ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 24. :நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா - பதிவு 31

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 31

24 वविद्रुमबिम्बश्रीन्यक्कारिरदनच्छदा நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா -



செம்பவழங்களை வரிசையாக ஒழுங்கான அளவில் இணைத்ததுபோல் உருவம் கொண்டது லலிதா தேவியின் இதழ்கள்.👄👄👄

நவ = புதிய ; 

வித்ரும = பவழம் / பவளம் 

பிம்ப= ஒப்பிட்டால் / பிரதிபலிப்பு 

ஸ்ரீ= காந்தி 

ந்யக்கார் = தரம் தாழ்த்துதல் 

ரதனச்சதா = இதழ்கள் / உதடுகள் 

24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா* = 

பவளத்தின் பிரகாசத்தை பழிக்கும் உதடுகளைக் கொண்டவள்.

சிலர், பிம்ப எனும் சொல் கோவைப்பழத்தை குறிப்பிடுவதாக பொருள் உணர்கின்றனர்.👍👍👍


பட்டர் 38 வது அந்தாதியில் இப்படி பாடுகிறார் .. 

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்

தவளத் திரு நகையும்... 

அம்பாளின் இதழ்கள் ஏன் பவளம் போல் சிவப்பாய் இருக்கிறது  தெரியுமா ? 

இரண்டு காரணங்கள் 

1.ஈசன் தான் இருக்கும் பள்ளியறையை மாற்றிக்கொண்டு அவள் இதழ்களில் வந்து துயில் கொள்கிறான்... 

அதனால் பெண்மைக்கே உரிய நாணத்தினால் அவள் இதழ்கள் எப்பொழுதும் சிவப்பாக இருக்கின்றன 

2. தேனீக்கள் எல்லாம் ஒவ்வொரு மலராய் சென்று மகரந்தம் கொண்டு வர சோம்பல் பட்டதாம் .. 

அன்னையிடம் சென்று ஒரே இடத்தில் எல்லா பூக்களின் மகரந்தமும் கிடைக்க வேண்டும் .. 

அங்கு தேன் ஆறாக ஓட வேண்டும் ... 

சிரித்தாள் அம்பாள் .. 

தன் இதழ்களை விரித்தாள் 

அங்கு தேன் கங்கை போல் ஓடுவதைக் கண்ட தேனீக்கள் தினம் அங்கு வந்து அதை அனுபவிப்பதினால் இதழ்களில் அவைகள் தங்களையும் அறியாமல் கொட்டும் இடங்கள் சிவந்து கடைசியில் இதழ்கள் முழுவதும் சிவந்து போயினவாம் ... 🪔🪔🪔


ரொம்ப சுலபமாக தெய்வத்தைப் பிடிப்பதற்கு ஸ்வரூப த்யானம், நாமோச்சாரணம் என்ற இரண்டை வைத்திருக்கின்றது. 

நாம-ரூபம் என்று இந்த இரண்டைத்தான் சொல்லியிருக்கின்றது. 

நாமாவைச் சொல்லிக்கொண்டே இருப்பதில் சிரம ஸாதனை எதுவுமில்லை. 

வாயால் பண்ணுவது அது. மனக்கண்ணாலோ, புறக்கண்ணாலோ ஒரு பரம மங்களமான மூர்த்தியை தரிசனம் பண்ணுவது கஷ்டமில்லாத இன்னொரு வழி. 

மஹான்கள் ஜீவனோடு இருக்கிற திவ்ய ரூபங்களைப் புறக்கண்ணுக்கு முன்னாடி காண்பார்கள். 

நம்மால் சிலா ரூபங்களை, விக்ரஹங்களைத் தான் புறக்கண்ணால் தரிசிக்க முடிகின்றது. 

அதனால் கோவிலுக்குப் போய் மூர்த்தி தரிசனம் பண்ணி அந்த அழகிலே சொக்கி, கஷ்டமில்லாமல் பகவத் ஸ்மரணை பெறுகிறோம். 

நாம மாஹாத்மியம் என்று எத்தனையோ சொல்லி-யிருந்தாலும் அதுகூட ஸாமான்யமாக நாம் இருக்கப்பட்ட நிலையில் ஒரு ரூபத்தோடு சேர்த்துச் சொன்னால்தான் மனஸை இன்புறுத்தி இழுத்துப் பிடித்து நிறுத்துகின்றது. 

நாம ஜபம் முறையாகப் பண்ணுகிற போதும் த்யான ஶ்லோகம் சொல்லி ரூபத்தை நன்றாக மனஸுக்குள் நிறுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கின்றது. 

லலிதா ஸஹஸ்ரநாம ஆரம்ப பாகத்தில் இப்படியே வர்ணனை வருகின்றது. 

ஸெளந்தர்ய லஹரியிலும் இதே ‘ஆர்டர்’ தான் பார்க்கிறோம். 

ஒரு உதாரணமாக இதை பார்ப்போம் 

ஆதி ஆசார்யாளுடைய ஸௌந்தர்யலஹரி 62-ஆம் ஸ்லோகத்தில், அம்பாளுடைய உதட்டுக்கு பவளக் கொடியும் (வித்ரு-மலதாவும்) ஒப்பாகாது என்று வருகின்றது. 

ஸஹஸ்ரநாமத்தில், அதே அர்த்தத்தில் “நவ வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-தஶநச்சதா” என்று இருக்கின்றது! 



நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி தசனச்சதா - 

அம்பாளின் உதடுகளை வர்ணிக்கும் நாமம் இது. 

சாதாரணமாக, அதரங்களின் சிவப்புக்குப் பவழம், கோவைப்பழம் போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டுவார்கள். 

அதுகூட வாடிப்போன, மங்கிப்போன பவழமில்லை. 

புதிய பவழம். வித்ருமம் என்பது பழம். 

நவ வித்ருமம் என்பது புதியதான பழம்; நல்ல கோவைப்பழம். 

இவை இரண்டின் சிவப்பு ஒன்றுமேயில்லை. 

இவற்றைத் தோற்கடிக்கும் சிவப்பு அம்பாளின் உதடுகளில் காணப்படுகிறது. 

தசனச்சதா என்பதற்கு பதிலாக ரதனச்சதா என்றும் சொல்லலாம். பொருள் ஒன்றுதான். 

இங்கேயும் ஆசார்யர் சொல்கிற ஸ்லோகம்தான் நினைவுக்கு வருகிறது. 

ப்ரக்ருத்யா ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சத ருசே: ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா ந பிம்பம் தத் பிம்ப ப்ரதிபலன ராகா தருணிதம் துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா 

என்று சௌந்தர்யலஹரியின் 62ஆவது ஸ்லோகத்தில் கேட்கிறார்   



அம்மா, இயற்கையாகவே செக்கச்செவேல் என்றிருக்கும் உன்னுடைய உதடுகளுக்கு எதை உபமானமாகச் சொல்வேன்?

பவழக்கொடியின் பழங்களைச் சொல்லலாமா? 

பவழக்கொடி பழத்தை உண்டாக்கட்டும். பார்க்கலாம். 

இப்போதைக்கு, பிம்பப்பழமான கோவைப்பழத்தைச் சொல்லலாமா? உன் அதரம் அளவுக்குச் சிவப்பை அது அடையப் பார்க்கிறது. முடியவில்லையாதலால் வெட்கம் அடைகிறது' என்கிறார். 

பவழக்கொடி என்று இயற்கையில் ஒன்றில்லை. பச்சையாக இருக்கும் செடிகளில் சிவப்புப் பழங்கள் கிடைப்பதால், பவழம் போல் கொடியே சிவப்பாக இருந்தால், அதன் பழம் இன்னும் வர்ணனையைத் தோற்றுவித்தது. அதை எடுத்துக்கொண்டு ஆசார்யர், வேண்டுமானால் பவழக்கொடி பழம் பழுக்கட்டும் என்கிறார். 

கோவைப் பழம் அம்பாளின் அதரத்தைப் பார்த்தது. அந்தச் சிவப்பைப் பார்த்துவிட்டுத் தானும் அந்த அளவுக்கு ஆகமுடியுமா என்று சந்தேகப்பட்டது. 

மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். மடு போன்ற கோவைப்பழம், அந்த உயரத்திற்குத் தான் வரவேண்டும் என்று எம்பிப் பார்த்தது. எவ்வளவுதான் எம்பி எம்பிக் குதித்தாலும் அம்பாளின் அதரச் சிவப்பை எட்டமுடியவில்லை; 

உடனே கோவைப் பழத்துக்கு வெட்கமோ வெட்கம். எல்லாவற்றையும் கொஞ்சம் கூட்டிப்பார்க்கலாமா? முதலிலேயே கோவை சிவப்புநிறம் கொண்டது. எம்பிக் குதித்ததால், அந்தப் பிரயத்தனத்தில் கூடுதல் சிவப்பானது; வெட்கப்பட்டபோது இன்னுமே சிவப்பு - இப்படி மும்மடங்கு சிவப்பானபோதும், அதனால் அம்பாளுக்குப் பக்கத்தில் வரவே முடியவில்லை, பாவம்!     



                                         💐💐💐💐💐💐💐💐💐💐



Comments

ravi said…
ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.

உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.

சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.

சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...
ravi said…
*கந்தர் அநுபூதி*
பதிவு 1 6th nov
ravi said…
*பாடல் 1 ... ஆடும் பரி, வேல்*

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனி யானைச் சகோதரனே.🙏🙏🙏
ravi said…
*தேடும்* ... அக்ரமாக சான்றோர்களை அழிப்பதற்காக தேடுகின்ற,

*கயமாமுகனை* ... கஜமுகாசுரனை,

*செருவில் சாடும்* ... போர் செய்து அழித்த,

*தனியானை* ... ஒப்பற்ற விநாயகப் பெருமானின்,

*சகோதரனே* ... தம்பியே,

*ஆடும் பரி* ... பிரணவ நடனமாடும் மயில்,

*வேல்* ... உன்னுடைய ஞானா சக்தியாகிய வேலாயுதம்,

*அணி சேவல்* ... அடியார்களுக்கு முருகனின் அருளைத் தெரிவிக்கின்ற
சேவல் (இவை மூன்றையும்)

*பாடும் பணியே ...* துதித்துப் பாடுகின்ற தொழிலையே

*பணியா அருள்வாய் ...*

என்னுடைய கடமையாக நீ அருள வேண்டும்🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 381* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*90 ப்ரஜாபவ*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: *ப்ரஜாபவ* : |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
கண்ணனை வெளிப்படையாக விரும்புபவர்கள், கண்ணனை உள்ளூர விரும்புபவர்கள் என இருவகையினர் தான் உண்டே தவிரக்
கண்ணனை வெறுப்பவர் என உலகில் யாருமே இல்லை!” என்றான் சகதேவன்.

“கண்ணா! கருமை நிறக்கண்ணா! உன்னைக் காணாத கண் இல்லையே! உன்னை மறுப்பார் இல்லை! கண்டு வெறுப்பார் இல்லை!” என்ற
பாடல் வரி தற்காலத்திலும் இந்தத் தத்துவத்தை சினிமாப் பாடலாக ஒலித்ததே!

உலகிலுள்ள அனைத்துயிர்களுக்கும் தானே இருப்பிடமாக இருந்து,

தன்னுள் அனைவரையும் தாங்கிக்கொண்டு, ஒரு தந்தை தன் மகனின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வது போல,

நம்மையும் முன்னேற்றிப் பக்குவப்
படுத்துகிறார் திருமால்.

நமக்கு ஆதாரமாக இருந்து நம்மைத் தாங்கும் அவரை மனதாற வெறுப்பது
என்பது யாராலும் முடியாத ஒன்று.

தன் பிரஜைகளுக்கு ஏற்ற இருப்பிடமாகத் திருமால் இருப்பதால் ‘ *ப்ரஜாபவஹ* ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 90வது
திருநாமத்தில் வியாசர் திருமாலை அழைக்கிறார்.
“ *ப்ரஜாபவாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்படித் திருமால் அருள் புரிவார்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 381*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*49 & 50*
ravi said…
மிகவும் அழகான ஸ்லோகங்கள்

*ஸ்தைர்யோபக்ன முபேத்ய’* என்பதற்கு ‘பகவான் என்ன விதிச்சிருக்காரோ அதுவே அநுக்கிரகம்’ போன்ற அர்த்தங்கள் நெஞ்சை தொடும்

பொதுவாக ‘மனசு அப்படியே நின்று விட வேண்டும்;

அப்படி ஆனால்தான் அத்வைதம் அநுபவமாக ஸித்திக்கும்.’ என்று சொல்வார்கள்.

அத்வைதத்தை நிலைநாட்டிய ஆச்சார்யாளே சிவானந்த லஹரி போன்ற பக்தி ஸ்லோகங்களை உபகரித்து பக்தியின் மேன்மையை அழகாக பல ச்லோகங்களில் விளக்குகிறார்.

*‘ஆனந்தாம்ருத பூரிதா* ’ என்ற ஸ்லோகத்திலும் பக்திக் கொடியை புண்ணிய காரியங்களால் நன்றாக வளர்ப்பதன் மூலம் முக்தி என்கிற கனியை கொடுப்பதாக சொல்லி, பக்தி பண்ணிக் கொண்டிருந்தாலே அது முத்தியை கொடுக்கிறது என்று உறுதியளிக்கிறார். 👌🙏🌸
ravi said…
பகவான் கீதையில், “ஒருத்தன் என்னிடம் பக்தி செலுத்திக் கொண்டேயிருந்தால், நான் யார், எப்படிப்பட்டவன் என்று உள்ள‌படி தெரிந்து
கொள்கிறான்.

அம்மாதிரி என்னை உள்ளபடி தெரிந்து கொண்டபின், எனக்கு வேறாக இல்லாமல் என்னுள்ளேயே புகுந்து விடுகிறான்” என்கிறார்.🙏🌸
ravi said…
[06/11, 22:59] Karthick Meganathan: ஸ்ரீ மாத்ரே நம:❤
07/11/2022 திங்கட்கிழமை ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மாலை 06.00 மணி முதல் 07.00 மணியளவில் விசேஷ மஹா அபிஷேகம் நடைபெற்று ஷோடஸ உபசாரத்துடன் மஹா தீபாராதனை ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுர ஶுந்தரி ௮ம்பாளுக்கு நடைபெற உள்ளது.
🙏 அனைவரும் வருக! அம்பிகையின் அருள் பெருக! 🙏
[06/11, 23:16] Karthick Meganathan: பாதாரவிந்த சதகம் !

14.பவித்ரீகுர்யுர்ந: பததலபுவ: பாடலருச:
பராகாஸ் தே பாபப்ரசமன துரீணா: பரசி'வே
கணம் லப்தும் யேஷாம் நிஜ சிரஸி காமாக்ஷி விவசா
வலந்தோ வ்யாதந்
வந்த்யஹமஹமிகாம்
வாஸவமுகா: || 14

மங்கள உருவினளே ! காமாக்ஷி / இந்திரன் முதலான தேவர்களும் உன் திருவடிப்புழுதியைத் தம் தலையில் பெற எப்போதும் நான் முன்னதாக, நான்முன்னதாக எனப் போட்டியுடன் முந்துகின்றனர். சிவந்த ஒளி கொண்டவையும் பாபத்தைப் போக்குவதில் முன் நிற்பவையுமான அவை
என்னை புனிதமாக்கட்டும்.(14)

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*❖ 14 குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா* =

மாணிக்க பரல்கள் பளபளக்கும் சரத்தால் மகுடத்தை அலங்கரித்திருப்பவள்
ravi said…
உணர்வுடையோர் மதிக்கின்ற
மாணிக்கமே

குற்றமற்ற வீணையின் நாதமும் ,

மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் ,

வீசுகின்ற தென்றலின் சாயலும் ,

செறிந்த இளவேனிலின் மாட்சியும் ,

ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும்
தன்னிடம் கொண்டவளே ...

தரம் அன்று இவன் என்று தள்ளாமல் தவிப்போரை தாவி அணைப்பவளே

உன் திருவடி நிழல் அன்றி வேண்டேன் வேறு எதுவும் இவ்வைகத்தே 🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 117*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
இல்லை
இல்லையென் றியம்புகின்ற வேழைகாள்

இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ

இல்லையல்ல வொன்றுமல்ல விரண்டுமொன்றி நின்றதை

எல்லைகண்டு கொண்டபே ரினிப்பிறப்ப தில்லையே. 117🙏🙏🙏
ravi said…
கடவுள் இல்லை, இல்லை என்று இயம்புகின்றவர்கள் எதுவும் இல்லா எழைகளாவார்கள்.

இல்லையென்றும், உண்டென்றும் சொல்லுமாறு தனக்குள்ளேயே நானாக நின்ற ஆன்மாவையும்,

ஆன்மாவில் ஆண்டவனையும், அறியாமல் இல்லை என்று சொல்ல என்ன ஆகுமோ?

அது இல்லாததும் இல்லை, ஒன்றும் உள்ளதும் அல்ல.

சக்தியாகவும், சிவனாகவும் இரண்டும் ஒன்றி நின்ற மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து, நினைந்து, தியானித்து சும்மா இருக்கும் சமாதிநிலை என்ற எல்லையைக் கண்ட தவசீலர்கள்,

மரணமில்லா பெருவாழ்வடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள்.

அவர்கள் இனி இம்மாய உலகில் பிறப்பெடுக்க மாட்டார்கள்.🙏🙏🙏
ravi said…
*148 नित्यशुद्धा - நித்யசுத்தா-*

என்றும் எப்போதும் பரிசுத்தமானவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
ravi said…
அம்பாளை போல் பரிசுத்தமானவள் எவரும் இல்லை ...

சக்தியின் ரூபங்கள் சில பரிசுத்தத்திற்கு உதாரணம்

1. *திரௌபதி* ( அக்கினியில் இருந்து உதித்ததவள்)

2. *கண்ணகி* ( அக்னி கொண்டு எரித்ததவள் )

3. *தாக்க்ஷயாயணீ* ( அக்னி குண்டத்தில் குதித்தவள்)

4. *ஜானகி* (அக்னியில் குளித்தவள்)

5. *ஸ்ரீ லலிதா* - அக்னியில் தோன்றியவள் .

6. *மீனாட்சி* ( அக்னியில் பிறந்தவள்) 💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ravi said…
தாக்ஷாயணி🔥
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 393* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*100. தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது*


ஸகல ஸித்தி💫💫💫💫💫💫💫💫💫💫💫
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100
ravi said…
வாக்கிற்கு பிறப்பிடமாகிய தாயே !

கர்ப்பூரதீப ஜ்வாலையால் சூரியனுக்கு நீராஜனம் செய்தாற்போலும்,

அமிருதகிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் அர்க்கியம் அளித்தாற்போலும்,

சமுத்திரத்திற்கு சொந்தமான ஜலத்தாலேயே சமுத்திரத்திற்குத் தர்ப்பணம் செய்தாற்போலும்,

உன்னுடையதேயான வாக்குகளால் அமைந்த இந்த உனது ஸ்தோத்திரம்🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ravi said…
ஸ்ரீ ஆசார்யர் எதற்குமேலே நினைக்க முடியாதோ அந்தத் தத்துவத்தைச் சொன்னவர்.

அவரே இப்படித் *தாழ்மையோடு* சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரு சுலோகத்தைப் பாராயணம் பண்ணினால் ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலன் ஊண்டாகும்.

எப்படி ?

எல்லா வித்தைகளுக்கும் விரயோஜனம் விநய ஸம்பத்து.

ஸகல விநயமும் இந்தச் சுலோகத்தில் இருக்கிறது.

பூஜை செய்யும்போது ஈசுவரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும்.

இதில் நீராஜனம் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்தச் சுலோகம் சொல்லுவதற்கு இதுவும் ஓர் அடையாளம் போல் இருக்கிறது.

– காமகோடி சங்கராசாரியார்.
ravi said…
*8.கண்ணழகு* 👀

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு

அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப்,

புடைபரந்து, மிளிர்ந்து,

செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள்

என்னைப் பேதமை செய்தனவே🙏🙏🙏
ravi said…
கண்ணா*

இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்கன் நீ அன்றோ ?

பிரமன் முதலிய தேவர்களுக்கும் அணுகவும் அனுபவிக்கவும் அரியவனாக இருக்கும் ஹரியும் நீ அன்றோ ?

எல்லோருக்கும் முன்னால் முதலில் தோன்றி முதல் காரணமான ஆதிப்பரம்பொருள்
நீயே அன்றோ ?

அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன் நீ அன்றோ ?

உன் திருமுக மண்டலத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து, ஒளிவீசும்,

செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் எனையும் பித்தேறும்படி செய்து
விட்டனவன்றோ?

கல்நெஞ்சனான எனையும் உன் கண்கள் உன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டது என்றும் ஆச்சரியம் அன்றோ *கண்ணா* ?🙏
ravi said…
இந்தக் கண்களின் அழகிலே ஈடுபட்ட நம்மாழ்வாரும் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாகி

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன்

ஆழியங் கண்ணபிரான் திருக் கண்கள்கொலோ அறியேன்

இவை திருக் கண்களா அன்றி மங்கையர்களின் உயிரைக் கவரும் கூற்றமா?

தெரியவில்லையே! என்று அக்கண்களின் அழகிலே ஈடுபடுகிறார்.👀👀
ravi said…
🌹🌺' Mother! Our family members should always have mutual love. This is the boon I ask of you, merchant..... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- -----
🌺🌹In the house of a rich merchant named Bhaskaran. There is no dearth of wealth. All the wealth was poured into his house.

🌺 One day Mahalakshmi appeared in the merchant's dream and said, 'Devote! I stayed in your house till now because of the merits you and your ancestors have done.

🌺 All the blessings you have done are now exhausted.

🌺So I am leaving your house in a day or two. Before that, if you want any boon, ask for it.

🌺But you should not ask me to stay here' she said.
The next day dawned. The merchant called everyone in the house and told them what had happened in the dream.

🌺 He asked his family for advice on what boon he could ask Mahalakshmi for. Each advised differently.

🌺 But they all expressed the same opinion. 'Ask for new gems as a boon; Listen to the many philosophies; Ask for lots of food items; Ask for many attic houses,' they continued to stack up.

🌺 Then Nalini, the last girl of that house, said to her father, 'Dad, no matter what gold, diamond, vitrium, ruby, house we need as a gift, it will not last in our house.

🌺Because whenever Goddess Mahalakshmi says that she is going to leave our house, once she leaves these things that are associated with her riches will also leave, or will not last.

🌺 So always ask Goddess Mahalakshmi to bless us with mutual love in our home.'

🌺 It seemed to the merchant that Nalini, the younger daughter, was right. With that as the final conclusion, the merchant Bhaskaran went to sleep for the night.

🌺That night, Mahalakshmi appeared in his dream. He said to her, 'Mother! Our family members should always have mutual love. This is the boon I ask of you. If you grant this boon alone, it is enough,' asked the merchant.

🌺 Lakshmi Devi smiled and said 'Son! Asking for such a boon, you again tied me up in your house.

🌺I have decided that in any family where people love each other, and in any family where there are no quarrels, I will definitely stay in that house.

🌺So, because of this boon you have asked for, I will stay in your house again,' she said and stayed there.
So those who want to get Lakshmi Kataksha avoid fighting.🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺‘ *அன்னையே* ! *எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம் என்ற வியாபாரி..... விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹பெரும் பணக்காரரான பாஸ்கரன் எனும் வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது.

🌺ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன்.

🌺நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள்.

🌺ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார்.

🌺மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

🌺ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.

🌺அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் நளினி தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை.

🌺ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.

🌺எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.

🌺இளைய மகள் நளினி கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி பாஸ்கரன் .

🌺அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

🌺லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய்.

🌺எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன்.

🌺எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.🌹🌺

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
[07/11, 07:23] +91 96209 96097: *ஸத்கர்தாய நமஹ*🙏🙏
நல்லோர்களால் பூஜிக்கப்படுபவர்
[07/11, 07:23] +91 96209 96097: நிஸ்ஸம்ஶயா ஸம்ஶயக்⁴னீ நிர்ப⁴வா *ப⁴வனாஶினீ*🙏🙏

ஒரு தீங்கும் இல்லமால் அருள்பவள்
ravi said…
FOCUS ON INSTANT PEACE



"What would you do if they cut it down?" she asked. "I'd be kinda sad," I replied.


This was a brief conversation between my daughter and me the other day as we passed my favorite tree on our walk.


It sits at the entry into our development and I'd have to believe it is the oldest tree in the neighborhood simply due to it’s large size and overall maturity.


There's something about this tree that is mesmerizing, particularly for nature-lovers like me.


"Listen to the rustling of the leaves," I said. "It's the music of the tree!"


She listened intently and then smiled big, "I hear it!"


I pointed out a few other things I love about the tree, focusing a lot on the calm that it brings me. There's something so serene and tranquil about this tree; it's really special.


As we continued our walk, Madison and I got into a beautiful discussion about taking time each day to give appreciation to the things we love.


I feel there's a lot of value in doing so each and every day. It's stress management at its finest (in my opinion).


Whether it be an old oak tree, the smile of a child, the majestic energy of a sunset, or the calm of a quiet room -- there's plenty to appreciate in our world right now; if you take the time to do it.

Friends, I know that the way we perceive life in the physical world can be challenging. So if you're struggling to keep up with the frantic pace of life, I challenge you to do this.



· Slow Down.

· Find one thing that gives you peace at this very moment.

· Focus on that thing for just one minute.

· Breathe in… and breath out.


Life isn't about that next meeting, sale, new house, or win.


Life is about the challenge of constantly bringing peace into your life through each daily transition.


That's the end game; that's the win.


I'd love to know; what do you focus on that brings you instant peace?
ravi said…
https://chat.whatsapp.com/HTSlXCqETutI9Az4MkEV5T

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் பற்றிய பதிவுகள் :*

ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

ஏனெனில், அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார்.

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும்.

திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியமும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

*அன்னாபிஷேகம் :*

சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக அன்னாபிஷேக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

சமைத்த அன்னத்தை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு உணவிற்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பது ஐதீகம்.

அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தருவதுண்டு.

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரின் அருளையும், ஒரு சேர பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் ஐப்பசி பௌர்ணமியில் விரதம் இருந்து இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தால் நினைத்தது நிறைவேறும். அதனால் தான் முழு நிலவு தினங்களில் சிறப்பான வழிபாட்டு முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு காட்டி இருக்கிறார்கள்.

*சிவனுக்கு அன்னத்தை பூசி பூஜிப்பது ஏன்?*

அன்னசூக்கத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்து சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிட தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன். என்கிறது அந்த மந்திரம் கடவுளுக்கு படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாக சாப்பிட வேண்டும். அன்னத்தை வீணாக்கக்கூடாது.

தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து உலகை காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்து தழுவிக் கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது.

ஐம்பெரும் பூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொள்ளும் அன்னம் இறுதியில் இறைவனிடத்தில் சேர்கிறது. அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்க கூடாது என்பதற்காக அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

சிவ நாமாக்களில் ரொம்ப உசந்ததாக எட்டு உண்டு. அதிலே முடிவான நாமா ‘மஹான்’தான். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹான் என்று இப்படி அஷ்ட நாமா. ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்தர (சத) அர்ச்சனை எல்லாம் பண்ணி முடித்து முடிவிலே இந்த எட்டுப் பெயர்களை ‘பவாய தேவாய நம:’, ‘சர்வாய தேவாய நம:’, ‘ஈசானாய தேவாய நம:’, ‘பசுபதயே தேவாய நம:’, ‘ருத்ராய தேவாய நம:’, ‘உக்ராய தேவாய நம:’, ‘பீமாய தேவாய நம:’, ‘மஹதே தேவாய நம:’, என்று இந்த ஆர்டரில் சொல்லி அர்ச்சித்து விட்டு, அப்புறமே தூப-தீப-நைவேத்யம் என்று போகிறதுதான் தொன்று தொட்டு வந்துள்ள பூஜாவிதி.
ravi said…
முதல் வேற்றுமையில் ‘மஹான்’ என்பதாக இருக்கிற பெயர், நாலாம் வேற்றுமையில் ‘மஹானுக்கு நமஸ்காரம்’ என்று வரும்போது ‘மஹதே நம:’ என்று வருகிறது.
’மஹதே தேவாய நம:’ என்று ‘தேவ’ சப்தம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எட்டுப் பேர்களில் ஒவ்வொன்றுக்கும் ‘பவாய தேவாய’, ‘சர்வாய தேவாய’ என்று தேவ சப்தம் சேர்த்துச் சொல்லிக் கொண்டே போய், கடைசியில் ‘மஹதே தேவாய’ என்று பூர்த்தி பண்ண வேண்டும்.
ravi said…
அந்த விசேஷத்தால்தான் ‘மஹாதேவன்’ என்றே சிவனுக்குப் பிரஸித்தமாக நாமா இருக்கிறது. ஆகக்கூடி சிவன் மஹாதேவனாகப் பூர்த்தி ஸ்தானத்தில் வருகிறான்.
ravi said…
மஹாதேவன் என்கிற மாதிரியே மஹாலிங்கம் என்றும், மஹேச்வரன் என்றும் அவனைச் சொல்கிறோம். ஆனாலும் விஷ்ணு-மஹாவிஷ்ணு மாதிரி சிவன் – மஹாசிவன் இல்லை. ஏன் இப்படி?
தேவர்களிலெல்லாம் பெரியவனாதலால் மஹா தேவன். பெருமை, மஹிமை வாய்ந்த லிங்க ரூபமானதால் மஹாலிங்கம். லிங்கம் என்றால் அடையாளம், அறிகுறி என்று அர்த்தம். பரப்ரம்மத்துக்கு இருக்கப்பட்ட அடையாளங்கள்தான் அத்தனை தேவதா ரூபங்களுமே. அவற்றுக்குள்ளே முதல் ஸ்தானத்திலிருக்கிற மஹிமை ‘லிங்கம்’ என்றே சொல்லப்படுகிற மூர்த்திக்குத்தான்! எப்படி?
ravi said…
மூர்த்தி’ என்றேன். ஆனால் கண், மூக்கு, காது, சரீரம் என்றுள்ள மூர்த்தியாகவா இருக்கிறது, நாம் பார்க்கிற சிவலிங்கம்? அப்படிப் பார்த்தால் அமூர்த்திதான், அரூபந்தான்!  ஆனாலும்! வெறும் வெட்டவெளியா, empty space-ஆ? அப்படியும் இல்லை. Cosmos என்கிற பிரபஞ்சம் மாதிரியே oval ஆக (நீள்வட்டமாக) ஸகல ஸ்ருஷ்டிக்கும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிற ஒரு பிம்பமாகவும் அது இருக்கிறது. விஷயஜ்ஞர்கள் ஸகுணம்-நிர்குணம் இரண்டும் சேர்ந்தது, ஸகளம்-நிஷ்களம் இரண்டும் சேர்ந்தது என்று அதற்குப் பெரிய மஹிமை சொல்வார்கள். அருவுருவம் என்று தமிழில் சொல்வது. இப்படி அருவ-உருவங்களாக ஒருத்தனே ஒருசேர இருப்பதில் அத்வைத-த்வைத தத்வங்கள் அத்தனையும் அடக்கம். அதாவது ஸகல தத்வமும், தத்வாதீதமும், (தத்வத்திற்கு அப்பாற்பட்டது) எல்லாமுமே அடக்கம். அதனால்தான் மஹத்தான அடையாளம், மஹிமை வாய்ந்த அறிகுறி என்று  போற்றி ’மஹாலிங்கம்’ என்பது.
ravi said…
மஹேச்வரன் என்று ஏன் சொல்வது என்றால்; ஈச்வரன் என்ற பதத்துக்கு ஆட்சி செலுத்தும் சக்திமானான தலைவன் என்று அர்த்தம். ‘ஈச்’ என்ற தாதுவுக்கு ரூல் பண்ணுவது, உடைமை படைத்திருப்பது என்று அர்த்தம். இந்த ப்ரபஞ்சம் முழுதையும் தன் உடைமையாக்க் கொண்டு அதன்மீது ஆதிக்க சக்தி காட்டி ஆள்கிற மஹத்தான கார்யத்தைப் பண்ணுகிறவனே ஈச்வரன். மஹத்தான கார்யம் பண்ணுவதால் மஹேச்வரன்.
ravi said…
https://chat.whatsapp.com/HTSlXCqETutI9Az4MkEV5T

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பதிவுகள் :*

• செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.

• கணவன் மனைவி பிரச்சனையை நீங்கி கணவன் மனைவி உறவை மேம்படும்.

• பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.

• ருத்ராட்சம், ஸ்படிக மாலை இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக கருங்காலி மாலையே மந்திர ஜபம் செய்வதற்கு ஏற்றது.

• வாலை, துர்கை, காளி, வாராஹி, பைரவர் போன்ற தெய்வங்களின் அருள் பெற இந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்ய பலன் நிச்சயம் கிடைக்கும்.

• ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும்.

• உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும்.

• குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுத்து மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும்

• வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும்.

• நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.

• மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும்.

• வாகனங்களில் அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு இது பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

*குறிப்பு :*

இந்த அற்புத சக்தி வாய்ந்த உயர்தர கருங்காலி மாலையானது ஒரு பூஜையின் போது 108 மாலைகள் மட்டுமே வைக்கப்படும். தற்போது குறைந்த எண்ணிக்கையில் (49) மட்டுமே உள்ளதால் தேவைப்படுபவர்கள் உடனே தொடர்பு கொண்டு கருங்காலி மாலையை முன்பதிவு செய்து உறுதிப்படுத்தவும்.

*பூஜையில் வைக்கப்பட்டுள்ள இந்த கருங்காலி மாலையை நீங்கள் பெற விரும்பினால், 6369199775 என்ற எண்ணிற்கு கால் மூலமாகவே அல்லது WhatsApp மூலமாகவே முன்பதிவு செய்யவும்.*

WhatsApp : wa.me/+916369199775

*கருங்காலி மாலையின் விலை 3000 /- ரூபாய்.*
ravi said…
முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 25,26 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம் ன்னு சொன்னார். இந்த 27 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு சொல்றார். அது எப்பேற்பட்ட ஔஷதம்?

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥

ன்னு சொல்றார்
ravi said…
*த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம்’*

மூவுலகங்களுக்கும் புத்துயிர் கொடுக்கற ஔஷதம் இது.

கிருஷ்ணனை நினைச்சா நமக்கு battery திரும்பவும் charge ஆகிடும். ‘ *ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம்’*

பக்தர்களுக்கு அத்யந்த ஹிதத்தை செய்யக் கூடிய ஔஷதம்ங்கிறார். ‘

*ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்’* இந்த வாழ்க்கைப் பிரச்சினைகள், வாழ்க்கையைப் பத்தின ஒரு கவலை, பவபயம்.

அதை போக்குவதற்கு ஏக ஔஷதம்.

இது ஒண்ணு தான் மருந்துன்னு சொல்றார். ‘

*ச்ரேய: ப்ராப்தி கரௌஷத⁴ம்* ’ மங்களங்களை கொடுக்கும் மருந்து.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ravi said…
அன்னாபிஷேகம் ஏன்?

மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிட சிறப்பாக சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான். அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூசை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர் , அதனால் உன்னைவிட அவர்களே சிவபூசை செய்வதில் சிறந்தவர்கள் என கண்ணன் சொல்கிறார்.

யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்கு தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளை பார்க்கிறான். ஆனால் சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான், நடந்தவற்றை சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை , ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான்.

அப்போது கண்ணன் , உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா என கேட்க , அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு என பழமொழியே வந்தது என்கிறான்.

கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்கு சமம் தானே? ஒரு பானை நிறைய சாதம் வடித்தபின் அதனை வணங்கினால் பல ஆயிரம் லிங்கங்களை வணங்கியதற்கு சமம் தானே அதனால் ஒரே சமயத்தில் பல ஆயிரம் லிங்கங்களை வைத்து பூசித்த அவரே சிறந்த சிவபக்தர். என்கிறார் கண்ணன்.

எந்த லிங்கத்தையும் விட அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் நித்தம் வீட்டில் சாதம் . பானையில் வடித்த பின் அதற்க்கு ஒரு விபூதி பட்டையிட்டு திலகமும் சிறிது பூவும் வைத்து , முடிந்தால் வெற்றிலை,பாக்கு வாழைபழம் இரண்டை வைத்து கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.

அதிலும் அன்னாபிஷேக மாதமான ஐப்பசியில் இதனை செய்வோர் எல்லா நலன்களும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம்.

அன்னவார்ப்பு திருநாள் - 7.11.2022
ravi said…
மஹா பெரியவா செய்த பேருதவி !!

நெமிலியிலே அருள்மிகு தேவி அன்னை பாலாவின் சன்னிதியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று அற்புதம் ஒன்று நடந்தது.

ஆம் ! விழியற்றவருக்கு வழி காட்டினாள் அன்னை ! இதோ அந்தச் செய்தி.

“அன்னைக்கு பாலாபிஷேகம் முடிந்தது. தேனாபிஷேகம் நடைபெறும் சமயம். வேதங்கள் ஒலிக்கும் சன்னிதிக்கு விழியற்ற ஒருவர் வயதான தமது தந்தையாருடன் வந்தார். பெயர் எம்.எஸ்.ராமமூர்த்தி என்றும், பெரம்பூர் ஐ.ஸி.எஃப் கோச் ஃபாக்டரியில் பணி புரிவதாகவும் கூறினார். அவரை அழைத்துச் சென்று அன்னையிடம் அமர வைத்தோம். பஞ்சாமிர்தபிஷேகம், சந்தனாபிஷேகம், இளநீர் அபிஷேகம் என அன்னைக்கு ஒவ்வொரு அபிஷேகத்தையும் பக்தி ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு அபிஷேக முடிவிலும் தீபாராதனை காட்டும்போது, “இருள் நீக்கும் திரிபுர சுந்தரியே—மருள் போக்கும் திரிபுர சுந்தரியே ! திருமணம் முடிக்கும் திரிபுர சுந்தரியே!” என்று அன்பர்கள் மனம் உருக கோஷித்தனர். அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடக்கும்போது விக்கி விக்கி அழுகின்ற குரல் கேட்டு அனைவரும் திகைத்தோம்.

யாரென்று பார்த்தால் அந்த விழியற்ற அன்பர் திரு ராமமூர்த்தி அவர்களிடம்தான் அந்த ஒலி எழும்பியது. பதறிப்போய் அவரை மெல்ல அழைத்து விவரம் கேட்டோம்.

“நான் பெரம்பூர் ஐ.ஸி.எஃப் கோச் ஃபாக்டரியில் வேலை பார்த்து வர்றதுக்குக் காரணம் பெரியவர் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் திரு. ஜி. லக்ஷ்மணன் அவர்கள்தான். அவர்களின் உதவியால்தான் இந்த விழியற்றவனுக்கு வேலை கிடைத்தது. இதுவரை எனது வயதான அம்மாதான் என்னையும் என் அப்பாவையும், பார்வையற்ற என் அண்ணாவையும் கவனித்துக் கொண்டாள். இரண்டு மாதங்களுக்கு முன்தான் எனது அம்மா காலமாகி விட்டார். நாங்கள் எப்படி வாழ்வது? அப்பாவுக்கோ வயதாகி விட்டது. திருமணத்தைப் பற்றி நான் நினைத்ததே கிடையாது. ஆனால் இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. பார்வையற்ற என்னை யார் விரும்புவார்கள் ? இது என்ன சோதனை ! நினைக்க நினைக்க எனக்கு துக்கம் தாங்கவில்லை.

ravi said…
மஹா பெரியவா செய்த பேருதவி !!

நெமிலியிலே அருள்மிகு தேவி அன்னை பாலாவின் சன்னிதியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று அற்புதம் ஒன்று நடந்தது.

ஆம் ! விழியற்றவருக்கு வழி காட்டினாள் அன்னை ! இதோ அந்தச் செய்தி.

ravi said…
அன்னைக்கு பாலாபிஷேகம் முடிந்தது. தேனாபிஷேகம் நடைபெறும் சமயம். வேதங்கள் ஒலிக்கும் சன்னிதிக்கு விழியற்ற ஒருவர் வயதான தமது தந்தையாருடன் வந்தார். பெயர் எம்.எஸ்.ராமமூர்த்தி என்றும், பெரம்பூர் ஐ.ஸி.எஃப் கோச் ஃபாக்டரியில் பணி புரிவதாகவும் கூறினார். அவரை அழைத்துச் சென்று அன்னையிடம் அமர வைத்தோம். பஞ்சாமிர்தபிஷேகம், சந்தனாபிஷேகம், இளநீர் அபிஷேகம் என அன்னைக்கு ஒவ்வொரு அபிஷேகத்தையும் பக்தி ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தார்கள்.

ravi said…
ஒவ்வொரு அபிஷேக முடிவிலும் தீபாராதனை காட்டும்போது, “இருள் நீக்கும் திரிபுர சுந்தரியே—மருள் போக்கும் திரிபுர சுந்தரியே ! திருமணம் முடிக்கும் திரிபுர சுந்தரியே!” என்று அன்பர்கள் மனம் உருக கோஷித்தனர். அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடக்கும்போது விக்கி விக்கி அழுகின்ற குரல் கேட்டு அனைவரும் திகைத்தோம்.

ravi said…
யாரென்று பார்த்தால் அந்த விழியற்ற அன்பர் திரு ராமமூர்த்தி அவர்களிடம்தான் அந்த ஒலி எழும்பியது. பதறிப்போய் அவரை மெல்ல அழைத்து விவரம் கேட்டோம்.

“நான் பெரம்பூர் ஐ.ஸி.எஃப் கோச் ஃபாக்டரியில் வேலை பார்த்து வர்றதுக்குக் காரணம் பெரியவர் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் திரு. ஜி. லக்ஷ்மணன் அவர்கள்தான். அவர்களின் உதவியால்தான் இந்த விழியற்றவனுக்கு வேலை கிடைத்தது. இதுவரை எனது வயதான அம்மாதான் என்னையும் என் அப்பாவையும், பார்வையற்ற என் அண்ணாவையும் கவனித்துக் கொண்டாள். இரண்டு மாதங்களுக்கு முன்தான் எனது அம்மா காலமாகி விட்டார். நாங்கள் எப்படி வாழ்வது? அப்பாவுக்கோ வயதாகி விட்டது. திருமணத்தைப் பற்றி நான் நினைத்ததே கிடையாது. ஆனால் இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. பார்வையற்ற என்னை யார் விரும்புவார்கள் ? இது என்ன சோதனை ! நினைக்க நினைக்க எனக்கு துக்கம் தாங்கவில்லை.

ravi said…
கடந்த நூறு ஆண்டுகளாக அன்னை பாலா திரிபுர சுந்தரியை நீங்கள் வீட்டிலேயே பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வருவதாகக் கேள்விப்பட்டேன். நடக்கமுடியாத திருமணங்களை அன்னை பாலா திரிபுரசுந்தரி நடத்திக் காட்டியதாக பலர் கூறவும் நாங்கள் இங்கே வந்துள்ளோம்.. “அம்மா! எங்களை ஆதரிக்க வேண்டும்” என்று கேட்க இங்கே வந்துள்ளோம்.

ravi said…
பார்வையற்ற என்னைப் பார்த்துக்கொள்ளவும், பாசத்துடன் கவனித்துக் கொள்ளவும் ஒரு பெண்துணை வேண்டும் என்று கேட்பதற்காக வந்துள்ளேன். வயதான அப்பாவை வாஞ்சையுடன் பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு மனைவியைக் கொடு “ என்று பாலாவை வேண்டிக்கொள்ள வந்துள்ளேன். அம்மாவை இழந்த துக்கம் தாங்காமல்தான் அன்னையின் சன்னிதியில் கதறி அழுதுவிட்டேன்” என்றார்.

ravi said…
எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கடந்த பல ஆண்டுகளாகப் பூஜை செய்து வருவது வாஸ்தவந்தான். சொந்த வீடாயிருந்தாலும், குடும்ப பூஜை செய்து வந்தாலும், யார் வந்தாலும் அவர்களைப் பூஜைகள் பார்க்க அனுமதித்துத் தரிசனம் செய்து வைப்பது வழக்கம்தான். ஆனால் இப்படி “கண்ணற்ற எனக்குப் பெண்ணொன்று தருவாளா?” என்று கேட்டால் என்ன சொல்வது ? அனைவரும் அதிர்ந்து போனோம். அவரது நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது. இருந்தாலும் பார்வையற்றவரை யார்தான் மணப்பார்கள்? அம்பாளிடம் இப்படி ஒரு வேண்டுகோளைக் கேட்டு விட்டார்களே ?” என்று அதிர்ந்து போனோம்.

ravi said…
ஆனால் அடுத்த கணம் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஆம்! திமிரியைச் சேர்ந்த திரு. பாஸ்கர ஐயர் என்பவர் தம் பெண் லலிதாவுடன் அம்மனின் சன்னிதிக்கு வந்தார். அவர் தம் பெண்ணுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்து வரதட்சிணை அரக்கனால் அடிபட்டுத் தோற்றுப்போனவர்.

‘சவரன்’ என்ற பெயரைக் கேட்டதும் ‘சர்ப்பம்’ என்ற பெயரைக் கேட்டது போன்று சரிந்து விடுவார்.

ravi said…
புரோஹிதம் மூலம் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கும் ஆயிரங்களுக்கும் வெகு தூரம். வந்தவர் அங்கே வந்திருந்த ராமமூர்த்தியின் நிலை அறிந்தார். லலிதாவும் அவரைப் பார்த்தார். “கண்பார்வை இல்லாவிடினும் பரவாயில்லை. நான் இவரையே கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்” என்று அந்தப் பெண் கூறவும் ஆச்சரியத்தால் பிரமித்தனர் அனைவரும். மனப்பூர்வமாக ஒத்துக்கொண்ட அந்தப்பெண்ணை அனைவரும் பாராட்டினர்.

ravi said…
அன்னையே ! என்னே உன் கருணை ! என்னே உன் திருவிளையாடல் ! நடக்க முடியாதது என்று நாங்கள் நினைத்ததை ஒரு நொடிக்குள் நடத்திக் காட்டிவிட்டாயே! முடியாதது என்று நாங்கள் நினைத்ததை ஒரு கணத்தில் முடிக்க வைத்து முறுவல் செய்கிறாயே !

ravi said…
அவரை வரவழைத்ததும் நீயே !

அவளை வரவழைத்ததும் நீயே !

திருமணம் முடிக்கும் திரிபுரசுந்தரி என்பது பொய்யாகுமா ?

காஞ்சிப் பெரியவாளிடம் சென்று ஆசி பெறுவதற்காக திமிரி பாஸ்கர ஐயரும் அவரது துணைவியார் லட்சுமியும், மகள் லலிதாவும் சென்றனர். காரணம் திரிபுரசுந்தரியின் சன்னிதியைப் பார்க்கும்போது அவருக்குக் காஞ்சிப் பெரியவாளின் கருணை முகம்தான் நினைவுக்கு வரும்.

ravi said…
ஆம்! தற்போது பாலா திரிபுரசுந்தரி பூஜை செய்பவர்களின் முன்னோர்களான நெமிலி ஹெட்மாஸ்டர் டி.கே.ஜானகிராம ஐயர் அவர்களும் மற்றவர்களும் காஞ்சிப் பெரியவாளை நெமிலிக்கு வரவழைத்து அன்னை பாலா திரிபுரசுந்தரியின் சன்னிதியில் பாத பூஜை செய்ததை அறிந்தவர் அவர்,

ஒவ்வொரு நவராத்திரியின் போதும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அன்னை பாலா திரிபுரசுந்தரியின் நவராத்திரி பூஜைப் பத்திரிகையை பெரியவாள் திருக்கரங்களில் சமர்ப்பிக்கும் செய்கையும் அறிந்தவராதலால், அன்னையின் சன்னிதியில் நடைபெற்ற இந்த அற்புதத்தைப் பெரியவாளிடம் கூறி அவரது ஆசியைப் பெறவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். அதனால்தான் காஞ்சிக்குப் பயணமானார்கள்.

பெரியவர் சன்னிதியிலே திமிரி பாஸ்கர ஐயர் சென்றதும் நமஸ்காரம் செய்துவிட்டு தாம் திமிரியிலிருந்து வருவதாகத் தெரிவித்தார்.

முதல் விசாரிப்பு, திமிரியில் இருந்த ஹெட்மாஸ்டர் குப்புசாமி ஐயரைப் பற்றியதுதான்.

அதிர்ந்து போனார் பாஸ்கர ஐயர். எத்தனை வருடங்களுக்கு முன்னே திமிரிக்கு வந்தாரோ தெரியவில்லையே ! பத்து வருடங்களுக்கு முன் அமரராகிவிட்ட அந்த ஹெட்மாஸ்டரைப் பற்றி ஞாபகமாகக் கேட்கிறாரே !.

அடுத்த கேள்வி, “திமிரியிலிருந்து இங்கே வந்து, மடத்திலே கோலாட்டம் போட்டாளே ஒரு சின்னப்பெண் ! சுகுணா! அவ எப்படி இருக்கா?”

பாஸ்கர ஐயருக்கு உடம்பு முழுவதும் ஷாக் அடித்தது போன்று ஆயிற்று. ஆம் ! திமிரியிலிருந்து பள்ளிப் பெண்களோடு வந்து மடத்தில் கோலாட்டம் நடத்திய சுகுணா அவரது மூத்த பெண்ணல்லவா! சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னே நடந்த நிகழ்ச்சியை எத்தனை ஞாபக சக்தியுடன் கூறி பிரமிப்பில் ஆழ்த்துகிறார் !

‘தான் வந்ததோ தனது இளைய மகள் திருமண விஷயமாக! விசாரிப்போ தனது மூத்த மகளைப் பற்றி !’ எப்படி இருக்கும் அவருக்கு !

"என் மூத்த மகள்தான்" என்று கூறியவர், "அவ மெட்ராஸ்லே இருக்கா" என்று பரபரப்புடன் முடிக்கிறார். வார்த்தைகள் குழறுகின்றன, பெரியவரோ வாத்ஸல்யத்துடன் பார்க்கிறார்.

உடனே தான் வந்த செய்தியினை மெல்ல விவரிக்கிறார்.

புளகாங்கிதமடைகிறார் பெரியவாள்.

அப்படியா விஷயம் ! இவரோட பெண் கல்யாணத்துக்கு யார் உதவி பண்ணப்போறா?: என்று வந்திருந்தவர்களைப் பார்த்து வினவினார். ஒருவர் 50 ரூபாய் தந்தார் மற்றொருவர் 51 ரூபாய் தந்தார். இன்னுமொருவர் 11 ரூபாய் தந்தார். அதனை அன்போடு எடுத்துக்கொள்ளச் சொன்னார் பெரியவர்.

ஆனந்தம் மேலிட அதனை எடுத்துக்கொண்டார் பாஸ்கர ஐயர்.

திடீரென்று ஒரு விசாரிப்பு.

“வக்கீல் ஓரிக்கை கண்ணாட்டியைத் தெரியுமா?”

மெய் சிலிர்த்தது பாஸ்கர ஐயருக்கு. தெரியுமாவது ! அவருக்கு கண்ணாட்டி என்பவர் உறவு அல்லவா! இது என்ன திருவிளையாடல் ! உனது ஜாதகமே தெரியும் என்கிறாரே பெரியவர் !

“அவர் எனக்கு உறவு” என்றதும் புன்னகை பூக்கிறார் பரமாச்சாரியாள்.

“கல்யாணம்னா லேசா? எவ்வளவோ பணம் தேவைப்படுமே ! இதுவெல்லாம் போறாதே !” என்று கூறிய பெரியவாளின் முகத்திலே ஒரு கேள்விக்குறி.

சரியாக ஒரு மாதத்திற்குள் அந்தக் கேள்விக்குறி பாஸ்கர ஐயரின் முகத்திலே ஆச்சரியக் குறியாக மாறியது.

பெரியவாளின் உத்தரவுக்கிணங்க, அடையாறு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கணிசமாக உதவி செய்ய வள்ளிமலை முருகன் சன்னிதியில் லலிதாவிற்கும் ராமமூர்த்திக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தது.

திருமணத்தை நாடாளுமன்ற முன்னாள் உதவி சபாநாயகர் திரு.லக்ஷ்மணன் வந்திருந்து அன்புடன் நடத்திக் கொடுத்தார். பாரதப் பிரதமர் காரியாலத்திலிருந்து “உடல் ஊனமுற்றவராயிருந்த போதும் லலிதாவை மணந்துகொண்டு மற்றொரு முக்கியமான படியைத் தாண்டியுள்ளார்!" என்று வாழ்த்திக் கடிதம் வந்தது.

ஆச்சார்யாளின் குருவருளும், அம்பாளின் திருவருளும் சேர்ந்து அந்தக் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடைபெற்றது. பெரியவாளின் பேருதவியை எண்ணி எண்ணி அத்தனை பேரும் நன்றியால் விழிநீரை உகுத்தனர்!

“தவக்கோலம் தமக்காக—தர்மங்கள் நமக்காக” என்று சீரிய வாழ்வு வாழ்ந்து வரும் மகாபெரியவாளை போற்றிப் புகழ்ந்திட வார்த்தைகளும் உண்டோ ?

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏
ravi said…
🌹🌺" *நாம் வாழும்போது பிறருக்கு எவ்வாறு பயன்படும்படி வாழ்ந்தோம் என்பதே நாம் வாழும், வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்.!.. விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹ஒரு ஊரில் செல்வந்தர் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். சிறந்த ஸ்ரீ விஷ்ணு பக்தர், எப்பொழுதும் ஸ்ரீ விஷ்ணுவின் மந்திரம்தான் அவர் எண்ணம் முழுதும்.

🌺ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
*செருப்பு பிஞ்சுபோச்சு..*
*அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.*

🌺அந்த வீட்டுக்காரரை அழைத்து...ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.*

🌺புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன் என்றார் ஏகாம்பரம்...

🌺காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*

🌺அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*
அதற்கு அந்த வீட்டுக்காரர்*
*அந்த செல்வந்தரைப் பார்த்து...*

🌺ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். ஏனென்றால் நீங்கள் சொல்லும் பாடும் ஸ்ரீ ஹரி நாமங்கள் என்றென்றும் மகத்துவம் வாயிந்தது

🌺நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க அய்யா “ என்று சொன்னார்.*

🌺அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்*

🌺சில ஆண்டுகள் கடந்தன...*
ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*

🌺அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.*
அப்போது நல்ல மழை.⛈*

🌺பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...*
ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.*

🌺அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.*
*பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.*

🌺அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..*
அவர் செருப்புக்கே நாங்கள் மரியாதை செய்து உள்ளோம் அவர் உடலுக்கா மரியாதை செய்ய மாட்டோம்🌹🌺

🌺அவர் பணம் மட்டும் கொண்டவரல்ல.. இறைவனை தான் நினைப்பது மட்டும் அல்லாமல் எல்லோரும் எப்படி ஸ்ரீ ஹரி பகவானை நினைத்து நெறியுடன் வாழ வேண்டும் என அடிக்கடி கூறுவார், ஏழை எளிய அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவி செய்வார்.

🌺நாம் இறந்த பிறகு எல்லோரும் பிணம்தான்... ஆனால் நாம் வாழும்போது பிறருக்கு எவ்வாறு பயன்படும்படி வாழ்ந்தோம் என்பதே நாம் வாழும், வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம், எனவே இனி வரும் ஒவ்வொரு நொடிகளையும் இறை பக்தியால் உணர்ந்து கடப்போம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
If you come across a person who triggers the thought, 'Oh, my worries will run away', and brings a smile within you, you have found your confidant in her / him.
ravi said…
Ponder over these things, which are difficult to get back:

a) Stones after they are thrown
b) Words after they are spoken
c) Opportunities / Occasions, after they are missed
d) Time, after it has elapsed....
ravi said…
முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 25,26 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம் ன்னு சொன்னார். இந்த 27 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு சொல்றார். அது எப்பேற்பட்ட ஔஷதம்?

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥

ன்னு சொல்றார்
ravi said…
*பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம்’ ஹே*

மனமே நீ இந்த கிருஷ்ணன் என்ற சிறந்த ஔஷதத்தை குடின்னு சொல்றார்.

அப்படி வாழ்க்கையில கஷ்டங்களை போக்கிக்கறதுக்கு மணி, மந்திர, ஔஷதம்னு ஒரு வழி இருக்கு.

குலசேகராழ்வார் கிருஷ்ணனே உனக்கு மணியாகவும், மந்த்ரமாகவும், ஔஷதமாகவும் இருப்பான்.

நீ வேற ஒண்ணை நாடாதே.

கிருஷ்ணனை மனசுல வெச்சுண்டே இரு.

அது போறும்னு சொல்றார்.

இந்த மணி, மந்திர, ஔஷதம்னு இந்த மூணு ஸ்லோகங்கள் ஒரு set.🙏🙏🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"பீம ரத சாந்தி தம்பதிக்கு அடிச்ச யோகம்!"

(பெரியவா கரத்தாலேயே தொடுக்கப்பட்ட ஆரத்தை அவர் முன்னாலேயே மாத்திக்கற மகா பாக்யம்)

(தன்னை தரிசனம் பண்ண ஒரு தம்பதி வருவா. அவாளுக்குத் தன் கரத்தாலேயே மாலைகட்டித் தந்து ஆசிர்வாதம் செய்யணும்கறதை எல்லாம் எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சு, புஷ்பக் கூடையை அங்கேயே வைக்கச் சொன்னார் பரமாசார்யாங்கறது, பரமேஸ்வரனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்)

ravi said…
கட்டுரையாள"ர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

ஒரு நாள் வழக்கம்போல நித்ய அனுஷ்டானங்களை எல்லாம் முடிச்சுட்டு பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார் மகாபெரியவா .அந்த சமயத்துல ஒருத்தர் பெரிய கூடை நிறைய புஷ்பத்தை எடுத்துண்டு வந்து ஆசார்யா முன்னால சமர்ப்பிச்சு நமஸ்காரம் செஞ்சார். அவரை ஆசிர்வதிச்ச பெரியவா,குங்கும பிரசாதம் குடுத்தார். அவர் வாங்கிண்டு புறப்பட்டதும்,பரமாசார்யாளோட அணுக்கத் தொண்டர் ஒருத்தர் பூக்கூடையை நகர்த்தி வைக்கறதுக்காக எடுத்தார்.

ravi said…
கையைச் சொடுக்கி அவரைத் தடுத்த பெரியவா, "அதை நகர்த்த வேண்டாம்.அங்கேயே இருக்கட்டும்!னு ஆணையிட்டார்.

வழக்கமா பெரியவாளை தரிசனம் பண்ண வர்றவாளால கனிவர்க்கம்,புஷ்பம்னு தரப்படற பொருட்களை ஆசார்யாளுக்கு அணுக்கத்துல நிற்கிற தொண்டர் உடனுக்குடனே நகர்த்தி வைச்சுடுவார். ஏன்னா மத்தவா கொண்டுவர்றதை பெரியவா முன்னால வைச்சு சமர்ப்பிக்கறதுக்கு இடஞ்சலா இருக்ககூடாது - -ங்கறதுக்காகத்தான். ஆனா,இன்னிக்கு புஷ்பத்தை ஏன் நகர்த்த வேண்டாம்னு ஆசார்யா சொல்றார்ங்கறது அந்தத் தொண்டர் உள்பட யாருக்கும் புரியலை.

ravi said…
பக்தர்கள் வரிசையாக வந்து பெரியவாளை தரிசனம் செஞ்சுட்டு பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்துண்டிருந்தா. நேரமும் நகர்ந்துண்டே இருந்தது . அந்த சமயத்துல வேகவேகமா அங்கே வந்தா வயசான ஒரு தம்பதி.

புதுப் பட்டு வேஷ்டியும் புதுப் பட்டுப் புடவையும் கட்டிண்டு இருந்த அவாளைப் பார்த்ததுமே ஏதோ விசேஷத்துல கலந்துண்டுட்டு வந்திருக்காங்கறது சொல்லாமலே தெரிஞ்சுது. பெரியவாளை நமஸ்காரம் பண்ணின சமயத்துல அந்தத் தம்பதிகளோட கண்ணுலேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சுது. அவ்வளவுதான் அவா எதுவும் சொல்லலை. பரமாசார்யாளும் ஒண்ணும் கேட்கலை. நமஸ்காரம் செஞ்சுட்டு பிரசாதத்துக்காக கையை நீட்டினவாளைப் பார்த்து, "அதோ அங்கே உட்காருங்கோ!" அப்படிங்கற மாதிரி ஜாடை காட்டினார், மகா பெரியவா.

ravi said…
தன் முன்னால ஒருத்தர் வைச்ச பூக்கூடையை நகர்த்த வேண்டாம்னு சொல்லார் இல்லையா? அதுல இருந்த பூக்களை ஒரு நார்ல கட்டி மாலைமாதிரி தொடுக்க ஆரம்பிச்சார் ஆசார்யா.எல்லோருக்கும் ஆச்சரியம்.

பத்துப் பதினைஞ்சு நிமிஷத்துல ரெண்டு மாலையை கடகடன்னு கட்டி முடிச்ச மகாபெரியவா, கொஞ்சம் முன்னால வந்து நமஸ்காரம் பண்ணிட்டு தள்ளி உட்கார்ந்துண்டிருந்தாளே அந்தத் தம்பதியை கூப்பிடச் சொன்னார். அதோட மடத்துலேர்ந்து வேத விற்பன்னர்களையும் வரச்சொன்னார்-பெரியவா.

அந்தத் தம்பதிக்கு நடக்கறது கனவா,நிஜமான்னு தெரியாத சந்தோஷம்.ஆனந்தத்துல அவா கைகாலெல்லாம் நடுங்க கண்ணுல ஜலம் வழிய மாலையை எடுத்து ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி சூட்டிண்டா.அந்த நேரத்துல வேத விற்பன்னர்கள் மந்திரத்தைச் சொல்லி ஆசிர்வாதம் பண்ணினா.

எல்லாம் முடிஞ்சதும், "என்ன சந்தோஷமா? பொறப்படுங்கோ...ஒரு குறையும் வராது!" அப்படின்னு சொல்லி நிறைய குங்கும பிரசாதத்தைக் குடுத்து அனுப்பினார், பரமாசார்யா.

.......................

வெளியே மடத்து சீடர் ஒருவரிடம் அவர்கள் சொல்லிய சாராம்சத்தின் சுருக்கம்.

இன்னிக்கு இவரோட எழுவதாவது பிறந்த நாள் எங்கள் பூர்வீகம் பெங்களூர், வருடம் ரெண்டு தரமாவது பெரியாவாளை தரிசனம் பண்ண வருவோம்.

"எங்க பிள்ளை மெட்ராஸ்லதான் இருக்கான். தன்னோட க்ருஹத்துலயே அப்பாவுக்கு பீமரத சாந்தி பண்ணி வைக்கறேன்னுட்டான் . இந்த சாக்குலயாவது ஆசார்யாளை தரிசனம் பண்ணறதுக்கு சந்தர்ப்பம் அமையுமேன்னுட்டு சரின்னுட்டோம்.

இன்னிக்கு கார்த்தால இவருக்கு பீமரத சாந்தி நடந்தது. நல்லபடியா முடிஞ்சதும் பெரியவாளை தரிசனம் பண்ண ஆசை வந்துடுத்து.

தரிசனம் பண்ணக் கூட்டிண்டு போறேன் என்று சொன்ன பிள்ளைக்கு, பெங்களுர்ல முக்கியமான மீட்டிங்-உடனே வரச் சொல்லி ஃபோன் கால்.

என்ன பண்றது நாங்க குடுத்து வைச்சது அவ்வளவுதான்னு நெனைச்சுண்டு, ரெண்டு கார் ஏற்பாடு பண்ணி பெங்களூர் புறப்பட்டோம்.

வழியில காவேரிப்பாக்கத்துக்கிடே பைபாஸ் ரோடுல போயிண்டு இருக்கறச்சே ஒரு கார் ரிப்பேர் ஆயிடுத்து. பக்கத்துலேர்ந்து மெக்கானிக்கை கூட்டிண்டு வந்து பார்த்தா, அதுல ஏதோ முக்கியமான பாகம் உடைஞ்சுடுத்து வாங்கிண்டு வந்து போட்டு சரிபண்ண ரெண்டு மணி நேரத்துக்குக் குறையாம ஆகும்னு மெக்கானிக் சொல்லிட்டார்.
https://chat.whatsapp.com/G68hOHsKayoEr3iBiZ5Eqo
டக்குன்னு எனக்கு ஒரு யோஜனை தோணித்து "காஞ்சிபுரம் பக்கத்துல தான் இருக்கு. ரெண்டு மணி நேரம் இங்கே சும்மா நின்னுண்டு இருக்காம அப்பாவும் நானும் காஞ்சிபுரத்துக்குப் போய் பரமாசார்யா இருந்தா தரிசனம் பண்ணிட்டு வந்துட்டுமா?ன்னு" புள்ளை கிட்ட கேட்டேன்.

https://chat.whatsapp.com/G68hOHsKayoEr3iBiZ5Eqo

அவனும் சரின்னுட்டான். அதான் ஆசார்யாளைப் பார்கறதுக்காக அவசர அவசரமா வந்தோம். இங்கே அவரோட கரத்தாலேயே தொடுக்கப்பட்ட ஆரத்தை அவர் முன்னாலேயே மாத்திக்கற மகா பாக்யம் கிடைச்சுடுத்து. இனிமே இந்த லோகத்துல எங்களுக்கு எதுவும் வேணாம். எங்கே இருந்தாலும் பெரியவா நினைவோட நிம்மதியா இருப்போம்" சொல்லிட்டுப் புறப்பட்டா அந்தத் தம்பதி.

தன்னை தரிசனம் பண்ண ஒரு தம்பதி வருவா. அவாளுக்குத் தன் கரத்தாலேயே மாலைகட்டித் தந்து ஆசிர்வாதம் செய்யணும்கறதை எல்லாம் எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சு,புஷ்பக் கூடையை அங்கேயே வைக்கச் சொன்னார் பரமாசார்யாங்கறது, பரமேஸ்வரனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்


ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 395* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*149*
ravi said…
*149 नित्यबुद्धा - நித்யபுத்தா -*

அழிவற்ற சாசுவதமான இயற்கையான ஞானம் கொண்டவள்.🙏
ravi said…
எப்பொழுதும் ஞானத்தை அருள்பவள் .

சித் ரூபமானவள் ...

ஞானம் முக்தி என்ற தனங்களில் இவகைளை கேட்டு பெறுவோர் நம்மிடையே யாருமே இல்லாததால்

பால் கட்டி தட்டி அந்த வலியினால் துடிப்பவள் ... 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 394* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*100. தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது*


ஸகல ஸித்தி💫💫💫💫💫💫💫💫💫💫💫
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100
ravi said…
தாயே!,

உன்னுடைய வாக்குகளால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது

கை தீவட்டிகளின் ஜ்வாலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும், 🌞🌞🌞

அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும், 🌝🌝🌝

ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது.🌨️🌨️🌨️
ravi said…
இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும்,

அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

*ஸ்வகீயை* : என்கிற பதத்தை ஸுர்யன், சந்திரன், ஸமுத்ரம் ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கே பொருள் வருகிறது.

தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே;

சந்திர காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே;

எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே;

இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார்.🙏🙏🙏🙏🙏
ravi said…
*10. மற்றொன்றைக் காணாத கண்கள்* 👀

கொண்டல் வண்ணனைக் கோவலனாய்

வெண்ணை
உண்டவாயன்,

என்னுள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன், அணியரங்கன்,

என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே🦚🦚🦚
ravi said…
நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன்,

*கண்ணா*

நீ என் நெஞ்சைக் கொள்ளை கொண்டாய்

அண்டங்களுக்கெல்லாம் தலைவனான நீ

திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்கிறாயே *கண்ணா*

உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம்போன்ற உன்னைக் கண்டு சேவித்த கண்கள் வேறெதையும் சேவிக்குமா *_கண்ணா_*

ஆரா அமுதனான அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் கண்டு களிக்குமா *கண்ணா* ?

கண்டு களிக்கவும் நான் இனி விரும்பு வேனோ *கண்ணா* ?
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 118*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
காரகார காரகார காவலூழி காவலன்

போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்

மாரமார மாரமார மரங்களேழு மெய்தசீ
ராமராம ராமராம ராமமென்னும் நாமமே. 118👏👏👏
ravi said…
எப்படி மாற்றிப் போட்டும் நாமசெபம் செய்தாலும் அது உண்மையை உணர்ந்தும். உண்மையாக உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்து மாறாது.

அது அகங்காரத்தை அழித்து தீரத்தைக் கொடுக்கும்.

உலகங்கள் யாவையும் காத்து ரட்சிக்கும் இறைவன்,

இராவண வதம் செய்யா போரில் நின்ற புண்ணியன், வாலியை வதம் செய்ய மாமரங்கள் ஏழையும் பானத்தில் துளைத்தவன் ராமன்.

அதுபோல நம் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களையும் ஸ்ரீராம நாமத்தில் பரிசுத்தமாக்கி,

அவைகளின் ஆற்றலால் தியானம், தவம் மேலோங்கி பிறவா நிலையடைய துணையாக நிற்பது ஸ்ரீராம நாமமே!🙏🙏🙏
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*❖ 15 அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா =*

அஷ்டமியின் சந்திரப்பிறையைப் போன்ற ஒளிரும் நெற்றிப்பிரதேசத்தை அழகுடன் அமையப்பெற்றவள்🦚🦚🦚
ravi said…
குவளை பூத்திருக்கும்
குளத்தருகில் காத்திருக்க

தெளிந்திருந்த நீருக்குள்
பார்வையும் வீழ்ந்திடவே

வானுலவும் வெண்நிலவு
நீந்திக் களிப்புறக் கண்டேனே

கறையினைக் களைந்திடவோ
நித்தம்

இதில் நீந்துகிறாய்
என்று நான் நினைத்திடவும்

கண் சிமிட்டி சிரித்தாயே தாயே நீ அன்றோ
வானத்து நிலவு....

வட்ட வடிவான வெண்ணிலவே

இரவுக்கு ஒளி, நீ தோன்றுவதினாலே
இருளை போக்கி வெளிச்சம் தருவாயே

மேகம் மறைத்தும் நீ வெளியில் வருவாயே

மோடம் குறைந்ததும் கண்ணில் விழுவாயே

நானும் உன்னை கண்டு மகிழ்ந்திடுவேனே

நாளும் அதற்காக தவம் இருந்திடுவேனே

வேதம் போற்றும் சந்திரன் நீயே

வேள்வி காக்கும் முனிவரெல்லாமே
வணங்கி உந்தன் புகழ் பாடிடுவாறே

அதை கேட்டவர் யாவரும் அக மகிழ்ந்திடுவாரே

வளர் பிறையாக நீ இருந்திடு என்றும்

தேய் பிறை காண பிடிக்க வில்லை எனக்கும்🌝🌝🌝
ravi said…
In the world full of stress and worries, staying positive is a rare skill.



It is not happy people who are thankful; it is the thankful people who are happy.



When you are disturbed, don't ask yourself "What is disturbing me?". Instead ask yourself "What am I not accepting, which is disturbing me?".



Never let small minds convince you that your dreams are too big.



One who knows himself is never disturbed by what others think about him.



Rivers never go reverse. So try to live like a river. Forget your past and focus on your future.



People need your love much more when they are wrong than when they are right
ravi said…
ZEN SAYINGS



"Move and the way will open."



"No snowflake ever falls in the wrong place."



"When the student is ready the teacher will appear."



"Those who know don't tell and those who tell don't know."



"An angry man catches no fish"



"First thought, best thought."



"Be master of mind rather than mastered by mind."



"When walking, walk. When eating, eat."



"Before enlightenment; chop wood, carry water. After enlightenment; chop wood, carry water."



"Sitting quietly, doing nothing, spring comes, and the grass grows by itself"



"The infinite is in the finite of every instant."



"The obstacle is the path."



"Better to see the face than to hear the name."



"Pain is inevitable. Suffering is optional."



"A visit will always bring pleasure, whether on the arrival or the departure."



"If you can't improve on silence, don't speak."
ravi said…
https://chat.whatsapp.com/HTSlXCqETutI9Az4MkEV5T

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு பற்றிய பதிவுகள் :*

அவசியத்தின் போதெல்லாம் அவதரிக்கின்ற பரம்பொருளின் அவதாரங்கள் எண்ணிலடங்காது என்றாலும், ஒரு சில மிக முக்கியமானதாக போற்றப்பட்டு வந்திருக்கின்றன.

இவற்றுள் மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்கள் பரவலாக வணங்கப்படுவது போல, சிவபெருமானுடையவற்றில் 25 அவதாரங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் லிங்கோத்பவர்.

லிங்கமே சிவபெருமான்தான் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் இருக்கும் திருவுருவைத் தான் லிங்கோத்பவமூர்த்தி என்று போற்றுகிறோம்.

அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கண்ணபிரான் கீதையை அருளினார். அதுபோல நாம் ஒவ்வொருவரும், நமக்கு வாய்த்த பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே, இது போன்ற நிலையைத்தான் லிங்கோத்பவர் கதையிலும் காண்கிறோம்.

பரம்பொருள் ஒன்றே ஆயினும், நாம், அதைப் பெரும்பாலும், பலவாகவே கருதி அறியாமையில் உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான்.

சிவனும் சக்தியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனும் திருமாலும் ஒன்றி சங்கரநாராயணராகவும், இப்படிப் பல திருவுருவங்களையும் ஏற்றிருக்கிறான். இது போலவே மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும்.

இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்திலும் காணலாம். எந்த ஆலயமும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லா தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைக்க இயலாது என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக்கின்றனர். இதனால் தான் திருமாலும், பிரமனும் இல்லாத சிவாலயமுமில்லை. ஆண் தெய்வமில்லாத பெண் சக்தி ஆலயமுமில்லை.

மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது. அகண்டாகார ஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றுவதும், சூடம் ஏற்றுவதுமே மிக முக்கியமான வழிபாடாகும்.

அன்றாடமும், மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும், பௌவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக, லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா... ?*

நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க!

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி


ravi said…
சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும்.

*
ravi said…
இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.* இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.

ravi said…
இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ravi said…
1. ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில் (சூரியன் ஸ்தலம்)

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.
ravi said…

2. ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்)

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

ravi said…
3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்)

'மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக கருத்து நிலவுகிறது.

ravi said…
. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்)

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலையில்) காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.
ravi said…

5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்)

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும்.

ravi said…
. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். *வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள்.* மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.

ravi said…
7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்)

மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில் தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார்.
எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
நவக்கிரக ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும் விட்டுவிட்டீர்களே எனக் கேட்பது காதில் விழுகிறது! ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் தானே. அவர்களுக்கு தனி வீடு கிடையாதல்லவா?

ravi said…
. அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)

திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
ravi said…
9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்)

துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.
ravi said…
சென்னையின் சிறப்பு மிக்க திருமயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம் அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம் ஆகின்றது.
ravi said…
சைவ அடியார்களுள் ஒருவரான ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பிறகு அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ravi said…
இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், *"மயிலையே கயிலை கயிலையே மயிலை"* என்ற சிறப்பைப் பெற்றது போலும். வரும் திங்கள் கிழமை சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 3 started on 6th nov
ravi said…
ஆடும் பரி, வேல், அணிசேவல்

எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
ravi said…
கடைசி இரு வரிகளிலும் காணப்படும் ஒரு நுட்பத்தைக் கவனிக்கவேண்டும்.

அழித்தவருக்கும் யானை முகம்.

அழிக்கப்பட்டவருக்கும் யானை முகம்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை,

விநாயகர் ஒளிமயமான குணங்களின்
பிம்பம்.

கயமுகாசுரனோ அனாத்ம விருத்திகளான தாமச குணங்களின்
பிம்பம்.

விநாயகர் கயமாமுகனைக் கொல்லவில்லை என்பதை கவனத்தில்
வைத்துக் கொள்ளவேண்டும்.

அவனுடைய அசுர குணங்களை நீக்கி,
தன்னுடைய பாதத் தொண்டனாக மாற்றி, தன் திருவடி நிழலில் மூஞ்சுராக
வைத்துள்ளார்.

ஆகையால் நாமும் அந்தக் கணபதியின் அருளால் பிரபஞ்ச
மாயையையும் நம்முடைய அசுர குணங்களையும் மாற்றி, முருகன் அருளால்
பிரணவ உபதேசமாகிய ஆத்ம ஞானத்தை பெறவேண்டும் என்பதே இப்
பாட்டின் நுண் பொருளாகும்.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 383* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
உத்தமர் கோவிலைச் சேர்ந்த தேவதேவி என்னும் நடன மாது உறையூரில் உள்ள சோழனின் அரசவைக்கு வந்து
ஆடல் பாடல்களை நிகழ்த்தி மன்னரை மகிழ்வித்தாள்.

ஊர் திரும்பும் வழியில் விப்ரநாராயணரின் நந்தவனத்தைக் கண்டாள்.

அதன் அழகால் ஈர்க்கப்பட்டு உள்ளே வந்தாள்.

தன் கைங்கரியத்திலேயே லயித்திருந்த விப்ரநாராயணர்
தேவதேவியின் அழகையும் அலங்காரத்தையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.
ravi said…
*சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 383*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*51*
ravi said…
சிவானந்தலஹரி 50வது ஸ்லோகத்துல ‘ *ஸந்த்4யாரம்ப4விஜ்ருʼம்பி4தம்* ’ அப்படீன்னு ஸந்த்யா காலத்தில் மலர்ந்து இருக்கும் மல்லிகையைப் போல,

ஸந்த்யா காலத்தில் நடனம் பண்ணும் மல்லிகார்ஜுன ஸ்வாமியை பார்த்து மல்லிகையாவே பேசினார் .

*ப்ரமராம்பா ஸமேத மல்லிகார்ஜுன* ஸ்வாமினு அந்த மல்லிகார்ஜுன ஸ்வாமியை வண்டாக அம்பாள் சுத்திண்டு இருக்கா, அணைச்சுண்டு இருக்கா அப்படீன்னு சொன்னபின்ன,

அவருக்கு அம்பாள் வண்டான பின்ன ஸ்வாமியும் வண்டாதான் இருக்கணும்னு அப்படீன்னு தோணியிருக்கு போல இருக்கு.

அடுத்த ஸ்லோகத்தல ஸ்வாமியையே ஒரு வண்டாக ரொம்ப அழகாக வர்ணிக்கிறார்.
ravi said…
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवाह्लाद: नादयुत: महासितवपुः पञ्चेषुणा चादृतः ।

सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥

ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-

ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।

ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-

ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
ravi said…
நீயே எங்கள் ஒளி நீயே எங்கள் வழி

நீயே எங்கள் வாழ்வு சங்கரா.

நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்

நன்மை என்ன, தீமை என்ன,
அழியாத கோலங்கள்,

நீயே எங்கள் வழியாவாய் சங்கரா.

நீதியின் பாதையில் பொருளாவாய்.

உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்.

அவற்றில் நாங்கள் நடந்தால் வெற்றியின் கனிகள்.

நீயே எங்கள் ஒளியாவாய் சங்கரா.

நீதியின் பாதையின் சுடராவாய் சங்கரா.
உம்மை நாங்கள்

போற்றிட பொய்மை எங்கும் போக்கிட

உண்மையின் இறைவா உனதருள் தாரும் சங்கரா...

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
ravi said…
இது சிவானந்தலஹரில 51வது ஸ்லோகம்.

ஸம்ஸ்ருத கவிதையோட ஒரு உச்சமா இருக்கு.

வார்த்தைகளை வச்சு விளையாடி

“ஶ்ரீசைலவாஸியான மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும் வண்டுக்கும்” ஸ்லேஷை பண்றார்.

ஒருவிதத்தில பார்த்தால் எல்லா பதங்களும் வண்டை குறிக்கிறது.

இன்னொரு விதத்தில ஸ்வாமியை குறிக்கிறது.🪲🪲🪲
ravi said…
பாதாரவிந்த சதகம் !

15.பலாகா மாலாபிர் நகருசிமயீபி: பரிவ்ருதே
விநம்ர ஸ்வர்நாரீ விகசகச காலாம் புதகுலே 1
ஸ்புரந்த: காமாக்ஷி ஸ்புட தலித பந்தூக ஸுஹ்ருத:
தடில்லேகாயந்தே தவ சரண பாதோஜ கிரணா:||

காமாக்ஷி / நன்கு மலர்ந்த செம்பரத்தம்பூவுடன் நட்பு கொண்ட உனது தாமரை
போன்ற பாதங்களின் ஒளிக்கதிர்கள், நக ஒளியாகிற
கொக்குவரிசைகள் பரவிய (தன்னை) வணங்குகின்ற தேவமாதரின்
விரித்த கூந்தல்களாகிற கார்மேகக் குவியலில் பளீரென ஒளிர்கிற
மின்னல் கோடாகின்றன.

தேவமாதர் தேவியை வணங்க, அவர்களது கூந்தல் திருவடிகளின் அருகே வீழ்ந்து கார்மேகம் போல் படிகின்றன. தேவியின் பாத நக ஒளி அவற்றின் மீது மின்னல் கொடிபோல் பாய்ந்து கணநேரம் ஒளிர்கிறது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 "“ *நம் சரித்திர ராமாயணம் விட்டுக் கொடுத்தலின் மகத்துவத்துவத்தை ஸ்ரீராமரும் சீதையும் வாழ்ந்து காட்டியுள்ளனர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..

🌺யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

🌺ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

🌺காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு

🌺அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு

🌺அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்

🌺கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..

🌺கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது

🌺“நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் “என்று மனைவி சொன்னால்..”எந்த நாய் சொன்னது?” என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு..”சரி இனி பார்த்து வாங்குகிறேன்” என்று சொல்லி விட்டால் முடிந்தது

🌺“நீ செய்த சாப்பாடு சகிக்கலை” என்று கணவன் சொன்னால்..
“எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..

🌺நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க” என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்..”இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்” என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்…

🌺மனைவி புது புடவை உடுத்தினால் ….”இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே” என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது” ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே” என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..

🌺தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி

🌺முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை

🌺எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது

🌺முள்ளால் குத்தின காயம் ஆறிடும்....சொல்லால் குத்தினா ஆறவே ஆறாது..

🌺ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்

🌺இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..

🌺“பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் “.என்றும்..”கணவன் தானே ..பேசட்டும்” என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது,

🌺நம் சரித்திர ராமாயணம் விட்டுக் கொடுத்தலின் மகத்துவத்துவத்தை ஸ்ரீராமரும் சீதையும் வாழ்ந்து காட்டியுள்ளனர்..........

🌺இந்த விட்டு கொடுத்தல் எனும் மாண்பை குழந்தைகளிடம் சொல்லி கொடுக்க நாம் தவறியதால் இன்று எத்தனை எத்தனையோ இளம் ஸ்ரீராமர்களும் சீதைகளும் நீதிமன்ற வாசலில் "விட்டுவிட வேண்டும்" என்ற தீர்ப்பிற்காக தவமாய் தவம் கிடக்கின்றனர்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
_*இருபது வயசுல*_ _இதுதான் வேணும்னு தோணும்....._
_*முப்பது வயசுல*_ _இது வேணும்னு தோணும்...._

_*நாற்பது வயசுல*_ _இதுவே போதும்னு தோணும்...._
_*ஐம்பது வயசுல*_ _இது இல்லைன்னா கூட பரவாயில்லைனு தோணும்....._

_*அறுபது வயசுல*_ _எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்...._
_*எழுபது வயசுல*_ _எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!!_

_*காலமாற்றம்....*_
_*காலச்சுழற்சி...*_
_*கால நேரம்....!!!!!*_

_பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!!!!_
_ஆணவம் எல்லாம் பணிவா மாறும்....!!!!_

_*அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!!!!*_
_*மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!!!!*_

_எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ...._
_அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!!!!_

_*எதற்காக ஓடினோம்....*_
_*எதற்காக ஆசைப்பட்டோம்....*_
_*எதற்காக எதைச் செய்தோம்.....*_
_*என்ற காரணங்கள் எல்லாமே .....*_
_*காலப் போக்கில் மறந்து போகும்....*_
_*மரத்துப் போகும்....!!!*_

_தீராப்பகையைத் தந்து_
_வன்மத்தோடு வாழ்ந்து_
_ஆட விடுவதும் காலம்தான்..._

_*அதன் பின் ஆட்டத்தை அடக்கி....*_
_*மறதியைக் கொடுத்து*_
_*ஓரமாய் உட்கார வைப்பதும் அதே காலம்தான்....!!!!*_

_வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,..._
_உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!!!!_

_*வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.....*_
_*அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்....👍*_
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 119*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
நீடுபாரி லேபிறந்து நேயமான காயந்தான்

வீடுவேறி தென்றபோது

வேண்டியின்பம் வேண்டுமோ

பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ

நாடுராம ராமராம நாமமென்னும் நாமமே. 119🙏🙏🙏
ravi said…
இப்பூவுலகில் பல பிறவிகள் எடுத்து பிறந்த இவ்வுடம்பை இது என்னுடையது என எண்ணி இருக்கின்றோம்!!!

இது வீடுபேறு எனும் இன்பம் பெற வேண்டினால் கிடைக்குமா?

அதற்கு நான்கு வேதங்களையும் நன்கு பாடிப் பழகி

இவ்வுலகமெங்கும் இறை நிறைத்திருக்கும் இயல்பை அறிந்து தன் உடம்பையும், உயிரையும் உணர்ந்து

யோக ஞான நாட்டமுடன் தியானம் கடைபிடியுங்கள்.

அதற்கு உற்ற துணையாக வருவது ராமநாமம்!!!

இராம நாமத்தில் ஓரெழுத்தும் ஓங்காரமும் உள்ளதை உணருங்கள்.🙏🙏🙏
ravi said…
*மன பாரம் நீக்கும் பெயர்*

மகாவிஷ்ணுவின் சகஸ்ர நாமங்களில் (ஆயிரம் திருப்பெயர்கள்) ஒன்று, பூகர்ப்பாயர்' என்பதாகும். பூமாதேவியை தாங்கும் பெருமாளை இப்பெயரால் அழைப்பார்கள். சென்னை அருகே உள்ள கோவளத்தில் இருந்து 1 கிலோமீட்டரில் உள்ளது, திரு விடந்தை. இங்கு நித்ய கல்யாணப் பெருமாள், தனது மடியில் தாயாரை சுமந்தபடி இருப்பார்.

இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர், தினமும் குதிரையில் இந்த ஆலயத்திற்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் செல்வார். ஆலயத்திற்கு போகும்போது ஒரு குதிரையும், தரிசனம் முடிந்து அரண்மனை திரும்பும் போது ஒரு குதிரையும் பயன்படுத்துவார். ஏனெனில் குதிரையால் தன்னை நீண்ட நேரம் சுமக்க முடியாது என்பதால் அப்படிச் செய்வார்.

ஒரு முறை மன்னன், நித்ய கல்யாணப் பெருமாளை தரிசிக்கும்போது, "இறைவா.. எப்போதும் தாயாரை இடது கையால் தாங்கி நிற்கிறீரே.. உமக்கு வலிக்கவில்லையா?" என்று வருந்தினார்.

அப்போது இறைவன் அசரீரியாக, "தனக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு கருவுற்ற தாய் எப்படி குழந்தையை சுமக்கிறாளோ, அதுபோல தாயாரும் பூமியில் வாழும் உயிர்களை தாங்குகிறாள். அவளின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே, நானும் தாயாரைச் சுமந்தபடி இருக்கிறேன்" என்று விளக்கினார்.

தாயாரைச் சுமக்கும் பெருமாளின் நாமமான 'பூகர்ப்பாய நமஹ' என்று சொல்லி வழிபட்டால் மன பாரம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

விஷ்ணுவை பற்றிய தகவல்களை தினமும் புதிய தகவல்களை அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்

http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
*ஜஹ்னவே நமஹ*🙏🙏

பக்தி இல்லாதவர்களிடம் தன்னை மறைத்துக் கொள்பவர்
ravi said…
நிர்விகல்பா *நிராபா³தா⁴* நிர்பே⁴தா³ பே⁴த³னாஶினீ |🙏🙏

தெளிவான புத்தியை அளிப்பவள்
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 02

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2

இல் - மனையில்
புகல் - நுழைதல்

பார்ப்பாருடைய வீட்டில் நாயும் கோழியும் இருத்தல் துன்பமாம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பமாம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பமாகும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
அம்மா

கண்களிலே மிரட்சி நெற்றியிலே குளிர்ச்சி 🦌🦌🦌

துடிப்பிலே புள்ளி மான் 🦌🦌🦌

துவண்டு விழுந்தால் துணைக்கு வருவதோ பெண் மான் 🦌🦌🦌

எம்மானை வேண்டி நின்றேன் பொன் மான் என வந்தாள் 🦌🦌🦌

கண், மான் எனக்கண்டேன் 🦌🦌🦌

காரூண்யம் இரு கொம்புகளாய் ஜொலிக்கக் கண்டேன் ... 🦌🦌🦌

மேனி எங்கும் சிலிர்க்கக் கண்டேன்

அனுமான் என உடல் எங்கும் சக்தி பரவக்கண்டேன்..

மெய்மை கொண்ட நெஞ்சமதில் வாக் தேவிகள் எனும் மான்கள் நுழையக்கண்டேன் 🦌🦌🦌

பொய்மை கொண்ட நெஞ்சமதில் புகல் அறியா பூங்குயில் என் வனமதை தேடி வரக்கண்டேன் ... 🦌🦌🦌

மானாக வந்தவள் எனை தானாக மாற்றி விட்டாள் .. 🦌🦌🦌

தரையில் என் கால்கள் மிதக்கக் கண்டேன் ..

வேறு ஏதும் விரும்பா உள்ளம் பெறக்கண்டேன் 🙏🙏🙏
ravi said…
*16 முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா =*

முழுமதியென ஜொலிக்கும் முகத்தில், நிழற்குறியாய் கஸ்தூரி திலகத்தை சிறப்புற தரிப்பவள்💥🌝🌝
ravi said…
கண்ணா

நினைக்க/உணர இயலா மிகப்பெரிய மாயங்களை நடத்துபவன் நீ அன்றோ

வெளியில் எனக்குப் பகைவர் என்றில்லாதபடி,

என்னுள்ளேயே ஐம்புலன்கள் எனும் பகைவரைப் படைத்து,

என்னை நலியவைத்து,

உன் தாமரைப் பொற்பாதங்களை யான் அணுகாதபடிச் செய்கிறாயே

என்ன நியாயம் இது *கண்ணா* ??😡😡😡

தேவர்கள் போற்றும், உலகம் மூன்றுக்கும் அதிபதியே,

என் அண்ணலே,

அமுதம் போன்று இனிமையானவனே,

என்னையாளும் அப்பனே 👌👌👌
ravi said…
உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி

என்னை உன் பாத பங்கயம்

நண்ணிலா வகையே நலிவான் இன்னம்

எண்ணுகின்றாய் எண்ணிலா பெருமாயனே !

இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை அண்ணலே !

அமுதே ! அப்பனே ! என்னை ஆள்வானே🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 395* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*100. தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது*


ஸகல ஸித்தி💫💫💫💫💫💫💫💫💫💫💫
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100
ravi said…
*ப்ரதீப ஜ்வாலாபி: -*

கைத் தீவட்டிகளின் ஜ்வாலையால்;

*திவஸகர நீராஜன விதி: -*

ஸுர்யனுக்கு ஹாரத்தி செய்வதுபோலும்;

*ஸுதாஸூதே* :

அம்ருதம் வர்ஷிக்கும் கிரணங்களிடைய சந்திரனுக்கு;

*சந்த்ரோபல ஜலவை:* -

சந்திர காந்த கல்லில் (சந்திர ஒளியால் ஏற்படும்) இருக்கும் நீர் போலவும்;

*ஸ்வகீயை* : *அம்போபி* :

தன்னுடைய ஜலத்தாலேயே;

*ஸலிலநிதி* - நீருக்கு அதிபதியாகிய சமுத்திரத்துக்கு;

*ஸெளஹித்யகரணம்* -

தர்பணம் முதலியவைகளால் த்ருப்தி செய்வது போல;

*வாசாம் ஜநநி -* வாக்குக்களுக்கு உத்பத்தி ஸ்தானமான தாயே;

*த்வதீயாபி* -

உன்னுடையதான;

*வாக்பி* : வாக்குகளால் செய்யப்பட்ட;

*தவ இயம் ஸ்துதி:*

உன் பற்றிய இந்த ஸ்துதி🙏🙏🙏
ravi said…
ஆதி சங்கரர் எல்லாம் நிறைந்தவர் . சிவ அம்சம் ... அவரே எவ்வளவு தன்னடக்கத்துடன்

தான் எழுதிய ஸ்லோகங்களில் சொல்லும் பொருளும் அம்பாள் அருளியதால் வந்தது என்கிறார் ...

ஒன்றுமே செய்யாமல் , சாதிக்காமல் நாம் எவ்வளவு பீத்திக் கொள்கிறோம் நாம் தான் செய்தோம் என்று ...

இப்படிப்பட்ட மகான்கள் மறைந்தும் வாழ்வார்கள்

நாம் வெறும் நீர்குமிழி தான் ...

இந்த தன்னடக்கம் வந்தால் மட்டுமே நமக்கு நற்கதி கிடைக்கும் 🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 396* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*150*
ravi said…
*150 निरवद्या - நிரவத்யா -*

குறையொன்றுமில்லாதவள்,

குற்றம் காணமுடியாதவள் அம்பாள்.

குறைகள் உண்டாக காரணம் அஞ்ஞானம், அம்பாள் பரிபூரண ப்ரம்ம ஞான ஸ்வரூபம் அல்லவா?
ravi said…
முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 25,26 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம் ன்னு சொன்னார். இந்த 27 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு சொல்றார். அது எப்பேற்பட்ட ஔஷதம்?

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥

ன்னு சொல்றார்
ravi said…
அடுத்த ஸ்லோகத்துல, கிருஷ்ண பக்தி இல்லேன்னா கர்மா, வேத பாராயணங்கள் எல்லாம் ஒண்ணும் பிரயோஜனம் இல்ல.

கிருஷ்ண பக்தி இருந்தா தான் அதுக்கெல்லாம் பலன்,

அதுக்கெல்லாம் சக்தி கொடுக்கறதே கிருஷ்ண பக்தின்னு சொல்றார்.
ravi said…
आम्नायाभ्यसनान्यरण्यरुदितं वेदव्रतान्यन्वहं

मेदश्छेदफलानि पूर्तविधयः सर्वं हुतं भस्मनि ।

तीर्थानामवगाहनानि च गजस्नानं विना यत्पद –

द्वन्द्वाम्भोरुहसंस्मृतिर्विजयते देवः स नारायणः ॥ २८ ॥

ஆம்னாயாப்⁴யஸனான்யரண்யருதி³தம் வேத³வ்ரதான்யன்வஹம்

மேத³ச்சே²த³பலானி பூர்தவித⁴ய: ஸர்வம் ஹுதம் ப⁴ஸ்மனி ।

தீர்தா²நாமவகா³ஹனானி ச க³ஜஸ்னானம் வினா யத்பத³ –

த்³வந்த்³வாம்போ⁴ருஹஸம்ஸ்ம்ருʼதிமர்விஜயதே தே³வ: ஸ நாராயண: ॥ 25 ॥ ன்னு சொல்றார்
ravi said…
We never pay attention to any part of our body unless it pains. Don't let it happen in relationships.



Ego is a sword with two edges, the outer edge cuts your popularity while the inner edge cuts your purity.



What is free in this world is the most precious - sleep, peace, air, water, light, love, feeling, faith and our breath.



You will get only what you work for, not what you wish for.



The distance between dreams and reality is called discipline.



It is better to look ahead and prepare, than to look back and regret.



Change is never painful, Only Resistance to change is painful.
ravi said…
EGO OF BEING BEST



After winning several archery competitions, a young bowman began to consider himself the greatest archer. Wherever he went, he would challenge people to compete with him and after defeating them, would make fun of them.



Once, he decided to challenge a famous master and reached his monastery among the mountains early in the morning.



"Master, I challenge you to an archery contest," said the young man. The master accepted the young man's challenge.



The competition began.



In his first attempt itself, the young man hit the distant target right in the middle, and in the next attempt, he pierced the first arrow that had hit the target.



Proud of his ability, the young man said, "Tell me Master, can you do better than this? If 'yes' then do it, if 'no' then give up."

ravi said…
The master said, "Son, come after me!"



The master walked and reached near a dangerous ditch. The young man got a little nervous seeing all this and said, "Master, where are you taking me?"



The master said, "Don't worry son, we are almost there, we just have to go to the middle of this wrecked bridge."



The young man saw that someone had built a makeshift wooden bridge to connect the two hills and the master was asking to go over the same.



The master reached the middle of the bridge, took out an arrow from the arch and aimed it precisely at a tree trunk in the distance. After aiming, the master said, "Come son, now you also prove your efficiency by aiming at the same tree."
ravi said…
The young man moved forward fearfully and with great difficulty reached the middle of the bridge and somehow shot an arrow, but it did not even land anywhere near the target.



The young man was disappointed and accepted his defeat.



Then the master said, "Son, you have mastered the bow and arrow, but you still do not have control over the mind, which is very important to be able to hit the target in any situation.



Son, always keep in mind that as long as a person has a desire to learn, his knowledge keeps increasing...but as soon as he has the ego of being the best, from then on his downfall starts."
ravi said…
The young man understood what the master was saying. He realized that his knowledge of archery works only in favorable circumstances and that he still had much to learn; he immediately apologized to the Master for his arrogance and vowed to always learn like a disciple and not boast of his knowledge.



Friends, we too can be physically strong, we can have many talents as well, but if our heart is not ready to accept every situation, can we lead a successful life?



Ego is not to be used to hurt others. It is to keep pointing the finger back towards myself saying, "Okay, I can do it better than I did last time.
Hemalatha said…
நிலவின் ஒளியை அனுபவிக்காமல் இருப்பவரும் உண்டோ இப்பூவுலகில்.மனதார ரசித்து பாராட்டிவிட்டேன்.
Hemalatha said…
Mother in law last fruday serious aayitanga.with Baba's blessings she is in GH now.out of danger.Saturday minor operation in her leg.Age 77.2 hands are not working bcoz of stroke.
Hemalatha said…
In between we did annadhanam with all your help🙏
Hemalatha said…
எந்த சூழ்நிலையிலும் தவறாமல் படித்துவிடுவேன்
Hemalatha said…
My relax,energy booster,etc sir
Hemalatha said…
Iron lady இல்ல சார்.கடவுளுக்கு மிகவும் பிடித்தவர்கள் நாங்கள்.எவ்வளவு சோதிச்சாலும் அவனை விடுவதாக இல்லை.அவனைபணிந்தே மடிவோம்😅🙏
ravi said…
https://chat.whatsapp.com/CVC5I4mUuXn4fCe9btAOMy

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சாயாவனேஸ்வரர் திருக்கோயில் பற்றிய பதிவுகள் :*

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி சிறிது தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலம் மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று.

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள்.

தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.

கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு “குயிலினும் இனிமொழியம்மை’ என்ற திருநாமம் ஏற்பட்டது) உடனே சிவன் தோன்றி, இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக, என அருள்புரிந்தார்.

இத்தலத்திற்கு தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர். ‘சாய்” என்றால் கோரை என்று பொருள். பசுமையான கோரைகள் மிகுந்திருந்த தலமாதலால் இத்தலம் ‘சாய்க்காடு” எனப்பட்டது.  சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோயில்களுள் இத்தலத்தில் உள்ள சாயாவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.

மாடக்கோயில் என்றால் ‘யானையால் புக முடியாத கோயில்” என்பதாகும். இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார் பிறந்து, முக்தி அடைந்த தலம். இங்குத் தனியே வைக்கப்பட்டுள்ள வில்லேந்திய வேலவர் பஞ்சலோகத் திருமேனி மிகச்சிறப்புடையதும், தொழுது நிறைவு பெறத்தக்கதுமாகும்.

நான்கு கரங்களுடன் வில்லையேந்திக் கம்பீரமாக வேலவரும், உயர்ந்த மயிலும் திகழ்ந்து காண்போர் கண்களுக்கு பெரு விருந்தாகின்றன. இவை நெடுங்காலம் முன்பு கடலில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு அருகில் பூம்புகார் காவல் தெய்வமாக சம்பங்கி அம்மன் கோயில் உள்ளது.

சித்திரை பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு விழா, சித்திரை, வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர் பந்தல், மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு 5 நாள் விழா, அதில் நான்காம் நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

எதிரி பயம் இருப்பவர்கள் வழிபட்டு நலம் பெறலாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
சிந்தனைத் துளிகள் *1878*

*╔═════≪•❈•≫═════╗*
✴️✴️✴️✴️✴️✴️✴️
*╚═════≪•❈•≫═════╝*

✴️உங்களின் நிறைவேறிய தேவைகளுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைகளுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

✴️பேசி விட்டு யோசிப்பதை விட, யோசித்து விட்டுப் பேசுங்கள். வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும் வழி.

✴️எதிலும் சற்று பொறுமையாக இருங்கள். அது புத்திசாலித்தனம். ஆனால் பொறுமையாகவே இருந்து விடாதீர்கள். அது சோம்பேறித்தனம் ஆகும்.

✴️குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களைத் தான் பாதிக்கும்.

✴️ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்க வேண்டாம். உட்காருகின்ற வயதில் நீங்கள் நினைத்தாலும் ஓட முடியாது.

*╔═════≪•❈•≫═════╗*
✴️✴️✴️✴️✴️✴️✴️
*╚═════≪•❈•≫═════╝*

எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
சொக்கலிங்கம்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ: ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.

ravi said…
ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ravi said…
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.

வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம் இருக்கிறது. வீட்டிலும் அசுத்தம் பண்ணக்கூடாது; ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும், ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா [மாதவிடாய்] ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system-ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ravi said…
ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்குள் ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. “மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?” என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. “பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது” என்று [‘வாஸிஷ்ட ஸ்ம்ருதி’யில்] சொல்லியிருக்கிறது: “ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே| இஹ க்லேசாய மஹதே”.

ravi said…
லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதாகவே – அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே – தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். ‘எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே! பணம் சம்பாதிக்கிறார்களே! ஏன் நாம் செய்யக் கூடாது?’ என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary [இரண்டாவது] தான்.

ravi said…
மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், “நீ பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது” என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும்.

அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.
ravi said…
*அக்ரஹாரம்* :-
---------------------------
விலாசமிழந்த கவிதையாய்...

மேற்கே பெருமாள் கோயில்
கிழக்கே சிவன் கோயில்

இடையில்
சாணமிட்டு,
கோலமிட்டு
படிகளுக்கு
காவியிட்டு

பாவாடை மேலாக்கும்
மடிசாரும் பஞ்சகச்சமும்
வேதமும் இசையும்
வெல்லமும் பச்சரிசியும்
நெய்யுமென பொங்கும்
சர்க்கரைப் பொங்கல்
அக்ரஹாரம் மணக்கும்..

ஏரை நம்பியவன்
எழுத்தை நம்பினான்
வந்தது வினை..

பஞ்சாயத்திலும்
பள்ளியிலும்
உத்தியோகம்
புருஷ லக்ஷணமானது.....

விளைந்த அரிசி நின்று போய்
வாங்கிய அரிசி வந்தது.

பஞ்சாயத்தும் பள்ளியும்
தண்ணீரில்லா பாசனமும்
பிழைப்புக்கு போதாமல் போக

பட்டணம் நோக்கி பயணித்தான்

பாதி பாழாய்(ப்}போனது..
மீதி பென்ஷன்,மணியார்டரோடு
போக வழி தெரியாமல் தங்கிப்போனது..
..
மெல்ல ..மெல்ல..
கடல் தாண்ட..
மொத்தமும் பாழாய்ப் போனது...

ஆனால்
பெருமாளும் சிவனும்
பாவம்..

போக வழிதெரியாமல்
அப்பரும் ஆழ்வாரும் பாடிய
ஸ்தல புராணத்தோடு........
?
ravi said…
https://chat.whatsapp.com/IuPwkPWq6fuIyjMeKGayd3

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்துநெற்றியில் பொட்டு வைப்பதன் ரகசியம் பற்றிய பகிர்வுகள் :*

நம்முடைய பாரம்பரியத்தில் பெண்கள் பொட்டு வைத்தல் மரபாகும். பெண்கள் வட்டமாக வைப்பது பொட்டு என்றும், ஆண்கள் நேர்கோடாக வைப்பது திலகம் என்றும் அழைக்கப்படுகின்றது.

திருமணமான இந்திய பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கள சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என நம்பப்படுகிறது.

நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண்கள் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. குங்குமமானது மஞ்சள், எலுமிச்சை, மெட்டல் மெர்குரி ஆகியவற்றின் கலவையாகும். மெர்குரி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

வகிடு நேராக எடுத்து உச்சியில் குங்குமம் வைப்பதால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என்பது நம்பிக்கை. முன் நெற்றி மற்றும் நெற்றிப்பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.

மேலும், நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது.

உடலில் ஏழு சக்கரங்கள் சக்தி நிலைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிறர் காணும் வகையில் வெளியில் தெரியும்படியாக அமைந்திருப்பது புருவ மத்தியில் அமைந்துள்ள ஆறாவது சக்கரம் மட்டுமே. இந்த சக்கரம் மூளை, நரம்புமண்டலம், காதுகள், நாசி, இடது கண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும், புத்திக்கூர்மை, மனம், புத்தி, ஆன்மசக்தி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த புருவ மத்தியைப் பாதுகாப்பதும், அதன் சக்தியை அதிகரிக்கச் செய்யவும் புருவ மத்தியில் பொட்டு வைக்கப்படுகிறது.

*குங்குமம் அணிவதன் பயன்கள் :*

*ஆண்கள் :*

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்து துணிவைக் கொடுக்கும். குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமம் அணிவது முன்னணித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் எனப்படும் நடுவிரலில் குங்குமம் இட்டு கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும். மோதிர விரலால் குங்குமம் தரிப்பது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பைத் தரும்.

*பெண்கள் :*

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். இந்த இடம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் ஆகும். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில்தான் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

பெண்கள், தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.

கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து, இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 4 started on 6th nov
ravi said…
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனி யானைச் சகோதரனே.
ravi said…
1.சேவல் என்ற சொல்லுக்கு 'காவல்' அதாவது துணை என்ற ஒரு
பொருளும் உண்டு.

'ஆடும் பரி வேல் அணி சேவல்' என்பதன் நுண்
பொருள் 'மயிலும் வேலும் துணை' என்பதே.

வேலும் மயிலும் துணை
என்பது மகா மந்திரமாகும்.

2. பரிக்கு ஆடும் பரி என்றும், சேவலுக்கு அணிசேவல் என்று கூறி
வேலுக்கு, எந்த அடைமொழியும் கூறாததற்கு என்ன காரணம்?

வேல்
பரிபூரண ஞானத்தின் வடிவம்.

அதற்கு எந்த அடை மொழியும்
தேவையில்லை என்பது தெரியவருகிறது.🦚🦚🦚
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 384* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
இதனைக் கவனித்த தேவதேவியின் தங்கை, “உன் அழகின் வலிமை அவ்வளவுதானா?” என்று ஏளனம் செய்தாள்.

அவமானம் அடைந்த தேவதேவி, “இவரை எப்படியும் மயக்கியே தீருவேன்!” என்று சபதமிட்டாள்.

தான் அணிந்திருந்த நகைகளையும், அலங்காரத்தையும் நீக்கினாள்.

எளிமையான பெண்ணின் உருவத்தைக் கொண்டாள்.
தானும் திருமால் பக்தை என்றும், விப்ரநாராயணரோடு இணைந்து திருமாலுக்குத் தொண்டு செய்ய விரும்புவதாகவும்
அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

அவரும் சம்மதிக்கவே, அன்று முதல் அவரது குடிலில்
இவளும் இருந்து கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 384*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*51*
ravi said…
*சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवाह्लाद: नादयुत: महासितवपुः पञ्चेषुणा चादृतः ।

सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥

ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-

ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।

ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-

ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
ravi said…
“ *ப்ருʼங்கீ³ச்சா²* *நடனோத்கட* :” –

முதல்ல வண்டுக்கு சொல்றேன்.

‘ *ப்4ருʼங்கீ* ³’ அப்படீன்னா பெண் வண்டு.

பெண் வண்டு ஆசைப்பட்டதுக்காக ஆசையோடு தான் நடிப்புதும். அதாவது மிருகங்கள்ல பெண் மிருகத்தை attract பண்றதுக்காக ஆண் மிருகங்கள் dance எல்லாம் ஆடும்.

அந்த மாதிரி, இந்த பெண் வண்டுக்கு அதோட விருப்பத்திற்காக தான் ஆடுவதும்.

” *கரிமத³க்³ராஹீ” –*

‘கரி’னா யானை. யானையோட மத ஜலத்தைக் குடிப்பதும்.

*“ஸ்பு²ரன்மாத4வாஹ்லாத³:”-*

வஸந்த ருது வந்தவுடனே, அது ரொம்ப நன்றாக ப்ரகாசிக்கும் போது தான் ரொம்ப சந்தோஷம் அடைவதும்.

வண்டுகளுக்கு வஸந்த ருது வந்தா, எல்லா பூக்களுமே பூத்துக் குலுங்கும்.

வண்டுகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
ravi said…
“ *நாத³யுத:”-* வண்டுகள் எப்பவும் ரீங்காரம் பண்ணிண்டே இருக்கும். ஈ…ஈ…னு.

“ *மஹாஸிதவபு* :”- நல்ல கருப்பான உடலை உடையதும் .

“ *பஞ்சேஷுணா ச ஆத்³ருʼத:” –*

‘பஞ்சேஷு’ன்னா 5 அம்புகள். ஐந்து அம்புகள் கொண்டவன் மன்மதன்.

மன்மதனடைய அந்த வில்லினுடைய நாண் கயறே வண்டுகளா ஆனது அப்படீன்னு ஒரு ஐதீகம் இருக்கு.

அதனால மன்மதனால் ஆதரிக்கப்பட்டதும்,

*”ஸுமனோவநேஷு” –* நல்ல பூக்கள் பூத்துக்குலுங்கும் காடுகளில்,

” *ஸத்பக்ஷ* ” – ரொம்ப ஆசைக்கொண்டதும்,

” *ஶ்ரீஶைலவாஸீ* ”

– ’ஶ்ரீஶைல வாஸீ’னா,ஶ்ரீஶைல வாயில் வசிப்பதும்னு சொல்லாம்.

‘ஶ்ரீ’னா திரு, மிகுந்த. அழகான மலைகளில் வண்டுகள் நிறைய காணப்படும் இல்லையா. வஸிப்பதும்.

“ *விபு4* :” – எங்கும் செல்லக்கூடியதும்.

” *ஸ: ப்4ரமராதி4ப:”* – அந்த ஆண் வண்டு,

“ *புன: ஸாக்ஷாத் மதீ³யே மநோராஜீவே” –*

என்னுடைய மனமாகிய தாமரையில்,

“ *விஹரதாம்* ” – விளையாடட்டும்.

அப்படீனு ஒரு வண்டு யானையோட மத நீரை குடித்துவிட்டு, தாமரை பூவை சுத்தி வந்து ரீங்காரம் பண்ணிண்டு,

பெண் வண்டை சந்தோஷப்படுத்தற காட்சியை அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்துடறார்.
ravi said…
https://chat.whatsapp.com/IuPwkPWq6fuIyjMeKGayd3

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்துநெற்றியில் பொட்டு வைப்பதன் ரகசியம் பற்றிய பகிர்வுகள் :*

நம்முடைய பாரம்பரியத்தில் பெண்கள் பொட்டு வைத்தல் மரபாகும். பெண்கள் வட்டமாக வைப்பது பொட்டு என்றும், ஆண்கள் நேர்கோடாக வைப்பது திலகம் என்றும் அழைக்கப்படுகின்றது.

திருமணமான இந்திய பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கள சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என நம்பப்படுகிறது.

நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண்கள் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. குங்குமமானது மஞ்சள், எலுமிச்சை, மெட்டல் மெர்குரி ஆகியவற்றின் கலவையாகும். மெர்குரி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

வகிடு நேராக எடுத்து உச்சியில் குங்குமம் வைப்பதால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என்பது நம்பிக்கை. முன் நெற்றி மற்றும் நெற்றிப்பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.

மேலும், நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது.

உடலில் ஏழு சக்கரங்கள் சக்தி நிலைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிறர் காணும் வகையில் வெளியில் தெரியும்படியாக அமைந்திருப்பது புருவ மத்தியில் அமைந்துள்ள ஆறாவது சக்கரம் மட்டுமே. இந்த சக்கரம் மூளை, நரம்புமண்டலம், காதுகள், நாசி, இடது கண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும், புத்திக்கூர்மை, மனம், புத்தி, ஆன்மசக்தி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த புருவ மத்தியைப் பாதுகாப்பதும், அதன் சக்தியை அதிகரிக்கச் செய்யவும் புருவ மத்தியில் பொட்டு வைக்கப்படுகிறது.

*குங்குமம் அணிவதன் பயன்கள் :*

*ஆண்கள் :*

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்து துணிவைக் கொடுக்கும். குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமம் அணிவது முன்னணித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் எனப்படும் நடுவிரலில் குங்குமம் இட்டு கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும். மோதிர விரலால் குங்குமம் தரிப்பது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பைத் தரும்.

*பெண்கள் :*

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். இந்த இடம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் ஆகும். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில்தான் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

பெண்கள், தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.

கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து, இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

"சில யோகிகள், சித்த புருஷர்கள் பல காலம் வரை ஸ்நானம் செய்வதில்லை. ஜபம்,தவம் செய்வதில்லை, ஆசார நியமங்களும் கிடையாது.

ஆனால், அவர்கள், பல அமானுஷ்யமான காரியங்களைச் செய்து காட்டி, நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் செப்பிடு வித்தை மாதிரி, வெறும் பொய்த் தோற்றம் இல்லை.

அப்படியிருக்க, நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்ய வேண்டும்? மடி,ஆசாரம்,விரதம்,உபவாசம் என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்? நெற்றிக்கு எதற்காகத் திலகம் வைத்துக் கொள்ளணும்? யோகிகள் திருநீறு இட்டுக் கொண்டார்களா? நாமம் போட்டுக் கொண்டார்களா?...."

இத்தகைய குறும்புத்தனமான கேள்விகளைக் கேட்டார் ஒருவர், பெரியவாளிடம்.

பெரியவாள் பார்வையை எங்கெங்கெல்லாமோ மெல்ல மெதுவாகச் செலுத்துவிட்டு கிட்டத்துக்கு வந்தார்கள்.

"ஸந்த்யாவந்தனம் செய்யும் போது, 'அஸாவாதித்யோ ப்ரஹ்மா; ப்ரஹ்மைவாஹமஸ்மி' என்கிறோம். அதாவது, நமக்குள்ளே பகவான் இருக்கிறார். நான் பரப்ரஹ்ம வஸ்துவாக இருக்கிறேன் என்கிறோம்

பகவான் இருக்கிற இடம் பவித்ரமாக இருக்க வேண்டாமா? அதனால் தான், ஸ்நானம்- ஸந்த்யை - தேவதார்ச்சனம் முதலியன ஏற்பட்டிருக்கு.

ஈஸ்வரத் தன்மையை அடந்து விட்ட மகா புருஷர்களுக்கு, சித்தசுத்தி ஏற்பட்டு விட்டதால், ஸ்நானம், ஜபம், ஆசாரம் போன்றவை தேவையில்லை!"--பெரியவா

கேள்வி கேட்டவர் முற்றிலும் சந்தேகம் நீங்கியவராய், பெரியவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போனார்.


ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

பரோபகாரம்
மஹாபெரியவா.

போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் போகணுமானால் நீ தான தர்மம் செய்யணும்."

ஒரு நாள் மடத்திற்கு விலை உயர்ந்த வெளிநாட்டு கார் ஒன்று வந்தது.

அதிலிருந்து ஒரு தனவான் இறங்கினார்.

பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.

அத்தனை கஞ்ச மகா பிரபு!

காசுக்குப் பஞ்சமில்லை. ஆனால், செலவழிக்க, அனுபவிக்க மனம்தான் இல்லை.

பெரியவர் தரிசனத்துக்கு வந்திருந்தார்.

வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

"எனக்கு ரத்த அழுத்தம், டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு. இப்ப கான்ஸர் வேறே வந்திருக்கு. ரொம்பக் கஷ்டமா இருக்கு.

பெரியவர்தான் பரிஹாரம் சொல்லணும்..."

"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"

"செய்யறேன்."

"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."

"இருக்கட்டும்.

வியாதி நீங்கினால் போதும்....

பெரியவர் என்ன உத்திரவு போட்டாலும், அதன்படி நடக்கிறேன்.. .

ப்ளட்பிரஷர், கான்ஸர், ஷூகர் எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று சொல்லி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

பொதுவாகவே,

அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவருக்கு.

இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார்.

கைவிட முடியுமா?

பெரியவர் சொன்னார்கள்:

1) கிணற்றில் தண்ணீர் இருக்கு. 'தண்ணீர் என்னுடையது தானே' என்று சொந்தம் கொண்டாடி, கிணறே தண்ணீரைக் குடித்து விடுவதில்லை.

2) மரத்தில் பழம் பழுக்கிறது. 'என் மரத்துப் பழம், நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.

3) பசுமாடு பால் கொடுக்கிறது. ஆனால் தான் சுரக்கும் பாலை பசுமாடு ஒருபோதும் குடிப்பதில்லை.

4) எத்தனையோ செடி-கொடிகள், காய்களைக் காய்க்கின்றன. ஒரு காயைக்கூட அவைகள் தமக்கு என்று வைத்துக் கொள்வதில்லை.

இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.

மனிதனுக்கு ஆறறிவு என்கிறார்கள்.

அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?"

பலத்த அமைதி நிலவியது.

பெரியவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் கூர்ந்து கவனித்தனர் அந்த தனவந்தர் உட்பட....

"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக அனுபவிக்கல்லே, பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.

போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது.

பாவம் போகணுமானால் நீ தான-தர்மம் செய்யணும்."

"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ?

குளம் வெட்டுவது, கோயில் திருப்பணி, ஏழைகளுக்கு உதவி, சொந்தக்காரர்களுக்கு உதவி, இப்படி நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும்.

அப்புறம்..

வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு.

அம்மா, அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால், அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?"

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி...அவ்வளவுதான். சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."

கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், இது வரை தான் வாழ்ந்த வாழ்வில் இருந்த பிழையினை உணர்ந்தார்.

கஞ்சனாக வந்தவர் கருணை நிறைந்த மனதுடன் விடை பெற்றார்.

பின்னர் கர்ண மகாப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.

பெரியவர்

ஒரு ஸ்பெஷலிஸ்ட்-

எல்லா நோய்களுக்கும்

"நோய் நாடி, நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்.

மஹாபெரியவா திருவடிக்கே...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


ravi said…
🌀 *திருமாலையாண்டான்*🌀

திருக்கோட்டியூர் நம்பி பிறந்த மறு ஆண்டு அழகர் கோயில் என்ற திருமாலிருஞ்சோலையில் மாசி மகத்தில் அவதரித்தவர் திருமாலையாண்டான். வைணவ குலத்தைச் சார்ந்த இவரது பெற்றோர், ஞானபூர்ணர் என்று பெயரிட்டனர். இவருடைய முன்னோரில் ஒருவர் கண்ணுக்கினியான் என்பவர். இவர் காலத்தில் மாலிருஞ்சோலை அழகர் கோயிலுக்கு சில மலையாள மாந்திரிகர்கள் கண்களில் மந்திர மையிட்டு வந்து அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.

இதை உணர்ந்த சுவாமி அவர்களுக்குக் கொடுத்த பிரசாதத்தில் மிளகை அதிகமாகச் சேர்த்துவிட, மலையாள மாந்திரிகர்கள் கண்ணில் நீர் பெருக்கு ஏற்பட்டு, அவர்களின் கண்ணில் இருந்த மாந்திரிக மை கரைந்து, அவர்களின் குற்றம் வெளிப்பட்டது. அவர்களுக்கு தண்டனையும் கிடைத்தது. எனவே கண்ணுக்கினியான் ஸ்வாமிக்கு, திருமாலை காப்பாற்றியவர் என்ற பெயரும் ஆண்டான் என்ற பட்டப்பெயரும் ஏற்பட்டது.
இன்றளவும் அவ்வம்சத்தினருக்கு திருக்கோயிலில் முக்கியப் பணிகள் அமைந்துள்ளது. இவர் தம் திருமகனாரான சுந்தரத் தோளுடையானை ராமானுஜரின் சீடராக்கினார்.

இவரது சீடரே யமுனாச்சாரியார் என்ற ஆளவந்தார். இவர் அருளிய கிரந்தங்களில் பிரமேய ரத்னம் என்ற கிரந்தம் வைணவத்தில் மிகவும் மதிப்புடையதாக விளங்குகிறது. திருமாலையாண்டானிடம்தான் ராமானுஜர், நம்மாழ்வாரின் திருவாய் மொழி பற்றி அறிந்தார். இவரின் திருவுருவத்தை திருமாலிருஞ்சோலையில் தரிசிக்கலாம்🐚

*வைஷ்ணவ குரு பரம்பரை அனைவரையும் பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்*👇👇

http://www.srimahavishnuinfo.blogspot.com இந்த லிங்கை அழுத்தி இதில் categories சென்று வைஷ்ணவ குரு பரம்பரை அழுத்தினால் வைஷ்ணவ குரு பரம்பரையில் உள்ள அனைவரின் முழு வரலாறும் படிக்கலாம்
ravi said…
பாதாரவிந்த சதகம் !

17.ஜபாலக்ஷ்மீஸோணோ ஜநித
பரமஜ்ஞாந நலிநீ விகாஸ
வ்யாஸங்கோ விபலித ஜகஜ்
ஜாட்ய கரிமா
மந: பூர்வாத்ரிம்மே திலகயது
காமாக்ஷி தரஸா
தமஸ் காண்ட த்ரோஹீ தவ
சரண பாதோஜ ரமண: II

தாயே ! காமாக்ஷி ! உன் திருவடித்தாமரையான காதலன்; சிவந்துள்ளவன், பேரறிவாகிய தாமரையை மலரச் செய்வதில்
ஈடுபட்டவன், உலகின் ஜடத்தன்மைச் சுமையைப் பயன் தராதபடி அழிப்பவன், அஜ்ஞான இருளை எதிர்ப்பவன்; அவன் என்மனமாகிற (அவன்) உதிக்கின்ற மலையில் திலகமிடட்டும்.

சூரியன் கிழக்குமலையின் உச்சியில் சிவந்து தோன்றுகிறான். உடன் மாந்தரின் சோம்பல் அகலுகிறது. இருள் நீங்குகிறது. தாமரை மலர்கிறது. திருவடியாகிற காதலன் சூரியன் போல் என் மனமாகிற கிழக்குமலையின் நெற்றியில் திலகமிடட்டும். உடன் எனது ஜடத்தன்மையும் அறியாமையும் தானே நீங்கும். பேரறிவு மலரும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺" *சூரியன்* , *தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளிய விதத்தை..!.. விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹இந்திரனால் தாக்கப்பட்ட ஆஞ்சநேயன் உயிரிழந்ததுபோல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார்.

🌺 வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர்.

🌺இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்கூட விதிவிலக்-கல்ல.

🌺எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட... அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

🌺இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார்.

🌺பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, 'இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்' என்று சொன்னார்.

🌺 இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே_அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

🌺இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.

🌺🌹ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

தானம் கொடுப்பது சிலாக்யமானது. ஆனால் அதை ஆத்மப்ரசாரத்துக்காக செய்யக்கூடாது. धर्मः क्षरति कीर्तनात् என்று சாஸ்திரம் கூறுகிறது. தானம் கொடுப்பதை பறைசாற்றினால் தானத்தின் புண்யத்தை இழந்து விடுகிறோம் .

அதேபோல், अतिथि देवो भव, நம் அதிதிகளை அன்புடன் வரவேற்க வேண்டும். மேலும் अभ्यागतः स्वयं विष्णुः, ஒரு பெரிய மனிதன் நம் வீட்டுக்கு அழைப்பு இல்லாமலே வந்தால், அதை நாம் பெரிய அதிர்ஷ்டமாக கருத வேண்டும். இவ்வாறு, நல்லதை செய்து விட்டு அதற்கான பெருமையை ஸ்வீகரிக்காமல், நாம் அடக்கத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் நமக்கு யாரேனும் எப்பொழுதாவது உதவி செய்திருந்தால், அதை நாம் ஒருபொழுதும் மறக்கக்கூடாது. நமக்கு மற்றவர்கள் செய்த நன்மைகளை மறந்துவிடுவது பெரிய பாபம். कृतघ्ने नास्ति निष्कृतिः, அந்த பாவத்துக்கு பிராயச்சித்தம். கிடையாது.

பகவத் கிருபைதான் நமக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கிறது. அதை பகவத் சேவைக்கும் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்கும் உபயோகப்படுத்துவது அதி உசிதம். மாறாக கர்வத்தை வளர்த்து நம் ஆஸ்திகளை துஷ்பிரயோகம் செய்வது முட்டாள்தனம். பணக்காரனாக இருந்தாலும் ஒருவன் கர்வத்தை தவிர்த்து நல் முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு பொழுதும் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யக்கூடாது. மற்றவர்களைப் பற்றி மதிப்புக்குறைவான பேச்சுக்களை பேசி அவர்களை மனம் நோகச் செய்யக் கூடாது. நாம் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் நல்லதாகவே பேசவேண்டும், ஒருபொழுதும் கெடுதலாக பேசக்கூடாது.

நல்ல வாழ்க்கையை நடத்துவதில் தீவிரமாக உள்ள ஒருவன் நமக்கு பெரியோர்கள் எடுத்துக் காட்டியிருக்கும் நல்ல வழிகளை பின்பற்றி நடந்து கொள்வது மிகவும் நல்லது
ravi said…
*நாராயணாய நமஹ*

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பவர்
ravi said…
நிர்விகல்பா நிராபா³தா⁴ *நிர்பே⁴தா³* பே⁴த³னாஶினீ |🙏🙏

வேற்றுமை இல்லாதவள்
ravi said…
ஸ்ரீராம நாம மகிமை

சதுர் யுகங்களில்”-கிருத யுகம்-தவம்; திரேதா யுகம்-யாகம்; துவாபர யுகம்-பாத சேவை; கலி யுகம்-நாம சங்கீர்த்தனம்“ஸ்ரீ ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும் .நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.
கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே. கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.
நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
நாமம், “பாதை மீறிவர்க்கும் தவறிவர்க்கும்” வழி காட்டும்
எல்லா நாமமும் பர பிரும்மத்தின் நாமமே, நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்து விடும்.
பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.
நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.
நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.
நாமம் தாய்-தந்தை போன்றது.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.
சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை,
ஸ்வ தர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால் தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.
நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.
நாமம் சொன்னால் பகவானே வந்து விடுவார்
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும் போதும் போகும் போதும், நாமம் சொல்லலாம்.
நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.
நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.
நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.ஸ்ரீ ராம நாமம்; தாரகம் மந்திரம்.
‘ஸ்ரீ ராம’ என்று கடலைக் கடந்த ஸ்ரீ அநுமான்
சிரஞ்சீவி வாயு புத்திரன் ஸ்ரீ அநுமான். ஸ்ரீ இராமனின் அடிமையான சேவகன். ஸ்ரீ ராம நாமமே அவரின் உயிர் மூச்சு.
ஸ்ரீ ராம நாமம், ஸ்ரீ ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
‘ராம’ என்று ஸ்ரீ சேது அணை கட்டிய வானரங்கள்
ஸ்ரீராமஜெயம்: அநுமான்-சீதைக்கு, இராமனின் வெற்றியை சுருக்கமாக தெரிவித்தது“மரா” என்று உச்சரித்து “ராமா” என்று ராமாயணம் இயற்றிய ஸ்ரீ வால்மிகி.
ஸ்ரீ வால்மீகியை ஸ்ரீ ராமாயண காவியம் எழுத அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், “ஸ்ரீ ராம” நாமம்.

விஷ்ணுவை பற்றிய புதிய ஆன்மீக தகவல்கள் அனைத்தும் தினம் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
கண்ணா

நான் உனை மறத்தலையும் அறியேன்,

ஞானத்தையும் அறியேன்.

ஆனால்,நீயோ நான் உனை ஒரு வேளை மறந்து விடுவேனோ என்ற அச்சத்தில்,

சிவந்த தாமரை மலரை போன்ற அழகிய திருக்கண்களால்

என்னைக் குளிர்ச்சியாக நோக்கியபடி வந்து,

நான் உனை என்றும் மறக்கவே முடியாதபடிக்கு,

என் நெஞ்சில் நிலைபெற்று விட்டாயே *கண்ணா*💥💥💥
ravi said…
அம்மா*

உன் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே அவை அழகோ 👣

*இல்லை*

அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே

அந்த பீதக ஆடை அழகோ ?

*இல்லை*

எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே ...

உன் நாபிக்கமலம் அழகோ ?

*இல்லை*

திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

அது அழகோ ?

*இல்லை*

திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே அந்த மார்பு அழகோ ?

*இல்லை*

திருக்கழுத்து என்னை சம்சார சாகரத்தில் அகப்படாமல் உய்யக் கொண்டதே!

அது அழகோ ?

*இல்லை*

சிவந்த திருவாய்,

ஐயோ! அதன் அழகை என்னென்று சொல்வேன்!

அந்தச் சிவந்தவாய் என்னை, என் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டதே!

*இல்லை*

உன் திருமுக மண்டலத்தில் கறுத்து,

விசாலமாகப் பரந்து, ஒளிவீசும்,

செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் எனை உன்னிடம் பித்தேறும்படி செய்துவிட்டனவே

கல் நெஞ்சனான எனையும் உன் கண்கள் தன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டவே அவை அழகோ ?

*இல்லை*

கோலமா மணியாரமும்
முத்துத் தாமமும்

முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ!

நிறை கொண்டது என் நெஞ்சினையே

அது அழகோ ?

*இல்லை*

மையோ!
மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!

ஐயோ!

உன் வடிவென்பதோர் அழியா அழகுடையாள்

*அம்மா*
உன் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே....🌸🌸🌸
ravi said…
*17 வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா =*

எழில் முகத்தை அவதனித்தால், மன்மதன் மன்றத்திற்கு அணி செய்யும் தோரணமென புருவங்கள் திகழப்பெற்றவள்.
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 120*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
உயிருநன்மையா லுடலெடுத்துவந் திருந்திடும்

உயிருடம்பொழிந்தபோது ரூபரூப மாயிடும்

உயிர்சிவத்தின் மாய்கையாகி யொன்றையொன்று கொன்றிடும்

உயிரும்சத்தி மாய்கையாகி ஒன்றையொன்று தின்னுமே. 120
ravi said…
உயிரானது நல்வினை, தீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்புவியில் வந்து வாழ்ந்து வருகின்றது.

உடம்பை விட்டு உயிர் போனபோது அது உருவம் ஒழிந்து அரூபமாக ஆகின்றது.

உயிர் என்பது சிவமென்ற பரம்பொருளின் மாயையாகி, மெய்ப்பொருளாகி அனைத்தையும் தன்னுள் மறைத்து மறைந்திடுமே!!!

உயிர் சிவனாகவும், உடம்புச் சக்தியாகவும் இருப்பதை அறிந்து தியான தவத்தால் ஒன்றிணைத்து சமாதி இன்பம் அடைபவர்,

உடம்பை உயிரில் கரைத்து இரண்டும் ஒன்றாகி சிவத்தை அடைவர்.🛎️🛎️🛎️
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 396* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*150*
ravi said…
*150 निरवद्या - நிரவத்யா -*

*அவத்யா* என்றால் சொல்லக்கூடாதது அதாவது குற்றம் உடையது ...

*நிரவத்யா* அதன் எதிர்மறை ...

குற்றம் அற்றவள் ...

குறை இல்லாதவள்

எதிலும் நிறை காண்பவள்

கரை சேர்ப்பவள்
கறை துடைப்பவள் சடை கொண்டவள் ... படை உடையவள் தடை ஏதும் பொடி ஆக்குபவள்

மடை போல் கருணை பொழிபவள் .
அன்ன நடை கொண்டவள்
விடை ஏறும் பெருமானின் இடம் கொண்டவள் ..
எடை இல்லாதவள் கொடி போன்றவள் ... கொம்பாய் வந்தே நம்மை அவள் மீது படர விடுபவள் .. 🙏🙏🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 396* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*100. தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது*


ஸகல ஸித்தி💫💫💫💫💫💫💫💫💫💫💫
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100
ravi said…
ஆதவனுக்கு அவன் கிரணத்து அங்கியைக் கொண்டு

ஆலத்தி சுழற்றல் என்கோ

சீதமதிக்கு அவன் நிலவின் ஒழுகு சிலைப் புனல்
கொடு உபசரிப்பது என்கோ

மோதி அமைக் கடல் வேந்தை அவன் புனலால்
முழுக்காட்டும் முறைமை என்கோ

நீ தரு சொற்கவி கொடு உனைப் பாடி உனது
அருள் பெறும் என் நீதி அம்மே💥💥💥
ravi said…
அம்மா. நீ தரும் சொல்லினைக் கொண்டு கவி பாடி உனது அருளினைப் பெறும் என் முயற்சி (அதில் கிடைத்த வெற்றி),

ஆதவனுக்கு அவன் கிரணத்தில் தோன்றிய அக்கினியைக் கொண்டு ஆலத்தி சுழற்றுவது போல என்று சொல்லவா?

குளிர்ந்த மதிக்கு அவன் நிலவொளியால் ஒழுகுகின்ற கல்லின்

(சந்திரகாந்தக் கல்லின்)

நீர்த்துளிகளைக் கொண்டு உபசரிப்பது போல என்று சொல்லவா?

அலைகள் எப்போதும் மோதிக் கொண்டிருந்தால் தன் நிலை கூடாமல் குறையாமல் இருக்கும் கடல் வேந்தனை அவனுடைய நீரினைக் கொண்டே திருமுழுக்கு செய்யும் வழிமுறையைப் போன்றதா?

என் சொல்லுவேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
MYSTIC AND PRINCE



Have heard that it happened once, in some ancient time, in some unknown country, that a prince suddenly went mad. The king was desperate -- the prince was the only son, the only heir to the kingdom. All the magicians were called, miracle makers, medical men were summoned, every effort was made, but in vain. Nobody could help the young prince, he remained mad.

The day he went crazy he threw off his clothes, became naked, and started to live under a big table. He thought that he had become a rooster. Ultimately the king had to accept the fact that the prince could not be reclaimed. He had gone insane permanently; all the experts had failed.
ravi said…
But one day again hopes dawned. A sage -- a Sufi, a mystic -- knocked on the palace door, and said, "Give me one opportunity to cure the prince."



But the king felt suspicious, because this man looked crazy himself, more crazy than the prince. But the mystic said, "Only I can cure him. To cure a madman a greater madman is needed. And your somebodies, your miracle makers, your medical experts, all have failed because they don't know the abc of madness. They have never travelled the path."
ravi said…
It seemed logical, and the king thought, "There is no harm in it, why not try?" So the opportunity was given to him.



The moment the king said, "Okay, you try," this mystic threw off his clothes, jumped under the table and crowed like a rooster.



The prince became suspicious, and he said, "Who are you? And what do you think you are doing?"



The old man said, "I am a rooster, more experienced than you. You are nothing, you are just a newcomer, at the most an apprentice."



The prince said, "Then it is okay if you are also a rooster, but you look like a human being."

ravi said…
The old man said, "Don't go on appearances, look at my spirit, at my soul. I am a rooster like you."



They became friends. They promised each other that they would always live together and

that this whole world was against them.



ravi said…
A few days passed. One day the old man suddenly started dressing. He put on his shirt.



The prince said, "What are you doing, have you gone crazy, a rooster trying to put on human dress?"



The old man said, "I am just trying to deceive these fools, these human beings. And

remember that even if I am dressed, nothing is changed. My roosterness remains, nobody can change it. Just by dressing like a human being do you think I am changed?" The prince had to concede.



A few days afterwards the old man persuaded the prince to dress because winter was approaching and it was becoming so cold.



Then one day suddenly he ordered food from the palace. The prince became very alert and said, "Wretch, what are you doing? Are you going to eat like those human beings,like them? We are roosters and we have to eat like roosters."



ravi said…
The old man said, "Nothing makes any difference as far as this rooster is concerned. You can eat anything and you can enjoy everything. You can live like a human being and remain true to you roosterness."



By and by the old man persuaded the prince to come back to the world of humanity. He became absolutely normal.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 385*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*51*
1 – 200 of 313 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை