அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 37 பதிவு 31

            அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 37

                                             பதிவு 31



கேள்வி பதில் நேரம்

பதிவு 31 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

கேள்வி 38

கேள்வி பதில் நேரம்

பட்டர் வரும் நேரம் .. இதழ்கள் இன்று வரைந்த கவிதையை முணுமுணத்தன...


அடைக்கலம் கொடுக்கும் அகிலாண்ட நாயகி

கற்சிலை என நினைத்து  முன்னே நின்றேன்

காதோரம் கதிரவன் ஒளி உமிழக் கண்டேன்

நுதலிடை சித்துகள் பிறப்பதை கண்டேன்

திலகமதில் நான்மறைகள் உறைய கண்டேன்

கண்களிலே கருணை மழை பொழிய கண்டேன்

நாசியிடை உயிர் இனங்கள் மூச்சினை கண்டேன்

பில்லாக்கு பிறையொன்று இருக்க கண்டேன்

செந்தளிர் இதழிடையே தமிழை கண்டேன்

சங்கொக்கும் கழுத்தினிலே சாகரம் கண்டேன்

வளை கொஞ்சும் கைகளிலே அருளை கண்டேன்

உயிரினங்கள் பசி போக்கும் மார்பை கண்டேன்

அகிலமது உறைகின்ற கருவை கண்டேன்

உலகமதில் படரும் கொடி இடையை கண்டேன்

காலனை எத்திய காலினை கண்டேன்

தஞ்சமென நான் புகலும் அடிகள் கண்டேன்

அகிலாண்ட நாயகி நீயென உணர்ந்தேன்

கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று 

நினைக்கயிலே

மனம் மருண்டு வினா ஒன்று எழந்தது

கூற்றவன் எனை வந்து கூப்பிடுகையில்

கூட்டிபோக வருவாயோ என கேட்டேன்

புன்னகைத்து அன்னை நீ அணைத்து கொண்டாய்

எனை இழந்து உன்னிடமே கலந்துவிட்டேன்🙌🙌🙌


பட்டர் மெய் மறந்து கேட்டுக்கொண்டிருப்பதை பார்க்காமல் பாட்டில் மூழ்கி இருந்தேன் ... 

அவரே என் தோளைத் தொட்டார்... பரவாயில்லையே அழகான வார்த்தைகளை அபிராமி உனக்கு இன்று தந்திருக்கிறாள் ... வாழ்த்துக்கள் என்றார் 

நான் .. ஐயனே ! எனக்கு எந்த தகுதியும் இல்லை எனக்குப்போய் அன்னை .....  

பட்டர் அவள் பவானீ... அவள் மனம் வைத்தால் எதையும் தருவாள் ... பெய்யும் கனகமும் அவளால் , செய்யும் திறனும் அவளால் சொல்லும் சொல்லும் அவளால்... 

🙌🙌🙌

நான்

ஐயனே ... இன்று தாங்கள் பவானீ என்ற திருநாமத்தை சொன்னீர்கள் .. 

எனக்கு இதில் ஒரு பெரிய பாடம் உள்ளது என்று புரிகிறது ... 

அருள் கூர்ந்து இந்த நாமத்தின் அருமையை அடியேனுக்கு விளக்க முடியுமா ? 

பட்டர்... 

உண்மை .. இந்த நாமத்தின் அருமையை சொல்லத்தான் வந்தேன் . 

புரிந்து கொண்டு விட்டாய் ... வாழ்த்துக்கள் 

மிகவும் அருமையான நாமம் .. அபிராமி எனும் நாமத்திற்கு அடுத்தபடியாய் நான் மிகவும் ரசிக்கும் நாமம் ..🙌🙌🙌

பவன் என்பதன் பெண் பால் பவானீ ...முதலில் பவன் என்ற திருநாமத்திற்கு என்ன அர்த்தம் ... 

நான்கு அர்த்தங்கள் உண்டு 



ருத்ரோ பவ ... ருத்திரனை குறிக்கும் , பவ காமோ... காமனை குறிக்கும் 

பவம் என்று சொன்னால் இந்த பிறவி பெரும் ஸாகரம் ..பவ ஸாகரம் 

ருத்திரனாக இருக்கும் சிவனின் உள் இருப்பவள் பவானீ...மன்மதனுக்கு உயிர் கொடுத்தவள் 

அதனால் பவானீ..நம்மையெல்லாம் பவ சாகரத்தில் இருந்து மீட்பவள் என்பதால் அவள் பவானீ

பவம்  என்றால் உற்பத்தி என்றும் ஒரு அர்த்தம் வரும் ...  இந்த உலக உயிர்களை அவள் பவன் துணை கொண்டு உற்பத்தி செய்வதால் அவள் பவானீ 

சிவனுக்கு எட்டு வடிவங்களும் எட்டு குணங்களும்  உண்டு .. எட்டு குணங்கள் : பஞ்சபூதங்கள் 5 குணங்கள் + சூரியன் + சந்திரன் + அக்னி .  

இதையே திருவள்ளுவர் 

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.... என்கிறார்

அதில் ஜலமும் உண்டு அல்லவா .. அந்த ஜலத் தத்துவத்திற்கு அதிபதியாய் இருக்கும் மூர்த்தத்திற்கு பவம்  என்று பெயர் உண்டு .


பவ என்றால் ஒன்றில் இருந்து வருவது 

பவானீ என்றால் எந்த ஒன்றில் இருந்து வருகிறதோ அதுவாய் ஆகிவிடுதல் ...

பரம்பொருளாய் ஆகக்கூடிய தத்துவத்திற்கு பவானீ என்று பெயர் 

பவானீ தவம் தாஸே மயீ என்று சொல்ல வந்தவன் பவாநீத்வம் தாஸே .... என்று சொல்ல தானாகவே ஆகி விடும் வரத்தை அம்பாள் அருளினாள் அவனுக்கு .. 

கும்பகர்ணனுக்கு நாக்கு புரண்டது . நித்திரைத்துவம் பெற்றான் .. காரணம் எண்ணம் நல்ல எண்ணம் இல்லாததால் ... 

இங்கே எண்ணம் நல்ல எண்ணம் .. நாக்கு இங்கேயும் புரண்டது .. அவனே அம்பாளாகி விட்டான் ... 🙌🙌🙌


எதிலிருந்து ஒன்று தோன்று கிறதோ அதுவே ஆகும் தன்மை .. 

கேட்பதற்கும் அதிகமாக வரம் கொடுப்பவள் என் அபிராமியாக இருக்கும் பவானீ .. 

இதை வைத்து தான் பாரதி 

தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;

கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;

ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்

சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,

பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;

யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொரிலாம்

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;

இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்

நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

என்று பாடினார் .



ரவி உனக்கு ஒன்று தெரியுமோ ..? 

சிந்தாமணி கிரகத்தில் நுழையும் காமேஸ்வரருக்கு அம்பாள் யார் அவர் அடியார்கள் யார் என்ற குழப்பம் அடிக்கடி வருமாம் .. 

இவள் தான்  எல்லோரையும் தானாகவே  மாற்றுபவளாயிற்றே.... 

தெய்வ வடிவம் தரும் என்று பாடினேன் அல்லவா ... 

இந்த திருநாமத்தை மனதில் வைத்து தான் .. 

எல்லோருக்கும் 

பவானீத்தவம் தரும் இவள் கருணா ரஸ சாகரா என்றால் அது கண்டிப்பாக மிகை ஆகாது .. 

எந்த எஜமான் , யாரோ ஒருவர் கேட்டதும் தன் seat ஐ காலி செய்து பிறர்க்கு அதை இந்தா எடுத்துக்கோ என்று சொல்வான் ? 

அதனால் தான் நான் இப்படி பாடினேன் 

வந்தே வணங்கும் அடியார்க்கு வானுலகம் தந்து தாம் போய் பரிவுடன் தங்கும் சதுர்முகமும் ..... 

இப்படி ஒரு தாயை நாம் எல்லோரும் அடைந்திருக்கிறோம் என்றால் நாம் முன் செய்த புண்ணியமே ரவி .... 🙌🙌🙌

நான்... ஐயனே எப்படிப்பட்ட விளக்கம் ... அருமை ... 

பட்டர் .. உங்கள் எல்லோருக்கும் பவானீத்வம் கிடைக்கட்டும் .. வாழ்த்தி விட்டு மறைந்தார்  எவரும் அறியா மறையை தெரிந்து கொண்டவர்... 🙌🙌🙌



        👌👌👌👌👌👌👌💐💐💐💐💐👍👍👍


Comments

ravi said…
கண்டிப்பாக குடும்பம் முழுவதும் ஒன்றாக இருந்து படித்து காட்டுங்கள் வந்த அருமையான தகவல்

*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*
ravi said…
1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*

ravi said…
*2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.*

ravi said…
*3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.*
ravi said…
*4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல்,பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில்தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.*
ravi said…
*5.திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீபகாலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது.*

*6. திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.*

ravi said…
*7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.*

ravi said…
*8.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனிமாதம்,தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவு−செலவுக்கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.*

ravi said…
*9. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.*

ravi said…
10. சென்னை ஆளுநராக இருந்த சர்.தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும்,தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக்கட்டளை ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோவில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.*
ravi said…
11 திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்.*

ravi said…
*12. ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.*

ravi said…
*13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.*
ravi said…
14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.*

*15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டுவிட்டன.*

ravi said…
*16. ஏழுமலையான் கோவிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோவில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.*

*17. தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்.*
ravi said…

*18. ஏழுமலையான் கோவிலில், மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப்படுபவை. இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்.*

*19. திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.
ravi said…
20. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பரஞ்செய்து ஏலம் விடுகிறார்கள்.*

ravi said…
*21. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.*

*22. ஏழுமலையான் கோவிலின் தலமரம் புளியமரம்.*

ravi said…
*23. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.*

*24. ஏழுமலையான் கோவிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.*

*25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோவிலே ஆகும். (எ.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.*

*26. ஏழுமலையானுக்குத் தினசரி , ஒருமுறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்.*

*#ஸர்வம்_ஸ்ரீ_கிருஷ்ணார்ப்பணம்*
ravi said…
எஞ்சியுள்ள வாழ்நாளில் தஞ்சம் உன் திருப்பாதமே

நெஞ்சிலே உன் திருநாமம் நிலைத்து நிற்கவே நித்தம் தவம் புரிகிறோம் பொன்னார மேனியனே 🌷🌷🌷
ravi said…
35.சுந்தரமூர்த்தி நாயனார்
ravi said…
திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவரே ஆலாலசுந்தரர்.

இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய தொண்டினை மேற்கொண்டவரே

ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தனரே.

அங்கு அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனரே

ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டாரே.

கண்டதும் காதல் கொண்டார் ...

கொண்டதும் விண்டவர் காணாத பெண்டீரை ஒரு பாகம் கொண்டவன் புன்னைகைத்தானே பூவுலகில் பிறவி எடுக்க

தடுத்தாட்க்கொள்வேன் என்றான் தக்க சமயத்தில் ...

வெண்ணெய் திருளும் வெண்ணெய் நல்லூர் அங்கே வேத நாயகன் நாடகம் ஒன்றே புரிந்தான் ...

பார்ப்போம் ரசிப்போம் அவன் நாடகம் தனை நாளை 🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 127*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ தி³வ்யபத³வீம்

வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி ப⁴ஜந்தே ஹரிமுகா:² ।

கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ

கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா ॥
ravi said…
ஆசைக்கோர் அளவில்லைன்னு அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்! –

இந்த பூமிக்கே நீ ராஜான்னு சொன்னா,கடலுக்கு யார் ராஜா?

நான் கடல் மேல் படை எடுக்கப் போறேம்பா அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பெரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்! –

குபேரனுடைய செல்வம் எல்லாம் உனக்கு கொடுப்பேன்னு சொன்னா கூட ஆனா இரும்பை தங்கமாக்கற ரசவாத வித்தை என்ன?அதை கத்துக்கறேன்பாளாம்.

அப்படி மனசோட ஆசைக்கு அளவே கிடையாது.

*கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ* – நீ தாட்சண்யம் பண்ற. எனக்கும் என்னுடைய ஆசை அளவில்லாம இருக்கு.

உன்னுடைய தாட்சண்யமும் அளவில்லாம இருக்கு
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 141* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

48வது திருநாமம்
ravi said…
*48. பத்மநாபாய நம: (Padmanaabhaaya namaha)*
ravi said…
அப்ரமேயோ ஹ்ருஷீகேச ’:
*பத்மநாபோ* (அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
புராணங்களுள் மிகவும் இனியதாகக் கொண்டாடப்படுவது ஸ்ரீமத் பாகவத புராணம். கிளிவடிவம் கொண்ட சுகமகரிஷி அதை உபதேசித்தார்.
சாதாரண பழத்தைவிடக் கிளி கொத்திய பழத்துக்குச் சுவை அதிகம் என்ற முதுமொழிக்கேற்ப சுகமகரிஷி என்னும் கிளி
பாகவதத்தைக் கொத்தியதால், பாகவதம் பிற புராணங்களைக் காட்டிலும் மிக மிக இனியதாக விளங்குகிறது.

அந்த பாகவத புராணத்தின் மூன்றாவது ஸ்கந்தத்தின் எட்டாவது அத்தியாயத்தில் பிரம்மா தோன்றிய விதம் வர்ணிக்கப்பட்டுள்ளது.

பிரளய காலத்தில் அனைத்து உலகங்களும் பிரளயக் கடலில் மூழ்கி இருந்தன.

அந்தக் கடல்நீரில் இருந்து ஒரே ஒரு தாமரைப்பூ மட்டும் தன்னந் தனியாகத் தோன்றியது.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தர்ம சாஸ்த்ரமே விதித்த வ்ரதமாக ஏகாதசி இருப்பதால் மாத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகிய எல்லாருமே அதை அநுஷ்டித்தாலும் ரொம்பவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பது மாத்வர்தான்.

ravi said…
ஸாதாரணமாக வேத மந்திரங்களையே நேராகப் பிரயோஜனப்படுத்திச் செய்கிற கர்மாக்களுக்குத்தான் மதாநுஷ்டானங்களில் ப்ராதான்யம் [முதலிடம்] கொடுப்பது வழக்கம்.
ravi said…
நம் மதத்துக்கு மூல நூல் வேதம்தானே? அதோடு பித்ரு கர்மா, தேவ கர்மா என்ற இரண்டுக்குள் பித்ரு கர்மாவுக்குப் ப்ராதான்யம் கொடுத்து விட்டு அப்புறம்தான் தேவ கர்மாவைச் செய்ய வேண்டும். சிராத்தம் என்பது வேத மந்திரங்களாலேயே ஆகிற கர்மா. அதோடு அது பித்ரு கர்மாவும் ஆகும். ஏகாதசி உபவாஸத்தில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. நாமஜபம், பஜனை ஆகியன பௌராணிகமும் தாந்த்ரிகமுமே ஆனவை. பூஜை பண்ணுவதில் மட்டுமே வேத மந்த்ரங்கள் கொஞ்சம் சேரும். ஏகாதசியை ஒரு உபவாஸமாக தர்ம சாஸ்த்ரம் சொன்னாலும் ச்ராத்தத்தைப் போல ஸ்மார்த்த கர்மாவாக விதிக்கவில்லை. அதோடு ஏகாதசி என்பது பித்ரு ஆராதனைக்கு அப்புறமே வருகிற தேவ ஆராதனைதான்.
ravi said…
ச்ராத்தம் என்பது ரொம்பவும் வைதிகமான ஸ்மார்த்த கர்மா. அதிலே பித்ரு சேஷமாக போஜனம் பண்ண வேண்டியதும் ஒரு அங்கம். ச்ராத்தம் பண்ணி விட்டுப் பித்ரு சேஷம் சாப்பிடாவிட்டால் தப்பு.

ravi said…
ஏகாதசியில் ச்ராத்தம் வந்தால் என்ன செய்வது? ‘ச்ராத்தம் பண்ணிப் பித்ரு சேஷம் சாப்பிடத்தான் வேண்டும். ஏனென்றால் ஏகாதசி எவ்வளவு முக்கியமான தாயிருந்தாலும், அதைவிட வைதிகமான ச்ராத்தத்துக்குத் தான் இன்னமும் அதிக முக்யத்வம் தரவேண்டும்’ என்று ஸ்மார்த்தர்களும், வைஷ்ணவர்களும் நினைக்கிறோம்.
ravi said…
அன்று ஏகாதசி உபவாஸ நியமத்தை விடுவதால் தோஷமில்லை; வேதக் கட்டளைப்படி பண்ணுவதால் நமக்குத் தப்பு வராது என்று நினைத்து ச்ராத்தம் பண்ணி போஜனம் செய்கிறோம்.
ravi said…
ஆனால் மாத்வர்கள் ஏகாதசியன்று ச்ராத்தம் செய்வதில்லை. இந்த வ்ரதாநுஷ்டானந்தான் முக்கியமென்று நினைத்து உபவாஸமிருக்கிறார்கள். ஆனால் அதற்காக சிராத்தத்தை விட்டுவிடுவதில்லை. ஏகாதசியன்று வருகிற சிராத்தத்தை மறுநாள் த்வாதசியன்று செய்கிறார்கள். அதிலும் த்வாதசி ப்ராணை காலம்பறவே [இளங் காலையிலேயே] பண்ணிவிட வேண்டுமென்கிற புராண விதிக்காக, மத்யான்ன காலத்துக்கு அப்புறமே பண்ண வேண்டிய சிராத்தத்தை அன்று ரொம்ப முன்னதாகவே பண்ணி விடுகிறார்கள்.

ravi said…
தீட்டுக் காலத்தில்கூட ஏகாதசி உபவாஸமிருக்க வேண்டும் என்பதில் எல்லா ஸம்பிரதாயக்காரர்களும் ஒத்துப் போகிறார்கள். மற்ற எந்த உபவாஸத்துக்கும் இம்மாதிரி ஸுதக ஆசௌச* காலங்களில் பலனில்லாததால், அவற்றை அப்போது அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்றே விதி இருக்கிறது. ஏகாதசிக்கு மட்டும் விலக்கு.
ravi said…
The ARROGANCE

After travelling long through a forest, Kalidasa reached a village. He felt very thirsty and looked around for water, whereupon he saw an old woman drawing water from a well.
He went up to her and asked her for water. She agreed to give him water, but asked him to first introduce himself, “Who are you ? Introduce yourself.” (apna parichay do)

Now Kalidasa, who was a renowned and revered scholar of his time, thought that an ordinary and old village woman was not worthy of knowing who great Kalidasa was.
So he said, “I am a traveller.”
But the old lady replied, “No, you cannot be a traveller. In this world there are only 2 travellers – the Sun and the Moon. Both Rise and Set every day and keep travelling perpetually.”
Who are you ?
Then thirsty Kalidasa said, “Alright then, treat me as a guest.”
The lady promptly replied, “No you cannot be a guest, son. In this world there are only 2 guests – Youth and Wealth … both are temporary and do not stay even if you plead with them a million times, and hence can only they be called as guests.”
Who are you ?
Thirsty but now quite intrigued with the profoundness of this old lady, Kalidasa said, “I am a Tolerant person, mata (sahansheel vyakti).”
Now the old lady replied, “You don’t quite look tolerant, young man. In this world only 2 truly know the meaning of Tolerance – Bhoomi (Earth) and Tree . How much ever you stamp the earth or throw stones at the tree (for the fruits), both continue to nurture us.”
So, who are you ?
With unquenched thirst, Kalidasa was increasingly becoming irritable. He said, “Fine then, consider me a stubborn person (hatavaadi)”
The lady smiled and said, “No my child, you are not that stubborn. There are only 2 truly stubborn personalities our nails and our hair. We keep cutting them non-stop, but they continue to grow.”
Who are you ?
Kalidasa had been patient so far, but now in anger he said, “Alright, I am a fool”.
Now the lady gave a wide smile and said, “There are only 2 kinds of fools in this world a King who rules without having any capability or knowledge & a Minister who is a sycophant to such a King and lavishes praises on such a useless king.”
ravi said…
Who are you ?

Kalidasa realised that he had been outsmarted by an old illiterate village woman. In complete awe and humility, he fell at the feet of the lady, saying, “O mother! How ignorant I was to think that I know myself. I am ashamed of myself. Pardon my ignorance. Show mercy, and grant me water, I beg of you.

ravi said…
When he touched her feet and then got up, whom did he see?
Mata Saraswati the Goddess of Learning and Wisdom.
She said, “Kalidasa, you are wise. But only if you know yourself do you become a true Manushya (human being). Your ego has overshadowed your achievements. You are educated, but you are _also given to arrogance. Hence, I had to come to guide you.
ravi said…
The mark of a true human being is not his knowledge, but his humility. Your intellect and education is of no use if it only feeds your ego.
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 222🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
2. Challenge -Olive Ridley Turtle*

Threatened Population (globally except Mexico breeding population)

In the eastern Pacific, the large arribada nesting populations have declined since the 1970s.

 Nesting at some arribada beaches continues to decline (e.g., Nancite in Costa Rica) and is stable or increasing at others (e.g., Ostional in Costa Rica).Â

There are too few empirical data available from solitary nesting beaches to confirm the declining trend that has been described for numerous countries throughout the region including El Salvador, Guatemala, Costa Rica, and Panama.

A Western Atlantic arribada nesting populations are currently very small.

A Recent data indicates the Suriname/French Guiana nesting population may still be threatened by incidental capture in the shrimp trawl fishery.

A Nesting data from French Guiana/Suriname during the 2002-2006 nesting seasons indicate that while nesting in Suriname continues at very low levels, nesting in French Guiana and overall nesting appears comparable to levels recorded for both countries about two decades ago.

This may indicate a shift from nesting beaches in Suriname to French Guiana and reflect the dynamic aspects of beach erosion and accretion in the region.

The other nesting population in Brazil, for which no long term data are available, is small, but increasing.

In the eastern Atlantic, long-term empirical data are not available and thus the abundance and trends of this population cannot be assessed at this time.

However, the threats associated with growing commercial and artisanal (i.e., generally smaller scale local, non-commercial) fisheries in the region are serious and warrant close attention.

In the northern Indian Ocean, arribada nesting populations are still large but are characterized as stressed and either in decline or on the verge of decline due primarily to the incidental capture of large numbers of turtles in shrimp trawl and gillnet fisheries.

Declines of solitary nesting olive ridleys have been reported in Bangladesh, Myanmar, Malaysia, Pakistan, and southwest India.
ravi said…
பெரியவா என்றால் யார் ? – சதாசிவ சர்மா

ஒரு நாள் ஏகாந்தமாகவும் விஸ்ராந்தியாகவும் இருக்கும் பொழுது என்னுடன் பேசியது:

ஸ்ரீ பெரியவா :ஏண்டா, பெரியவான்னா என்ன?

நான் : (பதில் சொல்ல முடியாமல் முழித்தேன்)

ஸ்ரீ பெரியவா : தெரியலயா………பெ ரி ய வா …..ந்நா என்ன?

நான் : (உண்மையாகவே ஒன்றும் புரியாமல் இருந்தேன்)
ravi said…
ஸ்ரீ பெரியவா :ரி ………..ரி ந்னா ரிக் வேதம், ய …………ய ந்னா யஜுர் வேதம். இப்ப வார்த்த முடியப் போறது ங்கற மாதிரி கடைசி வேதத்தின்……அதாவது அதர்வ வேதத்தின் கடைசி எழுத்தான ‘வ’. இதை சேக்கறதுக்கு முன்னாடி சாம வேதத்துக்கு உயிர் நாடி கானம். அ…..அ…..அ… ந்னு நிறைய வரும். அது சேந்துண்டு இருக்கு. அதாவது ரி …….ய…….அ………வ.
இப்ப அ+வ = வா……. இப்ப ரி ……ய…… வா சரியாய்டுத்தா..?ஏதோ என்னால முடிஞ்சது பெரியவாளோட வேத சம்பந்தப்படித்திட்டேன்னு பாக்கிறயா..? ஒரே ஒரு எழுத்து மிச்சமிருக்கே! ‘பெ’ அத என்ன பண்றது?..
ravi said…
(ஸ்ரீ பெரியவா என்னை நிமிர்ந்து பார்த்து என் பதிலை எதிர் பார்ப்பது போல் இருந்தது. நான் ஒன்றும் புரியாமலும், தெரியாததாலும் பதில் சொல்லாமல் இருந்தேன்)
ஸ்ரீ பெரியவா: என்ன முழிக்கறே? ஒண்ணும் புரியாம, தெரியாம இருக்கறதுக்கு என்ன பெயர் தெரியுமா? அஞ்ஞானம்நு சொல்லுவா. அந்த அஞ்ஞானமா இருக்கறவாள பாத்து பேந்த்த பேந்த்த முழிக்கறத ‘பெ’ ந்னு முழிக்கறதா சொல்லலாம் இல்லையா? அப்போ ‘பெ’ ங்கறது அஞ்ஞான வார்தையாயிடறது.
ravi said…
இப்ப எல்லாதையும் சேத்தாக்க, அஞ்ஞானத்தோட இருக்கறவாளை வேதத்தோட சம்பந்தப்படுத்தறதது தான் இந்த வார்த்தைன்னு தெரியறதா?.

அஞ்ஞானிகளை யார் ரிக், யஜுர், சாம அதர்வ வேத மார்க்கத்திலே மாத்தறாளோ அவாதான் “பெரியவா“

(எனக்கு இப்போதுதான் புரிந்தது அஞ்ஞானியான என்னை வேத மார்க்கத்தைக் காட்டியவராக இவர் இருப்பதினால்தான் நாம், ஏன், எல்லோருமே “பெரியவா” என்று கூப்பிடுகிறோம்னு.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
வேதாந்தம் உலகமே மாயை என்கிறது. அதனால் உலக வாழ்க்கைக்கு உதவுகிற விஷயங்களில் இந்தியர்களுக்கு அக்கறையே கிடையாது.
ravi said…
ஸயன்ஸ், டெக்னாலஜி, வைத்தியம், என்ஜினீயரிங் எல்லாம் மேல் நாட்டிலிருந்துதான் இந்தியாவுக்கு வந்திருக்கிறது” என்று சில வெள்ளைக்காரர்கள் சொல்வதுண்டு. இதுவே உண்மை என்று நம்மவர்களும் நம்பி, “ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஸ்வாமியையும், ஆத்மாவையும் பற்றித்தான் ஹிந்து சாஸ்திரங்கள் இருக்கின்றன. லோக வாழ்க்கைக்கு உபயோகமாக அவற்றில் ஒன்றும் இல்லை” என்று கண்டனம் செய்வதுண்டு.
ravi said…
உண்மையில் நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த உண்மை தெரியும். ஆயுர்வேதத்தை—சரகர், சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப் பார்த்தால், இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளும், ஸர்ஜரி விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். மிகவும் புராதனமான அதர்வண வேதத்திலேயே யுத்தத்தில் உண்டாகும் பல விதமான காயங்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், சிகிச்சை முறை முதலியவற்றைப் பற்றிச் சொல்லியிருப்பது இப்போது ரொம்பவும் உபயோகமாக இருப்பதாகச் சமீபத்தில் காசி சர்வகலாசாலையில் ஒருத்தர் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார்.
ravi said…
என்ஜினீயரிங் டெக்னாலஜியிலும் ஆதியிலேயே அபாரமான திறமையை நம்மவர்கள் காட்டியிருக்கிறார்கள். போஜராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான மிஷின்களைச் செய்வதற்கான அடிப்படைத் தத்வங்களை விவரித்திருக்கிறது.
ravi said…
சுமார் இரண்டாயிரம் வருஷங்களான ஓர் இரும்பு ஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்குப் பக்கத்தில் துருப்பிடிக்காமல் இருக்கிறது. டாடா தொழிற்சாலை இல்லாமலே இப்பட்டிப்பட்ட பெரிய தூணை எந்த உலையில் (FURNACE) அடித்து உருவாக்கினார்கள் என்று ஆச்சரியப்படும்படி இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே இப்படிப் பல என்ஜினீயரிங் அற்புதங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளான கல்லணை எந்தவிதமான கலவையால் கட்டப்பட்டது என்று இன்றும் புரியவில்லை.
ravi said…
ஆவுடையார் கோவில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதத்தின் அளவுக்கு மெல்லியதாக இழைத்திருக்கிறார்கள். திருவீழிமிழலை வெளவால் ஒட்டி மண்டபத்தின் பிரம்மாண்டமான வளைவை (ARCH) எந்த ஆதாரத்தில் கட்டியிருக்கிறார்கள் என்று என்ஜினீயரிங் நிபுணர்களும் வியக்கிறார்கள்.
ravi said…
தமிழில் பதினெண் சித்தர்கள் பாடலில் இருக்கிற வைத்திய நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்தியத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரகணம் என்று கொஞ்சம்கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது.
எல்லா கலைகளும் சாஸ்திரங்களும், ஸயன்ஸுகளும், பாரத தேசத்தில் நன்றாக வளர்ந்தே வந்திருக்கின்றன. ஆனாலும், இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் அணுகுண்டு போன்ற எத்தனையோ அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? இப்படி நேரக்கூடாது என்பதாலேயே, பக்குவமானவர்களுக்கு மட்டும் நம் தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
ravi said…
சாதாரண ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் இந்த சாஸ்திரங்கள் அமைந்திருப்பதற்கு இதுவே காரணம். சித்தர்களின் தமிழ் பாடல்களும்கூட இப்படித்தான் நமக்குப் புரியாத பரிபாஷையில் இருக்கும்.
ravi said…
இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சி செய்தால், நம் சாஸ்திரங்களிலிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும். சில சமாச்சாரங்கள் நமக்குப் புரியாமல் இருக்கும். அதற்காக அவற்றை ஒதுக்கிவிடக்கூடாது. நமக்குப் பின்னால் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் என்பதால், நமக்குப் புரிகிற சாஸ்திரங்கள், புரியாத சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும்.
மற்ற தேசங்களில் சமீப காலமாகவே இந்த விஞ்ஞான வித்தைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. நாம் ஆதியில் நமக்கென்றே இருந்த இந்த வித்யா சம்பத்தை மறந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து இப்போது கற்றுக் கொள்கிறோம்! இதில் ஒரு முக்கியமான வித்தியாசம், இந்த வித்தைகள் யாவும் பிரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸுக்கு அநுசரணையாகவே நம் தேசத்தில் வைக்கப்பட்டிருந்தன. வெறும் லௌகிக சௌக்கியத்துக்காகவே அவற்றை உபயோகப்படுத்தி மேல்நாடுகள் உண்டாக்கியிருக்கிற ‘நாகரிக’த்தில் ஆத்மசாந்தி அடியோடு போய்விட்டது. இதை மேல் நாட்டுக்காரர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் மூலம் படிப்படியாக நாகரிகத்தில் ஏறி, இப்போது அவர்கள் அதில் உச்ச நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
ravi said…
ஆனாலும் இதில் ஆத்ம திருப்தி இல்லை என்று கண்டுகொண்டு நம்முடைய வேதாந்தத்தின் பக்கமும் நம்முடைய பக்திமார்க்கத்தின் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். நாமோ நம்முடைய லௌகிக வித்தை, ஆத்ம வித்தை இரண்டையும் அலட்சியம் செய்து விட்டு, மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டுங்கெட்டான் நாகரிகத்தைத் தேடி ஓடுகிறோம். அவர்கள் இரும்பு உலகத்திலிருந்து (iron Age) தங்க யுகத்துக்கு (Golden Age)—அதாவது, இருட்டு யுகத்திலிருந்து பிரகாச யுகத்துக்கு—வந்து கொண்டிருக்கிறார்கள்.
ravi said…
நாமோ பிரகாச யுகத்திலிருந்து இருட்டு யுகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்! குறைவிலிருந்து அவர்கள் நிறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், நாமோ நிறைவிலிருந்து குறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.
ravi said…
*தடுத்தாட் கொள்வது:*

மன்னன் நரசிங்கமுனையரையர், சடையனார் மற்றும் இசைஞானியார் ஆகியோர் நம்பியாரூரர் திருமணம் ஏற்பாடு சிறப்பாக செய்தனரே

மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவம் கொண்டு வந்த சிவபெருமான். சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்திற்கு வந்தனரே .

முதியராய் வந்தவர் அங்குள்ளவர்களைப் பார்த்து "வேதியர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்" என்றாரே

அதனைக் கேட்ட வேதியர் அவரை வரவேற்றுத் "தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்" என்றனரே

அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி "எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்குள்ளது; அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்ய முயலுக" எனக் கூறினாரே

நம்பியாரூரர் அந்தணரைப் பார்த்து "உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மையானால் அதனை முடிக்காமல் நான் திருமணஞ் செய்து கொள்ளேன்; உம் வழக்கினைக் கூறும்" என்றாரே.

முதியவர் அவையோரை நோக்கி "நான் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து வருகிறேன்;
நம்பியாரூரர் எனக்கு வழி வழி அடிமையாவன். இதுவே நான் சொல்லவந்த வழக்கு" என்றார்.

சபையில் இருந்த அனைவரும் சிரித்தனரே...

"அக்காலத்தில் நம்பியாரூரர் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை என்னிடம் இருக்கையில் நீ நகைப்பதன் பொருளென்ன?` எனக் கேட்டார் முதியராய் வந்த சிவபெருமான்.

"ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டும்; உண்மையை அறிவேன்" என்றார் நம்பியாரூரர்.

தடுத்தாட்கொள்ள இறை வந்தும் கண் மூடித்தனமாய் வாழும் சுந்தரர்கள் தான் நம்மில் எவ்வளவு பேர்கள் ? வியப்புற்றேன் ...

காஞ்சி யின் குரல் வந்தே கவலை வேண்டாம் மயக்கம் கொடுப்பவன் தீர்க்கும் பிணியும் செய்வான் ....

தெய்வத்தின் குரல் அன்றோ எங்குமோ இனி என் நெஞ்சம் ??💐💐💐
ravi said…
உன் ஒளி கண்டேன் என் ஒலி ஓய உன்னில் கலந்தேன் ... என்னொளி நீ என்றால் இவ்வொளி வேண்டும் எப்பிறவி எடுப்பினும் 🌷🌷🌷
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 128*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ தி³வ்யபத³வீம்

வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி ப⁴ஜந்தே ஹரிமுகா:² ।

கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ

கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா ॥
ravi said…
சுகங்கள் எல்லாம் கொடுக்கற.

ஆனா நிஜமா என்கிட்ட தாட்சண்யம் பண்றதா இருந்தா *கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா*

– உன்னுடைய கருணை நிறைந்த கடாக்ஷத்தை என் மேல காண்பிச்சு என்னை எப்ப நீங்க காப்பாத்தப் போறேள்?
ன்னு கேட்கறார்.

ஆடினது போதுமென்று ஓய்வளிக்க உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா.

உலகெலாம் ஈன்ற அன்னைன்னு கல்யாணியில பாபநாசம் சிவன் பாடல் இருக்கு.

அந்த மாதிரி பதவிகள் எல்லாம் இருக்கு. சுகமெல்லாம் இருக்கு.

ஆனா எல்லாம் ஒய்ஞ்ச நிலைமை சிவனேன்னு இருக்கறது.

அந்த நிலைமையை கொடுக்கக் கூடியவர் பரமேஸ்வரன்

*த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³* –

அந்த உயர்ந்த பலனை உங்களால கொடுக்க முடியும்.

அது மோக்ஷம், ஞானம், ஜீவன் முக்தி.

அந்த பலனை, ஞான வைராக்யத்தை எப்ப தரப் போறேன்னு ஒரு ஸ்லோகம்.

அந்த தாட்சண்யத்தை பண்ணுங்கோன்னு வேண்டிக்கறார்.

ரொம்ப அழகான 2 ஸ்லோகங்களை இன்னிக்கு பார்த்தோம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ👍👍👍
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 142* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

48வது திருநாமம்
ravi said…
*48. பத்மநாபாய நம: (Padmanaabhaaya namaha)*
ravi said…
அப்ரமேயோ ஹ்ருஷீகேச ’:
*பத்மநாபோ* (அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
அந்தத் தாமரை இதழ்களின் மேல் பிரம்மதேவர் தோன்றினார்.

அருகில் யாரேனும் உள்ளார்களா என நான்கு திசைகளிலும் தேடினார் அவர்.

ஆனால், யாரையும் காண முடியவில்லை.

மீண்டும் மீண்டும் தன் முகத்தை நான்கு திசைகளை நோக்கிச் சுழற்றிக் கொண்டே
இருந்த அவருக்கு நான்கு முகங்கள் உண்டாகின.

பிரம்மாவுக்குத் தானும், தான் அமர்ந்திருக்கும் தாமரையும்
எங்கிருந்து தோன்றினார்கள் என்று அறிய ஆர்வம் ஏற்பட்டது.

கீழே எந்த ஆதாரமும் இல்லாமல் இந்தத் தாமரையால்
எவ்வாறு அந்தரத்தில் நிற்க முடியும் என்று சிந்தித்தார்.

அதனால் அதற்குக் கீழே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காக
அந்தத் தாமரைத் தண்டிலுள்ள துவாரத்தின் வழியாகக் கீழே பயணித்தார் பிரம்மா.🌷🌷🌷🌷🌷🌷
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 128* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது.

விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார்.

சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது.

யாராலும் தூக்கக்கூடமுடியாத

அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!

ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான்.

திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.

பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது.

‘ *வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’* என்று வியப்பாகச் சொல்கிறான்.

ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை.

காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள்.

ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 128* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 27👍👍👍
ravi said…
*27. சமயாசார மானஸிக பூஜை*

*ஆத்ம ஞான சித்தி*

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா

கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மஶனாத்யாஹுதி விதி:

ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில மாத்மார்ப்பம த்ருசா

ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம் 27💐💐💐
ravi said…
பட்டர் எப்படி பாடுகிறார் என்று பார்ப்போமா ?

வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன்,

நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன்,

பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்.

வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே. 66

அம்மா ... நான்
சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன்.

கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன்

உன் சௌந்தர்ய முகம் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் உன் அருளால் தானாகவே வெளிப்படுகிறது

தானம் செய்தும் அறிகிலேன்

தவங்கள்செய்தும் அறிகிலேன்

ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை அபிராமியே...

என்கிறார் ..

அம்மா !! ஏதோ பாடும் போது உன்னுடைய ஒரு சில நாமங்கள் என் நாவில் வந்து ஒட்டிக்கொள்கிறது ..

அதனாலாவது நான் சொல்வது எல்லாம் உன் ஸ்லோகங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாதா ?

ஒன்றும் தெரியாமல் என்னை படைத்து விட்டாயே ..

இது உன் தவறா இல்லை என்னுடையதா ? 💐💐💐
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 21*☀️☀️🌞🌞🌞
ravi said…
தப்தசாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |

நமஸ்தமோபினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||
ravi said…
ஸூர்ய பகவான் ஒளிப்பிழம்பானவர். அவருக்கு நமஸ்காரம்.

அவரே உலகத்தை வடிவமைத்தவர்.

இருளை அகற்றி உலகத்தோர் காணும் வண்ணம் அமைந்துள்ள ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்
ravi said…
ஒளி விடும் கதிரே .. கதிர் அணைக்கும் கரமே ..

கரம் பிடித்து வழி காட்டும் தாயே ...

தாய் எனும் வார்த்தையும் உன் தரம் அதற்கு நிகர் உண்டோ ...

நிகர் உண்டு எனில் ஒரு தாய் போதுமா ... ஓராயிரம் வேண்டாமோ ... 🌞🌞🌞
ravi said…
*கல் கருடன் உருவான கதை* :-
( *மிகவும் அற்புதமான பதிவு* )

' *செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்* ’ என்றும், ‘ *காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’* என்றும் பெயர் பெற்ற *கோச்செங்கட்சோழனின்* அந்த சாம்பல் நிறப்பட்டத்துப் புரவி, அரசலாற்றங்கரையில் வந்து நின்றபோது மாலைப்பொழுது முற்றத் தொடங்கியிருந்தது.
ravi said…
கரையோரத்து மரங்களிலிருந்து கூடு திரும்பிய பறவைகள் எழுப்பிய கூச்சல் எந்த இசைக் கருவியும் எழுப்ப முடியாத இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த இரைச்சலை ரசித்தபடியே புரவியை விட்டு இறங்கினான் மன்னன் *செங்கட்சோழன்* .

நெடுநெடு’வென்ற உயரத்துடனும் ஆஜானு பாகுவான தேகத்துடனும், புரவியிலிருந்து இறங்கியவனின் பெயருக்கேற்றபடி சிவந்து கிடந்த விழிகளில் அரசலாற்றங்கரையிலிருந்து வடக்கே பிரிந்த பாதையில் சற்றுத் தொலைவில் இரண்டொரு பந்தங்களும் பத்துப் பதினைந்து குடில்களும் புலப் பட்டன.
ravi said…
புரவியைப் பிடித்தபடி மெல்ல நடந்தவன், குடில்களை நெருங்க நெருங்க, பாதை நன்றாகச் செப்பனிடப்பட்டிருப்பதையும், இரு புறங்களிலும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.

அதுமட்டுமின்றி, பாதையின் இரு புறங்களிலும் கல் இருக்கைகள், உடைக்கப்பட்ட சில பாறைகள், யானைகள், குதிரைகள் பறவைகளின் கற் சிற்பங்கள் மட்டுமின்றி, அழகிய பெண்களின் சிற்பங்களும், ஓரிரு மன்னர்களின் சிற்பங்களும் கூடத் தென்பட்டன.
ravi said…
அந்தத் தமிழகத்து மன்னர்களின் சிற்பவரிசையில் தனது சிற்பமும் கூட நிற்பதைக் கவனித்தவன், முகத்தில் முறுவல் ஒன்று நெளிந்தது.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயில வட நாட்டிலிருந்தும்கூட சீடர்கள் வருகிறார்கள் என்றால் அதற்குக் காரண மிருக்கவே செய்கிறது" என்று முணுமுணுத்துக் கொண்டவன், பிரதான மாகத் தெரிந்த குடிலை நெருங்க முற்பட்டான்.
ravi said…
பிரதானக் குடிலின் முன்பாக தரையில் கருங்கல்லால் தளமிடப்பட்டு நடுவில் உயரமான கம்பமொன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.

மன்னன் அந்தக் கல்தளத்தில் கால்களைப் பதித்து இரண்டொரு அடிகள் நடக்கு முன்பாக, குடில்களின் கதவுகள் திறக்கப்பட்டு ஏந்திய பந்தங்களுடன் சிற்பியாரின் சீடர்கள் வெளிவந்தனர்.

மன்னனை நெருங்கிய சீடர்கள், வந்திருப்பவர் மன்னர் என்பதைக் கண்டு கொண்டதும் அவர்களில் ஒருவன் குடில்களின் வரிசையில் பின்னால் சற்றுத் தள்ளி தெரிந்த பெரும் குடிலை நோக்கிப் பறந்தான்.
ravi said…
சற்று நேரத்தில் சிற்பியார் வெளெரென்ற உடையும், அதைவிட வெளுத்து நீண்டுக் கிடந்த தாடி மீசையும் அரசலாற்றுக் காற்றில் வேகமாக அசைய, அரை ஓட்டமாகவே மன்னனை நோக்கி வந்தார்.

வர வேண்டும், வர வேண்டும் மன்னா..." என்று வரவேற்றவர், முன்னறிவிப்போ உடன் காவலரோ இன்றி தாங்கள் இப்படித் தனித்து வரலாமா" என்று கடிந்துகொள்ளவும் செய்தார்.

மன்னன் முகத்தில் மந்தகாசம் விரிந்தது. ஆசார்யரே, நான் இங்கு மன்னனாக வர வில்லை.

உமது பழைய சீடனாகத்தான் வந்திருக்கிறேன்.
ravi said…
அதுவும் உம்மிடம் ஏற்கெனவே நான் கேட்டிருந்தபடி உதவி கேட்டு" என்றான்.

தமது சீடர்களை நோக்கிய சிற்பி, சீடனே,சென்று கனிகளையும் பாலையும் எடுத்துக் கொண்டு எனது குடிலுக்கு வந்து சேர்" என்று உத்தரவிட்டு மன்னனின் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு தமது குடிலை நோக்கி நடந்தார்.

சீடன் கொண்டு வந்த கனிகளையும் பாலையும் அருந்திய மன்னன், சிற்பியை ஏறெடுத்தான்.
ravi said…
மன்னனின் சிவந்த விழிகளில் புலப்பட்ட கேள்வியைப் புரிந்துகொண்ட சிற்பியாரின் முகத்தில் முறுவல் விரிந்தது.

மன்னவா, நீ கேட்டபடி என் சீடனொருவனை உனக்குப் பரிசாக அனுப்பிவைக்கிறேன்.

*முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும்* கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன்.

நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர்,

சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார்.
ravi said…
சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பி யையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது.

கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி,

முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப் போகிறாய்?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது '' *திருநறையூருக்கு* " என்று.
ravi said…
செந்தளிர் கோதிக் குயில் கூவும்* ’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது.

பார்த்தவுடன் அவை *கங்க நாட்டிலும், குவளாலபுரியிலும்* விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
ravi said…
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வியாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை.

இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும்.
ravi said…
அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும்.

காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு.

*காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது.*

நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும்.
ravi said…
பின்னர், ‘ *யந்திரசர்வாஸ* ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான்.

மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள்.

மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.

அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.
ravi said…
சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின.

மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும்.

ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும்.

கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும்.

மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.
ravi said…
ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும்.

கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும்.

மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும்.

எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார்.

அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும்.
ravi said…
மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது.
ravi said…
மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.

கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும்,

மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும்,

பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது.

நமது *ஆன்மிகமும்* , *அறிவியலும்* எவர்க்கும் குறைந்தது இல்லை என்பது மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது..
TV Ganesh said…
*தாமறை*

தாமரை தடாகம் அபிராமிக்கு அருகதையானதே

தான் எனும் தான் மறைந்தால் தாமரை

பனி பட்டால் மூடும் தாமரை அல்ல

அபிராமி எனும் பணி பாட்டால் மலரும் தாமரை இது

உங்களை திட்டி எழுத முடியுமா

உங்கள் கவிதையின் கருவை பாராட்டி தீட்டி எழுதத்தான் முடியும்

நன்றி
Ramesh said…
வெண்ணை போல் வெள்ளை மனம்..
வெண்ணை போல் உருகும் உள்ளம்..
என்னைப் பொருத்தவரை...தாங்களும் ஒரு பட்டரே..
ravi said…
*சிவபெருமான் காட்சியளித்தல்:*

மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெருமான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து

"நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். அப்போது மாதர்பால் மனம் வைத்தாய்; ஆதலால் நம் ஏவலால் மண்ணுலகில் பிறந்தாய்.

இவ்வுலகியல் வாழ்வு உன்னைத் தொடர்ந்து வருத்தாவண்ணம் நாமே உன்னைத் தடுத்தாட் கொண்டோம்" என்று உண்மை உணர்த்தியருளினார்.

யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் ...

அன்பிருக்கும் அடைக்கும் தாழ் உண்டோ ...

தடுத்தவனே இரண்டு இல்லாளையும் தந்தான் என்றால் சுத்தரனின் சுந்தர பக்தியை வார்த்தையில் வடிக்கும் பக்குவம் எனக்கேது.... 🤔🤔
மூர்த்தி said…
பகவானை எப்படி புகழ்ந்தாலும் திருப்தி என்பது இல்லை., இன்னும் அவரது நாமம் சொல்லவேண்டும் போல் ஆவல்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kousalya said…
பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்🙇‍♀️🙇‍♀️🙏🙏🌹🌹
ravi said…
ஹஸ்தம்_திருவடி:

1. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் வரத ஹஸ்தம் மற்றும் திருவடி.

வரதராஜ பெருமாள் பெருமாள் தன வலது திருக்கரத்தின் விரல்களை தன் திருவடியை காட்டி வைத்திருப்பார். இதன் பொருள், “தன் திருவடியை சரணம் என்று அடைந்தவருக்கு, சரணாகதி தருவேன்” என்பதாகும்.

2. திரு அல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் அபய ஹஸ்தம் மற்றும் திருவடி.

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அஞ்சேல் என்று அபயம் அருளும் கீதாச்சார்யன்.

கை விரல்கள் மேல் நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும்.

3. திரு அல்லிக்கேணி தெள்ளியசிங்கர் ஆஹ்வான ஹஸ்தம் மற்றும் திருவடி

அழைத்து அபயம் அளிக்கும் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கர்.

பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார். இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷ்கிறேன்” என்பதாகும்..
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 129* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா?

‘மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.

முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’ *நுடங்கிய மின் என’,*

துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.

அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்:
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 129* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 27👍👍👍
ravi said…
*27. சமயாசார மானஸிக பூஜை*

*ஆத்ம ஞான சித்தி*

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா

கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மஶனாத்யாஹுதி விதி:

ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில மாத்மார்ப்பம த்ருசா

ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம் 27💐💐💐
ravi said…
அம்பிகே!,

எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன், நான் பேசுவதெல்லாம் உன் மந்த்ர ஜபமாகவும்,

என் உடலசைவுகள் உன் முத்திரைகளாகவும்,

என் நடை உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும்,

நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும்,

நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும்.

இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும்.
ravi said…
அம்பிகைக்கு " *தசமுத்ரா சமாராத்யா"* அப்படின்னு சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் இருக்கு.

அதாவது, ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உன்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, பீஜ, யோனி, த்ரிகண்டா என்னும் பத்து முத்ரைகளால் வணங்கப்படுபவள் அப்படின்னு அர்த்தம்.

ஸமயாசார்த்தை பின்பற்றும் ஞானிகள் அம்பிகையின் பிம்பத்திலோ அல்லது சக்ர ராஜத்திலோ இந்த முத்ரைகளை வெளிப்படையாக காண்பித்து பூஜை செய்வதில்லை.

அவர்களது இயற்கையான செயல்களே இம்முத்ரைகளாக ஆகிவிடுமாம்.

ஆச்சார்யார் இதை *சிவமானச பூஜா* ஸ்தோத்திரத்திலும் (5ஆம் ஸ்லோகமாக) இங்கே சொல்லியிருக்கார்.
ravi said…
ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
ஸ்ஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி தத்தகிலம் சம்போ தவாராதநம் ”

தாங்களே நான், புத்தியே பார்வதி தேவி, பஞ்சப்ராணன்களே பணியாட்கள்.

என் உடம்பே உமது திருக்கோவில்.

நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை.

உறங்குவதே சமாதி நிலை.

காலால் நடப்பதே உமக்குப் பிரதக்ஷிணம்,

பேசுவதெல்லாம் உமது தோத்திரங்கள். சம்போ!

இன்னும் என்ன என்ன காரியங்கள் செய்கிறேனோ அவை அனைத்தும் தங்கள் ஆராதனைகளாகும்.🙏🙏🙏
ravi said…
மாசி பிரதோஷமும் காசி சங்கரனும் காஞ்சி கருணா மூர்த்தியும் என்னை காக்கும் இந்த வேலை தனில் வேலன் வேலும் கூறாக (Valen + tine) என் வினை தீர்க்காதோ 🙏
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 22*☀️☀️🌞🌞🌞
ravi said…
நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ரஜதி ப்ரபு: |

பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: || 22 ||
ravi said…
ஸூர்ய பகவானே இந்த உலகத்தை உருவாக்கி, காத்து ரக்ஷிப்பவர்.

அழிக்க வல்லவரும் அவரே.

அவருக்கு நமஸ்காரம்.

அவரது அபரிமிதமான ஒளியாலேயே மழையைத் தருகிறார்.

அவரே இவ்வுலகை ஆள்கிறார்.
ravi said…
உலகை ஆளும் உத்தமனே

உதவி செய்தே உயர்ந்த உன்னதனே...

என் குறை தீராயோ ஏற்றம் மிகும் வாழ்வை அருளாயோ ...

என்னில் உனை கண்டும் ஏக்கம் எனை சூழ்வதன் மர்மம் என்ன ?

எனை ஆளும் பெருமாளே நீ இரட்டை வேடம் நடிப்பத்தின் நோக்கம் என்ன ? 💐💐💐
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 223🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
*2. Challenge -Olive Ridley Turtle*

The family has unique enviable remembrance .. turtles of this type travel all over the country but assemble twice in a year at odisha costal near our port for mass congregation ..

They lay their eggs and leave their unborn babies ... They create a pit and each pit will have min 100 eggs .. it covers the pits by sand and leave ...

After 10 -15 days the baby turtles will emerge from covered pits and travel back to sea without any guidance or hand holdings ...

Some mother turtle see them coming back to sea and heave a sigh of relief then they leave the place .

What a detached attachment !

Mother turtle does not hug , cajole and feed milk or play with their babies ..

As a profound duty the eggs are hatched and then no connection with born ones ....

Many steal the eggs and eagle , snakes take eggs home and out of 10k eggs , what goes back to see will not be more than 1k turtles ...
ravi said…
ஆதாரம் நீயே அம்மா
என் அகம் உன் கோவில் அம்மா

நான் வாழும் உந்தன் பாதம் பனித் தூங்கும் மலரே அம்மா

பாதாதி கேசம் யாவும் பாலாபிஷேகம் வேதம்
ஓதாத ஞானம் யாவும்
ஒரு பார்வை மலராய் தூங்கும்

நீ தாகம் சாடும் கங்கை நிறம் ஒன்றும் இல்லா வெண்மை .. உனை இன்றி வேறு ஏது உண்மை ?

உன் நெஞ்சில் நான் வாழும் போது என் நெஞ்சில் துன்பம் ஏது ?

கண்ணார காணும் போது கனவேது நினைவும் ஏது

தாயே உன் மடி மீது தவம் ஏது வரம் தான் ஏது ? தான் என்ற தனிமை ஏது ?

கண் என்ன கள்ளின் குளமா ? கன்னங்கள் மின்னல் களமா ?
வண்ணங்கள் ராகத்தின் வடிவா ? வார் குழல் வானின் முடிவா ?

அபிராமி நீ வரும் போது இருள் ஏது? ஒளியும் ஏது ?

ஆதாரம் நீயே அம்மா
என் அகம் உன் கோவில் அம்மா ....🙏🙏🙏
Moorthy said…
அருமையான அகவல்... 🙏🙏🙏
ravi said…
திருக்கடையூரில் ஈசன் எமனைக் காலால் உதைத்த வரலாற்றின் ரகசியத் தத்துவம்...!

காலதேவனைக் காலால் உதைக்கலாமா?

தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார் சிவனார். இது புராணம்.

காலம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வந்த காலதேவனைக் காலால் உதைக்கலாமா?
ravi said…
தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனையே தண்டிக்கலாமா?

அப்படியானால், ஆயுள் முடியும்போது அனைவருமே அந்த சிவனை ஆலிங்கனம் செய்துகொண்டு, எமனிடமிருந்து தப்பிவிட மாட்டார்களா?

இவையெல்லாம் நியாயமான கேள்விகள்தான்!

இவற்றுக்குப் பதில் காண முயலும்போது, புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன.
ravi said…
எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன். தேவர்கள், மானிடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு.

ravi said…
சிந்தனையின் இருப்பிடம் மூளை என்றால், ஆசாபாச உணர்ச்சி களின் இருப்பிடம் இதயம். எல்லோரும் இறைவனின் திருவடிகளைச் சிரத்தில் ஏற்க விரும்பினார்களென்றால், இறைவனின் திருவடிகள் தன் மார்பிலேயே பதிய வேண்டுமென்று தவமிருந்தான் எமதர்மன்.
ravi said…
உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல், சத்தியத்தின் பிரதிநிதியாக நீதி பரிபாலனம் செய்ய, ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என, தினமும் ருத்திர தேவனைப் பிரார்த்தித்தான் எமதர்மன்.

அந்தப் பிரார்த்தனை நிறைவேற, மார்க்கண்டேயன் ஒரு கருவியானான். எமன் பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீதுதான் வீசினான்.
ravi said…
அதே நொடியில் மார்க்கண்டேயன் இறைவனின் திருமேனியைத் தழுவிவிட்டான். பாசக்கயிறு இறைவனையும் பிணைத்துவிட்டது. எல்லாமே ஈஸ்வரனின் சங்கல்பப்படிதான் நடந்தது.

மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை முதலிலேயே தழுவிக் கொண்டிருந்தால், நிச்சயமாக எமதர்மன் தன் பாசக் கயிற்றை தான் வணங்கும் தெய்வத்தின் மீது வீசத் துணிந்திருக்கமாட்டான்
ravi said…
மார்க்கண்டேயன் மீது வீசிய பாசக்கயிறு தன் மீது விழும்படி செய்து, இருவருக்கும் தரிசனம் தந்து, தன் திருவடியை எமதர்மனின் இதயத்திலேயே வைத்து, எமதர்மனின் பிரார்த்தனையை பூர்த்தி செய்தான் இறைவன்.

ஆனால், அந்தத் திருவடி அம்பிகையின் அம்சமாக அமைந்தது எமதர்மன் செய்த பாக்யம். மார்க்கண்டேயனுக்கு 'என்றும் பதினாறு வயது’ இருக்க அருள் செய்து, அவனது பக்திக்கும் ஒரு பரிசு தந்தார்.
ravi said…
சிவபெருமான். ஈசன் எமனைக் காலால் உதைத்த வரலாற்றில், மற்றொரு ரகசியத் தத்துவமும் உண்டு.

சிவபெருமான் உமையொருபாகன் அல்லவா! அவன் பார்வதியைப் பாதி உடலாகக் கொண்ட அர்த்தநாரீஸ்வரன். அவனது திருமேனியில் இடதுபுறம் அன்னை உமாதேவியின் அம்சம். மார்க்கண்டேயன் மீதும் தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமனைத் தனது இடது காலால்தான் உதைத்தார் ஈசன்.
ravi said…
இடப் பாகம் சக்தியினுடையது. எனவே, இது சிவனின் திருவடியல்ல; சக்தி பார்வதியின் திருவடிதான்.

கடமையைச் செய்த காலதேவனை சிவபெருமான் தன் காலால் உதைக்கவில்லை. மாறாக, தர்மம் தவறாமல் தன் கடமைகளை அவன் தொடர்ந்து செய்ய, அன்னை சக்தியின் அருள் அவனுக்குக் கிடைப்பதற்காக,
ravi said…
அன்னையின் பாதமே தர்மதேவனின் இதயத்தைத் தொட்டு, அவனை வைராக்கியமுள்ளவனாகச் செய்தது. அதற்கு இறைவன் ஒரு வாய்ப்பளித்தார். இது திருக்கடவூர் ஸ்தல புராணக் கதை.
ravi said…
கடமையைச் செய்யும்போது, கடவுளென்றும் பாராமல் நீதி தருகிறவன் எமதர்மன். அவன் வெறும் மரண தேவன் அல்ல; உயிர்களை மனிதக் கூட்டிலிருந்து விடுதலை செய்யும் தர்மதேவன்.

சிவசக்தியின் சங்கல்பத்தின்படி, அவன் உயிர்களைக் கவருகிறான். அவன் நெருங்கும் வேளையிலும்கூட, சிவசக்தியின் அருள் இருந்தால், ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும் என்பதே இப் புராணக் கதை சொல்லும் தத்துவம்.

ஓம் நமசிவாய...!

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை