பச்சைப்புடவைக்காரி -பகையை வெல்லும் படை - 12 -விராலி மலை முருகன் -1 -310
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் 12 விராலி மலை முருகன் -1 (310) 👍👍👍💥💥💥 சுவாமி : சண்முக நாதன் (ஆறுமுகம் ) அம்பாள் : வள்ளிதேவசேன தீர்த்தம் : நாகதீர்த்தம் தலவிருட்சம் : விராலிச் செடி தலச்சிறப்பு : இங்கு வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும். மாயா சொரூப முழுச்ச மத்திகள் ஓயா வுபாய மனப்ப சப்பிகள் வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும் மாலா கிவாட நகைத்து ருக்கிகள் ஏகா சமீது தனத்தி றப்பிகள் வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம் ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள் ஈயா தபோதி லறப்பி ணக்கிகள் ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம் ஆமா றெணாத திருட்டு மட்டைகள் கோமா ளமான குறிக்க ழுத்திகள் ஆசா ரவீன விலைத்த னத்திய ருறவாமோ வேடன் ஒருவன் குரா மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தான். ...