பச்சைப்புடவைக்காரி --மாமனும் மருமானும் -415

 பச்சைப்புடவைக்காரி🙏🙏🙏   


மாமனும் மருமானும் 

 *415* 🏆🏆🏆


ரவி ... நினைத்து பார்த்திருப்பாயா நீ ... இன்றுடன் முருகனின் 99 படை அகலும் வீடுகளை பார்த்து வந்துள்ளோம் .. இன்று 100வது படை அகலும் வீடு .. இந்த புனித பயணம் ஒரு அசுவமேத யாகம் செய்ததற்கு ஈடாகும் .. பதிவுகளை படிக்கும் உங்கள் எல்லோருக்கும் புண்ணியங்கள் பொங்கி வழியும் அளவிற்கு சேர்ந்துள்ளது ... 

உண்மை தாயே ... பாலோடு பழம் சேர்ந்ததை ப் போல் தாங்களே வந்து விளக்கமும் தருகிறீர்கள் ... இல்லை என்றால் புண்ணியங்கள் இப்படி பால் போல் பொங்கி வழிய வாய்ப்பே இல்லை ... 

சிரித்தாள் .. சேவடி கோமளம் .. சிதறி தெளித்தன மனோன்மணிகள் பாதை எங்கும் 🙏🙏🙏




அம்மா இந்த நல்ல சமயத்தில் திருமாலையும் முருகனையும் இணைத்து அருணகிரி பாடியுள்ளதை போல கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா ? 

சொல்கிறேன் ..ரவி .. சில இடங்களில் சொல்லியுள்ளேன் . இருப்பினும் நீ கேட்பதால் தொகுத்து வழங்குகிறேன் உங்கள் எல்லோருடைய நன்மைக்காகவும் .. 👍👍👏



மாமன் மாலவனுக்கும், மருமகன் வேலவனுக்கும் உன்னதமான ஒற்றுமைகள் பல இருக்கின்றன.

ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் நமது பார்வையில், வள்ளி- தெய்வானை சூழ நிற்கும் கந்தவேலும், 

ஸ்ரீதேவி- பூதேவி சமேத கடல்நிறக் கடவுளும் ஒன்று போலத் தோன்றுவதை அனைவரும் உணர்ந்திருக்கலாம்.

*துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலன*’ என்பது போல அரக்கர்களை அழிக்கவும், 

அன்பர் களைக் காக்கவும் வலக் கரத்தில் சக்கரப்படையைச் சுழற்றியபடியே நிற்கும் மாமனைப் போலவே, 

பகை வெல்லவும் பக்தர்களுக்கு அருளவும் வலது கரத்தில் வேலாயுதம் தாங்கியபடி மருமகன் நிற்கிறார்.

முக்கண்ணனைப் போல ரிஷபமோ, அம்பிகைபோல சிம்மமோ வாகனம் இல்லாமல், 

கருட வாகனத்தில் ஏறி வட்டமிட்டு வருபவர் கேசவன். 

அதே போல மயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்கள் குறைதீர்க்க பறந்து வருபவர் குமரன். 

இருவருக்கும் பறவைகளே வாகனம். 

இரண்டு பறவைகளும் பாம்புக்குப் பகைவர்கள்.💐💐💐🐍🐍🐍



மயிலிறகைத் தலையில் சூடியிருக்கும் சின்னக் கண்ணன், கருமைநிற அழகன். 

மயிலையே வாகனமாகக் கொண்ட குழந்தை முருகனோ, மனங்கவரும் பேரழகன். 

கன்னத்தில் முத்தமிட்டு அள்ளி அணைக்கத் தோன்றும் இருவரின் மழலை உருவங்களும் கண்கொள்ளக்காட்சிகள்.

* தண்ணந்துழாய் மலர் மாலை மாலவனுக்கு பிரியம் என்றால், 

தண் கடம்ப மலர் மாலை வேலவனுக்கு விருப்பமானது.

*தேவசேனாபதி ஸ்கந்தனே போர்க்களத்தில் வல்லவன்’* 

என்று கீதையில் கிருஷ்ணன் சான்று பகர்கிறான். 

கீதை என்றவுடன் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. 

அர்ச்சுனனுக்கு உபதேசித்தவன் பரந்தாமன். 

தந்தை பரமசிவனுக்கே தத்துவம் மொழிந்தவன் முருகப்பெருமான். 

எனவே ஞானாசிரியர் தகுதியில் மாமனையும் மிஞ்சிவிட்டான், மருமகன்.🍇🍇🍇



முருகன் கோவில்களில் திருமால்

நில உலகில் உள்ள திருக்கோவில்களிலும் கூட, 

வேலவன் மாலவனைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறான்.

*முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றில், தெய்வானையை திருமணம் புரிந்துகொள்ளும் கோலத்தில் அருளும் முருகனின் அருகே,

*பவளக் கனிவாய்ப் பெருமாளாக* மாலவன் மேற்கு நோக்கி நின்று ஆசி வழங்குகிறார்.

* இரண்டாம் படை வீடான அலைகள் தவழும் திருச்செந்தூரில் சூராதி அவுணர்களை அழித்த வெற்றிவேல் பெருமான், செந்திலாண்டவனாகத் தரிசனம் தருகிறார். 

அந்த ஆலயத்தின் திருச்சுற்றில் *செந்தில் கோவிந்தனாக,* பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார். 

அவர் அருகில் அரங்கனும், லட்சுமியும் காட்சி தருகின்றனர்.

* ஆறாம் படை வீடான பழமுதிர்ச் சோலை எங்கே இருக்கிறது?. 

திருமால் கள்ளழகராக மலை அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்க, அந்த மலை மீது உள்ள பழமுதிர்ச் சோலையில்தான், அவ்வைக்கு கனி உதிர்த்து தந்த ஆறுமுகம் எழுந்தருளியிருக்கிறான்.👏👏👏




மருமகனைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 

ஆனால் நேரில் கண்டதில்லை. 

ஆனால் இத்தலப் பெருமாள், மருமகன் முருகனை தன் தலை தாண்டி உயர்ந்திருக்கும் மலை மீது தூக்கி வைத்திருப்பது என்பது கற்பனைக்கு எட்டாத தோற்றம்.

இதனை ஒரு கவிஞர்,

மருமகனைச் சிரம்மேல் போற்றும் மாமன்

பெருமையைக் கேட்டுளோம், நேரில் கண்டிலம்

தந்தைக் கோதியோன் திருமால் தலைமேல்

விந்தையாய் வீற்றுனான், சிந்தையைக் கவர....’ 

என்று வர்ணிக்கின்றார்.🙏🙏🙏



சில்ப முனிவருக்குக் கண்ணொளி வழங்கிய கந்தக் கடவுள், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்துள்ள ஆலயம் *எண்கண்* என்னும் திருத் தலம். 

இந்த ஆலயத்தை ஒட்டி கருடன் மீது அமர்ந்தபடி நாராயணப்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

* சூரனை வதம் செய்வதற்காக அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலன் வீற்றிருக்கும் தலம் சிக்கல். 

இந்த ஆலயத்தில் *கோல வாமனப் பெருமாள்* காட்சி தருகிறார்.

இப்படி சரவணப் பெருமான் உறையும் திருக் கோவில்கள் மட்டுமல்ல, கந்தனைப் போற்றும் காவியங்களிலும் காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவுக்குப் புகழ்மாலை சூட்டப்பட்டுள்ளது🦚🦚🦚



அம்மா அருமை இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் ..

பார்த்த சாரதி கோயில்  சக்கரைப்பொங்கலில் தேனும் திணை மாவும் கலந்து வரும் சுவைபோல இருக்கிறது தங்கள் தொகுப்பு ... 🍇🍇🍇

நாளை என்ற ஒரு பதிலில் நகை புரிந்து நடந்து சென்றால் நடேஸ்வரீ 🥇🥇🥇


745 ஜராத்வந்தர விப்ரபா-

விருத்தாப்பியம், என்ற முதுமையின்  இருளை விழுங்கும்   சூரிய ஒளி சக்தி அம்பாள் என்கிறது இந்த நாமம்.   

அழியக்கூடியது  உடல்.  என்றும் ஒளிவீசி திகழ்வது  ஆன்மா. 

அழியக்கூடியவை மீது  ஆசை வைக்கும்  உடல் தானும் அழிந்து போகிறது.  

ஆகவே தான்  அழிந்துகொண்டிருக்கும் இந்த உடலின் ஒரு அறிவிப்பு தான்  முதுமை, 

விருத்தாப்பியம், வயோதிகம். 

அதை உணர்ந்து கொள் எகிறது  இந்த நாமம்.🦚🦚🦚


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



Comments

Sridhar swaminathan said…
அடேயப்பா.. இவ்வளவு முருகன் கோயில்களை தரிசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு பச்சைப் புடவைக்காரியின் அருளோடு அவள் மைந்தன் உங்கள் குலதெய்வம் முத்துக்குமாரசாமியின் அருளும் பரிபூரணமாக உள்ளது சார். 🙏🙏🙏🙏🙏
ravi said…
இல்லே ஸ்ரீதர் . இதில் மானசீகமாக தரிசித்த கோயில்கள் தான் மிக அதிகம் . முருகனுக்கு மொத்த படை வீடுகள் 6 மட்டுமே என்று தவறான ஒரு பொது கருத்து நிலவுகிறது .. அது தவறு குன்று இருக்கும் இடம் யாவும் அவன் அரசாங்கமே என்பதை விளக்க என் blog இல் போட்ட பதிவுகள் . நேரில் போய் தரிசிக்கும் பாக்கியமோ புண்ணியமா நான் இன்னும் செய்யவில்லை
ravi said…
ஓவ்வொரு நாளும் மூன்று ஸ்லோகங்கங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஆசை . அவள் அருள் இருந்தால் 100 பாடல்களும் தெரிந்துகொள்வேன் வெகு சீக்கிரம் 🙏
ravi said…
உன்னைத்தான் ஒரு கல்லைத்தான் என்ற சொன்ன சொல்லைத்தான் கேட்டே துவண்டு போனேன் ..

கண்ணால் ஆட்சி செய்யும் அந்த பெண்ணைத்தான் பொன்னைத்தான் கோடி தந்தாலும் பொருள் வேண்டேன் ..

கோமளத்தின் திருவடியில் புரண்டு அழுதேன் ...

உன்னைத்தான் கேட்கிறேன் ..

என் சுவாமியை கல் என்றோர் சொன்ன புவி இதில் வாழேன் ..

பூத்தவளே ஏற்றுக்கொள் என்னை என்றேன்

சிரித்தாள் பண் சொற் மீட்டும் பரிமள யாமளை பைங்கிளி ...

கல்லைத்தான் என்றார் என்றே சொன்னாய் .. சுவாமி நாதன் பெயர் சொல்வோர் கள்ளைத் தான் உண்ட களிப்பைத் தான் சொன்னார்கள் ...

வருந்த வேண்டாம் என்றாள் வானவர் தானவர்கள் வந்திக்கும் பூரணாசல மங்கை

என்னைத்தான் தேனைத்தான் அதில் குளித்துதான் சுகம் கண்டேன் சுந்தரியின் பதில் கேட்டே !!👍👍👍💐💐💐
Sridhar swaminathan said…
சீக்கிரம் மனப்பாடம் செய்துவிடுவீர்கள் சார்..🙏🙏
ravi said…
அருமை..🙏🙏🙏
Sridhar swaminathan said…
அருமை..🙏🙏🙏
ravi said…
நெஜத்தை வெட்டி நிழலை கொன்று வெய்யிலில் குளிர் காய்கின்றது மரமண்டை தமிழகம் இன்று .... 😰😰😰
ravi said…
விழுப்புரம் .. விழுத்துணையாய் அன்று இருந்தது .. பொன்னான காலம் அது ..

புவனம் பத்தினான்கையும் பூத்தவள் புன்சிரிப்பு ஒன்றை சிந்தினாள் ..

சிந்தூரம் சிதறி தெளித்தது ..

செடி ஒன்று முளைத்தது ...

சீர் அந்தாதி ஒன்று
வளர்ந்தது...

கங்கை அவள் புண்ணியவதி ஆனாள் காவேரி மிகவும் கண்ணியமானாள் ...

கற்பகம் ஒன்று இறங்கி வந்தது .. காமதேனுவை அழைத்து வந்தது ...

செடி கொஞ்சம் பெரிதானது ...

பேதமைகள் கொண்ட வாழ்க்கை அது சீரானது ..

காலடி ஓசை கோயில் மணியானது ..

தெய்வத்தின் குரல் கண்ணன் சொன்ன கீதையானது ...

மொட்டுக்கள் எல்லாம் அரவிந்தங்கள் ஆயின ...

மறைகள் எல்லாம் பரிமளம் ஆயின ...

மயில் கொண்டவன் மடத்தின் அரசனான் ..

ஆண்டியாய் இருந்தே குபேரன் செல்வம் பெற்றான் .

சென்னி குனிந்தவர்கள் எண்ணிக்கையில் அடங்கா ...

சேவடி துதித்தவர்கள் காவடி கூட்டம் தனிலும் மேல் .

குருவாய் வந்தான் குரலை குழலாக்கினான் ...

முன்பு செய்த புண்ணியம் ஏது என்றே தெரியவில்லை .

அளியேன் அறிவுக்கும் அளவாகி அதிசயமானான் ... 🦚🦚🦚
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்*
💙💙💙💙💙💙💙💙💙💙

💙எண்ணம், சொல், செயல் இம்மூன்றிலும் பிறர்க்கு நன்மை தரக்கூடிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும் .

💙நீ யார்? என்பதற்கு உண்மையான பதில் உனது எண்ணங்களுக்கு ஏற்ப அமையும்.

💙எண்ணத்தில் நல்லது மட்டுமே நினைக்க, அது சொல்லில் நல்லனவாக மட்டுமே வெளிப்படும் . பிறகு செயலில் நல்லதாக மட்டுமே நடக்கும் .

💙மனித எண்ணங்கள் அல்லனவற்றை நோக்கி இழுத்து, ஓயாமல் எதிர்மறைகளையே நினைக்க வைக்கும் . நாம்தான் கட்டுப்பாடு எனும் கருவி கொண்டு அவற்றை ஒருமுகப்படுத்த வேண்டும் . தியானம், தவம், வழிபாடு இதற்கு உதவும்.

💙 *எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்!* என்ற கவித்துவ வரிகளுக்கேற்ப நம் எண்ணங்களில் கவனம் வைத்து, யாவர்க்கும் எப்போதும் நலம்
கிடைக்க சிந்திப்போம்.

💙💙💙💙💙💙💙💙💙💙
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
திருக்கடையூர் அபிராமி *47*

*பாடல் 45*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
அருமையான பாடல் ...

இப்படி இவர்கள் இருந்தார்களே அவர்களையும் நீ பார்த்துக்கொண்டு அரவனைத்துக்கொண்டாயே

அவர்களை பார்த்து நான் அதே போல் இருந்தால் அது நான் செய்த தவறாகுமா இல்லை தவப்பயனாகுமா ?

எது எப்படி ஆனாலும் நான் உன் பிள்ளை ..

முன்னம் தவறு செய்பவர்களைப் போல நானும் ஒருவேளை என்னையும் அறியாமல் நடந்து கொண்டால் என்னை வெறுக்காமல் ஏற்றுக்கொள் தாயே !! 💐💐💐
ravi said…
இங்கே அவர் சொல்ல வருவது அன்னையை வணங்காமல் அவள் பெருமையை உணராமல் அவள் பாதங்களை பற்றிக்கொள்ளாமல் தன் இச்சைபோல வாழ்ந்து ஞானிகளாக மாறியவர்களும் இருக்கிறார்களா தாயே என்று ஒரு கேள்வியை அபிராமியின் முன் வைக்கிறார் பட்டர் ..

அப்படி இருந்தால் அவர்களை மன்னித்து மதி வானவர்கள் தரும் செல்வத்தையும் அழியா புகழையும் வீடும் அவர்களுக்கு தந்தாயே ..

நானும் அப்படி இருந்தால் என்னை வெறுக்காமல் ஏற்றுக்கொள் என்கிறார் ..
ravi said…
*45. உலகோர் பழியிலிருந்து விடுபட*

தொண்டு செய்யாது

நின் பாதம் தொழாது,

துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?

அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால்

அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.🦚🦚🦚
ravi said…
*45. உலகோர் பழியிலிருந்து விடுபட*

*தொண்டு செய்யாது*
*நின் பாதம் தொழாது*😢😢

துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?

அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால்

அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.🦚🦚🦚
ravi said…
*45. உலகோர் பழியிலிருந்து விடுபட*

*தொண்டு செய்யாது*
*நின் பாதம் தொழாது*😢😢

அம்மா அந்த காலங்களில் இப்படிப்பட்ட வீணர்கள் இருந்திருக்கிறார்களா தாயே ?

அதாவது உன் பெருமை உணராது , உனக்கு தொண்டு செய்யாது உன் பாதம் தொழாது காலத்தை வீணடித்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்களா ?
ravi said…
*45. உலகோர் பழியிலிருந்து விடுபட*

தொண்டு செய்யாது
நின் பாதம் தொழாது😢😢

*துணிந்து இச்சையே*
*பண்டு செய்தார்* *உளரோ? இலரோ?* 😢😢

அவர்கள் மனம் போனபடி உன் பக்கம் கொஞ்சமும் திரும்பாமல் ------ அப்படிப்பட்ட அயோக்கியர்கள் இருந்திருக்கிறார்களா இல்லையா தாயே ?
ravi said…
*45. உலகோர் பழியிலிருந்து விடுபட*

தொண்டு செய்யாது

நின் பாதம் தொழாது,

துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?

*அப்பரிசு அடியேன்*
*கண்டு செய்தால்*

*அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?*

அம்மா ஒருவேளை அவர்கள் தாங்கள் செய்தது தவறு என்று தெரியாமலேயே இந்த கொடும் பாவத்தை செய்திருக்கலாம் ..

ஆனால் ஒருவேளை நான் செய்த கர்ம வினையினால் நான் அவர்களைப்போலவே தவறுகளை தெரிந்தே செய்தாலும் அது என் பாவமோ அல்லது நான் செய்த கெட்ட தவமோ அறியேன் ...
ravi said…
*45. உலகோர் பழியிலிருந்து விடுபட*

தொண்டு செய்யாது

நின் பாதம் தொழாது,

துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?

அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால்

அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?

*மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.🦚🦚🦚*

அம்மா உன்னை தொழாத உன் பாதங்களை இனியும் பற்றிக்கொள்ளாமல் உனக்கு இன்னும் நான் தொண்டுகள் புரியாமல் ஒருவேளை நானும் இருந்து விட்டால்

அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டதைப்போல் என்னையும் வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் .. 🙌🙌🙌
ravi said…
*சுருக்கம்*

தேவி! உனக்குத்தொண்டு புரியாமலும் உன் திரு வடிகளைத் தொழாமலும், மெய்ப்பொருள் இன்னதென உணர்ந்து, தம் மனம் போன போக்கினராய்ப் பழங்காலத்தில் ஞானியரைப் போன்ற அடியவர்கள் இருந்தார்களன்றோ!

அவற்றைத்தெரிந்து அவரைப்போன்றே என் இச்சைப்படி நானும் செயல்புரிந்தால்

அது மட்டும் எப்படி வஞ்ச கமாகும் அல்லது அவர்கள் செய்ததெல் லாம் தவமானதைப் போல நான் செய்ததும் தவமாகுமோ?

இந்நிலையில் நான் செய்யும் செயலில் தவறுண்டெனில் நீ பொறுத்தருள்வதே நலமன்றி என்னை வெறுத் தொதுக்குவது நன்றன்று.👏👏👏
Col lokesh said…
Ravi sir you have always inspired me with you calm and cheerful demeanor and of course a great sense of humor. You will always be a peer who i will miss all the time.
Wishing you well sir. And please do keep in touch. You may have retired from the company but you continue in my heart forever.
Warm regards.
Sudhir coo said…
Thanks for remembering sir. will surely keep in touch. please take care and stay safe.👍
Sanjay kumar said…
Thank you so much JRK Sir for such thoughtful message .... I really appreciate and value our friendship .... wish great time ahead ...🙏🙏
AKD said…
As always, your words are so inspiring & help others feel good. After you left, two of our young colleagues passed away due to Corona and it was heart-wrenching.

As you are aware condition is slowly improving now. Hopefully it’ll go back to normal in a month or two.

I really appreciate how closely you’re connected with all of us, I sometimes still get reminded of you automatically. How can someone forget such an intelligent person full of life?

I’ll always be willing to remain in touch. Regds,
Prs said…
Good morning sir. Thank you for your lovely and comforting words. It has been a very tough month indeed. Loss of two dear young colleagues is extremly painful. You did a fabulous job in contributing and mobilising contributions from our other colleagues. Pls stay safe sir. Rgds Ravi
Govind said…
It seems like yesterday 👍🏻we cannot miss being in touch with you 😊
Avb said…
Sure sir, thank you for your wonderful message 🙏🙏
Rajesh said…
Don't know what to respond sir.. after ur last day we r not even went to office again.. we still feel like u r continuing sir.. frankly no change for us😊
Sama said…
Thank you very much sir for considering a small place in your kind heart. We always cherish the time and moments spent with you. As you mentioned , there is no expire date for true relationships with near or dear or anyone. We are always proud you for your dedication, commitment, end to end responsibility and a great leadership. Once again salutations sir. 💐💐🙏🙏🙏💐💐
Vanishree said…
What a touching message sir. It means a lot to me. I am very fortunate to have a person like you who really look for nothing but just well being of others. When I read ur message few drops of tears in my eyes. I am not exaggerating sir. Thank u so much and I will definitely look forward to be in ur at least first 100 contacts. Take care n stay safe.
ravi said…
கும்பகோணம் ஸ்ரீ
உச்சிபிள்ளையார் திருக்கோயில் வரலாறு.

🙏🏻🙏🏻
.ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே..
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பிடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர் தம்கை
🙏🙏

ravi said…
தல அமைவிடம்:

சோழ வள நாட்டின் கோயில் நகராம் திருக்குடந்தையின் மையப் பகுதியில் அருள்மிகு உச்சிப்பிள்ளையார் திருக் கோயில் அமைந்துள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து இப்பிள்ளையார் அருள்பாலிக்கின்றார்.

ravi said…
திருக்கோயில் அமைப்பு:

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலின் மேல

வடக்கு திசைநோக்கி இந்திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ், வலி, கவ்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்னும் பதினாறுப் பேறுகளைக் குறிக்கும் வண்ணம் பதினாறு படிக்கற்கள் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்து சென்றால் எண்வகை பாக்கியங்களை நினைவூட்டும் வகையில் அர்த்த மண்டபம் கருவறையில் ஞானத்தின் பேர் உருவாய் அமர்ந்து பிள்ளையார் அருள்பாலிக்கின்றார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், உற்சவ விநாயகர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வலம் வருவதற்குத் கருவறையை திருச்சுற்று அமைந்துள்ளது.

ravi said…
பிள்ளையார் திருவுரும்:

பிள்ளையாரை ஓம் என்னும் பிரணவத்தின் வடிவம். என்பர். பிள்ளையார் தேவர், மனிதர், பூதம், விலங்கு, ஆண்,பெண், உயர்தினை, அஃறிணை என்னும் எல்லாமாய் காட்சியளிக்கின்றார். நான்கு கரங்கள் தேவரையும், உடல் மனிதரையும், யானைத்தலை விலங்கையும், பேழை வயிறும் குட்டைவான பருத்த இருகால்கள் பூதத்தையும், ஒடித்த கொம்பின் பாகம் பெண்டருவையும், நீண்டதந்தமானது ஆண் உருவையும் காட்டுகின்றன. மோதங்களால் நிறைந்திருக்கும் அவர்தம் திருவயிற்றில் அண்ட சராசரங்களே அடங்கி
இருக்கின்றன.

ravi said…
பிள்ளையார் பெருமை:

பிள்ளையார் எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல் எருக்கம் பூ இவைகளைக் கொண்டு செய்யக்கூடிய எளிய பூஜைகளையும் பிற பல பொருள்களால் செய்யும் எளிய பூஜைகளையும் ஏற்றுக்கொள்கிறார். மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, எள்ளுஉருண்டை, ஈண்டன், பிட்டு முதலானவை பிள்ளையாருக்குப் பிடித்த நிவேதனங்களாகும்.

ravi said…
பிள்ளையார் தன்னை மிஞ்சிய தலைவன் இல்லாத தனிப்பெருங் கடவுளாவார். இவரைத்தொழுவதால் வாழ்வில் வல்வினைகள் நீங்கப்பெற்று வளம். பெறலாம். எல்லாவற்றிற்கும் மூலமாய் விளங்குவதால் அவரே முழுமுதல் கடவுள். பிள்ளையார் சுழியிட்டு எந்தவொருச் செயலையும் தொடங்குவது தமிழர் மரபு. 'கணபதியை பூஜை செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது பழமொழி.

ravi said…
பிள்ளையாருக்கு உகந்த நாட்கள்:

பிள்ளையார் வழிபாட்டிற்கு ஏற்ற

நாள் வெள்ளிக்கிழமை. அமாவாசைகழித்து வரும் சதுர்த்தி திதியும். பௌர்ணமி கழித்து வரும் சதுர்த்தி திதியும் பிள்ளையாருக்குச் சிறந்த தினமாகக் கொண்டாடப்படுகின்றன. இந்நாட்களில் வழிபட்டால் துன்பம் நீங்கும் இன்பம் பெருகும். மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு திருமணத் தடை வியாபார நட்டம், எதிரிகளின் அச்சுறுத்தல்
முதலியவற்றை நீக்கும் தகைமையுடையது. வளர்பிறை சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி இந்திருக்கோயிலில் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆவணி அன்றைய திளம் காலைப்பொழுதில் காவிரியில் தீர்த்த வாரியும் இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. தனுர் மாத பூஜை சிறப்பு மிக்கது.
*பாஸ்கர் குருக்கள்*
*96776 23998*
*கும்பகோணம்*
ravi said…
திருக்கடையூர் அபிராமி *48*

*பாடல் 46*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
மிகவும் அருமையான பாடல்.. இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை . எல்லா பாடல்களும் முத்துக்கள் தான் ..

ஆதியும் அந்தமும் இல்லாத இறைவியை அந்தாதி எனும் அழகிய தமிழில் அடக்கி விட்டார் நம் அபிராமி பட்டர் .

பாடலுக்குள் போவதற்கு முன் ஒரு சந்தேகம் வந்தது ..

சரபோஜி மன்னர் என்ன இன்றைய திதி என்று சுப்பரமணியனிடம் கேட்க்கும் போது தன் நிலை மறந்திருந்த அவர் அன்னையின் வட்ட ஒளியையும் ஒலியையும் ஒன்று சேர்த்து இன்று பௌர்ணமி என்றார் ...

அன்னையின் முகம் என்றுமே பௌர்ணமி தான் ..

ravi said…
அப்படியிருக்க சரபோஜி மன்னர் வேறு எந்த நாளிலும் கேட்டிருந்தால் கூட பட்டர் இன்று பௌர்ணமி என்று தானே சொல்லியிருப்பார் ?

இருக்க முடியாது என்று பதில் ஒன்று சத்தமாக வந்தது .. திரும்பினேன் .. அபிராமி பட்டரே நின்றிருந்தார் ..

சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்

ரவி .. அம்பாளை 16 திதி தேவதைகள் ஒருவர் பின் ஒருவர் தினமும் சென்னி குனிந்து பூஜை செய்கிறார்கள் ..

நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோயில் போயிருக்கிறாயா ?

அங்கே அம்மனை அடைய 16 படிக்கட்டுகள் இருக்கின்றன ..

ஒவ்வொரு படியும் ஒரு திதி தேவதையை குறிப்பிடும் .. அ

ன்று சரபோஜி மன்னர் என்னை பார்க்க வரும் போது அபிராமியின் நினைவுகளில் இருந்தேன் ..

அப்பொழுது பௌர்ணமி திதி வந்து அபிராமியை பூஜை செய்து கொண்டிருந்த நேரம் .

அன்னையின் முகத்தில் வட்ட ஒளி ..

அதை ரசித்தேன் .. அதனால் பௌர்ணமி திதி என்று சொன்னேன் ...

சந்தேகம் பனி போல் மறைந்தது 🙏🙏🙏
ravi said…
*46. நல்நடத்தையோடு வாழ*

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே;

புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான்

இடப்பாகம் கலந்துபொன்னே!

மறுக்கும் தகைமைகள் செய்யினும்,

யான் உன்னை வாழ்த்து வேனே!👏👏👏👣👣👣
ravi said…
*46. நல்நடத்தையோடு வாழ*

*வெறுக்கும் தகைமைகள் செய்யினும்*

அம்மா நீ வெறுக்கக்கூடிய காரியங்களை பலர் செய்தாலும்
ravi said…
*46. நல்நடத்தையோடு வாழ*

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

*தம் அடியாரை மிக்கோர்*
*பொறுக்கும் தகைமை புதியதன்றே;*

நீயோ கருணாரஸ ஸாகரம். அவர்கள் உன் அடியார்களாக இருப்பதால் தெரிந்தே தவறுகள் அவர்கள் இழைத்தாலும் நீ பொறுத்துக்கொண்டு அவர்களை வெறுக்காமல், கை விடாமல் இருப்பது உனக்கு ஒன்றும் புதிய செயல் அல்லவே ? 👌👌👌
ravi said…
*46. நல்நடத்தையோடு வாழ*

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே;

*புது நஞ்சை உண்டு*
*கறுக்கும்* *திருமிடற்றான்*

எப்பொழுது அமுதம் தோன்றியதோ அன்று தான் நஞ்சும் தோன்றியது ... எப்பொழுது ஆசைகள் உதயமானதோ அன்று தான் பாவங்களும் தோன்ற ஆரம்பித்தன .

*Birth of two extremes .*

பட்டர் புது நஞ்சு என்கிறார் .. அமுதம் தோன்றிய அன்று எல்லோரும் வெறுக்கும் பயப்படும் ஆலகால விஷமும் தோன்றியது ...அதை எல்லோரையும் காப்பாற்ற வேண்டி ஈசன் அவசர அவசரமாக எடுத்து விழுங்கினார். அவரின் சிவந்த மேனியில் கண்டம் மட்டும் ஒரு குறை கண்டது ...

என்ன சொல்ல வருகிறார் பட்டர் ..

நஞ்சு கொடியது . பாவங்களின் மூட்டை .. அதையே எடுத்து உண்டவனை நீ வெறுக்காமல் மன்னித்து ஏற்று க் கொண்டாய் ..

நாங்கள் அந்த அளவிற்கு பாவங்கள் செய்யவில்லை .

எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள உன்னால் ஏன் முடியாது ? 💐💐💐
ravi said…
*46. நல்நடத்தையோடு வாழ*

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே;

புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான்

*இடப்பாகம் கலந்துபொன்னே!*

அம்மா அப்படிப்பட்ட ஈசனை விடாமல் துரத்தி அவனுடைய இடப்பாகத்தை வவ்வி கொண்டாயே .. அவனிடம் கலந்த பிறகு நீயும் பொன்னாக ஜொலிக்கிறாய் 🙏🙏🙏
ravi said…
*46. நல்நடத்தையோடு வாழ*

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே;

புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான்

இடப்பாகம் கலந்துபொன்னே!

*மறுக்கும் தகைமைகள் செய்யினும்*,
*யான் உன்னை வாழ்த்து வேனே!👏👏👏👣👣👣*

ravi said…
அம்மா நான் கேட்பதை நீ தராவிட்டாலும் .( பல சமயங்களில் நாம் கேட்பது கிடைப்பதில்லை

ஆனால் அபிராமிக்கு தெரியும் எதைக்கொடுத்தால் இந்த குழந்தைக்கு நல்லது என்று ..

பிறகு நாமே அதை உணரவும் வைப்பாள்)

உன்னை நான் தொழாமல் இருக்கவே மாட்டேன் .

நான் உன்னை நினைக்காத நாள் என்று ஒன்று வருமானால் அன்று என் கடைசி மூச்சு நின்றிருக்க வேண்டும் . 🙏🙏🙏
ravi said…
*சுருக்கம்*

ஆலகால விஷம் என்னும் கொடிய நஞ்சை விழுங்கிக் கழுத்திலேயே நிறுத்திக் கொண்டதால் கறுத்த திருக்கழுத் துடையவ ரான சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்துள்ள பொன் னிற மேனியளே!

வெறுக்கத்தக்க செயல்களை அடியவர்கள் செய் தாலும், அறிவிற் சிறந்த பெரியவர்கள் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் பழக்கம் தொன்று தொட்டே இருந்து வருவதுதானே?

ஆகவே, நீ விரும்பாமல் விலக்கத்தக்க செயல்களை நான் அறியாமையால் செய் தாலும், நீ பொறுத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில் உன்னை நான் வாழ்த்தி வணங்கத் தவறேன்.👏👏👏
Moorthi said…
அம்பாளின் ஒளிவட்டத்தை பெளர்ணமியுடன் ஒப்பிடட ரசனை அருமை... 👌🙏
நங்கனநல்லூர் ராஜேஸ்வரின் படிகளின் மகத்துவத்தை இன்றுதான் அறினந்தேன்....
அருமை... பெருமை... 🙏🙏🙏🙏🙏
Kousalya said…
Arumai 👌 👌 🙏🙏
ravi said…
அம்மா இங்கிலாந்து எங்கே குமர மலை எங்கே இரண்டையும் முடிச்சு போட்டு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்து விட்டீர்கள் .

ரவி முருகனுக்கு காலம் , நேரம் , இடம் , வகை என்ற பிரிவு கிடையாது . எங்கும் நிறைந்தவன் .

உண்மை தாயே ... அதனால் தான் அவனை விழுப்பொருள் என்றும் உன்னை விழுத்துணை என்றும் சொல்கிறோம்

சிரித்தாள் சிங்காரி... சிந்தூர வண்ண பெண்ணாள் மகிடன் தலை மேல் அந்தரி .. நீலி , பிங்கலை , புடையாள் , உடையாள் , செய்யாள் வெளியாள் , அயல் என் கண்மணி 👏👏👏
ravi said…
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

ஆகிய ஈசனுக்கே👣👣
ravi said…
திருக்கடையூர் அபிராமி *49*

*பாடல் 47*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
மீண்டும் ஒரு சந்தேகம் ... பட்டரை கூப்பிட்டேன் .. அடிக்கடி கூப்பிடுவதால் கொஞ்சம் அவர் முகத்தில் சலிப்பு தெரிந்தது . கேள்வி அபிராமியை பற்றி இருப்பதால் கொஞ்சமும் சிணுங்கி க்கொள்ளாமல் வந்தார்

பட்டரே .. உங்கள் முதல் பாடலில் உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் ... இதில் விழுத்துணையே என்று அபிராமியை சொல்கிறீர்கள் .. இதன் தாத்பபரியம் என்ன ?

பட்டர் சிரித்தார் .. சரி முதலில் அபிராமி என்ற நாமத்திற்கு அர்த்தம் சொல் பார்ப்போம் ..

கொஞ்சம் தடுமாறினேன் .. பட்டரே விளக்கம் தந்தார்

அபிராமி என்றால் அதிகமான ரம்யம் கொண்டவள் ... பேரழகி .. உவமை சொல்லவே முடியாதவள் .. அபி என்றால் ( अबी।
abee.) இப்பொழுது என்று பொருள் ... இப்பொழுது ரம்யமான என்று பொருள் ... அதை தினம் உச்சரித்தால் அவள் என்றுமே ரம்மியமானவள் என்று அர்த்தம் வரும் ... இன்று ரொக்கம் நாளை கடன் என்பதைப்போல

வாமா என்றால் அழகு என்ற பொருள். ‘ *வாமி* ’ என்றால் அழகி என்று பொருள்.

சிவபெருமானின் வாம பாகத்தில் விளங்குவதாலும் ‘ *வாமி* ’ ஆவாள்.



‘அபிராமி’ பெயரிலும் அழகு, வடிவிலும் அழகு. ‘ரம்யம்’ என்றால் அழகு. ரம்யத்தை உடையவள் ‘ *ராமி* ’ (அழகுடையவள்),

அபி&மேலான, எனவே ‘அபிராமி’ என்ற சொல்லுக்கு ‘மேலான அழகுடையவள்’ என்பது பொருள்.👏👏👏
ravi said…
அன்னை அபிராமி கண்கண்ட தெய்வம்,

அழகுக்கொரு வரும் ஒவ்வாத செல்வி,

சின்னஞ்சிறு பெண்ணுருவில் திகழும் உத்தமிழ்,

எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் ஈன்றருளும் வள்ளல் நாயகி.... 🙏🙏🙏
ravi said…
பட்டரே அருமை ... ஆனால் நான் உங்களை கேட்ட கேள்வி வேறு ..

தெரியும் .. அவசரப்படுகிறாய் ...

நான் உன்னைப்போல் அவசரப்பட்டருந்தால் அவளும் நிலவாக வந்திருக்க மாட்டாள் நானும் அந்தாதி முடித்திருக்க மாட்டேன் .

*விழுத்துணை*

வாழ்வில் வரும் துணைகள் எல்லாம் நிரந்தரம் அல்ல .

அவை விழும் , உதிரும் துணைகள் ...

துணை என்று வரும் பல உறவுகள் தொல்லைகளாக மாறும் குணம் கொண்டது ..

உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்

நீங்கள் துணைக்கு என்று வளர்க்கும் நாய்க்குட்டி ,

கையில் வைத்திருக்கும் குடை ,

காலில் அணியும் பாதணி ..

எங்கேயாவது ஒரு இடத்தில் இவைகளை கயற்றி விட வேண்டும் .

இவைகள் நிரந்தர துணைகள் அல்ல ...

மனைவி , குழந்தைகள் , உறவினர்களும் இப்படித்தான் ...

வாழ்வில் வரும் துணைகள் ஒரு வரைமுறைக்குள் நிற்பவை .. காலம் , இடம் ... இவைகளை பொறுத்து வேறுபடுபவை..

என் அபிராமி அப்படி அல்ல

அவள் விழுப்பொருள் விழும் துணை அல்ல... பிறவிகள் தோறும் நம் கர்ம வினைகள் தீரும்வரை நம்முடன் காலம் இடம் பார்க்காமல் உறுத்துணையாக வருபவள் ..

அதனால் உறுதியான மேன்மையான துணை என்று அழகிய தமிழில் *விழுத்துணை* என்று குறிப்பிட்டேன்

அவர் பாதங்களில் சாஷ்ட்டாங்கமாய் விழுந்தேன் ... 🙏🙏🙏
ravi said…
*47. யோகநிலை அடைய*

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்;

மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று,

விள்ளும் படி அன்று,

வேலைநிலம்
ஏழும்

பருவரை எட்டும்

எட்டாமல்

இரவுபகல்
சூழும்

சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.🥇🥇🥇🦚🦚🦚
ravi said…
*47. யோகநிலை அடைய*

*வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்;*

அம்மா எங்கெங்கோ திரிந்தேன் எங்கெங்கோ சுழன்றேன் .. முடிவில் உன்னிடம் சரண் அடைந்தேன் .. நீ தான் என் வாழும் + படி என்று தெரிந்து கொண்டேன் ..

உன் திருவடிகள் எனக்கு பேரானந்தத்தை தருகின்றன ...

நான் உன்னை சரண் அடைந்த பிறகு கிடைத்த இன்ப அனுபவங்களை யாரிடமும் என்னால் எடுத்து சொல்ல முடியாதே 👏👏👏
ravi said…
*47. யோகநிலை அடைய*

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்;

*மனத்தே ஒருவர்*
*வீழும்படி அன்று,*

வீழும் படி என்றால் விரும்பும் படி என்று அர்த்தம் ..

என் மனதில் ஏற்பட்ட அனுபவங்களை யாரிடமும் நான் விரும்பும் படி எடுத்துச் சொல்லவும் என்னால் முடியாது .

கற்கண்டு தித்திக்கும் என்பதை எப்படி விளக்கி சொல்ல முடியும் .. அனுபவிக்க வேண்டும் ..
ravi said…
*47. யோகநிலை அடைய*

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்;

மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று,

*விள்ளும் படி அன்று,*

விள்ளுதல் என்றால் சொல்லுதல் என்று அர்த்தம் . என்னால் சொல்லவும் தெரியவில்லை
ravi said…
*47. யோகநிலை அடைய*

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்;

மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று,

விள்ளும் படி அன்று,

*வேலைநிலம்*
*ஏழும்*
*பருவரை எட்டும்*
*எட்டாமல்*

வேலை என்றால் கடல் .. பருவரை என்றால் பெருத்த மலை ... ஏழு கடல் ஏழு நிலம் 8 மலைகள் ( திக்கெட்டும் ஒரு மலை) இவைகளுக்கும் அப்பாற்ப்பட்டவள் என் அபிராமி .. அவளை பார்த்தவர்கள் சொன்னதில்லை அவளைப்பற்றி சொன்னவர்கள் அவளை கண்டதில்லை.
ravi said…
கச்சியப்பரின் கந்த புராணத்தில் முருகன் தோன்றுவதை அவர் எப்படி அழகாக சொல்கிறார் பாருங்கள்

அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய்

ஒன்றாய்,
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,

கருணை கூர் முகங்களாறும்,

கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,

ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய🦚🦚🦚
ravi said…
அருணகிரி பட்டர் போல் பாடுகிறார் கந்தர் அனுபூதியில்

செவ்வான் உருவில் திகழ்வே லவன்அன்
றொவ்வா ததென உணர்வித் ததுதான்
அவ்வா றறிவார் அறிகின் றதலால்
*எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே?*

முருகனை நான் கண்டேன் ஆனால் அந்த இன்பத்தை உணர்ச்சியை என்னால் யாருக்கும் எடுத்து சொல்லவே முடியாதே !!
ravi said…
*47. யோகநிலை அடைய*

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்;

மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று,

விள்ளும் படி அன்று,

வேலைநிலம்
ஏழும்
பருவரை எட்டும்
எட்டாமல்

*இரவுபகல்*
*சூழும்*
*சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.* 🥇🥇🥇🦚🦚🦚
கதிரவனும் சந்திரனும் மறைவதில்லை .. மறையும் போல் ஒரு பிரமை நமக்கு ஏற்படுகின்றது .. அவர்கள் எழுப்பும் ஒளி வட்டத்தில் அமர்ந்து சுடர் விடும் அம்பிகை அவர்கள் பரப்பும் ஒளியை விட கோடி மடங்கு சுடர் விடுகிறாள் . 🙏🙏🙏
ravi said…
*சுருக்கம்*

அழிவில்லாத இன்பத்தில் வாழும்படியான பரம் பொருள் ஒன்றை மெய்ஞ்ஞானத்தால் அறிந்து கொண்டேன்.

அது, மனத்தில் ஒருவர் விரும்பித் தியானிக்குமாறுள்ள ஒன்றன்று;

இப்படி இருப்ப தென வாயினால் எடுத்துக் கூறவும் உரியதன்று.

ஏழு கடல்களுக்கும், ஏழுலகங்களுக்கும் உயர்ந்த வையான எட்டு மலைகளுக்கும் அப்பால்,

முறையே இரவையும் பகலையும் ஏற்படுத்தும் சந்திரன், சூரியர்களுக்கிடையே அமைந்து திகழ்கிறது.🌞🌞🌞🌝🌝🌝🌚🌚🌚🌕🌕🌕
Savitha said…
அருமை விழித்துணை
விரிவுரை
அபிராமி. அற்புதம்🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷
Kousalya said…
*Abhirami* peyar karanam, arpudhamana explanation... . 🌹🌹🌹🙏🙏
Kousalya said…
Arumai arumai vizhu thunai.. 🙏🙏
ravi said…
மஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்! — ரா.கணபதி

எனக்குள் ஒரு கேள்வி: விநாயகர் முருகன் சிவன், விஷ்ணு --- ஒரே கடவுளின் பல வடிவங்களுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென ஏன் அந்த மந்திரம் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ravi said…
ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் சாஸ்திரக் கருத்தை மட்டுமே கொண்டு சிலர் ப்ரணவ ஜபம் செய்யலாம், முதலில் ‘ஓம்’ என்று கூறிவிட்டு அதோடு அந்தந்த தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர (ஓம் கணேசாய நம:) : தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்கிறார்கள்.

ravi said…
ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.

ravi said…
இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும்என்ற எண்ணத்துடன் முப்பத்தேழுஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுதுஅவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன்.

ravi said…
நேரம்: மாலை ஐந்து மணி.

முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டியபகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின்மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும்,பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.

ravi said…
தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, " நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

ravi said…
அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: "மடியும்வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்" " அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள்.

ravi said…
இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’: மந்திரோபதேசம் பெற்றோம்.

‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்று மஹா பெரியவா கூறினார்கள்.

ravi said…
மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹ’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.

ravi said…
ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்றமகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!

‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.

ravi said…
நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’ எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக்கொண்டவரும்,இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பகிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

ravi said…
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன். சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர பெரியவா போற்றி
ravi said…
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன். சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர பெரியவா போற்றி
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது?” என்று கேட்டாராம். “நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம்.
ravi said…

“நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம்.

“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த் தபஸ் பண்ண ஆரம்பித்தார். முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. ‘இந்தச் சரீரந்தான் உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டிலும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகந்தான்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய், “இந்தச் சரீரம்தான் உயர்ந்த, நிறைந்த வஸ்து” என்று சொன்னாராம்.

ravi said…
அப்பா திரும்பவும், “இன்னும் கொஞ்சம் தபஸ் பண்ணு” என்று சொல்லிவிட்டாராம்.

இப்படியே கொஞ்சம் ‘தபஸ்’ பண்ணுவது, உடனே தமக்குக் தோன்றியதைப் போய்ச் சொல்வது என்று ஐந்து தடவைகள் பிருகு செய்தாராம். முதலில் உடம்பு நிறைந்த வஸ்துவாகத் தோன்றிற்று. இந்த உடம்பு ஒருநாள் பிரேதமாகிப் போவதுதானேயென்று யோசித்தபின், உடம்பு நிறைந்த வஸ்து இல்லை என்றும், பிராணன்தான் நிறைந்த வஸ்துவாகவும் தோன்றிற்று. அதன்பின் மனமே நிறைந்த வஸ்து என்று தோன்றியது. பிற்பாடு அறிவே நிறைந்த வஸ்துவாகத் தோன்றியது. ஐந்தாம் முறை போனபோது ஆனந்தாநுபவம்தான் நிறைவாகத் தோன்றியது.

ravi said…
நீங்கள் சொன்னபடி நான் இத்தனை நாட்களாகத் தபஸ் பண்ணினேன். இப்போதெல்லாம் நடுநடுவே ஏதோ ஒரு விதமான ஆனந்தம் ஸ்புரிக்கிறதே. இது என்ன?” என்று தந்தையைக் கேட்டாராம் பிருகு.
ravi said…

“உனக்கு ஒவ்வொரு சமயத்தில் கொஞ்சம் ஸ்புரிக்கிறது என்று சொல்கிறாயே அந்த ஆனந்தம்தான் வஸ்து. இது உனக்குத் துளித்துளி உண்டாகிறது. இதுவே நிறைந்து விட்டதானால் அதைத்தான் பேரானந்தம் என்கிறோம். அந்தப் பேரானந்தம் எப்போதும் குறைவு இல்லாமல் காலத்தாலும் தேகத்தாலும் நிறைந்து இருக்கும்படியான ஒரே வஸ்து. சரீரம், பிராணன், மனசு, அறிவு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று ‘ஆத்மா’ என்று இருக்கிறது. அது தன்னைத்தானே அறிந்து அநுபவிப்பதில்தான் இந்த ஆனந்தம் உண்டாகிறது” என்று பிதா சொன்னாராம். இப்படி உபநிஷக் கதை இருக்கிறது.

ravi said…
அந்தப் பேரானந்த சமுத்திரத்தின் ஏதோ ஒரு திவலை தான் நமக்கு எப்போதாவது உண்டாகிறது. கிளைகள், இலைகள் எல்லாம் அடர்ந்து இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தால் கீழே கொஞ்சம்கூட வெயில் படாமல் நிழல் இருக்கிறது. காற்று அடிக்கும்போது, இலைகள், கிளைகள் நகர்ந்து விலகுகிற சமயத்தில் சூரியனுடைய வெயில் கீழே அந்த இடைவெளி அளவுக்கு விழுகிறது. அப்புறம் மறுபடியும் கிளைகள் மூடி, அது மறைந்து விடுகிறது. அந்த மாதிரியாகத் தான் நமக்கு ஆனந்தம் அவ்வப்போது வந்து வந்து மறைந்து போகிறது. ஆனந்தம் என்பது எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்படியான வஸ்து. ஆனால் நம்முடைய கெட்ட கர்மா, மனம், புத்தி இவற்றினால் அது நம்மிடம் படாமல் மறைந்திருக்கிறது. ஒரு க்ஷணம் நாம் பண்ணியிருக்கிற புண்ணிய கர்மாக்களினாலே அவை விலகும்போது, காற்று அடித்து இலைகள் விலகும்போது, சூரிய ஒளி அதன் வழியாக வருவது போல், நம்முடைய கர்மாக்கள் விலகியதால், எங்கும் பரவிய ஆனந்தத்தின் திவலை நமக்கு உண்டாகிறது. இதுவே வளர்ந்து விட்டால் பேரானந்தமாகிறது. அந்த ஆனந்த சமுத்திரத்தின் லவலேசத்தைத்தான் நாம் எப்போதாவது அடைந்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம். தபஸ் பண்ணிப் பண்ணி விசாரம் செய்தால் எப்போதும் ஆனந்த மயமாக இருக்கும் சமுத்திரத்திலேயே கலந்து அதாகவே இருக்கலாம்.
ravi said…
JaiSriRam JaiSriRam JaiJaiSriRam

Hi Friends!!

Whoever is interested, Tomorrow i.e.,
31st May from
6am to 10pm
watch TTD channel


In the presence of Vedic Pandits, Sundarakanda Akhanda Parayana Yagnam, will be performed for 16 hours non-stop for
Loka Kshemam.
Get the Divine benefit

If not possible to sit althrough, sit for the time possible for you

Even you can switch on the channel and let it go for 16 hours

Vibrations will benefit everyone🙏

வணக்கம் நண்பர்களே

நாளை மே 31
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
TTD சேனலைப்பாருங்கள்

வேத பண்டிதர்கள் முன்னிலையில், சுந்தரகாண்ட அகண்ட பாராயண யாகம், 16 மணி நேரம் இடைவிடாது நிகழ்த்தப்படும்

லோகா க்ஷேமத்திற்காக

தெய்வீக பலனைப் பெறுங்கள்

உங்களால் முடிந்த நேரத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்

சேனலை போட்டு 16 மணி நேரம் கேட்டுக்கொண்டு இருக்கலாம்

அதிர்வுகள் அனைவருக்கும் பயனளிக்கும்🙏
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

தமிழ் தேசத்திலும் வள்ளல்கள் என்று இவர்களை தெய்வத்துக்கு ஸமானமாகக் கொண்டாடுகிற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. ”முதலெழு-இடையெழு-கடையெழு வள்ளல்கள்” என்று குமணன், அதியமான் முதலான 21பேரை ச்லாகித்துச் சொல்லியிருக்கிறது.

ravi said…
காரி, பாரி ஓரி என்றெல்லாம் ஏழு பேரைக் கடையெழு வள்ளல்கள் என்பார்கள். பாரி வள்ளல் முல்லைக் கொடி படருவதற்காகத் தன் தேரையே கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். இன்னொருத்தன் (பேகன்) மயில் குளிரில் நடுங்குகிறதே என்று தன் உத்தரீயத்தையே எடுத்து அதற்குப் போர்த்தினானாம்.


ravi said…
அதியமானுக்கு சிரஞ்ஜீவித்வத்தைத் தரக்கூடிய நெல்லிக்கனி கிடைத்தது. ‘நாம் சிரஞ்ஜீவியாக இருந்து என்ன ஸாதிக்கப் போகிறோம்? அவ்வைப் பாட்டி இருக்கிறாளே, ஸதாவும் லோக க்ஷேமத்தைப் பண்ணிக் கொண்டு, ஊர் ஊராக ஓடி குழந்தைகளுக்கு உபதேசம் செய்து வருகிறாளே, அவள் திடகாத்திரத்தோடு எத்தனை ஆயசு இருந்தாலும் அதுதான் லோகத்துக்கு நல்லது’ என்று அவன் நினைத்து அவளுக்கே அந்த நெல்லிக்கனியை தானம் பண்ணிவிட்டான்.

ravi said…
அதியமான் பண்ணியது புத்திசாலித்தனமாக இருக்கிறது. ஆனால் முல்லைக்குத் தேராவது? மயிலுக்கு எங்கேயாவது குளிருமா? அதற்குப் பட்டுப் பீதாம்பரத்தைப் போர்த்தவாவது? இதெல்லாம் புத்தி இல்லாத கார்யமாக அல்லவா இருக்கிறது?’ என்று கேட்கலாம். என்னைக் கேட்டால், இப்படி புத்திக்கு வேலையே இல்லாமல் முட்டாள்தனம் மாதிரி கூடத் தோன்றுகிற கார்யங்களைச் செய்வதுதான் நிஜமான அன்பை, நிஜமான த்யாகத்தைக் காட்டுகிறது என்பேன். அன்பு பீறிக்கொண்டு வருகிறபோது மூளையினால் அதற்கு நியாய அநியாயங்கள் பார்க்க முடியாது. இப்படித்தான், நாயன்மார்களைப் பார்த்தால் பெண்டாட்டியையே ஒருத்தர் தானம் பண்ணினார், இன்னொருத்தர் பிள்ளையையே கறி பண்ணிப் போட்டார் என்கிறபோது, இதெல்லாம் மூடத்தனம், உணர்ச்சிக் கட்டுப்பாடில்லாத கார்யம் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படிப்பட்ட த்யாக சிந்தனை இருந்தது என்பதுதான் முக்யம். மூளையால் ஸமாதானம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் உருட்டிப் புரட்டிக் கொண்டு வந்துவிட்ட த்யாகம்தான் நிஜமான த்யாகம் என்று என் அபிப்ராயம்.

ravi said…
இம்மாதிரி ஆவேசமாகப் பரோபகாரம் பண்ணின பெரியவர்கள் நம் தேசத்தில் ஆதிகாலத்திலிருந்து அவிச்சின்னமாக (தொடர் முறியாமல்) வந்து கொண்டே இருந்திருக்கிறார்கள்.
ravi said…
சிருங்கேரியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைக்குப் பிறகு பிக்ஷை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலி, மதுரை. ராமநாதபுரம் ஊர்களில் வேதபாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பலர் சிருங்கேரி வந்து சாரதாம்பாளையும் ஜகத்குருவையும் தரிசிக்க வந்திருந்தனர். அவர்களைச் சில நாட்கள் தங்கிப் போகும்படி, ஸ்வாமிகள் கட்டளை இட்டிருந்தார். அந்த மாணவர்களும் ஸ்வாமிகளது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ravi said…
பிரவசன (ஆன்மிக விளக்க உரை) உபன்யாசகர்களைப் பற்றி பேச்சு. மதுரை தல்லாகுளம் வேத பாட சாலையைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்து ”இந்த பிரவசனம் பற்றி மனசுல உள்ள ஒரு விஷயத்தை, குருநாதர்கிட்ட விக்ஞாபனம் (வேண்டுகோள்) பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றான்.

ravi said…
ஆச்சார்யாள், ”என்னது? சொல்லேன்!” எனப் பணித்தார்.

வேற ஒண்ணுமில்லே குருநாதா! இப்பல்லாம் கதா பிரவசனம் பண்ற சில உபன்யாசகர்கள், சாராம்சத்தை விட்டுட்டு, இதர விஷயங்களைத்தான் நிறைய பேசறா! இதனால… சாராம்சம் மறந்து போயிடறது. இதர விஷயங்கள் மட்டும் நன்னா ஞாபகத்தில் இருக்கு. ‘நல்ல பிரவசனம் கேட்டோம்’கிற திருப்தி ஏற்பட மாட்டேங்கறது! இது, பிரவசனம் பண்றவாளோட குறைபாடா அல்லது கேக்கறவாளோட குறைபாடா? மகா ஸ்வாமிகள்தான் தெளிவுபடுத்தி அனுக்கிரகிக்கணும்!”

ravi said…
ஜகத்குரு புன்னகைத்தார். ”மொதல்ல, நீங்கள்லாம் போஜனம் பண்ணியாச்சா?” என்றார்

அனைவரும் கைகூப்பி, ”பண்ணியாச்சு ஸ்வாமி” என்றனர்.

”சந்தோஷம். எங்கே ப்ரவசனம் யார் சொல்லக் கேட்டாலும், அதுல இருக்கிற நல்ல சாராம்சத்தை மாத்திரம் நாம கிரகிச்சுண்டு, மத்ததை விட்டுடணும். இதுக்கு, நம்ம மனசை பரிபக்குவப்படுத்திக்கணும். அதுதான் ஒசத்தியான குணம். உபன்யாசம் பண்றவா, காலத்தையும் சபையையும் அனுசரிச்சுண்டு அதே நேரம், ‘சப்ஜெக்ட்’டையும் விட்டுடாமத்தான் பூர்த்தி பண்றா! நாமதான் அன்னபட்சி மாதிரி அதுலேர்ந்து கிரகிச்சுக்கணும்… என்ன புரியறதா?” என்றார்

ravi said…
சூர்யநாராயணன் என்ற சிஷ்யன் பய பக்தியுடன் ”ஜகத்குருவிடம் ஒரு பிரார்த்தனை! நாங்கள்லாம் ஸ்ரீமத் ராமாயணம் கேக்கணும்னு ஆசைப்படறோம். ஜகத்குருதான் கிருபை பண்ணி…”

”அதுக்கென்ன… பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போறது. நன்னா வாசிச்ச பௌராணிகாளா (உபன்யாசகர்) மைசூர்லேர்ந்து வரவழைச்சு சொல்லச் சொல்றேன்” என்றார் ஸ்வாமிகள்.

ravi said…
யக்ஞநாராயணன் என்ற சிஷ்யன் ”ஜகத்குருவின் அம்ருத வாக்கால ஸ்ரீமத் ராமாயணம் சிரவணம் (கேட்டல்) பண்ணணும்னு எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை. குருநாதர் அனுக்கிரகிக்கணும்!”

”ஓஹோ… இதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?! பார்ப்போம்… பார்ப்போம்…” என்றபடி எழுந்து உள்ளே சென்று விட்டார்.

ravi said…
நாட்கள் கடந்தன. அன்றும் வெள்ளிக்கிழமை; சந்தியாகால வேளை. சாரதாம்பாள் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திடீரென… அம்பாளைத் தரிசிக்க வந்தார் ஸ்வாமிகள். அவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது மணி எட்டு இருக்கும்!

ravi said…
அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே, ”ஏதேது, விடமாட்டேள் போல இருக்கே. சரி… சரி… நீங்க ஆசைப்பட்டபடியே நடத்திடலாம்! ஒரு நல்ல நாள் பார்த்து ப்ராரம்பம் (ஆரம்பம்) பண்ணுவோம்” என்றார். அந்த நல்ல நாளும் வந்தது. ஏழு நாட்கள் ஆச்சார்யாள் சுந்தரகாண்டம் சொல்வதென முடிவாயிற்று. ‘மஹா சந்நிதானமே பிரவசன அனுக்கிரகம் பண்ணப் போறார்’ என்ற செய்தி பரவ, ஏகக் கூட்டம். அன்று மழை வேறு தூறி ஓய்ந்திருந்தது!

ravi said…
ஆசனத்தில் அமர்ந்த ஜகத்குருவை அன்று தரிசித்தவர்கள், சாட்சாத் வேத வியாஸ பகவானே வந்து அமர்ந்திருப்பது போல் உணர்ந்தனர். கணீரென்ற குரலில் பிரவசனம் ஆரம்பமானது. அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென பிரவசனத்தை நிறுத்திய ஸ்வாமிகள், மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தார். அவரிடம், ”ஆரம்பத்திலேயே சொல்லணும்னு இருந்தேன்… மறந்துட்டேன்! நீ என்ன பண்றே… என் பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு மனைப் பலகையைக் கொண்டு வந்து போடு. அதுமேல பட்டு வஸ்திரத்தை விரி. அப்புறம், ஒரு வெள்ளித் தட்டுல ரெண்டு பெரிய கொய்யாப் பழத்தை கொண்டு வந்து வை… சீக்கிரம்!” என்று கட்டளையிட்டார். உத்தரவு பூர்த்தி செய்யப்பட்டு, உபன்யாசம் தொடர்ந்தது.

ravi said…
ஐந்தாம் நாள் உபன்யாசமும் பூர்த்தி அடைந்தது. மாணவர்களுக்கும் நன்கு புரிகிற மாதிரி விவரித்த ஸ்வாமிகள், இடையிடையே தர்மசாஸ்திர நுணுக்கங்களையும் விளக்கினார்.

திருநெல்வேலி வேத பாடசாலையைச் சேர்ந்த வேங்கடேசன் என்ற மாணவன் மெள்ள வந்து ஜகத்குருவை நமஸ்கரித்து, ”எனக்கு ஒரு சந்தேகம் குருதேவா” என்றான் தயங்கியபடி.

”என்ன சந்தேகம், கேள்!” என்றார் ஸ்வாமிகள்.

அவன் திக்கித் திணறியபடி ”குருநாதா! உபன்யாசம் ஆரம்பிச்ச நாள்லேர்ந்து… உங்க பக்கத்துல ஒரு பலகையைப் போட்டு, அதுக்கு முன்னால ஒரு தட்டுல கொய்யாப் பழத்தையும் வைக்கச் சொல்றேள்! அது எதுக்குனு புரியலை…”

ravi said…
இதைக் கேட்டு கலகலவென சிரித்த ஆச்சார்யாள், ”சொல்றேன் கேளு… ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்… தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்’னு… எங்கெல்லாம் ஸ்ரீ ராமனின் பெருமை பேசப்படறதோ, அங்கெல்லாம் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி வந்துடுவார்னு ஒரு நம்பிக்கை. இங்கே நாம ஸ்ரீமத் ராமாயணம்னா சொல்றோம். அதனால நிச்சயம் ஸ்வாமி வருவாரில்லையா? அவரை நாம நிக்க வைக்கலாமோ? அவர் ‘நவ வ்யாகரண’ பண்டிதராச்சே! அவர் உட்காரத்தான் ஆசனப் பலகை! அப்புறம்… நம்ம வீட்டுக்கு யாராவது ‘கெஸ்ட்’ வந்தா பழம்- பட்சணம், காபியெல்லாம் குடுத்து உபசாரம் பண்ற மாதிரிதான் இது! ஸ்வாமிக்கு கொய்யாப் பழம்னா ரொம்பவும் புடிக்கும். இப்ப புரிஞ்சுண்டியா?” என்று கேட்டார்.

ravi said…
தலையாட்டினான் வேங்கடேசன். அந்த இளம்பிஞ்சு இன்னும் தெளிவடைய வில்லை என்பது அந்த தெய்வத்துக்கு தெரியாதா என்ன!

ஆறாம் நாளன்றும் நல்ல கூட்டம். அன்றைய உபன்யாசத்தை உருக்கமாகக் கூறி முடித்தார் ஜகத்குரு.

ravi said…
அனைவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துச் சென்ற பின்னர், பாடசாலை மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக நமஸ்கரித்து நகர்ந்தனர். கடைசியாக, முதல் நாள் சந்தேகம் கேட்ட திருநெல்வேலி பாடசாலை மாணவன் வேங்கடேசன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, கைகூப்பி நின்றான். புன்முறுவலுடன் அவனை ஏறிட்ட ஸ்வாமிகள், ”ஒம் முழுப் பேரென்ன?” என்று வினவினார்.

ravi said…
பிரசன்ன வேங்கடேசன் குருநாதா!”

”பூர்வீகம் எது?” என்று கேட்டார்.

”திருநெல்வேலி- கடையநல்லூர் பக்கம் ஒரு குக்கிராமம் குருநாதா”

”தகப்பனார் என்ன பண்றார்?”

”உபாத்தியாயம் (வைதீகத் தொழில்) குருநாதா!”

ravi said…
உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ்” என்று கூறிவிட்டு, அன்றைய தினம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கொய்யாப் பழங்களை தன் தங்கக் கைகளால் எடுத்து, அவனிடம் தந்தார். பிறகு, ”வேங்கடேசா! இவை ஆஞ்சநேயர் சாப்பிட்ட உச்சிஷ்ட (மீதி) பிரசாதம். நறுக்கி நீயும் வாயில போட்டுண்டு, எல்லாருக்கும் கொடு!” என்று விடைகொடுத்தார்.

ravi said…
ஆனால், பிரசன்ன வேங்கடேசன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆச்சார்யாள் அளித்த இரு கொய்யாப் பழங்களையும் கைகளால் உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்!

அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள் தனக்குள் சிரித்தபடி, ”என்ன பிரசன்ன வேங்கடேசா! பழங்களைக் கையில் வெச்சுண்டு அப்டி என்ன யோசனை? கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்!” என்றார். அவன் தயங்கினான்.

ravi said…
சொல்லு”- தைரியப்படுத்தினார் ஜகத்குரு.

”வேற ஒண்ணுமில்லே குருநாதா! அந்த ஆசனத்துல ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்து ஸ்ரீமத் ராமாயணம் கேட்டுட்டு, அவருக்கு அர்ப்பணிச்ச கொய்யாப் பழங்களையும் சாப்டுட்டுப் போறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.

ravi said…
இத நான் சொல்லலே! பரம்பரை பரம்பரையா நம்ம தேசத்துல ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் பண்ணிண்டு வர பெரியவாள்லாம் பூர்ண நம்பிக்கையோட கடைப் பிடிக்கிற வழக்கம். இது சத்தியமும் கூட! இதுல, உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஞானகுரு.

பிரசன்ன வேங்கடேசன் பேசத் தயங்கினான். அவனை அருகில் வரச் சொன்ன ஆச்சார்யாள், ”எதுவா இருந்தாலும்… மனசுல பட்டதை தைரியமா சொல்லு!” என்றார் .

ravi said…
நானும் பிரவசனம் கேக்கறச்சே அந்தப் பலகையையே அடிக்கடி பார்த்துண்டிருந்தேன்… என் கண்ணுக்கு ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்ததா தெரியவே இல்லியே! பக்கத்துல இருந்த சகாக்களையும் கேட்டேன். அவாளும் ‘தெரியலே’னுட்டா. அதான்…” மென்று விழுங்கினான் வேங்கடேசன்.

”சரி… சரி. இது உன்னோட முதல் சந்தேகம்! ‘ரெண்டு கொய்யாப் பழமும் வெச்சது வெச்சபடி அப்படியே இருக்கே! ஆஞ்சநேய ஸ்வாமி சாப்பிட்டிருந்தா, குறைஞ்சிருக்கணுமே’ங்கறதுதானே ரெண்டாவது சந்தேகம்?” என்று கேட்டார்.

ravi said…
ஆத்மார்த்தமான பக்தியும், சிரத்தையும் இருந்தா ஆஞ்சநேய ஸ்வாமி பவ்யமா, பக்தியோடு அமர்ந்து ஸ்ரீமத் ராமாயண சிரவணம் பண்றத நாமும் தரிசிக்கலாம்! ஆஞ்சநேயர் விஸ்வரூபியா வந்து உட்கார்ந்துட்டார்னா அத பார்த்துட்டு, தாங்கிக்கிற சக்தி எல்லோருக்கும் இருக்குமா? அதனால அவர், சூட்சுமமா வந்து கேட்டுட்டுப் போவார்!” என்று விளக்கம் அளித்தார்.
ravi said…
உனக்கு கிரந்த எழுத்து வாசிக்கத் தெரியுமா?” என்று வேங்கடேசனிடம் கேட்டார்.

”தெரியும் குருநாதா” என்றான் அவன்.

உள்ளேயிருந்து உபநிஷத் சம்பந்தமான ஒரு கிரந்த புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார் ஆச்சார்யாள். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு சிறு பகுதியை சுட்டிக் காண்பித்து, ”இதை, ஐந்து நிமிஷத்தில் மனப்பாடம் செய்து அப்டியே என்னிடம் ஒப்புவிக்க வேண்டும். முடியுமா பார்” என்றார் சிரித்தபடி!

ravi said…
புத்தகத்துடன் சற்றுத் தள்ளிப் போனான் பிரசன்ன வேங்கடேசன். சரியாக ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆச்சார்யாளிடம் வந்தவன், அவர் குறிப்பிட்ட பகுதியை அட்சர பிசகின்றி ஒப்பித்தான்.

ஆச்சார்யாள் முகத்தில் பரம சந்தோஷம். புத்தகத்தைக் கையில் எடுத்தார். தான் உருப்போடச் சொன்ன அந்தப் பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு,

ravi said…
வேங்கடேசா, நான் சொன்னபடி அஞ்சே நிமிஷத்துல படிச்சு ஒப்பிச்சுட்டே! நீ அந்த புஸ்தகத்திலேர்ந்து குறிப்பிட்ட அட்சரங்களை கிரகிச்சுட்டதால… அவை, அந்த இடத்திலேருந்து மறைஞ்சு போயிடலையே! கிரந்த எழுத்துக்கள்லாம் இருந்த இடத்துல அப்படியே இருக்கோல்லியோ? அதுமாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம எதை அர்ப்பணிச்சாலும், அதுல இருக்கிற பக்தி சிரத்தையுடன் கூடின ருசியை மாத்திரம் ஸ்வீகரிச்சுண்டு, பதார்த்தங்களைப் பரம கருணையோடு நமக்கே விட்டுடுறார். வெச்ச கொய்யா ரெண்டும் வாடாம- வதங்காம, முழுசா அப்படியே இருக்கிற ரகசியம் இப்ப புரியறதா உனக்கு?”

ravi said…
பிரசன்ன வேங்கடேசன் பிரமித்தான். அங்கு, சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.
பிரவசன பூர்த்தி நாள்! மதியம் மூன்று மணிக்கே மேடைக்கு ஆச்சார்யாள் வந்து விட்டார். உபன்யாசம், மிக உருக்கமாகப் போய்க் கொண்டிருந்தது. பூர்த்தி கட்டம். அனைவரும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

ravi said…
பெரிய வானரம் ஒன்று தாவித் தாவி அந்த உபன்யாச கூடத்துக்கு வந்தது. ஒருவரையும் லட்சியம் பண்ணாமல் மேடையில் பாய்ந்து ஏறி, ஆஞ்சநேய ஸ்வாமிக்காக போடப்பட்டிருந்த பலகையில், ஆச்சார்யாளைப் பார்த்தபடி- சாதுவாக அமர்ந்து கொண்டது! ஜகத்குரு சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த கொய்யாப் பழங்களை ‘அது’ ஏறெடுத்தும் பார்க்கவில்லை! கூட்டம் இதைப் பார்த்து வியந்தது!

ravi said…
மாலை ஐந்து மணி. அதுவரை, அந்த வானரம் அப்படி இப்படி அசையவே இல்லை! பழங்களையும் தொடவில்லை. ஆச்சார்யாள் உபன்யாசத்தைப் பூர்த்தி செய்து, ‘பலசுருதி’ (பலன்) சொல்லி முடித்தார். பிறகு வலப் புறம் திரும்பி வானரத்தைப் பார்த்து,
ravi said…
ஆஞ்சநேய ஸ்வாமி! ஸ்ரீமத் ராமாயணம் கேக்கறதுக்காக நீங்க வந்து உக்காந்திருக்கறதுல ரொம்ப சந்தோஷம்! அந்த ரெண்டு கொய்யாப் பழங்களும் உங்களுக்குத்தான்… ஸ்வீகரிச்சுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்ட வானரம், பழங்களை எடுத்துக் கொண்டு, ஆச்சார்யாளையே வாஞ்சையுடன் சற்று நேரம் உற்றுப் பார்த்தது.

ravi said…
கூட்டத்திலிருந்து குரலொன்று, ”ஆஞ்சநேயா… ராமா… ராமா!” என்று முழங்கியது. அனைவரும் குரல் வந்த திசையை ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கே பிரசன்ன வேங்கடேசன், கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தான்! இந்த நேரத்தில், மெள்ள மேடையை விட்டுக் கீழிறங்கிய வானரம், ராஜநடை போட்டபடி நடந்து சென்று மறைந்தது.

ravi said…
கண்களில் நீர் முட்ட ஜகத்குருவிடம் வந்த பிரசன்ன வேங்கடேசன், ”குருதேவா! ஒங்க பக்கத்துல பலகையில வந்து ஒக்காந்துட்டுப் போனது, என் கண்ணுக்கு வானரமா தெரியலே. சாட்சாத் ஆஞ்சநேய ஸ்வாமி, ஆஜானுபாகுவான சரீரத்தோட கம்பீரமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்! ஆச்சார்யாளோடு ஸ்வாமி ஏதோ பேசியதையும் பார்த்தேன்! நீங்க சொன்ன தாத்பர்யம் இப்ப எனக்குப் புரிஞ்சுடுத்து குருநாதா!” என்று ஜகத்குருவின் பாதார விந்தங்களில் விழுந்தான். எத்தனையோ பேர் தேற்றியும் அவனது கண்ணீரை மட்டும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த பரப்பிரம்மம் கரம் உயர்த்தி வேங்கடேசனை ஆசீர்வதித்தது!

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை