ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 5. தேவகார்ய ஸமுத்யதா (1) பதிவு10

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

  தேவகார்ய ஸமுத்யதா

பதிவு 10

இன்று நாம் பார்க்கப் போவது 5வது திருநாமம் .

எதற்காக சிதக்னிக்குண்டலத்தில் இருந்து தோன்றினாள் ? 

அவளுக்கும் உண்மையில் பிறவிகள் உண்டா மாந்தர்களைப்போல ?? 

5வது திருநாமம் பதில் சொல்கிறது ..

தேவகார்ய ஸமுத்யதா

தேவர்களின் சகல காரியங்களிலும் உதவுபவள்.  

தேவர்களால் முடியாததை எல்லாம் முடிக்கும் சக்தியுள்ள தேவி அல்லவா இவள்?

தேவர்களுக்கு உதவுபவள். 

தெய்வ செயல்களுக்கு உதவுபவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். 

தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, நேர்மையான, நீதிக்குட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்.🚩🚩🚩

ஸமுத்யதா என்றால் வழங்குபவள் .

சரி தேவர்கள் என்றால் விண்ணோர்கள் . அமரர் தங்கோன் இருக்குமிடம் ..

அப்படி என்றால் அம்பாள் அவர்களுக்கு மட்டும் தான் வருவாளா ? 

நாமும் அவள் பிள்ளைகள் தானே நாம் அழைத்தால் வர மாட்டாளா ? 

முதலில் நாமும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் நம் மனதில் வரவேண்டும் .

வந்தால் மட்டுமே போதாது 

அப்படிப்பட்ட உயர்ந்த சேவைகள் செய்ய வேண்டும் .. 

விண்ணவர் யாவரும் வந்திறங்கி பேணுதர்க்கெண்ணிய எம் பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணும் அன்பு பூணுதற்கெண்ணிய எண்ண மன்றோ நான் முன் செய்த புண்ணியம் என்கிறார் பட்டர் 

அவள் எண்ணங்கள் நம் நெஞ்சில் வந்து விட்டாலே நாமும் தேவர்கள் நிலைக்கு உயர்ந்து விடுகிறோம் ..

பிறகு அழைத்தும் பாராமல் அவள் எப்படி இருப்பாள் ? 💐💐💐


என்ன அந்த தேவ காரியம் . ஏன் அவள் சிதக்நிகுண்டலத்தில்
இருந்து ஒளி பிழம்பாய் தோன்றவேண்டும் ? 

பண்டாசுரன் காமனை எரித்து மிஞ்சிய பஸ்பத்தில் இருந்து தோன்றியவன்.. 

காமம் முழுவதும் எரியாமல் மிஞ்சி இருக்கும் சாம்பல் மீண்டும் காமம் ஓங்கி எழ அசுரனாய் அவதரித்தது ..

🔥🔥🔥

சிரித்தான் ஈசன் . நான் எரித்தேன் காமனை என்  சக்தி எரிக்கட்டும் அவன் சாம்பலை என்றான் ..

துடித்தனர் தேவர்கள் . புலியுடன் விளையாடியவர்கள் புலித் தோல் போத்தியவனோடு விளையாடியதால் வினை கொண்டனர் ..

வேண்டினர் தேவியை வீரம் கொண்டு அரக்கனை அழிக்க  எல்லோரும் ஒரு முகமாய் திரிபுரையை வேண்ட தாய் மனம் மணம் வீச 


தாரகை ஒளிக்குழம்பாய் 

உதிக்கின்ற செங்கதிராய், 

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாய் , 

மனோன்மணியாய் , 

சிந்தாமணியாய் 

ஸ்ரீ லலிதையாய்

பஞ்சமியாய் 

பைரவியாய் 

பஞ்சபாணியாய் 

இன்சொல் திரிபுர சுந்தரியாய் 

சிந்தூரமேனியளாய், 

நாயகியாய் , 

நாராயணியாய் 

நான்முகியாய் ,

கை நளின பஞ்ச பாணியாய் 

பாஸாங்குசம் உடையவளாய்  

சாதி நச்சு வாயினியாய் , 

மாலினியாய் , 

மந்திரிணீயாய் 

ஸம்பத்துகிரியாய்

அச்வாரூடாவாய் 

பவானியாய்

வாராஹியாய் , 

சூலினியாய் , 

மாதங்கியாய் , 

வஞ்சகர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டியாய் , 

காளியாய், 

ஒளிரும் கலா மண்டலியாய் , வைரவியாய் , 

வார்க்கும் குங்கும முலையுடன் 

அதன் மேல் முத்து மாலை தவழ 

அலர் கதிர் திங்களும் ஞாயிறும் போல் 

அண்ணாமலை மகரஜோதி கலந்த தீபமாய் தோன்றினாள் 

தேவர்களாகிய நம் வாழ்வும் சிறக்கவே ... 💐💐💐👍👍👍🌷🌷🌷🔥🔥🔥🔥


அன்னையின் தோற்ற வர்ணனை தொடர்கிறது

உதிக்கின்ற செங்கதிராய்

உச்சித்திலகமாய் 

உணர்வுடயோர் மதிக்கின்ற மாணிக்கமாய் , 

மனோன்மணியாய் 

சிந்தாமணியாய் 

வையிர குழையாய் , பனி மா மதியின் குழவியாய் 

பச்சைக் கற்பூரத்தின் மணமாய் 

பச்சை பரிமள பசுங்கொடியாய் , 

பைங்கிளியாய் , 

தாமரைகள் கோயில் கட்டும் ஆலயமாய் , முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் தையலாய் 

💐💐💐🙌🙌🙌


முக்கண்ணியாய் , 

திரிப்புரையாய் , 

முகிழ் நகையாய் , 

பாலும் தேனும் பாகும் போல் பனி மொழியாய் 

சுந்தரியாய் 

அந்தரியாய் 

மடப்பூங்குயிலாய் , 

கோல இயல் மயிலாய் , 

இமவான் தந்த கோமளமாய் , 

கைலாயருக்கு கிடைத்த கனங்குழையாய் ... கடம்பாவிடையாய் 

பாரும் புனலும், கனலும் வெங்காலும் படர் விசும்புமாய் 

வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவும் பகலும்  சூழும் சுடர்க்கு நடுவே சுடரும் ஒளியாய் 

நம் தாயாய் , மகாராணியாய் , 

சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கப் போகும் ராஜ ராஜேஸ்வரியாய் 

சிவசக்தியாய் தோன்றினாள் உலகம் உய்யவே 💐💐💐🙌🙌🙏🙏👍👍👍👣👣🌷🌷


ஐந்தாவது திருநாமம் .. அவள் தீய சக்திகளை அழிக்க உள்ளம் உருகி வேண்டுவோர் நலம் வாழ தோன்றி கொண்டு இருப்பாள் .. கண்ணன் கீதையில் சொன்னது இவளுக்கும் மிகவும் பொருந்தும் ..

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத |

அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |

தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (IV. 7-8)

எப்போதெப்போது தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டாலும் : “ *யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி”;* 

தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டால் என்ன ஆகும்? அதர்மத்துக்கு அபிவிருத்தி உண்டாகும். அதைச் சொல்கிறார்: *“அப்யுத்தாநம் அதர்மஸ்ய.”* 

இப்படி தர்மம் க்ஷீணித்து, அதர்மம் மேலோங்கும் போது, எப்போதெல்லாம் இப்படி ஏற்படுகிறதோ, அப்போது — “ *ததா* ”: “அப்போது” ;

அப்போது, என்னையே பிறப்பித்துக் கொள்கிறேன்: “ *ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம்.”*🔥🔥🔥


இது ஏதோ அப்போதைக்குப் பண்ணின கார்யமாக முடிந்துபோய் விடக்கூடாது. 

அப்புறமும் கொஞ்சம் நீண்ட காலத்திற்கு லோகத்தில் தர்மம் நன்றாக ஸ்தாபிதமாயிருந்து, ஸாதுக்கள் நிம்மதியாக வாழும்படியாகவும், துஷ்டர்கள் தலை ஓங்காதபடியும் செய்யவேண்டும்.

சைதில்யம் அடைந்த தர்மம் லோகத்தில் எந்நாளும் நலியாமல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படிப் பண்ணுவதற்கில்லைதான். 

எதிரெதிர் சக்திகள் — pair of opposites என்பவை — போராடிக் கொண்டு மாறி மாறி மேலுக்கும் கீழுக்கும் போவதில்தான் லோக நாடகமே இருக்கிறது. 

ஆனாலும் ஸ்ருஷ்டியின் விசித்ரப் போக்கில் இது ஸம பலப் போராட்டமாக இல்லாமல் ஆஸுரமான (அஸுரத்தனமான) அதர்மதத்திற்கே ஜாஸ்தி ஆளுகை கொடுத்துவிடுவதால் நாடக ரஸம் போய் விரஸமாகி விடுகிறது. 

இந்த மாதிரி ரொம்பவும் முற்றிப்போகும்போதுதான் அவதாரம் எடுத்து சீர்படுத்துவது. 

இப்படி சிஷ்ட ரக்ஷணமும் துஷ்ட சிக்ஷணமும் செய்து தர்மத்தின் ஆளுகையை ஏற்படுத்திவிட்டு நாம் திரும்பிய பிறகும் ரொம்ப சீக்ரமே அஸுரர்கள் தலைதூக்கி சிஷ்டர்களைத் தலை சாய வைக்கத்தான் பார்ப்பார்கள்.💦💦💦

அதர்ம சக்திக்கு ரொம்ப சீக்ரமே ‘ *அப்யுத்தானம்* ’ (எழுச்சி) உண்டாகப் பார்க்கும். 

நமக்கு நாமே பிறப்பைக் கொடுத்துக்கொண்டு மெனக்கிட்டு அங்கே போய்ப் பண்ணினது இவ்வளவு சுருக்க (விரைவில்) வீணாகி விடாமல் செய்யணும். 

எந்நாளுக்குமாக தர்மத்தைப் பெர்மனென்ட் பண்ணுவதற்கில்லையானாலும், ரொம்பவும் டெம்பரரியாகப் பிசுபிசுத்து விடாமல், கொஞ்சம் நீண்ட காலத்துக்கு ஆழமாக நிலைநாட்டவேண்டும். 🌺🌺🌺


மேலெழ வெறும்
ஸ்தாபனம்’ இல்லை, 

ஆழமாக ‘ *ஸம்-ஸ்தாபனம்’* பண்ண வேண்டும்” என்று நினைப்பார். “ *தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய* ”: தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்காக.

என்னதான் ‘நன்கு’ நிலைநாட்டினாலும், சாச்வதமாக ஸ்தாபிப்பதற்கில்லையல்லவா? 

அதனால் ஒரு காலகட்டம் ஆன பிற்பாடு மறுபடியும் அதர்மம் கையோங்கும்தானே?

“ஓங்கிவிட்டுப் போகட்டும். எப்போதெப்போது இப்படி ஏற்பட்டாலும் அப்போது பிறக்கிறேன் என்றுதான் சொன்னேனே! மறுபடியும் சொல்கிறேன்; *ஸம்பவாமி யுகே யுகே:* 

இப்படிப்பட்ட ஒவ்வொரு ஸந்தர்பத்திலும் அவதாரம் எடுக்கிறேன்.”

யுகே யுகே’ என்றால் ‘ஒவ்வொரு யுகத்திலும்’ என்று ‘லிடர’லாக அர்த்தம் பண்ணிக் கொண்டு ஒரு யுகத்தில் ஒரு அவதாரம்தான் செய்வார் என்று நினைத்துவிடக்கூடாது. 

‘இனி எத்தனை யுகங்கள் ஸ்ருஷ்டி நடந்தாலும், அலுக்காமல் சலிக்காமல் தர்ம ஸம்ஸ்தானத்திற்காக மறுபடி மறுபடி அவதரிப்பேன்’ என்று பகவான் சொல்வதாகவே அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டும்.👑👑👑👍👍👍


முதலில் யுக அளவைச் சொல்லாமல், “ யதா யதா” (எப்போதெப்போது) என்று தானே சொன்னார்? 

அதை அடுத்த ச்லோகத்திலேயே மாற்றி ‘யுகத்துக்கு ஒரு தடவை’ என்று பண்ணுவாரா?

எப்போதெல்லாம் தர்மம் மிகவும் சீர்கேடுற்று, அதர்மம் வலுத்தாலும் தாம் ஸத்துக்களைக் காப்பாற்றி அஸத்துக்களை அழிப்பதற்காக அவதாரம் என்ற பெயரில் ஜன்மா எடுப்பதாக பகவான் சொன்னார்.

பரித்ராணாய ஸாதூநாம்’ — “ஸத்துக்களைக் காப்பாற்றுவதற்காக” — என்று சொன்னதாலேயே, எத்தனைதான் அதர்மம் கையோங்கினாலும் அப்போதும் தர்மம் அடியோடு போய்விடாமல் தர்மத்தை அநுஷ்டிக்கும் ஸத்துக்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டிருப்பார்கள் என்று ஆகிறது.

ப்ரக்ருதியின் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்ட மநுஷ்யர்கள் மாதிரி கர்மாவுக்காக ஜன்மா தமக்கு இல்லை; 

லோக ரக்ஷணத்துக்காகவே தாமாக ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு ஜன்மா எடுக்கிறேன் என்று சொன்னார்.

சத்-சித்-ஆனந்தம் வெறும் 'அக்னி குண்ட' சம்பூதா என்றால் அது தேவேந்திரன் செய்த யாகத்தை மட்டுமே குறிக்கும். 

'சிதக்னி' என்று சொல்லும்போது, அது நமக்குள்ளே உள்ள 'சித்' என்பதைக் குறிக்கிறது. சச்சிதானந்தம் என்று சொல்வோமே, சத்-சித்-ஆனந்தம், அதில் வரும் 'சத்' என்பது எல்லாவற்றுக்கும் சத்தியமாக உள்ள, சகலத்துக்கும் சத்தியமாக உள்ள பரமாத்மா. இந்த 'சத்'துடன் 'சித்' சேர்ந்தால் அது ஆனந்தமாகிற நிலைமை; அதுதான் சச்சிதானந்தம்.

இன்னும் புரிந்து கொள்வோம் 


She is the slayer of Asuraas like Bandan, Mahishan, Shumban, Nisumban etc., thus eager to serve all good souls  .    

            👌👌👌👌👌👌💐💐💐💐💐💐👍👍




Comments

ravi said…
KANCHI MAHAPERIYAVA THIRUVADIGAL CHARANAM
🙏🌹🙏🌷🙏🌹🙏

"நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?'

தம்பதிகளின் ஆசையை பூர்த்தி செய்த மகான்

பரமாசார்யா காஞ்சி மடத்துல இருக்கற சமயத்துல அவரை தரிசனம் பண்ண பல ஊர்கள்ல இருந்தும் நிறையப்பேர் தினமும் வருவா. அதுவும் விசேஷ நாள்னா கேட்கவே வேண்டாம். கூட்டம் திமிலோகப்படும். மடத்து சிப்பந்திகள் இங்கேயும் அங்கேயுமா நின்னுண்டு வரிசையை கட்டுப்படுத்திண்டு இருப்பா.
ravi said…
ஒரு சமயம் மகரசங்கராந்தி அன்னிக்கு அதே மாதிரி ஆயிரக்கணக்கானபேர் பெரியவாளை தரிசனம் பண்றதுக்காக மடத்துல குவிஞ்சிருந்தா! அனுமார் வால் மாதிரி நீண்டு இருந்த வரிசையை, மடத்து சிப்பந்திகள் கிரமப்படுத்தி, உள்ளே அனுப்பிண்டு இருந்தா.

அந்த கூட்டத்துல ஒரு தம்பதி நின்னுண்டு இருந்தா. அவாளைப் பார்த்தாலே முகம் முழுக்க ஏதோ ஒரு சோகம் நிரந்தரமா அப்பிண்டு இருக்கறது தெரிஞ்சது. ஆமையா நகர்ந்துண்டு இருந்த வரிசை கொஞ்சம் வேகமா நகராதா, சீக்கிரமா ஆசார்யாளை தரிசிக்க மாட்டோமாங்கற ஏக்கம் அப்பப்போ அவாகிட்டே எட்டிப் பார்க்கறதையும் உணர முடிஞ்சது.
ravi said…
கூட்டம் நகர, நகர நேரமும் சேர்ந்து நகர்ந்து உச்சிக்காலத்தை நெருங்கித்து. அந்த சமயத்துல அந்தத் தம்பதிகள் கிட்டே ஏதோ ஒர பரபரப்பு தொத்திண்டுது. ரெண்டுபேரும் எதையோ முணுமுணுத்துக்கறதும், குறுக்குல போயாவது பெரியவாளை தரிசிக்க ஏதாவது வழி இருக்குமான்னு அங்கேயும் இங்கேயுமா எட்டி எட்டிப் பார்க்கிறதுமா நிலைகொள்ளாம தவிச்சாங்க.

அந்த சமயத்துல அங்கே இருந்த மடத்து சிப்பந்தி, அவாளை ஒழுங்கா நில்லுங்கோ... இப்படி நகர்ந்து நகர்ந்து மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணாதீங்கோன்னு மென்மையா சொன்னார்.
ravi said…
சட்டுன்னு தன்னோட கையில் இருந்த மஞ்சப்பையை உயர்த்தி அந்த சிப்பந்திகிட்டே காட்டினார் அந்த ஆசாமி. "பெரியவா எங்கிட்டே கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம். அவர் பிட்சாவந்தனத்துக்கு போறதுக்கு முன்னால குடுத்துடணும்னு தான் பரபரப்பா இருக்கோம். நீங்க கொஞ்சம் தயசு வைச்சா, கொஞ்சம் முன்னால போய் அவர்கிட்டே குடுத்துடறோம்..' சொன்னார்.

அவர் காடிடன பைக்கு உள்ளே உருண்டையா ஏதோ இருக்கறது தெரிஞ்சுது. "என்ன கூட்டம் நெறைய இருக்கறதால சுலபமா பார்க்கறதுக்கு வழி தேடறேளா... பெரியவா கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம்னு சொல்லி ஏமாத்தப்பார்க்கறேளா? அதெல்லாம் விடமுடியாது..' கண்டிப்பாகவே சொன்னார் மடத்து சிப்பந்தி.
ravi said…
இல்லை.. பொய் சொல்லலை... ஆசார்யா நேத்து எங்க ரெண்டுபேரோட கனவுலயும் வந்து கேட்டார்! அதனாலதான் இந்தக் கொய்யாப்பழத்தை எடுத்துண்டு வந்திரக்கோம்!' கெஞ்சலா சொன்னா, அந்த தம்பதி.

"யார்கிட்டே கதைவிடறேள்? பெரியவா ஒரு வார்த்தை சொன்னா வண்டிவண்டியா பழத்தைக் கொண்டு வந்து குவிக்க பல பெரிய மனுஷா தயாரா இருக்கா. அப்படி இருக்கறச்சே.. அவர் உங்ககிட்டே கேட்டாரா? அதுவும் கனவுல வந்து இந்த ஒரே ஒரு கொய்யாப்பழத்தைஎடுத்துண்டு வரச்சொன்னாராக்கும்?

வழியில சாப்பிடறதுக்கு வாங்கி வைச்சதை பெரியவா கேட்டான்னு சொல்லிட்டு முன்னால போகலாம்னு பார்க்கறேளோ?' முன்னால பின்னால இருந்த யாரோ குரல் எழுப்பினா.
ravi said…
அவ்வளவுதான், பேசாம தலையைக் குனிஞ்சுண்டு நின்னுட்டா அந்த தம்பதி. "அவர்தானே கேட்டார்? அதை எப்ப வாங்கிக்கணும்னு அவருக்கே தெரியும்.. நாம் ஏன் அவசரப்படணும்?' மெதுவா முணுமுணுத்தார் அந்தப் பெண்மணி.

ஆச்சு, மெதுவா நகர்ந்து நகர்ந்து பெரியவாளை அந்தத் தம்பதி தரிசிக்கிற முறை வந்தது. ஆம்படையானும், பொண்டாட்டியுமா ஆசார்யா கால்ல விழுந்தா, பிரசாதத்தை வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினா.

பிரசாதத்தைக் குடுக்கறக்கு பதிலா, "என்னைப் பார்த்ததும் வந்த வேலையை மறந்துட்டியா? நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?' பெரியவா கேட்க, எல்லாரும் அதிர்ந்துபோனா. அவா பொய் சொல்றதா குரல் எழுப்பினவா தலையை குனிஞ்சுண்டா.
ravi said…
அவசர அவசரமா, மஞ்சப்பையில இருந்த கொய்யாப் பழத்தை எடுத்து நீட்டினார் அந்த ஆசாமி. ஆசார்யா தன் பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார். அதோட அர்தத்தை புரிஞ்சுண்ட அந்த சீடர் சட்டுன்னு ஒர மூங்கில் தட்டை நீட்டி அந்தப் பழத்தை வாங்கி, கொஞ்சம் ஜலம் விட்டு அலம்பிட்டு ஆசார்யா பக்கத்துல வைச்சார். கனிஞ்சிருந்த அந்தக் கனியை கனிவோட எடுத்து பெரியவா மென்மையா ஒரு அழுத்து அழுத்தினார்.

கிருஷ்ணரோட கால் படறதுக்காவே காத்துண்டு இருந்த யமுனை அவரோட பாதம் பட்டதும் பட்டுனு விலகி வசுதேவருக்கு வழிவிட்ட மாதிர, பரமாசார்யாளோட கரம் படறதுக்காகவே காத்துண்டு இருந்த மாதிரி அந்தக் கொய்யாப்பழம் சட்டுன்னு இரண்டு விள்ளலா பிளந்துண்டுது.
ravi said…
அடுத்து யாருமே எதிர்பார்க்காதபடி, செவேல்னு இருந்த அந்தப் பழத்துல ஒரு பாதியை அப்படியே வாயில போட்டுண்டுட்டார், பெரியவா. இனனொரு பாதியை அந்தத் தம்பதிகிட்டே கொடுத்தார்.

"நீயும் உன் ஆம்படையாளும் சாப்பிடுங்கோ.. எதை நினைச்சு ஏங்கறேளோ அது கிடைக்கும்!' ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.

எல்லாருக்கும் இப்போ அந்த தம்பதிமேல தனி மரியாதை வந்துது. எது மேலயுமே பற்றோ ஆசையோ வைக்காத ஆசார்யா, இவா கொண்டு வந்த பழத்தை வாங்கி, உடனே சாப்பிடறார். மீதியை பிரசாதமாவும் தர்றார்னா, இவா எவ்வளவு பெரிய பாக்யம் பண்ணியிருக்கணும்னு பேசிண்டா.

அவா செஞ்ச பாக்யம் என்ன? பெரியவா அவாளுக்குத் தந்த வரம் என்னங்கறது, சரியா ஒரு வருஷம் கழிச்சு அதே தம்பதி மறுபடியும் ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தப்போ தெரிஞ்சுது. ஆமா, இப்போ அவா கையில, பிறந்து ஒண்ணு ரெண்டு மாசமே ஆன குழந்தையும் இருந்துது. தழுதழுப்போட குழந்தையை பெரிவா காலண்டையில போட்டுட்டு ரெண்டுபேரும் நமஸ்காரம் பண்ணினா.

"என்ன உங்க கோரிக்கை நிறைவேறிடுத்தா?' கேட்கலை மகா பெரியவா.. அவரோட புன்னகையே அதை எல்லாருக்கும் உணர்த்தித்து.

ஆசையே இல்லாத மகான், ஆசையா கேட்கறாப்புல ஒரு கொய்யாப்பழத்தைக் கேட்டு, அதையே ஆசிர்வாதமா தந்து அந்தத் தம்பதியோட ஆசையை பூர்த்தி செஞ்சிருக்கார்னா, அவரை பகவானோட அவதாரம்னுதானே சொல்லணும்.
JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
🙏🌹🙏🌷🙏🌹🙏
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாதிருக்க வரம் தரவேண்டும்
என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்ன மாதிரி, பகவத் ஸ்மரணம் எப்போதும் இருக்கவேண்டும் என்பது தான் விஷயம். அது இருப்பதே அலாதி ஆனந்தம். இந்த ஆனந்தம் நம் அஞ்ஞான நிலையிலேயே காரிய சாத்தியமாக இருக்கும் போது, ‘உடம்பு இருக்கிறதே, மனசு இருக்கிறதே, இதெல்லாம் தொலைந்து ஆத்மா மட்டும் பிரகாசிக்கவில்லையே!’ என்று துக்கப்பட வேண்டாம்.
அப்பர் ஸ்வாமிகள் பக்தர். ஆதலால் அவர் இப்படிச் சொன்னது பெரிசில்லை. ஞான மார்க்கத்துக்கு, அத்வைதத்துக்கு பரமாசாரியாளாக இருக்கிற நம் சங்கர பகவத்பாதர்களே, ‘சிவாநந்த லஹரி’யில், ‘நான் புழுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! இல்லை, கொசுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! அதனாலெல்லாம் என்ன மோசம் போய்விட்டது? இல்லை, ஒரு மாடாகத்தான் ஜன்மா எடுத்தால் என்ன? உன்னுடைய பாதத்தை ஸ்மரிக்கிற பரமானந்த வெள்ளத்தில் மட்டும் ஹ்ருதயம் தோய்ந்து கிடக்குமானால், அப்போது எந்த உடல் வாய்த்தால்தான் என்ன?” என்கிறார்.
ravi said…
நரத்வம் தேவத்வம் நகவன ம்ருகத்வம் மசகதா பசுத்வம் கீடத்வம்…..
கீடம் – புழு. ‘கீடத்வம்’ தான் அப்பர் சொன்ன ‘புழுவாய்ப் பிறக்கினும்’. மசகதா – கொசுத்தன்மை; Mosquito இதிலிருந்து வந்ததுதான். கொசுவாக இருந்துங்கூட பக்தி பண்ணமுடியுமானால், அந்த ஜன்மா எடுக்கக்கூட பயப்படவேண்டாம்.
மநுஷ்ய உடம்பாக இருந்தாலும், அதை வைத்துக் கொண்டே ஆனந்தமாக பக்தி பண்ணிக்கொண்டு, ஸமஸ்த ப்ராணிகளிடமும் நிறைந்த அன்போடு கர்மாவைச் செய்யமுடிகிறபோது, ‘உடம்பு வேண்டாம், புனர் ஜன்மா வேண்டாம்’ என்றெல்லாங்கூட ப்ரார்த்திக்க வேண்டியதில்லை.
எந்த உடம்பு வந்தாலும், எப்படிப்பட்ட ஜன்மா வாய்த்தாலும், அந்த பரமாத்மாவை அன்பே உருவான தாயாக பாவித்து, ஸாக்ஷாத் அந்தப் பரதேவதையின் சரணாரவிந்தத்தில் நீங்காத நினைவை வைத்து விட்டால் போதும். அவள் ஞானாம்பிகை. ஞானப்பால் கொடுப்பவள். கர்மாவினாலும், பக்தியினாலும் நம் மனஸிலிருக்கிற அழுக்கை எல்லாம் துடைத்து விடுவாள். அது பளிச்சென்று ஸ்வச்சமாக கண்ணாடி மாதிரி ஆகி, அதன் ஆட்டமெல்லாம் நின்று போனால் பூர்ண ஸ்வரூபம் தானே அதில் பிரகாசித்துவிடும். அந்த நிலையை அவளே அநுக்ரஹிப்பாள். இப்படித்தான் அநுக்ரஹிக்க வேண்டும் என்று நாம் சொல்ல வேண்டாம். வைகுண்டம், கைலாசம் மாதிரி தன் லோகம் என்பதாக ஏதோ ஒன்றில் நம்மைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு சேவா பாக்யம்தான் தரட்டும்; அல்லது அது வேறு, நாம் வேறு இல்லை என்று பூர்ணமாக நிறைந்து விடுகிற நிலையைத்தான் தரட்டும். எதுவானாலும் சரி.
அந்த நிலை நமக்குத் தெரியாதது, அதைத் தரப்போகிறதும் இன்னொருத்தர். நமக்குத் தெரிந்தது த்வைதம். ஏன் த்வைதம் தெரிகிறது என்றால் மனசு நிற்கவில்லை. மனசு ஏன் நிற்கவில்லை என்றால் ஆசாபாசம், த்வேஷம், பயம், துக்கம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. இவற்றிலேயே அலைந்து கொண்டு மனசு அசுத்தமாகி விட்டதால் நிற்கமாட்டேன் என்கிறது. அதனால் நமக்கு முதலில் சித்தசுத்தி வரவேண்டும். அதற்குக் கடமையைச் செய்து கொண்டு பரமாத்மாவை பக்தியோடு நினைத்துக் கொண்டிருப்பதுதான் வழி. இதை சந்தோஷமாகச் செய்வோம்.
ravi said…
🌹🌺' “ *ரவிவர்மா உள்ளத்தில் திரும்பத்திரும்ப உதித்த ஸ்ரீ ஆதிசங்கர் உருவம் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹 ராஜா ரவிவர்மா ஒரு ராஜகுடும்ப ஓவியர் தன் வாழ்நாளில் ஸ்ரீ ஆதிசங்கர் உருவம் வரைய ஆர்வம் கொண்டிருந்தும் அவர்படைப்புக்களை படித்திருந்தும் அவர் உருவத்தை அவரால் உணரமுடியவில்லை ‌‌

🌺இதனால் ஒருவித தவிப்பில் தளர்ந்த படி இருந்தார்..ரவிவர்மா..

🌺ஒருநாள் உறங்கப்போகுமுன் ஆதிசங்கர பகவத்பாதாள் குறித்து ஆழ்ந்து கவலையுடன் சிந்தித்தவாறு அன்றிரவு கண்உறங்கினார்..

🌺மறுநாள் விடியற்காலை நேரத்தில் அவருக்கு ஒரு காட்சி கனவு போல் உதித்தது..அதில் ஆதிசங்கரர் ஒருமரத்தடியில் அமர்ந்திருக்க அவரை சுற்றி சீடர்கள் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு உபதேசித்தபடி ஓர் காட்சியை தன் அனாகத சக்கரத்தில் நெஞ்சு பகுதியில் கண்டார்..

🌺இந்த காட்சி விடியும் வரை ரவிவர்மா உள்ளத்தில் திரும்பத்திரும்ப உதிக்க்கண்டார்..

🌺அன்றைய தினமே தொடங்கி ஒரு மாதகாலத்துக்குள் இந்த அற்புத சித்திரத்தை வரைந்து முடித்தார்...

🌺தான் உறக்கத்தில் கண்ட அதே முகம் சற்றும் பிறழாமல் தூரிகை சித்திரத்தில் பதிந்திருபபதைக்கண்டு மகிழ்ந்து இந்த சித்திரத்தை வணங்கிநின்றார்..

🌺அந்த உன்னதக் கலைஞனால் தான் நாம் இன்று ஆதிசங்கர பகவத்பாதாள் உருவத்தை கண்முன் நிறுத்தி பூஜிக்க முடிகின்றது..

🌺"மனஸ்சேன லக்னம் குரு ரங்ரி பத்மே..
ததக் கிம் ததக் கிம் ததக் கிம்..ததக் கிம்..."

🌺குருவின் கமல பாதத்தின் பக்தியில் உன் மனம் லயிக்காமல் போனால் செயல்புனைந்து புகழடைந்து
பயன் என்ன. பயன் என்ன பயன் என்ன..என்று இந்த பாடல் சொல்கின்றது..
இதை எழுதியவர் சாக்ஷாத்..ஆதிசங்கரர் பகவத்பாதாள்‌‌ தான்..
🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl

*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (28.05.22) storylines of Sri Krishna - " The image of Sri Adisankar that has repeatedly arisen in Ravi Varma's heart ... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/2hSlC-VkRE8

2. Sri Krishna Stories - English - https://youtu.be/sXjikdDsnYM

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/HkvJWXEBOkc


🙏🌹🌺 *Jai Sri Aadhi Sankara Gurumaharajki Jai* 🌹🌺🙏🏼
ravi said…
🌺🌹'' The image of Sri Adisankar that has repeatedly arisen in Ravi Varma's heart - a simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹 Raja Ravivarma was a royal painter who in his lifetime was interested in drawing the image of Sri Adisankar but after reading his works he could not perceive the image

🌺Thus he was in a state of some kind of suffering..Ravivarma ..

🌺One day before going to sleep, Adisankara fell asleep that night thinking deeply about Bhagavad Gita ..

🌺The next morning at dawn a scene dawned on him..in which Adisankar was sitting under a tree with the disciples sitting around him..as he saw a scene in the chest area on his inner wheel as he preached to them ..

🌺Ravivarma kept rolling in his heart again and again till the dawn of this scene ..

🌺 Started that day and finished drawing this amazing picture within a month ...

🌺He adored this image, enjoying seeing the same face he had seen in his sleep imprinted on the brush.

🌺It is only by that noble artist that we are able to worship the image of Adisankara Bhagavad Gita today.

🌺🌹 "Manassena Laknam Guru Rangri Padme ..
Dadak Kim Dadak Kim Dadak Kim..Tadak Kim ... "🌹🌺

🌺If your mind does not melt in the devotion of the Guru's lotus feet, become active and praise

🌺What is the use. What is the use of what is the use of .. This song says ..
This was written by Sakshat..Adhisankar Bhagavatpatal‌‌ ..
⁇🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
Oldest Older 201 – 212 of 212

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை