அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 42 பதிவு 36

         அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 42

                                          பதிவு 36



பதிவு  36🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 42

நான் ..  ஐயனே வணக்கம் .. இன்று என் கேள்வி கொஞ்சம் இசுகு பிசகாக இருக்கலாம் .. கோபிக்காமல் தாங்கள் பதில் சொல்ல வேண்டும் ...

பட்டர் உன் கேள்விகள் எனக்கு பழக்கமாகி விட்டன .. தையிரமாய் கேள் .. கோபிக்க மாட்டேன் 

நான் ... ஐயனே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் பல நாமங்கள் அவள் 
மதுவை விரும்புபவள் ... மஞ்சள் சாதம் , வெல்லம் கலந்த சாதம் சாப்பிடுபவள் என்று வருகிறது ... 

இவைகள் நாமங்களாக தெரியவில்லை 

மேலும் அன்னையின் விருப்பங்களாக தெரிகின்றன .. 

அவள் விருப்பு வெறுப்பு இவைகளை கடந்தவள்  அல்லவா ?

இப்படி பிரசாதம் அவளுக்கு படைப்பதால்  பீரிதி அடைபவளா ?



பட்டர்

இதன் தாத்பரியமே வேறு ... 

கந்தர் சஷ்டி கவசம் தெரியுமா உனக்கு ...?? 

முருகனிடம் ஓவ்வொரு அங்கமாக சொல்லி உன் வேல் காக்கட்டும் என்று சொல்கிறோம் ... 

அதுபோல் நம் உடலே 6  ஆதார சக்கரங்கள் ... 

ஸ்ரீபுரம் என்று ஒன்று தனியாக எங்கும் இல்லை 

உன் நெஞ்சம் தான் அவள் வசிக்கும் ஸ்ரீபுரம் ... 



சரி ஓவ்வொரு நாமமாக பார்ப்போம் .. உன் சந்தேகம் முழுமையாய் தீரும்வரை 👏👏

499. ரக்தவர்ணா :

இவளுடைய நிறமும் சிவப்பு .

500. மாம்ஸனிஷ்டா :

முதலில் த்வக் என்கிற தோலுக்கு அதிதேவதை . 

அதன் பிறகு ருதிரம் என்று தோலுக்குக் கீழே உள்ள திசுவிர்க்கு அதிதேவதை  

அதையடுத்து மாமிசம் - 

தசைகளுக்கு அதிதேவதையாய்  விளங்குபவள்  மாம்ஸனிஷ்டா ... 

இந்த திசுவும் , தசைகளும் தோலும் சிறப்பாக இருக்க அவைகளுக்கு போஷாக்கு கொடுக்கக் கூடிய சத்துக்களை அவளுக்கு படைக்கிறோம் ...

அவள் தோலும் தசையும் திசுவும் சிறப்பாக இருக்க அல்ல நம் உறுப்புக்கள் சிறப்பாக இருக்க  

அவளுக்கு படைத்தவகளை நாம் பிரசாதமாக சாப்பிடுகிறோம் ... ஆரோக்கியமாக இருக்கிறோம் ...



501. குடான்ன ப்ரீதமானஸா :

வெல்லம் கலந்த அன்னம் இவளுக்கு பிரியமானது ... 

என்ன அர்த்தம் ...?? 

இனிப்பு உடம்பில்  சேர்ந்தால் மனம் கோப தாபங்களை மறக்கின்றது ... 

நல்ல எண்ணங்கள் உருவாக இனிப்பு ஒரு வகையில் உதவி செய்கிறது .. 

அவளுக்கு படைத்து சாப்பிடுவதால் நம் மனமும் இனிப்பான விஷயங்களை மட்டுமே நினைக்கின்றன 

சர்க்கரை சத்து உடம்பில் சேர தசைகளுக்கு வேண்டிய கிளைக்கோஜன் சக்தி கிடைக்கிறது .... 

இப்பொழுது  சொல் அவள் நலத்திற்காகவா இவ்வளவும் படைக்கிறோம் ?



509. மேதோனிஷ்டா :

இவள் கொழுப்பு என்கிற தாதுவுக்கு அதி தேவதை  . 

மேதஸ் என்றால் கொழுப்பு .

கொழுப்பு சரியான அளவில் உடம்பில் சேர வேண்டும் .. கொழுப்பு உள்ள பிரசாதங்களை அதனால் அளிக்கிறோம் 

 510. மதுப்ரீதா :

தேன் போன்ற குணம் கொண்டவள் . தேன் ஒரு விஷனாசினீ மருந்து... தேன் உடம்பிற்கு மிகவும் தேவை 

*512.தத்யன்னாஸக்த ஹ்ருதைா :

இவளுக்கு பிடித்த அன்னம் - தயிர் அன்னம் 

என்ன அர்த்தம் ? 

தயிர் உடம்பின் உஷ்ணத்தை குறைக்கும்



 516 அஸ்த்திஸம்ஸ்த்திதா

கொழுப்பை எல்லாம் தாண்டி உள்ளே போனால் எலும்பு... எலும்பை பார்த்துக்கொள்பவள்.

524 மஜ்ஜா ஸம்ஸ்த்தா

எலும்புக்கும் உள்ளே இருக்கக்கூடிய திசுதான் மஜ்ஜா ( bone marrow ) 

நாம் இதை மஜ்ஜை என்று அழைக்கிறோம் . 

இந்த திசுவை காப்பவள் அம்பாள்...

இப்படி... மஞ்சள் கலந்த சாதத்தை விரும்புபவள் என்று நாமம் வரும் .. 

நாம் மஞ்சளின் அருமையை அறிவோம் . கிருமி நாசினீ .. 

அதை சேர்த்துக்கொள்வதால் உடம்பில் கிருமிகள் அழிக்கப்படும் .. 



ரவி .. அவள் விருப்பு வெறுப்பு இல்லாதவள் ... 

அவள் பெயரில் நாம் தான் விருப்பு வெறுப்பை அதிகம் செய்து கொள்கிறோம் ... 

அவளுக்கு படைத்து அந்த பிரசாதங்களை நாம் உண்டு சௌக்கியமாக இருக்கிறோம் ... 

ஸ்ரீமாதா என்று அவளை ஏன் அழைக்கிறோம் என்று புரிகிறதா ? 

நமக்காக மட்டுமே வாழ்பவள் என் அபிராமி .....🙌🙌🙌

நான் ஐயனே என் அறியாமை முழுதும் அகன்றது .... 

பதிலுக்காக காத்திருக்காமல் பறந்து சென்றார் பட்டர் .... 🦅🦅🦅




        👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐














Comments

ravi said…
அம்மா என்றே நான் அழைப்பது உன் காதில் விழவில்லையோ

நிலவான தாடகம் மீண்டும் காதில் வந்தே என் குரல் அதை தடுக்கின்றதோ ??

நட்சத்திரங்கள் ஒன்றாய் மூக்குத்தி ஆகியே என் குரல் தனை ஒளி இழக்க செய்கின்றதோ?

நீ சுமந்த குழவி நான் சுமந்த வலியில் என் குரல் வலி ஒன்றும் பெரிதோ ?

அம்மா எனும் உணர்வு எனில் நீங்கினால் வாழ்வேன் புவியில் என்றே நினைத்தாயோ ?

கூப்பிட்ட குரலுக்கு வராமல் கருப்பு சிலையாய் நின்று சிரிக்கின்றாய் .

ஓடி வரா காலுக்கு ஒரு கொலுசும் தேவையோ ...

சொக்கனை சொக்கியவளே சொல்

அம்மா எனும் அரும் வார்த்தை உன்னால் மறைந்து மறந்து போகுமோ ?? 💐
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 139* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இன்று 39வது திருநாமம் 🌸🌸🌸🌸
ravi said…
*39 कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद्वयान्विता - காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா --*

இடையழகை தொடர்ந்து வாக் தேவிகள் அவள் தொடையழகை வர்ணிக்கிறார்கள்.

அவள் தொடையழகு அவளது பிராண நாதன் காமேஸ்வரன் ஒருவனுக்கல்லவோ தெரியும் என்கிறார்கள்

நாம் பாதத்தை வணங்கி அருள் பெறுபவர்கள்... 🙏🙏
ravi said…
*காமேஷ* = ஈஸ்வரன் - மஹாதேவன்

*ஞாத* = அறிந்த - உணர்ந்த

*சௌபாக்ய* = மங்கலமான - அழகான

*மார்தவ* = மென்மை - கனிவான

*ஊரு* - தொடைப்பகுதி

*த்வய* = இரண்டு - ஜோடி

*அன்விதா* = அழகாய் அமைந்திருத்தல்

*39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; =*

அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள் 🌸🌸🌸
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 139* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 30👍👍👍
ravi said…
ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:

கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ

மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.🌸🌸
ravi said…
அம்மா! ஆதியந்தமில்லாத பரம்பொருளே,

உன்னிடத்தின்று தோன்றிய அணிமா போன்ற சக்திகளால் சூழப்பட்டவளாக சேவிக்கப்படுபவளே.

உன்னை தனது ஆத்மாவாக பாவித்து சிந்திப்பவனுக்கு

சிவ ஸாயுஜ்ய பதவிகூட துரும்பென தோன்றுவதால் தானே

உன்னை ஆத்மாவாக சிந்திப்பவனை ஊழித்தீ கூட மங்கள ஹாரத்தி காட்டி பூஜிக்கிறது.

இதில் வியப்பென்ன?.
ravi said…
உன் பதம் உருகி உன் பாதம் பற்றி இதத்தே ஒழுக உன் அடிமை கொண்டேன் .. இனி ஒருவர் மதத்தே வழிபடேன்

அவர் போன வழியும் செல்லேன் ..

அறிவு ஒன்றிலேன் என் கண் நீ வைத்த பேரளியே 🌞🌞🌞
ravi said…
*37. திருநீலகண்ட நாயனார்* 4
ravi said…
பேராண்மையும்
பேரன்பும்
பேரின்ப பெருவாழ்வும் நிறைந்திருந்த திருநீலகண்டரின்
திரு வாழ்வில்
ஒரு திருவிளையாடல் புரிய நினைத்தார்
தில்லையம்பதியார்.

அக்கணமே
திரிசடையனின் திருவிளையாட்டு அரங்கேறத் தொடங்கியது.

அப்போது திருநீலகண்டர் இறை பணி முடித்து
வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அது சமயம் திடீரென லேசான மழை.

மழைக்கு ஒரு வீட்டின் திண்ணையில் ஒதுங்கினார் நீலகண்டர்.

அந்த வீடு
ஒரு வேசியின் வீடு.

யதார்த்தமாக
அவ்வேளை அவள் தாம்பூலச்சாறை
சன்னல் வழியே
வெளியே துப்ப...

அச் செஞ்சாறு
நீலகண்டரைக்
கறை ஆக்கியது.

இதைக் கண்டு
துடித்துப் போன பரத்தை நீலகண்டரை
வீட்டினுள் அழைத்து
சொம்பு நீர் தந்து
தாம்பூலக் கறையைக்
கழுவச் செய்தாள்.🌸🌸🌸
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்*👌👌👌
ravi said…
அத ரவிரவதன்னிரீக்ஷய ராமம் முதிதமனாஹ ப்ரமம் ப்ரஹ்ருஷ்யமான: |

நிஷிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா சுரகண மத்யகதோ வாச்ஸ்த்ரவேதி ||🤝🙏
ravi said…
யுத்த களத்தில் ஸ்ரீராமனைப் பார்த்த ஸூர்ய பகவான், ராவணனின் முடிவு உறுதி எனத் தெரிந்து கொண்டான்.

ஸ்ரீராமனுக்கு, அதற்கான வழியையும் காண்பித்தான்.🌞🌞
ravi said…
இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை, உண்மையான பக்தியுடன் உதயமாகும் ஸூர்யனைப் பார்த்து மும்முறை சொல்லி வந்தால், வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி எதிரிகளை வென்று சிறப்புடன் வாழலாம்.🌞🌞🌞🌞
ravi said…
ஓ ராகவா

வீழ்ந்தான் தசமுகன் விண் தரையைத் தொட்டது போல்

சாய்ந்தான் கோடி வருடம் வாழ்ந்த ஆலமரம் போல் ஒரு அம்பில்

மறைந்தான் மண்ணில் மனிதரும் தேவரும் மாயா முனிவரும் தினம் வந்திப்பவன்

மறந்தான் தர்மம் நீதி தனை வேதத்தின் சாரம் தனை தன் தாரத்தின் கண்ணீர் தனை

துறந்தான் சிவநாமம் தனை ... துடித்தான் நெருப்பில் இட்ட புழு போல் ..

நெஞ்சம் விம்மினான் கடன் பட்டோர் மனம் போல்

சீதையை மணக்க நினைத்தவன் சிதையிலே சீர் அழிந்தான் ... கதை அல்ல இது பாடம் . கிடைத்த மனைவி தான் சீதை பிறர் துணை கணை தனை சேர்க்கும் ... வினை தனை அள்ளும் ... வீடு பேறு தனை விரட்டும்

சொல்லும் நாமம் துணை வாரா ... தெரிந்த வேதம் ஜயம் தனை தாரா

ராமன் சிரித்தான்

அவதாரம் முடியவே தன் தாரம் அதை தூசி படிந்த தன் மனம் அதில் திருநீறு பூசியே

வெண்மை நிறமாகி அதில் மீண்டும் அமர வைத்தான் ஆதவன் அருளால்
ravi said…
*The art of unleashing* .

(My experiences... Ravi ...Episode 233🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Dhamra port , Odissa*💐
ravi said…
*3. Kanika island*

*A live or die challenge*

Green peace had collected more data than us .. their only focus was to defame the giant corporates and getting funded for this noble cause
ravi said…
They were successful in their many attempts ... But we are used to preach bagavad gita in the battle field ...

Honesty , straight forwardness , integrity will have no meaning if the opponent has an atom bomb in his hands .

Media was getting assurance after assurance from TS that port will protect the turtles and it will maintain all safety norms but such hollow statements did not go well with green peace .. More n more slogans were raised stating that port was coming up on forest land and L&T was knowingly constructing the port ...

In the meantime a book containing all collected data was getting ready and lots of photos , video clipping proved beyond doubts that the kanika island as claimed by GP was under the sea and what we were constructing as port was not part of forest land ... 🙏🌸🌸
Hemalatha said…
நேற்று உங்களைநினைத்து வியந்துக் கொண்டிருந்தேன்
Hemalatha said…
இன்னும் வியப்பு தீரவில்லை
Hemalatha said…
நித்தமும் ......
ravi said…
வியக்கும் அளவிற்கு நான் ஒன்றுமே செய்ய வில்லையே ..
Hemalatha said…
ஐயா..🙏😥😥
Hemalatha said…
இது தன்னடக்கம் அல்ல.தமிழ் வார்த்தை தெரியவில்லை
Hemalatha said…
உணர்ச்சி வசப்பட்டு எழுதவில்லை.எங்களை உணர்ச்சி வசப்பட எழுதி உள்ளீர்கள்.ஏன் என் போன்றோருக்கு அவள் அனுகிரகிப்பதில்லை என்று உணர்ந்தேன்.இப்படி எழுதினால் தாய் தான் என் செய்வாள்.மகுடிக்கு மயங்கிய பாம்பாக கட்டுண்டு கிடக்கிறாள் உம்மிடத்தில்.படித்த நானே மெய்சிலிர்த்து அசைவுற்றிருந்தேன்.சில மணித்துளி.பாடு பொருளே அவளாக இருக்கும் போது எப்படி அசைவாள்.
ravi said…
எனக்கு உங்கள் கஷ்டங்கள் தொல்லைகள் எதுவுமே தெரியாது ..

அப்பப்போ நீங்கள் கோடிட்டு காண்பிக்கும் போது கொஞ்சம் புரியும் .

இது உங்கள் குடும்ப விஷயமாக இருப்பதால் அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டு கேட்க விருப்பம் இல்லை ..

ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும் .

தெய்வ நம்பிக்கை அன்னதானம் இப்படி பல நல்ல விஷயங்களுக்கு நீங்கள் இருவரும் சொந்தக்காரர்கள் ..

நீங்கள் சாய் , ஐயப்பன் நம்பும் அளவில் என் பக்தி நூற்றில் ஒரு பங்கு கூட இருக்காது ..

மனம் தளர விடாதீர்கள் ..

முன்வினை கர்மா இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு ..

அதனால் இந்த தற்காலிக மன உளைச்சல் அழுத்தம் ...

இறைவன் வினைக்கு ஏற்றமாதிரி கொஞ்சம் நம்மை பரிதவிக்க வைப்பான்

ஆனால் கண்டிப்பாக கை விட மாட்டான் .

நம்புங்கள் மேலாக அல்ல அழுத்தமாக இன்னும் ஆழமாக ..

நல்லதே நடக்கும் .. நான் உத்திரவாதம் 🌸🌸🌸🤝🤝🤝
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 139*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம்

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके

दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।

मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये

वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥

து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே

து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।

மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே

வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥

ன்னு ஸ்லோகம்
ravi said…
உலகத்தாரை நம்ப வேண்டியதில்லை.

நாம் பகவானை நம்பினா நமக்கு ஒரு வாழ்க்கை கொடுப்பார்.

தலையில எழுதியிருக்கிற சுக, துக்கங்கள் அந்தந்த வேளைக்கு வரும்.

இந்த நம்பிக்கை, தைரியம் வந்து, ஒருத்தரை பார்த்தாதான் அந்த மாதிரி ஒரு சத்குருவை பார்த்து, அவா நீ இந்த வழிபாடு பண்ணுன்னு சொல்லி அதை நாம கெட்டியா பிடிச்சிண்டு பண்ணினா தான் அந்த இரண்டு மணிநேரம் தினம் பண்றதுக்கு இடம் கொடுக்கறது. பகவான் வழிவிடறார்.

இது பண்ண முடியறதுன்னு தெரியும். இதை மூணு மணிநேரம் ஆக்கினா இன்னும் மேல மேல பஜனம் பண்ணினா அதனால ஒண்ணும் ஆபத்தே இல்ல.

அதனால ரொம்ப சம்பத்துதான். அதுனால ரொம்ப க்ஷேமம்ங்கிறதை மஹான்கள் சொல்லி கொடுப்பா.

நம்பி நாம பண்ணினோம்னா நாம் அதை அனுபவிக்கலாம்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 151* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️

*50. விச்வகர்மணே நம: (Vishwakarmane namaha)*🤝🤝
ravi said…
அப்ரமேயோ ஹ்ருஷீகேச ’:
பத்மநாபோ (அ)மரப்ரபு: |

*விச்’வகர்மா* மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
அசுரர்களின் ஆநிரைகளும் தேவர்களுக்குச் சொந்தமாகி விட்டன.

அதற்குப்பின் போரில் தேவர்கள் அசுரர்களை வீழ்த்தினார்கள்.

இந்தச் சரித்திரம், யஜுர் வேதத்தின் நான்காவது பகுதியின் இரண்டாம் பிரிவில் உள்ளது.

இதை பரசுராமர் பீஷ்மருக்கு உபதேசித்தார்.

இதைக் கேட்ட பீஷ்மர், ‘‘முதல்முறை ‘விச்வகர்மா!’ என்று தேவர்கள்
அழைத்தபோது ஏன் காயத்திரி அவர்கள் முன் தோன்றவில்லை?” என்று கேட்டார்.

அதற்குப் பரசுராமர், “ *விச்வகர்மா* என்ற திருநாமம் திருமாலுக்கே உரித்தானது.

அவருடைய ஆக்கத்தினால்தான்
இந்த உலகனைத்தும் உருவாகியது.

படைப்புக் கடவுளான பிரம்மாவைப் படைத்தவரும் அவரே, உள்ளிருந்து இயக்குபவரும் அவரே.

அதனால் விச்வகர்மா என்று தேவர்கள் அழைத்தபோது, தன்னை அழைக்கிறார்களா அல்லது திருமாலை அழைக்கிறார்களா
என்று காயத்திரிக்குப் புரியவில்லை.

அதனால் அவள் தோன்றவில்லை.🙏
ravi said…
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

|| பெருமாளின் பக்தர்களை காக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம் ||

ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தார்.

இவர் ஏகாதசி விரதத்தை ஒரு முறை கூட தவர விட்டதில்லை.

ஸ்ரீமந் நாராயணனிடம் சுயநலமற்ற அபரிமிதமான பக்தி வைத்து இருந்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அம்பரீச ராஜாவிற்கு காட்சி தருகிறார்.

என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு அம்பரீஷ ராஜாவோ தனக்கு தங்கள் தரிசனம் கிடைத்ததே போதும் பிரபு தன்யனானேன் என்றார்.
ravi said…
இவரின் பக்தியை மெச்சி பரந்தாமனே தன்னுடைய சுதர்சன சக்கரத்தை கொடுத்து விட்டார்.

அதை அனுதினமும் பக்தியுடன் பூஜை செய்து வந்தார் அம்பரீஷ மஹாராஜா.

இவர் ஒவ்வொரு முறையும் ஏகாதசியில் விரதமிருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பார்.

இவரது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

ஆனால் தேவலோகத்தில் அனைவரும் கலக்கமாக இருந்தனர்.
ravi said…
நூறாவது விரதம் முடிந்துவிட்டால் தேவலோக பதவி கூட கிடைத்துவிடும், மானுடனுக்கு இப்பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர்.

இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர்.

துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார்.

அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து இருந்தார்.
ravi said…
அவர் ஏகாதசி விரதம் முடித்து துவாதசி நேரம் முடிவதற்குள் அவர் உணவு அருந்தி இருக்கவேண்டும்,

அப்போதுதான் ஏகாதசியின் முழுப்பயனும் அவருக்கு கிடைக்கும்.

துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தார்.
ravi said…
துர்வாச முனிவரை வரவேற்று மன்னன் தாங்களும் என்னுடன் உணவருந்தினால் எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்றார்.

துர்வாச முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன், அதன்பின் உணவருந்தலாம் எனக்கூறிச் சென்றார்.

முனிவரின் திட்டம் என்னவென்றால் தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும் மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான்.
ravi said…
துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது.

கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்துவிடுவார்.

இன்னும் சில நிமிடங்களே இருந்தது வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார் அம்பரீஷ மஹாராஜா.
ravi said…
உடனே தலைமை பண்டிதர் உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும் என்று கூறினார்.

அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்துவிட்டு முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தார்.

இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர், மிகுந்த கோபமடைந்தார்

உடனே துர்வாசர் தனது ஜடா முடியில் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீஷனை கொல்லுமாறு ஆணையிட்டார்.
ravi said…
பக்தனுக்கு ஒரு துன்பம் என்றால் பகவான் சும்மா விடுவாரா

அம்பரீஷ ராஜாவோ தனது பூஜை அறையில் நித்ய பூஜை செய்யும் இடத்தில் பெருமாளை நினைத்து தியானம் செய்தார்.

அவ்வளவு தான் உடனே சுழன்றது சுதர்சன சக்கரம்.

புயலேன அந்த பூதத்தின் தலையை கொய்தது.
ravi said…
அதன் பின்னரும் தொடர்ந்து ஏவிவிட்ட துர்வாசரையும் துரத்தியது.

முதலில் பிரம்ம தேவரிடம் சரணடைந்தார் துர்வாசர் அவரோ சிவபெருமானிடம் தஞ்சமடையுங்கள் என்றார்.

சிவபெருமானோ ஸ்ரீமந் நாராயணரிடம் செல்லுங்கள் என்றார்.

மஹா விஷ்ணுவும் தன்னாலும் எதுவும் செய்ய முடியாது ஒரே உபாயம் அம்பரீஷ மஹாராஜாவிடம் தஞ்சமடையுங்கள் என்றார்.

துர்வாசர் கடைசியாக அம்பரீஷ மஹாராஜாவிடம் தஞ்சமடைந்தார்.
ravi said…
அம்பரீஷ மஹாராஜாவும் மனமார மன்னித்து சுதர்சன சக்கரத்தை சாந்த படுத்தினார்.

துர்வாசரிடம் தனக்கு எந்த பதவியிலும் நாட்டமில்லை ஸ்ரீமந் நாராயணனின் திருவருளும் அவருடைய பாதத்தில் ஒரு சிறு இடம் இருந்தால் அதுவே என் பாக்கியம் என்றார்.

துர்வாசரும் ஆஹா என்ன ஒரு அற்புதமான ராஜா நீ என்று வாழ்த்தி விடை பெற்றார்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மீநாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.

‘ச்யாமளா தண்டகம்’என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன ச்யாமளாதான் மீநாக்ஷி. ச்யாமளா, மாதங்கி, மந்த்ரிணி என்றெல்லாமே மந்திர தந்திர சாஸ்த்ரங்களில் மீநாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷாம்ருதத்தை ஸாதித்துத் தருகிறவள்.
ravi said…
குறிப்பாக “ச்யாமளா தண்டக”த்தில்
மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநி |
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவநவாஸிநீ ||
என்று வருவது, மரகதப் பச்சையாக ஜ்வலிக்கிற மீநாக்ஷியைச் சொல்வதாகவே இருக்கிறது. ‘கதம்ப வனம்’ என்பதுதான் மதுரை. ‘கடப்ப வனம்’ என்று தமிழில் சொல்வார்கள்.
ravi said…
ஓங்கார பஞ்ஜர சுகீம்” என்று ஆரம்பிக்கிற ‘நவரத்ன மாலிகை’யிலும் அம்பிகையை ஸங்கீத தேவதையாகத்தான் காளிதாஸன் வர்ணித்திருக்கிறான். “ஓங்காரம் என்ற கூட்டிலிருக்கும் கிளி” என்று அம்பிகையை வர்ணிக்க ஆரம்பிக்கிறான். மதுராபுரியில் மீநாக்ஷி வீணாதாரிணியாக இல்லாமல், கிளியைத்தான் கையில் வைத்துக்கொண்டிருக்கிறாள்!
ravi said…
மீநாக்ஷி பஞ்சரத்னம்’ என்று ஆசார்யாளும் பண்ணியிருக்கிறார்.
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் – தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே
என்று ஞானஸம்பந்தர் ஈஸ்வரனைப் பாடுகிறபோதுகூட ‘பாதிமாது’ என்று முதலில் ஈஸ்ரவனுடைய அர்த்தாங்கனாவாக இருக்கிற அவளைத்தான் சொல்லியிருக்கிறார்.
ravi said…
இப்படிப் பல கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள். குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ என்று, ஸாக்ஷாத் ஜகன்மாதாவைக் குழந்தையாக வைத்து ஸ்தோத்திரித்திருக்கிறார். அதைக் கோவிலிலேயே அரங்கேற்றம் பண்ணினார்கள். அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த திருமலை நாயகரின் அக்ராஸனத்தில் அரங்கேற்றம் நடந்தது.
ravi said…
குமரகுருபரர் பாட்டுகளைச் சொல்லிக் கொண்டு வரும்போதே திடீரென்று அங்கே அர்ச்சகருடைய பெண் குழந்தை வந்து, திருமலை நாயகரின் கழுத்தில் போட்டுக்கொண்டிருந்த முத்துமாலையைக் கழற்றிக் குமரகுருபரரின் கழுத்திலே போட்டுவிட்டதாம். ‘இதென்னடா, இந்தப் பெண் இப்படிப் பண்ணுகிறது?’ என்று எல்லோரும் பிரமித்துப் போயிருக்கும்போது அந்தப் பெண் அப்படியே கர்ப்பக்ருஹத்துக்குள் போய் அந்தர்தானமாகி விட்டதாம்! அப்போதுதான் எல்லோருக்கும் மீநாக்ஷியே இந்த ரூபத்தில் வந்து குமரகுருபரருக்கு பஹுமானம் பண்ணிவிட்டுப் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.
ravi said…
தமிழில் ‘அங்கயற் கண்ணி’ என்று அம்பாளைச் சொல்வார்கள். ‘அம்’ என்றால் அழகிய, ‘கயல்’ என்றால் மீன். மீன் போன்ற அழகிய கண்ணுள்ளவள், மீநாக்ஷி என்று அர்த்த்ம். ‘அங்கச்சி, அங்கச்சி’ என்றே மதுரையில் எந்தப் பெண்ணையும் கூப்பிடுவது இதனால்தான். இப்படி இருக்கிறது மீநாக்ஷியின் பெருமை. மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர்,
ravi said…
நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல், ‘இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?’ என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு*1 கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள். அந்த துரை படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது தூக்கத்திலிருந்தவனை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றியிருக்கிறாள்.
ravi said…
அப்புறம் அவன் பரம பக்தனாகி அம்பாளுக்குத் திருவாபரணம் – stirrup என்பதான குதிரை மீது ஏற உதவும் அங்கவடி – பண்ணி அர்ப்பணம் செய்திருக்கிறான். மதுராபுரி நாயிகே நமஸ்தே
மதுராலாப சுகாபிராம ஹஸ்தே |
மலயத்வஜ பாண்ட்ய-ராஜகந்யே
மயி மீநாக்ஷி க்ருபாம் விதேஹி தந்யே ||
(மதுராபுரிக்கு நாயகியே! மதுரமாகக் கூவும் கிளியை ஏந்தி எழிலுற்ற கரத்தை உடையவளே! மலயத்வஜ பாண்டிய மன்னன் மகளே! ஸகல ஐச்வர்யமும் நிறைந்தவளே! உனக்கு நமஸ்காரம். எனக்கு உன் க்ருபையை அருளுவாய்!)
ravi said…
மீநாக்ஷியின் புகழை இப்படிப் பாடிப் பாடியே, லோகம் முழுவதும் அவள் குழந்தைகள் என்பதில் ஒரு பேதம், ஒரு த்வேஷம் இல்லாமல், அத்தனை பேரும் சிந்தனையிலும் செயலிலும் ஒற்றுமையுடன் வாழ்க்கையை ஆனந்தமாய் நடத்துவோம்.
(Collector Rose Peter )
ravi said…
*37. திருநீலகண்ட நாயனார்* 5
ravi said…
அப்போதுதான்
நீலகண்டர்
அவள் முகம் பார்த்தார்.

அவளைப் பரத்தை
என்று சொன்னால் சொன்னவர்
நாக்கு அழுகும்.

அப்படி
ஒரு குடும்ப விளக்காய் காட்சியளித்தாள்.

வந்ததை வரவில் வைக்கும்
உடல் விற்பவள்
அல்ல அவள்.

மனம் ஒப்பும்
மணவாளனுடன் மட்டும் கூடிக் களிக்கும்
சரசக்காரி.

காதல் களியாட்ட
சிருங்காரச் சிங்காரி.

இருவர் கண்களும் ஈர்த்திழுக்க
பிடித்தது காட்டுத் 'தீ'

கொழுந்துவிட்டு
எரிந்தது காமத் 'தீ'.🔥
ravi said…
அன்னையை புகழும் ஓவ்வொரு சொல்லும் பொன்னேட்டில் பதிக்க வேண்டியவை ... அதை பெரியவளே சொல்லும் போது பழம் நழுவி பாலில் விழுவதைப்போல் உள்ளது 🍊🍊🍊
ravi said…
கங்கை கொண்டாள் புண்ணியம் உன் பாதம் தொட்டே

அழித்தான் தன் கலங்கம் சந்திரனும் சந்திர மௌளீஸ்வரர் பூஜை கண்டே

மறைந்தான் சனீஸ்வரன் உன் நாமம் தனை தினம் உரைப்போர் விடுத்தே

கணிந்தான் ஈசனும் அரங்கனுமே கண் கண்ட தெய்வமாய் நீ புவியில் தோன்றிய அன்றே

மகிழ்ந்தாள் காமாக்ஷி உன் உருவில் தினம் நடமாடும் தெய்வமாய் வீதி எங்குமே ...
ravi said…
இன்று முதல் அனுமன் சாலீஸா கொஞ்சம் ஆழ்ந்து அதன் பொருளை அறிந்து கொள்வோமா ... எல்லோருக்கும் மேலாக தெரியும் ஸ்லோகம் ஆனால் ஆழமான அர்த்தங்கள் கொண்டது .. இதன் பலனை சொல்லி மாளாது ... குருவை ( ஆதித்தனை இவ்வளவு நாட்கள் பார்த்துக் கொண்டு வந்தோம்) அவருடைய பிரியமான சிஷ்யனை அடுத்து பார்ப்பது தானே நியாயம் ... 👌👌👌
ravi said…
அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும்.

துயரங்கள் தொலையும்.

தடைகள் தவிடுபொடியாகும்.

நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர்
ravi said…
அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாக

ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு

அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.🔥🔥🔥
—————
ravi said…
அஞ்சனை மைந்தா போற்றி !

அஞ்சினை வென்றாய் போற்றி !

அஞ்சினைக் கதிர்பின் சென்று

அரு மறையுணர்ந்தாய் போற்றி !

அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !

அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

ஶ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம🙏
ravi said…
*The art of unleashing* .

(My experiences... Ravi ...Episode 234🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Dhamra port , Odissa*💐
ravi said…
*3. Kanika island*

*A live or die challenge*

Our dispute over Kanika land was referred to Empowered Committee and none of the members of the committee were really empowered to take any decision ...

The port was getting completed but we could not commission it because of its ongoing battle .. cost was going up every day and we were wondering what to do .

The EC consists of all retired judges of SC or HCs spread over India .

All of them wanted the age of our case was matching with their ages ...

Speed was something unknown to them .

There was a minimum gap of 6m between two meetings .. all happened not in Odissa but in Delhi ..

In Every meeting the case restarted afresh as the committee members kept on changing ..

As GP was funded they were not bothered to see the case was dragging but for us every second mattered ... 🙏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 140* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இன்று 40வது திருநாமம் 🌸🌸🌸🌸
ravi said…
*40* माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता - *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* -

இரு மாணிக்க பந்துகள் உருண்டு அழகிய முழங்கால் மூட்டுகளாக ஆனவை என்கிறார் அகஸ்திய ரிடம் ஹயக்ரீவர்.

அம்பாளின் தேஹ லாவண்யம் எவ்வளவு நேர்த்தி என்று சொல்கிறது இந்த நாமம்.👌👌👌
ravi said…
*ஸ்ரீ சக்ர மஹா மேரு அம்பாள் திரிபுரசுந்தரி - ஏற்காடு.*

நாம் ஏற்காடு எனும் உல்லாச ஸ்தலம் போகிறோம் அங்கே உள்ள மஹா மேரு சக்தி தேவதை அம்பாள் ஸ்ரீ சக்ர மஹா மேரு திரிபுரசுந்தரியை தரிசித்தி ருக்கிறோமா.

நான் சென்றபோது யாரும் எனக்கு தெரிவிக்காதது எனது துர்பாக்கியம். யாரையோ இங்கே என்னென்ன கோயில்கள் உண்டு என்று கேட்டபோது காதை தடவிக்கொண்டே எங்கோ யோசித்து தெருமுனையில் உள்ள சிறு முச்சந்தி விநாயகரைக் காட்டினார்.

நல்ல வழிகாட்டி.

வேறு யாரையும் கேட்க எனக்கு தோன்றாததன் காரணம், நாங்கள் அங்கிருந்து கிளம்பும் நேரம் வந்து விட்டது.

ஏற்காடு நகரத்திலிருந்து 6-7 கி.மீ தூரம். ஒரு பெரிய தனவந்தர் பங்களாவுக்கு பின் புறம் அம்பாள் குடியிருக்கிறாள்.

தனி வழி இருக்கிறது. ஏன் வாசலில் ஒரு புத்தர் காவல்?

அவரைக் கடந்து சென்றால் சந்நிதி.

புத்தருக்கு வலது புறம் தக்ஷிணாமூர்த்தி. ரெண்டு பேருமே பேசாதவர்கள்.

ரெண்டுபேரும் மௌனிகள் என்றாலும் ஞானிகள்.

நடுவே செல்லும் பாதை ஸ்ரீ லலிதா த்ரிபுரசுந்தரி யிடம் கொண்டு சேர்க்கிறது.

அவளே ஸ்ரீ சக்ர மஹாமேரு .

அவள் அருகே மூன்று புரங்களிலும் சரஸ்வதி, விஷ்ணு, பரமேஸ்வரன். மரத்தில் அற்புத வேலைப்பாடுகளோடு செதுக்கப்பட்டவை.

கோபுரம் மஹா மேரு உருவில் உள்ளது.

உலகில் பெரிய ''மஹா மேரு'' இந்த உருவம் தானோ?

அம்பாள் அழகாக தரிசனம் தருகிறாள். ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடத்தில் அமர்ந்திருப்பவள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 140* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 30👍👍👍
ravi said…
ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:

கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ

மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.🌸🌸
ravi said…
அம்பிகையைத் தனது ஆத்மாவாகவே ஒருவன் பாவனை செய்தால் ஏற்படும் மகிமை ஒப்புயர்வற்றது.

ஸதாசிவனைப்போல் கருதி உலகெல்லாம் அவனைப் பூஜை செய்யும்.

*திரிநயனீ* : ஸூர்யன், சந்திரன், அக்னி / இடை, பிங்களை, ஸுஷும்னை

O Goddess ! who art eternal and art served all around by the rays, Anima and others emanating from Thine own frame !

What is there to wonder at, if the Fire of the great Deluge should perform the ritual of offering lights before whosoever conceives Thee always ‘I am (Thou)’, treating the wealth of Tri-nayana as mere straw ?🌸🌸🌸
ravi said…
சமாதியில் இருந்து வெளியில் வந்து உரையாடிய ராகவேந்திரர்.

தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்க ளை புரிந்து மக்களை காத்தவர் ஸ்ரீராகவே ந்திரர். அவர் தன் இறப்பிற்கு பிறகும் தன் னை நாடி வரும் பக்தர்களை காத்தருள்வ தோடு தேவைப்பட்டால் நேரிலே தோன்றி அருள்புரிபவர்.
ravi said…
பிரிட்டிஷ் காலத்தில் ராகவேந்திரரே சமா தியில் இருந்து நேரில் தோன்றி ஆங்கிலே யரோடு உரையாடிய ஒரு உண்மை சம்ப வத்தை தான் இந்த பதிவில் பார்ப்பிக்கப் போகிறோம்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது மாஞ்சாலி என்னும் கிராமம். இங்கு தான் பகவான் ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்தார். இந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்தான் என்பதால் அதே இடத்தை தனது ஜீவசமாதிக்காக தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர்.
ravi said…
அப்போது அந்த பகுதியை ஆண்ட சுல்தா ன் மசூத் கான் என்ற மன்ன னும் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த இடத் தை ராகவேந் திரருக்கு கொடுக்க, அந்த இடத்தில் கடந்த 1671ம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்.

கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் படி கோவில் நிலத்திற்கு யாரும் வாரிசு இல்லை என் றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்து க்கொள்ளலாம். அந்த சட்டத்தின்படி பிரு ந்தாவனத்திற்கு தானமாகக் கொடுக்கப் பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.
ravi said…
இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மன்னர் சுல்தான், பகவான் ராகவேந்திரருக்குஇந்த இடத்தை பல வருடங்களுக்கு முன்பாகவே தானம் செய்ததால் இந்த இடம் ராகவேந்திரருக் கே சொந்தம் என போராடினர்.

இதனை அடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம், சர் தாமஸ் மன்றோ என்பவற்றின் தலைமை யில் ஒரு குழுவை அமைத்து இதற்கான தீர்வை கண்டறிய உத்தரவிட்டது.
ravi said…
மன்றோவும் அவரது குழுவினரும் ராகவே ந்திரரின் ஆலயத்தை நோக்கி விரைந்த னர். மன்றோ இந்து மதம் மீது மரியாதை கொண்டவர் என்பதால் தன்னுடைய காலனி மற்றும் தொப்பியை வெளியிலே யே கழட்டிவிட்டு ஜீவசமாதி அருகே சென்றார். பின் அங்கு யாரோ ஒருவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு ஆங்கிலத்தில் உரையாட ஆரமித்தார்.
ravi said…
அனால் அவருடன் வந்த குழுவினருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்றால் அங்கு யாருமே இல்லை ஆனால் மன்றோ மட்டும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறா ர். இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைத்தனர் எல்லோரும்.

மன்றோவோ, பிரிட்டிஷ் ஆணை குறித்த முழு விவரத்தையும் தெளிவாகா ஆங்கி லத்தில் எடுத்துரைத்துக் கொண்டிருக்கி றார். அதன் பிறகு மருதரப்பில் உள்ள நியத்தையும் கேட்டறிகிறார்.
ravi said…
இந்த உரை யாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. அதன் பிறகு ஆங்கில பாணி யில் ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார். அவருடன் வந்த குழுவினர் திகை ப்போடு, யாரிடம் இவ்வ ளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டனர்.
ravi said…
அங்கே ஒரு பெரியவர், ஒளிவீசும் கண்க ளோடு காவி உடையில் உயரமாக இருந் தாரே அவரிடம் தான். அவரிடம் நான் அர சின் சட்டம் குறித்து விளக்கினேன். அவரு ம் இந்த சொத்து பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்தார். அதில் இருந்து இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண் டேன் என்றார்
ravi said…
அதோடு அந்த நபருக்கு எப்படி இவ்வளவு ஆங்கில அறிவு, அவரின் ஒளிவீசும் கண் களும், தெளிவான ஆங்கில உச்சரிப்பும் என்னையே பிரமிக்க வைத்தது என்று அவர் கூறுகையில் அனைவரும் ஆச்சர்ய த்தோடு பார்த்தனர். இதனை கவனித்த அவர் ஏன் நீங்கள் அவரை பார்க்கவில் லையா? என்று குழுவினரைப் பார்த்து கேட்டார்.
ravi said…
எங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறினார்கள் அந்த குழுவினர். தன்னோடு உரையாடியவர் பகவான் ஸ்ரீராகவேந்திரர் தான் என்பதை உணர்ந்த மன்றோ, கடந்த நூற்றாண்டில் ஜீவ சமாதி அடைந்த மகான், பிரச்னையை தீர்க்க நேரில் தோன்றி தன் மொழியில் தன்னோடு உரையாடியதை எண்ணி பூரி த்துப்போனார்.

அந்த சொத்து மடத்திற்கே சொந்தம் என்ப தை அரசிற்கு தெரிவித்த தோடு அன்று முதல் பகவான் ஸ்ரீராகவேந் திரரின் தீவிர பக்தரானார் சர் மன்றோ. இந்த தகவல் அப்போதைய சென்னை மாகாண கெஜட் டிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குருவே சரணம்..
குரு ராகவேந்திரர் திருவடிகள் சரணம்... 🙏🙏🙏
ravi said…
முன்னொரு தெய்வமின்றி முதலான முழுப்பொருளே !!

பின்னொரு பிறவியின்றி வேரருக்கும் வேந்தனே !!

கண்ணொரு புலனிருந்தும் காணாமற் விட்டேனே !😰

இன்னொரு முறை அவதரித்தருள்வாய் கருணைக் கடலே !!
ravi said…
முன்னொரு தெய்வமின்றி முதலான முழுப்பொருளே !!

பின்னொரு பிறவியின்றி வேரருக்கும் வேந்தனே !!

கண்ணொரு புலனிருந்தும் காணாமற் விட்டேனே !😰

இன்னொரு முறை அவதரித்தருள்வாய் கருணைக் கடலே !!
Hemalatha said…
Last line super sir👌👌👏👏🙏
Hemalatha said…
Icing on 🍰 cake sir👌😊
ravi said…
*37. திருநீலகண்ட நாயனார்* 6
ravi said…
அவள் விழிகள்
விருந்து போட
நீலகண்டர்
தன்னைத் தொலைத்தார்.

நாளும் தொழும்
தலைவன்
சிவனை மறந்தார்.

ஊரே மெச்சும் இல்லத் தலைவியையும் மறந்தார்.

எப்படியோ ஒருவழியாக காமத் தேர்
நிலைக்கு வந்தது.

நிலைமை புரிந்த நீலகண்டர்
வெட்கித்
தலைகுனிந்த படி
வீட்டிற்குத் திரும்பினார்.

அப்போது பலத்த மழை.

அம் மழைத்துளிகள் நீலகண்டரின் கறையை நீக்க முடியாமல்
வேதனையோடு
தரைமண் சேர்ந்தன.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 141* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*40* माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता - மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா💐💐💐 -
ravi said…
*மாணிக்ய* = மாணிக்கம்

*முகுட* =
கிரீடம்

*ஆகார* = தென்படுதல்

*ஜானு* = முழங்கால்

*த்வய* = இரண்டு -
இருமை

*விராஜிதா* = எழிலுடன் விளங்குதல்
ravi said…
இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்
பெறுபவள்...

அபிராமி பட்டர்
வாக் தேவிகள் வர்ணித்ததை போல் அம்பாளை வர்ணிக்க ஆசைப்பட்டார் ...

முடியவில்லை .. தோள் கண்டார் தோளே கண்டார் என்பதைப்போல அன்னையின் ஒரு அங்கத்தைக் கூட

நூற்றில் ஒரு பங்கு கூட

வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டினாலும் கூட

அவரால் அந்தாதியில் பொருத்த முடியவில்லை ..

அவர் படும் கஷ்டம் கண்டு அம்பாளே ஒரு வார்த்தை அமைத்துக்கொடுத்தாளாம்...

*அது தான்*
*அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி'*👍👍👍

அம்பாளின் அழகு சௌந்தர்யம் என்பது பெரும் சாகரம்

அதில் பல சக்தி உபாசகர்கள் ( ஹயக்ரீவர் , அகஸ்தியர் அவர் மனைவி லோபா முத்திரை , அங்கி , குபேரன் , ஆதித்தன் அம்புலி , மும் மூர்த்திகள் , கணபதி , முருகன் , காமன் , நந்திகேஸ்வரர் , ஆதி சங்கரர் , மூகர் , காளிதாசன் , நீலகண்ட சாஸ்திரிகள் , அப்பயதீக்ஷிதர் , ஸ்யாமா சாஸ்திரிகள் , முத்து ராம தீக்ஷிதர் , தியாகராஜர் , கவி காள மேகம் , முண்டாசு கவி , கண்ணதாசன் , பாரதி தாசன் உட்பட) மொண்டு அனுபவித்தது ஒரு teaspoon அம்ருதம் மட்டுமே ...
Kousakya said…
டீஸ்பூன் இல்லை..ஒரு drop கிடைத்து அதை அனுபவித்தாலே போதுமானது...🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹அற்புதம்
ravi said…
இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்
பெறுபவள்...

அபிராமி பட்டர்
வாக் தேவிகள் வர்ணித்ததை போல் அம்பாளை வர்ணிக்க ஆசைப்பட்டார் ...

முடியவில்லை .. தோள் கண்டார் தோளே கண்டார் என்பதைப்போல அன்னையின் ஒரு அங்கத்தைக் கூட

நூற்றில் ஒரு பங்கு கூட

வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டினாலும் கூட

அவரால் அந்தாதியில் பொருத்த முடியவில்லை ..

அவர் படும் கஷ்டம் கண்டு அம்பாளே ஒரு வார்த்தை அமைத்துக்கொடுத்தாளாம்...

*அது தான்*
*அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி'*👍👍👍

அம்பாளின் அழகு சௌந்தர்யம் என்பது பெரும் சாகரம்

அதில் பல சக்தி உபாசகர்கள் ( ஹயக்ரீவர் , அகஸ்தியர் அவர் மனைவி லோபா முத்திரை , அங்கி , குபேரன் , ஆதித்தன் அம்புலி , மும் மூர்த்திகள் , கணபதி , முருகன் , காமன் , நந்திகேஸ்வரர் , ஆதி சங்கரர் , மூகர் , காளிதாசன் , நீலகண்ட சாஸ்திரிகள் , அப்பயதீக்ஷிதர் , ஸ்யாமா சாஸ்திரிகள் , முத்து ராம தீக்ஷிதர் , தியாகராஜர் , கவி காள மேகம் , முண்டாசு கவி , கண்ணதாசன் , பாரதி தாசன் உட்பட) மொண்டு அனுபவித்தது ஒரு teaspoon அம்ருதம் மட்டுமே ...
கௌசல்யா said…
இதற்கே கொடுத்துவைக்க வேண்டும்..
Lakshmi balaraman said…
அபிராமி அந்தாதி படிப்பதே என் பாக்யம்
அம்பாளின் கடாட்சம்
கிடைத்தால் போதும்🙏🙏
ravi said…
வேழ முகத்தோன் துணை இருக்க

வானர முகத்தோன் அருள் இருக்க

கருணை முகத்தோன் காஞ்சியில் வாழ்ந்திருக்க

ஆனந்தமாய் அரங்கன் துயில் கொள்ள

பரமானந்தமாய் கூத்தன் கும்மேளம் போட

காமாக்ஷி கடைக்கண் நோக்க

கதிர் காமன் வேலால் நம் வினை ஓட்ட

சபரியில் மணி அடிக்க

இன்றைய நாள் இனிய நாளாய் அமைவதில் ஆச்சரியம் என்ன 👍💐👌
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 141* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 30👍👍👍
ravi said…
ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:

கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ

மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.🌸🌸
ravi said…
Rays emanating from Thine own frame:

The Sri-chakraa of nine parts, in the form of Aavaranana-devataas-s as detailed below:

The three quadrangles of the Bhugrha,
wherein abide the eight sidhhis:

Animaa, Laghimaa, Mahimaa, Vasitva, Isaatva, Praakaamya, Prapti and Sarva-kaama-pradhaayini in the first quadrangle;

the eight Matrs (Mathaas) – Braahmii, Maaheswarii, Kaumaarii, Vaishnavii, Vaaraahee, Maahendrii, Chaamundaa and Mahalakshmi in the second quadrangle;

the ten Mudraa-s – in the third quadrangle: Sarva-samkshobini, Sarva-vidraavini, Sarvaakarshini, Sarva-vasankari, Sarvonmaadini, Sarva-mahaankusaa, Sarva-kechari, Sarva-bijaa, Sarva-yoni, Sarva-thrikhandaa
ravi said…
Sixteen Devata-s in the sixteen petalled lotus: Kaamaakarshini, Budhhyaakarshini, Ahamkaaraakarshini, Sabdaakarshini, Sparsaakarshini, Rupaakarshini, Rasaakarshini, Gandhaakarshini, Chittaakarshini, Dairyaakarshini, Smrtyaagarshini, Naamaakarshini, Bijaakarshini, Aatmaakarshini, Amrtaakarshini, Sareeraakarshini
ravi said…
Eight Devata-s in the eight petalled lotus: Anaga-kusumaa, Ananga-mekalaa, Ananga-madanaa, Ananga-madanaaturaa, Ananga-rekaa, Ananga-veginee, Anangaankusaa, Ananga-maalinee
ravi said…
*Sunday Musing*

*Unknown Relationship*

"Amma! Your son has sent a money order." The postman stopped his bicycle on seeing Amma.

As Amma took off her glasses, cleaned them with the end of her saree and wore them back, there was suddenly a gleam in her old eyes.

She looked at the postman with hopeful eyes and said, "Son! I want to talk to my son first."

But the postman tried to avoid her request. "Amma! I don't have enough time to call your son every time. I can't make you talk to him every time."

The postman tried to show Amma how busy he was, but Amma kept insisting him to call her son first.

"Son! It will only take a few minutes."

"Amma, you should not insist me to call your son every time."

Saying this, the postman started dialing a number on his mobile before placing the money in Amma's hand.

"Here, talk to your son! But don't talk for long, the balance is very low in my account."

He handed over his mobile to Amma.

Taking his mobile phone from his hand, Amma started speaking to her son, asked about his well-being, and looked satisfied just within a minute of talking. A wide smile had appeared on her wrinkled face.

"Here's a one thousand rupees, Amma," the postman said, handing over ten hundred rupee notes to her.

While counting the money, Amma gestured for him to stay.
"What happened now, Amma?"
"Keep this hundred rupees, son!"
"But why Amma?" he asked with surprise.

"Besides delivering the money every month, you also call my son for me. Every time you must've spent some amount on the calls, isn’t it?"

"Oh no Amma! Please let it be."

He kept on refusing, but Amma forcefully put a hundred rupee note in his hand. He looked at her for a moment, and then turned to get back to his work.

Amma, who lived alone in her house, also went inside, blessing the postman all the while.

The postman had just moved ahead a few steps, when someone put a hand on his shoulder...he turned back and found someone he knew standing there.

He was surprised to see it was Rampravesh, who ran a mobile phone shop nearby.

"Brother, how come you are here? You should be in your shop at this time."

"I had come here to meet someone. But I want to ask you something." Rampravesh's eyes were fixed on the postman's face.

"Yes, go ahead brother," the postman said very calmly.

"Brother! Why do you do this every month?"

"What have I done, brother?"

"Every month, you give Amma money from your own pocket and you also give me money to talk to her on the phone as her son! What for?"

On this question, the postman let out a sigh and replied, "I don't give money to this old lady, I give it to my mother."

"I don't understand! She is not your mother."

The postman continued... "Her son had gone to another city to earn money and every month he used to send a money order of thousand rupees for his Amma. But one day, instead of the money order, a letter came for Amma - it was from her son's friend. Her son had lost his life due to the virus, the pandemic.

“I did not dare to give this sad news to Amma who waits every month for the money order and hopes for the well being of her son.”

I lost my mother to corona last year. But every time I come here to deliver the money order, when I look at her, I feel the presence of my mother in her.

ravi said…
In my mind, I started considering her as my own Amma and every month I bring her a money order from my side.

The postman's eyes had welled up with tears.

But he did not wait for Rampravesh to reply... He took his bicycle and proceeded to distribute the mail.

Rampravesh was stunned to see the postman's true love and affection for Amma, a complete stranger.

Standing there, he just had one thought in mind, “if the feeling of Vasudhaiva Kutumbakam (the world is one family) is developed in all of us, then how beautiful this world would become!.

*Reflection*

*The two most important qualities that make us human are the ability to sympathize and empathize with others and the willingness to help them.*
ravi said…
*The art of unleashing* .

(My experiences... Ravi ...Episode 235🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Dhamra port , Odissa*💐
ravi said…
*3. Kanika island*

*A live or die challenge*

After prolonging the matter EC gave a mandate which we were longing for quite some time .. it started on forest land but judgment ended with Olive Ridle Turtle ... Even now i could not understand what relationship between the two ...

EC directed us to pay Rs 5cr towards corpus for conserving Turtles in our area .

While L&T remained silent TS rushed to pay this to buy peace from green peace .

All our efforts did not go waste .

Tons and tons of learning .. i can write a book on ORT and Forest land .

Had i not accepted such transfers or different assignments i would hv remained like a turtle in a pot ...

The knowledge we could gain over various disliking assignments if someone attempts to translate into money value many including me would have surpassed the networth of ambanis and adanis ...

Thanks to L&T and thanks to our parents the way they had brought us up to face challenges and not to run away from them 👍🙏
ravi said…
அனுமன் சாலீஸா* ஒரு புதிய புரிதல்
ravi said…
துளசி தாசர் வால்மீகியின் மறு அவதாரம் என்பார்கள் .

வடக்கில் கேள்வி பதிலாக ராம லீலா என்று ராமகாதையை முதல் முறையாக அரங்கேற்றி பெருமை சேர்த்தவர் ..

அனுமனை பலமுறை நேரில் தரிசித்தவர்

அவர் மூலம் ராம தரிசனம் பெற்றவர் .

பிறக்கும் போது அதிர்ஷ்டம் இல்லாத குழந்தை என்று ஒதுக்கப்பட்டவர் .

பிறந்த குழந்தை 32 பற்களுடன் 5வயது முதிர்ச்சியுடம் ராம ராம என்று சொல்லிக்கொண்டே பிறந்ததாம் ...

மனைவி சொன்ன ஒரு கடும் சொல்லால் வாழ்க்கை துறந்து சந்நியாசி ஆனவர் ...

அனுமனிடம் அபரீதமான பக்தி கொண்டவர் ...

அது சரி இவர் ஏன் அனுமன் சாலீஸா எழுத வேண்டும் எதனால் ஹிந்தியில் எழுத வேண்டும் ? நாளை அலசுவோம்
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்) குரல்

ஒரு வீட்டைப் பார்த்துஇதைக் கட்டியது யார்என்று நாம் கேட்டால் இதைக் கட்டியது சமீபத்திலானால் இன்னார் கட்டினார் என்று பதில் சொல்லலாம்.முன்னூறு நானூறுவருடங்களுக்கு முன்கட்டப்பட்ட வீட்டை யார் கட்டினார் என்றால் தெரியாது என்று சொல்வார்கள்.நாய்,பூனை முதலியன வீடு கட்டப்பட்டதாகவே அறிந்திருக்கமாட்டா.
ravi said…
இப்படியே எப்பொழதுமிருப்பதாகநினைத்துக்கொண்டிருக்கலாம்.ஒரு வண்டியைக் காட்டி அதை யார் செய்தது என்று கேட்டால் இன்ன தச்சன் செய்தான் என்று சொல்லலாம்;ஆனால் இந்த வாழை மரத்தை செய்தது என்று கேட்டால் தெரியாது.இது சமீபத்தில்தான் உண்டானது.ஆயினும்அதை செய்தது யார் என்று நமக்கு தெரியாது.ஒ்வ்வொரு பட்டையாக அதில் அடக்கியது யார்?எந்த ஆயுத்த்ததைக் கொண்டு இது செய்யப்பட்டது?தெரியாது.அந்த மலையை-நடசத்திரங்களை -சந்திரனை செய்தது யார்?தெரியாது.அவை வெகு காலமாக இருக்கின்றன
ravi said…
அவை நாட்பட்டவைதான்.ஆனால் இந்த புஷ்பம் இப்பொழுது உண்டானதே.இரண்டு நாள் முன்பு சிறு மொட்டாக இருந்தது.இப்பொழுது அழகிய ரோஜாப்பூவாகிவிட்டது.ஒவ்வொரு இதழிலும் எத்தனையோ நரம்புகள் ஓடிக்கொண்டுஇருக்கன்றன.ஒரு மிருகம் இந்தப பட்டணத்தை சுற்றிப் பார்த்தால் எவ்வளவு தெரிந்துகொள்ளுமோ அவ்வளவுதான் பிரபஞ்சத்தைப்பற்றிநாம் தெரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம்.இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுநமக்கு ஆக வேண்டுவதென்ன என்று கேட்கலாம்.இந்த அழகான ரோஜாப்பூவை செய்தவர் யார் என்று தெரிந்துகொள்வதால்நமக்குப் பிரயோஜனம் உண்டாகலாம்.
ravi said…
அவை நாட்பட்டவைதான்.ஆனால் இந்த புஷ்பம் இப்பொழுது உண்டானதே.இரண்டு நாள் முன்பு சிறு மொட்டாக இருந்தது.இப்பொழுது அழகிய ரோஜாப்பூவாகிவிட்டது.ஒவ்வொரு இதழிலும் எத்தனையோ நரம்புகள் ஓடிக்கொண்டுஇருக்கன்றன.ஒரு மிருகம் இந்தப பட்டணத்தை சுற்றிப் பார்த்தால் எவ்வளவு தெரிந்துகொள்ளுமோ அவ்வளவுதான் பிரபஞ்சத்தைப்பற்றிநாம் தெரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம்.
ravi said…
அவை நாட்பட்டவைதான்.ஆனால் இந்த புஷ்பம் இப்பொழுது உண்டானதே.இரண்டு நாள் முன்பு சிறு மொட்டாக இருந்தது.இப்பொழுது அழகிய ரோஜாப்பூவாகிவிட்டது.ஒவ்வொரு இதழிலும் எத்தனையோ நரம்புகள் ஓடிக்கொண்டுஇருக்கன்றன.ஒரு மிருகம் இந்தப பட்டணத்தை சுற்றிப் பார்த்தால் எவ்வளவு தெரிந்துகொள்ளுமோ அவ்வளவுதான் பிரபஞ்சத்தைப்பற்றிநாம் தெரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம்.
ravi said…
சிருஷ்டிகர்த்தா ஒருவன் நமது கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறான் என்று தெரிகிறது.அவன் இருக்கிறான் என்பதற்கு என்ன அடையாளம்?நாமே ஒரு அடையாளம்.
ravi said…
நம்முடைய உள்ளங்கையில் இருக்கின்ற ரேகை மாதிரி நாம் போட முடியுமா?இந்தப் பட்டணத்தில் விசித்திரங்கள் இருக்கின்றன.இவைகளை செய்தவன் நமக்கு அகப்படுவது இல்லை.அவன் ஒரு குகையில் புகுந்து கொண்டிருக்கிறான்.
“யோவேதே நிஹிதம் குஹாயாம்”எ்ன்று வேதம் சோல்கிறது.வேதம் அவனைப்பற்றி சொல்லும்போதெல்லாம் அவன் ஒரு குஹையில் இருப்பதாகவே சொல்கிறது.
ravi said…
அவன் ஒருவனாகத்தான் இருக கவேண்டும்.எங்கும் ஒரே மாதிரியாக செய்வதால் ஆசாமி ஒரு ஆசாமிதான்.அப்படி ஒருவன் இருக்கிறான்என்பதை உலகமெல்லாம் அறிவிக்கின்றன.இப்படி அறிவிக்கிற அடையாளத்திற்கு சம்ஸ்கிருத பாஷையில் ‘லிங்கம்’என்று பெயர்.
ravi said…
கண்ணுக்கு தெரியாத த்தை ஊகிப்பதற்கு அனுமானம் என்று பெயர்.ஆகாயத்தில் ஒரு கர்ஜனை உண்டானால் மேகம் குழுமியிருப்பதாக அனுமானிக்கிறோம்.மேகம் இருப்பதை அறிவிக்கும் கர்ஜனை ,லிங்கம்.காளஹஸ்தி முதலிய இடங்களில் மலையில் இரவு நேரம் நெருப்பு தெரியும்.
ravi said…
மரங்கள் தாமாகவும் தீப்பற்றி எரிவதுண்டு.பகலிலும் எரியுமானாலும் அப்பொழுது நெருப்பு தெரியாது.ஆனால் புகை தெரியும்அந்தப்புகையைக கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானிப்போம்.
ravi said…
அந்தப்புகை லிங்கம்.லிங்கம்என்ற சொல் அடையாளம் என்ற அர்த்த்த்தை உடையதுஎன்பது இந்த உதாரணங்களிலிருந்து தெரியும்.அப்படியே பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களையெல்லாம் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதைக்காட்டும் லிங்கம் இருக்கிறது.
ravi said…
இந்த உலகமே அந்த லிங்கம்.கண்ணுக்குத் தெரியாத்தை நினைப்பூட்ட கண்ணுக்குத் தெரியும் லிங்கம் ஏற்பட்டு இருக்கிறது.யோசித்து பார்ப்போமேயானால் எல்லாம் லிங்கமே.ஆயினும் ஒன்றைக் கண்டால் அவன் நினைவு வரும்படி அதை லிங்கமென்று சாஸ்த்திரம் ஏற்படுத்தியிருக்கிறது.அந்த நினைவு தினந்தோறும் உண்டாகும்படி செய்ய சாயங்காலத்தில் சிவ தரிசனம் அவசியம் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.ஈஸ்வர ஸ்வரூபம் இப்படிப்பட்டதென்று காட்ட அதைக் கூடுமானவரையில் அறிவிக்கக்கூடிய லிங்கத்தை சாஸ்திரம் சொல்லியிருக்கின்றது.
ravi said…
சாதாரண லிங்கத்தைவிட அதிகமாக ஸ்படிக லிங்கம் சிவஸ்வரூபத்தை அறிவிக்கக்ககூடியது.லிங்கத்தில் பிரம்மபீடம்,விஷ்ணு பீடம்,சிவபீடம் என்று மூன்று பீடங்கள் உண்டு.ஶ்ரீகாளஹஸ்தியில் லிங்கம் எட்டுக்கால் பூச்சியாகவும் பாம்பாகவும்,யானையாகவும் மூன்று பிரிவுகளாக உள்ளது.ஶ்ரீ எனபதற்கு ஐஸ்வர்யம்,லட்சுமி என்ற அரத்தங்களை தவிர எட்டுக்கால் பூச்சி என்ற பொருளும் உண்டு.கானம் என்பதற்கு பாம்பு என்ற அர்த்தம்.ஹஸ்தி என்பதற்கு யானை என்ற அர்த்தம் உண்டு..
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 141*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 19 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥

ஸதா³ மோஹாடவ்யாம் சரதி யுவதீநாம் குசகி³ரௌ
நடத்யாசாசாகா²ஸ்வடதி ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: ।
கபாலின் பி⁴க்ஷோ மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம்
த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ ॥
ravi said…
நம் மனசு ஏற்கனவே குரங்கு போல சஞ்சலமானது.

அதுல காமமாகிய கள்ளையும் குடிச்சு க்ரோதமாகிய தேளும் கடிச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரி நாம behave பண்ணிண்டு இருக்கோம்.

இந்த மனசை எப்படித் தான் மீட்கறது?

எப்படித் தான் பகவான் கிட்ட போறதுன்னா *கபாலின் பி⁴க்ஷோ –* ஒரு கபாலத்தை வெச்சிண்டிருக்கிற *பிக்ஷு* ரூபத்துல பகவான் வந்து தர்சனம் கொடுக்கிறார்.🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 153* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️
ravi said…
அப்ரமேயோ ஹ்ருஷீகேச ’:
பத்மநாபோ (அ)மரப்ரபு: |

விச்’வகர்மா *மனுஸ்‌ த்வஷ்டா*
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
*51. மநவே நமஹ (Manavey namaha)*

காலயவனன் என்ற யவன மன்னன் பெரும் சேனையோடு வந்து மதுரா நகரை முற்றுகையிட்டான்.

கண்ணனால் பதினேழு முறை போரில் வீழ்த்தப்பட்ட ஜராசந்தனும் மற்றொரு திசையிலிருந்து மதுராவைத் தாக்கப் படைதிரட்டி வந்து கொண்டிருந்தான்.

தேசத்தையும் மக்களையும் காப்பதற்காக மேற்குக் கடற்கரையில் புதிய நகரத்தை நிர்மாணித்து, மதுரா நகரையும் மக்களையும்
அப்படியே அந்தப் புதிய நகரத்துக்கு மாற்றிவிடுவது என்று முடிவெடுத்தான் கண்ணன்.

தன் அண்ணன் பலராமனையும், குலகுருவான கர்காசாரியாரையும்
அழைத்துக் கொண்டு கருடன் மேல் ஏறி அமர்ந்தான்

கண்ணன். “கருடா! மேற்குக் கடற்கரையில் புதிய நகரை நிர்மாணிப்பதற்குத்
தகுந்த இடத்தைத் தேர்ந்தெடு!” என்றான்.

உடனே கருடன் அவர்களை அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரை நோக்கிப் புறப்பட்டார்.
ravi said…
சின்ன சின்ன ஆசை !
சிறகடிக்கும் ஆசை !!

அருணோதயத்தில் ஆயிரம் காயத்ரி ஜபிக்க ஆசை !
அந்தியில் ஆதவனுக்கு அர்க்யம் தர ஆசை !

பன்னிரண்டு நாமங்களுடன் பஞ்ச முத்ரைகள் தரிக்க ஆசை !
பட்டை தீட்டி பஞ்சகச்சத்துடன் பவனி வர ஆசை !!

ஸஹஸ்ரநாமத்துடன் ஸாலிக்கிராமத்தை தொட்டு விட ஆசை !
பச்சை கற்பூர தீர்த்தமதை பருக பருக ஆசை !!
ravi said…
பவித்ரமான கங்கையில் நீராடி பதரி நாராயணனை தரசிக்க ஆசை !
பரந்தாமன் ஶ்ரீநிவாஸனை பத்து நிமிடம் ஸேவிக்க ஆசை !

ஆ விற்கு அகத்திகீரை கொடுக்க ஆசை !
அஸ்வத்த மரத்தின் அடியில் "ஹரித்யானம்" செய்ய ஆசை !!

ஹரிதினத்தில் நிர்ஜலமாய் இருக்க ஆசை !
அடுத்த நாள் பாரணை பந்திக்கு முந்த ஆசை !!

ஆனை மீது அமர்ந்து "ஹரி ஸர்வோத்தமனை"
பறை சாற்ற ஆசை !
ஆச்சார்ய மத்வரை ஹரி வாயுஸ்துதியில் தேட ஆசை
ravi said…
நான் எனதை அகற்றி நரஸிம்மனாக இருக்க ஆசை

மாதவனை ஸ்மரணை செய்து கொண்டு மாத்வனாக வாழ ஆசை !

மாத்வனாக மனிதனாக வாழ்ந்திட ஆசை !! ஆசை !! ஆசை !!

சின்ன சின்ன ஆசை !
சிறகடிக்கும் ஆசை !!

💐🙏ராம் ராம்💐🙏
Krishna said…
You are a guru. When Guru give a pravachan he doesn't think about audience. He focuses on his presentation and how to deliver max impact to the few who are interested ..
By the way I'm not releived it is over , I was actually looking forward to your posts. Now i will miss them!
Telang said…
😳😳 If you don't believe that I was enjoying reading it I don't really know what to say. Big headache..if you start forming your own opinion based on certain points I feel its incorrect. Suggest keep posting the way you were doing..seriously..
ASN said…
Is it because I replied to your message? I pass my time going through your episodes enjoying them. Pl resume
ASN said…
We are all tutorial students we understand by reading something not questioning them. So you need not be upset.
ravi said…
*The art of unleashing* .

(My experiences... Ravi ...Episode 239🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2029. .

*7th Assignment - Dhamra port , Odissa*💐
ravi said…
We hired dredgers to maintain the long channel for proper navigation of ships. One day we got a notice from sales tax department part of their revenue target collection stating that we did not pay entry tax on dredgers being plant and machinery as per the schedule of the Act ...

If we agree to this then that would be a perpetual liability as we proposed to engage 8 to 10 dredgers in a year and each one is more than Rs 40 cores and ET is 2% on original value .

We decided to contest but we did not much time and merits ...

There was hectic pressure to pay this amount before March 31st ... The notice came to our hand on 21st march .. At that point of time we had 4 dredgers deployed on channels ....

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை