ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 9. க்ரோதாகாராங்குசோஜ்வலா பதிவு15

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

9. க்ரோதாகாராங்குசோஜ்வலா

பதிவு 15



இன்று நாம் பார்க்கப்போவது 9வது திருநாமம் ... அருமையான ஒரு திருநாமம்

क्रोधाकाराङ्कुशोज्ज्वला - க்ரோதாகாராங்குசோஜ்வலா* - 

தவறு செய்தால் தொலைத்து விடுவேன், என்று தீயவர்களை கண்டிக்க ஒரு வலது கையில் அங்குசம் கொண்ட நிற்பதாக்ஷண்ய கோபமுடையவள். 

இதைத் தான் துஷ்ட நிக்ரஹம்  ஸிஷ்ட பரிபாலனம் என்பது.

ரெண்டு ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு  நாமங்களை பிரித்ததில் ஒன்பது நாமங்கள்  எனக்கு கிடைத்தது  ஆச்சர்யம்.  

ஓஹோ அம்பாள்  சக்தி ரஹஸ்யமானது. ஒன்பது என்பது ஒரு அதிசய, அதிக சக்தி வாய்ந்த எண்  என்பது தெரியுமா?



கொஞ்சம் சொல்கிறேன்.  

நான் சொல்வது எல்லாமே  எப்போதும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சமாச்சாரம் தான்.

108 உபநிஷத் களின்  கூட்டு எண்: 1+0+8=9

பகவத் கீதையின்  அத்தியாயங்கள் 18. கூட்டு எண் : 1+8=9

மகாபாரதத்தின் யுத்தம் நடந்தது  18 நாட்கள். பாரதத்தின் பர்வாக்கள்  18. கூட்டு எண்: 1+8=9  வியாஸர் 18 :  கூட்டு எண்  :9

கலியுகம் வருஷங்கள் 4,32,000:  கூட்டு எண்  4+3+2=9

துவாபர யுகம் வருஷங்கள் அதே மாதிரி தான்: 864,000 வருஷங்கள்:  கூட்டு எண் : 8+6+4=18:1+8: 9

த்ரேதா யுகமும் கூட  

எப்படி   அதே 9 .  மொத்த வருஷங்கள் 1,296,000 = 1+2+9+6=18 : 1+8:9

அதற்கும் முந்தி இருந்த  சத்ய யுகத்திலும் வருஷங்களின்  கூட்டு எண் 9:   1,728,000: 1+7+2+8=18 

ஒரு கல்ப யுகத்திற்கு  432,000,000 வருஷங்களாம். 

அதன் கூட்டு எண்  கூட  :9   :   4+3+2=9

பக்தி 9 வகைப்படும்   நவவித பக்தி என்பது.

கிரஹங்களும் 9 தான்.

நமது தேஹமே கூட  9 வாசல்  மாளிகை தான்.

இப்போது நாம் கொண்டாடும் துர்காபூஜைக்கும்   நவராத்ரி என்று தான் பெயர்  9  இரவுகள்.

ஜபமாலையில்  இருக்கும் மணிகள் 108.   அஷ்டோத்ரம் 108. 

எல்லாமே  ஆச்சர்யமாக  9 .[1+0+8=9]

இப்படியே  சொல்லிக்கொண்டே போனால் 108 பக்கங்கள் ஓடிவிடுமோ, 108 நாள்  ஆகுமோ தெரியவில்லை.🙏🙏🙏


க்ரோதாகார = ஆக்ரோஷம், கோபம் கோண்டு 

அங்குச = அங்குசம் என்ற ஆயுதத்தை (அம்பு) க்ரோதத்தின் வெளிப்பாடாக சுமந்திருக்கிறாள்

உஜ்வலா = பிரகாசிப்பவள்...💐💐💐

க்ரோதாகார-

அங்குசோஜ்வலா = 

க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள்  

சினத்தின் வெளிப்பாடு, ஜீவராசிகள் மீது அன்னை கொண்டுள்ள ஆளுமையின் அடையாளமாகவோ அல்லது அதர்மத்தை அழிக்க ஏற்றுள்ள உக்கிர ரூபமாகவும் பொருள் சொல்லப்படுகிறது🏵️🏵️🏵️


பளபளக்கும் அங்குசம் அங்குசத்தை எப்படி வைத்திருக்கிறாள்? க்ரோதாகார அங்குச உஜ்வலா! பளபளவென்று உள்ள அங்குசம். பளபளவென்று அது ஜொலிப்பதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது

எப்போதும் பளபளவென்று ஓர் ஆயுதம் காணப்பட்டால், அவ்வாயுதம் கூர்மையாகவும் இருக்கும்.

ஒரு நூலை வெட்டுவதற்குக் கத்தரிக்கோலைப் பயன்படுத்தும்போது, அது மழுங்கியிருக்குமேயானால் நூலை வெட்டாது. 

மேலும் நூல் பிரிந்து திரிதிரியாக வரும். பாசத்தை வெட்டும்போது அது திரிதிரியாகப் பிரிந்தால் பிரயோஜனமில்லை அல்லவா? 

நறுக்கென்று கத்தரிக்க வேண்டும். அதனால் அந்த அங்குசம் எப்படி இருக்கிறது? 

அம்பாளின் கையில் உள்ள அங்குசமானது பளபளவென்று ஜொலிக்கிறது. பளபளக்கும் அங்குசம் எத்தகையது என்றால், அது குரோதாகார அங்குசம். 

குரோதம் என்றால் பொதுவாக துவேஷம் என்று பொருள். அப்படியானால், அம்பாளிடம் ஏன் குரோதாகார அங்குசம் இருக்க வேண்டும்? 


துவேஷத்தைக் காட்டினால்தான் இந்த இடத்தில் பந்தத்தை வெட்ட முடியும் என்னும்போது, அந்த நிலையில் குரோதத்தைக் காட்டி, தேவையில்லாத பந்தத்தை வெட்டுபவள். 

ஆகவே ஒரு கையில் பாசம், மற்றொரு கையில் அங்குசம்!

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம வர்ணனையின் விதம்தான் எவ்வளவு அழகு! ஸ்வரூப வர்ணனை ஆரம்பிக்கும்போதுகூட திருக்கரங்களின் வர்ணனைதான் முதலில் வருகிறது. 


அதற்குப் பிறகுதான் மற்ற வர்ணனைகளெல்லாம் வருகின்றன. மன வில் சரி, சதுர்பாஹுவான நான்கு கரங்களில் உள்ளதில், முதலில் பாசம், அதாவது நம்மைக் கட்டிப் போடக்கூடிய பற்றைச் சொல்லி இரண்டாவதாக அந்தப் பாசத்தை நீக்கும் அங்குசத்தைச் சொல்லியாயிற்று. 

மற்ற இரு கரங்களில் என்ன இருக்கின்றன என்பதைத்தான் அடுத்த இரு திருநாமங்கள் சொல்கின்றன.



                                                
Ankusha is a goad , a sharp instrument which the elephant rider keeps with him for controlling the elephant . Krodha means anger or hatred. Devi holds an elephant hook in Her tight upper arm. She uses this hook to destroy the hatred , if any , developed by Her devotees and gives them knowledge and wisdom. 
                                     👌👌👌👌👌👌👌👌👌👌👌👌




Comments

ravi said…
4.பகவான் பிரம்மாஸ்த்திரத்தினை செயலிழக்க வைக்குமாறு யாருக்கு கட்டளையிட்டார்? To whom bhagwan commanded to subdue Brahmasthira?
*
1 point
a.துரோணர்/ Dhrona
b.அஸ்வத்தாமன்/ Ashwathaama
c.அர்ஜூனன்/ Arjuna
d.பிரம்மா/ Brahma
Anonymous said…
5.பிரளயக்காலத்தில் அழிக்கும் நெருப்பின் பெயர் யாது? What is the name of the fire that destroys at the time of annihilation?
*
1 point
a. தீ/ fire
b.கனல்/ fire hurl
c.நெருப்பு/ flame
d.ஸாம்வர்த்தகம்/ Samvarthagam
ravi said…
🌹🌺 *திருவருளும் குருவருளும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை காண இன்றியமையாதவை.''.....!!! - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" அய்யா நான் மகா விஷ்ணுவைக் கண்ணால் காண முடியுமா....?'' என குரு ஒருவரிடம் கேட்டான் சுரேஷ்

🌺"தம்பீ......! நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ....,
உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா....?

🌺 இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா...?''
அய்யா எனக்கென்ன கண் இல்லையா.......?
இந்த உடம்பை நான் எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.'' ...!!

🌺"தம்பீ......!
கண் இருந்தால் மட்டும் போதாது......!!

🌺கண்ணில் ஒளியிருக்க வேண்டும்......!!
காது இருந்தால் மட்டும் போதுமா.....?
காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்.....!!

🌺அறிவு இருந்தால் மட்டும் போதாது.......!!
அதில் பரிபூரண ஸ்ரீ மகா விஷ்ணுவின் அன்பை உணரும் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்...!!

🌺 உடம்பை நீ பார்க்கின்றாய்....!!
இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா....?''
"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

🌺 "தம்பீ...... ...! அவசரப்படாதே.....!!
எல்லாம் தெரிகின்றதா....?''

🌺"என்ன ஐயா விளையாட்டு....!
தெரிகின்றது..., தெரிகின்றது..., என்று எத்தனை முறை கூறுவது....?
எல்லாம்தான் தெரிகின்றது....?''

🌺 "தம்பீ....!
எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா...?''
"ஆம்! தெரிகின்றன.''.....!!
"முழுவதும் தெரிகின்றதா...?''
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,
"முழுவதும் தெரிகின்றது'' என்றான்....!!

🌺"தம்பீ...!
உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா....?''
விழித்தான். சுரேஷ்

🌺"ஐயா...! பின்புறம் தெரியவில்லை.'' "என்றான்.
தம்பீ...! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்....!!

🌺 இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே....!!
சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா...?''

🌺 "முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'...!!
நிதானித்துக் கூறு....!!.''
"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்....!!

🌺எல்லாம் தெரிகின்றது.'...!!'
"தம்பீ...! முன்புறத்தின் முக்கியமான, " முகம் தெரிகின்றதா".....?
சுரேஷ் துணுக்குற்றான்.

🌺பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,
"ஐயனே...! முகம் தெரியவில்லை....!'' என்றான்.

🌺 "குழந்தாய்...!
இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை.....!!
முன்புறம் முகம் தெரியவில்லை......!!

🌺நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்.....!!

இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்....!!

🌺 அன்பனே...!
இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,

🌺இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.'' ...!!
இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு,

🌺இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,
ஞானமே வடிவாய் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவை காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

🌺ஒரு கண்ணாடி.....
திருவருள்....!!
மற்றொன்று....
குருவருள்.......!!

🌺 திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால், "ஞானமே வடிவான ஸ்ரீ மகாவிஷ்ணுவை காணலாம்"....!!

🌺"தம்பீ.....!
"ஸ்ரீ மகாவிஷ்ணுவைதிருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்"......,
அதனைக் "குருவருள் மூலமே பெறமுடியும்".....!!

🌺" திருவருளும் குருவருளும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை காண இன்றியமையாதவை.''.....!!!
சுரேஷ் தன் தவறை உணர்ந்து குருவின் காலில் விழுந்து பணிந்தான்.....!!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*
ravi said…
🌺🌹 Lord and Guru grace are very essential to see Sri Mahavishnu .''..... !!! - Simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺🌹"Can I see Lord Vishnu with my eyes ....?" Suresh asked one of the guru.

🌺 "Thambi ......! Before I answer your question ....,
Can I ask you a question ....?

🌺 Do you see this body with your eyes ...? ''
Sir, I do not have an eye .......?
I have been looking after this body for a long time. '' ... !!

🌺"Thambi ......!
Just having an eye is not enough ...... !!

🌺The eye should be light ...... !!
Is having an ear enough .....?
The ear must be listening to the sound ..... !!

🌺Knowledge alone is not enough ....... !!
It should have the technique and plan to feel the love of the perfect Sri Maha Vishnu ... !!

🌺You look sick .... !!
Do you know all about this illness ....? ''
"Yeah. Looks good."

🌺 "Thambi ...... ...! Do not rush ..... !!
Do you know everything ....? ''

🌺"What a game sir ....!
Looks like ..., looks like ..., how many times do you say that ....?
Everything seems to be ....? ''

🌺"Thambi ....!
Do you know all the elements ...? ''
"Yes! I know .''..... !!
"Do you know the whole thing ...?"
He said in a slightly irritated voice,
"Looks whole" he said .... !!

🌺"Thampi ...!
Do you see the back of your body ....? ''
Not. Suresh

🌺 "Sir ...! The back is unknown. ''" He said.
தம்பீ ...! At first it seems .. it seems .. you have said that many times .... !!

🌺 Now you say the back is unknown .... !!
Well, do you see the whole front ...? ''

🌺"The whole front is visible .'... !!
நிதானித்துக் கூறு .... !!. ''
"I see all the parts .... !!

🌺Everything seems to be .'... !! '
"Thambi ...! The important one on the front," Do you see the face ".....?
Suresh chuckles.

🌺Then with a subdued body in a subdued voice,
"Aww ...! The face is unknown ....! '' He said.

🌺"Baby ...!
The whole back of this crippled body is not visible ..... !!
The front face is not visible ...... !!

🌺You have just seen a little bit of this body ..... !!

However, you are worried that I saw it .... !!

🌺Dear ...!
If you want to know the whole of this illness,

🌺If you stand between the binoculars you can see both sides of the sick. '' ... !!
To see this shit all over the body,

🌺As binary glasses are required,
You also need two glasses to see Sri Maha Vishnu in the form of wisdom. ''

🌺A glass .....
திருவருள் .... !!
Another ....
Guru ....... !!

🌺 With the help of two mirrors, Lord and Guru, "You can see Sri Mahavishnu in the form of wisdom" .... !!

🌺"Thambi .....!
"Though Sri Mahavishnu is everywhere" ......,
It can only be "obtained by the Guru" ..... !!

🌺"Lord and Guru are essential to see Sri Mahavishnu .''..... !!!
Suresh realized his mistake and fell at the feet of Guru ..... !!🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

காமாக்ஷி ஸன்ததமஸௌ ஹரிநீலரத்ன-
ஸ்தம்பே கடாக்ஷருசி புஞ்ஜமயே பவத்யா: |
பத்தோ_‌ऽபி பக்தி நிகளைர் மம சித்தஹஸ்தீ
ஸ்தம்பம் ச பந்தமபி முஞ்சதி ஹந்த சித்ரம் ||41||

எனது மனம் என்கிற யானையானது உனது கடாக்ஷ காந்தி ஸமூகமாகிற இந்திர நீல ரத்நக் கம்பத்தில், பக்தி என்னும் சங்கிலியால் கட்டப்ட்டிருந்த போதிலும், ஊழ்ப்பயன் என்னும் பிணைப்பை விட்டுவிடுகிறது! இது விந்தையன்றோ! கட்டுண்ட போதே ஸம்ஸார பந்தம் என்ற கட்டு விலகுகிறது. அஞ்ஞான பந்தம் விலக ஜீவன் தன்னை பக்தி என்கிற கயிற்றால் கடாக்ஷமாகிற ஞானத்தூணில் கட்டிக் கொள்ள வேண்டும்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
ராமனும் திரிசடையும்* 🙏

*திரிசடை சொன்ன கீதை* 👍👍👍
ravi said…
ராமா*!! 💐

உன் நாமம் சொல்லி சாதித்தோர் எண்ணிலர் ...

உன் நினைவில் தனை இழந்தோர் மாண்டிலர்

உன் வீரம் வலிமை தனை ஏனையோர் கண்டிலர் ..

உன் போல் கொற்றவன் இல்லை என்றே பகைவர் எவரும் இனி அண்டிலர் ...

உத்தமனே ஒன்று உணர்வாய் ...

உன் வெற்றிக்கு பின்னே உரமாய் உயிராய் ஒருத்தி இருந்தனள் ..

அவள் கரம் பிடித்தே உன் வாழ்வு ஒளி மயம் ஆகக் கண்டாய்

அவளை மணந்தனால்
சபையில் புகழ் ஓங்கி வளரக்கண்டாய் .

உத்தமி அவள் ..

உன் உயிராய் வேறு உடல் தாங்கி நிற்கின்றாள் ..

உள்ளம் நிறைய திருவாய் உறைகின்றாள் ...

இனியும் குற்றம் காணாதே ராமா ...

என்றும் அவள் இருக்க உனக்கு இணை ஏது ஈடேது இனி ராமா ?

உண்மை தாயே ...

ஒன்றுரைத்தாய் நன்றுரைத்தாய்...

ஓர் உயிர் ஈர் உடல் வாழும் இங்கே ...

ஒரே நாமம் அதில் வாழும் இரு நாமங்கள் இங்கே ...

*ராமா* என்பதில் *மா* என ஸ்ரீ மாதா அவளும் உண்டு நாமம் அதில் ...

நன்றி சொல்வேன் தாயே ..

எங்கள் இருவருக்கும் ஒரே தாயான உன்னை 🙏

அகம் குளிர்ந்தாள் திரிசடை ..

அந்த திரிசடையான் போல் தெரிந்தாள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரராய்

அன்னையே உன்னையே பணிவர் காஞ்சி தனில் காமாக்ஷி எனும் நாமம் தனில் ...

அவ்யாஜ கருணா மூர்த்திக்கும் குருவாய் தாயாய் இனியே....

வரதனாய் அங்கிருப்பேன்

உன் மடிதனில் குமரனாய் கண் அயர்வேன் 👍👍👍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 270* 🙏🙏🙏started on 7th Oct 2021

*91 .. குல சங்கேத பாலினி*
ravi said…
லௌகிக வாழ்க்கையின் விஷயங்களுக்கே ஆசிரியர் சொல்லித்தருகிற 'ஸ்பெஷல் டெக்னிக்' நுட்பங்களும், பயிற்சியால் கிட்டுகிற நுணுக்கங்களும் முக்கியம் என்றால், ஆன்மிக வாழ்க்கைக்கு அது எவ்வளவு முக்கியம்!

அதனால்தான், இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் குருமுகமான உபதேசம் வழியாகப் பெற வேண்டும் என்றார்கள்.

பாணி, டெக்னிக், நுட்பம், நுணுக்கம், உள்பொதிந்த அழகு என்றெல்லாம் சொல்கிறோமே, அந்த பாணி, டெக்னிக் போன்றவைதாம் *சங்கேதங்கள்* - *ரகசியங்கள்* .

சாவியைக் கண்டுபிடித்துவிட்டால், பூட்டைத் திறப்பது சுலபம் என்பதுபோல்,

இத்தகைய சங்கேதங்களைக் கண்டுவிட்டால், குண்டலினியை எழுப்பி ஆனந்தம் பெறலாம்.

சாத்திரங்கள், தர்ம நூல்கள், ஆகமங்கள், பூஜா விதிகள் போன்றவற்றில், குண்டலினிக்கான குறிப்புகள் உண்டு🙏
ravi said…
இவற்றை முறையாகவும், சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்புகளின் சங்கேதம் தெரிந்தால்தான், சரியாக புரிந்து கொள்ள முடியும்.

இல்லையென்றால், தவறாகத்தான் புரிந்து கொள்வோம்.

சங்கேதம் என்பதற்கு இன்னும் ஆழமான பொருளும் உண்டு.

தனக்கும் தன்னுடைய பக்தனான சாதகனுக்கு மட்டும் புரியும்படியாக ரகசியமாக உறைபவள்.

பக்தனுக்கும் உள்ள உறவு, அவர்களின் தனிப்பட்ட உறவுதானே.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 270* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*70 தாமரைக் கொடிகள் போன்ற நான்கு கைகள்*👏👏👏
ravi said…
*சிவாபராதத்துக்குச்சாந்தி* 🙏🙏🙏

ம்ருணாலீ ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்

சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம மதனா தந்தகரிபோ:

சதுர்ணாம் ஶீர்ஷாணாம் ஸம மபய ஹஸ்தார்ப்பணதியா 70
ravi said…
*அம்மா* !,

ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால்

பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து,

உன்னுடைய *நான்கு* கைகளால்

அவரது மீதியிருக்கும் *4* தலைகளுக்கும்

ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று

தன்னுடைய *நான்கு* முகங்களால்

உனது *நான்கு* கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்.


இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது.👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
எண்ணிய முடிதல் வேண்டும்,

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெறிந்தநல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
ravi said…
உள்ளம் குளிராதோ?-

பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ?-

அம்மா!

பக்திக்
கண்ணீர் பெருகாதோ?

வெள்ளைக் கருணையிலே

இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே!🙏🙏🙏
ravi said…
அனைவருக்கும் என் பணிவான வணக்கம் .. நதிகள் பல என் எழுத்துக்களில் எப்படியோ புகுந்து பிரவாகம் கொண்டு ஓடுகிறது ... எல்லாமே தாய் என்பதால் எழுதுவதில் இன்னும் ஆர்வம் பிறக்கின்றது ..

இங்கு எல்லோரையும் நதிகள் போல் இணைத்தால் எப்படி இருக்கும் ..

சங்கமம் ஆவது நடேச ஐயர் whatsapp group இல் ... ஒரு வளமான கற்பனை இதோ ... யார் பெயராவது விட்டிருந்தால் மன்னிக்கவும் .. Not intentional but aging ... 🙏
ravi said…
*சரஸ்வதி* நதியும் *பவானி* நதியும் *கிரி* வலம் வரும் திரி இதுவன்றோ...

இங்கே *வசந்தம்* பிறப்பதில் அதிசயம் உண்டோ ... ??💐

வசந்தம் வீச *ஜயம்* மத்தளம் கொட்டினால் *சித்திரையும்* காணுமே விஜயம் தனை

படைக்கும் பதிவுகள் வெற்றி தரும் *விஜி* யாய் இங்கே

சொல்லும் வார்த்தைகள் இங்கே *காயத்திரி* ஜபம் அன்றோ

*ஆனந்தம்* கொள்ளும் *கிருஷ்ணனும்*

*கோபியர்* கொஞ்சும் *கோபாலனும்* *சீதரமாய்* *ராதையுடன்* பவனி வரும் துவாரகை இதுவன்றோ ... 💐

ஏது இல்லை இங்கே ...?

*சந்திரசேகர்* பூஜை தினம் உண்டு ...

ஆனந்த நடம் புரியும் *நடராஜன்* அருள் உண்டு ...

*செல்லமாய்* கொஞ்ச *அம்மை* உண்டு ...

*உமாவும்* உமையொரு பாகனாய் வரும் நிகழ்வும் உண்டு ...

*சந்திரன்* சடையில் அணியும் அழகுண்டு

*சுவாமிநாதன்* அருள் உண்டு இங்கே

அவனே என்றும் இங்கே *குமரனாய்*

காஞ்சி வாழ் கருணைக்கடலாய் இங்கு வரும் வரமும் உண்டு ....

மீன் போல் துள்ளும் *மீனாட்சி* அருள் இருக்க

*வேலாயுதம்* வேண்டியதை அருள

*பரமேஸ்வரன்* பதம் சென்னி தனில் பதிய

அன்னை *ராஜராஜேஸ்வரியாய்*
புன்னகை பூக்க

*ரமாவாய்* அவள் புன்னகையில் சிந்தும் மதுரம் அதில் நான் மயங்கி விழ

இங்கே கிடைக்கும் *சாந்தியே* உன் வரம் என்றே கடலலைகள் கொப்பளிக்க ...

கண்டேன் என்றும் கண் கொள்ளா காட்சி ...

*ராமனுக்கு ஜே* என்றே சொன்னேன் *ராமச்சந்திரன்* சிரித்தான் ..

*நீல* நிறம் கொண்டவனே ஏன் சிரித்தாய் என்றேன் ..

*கிரி* வலம் வரும் *கணேஷின்* அருள் வெள்ளம் இருக்க

அணை போட்டு ஓடுகிறாய் என்றே சிரித்தேன் என்றான் .

திறக்கட்டும் மடை .. தெறிக்கட்டும் உன் எழுத்துக்கள் என்றான் ...

பாராட்டும் குணம் இருந்தால் பாரில் தேவை இல்லை ஒரு தெய்வம் என்றான்

சிலிர்த்துப்போனேன்.

பிறரை இன்னும் வாழ்த்த பிழை இல்லா எழுத்துக்களை தேடுகிறேன் ...

🙏🙏👍👍👍🙂🙂🙂
Chellammal said…
அய்யனே கற்பனைக் கவிஞனே உன் போல் கவிபுனையும். ஞானம் கம்பனையும் மிஞ்சிய கற்பனை ஊற்றை நான் கண்டதில்லை குழூவே நதியாய் ரவி எனும் அழகிய சூரியனாய். ஒளி வெள்ளம் வீச பரிசல் நாயகனாய் இன்ப ஆற்றில் இழுத்துச் சென்று விட்டாயே !!!!!!!!!!! !!!!! அதிகம் பாராட்ட வார்த்தைகளில்லையே. அகராதியில் !!!!!!! தேடுகிறேன் !!!!!! தேடுகிறேன்!!!!!!!!!!!!!
Ramani said…
As for as we are concerned, no CA come nearer to JRK in his overall knowledge...🙏🙏
ravi said…
[01/07, 09:17] Metro Ad Vipul: அற்புதம்🙏🏻
[01/07, 09:38] Metro Kowsalya: அருமை அருமை 🙏🙏
ravi said…
Puri Ratha Yatra

Ratha Yatra is a huge Hindu festival and it is organized each year at famous Jagannatha temple in Puri, Odisha, India. Ratha Yatra day is decided based on Hindu Lunar calendar and it is fixed on Dwitiya Tithi during Shukla Paksha of Ashada month. Currently it falls in month of June or July in Gregorian calendar.

Lord Jagannatha is worshipped primarily in city of Puri at famous Jagannatha temple. Lord Jagannatha is considered a form of Lord Vishnu and also revered by the followers of Vaishnavism. Jagannatha literally means Lord of the Universe. Jagannatha temple is one of the four Hindu pilgrimage centers known as Char Dham pilgrimages that a Hindu is expected to make in one's lifetime. Lord Jagannatha is worshipped along with his brother Balabhadra and his sister Devi Subhadra.

Ratha Yatra commemorates Lord Jagannatha's annual visit to Gundicha (गुंडीचा) Mata temple. It is said that to honor the devotion of Queen Gundicha, wife of the legendary King Indradyumna (इन्द्रद्युमना) who built the Puri Jagannatha temple, the Lord Jagannatha, Balabhadra and Subhadra leave their regular abode in the main temple and spend a few days in this temple built by Gundicha in their honor.

One day before of Ratha Yatra, Gundicha Temple is cleaned by devotees of Lord Jagannatha. The ritual of cleaning Gundicha temple is known as Gundicha Marjana (मार्जन) and is held one day before Ratha Yatra.

The fourth day after Ratha Yatra is celebrated as Hera Panchami (हेरा पञ्चमी) when Goddess Lakshmi, the consort of Lord Jagannatha, visits Gundicha temple in search of Lord Jagannatha. Hera Panchami should not be confused with Panchami Tithi as Hera Panchami is celebrated on the fourth day after Ratha Yatra and usually observed on Shashthi Tithi.

After resting eight days in Gundicha temple Lord Jagannatha returns to his main abode. This day is known as Bahuda (बहुदा) Yatra or Return Yatra and is observed on the eighth day after Ratha Yatra on Dashami Tithi (if we do not have any skipped or leaped Tithi during Lords' stay in Gundicha temple). During Bahuda Yatra Lord makes a short stoppage at Mausi Maa temple which is dedicated to Goddess Ardhashini.

It should be noted that Lord Jagannatha returns to his main abode just before Devshayani Ekadashi when Lord Jagannatha goes to sleep for four months. Ratha Yatra is also known as Puri Car Festival among foreign visitors.

It should be noted that rituals of Ratha Yatra start much ahead of Ratha Yatra day. Approximately 18 days before of Ratha Yatra Lord Jagannatha, his brother Balabhadra and his sister Devi Subhadra are given famous ceremonial bath which is known as Snana Yatra. Snana Yatra day is observed on Purnima Tithi in Jyeshtha month which is popularly known as Jyestha Purnima.
ravi said…
பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை! சிலிர்க்க வைக்கும் வரலாறு..!!.

(01/07/22 இன்று ரத யாத்திரை)

ஒடிசா மாநிலம், பூரி கடற்கரை நகரில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் நடைபெறும் ஜெகந்நாதர் ரத யாத்திரை, உலகப் பிரசித்திப் பெற்றதாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பூரி ஜெகநாதர் திருவிழாவில்., 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு., மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும்., 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு., பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும்., 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு., கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வார்கள்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக., வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும்., 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது .

ஜெகந்நாதர்., அவரது சகோதரர் பாலபத்திரர்., சகோதரி சுபத்திரா ஆகியோர் வெவ்வேறு ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..!!.

சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வர்.

தொடர்ந்து ரதங்கள் நிற்கும் இடத்தை தங்க துடைப்பத்தால் சுத்தப்படுத்திய பின் மலர்கள் தூவப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு., பின்னர் ரதங்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

ஸ்தல வரலாறு..!!.

பூரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார்.
ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது.
அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை.

அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை.

அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகநாதர் பலராமன் சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்..!!.
ravi said…
https://chat.whatsapp.com/GJwh6EdSqfx0qZpF7rxwmj

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐவகை வகை நமஸ்காரங்கள்‌ பற்றிய பதிவுகள் :*

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும். அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

*ஓரங்க நமஸ்காரம்:*

வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

*மூன்று அங்க நமஸ்காரம்:*

வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்.

*பஞ்ச அங்க நமஸ்காரம்:*

வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.

*அஷ்டாங்க நமஸ்காரம்:*

ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

*சாஷ்டாங்க நமஸ்காரம்:*

வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழங்கால்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

செயல் ஆவது யாதொன்றும் இல்லை, எல்லாம் உன் செயல், என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அநேக சிவஸ்தலங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளுக்குக் ‘காமகோட்டம்’ என்ற பெயர் இருப்பதாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. சோழர் காலத்திலிருந்து பல அரசர்கள் இந்த சந்நிதிகளுக்குத் திருப்பணி செய்ததை சிலர் சாஸனமாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவிநாசி, விஜயமங்கலம், திருவொற்றியூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருப்பழனம், கோயிலாடி மாதிரி பல க்ஷேத்திரங்களில் உள்ள அம்பாள் சந்நிதிக் கல்வெட்டுகளில், அந்தந்த அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, “திருக்காமக் கொட்டத்து நாச்சியார்”, “திருக்காமக் கொட்டமுடைய அழகமர் மங்கையார்”, “திருக்காமக் கொட்டமுடைய அகிலநாயகியார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது.
ravi said…
அந்தக் காலத்தில் குறிலைக் குறிக்கும் ஒற்றைக் கொம்பு, நெடிலைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு என்ற வித்தியாசமே கிடையாது. இதனால்தான் ‘காம கோட்டம்’ ‘காம கொட்டம்’ என்று இருக்கிறது. சிதம்பரத்திலும் இப்படி ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. அதோடு ஸம்ஸ்கிருதத்திலும், “காமகோஷ்ட ஸ்திதாயா;” என்று அங்குள்ள சிவ காமேசுவரியைச் சொல்லும் சாஸனம் இருக்கிறது.
ravi said…
எல்லா சக்தி கோட்டங்களிலும் இருந்த ஜீவகளை காஞ்சிபுரத்திற்கு இழுக்கப்பட்டு மறுபடியும் அங்கிருந்து அந்தந்த க்ஷேத்திரத்திற்கு அனுப்பப்பட்டதாகப் புராணம் சொல்லுகிறதல்லவா? அதாவது இப்போது நாம் எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அநுபவிக்கிற சாந்நித்தியமானது ஒரு காலத்தில் காஞ்சி காமாக்ஷியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும். இப்படிக் காமக்கோட்டத்திலிருந்தே எல்லா ஸ்தலங்களுக்கும் ஜீவகளை வந்ததால்தான், இதர ஸ்தலங்களிலுள்ள அம்பாள் சந்நிதிகளையும் “காமகோட்டம்” என்றே குறிப்பிடுகிற வழக்கம் வந்திருக்க வேண்டும்.
இன்று ஆலங்குடி என்கிற, பழங்காலத் திருஇரும்பூளையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரத்தில், “கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி” என்கிறார். முன்பே சொன்னதுபோல் குறில் – நெடில் கொம்பு வித்தியாசத்தை நினைத்தால், இங்கே காமகோடி என்பது ‘காமக்கோடி’ அல்லது ‘காமகோடி’ என்றேயிருக்கலாம்.
ravi said…
இன்று ஆலங்குடி என்கிற, பழங்காலத் திருஇரும்பூளையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரத்தில், “கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி” என்கிறார். முன்பே சொன்னதுபோல் குறில் – நெடில் கொம்பு வித்தியாசத்தை நினைத்தால், இங்கே காமகோடி என்பது ‘காமக்கோடி’ அல்லது ‘காமகோடி’ என்றேயிருக்கலாம். ஆலங்குடி அம்பாளை ‘காமகோடி’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, அது ஏதோ அந்த க்ஷேத்திரத்துக்கே சுபாவமாக ஏற்பட்ட பேர் அல்ல என்று தெளிவு படுத்துகிற மாதிரி, ‘கச்சிப்பொதி’ என்று காஞ்சீபுரத்தைப் பிரஸ்தாபிக்கிறார் ஞானசம்பந்தர். அப்பர் ஸ்வாமிகள் திருவதிகைத் திருத்தாண்டகத்தில் “கொழும் பவளச்செங்கனி வாய்க்காமக் கோட்டி” என்கிறார். இதிலிருந்தும், மற்ற க்ஷேத்திரங்களிலும் கூட காமாக்ஷியின் சக்தியே அருள்பாலித்தது என்று ஆகிறது. காம கொட்ட வாஸினி என்பதால் அப்பர், காமக்கோட்டி என்றார் போலிருக்கிறது.
‘காமகோடி’ வேறு. ‘காமக்கோட்டி’ வேறு. காமாக்ஷியின் இருப்பிடமான கோட்டம் காமகோட்டம். கர்மங்கள் எல்லாம் முடிந்து போகிற கோடியாக, அதாவது ஞான ஸ்வரூபமாக இருப்பது காமகோடி. காமாக்ஷியேதான் காமகோடி. மூர்த்தியாகச் சொல்லுகிறபோது காமாக்ஷி. பீடமாகச் சொல்லும்போது காமகோடி. காமாக்ஷி சந்நிதியில் காமகோடி பீடம் இருக்கிறது.
ravi said…
பாகவதத்தில் பரசுராமனின் தீர்த்த யாத்தரையின்போது, அவர் காஞ்சிபுரத்திற்கு வந்ததைக் கூறுகையில், ‘காமகோடி புரியான காஞ்சிக்கு’ என்றே சொல்லியிருக்கிறது. (காமகோடி புரீம் காஞ்சீம்) காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்தாலும், அம்பாளின் காமகோடி புரியாகவே அது ஆதி காலத்திலிருந்து விசேஷிக்கப்பட்டிருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.
இதர க்ஷேத்திரங்களில் அம்பாள் சாந்நித்தியத்தை மறுபடியும் ஏற்படுத்திய காமாக்ஷி மன்மதன் வெற்றிக்குக் காஞ்சியில் மட்டும் சாசுவதமான அடையாளம் இருக்க வேண்டும் என்று கருணை கொண்டாள். அதனால் காஞ்சீபுரத்தில் மட்டும் எந்தச் சிவாலயத்திலும் அம்பாள் சந்நிதி இருக்கலாகாது என்றும், மன்மதன் சிவனை ஜயித்ததற்கு அடையாளமாகக் காஞ்சிக்கு ‘சிவஜித்’ க்ஷேத்திரம் என்று பெயர் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டாள். இப்படிச் செய்தால், ஏன் இந்தக் காஞ்சி மண்டலத்தில் ஒரு சிவன் கோவிலில்கூட அம்பாள் சந்நிதி இல்லை? இதற்கு ஏன் சிவஜித் க்ஷேத்திரம் என்று பெயர் இருக்கிறது? என்று எல்லோரும் யோசிப்பார்கள் அல்லவா? அப்போது புராணத்தை, அல்லது புராணம் பார்த்தவர்களைக் கேட்பார்கள். உடனே இது மன்மதனுக்கு அம்பாள் தந்த வரப்பிரசாதம் என்று பதில் தெரியும். அதாவது மன்மதன் பிரார்த்தித்தப்படி அவனுடைய வெற்றி என்றென்றும் லோகத்தில் விளங்கும். இப்படித் தீர்மானம் பண்ணி, அபச்சாரம் பண்ணின மன்மதனுக்கும் அநுக்கிரஹம் செய்தாள் அம்பாள். இன்றைக்குக்கூட காஞ்சியில் எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும், காமாக்ஷீ கோவிலைத் தவிர வேறு அம்பாள் சந்நிதியே கிடையாது.
ravi said…
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் பாடும்போது
வாரிருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள்,
மதுவிம்மு கொன்றைத்
தாரிரும் தடமார்பு நீங்காக் தையலாள்,
உலகுய்யவைத்த
காரிரும்பொழில் கச்சிமூதூர்க் காமகோட்டம்
உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே,
ஓணகாந்தன் தளியுளீரே.
என்கிறார். இந்தத் ‘தளி’ அல்லது கோயிலுக்குத் தனியாக அம்பாள் இல்லாததால்தான், ‘உலகுக்கெல்லாம் சோறு போடுகிற காம கோட்டத்துக் காமாக்ஷி இருக்க, நீ ஏன் பிக்ஷாடனனாகக் கப்பரையோடு திரிகிறாய்?’ என்று பரமேசுவரனைக் கேட்கிறார். காமாக்ஷி ஞானப் பிரதமான தெய்வம் மட்டுமில்லை. ஞானப்பால் தருவதோடு அன்ன பூர்ணேசுவரியாக உலகுக்கெல்லாம் சோறும் போடுகிறாள். இரு நாழி நெல்லைக் கொண்டு அவள் முப்பத்திரெண்டு அறங்களையும் ஆற்றினாள் என்று தமிழ் நூல்கள் சொல்லும். அவள் நமக்குச் சோறு போடுவாள். நம் காமனைகளை எல்லாம் கடாக்ஷத்தால் நிறைவேற்றித் தருவாள். “காமாக்ஷி” என்றாலே நம் ஆசைகளைத் தன் கடாக்ஷத்தால் நிறைவேற்றுபவள் என்றும் ஓர் அர்த்தமாகும்.
காமனுக்கு அநுக்கிரஹம் செய்து, பரமேசுவரனைக் காமேசுவரனாக்கிய அந்த சிவகாம சுந்தரியைத் தியானித்தால், நம்முடைய ஆசைகள், காமங்கள் எல்லாமே கடைசியில் அழிந்து போகும். அவளுடைய கடாக்ஷம் கிடைத்துவிட்டால் அதன்பின் எவ்வளவு ஆசையை உண்டு பண்ணக்கூடிய வஸ்துவும், நமக்கு ஆசை உண்டாக்காது. காமம், குரோதம், லோபம் (பணத்தாசை), மோகம், மதம், மாத்சரியம் (பொறாமை) ஆகிய துர்குணங்களில் ஒன்றும் இல்லாமல் நம் சித்தம் பரிசுத்தம் ஆவதற்கு அவளையே பிரார்த்திக்க வேண்டும்.
ravi said…
https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆதி திருவரங்கம் பற்றிய பதிவுகள் :*

வைணவ சமயத்தினரின் வழிபாட்டு தெய்வமாக இருக்கும், திருமாலுக்கு 108 திவ்ய தேசங்கள் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. ஆனாலும் அதைவிடவும் சிறப்பு வாய்ந்த, பழமையான ஒரு திருக்கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தின் போதே நிறுவப்பட்ட கோவிலாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இதனை பழங்காலத்தில் உத்தரங்கம் அல்லது ஆதிரங்கம் என்று அழைத்துள்ளனர். தற்போது இது ‘ஆதி திருவரங்கம்’ என்று வழங்கப் படுகிறது.

*தல வரலாறு*

அசுர வம்சாவளியைச் சேர்ந்த சோமுகன் என்ற அரக்கன் கடுமையான தவம் செய்ததன் மூலம் அழியாமையையும், பல ஏற்றங்களையும் பெற்றான். ஆணவத்தையும், அசுரர்களைப் போன்ற மிருகத்தனத்தையும் கொண்டிருந்தான்.

பூமியையும், வானத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முனிவர்களையும், தேவர்களையும் கீழ்ப் படுத்தி சேவிக்கச் செய்ய விரும்பினான். பூமியையும் வானத்தையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி, தனக்குக் கீழ்ப்படியும் படி கட்டளையிட்டான்.

அவன் பிரம்மாவையும் சிறையில் அடைத்து, அவரிட மிருந்து வேத மந்திரங்களை பறிமுதல் செய்தான். பிரம்மா, தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஸ்ரீ நாராயணன் (விஷ்ணு) அவர்களிடம் சென்று சோமுகனைக் கட்டுப்படுத்தி தங் களைப் பாதுகாக்கும்படி பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ நாராயணன் சோமுகனுடன் சண்டையிடச் சென்றார். அவர் களுக்கு இடையே பயங்கர யுத்தம் வெடித்தது. சோமுகன் தனது மந்திர தந்திரங்கள் அனைத்தையும் இழந்து சோர்வடைந்தான்.

இனி அங்கேயே தங்கியிருந்தால் தன்னை ஸ்ரீநாராயணன் கொன்று விடுவாா் என்று அவன் அஞ்சினான். கடலுக்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டான். ஸ்ரீநாராயணன் ‘மத்ஸ்யா’ அவதாரத்தை எடுத்து சோமுகனை அடக்கி வேதங்களை மீட்டெடுத்தார்.

தேவர்களும் முனிவர்களும் உற்சாகமடைந்து ஸ்ரீ நாராயணனை ஆதி திருவரங்கத்தில் வணங்கினர். இந்த கோவிலில் புரட்டாசி, பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி போன்றவை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

*அமைவிடம்*

திருவண்ணாமலைக்கும், மணலூர்பேட்டிற்கும் இடையில் ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*சேவல் விருத்தம் 4*🐓🐓🐓
ravi said…
அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல
றிக் கொட்டமிட்ட் அமரிடும்

அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளைக் கொத்தியே

பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே

பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்

பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி
பொற்றைக் கறுத் அயில்விடும்

புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்

செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினை

தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே)
ravi said…
பகைவர்கள் அஞ்சும் படி, பெருத்த சப்தம் செய்து, விரட்டி, கூக்கரலிட்டு, ஆர்ப்பாட்டத்துடன், போர் செய்யும், அற்பமான சிறு தேவதைகளுக்கு படைத்திருக்கும்,

பலி வரிசைகளில், வெட்டுக்கள் பட்டு, அந்தச் சிறு தேவதைகள் கடித்துப் போட்டிருந்த, இலைகள் தழைகள் போன்றவைகளை, மூக்கால் கொத்தி, துண்டு துண்டாக பிய்த்தும்,

நான்கு பக்கமும் தூக்கி வீசி, எட்டு திசைகளிலும் அடைத்து பலி போடுவது போல் பெரும் கிளர்ச்சியுடன் வலிமை பெற்று,

ஒளி வீசும் தனது சிறகுகளைத் தட்டிக் கொண்டு, மிகுந்த லட்சணத்துடன் கொக்கரித்துக் கொண்டு வரும் (அது எது என வினாவினால்)

பொய்யும் கற்பனைகளும் நிறைந்த புறச் சமயங்கள், நடுங்கி பின் வாங்கவும்,

அலை வீசும் கடல் மீதும், அவைகள் கருகிக் போகும்படி, ஒளி வீசும் வேலாயுதத்தை செலுத்தியவன்,

அன்பும் அறிவும் நிறம்பப் பெற்றவன்,

சகல கலைகளிலும் கடலென திறமை மிக்கவன்,

புகழ் மிக்க செட்டியாகிய சுப்ரமணியக் கடவுள், வெட்சி மாலையை அணிந்தவன்,

நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்துள்ளவன்,

மொழிக்கு மொழி இனிமை மிக்க, இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்று தமிழையும், அறிந்து கொள்வதற்காக வந்த பொதிகை மலையில் வாழும் முனி சிரேஷ்டரான அகத்தியனுக்கு, உபதேசம் செய்தவருமாகிய குமாரக் கடவுளின், கொடியில் உள்ள சேவலே தான் அது.🐓
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 270*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்

किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
அடுத்த ஸ்லோகம் மேலும் பரமேஸ்வரனோட கல்யாண குணங்கள் எல்லாம் நினைச்சுப் பார்த்து, “உன்கிட்ட ஏதோ சிலபேர் வேண்டிக்கறா போலிருக்கு. என்ன வேண்டிக்க முடியும் நான்!”னு வியந்து ஒரு ஸ்லோகம் சொல்றார்.

योगक्षेमधुरंधरस्य सकलश्रेयःप्रदोद्योगिनो

दृष्टादृष्टमतोपदेशकृतिनो बाह्यान्तरव्यापिनः ।

सर्वज्ञस्य दयाकरस्य भवतः किं वेदितव्यं मया

शंभो त्वं परमान्तरङ्ग इति मे चित्ते स्मराम्यन्वहम् ॥ ३५॥

யோக³க்ஷேமது⁴ரந்த⁴ரஸ்ய ஸகலஶ்ரேய:ப்ரதோ³த்³யோகி³நோ

த்³ருʼஷ்டாத்³ருʼஷ்டமதோபதே³ஶக்ருʼதிநோ பா³ஹ்யாந்தரவ்யாபிந: ।

ஸர்வஜ்ஞஸ்ய த³யாகரஸ்ய ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா

ஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராம்யந்வஹம் ॥ 35॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

பரமேஸ்வரா! நீ ‘ *ஸர்வக்ஞ* :’ – உனக்கே எல்லாம் தெரியும்.

உன் கிட்ட ஒண்ணும் நான் சொல்லிக்க வேண்டியதில்லை
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 269* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ *_பூகர்ப்போ_*
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
*72. பூகர்பாய நமஹ (Bhoograbhaaya namaha)*
ravi said…
மதுரையை ஆண்ட ராஜசேகரப் பாண்டியன், தீவிர சிவபக்தன்.

அவன் பரதநாட்டியக் கலையைத் தவிர மீதமுள்ள 63 கலைகளிலும்
தேர்ச்சி பெற்று விளங்கினான்.

இறுதியில் பரதக்கலையையும் கற்க முற்பட்டபோது, அவனுக்குக் காலில் கடும் வலி உண்டானது.

“ஒருநாள் பரதம் ஆடும் நமக்கே இவ்வளவு வலி உண்டாகிறதே.

நடராஜர் எப்போதும் இடக்காலை மேலே தூக்கியபடியும்,
வலக்காலைக் கீழே ஊன்றியபடியும் நாட்டியம் ஆடிக்கொண்டே இருக்கிறாரே, அவருக்கு எவ்வளவு வலிக்கும்!” என்று எண்ணினான்
ravi said…
நின்றதாள் எடுத்து வீசி எடுத்த தாள் நிலம்மீது ஊன்றி
இன்றுநான் காண மாறி ஆடி என் வருத்தமெல்லாம்
பொன்று மாசெய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்றனான் சுரிகை வாள்மேல் குப்புற வீழ்வேன் என்னா”

என வேண்டினான்.

அவனுடைய பக்தியை மெச்சிய சிவனும், இடக்காலைக் கீழே ஊன்றி, வலக்காலை மேலே தூக்கி மாற்றி
ஆடிக் காட்டினார் என்ற வரலாறு போலவே வைணவத்திலும் ஒரு வரலாறு உண்டு.🙏🙏🙏
ravi said…
[01/07, 17:07] Kumar Uma: அற்புத கவிதை
[01/07, 17:09] Kumar Uma: Ravi’s trial of integrating all most all ladies names in our family is really a work to be given a big hand from all of us. Well done Ravi👏👏👏👌👌👌
Chitra sridhar said…
மிக அருமை.👏🏻👏🏻👏🏻👏🏻
Meena said…
Oh wow Anna ! Amazing!! Excellently written. Hats off to you.

And thanks for always keeping this group alive. I may not be contributing much but enjoy reading all the messages.
ravi said…
[01/07, 17:15] Chitra Sridhar: மிக அருமை.👏🏻👏🏻👏🏻👏🏻
[01/07, 19:43] Sib viji athimber: Arpudam
[01/07, 19:44] Sib viji athimber: Vijiakka
[02/07, 00:29] Sib Magesh: Really a very impressive masterpiece Ravi Anna..
[02/07, 00:35] Chandra US: Super master piece 👌
[02/07, 00:37] Chandra US: Thank you for keeping the group lively and active. God bless you all
ravi said…
🌹🌺 A simple story to illustrate that one should not hesitate to welcome and entertain a guest whether friend or foe 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹It is our Vedic command that even if we welcome an enemy into our home, we should do it with respect.

🌺 We should treat him well so that he does not get the impression that we are in his enemy's house. When Lord Sri Krishna along with Arjuna and Bhima approached King Jarasandan of Magadha, Jarasandan received the esteemed enemies with royal honor.

🌺It was a fight with Bheeman Jaraschandan who was the enemy guest. However, they were given a warm welcome. At night they used to sit together like friends and guests.

🌺They fought a life-or-death situation during the day. That is the accessory rule.

🌺 Even if one is extremely poor, one should give his guest at least some water to drink and kind words.

🌺So Srimad Bhagavatam says that we should not hesitate to welcome and entertain a guest whether he is a friend or an enemy, and we should not hesitate to welcome and entertain our guest even if he is an enemy.

🌺 Song 🌹
Hare Krishna Hare Krishna

Krishna Krishna Hare Hare

Hare Rama, Hare Rama,

Rama Rama, Hare Hare🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த தயக்கம் கூடாது - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது நம் வேதக் கட்டளையாகும்.

🌺எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான்.

🌺எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம்.

🌺பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும்.

🌺ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி.

🌺எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த எந்த தயக்கம் கூடாது என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, நாமும் நம்முடைய விருந்தினர் எதிரியாக இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்தவித தயக்கம் காட்டாது உபசரிப்போம்

🌺பாடல் 🌹
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,

ராம ராம, ஹரே ஹரே🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
42
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

காமாக்ஷி காஷ்ணர்யமபி ஸந்ததமஞ்ஜனம் ச
பிப்ரன் நிஸர்க தரலோ‌ऽபி பவத்கடாக்ஷ: |
வைமல்யமன்வஹமனஞ்ஜனதாம் ச பூய:
ஸ்தைர்யம் ச பக்த ஹ்ருதயாய கதம் ததாதி ||42||

ஹே காமாக்ஷி! உன்னுடைய கடாக்ஷமானது இயல்பாக கருநிறத்தோடும், கண்மையை தரித்துக்கொண்டும்,இயற்கையாகவே சஞ்சலமாய் இருக்கும் தன்மை கொண்டது! எனினும் உன்னிடம் பக்தி செலுத்தும் அன்பர்களின் இதயங்களுக்கு நித்யம் களங்கமிற்ற தன்மையையும், வெளுமையையும், ஸ்திரமாயிருக்கும் தன்மையை எப்படித் தருகிறது?
கடாக்ஷமானது தான் கார்ஷ்ண்யத்தோடு(கருப்பு) இருந்தாலும் பக்தர்களின் மனதில் கருப்பில்லாத (பாவமில்லாத) தன்மையை உருவாக்குகிறது. தான் அஞ்ஜனத்தைத் தரித்த போதிலும் பக்தர்களுடைய மனதை களங்கமில்லாததாக(வெளுமை) செய்கிறது. தான் சஞ்சலத்தன்மையோடு இருப்பினும் பக்தர்களுக்கு மனஉறுதியை தருகிறது. ஆகவே கடாக்ஷமானது தனக்கிருக்கும் குண விசேஷங்களுக்கு மாறான பலன்களை பக்தர்களுக்கு தருவதைக் கண்டு ஆச்ரியமடைகிறார்!
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
Sree Gurbyonamah
Maha periyava anugraham


*"அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,''* - பெரியவா

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்
குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள்.

ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, "வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா...'' என்றவர்,

அவரை நிறுத்தி, "அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,'' என்றார்.

அவரும் விசாரித்து வந்தார்.

"சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிட வில்லையாம்,'' என்றார்.

"ராமச்சந்திரா! வெளியே பூஜைக் கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு.

நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார்.

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை.

பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,'' என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப் பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை.

அவருக்கு கோபம் வந்து விட்டது.

"எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,'' என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார்.

அவர் அங்கிருந்து வந்து, "அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,'' என்றார்.

அய்யர் அலறாத குறை தான்.

"பெரியவா! மன்னிச்சுடுங்கோ'' என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.

*ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!*
*ஹர ஹர சங்கர*
*ஜய ஜய சங்கர*💐💐💐
ravi said…
*சங்கராம்ருதம் - 199*

இந்த சம்பவம் நடந்து சுமார் மூன்று வருஷங்கள் இருக்கும்.

எனக்கு நெருங்கிய நண்பர் வீட்டில் நடந்தது.

அவர்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தை , பிறந்து பல மாதங்கள் சென்றும், அசைவில்லாமல், திரும்பப் படுக்கவோ, குப்புறக் கவிழவோ இல்லாமல் இருந்து அனைவருக்கும் பெரும் மனக் கவலையைக் கொடுத்து வந்தது.

ஸதா இதே கவலை, பெரியவாளிடம் பிரார்த்தனை.

டாக்டர்கள் 2 வயதான பின் சோதனைகள் செய்து பார்க்கலாம்

ரொம்ப சின்னக் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள்.

அந்தத் தருணம் வந்து டாக்டரும் மரு நாள் டெஸ்ட் எடுக்க நேரமும் குறித்து விட்டார்கள்!

இதற்கிடையில் பெரியவா பாதுகை நியூஜெர்சி யில் மணிமண்டபத்தில் புறப்பட்டு ஒவ்வொரு state ஆக பயணம் வந்து கொண்டிருந்த சமயம்!

இவர்கள் கலிஃபோர்னியாவில் தங்கள் அகத்துக்கும் பெரியவா வருகையை எதிர்பார்த்து க்காத்திருந்தார்கள் டாக்டர் appointment க்கு முதல் நாள்!

பெரியவாளும் வந்தா எல்லா மனுஷாளும் புடை சூழ தூம் தாமாக!

வந்த மனுஷா நிறைய நேரம் பந்ததியா பூஜை, naevaedhyam ஹாரத்தி முடிஞ்சு புறப்படும்போது , குழந்தையின் அப்பாவை பாதுகையை சிரசில் தாங்கி வருமாறு சொல்ல, குழந்தை தானாக நடந்து வர முடியாததாக இருந்ததால்

பக்கத்தில் இருந்த நண்பரிடம் விட்டுச் சென்றார் பாதுகைகளைத் தாங்கியபடி!

திரும்ப வந்து, குழந்தையை எடுத்துக் கொண்டு, ஒர் இடத்தில் இறக்கி வைத்து விட்டு வந்த விருந்தினரை உபசரிக்க சென்றார்.

குழந்தையின் அம்மாவும் வந்தவர்களுக்கு விருந்து உபசாரம் செய்ய குழந்தை நடை பழக , எழுந்திருக்க ஒர் walker பக்கத்தில் இருந்தது!

ஒரு இயக்கமும் இல்லாமல்.இருந்த குழந்தை திடீரென தானாக எழுந்து, ஒரு பிடிமானமும் இல்லாமல் பூமியிலிருந்து கால் உயரக் கிளம்ப உற்சாகமாக க்குதித்து விழையாடியதைக் கண்டுப் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்!

பெரியவா வேறு, பாதுகை வேறல்ல! அவர் வந்து அந்தத் தூளி குழந்தையைக் குணப்படுத்தியது பெரியவா பக்தர்களுக்கு அதிசயம் இல்லை !

பக்தி என்றால் வெறும் பூஜை ஸ்லோகம்.மட்டும்.
அல்ல ,!

அவன் அருளால் அவன் தாளைச் சிக்கெனப் பிடிப்பது, எங்கு எழுந்தருள்வது இனியே என்று நம்மிடமே தக்க வைத்துக் கொள்ளும்.

பக்தி இருந்தால் எதுவும் சாதிக்கலாம் என்பதன் எடுத்துக் காட்டு இந்த சம்பவம்,!

எங்கும் நிறைந்த பரம்பிரம்மம்!!

கூடுதலான செய்தி இந்தக் குழந்தை பிறக்கும் முன்பே பெரியவா அதன் பாட்டியிடம் சொப்பனத்தில் வந்து, பெண் குழந்தை பிறக்கும், காமகோடி என்ற நாமகரணம் செய் என்ற உத்தரவுடன், பிடி குங்குமமும்.கொடுத்திருக்கிறார் !

காலையில் பார்த்தால் உள்ளங்கை முழுதும் சிவப்பாக குங்கும அடையாளத்துடன் காணப்பட்டது ஒரு அதிசயம் இல்லை பெரியவா விஷயத்தில் !!

அவர் உத்தரவின்படி காமகோடி என்ற நாமகரணம் சூட்டப் பட்டதாம் !!

பாக்யசாலிகள்!
ravi said…
ராமரும் அத்திரியும்*

*அத்தரி முனிவர் சொன்ன கீதை*💐💐💐

*அத்திரி* - அனுசூயா என்ற பத்தினியின் கணவர்.

ராமதரிசனம் பெற்றவர்.👌👌👌
ravi said…
ராமா* ...

எனையும் பார்க்க வந்தனையோ ஏழ் பிறப்பில் நான் செய்த பெரும் தவமோ ..

முன் தவம் செய்யாமல் முதல்வன் உன் தரிசனம் கிட்டுமோ ...

என் தவம் செய்யினும் உன் நாமம் சொல் தவம் ஒன்றிற்கு ஈடு ஆகுமோ ...

மாதவம் செய்த எவரும் மாதவன் உனையே வணங்க

உன் நாமம் தனை ஏந்தவும் எனை பணிந்தாயே ராமா ..?

என் கைமாறு செய்வேன் ?

ஏழை குடில் அதில் திருவுடன் வந்தாய் ..

மாளிகை ஆனதே என் வீடும் என் மன வீடும் ..

பொன் கொடுத்தே உனை பெறுவோர் உண்டோ .. ??

இந்த பெண் போல் வேறு மங்கை இனி உண்டோ ??

சிரித்தான் ராமன் ...

ஐயனே தந்தையின் இல்லம் வர தந்தி தேவை இல்லை ..

அனுசுயா
முதல் மூவருக்கும் அன்னை அன்றோ ...

அந்த மூவரில் நானும் ஒருவன் அன்றோ ..

நன்று சொன்னாய் ராமா ...

நலம் பல பெறுவாய் ..

சோதனைகள் வந்திடினும் வேதனைகள் நம்மை வேண்டினும் சாதனைகள் உண்டு என்றால்

அது உன் நாமம் செய்யும் உதவி அன்றோ ...

ஏகன் நீ அனேகன் நீ ...

ஏற்றுக்கொள்வாய் சீதனம் இதை சீதைக்கே !!!

சொன்னவள் அனுசுயா ...

சொல்லின் செல்வன் சொன்னான்

*அன்னையே* ...

சீதையின் புன்னகை ஒன்று போதுமே

பொன் நகை எதற்கு ...??

கானகம் இதில் வம்பு எதற்கு ...

திருடர்கள் பலர் இருக்க த்ருப்தி திருடு போகாதோ ..

சிரித்தாள் அனுசுயா ..

ராமா திருட்டு ஒரு முறை தான் நிகழும் பல முறை அல்ல ...

அவள் மனம் தனை என்றோ நீ திருடி விட்டாய் ...

திருடன் நீ இருக்கும் போது பிற கள்வர் பயம் ஏன் ?

கானகத்தில் நகை ஏன் தருகிறேன் என்றே நகைத்தாய்

எதற்கும் ஒரு காரணம் உண்டு ...

நாளை நடப்பதை யார் அறிவார் உனைத் தவிர ராமா ...

இந்த சீதனம் உதவி செய்யும் சீதைக்கு

ஒருவேளை அவள் புன்னகை கானகம் இதில் தொலைந்து போனால்...

*தாயே* ! அறிவேன் விதி அதுவே என்றால் என் விழியில் நிறைப்பேன் என்றும் அவளை ..

அவள் புன்னகை தோற்பதில்லை .. துஷ்ட்டர்களை துண்டிக்கும் ...

காஞ்சி முனியின் புன்னகை வாடுவதுண்டோ ..?

காமாக்ஷி அவள் புன்னகை தொலைந்து போனால் புவியும் தொலையும் அன்றோ ... ?

*அத்திரி* சொன்னார் ...

*ராமா*

எதுவும் தொலையாது ... உன் நாமம் சொல்வோர்க்கு ...

பொன்நகை கோடி தந்தாலும் பெண் இவள் கோடி அணிந்தாலும்

உன் நாமம் ஒன்று போதும் ... உலகம் என்றும் சுழலும் அதில் .

சூறைக்காற்று அடித்தாலும் வெந்தீயில் நனைந்தாலும்
வெள்ளம் அதில் அடித்து சென்றாலும்

உன் நாமம் ஒன்றே உயிர் காக்கும் ...

காத்திருக்கும் கடமை தனை காஞ்சி மகான் போல் காரூண்யம் கொண்டே முடித்து வா ராமா ..

உன் பெற்றோர்கள் நாங்கள் காத்திருக்கிறோம்

ஜய ராமனாய் சீதா ராமனாய் உனை பார்க்க ... ..

வருவேன் தாய் தந்தையே நிச்சயம் ...

சொன்னவன் ஓர் சொல் ராகவன் 🙏🙏🙏
ravi said…
**தாய் இருந்தால் துன்பம் இல்லை,*
*தந்தை இருந்தால் தவிப்பு இல்லை,*
*தங்கை இருந்தால் தனிமை இல்லை,*
*தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை,*

*பாட்டி இருந்தால் பயம் இல்லை,*
*அக்கா இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்,*
**அண்ணன் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு,*
*தம்பி இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்,*
*மனைவி இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்,*
*மகள் இருந்தால் மழலை பருவம் தெரியும்,*
*மகன் இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்,*
*மண்ணில் இறக்க போகிறோமே தவிர,*
*மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை,*
*வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்,*
*குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்,*
*அதை சொர்க்கமாக்குவதும்,* *நரகமாக்குவதும்*
*நம் கையில் தான் உள்ளது.*

அனைவருக்கும் இனிய குடும்ப தின வாழ்த்துக்கள்🙏🙏🙏
ravi said…
கபிணி அல்லது கபணி ஆறு தென்னிந்தியாவில் உள்ள 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது
ravi said…
*தாயே கபணி* ...

கேரள நாட்டு இளம் சிங்கமன்றோ நீ ...

உன் கர்ஜனையில் கசிந்து ஓடுவது உன் காரூண்யமோ...

இல்லை

நாங்கள் சிந்தும் ஆனந்த கண்ணீரோ ...

அறியேன் நான் ...

ஹரியையும் பார்த்ததில்லை

ஹரனையும் கண்டதில்லை ...

உன் முகம் காண்கையில்

அதில் மணிகண்டன் சிரிப்பதேன் ?

கண்ணன் அவன் உரல் கொண்டு தவழ்ந்து வர ,

காலடியில் உன் கொஞ்சும் சலங்கைகள் சங்கரா சங்கரா என்றே முழக்கமிட

காவேரி என கலந்தாயோ எங்கள் ரங்கன் திருப்பாதம் ?

எங்கள் அகிலாண்டேஸ்வரியே...

நீ ஓட எங்கள் நாளும் ஓடும்

நீ வாழ்த்த கோடி தலைமுறைகள் தலை நிமிர்ந்து வாழும் ... 🪷🪷🪷
ravi said…
*Arun , Vinu , A&S*

I always insist one can earn money a lot in his or her career but earning , owning , nurturing integrity is difficult .

There will be many temptations that might cross our road of journey but remaining firm and practice integrity is a god 's gift .

A spotless career for more than 3 decades against many temptations is a rare virtue .

Sukumar demonstrated .. so don't compromise for integrity .. we may earn less but with that earning we can buy lots of peace for sure . God bless 👍
Kousalya said…
ஆஹா.... அத்திரி யின் சொல்லை அற்புதமாய் அளித்தீர்கள்.... ராமா...ராமா என்னும் நாம பாராயணம்/ மனனம் செய்தால் அது ஒன்றே போதும்...காருண்ய கருணா மூர்த்தியே...சரணம் சரணம் சரணம் 🙏🙏👌👌🌷🌷🌹🌹
Kousalya said…
Om சக்தி - அழகன் பரிவாரத்துடன் அற்புதமான காட்சி.... சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் 🙏🙏🌹🌹🌷🌷🌼🌼
Sivaji said…
Arumai. 🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 49*
ravi said…
சாஸ்த்ரங்கள்ல யாரு அந்திம காலத்துல பகவானை ஸ்மரிக்கறானோ அவன் பகவானையே அடைவான் அப்படீன்னு சொல்லியிருக்கு.

குலசேகர ஆழ்வார் கடைசி காலத்துல நான் ஸ்மரிப்பேனான்னு எனக்கு எப்படி தெரியும். ??

அதனால இப்போலேருந்தே என் மனசை உன் பாதத் தாமரையில வெச்சுடு. அப்படீன்னு கேட்கறார்.

அந்த பிரார்த்தனை நிறைய மஹான்கள் பண்ணியிருக்கா.

மூக கவிக் கூட என் *மனமாகிய* கிளிக் குஞ்சு இந்த *புலனின்பகள்* என்ற நொய்யரிசியை தின்று களைச்சு கிடக்கு.

அதனால நீ உன்னுடைய *க்ருபைங்கிற* வலையைப் போட்டு

அந்த கிளியை பிடிச்சுண்டு வந்து உன்னுடைய *பாதம்ங்கிற* கூண்டுல அடைச்சு வெச்சுடுன்னு அழகான ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார் 🦜🦜🦜
Kousalya said…
என்ன ஒரு different thinking...மனமாகிய கிளியை கிருபை என்ற வலை வீசி உன் பாதம் என்ற கூண்டுல அடைக்கணுமாம் ....so that it cannot fly away...arpudham..🙏🙏👍👍😍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 271* 🙏🙏🙏started on 7th Oct 2021

*91 .. குல சங்கேத பாலினி*
ravi said…
சில வீடுகளில், சில என்ன, பல வீடுகளில் பார்க்கலாம்.

அந்தந்த வீட்டுக்கென்று சில சங்கேதச் சொற்கள் இருக்கும்.

கணவன் ஏதோ சொல்வார்; அவர் எதைச் சொல்கிறார் என்பது மனைவிக்குப் புரியும்.

குழந்தை சொல்கிற சொல்லுக்குத் தனியாக ஒரு அகராதியையே அம்மா வைத்திருப்பாள்.

இவ்வளவு என்ன, அலுவலகத்தில்கூட பார்க்கலாம். மேலதிகாரி - கீழே வேலை செய்பவர் உறவில்கூட காணலாம்.

திரைப்பட இயக்குநர் ஒருவர், வேலை மும்முரத்தின்போது, 'அதைக் கொண்டு வா, அது வேண்டும்' என்பாராரம்.

அது என்றால் என்ன என்பது அவருடைய துணை இயக்குநருக்குத் துல்லியமாகத் தெரியும்.

முதல் அது என்ன, இரண்டாவது அது என்ன என்று சரியாகத் தெரிந்தவர்தான், அவரிடம் துணை இயக்குநராகத் தொடர முடியும்.

அப்படியானால்.... அந்த உறவின் சங்கேதங்கள், அந்தந்த உறவுக்குத்தான் புரியும்.

அதுபோல அம்பாளுக்கும், பக்தனுக்கும் உள்ள சங்கேதங்களைப் பராமரிப்பவள்.🙏🙏🙏
Kousalya said…
Ohhh . குல சங்கேத பாலினி. அற்புதம்..🙏🙏👌👌🌷🌷🌹🌹
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 271* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*70 தாமரைக் கொடிகள் போன்ற நான்கு கைகள்*👏👏👏

*சிவாபராதத்துக்குச்சாந்தி* 🙏🙏🙏

ம்ருணாலீ ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்

சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம மதனா தந்தகரிபோ:

சதுர்ணாம் ஶீர்ஷாணாம் ஸம மபய ஹஸ்தார்ப்பணதியா 70
ravi said…
*ம்ருணாளீ ம்ருத்வீனாம்* - தாமரைத் தண்டு போன்ற ம்ருதுவான;

*தவ* -உனது;

*சதஸ்ருணாம் புஜ லதானாம் -*

கொடிகள் போன்ற நான்கு புஜங்களை;

*ஸெளந்தர்யம்* - அழகை;

*ஸரஸிஜபவ* : ப்ரம்மா;

*ப்ரதமமதனாத்* - தன்னுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த;

*அந்தகரிபோ* : - பரமசிவன்;

*நகேப்ய* : - நகங்களுக்கு;

*ஸம்த்ரஸ்யந்* - பயந்துகொண்டு;

*ஸம* -அபய - ஏக காலத்தில் அபயம்;

*சதுர்ணாம்* *சீர்ஷாணாம்* -

மீதமிருக்கும் நான்கு தலைகளுக்கும்;

*அபயஹஸ்தார்ப்பணதியா* - அபயப்ரதானம் செய்வாயென்ற எண்ணத்தில்;

*சதுர்பிர் வதனை: -* தனது நான்கு முகங்களாலும்;

*ஸ்தெளதி* - ஸ்தோத்ரம் செய்கிறார்.🙏🙏🙏
ravi said…
முன்னம் ஒரு தலை சின உன் முதல்வரால்
இழந்த அயன் முகங்கள் நான்கால்

உன்னழகுக்கு ஏற்ற பசுங்கழை மணித்தோள்
ஒரு நான்கும் வழுத்துகின்றான்

இன்னமொரு சீற்றம் எழுந்து அரிமலையை
எனினும்

இவள் தட மென் தோளைச்
சொன்ன தலைக்கு அழிவிலை என்று அதில் துணிந்த
துணிவன்றோ சுருதி வாழ்வே

முன்னொரு நாள் உன் தலைவரான சிவபெருமானின் சினத்தால் ஒரு தலையை இழந்த பிரமன்

மீதமுள்ள முகங்கள் நான்கால் உன் அழகுக்கு ஏற்ற உன் அழகான திருத்தோள்கள் நான்கினையும் போற்றிப் புகழ்கின்றான்.

அது எப்படி இருக்கின்றதென்றால், இன்னும் ஒரு முறை சிவபெருமானுக்குச் சினம் தோன்றி தலையைக் கொய்ய வந்தால் எந்த தலை உனது திருத்தோள்களைப் புகழ்ந்ததோ அந்த தலை தப்பும் என்று ஆய்ந்து முடிவு செய்து

புகழ்ச்சியெனும் செயலில் இறங்கியது போல் இருக்கிறது.👍👍👍
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏


*பெரியவா சரணம்* !!

""ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது""

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்
உயிரை மீட்டிய கருணை நாதர்

ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து
அடியேன் ஒரு மலைப் ப்ரதேசத்தில் சில வருடங்கள் தங்கினேன். அங்கு ஒவ்வொரு குருவாரம் காலையும் மஹா பெரியவாளின் மகிமையைப் போற்றும் சத் சங்கம், சில பக்தர் களின் வேண்டு கோளுக்கு இணங்கி நடத்திக் கொண்டிருந் தேன். அந்த மலைப் ப்ரதேசத்தின் குளிரையும், மழையையும் பாராது கலந்துக் கொள்ளும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது, மஹா பெரியவாளின் மீது அவர்கள் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு என் கண்கள் பனிக்கும்.
ravi said…
ஒரு *குருவாரம்* வழக்கம் போல் கூட்டம் நடந்துக் கொண்டிருந் தது. பஜனை முடியும் தருவாயில் அடியேன் இறுதியாக ஒரு பாடலைப் பாடக் கூட்டத்தினரும் பாடி முடித்தனர். பாடல் முடிந்த பின் அமைதியாக அமர்ந்திருந்த கூட்டத்திலுருந்து ஒரு பக்தர் எழுந்து நின்றார். அவரை அருகே வரும்படி அழைத்தேன். முன் வந்து நின்றவருக்கு சுமார் வயது 55லிருந்து 60க்குள் இருக்கும். எனக்கு வணக்கம் தெரிவித்தவர்.
ravi said…
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் *என் வாழ்வில் நடந்த சம்பவம்* . என் தாத்தவும் , என் தகப்பனாரும் காஞ்சி மடத்துடன் மிகவும் தொடர்பு உடையவர்கள். மிகுந்த பக்தி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் தந்தைக்கு காஞ்சிப் பெரியவா மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் மஹா பெரியவாளை மட்டுமே தெய்வமாக வழி படுபவர். என் தந்தை கொண்ட ஈடுபாட்டின் பேரில் நானும் பல முறை காஞ்சி சென்று மஹா பெரியவாளைத் தரிசித்தது உண்டு. ஆனால் ஏதோ ஆலயங்களுக்கு சென்று வழி படுவது போல் சென்று விட்டு வருவேனேத் தவிர, என் தந்தை அளவு பக்தியும், ஈடுபாடும் மஹா பெரியவா மீது அப்பொழுது என் உள்ளத்தில் இல்லை. என் தகப்பனாரின் மறைவுக்குப் பின் நான் காஞ்சி செல்வது அடியோடு நின்று விட்டது
ravi said…
திருமணம் முடிந்து குடும்பம் குட்டி என வாழ்ந்துக் கொண்டிருந்த நேரத்தில், என் 35 , 37 வயதில் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு, மீண்டு வர முடியாமல் கடன் வாங்கினேன். சில மாதங்களில் வாங்கியத் தொகைக்கு வட்டிக் கட்ட முடியவில்லை. எனவே வட்டிக் கட்ட மற்றொரு இடத்தில் கடன் வாங்கினேன். இப்படி ஒன்றின் தொடர்பாக மற்றொன்று என கடன் வாங்க , ஒரு நிலையில் பல இடங்களில் கடன் மட்டுமல்லாது, கடன் தொகையும் விஸ்வரூபம் எடுத்து நின்றது. பால் பாக்கி, மளிகை பாக்கி, வாடகை பாக்கி என அன்றாட செயல்களே பாதிக்கப்பட்டு நின்றது. நண்பர்கள் பகையானார் கள். அடுத்து என்ன செய்து மீள்வது என சிந்திக்க ஆரம்பிப்பதற் குள், ஏதாவது ஒரு கடன் கொடுத்தவர், வாசல் வந்து இறைத்து விட்டுப் போகும் சுடு சொல்லும், அதனால் உண்டாகும் அவமானமும் என்னை மேலும் சிந்திக்க விடாது, அந்த அவமானத்திலும் வேதனையிலும் என்னை சுழல வைத்தது. நிம்மதி இல்லாது துக்கத்தில் உழன்ற எனக்கு தூக்கம் ஏது? தூக்கம் என்பதை மறந்தேன். நல்ல மானம் மரியாதையுடன் வாழ்ந்த உயர்ந்த குடும்பம் என்னால் அவமானப் பட்டு நிற்கும் பொழுது மனம் கலங்கியது. வெளியே பையை எடுத்துக் கொண்டு செல்லும் மனைவி, அவமானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து, யாருக்கும் தெரியக் கூடாது என சமையல் அறையில் புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழும் பொழுது, என் உள்ளம் வெடித்துச் சிதறியது.
ravi said…
துக்கமும் துயரமும் வாட்ட மனம் ரணமாகிப் போன நிலையில் ஒரு நாள் முடிவு செய்தேன். என்னால் தானே என் குடும்பத்திற்கு இந்த நிலை. அவர்கள் படும் வேதைனையினால் நான் அடையும் கஷ்டத்தை தொலைக்க முடிவு செய்தேன். என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. மிகுந்த விரக்தியுடன் அன்று இரவுப் பொழுதில் வீட்டை விட்டு கிளம்பி கடற்கரை நோக்கி நடந்தேன். ஆள் அரவமற்ற கடற்கரையின் தனிப் பகுதி. உயிரை விட்டு விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கண் முன்னே தெரியும் கடல் தவிர பிற உலகம் மறைந்தது. கால்கள் தன்னிச்சையாக கடலை நோக்கி நடைப் போட்டது. அந்த நேரத்தில், எனக்கு பின்னால் ஒருவர் நடந்து வரும் பாத ஒலிக் கேட்டது. அதற்கு முக்கியத்துவம் தராமல் விரைவாக நடக்க முயன்றேன். மீண்டும் அதே பாத ஒலி. யாரோ பின் தொடரும் உணர்வு. என்னை மேலே நடக்க விடாது ஏதோ ஒன்று என்னைத் தடுத்து நிறுத்தியது. மெல்ல பின்னே திரும்பியவன் திடுக்கிட்டேன்.
ravi said…
அங்கு மஹா பெரியவா நின்று கொண்டிருந்தார்* . அவரைக் கண்டவன் உறைந்து விட்டேன். எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. நான் நானாக இல்லை. என்னை ஏதோ ஒன்று உந்திக் கொண்டிருக்க மடார் என அவர் பாதத்தில் விழுந்தேன். பாதத்தில் விழுந்தவன் எழுந்திருக்கவில்லை, நிமிரவில்லை. அவர் பேசுவது மட்டும் உன்னிப்பாகக் கேட்டது.

“ *ஏண்டா கஷ்டத்தை விட்டு விலகிப் போறதா நினச்சு உன் குடும்பத்துக்கு அதிக கஷ்டத்த கொடுத்துட் டுப் போறயேடா.* உன் கஷ்ட காலத்ல நீ என்னை நினைக்கல.... *ஆனா நான் உன்னை நினச்சேன் , கைவிடல. வீட்டுக்குப் போ.”* அந்தத் தேனினும் இனியக் குரல் ஒலிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக ரீங்காரமாக, அடுத்து என்ன நடந்தது என்றுத் தெரியாது, நான் சுய நினைவு இழந்தேன்.
ravi said…
நான் நினைவு வந்து கண்விழித்த பொழுது, எங்கும் ஒளிப் ப்ரகாசம். காலைப் பொழுதாகி, கதிரவன் ப்ரகாசித்துக் கொண்டிருந்தான். நான் எங்கு இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள சில நொடிப் பொழுதா னது. முதல் நாள் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

நான் மஹா பெரியவாளைக் கண்டது நிஜமா அல்லது கனவுக் கண்டேனா என ஒரு நொடிப் பொழுது மனதில் ஐயக் கேள்வி எழும்ப, அந்த நொடியில் அந்த பாத ஒலியும், அவரின் கருணை வார்த்தைகளும் எனக்குள் ரீங்காரம் எடுக்க ஆரம்பித்தது. அந்த ரீங்காரம் என் மனதில் மட்டும் ஒலிக்கவில்லை, என் சரீரம் எங்கும் ஒலித்தது. அது அற்புதமான உணர்வு. அதை உங்களிடம் விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. அந்த பாத ஒலியும் வார்த்தைகளும் இப்பொழுதும் என்னை விட்டு நீங்கவில்லை.
ravi said…
நான் எப்பொழு தெல்லாம் மஹா பெரியவாளின் முன் நிற்கிறேனோ அப்பொழுதெல்லாம் இந்த ரீங்காரத்தை உணர்கிறேன். *இது பெரியவா எனக்கு கொடுத்த பாக்கியம்* . இப்பொழுதும் அதை உணர்ந்துக் கொண்டு தான் இருக்கிறேன்” என்ற பொழுது அவர் உடம்பு சிலிர்க்க ஒரு நிமிடம் அதில் லயித்து , பின் தன் உரையைத் தொடர்ந்தார்.

“வந்தது மஹா பெரியவாதான் என ஊர்ஜிதமாக, என் குடும்ப நினைவு வர, ஓட்டமும் நடையுமாக இல்லம் வந்தேன். என் மனைவி என்னைக் காணாது வாசலில் கண்ணீரோடு பரிதவிப்புடன் நின்றுக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு என்னை மன்னித்து விடு மன்னித்து விடு எனக் கதறினேன்.
ravi said…
ஒன்றும் புரியாது என்னை ஏறிட்டவளிடம் நான் உன்னையும் குடும்பத்தையும் பற்றி கவலைப் படாது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தேன் என சொல்ல என் மனைவி யின் உடல் பதறுவதைக் கண்டேன். என்ன காரியம் செய்ய நினைத்தீர்கள் என அலறியவளை ஆசுவாசப் படுத்தி அமர வைத்து நடந்தவைகளை விவரிக்க விவரிக்க அவள் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டாள். ஒன்றும் பேசாது பூஜை அலமாரியிலிருந்த மஹா பெரியவாளின் படத்தை முன் வைத்து கொண்டு, என் கணவர் உயிரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தந்து விட்டீர்கள். பெரியவாளே உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என தன் மாங்கல்யத்தைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
ravi said…
அன்று எனக்குள் ஒரு புது சக்தி வந்தது போல் இருந்தது. அன்று முழுதும் என் மனதில் ஆயிரம் கேள்விகள். உலகை மறந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு கடல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த என் காதில் எப்படி அந்த பாத சப்தம் தெளிவாகக் கேட்டது? அப்படி என்றால் என் காதில் அந்த சப்தத்தை ஒலிக்கச் செய்தவர் அவர் தான் எனப் புரிந்தேன். கடன் சுமை தீரவும் இல்லை, குறையவும் இல்லை. ஆனாலும் எத்தனயோ மாதங்களாய் ஒரு நொடிப் பொழுதும் நீங்காது என் மனதை துன்பப்படுத்திக் கொண்டிருந்த - அரித்துக் கொண்டிருந்த கடன் சுமை இன்று என் மனதை ஏன் அரிக்கவில்லை என எண்ணிப் பார்த்தேன்,. இத்தனை நாட்களாய் இல்லாத சக்தி இன்று புதிதாய் பாய்வதை உணர்கிறேனே என சிந்திக்க, எனக்கு ஒன்று புரிந்தது. என் உள்ளத்தில் *குருவின் வார்த்தைகள் இடைவிடாது ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.*
ravi said…
ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது. தாமரை இலை தண்ணீர்ப் போல் இருக்கும் என்ற அனுபவத்தைப் பெற்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மஹாப் பெரியவா எதற்காக என்னை தடுத்து ஆட்கொண்டார்? நானோ அவரை வணங்கவில் லை. அப்படி இருந்தும் என் மீது ஏன் இவ்வளவு கருணை என எண்ணிய பொழுது என் மனைவியின் புலம்பல் என் காதில் கேட்டது. “அப்பா இருந்த வரைக்கும் மடத்துக்குப் போனேள்......” என்று அவள் தனக்குள் பேசிக் கொண்டே போக எனக்கு பதில் கிடைத்து விட்டது
ravi said…
என் அப்பாவின் நினைவு வந்தது. அவர் மஹா பெரியவாளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எந்த செயலும் அவர் உத்தரவும் ஆசியும் வாங்காது செய்ய மாட்டார். அவர் கோவிலுக்கு சென்று பார்த்ததில்லை. ஆனால் தோன்றிய பொழுதெல் லாம் மஹா பெரியவா ளைத் தரிசிக்க கிளம்பி விடுவார். அவர் மஹா பெரியவா மீது கொண்டிருந்த பக்திக்காக தான் பெரியவா என்னைக் காப்பாற்றினார் என தோன்றியது. ‘ *முந்தைப் பிறவியின் பெரும் பயனோ, எந்தைதாய் செய்த தவப் பயனோ* ’ என்ற மஹா பெரியவா பற்றிய பாடல் வரிகள் தான் இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. இது என் தந்தையின் தவப் பயன். இவ்வளவு பக்திக் கொண்ட என் தந்தையைப் பார்த்தும், *மஹா பெரியவாளின் மகிமை அறியாத பேதையாய்* இருந்திருக்கிறேனே, அவரை வழிப் பட்டிருந்தால் இந்த கஷ்ட நிலையே வந்திருக்காதே, நான் எவ்வளவு பெரிய முட்டாள், என நன்கு புரிந்துக் கொண்டேன். என் தந்தையை கை எடுத்து வணங்கினேன்
ravi said…
அன்றைய நாளும், மறு நாளும் என் மனம் மஹா பெரியவாளின் நினைவாகவே இருந்தது. பல மாதங்களாக தூக்கம் என்றால் என்ன என்பதையே மறந்திருந்த நான் இரு நாட்களும் நன்றாக உறங்கினேன். எனக்குள் ஒரு உற்சாகமும் தெளிவும் இருந்தது. என் உற்சாகத்தைக் கண்ட மனைவி ஆறுதல் அடைந்தாள். என் மனதில் பயமும் கோழைத்தனமும் அறவே இல்லை, எப்படியும் இந்த சூழலிலிருந்து வெளிவர அந்த *மஹா பெரியவரே வழிக் காட்டுவார்* எனத் திடம் கொண்டேன்.
ravi said…
மூன்றாம் நாள் விடியல் காலை அழைப்பு மணி ஒலிக்க கதவைத் திறந்த எனக்கு ஆச்சர்யம். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் என் தூரத்து உறவினர் வந்திருந்தார். என் தந்தை இருந்த காலங்களில் இரு குடும்பத்துக்கும் நல்ல போக்குவரத்து இருந்தது. பின்னர் கொஞ்சம் குறைந்து போனது. ஆனாலும் அவர் இங்கு வரும் பொழுது என் வீட்டில் தான் தங்குவார். வந்தவரை ஓய்வு எடுக்கச் சொன்னேன். வந்தவர் சில மணி நேர ஓய்வுக்குப் பின் என் அருகே அமர்ந்து தான் வந்த நோக்கத்தை தெரியப்படுத்தினார்.
ravi said…
” நேற்று முன் தினம் இந்த பகுதியைச் சேர்ந்த நண்பரை பார்த்தேன். அப் பொழுது உன்னைப் பற்றி விசாரித்தேன். அவர் உன் நிலையை சொன்னார். கேட்டது முதல் என் உள்ளம் பதறிப் போச்சு. லெட்டர் போடலாமானு நினைச்சேன். நீ உண்மைய சொல்ல மாட்டானு தோணித்து. ஏதோ ஒன்னு என்னை இருக்க விடாம அரிச்சுட்டே இருந்தது. பணத்தை ரெடி பண்ண ஒரு நாள் ஆச்சு. பணம் கைல வந்தவுடனே உன்னை நேரடியா பாத்து பேசலாம்னு வந்தேன்” என்றார். அவர் பையிலிருந்து ஒரு மிகப் பெரியத் தொகையை எடுத்து என் கையில் கொடுத்து வைத்துக் கொள் என்றார். நான் மறுக்க , சரி இதை நான் செய்யும் உதவியாகக் கொள். 10 வருடமோ 20 வருடமோ எப்பொழுது முடியுமோ திருப்பிக் கொடு என்றார். அவர் மிகுந்த உள்ளன்போடு கூறிய வார்த்தைகள் என் நெஞ்சைக் கரைய வைத்தன. கண்ணீரோடு வாங்கிக் கொண்டு அவரின் அன்புக்கு குடும்பமே நன்றி செலுத்தினோம். அவரை இங்கு அனுப்பிய மஹாபெரியவாளின் முன் நின்ற்றேன். இறைவா என் மீது உனக்கு இவ்வளவு கருணையா எனக் கதறினேன்.
ravi said…
அவர் தந்த தொகையைக் கொண்டு முக்கியமான சிறு சிறு கடன்களை அடைத்தேன். கை இருப்பாக கனிசமானத் தொகையை இருத்திக் கொண்டு, பட்சணம் செய்து விற்று பொருள் ஈட்டுவது என நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் அனைத்தையும் சரிசெய்து விட்டு , என் மனைவி செய்த பட்சணங்களை இரண்டு மூன்று தூக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தெருவாக சென்று வியாபரம் செய்தேன். மாலைக்குள் அனைத்தும் விற்றுவிடும். இப்படி 10 நாட்கள் சென்றிருக்கும், பதினோராம் நாள் நான் நான்கு தெரு தாண்டுவதுற்குள் என் பட்சணம் அனைத்தும் காலியாகி விட்டது. இது மஹாபெரியவாளின் கருணை. இப்படி அந்தப் பகுதி முழுதும் பட்சணம் பிரபல்யமாக , ஒரு சிறு கண்ணாடி போட்ட பட்சன தள்ளு வண்டி ஒன்றை தெரிந்தவர் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி, சரி செய்து, இன்னும் பல வகையான பட்சணங்களை செய்து விற்றேன். மதியத்திற் குள் அனைத்தும் முடிந்து விடும். மீண்டும் மாலை வியாபாரம் செய்வேன். ஆனால் ஒரு நாள் கூட வியாபாரம் நடக்கவில்லை என பட்சணங்களை திருப்பிக் கொண்டு வந்ததில்லை. அவரின் கருணையால் வியாபாரம் பெருக, ஒன்றரை வருடங்களில் கணிசமாகப் பணம் சேர்ந்து விட, ஒரு சிறு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஆட்கள் வைத்து பட்சணம் மற்றும் பேக்கரி வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.
ravi said…
மூன்றரை வருடங்களில் அனைத்து கடன்களும் அடைந்து, எனக்கு உதவிய உறவினரின் தொகையையும் செலுத்தி முடித்தேன் என்பது என்னால் நம்ப முடியாத ஆச்சர்யமாக இன்றும் உள்ளது. இப்பொழுது பல ஊர்களிலும் சொந்த இடத்தில் கிளை வைத்து சந்தோஷமாகவும் சுபிட்சமாகவும் இருக்கிறேன். துன்ப காலத்தில் என் உயிரை மீட்டுத் தந்து, வாழ்க்கையை செப்பணிட்டு சீராக்கி, உயர்வடையச் செய்து என் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த அவர் மஹா மஹா பெரியவர்; மஹா மஹா பெரியவர்” என நா தழு தழுக்க மஹா *மஹா என அழுத்தமாக சொல்லிய பொழுது அந்த மஹா, மஹா வின் அர்த்தம் அவருக்குப் புரிந்து* இருந்தது.
அவர் மேலும் தொடர்ந்தார். “ நான் என் நண்பரைக் காண இங்கு வந்தேன். இன்று விடியற் காலை என் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக் கும் பொழுது இங்கு மஹா பெரியவாளின் பேரில் கூட்டம் நடப்பதுக் கண்டு மேலும் பயணிக்க முடியாமல் ஏதோ என்னை உந்த அமர்ந்து விட்டேன். த்யானம், பிரார்த்தனை பஜனை என இப்படி ஒரு சத் சங்கத்தை பார்த்த்தில் லை. இன்று என் ஆத்மாவே ஆனந்தத்தில் மிதக்கிறது. என் வாழ்க்கையில் மஹா பெரியவாளின் கருணையை பகிர்ந்துக் கொள்ள சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி.
ravi said…
இன்றும் நான் என் குழுந்தைகளுக்கு செல்வ வளத்தை விட்டு விட்டு செல்ல வேண்டுமென்ப தில் குறியாய் இல்லை. அவர்களுக்காக மஹா பெரியவாளிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரார்த்தித்து, அந்த பிரார்த்தனை வளத்தை கொடுத்து விட்டு செல்ல நினைக்கிறேன் , என் தந்தை எனக்கு தந்தது போல. “ எங்கோ இருக்கும் உங்களை இங்கு வர வழைத்து, பகிர்ந்து கொள்ள வைத்தவர் அவர். அந்த மஹா பெரியவளுக்கு கோடி வந்தனம் என்று சொல்லி மீண்டும் அந்தப் பாடலை கூட்டத்தினர் அனைவரும் ஒன்றாகப் பாடி ஆனந்தமாய்க் கலைந்தோம்.
ravi said…
அந்தப் பாடல்:*

தீராக் கஷ்டத்தில் உம்மை மறந்து பிரிந்து
கடற்கரை சென்று உயிர் மாய்க்க செல்லுகையில்
பாதம் சத்தம் கேட்டு திரும்புகையில்
*பூரண தரிசனம் காட்டி பக்தனை மீட்டிய ஐயனே*
மஹா பெரியவாளின் அதிசயத்தையும் அற்புத்தையும் கேள்விப்பட்டு பக்திக் கொண்ட மக்கள் எத்தனையோ பேர். ஆனால் மஹா பெரியவாளே அதிசயத்தைக் காட்டி அதன் மூலம் பக்திக் கொண்ட இவர் எப்பேர்பட்ட பாக்கியசாலி என மகிழ்ந்தேன்.
இதயம் நொறுங்குண் டோர் தன்னை நாடுகையில்
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் வளம் தரும் *மாமுனியே சரணம் சரணமையா* 🪷!

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

*காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்*
🪷👣🙏🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
பூரிக் கரையினிலே வாரி இறைத்தக் கூட்டம்

கூவி அழைத்த கூட்டம் இல்லை இது

காசு கொடுத்து வாங்கிய கூட்டம் இல்லை இது ...

தொந்தி பெருத்தவரும்

தோல்வி தனில் தினம் குளிப்பவரும்

மந்தி மனம் கொண்டவரும்

மாதவனையே
நினைப்பவரும்

ஒன்றாய் இணைந்த கூட்டம் இது ...

சொல்லும் நாமம் தேனில் ஊறிய பலா ...

நெய்யில் குளித்த சக்கரை பொங்கல்

குறை இல்லாதவன் மறை போற்றும் மாதவன் சித்தி வீடு போகின்றான் ..

சித்தி எல்லோருக்கும் வழங்கியே ...

முக்தி இது போல் கிடைக்குமோ ...

அண்ணனும் தங்கையும் அள்ளி வழங்க

அங்கே

ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட

மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட

இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

கண்டேன் ஜகத் நாதனை ..

அகம் அழிந்தே அவன் குழல் தனில் காற்றாய் மெலிந்தேன் இன்றே ... 🦚🦚🦚
Ramani said…
Superb...👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ravi said…
*ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்*

பகவானை நாம் ஆராதித்துவிட்டோமென்றால் பிறகு நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதேயில்லை. அவனே நம்மைக் கவனித்துக் கொள்வான்.

ravi said…
முதலில் நாம் சிறிதளவாவது முயற்சி செய்கிறோமா என்று இறைவன் சோதித்துப் பார்ப்பான். ஏனென்றால் அவன் நம்மை மனிதர்களாகப் படைத்துவிட்டான். ஒரு கழுதையாகவோ, ஒரு குதிரையாகவோ நம்மைப் படைத்திருந்தால் அப்பொழுது நம்முடைய முயற்சியையே எதிர்பார்க்காமல் தானே நமக்குப் பலனைக் கொடுத்திருப்பான்.
ravi said…
ஆனால் நமக்கு புத்தியையும் பிறவியையும் கொடுத்திருக்கிறான் ; ஐம்புலன்களைக் கொடுத்திருக்கிறான்; அவைகளுக்குச் சாமர்த்தியத்தையும் கொடுத்திருக்கிறான். இவ்வாறிருக்கையில் அவற்றையெல்லாம் நாம் வீணாக்கிக் கொண்டிருந்தால் நம்மைவிட முட்டாள்கள் வேறு யாரும் கிடையாது.
ravi said…
ஆகையால் நாம் சிறிதளவாவது நல்வழியில் செல்ல முயற்சி செய்தால் எங்கிருந்தாலும் நம்மைக் காந்தம் போல் இறைவன் இழுத்துக் கொண்டு விடுவான்.
ravi said…
🌹🌺 *ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த தயக்கம் கூடாது - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது நம் வேதக் கட்டளையாகும்.

🌺எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான்.

🌺எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம்.

🌺பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும்.

🌺ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி.

🌺எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த எந்த தயக்கம் கூடாது என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, நாமும் நம்முடைய விருந்தினர் எதிரியாக இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்தவித தயக்கம் காட்டாது உபசரிப்போம்

🌺பாடல் 🌹
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,

ராம ராம, ஹரே ஹரே🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*#ஶ்ரீ_வைஷ்ணவ_குருபரம்பரை*

*#ஶ்ரீபெரிய_பிராட்டியார்_2* :-

சமுத்திர ராஜனுக்கும் , காவிரித்தாய்க்கும் மகளாகப் பங்குனி மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.

பெரிய பெருமாளின் பத்தினியான பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்க நாச்சியார். தன் தனிச் சன்னதி பிராகாரங்களை விட்டு வெளியில் வராத பத்தினித் தாயான இவர் மிகக் கருணை மிகுந்தவர். இவரின் கருணை சொல்லி மாளாது. ஸேவித்து அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் தாயாரின் கருணைத் தன்மை. தன்னை நம்பி வரும் பக்தர்களைக் காப்பதில் இவருக்கு இணையில்லை.தாயாரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் ஒவ்வொரு சமயமும் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்.

*#ஶ்ரீ_பெரிய_பிராட்டியார்_திருவடிகளே_சரணம்*

*#தொடரும்*....
ravi said…
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.
கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை.*
தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.*
எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.*
வெல்பவர்கள்bh தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.


மாலை வணக்கம் 🙏🏻
ravi said…
https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் பற்றிய பதிவுகள் :*

தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்குடித்திட்டை கிராமத்தில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோவில் ஒன்பது அதிசயங்களை ஒருங்கே அமையப்பெற்றது.

ஒவ்வொரு யுகம் முடியும் போதும் பிரளயம் (வெள்ளப்பெருக்கு) ஏற்பட்டு, புதிய யுகம் தோன்றும். அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பூமியில் அதீத மழை பெய்து, வெள்ளப்பெருக்கு உண்டானது.

உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கிப் போயின. ஆனால் பூமியின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் மேடாக (திட்டு) காணப்பட்டது. ஏனெனில் அங்கு இறைவனின் அருள் இருந்தது. அந்த தலமே ‘தென்குடி திட்டை.’

பரம்பொருள் பல அல்ல. ஒன்றுதான். ஆனால் அந்தப் பரம்பொருளே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாகப் பிரித்து உமாதேவியை உண்டாக்கினார். பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால், திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார்.

இந்த அன்னையின் சன்னிதிக்கு மேல் உள்ள விதானத்தில் 12 ராசிக்கான கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பிரளயத்தின் முடிவில் பரம்பொருளும், உமையும் இணைந்து மீண்டும் உலகையும், உயிரினங்களையும் படைக்க மும்மூர்த்திகளை தோற்றுவித்தனர். அவர்கள் இருண்ட பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர்.

அலைந்து திரிந்து திட்டையை அடைந்து இறைவனை தொழுதனர். அப்போது பரம்பொருள், உடுக்கையை முழங்கினார். அதில் இருந்து வெளிப்பட்ட மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளின் அச்சத்தைப் போக்கி அமைதிப்படுத்தியது. அவர்களின் மாயை நீங்கி வேத அறிவை பெற்றனர். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழிலை செய்தனர்.

தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், தினம் ஒரு கலையாக தேய்ந்து வந்தார். அதில் இருந்து மீள திங்களூர் கயிலாசநாதரை வணங்கினார். இதையடுத்து சந்திரனின் சாபம் போக்கி, மூன்றாம் பிறையாக தன் சடைமுடியில் இறைவன் சூடிக்கொண்டார்.

சாபவிமோசனம் அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, திட்டையில் அருளும் இறைவனுக்கு மேலே, சந்திரகாந்த கல்லாக சந்திரன் வீற்றுள்ளான். மேலும் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு (24 நிமிடம்) ஒரு சொட்டு என்ற ரீதியில் இறைவனை நித்திய அபிஷேகம் செய்கிறான்.

‘நமசிவய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவமே, சிவலிங்கம். திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆலயத்தின் மூலவரான வசிஷ்டேஸ்வரர், பிரதானமான ஐந்தாவது லிங்கமாக இருக்கிறார். எனவே இந்த ஆலயம் பஞ்ச லிங்க தலமாக போற்றப்படுகிறது. பஞ்ச பூதங்களும், பஞ்ச லிங்கங்களாக வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆலயத்தில் மூலவர் மட்டுமே பிரதானமாக வழிபடப்பட்டு, வரம் தரும் நாயகனாக விளங்குவார். ஆனால் திட்டை திருக்கோவிலில், சிவன், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், குரு, பைரவர் ஆகிய 6 பேரும் தனித் தனியே அற்புதங்கள் நிகழ்த்தி, தனித்தனி வழிபாட்டுக்குரிய சன்னிதிகளோடு அருள்கிறார்கள். இவர்கள் பிரதான மூலவரைப் போல, பிரதான தெய்வமாக விளங்குவது சிறப்புக்குரியது.

பெரும்பாலான ஆலயங்களின் கட்டிடங்கள் கருங்கற்களாலும், சில செங்கற்களாலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றில் இருக்கும் கொடிமரம், விமானத்தில் உள்ள கலசம் போன்றவை உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இந்த திட்டை திருத்தலத்தில் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் கூட கருங்கற்களினால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டார். அதன் ஒரு பகுதியாக திட்டைக்கு வந்து, மூலவரான வசிஷ்டேஸ்வரரை ஒரு மாத காலம் பூஜித்தார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. எனவே இது காலபைரவ ஷேத்திரமாகவும் திகழ்கிறது. சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலக இந்த பைரவரை வணங்கலாம்.

நவக்கிரகங்களில் முதன்மையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். தான் பார்க்கும் இடங்கள் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தன் பார்வை பலத்தால் சுபமாக மாற்றுபவர். உலகத்தின் தனம், தான்யம், பொன், பொருள், பணம் உள்ளிட்டவற்றுக்கு அதிபதி. இப்படிப்பட்ட குரு, திட்டை தலத்தில் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*சேவல் விருத்தம் 5*🐓🐓🐓
ravi said…
தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்

சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோட முறவே

கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட

குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டிக் கூவுமாம்

மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்

வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்

சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கட் கரசு கட்

டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே குருபரன் சேவற் திருத் துவஜமே)
ravi said…
ஒருவரின் தூண்டுதல் இல்லாமல், துன்பங்களை விளைவிக்கும், மோகினி எனும் பெண் பேய்களும் (நடு நிசியில் தனி வழியில் செல்லும் ஆடவரை பிடித்துக்கொள்ளும் இவ்வகை மோகினிப் பேய்),

பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேய்கள்,

இவைகளுடன் கூடி இருக்கும் வேதாளங்கள் பூதங்கள்,

எல்லாவிதமான ஏவல் சூன்யங்கள் அனைத்தையும், பாதத்தினால் எடுத்து உதறி, அவைகளை தண்டித்து, இந்திரனும், மகிழ்ச்சியுற்று,

மீண்டும் தேவலோகத்திற்கு அதிபனாகி,

தேவலோகத்தை அரசு ஆளவும், அந்த தேவர்களுக்கு நேர்ந்த சிறை நீங்கவும், எட்டு திசைகளில் உள்ள மலைகள், அரக்கர்களின் கூட்டங்கள் பொடி பொடியாகப் போகவும் கொடிய சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு

எட்டிக் குதித்து பெருங் குரலிட்டுக் கூவும் (அது எது என வினாவினால்)

பெரிய வாசுகி எனும் நாகப் பாம்பு, எலும்பு மாலை,

அருகம்புல் இவைகளை அணிந்துகொண்டு, நடனம் செய்யும் பரமேஸ்வரனுக்கு, நல்ல குரு மூர்த்தி, ஆகாயம், நீர், பூமி, நெருப்பு காற்று முதலான பஞ்ச பூதங்களையும், ஒன்பது கிரகங்களையும் காலம் என்று சொல்லப்படும் தத்துவங்கள் அனைத்தும் எல்லாமாய் இருக்கும் முருகக் கடவுள்,

தேவ சேனாபதி, பிரம்மனை சிறையில் அடைத்தவரும்

தேவ லோக சக்ரவர்த்தி, மது, தேன் போன்று இனிமை உடையவன், இருண்ட கடலில் மீன் உருவத்தில் இருந்த நந்தி தேவருக்கு மகிழ்ச்சியை அளித்தவன் இப்பேற்பட்ட குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.🐓🐓🐓🐓🐓🐓
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 271*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்

किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
*த³யாகரஸ்ய’* – நீ தயை உடையவன். அதனால எனக்கு ஒரு கஷ்டம்னா, நீயே பார்த்து பண்ணப் போற.

‘ *ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா’ –* உன்கிட்ட நான் சொல்லிக்கறதுக்கு என்ன இருக்கு?
ravi said…
*யோக³க்ஷேமது⁴ரந்த⁴ரஸ்ய’ –* உன்னை நம்பினவாளோட யோக க்ஷேமத்தை நீ பார்த்துக்கறே. தாங்கறே.

‘யோக³ம்’னா ஒரு நன்மை வந்து சேர்றது.

அந்த நன்மை நம்ம கிட்ட தங்கியிருக்கறது க்ஷேமம். அது மாதிரி எனக்கு தேவையான எல்லாத்தையும் என்கிட்ட கொண்டுவந்து சேரக்கிறதுலேயும், வந்து சேர்ந்த நன்மைகள் என்கிட்ட தங்கிறதுலயும் என்ன உண்டோ அதை நீதான் பார்த்துக்கறே.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 270* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ *_பூகர்ப்போ_*
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது “திரு இட எந்தை (திருவிடவெந்தை)” என்னும் திவ்ய தேசம்.
அங்கே தனது இடது தோளில் பூமிதேவியை ஏந்தியபடி வராகப் பெருமாள் தரிசனம் தருகிறார்.

இங்குள்ள உற்ஸவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்று திருநாமம்.
ravi said…
மாமல்லபுரத்தில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்த அரிகேசரி என்ற பல்லவ மன்னர் திருவிடவெந்தை வராகரிடம்
ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.

ஒவ்வொரு முறையும் மாமல்லபுரத்தில் இருந்து வராகரைத் தரிசிக்க திருவிடவெந்தைக்கு
மன்னர் வருகையில், தம் குதிரையை இரண்டு முறையாவது மாற்றுவார்.

ஏனெனில் ஒரே குதிரையால் அவ்வளவு தூரம் மன்னரைச் சுமந்து செல்ல முடியவில்லை என்பதுதான்!👍
Oldest Older 201 – 306 of 306

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை