அபிராமி அந்தாதி - பாடல் 65- ஆறுமுகன் மூதறிவின் மகன் -
பச்சைப்புடவைக்காரி -507
அபிராமி அந்தாதி
பாடல் 65
இன்றைய பாடல் ஒரு இலக்கிய சுவை கொண்டது ..
திருமுருகன் அவதார பெருமையை சொல்லும் பாடல் ... *மாரன்* என்றால் மன்மதன் *...கு* மாரன் என்றால் ஞானம் கொண்டவன் ... காமத்தை விரட்டுபவன் ...
இதன் தாத்பரியங்களை இன்னும் அலசும் போது பார்க்கலாம் ...🥇🥇🥇
பரமேஸ்வரன் தியான நிலையில் தக்ஷிணாமூர்த்தியாய் அமர்ந்திருக்கிறான் .
குமார சம்பவம் நிகழ்ந்தால் தான் சூரனை கொல்ல முடியும் ..
நடக்கும் எல்லா அக்கிரமங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும் ....
யார் தியானத்தை கலைப்பார்கள் யாருக்கு அவ்வளவு தையிரியம் இருக்கிறது ?
கலைப்பது மட்டும் வேலை இல்லை .. அங்கே ஆசையை ஈசன் மனதில் உருவாக்க வேண்டும் ....
யாருக்கு வல்லமை இருக்கிறது ?
முப்பது முக்கோடி தேவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர் ..
பிரம்மன் சத்திய உலகத்தை பாயாக சுருட்டிக்கொண்டு ஆதார் , PAN ஒன்றையும் மாத்தாமல் யார்கிட்டேயும் சொல்லிக்கொள்ளமல் ஓடி ஒளிந்து கொண்டார் ...
அரங்கன் உரக்க குறட்டை விட்டுக்கொண்டு நன்றாக தூங்குவதைப்போல நடித்தான் ...
🥇🥇🥇🥇🥇
அம்பாளே ஒரு யோசனை தந்தாள் .. மன்மதனை அழைத்து ஈசன் மேல் மலர் கணைகளை பொழிய ...
அன்னை கொடுத்த தையிரயத்தில் அம்பு விட்டான் ...
6 பொறிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மன்மதனை துளைப் போட்டது ... எரிந்து போனானன் எலும்புகள் கூட இல்லாமல் ... 🔥🔥🔥🔥🔥🔥
எல்லோரும் ஒளிந்திருந்து ஈசனின் மன மாற்றத்தை மதன் அம்பு எய்திய பின் பார்க்க தவம் செய்து கொண்டிருந்தனர்
மதன் எரிந்து போனது எல்லோரையும் கலங்க வைத்தது .... சூரனை கொல்ல வேண்டி தவம் இருந்தால் இவரோ மதனை கொன்று விட்டார் .. Missed Identity 🤔
அபிராமி பார்த்தாள் ...
பிள்ளையார் பிடிக்க குரங்காகி விட்டதே ...
சரி அண்ட சராசரங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது தானே இந்த மன்மத தகனம் நடந்தது ...
எந்த ஈசனின் கண் காமத்தை எரித்ததோ அதே கண் எல்லோரும் பார்க்கும் படி ஞானத்தை உருவாக்கட்டும் ...
ஆசை , காமம் அழிந்து போனால் அங்கே பிறப்பது ஞானம் தானே !!
ஈசனின் மூன்றாவது கண் திறந்தது
அதில் கோபம் இல்லை .. ஞானம் நிரம்பி வழிந்தது ...
காமம் இல்லை ... கருணை கடலாய் பொங்கியது ...
ஆசை இல்லை ... ஆனந்தம் அணை இல்லாமல் வெள்ளம் போல் ஓடியது ...
பொறிகளில் ஆயிரம் கோடி மன்மதனை ஒன்று சேர்த்தால் வரும் அழகு தெளித்தது எங்கும் ...
துன்பம் , துயர் , ஏழ்மை , வறுமை ஏக்கம் , தாக்கம் எல்லாம் பஷ்மாய் போயின ... 👀🔥
எந்த கண் மதனை எரித்ததை அனைவரும் பார்த்தனரோ அதே கண் கருணை வடிவமாய் ஆவதையும் எல்லோரும் அபிராமியின் வல்லமையால் பார்த்து மனம் குளிந்தனர்...
இப்படிப்பட்ட மாபெரும் அவள் வல்லமையை புகழ்ந்து பாடும் பாடல் இது
ககனமும் வானும் புவனமும் காண
விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும்
முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும்
உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே🥇🥇🥇🙏🙏🙏
ககனமும் வானும் புவனமும் காண -
பூமியில் வாழ்பவர்களும், வானுலகில் வாழ்பவர்களும், இடைப்பட்ட உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி.....🙏🙏🙏
விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு -
கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு
🔥🔥🔥
தடக்கையும் - நீண்ட வலிய கைகளையும்
செம்முகனும் - சிவந்த திருமுகமும்
முந்நான்கு- பன்னிரு கரங்களும்
இருமூன்று - ஆறுமுகங்களும்🙏🙏🙏
எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது -
என்று பல விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும் வல்லமை அமைந்தது...👏👏👏
அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே -
அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?!
மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று எல்லோரும் மயங்கி இருக்கும் போதில்
அந்த மன்மதனை எல்லோரும் காணும் படி வென்றதைத் தான் எல்லோரும் வியக்கும் படி *தகனம்* செய்தார் என்று கூறுகிறார்.
அப்படி மன்மதனைத் தகனம் செய்த தவப்பெருமானே அந்த மன்மதனை விஞ்சும் அழகுடைய திருக்குமரனைப் பெற்றார் என்று வியக்கிறார்.
அப்படிப் பெறும் வல்லமையும் அம்மையே உன்னால் தான் ஏற்பட்டது என்று அன்னையைப் போற்றுகிறார்.
ஒரே கல்லில் மூன்று மாங்காய்.
அழகில் சிறந்தவன் திருமுருகன் என்று மகனைப் போற்றியாயிற்று;
யாராலும் வெல்ல இயலாத மன்மதனைத் தகனம் செய்தார் என்று அப்பனைப் போற்றியாயிற்று;
அந்த அப்பனுக்கும் சக்தி வந்தது அம்மையே உன்னால் தான் என்று அன்னையையும் போற்றியாயிற்று.🙏🙏🙏
காமன் அழிந்து போகவில்லை.
அவன் உடல் மட்டுமே காணாமல் போனது.
அவன் உடலற்றவனாக அனங்கனாக் (அ+அங்கன்) வாழ்கிறான் என்பதை ' *காமன் அங்கம்'* தகனம் செய்யப்பட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
எல்லோரும் வானில் வாழ்பவர்களையும் மண்ணில் வாழ்பவர்களையும் மட்டும் சொல்லும் போது அபிராமி பட்டர் ககனத்தில் இருப்பவர்களையும் சொல்கிறாரே யாரவர்கள் என்றால்
மண்ணில் பந்தத்தில் உழன்று மண்ணோடு நெருங்கியிருப்பவர்கள், வானில் எல்லா பந்தங்களும் விடுபட்டு முக்தி நிலை பெற்றவர்கள் என்று மண்ணவரையும் விண்ணவரையும் கூறிவிட்டு, பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமான்களைச் சொல்கிறார் 'ககனம்' என்பதன் மூலம்.🙏🙏🙏
***
வாரியார் சொல்வார். *"புழுவைத் தேய்த்த வீரனே...* *எறும்மை ஏய்த்த எத்தகனே"*
இப்பிடிப் பாராட்டுனா வெக்கம் வந்து வந்தவன் ஓடிப் போயிருவான்.
அப்படித்தான் நாம சாமிய "மன்மதனை எரித்தவனே" முப்புரம் தீய்த்தவனேன்னு சொல்றதெல்லாம்.
அவரு எல்லாத்துக்கும் மேல...அப்படீன்னு சொல்லீருக்காரு.
இருந்தாலும் நாம சொல்லாம விடுறதில்லை.
வாரியார் சுவாமிகள் சொன்னது சரி தான்.
நம்மாழ்வாரும் 'நான் உன்னை தேவாதி தேவன்; உலக நாயகன் என்றெல்லாம் புகழ்கிறேனே. அதனால் உன் புகழ் மாசுபட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்' என்று சொல்வார்.
அதனைத் தான் வாரியார் சுவாமிகளும் சொல்லியிருக்கிறார்.
மன்மதனை எரித்தவன், முப்புரம் எரித்தவன் என்பதெல்லாம் இறைவனின் பெருமைக்கு முன்னால் ஒன்றுமே இல்லை தான்;
அவை எல்லாம் ஈசனுக்குப் புழுவைத் தேய்ப்பதைப் போலும் எறும்பை ஏய்ப்பது போலவும் தான்.
வேறு வகையில் பார்க்கலாம்.
அவனுக்கு வேண்டுமானால் மன்மதனை வெல்வது சின்ன வேலையாக இருக்கலாம்.
நமக்கு? வானிலும், மண்ணிலும், ககனத்திலும் என்று எங்கெல்லாம் உயிர்த்திரள்கள் இருக்கின்றன என்று இந்தியத் தத்துவங்கள் சொல்கின்றனவோ அங்கெல்லாம் இருக்கும் உயிர்த்திரள்கள் மன்மதனை வெல்வது பெரும் காரியமாகத் தானே கொண்டிருக்கின்றன.
அவனை வென்றான் என்று ஈசனைப் போற்றுவது இவர்கள் பார்வையில் மலையைப் புரட்டிய செயல் தானே.
அந்த வகையில் அபிராமி பட்டர் பாடினார் என்று எடுத்துக் கொள்வோம்.🔥🔥🔥
👏👏👏👏👏👏👏👏👏👏
அபிராமியே சரவண பொய்கையாய் மாறி ஆறு பொறிகளை தானே வாங்கிக்கொண்டு வாரி கட்டிக்கொள்கிறாள் ..
அம்பாள் கட்டிக்கொண்டதால் அவன் பெயர் கந்தன் என்றாகியது 🥇🥇🥇
ஆறுமுகன் மூதறிவின் மகன்
👌👌👌👌💐💐💐💐💐👍👍👍👌👌👌👌😊😊😊😊
Comments
பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்..
இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்....
அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்.....
அந்த இரண்டை கொண்டு,
*நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்*.
*இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்*..
*இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது*.
*உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்*
*நீ என்னை அழைத்தால் ஒழிய*.
*இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது*.
*ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை*
*உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்*.
*இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்*
*ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்*..
*ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு*
*எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம்.* .
*என்னை இனிமேல் பிறக்க வைக்காதே*. *எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம்*.
*அப்பொழுது “ஷடம்” என்னும் வாயு இறைவனை அழைக்கும்*
*ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்.*
*அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம்,*
*ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது.*
*வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட "சடாரி" என்னும் பாதத்தை நம் தலையில் வைப்பார்கள்*.
*அது ஏதற்கு என்றால் "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்*.
*மறதியை கொடுக்காமல் ஷடம் என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும் படி எனக்கு அருள்வாயாக* *என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்*.
இறைவன் எவ்வளவு கொடியவன் என்று.
நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு.
இந்த உண்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குழந்தை பிறக்கையிலே வாழக்கூடிய இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் இறைவன்.
ஒன்று ஆத்மா மற்றொன்று மனசு.. .
நீங்கள் ஆத்மாவை ஆதரமாக கொண்டு வாழ்ந்தால் இறைவனை சென்றடையலாம்..
உங்கள் மனதை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தால் பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். முடிவு நம் கையில்.
ஒவ்வொரு ஜீவனுக்கும் ஜீவ ஸ்வாதந்த்ரியம் என்னும் ஜீவனுக்குண்டான சுதந்திரத்தை கொடுத்து தான் அனுப்புகிறான்.
ஆத்மா இறைவனுக்கும் நமக்கும் உண்டான பாலம்.
மனசு நமக்கும் இந்த பூலோகத்திற்கும் இருக்கும் பாலம்.
வாழும் வகை நம் கையில் தான் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறான்.
இதயத்தின் வலது பாகத்தில் ஒரு நெல்லின் நுனியை நூறு பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு சிறு பகுதி மிஞ்சுமே அந்த அளவில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருகிறான்.
இறைவனின் ஐந்து அவதாரங்களில் இந்த அந்தர்யாமி அவதாரமும் ஒன்று.
நாம் எல்லோருமே இறைவன் நமக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதை அனுபவித்து இருக்கலாம்.
நாம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும் தெரியுமா?.
அந்தக்குரலுக்கு சொந்தகாரர் இறைவனே..
இறைவன் ஒவ்வொரு பிறவியிலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்க இருக்க காரணம் என்ன தெரியுமா?
மனிதனுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது எந்த நொடியிலும் வரலாம்..
ஏதாவது ஒரு பிறவியில் இவன் திருந்தி ஆத்மாவை ஆதாரமாக கொண்டு வாழ ஆரம்பித்து இறைவனை அழைத்தால் அந்த நொடியே இவனை ஆட்கொண்டு வழி நடத்தி தன்னுடன் அழைத்துக்கொள்ளத்தான்..
ஏன் தெரியுமா? நாம் அனைவருமே இறைவனின் சொத்து.
இறைவன் அவன் சொத்தை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையும் கையாண்டு நம்மை அடைய முயற்சிக்கிறான்.
ஆனால் நாம் ஒவ்வொரு பிறவியிலும் இறைவனையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி கொள்கிறோம்.
திரும்பவும் நமக்கு ஞானம் வருவகற்கு அறுபது வருடமாகிறது. இது ஒரு தொடர்கதையாக ஆகி விட்டது.
@mahavishnuinfo
எல்லா ஜீவராசிகளுடைய நன்மை-தீமைகளை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பவள்.
*
இதில் முதல் வரி, உபயத்தைத்தையும், இரண்டாவது வரி பலனையும் சொல்ல வருகிறது.
‘
ஸ்வாமி ஸ்ரீ தேசிகன், தனது க்ரந்தங்களின் வாயிலாக, பிராட்டிக்கு புருஷகாரத்தோடு கூடிய உபாயத்வமும் உண்டு என தெளிவு படுத்தியுள்ளார், ஏன் ஏன்றால் பற்பல சாஸ்த்திரங்கள் அவ்வாறு கூறுவதினால்.
*தாம் பத்மிநேமீம் சரணம் அஹம் ப்ரபத்யே: லக்ஷ்மீர்மே நஷ்யதாம் த்வாம் வ்ருணே* என்கிற ஸ்ருதி வாக்யத்தால்,
லக்ஷ்மி தேவியை சரணமடைந்து இல்லாமையைப் போக்கி அருளப் ப்ரார்த்திப்பதாக கூறுவதால், பிராட்டி ஸித்தோபாயம் என அறியலாம்.
*லக்ஷ்ம்ய ஸஹ ஹ்ருஷிகேச: தேவ்யா காருண்ய ரூபயா. ரக்ஷக ஸர்வ ஸித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே* என்கிற பாஞ்சராத்ர சாஸ்த்திரங்களினாலும்,
எப்போதும் பிரியாத லக்ஷ்மி பிராட்டியுடன் சேர்ந்து எம்பெருமான் ரக்ஷண கார்யத்தை செய்கிறான், என அறியலாம்.
இதனாலும், பிராட்டி ஸித்தோபாயம் என அறியலாம்.
#mahavishnuinfo
பித்ருப்யோ நமஹ 🙏🏻🙏🏻
|| பித்ருக்களை திருப்திபடுத்தும் கயா சிரார்த்தம் ||
நம் மூதாதையர்கள் தன் வம்சத்தில் யாராவது ஒருவர் கயாவுக்கு வந்து தம்மை கரையேற்ற மாட்டார்களா என ஏங்கிக் காத்திருப்போருக்கு
ஸ்ரீஹரி அருளிய வரம்.
அசுர குலத்தில் தோன்றிய கயாசுரன் கடுமையான தவத்தை மேற் கொண்டபோது தேவலோகமே நடுங்கியது..
இதை கண்ட தேவர்கள் பிரம்மனை நாடினர் .
அவர்களின் பயத்தைப் போக்க பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு கயா அசுரனிடம் வேண்டிய வரத்தைக் கேள் என நேரடியாகக் கேட்டார்..
இதைக் கேட்ட தேவர்கள் நடுங்கிப் போனார்கள்.
என்னை தொடுபவர்களுக்கு புனிதம் கிட்ட வேண்டும் என வேண்டினான்..
ஸ்ரீமஹா விஷ்ணுவும் அவன் விருப்பத்தை வரமாக அருளினார் .
இதைக் கேட்ட தேவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கயாசுரனின் பின் விளைவுகளை பிற்காலத்தில் உணரத் தொடங்கினர்.
இதனால் நரக லோகம் முழுவதும் கலைக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் யம ராஜர் பிரம்ம தேவரை நாடினார் .
நரக லோகம் கலைக்கப்பட்டால் அதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும்.
அதே சமயத்தில் நரக வேதனையை நினைத்து ஏற்படும் பயமே ஒருவனை நல்வினை பாதைக்கு தூண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என யமராஜர் வாதாடினார்.
எமராஜரின் செய்தியில் உண்மை இருப்பதை உணர்ந்த பிரம்மா அவரை அழைத்துக்கொண்டு பகவான் மஹா விஷ்ணுவை நாடினார்.
ஒரு யாகத்தை நிகழ்த்த அவருக்கு அவனது உடலையே தானமாக கேட்டார். நல்ல காரியத்திற்கு தன் உடல் பயன்படட்டுமே என்று ஒப்புக் கொண்டார் .
பிரம்மா தலைமையில் நடைபெற்ற அந்த வேள்வியில் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டனர்.
அத்தருணத்தில் கயாசுரன் உடல் தொடர்ச்சியாக ஆடிக் கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஆட்டத்தை தடுக்க முடியவில்லை.
கயாசுரன் உடல் மார்பின்மீது தர்மசீலா என்ற கல்லை வைத்து தம் திருநாமத்தை வைத்து கல்மீது அழுத்தினார் ஸ்ரீ ஹரி. கயாசுரன் யாகத்திற்காக உடலை அர்ப்பணித்த இடமே கயா என்று போற்றப்படுகிறது.
இந்த க்ஷேத்திரம் கயா என்ற தன் பெயரால் அழைக்க வேண்டுமென்றும் வரம் கேட்டான்.
ஸ்ரீமஹா விஷ்ணுவும் அப்படியே ஆகட்டும் என்று வரமருளினார்.
இத்திருத்தலத்தில் சிரார்த்தம் கொடுப்பவர்கள் பித்ருக்கள் அனைவரும் பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்றும் வரத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டான்.
இவ்வாறுதான் கயாசுரன் பெற்ற வரத்தினால் நம் மூதாதையர்கள் தன் வம்சத்தில் யாராவது ஒருவர் கயாவுக்கு வந்து தம்மை கரையேற்ற மாட்டார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள் நம் பித்ருக்கள்.
#mahavishnuinfo
🦅#புரட்டாசி_8ம்நாள்🦅 (24.09.21)
🦅#கோவிந்தநாமாவளி🦅
(#கோவிந்தாஹரிகோவிந்தா)
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஶ்ரீனிவாஸா கோவிந்தா ஶ்ரீ வேங்கடேஶா கோவிந்தா
பக்த வத்ஸல கோவிந்தா பாகவதா ப்ரிய கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
புராண புருஷா கோவிந்தா பும்டரீகாக்ஷ கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
நந்த நந்தனா கோவிந்தா நவனீத சோரா கோவிந்தா
பஶுபாலக ஶ்ரீ கோவிந்தா பாப விமோசன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஶிஷ்ட பரிபாலக கோவிந்தா கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
வஜ்ர மகுடதர கோவிந்தா வராஹ மூர்தீ கோவிந்தா
கோபீஜன லோல கோவிந்தா கோவர்தனோத்தார கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
பக்ஷி வாஹனா கோவிந்தா பாண்டவ ப்ரிய கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
மத்ஸ்ய கூர்ம கோவிந்தா மது ஸூதனா ஹரி கோவிந்தா
வராஹ ந்ருஸிம்ஹ கோவிந்தா வாமன ப்றுகுராம கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
வேணு கான ப்ரிய கோவிந்தா வேங்கட ரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஸீதா நாயக கோவிந்தா ஶ்ரிதபரிபாலக கோவிந்தா
தரித்ரஜன போஷக கோவிந்தா தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஶரணாகதவத்ஸல கோவிந்தா கருணா ஸாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
கமல தளாக்ஷா கோவிந்தா காமித பலதாத கோவிந்தா
பாப வினாஶக கோவிந்தா பாஹி முராரே கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
தரணீ னாயக கோவிந்தா தினகர தேஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
பத்மாவதீ ப்ரிய கோவிந்தா ப்ரஸன்ன மூர்தே கோவிந்தா
அபய ஹஸ்த கோவிந்தா அக்ஷய வரதா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
விராஜ தீர்த கோவிந்தா விரோதி மர்தன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஸாலக்ராம ஹர கோவிந்தா ஸஹஸ்ர நாம கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா லக்ஷ்மணாக்ரஜ கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
கருட வாஹனா கோவிந்தா கஜராஜ ரக்ஷக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
வானர ஸேவித கோவிந்தா வாரதி பந்தன கோவிந்தா
ஏடு கொண்டல வாடா கோவிந்தா ஏகத்வ ரூபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ப்ரத்யக்ஷ தேவ கோவிந்தா பரம தயாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
வஜ்ர மகுடதர கோவிந்தா வைஜயம்தி மால கோவிந்தா
வட்டிகாசுப்ரிய கோவிந்தா வாஸுதேவ சுதா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஸ்த்ரீ புத் ரூபா கோவிந்தா ஶிவகேஶவ மூர்தி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
பிரம்மாண்ட ரூபா கோவிந்தா பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா நீரஜநாப கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஜனார்தன மூர்தி கோவிந்தா ஜகத் ஸாக்ஷி ரூபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
அபிஷேக ப்ரிய கோவிந்தா ஆபன் நிவாரண கோவிந்தா
ரத்ன கீரீடகோவிந்தா ராமானுஜநுத கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
நித்யசுப ப்ரத கோவிந்தா நிகில லோகேசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
ஆனந்த ரூபா கோவிந்தா ஆத்யந்த ரஹிதா கோவிந்தா
இஹபர தாயக கோவிந்தா இபராஜ ரக்ஷக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
திருமலை வாசா கோவிந்தா துளசி வனமால கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ஶேஷ ஸாயி கோவிந்தா ஶேஷாத்ரி னிலய கோவிந்தா
ஶ்ரீ ஶ்ரீனிவாஸா கோவிந்தா ஶ்ரீ வேம்கடேஶா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா ஶ்ரீ வேங்கட ரமணா கோவிந்தா (2)
தொடர்ந்து ஒரு வேலையை செய்து கொண்டு இருந்தால், செய்யும் உறுப்பு காய்த்துப் போகும்.
சிலருக்கு பேனா பிடித்து எழுதி எழுதி விரல் காய்த்துப் போகும்.
சிலருக்கு வண்டியில் ஸ்டீரிங் வீலை பிடித்து பிடித்து கை காய்த்துப் போகும்.
குலசேகர ஆழ்வார் சொல்கிறார், கடவுள் நாமத்தைப் நாக்கு தழும்பு ஏற பாடி, கை கொண்டு மலர் தூவும் நாள் எந்நாளோ என்று உருகுகிறார்.
நாக்கில் தழுப்பு ஏறுவது என்றால் எவ்வளவு தரம் ஒரே நாமத்தை திருப்பி திருப்பி சொல்ல வேண்டி இருக்கும்.
அது பக்தி.
ஏதோ அவசரத்தில், வாயில் முணு முணு என்று சொல்லிவிட்டுப் போவதா பக்தி.
இதெல்லாம் பக்தியின் வேறு தளம். இப்படி நினைக்கக் கூட நம்மால் முடியாது.
வேலை வண்ணணை என் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட
ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினை
அவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி
என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே🙏🙏🙏
தமிழின் இனிமை, வட மொழியின் இனிமை எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார்.
பாட்டின் இனிமை என்பது உணர்வு சார்ந்தது.
அது இன்னது என்று சுட்டிக் காட்ட முடியாது.
இசையின் இன்பத்தைப் போல.
சிலருக்கு இசையை கேட்கும் காது வாய்த்து இருக்கும்.
அவர்களுக்கு இசையின் இன்பம் புரியும்.
இசை தெரியாதவர்களுக்கு சொன்னாலும் புரியாது.
பல பாட்டுப் போட்டியில் நடுவர்கள் "..அங்கங்கே கொஞ்சம் சுருதி விலகி இருந்தது" என்று சொல்லுவார்கள்.
நமக்கு எங்கே சுருதி விலகியது என்றே தெரியாது.
எல்லாம் சரியாக இருப்பது போலவே தெரியும்.
(பெரும்பாலானவர்களுக்கு). அந்த சுருதியை அறியும் செவி வாய்க்கவில்லை. 🎼🎼🎼
அது போல, பக்தி இன்பம் என்கிறார்.
எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.
All are not as gifted as you are Kavingare
Raman was a photographer. He came to Kanchipuram with his powerful camera to take photos of Maha PeriyavaaL.
If he took a snap of Maha PeriyavaaL in meditation, the flash light might disturb his meditation; so he waited.
When the Mahaan got up from his dhyAnam, Raman opened his camera and kept it ready for taking a snap. The Mahaan stood up raising his hand, which seemed like a gesture of blessing. Raman quickly snapped some picture of the sage.
An assistant who came trotting to him asked excitedly, "Why did you take pictures even when Maha Periyavaa gestured to say no to you?"
Raman was confused. "Maha Periyavaa only blessed (by raising his hand)?"
This made Raman get angry. 'You do not know what sort of a camera this one is. How can the pictures I took not be recorded? Let me see.' With such a haughty thought in mind he went to his place and as a first thing had the frames washed and developed. Not a single photograph that he took of Maha Perivar was visible.
The next minute Raman understood that Maha Periyavar was sAkSAt Sarvesvara.
Later he came to Kanchipuram leisurely, took permission from the Mahaan supplicating with love and devotion, took snaps and got his wish fulfilled.
*Periva Saranam !*
_Compiled by: Voice of Periva_ | https://t.me/PerivaVoice
*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.mahaswami.org*
🙏🙏🙏🌹🌹🌸🌸🙏🙏🥇🥇🙏🙏
அனுமனின் குரல் கானகத்தை கடம்பாடவி ஆக்கியது ..
மலர் சிரிக்க
தேன் சொரிய
மழை தூவ ...
பறவைகள் பண் இசைக்க
விலங்குகள் விண்ணுக்கும் மண்ணுக்கும் எம்பி எம்பி குதிக்க
ராகவன் தில்லை அம்பலனாய் அங்கே ஆனந்த நடம் புரிந்தான் ...
ஒரே சொல் ...
ஒரே வில்லை மகிழ்வித்தது..
ஒரே அம்பு ஊடுருவும் தேன் மலரம்பாயின ....
அனுமனை கட்டி அணைத்தான் ராமன் ...
அங்கே ரோமங்கள் கவி பாடின ...
காஞ்சி சென்று வந்தேன் ...
வடூவூர் ராமன் புன்னகையை பொன்னகையாய் பார்க்க வேண்டியே ...
கண்டேன் யாரும் காணா ஒளியை ...
சீதையாய் அனுமனாய் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாய்
சிரிக்கும் ஒரு அலர் கதிரை அங்கே ..
அனுமன் கொண்ட உற்சாகம்
ராமன் கட்டிக்கொண்ட ரோமங்கள்
சீதைக்கு மீண்டும் கிடைத்த மகிழ்ச்சி
அனைத்தும் பரிசாய் பெற்று வந்தேன் ..
நானும் ஒரு சொல்லின் செல்வனானேன் ... அனுமன் போல் ... 🙌🙌🙌
இறை உணர்வு என்பது ஒரு எளிமையான உணர்வு.
அதை மிக மிக சிக்கலான ஒன்றாக ஆக்கிவிட்டோம்.
வேதம், புராணம், இதிகாசம், அவதாரம், உபநிடதம், சுருதி, ஸ்மிரிதி, பூஜை, ஆசாரம், நியமம், என்று பல விதங்களில் சிக்கலாக்கி விட்டோம்.
பத்தாக் குறைக்கு குழப்பும் தத்துவங்கள்...
அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம், பரமாத்மா, ஜீவாத்மா, இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்று ஏகப்பட்ட சிக்கல்கள்.
இதை எல்லாம் படித்து, தெளிவதற்குள் நம் ஆயுள் முடிந்து விடும்.
ஒன்றைப் படித்தால் அதில் இருந்து ஆயிரம் சந்தேகம் வரும். என்று தெளிவு வர?
பக்தி செய்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் இல்லை.
இறைவனை மிக மிக எளிதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
அவன் நின்றான், உட்கார்ந்தான், படுத்தான், நடந்தான் என்று சொன்னாலே நம் இடர், துன்பம் எல்லாம் போய் விடும் என்கிறார் பொய்கையாழ்வார். 🦋🦋🦋
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
பக்கம் பக்கமா பாராயணம் பண்ணி, ஒப்பிக்க வேண்டுமா?
விரதம் இருக்க வேண்டுமா?
ஆசாரம், அனுஷ்ட்டானம் எல்லாம் பண்ண வேண்டுமா?
ஒன்றும் வேண்டாம்...
நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்
என்று சொன்னால் போதும்.
கடவுள் என்றால் ஏதோ சூப்பர் man மாதிரி ஏதாவது வித்தை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அல்ல.
சும்மா நம்மை மாதிரி, நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்றாலும் அவன் கடவுள்தான்.
அவ்வளவு ஒரு எளிமை.
மனதில் பக்தி வேண்டும். அன்பு வேண்டும்.
மற்றவை எல்லாம் ஆடம்பரம்.
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்
எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே
அருளே
உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே
அழியா முத்தி ஆனந்தமே ... 10 🙌🙌🙌
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே (64)
815 நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற்பெருந் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே (65)
Enna Panivu
4284
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும் ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
4
Akka
வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ //
பத்மாஸனஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே //
பத்மஜா ஆயிரம் இதழ் பத்மத்திலே ஜனித்தவள்..
பத்மாஸனி பத்மத்திலே அமர்ந்திருப்பவள்.
பத்மநாபப்ரியா பத்மநாபனின் மார்பில் ப்ரியமாய் அமர்ந்திருப்பவள்..
பத்மாக்ஷி பத்மப்ரியா பத்மலாதரா ஸ்ரீ ரமா பத்மினி ..
பத்மசுந்தரி பத்மஜாதா..
கமலப்ரீதி கமலாக்ஷவல்பா..
கரங்களே தாமரை மொட்டுக்களாக..
ஆஹா அவள் பெயரை புகழை வாழ்வெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம். பத்மத்திலே மலர்ந்திருப்பவளே திருப்பாதசரணம்..
கனகதாரையாக கனக நெல்லிக்கனியை ஏழை அந்தணர் மனைவிக்கு ஆதிசங்கரரிள் சொல்லுக்காக அருளியவள்..
கனகாம்பரதாரி ஸ்ரீ லக்ஷ்மி..
கனக மழை பொழிந்தாள் ஸ்ரீ ஸ்துதி கேட்டு நிஹமாந்த மஹா தேசிகனுக்காக.
ஜகன்மாதா மஹாலக்ஷ்மி.
கஜலக்ஷ்மி. பத்மஜாவின் அழகை..
சஹஸ்ர பத்மதளாயதாக்ஷி..
பீடதாமரை ஒவ்வொரு இதழிலலும் கண்கள் ..
அனைத்து இதழ்களும் யானையின் தும்பிக்கையாக நீண்டு கஜலக்ஷ்மியை அபிஷேயம் செய்யக் காண்கின்றேன்.
கற்பனையிலும் காணக்கிடைக்காத அதி அற்புத ஓவியம் அவளழகை காட்டித்தருகின்றது.
ஸ்ரீ லக்ஷ்மி மஹாமாயே
ஸ்ரீ பீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்து தே.
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏
*பதிவு 22* started on 4th Sep 2021
விருப் போடங் கரங்குவித்துக்
கமலங் கடவுளர் போற்றுமென் பூவை
கண் ணிற்கருணைக்
கமலந் தனைக்கொண்டு
கண்டொருகால்தம் கருத்துள்வைப்பார்
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே 19🦋🦋🌷🌷🌷
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீ பாதமே ஷரனு
கமலா சதி மூகக்கமல கமலஹித
கமலப்ரியா கமலெக்ஷனா
கமலா சனசாஹித, கருட கமன ஸ்ரீ
கமலலா நாபா நீ பதகமலமே ஷரனு || 1 ||
பரம யோகிஜன பாகதேய ஸ்ரீ
பரமபுருஷா பராத்பரா
பரமாத்மா பரமானுருப ஸ்ரீ
திருவேங்கதாகிரிதேவா ஷரனு || 2 ||
எல்லாமே கமலம் ... கண்கள் முதல் பாதங்கள் வரை ...🌷🌷🌷🌷
திருமுகம் கமலம், இணைவிழி கமலம்,
செய்யவாய் கமலம்,
நித்திலம் தாழ்
வருமுலை கமலம், மணிக்கரம் கமலம்,
மலர்ந்த பொன் உந்தியும் கமலம்,
பெருகிய அல்குல் மணித்தடம் கமலம்,
பிடி நடைத்தாள்களும் கமலம்,
உரு அவட்கு அவ்வாறு ஆதலின் அன்றே
உயர்ந்தது பூவினுட் கமலம்.🌷🌷🌷
அருணாம்புயத்தும்
என் சித்தாம்புயத்தும்
அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள்
தகை சேர்
நயனக்
கருணாம்புயமும்
வதனாம்புயமும்
கராம்புயமும்
சரணாம்புயமும்
அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே🌷🌷🌷
தேவர்கள் தாமரைகளான தங்கள் கரங்களை குவித்து போற்றும் தாமரைகளின் அரசி ... மகாராணி
தன்னை மனம் உருகி வேண்டும் பக்தர்களின் பிழைகளை எல்லாம் மன்னித்து ஏற்று தன் கருணை எனும் தாமரை கண்களால் ஞானம் வழங்கும் பேரழகி ...
வேதங்களின் ஸ்வரூபமாய் விளங்கும் பெண்ணரசி தாமரை மலர் தண்ணீர் போல் நம் பாசத் தொடரை எல்லாம் அழித்து முக்தி தருபவள் ...
இவளுக்கு இணை இவள் தான் 🌷🌷🌷🦋🦋🦋
🍅 புரட்டாசி ஸ்பெஷல் 🍅
🍁 திருப்பம் தரும் திருமலையின் 🍁
🍁 மூன்று பிறவியின் சரித்திரம் 🍁
⭐ ஏழுமலையானே வேங்கடவா ⭐
🦅 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🦅
🍒ஒரு மலை மூன்று யுகத்திலும் பகவானுக்கு உதவியது. எவ்வாறு உதவியது அது எந்த மலை என்ன!?
🌹🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌹
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🔥கோகுலத்தில் இந்திர விழாவை தடை செய்த கிருஷ்ணன் கோவர்த்தன கிரி பூஜை செய்யலாம் என்று சொன்னதால் அது கேட்டு வெகுண்ட இந்திரன் வருணனை அழைத்து கோகுலத்தில் மழை பெய்வித்து கோகுலத்தையே அழித்து விடுமாறு உத்தரவிட்டான். வருணனும் மிக பயங்கரமாக மழையை கோகுலத்தில் பொழிவித்தான்.
🔥தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டித்தீர்த்தது .குழந்தைகள் ஆடுமாடுகள் அனைவரும் ஆனந்தமாய் கோவர்த்தன கிரியில் இருந்து மழை பொழிவதை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவர்த்தன கிரியும் நகைத்தது.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
🔥 மேலும் கோவர்த்தனகிரி கூறியது .இங்குள்ள மக்களின் முகங்களை பார்த்தாயா !!உன்னைச் சரண் அடைந்து உன் அருளில் நிழலில் ஒதுங்கும் அவர்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த முன்வினைப்பயன் என்ற ஒன்று கூட கிடையாது. அதற்கு நிரூபணம் நானே என்று கோவர்த்தனகிரி கூறியது. அதற்கு கிருஷ்ணன் முன் ஜென்மம் பற்றி பேசுகிறாயே.இது துவாபர யுகம். திரேதா யுகத்தில் நீ யாராக இருந்தாய் என்று உனக்கு நினைவு உள்ளதா ??என்று கேட்டார். அப்பொழுது மலையின் மனதில் போன ஜென்மத்து ஞாபகம் சிந்தனைகளோடு ஓடிற்று.🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁 திரேதாயுகம் .இராமாயண காலம் .சேதுபந்தனம் நடந்துகொண்டிருக்கிறது. சேதுபந்தனத்திற்காக ஆஞ்சநேயர் வடக்கிலிருந்து பெரும் பெரும் மலைத் தொடரிலிருந்து ஒவ்வொரு மலையாக எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது மலைக் கூட்டத்தின் இடையே இருந்த சுமேரு என்ற மலையையும் கையில் எடுத்து கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆகாசத்திலிருந்து பார்த்த அனுமன் சேதுபந்தனம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அந்த மலையை அதே இடத்தில் வைத்தார்..உடனே சுமேரு மிகவும் வருந்தி பிரபு என் உற்றார் சுற்றம் உறவினர் சொந்தம் அண்ணன் தம்பி அனைவரும் சேது பந்தனத்திற்கு பயன்படுகிறது. நானும் அதற்கு பயன்படுவேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என்னை இப்படி பாதிவழியில் தொப்பென்று வைத்து விட்டீர்களே என்று கேட்டது.அது கேட்டு உடனே ஆஞ்சநேயர் ராமரிடம் சென்று இது போன்று கூற ராமர் அந்த மலையிடம் அடுத்த ஜென்மத்தில் நீ கடவுளுக்கு பயன்படுவாய். காலம் கனிந்து வரும். அதுவரை காத்திரு என்று கூறுவாயாக என்று கூறினார் .ஆஞ்சநேயரும் அதை அப்படியே வந்து சுமேருவிடம் கூறினார். இதுவே கோவர்த்தன கிரியில் முந்திய பிறப்பு. இரண்டாவது கோவர்த்தனகிரி .இனி அடுத்த பிறப்பைப் பற்றி பார்ப்போமா..💐
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
🔥மழை நின்றவுடன் யாதவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்ல கோவர்த்தனகிரியை பகவான் கீழே வைத்தார் .அப்பொழுது மலை பகவானைப் பார்த்து பகவானே உனக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என்று கூறியது. அதை கண்டு நகைத்த கிருஷ்ணன் மலையே நீ எனக்கு சேவை செய்தாயா?? நான் அல்லவா உன்னைஏழு நாள் தூக்கிக் கொண்டு இருந்தேன் .நான் அல்லவா உனக்கு சேவை செய்தேன் என்று கூறினார். உடனேயே கோவர்த்தனகிரி அபச்சாரம் அபச்சாரம் என்று தன் கன்னத்தில் போட்டுக் கொண்டது.வார்த்தைகளை மாற்றி பேசுகிறாயே கண்ணா. நீ தான் திருட்டு கண்ணன் ஆயிற்றே.நீ எதை சொன்னாலும் உலகமே கீதை என்று கேட்கும் .அடுத்து வரும் கலியுகத்திலாவது நான் உனக்கு சேவை செய்யும் வாய்ப்பை கொடு என்று கேட்டது.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥கண்ணன் மலையை கனிவுடன் பார்த்தார். தான் தூக்கி நின்ற ஏழு நாட்களும் மலை தன்னைத்தானே இலேசாக்கி கொண்டதையும் எண்ணி பார்த்தார் பின்பு புன்முறுவலோடு அதன் வேண்டுகோளுக்கிணங்கி அதற்கு அருள் புரிந்தார்.🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🔥 மலையே உன்னை துவாபரயுகத்தில் ஏழு நாள் நான் தாங்கினேன். அதற்கு பதிலாக கலியுகத்தில் நீ ஏழுமலையாகி என்னைத் தாங்குவாயாக.
🔥 நான் ஸ்ரீநிவாசனாக உன்மேல் கோயில் கொள்வேன்
🔥 .மலையப்பன் என்று மக்கள் என்னை வணங்குவார்கள்.
🔥 அந்த இடம் திருப்பதி என்று அழைக்கப்படும். திருப்பதியில் உன் மேல் தங்கும் நான் வரும் அனைவருக்கும் அனைத்தையும் வாரி வழங்குவேன். உன் மலைமேல் ஏறி வந்து என்னை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா வளங்களையும் நலன்களையும் செல்வங்களையும் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வாரி வழங்குவேன் என்று கண்ணன் கோவர்த்தனகிரியிடம் கூறினார். அதுவே இப்பிறவியில் ஏழுமலையாக சீனிவாசனை தாங்கிக் கொண்டிருக்கிறது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🦅#புரட்டாசி_9ம்நாள் 🦅 (25.09.21)
🦅#வேங்கடேச_சுப்ரபாதம்🦅
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே
அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்
பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்
தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்
ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்
ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
பதிவு 14... 12th Sep 2021🙏🙏🙏
முக்தானாம் பரமாகதி: |
அவ்யய : *புருஷ*: ஸாக்ஷீ
க்ஷேத்ரஜ்ஞோ(அ)க்ஷர ஏவ ச ||2🙏🙏🙏
பதிநான்காவது திருநாமம் *புருஷ*
*அடியார்க்கு தன்னையே வழங்குபவன்*
💐💐💐
ராமானுஜர் ஒரு முறை தில்லியை ஆண்டுவந்த ஒரு பெரிய சுல்தானை பார்க்க தில்லி சென்றார் .. சுல்தானுக்கு ஒரே ஆச்சரியம் .. தன்னைத்தேடி ஒரு மகான் வருவதை எண்ணி ...
ராமானுஜர் சொன்னார் .. தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலை தான் ... உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை என்றார் ..
பீ பீ நாச்சியார் சுல்தானின் மகள் காட்சி கொடுப்பதை பார்க்கலாம் .. முதல் மரியாதை இந்த நாச்சியாருக்குத் தான் அங்கே
*இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!*🙌🙌🙌
*பதிவு 515*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*(started from 25th Feb 2020 Tuesday)*
*5. மந்தஸ்மித சதகம்*
புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்
*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
சைத்யேன ஸமஸ்தம் பயன் 🙂🙂🙂
இந்தும் கிஞ்ச விமோஹயன் பசுபதிம்
விச்வார்த்தி முச்சாடையன்🙂🙂🙂
ஹிம்ஸன்ஸம்ஸ்ருதிதாம்பரம் தவ சிவே
ஹாஸாஹ்வயோ
மாந்த்ரிக 🙂🙂🙂
ஸ்ரீகாமாக்ஷி ( மதார்த்திதாபத மஸோ) மதீயமாநஸதேமோ🙂🙂🙂
வித்வேஷணே சேஷ்டதாம் 🙏🙏🙏🙂🙂🙂
இருவரிடையே கடுமையான போர் நடக்க, அனுமன் தளர்ந்து போனான்.
அப்போது நீலன் வந்து இடையே புகுந்து இந்திரஜித்தோடு மோதினான்.
இந்திரஜித் விட்ட அம்புகள் நீலனின் உடலைத் துளைத்தன.
அவன் நடுங்கினான். அங்கதன் வந்து போரில் கலந்து கொண்டான்.
அவனும் இந்திரஜித் விட்ட பாணங்களால் அடிபட்டு விழுகிறான்.
வானர சேனையும், வீரர்களும் அடிபட்டு சோர்வடைந்தது கண்டு இலக்குவன் சினந்து சொல்கிறான்.
"விபீஷணா! நாம் நினைத்தது தவறாகிவிட்டது.
நம் படை அழிகிறது. வீரர்கள் அடிபடுகிறார்கள்.
இவனோடு நானே போர் செய்திருக்க வேண்டும். மற்றவர்களை அனுப்பியது தவறு" என்கிறான்.
அதற்கு விபீஷணன் "ஐயா! நீ சொல்வது உண்மை. முன்பும் தேவர்கள் இவனிடம் இப்படித்தான் தோற்றார்கள்.
நீ இவனுக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் இவ்வுலகம் மீள வேறு வழியே இல்லை" என்றான்.
வார்த்தை சித்தரின் இவ்விளக்கத்தை படித்த பின்தான் இப்பாடல் எனக்கு (ஒன்றுமே தெரியாதவன்) புரிந்தது என்றால் அது மிகை அல்ல...
ஆன்மீக பசியில் இருக்கும் எங்களுக்கு அபிராமி அந்தாதியை ரசமாக பிழிந்து கொடுக்கும் சக்தியின் அபிராமி பட்டரை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
மொத்தத்தில் பசியாறிய உணர்வு இப்பதிவை படித்தபின்..
🙏🙏🙏🙏🙏🙏
மயக்கம் கொள்ள தயக்கம் ஏனோ
இருட்டும் வெளிச்சமும் அவளானபோது இடிந்துரைப்பது ஏனோ
நீரும் நெருப்பும் அவளானபோது நீர்த்துப்போவது ஏனோ
பிறப்பும் இறப்பும் அவளானபோது
நம் சிறப்பு சொல்வது ஏனோ
எடுப்பது நாமாகினும்
கொடுப்பது அவளானதால்
தடுப்பது இயலுமோ
அண்டிய பொருளை அண்டியவருக்கு கொடுப்பதே அபிராமி சேவை
அதுவே நம் அற்புத வாழ்வின் தேவை
என அழகாய் அபிராமியின் ஆணையை சொன்னதற்கு நன்றி