ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 7.சதுர் பாஹு சமன்விதா பதிவு13

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

7. சதுர் பாஹு சமன்விதா

பதிவு 13


இன்று நாம் பார்க்கப் போவது 7வது திருநாமம் .. அருமையான திருநாமம் 

தாயானவள் , மகாராணியாய் இருப்பவள் சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனம்... 

சிதக்கநி குண்டத்தில் இருந்து ஜோதி வடிவாய் 

தேவர்களாகிய நம் துன்பங்கள் எல்லாம் தீர்க்க , 

ஆயிரம் சூரியர்களும் மேல் காந்தி உள்ளவளாய் தோன்றுகிறாள் ... 

அவள் எப்படி காட்சி தருகிறாள் தெரியுமா ? 

நம் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிப்புரையாய் , சிற்றிடை கொண்டவளாய் , வார்க்கும் குங்கும முலை கொண்டவளாய் முலை மேல் முத்து மாலை அணிந்தவளாய்

சதுர்பாஹு ஸமந்விதாவாய்  காட்சி தருகிறாள் ...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌


*चतुर्बाहुसमन्विता  

சதுர் பாஹு சமன்விதா -

நான்கு கரங்களை கொண்டருள்பவள். 

அருள் தரும் அணைக்கும் கரங்கள் அடக்கவும் அடிக்கவும்,  அழிக்கவும் கூட செய்யும். 

பக்தர்களுக்கும் பாதகர்களுக்கும் தக்கவாறு  தீர்ப்பளிப்பவள் அல்லவா அம்பாள்.

நான்கு கரங்கள் எதற்கு ? 

இன்னும் வரும் நாமங்களில் பார்க்கப்போகிறோம்... 

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நான்கு வேதங்கள் அவள் கரங்கள் ... 

அவள் அங்கமே வேதம் அதனால் தான் பட்டர்  அறிந்தேன் யாருமே அறியா மறையை என்கிறார் .. 

இன்னொரு பாடலில் அருமறைகள் பழகி பாதம் சிவந்தவள் என்கிறார் ... 

உபநிஷதங்களும் அவளே ஒரு வேதம் எனும்  மரத்தின் வேறாக , நடு பாகமாய் முடிவாக இருக்கிறாள்....

திருக்கர விசேஷங்கள் சதுர்பாஹு ஸமன்விதா - இது அடுத்த நாமம். இங்குத்தான் ஸ்வரூப வர்ணனை ஆரம்பிக்கிறது எனலாம். 

சிதக்னி குண்ட சம்பூதா என்று சொல்லும் போது ஸ்வரூபம் என்னவென்று சொல்லவில்லை. 

ஸ்ரீமாதா என்று சொல்லும் போதோ, ஸ்ரீமகாராக்ஞி என்னும்போதோ ஸ்வரூபம் என்னவென்று சொல்லவில்லை. 

சிம்ஹாஸனேச்வரி என்னும் போதும் ஸ்வரூபம் சொல்லப்படவில்லை. ஸ்வரூபம் எங்கே உண்மையில் ஆரம்பிக்கிறது என்றால் 'சதுர்பாஹு ஸமன்விதா' என்ற திருநாமத்தில்தான்! 

'நான்கு திருக்கரங்களோடு இருப்பவள்' என்று அம்பாளை வர்ணிக்க ஆரம்பிக்கும் போது, 

வர்ணனை, அவள் திருமுகத்தில் ஆரம்பிக்கவில்லை, அவளுடைய திருக் கரங்களில்தான் ஆரம்பிக்கிறது.

நான்கு கரங்களைச் சொல்லும்போது, 'சதுர்பாஹு ஸமன்விதா' என்று கூறி, அவளுடைய திருக்கரங்கள் எவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் தொடர்ந்து சொல்கிறது. 

அம்பாள் ஸ்வரூபத்திலே ஒரு விஷயத்தை கவனிக்கலாம். 

ராஜராஜேசுவரியாகவும், காமாக்ஷியாகவும் லலிதாம்பிகையாகவும் இருக்கும்போது அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். 

நான்கு திருக்கரங்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷயம் இருக்கும்.

சங்கரர் சுட்டும் வித்தியாசம்! 


ஆதிசங்கர பகவத்பாதர் சொல்வதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்

அம்பாளை வர்ணித்துக் கொண்டே வரும்போது, அவளுடைய நான்கு திருக்கரங்களைப்பற்றிக் கூறுவார். "தாயே, உன்னுடைய நான்கு கரங்களில் ஒரு வித்தியாசம் இருக்கிறது அம்மா!" என்பார். 

எந்தவொரு தெய்வத்தையோ அல்லது தெய்வத் திருமேனியையோ பார்க்கும்போது சாதாரணமாக எல்லாரும் பார்ப்பது அல்லது கவனிப்பது என்னவென்றால் ஒரு கரம் அபய ஹஸ்தமாகவும் ஒரு கரம் வர ஹஸ்தமாகவும் அமைந்திருப்பதைத்தான். 

இதுதான் சாதாரணமாக அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பொதுவான தோற்றம் (ஓரிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்). 

அதனால்தான் நாட்டியம் ஆடுபவர்கள்கூட தெய்வத்தைக் காட்டும் முகமாக அபய-வர ஹஸ்தங்களை முத்திரையாகக் காட்டுவார்கள். 


அபய ஹஸ்தம் என்பது பயத்தைப் போக்குவது. அதற்கு 'அ-பய' ஹஸ்தம் என்றே பெயர். ஒவ்வொரு மனித மனத்திலும் பயம் இருக்கும். எதற்கு பயம் என்றால், மற்ற யாவற்றையும் தாண்டி, மரணத்தைப் பற்றிய பயம்

மரண பயம்! பயம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் ஏற்படலாம். 

ஒருவருக்கு இருட்டைப் பார்த்தால் பயம், ஒருவருக்குச் சுவரைப் பார்த்தால் பயம், ஒருவருக்குக் கிணற்றைப் பார்த்தால் பயம்! 

ஆனால் எல்லா பயங்களையும் கடந்து அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பயம் மரண பயம்! 

"எனக்கு மரண பயம் இல்லை" என்று அருணகிரிநாதர் பாடினார்! "ஏனென்றால், நான் மயிலைப் பார்த்தேன். மயிலைப் பார்த்ததும் என் மரண பயம் போய்விட்டது" என்றார். 


மரண பயம் என்பது இல்லை என்று மனிதர்களாகிய நாம் எவ்வளவுதான் சொன்னாலும் அது எங்கேயோ ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். இந்த மரண பயத்தைப் போக்குவதுதான் அபய ஹஸ்தம்.

'அம்மா' என்று அம்பாளுடைய கால்களில் விழும்போது, அவள் அந்த பயத்தைப் போக்குகிறாள். பயம் போய்விட்டது என்றால், அடுத்தது என்ன நடக்கும்?

பயம் இருக்கும்போது வாயே திறக்க மாட்டோம். அம்பாளிடம் போகும்போது என்று இல்லை; 

இது சராசரி வாழ்க்கையிலேயே நடக்கும். நமக்கு யாரிடமாவது பயம் என்றால், அவர் அருகிலேயே நெருங்கமாட்டோம்; பேச மாட்டோம்; ஒதுங்கியே இருப்போம். 

புதியதாக வந்தவர்களிடம் பழக பயப்படும் குழந்தைகள் முதலில் அவர்கள் அருகில் போகாமல் ஒதுங்கி நிற்பார்கள். 

அடுத்த கட்டமாக ஒரு மணி நேரம் ஆன பிறகு அதே குழந்தை பக்கத்தில் போய் உட்காரும். உட்கார்ந்து, "உன் பாக்கெட்டில் இருக்கும் பேனாவைத் தருகிறாயா?" என்று கேட்கும். 

பயம் போனவுடனேயே, 'எனக்கு ஏதேனும் கொடு' என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா! 

அதைப்போல பயம் போனவுடனேயே கடவுளிடம் நாம், "அம்மா, எனக்கு இதைக் கொடு" என்று கேட்கிறோம். 


பயத்தைப் போக்குவது அபய ஹஸ்தம்; கேட்டதைத் தருவதற்காக அமைந்திருப்பது வர ஹஸ்தம். பயம் போனவுடன் என்னென்னவோ கேட்க ஆரம்பித்துவிடுவோம். 

பாரதியைப் போல எல்லாரும் இருக்க முடியுமா? பாரதி என்ன கேட்டார்? 'காணி நிலம் வேண்டும்' என்று ஆரம்பித்து வரிசையாகக் கேட்டாரே, 

எல்லாம் தமக்குச் சொந்தமாகவேண்டும் என்பதற்காக அல்ல, வையத்தைப் பாலித்திட வேண்டும் என்பதற்காக அல்லவோ அவர் கேட்டார். 

பாட்டுத் திறந்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்! கேட்டுப் பெற விரும்புவதைத் தரக்கூடியது வர ஹஸ்தம். 


ஆனால் லலிதாம்பிகையிடம் பார்த்தால், அபய ஹஸ்தமும் இருக்காது; வர ஹஸ்தமும் இருக்காது

"இந்த அபய-வர ஹஸ்தங்களைக் காட்டி ஆள வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. அதனால்தான் உன் திருக் கரங்களில் அதற்கான அடையாளம் இல்லை" என்று ஆதிசங்கர பகவத்பாதர் சொன்னார். 

லலிதாம்பிகையின் நான்கு திருக்கரங்களுள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பணியைச் செய்து கொண்டு இருக்கின்றன - சதுர்பாஹு ஸமன்விதா!


👌👌👌👌👌👌👌👌

அபிராமி அந்தாதி 

பாடல் 2

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்

பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்

கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

பாடல் 9

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்

பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

பாடல் 85

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு

ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்

தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்

வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே

பாடல் 73

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த

சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை

நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

சௌந்தரிய லஹரி 

பாடல் 7

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா

பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா

தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:

புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா


அன்னை சிறிய மணிகள் ஒலிக்கும் ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகம் போன்ற பெருத்த ஸ்தனங்களால் சற்று வளைந்தவள்;சிறிய இடையுடையவள்; சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற திருமுகமுள்ளவள்; வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை தரித்தவள்;இத்தகைய, சிவ-சக்தி ஸ்வரூபியான பரதேவதை எங்கள் எதிரில் நின்று காட்சியளிக்கட்டும். மணிபூரகச் சக்ரத்தில் தேவி எப்படி பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.

பாடல் 70


ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்

சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:

சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா


அம்மா!, ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால் பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து, உன்னுடைய நான்கு கைகளால் அவரது மீதியிருக்கும் 4 தலைகளுக்கும் ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று தன்னுடைய நான்கு முகங்களால்உனது நான்கு கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது.

Chathurbaahu - samanvithaa - Devi has four arms . Each of Her arms holds one particular item.

                                        👌👌👌👌👌👌👌👌



Comments

ravi said…

🌺He left both bags on the shore and went to take a shower.

🌺The elder went into the water. Ramdev washed the Vashti he was wearing with a stone, washed it and dried it on the shore. The older one, the harder it was to wash. Knowing this, Ramdev bought his Vashti, washed it and squeezed it in water.

🌺Then the one who spread the veil to dry, shuddered. Vashti, which was already torn, was now torn in several places. The elder does not even have an alternative Vashti.

🌺 The elder then said, 'This is the Vashti given by Anbar last year. Very torn. Beware that rinse! Now this Vashti is ruined! What will he wear after taking a bath? Do we have only one alternative?
ravi said…
🌺If you can buy a new Vashti then there is no money? Panduranga !! Ramdev lamented what to do.

🌺What? Ramadeva! Is my Vashti dry? "The elder came ashore.

🌺Great! In beating and washing your vagina, the fiber is torn. Forgive me, said Ramdev.

🌺 What to do now after hearing this? The elder worried that.

🌺Don't regret it Swami. I have brought a new vest and robe to submit to Banduragan. Get dressed for this "Ramdev took the Vashti-robe he had bought for Banduragan from his bag.

🌺 Aww !! What are you doing? ”The elder refused to buy Vashti.

🌺Great! Banduragan has many people to offer expensive garments like silk and Pitambaram. Last time I bought similar yarn vests and vests. The priest refused to wear this.
ravi said…
🌺 "Peetambaram is the beauty of Banduragan. Give the thread you brought to the beggar at the temple gate and leave," he said sarcastically. Then I donated it to an old man.

🌺I still carry the same thread yarn. Seeing this, the priest ignores Vashti as usual. Can you pay for this? The Lord is in the laughter of the poor, 'said Ramdev.

🌺After that, the elder agreed to buy Vashti.
And Ramadeva! Hands tremble as he ages. You're going to dress me up! "

🌺 Accordingly the one who tied the veil around his waist, wore the mantle over his shoulder.

🌺Aha! Now you are like that Bandaranaike. "

🌺The elder smiled softly. Then the two went to the temple wearing Tirunam on their foreheads. The elder was coming behind Ramadevan.

🌺Lonest meeting to visit Banduragana for the day. Ramdev looked back. See you great.

🌺 Searched in many places. Well .. after visiting panduragana, he came to the meeting saying 'Let's look for the elder again'.
ravi said…

🌺There. Pandurangan, the parama dayalana, was seen wearing the yarn vest and angavastra that Ramadevan had bought.

🌺 Ramadevan fainted in awe ...
God! Did you come with me as an adult? Priests who accept silk-pithambara come straight to me saying that they do not wear low-cost vestments and robes.

🌺Panduranga .... I have given you the privilege of wearing Vashti with my own hands. What is your mercy. "Ramdev fell down and worshiped Pandurangana.

🌺Pandarinath Maharaj Ki Jai.! Vittala Vittala! Jai Hari Vittala!
விட்டல விட்டல! பாண்டுரங்க விட்டல! Bandarinatha vittala!
⁇🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺 *ராமதேவா* ! *என் வேஷ்டி காய்ந்து விட்டதா?" என்று கேட்ட பெரியவர்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவ் தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான்.

🌺சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.

🌺உண்டியல் பணத்தை எண்ணினார் ராமதேவன்.
இதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும்- அங்கவஸ்திரம் மட்டும்தான் வாங்க முடியும் என வருந்தினார்.
ravi said…
🌺பிறகு மனதைத் தேற்றியபடி, நூல் வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தார்.

🌺வழியில், அழுக்கு வேஷ்டியும் கிழிந்த துண்டுமாய் பெரியவர் ஒருவர் பின்னே வந்தார்.

🌺ராமதேவிடம் அவர், "தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?" என்று கேட்டார். உடனே அவன், "விட்டலனை தரிசிக்க பண்டரிபுரம் செல்கிறேன் சாமி"என்றார் உற்சாகத்துடன்.

🌺அப்படியா! நானும் அங்குதான் செல்கிறேன். பண்டரிபுரம் செல்வதற்கு, குறுக்குப் பாதை ஒன்று உள்ளது. எனக்கு அந்த வழி தெரியும். சந்திரபாகா நதியில் குளித்து விட்டு, மாலையில் விட்டலனை தரிசிக்கலாம்" என்று ராமதேவனை அழைத்தார் பெரியவர். அவனும் சம்மதித்தான்.
ravi said…
🌺பின்னர் இருவரும் பேசிக் கொண்டே வந்ததில், களைப்பே தெரியவில்லை. பெரியவர் சொன்னபடி மாலை வேளை துவங்கும் முன்பே கோயிலுக்கு அருகில் உள்ள சந்திரபாகா நதிக்கரையை அடைந்தனர்.

🌺பண்டரிநாதனுக்கு சமர்ப்பிப்பதற்காகக் கொண்டு வந்த வஸ்திரத்தை ஒரு பையிலும், தான் குளித்து விட்டு உடுத்திக் கொள்ளும் ஆடையை வேறொரு பையிலுமாக வைத்திருந்தார் ராமதேவ்.

🌺இரண்டு பைகளையும் கரையில் வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார்.

ravi said…
🌺பெரியவரும் நீரில் இறங்கினார். தான் அணிந்திருந்த வேஷ்டியை, அங்கு இருந்த கல்லில் அடித்துத் துவைத்து, அலசி, கரையில் காய வைத்தார் ராமதேவ். பெரியவரோ, துவைப்பதற்கு சிரமப்பட்டார். இதை அறிந்த ராமதேவ், அவரது வேஷ்டியை வாங்கித் துவைத்து, நீரில் அலசிப் பிழிந்தார்.
ravi said…
🌺பிறகு வேஷ்டியை காய வைக்க விரித்தவர், அதிர்ந்து போனார். ஏற்கெனவே கிழிந்திருந்த வேஷ்டி, இப்போது பல இடங்களில் கிழிந்திருந்தது. பெரியவரிடம் மாற்று வேஷ்டி கூட இல்லை.

🌺பெரியவர் அப்போதே சொன்னார் 'கடந்த வருடம் அன்பர் ஒருவர் கொடுத்த வேஷ்டி இது. ரொம்பவே கிழிந்து விட்டது. ஜாக்கிரதையாக துவையுங்கள் என்று! இப்போது இந்த வேஷ்டி பாழாகி விட்டதே! குளித்து விட்டு எதை உடுத்துவார்? நம்மிடமும் ஒரே ஒரு மாற்று வேஷ்டிதானே உள்ளது?

🌺புதிதாக வேஷ்டி வாங்கித் தரலாம் என்றால் பணமும் இல்லையே? பாண்டுரங்கா!! என்ன செய்வது என்று புலம்பினார் ராமதேவ்.
ravi said…
🌺என்ன? ராமதேவா! என் வேஷ்டி காய்ந்து விட்டதா?" என்று கேட்டபடி கரைக்கு வந்தார் பெரியவர். இடுப்பில் துண்டு மட்டுமே உடுத்தி இருந்தார்.

🌺பெரியவரே! உங்கள் வேஷ்டியை அடித்துத் துவைத்ததில், நார்நாராகக் கிழிந்து விட்டது. என்னை மன்னியுங்கள் என்றார் ராமதேவ்.

🌺இதைக் கேட்டதும் இப்போது என்ன செய்வது? என்று கவலைப்பட்டார் பெரியவர்.

🌺வருந்த வேண்டாம் சுவாமி. பாண்டுரங்கனுக்கு சமர்ப்பிக்கப் புது வேஷ்டியும் அங்கவஸ்திரமும் எடுத்து வந்திருக்கிறேன். இதை உடுத்திக் கொள்ளுங்கள்" என்று பாண்டுரங்கனுக்காக வாங்கிய வேஷ்டி- அங்கவஸ்திரத்தைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார் ராமதேவ்.
ravi said…
🌺அடடா!! என்ன காரியம் செய்கிறாய்?" என்று வேஷ்டியை வாங்க மறுத்தார் பெரியவர்.

🌹பெரியவரே! பாண்டுரங்கனுக்கு பட்டு, பீதாம்பரம் போன்ற விலை உயர்ந்த வஸ்திரங்களை வழங்க பலர் உள்ளனர். கடந்த முறை இதேபோல், சாதாரண நூல் வேஷ்டியும், அங்கவஸ்திரமும் வாங்கி வந்தேன். இதை அணிவிக்க மறுத்து விட்டார் அர்ச்சகர்.

🌺"பாண்டுரங்கனுக்கு பட்டும் பீதாம்பரமும்தான் அழகு. நீ கொண்டு வந்த நூல் வேஷ்டியைக் கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுத்து விட்டுப் போ" என்று ஏளனமாகப் பேசினார். பிறகு வயதான ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தேன்.

🌺இப்போதும் அதேபோல் நூல் வேஷ்டி தான் எடுத்து வந்துள்ளேன். இதைப் பார்த்ததும், அந்த அர்ச்சகர் வழக்கம் போல் வேஷ்டியைப் புறக்கணிப்பார். இதற்கு உங்களுக்குக் கொடுக்கலாமே? ஏழையின் சிரிப்பில்தானே ஆண்டவன் இருக்கிறான்' என்றார் ராமதேவ்.
ravi said…
🌺அதன் பின், வேஷ்டியை வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார் பெரியவர்.
அத்துடன் ராமதேவா! வயதாகி விட்டதால் கைகள் நடுங்குகின்றன. நீயே எனக்கு அணிவித்து விடேன்!" என்றார்.

🌺அதன்படி வேஷ்டியை அவரது இடுப்பில் கட்டிவிட்டவர், அங்கவஸ்திரத்தை அவரது தோளில் அணிவித்தார்.

🌺ஆஹா! இப்போது நீங்கள், அந்த பண்டரிநாதனைப் போலவே இருக்கிறீர்கள்" என்றார்.

🌺அந்தப் பெரியவர் மெள்ள புன்னகைத்தார்.பின்னர் இருவரும் நெற்றியில் திருநாமம் தரித்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனர். ராமதேவனுக்குப் பின்னே பெரியவர் வந்து கொண்டிருந்தார்.

🌺அன்றைக்கு பாண்டுரங்கனை தரிசிக்க ஏகக் கூட்டம். ராமதேவ் திரும்பிப் பார்த்தார். பெரியவரைக் காணோம்.
ravi said…
🌺பல இடங்களிலும் தேடினார். சரி.. பாண்டுரங்கனை தரிசித்து விட்டு, 'மீண்டும் பெரியவரைத் தேடுவோம்' என்று சந்நிதிக்கு வந்தார்.

🌺அங்கே. ராமதேவன் வாங்கி வந்த நூல் வேஷ்டியையும் அங்கவஸ்திரத்தை யும் அணிந்தபடி காட்சி தந்தார் பரம தயாளனான அந்த பாண்டுரங்கன்.

🌹வியப்பில் மூர்ச்சித்து நின்றார் ராமதேவன்...
பகவானே! பெரியவராக என்னுடன் வந்தது நீதானா? பட்டு- பீதாம்பரத்தை ஏற்கும் அர்ச்சகர்கள், குறைந்த விலையில் உள்ள வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் அணிவிக்க மாட்டார்கள் என்று நேராக என்னிடமே வந்து,
ravi said…
🌺பாண்டுரங்கா.... என் கையாலேயே உனக்கு வேஷ்டி அணிவிக்கும் பாக்கியத்தையும் வழங்கி விட்டாயே . என்னே உன் கருணை." என்று பாண்டுரங்கனை விழுந்து வணங்கினார் ராமதேவ்.

🌺பண்டரிநாத் மகாராஜ் கீ ஜெய் .!விட்டல விட்டல! ஜெய் ஹரி விட்டல!
விட்டல விட்டல! பாண்டுரங்க விட்டல! பண்டரிநாத விட்டல!
🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
Jingle US said…
Ippadi artham therinju padicha marakke marakkadhu athimber Thanks for sharing this with me ungalaala enakku punniyam 🙏🏻🙏🏻
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

தூமாங்குரோ மகரகேதன பாவகஸ்ய
காமாக்ஷி நேத்ரருசி நீலிம சாதுரீ தே |
அத்யன்தமத்புதமிதம் நயனத்ரயஸ்ய
ஹர்ஷோதயம் ஜனயதே ஹரிணாங்கமௌலே: ||37||
- கடாக்ஷ சதகம்.
ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷ சோபையின் கருப்பு வர்ணமானது மன்மதனாகிற நெருப்பின் புகைக்கொடி போலிருந்தும்கூட சந்திரசேகரனான பகவானுடைய மூன்று கண்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்பது மிகவும் அற்புதமாயிருக்கிறது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
சார் மன்னிக்கவும் ‌தொந்தரவிற்கு.எனக்கு‌ உங்கள் கல்வி அறக்கட்டளையிலிருந்து 1 லட்சம் கடன் கிடைக்குமா?.ஆகஸ்ட் மாதம் 20 ந்தேதி தந்து விடுகிறேன்.college fees கட்ட.சிரமத்திற்கு மன்னிக்கவும்.இல்லை என்றாலும் பரவாயில்லை தர்மசங்கடம் பட வேண்டாம்.என் நேர்மை தாங்கள் அறிந்ததே🙏🙏🙏
ravi said…
மீண்டும் உங்களுக்கு ஒரு உதவி செய்ய வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி ... நான் எந்த அறக்கட்டளையும் வைத்துக்கொள்ள வில்லை ...

படிப்பு தேடும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள் கனவுகள் நிறைவேற ஒரு சிறு தொகையை பொருளாய் வாங்கி தருகிறேன் ...

என் அப்பாவும் இப்படி படிப்பு சம்பந்தமான உதவி என்றால் வீட்டில் மூன்று வேளை சமையலை குறைத்துக்கொண்டு உதவி செய் என்பார் ... அவர் மாதிரி நான் இல்லாவிட்டாலும் உதவி செய்வதை பெருமையாக நினைக்கிறேன்
ravi said…
ஓ அப்படியா நான் தவறுதலாக நினைத்துக் கொண்டேன் மன்னிக்கவும்.ஆகஸ்ட் நிச்சயமாக திருப்பி தந்துவிடுவேன்
ravi said…
நன்றியை தவிர வேறு எதுவும் தற்சமயம் ஏதுமில்லை.நீங்க யாருக்கும் கல்விக்காக உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் என்று சொன்னதை அறக்கட்டளை என்று நினைத்துக் கொண்டேன் 🙏🙏
Hemalatha said…
இந்த பெயர்கள் நான் கேட்டறியாதது
Hemalatha said…
இவ்வளவு ஆழமாக ஒருவரால் ராமாயணம் படிக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது
Hemalatha said…
சிந்து நதிக்காக சிந்திய வார்த்தைகள் அற்புதம்
Hemalatha said…
உங்களின் எந்த பதிவுதான் நெஞ்சை தொடவில்லை
ravi said…
ராமனும் மால்யவானும்*🙏

*மால்யவான் சொன்ன கீதை* 🪷

*மால்யவான்* - ராவணனின் தாய்வழிப்பாட்டன்.👍
ravi said…
*ராமா*

வந்தாயோ லங்கை ..

வாராயோ என்றே வழி மேல் விழி வைத்திருந்தேன் ...

என் விழி நிறைந்தவனே

ராவணன் பழி தீர்க்க கோதண்டம் எனும் தழி கொண்டு வந்தனையோ *ராமா ?*

தீயவை சரியென்றே பட்டது அவனுக்கு ...

தீ உண்டபின்னும் லங்கையில் வெந்த சவம் போல் வாழ்கிறான் .. சிவம் தனை மறந்தே ...

பாட்டன் என்றே பகிர்ந்துரைத்தேன் பாவம் இது என்றே ...

பாவம் நீ யன்றோ .. என்றே என்னை
புறங்கனித்தான்...

தோளில் சுமந்தேன் மார்பில் தவழ்ந்தான்..

நிலவை பறித்து வந்தே அமுதூட்டினேன் ...

அந்த ரம்மிய நிலவு இன்று ராமச்சந்திரனாய் வரும் என்றே கனவும் கண்டிலேன் ...

வேண்டும் நீதி வாழட்டும் தர்மம் .

பிறர் மனை நினைக்கும் மாந்தர்க்கு காலன் பதில் சொல்லட்டும்

மால்யவான் தள்ளாத வயதிலும் பொல்லாத போரில் எள்ளாக யுத்தம் புரிகிறாய் ..

உன் போல் பாட்டன் இல்லை எனக்கே ...

உன் மடி மீதே கொஞ்சம் கண் அயர கருணை புரிவாயோ ?

ராமா என் கண் மூடும் நேரமதில் இப்படி ஒரு கருணையா .. ??

என் தவம் செய்தேன் ராமா .. ??

பாம்பாக சுருண்டு போன உடம்பில்

இடமில்லா அம்புகள் அணி வகுக்க ..

அதிலே என் தாய் தந்த பால் செவ் வானம் போல் சிவந்து ஓட

சிவப்பு கம்பளம் விரிக்கிறேன் ராமா ... வா ... வா என்னருகில்

*மால்யவான்* .. வான் நிறைந்த மால் என்பர் என்னை ...

என்னிலும் உயர்ந்தோன் ஒருவன் காஞ்சியில் உண்டு ...

கருணைக்கும் காரூண்யத்திற்கும் என்றும் போட்டி அங்கே ...

என்றும் வெல்பவன் அவனே ...

வேண்டிக்கொள் தர்மம் என்றும் தரணி இதில் வாழட்டும் என்றே .... 🙏🙏🙏
Kousalya said…
ஆஹா...மால்யவான் இவ்வளவு நல்ல குணம் கொண்டவனா?? இருப்பினும் அருமை அவனின் சிவப்பு கம்பளம் ... ஜய் ஶ்ரீ ராம்...பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🌹🌹🌷🌷🙏🙏
ravi said…
யாருக்குத் தெரியும் .? என் எழுத்துக்களில் எல்லோரும் நல்லவரே 🙂
Kousalya said…
அருமை...உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்...👍👍👍😊😊
ravi said…
வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்

ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்

காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்

மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 265* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*69 கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள்*

*ஸங்கீத ஞானம்*🎼🎼🎼🎧🎧🎤🎤🎹
ravi said…
ஸங்கீதத்தில் இருக்கும் கதி, கமகம் மற்றும் கீதத்தில் நிபுணியான தாயே!,

உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகளானது

உன்னைப் பரமசிவன் விவாஹம் செய்து கொண்டபோது அவரால் கட்டப்பட்ட கண்ட ஸுத்ரத்தின் அடையாளம் போலும்.

உனது கண்டத்திலிருந்து வரும் ஸங்கீதத்திற்கு ஆதாரமான மூன்று ஸ்ருதிகளுடைய லக்ஷ்ணங்களை காட்டும் எல்லையைப் போன்று விளங்குகிறது.🙏🙏🙏
ravi said…
ஸங்கீத ஞானம்

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே

விவாஹ வ்யாநத்த ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ

விராஜந்தே நானாவித மதுர ராகாகர புவாம்

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமான இவ தே 69
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 265* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*❖ 89 மூல கூடத்ரய கலேவரா* =

மூல மந்திரத்தை (பஞ்ச தசாக்ஷரி மந்திரம்) தனது சூக்ஷ்ம உடலின் முப்பகுதிகளாக கொண்டுவள்...
ravi said…
*வாக்பவ கூடம்*

பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் முதல் ஐந்து எழுத்துக்களை கொண்டுள்ளது.

‘ *வாக்* ’ என்பதை சமஸ்க்ருதத்தில் *வாச* என்று பொருள் கொள்ளலாம்.

*வாச* என்றால் பகருதல் அதாவது வார்த்தைப் ப்ரயோகங்களை குறிக்கும்.

பஞ்ச தசாக்ஷரி மந்திரம் பதினைந்து எழுத்துக்களின் கூட்டு.

அதை மூன்று கூடங்களாக பிரித்து தனது சூஷ்ம உடலின் வடிவமாக ப்ரதிபலிக்கிறாள்.

இம்மந்திரம் முறையான குரு தீக்ஷை பெற்று தியானத்தல் சிறப்பு. உள்முகமான பஞ்ச தசாக்ஷரி மந்திரத்துடன் " *ஸ்ரீம்* " என்ற பதினாறவது எழுத்தும் சேர்த்தால் *ஷோடசியாகி* , பார்வைக்கும் புத்திக்கும் புலப்பட்டு வெளிமுகமாகிறது.

*பஞ்ச தசாக்ஷரி* என்ற பதினைந்து அக்ஷர மந்திரம் மூன்று முகடுகளாக பிரித்து விளங்குகிறது.

க – ஏ – ஈ – ல – ஹ்ரீம் ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம் ஸ – க – ல – ஹ்ரீம்
ravi said…
மூன்று கூடங்கள் மூன்று முகட்டின் இருப்பிடமாக அல்லது பிரிவுகளாக உணரப்படுகிறது.

இம் மூன்று பிரிவுகள் வெவ்வேறு புரிதலின் அடிப்படையிலும் அறிய முற்படலாம்.🙏🙏🙏
ravi said…
வற்றி விடும் வாழ்வு தனில் என்றும் வற்றாத ஜீவ நதியன்றோ நீயன்றோ ....

எட்டாத உச்சம் தனை எட்டிப்பிடித்தே பூமியில் எங்களை கட்டி போட்டு விடுகிறாய் ...

வட்டி போட்டு தந்தாலும் உன் பாசம் எனும் முதலை திருப்பித் தர இயலுமோ ?

பட்டி தொட்டியெல்லாம் பரந்தாமன் புகழ் பரப்பி பஜகோவிந்தம் பாடுகிறாய் ...

நிஜ கோவிந்தன் நீ இருக்க

கஜ கோவிந்தன் அருள் இருக்க

அயிராவதம் என அன்னை அணைத்து க்கொள்ள

என்ன குறை உண்டு என்று சொல்லுவோம் ...?

குறை ஒன்றும் இல்லை

கோபுரம் மேல் நின்றே சத்தியம் செய்திடுவேன் ...
சடுதியில் நீ துணை வேளை தனில் 💐💐💐
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 43*
ravi said…
दिवि वा भुवि वा ममास्तु वासो
नरके वा नरकान्तक प्रकामम् ।
अवधीरितशारदारविन्दौ
चरणौ ते मरणेऽपि चिन्तयामि ॥ ८ ॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥ 8 ॥
ravi said…
அப்படி பக்தி பண்ணும்போது ‘இதுனால materiel ஆகவோ spiritual ஆகவோ நான் முன்னேறிண்டு இருக்கேனா’ ன்னு பார்க்க வேண்டாம்.

எனக்கு பக்தி பண்ணதுனால மோக்ஷம் வேணும்னு நினைக்கறது கூட frustration வரும்.

குருவை தியானம் பண்ணிண்டு இருந்தா அதுல கிடைக்கற சந்தோஷத்தை விட ‘நான் குருவாவே ஆகணும்’ அப்படீன்னு நினைச்சு ‘அவர் மாதிரி நான் இல்லையே, எனக்கு ரொம்ப குறைபாடுகள் இருக்கே’ அப்படீன்னு வருந்திண்டே இருந்தா என்ன பிரயோஜனம்?

‘குருவோட மஹிமை அபாரம்.

அதை நினைச்சு நினைச்சு நாம சந்தோஷப் படலாம். மத்ததை அவர் பார்த்துப்பார்’ னு வெச்சுண்டா இருக்கிற காலம் ஆனந்தமா இருக்கும்.

அந்த மாதிரி கிருஷ்ண பக்தி, ராமாயணம், அப்படி எந்த பஜனத்தில் நம்ம மனசு ரமிச்சுண்டு இருக்க முடியுமோ அதைப் பண்ணினா குறையே இருக்காது.

பக்தி பண்ணி குறைபடாம இருக்கலாம்.

அதைத் தான் குலசேகர கவி சொல்றார்.

நாளைக்கு அடுத்த இரண்டு ஸ்லோகம் பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….
கோவிந்தா கோவிந்தா🦚🦚🦚
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மரகத லிங்கத்தின் சிறப்புகள் :*

மரகதலிங்கம் ஒருவகை சிவலிங்கம். நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும்.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விஷயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவசக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது. சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே.*

கண்ணதாசனின் 'மேகவர்ண' சந்தேகத்துக்கு பெரியாவாளின் செயல்முறை விளக்கம்

மகா பெரியவாளை தரிசிக்கச் சென்ற கண்ணதாசன் பெரியவாளிடம், "ஸ்வாமி, பகவான் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருப் பதாகச் சொல்கிறார்கள் பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத் தானே இருக்க வேண்டும்?ஆனால்,பாற்கடல் மேக வர்ணமாக அல்லவா காட்சி தருகிறது" என்று கேட்டார். அவருடைய கேள்வியில் சற்றே குதர்க்கம் இருப்பதாகச் சுற்றிலும் இருந்தவர்கள் நினைத்தனர்.

ravi said…
ஆனால் கண்ணதாசன் கேட்டதற்கு மகா பெரியவா பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகவே புன்னகைத்தார். அன்றைக்கு மதியம் கண்ணதாசன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்றும், அதுவரை கண்ணதாசன் காத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவாகியது.

அன்று பிற்பகல் உம்மிடி செட்டியார், மகா பெரியவாளை தரிசிப்பதற்கு வந்தார்.மகா பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த உம்மிடியார், தான் கொண்டு வந்திருந்த பெரிய மரகதக்கல்லை பெரியவாளுக்குச் சமர்ப்பித்து, ஏற்றுக் கொள்ளு மாறு பிரார்த்தித்துக் கொண்டார்.

ravi said…
மகா பெரியவா பதில் ஒன்றும் சொல்லாமல், மடத்துச் சிப்பந்தியிடம் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வருமாறு பணித்தார்.பால் வந்ததும் உம்மிடியார் கொடுத்த மரகதக்கல்லை அந்தப் பாலில் போடுமாறு செய்தார். அதைப் பார்த்த உம்மிடியார், தான் கொடுத்த மரகதத்தின் தரத்தைதான் அப்படிச் சோதித்துப் பார்க்கிறாரோ என்று நினைத்தார்.மரகதத்தின் தரத்தை அப்படிப் பாலில் போட்டுச் சோதித்துப் பார்ப்பது வியாபார ரகசியம். மகா பெரியவாளுக்கு எப்படித் தெரிய வந்தது என்ற வியப்பும் உம்மிடியாருக்கு ஏற்படவே செய்தது.

மகா பெரியவா தம்முடைய அத்யந்த பக்தரான உம்மிடியாரை சந்தேகிப்பாரா என்ன? அவர் அப்படிச் செய்ததற்குக் காரணமே வேறு.மரகதக் கல்லை பாலில் போடச் செய்த மகா பெரியவா, கண்ணதாசனை அழைத்து மரகதக்கல் போடப்பட்டிருந்த பாலை பார்க்குமாறு கூறினார்

ravi said…
கண்ணதாசன் அந்தப் பாத்திரத்தைப் பார்த்தார். பாத்திரத்தில் இருந்த பால் பச்சை நிறத்துக்கு மாறி இருந்தது மரகதக் கல்லின் நிறம் பாலில் பிரதிபலித்தது. இதழ்களில் குறுநகை தவழ கண்ணதாசனைப் பார்த்த மகா பெரியவா,

"மரகதப் பச்சை பாலோட நிறத்தை எப்படிப் பச்சையா மாத்திடுச்சு பார்த்தியோ? அப்படித்தான் மேகவர்ணம் கொண்ட மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டதும், அவருடைய நிறமே பாற்கடலில் பிரதிபலிக்குது. அதனால்தான் பாற்கடல் மேகவர்ணத்துல தெரியறது" என்றார்.

மகா பெரியவாளின் செயல்முறை விளக்கம் கண்ணதாசனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவருடைய மனதில் தெளிவும் ஏற்பட்டது.அந்த சம்பவத்தை வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல்தான், 'திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே..' என்ற பாடல்.

பின்னர்,உம்மிடியாரிடம் திரும்பிய மகா பெரியவா, அவர் தமக்குச் சமர்ப்பித்த மரகதக் கல்லை வரதராஜ பெருமாள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்குமாறு பணித்து அவருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

*_Sri Mahaperiyava Saranam_*
ravi said…
*மயில் விருத்தம்* 20 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
நிராசத விராசத வரோதய பராபரன்
நிராகுலன் நிராமய பிரான்

நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி
நிலாவிய உலாச இதயன்

குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல்
குராநிழல் பராவு தணிகைக்

குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்

புலோமசை சலாமிடு பலாசன வலாரி புக
லாகும் அயி லாயுதன் நெடும்

தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வல
சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரி இத படா திகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.
ravi said…
நிராமய

இறைவன் தன்னுடைய சொந்த நிலையில் குணமற்றவனாக இருந்தாலும்
அடியார்களுக்காக 'அர்ச்சாவதாரம்' எடுக்கும் பொழுது
'எண்குணபஞ்சர'னாக பல அருட் குணங்களை ஏற்றுக்கொள்கிறான்.

புலோமசை

முருகப்பெருமானின் அவதார நோக்கங்கள் பலவற்றுள்
முக்கியமானதொன்று இந்திராணியின் திருமாங்கல்யத்தை காத்து,
இந்திரலோகத்தை வாழ்விப்பது. இச்செய்தியை முதல் மயில் விருத்தத்தில்,

இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண

... என அழகு பட முருகனை விளிக்கிறார்
ravi said…
சிவானந்த லஹரீ*
*பதிவு 265*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்
ravi said…
किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
ஹே பசுபதே! உன்னுடைய சாகஸத்தை ‘ *கிம் ப்³ரூமஹே* ’ – எப்படி சொல்ல முடியும்?

உன்னுடைய தைர்யத்தை எப்படின்னு சொல்றதுங்கிறார்.

அந்த மாதிரி தைரியம் யாருக்கு இருக்கு? உன்னுடைய தைரியம், உன்னுடைய சாகஸம் யாருக்குமே இல்லை🪷🪷🪷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 264* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : *ஹிரண்யகர்ப்போ* பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8

*71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)*
ravi said…
ஒருநாள் கருடன் குபேரனின் தோட்டத்திலிருந்த பொய்கையில் வாழும் ஒரு பாம்பை வேட்டையாட வந்தார்.

அவரது சிறகுகளின் அசைவினால் வீசிய பெருங்காற்றில் குபேரனின் தோட்டத்திலுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அம்மரங்களின் இலைகள், மலர்கள் எல்லாம் நாலா திசையிலும் பறந்து சிதறி விழுந்தன.

அர்ஷ்டிஷேணரின் ஆசிரம வாசலிலும் பலவித வண்ணப் பூக்கள் வந்து விழுந்தன.

அவற்றின் அழகாலும் நறுமணத்தாலும் ஈர்க்கப்பட்ட திரௌபதி பீமனிடம், “இது போன்ற பூக்கள் எனக்கு வேண்டும்!” என்று கேட்டாள்.🪷🪷🪷
ravi said…
*நல்வழி : 30*

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி

*பொருள்*

ஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மனிதர்களே ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்? , ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.

*இனிய காலை வணக்கம்.வாழ்க வளமுடன். 26/06/2022*
🌹🪷🌻🌷🌺🌷🌻🪷🌹
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மரகத லிங்கத்தின் சிறப்புகள் :*

மரகதலிங்கம் ஒருவகை சிவலிங்கம். நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும்.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விஷயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவசக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது. சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.
கர்நாடக இசையில் கரை கண்டவரான கே.வி. மகாதேவன் மகனோ அம்மா தரும் பணத்தில் மேல் நாட்டு ஹிப்பிகளு டன் பழகி ஊர் ஊராய் சுற்றுகிறார்.
ravi said…



கே.வி.மகாதேவனுக்கு இசையில் இடையறாத பணி இருந்ததால், தன் கவலையை அதில் மறக்க, திருமதி லீலா மகாதேவனோ பிள்ளைப் பாசத்தில் அனலில் இட்ட மெழுகாகிறார். காரணம், இவர்களின் பிள்ளை இவர்களைப் பிரிந்து, ஒரு நாள் ஹிப்பிகளுடன் எங்கோ சென்று விட்டது தான். அப்போது அவருக்கு ஆறுதலும், தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர். (அவர் யாரென்று பின்னால் தெரியும்)
"காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே, 'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு #வாலி உதவுவார்!" என்றும் சொன்னார். மறுநாளே வீட்டுக்கு வந்த கவிஞர் வாலியிடம், திருமதி கே.வி.எம். அவர்கள் விஷயத்தைச் சொல்ல, அப்பிடியா,அதுக்கென்ன! கரும்பு தின்ன கசக்குமா, நானும் பெரியவரை பார்த்து ரொம்ப நாளாச்சு. நீங்களும் மாமாவும் நாளைக்கே என்னோட வாங்க. என் காரிலேயே போயிட்டு வந்துடலாம் என்றார் அவர். திருமதி கே.வி.மகாதேவனுக்கு இப்போது வேறு ஒரு சந்தேகம். அவர் அருகில் தம்மை மடத்தில் அனுமதிப்பார்களா என்பது தான்,
ravi said…
ஏனென்றால் அவர் கே.வி.எம்மை காதலித்து மணம் புரிந்து கொண்டவர். அந்தண வகுப்பினர் அல்ல. மடத்தை ஆளும் அந்த மாமுனி, ஜாதி மத பேதம் எனும் மடத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று பதில் சொல்கிறார் வாலி. மறுநாள், தேனம்பாக்கத் தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள் எல்லோரும். மகா பெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றை யும் சொன்னார்கள். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், திருமதி கே.வி.எம். அவர்களை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு, உள்ளே சென்று விட்டார். மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே, ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு
திரும்பினார்கள் அவர்கள்
ravi said…
ஏனென்றால் அவர் கே.வி.எம்மை காதலித்து மணம் புரிந்து கொண்டவர். அந்தண வகுப்பினர் அல்ல. மடத்தை ஆளும் அந்த மாமுனி, ஜாதி மத பேதம் எனும் மடத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று பதில் சொல்கிறார் வாலி. மறுநாள், தேனம்பாக்கத் தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள் எல்லோரும். மகா பெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றை யும் சொன்னார்கள். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், திருமதி கே.வி.எம். அவர்களை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு, உள்ளே சென்று விட்டார். மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே, ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு
திரும்பினார்கள் அவர்கள்
ravi said…
வழியில் வாலி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். "அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்துவிடும். கவலைப்படாமல் வாருங்கள்" என்றார். அவர்கள் வீட்டை நெருங்கிய போது கிட்டத்தட்ட நள்ளிரவு. வீட்டின் வாசலில் இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது. அழுக்கு உடை, பரதேசிக் கோலம் என்று நிழலாகத் தெரிந்தது. ஹிப்பிக ளோடு சேர்ந்து விட்ட தங்கள் மகனும் இப்படித்தானே இருப்பான். ஒருவேளை அவன்தான் மனம் மாறி திரும்பி வந்திருப்பா னோ. மனதுக்குள் பதைபதைப்போடு காரில் இருந்து இறங்கி அவனை நெருங்கிய திருமதி கே.வி.எம். அப்படியே சிலிர்த்துப் போனார். ஆமாம் அவர்கள் மகன்தான் திரும்ப வந்திருந்தான். கண்களில் நீர் தளும்ப மகனை அணைத்துக் கொண்டு தேம்பினார் தாய். "இன்னிக்கு காலைல ஒரு பத்து பதினொரு மணி இருக்கும். அப்போதுல இருந்தே, 'இந்த ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது. உடனே வீட்டுக்குத் திரும்பிட ணும்'னு மனசுக்கு உள்ளே கட்டளை மாதிரி ஒரு குரல் கேட்டுண்டே இருந்தது. நானும் யோசிச்சேன். அது சொல்றதுதான் சரின்னு தோணித்து. அதனால திரும்பி வந்துட்டேன்" என்று சொன்னான் அவர்களின் மகன். மகன் தனக்குள் கேட்டதாகச் சொல்லும் அந்தக் குரல், காஞ்சி மகானின் குரல்.
ravi said…
இல்லை இல்லை அந்தக் கடவுளின் குரல் என்றே தோன்றியது, திருமதி கே.வி.எம். அவர்களுக்கு. அங்கேயே நின்று உரக்கச் சொல்லத் தொடங்கினார், 'ஜயஜய சங்கர ஹரஹர சங்கர’ உடனே மக்கள் திலகம் #எம்ஜிஆருக்கு ஃபோன் செய்த அந்தஅம்மையார், நா தழுதழுக்க தன் நன்றியை நவில்கிறார். உங்களால எனக்கு என் புள்ளை கெடைச்சுட்டான். இப்போது வாலியிடம் சொல்கிறார். அந்த மஹா பெரியவரை உங்கள் மூலம் தரிசிக்க சொன்னதே இந்தப் பரங்கி மலையார் தான்
ravi said…
இதில் இன்னொரு முக்கிய விஷயம். பின் ஒரு நாளில் வாலி, இது பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்க, அய்யா நானே உங்களிடம் சொல்லி யிருந்தால் நீங்கள் கட்டாயப்படுத்தி அவர்களைக் கூட்டிச் சென்றிருப்பீர்கள். அது தவறு. அவர்களுக்கே அதில் நம்பிக்கை இருந்து உங்கள் மூலம் தரிசிக்க வேண்டும். அதனால் தான் நான் உங்களிடம் நேரிடையாகச் சொல்லவில்லை. எம்.ஜி.ஆரின் விளக்கத்தில் மலைக்கிறார் வாலி!
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது
எம்.ஜி.ஆர் செய்தது இதற்கு அருமையான பொருள்.

जय जय शङ्कर हर हर शङ्कर 🙏
ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர 🙏
Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
ravi said…
*#ஸ்ரீராமானுஜரின்_வரலாற்றுமகிமை_பகுதி_5*

ராமானுஜருக்கு உள்ளுக்குள் சற்று நடுக்கம். ஏனெனில், எதிரே நின்றவரின் தோற்றம் அப்படி. ஆனால், அவரோடு ஒரு பெண்ணும் நின்றாள். வேடர்குல பெண்மணி. கண்ட நகைகளையும் உடலில் வாரி இறைத்திருந்தாள். ஆனால், முகத்தில் மட்டும் லட்சுமி களை. லட்சணமாக இருந்தாள். குரல் மட்டும் என்னவோ போல் இருந்தது.
ravi said…
குழந்தே! இந்த காட்டுக்குள்ளே எப்படி வந்தே? இங்கே திருட்டு பயம் அதிகமாச்சே! நீ யாரு? எங்கே போய்கிட்டு இருக்கே, உன்னைப் பார்த்தா பிராமணர் போல் தெரியுதே, என்றாள் அப்பெண்மணி. மீசைக்காரரும் அவரிடம் இதையே திருப்பிக்கேட்டார். வரை ஆசுவாசமாக தடவிக் கொடுத்தார். ராமானுஜர் வேறெதுவும் சொல்லவில்லை.

ஆனால், தான் காஞ்சிபுரம் போவதை மட்டும் கூறினார்.நல்லது...நல்லது...நாங்க இந்த விந்தியமலை அடிவாரத்தில் தான் வசிப்பவங்க தான். வயசும் ஆயிடுச்சு. எம்பெருமான் திருவடியை நல்லபடியா அடைய காஞ்சிபுரம் வழியாத்தான் ராமேஸ்வரம் யாத்திரை போறோம். எங்களோட வந்தா உன்னை காஞ்சிபுரத்திலே விட்டுட்டு கிளம்புறோம், என்றார் வேடன்.
ravi said…
ராமானுஜருக்கு மகிழ்ச்சி. நம்மை பாதுகாப்பாக காஞ்சியில் விட்டுச் செல்ல எம்பெருமானே இவர்களை அனுப்பியிருக்கிறார் போலும் என எண்ணியவராய் அவர்களுடன் புறப்பட்டார். இதற்குள் மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. தம்பி! கொஞ்சம் வேகமா நடந்தா இருட்டுறதுக்குள் பக்கத்தில் இருக்கிற ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்திடலாம். அங்கேயிருந்து காலையிலே புறப்படுவோம், என்றார் கடாமீசைக்காரர்.

அவர்கள் கிளம்பினர். ஆற்றங்கரையும் வந்தது. குளிர் அதிகமாக இருந்ததால் சுள்ளிகளைப் பொறுக்கி வந்து வேடன் தீ மூட்டினார். நடந்த களைப்பில் அப்பெண்ணுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. இருளில் ஆற்றில் இறங்குவது அபாயம். எனக்கு தண்ணீர் வேண்டுமே, என்றாள். அவர், பேசாம படு. இந்த பக்கத்துலே ஒரு கிணறு இருக்கு. காலையில் அங்கே போய் தண்ணீர் குடிச்சுக்கலாம், என்றார். எப்படியோ அவர்கள் உறங்கி விட்டனர்.
ravi said…
மறுநாள் வேடன் குறிப்பிட்ட கிணற்றின் பக்கமாகச் சென்றார் ராமானுஜர். படிக்கட்டின் வழியாக உள்ளே இறங்கினார். கை, கால்களை அலம்பி விட்டு, ஒரு குடுவையில் தண்ணீர் மொண்டு வந்தார். வேடன் மனைவிக்கு கொடுத்தார். அவளுக்கு தாகம் அடங்கவில்லை. திரும்பவும் கொண்டு வந்து கொடுத்தார். இப்போதும் தாகம் அடங்கியபாடில்லை. மீண்டும் கொண்டு வந்து கொடுத்தார்.

தம்பி! இன்னும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாயேன், என்றாள். ராமானுஜர் மீண்டும் தண்ணீர் எடுத்து வந்தார். வேடனையும், அவர் மனைவியையும் எங்கே? அவர்களைக் காணவில்லை. சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தார். பக்கத்தில் அவர்கள் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. இடமே வித்தியாசமாக தெரிந்தது. தெருக்கள், மாடமாளிகைகள் தெரிந்தன. ஒரு பெரியவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம், ஐயா! இது எந்த ஊர்? என்றார் ராமானுஜர்.
ravi said…
ஓய்! சரியான ஆளைய்யா நீர். உம்முடைய ஊரையே யாருடைய ஊர் என்று கேட்கிறீர். உம்மை யாதவப்பிரகாசரின் மாணவர் என்று இந்த ஊரே சொல்லும். சரியான ஆள் தான். காஞ்சிபுரத்திற்குள் நின்றுகொண்டு காஞ்சிபுரம் அடையாளம் தெரியாமல் பேசுகிறீர். இது சாலக்கிணறு என்பதை நீர் அறியமாட்டீரோ?, என்றவாறு, ராமானுஜரின் விளக்கத்திற்கு காத்துக் கொண்டிராமல் அவர் போய்க் கொண்டே இருந்தார்.
ravi said…
ராமானுஜருக்கு ஆச்சரியம். ஆ... நேற்று விந்தியமலைச் சாரலில். இன்று காஞ்சி நகரில். இது எப்படி சாத்தியம்? அப்படியானால், என்னோடு வந்த அந்த தம்பதியர் ஸ்ரீமன் நாராயணனும், தாயார் லட்சுமிதேவியுமா? அவர்களால் மட்டும் தானே இது சாத்தியமாகும்? அந்த நபர் சொன்னது உண்மை தானா? அவரது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில், தூரத்தில் காஞ்சிபுரத்து பெண்கள் சிலர் குடத்துடன் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வந்தனர்.

ராமானுஜர் அப்படியே பரவசித்துவிட்டார். ஸ்ரீமன் நாராயணனை துதித்தார். லோகநாயகா! உலக மக்களுக்கு இது போன்ற சோதனைகள் வந்து கொண்டே இருக்கட்டும். அப்படியானால் தான் உன் தரிசனம் அடிக்கடி கிடைக்கும். பிறவியென்ற தொல்லை நீங்கும், என்று மனதாரச் சொன்னார். இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ravi said…
ஏ இறைவா! எனக்கு பணத்தை தா, சுகத்தை தா, வீடு வாசலைத்தா, அழகான மனைவியைத் தா, அந்த ஆணழகனை என் கணவனாக்கு, என்றெல்லாம் வேண்டினால், இறைவன் வரவும் மாட்டான். நாம் கேட்டதை தரவும் மாட்டான். ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியை அனுபவிக்கவே பூலோகம் வந்துள்ளோம். அவன் தரும் துன்பத்தை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டால் இறைக்காட்சி நிச்சயம் கிடைக்கும். அப்படியே நடந்து வீட்டுக்கு வந்து விட்டார் ராமானுஜர்.

*#ஸ்ரீமதே_ராமானுஜாய_நமஹ*
ravi said…
ஆயில்ய நட்சத்திரம் அதில் விளைந்தது ஆயிரம் ஆச்சரியம் ...

அண்டங்கள் சொக்க வந்தாள் அன்னை கமலவல்லி...

அழகுக்கு அடிசுவடு கற்றுத் தந்தவள் ..

பசித்து புசி தேடி வருவோருக்கு அன்னமும்

பறந்து செல்லும் அன்னத்திற்கு நடையும்

மயிலுக்கு தோகையும்

குயிலுக்கு குரலும்

மானுக்கு மிரளும்

மீனுக்கு ஓடும் நதியும்

முக்திக்கு வித்தும் வித்தாய் முளைந்தெழுந்த புத்தியும்

புத்தியில் புரக்கும் புரத்தையும்

தந்தவள் அன்றோ இந்த நாச்சி ...

அன்பை பாய்ச்சி அருளமுதம் தருபவளே

அடி பணிந்தேன் உன் மடிதனில் தவழவே

அழகிய மணவாளர் தன் கனங்குழையே... அவன் மடி இறங்கி வாராயோ என்னை மடிதனில் சுமக்கவே
கௌசல்யா said…
நதிகளின் வர்ணனை அருமை . என்றுமே வற்றாதவள் 👏👏👍👍
Kousalya said…
ஆஹா..கமலவல்லியின் மேன்மைகளை அருமையாய் அடுக்கிவிட்டீர்கள்... அற்புதம்...🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

என் அபிப்பிராயம், அநேக சரித்திர உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும், local culture, local custom [பிரதேச பண்பாடு, பிரதேச வழக்குகள்] முதலியவற்றைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஸ்தல புராணங்கள்தான் ரொம்பவும் உதவும் என்பது. இவற்றை நன்றாக ஒன்றோடொன்று சேர்த்து ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தால், பதினெட்டு மஹாபுராணங்களை விடவும் உபபுராணங்களை விடவும், இதிஹாஸங்களை விடவும் நம்முடைய சரித்திரம், பண்பாடு முதலியவற்றை அறிய இவை உதவும் என்று தோன்றுகிறது. இவை ஒன்றுக்கொன்று விஷயங்களை ஸப்ளிமென்ட் செய்து கொண்டு (கூட்டிக் கொண்டு) போவது மட்டுமின்றி மஹாபுராணக் கதைகளிலுங்கூட விட்டுப் போனதைப் பூர்த்தி பண்ணுகின்றன. ‘ஹிஸ்டரி’ (சரித்திரம்) சரியானபடி தெரிய ஸ்தல ஐதிஹ்யங்களும் புராணங்களும் நிரம்ப உதவும்.

உதாரணமாக, இப்போது படிப்பாளிகளில் பலருக்கு அத்வைதியான பகவத்பாதாள் அநேக க்ஷேத்ரங்களுக்குப் போய் ஆலய பூஜா க்ரமங்களை சரிப்படுத்திக் கொடுத்தார் என்று சொன்னால் நம்பிக்கைப் பட மாட்டேன் என்கிறது. ‘அவர் ஞான மார்க்கத்தைத்தான் சிலாகித்துச் சொன்னார். அதனால் இந்த பக்தி வழிபாடுகள், ஆலய ஆகம ஸமாசாரங்கள் ஆகியவற்றில் அவர் பிரவேசித்திருக்க மாட்டார்’ என்கிறார்கள். ஆனால் அவர் புதுக் களை ஊட்டினதாக க்ஷேத்ர ஐதிஹ்யங்களின்படி சொல்லப்படும் ஸ்தலங்களை (ஒன்றுக்கொன்று ஆயிரம், இரண்டாயிரம் மைல் தள்ளியிருப்பவைகளை) போய்ப் பார்த்தால் அவற்றுக்கு ஆசார்யாளின் ஸம்பந்தமிருப்பது அழுத்தமாகத் தெரிகிறது. வடக்கே ஹிமாசலத்துக்கு நடுவில் உள்ள பத்ரிநாத்துக்குப் போனால் அங்கே ‘ராவல்’ என்று பூஜை பண்ணுகிறவர் கேரளத்து நம்பூதிரியாக இருக்கிறார்! இங்கே இந்த சென்ன பட்டணத்திலேயே திருவொற்றியூரில் திரிபுரஸுந்தரி அம்மனுக்குப் பூஜை பண்ணுவது யார் என்று பார்த்தால் இதுவும் ஒரு நம்பூதிரி பிராம்மணர்தான்! ஆசார்யாள் நம்பூதிரிப் பிராமணர்தான் என்றும் அவர் புதிதாக ஜீவ களையூட்டிய பல ஸ்தலங்களில் நம்பூதிரிகளையே பூஜகர்களாக வைத்தார் என்றும் கர்ண பரம்பரையாகச் சொல்லி வருவதற்கு இப்படி பிரத்யக்ஷ ஸாக்ஷியம் இருக்கிறது.

தர்மோபதேசத்திலும் இந்த ஸ்தல புராணங்கள் மஹா புராணங்களுக்குப் பின்தங்கி விடவில்லை. சின்ன சின்ன தர்ம நுணுக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ள ஆயிரக் கணக்கான ஸ்தல புராணங்களில்தான் பளிச்சென்று போதிக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது படிப்பாளிகளில் மத நம்பிக்கை உள்ளவர்களுங்கூட ஸ்தல புராணம் என்பதை ரொம்பவும் மட்டம் தட்டினாலும், தமிழ் தேசத்தில் ஸமீப காலம் வரையில் அதற்குப் பண்டிதர்களிடையே நிரம்ப கௌரவம் இருந்திருக்கிறது. அதனால்தான் அநேக ரிஷிகளின் பெயரிலுள்ள புராணங்களைப் பின்பற்றித் தமிழிலும் மஹா பண்டிதர்களாக, பெரியவர்களாக இருந்த அநேகர் ஸ்தல புராணங்களை இயற்றியிருக்கிறார்கள். ஸ்தலபுராணம், மான்மியம், கலம்பகம், உலா என்றெல்லாம் அநேக க்ஷேத்ரங்களின் மகிமையைச் சொல்கிற சிறந்த தமிழ் நூல்கள் இருக்கின்றன. (மஹிமை வாய்ந்தது ‘மாஹாத்மியம்’. அதைத் தமிழில் ‘மான்மியம்’ என்பார்கள்.) சங்ககாலம், தேவார-திவ்யப்பிரபந்த காலம், கம்பர்-ஒட்டக்கூத்தர் முதலானவர்களின் காவிய காலம் என்றெல்லாம் தமிழிலக்கியத்தைக் காலவாரியாகப் பாகுபடுத்தும்போது 16-ம் நூற்றாண்டைத் தலபுராண காலம் என்றே புலவர்கள் சொல்கிறார்கள். பதிநாலாம் நூற்றாண்டிலேயே உமாபதி சிவாசாரியார் எழுதிய சிதம்பர மாகாத்மியமான ‘கோயிற்புராணம்’தான் முன்னோடி என்கிறார்கள். கமலை ஞானப் பிரகாசரையும் சைவ எல்லப்ப நாவலரையும் முக்யமான புராணகர்த்தாக்களாகச் சொல்கிறார்கள். கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாசாரியார், திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர், சைவ சமயாச்சாரியார்களின் ஒரு முக்யஸ்தரான உமாபதி சிவாசாரியார், சிவப்பிரகாச ஸ்வாமிகள், இரட்டைப் புலவர்கள், அந்தகக் கவி வீரராகவ முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், திரிகூட ராசப்பக் கவிராயர் முதலான, நிரம்ப யோக்யதை வாய்ந்தவர்களெல்லாம் ஸ்தல புராணம் செய்திருப்பதிலிருந்து அதற்கு இருந்த பெருமை தெரிகிறது. உ.வே. ஸ்வாமிநாதய்யருடைய குருவான மஹாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை ஸமீபத்தில் அநேக க்ஷேத்ரங்களுக்கு ஸ்தல புராணம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதனால் தமிழின் சமயத்துறையிலும், இலக்கியத் துறையிலும் ‘தலபுராணம்’ என்பதற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று தெரிகிறது.

பெரிய சம்ஸ்கிருத சாஸ்திர பண்டிதரான கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் தமிழில் ‘வேதாரண்ய மாஹாத்மியம்’ எழுதியிருக்கிறார்.

ஸ்தல புராணம் பிரசாரம் ஆவதற்குத் தமிழ் தேசத்தில் ராஜாங்கமே ஆதரவுதந்து, உத்ஸாஹப்படுத்தியிருக்கிறது. 450 வருஷத்துக்கு முந்தி தஞ்சாவூரில் நாயக ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்த மந்திரி கோவிந்த தீக்ஷிதரின் விருப்பப்படியே, ஸம்ஸ்கிருதத்திலிருந்த பஞ்சநத (திருவையாறு) க்ஷேத்ர புராணத்தைத் தாம் தமிழில் பண்ணினதாக மொழி பெயர்ப்பாசிரியர் சொல்லியிருக்கிறார்.*
ravi said…
🌹🌺 *பரந்தாமா* .... *நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டிய பக்தன்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹 ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒருநிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான்.

🌺பரந்தாமா.... நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, தனக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான்.

🌺அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார்.

🌺ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி! இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள்.

🌺“இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை யார் அனுபவிப்பது?” என்று கேட்டார் திருமால்.

🌺அதற்கு மகாலட்சுமி, “இவன் ஏழு பிறவிகள் மீனாய்ப் பிறப்பதற்குப் பதிலாக நீங்களே ஒரு பெரிய மீனாக ஒரு அவதாரம் எடுத்து விட்டால், இவனது பாபத்துக்கான தண்டனை நிறைவேறி விடும். எனவே தாமதிக்காமல் இப்போதே இவனுக்கு முக்தியளியுங்கள்!” என்று தாய்ப்பாசத்தோடு கூறினாள்.

🌺அதனால் திருமால் மத்ஸ்யாவதாரம் எடுத்து அந்த பக்தனின் பாபங்களைத் தீர்த்தார். அந்த பக்தனும் விரைவில் முக்தியடைந்தான்.

🌺இவ்வாறு பக்தர்களின் பாபங்களைக் போக்குவதற்காகத் திருமாலையே மிருக வடிவங்களில் அவதரிக்க வைக்கிறாள் மகாலட்சுமி என்று புதிய கோணத்தில் விளக்கம் அளித்தார் வேதாந்த தேசிகன்.

🌺 பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.

🌺இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்? அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.

🌺 *ௐ “உதாரதியே நமஹ* ” 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*
ravi said…
🌹🌺 *பரந்தாமா* .... *நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டிய பக்தன்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹 ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒருநிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான்.

🌺பரந்தாமா.... நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, தனக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான்.

🌺அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார்.

🌺ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி! இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள்.

🌺“இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை யார் அனுபவிப்பது?” என்று கேட்டார் திருமால்.

🌺அதற்கு மகாலட்சுமி, “இவன் ஏழு பிறவிகள் மீனாய்ப் பிறப்பதற்குப் பதிலாக நீங்களே ஒரு பெரிய மீனாக ஒரு அவதாரம் எடுத்து விட்டால், இவனது பாபத்துக்கான தண்டனை நிறைவேறி விடும். எனவே தாமதிக்காமல் இப்போதே இவனுக்கு முக்தியளியுங்கள்!” என்று தாய்ப்பாசத்தோடு கூறினாள்.

🌺அதனால் திருமால் மத்ஸ்யாவதாரம் எடுத்து அந்த பக்தனின் பாபங்களைத் தீர்த்தார். அந்த பக்தனும் விரைவில் முக்தியடைந்தான்.

🌺இவ்வாறு பக்தர்களின் பாபங்களைக் போக்குவதற்காகத் திருமாலையே மிருக வடிவங்களில் அவதரிக்க வைக்கிறாள் மகாலட்சுமி என்று புதிய கோணத்தில் விளக்கம் அளித்தார் வேதாந்த தேசிகன்.

🌺 பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.

🌺இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்? அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.

🌺 *ௐ “உதாரதியே நமஹ* ” 🌹🌺
-------------------------------------------
ravi said…
*நல்வழி : 31*

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

*பொருள்*

இலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது.
உயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று, திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது. தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்

*இனிய காலை வணக்கம் 27/06/2022*
🌺🌹🪷🌻🌷🌺🌹🪷🌻🌷
ravi said…
*மஹா நதி ...ஒரிசா*
ravi said…
அம்மா ... உன்னில் நீராடி

அணி தரளக்
கொப்பும்

வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே...

ஆடி வரும் உன் அழகை பாடி முடிக்க முடியுமோ ...

பாடி முடித்தால் முற்றுப்புள்ளி தான் உன் நெற்றி தனில் வைக்க இயலுமோ ...

இயலும் என்றால் இந்த ஓர் பிறப்பில் அடையுமோ

அடையும் என்றால் நான் இனி அடைவது ஒன்றும் இல்லை என ஆகுமோ ?

ஜகம் நிறைந்தவளே அகம் குளிர்பவளே..
பரிபூர்ணியே ...

பரந்தாமன் பாதம் வருடி செல்பவளே

பணிந்தேன் தாயே .. பாற்கடல் ஒன்று பாரில் ஓட நீயே நதி என்று வந்தாய் ...

கீதை சொன்னவன் அங்கே தன் குடும்பம் என வாழ மீதி சொல்லி என்னையும் அவனுடன் சேர்த்து வைப்பாய் ...

வேண்டும் தவம் புரிகின்றேன் ..

சீண்டும் வரம் தேவை இல்லை

பாண்டுரங்கன் பாதம் தனில் சேரும் வரம் ஒன்று போதும் ..

சீருடன் வருகின்றேன்
சீரும் சிறப்புமாய் வாழ வைப்பாய் தாய் நீயே .... 🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 266* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
ராமனும் யுதாஜித்தும்* ✅✅

*யுதாஜித் சொன்ன கீதை* 🌹🌹🌹

கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்
ravi said…
ராமா*

மந்தரையும் செய்தாள் ஒரு சூழ்ச்சி ...

அதிலே வீழ்ச்சிக் கண்டாள் என் தமக்கை கைகேயி

என் தமக்கை ஏதும் அறியாதவள்

சூதும் புரியாதவள் வாதம் செய்யாதவள்..

உன் பாதம் சிரசில் மலராய் பதிப்பவள் ..

உன் நாமம் எனும் நாதம் அதில் வேதம் தனைக்கண்டவள் ...

உனக்கு சாதம் ஊட்டியவள் ...

ராமா மன்னிப்பாயோ என் தமக்கை தனை ..

தம் கையால் தானே மண் வாரி தெளித்தாள் ..

கண் இருந்தும் பார்வை தனை இழந்தாள் ..

வின் மேவும் புலவர்கள் தன் சாபம் கொண்டாள் ..

தன் வழி தனி வழி என்றே வாழ்ந்தவள்

இன்று தவிக்கிறாள் தாய்மை தனை இழந்தே ...

எந்த பெண்ணுக்கும் இவள் கதி,
நதி போல் வர வேண்டாம் ..

சிரித்தான் ராமன் ..

*யுதாஜித்*!! ...

உத்தமி இவள் அதி உத்தமம் இவள் ..

எத்தவம் செய்யினும் இவள் போல் அன்னை யார் பெறுவார் ... ??

தூற்றும் உலகம் என்றும் நிற்காது ...

எல்லோரும் எல்லாரையும் விரும்பி விட்டால் இறைவன் வந்து செல்ல இடமில்லை ...

எல்லோரும் நல்லவரானால் கரும்பும் கசந்து போகும் ...

எல்லா சுவையும் வேண்டும்

அதிலே அன்பும் பக்தியும் அழகாக சேர வேண்டும் ..

செய்யும் வினைகள் மறையும் ..

மறையும் அவன் அடி பணியும் ...

மாசற்றவள் உன் தமக்கை ..

தூற்றுவார் தூற்றல் போகட்டும் ராமனுக்கே ...

நிமிர்ந்து நில் .. பெருமை கொள் ...

அவள் இன்றி என் பிறப்பும் பூர்ணம் அடையாதன்றோ ...

ரிஷிகள் தேவர்கள் வாழ்த்தும் வாழ்த்தெல்லாம் அவள் தனை சேரட்டும் ...

அவள் போல் புண்ணியம் செய்வோர் புகல் புரியட்டும் சரித்திரத்தில் ...

காஞ்சி மகான் போல் காமாக்ஷி அவள் மடியில் துயில் கொள்வேன் ...

அவள் மடி என் பாற்கடல் ஆனால் பாரில் மீண்டும் மீண்டும் பிறந்திடுவேன் ...

தமக்கை தனை ராமன் புகழ தம்பி அவன் பாசமலராய் மணம் வீசினான் ...

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
கூத்தன் சார் ... எனக்கு கேள்விகள் கேட்பவரை மிகவும் பிடிக்கும் . ஏன் எப்படி எதற்காக என்று கேட்க்காமல் எதையுமே தெரிந்து கொள்ள முடியாது .. அந்தவகையில் உங்கள் கேள்வி என் நெஞ்சை இன்று தொட்டது உண்மை ..

*உங்கள் கேள்வி ...1*

போடும் பதிவுகளில் ராமர் தன் மூத்தவர்களை பெயர் சொல்லி ஒருமையில் அழைக்கலாமா ? அது ராமருக்கு அழகா ?

*பதில்* ... இங்கே ராமர் தன் அவதார நோக்கத்தை முடித்துக்கொண்டு பரந்தமானாக ஓவ்வொரு கதா பாத்திரத்தையும் சந்திக்கிறார் ..

பரமன் ஒருமையில் தான் படைத்த உயிர்களை பெயர் சொல்லி அழைப்பதில் தவறு இல்லையே ..

*கேள்வி 2* ...

எல்லோரும் நல்லவர்களாக இருக்க முடியாதே என்று ராமன் சொல்கிறான்

அவன் வாழ்ந்த காலத்தில் எல்லோரும் நலவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் ..

இப்படி ராமன் சொல்வதாக சொல்வது தவறு அல்லவா ?

*பதில்* ... எல்லாம் ஒரே சுவையாக இருந்தால் சமையல் வீணாகி போய் விடும் ...

இரவும் பகலும் ஒன்றானால் உயிர்கள் வாழ்வது போரடித்து விடும் ...

கண்ணன் கூடவே இருந்தும் அதர்மத்தின் எண்ணிக்கை அதிகரித்தது...

சிவ தாண்டவம் பாடியவன் காமனை வெல்ல முடியாமல் தவித்தான் ...

கெட்டவர்கள் இல்லாமல் நல்லவர்கள் உருவாக முடியாது ...

என்று அமுதம் வந்ததோ அன்றே ஆல கால விஷமும் பிறந்தது ...

*கேள்வி 3 ...* என்ன நோக்கம் உங்கள் இந்த படைப்புக்கள் ?

*பதில்* ... பெரியவா வின் கீர்த்தியை எழுதும் எழுத்துக்களில் இணைப்பது .. ஒரு அணிலின் சேவை ...
ravi said…
அதுபோல....

உடம்பு என்ற

ஜட வண்டியை

ஆத்மா, உயிர்

என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

👉 *எவ்வளவு காலம்..

👉எவ்வளவு நேரம்..

👉எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது இறைவனே*

இதுதான்

நமக்காக

இறைவன்

போட்டிருக்கும்

*டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு

தந்திருக்கும்

*அசைன்மென்ட்*..!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*

*உணராதவனுக்கு*

*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*

*இனியது செய்வோமே*!
Kousalya said…
இது என்ன யுதாஜித் கீதை என்று இல்லை...கைகேயி கீதை போல உள்ளது...Anyways without Her, the whole / very purpose of Ramayan would not have accomplished...👌👌👍👍
CYS said…
Arumai. 🌹🌹🙏🙏
ravi said…
அம்மா ... உன்னில் நீராடி

அணி தரளக்
கொப்பும்

வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே...

ஆடி வரும் உன் அழகை பாடி முடிக்க முடியுமோ ...

பாடி முடித்தால் முற்றுப்புள்ளி தான் உன் நெற்றி தனில் வைக்க இயலுமோ ...

இயலும் என்றால் இந்த ஓர் பிறப்பில் அடையுமோ

அடையும் என்றால் நான் இனி அடைவது ஒன்றும் இல்லை என ஆகுமோ ?

ஜகம் நிறைந்தவளே அகம் குளிர்பவளே..
பரிபூர்ணியே ...

பரந்தாமன் பாதம் வருடி செல்பவளே

பணிந்தேன் தாயே .. பாற்கடல் ஒன்று பாரில் ஓட நீயே நதி என்று வந்தாய் ...

கீதை சொன்னவன் அங்கே தன் குடும்பம் என வாழ மீதி சொல்லி என்னையும் அவனுடன் சேர்த்து வைப்பாய் ...

வேண்டும் தவம் புரிகின்றேன் ..

சீண்டும் வரம் தேவை இல்லை

பாண்டுரங்கன் பாதம் தனில் சேரும் வரம் ஒன்று போதும் ..

சீருடன் வருகின்றேன்
சீரும் சிறப்புமாய் வாழ வைப்பாய் தாய் நீயே .... 🪷🪷🪷
ravi said…
மகாநதி
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 266* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*90 குலாம்ருதைக ரசிகா =*

சஹஸ்ரத்திலிருந்து பெருகும் ' *குல* ' என்ற அம்ருதத்தில் விருப்பமுள்ளவள்

(சஹஸ்ர சக்ரம் என்பது ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்டு உச்சந்தலையில் இடம்பெற்றுள்ளது)
ravi said…
*குல* - அம்ருத = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் அம்ருதம்

*அம்ருதைக* = அம்ருதத்திலிருந்து

*ரசிகா* = விருப்பமுள்ளவள்🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 266* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*69 கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள்*

*ஸங்கீத ஞானம்*🎼🎼🎼🎧🎧🎤🎤🎹
ravi said…
இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார்.

விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது.

அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார்.

ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம்.

அந்த *த்ரிவளீ* எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார்.

ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள்.

இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது,

மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது.

இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது.🎼🎼🎼
ravi said…
இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார்.

விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது.

அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார்.

ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம்.

அந்த *த்ரிவளீ* எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார்.

ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள்.

இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது,

மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது.

இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது.🎼🎼🎼
மூர்த்தி said…
அற்புதமான வர்ணனை 👌🙏🙏🙏🙏
சவிதா said…
🙏🏻அற்புதம்
Kowsalya said…
I am only a Paramatma Rasika...whereever/ whom ever gives good narrations of this , i am ready to take since iam on learning stage.....may be once / twice i wd hv asked specific things to you or sometimes even complement/ supplement to ur verses also i wd hv told which i know... Hope that's ok 🙏
Hemalatha said…
யுதாஜித். ஏன் இந்த பெயர்கள் இப்போது நடைமுறையில் இல்லை.நீங்கள் இராமாயணம் ஆராய்ச்சி ஏதும் செய்துள்ளீர்களா?? தினமும் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்👌🙏
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 44*
ravi said…
முகுந்த மாலையில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 9 ஆவது ஸ்லோகம்.

कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्त:

अद्यैव मे विशतु मानसराजहंसः ।

प्राणप्रयाणसमये कफवातपित्तैः

कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥ ९ ॥

க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த:

அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: ।

ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:

கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 9 ॥
ravi said…
என் மனமாகிய ராஜஹம்ஸத்தை உன்னுடைய பாதத் தாமரை என்ற கூண்டில் இப்பொழுதே ‘ *அத்³யைவ’* இன்னிக்கே அதைக் கொண்டு போய் அந்த கூண்டுல அடைச்சுடறேன். *கிருஷ்ணா, ‘ப்ராணப்ரயாண ஸமயே’*

என்னுடைய பிராணன் போகும்போது ‘ *கப²வாதபித்தை:’ –* கப, வாத பித்தம்லாம் மாறி மாறி இருக்கும். *கண்டா²வரோத⁴னவிதௌ⁴* – என்னுடைய தொண்டையை அது அடைச்சு உன் நாமத்தைக் கூட சொல்ல விடாம இருக்கிற நிலைமையில ‘ *ஸ்மரணம் குதஸ்தே’* – உன்னுடைய ஸ்மரணம் ஏற்படுமா என்று எனக்குத் தெரியலை.

அதனால ‘ *அத்* ³ *யைவ மே விசது மானஸராஜஹம்ஸ:’* என்னுடைய மனம் என்ற ராஜஹம்ஸத்தை உன்னுடைய பாத பங்கஜம் என்ற கூண்டுல கொண்டு போய் அடைச்சுடறேன் அப்படீன்னு சொல்றார்.

மனசு பகவானுடைய பாதத்துல இருந்துதுடுத்துனா உடம்பு எங்கிருந்தா என்னன்னு நேத்திக்கு ஒரு ஸ்லோகத்துல சொன்னார்.🌞🌞🌞
ravi said…
ஒரு குரங்கு வளர்ப்பவன், குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

காலையில் மூன்று ரொட்டி,மாலையில் நான்கு ரொட்டி. அப்போழுது மாலை நேரம் என்பதால் எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.

சில நாட்கள் போனது.ஒரு நாள் காலை நேரத்தில் எல்லாக்குரங்குகளும் புரட்சி செய்தது.எங்களுக்கு காலையில் மூன்று போதாது.

குரங்கு வளர்ப்பவன் சொன்னான் அப்படியென்றால் காலையில் நான்கு மாலையில் மூன்று.

குரங்குகளுக்கு சந்தோசம் தங்களுடைய புரட்சி வெற்றியடைந்ததாக திருப்ப்தியடைந்தது.எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.

குரங்கு வளர்ப்பவன் சிரித்துக்கொண்டான்.ஏனென்றால் அவனுக்கு தெரியும் எப்படி இருந்தாலும் மொத்தம் ஏழுதான் என்று.

இதன் அடிப்படைதான் மனிதனின் மனது.

இந்த குரங்கு மனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

பிறகு புரட்சி செய்து வேறு ஒரு ஆட்சி
கொண்டுவருகிறது.

ஆனால் நான் சொல்கிறேன் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆட்சி மாறாது. மொத்தம் ஏழுதான்.

ஆனால் உங்கள் குரங்கு மனம் ஆட்சி மாற்றம் செய்துகொண்டேயிருக்கும். குரங்குகள் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

குரங்கு, வளர்ப்பவனை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு தான் ஏமாந்துகொண்டே இருக்கும்.

*— ஓஷோ.*
ravi said…
Pankaj fell in love
Pankaj married
Pankaj divorced
Pankaj Udaas

Sonia was walking.
Sonia slipped.
Sonia fell into the drain.
Sonia Gandhi

Sameera went to a parlor
Sameera did her hair
Sameera did her makeup
Sameera Reddy

Kangana hit the ball
Kangana took a single
Kangana did not reach the crease
Kangana Ranaut.

Hrithik buys bulb
Hrithik puts bulb in socket
Hrithik switches bulb on
Hrithik Roshan

Neil arms weak.
Neil joins gym.
Neil does chin-ups.
Neil Armstrong

Poonam puts Chuna
Poonam puts Kathha
Poonam puts Gulkand
Poonam puts supari
Poonam Pandey

Anil mombatti
Anil agarbatti
Anil dhoop
Anil Kapoor

Umar walking on the road
Umar got kidnapped
Umar not found by family
Umar Gul

Minisha purchased a cycle
Minisha started riding cycle
Minisha's height increased
Minisha Lamba

William making fruit shake
William took pears
William put them in glass
William Shakespeare

Mika went to studio
Mika went to recording room
Mika took the mike
Mika Singh...
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

தாயும் ஆனவர்- நம் பெரியவா.

கருவுற்றிருந்த பெண்மணிக்கு பெரியவா சொல்படி உதவி செய்த ராமன் என்ற பக்தர்.
பெரியவா சொன்னார்.. “நீ வெறும் ராமன் இல்லை.. தயாள ராமன்...”


கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
ravi said…


ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன் பெண்னை அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தாள்.

"ரொம்ப நாள் கழிச்சு, முழுகாம இருக்கு. அதான் கவலையா இருக்கு. நல்லபடியா குளி குளிக்கனும். சாமி ஆசீர்வாதம் பன்ணனும்.

பெரியவா கையை தூக்கி ஆசி வழங்கினார்கள்.

தாயார் தொடந்து பேசினாள், “ரொம்ப ஏழைங்க நாங்க, வாய்க்கு ருசியா பதார்தங்களை வாங்கி கொடுக்க முடியலை. சாம்பலைத் துண்ணுது”

அந்த சமயம் ஸ்டேட் பேங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டி தயிர் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
ravi said…
நீயே அந்த டப்பாவை, அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்...”

தயிர் டப்பா இடம் மாறியது.

கோபாலய்யர் (என்ஜினீயர்) பிற்ந்த நாள். வழக்கபடி ஒரு டின் நிறைய இனிப்பு - உறைப்புதின்பண்டங்கள் கொண்டு வந்தார், வேத பாடசாலை மாணவர் களுக்காக.

“கோபாலா! அந்த டின்நோட எல்லாத்தை யும் அந்தப் பொண்கிட்ட கொடுத்திடு...”

டின் இடம் மாறியது.

அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார்.

“அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு...”
ravi said…
ராமுவுக்கு பரம சந்தோஷம்... பெரியவாளே சொல்கிறார்கள் என்று. அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.

தாயும் மகளும் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அசோக் நகர் ராமுவைப் பார்த்து, “எவ்வள்வு ரூபாய் கொடுத்தே?” என்று பெரியவா கேட்டார்கள்.

பல பேர் எதிரில் தொகையைச் சொல்வதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்தது.

“பெரியவா சொன்னார்கள் என்றால், லட்சக் கணக்கில் கொண்டு வந்த் கொட்டுவதற்குப் பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் எம்மாத்திரம்?’ என்று நினைத்தார்.
ravi said…
நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது. அதை கொடுத்தேன்...’

“நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லலையே”

“இப்போதெல்லம் டெலிவரிகாக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போனால் கூட மூனு, நாலு ஆயிரம் ஆயிடறது...”

சில நிமிஷங்களுக்கு பின் பெரியவா சொன்னார்.. “நீ வெறும் ராமன் இல்லை... தயாள ராமன்...”

“போதும் ! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும்...” என்று நெஞ்சுருகச் சொன்னார் ராமு என்கிற ராமன்...”


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🙏🙏
Oldest Older 201 – 308 of 308

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை