ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1. Foreword - பதிவு 1

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே     ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்  

பதிவு 1   



ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 🌷🌷🌷

லலிதா ... என்ன சுகமான மயில் இறகால் வருடி விடும் நாமம் .. 

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் .. அவள் தங்கைக்கும் 1000 நாமங்கள் 

ஓவ்வொன்றும் தேனில் ஊறிய பலா சுளைகள் ... இப்படியும் இனிக்குமா ? 

ஓவ்வொரு நாமமும்  சொல்லும் கதைகள் அர்த்தங்கள் கோடி .. 

ஓவ்வொன்றாய் சுவைப்போம் இன்று முதல் மீண்டும் அவள் அருளால் 🙌🙌🙌

நாமங்களுக்குள் செல்லும் முன் இந்த ஐந்து ஸ்லோகங்களை தந்த  ஆதி சங்கரருக்கு நன்றி சொல்லுவோம் ...



प्रातः स्मरामि ललितावदनारविन्दं
विम्बाधरं पृथुलमौक्तिकशोभिनासम् ।
आकर्णदीर्घनयनं मणिकुण्डलाढ्यं
मन्दस्मितं मृगमदोज्ज्वलभालदेशम् ॥१॥

Praatah Smaraami Lalitaa-Vadana-Aravindam
Vimba-Adharam Prthula-Mauktika-Shobhi-Naasam |
Aakarnna-Diirgha-Nayanam Manni-Kunnddala-[A]addhyam
Manda-Smitam Mrgamado[a-U]jjvala-Bhaala-Desham ||1||

அம்மா  லலிதே, 

உன் தாமரை மலர் போன்ற அழகிய வதனத்தை காலை எழுந்ததும்  தரிசித்து வணங்குகிறேன் தாயே.  

அன்றலர்ந்த தாமரைக்கு  இன்னொரு  பெயர்  தேவி லலிதா திரிபுர சுந்தரியா?

சிவந்த அதரங்கள்  மாதுளையா?   

நாசியால்  முத்துக்கு அழகா?  

முத்து மூக்குத்தியால்  நாசிக்கு அழகா? 

காது வரை கண் என்று கேட்டிருக்கிறேன்  

இப்போது பார்க்கிறேன் தாயே.   

விஸா.. ஸா.. ஸா.. லாக்ஷி  முகத்தில் தான் என்ன பாசமிக்க, அன்பில் தோய்த்த  தாயின் புன்சிரிப்பு..    

நெற்றியில் கமகமவென்று  மானின் கஸ்தூரி ஜவ்வாது  வாசனை.......

ஆனந்தமும் அழகும் அலை போல் துள்ளி வந்தால் 

சர்க்கரைப்பொங்கலில் தேனும் பாலும் பழத்துடன் சேர்ந்து விழுந்தால் 

வானில் வரும் விண்மீன்கள் வானவில்லில் நம் மீது கருணை எனும் அம்பைத் தொடுத்தால் 

காற்றும் நீரும் கனகதாரா பாடினால் 

களிப்பும் ஆனந்த கண்ணீரும் காதலித்தால் .. கற்பூரமும் ஒளியும் கை பிடித்தால் 

கரை எங்கே என்றே தேடுவோம் .. அந்த அனுபவம் இன்று முதல் ஆரம்பம் 🦜🦜🦜🦚🦚🦚🎼🎼🎼


प्रातर्भजामि ललिताभुजकल्पवल्लीं
रक्ताङ्गुलीयलसदङ्गुलिपल्लवाढ्याम् ।
माणिक्यहेमवलयाङ्गदशोभमानां
पुण्ड्रेक्षुचापकुसुमेषुसृणिदधानाम् ॥२॥

2.  Praatar-Bhajaami Lalitaa-Bhuja-Kalpavalliim
Rakta-Angguliiya-Lasad-Angguli-Pallava-[A]addhyaam |
Maannikya-Hema-Valaya-Anggada-Shobhamaanaam
Punnddrekssu-Caapa-Kusume[a-I]ssu-Srnni-Dadhaanaam ||2||

கல்பவல்லி  என்று கொடி . நினைத்ததை நிறைவேற்றும் தன்மை வாய்ந்த  செடிகளில் 

காமதேனு.  அதை போன்ற  அழகிய  மென்மையான கரங்களை உடையவளே   

காலையில் நான் வணங்கும்  தேவி லலிதா திரிபுரசுந்தரி.  

பிஞ்சு வெண்டைக்காய் என்பதா, 

அழகிய  பளபளக்கும் முளைவிட்ட சிவந்த விரல்களில்  சிவந்த மோதிரங்கள் அணிந்தவளே.  

கரங்களில் தான் எத்தனை அழகிய  கங்கணங்கள் , வளையல்கள், கண்ணைப்பறிக்கும்  நவரத்ன மணிகள்  பதித்த வாகு வளையங்கள்..  

அழகுக்கு இனிமை சேர்க்கவென்றே  அம்மா, நீ கரும்பு வில்லை கையிலேந்தி இருக்கிறாயா?  

அதற்கு ஏற்ப  மலர்க்கணைகள், அம்புகள்,  அங்குசம் வேறு.    தேவி  அம்பா லலிதா திரிபுரசுந்தரி  உன்னை காலையில் பஜிக்க என்ன புண்யம் செயதிருக்கவேண்டும்.🙏🙏🙏🙏🙏




प्रातर्नमामि ललिताचरणारविन्दं
भक्तेष्टदाननिरतं भवसिन्धुपोतम् ।
पद्मासनादिसुरनायकपूजनीयं
पद्माङ्कुशध्वजसुदर्शनलाञ्छनाढ्यम् ॥३॥

Praatar-Namaami Lalitaa-Caranna-Aravindam
Bhakte[a-I]sstta-Daana-Niratam Bhava-Sindhu-Potam |
Padmaasana-[A]adi-Sura-Naayaka-Puujaniiyam
Padma-Angkusha-Dhvaja-Sudarshana-Laan.chana-[A]addhyam ||3||

பொழுது விடிந்தது.  அருணன் சிவந்து  கிழக்கே  தலை தூக்குகிறான்.  

உன் தாமரைத் திருவடி போற்றுகிறேன் அம்பா தேவி லலிதா திரிபுரசுந்தரி.  

ஆச்சர்யமாக  இந்த திருவடிகள் துளியும் ஒய்வு ஒழிவு  இல்லாமல்  எத்தனை கோடி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வாரி வழங்குகிறது. 

சம்சார சாகரத்தை கடக்கும் படகாக அல்லவோ  செயல்படுகிறது.  

நான் மட்டுமா  உன்னை விடிகாலையில் தேடி வந்து வணங்குபவன்? 

அதோ எனக்கு முன்னே  தாமரை மலர் மேல் அமரும் ப்ரம்மதேவனே  தேவர்கள் சுரர்கள்  புடை சூழ உன்னருள் வேண்டி நிற்கிறார்கள். 

தாமரை, அங்குசம், கொடி , சுதர்சன சக்ரம்  தாங்கி நிற்கும்  அம்பா தேவி லலிதா திரிபுர சுந்தரி உன்னை விடிகாலையில் வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏


4.  प्रातः स्तुवे परशिवां ललितां भवानीं
त्रय्यन्तवेद्यविभवां करुणानवद्याम् ।
विश्वस्य सृष्टिविलयस्थितिहेतुभूतां
विद्येश्वरीं निगमवाङ्मनसातिदूराम् ॥४॥

Praatah Stuve Para-Shivaam Lalitaam Bhavaaniim
Trayyanta-Vedya-Vibhavaam Karunnaa-[A]navadyaam |
Vishvasya Srsstti-Vilaya-Sthiti-Hetu-Bhuutaam
Vidyeshvariim Nigama-Vaang-Manasa-Ati-Duuraam ||4||

எப்போதுமே  விடிகாலை புத்துணர்ச்சியோடு செயல்பட உதவும் நேரம். 

இந்த சுகமான நேரத்தில்  தேவி லலிதா பவானி உன்னை எண்ணி என் மனம் பொங்கி வழிகிறது. 

எண்ணம் மனம் இதற்கெல்லாம் எட்டாதவளே. 

வேதாந்த  ஞானம்  இருந்தால்  தான்   கொஞ்சமாவது உன்  கம்பீரம், இரக்கம், புனிதம் எல்லாம் புரிபடும் என்று தோன்றுகிறது.  

சிருஷ்டி, ஸ்திதி, லயம் , எனும் முத்தொழில்களையும் புரியும் தாயே, 

தெய்வமே , பிரபஞ்ச  காரணி,  வேதங்களும் அறியமுடியாதவளே,  

வார்த்தைக்கு அப்பாற்பட்டவளே, 

மனதில் எல்லையற்று அறியப்படுபவளே, 

அம்பா, தேவி லலிதா திரிபுரசுந்தரி தாயே  உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.🙏🙏🙏🌷🌷🌷🦚🦚🦚


5. प्रातर्वदामि ललिते तव पुण्यनाम
कामेश्वरीति कमलेति महेश्वरीति ।
श्रीशाम्भवीति जगतां जननी परेति
वाग्देवतेति वचसा त्रिपुरेश्वरीति ॥५॥

Praatar-Vadaami Lalite Tava Punnya-Naama
Kaameshvari-Iti Kamale[a-I]ti Maheshvarii-[I]ti |
Shrii-Shaambhavii-[I]ti Jagataam Jananii Pare[a-I]ti
Vaagdevate[a-I]ti Vacasaa Tripureshvarii-[I]ti ||5||

உள்ளும் புறமும் அமைதி நிறைந்த சூழ்நிலையில் விடிகாலையில் அம்பே, தேவி லலிதா திரிபுரசுந்தரி உனது நாமங்களை நாவினிக்க  உச்சரிக்கிறேன்.   

காமேஸ்வரி, கமலா, மஹேஸ்வரி, ஸ்ரீ சாம்பவி, ஜகத் ஜனனி, பரா, வாழுதேவி, திரிபுரேஸ்வரி ........  எவ்வளவோ  இன்னும்......


                                           👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
















Comments

ravi said…
🌺கூரேசர் ஞானத்திலும் நற்பண்பிலும் நினைவாற்றலிலும் தலைசிறந்தவர். இல்லறப் பற்றற்ற இவர் தமது திருமாளிகையில் இரவுபகலாக அன்னதான சத்திரம் நடத்தியதால், அதன் கதவு “அடையா நெடுங்கதவு” என்று அறியப்பட்டது.

🌺கூரேசரோடு ஒப்பிட்டுச் சொல்ல முன்னும் பின்னும் பக்தர்கள் எவரும் இலர். பகவத் பக்தி, பாகவத பக்தி, ஆச்சாரிய அபிமானம், பௌதிகப் பொருட்களிலும் இல்வாழ்விலும் பற்றின்மை, ஒளிவிடும் புலமை, ஒப்பற்ற நினைவாற்றல், அன்பு, அடக்கம், கருணை போன்ற பல நல்ல குணங்கள் அவருக்கு அழகூட்டும் அணிகலன்களாக இருந்தன.
ravi said…
🌹🌺' தமது செல்வத்தின் பெரும்பகுதியை தானமாக வழங்கி விட்டு, காஞ்சிக்கு வந்து இராமானுஜரை சரணடைந்த கூரத்தாழ்வார் - விளக்கும் எளிய கதை🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஸ்ரீ இராமானுஜர் சீடர்களில்,
கூரேசர் எனப்படும் கூரத்தாழ்வார் காஞ்சிக்கு வடமேற்கே சுமார் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ள கூரம் என்னும் ஊரில், ஹாரீத கோத்ரம், வடமான் குலத்தைச் சேர்ந்த அனந்தர், பெருந்தேவி நாயகி தம்பதியருக்குப் பிறந்தார்.
ravi said…

🌺கூரேசர் ஞானத்திலும் நற்பண்பிலும் நினைவாற்றலிலும் தலைசிறந்தவர். இல்லறப் பற்றற்ற இவர் தமது திருமாளிகையில் இரவுபகலாக அன்னதான சத்திரம் நடத்தியதால், அதன் கதவு “அடையா நெடுங்கதவு” என்று அறியப்பட்டது.

🌺கூரேசரோடு ஒப்பிட்டுச் சொல்ல முன்னும் பின்னும் பக்தர்கள் எவரும் இலர். பகவத் பக்தி, பாகவத பக்தி, ஆச்சாரிய அபிமானம், பௌதிகப் பொருட்களிலும் இல்வாழ்விலும் பற்றின்மை, ஒளிவிடும் புலமை, ஒப்பற்ற நினைவாற்றல், அன்பு, அடக்கம், கருணை போன்ற பல நல்ல குணங்கள் அவருக்கு அழகூட்டும் அணிகலன்களாக இருந்தன.
ravi said…
🌺ஒருநாள் இரவு கூரேசர் நகர சோதனைக்குச் சென்றபோது, அவ்வூரைச் சேர்ந்த ஆண்டாள் என்னும் கன்னிகையின் பெற்றோர், தமது மகளுக்குத் திருமணமாகி தாம்பத்திய உறவு கொண்டால், கணவரை இழப்பாள் என்ற ஜோதிடரின் கணிப்பால் அவளுக்குத் திருமணமாகவில்லையே என்று கூறிக் கலங்குவதைக் கேட்டார்.

🌺இல்லறப் பற்றற்றவராயினும், அடுத்த நாளே அப்பெண்ணின் பெற்றோரிடம் பேசி, அக்கன்னிகையை தாமே மணந்து தாம்பத்திய உறவின்றி வாழ்வதாக உறுதியளித்து அவ்வாறே வாழ்ந்து வந்தார். கூரேசரும் ஆண்டாளும், புராணங்கள், இதிகாசங்கள் என சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த ஞானமுள்ள வேத வித்துக்களாகத் திகழ்ந்தனர்.
ravi said…

🌺தமது செல்வச் செழிப்பையும் தர்ம சிந்தனையையும் பகவான் வரதர் அறிந்து வியப்புற்ற செய்தியை திருக்கச்சி நம்பிகள் மூலம் அறிந்த கூரேசர் மனம் வருந்தி கண்ணீர் விட்டார்.

🌺பெருமாளே தமது செல்வச் செழிப்பை அறிந்து வியந்ததால், அச்செல்வம் இனி நமக்குத் தகாது என்றெண்ணி தமது செல்வத்தின் பெரும்பகுதியை தானமாக வழங்கி விட்டு, காஞ்சிக்கு வந்து இராமானுஜரை சரணடைந்தார்.

🌺இராமானுஜரும் அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்து சீடராக ஏற்றுக் கொண்டார். கூரேசர் பின்னாளில் இராமானுஜரின் பவித்திரம் என்று அறியப்பட்டார்.
ravi said…

🌺ஒருமுறை கூரேசர் ஆண்டாளைப் பிரிந்து வாழ்வதை அறிந்த இராமானுஜர் ஆண்டாளை அழைத்துக் கொண்டு திருவரங்கம் வருமாறு பணித்தார். உடனே கூரேசரும் கூரம் சென்று, எஞ்சியிருந்த செல்வங்களையும் தானமாக வழங்கிவிட்டு, மனைவியுடன் திருவரங்கம் திரும்பினார்.

🌺வழியில் மதுராந்தகம் அருகே காட்டில் நடந்து வந்தபொழுது, ஆண்டாள், “பயமாக இருக்கிறது” என்றாள். கூரேசர், “மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம், ஏதாவது வைத்திருக்கிறாயா?” என்று வினவினார்.
ravi said…

🌺அதற்கு ஆண்டாள், “தேவரீர் அமுது செய்ய ஒரே ஒரு பொன்வட்டிலை மட்டும் எடுத்து வந்தேன்,” என்றாள். உடனே, கூரேசர் அதனை வாங்கி அருகில் வீசிவிட்டு, “இனி பயமின்றி நட” என்று சொன்னார். அதனாலேயே கூரேசர், பொன்வட்டில் தனையெறிந்த புகழுடையோன் வாழியே என புகழப்பட்டார்.

🌺கூரேசர் செல்வச் செழிப்புடன் ஒரு மன்னரைப் போல வாழ்ந்து வந்தார். ஆயினும், இராமானுஜரை சரணடைந்த பின்னர், உஞ்சவிருத்தியெடுத்து அதனைச் சமைத்து பாகவதர்களுக்கு அளித்து தாமும் அமுது செய்து வந்தார்.
ravi said…

🌺சாஸ்திரங்களைப் படித்து சரணாகதி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இயலாதவர்கள் கூரத்தாழ்வாரின் வரலாற்றைப் படித்தறிந்தால் அதனை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். சரணாகதி நிஷ்டைக்கு மிகச்சிறந்த உதாரணம் கூரத்தாழ்வார்.🌺🌹

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
Unknown said…
nice! Thanks for the Sanskrit and English of Lalitha pancharathna.
Oldest Older 201 – 209 of 209

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை