ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 13 சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா பதிவு 20

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

13   चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा - சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா

பதிவு 20



இன்று நாம் 13வது திருநாமம் அதை பார்க்கப்போகிறோம் . அம்பாளின் கேசாதி பாதம் வர்ணனை இந்த நாமத்தில் இருந்து தொடங்குகிறது ... 🙌🙌
*13*  चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा - *சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா*   - 

அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?.  

சொல்கிறார் அகஸ்தியருக்கும்  நமக்கும்.

 செண்பகம், 
புன்னாகம், சௌகந்திகா

(இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)👌👌👌💐💐💐

 *கேசாதி பாத வர்ணனை* 13 to 24
 
*சம்பகா* - *அஷோகா* - *புன்னாக* - *சௌகந்திக* = 

அன்னைக்கு பிடித்தமான பலவித மலர்கள் 

 *லசத்* = மின்னும் 

 *கசா* = கேசம் 

*சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா* =ஷெண்பகப்பூ, விருக்ஷி, சுகந்திப் புஷ்பம், புன்னைப் பூ முதலிய மலர்களை, மிளிரும் எழில் கூந்தலில் சூடியிருப்பவள்

டமிருந்து வலமாக அசோக, சௌகந்திக,ஷெணக, புன்னாக, மலர்கள்

*13*  चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा - *சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா*   - 

 *ரகசியம் தெரியாத நக்கீரர்

மலர்களை முதலில் படைத்த இறைவன் அவைகளுக்கு இயற்கையில் நறுமணம் வைக்க வில்லை ... எல்லா மலர்களுக்கும் ஒரே வருத்தம் ... நாரதரிடம் முறையிட்டன .. நாரதர் இரக்கப்பட்டு ஒரு வழி சொன்னார் ... 

பட்டை தீட்டும் வயிரங்கள் , சாணை பிடிக்கும் அறிவாள்கள்  எப்படி தங்களை செம்மையாக தீட்டி கூர்மை படுத்திக்கொள்கிறதோ 

அதுபோல் பரிமளம் மணக்கும் அம்பாளின் சிரசில் சில நொடிகள் குடி இருந்தால் அவள் கேசத்தின் நறுமணம் தனக்குள்ளும் ஒட்டிக்கொள்ளும் என்பதுதான் அவர் சொன்ன வழி ... 

பல ஆண்டுகள் தவம் இருந்து அம்பாளின் சிரசில் அமரும் பாக்கியம் பெற்றன ... 

பிறகு ஓவ்வொரு மலரும் நறுமணம் கொண்ட மலராக பிறவி எடுத்தன .. 

இந்த உண்மையை அறியாத நக்கீரர் பெண்களுக்கு இயற்கை அன்றி செயற்கையில் மட்டுமே கூந்தலில் நறுமணம் உண்டு என்று இறையிடம் வாதாடினார் ... 

முடிவு அவரும் காமனைப்போல் பஸ்பமானார் ... 🌺🌺🌸🌸🌸🌷🌷🌻🌻🍁🍁💐💐



                                 👌👌👌👌👌👌👌👌👌👌

சௌந்தரிய லஹரி 

பாடல் 43

துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்

கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே

யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ

வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்

ஹே! பார்வதி! மலர்ந்த நீலோத்பல புஷ்பங்களின் வனம் போன்றதும், அடர்த்தியானதும், வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும். 

                                      👌👌👌👌👌👌👌👌👌👌


Comments

ravi said…
செங்கற்களாலும், கருங்கற்களாலும், சிகப்பு நிறம் பொருந்திய சாதி லிங்கத்திலும்,

செம்பினாலும், தராவினாலும் செய்யப்பட்ட சிலைகளிலும் சிவன் இருக்கிறான் என்கின்றீர்களே!

உம்மிடம் சிவன் இருப்பதை அறிவீர்களா?

உம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தையும் அதனால் அடையும் நாதலயமும் கிடைத்து இன்புறலாம்.🪷🪷🪷
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 89*
ravi said…
भवजलधिमगाधं दुस्तरं निस्तरेयं कथमहमिति चेतो मा स्म गाः कातरत्वम् ।

सरसिजदृशि देवे तावकी भक्तिरेका नरकभिदि निषण्णा तारयिष्यत्यवश्यम् ॥ १५ ॥

ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்

கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா:³ காதரத்வம் ।

ஸரஸிஜத்³ருʼசி தே³வே தாவகீ ப⁴க்திரேகா

நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவச்யம் ॥ 15 ॥

ன்னு இந்த ஸ்லோகம். ஸம்ஸார ஸாகரம். ‘ *பவ ஜலதிம் அகாதம்’ –*

தாண்ட முடியாத ரொம்ப பெரிய கடலாட்டமா இருக்கு. ஆழமா இருக்கு. ‘ *துஸ்தரம்* ’ –

இதை கடக்க முடியாதுன்னு தோணறது. ‘ *நிஸ்த்ரேயம்* ’ – இதை நான் எப்படி கடப்பேன்?
ravi said…
அது மாதிரி நாம பக்தி மார்க்கத்துல இருந்துண்டு இருக்கும்போது திடீர்னு நான் குண்டலினி யோகம் கத்துக்கப் போறேன்,

இல்ல வேதாந்தம் படிக்கப் போறேன்னு மாத்தி மாத்தி நினைக்கப் படாது. பகவானிடத்தில் நாம பக்தி பண்ணியிருக்கோம்.

பகவானை நாம நம்பியிருக்கோம்.

பக்தி மார்க்கத்துல மஹான்கள், குரு இவா காண்பிச்ச வழியில போயிண்டிருக்கோம். ‘ *தாரயிஷ்யதி அவஷ்யம்* ’

அவசியம் நம்மளை இந்த பவக் கடல்ல இருந்து தாண்ட வைக்கும்ங்கிற ‘ *ரக்ஷிஸ்யதி இதி விஷ்வாஸ:* ’

-பகவான் நம்மளை காப்பாத்துவார்ங்கிற விஸ்வாசம் ரொம்ப முக்யம்ங்கிறது இந்த ஸ்லோகத்துல வெளிப் படுத்தறார்.🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
🌹🌺" *நம் பூர்வ வினைகளை ஸ்ரீமந் நாராயணன் நாமம் சொல்லி மாற்றிக் காட்டுவோம் நம் பக்த பிரகாலாதன் போல......... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு குழந்தை கர்ப்பத்தில்
உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.

🌺(1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.

🌺(2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி காசு கூட சேமிக்க முடியாது. தங்காது...

🌺(3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.

🌺(4) கர்மா: தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான்.
இன்ன தொழில் செய்து தான்
இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம்.

🌺பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

🌺(5) மரணம்: இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில்
இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது.

🌺அதை யாரும் மாற்றமுடியாது.
யாராலும் மாற்றமுடியாது.
ஒரு நோயாளியை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார்.

🌺அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும்
மருத்துவர் இதே கேள்வியை தான் கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.

🌺ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில்
இருக்கும் போதே பூர்வ வினைக்கு
ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது.

🌺நம் பூர்வ வினைகளை ஸ்ரீ மந் நாராயணன் நாமம் சொல்லி மாற்றிக் காட்டுவோம் நம் பக்த பிரகாலாதன் போல🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺" Let's change our previous verbs by chanting Sriman Narayan's name like our devotee Prakalathan......... A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹A child in pregnancy
is created Five things are born with it.

🌺 (1) Life: Human life. No matter how hard you try, you can't last even a second.

🌺(2) Vidham: So much material is the reason for it. Even if you jump over it, you won't save a penny. won't stay...

🌺(3) Vidya: Only so much education can give. How much money does it cost?
Even if you do, studying for hours will not help.

🌺 (4) Karma: Career, character, wife
Formation of people. He will do this business.
What a business
This life
It is destined to live.
We see ourselves in life.

🌺Many have little to do with what they study. Visually, good people become bad and bad people become good
We are watching.

🌺 (5) Death: Today at this moment in this state
This life is written as prana vyogam.

🌺No one can change that.
No one can change.
A patient
We take him to the hospital. After checking there
Doctor half an hour ago
If he had come, he would have survived
He says.

🌺The question is why you couldn't go half an hour ago. Even though it was half an hour ago
The doctor would have asked the same question. If you are destined to survive
will survive.

🌺So these five are in pregnancy
For the prepositional verb while
determined accordingly.

🌺 Let's change our previous actions by chanting Sri Man Narayan's name like our devotee Prakalathan 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
Hemalatha said…
மட மட‌னு படை திறந்த வெள்ளம் போல்.....ஒரு நிக்கல் திணறல் இல்லாமல்......எப்படித்தான் எழுதுறீங்களோ.....அம்பாள் ஆசிர்வாதம் 🙏🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏

14-8-2022
இந்த சம்பவம் மீள் பதிவாகஇருக்கலாம்.
திரு ஸ்ரீனிவாசஐயரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு பெரிய சம்பவங்களில் இதை தொடர்ச்சிக்காக மீண்டும் பதிவிடுகிறேன்.
பி.சுவாமிநாதன்--
சென்னை சென்ட்ரலில் இருந்துரயில்மார்க்கமாக
திருத்தணி, திருப்பதி சென்றால் திருவள்ளூர் என்கிறரயில் நிறுத்தம் வரும். ஒரு காலத்தில் சாதாரணஊராக இருந்த திருவள்ளூர், இன்று தனி
மாவட்டமாகஅமைந்துள்ளது. இங்குள்ள
ஸ்ரீ வீரராகவ பெருமாள் ஆலயம் வெகு பிரசித்தம்
ravi said…

சுமார் 70,75 ஆண்டுகளு க்கு முன்னே திருவள்ளூ ரில் ராமசந்திர ஐயர் என்பவர் வசித்து
வந்தார். மிகவும் பிரபலமான வக்கீல். நேர்மை ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு வக்கீல் தொழிலை அமோகமாக நடத்தியவர்.

இதனால்
நீதிபதிகளாலும் சக வக்கீல்களாலுமே மிகவும்மதிக்கப்பட்டார் ராமசந்திர ஐயர்.
பூஜை – புனஸ்காரம், ஆசாரம் போன்ற எல்லாவற்றிலும் தேர்ந்தவர்.
மகா பெரியவா மீதுஅலாதியான பக்தி கொண்டவர்.திருவள்ளூரில் இவரது கிரஹத்துக்கு
மகா பெரியவா விஜயம் செய்து,தொடர்ந்து தங்கி, பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கிஇருக்கிறார். 'நீதி தவறாத சத்தியவான்' என்று பெரியவாளின் வா
யாலேயேஅருளப்பட்டவர் ராமசந்திர ஐயர்.
ராமசந்திர ஐயரது பேத்தியின் கணவர்
திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் மாப்பிள்ளை சீனிவாசஐயர், சீனிவாச ஐயருக்கு ஐந்து மகன்கள். இரண்டு மகள்.
இவர்களில் மூத்த மகன் சுந்தர்ராமன், தற்போது பெரம்பூரில் வசித்து வருகிறார்.எழுபதைக் கடந்தவர். 1960 -களின் துவக்கத்தில் சீனிவாச ஐயரின் குடும்பம் பழைய
மாம்பலத்தில் வசித்து வந்தது. இரண்டு மாடிகள் கொண்டதுகுடியிருப்பு. ஒரு நாள் அதன் மூன்றாவதுமொட்டை மாடியில் துணிகள் உலர்த்துவகென்று சீனிவாச ஐயரின் மகன்களான சிவகுமாரும், விசாகனும் ஈரத் துணிகளை
கொண்டு மொட்டை மாடிக்குச்சென்றனர்.
விசாகனுக்கு அப்போது மூன்றரைவயது.
ravi said…
சிவகுமார் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்த போது குழந்தையான விசாகன், அப்போது மொட்டைமாடி கைப்பிடிச் சுவருக்கு அருகே நின்று, கால்களால் எம்பி,எம்பி, வேடிக்கைபார்த்திருக்கிறான். அந்த வேளையில் சீனிவாச ஐயரின்
சகோதரியும்,விசாகனின் அத்தையும் ஆனவர் ஒருகாரில்வந்திருக்கி றார். ‘அத்தே கார்ல வர்றா... அத்தே கார்ல வர்றா'.. என்று சந்தோஷப்பட்டு கைகளைத் தட்டி மொட்டை மாடியில்
கைப்பிடிச்சுவர் அருகே எகிறிக்குதித்த விசாகன் சட்டென்று நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டான்.
ravi said…
ஓரளவுக்கு விவரம் அறிந்த சிவகுமார் பதறிப் போய்விட்டான். கீழே வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த விசாகனின்தாயார், அலறிப்புடைத்துக்கொண்டு சமையல்கட்டில் இருந்துவெளியே ஓடோடி வந்தார். மூன்றாவது மாடியில் இருந்தவிழுந்த விசாகன், விழுகிற வேகத்தில்
ravi said…
அங்கிருந்த எலுமிச்சை
மரத்தின் கிளைகளில் உடல் பட்டு, ஆங்காங்கே அதன்முட்கள்கிழித்து, ரத்தக் காயங்களுடன் கீழே கிடந்தான். அக்கம்
பக்கத்தில் வசித்து வந்த அனைவரும்'ஐயையோ... குழந்தைக்கு என்ன ஆச்சோ' என்கிற பீதியில் விசாகனின் தாயாருக்கு உதவவந்தனர். கீழே விழுந்த பிறகு விசாகனின் நினைவு தவறிப் போய்
கிட்டது.
ravi said…
அவனிடம் இருந்து ஒரு பேச்சும் இல்லை. தாயாருக்கு
இது இன்னமும் கவலையைக் கூட்டியது.
அங்கு இருந்தவர்கள் சட்டென்று விசாகனை ராயப்பேட்டை
ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போக ஏற்பாடுசெய்தார்கள். அங்கே ஐ.சி.யூ-வில் விசாகனை அனுமதித்தனர். எக்ஸ்ரே போன்றசோதனைகள்
மளமளவென்று நடந்தன. விசாகனின் அப்பாவுக்கு போனில் தகவல்
போய் அவரும் ஆஸ்பத்திரிக்குக் கண்ணீரும் கம்பலையுமாக ஓடி
வந்தார். 'மகனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது. அவன் உயிர் பிழைச்சுடணும்' என்று மகாஸ்வாமிகளை ஆஸ்பத்திரியில்
இருந்தபடியே பிரார்த்தித்துக் கொண்டனர் சீனிவாச ஐயரும் அவரது
மனைவியும்.
அப்போது மணி சுமார் காலை பதினொன்று இருக்கும். விசாகனுக்கு
சிகிச்சைமேற்கொண்டிருக்கும் மருத்துவர்களும் நர்ஸுகளும்
திரைப்படத்தில் வருவது போல் குறுக்கும் நெடுக்கும் பதறியபடி ஓடிக்கொண்டிருந்தார் களே தவிர, எந்த ஒரு நல்ல தகவலையும்
சொல்லவில்லை
ravi said…
விசாகனுக்கு இன்னும் நினைவு திரும்ப வில்லை’என்பதே அவர்கள் கடைசியாகச் சொன்ன தகவல்.
இதேவேளையில் காஞ்சி சங்கரமடத்தில் ஸ்ரீமகா பெரியவாசந்நிதியில் நடந்த அதிசயத்தைப் பார்ப்போம்.
சீனிவாச ஐயர் வசிக்கும் அதே பழைய மாம்பலம் தெருவிலேயே
அவரது வீட்டுக்கு ஓரிரு வீடுகள் தள்ளி ஹரிஹர ஐயர் என்பவர் வசித்து
வந்தார். இவரும் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர். அடிக்கடி காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் போய் பெரியவாளை ஏகாந்தமாக தரிசனம் செய்து விட்டுவருவது வழக்கம்.அன்றைய தினமும் பெரியவா தரிசனம் முடித்தபின் சந்திரமௌலீஸ்வரர் பூஜையைப் பார்த்து தரிசிக்கஸ்ரீமடத்தில் அமர்ந்திருந்தார்
ஐயர், அப்போது திடுமென ஹரிஹர ஐயரிடம் வந்தஒரு
சிஷ்யன்.
"மாமா... பெரியவா ஒங்களைக் கையோட,
கூட்டிண்டு வரச் சொல்றா" என்றான்." ஆஹா... பாக்கியம்'
' என்றபடி எழுந்து பெரியவா அருகே சென்றார் ஹரிஹர ஐயர்,'பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு அவரதுஉத்தரவுக்காகக் காத்திருந்தார்.
"திருவள்ளூர் ராமச்சந்திர ஐயரோட மாப்பிள்ளை சீனிவாச
ஐயர் உங்காத்துக்குப் பக்கத்துலதானே இருக்கார்?"
ravi said…
ஆமா பெரியவா...
"அவாகிட்ட சேர்ப்பிக்க வேண்டிய பிரசாதத்தை ஒம் மூலமா கொடுக்க றேன். ஒடனே அவாகிட்ட சேரணும்.." என்ற
“பெரியவா, ஒரு ருத்திராட்ச மாலையை யும், ஒரு காகிதத்தில்
விபூதியும் கொடுத்தார். அதைத் தன் கையில் வாங்கிக் கொண்ட
ஹரிஹர ஐயர், "கண்டிப்பா சேத்துடறேன் பெரியவா. ஆனா, சந்திரமௌலீஸ்வர
பூஜை முடிஞ்சப்புறம் நான்
பொறப்படலாமோல்லியோ?”என்று கேட்டார்.
"இல்லையில்லை. ஒடனே சேரணும். இந்தா, தீர்த்தம்வாங்கிண்டு நீ இப்பவே மெட்ராஸ் பொறப்படு" என்று
உத்தரவாகச் சொன்னார் பெரியவா.வெளியே வந்த ஹரிஹர ஐயருக்கு என்னென்னவோ
சிந்தனை. 'ஏன் இந்தப் பிரசாதத்தை இவ்வளவு அவசரம்அவசரமாகக் கொடுக்க வேண்டும். பூஜையை முழுசாக
என்னைப் பார்க்க விடவில்லையே? சரி, பெரியவா சொன்னால்,
எதற்கும் ஒரு காரணம் இருக்கும்' என்றபடி மனதைத் தேற்றிக்
கொண்டவர், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து,சென்னை
செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். மதியம் மணி
பன்னிரண்டரையைத் தாண்டி இருந்தது. அலுப்பின்காரணமாக வும் பயண சுகத்தின் காரணமாகவும் லேசான
உறக்கத்தில் ஆழ்ந்தார் ஹரிஹர ஐயர்.
சென்னைக்கு வரும் பேருந்தில் ஹரிஹர ஐயர் பயணம்செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ராயப்பேட்டை
மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? !
ஐயரின் குடும்பமே பதைபதைப்புடன் ஆஸ்பத்திரியில்காத்திருந்தது.மருத்துவர்கள்,பாதிக்கப்பட்டது ஒரு குழந்தை என்பதால், மருத்துவர் குழு கூடுதல்கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டு அவசர சிகிச்சையில் இறங்கினர்.சீனிவாச ஐயரையும் அவர் குடும்பத்தில் உள்ள முக்கியமான ஓரிருவரை
மட்டும் தன் அறைக்கு அழைத்த அந்தத் தலைமை மருத்துவர்,
ravi said…
பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. எவரும் கவலைப்படத் தேவை
இல்லை. மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்திருந்தாலும்,
குழந்தைக்கு எந்த விதமான உள்காயமோ, ஒரு சின்ன எலும்பு
முறிவோகூட இல்லை. இது எப்படி என்றுதான் எங்களது குழுவினருடன்
மிகுந்த ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருக்கி றோம். சாதாரணமாக
இது போன்ற உயரத்தில் இருந்து விழுந்தால், ஒரு குழந்தை உயிர்
பிழைப்பதே அரிது. அப்படி இருக்கும்போது உங்களது குழந்தை எந்த
விதமான காயமும் இல்லாமல் காப்பாற்றப் பட்டது, ஏதோ ஒரு அபூர்வ
சக்தியால்தான் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்” என்றார்.
அவர் முகத்தில் இருந்த ஆச்சரியம் இன்னும் விலகவில்லை என்பதை
முகம் உணர்த்தியது.
உடன் இருந்த பிற மருத்துவர்களும் தலைமை டாக்டரின் இந்தக்கருத்தை ஆமோதித்தனர்.
சீனிவாச ஐயரும் உடன் இருந்தவர்களும் விசாகனைக் காப்பாற்றிய அந்த தெய்வ சக்திக்கு மனதார நன்றி சொன்னார்கள்.
கூடவே, அந்தத் தலைமை டாக்டர் இறுதியாகச் சொன்ன ஒருதகவல் சீனிவாச ஐயரையும், அவரது குடும்பத்தின ரையும் கவலைப்பட
வைத்தது. "எல்லாம் ஓகே என்றாலும், குழந்தை இன்னும் கண்திறக்க வில்லை. சுய நினைவை இன்னும் அவன் எட்டவில்லை. அவன்
கண் விழித்தால்தான், அடுத்த கட்டம் என்ன என்று தீர்மானிக்க
முடியும். தெளிவாக எதையும் சொல்ல முடியும்” என்றார்.
“டாக்டர்... எங்க குடும்பத்துக்கே தெய்வ பக்தி அதிகம் உண்டு.
அதைவிட, காஞ்சி மகா பெரியவாளோட அனுக்ரஹம் எங்க
குடும்பத்துக்கு பரிபூரணமா இருக்கு. குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதுன்னு நம்பறோம். அவன் சீக்கிரம் கண் திறந்து எங்களை
பார்க்கணும்னு உங்ககிட்ட ரொம்ப வேண்டிக்கிறோம்” என்று கண்ணீர்விட்டார்
ravi said…
எல்லாம்"கூல் கூல்... தெய்வ சக்தியால முடியாதது எதுவுமே இல்லைதான்.
இருந்தாலும், உங்க பையன் கண் திறந்து பார்க்கிற வரை நாங்க எதுவும்சொல்ல முடியாது. வெயிட் பண்ணுவோம். நீங்க எல்லாருமேஅமைதியா இருங்க”என்று சொன்னார். பேருந்தில் இருந்து இறங்கிய ஹரிஹரஐயர்,
பழைய மாம்பலத்தில் உள்ள தன்வீட்டை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
தன் வீட்டுக்குச் செல்வதற்கு முன் மகா பெரியவா கொடுத்த
பிரசாதத்தை சீனிவாச ஐயரின் வீட்டில் கொடுத்து விடலாமே என்று வீடு இருக்கும் காம்பௌண்டுக்குள் நுழைந்தார்.
'அவர்மணியை
அழுத்தலாம் என்று போனவர் அப்போதுதான் கவனித்தார் - வீடு பூட்டப்பட்டிருந்தது. சாதாரணமாக இந்த நேரத்தில் வீடு பூட்டப் பட்டிருக்காதே'என்று யோசித்த ஹரிஹர ஐயர், பக்கத்து வீட்டில்
விசாரித்தபோதுதான் விவரம் அறிந்தார். துணுக்குற்றுப்
போனார்.
ravi said…
அவசரம் அவசரமாக மகா பெரியவா ஏன் தன்னிடம்
பிரசாதம் தந்து அனுப்பினார் என்று நீண்ட நேரமாக அவரது
மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு இப்போது விடை தெரிந்து விட்டது.
கிடைத்த ஏதோ ஒரு வாகனத்தில் தன் அவசரம் சொல்லி,
ராயப்பேட்டைக்கு விட்டார் சவாரி!
மாலை சுமார் நான்கு மணி இருக்கும். பரபரவென்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார் ஹரிஹர
ஜயர். விசாகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு எது என்பதை
விசாரித்து,நேராக சீனிவாச ஐயரிடம் சென்றார் ஹரிஹரன்.
தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இவர், தகவல் தெரிந்து குழந்தையைப் பார்க்க வந்திருக்கிறார் போலிருக்கிறது என்றுதான்சீனிவாச ஐயரின் குடும்பம் முதலில் நினைத்தது. தான், காஞ்சிபுரம் சென்ற விவரத்தையும், தரிசனம் பூர்த்தி பெறாத நிலை யில் பாதியிலேயே தன்னை அழைத்து மகா பெரியவா பிரசாதம் கொடுத்துஅனுப்பிய தையும் சுருக்கமாகச் சொன்னார் ஹரிஹரன்.
மகா பெரியவாளின் பெயர் உச்சரித்த மாத்திரத்தில், அதுவரை
அந்தக்குடும்பத்தினரிடம் இருந்த கவலை எப்படித்தான் ஓடி மறைந்தது
என்று தெரியவில்லை
ravi said…
தன் மகன் இருக்கும் சோகமான நிலையை
மறந்து, ஹரிஹர ஐயரிடம், “என்ன சொன்னார் மகா பெரியவா"என்று மீண்டும் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தார் சீனிவாச ஐயர்.
"ஒண்ணும் கவலை வேண்டாம். அந்தப் பரப்பிரம்மம் எல்லாம்
தெரிஞ்சுதான் எங்கிட்ட பிரசாதம் கொடுத்து அனுப்பிஇருக்கார்.
பெரியவா கொடுத்த விபூதியை அவன் நெத்தியில் இட்டு விடணும். இந்த
ருத்திராட்சத்தை அவன் தலைமாட்டுல வெச்சுடுவோம். மிச்சதை
பெரியவாளே பாத்துப்பார்"
என்றார் ஹரிஹர ஐயர்.
அனைவருக்கும் இதைக்கேட்பதற்கே
சந்தோஷமாக இருந்தது.
ravi said…
தலைமை மருத்துவர் அறைக்குஓடினார் சீனிவாச ஐயர். காஞ்சி
மடத்தில் இருந்து பிரசாதம்வந்திருக்கும் விவரத்தைச் சொன்
னார். "நாங்க தெய்வமா மதிக்கிற
குருநாதர்கிட்டேர்ந்து பிரசாதம்வந்திருக்கு. இதை உடனே
அவனுக்குஇட்டுவிடணும். அதுக்காக எங்களை ஐ.சி.யூ-வுக்குள்ளே
அனுமதிக்கணும்''
என்றுவேண்டினார். முதலில்இதற்கு
அனுமதி மறுத்தார் அந்தத்தலைமை மருத்துவர். பிறகு,
இவர்களது பிடிவாதம் தளராமல்இருக்கவே, ஹரிஹர ஐயரையும்,
சீனிவாச ஐயரையும் மட்டும் சிலநிபந்தனை களுடன் உள்ளே
அனுமதித்தார்.
ravi said…
ஜய ஜய சங்கர’ ஸ்லோகத்தை
மனதுக்குள் துதித்துக் கொண்டேஇருவரும் ஐ.சி.யூ-வுக்குள் நுழைந்தனர் விசாகன துவண்டு போய், பெட்'டில் படுத்திருந்தது தந்தையார் சீனிவாச ஐயருக்கும், ஹரிஹர ஐயருக்கும்
'கண்ணீரையே வரவழைத்தது.
அதிக நேரம் இங்கே இருக்கக் கூடாது' என்று அங்குபணியில் இருந்த செவிலியர்கள் சொன்னதன்பேரில், தன்
கையில் வைத்திருந்த விபூதியை, மகா பெரியவாளை துதித்துக்
கொண்டே விசாகனின் நெற்றியில் இட்டு விட்டார். அந்த
ருத்திராட்சத்தை அவன் தலைமாட்டில் தலைகாணிக்கு அடியே வைத்தார். இருவரும் வெளியே வந்தனர்.
என்னே ஆச்சரியம்! இவர்கள் இருவரும் வெளியே வந்த
அடுத்த விநாடி, அந்த அற்புதம் நடந்தது. விசாகன் பொசுக்கென்று கண்விழித்து விட்டான்.
ravi said…
செவிலியர்கள் ஓடிப் போய் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தனர்.
"ஈஸ் இட்?" என்றுபுருவம்உயர்த்திய அந்தத் தலைமை
மருத்துவர், ஐ.சி.யூ-வுக்குள் விரைந்தார். இந்த
சந்தோஷமான விஷயத்தைக் கேள்விப்பட்ட சீனிவாச ஐயர்,"பார்த்தேளா, பெரியவா கொடுத்த விபூதியோட மகிமையை..."
என்று குரல் தழுதழுக்க எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந் தார்.இயல்பான நிலையில் இருக்கும் விசாகனை எல்லோரும்
வந்து பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது. குடும்பத்தினர்
உட்பட அனைவரும் ஒன்று திரண்டு உள்ளே நுழைந்தனர்.
ravi said…
தலைமை மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை வைத்து,அவனைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எல்லோரையும்
பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தது குழந்தை.“அப்பா.." என்றான், சீனிவாச ஐயரைப் பார்த்து. விசாகனைப் பார்த்து தலைமை மருத்துவர் கேட்டார்:
“விசாகா... மாடியில் இருந்து கீழ விழுந்தியே... அப்ப என்னநடந்தது?'
தலைமை மருத்துவரின் இந்தக் கேள்விக்கு விசாகன் என்ன
பதில் சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள அனைவரும் அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.மூன்றாவது தளத்தில் இருந்து தரையில் விழுந்த விசாகனுக்கு,
விபத்துக்கு முன் நடந்தது என்ன என்பது ஸ்மரணையில் இருக்கிறதா...
தவிர, பழைய நினைவுகள் அப்படியே அவனுக்குள் இருக்கின்றனவா
என்பதை உறுதி செய்து கொள்ளவே இந்தக் கேள்வியை
அவனிடம் கேட்டார் தலைமை மருத்துவர்..
தன்னைச் சுற்றி ஓர் அரை வட்டம் போல் சூழ்ந்திருக்கும்
அனைவரையும் ஒரு முறை மலங்க மலங்கப் பார்த்தான் விசாகன்.
பிறகு, தலைமை மருத்துவரைப் பார்த்து, “மாடிலேர்ந்து விழுந்தேனா..."
என்று குழந்தைத்தனமாக விசாகன் இயல்பாகப் பேச ஆரம்பிக்க...
"ம்ம்... சொல்லு. மேலே என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றுபூரிப்பானார் தலைமை மருத்துவர்.
"
ravi said…
நான் கீழே விழும்போது காஞ்சிபுரம் உம்மாச்சி தாத்தா என்னை
ரெண்டு கையாலயும் அப்படியே தாங்கிப் பிடிச்சுண்டார். பிறகு எறக்கிவிட்டுட்டுப் போயிட்டார்" என்றான்.
தலைமை மருத்துவர் அதிசயப்பட்டார். சீனிவாசஐயர் உட்பட
விசாகனது குடும்பத்தினர் அனைவரும் பிரமித்துப் போய் நின்றனர்.
அப்போது சீனிவாசஐயர் தன் கைப்பையில் இருந்த மகா பெரியவா
படம் ஒன்றை எடுத்து, எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் விசாகனிடம்
நீட்ட, "ஆமாம்ப்பா... இந்த தாத்தாதான் என்னைப் பிடிச்சுண்டார்"
என்றான்.மருத்துவரைப் பார்த்து சீனிவாச ஐயர், "டாக்டர்,அவன் சொல்றது வாஸ்தவமாத்தான் இருக்கும். எங்க குடும்பத்துக்கே.. கண்
கண்ட தெய்வம் அந்த காஞ்சிசுவாமிகள் தான்.. அவரோட அனுக்ரஹம் தான் விசாகனைக்
காப்பாத்தி இருக்கு. இல்லேன்னா மூணாவது மாடிலேர்ந்துவிழுந்த ஒரு குழந்தை உடம்புல ஒரு அடிகூட படாம இருக்குமா?நீங்க எத்தனை கேஸ் பார்த்திருப்பேள்?
எங்கேயானும் இது சாத்தியமா?!" என்று கேட்கும்போது, மகா பெரியவாமீதுகொண்ட பக்தியின்வெளிப்பாட்டால் அவரது கண்களில்
,இருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன.
ravi said…
விசாகனின்கன்னத்தைச் செல்லமாகத் தடவிக்
கொடுத்து விட்டு, “லக்கி பாய்" என்றுசொல்லி
விட்டுவெளியேறினார் தலைமை மருத்துவர்.
அவரது மருத்துவக் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் அவனைப்பிரமிப்புடன் பார்த்து விட்டுத் தலைமை மருத்துவரைப்
பின்தொடர்ந்தார்கள்.

இதை அடுத்து வந்த ஓரிரு நாட்களில் விசாகன்' 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டான்.
நாட்கள் ஓடின. இயல்பு நிலைக்கு மகன் விசாகன் திரும்பிய
பிறகு காஞ்சிபுரம்
மகா பெரியவாளிடம் ஆசி வாங்கிவருவதற் காக ஒரு நாள் அவனைக் கூட்டிக் கொண்டு போனார்சீனிவாச ஐயர்.
பெரியவா தரிசனத்துக்காக அன்றைய தினம் கூட்டம் அதிகம் இருந்தது. 'திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்தில் இருந்துபெரியவாளை தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள்' என்கிறதகவல் வந்ததும்,சீனிவாச ஐயர்
குடும்பத்தினரைத் தன் அருகே வரவழைத்து அமர வைத்துப்
பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. அப்போது, விசாகன்மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததையும், பெரியவா வந்து அவனைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய சம்பவத்தையும்
தழுதழுக்கும் குரலில் சொன்னார் சீனிவாச ஐயர். அங்கு கூடி
இருந்தபக்தர்கள் பலரும்
கேட்டு மெய்சிலிர்த்தனர். ஆனால், இதற்கு பதிலாக பெரியவா என்ன சொன்னார்தெரியுமா?
தன் எதிரில் அமர்ந்திருக் கும் ஸ்ரீமடத்துக் காரியதரிசிகளையும்,
முக்கியஸ்தர்களையும் பார்த்து, "என்னமோ சொல்றான் பாரு...
மாடிலேர்ந்து இந்தப் புள்ளையாண்டன் விழுந்தானாம்... நான்
அவனைப் பிடிச்சேனாம்” என்று குரல் உயர்த்திச் சொல்லி சிரித்தார்.
எத்தனையோ பேருக்கு எத்தனையோ நன்மைகளைப் பல ரூபங்களில்தோன்றி மகா பெரியவா செய்திருக்கிறார். அந்த மகானோடு நெருங்கிய
தொடர்புடைய அன்பர்களுக்கு மட்டும்தான் இது தெரியும். ஆனால்,
என்றைக்கும் அதை பிரபல்யப்படுத்திப் பேசவே மாட்டார் மகான்.
அதுதான் பெரியவா!
ஜெய ஜெய சங்கரா!ஹர ஹர சங்கரா!!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
இந்தியாவின் உயிர்நிலையே மதமும் ஆன்மிகமும்தான்

நவீன சிர்த்திருத்தக்காரர்களும் போற்றும் பல கருத்துக்களைக் கொண்ட விவேகானந்தர் போன்றோரும், அன்னி பெசன்ட் போன்ற மேல்நாட்டு நல்லறிஞர்களுங் கூட இந்தியாவின் உயிர்நிலையே மதத்தை மையமாகக் கொண்ட அதன் ஆத்மிகந்தான் என்றே வலியுறுத்தியிருக்கின்றனர். அதனை மறந்து, மற்ற துறைகளில் இந்நாடு எத்தனை முன்னேற்றம் கண்டாலும் அது உயிரிழந்த சவத்திற்குச் செய்யும் அலங்காரமாகத் தானிருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் உலகவியல் ஆசைகள் வெறித்தனமாக வலுக்காதவாறு ஹிந்து மதம் எனப்படும் சநாதன தர்மத்தினால் அவர்களுக்கு ஆன்மிகவியலை மதாசரணைகளாகவும் தத்துவக் கோட்பாடுகளாகவும் கொடுத்து, அவர்களது உலக வாழ்வு சம்பந்தப்பட்ட அனைத்தையும்கூட ஈசனை மையம் கொண்ட சடங்குகளாகப் புனிதப்படுத்தியளித்து, உலகியலுமே ஆன்மவியலுக்கு உபாயமாகுமாறு உயர்த்திச் சிறப்புச் செய்து ஆதி காலத்திலிருந்து உலக நாடுகளிடையில் தனிச் சிறப்புப் பெற்றது நமது பாரத நாடு. மதவியலின் மூன்று அங்கங்களில் ஒன்றான தர்மம் என்பதை விரித்துக் கூறும் சநாதன தர்ம சாத்திரங்கள், ஒரு மானுடன் செய்யக்கூடிய சகல காரியங்களுமே ஆன்ம நலனுக்குப் பயனாகும்படியாக அவை ஒவ்வொன்றுக்கும் விதி வகுத்துக் கொடுத்துள்ளன. நல்லொழுக்கமாம் அத்தர்மம் ஈசனைச் சுற்றியே படர்ந்திருப்பதாகவும் ஆக்கிக் கொடுத்திருக்கிறது. இவ்வழி முறைகளையே இந்நாட்டு மக்கள் பூர்வ காலத்திலிருந்து பற்றியழுகி வந்திருப்பதால்தான் பிற நாட்டின் மேன்மக்களும் ஒப்புக்கொண்டு பாராட்டுமாறு இந்நாட்டிலேயே அதிக பட்சமாக மஹான்களும் மத நூல்களும் தத்துவ சாஸ்திரங்களும் தோன்றி, பிற நாட்டுப் பூர்வ காலப் பெரியோர்களும் அவற்றிலிருந்து ஆன்மிக உயர்வு கண்டு வந்திருக்கின்றனர். இவற்றின் துணை கொண்டு தத்தமது சூழ்நிலைகளுக்கேற்ற சித்தாந்தங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இவ்வாறாக, பிற நாடுகளின் உலகியற் போக்கைச் சமனப்படுத்தும் நாடாகவும் நமது நாடே திகழ்ந்திருக்கின்றது. இன்றைக்கும் மேநாட்டின் உலகியல் சக சாதனங்கள் யாவற்றையும் ஆண்டநுபவித்தும் வாழ்க்கையின் நிறைவைக் காணாத அந்நாடுகளின் பக்குவம் பெற்ற நன்மக்கள் நம் நாட்டுக்கே வந்து ஆன்மவியலில் ஈடுபட்டு அந்நிறைவை எய்துவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

ravi said…
இவ்வாறு சிற்றின்ப உலகியலிலிருந்து பேரின்ப ஆன்மவியலுக்கு வழிகாட்டியாக உலக நாடுகளுக்கு உதவி புரிவதையே தனது தனிப்பெருமையாகக் கொண்ட நமது நாட்டில் அந்த ஆன்மவியலை நாமே புறக்கணித்து மேநாடுகளின் உலகியல் முன்னேற்றத்தில் மோஹித்து அதன் பின்னேயே ஓடும் பேதமையை மெல்ல மெல்லப் பற்றிக்கொண்டு சுதந்திரம் பெறும் இச்சமயத்தில் அது முற்றியும் விட்டது.
ravi said…
பெய்யும் கனகமும் பொங்கும் புன் சிரிப்பும்*
ravi said…
சங்கரா* ...

பொன்னை விரும்பும் இந்த பூமியில் என்னை விரும்பி அழைத்தாய் ...

கண்கள் ததும்பும் காரூணியம் யார் மீது விழ வேண்டும் ?

*அம்மா* ... இந்த பெண் ஏழை

ஏதும் இல்லாமல் இருப்பவள் ..

இல்லை என்று சொல்லாதவள் ..

ஓட்டை வீட்டில் ஒழுகும் கூரை தனில் ஓம்காரம் ஒலிக்கின்றதே ..

நாட்டை காப்போர் வாழ வேண்டும் என்றே வீட்டை துறந்து வெளி வந்தாள்

*அம்மா* ...

நிர்வாணம் ஆடை கொண்ட வீடு தனில்

வறுமை, வாரணம் ஆயிரம் பாட இயலுமோ ?

ஓட்டுப்போட்ட தையல் , அணிந்த சேலைதனில் நெய்த நூலிலும் அதிகமன்றோ.?

அந்த தையல் அருள் இன்றி வாழுதல் சரியோ ?

கண் திறப்பாய் கமலம் போற்றும் காரிகையே 🪷🪷🪷

கமலக்கண்ணன் கனிந்து உருகும் அலர் கதிரே ... 🌞🌞

நீ உறங்கும் அவன் நெஞ்சமதில்

அதில் இருக்கும் மஞ்சமதில்

மாணிக்க கற்கள் என்ன குறைவோ தாயே ? ....

வயிரம் வைடூரியம் பவளம் முத்துக்கள் பார் முழுதும் தெறித்தாலும்

பஞ்சம் என்பது உனக்குண்டோ அம்மா ?

*சங்கரா* ..

வினைப் பயன் அறியாயோ ..

அத்வைதம், துவைதம்
விசிஷ்டாத்வைதம்

எல்லாம் கர்ம யோகம் ஒன்றே காரிய பலன் என்று உரைக்குமன்றோ ... ?

இவள் செய்த முன்வினை ... இன்று ஏழை என்றே பிறந்தாள் ..

நான் என் செய்வேன் *சங்கரா* ... ??

காலத்தின் கோலத்தை சிதைத்தே நான் ஒரு மா கோலம் போட முடியுமோ *சங்கரா* ... ?

*அம்மா* ..

தாய் நீ ... ஜனனி நீ ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

உன்னால் முடியாதது ஒன்று உண்டு என்றால்

முடியட்டும் என் வாழ்வும் இன்றுடன் உன்னுடன் 💐

*சங்கரா* ...

சோதனை வைத்தேன் .

வேதனை நீங்கட்டும் ..

உன் போதனை என்னவர் சொன்ன கீதையாகட்டும் ..

சாதனை படைக்க வந்தாய் .

சங்கரன் எனும் பெயர் கொண்டாய் ...

சுதந்திர திருநாள் இன்று

அழியட்டும் அவள் வறுமை ..

மறையட்டும் அவள் தனிமை ...

பொங்கட்டும் புது வெள்ளம் ...

பூக்கட்டும் பதினாறு புவனம் எங்கும் ...

பொன்னரசி பொழிந்தாள் கனக மழை ...

பெய்யும் கனகம் பெரும் வெள்ளம் கண்டதே ...

பெரியவா படம் ஒன்று அதில் அடித்து வர

காஞ்சி அணைத்துக்
கொண்டதே வாஞ்சையுடன் சிரிக்கும் பெரியவா தனையே 🙏🙏🙏
ravi said…
சாப்பாட்டு பீமன் என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும்?

ராமன் என்ன பாவம் செய்தார் -

*'சாப்பாட்டு ராமன்'*

என்று பெயர் வர?

முன்பு கேள்விப்பட்ட கதை

யுத்தம் முடிந்த பின் ராமர் அனைவருக்கும் விருந்து அளித்தாராம்

வானர சேனை ஆதலால் பழங்கள் அதிகமாக விருந்தில் இடம் பெற்றன

வானர சேனை அனைவருக்கும் இலை பரிமாறி பழங்கள் வைத்தாகிவிட்டது

ராமர் உண்ண தொடங்கிய உடன் உண்ணலாம் என அனைவரும் காத்திருந்தனர்

அனுமார் மேற்பார்வை முடிந்து ராமரிடம் வந்து விருந்து ஏற்பாடுகள் எல்லாம் சரி என்று பணிவாக நின்றார்

ராமர் அனுமாரை சாப்பிட அழைத்தார்

இலையும் இல்லை பழங்களும் இல்லை.

ராமர் அனுமாரை தன் எதிரே உட்கார சொன்னார்.

இலையில் இருந்த பழங்களில் தன் பக்கம் இருந்த பழங்களை ராமரும் எதிர்பக்கம் இருந்த பழங்களை அனுமாரும் சாப்பிட்டனர்.

சாப்பிடுவதில் கூட தர்மத்தினை கடைபிடித்ததால் ராமருக்கு சாப்பாட்டு ராமர் என்ற நாமமும் உண்டு.
ravi said…
*கந்தர் அலங்காரம் 32* 🐓🦚🙏

*அலங்காரம்-09:*

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து,

உச்சியின் மேல்
அளியில் விளைந்தது,

ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்
வெளியில் விளைந்த,

வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!🪷🪷🪷
ravi said…
கருணை தான் ஞானியின், யோகியின், பக்தனின் பரம லட்சணம்!

ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!

அப்படிக் கருணை இருந்தால், தேன் விளையும்! அளியில் (கருணையில்) விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி!

என்ன தேன்?

சிவானந்தம் என்னும் தேன்!

அம்பிகானந்தம் என்னும் தேன்!

முருகானந்தம் என்னும் தேன்!

மாலானந்தம் என்னும் தேன்!

அச்சுதானந்தம் என்னும் தேன்!

அத்தனையும் கிருபானந்தம் என்னும் தேன் தான்!

கருணையே சிவம்! அன்பே சிவம்!

காரேய்க் கருணை உடையவருக்குக் கருணையே பரமம் சிவம்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 311*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
67வது ஸ்லோகத்துல,

அந்த பாற்கடல், உன் மந்தஸ்மிதத்துக்கு சமம் ஆகாது.

ஏன்னா அந்த பாற்கடல், ஒரு மஹாபுருஷருக்கு ஒரு தடவை லக்ஷ்மியை கொடுத்தது!

உன்னுடைய மந்தஸ்மிதம் நமஸ்காரம் பண்ற எல்லார்க்கும், லக்ஷ்மியும், சரஸ்வதியும் கொடுத்துண்டே இருக்கு..

இன்னிக்கும், அப்படினு ஒன்னு சொல்வார்.

97 வது ஸ்லோகம் மந்தஸ்மிதத்துல, இந்த 37 சிவானந்தலஹரி மாதிரியே ஓரளவு இருக்கு, ”

பக்தர்கள் மனமாகிய மந்த்ர மலையையும், பக்தியாகிய கையிறையும் போட்டு கடைஞ்சு, பரமேச்வரன் என்கிற அம்ருதத்தை எடுத்து ஆஸ்சர்யமான ஒரு வஸ்துவை அடைகிறோம்னு” ஆச்சார்யாள் சொல்றார், 🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 308* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
*மேதாவீவிக்ரம* : க்ரம: |

🪷🪷🪷
ravi said…
அப்போது கண்ணன், “சூரியன் இன்னும் அஸ்தமிக்கவே இல்லை.

என் சக்கராயுதத்தால் நான் சூரியனை
இவ்வளவு நேரம் மறைத்திருந்தேன்!” என்று சொல்லித் தன் கையை மேலே உயர்த்தினான்.

சக்கரம் சூரியனை விடுவிக்கவே சூரியன் வானில் பிரகாசித்தது.
சகுனி துரியோதனனிடம், “மருமகனே, கவலைப்படாதே! அர்ஜுனனின் தலை சிறிது நேரத்தில் வெடித்துச் சுக்கு நூறாகப் போகிறது.

ஜயத்ரதனின் தந்தை விருத்தக்ஷத்ரன் தன் மகனின் தலையைக் கீழே சாய்ப்பவனின் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதற
வேண்டுமெனப் பரமசிவனிடம் வரம் பெற்றுள்ளார்!” என்றான்.🙏🙏🙏
ravi said…
The more you possess the more you are possessed.

The only person you are destined to become is the person you decide to be.

Prayers are not to change God's mind for you but to change your mind for your better and peaceful life.

Blessed are those who can give without remembering and take without forgetting.

Depression in failure should never go to heart and ego in success should never go to brain.

Start where you are. Use what you have. Do what you can.

If you get tired while pursuing your goals, learn to take rest and not to quit.
ravi said…
WHAT PEOPLE SAY IS ABOUT THEMSELVES



One day it happened: I was in Jaipur and a man came in the morning to see me, and he said, "You are divine."


I said, "You are right!"


He was sitting there and another man came and he was very much against me, and then he said, "You are almost devilish."


I said, "You are right!"


The first man became a little worried. He said, "What do you mean? You told me also, 'You are right,' and you say to this man also, 'You are right' -- we can't be both right."


I told him, "Not only two -- millions of people can be right about me, because whatsoever they say about me they say about themselves. How can they know me? It is impossible -- they have not even known themselves yet. Whatsoever they say is their interpretation.”


So the man said, "Then who are you? If this is my interpretation that you are divine, and this is his interpretation that you are evil, then who are you?"


I said, "I am just myself. And I have no interpretation about myself, and there is no need. I am simply delighted in being myself! -- whatsoever that means. I am happy in being myself."


Nobody can say anything about you. Whatsoever people say is about themselves. But you become very shaky, because you are still clinging to a false center. That false center depends on others, so you are always looking to what people are saying about you. And you are always following other people, you are always trying to satisfy them. You are always trying to be respectable. You are always trying to decorate your ego. This is suicidal.


Rather than being disturbed by what others say, you should start looking inside yourself. To know the real Self is not so cheap. But people are always hankering for cheap things.
ravi said…
If you want your joy to increase give it to others.

In every success story, you will find someone who has made a courageous decision.

Never let the things you want make you forget the things you have.

We may be known by the designation on our visiting card, but we are remembered by the values we live by and the love we give to others.

If it doesn’t evolve me, then it doesn’t involve me.

Flow like a water and you will find your way through any rock.

Be silent in the heat of anger.
ravi said…
WHO RUNS THE WORLD



There was a kind devotee of Lord Shri Krishna in Rajasthan, his name was Ramesh Chandra. He had a drugstore. In his shop, there was a small picture of Lord Krishna in one corner. Every day when he opened the shop, after the daily cleaning, he would wash his hands and clean that picture of God, and light incense etc. with great reverence.



He also had a son, Rakesh, who had completed his studies and now used to sit in the shop with him. He would see his father doing all this and since he was an educated young man of the new age, he would explain to his father that there is nothing like God, it's all an illusion of the mind.



The scriptures say that the Sun revolves around the universe in its chariot, while science has proved that the Earth revolves around the Sun... Giving such new examples of science every day, he would try and prove that there is no God.



The father would look at him with affection and just smile. He did not want to argue or discuss on this subject.



As time passed, the father grew old. He had perhaps sensed that now his end was near...



So one day he said to his son, "Son, whether you believe in God or not, it is enough for me that you are a hardworking, kind and honest person. But will you listen to this one thing and obey me?"



The son said, "Sure father, I will definitely agree."



Father said, "Son, after my death, do clean this picture of God every day in the shop; and secondly, if you ever get stuck in any trouble, then fold your hands and tell your problem to Shri Krishna. Just do this much, as I say." The son agreed.



The father passed away after few days, and time kept passing by...



One day, it was raining heavily. Rakesh kept sitting in the shop the whole day, and customers were also very few. On top of that, the electricity was also giving trouble. Suddenly, a boy who was dripping wet came running and said, "Brother, I need this medicine. My mother is very ill. The doctor said that if four spoons of this medicine are given immediately, then only mother can be saved...do you have this medicine?"



Rakesh saw the prescription and immediately said, "Yes I have it." The boy was very happy, and soon left with the medicine.



But what was this!! Shortly after the boy left, as Rakesh looked at the counter, he broke into a sweat... A customer had returned a bottle of rat poison just a short while ago. Since the lights were out, Rakesh had left the bottle on the counter thinking he would put it back in the right place when the lights came on. But this boy who had come to get the medicine, had taken the bottle of rat poison instead of his medicine bottle...and the boy was not even literate.

ravi said…
Oh God!!" the words came out of Rakesh's mouth involuntarily, "what a disaster this is!!" Then he remembered his father's words and immediately, with folded hands, he started praying in front of Lord Krishna's picture with a heavy heart : "O Lord! Father always used to say that you exist. If you really are there, then please don't let this untoward event happen today. Don't let a mother drink poison from her son's hands...Lord don't let her drink it!!!"



"Brother!" just then a voice came from behind... "Brother, I slipped because of the mud, the medicine bottle also broke! Please give me another bottle."



Looking at the picture with the adorable smile of God, tears started streaming down Rakesh's face!!!



That day, a belief was awakened within him that there is someone who is running the universe...some call him God, some call him the supreme, some omnipresent and some, the Divine Power.

ravi said…
Be real, not perfect.

Accept that what is, is; and what is not, is not.

Excuses never built empires.

Don't let your loneliness make you reconnect with toxic people. You shouldn't drink poison just because you're thirsty.

Seizing the opportunity is half of success and hard work is the other half.

Tactics without strategy is like the noise before defeat.

Failing is the first step to the path of success. It means you are trying in every way to achieve it in your life.
ravi said…
MIRROR EFFECT



What you see in others and your surroundings is called the mirror effect. Everything you see and experience is the reflection of you. It reflects what you are thinking and believing NOW. This is a tough one to swallow when things look bleak and not to our liking. But, be assured, there is always truth in the mental “mirror.” Let me give you a few examples.



When we have anger inside we are more likely to be attacked by an angry person. We will see the anger in others and react to it. We will either chime into their negative disposition or feel angrier. Or we will feel justified with our anger, or maybe we will look at them and judge their demeanor.



On the other hand, if we are a happy person, being attacked by an angry person, we will see the anger (if we see it at all – at one point in our unfoldment our consciousness will no longer recognize the “wrong”) and feel compassion only. No need to respond or react; just compassion for the misguided soul. We wish him or her well and move on with our own business. Doesn’t that sound a lot better, a lot more desirable?



The energy we send out (good or bad) will attract the same frequency. When we are confused and overwhelmed, we will attract certain misfortunes. Our car might stop working, our computer breaks down, our handy man doesn’t show up, and so forth. When we are in a bad mood we might get an angry phone call, we get unfair treatment at work, and our world starts looking bleak. We are all over the place and not in the NOW, so we are experiencing this unsettling energy.



The list goes on. However, if we are in good spirit and our frequency is up to par, all pieces of the life-puzzle fall into place easily and comfortably. All of a sudden, the freeway opens up in front of us, we find an easy parking space, we get a love letter in the mail, or an unexpected check shows up in our bank account. All good things will happen if our frequency is a positive and loving one.



When you stay in the NOW, you can only do one thing at a time, one thought at a time. Ask yourself: “What is going on inside of me at the moment? Am I exuding a high frequency, am I up to par with my unfoldment? Am I the best I can be?” (A word of caution: Don’t judge yourself, just be honest and then love yourself for being aware and willing to take the next step.)



Let’s talk a little bit more about the mirror effect. We have established the fact that what we see in others and our surroundings is called the mirror effect. Everything you see and experience, believe it or not, is the reflection of you, your thoughts, and especially your beliefs. It reflects what you are thinking and believing NOW.



But we also have to learn to see ourselves in the reflections of other people. We can learn so much from others and it’s therefore important to nurture relationships. It doesn’t mean we have to hang out with people we don’t like. However, if we come into contact with an unpleasant person (and there is always a good reason for it) we must learn from their disposition, even if it’s the mere acknowledgment of a negativity we still see within; we see this disposition because we still need to correct it within ourselves.

ravi said…
Anytime we perceive something, negative or positive, it shows us that we still identify ourselves with this disposition. Once we let go and correct this character trait, it will no longer show up in our experiences. And remember, we have a choice. And a wise choice would be to hang out with good people, people we can learn from.
ravi said…
ஆவணி அவிட்டம் என்றால் வெறுமனே பூணல் மாற்றிக்கொள்ளவேணும் காமோகாரிஷித் என்று ஒரு மந்திரம் காலையில் சொல்லனும் பின்பு இட்லியோ டிபனோ சாப்பிடனும் பின்பு ஒரு சங்கல்பம் சொல்லி தீர்ததமாடி புது பூணல் போட்டுக்கனும் அரிசி மற்றும் எள்ளால் ரிஷிதர்பணம் பிதுர் தர்பணம் ( அப்பா இல்லாதவர்கள்) பண்ணனும் ஆத்துக்கு வந்து கால் அலம்பணும் பின்னர் விருந்து ( ஆவணி அவிட்ட தளிகையை அசடு கூட செய்வாளாம் - அவ்வளவு நேரமாகுமாம் இந்த கர்மாவை செய்ய) சாப்பிடனும் அவ்வளவுதான் - (இட்லி டிபன் சாப்பிடலையா இரண்டாம் குளியல் இல்லாமல் அப்படியே தொடரலாம் - யார் சொன்னார்களோ) ஆவணி அவிட்டம் எனநம்மில் பலரும் இன்றயஇளைய தலைமுறையினரில் மெஜாரிட்டி ஆனவர்களும் நினைக்கிறார்கள்

ravi said…
ஆவணி அவிட்டம் என்பது என்ன?



ஆவணிஅவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை : இதை பூர்வர்கள் உபாகர்மா என்பர்



ஆவணி அவிட்டம் என்றால் புது பூணூல் மாற்றி கொள்வது என்பது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும் உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதுதான் உண்மையான ஒன்று



புராதனமான (ப்ராசீனமான) நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடுவது வழக்கம் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் அதுமாதிரி வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் இந்த ஆவணி அவிட்ட பண்டிகைதான்
ravi said…
ஆவணியாவிட்டம் என்று சொல்லப்படும் இந்த பண்டிகை வேதத்தை தவிர வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை இக்காலத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்து தான் கொண்டாடப்படுகின்றது என அறிந்துள்ளோம் என்றால் அது மிக மிக குறைவானவர்களே



சரி இதனை உபாகர்மா என கூறாமல் ஆவணி அவிட்டம் என கூறுவதேன்



பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம் மேலும் ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்
ravi said…
உபாகர்மா என்றால் என்ன



உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம் அதாவது வேதாரம்பம் இதனை ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத் என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்



அதாவது ஸ்லோகத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமாகையால் ப்ரஹ்மச்சாரிக்கும் மற்றுமுள்ள க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதங்களை கற்க்க ஆரம்பிக்க வேண்டிய நன்னாள் அதாவது வேதாரம்பம் செய்ய உகந்த நாள் என்பது ஆகும்



வேத ஆரம்பம் என்றால் வேத்த்திற்க்கு முடிவு
ravi said…
If you are not peaceful inside, the world you see will be chaotic. Peace begins from within.

Solve the problem or leave the problem but do not live with the problem.

Your faith can move mountains, your doubts can create them.

Punctuality is not about being on time, it is basically about respecting your own commitment.

When everything is lost you find yourself.

Never blame a day in your life. Good days give you happiness. Bad days give you experience. Both are essential in life. All are gods' blessings.

Don’t give away your power by blaming others for your pain.
ravi said…
POWER OF THE WORD



During one of my workshops, I was recently reminded of the power of word habits and how important these habits are in communicating with each other, but also within ourselves. We have formed a specific speech pattern with favorite expressions and use it in our daily communication with others. Mostly, we are not aware of what we are saying, or how we come across. We just speak and react verbally.



We also have a specific way of talking to ourselves. Think about your inner dialog. Are you encouraging yourself or are you telling yourself that you will fail, get sick, or aren’t smart enough? Are you using phrases like “I can’t”, “I’m not able to”, or something less suspicious like “Every time I do this, or that, I end up not feeling good”? Negative expectations will get you more negativity. The Law of Cause and Effect works at all times.



The issue is, we are not paying close attention to our words, i.e. thoughts.
ravi said…
Webster’s Dictionary describes a habit as: a usual way of behaving; something that a person does often in a regular and repeated way. We are creatures of habit. We act and talk the way we are used to. Years and years of practicing the ‘norm’, has made us automatons rather than thinking and reasoning individuals.



Since we are individuals we also perceive different words differently. It all depends on what they meant to us during our formative years. We have stored the meaning in our sub-conscious and now we are interpreting these words as we see fit. Again, we didn’t take the necessary diligence to analyze where these verbal attacks come from, if we are the culprits.
ravi said…
Words can spread quickly, especially in this day and age with the internet and social media. Words are alive, they are fluid, they influence, they can heal and soothe, but they can also cut into the heart like a razor sharp knife.



So let’s start changing the usage of words to more appropriate ones. For example: We use the word evil, horrific, terrible, etc. when describing someone’s less than good actions. Let’s replace it with the word ignorance. Personally, I rarely use the word evil, but choose it sometimes to denote a great wrong. In reality all evil is only the effect of ignorance and therefore unreal. Ignorance can be destroyed.
ravi said…
By gaining wisdom, we replace ignorance. By gaining wisdom, we are allowing more love to flow into and from our being. By gaining wisdom, we are changing our inner core, reflecting more of who we truly are. Let us choose our words wisely and let us think with a kind heart before we speak.
ravi said…
Your mind is the GARDEN in which your thoughts are the SEEDS.
Nurture your thoughts with care so that FLOWERS blossom, and not WEEDS
ravi said…
Do you encounter the question, "How Old are you?" Read this, and perhaps it will make you revisit your likely response.

HOW OLD ARE YOU (Courtesy Satish S, yet again)



Many of my well-wishers often ask me - how old are you?
I tell them how can I answer
This question, since i consider ti stupid!


When I play with a little child, I am one year old.
When I watch cartoons, I'm three.


When I dance to the tune of music, I am sweet sixteen.
Yes, when I try to heal someone's wound, I'm sure I’ve crossed six decades of my life span.


When I chat with sparrows or bulbuls, Or run after my dog and his ball, I become their age.


What is there in age?
Isn't it a number only?
Like the light of the sun
And the flowing river waters
I am ageless.


I keep changing with time and the experience.


Days are marching towards night no doubt,
Whenever it extends its hand, I shall hold it.

Till then it’s not my age that matters.
How fully have I lived thus far,

That is the consideration.

Hemalatha said…
பொன்னை விரும்பும் உலகத்தவருக்கு pen ஐ விரும்பி தரும் படைப்புகளுக்கு எத்தனை பொன் கொடுத்தாலும்‌ ஈடாகாது 🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 90*
ravi said…
भवजलधिमगाधं दुस्तरं निस्तरेयं कथमहमिति चेतो मा स्म गाः कातरत्वम् ।

सरसिजदृशि देवे तावकी भक्तिरेका नरकभिदि निषण्णा तारयिष्यत्यवश्यम् ॥ १५ ॥

ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்

கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா:³ காதரத்வம் ।

ஸரஸிஜத்³ருʼசி தே³வே தாவகீ ப⁴க்திரேகா

நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவச்யம் ॥ 15 ॥

ன்னு இந்த ஸ்லோகம். ஸம்ஸார ஸாகரம். ‘ *பவ ஜலதிம் அகாதம்’ –*

தாண்ட முடியாத ரொம்ப பெரிய கடலாட்டமா இருக்கு. ஆழமா இருக்கு. ‘ *துஸ்தரம்* ’ –

இதை கடக்க முடியாதுன்னு தோணறது. ‘ *நிஸ்த்ரேயம்* ’ – இதை நான் எப்படி கடப்பேன்?
ravi said…
அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
Bhuvana kumar said…
We are enjoying and cherishing👏👏👏👏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 314* 🙏🙏🙏started on 7th Oct 2021

*பவா = சிவன் -* சிவனின் வடிவம்

*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி

*பவா = செல்வம்*

*112 பவானீ* =

நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
ravi said…
அப்படிக் கொடுத்து விடுவதனாலே, அந்த *பவானீ* என்ற வார்த்தைக்கே பிற்காலத்தில் என்ன வியாக்கியானம் வந்தது தெரியுமா...?

*பவானீ* என்று சொன்னால், 'நான் ஆவேனாக' என்கிற பொருள் ஏற்பட்டது.

ஆகவே, பவானீ உற்பத்திக்குக் காரணமாக இருக்கக் கூடியவள் என்கிற அர்த்தம் மாறி

'நான் நீயாக மாறவேண்டும்' என்பதாகவே ஓர் அர்த்தம் அந்தத் திருநாமத்துக்கு.

இப்படி, யார் எதைக்கேட்டாலும் கொடுக்கக் கூடியவள் அம்பாள்.

அதனால்தான் அவளிடம் ' *அதிக வரம் பெறலாம்'* என்று சொல்லப்பட்டிருக்கிறது.

"அம்மா, நான் நீயாகவே ஆக வேண்டும்" என்று கேட்டால்கூட நடத்திக் கொடுக்கிறாள் அம்பாள்.

அப்படிப்பட்ட அழகான திருநாமம் *பவானீ* .

பவானீயாக இருக்கக் கூடியவள் என்ன செய்வாள் என்று சொல்லக்கூடியது அதற்குப் பின்னால் வருகிற திருநாமம்.🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 315* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*84 உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்* 👣👣👣👣👣👣👣

*பரகாயப்ரவேசம், ஜீவன்முக்தி*👏👏👏
ravi said…
ஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா

மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ

யயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ

யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி: 84
ravi said…
மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்திலும் அன்னையின் கால் விரல் நகங்கள் அவள் பாதகமலங்களில் பணியும் தேவர்களின் மகுடங்களின் ஒளி தெறித்து ரத்னம் போல் பிரகாசிப்பதாக வரும்.

//எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.//

அப்படியே அருள வேண்டும் அம்மா.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 37*🦚🦚🦚
ravi said…
பூசை பூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்

பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்

ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசைகொண்டதோ

ஏதுபூசை கொண்டதோ

வின்னதென் றியம்புமே. 37🇨🇮🇨🇮🇨🇮
ravi said…
கால நேரம் தவறாமல் பூசை செயம் பக்தர்காள்,

பூசை என்றால் என்ன என்பதை அறிவீர்களா?

“ *பூ* ” என்பது நமது ஆன்மா. “ *சை* ” என்பது அசையாமல் நிறுத்துவது.

இதுவே உண்மையான பூசையாகும்.

இந்த பூசையை நமக்குள்ளேதான் செய்ய வேண்டும்.

ஆன்மாவான பூவை அது எந்த இடத்தில் இருக்கிறதோ அங்கேயே நினைத்து நினைத்து நிறுத்தி அசையாமல் இருத்துவதே பூசை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அதை யோக தியானத்தால்தான் நமக்குள்ளே செய்ய வேண்டும்.

இதை விட்டு நீங்கள் செய்கின்ற பூசைகள் யாவும் புறச்சடங்குகளே.

ஆதியான சக்தியோ அநாதியான சிவனோ இந்த பூசையை ஏற்றுக் கொண்டார்களா?

ஆதலால் அப்பூசை செய்து தியானியுங்கள்.

அதனை ஆதியாகவும் அனாதியாகவும் நம் உயிரில் உறையும் சிவனும், சக்தியும் ஏற்றுக் கொள்வார்கள்.🇨🇮🇨🇮🇨🇮
ravi said…
இளங்குஞ் சரச்செழுங் கன்றே!
எனச்சொலி
ஏத்திநின்றாய்

உளங்கசிந் தங்கையால்
குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ?

வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு
விளங்கும்

புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 7🇨🇮🇨🇮🇨🇮
ravi said…
🌹🌺 ' *ஓம் ஸ்ரீ ரங்கா சரணம்*
*என கோஷமிட்டபடி கோபுரத்தில் இருந்து குதித்து உயிரை விட்ட வெள்ளையம்மாள்* ….. - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹வெள்ளையம்மாள் என்று ஒரு தேவதாசி. அரங்கனின் பரம பக்தை.

🌺முகலாய படையெடுப்பின் போது தளபதி கோவிலில் உள்ள நகைகளை எல்லாம் கொள்ளை அடித்தான்.எதிர்த்தவர்களை கொன்று குவித்தான்.

🌺கோவிலை கொள்ளை அடித்தவர்கள்
அங்கேயே தங்கி
இறைவனின் திருமேனிகள்
மற்றும் விலை உயர்ந்த நகைகளை
பூமியில் புதைத்து வைத்து இருப்பதை கேள்விபட்டு அதனையும்
எடுத்து செல்ல அங்கேயே தங்கி இருந்தனர்.

🌺இதையெல்லாம் கண்ட வெள்ளையம்மாள் மனம் துடித்தது.

🌺முகலாய தளபதியை பார்த்து அவருக்கு ஆசை நாயகியாக ஆகப் போவதாக கூறினாள். மக்கள் அனைவரும் அவளை தூற்றினர்.

🌺இரவு நேரத்தில்
தளபதி இருக்கும் இடம் சென்று தான் வந்திருப்பதை தெரிவித்தார்.

🌺ஏன் நீ இங்கே வர வேண்டும்
நீ சொல்லி அனுப்பி இருந்தாள் நானே உனது வீட்டிற்கு வந்து இருப்பேனே என்றான் தளபதி

🌺உன் ஆசைக்கு இணங்க சம்மதம் தெரிவிக்கவே வந்தேன்.
தொட வந்த தளபதியிடம்
இங்கே வேண்டாம்
நாளை எனது வீட்டிற்கு வாங்க என சொல்லி
மேலும் கொள்ளையடித்த பின் ஊருக்கு போகாமல் ஏன் இங்கேயே தங்கி இருக்கிறீர்கள் என கேட்டார்
வெள்ளையம்மாள்.

🌺நிறைய தங்க புதையல் இங்கே இருப்பதாக கேள்விப்பட்டோம்
அதனையும் கண்டுபிடித்து எடுத்து செல்ல வேண்டுமே என்றார்.

🌺தனக்கு புதையல் இருக்கும் இடம் தெரியும் அதனை காண்பிக்கிறேன்
ஆனால் ஓர் நிபந்தனை
என்றவள்
நான் அந்த புதையலை காண ஆசைப்படுகிறேன்
நீங்களும் நானும் தனியாக முதலில் சென்று
அந்த புதையலை பார்ப்போம்
பின்னர் உங்கள் ஆட்களை அழைத்து
எடுத்துக்கொள்ளலாம் என்றாள்.

🌺தளபதியும் வெள்ளையம்மாளும் வெள்ளை கோபுரம் வந்து அதன் உச்சியில் புதையல் இருக்கு என
சொல்லி இருவரும் கோவில் கோபுரம் உச்சியை அடைந்தனர் .

🌺புதையல் எங்கே இருக்கு காட்டு என கேட்ட தளபதியிடம்
ஸ்ரீ ரங்கநாதரின் கருவறையை கைகளால் காட்டிய வெள்ளையம்மாவை பார்த்து சிரித்த தளபதி கீழேயே காண்பிக்க வேண்டியதை என சொல்லி முடிக்க வில்லை
தனது பலம் அத்தனையையும் பிரயோகித்து ஒரே தள்ளில் தளபதியை கோபுரத்தின் உச்சியில் இருந்து தள்ளிவிட்டார்.

🌺தளபதியின் மரண ஓலத்தை கண்ட முகலாய வீரர்கள் வெள்ளை கோபுரத்தின் உச்சியில் நின்றிருந்த வெள்ளையம்மாளை கண்டனர்.

🌺ஓம் ஸ்ரீ ரங்கா சரணம்
என கோஷமிட்டபடி கோபுரத்தில் இருந்து குதித்து உயிரை விட்டார்
வெள்ளையம்மாள் .

🌺படை தளபதி இல்லாது
தங்கி இருந்த சேனைகள்
கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகளை விட்டு விட்டு
பயந்து பின்வாங்கி ஒடியது.

🌺வெள்ளையம்மாளின் நினைவாக இன்றும் அந்த கோபுரம்
அப்படியே வெள்ளை கோபுரமாய் காட்சியளிக்கிறது.

🌺இன்றும் அவர்கள் பரம்பரையில் யாரும் மரணித்தால் கோவில் மரியாதை செய்கிறார்கள்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌹🌺 'Om Sri Ranga Charanam
Villiayammal who jumped from the tower chanting...
-------------------------------------------------- ------
🌺🌹 A goddess named Vellayammal. A great devotee of Arangan.

🌺 During the Mughal invasion, Thalapathy looted all the jewels in the temple and killed the opponents.

🌺 Temple robbers
Stay there
God's wives
And expensive jewelry
I heard that it was buried in the earth
They stayed there to take it.

🌺 Seeing all this, Villiayammal's heart was pounding.

🌺 She saw the Mughal commander and told him that she would become his heroine. All the people despised her.

🌺At night time
He went to where the commander was and informed that he had come.

🌺 Why should you come here?
The commander said that you had sent me and I will come to your house

🌺I have come to consent to your wish.
To the commander who came to touch
Not here
Saying to buy my house tomorrow
He also asked why you are staying here instead of going to town after the robbery
Villiayammal.

🌺We heard that there is a lot of gold treasure here
He said that he should find it and take it away.

🌺 He knows where the treasure is, I will show it
But one condition
She is
I long to see that treasure
You and I go alone first
Let's see that treasure
Then call your men
She said let's take it.

🌺 Thalapati and Viliyammal came to the white tower as if there was a treasure on its top
Saying both of them reached the top of the temple tower.

🌺 To the commander who asked him to show where the treasure is

🌺The commander who smiled at Viyayamma who showed Sri Ranganatha's sanctum with her hands did not finish saying what should be shown below.
Using all his strength, he pushed the general from the top of the tower with one push.

🌺The Mughal soldiers who saw Thalapati's death knell saw Villaiyammal standing on the top of the White Tower.

🌺 Om Sri Ranga Charanam
Chanting, he jumped from the tower and lost his life
Villiayammal.

🌺 In the absence of the army commander
Staying forces
The looted jewels were left behind
Frightened, it retreated and snapped.

🌺 The tower is still in memory of Vellayamal
It looks like a white tower.

🌺Even today if anyone dies in their lineage they pay respect to the temple.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
Kousalya said…
அற்புதம்... காலன் அவன் காதில்லாதவன்... பாசம் கொண்ட பாசம் இல்லாதவன்
Kousalya said…
.அருமை அருமை...சங்கரா, உன் போதனை என்னவர் கீதை ஆகட்டும்.....🙏🙏🇮🇳🇮🇳🙏🙏
Savitha said…
வார்த்தைகள் நெல்லிகனி போல் உதிர்த்தது அற்புதம்
🙏🏻
ravi said…
காசிக்கு வந்தது ஒரு காலடி ...

இரண்டடியிலோ மூன்றடியிலோ நான்கு அடியிலோ விவரிக்க முடியா அரவிந்தம் செய்த சீரடிகள்...

இளமையின் அழகு இனிய சொற்களில் தெறித்தது ...

பஜ கோவிந்தம் காசி எங்கும் இனித்தது ...

சங்கரன் வாழும் காசியில் சங்கரனும் நுழைந்தான் கோவிந்தம் என்று முழங்கியே

விலகி செல்லுங்கள் ...

காமகோடி ஒன்று கால் நடையில் யாரும் காணா பொன்னடி சேவிக்க வருகின்றது ..

முழங்கினர் சீடர்களே ...

முன்னாடி கண்ணாடி செல்ல

பின்னாடி தள்ளாடி ஒருவன் வந்தான் தடை ஏதும் இல்லாமல்..

உடலெங்கும் துர்நாற்றம் ...

குருதி வழியும் கோரை பற்கள் ..

அடித்துப்போட்ட பன்றி உடல்

எதிர்த்து நின்ற எருமை கொம்பு

பதுங்கி பாய்ந்த புலியின் தோல் ..

உடல் எங்கும் வீட்டு ஓடுகள் போல் மண்டை ஓடுகள் ...

நதிகள் போல் நெளிந்து நெளிந்து செல்லும் பாம்புகள்

கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு

குனித்த புருவம் அதில் திங்களின் கீறல்

பனித்த சடை

அதில் பதுங்கி எட்டிப்பார்க்கும் பாகிரீதி

பழுது கொண்ட மேனியும் அன்று மின்னியது பவளம் போல்

அதிலே மூன்று முழுக்கு போட்டது பால் வெண்நீற்

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் மறைந்து நின்றதே

காணப் பெற்றான் சங்கரன்

மனி(த்)தப் பிறவியும் வேண்ட மறந்தான் இந்த மா நிலத்தே!

தள்ளிப்போ மூர்க்கனே ...

அனுஷ்டாங்கம் அறிவாயோ ..

விலங்குக்கு விலங்கு போடும் அறிவிலீயே அருகே வராதே நான் சங்கரன் ...

தெரியாமல் வார்த்தைகள் எல்லாம் தெரிந்தவனிடம் தெரிந்தே சேர்ந்தன...

சுவாமி விலகி போ என்று சொன்னது

இந்த அழுகி போகும் உடலையா

இல்லே என் உள்ளே உறையும் உன்னதமான அத்மாவான பரமனையா?

சொல்லுங்கள் சுவாமி என் பாக்ஷையில் ...

மூடன் நான்
மூர்க்கன் நான் மண்டூகம் நான் ...

முற்றும் ஏதும் இன்னும் நான் துறக்க வில்லை

கற்றும் ஏதும் புரியவில்லை ...

தாங்களே என் குரு

சொல்லுங்கள் யார் விலக வேண்டும் ?

விழுந்தான் சங்கரன் வீதி என்றும் பாராமல் ...

சங்கரன் மட்டும் விழவில்லை

அவன் கொண்ட அகங்காரம் விழுந்தது

ஆணவம் விழுந்தது அகம் அங்கே விழுந்து அழிந்தும் போனதே ....

வந்தவன் காணவில்லை ..
தந்தவன் அன்றோ சங்கரனை ...

தவித்துப்போனான் சங்கரன் ...

மனி(த்)தப் பிறவியும் வேண்டினான் இந்த மா நிலத்தே!

*சங்கரா* ... எல்லாம் இறை படைத்த உயிர் அன்றோ ..

இதில் விலக்கி பார்ப்பது தவறன்றோ ...

சிவம் இல்லா உயிர் ஏதும் படைப்பதில்லை பிரம்மன் அறிவாயோ ? ...

தூணுக்கும் தாய்மை தந்தவன் புகழ் அறிந்தும் அரியை அறியாமல் இருப்பதும் ஏனோ .. ?

நாங்கள் ஒருவரில் இருவர் என்று பேதமை காண்பது மூடமதே அன்றோ

கல்லுக்கும் பெண்மை தந்தான்

கரும்பாறைக்குள் தேரை வைத்தான் ..

நிற்கும் தேரை ஓட வைத்தான்

சிலந்திக்கும் யானைக்கும் குரங்குக்கும் முதலைக்கும் முக்தி தந்தான் ...

காலால் உதை பெற்றே

கல்லால் புண் பட்டே

வில்லால் கூர் அம்பால் கிழி பட்டே

பிரம்பால் அடி பட்டே

சொல்லால்
மிதி பட்டே

வினை தீர்க்க வருவான் அன்றோ..

வேண்டாம் விலகி போ எனும் எண்ணம்

எல்லாம் என் உயிரே சங்கரா...

இதில் உயர்வு தாழ்வும் என்று ஏதும் இல்லை

நல்ல விடை தந்தான் விடையேறி வானில் கடை தரும் கற்பகத்துடன்
அந்த கனிமுகத்துடன்

களி தின்றவன் எல்லோர் கலியும் தீர்ப்பவன்

*மனீஷா பஞ்சகம்* அங்கே மண்டி இட்டு மாதொரு பாகன் தாள் பணிந்ததே

மீண்டும் மனி(த்)த பிறவி கிடைத்தே மனிதருள் மாணிக்கம் ஆனான் சுவாமிநாதன் எனும் வேறு பேர் கொண்டே காலடி சங்கரன்
🪷🪷🪷🪷🪷
ravi said…
*சங்கடம் தீர்க்கும் சம்புவும் சலனம் துறந்த சங்கரனும்*🪷🪷🪷
ravi said…
நடமாடும் நாயகனோ பொன்னார் மேனியன் ... *சிவந்தவன்*

சினம் அற்றவன்

*வெள்ளை* மனம் கொண்டவன்

*பசுமை* மட்டுமே தருபவன் ..

*சக்கரமாய்* சுத்தும் வாழ்வு தனில்

நடு நின்று நல்லதே செய்பவன்..

பறக்கும் மூவண்ண கொடி🇨🇮 பாடுகிறதே தேவாரம்

ஆலவாயன் கோபுரம் உச்சி தனிலே 🙏🙏🙏
ravi said…
67
காமாக்ஷி தேஶிக க்ருபாம்குர மாஶ்ரயந்தோ
நாநா தபோ நியம நாஶித பாஶபந்தா: |
வாஸாலயம் தவ கடாக்ஷமமும் மஹாந்தோ
லப்த்வா ஸுகம் ஸமாதியோ விசரந்தி லோகே ||67||

காமாக்ஷி! குருவின் கருணையைப் விரும்பிப் பெற்றவர்களும், பலவகையான தவங்களாலும், நியமங்களாலும் பாசங்களின் பந்தங்களை நீக்கியவர்களான மகான்கள் உனது கடாக்ஷமாகிற வீட்டை அடைந்து நிலையான அறிவு பெற்றவர்களாக இவ்வுலகில் வாழ்கிறார்கள்.
ravi said…
*கந்தர் அலங்காரம் 33* 🐓🦚🙏

*அலங்காரம்-09:*

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து,

உச்சியின் மேல்
அளியில் விளைந்தது,

ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்
வெளியில் விளைந்த,

வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!🪷🪷🪷
ravi said…
*அநாதி இல் வெளியில் விளைந்த* = ஆதி=தோற்றம் x அநாதி=முடிவு!

முடிவில்லாத வெட்ட வெளி = Cosmos.

அம்பலவாணர் நடமிடும் வெளி!

அங்கு என்ன தான் விளையும்?

*வெறும் பாழை* =

வெற்றிடம் தான் விளையும்!

அண்ட வெளியில் பாழ் என்னும் வெற்றிடம் தான் விளையும்! Vaccum!

Volume of space that is empty of matter!
Quantum Theory

உங்களுக்குப் படிக்கப் பிடிக்குமா?

அவிங்களுக்கு இந்திய இறையியலில் அறிவியல் எப்படி எல்லாம் பின்னிப் படர்ந்து இருக்கு-ன்னு ஈசியாப் புரியும்!

*பாழ்* = கணிதத்தில் Zero என்பதை விட இங்கு Null என்று கொள்ளலாம்!

நாதம் என்பார்கள்!

நாத விந்து கலாதீ நமோ நம!

ஒன்றுமில்லாத நிலை! கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க - அந்த "ஒன்றும்" இல்லாத நிலை என்பதில் "ஒன்று" இருக்கு அல்லவா?
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 312*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
மூககவி சொல்றார்,

चेतःक्षीरपयोधिमन्थरचलद्रागाख्यमन्थाचल-

क्षोभव्यापृतिसम्भवां जननि ते मन्दस्मितश्रीसुधाम् ।

स्वादंस्वादमुदीतकौतुकरसा नेत्रत्रयी शांकरी

श्रीकामाक्षि निरन्तरं परिणमत्यानन्दवीचीमयी ॥ ९७॥

சேத꞉க்ஷீரபயோதி⁴மந்த²ரசலத்³ராகா³க்²யமந்தா²சல-

க்ஷோப⁴வ்யாப்ருʼதிஸம்ப⁴வாம்ʼ ஜனனி தே மந்த³ஸ்மிதஶ்ரீஸுதா⁴ம் |

ஸ்வாத³ம்ʼஸ்வாத³முதீ³தகௌதுகரஸா நேத்ரத்ரயீ ஶாங்கரீ

ஶ்ரீகாமாக்ஷி நிரந்தரம்ʼ பரிணமத்யானந்த³வீசீமயீ || 97 ||
ravi said…
இதுல, ஹே ஜனனீ! காமாக்ஷி!

“சேத:க்ஷீரபயோநிதி⁴மந்த²ரசலத்³ராகா³க்²யமந்தா²சல

க்ஷோப⁴வ்யாப்ருʼதிஸம்ப⁴வாம் ஜனனி தே மந்த³ஸ்மிதஸ்ரீஸுதா⁴ம் “

உன் மனசாகிய, “ *க்ஷீரபயோநிதி* ⁴” – பாற்கடல்ல, பரமேச்வரன் கிட்ட பிரேமை,அநுராகம் அப்படிங்கிற,

“ *மந்தா²சல” –*

மந்த்ர மலையை போட்டு கடையறதுனால, அதாவது பரமேச்வரனைக் குறித்து நினைத்த உடனே உடன்

உன் மனசுல பிரேமை என்கிற மலை வந்து உன் மனமாகிய பாற்கடலை கடையறது.

அப்போ ஒரு அம்ருதம் அதுல இருந்து உண்டாகறது.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 309* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
*மேதாவீவிக்ரம* : க்ரம: |

🪷🪷🪷
ravi said…
ஆனால் கண்ணனின் அறிவுரைப்படி ஜயத்ரதனின் தலை அவன் தந்தையின் மடியிலேயே சென்று விழும்படி
அர்ஜுனன் அம்பெய்தி விட்டான்.

தவம் புரிந்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரனின் மடியில் போய் அந்தத் தலை விழுந்தது.

“ஐயோ! இதென்ன மண்டை ஓடு?” என அந்தத் தலையைக் கீழே தள்ளிய விருத்தக்ஷத்ரனின் தலை வெடித்துச் சிதறியது.👍
ravi said…
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வறுமை நீங்கி செல்வம் செழிக்க அருளும் திருவஹீந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர் பற்றிய பதிவுகள் :*

பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம், பரஹன் நாரதீய புராணம் முதலான புராணங்களில் குறிப்பிடப்படும் தலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ‘திருவஹீந்திரபுரம்’ என்பதாகும்
ravi said…
கடலூரில் இருந்து மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் கொடில நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது, இந்த திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. இத்தலத்தில் தேவநாதப் பெருமாள் அருளும் ஆலயம் ஒன்றும், அதன் எதிரே மலை மீது ஹயக்ரீவர் ஆலயம் ஒன்று மாக இரண்டு கோவில்களில் உள்ளது.

தேவநாதப் பெருமாளாய், ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேதராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இத்தல இறைவனை, திருப்பதி ஏழுமலையானாக நினைத்து திருப்பதிக்குச் செலுத்தும் வேண்டுதலை இங்கேயே செலுத்துகின்றனர்.

சிலருக்கு எவ்வளவு முயற்சித்தாலும் திருப்பதி பாலாஜியை தரிசிக்கும் பேறு எளிதில் வாய்க்காது. அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து தேவநாதரை வழிபட்டால், திருப்பதி பெருமாளை வழிபடும் பாக்கியம் உடனடியாக கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
ravi said…
பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் நிர்மாணித்த தலம் இது என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த தலத்தில் உள்ள பெருமாளுக்கு ஆதிசேஷன் பாதாள கங்கையையும், கருடன் விரஜா தீர்த்தத்தையும் கொண்டு வந்து தாகம் தீர்த்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தில் பாதாள கங்கை சேஷ தீர்த்தம் என்றும், விரஜா தீர்த்தம் கொடில நதி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. சேஷ தீர்த்தம் பெருமாளின் திருமஞ்சனத்திற்கும், கொடில தீர்த்தம் பெருமாளின் நிவேதனம் தயாரிக்க மடப்பள்ளியிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் நாக தோஷம் அகலும்.

நாக தோஷம் தீர, பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு இங்குள்ள கிணற்றில் பால் தெளிக்கலாம். இதுவே ஆதிசேஷனின் சேஷ தீர்த்தமாகும். இது ஆலயத்தின் வெளிச் சுவரின் வடக்கே உள்ளது. இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தின் தென்மேற்கில் ஹேமாம்புஜவல்லி தாயார் அருள்பாலிக்கிறார்.
ravi said…
வடமேற்கில் சயனப் பெருமாள் மற்றும் ராமபிரானுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. தேவநாதப் பெருமாள் சன்னிதி திருச்சுற்றில் விநாயகர் அருள்புரிகிறார். வில்வ மரமே தல விருட்சமாக இருக்கிறது. இத்தல மூலவரின் எதிரில் கருடாழ்வார் கைகளைக் கட்டிக் கொண்டும், ராமர் சன்னிதியில் ஆஞ்சநேயர் வாயைப் பொத்தியபடியும் நிற்பது வேறு எங்கும் காணப்படாத அம்சமாக உள்ளது.

மேலும் ராஜகோபாலன் சன்னிதி, ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் சன்னிதியும் இருக்கிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக தேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர், தேவநாதப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கிறார்.

தேவநாதப் பெருமாளை ‘தாழக் கோவிலில்’ வழிபட்டு விட்டு, கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், சிறிய செந்நிற மலை காணப்படும். ‘அவ்ஷதகிரி’ என்று அழைக்கப்படும் இந்த மலை மீது 74 படிகள் உள்ளன.
ravi said…
இந்த மலை மீதுள்ள அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து தான், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.

ஆயக் கலைகள் 64-ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். நான்கு வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் கைப்பற்றிச் சென்றனர். பெருமாள், ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அந்த அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு, பிரம்மதேவரிடம் ஒப்படைத்தார்.

ஹயக்ரீவர் கல்வி, ஞானம் ஆகிய வற்றிற்கு ஆதாரமாக உள்ளவர். லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியருக்கு அருளிச் செய்தவர். கருடனால் தனக்கு உபதேசிக்கப்பட்ட ஹயக்ரீவ மந்திரத்தை உபாசித்து, ஹயக்ரீவரின் அருள் காட்சியை கண்டார் தேசிகன்.
ravi said…
திருக்காட்சி தந்த ஹயக்ரீவர், தேசிகனுக்கு சகல கலைகளும் கைவரச் செய்தார். ஹயக்ரீவரின் பூரண அருளைப் பெற்ற தேசிகன் தமிழிலும், வடமொழியிலும் பல வேதாந்த நூல்களைப் படைத்துள்ளார்.

திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் நிர்மாணித்த திருமா ளிகையும், அவர் தோண்டி தீர்த்தம் எடுத்த கிணறும் உள்ளது. தேசிகன் தவம் புரிந்து ஹயக்ரீவரின் அருள் பெற்ற மலையில் ஹயக்ரீவர், லட்சுமி ஹயக்ரீவராய் அருள்பாலிக்கிறார். அருகில் வேணுகோபாலன், நரசிம்மர் உள்ளனர். கருடாழ்வாரும் அருள்புரிகிறார்.
ravi said…
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம். மேலும் ஞானம், வித்தைகளில் மேன்மையும் கிட்டும். இத்தலத்தில் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

நாம் தினந்தோறும் தேசிகன் இயற்றிய ‘ஹயக்ரீவ ஸ்தோத்திரம்’ படித்து வந்தால், கல்வியில் உயர் நிலையையும், ஞானத்தையும், செல்வத்தையும் பெறலாம். இந்த தலத்தில் லட்சுமி நரசிம்மர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

இவரை ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும், சுவாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, பானகம் நைவேத்தியம் செய்தால் வறுமை, கடன் தொல்லை அகலும். செவ்வாய் தோஷமும் விலகும்.
ravi said…
இவ்வாலயத்தில் தேசிகனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. விசேஷ நாட்களில் ரத்ன அங்கி அலங்காரத்தில் தேசிகனைத் தரிசிக்கலாம். இத்தல தாயார் பிருகு மகரிஷிக்காக குழந்தையாக தாமரை மலரின் நடுவில் அவதரித்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவம் இருந்து தேவநாதப் பெருமாளையே கரம்பிடித்தார்.

வெள்ளிக்கிழமைகளில் ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு, மாலை வேளையில் வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையும். வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
இன்றைய 'பாலிடிக்ஸ்':பிரிவினை மயம்!

விளையாட்டுக்குச் சொன்னேன். வெள்ளைக்காரன் இருந்த மட்டும் அவனோடு சண்டை போடணும் என்கிறதில்..... 'ஸாத்விகப் போர்', 'அஹிம்ஸா யுத்தம்' என்று சொல்கிறார்கள். வாஸ்தவத்தில் காந்தியும், அவருடைய கொள்கைகளில் மனஸாரப் பிடிமானம் வைத்திருந்த ஒரு சின்ன மைனாரிடியும் தவிர, மற்ற பெருவாரியான ஜனங்கள் அஸல் போரில் இருக்கிற சிரமம், தியாகம் எதுவும் அநுபவிக்காமல்,
ravi said…
ஆனாலும் உள்ளுக்குள்ளே அஸல் போர் செய்கிறவர்களுக்கு குறைச்சலில்லாத த்வேஷத்தோடுதான் இருந்து வந்தார்கள். ஆகையினாலே நான் 'சண்டை' என்று சொன்னது தப்பில்லை. அப்படி, வெள்ளைக்காரனோடு சண்டை போடுகிறதில் ஆஸேது ஹிமாசலம் அத்தனை ஜனங்களும் ஒற்றுமையாக இருந்தோமே தவிர, அவன் என்னிக்குப் புறப்பட மூட்டை கட்ட ஆரம்பித்தானோ அன்னியிலிருந்தே நமக்குள்ளேயே ஒற்றுமை போய், இத்தனைதான் பிரிவு என்று கணக்குப் போட முடியாமல் தினுஸு தினுஸாக வகுப்புவாதம், மதவாதம், கட்சிகள் வாதம், மாகாண (மாநில) வாதம்.. மாகாணம் என்ன, தாலுகாவுக்குத் தாலுகா, பக்கத்துக்குப் பக்கத்து ஊர், தெரு, வீடு வரை ஒவ்வொருவரும் ஒருத்தரையருத்தர் ஏசிக்கொண்டு, பரஸ்பரம் போட்டி போட்டுக்கொண்டு அவரவரும் தனக்கு ஸ்பெஷல் ரைட் கொண்டாடிக் கொண்டு வாதம், த்வேஷம் என்றெல்லாம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறோம்.
ravi said…
ஜனங்களுக்கு ஸத்குணங்களை - ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அநுஸரித்துப் போவது, கட்டுப்பாடு., த்யாகம் , ப்ரேமை, உழைப்பு மனப்பான்மை, எல்லாவற்றுக்கும் மேலே மொத்தமாக இந்த ஒரே பாரத தேசத்தை வைத்துப் பார்க்கிற உண்மையான தேசபக்தி முதலான ஒழுக்கங்களை - திரும்ப திரும்ப எடுத்துச் சொல்லி, தேசத்துடைய ஒட்டுமொத்த ஷேமத்திற்காக அத்தனை பேரும் ஒற்றுமையாகப் பாடுபடணும் என்ற உணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்ற அபிப்ராயம் காந்தியும் அவருக்குக் கீழேயே பயிரானவர்களும் இருந்த தலை முறைக்குப் பிற்பாடு வந்த தலைவர்கள் எனப்பட்டவர்களுக்கு அநேகமாக அஸ்தமித்துப் போய்விட்டதாகத் தெரிகிறது.
ravi said…
வயஸு வந்தவர்களுக்கெல்லாம் வோட்டு என்று பண்ணினாலும் பண்ணினார்கள், அதிலிருந்து ஸமுதாயத்தின் பல ஸெக்ட்ஷன்களில் ஒவ்வொன்றிலும் ஒரு மெஜாரிடியைத் தாங்களே புதுசாக ஸ்ருஷ்டித்தாவது உண்டாக்கி, 'உங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்' என்று சொல்லிக் கொண்டு அவர்களையும் அந்தந்த ஸெக்ட்ஷன் மைனாரிடிகளையும் பரஸ்பர விரோதிகளாக்குவதுதான் வோட்டுப் பிடிக்க ப்ரம்மாஸ்திரம் என்று ஆக்கிக் கொண்டே இன்றைக்குப் பெரும்பாலும் 'பாலிடிக் ¢ நடக்கிறது மொத்தத்தில் இந்த தேசத்தின் உசந்த ஸமுதாயம், மேலெழ வெளியிலே பார்க்கிறதற்கு மட்டும் ஒருமைப்பாட்டு கோஷம் என்ற ஒரு 'ஷோ'வோடு, உள்ளுக்குள்ளே பிரிந்து, பிரிந்து, பிரிந்து வீணாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. ரொம்பவும் துக்கமும் வெட்கமும் படும்படியான ஸ்திதி, பொது எதிரி ஒருத்தன்கிட்டே விரோதத்தில்தான் நமக்கு ஒன்று சேரத் தெரிந்ததே தவிர நமக்குள்ளே பரஸ்பர ப்ரேமையில் ஒன்று சேரத் தெரியவில்லை!
ravi said…
அப்போது வெளிப்பார்வைக்காவது ஸாத்விகமாகச் சண்டை நடந்த மாதிரி இல்லாமல், இப்போது வெளியிலேயும் அஸுர யுத்தமாகவே நடந்து, யதுகுலம் மாதிரி நம்மை நாமே நிர்மூலம் பண்ணிக் கொள்வதில்தான் இது போய் முடியுமோ என்று பயப்படுகிற ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது.

இந்த அபாயத்தை இப்போதுள்ள அநேகக் கட்சிகளுடைய, வர்க்கங்களுடைய தலைமை ஸ்தானத்திலிருப்பவர்கள் தெரிந்துகொண்ட ப்ரக்ஞையே இல்லாமல் போய்க்கொண்டிருப்பதுதான் ரொம்பவும் விசாரம் தருவதாக இருக்கிறது. தர்மம் என்று ஒன்று இருக்கிறது... ஜனங்களுக்கு இருக்க வேண்டிய அநேக நல்லொழுக்கங்கள் சொன்னேனே, அவை எல்லாமும் அதோடு இன்னும பலவும் சேர்ந்துதான் தர்மம், தர்மம் என்கிறது. இந்த பாரத தேச கலாசாரத்திற்கு லோகத்திலேயே வேறே எந்தப் பெரிய 'ஸிவிலிஸேஷ'னுக்கும் இல்லாத தீர்க்காயுஸைக் கொடுத்து யுகாந்தரங்களாக ரட்சித்துக் கொண்டு வந்திருக்கிறது அந்த தர்ம சக்திதான். அப்படி ஒன்று இருக்கிறது என்று தப்பித் தவறியாவது தற்காலத்தில் தலைவர்கள் என்று இருக்கிறவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எலெக்ட்ஷனில் ஜயிப்பது ஒன்றைத் தவிர வேறே ஒரு லட்சியத்தையும் கட்சிகாரர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற துர்தசை ஏற்பட்டிருக்கிறது ஜயிப்பதுதான் குறி என்கிறபோது hook or crook, எதுவானாலும் ஸரீ என்று அதர்மத்திற்கும் கட்சிக்காரர்களைத் தூண்டிக்கொடுக்கிற வரைக்கும் போய்விடுகிறது.
ravi said…
இந்த நிலவரத்திலே முக்யமாக அப்போது வெள்ளைக்காரன் ஒரு தினுஸில் divide and rule தந்திரம் பண்ணினானென்றால், இப்போது தலைவர்கள் என்கப்பட்டவர்களும் ஸமுதாயத்தை அநேக மெஜாரிடி மைனாரிடிகளாக divide பண்ணி, மெஜாரிட்டியைத் திருப்தி பண்ணுவதற்காக தர்மாதர்மத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாமல் எதுவேண்டுமானாலும் பண்ணி எலெக்ட்ஷன் வெற்றிக்கே பாடுபடுவதாகத்தான் பொதுப்படையாகப் பார்க்கிறபோது தெரிகிறது.
ravi said…
இப்படிக் தற்காலத்தில் அவரவரும் ஸ்பெஷல் ரைட் கேட்டுக்கொண்டு ஏகமாகப் பிரிவுகள் ஏற்பட்டிருப்பது போதாதென்று நான் வேறே பிள்ளையாரிடம் தமிழ் மக்களுக்கு ஸ்பெஷல் ரைட் என்று ஒரு பிரிவை உண்டாக்கி இன்னொரு சண்டை மூட்டிவிட்டால் ஸமஸ்த ஜனங்களுக்குமான அந்தப் பிள்ளையார் என்னைச் சும்மா விடமாட்டார்!வாஸ்தவத்தில் பிள்ளையாரும் ஸரி, ஸுப்ரஹ்மண்யரும் ஸரி இந்த தேசம் பூராவுக்கும் ஸ்வாமிகள்தான். அதை ப்ரூவ் பண்ணவும் நிறைய எவிடென்ஸ் உண்டு.
ravi said…
முக்யமாக இரண்டு வாதம் - அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் 'உண்மையை டிஸ்கவர் பண்ணிச் சொல்கிறோமாக்கும்' என்று சொல்லிக்கொண்டு தங்களை அறியாமலே, ஏற்கெனவே குறுகின மனப்பான்மைகளில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறவர்களை இன்னும் தங்கள் பங்குக்கு வேறே மூட்டிக் கொடுத்திருக்கிற இரண்டு வாதம். ஒன்று, 'பிள்ளையார் நரஸிம்ஹ வர்மப் பல்லவ ராஜாவின் காலத்தில்தான் அவருடைய ஸேநாதிபதி பரஞ்ஜோதி - பிற்காலத்தில் சிறுத்தொண்ட நாயனார் ஆனவர், அவரால் சாளுக்ய தேச ராஜதானியான வாதாபியிலிருந்து தமிழ் நாட்டுக்குப் புதுசாக அறிமுகம் பண்ணப்பட்டவர்.
ravi said…
அதற்கு முந்தி அவருடைய வழிபாடு இங்கே கிடையாது. அதாவது அவர் தமிழ்த் தெய்வம் இல்லவே இல்லை, அசலார்' என்பது. இன்னொரு வாதம், 'முருகன் தமிழ் நாட்டுக்குத்தான் ஆதியிலிருந்து ஸ்வாமி இங்கேயிருந்துதான் வடக்கே அவரை இரவல் வாங்கிக்கொண்டு ஏதோ தங்கள் ஸ்வாமியே மாதிரி புராணம், மந்த்ரம், ஆகமம் எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு கதை பண்ணுகிறார்கள்' என்பது. இரண்டுமே தப்பு என்று 'ப்ரூவ்' பண்ண நிறையச் சான்றுகள் இருக்கின்றன. இப்போது அந்த விஷயம் வேண்டாம்.

ஆக, நான் வேறு, இப்ப இல்லாததை இருக்கிறதாகச் சொல்லி பேத உணர்ச்சியை மூட்டிக்கொடுக்கப்படாது.

இது ஒரு பக்கம். ஆனால் இன்னொரு பக்கத்தில், பிள்ளையார் இந்தத் தமிழ் நாட்டுக்கு எத்தனை தினுஸில் விசேஷ அநுக்ரஹம் பண்ணி நம் தமிழ் ஜனங்களுடைய இம்மை, மறுமை இரண்டுக்கும் 'டாப்' ஆன உபகாரியாயிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்து நமஸ்காரம் பண்ணாவிட்டால் நமக்கு நன்றி மறந்த பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்றும் தோன்றுகிறதே!ஆனதாலே, முத்ரை கித்ரை குத்திப் புதுசாக இன்னொரு சண்டை கிளப்பாமல், நன்றியோடு நமஸ்காரம் பண்ணுவதற்காகவே யதார்த்தத்தைச் சொல்கிறேன்.
(இன்று சங்கடஹர சதுர்த்தி-சுதந்திர தினம்)
ravi said…
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

*ஹோமங்களும் அதன் பயன்களும்*

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும்,
2 எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
3. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
4. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
5. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
6. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
7. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
8. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
9. சுயம்வர கலா பார்வதி ஹோமம் :
10. பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
11. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
12. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
13. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
14. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
15. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
16. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
17. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
18.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல பயங்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ்வோமாக...

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
Oldest Older 201 – 303 of 303

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை