பச்சைப்புடவைக்காரி -மாமனும் மருமானும் 2 -416
பச்சைப்புடவைக்காரி🙏🙏🙏
மாமனும் மருமானும் 2
*416* 🏆🏆🏆
இந்தப் பாடலில் ‘முதலையின் பிடியில் சிக்கிய யானையின் “ஆதி மூலமே!” என்ற அபயக்குரலைக் கேட்டு ஓடிவந்து, முதலையை தனது சக்கர ஆயுதத்தால் வீழ்த்தி கஜேந்திரனைக் காத்த கருணை மிகுந்த கடவுள் மெச்சிப் பாராட்டும் சூரசம்ஹார வேலவனே’
என்பதன் மூலம் மாமன், மருமகன் இருவரின் பராக்கிரமமும் வெளிப்படுகிறது.
................ பதிதாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் மட்டுழ
மதித்தான் திருமருகா மயிலேறிய மாணிக்கமே’
என்ற பாடலில், ‘மந்தார மலையை மத்தாக்கி.. வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்து தேவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்த பரந்தாமனின் திருமருகா..
அசுரர்குலத்தை அழித்த தேவர்களை மீட்டு அவர் களுக்கு வாழ்வு தந்த மயில் வாகனனே’ என்கிறார்.🦚🦚🦚
இவைகள் எல்லாவற்றையும் விட, உறவைச் சொல்லி உரிமை கொண்டாடும் போது..
முதன்முதலில் மாமனுக்கு மரியாதை கொடுத்து ‘மாலோன் மருகனே’ என்று அழைத்துவிட்டுத் தான், முருகப்பெருமானின் தந்தையான ஈசனுக்கே இடம் தந்திருக்கிறார் அருணகிரிநாதர்.
ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், வாமனாவதாரம் வராகவதாரம் என திருமாலின் பெருமைகளை எல்லாம் சொல்லிச் சொல்லி மாய்த்து, அத்தகு புகழுக்குரிய பேரன்புக்குட்பட்ட மருமகனே என்று வேலவனை வாயாரப் பாடுகிறார்.
அழகில், ஆற்றலில், அருளில், மாமனும் மருமகனும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்கள் என்பதே உண்மை.🙏🙏🙏👍👍👍
அம்மா ... அற்புதம் ஆனந்தம் ... ஆழ்வார்களும் இப்படி நடு நிலமையாய் பாடியிருந்தால் வைணவமும் சைவமும் பேதம் கண்டிருக்காது ..
முதல் ஆழ்வார்கள் ஈசனும் திருமாலும் ஒன்றே என்று பாடியிருக்கிறார்கள் ..
சிவாய விஷ்ணு ரூபாயை சிவ ரூபாய விஷ்ணுவே
அன்ன மாச்சாரியார் திருப்பதி பாலாஜியும் வார் சடை மேனியனும் ஒன்றே என்று பாடி இருக்கிறார் .. பேதங்கள் எங்களுக்குள் இல்லை .. நீங்களாக ஒரு மதில் சுவர் எழுப்பியது ...
உண்மை தாயே .. எங்கள் தலையில் நாங்களே மண் வாரிக்கொட்டிக்கொள்வதில் எங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் யாரும் இல்லை .. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நாங்களே சாக்கடை தண்ணீர் எடுத்து கங்கை என்று அதை நினைத்து எங்கள் மீது ஊற்றிக்கொள்கிறோம் .😰😰
சிரித்தாள் சின்ன பெண்ணாள்... அலர்ந்தது என் முகம் கதிரவனைக் கண்ட தாமரை போல் 🌷🌷🌷
*746 பாக்யாப்திசந்திரிகா*
அதிர்ஷ்டம் எனும் கடலுக்கு ஒளி வீசும் பிரகாசம் தான் அம்பாள் எனும் முழுநிலா.
சில இடங்களில் அம்பாளை சூரியனுக்கு ஒப்பிடுவோம்
முழுநிலவும் அவளே.🌕🌕🌕
747 பக்த சித்த கேகி கண கணா -
பக்தனின் மனது தான் அழகிய தோகை விரித்தாடும் மயில்.
அம்பாள் அதை ஆடவைக்கும் கருமுகில்.🦚🦚🦚
748 ரோகபர்வத தம்போளி -
இந்திரனின் கையில் உள்ள ஆயுதம் வஜ்ராயுதம்.
அது மலைகளை பிளந்துவிடும்.
ஸ்ரீ லலிதாம்பிகை அப்படிப்பட்ட ஒரு வலுமிக்க ஆயுத மாக பக்தர்களின் உடல் மன வியாதிகளை, நோய்களை, வலிகளை போக்குபவள்.
👍👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐💐🎂🎂🎂
Comments
*பாடல் 48*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
மீண்டும் இந்த உடம்பு என்ற குடிசையில் ஆத்மா வந்து தங்காமல் இருக்க அதாவது இனி பிறவி வேண்டாம் என்று விரும்புவோருக்கு பட்டர் அளித்த பஞ்சாமிருதம் இந்த பாடல் .. 🦚🦚🦚
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும்
பரிமளப் பச்சைக் கொடியைப்
பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து
இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.🙏🙏🙏🦜🦜🦜
*சுடரும் கலைமதி துன்றும்*
சந்திரனின் கலை மொத்தம் 16 .. 15 நாட்கள் தேய்பவனாகவும் 15 நாட்கள் வளர்பவனாகவும் இருப்பவன் சந்திரன் .
*திங்கள் கொழுந்து* என்கிறார் சேக்கிழார் ..
இளம் பிறை மூன்றாம் பிறை இறைவன் ஜடாமுடியில் என்றுமே தேயாமல் மார்க்கண்டேயனாக இருக்கிறான் சந்திரன் .
பல சாபங்கள் பெற்றவன் ... இருந்தாலும் தன்னை சரணடைந்தவனை எல்லோராளும் கை விடப்பட்டவனை தூக்கி தன் தலையில் வைத்துக்கொண்டு சந்திரனுக்கு உயர்ந்த ஸ்தானத்தை கொடுத்தவன் பரமேஸ்வரன் .
முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை
ஞானம்
பெற்றானைப்
பெரும்பற்றப் புலியூ ரானைப்
*பேசாத நாளெல்லாம் பிறவா நாளே*
மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன்.
பகைவருடைய மும்மதிலையும் அழித்தவன்.
விளங்கும் ஒளிவடிவினன்.
இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன்.
இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன்.
குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன்.
கூத்தாடுதலில் வல்லவன்.
யாவருக்கும் தலைவன்.
சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன்
ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப்
*பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.*🦚🦚🦚
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
“ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச்சூடி
வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து,
என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இது என்ற புகழைப் பெற்ற
பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!🙏🙏🙏
சுடரும் கலைமதி துன்றும்
*சடைமுடிக் குன்றில் ஒன்றிப்*
*படரும்*
அந்த ஜடாமுடி ஒரு காடு போல் இருக்கிறது அவன் மேனி எனும் மலையில்
அந்த மலையில் ஒன்றிப்படரும் .. பிரிக்க முடியாதபடி படரும் ..... 🦜🦜🦜
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும்
*பரிமளப் பச்சைக் கொடியைப்*
பல கோடி தூரங்களுக்கு அப்பாலும் நறுமணம் வீசும் பரிமள பச்சைக்கொடி என் அபிராமி .. கொடி வளைந்து நெளிந்து படரும் சுபாவம் கொண்டது . மலை போல் செங்குத்தாக வளர்வதில்லை .. அடியார்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப தன்னை நெளித்தும் வளைத்தும் அருள் புரிபவள் என்பதால் அவள் ஒரு கொடி ... அவள் இடையும் மின்கொடி தானே ..
மலர்கமலை வணங்கும் மின்கொடி மென்கடித் குங்கம தோயம் கொண்ட மேனி கொண்டவள் அபிராமி 🦚🦚🦚🥇🥇🥇
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும்
பரிமளப் பச்சைக் கொடியைப்
*பதிந்து நெஞ்சில்*
*இடரும் தவிர்த்து*
அந்த பரிமளத்தை முழுமையாக மனதில் உள்வாங்கி நிலை நிறுத்தி அந்த சமயத்தில் அவளிடம் நம் வேண்டுதல்கள் ஒன்றும் வைக்காமல் இடர்கள் பல வந்தாலும் உறுதியாக இருந்து .....🥇🥇🥇🥇
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும்
பரிமளப் பச்சைக் கொடியைப்
பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து
*இமைப்போது இருப்பார்*
*பின்னும் எய்துவரோ;*
*குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே*.🙏🙏🙏🦜🦜🦜
இமைப்போல் நம் உள்ளத்திற்குள் இருக்கும் அவளைப் பார்த்துக்கொண்டு வணங்கிக்கொண்டு , நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ....
இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ... இமைக்கும் பொழுதாவது அவளை உளமார நினைப்பவர்களுக்கு
குடலும் , கொழுப்பும் , ரத்தமும் உள்ள இந்த உடம்பு எனும் குடிசையில் மீண்டும் வந்து இருப்பதற்கு வாய்ப்பே இல்லை .. இதுவே அவர்களது கடைசி பிறவி ...
*அன்னையின் கருவூரை கடையூராக ஆக்கிவிடுவாள் திருக்கடையூர் அபிராமி*🌸🌸🌸🌼🌼🌼🌻🌻🌞🌞🌝🌝🌷🌷💐💐🌹🌹🍂🍂🍁🍁🌿🌿
ஒளிவீசித் திகழும் கலைகளையுடைய பிறையைத் தரித்த சடையடர்ந்த
திருமுடியையுடைய மேருமலை போன்ற சிவபிரானுடன் இணைந்து,
மணங்கமழும் பசுங்கொடியான அபிராமித் தாயைத்
தம் நெஞ்சில் தியானித்து,
அதனால் தங்கள் துயரங்களிலிருந்து விடு பட்டு,
ஒரு கண்ணிமைப் பொழுதாவது பேரானந்த நிலையில் இருப்பவர்கள்,
மீண்டும் இந்தத் தோலும், ரத்தமும், குடலும், தசையும் கொண்ட உடற்கூட்டை விரும்பிப் பிறப்பார்களோ? மாட்டார்களன்றோ!🦁🦁🦁
அபிராமி 🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
"
இறங்குகின்றது இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்".
"என்றும் ஈறு இலா அரக்கர் இன்பமாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்
இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே
அன்று அலைத்த செங்கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார்".
அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு.
இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.🦜🦜🦜
*பதிவு 406*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
80
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
க்ராந்தேன மன்மதமதேன விமோஹ்யமான
ஸ்வாந்தேன சூததரு மூலக தஸ்ய பும்ஸ
காந்தேன கிஞ்சிதவ லோகய லோசனஸ்ய
ப்ராந்த் மாம் ஜனனி காஞ்சிபுரீ விபூஷே 🦜🦜🦜
*பதிவு 988*🥇🥇🥇🏆🏆🏆
*US 980*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
40 வது ஸ்தபகம்
சத்வாரிம்ஸ ஸ்தபக
தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌
🦚🦚🦚🥇🥇🥇
ஸ்பூர்தௌ ஸ்பூர்தௌ மாயா தைவம்
சலனே சலனே ஸக்திர் தைவம்
தேஜஸி தேஜஸி லக்ஷ்மீர் தைவம்
ஸப்தே ஸப்தே வாணீ தைவம் 👏👏👏
நடக்கும் போது நடையாக விளங்குகிறாள்
ஓவ்வொரு கண்ணுக்குள்ளேயும் ஒளியாக விளங்குகிறாள்
சொற்களில் சரஸ்வதியாக விளங்குகிறாள் 🦚🦚🦚
*763* *த்ரிகுணாத்மிகா त्रिगुणात्मिका* -
சத்வ, ராஜா, தமோ குணங்களின் மொத்த உருவம் அம்பாள்.
*764* *ஸ்வர்காபவர்கதா, स्वर्गापवर्गदा* -
ஸ்வர்கத்தை முக்தியாக தருபவள்.
கர்மபலனாக இதை அனுபவிக்க உதவுபவள் .
கிருஷ்ணன் இதை தான் கீதையில் (IX.21) “ அப்பா அர்ஜுனா, இப்படி நல்ல கர்மபலனாக ஸ்வர்கத்தில் சுகமாக அனுபவம் பெற்று, கர்மபலன் தீர்ந்தபின்னர், ஜீவன் மீண்டும் பூமியில் பிறக்க நேரிடும்'' என்கிறார்.
*765* *ஶுத்தா, शुद्धा* -
பரிசுத்தமானவள் . அதுவே ஞானம்.
இது இல்லாமல் முக்தி அடையமுடியாது.
கறை இருந்தால் பரிசுத்தமானது.
கறை என்பது அஞ்ஞானம். அறியாமை.
*வழக்கம் போல் அன்று கீதையைப் பாராயணம் பண்ணும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்'' என்ற இடம் வந்தது. திடீரென்று இன்று அவனுக்கு ஒரு சந்தேகம்*.
இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது என்பது முடிகிற காரியமா*?
*''இல்லேம்மா, நான் இங்கே இருக்கிறவன் தான். இது என் குருநாதர் வீடு. அவர் எனக்கு கட்டளை இட்டதால் அவருக்கு தேவைப்பட்ட சாமான்கள் இதெல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.''*
*மூட்டை நிறைய , பருப்பு, மாவுகள், அரிசி, சமையல் சாமான்கள், எண்ணெய்கள், நெய் எல்லாமே இருந்தது. தாராளமாக மூன்று மாதத்திற்கு அவர்கள் ரெண்டு பேருக்கு சமையலுக்கு தேவையானவை*.
*''நான் இங்கே உன்னை பார்த்ததில்லையே அப்பா. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாமப்பா. அவருக்கு தெரியாமல் இதை நான் ஏற்க மாட்டேன். என்னை கோபிப்பார்''*
*ரொம்ப நேரம் கழித்து களைப்பாக எங்கும் அன்று உணவு பதார்த்தங்கள், தானியங்கள் பிக்ஷை எதுவும் கிடைக்காமல் பிராமணர் விசனத்தோடும் வெறும் கையோடும் வீடு திரும்பினார்*.
*பிராமணருக்கு தலை சுற்றியது.*
*''எனக்கு சிஷ்யனா? நான் சாமான் கேட்டேனா? அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் அடித்தேனா? என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது எதுவுமே நடக்கவில்லையே. எனக்கு யாரும் சிஷ்யனே கிடையாதே. நான் சாமான் கேட்கவில்லையே, அடிக்கவில்லையே''.*
*இல்லை என் கிருஷ்ணன் சாட்சியாக எனக்கு அவனைத் தெரியவே தெரியாது, நான் அடிக்கவில்லை''* என்கிறார்.
*''இதோ பூஜை அறையில் தான் இருக்கிறான் போய் பாருங்கள் '. ஓடினார். வீடு முழுதும் தேடினார். அவனைக் காணோம்.*
*பிராமணருக்கு புரிந்துவிட்டது. வந்தது கிருஷ்ணன் தான். வீட்டில் நிறைய சாமான்கள் வசதியாக நிறைந்திருந்ததே. அவர் வறுமை நீங்கியதே. இது கிருஷ்ணன் லீலை. அவன் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து மறுபடியும் பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார். காலையில் அவர் சந்தேகத்தோடு போட்ட X குறியைக் காணோம். யார் அழித்தது?*
*
*இன்று முழுதும் உஞ்சவிருத்தியில் ஒரு மணி அரிசி கூட எனக்கு கிடைக்கவில்லையே. இது நிதர்சனமான உண்மை இல்லையா?*
*ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே தஞ்சம் (சரணங்களே ஶரணம் !)
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
🌎உன் பலவீனம் தான், தலைவிதி ஆகின்றது. உன் பலம் விதிக்கு தலைவன் ஆக்குகின்றது.
🌎தலையில் தான் விதி உருவாகின்றது. நல்லதை பார்! நல்லதைப் பேசு! நல்லதை கேள்! நல்லதை நினை! *உன் தலையின் விதி தானாக அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாறும்.*
🌎கவலைப் பட்டு தலைவிதி என்று சொல்லாதே. மகிழ்ச்சியோடு இதைக் கடந்து செல்வேன் என்று சொல். உன் எண்ணம் போல் ஆகும்.
*விதியை வெற்றியாக மாற்று...!!*
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🍀இந்த நொடியை
சந்தோசமாக வாழுங்கள். நிகழ் காலத்தை
சந்தோசமாக வாழ்வது
தான் வாழ்க்கையை
இனிமையாக மாற்றும்.
🍀வாழ்வு என்பது
சில நொடியில் முடிந்து
போவதல்ல ஒவ்வொரு
நொடியையும் சந்தோசமாக
திருப்தியாக வாழ்வதாகும்.
🍀மகத்தான வெற்றி
என்பது இந்த உலகத்தை
வெற்றி கொள்வதைக்
காட்டிலும் உன் மனதை
வெற்றி கொள்வதே
மகத்தான வெற்றி.
🍀உண்மைக்கு மகத்தான
சக்தி உண்டு அதை
எவராலும் மாற்றிடவோ..
மறைத்திடவோ.. இயலாது
உண்மையை அழிக்கும்
சக்தி எவருக்கும் இல்லை.
🍀உண்மை என்பது
ஒரு இனிமையான உணர்வு.
உண்மையின் அருமை
தெரியாதவர்கள் இனிமையின்
சுகத்தை உணராதவர்கள்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
➖➖➖➖➖➖➖
நான் Five star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார்.
என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று Waiter ஐ கூப்பிட்டேன்.
Waiter அமைதியாக என்னிடம் கூறினார்.
அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.
நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன்.
Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat.
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.
அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.
The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை
Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.
Stay blessed and enjoy your day.
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.
👤✍️ *நமக்கும், நம்மைச் சார்ந்த உறவுகள், நண்பர்கள், அனைவருக்கும் இன்றைய நாள் நலமுடன், இனிய செய்திகளுடன் அமைந்திட பிரார்த்திக்கிறேன்.*
*பதிவு 989*🥇🥇🥇🏆🏆🏆
*US 981*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
40 வது ஸ்தபகம்
சத்வாரிம்ஸ ஸ்தபக
தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌
🦚🦚🦚🥇🥇🥇
ஸீர்ஷே ஸீர்ஷே த்யாயத் தைவம்
சக்ஷூஷி சக்ஷூஷி ராஜத் தைவம்
மூலே மூலே ப்ரதபத் தைவம் 🙏🙏🙏
ஓவ்வொருவருடைய சிரசிலும் தியான சக்தியாய் இருக்கிறாள் .
ஓவ்வொருவருடைய கண்ணிலும் நெருப்பு சக்தியாய் இருக்கிறாள் .
மூலாதாரத்தில் ஜீவனுக்கு சக்தியாக இருக்கிறாள் 🦚🦚🦚
*பதிவு 407*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
81
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஸ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார்.
இறைவியின் பெயர் ஸ்ரீஹரிலட்சுமி என்பதாகும்.
இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி.
விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.🦚🦚🦚
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
That day night rayaru decided to bless us. Rayaru appeared in our Son's dream in the form of a familiar doctor. Discussed in detail about the doctor profession, treatments, etc.
This is personal experience of Rayara Karuna. 🙏🙏🙏
Sri Raghavendraya namaha
*பாடல் 49*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
பட்டர் கூப்பிடாமலேயே வந்தார் ...
சொல் ... என்ன சந்தேகம் உனக்கு இன்று ....
சுவாமி ஒன்றும் இல்லை ...
அபிராமி அந்தாதி தாங்கள் பாடும் போது இருந்த சூழ்நிலை ஒரே பதட்டமானது ...
தீ ஒருபக்கம் கொழுந்து விட்டு எரிகின்றது
உங்கள் மேனியை சுவைக்க ..
இன்னொருபக்கம் உங்களை நம்பாதவர்கள் "ஒழியட்டும் இந்த பித்தன்" என்று முணுமுணுத்துக்
கொண்டிருக்க ,
ராஜா சரபோஜி வானத்தில் முழு நிலவு வருமா என்று எங்கிக்கொண்டிருக்க
நீங்களோ எதற்கும் கவலைப்படாமல் பாடுகிறீர்கள் .
79பாடல் வரை பாடவைத்து அபிராமி உங்களை சோதித்த வண்ணம் இருக்கிறாள் ...
வெங்காலன் , கூற்றன் உங்கள் மீது பாசக்கையிரை வீச ஆவலாக இருக்கிறான் ...
எப்படி உங்களால் வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்தாதி பாடினீர்கள்.. ??
கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாய் ?
அதுவும் கொஞ்சம் கூட தமிழ் இலக்கண மரபை முறிக்காமல் கட்டளை கலித் தொகை யில் 100 பாடல்களையும் எப்படி பாட முடிந்தது தங்களால் ... ??
அபிராமி பார்த்துக்கொள்வாள் என்று முழுமனதுடன் நம்ப வேண்டும் .
உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் ..
அபிராமி அந்தாதியை நான் இயற்றவே இல்லை ...
79 வது பாடலில் *விழிக்கே அருளுண்டு* என்று என்னை சொல்ல வைத்து விட்டு வானில் போய் முழு நிலவானாள் ... 🌕🌕🌕
பிறகு வந்த பாடல்களும் அவள் வானில் நிலவாய் இருந்து எனக்கு அனுப்பியவை ...
எவ்வளவோ அந்தாதிகள் எனக்கு முன்பும் எனக்கு பின்பும் வந்தாலும் அவள் என்னை பாட வைத்த இந்த திருக்கடையூர் அபிராமி அந்தாதி மார்க்கண்டேயன் போல சிறப்பாக , சிரஞ்சவீ யாக இருக்கிறது... இருக்கும் ..
வாயடைத்துப்போனேன் .. பட்டர் பறந்து சென்றார் என்னை வெண்ணெயாய் உருக்கி விட்ட பின் ... 👣👣👣
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி
வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது
வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து
அஞ்சல் என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.🙏🙏🙏🦚🦚🦚🦜🦜🦜👣👣👣
*குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி*
குரம்பை என்ற சொல்லுக்கு குடல் , குருதி கொழுப்பு இருக்கும் உடல் என்று நேற்று பார்த்தோம் .. உடல் ஒரு குடிசை ... ஆவி அந்த குடிசைக்குள் பிண்டமாய் இருக்கும் கருவுக்குள் நுழைந்து உயிர் தருகிறது ... இதுதான் காலனின் வேலை ...
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி
*வெங்கூற்றுக்கிட்ட*
*வரம்பை அடுத்து மறுகும் அப்போது*
வெங்கூற்றன் என்பது எமனைக்குறிக்கும் ...
இரக்கம் காரூண்யம் பாசம் பற்று இல்லாதவன் ..
எவ்வளவு கெஞ்சினாலும் உயிரை பறிக்காமல் போக மாட்டான் ...
கொடியவன் ஆனால் கடமை தவறாதவன்... 👏👏👏
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி
வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது
*வளைக்கை அமைத்து*
*அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து*
அப்பொழுது தாயே நீ என்ன செய்யவேண்டும் தெரியுமா ?
சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது ..
உன் வளையல்களின் ஒலி விண்ணை பிளக்க வேண்டும் ...
இதோ பார் எமன்!!
உன் மீது விட்ட பாசக்கயிறு .....
அதில் என் சேனை வீராங்கனைகள் பம்பரம் சுழற்றி விளையாடுவதைப்பார் என்று சொல்ல வேண்டும் ..
இனி எந்த கடையிலும் எமனுக்கு பாசக்கயிறே கிடைக்கக் கூடாது ... 👣👣👣
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி
வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது
வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து
அஞ்சல் என்பாய்;
*நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.🙏🙏🙏🦚🦚🦚🦜🦜🦜👣👣* 👣
இசைக்கும் நரம்புக்கும் மிகவும் தொடர்பு உண்டு ..
குழந்தையை தூங்க வைக்க வேண்டுமா ?
இசையுடன் கூடிய தாலாட்டு ...
ஒருவரை தூங்க வைக்க வேண்டுமா ... நீலாம்பரி ராகம் கொண்ட இசை ..
எழுப்ப வேண்டுமா ? பூபாளம் ...
ஒருவரை மேலே வழி அனுப்ப வேண்டுமா முகாரி ...
யாழ் , குழல் நாதஸ்வரம் போன்ற கருவிகளில் தவழ்ந்து வருபவை இசை...
இறைவன் இசை வடிவாய் இருப்பவன் .
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் அவளை *நாதரூபா* என்றும் *நாதஸ்வரூபிணி* என்றும் அறிகிறோம் ..
காம்போதி ராகத்தில் பாடி இமயமலையையும் அதன் தலைவனான ஈசனையும் உருக்கியவன் ராவணன் ...
இங்கே அபிராமியை இசைவடிவாய் நின்ற நாயகியே!
எமனை விரட்டி என்னிடம் "அஞ்சேல் நான் இருக்கிறேன் யார் உன்னை என்ன செய்ய முடியும்?"
என்று சொல்லிக்கொண்டே உன் சக தோழிகளுடன் என் முன் வந்து நில் ... என்கிறார் பட்டர் 🌹🌹🌹🥇🥇🥇🥇🌻🌻🌻🌸🌸🌸
யாழின் நரம்பைப் பொருத்திய கருவியில் இசை வடிவ மாய் எழுந்தருளி நிற்கும் அபிராமித் தாயே!
உடம்பாகிய கூட்டில் குடிபுகுந்துள்ள உயிரானது, பிரமன் குறித்த நாளில் கூற்றுவன் வந்து கவர்ந்து செல்லப்பட உள்ள அந்தவேளையில்,
அரம்பையும் தேவமகளிரும் சூழ்ந்து நின்று சேவிக்கப்படுபவளாகிய நீ,
ஓடோடி வந்து வளையணிந்த உன் அழகிய திருக் கரத்தால் எனக்கு அபயமுத்திரை காட்டி அஞ்சாதே என்று திரு வாய் மலர்ந்தருளி ஆதரிப்பாயாக!🥇🥇🥇👣👣👣
அபிராமி பட்டர் சொல்லி
கேட்டது போல அமைந்துள்ளது
உறைநடை🙏🏻🙏🏻
தாயே அபிராமியே போற்றி🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷
अमावास्या तु सोमेन सप्तमी भानुना सह ।
चतुर्थी भूमिपुत्रेण सोमपुत्रेण चाऽष्टमी ।
चतस्र स्तिथयस्त्वेताः सूर्य ग्रहण सन्निभाः ।
அமாவாஸ்யாது ஸோமேந ஸப்தமீ பாநுநாஸஹ ।
சதுர்த்தீ பூமிபுத்ரேண ஸோமபுத்ரேண சாஷ்டமி ।
சதஸ்ரஸ் திதயஸ் த்வேதா : ஸுர்யக்ரஹண ஸந்நிபா : ।।
புதன் கிழமையும் அஷ்டமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் புதாஷ்டமி புண்யகாலம் , இந்த நாள் ஸூரிய க்ரஹண நாளுக்குத் துல்லியமானது ,
உச்சிபிள்ளையார் திருக்கோயில் வரலாறு.
🙏🏻🙏🏻
.ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே..
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பிடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர் தம்கை
🙏🙏
சோழ வள நாட்டின் கோயில் நகராம் திருக்குடந்தையின் மையப் பகுதியில் அருள்மிகு உச்சிப்பிள்ளையார் திருக் கோயில் அமைந்துள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து இப்பிள்ளையார் அருள்பாலிக்கின்றார்.
அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலின் மேல
வடக்கு திசைநோக்கி இந்திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ், வலி, கவ்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்னும் பதினாறுப் பேறுகளைக் குறிக்கும் வண்ணம் பதினாறு படிக்கற்கள் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்து சென்றால் எண்வகை பாக்கியங்களை நினைவூட்டும் வகையில் அர்த்த மண்டபம் கருவறையில் ஞானத்தின் பேர் உருவாய் அமர்ந்து பிள்ளையார் அருள்பாலிக்கின்றார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், உற்சவ விநாயகர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வலம் வருவதற்குத் கருவறையை திருச்சுற்று அமைந்துள்ளது.
பிள்ளையாரை ஓம் என்னும் பிரணவத்தின் வடிவம். என்பர். பிள்ளையார் தேவர், மனிதர், பூதம், விலங்கு, ஆண்,பெண், உயர்தினை, அஃறிணை என்னும் எல்லாமாய் காட்சியளிக்கின்றார். நான்கு கரங்கள் தேவரையும், உடல் மனிதரையும், யானைத்தலை விலங்கையும், பேழை வயிறும் குட்டைவான பருத்த இருகால்கள் பூதத்தையும், ஒடித்த கொம்பின் பாகம் பெண்டருவையும், நீண்டதந்தமானது ஆண் உருவையும் காட்டுகின்றன. மோதங்களால் நிறைந்திருக்கும் அவர்தம் திருவயிற்றில் அண்ட சராசரங்களே அடங்கி
இருக்கின்றன.
பிள்ளையார் எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல் எருக்கம் பூ இவைகளைக் கொண்டு செய்யக்கூடிய எளிய பூஜைகளையும் பிற பல பொருள்களால் செய்யும் எளிய பூஜைகளையும் ஏற்றுக்கொள்கிறார். மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, எள்ளுஉருண்டை, ஈண்டன், பிட்டு முதலானவை பிள்ளையாருக்குப் பிடித்த நிவேதனங்களாகும்.
பிள்ளையார் வழிபாட்டிற்கு ஏற்ற
நாள் வெள்ளிக்கிழமை. அமாவாசைகழித்து வரும் சதுர்த்தி திதியும். பௌர்ணமி கழித்து வரும் சதுர்த்தி திதியும் பிள்ளையாருக்குச் சிறந்த தினமாகக் கொண்டாடப்படுகின்றன. இந்நாட்களில் வழிபட்டால் துன்பம் நீங்கும் இன்பம் பெருகும். மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு திருமணத் தடை வியாபார நட்டம், எதிரிகளின் அச்சுறுத்தல்
முதலியவற்றை நீக்கும் தகைமையுடையது. வளர்பிறை சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி இந்திருக்கோயிலில் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆவணி அன்றைய திளம் காலைப்பொழுதில் காவிரியில் தீர்த்த வாரியும் இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. தனுர் மாத பூஜை சிறப்பு மிக்கது.
*பாஸ்கர் குருக்கள்*
*96776 23998*
*கும்பகோணம்*
எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்குமுன் அவரை ஸ்மரிக்க வேண்டும்.
“பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.”
ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். “அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?” என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கேட்கிறார்.
(இன்று உலக குழந்தைகள் தினம்)
பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மஹா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.
“பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்ரஹித்த ஸ்வாமிகள், “ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ ?” என்று வினவினார்.
“
“
பெரியவா விடவில்லை. “அது சரி, நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே ?”
“ஒரு வாரம் முன்னாடி, பெரியவா!” – என் தகப்பனார் பதில் சொன்னார். “அதிருக்கட்டும்… இப்போ ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ ?” – இது பெரியவா.
உடனே அருகில் இருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, “இன்னிக்கிக் கார்த்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.
‘
சனிக்கிழமை. பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும், தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: “நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தான் ஜலம் போறது! பெரியவா கிட்ட போய் சொல்லணும்.”
சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தக்ஷணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.
“
“