அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 43 & 44 பதிவு 37
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 43 & 44
பதிவு 37
கேள்வி பதில் நேரம்
பதிவு 37🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்.
கேள்வி 43
நான் நமஸ்காரம் பட்டரே!! முதல் மூவர் என்று சொன்னீர்கள்..
மூன்று தொழில் என்று தானே சொல்கிறோம் ..
அம்பிகை ஐந்து தொழில் செய்கிறாள் என்று எங்கிருந்து வந்தது ... ?
விட்டுப்போன அந்த இரண்டு தொழில்களுக்கும் அதிபதி யார் ?
கேள்வி 44
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் எந்த தாத்பரியத்தில் அமைந்துள்ளது ?
பட்டர் உண்மை இரண்டு தொழில்கள் விட்டுப்போயின . இந்த இரண்டு தொழில்களும் நம் சொல்லுக்கும் வாக்குக்கும் எட்டாமல் இருப்பவை ...
ஜகத் வியாபாரம் என்றால் உனக்கு என்ன என்று தெரியுமா ?
புணரபி ஜனனம் என்பது போல் திருப்பி திருப்பி ஏதோ ஜென்மம் எடுத்துக்கொண்டு இந்த பூமியில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம் ...
ஓவ்வொரு உயிர்களும் தன் கர்ம வினைகள் முழுவதும் நீக்கி மீண்டும் பிறவிகள் எடுக்காத நிலையை அடையவேண்டும் ...
எவ்வளவோ யுகங்கள் ஆகலாம் ...
ஒன்று அல்லது இரண்டு உயிர்கள் வேண்டுமானால் இறைவனுடன் சேரலாம் ... பாக்கி ...??
அதுவரை இந்த ஜகத் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் ..
உயிர்கள் பிறக்க வேண்டும் ... படைத்தல் தொழில்
உயிர்கள் ரக்ஷிக்கப்பட வேண்டும் ... காக்கும் தொழில்
உயிர்கள் நீக்கப்படவேண்டும் ... அழிக்க முடியாது
வேறு நிலைக்கு transform ஆவது .
உனக்கு தெரிந்திருக்கும் matter can neither be created nor destroyed ... வாடிய இலை எருவாக மாறி நிலத்தில் சேருகிறது .. இலை அழிக்கப்படுவதில்லை .. அதன் நிலை நீக்கப்படுகிறது ....
ஒன்றை இல்லாமல் செய்யவே முடியாது . இது சாத்தியமே இல்லை.
இந்த மூன்றும் நடக்க ஆதாரமாக ஒன்று நடக்க வேண்டும் ... மறைத்தல் ..
அம்பாள் இதை நாம் அறிந்துகொள்ள விடுவதில்லை ..
எதையும் அதிகமாக தெரிந்து கொண்டாலும் அது சிக்கல் தான் ...
மாயை கண்ணை மறைக்கிறது என்போமே அதுதான். நாம் இருப்பது ஸ்வாஸ்வதம் , பொருள் புகழ் , பொன் நிலையானது என்று நினைக்கிறோமோ அதுதான் மறைத்தல் . What is permanent in life ? The only permanent thing in life is the same life gets destroyed .... ஆனால்
இதை நாம் அறியவிடாமல் மாயவலை யில் இருப்பதுதான் மறைத்தல் ... திரோதானம் என்பார்கள் ...
வாழ்க்கையை ரசிக்க விடுகிறாள் அனுபவிக்க அனுமதிக்கிறாள் மறைத்தல் மூலம் ... மறதி அவள் நமக்கு தந்த மாபெரும் வரம் ... கடைசி தொழில் அனுக்கிரகம் ...
இனி தயிர் கடையும் மத்தைப்போல் சுழன்று கொண்டு இருக்க வேண்டாம் .. என்று சொல்லி நமக்கு சச்சிதானந்தம் தரும் தொழில்
சத்’ என்றால் நிலையானது; ’சித்’ என்றால் அறிவு;
’ஆனந்தம்’ என்றால் மகிழ்ச்சி.
நிலையானவர் கடவுள் ஒருவரே.
அவரை வழிபட்டால் நல்லறிவு பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை உணர்த்துவதே ’ *சச்சிதானந்தம்* ’.
ருத்திரன் மறைத்தல் தொழிலையும் மகாதேவர் அனுக்கிரக தொழிலையும் செய்கிறார்கள்.
சரி உன் கடைசி கேள்வி .. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் எந்த தாத்பரியத்தில் அமைந்துள்ளது ... ??
ஸ்ரீ-மாதா; படைக்கும் தொழில் தாயாக இருந்து
ஸ்ரீமஹாராஜ்நீ ; மஹாராணியாய் இருந்துகொண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றுகிறாள் ... காத்தல் தொழில்
ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி;
இதுவும் அதே அர்த்தம் தரலாம் ஆனால் இதை reverse ஆக பார்க்க வேண்டும் ... ஸ்ரீமத் ஹிம்சாசனீஸ்வரி ... Violence இல்லை நீக்கும் தொழில் செய்பவள் ...
999 நாமங்கள் வரை மறைத்தல் தொழிலை குறிக்கும் அதாவது
அவளை முழுவதுமாய் புரிந்து கொள்ள முடியாத பெருமைகள் இவ்வளவுதான் என்று ஒரு வரைக்குள் அடக்கமுடியாத நாமங்கள் ...
கடைசி தொழில் அனுக்கிரகம் .. அதுதான் ஸ்ரீ லலிதாம்பிகையே .... சிவசக்தியாய் இருப்பவளே உன்னுள் என்னை சேர்த்துக்கொண்டு இனி பிறவாத வரம் கொடு என்று கேட்கும் திருநாமம் ...
நான் ஐயனே இதுவரை இப்படி ஒரு விளக்கம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திற்கு இருக்கிறது என்று அறிந்திலேன் ... எப்படி நன்றி சொல்வது தங்களுக்கு
பட்டர்
நன்றியா எனக்கா ... ??
அதோ பௌர்ணமியாய் சிரித்துக்கொண்டு இருக்கிறாளே என் அபிராமிக்கு சொல் .
உன்னை கேள்வி கேட்கவைத்து என் மூலம் பதிலையும் அவளே தருகிறாளே .. இதுதான் மறைத்தல் , அனுக்கிரகம் செய்தல் ..... 🙂🥇🥇🥇
👌👌👌👌👌👍👍👍💐💐💐💐💐💐💐
Comments
பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோகமுறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும் போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன.அவர் அதை வெளிபடுத்த காரணமே தன்னை பற்றி பெருமைபட்டு கொள்ளவோ அல்லது தனது முறைகளை பெருமைபடுத்த முற்படுவதே ஆகும்.
******************************************
*3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் பலர் ஏன் கஷ்டபடுகின்றனர்??*
இதற்கு காரணம் அவர்களே!! அதாவது நுழைந்தால் மட்டும் போதுமா?? அவர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்ற வேண்டாமா!! முன்பே சொன்னது போல் ஒரு பயிற்சியை கடைபிடிக்கும் போது அது வேலை செய்வது அவன் கர்மாவில் ஆகும். இவன் அந்த சமயத்தில் அடுத்தவர்களுக்கு தன் எண்ணங்களால் தீங்கு நினைக்கும்போது அது அவனுக்கே திருப்பப்படுகின்றது. அதுவும் அவனுக்கு அதுபோன்ற எண்ணங்களை வரவிடாமல் தடுப்பதற்கு ஆகும். நல்ல எண்ணம், சொல், செயல் உருவாக்கி கொண்டால் போதும். கஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
*பிரபஞ்ச இரகசியத்தை பிரபலப்படுத்தாதே!*
*************************************************
ஒருநிலைக்கு மேல் செல்லும்போது பலவிதமான அனுபவங்களும் இரகசியங்களும் கிடைக்கும். இதை வெளிபடுத்துவது என்பது தன்னை பற்றி பெருமைபட்டு கொள்வதற்காகவே, மேலும் பக்குவநிலைக்கு தகுந்தவாறே இரகசியங்கள் கற்பிக்கபடுகின்றன. இதை வெளிபடுத்தும் போது அடுத்து வரவிருக்கும் பாடங்கள் தடைசெய்ய படுகின்றன.
*அடுத்தவர்களை அம்பலப்படுத்தாதே!*
*******************************************
*5. அடுத்தவர் முறைகளில் தலையிட வேண்டாம்!!*
ஆன்மீகத்தில் எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சி கிடையாது. எனவே மற்றவர்கள் பாதைகளில் நீங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அடுத்தவர் முறை தவறு என்று நீங்கள் உணர்ந்தால், அதை சொல்வதற்கு நீங்கள் ஆன்மீகத்தில் கரைகண்டவராக கரைகடந்தவராக இருக்க வேண்டும். இது மனதில் பதிந்தால் யாருடைய பாதையிலும் தலையிட தோன்றாது.
*எஞ்சும்* வாழ்க்கை தனில் *கஞ்சம்* இல்லா மனம் வேண்டும் .. *பஞ்சு* *அஞ்சும்* உன் மலரடிகள் என்றும் *நஞ்சும்* *அஞ்சும்* என் மனமதில் குடி புக வேண்டும் ...
அங்கே பூசலார் போல் கட்டிய மடம் அதில் காலம் மறைந்தும் நீ வாழவேண்டும் உன் பழைய இருப்பிடமாய் 🌸🌸🌸👍👍👍👍
ஆகக்கூடி சிவன் மஹாதேவனாகப் பூர்த்தி ஸ்தானத்தில் வருகிறான்.
மஹாதேவன் என்கிற மாதிரியே மஹாலிங்கம் என்றும், மஹேச்வரன் என்றும் அவனைச் சொல்கிறோம். ஆனாலும் விஷ்ணு-மஹாவிஷ்ணு மாதிரி சிவன் – மஹாசிவன் இல்லை. ஏன் இப்படி?
பிரதோஷ காலத்தில் எல்லோரும் சிவ ஸ்மரணம் பண்ண வேண்டும்.மனதினாலும் வாக்கினாலும் ‘சிவ’என்ற இரண்டு அட்சரங்களை தியானித்து சொல்லவேண்டும்.தினமும் மாலை சந்தியாகாலம் பிரதோஷகாலமாகும்.திரயோதசி சந்தியா காலத்தில் வருவது
பிரம்மாவையும் இந்திரனையும் சந்திரனையும்
காசிபரையும் விசுவாமித்திரரையும் பெண்களையே
பார்க்க வேண்டாம்
என்று காடேகிய மகான்களையும் விட்டுவைக்காதது.
காமம் விஷம்
என்று
மூச்சுக்கு
முன்னூறு தரம் போதித்தவர் கூட
ஆரணங்கின்
ஸ்பரிசம் பட்டதும்
அமிர்தம் என்று
தாகம் தீர்த்த
புராணக் கதைகள்
ஆயிரம் உண்டே.
நீலகண்டர்
எம்மாத்திரம்?
வீட்டின் வாசலில் அலங்கரிக்கப்பட்ட அம்மனைப் போல் அபிஷேகிக்கத்தக்க
லட்சுமி போல் கணவனுக்காகக் காத்திருந்தாள்
கற்புடை நல்லாள்.
இது ஒரு சுவையான பதிவு ...
துளசிதாசர் வாரணாசியில் இருக்கும் போது அருகில் உள்ள ராமன் கோயில் சென்று கொண்டிருந்தார் ...
அவர் எதிரே ஒரு சவ ஊர்வலம் .
ஐயோ குய்யோ என்று ஒரு பெண் தன் மார்பில் அடித்துக்கொண்டு
"ஐயோ இப்படி என்னை தவிக்க விட்டு விட்டு போய் விட்டீர்களே "என்று ஊரே அதிரும்படி அலறினாள் ..
எந்த வித கேள்விக்கும் பதில் சொல்ல அவசியம் இன்றி நிம்மதியாக அவள் புருஷன் மீளா உறக்கத்தில் இருந்தான் ...
அந்த ஊர்வலம் துளசி தாசரை கடந்து சென்று கொண்டிருந்தது ..
அந்த பெண் இவரை பார்த்து விட்டு ஓடி வந்து அவர் காலில் விழுந்து கதறினாள் ...
அவள் மீது மிகவும் இரக்கப்பட்டு துளசிதாசர்
"அம்மா அழதே .. நீ சௌபாக்கியவதி நித்திய சுமங்கலியாக இருப்பாய்" என்றார் ..
அவள் ஒரே ஆச்சரியப்பட்டு இவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று ஊர் சொல்வது உண்மைதான் என்ற முடிவுக்கு வந்தாள் ... 💐💐💐
(My experiences... Ravi ...Episode 236🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*7th Assignment - Dhamra port , Odissa*💐
*A live or die challenge*
By paying Rs 5crs turtle would tell the world the port was not coming up on forest land ....
Green piece had accepted its defeat but told the world differently that turtles would now live 1000 years more because of their relentless efforts/ fights with two great corporates ...
Railways , Roads , DRDO ( missile centre ) ORT , GP , Forest land all gigantic problems looked very small now as our determination to win against all odds was the only key driver to keep going ...
I don't think anyone of you would hv experienced or witnessed all problems at one place together .
Each issue was pulling us from different direction .
But we sailed through .. all because like NGW i was blessed again with excellent technical team and F&A and very understanding non L&T boss . 🌸🌸🌸
*பதிவு 142* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 41-50*🏵️🏵️
காமதேவனின் அம்பறாத்தூணி போன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்)
இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள்
* குறிப்பு
() கூட = மறைக்கப்பட்ட
குல்ஃபா = கணுக்கால்கள்
பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது.
சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று *இந்திரகோபம்* .
சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு.
சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த
நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.
அன்னையின் முழங்கால்களாக உள்ளனவாம்.
சிறிது சிந்தித்தால், தங்கமயமாக சொலிக்கும் அன்னைக்கு, சோடனையாக அமைந்தனவா அவை?
அல்ல! அல்ல! மன்மதனைத் தன்பணிக்குக் காமேசுவரியான அன்னை சேர்த்துக்கொண்ட தயை என்றே கொள்ளவேண்டுமன்றோ?
மின்மினிகள் மேலாம்போல்
மின்னுமதன் வட்டில்கள்
தன்முழந் தாளிரண்டாய் தாயுடைத்தாள் –
பொன்மய
அன்னைக்குச் சோடனை அல்லவவை ;
அங்கசனைத்
தன்பணிக்குச் சேர்த்த தயை.
*வட்டில்கள்* – அம்புறாத்துணி🙏🙏
*பதிவு 142* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 30👍👍👍
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.🌸🌸
*க்ருணிபி* - கிரணங்கள்;
*அணிமாத்யாபி* : - அணிமா போன்ற தேவதைகள்;
*நிஷேவ்யே* - வணங்கத்தக்க;
*த்வம்* - உன்னை;
*அஹம் இதி* - தனது ஆத்மா என;
*பாவயதி* - பாவிப்பவன்;
*த்ரிநயன ஸ்ம்ருத்திம்* - சிவசாயுஜ்யம்;
*த்ருணயத* - துரும்பென;
*மஹாஸம்வர்த்தாக்னி* : - ப்ரளய/ஊழித் தீ;
*நீராஜன விதிம்* - மங்கள ஹாரத்தி;
*விரசயதி* - அனுஷ்டித்தல்;
*கிம் ஆச்சர்யம்* - என்ன ஆச்சர்யம்.!!!
*பிரளயாக்னி நீராசன தீபம்* என்ற உவமை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள் .
*பதிவு 142*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 19 ஸ்லோகம்
*பொருளுரை*
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥
ஸதா³ மோஹாடவ்யாம் சரதி யுவதீநாம் குசகி³ரௌ
நடத்யாசாசாகா²ஸ்வடதி ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: ।
கபாலின் பி⁴க்ஷோ மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம்
த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ ॥
நாம பகவான்கிட்ட போய் அது இது வேணும்னு பிச்சை கேட்கறோம்.
ஆனா அந்த பகவானே நம்ம கிட்ட பிக்ஷு ரூபத்துல வரும்போது என்ன பண்ணலாம்னா மே *ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம் –* இப்படி ஓரேடியா சலிசிண்டி இருக்கற என்னுடைய மனமாகிய குரங்கை, உன்கிட்ட கொடுத்துடறே என்கிறார்.
பிக்ஷைகாரனுக்கு ஏதாவது கொடுக்கணும்.
இவர் சொல்றார். நீ வந்து அங்க இங்க பிக்ஷைக்கு போற.
நீ ஒரு குரங்கையும் கூட்டிண்டு போனேன்னா இன்னும் யாராவது 2காசு கூடப் போடுவா.
அதுனால *த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா –* என் மனக்குரங்கை உன்கிட்ட கொடுக்கிறேன்.
நீ பக்திங்கிற கயிறாய் கொண்டு இதை நன்னா கட்டிபோட்டு வெச்சுக்கோ *சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ –*
உன்னுடைய அதீனமாக என்னுடைய மனசை ஆக்கிக்கொள் ன்னு ஒரு அழகான ஒரு பிரார்த்தனை.🙊🙊🙊
*பதிவு 154* 👏👏
12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️
பத்மநாபோ (அ)மரப்ரபு: |
விச்’வகர்மா *மனுஸ் த்வஷ்டா*
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ஆனால் முழு மதுரா நகரும் மக்களும் குடிபெயரும் அளவுக்கு அவ்வூரில் இடமில்லை.
எனவே கடல் அரசனை இருபத்தைந்தாயிரம் சதுர கிலோமீட்டர் தூரம் பின் வாங்கச் சொன்னான் கண்ணன்.
அவரும் பின்வாங்கவே, 150 கி.மீ. x 150 கி.மீ. பரப்பளவு கொண்ட புதிய நிலப்பகுதி கடற்கரையில் உருவானது.
கர்காசாரியர் மற்றும் அவரது சீடரான விச்வம்பரரைக் கொண்டு அவ்விடத்துக்குப் பூமிபூஜை செய்தான் கண்ணன்.
தேவலோகச் சிற்பியான விச்வகர்மாவை அழைத்து அன்று மாலைக்குள் அங்கே புதிய நகரத்தை அமைக்கச் சொன்னான்.🌸🌸🌸
-----------------------------------------------------------------
🌺🌹'' ஒரு ஊரில் விஷ்ணுபக்தர் ராகவன் என்பவர் வாழ்ந்து வந்தார்.
🌺அவர் தினமும் தன் தோட்டத்தில் உள்ள துளசியை மாலையாகவும் பூக்களை வைத்து அர்ச்சனை செய்வது வழக்கம்.
🌺ஒரு நாள் புயலுடன் கூடிய பலத்த மழை. ஆனாலும் அர்ச்சனை செய்ய எண்ணி பூக்கள் பறிக்க வேண்டுமே என்று அந்த மழையிலும் ராகவன் தோட்டத்தில் நுழைந்தார்.
🌺ஆனால் அப்போது ஏற்பட்டிருந்த புயலின் காரணமாக அனைத்து பூக்களும் நாசமடைந்திருந்தது.
🌺சரி துளசியை கொண்டாவது அர்ச்சிக்கலாம் என்று எண்ணி துளசி பறிக்க சென்றார் ராகவன் .
அதில் உள்ள இலைகளும் சிலவைகள் உதிர்ந்திருந்தது.
🌺அதில் உள்ள துளசி இலைகளை வைத்து மாலை மட்டுமே கட்ட இயலும். அர்ச்சனை செய்ய என்ன செய்வதென புரியாமல் மனதிடம் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்.
🌺ராகவன் வீடோ தனித்திருந்தால் உதவி கேட்க கூட சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும்.
🌺மழையும் புயலும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் அதற்கும் வழியின்றி தவித்து கொண்டிருந்தவர் அருகில் உள்ள ஒரு மரத்தின் அடியில் இயலாமையை எண்ணி சோகமாக நின்றார்.
🌺தன்னால் அர்ச்சனை செய்ய முடியாமல் போய் விடுமோ என்று எண்ணி நாராயணா நாராயணா என்று முணங்கினார்.
🌺அப்போது வீசிய காற்றின் காரணமாக மரத்தில் இருந்த இலைகள் உதிர ஆரம்பித்தது.
🌺உடனே மரத்தில் உள்ள இலைகளை வேகமாக பறித்து மடமடவென வீடு சென்றார் ராகவன் .
🌺அப்போது இறைவனிடம் பூக்கள் இல்லாததற்கு மன்னிப்பை கோரி துளசி மாலையை அணிவித்து பின் நாராயணன் நாமத்தை கூறி ஒவ்வொரு இலைகளாக பகவான் சிலை மீது தூவினார்.
🌺ஆம் அந்த இலைகள் அனைத்தும் புஷ்பமாக மாறி போயின. பகவானின் அன்பை கண்டு அவர் பாதங்களை நமஸ்கரித்தான்.
🌺பகவான் ஸ்ரீ விஷ்ணு நம்மிடம் பணமோ பொருளோ வேண்டுவதில்லை.
அவன் தருவதையே நாம் வைத்திருக்கிறோம்.
🌺என்ன தான் தீயவனாக இருந்தாலும் மனம் வருந்தி அன்பு மற்றும் பக்தி செலுத்தினால், இறைவனை போன்ற அன்பாளர் வேறு யாராகவும் இருக்க முடியாது.
🌺எனவே உலக சுகங்களில் மட்டுமே மூழ்காமல் இறைவனை தூய மனதோடு வணங்குவோம் .
ஸ்ரீ விஷ்ணுவின் அன்பை பெறுவோம் .
🌺ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய🌹
அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று.
அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது.
இந்த லிங்கோத்பவர் யார்?
ஆபாதால நப: ஸ்தலாந்த புவன
ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||
ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.
யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; ஆனால் அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்
அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானார். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் வந்தது. ‘நான் கண்டு விட்டேன்’ எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.
சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை.
*பதிவு 143* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 41-50*🏵️🏵️
மன்மதனின் மலர் அம்புகள் வைக்கும் அம்புரா பெட்டி அதுவும் மலர்களால் ஆனது தானே.
அதை தேன் கொண்ட மலர்கள் என்று அழகிய தேன் வண்டுகள் சுற்றி சுற்றி ரீங்காரம் இடும் என்கிறார் ஹயக்ரீவர்.
🙏🙏🙏
நாளைடைவில் அந்த கோபம் ஒரு பழி வாங்கும் எண்ணமாய் மாறியது ...
எல்லாவற்றிற்கும் மேலானவனை ஒரு எறும்பு எப்படி பழி வாங்க முடியும் ?
நடக்கும் காரியமா இது ?
ஈசனுக்கு எது பலவீனம் என்பதை ஆராய்ந்தான் மன்மதன் ..
வேர்த்து விறுவிறுத்து போனதுதான் மிச்சம் ..
கடைசியில் உணர்ந்தான் ..
ஈசனின் பலவீனம் அப்பழுக்கு இல்லாமல் பாசம் பொழியும் அம்பிகை மீது
காமேஸ்வரனுக்கு இருக்கும் இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாய் எப்படி பயன் படுத்திக்கொள்வது ?
அம்பாளிடம் ஓடினான் ...
தாயே!! நீங்கள் தான் எனக்கு உயிர் பிச்சை தந்தீர்கள் ..
இன்னொரு உதவியும் எனக்கு தாங்கள் செய்ய வேண்டும் ..
உங்கள் முன் கால்களில் என் அம்புறா துணி வைத்துக்கொள்ள இடம் தரவேண்டும் ..
அம்பாள் சிரித்துக்கொண்டே கேட்டாள்
சரி உன் அம்புகளை எங்கே கூர் படுத்திக்கொள்வாய் ..
தாயே! உங்கள் பாதங்களில் இருக்கும் அழகான நகங்களில் என்றான் ...
அம்பாளுக்கா தெரியாது ஏன் இவன் இப்படி குழைகிறான் என்று ...
சரி என்றாள் அம்பாள்
சிரித்துக்கொண்டே
ஈசன் ஓவ்வொரு தடவையும் ஊடலில் கொஞ்சும் போது அவன் சிரசு அன்னையின் பாதங்களை வருடும் போது
மன்மதன் தன்னைத்தான் உலக நாயகன் வணங்குகிறான் என்று நினைத்து வெற்றி வெற்றி என்று கூறிக்கொள்வானாம்
தன் குழந்தை தானே என்று அந்த தெய்வ தம்பதிகள் இதை பொருட் படுத்துவதில்லை ...
பட்டர் பிரான் சற்றே கிண்டலாக இதை வர்ணிக்கிறார் ..
அம்மா!! உன் பாதங்களில் நிலவின் வாசனை வருகிறதே என்ன காரணம் என்று ...
மதியை சூடியவன் பதித்த இதழ்களால் என்று அம்பாள் சொல்ல முடியாமல் நாணத்தில் சிவந்து போகிறாளாம் ....💐💐💐
*பதிவு 143* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 30👍👍👍
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.🌸🌸
அம்பாளை ஆத்மாவாக நினைப்பவர்கள் அதில் சிவமும் உள்ளது என்பதை உணர்வார்கள் ...
சிவனின் சிந்தை தானே அம்பாள் ... 🙏
லிங்கம், விக்கிரகம் போன்ற உருவங்கள் இல்லாது, ஆலயம் செல்ல முடியாத சமயத்தில் எளிதாக மனதாலேயே சிவனைப் பூஜிக்க மிகச் சிறந்த ஸ்லோகம் இது.
இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி க்ஷேமம் ஏற்படும்.
புத்திர தோஷம் இருந்தால் விலகும்.
ஸ்ரீ சிவாபசாரமும் நீங்கி சகல க்ஷேமங்களும் ஏற்படும்.
இந்த ஸ்தோத்திரம் படித்தாலே பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆராதயாமி மணி ஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரி ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
சிரத்தா நதீ விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய
மாயாபுரி என்னும் இந்த உடலிலுள்ள ஹ்ருதய கமலத்தில் ஸ்படிகம் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் ஆத்ம லிங்கத்தை, ஸ்ரத்தை என்னும் நதியிலிருந்து நிர்மலமான சித்தம் என்னும் ஜலத்தினால் அபிஷேகம் செய்து, ஸமாதி என்னும் புஷ்பங்களால் மீண்டும் பிறவாத வரமருள ஆராதிக்கிறேன்.🙏1
ஸ்நாநம் ச திவ்யாம்பரம்
நாநாரத்ன விபூஷிதம் ம்ருகமாதா
மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம்
புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே
ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்
கருணைக்கடலே! பசுபதே!
நவரத்தினங்கள் இழைத்த ஆசனமும், பன்னீரால் திருமஞ்சனமும், திவ்யமான பட்டாடையும், சுந்தராபரணங்களும், கஸ்தூரி கமழும் சந்தனமும், ஜாதீ, சம்பகம், பில்வபத்ரம் போன்ற புஷ்பங்களும்,
தூப, தீபங்களும் என் மனத்தாலே ஸங்கல்பித்து அளிக்கிறேன்.
அன்புடன் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.🙏 2
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பாநகம்
சாகாநாமயுதம் ஜலம் ருசிகரம்
கர்பூரகண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா
மயாவிரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு 3
ப்ரபுவே!
உயர்ந்த ரத்னங்கள் இழைத்த ஸுவர்ண பாத்ரத்தில்
நெய்யும், பாயசமும், பஞ்ச பக்ஷணங்களும், பால், தயிர், வாழைப்பழம், பானகம், மற்றும் பல காய்கறிகளும்,
ருசியுள்ள நிர்மலமான ஜலமும், பச்சைக் கர்ப்பூரம் கலந்த தாம்பூலமும் பக்தியுடன் மனத்தால் ஸமர்பிக்கிறேன்,
அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.🙏
வீணா பேரி ம்ருதங்க காஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி ஸ்துதிர் பஹுவிதாசை தத் ஸமஸ்தம் மயா
ஸ்ங்கல்பேன ஸ்மர்ப்பிதம் தவவிபோ
பூஜாம் க்ருஹாணாப்ரபோ 4👍
குடையும், சாமரங்களும், விசிறியும், நிர்மலமான கண்ணாடிகளும், வீணை, பேரி, மிருதங்கம், எக்காளம் முதலிய வாத்ய கோஷங்களுடனும், பாடல்களுடனும், பல ஸ்தோத்திரங்களுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரமும் மனதில் அளிக்கிறேன்.
ப்ரபோ! என் பூஜைகளைப் பெற்றுக் கொள்வீராக.
ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே
விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
ஸ்ஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி:
ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி
தத்தகிலம் சம்போ த்வாராதநம்👍5
புத்தியே பார்வதி தேவி,
பஞ்சப்ராணன்களே பணியாட்கள்.
என் உடம்பே உமது திருக்கோவில்.
நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை.
உறங்குவதே சமாதி நிலை.
காலால் நடப்பதே உமக்குப் பிரதக்ஷிணம்,
பேசுவதெல்லாம் உமது தோத்திரங்கள்.
சம்போ! என்ன என்ன காரியங்கள் செய்கிறேனோ அவை அனைத்தும் தங்கள் ஆரதனைகளாகும்.
(இதையே பட்டர் பிரான் நின்றும் இருந்தும், கிடந்தும் ,நடந்தும் நினைப்பது உன்னை ...
----தொடுத்த சொல் அவமாயினும் உன் திருநாமங்கள் தோத்திரமே என்று பாடினார்)
ச்–ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விதிதம் அவிதிதம்–வா
ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ 6
மகாதேவ சம்போ! அடியேன் கைகளாலும், கால்களாலும், வாக்காலும், உடலாலும், காதுகளாலும், கண்களாலும், மனத்தாலும், விதிப்படியும், விதிப்படி இல்லாமலும், பலவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அடியேனை மன்னித்து ஆட்கொள்வீராக என்று தங்களை மிகுந்த பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்👍👍👍🙏🙏🙏🌸
(My experiences... Ravi ...Episode 237🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*7th Assignment - Dhamra port , Odissa*💐
*Dredging*
As you are aware ocean in which all rivers finally merge into one .
This is what we call it oneness ...
All sounds , noises we make while living come to a halt once we merge with this Oneness .
You may call it Shiva or Krishna or by any name . We become silent on merging with bliss .
While joining the ocean all rivers bring their own baggages of dirt which we call in our language as Karma ...
In ocean language it is called siltation ...
These thing go down to the bottom of Sea and settle down .
We need to ensure when the ships come to berth the channel in which ships are navigated to reach berths is free from all silted soil , dirt and stones ...
Cleaning up this process is called Dredging ...
Very expensive but imminent to Port operation .
We need dredgers to carry out this process . Indian sails donor have very delicate dredgers .. we need to import as and when the process starts ... 🙏🙏🙏
நீ சௌபாக்கியவதி , தீர்க்க சுமங்கலி என்று ராமனே சொல்லி விட்டார் ."
கொஞ்ச நேரத்தில் அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது ...
சவமாக சென்ற தன் கணவன் சிவமாக எழுந்து நின்றான் ..
எல்லோரும் பயந்து ஓடினர் ...
ஆனால் அவன் மனைவி மட்டும் அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள் ..
அவன் சத்தமாய் சொன்னான் என் மனைவி சௌபாக்கியவதி அவள் தீர்க்க சுமங்கலி நான் சாக வில்லை என்றே ...🙏🙏
கோடியில் நிற்கும் ஒருவனை மாடியில் நிற்க வைப்பான் ...
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறப்போமோ ?
மாடியில் இருந்தாலும் மாதவம் செய்தவனை இழப்போமோ
உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் அன்றோ
சிந்தாமணி தனை கண்டதில்லை
சிந்திய முத்துக்களை கோத்ததில்லை ..
மலர்ந்த பூக்களை மாலையாய் போட்டதில்லை ...
அல்லியம் தாமரை கோயில் வைகும் அருட்கடலே
சக்தியில் தழைக்கும் சிவமே
தவம் செய்கின்றோம் உன் பிறவி தனை மீண்டும் காணவே
அன்றைய செயல்தான் விஷம் போல்
நீலம்
பூத்து இருந்ததே!
மாற்றம்
இல்லாளுக்குப் புரிந்தது.
காமுகக் கணவனின் தகிடுதத்தம்
கண்களை நனைத்தது.
கோபம் கொப்பளித்தது.
காத்திருந்த தாபம் காற்றோடு கரைந்து அணைந்து
கோபக்கனல் கொழுந்துவிட்டு எரிந்தது.
அதை ஊடல் என நினைத்த நீலகண்டர்
சரச மாடி
சமாளித்து விடலாம்
என மனையாளை நெருங்கினார்.
அம்மையாரின் எதிர்ப்பு ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருந்தது.
கடும் புயலின் அமைதி.
குரல் மட்டும் கணீர்.
"தொடாதீங்க... இன்னொரு மாதைத் தொட்டக் கரங்கள்
இனி 'எம்மைத்'
தொட வேண்டாம்...
திருநீலகண்டம் மீது ஆணை...!"
நீலகண்டர் அதிர்ந்தார்.
பரத்தை வீடு சென்று சரசமாடிய கதை
அதற்குள் வீட்டுக்குத் தெரிந்து விட்டதே!
*Pallavi*
eteeruga nanu dayachoosedavo inavamsottama rama
na tarama bhava sagara meedanu naLina daLekshana rama ॥
*Charanam* :
sree raghu nandana seeta ramana srita jana poshaka rama
karunyalaya bhakta varada ninu kannadi kanupu rama ॥
muripemuto na swami neevani munduga delpiti rama
maruvaka ika nabhimanamuncha nee marugu jochchitini rama ॥
kroora karmamulu neraka jesiti neramulenchaku rama
daridryamu pari haramu cheyave daiva sikha mani rama ॥
gurudavu namadi daivamu neevani guru sastrambulu rama
guru daivambani yerugaka tirigedu krooruda naitini rama
tandavamuna kakhilanda koTi brahmanda nayaka rama
bandhanamuna neenamamu dalachina brahmanandamu rama ॥
vasava kamala bhava sura vandita varadhi bandhana rama
sarchita makabhaya mosangave dasarathi raghu rama ॥
vasava nuta rama dasa poshaka vandana mayodhya rama
bhasura vara sadguna mulu kalgina bhadradreeswara rama ॥
🙏🙏🙏🌸🌸🌸
I don’t know in which manner you show mercy, Oh Rama the noblest king of sun dynasty,
is it possible for me to swim across the ocean of worldly problems?
Oh Rama your eyes are beautiful like lotus petals.
Oh Raghu Nandana, Oh lord of Sita, Oh Rama, the protector of the helpless.
You are the abode of kindness, you are the bestower of boons to devotees.
Mother Kousalya is fortunate to give birth to you.
Oh Rama, I already declared with pride that you are my Lord.
I stepped into your fold seeking for your unfailing love.
Please don’t find fault with me for the evil acts committed due to ignorance.
Please eradicate my poverty. Oh, Rama, you are the supreme gem.
You are my Guru. You are my God. You are the master of all great Sastras.
Oh, Rama I ignorantly lived like a cruel person.
Oh, Rama, you are the Lord of the Cosmos.
Thinking of your name itself bestows bliss during imprisonment.
Indra, Brahma, and other celestial beings bow to you.
You built a bridge on the sea. Oh, Rama the son of Dasaratha, I pray to you, why don’t you make me fearless?
You are the protector of Ramadasu.
I bow to you, Ayodhya Rama. You are luminous with noble qualities. Oh, Rama, you are the Lord of Bhadradri
*பதிவு 143*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 19 ஸ்லோகம்
*பொருளுரை*
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥
ஸதா³ மோஹாடவ்யாம் சரதி யுவதீநாம் குசகி³ரௌ
நடத்யாசாசாகா²ஸ்வடதி ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: ।
கபாலின் பி⁴க்ஷோ மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம்
த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ ॥
ஸ்வாமிகள் கிட்ட அவருடைய சமஸ்க்ருத வாத்யார் சுந்தர காண்ட ப்ரவசனத்தின் போது இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்தை எங்கேயாவது பொருத்தமா சொல்லுன்னு கேட்டார்.
ஸ்வாமிகள் எங்கே சொன்னார்னா
ஹனுமார் சீதாதேவியை பார்த்து அவருக்கு நம்பிக்கை ஏற்படும்படியா பேசிண்டே வரார்.
அப்ப சீதாதேவி, “ராமலக்ஷ்மணா எப்படி இருப்பா. நீ அவாளை பார்த்திருக்கேன்னு சொல்றியே. அவாளோட அங்க அடையாளங்களை நீ சொல்லுன்னு கேட்கறா.
அப்ப ஹனுமார் ஆரம்பிக்கறார்
ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோஹர: |
ரூப தாக்ஷிண்ய ஸம்பன்ன: ப்ரஸுதோ ஜனஹாத்மஜே ||
ராமர் தாமரைப் போன்ற கண்ணழகு படைத்தவர் *ஸர்வ ஸத்வ மனோஹர:*
– எல்லா பிராணிகளுடைய மனதையும் அபகரிக்கக் கூடிய அவருடைய அந்த கண்ணழகுன்னு சொல்றார்.
இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார் –
ஹனுமார் சீதாதேவி கிட்டசொல்றாராம்.
நாங்கள் எல்லாம் வானரா.
எங்களை மனசுக்கு ஒப்பிடுவா.
ஒரு க்ஷணம் கூட மனசு ஒரு இடத்துல நிக்காதவா.
எங்களை எல்லாம் இந்தமாதிரி ராமகாரியத்துல ஈடுபடுத்தி இன்னிக்கு வந்து நான் உங்களை தர்சனம் பண்ணினேன்னா அந்த ராமனுடைய கண்ணழகுல மயங்கி அவன் பேச்சை கேட்டு நாங்க அவனுடைய காரியத்தை பண்றோம்’ னு
அந்த இடத்துல இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்தை சொல்லி ஆதீனம்ன்னு ராமர் எங்களையெல்லாம் அடிமை ஆக்கிண்ட்டார்.
அவருடைய கண்ணழகுனாலன்னு சொன்னாராம்.
*பதிவு 155* 👏👏
12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️
பத்மநாபோ (அ)மரப்ரபு: |
விச்’வகர்மா *மனுஸ் த்வஷ்டா*
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
விச்வகர்மா நகரத்தை அமைப்பதற்கான
வரைபடத்தைப் போட்டு முடிப்பதற்குள் நண்பகல் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.
களைத்துப் போன விச்வகர்மாவும் கருடனும் மாலைக்குள் நகரத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று கண்ணனிட்ட கட்டளையை மறந்து தூங்கி விட்டார்கள்.
“நகரை அமைப்பதற்கு முன்னேயே அக்ரஹாரம் எங்கே என்று இவன் கேட்கிறானே!” எனத் திடுக்கிட்டுத் தூக்கத்திலிருந்து எழுந்தார் கருடன்.
அதுவரை அங்கிருந்த வெட்டவெளியில் இப்போது அழகிய நகரம் உருவாகி இருப்பதைக் கண்டு வியந்தார்.
அழகான சாலைகள்,
மாட மாளிகைகள், தோரண வாயில்கள், திருக்கோவில்கள், அரண்மனைகள், வீடுகள், தோட்டங்கள், குளங்கள், கிணறுகள்
அனைத்தும் இருப்பதைக் கண்டார்.
விச்வகர்மாவை எழுப்பினார்.
அவரும் புதிய நகரம் அமைந்திருப்பதைக் கண்டு வியந்தார்.
(My experiences... Ravi ...Episode 238🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*7th Assignment - Dhamra port , Odissa*💐
Fully mechanized cargo handling system
Proximity to the mineral belt of India
Fully mechanized cargo handling system
Proximity to the mineral belt of India
fully mechanized cargo handling system
Dhamra Port
The Dhamra Port Company Limited (DPCL) is a 100% subsidiary of Adani Ports and SEZ. DPCL has been awarded a concession by Government of Odisha to build and operate a port north of the mouth of river Dhamra in Bhadrak district on BOOST (Build, Own, Operate, Share and Transfer) basis for a total period of 34 years including a period of 4 years for construction.
Dhamra is one of the deep draft ports of India which can accommodate super cape-size vessels. It is an all-weather, multi-user, multi-cargo port poised to become the largest and most efficient port in the east coast of India. Situated between Haldia and Paradeep, Dhamra Port is in close proximity to the mineral belt of Orissa, Jharkhand and West Bengal offers deepened hinterland connectivity and operational efficiency
ஒரு வார்த்தை உறுத்தியது.
மனையாள்
மந்திரம் போல் உத்தரவிட்ட
'எம்மைத் தொடாதே'
அவர் உள்ளத்தை உலுக்கியது.
'எம்மை'
என்பதிலிருந்த 'பன்மை' எப்பெண்ணையும் தொடாதே
என்று தொனித்தது.
உள்ளிருக்கும் நாதன்
'ஆம்' என்று
ஆமோதிப்பது
போலிருந்தது.
அக்கணமே விலகினார்.
'எப்பெண்ணையும்
இனி பாரேன்...
உடல் சுகம் தேடேன்...'
நீலகண்டர் முடிவெடுத்தார்.
முடியுடை சிவனும் உள்ளிருந்தே
உளம் சிரித்தான்.
சதிராடும் துன்பங்களை நீக்கிடுவாய்
எது வரினும் அது நன்மை ஆகிடவே எனை ஆட்கொண்டு அருள்வாயே
நிலை இல்லா உலகில் நிஜமில்லா உறவு நிலையான
தொன்றும் இங்கில்லை ...
நேற்றும் இன்றும் என்றும் மாறாத என் தெய்வம் நீ மட்டும் போதும் நீ மட்டுமே போதும் ...
🙏🙏🙏
*We must "Slowly Use our Functional Muscles"*
1. To develop a habit of being able to stand ... just don’t sit ! ... & _don’t lie down if you can sit_ !
2. After the age of 50 ~ 60, it is *not possible to lose weight,* especially if you do not exercise & rely on eating less to lose weight !
Because if all the muscles are lost, it can be dangerous !!!
If you have never exercised before, you can only go running, biking, or climbing in your mind as it will hurt your knees a lot !
But if you have enough muscle strength & *slowly develop* the habit of running, cycling, climbing, etc ... it can be a good exercise & not hurt your knees ! _Whether you hurt your knees or not_ depends on your muscle strength !
4. If an elderly person is sick & hospitalized, don't ask him to rest more ... or lie down & relax too much !!! _They will not get out of bed_ then & *loose precious muscle mass* !
Lying down for a week result in loss of 5 % of muscle mass, if not more & old people can't get his muscles back !
Usually, many elderly people who hire helpers lose muscle faster !
6. Don't just do a single activity every day when you go to the park.
Dont just shake your hands when you can also shake your legs. You must also pull the horizontal bar or _move every sports equipment_ !!!
Because as long as a person moves, then *all the muscles of whole body* will be involved !
Many elderly people even have difficulty swallowing _because of insufficient exercise_ !
In the end, they could not even cough up a mouthful of sputum & die because of this !
With osteoporosis you just need to be careful not to fall, whereas sarcopenia not only affects the quality of life but also causes high blood sugar due to insufficient muscle mass !
8. The fastest loss of sarcopenia is in the muscle of the legs !
Because when a person sits or lie down, the legs are not moving & the muscle strength of the legs are affected ... this is particularly important !
*Squat* is not squatting down _but like sitting on the toilet seat_ ... you can use a chair & _stand up when your butt touches the seat_ !
TAIWAN's advanced medical system also have health insurance but on average the elderly in Taiwan spend 8 years in a wheelchair until they lie in bed before they die !
And you don't want to have eight years of old age when the quality of life is so poor !
So You MUST pay attention to sarcopenia !
Move up & down stairs, _go running,_ *cycling*, trekking & _climbing_ !!! All are good exercises to help _increase muscle mass_ !!!
_For a better quality of life_ for everyone in old age ...
Keep Moving 🏃🏻♀️🏃♂️🚶🏻♀️🚶🏻♂️Somehow 🧑🏻🦯👩🏻🦯Anyhow 💃🕺🏾
😊 As most of us are in 50+ bracket it may be helpful to overcome *sarcopenia* 👆 _take B complex capsule_ also
*பதிவு 144* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 41-50*🏵️🏵️
*42 கூட குல்ஃபா* =
பார்வைக்கு மறைக்கப்பட்ட (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள்
அம்பாளின் கணுக்கால்கள் வட்டமாக உருண்டு இருக்குமாம்.
அந்த கணுக்கால்கள் அவளை தினமும் சுற்றி வந்து வணங்குவதற்காக வட்டமாக உருண்டையாக இருக்கிறதோ 👌
*பதிவு 144* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 30👍👍👍
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.🌸🌸
ஆனால் அழியப்போகும் இந்த உடம்பிற்கு ஆராதனை செய்கிறோம் ... நமக்குள்ளே ஆத்மாவாக இறைவன் என்றும் இருக்கிறான் என்று நினைத்து பாருங்கள் ..
நம் எண்ணம் ,செயல் நடவடிக்கை , attitude எல்லாமே நல்லதாக அமையும் .. No room for EGO , Pride and we get more of appreciative culture ... 👍👍👍
சதிராடும் துன்பங்களை நீக்கிடுவாய்
எது வரினும் அது நன்மை ஆகிடவே எனை ஆட்கொண்டு அருள்வாயே
நிலை இல்லா உலகில் நிஜமில்லா உறவு நிலையான
தொன்றும் இங்கில்லை ...
நேற்றும் இன்றும் என்றும் மாறாத என் தெய்வம் நீ மட்டும் போதும் நீ மட்டுமே போதும் ...
🙏🙏🙏
துளசிதாசர் சொன்னார் ... அரசே இது எண்ணெயில் போட்டு வறுத்துக்காட்டும் அப்பளம் அல்ல .. இறை மீது நாம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தி, ஒழுக்கம் ... நான் மந்திரவாதி அல்ல ராமனை தொழுபவன் .. அவன் சொன்னால் மட்டுமே என்னால் எதுவும் செய்ய முடியும் ...
கேட்ட அக்பருக்கு ஒரே கோபம் .. வெளி காட்டிக்கொள்ளமல் சரி .. போனால் போகட்டும் ... என்னை புகழ்ந்து ஒரு தோஹா பாடு ... என்றார்
துளசி தாசர் அதையும் மறுத்தார் ...
*நிதி சால சுகமா ராமா* என்று தியாகராயர் சொன்னதை போல் நான் நரஸ்துதி செய்ய மாட்டேன் என்றார் ..
அக்பர் அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார் ...
அங்கு 40 நாட்கள் தொடர்ந்து எழுதியதுதான் இந்த *அனுமன் சாலீஸா ...*
ஒவ்வொரு நாளும் நாலு நாலு வார்த்தைகள் .. எதுகை மோனை கொண்டு ... 🐒🐒🐒
ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது.#பரமாத்மா #தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று #கேட்டாள் #ருக்மணி.
அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி பிராட்டி.
அவள் நித்யம் #இரண்டுபடி #பாலைச் சுண்டக் காய்ச்சி #பரிமள #திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இன்றைக்கு அவள் பால் #பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான்.
பரமாத்மா #தூங்கிவிட்டான் என்று #சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் #திருவடியைத் #தொட்டு #வணங்க வேண்டும் என்று போர்வையை நீக்கி திருவடியைப் பார்த்தாள்.
திருவடியில் பார்த்தால் ஒரே #கொப்புளங்கள்.பகவானை எழுப்பினாள் ருக்மணி.பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிர்காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? என்று கேட்டாள்.
ராதிகா பால் பருகியதற்கும், கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.
நீ #சுடச்சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப் பார்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள். அதனால் என் கால் #கொப்புளித்துவிட்டது என்றான்.
பகவான் சிரித்துக் கொண்டே சொன்னான்.'அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடிதானே!பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது! என்றான்.
‘சஹஸ்ரநாமம்' என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.
அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.
அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
“நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?
திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!
அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?”
‘சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு; இதை எடுத்துண்டுபோ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர்.
அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர்.
எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான். ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...? ஞானிகளுடன் அக்ரகண்யரான பீஷ்மரால்.. பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம்.
‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?' என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.
இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.
நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது.
வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...,