அபிராமி அந்தாதி - பாடல் 81 - வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! -

 

                    பச்சைப்புடவைக்காரி -525

அபிராமி அந்தாதி 

பாடல் 81


அபிராமி பட்டரிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் ஏராளம் . 

அன்னையின் தரிசனம் கிடைத்தபின்னும் , 
சரபோஜி மன்னன் அவர் காலில் விழுந்த பிறகும் , 

நாட்டு மக்கள் அவரை தொட்டு வணங்கிய பிறகும் 

பட்டத்து யானை அவரை தன் மேல் ஏற்றிக்கொண்டு ஊர் வலம் வந்த பிறகும், 

கொழுந்து விட்டு எரிந்த தீ அவர் பாதங்களை பூஜித்து சென்ற பிறகும் 

அவர் தன்னை அறிவே இல்லாதவன் எளியேன் என்றே சொல்கிறார் ... 

அம்மா எல்லாம் உனக்கு சமர்ப்பணம் ..  

இப்படி எண்ணாத கூட்டம் எனக்கு வேண்டாம் என்று வரம் கேட்கிறார் ... 

 *எளிமை , இனிமை,  அபிராமியை மனதில் கொண்டோர்க்கு ஏது மறுமை ??* 🙏🙏🙏


வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! (பாடல் 81)

அணங்கே 

அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை 

வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்

பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் 

என் கண் நீ வைத்த பேரளியே🥇🥇🥇

அணங்கே - அபிராமி எனும் அழகு தெய்வமே .. 

உன்னை பார்த்துவிட்டேன் .. 

உன் தரிசனம் கிடைத்து விட்டது . 

தேவர்களும் அசுரர்களும் யுகம் யுகமாய் வாசுகியை மேரு மலையில் வைத்து பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தனர் ... 

ஆனால் ஓரு நொடியில் ஆலகால விஷத்தை உன் பரிசத்தால்  அமுதமாக்கினாய் .. 

அந்த அமுத கலசத்தை நான் ஒருவனே உண்ட த்ருப்தி ...இனி என்ன வேண்டும் எனக்கு ?? 👌👌👌


அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் - 

வணங்கேன் ஒருவரை

இதை இரண்டு விதமாய் பார்க்கலாம் .. 

முதல் விளக்கம் பொதுவாக மேலாக நமக்கு புலப்படும் விளக்கம் இது 

அம்மா நீயே கிடைத்து விட்டாய் பின் உன் பரிவார தெய்வங்களை நான் வணங்குவதில் ஒரு அர்த்தமும் இல்லை .. முதலாளியின் கருணை கிடைத்தவுடன் கேட்டில் நிற்கும் கூர்க்காவிற்கு tips கொடுப்பது வீண் தானே ... 


 *இரண்டாவது விளக்கம்* 

எனக்கு என்னவோ முதலில் சொன்ன விளக்கத்தில் பட்டர் பாடலை  சொல்லியிருப்பார் என்று தோன்ற வில்லை .. 

அதில் கொஞ்சம் கர்வம் மமதை நெடி அதிகமாக இருக்கிறது ... 

அதனால் இப்படி எடுத்துக்கொள்வோம் 

அம்மா  உன் அருள் கிடைத்து விட்டது 

அதற்கு மூல காரணம் உன் பரிவார தெய்வங்களை நான் தினம் தினம் வணங்கியதால் ... 

அவர்கள் எல்லோருமே உன் அம்சங்கள் ... 

உன் அருளும் அவர்களின் அருளும் சேர்ந்து கிடைத்ததால் வேறு ஒருவரை ( சரபோஜி மன்னனைப்போல் இருப்பவர்களை ) நான் இனி வணங்கி கூழை கும்பிடு போட மாட்டேன்  எனக்கு அது தேவையும் இல்லை இனி ...🥇🥇🥇



பாஸ்கர ராயர் பெரிய சக்தி உபாசகர் .. 

ஏற்கனவே பச்சைப் புடவைக்காரி இவரைப் பற்றி நமக்கு நிறைய சொல்லியுள்ளாள் .. 

இவரும் பட்டரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் .. 

திருவிடை மருதூரில்  ராயர் தன் கடைசி நாட்களை நகர்த்தினார் .. 

ஒரு முறை ஒரு பெரிய மகான் திருவிடை மருதூர் வந்த போது அவரை எல்லோரும் வணங்கினர் , பூஜித்தனர் .. 

ராயர் ஒரு மரியாதையும் அவருக்கு செய்யவில்லை .. 

அந்த மகானுக்கு ஒரே வருத்தம் .. 

தன்னை வந்து பார்க்கும் எல்லோரிடமும் தன் மன வருத்தத்தை பகிர்ந்து கொண்டிருந்தார் .. 

இது ராயர் காதுக்கு எட்டியது . 

எல்லோரும் கெஞ்சவே ராயர் அவரிடம் சென்று அவர் வைத்திருந்த தண்டத்தை தள்ளி வைக்கும் மாறு சொல்லி அதற்கு சாஷ்ட்டங்கமாய் நமஸ்காரம் செய்தார் .. 

தண்டம் குபீரென்று தீ பற்றிக்கொண்டு எரிந்து போனது ... 

மகானுக்கு புரிந்து போனது இதுவரை ஏன் ராயர் தன் பாதம் பணியவில்லை என்று 

அவர் ஓடி வந்து ராயரின் பாதங்களில் விழுந்தார் .. 

இதுபோல   பட்டரும் சொல்லியிருக்கலாம் ... அம்மா உன் பார்வை கிடைத்த உடன் மற்ற யாவும் கடுகை விட சிறியதாய் தெரிகிறதே என்று ⭐⭐⭐


வாழ்த்துகிலேன் நெஞ்சில்

நெஞ்சிலும் மற்றவரை வாழ்த்த மாட்டேன்


வஞ்சகரோடு இணங்கேன் -* வஞ்சகர்களோடு இணங்க மாட்டேன்... 

தனம் தரும் என்ற 69வது பாடலில் ....நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் என்று சொன்னவர் இங்கே ஏன் இப்படி சொல்கிறார் ? 💐💐💐



அம்பாளே ஓடி வந்து காட்டிக்கொடுத்து விடுவாளாம்.. 

இவன் வெளியில் நல்லவனாக நடிக்கிறான் 

உள்ளே வண்டி வண்டியாய் வஞ்சத்தை நிரம்பியுள்ளான்.. 

இவன்  சேர்க்கை உனக்கு வேண்டாம் என்று தடுத்து விடுவாளாம் 🙏🙏🙏


எனது உனது என்று இருப்பார் சிலர்


எதுவுமே அவள் போட்ட பிச்சை என்ற நினைப்பு நமக்கு இருக்க வேண்டும் .. 

தகுதி , திறமை , வல்லமை , புகழ் எல்லாம் அவள் அருளால் மட்டுமே கிடைப்பது ... 

மஹா பாரதத்தில் ஒரு நிகழ்வு ... 

கண்ணன் துரியோதனனை பார்க்க வருகிறான் ... பீஷ்மர் , கிருபச்சாரியார் , துரோணர் எல்லோரும் கண்ணா என் மாளிகைக்கு வா அங்கே விருந்து ஓம்பலாம்... 

அதோ தெரிகிறதே அதுதான் என் மாளிகை வா போகலாம் என்றனர் ... 

விதரன் ஓடி வந்து கண்ணா நீ உன் குடிசைக்கு வரக்கூடாதா ? 

உன் குடிசையில் தான் நானும் இருக்கிறேன் என்றானாம் ... கண்ணன் யார் வீட்டுக்கு போயிருப்பான் என்று சொல்லித் தெரிய வேண்டாம் அல்லவா ?.. 🥇🥇🥇



பாரதியின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது 

தீராத விளையாட்டு பிள்ளை ....

தின்னப் பழங்கொண்டு தருவான்;-

பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

என்னப்பன் என்னையன் என்றால்-

அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

பெரிய தத்துவம் அடங்கிய எளிமையான பாடல் ..பாரதி போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார் ஒரு பெரிய உண்மையை 


 *தின்னப் பழங்கொண்டு தருவான்;-* 

அவன் வாழ்க்கை எனும் பழத்தை நாம் அனுபவிக்க தருகிறான் ... தகுதி புகழ் , செல்வம் எல்லாம் அருள்கிறான் 

பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

எல்லாம் கிடைத்தவுடன் நமக்கு *நான்* என்ற மமகாரம் என்னால்தான் முடிந்தது என்ற மமதை வந்து விடுகிறது 

அப்பொழுது அவன் கொடுத்த பழத்தை ( சுகத்தை , போகத்தை ) அவன் தட்டிப்பறித்துக் கொள்கிறான் .



 *என்னப்பன் என்னையன் என்றால்-*

உடனே அவனை அன்புடன் அவன் நாமங்களை சொல்லி சரணடைந்தால் 

அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

மனம் இறங்கி அவன் அந்த பழத்தை கொஞ்சம் கடித்து பிரசாதமாக நமக்கே திருப்பித் தருகிறான் ... 

நம் துன்பங்கள் துண்டைக்கானோம் துணியைக் காணோம் என்று ஓடி விடுகிறது

இப்படி என்னுடையது உன்னோடது என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும் அவர்களை சேர மாட்டேன் ⭐⭐⭐


அறிவு ஒன்றும் இலேன் - அறிவு ஒன்றுமே இல்லாதவன் நான்

 *என் கண் நீ வைத்த பேரளியே* - என் மேல் நீ வைத்தப் பெருங்கருணையை என்ன என்று போற்றுவேன்? 

ஒரு தகுதியும் தனக்கில்லை என்கிறார் பட்டர் அதுதான் அவரோட மிகப்பெரிய தகுதி



சில நேரங்களில் சில மனிதர்கள் வஞ்சகர்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுடன் இணங்கி இருக்க வேண்டிய நிலைமை உண்டாகிறது. 

சுயநலத்தால் எல்லோருமே அப்படி செய்வது அவரவர் அனுபவமாக இருக்கும். 

அன்னையின் அருளிருந்தால் அப்படி வஞ்சகரோடு இணங்கியிருக்க வேண்டிய தேவையிருக்காது என்பதை அபிராமி பட்டர் அருமையாகக் கூறுகிறார்.👏👏👏



அறிவு ஒன்றும் இல்லாதவன் நான். 

என் மேல் நீ வைத்த பெருங்கருணையை என்ன என்று சொல்லுவேன்? 

தெய்வங்களில் சிறந்தவளே. 

எல்லா தெய்வங்களும் நின் பரிவாரங்கள். 

நீயே என் மேல் கருணை கொண்டு விட்டதால் எதற்காகவும் எந்த நோக்கத்திற்காகவும் உலகத்தில் உன்னையன்றி மற்றவரை நான் வணங்க வேண்டியதில்லை; அதனால் வணங்கேன். 

அவர்களை நெஞ்சில் வாழ்த்தவும் தேவையில்லை; 

அதனால் வாழ்த்துகிலேன். வஞ்சகர்களோடு 

இணங்க வேண்டிய தேவையும் இல்லை; அதனால் இணங்கேன். 


தம்முடையது எல்லாம் அன்னையே உன்னுடையது என்று இருக்கிறார்களே சில மெய்யடியார்கள் அவர்கள் வெகு சிலரே; அப்படிப்பட்டவர்களோடு எந்தக் காரணத்தாலும் சண்டை போட மாட்டேன். பிணங்கேன்.

இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் .

🥇🥇🥇🥇🥇



வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! 
 
                                        👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

Comments

சவிதா said…
அம்பாளின் அழகு
தேன் சொட்டும் நாமங்களும்
கவிகுமாரின் வர்னனை
அற்புதம்
அபிராமி பட்டர் அளவு புண்ணியம் செய்யவில்லை. என்றாலும்
அவள் நாமங்களை சொல்லுவோம்
மூர்த்தி said…
மல்லியிடம் மல்லுகட்டும் விதம் மிக அழகு. ஆனால் மறுக்கமுடியாத உண்மை 👌👌👏🏼


ரமணி said…
[06/07, 11:02 pm] Ramani - Pune: இந்த உலகில் உள்ள அனைத்தும் அபிராமி அன்னையிடமிருந்து வந்தவை ஆதலால் அந்த அன்னையைத் தொழுதாலே அனைத்து சக்திகளையுமே தொழுதாற்போல்தான் என்று மிக அழகாக நமக்கு விளங்க வைத்துள்ளார் சக்தி குழும அபிராமி பட்டர்...

நல்விளக்கம்...

🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம் ஒரு(தெயவத்தின்)குரல்

ரஸமாக ஒன்று தோன்றுகிறது:
இந்த ஷோடச நாமாக்களைச் சொல்கிறவருக்கு, “வித்யாரம்பே” [கல்வி கற்கத் தொடங்கும்போது] , “விவாஹே” [கலியாணத்தின் போது] “ப்ரவேசே” [ஓரிடத்திற்குள் செல்லும்போது] , “நிர்கமே” [ஓரிடத்திலிருந்து புறப்படும்போது] , “ஸங்க்ராமே” [சண்டை சச்சரவுகளில்] “ஸர்வ கார்யேஷு” [எல்லாக் கார்யங்களிலுமே] விக்கினம் உண்டாகாது என்று பலன் சொல்லியிருக்கிறது. இந்த ஒவ்வொன்றுக்குமே ஸ்கந்த சரித்திரத்தில் proof, சான்று, இருப்பதாகத் தெரிகிறது.
ravi said…
வித்யாரம்பே:” பரமேச்வரனின் ஞான நேத்ர ஜ்யோதிஸிலிருந்து உண்டான ஸுப்ரம்மண்யருக்கு அக்ஷராப்யாஸம் என்ற அர்த்தத்தில் வித்யாரம்பம் அவசியமேயில்லை. அவரே “ஓம் இத்-யேகாக்ஷரம்” என்ற பிரணவத்திற்கு அர்த்தமாக இருந்து கொண்டு, அதைப் பிதாவுக்கு உபதேசம் பண்ணினவர். ஆனபடியால் அவர் விஷயத்தில் வித்யாரம்பம் என்பது ப்ரஹம் வித்யையை அநுபவமாக அநுஷ்டிக்கும் ஸந்நியாஸத்தை ஸ்வீகரிப்பதுதான். அப்படி அவர் ஸந்நியாஸி ஆனதற்கு விக்நேச்வரர் பழப் போட்டியில் ஜயித்ததுதான் காரணம்.*
“விவாஹே”: வள்ளி கல்யாண ஸமாசாரம். அதில் அண்ணாக்காரரின் முக்யமான பங்கை
ravi said…
தம்பியின் இல்லறம், துறவறம் இரண்டிற்குமே அவர் தான் key கொடுத்திருக்கிறார்! தம்பி குழந்தையாயிருந்த போது அவரை ஸந்நியாஸியாக்கி, அப்புறம் யௌவனத்தில் கிருஹஸ்தராக்கியிருக்கிறார்! தம்முடைய பரமபக்தையான ஒளவையையோ அவள் நல்ல யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டிய ஸமயத்தில் கிழவியாக்கி ஒரு ஸந்நியாஸினி மாதிரி செய்திருக்கிறார்! பெரும்பாலும் பால ப்ரஹ்மசாரியாகவே நாம் பூஜிக்கும் ஸ்வாமியின் லீலை இப்படி வேடிக்கையாக இருக்கிறது!
“ப்ரவேசே”: இந்த லோகத்தில் இப்படி ஸுப்ரஹ்மண்யம் என்று ஒரு திவ்ய மங்கள் மூர்த்தி பிரவேசிப்பதற்கு-தோன்றுவதற்கு-காரணம் சூரபத்மாவின் நிபந்தனைப்படி விக்நேச்வரர் அவனுடைய ஸம்ஹாரத்திற்கு ‘டிஸ்க்வாலிஃபை’ ஆகியிருந்ததுதான். அதாவது, ‘நெகட்டிவ்’ ஆக ஸுப்ரஹ்மண்ய ப்ரவேசத்திற்குக் காரணம் அவர்தான்.
ravi said…
நிர்கமே”: ‘ப்ரவேசம்’ என்றால் ஒன்றில் புகுவது, ‘நிர்கமம்’ என்றால் ஒன்றைவிட்டுப் போய்விடுவது. வள்ளி கல்யாணம், பிள்ளையார் நடத்திக் கொடுத்து முடிந்தவுடன் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தாம் பிரவேசித்திருந்த இந்த உலகத்தை விட்டுவிட்டு ஸ்கந்த லோகம் என்கிற தம்முடைய நித்யவாஸ ஸ்தானத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார். இரண்டு பத்னிகளோடும் புறப்பட்டுப் போய் விட்டார். வள்ளி கதை வருவதற்கு முந்தியே தேவஸேனா கல்யாணமாகி இருந்தது.
அவர் லோகத்தில் அவதாரம் பண்ணியதற்கு இரண்டு காரணம். சூரஸம்ஹாரம் ஒன்று. இன்னொன்று, அவருடைய மாமா மஹாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருத்தி தேவராஜன் பெண்ணாகவும், மற்றவள் வேடராஜன் பெண்ணாகவும் வளர்ந்து வந்தவர்களை அவர் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது.
ravi said…
முதலில் திருச்செந்தூர் தாண்டி ஸமுத்ரத்தில் போய் அஸுரஸம்ஹாரம் முடித்தார். அப்புறம் திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங்கே அவளோடு இருந்து கொண்டிருக்கும்போது நாரதர் வந்து சித்தூரில் வள்ளி அவரே நினைவாக ப்ரேமையில் உருகிக் கொண்டிருப்பதை சொன்னார். ஆகையால் திருப்பரங்குன்றம் கோவிலில் அவர் வல்லீ-தேவஸேனா ஸமேதராக இல்லாமல், ஒரு பக்கம் தேவஸேனையும், மறுபக்கம் வள்ளிக்குப் பதில் அவளுக்காகத் தூது சொல்ல வந்த நாரதருமாகத்தான் இருக்கிறார். ஸத்குருவானவர் ஜீவாத்மாவிடம் பரமாத்மாவின் க்ருபையை திருப்பி விடுவதற்கு ரூபகமாக நாரதர் வள்ளியிடம் ஸுப்ரம்மண்யரைத் திருப்பிவிட்டார். அதனால் சிவனுக்கும் குருவான ஸ்வாமி, நாரத குருவுக்குத் தன்னுடைய ஸந்நிதியிலேயே ஒரு பக்கம் இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
ravi said…
நாரதர் சொன்னதன் மேல் அவர் புறப்பட்டுப் போய் வேடன், விருத்தன், வேங்கைமரம் எல்லாமாக வேஷம் போட்டு அப்புறம் அண்ணாவின் அருளால் வள்ளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் புக்தி – முக்தி என்கிற இம்மை-மறுமைத் தத்வங்கள் இரண்டோடும் சேர்ந்துள்ள தம்முடைய ஸாந்நித்யம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என்று இரண்டு பத்னிகளோடும் ‘ஹனிமூன்’ மாதிரிக் கொஞ்சநாள் திருத்தணியில் இருந்தார். பிற்பாடு ஸ்கந்தலோகம் போய்விட்டார். அது தான் நிர்கமம். அதற்குப் படி போட்டுக் கொடுத்தது வள்ளி கல்யாணம். அதோடு அவருடைய அவதாரத்தின் இரண்டாவது ‘பர்ப’ஸும் நிறைவேறி விட்டது.
வள்ளி கல்யாணத்திற்குப் படி போட்டுக் கொடுத்தவர் யானையாக வந்து அவளைத் துரத்திய பிள்ளையாரேயாகையால், ஸுப்ரஹ்மண்யர் நம் லோகத்திலிருந்து ஸ்கந்த லோகத்திற்கு ‘நிர்கமம்’ பண்ணவும் அவர்தான் உதவி இருக்கிறார்.
ravi said…
ஸங்க்ராமே:” ஸங்க்ராமம் என்றால் சண்டை, யுத்தம். “ஸங்க்ராம சிகாவல” என்று ‘கந்தரநுபூதி’யில்கூட வருகிறது. யுத்தத்தில் மஹா பராக்ரமம் காட்டிய ஸுர ஸேநாதிபதி ஸுப்ரம்மண்யர். அப்படி யுத்தம் ஆரம்பிக்கிறதற்கு முன்னால் அவர் நிச்சயமாக விக்நேச்வர பூஜை பண்ணித் தானிருப்பார். ஏனிப்படிச் சொல்கிறேனென்றால் விக்நேச்வர பூஜை செய்யாமல் த்ரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தகப்பனார், பண்டாஸுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தாயார் ஆகியவர்களுக்கும் விக்கினங்கள் ஏற்பட்டு, அவர்கள் அந்தப் பூஜை பண்ணிய பிறகுதான் விக்கினம் நிவிருத்தியாயிற்று என்பதால் தம்பிக்காரர் முதலிலேயே ஜாக்ரதையாக முழித்துக் கொண்டு பூஜை பண்ணித்தானே இருப்பார்? அது மாத்திரமில்லை. சூரஸம்ஹாரத்திற்கு இவர் புறப்படுவதற்கு முன்னாடி அவரோடு பழத்துக்குப் போட்டி போட்டு பந்தயம் வந்ததில் தோற்றே போயிருக்கிறார்.
ravi said…
அந்த விரக்தியில் ஆண்டியானார். அந்த ஆண்டி வாழ்க்கையிலாவது ஜயித்தாரா, அதாவது அது தக்கி நின்றதா என்றால் இல்லை. மாதா பிதாக்கள் வந்து கேட்டுக் கொண்டு, அஸுர ஸம்ஹாரத்திற்காகவே அவர் அவதரித்திருப்பதை ஞாபகப் படுத்தியவுடன், ஸந்நியாஸத்திற்கு முழுக்கு போட்டுவிட்டுச் சண்டைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. அதனால் அண்ணா அநுக்ரஹம் இருந்தால்தான் கார்யம் ஸித்தியாகும் என்று இப்போது அவருக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனபடியால் அவரைப் பூஜை பண்ணிவிட்டுதான் புறப்பட்டிருப்பார்.
ravi said…
ஸர்வ கார்யேஷு”: அண்ணாவுக்குப் போட்டியாகப் பழத்துக்குப் பந்தயம் புறப்பட்டது பலிக்கவில்லை. அவரைப் பிரார்த்திக்காமல் ஆண்டியானதும் நிற்கவில்லை என்பதால் யுத்தத்திற்குப் போகும் போது அவரைப் பூஜை பண்ணினாலும் பிற்பாடு வள்ளியை அடைவதற்காகப் போனபோது அவரை மறந்துவிட்டார். ஆசைவேகம் எத்தனை பொல்லாதது என்று லோகத்திற்குக் காட்டுவதற்காகவே இப்படி ஏற்பட்டது. விக்னமும் நிறைய வந்தது. அப்புறம் அவரை ப்ரார்த்தித்தே கார்யஸித்தி பெற்றார். அதனால் அதற்கப்புறம் “ஸர்வ கார்யேஷு” என்றபடி எந்தக் கார்யமானாலும் அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் விக்நேச்வர பூஜை பண்ணித்தானிருப்பார். அதைப் பற்றி ஸந்தேஹமேயில்லை.
ஆகையாலேயே பிள்ளையாரின் ஷோடச நாமாக்களை முடிக்கிறபோது, அதற்குப் பலச்ருதியில் சொல்லப்படும் அத்தனை விதங்களிலும் விக்நேச்வரரின் அநுக்ரஹத்தைப் பெற்ற ஸ்கந்தரைக் குறிப்பிட்டு, அவருடைய பூர்வஜரென்று பூர்த்தி பண்ணியிருக்கிறது.
Chandra said…
Sir
We are going through all your posts. It is really interesting and no comments doesnt mean that we are not reading your posts. Nice that you are able to collect years back memories and sharing to all of us. Sometimes I wonder how u are able to collect years back memories as if they happened few days back.hats off to your memory and your presentation skills 🙏
ravi said…
*யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.*

மாயப்போர் என்பது போர்க்களத்தில் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் ஆங்காங்கே பிரிந்து நின்று போர் செய்கிறார்கள்.

அப்படி தனித்து நிற்கும் இலக்குவனிடம் அனுமன் நிலைமையை விளக்குகிறான்.

இதனைக் கேட்ட இலக்குவன் பாசுபதாஸ்திரம் ஏவுகிறான்.

அரக்கரின் சேனையும், அவர்களது மாயமும் எரிந்து அழிந்து போகிறது.

இருள் மறைந்து ஒளி வெளிப்படுகிறது.

மகோதரன் தன் மாயை விலகியதும் ஓடிவிடுகிறான்.

பிரம்மாஸ்திரத்தை ஏவ இதுவே தக்க தருனம் என்று இந்திரஜித், ஆலமரம் ஒன்றை அடைந்து, அதற்கான வேள்வியைச் செய்தான்.

உடனே தேவர் முதலானோர் அறியாதபடி பிரம்மாஸ்திரத்துடன் விசும்பில் சென்று மறைந்தான்.

அப்போது மகோதரன் இந்திரனைப் போல மாறுவேடம் தரித்து ஐராவதத்தின் மீது ஏறிக்கொண்டு வானரர்களுக்கு எதிராகப் போர் செய்தான்.🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 17 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
*அடுத்த ஸ்லோகம்*

सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा

न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।

हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं

चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥


ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ க்ஷுத்³ரப²லதா³

ந மன்யே ஸ்வப்னே வா தத³னுஸரணம் தத்க்ருʼதப²லம் ।

ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்

சிரம் யாசே சம்போ⁴ தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் ॥ 4॥
ravi said…
இந்த ஸ்லோகத்துல *ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ –*

உலகத்துல ஆயிரக் கணக்கான தெய்வங்கள் இருக்கு.

ஒவ்வொருத்தர் ஒண்ணு ஒண்ணு வழிபடறா.

அந்த தெய்வங்கள் எல்லாம் என்ன கொடுக்கறதுன்னா....
ravi said…
*க்ஷுத்³ரப²லதா³ –*

சாதாரண பலன்களை கொடுக்கும்.

கீழான பலன்களை கொடுக்கும்.

வீடு வாங்கணும்னா இந்த ஸ்வாமியை வேண்டிக்கோ. பணம் வேணும்னா குபேரனை வேண்டிக்கோ. நவக்ரஹங்களை வேண்டிக்கோ.

அவாளாம் ஓரளவு தான் பலன்களை கொடுக்க முடியும்.

பரமேஸ்வரன்தான் எல்லாருக்கும் மேலான தெய்வம்.

எவ்ளோ பெரியவர்னா *ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்* –

நாம எல்லாம் எங்கேயோ தள்ளி இருக்கோம்.

ஹரி: ன்னா விஷ்ணு, பிரம்மா இவாள்லாம் பரமேஸ்வரனுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கா.

ஆனா அவாளுக்கு கூட *அசஸுலபம்* . கிடைத்தற்கரியதான ஒண்ணு இருக்கு.

அது என்னன்னா, ‘ *தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம்* ’ – உன்னுடைய பாத தாமரைகளை வழிபடுவது என்ற அந்த பலன்.🙏🙏🙏
ravi said…
பட்டரும் இப்படித்தான் பாடுகிறார் ..

அணங்கே அணங்குகள் எல்லாம் உன் பரிவாரங்கள் ஆகையினால் ஒருவரையும் வணங்கேன் வாழ்த்துகிலேன் ... உன் புகழ்ச்சி இன்றி பேணேன் .. உன் திருமேனி பிரகாசம் இன்றி காணேன் இரு நிலமும் நான்கு திசையும் ககனமே ... என்கிறார் .... தெய்வம் ஒன்றே என்று எடுத்துக்கொண்டால் இந்த பாடல் எண்ணங்களில் வேறு படாது...👏👏👏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 18* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
ravi said…
*6. கடைக்கண் பார்வை*👀👀

தொடர்கிறது.....👁️👁️
ravi said…
காமனை கற்றோம் இதுவரை ... இனி அவன் எவ்வளவு பலவீனமாக இருப்பவன் இருப்பினும் அவனால் இந்த எப்படி வெல்ல முடிகிறது என்று பார்ப்போம் 🙏🙏🙏

🔥 அவன் உருவம் இழந்தவன் ... அனங்கன் ...

🔥 ரூபம் இல்லாததால் எட்டு திக்கையே ஆடையாய் அணிபவன்

🔥 அவன் தென்றல் எனும் தேரில் வருபவன் ..

புயல் வந்தால் , வந்து போன சுவடு தெரியும் ஆனால் தென்றல் வந்தால் என்ன சுவடு கிடைக்கும் ...?

மென்மையானது ...

கம்பர் சீதை யின் அழகை வர்ணிக்கிறார் .. மாடத்தில் இருந்து ராமன் நடந்து வருவதை ரசிக்கிறாள் ...

அவனை சந்திக்க விழைகிறாள் ..

அச்சம் மடம் நாணம் தடுக்கிறது ...

தான் அரசமரம் தனில் காத்திருப்பதாய் தூது விடுகிறாள் ..

ராகவன் தாமதமாய் வந்தே அவளை தேடுகிறான் ..

அவள் வந்து போன சுவடுகள் ஏதும் இல்லை

உண்மையில் வந்தாளா என்றும் தெரியவில்லை ...

தென்றலாய் வந்தே மறைந்து போனாள் சீதை அங்கே என்கிறார் கம்பர் 🙌🙌🙌
ravi said…
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ravi said…
This comment has been removed by the author.
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* 🌷🌷🌷பதிவு 17. 7th Oct 2021
ravi said…
*நாமங்கள் 1- 9*

ॐ श्रीमाता श्रीमहाराज्ञी श्रीमत्-सिंहासनेश्वरी । चिदग्नि-कुण्ड-सम्भूता देवकार्य-समुद्यता ॥ १॥उद्यद्भानु-सहस्राभा चतुर्बाहु-समन्विता । रागस्वरूप-पाशाढ्या क्रोधाकाराङ्कुशोज्ज्वला ॥ २॥

1. Srimatha

2. Sri Maharajni

3. Sri Math Simasaneshwari

4. Chidagni Kunda Sambootha

5. Deva Karya Samudhyatha

6. Udyath Bhanu Sahasrabha

7. Chadur Bahu Samanvidha

8. Ragha Swaroopa Pasadya

9. Krodhakarankusojwala 1
ravi said…
*1.ஓம் ஸ்ரீ மாதா*

2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ

3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |

4. சிதக்நிகுண்ட ஸம்பூதா

5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா

7. சதுர்பாஹு ஸமந்விதா |

8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா

9.காராங்குசோஜ்ஜ்வலா ||
ravi said…
*அன்னையும் அவள் திருநாமங்களும் தொடர்கின்றன* 🙌🙌🙌🙌🙌
ravi said…
ஓம் ஸ்ரீ மாதா ... முற்றும் துறந்த சங்கரர் தாயின் உடலை மடியில் போட்டுக்கொண்டு ஒரு சிறு குழந்தை போல் கதறி அழிகிறார் ... அவர் தண்டம் தண்டமாய் அங்கிருக்க பந்தம் அறுபடாமல் வால் இழந்த பட்டம் போல் அங்கே பறந்தது ...

*கண்கள் குளமாக அவர் விம்மி பாடிய மாத்ருகா பஞ்சகம்*

1. ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க,

வாய்க்கு ருசி இல்லாதிருத்தல்,

உடம்பு இளைத்தல்,

ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே!

அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல?

அந்த தாய்க்கு நமஸ்காரம்!😰😰😰
ravi said…
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ravi said…
*WHEN WE WERE RUN DOWN*

Two‌ ‌natural‌ ‌gas‌ ‌company‌ ‌service‌ ‌personnel,‌ ‌a‌ ‌senior‌ ‌training‌ ‌supervisor‌ ‌and‌ ‌a‌ ‌young‌ ‌trainee,‌ ‌were‌ ‌out‌ ‌checking‌ ‌meters‌ ‌in‌ ‌a‌ ‌suburban‌ ‌neighborhood.‌

‌They‌ ‌parked‌ ‌their‌ ‌truck‌ ‌at‌ ‌the‌ ‌end‌ ‌of‌ ‌an‌ ‌alley‌ ‌and‌ ‌worked‌ ‌their‌ ‌way‌ ‌to‌ ‌the‌ ‌other‌ ‌end.‌ ‌

At‌ ‌the‌ ‌last‌ ‌house,‌ ‌a‌ ‌woman‌ ‌looking‌ ‌out‌ ‌her‌ ‌kitchen‌ ‌window‌ ‌watched‌ ‌the‌ ‌two‌ ‌men‌ ‌as‌ ‌they‌ ‌checked‌ ‌her‌ ‌gas‌ ‌meter.‌ ‌

When‌ ‌they‌ ‌finished,‌ ‌the‌ ‌senior‌ ‌supervisor,‌ ‌proud‌ ‌of‌ ‌his‌ ‌physical‌ ‌condition,‌ ‌challenged‌ ‌his‌ ‌younger‌ ‌co-worker‌ ‌to‌ ‌a‌ ‌foot‌ ‌race‌ ‌back‌ ‌to‌ ‌their‌ ‌truck.‌ ‌

As‌ ‌they‌ ‌approached‌ ‌the‌ ‌truck,‌ ‌they‌ ‌realized‌ ‌that‌ ‌the‌ ‌woman‌ ‌was‌ ‌huffing‌ ‌and‌ ‌puffing‌ ‌right‌ ‌behind‌ ‌them.‌

‌They‌ ‌stopped‌ ‌and‌ ‌asked‌ ‌her‌ ‌what‌ ‌was‌ ‌wrong.‌ ‌Gasping‌ ‌for‌ ‌breath,‌ ‌she‌ ‌replied,‌

‌“When‌ ‌I‌ ‌saw‌ ‌two‌ ‌gas‌ company ‌men‌ ‌running‌ ‌as‌ ‌hard‌ ‌as‌ ‌you‌ ‌two‌ ‌were,‌ ‌I‌ ‌figured‌ ‌I’d‌ ‌better‌ ‌run,‌ ‌too!”‌ ‌

In‌ ‌another‌ ‌way,‌ ‌we‌ ‌spend‌ ‌a‌ ‌great‌ ‌deal‌ ‌of‌ time‌ ‌running,‌ ‌don’t‌ ‌we?‌ ‌

We‌ ‌are‌ ‌running‌ ‌to‌ ‌catch‌ up‌ ‌at‌ ‌work.‌ ‌

We‌ ‌are‌ ‌running‌ ‌to‌ ‌keep‌ ‌up‌ ‌at‌ ‌home.‌ ‌

We‌ ‌speak‌ ‌of‌ ‌“running”‌ ‌errands.‌ ‌

We‌ ‌“rush”‌ ‌off,‌ ‌we‌ ‌stop‌ ‌at‌ ‌the‌ ‌“Quick”‌ ‌mart,‌ ‌we‌ ‌buy‌ ‌“fast”‌ ‌food,‌ ‌we‌ ‌use‌ ‌the‌ ‌“express”‌ ‌lane,‌ ‌and‌ ‌we‌ ‌“hurry”‌ ‌back‌ ‌so‌ ‌we‌ ‌can‌ ‌“race”‌ ‌through‌ ‌our‌ ‌meal.‌ ‌

Too‌ ‌often‌ ‌our‌ ‌lives‌ ‌are‌ ‌lived‌ ‌in‌ ‌fast‌ ‌forward.‌ ‌Then we complain that we’re ‌run‌ ‌down.

*A Key learning for me* :

Today I’ll set my own pace. I’ll still arrive and, better yet, I’ll enjoy the journey.🙌🙌🙌
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 110🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*5th Assignment - NGW*
ravi said…
If someone treats you like an option, leave them like a choice.

One day you will look back and realize that you worried too much about things that do not really matter.

Even solid thing like iron becomes weak when it is hot, so always try to stay cool if you wish to be strong.
ravi said…
Today and for few more days i earmark to recall my gratitude to people without whom i would not have reached to this level . Before it is too late let me thank profusely for their contributions in my journey .

Let me start from a living legend going strongly with his mind of generosity and heart of kindness and warmth ... Yes your guess is correct ...

*Mr A. S . Narayanaswami* ,

A powerful man indeed brought 132kv line to ensure the power supply remained uninterrupted come what may ...

Very pious , highly generous a philanthropic in true sense , nourished his team well and always made his presence felt ...

His sense of humour draws no parallel ..

My learnings from him knew no boundaries ..

He allowed many a time his heart to rule his brain .. no doubt he was most sought after person in NGW and outside as well .

I was highly fortunate for having blessed with a mentor , guide , philosopher turned friend in my life .

My next person ...... 🤔🙏
A S Narayanasamy said…
My heart felt thanks for keeping me in high esteem in your heart.
As mentioned earlier, but for SDK &his team, we would never have an opportunity to serve L&T and also earn the friendship and guidance from honest, dedicated gems serving the company for a long period.
Though I came in contact with many seniors, colleagues whom I can not and will not forget, you were a precious friend whose friendship I will always cherish.
I tank you for giving me such a honour and pray to God that our friendship should continue throughout our life.
Chandra said…
Sir
We have seen all these qualities in you also. We feel proud to be a member of your team. Once Krishna said, a positive person thinks always positive about others 🙏
ravi said…
தூக்கம் பிடிக்கவில்லை துவளும் மேனிதனில் துயரும் அடங்க வில்லை ...

வான் மதியும் மறையவில்லை

வின் மீன்களும் மேகங்கள் நடுவே நீந்துவதை நிறுத்த வில்லை ...

பொன் பொதியும் குரல் ஏனோ வரவில்லை இன்னும் ...

புவி அடங்கக்கூடாதோ பூகம்பம் நிரம்பி வாராதோ

குரல் வாராவிடில் என் குரல் அது நிற்காதோ...

குணக்குன்றே ஏன் வரவில்லை இன்னும் ...

🙌🙌🙌 ....2
ravi said…
மின்னல் ஒன்று தெளித்தது ...

வானவில் ஒன்று அரும்பியது ...

இரவென்றும் பாராமல் வந்த வில்லை கேட்டேன் ..

அம்பெடுத்து தொடுப்பாயோ என் அங்கம் தனை வெல்வாயோ ?

சிரித்த வில் தண்டமாய் ஜொலித்தது ...

வெண் மேகங்கள் விபூதியாய் நெற்றியில் அணி வகுத்தது ...

என் ஆவி அங்கே காவியாய் உரு எடுத்தது ...

காலடியில் பாலாடை மிதந்தது ...

ஐந்தாவது தொழிலும் அறிந்து கொள்ளவே தாமதமாய் வந்தேன் ...

அருளும் தொழில் ...

படைத்தும் காத்தும் களைந்தும் மறைத்தும் இருந்தால் போதுமா ?

உச்சம் தொட வேண்டாமோ ... ?

உயர் பதவி அடைய வேண்டாமோ ..?

கோடியில் ஒரு ஆவி அவனுள் சென்றாலும் மீண்டும் பிறவா அருள் அன்றோ அது ...

👌👌👌.....3
ravi said…
ததியொரு மத்தில் சுழலும் உன் ஆவி தளர் வில்லாமல் அவன் பாதம் அடைவதே அவன் அருள் புரியும் ஐந்தாம் தொழில் ..

சதா சிவம் ... அசையும் உயிர் அசையா பிரம்மம் அதில் அசைந்த வண்ணம் சேர

ஆதி பராசக்தியின் ஆனந்த நடனம் இது

ஆயிரம் கமலங்கள் அணி வகுக்க

பிறை சூடியவனின் அடித்தாமரையில் கறை ஒழித்து சேரும் தொழில் இது ...

💐💐💐.....4
ravi said…
குரல் தெய்வமாய் மாற தண்டம் கோதண்டாமாய் மிளிர

பாய்ந்து ஓடும் மான்கள் கண்கள் எனும் தடாகம் தன்னில் நீர் அருந்த

கோடி மீன்கள் எனும் விழிகள் அங்கும் இங்கும் ஓட

கமலத்தில் அன்னமாய் அவனுடன் சேர்ந்தேன் ...

அருள் எனும் தொழிலில் ஒரு அங்கத்தினராய் .... 🙏🙏🙏🌺🌺🌺
TV Ganesh said…
மாயா லீலா வினோதன் தாமோதரன்.


அறம் பொருள் இன்பம் வீடு ஏதும் வேண்டாம் …
கடவுளும் வேண்டாம் .. உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனுக்கே என்ற நம்மாழ்வாரே என் தெய்வம் என்று குரு பக்தியைக்காட்ட தந்தருளிய பதினொன்றில் முதல் பாசுரம்.….

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை..
அனுபவிக்காதவர் எவருண்டு..
ஆழ்வார்களும் ஸ்லாகித்த மதுரமான கவியின் தன்னடக்கம் ஆசார்ய சரணாகதியை கற்கவேண்டிய ஒன்று.

லீலா சேட்டையிலே அன்னை தன்னை கட்டதிருக்க வெட்டி வைத்தவன் கயிற்றை..
இவனது தாயல்லவா வீணாக்காதே முடியிட்டு ஒட்டி வைத்தாள்..
நீட்டத்திலே குறைந்த கயிற்றுக்கு தன்னை குறுக்கொண்டான் தாமோதரன் என் பெயர்பெற..

கட்டுக்கடங்காதவன் கட்டுண்டான் அன்பிலே..
உலகை உண்ட வாயன் வலியிலே கண் கசக்குகிறானாம்..
கட்டியணைத்து கட்டை நீக்கி கட்டுண்டவனை விடுவித்து மருந்திடும் தாயின் அளவற்ற அன்பிலே அகமகிழ்ந்து போகின்றான் தாமோதரன்.

இந்த எண்ணங்களை ஓவியமாய் வெளிக்கொணர்ந்து எம்மையும் அனுபவிக்க வைத்து ஓவியருக்கு அவர் கலைத்திறனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
Kousalya said…
ஆஹா.....அற்புதமான திவ்யப்ரபந்த விளக்கம்....தாம உதரன்... சிறு தாம்பு கயிற்றால் உதரத்தில் அடையாளம் ஏற்பட்டதாம்..........துடி்த்துபோனாளம் யசோதா...பொய் அழுகை செய்து மனதிற்குள் மகிழ்கின்றானாம்.....அருமை அருமை...இந்த கார்த்தி மாதத்தில் தாமோதரனுக்காக தீப ஹாரத்தி எடுப்போம்....நம் எல்லா பாவங்களும் அதில் கரைந்து போகட்டும்......... யசோதா தாமோதரனுக்கு ஜய்....🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🪔🪔🪔🪔🪔🪔
ravi said…
அரங்கனே ...

பாடலாய் வருகின்றாய் ..

நாமமாய் மிளர்கின்றாய்

நாவினில் உறைகின்றாய்...

நான்கு அடி உயரத்தில் மூன்றடி அளக்கின்றாய்

பாலும் பழமும் சூழ்ந்திருக்க மண்ணை போய் தின்கின்றாய் ...

மண்ணில் வாழும் உயிர்க்கு பொன்னும் பொருளும் தருகின்றாய்...

மலையை தூக்கி மழை நிற்க கண்டாய் ..

எங்கள் சுமை தனை அழித்து உன் அருள் மழை தாரயோ ...

சக்தி வாழ் அன்பர்களுக்கு சித்தி தருவாயோ ...

முக்திக்கு வித்தாய்

வித்தில் விளைத்தெழும் புத்தியாய் வாராயோ

வண்ண மயில் கண்ணா .

எங்கள் உரல் எனும் மனமதில் கட்டுண்ட தாமோதரனே.... 🙌🙌🙌🙌
Suresh said…
Very well written Athimber! Makes us review our mindset around handling opposing views as well as people behind them. Please keep sharing yr nuggets of wisdom.🙏
ravi said…
Upanishads says that the size of the soul is 1 divided by 10000 size of tip of our hair.
It is so small but it is extremely powerful.
It is called anti material particle and it transmigrates from one body to another material body till the time the soul worships the supreme soul gets liberated.
The supersoul accompanies in all species of existence.
ravi said…
The Self is beyond birth and death, smaller than the smallest and greater than the greatest _ the Upanishads. This means it is beyond time and space. The Self is the seer of time and space from the Eternal and the Infinite.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

புது வருஷம் பிறக்கும்போது பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அப்போது முதலில் ஒரு ச்லோகம் சொல்லப்படுகிறது:
வாகீசாத்யாஸ் – ஸுமநஸ் – ஸர்வார்த்தாநாம் உபக்ரமே |
யம் நத்வா க்ரு தக்ருத்யாஸ்யு: தம் நமாமி கஜாநநம் ||
ravi said…
கஜானன’ என்று முடித்ததால், ச்லோகம் பிள்ளையாரைப் பற்றியது என்று எல்லாருக்கும் புரிந்திருக்கும். அவரைப் பற்றி இங்கே என்ன சொல்லியிருக்கிறது? “ப்ரம்மாதி தேவர்களும்கூட எந்தக் கார்யத்தின் ஆரம்பத்திலும் எவரை நமஸ்கரித்தே எடுத்த கார்யத்தை முடித்தவர்களாகிறார்களோ அந்த கஜானனரை-யானை முகரை – நானும் நமஸ்காரம் பண்ணுகிறேன்” என்று சொல்லியிருக்கிறது.
ravi said…
அல்ப சக்தர்களாக உள்ள மநுஷ்யர்கள்தான் என்றில்லை, நிரம்ப சக்தி படைத்த தேவர்களும்கூடப் பிள்ளையாரை வணங்குகிறார்கள்.

எப்போதாவது, முக்யமான ஸமயங்களில், பிள்ளையார் சதுர்த்தி மாதிரியான தினங்களில்தான் வணங்குகிறார்கள் என்றில்லை. எப்போது பார்த்தாலும், எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் வணங்குகிறார்கள்’ என்று ச்லோகம் தெரிவிக்கிறது.

அது மட்டுமில்லை. வணங்கியதன் பயனைப் பூர்ணமாகப் பெற்றுவிடுகிறார்களென்றும் தெரிவித்துவிடுகிறது.
ravi said…
அது மட்டுமில்லை. வணங்கியதன் பயனைப் பூர்ணமாகப் பெற்றுவிடுகிறார்களென்றும் தெரிவித்துவிடுகிறது. அவர்கள் நமஸ்காரம் பண்ணினார்கள், இவர் அதை வெறுமனே வாங்கிக்கொண்டார் என்று முடிந்துபோகவில்லை.

அவர்கள் எந்தக் கார்யத்தின் ஆரம்பத்தில் அவரை நமஸ்காரம் பண்ணினார்களோ அந்தக் கார்யத்தைப் பலிதமாக்கி, நிறைவேற்றிக் கொடுத்துவிடுகிறார். அவர்களை எடுத்த கார்யத்தை வெற்றிகரமாக முடித்தவர்களாக, அதாவது ச்லோகத்தில் சொல்லியிருக்கிறபடி ‘க்ருத க்ருத்யர்’களாக, ஆக்கிவிடுகிறார்.
ravi said…
தேவர்கள்கூடப் பிள்ளையாரை நமஸ்கரிக்கிறார்கள் என்பதற்கு ச்லோகத்தில் “வாகீசாத்யா: ஸுமநஸ்” என்று சொல்லியிருக்கிறது. “வாகீசன் முதலான தேவர்கள்” என்று அர்த்தம்.
‘ஸுமநஸ்’ என்றால் தேவர். ஸுமநஸ்’ என்றால் நேர் அர்த்தம் ‘நல்ல மனம்’. நல்ல மன விசேஷம்தான் தேவ சக்தி. துஷ்ட மனஸ்தான் அஸுர சக்தி. புஷ்பத்துக்கும் ஸுமநஸ் என்று பேர் உண்டு. ஒரு செடி அல்லது கொடியின் நல்ல மனம் மாதிரி இருப்பது அதன் புஷ்பம். நல்ல மனஸுக்கு அடையாளம் என்ன?

அதில் அன்பு ஊறிக்கொண்டிருப்பதுதான். இம்மாதிரி ஒரு செடியிலோ கொடியிலோ மாதுர்யத்தின் ஸாரமான தேன் ஊறிக்கொண்டிருப்பது அதன் புஷ்பத்தில்தானே?
ravi said…
அதில் அன்பு ஊறிக்கொண்டிருப்பதுதான். இம்மாதிரி ஒரு செடியிலோ கொடியிலோ மாதுர்யத்தின் ஸாரமான தேன் ஊறிக்கொண்டிருப்பது அதன் புஷ்பத்தில்தானே? அதன் பழத்தை விடவும் தித்திப்பு தேன்தான். கசப்பாகக் கசக்கும் காய், பழம் கொண்ட தாவரவகைகள் எத்தனையோ உண்டு. ஆனால் அவற்றிலும் புஷ்பத்திலே ஊறுகிற தேன் கசப்பாக இருப்பதாக எங்குமே கிடையாது. ஒரு செடி அல்லது கொடியில் பார்க்கவும் ரொம்ப அழகானது
ravi said…
சர்மத்துக்கு ஸுகமாக அதன் மார்தவம் (ம்ருதுத்தன்மை). மூக்குக்கு நல்ல ஸுகந்தம். நாக்குக்கு ருசியான தேன். பாக்கி இருப்பது காது. அந்தக் காதுக்கு இன்பமான வண்டுகளின் ரீங்காரத்தையும் ஒரு புஷ்பம் தன் தேனைக்கொண்டு வரவழைத்துவிடுகிறது!
ravi said…
ஸுமநஸ் என்றால் அழகானது என்றும் அர்த்தம்.
இப்படி நல்ல மனம், அழகு, தேவர்கள், புஷ்பம் ஆகிய நாலுக்கும் ‘ஸுமனஸ்’ என்று பெயரிருப்பதை வைத்துச் சிலேடை செய்து பல ச்லோகங்கள் உண்டு. (ஸ்ரீ அனந்தராம) தீக்ஷிதர் பிராபல்யப் படுத்திவரும் மஹிஷாஸுரமர்த்தினி ஸ்தோத்ரத்தில் கூட இப்படி ‘ஸுமநஸ்—ஸுமநஸ்’ என்று மூன்று நாலு தரம் அடுக்கிக்கொண்டு போயிருக்கிறது. ‘நல்ல மனம் கொண்ட தேவர்கள் அர்ச்சனை பண்ணுகிற அழகான புஷ்பங்களின் நிரம்பவும் மநோஹரமான காந்தியுடன் கூடியவளே!’ என்று ஸ்தோத்ரிக்கும்போது, ‘நல்ல மனம்’, ‘தேவர்கள்’, ‘அழகு’, ‘புஷ்பம்’, ‘நிரம்பவும் மநோஹரமான’ என்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ஸுமந’வைப் போட்டு அழகாக ச்லோகம் அமைந்திருக்கிறது.
ravi said…
தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர் பிள்ளையார் என்று சொல்லும்போதே நல்ல மனம்கொண்ட எவரானாலும் அவரை பூஜை பண்ணித்தான் பண்ணிவிடுகிறார்கள் என்றும் தெரிவித்துவிடுகிற மாதிரி “வாகீசாத்யா: ஸுமநஸ:” என்று, தேவர்களைக் குறிப்பாக இந்த ஸுமனஸ் என்ற பெயரால் சொல்லியிருக்கிறது.
நல்ல மனமுள்ளவரெல்லாம் ஒருத்தரைப் பூஜை பண்ணுகிறார்களென்றால், அப்படிப் பூஜிக்கப்படுபவரும் ரொம்ப நல்ல மனஸ் படைத்தவராகத்தானே இருக்க வேண்டும்?

(இன்று சங்கடஹர சதுர்த்தி)
ravi said…
*மஹா கணபதிம் மனஸ்மராமி*

*நாட்டை*
*தீக்ஷிதர் கிருதி*

*இயேசுதாஸ்*

👇👇👇

ஸ்ரீ மஹா கணபதிம்- மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி

மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித.

மஹா கணபதிம்... ஆ ஆ ஆ...

மஹா தேவ சுதம்..... ஆ ஆஅ ஆ
மஹா தேவ சுதம் - குரு குக நுதம்.
மஹா தேவ சுதம் - குரு குக நுதம்.

மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்.

மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதக்ப்ரியம்

மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதகப்ரியம்,

மஹா கணபதிம். மனஸா ஸ்மராமி
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித மஹா கணபதிம்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 43.. 12th Sep 2021🙏🙏🙏
ravi said…
ஸர்வ : *ச’ர்வ* : சி’வ: ஸ்தாணுர்‌
பூதாதிர்‌ நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
ravi said…
*26 வது திருநாமம் ..*

*சர்வ :*

அடியார்களின் துன்பங்களை போக்குபவர்
ravi said…
ஆதியில் பிரம்மதேவர் ஐந்து முகங்களுடன் விளங்கினார்.

கிழக்கு நோக்கிய முகத்தால் ரிக் வேதமும்,
தெற்கு முகத்தால் யஜுர்வேதமும், மேற்கு முகத்தால் ஸாம வேதமும், வடக்கு முகத்தால் அதர்வண வேதமும்,
இவற்றுக்கும் மேலே மேல்நோக்கி இருந்த ஐந்தாவது முகத்தால் இதிஹாஸ புராணங்களும் ஓதி வந்தார்.
ravi said…
அவரது ஐந்தாவது முகம் மிகுந்த பொலிவோடு விளங்கியதால் மிகுந்த கர்வம் கொண்டார் பிரம்மதேவர்.

வேத வல்லார்களான ரிஷிகள் தன்னை வணங்கினாலும் அவர்களைப் பதிலுக்கு வணங்க மறுத்தார்.

அவரது ஐந்தாம் தலையிலிருந்து வந்த ஒளியால் தேவர்கள் ஒளி இழந்து நிழல் போல ஆனார்கள்.🙌🙌🙌
ravi said…
அதைக் கண்ட பிரம்மாவுக்கு அகந்தை மேலும் அதிகரித்தது. ஒளியிழந்த தேவர்கள் பரமசிவனை அண்டினார்கள்.

பிரம்மாவின் கர்வத்தை அடக்கித் தாங்கள் இழந்த ஒளியை மீண்டும் பெற்றுத் தரும்படிப் பிரார்த்தித்தார்கள்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்ற பரமசிவனும் பிரம்மலோகத்துக்குச் சென்றார்.

ஆனால், அகந்தையில் மிதந்த பிரம்மாவோ பரமசிவனையும் புறக்கணித்தார்.

“நலமாக உள்ளீரா?” என்று அன்புடன் பரமசிவன் பிரம்மாவிடம் கேட்டார்.

ஆனால், அதற்கும் பதில் கூறாமல் அப்படியே
அமர்ந்திருந்தார் பிரம்மா.

அகந்தை தலைக்குமேல் ஏறுவது பிரம்ம தேவருக்கே நல்லதல்ல என்று எண்ணிய பரமசிவன்,.......🤔
ravi said…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
*யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.*
ravi said…
இலக்குவன் மகோதரனின் மாயையால் அவன் இந்திரன் போல் வந்திருக்கிறான் என்பது தெரியாமல், அனுமனிடம் சொல்கிறான் "முனிவர்களும், இந்திரன் முதலானவர்களும் ஏன் நம்மீது போர் செய்கிறார்கள்" என்று.

இந்த நேரம் பார்த்து இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை இலக்குவன் மீது ஏவிவிட்டான்.

அவன் செயலற்று தளர்ந்து வீழ்ந்தான். இந்திரனாய் வந்தவனைக் கொல்வேன் என்று எழுந்த அனுமனும் பிரம்மாஸ்திரம் தாக்கி கீழே விழுந்தான்.

சுக்ரீவன் முதலான மற்ற வானர வீரர்கள் அனைவருமே வீழ்ந்தனர்.

வானரங்கள் யாவரும் சாய்ந்து வீழ்ந்தனர். வானர வீரர்களொடு இலக்குவன் இறந்து வீழ்ந்தான்.

இந்திரஜித் வெற்றி சங்கை ஊதுகிறான்.

இராவணனிடம் சென்று நடந்ததைக் கூற, இராமன் சாகவில்லையா என்று கவலையோடு கேட்கிறான்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 18 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा

न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।

हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं

चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥


ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ க்ஷுத்³ரப²லதா³

ந மன்யே ஸ்வப்னே வா தத³னுஸரணம் தத்க்ருʼதப²லம் ।

ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்

சிரம் யாசே சம்போ⁴ தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் ॥ 4॥
ravi said…
உன்னுடைய பாத தாமரைகளை வழிபடுவது என்ற அந்த பலன் , அது கிடைச்சுடுத்துன்னா உலகத்துல இருக்கிற எல்லா விஷயங்களும் கிடைச்சுடும்.

முக்தியும் கிடைச்சுடும். அதனால நான் மத்த சாதாரண தெய்வங்களை எல்லாம் *ந மன்யே ஸ்வப்னே வா* – என் ஸ்வப்னத்துல கூட நான் அவாளை நினைக்க மாட்டேன்

*தத³னுஸரணம்* – அவா பின்னாடி நான் போகமாட்டேன்... 🙌🙌🙌
ravi said…
இதை அப்படியே உள்வாங்கி பட்டரும் பாடுகிறார் ..

சிவசக்தி ஸ்வரூபம் என்பதால் இந்த பாடல் ஈசனுக்கும் பொருந்தும்

வீணே பல கவர் தெய்வங்கள் பாற் சென்று மிக்க அன்பு கொண்டு பேணேன் .. உனக்கே அன்பு பூண்டு கொண்டேன் எப்பொழுதும் என்கிறார் .
Moorthi said…
இதில் சொல்லப்பட்ட சாதாரண தெய்வங்கள் ?
ravi said…
Good question moorti .. thanks for reading and responding ...

சாதாரண தெய்வங்கள் என்று இங்கே ஆதி சங்கரரும் பட்டரும் மற்ற தெய்வங்களை குறைத்து சொல்வதாக எடுத்துக்கொள்ள கூடாது ..

இவைகள் பரிகார தேவதைகள் ...

பெரிய இடத்தில் நமக்கு சிநேகம் உண்டானபின் காவலாளிகளுக்கு சலாம் போடவேண்டாமே

மேலும் இந்த குட்டி தேவதைகள் எல்லாமே பரமேஸ்வரன் ஈஸ்வரியிடம் சக்தி பெறுகின்றன ...

சூரிய ஒளி எதிரே கிடைக்கும் போது ஏன் நாம் மெழுகுவர்த்தியை தேடவேண்டும் ...?

உயர்ந்த நோக்கத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் .

We should not take in literal sense .
Moorthi said…
விளக்கத்திற்க்கு நன்றி 🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 19* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
ravi said…
*6. கடைக்கண் பார்வை*👀👀

தொடர்கிறது.....👁️👁️
ravi said…
💐 அவன் தேரும் பலவீனமான ஒன்று ... தென்றல்

💐சரி ரூபம் இல்லை தேரும் தென்றல் .. அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் அதாவது பலமானவையா ? AK 47 , RDX இப்படி ஏதாவது வைத்திருக்கிறனா ?

அதுவும் இல்லை.. 5 மலர் கனைகள் ... மேலே விழுந்தாலும் மயில் இறகினால் ஒத்தடம் தருவதைப்போல் இருக்கும் ..

சரி அவன் வில் ...அது ஒரு கோதண்டமோ பாசுபதாஸ்தரமோ இல்லை ..

அதுவும் மலர்களின் மகரந்தத்தினால் ஆன வில் ...

கரும்பு வில் என்றும் சிலர் சொல்லுவார்...

💐 அதில் உள்ள நாண் தேனீக்கள் ... கொஞ்சம் நாணை இழுத்தாலே அந்த தேனீக்கள் பறந்து விடும்

💐. சரி அவனுடன் எப்பவும் ஒரு நண்பன் வருவான் அவனவது பலசாலியா என்று கேட்டால் அதுவும் இல்லை ...

நம்மால் முடியாவிட்டாலும் காசு கொடுத்து நாலு பயில்வான்களையாவது
துணைக்கு வைத்துக்கொள்வோம் ..

அதுவும் இங்கு இல்லை .

💐வருபவன் வசந்தம் ... பூவிலும் மென்மையான காலம் ...

இங்கே ஆதி சங்கரர் என்ன சொல்ல வருகிறார் என்றால் அம்பாளின் கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால்

நாம் எல்லா உலகங்களையும் வெல்லலாம் ..

பெரிய பலசாலியாக இருக்க வேண்டிய தேவை இல்லை ...

படைகள் தேவை இல்லை ..

கூர்மையான ஆயதங்கள் தேவை இல்லை ...

💐 காமனை இன்னும் வென்றவர்கள் யாருமே இல்லை ...

அவன் எப்படி அம்பாளின் கருணைக்கு பாத்திரமானான் ... நாளை பார்ப்போம் ...💐💐💐💐💐
ravi said…
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* 🌷🌷🌷பதிவு 19. 7th Oct 2021
ravi said…
*1.ஓம் ஸ்ரீ மாதா*

2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ

3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |

4. சிதக்நிகுண்ட ஸம்பூதா

5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா

7. சதுர்பாஹு ஸமந்விதா |

8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா

9.காராங்குசோஜ்ஜ்வலா ||
ravi said…
*அன்னையும் அவள் திருநாமங்களும் தொடர்கின்றன* 🙌🙌🙌🙌🙌
ravi said…
*நம் கண்களை குளமாக்கும் ஆதி சங்கரரின் மாத்ருகா பஞ்சகம்*😰
ravi said…
2. குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே! ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே

அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே!

உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!

3. ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை.

மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே!

உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை.

காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!😰😰😰
ravi said…
[25/10, 7:49 am] Metro Ad Vipul: ஆஹா அற்புதம்🌷🙏🏻
[25/10, 7:51 am] Metro Ad Vipul: லலிதா நாமம் அருமை அருமை🌷🌷🙏🏻🙏🏻
[25/10, 9:07 am] Metro Kowsalya: Migavum arumai 👌 👌 🙏🙏
[25/10, 9:08 am] Shivaji L&T C: Sree Mathre Nama🌹🌹🙏
[25/10, 9:11 am] Metro Kowsalya: Mathruka Panchakam arpudham 🙏 🙏🙏🪔🪔🙏🙏
ravi said…
திருக்கடையூரில் நின்றிருந்தேன் ...

வானில் தெரியும் பூர்ண நிலவு உள்ளே கற்பூர ஒளிதனில் சிரித்துக் கொண்டிருந்தது ...

பட்டரின் பாடல் நாவில் வந்து அமர

நாபியில் எழுந்த நாதம் வார்த்தையாக தெளித்தது ...

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து

உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே...

கண்கள் நீரை பொழிந்தன ...

நெஞ்சம் விம்மித் தெளித்தது ..

மரலி வரும் நேரம் மனம் உனை நினைக்குமோ ...

அந்தகன் அழைக்கும் போது உன் நாமம் சொல்வேனோ ...

வெவ்விய காலன் இனி போதும் வாழ்க்கை என சொல்லும் போது வேதம் புகழும் உன் ரூபம் கண்ணில் தெரியுமோ ....

சிரித்த நிலவு சொன்னது ...

குருவின் அருள் இருந்தால்

திருவின் அருள் சேர்ந்து வந்திடுமே ..

வெளி நின்று காப்பேன் வெங்கூற்று உனை என் செய்யும் ...

வேண்டாம் இந்த வீண் பயம் ...

காஞ்சி வாழ் கருணை கடல் கண் கசக்கும் உன் கண்ணீர் கண்டால் ..

கவலையின்றி செல் ... சொல் உன் நண்பர்களுக்கும் ...

சொல்லின் செல்வன் என்றும் காப்பான் ...அவன் பாதம் பணியும் பக்தர்களுக்கே ... 🙌🙌🙌
ravi said…
[25/10, 8:02 am] Ramani - Pune: அழகோ அழகு....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
[25/10, 8:47 am] Shivaji L&T C: Arumai.. Periyava Charanam🌹🌹🙏
[25/10, 8:55 am] Metro Kowsalya: Arumai 🙏🙏👏👏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 111🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*5th Assignment - NGW*
ravi said…
Arrogance really comes from insecurity, and in the end our feeling that we are bigger than others is really the flip side of our feeling that we are smaller than others.

------Desmond Tutu
ravi said…
Yesterday we met Mr A S Narayanasamy ...

Today yet another gem MGT which stands for *Magestic Gentleman for all Times .*

Yes your guess is correct. He is M G Telang ...

His seed of investment is his smile and what he harvests through that is goodwill .

Very enviable personality never judgmental but balanced and humane ..

He takes life as it comes and always believes in the popular saying this too shall pass .

Life is not fair to many ... That is what we witnessed in his life too at the age of his prime carrier .

He became a single parent by the cruelty of fate for two beautiful daughters ..

Anybody else in his age would have brought one more woman in the family .

He dedicated his life in upbringing of his two kids ... Today both the daughters are mothers of a child and great achievers and their father is still a great hero to them ..

On work front he was very sincere and my learnings had no barrier and i enriched thro his vast work experience .. Our friendship continued when he moved to Eutectic division . Now it grown into a baniyan tree .

His soft nature , helping tendency , smiling face proved that there is no parallel to him even now ..

I'm grateful to both ASN and MGT for being a great source of inspiration and learning . God bless . 👏👏👏💐💐💐
Ajit said…
Very well narrated...100% agree! MGT is very nice human being ☺️
Ajit said…
Regarding ASN... I am sure he is still young by heart... Very humorous... Personality like ASN never become older...
BMR said…
👍👍👍
MG Telang said…
Omg..omg..Ravi you have a great artistic style of writing. You made me emotional yaar..
When I was transferred from Eutectic Delhi ( NRO) to NGW very little I knew that I am going to spend best of my 8 years in the total span of 33 years in L&T. Even now when I go to Nasik I always get that nostalgic feeling.
Ravi I thank you very much and I am really blessed to have less of a friend & more of a family member like you in my life.
Thanks Dear and as informed you yesterday I am planning for our grand meeting next week & in fact let's plan a visit to Nasik also later..
Thanks once again..🙏
RND said…
Will never forget these personalities, who r our 9 years of NGW life, JR sir great nerrative ! you can publish book.🙏
ASN 👏
MGT👏
ravi said…
*திருச்சிற்றம்பலம்*

கூர்த்தஅறி வத்தனையுங் கொள்ளைகொடுத் துன்னருளைப்

பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே. 31.



கடலமுதே தேனேயென் கண்ணே கவலை

படமுடியா தென்னைமுகம் பார்நீ பராபரமே. 32.



உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான்ஏழை

தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே. 33.



கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக்

கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே. 34.



எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்

புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே. 35.



ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை

பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே. 36.



கற்றஅறி வால்உனைநான் கண்டவன்போற் கூத்தாடில்

குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே. 37.



ஐயோ உனைக்காண்பான் ஆசைகொண்ட தத்தனையும்

பொய்யோ வெளியாப் புகலாய் பராபரமே. 38.



துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த

இன்பக்கண் ணீர்வருவ தெந்தாள் பராபரமே. 39.



வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்கா றாயுளறும்

நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே. 40.

*திருச்சிற்றம்பலம்*
A S Narayanasami said…
200% true. Each word sentence about MGT will reveal how much he sacrificed his prime time for the sake of his children. Not anyone can do Or think about it.
Inspite of such unbearable sorrow, he never showed outside and moved jovially with everybody.
He is also one of my best friends andJR has penned superb about him.
ASN
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்


பெண்களின் பாண்டித்யம் அக்கால - இக்கால மாறுபாடு
பழங்காலத்தில், ஆசார்யாள் புது ஜீவன் ஊட்டி ஸ்தாபித்த வைதிக வாழ்க்கையில் புருஷர்கள் உத்யோகத்துக்குப் போய் ஸம்பாதிக்கவில்லை.
ravi said…
க்ருஹத்திலேயே இருந்து கொண்டு விடிவதற்கு முன்னாலிருந்து ஒன்று மாற்றி ஒன்றாக அநுஷ்டானங்கள் செய்வதற்கே அவர்களுக்குப் பொழுது ஸரியாயிருக்கும்.
ravi said…
ஸம்பாவனை, மான்யம், குரு தட்சிணை முதலியவற்றிலிருந்தே அவர்களுடைய எளிய வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கிடைத்துவந்தது. புருஷர்கள் இப்படி ஸதாவும் அநுஷ்டானபரர்களாக இருந்ததால் ஸ்த்ரீகளும் ஸதா அவர்கள்கூட இருந்துகொண்டு பல விதங்களில் அந்த அநுஷ்டானாதிகளுக்காக ஸேவை செய்யவே அவர்களுக்கும் பொழுது ஸரியாயிருந்தது.
ravi said…
அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்குப் பாண்டித்யம் அடியோடு அவச்யமில்லாமலும், பாண்டித்யத்தால் அவர்களுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லாமலும் இருந்தது.
ravi said…
ஆனால் நம் காலத்தில் புருஷர்கள் நாள் பூராவும் - day- time என்பது பூராவும் - ஆஃபிஸில் வேலை செய்தே ஸம்பாதிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவதற்கில்லை என்ற அளவுக்கு நிலைமை முற்றி விட்டது.
ravi said…
ஆக, இப்போது புருஷர்களுக்கு ஆபிஸ், அது போக மிஞ்சியுள்ள நேரத்தில் அரட்டை, பொழுதுபோக்கு என்று ஒரு தினுஸாக ஆகிவிட்டது. இதனால் மத ஸம்பந்தமான நம்முடைய ஏராளப் புஸ்தகங்கள் உள்பட ஆத்மாவையோ, புத்தியையோ, மனஸையோ வளர்த்துக் கொடுக்கிற எதையுமே - நல்ல இலக்கியம் உள்பட எதையுமே - அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.
ravi said…
இதைக் கவனிக்கும்போது இதற்கு நிவாரணம் ஆசார்யாள் சொன்னதற்கு ஒரு தினுஸில் மாறுதலாகப் போனால்தான் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. இப்படி நான் சொல்வதே பொதுவாகப் பார்த்தால் மஹா பாபம்தான், பரம அபசாரமும்தான். அது எனக்குத் தெரியாமலில்லை.
ravi said…
அவர் காலம், நம் காலம் என்று சொல்லிக் கொண்டு காலத்தை அநுஸரித்து, என்றைக்கும் சாச்வதமான தர்மத்தை மாற்றுவது துளிக்கூட முறையேயில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரிகிறது.
ravi said…
இருந்தபோதிலும் புருஷர்கள் ஆபீஸ் போய்த தானாக வேண்டும் என்று ஆனதில் ஸ்த்ரீகள் நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்பதைக் கவனிக்கிறபோது இன்றைக்கு அவரே இருந்தால் என்ன சொல்லியிருப்பாரென்று என் அடி மனஸிலிருந்து பிரார்த்தித்துப் ப்ரார்த்தித்து, யோஜித்து யோஜித்துப் பார்க்கிறபோது தோன்றுகிறதோ அதையே துணிந்து சொல்கிறேன்
ravi said…
இன்றைக்கு Day - time பூராவும் வீட்டிலே இருக்கிற ஸ்த்ரீகளுக்கு யஜ்ஞாதி அநுஷ்டானங்களில் ஸஹாயம் பண்ணுகிற கார்யமில்லை. வீட்டு நிர்வாஹத்தில் அவர்கள் பல கார்யம் செய்ய வேண்டியிருந்தாலும், கார்யம் செய்ததில் களைத்து விச்ராந்தி செய்து கொண்ட பிற்பாடும் அவர்களுக்குப் பொழுது மிச்சம் இருக்கிறது. அது வீணிலோ, வம்பிலோ போகாமலிருக்க வேண்டுமானால்
அதற்கு வழிதான் ஆசார்யாள் அன்றைக்குச் சொன்னதற்கு வித்யாஸமான
ஒன்றாகத் தெரிகிறது.
ravi said…
அதாவது, இன்றைக்கு ஸ்த்ரீகள்தான் தங்களுக்கு மிஞ்சும் பொழுதையெல்லாம் நம்முடைய இதிஹாஸ - புராணங்கள், ஸ்தோத்ரப் புஸ்தகங்கள், அது மட்டுமில்லாமல் உசந்த காவ்யங்கள் ஆகியவற்றை நன்றாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பண்ண முடியும் என்பது.
ravi said…
அவர்களுடைய பொழுது நல்ல விதமாகக் கழிவதற்கு இது வழி என்பது மாத்திரமில்லை. எத்தனையோ யுகத்துக்கு முன்னாலிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து வந்துள்ள நம்முடைய மஹத்தான கலாசாரத்துக்கு உயிரூட்டுகிற புஸ்தகங்கள் நம் காலத்தில் செத்துப் போய் விட்டன என்ற பெரிய பழி, மஹத்தான களங்கம் நமக்கு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் இப்படி ஸ்த்ரீகளாவது அவற்றைப் படித்துப் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டு ரட்சித்துக் கொடுப்பதுதான் வழி.
ravi said…
இப்படித் தாங்கள் படித்தறிந்ததன் ஸாராம்சத்தை அவர்கள் புருஷமார்களுக்கும் சொல்லி அவர்களுக்கும் நம்முடைய ஸமய கலாசாரத்தில் ஒரு அபிருசியை ஏற்படுத்தவேண்டும். தானாகப் படித்துத் தெரிந்து கொள்ள ப்ரியப்படாதவனாக இருந்தாலும், பெண்டாட்டி சொல்கிறாள் என்றால் எவனும் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
நம்முடைய புராதனமான, புனிதமான இலக்கியச் செல்வம் என்பது நம் காலத்தோடு கொள்ளை போகாமலிருக்க வேண்டுமானால் அதற்கு இப்படி ஸ்த்ரீகள் பண்டிதைகளானால்தான் முடியும் என்று ப்ரத்யட்ச வய்வஹாரத்தில் ஏற்பட்டிருப்பதால்தான் துணிந்து சொன்னேன்.
ravi said…
ஆசார்யாள், பாண்டித்யம் என்கிறதை வேதத்தில் பாண்டித்யம் என்றே கருதி, வேதாத்யயன அதிகாரம் ஸ்த்ரீகளுக்கு இல்லாததால்தான் அவர்கள் பாண்டித்யம் பெறுகிறதற்கில்லை என்று சொன்னார். நானும் இப்போது வேதத்தில் கை வைக்கவில்லை. ஸ்த்ரீகளை வேதங்கள் படிக்கும்படியாகச் சொல்லவில்லை. வேதம் தவிர்த்து இதிஹாஸ - புராண - ஸ்தோத்ர - காவ்யாதிகள்தான் படித்துத் தெரிந்து கொள்ளச் சொல்கிறேன்.
ravi said…
ஆசார்யாள் பெயரிலுள்ள இந்த மடத்து த்வாராவே (மூலமாகவே) இப்படிப் பெண்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்கு எந்த விதமெல்லாம் உதவி செய்யலாமோ, இன்ஸென்டிவ் கொடுக்கலாமோ அவ்வளவும் அவருடைய ஆசீர்வாதத்துடனேயே செய்ய வேண்டுமென்று எனக்கு இருக்கிறது.
ravi said…
மொத்தத்தில் விஷயம் பெண்கள் உத்யோகத்துக்குப் போகாமல் க்ருஹிணிகளாகவே இருந்து கொண்டு க்ருஹ ஸம்ரக்ஷணம் செய்வதே ச்ருதி - ஸ்ம்ருதிகளின் வழிப்படியான ஸ்த்ரீ தர்மம். அதற்கு அநுகூலமாகவே ஆசார்யாள் அவர்களுக்குப் பாண்டித்யம் வேண்டியதில்லை என்று சொன்னது. இப்போது (நான்) சொல்கிறதும் அவளுடைய க்ருஹிணி தர்மத்துக்கு விரோதமில்லை. அவளை உத்யோகத்துக்குப் போகச் சொல்லவில்லை. உத்யோகத்துக்குப் போகிற புருஷன் கோட்டைவிட்ட கலாசார செல்வத்தை அவளாவது ஸம்ரிஷித்து
தரட்டும், அவள் வழியாகவே அவனுக்கும் அது கொஞ்சம் போகட்டும் என்றே சொல்கிறேன்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 44. 12th Sep 2021🙏🙏🙏
ravi said…
ஸர்வ : *ச’ர்வ* : சி’வ: ஸ்தாணுர்‌
பூதாதிர்‌ நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
ravi said…
*26 வது திருநாமம் ..*

*சர்வ :*

அடியார்களின் துன்பங்களை போக்குபவர்
ravi said…
அகந்தை தலைக்குமேல் ஏறுவது பிரம்ம தேவருக்கே நல்லதல்ல என்று எண்ணிய பரமசிவன்,

ஓர் அட்டகாசச் சிரிப்பை வெளிப்படுத்தினார். மூவுலகங்களும் அந்தச் சிரிப்பொலியால் நடுங்கின.

ஆனால், அதற்கும் பிரம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ளக்கூடாது
என்றெண்ணிய பரமசிவன், தன் இடக்கைப் பெருவிரல் நகத்தால், பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தார்.

பிரம்மாவின் தலையை இடக்கையில் ஏந்தியபடி கபால நடனம் புரிந்தார்.

அதைக் கண்ட தேவர்களும் மகிழ்ச்சியில் கூத்தாடினர்.👏👏👏
ravi said…
ஐந்து முகனாயிருந்த பிரம்மா இப்போது நான்முகன் ஆகிவிட்டார்.

ஆடி முடித்த பரமசிவனால் பிரம்மாவின் தலையைக் கையிலிருந்து கீழே போட முடியவில்லை.

கையில் அது ஒட்டிக் கொண்டு விட்டது.

வேதம் சொல்பவரின் தலையை வெட்டியதால் சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது.
ravi said…
இதுவெல்லாம் பரப்பிரம்மம் விளையாடும் லீலைகள் .. இதில் அவர் உசத்தி இவர் உசத்தி என்று நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது .. பலதடவைகள் சொன்னதை போல் பிரம்மம் ஒன்றே ஆனால் நாம் பல நாமங்கள் கொடுத்து அழைக்கிறோம் ...
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 19 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा

न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।

हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं

चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥


ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ க்ஷுத்³ரப²லதா³

ந மன்யே ஸ்வப்னே வா தத³னுஸரணம் தத்க்ருʼதப²லம் ।

ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்

சிரம் யாசே சம்போ⁴ தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் ॥ 4॥
ravi said…
*தத்க்ருʼதப²லம்* – அவா கொடுக்கிற பலன் எனக்கு வேண்டாம் சம்போ –

சம்போன்னா ஞானத்தினுடைய பிறப்பிடம்.

சந்தோஷத்தின் பிறப்பிடமான அப்பேற்பட்ட அந்த பரமேஸ்வரன் தான் என் தெய்வம்.

*ஹே பரமேஸ்வரா தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் –*

உன்னோட பாதத்தை வழிபடும் அந்த காரியத்தை

*சிரம்* – உடனடியாக பாத பக்தியை உடனே எனக்கு கொடுன்னு கேட்கறார்.
ravi said…
இந்த சிவானந்தலஹரில பக்தியும், ஞானமும் ஒண்ணு தான்னு சொன்னதுனால *ஞான தாதா மகேஸ்வர* : ன்னு பரமேஸ்வரன் தான் ஞானத்தை கொடுக்க முடியும்.

அதனால எனக்கு ஞானத்தை கொடு.

உத்தம பக்தியை கொடு.

அதை வெச்சுண்டு நான் எல்லாத்தையுமே தள்ளிண்டு போயிடுவேன்னு சிவ பக்தியை வேண்டிக்கறார்.

ஏக பக்தியை வேண்டிக்கறார்.👏👏👏
ravi said…
இதையே ஆதிசங்கரர் அன்னபூர்ணியிடம் அம்மா எனக்கு ஞான வைராக்கியத்தை கொடு வேறு வேண்டாம் என்கிறார் .. ஞான வைராக்கியம் கிடைத்து விட்டால் அந்த இந்திர பதவியும் மட்டமே .....
ravi said…
*யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.*
ravi said…
இராமன் போர்க்களத்தைவிட்டு வெகுதூரம் சென்று விட்டதால் அவனை பிரம்மாஸ்திரம் தாக்கவில்லை என்று இராவணனிடம் சொல்லிவிட்டு, தன் மாளிகைக்குச் சென்று விடுகிறான் இந்திரஜித்.

இராமன் படைக்கலப் பூஜையை முடித்துவிட்டு, அக்னி அஸ்திரத்தால் வெளிச்சம் உண்டாக்கி போர்க்களம் வந்தான்.

அங்கே பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டு கிடக்கும் ஒவ்வொருவராய்ப் பார்க்கிறான்.

அதிர்ந்து போனான் இராமன்.

தன் படை சர்வ நாசம் ஆகிவிட்டதை அறிந்து அழுகிறான்.

தம்பி இலக்குவனைக் கண்டு உணர்வு ஒடுங்கினான்.

தாங்க முடியாத துக்கத்தால் அழும் இராமனைத் தேற்றுவார் எவருமில்லை.

துணை வந்தோர் அனைவரும் இறந்து போயினர்.

இராமபிரானின் நிலை கண்டு தேவர்கள் மிகவும் வருந்தினர்.😰😰😰
ravi said…
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை