ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 21. கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா பதிவு 28

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 28

 21 கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா



அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அழகு.  

அவள் அழகுக்கு ஒப்புமை  வேறு ஏதாவது இருந்தால் தானே  இது போல  என்று காட்ட முடியும்?  

பிரம்மம் என்று சுலபமாக அவளை பற்றி சுருக்கமாக சொல்லிவிடலாம்.  

பரம ஆனந்தத்தின் உச்ச கட்டம் தான் ப்ரம்மம், *ப்ரம்மானந்தம்* .

அழகும் ஆனந்தமும் ஒன்று கூடிய கலவை. 

அகத்தின் அழகு முகத்தில் என்கிறோமே,  அவள்  முழுதும் பிரம்மத்தில் திளைப்பவள் என்பதால் அவள் முக காந்தி அப்படி ஒளிவீசுகிறது.🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️



உபாசனை ஐந்து வகை

அபீகமனம்   : அணுகுவது. 

உபாதானம் :  அர்ப்பணிக்க தயார் நிலை:  

லிஜ்யா :  நிவேதனம்,   

ஸ்வாத்யாயம் :  

தானே அறிவது.  

யோகம் : பக்தி தியானம்.

விக்ரஹ ஆராதனையில் ஆரம்பித்து தனக்குள் தானே  பிரம்மமாக உணர்வது வரை முதிர்ச்சி பெறுபவன் யோகி.

இந்த  பதிவில்   ஸ்லோகங்கள்  8 முதல் 10 வரை பார்ப்போம். 

அதில் வரும் நாமங்கள் பத்து.  

அதைத்தான் 21 முதல் 30 வது நாமம் வரை அர்த்தம் புரிந்துகொள்ளப்போகிறோம்.🙏🙏🙏🙏🙏🙏

21कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा - கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா

லலிதாம்பாளின் செவிகள் எப்படி இருக்குமாம் தெரியுமா.?? 

அன்றலர்ந்த அழகு மிகுந்த கதம்ப மலர்கள் போல💐💐💐


மஞ்சரி = கொத்து 

க்லுப்த = சீராக / தயாராக / அணிவகுத்து 

கதம்ப மஞ்சரி க்லுப்த = சீராக மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்து 

கர்ணபூர = காதுகளை சுற்றி அணியும் அணிகலன் 

மனோஹர = ரம்யமாக

சீராய் மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்துக்களால் காதுகளை அலங்கரித்திருப்பவள் 🍁🍁🌸🌸🏵️🏵️🏵️



21कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा - கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா

கண்கள் தாமரை என்றால் அவள் செவிகளோ கதம்ப மலர்கள் .. 

அவள் உள்ளம் ஒரு பூ பந்தல் ... 

பார்க்கும் பார்வையில் மகரந்தமும் தேனும் சொரியும் போது அங்கே பக்தர்கள் எனும்~ 

வண்டுகள் மொய்வதில் ஆச்சரியம் என்ன ?  

மொய்க்கும் வண்டுகள் அவள் கருணை எனும் தேனை அதிகமாக குடிப்பதினால் மயங்கி அவள் பாதம் எனும் பங்கஜத்தில் படுத்து உறங்குகின்றன ... 

ஏது இனி கவலை ஏது இனி பிறவி குடும்பும் கொழுந்தும் குருதியும் தோயும் குடம்பை இனி நமக்கு கிடைக்காது 👍👍👍👍👍👍👍👍

21  कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा - கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா

இப்படி ஓவ்வொரு அங்கத்தையும் இது அந்த மலருடன் ஒத்திருக்கிறது இது இந்த மலருடன் என்று சொல்வதற்கு பதில் எல்லாம் தாமரையே என்று ஒரே ஒரு மலருடன் பட்டர் வர்ணிக்கிறார் ...

முன்னமேயே பார்த்திருக்கிறோம் .. மீண்டும் உங்கள் பார்வைக்கு 🌷🌷🌷

அருணாம்புயத்தும், 

என் சித்தாம்புயத்தும் 

அமர்ந்திருக்கும்

தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், 

தகை சேர் நயனக்

கருணாம்புயமும், 

வதனாம்புயமும், கராம்புயமும்,

சரணாம்புயமும், 

அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.🙏🙏🙏


அருணாம்புயத்தும் - 

அருணனாம் ... சிவந்த  பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்... 

நளினி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா .. 

உடல் எங்கும் தாமரைகள் கொண்டவள் என்று அர்த்தம் .. 

அம்புஜம் , அம்புயம் , கஞ்சம் எல்லாமே தாமரையை குறிக்கும் ... 🌷🌷🌷

அபிராமி மாலையில் வாடிப்போகும் தாமரை அல்ல சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை ... 

கூம்பி போகும் அல்லது வாடிப்போகும் சாதாரண தாமரை அல்ல ... 🌷🌷🌷


என் சித்தாம்புயத்தும் 

என் மனமெனும் தாமரையிடத்தும்... 

ஏ தாமரையே!! 

பெருமை பீத்திக்கொள்ளாதே 

உன்னிடத்தில் தான் என் அபிராமி இருக்கிறாள் என்று .. 🌷🌷🌷

என் இதய தாமரையில் அவளே அமர்ந்து அரசாட்சி செய்கிறாள் ...

அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள்

அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற தன பாரங்களை கொண்ட  பெண்களில் சிறந்த அன்னை அவள் .. அபிராமி என் தையல் நாயகி ... 🌷🌷🌷


தகை சேர் நயனக் கருண அம்புயமும் - 

பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும் அவளே .. அவள் கண்கள் மென்மை அதனால் அவள் கண்கள் சுரக்கும் கருணையும் மென்மை ... 🌷🌷🌷

வதன அம்புயமும் -

திருமுகம் என்னும் தாமரையும்... அவள் முகம் தாமரை .. தன் பதியை பார்க்கும் பொழுதும் , தன் குழந்தைகளான நம்மை பார்க்கும் போதும் அவள் முகம் அரும்புகிறது .. 🌷🌷🌷


கர அம்புயமும்

திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்... 

கரங்கள் மென்மை , மேன்மை , தாய்மை , அருமை , பெருமை , வறுமை நீங்கும் குளிமை. 

சரண அம்புயமும் - 

திருவடிகள் என்னும் தாமரைகளும்

அடடா ... அவள் பாதங்கள் என்றுமே புது மலர்த்தாள் ... 

அல்லும் பகலும் தொழுவோர்க்கு அழியா அரசும் , செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்க செய்பவை ... 

அவள் பாதங்கள் ஒருநாள் என்ன செய்தது தெரியுமா ? 

அவள் பாதங்கள் எனும் கமலங்கள் என் தலையில் வலிய வந்து அமர்ந்து அருள் அற்ற அந்தகனை ஓட ஓட விரட்டியது ...


அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - 

அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்... அவள் இன்றி யாரிடமும் தஞ்சம் புக மாட்டேன் .. அவளே கஞ்சம்( தாமரை)  எனும் போது வேறு எங்கு போய் நான் தேன் குடிக்க வேண்டும் ? 💐💐💐🌷🌷🌷

கதம்ப மஞ்சரீ க்ல்ப்த கர்ணாபூர மநோஹரா. 

கதம்ப மரத்தின் துளிர்களைத் தன்னுடைய காதுகளில் செவிப் பூக்களாக அணிந்திருக்கிறாள். 

அந்தக் காலத்தில், இலைச் சுருள்களையோ சருகுகளின் சுருள்களையோ காதுமடல் துவாரங்களில் பெண்கள் அணிந்து கொள்வார்கள். 

இப்போது கூட, சில வீடுகளில், வைரத்தோடு என்றோ தங்கத்தோடு என்றோ சொல்லமாட்டார்கள். 

வைர ஓலை, தங்கோலை என்பார்கள். காரணம், அந்தக் காலத்தில் ஓலையைச் சுருட்டிப் போட்டுக் கொண்டதுதான். இயற்கையாகக் கிடைத்தவற்றை வைத்து அலங்காரம் செய்து கொள்வது வழக்கம். 

மாணிக்கவாசகர், சங்கங்கள் ஆர்ப்ப என்று பாடுவார். (கைகளில் அணியும்) வளையல்கள் ஒலியெழுப்ப என்று அர்த்தம். சங்குகளை வெட்டி, அதனால் கிடைத்த வட்ட வடிவச் சுருளைக் கைகளில் அலங்காரமாக அணிந்து கொண்டார்கள். 

அதனால், வளையல்களுக்கே சங்கங்கள் என்று பெயர். 

அதுபோல, ஓலைகளைக் கர்ணப்பூக்களாகவும் தோடுகளாகவும் அணிந்து கொண்டார்கள். காதுமடலின் கீழ்ப்பகுதியில் (அதாவது, தொங்குவது போலிருக்கும் பகுதி) அணிவது தோடு. 

அங்கிருந்து மேல் நோக்கி வரிசையாகச் சிலபேர் துளையிட்டு நகை அணிவதைப் பார்த்திருக்கிறோம். அந்த மாதிரி அணியக்கூடியவை செவிப்பூக்கள். ஆண்டாள்கூட தோடே, செவிப்பூவே என்று பாடுகிறாள். 

எல்லாவற்றுக்கும் மேலே, மடலின் மேல் உச்சிப் பகுதியில் அணிவது கொப்பு. இன்னும் இதுபோல பற்பல ஆபரணங்கள் உண்டு.

கதம்பத் துளிர்களைச் செவிப்பூவாக அணிந்துகொண்ட அம்பாள், தாடங்கங்களாக (தோடுகளாக) எவற்றை அணிந்திருக்கிறாள்? சூரியனையும், சந்திரனையும். இதைச் சொல்வது அடுத்த நாமம்.



                                            👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍


Comments

ravi said…
பேசுவது திறமை அல்ல. தனது பேச்சால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் பேசுவதே திறமை.

கோபத்தில் ஒருமுறை விட்ட வார்த்தைகளை மறுமுறை சரி செய்ய முடியாது. அப்படி முயன்றால் அது ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு சமம்.

நல்ல புரிதல் உள்ளவர்களுக் சொல்லத் தேவையில்லை. புரியாதவர்களுக் எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை.

எப்படி பேச வேண்டும் என்று கற்றுத் தர நிறைய பேர் இருக்கிறார்கள். ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்று கற்றுத்தர வாழ்க்கை மட்டுமே இருக்கின்றது.

நல்லதைக் கூட சில இடங்களில் பேசாமல் இருப்பதே நல்லது.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*வசவே நமஹ*🙏
அடியார்களுக்கு செல்வத்தை அளிப்பவர்

Yonithya machutha padambuja yugma rugma vyamohatha sthathirani thrunayamene asmathguroh Bhagavathosya dayaika sindho Ramanujasya charanow sharanam prapadye”

*ஸர்வேச்வரீ* ஸர்வமயீ ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ🙏
சகலவற்றுக்கும் அரணாக இருந்து காப்பவள்
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம்

கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை

ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
பகவானுடைய காரியத்தைத்தான் பண்ணனும். பகவான் என்ன கொடுப்பான்?

பகவானுடைய பஜனம் பண்ணினா ‘ *ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி* ’

வேற ஒரு தெய்வம் இவ்ளோ கருணை பண்ணாது.

இந்த தெய்வங்களுக்குள்ள தன்னையே கொடுக்கிறவன் இந்த நாராயணன் தான்.

அவன் புருஷகளுக்குள் உத்தமன்.

ராமருடைய குணங்களை நினைச்சுப் பார்த்தா, அயோத்தியா காண்டம் இரண்டாவது ஸர்கத்துல ஜனங்கள் எல்லாம் ராமனோட குணத்தை புகழ்ந்து பேசி தசரதர் கிட்ட ‘உடனடியாக நீங்க அவனை ராஜாவாக்குங்கோ’ ன்னு வேண்டிக்கறா.

அப்ப அவா சொல்றா. ‘ராமன் யாரிடத்துல திருப்தி ஆனானோ அவனுக்கு நிறைய செல்வத்தைக் கொடுப்பார்.

பக்தனுக்கு எல்லா அனுக்ரஹமும் பண்ணுவார். யார் கிட்ட ராமன் கோபிச்சிண்டானோ அவனை தவறாம தண்டிப்பான்’ ன்னு ஜனங்கள் சொல்றா.

அந்த மாதிரி பகவானோட காரியத்தை பண்ணினா கட்டாயமா நம்மை காப்பாத்துவான்.

அவன் புருஷோத்தமன். அவனுடைய குணங்களை நினைச்சுப் பார்க்கணும்.
‘ *த்ரிஜக³தாமேகாதி⁴ப:’* மூவுலகதுக்கும் அவன்தான் தலைவன்.

அதனால பகவானுடைய காரியத்தைப் பண்ணு.

யாரோ ஒரு மனுஷன்கிட்ட போயி இவன் தான் என்னை காப்பாத்தப் போறான்னு அவனை ஆச்ரயிக்காதே.

பகவானை ஆச்ரயித்து அவனுடைய காரியத்தை பண்ணுன்னு குலசேகராழ்வார் சொல்றார்🙏🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 16...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
ப்ரசண்டார்த்தி க்ஷோப ப்ரமதனக்ருதே

ப்ராதி பஸரித்
ப்ரவாஹ ப்ரோத்தண்டீ கரண

ஜலதாய
ப்ரணமதாம்
ப்ரதீபாய ப்ரெளடே

பவதமஸி காமாக்ஷி சரண
ப்ரஸாதெளன்முக்யாய ஸ்ப்ருஹயதி

ஜனோயம்
ஜனனிதே.

3
ravi said…
அம்பிகையை வணங்கினால் அதிக வரம் பெறலாம் என்பர் சான்றோர்.

எப்படிப்பட்ட மனக்கலக்கம், துயரானாலும் அவற்றையெல்லாம் தீர்க்க வல்லவள் தேவி காமாக்ஷி.

தேவியை வணங்குபவர்களின் அருட்தாகத்தைத் தணிக்கும் மேகமாகவும், ஸம்ஸாரமாகிய அடர்ந்த இருளில் ஒளிவீசும் தீபமாகவும் காமாக்ஷி விளங்குகிறாள்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தின் 742 முதல் 749ம் நாமம் வரை தேவியின் கருணை பேசப்படுகிறது.🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 419* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*164. நிர்மமா*🪷🪷🪷
ravi said…
தன்னையே தருபவள் .. இதைத்தான்
*பவானீத்தவம்* என்று ஆச்சரியாள் சௌந்தர்ய லஹரியில் சொல்கிறார்... தன்னலம் என்றுமே கருதாதவள் ... அதனால் தன்னகரில்லாமம் தனக்கு உவமை இல்லாதவளாக இருக்கிறாள் .. மமகாரம் அகங்காரம் இல்லாமல் எந்த காரமும் இல்லாமல் நமக்கு இனிப்பு மட்டுமே தருகிறாள் 🙏🙏🙏
ravi said…
அப்பா!!

என் குலதெய்வமே என் குலக்கொழுந்தே நந்தன்குல திலகமே!!

நீ தெய்வம் தான்

உனது செயல்கள் எதுவும் சாதாரண மழலை செயல்களே அல்ல

அந்த சர்வேஸ்வரன் நீ தான் என்று நன்கு புரிந்து கொண்டேன்!

மூன்று வேளையும் பாலும் தயிரும் வெண்ணெயும் திருடி தின்கிறாய் ..

இது போதாது என்றே மண்ணையும் களவம் என உண்கிறாய்

கோபியர் வீடுகளில் உடையாத பானை இல்லை ... திருடாத பொருள் இல்லை

முகாரி ராகம் பாடதோர் யாரும் இல்லை ...

முத்து முத்தாய் உன் கண்களை பார்த்தும் நீ திருட இன்னும் வரவில்லையே என ஏங்குவோர் பலர் உண்டு இங்கே

நெஞ்சை திருடிய நீ பஞ்சு போல் அங்கே உறங்க வருகிறாய் ..

உத்தமனே உயர்ந்தவனே உள்ளம் நிறைந்தவனே

உனை குழந்தை என்றே சொல்லி இனியும் நான் ஏமாற மாட்டேன் ..

பசி என்றே பால் ஊட்ட சொல்கிறாய் ..

என்னுள் வசிப்பவனே
ஏமாற மாட்டேன் ... அஞ்சுகிறேன் .. பால் ஊட்ட உனக்கே

பாலாய் நீ பிரவாகம் எடுக்க

என் தாய் பால் என் செய்யும் கண்ணா ?

உன் பசி போக்குமோ இல்லை என் வினை தீருமோ ?

பாலினும் சொல் இனியவனே

பால் போல் பழம் போல் பாகாய் இனிப்பவனே

என் தாய் பால் மூன்றடி அளந்தவன் பசி போக்குமோ *கண்ணா*?

அஞ்சுகிறேன் *கண்ணா*

------- *யசோதா* 💐💐💐
ravi said…
முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணையினோடு* தயிரும் விழுங்கி*

கப்பாலயர்கள் காவில் கொணர்ந்த* கலத்தொடு சாய்த்துப்பருகி*

மெய்ப்பாலுண்ட அழுபிள்ளைகள்
போல*

நீ விம்மி விம்மி அழுகின்ற*

அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்*

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.!🙏
ravi said…
மாணிக்க வீணை உன் மரகத கரங்களில் ...

மான் வசிக்கும் விழிகள் மாதுள முத்துக்கள்

மீன் துள்ளும் புருவம் காமன் வீட்டு வாசல் தோரணம்

இமை அணைக்கும் கண்கள்

இதழ் சிந்தும் மதுரம் ..

ஆதவன் அடைக்கலம் தேடும் பற்கள்

மதி கொட்டும் அமுத குரல்

அன்னம் துயில் கொள்ளும் உன் பாதம்

பஞ்சு அஞ்சும் மெல்லிய விரல்கள்

வினை போக்கும் பார்வை

அதில் பால் ஊட்டும் தாய்மை

விஜயம் என்பது செயல்

விழுந்து விட்டேன் உன் திருவடிகளில்

உனை இன்றி வேறு துணை தேடும் மூடன் அல்ல நான் *அம்மா*
ravi said…
*❖ 40 மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா;* =

இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்
பெறுபவள்🪷🪷🪷
Kousalya said…
ஆஹா...என்ன அழகு... என்ன அழகு...அவன் அழகை வர்ணித்து மாளாது...கண்ணனை கண்ணுக்குள் கட்டிவைத்து இமை கொட்டாமல் அவன் அழகை மனதில் இருத்தி இருக்கும் உணர்வு தந்தமைக்கு நன்றிகள் உரைத்து உய்ய அருள் புரிய வேண்டும் கண்ணா🙏🙏🙇‍♀️🙇‍♀️😍🪔🪔🪷🪷
Kousalya said…
Worth watching as many times...and cultivate/ nurture art of giving which leads good living.... Thank you 🙏🙏
Kousalya said…
அதி அற்புதம்..🙏🙏
ravi said…
் உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக! முழுஞான பெருக்கே வருக! பிறை மவுலி பெம்மான் முக்கண்சுடர்க்கு நல்விருந்தே வருக! முழுமுதற்கும் முத்தே வருக! வித்தின்றி விளைந்த பரமானந்தத்தின் விளைவே வருக! பழுமறையின் குருந்தே வருக! அருள்பழுத்த கொம்பே வருக! திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெருவெள்ளம் பிடைவார் பிறவிப்பிணிக்கோர் மருந்தே வருக! பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக! மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!..



3353. முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ!
மதுரன் நீ! மணாளன் நீ! மதுரை ஆலவாயிலாய்!
சதுரன் நீ! சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே! 4
திருச்சிற்றம்பலம்
🪔
ravi said…
BROKEN EGGS (Courtesy Satish S)


On a recent Saturday evening at around midnight, Rodney and his wife were just about to turn out the light and go to sleep when they heard the sounds of a group of people talking in the street, outside their home. Then out of the blue came two loud thuds above their bedroom window, followed by the noise of laughter and people running away down our street. Both of them jumped out of bed, Rodney turned on the external lights and rushed outside unsure of what had caused the two thuds or what damage he could expect to see. The silence of the night was broken by the distant sound of people laughing and at that moment Rodney was of a mind to chase after them, however, running bare-footed on the road in the dark is not a very wise thing to do. Rodney could hear dripping noises on the driveway and the flood light above their garage helped him to identify just what had happened. Their home had been the victim of an egg bombing!

ravi said…
Being faced with the prospect of cleaning up this sticky mess in the early hours of the morning was not a pleasing thought, on top of which Rodney was less than impressed that they had been singled out for this annoying prank. Rodney decided that it was too late to clean up the mess, as it would disturb their neighbours, so it could wait until morning. Early next morning with a bucket of warm water and scrubbing brush in hand, and with the extension ladder placed on the front wall, Rodney was now ready to wash off what was now two dry yellowish, egg grit impregnated, 1 metre long patches above their front bedroom windows. His task was made even more challenging by the two large canvas awnings which protect their bedroom windows from the heat and glare of the afternoon sun. His annoyance with the late night pranksters was again building to the level of the night before.
ravi said…
After retracting each of the awnings, something we rarely do except when there are very high winds, Rodney then climbed the ladder to clean up the first patch of egg stain, and then moved the ladder to clean the second patch. As he climbed the ladder for the second time, he noticed that the glass in a small window just under the roof line was very badly cracked. On closer inspection the crack ran around over half of the outer edge of the window pane. As the awning protected the window, it was clear to him that the damage had not been caused by the egg bombing. As he carefully placed his hand on the glass, he discovered that the pane of glass was very loose and had the window been closed with any force, it would have most likely shattered and the glass dropped to the driveway, some seven metres below
ravi said…
Just a few metres away, they had a basketball ring and on most days of the week there were up to six young people who played in the immediate area, including both his sons. His thoughts immediately turned to what could have happened if the broken glass in the window had gone undetected for much longer and then suddenly shattered. The likelihood of his two sons and their friends being seriously injured was extremely high. After quickly washing the remaining egg stain off the front wall and with the help of Tom, his youngest son, he got to work with some heavy duty masking tape and secured the cracked window as best he could. Within 24 hours the cracked window had been replaced and all was back to normal, except for the small bits of egg shell he kept finding on the front driveway and stuck to their garage doors.

ravi said…
Over the next few days, he realised that had their home not been bombarded by those eggs late on that Saturday night, he may not have discovered the broken window pane before it shattered and came down all over their driveway. Even though it had been an annoyance at times, the broken eggs and the stains were cleaned up very quickly, however, the pain that could have been caused by the shattering of glass would never go away and would have haunted his wife and himself, forever and a day. The cold shudder that ran down his spine when he first discovered the cracked window and the thought about the consequences of someone being seriously injured or even killed, made him realise just how very lucky we had been.

ravi said…
Frequently in life, the small things that happen to us may appear to have a negative impact and cause some form of pain, sadness, discomfort or personal aggravation. It is often said that we should not 'sweat the small stuff' and always look for the positive outcome or the silver lining in those dark clouds of the current circumstance, even though at the time that is not always an easy thing to do. Rodney’s personal experience with the egg bombing on that Saturday evening reminded him that in most cases there is always a flip side to everything that happens to us and that often the flip side can provide a positive outcome or an even greater benefit, if not now, then at some time in the future. From now on whenever he saw or break an egg, he will think of the egg bombing incident and say a thank you to those late night pranksters. Equally, he will always be reminded of Jean-Paul Sartre's quote: 'What is important is not what happens to us, but how we respond to what happens to us'.

ravi said…
Win in silence, let them think you are losing.



No matter what yesterday was like, birds always start the new day with a song.



We get the highest ROI from Investing in (y)ourselves.



The trouble with most of us is that we'd rather be ruined by praise than saved by criticism. Norman Vincent Peale



We can complain because rose bushes have thorns, or rejoice because thorn bushes have roses. Abraham Lincoln



Success is not final, failure is not fatal: it is the courage to continue that counts. Winston Churchill



Faith is the first step even you can't see the whole staircase.
ravi said…
RELIGIOUS OR SCIENTIFIC



Vasu asked. "Mom, I am a genetic scientist. I am working in the US on the evolution of man. Theory of evolution. Charles Darwin, have you heard of him? " His Mother sat next to him,

smiled and said, "I know about Darwin, Vasu. But Have you heard of Dashavatar?

The ten avatars of Vishnu?"



Vasu replied yes. "Ok! Then let me tell you what you and your Darwin don't know. Listen carefully.



The first avatar was the Matsya avatar, it means the fish. That is because life began in the water. Is that not right?" Vasu began to listen with a little more attention. She continued, "Then came the Kurma Avatar, which means the tortoise, because life moved from the water to the land. The amphibian! So the Tortoise denoted the evolution from sea to land.



Third avatar was Varaha, the wild boar, which meant the wild animals with not much intellect, you call them the Dinosaurs, correct?" Vasu nodded wide eyed. "The fourth avatar was Narasimha, half man and half animal, the evolution from wild animals to intelligent beings.



Fifth, the Vaman avatar, the midget or dwarf, who could grow really tall. Do you know why that is? Because, there were two kinds of humans, Homo Erectus and Homo Sapiens and Homo Sapiens won that battle." Vasu could see that his Mother was in full flow and he was stupefied.



"The Sixth avatar was Parshuram, the man who wielded the axe, the man who was a cave and forest dweller. Angry, and not social. The seventh avatar was Ram, the first rational thinking social being, who practised and laid out the laws of society and the basis of human relationships.



The Eighth avatar was Balarama, a true farmer who showed value of agriculture in the life. The Ninth avatar was Krishna, the statesman, the politician, the diplomat, the Ambassador, the sutile interpreter, the lover who played the game of society and taught how to live and thrive in the adhaarmic social structure.



And finally, my boy, will come Kalki, the man you are working on. The man who will be genetically supreme."



Vasu looked at his Mother speechless. "This is amazing Mom, how did you .... ?

This makes sense!"



She said, "Yes it does, son! We Indians knew some amazing things, but just didn't know how to pass it on scientifically. So we made them into mythological stories.



Mythology creates faith and makes man sensible. It is just the way you look at it - Religious or Scientific. Your call."
ravi said…
பாதாரவிந்த சதகம் !


38.தினாரம்ப: ஸம்பந் நலிந விபினானாம் அபினவோ
விகாஸோ வாஸந்த: ஸுகவி பிகலோகஸ்ய நியத:
ப்ரதோஷ: காமாக்ஷி ப்ரகட
பரமஜ்ஞான சசின:
சகாஸ்தி த்வத்பாத ஸ்மரண
மஹிமா சைல தனயே

மலைமகளே! காமாக்ஷி / உன் திருவடிகளை நினைப்பதன் பெருமை, செல்வச் செழிப்பாகிற தாமரைக்காடுகளுக்கு புது விடிவேளையாகும். நற்கவிகளாகிற குயில் கூட்டத்திற்கு எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய வஸந்தருதுவின் மலர்ச்சியாகும். தெளிந்த பேரறிவாகிய சந்திரன் வெளிப்படுகிற முன்னிரவாகும்.
உன் திருவடிகளைத் தியானிப்பதால் செல்வம் செழிக்கும். வாக்கு அழகுபெறும். அறிவு துலங்கும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
This comment has been removed by the author.
ravi said…
🌺🌹 "Lord Shri Krishna is highly satisfied by devotional offering of Tulsi leaf and Ganga water - A simple story to explain 🌺🌺
-------------------------------------------------- -----

🌺🌹This hymn says that Lord Krishna, who has great affection for devotees, sells himself completely to the devotee who offers a tulsi leaf and a handful of water.

🌺 Tulasi Thala Madrena Jalasya Sulu Kena Vaa..
Vikrinithe Swam Atmanam Bhaktebyo Bhakta Vatsala..🌹

🌺 Advaita Acharya devotes Tulsi leaves and water to him for the purpose of this sloka... Lord Sri Krishna thinks that I have no wealth equal to Tulsi leaves and water without knowing how to repay the debt.

🌺Thus the Lord devotes Himself to His devotee and attains a debt..Through this one can easily satisfy Lord Krishna with a Tulsi leaf..with a little water..

🌺 As Bhagavan says in Bhagavadgita when offering leaf or flower or small fruit or water it pleases him very much.. He fully accepts the service of his devotee..

🌺 Even the most impoverished devotees can save a small flower leaf or a small amount of water from any part of the world.

🌺Moreover, Krishna is very satisfied if he offers Tulsi leaves and Ganga water with devotion.

🌺 That devotional charity of his devotee says that devotional charity affirms Lord Krishna to the extent that he devotes himself to this...

🌹Valga Vayakam 🌺 🌹 valga Vayakam🌺 🌹valga Valamudan 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹Sarvam Shri Krishnarpanam🌹🌺🌻
ravi said…
🌺🌹" *துளசி இலையையும் கங்கை நீரையும் பக்தியுடன் அர்ப்பணித்தால் மிகவும் திருப்தி அடையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------

🌺🌹பக்தர்களிடம் மிகுந்த பாசம் கொண்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் துளசி இலையையும் கையளவு நீரையும் அர்ப்பணிக்கும் பக்தனிடம் தம்மையும் முழுமையாக விற்று விடுகிறார் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

🌺துளசி தல மாத்ரேண ஜலஸ்ய சுலு கேன வா..
விக்ரீணீதே ஸ்வம் ஆத்மானம் பக்தேப்யோ பக்த வத்ஸல..🌹

🌺இந்த சுலோகத்தின் பொருளை அத்வைத ஆச்சாரியார் துளசி இலையையும் நீரையும் தமக்கு அர்ப்பணிப்பனுக்கு... தான் பட்டுள்ள கடனை திருப்பி செலுத்த வழிதெரியாமல் துளசி இலைகள் நீருக்கும் சமமான செல்வம் என்னிடம் இல்லை என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நினைக்கிறார்.

🌺இதனால் பகவான் தம்மையே தனது பக்தனுக்கு அர்ப்பணித்து கடனை அடைகிறார்.. இதன் மூலமாக ஒருவன் பகவான் கிருஷ்ணரை துளசி இலையைக் கொண்டும்.. சிறிதளவு நீரை கொண்டும் எளிதில் திருப்திப்படுத்தலாம்..

🌺பகவான் பகவத்கீதையில் கூறுவதை போல இலையோ பூவோ சிறுபழமோ நீரோ அர்ப்பணிக்கும் போது அவரை மிகவும் திருப்தி படுத்துகிறது.. அவர் தம்முடைய பக்தனின் சேவையை முற்றிலுமாக ஏற்கிறார்..

🌺மிக மிக ஏழ்மை நிலையில் உள்ள பக்தர்கள் கூட உலகின் எந்த பகுதியில் இருந்தும் சிறிய பூ பழம் இலை அல்லது சிறிதளவு நீரை சேமிக்க முடியும்.

🌺அதிலும் குறிப்பாக துளசி இலையையும் கங்கை நீரையும் பக்தியுடன் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தால் அவர் மிகவும் திருப்தி அடைகிறார். தமது பக்தனின் அந்த பக்தி தொண்டு இதற்கு கைமாறாக பகவான் கிருஷ்ணர் தன்னையே அர்ப்பணிக்கும் அளவிற்கு பக்தி தொண்டு அவரை உறுதிப்படுத்துவதாக கூறுகிறது...

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺7
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺🌻


ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஞானத்திற்கு பக்தி முக்யமான உபகரணம் என்பதற்கும் மேலே, ஞானமேதான் பக்தி என்று க்ருஷ்ண பரமாத்மா காட்டியிருக்கிறார். நாலு தினுஸு பக்தர்களை அவர் சொல்லி, யாரார் என்று பேர் கொடுக்கும்போது ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என்று சொல்கிறார்: ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஞாநீ ச பரதர்ஷப.1 ஆர்த்தன் என்றால் கஷ்டப்படுகிறவன். ‘ஜிஜ்ஞாஸு’: ஞானத்திற்கு ஆசைப்படுகிறவன். அதாவது தத்வம் தெரியவேண்டுமென்று ஆசையுள்ளவன், அதற்காக முயற்சி பண்ணுபவன். ‘அர்த்தார்த்தி’ என்றால் பணம், காசு, வீடு, வாசல், பதவி முதலானவற்றை வேண்டுகிறவன். நாலாவதாகச் சொன்ன ‘ஞானி’ – ஞானியேதான்! பக்குவப்படி பக்தர்களை வரிசை செய்யும்போது ஆர்த்தன், அர்த்தார்த்தி, ஜிஜ்ஞாஸு, ஞானி என்பதுதான் சரி. ஆனாலும் ச்லோக ரூபத்தில் சொல்லிக் கொண்டு போகிறபோது, ரஸனை ஸமஞ்ஜஸமாயிருக்க வேண்டுமென்று [சொல்லமைப்பு முறைபாட்டழகோடு இருக்க வேண்டுமென்று] ஜிஜ்ஞாஸுவை முன்னேயும் அர்த்தார்த்தியைப் பின்னேயும் வைத்தார் போலிருக்கிறது. நமக்கு விஷயம், இதில் நாலாவதான உச்ச ஸ்தான பக்தனை அவர் ஞானி என்று வைத்துக் கொள்ளலாமே!’ என்று யாரும் திரிசமன் அர்த்தம் சொல்லமுடியாதபடி அவனை ‘ஏக பக்திக்காரன்‘ என்று அடுத்தாற்போலவே சொல்லி, ‘ஞானியும் நானும் ஒன்றே என்பது என் ஸித்தாந்தம்’ – “ஞானீ-த்வாத்மைவ மே மதம்”என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
ravi said…
அப்புறம் ‘பக்தி யோகம்’ என்றே [ஸகுண, த்வைத உபாஸனையை] உபதேசம் பண்ணும்போது, பக்தனை ப்ரியன், அதீவ (அதி) ப்ரியன் என்கிறாரே2 தவிர “நானே அவன்”என்று சொல்லாததிலிருந்து இங்கே அத்வைத ஞானியைத்தான் சொல்கிறாரென்று தீர்மானமாகிறது. ‘பக்தியோக’ உபதேசத்தில், “நிர்குண ஸாதனை தேஹப் பிரக்ஞையுள்ளவர்களுக்கு க்லேசம் தருவது, துக்கமானது” என்று சொல்லி ஸகுண உபாஸனையான பக்தியை விஸ்தரிக்கிறார். அதாவது தேஹ ப்ரக்ஞை ஜாஸ்தியுள்ளவர்களுக்கு ஞான வழி லேசில் வராது என்பதால்தான் ஸகுண பக்தியைச் சொல்கிறாரேயன்றி, ஞானத்தைவிட அதுதான் உத்தமானது என்ற அபிப்ராயத்திலில்லை என்று நன்றாகத் தெரிகிறது.
ravi said…
அது இருக்கட்டும். அப்புறம் அந்த பக்தி உபாஸகனின் லக்ஷணங்களை “அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்”3 [எந்தப் பிராணியிடமும் வெறுப்பில்லாமலிருப்பது] என்று ஆரம்பித்து ஏழெட்டு ச்லோகங்களில் சொல்லி “இப்படிப்பட்டவர்கள் எனக்கு அதி ப்ரியமானவர்கள்” என்று அத்யாயத்தை முடித்திருக்கிறார். இங்கே சொல்கிற லக்ஷணங்களெல்லாம் ஞானிக்குச் சொல்கிறவையாகத்தான் இருக்கிறது என்று நடுநிலையில் பார்க்கிற எவருக்கும் தெரியும். பக்தியிலே [பகவானின்] குண கணங்களை அநுபவிப்பது, அழுது சிரித்து ஆடிப் பாடி மெய் சிலிர்த்து மூர்ச்சை போடுவது, தாஸ்யம், வாத்ஸல்யம் முதலான பல பாவங்களில் உறவு கொண்டாடுவது, விதவித அபிஷேகம் அலங்காரம் பண்ணிப் பார்த்துப் பார்த்து ஸந்தோஷப்படுவது முதலானவற்றில் எதையுமே “பக்தியோக”த்தில் ஸ்வாமி சொல்லக் காணோம்! ஸகல ப்ராணிகளிடமும் அன்பு-அருள்; அஹங்கார மமகாரம் இல்லாமலிருப்பது; ஸுக-துக்கங்களில் ஸம த்ருஷ்டி; பூரிப்போ, பொறாமையோ, பயமோ, மனக்குழப்பமோ இல்லாமலிருப்பது; எது கிடைத்தாலும் அதில் ஸந்துஷ்டனாக வீடு வாசலை விட்டுவிட்டு இருப்பது என்றெல்லாம் அவர் கொடுக்கிற லக்ஷணங்கள் ஞான மார்க்கக்காரனுடையதாகத்தான் இருக்கிறது! பொதுவாக பக்தர்களை வர்ணிக்கிற மாதிரியும் ஒரு ச்லோகம் கீதையில் சொல்லியிருக்கிறார்:

ravi said…
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் |
கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ||4

‘சித்தத்தை என் விஷயமாகவே ஆக்கிக் கொண்டவர்கள், என்கிட்டே ப்ராணனையே வைத்தவர்கள், ஒருத்தருக்கொருத்தர் என்னைப் பற்றியே ஸதாவும் போதித்துக் கொண்டு என் கதைகளையே பேசிக்கொண்டு அதுவே த்ருப்தி, அதுவே ஆனந்தம் என்று இருப்பவர்கள்’ என்று சொல்கிறார். ஆனால் அப்படிச் சொல்வது ‘பக்தி யோக’த்தில் இல்லை; ‘பக்தர்கள்’ என்று பொதுவாக நினைக்கப்படுபவர்களைப் பற்றியும் இல்லை. ‘விபூதி யோகம்’ என்பதில் தம்முடைய ஐச்வர்ய சக்தியே ஸகல விஷயங்களிலும் வியாபித்திருப்பதைச் சொல்கிறபோது தான், இவ்வாறாகத் தம் ஐச்வர்யத்தை எங்கும் தெரிந்து கொண்ட ‘புதர்’கள் தம்மிடமே சித்தத்தையும் ப்ராணனையும் வைத்து கதை பேசிக் களிக் கூத்தாடுகிறார்கள் என்கிறார். புதர்கள் என்றால் அறிவு வழியில் போகிறவர்கள். ஆனாலும் வறட்டு வேதாந்திகளாக இல்லாமல் “பாவ ஸமன்விதர்கள்” என்று அவரே சொல்கிறபடி அன்பு கலந்த ஈடுபாட்டோடு கூடியிருப்பவர்கள். அதாவது ஆசார்யாள் ஞானவழிக்காரன் எப்படி இருக்கணும் என்கிறாரோ அப்படி இருப்பவர்கள். மேற்கொண்டு ஸ்வாமி சொல்கிற போது, இவர்களுக்கு பக்தி யோகத்தைத் தாம் கொடுக்கப் போவதாகச் சொல்லவில்லை; புத்தி யோகமாகிற ஞான மார்க்கத்தையே அநுக்ரஹித்து ஞான தீபத்தால் அவர்களிடம் பாக்கி சாக்கி இருக்கும் அஞ்ஞான தமஸை அழித்துவிடப் போவதாகவே ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்.

முடிக்கிற அத்யாயத்திலும் “பக்த்யா மாம் அபிஜானாதி”5 – பக்தியினால் என்னை ஸரிவர அறிகிறவர் – என்று ஞான ஸமாசாரமாகத்தான் சொல்கிறார். ‘(ஜ்)ஞா’ என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் ‘(ஜ்)ஞானம், ‘ஜானாதி’ என்ற இரண்டும் உண்டாவது. “பக்தியினால் என்னை உள்ளபடி அறிந்து எனக்குள்ளேயே புகுந்து என் அநுக்ரஹத்தால் அழியாத சாச்வத பதத்தை அடைகிறான்” என்று அத்வைதமாகவே சொல்லியிருக்கிறார். தொடர்ந்து, அர்ஜுனனையும் அப்படி இருக்கும்படி உபதேசிக்கும் போது, “புத்தி யோகத்தைக் கைக்கொள்ளு” என்றே சொல்கிறார்; ‘பக்தி யோகம்’ என்றில்லை.

ஆக, மணியடித்து பூப்போட்டுப் பூஜையில்லை; பல தினுஸு பாவங்களில் உறவு கொண்டாடுவதில்லை. ஆனாலும் அன்போடு தன்னையே மூல உயிருக்குத் தந்து கொள்கிற உணர்ச்சியாகிய பரம உத்தம பக்தியானது ஞான வழியில் முக்யமான இடம் பெற்றிருக்கிறதென்று எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

1 கீதை VII. 16

2 கீதை XII. 14-20

3. கீதை XII. 13

4 கீதை X. 9

5 XVIII. 55
(இன்றுபகவத் கீதை நாள்)
ravi said…
ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர்.


ஒருமுறை இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாசர், கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு, சரிகமபதநி சப்த ஸ்வரங்களைப் போதித்தார்.

இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா, கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள்.

அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள்.

இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தனது மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.

அவனோ குடிகாரன், சூதாடி, இதைத் தாமதமாக உணர்ந்த பட்டர், தவித்து மனம் மருகினார். ஆனால், பிரேமா மனம் தளரவில்லை.

ravi said…
பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த அவள் ராமாயணம், பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள்.

அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு வளர்ந்தாள்.

இந்த நிலையில் மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவன் கணவன்.

மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ண பட்டரும் இறந்து போனார்.

கணவனையும், தந்தையையும் இழந்த பிரேமா, ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள்.

அங்கு தர்மசத்திரம் ஒன்றில் தொண்டாற்றி வந்தாள்.

காசியில் அனைவரும் அவளை, பிரேமா பாய் என்றே அழைத்தனர்.

அப்போது அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன்.

ravi said…
மேலும், தனது தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ்ணன் உபன்யாசம், கலாட்சேபம் போன்றவற்றைக் கூறக்கேட்டு ஸ்ரீகிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான்.

ஒருநாள் சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர்.

அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமா பாய்.

இவர்களுக்கு உணவளித்து உபசரிக்கலாம்.

எனில், கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது.

விருந்தினர்களை உபசரிக்காமல் இருப்பது தவறு.

என்ன செய்வது? என்று தவித்தாள். சிறிது நேரம் யோசித்தவள்.

அடியவர்களுக்கு தாம் உணவளிப்பது, பாகவதம் கேட்க மகன் ராமகிருஷ்ணனை அனுப்பி பிறகு அவனிடம் விவரமாய் தாம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தாள்.

அதன்படி, ராமகிருஷ்ணனை பாகவதம் கேட்க அனுப்பினாள்.

உபன்யாசம் முடிந்து வீடு திரும்பிய ராமகிருஷ்ணனிடம், உபன்யாசத்தில் இன்று பவுராணிகர் என்ன சொன்னார்?

என்று ஆவலுடன் கேட்டாள்.

அம்மா! கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு, வளர்ப்பு, லீலைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார்.

குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது, வெண்ணெயைத் திருடி உண்டது, யசோதா துரத்தியும் பிடிபடாமல் ஓடியது ஆகியவற்றை விவரித்தார்.

கோலைக் கையிலெடுத்து அடிக்கப்போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள்.

குழந்தைக் கண்ணன் அழத் தொடங்குகிறான்.

ஏதேனும் ஒரு வகையில் கண்ணனைத் தண்டிக்க எண்ணி அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால், குறும்புக்காரக் கண்ணனோ கட்டிய உரலையும் சேர்த்து இழுத்தபடி வீட்டின் பின்புறம் சென்று ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான்.

உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார் என்றான்.

இதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரமோ பாய், மெய் மறந்தாள்.

நான் கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள்.

கண்ணா!

உன்னையா உரலில் கட்டிப் போட்டார்கள்?

கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே நீ மர இடுக்குகளில் நுழைந்து செல்லும் போது ஏதாவது பூச்சிகள் உன்னைக் கடித்தால் என்னாவது ?

என்னால் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

இப்போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன்.

என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள்.

அம்மா... அம்மா என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும், அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின்தொடர்ந்தனர்.

பிரேமா பாய் கங்கை நதியில் குதித்தாள்.

அவள் விழுந்த இடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது.

ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமா பாயை அனைவரும் வணங்கினர்.

தந்தையைக் காவிரியிலும் தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன், தான் பிறந்த பூமியான ஸ்ரீரங்கத்துக்கு வந்தான்.

அங்கு அரங்கன் சன்னிதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான்.

நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகாபிரபுவுடன் இணைந்து அவரைப் பின்தொடர்ந்தான்.

மொகாலய படையெடுப்பின்போது, பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, பெர்ஷியன் சங்கீதத்தைக் கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன் திரும்பி வந்ததும் குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம், பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான்.

இந்த ராமகிருஷ்ணனே பிற்காலத்தில் தீட்சை பெற்று, ஸ்வாமி ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ்பெற்றார்.

இவர் உருவாக்கியதே ஹிந்துஸ்தானி சங்கீதம்.

அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த, தான்சேன் சங்கீதம் பயின்றது ஸ்வாமி ஹரிதாஸிடம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

ravi said…
ஸர்வேச்வரீ *ஸர்வமயீ* ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ🙏
சகலமும் அனைத்துமாய் இருப்பவள்

*நைக ரூபாய நமஹ*🙏
பற்பல வடிவங்கள் கொண்டவர்
ravi said…
பொய் பேசுபவர்களிடம் விவாதம் செய்யாதீர்கள் உங்கள் விவாதம் அனைத்தும் எடுபடாது.

மாறாக மெளனமாக இருங்கள் உங்கள் மௌனமே அவர்களுக்கு சிறந்த பதிலாக இருக்கும்.

பொய் பேசுபவர்களுக்கு அவர்களே சிறந்த தண்டனையை கொடுத்துக் கொள்வார்கள்.

அவர்கள் உண்மை பேசும் போது யாரும் அவரை நம்பமாட்டார்கள்.

உண்மைகளுக்கு கனம் அதிகம். காற்றில் பரவாது. பொய்களுக்கு கனம் குறைவு. அவை காற்றில் பரவிவிடும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*"அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது"*

*நாம் அறிந்த விளக்கம் :*
ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப்படுகிறது. அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது என்பார்கள். இன்னும் சில இடங்களில் எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப் பானைக்குள்ளே கைய விட்டாராம் என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.

*விளக்கம் :*
இந்த பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அதாவது அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது என்பதுதான் சரியான பழமொழி. வட்டார வழக்கில் மருவி அது மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது.

ravi said…
*இன்றைய குட்டிக்கதை*



*பகிர்வு - தகவல் உலா ✍️*

*"அடகுக்கடை"*


வஜ்ரவேலு தன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பி, பின்புறம் இருந்த கண்ணாடி அலமாரியைப் பார்த்தான்.  


"அலமாரி நிரம்பி இருக்கே! புதுசா எதுவும் வைக்க முடியாது போலருக்கே!" என்றான்.


"எப்படிங்க இடம் இருக்கும்? ஒண்ணு அடகு வச்சவங்க கடனை அடைச்சுட்டுப் பொருட்களை மீட்டுக்கிட்டுப் போகணும், இல்லை, நாமாவது மீட்டுக்கிட்டுப் போகாத பொருட்களை ஏலம் போடணும். இங்கதான் ரெண்டுமே நடக்கறதில்லியே!" என்றான் கணக்காளன் குமரவேல்.


ravi said…
வஜ்ரவேலு சிரித்தான். "யாரும் கடனை அடைக்காமலா பத்து வருஷமா கடையை நடத்திக்கிட்டிருக்கோம்? எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து, என் குடும்பச் செலவுக்கும் காணற அளவுக்கு வருமானம் வந்துக்கிட்டுத்தானே இருக்கு?"


"என்னங்க நீங்க, ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறீங்க? இந்த அடகுத் தொழிலை நடத்தறவங்க யாருமே உங்களை மாதிரி அடகு வச்ச பொருட்களை ஏலம் போடாம வச்சுக்கிட்டிருக்க மாட்டாங்க!" என்றான் குமரவேல்.


அப்போது ஒரு வாடிக்கையாளர் வரவே, அவரிடம் கவனத்தைச் செலுத்தினான் குமரவேல். பேரேட்டை எடுத்துப் பார்த்து விட்டு, கால்குலேட்டரில் ஏதோ கணக்குப் போட்டு விட்டு அவர் செலுத்த வேண்டிய தொகையை அவரிடம் சொன்னான். அவர் பணத்தைக் கொடுத்ததும், அதை எண்ணிப் பெட்டியில் வைத்து விட்டு, அலமாரியில் இருந்த ஒரு வெள்ளிக் குத்துவிளக்கை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.


ravi said…
அவர் வஜ்ரவேலுவைப் பார்த்துக் கைகூப்பி விட்டுச் சென்றார்.  


"புரோநோட்டு காலாவதி ஆகி ஆறு மாசம் ஆச்சு. புதுசா புரோநோட்டு எழுதி வாங்கறதுக்காக நம்ம ஆறுமுகம் ஆறு மாசமா அவரு பின்னால அலைஞ்சுக்கிட்டிருக்காரு. ஆளையே பிடிக்க முடியல. இப்ப வந்து பணத்தைக் கட்டிட்டு அடகு வச்ச வெள்ளிக் குத்து விளக்கை வாங்கிக்கிட்டுப் போறாரு. நாம பொருளை ஏலம் போட்டுடுவோமோங்கற பயம் கொஞ்சம் கூட இல்லாம இருந்திருக்காரு!" என்றான் குமரவேல்.


வஜ்ரவேலு சிரித்தான்.


"நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்கன்னு எனக்குப் புரியலீங்க!" என்றான் குமரவேல்.


"புரியறதுக்கு என்ன இருக்கு? நாம வட்டிக்குக் கடன் கொடுக்கற தொழிலை நடத்திக்கிட்டிருக்கோம். நம்மகிட்ட கடன் வாங்கிட்டுப் போறவங்க குறிப்பட்ட காலத்துக்குள்ள கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா அவங்க அடகு வச்ச பொருளை நாம ஏலம் விட்டு நமக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக்கலாம். அதுக்கு சட்டப்படி நமக்கு உரிமை இருக்கு. ஆனா நான் அப்படிச் செய்ய விரும்பல. நம்மகிட்ட அடகு வச்சிருந்தாலும் அது அவங்களோட பொருள்தான். அதை நாம எடுத்து வித்து நம்ம கடனை வசூலிக்க எனக்கு இஷ்டமில்லை. எப்படியும் பொருளை அடகு வச்சவங்க அதை மீட்கணும்னுதானே நினைப்பாங்க? அதனால கொஞ்ச நாள் ஆனாலும் பணத்தைக் கட்டிப் பொருளை மீட்டுப்பாங்கன்னு நினைச்சு நாம பொருளை ஏலம் போடாம வச்சிருக்கோம்."


"
ravi said…
சில பேரால கடனைத் திருப்பிக் கட்ட முடியாமயே போயிடுமே!"


"அது மாதிரி நடந்திருக்கு. நீங்க வேலைக்கு வந்தப்பறம் அப்படி நடக்காததால உங்களுக்குத் தெரியல. ரொம்ப நாள் ஆச்சுன்னா, நானே அவங்களைக் கூப்பிட்டு அவங்க அடகு வச்ச பொருளை அவங்க கிட்ட கொடுத்து அதை வித்துப் பணத்தைக் கட்டச் சொல்லுவேன். அது மாதிரி சில சமயம் நடந்திருக்கு."


"
ravi said…
அப்ப எதுக்கு அடகுப் பொருளை வாங்கணும்? அடகுப் பொருள் இல்லாமயே கடன் கொடுக்கலாமே!"


"கடன் வாங்கறவங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கணுமே அதுக்குத்தான் அடகுப் பொருள் வாங்கறது."


"அப்ப ஏலம் போடறதில என்ன தப்பு?"


"சட்டப்படி தப்பு இல்லதான். மத்தவங்க பொருளை நாம ஏலம் போடறதை விட அவங்களையே வித்துக் கொடுக்கச் சொல்றது நியாயமா இருக்கற மாதிரி எனக்குத் தோணுது."


"
ravi said…
ஐயா! உங்களுக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி நான் இந்த ஊர்ல இருக்கற இன்னொரு அடகுக் கடையில வேலை செஞ்சேன். குறிப்பிட்ட காலத்துக்குள்ள கடனைக் கட்டலேன்னா அவரு நோட்டீஸ் கொடுத்துட்டுப் பொருளை ஏலம் போட்டுடுவாரு. அவருக்கு நிறைய லாபம் வரதை நான் பாத்திருக்கேன். நாமும் லாபத்துக்காகத்தானே தொழில் நடத்தறோம்?"


"அந்தக் கடையை விட்டு ஏன் வந்தீங்க?"


"அதான் சேரும்போதே சொன்னேனே சார்! அங்கே சம்பளம் கொடுக்க ரொம்ப லேட் பண்ணினாங்க. மூணு மாச சம்பளம் பாக்கி. அதனாலதான் அந்த வேலையை விட்டுட்டேன்."


"ஏன் அவங்களால சம்பளம் சரியாக் கொடுக்க முடியல?"


"என்னவோ தெரியலீங்க. லாபம் நிறைய வந்தா கூட அங்கே எப்பவுமே பணத் தட்டுப்பாடுதான். புதுசாக் கடன் கேக்கறவங்களுக்குக் கொடுக்கக் கூடப் பல சமயம் பணம் இருக்காது. அடகு வச்ச பொருளை ஏலம் போட்டதை எதிர்த்து சில பேரு கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்க. அந்தக் கேஸ்களை வாதாட வக்கீல்களுக்கு வேற அப்பப்ப பணம் கொடுக்கணும்."

"அவங்க நிறைய லாபம் சம்பாதிக்கறதா சொல்றீங்க. ஆனா அங்க பணத் தட்டுப்பாடு இருக்கு. நான் அதிகம் லாபம் சம்பாதிக்காம இருக்கலாம். ஆனா நான் போட்ட முதல் அழியாம அப்படியேதான் இருக்கு. எப்பவுமே கடன் கேட்டு வரவங்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லாம போனதில்லை. ஓரளவுக்கு வசதியா வாழற அளவுக்கு எனக்கு இந்தத் தொழில்லேருந்து வருமானம் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. மத்தவங்களுக்குக் கடன் கொடுத்து அவங்க கிட்டேருந்து வர வட்டிதான் என் வருமானம். ஆனா அவங்க அடகு வச்ச பொருளை என் பொருளா நினைக்காம அவங்களோட பொருளாகவே நினைச்சுக்கிட்டுத்தான் இந்தத் தொழிலை நடத்திக்கிட்டு வரேன்."


அப்போது இன்னொரு வாடிக்கையாளர் அங்கே வந்தார். "ரெண்டு மாசம் முன்னால என் பெண்டாட்டியோட சங்கிலியை அடகு வச்சுப் பணம் வாங்கிக்கிட்டுப் போனேன்" என்றார்.


"பணத்தைக் கட்டி அதை மீட்கப் போறீங்களா?" என்றான் குமரவேல்.


"இல்லை" என்று சற்றுத் தயங்கியவர், வஜ்ரவேலுவைப் பார்த்து, "தப்பா நினைச்சுக்காதீங்க. நாளைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போகணும். என் பெண்டாட்டிக்குக் கழுத்துல போட்டுக்க வேற நகை இல்ல. அந்த சங்கிலியைக் கொடுத்தீங்கன்னா, நாளன்னைக்குத் திரும்பக் கொண்டு வந்து வச்சுடறேன்" என்றார்.


"ஏங்க, இது என்ன அடகுக்கடையா, பாங்க் லாக்கரா?" என்றான் குமரவேல்.


"சங்கிலியைக் கொடுத்தா அதுக்கு பதிலா வேற பொருளை அடகு வைக்க முடியுமா?" என்றான் வஜ்ரவேலு.


"வேற எதுவும் இல்லியே! டிவி பொட்டியை வேணும்னா வச்சுட்டுப் போறேன்"


"பரவாயில்ல. உங்களை நம்பறேன். நகையை வாங்கிக்கிட்டுப் போங்க. சொன்னபடி நாளன்னைக்குத் திரும்பக் கொடுத்துடணும்" என்ற வஜ்ரவேலு, குமரவேலிடம் திரும்பி "கையெழுத்து வாங்கிக்கிட்டு அவரோட நகையைக் கொடுங்க!" என்றான்.

"சந்தேகமே இல்ல. பாங்க் லாக்கர்தான் இது!" என்று முணுமுணுத்தான் குமரவேல்.   


இல்லறவியல் 
அதிகாரம்
18         

*வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை)* 

*குறள் 178*

*"அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை* 
*வேண்டும் பிறன்கைப் பொருள்."*

*பொருள்:*  

செல்வம் குறையாமல் இருப்பதற்கான வழி மற்றவர்களின் பொருளை விரும்பாமல் இருப்பதேயாகும்.
ravi said…
*கண்ணா*

வத்ஸாசுரனையும்,(பசுக்கூட்டத்தில் கன்று உருவில் மறைந்து இருந்த அசுரன்)

கபித்தாசுரன் விளங்கனிமரமாக இருந்த அசுரனையும் கொல்வது!!

சாதாரண மனிதன் செய்யும் செயலா?!

மாயம் செய்வதில் வல்ல அசுரனின் மாயை அறிந்து கொள்ள அந்த பரமாத்மாவால் மட்டும் அல்லவா முடியும்?!

குழந்தை உருவம் கொண்டவர் குழந்தை ஆவதில்லை

குழந்தை உள்ளம் கொண்டவர் என்றும் இறைவனாக மாறத் தவறுவதில்லை ...

கண்ணா நீ குழந்தையா இல்லை பரமாத்மாவா ...

சுருண்ட கருமையான குழலை உடைய பெண்களின் உள்ளம் அதை குழந்தை திருட முடியுமோ ?

கோவர்த்தன மலையை ஒரு இடையன் தூக்க முடியுமோ ... ?

கதி கலங்க வைக்கும் கம்சனை கரம் கொண்டு ஒருவன் வீழ்த்த முடியுமோ ?

கார்கோடன் தலை மீது சிற்றம்பலம் அமைக்க முடியுமோ

மண்ணை தின்றே மதியை காட்ட முடியுமோ

விண்ணை கண்டே விரல் விட்டு அளக்க முடியுமோ

உரலில் உன்னை கட்ட முடியுமோ

உன் உதவி இன்றி எங்கள் முயற்சி ஏதும் வெல்லுமோ ?

அரம்பா!! என் கண்ணா

உனது அதி அற்புதமான இந்த தெய்வீக செயல்கள் மூலம்

நீ இடையில் வந்த பிள்ளை இல்லை எங்கள் இன்னல் தீர்க்க வந்தவன்

அச்சம் பல கொண்டேன் ஆரமுது படைக்கவே

*யசோதை*
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 16...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
காலிந்தீ ஜல காந்தய: ஸ்மிதருசி

ஸ்வர்வாஹினீபாதஸி
ப்ரெளடத் வாந்தருச: ஸ்புடாதர மஹோ

லெளஹித்ய ஸந்த்யோதயே
மாணிக்யோபல குண்டலாம்

சுசிகினி வ்யாமிச்ர தூமச்ரிய:
கல்யாணைகபுவ:கடாக்ஷஸுஷமா:

காமாக்ஷி ராஜந்திதே.

3
ravi said…
தேவி காமாக்ஷி எல்லா மங்களங்களுக்கும் பிறப்பிடமானவள்.

‘ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே’ என்று தேவி மஹாத்மியம் தேவியைப் புகழ்கிறது.

*பக்த ஸெளபாக்யதாயினி* -

பக்தர்களுக்கு ஸகல செளபாக்கியங்களையும் அளிப்பவள். ‘ *ஸர்வமங்களா* ’ எனும்படி ப்ரம்ம ஸ்வரூபிணியான தேவி மங்களமே வடிவானவள்.

தேவியின் கடைக்கண் பார்வையில் கங்கையில் யமுனை போல் கருநிறம் நீரின் காந்தி போலவும் மிகச் சிவந்த ஒளி வீசும் உதடுகள் என்னும் ஸந்தியா கால சூரியனைப் போலவும் தோற்றமளிக்கிறது🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 420* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*165 * ममताहन्त्री - மமதாஹந்த்ரீ -*

லலிதாம்பிகை பக்தர்கள் மனதில் குடிகொண்ட சுயநலத்தை அகற்றுபவள்.

பிறகு தான் அவளை அடையமுடியும்.
ravi said…
மமதை இல்லாதவள் .. மதம் இல்லாதவள் . மதம் கொண்டவர்களை நாசம் செய்பவள் . மமகாரம் அகங்காரம் அடியோடு அழிப்பவள் . சுயநலம் அவளுக்கு பிடிக்காத ஒன்று 🙌🙌🙌
ravi said…
விஷ்ணு சகஸ்ரநாமம்
***************************
தினமும் ஒரு திருநாமம்
****************************
இன்று 205 ஆம் திருநாமம்.
********************************
🌹ஸ்திராய நமஹ:🌹
*************************
(Sthiraaya namaha)

இரணியனை வதம் செய்த நரசிம்மர், அடுத்த படியாக பக்தப் பிரகலாதனுக்குப் பட்டா பிஷேகம் செய்ய நினைத்தார்.

ravi said…
எனினும் இரணியன் அமர்ந்த ஆசனத்தில் பிரகலாதன் அமர்ந்தால், இரணியனின் எதிர்மறையான அதிர்வலைகள் பிரகலா தனைப் பாதிக்கும் என்பதால், நரசிம்மர் முதலில் அந்தஆசனத்தில் அமர்ந்து விட்டு
அதன்பின் தான் அமர்ந்த ஆசனத்தில் பிரகலாதனை அமர்த்தினார். நரசிம்மர் அமர்ந்தபடியால் தான், அரசர்கள் அமரும் ஆசனம் சிம்மாசனம் என்று பெயர் பெற்ற து. அன்று முதல் மூவுலகங்களையும் சிறப் பாக ஆட்சி செய்து வந்தான் பிரகலாதன்.

.
ravi said…
ஒருநாள் பிரகலாதன் தற்செயலாக ஒரு முனிவரை அவமானப் படுத்தினான். அத னால் கோபம் கொண்ட முனிவர், “உனது நற்பண்புகள் தான் உன்னை ஆட்சி அதி காரத்தில் அமர்த்தியுள்ளன..ஆனால் இப் போது என்னை அவமானப் படுத்தியதால், நீ உனது நற்பண்புகளை எல்லாம் இழப்பாய்!” என்று அவனைச் சபித்தார்.

ravi said…
அன்று இரவு பிரகலாதன் சயனித்திருந்த போது, அவன் உடலில் இருந்து ஓர் உருவ ம் புறப்பட்டுச் செல்வதைக் கண்டான் பிரகலாதன்.

“நான்தான் தருமம். நீ நற்பண்புகளை இழந்துவிட்டதால், நான் உன்னை விட்டுச் செல்கிறேன்!” என்று சொன்னது அவ்வுரு வம்..அடுத்து மற்றொரு உருவம் அவன் உடலில் இருந்து வெளியேறியது.

“ஒருநாள் பிரகலாதன் தற்செயலாக ஒரு முனிவரை அவமானப் படுத்தினான். அத னால் கோபம் கொண்ட முனிவர், “உனது நற்பண்புகள் தான் உன்னை ஆட்சி அதி காரத்தில் அமர்த்தியுள்ளன..ஆனால் இப் போது என்னை அவமானப் படுத்தியதால், நீ உனது நற்பண்புகளை எல்லாம் இழப்பாய்!” என்று அவனைச் சபித்தார்.

அன்று இரவு பிரகலாதன் சயனித்திருந்த போது, அவன் உடலில் இருந்து ஓர் உருவ ம் புறப்பட்டுச் செல்வதைக் கண்டான் பிரகலாதன்.

ravi said…
நான்தான் தருமம். நீ நற்பண்புகளை இழந்துவிட்டதால், நான் உன்னை விட்டுச் செல்கிறேன்!” என்று சொன்னது அவ்வுரு வம்..அடுத்து மற்றொரு உருவம் அவன் உடலில் இருந்து வெளியேறியது.

“நான் தான் வாய்மை. தருமம் உன்னை விட்டுச் சென்றதால் நானும் செல்கிறேன்!” என்று அது சொன்னது அதைத் தொடர்ந்து இன்னொரு உருவம் வெளியேறியது.

“நான் தான் நன்னடத்தை. வாய்மை இல் லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன்!” என்றது அது. கடைசியாக ஓர் உருவம் வெளியேறியது.

“நான் தான் ‘ஸ்ரீ’! (செல்வம்) நன்னடத்தை இல்லாத இடத்தில் நான்இருக்க மாட்டேன் ” என்று கூறிவிட்டுச் சென்றது.

இப்படி நற்பண்புகளை இழந்ததன் விளை வாக, தருமம், வாய்மை, நன்னடத்தை, செல்வம் அனைத்தையும் இழந்தான் பிரகலாதன்.

ravi said…
இத்தகைய நற்பண்புகளை இழந்ததால், திருமாலிடம் அவன் கொண்டிருந்த பக்தி யும் குறையத் தொடங்கியது. இந்நிலையி ல், தனது அசுர சேனையைத் திரட்டிக் கொ ண்டு தேவலோகத்தின் மீது படையெடுத் தான் பிரகலாதன்.

பிரகலாதனின் சேனை இந்திரனையும் மற்ற தேவர்களையும் தாக்கியது. திருமா லின் உதவியை நாடினான் இந்திரன்.

“எங்களைத் துன்புறுத்திய இரணியனை நீ வதம் செய்து விட்டாய். இப்போது நாங் கள் நல்லவன் என்று கருதிய இரணியனி ன் மகனான பிரகலாதன் எங்களை தாக்க வருகிறானே! நீ தான் இவனிடமிருந்து எம்மைக் காத்தருள வேண்டும்!” என்று திருமாலிடம் பிரார்த்தித்தான் இந்திரன்.

அப்போது போர்க்களத்துக்கு வந்தார் திரு மால். பிரகலாதனைத் திருமால் தாக்குவா ர் என்று ஆவலுடன் காத்திருந்தான் இந்தி ரன்.

ஆனால் திருமால் பிரகலாதனைத் தாக்க வில்லை. ஓடிச் சென்று தனது பக்தனை ஆரத் தழுவிக் கொண்டார். திருமகள் கேள் வனான திருமாலின் ஸ்பரிசம் பிரகலாத ன் மேல் பட்டவுடன், பிரகலாதனிடம் ‘ஸ்ரீ’ திரும்ப வந்து விட்டது.

‘ஸ்ரீ’ வந்தவாறே, நன்னடத்தை வந்தது. நன்னடத்தையைத் தொடர்ந்து வாய்மையு ம், வாய்மையைத் தொடர்ந்து தருமமும் பிரகலாதனிடம் வந்தன. முன்போல் நற்பண்புகள் வாய்ந்தவனாக மிளிரத் தொடங்கினான் பிரகலாதன்.

அடுத்த நொடியே தனது தவறை உணர்ந் து திருமாலிடம் மன்னிப்பு கோரினான்.
“முனிவரின் சாபத்தால் எனது நற்குணங் களையும் பக்தியையும் இழந்தேன். இறுதி யில் தேவர்களையும் தேவாதி தேவனான
உன்னையும் எதிர்த்துப் போரிடவும் துணி ந்து விட்டேனே! என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று வேண்டினான்.

அதற்குத் திருமால், “பிரகலாதா! நான் உன் மீது கோபமே கொள்ளவில்லையே. கோபம் கொண்டால் தானே மன்னிப்பதை பற்றிப் பேச வேண்டும். என் பக்தர்களிடம் எனக்கு என்றுமே கோபம் வராது!” என்று சொன்ன திருமால், பிரகலாதனுக்கு அனுக்கிரகம் செய்து அவனை அனுப்பி வைத்தார்.

பிரகலாதன் தொடர்ந்து நல்ல முறையில் மூவுலகுகளையும் ஆண்டு வந்தான். இவ் வாறு தனது பக்தர்கள் பிழைகள் செய்தா லும், அப்பிழைகளைப் பொறுத்துக் கொண்டு, அந்த பக்தர்களை காக்க வேண் டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியோடு இருப்பதால், நரசிம்மர் ‘ஸ்திர:’ என்றழைக் கப்படுகிறார்.

‘ஸ்திர:’ என்றால் உறுதியோடு இருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத் தின் 205-வது திருநாமம்.

“தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல்
நன்கு செய்தார் என்பர் போலும்”

என்ற பாசுரத்தில், மகாலட்சுமியே ஒரு பக்தனைப் பற்றித் திருமாலிடம் குறை சொன்னாலும், திருமால் அதை ஏற்காமல்,
என் பக்தன் செய்தது எப்போதுமே சரிதா ன் என்று வாதிடுவதாகப் பெரியாழ்வார் பாடுகிறார்.

“ஸ்திராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை எந்நிலையிலும் கை விடாமல் நரசிம்மர் காத்தருள்வார்.

(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)
நாளை தொடரும்...

ஓம் நமோ நாராயணாய....
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...
04.12.2022... நேசமுடன் விஜயராகவன்...
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம்

கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை

ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
நாம இந்த ஸ்லோகத்தை அடிக்கடி நினைச்சுப் பார்த்துக்கணும்.

நாம அப்படி இல்லேன்னாலும், நமக்கு வைராக்கியம் இல்லாததுனால இந்த ஸ்லோகம் புரியவே புரியாம கூட போகலாம்.

ஆனால் இதுதான் சத்தியம்.

நாம பண்ற வேலை, நமக்கு எல்லாம் சௌரியமாதானே இருக்கு.

வேலையும் பிடிச்சிருக்கு. சம்பளமும் சௌரியமா இருக்கு.

இதெல்லாம், இவர் சொல்ற பேச்சு ஒண்ணும் புரியலைன்னு நமக்கு இப்ப தோணலாம்.

ஆனா ஒட்டகம் முள்செடியை தின்னும் போது வாயில ரத்தம் வந்தாலும் விடாம முள்செடியை திங்கும்ன்னு ராமகிருஷ்ணர் சொல்வார்.

அந்த மாதிரி நாம உலகவிஷயங்கள்ல இருக்கிற துக்க தோஷம் பார்க்க மாட்டேங்கறோம்.

நாம இதையே ருசிச்சு சாப்பிட்டுண்டு இருக்கோம்.

மஹான்கள் அந்த பகவானுடைய பாதத்தாமரையில் இருக்கும் அந்த தேனை குடிச்சு இதுதான் அமிர்தம்னு சொல்லி கொடுக்கறா.

At least நாம அது சத்யம்ன்னு நம்பணும்.

இது குலசேகராழ்வாருடைய வாக்கு.

இதை தினமும் சொல்லி என்னை இந்த மனிதர்களுக்கு வேலை செய்யற இந்த பந்தத்திலருந்து என்னை விடுவிக்கணும்னு வேண்டிக்கணும்.🙏🙏🙏🙌🙌🙌
ravi said…
*அம்மா* ...

வஞ்சகர் நெஞ்சில் புகல் அறியா மதன் உன்னில் புகுந்து கொண்டே புன்னகை உமிழ்ந்தானோ .. ?🦜

அவன் வீட்டு வாசல் தோரணம் என உன் புருவம் தந்தாய் ... 🪷

உன் கண்களிலே அவனை தவழ விட்டாய் 🪷

செவிகளிலே ரதிக்கு இடம் தந்தாய் ...

செவ்விதழ்களில் அவர்கள் நடனம் கண்டாய் 🕺💃

அஷ்டமி சந்திரானாய் உன் நெற்றி தனில் அவன் அம்புகள் தொடுக்க வைத்தாய் 🙏🏹

அவன் அம்புறாதுணியாக உன் முழங்கால்கள் தனை தந்தாய் .🦚

அம்பை தீட்ட உன் பாத நகங்கள் தந்தாய்🪷

பார் புகழ அவனை மீண்டும் உலவ விட்டாய் ... 🎼

மதனை ஜெயித்தவன் உன்னிடம் தோற்றானே !!

நெருப்பை கக்கியவன் காமம் தனை பொசுக்காமல் விட்டானே !!

தியானம் செய்தவன் தீப்பொறிகளில் மழலை ஒன்றை படைத்தானே ..

இதுவெல்லாம் உன் வல்லபம் அன்றோ?

வல்லபம் ஒன்றறியேன்

சிறியேன்

நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன்

பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்

வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே

பாற்கடலே!!!

பால் என பொழியாயோ உன் கருணை தனை 💐💐💐
ravi said…
(கேசாதி பாத வர்ணனை) (41-54)
ravi said…
*❖ 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா; =*

காமதேவனின் அம்பறாத்தூணி பொன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்)

இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள் 🕷️🕷️🕷️
ravi said…
இந்திரகோபம் ஒரு வகை பூச்சி.

பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது.

சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று *இந்திரகோபம்* .

சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு.

சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 140*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
சிட்டரோது வேதமுஞ் சிறந்தவாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்

கட்டிவைத்த போதகங் கதைக்குகந்த பித்தெலாம்

பொட்டதாய் முடிந்ததே பிரானையா னறிந்தபின். 140
ravi said…
வேத பண்டிதர்கள் ஓதும் நான்கு வேதங்களும், சிறந்ததாய் விளங்கும்

ஆகம சாஸ்திரங்களும், கோயில் கட்டி அதன் கருவறையில் கற்சிலைகள் நட்டு வைத்து கும்பாபிஷேகம் செய்யும் காரணங்களும், திருமந்திரம், திருக்குறள்,

திருவாசகம் போன்ற உன்னதமான நூல்களும், யோகா தவத்தால் கட்டிச் சேர்த்து வைத்த போதப் பொருளும், இராமாயணம், மகாபாரதம், புராணம் போன்ற கதைகளில் எல்லாம் உகந்ததாகச் சொல்லாப்படும் பிரமம் போன்ற இவை யாவும் எனக்குள் இருக்கும் எம்பிரான் ஈசனை அறிந்தபின் எனக்குள்ளேயே ஒரு பொட்டாக ஒரே மெய்ப்போருளாகவே முடிந்திருக்கிறதே !!💐💐
ravi said…
👌ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு,

" ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!

"அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!!

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!!

"மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!!

சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!!

ravi said…
அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ,

"ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....?

உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!!

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!!

ஆனால் ,
"என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்.

ravi said…
கவலைப்படாதே ....!!

இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று,

" கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!!

என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!!

அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!!

மறுபடியும் அவன் வரவேயில்லை....!!


மரம் அவனுக்காக ஏங்கியது....!!

பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!!

அவன் முகத்தில் கவலை தெரிந்தது,

இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!!

அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம்.

"வா என்னிடம் வந்து விளையாடு"...!!

"இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!!

அதற்கு அவன்_
இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!!

ravi said…
எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,

ஆனால் ,
"நாங்கள் வசிக்க சொந்தமாக
நல்ல வீடு இல்லை"....!!

"வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....!

மரம் உடனே சொன்னது ,

பரவாயில்லை ....
"உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!!

ravi said…
அதற்கு பதில்,
" என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் "....!!

"அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!!

"இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!!

முடிந்த வரை,
" வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!!

ravi said…
வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!!

அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!!

அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !!

பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!!

மரம் அவனை பார்த்து,
" ஆனந்த கூத்தாடியது"......!!!

அவன் எப்போதும் போல் ,
'சோகமாக இருந்தான்'.....!!

"ஏன் இப்படி இருக்கிறாய்",
என்று மரம் கேட்டது.....!!

"
ravi said…
என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"....,

"படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !!

"அதனால் வருமானம் இல்லை"

"நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!!

மரம் துடித்து போனது,.....!!

" நான் இருக்கிறேன்".....!!

"என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!!

"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!!

அவன் அடி மரத்தை வெட்டும் போது....,

மறக்காதே....!!

வருடத்திற்கு ஒரு முறை
என்றில்லாமல் ......,

"எப்போதாவது
என்னை பார்க்க வா".. என்றது....!!

ஆனால் அவன் வரவேயில்லை.....!!

மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!!

அப்போது அவன் வந்தான்.....!!!

'தலையெல்லாம் நரைத்து' ,
'கூன் விழுந்து' ,
'மிகவும் வயதான தோற்றத்துடன்'... ,
அவன் இருந்தான்.....!!

"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!!

"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!!

"கிளைகள் இல்லை"........!!!

"அடி மரமும் இல்லை".........!!

உனக்கு கொடுக்க,
"என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!!

அவன் சொன்னான் ,

நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' ,

அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!!

வீடு கட்டவும் ,
படகு செய்யவும்
என்னிடம் சக்தி இல்லை....!!

"எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!!

அப்படியா....!!!

இதோ....,
" தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!!

"அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!!

இந்த சுகத்துக்கு தான்......

"அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!!

"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!!

"அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!!

"இது மரத்தின் கதையல்ல"....!!

" நம் பெற்றோர்களின் கதை"....!!

இந்த சிறுவனை போல் ,

"நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!!

வளர்ந்து பெரியவனானதும்...,

தமக்கென்று குடும்பம்,
குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம்.

அதன் பின் ,

"ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!!

"நம்மிடம் இருப்பவை எல்லாம்",

" அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"...... !!

"நம்மால் அவர்களுக்கு எதுவும்
கொடுக்க முடியாது"......!!

"நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர".........!!!

"அவர்கள் விரும்புவதும் அதைதான்"..........!!! *******படித்ததில் பிடித்தது*******
ravi said…
👇🏻👇🏻👇🏻
*”I want to remember your face so that when I meet you in heaven, I can recognize you and thank you once again."*

When Indian billionaire Ratanji Tata was asked by the radio presenter in a telephone interview:

"Sir, what do you remember when you got the happiest in life"?

Ratanji Tata said:
"I have gone through four stages of happiness in life, and I finally understood the meaning of true happiness."

The first stage was to accumulate wealth and resources.
But at this stage I didn't get the happiness I wanted.

Then came the second stage of collecting valuables and items.
But I realized that the effect of this thing is also temporary and the luster of precious things does not last long.

Then came the third phase of getting a big project. That was when I had 95% of the diesel supply in India and Africa.
I was also the owner of the largest steel factory in India and Asia.
But even here I did not get the happiness that I had imagined.

The fourth step was when a friend of mine asked me to buy wheelchairs for some disabled children.
About 200 children.
At the behest of the friend, I immediately bought the wheelchairs.

But the friend insisted that I go with him and hand over the wheelchairs to the children. I got ready and went with him.
There I gave these children the wheel chairs with my own hands. I saw a strange glow of happiness on the faces of these children. I saw them all sitting in wheelchairs, moving around and having fun.
It was as if they had reached a picnic spot, where they were sharing a winning gift.

I felt real happiness inside me.

When I decided to leave, one of the kids grabbed my leg.
I tried to slowly release my legs, but the child looked at my face and held my legs tight. I leaned over and asked the child: do you need anything else?

The answer this kid gave me not only shocked me but also completely changed my outlook towards life.
This child said:

*"I want to remember your face so that when I meet you in heaven, I can recognize you and thank you once again."*
ravi said…
In most situations, all that is needed to move forward is 'The one step of courage'. It is vital that one does not get disheartened and stop - for that may not improve the situation / our state. Hence, given a difficult situation, drive to get the ONE POSITIVE THOUGHT (Action) which will bring a smile to oneself (& to others!). This will bring to the fore the hidden strengths, and enable each individual to find solutions.
ravi said…
Rain and pain never go in vain, they are tests before we see the gain.



It is not possible to change a person’s nature through Advice. It is just like water which even though becomes hot (when heated) gets back to its original shape when it gets cold.



Failure quickly gets to our heart and success goes to our head.



Failure also looks beautiful when you have friends to support you, success also hurts when you don't have friends to celebrate.



Life doesn't provide success directly. It can only provide possibilities and opportunities. It’s up to us to convert them into success.



There is no answer to any problem, there is only an understanding of the problem.



Action is the ladder of success, the more you do, the higher you climb.
ravi said…
I AM ME



There are a lot of people who spend a lot of time worrying about what other people are doing with their lives. When I say or do something that comes from my heart and someone criticizes me for my thoughts or actions, I have to remind myself that as long as I wasn't hurting anyone else, there was nothing wrong with what I said or did. The people who concern themselves with what I do or say because they want to exert some sort of control over me for some reason really don't matter--or at least, their reactions to my actions must not be important to me.
ravi said…
I am who I am, and I must be true to that. If someone criticizes me or my actions in an effort to get me to act some other way, then I should be suspicious of their motives: are they trying to get me to change because they have my best interests in mind? And do they truly know what my best interests are?


The more of us who say what we feel and who we are, the more diverse and unique this world will be. The more of us who adopt the "safe" and the "ordinary" things to say and ways to be, the less truly unique input into the world we'll be able to give.
ravi said…
The more of us who say what we feel and who we are, the more diverse and unique this world will be. The more of us who adopt the "safe" and the "ordinary" things to say and ways to be, the less truly unique input into the world we'll be able to give.



We can contribute to the diversity and uniqueness in this world, or we can contribute to the uniformity and conformity. When I think of the image I would like to present to a young person in order to help that person to grow into a truly unique individual, I know that I need to be truly me, truly myself. Otherwise, I'm simply teaching them to conform, and that really leads nowhere.
ravi said…
SWEEPER TO AGM AT SBI



At the age of 20, when she started a menial job at a Mumbai branch of the State Bank of India (SBI) following her husband’s death, little did Pratiksha Tondwalkar imagine that she would become one of the lender’s top officials 37 years later.



Tondwalkar started her career as a sweeper, not even having finished school. Determined to seek a better life for herself and her son, she studied and worked hard and now has been elevated to the post of assistant general manager at the country’s largest lender.



Tondwalkar’s story is of significance in India’s male-dominated banking sector. Women, often socially repressed, have had to traverse those extra miles to build their careers by going against societal norms while simultaneously having to take care of their families. Tondwalkar’s story was no different, as Moneycontrol found out after reaching out to her.

ravi said…
ஹர ஹர மஹாதேவா 🙏🏻🙏🏻

|| உண்மையான விஷயம் தானே ||

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

ஏனென்றால் இது பரமாத்மாவால் தீர்மானிக்கப் பட்டுவிட்டது

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.

உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.

சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.

சமாதானம் செய்யுங்கள்.

போட்டி பொறாமை வேண்டாம்

எல்லோருக்கும் உண்மையாக இருங்கள்

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை.

உலகை நேசியுங்கள்

ஒருநாள் உலகம் உங்களை நேசிக்கும்.

நல்லதே நினையுங்கள்

நல்லதே நடக்கும்.

சிந்தித்து செயல்படுங்கள்

ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
ravi said…
*கொடுப்பவன் பகவானாக இருந்தாலும் அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா ?*

அந்த உறுதியான எண்ணத்தை,
அதாவது உபாய நிஷ்டையை நமக்கு
அருள்பவள் மஹாலக்ஷ்மி பிராட்டியார்தான் !
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான
பக்தி ஏற்பட்டுவிட்ட பிறகு நடப்பது நடக்கட்டும் என்று
கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.
இல்லையென்றால்,
கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ஒருவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில்
பகவான் கிருஷ்ணர் அருளிய,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய
மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
’உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும்
உன்னை நான் விடுவிக்கிறேன்.
அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?’
கிருஷ்ணர் அருளிய இந்த சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே அவர் நாள்முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்......?
அவருக்கு பகவானிடத்தில் உறுதியான
நம்பிக்கை ஏற்படவில்லை என்று பொருள் !
காரணம் :
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம்
அவருக்குக் கிடைக்கவில்லை.
நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் தான் நம் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த நினைப்புதான் நம்மை எப்போதும்
கவலையில் ஆழ்த்திவிடுகிறது.
உண்மையில் நாமா எல்லோரையும் காப்பாற்றுகிறோம்?
கூரத்தாழ்வார் ஒரு சுலோகத்தில் :
‘நான் போன பிறகு, என் மனைவியை யார் காப்பாற்றுவார்கள் என்று இத்தனைநாள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒருநாள் நான் புரிந்து கொண்டேன்.
எனக்குப் பிறகு அவர்கள் இன்னும் நன்றாக
இருப்பார்கள் என்று அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன்.
இத்தனை நாளாக நான்தான் அவளை ரக்ஷித்துக் கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்,
பகவான்தான் அவளை மட்டுமல்ல என்னையும்
சேர்த்தே ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன்.
இதுவரை என்னையும் என் மனைவியையும்
ரக்ஷித்து வந்த பகவான், என் மனைவியை
நான் போன பிறகும்கூட ரக்ஷிக்கத்தான்
போகிறான்’ என்கிறார்.
இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே தவிர, கணவன் ரக்ஷிக்கிறான், மாதா பிதாக்கள் ரக்ஷிக்கிறார்கள், சொத்துக்கள் ரக்ஷிக்கும் என்றெல்லாம் நினைப்பது அபத்தம்.
பகவான் மட்டுமே ரக்ஷகர்.
ஆனால்,
அவர் அப்படி ரக்ஷிக்க வேண்டுமானால்,
அவர் திருமகளோடு சேர்ந்து இருக்க வேண்டும்.
அதனால்தான் ஆழ்வார் பாடுகிறார்:

’ஞாலத்தோடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப்பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ’

திருமகளோடு சேர்ந்திருந்து இந்த உலக உயிர்களை யுகங்கள்தோறும் காத்து ரக்ஷிக்கும் உன் திருவடிகளை அடையாமல் நான் இன்னும் எத்தனை நாள்தான் துன்பப்படுவது என்று கேட்கிறார்.
ஆகவே,
முதலில் மஹாலக்ஷ்மியையும்… பிறகு,
பெருமாளையும் சேவிக்க வேண்டும்.
ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை
சேவிக்காமல் இருக்கக் கூடாது.
அதாவது,
இருவருடைய திருவடிகளையும்
ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும்.
இருவரிடமும் பற்றுகொள்ள வேண்டும்.

ravi said…
🌹🌺 "“ *பரந்தாமா* ... *உங்களை மோகினியாகக் காண வேண்டுமென என்னுள்ளம் துடிக்கிறது!” என்ற சிவன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺🌹பாற்கடலிலிருந்து அமிர்த கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி தோன்றினார். அவர் கையிலிருந்து அதைத் தட்டிப் பறிப்பதற்காகத்
தேவர்களும் அசுரர்களும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினார்கள்.

🌺முப்பத்து முக்கோடி தேவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு
அறுபத்தாறு கோடி அசுரர்கள் அமிர்த கலசத்தைக் கொண்டு சென்றார்கள்.

🌺அப்போது திருமால் மோகினி என்ற அழகிய பெண்ணாக வடிவெடுத்து வந்து தன் அழகால் அசுரர்களை மயக்கினார்.
மோகினி சொல்வதை எல்லாம் அசுரர்கள் கேட்கத் தொடங்கினர்.

🌺“என் நெஞ்சுக்கினிய அசுரர்களே! அமிர்த கலசத்தின் மேல் பகுதியில் வெறும் உப்புதான் இருக்கும்,
அதைத் தேவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.

🌺அடிப்பகுதியில் உள்ள சாரமான அமுதத்தை உங்களுக்குத் தந்து விடுகிறேன்!” என்றாள் மோகினி.

🌺அதை அசுரர்களும் ஏற்றார்கள். மோகினியாக வந்திருப்பவர் திருமால் என அசுரர்கள் உணருமுன் தேவர்களுக்கு முதலில்
அமுதத்தை வழங்கிவிட்டாள் மோகினி.

🌺அமுதத்தைப் பருகியதால் வலிமை பெற்ற தேவர்கள் அசுரர்களைப் போரில் வீழ்த்தினார்கள்.
இச்சம்பவங்கள் ஏதும் பரமசிவனுக்குத் தெரியாது.

🌺அவர் ஆலகால விஷத்தை உண்டபின் கைலாசத்தில் பார்வதியுடன் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
கைலாசத்துக்குச் சென்ற நாரதர், திருமால் எடுத்த மோகினி அவதாரம் பற்றிச் சிவனிடம் சொன்னார்.

🌺மோகினியைக் காண வேண்டும் என விழைந்த பரமசிவனும், பார்வதியும் வைகுந்தத்தை அடைந்தார்கள்.

🌺புன்னகையுடன் அவர்களை வரவேற்றார் திருமால். பரமசிவன் அவரிடம், “நீங்கள் மோகினி அவதாரம் எடுத்ததாக நாரதர் கூறினார்.
அதைக் காணும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டவில்லை.

🌺அதனால் மீண்டும் ஒருமுறை மோகினி அவதாரம் எடுத்து காட்சிதர இயலுமா?” என்று பிரார்த்தித்தார்.
“இல்லை, அது அசுரர்களை மயக்குவதற்காக எடுத்த அவதாரம். அதை இப்போது எடுப்பது பொருத்தமாக இருக்காது!” என்றார் திருமால்.

🌺“ஆனாலும், பரந்தாமா... உங்களை மோகினியாகக் காண வேண்டுமென என்னுள்ளம் துடிக்கிறது!” என்றார் சிவன்.
உடனே திருமால் மோகினியாகப் பார்வதிக்கும், பரமசிவனுக்கும் காட்சி தந்தார்.

🌺தன்னுடைய பக்தர்களின் புலன்களை அடக்கி ஆண்டு அவற்றை
நல்வழியில் கொண்டு செல்வதால் ‘ஹ்ருஷீகேச:’ என்று அழைக்கப்படுகிறார் திருமால்.

🌺அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 47-வது திருநாமம்!” என்றார் பரமசிவன்.

🌺“ஹ்ருஷீகேசாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மால் அடக்க முடியாத நம் புலன்களை
எம்பெருமான் அடக்கி நம்மை நல்வழியில் செலுத்துவான்.


🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
பாதாரவிந்த சதகம் !

39.த்ருதச்சாயம் நித்யம் ஸரஸிருஹ மைத்ரீ பரிசிதம்
நிதானம் தீப்தீனாம் நிகில
ஜகதாம் போத ஜனகம் முமுக்ஷூணாம் மார்க்க
ப்ரதநபடு காமாக்ஷி பதவீம்
பதம் தே பாதங்கீம் பரிகலயதே பர்வதஸுதே

மலைமகளே காமாக்ஷி ! உன் திருவடி எப்போதும் தன்னிடம் ஸூரியனின் நிலையை விளக்குகிறது. எப்போதும் ஒளியேற்றது . தாமரையுடன் நட்புடன் பழகுகிறது. எல்லா ஒளிக்கும் மூல காரணமாகிறது. உலகமனைத்திற்கும் விழிப்பை - அறிவைத் தருகிறது. முக்தியை நாடுபவருக்கு வழிகாட்டுவதில் மிகவும் திறமை பெற்றது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
காரணமின்றி ஒருவன் உன்னை அவமானப் படுத்துகிறான் என்றால்,

உன் பாவத்தை அவன் மொத்தமாக குத்தகை எடுப்பதற்கு நிகர். உனக்கு சுபிட்சம். அவனுக்கு பெரும்கேடு.

உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.

எத்துயர் வரினும் அத்துயர் போக்கி புத்துயிர் அருளும் இறைவன் உன்னோடு பயம் கொள்ளாதே.

மலையளவு துயர் வரினும் மாமருந்தாய் காத்து நிற்பவன் இறைவன் ஒருவனே.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 419* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*165 ममताहन्त्री - மமதாஹந்த்ரீ*

நம் அழிவுக்கு காரணமே நம் மமதை தான் ..

நகுஷன் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்

இந்திர பதவியை அடையும் அளவு புண்ணியம் செய்தவன் ..

இனி வெல்ல யாரும் இல்லை என்ற மமதை அவனை கீழே தள்ளியது .

ஒருவரை அதள பாதாளத்தில் சேர்ப்பது மமதை கர்வம் மமகாரம் .

எவ்வளவு உயர பறந்தாலும் கழுகின் பார்வை நிலத்தின் மீதே இருக்கும்

அதே போல் நாம் எவ்வளவு உயர்ந்த பதவிக்கு சென்றாலும் எல்லாம் அம்பாள் அருள் என்றே நினைக்க வேண்டும் ..

நாம் சாதித்தோம் என்று நினைப்பது அடி முட்டாள் தனம்
ravi said…
*கண்ணா* ...

யாரிடம் நடிக்கிறாய் ... மனம் திருடும் உன்னால் பொருள் திருட முடியாதா ...

ஒருவர் வீடு தவறாமல் நீ உண்டே வெறும் சாதத்தை பிரசாதமாக்கினாய் ..

எல்லாம் கண்ணனுக்கே என்றே இயங்கிட வைத்தாய் ...

கொட்டி கொடுத்தாய் உனை தெய்வம் என்றே காண்போருக்கு

உருகும் வெண்ணெய் உண்டாதனால் நீ உருகும் உள்ளம் கொண்டனையோ .. ??

எங்கள் பக்தியும் வெண்ணெய் போல் உருக அதையும் சுவீகாரம் செய்தனையோ ??

கண்ணா நீ மழலை என்போர் சித்தம் கலங்கியவரே ... !!

நீ வேதாந்தி என்போர் இன்னும் வேதம் பயிலாதவரே ... !!

உன்னை தெய்வம் என்போர் மண்ணில் சொர்க்கம் காண்பவரே !!

அஞ்சுகிறேன் கண்ணா புருஷோத்தமனுக்கு பால் புகட்டவே 🙏🙏🙏
ravi said…
கும்மாயத்தொடு வெண்ணை-விழுங்கி
குடத்தயிர்சாய்த்துப்பருகி

பொய்ம்மாய மருதான அசுரரை பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்

இம்மாயம் வல்லபிள்ளை நம்பீ!

உன்னை என் மகனே என்பர் நின்றார்

அம்மா! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.🦚🦚🦚
ravi said…
கும்மாயம் என்பது பாசிப்பருப்பை குழைய வைத்து இனிப்பு சேர்த்து செய்வார்கள்.

ஆய்ச்சியர் சேரியில் ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படும் இது போன்ற எல்லா பதார்த்தங்களையும்…

ஒருவர் வீடு பாக்கி இல்லாமல் எல்லாருடைய வீட்டிற்கும் கிருஷ்ணன் தன்-சகாக்களோடு(ஆயர் சிறுவர்கள் நண்பர்கள்)
சென்று… அங்கு ஆயர் குல பெண்டிர் செய்து வைத்து இருக்கும் கும்மாயம் அதனுடன் வெண்ணை எல்லாம் விழுங்கி விட்டு அவர்கள் தோய்த்து வைத்து இருக்கும் தயிரையும் குடத்தோடு சாய்த்துப் பருகி விடுவான்!!
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 408* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய : *ஸர்வதர்ச’ன* : ||10
ravi said…
அந்த ஆட்சியருக்கு வேதாந்த தேசிகர் என்ற உதவியாளர் ஒருவர் இருந்தார்.

வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அவரை
ஆட்சியர் அடிக்கடி ஏளனம் செய்வார்.

“உங்கள் தெய்வம் உங்களைக் காக்க வேண்டும் என்பதற்காக உங்கள் உடம்பில்
பன்னிரண்டு இடங்களில் நாமம் இட்டுக் கொள்கிறீர்கள்.

ஆனால் கால்களில் நீங்கள் இடுவதில்லையே.
உங்கள் கால்களைத் தெய்வம் காப்பாற்ற வேண்டாமா?” என்று கேட்பார்.
ravi said…
*பாடல் 11 ... கூகா என என் கிளை*

(உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது)

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே
ravi said…
*நாகாசல* ... திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே,

*வேலவ* ... வேலாயுதக் கடவுளே,

*நாலு கவி த்யாகா* ... நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத்
தந்தவரே,

*சுரலோக சிகாணியே* ... தேவலோகத்திற்கு சிகாமணியாக
விளங்குபவரே,

*என் கிளை கூடி* ... என் சுற்றத்தார் ஒன்று கூடி,

*கூகா என அழ* ... கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு,

*போகா வகை* ... இறந்து போகாத வண்ணம்,

*மெய்ப் பொருள் போசியவா* ... உண்மையான பொருளை
அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே
ravi said…
*பாடல் 11..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 26 started on 6th nov
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 408*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ,
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ,
நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,

த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,

தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு.
ravi said…
அதே மாதிரி, முதல் ஸ்லோகத்தில் நாராயணீயத்தில், நாராயண பட்டத்ரி,

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ

அப்படினு ஆரம்பிக்கிறார்.

இங்க ‘ *வித்³யானந்த³மயாத்மனே* ’ அப்படினு ஆச்சார்யாள் சொல்றா மாதிரி,

‘ *ஆனந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ*

ஆனந்தமும் போதமும் சேர்ந்து ஒரு பரிபூர்ணமா ஒண்ணுக்கு மேல ஒண்ணு, அந்த ஆனந்தமும் அந்த ஞானமும் சேர்ந்து ஒரு உருவம் எடுத்ததுனா எப்படி இருக்கும்? அந்த

‘ *ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ*

‘ *அனுபமிதம்* ’ இதுக்கு ஒரு உபமானமே சொல்ல முடியாது.
ravi said…
"I can promise you that the challenges you’ll meet on the road to success are far less difficult to deal with than the struggles and the disappointments that come from being average. Confronting and overcoming challenges is an exhilarating experience. It does something to feed the soul and the mind. It makes you more than you were before. It strengthens the mental muscles and enables you to become better prepared for the next challenge." Jim Rohn
ravi said…
Life smiles at you when you are happy, but life salutes you when you make others happy.



Your level of abundance will be at the same level of gratitude.



Don't think about the rough road, think about the beautiful destination.



We are exactly what our mind is.



Understanding is deeper than knowledge. There are many people who know you but there are very few who understand you.



What you get by achieving your goals is not as important as what you become by achieving your goals. Zig Ziglar



Wake up determined, go to bed satisfied.
ravi said…
JAPANESE LIFE PHILOSOPHIES



But first: why have life philosophies at all? A philosophy of life is any general attitude towards, or philosophical view of, the meaning of life or of the way life should be lived. The beauty of creating your latticework of life philosophies is that it simplifies situations and decisions. It provides direction and structure. When there is a conflict or a compromise to be made, it’s easier to know how to feel or how to react, because you have a toolbox of life philosophies to rely on based on your values and priorities. It’s your way of life, and you’ve done the thinking in advance. No one defines and packages these lifestyle philosophies better than the Japanese. There’s much to learn from this ancient civilisation, so here are 5 Japanese philosophical concepts that can change your approach to lif
ravi said…
Kintsugi

Curiosity about Japan is nothing new. After Japan opened to the West in the 19th century, its impact on the formal and decorative arts became so intense that the phenomenon was anointed as an ‘’ism.’’ Japonism or Japonaiserie has continued to thrive to this day, with influences in technology, anime, martial arts, poetry (haiku), fashion and cuisine. We also look to Japan for inspiration on lifestyle and philosophy. They’re consistently recognised as some of the longest living and happiest in the world, with 1 Japanese person in every 1,450 aged over 100!
ravi said…
Uketamo

The Dewa Sanzan is a little-known mountain range in northern Japan. Since the 8th century, it has been the sacred pilgrimage site for the Yamabushi monks, who partake in yearly rituals seeking rebirth and enlightenment for their mind, body, and soul. We can sum up the core philosophy of their training in one word: Uketamo. The literal translation is “I humbly accept with an open heart.” Uketamo means acceptance to the core. The Yamabushi understood that the sooner you can accept all the good and bad things life throws at you, the lighter you will feel. Here’s how it works: You didn’t get the job offer you so badly wanted? Uketamo. The forecast suddenly changed to downpour rain, and now you must cancel your outdoor event? Uketamo. You broke your leg and can’t go on your long-awaited trip? Uketamo. This idea of radical acceptance can be found across cultures and philosophies, from Nietzsche to the Stoics’ Amor Fati. Don’t fall into the trap of wishing things were different. Don’t get stuck on “how things should be”. Don’t waste time feeling sorry for yourself. Instead, embrace your reality and deal with it. It doesn’t mean you have to love what’s happening. It just means you quickly understand and accept that you cannot change it, and your best option is to think creatively about how to move forward.
ravi said…
Kintsugi

Kintsugi is the centuries-old Japanese tradition of repairing broken ceramics with gold.

It means, literally, ‘to join with gold’. In Zen aesthetics, the broken pieces of an accidentally-smashed pot should be carefully picked up, reassembled and then glued together with lacquer inflected with a luxuriant gold powder. Every break is unique. Instead of restoring an item like new, the 400-year-old technique highlights the ‘scars’ as a part of the design. There should be no attempt to disguise the damage. The metaphor for life is clear. We should embrace and celebrate our flaws and imperfections. Sometimes, in repairing things that have broken (relationships, careers,…), we can create something more unique, beautiful, and resilient.

ravi said…
Tsundoku

This is a term every book lover needs to know. Tsundoku is the act of buying books and never reading them. It’s different from ‘bibliomania’ which refers to the desire to simply collect books. The intent to read is key to the concept of Tsundoku — it’s more about curiosity than it is about collecting. I love that there is no negative connotation to this. There’s no reason to feel bad about having a huge pile of unread books spread around your home. The Japanese see it as a tower of potential learning experiences. The earliest believed mention of the practice of tsun-oku, literally translated as “reading pile” dates back to the 16th century. It’s fascinating to learn that having a pile of unread books has been around for centuries — and not just a sign of our undistracted, overloaded times. Non-Japanese side note but interesting nonetheless: Lebanese-American essayist and statistician Nassim Nicholas Taleb believes that it’s natural to build a collection of unread books over time. He advises embracing them as an “antilibrary”.
ravi said…
Ikigai

Ikigai is the age-old Japanese ideology that’s long been associated with the nation’s long life expectancy. A combination of the Japanese words “iki”, which translates to “life” and “gai”, which is used to describe value or worth, ikigai is all about finding joy in life through purpose.

In other words, your ikigai is what gets you up every morning and keeps you going. The best way to encapsulate the ideology of ikigai is by looking at the Venn diagram which displays the overlapping four main qualities:

what you are good at

what the world needs

what you can be paid for

and of course, what you love
ravi said…
*அம்மா* ..

தாய்மைக்கு அர்த்தம் தந்தவளே , !

தவளே !

எந்தைக்கும் அன்னை ஆனாய்

என் ஏழ் பிறப்புக்கும் வழித்துணை ஆனாய் .

உனை நினையா நாள் எல்லாம் பிறவா நாளாக போக வேண்டும் ..

உன் நாமம் சொல்லா நாவெல்லாம் தீக்கு உணவாகட்டும் ...

உன் நாமம் கேளா செவி எல்லாம் உடைந்து போகட்டும்

உனை காணா கண்கள் கரை அடையா கண்ணீரில் மூழ்கட்டும் ..

முத்தானவளே மூத்தவளே
முதன்மை ஆனவளே முப்புரை எனும் நாமம் கொண்டவளே

உன் நாமம் நோய் தீர்க்கும் மருந்து என்றே உணரட்டும் மருத்துவர் எல்லாம் ...

தேடுவார் அவர்கள் வேறு வேலை என்றே உனை தேடி வந்தேன் அதிக வரம் பெற்றிடவே 🙏🙏🙏💐💐💐
ravi said…
*❖ 42 கூட குல்ஃபா =* பார்வைக்கு மறைக்கப்பட்ட (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள்🙏🙏🙏
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 141*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
நூறுகோடி யாகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி

நாளிருந்து மோதினா லதென்பயன்

ஆறுமாறு மாறுமா யகத்திலோ ரெழுத்துமாய்

ஏறுசீ ரெழுத்தையோத வீசன்வந்து பேசுமே. 141
ravi said…
எவ்வளவோ ஆகமங்கள், அதில் எத்தனயோ மந்திரங்கள், வாழ்நாள் காலம் முழுவதும் இருந்து ஒதிவந்தாலும்,

அதனால் மெய்நிலை அடைய முடியுமா?

அதன் பயனால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டுப் படிகளையும் கடந்து அகத்தில் ஓர் எழுத்தாக மெய்ப் பொருளை அடைந்து அதையே நினைந்து ‘ *சிவயநம* ’ என்று ஓதி தியானிக்க சோதியாக உலாவும் ஈசனே உன் குருவாக வந்து பேசுவான்.🙏🙏🙏
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அடுத்த ஸ்லோகம்

मदन परिहर स्थितिं मदीये मनसि मुकुन्दपदारविन्दधाम्नि ।

हरनयनकृशानुना कृशोऽसि स्मरसि न चक्रपराक्रमं मुरारेः ॥ ३१ ॥

மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யே

மனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி ।

ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி

ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 32 ॥
ravi said…
மதன! ஹே காமனே! நீ என்கிட்ட உன் வாலை ஆட்டாதேன்னு சொல்றார்.
‘ *முகுந்த³பதா³ரவிந்த* ³ *தா⁴ம்னி’*

முகுந்தனுடைய திருவடித் தாமரைகள் என்னுடைய ஹ்ருதயத்துல இருக்கு.

அதனால நீ இங்க இருக்காதே.

எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் இருக்க முடியாது.

எங்க காமன் இருக்கானோ அங்க ராமன் இருக்க முடியாதுன்னு துளசிதாசர் சொல்வார்.

அந்த மாதிரி என்னுடைய மனசுல முகுந்தனுடைய திருவடித் தாமரைகளை நான் வெச்சிண்டிருக்கேன்.

அதனால் இங்கேயிருந்து நீ விலகிப் போயிடு.

இல்லேன்னா! ன்னு சொல்லிட்டு ‘ *ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி’ –* பரமேஸ்வரனுடைய நெற்றிக்கண்ணால நீ சாம்பலா போனே.

ஏதோ காமாக்ஷி உன்னை காப்பாத்தினா. ‘ *ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே:’*

முரனை கொன்ற விஷ்ணு பகவானோட சக்ர பராக்ரமத்தை நீ நினைச்சு பாருன்னு சொல்றார்.🙏🙏🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 17...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
ப்ராப்னோதியம் ஸுக்ருதினம் தவ பக்ஷ பாதாத்

காமாக்ஷி வீக்ஷண விலாஸகலா புரந்த்ரீ

ஸத்யஸ்தமேவ கிலமுக்தி வதூர் வ்ருணீதே

தஸ்யாந்திதாந்த மனயோரிதமைகமத்யம்.🙌🙌🙌
ravi said…
காமாக்ஷியின் கருணாகடாக்ஷம் எந்த புண்ணியசாலியின் மேல் விழுகிறதோ அவனுக்கு மோக்ஷம் கிட்டுகிறது.

அந்தக் காலத்தில் அரசர்கள் ஸ்வயம்வரம் என்று அரசகுமாரிகள் தாங்களே வரனை வரிப்பது உண்டு.

கையில் மாலையுடன் ஸ்வயம்வர மண்டபத்தில் வரும் பெண்ணுடன் வாணிப்பெண் எனும் தோழி ஒவ்வோர் வரனையும் பற்றிக் கூறுவாள்.
பிடித்தமானவனையே கணவனாக மாலையிட்டு வரிப்பாள் அரசகுமாரி.

தேவியின் கருணாகடாக்ஷம் எந்த வரன் மேல் விழுகிறதோ அப்போழுதே முக்தி என்ற பெண்ணும் அவனுக்கு மாலையிட்டு விடுகிறாள்.

இப்படிப்பட்ட ஓர் ஒற்றுமையை கவி வியந்து பாராட்டுகிறார்.🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 419* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*165 ममताहन्त्री - மமதாஹந்த்ரீ*

நம் அழிவுக்கு காரணமே நம் மமதை தான் ..

நகுஷன் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்

இந்திர பதவியை அடையும் அளவு புண்ணியம் செய்தவன் ..

இனி வெல்ல யாரும் இல்லை என்ற மமதை அவனை கீழே தள்ளியது .

ஒருவரை அதள பாதாளத்தில் சேர்ப்பது மமதை கர்வம் மமகாரம் .

எவ்வளவு உயர பறந்தாலும் கழுகின் பார்வை நிலத்தின் மீதே இருக்கும்

அதே போல் நாம் எவ்வளவு உயர்ந்த பதவிக்கு சென்றாலும் எல்லாம் அம்பாள் அருள் என்றே நினைக்க வேண்டும் ..

நாம் சாதித்தோம் என்று நினைப்பது அடி முட்டாள் தனம்
ravi said…
1. *அருணா சலமென வகமே* *நினைப்பவ*
*ரகத்தைவே ரறுப்பா யருணாசலா (அ)*

*அருணாசலா !*

உனை நினைப்போர்க்கு ஏது அகங்காரம் மமகாரம் மமதை சுயநலம் ..??

கர்வத்துடன் பூமிக்கு வந்த கங்கையை உன் சடைக்குள் அடக்கி வைத்தாய் ..

மதி இன்றி மதி செய்த தவறை மன்னித்து உன் முடி தனில் சூடிக்கொண்டாய் ...

விஷம் கக்கும் நாகங்கள் தன் விஷம் தனை முறித்தாய் ..

மதம் கொண்டு மோத வந்த யானையின் தோல் உரித்தாய்...

சீறி வந்த புலியை நீ அணியும் ஆடை ஆக்கினாய் ...

முயலகன் ஆணவம் அழியக்கண்டாய் ...

உன் நாமம் சொல்லும் அனைவரும் அகம் கலைய அருள் செய்வாய் அருணாசலா 👌👌👌
ravi said…
. உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

*தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!*


*மெய் தரு வேதியன் ஆகி, வினை கெட, கைதர வல்ல கடவுள், போற்றி!*

ஆடக மதுரை அரசே, போற்றி!
கூடல் இலங்கு குருமணி, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!

*அண்ணாமலை எம் அண்ணா, போற்றி! கண்ஆர் அமுதக் கடலே, போற்றி!*
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!
*மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!*

*தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!*



924 தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு
ஓர் தெய்வம் ஆகி,
*தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி*, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி,
காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள்
நுகர்வானும் தானே ஆகி,
*நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய்,*
*நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.*

அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, *திரு* *அண்ணாமலையனை,*
*இரக்கம் ஆய் என் உடல்* *உறு நோய்களைத்*
*துரக்கனை*,-*தொண்டனேன் மறந்து உய்வனோ?*

610 *பண் தனை வென்ற இன் சொல் பாவை* *ஓர்பங்க! நீல-*
*கண்டனே! கார் கொள்* *கொன்றைக் கடவுளே*! *கமலபாதா *அண்டனே அமரர்கோவே! அணி அணாமலை உளானே!*
*தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.*

97. உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே.

வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்,
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப,
தண் ஆர் ஒளி மழுங்கி, தாரகைகள் தாம் அகல,
பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய், பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி,
கண் ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடி,
பெண்ணே! இப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!



சூடுவேன் பூம் கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன்; கூடி, முயங்கி, மயங்கி நின்று,
ஊடுவேன்; செவ் வாய்க்கு உருகுவேன்; உள் உருகித்
தேடுவேன்; தேடி, சிவன் கழலே சிந்திப்பேன்;
வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண்; அம்மானாய்!
திருச்சிற்றம்பலம்
🪔
ravi said…
*கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா? பகவானே, உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தை கொடு என்றுதான்.*

நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து, சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங் களிலிருந்து காப்பாற்றிவரும் அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம். இறைவன் நமக்கு செய்த பல உதவிகளுக்கு கைமாறாகவும் அதைக் கொள்ளலாம் அல்லது பகவான்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவும் அதைச் செய்யலாம்.

திருக்கோயில்களைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பது இப்படி நம்மால் முடிந்த சிறுசிறு கைங்கர்யங்களை செய்வதை சிரமேற் கொள்ள வேண்டும். நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில், கோயில் உற்சவங்களில் பணமோ பொருட்களோ கொடுத்து கலந்து கொள்வது கைங்கர்யமே.ராமாயணத்தில் ஒரு ரசமான கட்டம் உண்டு. அது அணில்கள் ராமபிரானுக்கு செய்த கைங்கர்யம் பற்றியது.

ராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்காக இக்கரையிலிருந்து அக்கரைக்கு சேது பாலம் அமைத்துக்கொண்டிருந்த சமயம் அது. கடலின் நடுவே பாலம் அமைக்க வானரங்கள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளையும், மலை களையும் கடலின் நடுவே போட்டு பாலம் கட்ட உதவிபுரிந்துகொண்டிருந்ததாம்.

அணில்கள் எல்லாம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்ததாம். ஆஹா, இந்த வானரங்கள் எல்லாம் எவ்வளவு ஜோராக ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்கிறது, நாமும் ஏதாவது கைங்கர்யம் செய்ய வேண்டுமே என நினைத்து கூடிக்கூடி பேசி சரி இப்படி செய்வோம் என முடிவெடுத்து, கூட்டம் கூட்டமாக கடலில் சென்று குளித்து விட்டு மணலில் புரண்டு அந்த பாறைகளின் நடுவே மணலைச் சிந்திவிட்டு வந்ததாம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த வானரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இந்த அணில்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று ஆவல் மேலிட அணில்களை பார்த்து, “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டதாம். அதற்கு அணில்களோ, “நாங்கள் ராமபிரானுக்கு எங்களால் இயன்ற சிறு உதவியை கைங்கர்யமாக செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறியதாம். ‘‘என்னது கைங்கர்யமா? நீங்களா?” என்று சிரித்தனவாம் வானரங்கள். “ஆமாம், ஆமாம். இதோ பாருங்கள் அந்தக் கடலில் சென்று நாங்கள் குளித்து விட்டு வருவதால், கடல் தண்ணீர் வற்றிவிடும்.

இதோ அந்தக் கடலில் குளித்து இந்த மண்ணில் புரண்டு எழுவதால், அந்த மண் எங்கள் முதுகில் ஒட்டிக் கொண்டுவிடும். அந்த மண்ணை இதோ இந்த பாறைகளின் இடுக்கில் உதறும்போது அது பாறைகளை பிடித்துக் கொள்ளும் பூச்சு வேலையாகப் போய்விடும். மேலும் பாறைகள் கடினமானதாக இருக்கும். ராமபிரானின் மென்மையான பாதங்கள் இதில் படும்போது அவரது கால்களுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வரும் அல்லவா? அப்படி வராமல் இருக்க இதோ நாங்கள் சிந்தும் இந்த மண் உதவுமே” என்று கூறியதாம்.

அணில்கள் பேசுவதை கவனித்த ராமபிரான் அந்த அணில்களை அன்போடு தடவி தந்தாராம். அன்று ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்த அணில்களின் மீது ராமரின் கைகள் பட்டதால் ஏற்பட்ட அந்த மூன்று கோடுகளைத் தான் இன்றளவும் அணில்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன தன் முதுகில். அணில்களைப்போல ஏதாவது ஒரு சிறிய சீரிய கைங்கர்யத்தையாவது நாமும் செய்வோமே.

திருமலையில் இப்படி எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், கைங்கர்யம் செய்தவர்கள் பலர். தம் குருவான ராமானுஜர் சொல்லிவிட்டார் என்பதற்காக, தம் நிறைமாதக் கர்ப்பிணியோடு திருமலைக்கு சென்று வன விலங்குகள் சூழ்ந்து கொண்டிருந்த அந்த இடத்தில் அழகாக ஒரு நந்தவனம் அமைத்து திருமலையப்பனுக்கு தினமும் பூக்கள் கொண்டு புஷ்ப கைங்கர்யம் செய்த ஆனந்தாழ்வார்.

அதேபோல தம் தள்ளாத வயதிலும் ஆகாச கங்கையிலிருந்து, திருவேங்கடமுடையானின் திருமஞ்சனத்திற்கென்று (அபிஷேகத்திற்காக) தினம் தீர்த்தம் கொண்டு வந்து அந்த திருமலையப்பனாலேயே ‘‘பிதாமகர்” என்றழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பிகள், பூவிருந்தவல்லியில் தன் அப்பா தனக்கு தந்த நிலத்தில் அழகாய் ஒரு நந்தவனம் அமைத்து, அந்த நந்தவனத்திலிருந்து, பூக்களைப் பறித்து அதைக் காஞ்சிவரதராஜருக்கு எடுத்துச் சென்று புஷ்ப கைங்கர்யமும், அந்த காஞ்சி வரதருக்கு தினமும் திரு ஆலவட்டம் வீசுவது, அதாவது விசிறி வீசும் கைங்கர்யத்தையும் செய்து வந்தாராம்.

எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கின்றன, பகவானைச் சென்று அடைய, அவனின் பிரியத்தை சம்பாதித்துக் கொள்ள... அந்த வழிகளில் எல்லாம் மிகச் சிறந்த எளிமையான வழி என்பது, கைங்கர்ய பக்தி எனும் வழிதான். இறைவனிடம், “உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தைத் தா” என்றே வேண்டி பெற்றிடுவோம் வாருங்கள்.

ravi said…
பாதாரவிந்த சதகம் !

40.சனைஸ் தீர்த்வா மோஹாம்புதிமத ஸமாரோடுமனஸ:
க்ரமாத் கைவல்யாக்யாம் ஸுக்ருதிஸுலபாம் ஸௌதவலபீம்
லபந்தே நிச்ரேணீம் இவ ஜடிதி காமாக்ஷி சரணம்
புரஸ் சர்யாபிஸ் தே புரமதன ஸீமந்திநி ஜனா:

திரிபுரத்தை அழித்தவனின் தர்மபத்தினியே ! காமாக்ஷி ! மெள்ள மெள்ள மோகமெனும் கடலைத் தாண்டி, மேலும் புண்ணியம் செய்தவர்களால் மட்டும் எளிதில் பெறத்தக்க முக்தி என்ற மேன் மாடத்தை முறையுடன் ஏறவிரும்புகிற மாந்தர், படியமைப்பு போன்ற உன் திருவடியை பலதரப்பட்ட வழிபாட்டு முறைகளால் மிக எளிதில் அடைகிறர்கள்.

ஜபம் ஹோமம் மார்ஜனம் தர்பணம் என்ற
நீண்டமுறைகளால் மந்திர சித்திபெற்றவர் தேவியின் திருவடியைப்பற்றுக் கோலாகக்கொண்டு முக்திவழியில் தடையுறாமல் தளராமல் செல்கின்றனர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 "Sarveswara.....you have started lighting the lamp and your temple is dark without the lamp, what will I do!?" A simple story explained by the panicked devotee 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Three thousand people had started putting Karthika Deepams in Thirumanas all over Thillai Street, and when Nayanar saw them, his heart started beating fast.

🌺 "Sarveswara.....they have started lighting the lamp and your temple is dark without the lamp, what will I do!?" He blurted out,

🌺 Afternoon cut the ganambul katinai "Buy it!? Buy it!?" No one bought it even though they bid street by street like Potter Street, Tacher Street, Kammal Street.

🌺Every day in the above streets someone buys a bunch of kanampulla and gives money and runs to "Thillai Pulecharam" after buying ghee and then comes to the place where he usually lights the lamp and then sits and lights the lamp until he stops walking.

🌺 But in Thillai they say that the life that suddenly came to Nei is not a female plant, but a horse plant. It was Annamalaiyar Deepam yesterday and Sarvalaya Deepam today. The price of ghee has gone up completely. Without a single paisa in hand, everything was bought and burnt yesterday.

🌺He bought everything he needed from places where he asked for money, said Nayan, who was in a lot of confusion. He was filled with tears when he thought about that.

🌺 It was getting dark, "Lord!! Chitsabesa!! Chitambaresa!! Should such a test come on this Karthik day??" Nayanar screamed.

🌺With no other choice he entered the temple with a bulkat on his head, lamps were kept all over the temple but only the place where he usually puts the lamp was dark, it seems that no one came forward to light the lamp as it is customary for Nayanar to come there.

🌺Nayanar's heart was broken, "What will I do!? What will I do!?" The thought came to him when he sat down and sat down

🌺 Saying "Sadar", he took the candlesticks, twisted the wick little by little into the lamp and set it on fire.

🌺The withered grass began to "sparkle" in all the lights, making it look like candles were burning in the area to some extent.

🌺 "I have been able to create this light in the shrine of Emperuman for nothing" said Nayanar with great joy as he added more and more grass to the lamps, but that happiness did not last long.

🌺 As the amount of grass decreased, the number of lamps also started to decrease, "But there is still a long time for Arthasamam, what shall I do?" Nayanar panicked

🌺Fully one lamp was burning and only the last handful of grass was left, Nayanar's eyes were full of tears, "I don't know what to do!!" He put his hands on his head and grunted

🌺That's when he realized that there was a material in his head that was suitable for burning smooth like a kanambulla and became a kanambulla boy.

🌺For the next second, Perumana, who did not think at all, lit the ganambula in his hand and put it in his hair.


🌺 His hair began to burn, "This poor body is useful for the light of the Lord's shrine," Sivanandamura Nayanar sat in Ananda Nittai.


🌺Immediately you got up in the sky as one of the gods and blessed Ganambulla Nayanar to rest in Shivaloka. 🌹🌺


🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan 🌹🌺
🌷🌹🌺 --------------------------------------------------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *சர்வேஸ்வரா* ..... *தீபம் வைக்கத் தொடங்கி விட்டார்களே உங்கள் ஆலயம் தீபமின்றி இருளுமே, என்ன செய்வேன்!?" என்று பதறிய பக்தன் -----விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹தில்லை வீதியெங்கும் மூவாயிரவர் திருமனைகளில் கார்த்திகை தீபங்கள் வைக்க தொடங்கியிருந்தனர், அவற்றை கண்டதும் நாயனாருக்கு இதயம் வேகமெடுத்து துடித்தது.

🌺"சர்வேஸ்வரா.....தீபம் வைக்கத் தொடங்கி விட்டார்களே உங்கள் ஆலயம் தீபமின்றி இருளுமே, என்ன செய்வேன்!?" என்று வாய்விட்டே பதறினார்,

🌺மதியம் அறுத்து கட்டிய கணம்புல் கட்டினை "வாங்கலியோ!? வாங்கலியோ!?" என்று குயவர் தெரு, தச்சர் தெரு, கம்மாளர் தெரு என்று வீதிவீதியாக ஏலம் போட்டும் யாரும் வாங்கவில்லை

🌺தினம் தினம் மேற்படித் தெருக்களில் யாராவது ஒருகட்டு கணம்புல்லை வாங்கி கொண்டு காசு கொடுப்பார்கள் ஓடிவந்து நெய் வாங்கி கொண்டு "தில்லை புலீச்சரத்திற்கு" ஓடி தாம் வழக்கமாக விளக்கேற்றும் பகுதிக்கு வந்து அமர்ந்து கொண்டு அர்த்தசாம பூசையாகி நடையடைக்கும் வரை விளக்கெரிப்பார்,

🌺ஆனால் தில்லையில் திடீரென்று நெய்க்கு வந்த வாழ்வு ஆனைவிலை, குதிரைவிலை கூறுகிறார்கள். அதுவும் நேற்று அண்ணாமலையார் தீபம், இன்று சர்வாலய தீபம் நெய்யின் விலை முற்றிலுமாக ஏறிவிட்டது கையில் ஒருபைசா கூட இன்றி எல்லாவற்றிற்கும் நேற்றே நெய்வாங்கி எரித்தாயிற்று

🌺கடன் கேட்கும் இடங்களில் எல்லாம் வேண்டிய மட்டும் வாங்கியாச்சு, என்று பலவாறும் மனக்குழப்பத்தில் தவித்த நாயனார், "மூவாயிரவர் வாழும் மாடவீதியிலா இந்த புல்லை வாங்க போகிறார்கள்??" என்று எண்ணி மனம் வெதும்பிய பொழுது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவருக்கு.

🌺பொழுது இருட்டிக் கொண்டிருந்தது, "எம்பெருமானே!! சித்சபேசா!! சிதம்பரேசா!! இந்த கார்த்திகை நாளிலா இப்படி ஒரு சோதனை வரவேண்டும்??" நாயனார் வாய்விட்டே கதறினார்.

🌺வேறுவழியின்றி தலையில் சுமந்த புல்கட்டுடன் ஆலயத்திற்குள் நுழைந்தார், ஆலயம் முழுவதும் தீபங்கள் வைக்கப்பட்டு இருந்தது ஆனால் இவர் வழக்கமாக தீபம் வைக்கும் இடம் மட்டும் இருண்டு கிடந்தது, அங்கு நாயனார் வந்து தீபம் வைப்பது வழக்கம் என்பதால் யாரும் தீபம் வைக்கவும் முன்வரவில்லை போலும்

🌺நாயனாருக்கு மனம் சுக்குநூறாக உடைந்தது, "என்ன செய்வேன்!? என்ன செய்வேன்!?" என்று துடித்தார் புற்கட்டை தரையில் போட்டுவிட்டு அமர்ந்த பொழுதுதான் அந்த யோசனை தோன்றியது

🌺"சடார்" என்று, அகல்விளக்குகளை எடுத்து வைத்து, அந்த கணம்புல்லையே சிறிது சிறிதாக திரிபோல திரித்து விளக்குகளில் இட்டு தீயிட்டார்

🌺வாடிய புல் அனைத்து விளக்குகளிலும் "சரசர" என்று எரிய தொடங்கியது, ஓரளவுக்கு அப்பகுதியில் தீபங்கள் எரிவது போல தோன்றவும் செய்தது,

🌺"ஒன்றும் இல்லாததற்கு இந்த வெளிச்சத்தையாவது எம்பெருமான் சன்னதியில் ஏற்படுத்த முடிந்ததே" என்று நாயனார் மிகுந்த மகிழ்வுடன் மேலும் மேலும் சிறிது சிறிதாக விளக்குகளில் புல்லை திரித்து சேர்த்து கொண்டே வந்தார், ஆனால் அந்த மகிழ்ச்சியும் வெகுநேரம் நீடிக்கவில்லை

🌺புல்லின் அளவு குறைய குறைய தீபங்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது, "ஆனால் அர்த்தசாமம் ஆக இன்னும் வெகு நேரம் இருக்கிறதே என்ன செய்வேன்?" என்று பதறினார் நாயனார்

🌺நிறைவாக ஒரே ஒரு தீபம் எரிந்து கொண்டிருந்தது கடைசிப் பிடி புல் மட்டுமே இருந்தது, நாயனாரின் நயனங்கள் கண்ணீரை சொரிந்தன, "என்ன செய்வதென்று தெரியவில்லையே!!" என்று தலையில் கைகளை வைத்து கொண்டு குமுறினார்

🌺அப்பொழுதுதான் கணம்புல்லை போலவே மிருதுவாக எரிப்பதற்கு ஏற்ற ஒரு பொருள் தம் தலையில் இருப்பதனை உணர்ந்தார் எம்குடியாளும் கணம்புல்ல நாயனார்

🌺அடுத்த விநாடி சிறிதும் யோசிக்காத பெருமானார், கையில் உள்ள கணம்புல்லை பற்றவைத்து தம் தலைமுடியில் வைத்து கொண்டார்.

🌺தலைமுடி பற்றி எரியத் தொடங்கியது, "எம்பெருமான் சன்னதி வெளிச்சத்திற்கு இந்த பாழும் உடல் பயன்படுகிறதே" என்று சிவானந்தமுற்ற நாயனார் ஆனந்த நிட்டையில் வீற்றிருந்தார்

🌺உடனேயே ஆகாயத்தில் உமையொரு பாகன் விடையொரு பாகனாய் எழுந்தருளி கணம்புல்ல நாயனாரை சிவலோகத்தில் இனிது வீற்றிருக்கும்படி ஆட்கொண்டு அருளினார். 🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 30

நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர். . . . .[30]

விளக்கம்:

நெடிய மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து கீழே குதித்தல் துன்பமாம். மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம். பாம்பு புற்றில் கை வைத்தல் துன்பமாம். கொடிய புலிகள் வாழும் வழியில் செல்லுதல் துன்பமாம்


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
காரணமின்றி ஒருவன் உன்னை அவமானப் படுத்துகிறான் என்றால்,

உன் பாவத்தை அவன் மொத்தமாக குத்தகை எடுப்பதற்கு நிகர். உனக்கு சுபிட்சம். அவனுக்கு பெரும்கேடு.

உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.

எத்துயர் வரினும் அத்துயர் போக்கி புத்துயிர் அருளும் இறைவன் உன்னோடு பயம் கொள்ளாதே.

மலையளவு துயர் வரினும் மாமருந்தாய் காத்து நிற்பவன் இறைவன் ஒருவனே.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (41-54)*
ravi said…
*❖ 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா; =*

ஆமையின் ஓடு தனை விஞ்சும் எழில் பாத-வளைவு கொண்டு விளங்குபவள்
ravi said…
*அம்மா*

உன் அண்ணன் எடுத்தான் கூர்மம் ... அமுதம் துள்ளி விழுந்தது

எடுத்த அழகு தனை உன் பாத வளைவுகளில் வைத்தானோ அந்த மாதவன் ?

மென்மை அகம் கொண்டவளே

ஆமை ஓடு பொருந்துமோ உனக்கு ... ?

கடின ஓடுகள் உன் உவமைக்கு பொருந்துமோ ... ?

உன் நெற்றி அஷ்டமி சந்திரனில்

கஸ்தூரி திலகம் ஒரு கரும்புள்ளி என்றார்களோ

அவர்கள் ஆமையின் ஓடு என்றும் சொன்னவர்களே !!

பஞ்சினால் ஓடு செய்து

அதில் பால் பழம் ஓடவிட்டு

யானையின் தந்தம் கொண்டு

அதிலே சங்கின் எழில் தெளித்து

முத்துக்கள் எல்லாம் அணிவகுத்து முன் நின்றதை போல் அன்றோ உன் பாத வளைவுகள் ?

ஆமை ஓடு வேண்டாம் தாயே ...

உன் நடை அன்னம் பயிலும் கலை

மான்கள் உறவாடும் இடை

மயில்கள் தோகை விரிக்கும் ஜடை

எனவே உன் உள்ளம் போல் கஜராஜனின் தந்தம் அங்கே முத்துக்கள் என ஜொலிக்கட்டும்

மாணிக்கமே மரகதமே உன் எழில் வர்ணித்து அந்தம் கண்டோர் உலகில் உண்டோ ? 🦜🦜🎼🎼🦚🦚
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 142*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்

மாலைகாலை யாய்ச்சிவந்த மாயமேது செப்பிடீர்

காலைமாலை யற்றுநீர் கருத்திலே யொடுங்கினால்

காலைமாலை யாகிநின்ற காலனில்லை யில்லையே. 142
ravi said…
இரவும் பகலும் தனக்குள்ளேயே கலந்து நிற்கும் இறைவனார், இரவும் பகலுமாய் சிவந்த சோதியாக நின்றிலங்கும் மாயம் எப்படி என்பதனைச் சொல்லுங்கள்.

அது மெய்ப் பொருளாக இருப்பதை அறிந்து இரவும் பகலும் எந்நேரமும் கருத்துக்கள் உதிக்கும் சிந்தையிலே நினைவு ஒடுங்கி சிவத்தியானம் செய்து வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில் ஈசன் சோதியாக திகழ்வான்.

அதனால் எமன் வருவான் என்பதோ, எமபயம் என்பதோ, தியானம் செய்பவர்களுக்குக் கிடையாது.
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா ! (அ)

அருணாசலா ..

சொல்லும் பொருளும் பிரிவதில்லை

பாலும் சுவையும் அகல்வதில்லை

நிழலும் நிஜமும் வேறு வேறு ஆவதில்லை ...

நெருப்பும் உஷ்ணமும் விரோதி ஆவதில்லை ...

உன் அழகும் கருணையும் விரிசல் காண்பதில்லை ...

அருணாசலா இப்பொழுது சொல்

என் அகமும் உன் சுந்தர வடிவும் என் நெஞ்சினுள்ளே அபிபின்னமாய் கார்த்திகை தீபம் போல் ஒளி வீசும் போது இதை வேறு வேறாய் பிரிக்க வல்லார் யார் அருணாசலா ? 💐💐💐

என் அகமும் நீயும் பிரிவதுண்டோ
ravi said…
Hariharan Krishnamurthy:
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்"

கார்த்திகை தீபம் அன்று (மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.)

வரும் டிஸம்பர் 07-12-2022 கார்த்திகை தீபம்
.
(நன்றி : தினமலர்-டிசம்பர் 2014

ravi said…
காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.

ravi said…
திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.

ravi said…
மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன், அவல், நெல் பொரி போன்றவற்றுடன் வெல்லம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும்.

ravi said…
அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும் படி மகாசுவாமிகள் சொல்வார்.

பலரும் அவ்வாறு தானம் செய்வர். அப்போது பக்தர்களிடம் பெரியவர், ""மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.

அது மட்டுமல்ல, "உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக் கொண்ட சகோதரிகளும் ஆயுள்விருத்தியுடன் திகழ்வர். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அருகிலுள்ள ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள். அத்துடன், கார்த்திகை பவுர்ணமிஅன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும். இதனால் வாழ்வே பிரகாசிக்கும்,'' என்றும் பெரியவர் சொல்வார்.

கார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார். வீடுகளிலும் கார்த்திகையன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப்பெருமானுக்கு விருப்பமானது. மேலும், எதிரிகளின் தொல்லை, கடன் தீர்தல், ஆயுள்விருத்தி, சகோதர உறவு வலுப்படுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார். மொத்தத்தில், கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர்.

எல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும். ஆனால், பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிட்சையாக ஏற்றுஉண்பார். சகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகைத் திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.
குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். மஹா பெரியவரின் பரிபூரண அருளையும்வழிகாட்டுதலையும் பெற இணைவீர்**
ravi said…
முகுந்தமாலா 32 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
அடுத்த ஸ்லோகம்

मदन परिहर स्थितिं मदीये मनसि मुकुन्दपदारविन्दधाम्नि ।

हरनयनकृशानुना कृशोऽसि स्मरसि न चक्रपराक्रमं मुरारेः ॥ ३१ ॥

மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யே

மனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி ।

ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி

ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 32 ॥
ravi said…
அப்படி பக்தியின் சுகத்தை அறிந்தவர்கள்

காம சுகத்தை மனசாலும் நினைக்கமாட்டார்கள் ஏங்கிறது இதன் தாத்பர்யம்.

பக்தியோட ருசி ஏற ஏற இந்த நாராயண நாமத்தை நாம சொல்றோம்.

இதெல்லாம் ஒண்ணும் எனக்கு தெரியலேன்னா, நிறைய நாம ஜபம் பண்ணிண்டே இருந்தா அதோட ருசி ஊறி ஊறி அந்த அம்ருதத்தை பானம் பண்ணினா தாமரை இலை மேல ஒரு பசை இருக்கிற மாதிரி நமக்கு உண்மையான பக்தி ஏற்படும்.

அந்த பக்தி ஏற்பட்டா தண்ணி தாமரை இலையில் ஒட்டாத மாதிரி விஷய சுகங்கள் தானாக விலகிடும்ங்கிறது

இந்த ஸ்லோகத்தோட த்வனி.

இதுவும் ஒரு முக்யமான பிரார்த்தனை.

குலசேகராழ்வார் பண்ண முகுந்தமாலையில நமக்காக ரொம்ப பிரார்த்தனை பண்ணி இருக்கார்.

இதெல்லாம் நாம மனசுல வாங்கிக்கணும்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 18...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
ஸ்ரீகாமகோடி சிவலோசன சோஷிதஸ்ய
ச்ருங்கார

பீஜவிபவஸ்ய புன: ப்ரரோஹே
ப்ரேமாம் பஸார்த்ரம்

அசிராத் ப்ரகரணே சங்கே
கேதாரமம்ப தவகேவல த்ருஷ்டி பாதம்👏👏👏
ravi said…
தேவியின் கண்ணோக்கம் சிருங்கார ரசம் நிறைந்த விதையினின்றும்

செழித்து வளர்ந்த மன்மதனான பயிரை, மங்களமேயான பரமசிவனின் கண்ணால் எரிந்து கரிந்து போனபோது,

அப்பயிர் மீண்டும் செழித்து வளர்ந்தது.

பரமசிவன் நெற்றிக்கண் கொண்டு மன்மத பயிரை எரித்து சாம்பலாக்கினார்.

தேவி சிருங்கார ரஸத்தை ஊற்றி மன்மதப் பயிரைத் தன் கண்ணோக்கம் என்ற வயலிலே மீண்டும் செழித்து வளரும்படி அன்பு எனும் நீரைப் பாய்ச்சி கண்ணால் எரிந்து போனவனை கண்ணாலேயே உண்டாக்கினாள். தேவியின் கடாக்ஷம் அவ்வளவு மகிமை
வாய்ந்தது.👏👏👏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 420* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*166 निष्पापा - நிஷ்பாபா* --

பாபம் அணுகாதவள் ஸ்ரீ லலிதை.

ஆசை தானே பாபம் செய்வதற்கு காரணம்.

''அர்ஜுனா நான் செய்யும் காரியம் எதுவும் எனக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.

அதன் விளைவு எனும் கனியும் நான் விரும்பாதது'' என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில்.

ஸ்ரீ அம்பாள் செய்யும் கர்மங்கள் அவளுக்காக அல்ல. நமக்காக.

எந்த பலனும் அவள் எதிர்பார்ப்ப தில்லை. அவளை அதெல்லாம் அணுகாதவை
ravi said…
*கண்ணா*

மை தீட்டும் மாந்தர்கள் நெஞ்சில் உனை தீட்டி வைத்தனரோ ...

அணியும் ஆடைகள் நெஞ்சில் மறைத்த உன்னை மறைக்க வில்லையே *கண்ணா*

பேசும் வார்த்தைகளில் கண்ணில் கலந்த மை பொய்மை என கலந்து கொண்டதோ

நீ செய்வதெல்லாம் மாயம் என்றால் அவர்கள் திட்டுவதும் ஒரு நாடகமே ..

உன்னை வெறுப்போர் உண்டோ *கண்ணா* கண்டு மறுப்போர் உண்டோ ...

குழந்தை என்றே நந்த கோபன் நினைக்கட்டும் ...

நீ எனக்கு அந்த பரம்பொருள் அன்றோ *கண்ணா* ...

எங்கனம் உனக்கே தாய் என்று பால் கொடுப்பேன் அஞ்சுகிறேன் *கண்ணா*

*யசோதா*
ravi said…
மையார்கண் மடவாய்ச்சியர் மக்களை-

மையன்மை செய்து அவர் பின் போய்

கொய்யார் பூந்துகில் பற்றித்தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்
பொய்யா!

உன்னைப் புறம்பலபேசுவ
புத்தகத்துக்குள் கேட்டேன்
ஐயா!

உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே!🤝🤝🤝
ravi said…
*பாடல் 11..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 27 started on 6th nov
ravi said…
*பாடல் 11 ... கூகா என என் கிளை*

(உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது)

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே
ravi said…
செங்கோட்டு வேலவனே,

கவிபாடும் திறமையை எனக்கு அளித்தவனே,

தேவ லோகத்தின் மணியானவனே,

நான் இந்த உடலை விடும் போது
என் சுற்றத்தார்கள் அனைவரும் கூடி,

நான் மரண யாத்திரைக்கு போகும்
இந்த அவல நிலை மாறும்படி எனக்கு உண்மைப் பொருளை
உபதேசித்தது என்ன அதிசயம்.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 409* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய : *ஸர்வதர்ச’ன* : ||10
ravi said…
ஒருநாள் திருமலையில் பெருமாள் அமுது செய்த கிச்சடியைப் பக்தர்கள் உண்டு கொண்டிருக்கையில்

அங்கு வந்த ஆட்சியர்,
“செப்பு பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட சுகாதாரமற்ற உணவுகளை உண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்
என்பதை அறியாமல் இப்படி உண்கிறீர்களே!” என ஏளனம் செய்தார்.

அன்று மாலை அலுவலகம் திரும்பிய முன்ரோ, “ஐயோ! ஐயோ!” என்று கத்தினார்.

திடுக்கிட்டு அவரது அறைக்கு ஓடிய உதவியாளர் வேதாந்த தேசிகன், வயிற்று வலியால் ஆட்சியர் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 409*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ,
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ,
நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,

த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,

தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு.
ravi said…
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,நிர்முக்தம்’ – எல்லாம் காலம் தேசம் என்கிற பந்தங்களில் இருந்து விடுபட்டதும்,

‘ நித்யமுக்தம்’ – எப்போதுமே பந்தமே இல்லாமல் இருப்பதும்

‘நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம்’ – எத்தனையோ ரிஷிகள் எத்தனையோ நிகமங்கள்

‘ஶதஸஹஸ்ரேண’ அப்படினு சொல்றார். அப்படினு ஒரு count, அதாவது countless scriptures எல்லாம் சேர்ந்து பேசினா கூட

‘நிர்பா⁴ஸ்யமானம்’ – இப்படி என்று விளக்க முடியாத அந்த பரப்ரஹ்மம்

‘அஸ்பஷ்டம்ʼ, த்³ருʼஷ்டமாத்ரே புன:’ அது ‘அஸ்பஷ்டம்’ விளக்க முடியாதது, ப்ரஹ்ம தத்வம் அது.
ravi said…
*கார்த்திகையில், கார்த்திகை 07.12.2022*
*திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்திரம்!*

ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!

நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*

திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார். அதனால் அரசன் இவரை சிறையில் அடைக்க, அப்போது தேவப்பெருமாள் திருமங்கை மன்னன் கனவில் தோன்றி, காஞ்சி வேகவதிக் கரையில் செல்வம் இருப்பதாகவும், அதை எடுத்து கப்பத்தொகையை கட்டுமாறும் உரைத்தார்!

அரசனின் படை வீரர்களை தம்முடன் அழைத்து சென்ற பரகாலன், வேகவதிக் கரையில் ஆற்று மணலை அளந்து கொடுத்தார். முதலில் கோபித்த வீரர்கள் அளந்து கொடுத்த மண், பொன்னானது கண்டு வியந்தார்கள்!

விஷயம் கேள்விப்பட்ட அரசன், ஆழ்வாரிடம் தெண்டன் சமர்ப்பித்து, அவருக்கு மேலும் பல தனங்களை கொடுத்ததோடு, தானும் பல தான-தர்மங்களை செய்து உய்வடைந்தான்!

ஶ்ரீமந் நாராயணன்- பிராட்டியுடன், திருமங்கை ஆழ்வாருக்கு பிரத்யட்சமாகி, அவருக்கு அருளிய திருநாமம் *நாராயணா* என்பதாகும்!

ஆழ்வார் தான் கண்டு கொண்ட நாராயணா எனும் திருமந்திரத்தின் அற்புத சக்தியை, இவ்வுலகம் உய்ய தனது *பெரியதிருமொழி* பிரபந்தம், முதல் பத்து பாசுரங்களில் "நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்" என்று ஒவ்வொரு பாசுரத்தின் முடிவிலும் உரைக்கிறார்..

"குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்;
நிலம் தரம் செய்யும் நீள்விசும்பருளும்,
அருளொடு பெருநிலம் அளிக்கும்;
வலம்தரும் மற்றும் தந்திடும்* பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
*நாராயணா* என்னும் நாமம்!"
-பெரியதிருமொழி

*குலம் தரும்*
நாராயணா என்னும் திருநாமம் தன்னை ஓதியவர்களுக்கு தொண்டக்குலம் ஆகிய உயர்ந்த குலத்தை தரும்;
*செல்வம் தந்திடும்*
அனைத்து ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும்;
*அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும்*
பாப பலன்களால் அனுபவிக்கும் துன்பங்களை அழிக்கும்;
*நீள்விசும்பருளும்*
முடிவான பரமபதத்தை அருளும்;
*அருளொடு பெருநிலம் அளிக்கும்*
அருளொடு கூடிய கைங்கர்யமாகிய பெருநிலையை தரும்;
*வலம் தரும்*
பரமபதத்தில் ஶ்ரீமந் நாராயணனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் நித்யசூரிகளுக்கு சமமான அறிவையும் ஆற்றலையும் தரும்;
*மற்றும் தந்திடும்*
நமக்கு தெரியாத நமக்கு வேண்டியதனைத்தையும் தரும்;
*பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நம்மை பெற்ற தாயைவிட நமக்கு நன்மைகளை செய்யும்;
*நலம் தரும் சொல்லை*
இப்படி எல்லா நன்மைகளையும் தருகின்ற திருநாமத்தை;
*நான் கண்டு கொண்டேன்*
திருமங்கை ஆழ்வாராகிய நான் நேரில் கண்டு கொண்டேன்;
*நாராயணா என்னும் நாமம்*
அது நாராயணா என்னும் திருநாமமே!!!

ravi said…
தகவல் உலா



*தினம் ஒரு குட்டிக்கதை* .

*வாய்ப்புகள் ஏராளம்...*

ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரை பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுவார்.
ravi said…
அவருடைய கை, கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்தியபோது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளியே வந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்தபோது அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அறைக்கதவை திறந்து வெளியே வந்தார்.

அவர் எப்படி இதனை செய்கிறார்? என்ன யுக்திகளை மேற்கொள்கிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது.

இதுவரை அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர்கூட தப்பித்தது இல்லை என்னும் சான்றும் பெற்றது அந்த சிறைச்சாலை. இதனை கேள்விப்பட்ட அந்த மாயாஜால கலைஞர் தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு வெளிக்காட்டுகிறேன் என்றும் கூறினார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை மூடினர். உள்ளே சென்று அவர் முதலில், தான் அணிந்திருந்த இடுப்பு பட்டையில் ஒளித்து வைத்திருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார்.

பின்னர் அந்த கம்பியை வைத்து கதவில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பூட்டை திறக்க முற்பட்டார். அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை.

தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவை கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார்.

*கதையின் நீதி:*

*நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில்* *வாய்ப்புகள் இல்லை என்று பூட்டு போட்டுக்கொண்டு* *உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறோம்.*

*வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளம். அந்த வாய்ப்புகளை தேடி நாம் சென்றோம் ** *என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும்.**

ravi said…
*💐💐💐🙏🏻🌹🌹"இன்றைய சிந்தனை.."*
……………………………

*'' எல்லாமே மாயை..''*
*................................*

இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.பதவி,பட்டம்,
அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித் தான்.

இவை சில நாள் மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும்.

நாட்கள் செல்லச் செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரை தான் உடல். காற்று வெளியே போய் விட்டால் நாம் பிணம்.

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள் தான் நாம்..இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள்..

சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான்.

சாவி கொடுத்தால் குரங்கு பொம்மை. ஆடும்.. டமாரம் தட்டும்.. தலையை ஆட்டும்,விசை இருக்கும் வரை தான் வேலையே செய்யும்..

ஒரு காவல்காரன். வழக்கம் போல் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் ”ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான்…
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போக வேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று….

அவன் பிள்ளை கொஞ்சம் வேள்வி ஞானம் உள்ளவன். இரவில் அவன் தப்பட்டை அடித்துக் கொண்டு ''ஜாக்கிரதை,ஜாக்கிரதை'' என்று சொல்லிக் கொண்டு தகப்பன் வேலையை செய்தான்…
அடுத்த நாள் ராஜாவே அந்தக் காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்.அந்தப் பையனைப் பார்க்கத் தான் வந்தான்.

”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ?, இங்கேயே தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுவாரோ .? காவல்காரன் மிகவும் நடுங்கினான்….

ஆனால் ராஜா அந்தப் பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?.

முதல் நாள் இரவு பையன், ” ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக் கொண்டு போகவில்லை..

சில வார்த்தைகள் சொன்னது தான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்கியங்கள் இவை தான்……

அடே தூங்கு மூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா, காசும் பொய்,வீடும் பொய் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை,. எல்லாம் மாயை..

இதை எல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள். பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக் கொள் ஜாக்கிரதை….

ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா . உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தைத் திருடுபவர்கள்.

விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே திருடர்களைத் தேடாதே.. உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள்,
ஜாக்கிரதை ஜாக்கிரதை…

மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம். நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள்,
இளமை, வாலிபம் நிரந்தரமல்ல..

நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை,

இதில் நீ என்ன? நான் என்ன?, எல்லாமே மாயை.. விழித்துக் கொள், ஜாக்கிரதை, ஜாக்கிரதை,.

*ஆம்.,தோழர்களே..*

*"உங்கள் புகழை, உங்கள் பதவியை*, *அதிகாரத்தை*
*ஒரு போதும்* *நம்பாதீர்கள்"*
*இது எதுவுமே வச்சநிரந்தரம் கிடையாது".*

*ஏற்றம் வரும் போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.*

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*


*DECLIVITY*

*(வீழ்ச்சி, கீழ் நோக்கிய சரிவு)*

meaning..... downward slope....


1.  Grandma has a hard time walking from her house to the lake due to her street’s slight *declivity.*


2.   Prominent signage is required along the bike path so that bikers are forewarned about any upcoming *declivity*.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

பணம் மட்டுமே
நிம்மதியை கொடுத்துவிடாது...
நிம்மதியை கொடுக்கும் சக்தி
மனம் ஒன்றுக்கு மட்டுமே உண்டு..!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

ஒரு கிண்ணம் தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்க்கவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசினால் பொடுகு உட்பட பல்வேறு பிரச்சனைகள் குணமாகும்.

📰 *நாளும் ஒரு செய்தி*

உடற்பயிற்சிகளில் எளிதானதும் சிறந்ததும் நடைப்பயிற்சியே ஆகும். நடைப் பயிற்சியால் நரம்புகள் வலுவடையும், தசைகளின் தொய்வு நீங்கும். எலும்புகள் உறுதியாகும்.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

எந்த வகை சாம்பார் செய்தாலும் நான்கு பச்சை வெங்காயத்தை கடைசியில் மய்ய அரைத்து சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
*-தாமஸ் புல்லர்*

📆 *இன்று டிசம்பர் 7-*

▪️ *கொடி நாள்.(இந்தியா)*

▪️ *1988-இல் 'யாசர் அராபத்' இஸ்ரேலை தனிநாடாக ஏற்றுக்கொண்டு அறிவித்தார்.*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
ravi said…
*கலர் கலராய் மிட்டாய் சாப்பிடும் குழந்தை பருவத்தில் தொடங்கி...!*

*கலர் கலராய் மாத்திரை சாப்பிடும் முதியோர் பருவத்தில் முடிகிறது வாழ்க்கை...!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
There is no outside force that can affect our life, unless we give that force power with our thoughts.



Investing is simple but not easy.



Position, power and prosperity are changeable; but principles, knowledge and truth are permanent.



Life is a long marathon. It requires lot of patience and perseverance for one to succeed.



When worries are turned into worship, battles are turned into blessings.



Believing in something provides a capacity to achieve it.



One hand of help, one word of sympathy, one act of humanity, one smile of charity and one sweet hello can change someone's mood and life.
ravi said…
VELA BOBBY



Sarbjeet Singh also known as Vela Bobby lives in Shimla. At the age of 45+ when most of people are fighting to climb the corporate ladder, he is busy setting up 'Chapati Banks' where Volunteers can deposit chapatis (Breads), so that the same can be distributed to the cancer patients their relatives and those who might not have the money to buy it.

Meet the person whose heart beats only to help others. He started all this when volunteering for a local gurudwara and realised the importance of blood for those in need. Over the years while Gurudwara stopped it, he continued with the drive having collected more than 25000+ units over the years. Even local hospital know his number and call him in emergency to get them requires blood.
ravi said…
He also has a van which he drives himself for carrying dead bodies without cost. One can call him at any odd hour and he won't refuse. Till now he has done it 6000+ times and is extremely satisfied man.


He also realised many poor don’t have money to buy food when they come for treatment so through his NGO he started feeding them. Initially it was only tea biscuit but now he provides Roti, Dal & Chawal.


His dream, there should be many Vela Bobby in India
ravi said…
Chanting of the Vishnu Sahasranama brings endless benefits. It sets us free from the fear of poverty, disease, birth, and death. We gain a higher consciousness that makes us understand God better, and towards introspection and meditation. Done with pure devotion and perseverance, the Vishnu Sahasranama bestows an abundance of blessings from God.
Today we debate many things whether they are scientific or religious – if one makes a deep dive one can find out all have roots with cosmic miracles. The First Shloka itself starts with Universe and Ecology
ravi said…
स्तोत्रम् ।
हरिः ॐ ।
विश्वं विष्णुर्वषट्कारो भूतभव्यभवत्प्रभुः ।
भूतकृद्भूतभृद्भावो भूतात्मा भूतभावनः ॥ १॥
stotram.
hariḥ oṃ.

viṣṇurvaṣaṭkāro bhūtabhavyabhavatprabhuḥ.
bhūtakṛdbhūtabhṛdbhāvo bhūtātmā bhūtabhāvanaḥ. 1..

Shloka 1:
1. Vishvam: He who is the Universe, reason for Universe, the entire being.
2. Vishnu: He who is All Pervading, Omnipresent, Remover of darkness
3. Vashatkara: One who controls and directs
4. Bhuta-Bhavya-Bhavat-Prabhu: Lord of past, present and the future.
5. Bhuta-Krit: Creator of all beings.
6. Bhuta-Bhrt: The sustainer of all beings.
7. Bhavah: He who exists with all the splendour and independent of anything else.
8. Bhutatma: The Atma or soul of all beings
9. Bhuta-bhavanah: One who nourishes and nurtures all beings.
Environment, nature, ecology - all interconnected with VSN. It is interesting to know how Vishnu’s dashavatar symbolically indicates the evolution of humankind in other words theory of evolution. One can conclude it is not scientific but only religious

ravi said…
The first avatar was the Matsya avatar, it means the *fish*.
That is because life began in the water.
Then came the *Kurma* Avatar, which means the tortoise, because life moved from the water to the land.
The amphibian!
So, the Tortoise denoted the evolution from sea to land.
Third avatar was *Varaha*, the wild boar, which meant the wild animals with not much intellect
The fourth avatar was *Narasimha*, half man and half animal, the evolution from wild animals to intelligent beings Fifth, the *Vaman* avatar, the midget or dwarf, who could grow tall.
There were two kinds of humans, Homo Erectus and Homo Sapiens and Homo Sapiens won that battle.
The Sixth avatar was *Parshuram*, the man who wielded the axe, the man who was a cave and forest dweller. Angry, and not social.
The seventh avatar was *Ram*, the first rational thinking social being, who practised and laid out the laws of society and the basis of human relationships.
ravi said…
The Eighth avatar was *Balarama*, a true farmer who showed value of agriculture in the life.
The Ninth avatar was Krishna, the statesman, the politician, the diplomat, the Ambassador, the sutile interpreter, the lover who played the game of society and taught how to live and thrive in the adharmic social structure.
And finally, my boy, will come Kalki, the man you are working on.
The man who will be genetically supreme."
Chanting or listening to Vishnu Sahasranama blindly will have no impact whatsoever. One will feel relieved of stress after chanting it, but that is just your brain releasing dopamine and oxytocin because you completed a difficult task of maintaining concentration for 30 or more minutes to chant those 1000 names. It was not the effect of Vishnu Sahasranama by itself.

Consider this following analogy, if I had 10 names and people called me by those 10 names daily, would it have any effect? Well, we might say, there is a difference,
I am mere human and Vishnu is a God. To that I say, God is present everywhere, in you and in me. So, chanting my name or yours for the matter should have an effect. But it doesn’t. Have you ever wondered why Bhishma chose to utter those 1000 names, and not any others like Hanuman, Parashuram, Indra. Because all those 1000 names point to the same thing.
Let me explain by example:

V
ravi said…
ishvam - first name uttered by Bhisma, which means Universe.
Vishnuh - Second name uttered, which means All Pervading. What is it that pervades (means to include) everything, Universe.

ravi said…
Vasudeva - Another name uttered down the line. It comes like Vasudevo BruhadBhanur … Vasu + Deva. Vasu = the 8 vasu (Apa (jala-varuna-water), Dhara (bhoomi-earth), Anala (paavaka-agni-fire), Anila (praana-vaayu-air), Dhruva (Nakshathra-star), Soma (Moon), Pratyuusha (Another name of Sun), Prabhaasa (light-brilliance-radiance)), Deva = Master.
Who is the master of the 8 Vasus? Universe? Narayana - This name comes like Saadhuh Jahnuh Narayano Naraha. Narayana = Nar + Aayana. Nar = life, Aayana = Living place. Which is the living place of life? Universe So, all those 1000 names point to one thing, The Universe. Once we understand this, the effect of Vishnu Sahasranama begins.
One can easily connect with Peace and harmony within the worldly turmoils.
Pancha Bhuta or Pancha Maha-Bhuta (Sanskrit: पञ्चभूत, पञ्चमहाभूत; pañca-mahā-bhūta), five great elements, also five physical elements, is a group of five basic elements, which, according to Hinduism, is the basis of all cosmic creation.[1] These elements are: Prithvi/Bhudevi (Sanskrit: पृथ्वी:, Earth), Apas/Varuna/Jala (Sanskrit: आपः, Water), Agni (Sanskrit: अग्नि, Fire), Vayu (Sanskrit: वायु:, Air), Akasha/Dyaus (Sanskrit: आकाश, Space/Atmosphere/Ether).[2] These elements have different characteristics and these also account for different faculties of human experience. VSN depicts thro various Namas the existence of Lord Vishnu as Pancha Bhuta. Ecology breathes by HIS grace and not keeping environment green we are not in rhythm with 1000 names or more of Lord Vishnu.
Conclusion
Vishnu Sahasranamam is the thousand divine names of supreme Lord Vishnu. These are some benefits of chanting the divine stotra: Reciting of this stotram with devotion and sincerity along with meaning helps in cleansing one’s mind from all evil thoughts. Recital of this stotra gives firmness of mind, happiness, freedom from jealously. Recital of this stotra helps a lot in curing of diseases. It is believed that Sage Vyasa concludes the Hymn with the following oath repeated twice:”
विश्वेश्वरमजं देवं जगतः प्रभुमव्ययम् ।
भजन्ति ये पुष्कराक्षं न ते यान्ति पराभवम् ॥ २२॥
viśveśvaramajaṃ devaṃ jagataḥ prabhumavyayam.
bhajanti ye puṣkarākṣaṃ na te yānti parābhavam. 22.

na te yAnti parAbhavam.na te yAnti parAbhavam”. “NEVER DO THEY MEET WITH ANY DISRESPECT. NEVER DO THEY MEET WITH ANY DISRESPECT”. So, those who chant this stotra will always be respected. This stotra gives prosperity to the one who recites it and protects ecology for the generations to come.


ईश्वर उवाच —
श्रीराम राम रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने ॥ २७॥
īśvara uvāca —
śrīrāma rāma rāmeti rame rāme manorame.
sahasranāma tattulyaṃ rāma nāma varānane. 27..

=====================================
ravi said…
The outside world is full of pain. Its experience is painful because that is its very nature. Our Maharishis of yore enjoyed unalloyed bliss by living in the forest. We can experience the same happiness by performing our duties cheerfully. The work we do on a day-to-day basis is the real tapas. This means executing our duties and obligations without a sense of individual doer-ship.
The Vishnu Sahasranamam (VSN) symbolizes health and represents the body.
There is no question that these namas of Bhagavan has lot of powers to cure all diseases. I read one incident (long back) where a devotee was asked to chant Vishnu Sahasranamam by Periyava as the devotee did not learn Veda etc and felt bad that he missed the bus. With Periyava’s kind direction, he started chanting Vishnu Sahasranamam daily. At one point it became a penance – he did nothing but this with utmost sincerity. In his deathbed, Sri Mahavishnu Himself gave darshan for this devotee before he left this world! This was witnessed by all the relatives who were at his last hours.
Vishnu Sahasra Nama is a Sanskrit hymn that contains a list of 1000 names of Lord Vishnu written by the Scholar Sage Vyasa. Ayurveda emphasizes the importance of mantras in the healing of diseases, restoring mental balances and creating a positive impact. From the Vedic period, our ancestors have relied on the healing power of Mantras.
In India, mantras play an incredibly significant role in our lives right from birth to the last breath. It begins with Jaatakarma reciting mantras in a new-born’s right ear, requesting the gods to protect the baby. Charaka mentions the recitation of Vishnu Sahasra Nama “in the treatment of Jwara (Fever). In fact, the VSN is the only spiritual hymn mentioned in Ayurveda. Other than VSN no other mantras, shlokas, Stotras of spiritual importance are mentioned in the Ayurvedic texts.
Mantras are Sanskrit words loaded with power and sounds that penetrate the deep levels of consciousness. The unique sounds and vibrations have a deep impact on our thought, action, environment, and the universe. Reciting VSN promotes positive thinking and makes one more optimistic about any situation. Each recitation brings about a positive change in one’s consciousness and restores peace of mind. It promotes self-realization and brings an awareness that restores peace of mind.

Research studies say VSN chanting is beneficial for people who are suffering from Insomnia or see bad dreams. clinical studies also say that chanting VSN helps restore peace of mind. Chanting VSN calms the mind, sharpens focus, and strengthens inner energies. It also helps children improve their learning power. In another study, researchers observed the effectiveness of VSN for stress management. The participants chanted VSN everyday at 8am for 12 weeks. After that, their cortisol levels and blood pressure levels were checked, the results concluded that depression, anxiety, stress, and cortisol levels were significantly decreased. Further their blood pressure was regulated within normal limits,
ravi said…
VSN indeed gives a package of benefits if it chanted with sincerity and dedication. A few of ailing problems ceased to many who chanted VSN with total dedication
 Strengthening Spinal cord
 Alleviating stomach issues, anxiety, and panic
 Fighting fatigue
 Improving concentration
 Keeping negativity at bay
 Combating stress
 Controlling anger
 Treating depression
 Managing BP
 Fastening healing
 Boosting immunity

Recent research on the efficacy of VSN namas has revealed, such mantras attune the body, mind, and breath. Sound energy is generated, and the vibrations of that energy awaken the chakras along the spinal column. These vibrations get diffused into the physical nervous system and the 72000 naadis (bundles of tubular vessels) that are part of the psychic nervous system. The phonetics of these namas stimulates multiple reflex points and awaken the dormant parts of the brain. VSN enhances the circulation and flow of energy throughout the body. Chanting a thousand names of Sri Hari Vishnu frees one from fear and brings goodness, bliss, and peace.

There are specific shlokas for specific ailment that is the beauty in VSN. But chanting whole without resorting to any shortcuts will yield permanent results
ravi said…
1. (Overcome the family problems of tensions, anxieties, disagreements)

उदीर्णः सर्वतश्चक्षुरनीशः शाश्वतस्थिरः ।
भूशयो भूषणो भूतिर्विशोकः शोकनाशनः ॥ ६७॥
udīrṇaḥ sarvataścakṣuranīśaḥ śāśvatasthiraḥ.
bhūśayo bhūṣaṇo bhūtirviśokaḥ śokanāśanaḥ. 67.
2. (Aspire for the welfare of everyone in the family and the well being of everyone)

अजो महार्हः स्वाभाव्यो जितामित्रः प्रमोदनः ।
आनन्दो नन्दनो नन्दः सत्यधर्मा त्रिविक्रमः ॥ ५६॥

ajo mahārhaḥ svābhāvyo jitāmitraḥ pramodanaḥ.
ānando nandano nandaḥ satyadharmā trivikramaḥ. 56..

अनिवर्ती निवृत्तात्मा सङ्क्षेप्ता क्षेमकृच्छिवः ।
श्रीवत्सवक्षाः श्रीवासः श्रीपतिः श्रीमतांवरः ॥ ६४॥

anivartī nivṛttātmā saṅkṣeptā kṣemakṛcchivaḥ.
śrīvatsavakṣāḥ śrīvāsaḥ śrīpatiḥ śrīmatāṃvaraḥ. 64..

3. (For all the problems of eyesight and eye related problems, defects in vision)
4.
अग्रणीर्ग्रामणीः श्रीमान् न्यायो नेता समीरणः ।
सहस्रमूर्धा विश्वात्मा सहस्राक्षः सहस्रपात् ॥ २४॥

agraṇīrgrāmaṇīḥ śrīmān nyāyo netā samīraṇaḥ.
sahasramūrdhā viśvātmā sahasrākṣaḥ sahasrapāt. 24..

5. (For curing all stomach problems and stomach related ailments)

भ्राजिष्णुर्भोजनं भोक्ता सहिष्णुर्जगदादिजः ।
अनघो विजयो जेता विश्वयोनिः पुनर्वसुः ॥ १६॥

bhrājiṣṇurbhojanaṃ bhoktā sahiṣṇurjagadādijaḥ.
anagho vijayo jetā viśvayoniḥ punarvasuḥ. 16..

ravi said…
6. (Get rid of all ailments, diseases)

स्तव्यः स्तवप्रियः स्तोत्रं स्तुतिः स्तोता रणप्रियः ।
पूर्णः पूरयिता पुण्यः पुण्यकीर्तिरनामयः ॥ ७३॥
stavyaḥ stavapriyaḥ stotraṃ stutiḥ stotā raṇapriyaḥ.
pūrṇaḥ pūrayitā puṇyaḥ puṇyakīrtiranāmayaḥ. 73..

7. (Get well soon for those who are seriously, critically ill /hospitalized)

ईशानः प्राणदः प्राणो ज्येष्ठः श्रेष्ठः प्रजापतिः ।
हिरण्यगर्भो भूगर्भो माधवो मधुसूदनः ॥ ८॥
īśānaḥ prāṇadaḥ prāṇo jyeṣṭhaḥ śreṣṭhaḥ prajāpatiḥ.
hiraṇyagarbho bhūgarbho mādhavo madhusūdanaḥ. 8..

अच्युतः प्रथितः प्राणः प्राणदो वासवानुजः ।
अपांनिधिरधिष्ठानमप्रमत्तः प्रतिष्ठितः ॥ ३५॥
acyutaḥ prathitaḥ prāṇaḥ prāṇado vāsavānujaḥ.
apāṃnidhiradhiṣṭhānamapramattaḥ pratiṣṭhitaḥ. 35..

वैकुण्ठः पुरुषः प्राणः प्राणदः प्रणवः पृथुः ।
हिरण्यगर्भः शत्रुघ्नो व्याप्तो वायुरधोक्षजः ॥ ४४॥
vaikuṇṭhaḥ puruṣaḥ prāṇaḥ prāṇadaḥ praṇavaḥ pṛthuḥ.
hiraṇyagarbhaḥ śatrughno vyāpto vāyuradhokṣajaḥ. 44..


Conclusion
The miracles that could happen to anyone in chanting VSN daily with a dedicated mind cannot be explained adequately but to be experienced that bliss. VSN is the great gift to all of us from Bhishma Pitamaha whose words were sculpted wonderfully as a yoga book by great Vedavayasa. We are all immensely blessed as all our problems find one stop solution in chanting VSN
Phalashruti

रोगार्तो मुच्यते रोगाद्बद्धो मुच्येत बन्धनात् ।
भयान्मुच्येत भीतस्तु मुच्येतापन्न आपदः ॥ ८॥
rogārto mucyate rogādbaddho mucyeta bandhanāt.
bhayānmucyeta bhītastu mucyetāpanna āpadaḥ. 8..
[ All diseases will disappear for sure !!!]
ईश्वर उवाच —
श्रीराम राम रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने ॥ २७॥
īśvara uvāca —
śrīrāma rāma rāmeti rame rāme manorame.
sahasranāma tattulyaṃ rāma nāma varānane. 27..
==========================================
ravi said…
உங்களை தவிர வேறு யாரும் உங்களுக்கு அமைதியை தர முடியாது.
- பகவத் கீதை.

தன்னுடைய செயலும் வார்த்தைகளும் மட்டும் தான் சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில் உங்கள் அமைதியை மட்டும் ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வாறு பேசக் கற்றுக் கொள்கிறீர்களோ அதேபோல் மௌனத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.

பேச்சு உங்களுக்கு வழிகாட்டலாம், ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில் மௌனம் உங்களைப் பாதுகாக்கும்.

மெளனம் சிலருக்கு கோபத்தின் வெளிப்பாடு, சிலருக்கோ
நிரந்தரமான சுதந்திரம்.
- (ப/பி

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அவருக்குப் (பிரம்மா)பூஜை இல்லாமலிருப்பதற்கு ஒரு காரணம் சொல்வார்கள்.

பரமேச்வரன் ஜ்யோதிர்மயமான லிங்கோத்பவ மூர்த்தியாக ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நின்றார். அந்த ஜ்யோதிஸ் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்று தேடிக்கொண்டு ப்ரஹ்மாவும் விஷ்ணுவும் போனார்கள். ‘நம் இரண்டு பேரில் யார் இதன் அடியையோ முடியையோ கண்டு பிடிக்கிறார்களோ அவரே பெரியவர்’ என்று பந்தயம் கட்டிக் கொண்டு போனார்கள். இப்படிப் புறப்படுகிறபோதே ப்ரஹ்மாவுக்கு, ‘அடிப்பாகத்தைப் போய் நாம் தேடுவதா?’ என்று அஹந்தை உண்டாயிற்று. அதனால், ‘நான் முடியைத் தேடுகிறேன்’ என்று ஹம்ஸபக்ஷியின் ரூபத்தை எடுத்துக்கொண்டு உயரே தேடிக்கொண்டு போனார். மஹாவிஷ்ணு எளிமையாக அடியைத் தேடிக்கொண்டு வராஹ ரூபத்தில் போனார்.

இரண்டு பேரும், ஒருத்தர் மேலேயும், ஒருத்தர் கீழேயுமாக, எவ்வளவு தூரம் போய் ச்ரமப்பட்டும் முடியாவது அடியாவது தெரிகிற அடையாளத்தையே காணோம்.

இனிமேலே முடியாது என்று களைத்துப்போய்த் திரும்பி விட்டார்கள். ஆனால் திரும்பின பிறகு மஹாவிஷ்ணு தம்மால் அடியைப் பார்க்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டார். ப்ரஹ்மாவோ முடியைப் பார்த்துவிட்டதாகப் பொய் சொன்னார்.

ravi said…
அப்போதுதான் ஜ்யோதி ஸ்வரூபத்திலிருந்து பரம சிவன் வெளிப்பட்டு, ‘பொய் சொன்ன ப்ரம்மாவுக்கு இனிமேல் பூஜையே நடக்காமல் போகட்டும்’ என்று சபித்து விட்டார்; அந்தப்படியே இப்போதும் நடந்துவருகிறது – என்று கதை சொல்கிறார்கள். நான் (கதையின்) அவுட்லைன் மட்டும்தான் சொன்னேன்.

ravi said…
நிஜத்தைச் சொன்ன விஷ்ணுவுக்குப் பரமசிவன் சக்ரம் தந்தார், தம்முடைய உடம்பிலேயே இடது பாகத்தைக் கொடுத்தார் என்றெல்லாம் சொல்வார்கள்.

பரமேச்வரனின் முடியைத் தேடித் தேடிப் போனவரின் கோயிலையும் இன்று நாம் தேடிப் தேடிப் பார்க்கும்படி இருக்கிறது!

ஆனால் இது சைவமான கதை. சைவர்கள் சொல்கிற கதை. வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். வருத்தப்படுவார்கள். ஆக்ஷேபிப்பார்கள்.

ப்ரஹ்மா தப்புப் பண்ணியதாக இன்னம் சில கதைகளும் உண்டு. கண்டியூர் கதைகூட அப்படித்தான். இல்லாவிட்டால் அவருக்கு ஆதியில் இருந்த ஐந்து தலைகளில் ஒன்றை ஈச்வரன் எதற்காக கொய்ய வேண்டும்? இதுவும் சைவமான கதைதான்.

ravi said…
விஷ்ணு கோயில்களிலேயும் ஏன் ப்ரம்மாவுக்கு ஸந்நிதி இல்லை? வைஷ்ணவர்கள் உட்பட ஸகல ஹிந்துக்களுந் தானே ப்ரம்மாவுக்கு வழிபாடில்லாமல் வைத்திருக்கிறார்கள்? சிவ ஸுதர்களான விக்நேச்வரருக்கும், ஸுப்ரஹ்மண்யருக்கும் ஜாம் ஜாமென்று பூஜை, உத்ஸவம் நடக்கிறது போல விஷ்ணுவின் ஸுதரான ப்ரஹ்மாவுக்கு ஏன் இல்லை?

ravi said…
ப்ரஹ்மாவுக்கு வழிபாடு இல்லாததற்கு வைஷ்ணவர்கள் ஏதாவது கதை, காரணம் சொல்கிறார்களோ என்று தெரியவில்லை. “இப்போது ஞாபகம் வரவில்லை” எனக் கூறும் ஸ்ரீசரணர்கள் பிற்பாடு ஞாபகம் வந்து கூறியது:

ravi said…
த்ரிமூர்த்திகளில் யார் சுத்த ஸத்வ மூர்த்தி என்று ப்ருகு மஹர்ஷி பரீக்ஷித்துப் பார்த்து விஷ்ணுதான் அப்படிப்பட்டவர் என்று தீர்மானம் பண்ணினதாக வைஷ்ணவமான புராணங்களில் ஒரு கதை , ஒன்றுக்கொன்று கொஞ்சம் வித்யாஸமாகச் சொல்லியிருக்கிறது. அவற்றில் ஒன்றின்படி, ப்ரஹ்மாவும் ஈஸ்வரனும் ‘நான்தான் சுத்த ஸத்வமூர்த்தி’, ‘நான்தான் சுத்த ஸத்வமூர்த்தி’ என்று பாத்யதை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மஹாவிஷ்ணு அப்படி எதுவும் சொல்லாமல் வைகுண்டத்தில் ராஜ்யபாரம் பண்ணிக் கொண்டிருந்தார். சுத்த ஸத்வம் என்றால் என்ன எதிரிடையான சூழ்நிலையிலும் மனஸ் கொஞ்சங்கூட மாறாமல் ஒரே அன்பு உணர்ச்சியிலேயே சாந்தமாக அடங்கி இருந்து கொண்டிருக்க வேண்டுமாதலால், அதை டெஸ்ட் பண்ணுவதற்காக ப்ருகு எந்த ஸ்வாமியானாலும் அவருக்குக் கோபம் ஏற்படும்படி, வேண்டுமென்றே அவருடைய இருப்பிடத்திற்குக் கொஞ்சங்கூட மரியாதையே காட்டாமல் அமர்க்களப்படுத்திக் கொண்டு போனார். இவர் அமர்க்களப்படுத்திக் கொண்டு போனதில் ப்ரஹ்மா கோபப்படவில்லை.
ravi said…
ஆனால் இவரை ‘வாங்கோ!’ என்று வரவேற்கவுமில்லை. இவர் தாமாகவே ஒரு ஆஸனத்தை இழுத்துப் போட்டுக்கொண்டு ப்ரஹ்மாவுக்கு ஸமதையாக உட்கார்ந்து கொண்டார். அவருக்கு உடனே கோபம் வந்துவிட்டது. “கோபத்துக்கு இடம் கொடுக்கிற நீர் உம்மை சுத்த ஸத்வமூர்த்தி என்று எப்படி சொல்லிக் கொள்ளலாம்?” என்று ப்ருகு கேட்டார். ப்ரஹ்மாவுக்குக் கோபம் இன்னும் ஜாஸ்தியாகி,”அப்படித்தான் சொல்லிக்கொள்வேன்” என்றார். அப்போதுதான் ப்ருகு, “உமக்கு ஆலயமே இல்லாமல் போகக் கடவது!” என்று சபித்தாராம்.

ravi said…
அதற்கப்புறம் ப்ருகு மஹர்ஷி கைலாஸத்துக்குப் போய், சாந்தமாக இருந்த ஈஸ்வரனை ஒரேயடியாகச் சீண்டியதில் அவர் இவரை சூலாயுதத்தாலேயே குத்த வந்தாராம்.அப்போது இவர்,”உம் ரூபத்துக்கு ஆலயத்தில் பூஜை இல்லாமல் அதற்குப் பதில் ஒரு கல் உருண்டையைப் பூஜை பண்ணட்டும்!” என்று சபித்ததாகவும், அதனால்தான் சிவன் கோயில் மூலஸ்தானத்தில் லிங்கத்தை வைப்பதாக ஏற்பட்டது என்றும் ஒரு கதை! வாஸ்தவத்தில் லிங்கம் என்பது ஜ்யோதிஸுக்கு அடையாளம்; ஆரம்பமும் முடிவும் சொல்ல முடியாத பரப்ரஹ்மத்துக்கு அடையாளம்; ரூபமாயும் இல்லாமல் அரூபமாயும் இல்லாமல் இருக்கிற ‘அருவுருவம்’ என்கிற உசந்த தத்வம். ஆனாலும் விஷ்ணு பரத்வத்தையே சொல்லவந்த கதையானதால் இப்படிச் சொல்லியிருக்கிறது!

ravi said…
கடைசியாக ப்ருகு வைகுண்டத்துக்குப் போய் சயனத்தில் இருந்த மஹாவிஷ்ணு தன்னைக் கவனிக்கவில்லை என்பதால்,… சொல்லவே கஷ்டமாயிருக்கிறது…. அவருடைய வக்ஷஸ்தலத்தின் மேலேயே ஓங்கி ஒரு உதை விட்டாரென்றும், பெருமாளோ அப்போதும் பரம சாந்தத்துடனும் ப்ரேமையுடனும், ‘உங்கள் கால் வலிக்கப்போகிறது!’ என்று சொல்லிக்கொண்டு ப்ருகுவின் பாதத்தைப் பிடித்துவிட்டாரென்றும், அவர்தான் சுத்த ஸத்வமூர்த்தி என்று ப்ருகு தீர்மானம் பண்ணினதாகவும் கதை போகிறது.

ravi said…
இப்படி விஷ்ணு பரத்வம் சொல்லவந்த புராணங்களிலும் ப்ருகு சாபத்தால் ப்ரஹ்மாவுக்கு ஆலய வழிபாடு கூடாது என்று ஆனதால்தான் வைஷ்ணவர்களும் அப்படியே பண்ணுகிறார்கள் என்று தோன்றுகிறது.

ravi said…
ச்ருதியிலேயே (வேதத்திலேயே) உள்ள ப்ராஹ்மணங்கள் என்ற பிரிவுகளில் ப்ரஜாபதி தப்புப் பண்ணியதாகக் கதை இருக்கிறது. ப்ரஜாபதி என்பது ப்ரஹ்மாதான்.
ravi said…
ஸகல ஹிந்துக்களுக்கும் வேதம் ஆதாரமாக இருப்பதால் அந்த ப்ராஹ்மணக் கதை காரணமாகவே வைஷ்ணவர்கள் உள்பட எல்லோரும் அவரது வழிபாட்டை நிறுத்திவிட்டார்களென்று சொல்லலாமென்று பார்த்தால், அதுவும் ஸரியாய் வரவில்லை. வேத காலத்திற்கு அப்புறம் வெகுநாள்வரை ப்ரம்மாவுக்கு வழிபாடு நடந்துதான் வந்திருக்கிறது.
ravi said…
கஷ்டம் என்றால் தேவர்கள் அவரிடம்தான் முதலில் ஓடி இருக்கிறார்கள். அஸுர, ராக்ஷஸரில் பலரும் அவரைக் குறித்துத் தபஸிருந்தே பெரிய வரங்கள் பெற்றிருக்கிறார்கள். முழுமுதல் தெய்வமாக அவர் வணங்கப்பட்டதாக தெரியாவிட்டாலும், முக்ய தேவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டிருக்கிறார். அப்புறம்தான் இது அப்படியே நின்று போய் விட்டதாகத் தெரிகிறது. வைஷ்ணவர்களும் ஏன் நிறுத்திவிட்டார்கள்?

ravi said…
நாம் பொழுது விடிந்தால் நூறு தப்புப் பண்ணிக் கொண்டிருக்கும்போது, ப்ரஹ்மா போன்றவர்கள் தப்புப் பண்ணிய கதையைச் சொல்லவே பிடிக்கவில்லை. “சாமியாம், இப்படித் தப்புப் பண்ணித்தாம்!” என்று நாஸ்திகர்கள் கேலி செய்வது இவற்றைக் காட்டித்தான். அதனால் சைவமாகப் பார்த்தது போதும். வைஷ்ணவமாக வேறு துருவ வேண்டாமென்று தோன்றுகிறது.

ஒன்று வேண்டுமானால் சொல்லலாம்.
ravi said…

(அது) என்ன?

விஷ்ணுவுக்கு ஒரு பிள்ளை ப்ரம்மா. இன்னொரு பிள்ளை உண்டு. அவர்தான் மன்மதன். இரண்டு பேரும் லக்ஷ்மியின் ஸம்பந்தமில்லாமலே பிறந்தவர்கள். ப்ரம்மா விஷ்ணுவின் நாபிகமலத்தில் உண்டானார். மன்மதனை அவர் மானஸிகமாக ஒரு பிள்ளை உண்டாகட்டும் என்று மனஸினால் நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ருஷ்டித்துவிட்டார்.
ravi said…
அதனால் அவருக்கு மனஸிஜன் என்று பெயர் வந்தது. ப்ரம்மா கமலஜர். மூன்றாவது பிள்ளையாக மஹாவிஷ்ணு மோஹினி ரூபத்தில் சிவனிடம் பெற்ற சாஸ்தா இருக்கிறார். அவருக்குப் பூஜை இருக்கிறது. பெரிசாக வ்ருத்தியாகியும் வருகிறது. ப்ரஹ்மாவுக்குப் பூஜை இல்லை. மன்மதனுக்கும் இல்லை.

இதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது. மன்மதன், ப்ரஹ்மா இருவருமே ஒரு ஜீவன் ஜன்மா எடுப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள்தானே? புத்ரோத்பத்திக்குக் காரணமான வேகத்தை மன்மதன் உண்டாக்குகிறான். அப்புறம் எந்த ஜீவன் எந்த பிண்டத்தில் புகுந்துகொள்ள வேண்டுமென்று பார்த்து ப்ரஹ்மா ஜன்மாவைக் கொடுக்கிறார்.

அத்தனை கஷ்டமும் நாம் ஜன்மா எடுத்ததால்தானே தெரிகிறது? ஸகல ஸமயாசாரங்களும், ஸாதனைகளும் ஜன்ம நிவ்ருத்தி என்ற ஒன்றுக்காகத்தானே இருக்கிறது?

இதனால்தான் ஜன்மா ஏற்படக் காரணமான ப்ரஹ்மாவுக்கு வழிபாட்டில்லாமலாயிருக்கிறதென்று தோன்றுகிறது. மன்மதனுக்கும் இதே காரணம்தான்.
ravi said…
கூடுதலாக இன்னொன்றும்: எல்லா வேகங்களிலேயும் மஹா பொல்லாததாக, வெறிப்பிடித்ததாக இருப்பதை உண்டாக்கி ஜீவனை அலைக்கழிப்பவன் அவன்தானே? ஆனால் அவனைப் பற்றி இப்போது கேள்வியில்லை.
ravi said…
பேச்சுவாக்கில் அவன் விஷயம் வந்துவிட்டது. குருவை மும்மூர்த்தியாகவும் சொல்லியிருக்கிறதென்று பார்த்ததில் முதல் மூர்த்தியான ப்ரஹ்மாவைப் பற்றிதான் விசாரித்துக் கொண்டிருந்தோம்.

கஷ்டத்துக்கெல்லாம் காரணமான பிறவிக்கு அவர் காரணமாயிருக்கிறாரே என்பதால்தான், ‘இவருக்கென்ன வழிபாடு?’ என்று கோபித்துக் கொண்டு நிறுத்திவிட்டோமோ என்னவோ என்று சொன்னேன்.

ravi said…
பூர்வ காலங்களிலும் அவர்தானே ஸ்ருஷ்டிகர்த்தா? அப்போதெல்லாம் அவருக்கு நிரம்ப மரியாதை நடந்திருப்பதாகச் சொன்னீர்களே!’ என்று கேட்டால், அந்தப் பூர்வ காலங்களில் இத்தனை அதர்மமும், பாபமும், அதனால் விளையும் கஷ்டங்களும் – இயற்கை உத்பாதங்கள் என்பவை கூட மனிதர்கள் செய்கிற பாபத்தின் விளைவாக ஏற்படுபவைதான்.
1 – 200 of 333 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை