பச்சைப்புடவைக்காரி - கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -2 - 336 -26 வது படை
ப ச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் 26 வது படை கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -2 (336 ) 👍👍👍💥💥💥 அம்மா ... கந்தன்குடியை உங்கள் பாணியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்க ஆசைப்படுகிறேன் - கருணை கூர்ந்து விவரமாக சொல்ல முடியுமா ? சொல்கிறேன் ரவி .... திருவாரூர் மாவட்டத்தில் ஒரு காட்டுப் பிரதேசம். அங்கே மரங்கள் அடர்ந்திருக்க, அவற்றை மலர்க்கொடிகள் தழுவ, அக்கொடிகளில் பூத்து சிரித்த மலர்கள் தேன் சிந்தி மகிழ... அந்த ரம்மியமான வனத்தை ஒட்டி ஒரு குக்கிராமம். அக்கிராமத்து மக்களின் நிறை செல்வம் ஆநிரைகள். காட்டுப் பகுதியில் அவை மேய்ச்சலுக்குச் செல்வதும், அந்தியில் வீடு திரும்புவதும் வழக்கமாயிருந்தது. ஒரு செல்வந்தர் வீட்டுப் பசு ம...