அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 81 பதிவு 63
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 81
பதிவு 63👌👌👌
கேள்வி பதில் நேரம்
பதிவு 63🥇🥇🥇
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .
கேள்வி 81
நான் ..
ஐயனே வணக்கம் .. இன்று என் கேள்வி கொஞ்சம் இசுகு பிசகாக இருக்கலாம் .. கோபிக்காமல் தாங்கள் பதில் சொல்ல வேண்டும் ...
பட்டர் உன் கேள்விகள் எனக்கு பழக்கமாகி விட்டன .. தையிரமாய் கேள் .. கோபிக்க மாட்டேன்
நான் ... ஐயனே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் பல நாமங்கள் அவள்
மதுவை விரும்புபவள் ... மஞ்சள் சாதம் , வெல்லம் கலந்த சாதம் சாப்பிடுபவள் என்று வருகிறது ...
இவைகள் நாமங்களாக தெரியவில்லை
மேலும் அன்னையின் விருப்பங்களாக தெரிகின்றன ..
அவள் விருப்பு வெறுப்பு இவைகளை கடந்தவள்
இப்படி பிரசாதம் அவளுக்கு படைப்பதால் பீரிதி அடைபவளா ?
பட்டர்
இதன் தாத்பரியமே வேறு ...
கந்தர் சஷ்டி கவசம் தெரியுமா உனக்கு ...??
முருகனிடம் ஓவ்வொரு அங்கமாக சொல்லி உன் வேல் காக்கட்டும் என்று சொல்கிறோம் ...
அதுபோல் நம் உடலே 6 ஆதார சக்கரங்கள் ...
ஸ்ரீபுரம் என்று ஒன்று தனியாக எங்கும் இல்லை
உன் நெஞ்சம் தான் அவள் வசிக்கும் ஸ்ரீபுரம் ...
சரி ஓவ்வொரு நாமமாக பார்ப்போம் உன் சந்தேகம் முழுமையாய் தீரும்வரை 👏👏
499. ரக்தவர்ணா:
இவளுளடய நிறமும் சிவப்பு .
500. மாம்ஸனிஷ்டா :
முதலில் " த்வக் " என்கிற தோலுக்கு அதிதேவதை .
அதன் பிறகு ருதிரம்
என்று தோலுக்குக் கீழே உள்ள திசுவிர்க்கு அதிதேவதை
அதையடுத்து மாமிசம் -
தசைகளுக்கு அதிதேவதையாய் விளங்குபவள் மாம்ஸனிஷ்டா...
இந்த திசுவும் , தசைகளும் தோலும் சிறப்பாக இருக்க அவைகளுக்கு போஷாக்கு கொடுக்கக் கூடிய சத்துக்களை அவளுக்கு படைக்கிறோம் ...
அவள் தோலும் தசையும் திசுவும் சிறப்பாக இருக்க அல்ல நம் உறுப்புக்கள் சிறப்பாக இருக்க
அவளுக்கு படைத்தவகளை நாம் பிரசாதமாக சாப்பிடுகிறோம் ... ஆரோக்கியமாக இருக்கிறோம் ...
501. குடான்ன ப்ரீதமானஸா :
வெல்லம் கலந்த அன்னம் இவளுக்கு பிரியமானது ...
என்ன அர்த்தம் ...??
இனிப்பு உடம்பில் சேர்ந்தால் மனம் கோப தாபங்களை மறக்கின்றது ...
நல்ல எண்ணங்கள் உருவாக இனிப்பு ஒரு வகையில் உதவி செய்கிறது ..
அவளுக்கு படைத்து சாப்பிடுவதால் நம் மனமும் இனிப்பான விஷயங்களை மட்டுமே நினைக்கின்றன.
சர்க்கரை சத்து உடம்பில் சேர தசைகளுக்கு வேண்டிய கிளைக்கோஜன் சக்தி கிடைக்கிறது
இப்பொழுது சொல் அவள் நலத்திற்காகவா இவ்வளவும் படைக்கிறோம் ?
509. மேதோனிஷ்டா :
இவள் கொழுப்பு என்கிற தாதுவுக்கு அதி தேவதை .
மேதஸ் என்றால் கொழுப்பு .
கொழுப்பு சரியான அளவில் உடம்பில் சேர வேண்டும் .. கொழுப்பு உள்ள பிரசாதங்களை அதனால் அளிக்கிறோம்
510. மதுப்ரீதா :
தேன் போன்ற குணம் கொண்டவள் . தேன் ஒரு விஷனாசினீ மருந்து... தேன் உடம்பிற்கு மிகவும் தேவை
512.தத்யன்னாஸக்த ஹ்ருதைா :
இவளுக்கு பிடித்த அன்னம் - தயிர் அன்னம்
என்ன அர்த்தம் ?
தயிர் உடம்பின் உஷ்ணத்தை குறைக்கும் ...
516 அஸ்த்திஸம்ஸ்த்திதா
கொழுப்பை எல்லாம் தாண்டி உள்ளே போனால் எலும்பு... எலும்பை பார்த்துக்கொள்பவள்
524 மஜ்ஜா ஸம்ஸ்த்தா :
எலும்புக்கும் உள்ளே இருக்கக்கூடிய திசுதான் மஜ்ஜா ( bone marrow )
நாம் இதை மஜ்ஜை என்று அழைக்கிறோம் .
இந்த திசுவை காப்பவள் அம்பாள்...
இப்படி... மஞ்சள் கலந்த சாதத்தை விரும்புபவள் என்று நாமம் வரும் ..
நாம் மஞ்சளின் அருமையை அறிவோம் . கிருமி நாசினீ ..
அதை சேர்த்துக்கொள்வதால் உடம்பில் கிருமிகள் அழிக்கப்படும் ..
ஸ்ரீமாதா என்று அவளை ஏன் அழைக்கிறோம் என்று புரிகிறதா ?
நமக்காக மட்டுமே வாழ்பவள் என் அபிராமி .....🙌🙌🙌
நான் ஐயனே என் அறியாமை முழுதும் அகன்றது ....
பதிலுக்காக காத்திருக்காமல் பறந்து சென்றார் பட்டர் .... 🦅🦅🦅
👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐
Comments
தொடர்ந்து பயணிப்போம்
_________________________
ஒரு சமயம் முனிஸ்ரேஷ்டரான அகத்தியர் தீர்த்தயாத்திரைகளை மேற்கொண்டு மலைகள், காடுகள், நதிகள், புண்யக்ஷேத்ரங்கள் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டு ஆங்காங்கே தேவதைகளைப் போற்றிக் கொண்டு வந்தார். அப்பொழுது ஜனங்கள் உலக வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டவர்களாகவும், தங்கள் புலன்களைத் திருப்திப் படுத்துபவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தார்
ஹயக்ரீவர் அகத்தியரைக் பார்த்து
“தங்களின் தவத்திற்கு மெச்சினேன். தங்களுக்கு நலமுண்டாகட்டும். வரம் ஏதாவது வேண்டுமென்றால் தாங்கள் கேட்டுக் கொள்ளலாம்” என்று வினவினார். அப்பொழுது அகத்தியர் ஹயக்ரீவரின் பாதங்களைச் சேவித்து, “ஸ்வாமி! இந்தப் பாமர மக்கள் எந்த உபாயத்தினால் முக்தர்கள் ஆவார்கள்? அதைத் தெரிவிக்கவும்” என்று கேட்டார்.
ஹயக்ரீவர் மிகவும் ஸந்தோஷத்தையடைந்து, “இதே கேள்வி தான் ஒரு காலத்தில் என்னால் பரமேஸ்வரனிடம் கேட்கப்பட்டது.
தவத்தாலும் கர்மங்களை யாகம் செய் வதாலும் ஒருவன் குணம் குறியற்ற நாமரூப வடிவமற்ற இறைவனை அடைகிறான். இது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல.
அந்த பராசக்தியை தியானம் செய்து சிவபெருமானும் அனைத்து சித்திகளையும் அடைந்து ஈஸ்வரனாக சக்தியை இடப்பாகத்தில் பெற்ற அர்த்தநாரியான. பிரம்மா முதலான அனைத்து தேவர்களும் அன்னையை வணங்கியதாலேயே தங்களுக்கு உரிய சக்தியைப் பெற்றனர்.
அகஸ்தியர் ஹயக்ரீவரை பார்த்து
"பெருமானே அப்பேர்ப்பட்ட பராசக்தியான அம்பிகை யார்?. அவளை எப்படி அறிந்து கொள்வது?. தயவுசெய்து எனக்கு கூறி அருள வேண்டும் என்று வேண்டினார்.
அதற்கு ஹயக்ரீவர் , ஜகன் மாதாவான அம்பிகை பிறப்பும் இறப்பும் இல்லாதவள், மெய்யறிவில் மட்டுமே அரிய தக்கவள் . ஞானமும் அதனை அடையும் வழியும் ஆனவள். எங்கும் நிறைந்த அவள் பிரம்மதேவனின் தவத்தின் பயனாய் வெளிப்பட்டாள். அப்போது அவள் பிரகிருதி என்று அழைக்கப்பட்டாள். அதுவே அவள் தன்னை வெளிப்படுத்திக் காட்டிய முதல் அவதாரம்.
தொடர்ந்து பயணிப்போம்..
இவ்வளவு அர்த்தத்தை
லலிதா நாமங்கள்களில்
உள்ளது என்று அறிய வைத்தமைக்கு நனறி
🙏🏻🙏🏻🙏🏻
இன்றைய பதிவில் சரணாகதி தத்துவத்தை மிக தெளிவாக விளக்கி உள்ளார் சக்தி குழும அபிராமி பட்டர்...
எல்லாமே அவள் செயல் என சரணாகதி அடைந்து விட்டால் ,நமக்கு எந்தவித கவலையும் இல்லை...
வாழ்வியலுக்கு வேண்டிய அருமையான தத்துவம்...
🙏🙏🙏🙏🙏🙏