ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 24. :நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா - பதிவு 31

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 31

24 वविद्रुमबिम्बश्रीन्यक्कारिरदनच्छदा நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா -



செம்பவழங்களை வரிசையாக ஒழுங்கான அளவில் இணைத்ததுபோல் உருவம் கொண்டது லலிதா தேவியின் இதழ்கள்.👄👄👄

நவ = புதிய ; 

வித்ரும = பவழம் / பவளம் 

பிம்ப= ஒப்பிட்டால் / பிரதிபலிப்பு 

ஸ்ரீ= காந்தி 

ந்யக்கார் = தரம் தாழ்த்துதல் 

ரதனச்சதா = இதழ்கள் / உதடுகள் 

24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா* = 

பவளத்தின் பிரகாசத்தை பழிக்கும் உதடுகளைக் கொண்டவள்.

சிலர், பிம்ப எனும் சொல் கோவைப்பழத்தை குறிப்பிடுவதாக பொருள் உணர்கின்றனர்.👍👍👍


பட்டர் 38 வது அந்தாதியில் இப்படி பாடுகிறார் .. 

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்

தவளத் திரு நகையும்... 

அம்பாளின் இதழ்கள் ஏன் பவளம் போல் சிவப்பாய் இருக்கிறது  தெரியுமா ? 

இரண்டு காரணங்கள் 

1.ஈசன் தான் இருக்கும் பள்ளியறையை மாற்றிக்கொண்டு அவள் இதழ்களில் வந்து துயில் கொள்கிறான்... 

அதனால் பெண்மைக்கே உரிய நாணத்தினால் அவள் இதழ்கள் எப்பொழுதும் சிவப்பாக இருக்கின்றன 

2. தேனீக்கள் எல்லாம் ஒவ்வொரு மலராய் சென்று மகரந்தம் கொண்டு வர சோம்பல் பட்டதாம் .. 

அன்னையிடம் சென்று ஒரே இடத்தில் எல்லா பூக்களின் மகரந்தமும் கிடைக்க வேண்டும் .. 

அங்கு தேன் ஆறாக ஓட வேண்டும் ... 

சிரித்தாள் அம்பாள் .. 

தன் இதழ்களை விரித்தாள் 

அங்கு தேன் கங்கை போல் ஓடுவதைக் கண்ட தேனீக்கள் தினம் அங்கு வந்து அதை அனுபவிப்பதினால் இதழ்களில் அவைகள் தங்களையும் அறியாமல் கொட்டும் இடங்கள் சிவந்து கடைசியில் இதழ்கள் முழுவதும் சிவந்து போயினவாம் ... 🪔🪔🪔


ரொம்ப சுலபமாக தெய்வத்தைப் பிடிப்பதற்கு ஸ்வரூப த்யானம், நாமோச்சாரணம் என்ற இரண்டை வைத்திருக்கின்றது. 

நாம-ரூபம் என்று இந்த இரண்டைத்தான் சொல்லியிருக்கின்றது. 

நாமாவைச் சொல்லிக்கொண்டே இருப்பதில் சிரம ஸாதனை எதுவுமில்லை. 

வாயால் பண்ணுவது அது. மனக்கண்ணாலோ, புறக்கண்ணாலோ ஒரு பரம மங்களமான மூர்த்தியை தரிசனம் பண்ணுவது கஷ்டமில்லாத இன்னொரு வழி. 

மஹான்கள் ஜீவனோடு இருக்கிற திவ்ய ரூபங்களைப் புறக்கண்ணுக்கு முன்னாடி காண்பார்கள். 

நம்மால் சிலா ரூபங்களை, விக்ரஹங்களைத் தான் புறக்கண்ணால் தரிசிக்க முடிகின்றது. 

அதனால் கோவிலுக்குப் போய் மூர்த்தி தரிசனம் பண்ணி அந்த அழகிலே சொக்கி, கஷ்டமில்லாமல் பகவத் ஸ்மரணை பெறுகிறோம். 

நாம மாஹாத்மியம் என்று எத்தனையோ சொல்லி-யிருந்தாலும் அதுகூட ஸாமான்யமாக நாம் இருக்கப்பட்ட நிலையில் ஒரு ரூபத்தோடு சேர்த்துச் சொன்னால்தான் மனஸை இன்புறுத்தி இழுத்துப் பிடித்து நிறுத்துகின்றது. 

நாம ஜபம் முறையாகப் பண்ணுகிற போதும் த்யான ஶ்லோகம் சொல்லி ரூபத்தை நன்றாக மனஸுக்குள் நிறுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கின்றது. 

லலிதா ஸஹஸ்ரநாம ஆரம்ப பாகத்தில் இப்படியே வர்ணனை வருகின்றது. 

ஸெளந்தர்ய லஹரியிலும் இதே ‘ஆர்டர்’ தான் பார்க்கிறோம். 

ஒரு உதாரணமாக இதை பார்ப்போம் 

ஆதி ஆசார்யாளுடைய ஸௌந்தர்யலஹரி 62-ஆம் ஸ்லோகத்தில், அம்பாளுடைய உதட்டுக்கு பவளக் கொடியும் (வித்ரு-மலதாவும்) ஒப்பாகாது என்று வருகின்றது. 

ஸஹஸ்ரநாமத்தில், அதே அர்த்தத்தில் “நவ வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-தஶநச்சதா” என்று இருக்கின்றது! 



நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி தசனச்சதா - 

அம்பாளின் உதடுகளை வர்ணிக்கும் நாமம் இது. 

சாதாரணமாக, அதரங்களின் சிவப்புக்குப் பவழம், கோவைப்பழம் போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டுவார்கள். 

அதுகூட வாடிப்போன, மங்கிப்போன பவழமில்லை. 

புதிய பவழம். வித்ருமம் என்பது பழம். 

நவ வித்ருமம் என்பது புதியதான பழம்; நல்ல கோவைப்பழம். 

இவை இரண்டின் சிவப்பு ஒன்றுமேயில்லை. 

இவற்றைத் தோற்கடிக்கும் சிவப்பு அம்பாளின் உதடுகளில் காணப்படுகிறது. 

தசனச்சதா என்பதற்கு பதிலாக ரதனச்சதா என்றும் சொல்லலாம். பொருள் ஒன்றுதான். 

இங்கேயும் ஆசார்யர் சொல்கிற ஸ்லோகம்தான் நினைவுக்கு வருகிறது. 

ப்ரக்ருத்யா ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சத ருசே: ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா ந பிம்பம் தத் பிம்ப ப்ரதிபலன ராகா தருணிதம் துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா 

என்று சௌந்தர்யலஹரியின் 62ஆவது ஸ்லோகத்தில் கேட்கிறார்   



அம்மா, இயற்கையாகவே செக்கச்செவேல் என்றிருக்கும் உன்னுடைய உதடுகளுக்கு எதை உபமானமாகச் சொல்வேன்?

பவழக்கொடியின் பழங்களைச் சொல்லலாமா? 

பவழக்கொடி பழத்தை உண்டாக்கட்டும். பார்க்கலாம். 

இப்போதைக்கு, பிம்பப்பழமான கோவைப்பழத்தைச் சொல்லலாமா? உன் அதரம் அளவுக்குச் சிவப்பை அது அடையப் பார்க்கிறது. முடியவில்லையாதலால் வெட்கம் அடைகிறது' என்கிறார். 

பவழக்கொடி என்று இயற்கையில் ஒன்றில்லை. பச்சையாக இருக்கும் செடிகளில் சிவப்புப் பழங்கள் கிடைப்பதால், பவழம் போல் கொடியே சிவப்பாக இருந்தால், அதன் பழம் இன்னும் வர்ணனையைத் தோற்றுவித்தது. அதை எடுத்துக்கொண்டு ஆசார்யர், வேண்டுமானால் பவழக்கொடி பழம் பழுக்கட்டும் என்கிறார். 

கோவைப் பழம் அம்பாளின் அதரத்தைப் பார்த்தது. அந்தச் சிவப்பைப் பார்த்துவிட்டுத் தானும் அந்த அளவுக்கு ஆகமுடியுமா என்று சந்தேகப்பட்டது. 

மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். மடு போன்ற கோவைப்பழம், அந்த உயரத்திற்குத் தான் வரவேண்டும் என்று எம்பிப் பார்த்தது. எவ்வளவுதான் எம்பி எம்பிக் குதித்தாலும் அம்பாளின் அதரச் சிவப்பை எட்டமுடியவில்லை; 

உடனே கோவைப் பழத்துக்கு வெட்கமோ வெட்கம். எல்லாவற்றையும் கொஞ்சம் கூட்டிப்பார்க்கலாமா? முதலிலேயே கோவை சிவப்புநிறம் கொண்டது. எம்பிக் குதித்ததால், அந்தப் பிரயத்தனத்தில் கூடுதல் சிவப்பானது; வெட்கப்பட்டபோது இன்னுமே சிவப்பு - இப்படி மும்மடங்கு சிவப்பானபோதும், அதனால் அம்பாளுக்குப் பக்கத்தில் வரவே முடியவில்லை, பாவம்!     



                                         💐💐💐💐💐💐💐💐💐💐



Comments

ravi said…
*சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवाह्लाद: नादयुत: महासितवपुः पञ्चेषुणा चादृतः ।

सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥

ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-

ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।

ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-

ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
ravi said…
இதையே ஸ்வாமிக்கு சொல்லும்போது ,

“ *ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட:”* –

ப்ருங்கி முனிவரின் விருப்பத்திற்கேற்ப நடனம் புரிபவரும்.

ஸ்வாமியோட நடராஜா தரிசனம்தான் ரொம்ப விசேஷம்!

இந்த ஸ்லோகத்துல நாம் அதை பாத்துட்டோம்.

ப்ருங்கி முனிவர் ஆசைப்பட்டதுக்காக நடனம் செய்தவரும்,

“ *கரிமத³க்³ராஹீ” –* அந்த கஜாஸுரனுடைய கொழுப்பை அடக்கினவரும்.

தோலாக போர்த்திண்டாறே யானையை கிழிச்சு.

“ *ஸ்பு²ரன்மாத4வாஹ்லாத³:* ” –

‘மாத4வ:’ விஷ்ணு பகவான், மோஹினி வேஷம் போட்டுண்டு வந்த போது, அதைப்பார்த்து ரொம்ப சந்தோஷம் அடைந்தவரும்......🌸🌸🌸
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 385* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
ஒருநாள் கனமழை பொழிந்தது.

மழையில் சொட்டச் சொட்ட நனைந்த தேவதேவி அதே கோலத்தில் குடிலுக்குள் நுழைந்தாள்.

உள்ளே வந்த அவளின் அழகில் மயங்கிய விப்ரநாராயணர், தன் வசம் இழந்தார்.

அவள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டார்.

திடீரென ஒருநாள் தன் தாயைப் பார்த்துவிட்டு, உடனடியாக வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுத் தேவதேவி சென்றாள்.

நாட்கள் கடந்தன. அவள் வரவில்லை. தேவதேவியைப் பிரிந்த துயர் தாங்காமல் விப்ரநாராயணர் அவளைத் தேடிக்கொண்டு
உத்தமர் கோவிலுக்குச் சென்றார்.🌸🌸🌸
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 4 started on 6th nov
ravi said…
*பாடல் 2 ... உல்லாச, நிராகுல*

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?

எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய்,

முருகா சுரபூ பதியே
ravi said…
*உல்லாச* ... மங்காத உள்ளக் களிப்பும்,

*நிராகுல* ... துன்பமற்ற நிலையும்,

*யோக* ... யோக சொரூபனும்,

*இத* ... நன்மை பயப்பவனும்,

*சல்லாப விநோதனும் ...*

அடியார்களிடம் இனிமையாகவே பேசி
திருவிளையாடல் புரிபவனும்,

*நீ அலையோ* ... நீ தானே முருகா,

*எல்லாம் அற* ... உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ,

*என்னை இழந்த நலம் ...* நான் எனும் ஜீவ போதம் இழந்து
அனுபவிக்கும் பேரின்ப நிலையை,

*சொல்லாய்* ... மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும்🙏🙏🙏
ravi said…
*பக்தனைத் தேடி வந்த
பரந்தாமன்!*

ராமதாசர் என்று பெயர் வைத்துக் கொண்டு கிருஷ்ண பக்தராகத் திகழ்ந்தார் துவாரகா ராமதாசர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம், ஏகாதசியன்று துவாரகைக்கு, 140 மைல் தொலைவு நடந்தே போய் துவாரகாநாதனுக்குத் துளசியை அர்ப்பித்து விட்டு வருவார்.

ஒருமுறை உடல் நோய்வாய்ப்பட்டதால் அவரால் நடக்க முடியவில்லை. துவாரகாநாதனே அவருடைய இல்லத்துக்கு வந்து விட்டார். துவாரகையில் கிருஷ்ணனின் விக்ரஹத்தைக் காணாமல் பக்தர்கள் நாடெங்கும் தேடினர்.

ராம தாசரின் இல்லத்தில் விக்ரஹத்தைக் கண்டனர். ஆனால், ராமதாசர் அதைத் தர மறுத்து அழுது புலம்புகிறார். கோயில் நிர்வாகிகள் தாசரின் ஏழ்மை நிலையைக் கண்டு, விக்ரஹத்தின் எடைக்கு எடை தங்கம் கொடுத்துவிட்டு, விக்ரஹத்தை வைத்துக் கொள்ளும்படி தாசரிடம் கூறுகின்றனர்.

துலாபாரம் தொடங்கியது. கண்ணனை எண்ணி கதறி அழுதபடி மனைவியையும் அழைத்துக் கொண்டு மூன்று முறை வலம் வந்து துளசியை மறுதட்டில் போடுகிறார் ராமதாசர். தட்டு உயர்ந்து சமநிலைக்கு வருகிறது. அவர்களும் கிருஷ்ண விக்ரஹத்தை அவரிடமே விட்டுச் செல்கிறார்கள்.

இன்றும் அவர் வாழ்ந்த தாக்கோர் என்ற ஊரில் சரத் பவுர்ணமியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி துவாரகாநாதனின் விக்ரஹத்தை இங்கே தரிசித்து மகிழ்கிறார்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
ravi said…
*#மனம்_கலங்காதிருக்க*...

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் ப்ரஹ்லாதன் மனம் கலங்கவில்லை...

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
ராஜா அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை...

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை...

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம்கலங்கவில்லை..

அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் பீஷ்மர் மனம் கலங்கவில்லை...

இளம் விதவையான
சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை...

தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் குசேலர்
மனம் கலங்கவில்லை...

ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை...

பிறவிக் குருடனாக இருந்த போதிலும் சூர்தாஸர் மனம் கலங்கவில்லை...

மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை...

கணவன்கஷ்டப்படுத்திய போதும் குணவதிபாய் மனம் கலங்கவில்லை...

இருகைகளையும்வெட்டிய நிலையிலும் சாருகாதாஸர் மனம் கலங்கவில்லை...

கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில்தள்ளியபோதும்
ஜயதேவர் மனம் கலங்க வில்லை

மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
சஞ்சயன் மனம் கலங்க வில்லை...

பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
பூந்தானம் மனம் கலங்கவில்லை...

கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
தியாகராஜர் மனம் கலங்கவில்லை...

நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள் மனம் கலங்கவில்லை...

சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
கூரத்தாழ்வான்மனம் கலங்கவில்லை...

எப்படி முடிந்தது இவர்களால்..?

ரகசியம்...

தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

ஆழ்ந்த நம்பிக்கை...

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..

முதல் வழி...
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்

இரண்டாம் வழி...
(சுய அறிவு)

மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

மந்திரமாக இருக்கலாம்...

கீர்த்தனைகளாக இருக்கலாம்...

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் "அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..." இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடை பிடித்தால்,வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,எதை இழந்தாலும், ஆத்மதிருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

திடமாக பகவானை வழிபடுவோம்...

அன்பே கடவுள் என போற்றுவோம்...

உறுதியுடன் உண்மையாக இருப்போம்...

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்.

ஆன்மீகத் தகவல்கள் புராண கதைகள் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 04

எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். . . . .[04]

விளக்கம்:

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*The Zeigarnik Effect on Short term Memory*🤔 😇

You pull out the key to open your house. You unlock the door and get inside. Then several hours later you're looking for the key and wondering where it is. And you discover that you have left it behind on the door. Has this happened to you?

ravi said…
To understand why it happens, let’s flashback to Bluma Zeigarnik, a Russian psychologist. One evening, Zeigarnik and her friends went out for dinner to a restaurant. They had a lovely meal. Guess what the highlight was? It was the service. More specifically, their waiter. He had an amazing memory. So as everybody placed their orders, he remembered every little detail, without writing anything down. He remembered who ordered what. And how they wanted it. Zeigarnik and her friends were all amazed by the waiter's memory.

ravi said…
After the meal, they were driving back when Zeigarnik discovered that she had left her jacket behind in the restaurant. So she turned around, drove back to the restaurant and sought out that friendly waiter who she knew would be happy to help her locate her jacket. Imagine her horror though when she found the waiter, but the waiter didn't even recognize her. What happened?

ravi said…
It got Zeigarnik thinking. And her research then showed how our brain tends to work. When a task is completed, our brain hits the delete button. And our memory gets wiped clean. Our short term memory struggles with space to retain information. So it keeps only the unfinished tasks alive. And the minute a task is completed it hits the delete button. And that's why waiters at restaurants will remember every little detail of your order. But only until the bill is made. That’s why when we photocopy a document, we pick up the copy and walk away, leaving the original behind. This has come to be known as the Zeigarnik effect. A term that describes how our short-term memory deletes completed tasks. Fascinating, isn't it?
ravi said…
The Zeigarnik effect might explain why at a bank’s ATM, you are now required to pull your card out before collecting the cash. They know Zeigarnik will be at play and once you collect the cash, the task is finished and good chance you will forget to take your card back.

ravi said…
It's something we can all put to good use. Look at what Netflix does. You will find through all their serials, every episode ends tantalisingly. That 30-minute episode ends at a point where you will say ‘wow, what happens next’? You want to know, you want to come back. There is no closure at the end of that episode and that's what brings us back all the time. Had there been closure, chances are we’d quickly forget about it. Maybe a powerful idea for all of us. If there is something you want to make sure remains alive, keep it just a bit unfinished. Writing a book? Make sure you end every writing session at a point of suspense or tension. Don’t resolve it. Don’t finish it. That will bring you back next day to writing again.

ravi said…
The Zeigarnik effect might also explain my favourite piece of communication advice. It’s this. Someone said that there are really two golden rules of communication: 1. Never tell everything at once.

That’s it. Ah, the Zeigarnik effect!

The writer is an author, speaker and leadership coach and former MD of Kimberly Clark Lever
ravi said…
கவிஞர் வாலி பதிவு செய்த 4-சம்பவங்கள்.

*"அடக்கமாகும் வரை..
அடக்கமாக இரு" என்று உணர்த்தும்
4- நபர்கள்.*

1) முதல் நபர்.

"தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம்.
------'xxx-----

2) இரண்டாவது நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!" என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''

எவ்வளவு பெரிய நடிகர்..!
எம்.ஜி.ஆர்..
சிவாஜி படங்களில் நடித்த போது,
அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!
எங்கே போனது..
அந்த வாழ்வும் வளமும்..!
-----xxxx-----

3) மூன்றாவது நபர்.

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது.
ஒரு நடிகை.
ஒரு காலத்தில்,
தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி.

பல பெரிய தயாரிப்பாளர்கள்
அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில் காத்திருந்த காலம் உண்டு.

என்னைப்பார்க்க வந்தவர்,
'"வாலி சார்..
எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.
-----xxx-----

4) நான்காவது நபர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.
சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப்போய் அவரருகே சென்று,
"நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன்.
என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்கினேன்.
'ஓ நீங்கதான் வாலியா..?’ என்று என் கைகளை பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா.. என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு.
இன்று அவர் என்னைத் தொடுகிறார்.
நான் சிலிர்த்துப் போனேன்.

"அவர் தொட்டதால் அல்ல".

எந்த ரயில் நிலையத்தில்..
ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ..
அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல்..
தனியாக அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்.
காலம் எப்படியெல்லாம்..
தன் ஆளுமையைக் காட்டுகிறது.
அந்தப் பழைய நிகழ்வுகளை
எண்ணிப்பார்க்கிறேன்.
--------- xxxx--------

1) கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் திரு. இளங்கோவன்.

2) என்னிடம் சிகரெட் கேட்டவர்..
திரு.சந்திரபாபு அவர்கள்.

3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்...
நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில்..
எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார்..
திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

*இவர்களை விடவா நான் மேலானவன்.*

அன்று முதல் நான்,
*"'நான்’"*
இல்லாமல் வாழப்பயின்றேன்.!*

எதுவும் மரணம் வரைதான்...
இதுதான் மனிதன் வாழ்க்கை

*வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்..*
*மரணத்தை விட கொடூரமானது*
ravi said…
பாதாரவிந்த சதகம்

16.ஸராக: ஸத்வேஷ: ப்ரஸ்ருமர
ஸரோஜே ப்ரதி தினம்
நிஸர்காத் ஆக்ராமன் விபுத ஜந
மூர்த்தாநம் அதிகம் 1
கதங்காரம் மாத: கதய பத
பத்மஸ் தவ ஸதாம்
நதாநாம் காமாக்ஷி ப்ரகடயதி
கைவல்ய ஸரணீம் ||

தாமரையிடம்
வெறுப்புள்ளதும், தேவர்களுடைய
(அறிஞர்களுடைய) சிரஸில் தினமும் நன்கு அடியெடுத்து
தாயே ! காமாக்ஷி ! பற்று(செம்மை) உள்ளதும் அலர்ந்த வைப்பதுமான உன் திருவடித்தாமரை வணங்குகிற நல்லோருக்கு மட்டும் முக்திவழிக்கு எப்படி வழிகாட்டுகிறது என்பதை விளக்குவாய் !

ராகத்வேஷங்கள் நிறைந்து, தேவர்களையும் ஞானிகளையும் தலைமீதேறி மிகவும் அடக்குகிற திருவடிகள், நல்லோருக்கு முக்திவழி எப்படிக் காட்டும் ? ராகத்துவேஷங்களின்றி, தன் திருவடி சார்ந்த சிஷ்யனிடம் பரிவோடு கைதூக்கி விடுபவன் அல்லவோ ஆசாரியனாகி முக்திவழி காட்டுவான் ? திருவடிஸ்பர்சமே வலுவில் சென்று முக்தி கொடுக்கிறதே.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
We are all products of our experiences, good and bad. Sometimes you learn as much from the negative experiences as you do from the positive.



There will always be people who treat you wrongly. Be sure to thank them for making you strong.



Work hard for what you want. Anything you desire will not come to you without a fight.



To progress in life, surround yourself with people who have dreams, desires and ambitions.



Life is like a coin. Pleasure and pain are the two sides, only one side is visible at a time, but remember other side is also waiting for its turn.



There is no outside force that can affect our life unless we give that force power with our thoughts.



Anything is not easy but everything is possible.
ravi said…
REMEMBER YOUR ROOTS



It is said about a great sage who was a prime minister: When he was appointed prime minister to a king, he was almost a beggar on the streets. But the news of his wisdom spread, rumours started coming to the palace, and the king started going to him and he was impressed. He was tremendously impressed by the man and his insight -- he appointed him his prime minister.

ravi said…
The beggar came to the palace. The king said, now you can drop your robe. Beautiful clothes were ready for him. He was given a good bath; beautiful robes, ornaments -- as befits a prime minister.

ravi said…
Then everybody became intrigued by the fact that in one room he had something like treasure locked. And every day he used to go, unlock the door -- he would go alone, he would not allow anybody inside -- lock the door again, and he would remain there for at least half an hour, and then come out. Everybody became suspicious: What is happening in that room? What is he having in that room? Is there some conspiracy? Is there some secret? And of course, the king also became interested.

ravi said…
One day the king said, I would like to come with you in your private room. I could not sleep last night. I continuously worried about what is there.


The prime minister said, there is nothing and it is not worthy of your eyes. I will not take you.


The king became even more suspicious. He said, there seems to be some danger! I cannot allow this to happen in my palace. You will have to take me in! The prime minister said, if you don’t trust me then I will take you in -- but then this is the end of my prime-minister-ship. Then take my resignation and come into the room.
ravi said…
Otherwise, trust me and never ask about the room! But the king was really suspicious. He said, Okay, you give your resignation but I am coming into the room.



With his whole court they entered. There was nothing... his old robe. Just the old robe hanging on a nail in the room. They looked around: there was nothing -- the room was empty.



They said, why do you come here?

ravi said…
He said, Just to see this robe -- to remind me that once I was a beggar, and any day I will be a beggar again. Just to remind me so that I don’t get too attached to this prime-minister-ship.



He dropped out of his dress, took his robe. The king started weeping and crying; he said, don’t go! But he said, now, enough is enough. You could not trust me, and when there is no trust there is no point in my being here. I must go.



But he left the palace the same way he had entered one day. Those ten, twelve years he remained the prime minister meant nothing; that was just an accident.
ravi said…
நாராய நமஹ 🙏🙏
அழியாத சொத்தோடு திகழ்பவர்
ravi said…
நிர்விகல்பா நிராபா³தா⁴ நிர்பே⁴தா *பே⁴த³னாஶினீ* |🙏🙏

குல, குடும்ப ஒற்றுமையை வளர்ப்பவள்
ravi said…
🌀 *மதுரகவி சுவாமிகள்*🌀

Post by
http://www.srimahavishnuinfo.blogspot.com

1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார் மதுரகவி சுவாமிகள்.திருவரங்கத்தில் உறையும் அரங்கர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார்.

ravi said…
அரங்கன் அருள்

கிபி 1855 ஆம் வருடம் வைகுண்ட ஏகாதசி காலத்தில், திருவரங்கத்தின் மன்னரான நம்பெருமாள் (உற்சவர்) உலா வரும்போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட இறையின் அழகில் மனதை பறிகொடுத்த நிலையில் திருமாலுக்கு திருமாலை (இறைவனுக்காக மலர் மாலை தொடுத்தல்) கைங்கர்யம் செய்யவேண்டும் என உறுதிபூண்டார்.

ravi said…
அதற்காக காவிரி கரையை ஒட்டி, வேங்கடாசல ராமானுசதாசர் என்பவரின் திருநந்தவனத்தில் வசித்து வரும் திருநந்தவனக் குடிகள் என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகளிடம் (ஏகாங்கி அதாவது, கட்டை பிரம்மச்சாரியாக, திருமண வாழ்வில் ஈடுபடாமல், சிந்தையை அரங்கத்தானிடம் மட்டுமே வைத்து, தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது, பின் அதை மாலையாகத் தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக் கொண்டு கோயிலில் சேர்ப்பது என வாழ்க்கை முறை கொண்ட இறைவனின் அடியவர்கள்) மாலைகளை தொடுக்கும் கலை கற்றுக்கொண்டார்.

ravi said…
மதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயதில் அவரது பெற்றோர், பெண் பார்க்கத் தொடங்கியபோது தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும், ஒர் ஏகாங்கியாக அரங்கன் சேவையில் என்றென்றும் தான் திளைத்திருக்கப் போவதாகவும் கூறி தன் திருமணத்திற்கு என்று பெற்றோர் சேர்த்து வைத்திருந்த தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டார். இந்தத் தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி அழகுப் பார்த்தார் மதுரகவி. மீண்டும் பெற்றோரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்தினை பெற்றுக்கொண்டு. இந்த நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார்.

ravi said…
வைணவத்தில் பந்தம் பிடிப்போர், கட்டியம் கூறுவோர் போன்றோரை சாத்தாத வைணவர்கள் என்று அழைப்பர். அதாவது, உடலில் பூணூல் சாற்றாதவர்கள். இவர்கள் வசித்து வந்த திருவரங்க வீதி சாத்தாத (சாத்தார) வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது. பெருமாளுக்குப் பூமாலைகள் அனுப்பும் உரிமம் துவக்கத்தில் இவர்களிடம்தான் இருந்து வந்தது. பூச்சந்தை வைத்து இந்தத் தர்மப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் நொடித்துப் போக…. இந்தக் கைங்கர்யம் நின்று போய்விடுவதாக இருந்த வேளையில், மதுரகவி சுவாமிகள் ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து இந்த உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார்.

ravi said…
ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சன்னிதி சாமி ஐயங்காரிடம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு வைணவ அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார். நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, பூ கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார்.

ravi said…
பின்னப்பட்டு போயிருந்த திருவரங்க திருக்கோவிலின் பொன் கூரையையும் புதுப்பிக்க, கிபி 1891-ல் திருவரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமியை அணுக, முதலில் தனக்கு மாலை கைங்கர்யம் அன்றி வேறெதுவும் என்று மறுத்துவிட்டார் மதுரகவி.

ravi said…
அன்றிரவே மதுரகவியின் கனவில் தோன்றி அரங்கன் ஆணையிட மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும், அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் விவரித்தார். அரங்கன் திருவுளப்படியே திருப்பணியைத் துவக்கி, தன்னுடையதே முதல் உபயம் எனக்கூறி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டு துவங்கிவைத்தார் திரு குவளைக்குடி சிங்கம் ஐயங்கார். ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து. கிபி 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது. அந்தக் காலத்தில் எண்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணம் அல்ல என்பதை நினைவில் கொள்க.

ravi said…
இதற்கு அடுத்த ஆண்டு (கிபி 1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கபட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்ட மதுரகவி சுவாமிகள் அன்றைய தினமே இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார்.

திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்) இன்றும் காணக்கிடைக்கிறது.

தமிழகத்திலேயே திருநந்தவனக்குடி ஒருவருக்காக அவர் அமைத்த நந்தவன வளாகத்திலேயே எழுப்பப்பட்டுள்ள ஒரே சமாதித் திருக்கோயிலாக இதுதிகழ்கிறது

தனி ஒருவராய் ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, திருவரங்கக் கோயில் விமானத் திருப்பணிகள் நடத்தினார்.

திருவரங்க கோயிலுக்காக பிரமாண்டமாக காவிரிக் கரையை ஒட்டி அம்மா மண்டபத்துக்கு அருகே திருநந்தவனம் அமைத்தார்.

வருடம் முழுவதும் திருவரங்கப் பெருமானுக்கும் தாயாருக்கும் சக்கரத்து ஆழ்வாருக்கும் தேவைப்படும் மாலைகள் மதுரகவி சுவாமியின் நந்தவனத்திலிருந்தே வருகின்றன.

ஆழ்வார்களின் சேவைக்கு இணையாக இந்தத் தொண்டு கோவில் நிர்வாகத்தால் இன்று வரை மதிக்கப்பட்டு வருகிறது.

மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும் திருவரங்கம் கோயிலில் நடந்து வருகிறது. பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய அவசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம் செய்யப்படும். இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும் நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

ravi said…
இந்த நந்தவனத்தில் மலருகின்ற பூக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கே உரியவை. ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பூத்தொடுக்கும் இப்பணி ஏகாங்கிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர். அதனால், இவர்களுக்கு ஊதியம் கிடையாது. தினமும் இரண்டு வேளை உணவு இவர்களுக்கு உண்டு. துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, துளசி, பட்டு ரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ குருக்கத்தி, பாதிரி என்று எண்ணற்ற பூ வகைகள் நிறைந்த நந்தவனத்தில் தினமும் அதிகாலை வேளையில் சுமார் பத்து ஏகாங்கிகள், மாலை கட்டுதல், பூப்பறித்தல் என தினமும் சுமார் பதினாறு மாலைகள். இரு வேளைகளில் – அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் திருவரங்கம் செல்கின்றன. உற்சவ நாட்களான சித்திரை, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் திருவிழாக் காலங்களில் (மொத்தம் 44 நட்கள்) அலங்கார மாலைகள் செல்லும்.

திருவரங்கம் கோயில் வெளியாண்டாள் சன்னதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு. ஒரு கல்வெட்டாக – அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.

திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப்படும் இந்தத் திருநந்தவனமும் சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்), திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.;

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவரங்கம் மார்க்கமாகச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச் சாலை வழியாகச் செல்லும்.

ஓம் நமோ நாராயணா நின் திருவடி போற்றி,
ஸ்ரீமதுரகவி சுவாமிகள் நின் திருவடி சரணம்,

*விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்*
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
🌹🌺 "“ *அரக்கனான கன்றின் இரு பின்னங்கால்களையும் வாலையும் பிடித்துச் சுழற்றி அடித்து ஒரு மரத்தின் மேல் வீசி எறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺ஒருநாள், கிருஷ்ணரும் பலராமரும் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வத்ஸாசுரன் என்ற பெயருடைய அரக்கன் ஒரு கன்றின் வடிவை மேற்கொண்டு இரு குழந்தைகளையும் கொல்லும் நோக்கத்துடன் அங்கு வந்தான்.

🌺கன்றின் வடிவத்தை எடுத்திருந்ததால் அவன் மற்றக் கன்றுகளுடன் சேர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் கிருஷ்ணர் இதைக் கவனித்துவிட்டார்.

🌺உடனே அவர் அரக்கன் வந்திருப்பதை பலராமருக்குத் தெரிவித்தார். பின்னர் இரு சகோதரர்களும் ஓசைப்படாமல் அரக்கனை அணுகினார்கள்.

🌺கிருஷ்ணர் அரக்கனான கன்றின் இரு பின்னங்கால்களையும் வாலையும் பிடித்துச் சுழற்றி அடித்து ஒரு மரத்தின் மேல் வீசி எறிந்தார். அரக்கன் உயிரிழந்து மரத்தின் உச்சியிலிருந்து தரையில் விழுந்தான்.

🌺அரக்கன் தரையில் இறந்து கிடந்ததைக் கண்ட தோழச் சிறுவர்கள் கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமகிழ்ந்து ஆகாயத்திலிருந்து மலர் மாரி பொழிந்தனர்.

🌺இவ்வாறு, பிரபஞ்சப் படைப்பின் பாதுகாவலர்களான கிருஷ்ணரும் பலராமரும் ஒவ்வொரு நாள் காலையிலும் கன்றுகளை அழைத்துச் சென்று, விருந்தாவனத்தின் இடைச்சிறுவர்களாக, பால்ய லீலைகளில் களித்திருந்தார்கள்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 397* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*151*
ravi said…
*151 * निरन्तरा - நிரந்தரா -*

என்றும் தொடர்ந்து இருப்பவள்.

முடிவற்ற, எல்லையில்லாத கருணாசாகரி.

எங்கும் நிறைந்தவள்
ravi said…
அம்பாளைத்தவிர வேறு எதுவும் நிரந்தரம் கிடையாது .. எல்லாமே அழியக்கூடியது .. உறவுகள் சேர்த்த பொருள், அனுபவிக்கும் பொறுப்புக்கள் , உத்தியோகம் , உயர்வு எதுவுமே நிரந்தரம் இல்லை .. அவள் நாமங்கள் அவள் புகழ் அவளைப்பற்றிய சிந்தனைகள் மட்டுமே நம்மை உய்விக்கும் 🌸🌸🌸🌸🌸🌸🌸
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 396* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*100. தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது*


ஸகல ஸித்தி💫💫💫💫💫💫💫💫💫💫💫
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100
ravi said…
*தன்னடக்கம்*

மகான்கள் பக்தியை மட்டும் வளர்க்க வில்லை .. நம்மில் தன்னடக்கம் , ego இல்லாமை இவைகளையும் சொல்லி தந்துள்ளார்கள் ..

சிறந்த உதாரணம் இந்த 100வது ஸ்லோகம் ...

இதே மாதிரி ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆதி சங்கரர் போன்ற மகான்களும் தன்னை ஒரு நாயேன் என்று சொல்லி ஸ்லோகம் இயற்றி உள்ளார்கள் ..

அப்படிப்பட்ட சில ஸ்லோகங்களை பார்ப்போம் .

இவைகளை மட்டும் தினமும் சொன்னால் போதும் .

தன்னடக்கம் ஞானம் எல்லாம் தாமாகவே நமக்கு வந்து விடும்
ravi said…
சுப்ரமணிய புஜங்கம் ( ஆதி சங்கரர்)

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் .. 2 ..

*முருகா* எனக்கு ஒன்றும் தெரியாது .. உன் நாமத்தை மட்டும் சொல்வேன் ஆனால் அப்படி சொல்வதால் சொற்கள் பொருள்கள் தாமகவே என்னை த் தேடி வருகிறதே !!👌👌👌
ravi said…
*அபிராமி பட்டர்*

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்

நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்

என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!!

நாயேனையும் - நாயை விட ஈனனான என்னையும்

இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - இங்கு ஒரு பொருட்டாக விரும்பி வந்து

என்று பாடுகிறார்

*மாணிக்க வாசகர்*

*யார் கொலோ சதுரர்?*

இதோ பார்! சல்லிக்காசுக்குப் பிரயோசனமில்லாத என்னை நான் உனக்கு தந்தேன்.

என்னை நீ ஏற்றுக் கொண்டு, உன்னையே எனக்குத் தந்து விட்டாயே!

யார் புத்தி சாலி? நீயே சொல் — என்று சிவ பெருமானை நக்கல் செய்கிறார்.

தந்தது உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்

*சங்கரா ஆர்கொலோ சதுரர்?*

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்!

*பட்டினத்தார்*

ஆண்டவா! தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அந்தத் தங்கத்தினால் கொஞ்சம் பிரயோசனம் உண்டு;

ஆனால் அவர்களால் தங்கத்துக்குப் பிரயோஜனம் உண்டா?

அது போல நீ அருள் மழை பொழிவதால் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பலன் உண்டு.

ஆனால் என்னைப் போன்றவர்களால் உனக்கு ஏதேனும் பலன் உண்டா?

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்

குண்டு பொன்படைத்தோன்

தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்

கேதுண்டத் தனமையைப் போல்

உன்னாற் பிரயோசனம் வேணதெல்

லாம் உண்டு உனைப் பணியும்

என்னாற் பிரயோசனம் ஏதுண்டு?

காளத்தீயீச்சுரனே! —-

🙏🙏🙏👏👏👏👏👏
ravi said…
*கண்ணா*

வெறும் பொன் (தங்கம்) அத்தனை ஒளிர்வதில்லையே

நீ தங்கமாக இருந்தாலும், நாங்கள் உணர முடிவதில்லையே !!

பொன்னானது, செந்நிறத் தாமிரம் சேர்க்கப்பட்டு,

அழகிய அணிகலனாக உருவெடுக்கையில், அது எப்படி ஒளிர்கிறதோ,

அது போலவே ஸ்ரீயை (திருமகளை) மார்பில் தரித்து புருஷ உத்தமனாக,

ஸ்ரீமன் நாராயணனாக அடியவரை
நீ அரவணைத்துக் கொள்வதால் அன்றோ நீ ஒளிர் விடுகின்றாய்

உனை எல்லோரும் நம்புவதால் *நம்பி* என்றே பெயர் பெற்றாயோ

சிவந்த பொன் போல் மிளிரும்

வானுலகக் கடவுளர்க்கும், இமையோர்க்கும்

ஆதியஞ்சோதியை -

எம்பிரானை -

எங்ஙனம் யான் மறக்க இயலும்! *கண்ணா*
ravi said…
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற,

அச்செம்பொனே திகழும் திருமூர்த்தியை,

உம்பர் வானவர் ஆதியஞ்சோதியை,

எம்பிரானை என் சொல்லி மறப்பனோ.
ravi said…
அம்மா*

உன் இரு தாடகங்களை சுற்றி சுற்றி வரும் மீன்கள்

உன் கண்கள் எனும் தடாகத்தில் நீந்தி செல்லும் வேகமதில்

விண்மீன்கள் உன் ஒளி வட்டமதில் நீந்தி செல்லும் நேரமதில்

நிலவுடன் முகில்கள் உறவாடும் வேளை தனில்

குவளையும் கமலமும் கானம் இசைக்கும் தருணம் அதில்

உன் எழில் கண்டு சிலையானேன் ..

எனை வடித்த நீயே சிலை என்றார் பலர் ...

செதுக்கிப்பார் சிந்தூரம் சிதறும் என்றேன் ...

மாணிக்கம் சிந்தும் மதுரம் கொப்பளிக்கும் புன்னகை கொண்டவளே

உனை புரிந்து கொள்ளாதோர் பலர் இருக்க

உன் விழி தனில் எனை மூடி

எனையும் மீனாக்கி உன் தாய்மையில் தவழ வைக்கின்றாய் ...

தவம் என் செய்தேன் .
தாயவள் உனை நான் பெறவே ?🐡🐠🐟🐬
ravi said…
*❖ 18 வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா =*

முகத் தடாகத்தில் விளையாடும் மீன்களென இரு விழிகள் கொண்டவள்.🐡🐠🐟🐬🐳🐋🦈
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 121*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
நெட்டெழுத்து வட்டமோ

நிறைந்தவல்லி யோனியும்,

நெட்டெழுத்தில் வட்டமொன்று

நின்றதென்று கண்டிலேன்

குட்டெழுத்தில் உற்றதென்று

கொம்புகால் குறித்திடின்

எட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படானம் ஈசனே. 121
ravi said…
அ’ முதல் ‘ஔ’ வரை உள்ள நேட்டேழ்த்துக்கள் யாவும் வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் வட்டமான பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு வருகின்றது.

எல்லா எழுத்திலும் ஒரேழுத்து நின்றதை கண்டுகொள்ளுங்கள்.
குற்றெழுத்தாகிய ‘க’ முதல் ‘ன’ வரையில் அகார ஒலியில் உற்றிருப்பதை உணருங்கள்.

அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் எழுத்துக்களின் ஒலி மாறுவதை அறியுங்கள்.

உதாரணமாக ‘ச’ என்பதில் கொம்பு போட்டால் ‘சி’ என்ற சிவனாகவும், ‘சீ’ என்ற சீவனாகவும், கொம்பு கால் சேர்த்தால் செ, சே, சு, சூ, சா, சொ, சோ, என்று ஒலி மாறுகிறது.

இப்படி விளங்கும் எழுத்துக்கள் யாவும் ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி மொழியில் நிற்பதைப் போல்

பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து தியானியுங்கள்.
ravi said…
முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 25,26 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம் ன்னு சொன்னார். இந்த 27 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு சொல்றார். அது எப்பேற்பட்ட ஔஷதம்?

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥

ன்னு சொல்றார்
ravi said…
இந்த வேதத்துல சொல்ற வ்ரதங்கள் எல்லாம் நீ பண்றயா?

உனக்கு பக்தி இல்லேனா அது உனக்கு ஏதோ கொஞ்சம் உடம்பு இளைக்கறதுக்கு பயன்படுமே தவிர அதுனால உனக்கு வேற ஒண்ணும் பிரயோஜனம் கிடைக்காதுன்னு சொல்றார்.

வேற புண்ய கார்யங்கள், இஷ்டா பூர்த்தங்கள்னு எல்லாம் சொல்வா.

கோயில்கள்ல மண்டகப் படி பண்றது, அன்னதானம் பண்றது, குளம் வெட்டறது.

இந்த மாதிரி நல்ல கார்யங்கள் எல்லாம் பக்தி இல்லேன்னா, சாம்பல்ல பண்ண ஆஹூதி மாதிரிங்கிறார்.

ஆஹூதிங்கிறது எப்பவுமே ஜ்வலிக்கிற அக்னியிலதான் பண்ணனும்.

சாம்பல்ல பண்ணக் கூடாது. நெய்யை சாம்பல்ல விட்டா என்ன ஆகப் போறது?

எரியப் போறது இல்ல. அந்த மாதிரி பிரயோஜனம் இல்லாம போயிடும்.
ravi said…
காஞ்சி சங்கராச்சார்யார் (1894-1994) உபன்யாசத்திலிருந்து எடுக்கப்பட்ட பொன்மொழிகள். சென்னை நகரில் 1932-ம் ஆண்டில் செய்த உபந்யாங்கள்; Source Book –நமது தர்மம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியீடு , பிப்ரவரி 1950

நவம்பர் 1 செவ்வாய்க் கிழமை

சில மதஸ்தர்கள் முக்கியமான புஸ்தகத்துக்கு கோயில் கட்டி வணங்குகிறார்கள் ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை அவர்கள் கிரந்த ஸாஹேப் என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் .

xxx

நவம்பர் 2 புதன் கிழமை

நம்முடைய மதத்தில், மதத்தைப் பற்றி படிப்பதே கிடையாது அப்படிப் படிக்காததனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் , நம்முடைய மதத்திலிருந்து பிடித்துப் போகிறார்கள் .

xxx

நவம்பர் 3 வியாழக் கிழமை

நம்முடைய மதக் கிரந்தங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம் . மற்றவர்கள், பிற மத புஸ்தகங்களை அழிக்கிறார்கள் . நமக்கு புஸ்தகத்தின் பெயரே தெரியவில்லை படிப்பதால் என்ன பிரயோஜனம் என்றும் கேட்கிறோம் . பிரேமை இருந்தால் காரணம் வேண்டியதில்லை

xxx

நவம்பர் 4 வெள்ளிக் கிழமை

மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேகமே வராது .மதப் படிப்பை இளம் பருவத்திலே படித்திருந்தால் எல்லோருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும் . ஸந்தேகம் இருக்காது .

xxx

நவம்பர் 5 சனிக் கிழமை

நமக்குள்ள ஸந்தேகங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்களை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம் உபதேசம் பெறுகிறோம் ; மஹா க்ஷேத்திரங்களுக்குப் போகிறோம் ; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம்; அப்படிச் செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது

xxx

நவம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை

இன்பத்துக்குப் பொருள் சாதனமாக இருப்பது போல , பொருளுக்கு தர்மம் சாதனமாக இருக்கிறது .தர்மம் அர்த்தத்துக்கு சாதனம் ; அர்த்தம் இன்பத்திற்கு சாதனம் .

xxx

நவம்பர் 7 திங்கட் கிழமை

எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம்; என்ன மாதிரி கொடுத்தால் நாம் பின்னால் செளக்கியமாக இருக்கலாமோ அது தர்மம்
ravi said…
நவம்பர் 8 செவ்வாய்க் கிழமை

ஸங்கீதம் , ஸாஹித்யம் என்னும் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் — ஸாஹித்தியம் உயர்ந்தது ; மருந்தின் மேலே வெல்லம் தடவிக் கொடுப்பது போல ஸாஹித்தியத்தை எல்லாரும் கேட்பதற்காக ஸங்கீதம் உபயோகப்படுகிறது என்கிறார் சிவ லீலார்ணவம் கவி.

xxx

நவம்பர் 9 புதன் கிழமை

கவியினுடைய நல்ல வார்த்தைகள் அமிருதத்தைப் போன்றவை .அமிருதம் சாகாது. கவியின் பாவத்தை இருதயத்தில் வாங்கினால் அது சாகாது. உள்ளுக்குள்ளே இருந்து நினைக்க நினைக்க இன்பத்தைத் தரும்

xxx

நவம்பர் 10 வியாழக் கிழமை

வேறே உள்ள மதப் புஸ்தகங்களெல்லாம் மனிதன் அடையவேண்டியது பரலோகம் என்று சொல்லுகிறது. மோக்ஷத்தைப் பரலோகம் என்றே சொல்லுகின்றன. ஆனால் நம்முடைய புஸ்தகங்கங்களில் பரலோகம் என்று வேறு இல்லை . இங்கேயே மோக்ஷத்தை அடையலாம்

xxx

நவம்பர் 11 வெள்ளிக் கிழமை

தர்மத்தைச் சொல்லும் புஸ்தகங்கள் 14; அவை ஆறு அங்கங்கள், நாலு வேதங்கள்,, மீமாம்ஸை , புராணம், நியாயம்,தர்ம சாஸ்திரம் . வேதமோடாறங்க மாயினானை என்று தேவாரம் சொல்லுகிறது
ravi said…
ஒரு ஜாமம் 3 மணி ஆகும்; அதாவது ஏழரை நாழிகை; 5 நாழிகை உஷத் காலத்திலும் இரண்டரை நாழிகை பிரதோஷ காலத்திலும் போய்விடும்; 30 நாழிகை பகற் காலத்தில் போய்விடும்; மிச்சம் இருப்பவை 3 ஜாமங்கள் ; அதனால்தான் ராத்திரிக்கு த்ரி யாமா என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது

xxxx

நவம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை

சிராத்தம் என்பதற்கு சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்; சிரத்தைதான் நமக்கு முக்கியம் ;ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் சட்டப்படிதான் பண்ண வேண்டும்.; காரியத்துக்குச் சட்டம் வேண்டும்; பக்திக்கும் ஞானத்துக்கும் ஒன்றும் வேண்டாம்.

Xxxx

நவம்பர் 14 திங்கட் கிழமை

இந்த மாதிரி வேஷ்டி கட்டிக்கொள்வது , ருத்ராக்ஷம் போட்டுக்கொள்வது இவைகளை எப்பொழுது ஆரம்பித்தார்கள்?இங்கிலீஸ்காரர்கள் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன உடை இருந்தது ; இன்ன உடை இப்பொழுதிலிருந்து உண்டாயிற்று என்று எழுதிப் படம் போட்டிருக்கிறார்கள. நாம் அந்த மாதிரி செய்யப் பார்த்தால் நமக்கு அகப்படாது .
ravi said…
xxx

நவம்பர் 15 செவ்வாய்க் கிழமை

சாப்பிடுவதற்கு முன் வைச்வதேவ ஹோமம் பண்ணி பலி கொடுக்க வேண்டும். மனிதர்களை உத்தேசித்து ஹந்தா என்று போட வேண்டும்; தேவர்களை உத்தேசித்து ஸ்வாஹா என்று போட வேண்டும்; பிதுருக்களை உத்தேசித்து ஸ்வதா என்று போட வேண்டும்.

xxx

நவம்பர் 16 புதன் கிழமை

இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவு பிராணிகள் இருக்கின்றனவோ அவை எல்லாவற்றுக்கும் வைச்வதேவத்தில் பலி உண்டு. நாய், காக்கை, சண்டாளன் இவைகளுக்கெல்லாம் பலி உண்டு.

xxx

நவம்பர் 17 வியாழக் கிழமை

ஷட்கர்ம நிரதர்களான (அறுதொழில் அந்தணர்) என்று காகிதம் எழுதுகிற வழக்கம் உண்டு . யஜனம், யாஜனம் , அத்யயனம் , அத்யாபனம், பிரதானம் , பிரதிக்ரஹம் என்று சொல்லுவது ஒரு வகை .

Xxx

நவம்பர் 18 வெள்ளிக் கிழமை

காயத்ரீ மந்திரம் ஆயிரம் ஜபிப்பது உத்தமம் ; நூறு ஜபிப்பது மத்யமம்; பத்து ஜபிப்பது அதமம் .

தைத்திரீய ஆரண்யகம் ” ஸஹஸ்ர பரமா தேவீ சதமத்யமா தசாவரா ” என்று சொல்கிறது .

xxx

நவம்பர் 19 சனிக் கிழமை

ஒரு சின்ன ஸ்லோகம் இருக்கிறது ; அதில் பிரதிதினமும் பண்ணவேண்டிய ஆறு காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஸந்த்யா ஸ்நானம் ஜபோ ஹோமோ தேவதானாம் ச பூஜனம்

ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட் கர்மாணி தினே தினே
ravi said…
xxx

நவம்பர் 20 ஞாயிற்றுக் கிழமை

நாள்தோறும் செய்யவேண்டிய ஆறு — ஸ்நானம் , ஸந்தியாவந்தனம், ஹோமம் (ஒளபாஸனம்), சிவ பூஜை, ஆதித்யம் (அதிதிக்கு அன்னம் இடுதல்), வைச்வதேவம் .

xxx

நவம்பர் 21 திங்கட் கிழமை

காந்தி விதவா விவாஹம் தான் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று சொன்னார் காந்தி படம் அநேகமாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது ஆனாலும் அவர் சொன்னபடி எவ்வளவு பேர் கேட்டார்கள்?

xxx

நவம்பர் 22 செவ்வாய்க் கிழமை

நான் கிராப் (crop) பை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லுகிறேன்; எத்தனை பேர் எடுத்தார்கள்? அதையும் கேட்கத் தயாரில்லை; இதையும் கேட்கத் தயாரில்லை ; ஸங்கடப்படுகிறார்கள்

xxx
ravi said…
நவம்பர் 23 புதன் கிழமை

வேத சம்பந்தமான எல்லா கிரியைகளிலும் கோ ப்ராஹ்மணேப்யஹ சுபமஸ்து நித்யம் என்று சொல்லுவது வழக்கம். இந்த வாக்கியத்தில் பசுவைத்தான் முதன்மையாகச் சொல்லப்பட்டிருக்கிறது

xxx

நவம்பர் 24 வியாழக் கிழமை

‘கோ’ வானது லோகத்திற்கே தாயாக இருக்கிறது கோ- வைத்தவிர பாக்கி பிராணிகள் எல்லாம் அவற்றின் சிசுக்களுக்கு மாத்திரம் பால் கொடுத்து ரக்ஷிக்கின்றன . பசுவோ ஆயுள் உள்ள வரை எந்த ஜாதிக்கும் பால் கொடுத்து ரக்ஷிக்கிறது .இதையெல்லாம் உத்தேசித்துத்தான் சாஸ்திரங்களில் கோ- வை ரக்ஷிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறது .

xxxx

நவம்பர் 25 வெள்ளிக் கிழமை

சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் நடந்த போட்டியில் வைகை ஆற்றில் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் ஓலையே வெல்லும் என்றும் அதுதான் உண்மையான மதம் என்றும் தீர்மானித்து எழுதினர் ; அந்த ஓலையில் திரு ஞான சம்பந்தர் எழுதிய வாழ்த்துப் பதிகத்தில் வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம் என்பதே முதல் வரி . அதுதான் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்னும் சிவ ஸ்தலத்தை அடைந்தது .
ravi said…
நவம்பர் 26 சனிக் கிழமை

அந்த ஸ்தலத்தில் இருக்கிற பரமேஸ்வரனுக்கு பத்திரிகா பரமேசுவரன் என்று ஸம்ஸ்க்ருதத்தில் பெயர். பத்திரிகை என்றால் ஏடு என்று அர்த்தம். ஏடு அங்கே தங்கியதால் சுவாமிக்கு அப்பெயர் ஏற்பட்டது

xxx

நவம்பர் 27 ஞாயிற்றுக் கிழமை

ஈசுவரன் நமக்கு ஐசுவரியத்தைக் கொடுக்கிறார் .அதை வைத்துக்கொண்டு பரோபகாரம் செய்யவேண்டும் . தங்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி ஒரு தர்மத்தைச் செய்யவேண்டும் ; செய்ய முடிந்தபொழுது உடனே செய்யவேண்டும் ; அப்புறம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது .

xxx

நவம்பர் 28 திங்கட் கிழமை

ஸந்யாஸ ஆச்ரமத்தை உடையவர்கள் அஹிம்சையைப் பூர்ணமாக அனுஷ்டிக்கவேண்டும். ஸந்யாஸம் வாங்கிக் கொள்ளும்போதே அவர்கள் அஹிம்ஸன் ஸர்வ பூதான் யன்யத்ர தீர்த்தேப்யஹ (சாந்தோக்யோபனிஷத் ) என்று பிரதிக்ஞை செய்துகொள்கிறார்கள் ‘ ஸகல பிராணிகளுக்கும் என்னால் பயமில்லை என்பது அதன் தாத்பர்யம்

xxx

நவம்பர் 29 செவ்வாய்க் கிழமை

ஸத்தியத்திற்கு லக்ஷணம் (definition) ஒன்று உண்டு —வாங்மனஸயோரைகரூப்யம் ஸத்யம் — மனதும் வாக்கும் ஒரே விஷயத்தைச் செய்வதுதான் ஸத்தியம் .

xxx

நவம்பர் 30 புதன் கிழமை

அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸன்னிதெள வைரத்யாகஹ — என்று பாதஞ்ஜல யோக ஸூத்ரம் – 4 சொல்லுகிறது அஹிம்ஸையை திரிகரணங்களாலும் ஸாதித்து விட்டோமானால் நமக்கு எதிரில் யாவரும் சாந்தம் அடைவார்கள் (கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும் – குறள் 260)

–subham–

Tags- காஞ்சி , பரமாசார்யாள், சுவாமிகள்
ravi said…
திருமாலை பாசுரம்-26.

“போதெல்லாம் போது கொண்டு ன் பொன்னடி புனைய மாட்டேன்;
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேனதுதன் னாலே:
ஏதிலேனரங்கர்க்கு எல்லே*
என் செய்வான் தோன்றினேனே.”
ravi said…
பிரித்து படிக்க.

“போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்”.

திருவரங்கன் ஆழ்வாரிடம்……

” ஆழ்வாரே
கர்ம- பக்தி- ஞான யோகம் எதுவுமே செய்யவில்லை என்று கூறி விட்டீர்கள்………
சரி போகட்டும் எப்போதாவது ஏதாவது செய்தீரா” என்று கேட்கிறார்.

ஆழ்வார் அதற்கு

“போது என்றால் நேரம்/ பொழுது/ காலம்….

அதாவது —

ஆழ்வார் தன்னைப் பற்றி அரங்கனிடம்……

Advertisements

REPORT THIS AD

அவர் மோக்ஷம் தர நீர் என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு…….

“அரங்கா ஐயனே நான் ஒரு போதும் எந்த காலத்திலும் உமது பொன்னடி/ திருவடி மகிமை உணர்ந்து-
நாடி வந்து தொழவும் இல்லை.

எனக்கு எதுவும் தெரியாது அறியாமையில் மூழ்கி
உனது திருவடி நாடி-தேடி உவகையுடன் உமது திருவடி சம்மந்தத்தைக் கொண்டாடி வணங்காத பேதை தான் நான்…
என்று கூற….
ravi said…
சரி மலர் எப்போதாவது அர்ப்பணித்ததுண்டா!.”

பகவானுக்கு இதெல்லாம் தேவையா? என்ன அதெல்லாம் ஒன்னும் அவருக்கு அவசியமில்லை.

நாம் பகவானை நாடி அவன் பொன்னடி போற்றி…தொழ வேண்டும் என்று உணர்த்தவே ஆழ்வார்
பிரபந்த.. பாசுரங்கள் மூலம்….
அருளியுள்ளார்.

ஆழ்வார் அமுதமாக இனிய மேன்மையான பக்தி பணிவு எப்படி வெளிப்படும்/- வெளிப்படுத்த நாம் பழக வேண்டும் என்றே பகவானும் ஆழ்வாரிடம் நடத்திய லீலையாகவே இந்த சம்பாஷணையை கருதுகிறேன்.

மேலும் ஆழ்வார் அருளுகிறார்.
ravi said…
போது எல்லாம்( ஒரு போதும்)

“போது(மலர்) கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்…

” தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்”

பாருங்கள்…..நாமாக இருந்தால் நிஜமாகவே இப்படித்தான் இருப்போம்… ஆனால்…
நான் உன்னை அப்படி தொழுதேனே இப்படி செய்தேனே…..
நீ என்னை சோதித்து கஷ்டம் தருகிறாயே…..
இது போதாதென்று நீ தானே கடவுள்….
காப்பாற்றினால் அல்லவா நீ கடவுள் கஷ்டம் தந்து தண்டிப்பது/ இன்னும் ஒரு படி மேலே போய் பழி வாங்கறேயே நீ விளையாட நான் தான் அகப்பட்டேனா?
அக்கிரமம் பண்றவனை எல்லாம் நன்றாக வாழ வைக்கும்- நீ என்னை கை விட்டு விட்டியே ….

என்று திரட்டுவோம்/ புலம்புவோம்….
பகவானை
போற்றி ஒரு வார்த்தையும் துதியாக கூறாமல் ஒரு மலரும் அர்ப்பணிக்காமல்…..

ஆனால் ஆழ்வார் நந்தவன கைங்கர்யம் புரிந்தவர்……..
நாம்…
திருவடி தொழுவதாக எண்ணிக் கொண்டு பிரதிபலனாக ஆயிரம் கோரிக்கை வைப்போம்.
ravi said…
ஆனால் ஆழ்வாரோ மிகவும் பணிவாக
நான் உன் திருவடி தொழவில்லை மறந்தும் கூட உன்னை நாடி வராது… ஒரு போதும் உன்னை நாடி வரவில்லை

ஒரு போது(மலர் தூவி) வணங்கியது கிடையாது

“தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்”

இனிமையான உமது அருட்குணங்களை உமது கருணை, பேரன்பு, எளிமை அருளும் தன்மைகளை…..

“திரு நாமமாக பெரியோர்கள் மொழிந்த………
பக்தவத்ஸலன், சரணாகத வத்ஸலன்,
கருணாமூர்த்தி,
ஸ்ரீ ராமன், ஸ்ரீஹரி, கிருஷ்ண கிருஷ்ண கோவிந்தா, அரங்கா என்று வாய்நிறைய நல்ல மொழிகளாக….. உன் இனிய திரு நாமங்களை….(பகவானின் தன்மைகளை விவரிக்கும் திருகுணம் கூறும் நாமங்களை…….
கூறியதே இல்லை……
ravi said…
தொழ வேண்டும் அர்ச்சிக்க வேண்டும் உம்மை என்று உணராமலே…. காலம் கழிந்தே வீணாக போயிற்று.

இந்த சம்சார சாகரத்தில் மூழ்கி……
உமது திருவடிகளை நல்ல வாசமிகு மலர்கள் கொண்டு…..
இரண்டாவது போது எனும் வார்த்தை மலர்களைக் குறிக்கிறது.

துதிகளை கூறவில்லை என்றாலும் அட்லீஸ்ட் எம்பெருமான் பொன்னடியை…..

பிராட்டி வருடும் திருவடிகள் அல்லவா?!
லோகமாதா பாற்கடலிலிருந்து தோன்றிய….அமுதத்துடன் அமுதகலச பகவான் தோன்றும் முன்பு தோன்றி தானே ஒரு அமுதமாக இனிமையும்…
உன்னதமான உத்தமமான தேவியாக எம்பெருமானை வந்தடைந்து திருவடி கைங்கர்யம் செய்து ஜீவன்களுக்கு கருணையோடு உஜ்ஜீவிக்க பகவானிடத்தே புருஷகாரம் செய்து செய்து…..

தாயாரின் பொற்கரங்கள் பட்டு பகவானின் திருவடி பொன்னடியாக விசேஷமாக…
ஜீவன்களை ஈர்த்து தன்னகத்தே அடைக்கலம் அருளி…..
ravi said…
மாசுச:” என்பாரே-
அப்படி அடைக்கலம் அருளி பொன்னடியாக மின்னுகிற…….
அப்படிப்பட்ட …..அந்த பொன்னடிகளில் பகவானை தொழுது ஒரு புஷ்பத்தை தனது-
ஹ்ருதயத்தை அர்ப்பணிக்கும் ஒரு அடையாளமாக சொல்வார்களே…..
ஆங்கிலத்தில் showing “token of love ”
…..
இந்த மெய்யன்பு
பகவானிடத்து….

காதலாகி கசிந்து உளமுருகி தன் அன்பின் அடையாளமாக …
தன் இருதயத்தை/…. ஆன்மாவை அவனது பொன்னடியில்- திருவடிகளில்…. சமர்ப்பிக்கும் அடையாளமாக….
ஒரு சாதாரண பூவை… மலரைக் கூட திருவடியில் சமர்ப்பித்து வணங்கவில்லை என்று…..

தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டு பணிவன்புடன் தான் ஏதும் செய்யவில்லை என்று செப்புகிறார் ஆழ்வார்.
ravi said…
எம்பெருமான் ஜீவன்களின் குறைகளை மறந்து அருளுவதில் பேரன்பு கொண்டவர் என்றால்….

நம் தொண்டரடிப்பொடி ஆழ்வார்….
பக்தியில் பணிவும் பரஞானமும் உணர்ந்தவராயினும்………..
அதையெல்லாம் கூறி மோக்ஷம் கேட்கவில்லை.

இன்னும் ஒரு படி தாழ்மையுடன் பணிவாக…….

இதற்கெல்லாம் காரணமாக….

” ஐயனே திருவரங்கனே…..

” காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேனதுதன் னாலே”

காதலால் நெஞ்சம் அதாவது ஆழ்வாரின் நெஞ்சம் …

ஆண்டாள் கொண்ட காதல் நம்மாழ்வார் கொண்ட காதல் போல….

ஆண்டாள் இயற்கையில் பெண் பகவானை பக்தியுடன் நேசித்து காதலால் கசிந்து உருகி பாடினாள் என்றால்…

நம்மாழ்வாரும் நாயகி பாவத்திலும்….
தாயாகவும் பிள்ளைத்தமிழ் பாடி பகவானை
மஞ்சனமாட்டி …
பூச்சூட்டி தாலாட்டு பாடி என்று பலபலவாய் பகவானை ஆராதித்தார் அல்லவா?
அதற்கு பகவானிடம் தங்கள் மனதை பறிகொடுத்து* அவர்கள் உள்ளத்தில் பகவானை எல்லா விதமாகவும் இருத்தி* ….
பாடினார்கள்….
ravi said…
அவர் உள்ளம் அரங்கனிடம் லயித்து அவன் பால் மனது தன் வசமின்றி ஈடுபட்டு
பக்தியில் மூழ்கி–பகவானோடு தன் நெஞ்சம் கலக்க வில்லை என்கிறார்……
ஆழ்வார் அருளமுது தொடரும்.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

திருமாலை.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

திருமாலை-26
பாசுரம் எனது சிறு விளக்கம் பகுதி-2.

” போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்:
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால்
நெஞ்சமன்பு –
கலந்திலே னதுதன் னாலே:
ஏதிலே னரங்கர்க்கு எல்லே*
என்செய்வான் தோன்றி-னேனே.

சென்ற பதிவில் ஆழ்வாரை அரங்கன்
மோக்ஷம்
அருளுவதற்கு

ஆழ்வார்
பகவானது திருவடி தொழுதாரா….
(பொன்னடி புனைய மாட்டேன் என்று ஆழ்வார் (அருளுரை) பாசுரத்தில் பதிலளித்த தையும்,

பிறகு பகவான்….
திருக்குணம் செப்பும் நாமங்களை கூறினாரா?
ravi said…
திருக்குணம் செப்ப மாட்டேன்)
என்று ஆழ்வார் பாசுரமாக கூறியதாக கண்டோம்.

அதாவது பகவானை தொழுது அவனை பக்தியோடு ஆராதித்து அவரை அணுகுவதற்கு பெரியோர்கள் காட்டிய வழி…..

நம் இந்திரியங்களை பகவான் நமக்கருளிய கைகளை கொண்டு பகவானின் திருவடியை கைகூப்பி வணங்கி வழிபட…..

தொண்டு மூலம் பகவானை மகிழ்வித்து*
அவரை ஆராதித்து கொண்டாடணும்…..

அடுத்து வாக்கு மூலம் பகவான் திருநாமங்களை அவரது திருக்குணங்களை நாமும் கூறி பிறருக்கும் எடுத்து கூறி சத்சங்கத்தில் இருந்து கொண்டு பகவானுக்கு வாக்கு மூலம்…

“வாசா” கைங்கர்யம் செய்ய வேண்டும்.
இதுவே எடுத்த பிறப்புக்கு ஒரு ஜீவன் செய்ய வேண்டிய கடமையும் கூட…

இதற்கு அடுத்து பகவான் கேட்கிறார்……. ஆழ்வாரை…..ஆழ்வாரே சரி போகட்டும்…..நீர் பொன்னடி போற்றி புனையவில்லை
….. சிலருக்கு இயலாது போகிறது அல்லவா பகவான் அதை பெரிது படுத்தாது……….
… சரி வாக்கு மூலம் திருநாமங்களும் கூறாது விட்டீர்கள்……
போகட்டும்……
மனசிலாவது என்னை எண்ணினீரா……
ravi said…
நம் ஆழ்வார் தான் பரமசாதுவாயிற்றே….
நாமானால் காரியமாக… வேணுமானால்…..

உன்னை நினைச்சுண்டே இருந்தேன் உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டே தான் இருந்தேன் வர முடியாமல் போச்சு ரொம்ப வருத்தம் மன்னிக்கவும் கேட்டு கார்யம் ……முக்யமாச்சே உண்மைய சொல்லி இழக்க முடியுமா?
சமயோசிதமாக பொய் என்று நமக்கும் தெரியும் கேட்பவருக்கு தெரியும் புரியும் என்று இருந்தாலும் நம்ம வைக்க சொல்வோமே…….
அப்படி எல்லாம் சொல்லத் தெரியாமல்…..
பரம பவித்ரமான மனசோட பவ்யமாக பணிவு மேலோங்க……
ஸ்வாமி மனசுல உம் மீது ஆழ்ந்த பக்தி மிகு காதல் எல்லாம் எனக்கு வரவே….. இல்லை.

“காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேனதுதன் னாலே….”

என்று உம்மை நான் மனங்கனிந்து காதல் மிகுந்து நீயே ஸர்வம் என்று உணர்ந்து உம்மோடு இணைய ஆம் திருவடிகளில்
ravi said…
என்னை…. அதாவது தனது ஆத்மாவை பகவானுக்கே…..
என்று அர்ப்பணிக்க….உடல் பொருள் ஆவி அனைத்தையும் பகவானிடமே சரண் என்று ஒப்புவிக்க…….. வேண்டும்.

அப்படி செய்த மனதில் அந்த பகவானே வந்து அமர்ந்து விடுவார் தான்…. தனது…. என்ற அகங்கார-மமகாரங்கள் எல்லாம்
மறைந்து நம் மனதில் அவன் வந்து உறைவதனாலே நெஞ்சமது ஒன்று கலந்து….
அது தானே இறையருள் கொண்ட/ பெற்ற மனமாகிறது.
அதை ஆழ்வார் செய்ய வில்லை என்று கூறுகிறார்……!!!!!

“ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே*
என் செய்வான் தோன்றினேனே.”

எதுவும் நான் செய்ய வில்லை திருவரங்கா*
இப்படி ஆழ்வார் மனது மறுகி தான் பிறந்ததே வீண் தான்….

சிலரை வீட்டில் தெண்டச்சோறு என்பார்களே அதைப்போல ஆழ்வார்
தன்னிலை தாழ்த்திக் கொண்டு
…..

ஏனோ நானும் ஒரு பிறவி என்று நீயும் என்னை படைத்து விட்டாய்…..
நானும் பிறந்த பயனாக ஒன்றுமே செய்ய வில்லை…..
பிறந்து தெண்டமாக வீணே கழித்து விட்டேன் என் செய்வேன் அரங்கா
வழிய
றியாது…. மனதில் வைராக்கியம் பூணாது….
எதுவும் இல்லாமல் போதை போக்கி விட்டேன்…..
நீங்களே பார்த்து எனக்கருளி என்னை உமது தொண்டில் பரமபதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"இதுதான் ஒரு மாதத்துக்கு உனக்கு நைவேத்தியம் !"

(அதிசயங்கள் நடக்கும்,நம்பிக்கைதான் வேண்டும்)

பக்தியுடன் உருகினால் நமக்கும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்கும்.நம்பிக்கைதான் வேண்டும்

கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பம்பாயில் கணபதிராம் என்பவரும், அவர் மனைவியும் பெரியவாளின் பரம பக்தர்கள்.

பெரியவாள் பாதுகையில் கற்கள் எடுத்துப் பதிக்க வேண்டுமென்பதற்காக, தனது வைரத்தோட்டையே கொடுத்தவர்கள்.

ravi said…
ஒரு ஆபரேஷன் செய்து கொள்வதற்காக மனைவியுடன் கணபதிராம் ஒரு மாத காலம் சென்னைக்கு வந்து தங்க வேண்டி வந்தது.புறப்படும் முன் அவர் மனைவி, பெரியவாளுக்கு ஒரு மாதம் பூஜை இல்லாமல் போகுமே என்று கவலைப்பட்டார்.

ஒரு முடிவுக்கு வந்து, ஒரு டப்பாவில் திராட்சைப் பழத்தை எடுத்து வைத்து, "இதுதான் ஒரு மாதத்துக்கு உனக்கு நைவேத்தியம் நான் திரும்பி வந்ததும் பூஜை தொடரும். மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ravi said…
ஆப்ரேஷன் ஆகி வீடு திரும்பியதும் பெரியவா முன்னால் வைத்த திராட்சைப் பழம் நினைவுக்கு வந்தது.அதை எடுத்து பிரசாதத்தை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமென்று திறந்து பார்த்தால் ஆச்சரியம்! ஒரு பழம்கூட அதில் இல்லை.

பக்தியுடன் உருகினால் நமக்கும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்கும். நம்பிக்கைதான் வேண்டும்


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

"பூவையின் துயர் தீர பூக்கொடுத்த புனிதர்"

(பெரியவா பூஜை செய்த செம்பருத்தி மகிமை)

'பூ தந்து புனிதம் நடத்திய புண்ணியர்'

நன்றி- குமுதம் லைஃப்
மன்னை ஜீ நீலா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சி மகான் பல வருடங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் தங்கி 'சந்திரமௌளீஸ்வரர்; பூஜையை செய்திருக் கிறார்கள்.

அந்த சமயத்தில் சாத்தனூரில் வியாச பூஜை செய்து தொடர்ந்து சாதுர்மாஸ்ய விரதமாக இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்.

ravi said…
அப்போது ஒருமேடையில் வேதவியாசர் முதலான அறுபத்து ஏழு பீடாதிபதி களையும் முனை முறியாத அட்சதை (அரிசி), மற்றும் எலுமிச்சம் பழத்தில் எழுந்தருளச் செய்து, அதன் முன்பாக அமர்ந்து மகாபெரியவா பூஜை செய்தார்.

அதனால், அவரை தரிசிக்க வரும் குழந்தைகள் பலரும் முனை ஒடியாத அட்சதையை தயாரித்து பூஜைக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டு குங்குமமும், காமாக்ஷி அம்மன் பொறித்த வெள்ளிக்காசும் பிரசாதமாகக் கொடுப்பார் மகான். அந்த வெள்ளிக்காசைப் பெற்றுக்கொண்டு குழந்தைகள் அடையும் சந்தோஷம் அளவிட முடியாதது.

அந்த சமயத்தில் ஒருநாள், நடுத்தர வயதைக் கடந்த ஒரு தம்பதியர், சுமார் பதினெட்டு வயதுள்ள தங்கள் மகளோடு மகானை தரிசிக்க வந்தார்கள் மகான் முன்னிலையில் வந்த பின்னும், எதுவும் சொல்லாமல், அவர்கள் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்த மகான், அந்த அம்மாளிடம் என்ன பிரச்னை என்பது போல் சைகையில் கேட்டார்.

அந்தப் பெண்மணி, "எங்கள் மகளுக்கு பதின்மூன்று வயதில் திருமணம் செய்து விட்டோம். பெரிய மனுஷிஆனதும் புருஷன் வீட்டில் கொண்டுவிட நினைத்திருந்தோம். ஐந்தாறு வருஷங்கள் ஆகியும்,இவள் இன்னும் பெரியவள்ஆகவில்லை!" என்று மிகுந்த துக்கத்துடன் சொன்னார்

மேலும் மாப்பிள்ளை வீட்டில் வேறு கல்யாணம் செய்ய வக்கீலைப் . பார்ப்பதாக கேள்விப் படுவதாகவும் சொல்லி வருந்தினார்கள்அந்தத் தம்பதியர். அமைதியாகக் கேட்டுக்கொண்ட பெரியவா, " இரண்டு நாள் தங்கி சந்திர மௌளீஸ்வரர் பூஜையை தரிசனம் செய்து தீர்த்தப் பிரசாதம் வாங்கிண்டு செல்லுங்கள். நல்லதே நடக்கும்.." என்று சொன்னார்.

அப்படியே அவர்களும் இரு தினங்கள் இருந்து பூஜைகளை தரிசித்து விட்டு, மூன்றாவது நாள் மகானிடம் வந்து, ஊருக்குக் கிளம்ப உத்தரவு வாங்கிக் கொள்வதாகிக் கூறி நமஸ்காரம் செய்தார்கள்

.பெரியவா மௌனமாக ஆசிர்வதித்தார். பிறகு பூஜையிலிருந்த ஒரு செம்பருத்திப் பூவை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

"இதை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடு! தொடர்ந்து இதுபோல் பன்னிரண்டு நாட்கள் சுவாமிக்கு வைத்த புஷ்பத்தை சாப்பிடு" என்று சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினார்.

என்ன ஆச்சரியம்; எத்தனையோ மருத்துவம் செய்தும், பூப்பு அடையாத அந்தப் பூவை (பெண்), மகான் சொன்னபடி செம்பருத்திப் பூவை சாப்பிடத் தொடங்கிய ஐந்தாவது நாளே பெரிய மனுஷி ஆகிவிட்டாள்.

மகிழ்ந்த அவளது பெற்றோர், மகளுக்கு 'மங்களஸ்னானம்' ஆனதும் முதல் வேலையாக மகானை தரிசிக்க வந்தார்கள். தங்களால் இயன்ற பழங்கள், மலர்களைத் தந்தார்கள். தங்கள் மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டதை, அவளது கணவன் வீட்டாருக்குச் சொல்லிவிட்டதாகவும், அவளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதற்கு முன் மகானிடம் சொல்லி ஆசிபெற வந்திருப்ப தாகவும் கூறினார்கள்

தங்கள் மகளின் வாழ்க்கையில் இருந்த பெரிய பிரச்னையைத் தீர்த்துவைத்ததற்கு . நன்றி என்று கண்ணீர் மல்கச் சொல்லிமகானை நமஸ்கரிதார்கள்

"எல்லாம் அந்தப் பெண்ணோட பூர்வ ஜன்ம புண்ணியம்.இதுல எனக்கு என்ன பெருமை இருக்கு" எல்லாம் செய்துவிட்டு தான் எதுவும் செய்யவில்லை என்பது போல் அமைதி யாகச் சொன்னார். பெரியவா,

'பூ தந்து புனிதம் நடத்திய புண்ணியர்'

ravi said…
🌀 *உய்யக்கொண்டார்*🌀

வைஷ்ணவ குரு பரம்பரை முழுவதும் படிக்க👇
http://www.srimahavishnuinfo.blogspot.com

வைணவ குரு பரம்பரையானது அரங்கமா நகருளானுடன் ஆரம்பித்து ரங்கநாயகி, விஸ்வக்ஷேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார் என்று சென்று ராமானுஜர் வரை அமைகிறது

பின்னர் ராமானுஜரைத் தொடர்ந்து எம்பார், பட்டர் எனச் சென்று மணவாள மாமுனிகள் வரை முடிகிறது. இந்த வரிசையை ஓர் ரத்ன ஆரமாகக் கொண்டால், அதன் நடுப்பதக்கமாக விளங்குகிறார், ராமானுஜர்.
ravi said…
இவருக்கு ஆசார்யரான ஆளவந்தாரை திருத்திப் பணி கொண்ட உத்தமர், மணக்கால் நம்பி. மணக்கால் நம்பிக்கு ஆசாரியன் உய்யக்கொண்டார் என்பர். நாதமுனிகளின் முதன்மைச் சீடர் உய்யக்கொண்டார் எனப்படும் புண்டரிகாஷர் ஆவர். திருவெள்ளரையில் அவதரித்த இவரைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. எனினும் வைணவத்தில் மிகவும் மதிப்புடையவராக இவர் திகழ்ந்தார்.

ravi said…
நாதமுனிகளிடம் இரண்டு நிதிகள் இருந்தன. ஒன்று யோக சாஸ்திரம். மற்றொன்று ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்கள், நாதமுனிகள் தம் இரு சீடர்களான உய்யக்கொண்டார் மற்றும் குருகை காவலப்பன் ஆகியோரிடம் யாருக்கு எது வேண்டும்? என்று கேட்க, குருகை காவலப்பன் யோக சாஸ்திரத்தைப் பற்றி தெரிந்துகொண்டார். உய்யக்கொண்டாரோ ஆழ்வார் பாசுரங்களையே கேட்டுத் தெரிந்துகொண்டு அதன் அர்த்தங்களையும் குறைவரக் கற்றுத் தெளிந்தார்.
ravi said…
அதன் மூலம்தான் உலகை உய்விக்க முடியும் என்பது அவரது முடிவு. இதனையே சம்பிரதாயமாகச் சொன்னால் அவரின் உள்ளம் புரியும். உய்யக்கொண்டார் பாசுரங்களைத் தேர்ந்தெடுத்தபோது பிணம் கிடக்க மணம்புரிவார் உண்டோ என்று கூறினார். அதாவது மரணம் நிகழ்ந்த வீட்டில் திருமணம் பற்றி யாரும் பேசுவார்களோ?
ravi said…
எனவே உலகத்தாரை உய்விக்க பாசுரங்களைத் தேர்ந்தெடுத்தார். அதைக் கண்ட நாதமுனிகள் அவரைப் பாராட்டி உய்யக்கொண்டாரே என்று அழைத்து மகிழ்ந்திட அதுவே அவரது பெயராக அமைந்துவிட்டது. நாதமுனிகள் யோக தசையில் நம்மாழ்வாரிடம் திருவாய்மொழி உபதேசம் பெற்றவர்.

ravi said…
நம்மாழ்வார்தன் யோக சக்தியால் வைணம் வளர பின்னாளில் ஒரு மஹான் அவதரிக்கப்போகிறார் என்ற தமது பொலிக பொலிக பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே தமது யோக சக்தியால் ராமானுஜர் போன்ற திருவுருவம் ஒன்றை வடிவமைத்து நாதமுனிகளிடம் கொடுத்திருந்தார்.
ravi said…
தம் இறுதிக்காலத்தில் அத்திருவுருவை உய்யக்கொண்டாரிடம் கொடுத்து, தமது பேரனான ஆளவந்தாரிடம் கொடுக்கச் சொல்லி, ஆளவந்தாரை வைணவம் வளர வழிவகுக்குமாறு பணித்தார். ஆனால் உய்யக்கொண்டார் காலம் வரை ஆளவந்தார் அவதரிக்கவில்லை. எனவே அவர் தமது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பைவிட்டு இறையுடன் இணைந்தார். அதன்படி மணக்கால் நம்பிதான் ஆளவந்தாரை திருத்திப் பணிகொண்டு, ஆளவந்தாருக்கு வழிகாட்டியாய் திகழ்ந்தார்
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.

ravi said…
காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும்.
ravi said…
மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.

ravi said…
மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ‘
ravi said…
ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’ என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.
ravi said…
சகல பற்றுகளையும் கடந்த நிலையை 'எல்லாம் அற' என்று
குறிப்பிடப்படுகிறது.

இதில் அகப் பற்று, அதாவது உயிர் மேல்
வைத்திருக்கும் பாசம், புறப் பற்று, என்னுடைய இல்லம் 'என்னுடைய
குடும்பம்' முதலிய உலக பசு பாச தொந்தங்கள் அடங்கும்.

இவை
நீங்கினவுடன் நான் .. எனது என்னும் ஜீவ போதத்தை இழந்து
இறைவனுடன் கலந்து நீவேறெனாதிருக்க நாவேறெனாது இருக்கும்
நிலை அடைந்து, ஜீவன் முத்தி நிலை அடையப்பெற்றால்

அந்த
அனுபவத்தை வாய் விட்டு கூற இயலாது.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 386* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
அவளோ செல்வச் செழிப்பில் ஊறியவள்.

வெறுங்கையோடு வந்த அவரை விரட்டி அடிக்குமாறு உள்ளிருந்தபடி உத்தரவிட்டாள்.

விப்ரநாராயணரோ வேறு புகலிடம் தெரியாமல், அவள் வீட்டு வாசலிலேயே அமர்ந்து விட்டார்.

அவரது நிலையைக் கண்டு மனமிரங்கிய அரங்கன் ஒரு லீலை செய்தான்.

அழகிய மணவாளதாசன் என்ற இளைஞனாக வேடமிட்டுக் கொண்டு தன் கோயிலில் உள்ள தங்கவட்டிலை எடுத்து வந்து
தேவதேவியிடம் அளித்து, விப்ரநாராயணர் கொடுத்தனுப்பியதாகச் சொன்னான்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 385*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*51*
ravi said…
*சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवाह्लाद: नादयुत: महासितवपुः पञ्चेषुणा चादृतः ।

सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥

ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-

ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।

ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-

ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
ravi said…
*நாத³யுத:”* – பகவான் பரமேஸ்வரனோட மூச்சுக்காத்துதான் ப்ரணவம்.
அந்த நாதத்தை கொண்டவரும்.

” *மஹாஸிதவபு* :” – இங்க அவஸர்கம் சேர்த்து, வெண்மையான திரு உருவம் கொண்டவர் அப்படீன்னு வச்சுக்கணும்.

எப்பவும் விபூதி பூசிண்டு வெள்ள வெளேர்னு இருக்கார்.

“ *பஞ்சேஷுணா ச ஆத்³ருத:” –*

மன்மதன் தன்னுடைய புஷ்ப பாணங்களுக்கு எவரை இலக்காக கொண்டானோ அந்த பரமேஸ்வரன்.
ravi said…
One liner Geeta.
எளிமையான கீதை.

*Chapter 1 - Wrong thinking is the only problem in life .*
அத்யாயம் 1 :- தவறான எண்ணங்கள் மட்டுமே வாழ்வில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
*Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .*
அத்யாயம் 2:- சரியான அறிவுதான் (நேர்மையான சிந்தனை) அனைத்துப் பிரச்சினைகளுக்கும்  முழுமையான தீர்வைத் தரும்.
*Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .*
அத்யாயம் 3:-
சுயநலமின்மையே முன்னேற்றத்திற்கும் வளமைக்கும் பாதையாக அமையும்.
*Chapter 4 - Every act can be an act of prayer .*
அத்யாயம் 4:- ஒவ்வொரு செயலும் இறைவனுக்கான வேண்டுதலாகவே அமைய வேண்டும்.
Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .*
அத்யாயம் 5:- எல்லையற்ற திறமையுள்ளவன் அனைத்தும் தன்னால் முடியும் என்ற கர்வத்தைத் துறந்து 
பேரின்பமயமான முடிவற்ற தன்மை வாய்ந்த பரமாத்மாவை அனுபவிக்க முயற்சி செய்.
*Chapter 6 - Connect to the higher consciousness daily.*
அத்யாயம் 6:-  மேன்மையான உணர்வை எப்பொழுதும் தன்னுள் இருத்திக் கொள்.
*Chapter 7 - Live what you learn .*
அத்யாயம் 7:- (நல்லவற்றைக்) கற்று உணர்ந்து அதற்கேற்ப வாழ்.
*Chapter 8 - Never give up on yourself .*
அத்யாயம் 8:- எப்பொழுதும் நம்மால் முடியாது என்று எதையும் கைவிடாதே.
*Chapter 9 - Value your blessings .*
அத்யாயம் 9:- உனக்கு அளிக்கப் ‌பட்டுள்ள திறமைக்கான பாராட்டுகளை வரமாகக் கொள்.
*Chapter 10 - See divinity all around .*
அத்யாயம் 10:- உன்னைச் சுற்றி தெய்வீகம் நிறைந்துள்தைக் கண்டு கொள்.
*Chapter 11 - Have enough surrender to see the truth as it is.*
அத்யாயம் 11:- உண்மையைக் காண சரணடையதல் முக்கியம்
*Chapter 12 - Absorb your mind in the higher.*
அத்யாயம் 12:- மனதில் உயர்வான எண்ணங்களை மட்டுமே கொள்.
*Chapter 13 - Detach from Maya and attach to divine .*
அத்யாயம் 13:- மாயையிலிருந்து விடுபட்டு தெய்வீகத் தன்மையுடன் உன்னை இணைத்துக் கொள்.
*Chapter 14 - Live a life- style that matches your vision.*
அத்யாயம் 14:- சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை உணர்ந்து வாழ்.
*Chapter 15 - Give priority to Divinity .*
அத்யாயம் 15:-தெய்வத் தன்மைக்கு முதலிடம் கொடு.
*Chapter 16 - Being good is a reward in itself .*
அத்யாயம் 16:- நல்லது செய்யும்போது தானாகவே அதற்கான பரிசைப் பெறுவாய்.
*Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .*
அத்யாயம் 17:- ஆற்றலின் ‌அடையாளம் என்பது மனதுக்கு உகந்த சரியானதை தேர்ந்தெடுப்பதுதான்.
*Chapter 18 - Let go, let us move to union with God .*
அத்யாயம் 18:- கடவுளைத் தேடி அவனுடன் ‌சேரும் முயற்சியில் ஈடுபடு. (சரணாகதி)

( Introspect on each one of this principle)
(ஒவ்வொன்றையும் நன்றாக  ஆராய்ந்த பிறகு அறிந்த கீதை சுருக்கமான தெளிந்த முதல்தன்மை வாய்ந்த உண்மைகள். )
                         
                  || ॐ तत्सत् ||
ravi said…
🌀 *உய்யக்கொண்டார்*🌀

வைஷ்ணவ குரு பரம்பரை முழுவதும் படிக்க👇
http://www.srimahavishnuinfo.blogspot.com

வைணவ குரு பரம்பரையானது அரங்கமா நகருளானுடன் ஆரம்பித்து ரங்கநாயகி, விஸ்வக்ஷேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார் என்று சென்று ராமானுஜர் வரை அமைகிறது

பின்னர் ராமானுஜரைத் தொடர்ந்து எம்பார், பட்டர் எனச் சென்று மணவாள மாமுனிகள் வரை முடிகிறது. இந்த வரிசையை ஓர் ரத்ன ஆரமாகக் கொண்டால், அதன் நடுப்பதக்கமாக விளங்குகிறார், ராமானுஜர்.
இவருக்கு ஆசார்யரான ஆளவந்தாரை திருத்திப் பணி கொண்ட உத்தமர், மணக்கால் நம்பி. மணக்கால் நம்பிக்கு ஆசாரியன் உய்யக்கொண்டார் என்பர். நாதமுனிகளின் முதன்மைச் சீடர் உய்யக்கொண்டார் எனப்படும் புண்டரிகாஷர் ஆவர். திருவெள்ளரையில் அவதரித்த இவரைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. எனினும் வைணவத்தில் மிகவும் மதிப்புடையவராக இவர் திகழ்ந்தார்.

ravi said…
நாதமுனிகளிடம் இரண்டு நிதிகள் இருந்தன. ஒன்று யோக சாஸ்திரம். மற்றொன்று ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்கள், நாதமுனிகள் தம் இரு சீடர்களான உய்யக்கொண்டார் மற்றும் குருகை காவலப்பன் ஆகியோரிடம் யாருக்கு எது வேண்டும்? என்று கேட்க, குருகை காவலப்பன் யோக சாஸ்திரத்தைப் பற்றி தெரிந்துகொண்டார். உய்யக்கொண்டாரோ ஆழ்வார் பாசுரங்களையே கேட்டுத் தெரிந்துகொண்டு அதன் அர்த்தங்களையும் குறைவரக் கற்றுத் தெளிந்தார். அதன் மூலம்தான் உலகை உய்விக்க முடியும் என்பது அவரது முடிவு.
ravi said…
இதனையே சம்பிரதாயமாகச் சொன்னால் அவரின் உள்ளம் புரியும். உய்யக்கொண்டார் பாசுரங்களைத் தேர்ந்தெடுத்தபோது பிணம் கிடக்க மணம்புரிவார் உண்டோ என்று கூறினார். அதாவது மரணம் நிகழ்ந்த வீட்டில் திருமணம் பற்றி யாரும் பேசுவார்களோ? எனவே உலகத்தாரை உய்விக்க பாசுரங்களைத் தேர்ந்தெடுத்தார். அதைக் கண்ட நாதமுனிகள் அவரைப் பாராட்டி உய்யக்கொண்டாரே என்று அழைத்து மகிழ்ந்திட அதுவே அவரது பெயராக அமைந்துவிட்டது. நாதமுனிகள் யோக தசையில் நம்மாழ்வாரிடம் திருவாய்மொழி உபதேசம் பெற்றவர்.

நம்மாழ்வார்தன் யோக சக்தியால் வைணம் வளர பின்னாளில் ஒரு மஹான் அவதரிக்கப்போகிறார் என்ற தமது பொலிக பொலிக பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே தமது யோக சக்தியால் ராமானுஜர் போன்ற திருவுருவம் ஒன்றை வடிவமைத்து நாதமுனிகளிடம் கொடுத்திருந்தார். தம் இறுதிக்காலத்தில் அத்திருவுருவை உய்யக்கொண்டாரிடம் கொடுத்து, தமது பேரனான ஆளவந்தாரிடம் கொடுக்கச் சொல்லி, ஆளவந்தாரை வைணவம் வளர வழிவகுக்குமாறு பணித்தார். ஆனால் உய்யக்கொண்டார் காலம் வரை ஆளவந்தார் அவதரிக்கவில்லை. எனவே அவர் தமது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பைவிட்டு இறையுடன் இணைந்தார். அதன்படி மணக்கால் நம்பிதான் ஆளவந்தாரை திருத்திப் பணிகொண்டு, ஆளவந்தாருக்கு வழிகாட்டியாய் திகழ்ந்தார்
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 05

சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை. . . . .[05]

விளக்கம்:

வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*அசங்கயேயாய நமஹ*🙏
எண்ணில் அடங்காத உயிர்களை சொத்தாக உடையவர்
ravi said…
*நிர்நாசா* ம்ருத்யுமதனீநிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா 🙏🙏

செம்மையான பாதுகாப்பை அழிப்பவள்
ravi said…
🌀 *தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமானிடம் வேண்டுகிறார்.,*🌀

தன் திருமாலையில்
பெருமானே! மனிசர் வாழ்வு நிலையில்லாதது. ஒருவர் நூறு வயது வாழ்வதாகக் கொண்டாலும்,அதில் பாதி ஆயுள், அதாவது ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலேயே போய் விடுகிறது. மீதி ஆண்டுகளில் பசி, பிணி, மூப்பு, பாலகன் என்று போய் விடுகிறது ஆதலால் எனக்கு இந்த லீலா விபுதி வேண்டாம் ஸ்வாமி.
வேத நூல்பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே!
பெருமான்:அதுவும் சரிதான், லீலா விபுதி அழியக்ககூடியது. அப்ப உன்னை
நான் மற்றும் நித்ய ஸூரிகள் வாசம் செய்யும் நித்ய விபுதிக்கு
அழைத்துச் சென்று விடவா?
ஆழ்வார்::பசுமையான மலைபோன்ற மேனியைக் கொண்ட, பவளத்தைப்
போல உன் வாய் என்ற அமுதத்தை விட்டு, நீ சொல்கின்ற
அந்த நித்ய விபூதியில் என்ன இருக்கிறது என்று என்னை அங்கே
அழைத்துச் செல்கிறேன் என்கிறாயே?
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!

ravi said…
பெருமான்: ஏன் ஆழ்வாரே, லீலா விபூதியும் வேண்டாம், நித்ய விபூதியும்
வேண்டாம் என்கிறீர். பின் எங்குதான் வாசம் செய்வதாக
உத்தேசம்? மொத்தமே ரெண்டு விபுதிதானே உள்ளது.
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி"
என்று உமக்குத் தெரியாதா? எல்லா மனிசர்களும் பாப
புண்ணியங்களைத் தொலைத்துவிட்டு அவர்களை
இங்குதானே நான் அழைத்துக் கொள்கிறேன். பின் எங்குதான்
வாசம் செய்வதாக உத்தேசம்?
ஆழ்வார்: நான் தான் என்னுடைய பாசுரங்களில் சொல்கிறேனே? அந்த
இடத்திலேயே எனக்கு ஒரு இடம் தரக்கூடாதா?
பெருமான்: எனக்குத் தெரியாமல் மூன்றாவது விபுதியா? எனக்கே
தெரியாமல் ஒரு இடமா?
ஆழ்வார்: பாசுரங்களின் முடிவில் “அரங்கமா நகருளானே" என்று
பாடினேனே, எனவே எந்த அரங்கன் இருக்கும் இடமோ
அந்த மூன்றாவது விபூதியில் எனக்கு ஒரு இடம் கொடுத்து
விடு. அதுதான் “பூலோக வைகுந்தம்” : அந்த இடத்தில்
இருந்துகொண்டு அரங்கனைப் பற்றி பாடிக்கொண்டு காலத்தை
ஒட்டுகிறேன்.
பெருமான்: ஆஹா! நல்ல காரியம் செய்தீர்! இப்போதே ஸ்ரீரங்கத்தை
மூன்றாவது விபுதி என்று உலகத்துக்கு அறிவித்து விடுவோம்.
இப்படியாக ஸ்ரீரங்கம் மூன்றாவது விபுதியானது.
எப்படி ஸ்ரீரங்கமும் வைகுந்தமும் ஒன்றாகும்.. ஆகும்!
“காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரெங்க மந்திரம்
ஸ: வாசுதேவோ ரங்கேசய: ப்ரத்யட்சம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மகாத்புதம்
ஸீ ரங்கசாயீ பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:”
அதைத்தான் மேலே உள்ள பாடல் விளக்குகிறது. லீலா விபுதி அடைவதற்கு முன்னால் விரஜா நதியைக் கடக்க வேண்டுமாம். அதற்குச் சமமானது இங்குள்ள உபயகாவேரின்னு சொல்ற காவேரி மற்றும் கொள்ளிடம். அவைதான் எல்லைகோடுகள்.
வைகுந்தம் ரெங்க மந்திரம் என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது.அதற்கு சமமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட “கோயில்" என்று குறிப்பிடப்படும் ஸ்ரீரங்கம்.ஸ: வாசுதேவ: ரெங்கசய என்ற வைகுண்ட வாசன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் தான், வேறுயாருமல்ல.
ப்ரத்யக்ஷம் பரமம் பதம் என்ற வார்த்தை ரங்கநாதன் தான் வைகுந்தவாசன் என்று குறிக்கிறது.


*விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்*
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
The Sun always comes after the storm. Be patient and think positive in any situation.



Nothing else can quite substitute for a few well-chosen, well-timed, sincere words of praise. They're absolutely free and worth a fortune. Sam Walton



Be more concerned with your character than your reputation, because your character is what you really are, while your reputation is merely what others think you are. John Wooden



How much pain has cost us the evils which have never happened? Thomas Jefferson



Opportunity is missed by most because it is dressed in overalls and looks like work. Thomas Alva Edison



It is not the load that breaks you down, it’s the way you carry it.



The key to success is to focus on goals not obstacles.
Oldest Older 201 – 313 of 313

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை