ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 . ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ பதிவு 8

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ 

பதிவு 8

இன்று நாம் பார்க்கப் போவது மூன்றாவது திருநாமம் .

அடுத்து வரும் திருநாமம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ. இந்தத் திருநாமத்துக்குத் தனியொரு அழகு உண்டு

சில சொற்களை நேராகச் சொன்னால் ஓர் அர்த்தம் வருவதுபோல அதையே திருப்பிச் சொன்னால் வேறொரு அர்த்தம் வரும்

இந்தச் சொல்லைச் சொல்லும்போது சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்று பொருளாகிறது

சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்ன செய்கிறாள்

இந்த வினாவிற்கு விடையாக, முந்தைய திருநாமம்தான் பொருந்தி வரும்

மஹாராணியாக இருப்பவள்தான்  சிம்மாஸனத்தில்  அமர்ந்திருக்கிறாள்

உயிர்களைக் காக்கிறாள். 

"அவ்வாறு 'சிம்மாஸனத்தில் அமர்ந்திருப்பது' எவ்வாறு 'சம்ஹாரம்' என்னும் தொழிலுக்குப் பொருந்தி வரும்?" என்றும் கேள்வி வரலாம்

சிம்ஹாஸனேச்வரி என்பதைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால்  சம்ஹரிக்கக் கூடியவள் - சிம்ஹாசனியே 'சம்ஹாரிஎன்று பொருள்  வரும்.   எவ்வாறு

சம்ஸ்கிருதத்தில் சொல்லைத் திருப்பிப் போட்டுப் பொருள்  கொள்ளும் முறை உண்டு. 'பச்யகன்என்பது 'கச்யபன்ஆகும்; 'வசிஎன்பது 'சிவஎன்றாகும்

அவ்வாறேசிம்ஹாஸனம் என்பது ஹிம்ஸாஸனம் ஆகும்சிம்ஹாஸனேச்வரி என்றால் சிம்மாஸனத்தில் அமர்ந்திருக்கும்  தலைவி.                 

ஹிம்ஸாஸனேச்வரி என்றால் ஹிம்சைஅதாவதுஅழிவு  செய்யக்கூடியவள் என்று பொருள்காப்பாற்றுகிறவளாக  சிம்மாஸனத்தில் அமர்ந்து ஆள்கிற அம்பாள்வேண்டிய நேரத்தில்  அழிப்பவளாகவும் ஆகிறாள்

ஆகவேஇந்த மூன்று திருநாமங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது சிருஷ்டிஸ்திதிசம்ஹாரத்தைச் சொல்கின்றனஇந்த மூன்றும்  வந்தாயிற்று

மூன்று தொழில்கள் முடிந்தாகிவிட்டன.

நான்காவது திருநாமத்தில்ஆரம்பித்து 999-ஆவது திருநாமம் வரை எதைச் சொல்கின்றன.

அப்பய்ய தீக்ஷிதரும் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளும் என்ன சொல்கிறார்கள்?

நான்கு முதல் 999 வரையிலான திருநாமங்கள் அனைத்தும் திரோபாவத்தையும் அதன் விளைவான அனுக்ரஹத்தையும் காட்டக்கூடிய திருநாமங்கள் என்கிறார்கள்.

பந்தத்தைக் கொடுப்பது திரோபாவம்; பந்தத்தை அழிப்பது அனுக்ரஹம். இவை இரண்டையும் சேர்த்துச் சொல்பவைதாம் மீதியிருக்கும் பெரும்பாலான திருநாமங்கள்.

கடைசியில் இருக்கும் திருநாமம் இருக்கிறதே லலிதாம்பிகா என்னும் திருநாமம், அது விசேஷமானது. மற்ற 999 திருநாமங்களையும் பாராயணம் செய்ததால், அந்த அம்பிகையை ஆத்ம ஸ்வரூபமாக உணரும் பரிபூரண ஆனந்த நிலையைக் காட்டும் திருநாமம் லலிதாம்பிகா

முழுக்க முழுக்க அனுக்ரஹத்தைக் காட்டுவது. ஆக, ஐந்து தொழில்களையும் சொல்லி, கடைசியில் அனுக்ரஹத்தில் போய் அம்பாளுடன் இரண்டறக் கலந்துவிடும் நிலைமை இருக்கிறதே, அந்தப் பரமானந்தத்தைக் காட்டுவதுதான் லலிதாம்பிகா என்னும் கடைசித் திருநாமம். 


ஸ்ரீ மத் ஸிம்ஹாஸனேஸ்வரி -* சக்ரவர்த்தி, மகாராஜாக்கள் போல் சிம்ஹா சனத்தில்  மஹா ராணியாக  வீற்றிருப்பவள்.

ஸ்ரீமத் = மதிப்பிற்குகந்த 

சிம்ஹ = சிம்ம

ஆசன = இருக்கை - பீடம் 

ஈஸ்வரி = இறைவி

சிம்ம வாஹினி. சிம்மத்தை ஆசனமாக கொண்டு வீற்றிருக்கும் மஹாதேவி.

முதலில் அவள் என் தாய் . சாதாரண தாய் அல்ல ..  பிரபஞ்சகளை அண்ட சராசரங்களை பெற்றவள் .

என் ராஜாத்தி ..மஹா ராணி .

அவள் அமர்ந்திருக்கும் இருக்கை சிம்மங்கள் காவல் காக்கும் இருக்கை .. 🦁🦁🦁


தண்டிப்பளாகவும் அவளே இருக்கிறாள் தண்டனையை மன்னிப்பவளாகவும் அவளே வருகிறாள் .. இரட்டை வேடம் சும்மா பிச்சு உதருகிறாள் ..

தாய் என்று அதிக உரிமை எடுத்து தவறுகள் செய்பவர்கள் அவள் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது ... மனமுருகி 

அம்மா நீ தான் எனக்கு கதி என் தவறுகளை மன்னித்து விடு இனி இப்படி செய்யமாட்டேன் என்று கதருபவர்களை கை தூக்கி விடுகிறாள் ஸ்ரீ மாதாவாக ..

எப்படிப்பட்ட ஒரு அன்னையை நாம் பெற்றுள்ளோம் ..  சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே ..

பயப்படவே தேவை இல்லை ..  அவள் நம் எல்லோருக்கும் முதலாய் இருப்பது தாய் எனும் ஸ்தானத்தில் . உரிமையுடன் அவளை அணுகலாம் எப்பொழுதும் ..அகில புவன சக்ரவர்த்தினியாக ரக்ஷிப்பவள். 



She is the queen of queens sitting on a Lion. Lion is the king of animals . The supreme queen is using the lion as  Her Vehicle

       🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁



Comments

ravi said…
Feedback
நாங்கள் அனைவரும் உங்களில் சிறந்ததை வெளிக்கொணர எங்களின் சிறந்த பங்களிப்பை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். எவ்வாறாயினும், நம்மை நாசப்படுத்தும், முக்கியமான தருணங்களில் தவறான திருப்பங்களை எடுக்க வைக்கும் சில சக்திகள் நமக்குள் உள்ளன, அது நம்மை நமது மோசமான எதிரிகளாக ஆக்குகிறது. நமது உயர்ந்த அபிலாஷைகள் இறுதியில் நமது ஆன்மீக மையத்தில் இருந்து உருவாகின்றன, அதேசமயம் நமது சுய-தோற்கடிக்கும் கீழான எண்ணங்களும் சில நிபந்தனைகளிலிருந்து எழுகிறது. காமம், கோபம் மற்றும் பேராசை ஆகிய மூன்று வடிவங்களில் இந்த நிபந்தனைகள் முதன்மையாக வருகின்றன என்று பகவத் கீதை குறிப்பிடுகிறது. இந்த சக்திகளை நாம் வெல்லாத வரை, நம் நல்வாழ்வுக்காக செயல்பட முடியாது. கீதை (16.22) இந்தப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெல்லுமாறு நமக்கு அறிவுறுத்துகிறது. மழையில் நெருப்பு நீண்ட காலம் நீடிக்க முடியாதது போல, நமது கீழ்ப் பக்கத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தக் கற்றுக் கொள்ளாவிட்டால், நமது உயர்ந்த பக்கத்தை நிலைநிறுத்த முடியாது. நாம் நமது பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும், கிருஷ்ணருடன் இணைந்திருக்க வேண்டும் மற்றும் நமது தெய்வீக ஆன்மீக இதயத்தைக் வெளிக்கொணர வேண்டும், இதன் மூலம் நமது சிறந்ததை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் மோசமானதைக் அகற்ற வேண்டும். நெருப்பு என்பது ஏற்கனவே இருக்கும் தண்ணீரை அகற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
ravi said…
We all aspire to bring out our best and to make our best contributions. However, there exists some force within us that sabotages us, that makes us take wrong turns at critical junctures, that makes us our own worst enemies. Our higher aspirations originate ultimately from our spiritual core, whereas our self-defeating lower side arises from our conditionings. The Bhagavad-gita indicates that these conditionings come primarily in three forms: lust, anger and greed. As long as we don’t overcome these forces, we can’t act for our well-being. The Gita (16.22) exhorts us to fight and overcome these forces. Unless we can learn to purge ourselves of our lower side, our higher side can’t be sustained, just as fire can’t last for long in rain. We need to develop our devotion, connect with Krishna and uncover our godly spiritual core, thus bringing out our best and thereby crowding out our worst. Fire is often a powerful way of getting rid of the water already present.
ravi said…
10. வேதத்தின் விதிமுறைகளை அறிந்து, ஒருவன் செயல்பட வேண்டும் இதனால் ____ / Knowing the regulations of the scriptures, one should act so that ______
*
1/1
a. அவர் கடவுளாக மாறுவார் / He will become god
b. அவர் படிப்படியாக பக்தி சேவையின் பரிபூரண நிலைக்கு உயர்த்தப்படுகிறார் / He may gradually be elevated to the perfectional stage of devotional service.

c. அவர் சக்திவாய்ந்த அரக்கனாக மாறுவார் / he will become powerful demon.
d. அவர் விலங்கு வாழ்க்கைக்கு இழிவானவராக மாறுவார் / he will become degrade to animal life.
ravi said…
Feedback
ப.கீ: 16.24: ஆகவே, எது கடமை, எது கடமை அல்ல என்பதை வேதத்தின் விதிமுறைகளால் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிந்து, ஒருவன் படிப்படியாக உயரும் வகையில் செயல்பட வேண்டும்.

BG 16.24: One should therefore understand what is duty and what is not duty by the regulations of the scriptures. Knowing such rules and regulations, one should act so that he may gradually be elevated.
ravi said…
9. சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன் நிலை என்ன? / What is the state of those who omit the rules given in sastras and live their lives as per their whims?
*
1/1
a. பௌதிக இன்பத்தைத் திருப்திப்படுத்த கஷ்டப்பட்டு முயற்சி செய்கிறார்கள். / With difficulty they are trying to satisfy material enjoyment
b. நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் பிஸியாக இருக்கிறார்கள் / Very busy in spending time with their friends
c. பக்குவத்தையோ சுகத்தையோ அடைவதில்லை/ Do not attain maturity, comfort, moksha and in animal life

d. எப்போதும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் / Always living in imaginary world
ravi said…
Feedback
ப.கீ: 16.23
சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம் போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.
BG: 16. 23
He who discards scriptural injunctions and acts according to his own whims attains neither perfection, nor happiness, nor the supreme destination.
ravi said…
08. அர்ஜுனன் சண்டையிடுவது அசுர தன்மையுடையது அல்ல என்று கிருஷ்ணர் எந்த அடிப்படையில் கருதுகிறார்? / On what basis Krishna considers that Arjuna’s fighting is not demoniac?
*
1/1
a. அர்ஜுனன் தன் எதிரிக்கு இரக்கமுள்ளவனாக இருந்தான்/ Because Arjuna was compassionate to his enemy
b. அர்ஜுனன் போரிட தயாராக இல்லை / Arjuna is not willing to fight
c. ஒரு க்ஷத்திரியருக்கு எதிரி மீது அம்புகளை எய்வது தெய்வீக தன்மையாக கருதப்படுகிறது /For a ksatriya shooting arrows at the enemy is considered transcendental

d. அர்ஜுனனுக்குப் போரின் முடிவு தெரியும் / Arjuna knows the result of war
ravi said…
Feedback
ப.கீ: 16.5 பொருளுரை: ஒரு சத்திரியனுக்கு, ஒரு இராணுவ மனிதனுக்கு, எதிரி மீது அம்பு எய்வது ஆழ்நிலையாகக் கருதப்படுகிறது, அத்தகைய கடமையிலிருந்து விலகி இருப்பது பேய்த்தனமானது. அதனால் அர்ஜுனன் புலம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. வாழ்க்கையின் பல்வேறு ஒழுங்குமுறைகளின் ஒழுங்குமுறைக் கொள்கைகளை நிறைவேற்றும் எவரும் ஆழ்நிலையில் அமைந்துள்ளனர்.


BG 16.5 purport: For a kṣatriya, a military man, shooting arrows at the enemy is considered transcendental, and refraining from such a duty is demonic. Therefore there was no cause for Arjuna to lament. Anyone who performs the regulative principles of the different orders of life is transcendentally situated.
ravi said…
07. பகவத் கீதை 16.21 இல், ஆத்மாவை அழிவு பாதைக்குக் கொண்டு செல்லும் மூன்று கதவுகளாக பகவான் எதைக் குறிப்பிடுகிறார்? / What does Bhagavan refer to as the three gates that lead the soul to the path of destruction?
*
1/1
a. காமம், கோபம், பேராசை / Lust, Anger, Greed

b. தற்பெருமை, அகந்தை, வீண் அபிமானம் / Pride, Ego, Worthless Admiration
c. தூய்மை, வாய்மை, நன்நடத்தை / Purity, Truthfulness and good conduct
d. மேலுள்ளவை ஏதுமில்லை / None of the above
ravi said…
Feedback
ப.கீ: 16.21
காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டு செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப்பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும்.
BG: 16. 21
There are three gates leading to this hell – lust, anger and greed. Every sane man should give these up, for they lead to the degradation of the soul.
ravi said…
06. ஜட வாழ்வு எனும் பௌதீக உலகில் யார் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பர்? / Who will take rebirth in this material world?
*
1/1
a. பொறாமையுடன் கருணையின்றி இருப்பவர் / One who is jealous and merciless

b. பகவத்கீதை மற்றும் பாகவதம் படிப்பவர் / Who reads Bhagavat Gita and Bhagavatham
c. பகவானின் வழிபாட்டில் அக்கறை கொண்டவர் / One who is interested in the worship of Bhagavan
d. நாம ஜபம் செய்பவர் / One who chants
ravi said…
Feedback
ப. கீ: 16.19
பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை, ஜடவாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகின்றேன்.
BG: 16.19
Those who are envious and mischievous, who are the lowest among men, I perpetually cast into the ocean of material existence, into various demoniac species of life.
ravi said…
05. அநியாயமான வழிகளில் செல்வதைச் சேமிப்பவனின் உண்மையான நிலை என்ன? / What is the status of those, who are earning wealth in unjustice ways?
*
1/1
a. பகவானின் கருணையால்தான் ஜீவன்கள் வாழ்கின்றனர் என்பதை உணர்வதில்லை / Not realizing that Jevatmas are living on Bahgavan’s mercy only
b. வரப்போகும் பாவ விளைவுகளின் துயரத்தை அறியாதவர் / Not knowing the reactions of their sins
c. சுயநலத்தால் பிறர்படும் துன்பத்தை சிந்திக்காதவர் / Because of selfishness not realsing the others suffering
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
ravi said…
Feedback
ப. கீ: 16.16 பொருளுரை: ஒரு அசுரன் தனது தனிப்பட்ட வேலையின் வலிமையை நம்புகிறான், கர்மாவின் சட்டத்தில் அல்ல. கர்மாவின் விதியின்படி, ஒரு மனிதன் ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறக்கிறான், அல்லது பணக்காரனாகிறான், அல்லது நன்றாகப் படித்தவன் அல்லது கடந்த காலத்தில் நல்ல வேலையின் காரணமாக மிகவும் அழகாகிறான். இவையனைத்தும் தற்செயலானவை என்றும் ஒருவருடைய தனிப்பட்ட திறமையின் பலத்தால் ஏற்பட்டவை என்றும் அசுரன் நினைக்கிறான். அனைத்து வகையான மனிதர்கள், அழகு மற்றும் கல்விக்கு பின்னால் எந்த ஏற்பாட்டையும் அவர்கள் உணரவில்லை. அப்படிப்பட்ட அசுரனுடன் போட்டிக்கு வருபவர் எவனும் அவனுக்கு எதிரி. பேய் பிடித்தவர்கள் பலர் உள்ளனர், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு எதிரிகள். இந்த பகை மேலும் மேலும் ஆழமாகிறது - நபர்களிடையே, பின்னர் குடும்பங்களுக்கு இடையே, பின்னர் சமூகங்களுக்கு இடையே, கடைசியாக நாடுகளுக்கு இடையே. எனவே உலகம் முழுவதும் தொடர்ந்து சண்டை, போர் மற்றும் பகை உள்ளது
ravi said…
BG 16.16 purport : A demoniac person believes in the strength of his personal work, not in the law of karma. According to the law of karma, a man takes his birth in a high family, or becomes rich, or very well educated, or very beautiful because of good work in the past. The demoniac think that all these things are accidental and due to the strength of one’s personal ability. They do not sense any arrangement behind all the varieties of people, beauty and education. Anyone who comes into competition with such a demoniac man is his enemy. There are many demoniac people, and each is enemy to the others. This enmity becomes more and more deep – between persons, then between families, then between societies, and at last between nations. Therefore there is constant strife, war and enmity all over the world.
ravi said…
04. அசுரகுணம் படைத்தவர்கள் மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக எதைக் கருதுகிறார்கள்? / What do demonaic natured people consider as the main purpose of human life?
*
1/1
a. உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வது / To fulfil material bodies needs

b. பகவானை வழிபடுவது / To worship Bhagavan
c. ஆத்ம ஞானம் பெறுவது / To realize self
d. வேதங்களைப் படிப்பது / To study scriptures
ravi said…
Feedback
ப.கீ: 16. 11-12
மனித நாகரிகத்தின் முக்கிய தேவை புலன்களைத் திருப்தி செய்வதே என்று அவர்கள் நம்புகின்றனர்.
BG: 16. 11-12
They believe that to gratify the senses is the prime necessity of human civilization.
ravi said…

3. "இந்த உலகம் பாலியல் ஆசையால் உருவாக்கப்பட்டது மற்றும் காமத்தைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை." என்பது __________ கொண்டவர்களின் கருத்து/ "This world is produced of sex desire and has no cause other than lust." It is the opinion of persons with _________
*
1/1
a. தெய்வீக குணம் / Divine nature
b. அசுரகுணம் / Demonic nature

c. பிறவி குணம் / Born nature
d. நற்குணம் / Goodness
ravi said…
2. யார் கட்டுப்படுத்தும் கடவுள் இல்லை என்றும், விரும்பிய விதத்தில் வாழ்வை அனுபவிக்கலாம் என்றும் கருதுகின்றனர்? / Who considers that there is no controlling God and that life can be enjoyed as desired?
*
1/1
a. தேவர்கள் / Demigods.
b. யோகிகள் / Yogis
c. முனிவர்கள் / Sages
d. அசுரர்கள் / Asuras

Feedback
ப.கீ: 16. 4 பொருளுரை:
இப்பதத்தில் நரகத்திற்கான ராஜபாட்டை விவரிக்கப்பட்டுள்ளது. கொள்கைகளைப் பின்பற்றாவிடினும், ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதற்காகவும்தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர். ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத்தையோ அடைந்து விட்டால், அவர்கள் எப்போதும் கர்வத்துடனும் அகந்தையுடனும் இருப்பர். மற்றவர்கள் தம்மை வழிபட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். பிறரால் மதிக்கப்படுவதர்கான தகுதி அவரளிடம் இல்லாவிடினும், மதிப்பளிக்கும்படி வலியுறுத்துகின்றனர். அவர்கள் அற்பமான விஷயங்களில் மிகவும் கோபமுற்று கொடூரமாக பேசுகின்றனர். கண்ணியமாக நடந்து கொள்வதில்லை. எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை அவர்கள் அறிவதில்லை. தங்களது சொந்த விருப்பத்தின்படி, மனம் போன போக்கில் எதையும் செய்கின்றனர். எந்த ஒரு அதிகாரியையும் அவர்கள் ஏற்பதில்லை. தாயின் கருவில் அவர்களது உடல் தொடங்கியதிலிருந்து இந்த அசுர குணங்கள் உள்ளன. மேலும், அவர்கள் வளரும்போது இந்தக் குணங்களும் வளர்ந்து அமங்கலமான இத்தன்மைகளை வெளிப்படுத்துகின்றனர்.
ravi said…
BG: 16. 4 Purport:
In this verse, the royal road to hell is described. The demoniac want to make a show of religion and advancement in spiritual science, although they do not follow the principles. They are always arrogant or proud in possessing some type of education or so much wealth. They desire to be worshiped by others, and demand respectability, although they do not command respect. Over trifles they become very angry and speak harshly, not gently. They do not know what should be done and what should not be done. They do everything whimsically, according to their own desire, and they do not recognize any authority. These demoniac qualities are taken on by them from the beginning of their bodies in the wombs of their mothers, and as they grow they manifest all these inauspicious qualities.
ravi said…
01. எவ்வாறு தெய்வீக மற்றும் அசுர குணம் வேறுபடுகிறது? / How divine and demonic qualities differ from each other?
*
1/1
a. சாஸ்திர விதிகளைப் பின்பற்றுவதாலும், பின்பற்றாததாலும் /By following and not following rules of Sastra

b. அன்னதானம் செய்வதாலும், செய்யாததாலும் / By donating and not donating food
c. கடுமையான தவம் புரிவதாலும், புரியாததாலும் / following and not following Severe austerity
d. தேச பற்றை வளர்த்துக் கொள்வதாலும் இல்லாததாலும் / By developing and not developing patriotism
ravi said…
Feedback
ப.கீ.: 16.1
23 சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.

BG: 16. 23 He who discards scriptural injunctions and acts according to his own whims attains neither perfection, nor happiness, nor the supreme destination.
ravi said…
TG Chap 16 May 2022 -The Divine and domestic nature
Total points
10/10
ravi said…
நாரதர் வேலைக்காரியின் மகனாகப பிறந்தது பின்னர் அவர்களை பாம்பு தீண்டி இறந்த து பின்னர் நாரதர் பௌதீக பந்தங்களில் இருந்து விடு பட்டது. பின்னர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நினைத்து ஆன்மீக சேவை செய்து பகவானின் ஸ்லோகண்களை மூவுலகிலும் பரவ செய்தது.எப்போதும் ஆண்டவனின் நாமங்களை இடை விடாது செபித்தல் , இறை பற்றை தொடர்ந்து செய்து முக்தி நிலை அடந்ந்தார்
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 64* 🌷🌷🌷🌷🌷
ravi said…
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் வாழும் எல்லா மக்களும் நண்பர்கள் ஆவார்கள்.

அந்த எட்டுத் திசைகளையும் காக்கும் தெய்வங்களான இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்கள் அருள் புரிவார்கள்!

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 228*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 30

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம்

वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता

गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।

पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे

शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥

வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா

க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா ।

பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே

ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥
ravi said…
முந்தின ஸ்லோகத்துல, ‘ *ஶம்போ* ⁴ *லோககு³ரோ மதீ³யமநஸ:* *ஸௌக்²யோபதே³ஶம்* *குரு’னு* சொன்னார்.

அங்க ‘லோககுரு’ங்கிறார். இங்க ‘த்ரிலோகீகு³ரோ’ – மூவுலகத்துக்குமே நீதான் குரு என்கிறார்.

‘ *பா³லேந்து³ சூடா³மணே’ –* இளம்பிறை சந்திரனை நெற்றியில, மௌலில அணிந்து கொண்டு இருப்பவரே!

‘பஶுபதே’ – எல்லா உயிர்களுக்கும் தலைவரே!

‘ஸ்வாமின்’ – என்னுடைய தலைவரே!

உங்களுக்கு பூஜை பண்ணனும்னு ஆசைப்படறேன்.

இப்ப தான் சிவராத்திரி ஆச்சு. சிவராத்திரியின் போது மத்த நாளைவிட கொஞ்சம் விமரிசையா நம்ம ஆத்துல ஒரு பூஜை பண்ணி சந்தோஷப் பட்டுப்போம்.

ஆனா ‘பகவானுக்கு உண்மையான பூஜை எது?

அதை பண்ண முடியுமா நம்மால?’ அப்படீன்னு ஆச்சாரியார் வியக்கறார்.👏👏👏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 229* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத - ஸ்த்ரிககுப்தாம *பவித்ரம்* மம்கலம் பரம் || 7 ||
ravi said…
*64. பரஸ்மை மங்களாய நமஹ (Parasmai Mangalaaya namaha)*
ravi said…
சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?

சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு?

இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.

சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள்.

சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும்.

சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.

கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.

கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள்.

அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே.

உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.🙌🙌
ravi said…
மந்தாக்ஷராக தரலீக்ருதி பாரதந்த்ர்யாத்
காமாக்ஷி மந்தரதராம் த்வதபாங்கதோலாம் |
ஆருஹ்ய மந்தம் அதிகௌதுகஶாலி சக்ஷு:
ஆனந்தமேதி முஹுர் அர்த்த ஶஶாங்க மௌலே: ||25||
கடாக்ஷ சதகம் .

காமாக்ஷி! அர்த்த சந்திரசேகரனான பரமசிவனுடைய கண்ணானது அதி சந்தோஷத்துடன் உனது கடாக்ஷமாகிற ஊஞ்சலில் மெதுவாக ஏறிக்கொண்டு இடைவிடாத
ஆனந்தமடைகிறது. அந்த கடாக்ஷ ஊஞ்சல் எப்படியிருக்கிறது என்றால்
லஜ்ஜையாலும், அநுராகத்தினாலும்
பரவசமாக சஞ்சலமாக்கப் பட்டிருப்பதால் மெதுவாக அசைந்துக்கொண்டிருக்கிறது

அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
*விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!*

*ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்!*

*இதன் கருத்து*

விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும்,

உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும்,

கிருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும்,

எப்போதும் குழந்தை வடிவானவரும்,

ஜடை தரித்துள்ளவரும்,

பரமேஸ்வரனது குமாரருமான ஸ்ரீகந்தனை வணங்குகிறேன் என்பதாகும்.👌👌👌
ravi said…
பொதுவாக வைகாசி விசாக தினத்தன்று வழிபாடுகள் செய்தால் செய்தால்

பகை நீங்கும். பாவங்கள் விலகும்.

முன்வினைப் பயன்கள் நீங்கும்.

திருமண வரம் கைகூடும்.

வேண்டும் வரம் கிடைக்கும்.

காரியத்தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.

எனவே அனைவரும் தவறாமல் இன்று முருகப்பெருமானை வழிபட்டு சகல வரங்களையும் பெறுவோம்🪔🪔🪔🦚🦚🦚
ravi said…
*மயில் விருத்தம்* 6 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
*சிவனை வலம் வருமளவில்*

கணபதி சிவபெருமானை சுற்றி வந்த அதே நேரத்தில் முருகனும்
தனது மயில் வாகனத்தில் உலகைச் சுற்றி வந்தார் என்பதை பல
இடங்களில் அருணகிரியார் நயம் பட கூறுவார்.

இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்

... என்பார் சீர் பாத வகுப்பில்.

'வன சரோதய' என்னும் சொல்லுக்கு 'வேடனாக உரு மாறி வந்தவர்'
எனவும் பொருள் கொள்ளலாம்.

'வன' + 'சரர்' + 'உதய' என
இச் சொல் பிரியும்.

சரவணப் பொய்கையில் ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகள்
வடிவம் எடுத்து தாமரை மலரில் பள்ளி கொண்டதை,

.. *ராஜீவ பரியங்க ..*

... என அழகுபட கூறுவார் அருணகிரியார். 'பரியங்க' என்ற சொல்லுக்கு
'கட்டில்' என்பது பொருள்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 252*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 32

*பொருளுரை*

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥

ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா

த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।

ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:

கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
ravi said…
எதோ பகவானுடைய காரியம்ன்னு பண்ணிண்டு போனா, உங்களுக்கு ஒரு ஆத்மதிருப்தியும் ஒரு சந்துஷ்டியும் இருக்கும்.

போகப் போக சித்தசுத்தி ஏற்படும். பகவான் அந்த சித்தசுத்தியை அநுக்கிரஹம் பண்ணுவார்!’ அப்படீன்னு சொல்லிக் குடுக்கறா. அவாளும் ரொம்ப சந்தோஷமா ‘ஆஹா! ரொம்ப நல்ல தெளிவு கிடைச்சது எங்களுக்கு!’ ன்னு சொல்லிட்டு போறா.
ravi said…
அந்த மாதிரி பார்த்தா ஹனுமாருக்கு, ‘ராம கார்யம் பண்றோம்!’ அப்படீங்கிறது திருப்தி.

ஸ்வாமிகளுக்கு, ‘மஹா பெரியவா சொன்னா.

ராமாயண பாகவதம் படிக்க சொன்னா. படிச்சுண்டு இருக்கேன்’ அப்படீங்கிறதுனால அவாளுக்கு என்ன கஷ்டம் வந்தாலும், அந்த கஷ்டம் பாதிக்கறதில்லை.

மஹா பெரியவாளுக்கு காமாக்ஷி!

புதுப் பெரியவாளுக்கு மஹா பெரியவா, திருப்பதி வெங்கடரமண ஸ்வாமி!

அப்படி அவாவா ஒரு தெய்வத்தை வெச்சுண்டு, அந்த தெய்வத்துடைய முகத்துல ஒரு சிரிப்பைப் பார்க்கணும்னா, அதுக்காக என் உயிரை வேணும்னாலும் கொடுக்கறேன் அப்படீன்னு தன்னுடைய கடமையை பண்ணிண்டே போயிருக்கா
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 252* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
*ஜ்யேஷ்ட்ட* : ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8

*68. ஜ்யேஷ்டாய நமஹ (Jyeshtaaya namaha)*
ravi said…
திருமாலின் குணங்களைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் வைகுந்தத்து நித்யசூரிகளுக்குள் பெரிய விவாதமே நடக்குமாம்.

எவ்வளவு விவாதம் செய்தாலும் அவர்களாலும் அவனது குணங்களின் மேன்மை இன்னது என்று நிர்ணயிக்க இயலாதாம்.

இவ்வாறு வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத குணங்களுடன் விளங்குவதால் திருமாலுக்கு ‘ *ஜ்யேஷ்டஹ* ’ என்று திருநாமம்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 68-வது திருநாமம்.
“ஜ்யேஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்கு நீங்காத ஆனந்தத்தைத் திருமால் தந்தருள்வார்.🙏🙏🙏
ravi said…
சரஸ்வதியை சபித்தால் அவள் வியாசர் நாவை விட்டு சென்று விடுவாளே ... அவரால் பின் எப்படி மஹாபாரதம் சொல்ல முடியும் ... இங்கே அவள் மறைவது சாபத்தால் அல்ல ... அளவுக்கு மீறி பெண் பொன் மண் இவைகள் மீது ஆசை வைத்தால் எல்லோரும் பூமிக்குள் சென்று விடும் நாள் தொலைவில் இல்லை என்பதை குறிக்கவே அவள் இங்கே தன்னை பூமிக்குள் மறைத்துக் கொள்கிறாள் ... வியாசருக்கு பயந்து அல்ல 🤝
ravi said…
அம்மா ஸரஸ்வதி ஏனம்மா பூமிக்குள் மறைகிறாய் ... ??

என் நாவில் அமர்ந்தவளே 💐

பூமிக்குள் போவதில் ஏன் இந்த நாட்டம் இவ்வளவு ஓட்டம் ...?

உனை போற்றுவோர் எவரும் இல்லை என்றே சீற்றம் கொண்டாயோ ...😡

பதவி பல பெற படிப்பு தேவை இல்லை என்றே சிலர் சொல்லக் கேட்டாயோ?🥸

வாழ்க்கை சீர் தூக்கி பார்க்க செல்வம் ஒன்றே போதும் என்றே நினைத்தாயோ ... ?🔥

இங்கே பணம் சேர்ப்போர் சொர்க்கத்தில் வங்கி திறப்பர் என்றே எவரும் சொன்னாரோ??👍

மண்ணும் பெண்ணும் பொன்னும் பூமிக்குள் உள்ளே இழுத்து விடும் என்றே நாங்கள் புரிய மறைந்தாயோ... ??👌

மாணிக்க வீணை ஏந்தும் எங்கள் மரகதமே ...

மண்டியிட்டு கேட்க்கிறோம் ...

மண்ணுக்குள் சொல்லாதே

நாங்கள் செல்லும் நாள் வரை ...

உன் வீணையின் கானம் அது ஒளிக்கட்டும் வீதி எங்கும்

பாடும் குயில்
ஆடும் மயில் உன் தாய்மை கொண்டே பூரிக்கட்டும் ..

உன் எண்ணம் அன்றோ நாங்கள் முன் செய் புண்ணியம் ...

பூத்தவளே செல்லாதே பூமிக்குள் ...😰

பொல்லாதவன் நான்

நீ சென்று விட்டால் வராகமாய் மாறியே வெளி கொண்டு வருவேன் ...

வீண் வாதம் வேண்டாம் ...

தாயே!! தமிழே!!

வந்து விடு எங்களை வாழவிடு .... 💐💐💐🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*ராமனும் குசத்வஜனும்* (Susajvajan)

*குசத்வஜன் சொன்ன கீதை*
ravi said…
ராமா ... உன் குணம் கண்டேன் ...

உத்தமர்களே உன் தம்பிகள் என்றே புரிந்து கொண்டேன் ...

உனக்கு நிகர் யாருமே இல்லை எப்போதிலும் ராமா

ஆனால் உன் சேவைக்கு நிகர் உன் தம்பிகள் உண்டு

ஜனகன் உயர்ந்த பரிசு ஒன்றை உனக்கு தரும் போது

நானும் நிகராய் மூன்று பரிசுகள் தருகிறேன் 🤝🤝🤝

*அடியேன்* என சொல்லும் உன் தம்பிகளுக்கு ...

தராசு சாயுமோ

தங்கதட்டு உணவாகுமோ ..?

கூவுவது எல்லாம் குயில் ஆகுமோ ?

ஆடுவது எல்லாம் மயில் ஆகுமோ ... 🦚

ஆகும் ராமா ...

உன் அடியவர்க்கு பணி செய்தால் எல்லாமே நிகர் ஆகும் ..

உன் சேவைக்கும் நிகர் இன்றி இருக்கும் உன் ராஜ்யம் ...

உன் நாமம் உன் அடியார் சேவை

ராவணன் இதை புரிந்து கொண்டிருந்தால்

உனை இவை வைத்தே வீழ்த்திருப்பான் அன்றோ ...

அறிவிலன் ... அசுரன் ..

நாமம் உதட்டில் ஒட்ட வில்லை

உள்ளத்தில் தைக்க வில்லை ..

பலமுகம் கொண்டவன் தசமுகம் தரையில் வீழக்கண்டான் ...

சிரித்தான் ராமன் ... 😊

என் பலவீனம் தெரிந்து கொண்டீர் ...

தசரதனும் அறியவில்லை

ஜனகருக்கும் தெரியவில்லை ...

சத்தியம் நீங்கள் சொன்னவை ... தம்பிகள் உயர்ந்தனர்

மாண்டவி, சுருதகீர்த்தி சீதைக்கும் மேல் ...

தம்பிகள் உச்சி தனை முகர்ந்தேன் ..

என் கர்வம் ஓங்கி வளரக்கண்டேன் ...

என் நாமம் ஒருவன் சொல்லக் கண்டேன் ..

என் வெற்றி வெகு தொலைவில் ஓடக்கண்டேன் ...

*ராமா* ...

சீதையும் என் கோதையே ...

சீற்றம் கொள்ளாதே அவளிடத்தில் ஒரு பொழுதும் ...

தவறுகள் அவர்கள் நால்வர் செய்யினும் தண்டனை எனக்கே கிடைக்கப் பெறுவாய்

*குசத்வஜரே* ...

உங்கள் போல் தந்தை எல்லா பெண்களுக்கும் கிடைக்கப் பெற்றால் மகான்கள் யாரும் பிறக்கத்தேவை இல்லை ...

மாந்தர்கள் கண்ணீர் சிந்த தேவை இல்லை ...

இருப்பினும் ஒரு மகான் பிறந்ததே ஆக வேண்டும் பூமியிலே ...

ராம ராஜ்யம் நிலை நிற்கவே ...

பிறப்பான் விழுப்புரம் ...

விரைவில் காண்பீர் அவனுள் என்னை மீண்டும் ... 🤝🤝🤝
Kousalya said…
Nice conversation with Ma Saraswati

அருமை
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 252* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*83*
*வது திருநாமம்*

*83* ब्रह्मोपेन्द्रमहेन्द्रादिदेवसंस्तुतवैभवा - *ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துதவைபவா ---*💐💐💐
ravi said…
சென்னையில் நங்கநல்லூரில் மாதா ராஜராஜேஸ்வரிக்கு ஒரு அழகான கோயில் உள்ளது.

1965-70களில் இந்த ஆலயம் எழுந்தது.

ஸ்ரீவித்யா உபாசகர் ராஜகோபால சுவாமிகள் வீட்டில் யாகசாலை அமைத்து மகாஷோடஸி மந்திரத்தால் செய்த ஹோமத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்தபோது,

தகதகவென்று தீயிலிருந்து தோன்றியவள்.

தாம்பாளத்தட்டில் அவளை கையில் ஏந்தி காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு செல்ல ‘ *இவள் ராஜராஜேஸ்வரியே!* இத்துடன் உருவான மணிகள் *சித்துகள்* ’’ என்று மஹா பெரியவா கூறினார்.

ஒரு ஆஸ்ரமம் அமைத்து ராஜராஜேஸ்வரிக்கு கோயில் கட்டினார்.

அம்பாளின் அர்ச்சனைக்கு கோயிலிலேயே விற்கப்படும் கற்கண்டு மட்டுமே நைவேத்யம்.

மஹா கணபதி, துர்க்கை. தன்வந்திரி பகவானும் அருள்பாலிக் கின்றனர்.

கொடிமரம். பலிபீடம், சிம்மம். பதினாறு படிகள்.

பதினாறு படிகள் திதி களை குறிக்கிறது.

முதல் படியில் சுக்ல பிரதமையென்றும், கிருஷ்ண பஞ்சதசியென்றும் குறிப்பு உள்ளது.👏👏👏
ravi said…
அந்த திதியின் தேவதையாக கொலுவிருக்கும் காமேஸ்வரி நித்யா தேவி பற்றி அகத்திய மாமுனிவரின் ஸ்லோகம் சுவரில் காணலாம்.

இந்த நித்யா தேவியின் யந்திரங்களும் திரு வுருவும் படியின் இருபுறங்களிலும் சுவரில் காணலாம்.

தினமும் இந்த யந்திரங்களுக்கும் திருவுருவங் களுக்கும் முறைப்படியான பூஜையும் நைவேத்யமும் உண்டு.

இதுபோல் 16 படிகளுக்கும் அதனதன் மஹிமையை அறியலாம்.

16வது படியில் அன்னை ராஜராஜேஸ்வரி மரகத பச்சை நிறத்தில் அழகாய் காட்சி தருகிறாள்.

அருகில் இருக்கும் உற்சவ விக்ரகம்தான் யாகத்தீயில் உருவானது.

இங்கே பல மகான்களால் பூஜிக்கப்பட்ட 43 சக்தி தேவதைகளின் யந்திரங்களும் யாகத்தில் தோன்றிய சித்தி மணிகளையும் சுரைக்காய் சுவாமியின் கைத்தடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சந்நதியின் இரு புறங்களிலும் வாராஹியும் மாதங்கியும் சந்நிதிகள்.
பழவந்தாங்கல் ரயில் நிலையம் மிக அருகில் உள்ளது
நங்கநல்லூர் ....🤝🪔🪔
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 253* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌65

*65 தேவியின் தாம்பூல மஹிமை*

*வெற்றி, வாக்விலாஸம்*

ரணே ஜித்வா தைத்யா னபஹ்ருத ஶிரஸ்த்ரை: கவஶிபி:

நிவ்ருத்தைஶ் சண்டாம்ஶ த்ரிபுரஹர நிர்மால்ய விமுகை:

விஶாகேந்த்ரோபேந்த்ரை: ஶஶிவிஶத கர்ப்பூரஶகலா

விலீயந்தே மாதஸ்தவ வதன தாம்பூல கபலா 65
ravi said…
இங்கே ஆச்சாரியரின் பக்தியையும் தெய்விக கற்பனை வளத்தையும் பாராட்டியே ஆக வேண்டும் ...

அம்பிகையை உயர்வாக புகழ்வதால் அதிகமாக சந்தோஷம் கொள்பவர் பரமேஸ்வரன் ..

*Converse is also true* .

அப்படி இருக்கும் அவர்கள் தாம்பத்தியம் ... 👏👏👏

தேவியை புகழ வேண்டும் அதே சமயத்தில் ஈசனை சற்றே குறைவு படுத்தி சொன்னால் சொல்லும் வார்த்தைகள் இன்னும் இனிப்பாக இருக்கும் ...

இங்கே பரமேஸ்வரனை மட்டம் தட்ட வில்லை அவனை சந்தோஷப்படுத்துகிறார் ...

அம்பாளுக்கு ஈசன் மட்டுமே நிகர் ...

கொஞ்சம் தராசை இந்த பக்கம் அல்லது அந்த பக்கம் சாய்த்தால் பெருமை படுபவர்கள் ஒருவராய் இருக்கும் இருவருமே ...

இதே சங்கரர் அம்பாளை ஈசனின் சிந்தனையின் மொத்த உருவம் *அகம் புருஷிகா* என்றும் புகழ்கிறார் ...

*ஈசனின் நிர்மால்யம்* என்பது கோடி பொன்னுக்கும் மேல்

அது கிடைக்காதா என்றும் ஏங்காத தேவர்களே இல்லை ...

இவ்வளவு உயர்வான ஒன்றைக் காட்டிலும் உயர்வானது ஒன்று உண்டு என்றால் அது அம்பாளின் *தாம்பூலமே* ...

இப்படி சொல்வதால் ஈசனும் மகிழ்வு அடைகிறார் ...

ஆச்சாரியார் புகழ்ந்து வர்ணிப்பது சிவனின் உயர்ந்த சிந்தனைகளாக இருக்கும் அம்பாளை ...

*ஒரே கல்லில் இரண்டு மாங்காய்* எனும் பழமொழி

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி மூலம் தான் இந்த உலகத்திற்கு வந்திருக்க வேண்டும் ... 🙏🙏🪔
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 30*👌
ravi said…
முகுந்தமாலா ஸ்தோத்திரத்துல ஆறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம்.

நேத்திக்கு “ *நாஹம் வந்தே”* அப்படீங்கிற ஸ்லோகத்துல

‘எனக்கு நரக வாதனை இருக்கக் கூடாது, சொர்க்க போகங்கள் வேணும், இல்லை, என்னுடைய ஆசா பாசங்கள் போகணும்,

இப்படியெல்லாம் எந்த ஒரு குறிக்கோளும் வெச்சுண்டு உன்கிட்ட நான் பக்தி பண்ணலை.

ஹே முகுந்தா, என் மனக்கோவிலில் உன்னை எழுந்தருளப் பண்ணி உன்னை நினைச்சுண்டு உட்கார்ந்திருக்கிறதே எனக்கு பிடிச்சிருக்கு.

இதுதான் எனக்கு ப்ரயோஜனமே.

இந்த பக்தியினால எனக்கு வேற ஒண்ணு வேணும்னு நான் கேட்கவே இல்லை.

உன்னை மறக்காம இருக்கிற ஒரு வரம் மட்டும் கொடு’, அப்படீன்னு கேட்டார்.

அதையே இன்னொரு வாட்டி reiterate பண்றார்.

இந்த ஏழாவது ஸ்லோகத்துல👏👏👏
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

. பாயும்மால்விடைமேல் ஒரு பாகனே;
பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே;
சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல் அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே;
கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே. 1

*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏

இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய
இடபத்தைச் செலுத்துபவர். உமாதேவியைத் தம் திருமேனியில்
ஒருபாகமாகக் கொண்டவர். தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின்
தொனியானவர். சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ
ஆனவர். ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும்
நுட்பமான கருத்தாக விளங்குபவர். ஆலநிழலின் கீழ்த்
தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்
பொருள் உரைத்த முதல்வர். போர்புரிய வந்த வில்லையுடைய
மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம். நெற்றிக்
கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்
திருக்கச்சியேகம்பமே.

கு-ரை: பாயும் மால் விடைமேல், ஒரு பாகன் - செலுத்து
பவன். பாவை - பெண்ணை. தன் உருமேல் - தன் உடம்பின்மேல்.
ருபாகன் - ஒருபாகத்தில் உடையவன். வேதத்துவனி - வேதத்தின்
முழக்கம். மால் - பெரிய. எரி - எரிகின்ற. வேதத்து -
வெம்மையையுடைய. வனியே - நெருப்பே. எரிவன்னி - வினைத்
தொகை. வேது - வெம்மை. அத்து - சாரியை. ஆயும் -
ஆராயத்தக்க. நன் பொருள் - நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும்,
நுண்பொருள் - நுட்பமான கருத்தாக. ஆதி - ஆவாய். அரும்
பொருள் ஆதியே - கிடைத்தற்கு அரிய பொருளாயுள்ள முதல்வனே.
காய - போர் புரிய (வந்த). வில்மதன் - வில்லையுடைய மன்மதன்.
பட்டது - முதற்கண் அடைந்தது. கம்பம் - நடுக்கமேயாம். காய -
காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. காமன் பட்டது கம்பம்
என்பதை “நந்தி தேவர் காப்பும் ஆணையும் உற்று நோக்கி
நெடிதுயிர்த்து உளம் துளங்கி விம்மினான்” எனவரும் காம தகனப்
படலத்தான் அறிக. கம்பம்:- ஏகம்பம் என்பது கம்பம் என முதற்
குறைந்து நின்றது. ஏக + ஆம்பரம் = ஏகாம்பரம் - (ஒற்றை மாமரம்)
ஏகம்பம் என மருவிற்று. வேதத்து + வனி = வேத விதிப்படி
வளர்க்கப்பெறும் வேள்வித் தீ எனலே பொருந்துவது.
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் நமசிவாய*
*திருச்சிற்றம்பலம்*

போற்றி! ஓம் நமச்சிவாய! புயங்கனே, மயங்குகின்றேன்;
போற்றி! ஓம் நமச்சிவாய! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை;
போற்றி! ஓம் நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்;
போற்றி! ஓம் நமச்சிவாய! சய! சய! போற்றி! போற்றி!

போற்றி! என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி! நின் பாதம் போற்றி! நாதனே, போற்றி! போற்றி!
போற்றி! நின் கருணை வெள்ளப் புது மது; புவனம், நீர், தீ,
காற்று, இயமானன், வானம், இரு சுடர்,
கடவுளானே!
*திருச்சிற்றம்பலம் *
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
🌹🌺 ஸ்ரீ கிருஷ்ணன் எங்கும் நிறைந்தவன் என்று உணர்ந்தால் யாரிடமும் பகைமை காட்ட மாட்டோம்- என்பதை விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹புஷ்டிமதி என்ற கோபிகை இருந்தாள். அவள் வீட்டில் ஏலக்காய் பாலை அவளின் பசு சுரக்குமாம். அதை திருட வேண்டும் என்று கண்ணன் எண்ணம் கொண்டான்.

🌺கண்ணனுக்கு தான் எல்லாம் திருடி சாப்பிடதானே பிடிக்கும். கண்ணனும் அவளுக்கு தெரியாமல் பாலை திருடி சாப்பிட்டான். இதை புஷ்டிமதி பார்த்து விட்டாள்.

🌺ஒரு பிரம்பு எடுத்து கண்ணனின் முதுகில் ஒன்று வைத்தாள். ஆனால் வலித்ததோ அவளுக்கு. அந்த அடி அவளுக்கு மட்டும் விழுக வில்லை.

🌺பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளின் மீது விழுந்தது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமே அவன் உடல்தான். அவனோ இந்த பிரபஞ்சத்தின் ஆத்மா. ஆத்மாவுக்கு ஏது வலி? உடலுக்குதானே வலி.

🌺அனைத்தையும் உடலாக கொண்டு உள்ளே உயிராக எங்கும் நிறைந்ததால் "விஷ்ணுகு" என்று அழைக்க படுகிறார்.


🌹🌺பாடல்

🌺கண்ணா
கருமை நிற கண்ணா
உன்னை காணாத
கண்ணில்லையே

🌺கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

🌺கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

🌺கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே

🌺நாமும் ஸ்ரீ கிருஷ்ணன் எங்கும் நிறைந்தவன் என்று உணர்ந்தால் யாரிடமும் பகைமை காட்ட மாட்டோம்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌺🌹 We will not show enmity to anyone if we feel that Sri Krishna is omnipresent- Simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌹🌺There was a coward named Pushtimati. Her cow secretes cardamom milk at her house. Kannan intended to steal it.

🌺Kannan likes to steal and eat everything. Kannan also stole the milk and ate it without her knowing. Pushtimati has seen this.

🌺Take a cane and put one on Kannan's back. But it hurt her. Those feet did not fall on her alone.

🌺 fell on all living beings in the universe. Because this universe is his body. He is the soul of this universe. What pain to the soul? Pain to the body.

🌺 He is called "Vishnu" because he embodies everything and is full of life everywhere inside.


🌺Song🌹

🌺 Kanna
Dark darling
Not seeing you
கண்ணில்லையே

🌺Kannakarumai
Color dear you
காணாத கண்ணில்லையே
Do not deny yourself
Do not hate to see
Even if you see me
Not responsible

🌺Kannakarumai
Color dear you
காணாத கண்ணில்லையே
Do not deny yourself
Do not hate to see
Even if you see me
Not responsible

🌺Kannakarumai
Color dear you
காணாத கண்ணில்லையே

🌺We will not show enmity to anyone if we feel that Sri Krishna is omnipresent🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

"மறக்க முடியாத அனுஷம்!"

( “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” )

ஆகஸ்ட் 25,2016,.தினமலர் காஞ்சிப்பெரியவரின் சீடர் குமரேசன் கூறிய உண்மைச் சம்பவம் இது.

திருக்கோவிலூரைச் சேர்ந்த பெரியவரின் பக்தரான மணி, தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்திருந்தார்.

பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தன்று தவறாமல் விரதமிருந்து பூஜை செய்வது அவரது வழக்கம். முடிந்தால் அனுஷத்தன்று காஞ்சிப் பெரியவரை தரிசிக்கவும் செய்வார்.

மணிக்கு இரு குழந்தைகள். மூத்தவள் பெண். இளையவன் பையன். பெண்ணுக்குத் திருமணம் முடிந்து பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். பையன் படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தான். இந்நிலையில் தான், மணி தம்பதி பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அன்று அனுஷம் என்பதால் மடத்தில் பெருங்கூட்டம் காத்திருந்தது. வீட்டில் நிறைமாத கர்ப்பிணி தனியாக இருக்கிறாளே என்ற எண்ணம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்!

காஞ்சிப்பெரியவர் சீடர்களிடம் வரிசையில் நிற்கும் திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” என்று சொல்லிக்கொண்டே அட்சதை கொடுத்து ஆசியளித்தார்.

தாமதம் செய்யாமல் மணியும் உடனே டாக்சியில் திருக்கோவிலூர் திரும்பினர்.

வீட்டிற்குள் நுழையும் போதே அடுத்த வீட்டுப் பெண்கள் ஓடி வந்தனர். “உங்களுக்கு இப்ப தான் பேரன் பிறந்திருக்கான். சுகப்பிரசவம் தான்” என்று சொல்லி விட்டு 'தந்தி ஒண்ணு வந்திருக்கு' என்று சொல்லி அதையும் கையில் கொடுத்தனர். அதைப் பிரித்து பார்த்த மணியின் கண்கள் அகல விரிந்தன. மகனுக்கு ரயில்வே துறையில் நாக்பூரில் சேர்வதற்கான பணி குறித்து தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகிழ்ச்சியுடன் மணி பேரக்குழந்தையைப் பார்க்கச் சென்றார். தாத்தாவிடம், 'எல்லாம் காஞ்சிப்பெரியவரின் கருணையே' என்று அந்தக் குழந்தை சொல்வது போலிருந்தது. குழந்தைக்கு 'சந்திரசேகரன்' (பெரியவரை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைப்பது வழக்கம்) என்று பெயரிட்டு வாழ்த்தினார். வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.

இதே போலவே, வேறொரு அற்புதமும் பெரியவரால் நிகழ்ந்தது.

ஒருமுறை பெரியவரை தரிசிக்க பெங்களூருவில் இருந்து பணக்காரர் ஒருவர் வந்தார். பழம், பூ, பட்டுப்புடவை, திருமாங்கல்யம் ஆகியவற்றை தாம்பாளத்தில் வைத்தபடி அவரது மனைவி உடன் நின்றாள்.

பெரியவரை வணங்கிய அவர்கள், “சுவாமி... யாராவது ஒரு ஏழைப் பெண்ணுக்கு இதை அளிக்க விரும்புகிறோம்,” என தெரிவித்தனர்.

அதே நேரத்தில், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலைச் சேர்ந்த ஏழை சமையல்காரர் ஒருவர் தன் மனைவி, மகளுடன் அங்கு வந்திருந்தார். தன் மகளுக்கு திருமணத் தேதி குறித்து விட்டதை தெரிவித்து ஆசியளிக்கும்படி வேண்டினார். அப்போது பணக்காரரை அழைத்த பெரியவர்,

“திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே இவாளை இங்க அனுப்பியிருக்கா... அதுக்கு காஞ்சி காமாட்சி வழிகாட்டியிருக்கா... கொடுக்க விரும்பினதை இந்த பொண்ணுக்குச் சீதனமாக கொடுங்கோ” என்று சொல்லி ஆசியளித்தார்.

பணக்காரரும் மகிழ்ச்சியுடன் திருமாங்கல்யம் உள்ளிட்டஅனைத்தையும் அவரிடம் கொடுத்தார். அப்போது அந்தப் பெண்ணை தீர்க்க சுமங்கலியாக வாழ பெரியவர் வாழ்த்தினார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

Kousalya said…
ஆஹா...ஶ்ரீராமனின் பலவீனம் உணர்த்தி அதை நாம் பலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தாங்களின் உரையாடல் மிகவும் அருமை...பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🌹🌹
Oldest Older 201 – 260 of 260

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை