பச்சைப்புடவைக்காரி -  அழகு குமரன் - 412

 *பச்சைப்புடவைக்காரி* 🙏🙏🙏

           என் எண்ணங்கள்

அழகு குமரன்  - 412


  *412* 🏆🏆🏆


ரவி இன்று எந்த ஆலயமும் நாம் போகப்போவதில்லை .. குமரனின் பெருமைகளைப் பற்றி பேசுவோம் ஒரு மாறுதலுக்காக...

சொல்லுங்கள் தாயே .. கொடுத்து வைத்திருக்க வேண்டும் ..உங்களிடம் இருந்து கேட்க 🦁🦁🦁


*முருகன்* -


 *அழகுக் குமரன்* 


அவனை நாளும் தரிசிக்கக் குறையொன்றும் இல்லையே..!


கந்த சஷ்டியில், 'மாறுபடு சூரர்'களை வதைத்த திருமுகத்துக்கு உரியவரான குமரனின் தரிசனம் காண்போமே... 

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பார்கள்.

தெய்வம், தன்னை அன்புடன் கொண்டாடி போற்றுபவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வரமாகத் தருவது போலவே-

குழந்தையும் தன்னிடம் அன்பு காட்டி கொஞ்சுபவர்க்கெல்லாம், தன்னிடமுள்ள எது ஒன்றையும் கேட்காமலேயே கொடுக்கக்கூடியது.

'இதனால்தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்று கூறியிருக்கிறார்கள். 👍👍👍



அந்த தெய்வமே குழந்தை வடிவில் இருந்துவிட்டால்..?

அங்கே அன்புக்கும் அருளுக்கும் பஞ்சமே இல்லை.

அப்படிக் குழந்தை வடிவத்தில் நம்மால் கொண்டாடப்பெறும் தெய்வங்கள் சைவத்தில் சிவகுமாரனும், வைணவத்தில் வசுதேவ குமாரனான கண்ணனுமே ஆவர். 

அழகுக்கும் தமிழுக்கும் ஒரு வடிவமாகத் திகழ்பவர் முருகப் பெருமான்.

முருகனைக் குழந்தையாக அன்பு செலுத்தி, அவன் புகழ் பாடிப் பரவசப்பட்டவர்கள் பலர்.🦜🦚🦚



அகத்தியருக்குத் தமிழ் கற்பித்த திறம் என்ன..?

பேசாப் பிள்ளையாக இருந்த குமரகுருபர குழந்தையைப் பேசவைத்து, 

காசியின் காற்றிலும் தமிழின் இனிமை பரவவிட்ட திறம் என்ன..?

'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டு, தமிழ் மூதாட்டி ஔவைக்கு ஞானம் புகட்டிய திறம்தான் என்ன..?

இப்படி நம் அழகன் முருகப் பெருமானின் அற்புத அருளாடல்களுக்குப் பஞ்சமே இல்லை. 

பற்றுகளை அறுத்தெறிந்து, எதுவும் வேண்டாம் என்று பழநியில் ஆண்டியாக நிற்பவன் அவன்!

இச்சா சக்தியான வள்ளியையும், கிரியா சக்தியான தெய்வானையையும் மணந்து, திருக்கல்யாணக் கோலத்தில் தணிகை மலையில் அருள்பவனும் அவன்தான்!🦚🦚🦚



முருகன் எந்தக் கோலத்தில் இருந்தாலும், அவனைக் குழந்தையாகப் பாவித்து, பரிவுடன் அன்பு செலுத்துவதில் தமிழக மக்களுக்கு நிகர் அவர்கள்தான். 

தங்கள் மொழி காக்க வந்த தமிழ்க்கடவுள் என்பதால் நமக்கெல்லாம் முருகப் பெருமானிடம் அத்தனை அன்பு, பரிவு!

திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் முதல், சொல்லச் சொல்ல வாய் மணக்கும் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் வரை அத்தனை பேரும் முருகப் பெருமானின் அருள் திறனை அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள்.

முருகப் பெருமானை, நாம் பல வடிவங்களில் வழிபடுகிறோம். 

நாம் எந்த வடிவில் விரும்புகிறோமோ, அந்த வடிவில் நம்மை ஆட்கொண்டு அருள்பவர் முருகக் கடவுள்.🦚🦚🦚




சிவ ஸ்வரூபம் என்பது ஞானத்தின் வடிவம்; 

முருகப் பெருமான் 

விருத்தி வடிவம். 

சிவ ஸ்வரூபம் என்பது ஒளிரும் ஞானம் என்றால், அந்த ஞானத்தை மற்றவர்க்கு எடுத்துக் காட்டும் ஜோதியாகத் திகழ்பவர் முருகப் பெருமான். 

எனவேதான், அருணகிரிநாதர் தம் திருப்புகழில், ' *தீப* *மங்கள ஜோதி'* யாக முருகப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். 

சிவபெருமானின் ஞானக் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஞானச்சுடர்ப் பொறிகளிலிருந்து தோன்றியவர் குமரக் கடவுள். 🔥🔥🔥



இதைத்தான் கந்த புராணம் அருளிய கச்சியப்பர்,

அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்

பிரும்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக் 

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே 

ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய'

என்று உருகி உருகிப் பாடியிருக்கிறார்.

மால் மருகனின் அவதாரம் சூரர்களை சம்ஹாரம் செய்வதற்கு மட்டுமல்ல, இந்தக் கலியுகத்தில், ஆசாபாசங்களின் காரணமாக நம் மனதில் ஏற்படக்கூடிய அசுர குணங்களை எல்லாம் அகற்றி, நம்மை ஆட்கொண்டு அருள்வதற்காக ஏற்பட்ட அவதாரம். 🥇🥇🥇


முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களைப் பற்றிப் பாடும்போது, முதல் வரியில் முருகனை விளையாட்டுப் பிள்ளையாக பாவித்துப் பாடுகிறார் அருணகிரிநாதர். 


அருணாசலத்தில் அழகன் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அருணகிரிநாதர் தம் திருப்புகழ்ப் பாடல்களில் பக்தி மணம் கமழக் கமழப் போற்றிப் பாடியிருக்கிறார்.


முருகப் பெருமானின் ஆறுமுகங்களின் அழகை, அருளாடல்களை உணர்த்தும் அந்தப் பாடல் இதோ...

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!

குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

இந்தப் பாடலில் மற்ற வரிகள் உணர்த்தும் தத்துவங்கள் எதுவும் நமக்கு வேண்டாம். 

மயில் ஏறி விளையாடும் குழந்தையாக நாம் குமரனை தரிசித்துக் கொண்டாடுவோம்.👏👏👏



அந்தக் குழந்தைக் குமரன், நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியன எல்லாம் அருள்வான்!

உண்மை தாயே!!

குழந்தையாக அவன் இருப்பதால் கள்ளம் கபடு இல்லாத தெய்வமாக இருக்கிறான் .. பிள்ளையாகவே இருந்து விட்டால் தொல்லை ஒன்றும் இல்லை . பெரியவர்களாக வளரும் போது தான் மனதில் எண்ணங்கள் குடி கொள்ளத் தொடங்குகின்றன ... 

இந்த குழந்தை உள்ளம் எங்கள் எல்லோருக்கும் வேண்டும் தாயே !!

சிரித்தாள் பரிமள பைங்கிளி ... சிரிப்பில் தந்தேன் வரம் என்று சொற்கள் காற்றில் பறந்து வந்து என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டன. 👌👌👌




*742  பவதாவ* *ஸுதாவ்றுஷ்டிஃ* ,

பொருள் விரும்பி  ஆசையில் மூழ்கி தவிக்கும், பரிதவிக்கும்  மானிட வாழ்க்கை எனும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டவனுக்கு  தேன்மழையாக  அவன் தாபத்தை போக்குபவள் அம்பாள் என்று இந்த அற்புத நாமம் சொல்கிறது.  

 *பவம்* தான் சம்சாரம் *தாவம்* என்றால் காடு💐💐💐

=======👍👍👍👌👌👌💐💐💐===========



Comments

S G S Ramani said…
அருமையான பதிவு..

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

ஓம் சரவணபவ..

🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
இன்று காலையில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் எதிரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தார். அவரிடம் கோயில் மூடியிருக்கிறது, பக்தர்கள் வருவது இல்லை, பின்னே எதற்கு இங்கு வந்திருக்கிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவரின் பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருந்தது.

ravi said…
நான் கோயிலில் பக்தர்கள் வரும்போது அவர்கள் தரும் காசுகளைக் கொண்டு எனது வயிற்றை நிரப்பிக் கொண்டேன். இப்போதும் அந்த காமாக்ஷி அம்மனை நினைத்து கொண்டு இங்கு வந்து விடுவேன்.
ravi said…
பக்தர்கள் வராவிட்டாலும் அவளுடைய பார்வை என் மீது இருக்கும் என்று அந்த நம்பிக்கையுடன் வந்து விடுவேன். அவள் என்னை கைவிடவில்லை.
ravi said…
தினமும் காலை மதியம் மற்றும் இரவு கோவிலை சுற்றி வருபவர்கள் மற்றும் தர்மவான்கள் எனக்கு உணவை தந்து விடுகிறார்கள். முன்பாவது நான் காசு கொடுத்து சாப்பிட வேண்டும். அவளை நம்பி நான் வந்தது முதல் எனக்கு உணவை இருக்கும் இடத்திலேயே தந்து விடுகிறாள். எனது நம்பிக்கை வாழ்வு எல்லாம் என் தாயான காமாட்சி தான்.

ravi said…
இதுதான் அவருடைய பதில் நான் அவரிடம் பேசி முடித்தவுடன் உடனே ஒரு இளைஞன் உணவு கொடுத்து சென்றுவிட்டான். பிச்சைக்காரன் என்னை பார்த்து என்னுடைய நம்பிக்கை நீங்களே பார்த்தீர்களா உடனடியாக எனது தாயார் என்னை கவனித்துக் கொண்டார். எப்போதுமே அவளினை நினைத்துக்கொண்டால் அவள் பார்த்துக்கொள்வாள் என்று சொல்லிவிட்டார்.

Total surrenderன் அர்த்தம் தெரிந்தது. கல்லினுள் உள்ள தேரைக்கும் அன்னம் படைக்கும் தாய் அவருக்கும் படைக்க மாட்டாளா?
ravi said…
திருக்கடையூர் அபிராமி *42*

*பாடல் 40*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
*40. பூர்வ புண்ணியம் பலன்தர*

வாணுதல் கண்ணியை,

விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப்

பேதை நெஞ்சில்
காணதற்கு அண்ணியள்

அல்லாத கன்னியைக்

காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ

முன்செய் புண்ணியமே.👏👏👏
ravi said…
இந்த பாடலும் மிகவும் அருமையானது ..

அம்பாள் நம் அருகில் என்றும் இருப்பவள் ஆனால் மனதில் அறியாமை , பேதமை , அவநம்பிக்கை இப்படி எவ்வளவோ சீனா சுவர் போல் நீண்டு பெரியதாய் திரையை எழுப்பி உள்ளோம் ..

இப்படி மனதில் குப்பைகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அவள் அருகில் இருந்தாலும் தெரிவதில்லை ...

அவளை வானவர்கள் இங்கு வந்து பார்க்க எண்ணி துடிக்கிறார்கள் ...

ravi said…
நமக்கு அவளை பார்க்க வேண்டும், அவளைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் , அவளைப்பற்றிய பதிவுகளை படிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்தாலே அது இந்த பிறவியில் செய்த புண்ணியம் மட்டும் இல்லை ..

முன் பிறவிகளில் செய்த மா தவம் புண்ணியம் ... 🥇🥇🥇
ravi said…
*40. பூர்வ புண்ணியம் பலன்தர*

*வாணுதல் கண்ணியை,*

அழகிய காந்தி வீசும் நெற்றியை உடையவள் முக்கண்ணி ..

சோமன் , சூரியன் , அக்னி என்ற மூன்று கண்களை கொண்டவள் ..

அக்னி எனும் நெற்றிக்கண்ணை நம் பகைவர்களை அழிக்க திறக்கின்றாள் ..

அவள் என்றும் இளமை மாறாதவள் . 🙏🙏🙏
ravi said…
*40. பூர்வ புண்ணியம் பலன்தர*

வாணுதல் கண்ணியை,

*விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்*

வானவர்கள் அனைவரும் அவளை வணங்க , தொழ அவள் தாமரை பாதங்களை பற்ற துடிக்கிறார்கள் ..

பூமியில் அவள் எளிதாய் தென்படுவதால் வானுலகை விட்டு பூமிக்கு வர எண்ணுகிறார்கள் 👏👏👏
ravi said…
*பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப்*


அவர்களால் எண்ண மட்டுமே முடிகிறது ... செயலில் காட்ட முடியவில்லை .. நாமும் இதோ இங்கே இருக்கும் திருக்கடையூர் போவோம் என்று திட்டம் தீட்டுகிறோம் ... வருடங்கள் ஓடி விட்டன .. போய் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் அமைவதில்லை .. இந்த விஷயத்தில் நாமும் தேவர்களும் ஒன்றே

கருவூர் ( கரு வளரும் ஊர் .. அதாவது தாயின் கருப்பை ) இனி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கடையூர் ( கடைசி ஊர்) அவசியம் போய் பார்க்க வேண்டும் .

இனி பிறவிகள் வாராது ..

இந்த பிறவி தான் நம் எல்லோருக்கும் கடைசி பிறவியாக இருக்கும் 🥇🥇🥇
ravi said…
*பேதை நெஞ்சில்*
*காணதற்கு* *அண்ணியள்*

அண்ணி என்பது அன்னைக்கு அடுத்தவளாக இருப்பவள் ...

அதனால் தான் அண்ணனின் மனைவியை அண்ணி என்று அழைக்கிறோம் .

*அண்ணியள்* என்பதற்கு அருகில் இருப்பவள் என்றும் அர்த்தம் உண்டு ..

அருகில் நிற்பவள் ... மனதில் பேதமை இருந்தால் அவள் வெகுதூரத்தில் போய் நின்று விடுவாள் ..

🙏🙏🙏
ravi said…
*அல்லாத கன்னியைக்*
*காணும் அன்பு*
*பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ*

இவ்வளவு பேதமைகளை மனதில் பூட்டி வைத்திருந்தாலும்

அவளை வணங்க வேண்டும் , அவள் திருவடிகளை பற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை , எண்ணம் என் நெஞ்சில் உருவாகியதே கண்டிப்பாக நான் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமாக இருக்காது ...

பல பிறவிகளாக நான் செய்து வந்த மா தவம் புண்ணியம் 🥇🥇🥇

முன்செய் புண்ணியமே.👏👏👏
ravi said…
நான் முன் பிறவிகளில் செய்த புண்ணியம் என் நெஞ்சில் பேதமைகள் கூடை கூடையாய் குவிந்து இருந்தாலும் என் அருகில் அம்பாள் வந்து நிற்க உதவியது ..

வானவர்களுக்கும் கிடைக்காத மிகப்பெரிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது . 🙏🙏🙏
ravi said…
*சுருக்கம்*

ஒளிவீசித் திகழும் அழகிய திருநெற்றியிலே விழி பெற்ற வளை,

தேவர்களும் வந்து வணங்கி வழிபட விழை கின்ற அபிராமி என்னும் எம் பெருமாட்டியைத் தொழும் வாய்ப்பு எனக்கு எப்படி ஏற்பட்டது?

அறியாமை நிறைந்த நெஞ்சினருக்கு, மிக அருகிலிருந்தும் கூடக் கண்டுகொள்ள முடியாத கன்னியான அவளைக்

கண்டு தொழுது அவளது பேரன்பை நான் பெறுவதற்கு, முற் பிறவிகளில் நான் செய்த புண்ணியங்களின் பயனே காரணம் எனக் கருதுகிறேன்.🥇🥇🥇
Savitha said…
விளக்கம் மிகவும் படிப்பவருக்கு புரியும் வண்ணம் எழுதும் திறன்
அபிராமியின் அருள்
🙏🏻🙏🏻🌷அபிராமவல்லியே🙏🏻🙏🏻🙏🏻
Sujatha said…
Wonderful 👏👏👏🙏🏼🙏🏼
ravi said…
உண்மையை உரக்க சொல்லும் வார்த்தை சித்தருக்கு நன்றிகள் பல பல...

🙏🙏🙏🙏🙏
ravi said…
மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது எல்லோரும் அஅ வை படிப்பது .. சத்தியமாக சொல்கிறேன் .. முன் பிறவிகளில் நாம் செய்த புண்ணியம் .. சக்தி நம்முள் மலர்வது ..
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 983*🥇🥇🥇🏆🏆🏆

*US 975*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

39 வது ஸ்தபகம்

*ஏகோநசத் வாரிம்ஸ ஸ்தபக*

ப்ராயோ வ்யோ மஸரீரா( இந்த் ரவஜ்ரா வ்ருத்தம் )

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
975 🥇🥇🥇

ஏதா கவீ நாம் பதகிங்கரஸ்ய

பூதா ப்ரமோதம் பரமாவாஹந்து

கீதாஸ்ஸபக்தித் ரவமிந்த் ரவஜ்ரா

ஸ்வே தாசலா தீஸ்வர வல்லபாயா 🦚🦚🦚
ravi said…
இந்த *இந்திர வஜ்ரம்* என்ற சந்தத்தில் உள்ள எல்லா பாடல்களும் ஸ்ரீ ரமணர் எழுதியது .. ஓவ்வொன்றும் முத்துக்கள் வயிரங்கள் மாணிக்கங்கள் .. சொல்பவரும் நவரத்தினமாய் திகழ்வார் 🦚🦚🦚
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 401*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

75
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
நீலாகா மதுகரந்தி மனேஜ்ஞ நாஸா

முக்தாருச ப்ரகட ( ரூட) கந்த பிஸாங்குரந்தி

காரூண்யமம்ப மகரந்ததி காமகோடி

மன்யே தத கமலமேவ விலோசனம் தே 👏👏👏
ravi said…
அம்மா ... உன் கரங்கூந்தல் சுருள்கள் வண்டுகளாய் தெரிகின்றன

உன் நாசியில் உள்ள முத்தின் வெண்ணிற ஒளிகள் தாமரை தண்டின் முளைகளாகவும் கண்ணில் பெருகும் கருணாரசம் மகரந்தமாகிய தேனாகவும் இருப்பதால் தானோ உன் பார்வையை கவிகள் தாமரை மலரை ஒத்திருக்கிறது என்கிறார்கள் 🤔
ravi said…
*[98/108] – அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்*
ravi said…
இந்தக் கோயிலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சரயு நதியில் தனது சகோதரர்களுடன் சங்கமம் ஆன குப்தா படித்துறை உள்ளது.

இங்க நீராடுவது புண்ணியம் தரும்.

இந்த ஆற்றின் கரையில் உள்ள அனுமன் விஸ்வருப வடிவம் கொண்டவராக இருந்தார்.

இப்போது தலை மட்டுமே தெரிகிறது.

குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோர் அயோத்தி பற்றி பாடியுள்ளார்கள்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 98 வது திவ்ய தேசம்.🥇🥇🥇
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூவரையும் வென்ற பேராற்றல் உடைய யானே, இராமனின் அம்புகளால் நொந்தேன் என்றால், அவற்றின் ஆற்றலை என்னவென்று சொல்வேன். நான் திக் விஜயம் செய்தபோது இந்திரன், திருமால், பிரமன், ஈசன் என அனைவரையும் வென்று விட்டேன். இவர்களால் எனக்குத் தோல்வி வராமல் இவர்களினும் ஆண்மை மிகுந்த இராமனால் அழிவு வந்ததே என்பதற்கு மகிழ்கிறேன்".

ravi said…
"வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழுவான் அங்கை
ஈசன், என்று இனைய தன்மை இனிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்றபோதும் நல்லதோர் பகையப் பெற்றேன்;
பூசல் உண்டு உறையும் தாராய், இது இங்குப் புகுந்தது என்றான்".

இதுதான் நடந்தது என்று இராவணன் மாலியவானிடம் கூறினான்.
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
கொடும் அம்புகளை விட்டு எண்ணற்ற அரக்கர்களைக் கொன்ற இராமன், முன்னர் கூனி என்பவளின் முதுகில் அம்பு விட்டதைப் போல விளையாட்டாகப் போர் புரிந்தானே தவிர, சினத்தோடு போரிட்டதாகத் தெரியவில்லை."

காகுத்தன் மரபில் தோன்றிய இராமனுடைய அம்புகளின் இயல்பு, நல்ல புலவர்கள் கவிதையில் கையாண்ட தேர்ந்த சொற்களைப் போலவும், அச்செய்யுளில் அமைந்த தொடை, ஓசை, பொருள், அணி போன்ற பண்புகள் அனைத்தும் உடையது. இராமனின் அம்புகளுக்கு, நல்ல புலவர்கள் இயற்றும் செய்யுளுக்கு உவமை கூறியது சிறப்பு.
ravi said…
*[98/108] – அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்*
ravi said…
நாம் இருக்கும்போது இன்னோருத்தியை தனது கணவர் நாடுகிறாரே என அவள் மனம் எந்த அளவு புண்பட்டிருக்கும்.

அந்த புண்பட்ட மணம் தன்னை அறியாமல் விட்ட சாபமே ராவணனின் அழிவுக்கு காரணமாயிற்று.

*தல சிறப்பு*

ராமனின் ஜெனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன.

இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் சிரமமானது. எனவே அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.🥇🥇🥇
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 400*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

74
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
74 🥇🥇🥇

மூகோ விரிஞ்சதி பரம் புருஷ குரூப

கந்தர்ப்பதி த்ரி தசராஜாதி கிம்ப சான

காமாக்ஷி கேவல முப்பக்ரமகால ஏவ

லீலா தரங்கித கடாக்ஷருச க்ஷணம் தே 🦚🦚🦚
ravi said…
காமாக்ஷியின் அருள் எப்படிப்பட்டது என்பதை அனுபவித்தவர்கள் உணர்ந்தவர்கள் மட்டுமே விவரிக்க முடியும் . 🙏🙏🙏
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 982*🥇🥇🥇🏆🏆🏆

*US 974*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

39 வது ஸ்தபகம்

*ஏகோநசத் வாரிம்ஸ ஸ்தபக*

ப்ராயோ வ்யோ மஸரீரா( இந்த் ரவஜ்ரா வ்ருத்தம் )

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
974 🦚🦚🦚

ஏகாக்ஷரீ பஞ்சத சாக்ஷரீம் வா

வித்யா ப்ரக்ருஷ்டா ஸகலே ஸஸக்தே

யோ பக்தியுக்த ப்ரஜபேத முஷ்ய

ப்ராணோ வஸே நிஸ்துலஸித்தி யோனி 🙏🙏🙏
ravi said…
ஹ்ரீம் .. புவனேஸ்வரீ

க்ரீம் -- காளி

ஹ்ரூம் -- ப்ரசண்டசண்டி

ஸ்ரீம் --- ஸ்ரீ லலிதாம்பிகை

இதில் எதை ஒன்றை சிந்தனையில் ஒருவன் பூஜிக்கிறானோ அவனை தேவர்களும் வந்து வாங்குபவர் 👏👏👏
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

♦️மனம் எந்த விசயத்தையாவது நினைத்து குழப்பமாக
இருந்தால் வீட்டில் இருக்காமல்
வெளியில் நமக்கு பிடித்த இடத்துக்கு
செல்லலாம் அல்லது இயற்கை சூழல் நிறைந்த இடத்திற்கு சென்று வாருங்கள்.

♦️இதன் மூலம் மனம்
தெளிவடையும், குழப்ப
விசயத்துக்கான தீர்வையும் மனம் சொல்லும்.

♦️என்னால் முடியும்!
என்னால் முடியும்! இந்தத்
தாரக மந்திரத்தைக் கண்ணாடி முன் நின்று கொண்டு மனம் தோல்வியால் துவண்டிருக்கும் போது உங்களுக்கு நீங்களே சொல்லிப் பாருங்கள்.

♦️அது உங்கள் மனதில் ஆழமான
தன்னம்பிக்கையையும், நேர்மறை
எண்ணங்களையும் விதைக்கும்.

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
மிருத்யுஞ்சய மந்திர யஜ்ஞம்

மிருத்யுஞ்சய மந்திரத்தை 11 முறை உச்சரித்து ஒருவருக்கொருவர் வழங்குகிறோம். இந்த பிரார்த்தனை மந்திரத்தை நான் தவிர 10 பேருக்கு அனுப்புங்கள். நீங்கள் அனுப்ப முடியாவிட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள், இந்த பிரார்த்தனை ஓட்டத்தை நிறுத்தாமல் வேறு ஒருவருக்கு அனுப்புவோம், அனைவருக்கும் நல்லது செய்வோம் ...
மனித இனத்தை பிடுங்கிக் கொண்டிருக்கும் இந்த அகால மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற கடவுளிடம் ஜெபிப்போம்.

முடிந்தால், மிருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் பதினொரு அல்லது 108 முறை பாராயணம் செய்யுங்கள்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽


11) ஓம் திரையம்பகம்
யஜமஹே
சுகந்திம் புஷ்டி
வர்தனம் |
ஊர்வருகாமிவா
பந்தனான்
மிருத்யோர்
முக்க்ஷீய
மாம்ருதாத் ||

இந்த யஜ்ஞம் உங்களுடன் நிறுத்தக்கூடாது .. முன்னோக்கி அனுப்பப்பட வேண்டும்

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ravi said…
வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல ஆறு கட்டளைகள் எடுத்துக்கோங்க..
வாழ்வு ரொம்ப மகிழ்ச்சியா மாறிடும்.

1.எதற்கெடுத்தாலும் எல்லாத்துக்கும்
கவலை படாதீங்க.
காலையில அழுதா
ஈவினிங் சிரிப்போம்..
துக்கமோ மகிழ்வோ எதுவோ
அதிக நேரம் நம்ம உடல்நிலை எடுத்துக்காது.
எல்லாம் கொஞ்ச நேரம்.
மீறி போனா அதை நீங்களே பிடிச்சு தொங்கறீங்கன்னு அர்த்தம்.

ravi said…
2.யதார்த்தம் பழகுங்க..
அதான் முக்கியம்.
யார்‌ வேணா கீழிருந்து மேலையும் மேலிருந்து கீழேயும் ஒரு நாளிலியே மாறிடுவாங்க.
எனக்கா இந்த நிலைமை ன்னு வாயடைச்சு போகாதீங்க.
உங்களை விட அவமான பட்டவங்க எல்லாம் உலகத்துல இருக்காங்க.

ravi said…
3.எதையும் ஆழமாக நேசிக்காதீங்க.
எதையும் ஆழமாக யோசிக்காதீங்க.
ரொம்ப சிம்பிள் இது.
நேசித்தலும் அதற்கான
யோசித்தலும் தான் அழுகைக்கு அடிப்படை காரணம் என்ற தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க.

ravi said…
4.ஒருத்தவங்க போயிட்டாங்கன்னா கெஞ்சாதீங்க.
வேணும் வரை இருந்துட்டு திடீர்னு போறாங்கன்னா கஷ்டபட வேண்டியது அவங்க தான். ‌
நீங்க இல்ல.
உதாசீன படுத்தினா உதறி விடுங்க.
விலகி செல்பவர்களிடம் தானா போயிட்டு அன்பை கொட்டாதீங்க..
அதனால் வர அற்ப கவலைகளுக்கு
இடம் தராதீங்க..
அந்த நினைவுகள் மேலே எழும்பிச்சுன்னா ஒரே போடு போட்டு புதைச்சிடுங்க..

ravi said…
5.துரோகம் பழகுங்க...
பிறப்பு இறப்பு போல துரோகமும்
மனித வாழ்வில் ஓர் அங்கம்.
ஏமாற்றத்தை ஏற்றுக்கங்க.
அப்பதான் அடுத்த முறை
ஏமாற மாட்டீங்க.
இழப்புகளை இயல்பாக்குங்க.
அப்போதுதான் இழப்புகளை பற்றி
கவலைபட மாட்டீங்க.
அவ்வளவு எளிதில் எவரையும்
நம்பிடாதீங்க.
வாழ்க்கையில் இதான் முக்கியம்.
ravi said…

6.ஆறுதலா இருக்க உங்களை தயார்படுத்திக்கங்க.
வேற யாரும் பண்ணுவாங்கன்னு நிக்காதீங்க.
உங்களுக்கு நீங்க தான் வேலைக்காரன் எஜமான் எல்லாமே..
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஒரு ப்ரதேசம் பாலைவனமான பின் அதிலே ஜலமே இல்லை. பொய் ஜலம்தான் கானல் நீராகத் தெரிகிறது. ஆனால் அந்த ப்ரதேசம் பாலைவனமாவதற்கு முன் எப்படி இருந்தது என்பதற்கு ஜியாலஜியில் சொல்வதைக் கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆதியிலே பெரிய ஜலாசயங்களாக, நீர் நிலைகளாக, ஸமுத்ரமாக இருந்த இடங்கள்தான் பிற்பாடு பல மாறுதல்களால் பாலைவனங்களாகிவிட்டன என்று பூதத்வ சாஸ்த்ரத்தில் ஆராய்ச்சி செய்து விளக்குகிறார்கள்.
ravi said…
முக்யமாக இப்போது பாலைவனமாக இருக்கிற ப்ரதேசங்களைத் தோண்டிப் பார்க்கிறபோது, அவற்றில் ஸமுத்ரத்தில் மாத்திரமே வாழக்கூடிய திமிங்கிலங்கள், மீன்கள் முதலியவற்றின் எலும்புகள், கிளிஞ்சல் சிப்பிகள் முதலியன கிடைக்கின்றன.
ravi said…
இதனால் ஆதிகாலத்தில் பெரிய நீர் நிலைகளாக இருந்தவைதான் இன்றைய பாலைவனங்களாகியிருக்கின்றன என்று தெரிகிறது. ஒவ்வொரு ஸமயங்களில் ஏற்பட்ட பூகம்பம் முதலான பெரிய சலனங்களால் ஸமுத்ரத்தில் சில இடங்களில் அடி பூமி முற்றிலும் மேலுக்கு வந்து வளைத்துக்கொண்டு அதற்கு நடுவே land locked-ஆக ஸமுத்ர ஜலம் தேங்கியிருக்கிறது.
ravi said…
அப்புறம் ஸூர்ய உஷ்ணத்தினாலும், இன்னும் வேறு தினுசான பருவ மாறுபாடுகளாலும் இந்த ஜலம் வற்றிப்போன பிற்பாடுதான், ஒரு காலத்தில் நீர்நிலையாக இருந்த இடங்களே பிறகு சொட்டு ஜலம்கூட இல்லாத பாலைவனங்களாகிவிட்டன என்கிறார்கள். ஆதியிலேயே மநுஷ்யனுக்கு இருப்பிடமாக ஸங்கல்பமான பூமியில், அவனுடைய வாழ்வுக்கு அவச்யமான மழை, நதி, பயிர் பச்சை எல்லாம் இருக்கின்றன.
ravi said…
ஆனால் இப்போது விபரீதமாக பூமியோடு ஸமுத்ரப்பகுதியும் வற்றிச் சேர்கிறபோது, இப்படிப்பட்ட பாலைவன பூமியில் மழையும் இல்லை, பயிர் பச்சையும் இல்லை. ஆதியில் பரமாத்மா, ‘இது கடல் ப்ரதேசம், அதனால் இந்த இடத்தில் ஜலத்தின் உள்ளோட்டம் (under current) வேண்டாம்’ என்று வைத்து விட்ட இடம்தானே இப்போது நிலப்பகுதியோடு சேர்ந்து விட்டது, அப்படிச் சேர்ந்துவிட்டது என்பதற்காக அவர் பழைய இயற்கை விதிகளை மாற்றிவிடுவதில்லை.
ravi said…
இதனால் தான் ஒரு காலத்தில் ஜல ப்ரவாஹமாக இருந்த இடமே பிற்பாடு சொட்டு ஜலம் இல்லாத பொட்டலாகி விடுகிறது! பாலைவன விஷயமாக என் ‘ரிஸர்ச்’ ஒன்றைச் சொல்கிறேன். இப்போது ஸஹாரா பாலைவனமாக இருப்பது ஒரு காலத்தில் ஸமுத்ரமாக இருந்த இடம் என்று ஜியாலஜிக்காரர்கள் சொல்கிறார்கள். உங்களுக்கு ராமாயணக் கதை தெரிந்திருக்கலாம். ஸகரன் என்ற ராஜாவின் பிள்ளைகள் தான் பூமியை வெட்டிக்கொண்டே போய் ஸமுத்ரத்தை உண்டாக்கினார்கள் என்று அதில் சொல்லியிருக்கிறது.
ravi said…
ஸகர புத்ரர்கள் வெட்டியதாலேயே ஸமுத்ரத்துக்கு “ஸாகரம்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஸாகரம் என்பதுதான் மருவி ‘ஸஹாரா’ என்றாயிருக்கிறதென்று நினைக்கிறேன்.
இந்தியாவில் ராஜஸ்தானம் இப்படிப்பட்ட ஒரு பாலைவனமாகத்தான் இருக்கிறது பாலைவனத்துக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘மருவாடிகா’ என்று பெயர். இதனால்தான் ராஜஸ்தான்காரர்களை நாம் ‘மார்வாடி’ என்று சொல்கிறோம்.
ravi said…
ஒரு காலத்தில் உயிரையும் செழிப்பையும் ஊட்டுவதான ஜலம் ஸமுத்ரமாக இருந்த இடமே இப்போது பாலைவனமாக இருக்கிறது என்கிற மாதிரி, இந்த லோக வாழ்வான பாலைவனமும் உயிருக்கு ஸாரமான பரமாத்மாவிடமிருந்து வந்ததுதான்!
ravi said…
ஆனால் அதிலே இப்போது ஆத்மாவை வளர்க்கிற ஸாரம் இல்லை. காமம், க்ரோதம் முதலான கானல் நீரோட்டம்தான் நம்மை இழுக்கடித்து, அலையாக அலைய வைத்து, நாசம் பண்ணுகிறது. இதைத்தான் ஆசார்யாள் “விஷய ம்ருக த்ரஷ்ணா” என்றார்.
ravi said…
முதலில் விநயத்தை, எளிமையை வேண்டினார். பிறகு மன அடக்கத்தை ப்ரார்த்தித்தார். அப்புறம் இந்த்ரியங்கள் பலவிதமான ஆசைக் கானல் நீரை நோக்கி ஒடாமல் இருக்கும்படி அவற்றின் தாஹத்தை அடக்கச் சொல்கிறார்.
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
🟦🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦🟦

🔵வாழ்வில் பேரிடர்கள் வருவது இயல்பு, அவை நம்மை சோதிக்க வந்தவை அல்ல, போதிக்க வந்தவை.

🔵தீர்வை முடிவாகத் தான்
எண்ண வேண்டுமே தவிர, அத்தீர்வே பிரச்சினையாகுமோ,
என்று கவலைப் பட்டால்
தீர்வு தீர்வாகாது.

🔵எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்பவர்கள். தள்ளாடும் வயதிலும் தன்மானத்தோடு வாழ்பவர்களே.

🔵உங்களின் துயரம் மற்றும் கவலைகளுக்குக் காரணம் பிரச்சனைகள் அல்ல. அதன் தொடர்ச்சியாக நம் மனம் உருவாக்கும் நினைவுகள் தான்.

🟦🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦🟦
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
திருக்கடையூர் அபிராமி *43*

*பாடல் 41*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
இந்த பாடல் மிகவும் அழகானது ...

அபிராமி பட்டர் தன் மனதை ஒரு குழந்தை போல் பாவிக்கிறார் ..

சில இடங்களில் அதை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்

சில இடங்களில் தன் மனதை எண்ணி பெருமைப்படுகிறார் ..

அப்படி மனதை எண்ணி பெருமை பாடல்களில் இதுவும் ஒன்று

பாவிகளே என்னிடம் வாருங்கள் என்று அழைக்காமல் என்ன புண்ணியம் செய்தனை மனமே என்று ஆரம்பிக்கிறார் ..

அவருக்கும் அவர் மனதிற்கும் நடக்கும் ஒரு உரையாடலாய் பார்ப்போம்

👍👍👍👌👌👌💐💐💐
ravi said…
*பட்டர்* : ஏ மனமே நீ எவ்வளவு புண்ணியம் செய்துள்ளாய் உனக்குத் தெரியுமா ?

*பட்டரின் மனம் :*

புண்ணியமா ? நானா ? நின் அன்பர் பெருமை எண்ணா கரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவானவன் நீ என்று என்னை குறை கூறினாய் ...

இன்று புண்ணியம் செய்த மனமே என்கிறாய் .. ஒன்றும் புரியவில்லை

*பட்டர்* ஆமாம் சொன்னேன் ஆனால் நீ முன் பிறவிகளில் செய்துள்ள புண்ணியங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் . என் தவறு தான்

🥇🥇🥇🙏🙏🙏
ravi said…
*பட்டரின் மனம்*

சரி எதை வைத்து நான் புண்ணியம் செய்துள்ளேன் என்று சொல்கிறாய்

*பட்டர்*

அதோ பார் அன்று மலர்ந்த குவளை மளர்களைப்போல் அழகிய கண்களை கொண்ட என் தாய் அபிராமி தான் மட்டும் வராமல் சிவந்த மேனியைக்கொண்ட யாராலும் அடி முடி காணமுடியாதவனையும் அழைத்துக்கொண்டு வருவதை

*பட்டரின் மனம்* ..

ஆஹா என்ன காட்சி கொடுத்து வைக்க வேண்டும் இதை காண கோடி கோடி கண்கள் வேண்டுமே ..

ஆமாம்.. இறங்கி வந்து என்ன செய்யப்போகிறார்கள் ?

👏👏👏
ravi said…
*பட்டர்* :

நீ செய்த புண்ணியத்தால் அவர்கள் சேர்ந்து இறங்கி வருவது மட்டும் அல்ல என்னை அவர்கள் புகழ் பாடும் அடியார்களின் கூட்டத்தில் நடு நாயகமாக சேர்க்கப்போகிறார்கள் ..

நல்ல அடியார்கள் கூட்டம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை .

அதற்கும் கோடி கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்

*பட்டரின் மனம்*

சரி அப்புறம் ..

👍👍👍
ravi said…
*பட்டர்* ..

என்ன சாதாரணமா , கதை கேட்பதைப்போல அப்புறம் என்கிறாய் ...

அவர்கள் இருவரும் நமக்காக இறங்கி வந்து அடியவர்கள் கூட்டத்தில் என்னையும் ஒருவனாய் சேர்த்து விடுகிறார்கள் என்கிறேன் ..

நான் எவ்வளவு பூரிப்பு அடைகிறேன் தெரியுமா ?

*பட்டரின் மனம்* ...

இல்லை இன்னும் ஏதாவது அவர்கள் செய்தார்களா அல்லது சேர்த்து விட்டு விட்டு மறைய போகிறார்களா ?

*பட்டர்* ... பொறுத்திருந்து பார் ...

🙏🙏🙏
ravi said…
*பட்டரின் மனம்*

அடடா .. கோடி சூரிய ஒளி உங்கள் சென்னியில் இருந்து வருகிறதே ...

அமுதம் நிறைந்த தாமரை பாதங்கள் மென்மையாய் உங்கள் சிரசை அழுத்துவதைப்போல் உணர்கிறேன் ..

பட்டரே!! நான் காண்பது கனவில்லையே...

*பட்டர்* ... கனவில்லை உண்மை என் சிரசில் அம்மை அப்பனின் பாதங்கள் பொருந்தின ..

உன்னால் தான் இவ்வளவு பாக்கியங்கள் எனக்கு கிடைத்தது ..

*பட்டரின் மனம் .*

உங்கள் பக்தியால் நானும் இன்று குளிர்ந்து போனேன் 💐💐💐👌👌👌
ravi said…
சரி பாடலை பார்ப்போம்

*41. நல்லடியார் நட்புப் பெற*

புண்ணியம் செய்தனமே மனமே!

புதுப் பூங்குவளைக்
கண்ணியும்,

செய்ய கணவரும் கூடி

நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து

தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி

நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.🥇🥇🥇
ravi said…
*41. நல்லடியார் நட்புப் பெற*

*புண்ணியம் செய்தனமே மனமே!*

என் மனமே உன்னை சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறேன் ..

நீ சேர்த்து வைத்த புண்ணியம் பலகோடி என்று இன்று உணர்ந்துகொண்டேன்
ravi said…
*41. நல்லடியார் நட்புப் பெற*

புண்ணியம் செய்தனமே மனமே!

*புதுப் பூங்குவளைக்*
*கண்ணியும்*

அபிராமியின் கண்ணோட்டம் அப்பொழுது அலர்ந்த குவளை மலர் போல் இருக்கும் என் தாயான என்றும் இளமை கொண்டவள் 🙏🙏🙏
ravi said…
சரி பாடலை பார்ப்போம்

*41. நல்லடியார் நட்புப் பெற*

புண்ணியம் செய்தனமே மனமே!

புதுப் பூங்குவளைக்
கண்ணியும்,

*செய்ய கணவரும் கூடி*

செக்க செவேல் என்ற மேனியைக் கொண்ட அவள் பதியை கூடவே என்னை பார்க்க வருகிறாள் ..

இப்படி ஒரு காட்சி கிடைக்க முப்பது முக்கோடி தேவர்கள் , திருமால் பிரம்மன் காத்திருக்க

என்னை பார்க்க வருகிறார்கள் ... ஏ மனமே நீ எவ்வளவு புண்ணியம் செய்துள்ளாய் ... 🥇🥇🥇
ravi said…


*41. நல்லடியார் நட்புப் பெற*

புண்ணியம் செய்தனமே மனமே!

புதுப் பூங்குவளைக்
கண்ணியும்,

செய்ய கணவரும் கூடி

*நம் காரணத்தால்*
*நண்ணி இங்கே வந்து*

நீ செய்த புண்ணியத்தால் என் காரியத்திற்காக அன்புடன் இங்கே வந்து எழுந்து அருள்கிறார்கள்👏👏👏
ravi said…
*41. நல்லடியார் நட்புப் பெற*

புண்ணியம் செய்தனமே மனமே!

புதுப் பூங்குவளைக்
கண்ணியும்,

செய்ய கணவரும் கூடி

நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து

*தம் அடியார்கள்* *நடுவிருக்கப்*
*பண்ணி*

நல்ல பக்தி செலுத்தும் அடியார்களுடன் நம்மை நடு நாயகமாய் சேர்த்து .. 🙏🙏🙏
ravi said…
*41. நல்லடியார் நட்புப் பெற*

புண்ணியம் செய்தனமே மனமே!

புதுப் பூங்குவளைக்
கண்ணியும்,

செய்ய கணவரும் கூடி

நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து

தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி

*நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.* 🥇🥇🥇

ravi said…
அது மட்டுமா அவர்கள் வந்ததின் முக்கிய நோக்கம் அவர்கள் இருவரின் பத்ம பாதங்களை என் சிரசில் பதிக்கத் தான்

ஏ மனமே இப்பொழுது புரிகிறதா எவ்வளவு புண்ணியம் நீ செய்துள்ளாய் என்று 👏👏👏🥇🥇🥇🙏🙏🙏
ravi said…
கம்பர் அழகாக சொல்கிறார் .. ராமன் அகஸ்தியர் பாதங்களில் விழுந்து வணங்குகிறான்... நெடியவன் ( திருமால்) தொழுத அடியவன் ( அகஸ்தியர்) என்று

அருணகிரி சொல்வதை கந்தர் அலங்காரத்தில் பார்ப்போம்

தாவடி, ஓட்டும் மயிலிலும்,

தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ!

படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!👣👣
ravi said…
மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டான் ஒரு சின்னக் குழந்தை!

அவன் சிறிய திருவடிகள் பெரிய திருவடிகள் ஆகின!

பெரிய திருவடிப் பெருமாளின் ஆசை மருமகன், முருகன்!

அவனுக்கோ சிறிய திருவடிகள்!

அந்தச் சிற்றடிகள், தேவர் தலையிலும், மயில் மேலும், என் பாடல்கள் மேலும் பதிந்துள்ளதே!👣👣👣
ravi said…
*சுருக்கம்*

மனமே!

அன்றலர்ந்த புத்தம் புதிய குவளை மலர்களை யொத்த அழகிய திருவிழிகளையுடைய அபிராமி அன்னையும்,

செந் நிறத்துடன் கூடிய அவருடைய பதியும் சேர்ந்து நம்மை ஆட்கொள் ளும் காரணத்தால்

நம்மை நாடி வந்து, நம்மையும் தம் அடியவர் களுடன் இருக்குமாறு திருவருள் புரிந்து,

நம் தலை மீது தம் திருவடி மலர்களைப் பதிப்பதற்கு, நாம் முற்பிறவியில் என்ன புண்ணியத் தைச் செய்திருக்கிறோமோ என்றெண்ணும்போது வியப்பாகத் தான் இருக்கிறது.🥇🥇🥇
ravi said…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
S G S Ramani said…
ஒவ்வொரு வரிக்கும் மிக அழகாக விளக்கவுரை தந்து நம் மனதில் அபிராமி அந்தாதியை பதிய வைக்க முயற்சிக்கும் வார்த்தை சித்தரின் ஸ்ரத்தையினை பாராட்ட வார்த்தைகள் கிட்டவில்லை...

அபாரமான முயற்சி...

🙏🙏🙏🙏🙏🙏
Savitha said…
பட்டர் தன் மனசாட்சியுடன்
பேசுவது போல கற்பனை அற்புதம்
கம்பர் கந்தர் அலங்காரத்தோடு அபிராமி அந்தாதியில்
இனைத்தது அற்புதம்
பத்மபொற்பாபாதம்

அருமை 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
Savitha said…
மிகவும் நல்ல பதிவு👏🏻👏🏻👏🏻
Lakshmi balaraman said…
அபிராமி வல்லி உன் மனதிற்குள் இருக்கும்போது
வெளியில் தேடாதே.
உன் மூலமாக அவள் எங்களிடம் பேசுகிறாள்.
हन्त: भाग्यम् जनानाम्।
अति उत्तमम् रवि।
Shivaji said…
Every day while reading the AA , the urge to visit Thirukadaiyur comes .... today's padivu reinforces..
ravi said…
இன்றைய சிந்தனை.

பிறருக்கு உதவி செய்து பழகியவர்களுக்கு யாரிடமும் உதவி கேட்க மனமிருப்பதில்லை...!!!
பிறரிடம் உதவி வாங்கிப் பழகியவர்களுக்கு யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை....!!

இந்த உலகம் உன்னைத் தூக்கி வைத்து ஆடுவதையும், தூக்கி எறிந்து வீசுவதையும் நிர்ணயிப்பது உன் குணம் அல்ல.....
நீ வைத்திருக்கும் பணம்.....!!!!!!

நல்ல இதயவ்களைப் பார்ப்பது கடினம்.....
நல்ல இதயத்துடன் பேசுவது அதிர்ஷ்டம்...
நல்ல இதயத்துடன் நட்பு வரம்.....!!!!!!

ravi said…
வாழும் போதே நரகத்தைப் பார்க்க வேண்டும் என்றால்....
ஒருவர் மேல் உண்மையான அன்பு வைத்துப் பாருங்கள்....!!!!!!

எது எளிதோ அது நீண்ட காலம் நீடிக்காது.....
எது நீண்ட காலம் நீடிக்கிறதோ அது எளிதானது கிடையாது....!!!!!

நேற்று நடந்ததை கடந்து செல்....
இன்று நடப்பதை கற்றுக்கொள்.....
நாளை நடக்கவிருப்பதை எதிர்கொள்....!!!!

அனுபவித்த துன்பங்களை மறந்து விடு.....
அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே.....!!!!!

ravi said…
வாழ்த்தினாலும், தாழ்த்தினாலும் சிரித்துக் கொண்டே இரு.....
காலம் அவர்களுக்குப் பதில் சொல்லும்.....!!!!

இன்பமோ, துன்பமோ..
தனிமை மட்டுமே என்றும் நிலையானது......!!!!!

பிடித்தவரகளை தக்க வைத்துக் கொள்ள நிறைய செலவு பண்ணுங்கள்....
பணத்தை அல்ல *நேரத்தை*.....!!!!

ravi said…
மாற்றங்களை ஏற்கத் துணிந்து விடுகிறது மனம்.....!!!!
சில நேரங்களில் விரும்பியும்....
பல நேரங்களில் வேறு வழியின்றியும்.....!!!!!

நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்.
அப்படியே வெளியே சென்றாலும் முகக்கவசம் இன்றி செல்லாதீர்கள்.
ravi said…
ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கூட்டு பிராத்தனை. அனைவரும் அவர் அவர் இல்லங்களில் இருந்து நம் உள்ளங்களில் முருகப்பெருமானையும், நரசிம்ம பெருமாளையும் வேண்டுவோம். வைகாசி விசாகமும் நரசிம்மர் ஜெயந்தியும் சேர்ந்து ஒரே நாளில் வருகிறது மிகவும் விசேஷமாக.

ravi said…
24.05.2021 ம் தேதி பிரதோஷம் உலகை காக்க ஆலகால விஷம் உண்ட ஈசனை வேண்டுவோம் தீவினை வந்து மக்களை தீண்டாமல் இருக்க.

25.05.2021 ம் தேதி வைத்தியனுக்கு எல்லாம் வைத்தியன் முத்து குமரனை சரணடைந்து வேண்டுவோம் வைகாசி விசாகத்தில்.

25.05.2021 ம் தேதி தன் பக்தனுக்காக நொடி பொழுதில் அவதாரம் எடுத்த நரசிம்மரை வேண்டுவோம் உலகம் உய்ய.

*_கூட்டு பிராத்தனைக்கு சக்தி அதிகம்._*

*அனைவரும் சேர்ந்து வேண்டுவோம் உலக மக்கள் நோயின் பிடியில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வதற்கு.*

*அனைவருக்கும் இந்த கூட்டு பிராத்தனை நிகழ்வை தெரிவியுங்கள்.*

நமக்காக, நம் குடும்பம், நம் சொந்தம், நம் நட்பு, நம் ஊர், நமது தமிழகம், நமது பாரத தேசம் மற்றும் இவ்வுலகில் வாழும் *அனைவருக்காகவும் பிராத்திப்போம்.*
💐💐🕉️💐💐🇮🇳💐💐🙏
ravi said…
A gentleman was walking through an elephant camp, and he spotted that the elephants weren’t being kept in cages or held by the use of chains.

All that was holding them back from escaping the camp, was a small piece of rope tied to one of their legs.

As the man gazed upon the elephants, he was completely confused as to why the elephants didn’t just use their strength to break the rope and escape the camp.

They could easily have done so, but instead, they didn’t try to at all.🐘🐘🐘
ravi said…
Curious and wanting to know the answer, he asked a trainer nearby why the elephants were just standing there and never tried to escape.

The trainer replied;

“when they are very young and much smaller we use the same size rope to tie them and, at that age, it’s enough to hold them. As they grow up, they are conditioned to believe they cannot break away. They believe the rope can still hold them, so they never try to break free.”😇
ravi said…
The only reason that the elephants weren’t breaking free and escaping from the camp was that over time they adopted the belief that it just wasn’t possible.🐘

No matter how much the world tries to hold you back, always continue with the belief that what you want to achieve is possible.

*Believing you can become successful is the most important step in actually achieving it*🐘🐘🐘
ravi said…
When you pray, God listens; when you listen, God talks and when you have faith, God works.

Happiness is a wonderful gift of the Almighty; the more we give it, the more we have it.

Be kind whenever possible. It is always possible. Instead of wanting more, give thanks for the blessings you already have.

It doesn't matter who begins well, all that matters is who finishes well at the end.

Forget two things in life: the good you did for others and
the bad done by others to you.
ravi said…
She who has beautiful eyebrows

She who is always radiant

She who is the leader of the gods

She who is the wife of shiva

She who is radiant

She who creates upheaval in the mind

She who has a form that is too subtle to be perceived by the sense organs

She who is vajreshvari, the sixth daily deity

She who is the wife of vama deva (shiva)

She who is exempt from changes due to age (time) ॥ 470 ॥👏👏👏🦚🦚🦚
ravi said…
சுப தினம். ராதே கிருஷ்ணா
இன்று வைகாசி விசாகம்.


ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி🙏
தூனணப் பிளந்து ஆணவத்தை அடக்கியோன்!🙏
விண்ணைத் தொடும் பிடரியுடன் செம் பொன் கண்களுடன் கர்ஜனை செய்தோன்!🙏

பாதுகாப்பாய் இருப்பதை உறுதி செய்திடுவோன்!🙏

பக்த பிரகலாதனுக்கு அருள் புரிந்தோனே, அவனியின் துயரைத் துடைத்தருள்வாயே!

ஜய ஜய ந்ருசிம்மா🙏


அழகு என்றால் முருகு!
முகுந்தன் ருத்ரன் கமலன்
முப்பெரும் தெய்வங்களின்
முகிழ் நகை ரூபம்!

பக்தி ஞான வைராக்கியத்தை அருள்வாயே முருகா!🙏
அகிலத்தை காத்தருள்வாயே🙏
ravi said…
*ந்ருஸிம்ஹ ஜெயந்தி 25-05-21*

क्षीराम्बुधि निवासिन् स्त्वं चक्रपाणे जनार्दन ।
व्रतेनाऽनेन देवेश भुक्तिमुक्तिप्रदो भव ।।

க்ஷீராம்புதி நிவாஸிந் ஸ்த்வம் சக்ரபாணே ஜநார்தன |
வ்ரதேநா(அ)நேந தேவேஶ புக்தி முக்தி ப்ரதோ பவ!


பாற்கடலில் பள்ளிகொண்டு சக்ரத்தைக்கையில் தாங்கிய ஜநார்தனா ஸ்ரீந்ருஸிஹ்மா எனக்கு இவ்வுலகில் தேவையான அனைத்து இன்பங்களையும்
தந்து இறுதியில் மோக்ஷத்தையும் தந்து அருள்புரிவாய்.

*வைஶாகே ஶுக்லபக்ஷேது சதுர்தஶ்யாம் நிஶாமுகே ।*
*மஜ்ஜந்ம ஸம்பவம் புண்யம் வ்ரதம் பாப ப்ரணாஶநம் ।।*

நரஸிம்ஹ ஜெயந்தி அன்று மாலை புண்யமான நரஸிம்ஹ அவதாரத்தின் சரித்ரத்தை பாராயணம் செய்து கதை கேட்டு பூஜை செய்து நமஸ்கரிப்பவர்களுக்கு அனைத்து பாபங்களும் விலகி நன்மை உண்டாகும்.

இந்த மஹோன்னதமான நாளில் ஸ்ரீந்ருஸிம்ஹ மூர்த்தியை பூஜித்து நமஸ்கரித்து இஹபர ஸுகங்களை பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம்‌
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூவரையும் வென்ற பேராற்றல் உடைய யானே, இராமனின் அம்புகளால் நொந்தேன் என்றால், அவற்றின் ஆற்றலை என்னவென்று சொல்வேன். நான் திக் விஜயம் செய்தபோது இந்திரன், திருமால், பிரமன், ஈசன் என அனைவரையும் வென்று விட்டேன். இவர்களால் எனக்குத் தோல்வி வராமல் இவர்களினும் ஆண்மை மிகுந்த இராமனால் அழிவு வந்ததே என்பதற்கு மகிழ்கிறேன்".

ravi said…
"வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழுவான் அங்கை
ஈசன், என்று இனைய தன்மை இனிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்றபோதும் நல்லதோர் பகையப் பெற்றேன்;
பூசல் உண்டு உறையும் தாராய், இது இங்குப் புகுந்தது என்றான்".

இதுதான் நடந்தது என்று இராவணன் மாலியவானிடம் கூறினான்.
ravi said…
*[98/108] – அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்*
ravi said…
இந்தக் கோயிலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சரயு நதியில் தனது சகோதரர்களுடன் சங்கமம் ஆன குப்தா படித்துறை உள்ளது.

இங்க நீராடுவது புண்ணியம் தரும்.

இந்த ஆற்றின் கரையில் உள்ள அனுமன் விஸ்வருப வடிவம் கொண்டவராக இருந்தார்.

இப்போது தலை மட்டுமே தெரிகிறது.

குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோர் அயோத்தி பற்றி பாடியுள்ளார்கள்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 98 வது திவ்ய தேசம்.🥇🥇🥇
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 401*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

75
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
நீலாகா மதுகரந்தி மனேஜ்ஞ நாஸா

முக்தாருச ப்ரகட ( ரூட) கந்த பிஸாங்குரந்தி

காரூண்யமம்ப மகரந்ததி காமகோடி

மன்யே தத கமலமேவ விலோசனம் தே 👏👏👏
ravi said…
அம்மா ... உன் கரங்கூந்தல் சுருள்கள் வண்டுகளாய் தெரிகின்றன

உன் நாசியில் உள்ள முத்தின் வெண்ணிற ஒளிகள் தாமரை தண்டின் முளைகளாகவும் கண்ணில் பெருகும் கருணாரசம் மகரந்தமாகிய தேனாகவும் இருப்பதால் தானோ உன் பார்வையை கவிகள் தாமரை மலரை ஒத்திருக்கிறது என்கிறார்கள் 🤔
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 983*🥇🥇🥇🏆🏆🏆

*US 975*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

39 வது ஸ்தபகம்

*ஏகோநசத் வாரிம்ஸ ஸ்தபக*

ப்ராயோ வ்யோ மஸரீரா( இந்த் ரவஜ்ரா வ்ருத்தம் )

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
975 🥇🥇🥇

ஏதா கவீ நாம் பதகிங்கரஸ்ய

பூதா ப்ரமோதம் பரமாவாஹந்து

கீதாஸ்ஸபக்தித் ரவமிந்த் ரவஜ்ரா

ஸ்வே தாசலா தீஸ்வர வல்லபாயா 🦚🦚🦚
ravi said…
இந்த *இந்திர வஜ்ரம்* என்ற சந்தத்தில் உள்ள எல்லா பாடல்களும் ஸ்ரீ ரமணர் எழுதியது .. ஓவ்வொன்றும் முத்துக்கள் வயிரங்கள் மாணிக்கங்கள் .. சொல்பவரும் நவரத்தினமாய் திகழ்வார் 🦚🦚🦚

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை