ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 21. கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா பதிவு 28

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 28

 21 கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா



அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அழகு.  

அவள் அழகுக்கு ஒப்புமை  வேறு ஏதாவது இருந்தால் தானே  இது போல  என்று காட்ட முடியும்?  

பிரம்மம் என்று சுலபமாக அவளை பற்றி சுருக்கமாக சொல்லிவிடலாம்.  

பரம ஆனந்தத்தின் உச்ச கட்டம் தான் ப்ரம்மம், *ப்ரம்மானந்தம்* .

அழகும் ஆனந்தமும் ஒன்று கூடிய கலவை. 

அகத்தின் அழகு முகத்தில் என்கிறோமே,  அவள்  முழுதும் பிரம்மத்தில் திளைப்பவள் என்பதால் அவள் முக காந்தி அப்படி ஒளிவீசுகிறது.🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️



உபாசனை ஐந்து வகை

அபீகமனம்   : அணுகுவது. 

உபாதானம் :  அர்ப்பணிக்க தயார் நிலை:  

லிஜ்யா :  நிவேதனம்,   

ஸ்வாத்யாயம் :  

தானே அறிவது.  

யோகம் : பக்தி தியானம்.

விக்ரஹ ஆராதனையில் ஆரம்பித்து தனக்குள் தானே  பிரம்மமாக உணர்வது வரை முதிர்ச்சி பெறுபவன் யோகி.

இந்த  பதிவில்   ஸ்லோகங்கள்  8 முதல் 10 வரை பார்ப்போம். 

அதில் வரும் நாமங்கள் பத்து.  

அதைத்தான் 21 முதல் 30 வது நாமம் வரை அர்த்தம் புரிந்துகொள்ளப்போகிறோம்.🙏🙏🙏🙏🙏🙏

21कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा - கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா

லலிதாம்பாளின் செவிகள் எப்படி இருக்குமாம் தெரியுமா.?? 

அன்றலர்ந்த அழகு மிகுந்த கதம்ப மலர்கள் போல💐💐💐


மஞ்சரி = கொத்து 

க்லுப்த = சீராக / தயாராக / அணிவகுத்து 

கதம்ப மஞ்சரி க்லுப்த = சீராக மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்து 

கர்ணபூர = காதுகளை சுற்றி அணியும் அணிகலன் 

மனோஹர = ரம்யமாக

சீராய் மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்துக்களால் காதுகளை அலங்கரித்திருப்பவள் 🍁🍁🌸🌸🏵️🏵️🏵️



21कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा - கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா

கண்கள் தாமரை என்றால் அவள் செவிகளோ கதம்ப மலர்கள் .. 

அவள் உள்ளம் ஒரு பூ பந்தல் ... 

பார்க்கும் பார்வையில் மகரந்தமும் தேனும் சொரியும் போது அங்கே பக்தர்கள் எனும்~ 

வண்டுகள் மொய்வதில் ஆச்சரியம் என்ன ?  

மொய்க்கும் வண்டுகள் அவள் கருணை எனும் தேனை அதிகமாக குடிப்பதினால் மயங்கி அவள் பாதம் எனும் பங்கஜத்தில் படுத்து உறங்குகின்றன ... 

ஏது இனி கவலை ஏது இனி பிறவி குடும்பும் கொழுந்தும் குருதியும் தோயும் குடம்பை இனி நமக்கு கிடைக்காது 👍👍👍👍👍👍👍👍

21  कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा - கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா

இப்படி ஓவ்வொரு அங்கத்தையும் இது அந்த மலருடன் ஒத்திருக்கிறது இது இந்த மலருடன் என்று சொல்வதற்கு பதில் எல்லாம் தாமரையே என்று ஒரே ஒரு மலருடன் பட்டர் வர்ணிக்கிறார் ...

முன்னமேயே பார்த்திருக்கிறோம் .. மீண்டும் உங்கள் பார்வைக்கு 🌷🌷🌷

அருணாம்புயத்தும், 

என் சித்தாம்புயத்தும் 

அமர்ந்திருக்கும்

தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், 

தகை சேர் நயனக்

கருணாம்புயமும், 

வதனாம்புயமும், கராம்புயமும்,

சரணாம்புயமும், 

அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.🙏🙏🙏


அருணாம்புயத்தும் - 

அருணனாம் ... சிவந்த  பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்... 

நளினி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா .. 

உடல் எங்கும் தாமரைகள் கொண்டவள் என்று அர்த்தம் .. 

அம்புஜம் , அம்புயம் , கஞ்சம் எல்லாமே தாமரையை குறிக்கும் ... 🌷🌷🌷

அபிராமி மாலையில் வாடிப்போகும் தாமரை அல்ல சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை ... 

கூம்பி போகும் அல்லது வாடிப்போகும் சாதாரண தாமரை அல்ல ... 🌷🌷🌷


என் சித்தாம்புயத்தும் 

என் மனமெனும் தாமரையிடத்தும்... 

ஏ தாமரையே!! 

பெருமை பீத்திக்கொள்ளாதே 

உன்னிடத்தில் தான் என் அபிராமி இருக்கிறாள் என்று .. 🌷🌷🌷

என் இதய தாமரையில் அவளே அமர்ந்து அரசாட்சி செய்கிறாள் ...

அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள்

அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற தன பாரங்களை கொண்ட  பெண்களில் சிறந்த அன்னை அவள் .. அபிராமி என் தையல் நாயகி ... 🌷🌷🌷


தகை சேர் நயனக் கருண அம்புயமும் - 

பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும் அவளே .. அவள் கண்கள் மென்மை அதனால் அவள் கண்கள் சுரக்கும் கருணையும் மென்மை ... 🌷🌷🌷

வதன அம்புயமும் -

திருமுகம் என்னும் தாமரையும்... அவள் முகம் தாமரை .. தன் பதியை பார்க்கும் பொழுதும் , தன் குழந்தைகளான நம்மை பார்க்கும் போதும் அவள் முகம் அரும்புகிறது .. 🌷🌷🌷


கர அம்புயமும்

திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்... 

கரங்கள் மென்மை , மேன்மை , தாய்மை , அருமை , பெருமை , வறுமை நீங்கும் குளிமை. 

சரண அம்புயமும் - 

திருவடிகள் என்னும் தாமரைகளும்

அடடா ... அவள் பாதங்கள் என்றுமே புது மலர்த்தாள் ... 

அல்லும் பகலும் தொழுவோர்க்கு அழியா அரசும் , செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்க செய்பவை ... 

அவள் பாதங்கள் ஒருநாள் என்ன செய்தது தெரியுமா ? 

அவள் பாதங்கள் எனும் கமலங்கள் என் தலையில் வலிய வந்து அமர்ந்து அருள் அற்ற அந்தகனை ஓட ஓட விரட்டியது ...


அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - 

அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்... அவள் இன்றி யாரிடமும் தஞ்சம் புக மாட்டேன் .. அவளே கஞ்சம்( தாமரை)  எனும் போது வேறு எங்கு போய் நான் தேன் குடிக்க வேண்டும் ? 💐💐💐🌷🌷🌷

கதம்ப மஞ்சரீ க்ல்ப்த கர்ணாபூர மநோஹரா. 

கதம்ப மரத்தின் துளிர்களைத் தன்னுடைய காதுகளில் செவிப் பூக்களாக அணிந்திருக்கிறாள். 

அந்தக் காலத்தில், இலைச் சுருள்களையோ சருகுகளின் சுருள்களையோ காதுமடல் துவாரங்களில் பெண்கள் அணிந்து கொள்வார்கள். 

இப்போது கூட, சில வீடுகளில், வைரத்தோடு என்றோ தங்கத்தோடு என்றோ சொல்லமாட்டார்கள். 

வைர ஓலை, தங்கோலை என்பார்கள். காரணம், அந்தக் காலத்தில் ஓலையைச் சுருட்டிப் போட்டுக் கொண்டதுதான். இயற்கையாகக் கிடைத்தவற்றை வைத்து அலங்காரம் செய்து கொள்வது வழக்கம். 

மாணிக்கவாசகர், சங்கங்கள் ஆர்ப்ப என்று பாடுவார். (கைகளில் அணியும்) வளையல்கள் ஒலியெழுப்ப என்று அர்த்தம். சங்குகளை வெட்டி, அதனால் கிடைத்த வட்ட வடிவச் சுருளைக் கைகளில் அலங்காரமாக அணிந்து கொண்டார்கள். 

அதனால், வளையல்களுக்கே சங்கங்கள் என்று பெயர். 

அதுபோல, ஓலைகளைக் கர்ணப்பூக்களாகவும் தோடுகளாகவும் அணிந்து கொண்டார்கள். காதுமடலின் கீழ்ப்பகுதியில் (அதாவது, தொங்குவது போலிருக்கும் பகுதி) அணிவது தோடு. 

அங்கிருந்து மேல் நோக்கி வரிசையாகச் சிலபேர் துளையிட்டு நகை அணிவதைப் பார்த்திருக்கிறோம். அந்த மாதிரி அணியக்கூடியவை செவிப்பூக்கள். ஆண்டாள்கூட தோடே, செவிப்பூவே என்று பாடுகிறாள். 

எல்லாவற்றுக்கும் மேலே, மடலின் மேல் உச்சிப் பகுதியில் அணிவது கொப்பு. இன்னும் இதுபோல பற்பல ஆபரணங்கள் உண்டு.

கதம்பத் துளிர்களைச் செவிப்பூவாக அணிந்துகொண்ட அம்பாள், தாடங்கங்களாக (தோடுகளாக) எவற்றை அணிந்திருக்கிறாள்? சூரியனையும், சந்திரனையும். இதைச் சொல்வது அடுத்த நாமம்.



                                            👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍


Comments

ravi said…
இவையும் – இல்லை. துஷ்ட சக்திகள் என்றைக்கும் இருக்கத்தான் செய்திருக்கின்றனவென்றாலும், பிற்காலத்தில் ஆனதுபோல அவை பூர்வத்தில் தலைவிரித்தாடவில்லை. அதனாலே இந்த லோகத்தில் ஜீவயாத்ரை நடத்துவது, ஜன்மா எடுப்பது என்பது இப்போது போல அப்போது அவ்வளவு நொந்து கொள்ளும்படியாக இருந்திருக்காது.
ravi said…
தெய்வ ஸம்பந்தமாக அநேக விஷயங்கள் எங்கு பார்த்தாலும் நடப்பதாகவும், யாக யஜ்ஞாதிகள் நிரம்ப நடப்பதாகவும், அவதார புருஷர்களும் மஹான்களும் ரிஷிகளும் நிறைய இந்த பூலோகத்தில் ஸஞ்சரிப்பதாகவுமிருந்த அந்தக் காலத்தில் ‘ஜன்மா ஏன் கொடுத்தார்?’ என்று ப்ரம்மாவிடம் ரொம்பக் கோபப்படவேண்டி இருந்திருக்காது என்று ஸமாதானம் சொல்லலாம்.
ravi said…
*தினம் ஒரு திவ்ய பிரபந்தம்*

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 10

பெருமா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை
குருமாமணிப் பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே

மிகப்பெரிய உரலில் பிணிக்கப்பட்டிருந்த வேளையில் அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு அங்கு வளர்ந்திருந்த இரண்டு பெரிய மருத மரங்களின் இடையே சென்று அவ்விரு மரங்களையும் முறித்த இந்தப் பிள்ளையினுடைய மிகச்சிறந்த மாணிக்க நகைகள் விளங்கும் திருமார்வம் இருந்த படியைப் பாருங்கள். செம்மையுடைய நகைகளை அணிந்த பெண்களே காணுங்கள்.

***

பிணிப்புண்டிருந்த உரலும் மிகப்பெரியது; இடையே சென்று முறித்த மருத மரங்களும் பெரியவை; ஆனால் இவனோ சிறு குழந்தை என்று இந்நிகழ்ச்சியின் முரண்பாடுகள் தோன்ற பெருமாவுரல் என்றும் இருமாமரம் என்று சொன்னதோடு இப்பிள்ளை என்றும் சொல்கிறார் ஆழ்வார். உரலும் பெரியதாக இருக்க மரங்களும் பெரியவைகளாக இருக்க இச்சிறுபிள்ளை இவ்வுரலை இழுத்துச் சென்று அம்மரங்களை முறித்தது தான் என்னே என்று வியப்பது போல.

இவன் திருமார்பகத்தில் 'அகலகில்லேன் இறையும்' என்று வாழும் அலர்மேல் மங்கையுடன் திருமறுவும் கௌஸ்துப மணியும் திகழ்கின்றன. இவை மூன்றும் இவன் திருமார்பில் எந்த நிலையிலும் எந்த அவதாரத்திலும் இருப்பவை. இந்தப் பாசுரத்தில் ஜீவகோடிகளின் உருவமான மிகச்சிறந்த கௌஸ்துப மணியை மட்டும் சொல்லி மற்ற இரண்டையும் குறிப்பால் உணர்த்துகிறார் ஆழ்வார்.

*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

ravi said…
*Mahaperiyava And The Astrologer*

An astrologer had come for Periyava’s darshan. He said, “I have a very big family but very little income. The income I get from practicing astrology is very less. I find it very difficult to survive."

Periyava asked, “Are you living in the same ancestral house that your father was living in?”

“No, my elder brother is living there. I am living in another house that is on the western side of the ancestral house."

Periyava said, “Do not stay there. In the ancestral house, on the eastern side, is there is an old cow shed? You put-up a hut and stay there. For generations your family has done Ambal pooja. Stay in the cow shed."

Periyava continued, "There is another thing you should bear in your mind. You are blaming (scolding) all the planets! When you see your clients' horoscopes, you say Guru is Neechan, Sani is Paapi, Budhan is Vakram. You should not say these words. Guru is a big planet. He is Dakshinamurthy swaroopam. You should not address him as Neechan, Papi, Vakram etc. Sani is the son of Suryan. He has got the title of Ishwaran. You are calling him Papi! It is enough if you say “The planets are not in the right place”. The Kaala palan is not good etc. When people come to you for matching the horoscopes of boys and girls, instead of bluntly saying, “They do not match", you can say “The right period for vivaha for the girl is yet to come. The putra bhagyam for the boy is doubtful. There are many girls who are aged beyond 30, and not married yet. When such horoscopes come to you, you should answer them without saying anything negative to the extent possible.

“In matters pertaining to marriage, you should not give a lot of importance to horoscope matching. Matching of sect (kulam), gothram and the minds (manasu) is enough. In olden days, horoscope matching did not have so much importance."

The astrologer was overwhelmed. He said, ‘Hereafter I will do only as advised by Periyava."

He took the prasadam and left a wiser man.

Source: Maha Periyaval Darisana Anubhavangal – Vol 3
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 31

பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர் பகை. . . . .(31)

விளக்கம்:

இசைக்க முடியாத யாழில் பாடுதல் துன்பமாம். சோதிடம் தெரியாதவர்கள் முகூர்த்தம் பார்த்தல் துன்பமாம். தாளம் இல்லாத மத்தளத்தின் ஓசை துன்பமாம். அவ்வாறே தன்மை இல்லாதவரது பகையானது துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[08/12, 07:24] +91 96209 96097: *ப்ரகாஷனாய நமஹ*🙏

தன் பெருமைகளை வெளிப்படுத்தி காட்டுபவர்
[08/12, 07:24] +91 96209 96097: ஸர்வ-யந்த்ராத்மிகா*-*
*ஸர்வ-தந்த்ரரூபா* மனோன்மனீ🙏

அனைத்து தந்திர சாஸ்திரங்களின் வடிவமாக இருப்பவள்
ravi said…
[08/12, 10:27] +91 95434 57536: Ji after reading tis ecology presentation, tat is a goose bump moment for me, simply superb explanation
[08/12, 10:30] +91 95434 57536: Wat a vocabularies u hv used, ji!!added medical terminologies too dopamine, oxytocin .. great jii ur presentation அருமை அருமை.. as sweet as honey
ravi said…
கோபியரே வாருங்கள் இங்கே

என் கண்ணன் உரல் கொண்டு

கழல் தழுவி மழல் மாறா வதனம் கொண்டு

அந்தி சாயும் நேரமதில்

அரக்கர் இருவருக்கும் அந்திமம் தந்தான் ..

கேசம் கலையவில்லை தேகம் குன்றவில்லை குழல் உறங்கவில்லை பொன் நகைகள் குலையவில்லை ...

எவரும் செய்வாரோ இந்த சாகசம்

பாரில் கண்ணன் ஒருவனே செய்வான்
கண் இமைத்து திறக்கும் வேளை தனில்

பொன்னகையுடன் புன்னகை மன்னன் உரலுடன் நல்ல குரலுடன் வருகிறான்

இங்கே வந்து பாருங்கள் கொஞ்சம் 🙌🙌🙌🦚🦚🦚
ravi said…
கதிர்கள் ஒளியும் இடம் ..

கற்பூரம் கணா காணும் இடம் ...

மதன் அம்பு தீட்டும் இடம் ...

அக்னி குஞ்சு ஆர்ப்பாட்டம் செய்யும் இடம் ...

காந்தி என உன் வெட்டப்படும் நகங்கள் கூட என் அறியாமையை அழிக்கின்றதே ...

பஞ்சு கொஞ்சும் பாதம்

அதிலே பால் வடியும் மோகனம் ...

முன் பின் என்றில்லாமல் முக்தி தரும் முதல்வி

முன் செய்த புண்ணியம் என்றும் நினைக்க வைக்கும் எழில் உருவம் ..

எந்தையின் இடை உருவம் எங்குமில்லா ஒளி வடிவம் ..

ஓதாமல் உள்ளவர்க்கே பிணி என வரும் உருவம்

பிழை அதை திருத்திக்கொண்டால் பிணி தீர்க்கும் உருவம்

அம்மா உனை நினைக்கையில் அகம் அழிந்து அகம் குளிர்கின்றதே ...

பனியிலும் கமலம் மலருமோ என்றே கேட்போர்க்கு பதிலாய்
உன் பாத மலர்கள் மலரக்கண்டேன்...

உன் நக ஒளி கண்டே அந்த கமலம் ஆதவன் வந்து விட்டான் என்றே மொட்டு விரிக்கின்றதோ தாயே 🪷🪷🪷🙌🙌🙌
ravi said…
அருணாசலா முதலில் உன் பேரை சொன்னேன் என் அகம் அழியக்கண்டேன் ...

திடீரென்று ஒளி வடிவாய் என் உள்ளம் புகுந்து உன் உள்ளம் எனும் சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை தந்தாயே ..

நான் என்ன அவ்வளவு புண்ணியம் செய்தவனா ...?

இல்லை நீ தான் அதிகம் பித்தனாகி இருப்பவனா ?

சொல் அருணாசலா

இது உனக்கு அழகா

நாயேனாகிய நான் எங்கே நீ எங்கே ..

இந்த புண்ணியம் எனக்கு எப்படி கிடைத்தது? ...

உன் பேரை ஒரே ஒரு தடவை மட்டும் சொன்னதாலா அருணாசலா ?💐💐💐
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 19...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
முனிஜன மனோ தாம்னே

தாம்னேவசோம்ப
ஜாஹ்னவீ
ஹிமகிரிதடப்ராக்பா

ராயா க்ஷராய பராத்மனே
விஹரண ஜுஷே

காஞ்சீதேசே மஹேஸ்வர
லோசன
த்ரிதய ஸரஸ க்ரீடா ஸெளதாங்கணாய
நமோ நம:
ravi said…
முனிவர்களின் மனதைத் தன் தங்கும் இடமாகக் கொண்டவள் தேவி.

அவர்கள் மனதில் ஆத்ம பிரகாசமாக நிறைந்திருக்கின்றாள்.

இதை ‘‘ *முனிமானஸ* *ஹம்ஸிகா* ’’ என்று லலிதா ஸஹஸ்ரநாமமும் கூறுகிறது.

கங்கோத்ரி என்ற இடம் இமயத்தின் உயரமாக சிகரமாக உள்ளது.

கங்கையின் ப்ரவாஹம் அங்கு உள்ளது போல தங்கு தடையற்ற வாக்குப் பிரவாகம் தேவியின் பக்தர்களுக்குக் கிடைக்கிறது.

தேவி லலிதாவாக, காமாக்ஷியாக காம விலாஸத்தின் மேன்மாடமாக காஞ்சி என்ற நகரத்தில் காமேஸ்வரனுடன் இன்புற்றிருக்கும் அந்த தேவியை மீண்டும் மீண்டும்
நமஸ்கரிக்கிறேன்🦚🦚🦚
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 421* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*166 நிஷ்பாபா*🙌🙌
ravi said…
பாவங்கள் காட்டுபவள் ஆனால் பாவங்கள் புரியாதவள் ...

பிறர் பாவங்கள் அழிப்பவள்

தாபங்கள் களைபவள்

கோபங்கள் உள்ள நெஞ்சினில் கோயில் கொள்ள மறுப்பவள்🦚🦚🦚
ravi said…
பெருமா உரலில் பிணிப்புண்டு இருந்து

அங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை

குருமாமணிப் பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே

சேயிழையீர் வந்து காணீரே🪷🪷🪷
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (41-54)*
ravi said…
*❖ 44 நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா; =*

நகங்களின் காந்தியாலேயே மண்டியிருக்கும் இருளென்ற அஞ்ஞானத்தை போக்க வல்லவள்

(பக்தர்களின் புத்தியை மூடி, நரகத்தில் மூழ்கச் செய்யும் அஞ்ஞானம்)
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

3 –
அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை

சிறையாய்
அமர்வித்து என்கொல் அருணாசலா ! (அ)🤝🤝🤝
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 143*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
எட்டுமண்ட லத்துளே யிரண்டுமண்ட லம்வளைத்து

இட்டமண்ட லத்துளே யெண்ணியாறு மண்டலம்

தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்

நட்டமண்ட லத்துளே நாதனாடி நின்றதே. 143
ravi said…
எட்டாகிய எண்சான் உடம்பிலே இரண்டாகிய உயிர் உள்ளது.

இப்படி எட்டும் இரண்டுமாய் இணைந்த இத்தேகத்தில்

மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா ஆகிய ஆறு ஆதாரங்கள் உள்ளது.

இவ்வுடம்பில் சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்நிமண்டலம், என்ற மூன்று மண்டலங்கள் இருக்கின்றது.

இப்படி உள்ள உடம்பாகிய மண்டபத்தில் நடுவாக இருந்து நாதனாகிய ஈசன் ஆடி நின்று ஆட்டுவிக்கின்றான்!🙌
ravi said…
முகுந்தமாலா 32 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
அடுத்த ஸ்லோகம்

मदन परिहर स्थितिं मदीये मनसि मुकुन्दपदारविन्दधाम्नि ।

हरनयनकृशानुना कृशोऽसि स्मरसि न चक्रपराक्रमं मुरारेः ॥ ३१ ॥

மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யே

மனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி ।

ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி

ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 32 ॥
ravi said…
நாம பாராயணம் என்கிறது சரீரத்தில் ஒர் அம்சமாகணும் ! *நாம பாராயண பிரீதா* என்று லலிதா சஹஸ்ர நாமாவில் ஒர் நாமம் !

காலாஞ்ஜி மேடு என்ற கிராமத்தில் லக்ஷ்மி என்ற பேருடைய ஒரு ஸ்த்ரீ இருந்தாள் .

அவள் சிறுவயதில் வைதவ்யம் அடைந்ததால் அவளை அந்த ஊர் ஜனங்கள் துக்கிரி என்று அழைத்து வந்தார்கள்.

ஆனால் ராம பாராயணம் (ராம நாம)
எப்போதும் சொல்லி வந்தாள். 10000 முறை ஜபித்ததும் சுவற்றில் சாக் பீஸ் ஆல் ஒரு கோடு கிழித்து, அதையே ராமராக பாவித்து, தான் சமைத்த உணவை ப்படைக்கும் வழக்கம் கொண்டிருந்தாள்.
ravi said…
🌹🌺 "“ *எந்த ஜீவனாக இருந்தாலும்* , *பெருமாள் பிரசாதத்தை உண்டு* ,
*பெருமாளை சுற்றி வந்தால் போதும், வைகுந்த பதவி கிடைக்கும்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺🌹வயலூர் எனும் கிராமத்தில்,
ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அதன் வாசலில், ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம்.

🌺தினமும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்குவர்.

🌺அந்த பிரசாதத்தை சாப்பிட்டபடி, பெருமாளை சுற்றி வருவர் பக்தர்கள்.
அப்படி வரும்போது,
அந்த பிரசாதம் கோவில் பிரகாரத்தில் சிந்தி விடும்.

🌺பிரசாதத்தை பொறுக்கி சாப்பிட்டபடி,
பிரகாரத்தை சுற்றி வரும் அந்த நாய்.

🌺இப்படியே பல நாட்கள் பிரசாதத்தையும் சாப்பிட்டு,
பெருமாளையும் சுற்றி வந்தது.

🌺ஒரு நாள், அது மரணமடைந்தது.
அந்த ஜீவனை, தர்மராஜன் முன் நிறுத்தினர் எமதூதர்கள்.

🌺கணக்கை பார்த்துவிட்டு,
"இந்த நாய், பெருமாள் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, பெருமாளையும் பிரதட்சணம் செய்துள்ளதால், இது, வைகுந்தம் போக வேண்டும்...' என்றான் சித்ரகுப்தன்.

🌺பூலோகத்தில், சாட்சி தேவதைகள் என்று சில தேவதைகள் சுற்றி வருவதுண்டு.

🌺யார், யார் என்ன புண்ணியம், பாவம் செய்துள்ளனர் என்று தெரிந்து, தர்மராஜன் சபைக்குப் போகும். சித்ரகுப்தன் ஒவ்வொரு ஜீவனும் செய்த பாவ புண்ணியங்களை, தர்மராஜனிடம் தெரிவிப்பான்.

🌺சாட்சி தேவதைகளைப் பார்த்து, "இது நிஜமா!' என்று கேட்டான் தர்மராஜன்.
சாட்சி தேவதைகளும், "ஆமாம்!' என்றனர்.

🌺அதன்பின் அந்த நாயின் ஆத்மா, வைகுந்தம் போகலாம் என்று தீர்ப்பு வழங்கினான் தர்மராஜன். உடன் விஷ்ணு தூதர்கள் வந்து, அந்த ஜீவனை வைகுந்தம் அழைத்துப் போயினர்.

🌺எந்த ஜீவனாக இருந்தாலும், பெருமாள் பிரசாதத்தை உண்டு,
பெருமாளை சுற்றி வந்தால் போதும், வைகுந்த பதவி கிடைக்கும்.


🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*கண்ணாடி துகளும், கற்கண்டும்*
*பார்ப்பதற்கு ஒன்று போல்தான் தெரியும்!*
*உண்ட பின்தான் தெரியும்*
*எது இனிக்கும்.*
*எது கிழிக்கும் என்று!*
*சில மனிதர்களும் அது போலவே!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*BRAVURA*

*(துணிச்சலான, அருந்திறல் இசைப்பு, சிறந்த செயல்திறன்)*

meaning.....great skill, energy, and enthusiasm in doing something....


1. The director was asking us for more *bravura* in the scene because it lacked life.


2. She was recognized for having great *bravura* in all her performances, never once faltering during her solo.



Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
தகவல் உலா


தினம் ஒரு குட்டிக்கதை.

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் – என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

பாசம் உங்களை இழக்காம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..


ravi said…
*ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை !!*

*பகிர்வு -அறிவு பரவல் ✍️*

👁🗨 *1.* நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.

👁🗨 *2.* பொது இடங்களில் தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

👁🗨 *3.* பொது இடங்களில், பயணங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

👁🗨 *4.* தங்கள் தாய்மொழியை அதிகமாக நேசிக்கிறார்கள். தாய்மொழியில் மட்டுமே குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்கள்.

👁🗨 *5.* ரயில், பேருந்துகளில் கூட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருடைய கட்டளையின்றியும் தானாகவே வரிசையில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒவ்வொருவராக ஏறுகிறார்கள்.

👁🗨 *6.* வெளியூர் மக்கள் உதவி கேட்கும்போது மனமுவந்து செய்கிறார்கள். உதாரணமாக ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறார்கள்.

👁🗨 *7.* பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுகிறார்கள். அளவாகவே உண்கிறார்கள். உலகிலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் பிட்டாக, தொப்பையின்றி இருப்பவர்கள். மேலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்களே.

👁🗨 *8.* எஸ்கலேட்டர், லிஃப்டு, படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று, அவசரமாக செல்வோருக்கு எப்போதும் வழிவிட்டு செல்கிறார்கள்.

👁🗨 *9.* அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வார்கள். பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவாகிறார்கள்.

👁🗨 *10.* அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் இருகிறார்கள்.
12 மணி நேரம் வேலை செய்தாலும் சளைக்காமல் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பணியை நேசித்து செய்கிறார்கள்.

*
ravi said…
🌹🌺 ""Whatever living being, having the offering of Perumal,
Just come around Perumal and you will get the rank of Vaikuntha - a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺🌹In the village of Vayalur,
There was a Perumal temple. At its door, a dog used to lie down.

🌺Prasadam, which is offered to Perumal every day, is given to the devotees.

🌺 Devotees come around Perumal to eat that offering.
When that happens,
The offering will be poured into the temple premises.

🌺As you wait and eat the offering,
That dog that walks around Prakaram.

🌺 After eating prasad for many days like this,
Perumal also came around.

🌺One day, it died.
The emissaries placed that life in front of Dharmarajan.

🌺After checking the account,
Chitragupta said, "This dog, after eating Perumal Prasadam, has also performed prathaksanam for Perumal, so it must go to Vaikuntam...".

🌺 In the world, there are some angels called witness angels.

🌺 Knowing who, who has done what virtues and sins, Dharmarajan will go to the congregation. Chitragupta informs Dharmaraja of the sins committed by every living being.

🌺The witnesses looked at the angels and said, "Is this real!" asked Dharmarajan.
And the witnessing angels said, "Yes!' They said.

🌺Then Dharmarajan gave judgment that the dog's soul may go to Vaikuntam. Vishnu's messengers came along and took the creature to Vaikuntam.

🌺Any living being, having Perumal's offering,
If you come around Perumal, you will get the rank of Vaikuntha.


🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ராமாநுஜருடைய நேர் சிஷ்யர்கள் அவரிடம் வைத்திருந்த பக்தி அஸாத்யமானது. உயிரையே கொடுப்பது என்கிறதற்கேற்க, கூரத்தாழ்வார் என்பவர் ராமாநுஜருக்காகப் பிராணத் தியாகமும் பண்ணத் தயாராயிருந்திருக்கிறார்.
ravi said…
இவர் காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரியாதை வாசகத்துக்குப் பெயரெடுத்த வைஷ்ணவர்களே பக்தி முதிர்ச்சியில், தாங்கள் ரொம்பவும் பெரியவராக நினைக்கிற வேதாந்த தேசிகரை ”தேசிகன்” என்று ஒருமையில் அழைப்பதாகச் சொன்னேனல்லவா?
ravi said…
அதுபோலவே கூரத்தாழ்வாரைக் ”கூரத்தாழ்வான்” என்றுதான் சொல்வார்கள். வெறுமனே ‘ஆழ்வான்’ என்று வைஷ்ணவர்கள் சொன்னாலே அது கூரத்தாழ்வார்தான். (‘ஆழ்வார்’ என்று ‘ர்’போட்டுச் சொன்னால் அது நம்மாழ்வார்தான்)

ravi said…
ராமாநுஜர் காலத்தில் ராஜாவாக இருந்த சோழன் தீவிர சிவபக்தன். ராமாநுஜரோ, ”விஷ்ணு ஒருத்தருக்குத் தான் ”ஏகாந்தி”களாகப் பூஜை பண்ண வேண்டும். சிவனுக்கு பண்ணக் கூடாது” என்கிற ஸித்தாந்தத்தைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
ravi said…
அதனால் சோழராஜா, ”எந்த ஆதாரத்தைக் கொண்டு விஷ்ணு தவிர சிவன் முதலான தேவதாந்தரங்களை வழிபடக்கூடாது என்று நிர்த்தாரணம் பண்ணுகிறீர்?” என்று ராமாநுஜரைக் கேட்டு வாதம் நடத்துவதற்காக ஒரு வித்வத் ஸதஸைக் கூட்டினான். அப்போது கங்கைகொண்ட சோழபுரம் ராஜ்யத் தலைநகராயிருந்தது. அங்கே அந்த ஸதஸைக் கூட்ட நிச்சயித்து, ராமாநுஜாசார்யாரை அழைத்துக்கொண்டு வருவதற்காக ஆள் அனுப்பினான். அப்போது அவர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார்.

ravi said…
ராஜஸேவகரைப் பார்த்ததும் கூரத்தாழ்வாருக்கு விசாரம் உண்டாய்விட்டது. ‘ராஜாவோ சைவன்; அவனே நிறைய சிவாலயங்கள் கட்டியிருக்கிறான். நம்முடைய குருவானால் சிவாராதனை கூடாது என்கிறார். அதனால் அவருக்கு இவரிடம் த்வேஷம் இருக்கும். இப்போது வித்வத ஸதஸ் என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய் இவரை என்ன பண்ணுவானோ? ராஜாவானதால் என்னவும் பண்ணிவிடமுடியும். நம்முடைய அருமை ஆசார்யருக்கு அவன் ப்ராணஹானி விளைவித்துவிட்டால் என்ன செய்வது?’ என்று ரொம்பவும் பயமும் கவலையும்பட்டார்.

ravi said…
அப்போதுதான் அவர் குருவுக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்தது. அதாவது குருவின் காஷாயத்தைத் தாம் உடுத்திக் கொண்டு, தம்மையே ராமாநுஜாசார்யார் என்று சொல்லிக்கொண்டு ராஜஸபைக்குப் போய்விடுவது என்று தீர்மானித்து விட்டார். ”வருகிற ஆபத்து எனக்கே வரட்டும்.
ravi said…
தங்களுக்காக இந்த ஸேவை செய்கிற பாக்யத்தை எனக்கு மறுக்காமல் அருள வேண்டும்” என்று ராமாநுஜரிடம் பிரார்த்தித்து, அவரை ஸம்மதிக்கப் பண்ணினார். ராமாநுஜர் வெள்ளை வேஷ்டி கட்டிக் கொண்டு, சோழ ராஜ்யத்தையே விட்டு, கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்துக்குப் போய்விட்டார். அங்கே இப்போதும் ”வெள்ளை சாத்துப்படி” என்று அவருக்கு உத்ஸவம் நடத்துகிறார்கள்.

ravi said…
கூரத்தாழ்வார் காஷாயம் தரித்துக்கொண்டு ராமாநுஜராக கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் போனார். அங்கே வித்வஸ் ஸதஸ் நடந்தது. இவர் சிவபரத்வத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார்*2. அதனால் இவர் நினைத்தப்படியே ராஜதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ராஜா கொலைத்தண்டனை தரவில்லை. இவருடைய கண்ணைப் பிடுங்கும்படியாக உத்தரவு போட்டுவிட்டான்.

ravi said…
குருவுக்கு ஏற்பட இருந்த இந்த கொடுமை நமக்கு வாய்த்ததே என்று கூரத்தாழ்வார் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். குருடராக ஆனார்.

அப்புறம் அந்த ராஜா காலமானபின் ராமாநுஜாசாரியார் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார். தமக்காக சிஷ்யர் கண்ணை இழந்துவிட்டாரே என்று துக்கப்பட்டார்.

ravi said…
ராமாநுஜர் பிற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்தபோதிலும், ஆரம்பத்தில் காஞ்சீபுரத்தில் வஸித்துக் கொண்டு வரதராஜ ஸ்வாமிக்குத்தான் தீர்த்த கைங்கர்யம் செய்துகொண்டு, அவரையே இஷ்ட தெய்வமாக உபாஸித்து வந்தார். ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் ஆராதனை க்ரமங்களை அமைத்துக்கொடுத்து அங்கே இவர் இருந்த காலத்திலும் கூட வரதராஜாவிடம் ஒரு தனியான பற்று வைத்திருந்தார்.
ravi said…
அதனால் இப்போது கூரத்தாழ்வாரிடம், ”எனக்காக உன் கண் போயிற்று. அதனால் உனக்காகப் பார்வை மீள வேண்டும் என்று இல்லாவிட்டாலும் என் மனஸ் ஆறுவதற்காக நீ வரதராஜாவை வேண்டிக்கணும்” என்றார். கூரத்தாழ்வாரும் அப்படியே காஞ்சீபுரம் பெருமாளிடம் ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக் கொண்டார்.
ravi said…
அவருக்கு த்ருஷ்டி திரும்பணும் என்று நிஜமாகவே ஆசை இல்லை. ‘எல்லா இந்த்ரியங்களையும் அடக்கினால்தான் ஈஸ்வர தர்சனம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. நமக்கோ ராஜசிக்ஷை ரூபத்தில் கண் போனதில் இந்த ஒரு இந்திரியமாவது கண்டதைப் பார்த்துக் கெட்டுப் போகாமலிருக்கும் அநுக்ரஹம் கிடைத்திருக்கிறது. இதைப் மாற்றப்பண்ணி மறுபடியும் லோகக் காட்சி பார்த்து என்ன ஆக வேண்டும்?’ என்றே நினைத்தார். ஆனாலும், ‘ஆசார்யன் ஆக்ஞைக்குக் கீழ்படிந்தாகவும் வேண்டுமே! அவர் பச்சாத்தாபம் படும்படியாக விடக்கூடாதே!’ என்று யோசித்தார். யோசித்து ஸ்வாமியிடம், ”எனக்குப் பார்வையை தா. ஆனால் எல்லா விஷயங்களையும் நான் பார்க்க வேண்டியதில்லை. என் ஆசார்யனுடைய திவ்யரூபத்தை தர்சனம் பண்ணுவதற்கும், உன் மங்கள விக்ரஹத்தை தர்சிப்பதற்கும் மட்டுமே கண்ணுக்குச் சக்தி தா” என்று கேட்டார். வரதராஜாவும் அப்படியே வரம் கொடுத்தாராம்.

ravi said…
ராமாநுஜருக்கு முந்தி இருந்த பெரியவரான ஆளவந்தார் திருநாட்டை அலங்கரிக்க முடியாமல் (சரீரயாத்ரை முடிந்து பரமபதம் சேர்வதைத் ”திருநாட்டை அலங்கரிப்பது” என்றே வைஷ்ணவர்கள் சொல்வார்கள்) அவருடைய ப்ராரப்தம் ‘டிலே’ பண்ணினபோது, பெரிய த்யாகமாக சிஷ்யர் ஒருத்தரே*3 அந்தக் கர்மசேஷத்தை ராஜபிளவை என்ற பயங்கரக் கட்டி ரூபத்தில் ஏற்று அநுபவித்துத் தீர்த்தார் என்றும் ஒரு கதை இருக்கிறது.
ravi said…


*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கந்தசஷ்டி கவசத்தின் விளக்கம் பற்றிய பதிவுகள் :*

கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஒரு பொருள் என்று கூறலாம். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீதேவராய ஸ்வாமிகள்.

கந்தசஷ்டி கவசத்தை தினமும் இருவேளை அதாவது காலையிலும், மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும். நாம் கந்தனின் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் நம்மைஅண்டாது. வீட்டில் கடன், வியாதி, எதிரிகள் பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? என இந்திரன் மற்றும் எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னை காக்க வேண்டும். பன்னிரெண்டு விழிகளும், பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னை காக்க வேண்டும். அவர் அழகை வர்ணிக்கும் போது, பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்தின மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் முருகனை ஸ்ரீதேவராயர் வர்ணிக்கிறார்.

http://blog.omnamasivaya.co.in/2022/12/blog-post_8.html

வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்கு கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல்.

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிற்றுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர்வேல், ஐந்து விரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனைவேல், எப்போதும் என்னை எதிர்வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனையவேல் போன்ற பல்வேறு விதமான வேல்கள் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி இவைகள் அனைத்தும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்து, புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும், பாம்பும் செய்யான், பூரான், ஆகியவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்றும் கூறுகிறார்.

வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் கந்தசஷ்டி கவசத்தைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

மேலும் இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

பின் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் என்றும் முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்றும் அப்பாடலில் கூறப்பட்டுள்ளது. எனவே நாள்தோறும் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

வேலனைப் போற்றி வணங்குங்கள்!!
நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் விலகி ஓடிவிடும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*இரண்டிற்கும் வித்தியாசம்,*
*வயது மட்டுமே...*

35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*

கண்ணன் என்பது செல்ல பெயர்.
குழந்தை பருவம்.

கிருஷ்ணன் என்பது வளர்ந்த பிள்ளை.
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து ,
குளித்துக் கொண்டிருந்தேன்.

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல்,
இரண்டு கையாலும்,
என்னை சுற்றி , சுற்றி,
சொம்பை, தேடினேன்.

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.

எனக்கு புரிந்து விட்டது.

சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று.

எனக்கு , கண் எரிகிறது
என்று அவளுக்கு தெரியவில்லை.

நான் , சொம்பை தேடுவதில்,
அவளுக்கு ஒரு ஆனந்தம்.

இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.

தற்போது , எனது கண்ணில் ,
ஒரு தூசி விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை ,
மறைத்து வைத்து...
அவர்கள் தேடுவதை கண்டு
ஆனந்தப் பட்டான்.

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து,
அவள் மனதை, காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....

கண்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது....

நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான்.
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என ,
பொய்யும் சொன்னான்...

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது ,
என கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.
🙏
ravi said…
*பாடல் 12..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 29 started on 6th nov
ravi said…
*பாடல் 12 ... செம்மான் மகளை*

(சும்மா இரு சொல் அற)

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்

.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.🙏🙏🙏
ravi said…
செம் மான் ... செவ்விய மானின் புதல்வியாகிய வள்ளியம்மையாரை,

திருடும் திருடன் ... வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற
கள்வனும்,

பெம்மான் ... மிகப் பெரியவனும்,

பிறவான் இறவான் ... பிறப்பும் இறப்பும் இல்லாதவனும்
ஆகிய முருகன்,

சொல் அற சும்மா இரு ... சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு
பெற்று மோன நிலை அடைந்து இருப்பாய்,

என்றலும் ... என்று உபதேசித்தவுடன்,

பொருள் ஒன்றும் அறிந்திலனே ...

அவனை அன்றி வேறு ஒரு
உலகம் ஒன்றையும் அறியாது நின்றேன்,

அம்மா ... இது என்ன ஆச்சரியம்.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 411* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய : *ஸர்வதர்ச’ன* : ||10
ravi said…
எதை வேண்டுமானாலும் கொடு! வயிற்று வலி குணமானால் போதும்!” என்றார் ஆட்சியர்.

“திருமலையப்பனுடைய துளசியையும் தீர்த்தத்தையும் தான் நான் தரப்போகிறேன். நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டார்.
தான் அந்தப் பெருமாளையும் அவரது அடியார்களையும் ஏளனம் செய்ததே தனது துன்பத்துக்குக் காரணம் என உணர்ந்த ஆட்சியர், “கொண்டு வா!” என்றார்.
“கோவிந்தா!” என உச்சரித்தபடி துளசியையும் தீர்த்தத்தையும் உட்கொண்டார்.

சில நிமிடங்களிலேயே வலி கொஞ்சம் குறையத் தொடங்கியது.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 411*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ,
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ,
நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,

த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,

தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு.
ravi said…
இந்த ஆச்சார்யாள் 55வது ஸ்லோகத்தில், சகல ஜகத் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் பண்ணின்டு, யோகிகளுக்கு அனுகிரஹமும் பண்ணின்டு, மத்தவாளுக்கு எல்லாம் தேவாதி கடைசி ஜந்து வரைக்கும், எல்லாரையும் யான் எனது என்று கூத்தாட வைக்கிற ஒரு மாயையும் பண்ணின்டு இதை எல்லாத்தையும் பண்ற, அந்த பரமேஸ்வரன், ஆனந்த தாண்டவம் ஆடுகிற ஆனந்த தாண்டவத்தில் இதை எல்லாத்தையும் அவர் பார்க்கிறார்.

எப்படி காமாட்சிங்கிற வடிவத்தில் மூக கவி பார்க்கிறாரோ, எப்படி குருவாயூரப்பன் அப்படிங்கிற குழந்தை கிட்ட பட்டத்ரி பார்க்கிறாரோ,

அந்த மாதிரி ஆச்சார்யாள் அந்த சிவனுடைய தாண்டவத்தில், அந்த ஒரு தரிசனம் கிடைக்கறது அவருக்கு.

அதை ரொம்ப வியந்து சொல்றார்.
ravi said…
*தினம் ஒரு திவ்ய பிரபந்தம்*

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 11

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
சுரிகுழலீர் வந்து காணீரே

பிறந்த பின்னர் ஒரு நாலு ஐந்து மாதங்கள் சென்ற பின்னர் தன்னுடைய திருவடியினை நிமிர்த்தி சகடாசுரனை உதைத்து அழித்து விட்டு ஒளி பொருந்திய வளைந்த கோரப்பற்களைக் கொண்ட பூதனையின் அரிய உயிரை அவள் முலைப்பாலுடன் எடுத்துக் கொண்டவனின் அழகான தோள்கள் இருந்தவாறைக் காணுங்கள். சுருண்ட தலைமுடியை உடைய பெண்களே வந்து பாருங்கள்.

***

நாலு ஐந்து என்று கூறியது நான்காம் மாதத்திலோ, ஐந்தாம் மாதத்திலோ, நாலு + ஐந்து = ஒன்பதாம் மாதத்திலோ, நாலு * ஐந்து = இருபதாம் மாதத்திலோ இந்த அதிசயங்களைச் செய்தான் என்று கூறும் படி உள்ளது. சின்னஞ்சிறு வயதில் இவ்வளவான அதிசயங்கள் செய்தான் என்று கூறினால் கண்ணெச்சில் (திருஷ்டி) பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர் 'பல்லாண்டு பாடிய இதத் தாயான இந்த ஆழ்வார்' என்பதால் இவ்வாறு கூறினார் என்னலாம். உயிரெழுத்துகளுக்கே 'ஓர்' என்ற சொல் பயன்படவேண்டும் என்ற இலக்கண விதியை கொண்டு இவர் சொல்ல வந்தது ஒன்பதாம் மாதம் என்றும் உய்த்து அறியலாம்.

திருவடிகளால் வாழ்விப்பது உண்டு; அழிப்பதும் உண்டோ என்றால் சகடன் தீய எண்ணம் கொண்டு வந்தான் ஆகையால் அதே திருவடிகள் அவனை அழித்து ஆட்கொண்டது என்பதில் குறையில்லை.

பூதனையை அழித்தது முதலாகவும் சகடத்தை இறுத்தது அடுத்ததாகவும் வர ஆழ்வார் மாற்றிப் பாடுகிறாரே என்றால் இங்கே சொல்ல வந்தது இவனது அதிசய சக்திகளையே; கால வரிசையை இல்லை என்பதால் குறையில்லை.

*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

Jeyalakshmi said…
Thank you Swami...u always pour your wishes.. great of you swami..
ravi said…
🌹🌺" *நாம் அதிகாலையில் கண் விழித்துக் கொண்டு
ஸ்ரீமந் நாராயான ஸ்தோத்திரங்களை
சொல்லி அவரை தினமும்
தியானம் செய்தால்*, தேவர்களின்
அருளும், மஹாலக்ஷ்மியின்
அருளும், நமக்கு கிட்டும் என்பதை -----விளக்கும் எளிய கதை🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒவ்வொரு நாளும் சூரியன்
உதிக்கும் முன்பு உள்ள
காலத்துக்கு உஷ காலம்
என்று பெயர். அச்சமயத்தில்
தேவர்களும், மஹாலெக்ஷ்மியும்
சஞ்சரிக்கிறார்கள்.

🌺அப்போது
நாம் அதிகாலையில் கண் விழித்துக் கொண்டு
ஸ்ரீமந் நாராயான ஸ்தோத்திரங்களை
சொல்லி அவரை தினமும்
தியானம் செய்தால், தேவர்களின்
அருளும், மஹாலக்ஷ்மியின்
அருளும், நமக்கு கிட்டும்.

🌺அவ்வாறின்றி அப்போது நாம் தூங்கிக் கொண்டிருந்தால்,
அவர்கள் கோபித்துக் கொண்டு
போய் விடுவார்கள்.

🌹🌺" ஸூரியோதயே சாஸ்தமயே ச
சாயினம் விமுஞ்சதி
ஸ்ரீரபி சக்ர பாணிநம் "🌹🌺

என்கிறபடி சூரியோதயத்தில்
சூரியன் மறையும் நேரத்திலும்
தூங்குபவர் இந்த்ரனாயிருந்தாலும்
அவர்களை விட்டு மஹாலக்ஷ்மி
விலகுவாள்.

🌺பணத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவியார் அனைவருக்கும் பொதுவானவள். இவருக்கு தான் அருள் புரிவேன், இவர்களுக்கு அருள் புரியேன்! என்று ஒரு போதும் சொல்வதில்லை. அவளை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும், மனமுவந்து உண்மையிலேயே அருள் புரிவாள்.

🌺அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பொறுத்து தான் அவர்களிடம் செல்வமும் எப்போதும் நிலைக்கும்.

🌺ஆகவே தன உஷ
காலத்திலும் சூரியன் மறையும்
நேரத்திலும் தூங்க கூடாது
என்கிறது சாஸ்திரம் .🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*ஆன்மீக கதைகள்*

ஒருவன் வேகமாக ஓடி வந்தான். எதிரே ஒரு முனிவர் வந்தார்.

ஏனப்பா இப்படி தலைதெறிக்க ஓடி வருகிறாய் என்று கேட்டார்.

என்னை துரத்திக் கொண்டு வருகிறது ஐயா என்றான் அவன்.

ஏதாவது நாய் துரத்திக் கொண்டு வருகிறதோ என்று நினைத்து அவனுக்கு பின்னால் பார்த்தார் முனிவர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தெரியவில்லை. எதுவும் இல்லையே என்றார்.

நல்லா பாருங்க என்றான் அவன்.

பார்த்துவிட்டு தான் சொல்கிறேன் என்றார் முனிவர்.

இதோ பாருங்கள் இதுதான் என்னை துரத்துகிறது என்று சுட்டிக்காட்டினான். அந்த இடத்தில் அவனுடைய நிழல் இருந்தது.

என்னப்பா சொல்றே என்று கேட்டார் முனிவர் கொஞ்சம் சந்தேகமாக.

அதன்பிறகு அவன் விபரமாகச் சொன்னான் எனக்கு நிழலை கண்டால் பிடிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனிடமிருந்து பிரிவதற்கு எவ்வளவு முயற்சிகள் பண்ணி பார்த்துவிட்டேன். முடியவில்லை என்றான்.

அப்படி என்ன முயற்சிகள் செய்தாய் என்று கேட்டார் முனிவர்.

ஒரு பெரிய குழியை தோண்டி அதிலே என்னுடைய நிழலை புதைத்து விடலாம் என்று முடிவு செய்து மண் வெட்டி எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனேன். ஆழமான குழியை தோண்டினேன். குனிந்து பார்த்தேன். அந்த குழிக்குள்ளே நிழல் தெரிந்தது . இதுதான் சமயம் மண்ணைப் போட்டு மூடி விடலாம் என்று நினைத்து கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டேன். இப்போது நிழல் மண்ணுக்கு மேலே வந்து இருந்தது. இது என்னடா வம்பா போச்சு என்று சொல்லி அவசரம் அவசரமாக மண்ணை அள்ளிப் போட்டேன். குழி பூராகவும் நிரம்பிவிட்டது. மறுபடியும் நிழல் மேலே வந்து உட்கார்ந்து இருந்தது.

சரி இதை குழியில் புதைக்க முடியாது என்று முடிவு பண்ணி இங்கே விட்டுவிட்டு ஓடி விடுவோம் என்று நினைத்து ஓடினேன் .அது காலை நேரம் இவன் மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். ஓடி ஓடி பார்க்கிறான் . நிழல் இவனை விட வேகமாக இவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறது.

சரி திரும்பி ஓடி பார்ப்போம் என்று நினைத்து அப்படியே திரும்பி ஓட ஆரம்பித்தான். இப்போது நிழலை காணவில்லை. கொஞ்ச தூரம் ஓடி விட்டு பின்னால் திரும்பிப் பார்த்தான். பின்னாலேயே நிழல் துரத்துகிறது.

இப்படி ஓடி வரும்போது தான் முனிவர் இவனை நிறுத்தியிருந்தார்.இந்த நிழலை துரத்த ஒரு வழி சொல்லுங்கள் ஐயா என்றான் .

முனிவர் சொன்னார் அங்கேயும் இங்கேயும் ஓடாதே . அப்படியே கீழே படுத்துக் கொள் என்றான். அவன் அப்படியே படுத்து கொண்டான். அப்படியும் இப்படியும் திரும்பி பார்த்தான். நிழலை காணவில்லை. இப்போது தான் நிம்மதியாக இருந்தான்.

எல்லா மனிதர்களும் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் எனது என்கின்ற ஆணவம் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. அதை விட்டு விட்டு ஓட வேண்டும் என்று நினைத்தாலும் அது முன்னால் வந்து நிற்கிறது பரம் பொருளை நோக்கி ஓடும் போது இந்த ஆணவம் பின்னால் வந்து விடுகிறது.

தன்னை உணர்ந்து மனிதனுக்கு விடுதலை உணர்வு ஏற்படுகின்ற நேரத்திலே அதாவது பரிபூரண சரணாகதி என்கின்ற நிலையிலே அது முழுவதுமாக மறைந்து விடுகிறது. அப்படிப்பட்ட சுதந்திர மனிதர்களாக எல்லோரும் மாறி விட்டால் இந்த உலகமே இன்பமயம் தான்.

ravi said…
🌹🌺 "We wake up early in the morning
Sriman Narayana Stotras
Tell him everyday
If you meditate, the gods
Grace, of Mahalakshmi
A simple story that explains grace and what we get 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Every day is the sun
Before sunrise
Time after time
Name that. At that time
Devas and Mahalekshmi
Wandering.

🌺 Then
We wake up early in the morning
Sriman Narayana Stotras
Tell him everyday
If you meditate, the gods
Grace, of Mahalakshmi
Grace will be given to us.

🌺 otherwise if we were sleeping then,
They were angry
They will leave.

🌹🌺" Suryodaye Sasthamaye Sa
Sainam Vimunjati
Shrirabi Chakra Paninam "🌹🌺

At sunrise
At sunset
Even if the sleeper is Indra
Mahalakshmi left them
She will withdraw.

🌺 Goddess Lakshmi who is the lord of money is common to all. I will bless him, I will bless them! Never say that. Whoever worships her, she will truly be gracious.

🌺She knows very well what to give them according to their good qualities. Depending on that, they have wealth and stability forever.

🌺 So Dana Usha
The sun will set in time
Do not sleep too late
Shastra says .🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 32

தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். . . . .[32]

விளக்கம்:

தன்னைத்தானே காத்துக்கொள்ளாது இருத்தல் மிகவும் துன்பமாம். முன்னே சொல்லாமல் பின்னால் பேசுபவர்களின் சொல் மிகவும் துன்பமாம். நல்ல குணமில்லாதவரது நட்பு துன்பமாம். அவ்வாறே பழைமையுடையவர் கெடுதல் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[09/12, 07:26] +91 96209 96097: *ஓஜஸ்‌தேஜோத்யுதிராய நமஹ*🙏

வலிமையும் புகழும் பொலிவும் கொண்டவர்
[09/12, 07:26] +91 96209 96097: ஸர்வ-யந்த்ராத்மிகா
ஸர்வ-தந்த்ரரூபா *மனோன்மனீ*🙏

சிவன் உடனுறை சகல அம்பாளாகவும் இருப்பவள்
ravi said…
பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். அவை:-
1) ஏளனம்.
2) எதிர்ப்பு.
3) அங்கீகாரம்.
- சுவாமி விவேகானந்தர்.

எதிலும் மனோபலம், தைரியம், செயலில் நேர்த்தி, கடைசி வரை முயன்று வெல்லும் மனோதிடம், இடைவிடாது முன்னேறும் தாகம்,

பகட்டு இல்லாமல் பார்க்க லட்சனமாக இருக்கும் தன்மை, எப்போதும் முகம் மலர்ந்து சிரிக்கும் புன்னகை, ஆகியவை ஒரு வெற்றியாளரின் அடிப்படைத் தேவைகள்.

வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
தகவல் உலா

* தினம் ஒரு கதை *

*நம்பிக்கை*

எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான் அதற்கு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார் அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான் சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான் தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர் அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான் அதற்கு அந்த கடைக்காரர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும் நான் தருகிறேன் என்று கூறி அவனை உள்ளே அழைத்து அவனிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொடுத்தார் இதைக் கொண்டு போய் உன் தாயிடம் குடிப்பதற்கு கொடு உன் தாய் குணமாவார் என்று கூறி அனுப்பி வைத்தார் மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை சிறப்பு மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்தனர் சிறுவனின் தாய்க்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது தாயும் உயிர் பிழைத்தார் அவரிடம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காகன பில் காட்டினார்கள் தனக்கு சிகிச்சை செய்த செலவுத் தொகையை கண்ட அந்த ஏழைத்தாய் அதிர்ந்து போனார் ஆனால் மருத்துவர்கள் அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள் உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் ஒருவர் மருத்துவமனையில் செலுத்தி விட்டார் அவரே உங்களிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார் என்று கூறி அந்த கடிதத்தை தாயிடம் கொடுத்தனர் அதை வாங்கி படித்தார் தாய் அதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல நான் ஒரு நிமித்தம் (கருவி) மட்டுமே

ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கடை வீதியில் நம்பிக்கையோடு அலைந்த உங்கள் அப்பாவி மகனுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.

*மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...*


ravi said…
💐💐💐🙏🏻🌺🌺🌺

*இன்றைய சிந்தனை*

............................................

*"அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைக் கொடுக்கும்...!"*

................................................

எதிலும் அதிக எதிர்பார்ப்புக் கூடாது, மகிழ்ச்சியின்மைக்கும் , முகத்தில் வெறுப்பினை வெளிக்கொணர்வதற்கும் காரணம், நாம் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றமே விடுத்து வேறொன்றுமில்லை .

என்னுடைய மகன் நன்றாகப் படிப்பான். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வுகளில் தேர்ச்சியடைவான் என்று அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் பெற்றோர்கள்...

ஆனால்!, தேர்வில் அவர்களது மகன் அவர்களின் எதிபார்ப்பிற்கு மாறாக இருக்கும். அப்பொழுது பெற்றோர்களால் அதனைத் தாங்கிக் கொள்ள இயலாது...

பொதுவாகவே அதிக எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைத் தருகின்றது, இவர் இப்படி இருப்பார் , அவர் அப்படி இருப்பார் என்று நாம் நினைத்து விட்டு அவருடன் நாம் பழகும் போது அவர் நாம் நினைத்ததை விட மாறுபட்டவராக இருப்பார், அல்லது நாம் நினைத்தது பொய்த்து விட்டது . நாம் எதிர்பார்த்ததை விட ஏன் நம்மை விட இவர் நல்லவராக இருக்கிறாரே என்கின்றோம்...

நாம் எதிலும் எதிர்பார்ப்போடு இல்லாதிருந்தால் ஏமாற்றமே இருக்காது, நாம் ஏன் தேவையற்று அதிக கற்பனையில் மிதக்க வேண்டும்...? எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வோம் என்று இருந்து விட்டால்  ஏமாற்றம் ஏற்படாது...!

மகிழ்ச்சியின்மைக்கும், மனநிறைவு இல்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்றால் அதிக எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தானே அன்றி வேறொன்றுமில்லை...

சிலர் நான் அப்படியாவேன், இப்படியாவேன் என்று கற்பனைகளில் மிதப்பார்கள், ஆனால்!, அவர்கள் நினைத்தது போல எல்லாம் நடக்கின்றதா...? அதிக எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா...?

சில வேளைகளில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது...

எந்தவித எதிர்பார்ப்புகள் இல்லாமல் எப்பொழுதுமே நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதைக் கொண்டு இந்த வாழ்க்கையை  மகிழ்வாகக் கடவோம்...

*ஆம் நண்பர்களே...!*

ஆசையன்றி வாழ நாம் புத்தர் அல்ல, அதே வேளையில் ஆசையைக் கட்டுக்குள் கொண்டு வாழப் பழக வேண்டும்...!

எதுவும் நிலைப்பு இல்லை, எவரும் நிலையில் இல்லை - என்கிற உண்மையை எப்பொழுதும் மனதில் ஒரு மூலையில் இருத்திக் கொள்ள வேண்டும்...

இன்ப துன்பங்களை ஓரளவிற்கு நிகரான நிலையில் எதிர்நோக்கும் பக்குவத்தைப் பழக்கிக் கொண்டால் - எதிர்வரும் துன்பங்களிலிருந்து ஓரளவு விடுபடலாம்...

எதன் மீதும் அளவற்ற விருப்பம் வைக்காதீர்கள். அதிகமான விருப்பம் தான் ஏமாற்றத்தையும்,  ஆபத்தையும் தருகிறது...!

*பகிர்வு - தகவல் உலா *

💐💐💐🙏🏻🌺🌺🌺


ravi said…
பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். அவை:-
1) ஏளனம்.
2) எதிர்ப்பு.
3) அங்கீகாரம்.
- சுவாமி விவேகானந்தர்.

எதிலும் மனோபலம், தைரியம், செயலில் நேர்த்தி, கடைசி வரை முயன்று வெல்லும் மனோதிடம், இடைவிடாது முன்னேறும் தாகம்,

பகட்டு இல்லாமல் பார்க்க லட்சனமாக இருக்கும் தன்மை, எப்போதும் முகம் மலர்ந்து சிரிக்கும் புன்னகை, ஆகியவை ஒரு வெற்றியாளரின் அடிப்படைத் தேவைகள்.

வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 422* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*167 * पापनाशिनी -பாபநாசிநீ -*

பாபம் துளியாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அப்படியே அதை அழித்து விடுபவள் மாதா லலிதாம்பிகை.

ஆங்கில விஞ்ஞானி புதிதாக கண்டுபிடித்துவிட்டதாக உலகம் மெச்சுகிறதே

அவன் என்ன கண்டுபிடித்தான்?

''ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான, எதிராக விளைவு மற்றொரு செயல் உண்டு'' ' for every action there is an equal and opposite reaction.

இது என்ன புதுசு? ரிஷிகள் வேதங்கள் ஆயிரம் வருஷங்கள், யுகங்களில் முன்பே சொல்லியிருக்கிறதே. ;;முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் கர்மா'' பற்றி.

ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே கிருஷ்ணன் படித்துப் படித்து அர்ஜுனன் மூலம் நமக்கு சொன்னது தானே இது.

கர்மா நல்லதாக இருந்தால் நல்ல பலன். கெட்டதாக பாபமாக இருந்தால் அதற்கேற்ற விளைவை அனுபவித்தே தீரவேண்டும்.

இதை இங்கிலீஷில் கொஞ்சம் சொன்னால் நியூட்டன் பெரிய விஞ்ஞானி . சமஸ்க்ரிதத்தில் சொன்னால் காதில் ஏறாது.

பாபங்களை கொளுத்தி விடுபவள் அம்பாள்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 20...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
த்வத்மாந்த ஸ்மித கந்தலஸ்ய நியதம்
காமாக்ஷி!

சங்காமேஹே
பிம்ப: கச்சந நூதன ப்ரச்லிதோ

நைசாசரஸ்ரீ கர:
கிஞ்ச க்ஷீரபயேயாநிதி: ப்ரதி நிதி ஸ்வர்வாஹினீ

வீசிகா
பிப்வோகோ(அ)பி விடம்ப ஏவ குஹனா
மல்லீ மதல்வீ ருச:
ravi said…
வெண்மையான பாற்கடல், கங்கை அலை, மல்லிகை மலர் இவற்றில் எதுவுமே ஸ்ரீகாமாக்ஷி தேவியின் மந்தஸ்மிதத்தின் முன் நிற்க முடியாது.

‘ஸ்ரீகர’ என்று கொண்டால் அழகு அல்லது லக்ஷ்மியைக் கொடுக்கும் சந்திரன் என்று பொருள்.
ravi said…
கோபியர்களே ...

என் கண்ணன் குழந்தை அல்ல

அவன் மழலை கண்டு மதி மயங்க வேண்டாம் .

என்பால் அன்பு கொண்டவன் போல் நடித்தே

பெண்பால் காதல் கொள்பவன் .

அன்பால் கட்டுண்டவன் ..

தன்பால் இழுப்பான் எவரையும்

பெண் பால் குடித்து பூதகி தனை பூதங்கள் அஞ்சும் பூத உடல் ஆக்கினான்

கண்பால் வரும் அரக்கர்களை வம்பால் மாட்டும் துரோகிகளை

எமன்பால் அனுப்பி வைத்தான்

அவன் தோள் அழகை கண்டீரோ ?

துவண்டு சொக்க வைக்கும் கேசம் அதை முகர்ந்தீரோ 🙌🙌🙌
ravi said…
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்

வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்

தோள்கள் இருந்தவா காணீரே

சுரிகுழலீர் வந்து காணீரே

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
முகுந்தமாலா 32 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
அடுத்த ஸ்லோகம்

मदन परिहर स्थितिं मदीये मनसि मुकुन्दपदारविन्दधाम्नि ।

हरनयनकृशानुना कृशोऽसि स्मरसि न चक्रपराक्रमं मुरारेः ॥ ३१ ॥

மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யே

மனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி ।

ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி

ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 32 ॥
ravi said…
யாருக்காவது ஒரு பிரச்னை என்றால் உடனே தான் ஜபித்த நாமாவின் .

பலனை அளிக்கும் விதமாக அந்தக் கோட்டை அழித்து விடுவாள் !

அவர்கள் பிரச்னை தீர்ந்துவிடும் ! இதை பெரியவா குறிப்பிட்டு நாம மகிமை பற்றிச் சொல்லியிருக்கார்!
ravi said…
அம்மா ...

பனி சூழ்ந்த மலையிலும்

உன் நக ஒளி கண்டு

ஆதவன் உதயமாகி விட்டான் என்றே மலரும் உன் பாத கமலங்கள்

நிலவிலும் கூம்பாமல் சிரிக்கின்றதே 🪷

நிஜத் தாமரை வெட்கி நாணம் கொண்டு ஆதவனை கண்டும் கூம்பி விடுகிறதே 🪷

அம்மா உன்னுடன் எது போட்டி போட்டாலும் அதற்கு வெற்றி கிட்டுமோ ??

தெரியாமல் புரிந்துகொள்ளாமல் தாமரைகள் முகம் வாடும் போது நகைப்பு ஒன்றே வருகிறது 😊

அன்று அலர்ந்த மலர் அன்றோ நீ இன்று பூக்கும் மலர்கள் போட்டி செய்வதோ ?

உணர்ந்து கொண்ட தாமரை அதோ ஓடி வந்து உன் பாதம் சேருகிறதே என் போல

இனி நாங்கள் கூம்புவது எங்கனம் தாயே ... 🪷🪷🪷🪷🪷
ravi said…
*❖ 45 பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா; =*

தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளிர்மை பொருந்திய பாதங்கள் கொண்டவள்.
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (41-54)*
ravi said…
அருணாசலா .. யாருக்காக என்னை உன் உள்ளம் எனும் சிறையில் வைத்தாய் . ??

நானாக கேட்க வில்லையே ...

என் அகம் அழித்தாய் உன் நாமம் சொன்னவுடன் ..

அழகும் சுந்தரமுமாய் அபிபின்னமாய் ஆக்கினாய் ..

உள்ளே வந்து என் உள்ளத்தை திருடி உனக்குள் ஒளித்துக் கொண்டாய் ...

ஒரே ஒரு தடவை உன் நாமம் சொன்னதற்க்கே அளவின்றி அருள் செய்கிறாய் ...

எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு ...

ஓடும் நதிகள் கடலில் சேர்வது அதன் அளவு ...

வானம் பூமியை தொடுவது அதன் அளவு

கடல் பொங்கி வருவது அதன் அளவு ...

ஆனால் உன் கருணை மட்டும் அளவே இன்றி உள்ளதே ...

உனக்கு நல்ல புத்தி சொல்லி திருத்துவோர் யாருமே இல்லையா ... ??

சரி என்னை ஏற்று கொண்டு விட்டாய்

என்னை இனி காக்காமல் போனால் இந்த வையகம் உன்னை பழிக்கும் நினைவில் நிறுத்திக்கொள் அருணாசலா 🦚🦚🦚
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

4-
ஆருக்கா எனை அண்டனை

அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா ! (அ)
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 144*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
நாலிரண்டு மண்டலத்துள் நாதனின்ற தெவ்விடம்

காலிரண்டு மூலநாடி கண்டதங் குருத்திரன்

சேலிரண்டு கண்கலந்து திசைகளெட்டு மூடியே

மேலிரண்டு தான்கலந்து வீசியாடி நின்றதே. 144
ravi said…
எண்சான் உடன்பில் நாதன் நின்றது எந்த இடம்?

இடகலை, பிங்கலை எனும் மூச்சில் மூலநாடியான சுழுமுனையில் ஏற்றி இறக்கி, வாசிப் பயிற்சியினால் தீயாக விளங்கும் ருத்திரனை கண்டு

அங்கு சந்திர, சூரியனாக விளங்கும் இரண்டு கண்களையும் ஒன்றாக இணைத்து

எட்டுதிசைகளையும் மூடி அகக்கண்ணைத் திறந்து தியானம் செய்யுங்கள்.

மேலான அவ்வாசலில் சக்தியும், சிவனும் கலந்து சிவமாக ஆடி நிற்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
ravi said…
💐💐💐💗💐💐💐
கண் கலங்கி நிற்கும் ஒருவரை தேற்றுவதற்கென்று ஆயிரம் வார்த்தைகள் உங்களிடம் இருக்கலாம்...! ஆனால், முடிந்தால் இரண்டு நிமிடங்கள் எதுவுமே பேசாமல் உங்கள் தோளில் அவரைச் சாய்த்துக் கொள்ளுங்கள்...! அந்த *இரண்டு நிமிடங்கள்* இரண்டாயிரம் கரங்கள் அவரைத் தட்டிக் கொடுக்கும்...!
🍇🍇🍇🪷🍇🍇🍇
*அன்பான இனிய காலை வணக்கம்*
🙏🏼🙏🏼🙏🏼⛱️🙏🏼🙏🏼🙏🏼
ravi said…
*கேரள கோவில்களில் உள்ள சிறப்பு !*

அங்கே சிவா, விஷ்ணு பேதங்கள் இல்லை

சைவம், வைணவம்… அதிலும் வடகலை, தென்கலை இல்லை..

ஏன் திருநீறே இல்லை …மஹா தேவர் என்றழைக்கப்படும் சிவ சன்னிதானங்களில்கூட !!

சந்தனம் மட்டுமே பிரசாதம்..

ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி, சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்..( பழைமையான கோவில்களிலேயே..!)

கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை…

எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம், “ இலவச” தரிசனம் போர்டுகள், வழிகள் கிடையாது…!

தந்திரிகள் , கருவறை பூஜையில் உள்ளோர், இயற்கை உபாதையை கழிக்கவேண்டியிருந்தால்.. மீண்டும் மீண்டும் குளித்தபின்பே கருவறைக்குள் செல்கிறார்கள்( குருவாயூரில் கண்டது )…

புஷ்பாஞ்சலி( ்அர்ச்சணை) அவ்வப்போது பெயர், நட்சத்திரம் சொல்லி “ சக குடும்பானாம்..” என்று சப்தமாக சொல்லி , நிமிடத்திற்கு ஒரு ஆரத்தி காண்பித்து தட்டுக்காசு வாங்குவதில்லை…
மந்திரங்களை மனதுக்குள் உச்சரித்து, முத்திரைகளுடன் புஷ்பாஞ்சலி மொத்தமாக நடக்கும்…

கோவில் பிரசாதம் என்று மெதுவடை, புளியோதரை, அதிரசம் என்று கோவிலுக்குள் மினி ஹோட்டல் கிடையாது

கோவில் பிரகாரத்திற்குள், ஏன் வளாகத்திற்குள்ளேயே யாரும் உணவருந்துவதில்லை ..

கோவில் வளாகத்திற்குள் அன்னதானக்கூடங்கள் இல்லை…

நரேந்திர மோதி வந்தாலும் வேட்டி, மேல் வஸ்திரத்துடன் மட்டுமே அனுமதி…( பத்மநாபசுவாமி ஆலயம்)
இந்திரா காந்தியே வந்தாலும் இந்து அல்லாதவர்க்கு அனுமதி இல்லை ( குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணன் கோவில்)

கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும், கிருஸ்துவர்கள் அதிகம் இருக்கும் மாநிலமான கேரளத்தில் தெய்வ பக்தி அதிகமாகவே உள்ளது..

அங்கே கோவிலை இடிப்பவர்கள் இல்லை.. கடவுளை இல்லை என்று சொல்பவர்களும் இல்லை!!

கோவிலின் பாரம்பரியத்தை கெடுக்கவும் இல்லை!! கோவில் உள்ளே செல்வதற்கு முன் ஆண்கள் சட்டையை கழட்டிவிட்டுதான் செல்ல வேண்டும்!!

இதற்கு அங்கு உள்ள எந்த அரசியல்வாதியும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை!!

பெண்கள் சில கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற கட்டுபாட்டை பெண்களே மதிக்கிறார்கள்..

எவ்வளவு பெரிய பணக்காரணாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும்.. வரிசையில்தான் வரவேண்டும்..!! சிறப்பு தரிஸணம் கட்டணம் ஏதும் கிடையாது.. ஏன்?பொதுவாகவே கட்டணமே கிடையாது!!

அர்ச்சகர்களை தொட்டு பேசமுடியாது!!
அவர்கள் இரண்டு வேளையும் குளித்துவிட்டுதான் கருவறைக்குள் செல்வார்கள்..

பூஜை முடியும் வரை யாருக்காகவும், எதுக்காகவும் பூஜையை பாதியில் நிறுத்துவதில்லை!!

அரைத்த சந்தனம்தான் சாற்றுவார்கள்..


பக்தர்கள் யாரும் அவர்கள் இஷ்டத்திற்கு கோவிலை சுற்றி எங்குமே விளக்கு ஏற்ற முடியாது.. கோவிலில் எரியும் பொதுவான விளக்கிலேயே கொண்டுவந்த எண்ணையை விட்டுவிடவேண்டும்..

அதிகாலை நிர்மால்ய தரிஸணம் உண்டு!! பூஜைநேரத்திற்கு பூஜை செய்துவிடுவார்கள்.. யாருக்காகவும் பூஜை நிற்காது..

பூஜைக்கு கட்டணம் செலுத்தியவர்கள் கோவில் நிர்வாகம் சொல்லும் நேரத்திற்கு வந்துவிட வேண்டும்.. இல்லையேல் அவர்களுக்கக காத்திருந்து பூஜை செய்ய மாட்டார்கள்!!

கோவில் பிரஸாதத்தை விற்பது இல்லை!! கோவிலின் பிரதான கோபுரத்துக்கு வெளியேதான் கடைகளுக்கு அனுமதி!!

வெளியிலிருந்து கொண்டுவரும் பூக்களையோ,மாலைகளைகளையோ, பிரஸாதங்களையோ, கருவறைக்குள் அனுமதிப்பல்லை!!

அர்ச்சர்கள் கோவிலை விட்டு வேறு எங்கும், யார் வீட்டுக்கும் பூஜைக்கு கோவில் நேரத்தில் செல்வதில்லை!!

கோவில் சாற்றும்வரை சன்னதியிலேயே அர்ச்சர்கள் இருப்பார்கள்!!

கோவிலை சுற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள்!!..

மொத்தத்தில் கோவில் பணத்திற்காக அல்ல. கேரளத்து பாரம்பர்யத்திற்காக!

*படித்ததில் பிடித்தது !*
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள் பற்றிய பதிவுகள் :*

1. மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டக்கூடாது.

2. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யக்கூடாது.

3. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தம் செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

4. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு, வாழை இலை போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

5. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது 3 வெற்றிலை, 1 பாக்கு என்ற எண்ணிக்கையில்‌ வைக்க வேண்டும்.

6. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

7. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது சிறப்பு.

8. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

9. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

10. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*தினம் ஒரு திவ்ய பிரபந்தம்*

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 12

மைத்தடங்கண்ணி அசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே
கனம் குழையீர் வந்து காணீரே

கரிய பெரிய திருக்கண்களை உடைய அசோதைப் பிராட்டியார் வளர்க்கின்ற சிறந்த நிலத்திலே மலர்ந்திருக்கும் நீலம் என்ற பெயர் கொண்ட கருநெய்தல் பூவைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிறு பிள்ளையாம் கண்ணனின் கூரிய முனைகளைக் கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் என்றும் வீற்றிருக்கும் திருக்கைத்தலங்களைக் காணுங்கள். கனமான காதணிகளையுடைய பெண்களே காணுங்கள்.

***

சென்ற பாசுரத்தில் திருத்தோளின் அழகை அனுபவித்த பின்னர் இந்தப் பாசுரத்தில் திருக்கைத்தலத்தின் அழகை அனுபவிக்கிறார்.

இயற்கையாகவே கருநிறம் கொண்ட திருக்கண்களையுடையவள் அசோதைப் பிராட்டியார் என்பதை மைத்தடங்கண்ணி என்று குறிக்கிறார்; மையணிந்து அழகு பெற்ற பெரிய கண்களை உடையவள் என்று சொன்னாலும் பொருந்தும். திருவாய்ப்பாடியில் கண்ணனை எடுத்து வளர்ப்பதற்கு நிறைய பேர் இருந்தாலும் யாரிடமும் கண்ணனைக் கொடுக்காமல் தானே அவனை இவள் வளர்ப்பதால் 'அசோதை வளர்க்கின்ற' என்று சொன்னார். அப்படி அவளே அவனைச் சீராட்டி வளர்க்கும் போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதால் அவள் திருக்கண்களின் கருநிறம் இவன் திருமேனி எங்கும் பரவியது என்று சொல்லலாம் படி இருக்கின்றது. அதனால் நீலநிறத்துச் சிறுப்பிள்ளை என்றார் கண்ணனை.

கூர்மையான முனைகளை கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் இவன் திருக்கைகளில் என்றும் நீங்காமல் இருந்தாலும் அவ்வப்போது அவற்றை அசோதைப்பிராட்டியாருக்குக் காட்டுகிறான் இவன். இவன் திருக்கைகளின் வெண்ணெயில் திளைத்ததால் நெய்த்தலை நேமி ஆனது என்றாலும் பொருந்தும். இவன் கருதிய இடத்திற்கு சென்று பகைவரை அழித்து மீண்டும் வரும் திருச்சக்கரத்தைப் போன்று இல்லாமல் இவன் திருக்கைத்தலத்தை விட்டு விலகாமல் தனது பெரும் ஓசையினாலேயே பகைவரை நடுநடுங்கச் செய்யும் திருச்சங்கமும் நிலையாகத் திருக்கைகளில் கொண்டவன் கண்ணன். அன்றி இவன் திருக்கைத்தலங்களில் மகாபுருஷ லட்சணமாகிய சங்கு சக்கர ரேகைகள் உள்ளன என்று சொன்னாலும் பொருந்தும்.

-----

*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

“ஹைமவதி” என்று இந்த இடத்தில் உபநிஷத்திலே அம்பாளுக்குப் பெயர் சொல்லியிருப்பதற்கு இரண்டு விதமாக அர்த்தம் பண்ணலாம். ஒன்று, ‘ஹிமம்’ என்பது ‘பனி’ ஆதலால் பனி மலையான ‘ஹிமவா’னுக்குப் பிறந்த இவள் ‘ஹைமவதி’ என்பது. ‘ஹிம’த்தைக் குறித்தது ‘ஹைமம்’ – ‘சிவ‘த்தைக் குறித்தது ‘சைவம்’ என்கிறாற்போல. இங்கே ‘இ’காரம் ‘ஐ’காரமாகிறது. இதே மாதிரி ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் ‘ஏ’காரமாக ஆரம்பிக்கும் வார்த்தையிலிருந்து உண்டாகிற derivative -களும் ‘ஐ’ஆகிவிடும். “ஏக”த்திலிருந்து “ஐக்யம்”, “கேகயன்” பெண் “கைகேயி”. இந்த ரூல்படி ‘ஹிமம்’ போலவே ‘ஹேமம்’ என்ற சொல்லின் அடியாகவும் ‘ஹைமவதி’ப் பெயர் ஏற்படும். ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜ்வலிப்பவள் ஹைமவதி. ‘பஹுசோபை உள்ளவள்’ என்று உபநிஷத்தே இங்கு அம்பாளைக் குறிப்பதால் ஸ்வர்ண காந்தியாய் ஜ்வலிப்பவள் என்று பொருள் கொள்வதும் ரொம்பப் பொருத்தந்தான். ஆசார்யாள் இரண்டு அர்த்தங்களையும் ஒப்புக்கொண்டு, இந்த சோபைக்கு, ஜ்வலிப்புக்கு அவள் வித்யா ரூபிணியாயிருப்பதே காரணம் என்கிறார். அப்புறம் தம் வாக்ய பாஷ்யத்தை முடிக்கிற இடத்தில், “வித்யாவானாக (வித்வானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்கலக்ஷணப்படி குரூபியாயிருந்தாலும்கூட பஹுசோபையுடனே ப்ரகாசிக்கிறான் : விரூபோ (அ)பி வித்யாவாந் பஹு சோபதே” என்கிறார். ஸதாசாரத்தோடு படிப்பாளிகளாக இருக்கப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில், “முகத்திலேயே என்ன அறிவுக் களை, என்ன தேஜஸ்!” என்று சொல்ல முடிகிறது. அதேபோல், “மூஞ்சியைப் பார்த்தாலே சோதாக் களை” என்றும் சொல்கிறோம். முன்னே சொன்ன ஸைகிள் பெடல் உதாரணப்படி நம் பூர்விகர்களின் வித்யா ப்ரகாசத்தின் பலத்தில் இப்போதும் நம்மில் சிலர் முகத்திலாவது இந்தத் தேஜஸ் இருக்கிறது. ஸைகிள் நின்று போகாமல் அவள் க்ருபைதான் ஓட்டுவித்து, எல்லோர் முகத்திலும் சோபையை உண்டாக்கி, தேசம் முழுதிலும் அறிவொளி பரவச் செய்ய வேண்டும்.
ravi said…
கரிய பெரிய திருக்கண்களை உடைய யசோதை வளர்க்கின்ற சிறந்த நிலத்திலே

மலர்ந்திருக்கும் நீலம் என்ற பெயர் கொண்ட கருநெய்தல் பூவைப் போன்ற நிறத்தைக் கொண்ட

சிறு பிள்ளையாம் கண்ணனின்

கூரிய முனைகளைக் கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும்

என்றும் வீற்றிருக்கும் திருக்கைத்தலங்களைக் காணுங்கள்.

கனமான காதணிகளையுடைய பெண்களே காணுங்கள்.

மண்ணுண்டான் நெஞ்சுண்டான்

வெண்ணெய் உண்டான்

வேதம் உண்டான் .

உங்கள் வேதனை உண்ண அவனை வேண்டீரோ ?

எண்ணுண்டான் என்னுண்டான்

இடை உண்டான் மடை திறந்தே மாண்புண்டான்

மாற்றம் கொள்ளான் மனம் தனில் அவனை அடைப்பீரே

உரல் கொண்டான் ... மழல் கொண்டான்

குழல் கொண்டான் குற்றம் பிறர் காணான் ..

குறை ஒன்றும் கொள்ளான்

கண்ணன் எனப் பெயர் கொண்டே

நம் கண் மணியாய் இருந்திடுவான்

கற்பனைக்கும் எட்டா எழில் கொண்டான்

ஏற்றம் தந்தே ஏழ் பிறப்பும் வினை கொல்வான் ..

விரைந்து அவனை பணிவீரே

***💐💐💐
ravi said…
*தினம் ஒரு திவ்ய பிரபந்தம்*

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

மைத்தடங்கண்ணி அசோதை

வளர்க்கின்ற
செய்த்தலை

நீல நிறத்துச் சிறுப்பிள்ளை

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய

கைத்தலங்கள் வந்து காணீரே

கனம் குழையீர் வந்து காணீரே🪷🪷🪷
ravi said…
*பாடல் 12..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 30 started on 6th nov
ravi said…
*பாடல் 12 ... செம்மான் மகளை*

(சும்மா இரு சொல் அற)

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்

.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.🙏🙏🙏
ravi said…
இப்பாடலில் வேத நுட்பங்கள் எடுத்தாளப்பட்டுள்ளதை,

*பெம்மான்* ... *மகதே மகியான் பிறவான் ...* அஜரம்

வள்ளியாகிய பக்குவப்பட்ட ஜீவனை, ஐம்புலன்களாகயே
சகோதரர்களுக்கும், மனமாகிய தந்தைக்கும் தெரியாமல் அவள்
உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்.

அவன் உபதேசித்த, 'சும்மா இரு சொல்
அற' என்கிற சொல்லில் இரண்டு கருத்துக்கள் அடங்கி உள்ளன.

வெறும் மவுன விரதம் இங்கு கூறப்படவில்லை.

சீர்பாத வகுப்பில்
கூறப்பட்டதுபோல்,

.. உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ரநுபூதி ..

... என்று கூறப்படும் நிலையே அதுவாகும்.

விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம், இருள் ஒளி என்ற 'துவத்துவ'
உணர்ச்சிகளின் நடுநிலை.

இது நிர்விகல்ப்ப சமாதி நிலையில்
கொண்டுவிடும்.

இவர்கள் பார்க்கும் இடமெல்லாம் பரம் பொருளை
அன்றி வேறு ஒன்றையும் காணார். உணரவும் மாட்டார்.

இதையே
கீதையில்,

.. எல்லாப் பொருள்களிலும் தன்னையும் தன்னிடத்தில்
எல்லாவற்றையும் எவன் பார்க்கிறானோ அவனே யோகி ..

இப்படி சும்மா இருக்கும் சுகத்தை வாய்விட்டு விவரிக்க முடியாது.
இதை வேதம் கூறும்போது,

*'யாதோ வாசோ நிவர்த்தநததே அப்ராப்ய மனஸ சுக'*

... நமது சாத்திரங்கள் எல்லாமே இறைவனை திருடனாக
வர்ணிக்கின்றன.

ஸ்ரீருத்ரத்தில்,

*'தங்கானுமங பததே நமஹ'*

... என்ற வார்த்தை வெளிவருகிறது.

அதாவது திருட தலைவனுக்கு
நமஸ்காரம் என்பது இதன் பொருள்.

ஞானசம்பந்தர் தனது
தேவாரத்தின் முதல் பாட்டில் சிவபெருமானை 'தனது உள்ளங் கவர்
கள்வன்' என்கிறார்.

சாமான்யத் திருடன் நாம் தூங்கும் போதும்,
கவனக்குறைவாக இருக்கும்போதும் திருடுவான்.

இவனோ ஐம்புலங்களும்,
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் விழித்துக் கொண்டிருக்கும்போதே
திருடுகிறான்.

சாதாரணத் திருடன் திருடினவுடன் அடுத்த நிமிடமே
அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவான்.

இவனோ திருடின இடத்திலே
ஒளிந்து கொண்டிருக்கிறான்.

இதை 'கறை இலங்கும்' - காஞ்சித்
திருப்புகழில் அருணகிரியார் அழகாக குறிப்பிடுகிறார்.

.. சித்தத்திற்குள் ஒளிக்கும் கரவடன் .. (திருப்புகழ் 315).

அந்தத் திருடனால் நமக்கு நஷ்டம். ஆனால் இந்தத் திருடனால் அதி லாபம் 🦚🦚🦚
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 412* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய : *ஸர்வதர்ச’ன* : ||10
ravi said…
தொடர்ந்து சில நாட்கள் அவற்றை உட்கொண்டவாறே ஆட்சியர் பூரணமாகக் குணமடைந்தார்.

பெருமாளின் பிரசாதத்தின் மகிமையை உணர்ந்த அவர், அடிக்கடி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தார்.

யாரேனும் திருமலையப்பனின் பிரசாதம் கொண்டு செல்வதைப் பார்த்தால், “எனக்கும் கொஞ்சம் தாருங்கள்!” எனக் கேட்கத் தொடங்கினார்.

ஒருநாள் கோயிலில் ஆட்சியரைக் கண்ட ஒரு பக்தர், “செப்புப் பாத்திரத்தில் செய்த கிச்சடி சுகாதாரமற்றது என்றீர்களே!

இப்போது உங்கள் வயிற்று வலியைக் குணப்படுத்திய பெருமாளுக்காக நீங்கள் ஒரு வெள்ளிப் பாத்திரம் வாங்கித் தரலாமே!

அதில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கலாமே!” என்றார்
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 412*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ,
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ,
நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,

த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,

தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு.
ravi said…
அப்படினு சிதம்பரம் போய் அந்த நடராஜாவை தர்சனம் பண்ண மாத்திரத்தில் முக்தி அப்படினு சொல்லியிருக்கா.

காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாச்சலத்தை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தில் அந்த நடராஜாவை தர்சனம் பண்ணா முக்தி, அப்படினு அவ்ளோ பெருமை கொடுத்து சொல்லியிருக்கா.

அதனால் தான் ஒவ்வொரு க்ஷேத்ரத்தலையும், நம்ப மயிலாபுரிலயும், திருவொற்றியூரிலயும் , திருவான்மியூரிலயும் எல்லா சிவன் கோவிலையும், அந்த நடராஜாவை ரொம்ப முக்கியமா எல்லாரும் தர்சனம் பண்ணனும், அப்படினு அந்த நடராஜ மூர்த்தியை, எல்லா கோவில்களையும் பண்ணி வச்சியிருக்கா.
ravi said…
🌹🌺 ""A simple story explaining that oil lamp is suitable for Lord Vishnu 🌹🌺 -------------------------------------------------- ------

🌹🌺They worship the five-faced lamp to emphasize that all the five elements in human life should be harnessed and brought to light.

🌺These five faces represent the five qualities of love, temperance, resourcefulness, tolerance and determination.

🌺 Women who worship all the five faces and light the lamp will get noble qualities. Rub the lamp well and then light the lamp. Oil and ghee in the lamp also have their benefits*.

🌺 If you use the oil of whatever you want in the lamp, you can achieve what you want. Those who want all kinds of wealth and pleasures should pour ghee and light the lamp*.

🌺 While worshiping the family deity, neem oil, ghee and ghee should be mixed in equal proportions and poured into the lamp and lit.

🌺 Lamps should be lit with candle oil so that the love between husband and wife lasts and relatives get good.

🌺If you light a lamp with coconut oil and worship Lord Ganesha, you can get his grace. Women who want to get Lakshmi Kataksha should light a lamp with cow ghee and worship. A ghee lamp is suitable for Lord Vishnu.*

🌺Ghee is suitable for whichever deity is being worshipped.


🌺 A lamp made of brass or silver, bronze is best for puja*.


🌺The lamp should be placed on a wooden board or tampalam. Pooja can also be done by placing a candle on a thaliana leaf.


🌺Decorate the lamp with vibhuti, kumkum, sandalwood and decorate it.


🌺 Devi freezes in the lamp. We worship the Goddess by lighting the lamp. Thiruvilakku pooja is simple* to seek the grace of the Mother who cares for the universe.


🌺 While extinguishing the lamp, put a drop of milk in the torch or slowly pull the wick inside. If Kuthuvilaku Pooja is performed in the temples by the women and virgins of Sumangalip, the house and the country will be blessed.*


🌺🌹Jai Deepalakshmi Namo Nama:'*🌹


🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan

🌷🌹🌺

--------------------------------------------------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "“ *மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺மானுட வாழ்வில் ஐம்பொறிகளையும் தன் வசப்படுத்தி ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை வழிபடுகின்றார்கள்*.

🌺இந்த ஐந்து முகங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மனஉறுதி எனும் ஐந்து குணங்களையும் குறிக்கின்றன.

🌺ஐந்து முகங்களிலும் திரியிட்டு தீபமேற்றி வழிபடும் பெண்கள் உன்னத பண்புகளைப் பெற்றிடுவார்கள். விளக்கை நன்கு தேய்த்து துடைத்து பின்பு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன*.

🌺எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.சகல விதமான செல்வங்களையும் சுகபோகங்களையும் விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்*.

🌺குலதெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும்*.

🌺கணவன்-மனைவியரிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெய்யால் விளக்கேற்ற வேண்டும்.

🌺தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசு நெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே.*

🌺எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது.

🌺பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது*.

🌺மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம்.

🌺திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும்.

🌺திருவிளக்கிலே தேவி உறைகின்றாள். விளக்கை வழி படுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம். அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப்பெற திருவிளக்கு பூஜை எளிமையானது*.

🌺திருவிளக்கை அணைக்கும் பொழுது ஒரு துளி பாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம். குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.*

🌺🌹ஜெய் தீபலட்சுமியே நமோ நம:'*🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
" *நாம் அதிகாலையில் கண் விழித்துக் கொண்டு ஸ்ரீமந் நாராயான ஸ்தோத்திரங்களை சொல்லி அவரை தினமும் தியானம் செய்தால்*, தேவர்களின்
அருளும், மஹாலக்ஷ்மியின்
அருளும், நமக்கு கிட்டும் என்பதை - விளக்கும் எளிய கதை

ஒவ்வொரு நாளும் சூரியன்
உதிக்கும் முன்பு உள்ள
காலத்துக்கு உஷ காலம்
என்று பெயர். அச்சமயத்தில்
தேவர்களும், மஹாலெக்ஷ்மியும்
சஞ்சரிக்கிறார்கள்.

அப்போது
நாம் அதிகாலையில் கண் விழித்துக் கொண்டு
ஸ்ரீமந் நாராயான ஸ்தோத்திரங்களை
சொல்லி அவரை தினமும்
தியானம் செய்தால், தேவர்களின்
அருளும், மஹாலக்ஷ்மியின்
அருளும், நமக்கு கிட்டும்.

அவ்வாறின்றி அப்போது நாம் தூங்கிக் கொண்டிருந்தால்,
அவர்கள் கோபித்துக் கொண்டு
போய் விடுவார்கள்.

*ஸூரியோதயே சாஸ்தமயே ச சாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ர பாணிநம்*

என்கிறபடி சூரியோதயத்தில்
சூரியன் மறையும் நேரத்திலும்
தூங்குபவர் இந்திரனாயிருந்தாலும் அவர்களை விட்டு மஹாலக்ஷ்மி
விலகுவாள்.

பணத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவியார் அனைவருக்கும் பொதுவானவள். இவருக்கு தான் அருள் புரிவேன், இவர்களுக்கு அருள் புரியேன்! என்று ஒரு போதும் சொல்வதில்லை. அவளை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும், மனமுவந்து உண்மையிலேயே அருள் புரிவாள்.

அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பொறுத்து தான் அவர்களிடம் செல்வமும் எப்போதும் நிலைக்கும்.

ஆகவே தன உஷ
காலத்திலும் சூரியன் மறையும்
நேரத்திலும் தூங்க கூடாது
என்கிறது சாஸ்திரம் .

ravi said…
[10/12, 07:27] +91 96209 96097: *ப்ரகாஷாத்மனே நமஹ*🙏

மூடர்களுக்கும் தன் பெருமைகளை வெளிப்படுத்தி காட்டுபவர்
[10/12, 07:27] +91 96209 96097: *மாஹேச்வரீ* மஹாதேவீ மஹாலக்ஷ்மீர்-ம்ருடப்ரியா🙏
குல தெய்வமாக இருந்து ஆள்பவள்
ravi said…
#கோமாதாவின்_உடல்_பகுதியும்
#அங்கே_அருளும்_தெய்வங்களும்

1. முகம் மத்தியில் சிவன்
2. வலக் கண் சூரியன்
3. இடக் கண் சந்திரன்
4. மூக்கு வலப்புறம் முருகன்
5. மூக்கு இடப்புறம் கணேசர்
6. காதுகள் அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம் ராகு
8. கழுத்து கீழ்புறம் கேது
9. கொண்டைப்பகுதி ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால் பைரவர்
12. முன் இடக்கால் ஹனுமார்
13. பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம் கங்கை
16. பிட்டம் - மேல்புறம் லக்ஷ்மி
17. முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி
18. வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு வீமன்
22. இடக்கொம்பு இந்திரன்
23. முன்வலக்குளம்பு விந்தியமலை
24. முன்இடக்குளம்பு இமயமலை
25. பின் வலக்குளம்பு மந்திரமலை
26. பின் இடக்குளம்பு த்ரோணமலை
27. பால்மடி அமுதக்கடல்
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 33

கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு. . . . .[33]

விளக்கம்:

கள் குடிப்பவன் சொல்கின்ற காரியத்தின் பயன் துன்பமாம். முட்களையுடைய காட்டில் நடத்தல் மிகவும் துன்பமாம். வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாம். அவ்வாறே வஞ்ச மனத்தினை யுடையவரது தொடர்பு மிகவும் துன்பமாம்.


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
அம்மா ...

கொஞ்சும் சலங்கை என்ன புண்ணியம் செய்ததோ

உன் பாதம் தனில் கொஞ்சி விளையாட

கொஞ்சும் கொஞ்சலில் ஈசன் கொஞ்சுவதும் சேர்ந்துள்ளதோ ?

கொஞ்சும் சலங்கை கொப்பளிக்கும் மதுரம் தனில் தேனீக்கள் ரீங்காரம் இட்டே கொஞ்சி மகிழ்கிறதோ?

நவ ரத்தினங்கள் ஒளி இழந்து கொஞ்சும் சலங்கை தனில் கேவி கேவி அழுகின்றதோ ...

கேள்வியின் நாயகியே

உன் சலங்கை கேள்விக்கு பதிலாய் கொஞ்சும் போது சொக்காதவர் புவியில் எவரும் உண்டோ ?💐💐💐
ravi said…
*❖ 46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா; =*

பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள்.
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (41-54)*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

5 –
இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்

இனியார் விடுவார் அருணாசலா ! (அ)
ravi said…
அருணாசலா ... என்னை உனக்குள் சிறை வைத்தே பெரிய பழி சேர்த்துக்கொண்டாய்

இதுவே எல்லோரும் உன்னை பித்தன் என்று சொல்ல ஏதுவாகும் அருணாசலா ...

இந்த பழியை நீ தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் ...

நீ மட்டும் பித்தன் இல்லை .. நானும் தான் .. உன் மீது பித்தாக்கி விட்டாய் ..

உனை இனி நழுவ விடுவேனோ அருணாசலா ???
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 145*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
அம்மையப்ப னப்புநீ யறிந்ததே யறிகிலீர்

அம்மையப்ப னப்புநீ யரியய னரனுமாய்

அம்மையப்ப னப்புநீ ராதியாதி யானபின்

அம்மையப்ப னின்னையன்றி

யாருமில்லை யானதே. 145������
ravi said…
தாயாகவும் தந்தையாகவும் நாத விந்துதான் அப்புவான நீராக இருப்பதை அறிந்தும் நாத விந்தை அறியாமல் உள்ளீர்களே.

அப்பு எனும் நீரே விஷ்ணு, பிரம்மா, சிவன் எனும் மும்மூர்த்திகளாக இருக்கின்றனர்.

அந்த நீரே ஆதிக்கும் ஆதியான அனாதியாகவும், பிரமமாகவும் இருப்பதை உணர்ந்து அது ஒன்றையே எண்ணித் தியானியுங்கள்.

அதுவே அம்மையாகவும், அப்பனாகவும் வாலை அன்னையாகவும் இருந்து அருளும்.
ravi said…
முகுந்தமாலா 33 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில நேத்திக்கு 31வது ஸ்லோகத்துல, ‘அல்ப புத்தி கொண்டவர்களும், அதமர்களான புருஷர்கள் கிட்ட போய் வேலை தேடி நிற்காதே.

புருஷோத்தமனும், வாரி கொடுக்கும் வள்ளலும், எப்பவும் சலிக்காமல் கொடுக்கக் கூடிய, உலகத்துக்கெல்லாம் தலைவனான, லக்ஷ்மிபதியான ஸ்ரீமன் நாராயணனை வணங்கி அவனுடைய காரியத்தை நீ பண்ணு.

அவன் உனக்கு எல்லாமே கொடுப்பான்’ ன்னு சொன்னார்.

அடுத்தது மதனனை விரட்டற மாதிரி ஒரு ஸ்லோகம் சொல்றார்.

‘காமனே! நீ ஏற்கனவே ஒரு தடவை பரமேஸ்வரனுடைய கோபத்துக்கு ஆளாகி நெற்றிக் கண்ணால அவர் உன்னை சுட்டெரித்தார்.

என் மனசுல நான் முகுந்த பதாரவிந்தத்தை வெச்சுண்டிருகேன். அதனால நீ உன் திறமையை இங்க காண்பிக்காதே.

ஓடிப் போயிடு! இல்லேனா முராரியினுடைய சக்ர பராக்ரமத்தை அடுத்து பார்க்க வேண்டி வரும்’ ன்னு சொன்னார்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 21...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
தம்ராணாம் நகராஜ சேகர

ஸுதேநாகாலயா
நாம் பர:

காமாக்ஷித்வரயா விபத்ப்ரசமநே காருண்ய
தாரா:

கிரன்
ஆகச்சந்த மனுக்ரஹம் ப்ரகடயந் ஆனந்த
பீஜாநி தே

நாஸீரே ம்ருதுமஹால ஏவதநுதே நாதே
ஸுதா சீதள’:
ravi said…
காமாக்ஷி, கருணையே வடிவானவள்.

தன்னை அடைந்த பக்தர்களின் பிறவி துக்கத்தை உடனே நாசம் செய்து மோக்ஷ சுகத்தைத் தருகிறாள்.

தேவி தேவ-அசுர யுத்த காலங்களில் துர்க்கையாகவும் மஹிஷாஸுரமர்த்தனியாகவும் அவதரித்து தேவர்களை அசுரர்கள் பிடியினின்றும் விடுவித்து பிரம்ம, விஷ்ணு, ருத்ர, இந்த்ராதியர்களை ரக்ஷித்த வரலாறுகள் உள்ளன.

இந்த இடத்தில் தேவியின் சண்டி, சாமுண்டி, நவாக்ஷரீ மந்திர வடிவங்களையும் நினைவு கூர்வோம்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 423* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*சக்தி ஆலயம் : மயிலை கற்பகாம்பாள்:*

சென்னையில் இருப்பவர்கள் அடிக்கடி செல்லும், ஒரு ஆலயம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் ஆலயம்.

பல்லவ ராஜாக்கள் ஏழாம் நூற்றாண்டில் கட்டியது.

மயிலாப்பூரை திருமயிலை , கபாலீச்சரம் என்று எல்லாம் அறிகிறோம்.

புராணங்கள் சொல்லுகிற விஷயம் :

இங்கே தான் ஸ்ரீ பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததால், மயில்கள் ஆர்ப்பரிக்கும் இடம் மயிலார்ப்பூர் காலக்கிரமத்தில், மயிலாப்பூர் ஆகிவிட்டது.

கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்கள் .

தவிர பரிவார மூர்த்திகளுக்கான சந்நிதிகளையும் இங்கே கோயிலில் காண்கிறோம்.

பிற்காலத் தென்னக கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு கண்ணைப்பறிக்கிறது.
ravi said…
We are here to add what we can to life, not to get what we can from it.



Art is a lie that reveals the truth. Pablo Picasso



If someone trusts you blindly, don't prove them blind.



It is true that integrity alone won't make you a leader, but without integrity you will never be one.



Each minute spent in planning will save ten minutes in execution.



Ego makes lot of noise. Confidence is calm.



Expect the best. Prepare for the worst. Capitalize on what comes.
ravi said…
ENJOY YOUR WORK



Lovely story from mythology, very relevant to our daily tasks.



Arjuna once asked Krishna, "Lord, why do people consider Karna more generous than Yudhishtar? Neither has my elder brother ever refused whatever he has been asked for nor whoever has asked. So why is Karna considered greater than Yudhishtira?"



The Lord said with a smile, "Come, I'll show you why."



Disguised as Brahmins, they first went to Yudhishtar's court and asked for sandalwood sticks to conduct a 'Yagna'.



The king immediately sent his soldiers to all parts of his kingdom in search of sandalwood sticks. It was monsoon, the trees were all drenched, and the soldiers returned with wet sandalwood pieces. The Yagna was not possible with the wet sticks.
ravi said…
Krishna and Arjuna proceeded to Karna's court next and asked for the same sticks. Karna thought for a while and said, "As it's raining for several days now, it will be impossible to collect dry sandalwood sticks. But there is a way. Please wait for a while."



Saying this, Karna proceeded to chop and cut down the doors and windows of the court which were made of sandalwood and after making them into pieces, gifted the dry sandalwood sticks to the Brahmins to conduct the Yagna.



They accepted the offerings and went back. On their way back, Krishna asked Arjuna, "Do you realise the difference between the two, Arjuna? Had we asked Yudhishtar to give his doors and windows for us to conduct the Yagna, he would have given us without a second thought. But he did not think of it himself."



"We did not ask Karna either. Yudhishtar gave because that was his Dharma. Karna gave because he loves to give. This is the difference between the two, and that is why Karna is considered greater. Whatever work you do, it becomes nobler when you do it with love."

ravi said…
We can work with different attitudes, because:

1. someone asked you to;

2. or as a duty;

3. or as your dharma;

4. or as Karna did, out of love for doing the job.



The last is however, the best. Whatever work you do, love it, enjoy the work. That is what brings fulfillment to you as well as the task you undertake.
ravi said…
Treat your relations and money with equal respect, because both are hard to make and easy to lose.



The best way to face any crisis is to remain calm, cool and solution-oriented with positive mindset and optimistic outlook.



Take care of today, tomorrow will surprise you.



Sometimes you have to eat your words, chew your ego, swallow your pride and accept your mistakes. It's not giving up, it's called growing up.



Good thoughts and positive attitude do not have any monetary value but they have the power to purchase the hearts of millions of people.



You are great if you can find your own faults Greater if you can correct them, But greatest if you accept & love others with their faults.



Happiness always looks small, but when you learn to share it, you will realize how big and precious it is. So keep sharing
ravi said…
AGGRESSIVE EXPANSIONIST



In the Tretayuga ruled a demon king called Bali. Despite being an Asura, he was virtuous, large hearted and cared for the welfare of the people in his kingdom. He was generous and known for his charitable qualities. Bali learnt the Shastras and mastered the Vedas under the guidance and supervision of his illustrious grandfather Prahlada. He performed rituals with unfailing regularity and set an example for other kings.


One day a Brahmin boy met the king while he was performing a sacrificial ritual. A diminutive figure with an umbrella in his hand, he asked Bali to give him three steps of land measured by his foot as charity. Despite being forewarned by his Guru Shukracharya that it was a setup and the Brahmin was none other than Lord Vishnu in disguise, Bali agreed to the request
ravi said…
The boy grew in size and covered the earth and the sky with his two feet. When asked about the third step, Bali asked the Brahmin to place it on his head. Then the Brahmin placed his foot on Bali’s head and pushed him to Patala, the netherworld.


But why did an honest king like Bali suffer such a cruel fate??


Despite his good qualities, Bali was an aggressive expansionist who was keen on conquering the three worlds. He set his sights on Indralok and was trying to punch above his weight by unseating Indra, the Lord of Heavens. His ego was clearly forcing him to cross certain redlines. That is when Lord Vishnu intervened and showed him his place.

ravi said…
Despite his good qualities, Bali was an aggressive expansionist who was keen on conquering the three worlds. He set his sights on Indralok and was trying to punch above his weight by unseating Indra, the Lord of Heavens. His ego was clearly forcing him to cross certain redlines. That is when Lord Vishnu intervened and showed him his place.


The story is an eyeopener on the perils of reckless expansion when there is no need for one. Other than satisfying one's ego, it is an exercise in futility that will reach unmanageable proportions.

The message is clear - keep it simple
ravi said…
Quite often one has the urge to express gratitude; the EGO / ATTITUDE prevents the expression itself. This is akin to the 'Wrapping of a Present with care' and not giving it at the right moment. Go ahead and LIVE the MOMENT
ravi said…
HEAVEN AND HELL (Source: Zen Stories, The Staff and Shout of the Venerable Ones)



There was once a general who asked the Zen master Hakuin: "Are there really such things as Heaven and Hell?" "What do you do for a living?" Hakuin asked him. "I'm a general."


"Ha, ha, ha! What idiot asked you to be his general? You look more like a butcher to me", the Zen master teased the general. "I'll cut you to pieces!" the general angrily pulled his sword. "Here lie the gates of Hell!" said the master.


"Excuse me...Please forgive my insolence.” And Hakuin said: "Here lie the gates of Heaven."
ravi said…
Excuse me...Please forgive my insolence.” And Hakuin said: "Here lie the gates of Heaven."


Heaven and Hell aren't places that suddenly appear after death. They exist here and now. Good and evil involve just a single instant of thought, and the gates of Heaven and Hell are ready to open for you at any time.



Have a Have a Saturday listening to Soothing music.

Oldest Older 201 – 333 of 333

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை