அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 71 ,72 & 73 பதிவு 60
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 71 , 72,73
பதிவு 60👌👌👌
கேள்வி பதில் நேரம்
பதிவு 60 🥇🥇🥇
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .
கேள்வி 71
நான் :
ஐயனே .... நமஸ்காரம் . இறைவி அபிராமி எங்கும் வியாபித்தவள் என்று சொல்லுகிறீர்கள் .இதை தாங்கள் என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு புரியும் மாதிரி சொல்ல முடியுமா ?
பட்டர் ..
தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதி என்று சொன்னேன் ஒருமுறை ... நீ அறிவிலி என்று நீயே ஒப்புக்கொண்டாய் ... பரவாயில்லை சொல்கிறேன் ...
🙌🙌🙌
பட்டர்
பிரகஸ்பதி எனப்படும் தேவகுருவை மூன்று இளைஞர்கள் தேடிவந்தனர்.
முனிசிரேஷ்டரே! உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும், என்றனர்.
ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த குரு, யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள், என உத்தரவிட்டார்.
முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்றான்.
ஆளே இல்லாத அந்த காட்டில், கிளியைக் கொன்று விட்டு குருவிடம் திரும்பினான்.
குரு அவனிடம், உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை.
அதனால் உன்னை சீடனாக ஏற்க முடியாது, என அனுப்பி விட்டார்.
இரண்டாவது இளைஞனுக்கு கிளியின் மீது இரக்கம் உண்டானது.
கொல்ல மனமின்றி, அதைக் காட்டில் உயிரோடு பறக்கவிட்டான்.
அவனிடம் குரு, நீ இரக்கம் கொண்டவன். உனக்கு நல்ல குரு கிடைக்க என் ஆசிகள், என்று திருப்பி அனுப்பினார்.
மூன்றாவது இளைஞன் எங்கும் சுற்றித் திரிந்தான்.
எங்கும் இறைவன் நிறைந்து இருக்கிறார். அதனால், யாரும் இல்லாத இடம் என்று ஒரு இடம் எங்குமில்லை. அதனால், இதைக் கொல்ல முடியாது, என்று சொல்லி குருவிடம் கிளியை ஒப்படைத்தான்.
அவனைக் குரு சீடனாக ஏற்றுக் கொண்டார்.
பின், தன் யோகசக்தியால் மூன்று கிளிகளையும் வரவழைத்து அவர்களின் சுயரூபத்திற்கு மாற்றினார்.
கந்தவர்களாக மாறிய கிளிகள், குருவை வணங்கிவிட்டு புறப்பட்டனர்.
இறைவன் இல்லாத இடம் வஞ்சனை நிறைந்த உள்ளங்களிலும் ,
தயா குணமும் இல்லாத நெஞ்சகளிலும் மட்டுமே .. 🌷🌷🌷
கேள்வி 72
நான் அருமை பட்டரே இன்னொரு கேள்வி
மண்ணுலக ஆசைகள் இல்லாமல் பொருள் மேல் பற்று இல்லாமல் வாழ்வது சாத்தியமா ? 💐💐💐
பட்டர்
ஏழை பிரம்மச்சாரி ஒருவன் தனது திருமணத்திற்காக வேண்டிய பொருள்வசதி இல்லாமல் மிகவும் மனம் வருத்தம் அடைந்தான்.
அவன் ஒருநாள் ஸ்ரீ தேசிகரை சந்தித்து குருதேவா நான் ஒரு பிரம்மச்சாரி, வறுமையில் வாடுகிறேன்.
அதனால் எனது திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறது என்று சொல்லி தனது இல்லாமையை தெரிவித்து, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வேண்டினான்.
அவனது நிலமையைக் கண்டு வருந்தி தேசிகர் அந்த பிரம்மச்சாரியை அழைத்துக் கொண்டு காஞ்சி வரதர் கோயிலின் ஸ்ரீ ரங்கநாச்சியார் சந்நிதிக்குச் சென்றார்.
தாயாரின் முன்னால் நின்று பக்தி சிரத்தையோடு ஸ்ரீஸ்துதி என்ற ஒப்பற்ற ஸ்தோத்திரத்தை பாடினார்.
அவரது பாடல்களைக்கேட்டு மயங்கிய ஸ்ரீ ரங்கநாச்சியார் பொன்காசுகளை மழையாகக்கொட்டச் செய்தாள்.
எல்லா பொற்காசுகளையும் எடுத்துக் கொள் என்றார் ஸ்ரீ தேசிகர்.
அவன் பொற்காசுகளை இரண்டு மூட்டைகளாக கட்டி, ஸ்வாமி நான் ஒரு மூட்டையை எடுத்துக்கொள்கிறேன்.
இன்னொரு மூட்டையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்.
தேசிகர் புன்னகை செய்தார், எனக்கு வேண்டாம் நீயே அவைகளை எடுத்துச் செல் அவைகளை நான் உனக்காக ஸ்ரீ பெருந்தேவித் தாயரிடம் கேட்டு வாங்கினேன் என்றார்.
கொட்டிக்கிடக்கும் பொன்காசுகளினால் கொஞ்சமும் கவரப்படாமல் வைராக்கிய சித்தத்தோடு இருக்கும் அந்த மகானுபவரைப் பார்த்து கண்களில் நீர்பனிக்க சேவித்தான் பிரம்மச்சாரி.
இந்தக் காட்சியைக் கண்ட மற்றவர்கள், அதிசயத்தில் பேச்சிழந்தனர்.
இப்படிக்கூட ஒரு மகான் இருப்பாரா என்று வியந்தனர்.
பொற்காசுகளை ஓட்டாஞ்சல்லியாக நினைத்து தொடுவதற்கோ, அல்லது எடுத்துக் கொள்வதற்கோ அல்ல, பார்க்கக்கூட விரும்பாத தேசிகரின் வைராக்கியத்தை வானளவாப் புகழ்ந்தனர்.
அது இருந்தும் இல்லாதைப்போலத்தான்.
ஈயாதான் செல்வம் இருந்தென்ன போயென்ன ? என்பது இதைத்தான்.
ஆகவே செல்வத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கையில் இருக்கின்ற பணத்தை மற்றவர் உபயோகிக்க கொடுப்பது உங்கள் மனத்தில் உள்ள அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகும்.
செல்வத்தினால் எல்லாம் கிடைக்கும் என்று எண்ணி போலியாக வாழ்பவர்கள் உண்மையான வாழ்க்கையைப் பார்ப்பதே இல்லை.
பறவைகள் தரையில் விரிக்கப்பட்டு இருக்கும் வலையை பார்க்காமல், அதன் மீது இருக்கும் தானியத்தை எடுப்பதற்கு ஆசைப்பட்டு அருகே போய் வலையில் மாட்டிக் கொள்வதைப்போல இவர்களும் செல்வத்தை சேர்ப்பதற்காக ஆசைப்பட்டு துன்பத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம் 🌷🌷🌷
நான் பட்டரே அருமை அருமை ...
கேள்வி 73
சிறந்த தெய்வம் என்று ஒன்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா ?
பட்டர் ... சிறந்த தெய்வம் என்றால் அது ஓவ்வொருவருடைய தாய் .
தாயை தெய்வமாய் நினை ..
அதை கொஞ்சம் திருப்பிப்போட்டு தெய்வத்தை தாயாக நினைப்பதுதான் அம்பிகையின் தியானம் .. 🙌🙌🙌
பட்டர் ... காற்றினிலே வரும் கீதம் போல் காற்றினில் கரைந்தும் போனார் .... தந்த பதில்கள் யானையின் தந்தங்கள் போல் ஒளி வீசின 👏👏👏🙌🙌🙌
👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊
Comments
வாலில் தீ வைக்கவேண்டும் என்றதும் அரக்கர்கள் குஷியாகி வாலில் சுற்றுவதற்கு அவரவர்கள் வீட்டில் இருக்கும் கயிறுகளை எல்லாம் கொண்டு வருகிறார்களாம்.
துணி காயப்போடும் கயிறு, குதிரை கட்டும் கயிறு, ஊஞ்சல் கயிறு இப்படி அத்தனையையும். ஆனால் அவர்கள் கொண்டு வந்த அத்தனை கயிறுகளும் அவர்களுக்கே பாசக் கயிறாக மாறி விட்டன.
எந்தக் கயிறுக்கு இருக்கிறது அனுமனைக் கட்டும் ஆற்றல்?
ஒரே ஒரு கயிறுக்குத் தான் உண்டு. அந்தக் கயிறை எடுத்துக் கொண்டுவர மறந்து விடுகிறார்கள் அரக்கர்கள்.
ராம நாமம் என்னும் கயிறு. நாமக் கயிறு ஒன்று மட்டுமே அவரைக் கட்டும்.
இந்த எமக் கயிறுகள் எம்மாத்திரம்?
தீ குளிரட்டும் என்று சீதை வேண்டிக் கொள்கிறாள்.
முனிவர்களின் வேள்வித்தீ குளிர்கிறது.
சிவபெருமான் கை நெருப்பு குளிர்கிறது.
ஏன், அவன் நெருப்புக் கண்ணும் குளிர்கிறது.
சில நேரங்களில் பனிக்கட்டி சுட்டு விடுகிறது,
நெருப்பு குளிர்ந்து விடுகிறது.
வாலில் இட்ட தீ வாலறிவனைச் சுடுவதில்லை.
வீணர்கள் வாழும் நகரைச் சுட்டு விடுகிறது.🐒🐒🐒
ஸ்தோதும்வாசாம் க்லுப்திரித்யேவ மன்யே
த்வத்ரூபம் U ஸ்வானுபூத்யேகவேத்யம்
நசக்ஷ§ஷாக்க்ருஹ்யதே நாபிவாசா
*ஓம் சிவாய நம*
*திருச்சிற்றம்பலம்*
பாடல் எண் : 98
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு.
பாடல் எண் : 101
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
குறிப்புரை : 98
அங்கை - அகங்கை. ஆறு - பயன். தீ ஆடுவாய் - தீயின்கண் நின்று ஆடுவாய்; விளி. அகங்கையும், தீயும் அழகால் ஒன்றனை ஒன்று விஞ்சுவனவாய் உள்ளன` எனக் கூறி, அகங்கையின் மிக்க அழகைப் புகழ்ந்தவாறு. இஃது ஏது அணியின் பாற் படும்.
குறிப்புரை :
`காரைக்காற் பேய் சொல் இம்மாலை அந்தாதி வெண்பாக்களை உரையினால், கரைவினாற் பரவுவார் ஆராத அன்பினோடு சென்று அண்ணலைப் பேராத காதல் பிறந்து ஏத்துவார்` என இயைத்து முடிக்க. `மாலையாய் அமைந்த வெண்பா` என்க. மாலையாதல் சொற்றொடர்நிலைச் செய்யுள் ஆதல். `உரை` என்றது, `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றனுள் `மொழி` என்னும் மொழியைக் குறித்தது. கரைவு - அன்பு. பரவுதல், ஏத்துதல் இரண்டும் துதித்தலைக் குறிக்கும் சொற்கள். ஆராத - நிரம்பாத. பேராத - மாறாத. காதல் - பேரன்பு. பிறந்து தோன்றப் பெற்று. `கரைவினால் பரவுவார்` என்றது இவ்வுலகத்திலும், பின் வந்தவை சிவலோகத்திலும் ஆதலின் அவை கூறியது கூறல் அல்லவாதலை அறிக. சென்று - சிவலோகத்தை அடைந்து. இது நூற் பயன் கூறியவாறு. ஈற்றில் `பிறந்து` என்றது முதல் வெண்பாவின் முதற் சீரோடு சென்று மண்டலித்தல் காண்க.
🙏🪔🙏
அற்புதத் திருவந்தாதி முற்றிற்று.