ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 29 அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- பதிவு 36

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 36

29  अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता

 அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா --



அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா
காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா 12
( 29 & 30) 💐

அம்பாளின் முக அழகை ஈசன் ஒரு நாள் ரசிக்க நினைத்தானாம் .


தினம் ரசிப்பவன் தான் அன்று கொஞ்சம் கூடுதலாக ரசிக்க ஆசைப்பட்டான் ..

முகத்தை கையில் ஏந்தினால் நாணம் எனும் மேகங்கள் அந்த முழு நிலவை ரசிக்கும் படி விடுவதில்லை .

கண்களை பார்த்தால் அங்கே விழிகள் ஒரு இடத்தில் நிற்காமல் மீன் போல அங்கும் இங்கும் அலை பாய்ந்தனவாம் ... 



சரி நெற்றியை ரசிப்போம் என்றால் அதுவோ தன் தலையில் உள்ள பிறைச் சந்திரன் போல் இருந்து ஈசனை ப்பார்த்து கேலி செய்ததாம்  

புருவங்களை ரசிப்போம் என்றால் அதுவோ மன்மதன் இருக்கும் வீட்டின் வாசல் தோரணமாய் உள்ளது .. 

ஈசனுக்கு பரம விரோதி மன்மதன் அதனால் ஈசன் புருவங்களை பார்ப்தை தவிர்த்தானாம்

நாசியை ரசிப்போம் என்றால் அதில் வெளி வரும் சுவாசம் உள்ளிழுக்கும் வாசம் தன் பெயரையே சொன்ன வண்ணம் உள்ளது .. அதனால் ஈசனுக்கு வெட்கம் கூடி விட்டதாம் 

சரி செவிகள் ... அங்கே சூரியனும் சந்திரனும் தாடங்கமாய் இருக்கிறார்கள் 

*No Privacy* 😰

சரி உதடுகள் ... 

அதுவோ மதுரம் தனை சுரந்தவண்ணம் உள்ளது .. 

அதிகமாக சுவைத்தால் அன்னையின் அழகை பார்க்காமல் உறக்கம் வந்து விடும் ... ஈசன் அங்கே உறங்க விருப்பம் இல்லை 

சரி பற்கள் ... 

32ம் அவன் திருநீறு தனை குறிக்கும் அளவில் அதி வெண்மையாக உள்ளதாம் அதனால் அந்த காந்தியில் அவன் மூன்று  கண்களும் கூசியதாம் ...

சரி எப்படி பார்த்தால் அன்னையின் முகம் முழுவதையும் பார்க்க முடியும் ?

ஈசனுக்கு அழுகையே வந்து விட்டதாம் 

அங்கே அம்பாளின் முகவாய் ஈசனை பார்த்து சிரித்ததாம் .. 

என்னை பிடித்துக்கொண்டு அன்னையின் திரு முகத்தை முழுதும் ரசிக்கலாமே என்றதாம் 

துள்ளி குதித்த ஈசன் அன்னையின் முகவாயை ஒரு கையால் பிடித்து அவள் பூர்ண அழகை ரசித்தானாம் ... 

அவ்வளவு சிறப்பு வாய்ந்த திருநாமம் 

அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா --*🙏🙏🙏🙏🙏

சிபுகம் என்பது முகவாய். யாராலும் ஒப்பிட்டுச் சொல்லமுடியாத முகவாயின் அழகோடு பிரகாசிப்பவள்.



அனா-அகலித -மதிப்பிடமுடியாதபடி - ஒப்பிட முடியாத 

சாத்ருஷ்ய = ஒப்புமை - சாயை 

சிபுக = தாடை 

ஸ்ரீ விராஜிதா = அழகுற அமைந்திருத்தல் 

29 அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா = விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்



                               👌💐👌👌👌👌👌👌👌👌

சௌந்தர்ய லஹரி 

19. காமகலா த்யானம்

காமஜயம்

20. சந்திரகாந்தப் பிரதமை போன்ற வடிவம்

ஸர்வ விஷ ஸர்வ ஜ்வர நிவாரணம்

21. மின்னல் கொடி போன்ற வடிவம்

ஸர்வ வசீகரம், ஸர்வாஹ்லாதகரம்

22. ஸ்தோத்ர மஹிமை

ஸர்வஸித்தி

23. சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்

ஸர்வ ஸம்பத்து

24. தேவியின் புருவ அமைப்பு

ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்

25. தேவி பூஜையில் மும்மூர்த்தி பூஜையும் அடக்கம்

உன்னதப் பதவியும் அதிகாரமும்

26. பராசக்தியின் பாதிவ்ரத்ய மஹிமை

அகத்திலும் புறத்திலும் சத்துருக்களின் அழிவு

27. சமயாசார மானஸிக பூஜை

ஆத்ம ஞான சித்தி



                                                                     👌👌👌👌👌



Comments

ravi said…
இதற்குப் பொருள், “எந்தப் பொருளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு”. அதாவது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும். எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார். கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று அவர்களின் பி.எச்.டியை வைத்துக்கொண்டு கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

ravi said…
நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. நம் அறிவு என்பது எவ்வளவு சின்னது என்று ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré, "சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார். இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. அதனால் நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :

ravi said…
இன்று தூங்கி நாளை எழுந்துகொள்ளும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...உங்கள் அப்பா, அம்மா, நாய்குட்டி, விடு, கோயில், செடி, தட்டு, அரிசி, பேனா, பென்சில், சட்டை, அணுக்கள், நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில்,
ஏன், நீங்கள் என....
உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

மறுநாள் காலை நீங்கள் எழுந்த பிறகு எல்லாம் பெரிசாகிவிட்டது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...
முடியாது என்கிறார் Jules henri. அவ்வளவு தான் நம் அறிவு.

சாதாரணமாக இதையே #அளக்க முடியாதபோது பெருமாளை இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.

ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

- திருப்பாணாழ்வார்

எழு உலகையும் உண்டு ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது உலகை உண்ட பிறகு அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.

கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம். அதே போல மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.

( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )

எப்படி என்று இதை எல்லாம் யோசிக்கவே முடியாது. முயற்சியும் செய்யாதீர்கள்.! இது தான் அகடிதகடனா சாமர்த்தியம். (லிஃப்கோ தமிழ் அகராதியில் - “perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள். ).

நம் இரைப்பையில் ‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா.? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.! ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.! இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.? பேன் தலையில் இருந்தால் அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம். இச்சிங்கோ, டச்சிங்கோ நாம் அதை உணர்வது எப்படி.? உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது.

நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும். தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம். ‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் என்றாவது எனக்கு ’அறிவு இல்லை, அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை, காரணம் நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.

#யாதுமாகி நிற்பவன் அவனே...

அவனின்றி ஓர் #அணுவும் அசையாது.

#ஸர்வம்_கிருஷ்ணார்பனம்.✨👌👌👌👌
ravi said…
*"ஸ்ரீமடம் நிர்வாகப் பொறுப்பில் நம் பெரியவா இருந்த காலம் வரை, அந்த மாபெரும் மாளிகை ஶ்ரீமடத்துக்கு ஸொந்தமாகவில்லை."*

*சென்னையில் மிக ப்ரபலமான ஹோட்டல் நடத்தும் ஒருவர், ஶ்ரீமடத்தில் ரொம்ப பக்தி உள்ளவர். பொது வாழ்விலும் மிகச் சிறந்த பேர் பெற்றவர். லக்ஷக்கணக்கில் ஸொத்து* .

*1958-ல் பெரியவா* *சென்னையில் முகாம்* .

*இந்த* *ஹோட்டல் முதலாளி *பெரியவாளிடம் வரும்போதெல்லாம் மறக்காமல் ஒரு ப்ரார்த்தனையை வாய்விட்டு சொல்வார்* ...

" *பெரியவாளுக்கு* *பாதபூஜை பண்றதுக்கு, அடியேனுக்கு பெரியவா.... அனுக்ரஹம் பண்ணணும்** "

" *அப்றம் பாக்கலாம்* "

*எத்தனை முறையானாலும், இதுதான் பெரியவாளின் பதிலாக இருந்தது* .

*ஸம்மதமும் இல்லை* , *மறுப்பும் இல்லை.*

இதை *பற்றித் தெரிந்த ஒரு பாரிஷதர், அந்த ஹோட்டல்காரருக்காக பெரியவாளிடம் பரிந்தார்* ..

" *பெரியவா.....அவர்* *ரொம்ப நல்லவர்* .... *நெறைய தான தர்மம் பண்றவர். மடத்துக்கும் நெறைய பண்றார். கொழந்த குட்டி இல்ல.... அவருக்கு* ........"

*"ஸெரி.... இப்போ* *அதுக்கென்ன* ?..."

" *இல்ல* *..... ரொம்ப நாளா பெரியவாளுக்கு பாதபூஜை பண்ணணுன்னு கேட்டுண்டு இருக்காரேன்னு* ...."

*பெரியவா* *ஶாந்தமாக *பதில் சொன்னார்*

" *பாரு..... அவன்* *நல்லவன், தர்மஶீலன், பக்தன்...ங்கறது எனக்கு தெரியும். நா... அவனப் பத்தி யார்கிட்டயாவது தூஷிச்சு இருக்கேனா* ?"

" *இல்ல பெரியவா... மடத்துக்கு ஏதாவது பண்ணனும்னு ஆசைப் படறார்* . *அவரோட பெரிய அரண்மனை மாதிரி இருக்கற பங்களாவையே மடத்துக்கு எழுதி வெக்கறேங்கறார்** ...!"

" *அதத்தான்* ஏன் *?...ங்கறேன்! அவன்* *தர்மஶீலன்..ன்னு* *சொல்றேள். நெறைய கோவில்களுக்கு, தன்னால முடிஞ்சதை, நெறைய செய்யட்டுமே* ! நா *... வேணான்னு சொல்லலியே! மடத்துக்கு குடுத்தாலும் அதே* *தர்ம *கார்யங்களுக்குத்தானே செலவாகப் போறது? அந்த தர்மத்தை.... அவனே டைரக்டாப் பண்ணலாமே* ?........"

*பெரியவா கொஞ்ச* *நேரம்* *மௌனமாக இருந்து விட்டு, ஒரு மஹா ஸத்யோபதேஸத்தை, அந்த ஹோட்டல்** *முதலாளியை முன்னிட்டு, அத்தனை பேருக்குமாக ப்ரகடனமாக கூறினார்* .

" *அதோட, அவன்* *ப்ராஹ்மணன்* . *வேதபாராயணம் பண்ண வேண்டியவன்! வேதத்தால மட்டுமே ஜீவனம் பண்ண வேண்டியவன்..! ஆனா* ... *அன்னத்தை வித்துண்டிருக்கான்.! மஹாபாபம்! இவனோட ஸொத்தெல்லாம் அன்ன விக்ரியத்தால ஸம்பாதிச்சதுதானே* ?..

*அந்தப்* *பணம் 'நம்ம சந்த்ரமௌலீஶ்வரருக்கு' வேணாம்! அப்டிப்பட்ட பணம் தேவையா?ன்னு சொல்லுங்கோ* ....."

*ஒருத்தருக்கும் பேச* *வாய் எழவில்லை* .

*எப்படி பேசுவார்கள்* ?

*ஸத்யந்தானே* !

*ஆனாலும் ஹோட்டல் முதலாளி, விடாமல் கெஞ்சிக் கொண்டே* *இருந்ததால், ஒருநாள் ஸமஷ்டி பிக்ஷை நடந்தபோது, அவரும் அதில் பங்கு பெறும் பாக்யம் பெற்றார்* .

*தவறானாலும், அவரும் தன் குழந்தை என்ற *வாத்ஸல்யத்தால் இந்த அனுக்ரஹம்* ........

*சேத்துப்பட்டில் அவருடைய பங்களாவை, அவருடைய *_காலத்துக்கப்புறம்* ஶ்ரீ மடத்துக்குப் போய்ச் சேரவேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்**_ .

*ஆனால் ஸ்ரீமடம் நிர்வாகப் பொறுப்பில் நம் பெரியவா இருந்த *காலம் வரை, அந்த* மாபெரும் மாளிகை ஶ்ரீமடத்துக்கு ஸொந்தமாகவில்லை* .

*லக்ஷங்களால் மட்டுமில்லை, கோடி கோடியாக கொட்டினாலும், ஸத்யமும்* , *தர்மமுமில்லாத விஷயம் எதுவும் தர்மஸம்வர்த்தனியான நம் பெரியவாளிடம் செல்லாது* .

*ஶ்ரீ* *ஆசார்யாள் பாதங்களுக்கு ஸமர்ப்பணம்* .

*ஹர ஹர சங்கர* ..
*ஜெய ஜெய சங்கர* ..

*ஹர ஹர சங்கர* ..
*ஜெய ஜெய சங்கர* ..
ravi said…
🌷🕊️ *சிந்திக்க சில நிமிடங்கள்*...

பணம் காசு மட்டும்
நிம்மதியான வாழ்க்கை இல்லை.
விருப்பப்பட்டது கிடைக்கும் வரைதான்
வேகம் இருக்கும் எல்லோருக்கும்.
வீட்டில் பிரிட்ஜ் இல்லாத அந்த கால நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன்.
இப்போது பிரிட்ஜ் இருக்கிறது.
ஆனால் ஐஸ் வாட்டர் மோகம்
எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று அன்றுஆசை பட்டேன்.
இப்போது வாங்கிய பிறகு பெரிய ஆர்வம் இல்லை.
அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி இருக்கிறது.
சோஃபாவும் அப்படித்தான்!
பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் !
ஆசைப்பட்டு வாங்கிய costly மொபைல்
இப்போது ஏனோ பெரிதாக மனதை கவரவில்லை.
ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி.
ஆனால் இப்போதெல்லாம் அதிக நேரம்
பார்ப்பது சலிப்பாக இருக்கிறது.
Laptop ஆசை பட்டு பார்த்து பார்த்து வாங்கியது.இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது.
ஆனால் mostly businessதான்.
எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை.
பயன்படுத்துவதும் இல்லை..
அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.
எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது.
இது ஒரு Duplicate வாழ்க்கை
என்று உணர முடிகிறது.
மனதோடு இயைந்த வாழ்வு அல்ல
வெளியூரில் Star Hotel ல் தங்கினாலும்
மனதளவில் பெரிய நிம்மதி இல்லை.
வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில் தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடும்.!
இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. உணர்த்தவும் செய்தது.
நமக்கு பண வரவு, சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று அடிக்கடி சரி பார்த்துக்கொண்டாலும்,
ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ
நமது பழைய மனதுக்குப்பிடித்த
நெருக்கமான வாழ்வைத்தான்!
தெருவிலே சட்டென்று இறங்கி நாலு பேரிடம் பணம் மட்டும் வாழ்க்கை இல்லைங்கன்னு சொல்லத்தோணுது.
ஆயிரம் இருந்தும்....
வசதிகள் இருந்தும்....
Peace of Mind எங்கே என்று தேடினால்
ஒளிவு மறைவு கள்ளமில்லா மனம் விரும்பும் பழைய வாழ்வே.
நகரத்திலிருந்து நம் சொந்த கிராமத்திற்கு போனால்அங்கேயே இயற்கையோடு தங்கிவிடலாமா என்று தோன்றுகிறது.
செயற்கை வாழ்வெல்லாம் வேறு வழி இல்லாமல் பணம் காசுக்காக வாழ்வது.
அப்படியே வாழ்ந்து பழகியாச்சு.
ஆனால் மனம் விரும்புவதென்னவோ கள்ளங்கபடமில்லாத இயற்கையோடு இணைந்த வாழ்வையே....💃🏼
ravi said…
அஜ்ஞாத பக்திரஸமப்ரஸரத் விவேக-
மத்யந்தகர்வமனதீத ஸமஸ்த ஶாஸ்த்ரம் |
அப்ராப்த ஸத்யமஸமீபகதம் ச முக்தே:
காமாக்ஷி நைவ தவ காங்ஷதி த்ருஷ்டிபாத: ||99||

காமாக்ஷீ! உனது கடாக்ஷமானது , பக்தியின் சுவை அறியாதவனை, விவேகமற்றவனை, செருக்குடையவனை, சாஸ்திரம் கல்லாதவனை, சத்தியமில்லாதவனை, உன்னருகில் வராதவனை விரும்புவதில்லை.
இதனுடைய தாத்பர்யம் என்னவென்றால், அம்பிகையின் கடாக்ஷம் பட்டுவிட்டால் இங்கு எதெது இல்லையைன்று சொல்லப்பட்டதோ அது அனைத்தும் பக்தனுக்கு கிடைத்து விடும்!
கணேசய்யருடைய விளக்கவுரையில், இறுதியடியக்கு, “காமாக்ஷி மாம் அவது தே கருணா கடாக்ஷ:” என்ற பாடமுண்டு என்கிறார். தான் எல்லா வகைகளிலும் குறையிருந்த போதிலும் அம்பிகையின் கடாக்ஷமானது தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்பது கவியின் பிரார்த்தனை !
ravi said…
🌹🌺 " *திருமாலின் பத்து சயன தலங்கள் பற்றி...!!-- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹1)ஜல சயனம்.
107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம்.

🌺2)தல சயனம்.
63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது,தல சயனம் .இங்கு திருமால் வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து,தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

🌺3)புஜங்க சயனம் (சேஷசயனம்).
முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது,புஜங்க சயனம்.இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

🌺4)உத்தியோக சயனம்.
12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது,உத்தியோக சயனம்(உத்தான சயனம்).வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக,சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார்.

🌺5)வீர சயனம்.
59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது,வீர சயனம்.திருமால், 'நான் எங்கு உறங்குவது?'என்று சாலிஹோத்ர முனிவரை கேட்ட போது,அவர் காட்டிய இடம் தான் திருஎவ்வுள்ளூர்.இங்கு திருமால் வீரராகவப் பெருமாள் வீர சயனத்தில் காட்சி தருகிறார்.

🌺6)போக சயனம்.
40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது,போக சயனம்.இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.

🌺7)தர்ப்ப சயனம்.
105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் அமைந்துள்ளது,தர்ப்ப சயனம்.இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார்.

🌺8)பத்ர சயனம்.
99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது,பத்ர சயனம்.இங்கு வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள் வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார்.பத்ர என்பது ஆலமரத்து இலையை குறிக்கிறது.

🌺9)மாணிக்க சயனம்.
61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது,மாணிக்க சயனம்.இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார்.இத்தலத்தின் சிறப்பாக,இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

🌺10)உத்தான சயனம்.
திருக்குடந்தையில் அமைந்துள்ளது,உத்தான சயனம்.இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.

🌺 *ௐ #நமோ #நாராயணா* 🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "About ten Sayana Thalams of Tirumal...!!-- A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹 1) Water Sayanam.
The 107th divine land Srivaikundam is located in the Tirupal Sea. It is a water lake that people cannot visit with their Buddha body.

🌺 2) Thala Sayanam.
The 63rd Divya Desam is located in Malla called Mamallapuram, Thala Sayanam. Here Thirumal puts his right hand on his chest with Upadesha Mudra and performs Sayana on the floor Adhisana.

🌺 3) Pujanga Sayanam (Seshasayanam).
The first divine land Srirangam is located in Thiruvarangam Vinnakaram, Pujanga Sayanam. Here Thirumal performs Sayana on Adisashan in Pujanga Sayanam.

🌺 4)Utdayoga Sayanam.
Located in the 12th divya desam called Thirukkudantai, Uddyoga Sayanam (Udthana Sayanam). Here Sarangapani Perumal performs Thirumashisai in the Uddyoga Sayanam as if he is speaking slightly rising from the Sayanam.

🌺 5) Viera Sayanam.
The 59th divine land, Thiruevvullur, is located in Tiruvallur, Veera Sayanam. When Thirumal asked Sage Salihotra, 'Where should I sleep?', he pointed to Thiruevvullur.

🌺 6) Poha Sayanam.
Phoka Sayanam is located in Chidambaram, the 40th divine land of Thiruchithirakutam. Here the mother of Bundarikavalli Sametharai Govindaraja Perumal is seen in Phoka Sayanam.

🌺 7) Darpa Sayanam.
105th Divya Desam is located in Tirupullani, Dharpa Sayanam. Here Sri Rama is seen in Dharpa Sayanam.

🌺 8) Bhadra Sayanam.
Located in the 99th Divya Desam Srivilliputtur, Bhatra Sayanam. Here Vadabhatra Sai, Vadaperungoviludaya Srirangamannar Perumal is seen in Vadabhatra Sayanam. Bhatra means banyan tree leaf.

🌺 9) Manikka Sayanam.
Manika Sayanam is located in Tiruneermalai, the 61st divine land. Here Thirumal Arena heroine Sametha Aranganatharai Chatur is seen in the Manika Sayanam in Aravani with Pujas. The best part of this temple is that Perumala can be visited in four stages: standing, standing, lying down and walking.

🌺 10) Udtana Sayanam.
Located in Thirukudantai, Uthana Sayanam. Here Tirumal is seen in Uthana Sayanam in Aravani.

🌺ௐ Namo Narayana 🌺
-------------------------------------------------- -------- 🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 21

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது. . . . .[21]

விளக்கம்:

பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
Experiences with Maha Periyava: The 64th Nayanar

There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan who was a Sanskrit professor in the Madras University would inform Periyava about the request. Even though he said, "He is very keen to have darshan of Periyava; he bothers me frequently", Periyava did not give his consent to meet him. Some years passed in this way.

ravi said…
Suddenly one day, Dr. Raghavan received intimation that said, “I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan.”

At that time our Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan of Maha Periyava. Periyava called him and inquired. When told about the Frechman's proposed visit to Chennai, Periyava said, "Alright, bring him."

Before he sat for the upanyasam after the puja, Periyava called me and said, "If any European turns up, seat him on a chair, as he would not be able to sit on the floor. I shall see him after the upanyasam."

ravi said…
When the upanyasam was over and Periyava was about to get inside he asked, "Did anyone turn up?" "No one turned up", I replied. At that time a man wearing a dhoti and towel came to the front and prostrated to Periyava four times. (The sampradaya is to always prostrate to sannyasis four times.) Behind the man came Dr. Raghavan and SankaraNarayana Aiyer (professor of Philosophy at Mylapore Vivekananda College). Since that European came in dhoti and towel, I was misled. Periyava told me, "Ask him how did he knew about prostrating four times." The European said, "I did as everyone did here."

ravi said…
Periyava told me, "Bring only the Frenchman." I said, "I wouldn't understand the English he speaks. It would be better if Dr. Raghavan or SankaraNarayana Aiyer is present."

"The English you know would suffice. You bring him," quipped Periyava. Dr. Raghavan and SankaraNarayana Aiyer stood outside the thatti (a coconut leaf weaved sheet of cover).

The Frenchman who came inside and sat spoke: "I have been studying Vedanta for some time now. Suddenly one day I felt that my entire body had gone numb, that I was residing outside the body, and my figure was extended from the earth to the sky. I also saw the Universe hanging from my body. It was very blissful at that time. There was no trace of sorrow. After this incident, nothing bothers my mind in my daily life. My wife is deceased. My son too is dead. These occasions did not create any ripple in my mind. I was always blissful.

"People in the bank think I am insane, looking at this mental state of mine. So, I have an inherent fear that one day they might put me behind the bars of a hospital".

Periyava uttered cryptically with love beaming in his face and a strange kind of admiration at the Frenchman, "What is inside? And what is outside? Is not everything inside the four walls?"

This question created a big change in him. His eyes were seen brimming with tears as if he was one with the Universe represented by the Pontiff.

There was silence, not a leaf whispered...

Then he composed himself and then requested Periyava, "You should always be with me." Finally, he asked Periyava to give him some upadesham.

Periyava said, "Continue what you are doing now (meditation). I shall be with you till your attainment." He tore a piece of the vastram he was wearing then and gave it to the Frenchman with the words, "Keep this always with you as my prasadam." Such a great anugraha for him on that day. He took leave with immense happiness, having received the grace.

Coming outside, the Frenchman prostrated to Dr. Raghavan and said, "It was only because of you I got this much bhagyam."

Periyava went to bed after they were gone. After he retired, I asked him about a doubt in my mind.

Without replying anything to me, Periyava lapsed into sleep. He called me the next morning before he started his one-hour japam. He asked me, "Do you know how many Nayanmars are there?"

I replied, "The Arupatthu Moover Utsavam is held (every year)! So, only sixty-three."

"Go to the Kapaleeswarar temple, count and come back," he said. When I did it, I counted sixty-seven. I told this to Maha Periyava.

"Who are those four people in excess?" he asked me.

I went back to the temple, inqured and came back. "One of them is the 'Appalum Adi Sarndharukku Adiyar!'" I said.

Periyava graced me with the knowledge, "Appal is those who are beyond desam and kaalam. Since the element of time is involved, it also refers to the Adiyars to be born hereafter also. This man is beyond desam. He has just four janmas left."

Author: Paanaampattu Kannan (in Tamil)
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 4
ravi said…
முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை

*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 140* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இன்னிக்கு முகுந்த மாலையில 23, 24 வது ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். ரொம்ப அழகான இரண்டு ஸ்லோகங்கள்.

बद्धेनाञ्जलिना नतेन शिरसा गात्रैः सरोमोद्गमैः

कण्ठेन स्वरगद्गदेन नयनेनोद्गीर्णबाष्पाम्बुना ।

नित्यं त्वच्चरणारविन्दयुगलध्यानामृतास्वादिनां

अस्माकं सरसीरुहाक्ष सततं सम्पद्यतां जीवितम् ॥ २३ ॥

ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன சிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:

கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா ।

நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 23 ॥
ravi said…
ன்னு ஒரு ஸ்லோகம். நித்யம் – ஒவ்வொரு நாளும் எப்பொழுதும் ‘ *த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யானாம்ருதம்* ’ –

உன்னுடைய இரண்டு பாதத் தாமரைகளின் தியானம், அதையே தியானம் பண்றது என்கிற அமிர்தம் – அந்த அமிர்தத்தை குடித்துக் கொண்டு ‘ *அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம்’ –*

எங்களுடைய வாழ்நாள் உன்னுடைய சரணாம்ருதம் என்ற அந்த ரசத்தை அமிர்த ரசத்தை பருகிக் கொண்டு ஒவ்வொரு நாளும் கழியட்டும். *ஸரஸீருஹாக்ஷ* – தாமரைக் கண்ணனேன்னு சொல்றார்.

உன்னுடைய கண்ணால் எங்களைக் கடாக்ஷித்து எங்களுக்கு அந்த பாக்யத்தைக் கொடு🍇🍇🍇
ravi said…
*ப*

*ஸ்ரீ மாத்ரே நம :*👌👌👌
ravi said…
*பரமேஸ்வரி* ... *போரூர்*
ravi said…
பயம் மனதில் குடி புகுந்ததே பாவங்கள் பல செய்ய வைத்ததே

பாழும் உடல் ஆசை கொண்டே இன்பம் பல தேடியதே

காணும் உணவுகள் உடல் பசி கண்டே வயிறு நிறைய துடித்ததே

சேர்த்து வைத்த செல்வங்கள் துணை வரேன் என்று பிடி வாதம் பிடித்ததே

வளர்த்த உறவுகள் வாசல் வந்தே வழி காட்டியதே

எரியும் நெருப்பு இனி நானே உன் உறவு என்றே என்னை கட்டிக்கொள்ளத் துடித்ததே

எங்கும் இல்லா அமைதி என் கண்கள் காணத் துடித்ததே

கொலுசு சத்தம் கேட்டே துயர் கொண்ட செவிகள் துடித்து எழுந்து கொண்டதே ..

அன்னை என்றே நீ வந்து அரவணைக்கும் போது அனைத்தும் என்னை விட்டு நீங்கியதே ...

ஆனந்தம் பரமானந்தம் இதுவே என்றே அடங்கி போன உடம்பும் மீண்டும் எழுந்து நட மாடியதே

சக்தி உள்ளே சென்றபின் இது சவம் என்றே சொல்ல யாருக்கும் துணிவு வர வில்லையே 🪷🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 97*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
நவ்விரண்டு காலதாய்

நவின்றமவ் வயிறதாய்

சிவ்விரண்டு தோளதாய்

சிறந்தவவ்வு வாயதாய்

யவ்விரண்டு கண்ணதா யெழுந்துநின்ற

நேர்மையிற்
செவ்வையொத்து

நின்றதே சிவாயமஞ் செழுத்துமே. 97🪷🪷🪷
ravi said…
பஞ்சாட்சரம் நமது உடம்பில் நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலும்,

மகாரம் வயிறாகவும்,

சிகாரம் நெஞ்சிலிருந்து இரண்டு தோள்கள் ஆகவும்,

வகாரம் தொண்டையாவும்,

யகாரம் இரண்டு கண்களாகவும்

அனைவருக்கும் நேர்மையாக அமைந்துள்ளது.

தூலத்தில் இவ்வாறு அமைந்துள்ள அஞ்செழுத்து சூட்சமத்தில் செம்மையான மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து தியானித்து சிவமே அஞ்செழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.🪷🪷🪷
ravi said…
தயை காட்டும் தாய் அவள்

தரணி புகழும் பரணி அவள் ...

தனக்கு உவமை இல்லாமல் உமையாய் பரமனின் பாகம் வவ்வியவள்

வாஞ்சைக்கு பாடம் எடுத்தவள்

வறுமைக்கு சூலம் கொண்டவள்

வாழ்விற்கு கலங்கரை விளக்கானவள்..

வளமைக்கு வாக்காய் நாவில் அமர்பவள்

வல்லமை தருபவள் .. அம்மா என்றே அழைத்தால் நெஞ்சில் வாசம் செய்ய பாசம் கொண்டு வருபவள் 🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 377* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*141* *शान्ता - ஷாந்தா*

சில சமயம் ஒரே அர்த்தம் கொண்ட ரெண்டு மூன்று நாமங்கள் வந்தால் அவற்றை படிக்காமல் விடவேண்டாம்.

ஒரு காரணத்துக்காகவே திருப்ப சொல்லவேண்டி யிருக்கும்.

அதற்குள் முன்னர் சொல்லாத அர்த்தம் த்வனிக்கலாம்.

ஸ்ரீ லலிதாம்பிகை எப்போதும் சாந்தஸ்வரூபி.

நமது பெண்கள் பலருக்கு சாந்தா, சாந்தி என்று பெயர் வைப்பதே நற்குணங்கள் நிரம்பி இருக்கவே.

பாரபக்ஷமற்ற பாசம், நேசம் பக்தர்களிடம் கொண்டவள்💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 374* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️

*98 பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்*

வாக்ஸித்தி

கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்

ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா

கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98
ravi said…
வேதியர்கள் அயன் நாவில் விஞ்சை மகள் என்றும்

சீதரன் தன் மணிமார்பில் செழும் கமலை என்றும்

நாதர் இடத்து அரிவை என்றும் நாட்டுவர்

எண் அடங்க
ஆதிபரன் மூலபரை யாமளை உன் மயக்கால்🏵️🏵️🏵️
ravi said…
ஆதிபராசக்தியான மூலபரையே! யாமளையே!

உன்னுடைய மாயத்தால் மயங்கி வேதம் அறிந்த வேதியர்கள் பிரமன் நாவில் வித்தையின் மகளாக நீ இருக்கிறாய் என்றும்,

திருமாலின் மணிமார்பில் தாமரையாளாக நீ இருக்கிறாய் என்றும்,

சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் பெண் நீ என்றும் நாட்டுவார்கள்.🏵️🏵️🏵️
ravi said…
இந்த ஸ்லோகத்தின் மூலம் எல்லா தெய்வங்களும் ஒரே பிரம்மம் தான் எந்த தெய்வத்திலும் பேதமை பார்க்கக் கூடாது ...

எல்லாம் ஒரே ஸ்வரூபம் ..

சக்தியாய் நினைத்து வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மாதாவாக அந்த பிரம்மம் வடிவெடுத்து வருகிறது ...

தாயின் கருணைக்கு மாற்றாக எதை சொல்ல முடியும் ??
ravi said…
தமருகந்தது
எவ்வுருவம் அவ்வுருவம்தானே தமருகந்தது

எப்பேர் அப்பேர்-தமருகந்தது எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே

அவ்வண்ணம் ஆழியானாம்

(உகந்தது - விரும்பியது, இமையாதிருப்பரே - இடைவிடாமல் தியானம் செய்தால்)

*கண்ணா*

எந்த உருவம் எங்கள் இஷ்ட்டமோ அதுவாய் ஆகி விடும் உன் கருணை என்னவென்று சொல்வது ?

எந்த பெயரை சொல்கிறோமோ அதுவே உன் நாமம் ஆக்கிக் கொள்கிறாய்

எப்படி சிந்தித்தாலும் நினைவெல்லாம் நீயே நிறைந்து நிற்கின்றாய்

சிவா முருகா முகுந்தா உமையே என்றே அழைத்தேன்

அனைவரும் உன் எழில் கொண்டே குழல் இசை பாடி மயில் பீலி கொண்டே வந்தனர் என் முன்னே 🙏🙏🙏

🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 82* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
கொலைத் தொழில் மட்டுமே செய்யும் இன்றைய ஆயுதங்களான, ராக்கெட்-லாஞ்சர் எல்லாம் கூட, பார்க்க மட்டும் அழகாக வடிவமைக்கறாங்க-ல்ல?
அருள் தொழிலும், மருள் தொழிலும் சேர்த்தே செய்யும் வேல் அப்போ எம்புட்டு அழகா இருக்கணும்?
அதான் வேலனுக்கு வேலழக்கு! வேலுக்கு வேலனழகு! சித்ர வேலாயுதம்!
ravi said…
*வெட்சி பூத்த* = வெட்சிப்பூ பூத்த பாதங்கள்! வெட்சி புனையும் வேளே போற்றி என்பது கந்த சஷ்டிக் கவசம்!

*தண்டை* = தண்டை, ஜல்-ஜல் என்று ஒலிக்கும் பாதங்கள்! தண்டை அணி வெண்டையும், கிண்கிணி சதங்கையும் என்று திருப்புகழ்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 363*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
மூக கவி கூட ஒரு ஸ்லோகத்துல சொல்றார். 65 ஸ்லோகம் பாதாரவிந்த சதகம்.

விவேகாம்ப⁴ஸ்ஸ்ரோதஸ்ஸ்னபனபரிபாடீஶிஶிரிதே

ஸமீபூ⁴தே ஶாஸ்த்ரஸ்மரணஹலஸங்கர்ஷணவஶாத் ।

ஸதாம் சேத:க்ஷேத்ரே வபதி தவ காமாக்ஷி சரணோ

மஹாஸம்வித்ஸஸ்யப்ரகரவரபீ³ஜம் கி³ரிஸுதே ॥ 65 ॥

விவேகம் என்ற ஜலத்தை கொண்டு வந்து, அவர் அந்த புத்தி என்கிற ஏத்தம் வாக்கு என்கிற சால் னு சொன்ன மாதிரி இங்க “ஸ்நபன பரிபாடி”- எப்டி ஜலம் பாய்ச்சணும்கற திறமையோடு விவேகத்தை கொண்டு

ஷிஷிரிதே – அந்த “சதாம் சேத: க்ஷேத்ரே” சாதுக்களாகிய அவா மனசு என்கிற வயல்ல விவேகம். எது right எது wrong இவ்ளோ தான் நம்மளால தெரிஞ்சுக்க முடியும்.
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 362* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
ஸுரேசஹ’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 86வது திருநாமம்.
“ *ஸுரேசாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களை எப்போதும் திருமால் ஆட்சி செய்வார்.


(குறிப்பு: ‘ஸுரேசஹ’ என்ற திருநாமத்தில் உள்ள ‘ச’ என்னும் எழுத்து ‘श’ என்ற வடமொழி எழுத்தின் உச்சரிப்பில் வந்துள்ளது.
அது ஸ, ஷ இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலி. கசடு, பிசகு உள்ளிட்ட வார்த்தைகளில் ‘ச’ வை உச்சரிப்பது போல,
ஸுரேச: வில் உள்ள ‘ச’ வை உச்சரிக்க வேண்டும்.)
ravi said…
We become more successful when we are happier and more positive.



To be kind is more important than to be right. Many times what people need is not a brilliant mind that speaks but a special heart that listens.



Believe that the whole world is ours; behave like the whole world is not only ours.



What's done is done. What's gone is gone. One of life's lessons is always moving on.



Arise, awake and do not stop till the goal is reached.



We can't have all that we desire, but time will give us all that we deserve.



A good head and a good heart are always a formidable combination. When you add to that a literate tongue, then you have something very special.
ravi said…
COURAGE TO STEP BACK



Recently, I saw a quote by Dennis Waitley, "A parents' job is to give roots and wings to their children". I love that quote and the imagery. Children grow roots from knowing there is stability and safety, that there is Mom and Dad to come home to. Children grow wings from taking courageous and risky steps.

ravi said…
This doesn't just apply to children, it applies to all of us. We function better when we have strong roots (community, relationships, financially stable). The stronger the roots, the easier it is for us to be willing to take a risk and fly. However, when we do, there is a time and space when we need to get pushed off the edge. If necessary, we need to be pushed off and have nobody trying to rescue us - unless we really are in trouble or unless someone notices that, instead of a parachute, we mistakenly put on our backpack.
ravi said…
If I could do it all over again, I would have stayed with Mom until she got her courage back. I wouldn't have been her strength; that did more bad than good. Don't take over a tough task for people. Help them by holding their hand for a bit but step back to allow the struggle as they find their own courage! Then watch their pride!
ravi said…
கந்த சஷ்டி விரதம் இருங்கள். சஷ்டி கவசம் படியுங்கள். உடல் நிலை பாதிப்பு நீங்கும். நன்மைகள் நடக்கும். முருகனின் அருள் இருப்பதால் நிச்சயம் நல்லது நடக்கும்.
பன்னீர் இலை விபூதி மகிமை,.
ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், அபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார். வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்த சங்கரரின் கனவில் இறைவன் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, திருசெந்தூர் வந்தடைந்த, ஆதிசங்கரர், இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, அவருக்கு இறை தரிசனம் கிட்டியது.
இலை விபூதியைப் அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியாதா?என்ற கேள்வி நம் மனதில் எழக் கூடும். மக்களுக்கு இலை விபூதியின் பெருமையை வெளிப்படுத்த இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்தான்இந்தசம்பவம்.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது மனமுருகி 32 பாடல்கள்கொண்டசுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.
இன்றளவும் விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறாது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று அதை பொக்கிஷமாக பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி,வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்துகொண்டு பயனடைகிறார்கள்.
நாமும் சரவண பவாய நமஹ என்று ஓதி இலை விபூதியைத் தரித்து கொள்ளவேன்டும்.
நமக்கு சென்னைக்குப் பக்கத்தில திருத்தணி இருக்கு. திருத்தணி முருகரையும் பவரோக வைத்யநாத பெருமாள் ன்னு சொல்லுவா. (‘நிலையாத சமுத்திரமான’ எனத் தொடங்கும் திருப்புகழ்). வியாதிகள் போகணும்ன்னு திருத்தணி முருகன் மேல அருணகிரி நாதருடைய ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு. அதைப் படிச்சா எல்லா வியாதிகளும் நிவர்த்தி ஆகும் அப்படின்னு நம்பிக்கை. அந்தத் திருப்புகழைப் படிக்கிறேன்.
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயிறீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத படியுன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடியசுரர் பதாதி மடிய அநேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவராட வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதிலுறை முகிலூர்தி தருதிரு மாதின் …… மணவாளா
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே.
‘நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே!
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!’ ன்னு பாடல்.
ஸூப்ரமண்ய புஜங்கத்தைப் படிச்சா வியாதிகள் போகும், அப்படின்னு மஹா பெரியவா ரெண்டு மூணு இடத்தில ‘தெய்வத்தின் குரல்’ல சொல்லியிருக்கா. ‘உடம்பு ஸ்வஸ்தம் ஆகிறதுக்கு சுப்ரமண்ய புஜங்க பாராயணம்’ அப்படின்னு சொல்லியிருக்கா. இந்த முப்பத்து மூணு ஸ்லோகத்தையும் படிக்க நேரம் இல்லேன்னா கூட அந்த,
कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥१९॥
குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட |
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் ||
அப்படின்னு முருகப் பெருமானுடைய நாமங்கள் இருக்கக் கூடிய அந்த 19வது ஸ்லோகத்தை நிறைய ஆவர்த்தி பண்ணிட்டு விபூதியை இட்டுண்டா போதும். ஒரு வாட்டி திருச்செந்தூர் போகும் போது பன்னீர் இலையில கொடுக்கற விபூதியை வாங்கிண்டு வந்து நம்மாத்து விபூதியோட சேர்த்துக்க வேண்டியது, அந்த விபூதியை இந்த ஸ்லோகத்தைச் சொல்லி இட்டுண்டா வியாதிகள் எல்லாம் போய்டும். இந்த பில்லி சூன்யம் மாதிரி எந்தக் கவலையும் இருக்காது.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.

ravi said…
அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!

ravi said…
இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோடில்லாமல் தாமும் கூட வந்தார்.

யமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.

உடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக (பிரத்யக்ஷ நிரூபணமாக) ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.

ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.

பூமாதேவி இந்த ஸந்தர்ப்பத்தில்தான் நரகாஸுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலான வரங்களைக் கேட்டதாகக் காவேரி புராணத்தில் இருக்கிறது.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"கண்ணதாசன் கைகளில் கட்டுப்போட்ட பெரியவா"

"நான் என்னவோ நெல்லுப் பொரி, அவல் மட்டும் சாப்பிடறதை பெரிய விஷயமாக நினைக்கிறா, சில பேர். மற்றவர்களோட கம்பேர் பண்ணினால்,இது ஒன்றும் ஒசத்தி இல்லே..." பெரியவா
.
"பாரத தேசத்திலே எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும்." (தன்னை முன்னுறுத்தி தொடர்ந்து கண்ணதாசன் எழுத தடைவிதித்த பெரியவா)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


கவியரசர் கண்ணதாசன், தான் எழுதிய 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற புத்தகத்தை ஒரு தட்டில் வைத்து, பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.

பெரியவாள், புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்கள்.

"பெரிய விஷயங்களையெல்லாம், எளிமையா எழுதியிருக்கே போலிருக்கு"---பெரியவா

கவிஞரின் இதயம் ஆனந்தத்தில், திளைத்துக் கொண்டிருந்தது.

பெரியவாள் தொடர்ந்தார்கள்.

பாரத தேசத்திலே, எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும்.

"சில சந்யாஸிகள், பால் மட்டுமே உட்கொண்டு வாழ்ந்திருக்கா. ஒருத்தர் கங்காஜலம் மட்டும்தான் சாப்பிடுவாராம்.! ஸித்தர்கள் எல்லாம் ரொம்ப ஆஸ்சர்யமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிச்சிருக்கா. சில ஸித்தர்கள், பச்சையாகக் கருணைக் கிழங்கை மட்டும் சாப்பிடுவா"

"ஓருத்தர் மரத்திலேயே தங்கியிருந்தார். இன்னொருத்தர்,யமுனை நதி நடுவில் பரிசல் நிறுத்தி,அதிலேயே இருந்திருக்கிறார்"

கொஞ்சம் நிறுத்தி விட்டு மறுபடியும் சொன்னார்கள்,பெரியவா.

"நான் என்னவோ நெல்லுப் பொரி அவல் மட்டும் சாப்பிடறதை பெரிய விஷயமாக நினைக்கிறா சில பேர் மற்றவர்களோட கம்பேர் பண்ணினால், இது ஒன்றும் ஒசத்தி இல்லே.."

மறுபடியும் இடைவெளி.

"இந்தப் புஸ்தகத்திலே, என்னைப் பற்றி எழுதியிருக்கியோ..."--பெரியவா

"முன்கூட்டியே திட்டமிட்டு, வரிசையாக வெளியாகிற புத்தகம். அடுத்த புத்தகத்திலேதான் பெரியவாளைப் பற்றி விரிவாக எழுதணும்.. இந்தப் புத்தகத்தில், மூணு, நாலு வரிதான் எழுதியிருக்கேன்".. கண்ணதாசன்

"அதுபோதும்...இதைத்தான் சொல்ல வந்தேன்.."---பெரியவா.

கண்ணதாசன், கைகளில் கட்டுப் போட்டு விட்டார்கள், பெரியவா.

"உத்தரவு' என்றார் கவிஞர் கண்ணதாசன்.


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪷🙏

ravi said…
100/101

அத்யந்த ஶீதலமனர்கல கர்மபாக-
காகோலஹாரி ஸுலபம் ஸுமனோபிரேதத் |
பீயூஷமேவ தவ வீக்ஷணமம்ப கின்து
காமாக்ஷி நீலமித மித்யயமேவ பேத: ||100||

ஹே காமாக்ஷி ! மிகவும் குளிர்ச்சியுள்ளதாயும், தடுக்க முடியாத பாப கர்மாக்களின் பலனென்பதான விஷத்தை தடுப்பதும், தேவர்களால் எளிதில் அடையக்கூடியதுமான உனது கடாக்ஷத்தை அமிர்தமாகவே நினைக்கிறேன் . ஆனால் அமிர்தம் வெளுப்பாகவும், உனது கடாக்ஷம் கருப்பாக இருப்பது தான் பேதமாகும்.

பாதேன லோசனருசேஸ்தவ காமகோடி
போதேன பதகபயோதி பயாதுராணாம் |
பூதேன தேன நவ காஞ்சன குண்டலாம்ஶு-
வீதேன ஶீதலய பூதரகன்யகே மாம் ||101||

ஹே காமகோடி! பர்வத புத்ரீ! பாபமாகிற ஸமுத்திரத்தை கண்டு பயந்தவர்களுக்கு ஓடமானதும், மிகவும் பரிசுத்தமானதும், புதிய ஸுவர்ண குண்டல காந்தியுடன் விளங்குவதுமான உன் கடைக்கண் பார்வையால் என்னை குளிர்விப்பாயாக!
|| இதி கடாக்ஷஶதகம் ஸம்பூர்ணம் |
ravi said…
MOTH TO BUTTERFLY (John Roedel)


"Hello? Is there somebody out there?" the moth asked from inside her dank and worn cocoon that dangled from a thin branch of one of the smallest trees in the woods. "Hello?" Please?! Is anybody there?" the moth called out again. "I'm right here, my little lovely," the light replied from the apex sun she was riding across the cloudless sky above.
ravi said…
I'm stuck in here," the moth said. "I can see that," the light responded. "The worst part is that I was supposed to become a butterfly but it didn't happen!! All of the other caterpillars changed but I didn't. I just changed into a moth. It’s not supposed to work like this! I’m supposed to be a butterfly and I’m just a moth!” "That's very okay, my love. You are so beautiful,” the light said. "I just want to get out now," the moth said. "I know." "Can you please help me?" the butterfly asked. The sun didn't respond.
ravi said…
The silence was unbearable to the moth. She began to cry so hard that her folded up wings ached. The moth had been holding back her tears for so long but now she couldn't anymore.
ravi said…
She was ashamed for not transforming like all of the other moths had done. She was stuck being the same creation that she was before. "Oh my little miracle, why are you crying?" the sun asked.
ravi said…
"Because my cocoon is broken and I can't get out! I have spent the last day listening to all of the other butterflies break through and fly away! I have heard the music from their wings and I am so sad that I can't make any of myself! I don't know why this is happening to me! I just want to feel the warm air! I just want to know what it feels like to be effortless! I just want a little taste of your sunlight! I am going to die in here, aren't?! I'm going to die in the dark!" "No, love, you aren't going to die in there. You will get out of your cocoon very soon." the sun said as she started her slow bend toward the western lip of the horizon.
ravi said…
How? How will I get out?!" the moth screamed. "I've tried kicking and biting my way through this wall in front of me! It won't budge. It won't tear. I am not strong enough to push my way out!" "You are strong enough," the light said as she melted down the sky like a drip of celestial ice cream. "And even if I do get out I won't be beautiful. I won't have changed into something that painters want to sketch. What is the point of being alive if I won't have pretty wings? I am a failure. I didn't become what I am supposed to be." "You are and will continue to be exactly who you are meant to be," said the light. "Now come out." "I told you that I can't force my way out!" the moth yelled. "
ravi said…
You aren't ever going to get out of your cocoon that way. You just need to say the password out loud and then it will open right up for you." "What's the password?" the butterfly asked. The sun was gone. She slipped over the edge of the world and wouldn't be back until morning. The darkness fell upon the woods and the butterfly began to shake. "This is where I die," she wept softly to herself. "No, my little lovely, it isn't. You aren't going to die in there," said a voice from the outside. "Who is there?" the butterfly asked. "It's me," said the light from her throne on the moon. "I thought you left me..." the butterfly said. "No, my sweets, I will never leave you. I just change forms from time to time.” "Change forms?" "Yes, I am still the same light but I just look different now." "Kind of like how I was meant to change into something more beautiful than I am now?" The moth asked. "No, just because I may have changed how I look it doesn't change the beauty that has always been inside of me. That is just the same. The miracle of my existence remains no different than it was before I jumped from the sun onto the moon. I have always been beautiful. Just like you! Just like you! Just like you," the light sang.
ravi said…
Oh..." the moth said. "Are you ready to come out?" "Yes..." The light from the moon shone harder than she ever had before. Then she asked: "
ravi said…
What's the password?" The words came to the moth from somewhere beyond her understanding: "I am beautiful. I am a miracle. I am worthy. I have always been this way and I always will be. "Perfect..."the light purred. With that the cocoon split in two and the moth fell into the arms of the waiting moonlight. "Look at you," the light said. "You are so very lovely." The moth hadn't changed into a butterfly but that the way she looked at herself transformed. The moth didn't grow painted wings but that didn't mean she wasn't the most beautiful thing in the entire woods. She had always been a miracle. She had always been a gift to the world.
ravi said…
The light and the moth danced wildly together for an entire summer under the warm summer air and perfectly cool nights. They explored every tree and kissed every flower. They loved each other as deeply as two miracles could. Then came an early frosty Fall, and that's when the moth finally transformed to become a ribbon of the light. As she turned into light she whispered to herself: "I am beautiful. I am a miracle. I am a miracle. I have always been this way and I always will be.”


Have a Wednesday filled with wonderful thoughts & feelings
ravi said…
🌹🌺The same Kannan ....killed the crocodile one day.
Now he has given salvation to a crocodile.....a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹All the living things like grass, garlic, plants, flags, birds, ants, beetles living in Tirumala may have been born there due to the benefit of the previous birth. They may be gods. Tava yogis say that they can transform themselves and live there.

🌺Similarly, the crocodile in the Ananta Padmanabhaswamy temple in Kasaragod may have been such a Tava Yogi. Or may have committed some small mistake by living with great devotion and dharma in previous births.

🌺Salvation can only be achieved if the account of karma is completed. So that crocodile may be a divine soul who has come to deduct the remaining karma.

🌺He killed an elephant named Kuvalayapeedam sent by Kamsa to kill him (Kanna).

🌺 When Gajendran Adi Moolame cried out from the crocodile to protect him from the crocodile, he killed the crocodile with the wheel and blessed the elephant.

🌺The same Kannan ....killed a crocodile one day.
He has given salvation to a crocodile.

He killed an elephant.
Rashi tamed an elephant

🌺 Salvation for curd pot
Salvation to the curd seller.
Salvation for the novel-fruiting old woman is salvation for the elephant
Salvation to the bird Jatayu. Mukti for the crocodile today.

🌺 So we don't have the power to understand his leelas.

🌺 But stanza by stanza he can stick to the paper.
Then we will be blessed.

🌺Alakila Uladayar He is leader Shriman Narayanan Annavarke Saran Namale 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *அதே கண்ணன்* .... *அன்றொரு நாள் முதலையைக் கொன்றான்* .
*இப்போதோ ஒரு முதலைக்கு முக்தி கொடுத்திருக்கிறான்* ..... *விளக்கும் எளிய* *கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹திருமலையில் வாழும் புல் ,பூண்டு, செடி ,கொடிகள் ,பறவைகள், எறும்புகள் ,வண்டினங்கள் என அனைத்து உயிர்களும் முற்பிறவியின் நற்பயன் காரணமாக அங்கே பிறந்திருக்கலாம்.அவை தேவர்களாக இருக்கலாம்.தவ யோகிகள் தங்களை உருமாற்றி அங்கே வாழலாம் என்று கூறுவர்.

🌺அதே போல காசர்கோடு அனந்த பத்மநாபஸ்வாமி திருக்கோவில் முதலை ஆழ்வாரும் அப்படி ஒரு தவ யோகியாக இருந்திருக்கலாம். அல்லது முற்பிறவியில் மிகுந்த பக்தி சிரத்தை தர்மத்தோடு வாழ்ந்து ஏதேனும் சிறு தவறிழைத்திருக்கலாம்.

🌺கர்மக் கணக்கை முடித்தால் தான் முக்தி கிட்டும்.அப்படி கர்மா மிச்ச சொச்சத்தைக் கழிக்க வந்த தெய்வீக ஆத்மாவாக அந்த முதலை இருக்கலாம

🌺தன்னைக் (கண்ணனைக் )கொல்ல கம்சன் ஏவிய குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றான்.
கஜேந்திரன் ஆதிமூலமே அபயம் அபயம் என முதலையிடம் இருந்து தன்னைக் காக்க வேண்டிக் கதறிய போது முதலையை சக்கரத்தால் கொன்று யானைக்கு அருளினான்.

🌺அதே கண்ணன் ....அன்றொரு நாள் முதலையைக் கொன்றான்.
இப்போதோ ஒரு முதலைக்கு முக்தி கொடுத்திருக்கிறான்.

🌺ஒரு யானையைக் கொன்றான்.
ஒரு யானையை ரஷித்தான்

🌺தயிர் பானைக்கு முக்தி
தயிர் விற்றவனுக்கு முக்தி.
நாவல்பழக்கார கிழவிக்கு முக்தி யானைக்கு முக்தி
ஜடாயு எனும் பறவைக்கு முக்தி. இன்று முதலைக்கு முக்தி.

🌺ஆக அவனது லீலைகள் விளங்கிக் கொள்ள நமக்கு சக்தி கிடையாது.

🌺ஆனால் சரணம் சரணம் என அவன் தாள் பற்ற முடியும்.
அப்போது நமக்கும் நற்கதி நிச்சயம்.

🌺அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் ஸ்ரீமந் நாராயணன் அன்னவர்க்கே சரண் நாங்களே🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺



ravi said…
WEIRDEST BORDER



Perhaps the world's most complicated boundary, a narrow bike trail offers a window into a region that has been the battleground of Europe and is where culture and geography intersect. Nicolai Meyer stepped away from his restaurant's deep fryer to offer a quick lesson in geography.
ravi said…
We're in Belgium," he explained, then pointed through the window. "The road is Germany. Then it's Belgium. Then Germany." The entire area he described spanned perhaps 50m.

I picked up one of his chips, which he assured me was a true Belgium frite, dipped it in mayonnaise and took a bite as I tried to make sense of this patchwork quilt borderland.

What may be the world's most complicated boundary centres on a narrow ribbon of bike trail. Its history offers a window into a region that at times has been the battleground of Europe and an area where culture and geography intersect.
ravi said…
The cycling route follows an 1899 railroad called the Vennbahn, or Fens Railway, which connects the city of Aachen, Germany, with Luxembourg. Built by Germany's Prussian State Railway to haul coal, iron and steel, the railway fuelled industrial growth and prospered through World War One, when it was used to carry military supplies.
ravi said…
When hostilities ended, the 1919 Treaty of Versailles awarded Belgium contested German land, along with the railroad and its tracks that connected it. That included a 28km corridor that left several pockets of German land completely cut off from the rest of the country. One section was annexed by Belgium and later returned to Germany in 1958, but five others remain as enclaves – a territory completely surrounded by another territory.

Story continues below
ravi said…
Today, one of the enclaves created by the Vennbahn covers just 1.5 hectares and contains a single farm. Others include small towns or sections of villages, the biggest covering about 1,800 hectares.



In the latter part of the 20th Century, traffic died down on the once-crucial rail line and a preservation group briefly tried to operate a tourist railroad. But in 2013, the former railway found new life when it was dedicated as a 125km paved bike path stretching through Germany, Belgium and Luxembourg. Cyclists now come from across Europe to pedal past medieval towns, nature reserves and misty farm fields dissected by centuries-old hedgerows. They also marvel at the preposterous border they're weaving in and out of. But the locals rarely pay attention.
ravi said…
Christian Strutz, a banker who lives in Germany, said it doesn't register that he's leaving his country when he drops by Meyer's restaurant, Nicki's Imbiss, in German-speaking east Belgium. "It's very normal for us," he said, then stopped for a moment to think about it. "It's crazy – crossing the border for frites."

ravi said…
Indeed, life generally flows smoothly across the international boundaries, thanks largely to the Schengen Treaty, which, when implemented in 1995, eliminated most internal European border controls. In one area, a German bus stops on a Belgian street to pick up passengers. In another, a postman must pass through Belgium every day to reach a German subdivision of small homes, and to pick up parcels left in a canary-yellow Deutsche Post mailbox.

But during the global pandemic, residents were reminded once again that they were straddling two nations. Inevitably, the Belgium and German responses to Covid-19 didn't completely align, which meant on some days proof of vaccine could be required for dining on one side of the border, but not the other.
ravi said…
Although it seems isolated, this region has repeatedly found itself at the crossroads of history. Charlemagne ruled his medieval empire from Aachen, where the Vennbahn begins. Later, Napoleon ordered the construction of a road linking towns that would eventually be connected by the railway. Hitler seized the region and rail line in 1940, and cyclists can still see the "dragon's tooth" concrete barriers that were part of the defences erected by the Third Reich to stop the advance of Allied tanks. Four years later, US troops fought their way past the barriers and reached what is today the enclave of Roetgen, which became the first German village liberated during World War Two.

ravi said…
After the war, the area saw action of another sort. Locals found they could make a tidy profit by smuggling coffee beans from Belgium into Germany, where the prices were three times higher, giving the region a new nickname, the "sinful frontier".



Some carried the contraband across the High Fens, a preserved region of wetlands not far from the Vennbahn that's known for its moody weather and porous border. But most the smuggling centred on Mutzenich, one of the Vennbahn enclaves. The town now honours the criminals with a bronze statue of a man with a sack of coffee over his back crouching behind a rock in the middle of the road. Over a five-year period, the smugglers carried more than 1,000 tons of coffee across the border, bringing badly needed cash into an area impoverished by WW2.

Mayor Jaqueline Huppertz, whose father was involved in the illegal trade, jokingly calls the activity an "early type of regional development".
ravi said…
The coffee carriers played an increasingly brazen cat-and-mouse game with authorities that sounds straight out of a Hollywood thriller. Men would travel by foot, bicycle and car, even stowing coffee beans in an ambulance and a hearse. When police gave chase, the smugglers dropped sharpened metal spikes on the roadway to stop the pursuit. The German authorities, who were using specially equipped, high-speed vehicles, responded by attaching a plough to the front of their cars to clear the hazards, a creation locals called a "broom Porsche".

ravi said…
Ultimately, about 50 of Mutzenich's citizens were caught and imprisoned near Cologne; a blow to the small town, which lost its economic livelihood and a such a large chunk of its male population that its municipal football team couldn't compete because it lacked players.

Many of the smugglers had donated money to help rebuild Mutzenich's war-damaged church, and the town's Catholic priest visited the inmates in prison to plead for their release. "Even today, this church is popularly known as St Mocha," the mayor said.

ravi said…
Ultimately, the men received reduced sentences, possibly because German authorities realised that the town might eventually vote in a referendum to join Belgium, Huppertz explained.

Today, the border is wide open, and the only indication you are entering a different country might be an easily overlooked street sign. Along the side of the Vennban, an occasional concrete marker sticks out of the weeds, marked B on one side and D on the other, abbreviations for Belgium and Deutschland. But the most convoluted border is the stretch near Meyer's chip shop in Raeren, Belgium.
ravi said…
After eating my share of frites, I embarked on an international journey, stepping off the pavement to briefly leave Belgium and then dart across German Highway 258 to reach the Vennbahn, which put me back into Belgium again. I entered a trailside restaurant, Kaffeefee, which gets its electricity and water from Germany, although the business is regulated and licensed by Belgium. Café owners Waltraud and Norbert Siebertz live another 200m further east in Germany.



Waltraud said most of her customers are typically cyclists who have no idea where they are. "The criss-crossing and zig-zagging is quite a surprise to them – in a special way. They think they're illegally crossing the border."
ravi said…
After she serves them a beer or cappuccino and perhaps a cherry strudel, she offers the riders a bit of advice. Although the trail itself is in Belgium, they're actually much closer to German cities and services. "If they have an accident, I tell them they should roll to the German side," she said, "because the ambulance will come faster."

ravi said…
*அர்த்தமுள்ள இந்துமதம் உருவான விதம்!*

சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும் ஒரு
படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது
மிக மோசமான விபத்து ஏற்பட்டது.

அதில் சின்னப்பா
தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.

ஆனால்,
கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த
நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும்
கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து
வணங்கி *‘விபத்து நேர்ந்து விட்டது’* என்று சொன்ன
மாத்திரத்தில்,

ravi said…
*‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’* என்று பெரியவர்
கேட்க, அதிர்ந்து போனார் தேவர்.

கண்கள் கலங்க வியப்பும்
வருத்தமுமாய்
“அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல்
மருத்துவமனையில் இருக்கிறார்”
என நா தழுதழுக்கக்
கூறினார் தேவர்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, சரி
கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய்,
அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு,
மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’

என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர,
தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும்
துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின்
கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப்
பெறுகிறார்.

ravi said…
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன்
நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, தெய்வங்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில்
நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம்
அது.

விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர
மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில்
படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப்
பேசியிருந்தார்.


ravi said…
எனவே அவரிடம் போய் இந்த விபூதியை
எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத்
தயக்கமாயிருந்தது.

ஆனால், முக்காலமும் உணர்ந்த ஞானியாகிய பெரியவர்,
தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து *‘தயங்காமல்*
*கொண்டுபோய் பூசு.* சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை
மறைத்திருந்தது.

இனி அவன் சூரியனாகத் திகழ்வான்.

அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?

கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல்
திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா.

ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர்
கண்ணதாசனின் தாத்தா.

காமாக்ஷி கோவில் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார்.

இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி
விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.

நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில்
விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு,
மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு
திரும்பினார்.

அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன்
நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ
என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின்
படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது
கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார்.

தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி
படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக்
கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ,
தேவர்
தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட
கண்ணதாசன் *‘இதென்ன விபூதி?’* என்று தேவரை ஏறிட்டுப்
பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர்,
தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம்
செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின்
விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.

திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாய்ந்தது
கண்ணதாசனின் வார்த்தைகள் –

‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை?

போனவாரம்தான் அவரை திட்டி தீர்த்தேன், ஐயோ’ என வாய்விட்டுப்
புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும்
சமர்ப்பித்தார்.

‘எனக்கு உடல்நலமாகி மருத்துவ
மனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச்
செல்லமாட்டேன்.

*இந்தப் பாவியிடம் கருணைவைத்த*
*அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து*
*அழைத்துச் செல்லுங்கள்’* என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த *நல்ல சந்திப்பும்,*
*பாவமன்னிப்பும் நடந்தது.*

மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.
அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை
நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார்,
கண்ணதாசன். அக்கவிதை இதோ :

——
*பார்த்த மாத்திரத்தில்* *பாவத்தை அலம்புகின்ற*
*தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து*

*கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்*
*முழுமூர்த்தம்* *கலிமொய்க்கும் இவ்வுலகைக்*
*காக்கவந்த கண்கண்ட தெய்வம்*
*எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென*
*தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!*
—–

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர்,
கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, *‘அனந்த கோடி*
*அற்புத லீலா சாகித்ய* *மாயமானுஷாய நமோ நமஹ,*

அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா
இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி,

‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை
எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே
கண்ணதாசனின் மனதில் *“அர்த்தமுள்ள ��இந்துமதம்”*
அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து
மணம் வீசியது.



ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!!
ravi said…
கடல் ஞாலம் செய்தேனும் யானே

என்னும்

கடல் ஞாலம் ஆவேனும் யானே

என்னும்

கடல் ஞாலம் கொண்டேனும் யானே

என்னும்

கடல் ஞாலம் கீண்டேனும் யானே

என்னும்

கடல் ஞாலம் உண்டேனும் யானே

என்னும்

கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?

கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்

கடல் ஞாலத்துக்கு என் மகள் கற்கின்றவே?

----நம்மாழ்வார்

பகவத் கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தான் யார் என்று நேரடியாக விளக்கிச் சொல்லும் பிரமிப்பூட்டும் சுலோகங்கள் உள்ளன.

பகவத் கீதையை உலகின் தலைசிறந்த நூல்களில் ஒன்றாகச் சொல்வதற்கு முக்கியக் காரணம் இந்த பத்தாம் அத்தியாயம்.

இதன் கருத்துகளை நம்மாழ்வார் அப்படியே கிரகித்துக்கொண்டு அவற்றை ஒரு தாய் தன் பெண் என்ன என்னவோ பிதற்றுகிறாளே என்று கவலைப்படுவதாக அமைத்த பாசுரங்களாக மாற்றி கீதையின் ஆழ்ந்த கருத்துகளை குறிப்பாக பத்தாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அத்தனை கருத்துகளையும் எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.

ஒரு தாய் தன் பெண்ணைப் பற்றி புலம்புகிறாள்

(கடல் ஞாலம் - கடல் சூழ்ந்த உலகம், கீண்டேன் - பிளந்தேன், கற்கின்றவே - சொல்வதெல்லாம்)

‘நீரையும் நிலத்தையும் செய்ததும் நானே என்கிறாள்.

அது ஆவதும் நான்; அதைக் கொண்டதும் நான், அதைப் பிளந்ததும் நான்; உண்டதும் நான் என்கிறாள்.

திருமால் வந்து புகுந்ததாலோ என்னவோ உலகத்தவர்களே, என் மகள் இப்படிப் பேசுகிறாள்’.

இந்தப் பாடலையும் கீதையின் பத்தாம் அத்தியாயத்தில் 32ஆம் சுலோகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஸர்காணாம் ஆதிர்அந்தஸ்ச மத்யம் சைவாஹம் அர்ஜுன அத்யாத்ம வித்யாவித்யானாம் வாதஹ ப்ரவத்தாம் அஹம் ‘

அர்ஜுனா யானே சிருஷ்டி அனைத்தையும் படைத்தவன், காத்தவன், அழித்தவன்.

அடிப்படை ஞானமும் தர்க்கமும் முடிவுகளும் யானே’.

திவ்யப் பிரபந்தத்தில் கீதோபதேசம் பற்றி நேரடியான குறிப்புகள் எதுவும் இல்லைதான்.

ஆனால், கீதையைப் படித்திராமல் நம்மாழ்வாரால் இந்த வரிகளை எழுதியிருக்க முடியாது. ***
ravi said…
கண்ணா ... பித்தானேன்...

உன் நாமம் ஒன்றே உரைப்பேன் ..

கல்லால் அடித்தனர் என்னை பலர்

காரி உமிழ்ந்தனர் பலர் ...

கருணை தனை தராசில் நிறுத்தி எடை போட்டனர் பலர்

பைத்தியம் என்றே என் ஆடை அவிழ்த்தனர் பலர் ...

முள்ளாள் குத்தி சுகம் கண்டனர் பலர்

கையில் ஆணி அடித்து களித்தனர் பலர் ...

உன் நாமம் செய்த லீலை அன்றோ இது ..

இதுவும் பெரும் சுகமே கண்ணா ..

எல்லாம் நீயன்றோ எதிலும் நீயன்றோ .. என்னில் இருப்பவன் நீயன்றோ

பிறரிலும் இருந்துகொண்டு என்னை தாழ்த்துதல் முறை அன்றோ ..

முகுந்தா என் பித்தம் தெளிய வேண்டாம் ..

பிறர் தூற்றுவதும் நிற்க வேண்டாம் ..

உன் நாமம் தரும் தேனை உரைப்பவர் எவரும் பித்தரே என்ற உண்மையும் உணர்வர் ஒருநாள் ...

அன்றே நானும் ஒரு ஞானி ஆவேன் ... உனை படைக்கும் பாசுரங்கள் ஆவேன் 🏵️🏵️🏵️
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 375* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*99 தேவியின் பக்தன் கல்வி,செல்வம்,அழகு, ஆயுள் நிரம்பியவன்*

பேரின்பம்
ravi said…
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99
ravi said…
உன்னைப் பூஜிப்பவன் பிரம்மாவும் விஷ்ணுவும் கூடப் பொறாமை படக்கூடியவனாக
கல்வியுடனும் செல்வத்துடனும் இன்பத்தை எய்துகிறான்.

மன்மதன் போன்ற உடல் அழகால் ரதி தேவியின் கற்பையும் கலங்கச் செய்கிறான்.

பசுத்தன்மையும் வினைக்கயிற்றின் கட்டுகளும் நீங்கியவனாக பேரானந்தம் எனப் பிரசித்தி பெற்ற இன்பரஸத்தை சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு அநுபவிக்கிறான்.🙏🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 378* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*141* *शान्ता - ஷாந்தா*
ravi said…
அமைதி வேண்டும் என்று எங்கெங்கோ அலைகிறோம் .. காலன் அழைப்பு விடும் வரை தேடிய அமைதி கிடைப்பதில்லை ... இதை நினைக்கும் போது கீழ்கண்ட திரை பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
ravi said…
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து

நாவினில் அன்பு வைத்து

நஞ்சினை நெஞ்சில் வைத்து

நாவினில் அன்பு வைத்து

நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்

கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே

அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே .... ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு...

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே

அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே🙏
ravi said…
அம்பாளின் ஒரு நாமத்தையாவது தினம் நினையுங்கள் தேடிடும் அமைதி தானாக ஒரு பட்டாம்
பூச்சியைப்போல் நம் மீது வந்து அமரும் . இது சத்தியம் 🙏
ravi said…
*பூமி*

*ஸ்ரீ மாத்ரே நம :*👌👌👌
ravi said…
*நீராகா* ராகமதனீ நிர்மதாமதநாசினீ🙏🙏
ravi said…
அம்மா ஏகாம்பரேஸ்வரீ இணை உண்டோ உனக்கு

ஈடு உண்டோ உனை தொழுவோர்க்கு

நித்தம் நித்தம் உனை நினைக்க வைத்தாய் உள் செல்லும் காற்றுக்கும் உணர வைத்தாய் ...

புவனம் பதி நான்கையும் பூக்க வைத்தாய் ...

பூத்த வண்ணம் காத்தவள் நீயே ஆனாய் ..

மறைக்கின்றாய் நீ யாரென்றே மாயை கொண்டு ..

துதிப்போர்க்கு உணர வைக்கின்றாய் எல்லாம் நீயே என்று 🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 98*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
இரண்டுமொன்று மூலமா யியங்குசக் கரத்துளே

சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோற் கிடந்ததீ

முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி யூடுபோய்

அரங்கன்பட் டணத்திலே யமர்ந்ததே சிவாயமே. 98
ravi said…
மூலாதார சக்கரத்தின் உள்ளே பாம்பைப் போல் சுருண்டு மூன்று வளையமாக குண்டலினி சக்தி கனலான தீயாக இருந்து தூங்கிக் கொண்டுள்ளது.

அதனை வாசியோகத்தில் விழிப்புறச் செய்தால் அச்சக்தியானது சங்கின் ஓசையுடன் கிளம்பும். .

அவ்வாசியை சுழுமுனை எனும் மூலனாடியால் முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றி சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அது சக்தியும் சிவனும் ஒன்றாகி இயங்கும் அரங்கன் பள்ளி கொண்ட இடத்தில் சிவமாக அமர்ந்திருப்பதை அறிந்து யோகஞான சாதகத்தால் தியானம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.👏👏👏
ravi said…
https://chat.whatsapp.com/HjRTSDmw4CY1ThPJ6MYHck

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்புக்கள் நிறைந்த சிவ பெருமான் கோவில்கள் பற்றிய பதிவுகள் :*

பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம்.

ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*கந்தர் அலங்காரம் 83* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
அல்லும் பகலும் இல்லா = இரவு பகல் இல்லாத
சூதானது அற்ற = வஞ்சகம் இல்லாத
வெளிக்கே = ஆன்ம வெளியில்
ஒளித்து = ஒடுங்கி இருந்து
சும்மா இருக்க = எம்பெருமானோடு ஏகாந்தமாய் "சும்மா" இருக்க!

சும்மா இரு, சொல் அற என்றலுமே, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!
எல்லாம் இழந்து, சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல, எனை விட்டவா! - என்றெல்லாம் முன்னர் அருணகிரி பாடி இருந்தார் அல்லவா? "சும்மா இரு"-ன்னா என்ன?-ன்னு இந்தப் பதிவில் பார்த்தோம் அல்லவா?

ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!

நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால் = "சும்மா" இருப்போம்!
என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!🍇🍇🍇
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 363* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: *ச’ரணம்‌* சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10


*87. சரணாய நமஹ* (Sharanaaya namaha)

திருவாரூருக்கு அருகே அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணமங்கை.

அங்கே தர்ச புஷ்கரிணிக் கரையில் அபிஷேகவல்லித் தாயாருடன் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

இப்பெருமாளைப் பெரும்புறக்கடல் என்று பெயரிட்டு அழைத்துள்ளார்.

அவ்வூரில் திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு திருமால் அடியார் வாழ்ந்து வந்தார்.

அவர் நாதமுனிகளின் சீடர்.

பக்தவத்சலப் பெருமாளின் பரம பக்தர். எப்படிப்பட்ட பக்தர்?
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 364*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
மூக கவி கூட ஒரு ஸ்லோகத்துல சொல்றார். 65 ஸ்லோகம் பாதாரவிந்த சதகம்.

விவேகாம்ப⁴ஸ்ஸ்ரோதஸ்ஸ்னபனபரிபாடீஶிஶிரிதே

ஸமீபூ⁴தே ஶாஸ்த்ரஸ்மரணஹலஸங்கர்ஷணவஶாத் ।

ஸதாம் சேத:க்ஷேத்ரே வபதி தவ காமாக்ஷி சரணோ

மஹாஸம்வித்ஸஸ்யப்ரகரவரபீ³ஜம் கி³ரிஸுதே ॥ 65 ॥

விவேகம் என்ற ஜலத்தை கொண்டு வந்து, அவர் அந்த புத்தி என்கிற ஏத்தம் வாக்கு என்கிற சால் னு சொன்ன மாதிரி இங்க “ஸ்நபன பரிபாடி”- எப்டி ஜலம் பாய்ச்சணும்கற திறமையோடு விவேகத்தை கொண்டு

ஷிஷிரிதே – அந்த “சதாம் சேத: க்ஷேத்ரே” சாதுக்களாகிய அவா மனசு என்கிற வயல்ல விவேகம். எது right எது wrong இவ்ளோ தான் நம்மளால தெரிஞ்சுக்க முடியும்.
ravi said…
இந்த ஆன்ம விசாரம், பகவத்கீதா இந்த புஸ்தகம் எல்லாம், ஆச்சார்யாள் பாஷ்யம் எல்லாம் படிச்சா ஒண்ணும்புரியாது.

நம்ம practical ஆ என்ன பண்ண முடியும்னா எது right எது wrong னு அவ்ளோதான் தெரிஞ்சுக்க முடியும்.

அதுக்கு மேல நமக்கு இருக்கற அந்த கர்ம கிரந்தி, ஆசா பாசங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப strong ஆ இருக்கறதுனால, நம்ப ஏற்கனவே ஒரு level achieve பண்ணிட்டோம்னு நெனைச்சிண்டு இருந்தா ரொம்ப ஏமாந்து போயிடுவோம்.
Oldest Older 201 – 302 of 302

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை