அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 74 & 75 பதிவு 61
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 74 & 75
பதிவு 61👌👌👌
பதிவு 61🥇🥇🥇
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .
கேள்வி 74 & 75
பட்டரே வாருங்கள் ... அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்
பட்டர் ... ரவி இன்று என்ன கேள்வி ?
நேற்று நாச்சியார் திருமொழி இன்று??
நான்...
இதில் 22வது வாக்கியம்
தெய்வத்தைப் பெற்றேனோ
தேவகியாரைப் போலே
உண்மையில் இங்கே யசோதை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
அவள் தானே கண்ணனை அணு அணுவாய் ரசித்தவள் .. தாங்கள் தான் எனக்கு விளக்க வேண்டும் ...💐💐💐
பட்டர்
நீ தேவகி வசுதேவர் தம்பதிகள் செய்த நல்வினையை பற்றி அறிய வில்லை ...
சாக்க்ஷாத் நாராயணனே இந்த தம்பதிகளுக்கு வேறு வேறு பிறவியில் மகனாக அவதரித்துள்ளார் ..
யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் .?..
யசோதைக்கு இப்படி சொல்லலாம் ...
ராம அவதாரத்தில் கௌசல்யாவாக ,
கிருஷ்ண அவதாரத்தில் யசோதையாக ,
கலி யுகத்தில் மலையப்பனின் வளர்ப்பு தாயாக ....
ஆனால் தம்பதிகளாக அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லை ...
முந்தைய ஒரு பிறவியில் வசுதேவர், சுதபஸ் என்ற பிரஜாபதியாகவும், தேவகி, ப்ருக்னி என்ற பெயரில் அவருக்கு துணைவியாய் வாழ்ந்தாள் ..
பெருமாள் அவர்களுக்கு பிரசனி கர்ப்பன் என்ற திருநாமத்தில் பிறந்தார் ..
ஆனால் அவர்கள் பெருமாள் தான் தங்கள் குழந்தை என்று உணரவில்லை ...
அடுத்த பிறவியில் அதிதியாகவும் காஸ்யபராகவும் இருந்தவர்களுக்கு வாமனராய் .. உபேந்திரனாய் பிறந்தார் ...
மூன்றாவது பிறவியில் கிருஷ்ணனாக ...
இறையே வந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த பெருமாள் தோன்றிய விதம் மிகவும் அருமையானது ...
நான்
ஐயனே கொஞ்சம் அதை விவரிக்க முடியுமா ?
பட்டர் .. கண்டிப்பாக
குழந்தையின் கைகளில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஆகியவை இருந்தன.
மஞ்சள் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் அணிந்திருந்தான் சின்னக்கண்ணன்.
பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள், ஆடை, ஆபரணம்.
இதெப்படி சாத்தியம்?
தன் வயிற்றில் பிறந்த மகன் சாட்சாத் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்.
தேவகி வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து... உஹும்... தரிசித்துக் கொண்டிருந்தாள்.
கடவுளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்தது ,
சின்ன சின்ன பீதாம்பரம் ,
குட்டி குட்டி கமலக் கண்கள் ..
வண்டுகள் போல் அலை பாய ,
ஒரு கையில் தீபாவளி பட்டாசை போல் விஷ்ணு சக்கரம்
இன்னொரு கையில் குட்டி வெண் சங்கு ...
இன்னொரு கையில் குட்டி கமலம்
இன்னோரு கையில் குழந்தை வைத்திருக்கும் லாலி பாப் போல கதை ...
சின்ன வயிற்றில் இருந்து கிளம்பும் குட்டி கொடி
அதில் மலர்ந்த குட்டி தாமரை 💐
அதில் ஒரு சின்ன குழந்தை தன்னை பிரம்மா என்று சொல்லிக்கொண்டது
மார்பில் குட்டி பாவாடையும்
பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழல்
மொட்டு விரிந்த மதுரை குண்டு மல்லியும் கொண்ட வளைக்கை ...
பெய்யும் கனகம் போல் பெருமாள் ...
இத்தனையும் சேர மதுர இதழ்கள் ஐஸ்க்ரீம் குச்சியை சப்புவதைப்போல புல்லாங்குழலை சப்பிக்கொண்டே சிரித்தது .... 🙂🙂🙂
தேவகி வசு தேவர் செய்த புண்ணியம் பல கோடி ..
தேவகி அங்கே பார்த்தது தன் குழந்தையை மட்டும் அல்ல , தன் காரூண்யம் மிக்க மாட்டுப்பெண்ணை ...
அது மட்டும் அல்ல பிரம்மா எனும் பேரப்பிள்ளை...
பொதுவாக நாம் நம் குழந்தைகள் கல்யாணத்தை பார்க்க 20 -25 வருடங்கள் காத்திருக்க வேண்டும்
பிறகு பேர பேத்திகளை பார்க்க இன்னும் 5 வருடம் ...
ஒரே வினாடியில் 30 வயது அவள் வாழ்க்கையில் கண்ணன் தரிசனம் கொடுத்து சேமித்து விட்டான் ...
அதனால் தான் திருக்கோளூர் பெண் பிள்ளை
தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே என்றாள் ...
நான் தேவகி வசுதேவரைப்போல உங்களை பெற கோடி புண்ணியங்கள் செய்துள்ளேன் ..
பட்டர் சிரித்துக்கொண்டே பறந்து சென்றார் ..🦅🦅🦅
பறந்து போன பட்டர் எதையோ மறந்து விட்டதை போல் திரும்ப வந்தார் ...
ரவி சொல்ல மறந்து போனேன்
குழந்தை நாராயணன் குட்டி சக்கரம் வைத்திருக்கிறான் என்று சொன்னது தப்பு ...
கையில் காத்தாடி போன்ற சக்கரம்...
ஊதல் போல் வெண் சங்கு ,
கிலுகிலுப்பைப்போல கதை ...
அவன் கிளுகிளுப்பை எல்லோருக்கும் தருபவன் அல்லவா ... இப்படி வந்தான் ...
மீண்டும் பறந்து சென்றார் ... வாயடைத்துப்போனேன் 🙌🙌🙌🦅🦅🦅
👍☺️👍👍👍👍👍👌👌👌👌💐💐😊😊
Comments
சீ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?
தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை.
மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை?
நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.
எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.
"இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன். ஏங்க?... கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து தியானம் பண்றீங்களே?"
கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன். திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.
நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள்தானே, தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள்
பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள்.
தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.
'அமைதியான நதியினிலே ஓடம்...' அருமையான பாட்டு. சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத
மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை
டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே. மனமே...
ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!
போட்டுக் கொண்டால்தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலியை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?
உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது?
அடடச்சீ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்? கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு
பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு-
அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.
'அலை பாயுதே கண்ணே...!
என் மனம் அலை பாயுதே..!'
கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்து
கொண்டுவிட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப்படவில்லை.
ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.
இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன்
இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான். ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.
முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி,
ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா...
நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்.
லீவு நாள்லகூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!
திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன் ஓஹோ... இதுதான் தியானமா?
எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.
யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.
"ஏங்க... எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது குறட்டை என்ன குறட்டை?"
*சோ* 😀😆🤣😂😃😂🤣
வரிக்கு வரி என்னே வர்ணனை...
அழகு...
🙏🙏🙏🙏🙏🙏