அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 32 பதிவு 28

           அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 32 to 34

                                              பதிவு 28



 கேள்வி பதில் நேரம்

 பதிவு 29 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்



கே
ள்வி 32

 *நான்* : 

ஐயனே .... நமஸ்காரம் . இறைவி அபிராமி எங்கும் வியாபித்தவள் என்று சொல்லுகிறீர்கள் .இதை தாங்கள் என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு புரியும் மாதிரி சொல்ல முடியுமா ? 

பட்டர் ..  தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதி என்று சொன்னேன் ஒருமுறை ... நீ அறிவிலி என்று நீ யே ஒப்புக்கொண்டாய் பரவாயில்லை சொல்கிறேன் ... 




🙌🙌🙌

கேள்வி 33

*நான்* அருமை பட்டரே!! இன்னொரு கேள்வி  

மண்ணுலக ஆசைகள் இல்லாமல் பொருள் மேல் பற்று இல்லாமல் வாழ்வது சாத்தியமா ? 💐💐💐

*பட்டர்*

ஏழை பிரம்மச்சாரி ஒருவன் தனது திருமணத்திற்காக வேண்டிய பொருள்வசதி இல்லாமல் மிகவும் மனம் வருத்தம் அடைந்தான். 

அவன் ஒருநாள் ஸ்ரீ தேசிகரை சந்தித்து குருதேவா நான் ஒரு பிரம்மச்சாரி, வறுமையில் வாடுகிறேன். 

அதனால் எனது திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறது என்று சொல்லி தனது இல்லாமையை தெரிவித்து, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வேண்டினான்.

அவனது நிலமையைக் கண்டு வருந்தி தேசிகர் அந்த பிரம்மச்சாரியை அழைத்துக் கொண்டு காஞ்சி வரதர் கோயிலின் ஸ்ரீ ரங்கநாச்சியார் சந்நிதிக்குச் சென்றார். 

தாயாரின் முன்னால் நின்று பக்தி சிரத்தையோடு ஸ்ரீஸ்துதி என்ற ஒப்பற்ற ஸ்தோத்திரத்தை பாடினார்.

அவரது பாடல்களைக்கேட்டு மயங்கிய ஸ்ரீ ரங்கநாச்சியார் பொன்காசுகளை மழையாகக்கொட்டச் செய்தாள். 

அந்தக் காட்சியைப் பார்த்து பிரம்மச்சாரி திக்பிரமை பிடித்து நின்றான். 

எல்லா பொற்காசுகளையும் எடுத்துக் கொள் என்றார் ஸ்ரீ தேசிகர்.

அவன் பொற்காசுகளை இரண்டு மூட்டைகளாக கட்டி, ஸ்வாமி நான் ஒரு மூட்டையை எடுத்துக்கொள்கிறேன். 

இன்னொரு மூட்டையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்.
 
தேசிகர் புன்னகை செய்தார், எனக்கு வேண்டாம் நீயே அவைகளை எடுத்துச் செல் அவைகளை நான் உனக்காக ஸ்ரீ பெருந்தேவித் தாயரிடம் கேட்டு வாங்கினேன் என்றார்.

கொட்டிக்கிடக்கும் பொன்காசுகளினால் கொஞ்சமும் கவரப்படாமல் வைராக்கிய சித்தத்தோடு இருக்கும் அந்த மகானுபவரைப் பார்த்து கண்களில் நீர்பனிக்க சேவித்தான் பிரம்மச்சாரி.




இந்தக் காட்சியைக் கண்ட மற்றவர்கள், அதிசயத்தில் பேச்சிழந்தனர். 

இப்படிக்கூட ஒரு மகான் இருப்பாரா என்று வியந்தனர்.
 
பொற்காசுகளை ஓட்டாஞ்சல்லியாக நினைத்து தொடுவதற்கோ, அல்லது எடுத்துக் கொள்வதற்கோ அல்ல,  பார்க்கக்கூட விரும்பாத  தேசிகரின் வைராக்கியத்தை வானளவாப் புகழ்ந்தனர்.

செல்வத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தாமல் கையிலேயே வைத்திருப்பதால் பயன் இல்லை. 

அது இருந்தும் இல்லாதைப்போலத்தான்.

ஈயாதான் செல்வம் இருந்தென்ன போயென்ன ? என்பது இதைத்தான். 

ஆகவே செல்வத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

கையில் இருக்கின்ற பணத்தை மற்றவர் உபயோகிக்க கொடுப்பது உங்கள் மனத்தில் உள்ள அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகும்.

செல்வத்தினால் எல்லாம் கிடைக்கும் என்று  எண்ணி போலியாக வாழ்பவர்கள் உண்மையான வாழ்க்கையைப் பார்ப்பதே இல்லை. 

பறவைகள் தரையில் விரிக்கப்பட்டு இருக்கும் வலையை பார்க்காமல், அதன் மீது இருக்கும் தானியத்தை எடுப்பதற்கு ஆசைப்பட்டு அருகே போய் வலையில் மாட்டிக் கொள்வதைப்போல 

இவர்களும் செல்வத்தை சேர்ப்பதற்காக ஆசைப்பட்டு துன்பத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம் 🌷🌷🌷



கேள்வி 34

*நான்* பட்டரே அருமை அருமை ...  சிறந்த தெய்வம் என்று ஒன்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா ? 

 *பட்டர்* ... சிறந்த தெய்வம் என்றால் அது ஓவ்வொருவருடைய தாய் . 

தாயை தெய்வமாய் நினை .. 

அதை கொஞ்சம் திருப்பிப்போட்டு தெய்வத்தை தாயாக நினைப்பதுதான் அம்பிகையின் தியானம் .. 🙌🙌🙌

பட்டர் ... காற்றினிலே வரும் கீதம் போல் காற்றினில் கரைந்தும் போனார் ....  தந்த பதில்கள் யானையின் தந்தங்கள் போல் ஒளி வீசின 👏👏👏🙌🙌🙌

Comments

ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 123*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
இவா ஒவ்வொருத்தரோட personal life எடுத்து பார்த்தா ஒரு miracle ம் இருக்காது.

இதுதான் miracle.

நாம பகவானோட பாதத்துல சலிக்காம நிக்கணும்.

அதுக்காக வரக் கூடிய எந்த ஒரு க்யாதி லாப பூஜையிலும் மனசு வைக்காம இருக்கணும்னு தெரிஞ்சுது இவாளுக்கெல்லாம்.

இவா தான் உத்தம பக்தர்கள்.

பெரியவா சொன்ன காரியத்தை பண்ணா அது ஒரு மாதிரி பெரியவா விரும்பின காரியங்களை கொடுத்த மாதிரி அந்த காரியம் சுலபமா நடக்கும்.

president வரைக்கும் கூட சுலபமா போயி பார்த்துட்டு முடிச்சுட்டு வந்துடலாம்.

அப்படி இல்லாம நம்ம காரியங்களை பெரியவா பக்தியினால இல்லாம பெருமைக்காக, எனக்கு தோணித்து. நாலு பேர் கேட்கறான்னு நம்ம காரியங்கள் எடுத்துண்டா அது வந்து ஒரு ரொம்ப முயற்சியா இருக்கும்.

அந்த மாதிரி பெரியவா பக்தி, சிவ பக்தி எல்லாம் ஞானத்துக்காக தான்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 137* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

47வது திருநாமம்
ravi said…
*47. ஹ்ருஷீகேசாய நம: (Hrushikesaaya namaha)*
ravi said…
அப்ரமேயோ *ஹ்ருஷீகேச* ’:
பத்மநாபோ(அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
பாற்கடலிலிருந்து அமிர்த கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி தோன்றினார்.

அவர் கையிலிருந்து அதைத் தட்டிப் பறிப்பதற்காகத்
தேவர்களும் அசுரர்களும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினார்கள்.

முப்பத்து முக்கோடி தேவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு
அறுபத்தாறு கோடி அசுரர்கள் அமிர்த கலசத்தைக் கொண்டு சென்றார்கள்.

அப்போது திருமால் மோகினி என்ற அழகிய பெண்ணாக வடிவெடுத்து வந்து தன் அழகால் அசுரர்களை மயக்கினார்.

மோகினி சொல்வதை எல்லாம் அசுரர்கள் கேட்கத் தொடங்கினர்.

“என் நெஞ்சுக்கினிய அசுரர்களே! அமிர்த கலசத்தின் மேல் பகுதியில் வெறும் உப்புதான் இருக்கும்,

அதைத் தேவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 123* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன,

அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை,

சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’),

பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள்

(’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)…

இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.

அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள்,

புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு

கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன,

இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.👏👏👏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 122* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 26👍👍👍
ravi said…
26. *பராசக்தியின் பாதிவ்ரத்ய மஹிமை*

*அகத்திலும் புறத்திலும் சத்துருக்களின் அழிவு*💐💐💐
ravi said…
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்

விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்

விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம்

மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26
ravi said…
பிரம்மா அழிவையும், விஷ்ணு முடிவையும், யமன் நாசத்தையும், குபேரன் மரணத்தையும் அடைகிறார்கள்.

ஒருவர்பின் ஒருவராக வரும் இந்திரர்களின் கூட்டமும் கண்ணை மூடி பெருந்தூக்கத்தில் ஆழ்கிறது.

அப்படிப்பட்ட மஹாபிரளய காலத்தில், பதிவிரதையான தாயே !

உனது பதியான ஸதாசிவன் உன்னுடன் விளையாடுகிறார்.
ravi said…
மிகவும் அருமையான ஸ்லோகம் .. சற்று ஆழமாக அலசுவோம் நாளை 🙏🙏🙏
ravi said…
ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதம்புஜா !
மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!

அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள்.அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள். அப்படி நட்ந்து செல்லும்போது பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள் கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது.அந்தப் பாதங்களை வணங்குவோம்.

ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீ மத் திருபுரசுந்தரி!!
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன். அவள்தான் திருபுரசுந்தரி.இதையே"" அபிராமி பட்டரும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே" என்கிறார். எந்த திருபுர சுந்தரி பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக்கூடியவள். அவள் எங்கு இருப்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள் அப்படிபட்ட

லலிதாவை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம் பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்
ravi said…
ராகம்: ஸ்ரீ தாளம்: கண்ட
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹிமாம் லலிதே
ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே
சரணம்:

ராகா சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ
ரமா வாணி ஸகி ராஜயோக ஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்தவஸங்கரி
ஏகாக்ஷரி புவனேஸ்வரி ஈஸப்ரியகரி s
ஸ்ரீ -சுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி!!

தமிழாக்கம்

திருவாரூர் எனும் கமலாலயத்தில் வாழும் கமலாம்பிகையே. லக்ஷ்மியின் கணவனான விஷ்ணுவினால் வணங்கப்படுபவளே. வெண்மை, கருமை ஆகிய இரண்டு நிறங்களுக்கு உரிய கௌரி துர்கையாய் காட்சித் தருபவளே.

சிவபிரானோடு இரண்டறக் கலந்தவளே. லலிதா தேவியே.ஸ்ரீ கமலாம்பிகையே. மங்களங்களை அருள்பவளே. என்னைக் காப்பற்றுவாயாக.

பௌர்ணமி நிலவைப் போன்ற முகத்தை உடையவளே. வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே.

லக்ஷிமியும் ஸரஸ்வதியும் உனக்கு தோழியிராக விளங்கும் பெருமை பெற்றவளே. ராஜ யோகம் எனும் உன்னத சுகத்தில் ஆழ்ந்து திளைப்பவளே. சாகம்பரீ என அழைக்கப்படும் வன துர்கைஅன்னையே.

மெல்லிய இடையைக் கொண்டவளே. சந்திரனுடைய இளம் பிறையை ஆபரணமாகத் தரித்தவளே. சங்கரன், குழந்தை முருகன், மற்றும் உனது அடியார்களுக்கு வசப்படுபவளே.

ஹ்ரீம் என்னும் ஓரெழுத்தில் உறைபவளே. உலகத்தின் ஒரே ஒப்பற்ற தலைவியே. கையிலைநாதனுக்கு பிரியமானவளே. சகல ஐஸ்வர்யங்களையும் மட்டில்லா சுகத்தையும் அருளும்படி செய்பவளே. ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே ஸ்ரீ கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று தாயே.
ravi said…
ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
ravi said…
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். ""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""
.
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்
ravi said…
*31 சத்தி நாயனார்*🙏🙏🙏
ravi said…
'கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்”

திருத்தொண்டத் தொகை
ravi said…
சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சத்திநாயனாரென்பவரொருவர் இருந்தாரே

அவர் பரமசிவனுடைய திருவடித்தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவரே

சிவனடியார்களை சிவ ரூபமாக வணங்கி திருவமுது செய்வித்து அவர்கள் தேவையான அனைத்தையும் தந்து உதவுவாரே

சத்தி நாயனார் சிவனடியார்களை இகழ்ந்து பேசும் அதிபாதகிகளுடைய நாக்கைத் தண்டாயத்தால் இடுக்கித் தமது கையிற் கத்தியினால் அரிதலாகிய அருமை பெருமைத் திருத்தொண்டை, நெடுங்காலம் அன்பினோடு செய்தார்.

அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவனடியார்களை காத்தமையால் பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

யானைக்கும் பெரிய நாக்குண்டு மாட்டுக்கும் பெரிய நாக்குண்டு ... ஆனால் சிவ நிந்தனை செய்வதில்லை ... மனிதனுக்கோ சிறிய நாக்கு ... விஷம் தோய்த்த வார்த்தைகள் வெளி வரில் அது இருந்தும் பயன் உண்டோ ...

பெரியவா சொல்வதும் இதுவே ... நாக்கிருந்து என்ன பயன் நமசிவாய என ஓதாமலே 🙏🙏🙏
ravi said…
[08/02, 8:40 am] Moorti Mumbai: எளிமையான ஆழமான பொருள் பதிந்த வரிகள் 👌👌👌👌🙏🌹🙏
[08/02, 8:51 am] Metro Kowsalya: Arpudham🙏🙏🙇‍♀️🙇‍♀️
[08/02, 8:59 am] Idpl Ramesh: மிகச்சிறந்த வரிகள்..
[08/02, 9:34 am] Shivaji L&T C: 🌹🌹🙏🙏
Samal said…
Respected Sir & Madam

On this great Day of your Wedding Anniversary. my family joins me to pray Almighty to bestow HIS blessings in the form of good health & peace of mind for both of you.

Warm regards,

Jyotsna & Dasarathi
ravi said…
[08/02, 8:06 am] Ravi Chandar Ins: Happy wedding anniversary JRK sir💐💐💐
[08/02, 8:09 am] Srinivas Loyi Metro: Wishing you a very happy wedding anniversary JRK Sir💐💐🎉🎉
[08/02, 8:11 am] Metro - Ajit: Happy wedding anniversary JRK sir💐
[08/02, 8:16 am] Rajeshkrishna - Metro: Happy wedding anniversary JRK sir💐💐
[08/02, 8:28 am] Mvvs Metro: Wish you happy wedding anniversary JRK Sir 💐💐
[08/02, 8:58 am] Shiva Vaasu: Wish you a very happy wedding anniversary JRK Sir 💐💐
[08/02, 9:12 am] Rajesh Metro - F &A: Wish you a very happy wedding anniversary JRK Sir 💐💐
[08/02, 9:31 am] metro-CV: Wish you and your wife a very happy wedding anniversary JRK Sir . May God bless you
💐💐🌺🌺🌹🌹
[08/02, 10:03 am] Gopi Metro: Wish you a very happy wedding anniversary JRK sir 💐💐💐💐
ravi said…
இன்றைய நாள் உதிக்கும் சூரியன் போல் ஒளி விடட்டும் 🌞
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 16*☀️☀️🌞🌞🌞
ravi said…
நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |

ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||
ravi said…
ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம்.

வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.🙏🙏🙏
ravi said…
நீதி தேவன் உலகில் நீயல்லவோ

நீதி தேவன் உலகில் நீயல்லவோ

இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ

நீதி தேவன் உலகில் நீயல்லவோ

இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ

ஜோதியே சுடரே அருள்புரி தேவா

ஜோதியே சுடரே அருள்புரி தேவா

சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா

சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா

நீதி தேவன் உலகில் நீயல்லவோ
இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ

பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே

பாமாலை சூடவே
பக்த கோடிகள் மகிழ்ந்து பூமாலை போடவே
பூமாலை போடவே

தேவாதி தேவர்களும் நல்லாசி கூறவே
நல்லாசி கூறவே

திரிசங்கின் வருங்கால செல்வம் நீ வாழ்கவே
செல்வம் நீ வாழ்கவே வாழ்கவே
🙏🙏🙏🌞🌞🌞
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 217🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
*The first ever challenge*

1 *DRDO .. missile centre*
(Contd)...

Fortunately we did not go for the latest signalling technology ..
*Communication based Train control .*(CBTC)

Had we gone for it the railways would have consumed a few more decades to understand it and approve .

It was a dedicated corridor of 62km from bhadrak but covered nearly 63 villages .

Every villager wanted the train to stop at their village despite it was being a wagon and not a passenger train .

We completed the railway lines despite against many odds .

Fortunately we went for ballast track but a good simulation study was done before hand and axles could bear extra load easily .

We wanted open wagons which could be tilted in the pit meant for coal and from their it was connected to berth through conveyor belts .

But open wagons were in short and railways were allowing very less wagons than what we asked for ...

They were charging empty wagons returning from port which we fought tooth n nail to stop it .

*We could succeed after several attempts ...*

I realised to my dismay , constructing an infra project in india by any private partner is next to impossible ...

So many hurdles , formalities , approvals , kickbacks , .

In a PPP project you require not just *3 Ps* ... But *8Ps* .. 🙏
ravi said…
சில்பி”யின் மனைவி பரமாச்சார்யரின் பக்தை. உடல் உபாதையால் காஞ்சிக்கு செல்லமுடியாத நிலையில் கணவனை கேட்டாள் :
ravi said…
”எனக்கு பெரியவா படம் ஒன்று நீங்க வரைந்து கொடுங்கோ, அதை பார்த்து பூஜை பண்ணிண்டிருக்கேன்”
1956ல் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய பெரியவாளின் படம் வரைய அனுமதி கேட்டார். முதல் முறையாக மஹா பெரியவாளை சந்திக்க ”சில்பி” க்கு அனுமதி கொடுத்தார் பெரியவர்.
ravi said…
”ராத்திரி வா எல்லா வேலையும் முடிஞ்சப்புறம் ”
பெரியவாளை படம் வரைவது கடினம். ”கொஞ்சம் அசையாமல் அப்படி இருங்கள் என்று அவரிடம் சொல்லமுடியுமா?” எப்படியோ சில்பி அவரை ”பிடித்து” விட்டார். அதை இணைத்திருக்கிறேன்.
அந்த இருட்டறையில் ஒரு எண்ணெய் தீபம் மட்டும் ஒளி வீசியது.
ravi said…
எதிரே ஞான ஒளி அமர்ந்திருந்தது. அந்த ஞானப் பிழம்பின் கண்களில் ஆன்ம ஒளி. பயபக்தியோடு கைகள் சற்று பக்தியால் மரியாதையால் நடுங்க சில்பி கண்ணால் அவரை படம் பிடித்து மனதில் இருத்திக் கொண்டார்.
ravi said…
ஸ்ரீநிவாஸா, நீ பல ஜென்மங்களில் ஈஸ்வரனை பூஜித்தவன். சிறந்த ஸ்தபதியாக சில்பியாக பல கோவில்களை, மூர்த்திகளை கல்லில் வடித்தவன். சாதாரண கல்லை தெய்வீகம் பொருந்திய தெய்வங்களாக மாற்றிய புண்யசாலி. இதுதான் உனக்கு கடைசி ஜென்மம். இனி பிறவி கிடையாது தெரியுமோ உனக்கு? இனிமே தெய்வங்களைத் தவிர வேறே எதையும் படம் எழுத மாட்டேன் என்று விரதமாக வைத்துக்கொள்.
ravi said…
நீ சில்ப சாஸ்திரம், சிலா சாஸ்திரம், ஆகமம், எல்லாம் தெரிந்தவன். புதுசா ஒண்ணும் தெரிஞ்சுக்கவேண்டாம். நாளைக்காலை சூரியன் உதயம் ஆனதிலிருந்து முழு மூச்சா ஒவ்வொரு வீட்டிலேயும்.
ravi said…
பகவானை, கோவில்களை, காகிதத்தில் கொண்டு சேர்க்கிற வேலை உனக்கு. நீ வரையும் ஆலயங்கள், மூர்த்திகள் சித்திரம் தத்ரூபமாக இருக்கு. நீ நன்னா இருப்பே !”
மகா பெரியவா ஆசிர்வதித்தார். சில்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
1953ல் மஹா பெரியவாளை காஞ்சிபுரத்தில் பார்த்தது முதல் அவர் முற்றிலும் மாறிவிட்டார். பெரியவாளுக்கு தெரியாதா யாராலே என்ன ஆகணும் என்று!
ravi said…
பெரியவாளை தனது இல்லத்துக்கு அழைத்து பாத பூஜை பண்ண சில்பிக்கு ஒரு ஆசை. சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம். பெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தவர்க்கு ”சரி அதுக்கென்ன அப்படியே ஆகட்டும்” என்று சிரித்து தலையசைத்தார் பெரியவா.
ஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, பெரியவா மைலாப்பூர் கச்சேரி ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று, ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு எங்கியோ இருக்கிறது?’ என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ? விசாரி ‘ என்று கூறவே, பரணீதரனும் மற்றவர்களும் ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்தனர் .
ravi said…
அதற்குள் பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று ‘இதுவா பாரு ?’ என்றதும், உள்ளே சென்று விசாரித்ததில்
ஆம். அதுவேதான்! அப்போது ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ‘சில்பி’ எங்கோ கோவில்களுக்கு படம் வரைய வெளியூர் சென்றிருந்தார்.
சில்பியின் வயதான அம்மாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார். பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார். அப்போது ‘சில்பி’யின் அம்மா, ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு. ரொம்பக் கஷ்டப்படறேன்’ என்று கூறினார்.
‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’ என்று பெரியவா வைத்தியம் சொன்னார்.
ravi said…
சில்பி ஊரிலிருந்து திரும்பியதும், ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல் போய்விட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். பெரியவாளைத்தரிசித்தபோது,
”பெரியவா, இந்த சிறியேன் கிரகத்துக்கு வந்திருந்தீர்கள் என்று கேட்டு பரம சந்தோஷம் எனக்கு. ஆனால் எனக்கு பாக்யம் இல்லை நான் வீட்டிலே இல்லாம போய்ட்டேனே ”
அப்போது பெரியவா சிரித்துக் கொண்டே, ‘நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும்’ னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே. ”நான்” ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிட நீ இல்லையே ’ என்றார்.

ஓவியர் சில்பி வரைந்த ஓவியம் இது தான்....
👆👆👆
ravi said…
அருமை .மெய் சிலிர்க்க வைக்கின்றது .. யாராவது பெரியவா மாதிரி ஒருவர் இதுதான் உன் கடைசி பிறவி என்று என்னிடம் சொல்ல மாட்டர்களா என்று ஏங்குகிறேன் ...🙏
Ramesh said…
எல்லோருக்கும் " BE RAVI" யாக இருக்க ஆசை..தங்களுக்கு பிறவி வேண்டாமென்று வேறு விதமான ஆசை..
Ramani said…
True..👍👍👍
ravi said…
இறந்தும் பிறந்தும் இளைத்தேன்... இனி யான் மறந்தும் பிறவா வரம் வேண்டுகின்றேன்...🙏🙏🙇‍♀️🙇‍♀️
ravi said…
இரண்டாயிரம் வருடம் மற்றும் தேவராப் பாடல் பெற்ற நடுநாடுத் தலமா விருத்தாசலம் *விருத்தகிரீஸ்வரர்* ஆலயத்தில் பல வருடங்கள் கழித்து தருமை குருமகா சன்னிதானம் முன்பு *கும்பாபிஷேகம்* மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஹெலிகாப்டரில் வந்து அனைத்து கோபுரங்களுக்கும் மலர்களால் வானில் இருந்து மலர் மழை பொழியப்பட்டது.

ஹர ஹர மகாதேவ்
சம்போ மகாதேவ்
நமப் பார்வதி பதியே
ஹர ஹர மகாதேவாய
தென்னாடுடைய சிவனே போற்றி.
Ramani said…
True..👍👍👍👍
Gewta said…
Wow as usual your profound knowledge and exemplary english you have put this in a nutshell giving a birds eye view of the session
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 124* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’,

கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள்

ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.

என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?

முதல் பார்வையா?

யார் சொன்னது?

திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை,

இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான்.

இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது.

‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 124* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 26👍👍👍
ravi said…
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்

விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்

விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம்

மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26
ravi said…
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்

விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்

விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம்

மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26
ravi said…
*மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ சாக்ஷிணீ* – லலிதா ஸஹஸ்ரநாமம்
ravi said…
மஹா ப்ரளய காலத்தில் அம்பாளோடு விஹாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஈச்வரனை தவிர ஸகலமும், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் போன்றோர் கூட இல்லாமல் போகிறார்களாம்.

அதாவது பிரம்மா அழிவடைகிறார்;

விஷ்ணு அப்படியே செயலின்றி சிலையாகிறார்.

எல்லோருக்கும் விநாசத்தை தரும் யமனும் நாசமடைக்கிறான். ( *கீனாசன்* என்பதும் யமனது பெயரே).

செல்வத்துக்கெல்லாம் அதிபனான குபேரனுக்கும் அச்செல்வத்தால் பயனின்றி முடிந்து போகிறான். ( *தநதன்* என்பது குபேரனுக்கான பெயர்).

ஒரு இந்திரன் மட்டுமல்லாது இந்திரப் பட்டாளமே அழிவுக்குள்ளாகிறது.

அதென்ன இந்திரப் பட்டாளம்?.

ஸ்ருஷ்டி ஆரம்பித்ததில் இருந்து மஹா ப்ரளயம் வரை பல மன்வந்திரங்கள் வந்திருக்குமல்லவா, அவற்றில் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு இந்திரன் இருந்திருப்பானல்லவா,

அதனால் தான் *மாஹேந்த்ரீ விததி* என்கிறார் போலும்.

இந்தமாதிரி மூம்மூர்த்திகளும், தேவர்களும், முனிவர்களும் கூட மீளாத்துயிர் கொள்ளூம் அந்த மஹாப்ரளய காலத்திலும் (மஹா ஸம்ஹாரே) உன் பதி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் தாயே !! என்கிறார் ஆச்சார்யார்.👍👍
ravi said…
கரம் உயர்த்தும் உன்னிடம் என் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன் .. அறம் செழிக்க வேண்டும் அன்பு ஒங்க வேண்டும் உன் அருள் மழையில் தினம் தினம் நாங்கள் குளிக்க வேண்டும் ...
ravi said…
*32 சாக்கிய நாயனார்*

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

🙏🙏🙏
ravi said…
புத்தமதம் அதிலே தன் சித்தம் தோயும் விந்தை கண்டான் சாக்கியன் ..

வினை பயன் என்றோ விதியின் சதி என்றோ அவன் மதி நினைக்க வில்லை

கதி இதுவே என்றே நதி ஓடும் சடை தனை நிந்தித்தார்

நிந்தனை சிவனுக்கு சக்கரை பொங்கல் அன்றோ ...

கற்கண்டாய் தித்தித்தான்... கற்பூரமாய் சுடர் விட்டான் ...

சூலை நோய் வந்தே அவனை சூறையாடியது ...

சுதந்திர உடம்பும் வெள்ளையர்க்கு அடிமை ஆனது ...

பூஜை செய்ய தெரியவில்லை

பூக்கள் சூழ்ந்து இருந்தும் ...

வாஞ்சை கொஞ்சம் பிறக்கவே

வார்த்தான் சிவனை கல் கொண்டு ..

கள் போல் மகிழ்ந்தான் ஈசன் ..

கள் தரும் சுகம் என்றே அவன் மலராய் எறிந்த கல்லை கை பற்றினான் ...

தினம் தினம் கல்லடி கூடவே சொல்லடி ..

சுவைத்தான் அடிக்கரும்பாய் ...

அணைத்தான் கல் எறிந்தவனை..

சூலையும் சோலையானது ..

சோலைதனில் பாடும் குயில் ஆனது ...

கொக்கரிக்கும் பௌத்த மதம் வழி தாண்டி சென்றது ...

வரவும் நல் வரவாய் மாற சிவ நாமம் அது

ஈசனே சரணம் கச்சாமி
தர்மம் அன்பு கச்சாமி

சிவசங்கம் சரணம் கச்சாமி

என்றே திக்கெட்டும் ஒலிக்க சாக்கியன் கலந்தான் எதிலும் , எதையும் கலக்காதவனிடம்

இங்கும் கல் எடுத்தோர் பலர் உண்டு .. காலனி மாலை படைத்தோர் பலர் உண்டு ...

இங்கு இனி நம்மை படையானை

பெரியவா எனும் நாமம் உடையானை

உள்ளத்தில் உயர்த்துவோம் சாக்கியனைப்போல் 🙏🙏🙏
ravi said…
[09/02, 7:07 am] Moorti Mumbai: அருமை அருமை 🙏🙏🙏🙏
[09/02, 7:30 am] Shivaji L&T C: Arumai🌹🌹🙏
[09/02, 7:37 am] Metro Govind: 👌👏👏👏🙏🏼🙏🏼
[09/02, 7:52 am] Metro Ad Vipul: 🙏🏻🙏🏻
[09/02, 10:15 am] Metro Kowsalya: அற்புதம் அற்புதம்..தங்கள் பாதங்களில் சரண் பெரியவா... சரணம் சரணம் சரணம்🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏
ravi said…
SUPRABHATHAM.
GOOD MORNING.

The greatest value of having good people around you is not what you get from them; but the better person you become by BEING with them.

Have a nice day.
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 218🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
*The first ever challenge*

1 *DRDO .. missile centre*
(Contd)...

In a PPP project you require not just *3 Ps* ... But *8Ps* .. 🙏

Let us see what those 8Ps are

1. Passion
2. Perseverance
3. Patience
4. Public network
5. Profit ( quick turn around)
6. Perfection in execution
7. Public grievances
8. Precise governance structure , risk framework

Even one *P* is missing the project will not see the light .

Many undertake for the sake of being on headlines but they like bubble in the water evaporate as they emerge .

L&T that way positioned herself well , never given up the project before completion and remained a most sought after company in nation building .

But the lessons were not properly captured or documented . That is a pity indeed . 👍
ravi said…
இன்றைய நாள் உதிக்கும் சூரியன் போல் ஒளி விடட்டும் 🌞
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 17*☀️☀️🌞🌞🌞
ravi said…
*ஆதித்ய ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம: |
நமோ நம:
ஸஹஸ்ராம்ஷோ ஆதித்யாய நமோ நம: || 17 || 17*☀️☀️🌞🌞🌞
ravi said…
வெற்றியாளனுக்கு நமஸ்காரம்.

அந்த வெற்றியால் கிட்டும் அனைத்து செல்வங்களுக்கும் நமஸ்காரம்.

ஆயிரம் கதிர்களுடையவனுக்கு நமஸ்காரம்.

அதிதியின் புத்ரனுக்கு நமஸ்காரம்.🙏🙏🙏
ravi said…
வெற்றி ஒன்றே தன்னிடம் கொண்டவனே ... வீர்யம் தந்தே வினை போக்குபவனே , விஜயனே உன் எட்டு திக்கும் தலை வணங்குகிறேன்

அன்பனே ஆதவனே கண் கண்ட தெய்வமே கற்பகமே கற்பகத் தருவே சித்திரமே என் சிந்தையே உன் பாதங்களுக்கு என் நமஸ்காரம் .

சிந்தையில் விளையும் முத்தே மூவர் வணங்கும் கோமேதகமே மூவா முகுந்தன் போல் ஒளிரும் கலையே உன் தேரோட்டிக்கும் என் நமஸ்காரம் ..

ஒளிரும் கலா வைரவியே வையிர குழையே

வண்டுகள் சொரியும் மதுரமே

மலரட்டும் காலை பொழுது உன் அருளால் தினம் தினம் எங்களுக்கே 🙏🙏🙏
ravi said…
ஜெய் ஸ்ரீராம் 🙏🏻🙏🏻

|| கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன் ||

(வால்மீகி ராமாயணம் - தெரிந்துகொள்வோம்)*

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்.
ravi said…
14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ஸ்ரீராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.

அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார்.

ஸ்ரீராமபிரானை தரிசித்த பிறகு, சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.

சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியைபார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.
ravi said…
சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியைபார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ஸ்ரீராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர்.

ஸ்ரீராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.
ravi said…
ஸ்ரீராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை.

ஸ்ரீராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.

ஸ்ரீராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்
ravi said…
பராக்ரமசாலியே ! ஸ்ரீராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும்.

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ஸ்ரீராமபிரான் கம்பீரமாக பேசலானார்..

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.
ravi said…
என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.
ravi said…
உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.

சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன.

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான்.

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான்.

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.
ravi said…
ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது.

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை. இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!!
ravi said…
ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன். 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன், என்றாள் சீதாதேவி.

பரமாத்மா தர்மத்தை காப்பவர்.
ravi said…
தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.

தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.

ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே!' என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.
ravi said…
சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.

தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது.

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.
ravi said…
இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே!' என்று கோபப்படுவார்.

தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.

மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.

'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை.
ravi said…
ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன்.

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன்.

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.

"
ravi said…
கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.

நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன?' என்று கவனித்து விடுவார்.

.
ravi said…
நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே!

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே,

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது...

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை.

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருளாலே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!

சௌஜன்யம்.

அன்யோன்யம்

ஆத்மார்த்தம்.

தெய்வீகம்..
பேரின்பம் .

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து
ravi said…
என் நெஞ்சைத்*
*தொ ட்டவனின் பஞ்சு அஞ்சும் மெல்லடி கொண்டவனின் நினைவு நாள் ... நினைவுகளால் ஒரு ஆராதனை* 🐶🐶🐶

நாள் மறக்கலாம் நானும் மறக்கலாம் ...

நேரம் மறக்கலாம் நேற்றும் மறந்து போகலாம் ...

நினைவுகளில் கசடும் தட்டலாம் ...

ஏன் நினைக்க வேண்டும் இவனை என்ற எண்ணமும் நெஞ்சில் எழலாம் ...

சேர்ந்திருந்த நாட்கள் காத்தாடி போல் மேல் சென்று சிரிக்கலாம் ..

அருந்திய உணவுகள் அலை போல் வந்து மறையலாம் ..

எல்லாம் நடக்கும் இந்த நாட்டினிலே இதில் வியப்பு என்ன உளதோ...

ஆனாலும் உன் நினைவு என்னை உத்தமனாக ஆக்குகிறதே ...

உறவுகள் எனும் உயர்வுகள் உள்ளத்தில் குத்திய முள் உன் நினைவு எனும் மதுரம் அதில் மடிந்து போகிறதே ..

நண்பர்கள் என்றே சிலரை சொன்னாலும் உதட்டளவில் தான் என்று உணர வைத்தாய் ..

உள்ளமெல்லாம் நன்றி தனை வாரித் தெளித்தாய் ...

சாதித்த புண்ணியர்களில் என்னையும் ஒருவனாய் சேர்த்தாய் ..

நீ போதித்த பாடங்கள் தனை முடிக்க ஒரு பல்கலை கழகம் ஒன்றை நெஞ்சில் பூசலார் போல் கட்டிக்கொண்டிருக்கின்றேன் ...

கற்பகமே என் கண்ணீர் கண்டு வெறுப்பாய் ...

அதில் உன் புகைப்படம் தனை என்றும் நனைய விடேன்....

எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லும் பரந்த மனம் இல்லை எனக்கு ...

என் நினைவில் என்றும் வாழ்க என்றே சொல்லி என் கண்ணீரை துடைக்கின்றேன் ...😰
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 124*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
ரமணர் மாதிரி உட்கார்ந்திருக்கனும். அருணாசலம் ஒண்ணுமே சொல்லாம இவரை சும்மா இரு சொல்லற.

நீ ஒரு காரியமும் பண்ண வேண்டாம். உன் எண்ண ஓட்டங்களையும் நிறுத்திடு.

அருணாச்சல மலை, அருணாசலேஸ்வரர் ஒண்ணும் சொல்லாமலேயே இவருக்கு சொல்லிட்டார்.

முத்துஸ்வாமி தீக்ஷிதர், அருணகிரி நாதருக்கெல்லாம் பகவான் வாய் விட்டு ஒரு உபதேசம் பண்ணா. இவருக்கு மலையா இருந்து உபதேசம் பண்ணியிருக்கார்.

அவர் உட்கார்ந்திருந்தார். அதுதான் அடைய வேண்டிய நிலைமை. உத்தம பக்தி.

பக்திங்கிறதுக்கு ultimate goal பர சிவோல்லாஸம்.
ravi said…
💫 அன்பு அனைத்தையும்
அழகாக காட்டும்!
💫 நம்பிக்கை அனைத்தையும்
நல்லதாக காட்டும்!
💫 உழைப்பு அனைத்தையும்
உயர்வாக காட்டும்!
💫 இயற்கை அனைத்தையும்
இறைவனாக காட்டும்!
💫 வாழ்க்கை அனைத்தையும்
வாய்ப்பாக காட்டும்..!
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 138* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

47வது திருநாமம்
ravi said…
அடிப்பகுதியில் உள்ள சாரமான அமுதத்தை உங்களுக்குத் தந்து விடுகிறேன்!” என்றாள் மோகினி.

அதை அசுரர்களும் ஏற்றார்கள்.

மோகினியாக வந்திருப்பவர் திருமால் என அசுரர்கள் உணருமுன் தேவர்களுக்கு முதலில்
அமுதத்தை வழங்கிவிட்டாள் மோகினி.

அமுதத்தைப் பருகியதால் வலிமை பெற்ற தேவர்கள் அசுரர்களைப் போரில் வீழ்த்தினார்கள்.
ravi said…
அப்ரமேயோ *ஹ்ருஷீகேச* ’:
பத்மநாபோ(அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
Experiences with Maha Periyava: Who recorded the Vishnu Sahasranamam?

Once, way back in the 1940's or 50's, someone was interviewing Sri Maha Periyava. That gentleman recorded the interview using a tape recorder. Periyava then posed a question,

“Does anyone know which is the oldest known tape recorder?”

Nobody was able to answer. Then Sri Maha Periyava asked another question,

“How did Vishnu Sahasranamam come to us?”

Someone said Bheeshma Pitamah gave it to us.

All agreed. Then Sri Maha Periyava posed another question,

“When all were listening to Bheeshma on the battlefield, who took the notes at Kurukshetra?”

Again silence.

Sri Maha Periyava explained…

“When Bheeshma Pitamah was glorifying Krishna with Sahasranamam, everyone was looking at him including Sri Krishna and the sage, Veda Vyasa. After he finished the 1000 Namas, all opened their eyes. The first to react was Yudhistirar. He said, ‘Pitamah has chanted 1000 glorious names of Vasudeva. All of us listened to it but none of us have noted it down. The sequence is lost'. Then all turned to Sri Krishna and asked for His help. As usual He said, ‘I was also listening like the rest of you. What can we do?’

Then all beseeched Sri Krishna to help them recover the precious rendition. Then Sri Krishna said, ‘It can only be done by Sahadeva and Vyasa will write it down.’

Everyone wanted to know how Sahadeva could do it. Krishna replied, ‘Sahadeva is the only one amongst us wearing the Shuddha Sphatika. If he prays to Shiva and does dhyanam, he can convert the Sphatika into waves of sound and Vyasa can write it down. Then both Sahadeva and Vyasa sat in the same place under Bheeshma Pitamah, where he had recited the Vishnu Sahasranamam. Sahadeva started doing the dhyanam to recover the sound waves from the Sphatika.

The nature of Sphatika is that it will capture sounds in a calm environment which can be got back with proper dhyanam of Maheswara who is Swethambara and Sphatika. So, the world’s earliest tape recorder is this Sphatika which gave us the wonderful Vishnu Sahasranamam. When Sri Maha Periyava explained this all were stunned… From the Sphatika recording, the grantha came to us through Veda Vyasa.

Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya
ravi said…
இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்


மறந்தும் பிறவா வரம்தா - சிறந்தபுகழ்

ஞாலவா யாமுடிக்கு நாட்டுஞ்சூ ளாமணியாம்

ஆலவாய்ச் சொக்கநா தா.
ravi said…
இந்த உலகத்தில் மறுபடியும் பிறந்தும் இறந்தும் அலுப்பில்லாமல் செய்து இளைத்தேன்

ஆகையால் ஸூலாயுதத்தை அணியாகக் கொண்ட அளப்பிலா புகழுடைய நடராஜனே

இனிமேல் மறந்தும்கூட நான் பிறக்காமல் இருக்க வரமருளுவாய் திரு ஆலவாய் என்று அழைக்கப்படும்

மதுரையில் வாழும் சொக்கநாதா
ravi said…
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்


கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்

அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

...அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே,,, தேவாரம்.


ravi said…
உணவருந்தினும் இல்லை பட்டினியாக கிடப்பினும்

தூக்கத்தின் பிடியில் இருந்தாலும்

உன்னுடைய மலர்ப்பாதங்களைப் பற்றி பெருமையாக

சொல்லும் பதங்களைத் தவிர வேறு சொற்களை என் நாக்கு மறந்தும் பேசாது

அன்று திருமாலான கண்ணனும் அவனுடைய நாபி கமலத்தின்

தாமரையில் அமர்ந்து இருக்கும் நான்முகனும்

உன்னுடைய அடி முடிகாணாமல் தோற்றுப் போகும் வண்ணம் அளவறியாத நெடியோனே

அப்படிப்பட்ட நீ எனக்கு அருள்புரியாத வண்ணம் இருப்பதுதான் உனக்கு நீதி உன் உள்ளத்தின் அருள் என்றால் அதையும் நான் மகிழ்வுடன் ஏற்றுகொள்வேன்
ravi said…
ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை

ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே

ஒற்றி யூர வொருசடை வைத்தவன்

ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே

..
ravi said…
.வானத்தில் ஒளிரும் சந்திரன் ஒரு பாம்பை பிடிப்பதற்காக அதன் பின்னே ஒற்றி செல்லும்

அந்தப்பாம்பும் அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக ஊர்ந்து ஒற்றி செல்லும்

இப்படி ஒன்றுகொன்று விரோத மனப்பான்மை உடைய சந்திரன் மற்றும் பாம்பையும் தன் சடையில் வைத்த திருவொற்றியூரில் குடிகொண்டு இருக்கும்

ஆதிசிவனைத் நாம் தொழுதால் நம்முடைய வினைப்பயன்கள் நம்மை விட்டு ஓடும் என்பதில் அச்சம் உண்டோ.
ravi said…
சங்கீத ஜாதி முல்லை
சங்கீதத்தைப் பற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சு.எனக்கு பிடித்த ராகங்களில் இரட்டை பிறவியான லலிதா வசந்தாவைபற்றி பார்க்கலாம். முன்பெல்லாம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால் வைக்கும் பெயராக மட்டும் இருந்த ராகம் இது.இரண்டுக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது சற்று கடினமான விஷயம்
முதல் ராகம் லலிதா
இதன்
ஆரோஹனம் ஸ ரி க ம த நி ஸ
அவரோஹனம் ஸ நி த ம க ரி ஸ
ravi said…
அருமையான வர்ஜ்ய ராகம் இது.பாடும் போது சுகமாக இருக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம் தரும்.இதில் வசந்தா ராக சாயல் இல்லாமல் பாடுவது கஷ்டம். இதுனாலேயே ரொம்பபேர் "ரிஸ்க்" எடுக்கத் த்யங்கும் ராகம்.
இதில் மிகவும் பிரபலமாக இருக்கும் கீர்த்தனை ஹிரண்மயீம் லக்ஷிமீம் என்ற முத்துஸ்வாமி தீக்ஷதருடையது.
ravi said…
ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்
ராகம்: லலிதா தாளம்: ரூபகம்

பல்லவி

ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி

ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)

அனுபல்லவி

கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்

ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்
ravi said…
கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)
சரணம்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.
பல்லவி
ravi said…
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்

அனுபல்லவி

அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால்
ravi said…
அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
ravi said…
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம்,
ravi said…
முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
ravi said…
என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்
முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 18*☀️☀️🌞🌞🌞
ravi said…
இனிய நாள் இன்றும் தொடரட்டும் 🌞🌞🌞
ravi said…
நம: உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |

நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: || 18 ||
ravi said…
மிகுந்த உக்கிரமும் தைரியமும் வாய்ந்தவனுக்கு நமஸ்காரம்.

தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்.

தாமரையை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம். 🌷🌷🌷

வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்🌞🌞🌞
ravi said…
*வல்லமை தாராயோ !!!* 🌞🌞🌞

சிந்தை தெளிந்திட
சிந்தனை பொங்கிட

தீமை களைந்திட
நன்மை புரிந்திட

தன்னிலை அறிந்திட
தமிழினை புறிந்திட

கற்பனை சிந்திட
கவிதைகள் தந்திட

காலம் வென்றிட
கலைகள் பெற்றிட

புலமை மிகுந்திட
புதுமை படைத்திட

ஈரம் நிறைந்திட
வீரம் மிகுந்திட

சோர்வினை மாய்த்திட
தரணியை ஜெய்த்திட

காலனை வென்றவனே
எனக்கு வல்லமை தாராயோ🙏🙏👍👍
Moorthi said…
அழகு நடையில் வசனம். அற்புதம் 👏🙏🙏
Kousalya said…
வல்லமை அருமை.,🙏🙏👍👍👏👏
ravi said…
ஐயோ கவி என்றல்லவவோ நினைத்தேன் .. வசனம் என்று சொல்லி பொங்கி வரும் பாலில் தண்ணீர் ஊற்றி விட்டீர்களே மூர்த்தி 😰
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 125* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா?

அவர்பாட்டுக்கு நடக்கிறார்.

ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.

சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை:

‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’

பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம்.

அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா?

அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது.

அவள் துடிதுடித்தாள்.

இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள்.

மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.🙂🙂🙂
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 125* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 26👍👍👍
ravi said…
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்

விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்

விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம்

மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26
ravi said…
இந்த பாடலில் ஆச்சரியாளின் கற்பனை கொடி கட்டி பறக்கிறது அதே சமயத்தில் அவர் அம்பாளின் மீது வைத்திருந்த அதிபக்தி பாகிரீதியை போல் பிரவாகம் எடுத்து ஓடுகிறது .

பிற கவிகளுக்கும் கற்பனை வளம் சிறக்கும் பாடலாக வரிகள் அமைந்துள்ளன ..

சரி என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போமா ?
ravi said…
தாயே ! என்ன ஆச்சரியம் இது ... ஊழிக்காலத்தில் அனைத்து தேவர்களும் மறைந்து விடுகிறார்கள் . என்றும் மூவா முகுந்தனும் விரிஞ்சியும் கூட வாழ்வதில்லை ... இதில் என்ன ஆச்சரியம் என்றால் இவர்கள் எல்லோருமே பாற்கடலில் உண்டான அமுதம் உண்டவர்கள் ... ஆனால் இவர்களுக்கும் அந்திமம் வருகிறதே ...ஆனால் ஆல கால விஷம் உண்டவன் மட்டும் வெகு ஆனந்தமாய் அற்புதமாக அதி சுந்தரனாய் நடம் புரிந்து கொண்டிருக்கிறானே .. அவன் அமுதம் அருந்த வில்லை .. இது எப்படி சாத்தியம் ?

1. உண்ட நஞ்சை அமுதாக்கிய உன் கரங்கள் செய்யும் வல்லபமா ?

2. உன் திருமாங்கல்யத்தின் பலமா ?

3. அவனுள் நீ இருப்பதால் வந்த அதிசயமா ?

எதை சொல்வேன் எப்படிச் சொல்வேன் உன் கருணையை அம்மா என்கிறார் ... 👣👣
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*33 சிறப்புலி நாயனார்*🐯🐯🐯
ravi said…
மந்திரம் நான்மறையாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன (அஞ்செழுத்துமே)"

தேவாரத்தின் வரிகள்.
ravi said…
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”

திருத்தொண்டத் தொகை
ravi said…
பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர் என்பதே

அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். புலி போல் சிவ நிந்தனை செய்வோர் மீதே பாய்வார் .. சிங்கம் போல் கர்ஜிப்பார் .. கரடி போல் கத்துவார் யானை போல் பிளிருவார்.. சிவா என்றால் குட்டி நாய் போல குழைவார்...

இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார்.

1.சிவசாதாக்கியம்,
2.அமுர்த்திசாதாக்கியம்,
3.மூர்த்தி சாதாக்கியம்,
4.கர்த்திருசாதாக்கியம்,
5.கர்மசாதாக்கியம்

என்னும் பஞ்சசாதாக்கியங்களுள், கர்மசாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து பரமேஸ்வரனை அனுதினமும் வழிபடுவாரே

சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினாரே

அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பாரே

அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார்.

இவர் திருவைந்தெழுத்தொதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தாரே

சிவனே வந்து நடமாட அந்த குரல் தந்தவனாய் காஞ்சியில் வாழும் கருணை வெள்ளமும் ஒரு சிறுப் புலி தானே 🐯🐯🐯
ravi said…
[10/02, 8:49 am] Moorti Mumbai: அருமை 👌🙏🙏🙏🙏
[10/02, 10:01 am] Shivaji L&T C: Arumai. 🌹🌹🙏🙏
TV Ganesh said…
பஞ்ச்சாதாக்கியங்கிளில்
கர்மசாதாமாக்கியதை
தர்ம சாதகமாக்கிய

கண்டது எனது பாக்கியம்

நவீன சிறப்புலி நாயனாரே

நீங்கள் கவிதையில் சிறந்த புலி

கவிதை நடையில் சீறும் புலி

போற்றும் உங்களை இந்த புவி
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 219🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
*The first ever challenge*

1 *DRDO .. missile centre*
(Contd)...

Road was a challenge , railways was a challenge . Added to that a big missile centre very close to our upcoming port .

DRDO decided at what distance every year the port should be ...

As far as they were concerned a port is a movable property .

There were two missile centres in Odisha ...

Let us understand more about the both .

Very prestigious missiles were fired from both the places ..

Dr. Abdul Kalam Island, formerly known as *Wheeler Island* , is an island off the coast of Odisha, India, approximately 150 kilometres (93 mi) east of the state capital Bhubaneswar.

The island was originally named after English commandant Lieutenant Hugh Wheeler.

On 4 September 2015, the island was renamed to honour the late Indian president, Dr. A. P. J. Abdul Kalam.

The Integrated Test Range missile testing facility is located on the island, and serves as the test facility for most of India's missiles such as the Akash, Agni, Astra, BrahMos, Nirbhay, Prahaar, Prithvi, Shaurya Missile, Advanced Air Defence, Prithvi Air Defence, and ASAT missiles.👍👍👍

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை