ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 7.சதுர் பாஹு சமன்விதா பதிவு13

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

7. சதுர் பாஹு சமன்விதா

பதிவு 13


இன்று நாம் பார்க்கப் போவது 7வது திருநாமம் .. அருமையான திருநாமம் 

தாயானவள் , மகாராணியாய் இருப்பவள் சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனம்... 

சிதக்கநி குண்டத்தில் இருந்து ஜோதி வடிவாய் 

தேவர்களாகிய நம் துன்பங்கள் எல்லாம் தீர்க்க , 

ஆயிரம் சூரியர்களும் மேல் காந்தி உள்ளவளாய் தோன்றுகிறாள் ... 

அவள் எப்படி காட்சி தருகிறாள் தெரியுமா ? 

நம் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிப்புரையாய் , சிற்றிடை கொண்டவளாய் , வார்க்கும் குங்கும முலை கொண்டவளாய் முலை மேல் முத்து மாலை அணிந்தவளாய்

சதுர்பாஹு ஸமந்விதாவாய்  காட்சி தருகிறாள் ...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌


*चतुर्बाहुसमन्विता  

சதுர் பாஹு சமன்விதா -

நான்கு கரங்களை கொண்டருள்பவள். 

அருள் தரும் அணைக்கும் கரங்கள் அடக்கவும் அடிக்கவும்,  அழிக்கவும் கூட செய்யும். 

பக்தர்களுக்கும் பாதகர்களுக்கும் தக்கவாறு  தீர்ப்பளிப்பவள் அல்லவா அம்பாள்.

நான்கு கரங்கள் எதற்கு ? 

இன்னும் வரும் நாமங்களில் பார்க்கப்போகிறோம்... 

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நான்கு வேதங்கள் அவள் கரங்கள் ... 

அவள் அங்கமே வேதம் அதனால் தான் பட்டர்  அறிந்தேன் யாருமே அறியா மறையை என்கிறார் .. 

இன்னொரு பாடலில் அருமறைகள் பழகி பாதம் சிவந்தவள் என்கிறார் ... 

உபநிஷதங்களும் அவளே ஒரு வேதம் எனும்  மரத்தின் வேறாக , நடு பாகமாய் முடிவாக இருக்கிறாள்....

திருக்கர விசேஷங்கள் சதுர்பாஹு ஸமன்விதா - இது அடுத்த நாமம். இங்குத்தான் ஸ்வரூப வர்ணனை ஆரம்பிக்கிறது எனலாம். 

சிதக்னி குண்ட சம்பூதா என்று சொல்லும் போது ஸ்வரூபம் என்னவென்று சொல்லவில்லை. 

ஸ்ரீமாதா என்று சொல்லும் போதோ, ஸ்ரீமகாராக்ஞி என்னும்போதோ ஸ்வரூபம் என்னவென்று சொல்லவில்லை. 

சிம்ஹாஸனேச்வரி என்னும் போதும் ஸ்வரூபம் சொல்லப்படவில்லை. ஸ்வரூபம் எங்கே உண்மையில் ஆரம்பிக்கிறது என்றால் 'சதுர்பாஹு ஸமன்விதா' என்ற திருநாமத்தில்தான்! 

'நான்கு திருக்கரங்களோடு இருப்பவள்' என்று அம்பாளை வர்ணிக்க ஆரம்பிக்கும் போது, 

வர்ணனை, அவள் திருமுகத்தில் ஆரம்பிக்கவில்லை, அவளுடைய திருக் கரங்களில்தான் ஆரம்பிக்கிறது.

நான்கு கரங்களைச் சொல்லும்போது, 'சதுர்பாஹு ஸமன்விதா' என்று கூறி, அவளுடைய திருக்கரங்கள் எவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் தொடர்ந்து சொல்கிறது. 

அம்பாள் ஸ்வரூபத்திலே ஒரு விஷயத்தை கவனிக்கலாம். 

ராஜராஜேசுவரியாகவும், காமாக்ஷியாகவும் லலிதாம்பிகையாகவும் இருக்கும்போது அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். 

நான்கு திருக்கரங்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷயம் இருக்கும்.

சங்கரர் சுட்டும் வித்தியாசம்! 


ஆதிசங்கர பகவத்பாதர் சொல்வதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்

அம்பாளை வர்ணித்துக் கொண்டே வரும்போது, அவளுடைய நான்கு திருக்கரங்களைப்பற்றிக் கூறுவார். "தாயே, உன்னுடைய நான்கு கரங்களில் ஒரு வித்தியாசம் இருக்கிறது அம்மா!" என்பார். 

எந்தவொரு தெய்வத்தையோ அல்லது தெய்வத் திருமேனியையோ பார்க்கும்போது சாதாரணமாக எல்லாரும் பார்ப்பது அல்லது கவனிப்பது என்னவென்றால் ஒரு கரம் அபய ஹஸ்தமாகவும் ஒரு கரம் வர ஹஸ்தமாகவும் அமைந்திருப்பதைத்தான். 

இதுதான் சாதாரணமாக அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பொதுவான தோற்றம் (ஓரிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்). 

அதனால்தான் நாட்டியம் ஆடுபவர்கள்கூட தெய்வத்தைக் காட்டும் முகமாக அபய-வர ஹஸ்தங்களை முத்திரையாகக் காட்டுவார்கள். 


அபய ஹஸ்தம் என்பது பயத்தைப் போக்குவது. அதற்கு 'அ-பய' ஹஸ்தம் என்றே பெயர். ஒவ்வொரு மனித மனத்திலும் பயம் இருக்கும். எதற்கு பயம் என்றால், மற்ற யாவற்றையும் தாண்டி, மரணத்தைப் பற்றிய பயம்

மரண பயம்! பயம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் ஏற்படலாம். 

ஒருவருக்கு இருட்டைப் பார்த்தால் பயம், ஒருவருக்குச் சுவரைப் பார்த்தால் பயம், ஒருவருக்குக் கிணற்றைப் பார்த்தால் பயம்! 

ஆனால் எல்லா பயங்களையும் கடந்து அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பயம் மரண பயம்! 

"எனக்கு மரண பயம் இல்லை" என்று அருணகிரிநாதர் பாடினார்! "ஏனென்றால், நான் மயிலைப் பார்த்தேன். மயிலைப் பார்த்ததும் என் மரண பயம் போய்விட்டது" என்றார். 


மரண பயம் என்பது இல்லை என்று மனிதர்களாகிய நாம் எவ்வளவுதான் சொன்னாலும் அது எங்கேயோ ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். இந்த மரண பயத்தைப் போக்குவதுதான் அபய ஹஸ்தம்.

'அம்மா' என்று அம்பாளுடைய கால்களில் விழும்போது, அவள் அந்த பயத்தைப் போக்குகிறாள். பயம் போய்விட்டது என்றால், அடுத்தது என்ன நடக்கும்?

பயம் இருக்கும்போது வாயே திறக்க மாட்டோம். அம்பாளிடம் போகும்போது என்று இல்லை; 

இது சராசரி வாழ்க்கையிலேயே நடக்கும். நமக்கு யாரிடமாவது பயம் என்றால், அவர் அருகிலேயே நெருங்கமாட்டோம்; பேச மாட்டோம்; ஒதுங்கியே இருப்போம். 

புதியதாக வந்தவர்களிடம் பழக பயப்படும் குழந்தைகள் முதலில் அவர்கள் அருகில் போகாமல் ஒதுங்கி நிற்பார்கள். 

அடுத்த கட்டமாக ஒரு மணி நேரம் ஆன பிறகு அதே குழந்தை பக்கத்தில் போய் உட்காரும். உட்கார்ந்து, "உன் பாக்கெட்டில் இருக்கும் பேனாவைத் தருகிறாயா?" என்று கேட்கும். 

பயம் போனவுடனேயே, 'எனக்கு ஏதேனும் கொடு' என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா! 

அதைப்போல பயம் போனவுடனேயே கடவுளிடம் நாம், "அம்மா, எனக்கு இதைக் கொடு" என்று கேட்கிறோம். 


பயத்தைப் போக்குவது அபய ஹஸ்தம்; கேட்டதைத் தருவதற்காக அமைந்திருப்பது வர ஹஸ்தம். பயம் போனவுடன் என்னென்னவோ கேட்க ஆரம்பித்துவிடுவோம். 

பாரதியைப் போல எல்லாரும் இருக்க முடியுமா? பாரதி என்ன கேட்டார்? 'காணி நிலம் வேண்டும்' என்று ஆரம்பித்து வரிசையாகக் கேட்டாரே, 

எல்லாம் தமக்குச் சொந்தமாகவேண்டும் என்பதற்காக அல்ல, வையத்தைப் பாலித்திட வேண்டும் என்பதற்காக அல்லவோ அவர் கேட்டார். 

பாட்டுத் திறந்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்! கேட்டுப் பெற விரும்புவதைத் தரக்கூடியது வர ஹஸ்தம். 


ஆனால் லலிதாம்பிகையிடம் பார்த்தால், அபய ஹஸ்தமும் இருக்காது; வர ஹஸ்தமும் இருக்காது

"இந்த அபய-வர ஹஸ்தங்களைக் காட்டி ஆள வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. அதனால்தான் உன் திருக் கரங்களில் அதற்கான அடையாளம் இல்லை" என்று ஆதிசங்கர பகவத்பாதர் சொன்னார். 

லலிதாம்பிகையின் நான்கு திருக்கரங்களுள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பணியைச் செய்து கொண்டு இருக்கின்றன - சதுர்பாஹு ஸமன்விதா!


👌👌👌👌👌👌👌👌

அபிராமி அந்தாதி 

பாடல் 2

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்

பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்

கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

பாடல் 9

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்

பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

பாடல் 85

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு

ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்

தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்

வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே

பாடல் 73

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த

சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை

நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

சௌந்தரிய லஹரி 

பாடல் 7

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா

பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா

தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:

புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா


அன்னை சிறிய மணிகள் ஒலிக்கும் ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகம் போன்ற பெருத்த ஸ்தனங்களால் சற்று வளைந்தவள்;சிறிய இடையுடையவள்; சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற திருமுகமுள்ளவள்; வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை தரித்தவள்;இத்தகைய, சிவ-சக்தி ஸ்வரூபியான பரதேவதை எங்கள் எதிரில் நின்று காட்சியளிக்கட்டும். மணிபூரகச் சக்ரத்தில் தேவி எப்படி பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.

பாடல் 70


ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்

சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:

சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா


அம்மா!, ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால் பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து, உன்னுடைய நான்கு கைகளால் அவரது மீதியிருக்கும் 4 தலைகளுக்கும் ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று தன்னுடைய நான்கு முகங்களால்உனது நான்கு கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது.

Chathurbaahu - samanvithaa - Devi has four arms . Each of Her arms holds one particular item.

                                        👌👌👌👌👌👌👌👌



Comments

Chandra US said…
Very nicely described
Jingle US said…
Very nice as usual athimber. Is there going to be a part2 on this?
The parrot pictures lion pictures even Ambal with AdiShankarar were unique and apt.
padma said…
Superb Ravikumar. Regards.
ravi said…
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருப்பட்டூர் ஆலயத்தின் அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :*

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.
ravi said…

7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
ravi said…

13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

15. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.
ravi said…

19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.
ravi said…
22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து
வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.
ravi said…

26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ravi said…
🌹🌺 *ஒருவர் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒன்றை கொடுத்ததால் அவர் பதிலுக்கு கோடிக்கணக்கான மடங்கு கிடைக்க செய்வான் - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு நாள் ஒரு பழ வியாபார பாட்டி நந்தமகாராஜாவின் அரண்மனை வாசலில் யாருக்கெல்லாம் பழம் வேண்டுமோ வந்து வாங்கிக் என்று பழங்களின் பெயர்களை சொல்லி கூவிக்கூவி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.

🌺இதை அரண்மனைக்குள் இருந்து கேட்ட குழந்தை கிருஷ்ணர் தனது கைகளில் தானியங்களை எடுத்துக்கொண்டு பழம் வாங்க சென்றார்.

🌺தனது தாய் தந்தையர் பண்டமாற்று முறையில் பிறரிடமிருந்து பொருட்களை வாங்குவதை குழந்தை கிருஷ்ணர் கவனித்து இருந்ததால் தானும் ஏதாவது கொடுத்தால் மட்டுமே பழங்கள் வாங்க முடியும் என்று கொஞ்சம் தானியங்களை கைகளில் அள்ளிக் சென்று கொடுத்து பழம் வாங்க வந்தார்.

🌺ஆனால் அவர் மிகவும் சிறு குழந்தையாக இருந்ததால் அவர் நடந்து வரும்போது தானியங்கள் எல்லாம் கீழே சிந்திவிட்டது குழந்தையல்லவா!
சிறிய கை அல்லவா! அவர் கைகளில் அவ்வளவு தானியம் பிடிக்கவில்லை கீழே சிந்தி கொண்டே வந்தது .

🌺இறுதியில் பழ வியாபாரியிடம் வந்தபோது கண்ணனின் கைகளில் தானியங்கள் எதுவுமில்லை ஒன்று இரண்டு தானியங்கள் மட்டுமே உள்ளங்கையில் ஒட்டி இருந்தது அதைக் கொடுத்து அவர் பழம் கேட்டார். சிறிய குழந்தையான கிருஷ்ணரின் வெகுளித்தனத்தை மிகவும் ரசித்து

🌺குழந்தை கிருஷ்ணரின் முக அழகை கண்டதும் அந்த பழ வியாபாரி #தன்னை_மறந்து கூடையிலிருந்த பழங்களில் சில பழங்களை எடுத்து குழந்தை கிருஷ்ணரின் கைகளில் அடுக்க ஆரம்பித்து விட்டாள்.

🌺அவள் கிருஷ்ணருக்கு ஒவ்வொரு பழங்களாக எடுத்துக் கொடுக்க கொடுக்க அவள் பழக்கூடை
தங்கம், வைரம், வைடூரியம்
என ஐஸ்வர்யங்களால் நிரம்பி வழிந்தது.

🌺அதாவது
ஒருவர் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒன்றை கொடுத்ததால் அவர் பதிலுக்கு திரும்ப அவர் கொடுத்ததை விட #கோடிக்கணக்கான மடங்கு கிடைக்க செய்வான் .

🌺 பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தொண்டு செய்பவர்கள் மற்றும் பகவானுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த உலகத்தில் என்றென்றும் நஷ்டம் அடைவதே இல்லை 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌺🌹Simple story that explains that if one gives something to Sri Krishna without expecting a response, he will get millions of times in return🌹🌺
--------------------------------------------------- ------
🌺🌺One day a fruit merchant's grandmother was doing gooey business at the door of Nanda Maharaja's palace saying the names of the fruits that anyone who wanted fruit would come and buy.

🌺 Hearing this from inside the palace the child Krishna took the grains in his hands and went to buy fruit.

🌺Child Krishna came to buy fruit by handing over some grains so that he could buy the fruits only if he gave something as his mother and father were watching the goods being bought from others in barter.

🌺But since he was a very small child all the grains spilled down while he was walking was not the child!
Not the little hand! He did not like so much grain in his hands and kept thinking down.

🌺When he finally came to the fruit merchant there were no grains in Kannan's hands and only two grains were stuck in his palm and he gave it and asked for fruit. Very fond of the laziness of the little child Krishna

🌺After seeing the beauty of baby Krishna's face, the fruit merchant # forgot himself and took some fruits from the basket and started stacking them in baby Krishna's hands.

🌺She is the fruit basket to give to Krishna to take every fruit

🌺 Gold, diamonds, vitriol
As overflowing with luxuries.

🌺 Because
If a person gives something to Sri Krishna without expecting retribution he will make available in return #millions of times more than he gave.

🌺 Those who do charity to Lord Krishna and do not hesitate to do anything for Lord Krishna will never lose in this world🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
ராமனும் கும்பனும்* 🪷🪷🪷

🦚🦚🦚
ravi said…
*கும்பன் சொன்ன கீதை*
*கும்பன் (Kumba)*

– கும்பகர்ணனின் மகன் (Son of Kumbakarna)
ravi said…
*ராமா* ... தந்தை வரம் ஒன்று தந்தான் .

நான் தவமிருந்து பெற்றவனாம் ...

தவம் செய்தே உனை காணும் புண்ணியம் தந்தான் ...

என் முன் சென்றான் .. நான் செல்ல பாதை ஒன்றை வகுத்தான் ...

பாவங்கள் பல கூட்டிக்கொண்டான் ..

பெருக்கிக் களைய நேரமில்லை

உறக்கம் அதில் ஓய்வு கொண்டான் ..

இறப்பும் அவன் பிறப்பும் உறக்கம் தனில் கோலோச்ச

செய்நன்றி தனில் உச்சம் தொட்டான் ..

உன் பாதம் நான் தொட்டேன் இன்று ..

ஓர் நொடியில் கண்டேன் உச்சத்தின் உச்சம் ...

பணியாமல் போன பாவிகள் பலருண்டு இங்கே பரந்தாமா ...

அவர்களுக்கும் கிட்டுமோ என் விருந்து ?

*கும்பா* ... பிறரும் வாழ எண்ணுகிறாய் ...

பிறவி பயன் காண்பாய் இன்று ...

கொதித்து வரும் என் அம்புகள் குளிர் மேகம் என உன் உள் செல்லும்

அங்கே கார்மேகங்கள் களைந்தே களிப்பூட்டும்

கோல மயில்கள் எழுந்தே நடம் புரியும்

அங்கே ஆடி வரும் அன்னங்கள் நடை பயிலும் ...

கூவும் குயில்கள் கோலமிடும் ...

துள்ளும் மான்கள் பள்ளி கொள்ளும் ...

பணிந்தேன் ராமா ... ஓங்கி வளரட்டும் என் உச்சி தனை முகர்ந்த பெற்றோர்களின் கர்வம் ...

உனைக்கண்டோர் வாழும் உலகம் கிடைக்கட்டும் எல்லோர்க்கும் இங்கே ..

இதுவே நான் உனை கேட்க்கும் கடைசி வரம்

தந்தேன் *கும்பா* ...

தரணி உன் பரணி பாடும் ...

காஞ்சி உன் நினைவு கொள்ளும்

அங்கே உதிக்கும் செங்கதிர் உன் போல் பிறர் வாழ தவம் செய்யும் பெரியவா என்ற அடைமொழியில் 🙏🙏🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 262* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*87 ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ* =

இடை முதல் கீழ்வரையிலான பாகங்களை ஷக்திகூடத்தின் ( பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் கடை நான்கு எழுத்துகள்) வடிவாக கொண்டிருப்பவள்...🪷
ravi said…
*ஶக்திகூட* = பஞ்ச தசாக்ஷர மந்திரத்தின் கடை நான்கு எழுத்துகள் ஷக்தி கூடம் எனப்படும்

*ஆபன்ன* = பெற்றிருத்தல்

*கடி* = இடை

*_அதோ பாக_* = கீழ் பாகங்கள்

*தாரிணி* = கொண்டிருத்தல்🦚🦚🦚
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 262* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*68 முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து*

*ராஜவச்யம்*🪷🪷🪷

புஜாச்லேஷாந் நித்யம் புரதமயிது : கண்டகவதீ

தவ க்ரீவா தத்தே முககமலநால ஶ்ரியமியம்

ஸ்வத: ஶ்வேதா காலாகரு பஹுல ஜம்பால மலினா

ம்ருணாலீ லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா 68

சௌந்தர்ய லஹரி - 👌👌👌68
ravi said…
அம்பிகே!,

பரமசிவன் உன்னை எப்போதும் ஆலிங்கனம் செய்வதினால் ஏற்படும் மயிர்க்கூச்சத்தால் உன் கழுத்துப் பகுதி முள்ளு-முள்ளாக இருக்கிறது.

இவ்வாறான உனது கழுத்துப் பிரதேசம், உனது முகமாகிய தாமரைக்குத் தண்டு போன்று தோற்றம் தருகிறது.

கழுத்தில் அணிந்திருக்கும் முத்து ஹாரம் வெண்மையானாலும்உனது கழுத்தில் பூசப்பட்டிருக்கும் கருத்த அகில் கலந்த சந்தனக் குழம்பின் மிகுதியால் சேற்றில் இருக்கும் தாமரைக் கொடியைப் போன்றதாக இருக்கிறது.🪷🪷🪷
ravi said…
நெல்லை வாழ் தாயே தமிழே ...

தரணி எங்கும் நெல்லையப்பர் பரணி பாடி வரும் பசுங்கொடியே பைங்கிளியே கோமல யாமலையே ...

பாதம் பணிந்தேன் அம்மா ...

உன் காந்தி தனில் கற்பூரமாய் கரைந்து போனேன் ...

கரையும் கற்பூரத்தில் கறை ஒன்றுமில்லாமல் நீ சிரிக்கிறாய்..

குறை கொண்டோரையும் கரை சேர்க்கிறாய் அக்கறை கொண்டே அக்கரையில் ...

எக்கரை கானிலும் உன் அழகு ..

பச்சை புடவை கட்டி பசுமையாய் சிரிக்கிறாய் ..

பாரிஜாத பூச்சூடி பார் மணக்கும் மல்லிகை மணம் பரப்ப மனம் தனில் ஓடுகிறாய் வற்றா நதியாய் ..

புண்ணியம் என் செய்தோம் தாயே புரியவில்லை ...

புரிந்த பின் வாழ்வில் கசப்பு இல்லை ... 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 39*
ravi said…
नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
ராமகிருஷ்ணருக்கு கிடைக்காத பகவத் அனுபவமா.

காளி தேவியினுடைய செல்லப் பிள்ளையா இருந்தார்.

அவர் தோத்தாபுரி கிட்டயிருந்து நிர்விகல்ப ஸமாதியை தெரிஞ்சுண்டார்.

ஸீதையா இருந்து ராமனைப் பார்த்தார். ராதையா இருந்து கிருஷ்ணனைப் பார்த்தார்.

அப்படி ஞானியா இருந்தவரே தினம் கார்த்தால எழுந்துண்டு ஹரிபோல், ஹரிபோல்னு சொல்லிண்டு வர்றவாள்கிட்ட பக்தியை பத்தி பேசிண்டு ஸாது சங்கத்துலயே இருந்துண்டு போயிட்டா.

“ஏணிப்படிகளில் மாந்தர்கள்” புஸ்தகத்தைப் படிக்கும்போது எனக்கு அந்த மாதிரி தோணும்.

அவர் எதுக்காக இந்த புஸ்தகம் எழுதினார் அப்படீன்னா, நீ வந்து ஏதோ கொஞ்சம் நல்ல வழியில இருக்கேன் என்கிறதுனால, ‘நான் பக்தன் அல்லது நான் ஆத்ம விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டிருக்கேன்’, அப்படீன்னு நினைச்சுக்காதே.

எவ்வளவோ dangers இருக்கு. கொஞ்சம் அஜாக்ரதையா இருந்தா கூட, ஏதோ ஒரு cricket தானே, cinemaதானே, politics தானே அப்படீன்னு அதை நீ பார்த்தேன்னா நீ பாமரன் அப்படீன்னு சொல்றார்🪷🪷🪷
ravi said…
#ஶ்ரீரங்கம்_ஶ்ரீ_பெரியபிராட்டியார்*

அகில லோக மாதாவும், ஜகத் ரட்சகியானயான “ஸ்ரீரங்க ராஜமஹிஷீ தன் புருவ நெறிப்பிலும் கண் அசைவிலும் தன் உதட்டு சுழிப்பாலும் நம்அழகிய மணவாளைப் பெருமாளை ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் செய்ய வைத்து ,அடியார்கள் செய்யும் தவறுகளை பெரியபெருமாளை தன் கருத்தில் கொள்ளாமல் வைத்தும் “உலகில் யார் தான் தவறு செய்யவில்லை,
ravi said…
இவர்கள் நம் குழந்தைகள் இவர்கள் என பெரிய பெருமாளிடம் நமக்காக எடுத்துரைத்தும் , அடியார்கள் தங்களுடைய பாபங்கள் குற்றங்கள் தோஷங்கள் கண்டு பயந்து பின்வாங்கும் போதும் சரி, அடியார்களுடைய பாபங்கள் குற்றங்கள் தோஷங்கள்,கண்டு

ஸ்ரீ பெரிய பெருமாள் தன்னிடம் அவர்களை அணுக விடாமல் தடுத்து நிறுத்தும் போதும் , ஸ்ரீ பெரிய பெருமாளை அடையாமல் விலகி நிற்கும் போதும் ,நாம் பெரிய பெருமாளை பற்றாமல் பின் வாங்கும் போதும் ,அடியார்கள் திருந்துவதற்கு ஒருசந்தர்ப்பம் அளித்து ஸ்ரீ ரெங்கராஜா மஹிஷீ நம்மை தன் அன்பாலும் தன் அருளாலும் நம் குற்றங்களை போக்கி ,நாம் பெரிய பெருமாளிடம் எவ்வித பயமும் மிரட்சியும் தோஷங்களும் இல்லாமல் ஸ்ரீ பெரிய பெருமாளின் தேனே மலரும் திரு பாதங்களை நம்மிடம் எவ்விதமும் எதிர்பாராமல் பற்ற வைக்கிறாள்.
ravi said…
அடியார்களை ரட்சிப்பதற்காகவே,ஸ்ரீ லட்சுமி ரெங்கமான ஸ்ரீரங்கத்தில் முதன்முதலில் ஸ்ரீ என்ற திருநாமத்தோடே எழுந்தருளி ஸ்ரீரங்க சேஷத்திரதிற்க்கு முதன்மை, மேன்மை பெருமை ,மங்கள தன்மை செல்வமுடைமை போன்ற நன்மைகளை உண்டாக்கி அடியார்கள் நலனுக்காக ஸ்ரீ நம்பெருமாளிடம் இரைஞ்சும் “ஹீரண்ய வர்ணாம் ஹரிணீம் மற்றும் நம் ஸ்ரீரங்க ஹர்ம்ய தல மங்கள தீபரேகாவான, “எங்கள்அழகிய மணவாளப் பெருமாளின் நாயகியான பட்டமஹிஷீயான ஸ்ரீரெங்கராஜ மஹிஷீயான பெரியபிராட்டியார்,தன் பிரிய நாயகனான அழகிய மணவாளப் பெருமாள் பதக்கம் சாற்றிக் கொண்டு நமக்கு அருள் பாலிக்கும் காட்சி.
ravi said…
ஏன் எனில் நம் தவறுகளை குற்றங்களை பார்த்து நமக்கு தண்டனை தருவதில் முனைப்பாக உள்ள பெருமாளை சர்வ சுதந்திரனை ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஓரான் வழி ஆச்சர்யரான .ஸ்ரீகூரத்தாழ்வான் ஸ்ரீஆண்டாள் அம்மாவிற்கு ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் அமுது செய்த அரவணை மஹா பிரசாதத்தால் வந்துஅவதரித்தவரும் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் புத்திரரும் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆண்டாள் அம்மாவின் திருக்குமாரர் ஆன ஸ்ரீ வேதவியாச பராசர பட்டர் ஸ்வாமிகளின் திருவடி தாமரைகளை பற்றி கொண்டு வரும் அடியார்களுக்கு , நம்ஸ்ரீரங்கநாச்சியாரான திரு தன் அருள்கொண்டும்,ஸ்ரீ பெரிய பெருமாளிடத்தில் சென்று பெருமாள்கிருபையை நமக்கு வாங்கி தரகூடியவள். சில சமயம்பெருமாள் கிருபை செய்வதற்கு முன்பே நமக்கு அருள்புரியகூடியவள்.
ravi said…
அவ்வாறான ஸ்ரீ பெரியபிராட்டியாரையும் பெரியபெருமாளையும் ஒரு சேர சேர்த்தியில் மிதுனமான இருவரை சேவிப்பது நன்று. அவ்வாறு முடியாது எனின் சர்வ லோக புருஷனான புருஷர்களில் உத்தமன்னான , கணவன் உருவம் பொறித்த உருவத்தை மனைவி தன்கழுத்தில் செயின்னில் லாகெட்டாக டாலராக போட்டுகொள்வது போல ,நாம் நம்காரியத்தை பெருமாளிடம் யாசிக்க போனால் பெருமாள் நம்குற்றங்கள் பாவங்கள் பார்த்து முகம்கொடுக்காதபோது நமக்கு புருஷகாரபூதையாக நம்அம்மா பெரியபிராட்டியார் பெருமாளிடம் நம்மைபற்றி உடனே எடுத்துரைக்க நம் பெரியபிராட்டியார் தன்கழுத்தில் (செயினாக)மாலையாக சாற்றிகொண்டு உள்ள அழகியமணவாளன் பதக்கத்தில் உள்ள பெருமாளை சேவித்தாலே, தாயாரும் பெருமாளும் சேர்த்தியில் சேவித்த பலன்கிட்டும்.
ravi said…
பெருமாளை சேவிக்கவில்லையே என கவலைவேண்டாம் , ஸ்ரீரங்க ராஜமஹிஷீ தன் புருவ நெறிப்பிலும் கண் அசைவிலும் தன் உதட்டு சுழிப்பாலும் நம்அழகிய மணவாளைப் பெருமாளை ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் செய்ய வைக்கும்போது ,அடியார்கள் செய்யும் தவறுகளை பெரியபெருமாளை கருத்தில் கொள்ளாமல் செய்யவும் நம்மை மன்னிக்கும் படியும் ஸ்ரீபெரியபிராட்டியாரால் மட்டுமே முடியும்.

ஆதலால் ஸ்ரீ பெரிய பிராட்டியாரை சேவித்தாலே ஸ்ரீ பெரியபிராட்டியார் சாற்றிகொண்டுள்ள ஸ்ரீஅழகியமணவாள பதக்கத்தை சேவித்தாலே ஸ்ரீபெரியபெருமாளும் ஸ்ரீபெரியபிராட்டியாரையும்சேர்ந்து சேவித்தாகும்.வேறு எந்த தாயாருக்கும் தன் பர்த்தாவின் பெயரை இட்டு எந்த பதக்கமும் இல்லை .ஸ்ரீ ரெங்க ராஜ மஹீஷீக்கு மட்டுமே தன் நாயகன் பெயர் இட்ட பதக்கத்தை, மங்கள சூத்திரம் சாத்திக்கொண்டு உள்ளாளோ இல்லையோ கண்டிப்பாக ஒரு நாளும் ஒரு நொடியும் பிரியாது ஸ்ரீ அழகிய மணவாள பதக்கம் சாற்றி கொண்டு இருப்பாள்
ravi said…
ஸ்ரீ ரெங்க ராஜ மஹீஷீ தனக்கு பாத்தியப்பட்ட நகைகளை உறையூரில் கமலவல்லி தாயாருக்கு ஏதாவது உத்சவம் என்றால் தன் எல்லா நகைகளையும் தருவாள் , ஸ்ரீஅழகியமணவாள பதக்கத்தை மட்டும் தரவே மாட்டாள் .ஸ்ரீ நம்பெருமாள் ஸ்ரீ ரெங்கநாச்சியார் உருவத்தை தன் மார்பிலும் , ஸ்ரீ ரெங்கநாச்சியார் ஸ்ரீ நம்பெருமாள் உருவத்தை தன் கழுத்தில் மாலையாகவும் தரித்து கொண்டுள்ளாள்.

ஸ்ரீ குணரத்னகோசத்தில் ஸ்ரீ பட்டர் ஸ்ரீபெரிய பிராட்டியார் பற்றி திருவாய்மலர்ந்தருளியுள்ளதை, ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆண்டாள் அம்மாவிற்கு அரவணை மஹா பிரசாதத்தால் வந்து அவதரித்தவரும் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் புத்திரரும் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆண்டாள் அம்மாவின் திருக்குமாரர் ஆன அடியேன்ஆச்சர்ய ஸ்வாமிகளான கூரகுலாதிப பிரம்மரதாதிரூட ஸ்ரீரங்கேச புரோஹித கோவில்ஸ்ரீ வேதவியாச செந்தாமரைக்கண்ணன் பட்டர் ஸ்வாமிகளின் பரமாச்சர்யன் (தாத்தா) கூரகுலாதிப பிரம்மரதாதிரூட ஸ்ரீரங்கேச புரோஹித கோவில்ஸ்ரீ வேதவியாச ரெங்கநாத பட்டர் சுவாமிகள் தன் அம்மா ஸ்ரீ பெரியபிராட்டியார் அழகிய மணவாளப் பெருமாள் பதக்கம் சாற்றிக்கொண்டுள்ளது.
ravi said…
பற்றியும்இவைஅம்மாவின் சர்வ நகைகளாக இருந்து வடிவழகை மெருகூட்டுகிறது என்றும்,எல்லா நகைகளோடும் ஸ்ரீ பெரியபிராட்டியாரின் அழகிய மணவாளப் பெருமாள் பதக்கம் ஈடாகாது என்றும் ,ஸ்ரீ ரெங்க நாச்சியாரின் திருமாங்கல்யமாகவே இருந்து சிறப்பு மேன்மை பொருந்தியது என்றும் என தான் ஸ்ரீ பெரியபிராட்டியாருக்கு கைங்கர்யம் செய்யும் போது கண்ட குணானுபவத்தை திருவாய்மலர்ந்தருளியுள்ளார்.

எங்கஅம்மா ஸ்ரீபெரியபிராட்டியாரின் தோடு மாட்டல் ஜிமிக்கி முக்குத்தி அழகு உலகில் எவருக்கும் இவ்வழகு வராது. இந்தஅழகுபார்த்து ஸ்ரீபெரியபெருமாள் தன் திருவடி சேவைக்கு ஒரு நாள் கூத்துக்கு தாயாரைபோல்சேவைதர வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ரெங்க நாச்சியாரிடமிருந்து கடன் வாங்குவார் ,ஆனால் எங்கஅம்மா ஸ்ரீபெரியபிராட்டியாரின் அழகு ஸ்ரீ நம்பெருமாளுக்கு வரவே வராது.
ravi said…
எங்கஅம்மா ஸ்ரீபெரியபிராட்டியாருக்கு எந்த நகையும் வேண்டாம்."காட்டன் ராணியான ஸ்ரீ பெரியபிராட்டியார்" "பூ சாற்று உத்சவத்தின் போது" வெள்ளை காட்டன் புடவையை கிள்ளு கிள்ளாக மடிப்பு வைத்து சாற்றிகொண்டு மார்பில் சந்தன பரளையை தரித்து கொண்டு அதன் மேல் இந்த ஸ்ரீ நம்பெருமாளின் உருவம் பொரித்த அழகிய மணவாளப் பெருமாள் பதக்கத்தை மேலே எடுத்து போட்டுகொண்டு (சிலர் புதிதாக நகை வாங்கினால் அதை அனைவரும் பார்க்கும் படி புடவை மேலே போட்டு கொண்டு வருவது போல) ஸ்ரீ ரெங்க ராஜ மஹீஷீ பட்டமஹீஷீ ஒரு காம்பீர்யத்தோடே புறப்பாட்டில் எழுந்தருளி சேவை சாதிப்பாள்.
ravi said…
ஸ்ரீ ரெங்க ராஜ மஹீஷீ பட்டமஹீஷீ இந்த காம்பீர்யம் ஸ்ரீ ரெங்கராஜா புறப்பாட்டில் அவருக்கு இருக்குமா என்பது ஐய்யமே..................................... ஸ்ரீ ரெங்க ராஜ மஹீஷீயின் புறப்பாட்டில் எழுந்தருளி வரும் தோளுக்கினியான் ஆகட்டும் ஒரு (majestic look) காம்பீர்யத்தோடவே இருக்கும்.அதில் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளேன்.

பிறப்பு வேண்டும் அது ஸ்ரீரெங்கத்தில் தேவனாகவோ ,மனுஷனாகவோ திரியக்காகவோ ,தாவரமாகவோ ,அல்லது அடியேன் ஆச்சார்ய சுவாமிகள் திருமாளிகையில் திருவடி சம்பந்தம் பெற்றவதாகவோ, அல்லது அடியேன் ஆச்சார்ய சுவாமிகள் திருமாளிகையில் ஒரு புழுவாகவோ பூச்சியாகவோ பிறந்து அடியேன் ஆச்சார்ய சுவாமிகள் திருவடி கிருபை முன்னிட்டு சதா சர்வ காலம் ஸ்ரீ பெரிய பெருமாளையும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் அவர்கள் உத்சவங்களையும் அனுபவிக்க ஆச்சர்ய சுவாமிகள் திருவடிகளை பிரார்த்திக்கிறேன்.

*ஶ்ரீ பெரியபிராட்டியார் பெரியபெருமாள் திருவடிகளே சரணம்*
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் பற்றிய பதிவுகள் :*

பார்வதியின் ஆங்கார வடிவங்களில் ஒன்றாகத் திகழும் பெண் தெய்வம் துர்க்கை அம்மன் ஆகும். துர்க்கை என்றால் வடமொழியில் யாவராலும் வெல்லமுடியாதவள் என்று பொருள்.

அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிஷாசுரனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிஷாசுரமர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள்.

சிவபுராணத்தின்படி, படைப்பின் ஆரம்பத்தில், ஈசனின் இடப்பாகத்திலிருந்து துர்க்கை தோன்றியதாக கூறப்படுகிறது.

*வில்லும் அம்புகளும் :*

கையில் இருக்கும் வில்லும் அம்புகளும் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து ஆற்றல் சக்திகளையும் கட்டுப்படுத்துவதை குறிக்கும்.

*இடியேறு :*

கையில் இருக்கும் இடியேறு அவரின் திடத்தை குறிக்கும்.

*பாதி மலர்ந்த தாமரை :*

கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை, சேருக்கு மத்தியில் பூப்பதை போல் உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது ஆன்மீகத்தை நாட வேண்டும் என்பதை குறிக்கும்.

*வாள் :*

வாள் அறிவை குறிக்கும். அறிவே இவ்வுலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது.

*சுதர்சன் சக்ரா :*

உலகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது என்பதை, ஆள் காட்டி விரலில் அழகாக சுழலும் சக்கரம் குறிக்கும்.

*திரிசூலம் :*

திரிசூலம் என்பது சத்வா, ராஜாஸ் மற்றும் தாமாஸ் என்ற மூன்று அம்சங்களை குறிக்கும்.

*அபாய முத்திரை :*

ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபாய முத்திரையை கொண்டிருக்கும். தன் பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

மார்கழி மாசம் ஒண்ணம் தேதி நடந்த நிகழ்ச்சி... பர்வத மலை கிரிவலம்.

நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?'

கட்டுரையாளர்-பி. ராமகிருஷ்ணன்
ravi said…

திருவண்ணாமலைக்குப் பக்கத்துல காஞ்சி கடலாடின்னு ஒரு கிராமம் இருக்கு. சிங்கம், புலி எல்லாம்கூட உலாவிண்டு இருந்துது. பக்ல்லயே அங்கே போறது ரொம்ப சிரமம். அந்த இடத்துக்குப் பக்கத்துல பெரிய மலைகள் எல்லாம் இருக்கு. அந்த மலைகள்ல ஒண்ணுல பரமேஸ்வரனும், ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கா. அந்த மலைக்குப் பேரு பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர். அம்பாள் பிரமராம்பிகை.

பௌர்ணமியில திருவண்ணாமலையில கிரிவலம் போறமாதிரி பர்வத மலையை மார்கழி மாசம் ஒண்ணம்தேதி பிரதட்சணம் பண்றது சுத்துவட்டாரத்துல உள்ள கிராமத்து மக்களோட வழக்கம். பரமாசார்யா எப்போல்லாம் அந்தப் பக்கமா போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். தோராயமா முப்பத்தஞ்சு, முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுத்திவர வேண்டியது இருக்கும். ஆசார்யா கூட போறவாள்லாம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடப்பா. ஆனா, பெரியவா வழக்கமா சாதாரணப் பாதையில நடக்கறதைவிட ரொம்ப வேகமா, அதேசமயம் கொஞ்சமும் தடுமாறாம ந்த மலைப்பாதையில நடப்பார்.
ravi said…
ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல் நாளே போய் பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுட ணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா.

அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.
ravi said…
பெரியவா என் சொப்பனத்துல வந்து, "நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?'ன்னு கேட்டார்னு சொன்னார்.

உடனே இன்னொருத்தர், "எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?' எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது.
ravi said…
அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக் கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறது ன்னு தான் கேள்வி எழுப்பினார் அவர்.

அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது.

அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், "என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே... நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணு மாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னுநினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துட லாம்னு கொண்டு வந்தேன்' சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார்.
ravi said…
கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். "விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்'னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.

அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங் கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்த வைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா.
ravi said…
வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதி ராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது? இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை.

கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லு வாளே, அதே மாதிரி பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது.
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றுவதன் காரணங்கள் பற்றிய பதிவுகள் :*

ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், ஸ்ரீ ஆஞ்சநேய பெருமான் ஸ்ரீ ராம, லட்சுமணனை தனது தோளில் சுமந்தார். அதன் காரணமாக, ராம பிரானால் போரில் எளிதில் வெற்றி பெற முடிந்தது.

என்றாலும், தோளில் ஸ்ரீ ராம, இலக்குவர்களைத் சுமந்த போது ராவணன் மற்றும் மற்ற அரக்கர்கள் விடுத்த அம்பினால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடலில் ரத்தக் காயங்கள் (பல இடங்களில்) ஏற்பட்டது. அப்பொழுது, ஸ்ரீ ராமர் தனது கரத்தால் ஆஞ்சநேயரின் உடலில் வெண்ணெயை சாற்றினார்.

அதன் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடல் ரணங்கள் மறைந்து அவருக்கு குளிர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு முதன் முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தியது ஸ்ரீ ராமர் தான்.

இந்த இனிய சம்பவத்தை (ராமபிரான் அன்போடு) அனுமனுக்கு வெண்ணெய் சாற்றியதை) நினைவு படுத்தும் விதமாகவும், மேலும் வெண்ணெய்க் காப்பு சாற்றுகின்றனர்.

வெண்ணை சாற்றுவதன் மூலம் ஆஞ்சநேயரை குளிர்விப்பதர்க்காகவும் பக்தர்கள் இன்று வரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் சாற்றி வழிபடுகின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌺🌹"சீடரே....நீங்கள் அந்த அவமானங்களுக்கு தகுதியுடையவர்தான் என்று அர்த்தம்*.. என்று சொன்ன குரு
விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹”சிவா தன் குருவிடம் கேட்டார்
குருநாரே என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள்.
நான் என்ன செய்வது..?

🌺குரு சொன்னார்,
அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்.

🌺என்னால் முடியவில்லையே.
அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்.

🌺அதுவும் முடியவில்லையே.
சரி. அப்படியென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.

🌺குருவே அதுவும் முடியவில்லை.
குரு சொன்னார்,
அவமானங்களை உங்களால்
நிராகரிக்க முடியவில்லை,
கடக்க முடியவில்லை,
கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் சீடரே....நீங்கள் அந்த அவமானங்களுக்கு தகுதியுடையவர்தான் என்று அர்த்தம்*..

இப்ப என்ன பண்ணலாம்
நீங்களே முடிவு பண்ணுங்கள்.
🌺குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ🌹
🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl

*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (23.06.22) storylines of Sri Krishna - " A man has to avoid all obstacles by the grace of his Gurumaharaj that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi, & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/k755A1Lu9wo

2. Sri Krishna Stories - English - https://youtu.be/tu3jT9v2qU8

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺https://youtu.be/yA73P9JkDa8

🙏🌹🌺 *Jai Sri Ramakrishna Gurumaharajki ....Jai* 🌹🌺🙏🏼
ravi said…
"Disciple .... that means you deserve those insults * .. said the Guru
Simple story to explain
--------------------------------------------------- ------
🌺🌹 ”Siva asked his Guru
Gurumaharajki I am insulted by many.
What can I do..?

🌺Guru said,
Do not object to them.

🌺 I could not.
Then pass them on.

🌺 That too could not.
OK. Then just look at them and smile.

🌺Guruji could not do that either.
The Guru said,
Shame on you
Could not refuse,
Could not pass,
If you can not laugh, disciple .... it means that you deserve those insults * ..

🌺What can be done now
Decide for yourself.

🌺Guru Brahma Guru Vishnu
Guru Devo Maheswara;
Guru Sashad Parapramma
Tasmai Sriguruve Namah
⁇🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
அரங்கன் மேனி கண்டாய் காவேரியாய் ஸ்ரீரங்கம் தனில் ...

அவன் பாதம் தொட்டாய் பீமனாய் பண்டரீபுரம் தன்னிலே ..

உன் போல் புண்ணியம் செய்தார் உளரோ இலரோ ..

இணையற்றவளே ... ஈடு சொல்ல உவமை இல்லாதவளே ...

இரக்கம் கொண்டே சுரக்கின்றாய் ...

சுற்றி வரும் பக்தர் தனை பாண்டு ரங்கன் போல் அணைக்கின்றாய் ...

அணை போட்டே தடுத்தாலும் உன் அன்பை தடை போட்டே எடை பார்க்க முடியுமோ ... ??

மடை திறந்தே ஸ்ரீ மாதாவாய் நீ வருகையில்

விடை ஒன்று கண்டேன் .. விடை ஏறும் பத்தினியே .. தடை இனி காணா என் வாழ்வே ...

சத்தியம் இது என்றே உன் சப்தம் கேட்கக்கண்டேன் ..

சடை தரித்தோனும் படை கண்டோனும் பாண்டு ரங்கனாய் அங்கே புன்னகைக்க

புரிந்து கொண்டேன் ஹரியும் ஹரனும் ஒன்றே என்றே 💐💐💐
ravi said…
பீமா நதி
கௌசல்யா said…
ஆஹா...பீமாவோ சந்திரபாகாவோ, ஹரியும் ஹரனையும் ஒருசேர அருமையாய் படைதீர் கவிகுமார் அவர்களே... ஹரே பாண்டுரங்கா... பெரியவா சரணம்...🙏🙏🌹🌹
சவிதா said…
அருமை....the outter mala is only cotton mala very very nicely done..🙏🙏🌷🌷
ravi said…
ராமனும் சதபலியும்* 🐵🐵🐵

*சதபலி சொன்ன கீதை* 🙏🙏🙏
ravi said…
ராமா*

திருவைத் தேடினேன் உன் உருவை மனதில் வைத்தே
உன் நாமம் அதை உதட்டில் வைத்தே ...

கருவிற்கு உயிர் கொடுப்பவனே கண்டிலேன் அன்னையை ...

செய்த பாவம் கோடியோ .. ?

கோடிகள் சேர்ந்ததினால் கோமகனை மறந்தேனோ ?

கொற்றவனே
குற்றம் என் செய்தேன் ...?

கண்ணில் படவில்லை கண்கொள்ளா காட்சி ...

அன்னையை காண வில்லை ...

அவள் அருளமுதம் பெறவில்லை

கண்டேன் சீதையை என்றே கனிமொழி பேசவில்லை ..

உயிர் சுமக்க இந்த உடலுக்கு யோக்கியதை இல்லை இனி *ராமா* ...

உள்ளமெல்லாம் உன் நினைவே இருந்தும் உதவி செய்ய முடியவில்லை *ராமா* ..

வாழ்க்கை கசக்கின்றதே *ராமா* ..

வாழ்ந்து இனி என்ன பயன் என்றே உயிர் கேட்கிறதே *ராமா* ...

சிவம் அகன்றே சவமானதே உள்ளம் *ராமா* ...

அணைத்துக் கொண்டான் சதபலியை *ராமன்* ..

வடக்கே சென்றாய் .

இடக்கே இல்லாமல் வாழும் வாழ்வில் கரும்பின் சுவை உண்டோ ...

கற்றவன் நீ கண் கலங்கலாமோ ...

சதம் அடிப்பாய் வெற்றிதனை

பலி வேண்டாம் பாவம் சேரும் ...

உன் உதவி தனை மறவேன் ..

வடக்கில் அன்னை இல்லை என்றே சொன்னாய்

அதுவும் பெரிய உதவி அன்றோ ...

வடக்கில் செலுத்தும் சக்தி மிச்சம் அன்றோ ...

என்றும் சிவமாய் இருப்பாய்

சவம் எனும் வார்த்தை சவமாகாட்டும் ...

காஞ்சி வாழ் தெய்வம் கலங்குவதில்லை

வடக்கும் கிழக்கும் தெற்கும் மேற்கும் அவன் நடக்காத இடம் இல்லை ..

எங்கும் காண்கிறான் திருவை ..
எதிலும் ஆசை இல்லாமலே ...

உன் உள்ளமதில் நாங்கள் வாழ்கிறோம் ..

*எத்திசை இருப்பினும் அத்திசை நற்திசையே .. வரும் எந்நாளும் நல் நாளே*🙏🙏🙏
கௌசல்யா said…
அருமை🙏🙏🌹🌹
ravi said…
[23/06, 08:08] Kumar Uma: 👍👍👍🙏🙏🙏🙏
[23/06, 09:14] Sib viji athimber: 👌👌🙏🙏
[23/06, 09:18] Chandra US: 🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 263* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*88 மூல மந்த்ராத்மிகா* = மூல மந்திரத்தின் வடிவானவள் (பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் மொத்த வடிவம்)
ravi said…
*மூல மந்த்ர* = மூலம் அல்லது அடிப்படையான மந்திரம்

*ஆத்மிகா* = தனது தன்மையாக கொள்ளுதல் 🙏🙏👏
ravi said…
விசையுறு பந்தினைப்போல் –

உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் –

நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் – சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் – இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 263* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*68 முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து*

*ராஜவச்யம்*🪷🪷🪷

புஜாச்லேஷாந் நித்யம் புரதமயிது : கண்டகவதீ

தவ க்ரீவா தத்தே முககமலநால ஶ்ரியமியம்

ஸ்வத: ஶ்வேதா காலாகரு பஹுல ஜம்பால மலினா

ம்ருணாலீ லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா 68

சௌந்தர்ய லஹரி - 👌👌👌68
ravi said…
அன்னையின் முகத்தை தாமரைப் புஷ்பத்திற்கும்,

கழுத்தை தாமரைத் தண்டாகவும் சொல்லி

தாமரைத் தண்டில் இருக்கும் சிறு முள்ளுகள் போல ஈசனது ஆலிங்கனத்தால் அன்னையின் கழுத்தில் உள்ள மயிர்கால்கள் கூச்செரிதலுடன் காணப்படுவதாகச் சொல்கிறார்.

தாமரை, தண்டு ஆகியவற்றை அன்னையின் முகம், கழுத்துக்கு உவமையாக்கி, பின்னர் தாமரைக் கொடிக்கு உவமையாக அன்னையின் கழுத்தில் விளங்கும் முத்தாலான ஹாரத்தைச் சொல்கிறார்.

முத்து மாலை வெண்மை நிறமுடையது என்றாலும் அன்னையின்
கழுத்தில் இருக்கும் அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பில் புரள்வதால்

தனது வெண்மையை இழந்து தாமரைக் கொடி போல காணப்படுவதாகச் சொல்கிறார்.🪷🪷🪷
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 40*
ravi said…
இந்த உலகத்துல இருக்கிற கடைசி நாள் வரைக்கும் ஞானிகளுக்கும், பக்தர்களுக்கும், எல்லாருக்கும் அந்த உயர்ந்த ஸ்திதிங்கிறது natural ஆ பக்தியாதான் இருக்கு.

அதனால அவா பக்தியை வேண்டி கடைசி நாள் வரைக்கும் அதுலயே இருந்துட்டு போயிடறா.

எட்டாவது ஸ்லோகத்துலயும் அதைத் தான் கேட்கறார்.

दिवि वा भुवि वा ममास्तु वासो
नरके वा नरकान्तक प्रकामम् ।
अवधीरितशारदारविन्दौ
चरणौ ते मरणेऽपि चिन्तयामि ॥ ८ ॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥ 8 ॥
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இப்படிப்பட்ட பெரிய உபகாரத்தைப் பண்ணுகிற குருவிடம் எவ்வளவு பக்தி பண்ணினால்தான் போதும்? அதனால் தான் ஸாக்ஷாத் ஈச்வரனிடத்தில் எவ்வளவு பக்தி வைக்க வேண்டுமோ அதே அளவுக்கு குருவிடமும் வைக்கணும் என்று சொல்லியிருப்பது:
யஸ்ய தேவே பராபக்திர் – யதா தேவே ததா குரௌ
‘யதா தேவே’ – ஈச்வரனிடத்தில் எப்படியோ; ‘ததா குரௌ’ – அப்படியே குருவிடமும்; ‘பராபக்தி’ – உயர்ந்த பக்தி (வைக்கவேண்டும்) .
ravi said…
ச்லோகம் எப்படிச் சொல்லிக்கொண்டு போகிறதென்றால், இம்மாதிரி ஈச்வரனிடம் பக்தி வைத்து, அதே அளவுக்கு குருவிடமும் பக்தியாக இருக்கிற மஹாத்மாவான சிஷ்யனுக்குத்தான் உபதேசிக்கப்படுகிற விஷயத்தின் உள்ளர்த்தம் முழுதும் வெளிப்படும் என்கிறது.* ஈச்வர பக்திக்கு ஸமானமாக குருபக்தி உள்ள சிஷ்யனை “மஹாத்மா” என்று உயர்த்திச் சொல்லியிருப்பதால், இந்த பக்தி பாவமே அவனுக்கு ஆத்ம ஞானத்தைக் கொடுத்து மஹாத்மா என்னும்படியாக ஆக்கிவிடுகிறது என்று ஏற்படுகிறது. ச்லோகத்தில் “யஸ்ய” – “எவனுக்கு” – என்று ஆரம்பித்து, ‘எவனுக்கு ஈச்வரனிடம் உத்தம பக்தி இருக்கிறதோ அதோடுகூட அதே அளவுக்கு குருவிடமும் இருக்கிறதோ அந்த மஹாத்மாவுக்கு தத்வார்த்தங்கள் எல்லாம் பிரகாசிக்கும்’ என்று சொல்லியிருக்கிறது:
ravi said…
தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந: குருவே ஈச்வரன், ஈச்வரனே குரு என்கிறபோது குரு க்ருபை என்ற ரூபத்தில் இந்த மஹா பெரிய பலனை அவன் கொடுத்து விடுகிறான் என்று அர்த்தமாகிறது. முதலில் குருவாக உபதேசம் பண்ணுகிறான். அது மூளை லெவலோடு நிற்காமல் அந்தராத்மாவுக்குள்ளே புகுந்து அநுபவமாக வேண்டுமானால் நாம் பரிபூர்ணமான பக்தியை அந்த குருவிடம் செலுத்த வேண்டும். இதற்கு ப்ரதியாக குரு பரம க்ருபை பண்ணுகிறபோது ப்ரத்யக்ஷமான அநுபூதி பிறக்கும்.
இரண்டு பேரிடம் பக்தியா என்கிற மாதிரியே இரண்டு பேருடைய க்ருபையா – ஈச்வர க்ருபை என்று ஒன்று, குரு க்ருபை என்று ஒன்று, இப்படி இரண்டு க்ருபைகளா – என்ற கேள்வி வந்தால் பதில் சொல்வது கஷ்டம்தான். ஒருத்தனுக்கு ஞான ப்ரகாசம் உண்டாக்குவதில் குரு, ஈச்வரன் என்ற இரண்டு பேரின் க்ருபைகளில் ஒவ்வொன்றுக்கும் எத்தனை பெர்ஸென்ட் என்று கணக்குப் பார்க்க வேண்டியதாகும்! (சிரிக்கிறார்.) ஞானப் பிரஸாதமென்பது இரண்டு க்ருபைகளுக்கிடையில் பங்குபோட்டு நடத்தக்கூடிய விஷயமில்லை என்றும், ஈச்வரன் என்ற ஒருத்தனுடைய ஒரே க்ருபைதான் குருவின் மூலமாக குருக்ருபை என்பதாக வருவதும் என்றும் ஆலோசித்துப் பார்த்தால் தெரிய வரும்
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

ப்ராந்த்வா முஹு: ஸ்தபகிதஸ்மிதபேனராஶௌ
காமாக்ஷி வக்த்ரருசி ஸம்சய வாரிராஶௌ |
ஆனந்ததி த்ரிபுரமர்தன நேத்ரலக்ஷ்மீ:
ஆலம்ப்ய தேவி தவ மந்தம் அபாங்கஸேதும் ||34||
- கடாக்ஷ சதகம்.
ஹே தேவி! காமாக்ஷி! திரிபுர ஸம்ஹாரியான பரமசிவனுடைய பார்வையாம் திருமகள், உன் புன்சிரிப்புக் கூட்டமாகிற நுரையுடன் கூடிய உன் முககாந்தி ஸமுத்ரத்தில், நீந்திக் களைத்து, மெதுவாக உனது கடாக்ஷமாகிற கரையைச் சார்ந்தடைந்து ஆனந்திக்கிறாள்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
#ஸ்ரீராமானுஜரின்_வரலாற்றுமகிமை_பகுதி_2*

ராமானுஜருக்கு இளம்வயது முதலே கல்வியில் பேரார்வம். ஆசிரியர்கள் அவர் மீது கொண்ட அன்பிற்கு அளவில்லை. பள்ளிப் பிள்ளைகளில் முதலாவது இடத்தில் இருந்தார் ராமானுஜர்.

அது மட்டுமல்ல, மகான்களைக் கண்டால் அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று பாராமல், அவர்களோடு உரையாடுவார். அவ்வகையில் அவரது உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர் திருக்கச்சி நம்பி என்னும் பக்தர்.
ravi said…
இவரை ஊரார் ஸ்ரீகாஞ்சி பூர்ணர் என்று அழைப்பார்கள். பரந்தாமனுடன் நேரில் உரையாடுபவர் என்று மக்கள் இவரைக் கருதினர். அவர் வேளாளர் குலத்தைச் சார்ந்தவர் என்பதால், தன்னை விட உயர்ந்த அந்தணர்களுக்கு தான் என்றும் ஈடல்ல என்ற கருத்தைக் கொண்டவர்.

ஆனாலும், அவர் சொல்லும் வார்த்தைகளை பரந்தாமனின் வார்த்தையாகக் கருதிய அந்தணர்கள் கூட மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். அவரது சொந்த ஊர் பூவிருந்தவல்லி (இன்றைய சென்னை பூந்தமல்லி). ஆனால், காஞ்சியில் குடியேறி விட்டவர்.

வரதராஜப் பெருமாளைத் தவிர அவருக்கு வேறு எந்த நினைவுமில்லை. தினமும் காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருக்கச்சிநம்பி பூவிருந்தவல்லியிலுள்ள பெருமாளை தரிசிக்கச் செல்வார்.
ravi said…
இதற்கு இடைப்பட்ட தூரம் 52 கி.மீ.,. தினமும் 104 கி.மீ., நடந்து சென்று வருவதென்றால், நம்பியிடமிருந்த பக்தியின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது ராமானுஜர் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

அவரது முகத்தில் வீசிய தெய்வீகக்களை ராமானுஜரை மிகவும் கவர்ந்தது. அவருடன் பழகுவதைப் பெருமையாகக் கருதினார். நம்பிகளோ பரமசங்கோஜி.

குழந்தாய்! நீர் பிராமணர். நான் வேளாளன். தாங்கள் என்னோடு நட்பு பூணுவது எவ்வகையிலும் பொருந்தாததாய் அமையுமென்றே கருதுகிறேன்,என்றார். இவ்விடத்திலே ராமானுஜர் சொன்ன கருத்து எக்காலத்திற்கும் ஏற்புடைய ஒன்று. காஞ்சி பூர்ணரே! தாங்கள் பகவானிடம் நேரில் பேசும் ஆற்றல் பெற்றவர்.

எங்களால் அது முடிகிறதா? பூணூல் அணிந்த காரணத்தால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆக முடியாது. யார் ஒருவன் பகவானே சரணமென அவனோடு ஒன்றிப் போகிறானோ, அவனே நிஜமான பிராமணன். ஐயனே! திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தவராயினும், அவரை பிராமணர்கள் போற்றி மகிழ்கிறார்களே, என்றார்.
ravi said…
அந்த செல்லக்குழந்தையின் அறிவாற்றலையும், ஜாதி துவேஷமற்ற தன்மையையும் எண்ணி வியந்தார் திருக்கச்சி நம்பிகள். அன்று கோயில் சென்று திரும்பும்போது ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் வீட்டிலேயே தங்கினார். அவருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்த ராமானுஜர், இரவில் அவர் படுத்ததும், கால்களைப் பிடித்து விட்டார்.

திடுக்கிட்டு எழுந்த நம்பிகள், ஐயா! நான் உங்கள் தொண்டன். எனது கால்களை தாங்கள் பிடித்து விடுவதா? என்றார் நெகிழ்ச்சியுடன். ராமானுஜர் வருத்தப்பட்டார். காஞ்சி பூர்ணரே! தங்களுக்கு சேவை செய்ய விடாமல் என்னை நீங்கள் தடுக்கிறீர்களே. இதை எனது துரதிர்ஷ்டமாகவே கருதுகிறேன், என்றார். இப்படி இவர்கள் கொண்ட அன்பின் எல்லை விரிந்து கொண்டே சென்றது. ராமானுஜர் வாலிப பருவத்தை அடைந்தார்
ravi said…
பதினாறு வயதானது. ஆசூரிகேசவாச்சாரியாரும், காந்திமதி அம்மையாரும் மகனுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். ரக்ஷகாம்பாள் என்னும் அம்மையாரைத் திருமணம் முடிக்க ஏற்பாடாயிற்று. தஞ்சமாம்பபாள் என்றும் இவருக்கு பெயருண்டு. ராமானுஜரின் திருமணம் கி.பி. 1033ல் நிகழ்ந்தது. மாட்டுப்பெண்ணின் வரவு குடும்பத்தில் பெருமகிழ்ச்சியை வரவழைத்திருந்தது.

ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரே மாதத்தில் அழிந்து போனது. திடீரென நோய்வாய்ப்பட்ட ஆசூரி கேசவாச்சாரியார் காலமாகி விட்டார். திருமணப் பந்தலிட்ட வாசலில் ஒரே மாதத்தில் நிகழ்ந்த இச்சோக சம்பவத்தால் காந்திமதி அம்மையார் நிலை குலைந்து போய்விட்டார். ராமானுஜரும் கடுமையான வருத்தத்தில் ஆழ்ந்தார்.
ravi said…
எனினும், அவரது ஆன்மபலத்தால் சற்றே தேறினார். இருப்பினும், மனச்சஞ்சலமடைந்த அவர்கள் ஊரைவிட்டே செல்வதென முடிவெடுத்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆன்மிகநகராம் காஞ்சிபுரத்துக்கு இடம் பெயர்ந்தனர். ராமானுஜர் அங்கேயே ஒரு வீடு கட்டி விட்டார்.

காஞ்சிபுரம் வந்ததும் தான் ராமானுஜருக்கு சோதனைக்காலமும் ஆரம்பித்தது. அதுவும் தனக்கு அமைந்த குருவிடமிருந்து இப்படிப்பட்ட சோதனை வருமென ராமானுஜர் நினைத்திருக்க மாட்டார். காஞ்சியில் யாதவப்பிரகாசர் என்ற பண்டிதரின் மாணவரானார் ராமானுஜர். பரம பண்டிதரான அவரது புலமை பலரைக் கவர்ந்திழுத்தது.
ravi said…
அத்வைதக் (கடவுளுக்கு உருவமில்லை எனச் சொல்லும் பிரிவு) கொள்கையில் நாட்டமுடையவர் அவர். ராமானுஜர் தனது மாணவரானதும் அவரது அறிவுத்திறன், தேஜஸ் ஆகியவற்றைக் கண்டு ஆனந்தம் கொண்டார். மிகக்கஷ்டமான பாடங்கள், மந்திரங்களைக் கூட ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே அதை உடனடியாகப் புரிந்து கொண்ட ராமானுஜர் பற்றி உயர்வான அபிப்ராயம் வைத்திருந்தார்.

ஆனால், ராமானுஜருக்கோ குருவின் அத்வைதக் கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. இருப்பினும், குருவின் சொல்லுக்கு மறுபேச்சு பேச அவர் விரும்பவில்லை. மொத்தத்தில் வகுப்பில் அதிகம் பேசாத மாணவராகவே ராமானுஜர் திகழ்ந்தார். அதேசமயம் நீண்டநாள் இந்த மவுனவிரதம் நீடிக்கவில்லை. ஒருநாள், மதியவேளையில் மாணவர்கள் உணவருந்தச் சென்றுவிட்டனர்.
ravi said…
யாதவப்பிரகாசர் ராமானுஜரை அழைத்து, ராமானுஜா, என் உடம்புக்கு இன்று நீ எண்ணெய் தேய்த்து விடு, என்றார். அக்காலத்தில் மாணவர்கள் தான் குருவின் சொந்தப்பணியைக் கூட கவனிக்க வேண்டும். அப்போது ஒரு மாணவன் அங்கு வந்தான்.

குருவே! தாங்கள் காலையில் நடத்திய பாடத்தில் ஒரு மந்திரத்தின் பொருள் எனக்கு புரியவில்லை. சாந்தோக்ய உபநிஷதத்தில் வரும் தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி என்பதற்குரிய விளக்கம் வேண்டும்,என்றான்.

யாதவப்பிரகாசர் அவனிடம், பொன்போன்று பிரகாசிக்கும் பரந்தமானின் கண்கள் குரங்கின் ஆஸனவாய் சிவப்பாக இருப்பது போன்ற நிறமுள்ள சிவந்த தாமரை போன்றவை, என்றார். இவ்விளக்கம் கேட்டு ராமானுஜர் கண்ணீர் வடித்து விட்டார். சூடான கண்ணீர் ஆசிரியரின் தொடையின் மீது விழுந்தது. அதன் உஷ்ணம் தாளாமல், ஆசிரியர் மேல்நோக்கி பார்த்தார். நின்று கொண்டிருந்த ராமானுஜர் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.
ravi said…
ராமானுஜா! ஏன் அழுகிறாய்? குருவே! தங்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். தாங்களே மகாத்மா. ஆனால், உலகத்தைக் காக்கும் எம்பெருமானின் திருக்கண்களை குரங்கின் பிருஷ்டபாகத்திற்கு ஒப்பிட்டதை எப்படி ஏற்பது? என்றார். குருவுக்கு கோபம் மிதமிஞ்சி விட்டது.

அப்படியானால் நீ தான் இந்த உலகத்திற்கே குருவோ? குருவின் கருத்தை மறுப்பவன் நல்ல சீடனாக இருக்க முடியாது. சரி! நீதான் என்னையும் மிஞ்சிய அறிஞன் ஆகிவிட்டாயே, எங்கே, இப்பதத்திற்கு என்னை விட வித்வானாகி விட்ட நீ தான் பொருள் சொல்லேன், என்றார்.

*#ஸ்ரீமதே_ராமானுஜாய_நமஹ*
ravi said…
1.கர்மகாண்டம் என்றால் என்ன? பகவான் கிருஷ்ணர் ஏன் இதை பரிந்துரைக்கவில்லை? /what is karma kanda why krishna doesn't recommend this ?
ravi said…
The rituals and sacrifices mentioned in the karma-kanda division of the Vedic literature are to encourage gradual development of self-realization. And the purpose of self-realization is clearly stated in the Fifteenth Chapter of the Bhagavad-gita (15.15): the purpose of studying the Vedas is to know Lord Krishna, the primeval cause of everything. So, self-realization means understanding Krishna and one’s eternal relationship with Him.”
ravi said…
Feedback
பகீ :2.(42-46) இந்த பௌதீக
உலகில், ஒருவர் எப்போதும் பொருள் மகிழ்ச்சிக்காக (ஆடம்பரத்திற்காக, பயணம் செய்ய, தன்னை அல்லது மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக) கடமைகளைச் செய்கிறார்.
ravi said…
பொருள் பலன்கள் (நல்ல வாழ்க்கைத் துணை, குழந்தைகள் கல்வி போன்றவை) பெறுவதற்காக செய்யப்படும் அனைத்து வேத சடங்குகளும் கர்மகாண்டம் எனப்படும். சிறந்த அறிஞரும் வலிமைமிக்க வீரனுமான அர்ஜுனனும் கூட, தனது சொந்த மகிழ்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தனது உறவினர்களைக் கொல்லாமல் தனது கடமையைத் தவிர்க்க விரும்பியதால், இதில் விழுந்தார்.
ravi said…
எப்பொழுதும் கிருஷ்ணரிடம் சரணடைந்து கர்மகாண்டத்திற்கு மேல் உயர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பௌதிக உலகில் உள்ள அனைத்து கடமைகளும் கிருஷ்ணரை (அகர்மாவை) மகிழ்விப்பதற்காக, பொருள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் அல்லது புலன் திருப்திக்காக செய்யப்பட வேண்டும்.
ravi said…
முக்கியமாக, ஜடச் செயல்களும் அவற்றின் முடிவுகளும் இந்த உடலுடன் முடிவடைகின்றன. இருப்பினும், ஆன்மா நித்தியமானது, அது ஒரு உடலிலிருந்து மற்றொன்றுக்கு செல்கிறது. வாழ்க்கையில் ஒருவரின் இறுதி இலக்கு/இலக்கை புரிந்துகொள்வது அல்லது கண்டறிவது, ஆன்மாவை வளர்ப்பது மற்றும் இந்த வாழ்க்கையில் கிருஷ்ணரை மகிழ்விக்க அர்ப்பணிப்பது எந்த இழப்பையும் ஏற்படுத்தாது.
ravi said…
அடுத்த பிறவியில், முந்தைய வாழ்க்கையில் ஒருவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆன்மீக நடவடிக்கைகள் தொடரும், இறுதியில் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து
ravi said…
விடுபடும்.

எ.கா- இந்தப் பிறப்புச் சுழற்சியில் ஒருவர் மருத்துவராகப் படித்தால், அடுத்த வாழ்க்கையை ப்ரீ-நர்சரியில் இருந்து தொடங்க வேண்டும். கிருஷ்ண உணர்வைப் போலவே, ஒருவன் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறான்.
ravi said…
Karmakanda (BG 2.42 -2.46)

In this materialistic world, one always performs duties for material happiness (for luxury, to travel, to satisfy oneself or others). All vedic rituals performed for obtaining material benefits (good spouse, kids education etc) and getting attached to the result is called Karmakanda. Even the great scholar and the mighty warrior Arjuna fell for this as he wanted to avoid his duty by not killing his relatives for his own happiness and pleasure. It is mentioned that one should always surrender to Krsna and raise above Karmakanda. All duties in this material world should be performed to please Krsna (Akarma) without material expectations nor for sense gratification.
Importantly, material activities and their results end with this body. However, soul is eternal that passes on from one body to another. Understanding or finding one’s ultimate aim/goal in life, nurturing the soul and dedicating to please Krsna in this life will not cause any loss. In the next life, the spiritual activities will be continued from where one had left in the previous life and ultimately be free from cycle of birth and death.
Eg- In this cycle of birth if one studies for becoming a doctor, next life would need to restart from pre-nursery. Where as in Krsna consciousness, one begins from where he had left.
ravi said…
2.ஒருவரின் கிருஷ்ண உணர்வுக்கு ஏற்படும் தடைகளை அகற்றி கவனத்தை செலுத்துவது எவ்வாறு? / How to remove obstacles to one's Krishna Consciousness and pay attention ?
ravi said…
Lord Krishna instructs a disturbed Arjuna that those people who tread on the path of Krishna Consciousness are fixed in their aim – to always render service unto the Supreme Lord in whatever capacity they can, without any desire for sense gratification.

There are times where, instead of distractions, that bring an assumed sense of happiness, occasional setbacks and problems may occur as obstacles to such determination. In the life of Srila Prabhupada for example, we see how many such obstacles tested his determination and resolve. Initially, he was devoid of the support of his family & close friends even before he ventured out on his daring mission. His pharmaceutical business had to ultimately come to an end, and as a result, he had no stable income, apart from the generous donations which he would receive from time-to-time. He was practically alone, with nothing but his sheer determination & courage. When he started to devote his full focus on leaving India to share Krishna bhakti in the western world, the obstacles multiplied.
ravi said…
Srila Prabhupada was unable to secure a trip to the United States without the help of many other people. He needed support, whether it was sponsorship to go to the USA, negotiating the travel, or even clearing all the formalities put forward by the government.

Insurmountable obstacles were all around him, and it did seem that such obstacles could not be overcome. Somehow or other, by Lord Krishna’s mercy and Srila Prabhupada’s deep and sincere desire, he was able to step unto the deck of the Jaladuta ship after months of fighting forward.

“With what great difficulty I got out of the country! Some way or other, by Krishna’s grace, I got out so I could spread the Krishna consciousness movement all over the world. Otherwise, to remain in India—it was not possible.”
ravi said…
“With what great difficulty I got out of the country! Some way or other, by Krishna’s grace, I got out so I could spread the Krishna consciousness movement all over the world. Otherwise, to remain in India—it was not possible.”

Srila Prabhupada quoted in the Lilamrta
ravi said…
Feedback
எந்தவொரு பாதையிலும் வெற்றியை அடைய, ஒருவருக்கு ஒரு நுண்ணறிவு இருக்க வேண்டும். அனைத்து வகையான புத்திசாலித்தனத்திலும் பக்தி யோகாவில் கவனம் செலுத்துவது சிறந்தது. அப்படிப்பட்ட ஒருவரால், பகவான் கிருஷ்ணரிடம் உள்ள வலிமையான பக்தி ஒருவரை வாழ்வின் உயர்ந்த பரிபூரணத்திற்கு உயர்த்தும். ஒருவரின் செயலால் கிருஷ்ணர் திருப்தி அடைந்தால் அனைவரும் திருப்தி அடைவார்கள். பக்தி ஒரு நல்ல குருவின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாகப் பயிற்சி செய்யப்படுகிறது.
ravi said…
To achieve success in any path one should have one pointed intelligence. Among all the types of Intelligence the intelligence that is concentrated on Bhakti yoga is the best. By such one pointed strong Bhakti towards Lord Krishna will elevate one to the highest perfection in life. If Krishna is satisfied by one's action then everyone else will be satisfied. Bhakti is the best that should be practised under the guidance of a Bonafide Guru.
ravi said…
5.வேதங்களின் அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றுவது எது? /Which is fulling all the aims of vedas?
*
1/1
a.சங்கீர்த்தன யக்ஞம்/ yagna through sankirtan

b.பிறருக்கு பௌதீக மாக உதவுதல்/ helping to fulfill someone's materialistic needs
c.யாகங்கள் செய்தல்/ doing yagna
d.அன்னதானம்/ donating food
ravi said…

4.கிருஷ்ண உணர்வில் உள்ளவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்? / What is the mindset of a person who is in Krishna consciousness?
*
1/1
a.திடமற்றது/ not so firm
b.நம்பிக்கை இல்லாதது/ without faith
c.திடமானது, உறுதியானது/ solid, firm

d.தன் விருப்பம் போல் செயல்படுவர்/ the one who likes to do as per the wish
ravi said…

3.பக்தியில் உறுதியற்றவரின் தன்மை எவ்வாறு இருக்கும்? /What is the nature of a person who is not so strong in devotion?
*
1/1
a.மனம் போன போக்கில் செயல்படுவர்/ does what he likes to do
b.இலட்சியம் இல்லாமல் இருப்பவர்/ the one without any goal
c.பிறர் சொல்வதை சிந்திக்காமல் ஏற்பவர்/ accepting others' views without even thinking
d. மேற்கண்ட அனைத்தும்/All of the above
ravi said…
2.எத்தகைய பாதை பயம் என்ற ஆபத்தில்லாத பயணம் தரும்? / Whiat kind of path will lead to a journey free from the danger of fear?
*
1/1
a.ஸாங்கியயோகம்/ Sangiya yoga
b.தியானயோகம்/ Dhyana yoga
C.பக்தி யோகம்/Bakthi yoga

d.ஹடயோகம்/ Hat yoga
ravi said…

1.கர்ம பந்தத்திலிருந்து தன்னை விலக்கிகொள்பவன் யார்? / Who detaches oneself from the materialistic bonding?
*
1/1
a.பிறர் செயலில் வாழ நினைப்பவர்கள்/ who thinks to get benefits from others' efforts
b.பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்பவன்/doing duties without expecting any benefits

c.பலனை எதிர்பார்த்து கர்மம் செய்பவன்/ doing deeds by expecting benefits
d.கர்மம் செய்யாமல் இருப்பவன்/who does not do any deeds
ravi said…
சங்கராம்ருதம் - 193

*"எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே?*

*அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்? - டாக்டர்*


காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி

இருந்த முகாமிற்கு பால்காரர் தினமும் பால்

கொண்டு வந்து கொடுத்தார்.அந்த மனிதருக்கு

பெரியவா யார், அவரை வணங்கி எழ வேண்டும்

என்கிற பக்தி உணர்ச்சியெல்லாம் சிறிதும்

இல்லை. ஏனெனில் அவர் மராட்டியர். யாருக்கு

பால் கொண்டு போய் தருகிறோம் என்று உணராத

மனநிலை.

இந்த சமயத்தில் ஒருநாள்,அந்தப் பால்காரரின்

மனைவிக்கு திடீரென்று உடல்நிலை கெட்டுவிட,

அடுத்தடுத்த நாட்களில் ஆரோக்கியம் வெகுவாகக் குறையத் தொடங்கியது. வீட்டில் சகல காரியங்களையும் ஓடி ஆடி வேலை செய்து

கொண்டிருந்த அந்தப் பெண், ஒரே வாரத்தில் நிற்க

முடியாமலும்,நடக்க முடியாமலும் தடுமாற,

உடலின் இயக்கம் சுத்தமாகக் குறைந்து, படுத்த

படுக்கையாகிவிட்ட நிலை.

பால்காரர் மனைவியை மருத்துவமனைக்கு

அழைத்துச் சென்றார். டாக்டர்கள் நன்றாகப்

பரிசோதித்தபின், அப்பெண்ணுக்கு ஒருவிதமான

கேன்சர் நோயினால் வெகுவாகப் பாதிப்பு

ஏற்பட்டிருக்கிறது என்றும்,இனி எந்த வைத்யமும்

அப்பெண்ணைக் காப்பாற்ற முடியாது என்றும்

சொல்லிவிட்டார்கள்.

மனதில் கவலை நிறைந்து வாட்டினாலும்

தொடர்ந்து மகானின் முகாமுக்குப் பால் கொண்டு

வந்து கொடுப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

வழக்கத்துக்கு மாறாக பால்காரர் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கண்ட மடத்தின் ஊழியர்கள் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க,பால்காரர் தன் மனைவியின் உடல்நிலை மோசமாகி இருப்பது பற்றி சொன்னார்.

அதோடு,தன் மனைவிக்கு என்ன உணவு கொடுக்க

வேண்டும் என்று அந்தப் பால்காரர் மருத்துவரிடம்

விசாரித்தபோது, அப்பெண் பிழைத்திருப்பதோ

இன்னும் கொஞ்சகாலம்தான் .அதனால் அவள்

விருப்பம் என்னவோ அந்த ஆகாரத்தை தரலாம்

என்று கூறிவிட்டதையும் சொன்னார்.

அப்பெண்ணோ எதுவும் ஆசைப்பட்டுக் கேட்கவில்லை பச்சை மிளகாயை அப்படியே பதம் செய்து தின்பதில் தான் அவளுக்கு விருப்பம் அதிகம்.அதை மனைவிக்குக் கொடுப்பது ஆபத்து நிறைந்த விஷயம் என்பது நன்கு தெரிந்தும், அதையே மனைவிக்குத் தயாரித்து

அளிப்பதாகவும் கூறினார்.வேதனையோடு.

தினமும் வரும் அந்தப் பால்காரரின் பரிதாபத் தோற்றம் சிப்பந்திகளின் மனதிலும் பரிதாபத்தை ஏற்படுத்த, பால்காரரைப் பற்றி மகா பெரியவாளிடம் சொல்லி ஆறுதல் தேட முடிவு செய்து,அத்தெய்வ சன்னதியில் போய் நின்றனர்.

அவர்களில் ஒருவர், "பெரியவா தினமும் மடத்துக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கிறானே அந்தப் பால்காரன்.." என்று ஆரம்பிப்பதற்குள், மகானே பேச ஆரம்பித்தார்.

"ஆமாம்..அவன் ஆத்துக்காரிக்கு உடம்பு சரியில்லை. டாக்டர்கள் கேன்சர்னு சொல்லி,இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோடு இருப்பா.அவளுக்கு இஷ்டப்பட்டதைக் குடுனு இவன்கிட்ட சொல்லிட்டா இல்லையா?அவனும் அதைத்தானே செஞ்சுண்டு இருக்கான்! இதைச் சொல்லத் தான் இங்கே வந்தேளா...?" என்று அவர்களிடம் கேட்கஅசந்து போனார்கள் எல்லோரும்! மகானுக்குத் தெரியாத விஷயமே இல்லை என்பதை எப்படி மறந்துபோனோம்! என்று திகைத்து நின்றார்கள்.

அவர்களுக்கு அப்போதுதான் மனதில் உறைத்தது. -

பால்காரனின் கஷ்டம் மகாபெரியவாளுக்குத்

தெரிந்திருக்கிறது என்றால் அதைவிட வேறு

அனுகிரகம் என்ன வேண்டும்? என்று அவர்கள்

மனதில் ஒருவித நிம்மதி ஏற்பட்டது.



எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம் அமைதியாக இருக்குமா? அவரது அனுகிரகம் உடனே செயல்பட ஆரம்பித்தது.

அடுத்த சில தினங்களில் பால்காரனின் மனைவி

படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். பின்

மெதுவாக எழுந்து நின்றாள். இது ஆரம்பம்.பிறகு

சில தினங்களில் பழைய நிலைக்குத் திரும்பி

மிகவும் ஆரோக்கியமாக நடமாட ஆரம்பித்துவிட்டாள்.

அதனால் மிகவும் ஆனந்தமடைந்த அந்த பால்காரர் தன் மனைவியை டாக்டரிடம் மீண்டும் அழைத்துப் போய் காட்டினார்.நன்கு பரிசோதித்தபின் முடிவுகளைப் பார்த்த டாக்டர் முதலில் தன்னையே நம்பவில்லை. ஏனெனில், அப்பெண்ணிடம் நோயின் சுவடே இல்லை.

வியப்போடு டாக்டர் கேட்டார்;

"எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே?

அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்?

இது முத்தின நோய்.இதுவே இப்படி குணமாகிவிட்டதே அந்த டாக்டர் கொடுத்த மருந்தை நான் மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்றுதான் கேட்கிறேன்"

பால்காரருக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை.

மகா பெரியவா என்னும் பெரும் தெய்வமே தன்

மனைவியை குணப்படுத்தியது என்று அவருக்குத்

தெரியுமா என்ன?

அடுத்தநாள் அந்த சந்தோஷத்தை மடத்து சிப்பந்திகளிடம் வந்து சொன்னபோது,அது அவர்களுக்குக் கொஞ்சமும் ஆச்ச்ரியத்தை தரவில்லை. காரணம் மடத்து ஊழியர்கள்

எல்லோருக்குமே மகாபெரியவாளின் அருட்பார்வையின் அற்புதம் நன்றாகத் தெரிந்த விஷயம் அல்லவா.
ravi said…
சோணை நதி*
ravi said…
அம்மா ...

சங்கரன் சொன்னதை திருப்பி சொல்கிறேன் .

கருப்பாய் ஆழமாய் இருக்கும் காளிந்தி எனும் யமுனை

செந்நிற சோணை

இவற்றுடன் நுப்பும் நுரையுமாய் வெண் நிறமாய் சேரும் கங்கை

அம்மா!!

இந்த திரிவேணி சங்கமம் உன் காரூண்யத்தின் சங்கமம்

உன் கண்களில் சேரும் ஆச்சரியம் ...

தாயின் கண்ணாய் இருக்கும் நீ

பெண்ணாய் பொன்னாய் எங்கள் புண்ணை துடைக்கும் அதிசயம் கண்டேன்

கருவுற்ற உன் மேனி தனில் அலைகள் பிரசவிக்கும் ஆனந்தம் கண்டேன்

கொற்றவளே குற்றம் அற்றவளே

இமாவன் பெற்ற கோமளமே

பஞ்சு அஞ்சும் உன் மெல்லடிகள் என் சென்னி தனில் தழுவி செல்லும் சுகம்

அதுவன்றோ நான் தினம் கேட்கும் நீலாம்பரி ராகம் 🪷🪷🪷
ravi said…
Dear Gomatha Asthikas coming
*26/06/2022 Sunday is Pradhosham* *we will be giving 200litres Milk ,40 litres each to 5 *temples* And *500 Elaneer ABISHEGAM* , 100 Each to 5 temples
Minimum contribution is 10 pieces.. per piece rate 25rs 🙏🙏 And milk Minimum contribution is 5 litres per litre cost 55rs 🙏🙏
*Sri Mahalingaswami Temple Thiruvidaimarudur* , *Neelakandeshwar Temple ,* *Sri Naganathaswamy temple* *Sri Uma Maheswara Swamy*and *Sri Adhikumbeswara Swamy temple* for milk Abhishekam. Those who are willing to participate can message me. Once we get required quantity litres we will close the request. - *Preetha Venugopal 9884715756 - Sri Vithal Brindavan Goshala Volunteer Team
ravi said…
*From Ancient Indian Texts :*

ॐ सर्वे भवन्तु सुखिनः
सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाग्भवेत।
ॐ शान्तिः शान्तिः शान्तिः॥

May all living beings be at peace, may no one suffer from illness;

May all experience see what is good, and may no one suffer.

Om Peace, Peace, Peace.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 264* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*88 மூல மந்த்ராத்மிகா* = மூல மந்திரத்தின் வடிவானவள் (பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் மொத்த வடிவம்)
ravi said…
மூலமந்திரத்தின் மூன்று கூடங்களைத் தன்னுடைய வடிவமாகக் கொண்டவள்.

மந்திரமே அவளுடைய சரீரம்.

பஞ்சதசீயின் பதினைந்து அக்ஷரங்களில் அம்பாள் வசிக்கிறாள்.

அக்ஷர வடிவமாகவே அவளை வணங்குவார்கள்.

திருவாரூர் கமலாம்பா சந்நிதிப் பிராகாரத்தில், அக்ஷரபீடச் சந்நிதி உண்டு.

பீடம் மாத்திரம் இருக்கும்;

மேலே வேறு வடிவம் கிடையாது.

அம்பாளை அக்ஷர ரூபத்தில் மனத்தில் தியானம் செய்து, அவரவர்கள் உள்ளத்தில் உள்ள ஸ்வரூபத்தை அங்கு ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும்.

விரும்புவோர் விருப்பப்படி... அம்பாளை யார் யார் எப்படியெல்லாம் பார்க்க விரும்புகிறார்களோ அவை எல்லாவற்றுக்குமான தகுந்த நாமங்கள் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் இருப்பது அதனுடைய விசேஷம்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 264* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*68 முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து*

*ராஜவச்யம்*🪷🪷🪷

புஜாச்லேஷாந் நித்யம் புரதமயிது : கண்டகவதீ

தவ க்ரீவா தத்தே முககமலநால ஶ்ரியமியம்

ஸ்வத: ஶ்வேதா காலாகரு பஹுல ஜம்பால மலினா

ம்ருணாலீ லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா 68

சௌந்தர்ய லஹரி - 👌👌👌68
ravi said…
*தவ* - உன்னுடைய;

*க்ரீவா* - கழுத்து;

*புரதமயிது* : - முப்புரமெரித்த சிவனது;

*புஜாச்லேஷாத்* - புஜங்களின் தழுவுதலால்;

*நித்யம்* - எப்போதும்;

*கண்டகவதீ* - மயிர்க் கூச்செரிந்து முள்ளுகள் போல;

*முக-கமல-நால-ச்ரியம்* - முகத்தாமரைக்குக் காம்புபோன்ற அழகை;

*தத்தே* - அடைகிறது;

*யத் அத:* - அதன் கீழே;

*ஹார-லதிகா -* முத்து மாலை;

*ஸ்வத* : - இயற்கையில்;

*ச்வேத* : - வெண்மையாக;

*காலாகரு* - கருமையான அகிலுடன் சேர்ந்த;

*பஹுல-ஜம்பால* - சந்தன குழம்பினால்;

*மலினா* - சேற்றில்;

*ம்ருணாலீ* - தாமரைக் கொடியின்;

*லாலித்யம்* - பொலிவை;

*வஹதி* - கொண்டதாக இருக்கிறது.🪷🪷🪷
ravi said…
வயங்குறு நின் தரளவட மான் மதச்சேறு
அளைய

மதுமத்தர் மேனி
முயங்குதொறும் எழு புளகம் உட்பொதிந்த

பசுங்கழுத்து முகமும் கண்டால்
இயங்குபுனல்

கருஞ்சேற்றில் எழும் வலய
முள்ளரைத்தாள்

ஈன்ற கஞ்சம்
பயம் புகுதல் கடனன்றோ

மாற்றிலாப்
பசுமையொளி பழுத்த பொன்னே!!💐💐💐
ravi said…
தவழும் உனது முத்து மாலை கஸ்தூரிச்சேற்றில் அசைய,

மதுவை உண்டு மயங்கியவர் போல் உன்னவர் உன் திருமேனியைத் தழுவும் போதெல்லாம்

எழுகின்ற புல்லரிப்பை உடைய

பசிய உன் கழுத்தையும் முகத்தையும் கண்டால் -

அசையும் நீரையை உடைய கரிய சேற்றில் விளையும் வட்டவடிவமான முள்ளினையுடைய காம்புகள் ஈன்ற தாமரை பயந்து போவது இயற்கையன்றோ

உவமையில்லாத பச்சை ஒளி கொண்ட சிறந்த பொன் போன்றவளே.🪷🪷🪷
ravi said…
இப்படித்தான் லலிதா என்று அன்புடன் கண்களில் பக்தி கண்ணீராய் சிந்த அழைத்தால்

ஓடி வருவாள்

ஸ்ரீ மாதாவாய்

மஹாராணியாய் ,
சிம்மாசனேஸ்வரியாய்

ஹிம்சாசனேஸ்வரியாய் ,

மறைப்பவளாய்

அருள்பவளாய்

ஓடி வருவாள் ஸ்ரீ லலித்தாம்பிகை நம்மிடம் ... 🪷🪷🪷
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏


ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் விஜய யாத்திரை சம்பந்தமாக கிழக்கிந்தியக் கம்பெனியாரால் 1792-ஆம் வருஷத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ravi said…
ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் கீழ்க்காணும் விருதுகளுடன் கும்பகோணத்திலிருந்து
சென்னப்பட்டிணத்திற்கு யாத்திரா
மார்க்கமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து
திருநெல்வேலி வரைக்கும்
ஆங்காங்கு சஞ்சாரம் செய்வார்கள்.

அவர்களிடத்திலிருந்து சுங்கம் முதலியன வசூல் செய்யக்கூடாது. மேலும் அவர்களுக்கு ஒருவிதமான இடைஞ்சலும் இன்றி, ஸகலவித சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட வேண்டும்."

யானைகள் 3, ஒட்டகம் 5,
பல்லாக்குகள் 10,
குதிரைகள் 20, மாடுகள் 50,
சிப்பந்திகள் 500.
---–-------
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது.
ravi said…
காஞ்சி ஶ்ரீ காமகோடி ஜகத்குரு ஶ்ரீ சங்கராச்சாரியார் மடம் ஒரு சமஸ்தானம். பாரம்பரியமாகவே யானைகள் 3, ஒட்டகம் 5, பல்லாக்குகள் 10, குதிரைகள் 20, மாடுகள் 50, சிப்பந்திகள் 500 என சமஸ்தானமாகவே விஜய யாத்திரை செய்தது.

பூஜ்யஶ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவா தாம் பீடமேற்று, ஆதிசங்கர பரம்பராகத மூலாம்னாய பீடத்திற்கே உரிய ஸ்வர்ண இழைகளால் இழைக்கப்பட்ட பீதாம்பரம், ஸ்வர்ண கௌரிசங்கர மாலை, ஸ்வர்ண பாதுகை, ஸிம்ஹாஸனம் முதலியவற்றை ஏற்று அருளியும்,

தனக்கு முந்தைய காஞ்சி ஶ்ரீ ஆச்சார்யர்கள் போலவே ஸமஸ்தானமாக காசி யாத்திரையும் செய்தவர்கள்.
ravi said…
தனக்கு முந்தைய காஞ்சி ஶ்ரீ ஆச்சார்யர்கள் போலவே ஸமஸ்தானமாக காசி யாத்திரையும் செய்தவர்கள்.

அப்படிக் காஞ்சி ஶ்ரீ மடத்திற்குரிய பாரம்பரிய முறைகளிருந்தாலும்,

பின் அனைத்தையும் துறந்து சுரமந்திரதருமூல வாஸியாக இருந்தார்கள்.

குருநாதர்கள் பெருமையைச் சொல்லவும் கூடுமோ?
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் ...
"ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை."

‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’

சொன்னவர்-டாக்டர், பத்மபூஷன் வை கணபதி ஸ்தபதி

சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.
ravi said…
அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள்.சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன். சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.
ravi said…
வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.
ravi said…
அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.
ravi said…
ஸ்ரீ சங்கரர்

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார்.

‘காமகோடி’ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்

- பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி

Jaya Jaya Shankara Hara Hara Shankara 🌹🌹🙏🌹

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அரசமர வழிபாடு பற்றிய பதிவுகள் :*

நம் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. இவையனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தனி சிறப்பு உண்டு. மும்மூர்த்திகளும் அரச மரத்தில் வாசம் செய்வதாக வேத நூல்கள் கூறுகின்றன.

பிள்ளை பெற தயாராக இருப்பவர்களும் மகப்பேறு கிடைக்காதவர்களும் அரசமரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

*கிழமைகளில் அரசமர வழிபாடு :*

*ஞாயிறு :*

அரசமரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.

*திங்கள் :*

சிவபெருமானை மலர்களால் பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

*செவ்வாய் :*

அன்னை உமா தேவியை பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு கிடைக்கும்.

*புதன் :*

தேவகணங்களை நமஸ்கரித்து அரசமரத்தை வலம் வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும்.

*வியாழன் :*

தட்சிணாமூர்த்தியை வணங்கி அரசமரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும், கீர்த்தியும் பெற முடியும்.

*வெள்ளி :*

லட்சுமியை நமஸ்கரம் செய்து அரசமரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.

*சனி :*

மஹாவிஷ்ணுவைப் பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரசமரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.

*அரசமரத்தை எப்படி வணங்குவது :*

அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்க கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.


கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.

பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. அதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.

குறைந்தபட்சம் 7 முறை வலம் வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றி வரலாம்.

சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின் மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை.

அரசமரத்தை காலை வேளையில்தான் வலம் வரவேண்டும். மதிய, இரவு வேளையில் நிச்சயமாக வலம் வரக்கூடாது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது* .

*அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன்* .

*ஊர் எல்லையில் உள்ள* *மலைமீது இருக்கிறார் கடவுள்* *என்று தகவல் கிடைத்தது*.

*வெறுங்கையோடு போகாதே*!
*ஏதாவது கொண்டு போ என்றார்கள்* .

*இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன்* .

*மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில்*!

*ரொம்ப உயரம் போலவே*!
*ஏற முடியுமா என்னால்* ? ! ? !

*மலையைச் சுற்றிலும் பல வழிகள்* !
*மேலே போவதற்கு* . . .

*அமைதி வழி* ,
*ஆடம்பர வழி* ,
*பக்தி வழி* ,
*தியான வழி* ,
*சாஸ்திர வழி* ,
*சம்பிரதாய வழி* ,
*வழிபாடு வழி* ,
*மந்திர வழி* ,
*தந்திர வழி* ,
*கட்டண வழி* ,
*கடின வழி* ,
*சுலப வழி* ,
*குறுக்கு வழி* ,
*துரித வழி* ,
*சிபாரிசு வழி* ,
*பொது வழி* ,
*பழைய வழி* ,
*புதிய வழி* ,

*இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள்* . . .

*அடேயப்பா* !
*எத்தனை வழிகள்* !

*ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி* !

*கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்* !

*என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை ! ஒதுக்கினர் சிலர்* .

*நான் கூட்டிப் போகிறேன் வா*!
*கட்டணம் தேவையில்லை*.
*என் வழியி்ல் ஏறினால் போதும்*.
*எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு* !
*என கை பிடித்து இழுத்தனர் சிலர்*!

*மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்* ,
*உனக்கு பதில்* *நான் போகிறேன்* ,
*கட்டணம் மட்டும்* *செலுத்து*!
*என்றனர் சிலர்* .

*பார்க்கணும் அவ்ளோதானே*!
*இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்*!
*அது போதும்* . . .
*அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்*!
*ஆணவத்துடன் சிலர்*.

*அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது*
*உன்னால் ஏறமுடியாது* *தூரம் அதிகம் . திரும்பி போ*.
*அவரை* *எதுக்கு பார்க்கணும்?*
*பார்த்து ஆகப்போறது என்ன?*
*அதைரியப்படுத்தினர் சிலர்*.

*உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை, ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்!*
*அது ஒரு வழிப்பாதை*!
*ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது*!
*அப்படியே போக வேண்டியதுதான்*!
*பயமுறுத்தினர் சிலர்*.

*சாமியாவது , பூதமாவது* !
*அது வெறும் கல்* !
*அங்கே ஒன்றும் இல்லை* !
*வெட்டி வேலை* !
*போய் பிழைப்பை பார்*!
*பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர்*.

*என்ன செய்வது ?*
*ஏறுவதா*,
*திரும்பி போவதா ?*

*குழம்பி நின்ற என் முன்னால்* ,
*வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா ! சாப்பிட எதாவது குடு சாமீ ! " என்றாள்* .

*கடவுளுக்கென்று கொணர்ந்ததை*
*அந்த கைகளில் வைத்தேன்* .

*மகராசனா இரு என்று வாழ்த்தினாள்* .

*வாழ்த்திய முகத்தினை பார்த்தேன்* .

*நன்றியுடன் என்னை நோக்கிய* *அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து* *புன்னகைத்தார் கடவுள்* !

*இங்கே என்ன செய்கிறீர்கள் ?*

*நான் இங்கே தானே இருக்கிறேன்*

*அப்போ அங்கிருப்பது யார் ?*
*மலை உச்சியை காட்டினேன்*.

*உம்*...*அதுவும் நான்தான்*
*அங்கேயும் இருக்கிறேன்*,
*இங்கேயும் இருக்கிறேன்* ,
*எங்கேயும் இருப்பவன் அல்லவா நான்*
*இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள்* .
*சிரமப்பட்டு* !

" *ஆனால் , . . . திணறினேன்* .
" *இது உமது உருவமல்லவே*"

*அதுவும் எனது உருவமல்லவே*
*எனக்கென்று தனி உருவமில்லை*
*நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன்*

*அப்படியென்றால்*,

*பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே*

*உணவளித்தவனும் நானே*

*வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே*

*தருபவனும் நானே*
*பெறுபவனும் நானே*

*நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்*
*என் தரிசனம் பெற கண் தேவையில்லை*
*மனம்தான் வேண்டும்*

*அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ?*
*குழப்பத்துடன் கேட்டேன்*.

*தாராளமாக ஏறி வா*
*அது உன் விருப்பம்*
*அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே* !
*அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்*

*புரியாமல் முழித்தேன்* ,
*கடவுளே !* *என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது*.

*கடவுள் சொன்னார்*,
*என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல*

*உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண , நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்*

*பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய்* .
*என்று சொல்லி* ,
*புன்னகைத்தார் கடவுள்* 🙏
ravi said…
ராமரும் தாரையும்*

*தாரை சொன்ன கீதை* 💐💐💐
ravi said…
ராமா படித்து படித்து சொன்னேன் வாலிக்கு வந்திருப்பவன் மனிதன் அல்ல பரந்தாமன் என்றே ..

சொல்லி சொல்லிக் கொடுத்தும் கிள்ளி கிள்ளி எறிந்தான் என் வார்த்தைகளை ..

பல்லி பல்லி என்றே சொல்லியும் அவன் தலையில் விழுந்தே மரணத்தை சொல்லின ..

பள்ளி பள்ளி அறையில் அவன் துறக்கம் இல்லை உறக்கம் கொண்டிருந்தான் ...

ராமா உன் மீது வைத்த நம்பிக்கை அந்த தும்பிக்கையான் மீது மக்கள் வைத்த நம்பிக்கை அன்றோ ...

சொல் ராமா அதை குறி பார்த்து கொள்வது கயமை அன்றோ ...

மறைந்து நின்று ஏன் கொன்றாய் ..

குறை ஒன்றும் இல்லா கோவிந்தனே

ராமன் அது இல்லையோ ?

சிரித்தான் ராமன் ...

தாயே பகை ஒன்றும் இல்லை வாலியிடம் ..

கொல்லப்படவேண்டியவன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு தனி மணம் கண்டவன் ...

சுந்தரி நீ இருந்தும் அந்தரி அவள் அருள் இருந்தும்

மந்திரி பலர் சொல்லியும்

முந்திரியாய் வந்தான் போருக்கு ...

காலில் விழுந்த அவன் தம்பியிடம் வாக்குரைத்தேன்...

எந்திரி சுக்ரீவா உன் எதிரி என் எதிரி என்றேன் ..

*தர்மம் காக்க அதர்மம் ஒரு அம்பாகலாம்* ..

*அதர்மம் அழிய தர்மம் ஒரு வில்லாகலாம்*

தர்மம் எனும் வில்லில் அதர்மம் எனும் அம்பை தொடுத்தேன் ..

அதர்மம் வாலியின் ரத்த வகுப்பை சார்ந்தது என்பதால் ..

தவறு இது என்றால் தாயே சாபம் ஒன்று கொடுங்கள் ..

ராமா நான் யார் உனக்கு சாபம் தர ...

வாலியின் பாபம் தீர நீயே வந்தாய் ..

ஒரு பாதி அழித்தாய் மறு பாதி நான் ...

கண் மூட வைப்பாய் என்னை அவன் உயிர் மீதே ...

தாயே ... எப்படியும் வாழலாம் என்பது ஒரு முறை ...

இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒரு மறை ...

காஞ்சி மண்ணில் நிகழும் இக்கலை...

தர்மம் அதர்மம் பக்கம் சாய்ந்தால் ராமன் அம்பு மீண்டும் பிறக்கும் ...

முறை எது என்றே வரை ஒன்று அது வகுக்கும் ...

வாழும் உன் புகழ் வானத்தில் மின்னும் தாரகைகள் போல் என்றும் ....
Hemalatha said…
Well said
Hemalatha said…
ஒரு முறை ராமா என்று சொன்னாலே பலன் அதிகம்.இதை படிக்கும்போது பல முறை சொல்லிவிடுகிறோம்.சொல்லவைத்த தங்களுக்கு நன்றி 🙏🙏🙏👌
Hemalatha said…
அதெப்படி தங்களிடம் மட்டும் அத்தனை நதிகளும் வந்து சங்கமிக்கிறது தங்களின் எழுத்தின் ஈர்ப்பு‌போலும்.அருமை சார்👌👏❤️🙏
ravi said…
ஶ்யாமா தவ த்ரிபுரஸுந்தரி லோசனஸ்ரீ:
காமாக்ஷி கந்தலிதமேதுர தார காந்தி: |
ஜ்யோத்ஸ்னாவதீ ஸ்மிதருசாபி கதம் தனோதி
ஸ்பர்தாமஹோ குவலயைஶ்ச ததா சகோரை: ||35||
- கடாக்ஷ சதகம்.
திரிபுரையே! காமாக்ஷி! கருத்ததும், மலர்ந்ததும், மிருதுவானதுமான கருவிழி காந்தியை உடைய உன்னுடைய கடாக்ஷ சோபையானது, அழகு இரவு நட்சத்திரம்போல் ஒளிவிடுகிறது; உனது புன்னகையாம் நிலவு அதோடு கூடியுள்ளது! ஆனாலும், கருநெய்தல் மலருடனும், சகோரப் பக்ஷியோடும் போட்டியிடுகிறதே! என்ன ஆச்சரியம்!! கருமையில் நெய்தல் மலருடனும் விழியழகில் சகோரப் பறவையுடனும் அன்னையின் கடைவிழிகள் போட்டியிடுவதாகக் கவி கற்பனை செய்கிறார். சந்திரன் குவலயங்களை மலரச்செய்வதாலும்,சகோர பக்ஷிகள் நிலவின் கதிர்களை உணவாக கொள்வதாலும் இரண்டுக்கும் நண்பனாயிருந்தும்
எதிர்ப்பதாக ஆச்ரியப்படுகிறார்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
🌺🌹“Oh Paranthama… me
To save itself
I begged you. Bot You
Snatched all from me what is that? Begged by a Pressured devotee
- Simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺🌹 ”A ship gets stuck in a storm while sinking in the sea. Senthil is the only one who somehow escapes.

🌺He was on a nearby island
Dissolves.

🌺“Oh Bhagavan from here
Escape me somehow
Keep it. How many days have I been on this island indifferent
Being? As the only lament

🌺My wife people
Don't you want to see ?? ” Don't tell me a way ... Madhusudana
Prays that.

🌺For himself in some form
That the helping hand will stretch
Looking forward to daily
Looking forward to
Senthil betrays. Nothing helped.
This is how the days go.

🌺To protect yourself,
Items found on the island,
And the wreck of the ship
With accessories
A small cottage
Built.

🌺In the shore
Who was aboard the ship
His supplies and
Only a few of the possessions
Securing, staying himself
Came ..

🌺Some days like this
Run. Senthil
Prayer only
Did not leave.

🌺God something
Sure for us in a form
That will help itself

🌺One day Ivan food
Out to search
Gone
On his return, he saw
The scene startled him
Put.

🌺Patta is to fall on one's feet
Like… whatever should not have happened it has happened.

🌺Senthil, the only one who had to stay
The cottage is airy
With smoke rising
Ignited
Was burning.

🌺He was inside the hut
All of the possessions
Were on fire.
Ivan screamed when he saw it
துடித்தான். Everything
Gone. இவனிடமிருந்த
And leftovers
Gone.

🌺“Ade Paranthama… me
To save itself
I begged you. You
What is
Snatch what is there
This is yours
Justice? ” Scream that
Crying.

🌺Ship the next morning
The noise woke him up.
Senthil was
It is towards the island
Was coming.

🌺 “oh god… good luck… a
Via from here
We escaped.
Someone us
They are coming to save. ”
That jumped in excitement
Jumped.

🌺Shipwrecks
Come on Life Boat
Took away.
Just here on the island
Trapped
How do you know that
Ask them, “Smoke and burn about something on the island
We saw what arose.

🌺Someone stranded on the island
Signal to save
That give
We thought. ”
They.

🌺Then the Lord hut
The reason for the burn is for him
Understood. Thank the Lord
Said.

🌺It is very rare for ships to come that way, only the cottage catches fire
If not burning her
He understood what the situation would be.

🌺Good Lord
Thinking of blasphemy by
Senthil.

🌺Many in life
In cases we
This is how the Lord is
In a hurry and misunderstood
We weigh.

🌺He is there to protect us
Every moment
Is waiting. He will give
The trials are all ours
Another huge one
To protect from danger
Let's do that
Understandably, what
About
You do not have the permission required to post.

🌺Test
If of the Lord
Insight is upon us
Has fallen ... soon
That good will happen
We will believe .. We will catch Madhusoothanan Thiruvadi🌹🌺

--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌺🌹“ *அடே பரந்தாமா* … *என்னை*
*காப்பாற்றும்படி தானே*
*உன்னை வேண்டினேன்* . *நீ*
*என்னவென்றால்*
*இருப்பவற்றையும்* *பறித்துக்*
*கொண்டாயே** … *என்று கதறி*
*அழுத பக்தன்*
- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹”கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.அதில் செந்தில் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.

🌺அருகிலுள்ள தீவில் அவன்
கரையேறுகிறான்.
“அடே பகவானே … இங்கிருந்து
எப்படியாவது என்னை தப்பிக்க
வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான்
இருப்பது? என ஒரே புலம்பல்

🌺என் மனைவி மக்களை
பார்க்கவேண்டாமா??” ஒரு வழி சொல்லடா... மதுசூதனா
என்று பிரார்த்திக்கிறான்.

🌺ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு
உதவிக்கரம் நீளும் என்று
தினசரி எதிர்பார்த்து
எதிர்பார்த்து
ஏமாந்துவிடுகிறான் செந்தில். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை.
இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

🌺தன்னை காத்துக்கொள்ள,
தீவில் கிடைத்த பொருட்கள்,
மற்றும் கப்பலின் உடைந்த
பாகங்கள் இவற்றை கொண்டு
ஒரு சிறிய குடிசை ஒன்றை
கட்டுகிறான்.

🌺அதில் கரை
ஒதுங்கிய கப்பலில் இருந்த
தனது பொருட்கள் மற்றும்
உடமைகள் சிலவற்றை மட்டும்
பத்திரப்படுத்தி, தானும் தங்கி
வந்தான்..

🌺இப்படியே சில நாட்கள்
ஓடுகின்றன. செந்தில்
பிரார்த்தனையை மட்டும்
விடவில்லை.

🌺பகவான் ஏதாவது
ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம்
உதவுவான் என்று தன்னை
தேற்றிக் கொண்டான்.

🌺ஒரு நாள் இவன் உணவு
தேடுவதற்காக வெளியே
சென்றுவிட்டு
திரும்புகையில், அவன் கண்ட
காட்சி அவனை திடுக்கிட
வைத்தது.

🌺பட்ட காலிலே படும் என்பது
போல… எது நடக்ககூடாதோ அது நடந்து விட்டது.

🌺செந்தில், தங்குவதுகென்று இருந்த ஒரே
குடிசையும் வானுயுற
எழும்பிய புகையுடன்
தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது.

🌺குடிசைக்குள் இருந்த
உடைமைகள் அனைத்தும்
தீக்கிரையாகியிருந்தன.
அதை பார்த்த இவன் அலறித்
துடித்தான். எல்லாம்
போய்விட்டது. இவனிடமிருந்த
மிச்ச சொச்ச பொருட்களும்
போய்விட்டது.

🌺“அடே பரந்தாமா … என்னை
காப்பாற்றும்படி தானே
உன்னை வேண்டினேன். நீ
என்னவென்றால்
இருப்பவற்றையும் பறித்துக்
கொண்டாயே… இது தான் உன்
நீதியோ…?” என்று கதறி
அழுகிறான்.

🌺மறுநாள் காலை ஒரு கப்பலின்
சப்தம் இவனை எழுப்பியது.
செந்தில் இருந்த
தீவை நோக்கி அது
வந்து கொண்டிருந்தது.

🌺“அப்பாடா… நல்ல வேளை… ஒரு
வழியாக இங்கிருந்து
தப்பித்தோம்.
யாரோ நம்மை
காப்பாற்ற வருகிறார்கள்.”
என்று உற்சாகத்தில் துள்ளி
குதித்தான்.

🌺கப்பல் சிப்பந்திகள் இவனை,
லைஃப் போட்டில் வந்து
அழைத்து சென்றார்கள்.
தான் இங்கே தீவில்
மாட்டிக்கொண்டிருப்பது
எப்படி தெரியும் என்று
அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை
எழும்பியதை பார்த்தோம்….

🌺யாரோ தீவில் கரை ஒதுங்கி
காப்பாற்ற வேண்டி சிக்னல்
கொடுக்கிறார்கள் என்று
நினைத்தோம்” என்கிறார்கள்
அவர்கள்.

🌺அப்போது இறைவன் குடிசையை
எரித்த காரணம் இவனுக்கு
புரிந்தது. இறைவனுக்கு நன்றி
சொன்னான்.

🌺அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து
எரியவில்லை என்றால் தன்
நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.

🌺அவசரப்பட்டு பகவானை
நிந்தித்ததை நினைத்து
வெட்கினான் செந்தில் .

🌺வாழ்க்கையில் பல
சந்தர்ப்பங்களில் நாம்
இப்படித்தான் இறைவனை
அவசரப்பட்டு தவறாக
எடைபோட்டுவிடுகிறோம்.

🌺நம்மை காக்கவே அவன்
ஒவ்வொரு கணமும்
காத்திருக்கிறான். அவன் தரும்
சோதனைகள் அனைத்தும் நம்மை
வேறொரு மிகப் பெரிய
ஆபத்திலிருந்து காக்கவே
என்று நாம்
புரிந்துகொண்டால், எதைப்
பற்றியும்
அலட்டிகொள்ளவேண்டியதில்லை.

🌺சோதனை
என்றால்… இறைவனின்
அருட்பார்வை நம் மீது
விழுந்துவிட்டது... விரைவில்
நல்லது நடக்கும் என்று
நம்புவோம் .. மதுசூதனன் திருவடி பற்றுவோம்
🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 41*
ravi said…
दिवि वा भुवि वा ममास्तु वासो
नरके वा नरकान्तक प्रकामम् ।
अवधीरितशारदारविन्दौ
चरणौ ते मरणेऽपि चिन्तयामि ॥ ८ ॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥ 8 ॥
ravi said…
*திவி* ன்னா மேல் உலகம்.

*புவி* ன்னா இந்த உலகம்.

இந்த பூ உலகத்துலயோ இல்ல சொர்க்கத்துலயோ, இல்ல நரகத்துலயோ *ப்ரகாமம்* : எவ்ளோ நாள் வேணா நான் இருக்கேன்.

*மமாஸ்து வாஸ* : எத்தனை நாள் வேணாலும் நான் அங்க வஸிக்கறேன்.

எனக்கு அதுல ஒண்ணும் குறை இல்லை.

எனக்கு வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்.

என்னோட வாழ்க்கை சுகமா கழியணும்னு நான் எதிர்பார்க்கலை.

என் வாழ்க்கையில கஷ்டங்கள் வரட்டும். இல்ல சுகங்கள் வரட்டும்.

எப்படி இந்த பூமியில வாழ்க்கையைத் தள்ளிண்டு இருந்தாலும் *மரணேபி* – கடைசி நாள் வரைக்கும் என்னுடைய மரணம் ஏற்படும் வரைக்கும் உன்னுடைய சரணாரவிந்தத்தை நான் சிந்தனை பண்ணனும்.

இது வேணும் எனக்குன்னு கேட்கறார்🪷🪷🪷
ravi said…
*#ஸ்ரீராமானுஜரின்_வரலாற்றுமகிமை_பகுதி_3*

குருவே! தங்கள் ஆசியோடு இப்பதத்திற்கான பொருளைக் கூறுகிறேன், என பணிவுடன் துவங்கினார். ஆசிரியர் பெருமானே! கப்யாஸம் என்ற சொல்லில் உள்ள அஸ என்ற மறைவுச்சொல்லுக்கு மலர்தல் எனப் பொருள். இதனடிப்படையில், அஸ என்பதற்கு மலர்ந்தது என பொருள் கொள்ள வேண்டும். கப்யாஸம் என்ற வார்த்தையை உள்ளடக்கிய மந்திரத்தை முழுமையாகக் கேளுங்கள்.

தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக- மேவ மக்ஷீணி என்பதாகும்.

ravi said…
*#ஸ்ரீராமானுஜரின்_வரலாற்றுமகிமை_பகுதி_3*

குருவே! தங்கள் ஆசியோடு இப்பதத்திற்கான பொருளைக் கூறுகிறேன், என பணிவுடன் துவங்கினார். ஆசிரியர் பெருமானே! கப்யாஸம் என்ற சொல்லில் உள்ள அஸ என்ற மறைவுச்சொல்லுக்கு மலர்தல் எனப் பொருள். இதனடிப்படையில், அஸ என்பதற்கு மலர்ந்தது என பொருள் கொள்ள வேண்டும். கப்யாஸம் என்ற வார்த்தையை உள்ளடக்கிய மந்திரத்தை முழுமையாகக் கேளுங்கள்.
ravi said…
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக- மேவ மக்ஷீணி என்பதாகும்.

இதன் பொருள், சூரிய மண்டலத்திலுள்ள அந்த பரந்தாமனின் கண்கள் மலர்ந்த தாமரைப் பூப்போல் அழகாக இருக்கும், என்பதாகும். தாமரை சிவப்பை குரங்கின் ஆசனவாய் சிவப்பு என குறிப்பிட்டதைத் தான் மறுத்தேன், என்றார். இந்தப் பொருள் கேட்டு யாதவப்பிரகாசர் துள்ளிக்குதித்தார்.

ஏ ராமானுஜா! நான் சொன்ன விளக்கம் சங்கராச்சாரியார் சொன்னதின் அடிப்படையிலானது. நீ சொல்வது ஒரு வாக்கியத்தை பிரித்து வருவதால் ஆனது. இதை ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால், நீ இலக்கணத்தில் கெட்டிக்காரன் என்று வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம், என்றார் ஆவேசத்துடன்.
ravi said…
இந்த சம்பவம் யாதவப்பிரகாசரை மிகவும் பாதித்தது. பெரியவர்கள் சிறியவர்கள் சொல்லும் நற்கருத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்ற உலக வாதத்திற்கு புறம்பாக அவர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டார். இதையடுத்து மற்றொரு நாளும் இதே போன்ற வாதம் எழுந்தது. யாதவப்பிரகாசர் அன்று வகுப்பெடுக்கும் போது,

ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்திற்கு, பரப்பிரம்மம் (இறைவன்) சத்தியமும், அறிவுமயமானதும், முடிவில்லாததும் ஆகும், என பொருள் சொன்னார்.

அப்போது எழுந்த ராமானுஜர், குருவே! அம்மந்திரத்திற்கு அப்படி பொருளல்ல.
ravi said…
ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்திற்கு, பரப்பிரம்மம் (இறைவன்) சத்தியமும், அறிவுமயமானதும், முடிவில்லாததும் ஆகும், என பொருள் சொன்னார்.

அப்போது எழுந்த ராமானுஜர், குருவே! அம்மந்திரத்திற்கு அப்படி பொருளல்ல.

பரப்பிரம்மம் சத்தியம் என்ற பண்பை உடையது. ஞானமும் அதன் பண்பு தான். முடிவற்றதும் என்பதும் அதன் பண்பு தானே தவிர, அதுவே முடிவற்றதோ, சத்தியமானதோ, ஞானமோ என்று அறுதியிட்டு பொருள் கொள்ள முடியாது, என்றார் மிக்க அடக்கத்துடன். இதைக் கேட்டு பிரகாசர் கொதித்தே போய் விட்டார்.

ஏனடா! உனக்கு அகங்காரம் அதிகமாகி விட்டது. இங்கே நீ குருவா? நான் குருவா? நான் சொல்வதைக் கேட்பதாக இருந்தால் நீ இங்கே இரு. இல்லாவிட்டால், நீயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி, உன் சொந்தக் கருத்துக்களையெல்லாம் உன்னிடம் படிக்க வரும் மட சீடர்களிடம் திணி. சங்கரரின் கொள்கைக்கு எதிராக உன் கருத்துக்கள் உள்ளன. இனியும் நீ எழுந்து பேசினால், உன்னை குருகுலத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை, என எச்சரித்தார்.
ravi said…
ஏதோ ராமானுஜரை அடக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் இப்படி சொல்லி விட்டாரே தவிர, அவரது உள்ளத்துக்குள் அச்சம் தோன்றலாயிற்று. யாதவப்பிரகாசர் அத்வைதக் கொள்கையில் ஊறிப்போனவர். அத்வைதம் என்றால், இரண்டாவது என்ற சொல்லுக்கே இடமில்லை எனக் கூறுவதாகும்.

அதாவது, உலகம் என்ற ஒன்றே கிடையாது. அது மாயை. அப்படியானால் நம் கண் முன்னால் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் எப்படி வந்தன என்றால், அதெல்லாம் வெறும் மனபிரமை தான். மனம் தான் இப்படியெல்லாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறது என்று வாதம் செய்வதாகும்.

நாராயணனை தெய்வமாக ஏற்கும் இந்த வாதம், அவருக்கு உருவமில்லை என்கிறது. இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கும் யாதவப்பிரகாசர், ராமானுஜரை துவைதத்தில் ஊறிப்போனவரோ என சந்தேகித்தார். துவைதம் உருவ வழிபாட்டுக்கு ஒப்புக்கொள்கிறது. இவர்களும் நாராயணனே உயர்ந்தவர் எனக் கூறினாலும், சில காரியங்கள் வெற்றி பெற பிற கடவுள்களையும் வழிபடுவர். ஒன்றுக்கு மேற்பட்டது என்பது துவைதத்தின் சுருக்கமான பொருள்.
ravi said…
இந்நிலையில் அவர் மனதில் விபரீதமான எண்ணமும் தோன்றியது. எந்த ஆசிரியர் மாணவனுக்கு நல்வழி காட்ட வேண்டுமோ, அதே ஆசிரியர் தன் மாணவனைக் கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். ஒரு மாணவன் தன்னை முந்துவதா என்ற பொறாமையா அல்லது தான் கொண்ட கொள்கையை நிலைநிறுத்த வேண்டும் என்ற வேட்ககையா...எப்படியிருப்பினும் மனதில் கொலைத்திட்டம் உருவாயிற்று.

காஞ்சிபுரத்திலுள்ள பல இளைஞர்கள் யாதவப்பிரகாசரை இரண்டாம் சங்கராச்சாரியார் என செல்லமாக அழைப்பார்கள். அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட தன் சீடர்களை ரகசியமாக அழைத்து, என் அன்புக் குழந்தைகளே! ராமானுஜன் என்னை எதிர்க்கிறான். என் உரைக்கு பதில் உரை கூறுகிறான். எனது புலமையில் குற்றம் கண்டுபிடிக்கிறான்.
ravi said…
அவன் இவ்வாறு சொல்வதற்கு காரணம் துவைதத்தின் மீது அவனுக்கு பிடிப்பிருப்பதால் தான். அவன் ஒரு நாத்திகன். அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறான். அவனை ஒழித்துக் கட்ட வேண்டும், என பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைத்தார். ஒரு மாணவன் எழுந்தான். குருவே! இதொன்றும் பிரமாதமான காரியமில்லை. உங்கள் கருத்துக்கு மறு கருத்து சொல்பவனை நம் குருகுலத்தை விட்டு விலக்கி விடுங்கள். அவ்வளவு தானே. இதற்காக கவலைப்படவே தேவையில்லையே, என்றான்.

உடனே மற்றொரு மாணவன் எழுந்தான்.
அட அசடே! உனக்கு ஆசிரியர் சொல்வது முழுமையாகப் புரியவில்லை. அவன் மகாபிரகஸ்தனாக இருக்கட்டும். நம் ஆசிரியரை எதிர்த்துப் பேசட்டும். அதுபற்றியா ஆசிரியர் கவலைப்படுகிறார். அத்வைதத்தை அழித்து, துவைதத்தை அவன் புகுத்தி விடுவானோ என்றல்லவா அஞ்சுகிறார்
ravi said…
ஒருவேளை நம்மிடமிருந்து விலக்கப்படும் ராமானுஜன், வெளியே போய் தனியாக குருகுலம் துவங்கி, துவைதத்தை போதித்தால் நிலைமை என்னாவது? எனவே அவனைக் கொன்று விடுவது தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, என்றான். ஒரு பெரிய ஆசானின் தலைமையில், காஞ்சிமாநகரில் கொலைத்திட்ட சதி உருவாகிக் கொண்டிருந்தது.

*#ஸ்ரீமதே_ராமானுஜாய_நமஹ*

*#தொடரும்*.....
ravi said…
*மயில் விருத்தம்* 18 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை
சிந்தப் புராரி அமிர்தம்

திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள்
தீ விஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயனத்

தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு
சண்டப் பரசண்ட மயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீது உலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்

வேலாயுதன் பழவினைத் துயர் அறுத்து எனை
வெளிப்பட உணர்த்தி அருளித்

துக்க சுக பேதம் அற வாழ்வித்த கந்தச்
சுவாமி வாகனமானது ஓர்

துரக கஜ ரத கடக விகட தட நிருதர் குல
துஷ்டர் நிஷ்டூர மயிலே.
ravi said…
*புராரி அமிர்தம்*

திருப் பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் கடைந்த சமயம் வெளி
வந்த 'மஹாலட்சுமி', 'ஐராவதம்', 'வைஸ்ரவஸ்' போன்ற மதிப்புள்ளவைகளை
திருமால் முதலிய தேவர்கள் எடுத்துக் கொண்டனர்.

ஆனால் அதி
பயங்கரமான ' *ஆலகால விஷம்'* வெளி வந்தபோது அதை பெற்றுக்
கொள்ளுவதற்கு யாரும் முன் வரவில்லை.

மாறாக அவர்கள் அஞ்சி
சிவபெருமானிடத்தில் சென்று முறையிட்டனர்.

சிவபெருமானும், சிறு
குழந்தைகளின் சுய நலத்தைக் கண்டு புன் சிரிப்பு செய்யும்
தந்தையைப்போல் அந்த விஷத்தை ஏற்று உண்டுவிடுகிறார்.

இந்த
'தியாகத்தை' அவர் செய்ததால்தான் அவருக்கு ' *தியாகேசன்* ' என்கிற
திருநாமம் ஏற்பட்டது.

வேதத்தில், 'தியாகம் செய்பவனே அழிவற்ற
நிலையை அடைகிறான்' என கூறப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, விஷத்தை
உண்ட ஈசருக்கு மரணம் கிடையாது.

ஆனால் அமிர்தம் உண்ட தேவர்கள்
'சதுர் யுக' முடிவில் மாண்டு விடுகிறார்கள்.🙏🙏🙏
ravi said…
சிவானந்த லஹரீ*
*பதிவு 264*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 33

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம்

नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः

पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्।

स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते

का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥

நாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா நதிர்வா நுதி:

பூஜா வா ஸ்மரணம் கதா²ஶ்ரவணமப்யாலோகநம் மாத்³ருʼஶாம் ।

ஸ்வாமிந்நஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந கிம் லப்⁴யதே

கா வா முக்திரித: குதோ ப⁴வதி சேத் கிம் ப்ரார்த²நீயம் ததா³ ॥ 33॥
ravi said…
ஸந்யாசிகளை பழிக்கறவா கிட்டயும் நாம போகக் கூடாது. ஏன்னா அந்த ஸந்யாசிகள் தாங்கள் உணர்ந்த அந்த பேரின்பத்தை, அனுபூதியை தான் பக்தி மார்க்கமா, அம்பாள் வழிபாடாக, பரமேஸ்வர வழிபாடாக, முருக வழிபாடாக, வேதத்து மூலமா பகவான் வெளிப்படுத்தினதை ஞானிகள் எடுத்துக் காண்பிக்கறா. அதனால அந்த ஞானிகளையும் பழிக்காம ரொம்ப humbleஆ நாம பக்தி பண்ணிண்டே போனா நமக்கு பெரிய ஒரு அநுக்ரஹம் கிடைக்கும் அப்படீங்கறது இந்த ஸ்லோகத்தினுடைய தாத்பர்யம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 263* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*70. ப்ரஜாபதயே நமஹ (Prajaapathaye namaha)*

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : *ப்ரஜாபதி* : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
*ஜா* ’ என்றால் வடமொழியில் பிறப்பு என்று பொருள்.
‘ *ப்ரஜா* ’ என்றால் நல்ல பிறப்பு,

அதாவது நம்மாழ்வாரைப் போலப் பிறக்கும் போதே பக்தியுடன் பிறத்தலாகிய
நற்பிறப்பை உடையவர்கள் என்று பொருள்.

நம்மாழ்வார் பிறந்தநாள் முதல் கண்ணனையே தன் உணவாகவும் தண்ணீராகவும் வெற்றிலையாகவும் கொண்டு வாழ்ந்தது போல,
உயர்ந்த பிறவிகள் எடுத்த அடியார்களுக்குத் தலைவனாகத் திருமால் விளங்குவதால் ‘ *ப்ரஜாபதி* ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *70* -வது திருநாமமாக அமைந்துள்ளது.
*“ப்ரஜாபதயே நமஹ”* என்று தினமும் சொல்லிவரும் அடியார்களின் குலத்தில் நம்மாழ்வாரைப் போன்ற
பக்தியுள்ள குழந்தைகள் பிறப்பார்கள்🪷🪷🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியினால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.
ravi said…
அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.

ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்து – ஜனன மரணச் சூழலிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.
ravi said…
மாயா’ என்றால் ‘எது இல்லையோ அது’ என்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. அது எப்போதுமே இல்லாதது அல்ல; எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். அவற்றிடம் ஆசை – துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அனுபவ பூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே; தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழிந்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது; இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகிறது. மாயையும் அப்போது இல்லாமலே போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது – அதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.
ravi said…
மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.
ravi said…
காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.
ravi said…
மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’ என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

காலாஞ்ஜனம் ச தவதேவி நிரீக்ஷணம் ச
காமாக்ஷி ஸாம்யஸரணிம் ஸமுபைதி காந்த்யா |
நிஶ்ஶேஷ நேத்ர ஸுலபம் ஜகதீஷு பூர்வ-
மன்யத் த்ரிநேத்ர ஸுலபம் துஹினாத்ரி கன்யே ||36||
- கடாக்ஷ சதகம்.

ஹிமவானுடைய பெண்ணாகிய ஹே தேவி! காமாக்ஷி ! கருப்புமையும், உனது பார்வையும் காந்தியால் சமமாயிருக்கின்றன. ஆனால், கருப்புமையானது உலகில் அனைவரது நேத்ரங்களுக்கும் ஸுலபமாய் கிடைக்கக் கூடியது.உனது கடாக்ஷமோ முக்கண்ணனுடைய பரமசிவனுக்கு மட்டும் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது!
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
🌺🌹Sri Krishna has made it clear through the Bhagavad Gita that every human being should fully fulfill the duties that are inherent in life. - Simple story to explain🌹🌺

--------------------------------------------------- ------

🌺Sri Krishna is also known as Kannan in Tamil Nadu and Kannaiya in the northern states.


🌺Krishna Jayanthi is known as "Ashtami Rogini" in Kerala.


🌺 It is still customary in the northern states for Krishna Gokul to engage in games with the Gopis at a young age under the name of "Rasalila".


🌺Sri Krishna lived in Gokul till the age of 3, in Vrindavan from the age of 3 to 6, with the Gopis at the age of 7 and in Mathura from the age of 8 to 10.


🌺Krishna was 7 years old when Kamsana was killed.


🌺To receive the grace of Lord Krishna, one should praise and worship with the hymns "Gitakovindham", "Sriman Narayaniyam" and "Krishna Karnamrutham".


🌺Worship of the eye will get rid of arrogance. Children do not have aggression. Young people will live as some of the Dharma. Increase management skills for politicians.

.

🌺 If you listen to Krishna Leela with one mind, you will not get hungry and thirsty.


🌺Those who utter and hear the name of Krishna daily are sure to reach the holy world.


🌺 If you pray that Om Namo Bhagavade Vasudevaya, Krishna will appear.


🌺Five hundred years ago, they wrote about what medicine should be offered to Lord Krishna Srinathji at the Nathwara site in Rajasthan.


🌺Almond lentils, pistachio lentils, laddu, sweet puris, morkkulam are his favorite dishes.


🌺Emperuman Sri Krishna has made it clear through the Bhagavad Gita that every human being should fully fulfill the natural duties in life.🌹🌺

--------------------------------------------------- --------

🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * 🌹🌺
ravi said…
🌹🌺 *மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் உணர்த்தியுள்ள ஸ்ரீ கிருஷ்ணர். - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

🌹கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் ``அஷ்டமி ரோகிணி'' என்றழைக்கிறார்கள்.

🌺 கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ``ராசலீலா'' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது.

🌹ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

🌺கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

🌺கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற ``கீதகோவிந்தம்'', ``ஸ்ரீமந் நாராயணீயம்'', ``கிருஷ்ண கர்ணாம்ருதம்'' ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.

🌺கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
.
🌺கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

🌺கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

🌺ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

🌺ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர்.

🌺பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.


🌺மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் உணர்த்தியுள்ளார் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணர்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
Ramesh said…
பல நல்லுள்ளங்களின் வாழ்த்து தேவனின் வாழ்த்துக்கு ஒப்பானது.🙏🙏
ravi said…
சிந்து நதி

*அம்மா*

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ சங்கமிக்கிறாய் எங்கள் வாழ்வைப் போல் ...

பகைமை கொண்டோய் அல்ல நீ

அதனால் பகைவர் நாட்டிலும் சிந்துகிறாய் பாசம் தனை

உன் இசை என்றும் கேட்கிறோம் நிலவினிலே ஏகாந்தம் அதை எட்டிப்பிடித்தே ...

சுழலும் உலகம் இதில் நீ சுற்றாத நகரம் இல்லை ..

எட்டாமல் இருக்கும் புண்ணியம் அதை எட்டிப்பிடித்தே தருகிறாய்

வற்றாத ஜீவ நதி நீ என்றால் அது மிகையோ தாயே ..

புண்ணான இதயம் தனில் பொன்னான உன் கரம் பட்டால் பெண்ணான உன்னை கண்ணாக பார்த்துக்கொள்வேன்

எண்ணாத நாளில்லை தாயே உன் புகழை ...

சாதித்த புண்ணியர் எண்ணிலர் எனினும் நான் என்றும் உனக்கு முதன்மை அன்றோ ...

🪷🪷🪷🙏🙏🙏
ravi said…
*ராமனும் திரிசிரஸ் ம்* 🪷🪷🪷

*திரிசிரஸ் சொன்ன கீதை* 👏👏👏
(ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.)
ravi said…
ராமா*

உன் கை வண்ணம் கண்டே களி கொண்டேன் ...

கலி தீர வந்தவனே கரனை அழித்து தர்மத்தின் கரத்தை உயர்த்தினாய் ...

உன் கரம் பிடித்த சீதை உன் சரண் புகுந்தோர் உள்ளங்களில் *ஸ்ரீ மாதாவாய்* வாழ்கிறாள் ...

என் உள்ளமும் சோகம் அழிக்கும் அசோக வனம் ...

என் நெஞ்சம் உன் தஞ்சம் ..

பஞ்சம் இல்லா உன் நாமம் கஞ்சம் ( 🪷) போல் கஞ்சமின்றி

என் உள்ளம் எனும் தடாகம் தனில் என்றும் மலரும் ...

வஞ்சம் கொண்டான் கரன் ...

நஞ்சு உண்டான் ..

மஞ்சம் தனில் தஞ்சம் புகுந்தவன் மதி இழந்தான் மதி எழும் சமயம் அதில் ...

புத்திமதிகள் சொன்னேன் மந்தியான அவன் உள்ளத்திற்கு ...

வளர் பிறை என்றே நினைத்தேன்

இன்றோ இருள் சூழும் அம்மாவாசை ஆகிவிட்டான் ..

அவன் வளர்த்த உடம்பு இது அவன் பெயர் சொல்லி போகட்டும் ..

உள்ளே அமைந்த உன் ஆலயம் அழிப்போர் இங்கே எவருண்டு ராமா ?

புன்னகைத்தான் புன்னகை அரசன் ..

*திரிசிரஸ்*!!

உன் போல் வீரம் கண்டதில்லை ..

காட்டில் பொழியும் நிலவென ஆனதே ...

கடலில் பெய்யும் மழை உப்பு கரிக்குமன்றோ ...

தீயவன் தொடர்பு தீமை தனை வளர்க்கும் ...

வளமாய் வாழ்வதில் அர்த்தம் இல்லை

நலமாய் நெஞ்சம் வாழ வேண்டும் ..

அங்கே ஏழ்மை வளரினும் தாழ்மை வளர இடமில்லை ...

ராமா புரிந்து கொண்டேன் உன் பொன்னான வார்த்தைகளை ... சேர்ப்பேன் புண்ணியம் இன்னொரு பிறவி எடுத்தே

எடுப்பாய் பிறவி என்றால் காஞ்சி தனில் பிறந்து விடு ...

காமன் வர அஞ்சும் நகரம் அது

காலன் பயந்து ஓடும் சிகரம் அது ...

என் உள்ளம் கவர்ந்தவன்

சங்கரன் வழி வந்தவன்

சடுதியில் முக்தி தந்திடுவான் ...

சறுக்கம் இனி எவர்க்கும் இல்லை

ராமா ... உன் ஆசியே என் நாசி சுவாசிக்கும் பிறப்பேன் உன் அருள் கொண்டு காஞ்சியிலே ...

அழிப்பேன் அதர்மம் என் வழி புகுந்தால் ...
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 264* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*❖ 89 மூல கூடத்ரய கலேவரா* =

மூல மந்திரத்தை (பஞ்ச தசாக்ஷரி மந்திரம்) தனது சூக்ஷ்ம உடலின் முப்பகுதிகளாக கொண்டுவள்...
ravi said…
*மூல கூட* = மூல மந்திரத்தின் இருப்பிடமாக *த்ரய* = மூன்று

*கலேவரா* = உடல்
ravi said…
: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 264* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*69 கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள்*

*ஸங்கீத ஞானம்*🎼🎼🎼🎧🎧🎤🎤🎹
[25/06, 09:48] Jayaraman Ravilumar: கலே ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே

விவாஹ வ்யாநத்த ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ

விராஜந்தே நானாவித மதுர ராகாகர புவாம்

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமான இவ தே 69
[
ravi said…
ஸங்கீத கதி, கமகம், கீதம் ஆகியவற்றில் ஒப்புயர்வற்ற திறமை வாய்ந்தவளே!

உன்னுடைய கழுத்தில் உள்ள மூன்று பாக்கிய ரேகைகள் நன்றாய்க் கட்டப்பட்ட பல நூல்கள் கொண்ட சரட்டின் எண்ணிக்கையை ஞாபகப்படுத்துவது போலும்.

பலவிதமான இனிய ராகங்களுக்குத் தோற்றுவாயாக உள்ள ஷட்ஜம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவது போலும் விளங்குகின்றன.🎼🎼🎼
ravi said…
பாகம்-1-

இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
ravi said…
அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம்.

*1 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்*

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.
ravi said…
2 நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி*

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
ravi said…
3 தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்*

சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.
ravi said…
4 ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை*

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
ravi said…

*5 ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்*

திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது
ravi said…
*6 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்*

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
ravi said…

*7 தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்*

மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது.

அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.
ravi said…
8 மருந்தீஸ்வரர் கோயில், சென்னை*

சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.
ravi said…

*9 அருள்மிகு இராமநாதசுவாமி கோவில்,* *ராமேஸ்வரம்..*

12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக அருள்மிகு இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் 'இராம+ஈஸ்வரம்' இராமேஸ்வரம் ஆனது
ravi said…
10 அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை*

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 42*
ravi said…
दिवि वा भुवि वा ममास्तु वासो
नरके वा नरकान्तक प्रकामम् ।
अवधीरितशारदारविन्दौ
चरणौ ते मरणेऽपि चिन्तयामि ॥ ८ ॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥ 8 ॥
ravi said…
இந்த இடத்துல *நரகாந்தக* : அப்படீங்கிறதுக்கு நரகனை கொன்றவர் விஷ்ணு பகவான் சத்யபாமா தேவியைக் கொண்டு நரகனை கொன்றார். அதனாலதான் நாம நரக சதுர்தசி, தீபாவளி கொண்டாடறோம், அப்படீன்னு சாதாரண பொருள்.

இந்த ராகவானந்தர் வ்யாக்யானத்துல

*‘நராணாம் கம், வைஷையிக சுகம், தஸ்ய அந்தம், அவஸானம் கரோதீதி நரகாந்தக:’*

ன்னு ஒரு அழகான ஒரு அர்த்தம் போட்டு ‘நரர்களுடைய விஷயப் பற்றுகளைப் போக்கடித்து காப்பாற்றுபவன்’ ன்னு நரகாந்தக: என்கிறதுக்கு அழகான meaning சொல்லி இருக்கார்
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏

வறுமையிலும் நிம்மதி

மஹாபெரியவரின் அருள் இருந்தால் வறுமையிலும் நிம்மதி கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு

நன்றி - தினமலர் ஜூன் 2022
-
காஞ்சி மஹா பெரியவரின் பக்தர்களில் ஒருவர் துளசிராமன். வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்ட போது சுவாமிகளிடம் பரிகாரம் கேட்டார். 'தினமும் ஸ்ரீராமஜயம் எழுது' என வழிகாட்ட அதை பின்பற்றினார். இரண்டு மாதத்திற்குள் வேலை கிடைத்தது. அதன் பின் தன் சகோதரிகள் நால்வருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடத்தியதால் கடன் தொல்லைக்கு ஆளானார்.
ravi said…


'உன் திருமணத்தின் போது வரதட்சணை பெற்று கடனை அடைக்கலாம்' என துளசிராமனிடம் யோசனை கூறினர் பெற்றோர். காஞ்சி மஹாபெரியவரிடம் இது குறித்து கேட்ட போது, 'வரதட்சணை வாங்க மாட்டோம்' என இளைஞர்கள் சபதம் ஏற்க வேண்டும். மீறி பெற்றோர் வற்புறுத்தினால் 'திருமணம் வேண்டாம்' என்று சொல்லவும் தயங்கக் கூடாது. முன்னோர்கள் திருமணத்தை 'ஆயிரம் காலத்துப்பயிர்' என்பார்கள். விட்டுக்கொடுத்தல், ஒழுக்கம் போன்ற நற்பண்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது என அறிவுறுத்தினார். அதன்படி துளசிராமனும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தார்.
ravi said…
மழையின் போது துளசி ராமனின் வீட்டில் தண்ணீர் ஒழுகும். கூரை மாற்ற பணம் இல்லை. இந்நிலையில் ஒரு பவுர்ணமியன்று வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தார். அப்போது ''மஹா பெரியவா.. இந்த வீட்டை மராமத்து செய்ய அருள்புரிய வேண்டும்'' என எண்ணியபடி துாங்கி விட்டார். 'வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா' என அவரது கனவில் தோன்றி ஆசி வழங்கினார் மஹாபெரியவர். மறுநாளே நண்பர் சிலர் வட்டி இன்றி கடன் தர ஒரே மாதத்திற்குள் ஓட்டுவீடாக மாற்றினார்.

அடுத்த பவுர்ணமியன்று கனவில், 'வீடு கட்டி முடிச்சாச்சா' எனக் கேட்டார் மஹாபெரியவர். 'இந்து சேகர சிவப்ரியா' என வீட்டுக்கு பெயரிட்டார்.

மஹாபெரியவரின் அருள் இருந்தால் வறுமையிலும் நிம்மதி கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணம்.


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
ravi said…
நம்முடைய கைரேகையில் பல விதமான ரேகைகள் தென்படும். மெல்லிய ரேகை, அடர்த்தியான ரேகை, நீளமான ரேகை, குட்டையான ரேகை என்று வெவ்வேறு வகைகளில் ரேகைகள் காணப்பட்டாலும் கையில் நான்கு ரேகைகள் மட்டும் பளிச்சென தெரியும்படி இருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு மூன்று ரேகைகள் தான் பளிச்சென்று இருக்கும். அவை எதை பற்றி குறிக்கிறது? அதை வைத்து நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்? என்பதை மேலோட்டமாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கெள்ளலாம்.
ravi said…
ஆயுள் ரேகை பலன்:*

ஆயுள் ரேகையானது மணிக்கட்டு பகுதியிலிருந்து கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வில் போன்று வளைந்து இருக்கும். இந்த ரேகையைத்தான் நாம் ஆயுள் ரேகை என்று சொல்கிறோம்.

ஒருவருக்கு ஆயுள் ரேகை அமைந்திருக்கும் நீள அளவு, அடர்த்தி போன்றவற்றை வைத்து ஒருவருடைய உடல் நலம், அவருடைய வாழ்நாள், எதிர்காலம் போன்றவற்றை இந்த ரேகையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

மணிக்கட்டு வரை நீண்டு காணப்பட்டால் அவருடைய ஆயுள் காலம் அதிகமாக இருக்கும். நீள வாக்கில் இல்லாமல் இடையில் வளைந்து வளைந்து ரேகை இருந்தால் உடலில் ஆரோக்கிய சம்பந்த பிரச்சனைகள் அடிக்கடி அவர்களுக்கு ஏற்படும்.

*இதய ரேகை பலன்:*

இதய ரேகை சுண்டு விரல் பகுதியிலிருந்து கீழே ஆரம்பித்து ஆள்காட்டி விரலை நோக்கி நீளமாக செல்லும். இந்த ரேகையை தான் இதய ரேகை என்று அழைப்பார்கள். இந்த ரேகையானது பலருக்கும் ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலுக்கு இடையில் பள்ளத்தில் சென்றுவிடும்.

இது போன்று இல்லாமல் ஆள்காட்டி விரலுக்கு மேலே சென்றால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். ரேகை பள்ளத்தை நோக்கி செல்லாமல் மேட்டு பகுதியை நோக்கி இருந்தால் எதிலும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

ரேகை பள்ளத்தை நோக்கி செல்பவர்களுக்கு எப்போதும் எந்த காரியத்திலும் பொறுமை குணம் என்ற ஒன்று அறவே இருக்காது. அவர்கள் அனைத்து செயலிலும் அவசரப்பட்டு செயலை முடிப்பார்கள்.
ravi said…
புத்தி ரேகை பலன்:*

புத்தி ரேகையானது ஆயுள் ரேகையிலிருந்து பிரிந்து இதய ரேகைக்கு நடுவில் செல்லும் ரேகையை தான் புத்தி ரேகை என்பார்கள். இந்த புத்தி ரேகை மணிக்கட்டு பகுதியிலிருந்து அப்படியே திரும்பி சென்றால் எந்த ஒரு காரியத்திற்கும் உடனே உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்கள்.

மணிக்கட்டை நோக்கி ரேகை திரும்பாமல், சுக்கிர மேட்டை நோக்கினால் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை எளிமையாக புரிந்து கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும். ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் ஒன்றாக இருப்பவர்களை விட தனித்தனியே பிரிந்து காணப்பட்டால் அவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும்
ravi said…
விதி ரேகை :*

இது எல்லோருக்கும் இருக்காது. சிலரது கைகளில் மட்டும்தான் இருக்கும். இந்த விதி ரேகை மணிக்கட்டிலிருந்து இதய ரேகைக்கும், புத்தி ரேகைக்கும் இடையில் நேராக செல்வது போன்று இருக்கும். இந்த ரேகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

இந்த விதி ரேகை செல்வ செழிப்பையும், வசதி வாய்ப்புகளையும் குறிக்கும். கையில் இந்த விதி ரேகையானது எந்த அளவிற்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை வசதி வாய்ப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு இந்த ரேகையே கையில் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை சந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.

இதய ரேகை, ஆயுள் ரேகை, புத்தி ரேகை, விதி ரேகை இந்த நான்கு ரேகைகளும் சாதாரணமாக அனைவருக்கும் கையில் பளிச்சென்று தெரியும். இவை நான்கும் கைரேகை சாஸ்திரத்தில் முக்கியமான ரேகைகளாக பார்க்கப்படுகிறது.
ravi said…
காதல் ரேகை :*

இதய ரேகைக்கும், சுண்டு விரலுக்கும் இடையில் சிறிய அளவில் செல்லும் ரேகையை காதல் ரேகை என்று சொல்லுவார்கள்.

இவை வாழ்க்கையில் காதலில் அவர்கள் கொண்ட ஆழமான உணர்வை எடுத்துரைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட ரேகைகள் இருந்தால் ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் வாய்க்கும் என்பார்கள். ஒரு சிலர் இதை குழந்தை ரேகை என்பார்கள். எத்தனை ரேகைகள் இருக்கிறதோ அத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பார்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எந்தக் காரியத்தையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தப்பி ஒரு காரியத்தைச் செய்தால் கஷ்டந்தான் உண்டாகும். ‘நியாயம்’ என்றாலும் முறை என்றே பொருள். சாலையில் செல்லும்போது இடது பக்கம் போகவேண்டும் என்றால், எல்லோரும் இடது பக்கமாகப் போவதுதான் முறையாகும். பெரியோர்கள் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு பொதுவான முறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் போட்டிருக்கும் வழியில் செல்வதுதான் நல்லது.

பகவானிடம் போவதற்கு இரண்டு முறைகளை – நியாயங்களை – வகுத்துத் தந்திருக்கிறார்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை; மற்றொன்று பூனைக் குட்டி முறை. ஸம்ஸ்கிருதத்தில் பூனை என்பதற்கு மார்ஜாரம் என்றும், குரங்கு என்பதற்கு மர்க்கடம் என்றும் பெயர். கிசோரம் என்றால் குட்டி என்று அர்த்தம். ஆகவே ஸம்ஸ்கிருதத்தில் இவை மர்க்கட கிசோர நியாயம் என்றும், மார்ஜார கிசோர நியாயம் என்றும் வழங்குகின்றன.

ravi said…
பூனை குட்டி போட்டால், அக்குட்டியானது தானாக நடந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் போகும் சக்தி பெறும் வரையில் அதைத் தாய்ப் பூனையே தன் வாயினால் கவ்விக் கொண்டு தூக்கிச் செல்கிறது. இதே போலத்தான் புலியும். புலிக்குப் பூனை மாமா முறை ஆகவேண்டும் என்பார்கள். புலிக்கு வேட்டையாடுதல், தாண்டுதல், பதுங்கிப் பாய்தல் ஆகிய எல்லாவற்றையும் பூனை சொல்லிக்கொடுத்ததாம்.
ravi said…
ஒன்றை மட்டும் சொல்லித் தரவில்லை. தானோ மிகவும் சிறியவன், எல்லாவற்றையும் சொல்லித் தந்தால் தனக்கே ஆபத்து வந்துவிடும் என எண்ணி, மரத்தில் ஏறுதல், சுவரில் ஏறுதல் முதலியவற்றைப் புலிக்குச் சொல்லித் தரவில்லையாம்! புலிக்கும் பூனைக்கும் தன் குழந்தைகளிடத்தில் வாத்ஸல்யம், பிரியம் அதிகம்.

ravi said…
பகவான் எல்லாக் குழந்தைகளுக்குமே தாயை மயக்கக்கூடிய சக்தியைத் தந்திருக்கிறார். அப்போதுதான் இக்குழந்தை வாழ வழி உண்டு என்பதாலேயே மாயாவியாகிய பகவான் அதற்கு ஏமாற்றும் வித்தையைச் சொல்லித் தந்திருக்கிறார். நம் கர்மாவை அனுபவிப்பதற்கு உடம்பு வேண்டும்; அந்த உடம்பு வளர உணவு வேண்டும். இதற்காகவே, (நமக்கு இந்த உண்மை தெரியாவிட்டாலும்) நாம் நம் வயிற்றில் ஆகாரத்தைப் போடுகிறோம்.
ravi said…
உடல் வளர்கிறது. இதற்காக நாக்கு என்ற ஓர் உறுப்பு இருக்கிறது. நாக்கில் நமக்கு ருசி தெரிகிறது. ருசி இல்லையென்றால் நாம் சாப்பிடமாட்டோம். உடலுக்குள் உணவு செல்லாது. ஆகவேதான் நாக்கில் ருசியைக் கொடுத்து அதன் மூலம் உடலானது உணவைப் பெற்றுக் கர்மாவை அனுபவிக்கும்படி பகவான் செய்திருக்கிறார்.
ravi said…
இவ்வாறெல்லாம் நாம் கர்மாவை அனுபவிக்கப் பண்ணுவதற்காகவே பகவான் பல தந்திரங்கள் செய்திருக்கிறார். பகவான் குழந்தைகளுக்கு மயக்கும் சக்தியைக் கொடுத்து அதை நாம் பிரியத்துடன் வளர்க்க வைத்து, நம்மை ஏமாற்றுகிறார். ஆனாலும் பகவானின் ஏமாற்றுவித்தை சாதாரண மக்களிடம்தான் பலிக்கும். ஞானியை பகவான் ஏமாற்ற முடியாது. ஞானி பகவானையே ஏமாற்றிவிடுவான்.

“சிக்ஷா சாஸ்த்ர”த்தில் வேத அக்ஷரங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதில் வேதத்தை எப்படிக் கற்கவேண்டும், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. “எப்படிப் பெண் புலியானது தன்னுடைய குட்டியை ஆபத்திலிருந்து காக்கத் தன் வாயில் கவ்விச் செல்கிறதோ, அப்படி வேதத்தை உச்சரிக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது*. புலி தன்னுடைய குட்டியை வாயில் கவ்விக் கொண்டு போகும்போது, குட்டியின் உடலிலே பற்காயம் ஏற்பட்டு விடக்கூடாது, குட்டி கீழே விழுந்து விடவும் கூடாது. அதுமட்டுமின்றி ஆபத்திலிருந்து தப்புவதற்காகத் தாய்ப்புலி வேகமாகவும் ஓட வேண்டியிருக்கும். இந்நிலையில் புலி குட்டியை எவ்வளவு ஜாக்கிரதையாக வாயில் பதமாகக் கவ்விக் காக்கிறதோ, அவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக வேதத்தை உச்சரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதே போலத்தான் பூனையும். பூனைக்குக் ‘கிராமப் புலி’ என்றே பெயர். ஆகவே வேதத்தை மார்ஜார கிசோர நியாயமாக உச்சரிக்கவேண்டும் என இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
ravi said…
*மயில் விருத்தம்* 19 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
சிகர தமனிய மேருகிரி ரசதகிரி நீல
கிரி எனவும் ஆயிரமுகத்

தெய்வநதி காளிந்தி என நீழல் இட்டு வெண்
திங்கள்சங்கு எனவும் ப்ரபா

நிகர் எனவும் எழுதரிய நேமி என உலகடைய
நின்ற மாமுகில் என்னவே

நெடிய முது ககன முகடு உற வீசி நிமிரும் ஒரு
நீலக் கலாப மயிலாம்

அகரு மருமணம் வீசு தணிகை அபிராம வேள்
அடியவர்கள் மிடி அகலவே

அடல் வேல் கரத்து அசைய ஆறிரு புயங்களில்
அலங்கல் குழாம் அசையவே

மகர கன கோமளம் குண்டலம் பல அசைய
வல் அவுணர் மனம் அசைய மால்

வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய
வையாளி ஏறு மயிலே.
ravi said…
முருகப் பெருமானின் ஒப்பற்ற வாகனமாகிய மயில் பல விதமான
நிறங்களையும் வடிவங்களையும் கொண்டது. இவைகளுக்கு
ஒப்புவமையாக உலகில் காணும் பற்பல பொருட்களின் பட்டியலை
இங்கு காணலாம். 'இலகுகனி மிஞ்சு' எனத் தொடங்கும் பழநித்
திருப்புகழில் (பாடல் 120),

பலநிறமி டைந்த விசிறைய மர்ந்த
பருமயில டைந்த குகவீரா

... என்பார்.
ravi said…
*71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)*
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 264* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : *ஹிரண்யகர்ப்போ* பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
பாண்டவர்களின் வனவாசக் காலத்தில் அர்ஜுனன் சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெறுவதற்காகத் தவம் புரியச் சென்று விட்டான்.

மற்ற பாண்டவர்களும் திரௌபதியும் இமயமலையை நோக்கி யாத்திரை மேற்கொண்டார்கள்.

பத்ரிநாத்தைக் கடந்து அவர்கள் வடக்கே செல்ல முற்பட்டபோது, “இது குபேரனின் தோட்டம் இருக்கும் இடம்.
இதைக் கடந்து யாரும் உள்ள செல்லக் கூடாது!” என்றோர் அசரீரி ஒலித்தது.

அதனால் இமயமலை அடிவாரத்தில்
அர்ஷ்டிஷேணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தில் பாண்டவர்களும், திரௌபதியும் தங்கி, அர்ஜுனனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 264*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ravi said…
சிவானந்தலஹரில 33 ஸ்லோகங்களுடைய அர்த்தம் பார்த்தோம்.

இப்போ 34ஆவது ஸ்லோகத்துக்கு அர்த்தம் பார்க்கலாம்.

33வது ஸ்லோகத்துல, “ஹே பரமேஸ்வரா! உன்னை பூஜை பண்றேன். நமஸ்காரம் பண்றேன். ஸ்தோத்ரம் பண்றேன். உன்னுடைய கதையைக் கேட்கறேன்.

உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன். தர்சனம் பண்றேன். இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா? எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார்.

“பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும். உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும்.

இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு?” அப்படீன்னு சொல்றார்.
ravi said…
🌺🌹Ramadeva! Is my Vashti dry? "Asked by the elder - simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺Ramdev, a bundle lifter, used to bathe every morning, evening, chant Sripandurangana and offer fruits and gems to the devotees.

🌺 It is customary to keep a portion of the earnings in a piggy bank and go to Bandaripuram every year and submit the garment to Vittalan.

🌺Ramadevan counted the bill money.
Vittalan regretted that he could only buy yarn and vestments.
ravi said…
🌺Then, as per his mind, he bought Nool Vashti and Anga Vastira and walked towards Bandaripuram.

🌺 On the way, an adult with a dirty face and torn piece came behind.

🌺 He said to Auramade, "Where are you going?" He asked. Immediately he said excitedly, "Sami, I am going to Bandaripuram to visit Vittalan."

🌺Really! I'm going there too. To reach Bandaripuram, there is a crossroads. I know that way. Let's bathe in the Chandrabhaga river and see Vittalan in the evening. "The elder called Ramadevan.

🌺Then the two kept talking and did not seem tired. According to the elder, they reached the banks of the Chandrabhaga river near the temple just before evening started.

🌺Ramdev had in one bag the clothes he had brought to submit to Bandaranaike and in another bag the clothes he had bathed in.
1 – 200 of 308 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை