பச்சைப்புடவைக்காரி-தென்சேரிகிரி 414 & 396 - post 78 contd

 *பச்சைப்புடவைக்காரி* 🙏🙏🙏

 *414* 🏆🏆🏆 see post 78 / 396 

*தந்தைக்கு உபதேசம் செய்தவன் தந்தையிடமே உபதேசம் பெற்றான்*



 1 தென்சேரிகிரி


மைந்தன் முருகன் தந்தை சிவனுக்கு பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் சொன்னது சுவாமிமலையில். 

அதே மகனுக்கு தந்தை மந்திர உபதேசம் செய்தது, மந்திராசலம் என்றழைக்கப்படும் *தென்சேரிகிரியில்!* 

பன்னிரண்டு கரங்களோடு போர்த் தளபதியாக, மனைவியர் சமேதராக மூலவர் முருகன் காட்சி தருகிறார். 

இடது கரத்தில் சேவற்கொடிக்கு பதிலாக சேவலையே ஏந்திய சிறப்பான அமைப்பு வேறெங்கும் காணக் கிடைக்காதது.🙂🙂🙂



கயிலையில் நந்தியம்பெருமான் கம்பீரமாக அமர்ந்திருந்தார். 

தேவர்கள் சூழ, முனிவர்கள் எதிரே அமர்ந்திருக்க, 

அவர் எம்பெருமானின் திருவிளையாடல்கள் நடந்தேறிய தலங்களைப் பற்றியும், கோயில்கள், தீர்த்தங்களின் மகாத்மியங்களையும் விரிவாகக் கூறலானார். 

அவற்றில் ஒன்றுதான் தென்சேரிகிரியின் பெருமை.

ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த ஞானப் பிழம்பான முருகப் பெருமான், சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். 

பிறகு, தாய்-தந்தையரை சென்றடைந்தார். 

கந்தனின் அவதார காரணத்தை தகப்பன் ஈசன் சொன்னார். 

தந்தை மொழி கேட்ட குமரன் சூரபத்மனையும் அவனுடைய கூட்டத்தையும் கொன்றொழிக்க சரியான சமயம் காத்து நின்றார். 

அதற்குள் அந்த அரக்கன் ஈசனைக் குறித்து கடுந்தவம் புரிந்தான். 

தவத்தின் வலிமையால் அரிய பல வரங்களைப் பெற்றான், சூரபத்மன்.🦜🦜🦜


அதனால் தலைகனம் கூடியது. 

தேவர்களையும், பூலோக மானிடர்களையும் துன்பங்கள் பல தந்து துடிக்க வைத்தான். 

சூரனை அழிக்கும் காலம் நெருங்குவதை சிவன் தன் செல்வனுக்கு உணர்த்தினார். 

குமரனும் தேவசேனைகளுக்குத் தலைமை தாங்கி போருக்குச் சென்றார். 

முருகனுக்குத் துணையாக வீரபாகு முதலிய நவ வீரர்கள் உடன் சென்றனர்.

சக்தியின் அம்சமான வேலையும், பதினொரு ருத்திரர்களின் அம்சமான பதினொரு ஆயுதங்களையும் கையில் ஏந்தினார், முருகப் பெருமான். 

படைபலம் பெருகியிருந்தாலும் அசுரர்களின் மாயையால் தன் குழந்தைக் குமரனுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என உமையன்னை அஞ்சினாள். 

மாயையின் பிடியிலிருந்து விடுவிக்கும் வல்லமை தரும் மந்திரங்களை மகனுக்கு உபதேசிக்குமாறு ஈசனிடம் இறைஞ்சினாள். 

ஈசனும் இசைந்தார்.🙏🙏🙏




குமரா, வீரமகேந்திரபுரி செல்லும் வழியில் யாம் ஒரு மலை வடிவில் தோன்றுவோம். 

நீ அங்குள்ள சிவகிரியில் தவமியற்று. நான் அங்கு உனக்கு மந்திர உபதேசம் செய்வோம்’’ என்றார் ஈசன்.

தந்தையின் கட்டளையைத் தலைமேற் ஏற்ற தனயன்சிவகிரிக்கு சென்றமர்ந்தார். 

சிவந்த கண்களை மூடி கடுந்தவம் புரிந்தார். 

சிவபெருமான் கந்தவேளுக்குக் காட்சியளித்து மந்திர உபதேசம் செய்தார். 

அந்த மந்திரத்தின் மகிமையால் சிறு குழந்தையான முருகப் பெருமான், வலிமைமிக்க சூரபத்மனை சம்ஹாரம் செய்து பார்முழுதும் பாதுகாத்தான்.🦚🦚🦚


தந்தை ஈசன் தனயன் முருகனுக்கு மந்திர உபதேசம் செய்ததால் இந்த மலைக்கு ‘ *மந்திரகிரி* ’ எனும் பெயர் ஏற்பட்டது; 

 *தென்சேரிகிரி* என்றும் புகழ் பெற்றது. 

இது நினைப்பவரை காத்தருளும் மலையாகும். 

அதாவது, (மந் - நினைப்பவரை, திர - காப்பாற்றும், கிரி - மலை) ‘ *மந்திர கிரி’* என்றும் அழைக்கப்பட்டது.

சுமார் 150 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஆலயம் அமைந்துள்ளது. 

ஆலய வாயிலில் கொடி மரமும், அதனை அடுத்து ஒரு பெரிய மகாமண்டபமும் உள்ளன. 

முதலிலுள்ள சந்நதியில் பன்னிரு கரங்களுடன் முருகப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி யளிக்கின்றார்.

ஆறுமுகங்களுடன் தோன்றும் கந்தப் பெருமானின் இருபுறமும் வள்ளியும், தெய்வானையும் அழகுற காட்சியருள்கின்றனர். 

இந்நாயகன் *மந்திராசல வேலாயுத மூர்த்தி* எனும் திருநாமத்தோடு விளங்குகிறார்.


அம்மா ... சுவாமிமலை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் ஈசன் உபதேசம் செய்த மலை முதல் முறையாக அறிகிறேன் ... தெய்வங்களில் உயர்வு தாழ்வே இல்லை .. எல்லாமே எங்களிடம் தான் !

சரியாக சொன்னாய் ரவி ... 

அம்மா !!

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; 

சுந்தரி!  

நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

சிரித்தாள் சிந்தூர பொட்டினாள் ... மீதி நாளை சொல்கிறேன் என்பது போல இருந்தது அவள் சிந்திய செந்தூர வண்ணங்கள் 🦜🦜🦜


743  பாபாரண்ய தவானலா

ஒரு அருமையான நாமம் இது.  

பாபக் காட்டுத்தீ.    
பாபங்களை சுட்டெரிப்பவள்.  
பாபநாசினி என்கிறோமே.அது 

744 தௌர்பாக்யதூல வாதூலா-  

துரதிஷ்டம் என்ற   இலவம்பஞ்சை சூறாவளிக்காற்றாக பறக்கவிடுபவள் அம்பாள் என்ற நாமம்.  நமது  பூர்வ ஜென்ம வினைப்பயன் தான் பஞ்சு மூட்டை  இங்கே. 🥇🥇🥇


💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👍👍👍👍

Comments

ravi said…
*743 பாபாரண்ய தவானலா* -

ஒரு அருமையான நாமம் இது.

பாபக் காட்டுத்தீ. பாபங்களை சுட்டெரிப்பவள். பாபநாசினி என்கிறோமே.அது

*744* *தௌர்பாக்யதூல வாதூலா-*

துரதிஷ்டம் என்ற இலவம்பஞ்சை சூறாவளிக்காற்றாக பறக்கவிடுபவள் அம்பாள் என்ற நாமம். நமது பூர்வ ஜென்ம வினைப்பயன் தான் பஞ்சு மூட்டை இங்கே. 🥇🥇🥇
ravi said…
அழகு கொப்பளிக்க ஆடரங்கம் கொண்டோன் ஜதி போட

அன்னை சிவகாமி பைங்கிளியாய் பாட ,

கேட்கும் மேனி சிலிர்க்க ஆடும் மயில் சிரிக்க கூவும் சேவல் நாணி கோண குமரன் வந்தான்

அங்கே குறைகள் காற்றில் பறக்க மயிலின் மூரலானேன் ..

மயக்கத்திலே முருகன் என் உதடுகளில் உறக்கம் கண்டான் 🙌🙌🙌
Savitha said…
அருமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kousalya said…
Arpudham 🙏🙏
T.V Ganesh said…
சந்தித்தது சிறிதே என்றாலும்

உங்களால் முருகனை சிந்தித்தது பெரிதாகினும் பெரிதே

உங்கள் படைப்புகளை கண்டது என் வாழ்வின் அறிதாகினும் அறிதே

அறியாத, அரிதான ஆறுமுகனின் ஆற்றல்களை

அறிய வைத்து ஊழ்வினையில் ஊறிய உள்ளத்தை

T.V Ganesh said…
ஆற்றிய, தேற்றிய ஆன்மீக
தேன் ஊற்றிய அருமருந்தானதே
திருமருந்தானதே

கோவையின்
கோவை பற்றி கவிக்கோ போல கோர்த்தீர்

பாவமது பதமாய் ஆடுகையில்
இதமாய் முருகன் பதம் சொன்னீர்

இடுக்கண் வரும் வேளை கடுக்கண் கொண்ட கலியுக முருகனை முன்னிருத்தீனீர்

கந்தலாய், துன்பத்தின்
காந்தலாய்
துயரத்தின்
ஏந்தலாய்
துடித்த போது

கந்தனின் காதையதை
பாதையென படிக்கச் செய்தீர்

முருகனை நினைத்து கண்ணீர்
வடிக்க வைத்தீர்

சொந்தத்தின் சுயரூபமது சூனியமாக தெரிகையில்

சுப்பிரமணிய ரூபமே பந்தமென பதமாய் சொன்னீர்

மந்திரமோ
தந்திரமோ
எந்திரமோ

இல்லை

என் திறமோ தெரியாத வேளையில்

வேலை வேளியாய் கட்டி
வேலனின் வேதமதை
வேள்வி கொள்ளச் செய்தீர்

ஆறுபடை வீடு கொண்டவன் என நினைத்திருக்கையில்

நூறு படை கொண்டவன் என உங்கள் நூல் கொண்டு மாலை செய்தீர்

வைணவத்துக்கும்
வையாபுரிக்கும்
ஒற்றுமை ஓதினீர்

நொச்சி கொண்ட மைலத்தானிடம்
மையல் கொள்ள வைத்தீர்

வயலூரானின்
வளமை சொன்னீர்

செந்தூரானின்
செம்மை இயம்பினீர்

அப்பனுக்கு பாடம் சொன்னவனின் அற்புதத்தை
இந்த சுப்பனுக்கும்
சொன்னீர்

இனி எங்கு செல்வேன் நான்

ஆயுள் வரை அலைந்தாலும்

ஆறுமுகன் படை வீடுகளை

உங்கள் படைப்புகள் தாண்டி

என்னால் காணமுடியாது
🦚🦚🦚🦚
ravi said…
கணேஷ் .. உங்கள் புகழ்ச்சிக்கு நான் உண்மையில் அருகதை இல்லை அதனால் முருகன் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏
S G S Ramani said…
மிக அருமை...உண்மை...
T.V Ganesh said…
ஆறுமுகன் கதை சொன்ன உங்களுக்கு
அருகதை இல்லையென்பதா

மனம் ஆறும் கதை சொன்ன உங்களுக்கு அருகதை இல்லையென்பதா

உங்களுக்கு மட்டுமே அருகதை உண்டு

ஆம்

முருகனை எங்கள் உள்ளத்தின் அருகில் கதை கேட்க வைத்த அருகதை உண்டு

முருகனின்

ஆறு(படை) கதை

மனம்
ஆறும் கதை

வாழ்வு எனும்
ஆறு(வழி) கதை

என ஆறாய் ஓடும்
உங்களுக்கு அருகதையும் உண்டு
அரும்கதையும் உண்டு🙏🙏🙏💐💐
ravi said…
இதற்கும் அபிராமி பட்டர் பாடலைத்தான் நாட வேண்டும்

களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை ...🙏🙏🙏
ravi said…
உன்னைத்தான் ஒரு கல்லைத்தான் என்ற சொன்ன சொல்லைத்தான் கேட்டே துவண்டு போனேன் ..

கண்ணால் ஆட்சி செய்யும் அந்த பெண்ணைத்தான் பொன்னைத்தான் கோடி தந்தாலும் பொருள் வேண்டேன் ..

கோமளத்தின் திருவடியில் புரண்டு அழுதேன் ...

உன்னைத்தான் கேட்கிறேன் ..

என் சுவாமியை கல் என்றோர் சொன்ன புவி இதில் வாழேன் ..

பூத்தவளே ஏற்றுக்கொள் என்னை என்றேன்

சிரித்தாள் பண் சொற் மீட்டும் பரிமள யாமளை பைங்கிளி ...

கல்லைத்தான் என்றார் என்றே சொன்னாய் .. சுவாமி நாதன் பெயர் சொல்வோர் கள்ளைத் தான் உண்ட களிப்பைத் தான் சொன்னார்கள் ...

வருந்த வேண்டாம் என்றாள் வானவர் தானவர்கள் வந்திக்கும் பூரணாசல மங்கை

என்னைத்தான் தேனைத்தான் அதில் குளித்துதான் சுகம் கண்டேன் சுந்தரியின் பதில் கேட்டே !!👍👍👍💐💐💐
ravi said…
She who is the deity of the organ of touch (skin)

She who fills with fear the mortal beings bound by worldly existence

She who is surrounded by amrita and other shakti deities

She who is the dakini deity

She who resides in the anahata lotus in the heart

She who is black in complexion

She who has two faces

She who has shining tusks

She who is wearing garlands of rudraksha
beads and other things

She who presides over the blood in the bodies of living beings ॥ 490 ॥🥇🥇🥇
ravi said…
Real Richness is When We are So Expensive that No One can Buy Our Character.

Compassion and tolerance are not a sign of weakness, but a sign of strength.

Do something today that will make you proud tomorrow.
ravi said…
*Thinking Out of the Box (Creative Thinking)*👏👏👏
ravi said…
In a small Italian town, hundreds of years ago, a small business owner owed a large sum of money to a loan-shark.

The loan-shark was a very old, unattractive looking guy that just so happened to fancy the business owner’s daughter.
ravi said…
He decided to offer the businessman a deal that would completely wipe out the debt he owed him.

However, the catch was that we would only wipe out the debt if he could marry the businessman’s daughter.

Needless to say, this proposal was met with a look of disgust.

The loan-shark said that he would place two pebbles into a bag, one white and one black.
ravi said…
The daughter would then have to reach into the bag and pick out a pebble.

If it was black, the debt would be wiped, but the loan-shark would then marry her.

If it was white, the debt would also be wiped, but the daughter wouldn’t have to marry the loan-shark.

Standing on a pebble-strewn path in the businessman’s garden, the loan-shark bent over and picked up two pebbles.
ravi said…
Whilst he was picking them up, the daughter noticed that he’d picked up two black pebbles and placed them both into the bag.

He then asked the daughter to reach into the bag and pick one.

The daughter naturally had three choices as to what she could have done:

Refuse to pick a pebble from the bag.

Take both pebbles out of the bag and expose the loan-shark for cheating.

Pick a pebble from the bag fully well knowing it was black and sacrifice herself for her father’s freedom.

She drew out a pebble from the bag, and before looking at it ‘accidentally’ dropped it into the midst of the other pebbles. She said to the loan-shark;.....
ravi said…
“Oh, how clumsy of me. Never mind, if you look into the bag for the one that is left, you will be able to tell which pebble I picked.”
ravi said…
The pebble left in the bag is obviously black, and seeing as the loan-shark didn’t want to be exposed, he had to play along as if the pebble the daughter dropped was white, and clear her father’s debt.🥇🥇🥇👏👏👏
ravi said…
She who is the deity of the organ of touch (skin)

She who fills with fear the mortal beings bound by worldly existence

She who is surrounded by amrita and other shakti deities

She who is the dakini deity

She who resides in the anahata lotus in the heart

She who is black in complexion

She who has two faces

She who has shining tusks

She who is wearing garlands of rudraksha
beads and other things

She who presides over the blood in the bodies of living beings ॥ 490 ॥🥇🥇🥇
ravi said…
Generosity is giving more than you can, and pride is taking less than you need.

It is better to change and adapt than to complain and remain.

Other persons will not be able to see our real value, until we ourself see and appreciate it. 🦚🦚🦚
ravi said…
*The Group of Frogs (Encouragement)*💐💐💐
ravi said…
As a group of frogs was traveling through the woods, two of them fell into a deep pit.

When the other frogs crowded around the pit and saw how deep it was, they told the two frogs that there was no hope left for them.

However, the two frogs decided to ignore what the others were saying and they proceeded to try and jump out of the pit.

Despite their efforts, the group of frogs at the top of the pit were still saying that they should just give up. That they would never make it out.
ravi said…
Eventually, one of the frogs took heed to what the others were saying and he gave up, falling down to his death.

The other frog continued to jump as hard as he could.

Again, the crowd of frogs yelled at him to stop the pain and just die.

He jumped even harder and finally made it out. When he got out, the other frogs said, “Did you not hear us?”

The frog explained to them that he was deaf.

He thought they were encouraging him the entire time.

People’s words can have a big effect on other’s lives.

Think about what you say before it comes out of your mouth.

It might just be the difference between life and death.👏👏👏
Chellammal Nagarajan said…
உன் கவிதையத்தான். படித்தேன் வியந்தேன் ரசித்தேன் மகிழ்தேன்.
Moorthi said…
தெய்வத்தின் புகழை சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கோடி நன்மைகள் வந்து சேரும் 🙏🙏💐💐🙏🙏
Lakshmi balaraman said…
मम भाग्यम्।
என்னுடய பாக்யம். 🙏🙏
ravi said…
இன்றைய சிந்தனை.

பிறருக்கு உதவி செய்து பழகியவர்களுக்கு யாரிடமும் உதவி கேட்க மனமிருப்பதில்லை...!!!
பிறரிடம் உதவி வாங்கிப் பழகியவர்களுக்கு யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை....!!

இந்த உலகம் உன்னைத் தூக்கி வைத்து ஆடுவதையும், தூக்கி எறிந்து வீசுவதையும் நிர்ணயிப்பது உன் குணம் அல்ல.....
நீ வைத்திருக்கும் பணம்.....!!!!!!

நல்ல இதயவ்களைப் பார்ப்பது கடினம்.....
நல்ல இதயத்துடன் பேசுவது அதிர்ஷ்டம்...
நல்ல இதயத்துடன் நட்பு வரம்.....!!!!!!

வாழும் போதே நரகத்தைப் பார்க்க வேண்டும் என்றால்....
ஒருவர் மேல் உண்மையான அன்பு வைத்துப் பாருங்கள்....!!!!!!

எது எளிதோ அது நீண்ட காலம் நீடிக்காது.....
எது நீண்ட காலம் நீடிக்கிறதோ அது எளிதானது கிடையாது....!!!!!

நேற்று நடந்ததை கடந்து செல்....
இன்று நடப்பதை கற்றுக்கொள்.....
நாளை நடக்கவிருப்பதை எதிர்கொள்....!!!!

அனுபவித்த துன்பங்களை மறந்து விடு.....
அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே.....!!!!!

வாழ்த்தினாலும், தாழ்த்தினாலும் சிரித்துக் கொண்டே இரு.....
காலம் அவர்களுக்குப் பதில் சொல்லும்.....!!!!

இன்பமோ, துன்பமோ..
தனிமை மட்டுமே என்றும் நிலையானது......!!!!!

பிடித்தவரகளை தக்க வைத்துக் கொள்ள நிறைய செலவு பண்ணுங்கள்....
பணத்தை அல்ல *நேரத்தை*.....!!!!

மாற்றங்களை ஏற்கத் துணிந்து விடுகிறது மனம்.....!!!!
சில நேரங்களில் விரும்பியும்....
பல நேரங்களில் வேறு வழியின்றியும்.....!!!!!

நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்.
அப்படியே வெளியே சென்றாலும் முகக்கவசம் இன்றி செல்லாதீர்கள்.
Lakshmi balaraman said…
அபிராமி வல்லி உன் மனதிற்குள் இருக்கும்போது
வெளியில் தேடாதே.
உன் மூலமாக அவள் எங்களிடம் பேசுகிறாள்.
हन्त: भाग्यम् जनानाम्।
अति उत्तमम् रवि।
Kousalya said…
24th post on AA today only read... Now i two can say " Sath sangam meanmai tharum... since my manam also did some good deeds in earlier janma, thangalai pondravargalin sath sangam moolam i am blessed / benefitted ...Really very very nice narrations.
ravi said…
திருக்கடையூர் அபிராமி *46*

*பாடல் 44*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
*44. பிரிவுணர்ச்சி அகல*

தவளே!

இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்

அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;

ஆகையினால்

இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்

துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.🦚🦚🦚🙏🙏🙏
ravi said…
மிகவும் உணர்ச்சி பூர்வமான பாடல் .

உங்களுக்கு பிடிக்கும் ஏதாவது ஒரு கடவுளை வணங்குங்கள் ...

இந்த தெய்வம் உசத்தி அந்த தெய்வம் கருணை அதிகம் என்றே மாத்திக்கொண்டே இருக்க கூடாது .

இங்கே அபிராமி ஒருத்தியே போதும் அவள் மிகவும் உயர்ந்தவள் ..

மற்ற சமயங்களும் தெய்வங்களும் எனக்கு வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறார் பட்டர் .

கடைசியில் அபிராமியும் அவரை கை விடவில்லை 🥇🥇🥇
ravi said…
*44. பிரிவுணர்ச்சி அகல*

*தவளே!*

தவளே என்றால் தவம் செய்தவள் என்று அர்த்தம் ...

மாங்காடு, மயிலை , காஞ்சி அன்னை கடும் தவம் செய்த சில இடங்கள் .

மாதவன் என்பது ஆண் பால் ... மாதவள் என்பது பெண் பால் ... 🦚🦚🦚
ravi said…
*44. பிரிவுணர்ச்சி அகல*

தவளே!

*இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்*

எங்கள் சங்கரனார் என்று மிகவும் உரிமையுடன் ஈசனை அழைக்கிறார் ..

அவன் இல்லத்து அரசி ...

மங்கலமானவள் ... தீர்க்க சுமங்கலி ... ஈசனின் வீட்டை மங்கலமாக வைத்துக்கொள்பவள் ... ஒரு மனைவியால் தான் குடும்பத்தை மங்களகரமாக வைத்துக்கொள்ள முடியும் ... அதைத்தான் பரமேஸ்வரி இந்த உலகம் எனும் வீட்டுக்கு சொந்தகாரனான ஈசனை கட்டி அரவணைத்து காக்கிறாள் 🙏🙏🙏
ravi said…
*44. பிரிவுணர்ச்சி அகல*

தவளே!

இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்

*அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;*

ஒரு பெண் அன்னையாக , மனைவியாக , பெற்ற பெண்ணாக இருக்கிறாள் .. சாரதாவை தாயாக பார்த்தார் ராமகிருஷ்ணர் ... கண்ணதாசன் மனைவியின் பெருமைகளை பல பாடல்களில் வடித்துள்ளார் ..

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ..

வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாமல் இருந்தேன் ..

பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

*கண் போல் வளர்ப்பதில் அன்னை*

அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை

திருமூலர்

வாயும், மனமும் கடந்த மனோன்மணி

பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல்தாரமும் ஆமே

- திருமந்திரம் 1178

என்று பட்டர் பாடியதைப்போல தானும் சொல்கிறார்

ஈசனுக்கு மனைவியாய் , மகளாய் , தாயார் இருப்பவள் பராசக்தி 🥇🥇🥇
ravi said…
*44. பிரிவுணர்ச்சி அகல*

தவளே!

இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்

அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;

*ஆகையினால்*

*இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்**

ஈசனுக்கே தாயாக இருப்பவள் அபிராமி அதனால் எல்லோருக்கும் மேலாக எல்லா தெய்வங்களும் வந்து வணங்கும் நிலையில் அவள் இருக்கிறாள்
ravi said…
*44. பிரிவுணர்ச்சி அகல*

தவளே!

இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்

அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;

ஆகையினால்

இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்

*துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.🦚🦚🦚🙏🙏🙏*

அம்மா ! உனக்கே தொண்டு செய்வேன் .. உன் நாமம் ஒன்றையே சொல்வேன் . இனி ஒரு தெய்வம் கண்டு துவண்டு போக மாட்டேன் ...

ravi said…
சக்தி சிவனில் பாதி ... அதனால் சிவனை தனியாக வணங்க அவசியம் இல்லை ... கணபதி முருகன் பாலா மணிகண்டன் இவர்களுக்குத் தாய் ..அவர்களும் இவளைத்தான் வணங்குகிறார்கள் .. மலர்கமலை போற்றும் நாயகி .. பிரம்மன் வணங்கும் தேவி .. விஷ்ணுவின் அருமை சோதரி .. முப்பது முக்கோடி தேவர்கள் கந்தர்வர்கள் ரிஷிகள் மகான்கள் திருவடி தேடும் பரிமள யாமல கோமள வல்லி ... எல்லாமே அவளுக்குள் அடக்கம் .. எதற்கு மற்றும் ஒரு தெய்வம் ?? 💐💐💐
ravi said…
*சுருக்கம்*

எங்களுக்கெல்லாம் இறைவியாகிய அன்னையே!

எங்கள் இறைவராகிய சங்கரனாரின் துணைவியானவளே.

இவளே ஒரு சமயம் ஈசனுக்கே அன்னையுமானாள்.

எனவே தேவர்கட்கெல்லாம் தலைவியாயிருக்கும் மேலான பேறு பெற்றவளைத் தெய்வமாய்க் கொள்வதல்லாமல் வேறொரு தெய்வம் உண்டெனக் கருதி வீணாகத் தொண்டு செய்து நான் மன வருத்தம் அடையமாட்டேன்.🦚🦚🦚👏👏👏🥇🥇🥇🙂🙂🙂
ravi said…
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

*ஒரு பக்தன் எப்படி இருக்க
வேண்டும்*

🌸‘பக்தி’ மற்றும் ‘ஆன்மிகம்’
ஆகியஇரண்டு பாதங்கள் குறித்து
தவறான கருத்து பலர் மத்தியில்
இருக்கிறது.

🌸இறைவழிபாட்டில் தொடர்ந்து
ஈடுபட்டாலோ அல்லது
விரதங்கள் அனுஷ்டித்தாலோ
அல்லது பிரசித்தி பெற்ற
ஆலயங்களுக்கு அடிக்கடி
செல்வதாலோ ஒருவர்
பக்திமானாகிவிடமுடியாது.
ஏனெனில், இவையனைத்தும்
ஒரு வகையில் சுயநலம் சார்ந்த
செயல்களே.

ravi said…
🌸அது போல பணம்
செலவழிப்பதால் மட்டும்
ஒருவர் தர்மவான் ஆக
முடியாது. அன்னதானம்
செய்வதால் அவர் அறம் செய்தவர்
ஆகவும் முடியாது.

🌸நெற்றியில் திருநீறு
பூசியவர்கள் எல்லாம் சிவ
பக்தர்கள் அல்ல.
திருமண் இட்டவர் எல்லாம்
விஷ்ணு பக்தரும் அல்ல. பலர்
பகட்டுக்காகவும், நானும்
பக்திமான் என்பதை
வெளிக்காட்டுவதற்காகவும்,
பெருமைக்காவுமே இறை
வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் ஏழைகளின் தொண்டே
இறைவனின் தொண்டு என்பதை
அனைவரும் உணர வேண்டும்.
ravi said…

🌸ஒருவர் துன்பப்படும் போது
அவருக்கு துணை நின்று
அவர் துயர் துடைப்பதே ராம
கைங்கர்யம். உதவி செய்பவர்
ஏழையாக இருக்கலாம்.
நெற்றியில் திருமண்
இடாதவராக, பஜனை, ஜெபம்,
வழிபாடு அறியாதவராக
இருக்கலாம். இருப்பினும்
ஒருவர் துன்பப்படுவதைப்
பார்த்து துயர் துடைக்க
முன்வருவாரே ஆயின் அவரே
உண்மையான உயர்ந்த பக்தர்.
உண்மையான பக்தி உடையவன்
யார்?
ravi said…

🌸ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது.

🌸உண்மையான பக்தி உடையவன்
யார் என்பது தான் அது’ நேராக
இறைவனிடம் சென்று தங்கள்
சந்தேகத்தை கேட்டன.

அப்போது இறைவன்,

🌸“தேவதைகளே! இந்த ஊரில்
போய் யார் எனது உண்மையான
பக்தன் என்பதை விசாரித்து
வாருங்கள்” என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு
பலரிடமும் சென்று
விசாரித்தன.

ravi said…
🌸ஒருவன், “நான் கோவிலுக்குப்
போகாத நாளே இல்லை…
தினமும் மூன்று வேளை
கடவுளை வணங்குகிறேன்,”
என்றான்.

🌸அடுத்தவன், “நான் வெள்ளி,
செவ்வாய் கிழமைகளில்
கோவில் போவேன்,” என்றான்.

🌸மற்றவன், “நான் வாரத்தில் ஒரு
நாள் நிச்சயம் கோவிலுக்குச்
செல்லுவேன்,” என்றான்.

🌸இன்னொருவன், “எனக்கு கஷ்டம்
வரும் சமயத்தில் கடவுளிடம்
முறையிடுவேன்,” என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு
சமயத்தில் கடவுளை
நினைப்பவராகவே இருக்க,
“இதில் யார் உண்மையான
பக்தன்’ எனக் கண்டு பிடிப்பது
எப்படி என்ற குழப்பம்
தேவதைக்கு ஏற்பட்டது.

ravi said…
🌸அப்போது அந்தவழியே
அவசரமாகச் சென்று
கொண்டிருந்த ஒருவனை
நிறுத்தி, “அய்யனே! உனக்குக்
கடவுள் பக்தி உண்டா?
நீ எப்போது கடவுளை
வழிபடுவாய்?”
என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், “எனக்குக்
கடவுளை நினைக்கவே
நேரமில்லை… அவசரமாக
சிலருக்கு உதவி செய்ய
வேண்டியிருக்கிறது. நான்
போகிறேன்…” என்று பதில்
கூறிவிட்டு ஏழைகளுக்கு
உதவிட அவன் விரைந்தான்.

ravi said…
🌸தேவதைகள் கடவுளிடம்
திரும்பி வந்து நடந்ததை
அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட
கடவுள் மவுனம் சாதித்தார்.

🌸“தேவனே… உண்மையான பக்தன்
யார் என்று கண்டுபிடித்து
விட்டீர்களா?”
என்று கேட்டன. “கண்டுபிடித்துவிட்டேன்!”
என்றார் கடவுள்.
“யார் பிரபு? தினமும்
மூன்று வேளை
கோவிலுக்கு
வருபவர்தானே?”
என்று கேட்டன தேவதைகள்.
கடவுள் புன்னகைத்தபடியே,
“இல்லை… இல்லை…
கடைசியாக என்னை
நினைக்கக்கூட நேரமில்லாது
ஏழைகளுக்கு சேவை செய்ய
ஓடினானே… உண்மையில் அவன்
தான் எனது உண்மைப் பக்தன்,”
என்றார்.
உண்மை புரிந்தது
தேவதைகளுக்கு.
தன்னலமற்ற சேவையே
உண்மையான ஆன்மிகம் என்பதை
நாம் அனைவரும்
உணரவேண்டும்.
தன்னை ஒரு பக்தனைப் போல
காட்டிக்கொள்வது எளிது.
ஆனால் உண்மையான பக்தனாக
நடந்துகொள்வது அத்தனை
எளிதல்ல.

🌸ஒரு பக்தன் அல்லது பக்தை
என்பவர் எப்படி இருக்க
வேண்டும்?

🌸ஒரு பக்தன் எப்படி இருக்க
வேண்டும் என்று

*கந்தபுராணத்தில்
முருகப்பெருமான்
சொல்லியிருக்கிறார்*

ravi said…
தெளிவான அறிவோடு
* இருக்க வேண்டும்.
* எல்லோரிடமும்
* அமைதியாகவும்,
* இனிமையாகவும் பேச
* வேண்டும்.
* உணர்ச்சியை வென்றவனாக
* நடந்து கொள்ள வேண்டும்.
* எவரிடமும், எந்த விதத்திலும்
* பகைமை பாராட்டாதிருக்க
* வேண்டும்.
* எப்பொழுதும் கருணை
* கொண்ட மனதுடன் இருக்க
* வேண்டும்.
* தீய செயல்களை
* சிந்திக்காதவனாக இருக்க
* வேண்டும்.
* நல்ல காரியங்கள்
* செய்பவனாகவும், பிறர் இன்ப –
* துன்பங்களில் ஈடுபாடு
* கொண்டவனாகவும் இருக்க
* வேண்டும்.
* எல்லா உயிர்களிடத்தும்
* கடவுள் இருப்பதை
* உணர்ந்தவனாகவும், ஏற்றத்
* தாழ்வு பார்க்காதவனாகவும்
* செயல்பட வேண்டும்.
* ஏழை எளியவர்களுக்கு உதவி
* செய்பவனாக இருக்க வேண்டும்.
* பிறர் குறைகளை பற்றி
* கவலைப்படாமல், அவனுக்கு
* உதவ வேண்டும்.
மேற்கூறிய குணநலன்கள்
இருந்து, ஈடுபாடுடன்
என்னிடம் பக்தி செலுத்துபவன்
எவனோ, அவனே உண்மையான
பக்தன். இதில் ஒரு குறை
இருந்தாலும் அவனை என்
பக்தனாக ஏற்க மாட்டேன் என்று
கூறியிருக்கிறார்
முருகப்பெருமான்.
இது முருகப்பெருமானுக்கு
மட்டும் அல்ல அனைத்து
தெய்வங்களுக்கும்
பொருந்தும்.
மேற்கூறிய குணநலன்கள்
உங்களிடம் இருக்கிறதா?

🌸‘ஆம்’ என்று உங்கள் மனசாட்சி
சொன்னால் நீங்கள் உண்மையில்
பெரிய பக்திமான் தான்..

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
S G S Ramani said…
உண்மை.. நம்புகின்றோம் அபிராமியை நெஞ்சார...

🙏🙏🙏🙏🙏
Kousalya said…
[27/05, 2:52 pm] Metro Kowsalya: Anekakoti ńamaskarangal Thangalukkum u
[27/05, 2:52 pm] Metro Kowsalya: Thangalin intha sevaikkum..
Shivaji said…
🙏🙏 We are blessed
Moorthi said…
சுருக்கமாக அனைத்து விவரங்களை எடுத்துகாட்டியத்ற்க்கு நன்றி 🙏🙏🙏
Shanti purushotham said…
Nanri pala kodi for your thogupu 🙏🏼. Visiting places we have never been ,through your writing.🙏🏼🙏🏼🙏🏼
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 985*🥇🥇🥇🏆🏆🏆

*US 977*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

40 வது ஸ்தபகம்

சத்வாரிம்ஸ ஸ்தபக

தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
977 🙂🙂🙂

ஆர்த்ரா தயயா பூர்ணா சக்த்யா

த்ருஷ்டி வஸம் வித விஷ்டபராஜா

அகில புரந்த் ரீ பூஜ்யா நாரீ

மம நிஸ்ஸேஷாம் விபதம் ஹரது 🙂🙂🙂
ravi said…
தயை உன்னிடம் இருந்து பிறக்கிறது எப்படி கங்கை உன் பதியின் சடையிலிருந்து பிறக்கிறதோ அதுபோல ...

அண்டங்கள் உன் வசம் ஆனால் நீயோ என் வசம் ...

அன்பினால் கட்டுப்பட்டாய் அதன் விளைவு உனக்கு ஆயுள் தண்டனை என் மனம் எனும் சிறையில் . 👏👏👏
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 403*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

77
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
ஸம்ஸாரகர்ம பரிதாப ஜு ஷாம் நராணாம்

காமாக்ஷி சீதல தராணி தவேக்ஷி தானி

சந்த்ராதபந்தி கன சந்தன கர்தமந்தி

முக்தா குணந்தி ஹிமவாரி நிஷே சனந்தி🥇🥇🥇
ravi said…
அம்மா உன் நாமம் நிலவைப்போல் அமுதம் பொழிகிறது .. செழுஞ்சந்தனக் குழம்பை வாரி மார்பில் பூசிக்கொண்டதை போல் குளிர்ச்சியையும் மகழ்ச்சியையும் தருகிறது 🙂🙂🙂
ravi said…
*[99/108] – அருள்மிகு தேவராஜன் – ஹரிலட்சுமி திருக்கோயில்*💐💐💐
ravi said…
*நைமிசாரண்யம்* என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.👏👏👏
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
ஒரு கொள்கையை மேற்கொண்டு விட்டால், அதனால் வெற்றியோ, தோல்வியோ எது நேரினும், அதில் உறுதியாக நிற்றல் உத்தமனுக்கு உரிய செயல்.

இராவணன் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதே நன்று என்று மகோதரன் கூறுகிறான்.

இராவணனை ஊக்கப் படுத்துவதற்காக, அவன் முன்பு பெற்ற வெற்றிகளையெல்லாம் நினைவு படுத்துகிறான்.

"வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே,
என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ? - புகழ்க்கு மேலோய்!"
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 986*🥇🥇🥇🏆🏆🏆

*US 978*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

40 வது ஸ்தபகம்

சத்வாரிம்ஸ ஸ்தபக

தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
978🥇🥇🥇

ஸூத்தப் ரஹ்மணி மோதோ தைவம்

தத்ர லிஸ்ருக்ஷதி காமோ தைவம்

ஸ்ருஜதி பதார்தான் த்ருஷ்டிர் தைவம்

தான் பிப்ராணே மஹிமா தைவம் 🦚🦚🦚
ravi said…
அன்னை உமை பரபிரும்ம ஸ்வரூபத்தில் பேரானந்தமாய் விளங்குகிறாள் ...

உலகத்தை சிஷ்ட்டிக்கும் போது ஆசையாய் விளங்குகிறாள்

எல்லா உயிர்களையும் தன் பார்வையாலேயே படைக்கிறாள்

அவை அனைத்தையும் தாங்கக்கூடிய மகிமையாகவும் அவளே இருக்கிறாள் 🙌🙌🙌
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 404*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

78
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
ப்ரேமாம் புராசி ஸததஸ்னபிதானி சித்ரம்

காமாக்ஷி தாவக கடாக்ஷ நிரீ க்ஷணானி

ஸந்துக்ஷயந்தி முஹூரிந்தன ராசி ரீத்யா

மாரத்ருஹோ மனஸி மன்மத சித்ர பானும் 🥇🥇🥇
ravi said…
அம்மா ஈசனின் பனி படர்ந்த சடை அதன் மேல் அமுதம் பொழியும் சந்திரன் ..

குளிர் கொண்டு ஓடும் கங்கை ..

தொட்டால் ஜில்லென்று என்று இருக்கும் பாம்புகள் அவன் உடல் எங்கும் ..

ravi said…
இதையெல்லாம் விட இமவான் மகளாகிய நீயும் அவனைப்பிரியாமல் அவன் அருகில் ....ஏன் உடலில் ஒரு பாதியாய் இருக்கிறாய் .

இதற்கும் மேலே அவனை ஜில்லென்ற தண்ணீரில் எப்பொழுதும் குளிப்பாட்டும் அவன் அடியவர்கள்

இவ்வளவு குளிமையை அவன் எப்படி சமாளிக்கிறான் என்றே யோசித்தேன் .

உன் புன்னகையே ஒரு பதிலாக வந்தது ...

எங்கள் மனத்தில் கோபம் தாபம் பொறாமை ,விரக்தி , ஆசை எனும் தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது ..

இருந்தும் நீங்கள் இருவரும் என் மனதில் குடி கொண்டுள்ளீர்கள் ..

இந்த அசுத்த சக்திகள் எழுப்பும் அக்னி ஜ்வாலை ஈசனுக்கும் உனக்கும் அவ்வளவு குளிமை கண்டிப்பாகத் தேவை என்பதை நிரூபிக்கின்றனவே !!!👍👍👍
ravi said…
*[99/108] – அருள்மிகு தேவராஜன் – ஹரிலட்சுமி திருக்கோயில்*💐💐💐
ravi said…
*தல வரலாறு*

இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர்.

அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர்.

பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார்🦚🦚🦚
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
மன்னா! மாலியவான் கூறியபடி சீதையை விடுதியாயின், வலிமை நீங்கியவனாய். ஆதலால், சீதையின் பொருட்டு போர் செய்து ஆவியை விடுவது சிறப்பு" என்கிறான் மகோதரன்.

"இப்படி நீ வருந்தி இருப்பாயாயின், குரங்குக் கூட்டம் பழ மரங்களை அழிப்பது போல இலங்கை நகரையும் அழித்து விடும். மூவரை வென்று தேவர்களை ஏவல் கொண்டு, மூவுலகங்களையும் அடிமைப் படுத்திய நீ இராம இலக்குவர்களை ஒரு பொருட்டாக மதிக்கலாகாது" இவ்வாறு மகோதரன் இராவணனை ஊக்கப் படுத்தி ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
🟪🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟪

🟣 மற்றவர்கள் பிரச்சனைகளை, கவலைகளை பகிர்ந்து கொள்ளும் போது முழுமையான அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறுவது தான் மனிதாபிமானம்.

🟣 இருப்பதை விட்டு விட்டு, பறப்பதற்கு ஆசைப் படுபவர்கள், இருக்கும் நிம்மதியை இழந்து விடுகின்றனர்.

🟣 ஒரு ஆணும், பெண்ணும் விட்டுக் கொடுத்து வாழ்வதில் தான் சமநிலை இருக்க வேண்டும், சண்டை போடுவதில் அல்ல.

🟣 சில பேர் அக்கறை என்கிற பெயரில் தொல்லையாக இருந்தாலும். சில சமயம் நமக்கு உதவியாகவும் இருக்கிறார்கள்.

🟣 சில பிரச்சனைகள் பெரிதாவதும். சில பிரச்சினைகள் சாதாரணம் ஆவதும். அதைக் கையாளும் விதத்தில் தான் இருக்கிறது.

🟪🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟪
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
*"உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!"*

மகாபெரியவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. யாத்திரைக்கு இடையே வழுவத்தூர் என்ற கிராமத்தில் தமது பக்தரான ராமசுவாமி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார் மகான்.

ravi said…
ஒரு நாள் மாலை நேரம் தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு பக்தர் ராமசுவாமியை அழைத்தார் மகான். "பசுக்கொட்டகையில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, இரண்டு கைப்பிடி கல் உப்பைப் போட்டு இங்கே கொண்டு வா!" என்றார்.

அவர் சொன்னபடியே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி உப்புப்போட்டு எடுத்து வந்தார், தொண்டர்.

கொஞ்சம் உயரமான திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தமது இரு கால்களையும் அந்த உப்புத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டார், மகான்.

ravi said…
அவர் அப்படிச் செய்தது, புதுமையாக இருக்கவே, பலரும் அங்கே கூடிவிட்டார்கள். "இன்றைக்கு ரொம்ப நேரம் ஒரே மாதிரி அசையாம உட்கார்ந்திருந்தேனா...அதுல கால் இறுகிக் கொண்டு வலிக்கிறது...அதுக்குதான்!" யாரும் கேட்காமலே சொன்னார் பெரியவர்.

கொஞ்ச நேரம் கழித்து மகான் அந்தப் பாத்திரத்தில் இருந்து தமது திருவடிகளை எடுத்ததுதான் தாமதம். அதற்காகவே காத்திருந்ததுபோல எல்லோரும் நெருங்கி அந்த நீரை தீர்த்தமாக பாவித்து தலையில் தெளித்துக் கொண்டார்கள்.

ravi said…
திடீரென்று மகான், " அந்த ஜலத்தை முழுசா தீர்த்துடாதீங்கோ...ஒரு செம்புல கொஞ்சம் நிறைச்சு வையுங்கோ!" சொல்ல, இப்போது எல்லோர் மனதிலும் ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் மகான் சொன்னபடி ஒரு செம்பில் அந்த உப்பு நீரை எடுத்து வைத்தார்கள்.

அன்று இரவு நெருங்கும் நேரம். வயதான பாட்டி ஒருவர் வந்து மகாபெரியவர் முன் நின்றார். எதுவும் பேசாமல், மகானையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகி வழிந்தது.

ravi said…
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மகான், "என்ன காசி, ராமேஸ்வரம் போகவேண்டும் என்று ஆசை. ஆனால் கையில் காசு இல்லையே! என்ற ஏக்கத்தோடு என்னிடம் வந்திருக்கிறாயோ!" மென்மையாகக் கேட்டார்.

"ஆமாம் பெரியவா!" தழுதழுப்புக்கு இடையே இந்த இரட்டை வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார் அந்த மூதாட்டி.

எதுவும் சொல்லாமல் உள்புறம் திரும்பி, "ராமசுவாமி, அந்த செம்புல நிரப்பி வைத்த ஜலத்தை எடுத்துக் கொண்டு வா!" குரல் கொடுத்தார் மகான்.

மறு நிமிடம் செம்பு நீரை எடுத்துக் கொண்டு அவர் வர, "அதை அப்படியே அந்தப் பாட்டி தலையில் ஊற்று...!"

மகானின் கட்டளை பிறக்க, அதை அப்படியே நிறைவேற்றினார், தொண்டர். அடுத்ததாக, தமது கையில் இருந்த கமண்டல நீரை, காலியான செம்பில் ஊற்றிய மகான், அதையும் அந்தப் பாட்டி தலையில் ஊற்றச் சொன்னார்.

"முதல்ல ராமேஸ்வரம்.. அடுத்தது காசி... ரெண்டு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடின பலன் உனக்குக் கிடைச்சாச்சு. கவலைப்படாமல் போ..எல்லாம் நல்லபடியாக நடக்கும்!" கை உயர்த்தி ஆசிர்வதித்தார் மகான்.

மனம் முழுக்க பரிபூரண திருப்தியுடன் புறப்பட்டார் அந்த மூதாட்டி. இதுவரை நடந்ததெல்லாம் சாதாரணமானதாகவே தோன்றியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு தகவல் வரும் வரை. அந்தச் செய்திதான், மகானின் திருவிளையாடலை உணர்த்தியது அனைவருக்கும்.

மகானை தரிசித்துவிட்டுப் போன அந்த மூதாட்டி, அதற்கு மறுநாளே முக்தி அடைந்திருந்தார். விஷயத்தை மெதுவாக மகாபெரியவரிடம் தெரிவித்தார் அணுக்கத் தொண்டர் ராமசுவாமி.

கொஞ்சமும் பதற்றமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்ட மகான், "அதனாலதான், நேத்திக்கே உன்னை அவளுக்குப் புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ணிவைக்கச் சொன்னேன்! கஷ்டமே இல்லாம முக்தி கிடைச்சிருக்கும் அவளுக்கு!" சொல்ல திடுக்கிட்டுப் போனார் அந்த பக்தர்.

தன்னை தரிசிக்க வரப்போகிற மூதாட்டிக்கு காசி, ராமேஸ்வர புண்ணிய தீர்த்தத்தில் நீராடும் ஆசை இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, உப்பு நீரை (ராமேஸ்வரம் கடல்நீர்) எடுத்துவைக்கச் சொன்னதும், அதையும், தமது கமண்டல தீர்த்தத்தையும் (சன்யாசிகளின் கமண்டல நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதிகம்) அந்த மூதாட்டி மேல் அபிஷேகிக்கச் சொன்னதும் ஆச்சரியம் என்றால், அவளது முக்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தாமதிக்காமல் அவள் ஆசையைப் பூர்த்தி செய்து புண்ணியம் தேடித் தந்தது எத்தனை பெரிய திருவிளையாடல்!

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
ravi said…
பாடல் பெற்ற சிவாலயம் *31/274*

திருஓமாம்புலியூர்

*மூலவர்*
துயரந்தீர்த்தநாதர்,
பிரணவ வியாக்ரபுரீசுவரர்
*தாயார்*
பூங்கொடிநாயகி,
புஷ்பலதாம்பிகை
*தலவிருட்சம்*
இலந்தை
*தீர்த்தம்*
கௌரி தீர்த்தம், கொள்ளிடம்
*பாடல் வகை*
தேவாரம்
*பாடியவர்கள்*
திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர்

*தலவரலாறு*

உமாதேவி ஒரு முறை, கைலாயத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்துகொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார்.
ravi said…
சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது, உமையின் கவனம் திசை திரும்பியது.
ravi said…
சிவபெருமான், உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்துவிட்டார். அதன்படி உமையம்மை பூமிக்கு வந்தார். பூமிக்கு வந்த தேவி, ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள்.
ravi said…
அம்பாளின் தவத்தினை மெச்சிய இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக் கூடாது என்பதற்காக, நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார்.
ravi said…
அப்போது முருகப் பெருமான் அங்கு வர, நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன், அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக்கொண்டார்.
ravi said…
இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது. இறைவனுக்கு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என்று பெயரும் ஏற்பட்டது.

*ஆலய அமைப்பு*

கிழக்கு நோக்கி அமைந்த இக்கோயில் மதில்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரி தீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம்.
ravi said…
அதனை அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. மூலவர் சுயம்புமூர்த்தியாக சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சி அளிக்கிறார்.
அம்பாள் தனி சன்னதியில் தெற்கு நோக்கி அழகாகக் காட்சித்தருகிறாள்.
ravi said…
சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும் மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன
ravi said…
இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்புடையவர். இறைவன் சந்நிதியில் வலதுபுறம் தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி, உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார்.
ravi said…
ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிப்பது இத்தலத்தில் மட்டும்தான். இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.
ravi said…
கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. சரஸ்வதிக்கு இவ்வாலயத்தில் தனிச் சன்னதி உள்ளது.

*அமைவிடம்*

சிதம்பரத்தில் இருந்து 31 கி.மீ. தொலைவில் காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் வழியில் உள்ளது இவ்வாலயம்.

*ஆலய முகவரி*

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்,
ஓமாம்புலியூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் *608 306.*

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*சிறப்பு*

பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று.

குரு பரிகாரத்தலம்.

நடராஜரின் கருங்கல் சிலாரூபம் மற்றும் இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதி.
ravi said…
தினம்ஓரு(தெய்வத்தின்)குரல்

ஸம்பந்தத்தைச் சொன்னேன். ஸம்பந்தரோடேயே ஆரம்பிக்கிறேன். அவர் குமாரஸ்வாமி அவதாரம். அண்ணாக்காரரையும், அவரையும் பிரிக்கவே படாது என்றும் சொன்னேனோல்லியோ? அதோடு திருமுறைகளிலேயே நூல்களை வரிசைப்படுத்தும்போது ஸம்பந்தரில்தான் ஆரம்பித்து, அப்புறம் அப்பர், அப்புறம் ஸுந்தரர் என்று போயிருக்கிறது.

ravi said…
தேரழுந்தூர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். தமிழில் கவிச் சக்கரவர்த்தி என்கிற கம்பன் பிறந்த ஊர். 'அழுந்தை மறையோர்' என்று பாட்டுக்குப் பாட்டு அங்கே விசேஷமாக வைதிகாசாரத்தை வளர்த்து வந்த பிராம்மணர்களை ஞானஸம்பந்தர் தம்முடைய பதிகம் நெடுகப் போற்றியிருக்கிறார். அங்கே ஸ்வாமிக்கு வேதபுரீச்வரர் என்றே பேராயிருப்பதால் ஊருக்கே வேதபுரி என்று இன்னொரு பேர் இருந்திருக்கணும். அந்த வேதபுரியில்தான் தமிழின் சக்கரவர்த்திக் கவி பிறந்திருக்கிறார் அங்கே ஞான ஸம்பந்த விநாயகர் என்றே ஒரு பிள்ளையார் இருக்கிறார்.

ravi said…
ஸம்பந்தரின் பாடல் பெற்ற அந்த ஸ்தலம் வைஷ்ணவர்களின் திவ்ய தேசத்திலும் ஒன்று. ஆமருவியப்பன் என்றும் கோஸகர் என்றும் ப்ரக்யாதி வாய்ந்த பெருமாள் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறார்.

ravi said…
ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அந்த ஊருக்குப் போனபோது இரண்டு பக்கங்களில் இரண்டு கோபுரங்கள் தெரிந்தது. ஒன்று ஈச்வரன் கோவில். இன்னொன்று பெருமாள் கோவில். அனன்யமான பக்தியை - அதாவது, ஒரு தெய்வத்திடம் மட்டுமே மனஸைப் பூர்ணமாக அர்ப்பணித்துச் செய்கிற பக்தியை - ஈச்வரனிடமே வைக்கவேண்டுமன்று தான் அவருக்கு அதிகாரம் சிவ பக்தியை வளர்த்துக் கொடுக்கவே அதிகார புருஷராக அவதாரம் செய்திருந்தவர் அவர். அதனால் கண்ணுக்குத் தெரிந்த இரண்டு கோவிலில் எது சிவாலயம் என்று தெரியாமல் அவர் கொஞ்சம் குழம்பினார். அப்போது இந்தப் பிள்ளையார்தான் அவருக்குக் கோவிலை அடையாளம் காட்டினார். அதனால் 'வழிகாட்டி விநாயகர்' என்றும் அவருக்கு ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.
ravi said…
ரொம்பவும் ஸந்தோஷத்துடன் சிவாலயம் சென்று பதிகம் பாடின ஸம்பந்தர் ஸ்வாமியிடம், "எனக்கு வழிகாட்டியது பிள்ளையார்தான் என்று என்றென்றைக்கும் லோகம் நினைவு வைத்துக் கொள்ளும்படியாக அவருக்கு என் பெயரையே சூட்ட வேணும். அதோடு, நீங்கள் ஆர்த்ரா (ஆருத்ரா) தர்சனமும் அந்த ஸந்நதியில்தான் மண்டகப்படி நடத்திக் கொள்ள வேண்டும்" என்று வரம் கேட்டு வாங்கிக் கொண்டார்.

ravi said…
அதனால்தான் அங்கே அந்தப் பிள்ளையாருக்கு 'ஆளுடைய பிள்ளையார்' என்றே சொல்லப்படும் ஞானஸம்பந்தரின் பேர். அந்த ஊர் சிவன் கோவில் நடராஜாவுக்குத் திருவாதிரையின் போது இன்றைக்கும் அங்கேதான் ஆர்த்ரா தர்சன வைபவம் நடத்தப்படுகிறது.
(இன்று ஞான சம்பந்தரின் குரு பூஜை)
ravi said…
பெரியவா சரணம்.

அன்றைய விடியற்காலையில் ஓர் அற்புதமான கனவு.

மனம் சோர்ந்த நிலையில் ஓர் பாதையில் நின்று கொண்டிருக்கின்றேன். அங்கே வழி நடப்போர் யாவரையும் காண்கையில் ஒருவருமே தெரிந்த முகமாக இல்லை. அந்த இடமும் புரியவில்லை. என்ன செய்வது என தவித்தபடி மனம் பதைத்துப் போய் நிற்கும்போது, அந்த பெரியவர் எனதருகே வந்தார்.

ravi said…
ஏதோ ஸ்லோகம் சொல்லியபடியே வந்தவர். அதனை நிறுத்திவிட்டு, "என்னப்பா... ரொம்ப கொழப்பமோ..?!!" என்றபடி புன்சிரிப்போடு எனைப் பார்த்தார்.

நானோ இவர் யார்னு தெரீலையேன்னு கண்கள் பணிக்க அவரை பார்த்தேன்... இவர் என்ன ஸ்லோகம் சொல்லிண்டுருக்கார்... கேள்விப்படலையே நாம் என்றபடி குழம்பிப் போனேன். காரணம் அவர் சொல்லிண்டு வந்த ஸ்லோக வார்த்தைகள்...

ravi said…
மறுபடியும் அவர் சிரிப்போடு, "என்ன, என்னையும் புரியலே, ஸ்லோகமும் தெரியலையோ..?" என்றபடி, "அது இருக்கட்டும்.. என்னோட வா, நோக்கு ஒண்ணு காட்டறேன்..." என்றபடி எந்த முன்னமாய் நகர, என்னையும் அறியாமல் அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தேன்.

ravi said…
சில வழிகள் நன்றாக செப்பணிட்ட சாலை, சிலது சிறிசு... சிலது பெரிசு.. சில தூரம் கரடு முரடாக.. கால்ல கல்லும் முள்ளும் குத்தி நடக்க முடியாம தடுமாறி மெல்ல நடந்து... கண்களில் நீர் வழிய முன்னமாய் எவ்வித சலனமுமின்றி அவர் நடப்பதை பார்த்தபடியாக பின் தொடர்கிறேன்...

ravi said…
அவர் மெல்ல நின்று திரும்பிப் பார்த்து, "என்ன, முடியலையோ... எதுவுமே அவ்ளோ சுலபமா கிடைக்காதுடா... அப்படி கிடைச்சதுல்லாம் சீக்ரமா விலகிடும்... கஷ்டப்பட்டு ச்ரமப்பட்டு லவலேசானும் அது என்னா....ந்னு உணர்ந்தப்றம் கிடைச்சதுன்னா... அது தான் நம்மோட நீண்டு வரும்... புரியறதோ.. மெல்ல வா" என்று சிரித்தபடி சொன்னார்.

ravi said…
என் மனமோ அவர் எங்கிட்டே வந்தபோது சொல்லிண்டு வந்த ஸ்லோக வார்த்தைகளிலே சிக்கியபடியாக... " யதந்தே காமாக்ஷி! ப்ரதி திவஸம்...." ம்ம்ம்ம்.. அப்புறமா "த்வதீயம் பாஜாப்ஜம்"... " பாடலருச" "காமாக்ஷி நியதம்"... சங்கரா... இது சௌந்தர்ய லஹரியா... மூக பஞ்சசதீயா... தெரீலையேன்னு யோசிக்கும்போது, "ரொம்ப யோசிக்காதடா... வா. வா!" என்றபடியாக நகர்ந்தார்.

ravi said…
ஒரு குறிப்பிட்ட இடம் சேர்ந்தபோது, "மெல்லமா, இத புடிச்சுண்டு ஏறு" என்றவரைப் பார்த்தபோது, அங்கே ஒரு மாடு நிற்பதைக் கண்டேன். அதன் இடப்புறமா ஒரு பெரிய பாறை. அது மேல தான் ஏறச்சொல்றார். மாட்டின் இடுப்பிலே கைபதிச்சுண்டு தாங்கிண்டு ஏறனுமா... அவரோ எப்படி பாறையின் மேலே ஏறினார்னு தெரீலையே.. இந்த மாடு முட்டிடாதோ என நினைக்கையில், "ஒண்ணும் பண்ணாது.. அதுகிட்ட ப்ரார்த்திச்சுண்டு ஏறு.." என்றவர் மெல்ல நகர்ந்தார். மெல்ல அதன் மேல் கைவைத்ததும், அதுனுடலை சிலிர்த்துக் கொண்டது, வாலை சுழட்டி தன் இடுப்பின் மேற்புரமாக தட்டிக் கொண்டது. ஓ... நான் அங்க தான் கைவச்சு ஏறணும்னு சொல்றது போலருக்குன்னு நினைச்சுண்டு மெல்ல அந்த இடத்தில் கை வைக்கின்றேன். அடுத்த நொடி நான் பாறையின் மேலே...!

ravi said…
ஆச்சர்யமாக எப்படின்னு திரும்பி மாட்டைப் பார்க்க எத்தணிக்கும்போது, கணீர் என அவர் குரல்... "கடந்து வந்தப்றம் எதுக்குடா திரும்பனும்...? நேரா வா" என்று நகர்கின்றார்.

ravi said…
இப்போது அவரை பார்க்கையில் ஆச்சர்யம். அவர் நடையில் ஒரு நளினம். அழகோ அழகு. அவர் ஒவ்வொரு காலையும் முன் வைக்கையில் பின் புறமிருந்து எடுத்து வைக்கும் காலின் பாதம் பார்க்கையில் அவ்வளவு சுகந்த நிறம். சட்டென ஓர் அதிர்வு.. அவர் கால்களில் என்ன? நலங்கிடப்பட்டிருக்கே... அவரோ பஞ்சகச்சம் கட்டிண்டாமாதிரி இருக்கு.. ஆ... பஞ்சகச்சமா அல்லது மடிசாரா... இது வெள்ளை நிறமா அல்லது வெள்ளையிலே சிறிது சிவப்பு கலந்து பட்டு ரோஜாவை விடவும் வெளிர் ரோஜா நிறமா.. இது என்ன அவருடைய கைகளிலே விபூதி காணும். ஆ.. கங்கணம் இப்போ வளையலா தெரியறதே... சட்டென அவர் பின்னந்தலையைப் பார்க்கும்போது அதிர்ந்தேன். அங்கே குடுமி முடிஞ்சுண்டுருநதார். இப்போ அதை சுழற்றி விட்டுட்டாரா? அது பொம்மணாட்டி கூந்தல் போல இருக்கே... இவர் ஆணா அல்லது பெண்ணா என நினைச்சுண்டே மெல்ல அவரை பின் தொடர்ந்தேன்.

ravi said…
அங்கே அந்த பாறை இப்போ பெரிய மலை முகடாக தோன்றியது. அங்கே ஒரு சிறு கோவில். சுற்றுச் சுவர் இல்லாத கோவிலா அல்லது நான் கோவிலுக்குள்ளே வந்தாச்சான்னு புரியலை. கருங்கல்லால் ஆன பீடம். அதன் மேல் கல்லாலான கொடிமரம். அதற்கு பின்னால் ஓர் அழகான கோவில்.

ravi said…
அங்கே அவர் நிற்கிறார். நான் அவரைக் கடந்து போய் நின்று கோவிலைக் கண்டு வியந்தபடியாக இருக்கையில்... அவர் சொல்லும் ஸ்லோகவரிகள் காதில் விழுகிறது. தெளிவா அர்த்தம் புரியறது. ஆனா ஸ்லோகம் புதுசு. நேக்கு தெரியாத ஸ்லோகம்.

ravi said…
ஆஹா இவ்ளோ அற்புதமான ஸ்லோகத்தை நான் கத்துக்கணும்னு நெனசசு திரும்பியவனுக்கு பக் கென இருந்தது. அங்கே அவர் இல்லை. இப்போ அந்த கொடிமர பீடமும் இல்லை. என்னாச்சுன்னு நினைச்சு கோவில் பக்கமா திரும்பினேன். அங்கே கோவிலும் இல்லை. நகர்ந்தேன்.. இதுவரை காலடியில நடந்துணர்ந்த பாறையும் இல்லை. வெறும் மணர்ப்பரப்பு. சுற்றிலும் மரங்கள்..வீடுகள்... தெரியாத மனிதர்கள்... சிரிப்புக்கள்.. கோபப் பேச்சுக்கள்... அழுகைச் சத்தம்... அங்கலாய்த்த பேச்சொலிகள் என நான் முன்னமாய் நின்றிருந்த அதே இடமோ அல்லது வேறொரு இடமோ...

ravi said…
ஆனா ஒண்ணு... இப்போ மனசுல பயமில்லே. திகைப்பு இல்லே.. இது எங்கேன்னு யோசிச்சு குழம்பலை. மேற்கொண்டு நடப்போம்.. கொஞ்ச தூரம் போனா நமக்கு ஏதாச்சும் வழி கிடைக்கும்..புரியும்.. எனும் தைர்யம்.

ச்லோக விளக்கத்தை மனசு அசைபோட நடந்தேன்.
ravi said…

ஹே காமாக்ஷி.. நல்ல மனிதர்கள் தமது குருவின் கடாக்ஷத்தால் ஒளியால் இருட்டுங்கிற அறியாமை அஞ்ஞானத்துல் இருந்து வெளி வந்து விடுகிறார்கள். வேதம் சொல்லிருக்கற நல்ல விஷய்ங்களை உணர்ந்து நடந்து உன்னோட கமல பாதத்தை எப்பவும் மனசுல த்யானிக்க ஆரம்பிக்கறா. உன்னோட காலி்லே இருக்கற கொலுசொலி எல்லோருக்கும் செழிப்பு தர்றது. சிவனையே மயக்கின உன்னோட நாம ஸ்மரணையும் ஜபமும் எதையும் சாதிக்க அருள் தருமே...

ravi said…
சட்டென எதையோ நினைச்சுண்டு திரும்பினேன்...... நான் படுக்கையிலிருந்து புரளுவதை உணர்ந்தேன். இதுகாறும் நாம் கண்டது கனவு எனவும் தெளிந்தேன்.

எழுந்து கொண்டு இவ்வளவு நேரமாகியும், நனவிலும் அந்தக் கனவையோ அதனில் கேட்ட சில வார்த்தைகளையோ, உணர்ந்தவற்றையோ மறக்கவில்லை. இங்கே பகிர்ந்தபடியாக இருக்கின்றேன்.

காரணம்... மூளை உணர்ந்த சிலவற்றை எம் மனம் உணர்ந்து கொள்ள எவரேனும் உதவிட மாட்டாரா என்ற ஏக்கம்.

காமக்ஷியின் அப்படிப் பட்ட விளக்கம் வரும் ஸ்லோகம் தான் என்ன?

வெறும் பாறையின் மேல் கோயில் எங்கே இருக்கு? அதுவும் கருங்கல்லால் ஆன த்வஜஸ்தம்பம்...

ravi said…
பஞ்சகச்சம்.. மடிசார்; கங்கநம்.. வளையல்; குடுமி.. ஜடை; செந்தூரப் பொட்டு...

சொல்ல மறந்துட்டேனே... அந்த கோவிலுக்கு வலது புறம் ஒரு பெரிய மாமரம் கூட.

விளக்கமும் ஸ்லோகமும் தெரிஞ்சவா இந்த அற்பப் பதருக்கு உதவுங்களேன்.

ஆனால் இன்று படுக்கையில் இருந்து எழும்போது அடியேன் சொல்லிண்டே எழுந்தேன்..."ச்ருதீநாம் மூர்தானோ...." என்ற பகவத்பாதாளோட சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை...

ஆம். சௌந்தர்ய லஹரியோட பொருள் விளக்கம் மட்டுமல்ல....பல ஸ்லோகங்களையும், நல்ல விட்ஹயங்களையும் சொல்லித் தந்த, இன்றும் எனக்கு நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும் என் அன்பு உறவுகள் எல்லோருக்கும் நமஸ்காரங்கள்.

இன்றிருக்கின்றேன்... மஹா அனுஷ பூஜையிலே கலந்து கொள்ளவும் செய்தேன். இருக்கின்ற இன்றைய உயிர்ப்பினிலே எல்லோருக்குமாக ப்ரார்த்தனை செய்தேன். எதுவரை எந்தன் வாழ்வுப்பயணம் என்பதறியேன். ஆனால் எல்லாவற்றையும் அறிந்துள்ள ஜகதாச்சார்யர்களை அனுதினமும் நினைக்க அறிவேன். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இனி கிட்டும் பிறப்புக்களிலும் எம் சங்கரனைப் போற்றும் தனிப்பெரும் பாக்கியம் அவர் அருள்வார். இப்பிறப்பில் என்னோடு பயணித்த, பயணிக்கும், பயணிக்கப் போகும் எல்லோருக்குமாக ப்ரார்த்தித்தேன். அடுத்தென்ன என்பதை அவரே அறிவார்.

ஆம்!

பெரியவா சித்தம் அடியேன் பாக்கியம்.

சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்.

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை