அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 41 பதிவு 35
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 41
பதிவு 35
பதிவு 35🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்.
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்..
கேள்வி 41
பட்டர் என்ன ரவி ஒன்றும் கேள்வி இல்லையா இன்று ... நான் போகட்டுமா
நான் ஐய்யயோ போவதாவது .. கொஞ்சம் யோசித்துக்கொண்டிருந்தேன் ...
ஐயனே சிவசக்தியின் தத்துவத்தை மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள்
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் பல இடங்களில் ஒருவரை ஒருவர் ரசிப்பதாக நாமங்கள் வருகின்றன ...
தங்களுக்கு பிடித்த அப்படிப்பட்ட சில நாமங்களை கொஞ்சம் விளக்க முடியுமா ?
பட்டர் ஒரு இடம் என் நெஞ்சை தொட்ட இடம் ... நீயே நாமத்தை கண்டு பிடி ..
அம்பாளின் கன்னங்கள் கண்ணாடி மாதிரி இருக்கின்றனவாம் ...
காமேஸ்வரன் தன் அழகை அவள் கன்னங்களில் பார்க்கிறான் ...
கண்ணாடியை கொஞ்சம் இந்த பக்கம் அந்த பக்கம் அசைந்து சரி தன் சிங்காரத்தை சரி செய்து கொள்ள வேண்டுமே ..
உடனே காமேஸ்வரனுக்கு ஒரு யோசனை பிறந்தது ...
அம்பாளின் மோவாய் கட்டையை கண்ணாடியின் பிடியாக வைத்து அவள் கன்னத்தை அதாவது கண்ணாடியை இந்த பக்கம் அந்தப்பக்கம் அசைத்து தன் சுந்தர வதனத்தை சரி செய்து கொள்கிறானாம்
நான்:
காமேச்வர-ப்ரேமரத்ன- மணி-ப்ரதிபணஸ்தனீ
பட்டர் பரவாயில்லை சட்டென்று சொல்லி விட்டாயே ...
சவமாய் சலனங்கள் இல்லாமல் இருந்த பிரம்மம் உயிர்களை உண்டு பண்ணவேண்டும் என்று எண்ணுகிறது ...
அந்த சலனத்தை ஈசனின் மனதில் உண்டாக்குகிறாள் ...
இப்படி ஈசனுக்கு எல்லாமாய் இருக்கிறாள் ...
அவள் தன் மனதை ஈசனுக்கு அற்பணித்தவள் ..
நான்
மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா
பறந்து சென்றார் பட்டர் ...
விழிக்கே அருள் உண்டு வேதம் சொன்ன வழிக்கே வழி பட நெஞ்சுண்டு ...
மனம் என்னையும் அறியாமல் முணுமுணுத்தன ...🙏🙏🙏🙏🙌🙌🙌
Comments
தாராளமனசு
உங்களைப்போல் யாரும். கிடையாது. 🙌
மனசுவரணுமே.
உன் பெரும் தன்மைக்கு
அளவேயில்லை.
Very proud of you😍
*பதிவு 137*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 18 ஸ்லோகம்
*பொருளுரை*
दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके
दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।
मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये
वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥
து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே
து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।
மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே
வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥
ன்னு ஸ்லோகம்
*பு⁴வனே சங்க்ரம்யேऽஹம் – இந்த*
மூவுலகத்துலயும் சுத்தி சுத்தி வரேன். எதுக்காகன்னா *குபுருஷகரப்⁴ரஷ்டை:* நிறைய கெட்ட புருஷர்களோட கையிலேருந்து நழுவி விழும்
*து³ஷ்டைர்த⁴னைருத³ரம்ப⁴ரி:* – அவன் என்னென்னமோ பண்ணி சம்பாதிச்ச பணம். அந்த கெட்ட பணத்தை வாங்கிண்டு அதை வெச்சு வயிற்றை நிரப்பனும்ங்கிறதுக்காக நான் இப்படி சுத்தி சுத்தி வரேன்.
உலகம் முழுக்க சுத்திண்டிருக்கேன் *கியந்தம்* – எவ்ளோ நாள்தான் இப்படி இருக்கப் போறேன்
*தருணகருணே* – கருணையே மிகுந்த உன் கடாக்ஷம் *தந்த்³ராசூன்யே* – எப்பவும் சோம்பல் இல்லாத உன்னோட உள்ள துருதுருன்னு கடாக்ஷம்கிறார்.
அதாவது என்ன அர்த்தம்னா அந்த கடாக்ஷம் ஒருத்தனுக்கு கிடைச்சுதுன்னா,அவனுக்கு இந்த மாதிரி எல்லார் வீட்டு வாசல்ல நின்னு வயிற்றை நிரப்பற நிலைமை மாறிடும்.
*பதிவு 149* 👏👏
12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️
பத்மநாபோ (அ)மரப்ரபு: |
*விச்’வகர்மா* மனுஸ் த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
தேவர்கள் காயத்திரியை “ *விச்வகர்மா* !” என்ற திருநாமத்தால் அழைத்தார்கள்.
யாருடைய திறனால் இவ்வுலகனைத்தும் ஆக்கப்பட்டுள்ளதோ,
யாருக்குக் கட்டுப்பட்டு அனைத்துலகும் செயல்படுகின்றதோ அவருக்கே விச்வகர்மா என்று பெயர்.
தேவர்கள் அந்தப் பெயரால் அழைத்தபோது, காயத்திரி அவர்கள் முன் தோன்றவில்லை.
இப்போது ஆசைப்படுகிறபடி எல்லோருக்கும் ரொம்ப வசதி, ஸெளகர்யம் பண்ணித்தருவது என்பது முடிவே இல்லாமல் துராசைகளைப் பெருக்கி விடுகிற ஏற்பாடுதான். எல்லோருக்கும் கார், பங்களா, ரேடியோ, டெலிபோன் இருக்கிற அமெரிக்காவில் ஜனங்கள் திருப்தியடைந்து விட்டார்களோ? இல்லை.
ஒரு முறை பெரியவா அம்பாளை ப் பற்றிய சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார் ..
ஒருவர் இடையில் எழுந்து ஒரு கேள்வி கேட்டார் ..
பெரியவா ! அபிராமி அந்தாதி தினம் சொல்லுங்கள் என்கிறீர்களே ..
ஓவ்வொரு பாட்டுக்கும் ஒரு பலன் உண்டு என்றும் சொல்கிறீர்கள் ...
சுருக்கமாக சிறப்பான மொத்த பலன்களையும் ஒரே வரியில் சொல்ல முடியுமா ?
பெரியவா சிரித்தார்
நீ லாட்டரி டிக்கெட் வாங்கி உடனே பெரிய செல்வந்தனாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாயோ ??...
சரி நீ புரிந்து கொள்ளம்படி சொல்கிறேன் ..
அபிராமி அந்தாதி சொல்பவருக்கு வாழ்வில் அம்மாவாசையே இல்லை ...
கேள்வி கேட்டவர் கொஞ்சம் தலையை சொறிந்தார் ..
பெரியவாளுக்கா இது புரியாது ... ?
பெரியவா தொடர்ந்தார் ....
நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்
அபிராமி அந்தாதி தினமும் சொல்பவர் வாழ்வில் இருளே கிடையாது ..
ஒளிமயமான வாழ்க்கை யாக எப்பவும் இருக்கும் ..
அபிராமி இருளை நிலவாக்கியவள் தெரியுமோ உனக்கு என்றார் ...
கேள்வி கேட்டவர் சரபோஜி மன்னரைப்போல வாயடைத்துப்
போனார் ... 🙏🙏🙏
ஒருவர் கேட்டார் .
நாய் கடித்தால் நாய் குணம் வரும் என்றால் சிங்கம் கடித்தால் சிங்கம் போல் ஆவோமா?
கிவாஜ கொஞ்சமும் யோசிக்க வில்லை உடனே சொன்னார்
சிங்கம் கடித்தால் அசிங்கமாகி உடனே சாவோம்!
”தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அது போல இந்த (மயிலாப்பூர்) கற்பகாம்பாள் சந்நிதி…” பெரியவா.
மகானைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் நின்று, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மஹா பெரியவாளின் திருச்சந்நிதியை அடைந்தார் திரிபுரசுந்தரி.
“மயிலாப்பூர்லதான் பெரியவா…” – திரிபுரசுந்தரி.
“மயிலாப்பூர்ல கோவில்களுக்குப் போற வழக்கம் உண்டா?”
“
கற்பகாம்பாள்கிட்ட என்ன வேண்டிப்பே?”
“எப்பவும் உலக நலனுக்காகத்தான் வேண்டிப்பேன் பெரியவா. தெய்வங்கள்கிட்ட நமக்குன்னு எதுவும் கேக்கக் கூடாதுன்னு என் மாமனார் (கி.வா.ஜ) சொல்வார்…”
“உன்னோட போன பிறவிகள்ல நீ பண்ணின புண்ணியத்துனாலதான் இப்ப மயிலாப்பூர்ல வசிக்கறே… இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா? கற்பக விருட்சம்.
ஹர ஹர சங்கர..
காஞ்சி சங்கர ..
காமகோடி சங்கர...
ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...
இன்றைய நாள் எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால், இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்.
மேலக்கோட்டையில் ராமாநுஜர் வாழ்ந்த காலத்தில் ஏழிசை எம்பிரான் என்ற அரையர் வாழ்ந்து வந்தார்.
என்றழைக்கப்படும் எம்பெருமான் நடனமாடுவான்.
தன் பாட்டுக்கு இறைவனே நடனமாடுகிறான் என்ற ஆணவம் அந்த அரையருக்கு வந்துவிட்டது.
அதனால் ராமாநுஜரையே பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தினார்.
நம்மை அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்வதே சிறந்தது என்றெண்ணிப் பொறுமை காத்தார் ராமாநுஜர்.
எனினும் ராமாநுஜரின் சீடர்களான கூரத்தாழ்வான், நடாதூராழ்வான், முதலியாண்டான் ஆகியோர் தங்கள் குருவை
ஏழிசை எம்பிரான் அலட்சியப்படுத்துவதைக் கண்டு மிகவும் வருந்தினார்கள்.
அவர்கள் அந்த அரையரிடம் சென்று, “எங்களுக்கு ஒரு சந்தேகம். செல்வப்பிள்ளையிடம் நீங்கள் அதை விண்ணப்பித்து
விடைகேட்க முடியுமா?” என்று கேட்டார்கள். “
“எங்கள் குருவான ராமாநுஜருக்கு முக்தி உண்டா? இல்லையா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்!” என்றார்கள்.
“நாளை கேட்டுச் சொல்கிறேன்!” என்றார்.
செல்வப்பிள்ளையிடம் விண்ணப்பித்தார் ஏழிசை எம்பிரான்.
அதற்கு எம்பெருமான், “ராமாநுஜர் மட்டுமல்ல, அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் முக்தியுண்டு. இதில் சந்தேகமே இல்லை!” என்றான்.
அதை அப்படியே ராமாநுஜரின் சீடர்களிடம் கூறினார் அரையர்.
அரையர், “எனக்கு நிச்சயமாக முக்தியுண்டு! இதிலென்ன சந்தேகம்?” என்று கேட்டார்.
“இருந்தாலும் ஒருமுறை பெருமாளிடம் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்கள்.
இருந்தாலும் ராமாநுஜரின் சீடர்கள் உன்னிடம் கேட்கச் சொன்னார்கள். எனக்கு முக்தி உண்டல்லவா?” என்று கேட்டார் அரையர்.
“இதற்கான விடையைத் தான் நேற்றே சொல்லி விட்டேனே!” என்றான் எம்பெருமான். “என்ன?” என்று வியப்புடன் கேட்டார் அரையர்.
“ராமாநுஜருக்கும் அவருடன் தொடர்புடையவருக்கும் தான் முக்தியளிப்பேன். அந்த ராமாநுஜரையே இகழும் உங்களுக்கு முக்தி கிடையாது!” என்றான்.
(My experiences... Ravi ...Episode 232🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*7th Assignment - Dhamra port , Odissa*💐
*A live or die challenge*
Aerial survey the cost was a bomb to us . Hiring of military helicopter not one but three at a time and with govt officials ...
Taking photos videos by powerful camera the rays of which could touch the beneath of rocks and sand ..
But govt came for rescue . It agreed to defray 50 % so that they were alive in headlines ..
One week intense survey , collection of historical data , archeology info , villagers updates all were scattered and we needed to compile it to arrive at a readable report ...
In the meantime Green Peace also did their homework thoroughly to counter our findings .... It was not just a battle but a war ... 🌸🤝
உலகை உய்விக்க சிவபெருமான்
ஆலகால விஷத்தை உண்ட போது
அருகிருந்த
சிவகாமித் தாயார்
அவரது கழுத்து கண்டத்தை
இறுகப்பற்றி
கீழே விஷம் இறங்காமல் காத்த சம்பவம்
அடிக்கடி அவன் கற்பனையில்
காட்சியாய் வந்து நிற்கும்.
எனவே அவன் எம்பெருமானை ' *திருநீலகண்டம்* ' என்றே எந்நேரமும் அழைப்பான்.
சர்வகாலமும் தொழுவான்.
எதற்கெடுத்தாலும் ' *திருநீலகண்டம்* '
எனும் எட்டெழுத்து மந்திரத்தை
அவன் திருவாய் மலர
அது ஆங்கிருப்போர்
அத்தனை பேரின் செவிகளையும்
தேனாய் நிரப்பும்.
எனவே
'அவரை'
சிதம்பரத்து மக்கள் ' *திருநீலகண்டர்* '
என்றே வாய் மணக்க சொல் இனிக்க
அழைக்கலாயினர்.
ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர். "பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........
அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். "இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........
இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!
இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது. மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும்.
ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..
பெண் அல்ல அவள் பேர்ழகி ... பெருமாட்டி ..
சிம்ம வாகனம் அதில் செம்மையாய் வந்திடுவாள் ..
சிவந்த இடை உடையில் மின்னல் கொண்டு தாக்கிடுவாள் ...
வெண் மேகம் அவள் மனம் என்றால் நீலவானம் அவள் நிறம் அன்றோ ..
பொன்னாள் அன்று பொன்னால் எழுதிய நாமங்கள் உரைத்தேன்
பொன்னார் மேனியன் தன் பொன் உடம்பில் இடப்பாகம் காண்பித்தான் ...
மின்சாரம் கோடி தாக்கியே போய் விழுந்தேன் காஞ்சி மடம் தன்னில் ...
அங்கே ஒரு கற்பக விருக்ஷம் கற்கண்டாய் எனக்கு சுவை தந்ததே 🙏🙏🙏
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் || 30 ||🌞
அவனைக் கொல்லும் பொருட்டு முன்னேறினான். கொல்கிறான் ...
*வெற்றி! வெற்றி!! வெற்றி* !!!💐💐👌
வில் எடுத்தாய்
உன் சொல் கேளா தசமுகனை ஜயம் கொள்ள 🏹
ஜயம் கொண்டாய் ஆதித்ய ஹிருதயம் உரைத்தே ...🌞
எல்லோர் இருதயம் தனில் சிம்மாசனம் போட்டே சிரிக்கின்றாய் ... 🫀🙂
உன் சிரிப்பில் கதிரவனும் குளிர் காய்வதென்ன ?🌞
சந்திரனும் உன் பெயருடன் ஒட்டிக்கொள்ளும் மர்மம் என்ன ? 🌕
சிவநாமம் சொல்லியும் அவன் சிந்தை அழுகும் போது என்ன பயன் என்றே தசமுகனை கொன்றாயோ ? 🙊
சிவராமனாய் நீயே இருக்கும் போது தனி சிவம் தேவை இல்லை என்றே நினைத்தாயோ ?🙈
சிங்கார ராமா ...!!
சினம் அறியா நீ
எங்கு கற்றுக்கொண்டாய் சினம் அதை?
சிரம் அறுக்கும் விந்தை தனை ... ??
ஈசன் கொடுத்தானோ ரௌத்திரம் தனை தானமாய் உனக்கே.
அங்கி தந்தானோ தன் பொசுக்கும் தன்மை தனை ?
சிரித்தான் ராமன் ..🙂 வன்மை தந்தவர் எண்ணிலர்
ஆனால் ஜயம் கண்டது ஆயிரம் கரம் கொண்ட ஆதித்தனால் .. 🌞🌞🌞
தன் ஹிருதயம்🫀 தனில் என் இதயம் தனை பொறுத்திக்கொண்டானே !!!🫀
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பதிவு 138* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
அம்மா .. ஒன்றுமே இல்லாத ஒரு இடத்தில் ஒரு சிறிய மின்னல் மட்டும் கண் சிமிட்டி கொண்டிருக்க
அந்த ஒளியில் சில மணிகள் மெதுவாய் ஒலி எழுப்ப ,
அந்த ஒலியில் சிவநாமம் ஜொலிக்க
என் கண்களில் மட்டும் ஏன் அம்மா கங்கை பிரவாகம் எடுக்க செய்கிறாய் ... ? உன் முக ஒளியில் கோடி சூரியன் இருந்தும் இல்லாத இடையில் மின்சாரம் ஒன்று பாய்கின்றதே .. என்ன விந்தை அம்மா இது ?
காளமேகம் சொல்கிறார் ...
ஒளி படைத்த உன் திரு முகத்தில் இருந்து எடுத்த மின்சாரம் மின்னல் போல் உன் மேனி எங்கும் ஓடி
இல்லாத இடையில்
உன் நாபி எனும் பள்ளத்தில் விழுந்து அங்கே ஒட்டியாணம் எனும் ஒளியாய் ஜொலிக்கின்றதே ...
💐💐💐
*பதிவு 138* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 29👍👍👍
கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம் ரேஷ்வேதேக்ஷுப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே👍👍👍
சீர் வைக்கப்பட்ட பொருள்களின் அலங்காரம் கலையாமல் அல்லவோ மணப்பெண் வரவேண்டும்!
அப்படிச் சீதனமாக வைக்கப்பட்ட வரிசைப் பொருள் மகாவிஷ்ணுவின் கிரீடம்.
திருமுடியைக் காலால் மிதித்து விடலாகாது என்று அன்னை இடிக்காமல் ஒய்யாரமாக வருகிறாள்...
இப்படியும் இந்த ஸ்லோகத்தை பார்க்கலாம் ...
🌼🌼🌼
இது தான் உண்மையான தாம்பத்யம் ...
வருடங்கள் பல ஓடலாம் ..
முதல் நாள் மணப்பெண் போல் தன் முகத்தை வெட்கத்தால் மூடிக்கொள்கிறாள் அம்பாள் , ஈசன் வந்து மூடிக்கொண்ட கரங்களை கலைப்பான் என்று ..
அவனும் மெதுவாக அம்பாளின் கரங்களை விலக்குகிறான் ...
தாமரை மொட்டு இதழ்களை விரிப்பதைப் போல் அவள் முகம் மலர்கிறது ...
இதைவிட ஒரு ஜோடிக்கு வேறு என்ன திருமண பரிசு வேண்டும் ...
Position , Possession , Power nothing matters between the two . They carry the only feeling and conviction that they are made for each other 💐
அம்பாள் அணியும் ஆடைகளோ நகைகளோ உலகில் எங்கும் இல்லை
ஆனால் அவன் அணியும் ஆடையோ எட்டு திக்குகள் மட்டும் ( எட்டு திக்கே அணியும் திருஉடையானிடம் என்கிறார் பட்டர் பிரான்)
🍒🍒🍒
அவன் இருப்பதோ பேய்கள் சுற்றும் சுடுகாடு ...
என்ன சம்பந்தம் இருவருக்கும் இடையே ...??
அன்புதான் .. நான் உனக்கு மட்டுமே நீ எனக்கே என்ற உரிமை ...
இது தான் நிரந்தரம் சாத்தியம் சிவ சக்தி சொல்லும் வாழ்க்கை ரகசியம் ..
👌👌👌
அபிமானமான வாழ்க்கை
சரியான புரிதல்
விட்டுக்கொடுத்து ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளும் வாழ்க்கை
காலம் பொன்னேட்டில் இப்படிப்பட்ட தம்பதிகளை பதிக்கின்றது ..
இது தான் சௌந்தர்ய லஹரி , ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , அபிராமி அந்தாதி , சியாமளா தண்டகம், மூக பஞ்சசதீ அனைத்தும் சொல்லும் சாரம் ... 🌸🌸🌸💐💐💐🙏🙏
பெண்களுக்குப் பதியேதான் குரு. பழைய காலத்தில் காமம் உள்ளே புகுமுன் காயத்ரீ புகுந்துவிடவேண்டும் என்று கருதி எட்டு வயசுக்குள் புருஷப் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்து குருவிடம் சேர்த்தார்கள். அதே வயசில் பெண்களுக்குக் கல்யாணம் செய்து புருஷனிடம் சேர்த்தார்கள்.
எப்பேர்ப்பட்ட பர்த்தா வந்தாலும், அவனையே தெய்வமாகப் பாவித்துத் தன்னை சரணாகதி செய்துவிட வேண்டும் என்பதுதான் உத்தம பதிவிரதா லக்ஷணம். ஏதோ ஓரிடத்தில் மனஸை பரிபூரணமாக அர்ப்பணம் பண்ணிவிட வேண்டும்.
‘ஈசுவரன் மயானத்தில் வசிக்கிறாரா, வசிக்கட்டும்;
(இன்றுஅனுஷம்)
உண்மை ... எல்லாம் அடைந்து விட்டால் நமக்கு எதன் மீதும் பற்று ஏற்படாது .. அம்பாளிடம் இனி மேலும் அடையப்போவது ஒன்றும் இல்லை .. அதனால் அவள் மனம் எதிலுமே பற்றே இல்லாத ஒருவனை நாடியது ...
*பதிவு 138*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 18 ஸ்லோகம்
*பொருளுரை*
दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके
दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।
मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये
वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥
து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே
து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।
மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே
வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥
ன்னு ஸ்லோகம்
ஆனா காமாக்ஷியினுடைய கடாக்ஷம் சோம்பல் இல்லாமல் நமக்கு கொடுக்கும்.
அதுனால அம்மா, அந்த உன்னுடைய *தரங்க³ய லோசனே –* அலை போன்ற உன்னுடைய கடாக்ஷத்தை *நமதி மயி தே கிஞ்சித் –* என்மேல கொஞ்சம் போடக் கூடாதா?
*காஞ்சீபுரீமணிதீ³பிகே* – காஞ்சிபுரத்துக்கு ஒரு மணிதீபம் போல விளங்கும் ஹே காமாக்ஷி உன்னுடைய கடாக்ஷம் எனக்கு கிடைச்சுடுதுன்னா இந்த மாதிரி கண்ட பேர் கிட்ட நான் போய் நிக்கற நிலைமை வராதேன்னு சொல்றார்.
அவர்கள் பக்கம் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த என் திரிப்புரை யின் பாதங்களை பற்றுவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு சோம்பல் , தயக்கம் ??
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்,
நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால்
*ஒரு காலத்திலும்*
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.🌸🌸🌸
*பதிவு 150* 👏👏
12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️
பத்மநாபோ (அ)மரப்ரபு: |
*விச்’வகர்மா* மனுஸ் த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
“1. *ஓஜோஸி* (நீயே அழகிய தோற்றம்),
2. *ஸஹோஸி* (நீயே உடல் வலிமை),
3. *பலமஸி* (நீயே மன வலிமை),
4. *ப்ராஜோஸி* (நீயே சுடரொளி),
5. *தேவாநாம் தாம நாமாஸி* (நீயே தேவர்களின் இருப்பிடமும் புகழும் ஆவாய்),
6. *விச்வமஸி* (நீயே விச்வம் எனத் தொடங்கும் ஆயிரம் திருநாமங்களால் துதிக்கப் படுகிறாய்),
7. *விச்வாயு* : (நீயே அனைவருக்கும் இலக்காக விளங்குகிறாய்),
8. *ஸர்வமஸி* (நீயே அனைவருக்குள்ளும் இருந்து அனைவரையும் இயக்குகிறாய்),
9. *ஸர்வாயு* : (நீயே அனைத்துக்கும் உயிர்),
10. *அபிபூ* : (உன் அடியார்களின் பாபங்களை வெல்பவன் நீ)”
இவ்வாறு அந்தர்யாமியாக உள்ளே விளங்கும் திருமாலை இட்டு, திருமாலுக்கு உடலாக இருக்கும் காயத்திரியைத் துதி செய்தவுடன்
காயத்திரி தேவர்களுக்குக் காட்சி தந்து அவர்களுக்கு மேற்சொன்ன ஆறு செல்வங்களையும் அளித்தாள்.🌸🌸🌸
எழுதுகோல் எடுத்து எழுத வந்தேன் .. ஏனோ வார்த்தை ஒன்றும் வரவில்லை
தப்பும் தவறுமாய் எழுத்துக்கள் 500 மில்லி போட்டதைப் போல் எதிரில் ஆடின
ஏன் இன்று இப்படி என்றே யோசித்தேன் ... பதில் இல்லை ...
மனம் திடம் செய்து நேற்று மணந்த இளம் ஜோடியை நினைத்தே கவிதை ஒன்றை கண்ணோரம் ஓடும் மை கொண்டு தீட்டினேன் என் மனம் எனும் வெண் சுவரில் ...
வார்த்தைகள் நடமாடியே வரிசையில் வந்து நின்றன
வாழ்க இருவரும் பல்லாண்டு ... பல் ஆடாமல்
இளமை குறையாமல்
ஏக்கம் ஒன்றும் இல்லாமல்
வேண்டும் முழுவதும் வேண்டதக்கது அனைத்தும் பெற்றே
🌸🌸🌸🌼🌼🌼💐💐
முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா
வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
அடுத்தபடியாக அம்பாளின் முகத்தைப் பற்றிய வர்ணனை. அவள் முகம் எப்படி இருக்கிறதாம்.முகம் பூர்ண சந்திரன் போல இருக்கும் உன் முகத்தில், எப்படி சந்திரனில் ஒரு சிறு களங்கம் தென்படுமோ அதுபோல உன்நெற்றியில் கஸ்தூரி மானிடமிருந்து பெற்றகஸ்தூரியால் திலகமிட்டு அழகாக ஜ்வலிக்கும் உன் முகம்.இதுதான் முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா
அடுத்தது கண்களைப் பற்றிய வர்ணனை
அவளுடைய முகத்திலிருந்து வரும் அழகு இருக்கிறதே அது அப்படியே பிரவாகமாகிய நதி போல அதுவும் ஒரு நதி அல்ல இரண்டு நதிகள் பெருக்கெடுத்து ஓடிவந்து இரு கண்களாக மாறி விடுகிறதாம்.
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
சரி இப்போது சுண்டல் நேரம் நெருங்கி விட்டது. நாளை வேறு ஒரு நாமாவளியைப் பார்க்கலாமா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம்.
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !! தேவியின் முகம் தெரியும்
சுண்டல் ஆறிக்கொண்டு இருக்கிறது சாபிடுங்கள் நாளை மற்றுமொரு நாமாவளியைப் பார்க்கலாம்
மூக்கு வர்ணனைக்குப் பிறகு கன்னம். அம்பாளின் கன்னம் எப்படி இருக்கிறது.பத்மராகக் கல் என்று ஒன்று உண்டு.
பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா !!
அம்பாளுடைய பாதத்தில் எல்லோரும் வந்து வணங்குகிறார்கள். யார் யார் வந்து வணங்கினார்கள்?
தேவேந்திரன்,மும்மூர்த்திகள்,தேவாதி தேவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் வந்து வணங்கினார்கள்.அப்படி வண்ங்கியவர்களில் சிலருக்கு தமோ குணம் இருந்ததாம்.
மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!
அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள்.அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள். அப்படி நட்ந்து செல்லும்போது பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள் கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது.அந்தப் பாதங்களை வணங்குவோம்.
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன். அவள்தான் திருபுரசுந்தரி.இதையே"" அபிராமி பட்டரும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே" என்கிறார். எந்த திருபுர சுந்தரி பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக்கூடியவள். அவள் எங்கு இருப்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள் அப்படிபட்ட
லலிதாவை வணங்கி பலன் பெறுவோம்
வெளிப்படையாகப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரி என்றுதான் தோன்றும். ஆனால் ஆழமான உண்மை புரிந்தால் தான் அவரோ இவரோ காரணமல்லர்,