ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 6 உத்யத்பாநு ஸஹஸ்ராபா பதிவு12

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

உத்யத்பாநு 

ஸஹஸ்ராபா - 

பதிவு 12


இன்று ஒரு அருமையான திருநாமம் பார்க்க போகிறோம் .. 

என் தாய் , மஹாராணி , சிம்மங்கள் படை சூழ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவி தேவர்களாகிய நம் குறைகளை தீர அதர்மம் தலை தூக்காத வண்ணம் தான் தலை தூக்கி சிதக்கநி குண்டத்தில் இருந்து ஜகத் ஜோதியாய் எழுந்து வருகிறாள் 

எப்படி வருகிறாள் என்று பார்க்க வேண்டாமா ...?? பார்ப்போம் இன்று வாருங்கள் 💐💐💐

उद्यद्भानुसहस्राभा - உத்யத்பாநு ஸஹஸ்ராபா -* 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞



ஆயிரம் உதய சூரியன்களைப் போல் சொக்கத் தங்கமாக ஜொலிப்பவள். 

ஒரு நிமிஷம் கண்ணை மூடி  யோசித்தால்  அவளது ஸ்வரூபம் எவ்வளவு ஒளிமயமானது  என்று அறிய முடியும்.💥💥💥

*உத்யத் பானு* = உதய சூரியன் 

*சஹஸ்ர* = ஆயிரம் *ஆபா* = பிரகாசம் 

*உத்யத்பானு சஹஸ்ராபா* = ஆயிரம் உதய சூரியனின் பிரகாசத்துடன் பிரகாசிப்பவள்

இதைத்தான் பட்டர் உதிக்கின்ற செங்கதிர் என்று பாட ஆரம்பித்தார் .. 

உதிக்கின்ற பானு குளிமையானவன் குழந்தை .... 

வானத்தில் சிவப்பாக வருபவன் ... 

குளிமையும் செங்கதிர்களும் ஒன்று சேர்ந்தவள் அன்னை ஸ்ரீ லலிதா ... 

சௌந்தர்ய லஹரியிலும் பார்க்க போகிறோம் அவளின் திவ்ய சொரூபத்தை .... 💥💥💥💥💥💥💥💥💥

ஆமாம் ஏன் வாக் தேவிகள் அம்பாளை ஆதவனுடன் ஒப்பிட வேண்டும் ? 

அழகிய அம்புலி இருக்கும் போது ? *உத்யத்மதி ஸஹஸ்ராபா*  என்று வர்ணித்திருக்கலாமே .. 

அம்பாள் தன் காரூண்யத்தை அமுதாக பொழிபவள்... 

சந்திரனோடுதான் ஒப்பிட்டிருக்க வேண்டும் அல்லவா ? ..

ஏன் அப்படி செய்யவில்லை .. கொஞ்சம் அலசுவோம்

1. சூரியனை முதன்முதல் தெய்வமாய் கொண்டாடும் சமயம் சௌரம் .. கிரேக்க பாலஸ்திய நாடுகளில் முன்னர் சூரியனைத் தான் வழிபட்டார்கள்

2. கண்ணால் பார்த்தவைகளை நாம் உண்மை இருக்கிறது என்று நம்புவோம் . ஆதவன் கண்ணுக்கு எதிரே தெரியும் தெய்வம்

3. ஆதவன் தேய்வதில்லை , மறைவதில்லை ... கிரகணம் விதி விலக்கு

4. கடமை ஆற்றுவதில் அவனுக்கு நிகர் அவனே .. எந்த ராஜா எந்த ஊர் போனாலும் காலையில் உதயமாகி மாலை மறைகிறான்..

6. அதனால் தான் நாமும் இவனை இப்படி பாடி வணங்குகிறோம்

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!

நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி! 


சூரியனிடமிருந்தே ஒளி சந்திரனுக்கு கிடைக்கிறது .. நிஜத்தை விட்டு யார் நிழலை தேடுவார்கள் 

7. சூரிய ஒளியை ஹௌஷதம் என்பார்கள் ... பல நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளை குணம் செய்யும் தன்மை கொண்டது 

8. இரவு எனும் அசுரனை வதம் செய்வது சூரியன் 

9. எல்லோரும் பாடி புகழும் அரவிந்தங்கள் காத்திருப்பதும் அவனை காணவே 

10. சூரிய காந்தி சூரியனை மேற்கில் கொண்டு போய் விடும் வரையில் அவனை தொழுத வண்ணமே உள்ளது 

11அகஸ்தியர் ராவணனை வெல்லும் திறனை ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லியே கிடைக்க வைத்தார் 

12. ஆஞ்சநேயருக்கு குருவாய் எல்லா கலைகளையும் சொல்லித் தந்தவன் ஆதவன் 

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .


இப்படி ஒரு ஆதவன் நம் எல்லோருக்கும் வேண்டியதை அருள்கிறான்  

இதைப்போல் 1000 சூரியர்கள் அதற்கும் மேலே அம்பாள் இருக்கிறாள் என்றாள் அவள் கருணையின் அளவை விவரிக்க முடியுமா எவராலும் ??💥💥💥💥💥💥💥💥💥

அவளுடைய ஓவ்வொரு திருநாமமும் நம்மை கொக்கிப் போட்டு இழுக்கின்றன ... மேலே செல்லவே முடியவில்லை .. ஓவ்வொன்றும் அவ்வளவு அழகு , சௌந்தர்யம் , சுந்தரம் ...


ஒரு கதிரவனையே நம்மால் நம் கண்கொண்டு ஒரு வினாடிக்கு மேல் பார்க்க முடியவில்லை .. நினைத்துப் பாருங்கள் அவளோ 1000 சூரியர்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் அதற்கும் மேலே ஒளி உடையவள் .

அப்படியே வந்தால் நம் கண்கள் ஒரு வினாடியில் எரிந்து போகும் .

அதனால் நம் அளவிற்கு அவள் தன்னை தாழ்மை படுத்திக்கொண்டு நாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிக மிக சிறியதாய் ஆகிறாள் .

இதையே ஒரு பெரிய அதிசயம் என்கிறார் பட்டர் .. 

அளியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே என்று 

ஒரு சூரியன் என்று அவளை வர்ணித்திருந்தால் அது சிறுமையாகும் .

அதனால் ஒரு முறைக்காக 1000 என்கிறோம் .. 

ஆனால் அவள் உண்மையில் அளவிடவே முடியாதவள் எண்ணிக்கையில் அவளை உட்படுத்த முடியாது .. 

பட்டர் மீண்டும் சொல்கிறார் நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு .

அவளை வெறும் ஒரு சூரியனுடன் ஒப்பிட்டு அவளை சிறுமை படுத்த வாக் தேவிகள் விரும்பவில்லை .. 

ஆயிரம் சூரியர்கள் என்று சொன்னாலும் திருப்தி  வருவதில்லை .. 

இது எப்படி இருக்கிறது தெரியுமா ? 


ஒரு வண்டு தேனை பருக மலரை நாடி வருகிறது .

மகரந்தம் தேனை சொரிகின்றன .. 

குடித்து விட்டு பறக்காமல் வண்டு கூம்பி விடும் பூவிலேயே உறங்கவும் ஆரம்பிக்கிறது .

அம்பாளின் ஒவ்வொரு நாமமும் இப்படித்தான் வண்டை போல் நம்மை சொக்க வைத்து வேறு எந்த நாமமும் வேண்டாம் இந்த ஒரு நாமம் மட்டுமே போதும் என்று சொல்லும் அளவிற்கு நம்மை செய்து விடுகிறது . 👌👌👌

பட்டர் தன் அபிராமி அந்தாதியில் முதல் பாடலாக உதிக்கின்ற செங்கதிர் அம்பாளின் உச்சித் திலகமாய் பார்க்கிறார் .. 

ஒரு சூரியன் வெறும் அம்பாளின்  சீமந்த வகுடில் உச்சித் திலகமாய் உதிக்கிறான் .. அப்படி என்றால் அம்பாளை முழுவதும் வர்ணிக்க 1000 சூரியர்களும் போதாதே  !!!💐💐💐🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞


தேவ கார்ய சமுத்யதா
' என்பது எங்கோ உள்ளவர்களுக்காகச் சொன்னது அல்ல. 

நாங்கள் நல்லவர்களாக இருந்தால், நாங்கள் நல்ல காரியங்களை அதிகமாகச் செய்பவர்களாக இருந்தால், நாங்கள் தர்ம நிலையில் நிற்பவர்களாக இருந்தால், 

எங்களுடைய காரியங்களைப் பூர்த்தி செய்து தருவதற்காக சிதக்னி குண்ட சம்பூதாவானவள், எமது சித்தமாகும் அக்னியிலிருந்து வெளிப்படுவாள்; தர்ம செயல்களை ரக்ஷிப்பதற்காக அவள் வருவாள். 

அடுத்து வரும் நாமங்கள் இதே விஷயத்தைத் தெளிவாகச் சொல்கின்றன. 'சிதக்னி குண்ட சம்பூதா தேவ கார்ய சமுத்யதா' என்று சொல்லிவிட்டு, 

'உத்யத்பானு ஸஹஸ்ராபா' என்று அழைக்கிறது சஹஸ்ரநாமம். ஆயிரம் சூரியன்கள் உதயமாகும்போது எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ, அதைக்கட்டிலும் கோடி மடங்கு பிரகாசிப்பவள்.



  
Devi is as bright and shining as a thousand suns rising together. She is a four armed Goddess    who holds in one of Her left hands a noose representing the power of love and the flashing Ankusha  ( goad) of anger in one of Her right hands of restraining the focus of evil. 

Udhayadh means rising, Bhannu   means Sun   , Sahasra means thousand and aabhaa means light. Devi is bright and shining as the light emanating from 1000 suns rising together . When the sun rises, it gives reddish , orange hue. In many Shastras , Devi is described as having a red hue. 

                      💐💐💐💐💐💐💐💐💐💐💐




Comments

ravi said…
திருமால் ‘ப்ராணஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 67-வது திருநாமம்.‘ப்ராணதஹ’ என்ற 66-வது திருநாமம் திருமால் நமக்குப் பலம் தருகிறார் என்பதைக் காட்டியது;
‘ப்ராணஹ’ என்ற 67-வது திருநாமம் திருமால் உயிர் தந்து காக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
“ப்ராணாய நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால் அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்தும் திருமால் நம்மைக் காத்தருள்வார்.
Rajesh krishna said…
I am also hearing from naren he had completed PhD...while doing conversation he said same thing... JRK sir motivation is highly appreciated and also said your F&A team missed such a legendary HOD...
Rajesh krishna said…
There is no comparison between rahul and u sir...your knowledge, compassion, friendly nature missing so much not only me entire team.. some times other team members especially procurement team remember a lot while our internal discussions..
ravi said…
ராமனும் ருமையும் (Rumai)*

*ருமை சொன்ன கீதை*
ravi said…
*ராமா* !

தேனை மறந்திருக்கும் வண்டும் -

ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் -

இந்த
வையம் முழுதுமில்லை அறிவாயே நீ

சுக்ரீவன் முகம் மறந்துபோனால் -

இந்த
கண்களிருந்து பயனுண்டோ??

இனி
வாழும் வழியென்ன என்றே கேட்டேன் ராமா ??

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ ராமா ?

என் கண்கள் புரிந்து விட்ட பாவம் என் உயிர் துணைவன் முகம் மறக்கலாச்சே...

அவன் முகம் மறந்து போனால் என் கண்கள் இருந்தும் என்ன பயன் ராமா ??

துடித்தேன் சிலிர்த்தேன் துவண்டேன் உறக்கம் இன்றி தூக்கம் கொண்டேன் ...

அஞ்சி அஞ்சி நடந்தேன் அந்த திருமண நாளிலே

இன்றோ அன்ன நடை பயின்றேன் உடல் உயிர் காணாததால் தானே ??

*ருமை*!!

உத்தமி நீ ..

உள்ளத்தில் உள்ளதை உதட்டில் கொண்டு வந்தாய் ...

வீழ்த்துவேன் வாலியை ..

துரத்துவேன் உன் வலியை ...

பிறர் மனை விரும்பும் அனைவரும் வால் இல்லா வானரமே ... 🙈🙈🙈

ராமா .. ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய் ..

நன்றும் இன்றே சொன்னாய் ...

இன்றே கண்டேன் சொர்க்கம் அதை ...

மறந்த முகம் நிழலாட அதிலே உன் நாமம் இழைந்தோட

இணையில்லா நட்பு ஒன்று மலரக்கண்டேன் ...

ராமா ஒரு வரம் தருவாய் ..

உன் முகம் நான் மறந்தால் உயிர்காற்றை நிற்க செய்வாய் ...

சிரித்தான் ராமன் ...

என் நாமம் பெரிதில்லை ...

பெரியவா என்றே எனை யாரும் அழைப்பதில்லை ...

காஞ்சி நிழலே நான் துயிலும் ஸ்ரீ ரங்கம் என அறிவாய் ..

அவன் புகழ் பாட மறவாதே

மறந்தால் காலனும் கருணை காட்டான் ...

உண்மை ராமா

உனக்குள் இருக்கும் உத்தமனை மறவேன் இனி ...

அவனுள் இருக்கும் உனை என்றும் தொழுவேன் இனி ....

👍👍👍🙌🙌🙌🙌🙌
Kousalya said…
அருமை. ..ருமையுடனான சம்பாஷனை...🙏🙏 ஜய் ஶ்ரீ ராம்... பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🌹🌹
Moorthi said…
ஓர் அழகான எழுத்து வடிவம். அருமை 👌🙏🙏🙏
Moorthy said…
படித்தேன்... மெய்மறந்தேன்... தங்களுக்கு நன்றிகள் பற்பல... 🙏🙏
Ramesh said…
Is there anything you have left untouched sir? My goodness..🙏🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🪔


"ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை"

("பூரானை ஒண்ணும் செய்யாதே....ஹிம்சை செய்யாதே.. ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு....பூரான் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை....ஒண்ணை அழிச்சாலும்,ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி...")

கச்சி மூதூர் கருணாமூர்த்தி.
தொகுப்பாளர்-சத்யகாமன்.

சாயங்காலம் ஐந்து மணி பெரியவாள் ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.

அவர்கள் வஸ்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார்.பரபரப்புடன் கைகைளை நீட்டி,காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.

என்ன அவசரம்" என்றார்கள் பெரியவாள்.

பெரிய சடைப்பூரான் இருக்கு,வஸ்திரத்திலே...."

பெரியவா,கண்ணனிடம் வஸ்திரத்தைக் கொடுத்தார்.

"பூரானை ஒண்ணும் செய்யாதே....ஹிம்சை செய்யாதே. ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு....பூரான் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை....ஒண்ணை அழிச்சாலும்,ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி..."

பூரான்....ஒரு விஷ ஜந்து. அந்த உயிரிடமும் கருணை,

பெரியவாளுக்கு.

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

"நானும் நீயும் ஒண்ணுதான்"

தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை

(பெரியவாளின் எளிமையான விளக்கம்)

கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.

ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.

அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?" என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!" என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும் புரிஞ்சிண்டாளா?" என்றார்.

"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?" என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை சரியாக புரிந்து கொள்கிறார்களா, இல்லையா என்பதைக் கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம். அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை. கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.

ravi said…
அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.

"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும், 'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத் தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து- "நானும் நீயும் ஒண்ணுதான்!" என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக் கொள்ளலாமா?" என்றார்.

கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து. "இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார்

"இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்... எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை, அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🪔

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🪔
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🙏🪔
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 16 வரை மற்றும் Experiences with mahaperiyava அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/BsXcugcjdXD6n8yss285LQ
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/+WcLqSfP2g8hmMzVl
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🪔🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🪔
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to மஹா பெரியவா அனுபவம் comments" Through this link
whatsapp
https://chat.whatsapp.com/BsXcugcjdXD6n8yss285LQ
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+WcLqSfP2g8hmMzVl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ravi said…
21

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

பீயூஷ வர்ஷ ஶிஶிரா ஸ்புடத் உத்பலஸ்ரீ-
மைத்ரீ நிஸர்க மதுரா க்ருத தாரகாப்தி: |
காமாக்ஷி ஸம்ஶ்ரிதவதீ வபுரஷ்டமூர்தே:
ஜ்யோத்ஸ்னாயதே பகவதி த்வதபாங்கமாலா ||21||

ஹே காமாக்ஷி ! உன்னுடைய கடாக்ஷத்தின் வரிசையானது நிலவைப் போல் அமிர்தவர்ஷத்தினால் குளிர்ச்சியுள்ளதாயும், மலர்கிற கருநெய்தல் புஷ்பத்தின் அழகுக்கு ஸ்நேகபாவமுள்ளதாயும், இயற்கையாகவே இனிமையுள்ளதாயும், நக்ஷத்திர மண்டலத்தை அளாவினதாயும், அஷ்டமூர்த்தியான பரமசிவனுடைய சரீரத்தை அடைந்ததாகவும் விளங்குகிறது.

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.....
ravi said…
🌹🌺'' *இராம பிரானால் மணலில்* *வடிவமைக்கபட்ட ஸ்வயம்பு* *மூர்த்தியாக காட்சி தரும்* **நாலாயிரம் பிள்ளையார் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹*சீர்காழிக்கு அருகாமையில் உள்ள நாங்கூர் என்ற ஊரில்*நாலாயிரம்* *பிள்ளையார்* என்கிற பெயரில் அருள்பாலித்து வருகிறார் முழுமுதல் கடவுளான விநாயகப்பெருமான்.

🌺கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு
வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான்.

🌺பிரம்மனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான்.

🌺நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர்.

🌺இதற்கிடையில்,கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது.

🌺வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி, அவனுக்கு வரும்படியாக நான்முகன்
வரமளித்து மறைந்தார்.

🌺குகையின் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாலி அப்பாறையை அகற்றிவிட்டு வெளியில் வந்து, கிஷ்கிந்தையை அடைந்தான்.

🌺அரசன் இல்லாததால் மந்திரிகளும் மக்களும் கோரியபடி சுக்ரீவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் வேளையில் அவனை அரியணையில் வீற்றிருக்கக் கண்ட வாலி கோபமுற்றான்.

🌺தம்பியான சுக்ரீவனைப் போரிட்டு வென்று நாட்டை விட்டே துரத்தி விட்டான்.

🌺ஆனால் சுக்ரீவனது மனைவியையோ மற்றும் அவனது மகனான அங்கதனையோ சுக்ரீவனோடு அனுப்பவில்லை.

🌺இத்தவறுக்காகவே இராமனால் பிற்காலத்தில் தண்டிக்கப்பட்டான் என்றும் கூறுவது உண்டு.

🌺காடுகளில் அனுமனோடு திரிந்துகொண்டு வாலிக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த சுக்ரீவன், இராம லக்ஷ்மணர்களைக் கண்டு தான்படும் துயரத்தை அவர்களிடம் கூறினான்.

🌺அவனுக்கு அடைக்கலம் கொடுத்த இராமன், ஆச்சா மரம் எனப்படும் ஏழு ஆச்சா மரங்களுக்குப் பின்னால் நின்று கொண்டு வாலியின் மீது பாணம் செலுத்தி அவனை வீழ்த்தினார்.

🌺அதனால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கும் பொருட்டு, நாங்கூரை அடைந்து காவிரியின் கிளை நதியான மணிகர்ணிகையில் மணல் எடுத்து விநாயகர் திருவுவை அதில் அமைத்துப் பூஜை செய்தார்.

🌺அசரீரி வாக்கின்படி, தோஷ நிவர்த்திக்காக 4000 வேத
விற்பன்னர்களைக் கொண்டு யாகம் செய்ய முற்படுகையில் ஒரு அந்தணர் வரவில்லை.

🌺தடை ஏற்படுகிறதே என்று வருந்திய இராமருக்கு ஆறுதல் அளித்துத் தானே ஒரு வேதியராக மகா கணபதி வந்ததால் நாலாயிரத்தில் ஒருவர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

🌺அதுவே மக்கள் வழக்கில் தற்போது நாலாயிரம் பிள்ளையார் எனப் படுகிறது.

🌺இராம பிரானே மணலால் வடிவமைத்த கணபதியாதலால் ஸ்வயம்பு மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*- *
ravi said…
''🌺🌹 * Rama Pran built in the sand * * Designed himself * * sculpted * * Four thousand vinayaka - simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹* In the town of Nangur near Sirkazhi, the full-fledged deity Vinayakaperuman is blessing under the name of * four thousand * * Pillaiyar *.

🌺Wali who ruled Kishkintha had half the strength of the enemy whoever he fought with
He received the gift of coming from Pramadeva.

🌺He was inside a cave to perform severe penance towards Brahman.

🌹Fearing that Wali would not come out for a long time, his warriors covered the cave with a boulder and returned to Kishkinda.

🌺 Meanwhile, Vali got a vision of Brahman as a result of severe meditation.

🌹 Half the strength of the enemy as Wally owes, foursome to come to him
Gifted and disappeared.

🌺Wally was shocked to see that the mouth of the cave was closed, removed the rock and came out and reached Kishkintha.

🌺Wali was angry to see Sukrivan enthroned while Sukrivan was in charge of the government as demanded by the ministers and the people in the absence of the king.

🌺 He defeated his brother Sukrivan and drove him out of the country.

🌺But Sukrivan did not send his wife and his son Angadana with Sukrivan.

🌺It is said that he was later punished by Rama for this.

🌺 Sukrivan, who was wandering in the forest with Hanuman and living in fear of Vali, told them of the grief he felt at seeing Rama Lakshmanas.

🌺Raman, who had given him refuge, stood behind the seven Acha trees called the Acha tree and fell down on Vali with a drink.

🌺order to remove the damage caused by it, he reached the anchor and took sand from Manikarnika, a tributary of the Cauvery, and placed Ganesha in it and worshiped it.

🌺According to the Asariri vow, 4000 Vedas for Tosha Nivarti
An antler did not come while attempting to sacrifice with the vendors.

🌺 Maha Ganapati came as a healer himself to comfort Rama who regretted that the ban was occurring and he became known as one in four thousand.

🌺That's the case of the people now called four thousand children.

🌺🌹Rama Pran presents himself as a self-portrait of Ganapati created by sand.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
பழைய ராஜாங்கங்களில் வியாகரண சாஸ்திரப் பிரசாரத்தை எவ்வளவு போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பதற்கு வேங்கி சாஸனம் மாதிரி சமீபத்தில் ஒரு சான்று கிடைத்தது.

முன்னே central provinces (மத்ய மாகாணம்) என்று சொல்லி, சுதந்திர இந்தியாவில் ‘மத்ய ப்ரதேஷ்’ என்கிறார்களே அங்கே, ‘தார்’ என்று ஒரு ஸம்ஸ்தானம் இருந்தது. இப்போது இந்தியன் யூனியனோடு சேர்ந்துவிட்டது. அந்த ‘தார்’ தான் கொடைவள்ளலும், கலைகளை எல்லாம் போஷித்தவனுமாகிய போஜராஜாவுடைய தலைநகரான “தாரா” என்பது. அந்த தாரா-தார் – பட்டிணத்திலே ஒரு மசூதி இருக்கிறது. அந்த மசூதியில் ஒரு பொந்துக்குள் ஏதோ ஸம்ஸ்கிருத எழுத்துக்கள் தெரிவதாக வெளியிலே தெரிய வந்தது. ஆனாலும் அந்நிய மதஸ்தர்களின் இடமாகி விட்டது. அவர்கள் அநுமதித்தால்தான் அங்கே போய் என்னவென்று பார்க்க முடியும். இதனால், எபிக்ராஃபிகல் டிபார்ட்மென்ட்காரர்களே ஒரு பத்து பதினைந்து வருஷம் ஒன்றும் பண்ண முடியாமல் சும்மா இருந்தவிட்டார்கள். அப்புறம், சுதந்திரம் வந்து சில வருஷங்களுக்கு அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக அது என்ன எனறு பார்க்க போவது போல் போய், அப்புறம் மசூதிக்காரர்களிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு, அந்த பொந்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.

ravi said…
அதிலே ஒரு பெரிய சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரத்தில் ஏகப்பட்ட ச்லோகங்கள் எழுதியிருந்தது. அதிலுள்ள எழுத்துக்கள்தான் முன்னே தெரிந்தவை. ச்லோகங்கள் சொன்ன விஷயம் என்ன என்று பார்த்தால், அத்தனையும் வியாகரணம் தான்! வியாகரணம் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் சக்கராகாரமாகப் பாடல்களாக அமைத்து, ஆச்சரியப்படும்படியான chart- ரூபத்தில் எழுதி வைத்திருக்கிறது! போஜராஜா காலத்தில் ஸரஸ்வதியின் ஆலயமாக இருந்த இடத்தில்தான் இப்போது மசூதி இருக்கிறது. வாக்தேவியான ஸரஸ்வதி ஆலயத்தில் பாஷா சாஸ்திரம் இருக்கவேண்டும் என்றே வேத புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான வியாகரணத்தை எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த பெரிய சக்கரத்தை ஒரு பார்வை பார்த்தால் வியாகரணம் முழுக்கத் தெரிந்துவிடும் என்கிறார்கள். அதற்கு வழிபடத்தக்க பெருமை உண்டு என்பதாலேயே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்தக் கோயில் மசூதியாகப் போய் அநேக வருஷங்கள் கழித்து வாக்தேவியின் அநுக்ரஹத்தால் இந்தச் சக்கரம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை எபிக்ராஃபி இலாகாக்காரர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். இங்கிலீஷிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

வியாகரணம் மாதிரியான சாஸ்திரங்களைக் கூட வெறும் லௌகிகம் என்று தள்ளாமல் பூஜார்ஹமாக [வழிபாட்டுக்கு உரித்தானதாக] வைத்து, ராஜாங்கத்தாரே போஷித்து வந்திருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.
ravi said…
மலர்க்குள் மலராய்

ஆதிக்கத்துள் ஒரு மாணிக்கமாய்

மாணிக்கத்தில் மீண்டும் மலர் செண்டாய்

செண்டுக்குள் வாழும் வண்டாய் வந்தாய் எங்கள் வாழ்வும் மலர

மலர்ந்தது வாழ்வே அதிலே அதிர்ந்தது தேன் அடைகள் ...

உன் அடையா அன்பிலே தெளித்தது தேன் மழைகள் ...

அதிலே வாழும் விண் மீன்கள் நாங்கள் ...

உந்தன் விழி தனில் இடம் தருவாயோ

அந்த தடாகம் தனில் தவழும் மீனாய் என்றும் வாழ்வோம் ...🐟🐟🐠🐠🐡🐡🐋🐋
Kousalya said…
Arpudham...🙏🙏பெரியவா திருவடிகளே சரணம்
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 249* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*82 வது திருநாமம்*
ravi said…
*82* कामेश्वरास्त्रनिर्दग्धसभण्डासुरशून्यका - *காமேச்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர சூந்யகா :* 💐💐💐
ravi said…
*சூன்யகா* என்பது பண்டாசுரனின் தலைநகரம்.

காமேஸ்வரன் பெயர் சொல்லி விடுத்த அஸ்திரம் பண்டாசுரனை அவனுடைய தலைநகரத்தோடு சேர்த்து சாம்பலாக்கிவிட்டது.

அம்பாளின் இந்த நாமா பண்டாஸுர வதத்தை லலிதை *வெற்றிகரமாக*👍👍👍👏👏👏 முடித்ததை சொல்கிறது.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 249* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌64

*64 நாவின் வர்ணனை*

*ஸரஸ்வதி கடாக்ஷம்*

அவிஶ்ராந்தம் பத்யுர் குணகண கதாம்ரேடனஜபா

ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா

யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ

ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா 64
ravi said…
அன்னையின் நாக்கில் சரஸ்வதி தேவி எப்போதும் இருப்பதாகச் சொல்வது வழக்கம்.

அவளுடைய நிறம் ஸ்படிகம் போன்ற வெளுப்பு.

அப்படியிருந்தாலும் அவள் வாசம் செய்யும் அன்னையின் நாக்கு ரக்த வரணமாக இருப்பதால்

சரஸ்வதி தேவியும் நிறம் மாறி பத்மராகக் கல்லின் ஒளியுடன் இருப்பதாகச் சொல்கிறார்.

அன்னை எப்போதும் தனது புருஷனது லீலைகளைப் பேசிக்கொண்டே இருப்பதாகச் சொல்லி அவளது நாக்கைச் சிறப்பித்துக் கூறும்போதே

அவளது பாதிவிரந்தத்தையும் விசேஷமாகச் சொல்கிறார்.👍👍👍
ravi said…
*தவ ஸா ஜிஹ்வா -*

உன் நாக்கானது;

*அவிச்ராந்தம்* -

எப்போதும்/இடைவிடாது;

*பத்யு* : -

உன் புருஷனான பரமசிவத்திடம்;

*குணகண கதாம்ரேடந ஜபா -*

ஈசனின் கல்யாண குணங்களைச் சொல்லும் கதைகளை மீண்டும் மீண்டும் மந்திர ஜபம் போல;

*ஜபா புஷ்ப -*

செம்பரத்தைப் பூ;

*சாயா* -
நிறத்துடன்;

*ஜயதி* - விளங்குகிறது;

*யதக்ராஸீநாயா* - யத் அக்ராஸீனாயா: -

எந்த நாக்கின் நுணியில்;

*ஸரஸ்வதியா* - சரஸ்வதி தேவியின்;

*ஸ்படிக-* *த்ருஷத்-*
*அச்சவிமயீ -*

ஸ்படிகம் போன்ற வெண்மையான ஒளியுடைய; மூர்த்தி: - ரூபமானது;

*மாணிக்க வபுஷா -* பத்மராகத்தின் ரூபமாக;

*பரிணமதி* - மாறுதல் ஆகிறதோ?.👍👍👍
ravi said…
விள்ள நாவுரை எழுந்தொ றுந்தலைவர்

வீரமும் புகழும் அழகுமே

தெள்ளு பாடல்மது ரம்ப ழுத்தனைய
செய்ய

கேழொளிவ னப்பினால்

அள்ளல் மாமலரை விட்டு வாணியுனது

அருண நாவுறைய வெள்ளையாய்
உள்ள மேனியுமே னம்மை நீயருள

உன்நி றம்பெறுவ தொத்ததே.🙌🙌🙌
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 26*👌
ravi said…
ஐந்தாவது ஸ்லோகம்,

श्रीमुकुन्दपदाम्भोजमधुनः परमाद्भुतम् ।

यत्पायिनो न मुह्यन्ति मुह्यन्ति यदपायिनः ॥ ५ ॥

ஸ்ரீ முகுந்த3 பதாம்போ4ஜ மது4ன: பரமாத்பு4தம் |

யத்பாயினோ நமுஹ்யந்தி முஹ்யந்தி யத3பாயின: ||

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
அதே நேரத்துல பகவானுடைய பாதத் தாமரைகள் ல மனசு வெச்சு அந்தத் தேனைப் பருகினா பரம சாந்தமாக, ரொம்ப தெளிவா, ரொம்ப ஆனந்தமா இருப்பா,

அப்படீங்கிற உயர்ந்த உண்மையை ரொம்ப வேடிக்கையா இந்த ச்லோகத்துல கவிதையா சொல்ற மாதிரி சொல்றார்.

மூகபஞ்சசதி ல கடாக்ஷ சதகத்துல கூட இந்த மாதிரி கருத்து உள்ள ஒரு ஸ்லோகம் இருக்கு.
ravi said…
नीलोऽपि रागमधिकं जनयन्पुरारेः

लोलोऽपि भक्तिमधिकां दृढयन्नराणाम् ।

वक्रोऽपि देवि नमतां समतां वितन्वन्

कामाक्षि नृत्यतु मयि त्वदपाङ्गपातः ॥

நீலோபி ராகமதிகம் ஜனயன்புராரே:

லோலோபி பக்திமதிகாம் த்ருடயன் நாரணாம்

வக்ரோதி தேவி நமதாம் ஸமதாம் விதன்வன்

காமாக்ஷி ந்ருத்யது மயி த்வதபாங்கபாத:

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
அம்மா, உன்னுடைய கண் நீலமா இருக்கு.

காமாக்ஷியினுடைய கண் கரு நீல வர்ணத்துல இருக்கு. இருந்தாலும் இந்த முப்புரத்தை எரித்த பரமேஸ்வரனுக்கு இது ராகத்தை உண்டாகிறது.

ராகம்ங்கிற வார்த்தைக்கு *சிகப்புன்னு* சமஸ்க்ருததுல ஒரு அர்த்தம்.

ராகம்ங்கிற வார்த்தைக்கு *ஆசைன்னு* ஒரு அர்த்தம்.

அந்த மாதிரி உன் கண் நீலமா இருந்தா கூட அவருக்கு ஆசையை ஜாஸ்தி பண்றது.

அதாவது காமாக்ஷி பார்த்தா பரமேஸ்வரனுக்கு ஆசை வர்றதுன்னு அர்த்தம்.

*லோலோபி* – கண் பார்வைங்கிறது இங்க அங்க போயிண்டு இருக்கும்.

அந்த மாதிரி உன்னுடைய பார்வை சலித்துக் கொண்டு இருந்தாலும், காமாக்ஷியை நமஸ்காரம் பண்றவாளுக்கு *லோலோபி பக்திமதிகாம் த்ருடயன் நாரணாம்,*

அவாளுடைய பக்தியை த்ருடம் பண்றது.

அவாளோட மனசு சஞ்சலம் அடையாம தெளிவா ஒரே இடத்துல இருக்கும்படியா, உன்னுடைய பாதத்துலேயே இருக்கும்படியா பக்தியை த்ருடப் படுத்தறது, உன்னுடைய கடாக்ஷம் அப்படீன்னு சொல்றார்.🙌🙌🙌
ravi said…
*வக்ரோதி தேவி நமதாம் ஸமதாம்* *விதன்வன்*

கண் வளைஞ்சு தானே இருக்கும்.

அது மாதிரி வக்ரமா இருந்தாலும் உன் கண், நமஸ்காரம் பன்றவாளுக்கு சமத்துவத்தை கொடுக்கறது.

இந்த த்வந்தங்கள் ஒண்ணுமே அவாளை படுத்தறது இல்லை.

அவா எப்பவுமே equanimity யோட இருக்கான்னு சொல்றார்.

காமாக்ஷி உன்னுடைய அப்பேற்பட்ட கடாக்ஷம், *காமாக்ஷி ந்ருத்யது மயி த்வதபாங்கபாத –*

என் மேல் அது நடனம் இடட்டும், அப்படீன்னு எல்லாத்தையும் ஒண்ணா பார்க்கிற தன்மை, நேர்மை அதை காமாக்ஷியினுடைய கடாக்ஷம் கொடுக்கும், அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

அந்த மாதிரி ‘கடாக்ஷம் வளைந்து இருந்தாக் கூட அந்த கடாக்ஷம் ஒருத்தனுக்கு கிடைச்சா அவன் நேர்மையா இருப்பான்’ ன்னு வேடிக்கையா சொல்ற மாதிரி இங்க குலசேகர கவி ‘உன்னுடைய பதாம்போஜத்திலிருந்து வருகிற தேனைப் பருகக் கூடியவர்கள் இந்த மதுவைப் பருகி ரொம்ப தெளிவோட இருக்கா.

இந்த மதுவைப் பருகாதவர்கள், உலக விஷயங்களிலேயே ஈடுபாட்டிருக்கிறவா ரொம்ப கலக்கத்தோட இருக்கான்னு சொல்றார்.

இது ஐந்தாவது ஸ்லோகம். ஆறாவது ஸ்லோகம்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
குரு வேண்டும் என்று தேடினோம். சுத்தமானவர், பூர்ணமானவர் என்று நம்பித்தான் இவரை ஆச்ரயித்தோம். இவரிடம் வந்தபோது இவர் அசுத்தமானவர், அபூர்ணமானவர் என்று நாம் நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் வந்தேயிருக்க மாட்டோம். வந்தபின் இப்போது சந்தேகம் ஏற்பட்டு விட்டதென்றால் என்ன செய்யலாம்? இன்னொருவரிடம் போவதென்றால் அவர் கதையும் பிறகு எப்படியாகுமோ என்று ஒரு பயம். இன்னொரு பயம், குரு என்று இவரை வரித்துவிட்டு, இன்னொருவரிடம் போனால் பாதிவ்ரத்ய தோஷம் [கற்பில் தவறுவது] போல், குருத்ரோஹம் என்ற பாபம் ஸம்பவிக்குமோ என்பது.

இந்த நிலையில் ஒரே ‘ஸொல்யூஷன்’ [தீர்வு], யோக்யதாம்சத்தைப் பார்க்காமலிருந்து விடுவதுதான் என்று தோன்றுகிறது. நாம் குருவைத் தேடினபோது, இவர்தான் கிடைத்து, இவரைத்தான் வரணம் செய்ய வேண்டியிருந்தது என்றால், ஈச்வரனே இவரைத்தான் நமக்கு குருவாக அனுப்பி வைத்திருக்கிறான் என்றுதானே அதற்கு அர்த்தம்? அப்படியே வைத்துக் கொள்வோம். குருவை ஈச்வரன் அனுப்பினான் என்று மட்டுமில்லாமல் ஈச்வரனே குருவாக வந்திருக்கிறான் என்று பாவிக்கும் படி தானே சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது! இவர் மநுஷ்ய குரு என்கிற வரையில்தான் இவர் நிர்தோஷமானவரா, தோஷமானவரா என்ற கேள்வி வருகிறது. இவரே ஈச்வரன் என்று நம்பிவிட்டால், இந்தக் கேள்விக்கே இடமில்லை. தோஷமுள்ள ஈச்வரன் என்று உண்டா என்ன? ஈச்வரனிடத்தில் தோஷம் மாதிரி ஏதாவது தெரிந்தால்கூட, அதுவும் நம் திருஷ்டி தோஷம் தானே? இப்படியே குருவைப் பற்றியும் நினைத்துவிட்டால் போகிறது. இவர் ஈச்வரனே என்று வைத்துவிட்டால் இவரைவிட்டு இன்னொருவரிடம் போவதற்கும் இடமில்லை. ஈச்வரன் ஒருத்தன் தானே? ஒரு ஈச்வரனை விட்டு இன்னொரு ஈச்வரனிடத்தில் போவது என்பது பரிஹாஸமான விஷயமல்லவா?

அதனால் குரு என்று ஒருத்தரை அடைந்த பிறகு, அவர் எப்படியானாலும் இருக்கட்டும் என்று நாம் நம் பக்தியில் இறங்காமல், சலிக்காமல் அவரையே உபாஸித்து வரவேண்டும்; சுச்ரூஷை பண்ண வேண்டும். இப்படிப் பண்ணினால் கடைசியில் ஈச்வரன் அவர் மூலமே நமக்கு சுத்தியை, ஞானத்தைக் கொடுத்துவிடுவான். அவர் மோக்ஷத்துக்குப் போனாலும் போகாவிட்டாலும் நாம் போய்விடுவோம்!

ravi said…
தூர்த்த குணம், கெட்ட பழக்கமுள்ள குருவை உபாஸிக்கிறோம் என்று உலகம் பரிஹாஸம்தான் செய்யும். செய்துவிட்டுப் போகட்டும். இதனால் நமக்கு எந்த அளவுக்கு நஷ்டம் வந்தாலும் வந்துவிட்டுப் போகட்டும். முடிவில் இதற்கெல்லாம் ஈடு செய்வதான பரம லாபம் கிடைக்காமற் போகாது. நமக்கென்று லாப-நஷ்டம், மானாவமானம் பார்க்காமல், ஓரிடத்தில் நம்பி சரணாகதி பண்ணிவிட்டால், முடிவில் அதற்காக ஈச்வரன் பரம லாபமான ஆத்ம ஞானத்தைக் கொடுத்து விடுவான்.

லோகத்தில் லாப நஷ்டம் என்பவை உண்மையில் நிரந்தரமாக இல்லை. அவை கொஞ்ச நாள் இருப்பதுபோலத் தோன்றுவதுதாம். ஆதலால் பாக்கி இடங்களில்தான் லாபநஷ்டம் பாரத்தாலும் பார்க்கலாம்; குருவிடத்தில் மட்டும் லாப நஷ்டம் பாராமல் சரணாகதி பண்ணிவிடவேண்டும்.
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

கேஶப்ரபாபடல நீல விதானஜாலே
காமாக்ஷி குண்டலமணிச்சவி தீபஶோபே |
ஶங்கே கடாக்ஷருசிரங்கதலே க்ருபாக்யா
ஶைலூஷிகா நடதி ஶங்கரவல்லபே தே ||23||

சங்கரபத்நியான ஹே காமாக்ஷி ! உனது கிருபையாகிற நடிகையானவள் உனது கேசத்தின் காந்திப்படலமாகிற கருங்கூரையைக் கொண்டதும், உனது காது குண்டலமணியின் காந்தியாகிற தீபத்தினால் விளங்குவதுமான உனது கடாக்ஷமாகிற நாடகமேடையில் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறாள்.....

அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
*மயில் விருத்தம்* 4 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
தேவ லோகத்து ஐந்து வகையான மரங்கள்,

1. சந்தானம்
2. ஹரி சந்தானம்
3. மந்தாரம்
4. பாரிஜாதம்
5. கற்பகம்

... எனப்படும்.

விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொல்லாமல் தன்னுடைய
அருளுக்குப் பாத்திரமாக தனது வாகனமாகக்
கொண்டது அவரது
தனிப் பெருங் கருணையே.

இங்கு ஒரு யோகக் கருத்தும் உண்டு.

விநாயகர் மூலாதாரக் கடவுள்.

பிரணாயாமத்தால் குண்டலிணியை மூலாதாரத்தில் இருந்து
எழுப்பும்போது, அது இரவில் மூஞ்சுறு 'குறு குறு' என ஒலிக்கும்
சத்தத்தை உண்டாக்கும்.

இது ஞானிகளின் அநுபவமாகும்.😊😊😊
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 250*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 32

*பொருளுரை*

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥

ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா

த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।

ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:

கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
ravi said…
ருத்ராம்சமான ஹனுமார், அவர் வால்ல நெருப்பு வெச்சு ஊருக்குள்ளே கட்டி இழுத்துண்டு போறா, அடிக்கறா!

‘கொல்லு இவனை’அப்படீன்னு கத்தறா.

பெண்களும் கொழந்தைகளும் சேர்ந்துண்டு கை கொட்டி சிரிச்சு கேலி பண்றா.

ஹனுமார் சொல்றார், ‘ *பீடாம் குர்வந்தி ரக்ஷாம்ஸி நமேஸ்தி மனஸ ச்ரமஹ’ –*

இவா என்னை ஹிம்சை பண்றா தான்.

ஆனா என் மனசுல சிரமமே இல்லை! ஏன்னா இது ராம கார்யம்னா! எனக்கு ஒண்ணும் இல்லை. என் மனசுல சிரமம் இல்லை.

இப்போ, பகல்ல ஊருக்குள்ளே கூட்டிண்டு போறா.

நான் இந்த இலங்கையோட அமைப்பைப் பார்த்துக்கறேன் அப்படீங்கறார்.🐵🐵🐵
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 250* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
*ஜ்யேஷ்ட்ட* : ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
*68. ஜ்யேஷ்டாய நமஹ (Jyeshtaaya namaha)*
ravi said…
(1 unit) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது சாதாரண மனிதரால் பாட இயலாத இசையையும் பாடவல்ல மனித கந்தர்வர்களின் ஆனந்தம்.

(100 units) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது தேவலோகத்துப் பாடகர்களான தேவ கந்தர்வர்களின் ஆனந்தம்.

(10000 units) அதை விட நூறு மடங்கு உயர்ந்தது பித்ருலோகத்தில் இருக்கும் நம் முன்னோர்களான பித்ருக்களின் ஆனந்தம்.
(1000000 units)

அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது சொர்க்கத்திலுள்ள தேவர்களின் ஆனந்தம்.
(100000000 units)

அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆனந்தம்.
(10000000000 units)

அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது இந்திரனின் குருவான பிரகஸ்பதியின் ஆனந்தம்.
(1000000000000 units)

அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது பிரம்மாவின் ஆனந்தம்.
(100000000000000 units)

அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது திருமாலின் ஆனந்தம்.

எனவே சாதாரண மனிதனின் ஓர் அலகு ஆனந்தத்தை விட 10000000000000000 (1016) மடங்கு உயர்ந்ததாகத் திருமாலின்
ஆனந்தம் விளங்குகிறது என்றது வேதம்.

ஆனால் இப்படிச் சொன்ன வேதமே ஒரு நொடி யோசித்து, ‘நான் கூறிய அளவு மிகவும் குறைவானது. என்கிறது 🤝🤝🤝
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 251* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*83*
*வது திருநாமம்*
ravi said…
*83* ब्रह्मोपेन्द्रमहेन्द्रादिदेवसंस्तुतवैभवा - *ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துதவைபவா ---*💐💐💐
ravi said…
பண்டாசுரனை வதம் செய்த ஸ்ரீ லலிதாம்பிகையே ப்ரம்ம தேவன் விஷ்ணு இந்திராதி தேவர்கள் போற்றுகிறார்கள். மஹா சக்தி என்று வணங்குகிறார்கள்.

இன்னும் கடலளவு இருக்கிறது

அம்பாளின் நாமங்கள். மொத்தம் ஆயிரம். இல்லை இல்லை ஆயகியாதி உடையாள்... நாம் எடுத்துக்கொண்டது வெறும் 1000 நாமங்கள் மட்டுமே

அவற்றில் இதுவரை 83 தான் அறிந்திருக்கிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாக கற்போம் அவள் நாமங்களை .. 🤝
ravi said…
*இன்று ஒரு சக்தி ஆலயம்:*

*ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம் நங்கநல்லூர்*

பரமேஸ்வரன் தவத்தில் திளைப்பவர்.

அவர் தவம் களைய அவர் மேல் மலரம்புகளை வீசுகிறான் மன்மதன்.

தவம் கலைந்ததால் சிவன் கோபம் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்து எதிரே பார்க்கும்போது மன்மதன் தெரிந்து சாம்பலாக எரிந்து போனான்.

கிடந்த சாம்பல் குவியல்களை பொம்மையாய் செய்து விளையாடினார் கணேசன்.

பிள்ளையாருக்கு விளையாட தோழனாய் இருக்கட்டுமே என நினைத்த பார்வதி பொம்மைக்கு உயிர் ஊட்ட நினைத்து சர்வேஸ்வரரை பார்க்க

சிவனாரின் கண்பட்டு பொம்மை உயிர்பெற்றது.

சாம்பலில் இருந்து வந்ததால் பண்டாசுரன் என பெயரிட்டார் ஈசன்.

இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் ஈசனை நினைத்து கடும் தவம் செய்தால் வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என விநாயகர் மூலம் அறிந்த பண்டாசுரன் பாதாள லோக ராஜாவாகிறான். 💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 251* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌65
ravi said…
*65 தேவியின் தாம்பூல மஹிமை*

*வெற்றி, வாக்விலாஸம்*

ரணே ஜித்வா தைத்யா னபஹ்ருத ஶிரஸ்த்ரை: கவஶிபி:

நிவ்ருத்தைஶ் சண்டாம்ஶ த்ரிபுரஹர நிர்மால்ய விமுகை:

விஶாகேந்த்ரோபேந்த்ரை: ஶஶிவிஶத கர்ப்பூரஶகலா

விலீயந்தே மாதஸ்தவ வதன தாம்பூல கபலா 65
ravi said…
தாயே!, அசுரர்களுடன் போரில் ஈடுபட்டு, அவர்களை வென்று திரும்பிய விசாகன் என்று சொல்லப்படும் தேவஸேனாபதியான ஸுப்ரமண்யரும்,

இந்த்ர, உப-இந்திரரும்

தாங்கள் போரில் ஜெயம் அடைந்ததை உனக்குத் தெரிவிப்பதற்காக போர்களத்திலிருந்து நேராக உன்னிடம் வந்து

தங்கள் கவசத்துடனும், தலைப்பாகையை கழற்றியவாறும் உன்னை நமஸ்கரிக்கின்றனர்.

இவர்கள் சண்டிகேஸ்வரனுடைய பாகமாகிய பரமசிவனது நிர்மால்யத்தில் நோக்கம் இல்லாதவர்களானாலும்,

சந்திரன் போன்ற நிறமுடைய பச்சைக் கர்பூரத்துடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்களை பிரஸாதமாகக் கொள்கின்றனர்.🦚🤝
ravi said…
சிவனுடைய நிர்மால்யம் (சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புஷ்பம், தாம்பூலம், மற்றும் உணவுப் பதார்த்தங்களில் அவர் எடுத்துக் கொண்டது போக மீதி) அவரது ப்ரமத கணங்களில் முதலாவதான சண்டன் என்பவனுக்குச்
சொந்தமானது.

இதனால்தான் சிவன் சொத்துக் குல நாசம் என்று கூறுகிறார்கள்.

சிவ பூஜையில் சண்டேஸ்வரருக்கு சிறப்பிடம் உண்டு.

சண்டேசரது அனுமதி பெற்றே சிவ பிரஸாதம் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறான சணடேசருக்குச்
சொந்தமானதில் ஸுப்ரமண்யர், விஷ்ணு மற்றும் இந்திரன் விருப்பம் காண்பிக்கவில்லையாம்.

அதாவது விலை மதிக்க முடியாத எல்லோரும் பல கோடி தவங்கள் செய்தும் எளிதில் கிடைக்காத சிவ பிரசாதத்தைக் காட்டிலும் அம்பாளின் தாம்பூல பிரசாதம் உயர்வானது என்பதை தன் கற்பனை வலத்தில் சொல்கிறார் ஆச்சரியார் ...

உபேந்திரர் என்பது மஹாவிஷ்ணுவின் பெயர்.

தேவர்களின் ஸேனாபதியாக விசாகன் இருப்பதால் அவரது பெயரை முதலில் சொல்லியிருக்கிறார்.
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 28*👌
ravi said…
ஆறாவது ஸ்லோகம்

नाहं वन्दे तव चरणयोर्द्वन्द्वमद्वन्द्वहेतोः कुम्भीपाकं गुरुमपि हरे नारकं नापनेतुम् ।

रम्यारामामृदुतनुलता नन्दने नापि रन्तुं भावे भावे हृदयभवने भावयेयं भवन्तम् ॥ ६ ॥

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வமத்³வந்த்³வஹேதோ:

கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபனேதும் ।

ரம்யாராமாம்ருʼது³தனுலதா நந்த³னே நாபி ரந்தும்

பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³யப⁴வனே பா⁴வயேயம் ப⁴வந்தம் ॥ 6 ॥
ravi said…
அதனாலே ‘ *ஹ்ருதய பவனே* ’ – என் மனக் கோவிலில் உன்னை எழுந்தருளப் பண்ணி

*பாவயேயம் பவந்தம்* – உன்னை தியானம் பண்ணிண்டே இருக்கணும்.

இதை மட்டும் எனக்குக் கொடு. இந்த சங்கல்பம் தான் நான் பண்றேன்.

எனக்கு வேற எதுவுமே வேண்டாம்னு இன்னொரு தடவை சொல்றார்..👏
ravi said…
இந்த மாதிரி பக்தி பண்ணுகிறவர்களை உலகம் புரிஞ்சுக்காது.

உலகத்துல so called பெரிய மனுஷா, பணம், பதவி, வசதி இருக்கிறவர்களைத் தான் இந்த உலகத்துல பாராட்டப் போறா.

ஏதோ ஏழையா பரம சாதுவா பகவத் பஜனம் பண்றவாளை உலகம் புரிஞ்சுக்காது.

ஏன்னா, அவாளும் உலகத்தவர்களை திருப்தி படுத்தறதுக்கான கார்யம் எதுவுமே அவா பண்ண மாட்டா.

அவா பகவானுடைய பக்தியிலேயே மூழ்கி இருப்பா.

குலசேகரக் கவி சொல்றார்👏👏👏
ravi said…
*மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்*

சிலர் "நாம் இறைவனை நம்புகிறோம். ஆனால் எதிர்வீட்டுக்காரன் எவ்வளவு செல்வந்தனாக இருக்கிறான். நம்மை ஏன் கண்ணன் இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கிறான்." என்று புலம்புவர். இப்படி புலம்புவதற்கு காரணம் என்னவென்றால் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவது.
சிறு குழந்தையாக இருக்கும்போது நாம் மிதிவண்டியில் பயணிக்கும் போது நம்மை யாராவது முந்தினால் நாம் போட்டி போட்டு கொண்டு அவனை முந்துவோம். "நாம் அவனை முந்தி விட்டோம்" என்று ஆனந்தம் கொள்வோம். ஆனால் நாம் யாரை முந்தினோமோ அவனுக்கு நாம் அவனை போட்டி போட்டு கொண்டு முந்தினோம் என்று கூட தெரியாது.
அதன்பின்தான் நாம் "நாம் இவனை பின்பற்றி நம்முடைய பாதையை விட்டு விட்டோம்" என்று நினைப்போம். இதன் தாத்பரியம் என்னவென்றால் நாம் நம்முடைய பாதையில் முன்னேறி கொண்டே இருக்க வேண்டுமே தவிர மற்றவரிடம் நம்மை ஒப்பிட்டு நம் பாதையை மறந்து விட கூடாது.
நமக்கு ஒப்பில்லாத கிருஷ்ண பக்தி கொடுத்து இருக்கிறான். நம் பாதை கண்ணனை நோக்கி. அனைத்து ஆன்மாவின் உயர்ந்த நோக்கமும் அதுவே. இதை விட வேற கருணை வேண்டுமா? யார் செல்வந்தனாக இருந்தால் என்ன? எப்படி வாழ்ந்தால் என்ன?. எதற்காக ஒப்பிட வேண்டும் ?.
எனவே மற்றவர்களின் பாதையின் மீது மோகம் கொண்டு உங்கள் தெய்வீக பாதையின் வழியை மறந்து விடாதீர்கள். உங்கள் வழியில் முன்னேறுங்கள்.

#mahavishnuinfo
ravi said…
பல்லக்கு தூக்கிய எமன் ........................ !!

வீதியில் ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார்.

அவனும் அப்படியே செய்தான்.

காலகிரமத்தில் இறந்து போனான்.

அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர்.

அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான்.

திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார்.

'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன் அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா என்றான்.

இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள் என்றார்.

யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.
அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

அவரும் ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர்.

இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே...

இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா ?? என்று சொல்லி .....

பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான் !!

ஜெய் ஸ்ரீராம்!

மும்மைசால் உலகுக்கெல்லாம்

மூலமந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப் பெரும் பதத்தை தானே

இம்மையே, எழுமை நோய்க்கும்

மருந்தினை இராமன் எண்ணும்

செம்மைசேர் நாமம் தன்னை

கண்களில் தெரியக் கண்டான்.

- வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்.

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும்.

#mahavishnuinfo
ravi said…
*ராமரும் பரசுராமரும்* 👏👏👏

*பரசுராமர் சொன்ன கீதை* 🙏🙏🙏
ravi said…
ஒருவர் சிவனை குருவாக கொண்டவர் இன்னொருவரோ சிவனை தன்னுள் கொண்டவர் ...

ஒருவர் பலராமரைப் போல் பலசாலி இன்னொருவர் களம் கண்ட ஆச்சாரி ...

கோதண்டம் துள்ளி விளையாடியது அங்கே ...

பிரம்மாஸ்திரம் புரண்டு அடங்கியது இங்கே ...

களம் கண்டவன் யுகம் பல கண்டவனை சந்திக்கும் வேளை ...

ஓர் உயிர் இரு உடல்களை நிந்திக்கும் காலை ....

கர்வம் கொண்டாயோ ராமா ...

சிவ தனுசு முறித்தே சிவனை வென்றதாய் நினைத்தாயோ ...

இல்லை இல்லை நினைப்பேனோ அப்படி ...

நிகழ வேண்டும் இப்படி என்றே விதி இருக்க உருப்படியாய் செய்தேன் ஒரு வேளை ...

உளராதே மேலும் என் கோபம் அடங்காதே இனியும் ...

இதோ சிவனின் மறு பாகம் விஷ்ணுவின் வில் ...

உடை இதை ... அடை உன் கர்வத்தை .. சடை கொண்டோன் மீதே ஆணை ...

சிரித்தான் ராமன் .. புது தேசம் ஒன்று உன்னால் பிறக்கட்டும் ...

இதோ உடைக்கிறேன் என்றே நாண் ஏற்ற நாணியது விஷ்ணுவின் வில் ...

ராமா பண்பில் சிறந்தவன் நீ

பாற்க்கடல் நாதன் நீ

பாடம் சொன்னாய் .. உனக்கும் கீதை ஒன்று சொல்கிறேன்

கண்ணனாய் வருவாய் ...

களம் மீண்டும் காண்பாய் ...

வில் ஒன்று எடுக்காதே ...

சிவ தனுசு ஒன்று போதும் ...

தர்மம் வாழ இன்னொரு வில் உடைய வேண்டாம் ...

சிரித்தான் ராமன் .. எதுவும் அழிவதில்லை உடைவதில்லை ...

என் கோதண்டம் காஞ்சி தனில் தண்டம் ஆகும் ...

இதோ உடைத்த சிவ தனுசு அங்கே சிவமாய் திகழும் ...

பரமாத்மா அவன் .. ஆத்மா என்றும் அழிவதில்லை ..

பரசுராமர் மகிழ்ந்தே மறைந்தார் கண்ணனை காண 🦚🦚🦚
ravi said…
🌹🌺 *நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஸ்ரீகிருஷ்ணன் கண்காணிப்பில் இருக்கிறது - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹இளைஞன் மாரி ஒரு வெள்ளிக்கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான்.

🌺அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்கவும் ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கு அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான்.

🌺அதையே பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது. அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன.

🌺”அய்யா... இந்த வெள்ளியை எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும்?” இளைஞன் மாரி கேட்டான்.

🌺”இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும். வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும்” என்று அதிலிருந்து பார்வையை எடுக்காமல் கொல்லன் சொன்னான்.

🌺’ஓ இந்த வேலையில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதா’ என்று எண்ணிய அந்த இளைஞனுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்தது. “அது சுத்தமாகி விட்டது, சூடு செய்வதை நிறுத்த வேண்டும்
என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?”

🌺”எப்போது என் முகம் தெளிவாக வெள்ளியில் பிரதிபலிக்கிறதோ அப்போது வெள்ளி முழுமையாகத் தூய்மையாகி விட்டது என்று தெரிந்து விடும். உடனடியாக நிறுத்தி விடுவேன்” என்றான் கொல்லன்.

🌺ஸ்ரீ கிருஷ்ணனாகிய கொல்லனிடம் நம் வாழ்க்கையை ஒப்படைத்து மிக அழகான நிலைமைக்கு மாற்றச் சொல்லி நாம் இடைவிடா பிரார்த்தனை செய்ய வேண்டும்.

🌺நம் வாழ்வின் பொருளே அது தான். இந்த உலகில் நாம் ஜென்மம் எடுப்பதே ஒரு உயர்வான நிலைக்கு மாறத் தான். வந்த படியே உலகில் ருந்து விடை பெற்றால் அப்படிப்பட்ட வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?

🌺இதையே அல்லவா திருவள்ளுவரும் ஒரு குறளில் அழகாகச் சொல்கிறார்.

🌹🌺*சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்*
*சுடச்சுட நோற்கிற் பவர்க்கு*🌹🌺

(நெருப்பிலே இட்டுச் சுடச் சுடத் தங்கம் ஒளி விடுவது போல துன்பம் வருத்த வருத்த தவம் செய்பவரின் மெய்யறிவு மிகும்)

🌺எனவே வாழ்க்கையின் வெப்பம், கஷ்டம் தாளாமல் வருத்தப்படும் போதெல்லாம் இந்த உவமையை நீங்கள் நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

🌺நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஸ்ரீ கிருஷ்ணன் கண்காணிப்பில் இருக்கிறது. இந்த வெப்பம் நம் வாழ்க்கையை அழிப்பதற்காக அல்ல, ஒரு அழகான ஆபரணமாக்குவதற்காகத் தான்.

🌺இது புரியும் போது வெப்பத்தில்/கஷ்டத்தில் சுருண்டு விட மாட்டோம். நாம் ஆபரணமாகிக் கொண்டிருக்கிறோம் என்று புரிதலுடனும், நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக் கொள்வோம்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌺🌹Srikrishnan is watching every minute of our lives - a simple story that explains that🌹🌺
--------------------------------------------------- ------
🌺🌹 The young Mari had come to a silversmith and told the butcher to make it into an ornament with beautiful workmanship.

🌺He was curious to see how the blacksmith was doing it so from the beginning he just sat there watching the blacksmith work with great interest. The blacksmith was melting the silver with great care.

🌺Marri who was looking at the same seemed to need a lot of patience and focus for this job. Those two had a lot to do with the killer.


🌺"Hey ... how long do you have to heat this Friday?" Young Mari asked.


🌺 ”It should melt until it starts to melt and its dirt is removed. Stop heating immediately after the silver is clean. Otherwise the silver will burn in this fire, ”said the blacksmith without taking his eyes off it.

🌺‘Is there such a problem in this job?’ The young man immediately had a suspicion. "It simply came to our notice then How do you know that? ”
🌺”When my face is clearly reflected in the silver then I know that the silver is completely clean. I will stop immediately, ”said the butcher.

🌺 We must constantly pray to Lord Krishna to hand over our life to the killer and transform it into the most beautiful state.

🌺That is the meaning of life. In this world we have to take birth to change to a higher level. What is the meaning of such a life if it is answered from the world as it came?

🌺This is not what Thiruvalluvar says beautifully in a verse.

🌺🌹 * Suffering that glows like fiery gold *
* For the Power of Baking Snoring *

🌺 (Wisdom of the penitent is as great as the light of gold that burns in the fire)

🌺So remember this parable well whenever you feel the heat of life, the hardships and the unrelenting grief.

🌺Every minute of our life is under the watchful eye of Sri Krishna. This heat is not meant to ruin our lives, but to make us a beautiful ornament.

🌺 We will not curl up in heat / difficulty when we understand this. We accept it with the understanding and confidence that we are becoming an ornament.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
Moorthi said…
அழகான பதிவு... அருமை. நன்றிகள் பல 👌🙏🙏🙏🙏
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

கேஶப்ரபாபடல நீல விதானஜாலே
காமாக்ஷி குண்டலமணிச்சவி தீபஶோபே |
ஶங்கே கடாக்ஷருசிரங்கதலே க்ருபாக்யா
ஶைலூஷிகா நடதி ஶங்கரவல்லபே தே ||23||

சங்கரபத்நியான ஹே காமாக்ஷி ! உனது கிருபையாகிற நடிகையானவள் உனது கேசத்தின் காந்திப்படலமாகிற கருங்கூரையைக் கொண்டதும், உனது காது குண்டலமணியின் காந்தியாகிற தீபத்தினால் விளங்குவதுமான உனது கடாக்ஷமாகிற நாடகமேடையில் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறாள்.....

அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*
பகவான் கீதையிலே சொல்லியிருக்கின்றார்;
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதெள I
ஞாத்வா சாஸ்த்ரவிதானோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி II
அதாவது, “எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? நாம் எதைச் செய்தால் நமக்கு நல்லதாகும்? “ எதைச் செய்தால் நமக்குக் கெட்டதாகும்?” என்பதைத் தீர்மானம் செய்ய நம்மால் முடியாது. ஒவ்வொருவனுடைய புத்தியும் ஒரே வழியில் போகும் என்று சொல்ல முடியாது. ஆகவே, சாஸ்திரம்தான் பிரமாணம், இந்த தர்ம அதர்மங்களைப் பற்றி தீர்மானமாகச் சொல்வதற்குச் சாஸ்திரம் ஒன்றிற்குத்தான் உரிமை உண்டு. சாஸ்திரம் எதைச் சொல்கின்றதோ அதைத்தான் நாம் அனுசரிக்கவேண்டும். சாஸ்திரத்தின் மூலமாகத் தான் எது பாபம், எது புண்ணியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ravi said…
அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்தவாரியார் சொற்பொழிவில் கேட்டு மகிழ்ந்தது.

படித்து மகிழுங்கள்

எதையுமே நேரடியாகச் சொல்லிவிட்டால் அதில் ஒரு சுவை இருக்காது.

அதையே ஒரு புதிராகச் சொல்லும்போது சற்றே சிந்திக்கவும், சிந்தித்து விடையைக் கண்டுபிடிக்கும் போது மகிழ்ச்சியோடு அதை நினைவில் கொள்ளவும் முடிகிறது.

இராமலிங்க அடிகள், தனியொரு மனிதராய் தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் செய்த தொண்டு அளப்பரியது.

அவர் அறுகம்புல் பற்றி எழுதியுள்ள ஒரு வெண்பா படித்து, சிந்திக்க இன்பம் தருகிறது.

"பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டி - தகவின்
அருச்சித்தால் முன்னாம்; அதுகடையாம்
கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து''

பகுதி தகுதி விகுதி என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அருச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும்.

அதாவது, சிற்சபையானை எதைக்கொண்டு அருச்சித்தால், எது உண்டாகி, எது கிடைக்கும்? என்பதுதான் இப்பாடல் கூறவரும் கருத்து.

பகுதி, தகுதி, விகுதி என்பதில்,
இகலில் இடையை இரட்டி: இடையில் உள்ள எழுத்து "கு' (பகுதி, தகுதி, விகுதி).

இதைக் கூட்டினால் மூன்று "கு' வரும். இதை இரட்டித்தால் ஆறு "கு' - அறுகு வரும். (அறுகு-அறுகம்புல்).
அருச்சித்தால் முன் ஆம்:

அறுகம்புல் கொண்டு அருச்சித்தால் முன் உள்ள எழுத்துகளான (ப, த, வி) - பதவி என்பது வரும். (பதவி - சிவபதம்).
அது கடை ஆம்:

பதவி ஆகிய சிவபதம் என்னும் நிலை வந்தால், கடைசி எழுத்தினைக் கூட்ட (தி,தி,தி) மூன்று "தி' வரும். அதாவது முத்தி (மோட்சம்) கிடைக்கும்.

இவ்வாறு வள்ளலார் சொற்களை நயம்படக் கையாண்டுள்ளார்.
ravi said…
மு’ என்றால் ” முகுந்தன்

‘ரு’ என்றால் ” ருத்ரன் ”

‘கா’ என்றால் ” பிரம்மா ”

இதனால் “முருகா ” என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.

இது மட்டுமல்ல.

” முகுந்தன் ” தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

” ருத்ரன் ” எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.

” பிரம்மா ” தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் ” முருகா ” என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

முருகா!முருகா!முருகா!முருகா!
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️


நம்ம நாட்டோட தர்ம சாஸ்திரங்களோட சக்தியல்லவா அவரைக் காப்பாத்தியிருக்கு?

டாக்டர் எஸ்.ஜெயபாரதி

காஞ்சி பரமாச்சாரியாரின் அடியார்களில் ஒருவர் ஒருமுறை கல்கத்தாவைச் சேர்ந்த சேட்டு ஒருவரை அவரிடம் கூட்டிவந்தார்.

அந்த சேட் மிகவும் வசதிபடைத்தவர். பக்தியும் பணிவும் கொண்டவர்.

அவருக்குக் கடுமையான நோயொன்று சிரமம் கொடுத்தது. இரைப்பைக்கு மேலேயுள்ள உணவுக்குழாயின் இயக்கத்தில் பாதிப்பு. அதன் விளைவாக உணவை வயிற்றில் துவாரம் போட்டு அதன்மூலம் உணவு செலுத்தப்பட்டு வந்தது.
ravi said…
இருப்பினும் அதையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தார். எந்த விதமான வைத்தியமோ, கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனையோ, மாந்திரீகமோ எதுவுமே அவருக்குப் பலிக்கவில்லை.

அவர் பரமாச்சாரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே அவரைப் பார்க்க அழைத்துச்செல்லுமாறு அவருடைய நண்பராகிய அடியாரை வற்புறுத்தினார்.

பரமாச்சாரியாரிடம் சொன்னபோது அவர் முதலில் பார்க்க மறுத்துவிட்டார்.

அதனால் சொல்லாமல் கொள்ளாமல் அந்த அடியார் அந்த சேட்டை அழைத்துக்கொண்டுபோய் பரமாச்சாரியாரின் முன்னிலையில் நின்றார்.

அந்த அடியார் என்ன சொல்லியும் பரமாச்சாரியார் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. இரவு வெகுநேரமாகிய பின்னர் அதைப் பற்றி பேசினார்.
ravi said…
ஆனால், இதற்கெல்லாம் ஒன்றும் செய்யமுடியாது; பக்தியுடன் இருந்து நல்ல காரியங்களை நிறையச்செய்யுமாறும் சொல்லிவிட்டார்

அடியார் விடவில்லை. எப்படியும் இதற்கெல்லாம் விமோசனம், பரிகாரம் இருந்துதான் ஆகவேண்டும் என்று பணிவுடன் வாதிட்டு பரமாச்சாரியரை மிகவும் உரிமையுடனும் நம்பிக்கையுடனும் வற்புறுத்தினார்.

சிறுது நேரம் மௌனமாக இருந்த பரமாச்சாரியார், அந்த சேட்டிடம் தாம் சொல்வதை அப்படியே செய்யுமாறு வாக்குறுதி கேட்டார்.

சேட் ஒத்துக்கொண்டார்.

இந்து சமயத்திலுள்ள பதினெட்டுப் புராணங்களையும் பதினெட்டுத் தனித்தனிப் புத்தகங்களாக சமஸ்கிருதத்தில் அச்சிட்டு, தகுதியுடையவர்களாகிய வேத நூல் படிப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று பரமாச்சாரியார் ஆணையிட்டார்.
ravi said…
பரமாச்சாரியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சேட் அந்த நற்காரியத்தைத் தாம் செய்வதாக ஒத்துக்கொண்டார். பரமாச்சாரியர் அந்த சேட்டை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கச்செய்தார்.

கல்கத்தாவுக்குச் சென்ற சேட், தம்முடைய ஐந்து மாடிக்கட்டடத்தின் மேல்மாடி முழுவதையும் புராண வெளியீட்டிற்காக ஒதுக்கினார். பல சாஸ்திர விற்பன்னர்களை கூட்டுவித்தார். அவர்களின்மூலம் தரமான காகிதத்தில் சுத்தமாக அச்சிட்டுப் பெரிய பெரிய புத்தகங்களாக வெளியிட்டுக் கொடுத்தார்.

'பக்தியே விலை' என்றும் குறிப்பிடச் செய்தார், சேட்.
பதினேழு புராணங்கள் அச்சிடப்பட்டுவிட்டன.

ஆனால் சேட் வழக்கம்போல் குழாய்மூலமே உணவு செலுத்தப்பட்டு வந்தார்.

ஆனாலும்கூட சேட் அதைப் பற்றி கவலையும்படவில்லை. அவர்பாட்டுக்கு புராண வெளியீட்டை நம்பிக்கையுடன் ஒரு கர்மயோகமாகச் செய்தார்.

கடைசியாக ஸ்காந்த புராண வெளியீட்டு வேலை தொடங்கியது.

அவ்வளவுதான். திடீரென்று ஒருநாள் சேட் சாப்பாட்டை வாயால் மென்று விழுங்கி சாப்பிடத் துவங்கினார்.
நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்.

அதுவரை தீராமல் இருந்த நோய் பரமாச்சாரியார் பேரருளால் நீங்கியது. பரமாச்சாரியாரைப் போய்ப் பார்த்து விபரத்தைச் சொன்னார்கள்.

பரமாச்சாரியரின் ஆற்றலை வியந்து அவர் தந்த வரத்தால் சேட்டின் நோய் நீங்கிப் பிழைத்துக் கொண்டதாக அந்த அடியார் சொல்லி, 'பரமாச்சாரியார்தான் கடவுள'் என்றும் சொன்னார்.

ஆனால் பரமாச்சாரியாரோ ரொம்பவும் 'கூலாக'ச் சொல்லியிருக்கிறார்.

"நம்ம நாட்டோட தர்ம சாஸ்திரங்களோட சக்தியல்லவா அவரைக் காப்பாத்தியிருக்கு?"

Jaya Jaya shankara Hara Hara shankara 🌹🌹🙏🙏

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
“ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே, நமஸ்தே”: ஸுப்ரஹ்மண்யனான உனக்கு நமஸ்காரம். அனந்த கோடி நமஸ்காரம்.
ஸுப்ரஹ்மண்யன் என்றால்? நல்ல ப்ரஹ்மண்யன். தேர்ந்த ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால்?
‘ப்ரஹ்மம்’ என்றால் ஸத்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது. வேதத்துக்கு ‘ப்ரஹ்ம’ என்று ஒரு பெயர். அதனால்தான் வேத மந்திரத்தில் ஒரு குழந்தைக்கு தீக்ஷை கொடுப்பதான உபநயனத்தை ‘ப்ரஹ்மோபதேசம்’ என்பது. வேதம் கற்றுக் கொள்வதாலேயே அந்தக் குழந்தை ‘ப்ரஹ்மசாரி’ ஆகிறான். ‘ப்ரஹ்ம யஜ்ஞம்’ என்கிற மாதிரியான பல இடங்களிலும் ‘ப்ரஹ்ம’ என்றால் வேதம் என்றே அர்த்தம். வேதத்தை அநுஸரிப்பது, அநுஷ்டிப்பது – அதாவது வைதிகம் என்பதுதான் ப்ரஹ்மண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்களே ப்ராஹ்மணர்கள். வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்.
வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாஸனை. ஸுப்ரஹ்மண்யர்தானே அக்னி ஸ்வரூபமாயிருப்பவர்? பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்துதானே அவராக ஆனது? அதனால் அவர் வேத தேவராக இருப்பவர். வேதம் படிப்பதும் சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள ப்ராஹமணர்களின் தெய்வமாயிருப்பவர் ஸுப்ரஹ்மண்யர்.
ஆசார்யாளும் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தில், “மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம்” என்று சொல்லியிருக்கிறார். ‘மஹீதேவர்’ என்றால் ‘ப்ராஹமணர்’. ‘மஹீதேவ தேவர்’ என்றால் ப்ராஹ்மணர்களின் தெய்வம் என்று அர்த்தம்.
தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான ‘திருமுருகாற்றுப்படை’யிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. ஷண்முகனின் ஆறு முகங்களில் ஒவ்வொன்றும் ஒருவிதமான அநுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக்கொண்டு போகும்போது
                ஒரு முகம்
      மந்திர விதியின் மரபுளி வழாஅது
      அந்தணர் வேள்வியோர்க்கும்மே
என்று சொல்லியிருக்கிறார். திருவேரகம் என்கிற ஸ்வாமிமலையை வர்ணிக்கிற இடத்திலும் அங்கே நல்ல ப்ரஹ்மசர்ய அநுஷ்டானமுள்ள ப்ராஹமணர்கள் முத்தீ வளர்த்து யஜ்ஞாதிகள் செய்து ஸுப்ரஹ்மண்ய மந்திர ஜபமும் பூஜையும் செய்வதையே சொல்லியிருக்கிறார்.
யஜ்ஞ கர்மத்தில் பங்கு கொண்டு செய்கிற ப்ராஹ்மணர்களுக்கு ரித்விக் என்று பெயர். பதினாறு வகையான ரித்விக்குகளில் ஒருவருக்குப் பேர் ‘ஸுப்ரஹ்மண்ய’ என்பது.
‘ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி’ என்பதே குமாரஸ்வாமிக்கு ப்ரஸித்த நாமாவாக இருப்பதிலிருந்தே அவர் வேதத்துக்கும் வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது.
(நாளை வைகாசி விசாகம்)
ravi said…
பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்:

”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா.

ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரிய வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா.

சின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது.

அந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா?”னு கேட்டார் பெரியவா.

ஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி! அது எங்க பாக்கியம்! பெரியவா இங்கேதான் தங்கணும். என்னென்ன ஏற்பாடு பண்ணணுமோ, உத்தரவிடுங்கோ! அதையெல்லாம் நாங்க பண்ணித் தரோம்”னு பவ்யமா சொன்னார்.

அப்புறம்… நாலு லாரி நிறைய கீத்து, சவுக்குக் கட்டையெல்லாம் வந்து இறங்கித்து. 300 அடிக்குப் பந்தல் போட்டு, பெரியவா தங்கறதுக்கும், தரிசனம் பண்றதுக்கும் ஏற்பாடு பண்ணினார் அந்த அதிகாரி. பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்கு நிறையப் பேர் வருவாங்கறதால, சுமார் ஆயிரம் பேர் உக்கார்றதுக்கு வசதியா ஏற்பாடெல்லாம் பண்ணி முடிச்சார். எல்லா ஏற்பாடுகளும் பிர மாதமா நடந்து முடிஞ்சாலும், அன்னிக்கி ராத்திரி முழுக்கப் பெரியவா தூங் கவே இல்லை” என்று சஸ்பென்ஸோடு சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மி நாராயணன்.

பெரியவர் ஏன் தூங்கவில்லை? அந்த ஊரும், சிவாலயமும் பெரியவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த ஆறு பல வருடங்களாக வறண்டே கிடந்தது. பருவமழையும் பொய்த்துப்போனது; ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். இதில் ரொம்பவே கவலைப்பட்டாராம் பெரியவர்.

லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்தார்… ”பெரியவா யாரோடயும் பேசாம ஆத்துப் பாதையையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தார். சாயந்திரம் திடீர்னு எழுந்தவர், ஆத்தங்கரை நோக்கிப் போனார். ஆத்து மணல்ல இறங்கி நின்னார். கொஞ்சம் யோசிச்சவர், அப்படியே நடக்க ஆரம்பிச்சார். கிட் டத்தட்ட ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அந்த மணல்லயே நடந்துபோயிட்டுத் திரும்பினார். அப்புறம் எங்களைக் கூப்பிட்டு, ‘சந்தியா ஜபம் பண்ணப் போறேன். யாராவது என்னைப் பார்க்க வந்தா, காலைல வரச் சொல்லு’னு சொல்லிட்டு, ஜபத்துல மூழ்கினார் பெரியவா.

ravi said…
நல்லா இருட்டிடுச்சு. அப்பல்லாம் ஹரிக்கேன் விளக்குதான். ஒண்ணோ ரெண்டோ பெட்ரோமாக்ஸ் லைட் இருக்கும். எல்லாத்தையும் ஏத்தி வைச்சோம்.

ஆச்சு… ராத்திரி பத்து மணி இருக்கும். காத்து குளுமையா வீசின மாதிரி இருந்துது. பொட்… பொட்டுனு உடம்புல ரெண்டொரு மழைத்துளி பட்டுது. லேசா தூத்தல் போட்டுது. அப்புறம், நிதானமா பெய்ய ஆரம்பிச்ச மழை, கொஞ்ச நேரத்துலேயே வேகமெடுத்து ஹோன்னு இரைச்சலோட வலுவா பெஞ்சுது. அங்கே இருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவுல பெரியவாளை உக்காரச் சொல்லிட்டு, பக்கத்திலேயே நான் ஒரு தாழங்குடையைப் பிடிச் சுண்டு நின்னேன்.

கிட்டத்தட்ட நாலு மணி நேரம்… வெளுத்து வாங்கிச்சு மழை. நடுராத்திரி ஒண்ணரை மணிக்குதான் ஓய்ஞ்சுது. காஞ்சு மணலா கிடந்த ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சுது.

மறுநாள்… விடிஞ்சும் விடியாததுமா ஊர் ஜனங்க எல்லாம் அதிசயப்பட்டு, ‘பெரியவா மழையை வரவழைச்சுட்டார்’னு சொல்லி, கூட்டமா திரண்டு வந்து, அவரைத் தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. பெரியவாளும் மனநிறைவோடு வியாச பூஜையைப் பண்ணி முடிச்சார்.

பெரியவா மகா தபஸ்வி! வியாச பூஜைங் கறது நமக்குச் சொன்ன காரணம். ஆனா, அந்த ஊருக்கு என்ன தேவையோ, அதை நிறைவேத்திக் கொடுத்தாரே, அதை இப்ப நினைச்சாலும் உடம்பே சிலிர்க்கிறது” என்று நெகிழ்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

”இப்படித்தான், மகாராஷ்டிரால பண்டர் பூர்னு சொல்ற பண்டரிபுரத்துக்குப் பெரியவா போனப்பவும் நடந்துது” என்று அடுத்த ஆச் சரியத்தையும் விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்.

பண்டரிபுரத்தில் ஓடும் நதியின் பெயர் பீமா. அந்த நதியில் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தண்ணீரே இல்லாமல், சுத்தமாக வறண்டு கிடந்ததாம்!

”ஆத்துல அங்கங்கே கிணறுகள் மாதிரி தோண்டி, சுமார் நூறு மீட்டர் ஆழத்துலேருந்து தண்ணி எடுப்பாங்க ஜனங்க. அதுவும், குடத்துல அவ்ளோ நீளத்துக்குக் கயிறு கட்டிக் கிணத்துக்குள்ளே இறக்கி… அந்தக் குடம் நிரம்பறதுக்கே எப்படியும் 20, 25 நிமிஷமாவது ஆயிடும். அந்த ஆத்துக்கு அக்கரைல ஒரு பாழடைஞ்ச மண்டபம் இருந்துது. அங்கேதான் பெரியவா தங்கி இருந்தா.

சாயந்தரம் 5 மணி இருக்கும்… பெரியவா அங்கேயே உக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டா. சரியா ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்… கனமழை பெய்ய ஆரம்பிச் சுது. ஆத்துல வெள்ளமா ஓடுச்சு தண்ணி. ரொம்ப நேரத்துக்கு மழை விடவே இல்ல. அப்புறம், பரிசல்கார னைக் கூட்டிண்டு வந்து, ராத்திரி 12 மணிக்குதான் இக்கரைக்கு வந்து சேர்ந்தா பெரியவா.

கூட்டம் பெரியவாளைச் சூழ்ந்துண்டு, நமஸ்காரம் பண்ணித்து. ‘ஸ்வாமி! நீங்கதான் மழையைக் கொண்டு வந்தீங்க’ன்னு நெக்குருகிச் சொன்னாங்க ஜனங்க.

‘என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”

லக்ஷ்மிநாராயணன் சிலிர்ப்போடு இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கடைசியாகச் சொன்னார்… ”பெரியவா தன்னடக்கத்தோடு அப்படிச் சொன்னாலும், எனக்கு நன்னாத் தெரியும், அவர் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சம்!”

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

அத்யந்த ஶீதலமதந்த்ரயது க்ஷணார்த்தம்

அஸ்தோக விப்ரம் அனங்கவிலாஸகந்தம் |

அல்ப ஸ்மிதாத்ருதம் அபாரக்ருபா ப்ரவாஹம்

அக்ஷிப்ரரோஹம் அசிரான்மயி காமகோடி ||24||
கடாக்ஷ சதகம்.

காமகோடி ஸ்வரூபிணியான ஹே காமாக்ஷி ! மிக்க குளிர்வானதும், மிகவும் அழகுள்ளதும், மன்மத விலாஸத்திற்குக் காரணமானதும்,
மந்தஸ்மிதத்தோடு கூடியதும்,
கரைகாணாத கருணை வெள்ளத்தை உடையதுமான உன்னுடைய கடைக்கண் பார்வையானது, விரைவில் என்னிடம் வந்து ஓர் அரை நொடி நேரமாவது தங்கி இளைப்பாறட்டும்.

அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
Kousalya said…
அத்தனை ஆனந்தமான வஸ்து நம் அனைவரும் எப்போதுமே ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்....என்பதை நினைக்கும் போதே மனம் மிகவும் லேசாகி விடுகிறது....அருமை🙏🙏🌹🌹
Moorthi said…
அற்புதமான மனதில் லயக்ககூடிய பதிவு 👌👍🙏🙏🙏
ravi said…
*கீதை படியுங்கள்*

துவாரகையில் இடையர் குலத்தில் பிறந்த மாயக்காரன் கண்ணன்.

அவன் நமக்கு வெகு தூரத்தில் இருப்பவனா எனில், ஆம்.

கிட்டத்தில் இருப்பவனா, ஆம்.

மிகப் பெரியவனா, ஆம்.

சிறுவனா ஆம்!

அவன் அன்று யுத்தத்தின் நடுவில் ஓதிய கீதையை கற்காதவர்கள் உலகத்தில் ஞானமற்ற அந்நியர்கள்.

நான்முகன் திருவந்தாதியில் திருமழிசை ஆழ்வாரின் இந்த வெண்பாவில் மூன்று அழகிய தமிழ் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

*சேயன்* - என்றால் தூரத்தில் இருப்பவன்,

*அணியன்* - கிட்டத்தில் இருப்பவன்,

*ஏதிலர்* என்றால் அந்நியர்கள்.

‘ *ஏதிலார்* குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்’ என்று வள்ளுவர் சொல்லும்
மற்றவர்கள்’.

இம்மூன்று சொற்களில் *அணியன்* என்ற சொல் தற்போது வழக்கில் மலையாளத்திலும் இருக்கிறது,

*கையாள்* என்கிற அர்த்தத்தில்.

பகவான் நம் கையாளாக இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

இப்போது பாடலைப் பார்ப்போம்.

சேயன், அணியன், சிறியன், மிகப்பெரியன், ஆயன், துவரைக்கோனாய் நின்ற மாயன் --

அன்று ஓதிய வாக்(கு) அதனைக்

கல்லார், உலகத்தில் ஏதிலர் ஆம், மெய்ஞ் ஞானம் இல்.

(துவரை என்று துவாரகையை தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ஆழ்வார். அவர் வாக்கு என்று சொல்லுவது பகவத் கீதையை.

அதைக் கற்காதவர்கள் உலகத்தில் எதற்கும் தகுதியில்லாதவர்கள்).
Kousalya said…
அற்புதமான முறையில் தாங்களின் சாரத்தை விளக்கிவிட்டீர்கள்..அருமை அருமை 🙏🙏👌👌👍👍🌹🌹
ravi said…
🌴🌴🌴


*தாமிரபரணி கரையோர*
*நவகைலாய சிவாலயங்கள்...*

🌹🙏

தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை. பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்.

பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன.

பாபநாசம்: முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணியின் முதல் தடுப்பணை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராட வசதி பெற்ற திருத்தலம்.

சேரன்மகாதேவி: இரண்டாவதாக சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் -ஆவுடைநாயகி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரபகவான் அம்சம் கொண்ட தலம்.

கோடகநல்லூர்: மூன்றாவதாக கோடகநல்லூரில் உள்ள கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூரியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செவ்வாய்பகவான் அம்சம் கொண்ட தலம்.

குன்னத்தூர்: நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதை பரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத்திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. ராகுபகவான் அம்சம் கொண்ட தலம்.

முறப்பநாடு: ஐந்தாவதாக தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் -சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. குருபகவான் அம்சம் கொண்ட தலம்.

ஸ்ரீவைகுண்டம்: ஆறாவதாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் அம்சம் கொண்ட தலம்.

தென்திருப்பேரை: ஏழாவதாக தென்திருப்பேரையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மை திருக்கோயில்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அருகே அமைந்துள்ளது. புதன்பகவான் அம்சம் கொண்ட தலம்.

ராஜபதி: எட்டாவதாக ராஜபதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தென்திருப்பேரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. கேது பகவான் அம்சம் கொண்ட தலம்.

சேர்ந்தபூமங்கலம்: ஒன்பதாவதாக சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பகவான் அம்சம் கொண்ட தலம்.

நவகைலாய கோயில்களில் பக்தர்கள் மிகவும் எளிமையாக வழிபட உதவும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. காலையில் புறப்படும் பயணிகள் அனைத்து ஆலயங்களிலும் தரிசனம் செய்துவிட்டு இரவில் திருநெல்வேலியை அடையலாம்.
ravi said…
*மயில் விருத்தம்* 8 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
ஆதார பாதளம் பெயர அடி பெயர
மூதண்டம் முகடது பெயரவே

ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி
கவுள் கிரிசரம் பெயரவே

வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க பிரியப்பட விடா

விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி
மகீதரி கிராத குலி

மாமறை முநி குமாரி சாரங்கம் நம் தனி வந்த
வள்ளி மணி நூபுர மலர்ப்

பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.
ravi said…
*நம் தனி வந்த வள்ளி*

வைகுந்தத்தில் திருமாலும் மஹாலட்சுமியும் சொக்கட்டான்
ஆடும்பொழுது அங்கு வந்த துருவாச முனிவரை மதிக்கவில்லை
என்கிற காரணத்தினால் கோபமடைந்த முனிவர், திருமாலை
சிவமுனிவராகவும் மஹாலட்சுமியை மானாகவும் ஆக சபிக்கிறார்.

அதன்படி திருமால் சிவமுனிவராக வள்ளிமலையில் தவமியற்றுகிறார்.

அங்கு மான் உருவில் வந்த திருமகளை பார்த்த உடனேயே சிவ
முனிவரின் கண் பார்வையிலேயே கருவுற்று, வள்ளியை ஈன்று,
வள்ளிக் கொடி குழியில் போட்டுவிடுகிறாள்.

இப்படி ஒரு
ஆச்சரியமான வகையில் வள்ளிப் பிராட்டியார் பிறந்ததினால் அவளை
நம் அருணை முனிவர்,

.. *தனி வந்த வள்ளி* ..

... எனக் குறிப்பிடுகிறார்.

ஒரு கற்புடைய மாது தன் கணவரின் சுற்றத்தாரை எல்லாம் அன்புடன்
தன் சுற்றமாக கருதி பாவிப்பது போல்

அருணகிரியாரும் தனது ஆத்ம
நாயகனாகிய முருகப் பெருமானின் சுற்றத்தை எல்லாம் தன் சுற்றமாக
கொண்டாடுவார்.

விநாயகரை 'மம விநாயகர்' என்றும், சிவபெருமானை,
'என் தந்தை சதாசிவ கோத்திரன்' என்றும், பார்வதி தேவியை 'எமதாயி'
என்று கூறுவது போல் வள்ளிப் பிராட்டியாரையும் 'நம் வள்ளி' என்கிறார்.🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 254*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 32

*பொருளுரை*

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥

ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா

த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।

ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:

கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
ravi said…
காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்தை, பாற்கடலுக்கு, வெள்ளை வெளேர்னு இருக்கு ‘வெள்ளையா சிரிக்கறானு!’ சொல்வோமே,

அந்த மாதிரி, வெண்மையை அடிக்கடி சொல்வார்.

அதைப் பாற்கடலுக்கு சமானமா ‘ *ஸாத்³ருஶ்யமா’* சொல்லலாம்.
வெள்ளையாவும் இருக்கு.

அம்பாளுடைய அதரம் சிவப்பா இருக்கற மாதிரி, இந்த பாற்கடல்லயும் பவளம் இருக்கு!

ஆனா ஒரு வித்தியாசம். பாற்கடலை முன்ன கடைஞ்ச போது ஒரு ரசம் வந்தது.

அது ஹாலாஹல விஷம்.

அதை பரமேஸ்வரன் மடக்குனு குடிச்சுட்டார்.

காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்துலேர்ந்து இனிமைன்னு ஒரு ரசம் வந்துண்டே இருக்கு.

அதை ரஸிச்சு ரஸிச்சு இன்னிக்கும் குடிச்சிண்டே இருக்கார்!” ன்னு சொல்றார்.

அப்படி அந்த காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதம்ங்கிற அம்ருத ரஸம், அதைக் குடிக்கறதுனால பரமேஸ்வரனுக்கு இந்த ஹாலாஹலம் ஒண்ணுமே பண்ணலை.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 254* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

*69. ச்ரேஷ்டாய நமஹ (Sreshtaaya namaha)*

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : *ச்’ரேஷ்ட்ட* : ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
கண்ணா நவரத்தினம் அழகூட்டுமோ ...

உன் கருமை மேனி தனில் கசிந்தோடும் காரூண்யம்

கோடி கதிரவனாய் ஜொலிக்கும் போது

நகைகள் உன் எழில் கூட்டும் என்றால்

கதிரவனுக்கு கற்பூரம் காட்டுவது போல் அன்றோ அது ?

உன் புன்னகை எந்நகையும் தலை குனிய வைக்கும் அன்றோ .. ??

கண் படும் என்றே உன் கருமேனிதனில் நவரத்தினம் நளிந்து உருண்டு சென்றதோ

உன் ஒளியில் ஓர் கதிர் பட்டதனால் கடையில் ஒரு கோடி விலை போகின்றதே ...

உன் இதழின் மதுரம் சுவைத்தனால் குழலும் கோடி விலை போகின்றதே ...

உன் கேசத்தில் தோகை விரித்து ஆடியதால் மயில் பீலிகள் மாணிக்கம் விலை கண்டதே ...

பாதம் கொஞ்சிய கொலுசுகள் காஞ்சி பட்டு புடவை என விலையில் உயர்ந்து போனதே ...

எங்கள் அன்பும் இன்று உச்சம் தொட்டே இப்புவியை விலை பேசியதே

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
நாரதர்: மனத்தை விட எது உயர்ந்தது?

சனத்குமாரர்: மன உறுதி.

நாரதர்: அந்த மனவுறுதியை விட?

சனத்குமாரர்: ஒருமுகப்படுத்தப்பட்ட மனது.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்:
தியானம் உயர்ந்தது.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்: விஞ்ஞானம்.

நாரதர்: அதை விட?

சனத்குமாரர்: உடலில் வலிமை இருந்தால் தானே கல்வி கற்று விஞ்ஞானத்தைப் பெற முடியும்?
அதனால் விஞ்ஞானத்தை விட உடல்வலிமை உயர்ந்தது.

நாரதர்: உடல் வலிமையை விட?

சனத்குமாரர்: உணவு உண்டால்தானே உடல் வலிமை பெறும்? எனவே அன்னமாகிய உணவு வலிமையை விட உயர்ந்தது.

நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: மழை பொழிந்தால்தான் உணவுப் பண்டங்கள் விளையும். எனவே அன்னத்தைவிடத் தண்ணீர் உயர்ந்தது.

நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: சூரியன், மின்னல் போன்ற ஒளிகள்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

உலகத்தில் புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு மதத்தினரும் ஏதாவது ஒரு புஸ்தகத்தைத்தான் நிரம்பவும் கெளரவமாக வைத்திருக்கிறார்கள். எல்லாம் புஸ்தகங்களேயானாலும், ஒரு புஸ்தகத்தை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். அதில்தான் ஜன்மம் கடைத்தேறும் வழிகள் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். அந்தப் புஸ்தகத்துக்குப் பூஜை செய்கிறார்கள்; நமஸ்காரம் செய்கிறார்கள். சில மதஸ்தர்கள் அந்தப் புஸ்தகத்திற்கே தனியாகக் கோயில்கட்டி வணங்குகிறார்கள். ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை அவர்கள் “கிரந்த ஸாஹேப்” என்று மரியாதையாகச் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் தங்கள் ஆத்ம க்ஷேமத்திற்கு வேண்டிய மார்க்கங்களைச் சொல்லும் ஒவ்வொரு புஸ்தகத்தைப் பெற்றிருக்கிறார்கள். இவை எல்லாம் ஒரு மதஸ்தாபகரின் பெயரில் இருந்தாலும், வாஸ்தவத்தில் பரமாத்மாவின் வாக்கேதான், பகவானின் ஆக்ஞைதான் அந்தந்த மதஸ்தாபகர் வழியாக வந்தது என்கிறார்கள். இதனால் இவற்றை Revealed Text என்கிறார்கள். இதையே நாமும் “அபெளருஷேயம்” என்கிறோம். புருஷர்கள் (மனிதர்கள்) தாமே செய்வது பெளருஷேயம். இப்படியில்லாமல் பரமாத்மாவே மனிதனைக் கருவி மாத்திரமாகக் கொண்டு வெளியிடுவது அபெளருஷேயம்.

சரி, நம்முடைய வைதிக மதத்திற்கு ஆதாரமாக எந்தப் புஸ்தகம் இருக்கிறது? மற்ற மதஸ்தர்களை ‘உங்கள் மதப்புஸ்தகம் எது?’ என்று கேட்டால் அவர்களுக்கு சந்தேகமில்லாமல், இன்னது என்று தெரியும். கிறிஸ்தவர்கள் பைபிள் என்பார்கள். முஹம்மதியர்கள் குரான் என்பார்கள். பெளத்தர்கள் த்ரிபிடகம் என்பார்கள். பார்ஸியர் ஜெண்டவஸ்தா என்பார்கள். நம்மைக் கேட்டால் – இந்த காலத்தில் சைவர், வைஷ்ணவர், த்வைதி, அத்வைதி இன்னும் நம் தேசத்திலிருக்கப்பட்ட பல ஸம்பிரதாயத்தினருக்கும் பொதுவாக எந்த மதப்புஸ்தகம் இருக்கிறதென்றால் – எல்லோரும் சேர்ந்து எந்த ஒன்றைச் சொல்லலாம் என்பதே தெரியாமல் விழிக்கிறோம்! இதற்கு என்ன காரணம்?

முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. மற்ற ஜனங்களுக்கு எந்த மதத்தில் ஜனனம் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த மதத்தைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். அல்லது மதப் படிப்பை முதலில் இரண்டு அல்லது மூன்று வருஷங்கள் படித்துவிட்டு அப்புறம் லெளகிகப் படிப்பைப் படிக்கிறார்கள். அதனால் சிறு பிராயத்திலேயே அவர்களுக்கு மதத்தைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு விடுகிறது. நம்முடைய மதத்தில் மதத்தைப்பற்றிப் படிப்பதே கிடையாது. அப்படி படிக்காததனால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் நம்முடைய மதத்திலிருந்து பிடித்துக் கொண்டு போகிறார்கள். மற்ற மதஸ்தர்கள் தங்கள் மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு போவதில்லை. காரணம் பால்யத்திலிருந்தே மத சாஸ்திரங்களை அவர்கள் படிக்கிறார்கள். அதனால் அதனிடம் பற்று ஏற்படுகிறது. நாமோ பால்யத்தில் கொஞ்சம்கூட எட்டிப் பார்ப்பது இல்லை. என்ன வாசித்தாலும் ஏறாத வயதில் நாம் வாசிக்கிறோம். நம்முடைய மதப்புஸ்தகங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம்.
ravi said…
🌹🌺 If the baby is in danger, then the mother is as worried as the motherhood Eason - explains the simple story🌹🌺 --------------------------------------------------- ------

🌺🌹Parnanathan forgot food and water and repented thinking of Lord Shiva. One day he became very hungry. Penance dissolved. He opened his eyes.

🌺There were many wildlife around him at that time, such as lions, tigers and birds.

🌺 When the birds saw the starving man, they plucked the fruit and put it in front of prnanathan.

🌺 After enjoying that it was Ein's grace, he finished eating the fruits of the hungry coast and continued his meditation again.


🌺 Thus many years passed. He finished his meditation and started worshiping Shiva.

🌺One day when Dharpa was mowing the grass he was screaming in his hand and bleeding.


🌺But he has no tension. If the baby is in danger, then Eason's mother is as worried as the mother.


🌺Sivaperumaan appeared in the form of a hunter and saw Barnanathan holding his hand. What a surprise. ?!


🌺Vibhoothi ​​started pouring blood on the spot. Parnanathan knew that he was a mother.


🌺 I know that you are the Sarveshwaran I worship who stopped the blood and poured the ashes.


🌺 "Isn't this servant privileged to see their self-image?" Asked Barnanathan.

🌺Eason showed up in his self.

🌺 I made this ash for you. So let this ashes be called "Bipudi from today."
Bipudi was created by your goodness.

🌺 Sage Agathiyya said, "Hatred, incurable disease, mental illness, verbal abuse, whatever it is, if you continue to wear vibudhi, those problems will go away."
Preached to Sri Rama.

🌺Vipudi is also suitable for Sri Maha Lakshmi. She loves it and bathes in water mixed with vibudhi every day. If Mr. Mahalashmi.
That is why we call Vibudhi as Tiruneeru.

🌺🌹 **Song about thiruneer (sand)* 🌹🌺
🌹🌺 மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீரு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்க்கது
My sweet Eesane who came as a gift, remember your sweet..🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺 *குழந்தைக்கு ஆபத்து என்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன் தாயுமானவர்தான் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹பர்னநாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணைத் திறந்தான்.

🌺அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது.

🌺பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப பறித்து பர்னநாதன் முன் வைத்தது.

🌺இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான்.

🌺இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது.தவத்தை முடித்து கொண்டு சிவ வழிபாட்டை தொடங்கினான்.

🌺ஒருநாள் தர்ப்பைப் புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு இரத்தம் கொட்டியது.

🌺ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்து என்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன் தாயுமானவர்தான்.

🌺சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி , பர்னநாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்…. ?!

🌺இரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான் பர்னநாதன்.

🌺இரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்டச் செய்த தாங்கள் நான் வணங்கும் சர்வேஸ்வரன் என்பதை நான் அறிவேன்.

🌺இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா ?“ என்று வேண்டினான் பர்னநாதன்.

🌺ஈசன் தன் சுயரூபத்தில் காட்சிக் கொடுத்தார்.
உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி" என்று அழைக்கப்படட்டும்.
உன் நல்தவத்தால் விபூதி உருவானது.

🌺பகை, தீராத வியாதி , மனநல பாதிப்பு , செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்சனைகள் விலகும் “ என்று அகத்திய முனிவர்
ஸ்ரீ இராமருக்கு உபதேசம் செய்தார்.

🌺ஸ்ரீ மகா லஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். திரு என்றால் மகாலஷ்மி.
அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.

🌺 மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு காண இனியது நீறு கவினைத் தருவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே
வரமாக வந்த என் இனிய ஈசனே உன் இனிய நினைவில்..🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*இரண்டிற்கும் வித்தியாசம்,*
*வயது மட்டுமே...*

35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*

கண்ணன் என்பது செல்ல பெயர்.
குழந்தை பருவம்.

கிருஷ்ணன் என்பது வளர்ந்த பிள்ளை.
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து ,
குளித்துக் கொண்டிருந்தேன்.

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல்,
இரண்டு கையாலும்,
என்னை சுற்றி , சுற்றி,
சொம்பை, தேடினேன்.

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.

எனக்கு புரிந்து விட்டது.

சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று.

எனக்கு , கண் எரிகிறது
என்று அவளுக்கு தெரியவில்லை.

நான் , சொம்பை தேடுவதில்,
அவளுக்கு ஒரு ஆனந்தம்.

இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.

தற்போது , எனது கண்ணில் ,
ஒரு தூசி விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை ,
மறைத்து வைத்து...
அவர்கள் தேடுவதை கண்டு
ஆனந்தப் பட்டான்.

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து,
அவள் மனதை, காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....

கண்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது....

நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான்.
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என ,
பொய்யும் சொன்னான்...

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது ,
என கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.

*அருமையான கருத்துக்கள் செரிந்த பதிவு.*
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 254* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*84 ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி* =
ravi said…
ஹரனாக இருக்கும் பரமேசுவரனின் நேத்திரம் (கண்), அதாவது சிவனுடைய நெற்றிக்கண்ணின் தீப்பொறி பட்டு, ஒருவன் (மன்மதன்) பஸ்மமாகிப் போனானே,

அவனுக்கு ஒளஷதமாக (மருந்தாக) அம்பாள் இருக்கிறாள் (காம சஞ்சீவன ஒளஷதி).

"காமன் மறுபடியும் உயிர் பெற்றுவிடக்கூடியதுபோல அவனுக்கு மருந்தாக இருப்பவளே!"
என்கிறது இந்தத் திருநாமம்.

மருந்தாக இருக்கிறாள்.

அதுமட்டுமா? மன்மதனுக்கு சஞ்சீவினியாக, அவனுக்கு நிரந்தர வாழ்வைத் தரும் அமிர்தமாக இருப்பவள் அம்பாள்.

காமன் எரிந்து சாம்பலானான். அந்தச் சாம்பலிலிருந்து பண்டாசுரன் வந்தான்.

அவனும் அழிந்த பிறகு அந்த சுழற்சியை மீண்டும் காமனிடத்திலேயே கொண்டுபோய் நிறுத்தி அவனுக்கு மருந்தாக இருக்கிறாள் என்னும்போது என்ன அர்த்தம்?🤔
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 255* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌66

*66 தேவியின்குரல் வீணையினும் இனியது*

*_இன்சொல், ஸங்கீத ஞானம்_*

விபஞ்ச்யா காயந்தீ விவித மபதானம் பஶுபதேஸ்

த்வயாரப்தே வக்தும் சலித ஶிரஸா ஸாதுவசனே

ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் 66
ravi said…
பசுத்த மலர்க்கொடி கருணை பழுத்து அனைய

கொம்பே நின் பரமர் பொற்றோள்
விசைத் தொழிலைக் கலைவாணி தனில் பாடிப்

பாடிய அவண் மெலிவதல்லால்

அசைத்திலர் பொன் முடி உனது மதுரமொழிக்கு
அசைத்தனர் என்று

அதற்கு நாணி
இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில் வீணை
உறையில் இட்டாள் ஏது செய்வாள்🪷🪷🪷
ravi said…
பச்சை நிற மலர்க்கொடியானது

கருணையெனும் பழமும் பழுத்தது என்று சொல்லலாம் படி இருக்கின்ற சிறந்தவளே!

உனது கணவரான பரமசிவனின் தங்கத்தோளின் வெற்றித் (விசை = விஜய) தொழிலைக் கலைவாணி தனது இனிய குரலில் பாடிய போது

அதனை விரும்பிக் கேட்டது மட்டுமே செய்தார் பரமசிவனார்;

தலை அசைத்தார் இல்லை.

உனது இனிய மொழிக்கு தலை அசைத்தார்.

அதனைக் கண்டு நாணி இசைத்தொழிலை விட்டாள் கலைவாணீ.

தனது அழகிய வீணையை உறையில் இட்டாள்.

வேறு என்ன தான் செய்வாள் அவள்?🙏🙏🙏
ravi said…
*ராமரும் ததிமுகனும் (Tathimugan)*

*ததிமுகன் சொன்ன கீதை 🐵🐵🐵*🪔🪔🪔
ravi said…
கண்டேன் கண்டேன்* *சீதையை*
*ஓ ராகவா ...*

குயிலின் குரல்
கூடி செல்லும் கரு மேகங்கள் நடுவே

மின்னலாய் கிழித்துக்கொண்டு தெறித்தது ... ⚡⚡⚡

ராமன் அம்புக்கும் இப்படி கிழித்து செல்லும் சக்தி உண்டோ ... 🙊

அவன் அடியார்க்கு உண்டு என்றே அனுமன் குரல் அங்கே தெய்வத்தின் குரலாய் இசைத்தது ... 🏵️🏵️🏵️

தாரகைகள் மேகங்கள் எனும் பஞ்சினால் நூல் தொடுத்து

அந்த மாலை தனில் மஞ்சம் விரித்தனர் ...

ஆதவன் அழைத்து வந்தான் அமுதம் பொழியும் நிலவு தனை .. 🌞🌝

இருவரும் கை கோத்து இது வரை நடந்ததில்லை

கண்டனர் வானரர் சேனை அதிசயம் இதை ... 🐒🐒🐒

இடி உறும மின்னல் மேகங்களில் ஓடி விளையாட ...🪷🪷🪷

பறவைகள் பாடிசைக்க 🦅🦅🦅

விலங்குகள் வீணை வாசிக்க 🦁🐯🐨

வேதங்கள் அனுமன் உருக்கொண்டு மண்ணில் இறங்கியே

மீண்டும் முழுங்கின சாம கானம் அதை ... 🎤🎧🎼

கண்டேன் சீதையை கண்டேன் கற்பின் சுடரை

கண்டேன் காரூண்யத்தின் உருவை ... 🪔🪔🪔

கற்பகமும் காமதேனுவும் கலந்த கலவை அவள் ... 🐄

அந்த கலவை வாழ் மகானாய் உன் நினைவில் வாழ்கிறாள் அங்கே ...

உண்ணுவது உன் நாமம் ராமா !!

அவள் உறங்குவது உன் நாமம் தனில் !!

நிற்பது உன் நாமம்

அருகில் இருப்பதும் கிடப்பதும் உன் நாமம்
அதன் பெருமை தனில் ... !!

அணியும் உடையும் உன் நாமம் எனில் வருமோ அதில் ஓட்டைகள் ...

கிழியும் இடங்களில் அவள் மனம் ஊசி கொண்டு தைத்தது உன் நாமமே ராமா ... !!

கேட்டனர் வானரர் ... மாதுவை கண்டவன் மனம் குளிர

திராட்சை மதுவை ஊற்றினர் அவன் மீதே ... 👍👍👍

பாலாபீஷேகம் அனுமன் கேட்க வில்லை

பஞ்சாமிருதம் தனில் மிதக்க வில்லை ..

காலாற மலை போல் நடந்தான் ராமனிடம்

ராமா என்றால் இதோ வந்தேன் என்றே ஓடி வந்தான் ராகவன் ... 🪷🪷🪷

ஓடி வந்தான் *ததிமுகன்* ...

*ராமா* இலங்கை தீ பற்றி எரிந்தது அங்கே

என் மதுவனம் உள்ளே எரியும் தீ தனை அனைத்ததே இங்கே !!

ராமா என்ன விந்தை இது ??

பற்ற வைத்த இரண்டும் கொதித்தும் குளிர்ந்தும் போகுமோ ஒரே நேரமதில் ... 🤔

அணைத்துக் கொண்டான் ததிமுகனை ..

குழந்தை போல் வளர்த்தாய் உன் மதுவனத்தை...

மதுரம் என வந்தான் என் அனுமன் இன்று ...

*ததிமுகனே* அழிந்தது உன் வனம் அல்ல தசமுகன் எனும் பெரும் வனம் ...

*ராமா* ... இந்த வனம் போகட்டும்

உன் மனம் அதில் ஊரும் மதுவை நான் பருக அருள்வாயோ *ராமா* ..

இதோ தந்தேன் என் நாமம்

அனுமன் நெய் ஊற்றி பாலூட்டி அதில் தேன் மிதக்க வளர்த்த நாமம் ...

இதிலும் இனிக்குமோ உன் மது வனம் ... 💐

*ராமா* உன் நாமம் ருசி தனில் கண்டேன் காஞ்சி மகானை ...

அவன் நாமம் எனும் தேன் அடையில்

உன் நாமம் எனும் தேனீக்கள் நெய் போல் உருகக்கண்டேன் 🐝🐝🐝🐝🐝🐝🐝🐝

கண்டேன் கண்டேன் ஓ *ராகவா* உனை அனைவர் போற்றும் சுவாமிநாதனாய் 🪔🪔🪔
ravi said…
ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்

ரக்தாங்குலீய லஸதங்குளி பல்லவாட்யாம் !

மாணிக்ய ஹேமவல்யாங்கத சோபமானாம்

புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததானாம் !! (2)

காலையில் ஸ்ரீலலிதாம்பிகை
யின் கல்பகக் கொடி போன்ற கைகளை சேவிக்கிறேன்.

அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும்,
மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன.

கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.🪔🪔🪔
ravi said…
*நல்வழி : 18*

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்

*பொருள்*

அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி,என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்

*இனிய காலை வணக்கம்15/06/2022*
🌹🌻🙏🏻🌻🌹😃🌹🌻
Oldest Older 201 – 299 of 299

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை