பச்சைப்புடவைக்காரி -மலைய கோயில் - மிட்டாய் முருகன் 370 -52 வது படை
ப ச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் 52 வது படை மலைய கோயில் -மிட்டாய் முருகன் 370 👍👍👍💥💥 💥 1👍👍👍 புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது, மலையக்கோயில். பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றினாலும், கீர்த்தியில் மிகப்பெரியதாகவும் மிகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது மலையக்கோயில் மலை. மலையின் மீதுள்ள கோயில் *மேல்கோயில்* என்றும், மலையின் கீழுள்ள கோயில் *கீழ்க்கோயில்*’ என்றும் அழைக்கப்படுகிறது. மலை மேல் முருகப் பெருமானும் மலையடிவாரத்தில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். 💐💐💐👌👌👌 2🙏🙏🙏 மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்குக் குடவரைக் கோயில் ஒரே கருவறையையும் அந்தக் கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறத...