பச்சைப்புடவைக்காரி -பொள்ளாச்சி 413 -பகையை வெல்லும் 93
*பச்சைப்புடவைக்காரி* 🙏🙏🙏
பகையை வெல்லும் 93
*413* 🏆🏆🏆
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி👍👍👍👌👌👌
1🙏🙏🙏
மூலவர் –
*சுப்பிரமணிய சுவாமி*
அம்மன் –
*வள்ளி, தெய்வானை*
பழமை –
*1000 வருடங்களுக்கு முன் ஊர் –*
பொள்ளாச்சி
மாவட்டம் –
கோயம்புத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
விவசாய வளம் கொழிக்கும் செழிப்பான ஊர் பொள்ளாச்சி.
இவ்வூரின் பெயர்க் காரணங்களை இரண்டு விதமாகக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகளில் பொள்ளாச்சி வாரச்சந்தை பெயர் பெற்ற சந்தையாகும்.
சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவர்.
அப்படிப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் “ *பொருள் ஆட்சி”* என்ற பெயர் ஏற்பட்டு அது நாளடைவில் மருவி “பொள்ளாச்சி” என வழங்கலாயிற்று.
இவ்வூரில் மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்து சோலைகளாக பரிமளித்தது.
சோலைகள் பொழில்கள் என வழங்கப்பட்டன. சிற்றூர்களை வாய்ச்சி என அழைப்பர்.
பொழில்களுக்கு இடையில் அமைந்த வாய்ச்சி “ *பொழில்வாய்ச்சி* ” என வழங்கப்பட்டு நாளடைவில் இப்பெயர் மருவி “பொள்ளாச்சி” என வழங்கலாயிற்று என்றும் கூறுவர்.🥇🥇🥇
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் கொங்கு சுந்தர பாண்டியன், கொங்கு திரிபுவனச் சக்ரவர்த்தி விக்ரமசோழன் ஆகிய அரசர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறியலாம்.
தெற்குச் சுவரில் கொச்சி அரச பரம்பரையைச் சார்ந்த மன்னர் பெரும் படப்பு சொரூபத்தின் ஆறாம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு ஒன்றுள்ளது.
இதில் இக்கோயிலின் பெயர் “ *திருவகத்தீஸ்வர முடையார் கோயில்”* எனக் காணப்படுகிறது.
எனவே இத்தலம் சிவத்தலமாக இருந்திருக்ககூடும் என்ற குறிப்பு உள்ளது👏👏👏
3🌕🌕🌕
கோயில் கிழக்கு நோக்கி ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது.
சிவன் சன்னதி முன்பு இராஜ கோபுரமும், முருகன் கோயில் முன்பு சிறிய முகப்பும் உள்ளன.
கருவறையில் முருகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராய் அருள்பாலிக்கின்றார்.
முருகன் மயில் மீது ஒரு முகத்துடன் நான்கு கரங்களுடன் உள்ளார்.
சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் பின் கைகளில் சக்தி ஆயுதமும், வச்சிரமும் இருக்க, முன் கைகளில் அபய வரத முத்திரை காட்டி காட்சி தருகிறார்.
மயிலின் தலைப்பகுதி இடப்புறமாக இருப்பதால் இது தேவ மயில் எனப்படும். திருவாச்சி, மயில் மற்றும் முருகன் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும்.
தேவியர் இருவர் கரங்களில் ஒரு கரத்தில் மலர் தாங்கி மற்றொரு கரம் கை கத்ய வலம்பித முத்திரை காட்டிட உள்ளனர்.
கருவறையின் கல்நிலவுப் பகுதியில் எதிரெதிரே இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
அவை இக்கோயிலைக் கட்டிய சுந்தரபாண்டிய மன்னனும் அவரது மனைவியும் எனக் கூறப்படுகிறது.
மகா மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மையின் ஐம்பொன்சிலைகள் காட்சியளிக்கின்றன.🙏🙏🙏
இராமர் சீதை திருவுருவங்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் இராம நவமியன்று தங்கக் கவசம் சாத்தி, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சிற்பக் கலை நயத்தையும், கலை நுட்பத்தையும் பிரதிபலிக்கின்ற அம்சங்கள் இம் மண்டபத்தில் நிறைய இடங்களில் காணப்படுகின்றன.
கோயிலுக்கு எதிரே உள்ள மேல் விதானத்தில் தாமரை மலருடன் கூடிய பன்னிரண்டு ராசி சிற்பங்களைக் காணலாம்.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழியின் சிற்பம் அழகு வாய்ந்தது.
இதன் வாயில் தொங்கும் மூன்று வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
சிவ சன்னதியின் சுற்றில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர், விநாயகப் பெருமான், பைரவர் சன்னதிகளும் உள்ளன.
பொள்ளாச்சி முருகன் மும்மணிக் கோவை, கந்தன் பிள்ளைத் தமிழ், பொள்ளாச்சி சுப்பிரமணியர் இரட்டை மணிமாலை ஆகிய நூல்கள் இம்முருகன் புகழ்பாடும் பாடல்களைக் கொண்டவையாகும்.🥇🥇🥇
முருகன் சன்னதிக்குத் தென்புறம் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன.
இச் சன்னதிகளுக்கு முன்பு இருபத்து நான்கு தூண்களைக் கொண்ட திருமண மண்டபம் உள்ளது.
இம்மண்டபத்தில் உள்ள நுணுக்கமான அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், இலிங்கத்தின் மீது பால் சொரியும் பசு,
கண்ணப்ப நாயனார், பார்வதி கல்யாணம், மார்கண்டேயன், முருகன், விநாயகர் மற்றும் தசாவதார சிற்பங்கள், ஈசன் சன்னதி முன்புள்ள தூண்களில் துல்லியமாக வடிக்கப்பட்டுள்ளன.
அம்மன் சன்னதி முன்பு உள்ள தூண்களில் சரஸ்வதி, லட்சுமி, காமாட்சியம்மன், காளி, மாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர், கோவர்த்தனகிரிதாரி, இராமர், சீதை, அனுமன், காளிங்க நர்த்தன கண்ணன் சிற்பங்களை வடித்துள்ளனர்.👏👏👏
*திருவிழா* :
சூரசம்ஹார சஷ்டி பெருவிழா, இராம நவமி, வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, பிரதோஷம்
*வேண்டுகோள்* :
துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகுகால பூஜை நடத்தினால் தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
*நேர்த்திக்கடன்* :
சுவாமிக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
அம்மா அதி சுந்தரம் .. சிரித்துக்கொண்டே நான்மாடக்கூடல் சென்றாள் நான்முகனை பெற்ற நாயகி ...🙏🙏🙏
743 பாபாரண்ய தவானலா -
ஒரு அருமையான நாமம் இது.
பாபக் காட்டுத்தீ. பாபங்களை சுட்டெரிப்பவள்.
பாபநாசினி என்கிறோமே .அது !!
*744* *தௌர்பாக்யதூல வாதூலா-*
துரதிஷ்டம் என்ற இலவம்பஞ்சை சூறாவளிக்காற்றாக பறக்கவிடுபவள் அம்பாள் என்ற நாமம்.
நமது பூர்வ ஜென்ம வினைப்பயன் தான் பஞ்சு மூட்டை இங்கே. 💐💐💐
=========👌👌👌👌👍👍👍😊😊😊💐💐💐==
Comments
அம்பாளுக்கு சாமுண்டி என்று ஒரு பெயர் உண்டு எண்டு அறிவோம்.
மைசூரில் சாமுண்டேஸ்வரி ஆலயம் செல்கிறோம்.
சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை வதம் செய்து இந்த பெயர் பெற்றாள்.
மார்கண்டேயபுராணத்தில் (தேவி பாகவதம்) (84.25) சண்டிகா தேவி காளியைப் பார்த்து ''நீ சண்ட முண்டர்களை வதம் செய்ததால் இனி உலகம் உன்னை சாமுண்டி என்று உணரும்'' என்று உரைத்ததாக சொல்கிறது.
சாமுண்டி சப்த மாதாக்களில் ஒருவள்.🙏🙏🙏
*பாடல் 42*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
அன்னையின் தனங்களின் அருமையை விளக்கும் பாடல் ..
அவர் உண்மையில் தனங்களை விவரிக்க வில்லை அந்த தனங்கள் சுரக்கும் ஞானத்தைப் பற்றி பாடுகிறார் ..
பரஞானம், அபரஞானம் என ஞானம் இரு வகைப்படும்.
பிரபஞ்சம் அல்லது இயற்கையைப் பற்றிய ஞானத்திற்கு அபரஞானம் என்று பெயர்.
மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்திற்குப் பரஞானம் என்று பெயர்.
வேதங்கள், ஆகமங்கள், பௌதிக விஞ்ஞானம் ஆகிய அனைத்தும் அபரஞானத்தைச் சேரும்.
ஐம்பொறிகளின் மூலம் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெறுகிற ஞானம் அபரஞானம் ஆகும்.
ஐம்பொறிகளுக்கும் அப்பால் உள்ளதைத் தெரிவிக்கின்ற ஞானம் பரஞானம் ஆகும்.
அபரம் என்றால் கீழானது. பரம் என்றால் மேலானது.
பெருமாளின் திருவடியிலேயே வாழ்நாள் கழித்த ஆழ்வார் பெருமக்கள் ஞானம் என்பதே இறைவனை நாடும் அறிவுப் பயணம்தான் என்று கூறியுள்ளனர்.
பொய்கையாழ்வார், தத்துவ ஞானத்திலிருந்து எவ்வாறு பர ஞானம் உருவாகிறது என்றும்,
பூதத்தாழ்வார், பர ஞானம் எவ்வாறு பர பக்தியாக மலர்கிறது என்றும்,
பேயாழ்வார், பரபக்தி எவ்வாறு பரம பக்தியாக நிறைகிறது என்றும் நிகழ்த்திக் காட்டினர்.
ஞானம் என்றால் என்ன என்பதை விளக்குவது கடினமாகவே உள்ளது.
ஆனால் அதை அடையப்பெறுவது எளிதானது என்றே தோன்றுகிறது.
அதுதான் இறைச் சிந்தனையில் மனத்தைச் செலுத்துவது.
அப்படி நம் மனத்தைச் செலுத்தும் திறம் நம்மிடம் வசப்பட்டு விட்டால் நமக்கு ஞானம் நிச்சயமாக வாய்த்துவிடும்.
இந்த ஞானத்தை நமக்கு பாலாக கொடுப்பவள் அம்பாள் ... அதையே இங்கு அழகாக சொல்கிறார் பட்டர் .
உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும்.
உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.
கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.🙏🙏🙏
இடம் கொண்டு விம்மி,
இணைகொண்டு இறுகி,
இளகி,
முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு,
இறைவர் வலிய நெஞ் சை
நடம் கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி
நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி
வேதப்பரிபுரையே.🙏🙏🙏
*இடம் கொண்டு விம்மி,*
அபிராமி ஈசனின் இடப்பாகத்தில் இடம் பெற்றுள்ளாள்... அவள் நமக்காக கவலை பாடுகிறாள் .. இவ்வளவு பெருத்த தன பாரங்கள் இருந்தும் ஞானம் வேண்டும் என்று என் குழந்தைகளில் ஒன்று கூட கேட்டவில்லையே என்ற சோகம் துக்கம் அவளை வாட்டுகிறது ... விம்முகிறாள் அழுகிறாள் வேதனை படுகிறாள் ...
இடம் கொண்டு விம்மி,
*இணைகொண்டு இறுகி,*
*இளகி* ,
அந்த தன பாரங்கள் இணையாக இறுகி தன் குழந்தைகளுக்காக இளகி இருக்கிறதாம் .. அம்பாள் இரண்டு விதத்தில் கஷ்டப்படுகிறாள்
ஒன்று ஞானம் வேண்டும் என்று கேட்டு பெற ஒருவரும் முன் வருவதில்லை ...
மண் தரும் செல்வம் தான் வேண்டும் என்று நாம் பிடிவாதமாக இருக்கிறோம் ...
ஞானம் யாரும் கேட்க்காததால் அது இரு பக்கமும் கட்டிக்கொண்டு தாங்கொணா வலியை தருகிறது .
இரண்டாவது... பாரம் தாங்காமல் அவள் இடை எப்பொழுது வேண்டுமானாலும் உடையும் போல் இருக்கிறது ...
அம்பாள் படும் கஷ்டங்களுக்கு முன் நம் துயரங்கள் ஒன்றுமே இல்லை ..
இவ்வளவு வலி வைத்துக்கொண்டும் அவள் சிரித்தவண்ணம் மகிழ்ச்சியாக நித்ய த்ருப்தாவாக இருக்கிறாள் .
என்ன ஓரு அதிசயம் !!👌👌👌
இடம் கொண்டு விம்மி,
இணைகொண்டு இறுகி,
இளகி,
*முத்து*
*வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு,*
அவள் தன் மலை போன்ற தனங்களின் மீது என்றும் தவழும் முத்து மாலையை அணிந்துள்ளாள் .. 🙌🙌
இடம் கொண்டு விம்மி,
இணைகொண்டு இறுகி,
இளகி,
முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு,
*இறைவர் வலிய நெஞ்சை*
*நடம் கொண்ட* *கொள்கை*
*நலங்கொண்ட நாயகி*
இறைவனது கடினமான ஸ்திரமான ஞானமயமான நெச்சை ஆனந்த நடம் செய்யும் படி செய்து குழைந்து உருகி என் குழந்தைகளுக்கு நலம் மட்டுமே செய்வேன் என்று உறுதியாக இருப்பவள் அபிராமி 🙌🙌🙌
இடம் கொண்டு விம்மி,
இணைகொண்டு இறுகி,
இளகி,
முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு,
இறைவர் வலிய நெஞ் சை
நடம் கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி
*நல்லரவின்*
*படங்கொண்ட அல்குல்*
*பனிமொழி*
*வேதப்பரிபுரையே.* 🙏🙏
அவள் இடை நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதைப்போல் மெலிந்து நலிந்து உள்ளது ..
அவள் சொற்கள் பனியின் குளிமை கொண்டவை அவள் வேதப் பரிபுரை அதாவது வேதத்தை காப்பவள் ... நான்கு வேதங்களும் அவள் வீற்றிருக்கும் சிம்மாசனத்தில் கீழ் படிக்கட்டுகள் என்றாவது ஒரு நாள் அன்னை நடக்கும் போது அவள் திருவடிகள் தங்கள் மீது படாதா என்று ஏங்குகின்றனவாம் ..
ஆனால் ஒரு பக்தன் அம்மா என்று மனமுருகி கூப்பிட்டாலும் ஒரே பாய்ச்சலில் தாவி செல்வதால் இன்று வரை அந்த வேதங்கள் மீது அவள் திருவடிகள் பதியவே இல்லையாம் 👣👣
அளவில் பரந்து பருத்தனவாயும் ஒன்றோடொன்று இணை யாய்க் காணப்படுவனவாயும் தளர்ச்சியின்றிச் செழித்தும் குழைந் தனவுமான கொங்கைகளாகிய மலைகளின் மீது அழகிய முத்து மாலையை அணிந்தவாறு,
ஈசனின் வன்மை மிகுந்த நெஞ்சத்தைத் தாம் எண்ணியபடியெல்லாம் ஆட்டி வைக்கும் உறுதியையும்
அதற் கேற்ற பேரெழிலையும் படைத்த தேவி,
நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையும், இனிமையான வாய்ச்சொற்களையும் வேதமாகிய சிலம்பையும் உடையவ ளாவாள்.🦜🦜🦜🦚🦚🦚
இதில் கருத்துக்கள் அருமை
அபிராமவல்லியே🌷🌷🙏🏻🙏🏻
*பதிவு 984*🥇🥇🥇🏆🏆🏆
*US 976*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
40 வது ஸ்தபகம்
சத்வாரிம்ஸ ஸ்தபக
தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌
🦚🦚🦚🥇🥇🥇
என்ற தத்துவத்தை கவி உணர்த்துகிறார் .. இதற்கும் மேல் விளக்கம் சொல்வது கடினம்
ஸமயது பாபம் தமயது துகம்
ஹரது விமோஹம் ஸ்புடயது போதம்
ப்ரதயது சக்திம் மந்தம் ஹஸிதம்
மனஸி ஜஸாஸன குலஸூத்ருஸோ ன 🦜🦜🦜
*பதிவு 402*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
76
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
காமாக்ஷி தாவக கடாக்ஷக கமதேனோ
ஸம்பர்க்க ஏவ கதமம்ப விமுக்தபாச
பந்தா ஸ்ஃபுடம் தனுப் ருத பசுதாம் த்யஐந்தி 🦚🦚🦚
*ராமநவமி*
*பிரார்த்தனை*
மனைவிக்கு துரோகம் செய்பவன் அழிந்து போவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் பாடம்.
*மனைவியை நேசித்தல் ராமனை தினமும் துதிப்பதற்கு ஒப்பாகும்.*
பெண்களும் கோபப்படாமல் சீதாதேவி போல் பொறுமையாக இருக்க வேண்டும்.
*நேர்த்திக்கடன்*
ராமனுக்கு மிகவும் பிடித்த துளசிமாலையை அணிவித்து அவரை வழிபடலாம்.
ஸ்ரீராமஜெயம் எழுதுவதோ, ராம நாமத்தை உச்சரிப்பதோ எவ்வளவு பெரிய பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.
*பொது தகவல்*
ஒரு பெண் அழுதால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்.
ஆனால் ஒரு ஆண் அழுதால் அதற்கு காரணம் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் என்பதை தெளிவாக எடுத்துக்கூறும் கதை ராமாயணம்.
அதனால் தான் ராமாயணத்தை படித்தாலே புண்ணியம்.
ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலே புண்ணியம் என்கிறோம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
இப்படி மாலியவான் சொன்னவுடன், அப்புறத்தில் இருந்த மகோதரன் விரைந்து வந்து, தீப்பொறி பறக்க "நீ சிறுமை தரும் சொற்களைப் பேசுகிறாய். போதும் நிறுத்து" என்று அடக்கிவிட்டு இராவணனுக்கு நடைபெறமுடியாத உறுதிமொழிகளைக் கூறுகிறான்.
க்ஷரம் அக்ஷரம் என்றால் வார்த்தை, எழுத்துகள்.
எழுத்துக்களின் கோர்வை தான் வார்த்தை.
அம்பாள் தான் சப்த பிரம்மம்.
எல்லா சப்தத்துக்கும் காரணம்.
தேவி உபநிஷதத்தில் (9.6) ஒரு ஸ்லோகம்:
மந்த்ராணாம் மத்ருகாதேவி சப்தானாம் ஞான ரூபிணி'' (मन्त्राणां मतृकादेवी शब्दानां ज्ञान रूपिणी) என்று வரும்: மத்ருகா என்றால் முழுமுதல், ஆதாரம்.👍👍👍
ஆனால் அதுதான் கருணை மிகுந்த அவதாரம் என்கிறார்கள் ஞானிகள்.
பிரகலாதனுக்குப் பல்வேறு துன்பங்களைத் தந்தான் அவன் தந்தையான இரண்ய கசுபு.
அத்துன்பங்களில் எல்லாம் உடன் இருந்து அவனைக் காத்துவந்தார் பகவான் விஷ்ணு.
ஒரு கட்டத்தில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து யுத்தம் ஏற்பட்டது.
‘பகவான் எங்கிருக்கிறான்?’ என்று கேட்டான் இரண்ய கசுபு.
பிரகலாதனோ ‘இறைவன் இந்தப் பிரபஞ்ச வடிவானவன். தூணிலும் துரும்பிலும் நிறைந்திருப்பவன்’ என்று பதில் சொல்கிறான்.🦁🦁🦁
அதனால் இந்த உலகின் அனைத்துத் துகள்களிலும் அந்தக் கணத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்கின்றன ஞான நூல்கள்.🦁🦁🦁
அதாவது வென்றது நரசிம்மரின் வலிமை என்பதை விட தோற்றது இரண்யன் அல்லது அதர்மம் செய்பவனின் கருத்து என்பது மிகவும் பொறுந்தும் என்பார்கள்.
நம் வாழ்விலும் நாம் நல்ல கருத்துகளை உறுதியாக நம்புவோம் என்றால் அதனால் பிரகலாதனுக்கு ஏற்பட்டதைப்போலப் பல துன்பங்கள் நமக்கு ஏற்படலாம்.
ஆனால் முடிவில் இறைவனின் அருளால் நன்மையான கருத்துகளே வெற்றிபெறும் என்பதை விளக்கும் அவதாரமாகவே நரசிம்ம ஜயந்தி விளங்குகிறது.🦁🦁🦁
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
என்னும் ஸ்லோகத்தை நாள் முழுவதும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் சொல்வது நல்லது.
மாலையில் நரசிம்ம சுவாமி அல்லது பெருமாள் படத்துக்கு துளசி சாத்தி, பானகம், நீர்மோர் ஆகியன நிவேதனம் செய்வது விசேஷம்.🦁🦁🦁
ஆரோக்கியம் மேம்படும். இந்த கொரோனா காலத்தில் நம் அனைவருக்கும் தேவை நல் ஆரோக்கியம்.
அந்த ஆரோக்கியத்தை நரசிம்ம சுவாமி அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.🦁🦁🦁
*பாடல் 43*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
முமலங்கள் யாவை ... வள்ளலார் சொல்வதை பார்ப்போமா ?
*ஆணவம், மாயை, கன்மம்.*
ஆன்மா என்னும் ஒளியை, ஆணவம் ,மாயை ,
கன்மம் என்னும் மும்மலங்கள் மறைத்துக் கொண்டு உள்ளதால் ,
உண்மையான கடவுளை அறிய முடியவில்லை என்கிறார்கள்.
ஆன்மா தானே எங்கும் செல்லாது ,...
அதை அழைத்து செல்வதற்கு '' *ஆணவம்* ''என்னும் ஒரு மனைவியை,..
இயற்கையே கட்டிவைத்து,
அதன் துணையுடன் உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது .
அதனால்தான் ஆணவம் செயற்கை அல்ல ,ஆணவம் இயற்கை என்கிறார் வள்ளலார் .
'உதாரணம்;-- ..ஒரு
பெண் திருமண வயது வந்தவுடன்,அந்த பெண்ணுக்கு தகுந்த கணவனை தேர்வு செய்து ,திருமணம் செய்து கணவன் வீட்டிற்கு ,தாய்,தந்தையார் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள் .
அனுப்பும் போது மணப் பெண்ணை சும்மா அனுப்புவ தில்லை ,
அந்த பெண்ணுக்கு தேவையான ,ஆடை,...ஆபரணங்கள் ,....தேவையான பணம் போன்ற சீர் வரிசை... ,அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் .
அதேபோல் ஆன்மாவுக்கு ஆணவம் என்னும் மனைவியை மணம் முடித்து (கட்டிவைத்து) ,''அருள் அமுதம்'' என்னும் பொருளை ''ஆன்மா என்னும் பெட்டியில் ''வைத்து மகிழ்ச்சியுடன் ஆண்டவர் அனுப்பி வைக்கிறார் .👏👏👏
பிரம்ம ராட்ஷசி, பேய் போல் பிடித்துக் கொண்டாள் .
சிவபூராணத்தை சிறிதும் காட்டாள்,..
ஜெகமேனும் ஏக தேசமும் தெரிய விடாமல் இருக்காள் .
எவ்விடத்து இருளும் என்னுடைய அகம் என்னும் உண்மையை,...சுவர்போல் கட்டிக் கொண்டாள் .
நனவில் தான் காட்டமாட்டாள் என்றால் ,கனவிலும் இருள் போல் மறைத்துக் கொண்டாள் .மிகவும் கொடியவள் .
இரவு எது ?,....பகல்எது ?,...இன்பம் எது ?,...துன்பம் எது?...ஒளி எது ?..வெளி எது ? என ஒன்றும் தெரிய விடாமல் ,இறுக்கும் அரக்கி,...இவளோடும் இருந்து வாழ்ந்து கொண்டு உள்ளேன் .
எளியேனால் என்ன செய்ய முடியும் .?
அவள் மயக்கத்தில் என்னை இழந்தேன் .
ஆணவத்தின் முதல் பிள்ளை ! *அஞ்ஞானம்* !
அஞ்ஞானம் என்னும் ஒரு மூடப் பிள்ளையைப் பெற்றுக் கொண்டேன்.
அவன் எனக்குத் துணையாக இருப்பான் என்று நினைத்து அன்போடு அரவணைத்து ஆசையோடு வளர்த்தேன் .
அவனோ சூரியனை மறைக்கும் கரு மேகங்கள் போல்,என்னுடைய அகக் கண்ணையும் ,புறக் கண்ணையும்,அவன் கைகளாலே முடிக் கொண்டான் ...தன்னையும் காட்டாமல் ,என்னையும் நான் பார்க்க முடியாமல் மறைத்துக் கொண்டான் .😨😨
என்னுடைய தவிப்பைப் பார்த்து இடண்டாவது மனைவியாக, என்னை தானாகவே வந்து திருமணம் செய்து கொண்டாள் .
அவள் தான் *மாயை* என்பவளாகும் .
எனது இரண்டாவது மனைவி ;--மாயை !
இங்கு வந்ததும் ஆணவம் என்னும் மனைவியையும் ,அவளுக்கு பிறந்த அஞ்ஞானும் என்னும் பிள்ளையையும் இங்கு வந்த உடனே .மறந்து விட்டேன் .
இரண்டாவது மனைவியாக மாயையைத் திருமணம் செய்து கொண்டேன் .👆👆
அவளுக்கு பிறந்தது நான்கு குழைந்தை களாகும் .
முதல் பிள்ளை ;-- *மனம்* என்னும் பெயராகும் ....இரண்டாவது பிள்ளை ;-- *புத்தி* என்னும் பெயராகும் .மூன்றாவது பிள்ளை ;-- *சித்தம்* என்னும் பெயராகும் ....நான்காவது பிள்ளை ;--- *அகங்காரம்* என்னும் பெயராகும் .
இந்த நான்கு பிள்ளைகளும் எனக்கு கொடுக்கும் தொல்லைகள் அளவில் அடங்காது .😰😰
அந்த *தேகம்* பெருமாயை என்னும் பெண்ணிடத்தில் ,தின வாடகைக்கு வாங்கி குடி இருக்கிறார்கள் .
அதற்கு குடிக்கூலி வீடு ;-- *தேகம்* என்பதாகும் .
ஆன்மாவின் குடிக்கூலி வீடு ;-- தேகம் ...
ஆன்மா வாடகை வீட்டில் வாழாமல் .ஆன்மா தனக்கு என சொந்தமான ஒளிதேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே இவ்வுலகத்தை விட்டு வெளியே செல்லமுடியும் .
இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு பெருமாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு உடம்பு என்பதாகும் .
உயிர் இல்லாமல் வாழ வேண்டுமானால் உயிர் எடுக்காமல் இருக்க வேண்டும் .
ஆன்மா வாழ்வதற்கு ஒளி தேகம் எடுத்தால் தான் வாடகை கிடையாது ,
ஆன்மா வாழ்வதற்கு ஒளிதேகம் எடுப்பதே சொந்த வீடு என்பதாகும் .
ஆன்மாவில் இருந்து உயிர் வருவதற்கு ...உருவம் உள்ள பஞ்ச பூத தேகம் எடுத்து வாழ்ந்து கொண்டு வருகிறது ...
இதை மாற்ற வேண்டுமானால் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் அமுதத்தை அறிந்து அதை ....ஜீவர்களின் அன்பால் ..தயவால் ...
கருணையால் மோட்ச வீட்டின் திறவுகோலைப் பெற்று ,....இறைவன் கருணைக் கொண்டு மேல் வீட்டின் கதவைத் திறந்து,அருள் அமுதை உண்டு ,சுத்த தேகம் ...
பிரணவ தேகம் ...ஞான தேகம் ...என்னும் ஒளிதேகத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டுமே ...ஆணவம் ...
மாயை ...கன்மம் ...என்னும் கூண்டில் இருந்து வெளியே வரமுடியும் .🙌🙌🙌
பரிபுரச் சீறடி!
பாசாங் குசை! பஞ்ச பாணி!
இன்சொல்
திரிபுர சுந்தரி
சிந்துர மேனியள்
தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை
அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.🥇🥇🥇
பரிபுரச் சீறடி!
*பாசாங் குசை! பஞ்ச பாணி!*
எமனும் காமனும் தீவிர வாதிகள் .. அம்பாளை சரணடைந்த பின் அவர்களின் ஆயுதங்களை அம்பாளிடம் ஓப்படைத்து விட்டனர் . இன்னொருவர் கொடுத்த மலர் செண்டை நம் கையில் வைத்திருப்பதைப்போல அவளும் அந்த ஆயதங்களை கையில் வைத்துள்ளாள்.. அவள் விலை கொடுத்து வாங்கியவை அல்ல இவைகள் ..
பாசம் , அங்குசம் , கரும்பு எனும் வில் , மலர்கனைகள் ..சூலம்
மன்மதன் இனி எனக்கு வாகனம் வேண்டாம் என்று அம்பாளிடம் ஒப்படைத்த கிளி 🦜👏👏👏
பரிபுரச் சீறடி!
பாசாங் குசை! பஞ்ச பாணி!
*இன்சொல்*
*திரிபுர சுந்தரி*
அவள் வாயிலிருந்து வரும் சொற்கள் பண் இசைக்கும் கருவிகளைப்போல இருக்கும் . சொற் பரிமள யாமல பசுங்கிளி அவள் .. கலை வாணியின் வீணை கச்சபியை மூடச் செய்தவள் .. *யாழினை பழிக்கும் அம்பிகை* என்றே ஒரு திருநாமம் உண்டு அவளுக்கு 🙌🙌🙌
பரிபுரச் சீறடி!
பாசாங் குசை! பஞ்ச பாணி!
இன்சொல்
திரிபுர சுந்தரி
*சிந்துர மேனியள்*
அவள் சிவந்த நிறம் கொண்டவள் என்று முதல் பாடலில் பார்த்தோம் ..
கோடி செண்பக பூக்களை அரைத்து அதில் அண்டா ஆயிரம் கொண்ட குங்கமப்பூவை குழைத்து
சுகந்தம் , பரிமளம் கோடி கசக்கி பிழிந்து ஒரு குழம்பாக்கினால் வரும் சிவப்பு அவள் மேனி 🦚🦚🦚
பரிபுரச் சீறடி!
பாசாங் குசை! பஞ்ச பாணி!
இன்சொல்
திரிபுர சுந்தரி
சிந்துர மேனியள்
*தீமைநெஞ்சில்*
*பரிபுர வஞ்சரை*
நீங்கள் தீமைகள் செய்யாதவர்களாக இருக்கலாம்
ஆனால் மனதில் இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்க தொடங்கினாலேயே உங்களுக்கு அசுரத் தன்மை வந்து விடும் .
எல்லா அசுரர்களும் தவம் கோடி செய்து கோடி தவங்கள் பெற்று அவைகளை சரியான வழியில் உபயோகப் படுத்தாமல் அழிந்து போனார்கள் ...
அப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் நம் மனதில் தோன்றினால் அம்பாள் என்ன செய்வாள் தெரியுமா ? 👌👌👌
பரிபுரச் சீறடி!
பாசாங் குசை! பஞ்ச பாணி!
இன்சொல்
திரிபுர சுந்தரி
சிந்துர மேனியள்
தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை
*அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை*
*எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.🥇🥇🥇*
திரிபுரத்தை எரித்த தீ வண்ணனின் சிவந்த பாகத்தில் பாதியாய் இருப்பவள் அந்த கெட்ட எண்ணங்களை திரிபுர சுந்தரியாய் வந்து எரித்து விடுவாள் ..
நம் மீது அவ்வளவு கருணை பாசம் ...
இந்த குழந்தை ஒரு அசுரனாக ஆகி விடக்கூடாதே என்பதில் 🥇🥇🥇👏👏👏
நெஞ்சில் தீய எண்ணங்களைக் கொண்டு தேவர்களு க்குத் தீமை செய்ய எண்ணித் திரிபுரத்தில் உள்ள அசுரர்களை அச்சுறுத்த எண்ணி, வளைத்த மேருமலையாகிய வில்லை யேந்திய திருக்கரத் தையும், நெருப்பைப் போன்று சிவந்த திரு மேனியையுங் கொண்ட ஈசனின் இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அபிராமி
சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும், பாசாங்குசத்தையும் உடையவள்.
ஐந்து மலர்ப்பாணங்களைக் கையில் ஏந்தியவள்.
இனிய
வார்த்தைகளையுடைய திரிபுர சுந்தரி.
சிந்தூரம் போலச் சிவந்த திரு மேனியையுடையவள்.🙌🙌🙌
ஜோதிடர் சொன்ன
"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்…
ஒன்னும் பிரயோஜனம் இல்லை.
எதுவும் நடக்கலே..
இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –
பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை களின் பேரிலும் அல்லது தோஷங்களுக் காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.
நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.
அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.
மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி,
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து
“ஐயோ… அம்மா”
என்ற குரல் கேட்டது.
ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே…
யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.
“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே”என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும்.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்து விடுங்கள்.
நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை.
அறியாமல் நடந்த தவறு இது.
போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்….”
அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.
தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.
“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன்.
நான் தண்டிக்கப் படவேண்டியவன்.
பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.
நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான்.
இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்..”
என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.
அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது?
செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்….
“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?
நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர் கள் சரி தானே?
நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?
அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே
எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்…
“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.
அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை.
நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது.
அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மை யாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார்.
அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.
ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.
அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.
மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது…
எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.
ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந் தன்மையா?
இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.
இந்த கதை கூறும் நீதி.
நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.
அந்த விறகுவெட்டி தான் இறைவன்.
இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.
பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்,
ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது.
ஆனால்,
இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று,
ஆண்டவா,
மனதுக்குள் வேறு எந்த சிந்தனையு மின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து,
அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இது போல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன்.
இந்த ஒரு முறை மன்னித்து விடு !
என உளமுருகி மன்றாடி கேளுங்கள்.
ஆண்டவன் முன் நீங்கள் கண்
மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான்.
கருணை புரிவான். நீங்கள் இதை உணர்வு பூர்வமாக பெற்று விடுவீர்கள்.
இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.
ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம்,
அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம்
என்பது இங்கே மிகவும் முக்கியம்.
நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.
நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி…
செய்த பாவத்திற்கு மனம் திருந்தி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு பரிகாரம் என்பது கிடையாது.
மனம் வருந்தாமல், சிறு நெருடல், உறுத்தல் கூட இல்லாமல் செய்யும் எந்த பரிகாரமும் பாகற்காயை போன்றே தன்மை
மாறாது.
மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்…
உடனடி பலன் நிச்சயம்.
(வாட்ஸ்அப் குரூப்)
மஹாபெரியவாளின் பிடி அரிசி மகாத்மியம்.
பிடியரிசி வந்திருக்கேன்....
பிடியரிசி போட்டு வைத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்று அவர் கொண்டுவந்த பக்கெட் டில் போட்டுவிட்டு நகர..
சார் ஒரு நிமிஷம்...
நான்திரும்பிப் பார்த்தேன்..
எனக்கு இதெல்லாம் ஒத்துவராது... இருந்தாலும் முதன்முதலில் நிராகரிக்க வேண்டாம் என்று அவருடன் சென்றேன் .
எல்லாம் அடுக்குமாடி வீடுகள். இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்று.,...
ஒவ்வொரு வீட்டிலும் என்னை அறிமுகப்படுத்தி இவர்தான் அடுத்த மாதத்திலிருந்து வருவார் என்று ஒரு போடு போட்டார்...
அடுத்த மாதம்
ஒவ்வொரு வீடு வீடாக...
பிடியரிசி வந்திருக்கேன்.
அடுத்த வீடு. மூன்றாவது மாடி
பிடியரிசி வந்திருக்கேன்...
ஒரு நிமிஷத்தில் ஓடிவந்து அரிசியை போட்டுவிட்டு...
என் மீது மனிதநேயத்துடன் ஒரு பார்வை...
மற்றொரு வீடு
யார் நீங்க.. அரிசி எல்லாம் கிடையாது என்று கர்ஜனை குரலில் கூறி கதவை மூட...
உள்ளே இருந்து ஓடி வந்த மாமி, அவர் பிடியரிசி மாமா, புதுசா நம்ம வீட்டுக்கு வரார்.. என்று சொல்லிக்கொண்டே அரிசி கொண்டு வந்தாள்.
...ஏண்டி, மாமா ஆபீசும் போய், இந்த சேவையும் செய்யறார்...
பின்னே, உங்கள மாதிரி வீடு ,ஆபீஸ்,.. ஆபீஸ் ,வீடு என்று இருந்தா உலகமே தெரியாம போயிடும்,
நாலு வீட்டுக்கு போனாத்தான் உலக நடப்புக்கள் புரியும்.
என் மூளையில் பிசகி இருந்த இரண்டு நரம்புகள் டக்கென்று விடப்பட்டன.
மற்றும்
பிடியரிசி வந்து இருக்கேன்...
என்ற மந்திரச்சொல்
வேத பாடசாலை குழந்தைகள் ஆதிசங்கரர் மாதிரி வீடு.. வீடாகவா போகமுடியும் .. ஏதோ, நீங்க வந்து பிக்ஷை அரிசியை வாங்கிண்டு போறீங்க என்று சொல்லிக்கொண்டே அரிசியை அந்த மாமி போட்டாள்.
தன் பேச்சில் எனக்குள் ஆதிசங்கரரை நினைவு படுத்தினாள்
நான்கு மாதங்களில்
பிடியரிசி வீடுகள் 15 லிருந்து 30 ஆக மாறின.
நான் பிடியரிசி வந்திருக்கேன்....
உங்கள் முன்னோர்கள் வேதம் படித்த புண்ணியம் உங்களை மகா பெரியவா எப்படி இந்த கைங்கர்யத்தில் இழுத்து விட்டிருக்கிறார் பார்த்தீர்களா, என்று சொல்லி அட்டகாசமாக சிரித்துக்கொண்டே பிடி அரிசியை போட்டார்.
என் இதயத்தில் இருந்த பனிப்பாறை இரண்டாக உடைந்து உருகி ஓடியது.
கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை பார்த்தாள், எனக்கும் ஒரு துண்டை விரித்துப் போட்டு வேதத்திற் காக பிச்சை எடுக்கலாம்னு தோணுது,.....
பெரியவா சொன்ன இந்த வார்த்தைகள் என்னை வெகுவாக பாதித்தது.
அந்த வீட்டின் பெயர்
ஸ்ரீ ஸ்ரீ பெரியவாள்
பிடியரிசி வந்து இருக்கேன்.....
கதவைத் திறந்த அந்தப் பெண்மணி ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசியை கொண்டு வந்து போட்டார்கள். கீழே விழுந்து அந்த அரிசி பக்கெட்டிர்க்கு நமஸ்காரமும் செய்தார்.
இதைப்போல் காண்பது எனக்கு முதல் தடவை.
அண்ணா இந்தப் பிடி அரிசியை , மகா பெரியவரே போட்டிருக்கார்.. இந்த குடும்பம் மகாபெரியவரின் பூர்வாசிரமத்தில் வழிவந்த குடும்பம்.. அதனால் உங்களுக்கு போட்ட பிடியரிசி மகா பெரியவாள் தான் போட்டது... என்று சொல்ல ...அந்த தம்பதிகளை அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்
மகா பெரியவாள் தான் பிடியரிசி போட்டிருக்கிறார் என்ற குரல் மட்டும் இன்றுவரை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இன்று 31வது வருடம்
ஆரம்பம். பிடியரிசி வளர்ந்துகொண்டே இருக்கிறது.
சங்கர் திரிவேதி
944 53 19 632
ஆசார்யரிடம் வஸித்து, வித்தையை அப்யாஸம் பண்ணுவதற்கு ‘குருகுலவாஸம்’ என்று பெயர். ‘ஆசார்ய குல வாஸம்’ என்றில்லை. இதைப் பார்த்தால் ஆசார்யர், குரு இரண்டும் ஒன்றேதான் என்று தோன்றும். ஜகத்குரு சங்கராசார்யார் என்பதால் ஒருத்தரே குரு ஆச்சார்யார் இரண்டுமாக இருக்கிறார் என்று ஏற்படுகிறது. இப்படியிருப்பதாலேயே இரண்டும் கொஞ்சம் வேறாயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
‘
‘
(இன்று மஹாபெரியவா ஜெயந்தி)
It is the only book in the world that has the 4th highest number of translations among all books.
Ranking in no. of Translations:-
1. Bible -123
2. Quran - 118
3. Bhagavad Gita - 110
4. Thirukkurrall - 107
5. Das Kapital by Karl Marx - 86
திருக்குறள் நூல்
மொழிபெயர்ப்புகளின் அட்டவணை தொகுப்பு.
எண், மொழி ,முதல் மொழிபெயர்ப்பு ஆண்டு, மொழிபெயர்ப்புகள்
(2015ம் ஆண்டு வரை)
1. அரபு 1976 2
2. வங்காளம் 1939 4
3. சீனம் 1967 2
4. செக் 1952 1
5. டச்சு 1964 1
6. ஆங்கிலம் 1794 58
7. பிஜி 1964 2
8. ஃபின்னிஷ் 1972 1
9. பிரெஞ்சு 1767 18
10. ஜெர்மன் 1803 8
11. குஜராத்தி 1931 3
12. இந்தி 1924 19
13. ஜப்பானிய மொழி 1981 2
14. கன்னடம் 1940 8
15. கொங்கனி 2002 1
16. கொரியன் 2
17. லத்தீன் 1730 3
18. மலாய் 1964 3
19. மலையாளம் 1595 19
20. மணிப்புரியம் 2012 1
21. மராத்தி 1948 1
22. ஒடியா மொழி 1978 5
23. போலிஷ் 1958 2
24. பஞ்சாபி 1983 2
25. ராஜஸ்தானி 1982 1
26. ரஷ்ய மொழி 1963 4
27. சமஸ்கிருதம் 1922 6
28. சௌராஷ்டிரா 1980 1
29. சிங்களம் 1961 2
30. ஸ்வீடிஷ் 1971 1
31. தெலுங்கு 1877 14
32. உருது 1965 2
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.
திருக்குறளில், தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள.
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.
திருக்குறளில், ஒரு சொல், அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது; இதில் ஆதி பகவன் - என்பது கடவுளைக் குறிக்கிறது).
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்.
.
(தன் மகன் சிறந்தவனாக வளர்வதற்கு ஒரு தாய் தன் உதிரத்தை அல்ல உயிரையே தந்த வரலாறு இது.) எந்த ஒரு மரத்தின் வேரும் வெளியில் தெரிவதில்லை, தெரியாமல் இருப்பதுதான் நியதி.
வைதிக மதங்களில் பெண்ணுக்குத் துறவு இல்லை. ஏன் என்றால், பெண் பெண்ணாக வாழ்வதே ஒரு துறவு நிலைதான்! தனக்காக அவள் வாழ்தல் இல்லை என்றே கூறலாம். பெண், அன்னை பராசக்தியின் சொரூபம். கன்னிகைகள் அனைவரும் அன்னை பராசக்தி சொரூபமாகவே எனக்குத் தென்படுகிறார்கள் என்றார் பகவான் ராமகிருஷ்ணர்.
இது கூடாது. உங்கள் உயிர்க்கு இது இறுதி தரும் என்றனர் மருத்துவச்சியர். கமலவதி தளரவில்லை. வேறு வழியின்றி கமலவதியின் கால்களைச் ÷ சர்த்துப் பிணைத்துத் தோழியர் தலைகீழாகத் தூக்கிப் பிடித்தனர். அந்த நேரமும் வந்தது. பிறகு அவரைக் கீழே படுக்க வைத்தவுடன் தாயினுள் கூடுதலாக ஒரு நாழிகை சிக்கிக் கிடந்த மகன் கண்கள் சிவப்பேற மண்ணில் வந்தான்.
*பதிவு 985*🥇🥇🥇🏆🏆🏆
*US 977*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
40 வது ஸ்தபகம்
சத்வாரிம்ஸ ஸ்தபக
தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌
🦚🦚🦚🥇🥇🥇
ஆர்த்ரா தயயா பூர்ணா சக்த்யா
த்ருஷ்டி வஸம் வித விஷ்டபராஜா
அகில புரந்த் ரீ பூஜ்யா நாரீ
மம நிஸ்ஸேஷாம் விபதம் ஹரது 🙂🙂🙂
அண்டங்கள் உன் வசம் ஆனால் நீயோ என் வசம் ...
அன்பினால் கட்டுப்பட்டாய் அதன் விளைவு உனக்கு ஆயுள் தண்டனை என் மனம் எனும் சிறையில் . 👏👏👏
*பதிவு 403*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
77
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
காமாக்ஷி சீதல தராணி தவேக்ஷி தானி
சந்த்ராதபந்தி கன சந்தன கர்தமந்தி
முக்தா குணந்தி ஹிமவாரி நிஷே சனந்தி🥇🥇🥇
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.👏👏👏
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
இராவணன் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதே நன்று என்று மகோதரன் கூறுகிறான்.
இராவணனை ஊக்கப் படுத்துவதற்காக, அவன் முன்பு பெற்ற வெற்றிகளையெல்லாம் நினைவு படுத்துகிறான்.
"
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே,
என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ? - புகழ்க்கு மேலோய்!"