அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 26 பதிவு 22

          அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 26

பதிவு 22


*கேள்வி பதில் நேரம்* 

 *பதிவு 22* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 26

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 *பட்டர்*  

வாழும் வழி ஒன்று கண்டு கொண்டேன் ஒருவர் மனத்தே வீழும் வழி அன்று விள்ளும் வழி அன்று ... 

அலர் கதிர் அபிராமி உங்களை காக்கட்டும் 

இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌




*நான்* ஐயனே ... பல சந்தேகங்கள் உங்கள் பதிலால் தீர்ந்தது உண்மை .. 

உங்கள் திருவாயால் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்ட அம்பாளின் அழகை பல நாமங்கள் மூலம் , எங்களுக்கு விரிவாக சொல்ல முடியுமா ... 

இது கேள்வி இல்லை ஒரு வேள்வி ...  🥇🥇🥇

*பட்டர்* .. 

சொல்ல நானும்  கொடுத்து வைத்திருக்க வேண்டும் . 

இப்படி கேட்டதற்கு நான் தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் ரவி ...

*பட்டர்

அவள் அழகை சொல்லும் நாமங்களை ஒன்றாய் *கருணை* எனும் பால் குடத்தில் கலந்து அதில் *காரூண்யம் , விழியின் கடை* எனும் மலைத்தேனையும்

பொடி செய்த கோடி மூட்டை கற்கண்டையும் சேர்த்து

 *பக்தி* எனும் பச்சை கற்பூரம் , 

*சரணாகதி* எனும் கோடி மூட்டை சர்க்கரை , 

 *அன்பு* எனும் ஏலக்காய் , 

 *கவனம்* எனும் கிராம்பு , திராட்சை , 

*பிறர் வாழ வேண்டுதல்* எனும் வெல்லம் கோடி குண்டா அண்டாக்களில் சேர்த்து இவைகளின் கலவை என்னுடைய இந்த தொகுப்பு ....🥇🥇🥇

நான் .. மயக்கம் போட இருந்த போது பட்டர் கைத்தாங்களாய் என்னை பிடித்துக்கொண்டார்...

பட்டர் .. என்ன ரவி இவ்வளவு பலவீனமாக இருக்கிறாய் ... நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்க வில்லையே 




நான் ... அவர் காது பட சொன்னேன் ... 

தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரார் பாகத்து உமை மைந்தனே .. 

உலக ஏழும் பெற்ற சீர் லலிதாவின் நாமங்கள் 

காரமர் மேனி கணபதியே 

என் சிந்தையுள் எப்பொழுதும் நிற்க கட்டுரையே 💐💐💐

*பட்டர்*

எந்த ஓர் ஆணும், உலகிலேயே உனக்கு மிக அழகாகத் தெரியும் பெண் யார் என்று கேட்டால், 

முதல் பதில் *அம்மா* என்றே வரும். 

இங்கே அழகு அன்னையின் அன்பினாலும், அக்கறையினாலும், காட்டும் பாசத்தினாலும் உள்ளத்தைக் கொள்ளையிட்டதால் வருவது.




*ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி

எல்லையில்லாத அழகின் உருவமாய்த் திகழ்கிறாள். 

சுகந்தம் வீசும் சம்பக, புன்னாக, 

அசோக புஷ்பங்களின் நறுமணத்தை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தே கொண்ட கூந்தல் கற்றையை உடையவள் அம்பிகை.

அவள் நெற்றியில் திகழும் கஸ்தூரி திலகம்…

மன்மதனுடைய வீட்டின் தோரணம் போன்ற புருவங்கள்… 

முகத்தில் உள்ள அழகு வெள்ளத்தில் துள்ளி விளையாடும் மீன்களைப் போன்ற கண்கள்… 🐟🐟🐋🐋

நட்சத்திரத்தின் பொலிவைப் பழிக்கும்படியான மூக்குத்தியுடன் கூடிய மூக்கு… ⭐⭐⭐

சூரிய சந்திரர்களே தோடுகளாக விளங்கும் செவிகள்… 🌞🌝

பத்மராகக் கண்ணாடியைப் பழிக்கும் கன்னங்கள்…

பவழ வாய்; 

சுத்த வி(த்)தையே முளைத்தது போன்ற அழகிய பல் வரிசை… – 

இப்படி அம்பிகையின் கட்புலனாகும் முக அழகு வர்ணிக்கப்படுகிறது.

பச்சைக் கற்பூரம் மணக்கும் தாம்பூலம், 

ஸரஸ்வதியின் வீணா நாதத்தினும் இனிய குரல்.. 

சொக்கனையும் சொக்க வைக்கும் புன்முறுவல்…

 – என அங்க அவயங்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் செயல் வெளிப்பாடு வர்ணிக்கப் படுகிறது.

மங்கல சூத்திரமும் அட்டிகையும் பதக்கமும் விளங்கும் கழுத்து.. 

காமேச்வரனுடைய விலையற்ற அன்பை விலைக்கு வாங்குவது போன்ற ஸ்தனங்கள்… 

நாபியாகிற பாத்தியில் இருந்து மெல்லிய கொடி போல் எழும் ரோம வரிசை; 

மூன்று மடிப்புக்களால் அழகிய வயிறு… 

சிவப்புப் பட்டாடை… 

சிறு கிங்கிணிகளுடன் கூடிய அரைஞாண், 

காமேசுவரன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் துடைகள், 

இரத்தினக் கிரீடங்கள் போன்ற முழங்கால்கள்… 

திரண்ட கணுக்கால்… 

ஆமை முதுகு போன்ற புறங்கால்..

வணங்குவோர் அகத்திருளைப் போக்கும் இரத்தின தீபங்களைப் போன்ற நகங்கள் பொருந்திய திருவடித் தாமரைகள்…👣👣

இவ்வளவு உவமை நயத்துடன் அழகுமிளிரத் திகழும் அம்பிகை, 

அன்பினால் சிவந்த உள்ளம் போல் 

அழகினால் சிவந்த திருமேனி உடையவள். 

அழகு மிக்க ஆபரணங்களுக்கு அழகு செய்யும் அவயங்கள் தோன்ற, அவள் அழகின் பொக்கிஷமாய்த் திகழ்கிறாள்.🥇🥇🥇




*பட்டர்*  சொல்லிக்கொண்டே போகலாம் பதிவு மிகப்பெரியதாய் ஆகிவிடும் .. நாளை தொடர்வோம் 

நான் ... சொக்கிப்போனேன் சொக்கனையும் சொக்கியையும் இப்படி சொக்க சொக்க வர்ணிக்க முடியுமா ? 

முடியும் அபிராமி பட்டர் ஒருவரால் மட்டுமே ...* 🥇🥇🥇

சொக்கப் பானை எரிந்ததைப்போல் பட்டர் எரிப்புரை  மேனியுடன் கலந்து போனார் .. 🙏🙏🙏




      👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

Comments

Ramani said…
கேள்வியின் நாயகனே அந்த கேள்விக்கான பதிலையும் தமிழில் அழகாக வர்ணித்து கூறும்போது நாங்களும் (சக்தி குடும்ப அங்கத்தினர்கள்) சொக்கித்தான் போகிறோம்...

அருமை ...

Savitha said…

🙏🙏🙏🙏🙏🙏

Ramani sir
இது நாங்கள் வைத்த பெயர்


Savitha said…
😊😊😊😊

அஹா அருமை

அற்புதமான பதிவு மிகவும் ஆழகான வர்ணனை
🙏🏻🌷
கேள்வியின் நாயகன் = கவிகுமார் வாழ்க
🙏🏻🙏🏻🙏🏻😊

Gayatri said…
Beautifully compiled 👌🏼👌🏼
Raji said…
👌👌Enna varnanai..Pramadam..I will hold myself without fainting till the next post atleast.
TN Ketharam said…
Papu Enters 60!

One way I am feeling happy that my daughter is entering sixty, but the other way I feel sorry that she is getting old! But she will be always young at heart and ready to help the needy.

I got married to Janaki ( Thitd daughterof Fl. Lt. Sitaraman) at Chromepet, Chennai in 1958.( I was 26 then and she was 22).
TN Ketharam said…
We first started our family at New Delhi where I was working as Engineering Assistant in the Department of Lighthouses and Lightships, Ministry of Transport. Chitra was born in 1959 as wedding anniversary gift. Then we moved to Ranchi, Jharkand (old Bihar) in 1960, since I was offered the post of Asst. Engineer( Designs) in Heavy Engineering Corporation which was under construction .
TN Ketharam said…
Papu was born in 1961 and Geeta in 1962. I was not aware that Janaki came from 3D family! My f-in- law had 3D plus one son. My self and brother-in-law Ramani at Nagpur repeated the same!
T N Ketharam said…
The life at Ranchi was smooth and lovely with my 3 lovely daughters and caring wife. All were studying in Sacert Heart Convent and all became school captains too!

There was great joy and surprise when we got Suresh in our family in 1973 after eleven years gap!

Chitra got married to Ramani at Chennai on 25/5/80. My first grand daughter Preetha was born at Ranchi on 11/4/81.

Then I realised that my earnings are not matching to my needs. I took a job in Iraq with Arvind Constructions
TN Ketharam said…
on five years contract as Deputy Project Manager( Designs). My family stayed at Ranchi for 2 more years for the completion of Degree courses for Papu and Geeta. Suresh was in St. Xavier convent in school, Papu was in B. Sc ( maths) in St.Xavier college and Geeta was in B. Com at Marwari college. Ramani and Chitra were first one to settle in Singapore in 1980. Janaki shifted to Ashok Nagar, Chennai with three kids in 1983. She was managing them all alone.
TN Ketharam said…
She found Sri. Ravikumar and fixed the marriage of Papu with him. I saw Ravi and his parents just a week before their before marriage. It was conducted at T. Nagar,Chennai in a grand scale on 8/2/85. I got back to Iraq.
TN Ketharam said…
Life is not always smooth. I got a message from Ramani ( Singapore) that my wife is unwell and needs immediate care. I was with her during her last forty days,staying in different Hospitals. She left us on 12/2/86. Adi and Arun were just two months old!

By God’s grace my brother Krishnan promised to take care of Geeta and Suresh during my stay in Iraq. Geeta got accountant job in my company Arvind Constructions, Cannaught Place, New Delhi. Suresh got admission in English medium school at Pusa Road, in Karolbagh near by my brother’s house.
TN Ketharam said…
On completion of contact at Iraq, I joined as General Manager in my company Head office at New Delhi, where Geeta was also working. I set up my own family at Rajendra Nagar, New Delhi with my son and daughter. I was looking for a match for Geeta. Luckily Mr. Ramanathan’s brother Mr. Gurumurthy was working in Delhi. The marriage was settled and conducted on 6/7/87 at Srirangam, with the help of my brother Ramani, who was doing Real Estate business there.
TN Ketharam said…
Geeta and Ramanathan were working at Mumbai. Ramanathan was in Hotel Leela Pentas and Geeta in some other firm. She came to Delhi for her first delivery and Ramya was born on 4/10/88.

Ramanathan was searching for a job at Singapore. He got a job at Jakarta with my s-in-law Ramani’s help. He left with Geeta and Ramya to Jakarta in 1990.
TN Ketharam said…
I was staying alone with Suresh at Rajendra Nagar. Since I had to go on tour often, I have to leave alone my son under the care a cook. More over my savings were not enough for higher studies of Suresh. I had to shell out 50% of my salary on house rent alone! More over I was constructing a house for me at Srirangam with the help of my brother Ramani. My brother Ramani was also was in need of me to expand his real estate business. So I left my son under the care of my brother Krishnan again and left for Srirangam in 1990.
T N Ketharam said…
Suresh joined Hospitality Management at Manipal and was working as lecturer there on completion. He was very keen to go to foreign for further studies. Based on GMAT score and interview, he was selected in Nanyang Technical University, Singapore for MBA in finance. My house was also ready at Srirangam and we were staying together for an year or so there. He did PG in computer course from St. Joseph College, Trichirappalli.
TN Ketharam said…
After his departure I rented out my house and stayed with my brother.

During my stay at Srirangam, I was visiting Ravi and Papu almost every year.Ravi was transferred to many places. They were staying at Awarpur, Kansbahal,Nalasupara, etc., While in Mumbai, Papu told me that she will give a companion for Arun soon. She took me to Andheri during her Medical check up. The doctor showed me two black dots in ECG and congratulated that I will be grandfather for Twins! We were happy and careful. I took her with me to Srirangam for safe delivery of first twins in our family. Papu delivered on 13/8/91 at Dhanvantri Hospital,Thiruvanaikoil. Ravi chose nice names for twins as Akshaya and Subhiksha and they were taken care of by my brother’s wife Chandra very well.
TN Ketharam said…
Ravi and Papu shifted to Boriville and then purchased twin flats at Dahisar and stayed with his parents.

Then they moved to Bhubaneswar, Orissa. We visited them many times and had darsan of Puri Jagannath often.

Ravi joined Hyderabad Metro as CFO ten years back and settled here.

I too shifted to Singapore after Suresh’s marriage once for all after selling my house!
TN Ketharam said…
Now coming to Papu: I went through the comments written by many of her relations and friends. I am really proud of her achievements and I feel nothing left for me to add. But I noticed one thing special. Even though we named her as Lakshmi, she is least interested in accumulating gold,silver and silk Sarees. But there will not be shortage of wealth, in her home! Mr. Ravikumar is ideal life partner for her. He is great achiever in his official field and secured best CFO award from Chartered Accountants Association.

Many of you may not be aware that reads lots of spiritual books and writes lots of spiritual stories in Tamil. No wonder if they are published in book form soon
TN Ketharam said…
Papu wished that all her children should stay in India married and settled and achieved it recently just before COVID-19. It is all due to her effort and God’s Grace. Vinodhini showed her management skill in the marriage arrangements.

Arun, Akshaya and Subhiksha are doing very well. They are sure to reach top positions in due course.

For all our family members, visiting India means, staying with Papu!
TN Ketharam said…
I wish Ravi and Papu a happy retired life with lots of grand children, relations and friends.

I am also thankful to my wife Janaki who gave me four jewels to take care of me so well so long , even though she left us early.

My life itself is an example of my efforts and God’s Grace. I am lucky to have three good CA,S-in-laws. My D-in-law Kavitha is very well qualified and friendly with all.

God has blessed me with 3 grandsons, 6 grand daughters and 5 great grand daughters all spread over the world!

Wish all of you best future with health, wealth, happiness and mental peace.

Ketharam.

Hyderabad. 12/7/2020.
ravi said…
*The Speck Of Dust*

The dust once thought that if she could ever fly
she would never come back to earth.
So, she prayed and meditated and chanted
and did all that was in her power
to make the Gods fulfill her desire.

And the Gods did listen.
The wind blew with such power
that it took the dust over the trees,
over the mountains, into the sky.
She travelled everywhere.

She felt she fulfilled her destiny.
The magic played on for some time.

But now..she wanted to return back n rest.
Enough of this travel, enough of this
sense of reaching somewhere.
Being this enlightened, self awakened
dust particle, higher than the rest !

She wanted to be dust again.
She wanted to be..just be.
And she cried from the deepest core of her heart.
She cried till the Gods sent her back.

There back on earth, she rested like never before.
She realised she was always this.
Always perfectly herself but all that journey
to the sky and beyond, was perhaps
only to make her see so.
And how she smiled then..looking at the sky.
It was amazing.

All her knowledge had dropped.
All desires had dropped.
She was once again, a nothing.
But within that nothingness
there was this amazing Grace,
The Grace of Being.

And she settled. She finally settled as she was.
No seeking, no searching..Just being, AS IS.

And then the winds smiled, the seeds dropped,
the sun shone, the rains showered
and flowers sprouted.
The dust had dissolved.
She was no more.
She had become All.

🙏🙏🙏
ravi said…
"டாக்டரின் கனவில் வந்த டாக்டர்"*….

பெரியவா ஸாக்ஷாத் வைத்யநாதன்! வில்வ இலை, வெள்ளைத் தாமரை, துளஸி தீர்த்தம், விபூதி, இப்படி இயற்கையோடு ஒட்டி உறவாடும் வைத்யத்திலிருந்து, பிரண்டை துகையல், மிளகு ரஸம், வாழைத்தண்டு salad, என்று நம்முடைய ‘நாக்குக்கு’ வக்கணையாக உணவோடு கூடிய வைத்யத்தோடு மட்டும் இல்லாமல், தானே தன் தொண்டையை தடவி விட்டுக் கொள்வது, வயற்றை தட்டிக் கொள்வது என்று பக்தர்களுடைய வலியை தான் வாங்கிக் கொண்டோ, அல்லது அதை…. தான், இருந்த இடத்திலிருந்து அப்படியேவோ தீர்த்திருக்கிறார்.
ravi said…
ஆனால், இந்த ஸம்பவத்தில், தன்னுடைய பக்தரான ஒரு டாக்டருக்கு, அவருடைய கனவில் வந்து, வைத்ய முறையை சொல்லி ஸரி செய்திருக்கிறார்.

அந்த பாக்யசாலியான டாக்டர் பெங்களூரை சேர்ந்தவர். ரொம்ப கைராஸியான, ப்ரபலமான டாக்டர் என்றாலும், நோயாளிகளின் ஹார்ட் பீட்டை, ஜாஸ்தி பில் போட்டு, ‘படார்! படார்!” ரென்று அடிக்க விடமாட்டார். ஏழைகளுக்கு முடிந்தவரை இலவசமாகவே வைத்யம் பார்ப்பார். அநேகமாக எல்லா நோயாளிகளுமே, இவரிடம் வந்தால், நல்லபடி ஸொஸ்தமாகித்தான் செல்வார்கள்.
ravi said…
இவரைப் பற்றி கேள்விப்பட்டு, தன்னுடைய வயிற்றுவலிக்கு தீர்வு தேடி, இவரிடம் வந்தார் ஒருவர்.

“இது ஒண்ணுமில்ல… ஸாதாரண வயத்து வலிதான் ! ரெண்டு நாள்ள ஸெரியாயிடும்..”

மருந்து குடுத்தார். ரெண்டு நாளில் போகவில்லை! விடேன்-தொடேன் என்று, அந்த பேஷண்டும், இந்த டாக்டரைத் தவிர, வேற யாரிடமும் போகமாட்டேன்! என்று அடமாக வந்து, வேற வேற மருந்துகளை முழுங்கிக் கொண்டிருந்தார். பலன் மட்டும் இல்லை!
ravi said…
டாக்டருக்கோ ஒரே கவலை! “எந்த மருந்துக்குமே கேக்காம, அப்படியென்ன வயத்து வலி!”…….

வேற ஒன்றுமே செய்யத் தோன்றாமல், தன்னுடைய ‘மஹா chief டாக்டர்’-ரிடம், மானஸீகமாக ப்ரார்த்தனை செய்தார். அவர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கும் வருபவர்தான்.

“பெரியவா…. எனக்கு ஒண்ணுமே புரியல! ஒங்களோட க்ருபைனால, இங்க வர்றவாளுக்கு என்னால நல்லபடி வைத்யம் பண்ண முடியறது… ஆனா…. இவருக்கு மட்டும் ஏன் என்னோட எந்த மருந்துமே ஒத்துக்கல?… அவரோட வயத்து வலி குணமாகணும்… காப்பாத்துங்கோ! பெரியவா…”
ravi said…
MMS பக்தரிடமிருந்து போனதோ இல்லையோ? ஓடி வந்துவிட்டார்! டாக்டரின் கனவில்…

“இதுக்கு ஏன் இத்தன கொழம்பணும்? அந்த பேஷன்ட் எப்போ ஸாப்படறார்?…ன்னு மொதல்ல கேளு! அவரோட ஸாப்பாட்டு நேரத்தை மொதல்ல ஸெரி பண்ணு…. அப்றம் எல்….லாமே ஸெரியாய்டும்!….”

‘ஆஹா! பெரியவா! இது எனக்கு தோணாம போச்சே!…..

முழித்துக் கொண்டார்! தூக்கத்திலிருந்தும், அந்த பேஷன்ட்டின் வைத்ய முறையிலும்!

மறுநாள் அந்த பேஷன்ட் வந்ததும்…..

“நீங்க எங்க வேலை பாக்கறீங்க?….”

“மில்லுல டாக்டர்….”

“ஒங்களோட ஸாப்பாட்டு டைமிங் எப்டி?….”

“மில்லுல…. வேலை முடிஞ்சதும், ஸாயங்காலம் அஞ்சு மணிலேர்ந்து… ஆறு மணிக்குள்ள என்னோட ஸாப்பாட்டை முடிச்சிடுவேன் டாக்டர்…. அதுதான் ரொம்ப நாளா பழக்கமா ஆயிடிச்சு!…”
ravi said…
நீங்க மொதல்ல… ஒங்க ஸாப்பாட்டு நேரத்தை கரெக்ட் பண்ணுங்க… இப்போ நீங்க ஸாப்படற நேரம் தப்பு! காலேல…breakfast-டை மிஸ் பண்ணவே கூடாது! மத்யானம் ஸாப்பாடு, ராத்ரி ஸாப்பாடு கரெக்ட்டா ஸாப்பிடுங்க…. மொத்தத்ல… நீங்க மூணு வேளையும் ஒழுங்கா ஸாப்பிடணும். ஒரு வாரம் கழிச்சு வந்து சொல்லுங்க…..”

கனவான நம் வாழ்க்கையையே, தலைகீழாக புரட்டிப் போட்டு, தன்னுடைய ஶரணாம்ருதம் எனும் அருமருந்தை, அம்மாவாக இருந்து புகட்டும் நம் பெரியவா, அந்த டாக்டரின் கனவில் வந்து தந்த prescription, பலனில்லாமல் போகுமா?
ravi said…
ஒரு வாரம், டாக்டருடைய “கனவு chief” தந்த diet chart-டை கர்ம ஶ்ரத்தையாக follow பண்ணினார். வயத்து வலி, அஞ்ஞானம் போல் மறைந்தது! ஒரு வாரம் கழித்து டாக்டரிடம் வந்தார்……

“டாக்டர்…. என்ன மாயமோ? நீங்க சொன்னபடி மூணு வேளையும் ஒழுங்கா ஸாப்ட்டேன்….. இப்போ வயத்துல வலியே இல்ல! நா…. நீங்க குடுத்த மருந்தைக் கூட நிறுத்திட்டேன் டாக்டர்!.”

“அன்னம் ப்ரஹ்மம்”… பகவானின் ஸ்ருஷ்டியில், அனைத்துமே மஹிமை வாய்ந்ததே! அதிலும் பாலுக்கடுத்தபடி, நம் அனைவரையும் வளர்க்கும் அன்னத்தின் மஹிமை எப்பேர்ப்பட்டது!

கண்டதை தின்னாமல், ஸாத்வீகமான எதையுமே நேரத்துக்கு, அளவோடு ஸாப்பிட்டால், நோயின்றி வாழலாம் என்பதை பெரியவா அழகாக உணர்த்திய சம்பவம்!
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

தேசக் கொடியில் தர்ம சக்கரம் இடம் பெற்றதன் உட்காரணம்.

நாம் கருத்துச் செலுத்தாவிடினுங்கூட, நாம் அறியாமலே அவ்வீசனேதான் தனது தர்ம சக்கரம் நமது சுதந்திர நாட்டின் புதிய கொடியில் மத்திய ஸ்தானம் பெறச் செய்திருக்கிறாரென்றே தொடங்கினோம்.
ravi said…
நாமறிந்த அளவில், செல்வாக்குப் பெற்ற நவீனக் கொள்கைத் தலைவர்கள்தாம் சுதந்திர பாரதக் கொடியின் அமைப்பை வகுப்பதிலும் முக்கியம் பெற்றவர்கள். அவர்கள் உலகவியல் முன்னேற்றத்தையே பெரிதாகக் கருதுபவரெனினும், நல்லொழுக்கம், தியாகம், தீரம் ஆகியவற்றில் மிக்கவர்கள்.
ravi said…
தேசாபிமானம் என்று தங்களுக்குத் தோன்றும் ஒன்றில் தன்நலம் மறுத்துப் பற்றுதல் கொண்டவர்கள். அவர்கள் தெய்வ சம்பந்தமில்லாத நன்னெறிக் கோட்பாட்டை தர்மமாகக் கருதுபவர்கள்
ravi said…
. அத் தர்மத்தை நாட்டுப் பிரஜைகள் யாவரும் பற்றியழுக வேண்டும் என்பதே தமது கொள்கை என்பதைக் காட்டுமுகமாக நமது கொடியில் ஒரு புராதனச் சின்னம் நடுநாயகமாக இடம் பெறே வேண்டுமெனக் கருதினர். அவ்விதத்தில்தான் தற்போது நமது கொடியின் நடுவில் தர்ம சக்கரம் இடம் பெற்றிருப்பது.

ravi said…
தற்காலத்தில் நமது நாட்டில் வழங்காதது என்றே சொல்லக்கூடிய - தெய்வ சம்பந்தமற்ற - ஒரு பெருமதத்தின் சின்னம் என்பதாலேயே 'மதச் சார்பற்றவர்'களாகக் கருதப்படக்கூடிய அத்தலைவர்கள் இத் தர்ம சக்கரத்தை தேர்ந்தெடுத்தனர் என்றாலும் சாரநாத்திலுள்ள ஸ்தம்பத்தில் இடம் பெற்றுள்ளதான இச்சின்னம் சரித்திரப் பிரசித்தி பெற்றவரும், சாஸனம் தோறும் தம்மை 'தேவாநாம் பிரியன்' - 'தேவர்களுக்குப் பிரியமானவன்' - என்று தெரிவித்துக் கொண்டவருமான அசோகச் சக்கரவர்த்தியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் நம்மெல்லோருக்கும் பெருமையூட்டுவதேயாகும். ஆயினும் பகவானைப் புறக்கணித்து 'அறநெறி மட்டுமே' என்ற நடைமுறைச் சாத்தியமற்ற தர்மம் குறித்துக் குறைபாடும் தெரியவே செய்கிறது.
ravi said…
தனது உலக இராஜ்யத்தில் தர்மம் என்ற சட்டத்தை விதித்து நடத்துபவனாகவும், அதனைப் பின்பற்றுவோர்க்கு நலன்கள் வழங்குபவனாகவும், அல்லாதாரைத் தண்டிப்பவனாகவும், அவர்களுக்குப் பிறவிகளை உண்டாக்கும் ஓர் உயிருள்ள ஈசனைக் காட்டி அவனிடம் பிரியம், பயம் இரண்டுங் கலந்த பக்தி என்பது சுவாபாவிகமாக (தன்னியல்பாக) ப் பிறக்கச் செய்தாலே பொதுஜன சமூகம் தர்மம் என்ற ஒழுங்குமுறைக் கோட்பாட்டைப் பின்பற்றும். இந்த யதார்த்த உண்மையை மறந்து அறநெறியை மட்டும் போதித்த அம்மதம் நடைமுறையில் பயன் தரவில்லை. அம்மதம் பெரியோர்களும் சிறிது காலத்திலேயே நாடெங்கிலுமிருந்த அவர்களது சங்கத்தின் அலங்கோலப் போக்கிலிருந்து இவ்வுண்மையைக் கண்டு தெளிந்தனர். அதன் விளைவாக அவர்கள் தம் மத ஸ்தாபகரையே அந்த ஈசனின் இடத்தில் வைத்து ஹிந்துக்கள் தங்களது கடவுளருக்கு எழுப்பியதை விடவும் மிகப் பெரிய பிம்பங்களும், ஆலயங்களும் அவருக்குச் சமைத்து வழிபட்டு மந்திராதி ஆகமங்களும் வகுத்தனர். அதோடு ஹிந்துமத தேவதா கணங்களையே
ravi said…
நேராகவே தழுவலாகவோ தமது மதத்திலும் இடம் பெறச் செய்தனர். தெய்வ சம்பந்தமற்ற தர்மத்தைத் தனது இராஜ்யத்தில் பரப்பியதாக இன்றைய சீர்திருத்தவாதத் தலைவர்கள் கருதும் அசோகச் சக்கரவர்த்தியும் தம்மைத் 'தேவர்களுக்குப் பிரியமானவன்' என்ற விருதினாலேயே தெரிவித்துக் கொள்வதும் அம்முறையில்தான். இதைக் கவனியாது, அம்மத ஸ்தாபகர் அம்மதத்தின் மூல உருவத்தை தெய்வ சம்பந்தமில்லாததாகக் கூறி, அதைத் தமது 'தர்ம சக்கரப் பிரவர்த்தனம்' (ஸம்ஸ்கிருதத்தின் திரிபு மொழியான பாலியில் 'தம்ம சக்கப் பவர்த்தனம்') என்ற பிரசித்தமான வாக்குத் தொடரால் குறிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நமது கொடி நடுவில் சக்கரத்தைப் பொறிக்கச் செய்துள்ளனர்.
ravi said…
அந்த வாக்குத் தொடருக்குப் பொருள் 'தர்மமாம் சக்கரத்தை நன்கு சுழன்றோடச் செய்தல்', அதாவது 'அம்மதக் கோட்பாடுகளை நாற்றிசையும் பரப்புதல்' என்பதேயாகும். எப்படியாயினும் சுதந்திர பாரதத்தில் அறநெறி நன்கு பரவித் தழைக்குமாறு அரசாங்கம் பாடுபடும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு உருவகமாகவே தர்மசக்கரம் தற்போது கொடி நடுவில் பொறிக்கப்பட்டுள்ள தென்பது அம்மட்டில் மகிழ்ச்சிக்குரியதே.
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
இராமபிரான் அக்னிதேவனிடம், "அழிவு இல்லாதவன் நீ! சீதையை இகழ்ந்து ஒதுக்குவதற்கு யாதொரு குற்றமும் இல்லாதவள் என்று மெய்ம்மையான மொழியைக் கூறினாய். அதனால் உலகம் இகழ்ந்து ஒதுக்க யாதொரு பழியும் இல்லை.

இனி இவள் நீக்கத்தக்கவள் அல்ல என்று ஏற்றுக் கொண்டேன்" என்றான்.

தேவர்கள் வேண்டிக் கொள்ள, பிரம்ம தேவன், இராமபிரானிடம், அவன் யார் என்பதைக் கூறுகிறான்.

இராமபிரானே திருமாலின் அவதாரம் என்றும், அவதார காரனங்களையும், விளைவுகளையும் பிரமதேவனும், பரமேஸ்வரனும் விளக்கிக் கூறுகிறார்கள்.

பிறகு சிவபெருமான் வைகுந்தப் பதவி பெற்றுவிட்ட தசரதன் இருக்குமிடம் சென்று, அங்கு போய், அவனுடைய மகன் இராமன் பிரிவினால் தசரதன் அடைந்த துயரத்தை, இராமனைச் சந்தித்துப் போக்கிக் கொள்ளுமாறு கூறுகிறார்.

சிவபெருமான் கட்டளைப்படி, தசரதன், தன் மகனைக் காண நிலமிசை வந்து சேர, இராமன் அவன் திருவடிகளில் வணங்கி ஆசி பெற்றான்.

தசரதன் காலில் வீழ்ந்து வணங்கிய சீதையையும் தசரதன் வாழ்த்தி ஆசி கூறினான்.

இலக்குவனை அருகில் அழைத்து, அவனைத் தழுவிக் கொண்டு அவனைப் பாராட்டுகிறான்.

அப்போது, இராமன் தசரதனிடம் ஒரு வரம் கேட்கிறான்,
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 110*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
எங்கும் நிறைந்த இறைவனே!

யான் செய்த நற் கர்மப்பயனாலோ, நினது கருணையாலோ என் முன்னே நீ தோன்றினாலும்,

நிர்மலமான உன் இணையடி கமலத்தை எப்படிக் காண்பேன்?

உன்னை வணங்க ஆவல்கொண்ட தேவர்கள் முண்டியடித்து அவர்களது மாணிக்கமிழைத்த கிரீடங்கள் என்னை (என் பார்வையை)த் தடுக்கின்றனவே!🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 125* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
*45. தாதுருத்தமாய நம: (Dhaathuruthamaaya namaha)* 🪔🪔🪔
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
தாதா
விதாதா *தாது ருத்தம:* ||5
ravi said…
படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று.

அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி,

தன் மகனான நாரதரை அழைத்து,
“உன் தந்தை ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

குற்றமில்லாத பெண்ணாக அவளை உருவாக்கப் போவதாகப்
பெருமிதம் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள்.🙏
ravi said…
*தம்மடியார் பிறவி மரணம் இரண்டும் அடையார் இந்த வையகத்தே*🌞🌞🌞
ravi said…
மரணம் அடையாமல் எந்த உயிரும் உயிர் வாழ முடியுமா ?

எல்லாம் தெரிந்த பட்டர் ஏன் அந்தாதி படிப்பவர்களை இப்படி குழப்புகிறார் ?


புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம் I

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே

க்ருபயா பாரே பாஹி முராரே II

என்று பாடிய ஆதி சங்கரர் தவறாகவா சொல்லி இருப்பார் ?

ஒரு சின்ன அலசல் புரிவோமா இன்று ?💐💐💐
ravi said…
வெங்காலன் , எமன் அந்தகன் , வெங்கூற்று , மரலீ இன்னும் பல பெயர்கள் கொண்டவன் எம தர்ம ராஜன் ...

தன் கடமையை தர்மத்தை எந்த உணர்ச்சியும் இல்லாமல் புரிபவன் ...

பந்த பாசங்கள் இல்லாதவன் ..

கருணை கொண்டவன் ஆனால் அதை காட்ட தயங்குபவன் ...

கருணைக்கும் அவன் செய்யும் தொழிலுக்கும் எப்பொழுதும் conflict of interest உண்டு ...

அவனை கண் காணிக்க எப்பொழுதும் powerful ஆன CCTV cameras எங்கும் உண்டு ...

அவனை சுற்றி நிறைய whistle blowers உண்டு ...

அதனால் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் அவன் கடமை தவறாது பணி புரிந்தே ஆக வேண்டும் 🙏
ravi said…
வினை வழியே அடும் காலன் என்கிறார் பட்டர் ... அதாவது நாம் செய்யும் வினைகள் மூலம் தான் நம்மை இவன் தொடர்பு கொள்கிறான் .. செய்த வினைகளுக்கு ஏற்ப பலன் தருகிறான் ..

ஒரு உடம்பில் இருந்து உயிரை பறித்து வேறு உடலில் சேர்க்கிறான் .. just a dignified courier job ..

செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு பிறவிகள் கிடைக்கின்றது ... ..

சரி இனி அம்பாளிடம் வருவோம் ... 🙏🙏🙏
ravi said…
ஒரு குழந்தை தரையில் விளையாடிக் கொண்டிருக்கின்றது ... அப்பொழுது அது தன்னை அசிங்கம் செய்து விடுகிறது என்று வைத்துக்கொள்வோம் ..தாய் , வேலைக்காரி வந்து அந்த குழந்தையை சுத்தம் செய்யும் வரை பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டாள்

ஓடிச் சென்று அந்த குழந்தையை எடுத்து சுத்தம் செய்து வேறு உடை போட்டு பவுடர் போட்டு மையிட்டு புது உடை அணிவித்து என் ராஜா என்று முகத்தில் முத்தாரம் பொழிவாள்

நம் மானிட பிறவியில் 3 மலங்கள் இருக்கின்றன ஆணவம் கன்மம் மாயை ... என்று

இவைகளின் நடுவே அந்த குழந்தையைப்போல் அழுது கொண்டு , சுழன்று கொண்டே இருக்கிறோம் ..

யார் வந்து நம்மை சுத்தம் செய்வார்கள் ?
ravi said…
உயிர் பிரியும் முன் அம்பாளை நினைப்பவர்களுக்கு அவளே வளைக்கை அமைத்து அரம்பையர் சூழ வந்து அஞ்சேல் என்கிறாள் ... உயிர் பிரிக்கும் காலனிடம் .. இதோ பார் இவன் என் குழந்தை ... நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி மலங்களை சுத்தம் செய்து கொஞ்சி முக்தி எனும் முத்தாரம் கொடுத்து அழியா வீடும் தருகிறாள் ...

முக்தி கிடைத்து விட்டால் இனியேது மரணமும் பிறவியும் ??

பட்டர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று புரிகிறது அல்லவா ? 👌👌👌
ravi said…
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸ்ர்வ ஷத்ரு வினாஷனம் |

ஜயாவஹம் ஜபேன்னித்யம் அக்ஷய்யம் பரமம் ஷிவம் || 4 ||🌞🌞🌞
ravi said…
ஆதித்ய ஹ்ருதயம் ஒரு புண்ணிய மிக்க மந்திரம் ஆகும்.

எதிரிகளை வீழ்த்தும். தினமும் பக்தியுடன் அதை பாராயணம் செய்பவர்களுக்கு நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும்.👍👍👍
ravi said…
ஆதித்தன் இதயத்தை தொடும் இந்த ஸ்லோகம்

புண்ணியங்களை கண்ணியமாக கொடுக்கும் இந்த ஸ்லோகம்

வன்னியர்களுக்கும் கண்ணியர்களுக்கும் நண்ணியவருக்கும் நல்லதே செய்யும் இந்த ஸ்லோகம்

பகை காணா தகை தரும் ... தரை தொடா ஜயம் தரும் ...

ஜடாமுடி கொண்டவனின் அருள் தரும் ..

நீண்ட கேசம் உடைய கேசவனின் மனம் தரும் ...

தாயினும் பரிந்து சகலரை அணைக்கும் குணம் தரும் ..

தூரத்தே நெருப்பை வைத்து சாலத்தை தரும்

தூயவர் இதயம் போல் துலங்கிடும் ஒளி தரும்

இருள் நீக்கம் தரும் .. இணையில்லா இந்த ஸ்லோகமே 🌞🌞🌞
ravi said…
*19 - கழறிற்றறிவார் நாயனார்*🌞🌞🌞
ravi said…
கார்கொண்ட கொடைக்
கழறிற்றறிவார்க்கும் அடியேன்”

திருத்தொண்டத் தொகை.
ravi said…
கொடுப்பதர்கென்றே பிறந்தவன் கொடையில் கோமேதகம் ...

குணத்தில் மாணிக்கம் ...

பிறர் துயர் காண பொறுக்காதவன் ...

பித்தன் மனம் கவர்ந்தவன் ...

சித்தம் எல்லாம் சிவம் தனை நிறைந்தவன்

மன்னன் பதவி கிடைத்தும் மண்ணில் போகும் வாழ்வு இது என்றே மறுத்தனன் ...

தினம் பாடும் பாடலில் ஆடலரசன் ஆடும் தண்டை சத்தம் கேட்பவன் ..

ஒரு நாள் தண்டையும் கொலுசும் கேட்க வில்லை என்றே உயிர் மாய்க்க போனான் ...

தடுத்து நின்றான் தன்னிகரில்லா பொன் மேனியன் ..

சுந்தரரின் தமிழில் மெய் மறந்து போனேன் ...

உன் மெய் மடிய விடுவேனோ .நெய் ஊற்றி விளக்கு ஏற்றும் உன்னை நான் காக்காமல் விடுவேனோ ...

தன்னில் அணைத்தான் ஈசன் ... தன்னிகரில்லா வேந்தன் அவனை ....

ஆடும் அரசன் அவனை தனக்குள் அணைத்து க்கொண்டான் மெய்யறிவு கொண்ட காஞ்சி வாழ் வேந்தனும் அன்றே 🪔🪔🪔
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 205🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
There is no better exercise than reaching the heart and elevating people.

No anger inside means no enemy outside.

Focus more on your desire than on your doubt. The dream will take care of itself.

Judge a person by their questions rather than their answers.
ravi said…
* *Genesis of Dhamra Port*

It was an interesting story ... It all started by L&T with two foreign partners .

Seeing the delays in getting approval and global financial crises one of the partners left the project and after some time the second partner also followed .

L&T was left alone for nearly 10 yrs and nothing happened or progressed during this 10 years ..

L&T did not want to put their entire stake on this project . Their expertise lies only in construction and not O&M .. so started looking for a strategic partner outside but this time an Indian Company ..

TATA is not an EPC company nor they have enough experiences in building any infra facilities on their own .

All their furnace building orders were secured invariably by us so we became their most preferred client but certainly not a partner in a business .

They were building a steel plant both at Gopalpur and Kalinga .

They needed imported coal , limestone , iron ore to their upcoming plants .

They were looking for a dedicated berth or port so that their logistic cost could be brought down significantly .. by that time we were desparate in getting an alliance and start a dust gathering project 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 111* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 23👍👍👍
ravi said…
த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த்தம்

ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம்

ஸகல மருணாபம் த்ரினயனம்

குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் 23🦋🦋🦋
ravi said…
அர்த்தநாரிஸ்வர ரூபத்தை சொல்வது போல ஆரம்பித்து சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது.

ஈஸ்வரனைப்போல முக்கண்ணும், கிரீடத்தில் சந்த்ர கலையும், கொண்டிருக்கும் அன்னையை விளித்து சொல்லப்படுகிறது....

ஈசன் வெண்மையானவர், ஆனால் அன்னை சிவந்த நிறத்தவள் (அருண நிறம் பற்றி நிறைய பார்த்தோம் முன்னரே).

ஈஸ்வரனின் இடது பாகத்தில் அன்னை இருக்கிறபடியால் ஈசனின் வெண்மை மறைந்து அருண நிறம் வந்து விடுகிறாதாம்.

பாதி உடலாக இருக்கும் அன்னைக்கு அந்த பாதியில் த்ருப்தியில்லாமல் இன்னொரு பாதியினையும் தனதாக்கிக் கொண்டாளாம்.

ஆகையால் ஈசனின் சந்திரனும், மூன்றாம் கண்ணும் அன்னை கொண்டிருப்பதாகவும், இரண்டு ஸ்தனங்களால் சற்றே வளைந்தும் இருப்பதால் இந்த சந்தேகம் கொண்டதாக சொல்கிறார் ஆச்சார்யார்.

இந்த ஸ்லோகமானது ருண விமோசனத்திற்கு பாராயணம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 111* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*31* कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता - *கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா* -🙏🙏🙏
ravi said…
*தோள் வளை*

இதைப்பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் .
ravi said…
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும்.

எல்லா பெண்களும் அம்மனின் அம்சம்

எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

*1. தாலி* - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

*2. தோடு* - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

*3. மூக்குத்தி* - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

*4. வளையல்* - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

*5. ஒட்டியாணம்* - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
ravi said…
*6. மோதிரம்*

எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

இவை தவிர..
நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை,

அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க *தங்கம்* ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.
இவ்வாறு அணிவதன் சிறப்பு..🙏
ravi said…
*கொலுசு* : பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

*மெட்டி* : மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.

👍👍👍
ravi said…
வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

*மோதிரம்* : விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.

அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

*மூக்குத்தி* : மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம்

இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.

காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்.

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது

*மூக்குத்தி* . சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும்.

இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

*காதணி* : தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள்.

*காது குத்துதல்* என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது.

காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.🙏🙏🙏
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
என்றென்றும் திகழும் எங்கள் ராமானுஜர்*

எவ்வளவு நூற்றாண்டு மாறினாலும், அறிவியல் வளர்ச்சி என்ன தான் வளர்ந்தாலும், நாம் வாழ்கின்ற நாட்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். எங்கே சமத்துவம்? அப்படி என்றால் என்ன?. இதே கேள்வியை 1000 ஆண்டுக்ளுக்கு முன் ஒரு மகான் எழுப்பினார்.
ravi said…
வைணவத்தின் வைரமணி,
வேதாந்தசிகாமணி,
சூடிகொடுத்த நற்பெண்மணி,
அவளுக்கு முன்னான மாமுனி,
அரங்கனுக்கு உடையவன்,
அன்பருக்குள் உறைபவன்
அந்த மகான் தான்  இராமானுஜர். வரும் பிப்ரவரி மாதம் 13.02.2022 அன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரத்தில், அமைந்துள்ள ஷம்ஷபாத் ராம்நகரத்தில் 261 அடி உள்ள  ராமாநுஜாசார்யாவுக்கு சிலை நிறுவப்பட இருக்கிறது. ராமானுஜாசார்யாவுக்கு சிலை எதற்கு? அந்த சிலைக்கு நாம் ஏன் சமத்துவ சிலை என்று அழைக்க வேண்டும்.
இதற்கு மிக எளிமை மற்றும் அருமையான விளக்கம் தருகிறார் எச்.எச்.சின்ன ஜீயர் சுவாமி ஜி. அவா்களின் பார்வையில், பார்வை மிகவும் பிரமாண்டமாக இருந்தால், பார்வையை தூண்டிய ஆளுமையை கற்பனை செய்து பாருங்கள். மிக பிரமிப்பு, அதை சாதாரணமாக சொல்வதென்றால். சிலை ராமானுஜாச்சாரியாவின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. அந்த
ஆளுமையின் குணங்கள் பல...
ravi said…
எப்போதும் அமைதியாக,
ஆனால் செயலுக்குத் தயாராக,
ஒரு பார்வையாளர்,
ஆனால் ஒரு சமூக சீர்திருத்தவாதி.
ஒரு ஆன்மீக தலைவர்,
ஆனால் ஒரு புரட்சியாளர்.
ஒரு நிலையான உத்வேகம்,
அவரது வாழ்நாளில் மற்றும் காலம் முழுவதும்.
ராமானுஜாச்சாரியா பற்றிய
சில சிறப்பம்சங்கள்:
ravi said…
1017 ஆம் ஆண்டு பெரும்புதூரில் பிறந்த ராமானுஜாச்சாரியா, பாரதம் முழுவதும் பயணித்து, அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு, அதே நேரத்தில், தனிப்பட்ட தேவைகளில் கவனம் செலுத்தினார்.
ravi said…
அனைவரின் நலனுக்காகவும், நல்வாழ்வுக்காகவும், ராமானுஜாச்சாரியா, வேதங்களின் சாரத்தை 9 வேதங்களின் வடிவில் வழங்கினார். அவரது சொந்த இதயத்தின் தூய்மை, அவரது வழிகாட்டிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், உயரடுக்கு மற்றும் சாமானியர்களை பக்தி, தெய்வீக அன்பின் பாதையில் நடக்கச் செய்ய அவருக்கு உதவியது. வைஷ்ணவத்தின் தீபம் ஏற்றிய  ராமானுஜாச்சார்யா, பக்தி இயக்கத்தின் போதகர் ஆவார். உலகம் மாயை என்ற மாயாவாதக் கருத்தைத் தகர்த்தெறிந்ததோடு, பல தவறான கருத்துக்களையும் நீக்கி மற்ற அனைத்து பக்தி சிந்தனைகளுக்கும் அவர் ஆதாரமாக இருந்தார்.
ravi said…
ராமானுஜாச்சாரியாவின் விஷ்ணு பக்தியின் வைஷ்ணவப் பெருங்கடலின் ஆழத்தில் மூழ்கி, கபீர், மீராபாய், அன்னமாசாரியா, ராம்தாஸ், தியாகராஜா மற்றும் பலர் மாயக் கவிஞர்களாக உருவெடுத்தனர். ராமானுஜாச்சாரியாவை ஏன் சமத்துவத்தின் சின்னமாக குறிப்பிடப்படுகிறோம், என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மதங்கள் மற்றும் சமூக நிலை முழுவதும் சமத்துவத்தை அவர் பரப்பினார்.
ravi said…
வேதங்களுக்கு இணையான, திவ்ய தேசத்தின் மகிமையைப் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். இவர்களில் சிலர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், ஆனால் அவர்களின் பாடல்கள் கோயில்களில் கட்டாயமாக்கப்பட்டன. வயதான காலத்தில், ராமானுஜாச்சாரியா, காவேரி நதிக்கு குளிக்கச் செல்லும் போது, ​​பிராமண அறிஞரான தாசரதியின் ஆதரவைப் பெறுவார். இருப்பினும், திரும்பி வரும்போது பிறப்பால் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த தனுர்தாவின் தோளில் சாய்ந்தபடி வருவார். உடல் நிலையை விட பக்திக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைப் பற்றி இது விளக்குகிறது.
ravi said…
ராமானுஜச்சாரியா என்பது அந்த மாபெரும் நீர்த்தேக்கத்தில் இருந்து, சமத்துவத்தை முன்னிறுத்தும் இன்றைய சிந்தனைப் பள்ளிகள் அனைத்தும், சிற்றோடைகளாக, நீரோடை
களாக, கிளை நதிகளாகப் பாய்ந்துள்ளன.
ravi said…
இது ஒரு வரலாற்று உண்மை.இந்த தெய்வீக ஆளுமை தனது பிரசன்னத்தால் பூமியைப் புனிதமாக்கி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உலகம் அவருக்குக் கடன் கொடுக்காமல், அவரது சித்தாந்தத்தை ஆதரிக்கிறது. அவரது பெயர் நிழலில் உள்ளது. எனவே, மாயாஜால சாரம் காணாமல் போய்விட்டது மற்றும் சமூகத்தில் மதிப்புகள் மறைந்து வருகின்றன.
ravi said…
கண்ணுக்குத் தெரியாத, ஆனால் வெல்ல முடியாத, சுவர்கள் கட்டப்பட்டு, சமுதாயத்தை பிளவுபடுத்துகின்றன. சமத்துவம் என்பது இன்னொரு பெயராகிவிட்டது.  ராமானுஜாவின்
சித்தாந்தத்தின் பிரகாசமே காலத்தின் தேவை.அவனுடைய வடிவமும் அவனுடைய வார்த்தையும் சமுதாயத்தை ஊக்குவிக்கும். இந்த உத்வேகத்தை அனுபவிக்க, அவர் பிறந்த மில்லினியத்தை விட சிறந்த நேரம் என்ன!
ravi said…
அதனால்தான் சமத்துவ சிலை உருவானது. சிலை உங்களுக்குள் எதிரொலிக்கட்டும், சமத்துவத்தின் எதிரொலி. இந்த எதிரொலிகள் சமத்துவத்திற்கான ஏக்கமாக மாறட்டும். இந்த ஏக்கம் சமத்துவத்திற்கு வழிவகுக்கும் செயல்களாக மாறட்டும்.
ravi said…
முக்கிய நிகழ்ச்சிகள்
3.2.2022: அக்னி ப்ரதிஷ்ட
5.2.2022: வசந்த பஞ்சமி
8.2.2022: ரத சப்தமி
11.2.2022: சமுகிக உபநயனம்
12.2.2022: பிஷ்ம ஏகாதசி
13.2.2022: சிலை திறப்பு
14.2.2022: மஹாபூர்ணாஹுதி
சீரார் மதில்கள் சூழ்
திருவரங்கத் திரு நகரினில்
காரார்ந்த மேனியனின்
காலடியைத் துதிப்பவன்
ஆதிரைநட்சத்திரம் கொண்ட
தீதிலா வைணவ ஜோதி
(அவன்)ஓதியதெல்லாம்
“அண்ணலின் அடியார்
அனைவரும் ஒரே ஜாதி!”
என்றும் வாழும் எங்கள் ராமானுஜர்

*விஷ்ணுவின் ஆன்மிகத் தகவல்களை அறிந்துகொள்ள நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்*
👇👇👇
ravi said…
தூப்புல் குல விளக்கே.....!!!

உன் அருள் அன்றி எனக்கு ஒரு நல்துணை இன்மையினால் *
என் இரு வல்வினை, நீயே விலக்கி இதம் கருதி *
மன்னிய நல் திருமந்திரம் ஓதும் பொருள் நிலையே *
பொன் அருளால் அருளாய் புகழ் தூப்புல் குலவிளக்கே.
ravi said…
பிள்ளையந்தாதி -15

உலகமே புகழும் தூப்புல் குலத்திற்கு தீபமாகப் ப்ரகாசிக்கும் ஸ்வாமியே! உம்முடைய க்ருபையைத்தவிர வேறு நல்ல ஸஹாயம் எனக்கு இல்லை. எனக்கு ஹிதம் எது என்பதை நீரே சிந்தித்து, அடியேனுடைய புண்ய,பாப இரண்டு வலிமையான கர்மங்களை விலக்கி, ஸ்திரமான உயர்ந்த மூல மந்த்ரமான திருவஷ்டாக்ஷரம் தெரிவிக்கும் மூன்று நிலைகளையும் ( ஸ்வரூப நிஷ்டை, உபாய நிஷ்டை, புருஷார்த்த நிஷ்டை ) அடியேன் பெற்று உய்யுமாறு அருள் புரிய வேண்டுகிறேன்.
ravi said…
ஸ்வரூப நிஷ்டை -
1.பிறர் தன்னை அவமானப்படுத்தினாலும், அது ஆத்மாவுக்கு அல்ல, என்று வருத்தமில்லாமல், இருப்பது.

2. தன்னை அவமதிப்பதால், தன்னுடைய பாபத்தை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்களே என்று அவர்களிடம் தயையுடன் இருப்பது.

3. தான் , நினைத்து நினைத்து வருத்தப்பட வேண்டிய தன்னுடைய குற்றங்களை, அவர்கள் எடுத்துச் சொல்லி நினைவுபடுத்தினார்களே என்று, அப்படிப்பட்டவர்களிடம் நன்றியுடன் இருப்பது.

4. அப்படி அவமதிப்பவர்கள், பகவானால் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்து, அவர்களிடம் மனம் மாறுபடாமல் இருப்பது. தன் குற்றத்தை அவர்கள் சொல்வதால், தன் பாபம் கழிகிறது என்று மகிழ்ச்சி.
ravi said…
உபாய நிஷ்டை -

1.பகவானே கதி என்று இருப்பது .

2. மரணம் வந்தாலும் சந்தோஷத்துடன் வரவேற்பது.

3. பகவான் ரக்ஷகன் ; அவன் எப்படியும் காப்பாற்றுவான் என்று மனம் தேறி இருப்பது.

4. பரண்யாஸம் ஆன பிறகு , அதே பலனுக்கு
வேறு ப்ரயத்னம் செய்யாமல் இருப்பது.

5. அநிஷ்ட நிவ்ருத்தி, இஷ்டப்ராப்தி —பகவானுடைய பொறுப்பு என்று இருப்பது.
ravi said…
புருஷார்த்த நிஷ்டை -

1. சரீர சம்ரக்ஷணத்தில் நோக்கம் தவிர்த்து, கவலை இல்லாமல் சாஸ்த்ரங்கள் அனுமதித்த போகங்கள் , தன்னுடைய ப்ரயாசை இல்லாமல் தாமே வந்து அடைந்தால் , கர்மம் கழிவதாக எண்ணி , விலக்காமல் அனுபவிப்பது.

2. இன்ப, துன்பம் —சமமாகப் பாவித்து (இன்ப மகிழ்ச்சி ,துன்ப சோகம் ) பகவத் கைங்கர்யத்தைச் செய்து வருவது.

3. பகவத் அனுபவமான பரமபதத்தைப் பெற, மிகவும் ஆவலுடன் இருப்பது .
ravi said…
பூரி ஜெகன்நாதர் ஆலயம்

பொறுமை கடலிலும் பெரிது என காட்டும் பூரி ஜெகன்நாதர்....

கீழைக் கங்க குல அரசன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் 11ஆம் நூற்றாண்டில் இவ்வாலயம் விரிவுபடுத்தி கட்டப்பட்டது.

ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்படுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.
ravi said…
கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர் இக்கோயில் மூலவர்களாக உள்ளனர்.

மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்துள்ளது.

பூரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன்,
பூரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு தன்னை,பலராமரை, சுபத்திரை சிலைகளை செதுக்குமாறு பெருமாள் கூறினார்.

ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது.

அதைக் கண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர்.

அரசன் அந்த, மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார்.
ravi said…
தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது.

அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார்.

அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார்.

அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை.
ravi said…
இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ
என்ன வயதான தச்சருக்கு ஏதாவது தவறு நடந்துவிட்டதோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான்.

உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு,

இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு நீ கடைபிடிக்காத பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார்.

அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகன்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.
ravi said…
பிரசாதம்

பூரி எனும் புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது,

விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது.

கோவிலில்
இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணி கிழிகளில் கட்டி , உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .
ravi said…
பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று இந்த நிர்மால்ய மகா பிரசாதத்தை விரும்பி வாங்குவார்கள்.

இந்த மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் பக்தர்களுக்கு மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கிறது.

ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.

ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள்.
ravi said…
மேலும் மரண சமயத்தில் நிர்மால்ய பிரசாதத்தையும், புனித துளசியும் தண்ணீருடன் சேர்த்து வாயில் ஊற்றப்படுகிறது.

அதன் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் மரணத்திற்குப் பிறகு இதை உட்கொண்டதால் ஆத்மா எமனுடைய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படும். இது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஊர்மிளாவே அந்த மகா பிரசாதம் ஆவார்.

திரேதாயுகத்தில் இராவணனை வென்ற பிறகு
ஸ்ரீ ராமரும்,ஸ்ரீ லக்ஷ்மணனும் மற்றவர்களும் அயோத்திக்குத் திரும்பினார்கள்.

அயோத்தியா வாசிகளும் அவர்களுடைய வீரதீர செயல்களை கேட்டு மகிழ்ச்சியில் இருந்தனர்...

லக்ஷ்மணனுடைய மனைவி ஊர்மிளா மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்....
ravi said…
திரேதாயுகத்தில் இராவணனை வென்ற பிறகு
ஸ்ரீ ராமரும்,ஸ்ரீ லக்ஷ்மணனும் மற்றவர்களும் அயோத்திக்குத் திரும்பினார்கள்.

அயோத்தியா வாசிகளும் அவர்களுடைய வீரதீர செயல்களை கேட்டு மகிழ்ச்சியில் இருந்தனர்...

லக்ஷ்மணனுடைய மனைவி ஊர்மிளா மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்....

அனைவரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்றதையும், இந்திரஜித்தின் பலத்தையும், அவன் பெற்றிருந்த ஒரு வரத்தை பற்றியம் பேசி கொண்டிருந்தார்கள்.

இந்திரஜித் பெற்ற வரம் என்னவென்றால், எவனொருவன் பதினான்கு வருடம் தொடர்ந்து சாப்பிடவில்லையோ.... எவன் ஒருவன் தொடர்ந்து பதினான்கு வருடங்கள் தூங்கவில்லையோ .அவன் மட்டுமே இந்திரஜித்தை கொல்ல முடியும் என்பதாகும்.
ravi said…
அரண்மனையில் அன்று மாலையே இந்த செய்திக்குப் பின் உள்ள உண்மையை பற்றி அறிய ஒரு கூட்டம் கூடியது

ஸ்ரீ ராமர் லட்சுமணனை பார்த்து, லக்ஷ்மணா! நீ பதினான்கு வருடங்களாக உணவு உண்ணவில்லை என்றால் பஞ்சவடியில் நாம் தங்கியிருந்த போது நான் தந்த உணவு பொட்டலங்களை என்ன செய்தாய் என்று வினவினார் ?

லக்ஷ்மணன் பிரபுவே நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் ஷமி மரத்தில் உள்ள ஒரு பெரிய துவாரத்தில் வைத்திருக்கிறேன் என்றார் .

இது உண்மையா என அறிய விரும்பிய ஸ்ரீ ராமர் ஸ்ரீ ஹனுமானை நீ இப்போது பஞ்சவடிக்கு சென்று ஷமி மரப்பொந்தில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொட்டலங்களை எடுத்து வா என்றார் .
ravi said…
இது உண்மையா என அறிய விரும்பிய ஸ்ரீ ராமர் ஸ்ரீ ஹனுமானை நீ இப்போது பஞ்சவடிக்கு சென்று ஷமி மரப்பொந்தில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொட்டலங்களை எடுத்து வா என்றார் .

யுத்த பூமியில் இந்திரஜித்தின் அம்பால் மயக்கமடைந்த லஷ்மணனை காக்க சஞ்ஜீவினி மலையை ஒற்றை கையால் கொண்டு வந்த நான், அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வர வேண்டுமா என்று சிறிய தயக்கத்துடன் எடுத்து வர புறப்பட்டார்.

பஞ்சவடியை அடைந்த ஹனுமான் அந்த உணவு பொட்டலங்களை பார்த்தார் ...ஆனால் அதை அவரால் எடுக்க முடியவில்லை.

இறுதியில் மிகவும் பணிவாக
ஸ்ரீ ராமரிடம் இயலாமையை தெரிவித்தார்

ஹனுமானால் . அந்த உணவு பொட்டலங்களை தனது அஹங்காரத்தினால் சுமக்க முடியாமல் போனது என்று ஸ்ரீ ராமன் புரிந்துகொண்டார்.

நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் இருந்து இங்கே கொண்டு வருகிறேன் என்றார் லெட்சுமணன்.

லக்ஷ்மணன் தனது தெய்வீக அம்பினால் அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வந்தார்

அவை எல்லாம் ஸ்ரீராமர் முன்பாக சமர்ப்பிக்கபட்டது.
ravi said…
ஸ்ரீராமர் அதிசய பட்டவராக ஆஞ்சநேயரிடம் பதினான்கு வருடங்களாக சேமிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை சரி பார்க்க சொன்னார் .

அப்படி சரிபார்த்தபோது அதில் ஏழு பொட்டலங்கள் மட்டும் குறைவதாக கூறினார்.

ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனிடம் இருந்து ஏழு உணவுப் பொட்டலங்கள் குறைந்ததைப் பற்றி கேட்டார்.

லக்ஷ்மணன் மிகவும் பணிவாக அதன் காரணத்தை விளக்குகின்றேன் என்று கூறினார்.

நாம் இருவரும் காட்டில் இருக்கும் போது, தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட போது தாங்கள் அன்று எனக்கு முதல் முறையாக உணவு அளிக்க வில்லை. இராவணன் பஞ்சவடியில் இருந்து சீதையை கடத்திக் கொண்டு சென்ற போது தாங்கள் எனக்கு இரண்டாவது முறையாக உணவு அளிக்க வில்லை. மூன்றாவது முறை லங்கேஸ்வரிக்கு முன்பு பலிகொடுக்க பாதாளம் சென்ற போது நாம் இருவரும் உணவு பற்றி நினைக்கவில்லை.
ravi said…
இந்திரஜித்தின் பானத்தால் மயங்கி விழுந்த நான் அன்று நான்காவது முறையாக உணவு அளிக்கப் படவில்லை. .

இந்திரஜித் தலை துண்டிக்கப்பட்ட போது ஐந்தாவது முறையாக உணவு அளிக்கப் படவில்லை. . .

நீங்கள் ராவணனை சிரச்சேதம் செய்த போது ஆறாவது முறையாக உணவு அளிக்கப் படவில்லை. . .

புலஸ்தியர் ரிஷியின் மைந்தனான, இராவணன். பிராமணன் ஆவார்.

அந்த இராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்ததாக நீங்கள் எண்ணினீர்கள்.

அப்போது ராவணனின் மரணத்திற்கு இலங்கையில் துக்கம் அனுஷ்டித்த போது அதில் கலந்து கொண்டு உணவு உண்ணாமலே நாம் இலங்கையை விட்டு கிளம்பினோம்
ravi said…
ஸ்ரீ இராமர் லக்ஷ்மணனுடைய மிக உயர்ந்த தியாகத்தினாலும் அர்ப்பணிப்பு உணர்வினாலும் தியாகம் ஈடு இணை இல்லாதது என்று கூறினார்.

பின்பு மிகவும் உன்னதமான தியாகம் புரிந்த லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவை புகழ்ந்து பேசினார்..

லக்ஷ்மணன் இல்லாமல் பதினான்கு வருடங்கள் ஊர்மிளா கழிக்க நேர்ந்தது.
ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்திருக்கின்றாள்..…. இந்த பதினான்கு வருடங்களும் லக்ஷ்மணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் எல்லா புகழும் ஊர்மிளாவிற்கே என்று கூறினார்.
ravi said…
அயோத்தியாவில் நமக்கு மூன்று சிம்மாசனங்கள் இருக்கிறது ஒன்று எனக்கு மற்றொன்று சீதைக்கு மற்றொன்று லக்ஷ்மணனுக்கு. இன்றிலிருந்து ஊர்மிளாவிற்காக நான்காவது சிம்மாசனம் ஏற்பாடு ஆகட்டும் என்று ஆணையிட்டார்.

ஊர்மிளா கூப்பிய கரங்களுடன் ராஜா ராமரிடம் கூறினாள் .....எனக்கு சிம்மாசனத்தின் மீது எந்த பற்றுதலும் இல்லை..... எனக்கு உங்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் மட்டும் அளிக்க வேண்டும் எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்றாள்.

ராமர் மிகவும் மகிழ்ந்து அவளிடம் வேறு ஏதாவது வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறினார்....
ravi said…
அப்போது மிகவும் பணிவுடன் இருகரம் கூப்பி தாங்கள் எனக்கு ஏதாவது வரம் தர நினைத்தால் இனி வரும் காலங்களில் எனக்காக கோவில்களோ அல்லது வழிபாடோ கூடாது. நான் எல்லோருக்கும் மனம் தரும் ஒரு ஊதுபத்தியாக இருக்க விரும்புகின்றேன். இனிவரும் காலங்களில் நான் தங்களது தாமரை பாதத்திற்கு கீழ் நிவேதனமாக இருக்க விரும்புகின்றேன் எனக் கூறினாள்

பகவான் ஶ்ரீ ராமசந்திரன் ஊர்மிளாவின் பக்தியை கண்டு பின்வருமாறு கூறினார் ....

வரப்போகும் கலியுகத்தில் நான் பூரி க்ஷேத்திரத்தில் அவதரிக்கும் போது லக்ஷ்மிதேவி எனது அருகில் இருக்க மாட்டாள் .
ravi said…
லக்ஷ்மணன் எனது மூத்த சகோதரராக பலராமர் என்ற பெயருடன் என் அருகில் இருப்பார். எனக்கு நெய்வேதியம் செய்யப்படும் எந்த பிரசாதமும் விமலாதேவிக்கு நைவேத்தியம் செய்யப்படும். பிறகுதான் அது மகா பிரசாதமாக மாறுகிறது .

நீ மகா பிரசாதமாக இருப்பாய். உமது இனிய நறுமணத்தால் தெய்வீகத்தை பரப்புவாய்.... .நீ மகா பிரசாதமாகவும் நிர்மால்யமாகவும் வரும் காலங்களில் விளங்குவாய். பக்தர்கள் உன்னை வழிபட்டு புண்ணியம் அடைவார்கள். ராமர் மேலும் கூறினார் கலியுகத்தில் நீ அன்ன பிரம்மமாக வழிபட படுவாய் ஊர்மிளா மேலும் வேண்டினாள் ...

நீங்கள் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நான் வங்கக் கடலில் ஒரு நீர்க்குமிழியாக வந்து தங்களது பொற்பாதங்களை தொட வேண்டும்...

இந்த வரங்களை ஊர்மிளாவிற்கு வழங்கிய ஶ்ரீராமர் கூறினார் ஊர்மிளா உன்னுடைய தன்னலமற்ற அன்பும் தியாகமும் ஈடு இணையற்றது.
ravi said…
கோவிந்தனின் இருக்கை

பக்தன் : கிருஷ்ணா, என்னவாயிற்று. சௌகரியம் இல்லாமல் இருப்பது போல் காண்கிறாய்
கிருஷ்ணா : ஆம். உன் மனதில் அமர்ந்து இருக்கிறேன். இடம் சௌகரியமாக இல்லை.
பக்தன் : ஏன் அவ்வாறு கூறுகிறாய்
கிருஷ்ணா : என்னவென்று சொல்வது. என்னை தவிர்த்து ஆயிரம் விஷயங்களை சேகரித்து வைத்து இருக்கிறாய். அவைகளையும் மீறி உட்கார வேண்டியதாக இருக்கிறதே
ravi said…
பக்தன் கண்களில் குளம்.
கிருஷ்ணா : என்னவாயிற்று. ஏன் அழுகிறாய்
பக்தன் : என் மனதில் சௌகரியம் இல்லாமல் இருக்கிறாய். என்னால் "அந்த அழுக்கில் இருக்காதே. சென்று விடு" என்று கூறவும் முடியவில்லை. "இரு" என்று சுயநலமாகவும் கூற முடியவில்லை.
கிருஷ்ணா (சிரித்து கொண்டே) : நீ போ என்று சொன்னாலும் நான் அங்கேயேதான் இருப்பேன். உன்னை விட்டு எக்காரணம் கொண்டும் அகல மாட்டேன். நீ என் சொத்து அல்லவா. ஆனால் ஒன்று
ravi said…
பக்தன் : சொல் கிருஷ்ணா
கிருஷ்ணா : உன் மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் வரை நான் ஓய மாட்டேன். அது வரை உனக்கு சோதனைகள் தரவும் தயங்க மாட்டேன்
பக்தன் : சித்தமாக உள்ளேன். நீ என் மனதில் சந்தோஷமாக ஆனந்தமாக சௌகரியமாக இருக்கும் வரை நீ என்ன சோதனை வேண்டுமென்றாலும் தா.
லட்சுமி தேவி : அதெல்லாம் அனுமதிக்க மாட்டேன் ஸ்வாமி. என் பக்தன் சோதனைகள் அனுபவிப்பதா? அவன் மனதில் இருக்கும் அழுக்குகளை என் அன்பால் அழித்து விடுவேன். தங்களின் நாமத்தை அவ்வப்போது அவனை கூறும்படி செய்வேன். அவன் மனம் இன்னும் சுத்தமாகும். சோதனைகள் அனுபவித்தாலும் அதன் வலியை குறைப்பேன். அதே நேரத்தில் அவன் தவறை உணர வைத்து அவன் அழுக்குகளை நீக்கி தங்கள் பக்கம் அவனை திருப்புவேன்
பக்தன் : தாயே. கருணை உடையவளே. தங்கள் இருவரின் கருணை யாருக்கு வரும்.
ravi said…
திரட்டுப் பால்

மஹானிடம் அளவற்ற பக்தி கொண்டவர் கடம் வித்வான் சுபாஷ் சந்திரன். தனக்கு எல்லாமே அந்த மஹான் தான் என்று நினைப்பவர் – தீபாவளி தினத்தன்று ---
(குமுட்டி அடுப்பில்) கிளறிய திரட்டுப்பாலை, ஆசையோடு மஹானிடம் கொடுக்க நினைத்தார்.

hare Shankara
ravi said…
வெறும் நெல் பொரியையும், வாழைக்காய் மாவையும் பிட்க்ஷையாக ஒரு கைப்பிடி அளவே தினமும் ஏற்று சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் சர்வேஸ்வரரான மஹா பெரியவா, தன் திரட்டுப் பாலை ஏற்றுக் கொள்வாரா என்பது தான் சுபாஷ் சந்திரனின் சந்தேகம்.

ravi said…
ஏண்டா நீ ஆசையா பண்ணிண்டு வந்திருக்கே. இதைப் பெரியவா கட்டாயம் ஏத்துப்பா!” என்று அவருக்குத் தைரியம் சொன்னது யார் தெரியுமா? பெரியவாளைக் கடவுளாகப் பூஜிக்கும் பிரதோஷம் மாமா தான். மாமா சொல்லிவிட்டால் அது நிச்சயம் நடக்கும் என்று கடம் வித்வானும் நம்பினார். எவ்வளவோ பக்தர்கள் பழங்கள், மாலைகளோடு வரிசைக் கிரமமாக காத்துக் கொண்டு இருந்தனர்.
ravi said…
கடம் வித்வானின் நம்பிக்கை சற்றே சரிந்தது. பெரியவாளிடம் கைங்கர்யம் செய்யும் ஒருவர், “ இந்தக் கூட்டத்தில் இது சாத்தியமா என்ன? பெரியவா சந்நிதிக்கு நேரே வச்சுட்டு வேண்டிண்டு போங்க” என்று சொல்ல, கடம் வித்வான் மிகவும் மனம் தளர்ந்து விட்டார்.

ravi said…
ஆனால் மனதில் நம்பிக்கை கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணம் பிரதோஷம் மாமாவின் வார்த்தைகள்.
அதனால் சற்று கூட்டத்தை விட்டு நகர்ந்து திட்டு போன்ற ஒரு இடத்தில், கையில் கொண்டு வந்திருந்த பாத்திரத்தோடு உட்கார்ந்து விட்டார் கடம் வித்வான். அந்த சமயத்தில் மஹான், கையில் ஏதோ புத்தகத்தை வைத்துக் கொண்டு அதைப் படித்துக் கொண்டு இருந்தார்.

ravi said…
பக்தர்கள் அவரைத் தரிசித்தபடியே நகர்ந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அதே நிலை. கடம் வித்வான் மனத்தில் விரக்தி தோன்ற ஆரம்பித்தது.

”அவர் ஏத்துப்பார்” என்கிற பிரதோஷம் மாமாவின் குரல் மட்டும் அவரது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

திடீரென்று புத்தகத்திலிருந்து தன் முகத்தை அகற்றிய மஹான், வேறெங்கும் பார்க்காமல், நேராக கடம் வித்வானைப் பார்த்தார்.

ravi said…
ஜாடையில் அவரைத் தன் அருகில் வருமாறு அழைத்தார். கடம் வித்வான் இரண்டே எட்டில் மஹானின் அருகில் போய் நின்றார். அவர் கையில் இருந்த பாத்திரத்தை குழந்தை பாவத்தோடு தன் கையில் வாங்கிக் கொண்டார் மஹான். பிறகு தன் பக்தர் அன்பால் திரட்டிக்கொண்டு வந்த திரட்டுப்பாலை, முற்றும் துறந்த நிலையைத் துறந்தவராய் தீபாவளி பட்க்ஷணமாக தன் திருக்கரத்தாலேயே பாத்திரத்திலிருந்து எடுத்து உருட்டி வாயில் போட்டுக் கொண்டார்.

ravi said…
திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியால் சுபாஷ் சந்திரன் திக்கு முக்காடித் தான் போனார்.

பிரதோஷம் மாமா எவ்வளவு துல்லியமாக பகவானைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்கிற மகிழ்ச்சி ஒரு பக்கம்…. வாழ்நாளில் யாருக்குமே சுலபத்தில் கிடைக்காத பேறு அல்லவா இது?

Jaya Jaya Shankara hare
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை என, அழகன்
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி!".

"இராமா! நீ கேட்டுக் கொண்டபடியே, பரதன் என் மகனாக ஆகட்டும், அவனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பாவி கைகேயி மீது நான் கொண்ட கோபம் தீராது" என்றான்.

அது கேட்ட இராமன், "நான் சுமக்கவிருந்த பெருஞ்சுமையான அரச பதவியை நீக்கிப் புண்ணியத் துறைகள் ஆடி, தீயோரை ஒறுத்து, நல்லோரைக் காக்கும் இவ்வாய்ப்பினை அருளிய எம் அன்னையின் செயல் எங்ஙனம் குற்றமுடையது? குற்றமுடையது அல்ல!" என்றான். மெய்ம்மையை உணர்ந்த தசரதன், தான் கைகேயியின் பால் கொண்ட வெகுளியை விட்டு ஒழித்தான்
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 111*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
*விபோ* – எங்கும் நிறைந்திருப்பவனே! ஸ்வாமி – என்னுடைய எஜமானனே.

*ஸ்வாமின்னா* – உடையவன்.

நம்முடையஎஜமானன்

*ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி*

– நான் பண்ண ஏதோ போன ஜன்மத்து புண்யத்துனாலயோ

*மயி கருணயா வா* – என் மேல இருக்கிற கருணையினாலயோ

*த்வயி ப்ரஸன்னேऽபி* –

நீங்கள்என்முன் தோன்றி காட்சி கொடுக்கிறீர்கள், ஆனாலும்

*ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம்* – உன்னுடைய தூய்மையான திருவடித்தாமரைகளை யுகளம்னா இரண்டு. திருவடித்தாமரைகள் இரண்டையும்

*கத²ம் பச்யேயம்* – நான் எப்படி தரிசனம் பண்றது?
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 126* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
*45. தாதுருத்தமாய நம: (Dhaathuruthamaaya namaha)* 🪔🪔🪔
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
தாதா
விதாதா *தாது ருத்தம:* ||5
ravi said…
பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார்.
‘ *ஹல்யம்* ’ என்றால் குற்றம் என்று அர்த்தம்.

எந்தக் குற்றமுமில்லாத பேரழகியாதலால் ‘ *அஹல்யா* ’ என்று பெயர் வைத்தார்.

அவளது தலையெழுத்திலும் *அஹல்யா* என்று எழுதினார் பிரம்மா.

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை