ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 2. ஸ்ரீமஹாராக்ஞீ பதிவு 7

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

2. ஸ்ரீமஹாராக்ஞீ 

பதிவு 7

இன்று நாம் பார்க்க போகும் திருநாமம் 2. ஸ்ரீ மஹாராக்ஞீ

என்னதான் அவள் அண்ட சரசாரங்களுக்கு மஹா ராணியாக இருந்தாலும் முதலில் அவள் என் அன்னை ... அந்த உரிமையை நான் என்றும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ..

அவள் மகாராணியாகவே இருக்கட்டும் அதற்காக என் தாயிடம் நான் ஏன் பயப்படவேண்டும் ? 💐💐💐💐💐

வாக்தேவிகளின் கருணையை பாருங்கள் ... மஹாராணி எனும் நாமம் இதை முதல் நாமமாக வைக்காமல் இரண்டாவதாக வைத்துள்ளார்கள் .

அம்மா என்று ஆனபின் உரிமை தானாக நம்முடன் ஒட்டிக்கொள்கிறது 

அவளிடம் பயம் இல்லை ... பெருமையும் கர்வமும் நமக்கு உண்டாகிறது ... 

என்ன பெருமை ..?

எப்படிப்பட்ட உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவள் எனக்கும் தாயாக வருகிறாளே .. 

இது இந்த ஒரு பிறவியில் மட்டும் அவள் எனக்கு அன்னையாக வரவில்லை .

என்னுடைய எவ்வளவோ ஜன்மங்களிலும் அவளே என் தாயாக வருகிறாள் ..

கர்வம் ஏன் .?

என் தாய் ஒரு ஆப்பை சாப்பை அல்ல 

அவள் எல்லா அண்ட சராசரங்களுக்கும் மஹா ராணி ...

அதனால் எப்பவும் நீங்கள் எல்லோரும் என்னிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்  .💐💐💐

தாயாகவே இருந்தால் கண்டிப்பு எப்படி வரும் .?


ராஜ்ய பரிபாலனம் செய்யும் போது ஒரு பெரிய ராஜ்யத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் போது கடமைகள் என்ற பெயரில் தவறு செய்தவர்களை தண்டிக்கும் குணம் வரும் .

ராமன் வெறும் ஒரு நல்ல கணவனாக இருந்திருந்தால் ராம ஆட்சி இன்று புகழ்ந்து சொல்கிறோமே அது கிடைத்திருக்குமா ? 

தாய்ப் பாசம் என்பது வேறு கடமை என்பது வேறு .

சத்தியபாமா தான் பெற்ற நரகாசுரனை வதம் செய்தது ஒரு கடமை உணர்ச்சியில் தாய் பாசத்தால் அவனை வென்றிருக்க முடியுமா ? 

அதனால் ஸ்ரீ மாதாவாக இருப்பவள் இந்த அண்டங்களை ராஜ்ய பரிபாலனம் செய்வதால் மஹாராணி எனும் பொறுப்பில் இருப்பதால் தவறு செய்பவர்களை தண்டிப்பதில் தவறுவதில்லை

அகில புவன சக்ரவர்த்தினியாக ரக்ஷிப்பவள்

பிரபஞ்சம் என்னும் ராஜ்ஜியத்தை ஆளுபவள்.. 

தோற்றுவித்த அனைத்தையும் கனிவுடன் ஆளுபவள் 

என் தாய் என்ற முதல் கர்வம்.

பிறகு அவள் ஒரு ஆப்பை சாப்பையான தாய் இல்லை 

அவள் இந்த பிரபஞ்சத்தையே ஆளுபவள் என்ற கர்வம் ... 

ஒரு பிள்ளைக்கு தன் தாய் collector , prime minister , queen என்று சொல்லும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ ...

அதை விட  கோடி மடங்கு சந்தோஷம் என் தாய் இந்த பிரபஞ்சத்தையே ஆளுபவள் என்று சொல்லும் போது வருகிறதே .. 

என்ன புண்ணியம் செய்தேன் என் அம்மே உன் வயிற்றில் நான் வந்து பிறக்க ,  புவனம் பதினான்கையும் பூத்தவளே 🙏🙏🙏

தண்டிப்பளாகவும் அவளே இருக்கிறாள் தண்டனையை மன்னிப்பவளாகவும் அவளே வருகிறாள் ... இரட்டை வேடம் சும்மா பிச்சு உதருகிறாள் ... 

தாய் என்று அதிக உரிமை எடுத்து தவறுகள் செய்பவர்கள் அவள் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது ... 

மனமுருகி அம்மா நீ தான் எனக்கு கதி என் தவறுகளை மன்னித்து விடு இனி இப்படி செய்யமாட்டேன் என்று கதருபவர்களை கை தூக்கி விடுகிறாள் ஸ்ரீ மாதாவாக ..

எப்படிப்பட்ட ஒரு அன்னையை நாம் பெற்றுள்ளோம் ..  

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே ...

ஸ்திதி - காப்பாற்றும் தொழில். மஹாராக்ஞி என்றால் என்ன அர்த்தம்? 

எப்போதும் படைப்பதைவிடக் காப்பாற்றுவது மிகவும் கஷ்டம். 

உதாரணமாகக் கோலத்தை அழகாகப் போட்டுவிடலாம். 

பத்து நிமிஷம் அந்தக் கோலத்தை யாரும் அழித்து விடாமல் காப்பாற்றுவது எவ்வளவு கஷ்டம்? யாராவது, 

"கோலம் அழகாக இருக்கிறதே" என்று ரசிப்பதற்காக அதைச் சுற்றி வந்தால்கூட, தவறி கால்பட்டோ புடவை ஓரம்பட்டோ இழை கலைந்துவிடும்! 

ஆகவே காப்பாற்றுவது என்பது மிகவும் கஷ்டமான செய்கை. 

ஆம், இருப்பதிலேயே மிகவும் கஷ்டமான விஷயம் அதுதான். ஆனால், படைத்த இந்தக் குழந்தைகளையெல்லாம்

இந்த ஆன்மாக்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் பல விதங்களில் தன்னை அம்பிகை ஆட்படுத்திக் கொள்கிறாள். 

அவ்வாறு ஆணையிட்டுக் காப்பாற்றுவதால்  அவள் மஹாராக்ஞி

அதாவது மகாராணியாக இருப்பவள். ஒரு நாட்டை அரசர்களாக, ஆட்சியாளர்களாக இருந்து பரிபாலனம் செய்பவர்கள் காப்பாற்றுகிறார்கள்.

ராஜராஜசோழன் பரிபாலித்தான் என்று சொல்வோம். ஒரு நாட்டைப் பரிபாலித்துக் காப்பவனைப் பேரரசன் என்றால், இவ்வளவு பெரிய சிருஷ்டியிலுள்ள இவ்வளவு உயிர்களையும் காப்பவள் மகாராணி! 

அவள் மகாராணியாக இருந்து காப்பாற்றுகிறாள். அதனால் இந்தத் திருநாமம் ஸ்திதியை, காத்தலைக் காட்டும் திருநாமம். 

ஆறு ஆதாரங்களாகிய தாமரை மலருக்குள் ஸுஷும்நா நாடியின் நடுவில் வெகுதேஜஸுடன் விளங்குகின்றவளும், சந்திரமண்டலத்தைக் கரைத்து குடிக்கின்றவளும், ஜ்ஞானானந்த ஸ்வரூபிணியாகவும், அம்ருத வடிவாயுமுள்ள என் அம்பிகையை ஸ்தோத்ரம் செய்கிறேன்.

ஒலிக்கும் தண்டை, சதங்கை முதலியவற்றிலுள்ள இரத்தின கற்களின் ஒளி ஊடுருவிய செம்பஞ்சுக் குழம்பினால் ஈரமான உனது திருவடித் தாமரைகள், பிரம்ம-விஷ்ணு-மகேச்வர்களால் சேவிக்கப்படுவதையும், ஹே மஹா தேவி!என் தலையில் இருப்பதையும் பார்த்து மகிழ்கிறேன்.


ஒலிக்கும் தண்டை, சதங்கை முதலியவற்றிலுள்ள இரத்தின கற்களின் ஒளி ஊடுருவிய செம்பஞ்சுக் குழம்பினால் ஈரமான உனது திருவடித் தாமரைகள், பிரம்ம-விஷ்ணு-மகேச்வர்களால் சேவிக்கப்படுவதையும், ஹே மஹா தேவி!என் தலையில் இருப்பதையும் பார்த்து மகிழ்கிறேன்.

ஹே தேவி!செம்பட்டு உடுத்தி முடித்தபின் அதன் மேல் ரத்னம் இழைத்த ஒட்டியாணம் அணிந்த இடுப்பு, பளிச்சிடும் வலம்புரி நாபி, மூவளிகள், உரோமவரிசை இவற்றையும் மனதளவில் சேவிக்கிறேன்.


தாமரையிதழ் கண்ணி தாயே!உனது வட்ட வடிவில் உயரமான மாணிக்ய குடம் போன்று அழகிய இரு ஸ்தனங்களையும் சேவிக்கிறேன். அவை நிரம்பிய பாற்குடமாகவே, எப்பொழுதும் கசிவதாகவே முத்து ஹாரங்கள் தொங்குவதாகவே உள்ளன

ஸ்ரீ பவாநீ மாதாவின் நீண்ட கைகள், வாகைப்பூ சுற்றிய தாயும், அம்பு, வில், பாசம், அங்குசம் இவை ளிர்வதாயும் குலுங்கும் கை வளையல்களும், பெரிய தோளிவாளைகளும் கொண்டு தேவியை மேலும் அழகு படுத்துகின்றன. அத்தகைய பவாநீயை சேவிக்கிறேன்.


ஸ்ரீ பவாநீ தேவி, மாணிக்யக் கற்கள் பதித்த ஹாரம் காதோலை இவைகளால் பளபளக்கும் சாந்தமான முகப்பொளிவுடன் இருக்கிறாள். சரத்காலத்து பூர்ண சந்திர ஒளி நிரம்பிய கோவைப்பழ உதட்டின் மேல் தவழும் புன் முறுவல் வேறு அவள் தாமரை முகத்தில் பரவியுள்ளது. அத்தகைய ஸ்ரீபவாநீயை சேவிக்கிறேன்.

ஹே தாயே!நல்ல நாசியும், அழகிய புருவம், நெற்றி இவற்றையுடையதும், உதட்டு அழகை உடையதும், வேண்டியதைத் தரும் கடாக்ஷம், நெற்றியில் சந்தனம், கஸ்தூரி திலகம் இவற்றைக் கொண்டதுமான உனது முகத்தை சேவிக்கிறேன்


ஹே தாயே! உனது உச்சிப்பூ வைரத்துடன் இணைத்து கட்டிய சந்திரப்பிறையழகும் சேர்ந்துள்ள தீரிய தலையை சேவிக்கிறேன். அது கனமாயும், மழமழப்பாயுமுள்ள கொண்டையையுடையதாயும், சிதறியாடும் பொடிக் கேசத்தினிடையே மொய்க்கும் வண்டுகளால் அழகாயுமுள்ளது.

ஹே தாயே பவாநி!உலகைக் கடந்த க நுண்ணிய ஆனால் ககத் தெளிவான உனது வடிவம் இந்த சிறியேனுடைய ஹ்ருதயத்தாமரையில் தோன்றட்டும். அந்த வடிவம் எப்பொழுதும் ஸரஸ்வதீமயமாயும், லக்ஷ்மீமயமாயும் இருப்பதுதானே!


ஹே ராஜராஜேச்வரீ!திருபுரே!சிவமயமான கட்டில் கொண்டு பரசிவையான உன்னை தியானிக்கிறேன். , கணேசர், அணிமாதி சித்திகள், சக்திகள் ஆகியவற்றால் சூழப்பெற்று, சக்ரராஜ ஸ்ரீசக்ரத்தில் விளங்குகிறாய்.

ஹே தாயே! நீயே சூர்யன், நீயே சந்திரன், நீதான் அக்னி, தண்ணீரும் நீயேதான். நீயே ஆகாயம், பிரதீவி, வாயு ஆகியவற்றையும், ஏன் மஹத்தும் நீதானே:நீயன்றி வேறு ப்ரபஞ்சம்தான் ஏது?ஆனந்த-ஞான-வடிவான உன்னைத்தான் நான் ஸேவிக்கிறேன்.


வேதங்கள்கூட நெருங்கவில்லை உன்னை. ஹே பவாநீ!நீயோ வேதங்களையும் ஆகமங்களையும் நன்கு அறிந்துள்ளாய்!உனது அருமை பெருமைகளை தெரிந்து கொண்டவரில்லை. நான் மயங்கிப் போய்தான் உன்னை ஸ்தோத்திரம் செய்ய முற்பட்டேன். இதை பொருத்தருள் அன்னையே!

ஹே தேவி!நீதான் எனக்கு குரு. சிவனும் சக்தியும் நீயே. நீயே எனக்கு தாயும் தந்தையும், நீயே எனது கல்வி. நீயேதான் எனது உறவினரும் கூட. என் மேல்நோக்கிய போக்கும், புத்தியும் எல்லாமும் நீயேதான்


நல்ல புண்யமான, மங்கமான ஹே பவாநி தேவி!நீ இரக்கம் நிரம்பி சிறந்து காப்பவள். ஹிரண்யகர்பர் முதலியோராலும் c நெருங்க முடியாதவள். உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், என்னை ஸம்ஸார பீதியிலிருந்து காப்பாயாக.

இவ்வாறிந்த பெரிய ஸ்ரீபவாநீ புஜங்க ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவருக்கு ஸ்ரீ பவாநீதேவி, தனது பதவியையும் முக்தியையும் செல்வத்தையும் அஷ்டமாஸித்திகளையும் தந்து அருள்வாள்.


எவரெவர், பவாநீ பவாநீ பவாநீ என்று மூன்று முறை மகிழ்ச்சியுடனும் எப்பொழுதும் உரக்கஜபம் செய்கிறார்களோ, அவரனைவருக்கும் துன்பமும், மோஹமும், அச்சமும் எங்கிருந்தும், எவ்வகையிலும், எதன் மூலமும் ஏற்படாது.

Shreemahaaraagyee - this naama also starts with prefix Shree. Devi is the queen of queens , the Supreme ruler or the Empress.


                                💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Comments

ravi said…
8. கீழ்க்கண்டவற்றில் எது தொடக்கமற்றது என்று புரிந்து கொள்ளப்படுகிறது./ which of the following is understood to be beginningless.
*
1/1
a. ஆத்மா / Soul
b. ஜட இயற்கை மற்றும் ஆத்மா / Material nature and soul

c. ஜட இயற்கை / Material nature
d. எதுவுமில்லை / Nothing
Feedback
ப.கீ: 13.20 : ஜடஇயற்கை மற்றும் உயிர்கள் தொடக்கமற்றவை என்று புரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் மாற்றங்கள் மற்றும் குணங்கள் ஜட இயற்கையின் தயாரிப்புகள்.

BG: 13.20: Material nature and the living entities should be understood to be beginningless. Their transformations and the modes of matter are products of material nature.
ravi said…
9. உண்மையான அறிவுள்ளவன் ஜட உலகின் துன்பதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? / What should a transcendentalist do to get rid of the sufferings from the material world?
*
1/1
a. ஆன்மிக பயிற்சி செய்து பகவானை அடையவேண்டும் / Gain spiritual knowledge and practice to attain Bhagavan

b. ஆட்சி முறையை மாற்றவேண்டும் / Change the regime
c. குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் / Give severe punishment for crime
d. நல்ல முறையில் விவசாயம் செய்ய வேண்டும் / Cultivate good agriculture
ravi said…
Feedback
ப.கீ: 12.20
பக்தித் தொண்டு என்னும் இந்த அழிவற்ற பாதையைப் பின்பற்றி, என்னை பரம இலக்காக வைத்து நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்துபவர்கள், எனக்கு மிக மிக பிரியமானவர்கள்.
BG: 12.20
Those who follow this imperishable path of devotional service and who completely engage themselves with faith, making Me the supreme goal, are very, very dear to Me.
ravi said…
10. உடலுக்குள் வசிக்கும் ஜீவாத்தமா முழு உடலையும் எவ்வாறு ஒளிரச் செய்கிறது? / How does the living entity residing within the body illuminate the entire body?
*
1/1
a. சூரிய ஒளி மூலம் / through sunlight
b. நிலா ஒளி மூலம் / through Moonlight
c. உணர்வு மூலம் / Through consciousness

d. கை விளக்கு மூலம் / Through torch light
ravi said…
Feedback
ப.கீ 13. 34: பரதனின் மகனே, சூரியன் மட்டும் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஒளிரச் செய்வதைப் போல, உடலினுள் ஒன்றான ஜீவன் முழு உடலையும் உணர்வால் ஒளிரச் செய்கிறது.

BG 13.34: O son of Bharata, as the sun alone illuminates all this universe, so does the living entity, one within the body, illuminate the entire body by consciousness.
ravi said…
1. உடல், ஆன்மா, பரமாத்மா, மற்றும் விடுதலை முக்திக்கான செயல்முறை பற்றிய சிறு குறிப்புகளை எழுதுங்கள். / Write short notes on body, soul, super soul, and process of liberation.


In the first six chapters of Bhagavad-gītā, the knower of the body, the living entity, and the position by which he can understand the Supreme Lord are described. In the middle six chapters of the Gītā, the Supreme Personality of Godhead and the relationship between the individual soul and the Supersoul in regard to devotional service are described. The superior position of the Supreme Personality of Godhead and the subordinate position of the individual soul are definitely defined in these chapters. The living entities are subordinate under all circumstances, but in their forgetfulness they are suffering. When enlightened by pious activities, they approach the Supreme Lord in different capacities—as the distressed, those in want of money, the inquisitive, and those in search of knowledge. That is also described. Now, starting with the Thirteenth Chapter, how the living entity comes into contact with material nature, how he is delivered by the Supreme Lord through the different methods of fruitive activities, cultivation of knowledge, and the discharge of devotional service are explained. Although the living entity is completely different from the material body, he somehow becomes related. This also is explained.
ravi said…
Feedback
உடல், ஆன்மா, பரமாத்மா, மற்றும் விடுதலை முக்திக்கான செயல்முறை பற்றிய சிறு குறிப்புகளை எழுதுங்கள். / Write short notes on body, soul, super soul, and process of liberation.

1. செயல்களுக்கு களமாக விளங்குவது உடல்

1. குழந்தை பருவத்திலிருந்து முதுமை வரை உடல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தாலும் அதே நபராகவே இருக்கிறார்.
2. கட்டுண்ட ஆத்மாவிற்க்கு உள்ள உடல் ,புலன், மனம் அனைத்தும் ஜட பந்தத்தில் உள்ளது.
3. புலன் இன்பத்தை அனுபவிக்கும் ஆசையின் அடிப்படையில் உடல் செயல்படுவதால் ஒரு குறிப்பிட்ட உடல் அடுத்த பிறவியில் கிடைக்கிறது.

2. ஆத்மா மற்றும் பரமாத்மா

1. தன்னை மட்டும் அறிபவர் ஆத்மா; அனைத்தையும் அறிபவர் பரமாத்மா.
2. பரமாத்மா அனைத்து உடல்களுக்கும் பரம உரிமையாளர். ஆனால் ஆத்மா ஒரு உடலுக்கு மட்டுமே உரிமையாளர்.
3. பரமாத்மா புலன்களைக் கட்டுப் படுத்துபவர் (ரிஷிகேசர்); ஆத்மா என்பது இரண்டாம் நிலை கட்டுப்பாட்டாளர்
4. ஆத்மா தவறிழைக்கக் கூடியது; பரமாத்மா தவறிழைக்காதது.
5. ஆத்மா கீழானவர்; பரமாத்மா உயர்ந்தவர்

3.. எவ்வாறு முக்தியடைய முடியும்?

ஆத்மாவையும் பரமாத்மாவையும் பிரித்தறிந்து , பௌதிக இயற்கையின் பந்தத்திலிருந்து விடுதலை பெறும் செயல்முறை அறிந்தால் முக்தியடைய முடியும்.

விடுதலை பெற, இல்லற வாழ்க்கையை இனிமையாக்க சில செயல்முறைகளை:

1. நம்பிக்கையுடன் சத்சங்கத்திடம் இணைந்து நல்ல விஷயங்களைக் கேட்டல்
2. ஆன்மீக குருவை ஏற்றுக் கொண்டு அவரின் சொற்படி நடந்தல்
3. நான்கு ஒழுக்கக் கட்டுப்பாடுகள்
4.ஹரே கிருஷ்ணா ஜபம்
5.பிரசாதம் ஏற்றுக்கொள்ளுதல்
6. பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் பற்றிய விவாதங்கள்
7. தெய்வ வழிபாடு
ravi said…
2. நல்லவர்களுக்கு பகவான் ஏன் கெடுதல்களை அனுமதிக்கிறார்?/ Why does God sanction sufferings to the good people?
We know the soul is eternal. We are on a journey. And this life is but one small step in that journey. You could think of a motion picture which is on big, big reels of film made up of millions of frames. So our journey is like the entire motion picture and this life is but one frame out of the total movie. So what happens in this frame is a continuation of what happened in the previous frame and what we do in this frame will effect what happens in the next frame. So bad things do not happen to good people. They may have been good in this life but if bad things are happening we can see it is the result of some bad action they have performed in the past; in this life or in previous lives.

There is no such thing as “chance.” In Sanskrit there is not even a word that means “chance.” The concept does not even exist. The closest thing they have is “adrsti” which means “the cause is unknown.” So if something bad and unexpected happens they will not say it happened “by chance” they will say “the cause is unknown.” Which means it happened for some reason but we do not know what that reason is…

As far as a devotee is concerned Krishna is looking after him, that is sure, but how much of a devotee are we really? It is a question of surrender. We may be “a devotee” but we many not be completely surrendered to Krishna. But a devotee is in Krishna’s hands. He does not mind what is Krishna’s plan. If it is Krishna’s plan that he should be stabbed then that is all right. But he will think I am being stabbed because of my sinful actions in the past and it is Krishna’s mercy. I really deserve a lot worse. Krishna has minimized my suffering so much… Somehow a devotee always thinks it is Krishna’s mercy…

But that does not mean that if we are devotees and we see someone coming to stab us we will just put our arms up in the air and say: “It’s Krishna’s mercy” and let him stab us. No. A devotee can fight also. If someone is coming to attack him then he can protect himself of course. After all this body belongs to Krishna and we are using it to serve Krishna so if someone is trying to damage it if they succeed that will make it more difficult for us to serve Krishna. So we have to try and stop them. Also if they are attacking the other devotees we have to stop them.

So we are not, like the Buddhists, non-violent. Sometimes violence is necessary. Actually in the Vedic system there is a whole class of men called ksatryias. That means “to protect from hurt.” So these ksatryias are meant for using violence to protect the other members of the society when it is necessary. Non-violence is not a practical philosophy.
ravi said…
பாலும் தேனும் பாகும் உன் நாமத்தில் கங்கை போல் ஓடும் அதிசயம் என்ன ?

கரும்பும் முக்கணிச் சாறும் கற்கண்டும் உன் நினைவாய் இனிப்பதென் மர்மம் என்ன ?

முந்திரியும் திராட்சையும் பிஸ்தாவும் பச்சை கற்பூரமும் உன் பச்சைப்புடவையில் பட்டம் விடுவதென் ஆர்வம் என்ன ?

பனி மலையும் தவழும் சுடரும் தாரகையும் உன் வருகை கண்டு மகிழ்வதேன் ?

தாய் என்றே நீ வருவதால் உன் மடி நிழல் படர ஆசை கொண்டோம் ...

கொம்பு என்றே நீ இருப்பதால் கொடி நாங்கள் உன் மீதே படர்கின்றோம் ...

பார்வையில் பாசம் பொழிபவளே

பவளச் செவ்வாய் இதழ் கொண்டவளே ..

பைங்கிளியே பசுங்கொடியே பர்வதமே

உன் அருள் இல்லா நாட்கள் என் மீது ஈ மொய்க்கும் நாட்கள் அன்றோ .... 🙌🙌🙌
ravi said…
ஹரே கிருஷ்ணா பக்தர்களே!! 🙏🙏

உங்கள் descriptive பதில்களுக்கான Grading’s பின்வருமாறு;


நாள் 8 - A
நாள் 9 - A
நாள் 10 - A
நாள் 11 - A

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருள் என்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

(A - Very Good , B - Good , C - Ok)
NA- descriptive questions not attended
Blank- quiz not attended

நன்றி
ஹரேகிருஷ்ணா
தமிழ் கீதை குழு
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஞானத்துடன்—அறிவுடன் பார்த்தால்—எல்லாவற்றையும் ஆனந்தமாகவே பார்ப்போம். ஆனந்தம் முடிவில்லாதது. உண்மையாக அறிந்தால் எல்லாம் ஆனந்தம் என்று காண்போம். ஆனந்தம் எல்லையில்லாதது. அது இல்லாத இடமில்லை. ஞானமும் எல்லையில்லாதது. அதுவும் இல்லாத இடமில்லை. எல்லையில்லாத, எங்கும் நிறைந்த பொருள் இரண்டு இருக்கமுடியாது. ஆகையால் ஆனந்தமும் ஞானமும் ஒன்றே. உபநிஷத்தில் ஆனந்தம் தான் பிரம்மம் என்று சொல்லியிருக்கிறது. ஆனந்தம், ஞானம், பிரம்மம், ஆத்மா எல்லாம் ஒன்றே. அது இல்லாத இடமில்லை என்பதால், அதுவே இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் உடைய ஜீவனும்.
ravi said…
நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். இன்னொன்றை ஊமத்தை என்று சொல்கிறோம். ஞானம் என்கிற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அப்படியே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் ஒன்றை ரோஜாவாகவும், மற்றொன்றை இன்னொரு பொருளாகவும் பார்க்கிறோம். உண்மையில் எல்லாம் ஆனந்தம்தான். உண்மை நமக்குப் புலப்படாததற்குக் காரணம், நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும்தான். கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதிபிம்பத்தில் யதார்த்த பாவமே கொஞ்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.
ravi said…
பைத்தியம் பிடித்த ஒருவனிடம் ‘இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டே இரு’ என்றால், அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைத் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடிகிறது. ஸ்தூல வஸ்துவை நம்மால் பிடிக்க முடிகிறது. ஆனால் ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக் கொண்டு இரு என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் படங்கள் ஓடுவதுபோல் ஓட்டமாக ஓடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம். மனம் கட்டப்படுகிற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஐகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஐகாக்ரதை வரும்; ஐகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.
ravi said…
தோஷத்தைப் எப்படிப் போக்குவது? நமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது? பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம்? கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே மறுபடியும் திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதே மாதிரி அஸத் காரியங்களை ஸத்காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயவங்களினாலேயே தொலைக்க வேண்டும். தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு, எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 61* 🌷🌷🌷🌷🌷
ravi said…
திருவாவினன்குடியில் வாழும் குழந்தை வேலாயுதச் சுவாமியான உனது விபூதியை அன்புடன் நான் நெற்றியில் அணிந்து கொள்ள,

பாசவினைகளின் பற்றது நீங்கி, உன் திருவடிகளைப் பெற உனது அருள் கிடைக்கும்!

ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!

வேலாயுதனே! அன்னமும் சொர்ணமும் போன்ற பலவித செல்வங்களும் நீ அன்புடன் என்னைக் காத்து அடியேன் சிறப்புடன் வாழும்படி அருள் புரிவாய்!

அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 225*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 29

*பொருளுரை*
ravi said…
இன்னிக்கு ஸ்லோகம்,

त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं

त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।

वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां

शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९॥

த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யந்வஹம்

த்வாமீஶம் ஶரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ⁴ ।

வீக்ஷாம் மே தி³ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம் தி³வ்யைஶ்சிரம் ப்ரார்தி²தாம்

ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு ॥ 29॥

அப்படீன்னு ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
*லோக கு³ரோ’ –* உலகத்துக்கெல்லாம் குரு. ஜகத்குரு பரமேஸ்வரன் தான். ‘

*மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’* –

என்னோட மனசுக்கு சௌக்யமான உபதேசம் பண்ணு அப்படீன்னு சொல்றார்.

இப்படி பண்ணா நிச்சயமா குருவினுடைய அநுகிரஹம் கிடைக்கும்.💐💐💐
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 226* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத - ஸ்த்ரிககுப்தாம *பவித்ரம்* மம்கலம் பரம் || 7 ||
ravi said…
*63. பவித்ராய நமஹ (Pavitraaya namaha)*
ravi said…
அதனால் தேவர்கள் நெய்யை மீண்டும் உருக்கி அக்னியில் ஊற்றினார்கள்.

இம்முறை அந்த யாகத்தையே அசுத்தம் பிடித்துக் கொண்டது.

அதனால் யாகத்தைச் சரியாக நடத்த முடியாமல் போனது.

இவ்வாறு யாகத்தைப் பிடித்த மாசைப் போக்க வேண்டுமென்று எண்ணிக் கற்றறிந்த அந்தணர்களின் உதவியைத் தேவர்கள் நாடினார்கள்.

அவர்களின் வழிகாட்டுதலின்படி யாகத்தைச் சிரத்தையுடன் செய்தார்கள்.

யாகம் நிறைவடைந்தவுடன் அந்தணர்களுக்குச் சன்மானம் கொடுத்தார்கள்.

அந்தச் சன்மானத்தைப் பெற்றுக் கொண்ட அந்தணர்களின் மனங்களை அசுத்தம் பிடித்துக் கொண்டுவிட்டது.

அதனால் அந்தணர்கள் சிரத்தை இல்லாமல் வெறும் சன்மானத்துக்காகவே யாகம் செய்விக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த மன மாசைப் போக்கவேண்டும் என்பதற்காக, பிரம்மதேவர் ஓர் ஏற்பாடு செய்தார்.

இனி யாகத்தில் சன்மானம் பெறும் அந்தணர்கள் அனைவரும் மந்திரம் சொல்லிக் கொண்டு தான் சன்மானம் பெற வேண்டும்.💐
ravi said…
தினம் ஒரு ஸ்லோகம் 08.06.2022. வைகாசி 25
தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.
99404 47437
ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்
பவாநீ புஜங்கம்
ravi said…
1. ஷடாதார பங்கே
ருஹாந்தர்விராஜத்
ஸுஷும்நாந்தராலேதிதே ஜோலஸந்தீம்
ஸுதாமண்டலம் த்ராவயந்தீம் பிபந்தீம்
ஸுதாமூர்த்திமீடே சிதானந்த ரூபாம்
ravi said…
ஆறு ஆதாரங்களாகிய தாமரை மலருக்குள் ஸுஷும்நா நாடியின் நடுவில் வெகுதேஜஸுடன் விளங்குகின்றவளும், சந்திரமண்டலத்தைக் கரைத்து குடிக்கின்றவளும், ஜ்ஞானானந்த ஸ்வரூபிணியாகவும், அம்ருத வடிவாயுமுள்ள என் தம்பிகையை ஸ்தோத்ரம் செய்கிறேன்.
ravi said…
2.ஜ்வலத்கோடி பாலார்க பாஸாருணாங்கீம்
ஸுலாவண்ய ச்ருங்கார சோபாபிராமாம்
மஹாபத்ம கிஞ்ஜல்க மத்யே விராஜத்
தரிகோணே நிஷண்ணாம் பஜே ஸ்ரீபாவாநீம்

ஜ்வலிக்கும் கோடி பால சூர்யர்கள் ஒளிபோல் செம்மேனியள், நல்ல அழகும், சிருங்காரமும் சேர்ந்திருப்பதால் கவர்ந்திழுக்கும் அழகி, மஹாபத்மத்தின் கிஞ்ஜல்கத்தினிடையே விளங்கும் த்ரிகோணத்தில் அமர்ந்திருக்கும் பவாநீ மாதாவை சேவிக்கிறேன்.
ravi said…
3.க்வணத்கிங்கிணீ நூபுரோத்பாஸி ரத்ன
ப்ரபாலீட லாக்ஷ£ர்த்ர பாதாப்ஜயுக்மம்
அஜேசாச்யுதாத்யை:ஸுரை:ஸேவ்யமானம்
மஹாதேவி மன்மூர்த்நி தே பாவயா

ஒலிக்கும் தண்டை, சதங்கை முதலியவற்றிலுள்ள இரத்தின கற்களின் ஒளி ஊடுருவிய செம்பஞ்சுக் குழம்பினால் ஈரமான உனது திருவடித் தாமரைகள், பிரம்ம-விஷ்ணு-மகேச்வர்களால் சேவிக்கப்படுவதையும், ஹே மஹா தேவி!என் தலையில் இருப்பதையும் பார்த்து மகிழ்கிறேன்.
ravi said…
4.ஸுசோணாம்பரா பத்த நீவி விராஜத்
மஹாரத்ன காஞ்சீகலாபம் நிதம்பம்
ஸ்புரத்தக்ஷிணாவர்த நாபிம் ச திஸ்ரோ
வலீரம்ப தே ரோமராஜிம் பஜேஹம்

ஹே தேவி!செம்பட்டு உடுத்தி முடித்தபின் அதன் மேல் ரத்னம் இழைத்த ஒட்டியாணம் அணிந்த இடுப்பு, பளிச்சிடும் வலம்புரி நாபி, மூவளிகள், உரோமவரிசை இவற்றையும் மனதளவில் சேவிக்கிறேன்.
ravi said…
5.லஸத் வ்ருத்த உத்துங்க மாணிக்ய கும்போ
பமச்ரி ஸ்தன த்வந்த்வ மம்பாம்புஜாக்ஷி
பஜே துக்தபூர்ணாபிராமம் தவேதம்
மஹாஹாரதீப்தம் ஸதா ப்ரஸ்நுதாஸ்யம்

தாமரையிதழ் கண்ணி தாயே!உனது வட்ட வடிவில் உயரமான மாணிக்ய குடம் போன்று அழகிய இரு ஸ்தனங்களையும் சேவிக்கிறேன். அவை நிரம்பிய பாற்குடமாகவே, எப்பொழுதும் கசிவதாகவே முத்து ஹாரங்கள் தொங்குவதாகவே உள்ளன.




6.சிரீஷப்ரசுன்னோல்ல ஸத்பாஹுதண்டை:
ஜ்வலத்பாண கோதண்ட பாசாங்கு சைஸ்ச
சலத் கங்கணோதார கேயூர பூஷோ
ஜ்வலத்பிர் லஸந்தீம் பஜே ஸ்ரீபவானீ.

ஸ்ரீ பவாநீ மாதாவின் நீண்ட கைகள், வாகைப்பூ சுற்றிய தாயும், அம்பு, வில், பாசம், அங்குசம் இவை ளிர்வதாயும் குலுங்கும் கை வளையல்களும், பெரிய தோளிவாளைகளும் கொண்டு தேவியை மேலும் அழகு படுத்துகின்றன. அத்தகைய பவாநீயை சேவிக்கிறேன்.
ravi said…
7.சரத்பூர்ண சந்த்ரப்ரபாபூர்ண பிம்பா
தரஸ்மேர வக்த்ராரவிந்தாம் ஸுசாந்தாம்
ஸுரத்னாவளீ ஹார தாடங்க சோபாம்
மஹாஸுப்ரஸன்னாம் பஜே ஸ்ரீபவாநீம்
ஸ்ரீ பவாநீ தேவி, மாணிக்யக் கற்கள் பதித்த ஹாரம் காதோலை இவைகளால் பளபளக்கும் சாந்தமான முகப்பொளிவுடன் இருக்கிறாள். சரத்காலத்து பூர்ண சந்திர ஒளி நிரம்பிய கோவைப்பழ உதட்டின் மேல் தவழும் புன் முறுவல் வேறு அவள் தாமரை முகத்தில் பரவியுள்ளது. அத்தகைய ஸ்ரீபவாநீயை சேவிக்கிறேன்.


8.ஸுநாஸாபுடம் ஸுந்தர ப்ரூலலாடம்
தவெளஷ்டச்ரியம் தானதக்ஷம் கடாக்ஷம்
லலாடோல்லஸத் கந்த கஸ்தூரி பூஷம்
ஸ்புரத்ஸ்ரீ முகாம்போஜ மீடேஹமம்ப

ஹே தாயே!நல்ல நாசியும், அழகிய புருவம், நெற்றி இவற்றையுடையதும், உதட்டு அழகை உடையதும், வேண்டியதைத் தரும் கடாக்ஷம், நெற்றியில் சந்தனம், கஸ்தூரி திலகம் இவற்றைக் கொண்டதுமான உனது முகத்தை சேவிக்கிறேன்.
ravi said…
9.சலத்குந்தலாந்தர் ப்ரமத் ப்ருங்க ப்ருந்தம்
கனஸ்நிக் ததம்ல்ல பூஷோஜ்வலம் தே
ஸ்புரன்மௌலி மாணிக்ய பத்தேந்துரேகா
விலாஸோல்லஸத் திவ்ய மூர்தானமீடே

ஹே தாயே! உனது உச்சிப்பூ வைரத்துடன் இணைத்து கட்டிய சந்திரப்பிறையழகும் சேர்ந்துள்ள தீரிய தலையை சேவிக்கிறேன். அது கனமாயும், மழமழப்பாயுமுள்ள கொண்டையையுடையதாயும், சிதறியாடும் பொடிக் கேசத்தினிடையே மொய்க்கும் வண்டுகளால் அழகாயுமுள்ளது.


10.இதிஸ்ரீபவாநி ஸ்வரூபம் தவேதம்
ப்ரபஞ்சாத்பரம் சாதிஸூக்ஷ்மம் ப்ரஸன்னம்
ஸ்புரத்வம்ப டிம்பஸ்யமே ஹ்ருத்ஸரோஜே
ஸதா வாங்மயம் ஸர்வதே ஜோமயம் ச.

ஹே தாயே பவாநி!உலகைக் கடந்த க நுண்ணிய ஆனால் ககத் தெளிவான உனது வடிவம் இந்த சிறியேனுடைய ஹ்ருதயத்தாமரையில் தோன்றட்டும். அந்த வடிவம் எப்பொழுதும் ஸரஸ்வதீமயமாயும், லக்ஷ்மீமயமாயும் இருப்பதுதானே!
ravi said…
11.கணேசாணி மாத்யாகிலை:சக்திப்ருந்தைர்
வ்ருதாம் வை ஸ்புரச்சக்ரராஜோல்லஸந்தீம்
பராம் ராஜராஜேச்வரி, த்ரைபுரித்வாம்
சிவாங்கோபரி ஸ்தாம்சிவம் பாவயாமி

ஹே ராஜராஜேச்வரீ!திருபுரே!சிவமயமான கட்டில் கொண்டு பரசிவையான உன்னை தியானிக்கிறேன். , கணேசர், அணிமாதி சித்திகள், சக்திகள் ஆகியவற்றால் சூழப்பெற்று, சக்ரராஜ ஸ்ரீசக்ரத்தில் விளங்குகிறாய்.




12.த்வமர்கஸ்த்வமிந்துஸ்த்வமக்னித்வ மாபஸ்
த்வமாகாச பூவாயவஸ்த்வம் மஹத்வம்
த்வதந்யோ ந கஸ்சித் ப்ரபஞ்சோஸ்தி ஸர்வம்
த்வமானந்தஸம் வித்ஸ்வரூபாம் பஜேஅஹம்

ஹே தாயே! நீயே சூர்யன், நீயே சந்திரன், நீதான் அக்னி, தண்ணீரும் நீயேதான். நீயே ஆகாயம், பிரதீவி, வாயு ஆகியவற்றையும், ஏன் மஹத்தும் நீதானே:நீயன்றி வேறு ப்ரபஞ்சம்தான் ஏது?ஆனந்த-ஞான-வடிவான உன்னைத்தான் நான் ஸேவிக்கிறேன்.
ravi said…
13.ச்ருதீநாமகம்யே ஸுவேதாகமஜ்ஞா
மஹிம்நோ நஜாநந்திபாரம் தவாம்ப
ஸ்துதிம் கர்துமிச்சா மிதே த்வம் பவாநி
க்ஷமஸ்வேதமத்ர ப்ரமுக்த:கிலாஹம்

வேதங்கள்கூட நெருங்கவில்லை உன்னை. ஹே பவாநீ!நீயோ வேதங்களையும் ஆகமங்களையும் நன்கு அறிந்துள்ளாய்!உனது அருமை பெருமைகளை தெரிந்து கொண்டவரில்லை. நான் மயங்கிப் போய்தான் உன்னை ஸ்தோத்திரம் செய்ய முற்பட்டேன். இதை c பொருத்தருள் அன்னையே!


14.குருஸ்த்வம் சிவஸ்த்வம் ச சக்திஸ்த்வமேவ
த்வமேவாஸிமாதா பிதா ச த்வமேவ
த்வமேவாஸி வித்யா த்வமேவாஸி பந்து:
கதிர்மே மதிர்தேவி ஸர்வம் த்வமேவ

ஹே தேவி!நீதான் எனக்கு குரு. சிவனும் சக்தியும் நீயே. நீயே எனக்கு தாயும் தந்தையும், நீயே எனது கல்வி. நீயேதான் எனது உறவினரும் கூட. என் மேல்நோக்கிய போக்கும், புத்தியும் எல்லாமும் நீயேதான்!


15.சரண்யே வரேண்யே ஸுகாருண்ய மூர்த்தே
ஹிரண்யோதராத்யை ரகண்யே ஸுபுண்யே
பவாரண்யபீதேஸ்ச மாம்பாஹி பத்ரே
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவாநி

நல்ல புண்யமான, மங்கமான ஹே பவாநி தேவி!நீ இரக்கம் நிரம்பி சிறந்து காப்பவள். ஹிரண்யகர்பர் முதலியோராலும் c நெருங்க முடியாதவள்.

உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், என்னை ஸம்ஸார பீதியிலிருந்து காப்பாயாக.

16.இதீமாம் மஹத்ஸ்ரீ பவாநீ புஜங்க
ஸ்துதிம்ய:படேத் பக்தியுக்தஸ்ச தஸ்மை
ஸ்வகீயம் பதம் சாச்வதம் வேதஸாரம்
ச்ரியம் சாஷ்டஸித்திம் பவாநீ ததாதி

இவ்வாறிந்த பெரிய ஸ்ரீபவாநீ புஜங்க ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவருக்கு ஸ்ரீ பவாநீதேவி, தனது பதவியையும் முக்தியையும் செல்வத்தையும் அஷ்டமாஸித்திகளையும் தந்து அருள்வாள்.


17.பவானி பவானி பவானி த்ரிவாரம்
உதாரம்முதா ஸர்வதா யே ஜபந்தி
நசோகோ நமோஹோ நபாபம் நபீதி:
கதாசித் கதஞ்சித் குதஸ்சித் ஜனாநாம்

எவரெவர், பவாநீ பவாநீ பவாநீ என்று மூன்று முறை மகிழ்ச்சியுடனும் எப்பொழுதும் உரக்கஜபம் செய்கிறார்களோ, அவரனைவருக்கும் துன்பமும், மோஹமும், அச்சமும் எங்கிருந்தும், எவ்வகையிலும், எதன் மூலமும் ஏற்படாது.
ravi said…
தெய்வத்தின் குரல்.*



உள்முகத் தெய்வமணி





ஈச்வரனுக்குத் திசைக்கொன்றாக ஒரு முகம், அது போக மேலே பார்க்க ஒன்று, அதற்கு ஊர்த்வ முகம் என்று பேர் சொன்னேனோல்லியோ? அதே மாதிரி இந்த ஆறாவது முகம் அதோமுகம். மேலே பார்ப்பதால் ‘ஊர்த்வம்’. கீழே பார்ப்பதால் ‘அதோ’. ’அதோ கதி’ என்கிறோம். அப்படியென்றால் மேல்லோகம் என்கிற மோக்ஷத்திற்கு வழியில்லாமல், கீழ் லோகமான நரகத்திற்கு வழி. ஆனால் ஸ்வாமியின் ‘அதோமுகம்’ என்கிறபோது இப்படி கெட்டதான, தாழ்ச்சியான அர்த்தமில்லை! ரொம்பவும் உசந்த அர்த்தமே.
ravi said…
மேலேயுள்ள ஆகாசம் பரவெளி. ‘பரம்’ என்றால் உயர இருப்பது, உயர்வானது; உயர்ந்த தத்வத்துக்கு ஸ்தூலமான ரூபகமாக இருப்பது அது. அகண்ட ப்ரஹ்மத்துக்கு ஸ்தூல ரூபகமே வெளியிலே தெரிகிற அகண்ட ஆகாசம். அது பரம், பரம பதம். அதைப் பார்க்கிற ஈச்வரனின் ஐந்தாவது முகத்துக்கான மூர்த்தியான ஸதாசிவத்துக்கும் ப்ரஹம்மாகச் சிறப்பு சொன்னேன். ஸ்வாமி அப்படிப் பர தத்வமாக, பரம தத்வமாக இருப்பதாலேயே ‘பரமசிவன்’, ‘பரமசிவம்’ என்பது. எப்படி வேறு எந்த தெய்வத்துக்கும் ‘ஸதா’ prefix (முன்னடை) இல்லையோ, அப்படியே இந்த ‘பரம’வும் சிவன் ஒருத்தனுக்குத்தான்! சின்னக் குழந்தைகள் கூடப் ‘பரமசிவன் – பார்வதி’ என்றே சொல்கின்றன! சிவனுக்கே பொதுவில் அதிகம் வழங்குகிற பேரான ’ஈச்வர’னுக்கும் பரம சேர்த்துப் ‘பரமேச்வரன்’ என்கிறோம்….
ravi said…
ராமனும் கரன் & தூஷணனும்*🤝🤝

*கரன் & தூஷணன் சொன்ன கீதை* 🙏🙏
ravi said…
*ராமா* !!

ராவணனின் தம்பிகள் நாங்கள் ....

ஜனஸ்தானதின் அதிபதிகள் நாங்கள் ... இதுவரை தோல்வி கண்டதில்லை இனிமேலும் காணப்போவதில்லை

எங்கள் தங்கை என் பாவம் செய்தாள் ?

ஏன் அவள் அடைந்தாள் இந்த மானபங்கம் ... ?

அரக்கர்கள் நாங்கள் ...

ஆசைக்கு அளவு இல்லை

அண்டங்கள் கொண்டு குவித்தாலும்

ஆசை தனை மூட முடியுமோ ? சிற்பமாய் நிற்க நாங்கள் என்ன தெய்வமோ ?

சிரித்தான் ராமன் ....

காமனை எரித்தவன் தனை உங்கள் கண்டத்தில் வைத்தால்

அகன்று விடும் காம ஆசைகள் அனைத்தும் ...

அகிலாண்டமும் ஒளி வீசும் அவன் ஒளிர்த்திருமேனி தனில் மனம் வைத்தால் ...

களியாகும் கரை புரளும் வெளியாகி விடும் ..

எங்கனே மறந்தீர் அவன் விரகினையே ??

காமம் எனும் தீயில் ஆசை எனும் நெய் வார்த்தாள் உன் தங்கை ...

வளர்ந்த தீ அது உங்கள் தேசம் தனை சேதம் செய்து விடும் ...

பேதம் பார்க்காதே வேதம் ஓதும் நீங்கள் ஏதும் அறியா பிதற்றல் ஏனோ ?

ராமா உணர்ந்தோம் ... உடம்பு அண்ணன் வளர்த்தான் ... அதிலே பகை எனும் விஷம் கொடுத்தான் .. வந்தவன் பரமனே என்றாலும் பார்க்காதே ... பறந்து பறந்து சண்டை இடு என்றான் .. பருந்துகள் செய்த பாக்கியம் பெற்றோம் இல்லை நாங்கள் ...

காமன் மட்டும் சிவனால் அழியவில்லை ... அவன் எய்த அம்புகளும் பொசுங்கி போயின

சேர்த்துக்கொள் ராமா எங்களை உன் திருவடியில் ... 👣

எய்த அம்பு கனலாய் கரன் தூஷணன் கரம் பற்றியதே ... வலம் வந்தனர் தனை நாடி வந்த அக்னியை... தங்கைக்கு அக்னி சாட்சியாய் திருமணம் புரிந்தவர்கள் ...

ராமன் சொன்னான் ... படித்தவர்கள் நீங்கள்

தானவர்கள் ஆனது விதியன்றோ ...

மீண்டும் வானவர் ஆக வழி ஒன்று சொல்வேன் ..

எடுங்கள் பிறவி ஒன்றை காஞ்சி நகர் தனில் ...

அங்கே ஜொலிக்கும் ஜ்வாலை தனில் சேரவே தினம் சொல்லுங்கள் ஹர ஹர சங்கர ஜய ஐய சங்கர ...

இதற்கு மேலும் ராம் நாமம் சிறப்பு இல்லை .... 🙏🙏🙏🔥🔥
Shivaji said…
Arumai . 🌹🌹🙏🙏
Ramesh said…
முத்து மாலை கோர்க்கும்போது நடுநடுவே மாணிக்கத்தையும் வைத்துக்கோர்த்த பாமாலை..முடிவில் முத்தாய்ப்பாக ஒரு வைரம்..ஆஹா...
Kousalya said…
அற்புதம்.... கவிக்குமார் அவர்களின் பாமாலைக்கு வர்ணனையக நவரத்ன மாலை மிகவும் அருமை.... பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🌹🌹
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 252* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*83*
*வது திருநாமம்*
ravi said…
*83* ब्रह्मोपेन्द्रमहेन्द्रादिदेवसंस्तुतवैभवा - *ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துதவைபவா ---*💐💐💐
ravi said…
ஆணவம் ஆக்கிரமிக்க, மூவுலகையும் வெல்ல உத்திரகுரு என்னுமிடத்தில் தேவர்களை எதிர்த்தான்..

போர் வலுத்து கைலாசம் வரை சென்று வென்றுவிட்டான் பண்டாசுரன்.

அவனை வெல்ல ராஜ
ராஜேஸ்வரி என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதியுங்கள் என ரிஷி ஆங்கிரஸர் கூற,

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றுகூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி தாந்த்ரீக முறைப்படி மகாயாகம் செய்ய யாகத்தின் பலனாக யாகத்தீயிலிருந்து பேரொளியோடு *ராஜராஜேஸ்வரி* தோன்றினாள்.

பண்டாசுரன் மேல் போர் தொடுத்து அவனை அழித்தாள்
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 252* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌65

*65 தேவியின் தாம்பூல மஹிமை*

*வெற்றி, வாக்விலாஸம்*

ரணே ஜித்வா தைத்யா னபஹ்ருத ஶிரஸ்த்ரை: கவஶிபி:

நிவ்ருத்தைஶ் சண்டாம்ஶ த்ரிபுரஹர நிர்மால்ய விமுகை:

விஶாகேந்த்ரோபேந்த்ரை: ஶஶிவிஶத கர்ப்பூரஶகலா

விலீயந்தே மாதஸ்தவ வதன தாம்பூல கபலா 65
ravi said…
*மாத* : - தாயே!,

*ரணே* - போரில்;

*தைத்யான்* - அசுரர்கள்;

*ஜித்வா* - வென்று;

*நிவ்ருத்தை* : -

திரும்பியவர்கள்;

*அபஹ்ருத-சிரஸ்த்ரை* : - தலைப்பாகை இல்லாதவர்கள்;

*கவசிபி* : - கவசமணிந்தவர்கள்;

*சண்டாம்ச* - சண்டிகேஸ்வரனுடைய பாகமான;

*த்ரிபுரஹர நிர்மால்ய -* பரமசிவனது நிர்மால்யம்;

*விமுகை* : - விருப்பமின்மை;

*விசாக* -இந்த்ர-

*உபேந்த்ர* - விசாக நக்ஷத்திரத்தில் பிறந்த ஸுப்ரமண்யன், இந்திரன்,

உபேந்திரன் என்று கூறப்படும் மஹாவிஷ்ணு;

*சசி விசத* - சந்திரன் போன்ற வெண்மையான;

*கர்ப்பூரசகலா* - பச்சைக் கர்பூரத்துடன் கூடிய;

*தவ* - உன்னுடைய;

*வதன தாம்பூல கபலா* - வாயில் மெல்லப்பட்ட தாம்பூல கவளங்கள்;

*விலீயந்தே* - உட்கொள்ளுதல்
ravi said…
பதம் பிரித்து:

அற்றை அருள் சிவ சேடம் சண்டன் உணவு

அது பொறாது ஆவல் தீரக்

கற்றை மலர்க் குழல் உமை நின் கருப்பூர
சகல மதிச் சகலம் போல

உற்ற திருத்தம்பலத்து ஒரு சகலமேனும்

இனிதுண்டு வாழப்
பெற்றிலரேல்

அமரரெனும் பெயர் பெறவும்
இருந்தனரோ
பிழைப்பில் விண்ணோர்🙏🙏🙏
ravi said…
அருள் தரும் சிவபெருமானது எச்சம் (மீதம் - உண்டு அனுபவித்ததன் மிச்சம்)
சண்டசேசுவரரது உணவு/உடைமை.

அது தேவர்கள் பெறவில்லை.

அவ்வாறு அதனைப் பெறாது ஆனால் தங்கள் ஆவல் தீர, மலர்க்கற்றைகள் கூடிய திருக்குழல் (முடி) உடைய உமையான உனது கர்ப்பூர மணம் வீசும் நிலவின் வட்டம் போன்ற முகத்தில்

உற்ற திருத்தாம்பூலத்து ஒரு துளியேனும் பெற்று இனிது உண்டு வாழப் வேறு கதியற்ற இந்தத் தேவர்கள் பெறவில்லையென்றால்

அவர்கள் என்றும் அழியாத அமரர்கள் என்ற பெயர் பெறவும் இயலுமா அம்மா?🙏
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 29*👌
ravi said…
ஆறாவது ஸ்லோகம்

नाहं वन्दे तव चरणयोर्द्वन्द्वमद्वन्द्वहेतोः कुम्भीपाकं गुरुमपि हरे नारकं नापनेतुम् ।

रम्यारामामृदुतनुलता नन्दने नापि रन्तुं भावे भावे हृदयभवने भावयेयं भवन्तम् ॥ ६ ॥

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வமத்³வந்த்³வஹேதோ:

கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபனேதும் ।

ரம்யாராமாம்ருʼது³தனுலதா நந்த³னே நாபி ரந்தும்

பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³யப⁴வனே பா⁴வயேயம் ப⁴வந்தம் ॥ 6 ॥
ravi said…
இந்த மாதிரி *பதாம்போஜ மது* – பாதத் தாமரையிலிருந்து வெளி வரும் அந்த மதுவைப் பருகினவர்கள் ரொம்ப தெளிவா இருப்பா.

அதைப் பருகாதவர்கள் கலக்கமா இருப்பான்னு அவர் சொல்றா.

ஆனா உலகத்தவர்கள் என்ன சொல்வா?

‘அவன் ஒரு மாதிரி. அவன் என்னமோ புஸ்தகத்தை வெச்சு எப்பப் பார் படிச்சுண்டே இருப்பான். பிழைக்கத் தெரியாதவன்’ அப்படீன்னு தான் உலகத்தவர்கள் சொல்வா.

‘நாம எல்லாம் ரொம்ப smart ஆ இருக்கோம். அவன் ஐயோ பாவம்’ னு சொல்வா.

அந்த பகவானுடைய ருசியைக் கண்டவர்கள் தான் அதை அனுபவிச்சிண்டு ஏகாந்தத்துல இருப்பா.

ஏதோ பாக்யவசத்துனால யாராவது வந்தா அவாளுக்கு வழி காண்பிப்பா.

அது மாதிரி இந்த ஸ்லோகத்துல குலசேகர கவி சொல்றது ‘எனக்கு உன்னை தியானம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கணும். இது ஒண்ணுதான் வேணும். இதுனால எனக்கு ஒரு உலக சுகங்களோ, இல்ல கஷ்ட நிவர்த்தியோ, இல்லை மோக்ஷமோ கூட வேண்டாம்’ என்றார்.

இது தான் உத்தம பக்தி.

அடுத்த ஸ்லோகத்துலயும் எனக்கு தர்மார்த்தகாமமோக்ஷம் எதுவும் வேண்டாம். பக்திதான் வேணும்னு சொல்றார். ‘ *நாஸ்தா தர்மே’* ங்கிற ஸ்லோகத்தை நாளைக்குப் பாப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸுப்ரஹ்மண்யர் கோடி கோடி மன்மத லாவண்யராக இருப்பதுதான் ஆச்சர்யம். இவர் யார்? பரமேச்வரனின் புத்ரர். அந்தப் பரமேச்வரனோ மன்மதனை அப்படியே பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே அவர் மன்மதனைப் பொசுக்கினாரோ அதே நேத்ராக்னியிலிருந்து உண்டானவர் ஸுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தியாக ஆன ஸ்வரூபம் என்று தத்வார்த்தம். தத்வார்த்தம் இருக்கட்டும். நான் வேடிக்கையாகச் சொல்ல வந்தேன் – மன்மதனை தஹனம் பண்ணினவரின் பிள்ளை கோடி கோடி மன்மதனாக இருக்கிறார்!
ravi said…
குமாரன் என்பது அவருக்கு ஒரு விசேஷப் பேர் அல்லவா? தெற்கே எப்படிப் பிள்ளை என்றாலே பார்வதி பரமேச்வரர்களின் மூத்த பிள்ளைதான் என்று வைத்துப் ‘பிள்ளையார்’ என்கிறோமோ, அப்படி வடக்கே இளைய பிள்ளையைத்தான் கொண்டாடி ‘குமார்’, ‘குமார்’, என்றே சொல்கிறார்கள். நாமுங்கூட குமாரஸ்வாமி, குமரன் என்று சொல்கிறோம். இப்போது புருஷ ப்ரஜைகளில் பாதிப் பேருக்குப் பேர் ‘குமார்’தான்! ‘குமார’ சப்தம் குறிப்பாக ஸுப்ரஹ்மண்யருக்கே உரியதாக இருக்கிறது.
ravi said…
வால்மீகி ராமாயணத்தில் விச்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுக்கு ஸுப்ரஹ்மண்ய அவதாரக் கதையைச் சொல்லி முடிக்கும் போது இந்தக் ‘குமார ஸம்பவ’க் கதையைக் கேட்டால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று சொன்னதாக வருகிறது.
ravi said…
ஆதி கவி வாக்கில் வந்த ‘குமார ஸம்பவம்’ என்ற வார்த்தையையே காளிதாஸர் தம்முடைய காவ்யத்துக்குத் தலைப்பாகப் போட்டார்.
ravi said…
குமாரன் என்ற பேர் விசேஷம் இருக்கட்டும். அதை எதற்குச் சொல்ல வந்தேனென்றால், அதற்குப் பிள்ளை என்ற அர்த்தத்தோடு மன்மத ஸம்பந்தமாக இன்னோர் அர்த்தமும் சொல்வதுண்டு. மன்மதனுக்கு ‘மாரன்’ என்றும் ஒரு பேர் உண்டல்லவா? மாரனுக்கு வெட்கத்தை உண்டாக்குகிறவன், அதாவது மாரனைப் பழிக்கும் மஹா அழகன் தான் குமாரன்: ‘குத்ஸித மார: - குமார:’. குமாரன் என்றாலே மன்மத மன்மதன், மநஸிஜ கோடி கோடி லாவண்யன் என்று அர்த்தம் ஏற்பட்டுவிடுகிறது.
ravi said…
தமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் – முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்து போன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக் கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால்தான் ஸுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத்தானே இருப்பார்? ‘மநஸிஜ கோடி கோடி லாவண்யாய.’
(இன்று வைகாசி விசாகம்)
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏


"வெடிச் சத்தமும், வேத கோஷமும்"

ஸ்வாமிகளின் குழந்தை விளையாட்டும், பண்ணிய அற்புதமும்.

(படித்தது,கேட்டது,யாரோ சொன்னது என்பதன்று இது. நேரில் கண்டது, நெகிழ்ந்தது" - டாக்டர் சுதா சேஷய்யன்)


கட்டுரையாளர்-டாக்டர் சுதா சேஷய்யன்.
தினமணி வெள்ளி மணி 19-02-2016
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ravi said…
1985-ஆம் ஆண்டு, தீபாவளிக்கு முந்தைய நாள் காஞ்சிபுரத்தில் கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு தீபாவளியன்று ஸ்ரீமடம் சென்று தரிசித்தபோது ஏற்பட்ட அனுபவம். ஆனந்தம் அற்புதம்.


அன்று தீபாவளி என்பதால் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்கள்; தீபாவளி மலர்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பத்திரிகைக்காரர்கள் எல்லோருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஸ்ரீ மஹா பெரியவா.


தட்டுத்தட்டாகப் பட்டாசுகள்.தாம்பாளம் தாம்பாளமாகப் பழங்கள் -காணிக்கையாய் வந்தவையெல்லாம் ஸ்ரீ மஹா பெரியவர்கள் அருகில். தாயாரோடும் தந்தையோடும் நின்று தரிசித்துக் கொண்டிருந்த அடியேனுடைய அனுபவம் இது!
ravi said…
வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நிறைய சிறுவர்கள் வந்திருந்தார்கள்.(அவர்கள் எந்த ஊர், எந்த பாடசாலை என்றெல்லாம் விசாரிக்கத் தோன்றாத வயசு)


ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களை வேதம் ஓதச் சொன்னார்கள்.அவர்களும் செய்தார்கள். நிறைவடைந்தவுடன், அதில் ஒரு சிறுவன் சொன்னது;


"ஸ்வாமி நான் வேதம் படிக்கிறேன். உச்சரிப்புக்கும், ஸ்பஷ்டத்துக்கும் குரல் ரொம்ப முக்கியம். ஆனால் என் குரல், சித்த நாழி கழிச்சு கட்டிக்கிறது. சத்தமே வருவதில்லை"-உடைந்து போய் கண்ணீரோடு கூறினான்.


ஸ்வாமி காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியவில்லை.அவர்கள் பட்டாசுக் கட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ravi said…
அந்தச் சிறுவன் திரும்பத் திரும்பச் சொல்லி வருந்தி "இதப் பாருங்கோ ஸ்வாமி.குரல் என்னாறது பாருங்கோ.." அடுத்து அந்தச் சிறுவன் என்ன பேசினான் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அவன் வாய் அசைந்தது. ஆனால் சத்தம் கேட்கவில்லை. தொடர்ந்து என்னமோ சொல்லிக் கொண்டே போகிறான்.ஆனால் ஒன்றும் வெளிவரவில்லை.


ஸ்வாமிகள் வேறோதோ யோசித்துக் கொண்டிருந்தார்கள்.


பல நிமிடங்கள் ஓடி விட்டன. கூட்டம் வரவர, வேத பாடசாலை மாணாக்கர்கள் நகரத் தொடங்கினார்கள். 'பிரசாதம்' இழுத்தார்கள்.


ஸ்வாமி கையில் சில பழங்கள்.அவற்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.


பக்கத்திலிருந்த ஸ்ரீ மடத்துக்காரர் ஒருவர் (கூட்டத்தைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்) "இவர்களுக்கு பிரசாதம் - பழம் கொடுத்துடலாமா" என்றார்.
ravi said…
பக்கத்திலிருந்த ஸ்ரீ மடத்துக்காரர் ஒருவர் (கூட்டத்தைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்) "இவர்களுக்கு பிரசாதம் - பழம் கொடுத்துடலாமா" என்றார்.


நிமிர்ந்து பார்த்து "எனக்கும் வேண்டும்" என்றார்கள் பெரியவா. அந்த மடத்துக்காரர் பட்டாசுத் தட்டில் கை வைக்கப் போக விருட்டென்று அதையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். "எனக்குடா" என்று குழந்தை போல் சொன்னார்கள்.


இப்படியே ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் இழுப்பதும்.... குழந்தை போல் விளையாடுவதும் தொடர்ந்தது.


15 நிமிடங்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டும்.மெல்ல நகரத் தொடங்கிவிட்டார்கள் மாணாக்கர்கள். இரண்டடி தாண்டி விட்டுத் திரும்பிப் பார்த்த அந்தக் குறிப்பிட்ட சிறுவனின் கையில் திடீரென்று ஒரு சர வெடியைக் கொடுத்தார்கள் ஸ்வாமிகள்.அவன் லேசாகத் தலையை சாய்ந்து கொண்டு நகர்ந்தான்


அவன் தள்ளிப் போய்விட்டான்.பக்கத்தில் இருந்தவனிடம் சொல்லி அவனைக் கூப்பிட்டார்கள் ஸ்வாமிகள்.
ravi said…
இப்போ வேதம் சொல்லு" ஏதோவொரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்லி-அதைச் சொல்லச் சொன்னார்கள்.


இடி முழக்கமாய் ஒலித்தது குரல்.


அதற்கு முன்னாலிருந்த அந்தச் சிறுவனின் குரல் போலின்றி புதியதாய்....பெரியதாய்....தெளிவாய்... முழங்கியது வேத கோஷம்.


"இப்ப எல்லாம் சரியாய்ப் போச்சு போ" ஸ்வாமிகள் அப்பவும் கையில் பழங்களை வைத்துக். கொண்டு குழந்தை மாதிரி விளையாடிக் கொண்டிருந்தார்கள்

மகாஸ்வாமியின் திருவிளையாடல்களை யார் அறிவார்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
ravi said…
சங்கராம்ருதம் - 178

ஒரு முறை பக்தர் ஒருவர் பெரியவா விடம், "சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே.... காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி புரியத் தொடங்கும்.. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும்..
அது வரை பொறுமையுடன் இருக்கத் தானே வேண்டும்? வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்..
சுவாமிகள் கனிவுடன், "உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?" என்று கேட்டார்.
பக்தர், " தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே..." என்றார்..
"எந்த வேளையில் கடைவார்கள்... காலையிலா, மத்தியானமா?"
"அதிகாலையில் தான் சுவாமி"
" மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்..
" அதிகாலை சுபமான வேளை. அந் நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சி யாக இருக்கும்.. அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும்.. உருகாமல் கெட்டியாகவும் இருக்கும்.. சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு.. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும்... " என்று கூறி நிறுத்திய பெரியவா
மேலும் தொடர்ந்தார், " அது போல, வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலை மோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது.. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது.. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி எனும்வெண்ணெய் சுலபமாகத் திரளும்.. "
ravi said…
இதனால், பெற்றோர் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.. இந்தப் பழக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்.. துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும்..
அதனால் பக்திக்கு ஏற்ற வயது இளமைப் பருவம் தான்.. புரிகிறதா? " என்று கனிவாகக் கூறினார் பெரியவா..
பக்தரும் இதயம் கனிந்து, கண்ணீர் மல்க பெரியவா பாதம் பணிந்து நமஸ்கரித்தார்..

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
ravi said…
வைகாசி விசாகம்: பகை நீங்கி மன நிம்மதி பெருக அருள்வார் முருகன் - கடைப்பிடிப்பது எப்படி?
ravi said…
இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் குருபகவானுக்குரிய இரண்டாவது நட்சத்திரம் விசாகம். இதுவே முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமும் கூட. இந்தப் பிரபஞ்சத்தின் குருவாகத் திகழ்பவர் சிவபெருமான். அந்த சிவபெருமானுக்கே குருவாக விளங்கி 'தகப்பன் சாமி' எனத் திகழ்ந்து குருவுக்கே குருவாக விளங்கியே பேறு பெற்றவர் முருகப்பெருமான்.

முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், விசாக நட்சத்திரம் ஆகியன. இவை தவிர்த்து தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டிப் பெருவிழா ஆகியவை மிகவும் முக்கியமானவை. அவற்றுள் தனிச்சிறப்போடு திகழும் தன்மை கொண்டது வைகாசி விசாகம்.
ravi said…
மனமே முருகனின் மயில்வாகனம்

பொதுவாக நம் நாட்டில் பௌர்ணமி நாள் எல்லாம் விழாகாலமாகவே திகழும். அவ்வாறு வைகாசி மாதம் வரும் பௌர்ணமி நாளே வைகாசி விசாகம் என்று கொண்டாடப்படும். முருகப்பெருமானோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் மூன்று. அவை: விசாகம், கார்த்திகை, உத்திரம். இவை முறையே வைகாசி, கார்த்திகை, பங்குனி ஆகிய மாதங்களில் முழுநிலவு நாளை ஒட்டியே வரும். இந்த மூன்றுமே முருகனை வழிபட உகந்த திருநாள்களாகும். முழு நிலவு என்பது சந்திரன் தன் முழு ஒளியோடு திகழும் நாள். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் மனதின் அதிபதி. மனம் முழுமையும் இருள் இன்றி பூரணமான ஒளியோடு திகழ வேண்டும் என்றால் பௌர்ணமி நாளில் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் அவனை வழிபட்டால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்தொளி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ravi said…
வினைகள் தீர்க்கும் விசாகன்

முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் அந்தத் திருநாமம் வந்தது என்று சொல்வார்கள். அதேவேளை சாகன் என்றால் சஞ்சரிப்பவர் - வி என்றால் பறவை என்று பொருள். விசாகன் என்றால் பறவையின் மீதேறி சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில் என்னும் பறவையின் மீதேறி முருகப்பெருமான் சஞ்சரிப்பவர் என்பதே விசாகன் என்பதன் பொருள்.
முருகனை மயில்மீது ஏறிவரும் பெருமானாக வழிபடுவதன் தத்துவம் தனித்துவமானது. முருகனுக்கு இரண்டு மயில்கள். ஒன்று தேவ மயில். சூரபத்மனோடு புரிந்த யுத்தத்தில் இந்திரனே மயிலாக வந்து முருகனுக்கு வாகனமாக மாறினார். முருகனுக்கு எப்போதும் தேவர்குலத் தலைவனைத் தன் வாகனமாக மாற்றிக்கொள்ள விரும்பாத முருகப்பெருமான், அசுரனுடனான யுத்தத்தின் முடிவில் சூரபத்மனை சம்காரம் செய்யாமல் மயிலும் சேவலுமாக மாற்றினார். அந்த மயிலை அசுரமயில் என்பார்கள். அசுர குணம் என்பது அடங்காமல் இருப்பது. அடங்காத அசுரனையும் முருகன் தன் கருணையினால் அடக்கி ஆள்வார் என்பதுதான் அசுரமயிலின் தத்துவம்
ravi said…
முருகப்பெருமானை மயில் மீது ஏறி வரும் பெருமானாகக் கண்டு வழிபட்டால் அந்த விசாகன் விரைந்து வந்து நம் வினைகள் தீர்ப்பான் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான் ஏற விரும்பும் மயில் நம் மனமே என்று சொல்வாரும் உண்டு.

‘ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார். இதன்பொருள் ஏறத்தக்க மயிலின் மீது ஏறி விளையாடல்கள் புரியும் முகம் என்று பொருள். மனமே முருகனின் மயில் வாகனம் என்று ஒரு பாடல் உண்டு. யாரெல்லாம் தம் மனத்தை முருகனுக்கான வாகனமாக மாற்றி சதா சர்வகாலமும் அவனைச் சுமந்து திரிகிறார்களோ அவர்களின் மனதில் எல்லாம் ஏறி (எழுந்தருளி) திருவிளையாடல்கள் புரிபவன் முருகப்பெருமான் என்பதுவே அடியார்களின் வாக்கு.

அப்படிப்பட்ட முருகனுக்கு மனதில் இடம் தந்து வழிபாடுகள் செய்ய வேண்டிய நாள் வைகாசி விசாகம்.
ravi said…
வைகாசி விசாகம் வழிபடுவது எப்படி?
இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (12.6.2022) கொண்டாடப்படுறது. முருகப்பெருமான் ஆலயங்களில் கடந்த பத்து நாள்களாக உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்த நாளில் ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபடலாம்.

இன்று நீராடி திருநீறு அணிந்து முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும். முருகனுக்கு செவ்வரளி, செம்பருத்தி முதலிய செந்நிற மலர்களை சாத்தி வழிபடுவது விசேஷம். சிலர் நாள் முழுவதும் உண்ணா நோன்பும் மேற்கொண்டும் வழிபடுவார்கள். முருகப்பெருமானுக்குரிய திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் பாராயணம் போன்ற தோத்திரங்களை நாள் முழுவதும் சொல்லி வழிபட வேண்டும்.
ravi said…
ஆறுமுகப்பெருமானைப் போற்றும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவதும் நற்பலன்களைத் தரும்.
விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!

ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்!

இதன் கருத்து விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும், கிருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரனது குமாரருமான ஸ்ரீகந்தனை வணங்குகிறேன் என்பதாகும்.

பொதுவாக வைகாசி விசாக தினத்தன்று வழிபாடுகள் செய்தால் செய்தால் பகை நீங்கும். பாவங்கள் விலகும். முன்வினைப் பயன்கள் நீங்கும். திருமண வரம் கைகூடும். வேண்டும் வரம் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. எனவே அனைவரும் தவறாமல் இன்று முருகப்பெருமானை வழிபட்டு சகல வரங்களையும் பெறுவோம்.
ravi said…
*மயில் விருத்தம்* 7 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டு க்ரவுஞ்ச சயிலம்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு
தனி வெற்பும் அம்புவியும் எண்

திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு
சித்ரப் பதம் பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசும் கவுரி
பத்ம பதம் கமழ் தரும்

பாகீரதிச் சடில யோகீசுரர்க்கு உரிய
பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு
கந்தச்சுவாமி தணிகைக்

கல்லாரகிரி உருக வரு கிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே.
ravi said…
சிவபெருமான் தன்னுடைய நிமிர் ஜடாமுடியில் கங்கையை
வைத்திருப்பதை உணர்ந்த பார்வதி தேவி கோபமடைந்து ஊடலை
அடைகிறாள்.

அதைத் தணிப்பதற்காக சிவபெருமான் அவள்
திருப்பாதங்களில் விழும்போது அவள் திருவடிகளில் வீசும் நறுமணம்
சிவபெருமான் முடியிலும் சேர்ந்து வீசுகிறது என்பதை,

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீரதிச் சடில யோகீசுரர்

... எனச் சிவபெருமானை அழகு பட விவரிக்கிறார் அருணகிரியார்.🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 253*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 32

*பொருளுரை*

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥

ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா

த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।

ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:

கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
ravi said…
பரமேஸ்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டாரே!

அவர் எப்படி பொறுத்துண்டார் இதை?”னு கேட்டா,

அதுக்கு பதில் ‘மூகபஞ்சசதி’ ல இருக்கு.

மந்தஸ்மிதசதகத்துல 21ஆவதுஸ்லோகம்.

सादृश्यं कलशाम्बुधेर्वहतियत्कामाक्षिमन्दस्मितं

शोभामोष्ठरुचाम्बविद्रुमभवामेताद्भिदांब्रूमहे।

एकस्मादुदितं पुराकिलपपौ शर्वः पुराणः पुमान्

एतन्मध्यसमुद्भवं रसयते माधुर्यरूपंरसम्॥२१॥

ஸாத்³ருʼஶ்யம் கலஶாம்பு³தே⁴ர்வஹதியத்காமாக்ஷிமந்த³ஸ்மிதம்

ஶோபா⁴மோஷ்ட²ருசாம்ப³வித்³ருமப⁴வாமேதாத்³பி⁴தா³ம்ப்³ரூமஹே।

ஏகஸ்மாது³தி³தம் புராகிலபபௌ ஶர்வ: புராண: புமாந்

ஏதந்மத்⁴யஸமுத்³ப⁴வம் ரஸயதே மாது⁴ர்யரூபம் ரஸம்॥ 21॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 253* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : *ச்’ரேஷ்ட்ட* : ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
*69. ச்ரேஷ்டாய நமஹ (Sreshtaaya namaha)*
ravi said…
சாந்தோக்ய உபநிஷத்தின் 7-வது அத்தியாயத்தில் சனத்குமாரருக்கும் நாரதருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இது:

நாரதர்: சனத்குமாரரே! அடியேனுக்கு ஏதாவது உபதேசிக்க வேண்டும்.

சனத்குமாரர்: தங்களுக்கு இதுவரை என்னென்ன விஷயங்கள் தெரியும்?

நாரதர்: அடியேன் நான்கு வேதங்கள், இதிகாச புராணங்கள், இலக்கிய இலக்கணம் உள்ளிட்டவற்றை அறிவேன்.

ஆனால் அவற்றிலுள்ள எழுத்துகளை மட்டுமே நான் அறிவேன்.

வார்த்தைகளுக்கு மேம்பட்டதை அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்.

சனத்குமாரர்: எழுத்துகளைவிடப் பேச்சாற்றல் உயர்ந்தது.

நாரதர்: பேச்சாற்றலை விட எது உயர்ந்தது?

சனத்குமாரர்: மனத்தால் நினைத்தால்தானே வாயால் பேச முடியும்?

அதனால் பேச்சாற்றலை விட மனம் உயர்ந்தது.

நாரதர்: மனத்தை விட எது உயர்ந்தது?

சனத்குமாரர்: மன உறுதி.

நாரதர்: அந்த மனவுறுதியை விட?

சனத்குமாரர்: ஒருமுகப்படுத்தப்பட்ட மனது.
🪷🪷🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தெய்வாநுக்ரஹத்தாலேயே ஒருத்தனுக்குக் கிடைக்கிற மூன்று பெரிய வாய்ப்புகள்: ஒன்று, மநுஷ்ய ஜன்மா கிடைப்பது. இரண்டு, ஸத்ய தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது; மூன்று, மஹா புருஷனான ஒரு குரு கிடைப்பது” என்று ஆசார்யாள் ‘விவேக சூடாமணி’ ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்.
எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான்: தக்ஷிணாமூர்த்தி தான். குருவைவிட சிரேஷ்டமானவர் இல்லை. நமக்கு அவரிடத்தில் பூர்ணமான நம்பிக்கை ஏற்பட வேண்டும். அது நிஜமான நம்பிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு அவரிடத்தில் ஈசுவரனே இப்படி வந்திருக்கிறான் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், அப்புறம் தனியாக ஸ்வாமிகூட வேண்டாம். இந்த நம்பிக்கையே, அவரிடத்தில் நாம் வைக்கிற பக்தியே, நம்மைக் கடைத்தேறச் செய்து விடும்.
வைஷ்ணவர்களுக்கு ஆசார்ய பக்திதான் மிகவும் பிரதானம்.
)
ravi said…
ஈசுவர அபராதம் பண்ணினால் ஈசுவரனிடத்திலேயே போய் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது இல்லை; ஆசார்யன் மன்னித்து விட்டாலே போதும். ஈசுவரனுடைய கோபம் தணிந்து விடும். ஆனால் குருவினிடத்தில் அபசாரம் பண்ணிவிட்டு ஈசுவரனிடத்தில் போனாலும் ஒன்றும் நடக்காது. குருவிடத்திலேயே போய்த்தான் அந்த அபசாரத்துக்கும் நிவிருத்தி தேடிக்கொள்ள வேண்டும் என்று ஸ்வாமியே சொல்லி விடுவார்.
ravi said…
சிஷ்யனுக்காக குருவே பரமாத்மாவிடம் சிபாரிசு பண்ணினால் அவருக்குக் கோபம் போய் இவனுக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவார். ஆனால் குருவுக்கே கோபம் வந்து விட்டால் ரக்ஷிக்கிறவர் எவருமே இல்லை. இப்படி ஒரு ச்லோகம் கூட இருக்கிறது.2
ravi said…
அதனால்தான் குரு பக்தியை மிகவும் விசேஷமாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. உத்தமமான குரு கிடைக்கவில்லை என்றால், அரைகுறையாக ஒரு குரு இருந்தாலும் அவரை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு ஈசுவர பக்தி செய்ய வேண்டும்.
நாம் பக்தி செய்வதால் ஈசுவரனுக்கோ குருவுக்கோ ஒரு லாபமும் இல்லை. நமக்கேதான் பெரிய லாபம், என்ன லாபம் என்றால் :
ravi said…
நாம் அழுக்கு உடையவர்களாக இருக்கிறோம்; சஞ்சலம் உடையவர்களாக இருக்கிறோம். மனஸை ஒரு நிமிஷங்கூட ஓர் இடத்தில் நிறுத்த முடியாதவர்களாக இருக்கிறோம். எப்போதும் சுத்தமாக, நிரம்பிய ஞானம் உடையவனாக, அசங்காமல், ஆடாமல், பட்ட கட்டை மாதிரியாக இருக்கிறவனை நாம் நினைத்தால்தான், நாம் நினைக்கிற அவனது நிச்சலனமான நிலை நமக்கும் வரும். நாமே அவனாக ஆகிவிடுவோம். ஈசுவரனைத்தான் அப்படி நினைக்க வேண்டும் என்பது இல்லை. இப்படிப்பட்ட குணங்கள் உடையதாக எதை நினைத்துக் கொண்டாலும், நம்மைப் போன்ற ஒரு மனிதரையே இவ்வளவு குணங்கள் உடையவராகக் கருதி அவரையே குருவாக நினைத்து பக்தி செய்தாலும் நாம் அப்படியே ஆகிவிடுவோம். மனஸ் நின்றால்தான் ஆத்மா பிரகாசிக்கும்; அதாவது நமது நிஜமான ஆனந்த நிலை தெரியும். மனஸை நிறுத்துவதற்காகத்தான் குரு பக்தி வேண்டும், ஈசுவர பக்தி வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.
(இன்று மஹாபெரியவா ஜெயந்தி
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

"மறக்க முடியாத அனுஷம்!"

( “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” )

ஆகஸ்ட் 25,2016,.தினமலர் காஞ்சிப்பெரியவரின் சீடர் குமரேசன் கூறிய உண்மைச் சம்பவம் இது.

திருக்கோவிலூரைச் சேர்ந்த பெரியவரின் பக்தரான மணி, தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்திருந்தார்.

பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தன்று தவறாமல் விரதமிருந்து பூஜை செய்வது அவரது வழக்கம். முடிந்தால் அனுஷத்தன்று காஞ்சிப் பெரியவரை தரிசிக்கவும் செய்வார்.

மணிக்கு இரு குழந்தைகள். மூத்தவள் பெண். இளையவன் பையன். பெண்ணுக்குத் திருமணம் முடிந்து பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். பையன் படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தான். இந்நிலையில் தான், மணி தம்பதி பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அன்று அனுஷம் என்பதால் மடத்தில் பெருங்கூட்டம் காத்திருந்தது. வீட்டில் நிறைமாத கர்ப்பிணி தனியாக இருக்கிறாளே என்ற எண்ணம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்!

காஞ்சிப்பெரியவர் சீடர்களிடம் வரிசையில் நிற்கும் திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” என்று சொல்லிக்கொண்டே அட்சதை கொடுத்து ஆசியளித்தார்.

தாமதம் செய்யாமல் மணியும் உடனே டாக்சியில் திருக்கோவிலூர் திரும்பினர்.

வீட்டிற்குள் நுழையும் போதே அடுத்த வீட்டுப் பெண்கள் ஓடி வந்தனர். “உங்களுக்கு இப்ப தான் பேரன் பிறந்திருக்கான். சுகப்பிரசவம் தான்” என்று சொல்லி விட்டு 'தந்தி ஒண்ணு வந்திருக்கு' என்று சொல்லி அதையும் கையில் கொடுத்தனர். அதைப் பிரித்து பார்த்த மணியின் கண்கள் அகல விரிந்தன. மகனுக்கு ரயில்வே துறையில் நாக்பூரில் சேர்வதற்கான பணி குறித்து தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகிழ்ச்சியுடன் மணி பேரக்குழந்தையைப் பார்க்கச் சென்றார். தாத்தாவிடம், 'எல்லாம் காஞ்சிப்பெரியவரின் கருணையே' என்று அந்தக் குழந்தை சொல்வது போலிருந்தது. குழந்தைக்கு 'சந்திரசேகரன்' (பெரியவரை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைப்பது வழக்கம்) என்று பெயரிட்டு வாழ்த்தினார். வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.

இதே போலவே, வேறொரு அற்புதமும் பெரியவரால் நிகழ்ந்தது.

ஒருமுறை பெரியவரை தரிசிக்க பெங்களூருவில் இருந்து பணக்காரர் ஒருவர் வந்தார். பழம், பூ, பட்டுப்புடவை, திருமாங்கல்யம் ஆகியவற்றை தாம்பாளத்தில் வைத்தபடி அவரது மனைவி உடன் நின்றாள்.

பெரியவரை வணங்கிய அவர்கள், “சுவாமி... யாராவது ஒரு ஏழைப் பெண்ணுக்கு இதை அளிக்க விரும்புகிறோம்,” என தெரிவித்தனர்.

அதே நேரத்தில், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலைச் சேர்ந்த ஏழை சமையல்காரர் ஒருவர் தன் மனைவி, மகளுடன் அங்கு வந்திருந்தார். தன் மகளுக்கு திருமணத் தேதி குறித்து விட்டதை தெரிவித்து ஆசியளிக்கும்படி வேண்டினார். அப்போது பணக்காரரை அழைத்த பெரியவர்,

“திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே இவாளை இங்க அனுப்பியிருக்கா... அதுக்கு காஞ்சி காமாட்சி வழிகாட்டியிருக்கா... கொடுக்க விரும்பினதை இந்த பொண்ணுக்குச் சீதனமாக கொடுங்கோ” என்று சொல்லி ஆசியளித்தார்.

பணக்காரரும் மகிழ்ச்சியுடன் திருமாங்கல்யம் உள்ளிட்டஅனைத்தையும் அவரிடம் கொடுத்தார். அப்போது அந்தப் பெண்ணை தீர்க்க சுமங்கலியாக வாழ பெரியவர் வாழ்த்தினார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

ravi said…
🌹🌺 ஸ்ரீ கிருஷ்ணன் எங்கும் நிறைந்தவன் என்று உணர்ந்தால் யாரிடமும் பகைமை காட்ட மாட்டோம்- என்பதை விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹புஷ்டிமதி என்ற கோபிகை இருந்தாள். அவள் வீட்டில் ஏலக்காய் பாலை அவளின் பசு சுரக்குமாம். அதை திருட வேண்டும் என்று கண்ணன் எண்ணம் கொண்டான்.

🌺கண்ணனுக்கு தான் எல்லாம் திருடி சாப்பிடதானே பிடிக்கும். கண்ணனும் அவளுக்கு தெரியாமல் பாலை திருடி சாப்பிட்டான். இதை புஷ்டிமதி பார்த்து விட்டாள்.

🌺ஒரு பிரம்பு எடுத்து கண்ணனின் முதுகில் ஒன்று வைத்தாள். ஆனால் வலித்ததோ அவளுக்கு. அந்த அடி அவளுக்கு மட்டும் விழுக வில்லை.

🌺பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளின் மீது விழுந்தது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமே அவன் உடல்தான். அவனோ இந்த பிரபஞ்சத்தின் ஆத்மா. ஆத்மாவுக்கு ஏது வலி? உடலுக்குதானே வலி.

🌺அனைத்தையும் உடலாக கொண்டு உள்ளே உயிராக எங்கும் நிறைந்ததால் "விஷ்ணுகு" என்று அழைக்க படுகிறார்.


🌹🌺பாடல்

🌺கண்ணா
கருமை நிற கண்ணா
உன்னை காணாத
கண்ணில்லையே

🌺கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

🌺கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

🌺கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே

🌺நாமும் ஸ்ரீ கிருஷ்ணன் எங்கும் நிறைந்தவன் என்று உணர்ந்தால் யாரிடமும் பகைமை காட்ட மாட்டோம்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

த்ரையம்பகம் த்ரிபுரஸுந்தரி ஹர்ம்யபூமி

ரங்கம் விஹாரஸரஸீ கருணாப்ரவாஹ: |

தாஸாஶ்ச வாஸவமுகா: பரிபாலனீயம்

காமாக்ஷி விஶ்வமபி வீக்ஷண பூப்ருதஸ்தே ||26||

திரிபுரஸுந்தரியே! காமாக்ஷீ!
உனது கடாக்ஷமாகிற மன்னனுக்கு பரமசிவனுடைய மேனி அரண்மனையாகவும், உனது கருணை வெள்ளம் விளையாடும் குளமாகவும், இந்திரன் உள்ளிட்ட தேவர்களனைவரும் பணி செய்பவர்களாகவும், உலகம் முழுவதும் உன் ஆளுகைக்கு உட்பட்ட ராஜ்யமாகவும் விளங்குகிறது...
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
🌺🌹" *அய்யனே பார்த்தா...* *நீங்கள் என்னை அருள் கூர்ந்து பார்த்தாலொழிய இந்த ஏழை பார்த்தனின் கஷ்டம் நீங்காது என வேண்டிய பக்தன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹”பார்த்தசாரதி என்ற ஏழை, பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மணி அடிக்கும் வேலை செய்து வந்தார்.

🌺அவருக்கென யாரும் இல்லை. அப்போது அந்த கோயிலில் புதிதாக தர்மகர்த்தா சுப்பிரமணி பணிக்கு சேர்ந்தார். அவர் பல மொழிகள் எழுத படிக்க தெரிந்தவர்

🌺பார்த்தசாரதிக்கோ சுட்டுப் போட்டாலும் எழுத படிக்க வராது. இருந்தாலும் வேலை கைவிட்டு போய் விடும் என்பதால் மிகவும் முயற்சி செய்து படிக்கலானார்.

🌺ஒருமுறை பெருமாள் கோயில் பார்த்தசாரதியிடம் மனமுருகி...அய்யனே பார்த்தா... நீங்கள் என்னை அருள் கூர்ந்து பார்த்தாலோழிய இந்த ஏழை பார்த்தனின் கஷ்டம் நீங்காது என வேண்டினார்

🌺ஆனால் அவரால் எவ்வளவு முயன்றும் முடியாமல் போய்விட்டது. அதனால் அவரை பணியிலிருந்து விலக்கினார்கள்‌.

🌺பார்த்தசாரதி மனம் நொந்து போய் கையில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு ஊர் ஊராகச் சென்று வேலை தேடினார். அப்போது ஒரு ஊரில் வேலை தேடி வந்த போது அங்கே டீ குடிக்க ஏதாவது கடை இருக்குமா என தேடினார்.

🌺ஆனால் அங்கே சுற்றிலும் எந்த டீ கடையும் இல்லை. அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கே கையிலிருந்த பணத்தை வைத்து ஒரு சிறிய டீ கடை ஆரம்பித்தார்.

🌺அது அவருக்கு எதிர்பாராத அளவில் லாபத்தை ஈட்டித் தந்தது. அய்யனே பார்த்தா... உங்கள் கருணையே கருணை என வேண்டி உடனே தனது கடையை விரிவு படுத்தி மேலும் பல லாபத்தை பெற்றார். அப்போது அவரிடம் உள்ள பணத்தை எடுத்து வங்கியில் சேமித்தால் அதிக அளவில் லாபத்தை ஈட்டித் தரும் என நண்பர் ஒருவர் கூறினார்.

🌺பார்த்தசாரதியும் சரி என அவ்வாறே செய்தார். நாட்கள் ஓடியது. அந்த வங்கியின் மேலாளர் பார்த்தசாரதியின் வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை அறிந்து அவரை பார்க்க சென்றார்.

🌺பார்த்தசாரதி, அய்யன் பார்த்தனை வேண்டிக் கொண்டே டீ ஆற்றிக் கொண்டு இருந்தார். வங்கியின் மேலாளர் அவரை அணுகி அவரது கணக்கில் அதிக பணம் இருப்பதை கூறினார். அதற்கு பார்த்தசாரதி அப்படியா அவ்வளவு பணமா என்கிட்ட இருக்கு என ஆச்சரியமாக கேட்டார்.
இதை கேட்ட மேலாளருக்கு பெரும் வியப்பு.

🌺என்னங்க நீங்க உங்க கணக்குல அவ்வளவு பணம் இருக்கு நீங்க இவ்வளவு சாதாரணமா என் கிட்ட கேக்குறீங்க. உங்க கணக்கில் எவ்வளவு பணம் இருக்குனு உங்க கணக்கு புத்தகத்தில இருக்குமே ஏன் நீங்க பார்க்கலியா என்று கேட்டார்.

🌺அதற்கு பார்த்தசாரதி திருதிருவென முழித்தார். அய்யா எனக்கு எழுத படிக்க தெரியாது என்றார்.

🌺அதற்கு வங்கியின் மேலாளர் ஆச்சரியத்துடன் நீங்கள் படிக்க தெரியாமலே இவ்வளவு சம்பாதித்து இருக்கிறீர்களே, ஒரு நாலு எழுத்து படித்திருந்தால்.......?

🌺பார்த்தசாரதி பொறுமையுடன் ,
*"முயற்சி செய்ய தவறி... அய்யன் பார்த்தனின் அருளை உணராமல் இன்னும் அந்த கோயிலில் மணி அடித்து கொண்டிருப்பேன் ஏழை பார்த்தனாய்......"*

🌺நம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பவற்றை சிந்தித்தால் வெற்றி நிச்சயம், இல்லை என்பதை விடுத்து எங்கும் நிறைந்து இருக்கும் பார்த்தனை தொழுவோம், பரமபதம் அடைவோம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌺🌹"Ayyane Partha ... Devotee who wants the suffering of this poor Parthan will not go away unless you look at me with grace - Simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------

🌹🌺Parthasarathy, a poor Parthasarathy, worked as a bell ringer at the Perumal Temple.


🌺 No one for him. Then the new trustee Subramanian joined the work in the temple. He can read and write in many languages


🌺Parthasarathy will not be able to read or write even if he is shot. However, he tried hard to study because he would quit his job.


🌺Once Perumal Temple Parthasarathy was heartbroken ... Ayyane Partha ... He prayed that the suffering of this poor Parthan will not go away unless you look at me with grace.


🌺But he has gone so far as to be unable to try. So they fired him‌.


🌺Parthasarathy went mad and took the money he had in hand and went from town to town in search of work. Then when he came looking for a job in a town he was looking for a shop there to drink some tea.


🌺But there is no tea shop around. Then he had an idea. There he started a small tea shop with the cash on hand.


🌺 It brought him an unexpected amount of profit. Ayyane Barta ... Praying for your mercy, he immediately expanded his shop and made many more profits. A friend said that if he took the money and saved it in the bank, he would make more profit.

🌺Parthasarathy did the same. The days flew by. The manager of the bank found out that there was more money in Parthasarathy's bank account and went to see him.

🌺Parthasarathy was making tea while praying for Ayyan Parthan. The manager of the bank approached him and said that there was more money in his account. Parthasarathy wondered if he had that much money.
Great surprise to the manager who heard this.

🌺Why do you have so much money in your account? He asked why you have so much money in your account and why it is in your account book.

🌺 Parthasarathy called it Thiruthiruvena. Sir said I can't read or write.

🌺The bank manager wondered if you had earned so much without knowing how to read, if you had read a four letter .......?

🌺Parthasarathy patiently,
* "Failed to try ... I was still ringing the bell in that temple without realizing the grace of Ayyan Parthan you saw poor ......" *

🌺If we think of what we do not have and do not yearn for success, success is guaranteed, we will worship the omnipresent vision of not having, and attain paramatman🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
ராமரும் சதானந்தரும்*

*சதானந்தர் சொன்ன கீதை* 🪷🪷🪷
ravi said…
ராமா என் போல் பாக்கியம் செய்தவர் உண்டோ இந்த புவி தனில் ... உண்டு என்றால் அதுவும் நான் அன்றோ ...

கல்லை மலராக்கினாய் ...

பெண்மை மேன்மை கண்டே

அதை மலையாக்கினாய்...

அலை அலையாய் உன் நாமம் உதடு என் நதிதனில் துள்ளி விளையாடும் போதில்

சுற்றம் மற்றும் எதுவும் தெரிவதில்லை கண்களிலே ...

என்ன ருசி ராமா உன் நாமம் .. சொல்வோர் குறைவதில்லை எதிலும் ...

தாயை தந்தாய் என் தந்தை மீண்டும் சேர்ந்தார் ஓர் உயிராய் ...

உன் திருமணம் நான் செய்தே மிதிலை கற்கள் அதிர்வை ஏற்படுத்த கண்டேன்

தாயும் சேர்த்து வாயும் இனித்து மனமும் மகிழ்ந்து கணமும் உன் நாமம் மறவா வரமும் பெற்று மணமும் புரிந்தேன் .. இனி நான் காண்பது சதா ஆனந்தமே ...


ராமன் புன்னகைதே சொன்னான்

*சதானந்தரே* ... உன் போல் பண்டிதர் ஒருவர் காணேன் அயோத்தியில் ...

வேதம் கற்றாய் ... பாதம் தொட்டாய் ...

தாயே தெய்வம் என்றும் கொண்டாய் ...

இனி ராமனும் அடி பணிவான் உனக்கே .. குறை ஒன்றும் இல்லா சதானந்தர் என்றே புகழ் கொள்வாய்

ஐயனே ...

மீண்டும் பிறவா வரம் வேண்டும்

பிறந்தால் உனை மறவா குணம் வேண்டும் ...

மறந்தால் நானும் கல்லாய் போகும் நிலை வரவேண்டும் ..

கல்லாய் போனால் அதிலே உன் வடிவம் செதுக்கும் சிற்பி ஒருவன் கிடைக்க வேண்டும் ..

சிற்பி கிடைத்தால் உன் நாமம் அவன் உதடுகளில் அவன் உளி போல் தெறிக்க வேண்டும் ...

தெறிக்கும் உன் நாமம் எனக்கு மீண்டும் பிறவா வரம் தர வேண்டும் ..

சிரித்தான் ராமன் .. ஒரு அந்தாதி கேட்டு விட்டாய் ...

காஞ்சி தனில் காமாக்ஷி தன் புன்னகை தனில் உனை தாலாட்டும் மகான் ஒருவன் வருவான் ...

குறை இல்லாமல் அவன் உனை என்னுடன் சேர்ப்பான் ...

நிறை கொண்ட அவன் வரும் வரை வாழ்வாய் சதா ஆனந்தமாய் .... 🪔🪔🪔
Kousalya said…
ஆனந்தம் ஆனந்தம்...புதிதாய் ஒரு அந்தாதி செய்தீர்கள் அந்த சதா ஆனந்தருக்கு...அருமை அருமை....பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🌹🌹
Moorti said…
இது போல் தரிசனம் காண கண் கோடி வேண்டும்.... அருமை 🙏🙏🙏🙏
ravi said…
அம்மா நர்மதே*👍

(நேற்று அன்னை சரஸ்வதி இன்று தாய் நர்மதா ....)💐💐💐

அம்மா பாகம் கொண்டவன் மனதில் பிரவாகம் கண்டாயோ

தாகம் என்றே தவிப்போர்க்கு காகம் போல் கரைந்தாயோ...

யாகம் செய்தும் உனை காண்போர் எவர் ?

தியாகம் செய்தே உன் கருணை வென்றோர் பலர் ...

நாகம் கக்கிய நஞ்சு தனை உண்டவன்

பொருள் முடிக்கும் போகமாய் வரும் போது

அதில் வரும் அரும் மருள் நீ யன்றோ

அதில் வரும் தெருளும் உன் நினைவன்றோ

என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி

ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன்

அம்புயாதனத்து அம்பிகையே...

தாயே நர்மதே!

நம்பி உனை சரண் அடைந்தேன் நிறைய வரம் தருவாய் தாயே ..💐💐💐
Kousalya said…
அழகு நர்மதை --- இவளே நம் நாட்டின் நயாகரா....இல்லை அவளிலும் மேம்பட்டவள்... ஏன் என்றால் இவளால் அன்றோ பயிர் செழிக்கின்றது....🌱🌿🍀🌳🌾🌾
Savitha said…
நதிகளின் நாட்டிய அரங்கேற்றம் அற்புதம்
Savitha said…
நாட்டிய அரங்கேற்றம் மிகவும் அழகிய தமிழ்ச் சொல் 🙏🙏🙏
Savitha said…
எனக்கு நதிகள் பற்றி பேசுவதில் அழகை ரசிப்பதில்
மிகவும் ஆர்வம்

நர்மதைக்கு புடவை சாற்றும் விதமே அழகு🌷🙏🏻
ravi said…
உண்மை ... எல்லாம் தாயாக பார்க்கும் போது நெஞ்சத்தில் உள்ள அழுக்கெல்லாம் நீங்குகிறது
ravi said…
உண்மை ... எல்லாம் தாயாக பார்க்கும் போது நெஞ்சத்தில் உள்ள அழுக்கெல்லாம் நீங்குகிறது
ravi said…
[13/06, 17:35] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 253* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : *ச்’ரேஷ்ட்ட* : ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
[14/06, 06:55] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 253* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*84 ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி* =

சிவனார் நெற்றிக்கண் நெருப்பினால் எரிந்த மன்மதனை, உயிர்த்தெழுப்பிய மருந்தானவள்.

*சந்தக்த* = எரிந்த

*காம* = காமதேவன்-மன்மதன்

*சஞ்சீவன* = புனர் ஜீவனம் - மீண்டு உயிர்த்தெழுதல்

*ஔஷதி* = மருந்து
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 254* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌66
ravi said…
*66 தேவியின்குரல் வீணையினும் இனியது*

*_இன்சொல், ஸங்கீத ஞானம்_*

விபஞ்ச்யா காயந்தீ விவித மபதானம் பஶுபதேஸ்

த்வயாரப்தே வக்தும் சலித ஶிரஸா ஸாதுவசனே

ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் 66
ravi said…
பசுபதியினுடைய பலவகைப்பட்ட லீலையை வீணையில் பாடுகின்ற ஸரஸ்வதீதேவீ உன்னால் தலையசைப்புடன் ஆமோதிக்கும் வார்த்தையானது சொல்வதற்கு ஆரம்பிக்கப்பட்டபோது

அதனுடைய இனிமையால் வீணத்தந்திகளின் அழகிய ஒலி அவமதிப்புற்றதைக் கண்டு தன்னுடைய வீணையை உரையினால் வெளியில் தெரியாவண்ணம் மூடிவிடுகிறாள்.

*கச்சபீ* என்பது ஸரஸ்வதியின் வீணைக்குப் பெயர்.

*கச்சபீ* என்ற சிறந்த வீணை நாதத்தினும் இனிய மொழியாள் – லலிதா ஸஹஸ்ரநாமம்.🤝🤝🤝
ravi said…
**நல்வழி : 17*

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?

*பொருள்*

வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா ? அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா ? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.

*இனிய காலை வணக்கம். 14/06/2022*

🌹🌻🙏🏻🌻🌹😃🌹🌻
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

933
நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! நலஞ்சுடரே! நால்
வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்குஅரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து *நிலை இலா நெஞ்சம் தன்னுள் நிலாவாத புலால்உடம்பே புகுந்து நின்ற கற்பகமே!* யான் உன்னை விடுவேன் அல்லேன்-கனகம்,மா மணி, நிறத்து எம் கடவுளானே!
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
Oldest Older 201 – 307 of 307

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை