ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 5. தேவகார்ய ஸமுத்யதா (2) பதிவு11
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
தேவகார்ய ஸமுத்யதா (2)
பதிவு 11
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்
ப்ராத:ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் !
ஆகர்ண தீர்க்க நயனம் மணி குண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || (1)
🛕காலை வேளையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன்.
அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும்,
பெரிய முத்துக்களாலான மூக்குத்தியுடையதாயும்,
மாணிக்க குண்டங்களுடையதாயும்,
புன்முறுவல் உடையதாயும்,
கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.
ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீய லஸதங்குளி பல்லவாட்யாம் !
மாணிக்ய ஹேமவல்யாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததானாம் !! (2)
காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்ற கைகளை சேவிக்கிறேன்.
அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும்,
மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும்,
தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன.
கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.
ப்ராதர் நமாமி லலிதா சரணாரவிந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம் !
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்
பத்மாங்குசத்வஜ ஸுதர்சன லாஞ்சநாட்யம் II (3)
🛕 பக்தர்களின் இஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும்
சம்ஸாரக் கடலைக் கடப்பதற்காக அமைவதும்,
பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும்,
தாமரை அங்குசம், கொடி சுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான
ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.
ப்ராதஸ் ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்யவிபவாம் கருணானவத்யாம் !
விச்வஸ்ய ஸ்ருஷ்டிவிலயஸ்திதி ஹேதுபூதாம்
விஸ்வேஸ்வரீம் நிகம வாங் மனஸாதி தூராம் II (4)
🛕 உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும்,
மாசற்ற கருணை பூண்டவளும்,
உலகத்தை படைக்கவும்,
காக்கவும்,
பிறகு லயமடையச் செய்பவளும்,
வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான
ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்.
ப்ராதர் வதாமி லலிதே தவ புண்யநாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II (5)
🛕 ஹே லலிதாம்பிகே!.
உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன்.
காமேச்வரி என்றும்,
கமலா என்றும்,
மஹேச்வரீ என்றும்,
ஸ்ரீசாம்பவீ என்றும்,
உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.
ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னர்
வித்யாம் ச்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்திம் II (6)
🛕 ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை.
மிக எளிதானவையுங்கூட –
காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன்
கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்.
சத்-சித்-ஆனந்தம்
வெறும் 'அக்னி குண்ட' சம்பூதா என்றால் அது தேவேந்திரன் செய்த யாகத்தை மட்டுமே குறிக்கும். 'சிதக்னி' என்று சொல்லும்போது, அது நமக்குள்ளே உள்ள 'சித்' என்பதைக் குறிக்கிறது.
சச்சிதானந்தம் என்று சொல்வோமே, சத்-சித்-ஆனந்தம், அதில் வரும் 'சத்' என்பது எல்லாவற்றுக்கும் சத்தியமாக உள்ள, சகலத்துக்கும் சத்தியமாக உள்ள பரமாத்மா.
இந்த 'சத்'துடன் 'சித்' சேர்ந்தால் அது ஆனந்தமாகிற நிலைமை;
அதுதான் சச்சிதானந்தம்.
சித் என்பது என்ன? சைதன்யம்; அதாவது ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரமாத்மாவின் பிம்பமாக, உள்ள பொருள்; பரம்பொருளின் பொருள்.
ஆதிசங்கரர், "ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் அந்த வஸ்து இருக்கிறது. அந்த வஸ்துவுக்கு என்ன பெயர் சொல்வது? அது பரமாத்மாவின் வஸ்து!" என்கிறார்.
அறிவு என்றும் சொல்வார்கள். இறைவன்தான் முழுமையான அறிவு என்றால், இறைவனின் துகளாக இருந்து, இறைவனைப் பூரணமாக உணரும் வஸ்துதானே அறிவு. சிதாகாசம் என்று சொல்கிறோம்.
சிதம்பரத்தில் நடராஜர் ஆடுகிறார் என்றால், ஏதோ சிதம்பரம் என்னும் ஊரில் ஆடுகிறார் என்று மட்டும் பொருளன்று (சிதம்பரத்துக்கே ஆகாச ஸ்தலம் என்று ஒரு பெயர் உண்டு). சிதாகாசத்தில் அவர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
ஆகாசம் என்பது, இந்த 'சித்'தானது இறைவனின் பிரகாசத்தை உணர்கிற இடம்.
அக்னிக் குஞ்சு!
பாரதி ஒரு பெரிய தேவி உபாஸகர்.
அவர் ஓர் அழகான பாட்டுப் பாடுவார்- நெருப்பைப் பார்த்தேன் என்று பாடுவார்.
சிறிய நெருப்புப் பொறி; பெரிய நெருப்பல்ல .
அந்தத் துளி நெருப்புப் பொறியைப் பார்த்தவர், இங்கே மினுக் மினுக் என்கிறதே, எங்கேனும் கொண்டுபோய் அதை ஒளித்து வைத்தால் என்ன என்று எடுத்துப் போனார்.
எங்கே ஒளித்து வைப்பது? ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு மரம்; அந்த மரத்தில் ஒரு பொந்து. அந்தப் பொந்துக்குள்ளே கொண்டு போய் தீப்பொறியை வைத்துவிட்டார்.
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு அர்த்தம் பாருங்கள்!
அக்னிக் குஞ்சு-வெறும் அக்னி அன்று. அதைக் காட்டில் வைத்தேன் என்று சொல்லாமல், 'ஆங்கோர்' காடு என்கிறார்.
காடு பக்கத்தில் இல்லை; எங்கேயோ தூரத்தில் இருக்கிறது. அக்னிக் குஞ்சு பக்கத்தில் இருக்க வேண்டாம் என்று எங்கேயோ ஒரு காட்டில் கொண்டு வைத்துவிட்டு அதை மறந்துவிட்டார்.
வெந்து தணிந்தது காடு-தழல் வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் -
எனும்போது அந்த நெருப்பு எப்படிப்பட்ட நெருப்பு என்பதை உணரமுடியும்.
பாரதியை சற்று அப்பால் வைப்போம். வேறொன்றைப் பார்ப்போம்.
நமக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். அல்லது வெகுநாட்களாக ஆசைப்பட்ட விஷயம். அது மிகவும் சின்ன விஷயமாகக்கூட இருக்கலாம்.
கைநிறைய சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுச் சாப்பிட வேண்டும் என்று ஓர் அல்ப ஆசை. அனேக நாட்களாக அந்த ஆசை நிறைவேறவில்லை. யாராவது பார்த்து விடுவார்களே என்று வெட்கம் இருந்தது.
ஒரு நாளைக்கு அது சாத்தியப்பட்டது. எவ்வளவு சந்தோஷம்! அதுதான் வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது மிகவும் பெரிய விஷயம்தானே! அப்போது நாம் என்ன சொல்வோம்? "அப்படியே ஆடவேண்டும் போல இருக்கிறது. குதிக்கவேண்டும் போலத் தோன்றுகிறது" என்போம்.
எல்லை மீறிய மகிழ்ச்சியில், ஆனந்தத்தின் எல்லைக்குப் போகும்போதுதான் ஆட்டம் வரும். பாரதி அந்த ஆனந்தத்தின் எல்லைக்குப் போனார். அதனால்தான் தத்தரிகிட தித்தோம்!
ஏன் தத்தரிகிட தித்தோம் வந்தது?
'சின்னப் பொறிதானே என்று நினைத்து என்று நினைத்து நெருப்பைக் கொண்டுபோய் இதயமாகிற பொந்தில் வைத்தேன். என்னைச் சுற்றி என் மனத்துக்குள் வேண்டாத காடும் குப்பையும் இருந்தன.
நெருப்புப் பொறியை உள்ளே வைத்துவிட்டு அதை நான் மறந்துபோய்விட்டேன்.
ஆனால், வெந்து தணிந்தது காடு; சுற்றியிருந்த குப்பையெல்லாம் பொசுங்கிப் போய்விட்டது.
அப்போதுதான் ஓர் உண்மை புலப்பட்டது. இங்கே என்னுள்ளே கொண்டு வைத்த ஒரு சின்ன 'சித்' என்பதும் 'அங்கே' உள்ள 'சத்' என்பதும் இரண்டின்றி ஒன்றாகச் சேர்ந்தன.
அப்போது உணர்ந்தேன் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை' என்று சத்-சித் இரண்டுக்கும் இடையே இது இளையது அது மூத்தது என்று உண்டா? கிடையாது.
நமக்காக அம்பிகை அக்னியிலிருந்து புறப்பட்டு வந்தாள். எந்த அக்னியிலிருந்து? யாரோ என்றைக்கோ செய்த யாக அக்னியிலிருந்து மட்டும் அவள் தோன்றவில்லை.
நம் மனத்துக்குள் தினந்தோறும் சித்துக்குள்ளே செய்யக்கூடிய யாகமிருக்கிறதே, அந்த 'சித்' அக்னி குண்டத்திலிருந்து வருகிறாள்.
அப்படியானால் தேவ கார்ய சமுத்யதா என்பதற்கு என்ன அர்த்தம்? எங்களுடைய சித்தத்திலிருந்து சிதாகாசத்திலிருந்து வந்திருப்பவள் என்றால் தேவ காரியத்துக்கு வந்ததாக எப்படி ஆகும்?
அடுத்த நாமமே முப்பத்து முக்கோடி தேவர்களுக்கான காரியத்தை நிறைவேற்ற அவள் வந்ததாகச் சொல்கிறதே என்னும் கேள்வி வரும். மிகப் பெரிய உண்மையை - சநாதன தர்மம் என்றைக்கும் சொல்லும் உண்மையை, இந்த 'தேவ கார்ய ஸமுத்யதா' உணர்த்துகிறது.
Comments
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
"பெரியவா,எப்போது ஸ்பெயின் நாட்டிற்கு விஜயம் செய்தார்?"
ஒரு சைகையின் மூலம் பதிலளித்த பெரியவா
சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம் பெரியவா, என்று தெரிந்து கொண்ட ஸ்பெயின் பிரமுகர்.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நாட்டின் அதிபரைப் பற்றியோ, சீதோஷ்ண நிலையைப் பற்றியோ விசாரிக்கலாம். இல்லை மக்களின் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் பேசி இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களையும் பத்திரிக்கை வாயிலாக, எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு
ஆனால், மகான் இதைப்பற்றியெல்லாம் அந்த ஸ்பெயின் பிரபுவிடம் கேட்கவில்லை.
அவர் என்ன கேட்டார் பாருங்கள்;.
"உங்கள் அரண்மனையில், நியூவிங், ஓல்ட்விங் என்று இரண்டு இருக்கோ?"
"ஆமாம்."
"இப்ப நீங்க எந்த 'விங்'லே இருக்கீங்க?"
"நியூவிங்" என்கிறார் அவர்.
"அங்கே தண்ணீர், மத்தவசதி எல்லாம் இருக்கோ?"
"ஆமாம், நியூவிங் மிகவும் வசதியா இருக்கிறதாலே தான் அங்கே தங்கியிருக்கிறோம்."
அடுத்து மகான் அவரிடம், ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறார்.
இப்படி தன் நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி இத்தனை விரிவாகச் சொல்லி, அதை இப்படி மாற்றலாம் என்று அறிவுறை வேறு கூறுகிறாரே என்று நினைத்த அவர், மொழிபெயர்ப்பாளரிடம், "மகான் எப்போது ஸ்பெயின் நாட்டுக்கு விஜயம் செய்தார்?" மொழி பெயர்ப்பாளர் அதை மொழிபெயர்ப்பு செய்து பதில் கேட்பதற்கு முன்பே சாட்சாத் பரமேஸ்வரரான மகான், ஒரு சைகையின் மூலம், அந்த ஸ்பெயின் பிரமுகருக்கு பதிலளித்து விட்டார்.
தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார். ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக்கணமே எல்லாம் புரிந்து போயிற்று.
இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம் என்று தெரிந்து கொண்ட அவருக்கு மெய்சிலிர்க்க, கீழே விழுந்து, வணங்கி எழுந்து மகானின் ஆசியைப் பெற்றார்.
*ஜடாயு சொன்ன கீதை*🦅🦅🦅🦅🦅
உடல் எடுத்தும் யாருக்கும் உதவி செய்யாமல் போகுமே என்றே அன்று புலம்பினேன் ..🦅
மனம் திறந்தும் மகேசன் அங்கே வராததால் மதி மயங்கி போனேன் ...🦅
என்ன வாழ்க்கை யாருக்கும் பயன் இல்லா வாழ்க்கை .. 🦅
மூச்சு விடும் பிணமோ நான் என்றே உடல் இளைத்தேன்... 🦅
உன் நாமம் காற்றினிலே கலந்து வரக்கண்டேன் ... 🦅
அது என் நாவில் சிம்மாசனம் போட்டே அமரக்கண்டேன் .. 🦅
வானவீதியில் தசமுகன் திருவை திருடிச் செல்லக் கண்டேன் ... 🦅
தீப் பொறிகள் என் கண்கள் கக்கக் கண்டேன் ... 🔥
தீயட்டும் என் உடம்பு என்றே போரிட்டேன் முடிந்த வரை ...🦅
சிறகுகள் மண்ணில் சாய 🦅
அழியும் உடல் உன் அணைப்பில் ஓயக்கண்டேன் .. 🦅
என் புண்ணியம் செய்தேன் ..
தசரதன் காணா சடங்குகள் நீயே எனக்கு செய்யக் கண்டேன் ... 🦅
ஓடி விட்ட தேர் ஒன்று எனை தேடி வரக்கண்டேன் ... 🦅
தேவர்கள் பூக்கள் பொழிய ... வைகுண்டம் கண்ணில் தெரியக்கண்டேன் 🦅
உன் நாமம் தந்த உயர்வு அன்றோ இது .. 🦅
பறவைக்கும் பரமபதம் தந்தாய் ...🦅
பார் மறக்குமோ சக்கரவர்த்தி திருமகன் உன்னை 🦅
கண் சற்றே கலங்கினான் ராமன் ... 😰
உன் போல் எவருண்டு ?
உயிர் கொடுத்தாய் என் பொருட்டு ...
என் தந்தைக்கும் மேலே நீ
இதுவே நான் செய்யும் தர்மம் ... 🦅
தந்தைக்கும் மேலே சொல்ல
தரணி காணும் நிகரில்லா அழகன் ஒருவனை ..
நடமாடும் தெய்வமாய் சிரித்துடுவான் ...
தொலைந்து போகும் துன்பங்கள் யாவுமே ..
*ராமா* இன்னொரு பிறவி ஒன்று இருந்தால் பிறக்க வேண்டும் காஞ்சி தனில் ..
பெரியவா தன்னில் காண வேண்டும் உன்னை ... 🦅
அப்படியே நடக்கும் என்றான் தசரத ராமன் ...
திருக்கழுகுன்றம் அதில் தினம் வரும் ஜடாயு 🦅
காஞ்சி மண்ணைத் தொட்டே வாஞ்சியுடன் தினம் பறக்கின்றதே 🦅🦅🦅
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....
காமத்ருஹோ ஹ்ருதயயன்த்ரணஜாகரூகா
காமாக்ஷி சஞ்சலத்ருகஞ்சலமேகலா தே |
ஆஶ்சர்யமம்ப பஜதாம் ஜடிதி ஸ்வகீய-
ஸம்பர்க ஏவ விதுனோதி ஸமஸ்தபன்தான் ||17||
ஹே ! அம்பிகையே! காமாக்ஷி தாயே! உன்னுடைய சஞ்சலமான கடாக்ஷமென்கிற கயிறானது காமனின் எதிரியாம் சிவனின் உள்ளத்தை கட்டுவதில் ஜாக்கிரதை உள்ளதாயிருப்பினும், உன்னை ஸேவிப்பர்களுடைய சகலவிதமான பந்தங்களையும் விரைவாக
நீக்கிவிடுகிறதே! இது ஆச்சர்யமே!!
இங்கு அம்பிகையின் கடாக்ஷத்திற்கு இருக்கும் பந்தன சக்தியையும், பந்தமோசன சக்தியையும் சொல்லப்படுகிறது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
*பதிவு 242* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*78வது திருநாமம்*
பண்டாசுரன் அம்பாளின் சைன்யத்துக்கு விதித்த தடைகளை, விக்ன யந்திரத்தை முறித்தவர் .
இந்த விக்ன யந்திரத்தை ஸ்ரிஷ்டித்தவன் *விசுகன்* .
அதாவது எந்த காரியத்திலும் சங்கல்பத்திலும் தடங்கல், குறைபாடுகளை உண்டாக்கும் யந்திரங்கள் அவை.
அவற்றை பலனளிக்காமல் செயது காரிய சித்தி உண்டாக்குபவர் விக்ன ஈஸ்வரர். *விக்னேஸ்வரர்* . விநாயகர்.
அம்பாளுக்கு அதனால் தான் பிள்ளையாரை மிக மிக மிக மிக பிடிக்கும். அவரை பிடிக்காதவர் என்று யாரும் உளரோ அவர் நம்மை கெட்டியாக பிடித்துக்கொள்ள தினமும் கண நாதனை வேண்டிக்கொள்வோம் ... வரும் துன்பங்கள், தோல்விகள் , மன சங்கடங்கள் தவிடு பொடியாகி விடும்
சிவகணங்களுக்கு தலைவன் கணேசர். கண நாதன்.🙌🙌
*பதிவு 242* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌61
*மனோஜயம், லக்ஷ்மீகடாக்ஷம்*👍👌
ஹிமவான் வம்சத்துத்திற்கு த்வஜத்தின் கொடி போன்றவளே;
*த்வதீய* : *அஸெள* -
உன்னுடைய நாசதண்டமானது;
*அஸ்மாகம்* - எங்களுக்கு;
*உசிதம்* - தகுந்தது;
*நேதீய* : - சீக்கிரம் கிடைக்க;
*பலம் பலது* - (உன் நாச தண்டமானது) பலத்தை தரட்டும்;
*அந்த* : தன்னுள்;
*முக்தா* : *வஹதி* -
முத்துக்களை கொண்டுள்ள;
*யத்* : எதனால்;
*தாஸாம் ஸம்ருத்யா -* நிறைந்துள்ள;
*பஹிரபி ச -* வெளியிலும் கூட;
*சிசிரகர* நிச்வாஸகளிதம் - வாம நாடி என்று கூறப்படும் இடது பக்கத்து மூக்கு துவாரம்(சாதாரணமாக மூச்சினை வெளிவிடும் பகுதி);
*மூக்தா மணிதர* - முத்து மூக்குத்தி (புல்லாக்கு?) அணிந்திருக்கிறதோ?
இடுப தாகை அனைய
என்
அமலை யுன்றன் வதம துண்ட
அணிசி றந்த மணியையோ
விமலு மன்னு கவிஞர் முத்தை
வெற்பில்
வல்லி யலர்வதோர்
கமல மன்னு குமிழ ளித்தல்
கண்ட தல்ல என்பதே🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 19*👌
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥
ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ஏழைகளுக்கு எளியவரா இருந்தார்.
அதனால அவருக்கு *திருவல்லிக்கேணி பெரியவான்னே* ஒரு பேரு வந்துடுத்து.
அது ஏன் இருந்தார்னா, அந்த பார்த்தசாரதியோட த்யானத்துலேயே இருக்கணும்.
பார்த்தசாரதியை தரிசனம் பண்ணனும். இந்த *ப்ருத்விபாரநாஷோ முகுந்த: –*
அப்படீங்கிறதுக்கு அந்த பார்த்தசாரதியை பார்த்துண்டு உயிரை விட்ட எல்லாரும் *கிருஷ்ணா சாயுஜ்யம்* அடைஞ்சு முக்தி அடைஞ்சான்னு அர்த்தம் சொல்லியிருக்கார்.
அதை படிச்ச உடனே எனக்கு ஸ்வாமிகள் ஞாபகம் வந்தது.
அவர் ஆசைப்பட்ட அதே மாதிரி அவருக்கு முக்தி கிடைச்சுது.🙌🙌🙌
1/1
a. கர்ம யோகம் புரிவதால்/Doing Karma yoga
b. பகவானின் உன்னத லீலைகளை கேட்பதால்/ Hearing the Past times of Bhagvan
c. கோவிலுக்கு செல்வதால்/ Going to temple
d. மூச்சுப் பயிற்சி செய்வதால்/ Doing Pranayama
2.ஜீவாத்மாவின் தேவையற்ற பௌதீக துன்பங்கள் குறைய வேண்டுமெனில்,நம்மை நாம் எதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்? / In what way we should involve ourself to reduce the unnecessary materialistic suffering of the soul?
1/1
a. இதிகாசங்கள் கேட்டல்/ Hearing the Epics
b. புராணங்கள் படித்தல்/ Reading great Myths
c. பக்தி தொண்டு புரிதல்/ Doing Devotional service
d. வேத இலக்கியம் கற்றுணர்தல்/ Learning of Vedic Literature
3. பகவானின் எத்தகைய சக்தியால் நாம் பௌதீக துன்பங்களில் சிறைப்பட்டுள்ளோம்? / By which energy of Bhagavan, we are imprisoned in Material sufferings?
1/1
a. பகிரங்க சக்தி/ External energy
b. நடுத்தர சக்தி/ Marginal energy
C. அந்தரங்க சக்தி/ Internal energy
d. எதுவுமில்லை/ None of above
4.பகவான் கிருஷ்ணருக்கும் ஜீவராசிகளுக்கும் உள்ள உறவுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்.? / How should be the relationship between Lord Krishna and the living entities?
1/1
a. எதிர்பார்ப்பு/ Expectation
b. கடமை/ Duty
c. அன்பு/ Love
d. எதுவுமில்லை/ None of above
5. வியாசர் முழுமுதற் கடவுளையும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் எவ்வாறு அறிந்து கொண்டார்?/ How did Vyasar get to know the Supreme Personality of God Head and everything he controls?
1/1
a. ஞான யோகம்/ Gnana Yoga
b. கர்ம யோகம்/ Karma Yoga
c. தியான யோகம்/ By Meditation
d. பக்தி யோகம்/ Bhakti Yoga
இடம் பெற்ற ரிஷிகள்
1. சௌனக ரிஷி உலக நன்மைக்காக கேள்விகள் எழுப்புகிறார் .. மிகச்சிறந்த பக்தி தொண்றாற்றுகிறார்
2. ஸ்ரீ சூத ரிஷி ... ரிஷிகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் தருகிறார்
3. நாரத முனி ... பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆற்றிய லீலைகளை விவரிப்பதால் ஆன்மீக உலகை அடையலாம் என்று வியாசரிடம் சொல்ல அவர் வருத்தம் தீர்க்க அவர் எதிரில் தோன்றுகிறார்
4. வியாச பகவான் ... நாரதரின் பொன் மொழிகளை கேட்டு ஸ்ரீமத் பாகவதம் எழுத ஆயுதமாகிறார்
5. ஸ்ரீ சுகதேவ கோஸ் சுவாமி ... தன் தந்தை தொகுத்த பாகவத்தை சிரத்தையுடன் கேட்டு தெரிந்து கொள்கிறார்
நாரதர்
வியாசர்
சூதகோஸ்வாமி,
சௌனகரிஷி.
நாரதர் வியாசரிடம் பகவானின் உன்னதமான லீலைகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் வேத நூல்களை இயற்றக் கூறினார். வியாசர் சௌனகரிஷிக்கு அதனை எடுத்துக்கூறினார். சூதகோஸ்வாமி இதனை பரிஷீத்மன்னனுக்கு விளக்கி கூறினார்.
Naradar,
Vyasar,
SutaGoswami,
Chaunagarishi.
Naradhar asked Vyasa to compose scriptures so that people could understand the noble rhythms of Bhagavan. Vyasar took it to Chaunakarishi. Sudhakoswami explained this to Parikshitmaharaj.
ஸ்ரீ வியாச பகவான் சிறு பழங்கள் சூழ்ந்த மரங்கள் நிறைந்திருந்த தன் ஆசிரமத்தில் நீரைத் தொட்டு தன்னை புனித்தப்படுத்தி கொள்கிறார்
தியானம் செய்ய கீழே அமர்கிறார்
அவரால் பகவானின் முழு உருவத்தையும் அவருக்கு கட்டப்பட்டுள்ள பகிரங்க சக்தியையும் பார்க்க முடிகிறது
அவர் ஸ்ரீமத் பாகவத்தை தொகுத்து பிழைகள் சரி பார்த்து திருத்தி அதை தன் புத்திரன் ஆன ஸ்ரீ சுக்தேவ கோஸ் சுவாமியிடம் விவரிக்கிறார்
1-7.2: ஸ்ரீ சூதா கூறினார்: வேதங்களுடன் நெருங்கிய தொடர்புடைய சரஸ்வதி நதியின் மேற்குக் கரையில், முனிவர்களின் ஆழ்நிலை செயல்பாடுகளை உயிர்ப்பிக்கும் சம்யாப்ராஸாவில் தியானத்திற்காக ஒரு குடிசை உள்ளது.
1-7.3: அந்த இடத்தில், ஸ்ரீல வியாசதேவர், பெர்ரி மரங்களால் சூழப்பட்ட தனது சொந்த ஆஸ்ரமத்தில், சுத்திகரிப்புக்காக தண்ணீரைத் தொட்டு தியானம் செய்ய அமர்ந்தார்
Text 2: Sri Suta said: On the western bank of the river Sarasvati, which is intimately related with the Vedas, there is a cottage for meditation at Samyaprasa which enlivens the transcendental activities of the sages.
Text 3: In that place, Srila Vyasadeva, in his own asrama, which was surrounded by berry trees, sat down to meditate after touching water for purification.
Total points5/5
பகவான் கிருஷ்ணனுக்கு உன்னத அன்புத்தொண்டு செய்வதால் துன்பம் பயம் மாயைபோன்றவைநீங்கும்
பக்திதொண்டினை பகவானுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எதனால் தோன்றும்?
ஜீவாத்மாவின் தேவையற்ற பௌதீக துன்பங்கள் குறைய வேண்டுமெனில்,நம்மை நாம் எதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
பகவான் கிருஷ்ணருக்கும் ஜீவராசிகளுக்கும் உள்ள உறவுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?
ஹரே கிருஷ்ணா
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பக்தி தொண்டினை நேரடியான தொடர்பு கொண்டால் துன்பங்களை குறைத்து விட முடியும்.வேத இலக்கியங்களை கேட்பதனால் பகவானுக்கு உன்னதமான அன்புத் தொண்டு செய்ய உணர்வு ஏற்பட்டால் வருத்தம் மாயை மற்றும் பயம் என்ற நெருப்பை அது அணைத்து விடும்
சென்னை - 600 019.
RC
*திருவொற்றியூர் பெயர்க்காரணம்*
1.ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் வரி விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் இரு இடங்களில் கூறப்பட்டுள்ளது.
2. பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் பலனால் சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழாமல் தடுத்தார்.
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது. (திருவொற்றியூர்ப் புராணம்)
*மூலவர்: படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், (ஆனந்தத்தியாகர்)
*தாயார்:வடிவுடையாம்பிகை (திரிபுரசுந்தரி அம்மன்), வட்டப்பாறையம்மன்
*மூலவர் சுயம்பு; உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார்.
*சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. சதுர வடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டள்ளது; ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை சார்த்தப்படுகிறது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு மட்டுமே சுவாமி, கவசமில்லாதிருப்பார்; மீண்டும் கவசம் சார்த்தப்பட்டு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிக்கின்றார். அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகிறது.
*இத்தலத்தில் ஸ்ரீ தியாகராஜ சுவாமி - காரணி விடங்கர் என்று போற்றப்படுகிறார்.
*கருவறை விமானம் கஜப்பிருஷ்ட அமைப்புடையது.
*ஞானசக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில் ஞானம் பெற்றுத் திகழ அருள் புரிகிறார்.
*தல விருட்சமாக அத்தி மற்றும் மகிழம்பூ மரமும் அமைந்துள்ளன.
*தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன.
*'ஒற்றியூர் ' கோயில் முன் மண்டபத் தூண்கள் அற்புதமான சிற்பங்களையுடையது; மேலே உள்ள தூணில் - விதானத்தில் சூரியன் தலைப்புறமும், சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக்காட்டப்பட்டுள்ளது (கற்சிற்பம்). இவ்வழகு கண்டுணரத் தக்கது.
*'வட்டப்பாறை அம்மன் ' சந்நிதி - மதுரையை எரித்த கண்ணகியே இவ்வட்டப்பாறையாகத் திகழ்வதாக நம்பப்படுகிறது. அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
*கம்பர், வால்மீகி ராமாயணத்தை பகலில் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,
ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!
என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார்.
*இத்தலத்தில் சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, பிறகு இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
*
*கோயிலின் வெளிப்பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கான 27 லிங்கங்கள் அமைந்துள்ளன. பக்தர்கள், அவரவர் நட்சத்திரங்களுக்கான லிங்கங்களை வணங்குகின்றனர்.
*இது அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரில் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
*இக்கோயிலிலிருந்து சிறிது தொலைவில் (எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில்) பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்து, அவர் முக்தி அடைந்த கோயில் உள்ளது.
*சென்னை உயர்நீதி மன்றப் பகுதியிலிருந்தும், வள்ளலார் நகர் (Mint) பேருந்து நிலையத்திலிருந்தும் திருவொற்றியூருக்கு அடிக்கடி நகரப் பேருந்து செல்கிறது. காலடிப்பேட்டையை அடுத்து, 'தேரடி' நிறுத்தத்தில் இறங்கினால் சன்னதி வீதியின் கோடியில் கோயிலைக் காணலாம். சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் உள்ளது.
🙏சிவாயநம
*ராமரும் சம்பாதியும்* 🦅🦅🦅
*சம்பாதி சொன்ன கீதை* 🦅🦅🦅*
தாரக மந்திரம் கடல் அலை போல் சப்தம் இட
புதிய சிறகுகள் உடலில் பிரசவிக்க
வானில் பறந்து சென்றான் சம்பாதி ... 🦅
தம்பி இழந்த சோகம் நெஞ்சை அடைக்க
ஒன்று சேர்ந்த இளமை பருவம் கண்ணில் நிழலாட
கண்ணீர் உப்புக்கள் ஜடாயுவிற்கு ஈமக் கடன் செலுத்த
இலங்கை திக்கை எடுத்துரைத்தான் வானரங்களுக்கு...
தன் உயிர் தம்பியை இழந்தாலும்
பிறருக்கு உயிர் கொடுத்தான் நல்ல செய்தி சொல்லியே .. 🦅
திக்கற்ற வானரங்கள்
திசை மறந்த வானரங்கள்
ராம நாமம் சொல்லியே
சீதை நாமம் கண்டனர் இலங்கையிலே ...
சம்பாதி சொன்னான் ...
*ராமா* !!
உன் நாமம் தந்ததே புதிய வாழ்க்கை ...
தம்பி இல்லா வாழ்க்கை
தரம் இல்லா சேர்க்கை ..
ஒன்று செய்வாயா ராமா ??🦅
என்னையும் என் தம்பியுடன் சேர்த்து விடு ... 🦅
ஒன்றாய் பிறந்தோம் ஒரு தாய் வயிற்றில் ..🦅
முன்னவன் மட்டும் பின்னவன் இல்லாமல் முனகி வாழ , 🦅
அதுவும் ஒரு வாழ்வோ ராமா ... ??🦅
என்னவன் அவன் நல்லவன் அவன் ... 🦅
அன்னையை மீட்க அரக்கனுடன் போர் செய்தான் ... 🦅
வெறும் மூச்சு விடும் ப்ரேதமாய் நான் மட்டும் இருந்து என்ன பயன் இங்கே ராமா ??🦅
அணைத்துக் கொண்டான் ராமன் அண்ணன் சம்பாதியை ...
நானும் அண்ணன் தான் ...
உன் போல் நினைப்பதில்லை ..
என்னிலும் உயர்ந்த உத்தமன் நீ ...
நீ இல்லா விடில் காண்போமா லங்கை தனை
மீட்ப்போமோ மீன் கொஞ்சும் விழியாளை ?
முக்தி தர விழைகின்றேன்..
மூவர் தேவர் வாழ் உலகம் நீ செல்ல விரும்புகிறேன் ...
உன் உதவிக்கு இது நிகர் இல்லை ...
வானில் வட்டமிடும் கழுகை கண்டான் சம்பாதி ... 🦅
தம்பி வந்து விட்டாயா? 🦅
என்றே மூச்சை ராமனிடம் தந்து விட்டு
பூக்கள் பொழியும் புஷ்பக விமானம் தன்னில் தம்பியுடன் சேர்ந்தான் ... 🦅🦅
உறவுகள் முக்கியம்
வாழும் நாட்கள் தாழும் நாட்களாய் ஆகும் முன்
சுற்றம் மதிப்போம் ..
சூழ்நிலை ராம நாமம் ஜபிக்கட்டும் ...
ரம்யம் தந்திடும் ராம நாமம் தனையே 👌
காஞ்சி வாழ் கருணை கடல் சொன்ன வாக்கு
சம்பாதி தந்த கீதை இது 👌👌👌
லோகோபகாரமாகச் செய்யக்கூடிய அநேகப் பணிகளில் ஸத்பாத்ரத்துக்கு வித்யையை போதிப்பதற்கு ஸமமாக எதையும் சொல்ல முடியாது என்று நம் முன்னோர் அபிப்ராயப்பட்டனர். ‘வித்யாதானம்’, ‘வித்யாதானம்’ என்று இதை மிகவும் விசேஷித்துச் சொல்லியிருக்கிறது. ‘தானம்’ என்ற பதத்தைப் போட்டதாலேயே, கற்றுக் கொடுக்கிற ஆசார்யர் வித்யார்த்தியிடமிருந்து எந்த த்ரவ்ய லாபமும் எதிர்பார்க்கக்கூடாது என்று ஏற்படுகிறது.
🌺🌹Suzanner was one of the most important figures in the Ramayana epic.
🌺He is the father-in-law of the ape king Wali.He is also the best ape doctor.
🌺 During the war with Ravana, Lakshmanan lost consciousness after being attacked by Nagastra thrown by Ravana's son Meghnathan.
🌺 Susener was the one who mentioned that the herb to save his life was in Sanjeevi hill.
🌺A fierce battle ensued between Rama and Ravana and Ravana was killed. Rama then left for Ayodhya with Sita and his helpers.
🌺Suchener then decided to stay on the mountain called Sumansaparvam and do penance for Shiva. By the time he went there all the people there were sick. Susaner stayed in the area thinking to help them.
🌺Suddenly Rama sent Sussena to remind him to come and see where he was.
🌺Hanuman also wandered here and there and finally came to this area.But there Susaner had attained Samadhi.
🌺So Hanuman was so upset that he covered his body with deer skin and left some jasmine flowers on it and went to Rama and told him what had happened
🌺When Rama came there with Sita and Lakshman and saw that the mantle had been removed, a Shiva lingam had begun to grow there.
🌺Everyone bathed in the Pushkarani at that place and went from there.
🌺As the Sivalingam grew, all the people of the area began to get healthier.
🌺 The Shiva lingam here is called 'Mallikarjuna Swami' by the people of the area.
🌺 The deer skin in the vernacular means 'Ajina'.
🌺 It is said that this Shivalinga was later worshiped by Arjuna, one of the Pandavas, and hence the name of Lord Itala was changed to 'Mallikarjuna Swami'.
🌺Srikakulam district of Andhra Pradesh is located in Ravivalasa village, Tirukoil.
🌺This temple Lingam is a self lingam about 60 feet high and 10 feet wide.
🌺The king who ruled this area wanted to build a temple for the Swayambhu lingam.
🌺Thus the temple was not built.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
🌹🌺' “ *மன்னா... நான் கருவறைக்குள் இருக்க விரும்பவில்லை எனக்கு கோவில் வேண்டாம் என்ற ஈசன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ராமாயண இதிகாசத்தில் இடம் பிடித்திருக்கும் நபர்களில் முக்கியமானவர்,சுசேணர்.
🌺இவர் வானர அரசனான வாலியின் மாமனார் ஆவார்.இவர் சிறந்த வானர மருத்துவரும் கூட.
🌺ராவணனுடனான யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில்,ராவணனின் மகன் மேகநாதன் வீசிய நாகாஸ்திரம் தாக்கி,லட்சுமணன் சுயநினைவை இழந்தான்.
🌺ராமருக்கும் ராவணனுக்கும் உச்சகட்ட போர் நடைபெற்று,ராவணன் கொல்லப்பட்டான்.பின்னர் ராமர்,சீதை மற்றும் தனக்கு உதவி புரிந்தவர்களுடன் அயோத்தி புறப்பட்டுச் சென்றார்.
🌺அப்போது சுசேணர்,சுமங்சபர்வம் என்ற மலையில் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்ய முடிவு செய்தார்.அவர் அங்கு சென்ற சமயத்தில் அங்கிருந்த மக்கள் அனைவரும் நோய் வாய்ப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு உதவ நினைத்து சுசேணர்,அந்தப் பகுதியிலேயே தங்கிவிட்டார்.
🌺திடீரென்று ராமருக்கு சுசேணரின் நினைவு வர,அவர் எங்கிருக்கிறார் என்று பார்த்து வரும்படி அனுமனை அனுப்பினார்.
🌺அனுமனும் அங்கு இங்கென்று அலைந்து திரிந்து விட்டு,இறுதியாக இந்தப் பகுதிக்கு வந்தார்.ஆனால் அங்கு சுசேணர் சமாதி அடைந்திருந்தார்.
கொஞ்சம் கொலுசுகள் உனை போற்றும் ஆழ்வார்களோ கண்ணா ??
வண்ணம் இல்லா நிறம்
கொள்ளும் எண்ணமெல்லாம் உன் வண்ணம் ..
பொன்னும் பொருளும் வேண்டேன்
உன் புன்னகை ஒன்று போதுமே ...
கண்ணில் மை எனும் நகை கொண்டவனே ,
பெண்ணகை மடி அவள் மீதே தவழ்ந்து
என்ன தவம் செய்தனை என்றே கேட்க வைத்தாய் ..
என் சொல்வேன் கண்ணா
உனை காணாத கண்கள் குருடாகட்டும்
பேசாத நாக்கு பிசைந்து போகட்டும்
வணங்காத சிரம் வாழ்த்துவோர் இன்றி மங்கட்டும் ..
போற்றாத கரங்கள் புண்ணாய் எங்கும் நிறையட்டும் ..
உன் புகழ் கேட்கா செவிகள் செந்தீயில் பொசுங்கட்டும் ..
உன் கோயில் நடவா கால்கள் பலம் குன்றி போகட்டும் ...
உன் நினைவே என் மூச்சில் நிறைந்து நிற்கட்டும் 🙌🙌🙌
[03/06, 11:20] Jayaraman Ravilumar: என் கோபம் ஒன்றுமே இல்லை ...
அபிராமியை ஒரு நிமிடமாவது தினமும் நினைக்காதவர்களுக்கு
அபிராமி பட்டர் சாபமே இடுகிறார் ..
மின்போலும் உன் தோற்றம் ஒரு மாத்திரை பொழுதும் நினையாதார்
குலம்
கோத்திரம்
கல்வி
குணம்
குன்றி
நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே ...
பிச்சை எடுப்பார்கள் என்கிறார் ...
அவ்வளவு ஆதங்கம் ...
நேரம் இல்லை என்று படிக்காதவர்களை கண்டால் நெஞ்சு பொறுப்பதில்லை ...
இதுவும் அவரே சொல்கிறார்.... 🙏
🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩
லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது.
இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும்.
பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப் புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.
தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது “ என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக்கூறினார் ஹயக்கிரீவர்.
இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க அதற்கு ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.
அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.
உடனே "நவரத்னமாலா " என்ற பாமாலை
பாடினார்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
இதைத்தான் இங்கு வலியுறுத்தி வருகிறேன் .
Both LS , SL are two eyes of the face Shivananda Lahiri ( SL) and VS are our potential and kinetic energy ...
தினம் இங்கு போடும் பதிவுகளை படித்துக்கொண்டு வந்தாலே போதும் .. *பகவான் சாயுஜ்யம்* கிடைத்து விடும் ...
எல்லா பதிவுகளையும் படிக்க மொத்தம் 10 நிமிடம் கூட எடுக்காது ...
அதற்கும் நேரமில்லை, விருப்பம் இல்லை என்றால் என்ன சொல்வது ..??
அவரவர்கள் பிராப்தம் படி தான் நடக்கும் .. 🙏
*பதிவு 243* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌62
*நல்ல நித்திரை*
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஶ்யம் ஜனயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலன ராகா தருணிதம்
துலா மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா 62
இயற்கையாகவே சிவந்திருக்கிற உன்னுடைய உதடுகளின் அழகுக்கு உபமானம் சொல்லுகிறேன்.
பவழக்கொடி பழத்தை உண்டாக்கட்டும்.
கோவைப்பழமோ என்றால் தேவியின் உதடுகளைப் போல் இருக்கவேண்டும் என்று அச்சிவப்பைத் தன்னிடம் பிரதிபலிக்கச் செய்துகொண்டதால் சிவப்பாக இருப்பதால்
சமத்துவத்தை சிறிதளவுகூட அடைய முயன்றாலும் எப்படித்தான் வெட்கப்படாமல் இருக்கும் ?
ஆகையால் அம்பாளுடைய அதரங்களுக்கு இணை ஏதுமில்லை என்று கூறுகிறார்.
கவிஞர்கள் சாதாரணமாக பெண்களின் அதரத்திற்குச் சமமாகக் கோவைப்பழத்தையும், பவழத்தையும் சொல்வது வழக்கம்.
கோவைப் பழத்திற்கு சம்ஸ்கிருதத்தில் *பிம்ப-பலம்* என்று பெயர்.
அன்னையின் அதர பிம்பத்தின் சிகப்பு நிறமானது
கோவைக்கனியில் பிரதிபலிப்பதாலேயே அப்பழம் அந்த நிறத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார்.
ஆக, பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால்
அதனி மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என்று நம்மை கற்பனையில் காணச் செய்கிறார் பகவத்பாதர்.
இதுவே சஹஸ்ரநாமத்தில், " *நவவித்ரும பிம்ப ஸ்ரீந்யக்கார் தசனச்சதா"* என்று கூறப்படுகிறது.🙌🙌
*பதிவு 243* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*79வது திருநாமம்*
மற்ற அஸ்த்ரங்களால் அவனைத் துளைத்து, துன்புறுத்தி வென்றாள் ,
கொன்றாள் .🙌🙌🙌
*ராமரும் சம்பாதியும்* ������
*சம்பாதி சொன்ன கீதை* ������*
*ராமரும் சம்பாதியும்* 🦅🦅🦅
*சம்பாதி சொன்ன கீதை* 🦅🦅🦅*
தாரக மந்திரம் கடல் அலை போல் சப்தம் இட
புதிய சிறகுகள் உடலில் பிரசவிக்க
வானில் பறந்து சென்றான் சம்பாதி ... 🦅
தம்பி இழந்த சோகம் நெஞ்சை அடைக்க
ஒன்று சேர்ந்த இளமை பருவம் கண்ணில் நிழலாட
கண்ணீர் உப்புக்கள் ஜடாயுவிற்கு ஈமக் கடன் செலுத்த
இலங்கை திக்கை எடுத்துரைத்தான் வானரங்களுக்கு...
தன் உயிர் தம்பியை இழந்தாலும்
பிறருக்கு உயிர் கொடுத்தான் நல்ல செய்தி சொல்லியே .. 🦅
திக்கற்ற வானரங்கள்
திசை மறந்த வானரங்கள்
ராம நாமம் சொல்லியே
சீதை நாமம் கண்டனர் இலங்கையிலே ...
சம்பாதி சொன்னான் ...
*ராமா* !!
உன் நாமம் தந்ததே புதிய வாழ்க்கை ...
தம்பி இல்லா வாழ்க்கை
தரம் இல்லா சேர்க்கை ..
ஒன்று செய்வாயா ராமா ??🦅
என்னையும் என் தம்பியுடன் சேர்த்து விடு ... 🦅
ஒன்றாய் பிறந்தோம் ஒரு தாய் வயிற்றில் ..🦅
முன்னவன் மட்டும் பின்னவன் இல்லாமல் முனகி வாழ , 🦅
அதுவும் ஒரு வாழ்வோ ராமா ... ??🦅
என்னவன் அவன் நல்லவன் அவன் ... 🦅
அன்னையை மீட்க அரக்கனுடன் போர் செய்தான் ... 🦅
வெறும் மூச்சு விடும் ப்ரேதமாய் நான் மட்டும் இருந்து என்ன பயன் இங்கே ராமா ??🦅
அணைத்துக் கொண்டான் ராமன் அண்ணன் சம்பாதியை ...
நானும் அண்ணன் தான் ...
உன் போல் நினைப்பதில்லை ..
என்னிலும் உயர்ந்த உத்தமன் நீ ...
நீ இல்லா விடில் காண்போமா லங்கை தனை
மீட்ப்போமோ மீன் கொஞ்சும் விழியாளை ?
முக்தி தர விழைகின்றேன்..
மூவர் தேவர் வாழ் உலகம் நீ செல்ல விரும்புகிறேன் ...
உன் உதவிக்கு இது நிகர் இல்லை ...
வானில் வட்டமிடும் கழுகை கண்டான் சம்பாதி ... 🦅
தம்பி வந்து விட்டாயா? 🦅
என்றே மூச்சை ராமனிடம் தந்து விட்டு
பூக்கள் பொழியும் புஷ்பக விமானம் தன்னில் தம்பியுடன் சேர்ந்தான் ... 🦅🦅
உறவுகள் முக்கியம்
வாழும் நாட்கள் தாழும் நாட்களாய் ஆகும் முன்
சுற்றம் மதிப்போம் ..
சூழ்நிலை ராம நாமம் ஜபிக்கட்டும் ...
ரம்யம் தந்திடும் ராம நாமம் தனையே 👌
காஞ்சி வாழ் கருணை கடல் சொன்ன வாக்கு
சம்பாதி தந்த கீதை இது 👌👌👌
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 20*👌
मुकुन्द मूर्ध्ना प्रणिपत्य याचे
भवन्तमेकान्तमियन्तमर्थम् ।
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥ ४ ॥
முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥ 4 ॥
मुकुन्द मूर्ध्ना प्रणिपत्य याचे
भवन्तमेकान्तमियन्तमर्थम् ।
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥ ४ ॥
முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥ 4 ॥
*ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥* 💐💐💐
உன்னுடைய தயவுனால எனக்கு வேண்டிய வரம் ஒண்ணு தான்.
உன்னுடைய ப்ரஸாதத்துனால எனக்கு ஒரே ஒரு வரத்தைக் கொடு.
போன ஸ்லோகத்துல அந்த கிருஷ்ணனை தர்சனம் பண்ணதுனால இப்ப அந்த கிருஷ்ணன் கிட்ட ஒரு வரம் கேட்கறார்.👌👌👌
கிருஷ்ண பக்தியில் அர்ஜுனனை மிஞ்சியவர் யார்?
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு நெருக்கமானவன் அர்ஜூனன். கண்ணனே தனக்கு சாரதியாக அமையும் பாக்கியம் பெற்றவன். எத்தனையோ ஆபத்துக்களில் இருந்து அவரால் தப்பித்தவன். மகாபாரதத்தில், கண்ணனுக்கு அர்ஜூனனைவிட நெருக்கமானவர்கள் வேறு யாரும் இல்லை என்றுகூடச் சொல்பவர்கள் உண்டு. அதற்குக் காரணம், அர்ஜூனனுக்கு பகவன் ஸ்ரீகிருஷ்ணரின் மேல் வைத்திருந்த அளவில்லாத நம்பிக்கை; குருட்டுத்தனமான பக்தி. அவ்வளவு பக்திகொண்டவனா அர்ஜூனன்? நிச்சயமாக. இதை ஒரு சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.
அவன் அப்போதுதான் நன்கு தூங்கி எழுந்திருந்திருக்கிறான் என்பது தெரிந்தது. கண்ணனுக்கு ஆச்சர்யம்! ``அர்ஜூனா... இன்றைய போரில் உனக்கு என்னவாகும் என நானே மனம் குழம்பிக் கிடக்கிறேன்... உனக்கு எப்படி உறக்கம் வந்தது?’’
``இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? நான் உன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டேன். அதாவது, என்னை நான் உனக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன். இனி எதைப் பற்றியும் எனக்கெதற்குக் கவலை? என் கவலை... உன் கவலை.’’ அந்த அளவுக்கு கிருஷ்ணரின் மேல் அர்ஜூனனுக்குப் பற்று. பக்தி இருக்கிறவனுக்கு பயம் இல்லை... எது குறித்தும்!
அது ஓர் அந்தி நேரம். துவாரகைக்கு வந்து தங்கியிருந்தான் அர்ஜூனன். கிருஷ்ணனின் விருந்தினர் மாளிகை உப்பரிகை. சூரியன் மறைந்திருந்தான். ஆனால், இருள் இன்னும் கவிய ஆரம்பித்திருக்கவில்லை. சூரியனின் செங்கதிர்களின் மிச்சம் மட்டும் கீழ்வானத்தை ஆரஞ்சு நிறத்தில் அடித்திருந்தது. அந்தப் பேரழகில் தன்னை மறந்து லயித்திருந்தான் அர்ஜூனன்.
``அர்ஜூனா...’’ என்றபடி அவன் அருகே வந்து நின்றார் கிருஷ்ணர்.
சுயநினைவுக்கு வந்தவனாக, கண்ணனைத் தொழுது வணங்கினான்.
``என்ன அந்தி வானத்தின் அழகில் சொக்கிக்கிடக்கிறாயா?’’
``ஆம் கண்ணா! அதில்கூட உன்னையே தரிசித்துக்கொண்டிருந்தேன்...’’ அர்ஜூனனின் குரலில் லேசாகப் பெருமிதம்..!
``என்னையா?’’
இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் கிருஷ்ணர். அர்ஜூனன் முகத்தில் கேள்விக்குறி.
``அதாவது, சதா சர்வகாலமும் உனக்கு என் நினைப்புத்தான் என்பதை நிரூபிக்க விரும்புகிறாய்...’’
``இதில் சந்தேகம் என்ன கண்ணா? நீயே எனக்கு எல்லாமும்... அதன்படிதானே வாழ்கிறேன்?’’
``அப்படியானால், என் மேல் செலுத்தும் பக்தியில் உன்னை மிஞ்ச ஆள் இல்லை என்கிறாய்?’’
``நிச்சயமாக.’’
``தவறு அர்ஜூனா. உன்னையும்விட என் மேல் ப்ரியமுடன் கூடிய பக்தி செலுத்துகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.’’
``புறப்படு என்னோடு. அது எந்த தேசம், யார் எவர் என்றெல்லாம் கேட்கக் கூடாது. சம்மதமா?’’
அர்ஜூனன் உடன்பட்டான். இருவரும் கிளம்பினார்கள்.
பகவான் தன் அரண்மனைக்கு வருவார் என்று அந்த அரசர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரும் அவர் துணைவியும் சிறுவயது மகனும் அவனை நெஞ்சார வணங்கி வரவேற்றார்கள். பக்தியோடு உபசரித்தார்கள். பகவான், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.
``உங்களுக்கு என் மீது மாறாத பக்தி உண்டு அல்லவா?’’
``ஆம் பெருமானே!’’
``நான் ஒன்று கேட்டால் தருவீர்களா?’’
``உயிரையும் தருவோம்.’’
``சரி. ஆனால், ஒரு நிபந்தனை.’’
``என்ன?’’
``எனக்கு நீங்கள் தானம் கொடுக்கும்போது, உங்கள் இல்லத்தில் ஒருவர் கண்ணிலும் துளிக் கண்ணீர்கூட வரக் கூடாது.’’
``சம்மதம்.’’
உடன் வந்திருந்த அர்ஜூனன், அங்கே நிகழ்வதை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
``என்ன வேண்டும் பகவானே!’’ ஆர்வமும் பரவசமும் குரலில் தொனிக்கக் கேட்டார் அரசர்.
``உங்கள் பாலகனை இரண்டாகப் பிளந்து, அவனுடைய உடலின் வலதுபாகத்தை மட்டும் எனக்குத் தரவேண்டும்.’’
`என்ன கொடுமை இது... கண்ணனின் திருவாயில் இருந்தா இந்த வார்த்தைகள்!’’ அர்ஜூனன் விதிர்விதிர்த்துப் போனான். ஆனால், அங்கிருந்தவர்கள் முகங்களில் எந்தச் சஞ்சலமும் இல்லை. அர்ஜூனன் ஆச்சர்யத்தோடு பார்த்தான்
``அட... இது என்ன... இளவரசனின் இடது கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்?’’ கேட்டார் கிருஷ்ணர்.
அதற்கு அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பதில் சொன்னான்... ``மன்னிக்க வேண்டும் பரந்தாமா! நீங்கள் என் உடலின் வலது பக்கத்தைக் கேட்டீர்கள். அது உங்களுக்குப் பயன்படுகிறதே என்கிற திருப்தி ஒருபுறம். ஆனால், உங்களுக்குப் பயன்படாமல் வீணாகப் போகிறோமே என என் உடலின் இடது பாகம் வேதனைப்படுகிறது. அதனால் எழுந்தது இந்தக் கண்ணீர்..
கிருஷ்ணரின் வதனத்தில் அதே மென் சிரிப்பு !!
Chanting clears impure consciousness: In the impure state of consciousness, one identifies oneself with body and forgets his real identification i.e spirit soul. He hovers on the material platform trying to find eternity, knowledge, happiness and finds always defeated in this pursuit. However, by simple chanting one can realize his position as spirit soul and his relationship with the creator and the nature around.
Chanting brings auspiciousness: Our life in one sense is the projection of our desires. Most of the time our desires keep fluctuating and remain unfulfilled, and even if fulfilled we still find emptiness. Have you ever wondered, what desires to have and what desires to achieve ? Chanting helps one purify one’s desires and thereby brings auspiciousness in every sphere of life.
Chanting reveals transcendental knowledge: Be it MIT, Harvard or any other education institution, people are perplexed as what is life, where did one come from, why one exists, what is the purpose of existence etc. As one chants, one can understand the secrets of existential questions.
Chanting calms the mind: Chanting helps one control the mind very easily. Anyone chanting attentively can easily within few minutes can see his mind becoming more steady and easily controlled.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*மஹா பெரியவா அருள்வாக்கு* *பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மன நிறைவோடு இருப்பது தான்.
*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப் பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துச் செய்ய வேண்டும்.
* நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அது கட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.
* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.
*தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சிய தர்மம்' என்பதாகும். *- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங்கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 15 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/BlCJgBEIfSS0Nfnd10dR5K
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to *மஹா பெரியவாஅனுபவம் comments" Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
So attractive that devotees are in tears just thinking about him, let alone having a sight
So attractive that all gods praise him
So attractive that Lord Krishna worshipped him
So attractive that Lord Krishna told Arjuna to worship him
So attractive that he dispelled death
So attractive that ghosts turn from evil, negative entities to positive entities, crying at the sight of their lord
So attractive that the wives of rishis were awestruck by seeing him only wearing tiger skin
So attractive that Lord Rama worshipped him for blessings on the war against Ravan
So attractive that Lord Rama worshipped him to remove the sin of Brahma Hathya
So attractive that Ravan worshipped him
So attractive that Vasuki chose to forever be around Lord Shiva’s neck
So attractive that Maa Parvati, the mother of this whole world, prayed for thousands of years to be with Lord Shiva
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சங்கராம்ருதம் - 170
மஹாபெரியவாள் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள்.அப்பொழுது அங்கு பெரிய கட்டடங்களோ, மற்ற வசதிகளோ செய்யப்படவில்லை. ஸ்ரீ மஹாபெரியவாள் அங்குள்ள சின்னக்கோயிலின், முன்புறம் திண்ணையில், கயிற்றுக்கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நானும், (கிருஷ்ணமூர்த்தி) இரு நண்பர்களும் தரிசனத்திற்காகச் சென்றோம்.என் திருச்சி நண்பர், திருவானைக்காவிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு, ஒரு அஷ்டோத்ர தங்கக்காசு மாலை செய்திருந்தார்.அந்த மாலையைப் பெரியவாளிடம் காண்பித்து அனுக்ரஹம் பெறச் சென்றிருந்தோம். பெரியவாள் அந்தத் தங்கக்காசுமாலையை வாங்கிப் பார்த்து,தன் சிரசில் வைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டு
ஆசீர்வதித்தார்.
மஹாபெரியவர்கள், யாரேனும் மாலை கொண்டு வந்து சமர்ப்பித்தால், அதை தன்னுடைய சிரசில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். இதன் தாத்பர்யம், தனக்கு என்று ஒன்றையும் ஏற்றுக்கொள்ளாமல்,அம்பாளுக்கு அர்ப்பணித்ததாகப் பாவித்து, அம்பாளின் பிரசாதமாகக் கருதி, அதை சிரசில் வைத்துக்கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
என் நண்பரிடம், "நீ அம்பாளுக்குக் காசுமாலை செய்து வைத்திருக்கிறாய், எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டார்கள், பெரியவா. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
பெரியவாள் சொல்கிறார்;
"இங்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க பித்தளைக் குடம் வைத்திருந்தேன். அதைத் திருடன் கொண்டு போய் விட்டான். யாரும் எடுத்துப் போகாதவாறு, ஒரு மண்குடம் தினமும் எனக்குக்.கிடைக்க ஏற்பாடு செய்வாயா?" என்றார்கள்--அந்த கைங்கர்யம் சில காலம் நடந்தது.
ஒரு சமயம் தரிசனத்தின் பொழுது, கணவனை இழந்த வயது முதிர்ந்த அம்மையார்,மஹாபெரியவாளிடம்,
"நான் கிராமத்தில் ஒரு பசுமாடு வைத்துக்கொண்டு, பராமரித்து,பால் கறந்து விற்று ஜீவனம் நடத்தி வந்தேன்
அந்த மாட்டைத் திருடன் கொண்டு போய்விட்டான்" என்று வருத்தத்துடன் தெரிவித்தாள்.
பெரியவாள் ஹாஸ்யமாக, " அப்ப நீ என்னைத் திருடனைப் பிடித்து வரச் சொல்கிறாயா?" என்று சொல்லி அடுத்த க்ஷணம் பக்கத்தில் உள்ள ஸ்ரீமடத்து சிப்பந்தியிடம், சிவாஸ்தானத்திலிருந்து, கன்றுடன் கூடிய பால் கறக்கும் பசு மாட்டை, இந்தப் பாட்டி வீட்டில் கட்டு" என்று ஆக்ஞையிட்டார்.
என்னே கருணை!
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 15 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/BlCJgBEIfSS0Nfnd10dR5K
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕉️🙏
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to *மஹா பெரியவாஅனுபவம் comments" Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
வெளியூர் அம்மாள் அடிக்கடி தரிசனத்துக்காக ஸ்ரீ மடத்துக்கு வருபவர். அதனால், பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் தொண்டர்களுக்கு நன்றாக அறிமுகமானவர்.அவர் ஒரு தடவை தரிசனத்துக்காக வந்தபோது, வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்பவர், பெரியவாளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். வந்த அம்மையார் அவரிடம் குசலம் விசாரித்துவிட்டு, பெரியவாளிடம் ஒரு கேள்வி
கேட்கப் போவதாகத் தெரிவித்தார்.
"என்ன கேள்வி?"
"எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்."
வித்யார்த்திக்குக் கோபம் வந்தது.
"பெரியவாளிடம் ஆன்ம விஷயங்கள்,ஈசுவர பக்தி, பூஜை - புனஸ்காரம் பற்றிப் பேசலாம். உங்கள் வீட்டுப்
புளிய மரங்கள் காய்க்கவில்லை என்றால், அவர் என்ன செய்வார்? இதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது" என்று கடிந்து கொண்டார்.
பெரியவாள் பக்கத்தில் இன்னொரு சிஷ்யர் இருந்தார்.
"அந்த அம்மா என்ன சொல்றா? கேளு.." என்றார் பெரியவாள்.
அவர் வந்து அம்மையாரிடம் விசாரித்துவிட்டுச் சென்றார்
"அவா தோப்பிலே புளியமரங்களெல்லாம் நாலு வருஷமா காய்க்கலையாம்."--சிஷ்யர்.
பெரியவாள் சொன்னார்கள்;
"புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்காளான்னு கேட்டுண்டு வா"-பெரியவா.
"கேள்விப்பட்டிருக்கேன். தோப்புப் புளியமரங்களிலே பிசாசு இருப்பதாக ஊர்க்காரர்கள் சொல்வார்கள்"-அம்மாள்.
"அந்த அம்மையார் குடும்பத்தில், முன்னொரு தலைமுறையில், ஒரு பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்-இந்த விவரம் இந்த அம்மாளுக்குத் தெரியுமான்னு கேளு"--பெரியவா.
"கேள்விப்பட்டிருக்கேன். என் மாமனாரின் அப்பா, தன் மூத்த சம்சாரத்தை ரொம்பவும் கொடுமைப்
படுத்தினாராம். இம்சை பொறுக்காமல் அவர் கிணற்றில் குதித்து உயிரை விட்டாராம்.
இந்த மாதிரி ரகசியமான குடும்ப சமாசாரங்களெல்லாம், பெரியவாளுக்கு எப்படித் தெரிகிறது என்று அம்மையாருடன் வந்தவர்கள், ஆச்சர்யமும், அவமானமும் அடைந்தார்கள்.
பெரியவாள், அப்போது பிரசித்தமாக இருந்த ஒரு மந்திரவாதியிடம் (ஆனந்தத் தாண்டவபுரம் அய்யங்கார்) சென்று பரிகாரம் செய்துவிட்டு, ராமேஸ்வரத்தில் தில ஹோமம் பண்ணச் சொன்னார்கள்.
இவ்வளவையும் செய்து முடித்த பிறகு, புளிய மரங்கள் நன்றாகக் காய்க்கத் தொடங்கின.
முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்களில், ஒரு கூடை நிறைய எடுத்து வந்து பெரியவாள் முன்பு வைத்தார், அம்மையார்.
இனிப்பான புளியம்பழங்கள்.
பெரியவாள் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.
"பெரியவா அனுக்ரஹத்தால் என்னோட மாமியாரின் மாமியாருக்கு நல்ல கதி கிடைச்சுது." என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்,அம்மையார்.
"துர் மரணம் ஏற்பட்டால், அந்த உயிர் ஆவியாகி அலைந்து தவிக்கிறது. அதற்கான பரிகாரங்களைச் செய்து விட்டால், தவிக்கும் உயிர் மேலுலகம் போய் விடுகிறது"--பெரியவா.
பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மஹா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர். ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிக்ஷை அளித்து வழி படுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார்,
அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டனர்.மறுநாள் காலை ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார்.என்னையும்உடன்அழைத்துச்சென்றார். அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், “சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கு உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ ?
வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.உடனே என் தந்தையார், “நானும் அதக் கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக்கிழமையே வைச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும் ?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.காரியஸ்தர் சிரித்தபடியே, “சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர செலவு. எல்லாம் முடிஞ்சு ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை) அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு பிடிக்கும்! உங்கள் ஊர்ல வசூலாயிடுமோல்லியோ?” என்று கேட்டார். சற்றும் தயங்காமல், “பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், “அது சரி…மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.
நம்மூர்லநிறையதனிகாள்லாம்(பணக்காரர்கள்)இருக்காளோ?”என்று வினவினார்.
உடனே என் தகப்பனார் குரலைத் தாழ்த்தி, “மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரக்கிக்கணும்” என வேண்டினார்.
புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் முப்பது வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. நானூறு ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும் ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக மொத்த வசூல் ஐநூறு ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.
இனி பெரியவாளின் பாத சமர்ப்பணைக்குத் தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை.
நாங்கள் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கைகூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது.‘பாதசமர்ப்பணைஐநூறுக்குஎன்னபண்ணப்போகிறோம்?’என்கிற கவலை அவருக்கு.
திடீரென்று ஒரு கருணைக் குரல்: “சந்தானம்! கிட்ட வாயேன்…ஏன்அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.“என்ன சந்தானம்! நேத்திக்கு நீகண்ணுலபடவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியா ?” என்று வினவினார் ஸ்வாமிகள். “அதெல்லாம் ஒண்ணுமில்ல பெரியவா. ஞாயித்துக்கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷாவந்தனம் பண்றமோல்லியோ…அதுவிஷயமா
ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், “அது சரி சந்தானம் … லௌகீகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என் சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத்தயங்கினார் என்தகப்பனார்.
திடீரென, “ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நிறைய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார்.
”காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார் ?” என்று அனைவரும் குழம்பினர்.
“போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.பெரியவா விடவில்லை. “அது சரி, நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?”“ஒரு வாரம் முன்னாடி, பெரியவா!” – என் தகப்பனார்பதில்சொன்னார். “அதிருக்கட்டும்…இப்போ ஜலம் போயிண்டிருக்கோ…தெரியுமோ?” – இது பெரியவா.உடனே அருகில் இருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, “இன்னிக்கிக் கார்த்தால நான் காவிரிஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறதுபெரியவா”என்றார்.ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை.
“சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியா எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, “சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளைக்கு விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதான்னு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறி விட்டு, ‘விசுக்’ கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.‘
சனிக்கிழமை. பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும், தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை.
என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: “நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தான் ஜலம் போறது! பெரியவா கிட்ட போய் சொல்லணும்.”தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார், என் தந்தையார்.
திடீரென கரையிலிருந்து, “சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ…புண்ணியமுண்டு” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர் ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தக்ஷணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.அவர் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கும் பூர்வீகம்
மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர் தான். அப்பா வழித் தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருதுவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்க ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட்டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திர மௌலீச்வர ஸ்வாமி தான் எங்க குலதெய்வம்.”
“நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா”ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்கு கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர்,
விவரித்தார்.அவருக்குபரமசந்தோஷம். “கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்ம ஊர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்றபடி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் ஐநூறு ரூபாய்.
“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம்.
காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதான்னு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், “பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்கள் பிரமிப்பு அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷா வந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக, அந்த ஐநூறு ரூபாயை வைத்து சமர்ப்பித்தார். பழத்தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.
ஹர ஹா சங்கர
ஜய ஜய சங்கர
மாதவன் பாதம் கொஞ்சும் மங்கையே
கங்கை கண்ட புண்ணியம் கொண்டவளே ...
காசி செல்லாதோர்க்கும் பாசி படிந்த மனம் கொண்டோருக்கும் ஆசி கூறும் அருட்கடலே ...
என்றும் அழியா குலக்குன்றே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே ...
பிண்ணி செல்லும் வாழ்க்கை அதில்
நதி போல் குதித்து குரல் கொடுத்து கும்மாளம் போட்டு வாழ்கிறோம் ...
நதி சேரும் கடல் வரும் போதே யார் வருவார் கதி என்றே ?
உன் நிதி வேண்டும் உன் மதி வேண்டும்
சதி செய்வோர் சடுதியில் வீழ வேண்டும் ...
சான்றோன் இல்லை நான் எனினும் சார்ந்தேன் உனை கதியென்று ...
துணை புரிவாய் ...துயில் எழுப்பாய் ரங்கனை
தூங்கட்டும் ரங்கன் கடல் போல் அமைதியாய் ...
துணை என நீ வரும் போதிலே
கணை என் செய்யும் கொடும் கூற்று என் செய்யும் ?