அபிராமி அந்தாதி - பாடல் 84 - வஞ்சகர் நெஞ்சு அடையாள்! -

 

                        பச்சைப்புடவைக்காரி -528

அபிராமி அந்தாதி 

பாடல் 84


இன்றைய பாடல் தமிழின் அழகின் உச்சம் இப்படி ஒரே வார்த்தையை மடித்து மடித்துப்போட்டால் அதற்குப் பெயர் *மடக்கடி* என்று பெயர் . 

தான் பெரும் இன்பம் பெறுக இந்த வையகம் என்ற பொருளில் பாடியுள்ள பாடல் 🙏🙏🙏


வஞ்சகர் நெஞ்சு அடையாள்! (பாடல் 84)

உடையாளை 

ஒல்கு செம்பட்டுடையாளை 

ஒளிர்மதிச் செஞ்
சடையாளை 

வஞ்சகர் நெஞ்சு அடையாளை 

தயங்கு நுண்ணூல்
இடையாளை 

எங்கள் பெம்மான் இடையாளை 

இங்கு என்னை இனிப்
படையாளை 

உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே🙌🙌🙌👣👣👣🌷🌷🌷



உடையார் என்று இறைவனைத் தான் கூப்பிடுவோம் ...தஞ்சை  பெருவுடையார் கோயில் ஆவுடையார் கோயில் என்று... அதே போல் கம்பன் தன் முதல் பாட்டில் 
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்

என்று பாடுகிறார் ... முதன் முதலில் பட்டர் அபிராமியை *உடையாள்* என்று பாடுகிறார் ... 

உடையாளை - உலகங்களையும் உயிர்களையும் உடைமைகளாகக் கொண்டவளை....🌷🌷🌷



மாணிக்க வாசகர் பாடுகிறார் 

 உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.



பொற்சபையில் ஆடுகின்ற, எம் ஈறில்லா முதல்வனே! 

எம்மை ஆளாகவுடைய உமையம்மை, சொரூப நிலையில் உன்னிடையே அடங்கித் தோன்றுவாள்; 

உடையவளாகிய உமையம்மையினிடத்தே, தடத்த நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய்; 

அடியேன் இடையே நீங்கள் இருவீரும் இருப்பது உண்மையானால், 

என் எண்ணம் நிறைவேறும்படி எனக்கு முன்னே நின்று, அடியேனாகிய யான், உனது அடியார் நடுவில் இருக்கின்ற திருவருளைச் செய்வாயாக.🙌🙌🙌



ஒல்கு செம்பட்டுடையாளை - ஒளிவீசும் சிவந்த பட்டு உடையை அணிந்தவளை

ஒளிர்மதிச் செஞ்சடையாளை - 

ஒளிரும் நிலவை அணிந்த செம்மையான சடையை உடையவளை

வஞ்சகர் நெஞ்சு அடையாளை - வஞ்சகர்களின் நெஞ்சில் தங்காதவளை




தயங்கு நுண்ணூல் இடையாளை - 

தயங்கித் தயங்கி அசையும் நுண்ணிய நூல் போன்ற இடையை உடையவளை

எங்கள் பெம்மான் இடையாளை - 

எங்கள் தலைவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் இருப்பவளை

இங்கு என்னை இனிப் படையாளை* - இந்த உலகத்தில் இனி என்னைப் படைக்காதவளை...



உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே 

உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் அவள் பார்த்துக்கொள்வாள் விடாமல் அவளை நம்பி  வணங்குங்கள்...🌷🌷🌷🙌🙌🙌



ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும் இணையான நாமங்கள் 

 துஷ்ட தூரா... 

துஷ்ட்டர்களையும் , வஞ்சக எண்ணம் கொண்டுவர்களையும் நம்மிடம் இருந்து தூரப்படுத்துபவள்🌷🌷🌷

கபர்தி ...சிவன் எல்லாம் உடைவன்  கபர்தினி ... அம்பாள் எல்லாம் உடையவள் 

 ஸ்வாமி... சிவன் 

 ஸ்வாமினி... அம்பாள் 

பவனாசினீ...  பாவங்களை போக்கி பிறவாமையைத் தருபவள்


ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். 

ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். 

வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். 

ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். 

சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். 

என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். 

என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். 

அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். 

நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.



         வஞ்சகர் நெஞ்சு அடையாள்!         
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

Comments

Ramani said…
அன்னையின் அடி பணிந்தால், அவள் நமக்கு அருள் புரிவாள். நமக்கு பிறவி என்பதே வராத வண்ணம், பார்த்துக் கொள்வாள்.

சக்தி குழும அபிராமி பட்டரின் அறிவுரைப்படி அன்னையை விடாமல் நம்பி வணங்குவோம்...

🙏🙏🙏🙏🙏🙏
Savitha said…
அஹா மிகவும் நல்ல வர்னனை
சிவந்த பட்டுடை
உடுத்தியவள்
Super🙏🏻🙏🏻🌷🌷
Rajavadivelu said…
ஐயா வணக்கம் தாங்கள் ஆரம்பித்த உதவியால் எங்களின் மகள் கல்யாணம் இனிதாக நிறைவேறியது மேலும் நல்ல மணத்துடன் தாங்கள் செய்த இந்த உதவி காலம் உள்ளவரை எங்கள் குடும்பம் மறக்காமல் இருப்போம் காரணம் பாபா உங்கள் உருவில் வந்தது. கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
TV Ganesh said…
குணம் மாறாமல்
மனமுவந்து
பணம் தந்து
திருமணம் நடக்க
மகாகணம் பொருந்திய
பெருமகனாரே

இது அபிராமியின்
திருவிளையாடல்

கேட்டதும் அவளே
கொடுத்ததும் அவளே

நல்லோர் பொருட்டு
எல்லோருக்கும்
பெய்யுமாம் மழை

அதுபோல

அபிராமி நடத்த நினைப்பதை

உங்கள் மூலம்
நிகழ்த்தி காட்டுகிறாள்

உங்களுக்கு அருள் கூட்டுகிறாள்

காலத்தில் செய்த உதவி சிறிதாகினும் பெரிது

இது வள்ளுவன் குரல்

ஆனால்

ஞானத்தினால் செய்த உதவி பெரிதாகினும்
சிறிதாய்
நினைக்கும் உங்கள் பாங்கிற்கு

அந்த அபிராமியின்
அருளே சாட்சி🙏🙏
Friend said…
Sir மிக்க நன்றி 🙏🙏முழுதும் கொடுக்கவில்லை மன்னிக்கவும். தங்களால் ஆரோக்கியக்கேடு ஏற்படவே இல்லை. தாங்கள் செய்த உதவியின் அளவு தங்களூக்கு தெரியாது. நன்றிகள் பல. மிக விரைவில் மீதித்தொகையும் கொடுத்துவிடுவோம். தாமதத்திற்கு மிகவும் மன்னிக்கவும்🙏🙏🙏
Friend said…
தயவுசெய்து கடைசிவரிகளை அழித்து விடுங்கள். இப்படி தாங்கள் சொல்லக்கூடாது என்பதற்காகவே நான் பணத்தை திருப்பி தரும் நாள்வரை இதை தங்களிடம் பகிரவில்லை. மன்னிக்கவும். மிகவும் உறுதியான அவரை பணம் நிலைக்குலைய செய்துவிட்டது. ஏதோ காரணத்திற்காகவே இறைவன் அவரை சோதிக்கிறார். ஆனால் கைவிடவே மாட்டார். உறுதியாக நம்புகிறேன். ஃபினிக்ஸ் பறவை போல் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையும் உறுதியும் உண்டு. தவணை அளித்ததற்காக நன்றி 🙏🙏தாமதிக்காமல் தந்து விடுவோம். தாங்கள் என்ன சொல்வீர்களோ என்று மனக்குழப்பமாக இருந்தது. நன்றி. நன்றி. நன்றி🙏🙏🙏
Friend said…
Sir pls sorry கேட்டு சங்கடப்படுத்த வேண்டாமே. நாங்கள் தான் இந்த ஜென்ம உள்ள வரை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி என்பதை விட தங்கள் குடும்பம்என்றும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.இம்மாதிரி மனிதரை படைத்த ஆன்டவனுக்கு நன்றி இம்மாதிரி உதவி மீண்டும் வேண்டாம் சார். மேலும் இரு உதவி ஒன்று என் கணவருக்கு part time accounts எழுத எங்காவது பரிந்துரைக்க முடிந்தால் மிகப்பெரிய உதவியாக இருக்கும். 2வது பணம் சேமிக்க ஏதும் யோசனைகள். மீதித்தொகை தர டிசம்பர் வரை time எடுத்துக் கொள்ளலாமா? அதற்கு முன்பே கிடைத்தாலும் நிச்சயம் கொடுத்து விடுவேன். பணத்தின் காரணமாக என் கணவருக்கு மனஅழுத்தம் அதிகரித்து, மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய அளவிற்கு ஆகிவிட்டது. தொந்தரவிற்கு மன்னிக்கவும்🙏🙏🙏🙏
ஸ்ரீதர் சுவாமிநாதன் said…
👏👏👏💐💐 யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் திருமணம் நடப்பதற்காக பெரிய தொகையை அனுப்பிய உங்கள் நல்ல உள்ளம் நிச்சயம் பாராட்டுக்குரியது சார். உங்கள் பெரிய மனதுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் பணத்தை திருப்பிக் கொடுத்த நாணயமான அந்த தம்பதியும் பாராட்டுக்குரியவர்கள். அதோடு உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் சார். இதை உங்கள் பெண் திருமண பேச்சுவார்த்தைகளின்போதே தெரிந்து கொண்டேன். பேராசை, கெட்ட எண்ணங்களை கொண்டவர்கள் உங்களை நெருங்க முடியாது. அபிராமியும் அவள் மகன் முத்துக்குமரனும் அவர்களை விலக்கி உங்களை காப்பார்கள். 💐💐💐🙏🙏🙏🙏
ravi said…
*உள்ளமெல்லாம் பாயசம்* 💐💐💐

உதடுகளில் தேன் ஊற்றி

உள்ளத்தில் பாயசம் செய்யவே மனம் குழைந்தேன் ...

என்ன பாயசம் என் பெம்மானுக்கு பிடிக்கும் என்றே தெரியவில்லை ..

சர்க்கரை அரை மூட்டை எடுத்து

அதில் பசு நெய்யை பாற்கடலாய் ஊற்றினேன்..

பக்கத்தில் துணை இருக்க பாதாமும் முந்திரியும் பட்டி மன்றம் நடத்தினவே ..

மௌனம் சாதித்த திராட்சை

சாதிக்க பிறந்த குங்கமப்பூ,

ஏலம் விட்ட ஏலக்காய் ,

காரம் இல்லா கிராம்பு ,

மண் களிக்கும் பச்சை கற்பூரம்

பாங்காக ஏற்காடு வெல்லம் ,

கரை காணா கற்கண்டு அனைத்தும் கங்கை போல் அங்கே சங்கமம் ஆகும் அழகு கண்டேன் ..

ஏதோ ஒரு குறை இருக்க

சுவை அது குறைய மனம் கரை காணா வெள்ளம் போல் கரைந்து போகக்கண்டேன் ..

என்ன குறை அது ? புரியவில்லை ...🤔🤔🤔

பொங்கி வந்த கண்ணீரை பெரியவாளின் பொற் பாதங்களில் ஓட விட்டேன்

அதில் துள்ளி குதித்த மீன் ஒன்று சொன்னது ஒரு பொன் மொழி 🐋🐋🐋

சுவாமிநாதன் எனும் பாலை உன் கலவையில் சேர்க்க மறந்தாய் .. 🙏🙏🙏

பாலினும் சொல் இனியவன் .

பாலையும் பாகையும் தேனையும் போல் இனிப்பதன்றோ அவன் திருநாமம் ... 👏👏👏

கலவை கண்டவனை உன் கலவையில் சேர்த்துப்பார் ...

வாசுகியை , மேருவை இனி கடையத் தேவை இல்லை ...

அமுதமாய் இனி இனிக்கும் நீ செய்யும் பாயசமே...

செய்தேன் மீன் சொன்னபடி ..

வாசலில் அந்த அமுதம் குடிக்க வானவரும் தானவரும் வரிசையில் நிற்கக் கண்டேன் .. 🐟🐟🐟

வார் சடையோன் உண்ட நஞ்சு அமுதாக்கிய சுந்தரி சிரித்தாள் எனை பார்த்தே 🙂🙂🙂

அதிலே சுவாமி நாதன் மயில் கொண்டு நடமாடக்கண்டேன் 🦚🦚🦚
Savitha said…
ஆஹா அற்புதம்🙏🏻🙏🏻🌷🌷🌷
Shivaji said…
Arumai. 🌹🌹🙏
Ramesh said…
பாயசம் தித்தித்தது..
T Sukumar said…
Good Ravi. Sorry I could not respond earlier. Is so nice of you to help people great. God bless you. Will try to respond at the earliest in futire
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* 🌷🌷🌷பதிவு 23..7th Oct 2021
ravi said…
*1.ஓம் ஸ்ரீ மாதா*

2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ

3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |

4. சிதக்நிகுண்ட ஸம்பூதா

5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா

7. சதுர்பாஹு ஸமந்விதா |

8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா

9.காராங்குசோஜ்ஜ்வலா ||
ravi said…
*பட்டினத்தார் தொடர்கிறார் ....* 😰😰

6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு ?

7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.🔥🔥🔥
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 23* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
ravi said…
7வது ஸ்லோகத்துக்குள் போவதற்கு முன் 6 ஸ்லோகங்களின் சாராம்சத்தை பார்ப்போம் அப்பொழுதுதான் மனதில் நம்மால் உள் வாங்கிக்கொள்ள முடியும் 🌺🌺🌺
ravi said…
*முதல் ஸ்லோகம்*

*பராசக்தியின் ஏற்றம்*

ஈசனுக்கு உன் சக்தியில்லாமல் நீ இணையாமல் அவனால் இயங்க முடியுமோ ...?

மும்மூர்த்திகள் துதிக்கும் உன்னை புண்ணியங்கள் ஒன்றுமே செய்யாமல் பாவங்கள் மட்டுமே செய்து கொண்டிருக்கும் என்னையும் உன்னை துதிக்கக் கூடிய பாக்கியத்தை தந்தாயே

தாயே !! உன் கருணையை பேரருளை எப்படி விவரிப்பேன் 💐💐💐
ravi said…
*இரண்டாவது ஸ்லோகம்*

*பாதத்துளியின் மகிமை*🙏🙏🙏

அம்மா உன் பாதத்துளிகை கொண்டுதான் மும்மூர்த்திகள் தங்களுக்கு கொடுத்த வேலைகளை சரிவர செய்கிறார்கள் ... இது மிகை அல்ல ... அதில் ஒரு துளி என் மீது விழுந்தாலும் நானும் மிகுந்த பாக்கியசாலியாகி விடுவேன்🦜🦜🦜
ravi said…
*மூன்றாவது ஸ்லோகம்*

*ஸர்வ வித்யா ப்ராப்தி*🌺🌺🌺

அம்மா உன் கருணை எங்கெல்லாம் போய் அருள் மழை பொழிகிறது தெரியுமா ... மெத்த படித்தவர்கள் அகந்தையினால் தடம் புரளும் போதும் , ஜடங்கள் , ஒன்றும் இல்லாதவர்களுக்கும் அருள் புரிவதாகவும் , வராக மூர்த்தி பூமியை தன் மூக்கினால் வெளியே கொண்டு வந்த மாதிரி நம்மை சம்சாரக்கடலில் இருந்து மீட்பதாகவும் இருக்கிறது
ravi said…
*நான்காவது ஸ்லோகம்*

*பாத கமலங்களின் நிகரற்ற சக்தி*

*ஸகல பய நிவ்ருத்தி, ரோக நிவ்ருத்தி*👌👌👌

அம்மா திரிபுர சுந்தரியே ... மற்ற தெய்வங்கள் போல் அபய வரத முத்திரைகளை காட்டாமல் உன் திருவடிகளே எல்லா நன்மைகளையும் செய்யும் .. அதற்கு நிகர் எதுவும் இல்லை 🙏🙏🙏
ravi said…
*ஐந்தாவது ஸ்லோகம்*

*தேவி பூஜையின் மகிமை*

*ஸ்த்ரீ புருஷ வசியம்*💐💐💐

உன் கருணை பெற்றவர்கள் உலகையே வெல்லும் வசீகரம் அடைவார்கள் ... இதற்கு உதாரணம் மோகினி அவதாரம் எடுத்த முகுந்தன் , ஐந்து மலர்கனைகள் கொண்ட மன்மதன்
ravi said…
*6வது ஸ்லோகம்*

*கடைக்கண் பார்வை*
*புத்ர ஸந்தானம்*💐💐💐

உன் கடைக்கண் பார்வை மூலம் மிகவும் பலவீனமாக உருவமே இல்லாமல் இருக்கும் மன்மதன் இந்த உலகத்தை இன்னும் வென்று கொண்டிருக்கிறான் ... இது எவ்வளவு பெரிய விந்தை .... உன் கடைக்கண் பார்வை எங்கள் பக்கம் திரும்ப அருள் செய்வாய் தாயே !!👍👍👍👌👌👌
ravi said…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
என்றும் புத்தம் புதியவன்.

ஆதியிலே முதலாக உதித்து வந்தவன் மிகப்பழையவன்....
ஆதியோடந்தமாக நிறைந்து நிற்பவன்..
ஆராவமுதனாக தித்திருப்பவன்..
ஆயிரம் கால பயிராக உயிராக அனைத்திலும் நிறைந்திருப்பவன்..
என்றுமே புத்தம் புதியவன்.

ஆயிரம் இதழ் தாமரையில் வீற்றிருப்பவளை மார்பிலே ஏற்றிருப்பவன்..
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் குடையாக விரிந்து சேவை சாதிக்க ஆனந்திப்பவன்..
ஆதி சேஷசயனத்திலே அருள்பாலிப்பவன்..
என்றுமே புத்தம் புதியவன்.

ஆனந்தக் குழலூதி உலகையே ஆள்பவன்..
ஆதார ஸ்ருதிலயமாக நாதஸ்வரூபன்..
ஆவினை என்றுமே தழுவி நிற்கும் ராஜகோபாலன்..
ஆனந்தத்தை கண்டதுமே புதிதாக என்றும் தருபவன்..
என்றும் புத்தம் புதியவன்.

ஆயிரத்திலே இரு தாமரை இதழ்கள் கண்களிலே கண்டுகொண்டேன்..
கண்டுகொண்டேன் கரும் குட்டனின் அளவிலா கருணை அழகை..
தினம் வந்து தானே தரிசனம் தரும் பேரழகை என்னவென்பேன்..
கண்ணினுள் சிறுத்தாம்பினால் கட்டுண்ட மாயன்..
என்னையும் சேர்த்து அவனோடு பிணைக்கட்டும்.
சரணாகதி செய்கின்றேன் தினம்..
ஏனெனில் அவன் தினம் புத்தம் புதியவன்.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏
ravi said…
ஆயிரத்தில் ஒரு பாடல் இது ஆயிரத்தில் ஒருவன் எழுதியது .. ஆயிர கமலங்கள் ஆனந்த நடனம் புரிய வைக்கும் வரிகள் ... ஆயிரம் ஜன்மங்கள் தருமோ இந்த சுகம் 🌺🌺🌺
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 115🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*5th Assignment - NGW*
ravi said…
Hard times can test me, not destroy me.

Life is a battle of balance between attachment and detachment. Attach yourself enough, to feel the pain in others. Detach yourself enough, not to feel the pain inflicted by others.

The More you leave, The More You live.
ravi said…
The driver seen his last day in NGW .... We had hefty laugh .. col GSS was highly embarrassed . But mistake was not from his part . He gave the driver high dose of orientation and fear instincts ...

GSS was a thorough gentleman . He was also a good event manager ..

We used to pool our cars to go to sinnar from nashik road...

Those were unforgettable days .. full of fun ...

He made our stress relieved and taught us how to deal with tough times . A big salute to him . I really miss him .

Our next Hero is *Mr R.W* *Kuklani* another departed soul .

We can write a separate book on him ..

He balanced well between Ego and humanity .

He was always flying 40000 ft high but never hesitated to ground at any point of time .

He was a terror to many but friendly outside .

He treated his family and company alike ...

Because of this rich attitude much of stationary in the office were decorating his home as well ...

We will see more about him tomorrow 💐💐💐
ravi said…
*"மேனா தூக்கும் கன்னையனின் அனுபவம்"*

பெரியவா செல்லும் மேனாவை தூக்குபவர்களுக்கு போகி என்று பெயர். அப்படி 1940 ல் தன் அப்பா பெத்த [பெரிய] போகியோடு மடத்துக்கு வந்த கன்னையனை பெரியவா, குஞ்சுமவன் பெத்தபோகி என்று செல்லமாக அழைப்பாராம். மேனா தூக்கும் காலத்துக்கப்புறமும் பெரியவாளோடு தன்னை இணைத்துக் கொண்டுவிட்ட கன்னையனின் ஆனந்த அனுபவங்கள்.
ravi said…
ஒரு வாட்டி மேனாவைத் தூக்கினா....ஆறு கிலோமீட்டர் நடப்போம். ஆறாவது கிலோமீட்டர்ல, இன்னொரு கோஷ்டி தயாரா நிப்பாங்க. தோள் மாத்திக்குவோம். நாங்க வேற வண்டில போயி ஆறு கிலோமீட்டருக்கு அப்பால காத்துகிட்டு இருப்போம். முன்னால நாலு பேரு, பின்னால நாலு பேரு......பொதுவா, ராத்திரி ஏழு மணிலேர்ந்து பத்து மணிவரை நடப்போம். நாங்க சாப்பிடற நேரங்கள்ள......
ravi said…
பெரியவங்க எங்களை நல்லா சாப்பிடவிட்டுட்டு சும்மா ஒக்காந்திருப்பாரு.......நாங்க வந்ததும் "சாப்ட்டாச்சா?"..ன்னு விசாரிப்பாரு.
ravi said…
ஒரு வாட்டி மேனாவைத் தூக்கினா....ஆறு கிலோமீட்டர் நடப்போம். ஆறாவது கிலோமீட்டர்ல, இன்னொரு கோஷ்டி தயாரா நிப்பாங்க. தோள் மாத்திக்குவோம். நாங்க வேற வண்டில போயி ஆறு கிலோமீட்டருக்கு அப்பால காத்துகிட்டு இருப்போம். முன்னால நாலு பேரு, பின்னால நாலு பேரு.......
ravi said…
பொதுவா, ராத்திரி ஏழு மணிலேர்ந்து பத்து மணிவரை நடப்போம். நாங்க சாப்பிடற நேரங்கள்ள......பெரியவங்க எங்களை நல்லா சாப்பிடவிட்டுட்டு சும்மா ஒக்காந்திருப்பாரு.......நாங்க வந்ததும் "சாப்ட்டாச்சா?"..ன்னு விசாரிப்பாரு
ravi said…
ஒருதடவை விடிகாலை மூணு மணிக்கெல்லாம் கெளம்பி, கிட்டத்தட்ட எளுவத்தஞ்சு கிலோமீட்டர் ! காளையார் கோவில்ல காம்ப்! அங்கபோனதும், பெரியவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?......
ravi said…
"எங்க ஆளுங்களுக்கு குளிக்க வெந்நீர் போட்டுக்குடு".....ன்னு உத்தரவு போட்டாங்க! எங்கமேல அத்தனை கரிசனம்! "பாவம்..... போகிக்கெல்லாம் தோள் வலிக்கும்" ன்னாங்க! நாங்க இருந்த எடத்துலேர்ந்து காம்ப்புக்கு ஒரு கிலோமீட்டர் தான் நடந்தே போறேன்னு சொல்லிட்டு போனாங்க. !
ravi said…
அப்புறம் அங்கேர்ந்து மூணு மணிக்கு கெளம்பி சிவகங்கை போனதும், எங்களுக்கெல்லாம் ரெண்டு நாளு ரெஸ்ட் குடுத்தாங்க..... அதோட அந்த ஊர்க்காரங்ககிட்ட எங்களுக்காக அவரே கரிசனப்பட்டு என்ன சொன்னாங்க தெரியுமா? "
ravi said…
இவாளுக்கு ரொம்ப ஸ்ரமம்.....வடை பாயசத்தோட சாப்பாடு போடு."ன்னாங்க."......[உணர்ச்சி மிகுதியால் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது] ஆம்! பெரியவா என்னும் அன்புருவத்தால் ஆளப்பட்டவர் அல்லவா
ravi said…
ஒரு நாளு, காலேல சுமார் ஒம்பது மணி இருக்கும்....வேதபுரி சாஸ்த்ரி, பெரியவங்களுக்கு தொண்டு பண்ணிக்கிட்டு இருந்தாரு. அப்போ, பெரியவங்க ஜபம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. பட்டணத்துலேர்ந்து செலபேர் பெரியவங்களை பாக்க வந்தாங்க. "பெரியவா ஜபம் பண்ணிண்டிருக்கார்.....
ravi said…
இப்போ பாக்க முடியாது"...ன்னுட்டார் வேதபுரி. அவுங்க திரும்பி போய்ட்டாங்க. பெரியவங்க ஜபம் முடிஞ்சதும் வேதபுரிகிட்டே, "பட்டணத்துலேர்ந்து வந்தவா எங்கே?.." ன்னு கேட்டாங்க.
ravi said…
அவா போய்ட்டா..."ன்னார் வேதபுரி.

"அவா.....ஒன்னைப்பாக்க வந்தாளா? என்னைப் பாக்க வந்தாளா?...." ன்னு கேட்டுட்டு, என்னைப்பாத்து "அவா பஸ் ஸ்டாண்டுல நின்னுண்டிருப்பா....போய் அழைச்சிண்டு வா!.." ன்னு சொன்னாங்க. நான் ஓடிப்போயி பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவங்ககிட்ட பெரியவங்க கூப்பிடறாங்க..ன்னு சொன்னதும், அவுங்க மொகத்துல அத்தனை சந்தோசம்.....
ravi said…
வேகமா ஓடி வந்து தரிசனம் பண்ணி, கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தாங்க....மடத்துக்கு எதுனாச்சும் காணிக்கை குடுக்கணும்ன்னு அவுங்க கேட்டதும், பெரியவங்க ஒடனே "போகிக்கு எதாவுது ஒதவி பண்ணுங்கோ!" ன்னு எங்களுக்காக அவர் ஒதவி கேட்டாருங்க"
ravi said…
நாப்பது வருசத்துக்கு முந்தி கொள்ளிடக்கரையில மேனா உள்ளார தபஸ் பண்ணிட்டு இருந்தாங்க. நான் பக்கத்துலதான் ஒக்காந்திருந்தேன். நல்ல இருட்டு. கொஞ்சநேரத்துல மானேஜர் வந்து பெரியவங்க கிட்ட ஏதோ சொல்லணும்னு மெல்ல கதவை திறந்தா...உள்ள பெரியவங்களைக் காணோம்! "திக்"ன்னு ஆயிடிச்சு! ரெண்டு நிமிஷம் கழிச்சு இருட்டுலேர்ந்து "என்ன?..."ன்னு கேட்டுகிட்டே பெரியவங்க வர்றாங்க!

"பெரியவா மேனாலேர்ந்து எறங்கினதை நீ பாக்கலியா?" ன்னு மானேஜர் கேட்டாரு...."கடவுளே! அதானே தெரியலே!.....இங்கேதான் ஒக்காந்திருக்கேன்! கதவும் மூடினபடிதான இருக்கு!...."
ravi said…
பெரியவா மேனாலேர்ந்து எறங்கினதை நீ பாக்கலியா?" ன்னு மானேஜர் கேட்டாரு...."கடவுளே! அதானே தெரியலே!.....இங்கேதான் ஒக்காந்திருக்கேன்! கதவும் மூடினபடிதான இருக்கு!...."

இப்பவும் அந்த இன்பமான அதிர்ச்சியில் அவர் உள்ளமும் முகமும் சிரித்தன! பாக்யசாலி!
ravi said…
வேதம் சொல்லிக்கொடுத்தவர்தானென்றில்லை, மற்ற ஸெக்யுலர் ஸப்ஜெக்ட்கள் (உலகியல் படிப்புகள்) சொல்லிக் கொடுத்தவர்கள்கூட இப்படிப்பட்ட உத்தமமான யோக்யதாம்சங்களைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ravi said…
ஆத்மாநுபவம், திவ்யாநுபவங்கள் வேண்டுமானால் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் மிகவும் உயர்ந்ததான மநுஷ்ய குணங்கள் அவர்களுக்கு இருந்திருக்கின்றன
ravi said…
பொதுவாக இப்படியிருந்தால்தான் அவர்களிலேயே கோபிஷ்டராக, பக்ஷபாதமுள்வராகச் சில ஆசார்யர்கள் வந்தபோதுங்கூட இவர்களிடமும் சரணாகதி பண்ணிவிட்டு பக்தி விச்வாஸத்தோடு இவர்களுக்கு ஸேவகம் செய்யும் சிஷ்யர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
ravi said…
இல்லாவிட்டால் சண்டை போடச் சொல்லிக் கொடுக்கும் தநுர்வேத ஆசார்யராகவே இருந்த த்ரோணரிடம் ஏகல்வ்யன் (ஏகலைவன்) எப்படி சரணாகதி பண்ணியிருப்பான்? பரசுராமருக்கு எப்படிக் கர்ணன் அடிமை மாதிரிப் பணிவிடை பண்ணியிருப்பான்
ravi said…
டான்ஸ் கற்றுக் கொடுப்பவனுக்குக்கூட ‘ஆசார்ய’ பட்டம் கொடுத்து “ந்ருத்யாசார்யன்” என்னும்படியாக, நம் தேசத்து டீச்சர்கள் தங்களுடைய வித்தையில் தேர்ச்சி பெற்றிருந்தது மட்டுமல்லாமல் ஒப்பற்ற ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே பெரிய ஸிம்ஹம், தான் ஸேன் என்ற உஸ்தாத் அக்பர் ஸபையில் இருந்திருக்கிறான்.
ravi said…
அவனுடைய ஸங்கீத ஆசார்யர் ஹரிதாஸைப் பற்றிப் படிக்கும்போது அவர் ரிஷி மாதிரியான மஹானாக இருந்திருக்கிறாரென்று தெரிகிறது. ஹரிதாஸ் ஸ்வாமி என்றே சொல்கிறார்கள்.
இங்கேயே திருவையாற்றிலே நூறு வருஷத்துக்குள்ளே மஹா வைத்யநாத சிவன் என்று ஸங்கீத வித்வான் இருந்திருக்கிறார்.
ravi said…
பெயரையே சொல்லாமல் ‘சிவன்வாள்’ என்றே சொல்லும்படியாக அத்தனை உயர்ந்த வாழ்க்கை நடத்தியிருக்கிறார். ஒருநாள் சிவபூஜை தப்பினது கிடையாது, ஒருவேளை ஸந்த்யாவந்தனம் தப்பினது கிடையாது. வெளியூர்களில் கச்சேரிக்குப் போகிறபோது பூஜைப் பெட்டி வந்துசேராவிட்டால் அன்றைக்குப் பட்டினிதான். ஸாயம் ஸந்த்யோபாஸனைக்குக் குந்தகமில்லாமல் கச்சேரியை மூன்று மணிக்கே ஆரம்பித்து ஆறு மணிக்குள்ளே முடித்து விடுவாராம். அப்படிச் செய்ய முடியாவிட்டால் ஸந்த்யாவந்தனம் ஆனவிட்டு ஆறரை மணிக்கு மேலேதான் கச்சேரி ஆரம்பிப்பாராம். நிர்பந்தமாக எங்கேயாவது நாலு மணி, அஞ்சு மணிக்கு ஆரம்பிக்க நேர்ந்தாலும் ஸரியாக ஸந்த்யா காலத்திலே கச்சேரியை நிறுத்திவிட்டுப் போய் ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டுத் திரும்பிவந்துதான் கச்சேரியை விட்ட இடத்தில் ஆரம்பிப்பது என்று வைத்துக் கொண்டிருந்தாராம்.
ravi said…
பணம், காசு, வழக்கு எல்லாம் முழுக்க அவருடைய அண்ணா ராமஸ்வாமி சிவன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரும் நல்ல பக்தி, ஸாஹித்ய வ்யுத்பத்தி எல்லாம் உள்ளவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிப் பெரிய புராணக் கீர்த்தனைகள் என்று பண்ணியிருக்கிறார். அவர் பொறுப்பிலேயே எல்லாம் விட்டுவிட்டுத் தம்பி ஸங்கீதம், சிவபூஜை, காயத்ரி இதுவே வாழ்க்கை என்று இருந்திருக்கிறார்.
ravi said…
சிஷ்ய பரம்பரை உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம்கூட அவருக்கு இல்லை. ஆனாலும் அவருடைய சீலத்தினால் அவரை தெய்வமாக மதித்துத் தாங்களாகவே ஒரு இருபது முப்பது சிஷ்யர்கள் எப்போது பார்த்தாலும் அவருடைய க்ருஹத்திலே இருந்து கொண்டு, அவர் இவர்களை உட்கார்த்தி வைத்து சிக்ஷை என்று சொல்லிக் கொடுக்காவிட்டாலும்கூட இவர் பாட்டுக்கு ஆத்மார்த்தமாகப் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கேட்டே பாடம் பண்ணிவிடுவார்களாம்.
ravi said…
அந்த இருபது முப்பது பேருக்கும் இவரே சாப்பாடு போட்டிருக்கிறார், குரு தக்ஷிணை என்று எதுவும் வாங்கிக் கொள்ளாமலே!
ravi said…
ஆடல் பாடல் கற்றுக் கொடுத்தவர்கள், கத்தியைச் சுழற்றி யுத்தம் போடச் சொல்லிக்கொடுத்தவர்கள் ஆகியவர்கள்கூட ‘ஆசார்யன்’ என்ற மரியாதைக்குகந்த பெயரைப் பெறும் யோக்யதை ஸம்பாதிக்துக் கொண்டிருந்தார்களென்றால், வேத சாஸ்த்ரம் சொல்லிக் கொடுக்கிறவர்கள், ‘இவனே ஈச்வரன்’ என்று சிஷ்யர்கள் சரணாகதி பண்ணக் கூடியவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதில் ஸந்தேஹமென்ன
HVB said…
என்னையுமொரு வார்த்தையுள் படுத்துப் பற்றினாய் ,,,?? என்பது திருவாசகம்

கருணைக்கடலின் கருணைக்கு நீவிர் உகந்தவர்களாக உள்ளீர்
ஓம்

Really very big heart ♥️ for you
ravi said…
இல்லை சார் .. நான் போட்ட பதிவு என் பெருமையை பற்றி சொல்ல அல்ல .. அன்னையின் கருணா ரஸ சாகரத்தைப் பற்றி மட்டுமே .. உங்கள் புகழ்ச்சிக்கு நான் தரம் அல்ல
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம்முடைய தேசத்தில் இருக்கிற அநேக ராஜ்யங்களில் ஒரே மலைகளும், பிரம்மபுத்ரா மாதிரியான காட்டாறுகளும் மலை ஜனங்களுமே ஜாஸ்தி இருக்கிற அஸ்ஸாமுக்கு அவ்வளவு பெருமை இருப்பதாக நாம் நினைப்பதில்லை
ravi said…
ஆனால் லோகத்திலேயே ‘மாக்ஸிமம்’ மழை பெய்கிற சிரப்புஞ்ஜி அங்கேதான் இருக்கிறது.

ஆதி காலத்தில் அதற்கு நிரம்பப் பெருமை இருந்திருக்கிறது. அப்போது அதற்குக் ‘காமரூபம்’ என்று பேர்.

ஏன் அப்படிப் பேர் என்றால், தக்ஷிணத்தில் பராசக்தி காமாக்ஷியாக இருக்கிற மாதிரி அங்கேயும் ‘காமா’ என்ற பெயரில் பிரசித்தமான சக்தி பீடத்தில் இருக்கிறாள். ‘காமாக்யா’ என்று சொல்வார்கள்.

‘ஆக்யா’ என்றால் பெயர். சிவ நாம மகிமையைச் சொல்வதாக ஸ்ரீதர ஐயாவாள் செய்திருக்கிற ஸ்துதிக்கு ‘ஆக்யா ஷஷ்டி’ என்றே பெயர். ‘காமாக்யா’ என்றால் ‘காமா’ என்று நாமமுடையவள்.
ravi said…
அவளுடைய வாஸஸ்தலமானதால் அஸ்ஸாமுக்கே காமரூபம் என்று பெயர். அதற்கு இன்னொரு பெருமை என்னவென்றால் பகவான் வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் பண்ணி, ஜலத்துக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம் இந்தக் காமரூபம்தான்
ravi said…
மலையும் குன்றுமாகக் கரடு முரடாக இருந்ததால் இந்தப் பிரதேசம்தான் வழுக்கி விழாமல் ‘பாலன்ஸ்’ பண்ணிக் கொள்ள ஏற்றதாக இருந்தது போலிருக்கிறது.

இப்படி பூமாதேவியோடு வராஹ மூர்த்திக்கு ஸ்பரிசம் ஏற்பட்டதிலிருந்து ஒரு புத்திரன் ஸம்பவித்தான்.

பகவத் லீலை நமக்குப் புரியாது. ஸாக்‌ஷாத் பகவானே ஓர் அஸுரனைக் கொன்று, நம்மெல்லோரையும் தாயாகத் தாங்குகிற பூமாதேவிக்கு அநுக்ரஹித்த இந்தப் புத்திரன் எதனாலோ அஸுரனாக இருந்தான்.

நல்லதற்கு மட்டும் God, கெட்டதற்கு Satan (சாத்தான்) என்றில்லாமல், நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ஒரே பரமாத்மாதான் மூலம் என்றுதானே நம் சாஸ்திரம் சொல்லுகிறது?

அதனால் இப்படி பகவானுக்கும் பூமாதேவிக்குமே அஸுரப் பிள்ளை பிறந்தது போலிருக்கிறது.

அந்தப் பிள்ளைதான் நரகாஸுரன்.
அவன் ப்ரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணி மஹா பலத்தைப் பெற்றான்.
ravi said…
அவன் ப்ரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணி மஹா பலத்தைப் பெற்றான். லோகங்களையெல்லாம் ஹிம்ஸித்து நரக பாதைக்கு ஆளாக்கினான்.

அதனால்தான் அவனுக்கு நரகாஸுரன் என்றே பேர் வந்ததோ என்னவோ? ‘பெளமன்’ என்றும் அவனுக்கு இன்னொரு பெயர். ‘பூமியின் பிள்ளை’ என்பதால் இப்படிப் பேர் வந்தது.

அங்காரகனும் (செவ்வாயும்) பூமி குமாரனானதால் அவனுக்கும் ‘பெளமன்’ என்ற பெயருண்டு.

ஸங்கல்பத்தில் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்றோ, அங்காரக வாரம் என்றோ சொல்லாமல், ‘பெளம வாஸர யுக்தாயாம்’ என்றுதான் சொல்கிறோம்.
ravi said…
கிரஹத்தில்தான் நம்முடைய உலகம் மாதிரியே நம்மைப் போன்ற உயிரினம் இருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

கிரேக்க-ரோம ‘மைதாலஜி’களில், செக்கச் செவேலென்றிருக்கிற அந்தக் கிரஹத்தை யுத்த தேவதையாகச் சொல்கிறார்கள்.

‘செவ்வாய்’ என்றே தமிழில் சிவப்பை வைத்துப் பெயர் இருக்கிறது. செக்கச் செவேலென்ற சிவ நேத்ராக்னியில் தோன்றி தேவஸேநாதிபதியாக இருக்கும் முருகனை அங்காரகனோடு இணைத்து நினைக்கிறோம்.
ravi said…
இந்த பெளமனோ கன்னங் கரேலென்று, தான் போகிற இடத்தையெல்லாமும் நரக இருட்டாகப் பண்ணுகிறவனாக இருந்தான்! தேவலோகத்துக்குப் போய் தேவர்களை அடித்து நொறுக்கி ஹதாஹதம் பண்ணினான்.

இந்திரனுடைய குடையையும் – குடைதான் பெரிய ராஜச் சின்னம்; ’வெண்கொற்றக் குடை’ – என்கிறோம். ‘சத்ரபதி’, ‘சத்ரபதி சிவாஜி’ என்றெல்லாம் சொல்கிறபோது ‘சத்ரம்’ என்றால் குடைதான் –
ravi said…
அப்படிப்பட்ட இந்திரனுடைய குடையையும், இந்திரனுடைய தாயார் அதிதியின் குண்டலங்களையும் நரகாஸுரன் பறித்துக் கொண்டு வந்தான். காம ரூபத்தில் ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்கிற ஊரைத் தலைநகராக வைத்துக் கொண்டு கொடுங்கோல் ராஜ்யம் நடத்தினான்.

‘ஜ்யோதிஷபுரம்’ என்றால் ப்ரகாசமான பட்டணம்’ என்று புரிந்து கொள்வீர்கள். ‘ப்ராக்’ என்றால் முன்பக்கம், கிழக்குத் திசை என்று அர்த்தம். ஸூர்யோதயம் கிழக்கில் தானே?

இந்தியாவுக்கே கீழ்க்கோடியில் காம்ரூபத்தில் இருந்ததால், தன்னுடைய இருட்டு ஊருக்கு ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்று பெயர் வைத்தான்.
ravi said…
பஹு காலம் இந்திரனும் பகவானிடம் முறையிடாமல் பொறுத்துக் கொண்டே இருந்தான். வேறே யாரோ அஸுரன் என்றால் பகவானிடம் ‘கம்ப்ளெயின்’ பண்ணலாம். இவனோ பகவானுக்கே அல்லவா பிள்ளையாக இருந்தான்?

அதனால், ‘உன் பிள்ளையின் அழகைப் பார்’ என்று பிராது கொடுத்தால் அது பகவானையே குத்திக் காட்டுகிற மாதிரிதானே என்று நினைத்துப் பொறுத்துக் கொண்டேயிருந்தான்.
ravi said…
அப்புறம் பகவான் கிருஷ்ணாவதாரம் பண்ணினார். எளியவர்களுக்குள் எளிய இடைப் பசங்களோடும் கோபிகா ஸ்திரீகளோடும் பரம பிரேமையோடு உறவாடிக் கொண்டே, அதிமாநுஷ்யமான அற்புதங்களையும் பண்ணினார்.

பூதனையிலிருந்து ஆரம்பித்து அநேக அஸுரர்களை அதி பால்யத்திலேயே ஹதம் பண்ணினார். இந்த இந்திரனே ஏழு நாள் மழை பெய்துவிட்டு ஓய்ந்து போய்த் தன் காலில் விழுந்து சரணாகதி பண்ணி, கோவிந்த பட்டாபிஷேகம் செய்யும்படியாக்க் கோவர்த்தன கிரியைச் சுண்டு விரலில் தூக்கி, கோக்களையும், கோபர்களையும் ரக்ஷித்தார்.
ravi said…
இன்னொரு சந்தர்ப்பத்தில் ப்ரம்மா, ‘இதென்ன நம் தகப்பனாரான பரமாத்மா இப்படி மாயத்தில் மாட்டிக் கொண்டு, மாடு மேய்த்துக் கொண்டு திரிகிறாரே! இந்த மந்தையையெல்லாம் நாம் மறைத்து விட்டாலாவது அவருக்கு மாயை போகுமா?’ என்று தப்பாக நினைத்து, ஆநிரை முழுதையும், ஆயப் பசங்கள் அத்தனை பேரையும் கடத்திக் கொண்டே போய்விட்டார்!

ravi said…
ஷண காலத்தில் பாலகிருஷ்ணன் அவ்வளவு பேருக்கும் ‘டூப்ளிகேட்’ ஸ்ருஷ்டி பண்ணிவிட்டார். ஒரு வருஷம் முழுக்க அந்த டூப்ளிகேட் ஸ்ருஷ்டியையேதான் கோகுலத்திலே இருந்த தாய், தகப்பன்மார்களெல்லாம் ‘ஒரிஜினல்’ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

பரிபாலனை தெய்வமான கிருஷ்ணரால் இப்படி ஸ்ருஷ்டி செய்ய முடிந்தாலும், ஸ்ருஷ்டிக்குத் தெய்வமான ப்ரம்மாவால் தாம் கடத்திக் கொண்டுபோன பசுக் கூட்டத்தையும், இடைப் பசங்களையும் பரிபாலித்துச் சமாளிக்க முடியவில்லை! தெரியாத காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டாடினார்.
ravi said…
தெரியாத காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டாடினார். ஸம்ஹாரம் செய்து விடலாமா என்றால், ப்ரம்மா ஸம்ஹார மூர்த்தியுமில்லையே! கிருஷ்ணர் பச்சைக் குழந்தையாயிருந்ததிலிருந்து அநேக அஸுரர்களை வதம் செய்திருக்கிறாரே,

ravi said…
அப்படிச் செய்ய ப்ரம்மாவுக்கு ஸம்ஹார சக்தியுமில்லை; மனஸும் இல்லை. அப்போதுதான் அவருக்கு மும்மூர்த்தி என்றிருந்தாலும், தாம் தகப்பனாருக்குக் கொஞ்சங்கூட ஸமதையில்லை. தம் ஸ்ருஷ்டி சக்திகூட தகப்பனாரின் அநுக்ரஹத்தினால் கிடைத்ததுதான் என்று தெரிந்தது. ‘
ravi said…
தகப்பனார் எந்த மாயைக்கும் ஆளாகவில்லை. மாயை எவருக்கு அடிமையாக வேலை செய்கிறதோ அப்படிப்பட்ட ப்ரபு அவர். இதைப் புரிந்து கொள்ளாதபடி நம்மைத்தான் மாயை மூடியிருந்தது’ என்று பிரம்மாவுக்கு அறிவு பிறந்தது.

ravi said…
அவர் தாம் கடத்திக் கொண்டு போனவர்களையெல்லாம் கிருஷ்ணரிடமே கொண்டு வந்து கொடுத்து, ஏகமாக ஸ்தோத்திரம் பண்ணி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போனார்.
ப்ரம்மா தப்புப் பண்ணின போது, பெற்ற பிள்ளையென்றும் பாராமல் அவரை இப்படித் திணறப் பண்ணின கிருஷ்ணர்தான் வெளியிலே என்ன வேஷம் போட்டாலும் உள்ளூர பந்து-மித்ரர் என்ற பந்த பாசமே இல்லாமல் தர்ம நியாயப்படி பண்ணுகிறவர்; இவரால்தான் புத்திரன் என்றும் பார்க்காமல் நரகாஸுரனைக் கொல்ல முடியும் என்று இந்திரனுக்குத் தீர்மானமாயிற்று. ஆனாலும், அவதாரம் பண்ணின நாளிலிருந்து எப்போது பார்த்தாலும் அஸுர ஸம்ஹாரத்துக்கே அவரை இழுத்து ச்ரமப்படுத்துவதா என்று இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொண்டிருந்தான்.
ravi said…
கம்ஸ வதமாகி, ஜராஸந்தனைத் துரத்திவிட்டு, பகவான் துவாரகாபுரியை நிர்மாணம் பண்ணிக்கொண்டு அங்கே கொஞ்ச காலம் விச்ராந்தியாக இருந்தார்.
ravi said…
அப்புறம் ருக்மிணியின் உறவுக்காரர்களோடு சண்டை போடு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்.

அதற்கப்புறம் ஸத்யபாமா முதலான அநேக பத்னிகளையும் விவாஹம் செய்து கொண்டார்.

இதிலெல்லாமும் நடுவே சண்டைகள் வந்தன. அப்புறம் கொஞ்ச காலம் எந்தச் சண்டையுமில்லாமல் பத்தினிகளோடு ஸந்தோஷமாக, சாஸ்திரோக்தமான கிருஹஸ்த தர்மங்களைச் செய்துகொண்டு துவாரகையில் வாழ்ந்து வந்தார்.


இனிமேல் அவரை உபத்திரவப்படுத்தினால் பரவாயில்லை என்று இந்திரன் அவரிடம் வந்து நரகாஸுரனுடைய ஹிம்ஸையைப் பற்றி முறையிட்டான்(நாளையும் தொடரும்)
ravi said…
*அர்ஜுனன் கை ரேகை பார்த்த அம்பிகை*🙏🙏🙏
ravi said…
விஜய மங்கை ஆலயத்தில் *சபரி துர்க்காவை ....*

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே

வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

உள்ளம் கரைந்து போனது கறை கொண்டவனின் திரு மனையாளை பார்க்கும் போது ...

----2💐💐💐
ravi said…
நான் தான் கொன்றேன் காட்டு பன்னியை... வேடன் கொக்கரித்தான் ..

அர்ஜுனன் ஆடம்பரமாய் சிரித்தான் ...

விஜயன் என்று எனக்கு பெயர் ..

தோல்வி கண்டதில்லை .

எய்த அம்புகள் வெற்றி குவிக்காத நாளும் இல்லை ..

வேண்டாம் வேடுவனே விரைந்து சென்று விடு.. என் கோபம் உன் வீட்டையும் சாம்பலாக்கும்

எல்லோர்க்கும் வீடு பேறு தருபவன் சிரித்தான் ..

*வா நீயா நானா பார்ப்போம் ..*

அர்ஜுனன் கர்வம் அங்கமெல்லாம் பாய்ந்து கங்கை என ஓடியது ...

கங்கை தனை சிரசில் கொண்டவன் வேடன் என்றே தெரியாமல் பித்தனாயாய் பீத்திக்கொண்டான் தன் பெருமையை...

மல்யுத்தம் இருவருக்கும் ...

---/3👍👍👍
ravi said…
விண்ணோர்களுக்கும் மால் அயனுக்கும் கிடைக்கா ஆலிங்கனம் அகம் பிடித்தவனுக்கு தந்தான்

அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தைவேரறுப்பவன்...

படு தோல்வி விஜயனுக்கு கண்டறியாத காயங்கள் மேனி எங்கும் ....

உடம்மெல்லாம் இருந்த வெற்றி தழும்புகள் ஓடி மறைந்தே வெட்க தழும்புகள் அங்கே கொப்பளித்தன விஜயனுக்கு ..

வந்த தம்பதிகள் இன்னும் வஞ்சனை செய்யாமல் காட்சி கொடுத்தனர் ...

பாசுபதாஸ்ரம் தர ஐயன் அருள் கொண்டான் ..

தடுத்தாள் அம்பிகை ...

----4👌👌👌
ravi said…
வியந்தான் புரம் எரித்த வில்லான் ...

உன் கருணைக்கு ஏது தாழ்....

என்னவளே ஏன் தடுக்கிறாய் கொடுப்பதை ??
என்றே வினவ...

சொன்னாள் கிளி 🦜🦜🦜பேசும் மொழியில் மயிலாய் இருக்கும் மரகத மேனியாள்... 🦚🦚🦚

இவனோ மானிடன் .. கொடுப்பதோ தவம் பல செய்தும் கிடைக்காத அஸ்திரம் ...

இவனுக்கு தரம் உண்டோ பெற என்றே பார்க்கிறேன் கொஞ்சம் என்றாள் ..

விஜயனை அருகில் அழைத்தே வினை ரேகை உண்டோ என்றே பார்த்தாள்..

விழியால் மதனை அழித்தவன் சிரித்தான் ..

....5🙂🙂🙂
ravi said…
தமியேனும் உன் பக்தர்க்குள் தரம் அல்ல இவனென்றே தள்ள நினைத்தாயோ மாதங்கீ ... ?

ஈசன் கண்கள் விஜயன் வினை அகற்ற வினா தொடுத்தன...

விஜயன் தரம் கொண்டவனே ...

நான் உங்களுடன் வரா விடில் அர்ஜுனனும் காமன் போல் எரிந்திருப்பான் ... 🔥

அதை தடுக்க நான் வந்தேன் என்றாள்...

அன்னையின் கருணையில் உறுகிப்போனான் அங்கம் தனில் பெண்ணுக்கு பங்கம் இன்றி சொந்தம் தந்தவன் ..

விஜயனும் விக்கிப்போனான்

வார்த்தை அம்புகள் ஒடிந்து போகவே ...

காஞ்சிக்கு விரைந்தேன் கண் கண்ட தெய்வம் அதைக் காண ...

பேசும் தெய்வம் அது என் கையில் ஓடும் ரேகையில் கண் வைத்தது ...

என் கரங்களில் பசுபதி எனும் அஸ்திரம் மின்னக்கண்டேன் ...

பேசும் சொற்கள் எல்லாம் பெய்யும் கனகம் போல் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்றே வந்தன .... 🙏🙏🙏🙏🙏
ravi said…
🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🦜👣👣👣
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

முன்னுரை

ஸ்ரீ மஹா பெரியவர்கள் ஸ்ரீகாளஹஸ்தியில் 1966ம் ஆண்டு எழுந்தருளியிருந்த போது, தீபாவளிக்கு அண்மையில் அவர்களைத் தரிசிக்கச் சென்ற அடியார்களில் ஒருவர், “தீபாவளிக்கும் கங்கா ஸ்நானத்துக்கும் என்ன தொடர்பு?” என்று விளக்கி வைக்குமாறு பெரியவர்களை வேண்டிக் கொண்டார்.
ravi said…
பெரியவர்கள் புன்னகை பூத்து, “ஏன், தீபாவளிக்கும் கங்கைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதென்று நினைக்கிறாயா? தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை.
ravi said…
கங்கையோ பரமேச்வர ஸம்பந்தமுள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. ‘யமுனா தீர விஹாரி’ என்றே அவரைச் சொல்கிறோம். அதனால் தீபாவளியில் கங்கா ஸ்நானம் என்று ஏன் விசேஷம் கொடுத்திருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதாக்கும்?” என்று கேட்டார்.
அந்த அடியார் அப்படித்தான் எண்ணியிருப்பார் போலும். பேசாமல் இருந்தார்.

ravi said…
அது இருக்கட்டும்; தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கிறாயோ?” என்று ஓர் அபூர்வ விஷயத்தை வினாவாக விடுத்தார் ஸ்ரீ ஜகத்குரு.
ravi said…
இல்லை. பெரியவாள்தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்” என்று அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.

கூடியிருந்தவர்களில் வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா என்று பெரியவர்கள் அலுக்காமல் ஒவ்வொருவராக்க் கேட்டார். எவருக்கும் தெரியவில்லை.

பண்டிதராகத் தோன்றிய ஒருவர், “ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை” என்றார். அவர் சொன்ன மாதிரியிலிருந்து, அதனால் இவ்விஷயங்களை ஏற்பதற்கில்லை என்பது போலிருந்தது.
ravi said…
பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கின்றன. ராமாயண, பாரத, பாகவதாதிகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும் வருகின்றன.
ravi said…
கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும் இவை பெரும்பாலும் மூல ராமாயண, பாரத, பாகவதாதிகளுக்கு complimentaryயாகவே (இட்டு நிரப்பி முழுமை தருவனவாகவே) இருக்கின்றன. ஆகையால், மூலக்ரந்தத்துக்கு contradictoryயாக (முரணாக) இல்லாதவரை இப்படிப்பட்ட additional (கூடுதலான) ஸமாசாரங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிய பெரியவர்கள், “நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோ இல்லையோ?” என்று தெரியாதவர் போலப் பெரியவாள் பண்டிதரைக் கேட்டார்
ravi said…
வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங்களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்லை” என்று கூறிய பண்டிதர் “நரகாஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று பூமாதேவி ஒப்புக்கொடுத்ததாகவும் இருக்கிறது” என்றார்.
ravi said…
வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianshipலேயே விட்ட மாதிரி” என மொழிந்த ஜகத்குரு, “அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப்பட்டிருக்கிறாயோல்லியோ?” என்று கேட்டார்.
ravi said…
கேட்டிருக்கிறேன்” என்றார் அவர்.
“எனக்கென்னவோ அவனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பதுதான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவான் ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும், அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது.
ravi said…
பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு அபிப்ராயம்” என்றார்.
ravi said…
கண்ணன் காவேரி ஸ்நானம் செய்த கதையைத் தெரிந்து கொள்வதில் தங்கள் ஆர்வத்தைச் சில பக்தர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
“அவன் (முதலில் விண்ணப்பித்த அடியார்) ‘கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு’ என்று கேட்டான். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொல்கிறேனென்றால், “ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது” என்று நினைக்க மாட்டானா?
ravi said…
அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்” என்று குறும்பாகக் கூறிய குருநாதர், மேலும் குறும்பாக “இவர் (பண்டிதர்) ”பாகவதத்திலே வந்தால்தான் ஒப்புக் கொள்வேன்” என்று சொன்னாலும் நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்தான் சொல்லப் போகிறேன். காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது.
ravi said…
அதிலொன்றில்** துலா காவேரி மஹிமையைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்களையும் கொடுத்திருக்கிறார்” என அர்த்த புஷ்டியுடன் மொழிந்து, நிமிர்ந்து அமர்ந்து, கதை கூற ஆயத்தமானார்.
** பிரம்ம வைவர்த்த புராணத்தில்
ஓர் அம்மாள் “நரகாஸுர வதக்கதையைக்கூடப் பெரியவாள் வாயாலே கேட்கணும்” என்று விஞ்ஞாபித்துக் கொண்டாள்.
“எல்லாக் கதையும்தான்! ஏதோ இப்போது எனக்கு நினைவு வருகிற வரைக்கும் சொல்கிறேன்” என்று ஸர்வக்ஞர் கடல் மடையாகத் தொடங்கினார். பண்டிதரும் ஓரிரு இடங்களில் எடுத்துக் கொடுக்க, அது மேலும் பொங்கிப் பெருகச் செய்தார்.
கங்கையும் காவேரியுமாக இருந்த அந்தப் பிரவாஹத்தை இங்கே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
(தீபாவளி வரை தொடரும்)
ravi said…
அது 1960 ம் வருடம் என்று நினைவு…
கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார்.
குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார்.
ravi said…
அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் வாசலில் நின்று பூர்ணகும்ப மரியாதையுடன் மஹா பெரியவாளை வரவேற்றுப் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்.
பெரியவாளிடம், “இந்த இடம் ஒரு காலத்தில் பெரிய கீற்றுக் கொட்டகையாக இருந்தது. ‘சங்கர ஹால்’ என்று பெயர். அது தீப்பற்றி எரிந்துவிட்டது. அந்த இடத்தில் மீண்டும் கீற்றுக் கூரை வேயப் பயமாக இருக்கிறது. நல்லதாக ஒரு கட்டிடம் கட்டியாக வேண்டும்… அது இன்னமும் நிறைவேறவில்லை. பல தடங்கல்கள். ஸ்வாமிகள்தான் அனுகிரகிக்க வேண்டும்…” என்றார்.
ravi said…
கவலைப் படாதே, அதுக்குன்னு ஒருத்தர் வருவார்; எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்தா இதை வைத்துக்கொண்டு ஆரம்பி…” என்றவாறு ஒரு சிறிய தட்டைத் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார். அதில் ஒரு ஆப்பிள் பழமும், ஒற்றை ரூபாய் நாணயமும்!

உடனேயே நன்கொடை வசூலைத் தொடங்கி விட்டனர். அப்போது ஒரு அதிசயம்!! அந்தப் பள்ளி வாத்தியாரின் ஒரு நண்பரைப் பார்த்து நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர் ஐநூறு அல்லது ஆயிரம் நன்கொடை தருவார் என்று எதிர்பார்த்தனர்.
ravi said…
ஆனால் அவரோ பள்ளியையே நேரில் பார்க்க வந்துவிட்டார். தலைமை ஆசிரியர் கட்டிட வேலைகளை சுற்றிக் காண்பித்து அவரிடம் விளக்கினார்… சுற்றிப் பார்த்து முடிந்தவுடன் அவருக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை.
ravi said…
உடனே சொன்னார், “பள்ளிக்கு தற்காலிக கூரையெல்லாம் வேண்டாம்… நிரந்தரமாக ஒரு சிறந்த கட்டிடம் கட்டி, மேலேயும் ஒரு மாடி கட்டிடலாம். அதற்கு உண்டான எஸ்டிமேட் தயாரிச்சு என்னிடம் கொடுங்க..” என்றார்.
ravi said…
அவ்வளவுதான்… அடுத்த சில நாட்களில் எஸ்டிமேட் அங்கீகரிக்கப் பட்டு, உடனே மேலும் கீழுமாகப் பள்ளி சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. தவிர இரண்டு பெரிய ஹால்கள் கொண்ட ‘சங்கரஹால்’ உருவாகிப் பள்ளிக்கே அழகும் பெருமையும் சேர்த்து விட்டது. இதையெல்லாம் தாண்டி ‘சாரதி கலையரங்கம்’ என்ற பெயரில் ஒரு பிரும்மாண்டமான கலையரங்கம் வேறு. ஐந்நூறு ஆயிரம் என நன்கொடை எதிர் பார்த்தவரிடமிருந்து ஒரு பெரிய பள்ளியே லட்சணத்துடன் சீக்கிரம் கிடைத்துவிட்டது.
“கவலைப் படாதே, அதுக்குன்னு ஒருத்தர் வருவார்; எல்லாம் நல்லபடியாக நடக்கும்…”
மஹா பெரியவாளின் தீர்க்க தரிசனமான வேதவாக்கு பலித்தது.
சென்னையிலுள்ள ஒரு பிரபல ஸ்கின் டாக்டர் மஹா பெரியவரை தரிசிக்கச் சென்றார்.
ravi said…
எவ்வளவு காணிக்கை வைத்திருக்கிறாய்?”
“நூற்றியோரு ரூபாய்…”
“இவ்வளவுதான் கொடுப்பாயோ? நீ எவ்வளவு பெரிய டாக்டர்?”
“பெரியவா உத்திரவுப்படி செய்கிறேன்.”
“அதற்காகத்தான் கேட்டேன். கும்பகோணம் மடத்தின் சார்பில் அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம் நடக்கிறது. கடைசி கர்மாக்களை செய்கிற இடம் திறந்தவெளியாக இருக்கிறது… அதற்கு காம்பவுண்டு சுவர் கட்டித்தர முடியுமா?”
“பெரியவாளின் ஆக்ஞை.”
ravi said…
ஆனால் அதற்குள் வேறொரு பக்தர் தானே முன்வந்து அந்தப் பணியை நிறைவேற்றி விட்டார் என்பது தெரிய வந்ததும், “சரி, வேற வேலை இருந்தால் சொல்கிறேன்…” என்று டாக்டரை அனுப்பிவிட்டார் பெரியவா.
ravi said…
சிவராம சாஸ்திரிகள் என்பவர் ஒரு ரிக்வேத விற்பன்னர். அந்த டாக்டரிடம் தோல்நோய் சிகிச்சை பெற்று வந்தார். சம்ஸ்க்ருத பாடசாலையில் பேராசிரியராகவும் வேலை பார்த்து வந்தார். அந்த டாக்டர் ஒருமுறை பாடசாலை மாணவர்களிடம், “நான் சாஸ்திரிகளை மட்டுமல்ல, அவரிடம் இருக்கும் ரிக் வேதத்தையும் சேர்த்துக் காப்பாற்ற விரும்புகிறேன்…” என்று விளையாட்டாகச் சொன்னார்.
டாக்டரின் இந்தப் பேச்சு பெரியவா செவிகளுக்கு எப்படியோ போய்விட்டது.
அடுத்த தடவை டாக்டர் தரிசனத்திற்கு போனபோது, “நீ சாஸ்திரிகளைக் காப்பாற்றி வருகிறாய் சந்தோஷம்… ரிக் வேதத்தையும் காப்பாற்றுவதாகச் சொன்னாயாமே!”.
“ஆமாம்… அவருக்கு மருந்தில் ஓர் அக்கறை வரவேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னேன்…”
ravi said…
பெரியவா ஒரு புன்னகையுடன், “இவ்வளவு அக்கறையாக உன்னைப்போல் சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்” என்று டாக்டரைப் பாராட்டினார்.
கூட்டமில்லாத ஒரு நாளில், பெரியவாளுடன் பேசுகிற வாய்ப்பு டாக்டருக்கு கிடைத்தது. பல தோல் நோய்களைப் பற்றி பெரியவா துருவித்துருவி விரிவாகக் கேட்டறிந்து கொண்டார். பிறகு அவருக்கே உரித்தான முறையில், சில ஆன்மீக விளக்கங்களும், பழங்கால தமிழ் வைத்திய நிவாரணங்களையும் விவரித்தார்.
மேலும் சித்த மருத்துவ முறை பற்றிப் பெரியவா கூறிய நுட்பமான செய்திகள் டாக்டரைப் பிரமிக்க வைத்தன.
ஹோட்டல்களில் மாவாட்டுவதுதான் அந்த மயிலாப்பூர் பாட்டிக்கு வாழ்வு. பாட்டிக்கு வெண்குஷ்டம் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவிவிட்டது. “பார்க்கவே நன்னாயில்லே, வேலைக்கு வரவேண்டாம்…” என்று பலர் சொல்லிவிட்டார்கள்.
ravi said…
வேலை போயிற்று. ஆனால் வேளை தவறாமல் பசிக்கிறதே! வாழ்வாதாரத்தை தொலைத்த பாட்டி, சதாராவில் முகாம் இட்டிருந்த பெரியவாளைப் போய்ப் பார்த்துக் கதறினார்.
ravi said…
இவ்வளவு தூரம் ஏன் வந்தே? சென்னை கீழ்ப்பாக்கம் லாண்டன்ஸ் சாலையில், நடராஜன் என்று ஒரு தோல் டாக்டர் இருக்கார்… அவரிடம் போய்க் காண்பி. அவரே மருந்து கொடுத்து குணப் படுத்துவார்…”
பாட்டி டாக்டரைச் சந்தித்து விபரம் சொன்னார்.
டாக்டர் நெகிழ்ந்தே போனார். உலகம் போற்றும் மஹா பெரியவா, ஒரு சாதாரணான என்னையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாரே!!! நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேனோ? என்று உருகினார்.
அந்தப் பாட்டிக்கு பிரத்யேக கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட, என்ன ஆச்சரியம், வெண்குஷ்டம் மறைந்து பாட்டி மீண்டும் வேலைக்குச் செல்லலானாள்…
டாக்டர் நடராஜன் வெளிநாட்டில் படித்திருந்தாலும் கூடியவரை நமது பூஜை புனஸ்காரங்கள்;
ravi said…
ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து வந்தார். பாட்டியை குணப்படுத்தியதை பெரியவா அறிந்து கொண்டார்.
பெரியவா தரிசனத்திற்கு எப்போது டாக்டர் போனாலும், அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் விசாரிப்பார்கள்… “நீ ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பாயா?”
ravi said…
சில சமயங்களில் என் மனசு எப்படிச் சொல்கிறதோ அதன்படி நடப்பேன்…”
“நீ மேல் நாட்டில் படித்தவன்… அதெப்படி நம்முடைய வைதீக அனுஷ்டானங்களில் ஈடுபடுகிறாய்?”
“அங்குள்ள மக்களின் வாழ்க்கை இயந்திர ஓட்டம்தான்; வெறும் பணம், உடலின்பம், வசதிகள் மட்டும்தான்… ஆனால் நமது வாழ்க்கை முறையில் அமைதி இருக்கிறது; ஆன்மீகத் தேடல் இருக்கிறது; மனிதப் பண்பாடு இருக்கிறது; இன்னும் பசுமையாக இருக்கும் கலாச்சாரம் இருக்கிறது. நான் இங்கேயே இருந்திருந்தால் கூட, ஆன்மீகத்தில் எனக்கு இவ்வளவு ஈடுபாடு வந்திருக்காது. வெளிநாட்டு வாசம், எனக்கு ஒரு வரப்பிரசாதம்!!”
ravi said…
பெரியவாளுக்கு டாக்டருடைய பதில் ரொம்பத் திருப்தி அளித்திருக்க வேண்டும். ஒரு ஆப்பிளை எடுத்துப் பந்தாடி டாக்டரிடம் எறிந்தார். டாக்டர் அதை சந்தோஷத்துடன் கேட்ச் பிடித்தார்.
டாக்டர் பெரியவா திருவடிகளைக் கேட்ச் பிடித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. டாக்டர் வெறும் Skin specialist; பெரியவா Kin specialist அதாவது உறவு முறைகளை நன்கு பிணைத்து வைப்பவர். தோல் டாக்டர் என்பதால், தோல் நோய்களை மட்டும் நீக்குபவர்; பெரியவா Soul doctor ஆத்மாவைப் பீடிக்கும் பிணியை அறவே நீக்குபவர்…
ASN said…
மெய் சிலிர்க்க வைத்தது
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 24* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
ravi said…
*7வது ஸ்லோகம்*
ravi said…
7. *தேவியின் ஸ்வரூபம்*

தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்
ravi said…
க்வணத் காஞ்சி தாமா கரிகலப கும்ப ஸ்தன நதா
பரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வதனா
தனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா 7
ravi said…
அன்னை சிறிய மணிகள் ஒலிக்கும் ஒட்டியாணத்தை அணிந்தவள்;

யானையின் மத்தகம் போன்ற பெருத்த ஸ்தனங்களால் சற்று வளைந்தவள்;

சிறிய இடையுடையவள்;

சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற திருமுகமுள்ளவள்;

வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை தரித்தவள்;

இத்தகைய, சிவ-சக்தி ஸ்வரூபியான பரதேவதை எங்கள் எதிரில் நின்று காட்சியளிக்கட்டும்.

மணிபூரகச் சக்ரத்தில் தேவி எப்படி பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.🦚🦚🦚🦜🦜🦜
ravi said…
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* 🌷🌷🌷பதிவு 24..7th Oct 2021
ravi said…
*1.ஓம் ஸ்ரீ மாதா*

2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ

3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |

4. சிதக்நிகுண்ட ஸம்பூதா

5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா

7. சதுர்பாஹு ஸமந்விதா |

8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா

9.காராங்குசோஜ்ஜ்வலா ||
ravi said…
*பட்டினத்தார் தொடர்கிறார் ....* 😰😰

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?

10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்!
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!

துறவியே ஆகிப் போனாலும் ஒவ்வொரு ஆண்மகனும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றி முன்னோர்கள், ஞானிகள், சித்தர்கள் ஆகியோரின் ஆசிகளை பெற்றுய்வோம்.👣👣👣
ravi said…
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
TV Ganesh said…
அர்ஜுனன் சரணாகதி.

குருக்ஷேத்ர யுத்தம் ஆரம்பித்தது..
குருவும் உற்றார் உறவினரும் போரிலே எதிர்தரப்பிலே நிற்க..
குழம்பியவன் அஞ்சி சொந்தமும் நட்பும் பகையாயிடுமோ..
குந்தி புத்திரன் கௌந்தேயன் மனமுடைந்து காண்டீபம் துறந்து...
கண்ணனின் பாதங்களில் அடைந்தான் சரணாகதி.

சர்வாங்கமும் தரையிலே பட பணிந்தவனை..
சர்வலோகநாயகன் கரத்திலேந்தி வருடுகின்றான்..
சர்வ தர்மத்தையும் விட்டு நானே கதி..
சரணடைந்து விடு என்னையே என சொல்லும் கீதா ஆசார்யன் பாதம் சரணடைந்து விடுவோம்.

பாண்டவ தூதனாக வெண்ணுடையிலே வந்தவன்..
பாரிலே கீதையை போதிக்கும் குருவாய் காவி உடையிலே காட்சியளிக்கின்றான்..
பாரதப் போரிலே ஆயுதம் ஏந்தாது சாரதியாக நிற்பவன் சர்வலோக ரக்ஷகன்.
பாவியோ புண்ணியனோ பேதம் பாராது அருளிடுவான் பாதம் பணிந்திடு.

காலச்சக்கரத்தை தன்னிச்சையால் சுழற்றிடுவான்..
கயிறு கொண்டு எண்ணக்கரு திரையை அடக்கிடுவான்..
கரத்திலேந்தி அபயம் அளித்திருந்தார் பணிந்தோரை..
கண்ணனே நம் சம்சார சாகரத்தேரின் சாரதி..
சரணாகதி அடைந்தேன் கிருஷ்ணா.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
ravi said…
நாமெல்லாம் அர்ஜுனன் தான் ... காண்டீபம் தினம் தினம் நழுவ விடும் விஜயன் நாம் ... நம் மீது நம்பிக்கை இல்லை ... தரம் தாழ்த்தி பார்ப்பதில் அகம் மகிழ்ந்து போகிறோம் ... கண்ணன் போல் ஒருவன் காண்போமா ... வீழ்வேன் நான் என்றே நினைத்தாயோ என்றே கேள்வி கேட்போமோ ??💐💐💐
Moorthi said…
அம்மனுக்கு எவ்வகையில் அலங்காரம் செய்தாலும் பக்தர்களின் மகிழ்ச்சியே... 🙏🙏🙏👌
ravi said…
சாந்தம் எனும் நெய்யில் தவம் எனும் திரி தொடுத்தே விரதம் எனும் விளக்கேற்றினேன் ...

வரும் நாதமெல்லாம் என் நாபி எனும் அன்னையின் கர்ப்பத்தில் உதித்த முத்துக்கள் ...

அதிலே பக்தி எனும் மாலை தொடுத்தே பரம் என்று உனை அடைந்தேன் ..

இனி எனக்கு பொருந்தாத பொருள் ஒன்றும் இல்லை ...

வின் மேவும் புலவர்கள் , அமரர் தங்கோன் , அம்புலி , ஆதித்தன் அங்கி , குபேரன் பொதிமுனி காதி , பொருப்படை கந்தன் போதிர் பிரம்மன் முராரி புராரி கணபதி காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் ...

அதிலே என்னையும் சேர்த்தான் இன்று புலி சுரக்கும் பாலை புவியில் ஓடவிட்டவன் ..... 🐯🐯🐯🐯🐯
Moorthi said…
அருமையான பொருத்தமான விளக்கம் 👌👌🙏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 116🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*5th Assignment - NGW*
ravi said…
If helping others is your priority then be rest assured that Almighty will never leave you helpless.

Until you master your mind you are its slave.
ravi said…
Today we are meeting an interesting personality late Mr.R.W.Kuklani JGM of NGW shortly known as RWK ....

He was not a person of people oriented and was under wrong notion or orientation that shouting at others would always demonstrate one's leadership position ..

He was thoroughly mistaken . 99.99% of people respect the position and once it goes all possessions would also leave .. Like at the end of a chess game king and pawns have to go to same box .

Power was only on board ....

He could easily be provoked but all said and done he was a gem of a person and could help people within his reach .

Since he had very few friends because of his attitude he developed a habit of telling people his cock and bull stories to show how important he was in L&T ...

People who go to him have to necessarily hear his story for 15min minimum .

People who cannot stand to this have to circulate their curriculum vitae in the market ... and update him on this regularly .... 💦💦

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை