அபிராமி அந்தாதி - பாடல் 69`(1) - தனம் தரும் கல்வி தரும் -
பச்சைப்புடவைக்காரி -511
அபிராமி அந்தாதி
பாடல் 69(1)
இன்றைய பாடல் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாடல் ..
அபிராமி அந்தாதியில் இரண்டு பாடல்களை நாள் தோறும் சொல்லி வந்தால் நமக்கு மனக்குறை என்று ஒன்றுமே இருக்காது .
இந்த பாடலும் பாடல் 52 ம் ... எல்லாம் தருபவள் என்பதை கண் கூடாக அனுபவிக்கலாம்
பாடல் 52
வையம்,
துரகம்,
மதகரி,
மாமகுடம்,
சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,
பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.🙏🙏🙏
பட்டருக்கு சம்ஸ்கிருதம் நன்றாக வரும் ஆனால் பிறரை போல் அதிலேயே பாடாமல் நமக்காக சுத்த தமிழில் பாடியுள்ளார் ..
கடாக்ஷம் , கனம் இவைகள் சம்ஸ்கிருத வார்த்தைகள் .. கடாக்ஷம் என்பதை *விழியின் கடை* என்று தமிழில் அழகான சொல்லாய் மாற்றினார் ..
கண்ணோட்டம் என்றாலும் கடாக்ஷம் என்று பொருள் தரும் ...
இந்தக்காலத்தில் மாண்புமிகு என்று ஒருவரை அழைக்கிறோம் ...
அந்த காலத்தில் கனம் பொருந்திய ... என்று அழைப்பார்கள்...
அதாவது பெருமை பொருந்திய என்று அர்த்தம் ... கனபாடிகள் என்று இதிலிருந்து தான் வந்தது ... 🥇🥇🥇
பாடலை பார்ப்போம் 🙏🙏🙏
*தனம் தரும் கல்வி தரும் (பாடல் 69)*🤝🤝🤝
தனம் தரும்
பொருள் மிகவும் முக்கியம் .. மாணிக்கவாசகர் பொருள் தன்னிடம் இல்லாததால் தானே அரச பணத்தை வைத்து கோயில் கட்டினார் .
கலியன் எனும் திருமங்கை ஆழ்வாரும் திருடி தானே ஸ்ரீரங்கம் கோயில் கட்டினார் ... பூசலார் மாதிரி இன்னொருவரை நாம் பார்த்ததில்லையே ..
எல்லாவிதமான செல்வங்களும் தரும்
கனம் என்பது சமஸ்கிரதத்தில் மாற்றி போடுதல் என்று பொருள் அதாவது வேதத்தில் ஒரு வார்த்தையை தூக்கி வேறு இடத்தில் போட்டு அந்த வார்த்தையை இங்கு போட்டாலும் பாடலின் பொருள் மாறாது அப்படிப்பட்ட பாடல் இது .. தெய்வ வடிவு தரும் என்றும் பாடலை ஆரம்பிக்கலாம் . பொருள் அதே !!👌👌👌
அடுத்தது *கல்வி*
எவ்வளவோ பேர்கள் என் படிப்புக்கு ஏற்ற வேலை , சம்பளம் இல்லை என்று கவலைப்படுகிறார்கள் ..
இப்பொழுது சொற்களை பிரிக்காமல் ஒரே சொல்லாக சொல்லிப் பாருங்கள் ... அந்த கவலை அழிந்து போகும் ...
தனம் தரக்கூடிய கல்வி தரும் ... அதாவது சரியான அளவிற்கு தனம் கிடைக்கும் .. கல்வி இல்லை என்றால் சேர்த்த பணத்தை நம்மால் சரியாக செலவழிக்கத் தெரியாமல் போய் விடும் ..
நம்மை ஏமாற்றும் கூட்டம் அதிகரித்து விடும் ... இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ஞானம் எனும் தனம் தரும் அதை உணரக்கூடிய கல்வி எனும் அறிவைத் தரும் ..
எதைக் கேட்பது என்பது நம் கையில் தான் இருக்கிறது .. அழியாத ஞான செல்வமா இல்லை அழிந்து போகும் பொருள் செல்வமா ??
தனம் கிடைத்து விட்டது அதை பெறக்கூடிய கல்வியும் கிடைத்து விட்டது ... இன்னும் என்னவெல்லாம் கிடைக்கும் ? ( பேராசை யாரை விட்டது ??)
நாளும் தளர்வு அறியா மனம் தரும் -
என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்...
வயதாகலாம்
உடம்பில் முதிர்ச்சி தளர்வு , இயலாமை தள்ளாமை என்று எல்லா ஆமைகளும் வரலாம்
ஆனால் 20 வயதில் நமக்கு இருக்கும் மனமும் சுறுசுறுப்பும் உறுதியும் கிடைத்து விட்டால் வயது நம்மை என்ன பண்ண முடியும் ?
இப்பொழுது நல்ல சம்பளம் நல்ல படிப்பு இவை இருந்தும் அடிக்கடி I'm depressed என்ற வார்த்தையை கேட்கிறோம்
அவர்களுக்கு இருப்பது தளர்வை தரும் மனம் .. உறுதியின்மை ... அம்பாள் இளமையான தளர்வில்லாத உறுதியான மனத்தை தருகிறாள்
இவ்வளவு தானா ?? 🤔🤔🤔
தெய்வ வடிவும் தரும்
தெய்வீகமான உருவத்தையும் தரும்... அம்பாள் உபாசகர்களை பார்த்தால் முகத்தில் தெய்வீக ஒளி தெரியும் .. சிலரை பார்த்தவுடன் யாருமே சொல்லாமல் கை எடுத்து கும்பிடும் எண்ணம் நமக்கு வரும் ..
இவர்கள் அபிராமியின் அருள் உடையவர்கள் .. தெய்வீக ஒளி உடையவர்கள்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் -
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்.. நல்லவர்களின் சேர்க்கை கிடைக்கும் அருளார்களின் சம்பந்தம் நமக்கும் கிடைக்கும்
இவ்வளவு தானா ?? 🤔🤔🤔
பட்டருக்கு கோபம் வந்து விட்டது .. இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறாயே என்று சொல்லி விட்டு பட்டென்று சொல்கிறார்
நல்லன எல்லாம் தரும் -
இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்
இப்படித்தான் இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று சொன்ன ஒரு ஆழ்வார் தளர்ந்து போனார் .. யார் அவர் 🤔🤔
குலம் தரும்
செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும்
*மற்றும் தந்திடும்*
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
----திருமங்கை ஆழ்வார் 💐💐💐
மாணிக்க வாசகர் வேறு விதமாக பட்டரையும் திருமங்கை ஆழ்வாரையும் மிஞ்சும் வண்ணம் பாடி விட்டார் ..
ஏன் இது தருவான் அது தருவான் என்று சொல்லிக்கொண்டே தளர்ச்சி அடையவேண்டும் ... என்று நினைத்து இப்படி பாடுகிறார்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும்
அதுவே
வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.🤝🤝
மாணிக்க வாசகர் அபிராமி பட்டரைபோலவோ , திருமங்கை ஆழ்வார் போலவோ இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று ஏலம் போடவில்லை ...
ரத்தின சுருக்கமாய் சொல்கிறார் ...
எனக்கு எது நல்லது எது வேண்டும் என்பது என்னை விட உனக்குத்தான் அதிகம் தெரியும் ..
*வேண்டத் தக்கது அறிவோய் நீ -*
உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே;
*மேலும், வேண்ட -*
அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், முழுதும் தருவோய் நீ -
அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே;
*வேண்டும் அயன்மாற்கு* -
உன்னைக் காண விரும்பிய பிரமன் திருமால் என்பவருக்கும்,
*அரியோய் நீ -*
அருமையாய் நின்றவனாகிய நீ;
*வேண்டி* - நீயாகவே விரும்பி,
*என்னைப் பணி கொண்டாய் -*
என்னையாளாகக் கொண்டனை;
*நீ வேண்டி* - என் பொருட்டு நீ விரும்பி,
*யாது அருள் செய்தாய் -* *
எதனை அருள் செய்தனையோ, அதுவே யானும்
*வேண்டின் அல்லால்* - அதனையே யானும் விரும்புவதல்லது,
*வேண்டும் பரிசு ஒன்று -* நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உண்டு
*என்னின்* - உளதாகுமெனில்,
*அதுவும் உன்றன் விருப்பு அன்றே -*
அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பேயன்றோ?
நீ எது கொடுத்தாலும் அது என் நன்மைக்கே என்று சுருக்கமாக முடிக்கிறார் . ஆனால் நம்மில் பலருக்கு பலன்களை பட்டியல் போட்டு காண்பித்தால் தான் கொஞ்சமாவது நம்புவார்கள் 🙏
எல்லாம் கிடைத்து விட்டது . நிலையான மனம் இல்லாவிட்டால்
மீண்டும் மீண்டும் ஆசைக்கடலில் மூழ்கி விடுவோமோ ..
*கனம்* தரும் அன்பர் என்பவருக்கே நிலையான பெருமையும் ஸ்திரமான மனதும் கிடைக்கும் ..
ஒரு கேள்வி பிறக்கும் அவளுக்கு அந்த பாரபட்சம் கிடையாதே அன்பர் என்பவர் அன்பர் இல்லாதவர் என்று ...
அன்பர் இல்லாதவர்களுக்கும் அருள்வாள் ..
கனம் தருவாள் .. பிணி கொடுத்து அதற்கு மருந்தும் அவளே கொடுப்பாள் 🥇🥇🥇
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
*நாராயணனே நமக்கே பறை தருவான்*
ஆண்டாள் பாடினாள் அதே போல பட்டரும் இங்கே அன்பர் *என்பவர்கே* அபிராமி *கடைக்கண்களே* ' என்று இருமுறை ஏகாரத்தை இட்டிருக்கிறார்🤝🤝🤝
செல்வம் எல்லாம் எல்லாருக்கும் தந்து விடுகிறாள் அபிராமி அன்னை!
பொதுவா உலகில் கண்கள் பேசும் பேச்சால் தான் மனம் கலைகிறது!
காதலியின் கண்களில் காதல்
அன்னையின் கண்களில் கண்ணீர்
தந்தையின் கண்களில் கோபம்
குழந்தையின் கண்ணில் அன்பு
நட்பின் கண்ணில் பாசம்
அல்லோர் கண்ணில் வெறி
நல்லோர் கண்ணில் கருணை
இப்படி கண்களால் கலைந்து போகும் மனத்துக்கு, கண்களாலேயே மருந்திடுகிறாள் அன்னை அபிராமி!
அதான் ஏகாரம் - *கடைக் கண்க"ளே"!*
மனம் பறந்து போகாமல் அதுக்கு கனம் தரும், கடைக் கண்களே!
இது எல்லாருக்கும் கிட்டி விடுமா-ன்னா..கிட்டும்...
அதைப் பெற்றுக் கொள்ளச் சரியான பாத்திரம் வைத்திருந்தால்!
அது தான் *அன்பர் என்பவர்க்"கே"!* 🥇🥇🥇
அங்கே ஏகாரம் இதற்காக,
அன்பர் என்பவர்க்கே,
நீங்கள் உண்மையான அன்பர் இல்லாவிட்டால் கூட, நாடகத்தால் உன்னடியார் நடுவே புகுந்து ... என்று மணிவாசகர் கூறியது போல் அன்பர் என்று நினைப்பவர்களுக்கு கூட அருள் கொடுப்பவள் அன்னை அபிராமி என்று அன்னையின் அருள் திறத்தை பாடுகின்றார் அபிராமி பட்டர்.🥇🥇🥇
வேண்டத்தக்கது
அறிவாள் அவள் வேண்ட முழுதும் தருவாள் அவள் ...
பக்தி வேண்டும் நம்பிக்கை வேண்டும் மனதில் உறுதி வேண்டும் 🙏🙏🙏
தனம் தரும் கல்வி தரும்
=======
Comments
பதிவு 19.. 12th Sep 2021🙏🙏🙏
ப்ரதானபுருஷேச்’வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான்
கேசவ:புருஷோத்தம: ||3
“கர்காசாரியாரே! பக்தியோகம் செய்தால்தான் மோக்ஷம் அடைய முடியும் என்கிறது வேதம்.
ஆனால், அந்த பக்தியோகத்தைச் செய்யத்
தெரியாதவனான ததிபாண்டனும்,
செய்ய இயலாததான அவன் பானையும்
எப்படி முக்தி அடைந்தனர்?”
கர்காசாரியார், “பக்தியோகமென்னும் மார்க்கத்தின் ஸ்தானத்தில் கண்ணன் தன்னையே வைத்துக் கொண்டு,
தானே மார்க்கமாக இருந்து ததிபாண்டனுக்கும் பானைக்கும் முக்தி தந்தான்!” என்று விளக்கினார்.
முக்தியடையும் மார்க்கத்தை ‘ *யோகம்* ’ என்று சொல்கிறோம்.
நம் போன்றோர்க்கும்
முக்தியடையும் மார்க்கமாக – யோகமாக – எம்பெருமான் தானே இருந்து, முக்தி அளிப்பதால்
எம்பெருமானுக்கு “ *யோக* :” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினெட்டாவது திருநாமம்.
மின்படிக்கட்டில் நிற்பவர்கள் படி ஏறத் தேவையில்லை.
அந்த மின்படிக்கட்டே அவர்களை மேலே உயர்த்தி விடுகிறது.
அவ்வாறே “ *யோகாய* *நம* :” என்று தினமும் சொல்லிக் கண்ணனின் கழல்களைப் பற்றும் அன்பர்களுக்குக் கண்ணனே
மின்படிக்கட்டாக ( escalator ) இருந்து அவர்களை வாழ்வில் உயர்த்துவான்.🙌🙌🙌
52. இங்கில்லை என்றேனோ
ததிபாண்டனைப் போலே🙌🙌🙌
*பதிவு 27* started on 4th Sep 2021
மணிவடமும்
உடையாளை
நுண்ணிடை யொன்றுமிலாளை
உபநிடதப்
படையாளை
எவ்வுயி ரும்படைப் பாளைப்
பதுமநறும்
தொடையாளை
அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே 24🙏🙏🙏🦚🦚🦚🦜🦜🦜🎼🎼🎼
ஒல்கு செம்பட்டுடையாளை,
ஒளிர்மதிச் செஞ்
சடையாளை,
வஞ்சகர் நெஞ்சு அடையாளை,
தயங்கு நுண்ணூல்
இடையாளை,
எங்கள் பெம்மான் இடையாளை,
இங்கு என்னை இனிப்
படையாளை,
உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே🙏🙏🙏
என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள்.
ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள்.
வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள்.
ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள்.
சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள்.
என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள்.
என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள்.
அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள்.
நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.🙌🙌🙌
இன்னொரு கரத்தில் ஜப மாலையையும் ஏந்தி உள்ளவள் ..
இடை இல்லாதவள் ... அப்படி ஏதாவது இருந்தால் மின்னல் போல் தோன்றி மறையும் ...
எல்லா உபநிஷதங்களையும் தனது படை வீரர்களாக கொண்டவள்
எல்லா உயர்களையும் படைப்பவள்
நறுமணம் வீசும் தாமரையை மாலையாக அணிந்தவள்
இவளையன்றி யாரை நான் தொழுவேன் . இவளுக்கும் மேல் இறைவி இல்லை 🙌🙌🙌🦜🦜🦜🎼🎼🎼
கிஷ்கிந்தா காண்டத்திலே நிஹமாந்த மகாதேசிகனது ரகுவீர கத்யத்திலே மாரீச வதம்
பற்றி அனுபவிக்கின்றார்
அதற்காகவே சுருக்கமாக மாரீச வதம் அருளிச் செய்கிறார் இங்கே..
பயந்து சொற்கள் எல்லாமே பயமூட்ட
ராம பிரபாவம் அறிந்து-
சிலை வணங்கி மான் மறிய எய்தான் தன்னை –தலை வணங்கி கை கூப்பி அடியார்களால் உலகம் வாழ்கிறது -குலசேகரர்
தில்லைச் சித்ர கூட பதிகம்
புஷ்ப காச திருவடிகள்-அன்று அவனுக்கு கைங்கர்யம் இழந்தோமே -இராமானுஜர்
மான் தொடர்ந்த அம்மானை ஏத்தாது -பெரிய திருவந்தாதி பாசுரம்..
ஸ்ரீ ராமன் தர்பாஸனத்திலே அமர்ந்திருப்பவர் இன்று சீதா பிராட்டியுடன். மாய மான் தோலின் மீது அமர்ந்திருக்கின்றான்..
ஏகாந்தமாக சேவையிலே கரம் பிடித்து..
தோளில் கரம்பதித்து அணைத்து,.
அவளழகை பருகையிலே..
மாயமானால் ஆகப்போகும் விபரீதம் கருத்தினில் எழ..
சற்றே கண்மூடி த்யானிக்கையிலே..
கிடைத்தணநேரத்தை விரயம் செய்யாது ..
கண்கள் மலர்ந்து அண்ணலின் அரும்பு மீசையோடு கூடிய அழகை பருகுகிறாள் வைதேகி..
பிரியும் வேளை நெருங்குவதை அறியாத பேதை..
பிரியமானவன் ஆழகிலே மயங்குகின்றாள்.
மாயையின் வலிமை அறியாது வலையிலே சிக்கிய ஜானகியும் விதிவிலக்கல்லவே..
ஜெய் ஸ்ரீ ராம்.
🙏
வந்திருப்பது ஒரு மாய மான் இது ராமன் உள்ளம் சொல்கிறது ..
பெண் மான் ஒரு பொன் மானை கேட்க எம்மான் அவளை ஏமாற்ற விருப்பம் இல்லை ..
கண்மான் கொண்ட கருணா மூர்த்தி ...
பெம்மான் அவனன்றோ என்றே பாடினான் பால் உண்ட குழந்தை அன்று ...
தன்மான் காக்க வில்லெடுத்தான் தம்பி தடுத்தும் பின் சென்றான் ..
மாயைக்கு சீதையும் விலக்கில்லை என்றே மாந்தர்கள் புரிந்து கொள்ள
மாயை அங்கே வென்றது ... அலர் கதிர் மலர் ஒன்று கூம்பியது
எதையும் கேட்டதில்லை மைதிலி ராமனிடம் இதுவரை ..
மனம் ஒப்ப கேட்டாள் பிரிவு தனை ...
விதி மதி தனை வென்றது
கதி நீ யே என்றவள் சதிக்கு உடன்பட்டாள் ..
இது நதி செய்த பாவமோ
விதி செய்த விளையாட்டோ ...
ஒரு ஜீவாத்மா பராமாத் வை எனோ விலகி வெகு தூரம் சென்றது ...
நம் எல்லோரையும் போல் ... 🙏🙏🙏🙌🙌🙌
காண்டீபம் கை நழுவி கடலில் சேரத் துடித்தது ...
கலங்கிய பார்த்தனை கை தூக்கி எழுப்பினான் கண்ணன் ...
பிறந்தது அங்கே கீதை ...
அதை பெற்றவன் கண்ணனா அர்ச்சுனனா ?
உற்றவரும் சுற்றவரும் பாரதப்போரை நிறுத்துவதில்லை யுகம் மாறி என்ன?
களம் மாறி என்ன ?
ரத்தம் நிறம் மாறி போகுமோ ?
கீதை ஒலித்தும் சீதை அழுதும் தினம் தினம் நடக்கும் யுத்தம் அன்றோ ? ...
தேடினேன் ஒரு புதிய கீதை தனை ...
புரட்டிய பக்கங்கள் எதிலும் தெய்வத்தின் குரல் ஒலிக்க வியந்தேன் ..
கண்ணன் அவன் மீண்டும் வந்து விட்டான் ..
தொலைத்த காண்டீபம் கையில் சேரக்கண்டேன் ..
புதிய கீதை பாதை ஒன்று போட
காதை ஒன்று கண் எதிரே நிகழ
அமைதி எங்கும் ஆர்ப்பாட்டம் செய்ய
வீழ்ந்தனர் உள்ளம் அதில் வாழ்ந்திருந்த கௌரவர்கள் 🙏🙏🙏🙌🙌🙌
Shivaji L&T C: Arumai.. Periyava Charanam 🌹🌹🙏🙏
Kowsalya: அருமை அருமை... நடமாடும் தெய்வத்தின் குரலுக்கு ஓர் புதிய கண்ணோட்டம் காணல் அற்புதம்...பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்🙏🙏👌👌🌹🌹🌷🌷
Moorti Mumbai: பொன் எழத்துக்கள் அருமை 🙏👏👏👍👌
(My experiences... Ravi ...Episode 86) started on 7th july 2021. .
*4th Assignment - KBL*
*Kindness is a language which the deaf can hear and the blind can see* .
I submitted the actual bill against the IOU and that's it .....
In the meantime time moved very fast and Madan was to leave KBL for a higher position in Power vertical Baroda ...
Many people were against his honesty and candid approach towards clipping weeds growing in KBL without watering the plant ...
They were jubilant on hearing this news .
I moved with him very closely and my equation with him was good and he aligned his thought process of fixing many knotty issues with mine in KBL .
A great support indeed during my low times in KBL .
Madan left KBL by creating a big vacuum for honesty in KBL ...
While going , he accepted my invitation for dining with us .
He never visited anyone 's house in KBL for socialisation .
He said as a final word ... Ravi this is not a right place for you and me ...
I'm fortunate in moving out .. Pls convince YMD for your transfer .
It does not amount we are running away out of fear but when majority are culprits having culpable minds , it is better if we don't spend time in teaching bhagavad gita here ...
He left KBL ... My eyes and heart choked to function normally ... 🙌🙌🙌
Fantastic presentation
Kind attn : Mr.J.Ravikumar
Hearty congrats to you and your team, for the successful completion of Hyderabad Metro mega project.
Your hardwork, dedication and vision has become a reality.
I have always admired your out-of-box thinking and leadership. You are an inspiration to all PPP projects, and your dedication towards L&T's Hyderabad Metro growth is unparalleled.
We are indeed lucky and blessed to have an inspirational leader leading this mega project and sharing the challenges through webinar.
Your rich experience in PPP model, a great management lesson for many to follow and implement.
Warmest Regards
T. V. Ganesh
National Head- Shriram Properties
Dear JRK Sir,
I had the good fortune of watching your webinar article regarding *Public Private Partnership* for the Hyderabad Metro Infrastructure projects.
It is refreshing to have a positive upbeat on the good things that are happening.
Your enthusiasm will inspire others to move forward with actions that bring rewarding achievements and challenges to the PPP -BOLT projects.
I learnt new definitions from your presentation..
COVID new definition -
C - cost spiraled
O - out of control
V - visibility amidst mist
I - interest killed the interest
D - devastation
FEAR -
F - forget
E - everything
A - and
R - run
FEAR -
F - face
E - everything
A - and
R - rise
With utmost respect and admiration, Hearty congrats to you, for the Hyderabad Metro completion.
Your dream comes true
You’re an inspiration to all L&T ites, and your dedication towards L&T's Hyderabad Metro growth is unparalleled.
We are indeed lucky and blessed to have an inspirational and visionary leader at L&T's helm and sharing your rich experience about PPP model.
We look forward to watch your next webinar..
Warmest Regards
T. V. Ganesh
நரம்பு கூடி
சதைகொண்டு
எரிதழல் தின்னும்
இதயமில்லை உங்களுக்கு
கோபம், பொறாமை
பொல்லாப்பு
வஞ்சம்
கொண்ட
நெஞ்சம்
உங்களுக்கு இல்லை
உதிரம் ஓடி
உயிர் வளர்க்கும்
இதயமில்லை உங்களுக்கு
உங்களின் இதயம்
எங்களிடம் உள்ளது
அதில்
அன்பு கூடி
அரவணைப்பு கொண்டு
ஆன்மீக தழல்
தின்னும்
அற்புத இதயம்
தீயவை நீக்கி
நல்லதை மட்டுமே
நல்கும் நற்குண
இதயம்
அதில் எப்போதும்
அன்பு மட்டுமே
உதயம்
குருதி போல்
அபிராமியின்
சுருதி சேர்ந்த
விருத்தியான இதயம்
உங்கள் இதயம்
எங்களின் ஒவ்வொரு
உதயத்திலும்
எங்கள் உயிரில்
நல்லவை
ஊறவைக்கும்
ஆன்மீகம்
உலராது வைக்கும்
உங்கள் இதயம்
பச்சைபுடவைக் காரியோடு
உறைந்து நிற்கும்
எப்போதும்
உரைத்து நிற்கும்
I am sorry there was an unscheduled meeting and subsequent to that was to sent some series of mails
But I read the review TVG has been too kind to report
I missed my share of your exemplary professional advice
By travelling in metro,you can go to different planet....🙄
Nice to hear about our project once again.beautifully explained sir.
[29/09, 6:51 pm] Shiva Vaasu: Is it MRF car Tyre sir 🤣🤣🤣
[29/09, 6:53 pm] Rajesh Metro - F &A: Ur speech never change sir... 😀
[29/09, 6:56 pm] Shiva Vaasu: Thammra port how the cost overrun was handled is next slide
[29/09, 7:24 pm] Shiva Vaasu: A poetry in concerte is totally new msg sir 👌👌👌
[29/09, 7:28 pm] Shiva Vaasu: Saaaaaaar it's not 3 hours sir🤣🤣🤣
[29/09, 7:34 pm] Shiva Vaasu: Next is CBTC and headway
[29/09, 7:42 pm] Shiva Vaasu: Sir, you are L&T Metro Ambassador 👏👏. No one can tell with this much of passion. You are spine and wing for this project sir.
[29/09, 7:45 pm] Shiva Vaasu: Sir, 57 trains and not 52
[29/09, 7:49 pm] Shiva Vaasu: Next slide is engineering marvel, steel bridge
[29/09, 8:32 pm] Ravi Chandar Ins: Sir utilized World heart day for answering query of a participent 😀😀.
Heart day
Heart of hyderabad
Heart transplant
👏👏👏👏
[29/09, 8:36 pm] Shiva Vaasu: Overall a Good show sir 👏👏👏
[29/09, 8:36 pm] Shiva Vaasu: The final message about heart was really good
[29/09, 8:49 pm] Shiva Vaasu: After your session we are spellbound and are searching for words sir.
[29/09, 8:51 pm] Shiva Vaasu: We missed that bent statue slide sir
[29/09, 8:57 pm] Rajesh Metro - F &A: Excellent speech sir..hatsoff for your dedication sir 🙏
[29/09, 9:19 pm] Metro - Ajit: Good presentation sir 👏👏
[29/09, 9:22 pm] Rajeshkrishna - Metro: Good presentation sir👏👏👌
[29/09, 9:53 pm] Shiva Vaasu: When you are giving a presentation, your flow is the highlight sir. Anyway, we all know that HYDERABAD IS FULL OF ROCKS.🤣🤣🤣🤣
[29/09, 8:39 pm] Metro indu: Hatsoff to your patience
[29/09, 8:29 pm] Rajesh Metro - F &A: Excellent speech sir
[29/09, 8:29 pm] Rajesh Metro - F &A: Hatsoff to your dedication
[29/09, 8:30 pm] Rajesh Metro - F &A: Last question from that member was funny.. 😀 hospitality service luggage service to keep separate coaches for that.. u gvn opt answer... We r not doing charity 😀😀
[29/09, 8:59 pm] Rajesh Metro - F &A: Krk also joined sir
[29/09, 8:59 pm] Rajesh Metro - F &A: Rahul not aware
The challenges of Odisha project was excellently addressed by you.
When it reached L& T metro rail,
I had another unexpected Google meet which I was the organizer
Had to leave at that point
யோகாய நம......
Escalator superb
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே
மண்ணிலே பல மின்மினி
புதிதாய்ப்போடும் பூங்கோலமே
வாழ்த்துதே வரவேற்குதே
இனிதாய்ப் பாடும் சுகராகமே.
உல்லாச குயில்கள் ஒய்யாரமாக
ஒன்றாக கூடி பண்பாடும் நேரம்
செவ்வான வில்லின் வண்ணங்கள் ஜாலம்
எங்கெங்கும் இன்பம் கூத்தாடும் கோலம்
அன்பென்ற வார்த்தைக்கு இணையேது அன்பே
இல்லாமல் போனாலே வாழ்வேது இங்கே
பண்பென்ற பாசக்கூட்டிலே சேர்ந்து
பண்பாடும் வானம் பாடி நாமே..
நல் வீணை நாதம் மீட்டாமல் மீட்டு
என்னோடு பாடு கேட்கட்டும் இங்கே
எல்லோர்க்கும் வாழ்த்து
எப்போதும் கூறு
நல்லோரின் வாக்கு சங்கீதம் இங்கே
வேரின்றி வாராது
சீரான முல்லை
மாறாத அன்பின்றி வேறேதும் இல்லை
பண்பென்ற பாசக்கூட்டிலே சேர்ந்து
பண்பாடும் வானம் பாடி நாமே
🙌🙌🙌🙏🙏🙏👣👣👣
மூளை வளர்ச்சியும் இதய வளர்ச்சியும்
ஆனால் வித்யா போதகர் என்பதாக எந்த ஒரு வித்தையையும் - Arts , Science எல்லாமே வித்தைகள்தான் அப்படி எந்த ஒரு வித்தையைச் - சொல்லிக் கொடுக்கிறவருக்கும் குரு என்ற பேர் ஏற்பட்டுவிட்டதால் கேள்வி வருகிறது. என்ன கேள்வி என்றால், 'நல்வழி' என்பதன் ஸம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு ஸயன்ஸை, ஆர்ட்டைத் தானே இந்த குரு சொல்லிக் கொடுக்கிறார்?
இன்றைக்குதான் என்றில்லை. பூர்வகாலத்திலேயே நாஸ்திகத்தைக்கூட சாஸ்த்ரமாகவும், சூதாட்டம் - திருட்டு முதலானதைக்கூட வித்யைகளாகவும் சொல்லி, அவற்றுக்குக்கூட மூலபுருஷர்களும் குருமார்களும் சொல்லியிருக்கிறது!ப்ருஹஸ்பதியையே நாஸ்திக சாஸ்திரமான சார்வாகம் என்பதற்கு மூலபுருஷராகச் சொல்லியிருக்கிறது.
(மேலே) சொன்னபடி நாஸ்திகம், திருட்டு - புரட்டு உள்பட எதையும் 'வித்யை' என்கிறபோது வித்யை என்பது 'ஏதோ ஒரு துறையில் அறிவு' என்றே ஆகிறது.
ஆனால் இது ஒரு ஜீவனை மூளை என்பதன் எல்லைக்குள் மட்டும் கொண்டு வந்து பின்னப்படுத்தி, குரு என்ற ஸ்தானத்தையும் ரொம்பக் குறைத்துவிடுகிற கார்யந்தான். அறிவு வளர்ச்சி என்ற ஒன்றை மட்டும் கவனித்து, எந்தத் துறையில் அறிவை வழங்குவதும் வித்யாபோதனை என்னும்போது ஜீவனுடைய ஹ்ருதயத்தை ஒதுக்கி விட்டதாக ஆகிறது.
'வித்யை' என்று வைத்து விட்டார்கள். அதன் போதகர் 'குரு' என்றும் சொல்லிவிட்டார்கள் ஆனால் இதுவே நம் பூர்விகர்களின் பூர்ணமான அபிப்ராயம்
என்று நினைத்து விடக்கூடாது.
நம் தேசத்தில் இந்த அறிவு வித்யைகளைக் கற்பிக்கிறவர்களும் உத்தம ஹ்ருதயமுள்ள யோக்யர்களாக, நல்ல சீலமுள்ளவர்களாக இருந்து வந்தார்கள். திருட்டு, சூதாட்டம் மாதிரியான கெடுதலான வித்யைகளைக் கற்றுக் கொடுக்கிறவர்களைத் தவிர, மற்ற ஆசாரியர்கள், ஆசிரியர்களெல்லாம் நல்ல morals -ம் அதாவது நன்னெறியும், அத்தனை நெறிக்கும் ஆதாரமான தெய்வபக்தியும் கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். அதனால், அவர்களிடம் கற்றுக்கொண்டவர்கள், பக்தி விச்வாஸம் வைக்கவேண்டிய குருமார்களாகவே அவர்களுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் பல துறைப் பாடத்தால் மூளை வளரச்சி பெறுகிறதோ? பாடமான cF போதனை, பக்தி போதனை முதலியவற்றுக்கு ஜீவ சக்தி ஊட்டிய அவர்களுடைய வாழ்க்கை உதரணத்தாலும், பெர்ஸனல் ரேடியேஷனாலும் ஹ்ருதய வளர்ச்சியும் பெற்றார்கள்.
ஆனாலும் ஆத்ம பரிபக்வம், பூர்ணத்வம் முதலியன இங்கே கிடைப்பதற்கில்லை. அதற்கென்றே ஏற்பட்ட குருமாரைத்தான் நம்முடைய மரபிலே முக்யமாக குரு, ஆசார்யர், தேசிகர் என்றெல்லம் சிறப்பித்து வைத்தது.
ஜீவனை தேவனாக்குவதற்கே முக்யத்வம் தந்தவர்கள் நம் மன்னோர்கள். "வேறே எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், கலாசாரத்திலும் இப்படி 'ஸெக்யூலர்' (உலகியல்) என்று தோன்றுகிற ஸகலத்தையுங்கூட 'ஸ்பிரிசுவலைஸ்' பண்ணி (ஆன்மிகமாக்கி) த் தரக் காணோம்" என்று மதாந்தரங்களை (பிறமதங்களை) ச் சேர்ந்த அறிவாளிகளும் சொல்கிறார்கள்.
*பதிவு 520*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*(started from 25th Feb 2020 Tuesday)*
*5. மந்தஸ்மித சதகம்*
புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்
*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
லீலா ஜாதரதே ஸூகேன நியமஸ் நா நாய மே நாத்மஜே 🙂🙂🙂
ஸ்ரீ காமாக்ஷி ஸூதா மயீவ சிசிரா ஸ்ரோ தஸ்விநீ தாவகீ 🙂🙂🙂
காடாநந்ததரங்கிதா விஜயதே ஹாஸ ப்ரபாசாதுரீ 🙂🙂🙂
கொண்டிருப்பதால் உன் நாவில் குடியிருக்கும் வெண்மை நிற சரஸ்வதி சிவப்பு நிறமாகி விடுகிறாள் ..
அவனை நினைப்பதால் ச்ருங்கார ரசத்துடன் கூடிய பேச்சு உன் நாவில் இருந்து தெளித்து உன் உதடுகளில் மதுரம் எனும் தேனை ஊற்றி புன்னகையை வரவழிக்கின்றதே 🙂
மறைந்திருந்து இந்த மாயத்தைச் செய்தவனைப் பிடிப்பேன் என்று எழுந்த அனுமனும், நாகபாசத்தால் கட்டப்பட்டான்.
அவன் மட்டுமின்றி வானரப் படை அனைவரையுமே, நாகபாசம் கட்டிப் போட்டுவிட்டது.🐍🐍🐍
*வயது மட்டுமே...*
35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......
கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,
அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.
இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*
கண்ணன் என்பது செல்ல பெயர்.
குழந்தை பருவம்.
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்
சின்ன உதாரணம்...
ஒருநாள், நான் ...
முகம் முழுக்க சோப்பு தேய்த்து ,
குளித்துக் கொண்டிருந்தேன்.
திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல்,
இரண்டு கையாலும்,
என்னை சுற்றி , சுற்றி,
சொம்பை, தேடினேன்.
அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.
எனக்கு புரிந்து விட்டது.
சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று.
எனக்கு , கண் எரிகிறது
என்று அவளுக்கு தெரியவில்லை.
நான் , சொம்பை தேடுவதில்,
அவளுக்கு ஒரு ஆனந்தம்.
இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.
தற்போது , எனது கண்ணில் ,
ஒரு தூசி விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.
இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....
மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....
கோபிகளின் ஆடைகளை ,
மறைத்து வைத்து...
அவர்கள் தேடுவதை கண்டு
ஆனந்தப் பட்டான்.
அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....
மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து,
அவள் மனதை, காத்து நின்றான்..
இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....
கண்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது....
நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான்.
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என ,
பொய்யும் சொன்னான்...
அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....
திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது ,
என கீதை உபதேசம் செய்தார்....
இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..
[30/09, 7:48 pm] Sib viji athimber: 🙏🙏
[01/10, 7:09 am] +1 (617) 821-1501: 👍👏
Does she do all forms of painting like Tanjore,Madhubani,Oil paintings etc...
My right brain thinking is utilized lesser-Hence not much of painting skills.
She has an artistic hand....
She has also an interest in pet animals
And is able to express togetherness too
அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்த்ததன்பெரிய பலன்.அன்பு மயமான அம்பிகையை தியானிப்பதை விட பேரானந்தம் எதுவும்இல்லை.பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன.
மனுஷ்ய ஸ்வபாவம் ஆசார்யாளுக்கு நன்றாக தெரியும்.
இல்லை என்றே மனம் பல்லை கடித்து சொன்னது ... 😡
கொஞ்சம் விளக்கி சொல்வாயோ என்றே கேட்டேன்
எனக்கல்ல இதை படிப்போர்க்கும் என்றேன் ....
கண்களை சரயுவில் தோய்த்து சொன்னது ...
ராமன் ஒரு உறவை உயிராக மதித்து வாழ்ந்தான் ...
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்றே பஞ்சு அஞ்சும் பாதம் கொண்டவள் அவன் வழி நடந்தாள் ...
இங்கே பந்தம் ஏதும் இல்லை ..
எல்லா உயிரும் தன் உயிரே என வாழ்ந்தான் ..
கல்லும் முள்ளும் அவன் பாதம் சுவைத்தன ..
கால்நடைகள் அவன் கால்நடை கண்டு கண்ணீர் சொறிந்தன ...
கண்டதில்லை ராமன் கானகம் போனதை ..
வியக்காத உயிர் இல்லை கானகம் நகரமாய் ஆன விந்தை அதை ...
கோதண்டம் எதிரிக்கு எமனாய் ஆனது அங்கே ..
கை பிடித்த தண்டம் எதிரிகளை பக்தன் ஆக்கியது இங்கே ...
ராமன் குறைவாய் பேசினான் அங்கே ...
காற்றில் மிதக்கும் தெய்வத்தின் குரல் என்றும் நிறைவை தருவது இங்கே ...
காரூண்யம் ராமனின் இன்னொரு பெயர் அங்கே ...
கருணா ரஸ சாகரம் .. பெரியவாளின் மறு பெயர் இங்கே ...
கற்பகமும் காமதேனுவும் ராமன் வடிவில் அங்கே ...
இரண்டும் சேர்ந்து வந்து அருளும் *கலவை* இங்கே ..
காரணம் ஏதும் இன்றி கருணை பொழியும் கல்யாண ராமன் அங்கே ...
அவ்யாஜ கருணாமூர்த்தி எனும் பெயர் கொண்டவன் வாழும் இதயங்கள் இங்கே ..
தசமுகனை கொன்றவன் அங்கே ...
ஐம்புலக்கள்வரை உள்ளமத்தில் குடி புகாமல் வைப்பவன் இங்கே ...
ஆனந்தம் அங்கே பரமானந்தம் இங்கே ..
ஆச்சரியம் அங்கே .. அதிசயம் இங்கே ..
மனித ரூபத்தில் வந்த தெய்வம் அங்கே ...
தெய்வம் மனிதனாய் மாறிய விந்தை இங்கே ... 🙏🙏🙏🙏🙏
[01/10, 9:49 am] Ramani - Pune: அருமையான நடை....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
[01/10, 11:08 am] Metro Kowsalya: ஆஹா.. என்ன ஒரு அற்புதமான விளக்கம்...மிகவும் அருமை... ஸ்ரீராம பாதம் தரணியை ஆண்டது....இன்று மானுடத்திற்கு நல் வழி காட்டும் பெரியவா பாதங்களுக்கு சரணம் சரணம் சரணம்🙏🙏🌹🌹🌷🌷🌹🌹
வைதேகியை கானகத்திலே இழந்தான் காகுத்தன்..
வையகத்திலே நிம்மதியை இழந்தான் சீதாராமன்..
கானகத்லிலே இலை தழை மரம் செடி ஒன்று விடாது கேட்கின்றான்..
கண்டீர்களோ என் பிரிய தேவியை என்று.
பத்திலே ஒன்றானவன்..
பற்றில்லாதவனாயினும்..
பற்றுள்வனாக காட்ட நர நாராயணனாக வந்தவனன்றோ..
பந்தத்திலே கரைகின்றான் மானுடனைப்போல் கதறுகின்றான்..
கோதண்டராமன் தன் கோதண்டத்தையே பூணூலாக அணிந்தவன்..
கோவத்திலே கடலையே வற்றவைப்பேன் என சூளுரைத்தவன்..
கோமளிவல்லியை நினைத்தேங்குகிறான் சாதாரண மானுடனைப்போல்.
ஆவும் கண்றும் அணைத்து வினவுகின்றான்..
நிழலைப் போல் தொடர்ந்து வருபவள் வற்றாத அன்பு ஊற்றவள்..
என் முகம் பார்த்து என மன ஓட்டத்தை அறிந்து கொள்பவள்..
இன்னும் பல நற்குணங்களை கூறிக்கொண்டே...
கன்றைப்போல் குழந்தையாக தேவியைத் தேடுகின்றான்..
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜமப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாஹும் அரவிந்த தளாயதாக்ஷம்
ஸ்ரீ ராமம் நிசாசரவினாசகரம் நமமாமி.
🙏
வற்றாத அருள் சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாமபிக்கையே 🌷🌷🌷🙏🏻🙏🏻
கற்பகம் தனில் கற்பூரமாய் கரையும் நாள் எந்நாளோ ..
கூட வந்த காமதேனு உதவி ஒன்று செய்தது ..
மா என்றே சொல் நடக்கும் மா விந்தை ஒன்று இங்கே ....
அம் ....மா என்றே கண்ணீர் நடுவே 3 முழுக்கு போட்டு அழைத்தேன் ...
கற்பூரமாய் மாற்றி விட்டாள் அன்னை இன்று என்னை 🙌🙌🙌
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஈடு இணை அற்றது 🙏🏻
உங்கள் போல் படைப்பு பிரம்மனும் செய்ததில்லை ...
செய்திருந்தால் அது மனதில் நிற்பதும் இல்லை ..
மும்மூர்த்திகளில் ஒருவராய் உங்களை காண்கிறேன் என்றும் . 👍👍👍👏👏👏
*பதிவு 28* started on 4th Sep 2021
வலம்வருவார்
துதிப்பார்
தம் தொழில் மறந்து
விழுவார்
அருமறை மெய்தெரிவார்
இன்ப மெய்புளகித்(து)
அழுவார்
இனுங்கண்ணீர் மல்குவார்
என்கண்ணின் ஆவதென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே 25
விடாமல் அவளை தொழுபவர்கள் ,
வலம் வருபவர்கள் ,
துதிப்பவர்கள்
எல்லாம் மறந்து அவள் திருவடிகளில் பரவசமாய் விழுவார்கள்👣👣
அரிய வேதங்களின் ரகசியங்களை அறியும் சக்தி பெறுவார்கள் , உண்மை பொருளை உணர்வார்கள்
இன்பம் அதிகம் பெற்று கண்ணீரை கங்கை போல் சொரிவார்கள்...
மெய் சிலிர்க்கும் அனுபவம் பெறுவார்கள் ...
அவர்கள் படையாத தனம் இல்லை 🦜🦜🦜🦋🦋🦚🦚🦚🎼🎼🎼
🙏🏻🌷
[01/10, 9:19 am] Shivaji L&T C: 🌹🌹🙏🙏
[01/10, 10:36 am] Metro Kowsalya: அற்புதமான பதிவு... ஆஹா..பத்திலே ஒருவனானவன்... பந்தத்திலே கரைகின்றான் நரனாக...நிர்மலமான ப்ரேமையில் மானுடம் என்ன தேவன் என்ன....பரிசுத்த பிரேமைக்கு அனைத்தும் அடக்கம்....ஜெய் சீதா ராம்.....🙏🙏
[01/10, 10:40 am] Metro Kowsalya: மாதா...நின் அருள் ஒளி இல்லையானால் என் மன இருள் எவ்வாறு தீரும்...அருட்கடலே லலிதாம்பிக்கே சரணம் சரணம் சரணம்🙏🙏👏👏
[01/10, 10:45 am] Metro Kowsalya: வெள்ளன்ன வாஹினியே வெங்கமல மலர் அணியும் ஸ்ரீ வாணியே நின் தாள் சரணம் தாயே🙏🙏🌼🌼🙏🙏
கண் களிக்கும் படி காணலாம் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரலும் வீணயும், கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி
மதங்கர் குலத்தில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே ... 🎼🎼🎼🦚🦚🦚🦜🦜🦜🦋🦋🦋
பேத்தியுடன் விளையாட
நேரமில்லையா.
லக்ஷ்மியுடன் வெளியே செல்ல
நேரமில்லையா.
மகள்(கள்) உடன் பேச
நேரமில்லையா.
நேரம் உன் கய்யில் தான்
வாழ்க வளமுடன் 🙏
வளர்க உன் எழுத்துக்கள். 👍
நேரம் இல்லை என்றாலும்
கிடைக்கும் கிடைக்கும் நேரமதில் எழுதும் மோகம் இது ...
தாகம் தணிக்க தண்ணீர் உண்டு
ஆனால் பாகம் கொண்டவள் புகழ் தனை சொல்லும் பேறும் தவமும் கிடைக்குமோ
சோகம் கொண்ட உயிர் குரம்பை விட்டு செல்லும் முன்னே ... தவளே அவளை வணங்க நேரம் இன்னும் போதுமோ ??
பதிவு 20. 12th Sep 2021🙏🙏🙏
ப்ரதானபுருஷேச்’வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான்
கேசவ:புருஷோத்தம: ||3
*மோட்சத்திற்கு வழிகாட்டும் தலைவன்* 💐💐💐👌👌👌👌
*யோகவிதாம் நேதாய நம: (Yogavidhaam nethaaya namaha)*🙏🙏🙏
ஏழிசை எம்பிரான் என்ற அரையர் வாழ்ந்து வந்தார்.
அவர் ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடினால், மேலக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் செல்வப்பிள்ளை
என்றழைக்கப்படும் எம்பெருமான் நடனமாடுவான்.
இறைவனுடன் நேருக்கு நேர் பேசக் கூடியவராக அந்த அரையர் திகழ்ந்தார்.
தன் பாட்டுக்கு இறைவனே நடனமாடுகிறான் என்ற ஆணவம் அந்த அரையருக்கு வந்துவிட்டது.😔😔
இறைவனிடமே பேசக்கூடிய பேறு பெற்றவர்,
நம்மை அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்வதே சிறந்தது என்றெண்ணிப் பொறுமை காத்தார் ராமாநுஜர்.🙏
ஏழிசை எம்பிரான் அலட்சியப்படுத்துவதைக் கண்டு மிகவும் வருந்தினார்கள்.
அரையருக்குப் பாடம் புகட்ட வேண்டுமென எண்ணினார்கள்.
அவர்கள் அந்த அரையரிடம் சென்று, “எங்களுக்கு ஒரு சந்தேகம். செல்வப்பிள்ளையிடம் நீங்கள் அதை விண்ணப்பித்து
விடை கேட்க முடியுமா?” என்று கேட்டார்கள்.
“சொல்லுங்கள்!” என்றார் அரையர்.
“எங்கள் குருவான ராமாநுஜருக்கு முக்தி உண்டா? இல்லையா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்!” என்றார்கள்.
“நாளை கேட்டுச் சொல்கிறேன்!” என்றார்.
செல்வப்பிள்ளையிடம் விண்ணப்பித்தார் ஏழிசை எம்பிரான்.
அதற்கு எம்பெருமான், “ராமாநுஜர் மட்டுமல்ல, அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் முக்தியுண்டு.
இதில் சந்தேகமே இல்லை!” என்றான்.
உடனே சீடர்கள், “அரையரே! உங்களுக்கு முக்தி உண்டா இல்லையா என்று கேட்டீர்களா?” என்று வினவினார்கள்.
அரையர், “எனக்கு நிச்சயமாக முக்தியுண்டு! இதிலென்ன சந்தேகம்?” என்று கேட்டார்.
“இருந்தாலும் ஒருமுறை பெருமாளிடம் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்கள்.
இருந்தாலும் ராமாநுஜரின் சீடர்கள் உன்னிடம் கேட்கச் சொன்னார்கள்.
எனக்கு முக்தி உண்டல்லவா?” என்று கேட்டார் அரையர்.
“இதற்கான விடையைத் தான் நேற்றே சொல்லி விட்டேனே!” என்றான் எம்பெருமான்.
“என்ன?” என்று வியப்புடன் கேட்டார் அரையர்.🙏🙏
அந்த ராமாநுஜரையே இகழும் உங்களுக்கு முக்தி கிடையாது!” என்றான்.
“என்ன இப்படிச் சொல்கிறாய்?
இத்தனை நாள் உனக்காக நான் பாட்டு பாடினேனே!” என்று கேட்டார் அரையர்.
“அதற்காகத் தான் நானும் ஆட்டம் ஆடிவிட்டேனே!
நீங்கள் பாட்டு பாடியதற்காக நான் முக்தியளிக்க மாட்டேன்.
தான் பாடிய பாட்டினால் மட்டுமே
முக்தி கிட்டிவிடும் என்று எண்ணியிருந்த அந்த அரையர், குருவின் அருளால் மட்டுமே முக்தி கிட்டும் என்பதை உணர்ந்து
ராமாநுஜருக்குச் சீடராகி, அவருடைய அருளால் முக்தியும் பெற்றார்.🙏🙏🙏
இப்படி முக்தியடைவதற்கான சரியான வழியைக் காட்டி அவ்வழியில் நம்மை இயக்கி வழி நடத்திச் செல்வதால்
‘ *யோகவிதாம் நேதா’* என்று எம்பெருமான் அழைக்கப்படுகிறான்.
“ *யோகவிதாம் நேதாய நம:”*
என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு எம்பெருமானே வழிகாட்டியாக இருந்து
நல்வழியில் அவர்களை நடத்திச் செல்வான்.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
நமக்கு ஊரில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள ஆசை.
எந்த நடிகர்/நடிகை எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அது எப்போது வெளி வருகிறது.
நடிகர் இல்லாவிட்டால் அரசியல் தலைவர். இல்லை என்றால் ஆன்மீகத் தலைவர்.
அவர் எங்கே எப்போது உபன்யாசம் செய்யப் போகிறார்.
அதுவும் இல்லாவிட்டால் "என் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை", "அவருக்கு என்னதான் வேண்டும்", "வர வர இந்தக் காலத்துப் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை" ....
என்று மற்றவர்களை புரிந்து கொள்ளவே நாம் முயற்சி செய்கிறோம்.
அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நம்மை நாம் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்வது இல்லை.
"என்னைப் பற்றி எனக்கு என்ன புரியாது. என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்" என்று நாம் நினைக்கிறோம்.
அது சரி அல்ல. நாம் நம்மை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை. 🙏
எப்போதாவது நாம் "நான் யார்" என்ற கேள்வியை கேட்டது உண்டா?
நான் என்பது இந்த உடலா, நினைவா, உயிரா, உறவுகளின் கலவையா? கணவனா? மனைவியா? பிள்ளையா? அறிவாளியா? முட்டாளா? பணக்காரனா? ஏழையா?
நான் என்பது யார்?
நமக்குள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பல விஷயங்களை திணித்து வைத்து இருக்கிரறார்கள்.
பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் பார்த்த சினிமாக்கள், படித்த புத்தகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து நம் மண்டைக்குள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
நான் என்பது தனி ஒருவன் இல்லை.
பெரும் கும்பல் உள்ளே இருக்கிறது.
இதில் உண்மையான நான் யார்?💐💐
நீங்கள் நம்பவில்லை, உங்களுக்கு சின்ன வயது முதல் அப்படி நம்பும்படி சொல்லப் பட்டது.
நீங்களும் அதை கடை பிடிக்கிறீர்கள்.
ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால், நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள்.
நீங்கள் நம்புவது என்பது பெரிய விஷயம் இல்லை.
சுத்த சைவம், ரொம்ப ஆச்சாரம், எல்லாமே கற்பித்தவை.
நமது என்று சொந்தமாக எதுவம் இல்லை.
சைவ வீட்டில் பிறந்ததால் நான் சைவமாக இருக்கிறேன். இதில் என் பெருமை என்ன?
இந்த கும்பலை விரட்டி விட்டு யோசித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்று தெரியும். 🙏
"நான் யார்? என் உள்ளம் என்பது என்ன? என் அறிவு/ஞானம் என்பது என்ன? என்னை யார் அறிவார்" என்று.
மாணிக்கவாசகருக்கு அந்த கேள்வி எழுந்து இருக்கிறது.
*பாடல்*
நானார் ?
என் உள்ளமார்? ஞானங்களாரென்னை யாரறிவார்?
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.💐💐💐
இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ?
அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?
ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?
தேடுங்கள். நீங்கள் யார் என்று அறிய முயற்சி செய்யுங்கள்.
Know Thyself என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
நம்மை அறிவதை விட்டு விட்டு, உலகில் உள்ள எல்லோரையும் அறிய நினைக்கிறோம். என்ன ஒரு அறிவீனம்.😔😔😔
(My experiences... Ravi ...Episode 87) started on 7th july 2021. .
*4th Assignment - KBL*
*Pray when you feel like worrying. Give thanks when you feel like complaining. Keep going when you feel like quitting.*🙌🙌
Mr Kumar who was working in KBL under Madan became new unit head ..
He was from Bihar so we need to understand between the lines ..
One fine day , all my travels , claims were stopped at his office and he was not approving even a small claim .
First times my claims were put on hold without assigning any valid reasons ...
Initially i did not take anything seriously but when the days passed by i felt the money crunch ...
I went to Kumar and asked him the reason for the hold ...
He was giving evasive replies stating he was too busy on travels , settling down in his new assignment , furnace division issues , labour issues etc , but nothing justified the hold ....
Again and again i met him to know the truth beneath his hesitation ...
Finally he revealed the reason .... 😔😔😔
சொல்லும் வார்த்தைகளும் பொருள் காணா அனாதைகள்
அற்புதம் வடித்த பொற்பதம் .. சொல் பதம் கண்ட சுவை பழம்
மால் எடுத்தான் பத்து அவதாரங்கள்
தச முகன் கண்டான் பத்து தலைகள் ...
கண்ணன் எடுத்தான் விஸ்வரூபம் ..
ஆறுமுகன் கண்டான் மூன்று நான்கும் இரண்டு மூன்றும் கொண்ட மூதறிவின் மகனாய்
இவை எல்லாம் நீ ஒருவனே தந்தாய்
விழி இமை கொண்டு பாதங்கள் வரை கலைவாணீ கச்சபீ வாசித்தாள் ..
கார்மேகம் சூல் கொண்டே வளை காப்பு கண்டது ...
நடிப்பு இறந்தும் வாழும் அதிசயம் உலகமதில் கண்டதுண்டோ ...
இது எட்டாத யாரும் எட்டாத அதிசயம் என்றால் அதில் பொய்மை உண்டோ ? 🦋🦋🦋🙏🙏🙏
[01/10, 11:16 am] +971 55 896 4275: 👌👍
*பதிவு 521*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*(started from 25th Feb 2020 Tuesday)*
*5. மந்தஸ்மித சதகம்*
புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்
*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
மஜ்ஜந்தீ மதுர ஸ்மிதா மரதுனீ
கல்லோலஜாலேஷூ தே 🙂🙂🙂
நைரந்தர்ய முபேத்ய மன்மத மருல் லோலேஷூ யேஷூ ஸ்ஃபுடம் 🙂🙂🙂
ப்ரேமேந்து ப்ரதிபிம்பிதோ விதனுதே கௌ தூஹலம் தூ ர்ஜடே🙂🙂🙂
வாலால் தரையில் அடிப்பார்கள்,
இலக்குவன் கட்டுண்ட நிலைமை கண்டு வருந்துவார்கள்.
வானரர்கள் விபீஷணனை நோக்கி இதிலிருந்து விடுபட என்ன பரிகாரம் என்று கேட்டார்கள்.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆயிரம் அம்புகள் தன் மார்பைத் துளைத்தபோதும் அஞ்சாத அஞ்சனைபுத்ரன், இலக்குவனுக்கு நேர்ந்த துயரம் கண்டு வருந்துகிறான்.
அளவற்ற அம்புகள் துளைத்ததால் அங்கதன் சோர்வடைந்திருந்தான்.
சுக்ரீவன் நிலையும் அஃதே.
நாகபாசத்தை அழிக்கும் வகை இலக்குவர்க்குத் தெரியும், இருந்தாலும், அதனை செயலாற்ற முடியாமல் கட்டுண்டானே என்ன செய்வது?
நான் இந்த பாடலை தினமும் சொல்கிறேன்
இதன் விளக்கம் அறிந்தும் மனம் லேசாகிறது
அவள் பார்த்து கொள்ளுவாள் என்ற புத்துணர்ச்சி வருகிறது
அருமை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷
மனமெனும் பேட்டரி சரியாக இருக்க வேண்டும்
அதில் அருள் எனும் சார்ஜ் இருக்க வேண்டும் என
வேண்டிய வேடனுக்கு விடை இல்லாத் தேடலைத் தந்தார் முனிவர்
முகமோ சிங்கம் மனித அங்கம்
வேண்டுமென .......நடவாது என நினைத்து
நடத்திக் காட்டச் சொன்னார் வேடனை.
வேடனோ....
நொடிக்கு நொடி
அடிக்கு அடி
தேடினான்..... சிங்க முகனை.
சிக்கினார்.......
சிங்க முகன். பரமன் ...வேடன் வலையில்..
வியந்தார்.....
வினவினார்...
முனிவர் பரமனிடம்.
பகரச் சொல்லி.
பரமன் பாபரனின் நம்பிக்கைக்கு அடிமை
என்றார் சிங்க முகன்
என்மேல் நம்பிக்கை வை
நம்பி வை என்பதே நரசிம்மர் வாக்கு.
அதை
இந்த பாமரனுக்கு பரமனின் பராக்கிரமத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
தனது பக்தர்களுக்கு அன்னை அபிராமி என்னதான் தர மாட்டாள்...
எல்லாமுமே அவள் தருவதுதானே..
தனது கடைகண் பார்வையால் அவள் நம்மைக் காத்து அருள்வாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
🙏🙏🙏🙏🙏🙏