ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1 ஸ்ரீ மாதா (1) பதிவு 4

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

ஸ்ரீ மாதா (1)

பதிவு 4  

.....பதிவு 4

ॐ श्रीमाता श्रीमहाराज्ञी श्रीमत्-सिंहासनेश्वरी ।  चिदग्नि-कुण्ड-सम्भूता देवकार्य-समुद्यता ॥ १॥उद्यद्भानु-सहस्राभा चतुर्बाहु-समन्विता । रागस्वरूप-पाशाढ्या क्रोधाकाराङ्कुशोज्ज्वला ॥ २॥

அரம்பமே அமர்க்களம் ...  *தாயே ! அம்மா*!! என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்  ஆரம்பிக்கின்றது ... 

அம்மா என்று  சொல்லிப்பாருங்கள் ..

தன் கஷ்டங்களை மறைத்துக்கொண்டு ( *அம்* என்று சொல்லும் போது உதடுகள் வாயை  மறைத்துக்கொள்கின்றன ...*மா* என்று சொல்லும் போது ஆனந்தம் பீறிட்டு வெளியே முத்துக்களாய் சிதருகிறது .. )

வெளியே அவள் தருவது அதைத்தான் .. 

உள்ளுக்குள்ளே தன்னை அழுத்திக்கொண்டு  வெளியே வெண்ணெயாய் உருகுபவள் தான் *அம்மா* .... 🌸🌸🌸🌸🌸

*ஓம் ஸ்ரீ மாதா*

தாயை பற்றி விவரித்து எழுத முடியுமா ... முடியும் என்றால் அம்பாளின் அழகையும் ஒருவரால் விவரிக்க முடியும் .. 

கடலின் ஆழத்தையும் வானத்தின் வெளி பரப்பையும் துல்லியமாய் விவரிக்க முடியும் ..

விண்மீன்கள் மொத்தம் எவ்வளவு என்றும் அவனால் அடித்து சொல்ல முடியும் ... 

சுருக்கமாக அவனால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை 

ஒரு கைப்பிடி மண்ணில் எவ்வளவு கற்கள் இருக்கின்றன என்று கணக்கும் போட முடியும் ... 👍👍

🌸கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா !!

🌸 அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 

🌸 அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே 

அம்மாவை வணங்காது உயர்வில்லையே 

🌸 தாய் இல்லாமல் நான் இல்லை தானே ஒருவரும் பிறப்பதில்லை

🌸 அன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை

*சமஸ்கிருதம்

मातृ माता , जननी , जन्मदा , जनयित्री , प्रसूः , जनिः , जनी , जनित्री , सावित्री , अक्का , अम्बा , अम्बिका , अम्बालिका

 *நேபாளி

आमा , माता , जननी , मातृ

 *வங்காளம்

জননী, মা , মাতা , জননী , জন্মদাত্রী , মাতৃকা

*அஸ்ஸாமீஸ்

মা , আই , মাতৃ , বৌটি , বৌ , জননী , জন্মদাত্রী

 *போடோயம்

आय , आइ , बिमा

 *இந்தி

माता, माँ , माई , अम्मा , अम्माँ , अम्मां , महतारी , मैया , जननी , जन्मदात्री , अम्मीं , मादर , मातारी , मातृ , प्रसू , मातृका , वरारणि , माया , वालिदा , शिफा , अल्ला , धात्री , प्रजायिनी

*மராத்தி

आई, आई , माय , माऊली , माउली , मातोश्री , मातुश्री , जननी , जन्मदात्री , माता

*கொங்கனியம்

आवय , मांय , जननी , माता

 *பஞ்சாபி

ਮੰਮੀ, ਮਾਤਾ , ਮਾਂ , ਮਾਈ , ਅੰਮੀ , ਅੱਮਾ , ਮਾਤ , ਜਨਨੀ , ਬੀਬੀ

 *குஜராத்தி

બા, માતા , માં , મા , જનની , જનેતા , અંબા , મૈયા , અમ્મા , જન્મદાત્રી , અમ્મી , માદર , માતારી , માતૃ , માતૃકા , માયા , ધાત્રી , ધાત્રી , શિફા

*ஒடியா* (ஒடியம்)

ମାତା, ମା, ଜନନୀ, ଜନ୍ମଦାତ୍ରୀ, ବୋଉ

 *கன்னடம்

ಅಮ್ಮ*

தெலுங்கு

అమ్మ, తల్లి, మాతా, జనని , మాతృమూర్తి , మాత, మాతృశ్రీ, మాతృదేవత.

 *மலையாளம்

അമ്മ, മാതാവു , ജനയിത്രീ, ജനനി, ജനിത്രി, പ്രസു, തായ്‌, അംബ, അംബായ, അംബിക, തള്ള

 *காஷ்மிரி

موج

 *உருது

ماں،والدہ،مائی،اماں،مادر،ام

ஒரே அர்த்தம் ...எல்லா மொழிகளிலும்

கருணை ... அன்பு .. தியாகம் , 👌👌👌💐💐💐💐💐

எதற்கும் ஒரு மூலம் வேண்டும் .. 

செடி வளர விதை வேண்டும் என்பதைப்போல்.... ஆதியும் அந்தமும் இல்லாதவனுக்கு மூலம் உண்டோ ?? 

அவனையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டுமே .... யார் அது ? 🤔

பட்டரின் பாடல் ஒன்று .... 

தவளே ... இவள் எங்கள் சங்கரனாருக்கு மனை மங்கலமாம்... அவளே அவர்க்கு அன்னையும் ஆயினள்.... ... 

முதல் மூவருக்கும் அம்மே என்கிறார் இன்னொரு பாடலில் ... 

பிரம்மன் முதலாகிய தேவர்களை பெற்ற அம்மே என்கிறார் இன்னொரு பாடலில் ... 

மூலம் என்பதே தாய் தான் அவள் மூலமாகத்தான் உயிர்கள் வெளி வருகின்றன .. 

பத்து மாதம் சுமப்பவள் 

நம் ஒரு பிறவி தாய் ..  அண்ட சராசரங்களை  என்றும் தன் கருப்பையில் சுமக்கிறாள் ... 

அவள் தானே தன் பணிக்குடத்தை உடைத்து ஒவ்வொரு உயிராக உலகில் சுழல விடுகிறாள் .. 

இந்த உலக மாதாவை அம்மா என்றே அழைத்து உருகுபவர் தாயர் இன்றி மங்குவர் அதாவது இன்னொரு தாயின் வயிற்றில் பிறக்க மாட்டார்கள் ... 

ஓம் ஸ்ரீ மாதா ... முற்றும் துறந்த சங்கரர் தாயின் உடலை மடியில் போட்டுக்கொண்டு ஒரு சிறு குழந்தை போல் கதறி அழிகிறார் ... 

அவர் தண்டம் தண்டமாய் அங்கிருக்க பந்தம் அறுபடாமல் வால் இழந்த பட்டம் போல் அங்கே பறந்தது 

கண்கள் குளமாக அவர் விம்மி பாடிய மாத்ருகா பஞ்சகம்

1. ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா

நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I

ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :

தாதும் நிஷ்க்ருதிமுந்நதோபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, 

வாய்க்கு ருசி இல்லாதிருத்தல்,

உடம்பு இளைத்தல், 

ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! 

அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல? 

அந்த தாய்க்கு நமஸ்காரம்!😰😰😰

2. குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா

யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I

குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்

ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே!  ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே 

அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! 

உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்.

3. ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா

ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I

ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:

அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. 

மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! 

உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. 

காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!😰😰😰

4. முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி

ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I

இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:

ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா ! 

என் கண் அல்லவா ! 

என் ராஜா, 

என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! 

அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !😰😰

5. . அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்

ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I

க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -

த்யஹோ ஜநந்யை ரசிதோயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் 'அம்மா' அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! 

இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்....

தாயைப்போல் ஒரு தெய்வமும் இல்லை .. அதனால் தால் அவளே எல்லோரும் விரும்பும் ஸ்ரீ மாதா எனும் முதல் திருநாமத்தைக் கொண்டவளாக விளங்குகிறாள்      💐💐💐

                                    👍👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌

       

Comments

ravi said…
48. உடல் பற்று நீங்க

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே
ravi said…
ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!
ravi said…
49. மரணத் துன்பம் இல்லாதிருக்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பையடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
ravi said…
நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!
ravi said…
50. அம்பிகையை நேரில் காண

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்றாய
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.
ravi said…
According to the Gita, what is karma? What is Akarma, Vikarma, and yagya?
ravi said…
We will keep this SIMPLE & TO THE POINT .

GITA is a string of Practical lessons given by the Lord to ARJUN to change the state of ARJUNS MIND which has fallen in a confused and agitated state due to which ARJUN is unable to keep his balance and stands frozen in the state of indecision . FROM THIS POINT STARTS THE LORDS LESSONS, to get ARJUNS MIND back to normal state so that Arjun can know what the TRUTH is, by knowing what is FALSE . ( TO KNOW THE TRUTH – YOU FIRST NEED TO KNOW WHAT IS NOT THE TRUTH ) .

MIND IS ALL THERE IS . EVRYTHING IS HAPPENING IN THE MIND ONLY . THERE IS NOTHING IN THIS CREATION WHICH IS ANYTHING EXCEPT THE MIND . ANY SPEECH ACTION IS A BY PRODUCT OF THE MIND ONLY . AGAIN I REPEAT MIND ( bundle of THOUGHT ) IS ALL THERE IS .

THE LESSONS IN GITA AND SPECIALLY SOME KEY WORDS IN GITA HAVE A VERY DIFFERENT MEANING CONTRARY TO WHAT THEY ARE UNDERSTOOD AS . GIVEN BELOW THE MEANING OF WORDS AS ASKED BY YOU
ravi said…
KARAM – THOUGHTS

AKARM - STATE OF MIND WHERE FLOW OF THOUGHTS HAVE GOT SUSPENDED . NO THOUGHTS FLOW IN THIS STATE.

VIKARAM – FLOW OF THOUGHTS OF LOWER VIBRATIONS WHICH WILL MAKE THE THINKER EXPERIENCE FEAR,PAIN, CONFUSION , CHAOS AND SIMILAR RE-ACTIONS IN THE MIND .

YAGYA - A STATE OF MIND WHERE THE PRACTIONER FUNCTIONS WITH THOUGHT OF ONENESS WITH ALL THAT EXISTS , AND WORKS WITH GOODNESS FOR ALL .

I WILL ADD ONE MORE WORD WHICH MAY BE OF INTEREST TO YOU, IN THE CONTEXT YOU ASK THIS QUESTION .

SANYAS – STATE OF MIND WHERE THERE IS A FLOW OF HIGHER VIBRATION THOUGHTS CARRIED TO THE POINT OF EXTREME ENJOYMENT AND MARKED BY UTTER FEARLESSNESS AND AN ASSURANCE OF ABSOLUTE COMPASSION TO EVERYTHING IN THE CREATION . SANYASI IS A TRUE EMBOIDMENT OF BRAHAMAN .

ON A CLOSING NOTE IF YOU TRULY WHISH TO KNOW WHAT THE TRUE GITA IS , PLEASE CONTACT THE FOLLOWING 11O YEARS OLD ORGANISATION ( LATENT LIGHT CULTURE ) HAVING OFFICE IN ALLAHABAD AND DELHI
ravi said…
*ஹரே கிருஷ்ண🙏பக்தர்களே🌺*
பகவத் கீதை வகுப்பில்
*தியானயோகம்* பற்றி விளக்கமாக பார்த்தோம். மேலும் அஷ்டாங்கயோகத்தின் நிலைகள் மற்றும் மனதை எவ்வாறு வெல்வது என்பதையும் கேட்டறிந்தோம். *உண்மையில் யோகம் என்பது என்ன? மகிழ்ச்சி மற்றும் துன்பத்தை எவ்வாறு நீங்கள் பொறுத்துக் கொள்வீர்கள்?என்பதை இங்கு பதிவு செய்யவும்....இவ்விடம் உங்களின் கருத்துக்கள்,மற்றும் சந்தேகங்களை தயங்காமல் இங்கு பதிவு செய்யலாம்.
உங்களின் தொடர்ந்த ஒத்துழைப்பிற்கு நன்றி🙏
*ஹரே கிருஷ்ணா🙏*
ravi said…
பௌதீக ஆசைகளை துறந்து பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஈடுபடுகறார்களோ அதுவே யோகம்
ravi said…
கடவுளையும் நம்மையும் இணைக்கும் பாலமே யோகம்..பக்தியோடு இணையும் போது பக்தி யோகம் எனப்படுகின்றது.
ravi said…
*ஹரே கிருஷ்ண பக்தர்களே🌸🌺🌹*

*தர்மத்தைக் காக்க போர் புரிவது ஒரு சத்ரியனின் கடமை என்று ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்*

இக்காலச் சூழலில் இந்த அறிவுரை நமக்கு எவ்வாறு சாத்தியப்படும் என்பது பற்றி தங்களது மேலான புரிதலையும் இங்கு பதிவிடலாம்.

*ஹரே கிருஷ்ணா🙏💐*
ravi said…
Hare Krishna, hope all of our Devotees are busy preparing for tomorrow's Ekadhasi. Kindly alos share how are going to fast tomorrow's Pandava Nirjala Ekadhasi. Hare Krishna
ravi said…
மனிதர் ஆகிய நாமும் தர்ம வழி சென்று நமது கடமை மற்றும் பகவானின் தொண்டு செய்து பரந்தாமனின் பாதம் அடைவோம்.🙏🙏🙏🙏🙏
ravi said…
Hare Krishna, yes நமது கடமையே பகவானின் தொண்டனாகவே இருக்க வேண்டும் கடமை வேறு பகவானின் தொண்டு வேறாக இருக்க வேண்டியது இல்லை ஹரே கிருஷ்ணா
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்த [ஆனந்தலஹரி] ச்லோகங்களுக்கு நடுவே சிலதில் லலிதாம்பாள் ரூபத்திலில்லாமல், ஆனாலும் ஸ்ரீவித்யா தந்த்ரத்திற்கு ஸம்பந்தமான வேறு தேவதா ரூபங்களில் அம்பாள் அநுக்ரஹம் செய்வதைச் சொல்லியிருக்கிறது. அப்படி ஒன்று [ச்லோ.15] சொல்கிறேன்: வீணை இல்லாத ஒருவித வாக்தேவி ஸ்வரூபமாக அம்பாளை [இங்கே] சொல்லியிருக்கிறது. வாக்தேவி என்றால் ஸரஸ்வதிதான்.
அம்பாள் விஷ்ணுவுக்கு ஸஹோதரி என்கிற மாதிரியே இன்னும் இரண்டு – ரொம்பப் பேருக்குத் தெரியாதது: லக்ஷ்மி ப்ரம்மாவுக்கு ஸஹோதரி, ஸரஸ்வதி பரமசிவனுக்கு ஸஹோதரி1. அண்ணா – தங்கை என்றால் ஒரே ஜாடை, ஒரே மாதிரி மனோபாவம், ஒரே மாதிரிக் கார்யம் பண்ணுவது என்றுதானே இருப்பார்கள்? அப்படி ஸரஸ்வதி பரமசிவன் மாதிரியே வெள்ளை வெளேரென்று இருக்கிறாள். ”சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்” என்றால் சரத் கால சந்திரிகை மாதிரி சுப்ரமாக, வெள்ளை வெளேரென்று இருப்பவள். சரத் காலத்தில்தான் அவளுக்கு ஸரஸ்வதி பூஜையும் பண்ணுகிறோம். ‘சரத்’தை வைத்துத்தான் அவளுக்கே ‘சாரதா’ என்று பேர் இருக்கிறது.
ஆசார்யாளுக்கு சாரதா நாமத்தில் விசேஷமான பிடிப்பு உண்டு. வித்வத்திலே சிகரத்துக்குப் போய் பாஷ்யம், ஸ்தோத்ரம், வாதம் என்று ஏராளமாகப் பண்ணியவராதலால் அவருக்கு ஸரஸ்வதி ரொம்பவும் முக்யம். அந்த ஸரஸ்வதிக்கு உள்ள அநேகம் பெயர்களில் சாரதா நாமத்தில் அவருக்குத் தனியான ஈடுபாடு! வெள்ளை வெளேர் என்று பரம பரிசுத்தத்தையும், ஹித சீதமாக இருப்பதில் அருளின் குளிர்ச்சியையும் காட்டுகிற பெயராக இருப்பதால் இருக்கலாம்! ‘ச’வும் ‘ஸ’வும் ஒன்றுக்கொன்று மாறி வருவதுண்டு. அப்படிப் பார்க்கும்போது ‘சாரதா’ என்பது ‘ஸாரதா’ என்றாகும். வடக்கே அப்படியும் சொல்கிற வழக்கமிருக்கிறது. ‘ஸார-தா’ என்றால் ‘ஸாரமான தத்வத்தை அநுக்ரஹிப்பவள்’ என்று அர்த்தம். ஞானந்தான் ஸார தத்வம். அதனாலும் ஆசார்யாளுக்கு அந்தப் பேரில் தனியான பிடிமானம் இருந்திருக்கலாம். ச்ருங்கேரியில் சாரதாம்பாள் என்றே அம்பாளை ப்ரதிஷ்டித்திருக்கிறார். அது சாரதா பீடம். த்வாரகையிலுள்ள ஆச்சார்யாளின் மடத்திலும் சாரதா பீடம் என்றே சொல்கிறது. நம் [காஞ்சி] மடத்துக்கும் சாரதா மடம் என்றே பேர். காமகோடி பீடம்; சாரதா மடம். அந்தப் பேரில் அவருக்குத் தனிப் பிடிப்பு இருந்தாலும், நம்முடைய ஸ்தோத்ரத்தில் ஒரு இடத்தில்கூட லலிதாம்பாள், த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களையே சொல்லாததால் இந்தப் பெயரையும் சொல்லவில்லை போலிருக்கிறது! ஆனலும் ‘சரத்-ஜ்யோத்ஸ்நா’ என்று ஆரம்பத்திலேயே சாரதாவை ஞாபகப்படுத்திவிடுகிறார்!
ஈச்வரன் மாதிரியே அவள் சுத்த வெளுப்பு. அவர் மாதிரியே ஜடாமகுடம் தரித்துக் கொண்டிருப்பவள். அதோடு அதில் அவர் மாதிரியே சந்திர கலையையும் வைத்துக் கொண்டிருப்பவள். தானே சந்த்ரிகை மாதிரியான தாவள்யத்தோடு இருப்பவள் ஜடா மகுடத்திலும் சந்த்ரகலை வைத்துக்கொண்டிருக்கிறாள்: ”சசியுத ஜடாஜூட மகுடாம்”.
சதுர்புஜையாக இருக்கிறாள். இரண்டு ஹஸ்தங்களில் வராபய முத்ரை – ”வர த்ராஸ த்ராண” என்று சொல்லியிருக்கிறது. ‘அபயம்’ என்பதற்குப் பதில் ‘த்ராஸ த்ராணம்’ என்று மோனையழகோடு போட்டிருக்கிறார். ‘த்ராஸம்’ என்றால் பயம்தான். ‘த்ராணம்’ ரக்ஷிப்பது பயத்த்லிருந்து ரக்ஷிப்பதென்றால் அபயந்தானே?
”உன்னைத் தவிர எல்லா தேவதைகளும் அபய வரத முத்ரை காட்டுகின்றன” என்று முன்னாடி சொன்னாரல்லவா? அதனால்தான் அப்புறம் லலிதாம்பாளுக்கு வேறான ஒரு ரூப பேதத்தை இங்கே சொல்லும்போது வராபயம் காட்டும் ஸாரஸ்வத [ஸரஸ்வதியின் தொடர்புள்ள] ரூபமாக வர்ணித்திருக்கிறார். வீணை, கிளி என்றிப்படி அந்த ஹஸ்தங்களில் வைத்துக் கொள்ளாமல் வரம், அபயம் காட்டும் ரூபமாகச் சொல்லியிருக்கிறார்.
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

கேஶப்ரபாபடல நீல விதானஜாலே
காமாக்ஷி குண்டலமணிச்சவி தீபஶோபே |
ஶங்கே கடாக்ஷருசிரங்கதலே க்ருபாக்யா
ஶைலூஷிகா நடதி ஶங்கரவல்லபே தே ||23||

சங்கரபத்நியான ஹே காமாக்ஷி ! உனது கிருபையாகிற நடிகையானவள் உனது கேசத்தின் காந்திப்படலமாகிற கருங்கூரையைக் கொண்டதும், உனது காது குண்டலமணியின் காந்தியாகிற தீபத்தினால் விளங்குவதுமான உனது கடாக்ஷமாகிற நாடகமேடையில் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறாள்.....

அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
வைகாசி விசாகம் 12.06.2022

வைகாசி விசாகம் பற்றிய புராண கதை.

பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன. அதனைக் கண்ட முனிவர், "நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.

தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் அந்தக் குழந்தைகள். அதனால் மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர்.

ஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர்.

பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான்.

விரதமிருப்பது எப்படி? வைகாசி விசாக விரதமுறை !!

வைகாசி விசாகத்தன்று விரமிருந்து முருகப்பெருமானை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் நம்மை வந்து சேரும். இப்பொழுது முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று எவ்வாறு விரதம் இருப்பது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி காண்போம்.

விரதமுறை :

விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளித்துமுடித்து நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், கனி வகைகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ, ஓம் முருகா என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

அதுமட்டுமின்றி, முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

பலன்கள் :

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகப்பெருமானை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர்தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.

வைகாசி விசாகத் திருநாளன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு விரதம் இருந்து ஆறுமுகப் பெருமானுக்கு பால் காவடி எடுத்து பாலாபிஷேகம் செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.

மேலும், இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமணம் கைகூடும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

வைகாசி விசாகம் அனைத்து முருகர் ஆலயங்களில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகர் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு இறையருளைப் பெற்றிடுங்கள்.
ravi said…
🌹🌺Mahakatmave .... Here comes the boy Govindan respectfully invited to the big tirumalai trust - simple story to explain
--------------------------------------------------- ------
ாலத்தில் At that time the Sikhs and Vaishnavas would clash fiercely. Just seeing a Vaishnava is enough! A sivan will go home after taking a bath somewhere.

🌺The time when Hinduism was so divided within two sects. Ramanujar wanted to turn his brother Govindan to Vaishnavism. Govindan considered his presence to be his greatest strength.

🌺Then at Thirumalai (Tirupati) the great Thirumalai Nambi was doing charity for Venkatachalapathy. Ramanujar wrote him a letter. *

🌺 In the letter, he had mentioned that you should send advice to my brother Govindan, who was engaged in red work in Kalahasti, to Srirangam.

🌺Went to meet Govinda relying on Greater Thirumalai. Govindar used to come to the pool every day to pick flowers. One day a great Vaishnava great man with Ventadi was teaching his disciples about various shastras in a pool.

🌺Govindan climbed a tree and heard them talking. The elder's speech impressed him greatly. Then he got down from the tree and walked over to where he was with the flowers.

🌺Govindana relied on the big tirumala even though he was very young in age. Mahatma ... respectfully invited me to come here. Govindan also politely approached him.

🌺 Fantastic conversation took place between the two. That conversation sounded like honey to those around. They spoke to glorify the deities Vishnu and Shiva.

🌺 Brother! To whom are you taking these flowers? Said the elder. Swami! I am snatching this to worship Shiva, said Govindan.

🌺Nambi: Flower worship to Shiva is not right. Is he not the one who separates desires and burns them and coats them white? He is unlikely to have a passion for these flowers.

🌺And he is a resident of the cemetery. Who is fond of Narayanan. Can these flowers be suitable for Tirumala with wedding qualities?

🌺Govindan: Great! I accept what you say. The Lord is the possessor of everything. We can only return devotion to Him unless He is the one who gives it to us.

🌺Sivan is the one who drank the poison and saved the world. We have him to thank. These flowers may not be necessary for that. Just hello is enough.

🌺It is enough to shed devotion flowers from within. However I think devotion grows through the ritual of flower sprinkling worship.

🌺Nambi: You are very right. Only scholars can make such an opinion. Your devotion is excellent. He was the one who came to suppress the arrogance of Lord Hari Vamana 'Than'. My opinion is that we should hand ourselves over to Him.

🌺 It's not the only one. In the Gita the Lord says that one should follow his own Dharma. Seen in that light, it is proper for you to worship Lord Hari. Govindan: Do not teach distinction between Tirumala and Shiva.

🌺The story of a devote🌺Nambi: You are very right. Only scholars can make such an opinion. Your devotion is excellent. He was the one who came to suppress the arrogance of Lord Hari Vamana 'Than'. My opinion is that we should hand ourselves over to Him.
ravi said…

🌺 It's not the only one. In the Gita the Lord says that one should follow his own Dharma. Seen in that light, it is proper for you to worship Lord Hari. Govindan: Do not teach distinction between Tirumala and Shiva.

🌺The story of a devotee named Kandakarnan is not unknown to them. Do not think of me as pious like him. Kandakarna worshiped only Shiva.

🌺Sivan intended to correct him and took Narayanan's body with him and presented him as Sankara Narayanan. Even then he worshiped only the part where Shiva was.

🌺 The fragrance of the incense he showed was blowing in such a way that it went to Shiva's side. For this Shiva punished him and made him live a miserable life in a village. Do you know what suffering is? He stayed in a Vaishnava village.

🌺The people there sang praises to Vishnu. Still untouched, he tied the bell (bell) around his ears and kept beating to keep the sound of Vishnu from falling.

🌺 "I do not think there is a need for such a dependent devotion," he concluded🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam 🌹🌺
ravi said…
🌹🌺 *மகாத்மாவே* ....
*இங்கு வாருங்கள் என சிறுவன் கோவிந்தனை மரியாதையுடன் அழைத்த பெரிய திருமலை நம்பி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹அக்காலத்தில் சைவர்கள், வைணவர்கள் கடுமையாக மோதிக் கொள்வார்கள். ஒரு வைணவனை பார்த்தாலே போதும்! ஒரு சைவன் எங்காவது குளித்து விட்டுத்தான் வீட்டுக்கு போவான்.

🌺அந்த அளவுக்கு இந்து மதத்திற்குள்ளேயே இரு பிரிவாக பிளவுபட்டிருந்த நேரம். ராமானுஜர் தன் தம்பி கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். கோவிந்தன் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார்.

🌺அப்போது திருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி என்பவர் வெங்கடாசலபதிக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார். அவருக்கு ராமானுஜர் கடிதம் எழுதினார்.*

🌺*கடிதத்தில், தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள், என குறிப்பிட்டிருந்தார்.

🌺பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் வைணவப் பெருமகனார் ஒருவர் குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ்திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார்.

🌺கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார்.

🌺வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை. மகாத்மாவே... இங்கு வாருங்கள் என மரியாதையுடன் அழைத்தார். கோவிந்தனும் பணிவுடன் அவர் அருகே சென்றார்.

🌺இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது அந்த உரையாடல். விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர்.

🌺தம்பி! இந்த பூக்களை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள்? என்றார் பெரியவர். சுவாமி! சிவனை வழிபடுவதற்காக இதனைப் பறித்துச் செல்கிறேன், என்றார் கோவிந்தன்.

🌺நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா? அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை.

🌺மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்?

🌺கோவிந்தன்: பெரியவரே! தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும்.

🌺சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்களும் தேவையில்லாமல் இருக்கலாம். வெறும் வணக்கம் மட்டுமே போதும்.

🌺உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன் பெரியவரே.

🌺நம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உன் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனின் 'தான்' என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடமே நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து.

🌺அது மட்டுமல்ல. கீதையில் பகவான் ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியை வழிபடுவதே முறையானது. கோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம்.

🌺கண்டாகர்ணன் என்ற பக்தனின் கதை தங்களுக்கு தெரியாததல்ல. அவனைப் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான்.

ravi said…
🌺சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான்.

🌺தான் காட்டிய தூபத்தின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். என்ன துன்பம் தெரியுமா? ஒரு வைணவக் கிராமத்தில் தங்க வைத்தார்.

🌺அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன் தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தானாம்.

🌺இப்படிப்பட்ட ஒரு சார்ந்த பக்தி தேவையில்லை எனக் கருதுகிறேன் என முடித்தார் பெரிய திருமலை நம்பி 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

Oldest Older 201 – 222 of 222

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை