ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1 ஸ்ரீ மாதா (1) பதிவு 4

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

ஸ்ரீ மாதா (1)

பதிவு 4  

.....பதிவு 4

ॐ श्रीमाता श्रीमहाराज्ञी श्रीमत्-सिंहासनेश्वरी ।  चिदग्नि-कुण्ड-सम्भूता देवकार्य-समुद्यता ॥ १॥उद्यद्भानु-सहस्राभा चतुर्बाहु-समन्विता । रागस्वरूप-पाशाढ्या क्रोधाकाराङ्कुशोज्ज्वला ॥ २॥

அரம்பமே அமர்க்களம் ...  *தாயே ! அம்மா*!! என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்  ஆரம்பிக்கின்றது ... 

அம்மா என்று  சொல்லிப்பாருங்கள் ..

தன் கஷ்டங்களை மறைத்துக்கொண்டு ( *அம்* என்று சொல்லும் போது உதடுகள் வாயை  மறைத்துக்கொள்கின்றன ...*மா* என்று சொல்லும் போது ஆனந்தம் பீறிட்டு வெளியே முத்துக்களாய் சிதருகிறது .. )

வெளியே அவள் தருவது அதைத்தான் .. 

உள்ளுக்குள்ளே தன்னை அழுத்திக்கொண்டு  வெளியே வெண்ணெயாய் உருகுபவள் தான் *அம்மா* .... 🌸🌸🌸🌸🌸

*ஓம் ஸ்ரீ மாதா*

தாயை பற்றி விவரித்து எழுத முடியுமா ... முடியும் என்றால் அம்பாளின் அழகையும் ஒருவரால் விவரிக்க முடியும் .. 

கடலின் ஆழத்தையும் வானத்தின் வெளி பரப்பையும் துல்லியமாய் விவரிக்க முடியும் ..

விண்மீன்கள் மொத்தம் எவ்வளவு என்றும் அவனால் அடித்து சொல்ல முடியும் ... 

சுருக்கமாக அவனால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை 

ஒரு கைப்பிடி மண்ணில் எவ்வளவு கற்கள் இருக்கின்றன என்று கணக்கும் போட முடியும் ... 👍👍

🌸கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா !!

🌸 அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 

🌸 அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே 

அம்மாவை வணங்காது உயர்வில்லையே 

🌸 தாய் இல்லாமல் நான் இல்லை தானே ஒருவரும் பிறப்பதில்லை

🌸 அன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை

*சமஸ்கிருதம்

मातृ माता , जननी , जन्मदा , जनयित्री , प्रसूः , जनिः , जनी , जनित्री , सावित्री , अक्का , अम्बा , अम्बिका , अम्बालिका

 *நேபாளி

आमा , माता , जननी , मातृ

 *வங்காளம்

জননী, মা , মাতা , জননী , জন্মদাত্রী , মাতৃকা

*அஸ்ஸாமீஸ்

মা , আই , মাতৃ , বৌটি , বৌ , জননী , জন্মদাত্রী

 *போடோயம்

आय , आइ , बिमा

 *இந்தி

माता, माँ , माई , अम्मा , अम्माँ , अम्मां , महतारी , मैया , जननी , जन्मदात्री , अम्मीं , मादर , मातारी , मातृ , प्रसू , मातृका , वरारणि , माया , वालिदा , शिफा , अल्ला , धात्री , प्रजायिनी

*மராத்தி

आई, आई , माय , माऊली , माउली , मातोश्री , मातुश्री , जननी , जन्मदात्री , माता

*கொங்கனியம்

आवय , मांय , जननी , माता

 *பஞ்சாபி

ਮੰਮੀ, ਮਾਤਾ , ਮਾਂ , ਮਾਈ , ਅੰਮੀ , ਅੱਮਾ , ਮਾਤ , ਜਨਨੀ , ਬੀਬੀ

 *குஜராத்தி

બા, માતા , માં , મા , જનની , જનેતા , અંબા , મૈયા , અમ્મા , જન્મદાત્રી , અમ્મી , માદર , માતારી , માતૃ , માતૃકા , માયા , ધાત્રી , ધાત્રી , શિફા

*ஒடியா* (ஒடியம்)

ମାତା, ମା, ଜନନୀ, ଜନ୍ମଦାତ୍ରୀ, ବୋଉ

 *கன்னடம்

ಅಮ್ಮ*

தெலுங்கு

అమ్మ, తల్లి, మాతా, జనని , మాతృమూర్తి , మాత, మాతృశ్రీ, మాతృదేవత.

 *மலையாளம்

അമ്മ, മാതാവു , ജനയിത്രീ, ജനനി, ജനിത്രി, പ്രസു, തായ്‌, അംബ, അംബായ, അംബിക, തള്ള

 *காஷ்மிரி

موج

 *உருது

ماں،والدہ،مائی،اماں،مادر،ام

ஒரே அர்த்தம் ...எல்லா மொழிகளிலும்

கருணை ... அன்பு .. தியாகம் , 👌👌👌💐💐💐💐💐

எதற்கும் ஒரு மூலம் வேண்டும் .. 

செடி வளர விதை வேண்டும் என்பதைப்போல்.... ஆதியும் அந்தமும் இல்லாதவனுக்கு மூலம் உண்டோ ?? 

அவனையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டுமே .... யார் அது ? 🤔

பட்டரின் பாடல் ஒன்று .... 

தவளே ... இவள் எங்கள் சங்கரனாருக்கு மனை மங்கலமாம்... அவளே அவர்க்கு அன்னையும் ஆயினள்.... ... 

முதல் மூவருக்கும் அம்மே என்கிறார் இன்னொரு பாடலில் ... 

பிரம்மன் முதலாகிய தேவர்களை பெற்ற அம்மே என்கிறார் இன்னொரு பாடலில் ... 

மூலம் என்பதே தாய் தான் அவள் மூலமாகத்தான் உயிர்கள் வெளி வருகின்றன .. 

பத்து மாதம் சுமப்பவள் 

நம் ஒரு பிறவி தாய் ..  அண்ட சராசரங்களை  என்றும் தன் கருப்பையில் சுமக்கிறாள் ... 

அவள் தானே தன் பணிக்குடத்தை உடைத்து ஒவ்வொரு உயிராக உலகில் சுழல விடுகிறாள் .. 

இந்த உலக மாதாவை அம்மா என்றே அழைத்து உருகுபவர் தாயர் இன்றி மங்குவர் அதாவது இன்னொரு தாயின் வயிற்றில் பிறக்க மாட்டார்கள் ... 

ஓம் ஸ்ரீ மாதா ... முற்றும் துறந்த சங்கரர் தாயின் உடலை மடியில் போட்டுக்கொண்டு ஒரு சிறு குழந்தை போல் கதறி அழிகிறார் ... 

அவர் தண்டம் தண்டமாய் அங்கிருக்க பந்தம் அறுபடாமல் வால் இழந்த பட்டம் போல் அங்கே பறந்தது 

கண்கள் குளமாக அவர் விம்மி பாடிய மாத்ருகா பஞ்சகம்

1. ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா

நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I

ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :

தாதும் நிஷ்க்ருதிமுந்நதோபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, 

வாய்க்கு ருசி இல்லாதிருத்தல்,

உடம்பு இளைத்தல், 

ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! 

அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல? 

அந்த தாய்க்கு நமஸ்காரம்!😰😰😰

2. குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா

யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I

குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்

ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே!  ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே 

அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! 

உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்.

3. ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா

ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I

ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:

அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. 

மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! 

உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. 

காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!😰😰😰

4. முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி

ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I

இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:

ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா ! 

என் கண் அல்லவா ! 

என் ராஜா, 

என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! 

அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !😰😰

5. . அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்

ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I

க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -

த்யஹோ ஜநந்யை ரசிதோயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் 'அம்மா' அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! 

இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்....

தாயைப்போல் ஒரு தெய்வமும் இல்லை .. அதனால் தால் அவளே எல்லோரும் விரும்பும் ஸ்ரீ மாதா எனும் முதல் திருநாமத்தைக் கொண்டவளாக விளங்குகிறாள்      💐💐💐

                                    👍👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌

       

Comments

ravi said…
அபிராமி அந்தாதி
ravi said…
உள்ளடக்கம்
Abirami Anthathi Lyrics in Tamil
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி
கணபதி காப்பு

1. ஞானமும் நல்வித்தையும் பெற
2. பிரிந்தவர் ஒன்று சேர
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
4. உயர் பதவிகளை அடைய
5. மனக்கவலை தீர
6. மந்திர சித்தி பெற
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
9. அனைத்தும் வசமாக
10. மோட்ச சாதனம் பெற
ravi said…
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
12. நெஞ்சம் தியானத்தில் நிலைபெற
13. வைராக்கிய நிலை எய்த
14. தலைமை பெற
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
18. மரண பயம் நீங்க
19. பேரின்ப நிலையடைய
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
ravi said…
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
22. இனிப் பிறவா நெறி அடைய
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
24. நோய்கள் விலக
25. நினைத்த காரியம் நிறைவேற
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
27. மனநோய் அகல
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
ravi said…
31. மறுமையில் இன்பம் உண்டாக
32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
35. திருமணம் நிறைவேற
36. பழைய வினைகள் வலிமை பெற
37. நவமணிகளைப் பெற
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
40. பூர்வ புண்ணியம் பலன்தர
ravi said…
41. நல்லடியார் நட்புப் பெற
42. உலகினை வசப்படுத்த
43. தீமைகள் ஒழிய
44. பேதபுத்தி நீங்க
45. உலகோர் பழியிலிருந்து விடுபட
46. நல்நடத்தையோடு வாழ
47. யோகநிலை அடைய
48. உடல் பற்று நீங்க
49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
50. அம்பிகையை நேரில் காண
ravi said…
51. மோகம் நீங்க
52. இம்மையில் பெருஞ்செல்வம் அடைய
53. பொய்யுணர்வு நீங்க
54. கடன் தொல்லைகள் தீர
55. விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த
56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
57. வறுமை ஒழிய
58. மனஅமைதி பெற
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
60. மெய்யுணர்வு பெற
ravi said…
61. மாயையை வெல்ல
62. எத்தகைய அச்சமும் அகல
63. அறிவு தெளிவோடு இருக்க
64. பக்தி பெருக
65. ஆண்மகப்பேறு அடைய
66. கவிஞராக
67. பகைவர்கள் அழிய
68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
69. சகல சௌபாக்கியங்களும் அடைய
70. நுண் கலைகளில் சித்தி பெற
ravi said…
71. மனக்குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெற
72. பிறவிப் பிணி தீர
73. பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாக
74. தொழிலில் மேன்மை அடைய
75. விதியை வெல்ல
76. தனக்கு உரிமையானதைப் பெற
77. பகை அச்சம் நீங்க
78. சகல செல்வங்களையும் அடைய
79. கட்டுகளில் இருந்து விடுபட
80. நிலையான மனமகிழ்ச்சி நிலைத்திட
ravi said…
81. நன்னடத்தை உண்டாக
82. மன ஒருமைப்பாடு அடைய
83. ஏவலர் பலர் உண்டாக
84. தர்ம சங்கடங்கள் நீங்க
85. துன்பங்கள் நீங்க
86. ஆயுத பயம் நீங்க
87. செயற்கரிய செய்து புகழ் பெற
88. எப்போதும் அம்பிகை அருள் பெற
89. யோக சித்தி பெற
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
ravi said…
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற
92. மனநிலை பக்குவமடைய
93. உள்ளத்தில் ஒளி உண்டாக
94. மனநிலை தூய்மையாக
95. தூய மனநிலை பெற
96. எங்கும் தலைமையும் புகழும் பெற
97. புகழும் அறமும் வளர
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
99. அருள் உணர்வு வளர
100. அம்பிகையை மனத்தில் காண
101. நூற்பயன்
ravi said…
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே
ravi said…
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே!

மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே!

ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி

எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக👍
ravi said…
1.
. ஞானமும் நல்வித்தையும் பெற
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.
ravi said…
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும்.

அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.
ravi said…
பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
ravi said…
அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள்.

வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள்.

அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
ravi said…
குடும்பக் கவலையிலிருந்து குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே.
ravi said…
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை.

மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது.

இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன்.

எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.
ravi said…
உயர் பதவிகளை அடைய

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே
ravi said…
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே!

தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.
ravi said…
மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
ravi said…
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே!

மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே!

மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்)

நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி!

நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.
ravi said…
மந்திர சித்தி பெற

சென்னியது உன்பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே.
ravi said…
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே!

என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே!

என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே!

செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே

மறவாது தொழும் அடியார்களையே!

நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!
ravi said…
மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே!

தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!

ravi said…
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி.

என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள்.

அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள்

(அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள்.

தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள்.

அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.
ravi said…
அனைத்தும் வசமாக

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்துஎன் முன்நிற்கவே.
ravi said…
அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும்.

அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது.

இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.
ravi said…
மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதுஉன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

ravi said…
அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே!

அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே!

உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன்.

நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்
ravi said…
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வானந்த மான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
ravi said…
12. நெஞ்சம் தியானத்தில் நிலைபெற

கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
ravi said…
என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
ravi said…
13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!
ravi said…
உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்
ravi said…
14. தலைமை பெற

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.
ravi said…
ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
ravi said…
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக் கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.
ravi said…
அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!
ravi said…
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்தொளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே
ravi said…
கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!
ravi said…
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக வன்றோ வாமபாகத்தை வவ்வியதே.
ravi said…
அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.
ravi said…
18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத்திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே.
ravi said…
அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்
ravi said…
19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
ravi said…
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.
ravi said…
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
ravi said…
என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!
ravi said…
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை! செங்கல சம்முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கைச்! சகல கலாமயில்! தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும்பெண் கொடியே.
ravi said…
அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே!

வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே!

சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே!

பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
ravi said…
22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே.
ravi said…
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே!

பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.
ravi said…
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது; அன்பர் கூட்டந் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
ravi said…
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன்.

மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே!

எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே!

ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!
ravi said…
24. நோய்கள் விலக

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
ravi said…
அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே!

தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.
ravi said…
25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
ravi said…
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
ravi said…
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
ravi said…
பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.
ravi said…
27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
ravi said…
அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!
ravi said…
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே
ravi said…
தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.
ravi said…
29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே
ravi said…
அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?
ravi said…
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டது அல்லவென்கை
நன்றே உனக்கு இனிநான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பலஉருவே! அருவே! என் உமையவளே!
ravi said…
அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!
ravi said…
6வது அத்தியாயம் ஸ்லோகங்களில் இருந்து, தியான யோகம் மற்றும் பக்தி யோகம் ஆகிய இரண்டிலும் பொதுவாக பின்பற்றவேண்டிய சில நடைமுறைகளை குறிப்பிடவும்? / From 6th chapter slokas mention the practices that should be followed which are common for both dhyana yoga and bhakti yoga?
ravi said…
தியான யோகம் மிகவும் கடுமையானது ... இயமம், நியமம் , ஆசனம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தாரணை, தியானம், சமாதி இப்படி பல படிகளை கடக்க வேண்டும் ... பக்தி யோகம் கடினம் அல்ல ஹரே கிரிஷ்ண ஹரே ராம் என்றால் போதும் பக்தியுடன் பற்றில்லாமல்
ravi said…
Feedback

2- புலன் திருப்திக்கான ஆசையை கைவிட வேண்டும்.
4- எல்லா ஜட ஆசைகளையும் கைவிட வேண்டும்,
5, 6 - மனதை வெல்வது முக்கியம்,
7- மகிழ்ச்சி மற்றும் துன்பத்தை பொறுத்துக்கொள், வெப்பம் மற்றும் குளிர், மானம் மற்றும் அவமானம் அனைத்தும் ஒரே மாதிரியானவை.
8- அறிவு மற்றும் உணர்தல் அவசியம்.
9- ஒவ்வொரு உயிரையும் சமமான எண்ணத்துடன் பார்க்க வேண்டும்.
16- அதிகமாக சாப்பிடவோ அல்லது குறைவாக சாப்பிடவோ, அதிகமாக தூங்கவோ அல்லது குறைவாக தூங்கவோ கூடாது.
17- உண்ணுதல், உறங்குதல், பொழுதுபோக்குதல் மற்றும் வேலை செய்யும் பழக்கங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அனைத்து பொருள் வலிகளையும் குறைக்கும்.
20-23மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் கூட அசைக்கப்படாமல் உறுதியாக இருக்க வேண்டும்.
ravi said…
2-must renounce the desire for sense gratification.
4-mustt renounce all material desires,
5,6 - practice control of mind
7- tolerate happiness and distress, heat and cold, honor and dishonor since all are same.
8 - acquiring knowledge and realization is required
9 - every living being must be seen all with an equal mind
16 - should neither eats too much or eats too little, sleeps too much or does not sleep enough
17- By regulating his habits of eating, sleeping, recreation and work will mitigate all material pains
20-23 - must be firm so as is never shaken, even in the midst of greatest difficulty.
ravi said…
ஏன் பிராணாயாமம் மற்றும் ஆசனம் ஆகிய இரண்டை மட்டுமே பயிற்சி செய்வது தியானயோகத்தின் முடிவான பலனைத் தராது? / Why practicing Pranayama and Asana alone will not give the net result of Dhyana Yoga?
ravi said…
இவை இரண்டுமே உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஆனால் இதில் பக்தி யோகம் கிடைக்காது . ஆத்மாவை தூய நிலையில் வைத்திருக்க உதவாது ... பக்தி மார்க்கத்தில் செல்ல வேண்டும் என்றால் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கு பக்தி யோகம் ஒன்றே உதவி செய்யும்
ravi said…
Feedback
"அஷ்டாங்க யோகத்தின் 8 நிலைகளில், ஆசனம் மற்றும் பிராணாயாமம் முறையே 3 மற்றும் 4வது நிலையில் தான் உள்ளது. ஆசனம் என்றால் அமரும் விதங்கள், பிராணாயாமம் என்றால் பிராணனை கட்டுப்பாடுத்துவதுஆகும்.

பிராணாயாமம் மற்றும் ஆசனம் ஸ்தூல மற்றும் சூட்சும உடலைத் தயார் செய்யும் பயிற்சியாகும். யோகம் என்பது ஆன்மாவைப் பகவானுடன் இணைப்பதாகும். பிரணாயாமம் மற்றும் ஆசனப் பயிற்சிகள் நேரிடையாக ஆத்மாவுடன் சம்பந்தபட்டவை அல்ல.

ஆகவே, இவ்விரண்டையும் பயிற்சி செய்வது உடல் ரீதியான பௌதிக பலன்களை அளிக்குமே தவிர, ஆத்மரீதியாக ஆன்மீக பலன்களான யோகத்தையோ முக்தியையோ அளிக்க வல்லவை அல்ல
ravi said…
Of the 8 stages of Ashtanga Yoga, Asana and Pranayama are in the 3rd and 4th stages respectively. Asana means sitting postures and pranayama means controlling prana.

Pranayama and asana are exercises that train the physical and subtle body, Yoga means linking the soul with the Lord. Pranayama and asana exercises are not directly related to the soul.

Hence , practicing these two is only capable of giving physical or physical benefits, but not spiritual benefits like yoga or salvation.
ravi said…

10. பக்தி யோகத்தில் யார் ஈடுபடலாம்? / Who is qualified to engage in Bhakthi Yoga?
*
1/1
a. குழந்தைகள், வயதானவர்கள் / Children, elderly
b. ஏழைகள், வேலைக்கு செல்பவர்கள் / Poor, those who go to work
c. படித்தவர்கள், தவறிழைக்காதவர்கள் / Those who are educated and do not make mistakes
d. உலகிலுள்ள அனைவரும் / Everyone in the world
ravi said…
Feedback
பக்தியை அடைய அல்லது இறைவனுக்கு தூய பக்தி சேவையை அடைய, ஒருவர் வேறு எதையும் விரும்பாத நிலைக்கு வர வேண்டும்.
மத்தோ ’பை அனந்தத் பரதஹ் பரஸ்மாத்
ஸ்வர்গாபவர்গாதிபதேர் ந கிஞ்சித்
யேஷாம் கிம் உ ஸ்யாத் இதரேண தேஷாம்
அகிஞ்சனானம் மயி பக்தி-பஜம்
[ரிஷபதேவர் கூறினார்:] “பகவான்ம முழு செல்வமும், சர்வ வல்லமையும் உடையவன், பிரம்மா மற்றும் தேவலோகங்களின் அரசனான இந்திரனை விட உயர்ந்தவன். பரலோக ராஜ்ஜியத்திலும் விடுதலையின் மூலமும் பெறப்பட்ட அனைத்து மகிழ்ச்சியையும் அளிப்பவன் நான். இருந்தபோதிலும், பிராமணர்கள் என்னிடம் பௌதிக சுகங்களைத் தேடுவதில்லை. அவர்கள் மிகவும் தூய்மையானவர்கள் மற்றும் எதையும் சொந்தமாக வைத்திருக்க விரும்பவில்லை. அவர்கள் வெறுமனே என் பக்தி சேவையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வேறு யாரிடமாவது பொருள் பலன்களைக் கேட்பதன் அவசியம் என்ன?”
-ஸ்ரீமத் பாகவதம் 5.5.25

ravi said…
To attain bhakti, or pure devotional service to the Lord, one must come to the point of desiring nothing else.
matto ’py anantat paratah parasmat
svargapavargadhipater na kinchit
yesham kim u syad itarena tesham
akinchananam mayi bhakti-bhajam
[Lord Rshabhadeva said:] “I am fully opulent, almighty, and superior to Lord Brahma and Indra, the king of the heavenly planets. I am also the bestower of all happiness obtained in the heavenly kingdom and by liberation. Nonetheless, the brahmanas do not seek material comforts from Me. They are very pure and do not want to possess anything. They simply engage in My devotional service. What is the need of their asking for material benefits from anyone else?”
—Srimad-Bhagavatam 5.5.25
ravi said…
09. கீழ்க்கண்டவற்றில் எது சிறந்த யோகம்? / Which of the following is the best yoga?
*
1/1
a. கர்மயோகம் / Karma Yoga
b. தியானயோகம் / Dyana Yoga
c. பக்தி யோகம் / Bhakthi Yoga

d. ஞான யோகம் / Gnana Yoga
ravi said…
Feedback
ப. கீ. : 6.47
மேலும், எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்குத் திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும், எல்லோரையும் விட உய்ர்ந்தவனுமாவான். இதுவே, எனது அபிப்பிராயம்.

BG: 6.47
And of all yogīs, the one with great faith who always abides in Me, thinks of Me within himself and renders transcendental loving service to Me – he is the most intimately united with Me in yoga and is the highest of all. That is My opinion.
ravi said…
ஹரே கிருஷ்ணா பக்தர்களே!! 🙏🙏

உங்கள் descriptive பதில்களுக்கான Grading’s பின்வருமாறு;


நாள் 4 - B
நாள் 5 - A

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருள் என்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.


A- Very Good , B - Good , C - Ok

நன்றி
ஹரேகிருஷ்ணா
தமிழ் கீதை குழு
ravi said…
ஹரே கிருஷ்ணா பக்தர்களே!! 🙏🙏

உங்கள் descriptive பதில்களுக்கான Grading’s பின்வருமாறு;


நாள் 1 - B
நாள் 2 - B
நாள் 3 - A

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருள் என்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.


A- Very Good , B - Good , C - Ok

நன்றி
ஹரேகிருஷ்ணா
தமிழ் கீதை குழு
ravi said…
01. யோகா என்றால் என்ன? / What is Yoga?
*
1 point
a. மூச்சுப் பயிற்சி செய்வது / Doing breathing exercises
b. பகவானின் தொடர்பில் இருப்பது / Being in association with Bhagavan
c. உடற் பயிற்சி செய்வது / Doing physical exercise
d. கண்களை மூடிக்கொண்டு ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துவது / Closing the eyes and focusing on something
ravi said…
02. மனம் எப்போது நமது நண்பன் ஆகிறான்? / When does the mind become our Friend?
*
1 point
a. பகவான் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் பொழுது / When increasing faith on Bhagavan
b. நம்மைச் சார்ந்தவர்களைப் பொறுத்துப் போகும் பொழுது / / When tolerating to those who depend on us
c. சாஸ்திர விதிகளை உறுதியுடன் பின்பற்றும் பொழுது /When we strictly follow scriptures rules
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
ravi said…
3. அஷ்டாங்க யோகத்தின் இறுதி இலக்கு என்ன? / What is the ultimate goal of Ashtanga Yoga?
*
1 point
a. அஷ்டசித்தி பெறுவது / To get ashta siddhi
b. முக்தி அடைவது / To achieve liberation
c. மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது / To control others
d. வானில் மிதப்பது / To float in the sky
ravi said…
04. அஷ்டாங்க யோகப் பயிற்சிகடைசி நிலைகளை யார் செய்ய முடியாது? / Who cannot attain the final stages of Astanga yoga?
*
1 point
a. பிரம்மச்சாரி / Brahmachari
b. கிரஹஸ்தர் / Grishastha
c. வானபிரஸ்தர் / Vanaprastha
d. சந்நியாசி / Sanyasi
ravi said…
5. அஷ்டாங்க யோகப்பயிற்சி அர்ஜுனரால் ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை ?/Why was the practice of Ashtanga yoga not accepted by Arjuna ?
*
1 point
a. மனத் திருப்தி மட்டும் அளிக்கும்/ Satisfies only the mind
b. நீண்ட பயிற்சி காலம்/ Requires long training period
c. மனம் நிலையற்றதும், அமைதியற்றதும் ஆகும்/ Makes the mind unstable and restless
d. தகுதி வாய்ந்த குரு கிடைக்கவில்லை / Qualified Guru was not available
ravi said…
6. கிருஷ்ணர் விளக்கிய அஷ்டாங்க யோகம் குறித்து அர்ஜுனனின் பதில் என்ன? What was Arjuna’s response to Lord Krishna’s explanation of the Asthanga yoga system?
*
1 point
a. அர்ஜுனன் அதனை ஏற்றுக் கொண்டார்/ He accepts it readily
b. அர்ஜுனன், மனதை அடக்குவது, காற்றை அடக்குவதினும் கடினம் ஆகும் என்றார் / He says controlling the mind is more difficult than controlling the wind
c. அர்ஜுனன், அது குறித்து சிந்திக்க நேரம் வேண்டும் என்றார் / He needs time to think about it
d. அர்ஜுனன், அதை பயிற்சி செய்வது சுலபமாக இருப்பதால், ஆர்வமுடன் அதனை கற்க விரும்பினார் / He expresses eagerness to learn more about it and finds its practice easy
ravi said…
7. மனதைக் கட்டுப்படுத்த பகவான் கூறிய வழிமுறை யாது? / How has Lord Krishna instructed us to control our mind?
*
1 point
a. பயிற்சி மற்றும் பற்றின்மை / Training and detachment
b. அதிஷ்டம் மற்றும் ஆர்வம் / Luck and curiosity
c. ஆசீர்வாதம் மற்றும் விருப்பம் / Blessings and desire
d. கட்டுப்படுத்த தேவை இல்லை / No need to control
ravi said…
8. யார் நல்லோர் மற்றும் செல்வந்தர் குடும்பத்தில் பிறக்கின்றனர்? / Who is born into a righteous and rich family?
*
1 point
a. பக்தியை ஆரம்பத்தில் மேற்கொண்டு இடையில் விட்டவர் / One who practices bhakti at an early age
b. செல்வதைச் சேர்த்து வைத்தவர் / Has earned wealth
c. கடினமாக உழைத்தவர் / Has worked hard
d. பிறருக்கு உதவி செய்தவர் / Has helped others
ravi said…
🌹🌺' *தண்ணீர் அருந்தும் வழக்கம் குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை நினைவில் வைத்து எளிய தியானப் பயிற்சி செய்தால், " எளிதில் அவன் திருவடி அடையலாம் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹இன்றும் நம் வீட்டிற்கு யார் வந்தாலும்‌ தண்ணீர் அருந்த கொடுப்பது நம்
முன்னோர்கள்‌ வழக்கம் .

🌺புதிதாக வருபவர்‌ தெரிந்தவராக
இருந்தாலும்‌, தெரியாதவராக இருந்தாலும்‌ குடிக்க
தண்ணீர்‌ கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள்‌ பேசுவது
மற்றும்‌ அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பது
போன்ற நடைமுறை இருந்து வருகிறது .
ravi said…


🌺இவ்வாறு வருபவர்களுக்கு முதலில்‌ தண்ணீர்‌
கொடுப்பதற்கு மிகச்‌ சிறந்த காரணங்கள்‌ உள்ளது.

🌺தண்ணீருக்கு மனிதர்களின்‌ மனநிலையை மாற்றும்‌
அற்புதமான சக்தி இருக்கிறது. ஒரு மனிதனின்‌
கோப தாபத்தையும்‌, வெறுப்புணர்ச்சியையும்‌ மாற்றும்‌
ஆற்றல்‌ தண்ணீருக்கு உள்ளது.

🌺ஏதாவது சண்டை
சச்சரவு வரும்போது ஒருவரையொருவர்‌ ஏச்சுப்‌
பேச்சு நடத்தும்‌ போது அவர்களை விலக்க வருபவர்‌
“முதல்ல தண்ணி குடிப்பா அப்புறம்‌ பேசலாம்‌” என்று
கூறுவார்‌.
ravi said…
🌺சண்டையிடும்‌ நபர்‌ தண்ணீர்‌ குடித்ததும்‌
தனது பேச்சில்‌ ஒரு வித சாந்தம்‌ வெளிப்படும்‌.

🌺ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை 7.8 இல் நான் தண்ணீரின் சுவையாக இருக்கிறேன் என கூறுகிறார், இது தான் நாம் இன்றும் கடை பிடிக்கிறோம்


🌺🌹ரஸோ ‘ஹம் அப்ஸு கவுந்தேய
பிரபாஸ்மி சாஷி-சூர்யயோঃ
பிரணவ் சர்வ-வேடிசு
சப்த கே பௌருஷஸ் நৃஷு🌹🌺

🌺🌹ஓ குந்தியின் மகனே [அர்ஜுனா], நான் தண்ணீரின் சுவையாக இருக்கிறேன் , சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி, வேத மந்திரங்களில் ஓம் என்ற எழுத்து; நான் ஈதரில் ஒலி மற்றும் மனிதனில் திறனாக இருக்கிறேன்🌹🌺
ravi said…
🌺விரதம் கடைபிடிப்பவர்கள் வெறுமனே தண்ணீரைக் குடித்து, பகவத் கீதை 7.8 இல் தண்ணீர் அருந்தும் வழக்கம் குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை நினைவில் வைத்து எளிய தியானப் பயிற்சி செய்தால், " எளிதில் அவன் திருவடி அடையலாம்
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
*‌🌺சிவாயநம🌺*

🌺எம்பெருமான் சிவபெருமானைப் பற்றி பேசா நாளெல்லாம் பிறவா நாளே🌺

*🌺திருநீற்றின் பெருமை*

🌺எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே🌺

🌺இன்று திருநீற்றின் பெருமையை சொல்லும் பாடல் 🌺 வெண்ணீறு 🌺 திருமுறை 12 பதிகம் 28 பாடல் 735🌺

🌺என்றவர் உரைத்த போதில்
எழில்கொள்பூம் புகலி வேந்தர்
ஒன்றும்நீர் அஞ்ச வேண்டா
உணர்விலா அமணர் தம்மை
இன்றுநீர் உவகை எய்த
யாவருங் காண வாதில்
வென்றுமீ னவனை வெண்ணீ
றணிவிப்பன் விதியால் என்றார்🌺

*பொழிப்புரை :*

*🌺என இங்ஙனம் அவர்கள் உரைத்தபோது, அழகு பொருந்திய பொலிவுமிக்க தலைவரான பிள்ளையார், "நீவிர் ஒன்றற்கும் அஞ்சவேண்டா! உணர்வற்ற சமணர்களை இன்று நீவிர் மகிழ்ச்சியடையுமாறு எல்லோரும் காணுமாறு வென்று, பாண்டியனைத் திருநீறு அணியும்படி இறைவன் ஆணையினால் செய்வன்!" என மொழிந்தருளினார்.*

*🌺திருச்சிற்றம்பலம் 🌺*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

சங்கராம்ருதம் - 146

திரு.எஸ்.பாண்டுரங்கன் எனும் ஸ்ரீ பெரியவா பக்தரின் அனுபவம் இது (நன்றி : மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்)
இவர் 1972 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானத்தின் நிர்வாக அறங்காவலராக இருந்தவர்.
ravi said…
அப்போது திரு. வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் வேலூரில் அவர் நடத்தும் தவணை முறைக்கிளை அலுவலகத்தைத் திறந்துவிட்டு காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபெரியவாளைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை இவரிடம் கூறினார்.
திரு. பாண்டுரங்கனும் அவ்வாறே ஸ்ரீமடத்தில் கேட்டு ஸ்ரீ பெரியவா தேனம்பாக்கத்தில் தரிசனம் அருள்வதாக தெரிந்துக் கொண்டார்.
அன்றைய தினம் ஸ்ரீபெரியவா மெளனம். பாரத ஜனாதிபதியாக இருந்த மாண்புமிகு ஸ்ரீ வி.வி.கிரி அவர்கள் அன்றைய தினம் காலை பத்து மணிக்கு ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்துச் சென்று விட்டார். இவர்கள் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்கச் சென்றனர். தேனம்பாக்கத்திற்கு திரு. வி.ஜி.பி., அவர் மனைவி, ஒரு புகைப்படக்காரர் என ஐவர் சென்றனர்.
ravi said…
திரு. பன்னீர்தாஸ் புகைப்படம் எடுப்பவரிடம் “மஹா பெரியவா அவர்கள் என்னை ஆசிர்வாதம் செய்யும் சமயம் பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும்” என்று கூற அவர்களை அழைத்துச் சென்ற பாண்டுரங்கன் “எதற்கும் ஸ்ரீ பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொள்வது நல்லது” என்று தன் அபிப்ராயத்தைக் கூறினார்.

“பெரியவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கமாட்டார்கள். நாம் தான் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று திரு. பன்னீர்தாஸ் இவரை சமாதானம் செய்துவிட்டார்.
ஸ்ரீ பெரியவா வரச்சொல்லி உத்தரவாக இவர்கள் ஒரு ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டார்கள். ஸ்ரீ பெரியவா “எதற்கு வந்தீர்கள்” எனக் கேட்க, பன்னீர்தாஸ் “நான் பத்தாயிரம் வீடு கட்டி தவணை முறையில் கொடுக்க ஒரு திட்டம் ஆரம்பித்துள்ளேன். அதற்கு ஸ்ரீ மஹாபெரியவாளுடைய ஆசிர்வாதம் வேண்டும்” என்றார்.
“இதற்கு எத்தனை பணம் தேவை” என்றார் ஸ்ரீ பெரியவா.
வி.ஜி.பி ஒரு உத்தேச மதிப்பைக் கூறினார்.
“இதற்கு எப்படி உனக்கு பணம் கிடைத்தது” கேட்டார் ஸ்ரீ பெரியவா.
ravi said…
அதற்கு வி.ஜி.பி. “நான் பத்து ஆண்டுகளுக்கு முன் டீ கடையில் வேலை செய்து வந்தேன். சில ஆண்டுகள் கழித்து தவணைமுறைத் திட்டம் ஒன்று ஆரம்பித்தேன். அது வளர்ந்து பல கிளைகள் உருவாகியுள்ளன. எல்லாம் மக்கள் பணம்தான். அதுபோலத்தான் தவணை முறை வீடு கட்டும் திட்டம். தவணை முறையில் பணம் ரோலிங் ஆவது சௌகர்யமாக உள்ளது. இதற்கு பெரிய முதலீடு தேவையில்லை. நம்பிக்கை, நாணயம், தான் எங்கள் முதலீடு” என்றார்.
ravi said…
ஸ்ரீ பெரியவா, “நல்ல திட்டம்தான். வீடு இல்லாத ஏழை குடும்பத்திற்கு உதவியாகவும், நேர்மையாகவும், சேவை செய்யுங்கள்” என்று ஆசிர்வதித்தார்.
ravi said…
அதற்குள் இவர்களுடன் சென்ற கேமராமேன் சுமார் இருபது புகைப்படங்களை எடுத்துவிட்டிருந்தார். ஸ்ரீ பெரியவாளிடம் ஆசி பெற்றபின் “நான் போய் நாலு நாட்களில் இன்று எடுத்த போட்டோ பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்று பன்னீர்தாஸ் அவர்கள் பாண்டுரங்கனிடம் கூறிச் சென்றார்.
அவர் சென்னைப் போய் ஐந்தாம்நாள் பாண்டுரங்கன் அவர்களுக்கு பன்னீர்தாஸிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
“கண்கண்ட தெய்வம் என்றால் காஞ்சி பெரியவாள் தான். விலை உயர்ந்த கேமராவினால் அன்றைய தினம் எடுக்கப்பட்ட போட்டோ படம் ஒன்று கூடப் பதிவாகவில்லை. எல்லாப் பிரதிகளும் கறுப்பாக உள்ளன. நீங்கள் அன்று பெரியவாளிடம் உத்தரவு பெற வேண்டும் என்று சொன்னதை நான் உதாசீனம் செய்தேன். அவர் காட்சிதரும் கடவுள் என்பதை பூர்ணமாக உணர செய்துவிட்டார். அதனால் அப்பேற்பட்ட தெய்வத்திடம் ஆசி பெற்றதே என் பெரும் பாக்யமாகும். அது ஒன்றே எனக்குப் போதும்” என்று எழுதியிருந்தார்.

இப்பேற்பட்ட தெய்வத்தின் அருளால் தான் 1972 முதல் 1975 வரை ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானத்தின் அறங்காவலராக எந்த குற்றம் குறை இல்லாமல் பணிபுரிந்ததாக திரு.பாண்டுரங்கன் அவர்கள் மனப்பூர்வமாக உணர்வதாகக் கூறுகிறார்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. .
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.
ravi said…

Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma.
It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️
ravi said…
ராமனும் தாடகியும்...*

*தாடகி சொன்ன கீதை*
ravi said…
ராமா பசி கொண்டேன் .. புசித்தேன் மனம் குளிர ...

வசித்த ரிஷிகள் என் வாய்க்குள்ளே யாகம் செய்யக்கண்டேன் ...

எரியும் நெருப்பில் நெய் போல் உனைக் கண்டேன் ...

என் ராமா ஏன் இந்த தயக்கம் ..

பெண் அல்ல நான் ..
பேயின் மறு உருவம் ..

தாயல்ல நான் .. தீயின் மறு உருவம் ...

தயங்காதே நான் பெண் என்றே ...

உன் அம்பின் ருசி கண்டதில்லை ...

உன் நாமத்தின் ருசி போல் இருக்குமோ ?

ராமா , பாவம் செய்தவரையும் உன் அம்பு வைகுண்டம் அனுப்புமாமே ..

எனக்கும் கிட்டுமோ உயர் பதவி ராமா ?

சிரித்தான் ராமன் ...

பாவம் செய்தாய் பழி சுமந்தாய் ..

பார்ப்பவர் கதி முடித்தாய் ...

ஆனாலும் நீ ஒரு பெண் ...

*அன்னையர் தினம்* இன்று அஞ்சுகிறேன் உனைக்கொல்ல...

பெண் என்றாய் ராமா ...

*காரணமற்ற கருணை பொழியும் காஞ்சி மகானோ நான் ...*

இல்லை ...

காப்பதற்கு கொண்ட ராம அவதாரமோ நான்

இல்லை ....

தாய்மை இல்லை என்னிடம் ...

வாய்மை தூய்மை இல்லை ...

பெண் என்றால் அதோ அரங்கம் சென்று பார் ..

தாயார் கண்களை ... காரூண்யம் காவேரி போல் பாய்வதை ..

மோகினி வடிவம் கொண்ட அரங்கனுக்கும் இல்லை இக்கருணை...

மீண்டும் பிறந்தால் யசோதை என பெயர் கொடுப்பாய் எனக்கே ..

தவம் செய்யும் ரிஷிகளும் தேவரும் கேட்க வேண்டும் என்னை ...

என்ன தவம் செய்தாய் யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா வென்றே அழைக்க ...

தாயே சரணம் என்றே அவள் உயிர் பசி தீர்த்தான் ராமன் ...

அம்பு சென்றே அமர்ந்தது அவள் அடி வயிற்றில் ...
கால் விரல் சூப்பும் கண்ணனாய் ... 🙌🙌
ravi said…
105.ஸ்தோத்ரமேதத் ப்ரஜபதஸ்தவ த்ரிபுரஸுந்தரி
அனுத்க்ஷ்ய பயாத்தூரம் ம்ருத்யுர்தாவதி பஞ்சம் :


ஹே த்ரிபுரசுந்தரி!

உனது இந்த ஸ்தோத்ரத்தை ஜபிப்பவரை பயத்தினால் போலும் கண்ணெடுத்துப் பாராமல்

யமன் அம்பரந்து வெகுதூரம் ஒடுகிறான்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 217* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*70 வது திருநாமம்*
ravi said…
*70* *किरिचक्ररथारूढदण्डनाथापुरस्कृता - கிரிசக்ர - ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா | -*👍
ravi said…
இத்தேவி வராக முகம் கொண்டதேன்?

‘‘மானமில்லாப் பன்றிபோல்
உபமானமுமில்லை என்பது ஆன்றோர் வாக்கு”

தேவர்களுக்கு அதிபதியான அதிரூப சௌந்தர்யம் கொண்ட திருமால் கடலில் புதைந்த உலகை மேலே கொண்டு வர மானமில்லாப் பன்றி வடிவெடுத்ததில் அவனுக்கு நிகருண்டோ? என வியக்கின்றனர் சான்றோர்.

பன்றி மானமில்லாததாகக் கருதப்படுவதாயினும் அதனிடம் இருந்து உயர்ந்த ஆன்ம குணம் நமக்குப் பாடமாக வெளிப்படுகிறது

இல்லையெனில், அவமானமும் இல்லையன்றோ?

மான அவமானம் எனும் இரண்டிலும் பாதிக்கப்படாமல் இருப்பதே ஞானசாதனை.

சுகத்தையே வேண்டாம் என்பவருக்குத் துக்கம் ஒன்றுமே செய்யாதல்லவா?

தன்மானம், தன்மதிப்பு, தற்பெருமை எனத் தன்னையே பாராட்டிக் கொண்டிருப்பவர்கள்தான் தனக்குச் சிறு அவமதிப்பு நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளாமல் துவண்டு போவார்கள்.

புகழ்ச்சிக்கு மகிழ்ந்தும், இகழ்ச்சிக்கு அஞ்சியும் வாழ்வது ஞானத்திற்குப் புறம்பானது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பன்றியின் முகத்தைக் கொண்டுள்ளாள் . 🐷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 217* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 54👍👍👍

*மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்* 👀👀👀

தேவி பிரத்யக்ஷம், ஸகல லோக வச்யம்🙌
ravi said…
அபிராமி பட்டர் மூன்று நயனங்கள் கொண்ட அன்னையை வானலாவ புகழ்கிறார் ...

அம்மா நீயோ அண்ட சராசரங்களை பெற்று எடுத்தாய் ..

அகிலாண்டமும் நின் ஒளியாகி உன் ஒளிர்திருமேனையை உள்ளுதொரும் களியாகி அந்தகரணங்கள் விம்மி கரை புரண்டு வெளியாகி விடில் எங்கனே மறப்பேன் நின் விரகினையே ...

மூன்று கண்கள் கொண்டவளே , முத்துப்பல் அழகியே மூவரையும் யாவரையும் பெற்றவளே ...

உன் அருள் இன்றி உயிர் வாழுமோ ...

சக்தி இன்றி சிவம் தான் தழைக்குமோ ... என்கிறார் .. காரணமற்ற அன்பை பொழியும் தாயவள் ... நம்மை பார்த்துக்கொள்ள ஒரு கண் போதாது என்று மூன்று கண்களை பெற்றவள் ... 👀👀👁️
ravi said…
108.த்வாமேவாஹம்ஸ்தௌ நித்யம் ப்ரணௌ
ஸ்ரீவித்யேசாம் வச் ஸஞ்சிந்தயா
அத்யாஸ்தே யா விச்வமாதா விராஜோ
ஹ்ருத்புண்டரீகம் விரஜம் விசுத்தம்
விராட்புருஷனின் தூயதாய ஹ்ருதயத்
ravi said…
தாமரையில் விச்வ மாதாவான அம்பிகை ற்றிருக்கிறாள். அத்தகைய தாயான உன்னைத்தான் ஸ்தோத்ரம் செய்கிறேன். நிதமும் வணங்குகிறேன். வார்த்தைகளில் பேசுகிறேன். மனதில் எண்ணுகிறேன்.
ravi said…
,
🪔
*ஓம் சிவாய நம*
*திருச்சிற்றம்பலம்*

முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய்
பவளக்கொடி அனைய சடையார் போலும்;
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்; இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்;
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன்
வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
*அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.*

930 அப்பன் நீ, *அம்மை நீ,* ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
ஊர்ந்த செல்வன் நீயே.



*அம்மையே!* அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

*பால் நினைந்து ஊட்டும் தாய்* இனும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

The Crown is


`காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
*பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை* தன்
பாதத் திறம் பாடி, ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

*திருச்சிற்றம்பலம்*
🪔
ravi said…
பூ நிலாய ஐந்துமாய்

புனற்கண் நின்ற நான்குமாய்

தீ நிலாய மூன்றுமாய்

சிறந்த கால் இரண்டுமாய்

மீ நிலாயது ஒன்றும்

ஆகி, வேறுவேறு தன்மையாய்

நீ நிலாய வண்ணம்

நின்னை யார் நினைக்கவல்லரே?

அடி பணிகிறோம் இனிய அன்னையர் தினத்தன்று அனைத்து கருணை உள்ளங்களுக்குமே 🙌
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 68*🐒🐒🐒
ravi said…
அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |

அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா ||

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |

ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா ||16🐒🐒🐒
ravi said…
*அஷ்ட சித்திகளும் நவநிதிகளும்*🐒
ravi said…
*அட்டமா சித்திகள் விளக்கம்*

*அணிமா* - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

*மகிமா* - மலையைப் போல் பெரிதாதல்.

*இலகிமா* - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

*கரிமா* - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

*பிராத்தி* - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

*பிராகாமியம்* - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்.
(கூடு விட்டுக் கூடு பாய்தல்)

*ஈசத்துவம்* - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

*வசித்துவம்* - அனைத்தையும் வசப்படுத்தல்.🙌🙌🙌
ravi said…
அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்

அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,

திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,

சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,

பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை

பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை

வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.
ravi said…
*நவ நிதிகள் ... அதிபதி குபேரன்*
ravi said…
சங்கம்,
பதுமம்,
மகாபதுமம்,
மகரம்,
கச்சபம்,
முகுந்தம்,
குந்தம்,
நீலம்,
வரம்

ஆகியனவே நவநிதிகள் ஆகும்.

குபேர சம்பத்துக்களாக அவனருகில் இந்த நவநிதிகளும் திகழ்வதாகச் சொல்லப்படுகின்றன
ravi said…
இவை அனைத்தையும் சீதை அனுமனுக்கு வழங்கினார் ... அனுமனோ அவனை வழிபடும் நம் அனைவருக்கும் தந்து கொண்டே இருக்கிறார் ..🐒🐒🐒
Kousakya said…
On the correct day, very right stanza has come... super super...👌👌🙏🙏👍👍🙇‍♀️🙇‍♀️
ravi said…
[08/05, 09:51] Shivaji L&T C: Apt on Mother's day 🌹🌹🙏🙏

[08/05, 11:40] Moorti Mumbai: அழகான நடையில் சொல்லப்பட்ட அருமையான விஷயங்கள்... ரசித்தேன் 👌👏🙏🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ஒளவை, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்‘ என்கிறாள். வேதமும் மாதா பிதாக்களை தெய்வமாக நினைக்கச் சொல்கிறது. இரண்டிலும் அப்பாவுக்கு முன்னாடி அம்மாவைத்தான் தெய்வமாகச் சொல்லியிருக்கிறது.

ravi said…
தாயாரைத் தெய்வமாக நினைப்பதையே திருப்பி வைத்து தெய்வத்தையே தாயாராக பாவிக்கும் போதுதான் அம்பாள் அம்பாள் என்று வழிபடுகிறோம். மற்ற எந்த ரூபத்தையும்விடப் பரமாத்மாவை இப்படித் தாயாராக நினைக்கிறபோதே ஜாஸ்தி ஆனந்தம் உண்டாகிறது. ஏன்? அம்மாவைவிட அன்பானவர்கள் இல்லை. அவளிடம் நமக்கு ஸ்வாதீனம் ஜாஸ்தி. கொஞ்சங்கூட பயப்பட வேண்டாம். வெட்கப்பட வேண்டாம். பயத்துக்கும் வெட்கத்துக்கும் காரணமாக இருப்பதெல்லாம் தன்னால் அவள் முன் அடிபட்டுப் போகிறது!
ravi said…
எத்தனை பயம் வந்தாலும் குழந்தை ”அம்மா” என்று அவளைத்தான் கட்டிக் கொள்கிறது. வயஸு ஏறும்போது ஒருத்தருக்கு ஏற்படும் மனோவிகாரத்துக்கு வெட்கப்பட வேண்டியில்லாமல், அம்மாவின் முன்னால் தானாக அது நசித்துவிடுகிறது.

தாயன்பைப் போலக் கலப்படமில்லாத பூர்ண அன்பை எங்கேயும் காணமுடியாது. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலுங்கூட, தாயாராகப்பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூர்ண அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள். ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்கிறோம். ”
ravi said…
துஷ்டப் பிள்ளை இருப்பதுண்டு; ஆனாஸ் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது1.” என்று ‘தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்ர’த்தில் சொல்லியிருக்கிறது. பிறக்கிற போதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில் அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பிறந்த பிற்பாடும் ஆஹாரம் தருவதிலிருந்து ஸகலத்துக்கும் அவள்தான் கதியாய் இருக்கிறாள். பால்யத்தில்தான் தாயார்-குழந்தையின் பரஸ்பர அன்பு ரொம்பவும் அதிகமாக இருப்பது. அவளையே முழுக்க நம்பியிருப்பது அப்போதுதான். காமாதி விகாரங்கள் தொடாத போதுதான் அம்மாவே கதியாயிருப்பது. ‘எல்லாம் அவள் செய்வாள்’ என்று திட உறுதியோடு கவலையில்லாமல் ஒப்புக்கொடுப்பது குழந்தைப் பிராயத்தில்தான்.
ravi said…
பரமாத்மாவை மாதாவாக பாவிப்பது அதனால் தான். நமக்கு எத்தனை வயஸாயிருந்தாலும் அங்கே குழந்தையாகிவிடுகிறோம். பூர்ண நம்பிக்கை, சரணாகதி என்று ஒட்டிக் கொண்டிருப்பது, மனோவிகாரமில்லாமலிருப்பது – இப்படிக் குழந்தைத் தன்மையிலுள்ள தெய்வத்தன்மையெல்லாம் நம்மிடம் வருவதற்காகத்தான் பரமாத்மாவை அம்பாளாக பாவிப்பது. பசியாக இருக்கட்டும், ஒரு வஸ்து வேண்டும் என்றிருக்கட்டும், வெளியே போக ஆசையாயிருக்கட்டும், நோவு நொடி ஏதாகட்டும் – எதுவானாலும் ”அம்மா, அம்மா” என்று அந்த ஒருத்தியையே குழந்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல நாம் பரமாத்மாவை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்ள அவரை ஜகன்மாதாவாகவும் நம்மைக் குழந்தைகளாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும். ”குழந்தையாகி விடவேண்டும்” என்று உபநிஷத்தும் உபதேசிக்கிறது2.
ravi said…
பரமாத்மாவை ஜகஜ்ஜனனியாக பாவிப்பது என்றால், இது இல்லாத ஒன்றை நாமே கல்பித்துக்கொண்டு ஸந்தோஷப்படுவது என்று அர்த்தமில்லை. வாஸ்தவத்திலேயே ஸகல குணங்களுக்கும் ஆச்ரயமாக இருக்கப்பட்ட பரமாத்மாவிடம் பூர்ணமான மாத்ருத்வமும் இருக்கத்தான் செய்கிறது. இத்தனை அம்மாக்களுக்கும் அந்த அம்மாக்களுடைய வாத்ஸல்யத்துக்கும் தியாகத்துக்கும் அந்தப் பரமாத்மாதானே மூலம்? அதனால், நாம் பாவிக்காவிட்டாலும், யதார்த்தத்திலேயே பரமாத்மா மாத்ரு தத்வம் நிரம்பியவர்தான். ‘தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!‘ என்று மாணிக்கவாசகர் சொல்வது3 இதைத்தான். ‘அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே‘ என்றும் சொல்கிறார்4. அப்பர் ஸ்வாமிகளும் ‘அப்பன் நீ, அம்மை நீ‘ என்கிறார்5. பரமாத்மாவின் மாத்ரு பாவத்தை அநுபவித்துத் தான் இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
ravi said…
நம் சரீரத்தின் அம்மா எத்தனை அன்பாயிருந்தாலும், அவளுடையதோ, நம்முடையதோ யாருடைய சரீரம் முதலில் போனாலும் அதோடு அந்த ஸம்பந்தம் போய் விடுகிறது! வெவ்வேறு ஜன்மாவில் வெவ்வேறு அம்மா வருகிறாள். இத்தனை அம்மாக்களுக்கும் உள்ள அன்பின் மூலமான பரமாத்மா மட்டும் எப்போதும் சாச்வதமாகத் தொடர்ந்து வருகிறார். இதனால்தான் ”தொடர்ந்து வரும் தாயானை”6 என்கிறார்கள். அழிந்து போகிற உடம்புக்கு மட்டும் அம்மாவாக இல்லாமல் அழியாத உயிருக்கு அம்மாவாக இருந்து, இஹத்திலும் பரத்திலும் ரக்ஷிக்கிற பரம கருணை கொண்ட தாய் பரமாத்மாவே! ஒரு ஐந்து பேர், பத்துப் பேருக்குக் கொஞ்ச காலம் மட்டும் தாயாராக இல்லாமல், புழு பூச்சியிலிருந்து யானை, சிங்கம் வரை, மநுஷ்யர்களிலிருந்து தேவர்கள் வரை இத்தனை ஜீவராசிகளுக்கும் எத்தனை காலத்துக்கும் அம்மாவாக இருப்பது பரமாத்மாவே. ஒவ்வொன்றுக்கும் வேண்டிய ஆஹாராதிகளை, போக்ய வஸ்துக்களை லோகத்தில் பண்ணி வைப்பது அந்தப் பெரிய அம்மாதான். குழந்தைக்காகத் தாயாரிடம் பால் உண்டாகிறது; வயிற்றிலிருக்கும்போதே தொப்புள் கொடி வழியாக அவளிடமிருந்து அதற்கு ஆஹாரம் போகிறது என்றால், இந்த ஏற்பாட்டை ஒவ்வொரு தாயாரும் தானாகவா செய்து கொண்டாள்? மஹாமாதாவாக ஒரு பராசக்தி இருந்து கொண்டுதான் இப்படியெல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது
ravi said…
பரமாத்மா நம்முடைய உடலை மட்டுமின்றி உயிரையும் வளர்க்கிற அம்மா. அறிவை வளர்த்து ஆத்மாநுபவத்தைத் தருகிற அம்மா. வயிற்றுக்குப் பால் தருகிற மாதிரி ஞானப்பால் கொடுத்து, அம்மா பிள்ளை என்ற பேதமில்லாமல் ஒன்றாகச் செய்துகொள்கிற அம்மா.

ஆனதால் நம் மனஸுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமில்லாமல், இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபடவேண்டும் என்கிற நியாயத்தையொட்டி வாஸ்தவமாகவே எந்தெந்த ஜன்மத்துக்கும், ஜன்மாவே நீங்குவதற்கும், துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வணங்கத்தான் வேண்டும்.

எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. அப்படி ஸாக்ஷாத் பரப்பிரம்மமே தாயாகி, அம்பிகையாக இருந்து கொண்டு நமக்கு அநுக்ரஹம் செய்யவேண்டும் என்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வந்து அருள்புரிகிறது.
ravi said…
அரூபத்துக்கு ஏன் ரூபம் வேண்டுமென்றால், ரூபமுள்ள நாம் அனைவரும் அந்த மூலத்திலிருந்தே பிறந்து, அது நமக்குத் தாயாராகவும் நாம் அதற்குக் குழந்தைகளாகவும் இருப்பதால்தான். நமக்கும் ரூபமில்லை, நாமும் ஆத்மாதான் என்கிறது இருக்கட்டும் – இப்போது நமக்குத் தெரியாத கதை அது! இத்தனை ரூபங்கள் – பசு, பக்ஷி, மிருகம் என்று நானா விதம், ஒவ்வொரு ஜாதியும் ஒரே மாதிரி – இருந்து கொண்டிருப்பதால் இவற்றுக்கெல்லாம் ஒரு மூலம் உண்டு என்று மட்டும் இப்போதும் புத்திக்குத் தெரிகிறது. மூலம் – தாயார்; மூலத்திலிருந்து வந்த எல்லாம் குழந்தைகள்
ravi said…
குழந்தை என்றால் அதற்கு அம்மாவைப் பார்த்தாக வேண்டும். அவள் பக்ஷணத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளேயிருந்தால் போதாது! குழந்தை பக்ஷணத்தைத் தொடாது. அவளே கண்ணுக்கு முன்னால் வந்து ஊட்டினால்தான் தின்னும். பக்ஷணமே வேண்டாம்; அவள் கண்ணுக்கு முன்னால் இருந்துவிட்டால் போதும்! உள்ளேயிருந்து, ”கண்ணே ராஜா!” என்று அவள் குரல் கொடுத்தால்கூடப் போதாது. அவளைப் பார்த்தேயாக வேண்டும்! அவள் தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும்! அவள் முகத்தைப் பார்த்தால்தான் அது ‘களுக்’ ‘களுக்’ என்று சிரிக்கும். நாமும் குழந்தைகள்தானே, பராசக்திக்கு? அதனால் அரூபமாக, தத்வமாக ஒரு பராசக்திதான் நம்மை ரக்ஷிக்கிறது என்று தெரிந்தால் போதமாட்டேன் என்கிறது; ரூபமாக, பிரேமையாக ரக்ஷிக்கிறாள் என்று பார்க்கும் படியாக அது வந்தால்தான் மனஸ் நிறைகிறது
ravi said…
பரமாத்மாவைப் பரம கருணாமூர்த்தியாகப் பார்க்க வேண்டுமானால் அதற்கு அம்பாள் ரூபத்தைவிட வேறில்லை. குழந்தைக்குத் தாய், கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதாரவிந்தத்தில் நிறைந்த அன்பு இருந்துவிட்டால் வாழ்க்கையே நிறைந்து பரிபூர்ண ஆனந்தம் உண்டாகிவிடும். அம்மாவாக உபாஸிக்க ஆரம்பித்தால் இப்படிப்பட்ட நிறைந்த அன்பு வெள்ளம் இயல்பாக நம்மிடமிருந்து பெருக ஆரம்பித்து விடும்.

அம்பாளுடைய தியானம் இடைவிடாத தாரையாக நம்மிடமிருந்து பெருக ஆரம்பித்துவிட்டால் அதுவே ஸகல தாப சமனமான, ஸமஸ்த பாப நிவாரணமான புண்ய தீர்த்தமாகும். அன்புக்கெல்லாம் ஊற்றாக இருக்கிறது அதுதான்.

‘ஸஹோதர ஸஹோதரிகளே!’ என்று இப்போது நாம் வாய் வார்த்தையில் மட்டும் பிரஸிங்கிப்பதும், எழுதுவதும் நிஜ அநுபவமாவது, இத்தனை பேருக்கும் நிஜமாக ஒரே அம்மாவாக – ‘நமஸ்தே ஜகத் ஏக மாத:‘ என்று காளிதாஸன் [‘சியாமளா தண்டக’]த்தில் சொன்னதுபோல ஒரே அம்மாவாகப் – பரமாத்மா இருப்பதை உணரும் போதுதான். எல்லா ஜீவ ஜந்துக்களையும் நம் உடன் பிறப்புக்களாகத் தழுவுகிற அன்பானது இத்தனைக்கும் பொதுவாக இருக்கும் மாதாவை உணரும்போதுதான் ஸித்தியாகும்.
(இன்று அன்னையர் தினம்)
ravi said…
31. மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.
ravi said…
அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.
TV Ganesh said…
அம்மா உனக்கு எதுவுமே தெரியாது என்னைத் தவிர

நான் விழிக்கும் முன் விழித்து கட்டியணைத்து முத்தமிடுவாய்

எனக்கு பசிக்கும் முன் ருசிக்க தருவாய்

என் நல்லது அனைத்திற்கும் முன்னால் வருவாய்

தீமை ஏதும் அணுகாது காப்பாய்

கடிந்தாலும், அடித்தாலும் என் மனம் வலிக்காமல் செய்வாய்

ஆம்

எனக்கும் ஒன்றும் தெரியாது, உலகமும் புரியாது, கடவுளும் தெரியாது

காரணம்

நீ என் அம்மா

நமஸ்காரம் அம்மா
Hemalatha said…
தாய்மை என்பது பெண்களிடத்தில் மட்டுமல்ல.தங்களிடமும் உண்டு.ஒவ்வொரு நாளும் தாயின் மகத்துவத்தை உணர்த்தும் தங்கள் எழுத்துக்களிலும் தாய்மையை காண்கிறோம்.

ஒரு தாயின் மனவேதனையைப் போக்கும் விதமாக யாரென்றே தெரியாத எங்களுக்கு பண உதவி செய்து ன் மகளின் திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்த தங்களின் நல் உள்ளத்திலும் தாய்மையைக் காண்கிறேன்.தங்களுக்கு எங்களின் அன்னையர் தின வணக்கங்கள்🙏🙏🙏🙏
ravi said…
32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லலற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!
ravi said…
அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!
ravi said…
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
ravi said…
தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, ‘அன்னையே’ என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!
ravi said…
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.
ravi said…
தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.
ravi said…
35. திருமணம் நிறைவேற

திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
ravi said…
அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!
ravi said…
36. பழைய வினைகள் வலிமை பெற

பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும்தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!

குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.
ravi said…
37. நவமணிகளைப் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!
ravi said…
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.
ravi said…
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற

ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!
ravi said…
40. பூர்வ புண்ணியம் பலன்தர

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்
ravi said…
Worth reading a hundred times ...Sanjay, at the end of the war in Mahabharata went to the spot where the greatest war took place; Kurukshetra.

He looked around and wondered if the war really happened, if the ground beneath him had soaked all that blood, if the great Pandavas and Krishna stood where he stood.

“You will never know the truth about that!” said an aging soft voice.

Sanjay turned around to find an Old man in saffron robes appearing out of a column of dust.

“I know you are here to find out about the Kurukshetra war, but *you cannot know about that war till you know what the real war is about*.” the Old man said enigmatically.

“What do you mean?”

*The Mahabharata is an Epic, a ballad, perhaps a reality, but definitely a philosophy*.

The Old man smiled luring Sanjay into more questions.

“Can you tell me what the philosophy is then?”
Sanjay requested.

Sure, began the Old man.

*The Pandavas are nothing but your five senses*,
sight,
smell,
taste,
touch
and sound...,

and do you know what the *Kauravas* are?
he asked narrowing his eyes.

*The Kauravas are the hundred vices that attack your senses everyday but you can fight them*... and do you know how?

Sanjay shook his head again.

“When Krishna rides your chariot!”

The Old man smiled brighter and Sanjay gasped at that gem of insight.

*Krishna is your inner voice, your soul, your guiding light and if you let your life in his hands you have nothing to worry*.

Sanjay was stupefied but came around quickly with another question.

“Then *why are Dronacharya and Bhishma fighting for the Kauravas, if they are vices*?”

The Old man nodded, sadder for the question.

It just means that as you grow up, your perception of your elders change. *The elders who you thought were perfect in your growing up years are not all that perfect. They have faults. And one day you will have to decide if they are for your good or your bad. Then you may also realize that you may have to fight them for the good. It is the hardest part of growing up and that is why the Geeta is important*.

Sanjay slumped down on the ground, not because he was tired but because he could understand and was struck by the enormity of it all.

*What about Karna*? he whispered.

“Ah!” said the Old man. “You have saved the best for last. *Karna is the brother to your senses, he is desire, he is a part of you but stands with the vices. He feels wronged and makes excuses for being with the vices as your desire does all the time.*

*Does your desire not give you excuses to embrace vices*?”

Sanjay nodded silently. He looked at the ground, consumed with a million thoughts, trying to put everything together and then when he looked up the Old man was gone....
disappeared in the column of dust.........leaving behind the great philosophy of Life!
The day we understand difference between needs and wants , all our mental chaos will end.!! 🙏🏻🙏🏻 😎😎
ravi said…
🌹🌺' ‘ *அட போடா... எனக்கு "சுள்ளி பொறுக்கவே நேரம்‌ கிடைக்கவில்லை. இதிலே குளிர்‌ காய எங்கே நேரம்‌?” என்ற நண்பன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹மாதேஷ் எப்போது பார்த்தாலும்‌ சுள்ளி பொறுக்கிக்‌
கொண்டே இருந்தான்‌. அவனைப்‌ பார்த்துக்‌ கொண்டே இருந்த நண்பன் சிவா நீ எப்பொழுதும் சுள்ளிப் பொறுக்கிக்‌ கொண்டு இருக்கிறாயே, எதற்கு? "என்று
கேட்டான்‌.
ravi said…
🌺மாதேஷ் உடனே "குளிர்‌ காய்வதற்கு தான் " என்றான்‌ அழுத்தமாக...

🌺இதை கேட்ட நண்பன் சிவா , "நீ இதுவரை குளிர்‌ காய்வதை நான்‌ பார்த்ததே இல்லையே "என்றான்‌.

🌺மாதேஷ், நண்பா....அட போடா... எனக்கு "சுள்ளி பொறுக்கவே
நேரம்‌ கிடைக்கவில்லை. இதிலே குளிர்‌ காய எங்கே
நேரம்‌?” என்றான்‌.

🌺பணம்‌ சம்பாதிப்பது வாழ்க்கையை
சுகமாக அனுபவிக்கத்தான்‌. ஆனால்‌, சிலர்‌ பணம்‌
சம்பாதிப்பதையே தங்கள்‌ குறிக்கோளாக , அதாவது,
குறியாக இருக்கின்றனர்‌.

🌺குடும்பத்திற்காகச்‌
சம்பாதிக்கிறேன்‌ என்று, அவர்கள்‌ குடும்ப வாழ்வை
அனுபவிப்பதில்லை.
ravi said…

🌺மனைவியிடமோ,
குழந்தைகளிடமோ உறவாடி மகிழ நேரமில்லை
என்கிறார்கள்‌.

🌺பொருள் மிகவும் அவசியம் தான், ஆனால் அதுவே நம் வாழ்வின் முக்கியம் அல்ல... பகவான் அருள்தான் மிகவும் அவசியம், இந்த பிறவி ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி அடைய மட்டுமே.. இதையே வள்ளுவர் *குறள் 247* இல்

🌺அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.🌹

🌺 *பொருள்* 🌹

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது, அதுபோலவே பகவான் கருணை உள்ளம் இல்லாதவர்களின் வாழ்க்கையும் எந்த உலகத்திலும் சிறப்பாக அமையாது.
ravi said…
🌺எவனொருவன்‌ தூங்க வேண்டிய நேரத்தில்‌ ,
எந்தக்‌ கவலையும்‌ இல்லாமல்‌ ஆனந்தமாக
உறங்குகின்றானோ, அவன்‌ தான்‌ உண்மையான பணக்காரன்‌.

🌺நாம் அளவோடு உழைத்து, ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி பிடித்துக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாக
வாழ பழகிக்‌ கொள்வோம். 🌹🌺

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌺🌺'If you practice simple meditation by remembering what Sri Krishna says about the practice of drinking water, "We can easily attain the Feet of Sri Krishna- simple story to explain *🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹Whoever comes to our house today‌ is ours to give water to drink
Ancestors‌ custom.

🌺Newcomer‌ Known
Drink though, even if unknown
Talking about other things after giving water
And‌ giving him something to eat
Comes from such practice.
ravi said…
‌🌺We are giving Water first for those who come thus
There are very good reasons to give.

🌺Water will change the mindset of humans
There is amazing power. Of a man‌
Transforms anger and resentment
Energy‌ is for water.

🌺Fight something
Fear each other when it comes to conflict
The one who comes to exclude them while speaking
"Drink the first water and then you can talk."
Will say‌.

🌺Fighting ‌ person‌ after drinking water‌
A kind of calmness emerges in his speech.

🌺Sri Krishna says in Bhagavad Gita 7.8 that I am the taste of water, this is what we still shop for today
ravi said…
🌺Auraso ‘hum apsu kaundeya
Prabhasmi Sashi-Suryayo
Pranav Sarva-Vedic
Sapta K Purushas Nishu

🌺🌹O son of Kunti [Arjuna], I am the taste of water, the light of the sun and moon, the letter Om in the Vedic mantras; I am capable of sound and man in ether🌹🌺


🌺Practitioners should simply drink water and practice simple meditation by remembering what Lord Krishna says about the custom of drinking water in Bhagavad Gita 7.8, "We can easily attain Thiruvadi"🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 218* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*70 வது திருநாமம்*
ravi said…
*70* *किरिचक्ररथारूढदण्डनाथापुरस्कृता - கிரிசக்ர - ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா | -*👍
ravi said…
வாராஹியும் தன் அடி யார்களின்பாபபீடைகளை எல்லாம், மாயாமல மாசுக்களை எல்லாம் களைந்து அவர்களைத் தூய்மைப்படுத்துகிறாள்.

தான் ஈன்ற கன்றினை தன் நாக்கால் நக்கி பசு தூய்மைப்படுத்துவதுபோல தன் தாயன்பால், உயர்குணத்தால் தன்னை அண்டுவோரின் தோஷங்களை எல்லாம் போக்கிப் புனிதமாக்கி, பயம், பந்தம், துன்பங்களிலிருந்து மீட்டு முக்திக்கு அருள் செய்கிறாள்.

பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படை களுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு *விஷூக்கன்* எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானம் பரக்கப் பேசுகிறது.

லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் *விஷூக்ரப் ப்ரான ஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’* எனும் நாமங்கள் இவளைக் குறிக்கின்றன.
ravi said…
இவள் ஆரோகணித்து வரும் ரதம் ‘கிரி சக்ரரதம் என்றும், இவளின் யந்திரம் ‘கிரியந்த்ரம்’ என்றும் போற்றப்படுகிறது.

(கிரி- பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது.

பராபட்டாரிகையான லலிதையின் மனக்குறிப்பறிந்து கீதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள்போற்றப்படுகிறாள். இன்னும் வருவாள் 🐷🐷🐷🐷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 218* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 54👌👌👌
ravi said…
வரிவிழிச் செம்மை வெண்மை

வனப்புறு கருமை

மூன்றும்
எரிதெறு கற்ப காலத்
திறந்தமுப் பொருளுந் தோன்றுங்
கருஎனக் குணங்கள்

மூன்றின்
காரண மென்னப் பெற்றால்

அருமறைப் பொருளே உன்றன்
அருளலா துலக முண்டோ.🍇🍇🍇
ravi said…
பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே

தயாமித்ரைர் நேத்ரை:

அருணதவள ச்யாமருசுபி:

சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்

த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்👁️👁️
ravi said…
*மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள்*
ravi said…
பசுபதிக்கு ஆதீனமான உள்ளம் படைத்தவளே !

தயைக்குக் கூட்டாளிகளும் சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவைகளுமான உனது கண்களால்

மேற்கு நோக்கிச் செல்வதும் சிவந்ததுமான *சோணபத்ரா* என்ற ஆறு,

வெளுப்பான *கங்கை* ,

சூரியபுத்திரியாகவும் கறுப்பு வர்ணம் கொண்டதாகவும் விளங்கும் *யமுனை* என்ற மூன்று புண்ணிய நதிகளின் ஸங்கமமாகிய பாவத்தையெல்லாம் போக்கும் இக்கூட்டுறவை

உன்னைக் காணும் – எங்களை புனிதமாக்குவதற்காக ஏற்படுத்தியிருக்கிறாய் என்பது நிச்சயம்.

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
ravi said…
*ராமனும் கபந்தனும்*

*கபந்தன் சொன்ன கீதை* 👁️👁️
ravi said…
அஷ்ட்டகோணம் ... கண் இருக்கும் இடமதில் காதும்

காது இருக்கும் இடத்தில் முகமும்

வயிற்றில் வாயும் வாயில் துர்நாற்றமும் ...

பார்க்கவே பயங்கரம் ...

நீண்ட கரங்கள் உதவி தர அல்ல உணவு தேட ..

கையில் கிடைத்ததெல்லாம் வயிற்றில் சமாதி கண்டன ...

சமாதி கண்ட ரிஷிகள் எல்லாம் அவன் வயிற்றில் கற்பூரமாய் கரைந்தனர்....

பார்த்ததில்லை இப்படி ஒரு அகோரம் ...

ஏன் படைத்தாய் இறைவா இப்படி ஒரு கோரம் .. புலம்பினான் ராமன் ...

கபந்தன் சிரித்தான் ... ராமா !

என்னை படைத்தவன் நீ ...

நீயே புலம்பினால் நான் எங்கு போவேன் ...??

கந்தர்வனாய் இருந்தவனை கர்வம் ஆட்க்கொண்டே அகோரம் கொண்டேன் ...

கொடும் பாவி ஆனேன் ...

என் கர்மா...
அதுவே என் விகர்மா...
அகர்மா செய்ய முடியவில்லை ...

உடல் இதை சட்டை எனக்கொண்டேன்

அசட்டை செய்தேன் ...

உயிர் செல்லும் துவாரங்களில் உன் நாமம் உரைத்திலேன் ...

சட்டை மாற்றும் நேரம் இது சடுதியில் என் சட்டை தனை உரிப்பாயோ ராமா ?

மெல்ல ஒரு அம்பு எடுத்தே கள்ள சிரிப்புக் கொண்டே வல்லவன் எய்தான் அதை ...

கபந்தன் அவன் உடல் எனும் சட்டை சுக்கு நூறாய் கிழிந்ததே ...

கிழியும் முன் செய்தான் ஒரு காரியம் ...

திருக்கோளூர் பெண்பிள்லை ரகசியம் அதில் 17 வது வரியாக

*அடையாளம் சொன்னேனோ*
*கபந்தனைப் போலே*

என்றே .. அங்கே வந்தே சிம்மாசனம் போட்டே அமர்ந்தான் கபந்தன் ...

யுகம் மாறினாலும் அகம் அழிந்தாலும் ராமனுக்கு வழி காட்டினான் சுக்கரீவன் இருக்கும் இடம் அதையே ...

சபரியைய் காணவும் அவள் கனவு நிறையவும் ராமன் பாதம் நாடினான் ...

இறைவனுக்கே பாதை காட்டியவன்

இதயத்தில் என்றும் வாழ்வான் அன்றோ ...

தெய்வத்தின் குரல் கேட்பதும் தினம் சொல்வதும் இதையே அன்றோ ...

காஞ்சி வாழ் கபந்தன் நம்மை அவனுள் விழுங்கி அவனாக்குவான் ...

இதில் யார்க்கும் சந்தேகம் உண்டோ ? 🙌🙌🙌🙌
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 69*🐒🐒🐒
ravi said…
அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |

அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா ||

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |

ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா ||16🐒🐒🐒
ravi said…
ரசாயனம் என்றால் ரஸத்தின் சாரம் ... கலவை .. ராம எனும் பாயசத்தின் அதி சுவை ...இந்த ரஸம் என்றும் அனுமானுக்கு சொந்தம் ... தினமும் அவன் விரும்பி அருந்துவது வடை மாலையோ வெண்ணெயோ இல்லை ... ராம நாமத்தைக் கொண்டு செய்த பாயசம் ... கற்கண்டு , திராட்சை , பாதாம் முந்திரி பருப்பு பச்சைக் கற்பூரம் , ஏலக்காய் , கிராம்பு இவை கலந்த பாயசம் ... ஓவ்வொரு தடவையும் நாம் ராமா என்று சொல்லும் போது ராமரைக்காட்டிலும் அதிகமாக குஷி கொள்பவர் அனுமான் .. அவர் குடிக்க பாயசம் கூடிக்கொண்டே போவதால் ...🐒🐒🐒
ravi said…
முதல் முதலில் அனுமன் ராமனை சந்திக்கும்போது அடக்கத்துடன் தான் ஒரு மந்திரி சுக்கரீவனுக்கு என்கிறார் ... பிறகு சீதையை சந்திக்கும்போது நான் சுக்கரீவனின் தூதன் , அமைச்சர் என்று அறிமுகப்படுத்திக்கொள்ள வில்லை .. அடியேன் ராம தூதன் , ராம தாசன் என்கிறார் ... ராமநாமம் அவரை அப்படி இறைக்கு அடிமையாக்கி விடுகிறது ...இந்த அடிமைத்தனம் தான் நமக்கும் என்றும் வேண்டும் ... 🐒🐒🐒🙌
ravi said…
41. நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப்பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.
ravi said…
அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்
ravi said…
42. உலகினை வசப்படுத்த

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.
ravi said…
அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!
ravi said…
43. தீமைகள் ஒழிய

பரிபுரச் சீறடிப்! பாசாங்குசை! பஞ்சபாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே
ravi said…
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!
ravi said…
44. பேதபுத்தி நீங்க

தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே.
ravi said…
எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!
ravi said…
45. உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்திச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.
ravi said…
அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.
ravi said…
46. நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!
ravi said…
ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.
ravi said…
47. யோகநிலை அடைய

வாழும்படியொன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படியன்று, விள்ளும்படியன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்
1 – 200 of 222 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை