பச்சைப்புடவைக்காரி -அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – 334 - 25 வது படை

                                                     ச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

       பகையை வெல்லும்   25  வது  படை

அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம் சிறப்புகள் 2 & 3

(334 ) 👍👍👍💥💥💥


மலை மேல் சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். 

சிவ சிவ என்ற சிவ வாக்கியர் சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். 

அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. 

அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. 




இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர். 



அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. 

அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம். சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும் (வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.


 "கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே 
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே." 
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! 
உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? 
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது? 




உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே? 
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே? 
ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ 
பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ 
தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ 
வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 
அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ? 
புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ? 
உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம் 
உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா 
உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா 
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா? "




                                             அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். 

அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார். 



இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும்போதே “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். 


அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார். சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. 

இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார். 




                                        அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது. சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக்கை தண்ணீரிலே மறைந்தது. அதனைக் கண்ட சிவவாக்கியர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக்காயை நீரில் அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார். 

சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்த தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்” என்றார். 

அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது. சிவவாக்கியர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. 




சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையை கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார். “அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார். 

சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார். ஒருநாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார். அப்போது வெளியில் வந்த கன்னிப்பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். 



உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள். சிவவாக்கியர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார். குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது. 
                                             
சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். 



காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி “குருசாமி! தங்களின் பாதம் பட இந்த குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர். “தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். 

“சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்” என்றனர் குறவர்கள். சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. 

அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார். ஒருநாள், சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். 




சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார். 



குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய் உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர். 



                                               உணவுடன் வந்த அவர்களை பார்த்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர். வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். 

“இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர். உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார். 




சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரை கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்புகொண்டு சந்தித்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 

சிவவாக்கியர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர். இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார். சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புத்துண்டுகளை வாங்கி அவற்றை தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். 



சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார். சிவவாக்கியர் இவைகளைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள். சிவவாக்கியர் மனைவியை அழைத்து உனக்கு தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்கு தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள். சிவவாக்கியர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது. 


                                            
ஒருநாள் சிவவாக்கியரை சில சிவ பக்தர்கள் சந்தித்தனர். “சுவாமி எங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டினர். சிவவாக்கியர் சற்று யோசித்தார். “அவர்களை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள் மூலம் தங்கம் செய்து அதனால் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க போகிறோம்” என்றனர். 

அதற்கு சிவவாக்கியர் கடகடவென சிரித்து “அன்பர்களே! உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பிறகு நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் எல்லோரும் தங்கத்தை அடைய எளிய வழி” என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த அன்பர்கள் உண்மையை உணர்ந்து சென்றார்கள். 



சிவவாக்கியர் தியானத்தில் ஆழ்ந்தார். இறைவா மக்களுக்கு தூய்மையான எண்ணம் உருவாவதற்கு நீதான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினார். இவர் தன் அனுபவங்களை பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாகியம்’ என்று அழைக்கப்படுகிறது. 

இவர் நாடிப் பரீட்சை என்னும் நூலை எழுதினார். சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தியடைந்ததாக கூறப்படுகிறது. இன்றும் பௌர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் இவருக்கு சமாதி பூசை நடைபெற்று வருகிறது. 



தியானச் செய்யுள் 
சிவனில் சிந்தை வைத்து 
ஜீவனில் சித்து வைத்து 
அவனியைக் காக்க வந்தா 
அழகர் பெருமானே… 
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும் 
தங்கள் தங்கத் தாமரைத் 
திருவடிகள் காப்பு. 

சிவவாக்கியர் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, உதல் சித்தராகப் போற்றப்படும் இந்த சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள், குங்கும திலமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருக பாடி சங்கு புஷ்பம், அல்லது தும்பைப் புஷ்பம் அல்லது வில்வத்தால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும். 



பதினாறு போற்றிகள் 

1. பாவங்களைப் போக்குபவரே போற்றி! 
2. எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி! 
3. சிவ பெருமானின் அவதாரமே போற்றி! 
4. ஜீவராசிகளை காப்பவரே போற்றி! 
5. ருத்ரனின் அவதாரமே போற்றி! 
6. தீமைகளை அழிப்பவரே போற்றி! 
7. சர்வ வல்லமை படைத்தவரே போற்றி! 
8. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி! 
9. தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி! 
10. சிவனின் அருள் பெற்றவரே போற்றி! 
11. சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி! 
12. கலைகளுக்கு அதிபதியே போற்றி! 
13. காருண்ய மூர்த்தியே போற்றி! 
14. மன நிம்மதி அளிப்பவரே போற்றி! 
15. மங்களங்கள் தருபவரே போற்றி! 
16. மகிமைகள் உடைய சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! போற்றி! 



இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின் மூலமந்திரமான “ ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! “ என்று 108 முறை ஜபிக்கவேண்டும். பின்பு நிவேதனமாக பழங்கள், சுத்தமான விபூதி, தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். 

சிவவாக்கியரின் பூசா காரிய சித்திகள் இவர் சந்திர கிரகத்தினை பிரதிபலிப்பவர். 

ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை நீக்குபவர். 




மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் இவரை பூசிக்க வேண்டும். மேலும் இவரை வழிபட்டால்.. 

1. மனவியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். 
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலை மாறும். 
3. சஞ்சல புத்தி நீங்கும். 
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கும். 
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து திங்கட்கிழமையன்று பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.




"நட்ட கல்லை தெய்வம் என்று  
நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி 
வந்து முனுமுனுவென்று  
சொல்லும் மந்திரம் ஏதடா?" 

- சிவவாக்கியார் - 

                            சித்தர்களுள் சிறந்தவராக கருதப்படுபவர் சிவவாக்கியார். தாயுமானவர், பட்டினத்தார் ஆகியவர்களால் பாராட்டப் பட்டவர். சிவவாக்கியார் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர். பிறக்கும் போதே "சிவ" "சிவ" என்று சொல்லிக் கொண்டு பிறந்த படியால் சிவவாக்கியார் என்று அழைக்கப் படுவதாக சொல்லப் படுகிறது. 




போகர் தனது சப்தா காண்டத்தில் சிவவாக்கியார் தை மாதத்தில் வரும் மகநட்சத்திரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார். 

நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. 

சிவவாக்கியார் கும்பகோணத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.


அம்மா ! எப்படிப்பட்ட சித்தர்களும் மகான்களும் இந்த பூவுலகில் மறைந்தும் இன்னும் வாழ்ந்துகொண்டும் எங்களை வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்  என்று நினைக்கும் போது மனம் மிகவும் புளகாங்கிதம் அடைகிறது தாயே ! 

உண்மை ரவி இன்னும் எவ்வளவு வருடங்கள்  ஓடி மறைந்தாலும் இந்த பூமி புண்ணிய பூமிதான் ரவி ..... 

புண்யகீர்தி  -  அம்பாளை நினைத்து  வேண்டிக்கொண்டு  துவங்கும்  என் காரியமும் நல்லாதாய் முடியும். நல்ல காரியங்களை செய்ய உதவுபவள் . புண்ணியம்  தரும் செயகைகளை செய்ய வைப்பவள்   லலிதாம்பிகை.  பேரும் புகழும்  வாங்கித்தருபவள் அன்னை அம்பாள்.

புண்யலப்யா -  மேலேசொன்னதோடு  கூட இன்னொரு   விஷயம். புண்ய காரியங்களை செய்தால்  தான்  அம்பாள் புலப்படுவாள்.  புண்யம்   என்றால் ஸத் கார்யங்கள் ஸத்  எண்ணங்கள்.  சௌந்தர்ய லஹரியில்  சங்கரர் ''அம்மா உன்னை  ப்ரம்மா விஷ்ணு  ருத்ரன்  ஆகியோர் வழிபடுகிறார்கள்.  பூர்வ ஜென்ம  புண்ய பலன் இருந்தால் தானே  உன்னை  தொழக்கூட முடியும் '' என்கிறார்.

புண்யஶ்ரவண கீர்தனா-  புண்ய  விஷயங்களை, படிப்பது, கேட்பது  போன்ற பாக்யம் இருக்கிறவர்களுக்கு நன்மை புரிபவள் அம்பாள். விஷ்ணு சஹஸ்ரநாமமும் முடிவில் லலிதா சஹஸ்ரநாமம்  சொல்வதையே, இதையே  சொல்கிறது.

==========================




Comments

ravi said…
அச்சில் பரமன் பிரதி
அருள் வீச்சில் குபேர நிதி

பேச்சில் கருணை செய்வான் -- உயிர் மூச்சில் சிவனை நெய்வான்

இச்சைகள் துறந்த வேந்தன்
இச்சகம் உய்ய வந்தான்

கச்சியிற் வாழும் அத்தெய்வம் -- வையம் மெச்சியே தொழும் அத்வைதம்

உச்சியில் பிறையை வைத்தான் அவனே

என்றும் நம் கறை நீக்கி கரை சேர்ப்பான் .. திண்ணம் இதுவே !!

மஹா பெரியவா சரணம் 🥇🥇🥇🙏🙏🙏
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*மஹாமந்த்ரா ( महामन्त्रा – அனைத்து மந்திரங்களயும்விட உன்னதமான, உயர்ந்த மந்திரமானவள் )*👌👌👌
ravi said…
அன்னை தந்திர சாதனங்களில் கூறப்படும் சாதனங்கள் இயக்கும் மந்திரங்களாக இருப்பவள் அன்னை!

மந்திரங்களின் ஒலி அதிர்வுகளுக்கு உலகில் பல அதிசயங்களை நிகழ்த்தும், வலிமையுண்டு. “ஓம்”, “ஶ்ரீ” போன்ற ஒலிகளும்,

அவற்றைத் தரும் அசைகளும் எல்லா சுலோகங்களிலும் வருவதைக் காண்கிறோம்.

பூஜைகளிலும் இவையே பெரும்பாலும் ஒவ்வொரு மந்திரத்தின் துவக்கத்தில் இருப்பதைக் காணலாம்.

பஞ்சாக்ஷரி, அஷ்டாக்ஷரி, பஞ்சதஶாக்ஷரி, ஷோடஶாக்ஷரி என்று ஐந்தாகவும், எட்டாகவும், பதினைந்தாகவும், பதினாறாகவும், அசைகளின் கூட்டால் மந்திரங்கள், ஏறக்குறைய 70 இலட்சம் மந்திரங்கள் இருந்தாலும்,

அவற்றுளெல்லாம் ஆகச் சிறந்தவைகளாக 24 அசைகளை உடைய காயத்ரி சொல்லப்படுகிறது.

204-வது மந்திரமாகச் சொல்லப்பட்ட *ஸர்வமந்த்ர ஸ்வரூபிணியாக* அன்னையே இருக்கிறாள்.

மஹாமந்திரமாக லலிதா ஸஹஸ்ரநாமமே துதித்துத் துவங்கும் ஸ்லோகத்தில், *ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மஹாமந்த்ரஸ்ய*” என்று அவளை “மஹாமந்த்ரா” என்றே கூறித் துவங்குகிறது.

எனவே எல்லாவற்றுக்கும் மேலான *மஹாமந்த்ரா*”-வே அன்னைதான்.

மகிமைசெய் மந்திரங்கள் மற்றுண்டா மாயின்
அகிலமகா மந்திரமே அன்னை –

சுகிர்தம்
அதுவெனப் போற்றிடும் அற்புத வாக்கே
இதுவென் றுணர்தென்றும் ஏத்து

*சுகிர்தம்* – நன்மை, பாக்கியம்👌👌👌
ravi said…
*Connect with Periyava 🥇🥇*
Savitha said…
அருமை இவ்வளவு தகவல்ளை சேகரித்து ஒரே கோர்வையாக பதிவிடுவது மிகவும் கடினம்
கவிகுமாரின் எழுதும் ஆற்றல் அற்புதம்
சிவன் மலை அற்புதம்
சிவ சித்தர் ஆற்றல் அதிசயம்
இவ்வளவு பக்தி அருமை🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
முருகா 🙏🏻🙏🏻🌹🌹🌹

புண்யகீர்தி
மாதா ஜெய
ஓம் லலிதாம்பிகையே🌹🌹🌹🌹🌹🙏🏻
ravi said…
*கம்பராமாயணம்* *658* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
ravi said…
தீப்போன்ற கற்புடைய சீதையை ஏதோ எளியவள் என்று எண்ணிவிடாதே.

அவள் தூய்மையே உருவானவள்.

திருப்பாற் கடலில் அமிழ்தோடு பிறந்தவள் இந்தத் திருமகள் ஆவாள்.

உலக மாந்தர்க்கெல்லாம் கண்ணுக்குப் புலப்படாத தாயாய் நின்று அருள் புரிபவள் அவளே என்றும் எல்லோரும் கூறுகிறார்கள்.

அறத்தின் மூர்த்தியான திருமாலை தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவரும் இராவணனின் தவத்தின் வலிமையை உணர்ந்து, மனித உருவம் தாங்கி இங்கே உன்னை அழிப்பதற்காக வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

எண்ணற்ற தீய நிமித்தங்கள் இலங்கையில் தோன்றுகின்றன.

ravi said…
தாயினும் நல்லாள் சீதாப் பிராட்டியைத் தேடி இராம தூதனாக வந்த அனுமனால் தாக்கப்பட்ட இலங்கையின் காவல் தெய்வம், இலங்கிணி இந்த நகரத்தை விட்டு நீங்கி ஓடிப் போய்விட்டாள்.

இந்த நகருக்குள் போர் நுழைந்துவிட்டது.🥇🥇🥇
ravi said…
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌹🤝🤝
ravi said…
[96/108] – *அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்*🌸🌸🌸
ravi said…
*தபோவன நரசிம்மர்:*

காலிகோபுரத்தை அடுத்து சற்று தொலைவில் நரசிம்மர் கோயிலைத் தரிசனம் செய்யலாம்.

நரசிம்மர் கோயில் அமைந்துள்ள இடம் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது.

ரிஷுபமுனிவர் இத்தபோவனத்தில் தவம் செய்த போது நரசிம்மர் காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது.

யோகநரசிம்மர் சுயம்பு வடிவத்தில் நெடிய மூர்த்தியாக காட்சி தருகிறார்.

பிற்காலத்தில் இவ்விடத்தில் லட்சுமிநரசிம்மருக்கு கோயிலை எழுப்பியுள்ளனர்.

இத்தபோவனம் மரங்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தருகிறது.

தியான பயிற்சி செய்பவர் கள் இக் கோயிலின் முன்மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து மனஅமைதி பெறுகிறார்கள்.👌👌👌
ravi said…
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 910*🥇🥇🥇🏆🏆🏆

*US 902*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

37 வது ஸ்தபகம்

தஸமம் ஸதகம் ( பத்தாம் ஸ்தபகம் ) 👍👍👍

*தத்த்வ விசார ( அனுஷ்டுப் வ்ருத்தம் )* 👍👍👍

கவி தனது மதத்தின் தத்துவத்தை விளக்குகிறார்
ravi said…
902 🤝🤝🤝

பூர்ணம் ப்ரக்ஞாத்ரு ஸத் ப்ரஹம தஸ்ய ஞானம்
மஹேஸ்வரீ

மஹிமா தேஜ அஹோஸ் விச் சக்திர்வா ப்ராண ஏவ வா 🙏🙏🙏
ravi said…
பிரம்மம் எனும் சிவனிடம் இருந்து ஞானம் எனும் மஹேஸ்வரியை பிரிக்க முடியாது . இரண்டும் ஒன்று ... விளக்கும் வெளிச்சமும் போல இரண்டும் சேர்ந்தே இருப்பது சிவசக்தி 🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 330*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

3/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
ஆனங்க தந்த்ர விதி தர்சித கௌசலானாம்

ஆனந்த மந்த பரிகூர்ணித மந்தராணாம்

தார்லய மம்ப தவ தாடித கர்ணஸீம்நாம்

காமாக்ஷி கேலதி கடாக்ஷநிரீ க்ஷணானாம் 🤝🤝🤝
ravi said…
அம்மா உன் அருள் இல்லை என்றால் ஈசனே தியானத்தில் மூழ்கி இருப்பார் .. அவரை உன்னுடன் இணைத்துக்கொண்டதால் உலகில் எல்லா ஜீவன்களும் உயர் வாழ்கின்றன 🥇🥇🥇
ravi said…
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
*26 கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா* =

நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும் சுகந்தம் பரப்புபவள் 👌👌👌
ravi said…
வரதன் நினைத்தானா ஒரு சொட்டு தாம்பூலம் அவன் தலை மேல் அயன் எழுதிய எழுத்தை மாற்றும் என்றே !!

வாய் பேசா ஊமை அவன் நினைத்தானா 500 பாடல்கள் தான் பாட அன்னை சந்தோஷம் கொள்வாள் என்றே

நுனி கிளையில் அமர்ந்தே அடி மரம் வெட்டியவன் நினைத்தானா சியாமளா தண்டகம் பாடுவேன் என்று ...

ஒரு துளி தாம்பூலம் விழுமோ நம் மீதே ... விழுந்தால் கேட்ப்போமோ இன்னொரு பிறவி தனை ? 💐💐💐💐👍👍👍👍👍
ravi said…
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
Savitha said…
அருமை
வரதன். கதையோடு
இந்த நாமத்தை இனைத்து அருமை🙏🏻🙏🏻
ravi said…
*Aruṇaruṇa-kausumbha-vastra-bhāsvat-kaṭītaṭī अरुणरुण-कौसुम्भ-वस्त्र-भास्वत्-कटीतटी (37)*👍👍👍
ravi said…
She wears a red silk cloth around Her waist. Red colour means compassion.

Everything associated with Her is red in colour, indicating that Her form is full of compassion (one of the reasons of being Śrī Mātā).

It can be said that She performs Her three acts (creation, sustenance and dissolution) with compassion.

This could also refer to one of the Vāc Devi-s, Arunā. This Sahasranāma was composed by eight Vāc Devi-s.

They are Vasini, Kāmeśvari (not Śiva ’s wife), Modhini, Vimalā, Arunā, Jainī, Sarveśvariī and Koulinī. Arunā Vāc Devi is in Her waist.🤝🤝🤝
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸரி; ஆனால், வாஸ்தவத்திலேயே தோஷமில்லாமல், கொஞ்சங்கூட குணஹீனமில்லாமல், பரிபூர்ண சக்தி மயமாக ஒரு ஈச்வரன் இருக்கும்போது, அவனையே நேராக பக்தி பண்ணாமல், இந்த அம்சங்களிலெல்லாம் நம்மைவிட எவ்வளவு உசந்தவரானாலும் அவனைப்போல முழுக்க perfect என்று சொல்ல முடியாத ஒருவரை perfect – தான் என்று நம் பாவனையால் பூர்த்தி பண்ணுவித்து பக்தி செலுத்துவானேன் – என்று கேட்டால்…

ravi said…
ஈச்வர பக்தியைவிட குரு பக்தியில் இருக்கிற அட்வான்டேஜைச் சொல்கிறேன். முன்பே சொன்னேன். இன்னம் கொஞ்சம் சேர்த்துச் சொல்கிறேன். ஈச்வரன் கண்ணுக்குத் தெரியவில்லை.
ravi said…
இவரோ தெரிகிறார். இவரோடு கலந்து பழகமுடிகிறது. நமக்கான நல்லது, பொல்லாததுகளை ஈச்வரன் வாய்விட்டுச் சொல்வதில்லை.
ravi said…
இவர் கர்ம ச்ரத்தையாக எடுத்துச் சொல்லி முட்டிக் கொள்கிறார். நாமும் இவரிடம் ‘இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா?’ என்று நன்றாக வழிகேட்டுப் பெறமுடிகிறது. ஈச்வரனிடமிருந்து அப்படிப் பெற்றுக்கொள்கிற அளவுக்கு நமக்குத் தீவிர பக்தி ச்ரத்தை இருக்கிறதா?

ravi said…
அப்புறம், ஈச்வரன் என்றால் எங்கேயோ எட்டாத நிலையிலிருப்பதாலேயே, ஒரு பக்கம் அவனோடு நாம் கலந்து பழக முடியாது என்பதோடு, இன்னொரு பக்கம், கண்ணுக்கு – வாக்கு, மனஸு எல்லாவற்றுக்குமேதான் – எட்டாத நிலையிருக்கிற அவன் நாம் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்;
ravi said…
அதனால் தண்டிக்க வேண்டியதற்கு தண்டிப்பான், அநுக்ரஹிக்க வேண்டியதற்கு அநுக்ரஹிப்பான் என்ற எண்ணமும் நமக்கு இல்லை. அவனுடைய பார்வையிலேயே இருக்கிறோமென்று தெரியாததால்தான் துணிந்து மனம் போனபடி எதுவும் பண்ணுகிறோம்.
ravi said…
தப்பு பண்ணினால் தண்டனை என்ற பயமில்லாமல் பண்ணுகிறோம். அப்படியே, நல்லதுசெய்வதென்றால் எந்த நல்லதானாலும் அதற்கு நாம் தேஹத்தாலோ த்ரவியத்தாலோ ஏதாவது விதத்தில் கொஞ்சமாவது ஸாக்ரிஃபைஸ் செய்யாமல் முடியாது;
ravi said…
இப்படி ஸாக்ரிஃபைஸ் பண்ணுவானேனென்று இருந்துவிடுகிறோம். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்று பழமொழி இருக்கிறது. கொல்வது மட்டுமில்லை, நல்லது பண்ணுவதென்றாலும் அரசன் உடனே பொன், பொருள், ராவ்பஹதூர் – திவான் பஹதூர் – ஸர் வரைக்கும் பட்டம் கொடுக்கிறதுபோல தெய்வம் உடனே கொடுப்பதாகத் தெரியவில்லை.
ravi said…
நம் புண்ய – பாப கர்மங்களின் நல்ல – கெட்ட பலன்கள் எத்தனையோ ஜன்மாந்தரங்களில் கோத்து வாங்கிக்கொண்டு போகும்படியாகத்தான் ஈச்வர தர்பார் நடக்கிறது. இப்படி எப்பவோ பண்ணியதற்கு எப்பவோ பலன் என்பதால், நாம் இப்படிப் பண்ணியதற்குத்தான் இது பலன் என்றே நமக்குத் தெரியாமல் போய்த் தப்பு பண்ணுவதிலும் குளிர்விட்டுப் போகிறது; நல்லது பண்ணுவதற்கும் உத்ஸாஹமில்லாமல் போகிறது.

ravi said…
குரு எப்படி இருக்கிறார்? நாம் தப்புப் பண்ணினால் உடனேயே எடுத்துச் சொல்லிக் கண்டிக்கிறார். நமக்கு உறைக்கும்படிக் கரித்துக்கூடக் கொட்டுகிறார்.
ravi said…
நாம் ஒரு தப்புப் பண்ணக்கூடிய நிலைமை ஏற்படும்போது, “இது குருவின் காதுக்குப் போய்விட்டால் என்ன ஆவது?” என்ற பயம் ஏற்பட்டு நம்மைக் கட்டிப்போடும். அவர் ஆத்மசக்தி நிறைந்த குருவாயிருந்தால் நாம் எங்கே என்ன தப்புப் பண்ணினாலும் அவர் தாமாகவே தெரிந்துகொண்டு விடுவார்.
ravi said…
அவ்வளவு சக்தியில்லாவிட்டாலும், அல்லது சக்தி இருந்தும் அதை வெளியில் காட்டாதவராக இருந்தாலும் – மநுஷ்ய விளையாட்டு விளையாடுவதில் பல குருக்கள் இப்படித் (தெரிந்தும் தெரியாத மாதிரி) இருப்பது முண்டு, இப்படி இருந்தாலும் – வேறே யாராவது சொல்லி நம் தப்பு அவருக்குத் தெரிந்துவிட்டால் அப்புறம் நம் கதி என்ன என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். அது நம்மைத் தப்பிலிருந்து தடுக்கும்.

ravi said…
இதேபோல நாம் ஒரு நல்லது பண்ணினாலும் குரு அதை உடனே தாமாகவேயோ, இன்னொருத்தர் சொல்லியோ தெரிந்துகொண்டு – அல்லது இது நாம் பண்ணிய நல்லதல்லவா? அதனால் நாமே எப்படியாவது அது அவர் காதில் விழுகிற மாதிரி செய்துவிடுவோம்!
ravi said…
இப்படி ஏதோ ஒரு விதத்தில் அவர் தெரிந்துகொண்டு – நம்மை மெச்சி, விசேஷமாக ஆசீர்வாதம் அநுக்ரஹம் பண்ணி, மேலும் மேலும் உத்ஸாஹப்படுத்துவார்.
ravi said…
ஒரேயடியாக மெச்சினால் நமக்கு மண்டைக் கனம் ஏற்படுமென்பதால், ‘தப்புக்காக சிஷ்யனை வெளிப்படக் கண்டிக்கிறதுபோல, அவன் செய்யும் நல்லதற்காக வெளிப்பட ச்லாகிக்கக் கூடாது’ என்று வைத்துக் கொண்டிருக்கும் குருகூட ஸூக்ஷ்மமாக, ஆனாலும் சிஷ்யனுடைய மனஸுக்கு நிச்சயமாகத் தெரிகிறவிதத்தில், ஏதோ ஒரு மாதிரி தம்முடைய ஸந்தோஷத்தைக் காட்டி, அதற்காக ஒரு அநுக்ரஹம் செய்யத்தான் செய்வார்.

ravi said…
நாம் கடைத்தேற வேண்டுமானால் அதற்கு நம்முடைய பாப கர்மாக்களைக் குறைத்துக் கொண்டு, புண்ய கர்மாக்களைக் பெருக்கிக் கொண்டாலொழிய எப்படி ஸாத்யமாகும்? இதில் புண்ணிய கர்மாவைப் பெருக்கிக் கொள்வதற்கு ‘இன்ஸென்டிவ்’ (போனஸ் மாதிரி நம்மை உத்ஸாஹப்படுத்துவது), பாப கர்மாவைச் செய்தால் ‘டிஸ் இன்ஸென்டிவ்’ இரண்டுமே நமக்கு உடனுக்குடன் குருவின் தீர்ப்பில் தெரிவதுபோல ஈச்வரனின் தீர்ப்பில் தெரிவதில்லை.

ravi said…
இதற்கும் மேலே, நம்முடைய பாப சித்தத்தைக்கூட குரு என்ற ஒருவர் இருக்கும்போது அவரே, நாமாக சுத்தி செய்து கொள்வதைவிடச் சிறப்பாக நமக்காக சுத்தி செய்துதருகிறார். பாபத்தில் கொஞ்சத்தைத் தாமே கூட வாங்கிக் கொண்டு தீர்த்து வைக்கிறார். நம்மைவிடக் கெட்டியாக நமக்காக ப்ரார்த்திக்கிறார். நமக்காக ஈச்வரனிடம் முறையிடுகிறார், வாதிக்கிறார், ஸ்வாதீனமாக உத்தரவு போடுகிறார், சண்டைகூடப் பிடிக்கிறார் – என்றெல்லாம் சொன்னேன்.

ravi said…
இதனாலெல்லாம்தான் ஈச்வரனைக் காட்டிலும் அபூர்ணமான குருவாக இருந்தாலுங்கூட அவரையே பூர்ண ஈச்வரன் என்று வழிபடச் சொல்லி “குரு வாத்” (Guru-vad) என்றே (வட இந்தியாவில்) உயரக் கொண்டு வைத்திருப்பது.

ravi said…
இப்படி அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் குருவிடமே வைத்து விட்டவர்களுக்குத் தெரியும். பகவத் ஸ்மரணையை விடவும் குரு ஸ்மரணையிலேயே அதிக சாந்தி என்று.
ravi said…
இரண்டே வார்த்தைகள் ... *பேஷ் பேஷ் ...*👌👌

தெளித்தது அன்னையின் மதுர இதழ்களில் இருந்தே

கச்சபி எனும் வீணை கச்சிதமாய் தன்னை மூடிக்கொண்டது ...

கலைவாணி வாசிக்க மறந்தாள் ...

கடல் என சூழ்ந்த தேவர்கள் வாயடைத்துப்போயினர் ...

குயில் பாட மறந்தது ..

தென்றல் தன் பரிசம் மறந்தது ...

அலைகள் நின்று போயின ...

கதிரவன் கதிர்களை திரும்பி வாங்கிக்கொண்டான் ...

நிலவும் மேகங்கள் எனும் வீட்டில் நுழைந்து தாழ் போட்டுக்கொண்டது

நட்சத்திரங்கள் மின்னுவதை நிறுத்திக்கொண்டது ..

மஹாலக்ஷ்மி கமலத்தில் மறைந்து கொண்டாள் ..

மாதவன் தன் போர்வைக்குள் புகுந்து கொண்டான் ...

மதுரம் கடலாய் ஓடியது பட்டாம் பூச்சிகள் அதில் பவனி வந்தது ...

அன்னையின் குரல் கேட்ட பின் தேனும் கசந்தது ... கற்கண்டும் பாகற்காய் ஆனது ...

அம்மா ... அதிகம் நீ பேசினால்

நாங்கள் ஆனந்தம் எனும் சுனாமியில் அடித்து செல்வோம் என்றேன் ...

ravi said…
மீண்டும் அதே *பேஷ் பேஷ்*.. அன்னையிடம் இருந்தே ...

சுத்தமான நந்தினியின் பாலில் மேரு மலை அளவில் நெய் ஊற்றி

அதில் சக்கரை கற்கண்டுகள் நாட்டு நட்டு களை எடுத்தேன் ...

ஓடி வந்த முந்திரியும் திராட்சையும் உத்தரவு இன்றி அதன் உள்ளே குதித்தன ...

பாதாமும் பிஸ்தாவும் அப்படியே எட்டி , எம்பி குதித்தன ...

அம்மாவின் *பேஷ் பேஷ்* என்னை பேசவிடாமல் வாயிலே சக்கரைப்பொங்கல் தனை அள்ளித் தெளித்தது ...

*சொக்கிப்போனேன் ... இனி சொல்வதற்கும் ஒன்றும் இல்லை ...*👌👌👌
Savitha said…
அருமை
நெய் தாராளமாக
முந்திரி திராட்சை அதிகம்
Kousalya said…
Sokkiyin varthaigal yavum namaste sokkan vaippavaiye..!! 👍 👍 migavum arumai. Besh Besh!!!
Savitha said…
ஆஹா சிவாக்கியர் சொல்வது போல்
பொன் பொருள் எமன் 100% உண்மை
எளிமையான இறைவன் பக்தி
போற்றி ..பாடல்கள் அருமை
Savitha said…
சித்தன் சிவன் போக்கு என்று சொல்லுவது
....வழக்கம் அது இந்த பதிவுக்கு பொருந்தும்🌹🌹
புண்யலப்யா🌹🌹🌹🌹
ravi said…
A small correction ... அது சித்தன் இல்லை சித்தம் ...

சித்தம் போக்கு சிவன் போக்கு ... என்பார்கள் ...

*அர்த்தம்*

சித்தத்தை (மனதை) சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள்.

எண்ணம், சொல், செயலால் ‘சிவனே’ என பக்தியில் ஆழ்ந்திருப்பர்.

மனைவி, மக்கள் என்னும் குடும்பப் பிணைப்புக்குள் சிக்காதவர்கள்.

‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என மனதில் பட்டதைச் சொல்லும் துணிவு கொண்டவர்கள்.

‘‘உள்ளத்தில் கடவுள் இருக்கும் போது, சிலை வடிவில் அவனைத் தேடுவது அறிவீனம்’ என்பது சித்தர்களின் முடிவு.😊😊😊
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்தக் காலத்தில் இருக்கிற நாமெல்லோரும் அச்வமேத யாகம் செய்ய முடியுமா?

ravi said…
‘இதென்ன கேள்வி? ஸ்வாமிகள் சரியாகத்தான் பேசுகிறாரா?’ என்று தோன்றும். ‘இந்தக் காலத்திலாவது? அச்வமேதமாவது? பழைய காலத்திலேயே க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்த மஹாராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அச்வமேதம் செய்ய முடிந்திருக்கிறது.
ravi said…
ஒரு ராஜ்யத்து அரசனாகப் பட்டாபிஷேகம் ஆனபின், சதுரங்க ஸேனா பலத்தோடுகூடச் சொந்தமாகவும் வீரதீர பராக்ரமங்கள் படைத்த ஒரு ராஜாதான் அச்வத்தை ஸகல தேசங்களுக்கும் ஓட்டி, அந்தத் தேசங்களையெல்லாம் ஜயித்து, திக்விஜயம் பண்ணிச் சக்ரவர்த்தி என்ற பிருதத்தை அடைந்து அச்வமேதம் பண்ணமுடியும்.
ravi said…
இப்போது நம்மில் யார் அப்படிச் செய்ய முடியும்?’ என்று தோன்றும் நம்மில் யாரவது அச்வமேதம் செய்ய முடியுமா என்று கேட்காமல் (இப்படிக் கேட்டாலே அஸம்பாவிதம்தான்!)
ravi said…
நாம் எல்லோரும் அச்வமேத யாகம் செய்ய முடியுமா என்று கேட்கிறேனே என்று ஒரே குழப்பமாகத் தோன்றும்.
ravi said…
முடியுமா, முடியாதா என்பது ஓரு பக்கம் இருக்கட்டும். எதற்காக அச்வமேதம் செய்ய வேண்டும்? நம் பதவியையும் பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்கா? அச்வமேதம் செய்தல் இந்திரலோகம் கிடைக்கும் என்பதற்கா? இதற்காகவெல்லாம் என்றால் அச்வமேதம் செய்யவே வேண்டாம். பதவி, பவிஷு, தேவலோக ஸெளக்கியம் எல்லாமே அஹங்காரத்தை வளர்த்துக் கொள்கிற காரியங்கள்தாம்! நம்மிடம் கொஞ்சநஞ்ச ஞானம்கூடச் சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவைதாம். பின் எதற்காக அச்வமேதம் என்றால்:
ravi said…
ஹயமேத ஸமர்ச்சிதா
என்று அம்பாளுக்கு லலிதா த்ரிசதியில் ஒரு நாமா சொல்லியிருக்கிறது.
ravi said…
த்ரிசதி’ என்பது முந்நூறு பெயர்கள் கொண்ட நாமாவளி. அர்ச்சனையில் பிரயோஜனமாவது ‘ருத்ர த்ரிசதி’ என்பது வேதத்திலிருந்தே எடுத்தது. ‘லலிதா த்ரிசதி’ வேதத்தில் இல்லாவிட்டாலுங்கூட அதற்கு ஸமதையான கௌரவம் பெற்றிருக்கிறது. ஹயக்ரீவரிடமிருந்து ‘லலிதா ஸஹஸ்ரநாம’ உபதேசம் பெற்றுங்கூட மனசாந்தி அடையாத அகஸ்தியர் இந்த த்ரிசதியைக் கேட்டுத்தான் தெளிவை அடைந்தார்.
ravi said…
ஆசார்யாளே பாஷ்யம் பண்ணியிருக்கிற பெருமையும் இந்த த்ரிசதிக்கு இருக்கிறது. லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ர நாமம் இரண்டுமே ரொம்ப மந்த்ரவத்தானபடியால் இவற்றை உரிய நியமங்களோடு ரஹஸ்யமாகவே ரக்ஷிக்க வேண்டும்.
ravi said…
ஹயக்ரீவர் உபதேசித்த இந்த த்ரிசதியில் ”ஹயமேத ஸமர்ச்சிதா” என்று ஒரு நாமா இருக்கிறது. ஹயம் ஹயம் என்றால் அச்வம், குதிரை என்று அர்த்தம்.
ravi said…
கழுத்துக்கு மேலே குதிரை முகம் படைத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமாக இருப்பவரே ஹய-க்ரீவர். ஹயமேதம் என்றாலும் அச்வமேதம் என்றாலும் ஒரே அர்த்தந்தான். ”ஸமர்ச்சிதா” என்றால் நன்றாக, பூர்ணமாக ஆராதிக்கப்படுபவள் என்று அர்த்தம். ”ஹயமேத ஸமர்ச்சிதா”-
ravi said…
அச்வமேத யாகத்தால் நன்கு ஆராதிக்கப்படுபவள்.
அதாவது ஒருத்தன் அச்வமேதம் செய்தால், அதுவே அவன் அம்பாளுக்குச் செய்கிற விசேஷமான ஆராதனையாகி விடுகிறது.
ravi said…
வெறும் யஜ்ஞ‌ம் என்றால் அதற்கென புத்ர ப்ராப்தி, தன லாபம், பதவி, ஸ்வர்க வாஸம் மாதிரியான பலன்கள்தான் உண்டு. இந்தப் பலன்களோடு, இவற்றைவிட முக்யமாக, அநேகக் கட்டுப்பாடுகளோடும், ஐகாக்ரியத்தோடும் ( one- pointed concentration ) ஒரு யாகத்தைச் செய்வதால் ”சித்த சுத்தி’ ‘என்கிற மஹா பெரிய பலனும் ஏற்படுகிறது.
ravi said…
ஒரு யாகம் அம்பாள் ஆராதனையாகிறபோதோ அதற்குச் சின்னச் சின்னப் பலன்களாக இல்லாமல் ஸகல புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடிய சக்தி உண்டாகிறது. ஸாக்ஷாத் பரதேவதை ப்ரீதி அடைந்தால் எதைத்தான் தரமாட்டாள்? .
ravi said…
பதவி, பவிஷு, இந்திர லோகம் எல்லாவற்றுக்கும் மேலாக பரம ஞானத்தை, ஸம்ஸார நிவிருத்தியை, மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியையே அம்பாள் மனசு குளிர்ந்தால் அநுக்கிரஹித்துவிடுவாள். ஆனதால், அச்வமேதம் பண்ணிவிட்டால், அதனால் அம்பாளை ஆராதித்ததாகி விடுமாதலால், இம்மை மறுமைக்கு வேண்டியதில் பாக்கியில்லாமல் ஸகல சிரேயஸ்களையும் பெற்று விடலாம்
ravi said…
அன்றைய தாம்பத்தியம்...
எங்கள் ஜனரேஷன்.. அம்மா... அப்பா... மனைவி.. பேரன்.. பேத்திகள்... உறவுகள்...


இ‌ன்றைய தாம்பத்தியம்
===============
இன்றுடன் லக்ஷ்மி போய் 14 நாள் ஆகிறது நேற்றுடன் கிரேக்க்கியம் முடிந்து உறவுகள் எல்லாம் ஊருக்கு போயாச்சு.

ravi said…
நாதனுக்கு காலை 5 மணிக்கு முழிப்பு வந்து வி‌ட்டது இது அவருடைய 78 வருஷ பழக்கம் மெதுவாய் எழு‌ந்தி ருந்து வாசல் கதவைத் திறந்து வெளி வாசல் வந்தார் . பக்கத்து வீடுக‌ளி‌ல் எல்லாம் பெருக்கி தெளிச்சு கொண்டு இருந்தார்கள்.
ravi said…
லக்ஷ்மி பக்கத்தில் நின்று ஏன்னா ஒரு வாளி தண்ணிர் சேந்தி தரேளா என்று கேட்கிற மாதிரியே இருந்தது .அவள் போடும் புள்ளி வைத்த கலர் கோலம் அவர் மனத்தில் வந்து மறைந்தது. துக்கம் குடலை புரட்டியது ஆண்கள் அழக் கூடாது எ‌ன்று எல்லோரும் சொல்வார்கள் ஆணும் அழத்தான் செய்கிறான் வாழ்வில் இரண்டு முறை. ஒன்று தாயை இழக்கும் போது இன்னொரு முறை தாரத்தை இழக்கும் போது.

ravi said…
மணி 6 ஆயிடுத்து. பையன், நா‌ட்டு பொண்ணு தூங்குகிறார்கள் போல. பெட் ரூம் கதவு இன்னும் திறந்த பாடில்லை

ஓரு நிமிடம் அவர் மனக்குதிரை பின் நோக்கியது

லக்ஷ்மி 5 .25 ஆச்சு இன்னும் காப்பி ரெடியாகலியா?

இருங்கோன்னா சித்த வெயிட் பண்ணு ங்கோ 5 நிமிஷம் என்று சொல்லி முடிக்கும் போதே ஆவி பறக்கும் காப்பி டம்பளர் உடன் ஆஜராகி விடுவாள்

ravi said…
மணி ஏழை தொட்டது வயிற்று பசி வாயின் எல்லை வரை வந்து நின்றது . அப்பாடா ஒரு வழியா பெட் ரூம் கதவு திற‌ந்து பையனும் நாட்டுபெண்ணும் வெளியில் வர இன்னும் ஒரு 5 நிமிடத்தில் காப்பி வந்துடும் னு இவர் நினைக்க நாட்டுபெண் ஹிண்டு பேப்பர் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
ravi said…
ஒரு பத்து நிமிடத்தில் அவள் இடத்தை விட்டு எழுந்திருக்க அவர் காப்பி குடிக்க தயாரானார் அவருக்கு இந்த காலை காப்பி குடிப்பது என்பது அப்படி ஒரு சந்தோஷமானவிஷயம் .
பொண்டாட்டி போனா அவ கூட பசி ,விருப்பம்,ருசி, எல்லாம் போய் விடுகிறதா என்ன?

சற்று நேரத்தில் நாட்டுபெண் ஒரு கப்ல பிரவுன் ம் இல்லாம காப்பி
கலரும் இல்லாம ஒரு திரவத்தை கொண்டு வர அம்மா எனக்கு காப்பி டவரா டம்பளர்ல குடிச்சு பழக்கம் என்று சொல்லஅதற்குஅவள்
இன்றிலிருந்து நம் ஆத்துல நோ காப்பி டீ தா‌ன் மாமா எ‌ன்று சொல்ல அவ‌ர் மனம் மிகவும் வலித்தது .

ravi said…
மணக்க மணக்க கும்பகோ ணம் டிகிரி காப்பி யுடன் லக்ஷ்மி கண்ணெதிரே வ‌ந்து மறைந்தாள் பையன் அப்பா முகத்தைப் பார்த்தான்

எட்டு மணியானா லக்ஷ்மி டைனிங் டேபிள்ல டிஃபன் வச்சிடுவா ஓன்பது ம‌ணி ஆச்சு இன்னும் எதுவும் டேபிள் க்கு வரவில்லை .சிறிது நேரத்தில் நாட்டுபெண் வ‌ந்து மாமா இனிமே பிரேக்ஃபாஸ்ட் ,லஞ்ச் எல்லாம் தனி தனியா பண்ண போவதில்லை brunch அதாவது ஒரு 11 30 மணிக்கு லஞ்ச் சாப்பிடலாம் என்றாள்.78 வருஷ breakfast பழக்கம் இர‌ண்டாவது முறையாக மனது வலித்தது பையன் நிமிர்ந்து அப்பாவை பார்த்தான்.

ravi said…
இரவு டின்னர் லக்ஷ்மி இரு‌க்கு‌ம் போது வித விதமா பண்ணுவாள் வேலைக்கு போகும் பையனும் நாட்டுபெண்ணும் இரவுதான் ரசிச்சு சாப்பிடுவார்கள் என்று , சரி ராத்திரிக்கு என்ன பண்றா பார்க்கலாம் என்று நினைக்க

நாட்டுபெண் ஏன்னா நீங்க கடை தெருவுக்கு போகும் போது அ‌ந்த நார்த் இந்தியன் கடை ல 12 சப்பாத்தி வாங்கிக்குங்க ,தால் தருவான் தொட்டு கொள்ள நைட்டூக்கு சாப்பிடலாம் எனவும் மகன் மூன்றாவது முறையாக அப்பாவை நிமிர்ந்து பார்த்தான்.அப்பாவின் கோபம், இயலாமை எல்லாம் புரிந்தது.

ravi said…
அப்பா நான் கடை தெரு போறேன் நீங்க வரீங்களா எனவும் இவருக்கு பையன் தன்னுடன் ஏதோ பேசத விரும்புவது தெரிந்தது இருவரும் கடை தெரு கிளம்பினார்

கோவில் அருகே வந்ததும்

அப்பா இங்க உட்காருங்க உங்ககிட்ட பேசணும்

சொல்லப்பா

ravi said…
காலையிலிருந்து உங்கள் முகத்தை பார்கிறேன் அதில் உள்ள வலி எனக்கு புரிகிறது . அம்மா போய் பதினாலு நாளைக்குள் உங்கள் வாய்க்கு ருசியானதெல்லாம் அவளுடன் போய் விட்டது.
ravi said…
அப்பா நீங்க அம்மாவை கல்யாணம் பண்ணி கூட்டி வரும்போது அம்மாக்கு பதினைந்து வயசு உங்களுக்கு இருபத்து ஒரு வயசு என்று சொல்லுவேள்.
ravi said…
திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டது கூட இல்லை .இருந்தும் உங்கள் இருவருக்கும் இடையே அருமையான புரிதல் இருந்தது. அதனா‌ல் அம்மா ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு விட்டாள் .
ravi said…
ஒவ்வொரு நிமிடமும்உங்கள் முக‌ம் பார்த்து உங்கள் தேவையை பூர்த்தி செய்தாள் அப்படி பண்ணின அம்மாவை கூட நீங்க நான் உன் கணவன் எப்போதும் நான் சொல்லுவது தா‌ன் செய்யணும்கிர மாதி‌ரி விரட்டுவேள்.அப்படி நீங்க விரட்டினா கூட அம்மா உங்க வார்த்தைக்கு மதிப்பு குடுத்து உங்க சந்தோஷம் தான் அவ சந்தோஷம்னு வாழ்ந்தாப்பா .நீ‌ங்க‌ள் அம்மாவை திட்டியது போல இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் நான் ஓரு முறை திட்டியிருந்தேன் என்றால் என் திருமண உறவு அன்றுடன் முடிந்து இருக்கும்

ravi said…
உங்களுடையது ஓரு இனிமையான தாம்பத்யம் ஈகோ ,அலட்டல் ,எதிர்ப்பு எதிர்ப்பார்ப்பு எதுவு‌ம் இல்லாத ஓரு அருமையான தாம்பத்யம்.

ravi said…
இப்போது நானு‌ம் உங்கள் நாட்டுபெண்ணும் கல்யாணம்கிற பந்தத்துல இணைந்து இருக்கிறோம். என்னை பொருத்த வரை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நான் உன்னை கடைசி வரை காப்பாற்றுவேன் என்று சொல்லும் ஆணாக நானு‌ம், உன்னை விட்டு எந்த ஜென்மத்திலும் பிரிய மாட்டேன் என்று சொல்லும் பெண்ணாக அவளும் இருக்க வேண்டும் அதுதான் ஒரு திருமணத்தின் புரிதல்.ஆனால் எங்கள் திருமணம் அப்படி பட்டது இ‌ல்லை விடிந்து எழுந்தால் எங்களுக்குள் ஒரு ஈகோ clash.
ravi said…
ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அவள் இவனுக்கு என்ன நான் அடிமையா எ‌ன்று நினைப்பதும் சம்பாதிக்கிற திமிருடன் இவ பேசுறா பார்த்தியானு என்னோட நினைப்பும் கல்யாணம் ஆன இந்த 26 வருஷத்தில் துளி கூட மாறவில்லை. .நா‌ங்க‌ள் எங்கள் வாழ்க்கையில் டெய்லி கத்தி மேல் தான் நடந்து கொண்டு இருக்கிறோம் .
ravi said…
எனக்கு இப்போது வயசு 55 அவளுக்கு 52 வயசு .இத‌ற்கு அப்புறம் பி‌ரிவு என்பதெல்லாம் அசிங்கம் atleast உங்கள் பேரன் வருண்காகவாவது நா‌ங்க‌ள் அட்ஜஸ்ட் செய்து தா‌ன் போக வே‌ண்டு‌ம் .அவளிடம் நீ‌ங்க‌ள் போய் கேட்டாலும் அவளும் இதையேதான் சொல்லுவாள். எங்கள் தாம்பத்தியம் என்பது உங்களது போல் இல்லை எனக்கு 29 வயசில் திருமணம் அவளுக்கு அப்போது 26வயசு
ravi said…
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவ‌ர் புரிந்து கொண்ட பி‌ன் தா‌ன் திருமணம் எ‌ன்று சொல்லி எட்டு மாசம்பழகிநோம் அந்த எட்டு மாசத்தில் எல்லாமே made for each other ஆகத்தான் தெரிந்தது. தாலி என்ற மஞ்சள் கயிறை அவள் கழுத்தில் கட்டிய வுடன் இவள் என்னவள் இனி எந்த முடிவும் அவ்வளவு ஈசி ஆக அவளால் தனியாக எடுக்க முடியாது,நாம தான் அவள் வாழ்க்கையின் முக்கியமான ஒருவன் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற ஆண் திமிரு எனக்கும் ஐயோ இத்தனை difference of opinion ஆ என்ன செய்ய தாலி கட்டிக் கொண்டேன் எதாவது தவறான முடிவு எடுத்தால் தன் பெற்றார்க்கு‌ம் சுற்றி உள்ள உறவினருக்கும் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் அவளுக்கும். இப்போது சொல்லப் போனால் ஒற்றுமையான தாம்பத்தியம் என்னும் ஒரு அழகான நாடகத்தை நா‌ங்க‌ள் இருவரு‌ம் ஊரார் மெச்ச நடித்து கொண்டு இருக்கிறோம்.
இதைதான் கத்தி மேல நடக்கிற மாதிரின்னு சொன்னேன்.
இதுதான்பா இன்றைய தாம்பத்தியம்.

ravi said…
அப்பா பசி , ருசி எ‌ல்லா‌ம் என் அம்மாவுடன் போச்சு. அதனால் நீங்களும் என்னை மாதிரி கிடைக்கும் நேரத்தில் கிடைப்பதை சாப்பிட்டு கொண்டு வாழ பழக்கிக் கோங்க .ஆனால் கடவுள் குடுத்த வரம் ஆன உங்கள் தாம்பத்யத்தை அசை போட்டு மிச்ச நாள்களை கழியுங்கள் அப்பா.

ravi said…
வாங்க நேரம் ஆகுது போலாம் என்றான்

அவன் கையை இறுகப் பற்றி உண்மையிலே எங்கள் ஜெனரேஷன் குடுத்து வைத்தவர்கள். அருமையான மனைவி , மகன், தாத்தா ,பாட்டி ஒருத்தர ஒருத்தர் புரிந்து கொண்ட அழகான குடும்பம் கடவுள் குடுத்த வரம் .
ravi said…
நான் நீ வாழும் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் உங்களை எல்லாம் பார்த்தால்உ‌ண்மை‌யிலேயே ரொம்ப பாவமா இருக்கு . நான் இனி என்னை மாற்றிக்க கொள்கிறேன். கவலைப் படாதே .என்னால உன் குடும்பத்தில் பிரச்சினை வராது நிம்மதியாக இரு என்றார்.
ravi said…
*#சரணாகதி_நீயேகதி*
-- ஒரு #குட்டிக்_கதை!
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.

ravi said…
💥குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்.

💥ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.

ravi said…
💥தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “ கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.

ravi said…
💥 “ நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.

💥 “ எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்”
என்றது குருவி!

💥 *"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”*- இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!

💥குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.

ravi said…
💥போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

💥அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை.

ravi said…
ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.

💥 ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.

ravi said…
💥யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.

💥 ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!
ravi said…

💥மனிதன் தானே!
“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன். ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்!

💥 “பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம், “அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்!

💥அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!

ravi said…
போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்.

💥 அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்!

💥தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்.

💥ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்!

ravi said…
💥“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.

ravi said…
💥அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன.
ravi said…

💥தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

“ பகவானே! என்னை மன்னித்து விடு!

ravi said…
💥உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.

ravi said…
💥அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!

💥அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.

🙏 “பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம சம் ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”🙏🙏

*"#சரணாகதி_நீயேகதி"* -- என்று சரணடைவோம் மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு

*நம்புவோம் நிம்மதியாக வாழ்வோம்*
ravi said…
*ப்ரும்ஹோபேந்த்ர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவா* ( ब्रह्मोपेन्द्र महेन्द्रादि देवसंस्तुत वैभवा – ப்ரம்ஹா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களால் துதிக்கப்பட்ட பராக்கிரமத்தோடு கூடியவள்.

தேவர்களுக்காக பண்டாஸுரனையும், அவனோடு அஸுர குலத்தையும் நிர்மூலம் செய்ய ஶ்ரீமாதா தன்னுடைய சேனைகளோடு வந்து, பண்டனை அவன் பட்டணத்தோடு அழித்தபிறகு,

தேவர்களின் சார்பாக, ப்ரம்மனும், விஷ்ணுவும், இந்திரனும் துதிக்கதக்க பராக்கிரமத்தோடு அன்னை விளங்கியிருந்தாள் என்பதைச் சொல்லும் நாமமிது.

அயனொடு மாலும் அமரேந் திரனும்
வியந்து துதித்திடும் வீரை – செயத்தைப்
பயத்த பரையைப் பணிந்தார்க் கிலையே
மயல்மிகு மாய மனம்

*பயத்த* – விளைத்த👌👌👌
ravi said…
*Nama ... A connect with periyava*👌👌👌
ravi said…
*ப்ரும்ஹோபேந்த்ர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவா* ( ब्रह्मोपेन्द्र महेन्द्रादि देवसंस्तुत वैभवा )👌👌👌

எல்லோரும் மன்னர்கள் எல்லோரும் அரசர்கள்
எல்லோரும் பெரியவர்கள்

சாரை சாரையாய் கூட்டம் அங்கே கால் கடுக்க பசி எடுக்க

நடமாடும் தெய்வம் அதை ஆடாமல் அசையாமல் பார்க்கவே காத்திருந்தனர் ...

அந்தஸ்து இல்லை அங்கே அகம் மடிந்தது அங்கே ,

ஈட்டிய பொருள், கல்வி எதுவும் வேலை செய்ய வில்லை அங்கே .... பக்தி ஒன்றே அங்கே முதலீடு ...

வேண்டுவதெல்லாம் பெரியவாளின் தரிசனம் ...

அவர் சிந்தும் மந்தஸ்மிதம் ...

அங்கே தேவர்கள் காத்திருக்க

இங்கே தேவேந்திரர்கள் வரிசையில் நின்றிருக்க

என்ன தவம் செய்தோம் ... ஸ்ரீ லலிதாவை இந்த புண்ணிய பூமியில் சுவாமிநாதனாய் தரிசிக்க 🥇🥇🥇
ravi said…
*இதுவரை நாம் பார்த்த முருகன் ஆலயங்கள்*

🦚🦚🦚

1. *ஆறுபடை வீடுகள்*

2. 7 வது படையாக *மருதமலை - கோயம்பத்தூர்*

3. 8 வது படையாக *திருசெங்கோட்டு முருகன் - திருச்செங்கோடு*

4. 9 வது படையாக *செல்வமுத்து குமரன் - வைத்தீஸ்வரன் கோயில்*

3. 10 வது படையாக *வயலூர் - திருச்சி*

4. 11.வது படையாக விராலிமலை - *திருச்சி -மதுரை வழி*

5. 12 வது படையாக *குக்கே சுப்ரமணியசுவாமி - கர்நாடகா*

6. 13 வது படையாக - *மோபி சுப்பிரமணியர் கோயில் - ஆந்திரா*

7. 14 வது படையாக *கதிர்காமம் - ஸ்ரீலங்கா*

8. 15 வது படைவீடாக *மலேஷியா பத்துமலை குகை முருகன்* 🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

9. 16வது படை வீடாக *எட்டுக்குடி முருகன் - திருவாரூர்*

10. 17வது படை வீடாக *அனுவாவி சுப்ரமணிய சுவாமி - கோயம்புத்தூர்*

11. 18வது படை வீடாக *ஸ்கந்தாஸ்ரமம் சேலம்*

10. 19வது படை வீடாக *ஊத்து மலை முருகன் - சேலம்*

11. 20வது படை வீடாக - *சிங்கார வேலன் சிக்கல் நாகப்பட்டினம்*

12. 21வது படை வீடாக *திருமுருகன் பூண்டி*

ravi said…
13 . 22வது படை வீடாக - *சென்னி மலை முருகன் - ஈரோடு*

14. 23வது படை வீடாக *வள்ளி மலை முருகன்*

15. 24வது படை வீடாக *சிவன் மலை காங்கேயம்*

16. 25வது படை வீடாக நாளை பார்க்கப்போவது *கந்தன்குடி ..திருவாரூர்*

💐💐💐
Hema latha said…
என்ன தவம் செய்தேன் தெரியவில்லை ரவி ஐயாவின் பதிவை பச்சை புடவைக்காரி எனும் பெயரில் படிக்க🙏🙏🙏
ravi said…
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ..

என்ன தவம் செய்தேன் போடும் பதிவுகளை படிப்பதோடு மட்டும் அல்லாமல் , அவைகளை ரசிக்கவும் , பாராட்டவும் நல்ல பக்தி உள்ள நெஞ்சங்களை நண்பர்களாக பெற்றுள்ளேன் என்றே ... 🤝🤝🤝

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை