ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 23. பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: பதிவு 30

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 30

23 पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः - பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ:

இன்று நாம் பார்ப்பது 23வது திருநாமம் .. மிகவும் அருமையான நாமம் 🌸🌸🌸🌸🌸

23 पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः - பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ:


பத்ம ராக கல்லை இழைத்து கண்ணாடியாக்கினால் எப்படி வழவழவென்று ஒளி வீசுமோ 

அது போல் இருக்கும் கன்னங்களை உடையவள் அம்பாள்.👍👍👍👍👍👍👍👍👍👍

பத்மராக = மாணிக்கத்தின் வகை 

ஷிலா = (மாணிக்க) கற்கள் 

தர்ஷ = பார்வைக்க

பரிபாவி = மனத் தோற்றம் 

கபோல = கன்னம்

பத்மராக ரத்தினத்தை போல ஜொலிக்கும் கன்னங்கள் கொண்டவள்

இப்படி ஓவ்வொரு நாமமாக வாக்தேவிகள் அம்பாளை வர்ணிப்பதை முழுசா கேட்க நம் அபிராமி பட்டருக்கு பொறுமை இல்லை .. 

எப்போ நாம் வர்ணித்து முடிப்பது இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்றே நினைத்தாரோ என்னவோ ... ஒரே வரியில் பாடி விட்டார் ரத்ன சுருக்கமாய் 

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகி சிவந்த பதாம் புயத்தாள் 🙏🙏🙏



பத்மராகத்தால் செய்யப்பட்ட கண்ணாடி போன்று பளபளக்கும் கன்னங்களை உடையவள். 

பத்மராகம் என்பது ரத்தினக் கற்களில் ஒன்று. 

சிவப்பு நிறமாகவும் தெளிவாகவும் இருக்கும். அதுபோன்றே அம்பாளின் கன்னங்களும் பளபளக்கின்றன. 

நிர்மலமாக உள்ளன. 


                                                      💐💐💐💐💐💐💐💐💐💐

Comments

ravi said…
Be who you are and say what you feel, because those who mind don't matter, and those who matter don't mind. Dr. Seuss



How wonderful it is that nobody needs to wait a single moment before starting to improve the world. Anne Frank



The biggest addiction, and one we least often talk about, is being addicted to beliefs. We really get hooked into thinking what we believe is true and right. Martha Boesing



See the world as if for the first time; see it through the eyes of a child, and you will suddenly find that you are free. Deepak Chopra



Notice that the moment you become unhappy is usually the moment you attempt to control another person. Hugh Prather



Procrastination is like a credit card. It's a lot of fun until you get the bill.



Don’t allow your emotions to overpower your intelligence
ravi said…
TWO WINGS



As I was traveling from Delhi to Chennai, I looked out through the window and the TWO Wings of this plane reminisced a lot about my life. I am so incredibly grateful to the clouds and storms I had to face to make this far. And thankful to the TWO wings that carried my dreams up in the sky.



The plane’s Wing is in this picture- can you imagine what great power it would have to endure the hundreds of storms and thousands of turbulences that came in its way.


Likewise, there are TWO WINGS that carried my dreams this far through the storms and clouds in my life. Some storms taught me to be humble and some of them taught me to be tough. And I flew on these TWO Wings. ‘The Wings of Courage’ and ‘The Wings of Determination’. If you are equipped with these two wings, Be assured that you can fly out of any situations successfully. All you need is to Give your dreams ‘the wings’ to fly.



You have everything in your power – you only need to take the ‘Courage to face the storms’ and ‘Determination Not to Give-up’. The problems might look so small, as you fly above them. Fly up in the sky like these WINGS of the plane
ravi said…
Old friends pass away, new friends appear. It is just like the days. An old day passes, a new day arrives. The important thing is to make it meaningful: a meaningful friend or a meaningful day.

Dalai Lama



Anger will never disappear so long as thoughts of resentment are cherished in the mind. Anger will disappear just as soon as thoughts of resentment are forgotten. Buddha



I am always doing things which I cannot do, in order that I may learn how to do it. Pablo Picasso



Life is a progress, and not a station. Ralph Waldo Emerson



The key to cherishing yourself is recognizing that you are valuable, lovable and definitely worth being cherished. Once you are ready to make this decision for yourself, you will discover an inner confidence that was trapped just behind your fears. Michelle Morris Spieker



You can't stay in your corner of the Forest waiting for others to come to you. You have to go to them sometimes. A.A. Milne in Winnie The Pooh



The true felicity of life is to be free from anxieties and perturbations; to understand and do our duties to God and other people, and to enjoy the present without any serious dependence on the future. Seneca
ravi said…
YOUR VALUE



This is an iron bar. The value is around $100.



If you decide to make horseshoes, its value would increase to $250.



If, instead, you decided to make sewing needles, the value would increase to about $70,000.



If you decided to produce watch springs, the value would increase to about $6 million.



Your value is not just what you are made of, but above all, in what ways you can make the best of who you are!



Quite simple, isn’t it?
Kousalya said…
Arpudham...கந்தர் அனுபூதியும் கிருஷ்ணனின் கீதையும் ஒரே சரணாகதி தத்துவத்தை உரைக்கிறது... மிகவும் அருமை..🙏🙏🪔🪔🙇‍♀️🙇‍♀️👍👍
ravi said…
இன்னிக்கு அமாவாசை. என்ன டிபன்னு பேசிண்டிருக்கச்ச,

பாட்டி! என்ன டிபன் இன்னிக்கு?

இட்லி பண்ணட்டுமாடி செல்லம்…

போ பாட்டி! ஒரே போர்,காலம்பற டெய்லி அதான் ப்ரேக்பாஸ்ட்

சரி தோசை…………

மசால் தோசை பண்ணுவியா?

இன்னிக்கு அமாவாசைடி செல்லம். மசால் தோசைக்கு பதிலா மொறுமொறுன்னு வார்த்து தேங்காய் சட்னி பண்ணித்தரட்டுமா?

ம்க்கும் வேணாம்.

இப்படி சப்பாத்தி, பூரி,

தொட்டுக்க தால் தான் பண்ணுவ. வேணாம் போ..

ரவா கிச்சடி, சம்பா ரவா அடை….

அதெல்லாம் மனுஷா சாப்பிடுவாளோ?

போடி, முனிவரோட எலிப்பொண்ணாட்டம் படுத்தறதுகள்….

ravi said…
அதென்ன பாட்டி எலிப்பொண்ணு படுத்தல்..

ஒருதரம் , ஒரு எலி பூனைக்கு பயந்துண்டு ஒரு முனிவரோட காலடி வந்து விழுந்ததாம். அவர் பாவம்னு இரக்கப்பட்டு அதை ஒரு பொண்குழந்தையா மாத்தி வளர்த்தாராம். அவளுக்கு கல்யாண வயசு வந்தவுடனே, “சூரியனைக் காமிச்சு கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டாராம். சூரியன் சுடும் வேண்டாம்னுட்டா. அப்ப சூரியனை மேகம் மறைக்க, மேகத்தை பண்ணிக்கிறியான்னு கேட்டாராம். ம்க்கும் மேகம் ஒரு இடத்துலயும் நிக்காது. ஓடிண்டே இருக்கும். வேணாம்னாளாம். சரி மேகத்தை தள்ளிண்டு போறதே காத்து அதை பண்ணிக்கிறியா?

ravi said…
அதோ அந்த மலை காத்தை தடுக்கறது பார். வேணாம்னுட்டா. சரி அப்ப மலையையாவது பண்ணிக்கோன்னாராம். அப்ப அங்க ஒரு எலி மலையை குடைஞ்சிண்டு இருந்ததாம். அப்பா பாருப்பா, மலையையே குடையறது. இதான் பலசாலி..நான் அதை பண்ணிக்கறேன்னாளாம். பிறவி புத்தி போகுமோன்னு முனிவர் அவளை பழையபடி எலியா மாத்தி கல்யாணம் பண்ணி வச்சாராம்.

ravi said…
அதுமாதிரிதான் நீயும் படுத்தறாய்! எதைக் கேட்டாலும் வேற சொல்றாய்! ஏண்டிம்மா மாட்டுப்பொண்ணே! நாங்க பேசறதைக் கேட்டா நோக்கு சிரிப்பா வர்றதாக்கும்…

இல்லம்மா! நீங்க மட்டுமல்ல. இப்படி ஒருத்தர் மாத்தி மாத்தி கேட்டு பெருமாளையும் படுத்தி வச்சிருக்கார். அதை நினைச்சுண்டேன்….

அப்படி என்னத்த கேட்டார் பெருமாளே அசந்து போற அளவுக்கு?

உனக்கு ரொம்ப பிரியமா ஒரு குளம் இருக்கோன்னோ, அந்த கரைலயே என்னை ஒரு நாரையாய் படைச்சுடு. நான் அங்கயே சுத்திண்டிருக்கேன்னார்..

ravi said…
சரின்னு பெருமாள் ஓகே சொல்லச்ச, இல்லல்ல வேணாம். என்னிக்காவது ஒருநாள் தண்ணி வத்திடுத்துன்னா, இல்ல இதைவிட வேற ஒரு குளம் கண்ணுல பட்டா, அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவையாட்டம் பறந்தாலும் பறந்துருவேன். பேசாம என்னை அந்த குளத்துல ஒரு மீனா மாத்திடேன்றார்

சரி! ஓகே ! அப்படின்னு பெருமாள் , ”நான் தூக்கத்தை கண்டினியு பண்ணட்டுமா”ன்னு கேட்டு சாயச்சே,

ravi said…
இரு இரு…அவசரப்படாதே… எப்பப்பாரு தண்ணியைப் பற்றிண்டே வாழவேண்டியிருக்கும். வேற ஒரு நாரை வந்து என்னைச் சாப்பிட்டுட்டு போயிருத்துன்னா.. அதனால பற்றை விட வேண்டி அங்க வந்து பிறந்துட்டு எப்ப பாரு பயத்தோட வாழமுடியுமா? அதனால..”

பகவான் கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கிண்டு, “சரி சொல்லு! வேற என்னவா பிறக்க வைக்கணும்?”

ravi said…
பேசாம, நீ வாய் கொப்பளிப்பியே அந்த பொன் காளஞ்சியா மாத்திரேன். ஏன் சொல்றேன்னா, உயிருள்ள பொருளா இருந்தா, எங்கயாவது போகணும்னு மனசு சஞ்சலப்படும். இதுன்னா, அப்படியே அசையாம ஓரிடத்துல இருந்துரலாம், சிந்திக்கவும் தோணாது பாரேன். அது மட்டுமல்லாம இதுல இன்னொரு விஷேஷமும் இருக்கு…

ravi said…
என்ன…? ஆதிசேஷன் ஆர்வத்தோட கண்ணாலயே கேக்கறானாம்”

”மத்தவாள்ளாம் உன் வாசலுக்கு வர்ற முண்டியடிச்சுண்டு வரணும். இப்ப நான்னா, அதாவது பொன்காளஞ்சின்னா, பெருமாளோட கைங்கர்யபரன்னு மரியாதையா வழிவிட்டுடுவா பாத்தியோ? நோ ஜரகண்டி தெரியுமோ?”

ravi said…
திருமார்வத்துல இருக்கறா மஹாலக்ஷ்மி சிரிக்கறாளாம். “நீ நன்னா பொழச்சுப்பேன்னு ”மஹாலக்ஷ்மி சிரிக்கறாளாம்… சரின்னு பகவான், ”இடத்தைக் காலி பண்றியா? அடுத்தவாள்ளாம் வெயிட்டிங்…”

”இரு இரு… வேணாம் பொன் வட்டிலா பொறக்கல. ஏன்னா, பாக்கறவா எல்லாருமே நல்லவாளா இருக்க சான்ஸ் இல்ல, என்னைய யாராவது களவாடிண்டு போய்ட்டா.. உன்னையும் நம்ப முடியாது. பக்தர்களைத் திருத்தறேன்னு நீயே என்னை யாராத்துலயாவது கொண்டு விடற ஆளாச்சே. அப்படித்தான் உன் வட்டிலை கொண்டு தேவதேவி வீட்டுல கொடுத்தே. ரத்தினமாலையை ஹாதிராம் பாவாஜி வீட்டில் வச்சுட்டு வந்தே. ஒவ்வொண்ணா காணாப்போறதுன்னா, என்னைய உள்ள வச்சு பூட்டிட்டான்னா….”

ravi said…
அட ராமா… இப்ப நான் என்னதான் பண்ணட்டும்?”

”பேசாம என்னை ஒரு பூவா மாத்திடு. அதுவும் உனக்கும் தாயாருக்கும் பிடிச்ச செண்பகப்பூவா மாத்திடேன். திருவல்லிக்கேணில வேதவல்லி அதை சார்த்திண்டு என்ன அழகாருப்பா… உனக்கும் அழகாத்தான் இருக்கும். புஷ்ப கைங்கர்யம் பண்ணினாப்புலயும் ஆச்சு .”

”சரிதான். இனிமே எதுவும் கேட்கப்படாது.”

ravi said…
இரு இரு… அவசரப்படாதே.. இப்ப என்ன பிரஹ்லாதன் கூப்பிட்டானா, கஜேந்திரன் கதர்றானா? கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதைக் கேக்காம ஓடறதிலேயே குறியாயிருக்கியே!”

”சரி ஓடலை! சொல்லு கண்ணா!”

ravi said…
இல்ல…நீ கண்ணன்னு சொன்னதும் ஒண்ணு ஞாபகம் வந்துருத்து. பாமா கேட்டதும் படக்குனு பாரிஜாத மரத்தை தூக்கிண்டு வந்துட்டியே, அந்த மாதிரி என்னைய யாராவது வேரோட பேர்த்து எங்கயாவது கொண்டு போயிட்டான்னா….”

”நானே வாயைக் கொடுத்து மாட்டிண்டேனா? சரிதான். அப்ப உன்னை என்னவாதான் மாத்தணும்?”

”என்னைப் பேசாம ஒரு புதரா மாத்திரு. யாரும் சீந்தக்கூட மாட்டா. நா பாட்டுக்கு கம்முனு உன்னையே நினைச்சுண்டு இருப்பேன்.”

”சரி! இதான் கடைசி.. ஒரு சொல்னு ஆரம்பிச்சு ஒவ்வொரு சொல்லா போயிண்டிருக்கேன். இனிமே கேக்கப்படாது. டீலா, நோ டீலா?”

ravi said…
நோ டீல். ஏன்னா, யாராச்சும் இந்த புதர் ஏன் இங்க இருக்கு? இங்க ஒரு மண்டபம் கட்டலாம்னு என்னை வெட்டி எறிஞ்சுட்டா, தோட்டம் போடலாம்னு நோட்டம்போட்டுட்டா…. நான் என்ன செய்வேன்?அதனால பேசாம நீ குடியிருக்கற மலைச்சிகரமா மாத்திரு. நானும் க்ருஷ்ணா ராமான்னு உன்னையே நினைச்சுண்டு ஜம்முனு இருந்துடறேன்,,,”

”நீ என்ன ராமாவதாரத்துல வானரமா இருந்தியா? இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் தாவறியே?”

ravi said…
இரு இரு வானரம்னா சொன்னே.. அச்சோ அப்ப மலைச்சிகரம் வேணாம். ஏன் சொல்றேன்னா, நாளைக்கு நீ வேற ஒரு அவதாரம் எடுத்து, கடலைக் கடையறேன்னு என்னை வேரோட தூக்கிட்டா, இல்ல அந்த அனுமான் வந்து பாலம் கட்டணும்னு என்னை லபக்குன்னு தூக்கிண்டு பறந்துபோய்ட்டா… ம்ஹூம் ,, என்னைப் பேசாம மலைமேல ஓடற ஆறா மாத்திடேன். யாரும் தூக்கவே முடியாது ! நானும்….”

ravi said…
”வாமனா, நாராயணான்னு சேவிச்சுண்டு இருப்பியாக்கும்…”

”இரு இரு,,,, வாமனர்னவுடனே ஒண்ணு தோணிடுத்து. ஆறா மாறினா, எப்ப பாரு மழையை நம்பிண்டு இருக்கணும். யாராச்சும் என்னைக் கமண்டலத்துல அடைச்சுண்டு போய்ட்டா.. அதனால வேணாம் வேணாம்..என்னைய பேசாம பக்தர்கள் போற பாதையா மாத்திரேன்..நானும் அவாளோட ஸ்ரீபாத தூளியை தலைல தாங்கிண்டு கோவிந்தா கோவிந்தான்னு”

ravi said…
கோஷம் போட்டுண்டிருக்கேன்னு சொல்றியா… சரி… இதுதான் கடைசி …..”
”அடடா….”

”என்ன கோவிந்தான்னவுடனே உனக்கு வேற ஏதாச்சும் ஞாபகம் வந்துருத்தா. நான் இன்னொரு தரம் கோவர்த்தனத்தை இப்போதைக்கு தூக்கறதா இல்ல. இன்னும் கல்கியே வர்ல. அதனால…”

ravi said…
இல்லல்ல… இப்பல்லாம் அடிக்கடி டேக் டைவர்ஷன்னு போட்டு போட்டு பாதையை மாத்திண்டே இருக்கா.. அதனால என்னை விட்டுட்டு வேற வழில போய்ட்டான்னா என்ன பண்றது? அதனால உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். என்னைய பேசாம உன் கர்ப்பக்ரஹத்தோட படியா மாத்திடேன். நானும் உன்னை சதா பாக்கும்படியா இருந்துப்பேன்…”

ravi said…
இப்படி படிப்படியா இறங்கி ஒருவழியா படியா வர்றேன்னுட்டே,… சரி… இன்னிலேர்ந்து என் கர்ப்பக்ரஹத்தோட படி குலசேகரப்படின்னு வழங்கப்படட்டும். திருப்தியா?”

திருப்திதான்..

என்ன இழுக்கற?

இப்பல்லாம் கருங்கல்படிக்கு பதிலா எல்லாத்தையும் தங்கக்கவசம், வெள்ளிக்கவசம் போட்டு மறைச்சுடறா. என்னையும் மறைச்சுட்டான்னா என்ன பண்ணுவேன்..

அதுக்கு….

நீயே யோசிச்சு என்னை ஏதாவதா படைச்சுக்கோயேன்….

பெருமாளே அசந்துட்டாராம்… அப்படி வா வழிக்குன்னு சொல்லிட்டு.. எல்லா கோவில்லயுமே நீ குலசேகரப்படியா இருந்துக்கோ... ஏதாவது ஒண்ணுல மறைச்சுட்டாலும் இன்னொன்னுல சேவிச்சுண்டே இருடாப்பான்னாராம்,
இப்ப சொல்லுங்கோ நான் சிரிச்சது தப்பா?

”நீ சிரிச்சதும் தப்பில்ல… இவ கேட்டதும் தப்பில்ல… சட்டுனு விளக்கேத்திட்டு அடுப்பை மூட்டு. ஒரு அரிசி உப்புமாவைக் கிளறி சட்டினி அரைச்சு நானே ஊட்டிவிட்டா உன் பொண்ணு கடகடன்னு சாப்பிட்டுடுவா…. அவாளை சாய்ஸ் கேட்டாதான் தப்பு……”

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே…
(பெருமாள் திருமொழி – ஊனேறு செல்வத்து)
ஆழ்வார் திருவடிகளே சரணம்..
ravi said…
பாதாரவிந்த சதகம் !

29.பவித்ராப்யாம் அம்ப ப்ரக்ருதி ம்ருது லாப்யாம் தவ சிவே
பதாப்யாம் காமாக்ஷி ப்ரஸபம் அபிபூதை: ஸசகிதை:
ப்ரவாலை: அம்போஜை: அபி ச
வனவாஸ வ்ரத தசா:
ஸதைவாரப்யந்தே பரிசரித
நானாத்விஜ கணை: 29

தாயே | சிவே ! காமாக்ஷி ! தூய்மை மிக்கதும் இயல்பாகவே மிருதுவாக உள்ளதுமான உன் இருதிருவடி (இரட்டை)களால் பலரறியத் தோற்கடிக்கப்பட்டுப் பயந்துள்ள பவழங்களாலும் தாமரைகளாலும் எப்போதும் துவிஜர்களின் பரிசரணைபெற்று வனத்தில் வசிப்பதென்ற விரதத்தின் முறைகள் தொடங்கப் பட்டுள்ளன.

சிலேடை வனவாஸம் - காட்டில் வசிப்பது, நீரின் நடுவே வசிப்பது. துவிஜர். தூய அந்தணர், பறவைகள். பவழமும் தாமரையும் மென்மையிலும் தூய்மையிலும் திருவடியிடம் தோற்றன. மிருதுவான திருவடி உறுதிமிக்க பவழத்தை வென்றது. அதன் செம்மையில் இரண்டும் தோற்றன. பலரறியத் தோற்றதால் பயந்த அவை தவம்புரியக் காட்டிற்குச் சென்று நீரின் நடுவே வசிப்பதென்று விரதம் ஏற்றன. அவ்வாறு தவம் புரிய துய்மை மிக்க துவிஜர் (அந்தணர்) சூழ்ந்துள்ள இடத்தைத்
தேர்ந்தெடுத்தனவோ ? பவழம் கடல் நீரில் வசிக்கிறது. தாமரை நீரில் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவம் புரிகிறது. அதனைச் சுற்றி துவிஜர்கள் (பறவைகள்) சூழ்ந்து நிற்கின்றன.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*Jrsreadsandshares*
*தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்*
1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*

3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*

4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்*

7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *பிராணாயாமம்*

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் *குண்டலினி*

9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*

10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*

11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*
வாழிய நலம்🙏🙏
Kousalya said…
ஆஹா... அதி அதி அற்புதமான சம்பாஷனை....choice குடுத்தா பிரச்சினை தான்.... அருமையோ அருமை.. குலசேகரரே....திருவடிகளே சரணம்...🙏🙏👌👌🙇‍♀️🙇‍♀️
ravi said…
🌹🌺 "“ *ஏ... திருட்டு பெண்ணே* .... *பாண்டுரங்கன் கட்டியிருந்த வஸ்திரத்தைக் கூட விட்டு வைக்காமல் எடுத்து வந்து விட்டாயே?'' என்ற பொது மக்கள் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம்.... பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண்குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர் திரும்பவில்லை.

🌺பாண்டுரங்கனே தனக்கு அன்னையும், தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள்.

🌺அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய். அங்கு வந்த நாமதேவர் என்னும் மகான் ஜனாபாயிடம் பேசி அவளது மனநிலையை அறிந்தார்.

🌺கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

🌺அவள் நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு, கோவிலிலும் பஜனை செய்து கொண்டு காலத்தை கழித்தாள்.

🌺குழந்தையாக இருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள்.

🌺ஜனாபாயின் பக்தியை உலகிற்கு அறிவிக்க திருவுள்ளம் கொண்டார் பாண்டுரங்கன்.

🌺தன் பட்டு பீதாம்பரம் ஜனாபாய் வீட்டுக் கொடியில் காய்ந்து கொண்டிருக்க, அவளின் கந்தல் புடவையை உடுத்திக் கொண்டு மறைந்து போனார்.

🌺 கோவிலின் கதவை மாலை நேர வழிபாட்டிற்காக திறந்த அர்ச்சகர்கள் அதிர்ந்தனர். பாண்டுரங்கன் அணிந்திருந்த அருமையான காசி பட்டும், ஆபரணங்களும் காணாமல் போயிருந்தன. ஒரு கந்தல் புடவை சிலையில் சுற்றப்பட்டிருந்தது.

🌺ஜனாபாயின் குடும்பத்திற்கு மிகவும் பழக்கமான அர்ச்சகர், "இது ஜனாபாயின் புடவை போல இருக்கிறதே!'' என்று சொல்ல எல்லாரும் நாமதேவரின் வீட்டுக்கு வந்தனர்.

🌺அங்கு கொடியில் காய்ந்து கொண்டிருந்த பட்டு பீதாம்பரத்தைப் பார்த்து, "இவள் தான் பாண்டுரங்கனின் பீதாம்பரத்தையும், ஆபரணங்களையும் திருடிக் கொண்டு வந்திருக்கிறாள்'' என்று சொல்லி வீட்டில் சோதனை செய்யத் தொடங்கினர்.

🌺அவளது படுக்கை அறையில் ஆபரணங்கள் இருந்தன. அவளிடம், "நகைகளை எப்போது திருடினாய்? ஏ... திருட்டு பெண்ணே.... பாண்டுரங்கன் கட்டியிருந்த வஸ்திரத்தைக் கூட விட்டு வைக்காமல் எடுத்து வந்து விட்டாயே?'' என்று பொது மக்கள் விசாரித்தனர்.

🌺ஜனாபாய் இதற்கெல்லாம் கலங்கவில்லை.

🌺"நான் தவறு செய்யாதவள். அப்படி தவறு செய்ததாக நீங்கள் கருதினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள்,'' எனக் கூறி நெஞ்சு நிமிர்த்தி நின்றாள்.

🌺அவள் பொய் சொல்வதாக நினைத்த அர்ச்சகர்கள் அரசனிடம் புகார் கூறினர். அவளை பொதுவீதியில் கழுவேற்றும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.

🌺ஜனாபாயை கழுமர மைதானத்திற்கு அழைத்து வந்தனர். அவள் கழுமரத்தைப் பார்த்து கைகூப்பி,

🌺 "விட்டல! விட்டல!
ஜே! ஜே! விட்டல!'' என்று பாடினாள்.

🌺கழுமரம் தீப்பற்றி எரிந்தது.
பாண்டுரங்கன் ஓடி வந்து ஜனாபாயைத் தழுவிக் கொண்டு, "உன் நிஜபக்தியை உலகிற்குத் தெரிவிக்கவே இவ்வாறு செய்தேன்,'' என்று சொல்ல ஜனாபாய் அவரது திருவடியில் விழுந்து வணங்கினாள்.

🌺ஜனாபாயின் புகழும், அவளது கீதங்களின் உயர்வும் நாடெங்கும் பரவியது. பாண்டுரங்கனே நேரில் வந்து ஜனாபாய் மற்றும் நாமதேவரின் பாடல்களை எழுதி_தொகுத்தும் கொடுத்தார்.

🌺அமுதமயமான அந்த பாடல்களே இன்றும் பண்டரிபுரத்தில் பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*இன்னா நாற்பது*

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;
நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி. 19

குலத்து - நற்குடியில்
நிலத்து - பூமியில்

நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*வர்த்தமானாய நமஹ*🙏
பக்த ர்க‌ளின் வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாக கருதுபவர்.
ravi said…
துஷ்டதூரா *துராசார-சமனீ* தோஷவர்ஜிதா🙏

மனம் வாக்கு காயம் ஏற்படும் அனாசாரங்களை அழிப்பவள்
ravi said…
*❖ 32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா =*

முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள்.
ravi said…
முத்தோடு ரத்தினமும் சேர்ந்தே ஹாரம் ஆனதோ

அங்கே வயிரமும் வயிடூரியமும் வாசல் காவலர் ஆனாரோ

கோமேதகமும் மாணிக்கமும் மாலைக்கு நாறானதோ

பவளமும் புஷ்பராகமும் மாலையில் ரத்தின கம்பளம் விரித்ததோ

நீலமும் முத்தும் மரகதமும் நேர்கோட்டில் நின்றே சிரித்ததோ

நீ அணிந்து வரும் அழகில் பதக்கமாலையும் உயிர் பெற்றதோ

🙏🙏🙏
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 131*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
காலமே
யெழுந்திருந்து

கண்கண் மூன்றி லொன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே. 131
ravi said…
காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!!

எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா?

அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.🤝🤝🤝
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 411* 🙏🙏🙏started on 7th Oct 2021

*159 मदनाशिनी - மதநாசிநீ -*
ravi said…
பூமிக்கு குறுக்கே நெடுக்கே பல கோடுகள் செல்வதாய் பூகோளத்தில் படித்திருக்கிறோம் .

Latitude , longitude என்று இவைகளை சொல்கிறோம்

கிழக்கு திசையில் 10 டிகிரி 20 டிகிரி என்று போய் கொண்டே இருந்தால் எங்கு போய் முடியும் 180 டிகிரியில் கிழக்கில் போய் முடியும் ...

அதே போல் மேற்கில் போனால் அதே மாதிரி 180 டிகிரி மேற்கில் போய் முடியும் ... ஆனால் 180 டிகிரிகளுமே ஒரே புள்ளி ஒரே கோடு தான்

கிழக்கும் மேற்கும் வேறு வேறு திசைகள் ஆனாலும் அவை இரண்டுமே ஒரே இடத்தில் சந்திக்கின்றன அல்லவா ?

அதே மாதிரி தான் அம்பாளும் எதிர்மரை நாமங்கள் தாங்கி வருகிறாள் .. அவள் சர்வ வியாபிணி ..

*நிர்மதா* என்றால் மதமே இல்லாதவள் என்று அர்த்தம் ..

*மதநாசினீ* எனும் நாமம் அகங்காரம் மதம் உள்ள நம்மை நல்ல வழி படுத்தி அவைகளை நாசம் செய்து நமக்கு முக்தி கொடுப்பவள் 🪷🪷🪷
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 7 ...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் 8*💐💐💐
ravi said…
श्रितकम्पसीमानं शिथिलितपरमशिवधैर्यमहिमानम् ।
कलये पटलिमानं कंचन कञ्चुकितभुवनभूमानम् ॥ ८॥

8. Sritha kampasi maanam shidhiltha parama shiva dhairya mahi maanam,
Kalaye patalimaanam kanchana kanchukitha bhuvana bhoomaanam.

ஶ்ரிதகம்பஸீமானம் ஶிதிலிதபரமஶிவதைர்யமஹிமானம் |

கலயே படலிமானம் கம்சன கஞ்சுகிதபுவனபூமானம் ||8||
ravi said…
காஞ்சியில் பரிமளிக்கும் கம்பா நதிக் கரையில் வாசம் செய்பவள்.

பரமேஸ்வரனின் திட வைராக்கிய சித்தத்தையே தளர்த்துபவள்.

சகல புவனமும் ஆடையாக, வஸ்திரமாக தரித்தவள்.

வெண்மையும் சிவப்பும் கலந்த நிறம் கொண்டவள்.

அம்பா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.🤝🤝🤝
ravi said…
முகுந்தமாலா 31 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
சுவாமிகள் கிராமத்து ஜனங்களை அழைத்து சிவாலயக்குளக்கரையில் அம்பாளை வழிபட்டு நாராயண நாம ஜபம் செய்துகொண்டிருங்கள் பகவான் கிருபை செய்வார் என்றருளினார்.

கிராமத்தாரும் சிரமேற்கொண்டு அவ்வாறே பணிய மழை போதும்போதும் என்கிற அளவுக்குப் பொழிந்து

ஏரிகுளங்களை நிறைத்தது.

நாராயண!நாராயண!
ravi said…
நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும், வினைதான் என் செய்யும் நாம பாராயணம் நாவில் உள்ளவரை ?

சிவராமன், கெளரி தம்பதியினர் ஸ்ரீ சிவன் சாரின் பக்தர்கள் .

கெளரி நாவில் ஸதா நாம ஜபம் !

நாக்கில் கான்சர் என்று தெரிந்து அறுவை சிகிச்சை செய்யும் கட்டம் வந்த போது கெளரி நாம ஜபம் நாவில் அதற்குக் குந்தகம் வருவது போல் எந்த சிகிச்சையும் எனக்குத் தேவையில்லை என உயிரை விட்டவர்கள்.
பக்தியின் மேன்மை நாம ஜபம் !
ravi said…
நாராயணா என்னும் நாமம் நாவில் உள்ளவரை யாதொரு தீமையும் நம்மை அண்டாது !

அஜாமிளன் என்பவன் சிறு வயதில் பகவானிடம் நல்ல பக்தியுடன் இருந்து விதி வசத்தால் தீய பழக்கங்களுக்கு ஆளாகி பகவானையே மறந்தவன் !

ஆனால் இழைக்கும் வினை வழியே அடுங்காலன் வந்து அவன் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்போது நாராயணா என்று தன் மகனை அழைக்க,

ஒரு முறை அழைத்தாலும் ஓடோடி வந்து அபாயம் அளிப்பவன் அல்லவா பகவான் ,?

அதன்படி பகவான் எமகிங்கரர்களைத் தடுத்து உயிரைக் கவரா வண்ணம் தடுத்து ஆட்கொள்கிரார் என்கிறது பாகவதம் !

ஒரு முறை தவறி மகன் பேரைச் சொன்னதற்கே
இந்தப் பலன் என்றால் நித்ய ஜெபம் எப்படிப்பட்ட பலனளிக்கும் என்ற கருத்தை விளக்கவே மேற்படி ஸ்லோகங்கள் நமக்கு மகான்கள் மூலம் கிட்டியுள்ளது !

முகுந்தமாலை அற்புதமான ஸ்லோகம் கொர்வை ,!!

குடும்ப விஷயங்களைக் கோர்வையாக சொல்லி நாம பாராயணத்தை எளிமையாக விளக்கியுள்ளது ஸ்பெஷல் !!

ஓம் நமோ நாராணா நம:🙏🙏🙏
ravi said…
Saturday Reflection: PRONUNCIATION POEM (from Internet)

I take it you already know
of tough and bough and cough and dough?
Others may stumble but not you
on hiccough, thorough, laugh and through
Well done! And now you wish perhaps,
to learn of less familiar traps?

Beware of heard, a dreadful word
that looks like beard and sounds like bird
and dead - it's said like bed and not bead
for goodness' sake don't call it deed!
Watch out for meat and great and threat
they rhyme with suite and straight and debt.

A moth is not the moth in mother
not both in bother, broth in brother
and here is not a match for there
nor dear and fear for bear and pear.


And then there's dose and rose and lose
just look them up - and goose and choose
and cork and work and card and ward
and font and front and word and sword
and do and go and thwart and cart....
come, come - I've hardly made a start.
A dreadful language? Man alive,
I mastered it when I was five.
ravi said…
*அன்று*
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று*
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று*
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று*
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று*
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று*
படித்தால் வேலை
*இன்று*
படிப்பதே வேலை
*அன்று*
வீடு நிறைய உறவுகள்
*இன்று*
உறவுகள் அற்ற வீடுகள்.
*அன்று*
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று*
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி
*அன்று*
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை
*அன்று*
படங்களில் பாடல் கருத்தானது.
*இன்று*
கருத்தே இல்லாத பாடலானது
*அன்று*
ஓடினோம் வயிற்றை நிறைக்க
*இன்று*
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று*
இளைஞர்கள் போதையில்
*அன்று*
ஒரே புரட்சி
*இன்று*
ஒரே வறட்சி
*அன்று*
வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.
*இன்று*
போதையின் பிடியில் இளைஞர்கள்.
*அன்று*
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று*
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று*
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்
*அன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று*
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
மகிழ்வை தேடும் நிகழ்ச்சி

*அன்று*
வாழ்ந்தது வாழ்க்கை
*இன்று*
ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை..!
ravi said…
*பராசர பட்டர்*

(விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர் ராமனுஜரின் சீடர்)

அரங்கனை பலவாறு வர்ணித்து புகழ்ந்து கொண்டு வருகிறார் .

ஓர் இடத்தில் சற்று தயங்கி உன் போல் தரித்திரன் எவரும் இல்லை என்று சொல்லி விடுகிறார்....

*அரங்கன்*

நிறுத்தும் பராசர பட்டரே ..

தூங்கி விட்டேன் என்று நினைத்தீர்களா ?

என் செவிகள் என்றுமே உறங்காது ...

போகின்ற போக்கில் என்னை *தரித்திரன்* என்று சொல்லி விட்டீர்கள்..

போனா போகுது மன்னித்து விட்டேன் சொற்பிழை ..

*பட்டர்* :

அரங்கா ... சொற் பிழை இல்லை .

தெரிந்தே சொன்னேன்

*அரங்கன்* ..

என்ன .. எவ்வளவு திமிர் .. ??😡😡😡

உனக்கு நிறைய இடம் கொடுத்து விட்டேன் ..

என் மார்பில் என்றும் உறையும் திருமகள் .. அவள் என்னுடன் என்றும் இருக்க

நான் மிகப்பெரிய செல்வந்தன் ..

நான் எப்படி தரித்திரம் கொண்டவன் ?

எதில் தரித்திரம் உடையவன் .. ??

இதோ பார் என்னைப்போலவே என் ஆதிசேஷனும் உன் மேல் மிக கோபமாக உள்ளான் ..😡😡😡

உடனே சொல் ...

*பட்டர்*

அரங்கா சிரிக்கிறதா அழறதா உன் பேச்சுக் கேட்டு ?

உனக்கு நடிக்கவும் வராது என்று இப்பொழுது புரிந்து கொண்டேன் ..

உன்னால் பொய்யாக கூட கோபிக்கத் தெரியாது ..

*அரங்கன்* ...

எனக்கும் பரமேஸ்வரனை போல் நெற்றி கண் உண்டு ..

நக்கீரனை போல் உனை எரித்து விட முடியும் ...

சொல் நான் எப்படி தரித்திரன் ஆவேன் ?

*பட்டர்* ... அரங்கா ... சொல்கிறேன் தூங்காமல் நடிக்காமல் கேள்

உனக்கு ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை ..

உனை போல் காரூண்யம் கொண்டவன் இருக்கிறாரோ என்றால் அதுவும் இல்லை ..

உன் அழகு போல் ஜொலிப்பவர் எவரும் உண்டோ அதுவும் இல்லை ...

இப்படி எதுவுமே இல்லாதவன் தரித்திரன் தானே ...

*அரங்கன்* ...

பட்டரே என்னை வென்று விட்டீர் ...

உனை போல் பக்தன் எனக்கு இருக்கும் வரை நான் தரித்திரன் அல்ல ... வாழ்க நீ

*பட்டர்* ...

ஐயனே உனை வேண்டி இன்னும் உனையே பெறாதவர்கள் என்றுமே தரித்திரர்கள் தான் ...
ravi said…
*ஓர் அரிய சம்பாஷணை*

*அரங்கனும் பராசர பட்டரும்* 💐💐💐
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 17 started on 6th nov
ravi said…
*பாடல் 7 ... கெடுவாய் மனனே*

(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)
ravi said…
கெடுவாய் மனனே, கதி கேள்,

கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள்

நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.🦚🦚🦚
ravi said…
*மனனே* ... ஏ மனமே,

*கெடுவாய்* ... நீ கெட்டு வீணே ஒழிகின்றாய்,

*கதி கேள்* ... நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக,

*கரவாது இடுவாய்* ...

இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம்
செய்வாயாக,

*வடிவேல் இறை தாள் நினைவாய் ...*

வேலாயுதக்கடவுளின்
திருவடிகளைத் தியானிப்பாயாக,

*நெடு வேதனை* ...

நீண்ட பிறவித் துன்பத்தை,

*தூள் படவே சுடுவாய் ...*

பொடியாக்கி ஞானாக்கினியால்
சுட்டு எரிப்பாயாக

*வினையாவையும் விடுவாய் விடுவாய் ...*

வினைகள் யாவையும்
விட்டு விடுவாய்🙏🙏🙏
Moorthy said…
ஆறுமுகமும் பன்னிரெண்டு கையுடைய முருகப்பெருமானே சரணம் சரணம் 🙏🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 399* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
ராமன் என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என நான் நம்பினேன்!” என்றான் விபீஷணன்.

“எதை வைத்து அப்படி நம்பினாய்?” என்று கேட்டான் லக்ஷ்மணன்.

“உனக்குத் தமிழ் தெரியுமா?” என்று கேட்டான் விபீஷணன்.

“ஆம்! தெரியுமே! நாங்கள் வனவாசத்தில் அகஸ்தியரின் ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் அவரிடம் இருந்து தமிழ் கற்றோம்!” என்றான் லக்ஷ்மணன்.

“தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘யானை வாயில் நுழைந்த கரும்பு போல’ என்று.

யானையின் வாயை ஒரு கரும்பு அடைந்து விட்டால் அது வெளியே வருவதற்கு வாய்ப்பே இல்லை.

ஏனெனில் அதைத் தின்று முடிக்காமல் யானை விடாது.

இங்கே ராமன்தான் யானை.

பக்தர்கள் கரும்பு போல.

கரும்பைக் கண்டால் யானை மகிழ்ச்சியடைந்து அதை இறுகப் பிடித்துக் கொள்வது போலத்

தன் வாயிலைத் தேடிவந்த பக்தர்களை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டு காப்பாற்றியே தீருவான் ராமன்!

இந்த ரகசியம் எனக்குத் தெரிந்ததால் தான் நம்பிக்கையோடு சரண் புகுந்தேன்,” என்றான் விபீஷணன்🙏🙏🙏
ravi said…
இவ்வாறு தன்னைச் சரண் புகுந்த அடியவர்களை யானை கரும்பைப் பிடித்துக் கொள்வது போல இறுகப் பிடித்துக் கொண்டு
கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘ *வ்யாலஹ* ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *93* -வது திருநாமம்.

“ *வ்யாலாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல பிரார்த்தனைகள் அனைத்தையும்
திருமால் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.🤝🤝🤝
Kousalya said…
பக்தர்களை கரும்பாக்கி யானையிடம் சேர்த்த அழகு மிகவும் சிறப்பானது... அருமை... அற்புதம்.. ஆஹா 👌👌👏👏🙏🙏🙏🙏🌹🪷🤲
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 399*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
ஸந்த்⁴யாக⁴ர்மதி³னாத்யயோ ஹரிகராகா⁴தப்ரபூ⁴

தானக-
த்⁴வானோ வாரித³க³ர்ஜிதம்ʼ

தி³விஷதா³ம்ʼ த்³ருʼஷ்டிச்ச²டா சஞ்சலா .

ப⁴க்தானாம்ʼ பரிதோஷபா³ஷ்பவிததிர்வ்ருʼஷ்டிர் *மயூரீ* *ஶிவா* 🦚

யஸ்மின்னுஜ்ஜ்வலதாண்ட³வம்ʼ விஜயதே தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 54..
ravi said…
இந்த ஸ்லோகத்திலும் பரமேஸ்வரனை ஆண் மயிலாகவும் அம்பாளை பெண் மயிலாகவும் வர்ணிக்கிறார் ... 🦚🦚

எப்படி என்று பார்ப்போம்

*மயில்*🦚

ஆண் மயில் பெண் மயிலை பார்த்தால் ஆனந்தப்பட்டு தோகை விரிக்கும்

ஆனந்த நடனமாடும் .. அதனுடன் இணைந்து பெண் மயிலும் ஆடினால்

ஆஹா நமக்கு வேறு சொர்க்கமே வேண்டாம் ...🦚🦚

*பரமேஸ்வரன்*🦚

அம்பாளின் கடாக்ஷ , கற்பக முகத்தை பார்த்து அவள் மதுரமாய் சிந்தும் மந்தஸ்மித்தை அளவில்லாமல் அருந்தி

அந்த களிப்பில் ஆனந்த நடனம் ஆடுகிறான் ஈஸ்வரன்

*மயில்*🦚

சந்தியா வேளையில் அதாவது குறிப்பாக கோடை முடிந்து குளிர் காலம் ஆரம்பிக்கும் வேளை தனில் மயில் மேகம் கண்டு ஆடும் தோகை விரிக்கும்

*பரமேஸ்வரன்*🪷🦚
பிரதோஷம் சந்தியா வேளையில் தான் ..

அப்பொழுது பரமேஸ்வரன் பார்வதி மகிழ அண்டம் மகிழ

முப்பது முக்கோடி தேவர்கள் மகிழ ரிஷிகள் மகிழ

மரம் செடி கொடி பறவை , விலங்குகள் மகிழ

திருமாலும் பிரம்மனும் ஆனந்த கண்ணீர் சிந்த அங்கே நடனம் புரிகிறான் 🪷🦚

*மயில்*🦚

மேகம் இடிக்க மின்னல் வெடிக்க மழை சொரிய மயில் மழையில் நனைந்து ஆடுகிறது

*பரமேஸ்வரன்*🪷🦚

விஷ்ணுவின் மத்தளம் மேகம் உண்டாக்கும் இடி ... மின்னல் வெட்டு தேவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கும் பார்வையின் ஒளி ...

அவர்கள் சிந்தும் ஆனந்த கண்ணீர் பொழியும் மழை ... 🌧️🌧️🌧️

*மயில்*🦚

ஆண் மயில் வேகமாக சிலிர்த்துக்கொண்டு ஆடும் போது ஒரு அதிசயமான ஒளி ஏற்படும் ...

*பரமேஸ்வரன்*🦚🪷

பரமேஸ்வரன் ஆடும் போது ஏற்படும் ஒளி மிகவும் அற்புதமானது

அதை காணவே கோடி கண்கள் வேண்டும் ..

அதை ரசித்து மனம் மகிழ்ந்து போகிறாள் அம்பாள் ..

அவள் மட்டும் தானா ?

அவளுடன் திருமால், பிரம்மன் , திருமகள் சரஸ்வதி

ஏனைய தெய்வங்கள்

முனிவர்கள் முப்பது முக்கோடி தேவர்கள் இன்னும் நிறைய நம்மையும் சேர்த்து ...

மயிலையே கயிலை கயிலையே மயிலை ..

இங்கே பெண் மயூரீ யாய் அம்பாள் ..

ஆனந்தமாய் நடம் ஆடும் கபாலீஸ்வரராய் ஈசன் ..

பூமியில் அவன் நடனம் கண்டுகளிக்க முப்பது முக்கோடி ஜனங்களில் நாமும் ஒருவர் ... 🦚🦚🦚🦚🦚
Moorthi said…
மிகவும் ரம்யமான தோற்றம் 👌👌🙏🙏🙏
கௌசல்யா said…
இவர்களுடன் நாமும் தான் மகிழ்கிறோம்
ravi said…
*Jrsreadsandshares*
*தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்*
1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*

3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*

4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்*

7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *பிராணாயாமம்*

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் *குண்டலினி*

9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*

10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*

11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*
வாழிய நலம்🙏🙏
ravi said…
*கட்டைவிரல் இதயத்தில் கடவுள்!*

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந் தாள்.பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான்.
பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.

பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன், என்றான்.
அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே, சொல்...சொல்.
.உடனே தீர்த்து விடுகிறேன், என்றார்.
ஐயனே! நான் உலகில் வாழ்ந்த காலத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன்.
பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! உண்மையைச் சொல்லுங்கள். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்? என்றான்.
பெருமாள் சிரித்தார்.
பக்தனே! மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே! என்றார்.
சுவாமி! உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது.கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர். புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன். கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான்.நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன. எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை.பகவனாகிய தாங்களே பெரியவர், என்றான்.
இல்லை...இல்லை... நீ சொல்வது சரியல்ல. உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்! அவர்களில் யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்று பதிலளித்தார் பெருமாள்.
எப்படி? என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், தாங்கள் சர்வ வியாபி.வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள். விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்? என திருப்பிக்கேட்டான்.
உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார். அதன் முன்னால், அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார், என்றார். பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
ஏனெனில், பகவான் அவனது மார்புக்குள் சிறுஅளவில் குறுகி நின்றார்.
பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டைவிரல்வாக மாற்றி வைத்துக் கொண்டாயே! எனவே நீ தான் பெரியவன், என்றார்.
பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம். அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்.

**********

ravi said…
*💐💐💐🙏🏻🌹🌹🌹🌺🌺இன்றைய சிந்தனை.*
……………………………………………........................

*''இளமையில் முதுமை..''*
..........................................................

"உங்களுக்கு வயதாகி விட்டது, பழைய மாதிரி ஓட, பளு தூக்க வேண்டாம்" என  நண்பர்களோ, மற்றவர்களோ சொல்லி அதை நாம் கேட்டால், அது நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் மரண தண்டனைக்குச் சமம்.

வயதாவது என்பதன் விரிவுரை என்பது "ஒரு குறிப்பிட்ட வயதைத் தொட்டப் பின் நாம் முதியவர்கள், அந்த வயதைத் தொடாத வரை இளையவர்கள்" என்பது அல்ல.

"இளமையில் வறுமை" மிகக் கொடியது என்பார் அவ்வை. ஆனால் அதைவிடக் கொடியது,  "இளமையில் வரும் முதுமை"

நேற்றைய நிலை 70, 80களில் வரும் வியாதிகள் 50,60 வயதினர்க்கு வருவதைக் கண்டது..

இன்றைய நிலை என்பது 20, 25 வயதில் மாரடைப்பு, ஐந்து வருடக் குழந்தைக்கு சர்க்கரை வியாதி, 30 வயதில் புற்றுநோய் என்பது.

ஆக 70, 80களில் வந்த முதுமை இப்போது 10 வயதிலேயே உடல் பருமனில் துவங்கி விடுகிறது.

பெண்கள் ஏழெட்டு வயதில் பூப்பு அடைகிறார்கள். இதை "இளமையில் முதுமை" எனச் சொல்லாமல் எப்படிச் சொல்ல முடியும்?

அதே சமயம் 90, 100 வயதில் உடல் உறுதியுடன் மாரத்தான் ஓடி சாதனை புரிந்தவர்களைப் பார்க்கின்றோம்.

79 வயதில்  ஒருவர் 200 கிலோ  எடையைத் தூக்கி சாதனை செய்கிறார். 79 வயதில் 200 கிலோ தூக்கும் ஒருவர் முதியவரா? இளைஞரா?

ஆக வயதாவது என்பது ஒரு குறிப்பிட்ட வயதைத் தொடுவதோ, பேரனோ, பேத்தியோ வருவது, ஓய்வு பெறுவது, நரை,திரை, வழுக்கை இவை எல்லாம் அல்ல.

இவை எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான மாற்றங்கள். வயதாவதன் அறிகுறி அல்ல.

10 வயதில் முதுமையும் அடையலாம். 80 வயதில் 20 வயதினரை விட இளமையுடனும் இருக்கலாம்.

நமக்கு உண்மையில் எப்போது வயது ஆகிறது?

வளர்ச்சி இருக்கும் வரை நாம் இளைஞர்கள் தான் வளர்ச்சி நின்றால் முதியவர்கள்.

தினமும் புதியதாகக் கற்றுக் கொள்ளும் வரை வளர்ந்துக் கொண்டே இருக்கிறோம் என்றே பொருள்.

நம் மூளை செல்கள் வளர்கின்றன. உடற்பயிற்சி செய்வதால் நம் தசைகள் வளர்கின்றன. உடல் வலு அடைகிறது..

ஆக மூளையும், உடலும் வளரும் 75 வயது பெரியவரை நாம் இளைஞர் என்று தான் அழைக்க முடியும்.

உடற்பயிற்சி செய்யாத 31 வயது இளைஞரின் உடலும், மூளையும் வளர்ச்சி அடைவதை நிறுத்தி விடுவதால் அவரை முதியவர் என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

ஆக இளமையும் முதுமையும் அவரவர் உடல் மற்றும் மன வலுவால் தீர்மானம் ஆகிறதேயொழிய ஆண்டுகளால் தீர்மானம் ஆவது இல்லை.

அதனால் உங்கள் வயது எதுவாக இருப்பினும் நீங்கள் செய்ய முடியாத செயல்கள், எட்ட முடியாத உயரம் என எதுவுமில்லை.

அந்த நம்பிக்கை இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் இளைஞர் தான்.

அந்த நம்பிக்கை அற்றுப் போய் குப்பை உணவுகள் மற்றும் குப்பை வாழ்க்கைமுறையில் வீழ்ந்தால் 10 வயதிலும் நீங்கள் முதியவர் தான்.

உங்கள் வயது என்ன என்பது உங்கள் கையில் இல்லை..ஆனால் நீங்கள் இளைஞரா?, முதியவரா? என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது..

*ஆம்.,அன்பு நண்பர்களே..,*

ஆரோக்கியமாக வாழ்ந்து, முதுமையை முடிந்தளவிற்கு தள்ளிப் போட நாம் நம்மை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதை செய்து முடிக்க அல்லது சாதித்துக் காட்ட முதலில் மனதில் அதிக உறுதி வேண்டும்.

நம் முயற்சியில் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் விதைக்க வேண்டும்.

பின்பு அதே உறுதியில், நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும்.

இதைத் தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், முதுமையையும் வெல்ல முடியும்.

ஒன்று மட்டும் உண்மை. அதீத மனோபலம் இருந்தால் முதுமையை வெல்லலாம்..

ravi said…
#இங்கேயே_ஒரு_ஸ்ரீரங்கம் -

சென்னைக்கு மிக அருகிலேயே ஒரு ஸ்ரீ ரங்கம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? நான் நான்கு ஐந்து முறை தரிசித்தும் இன்னும் தாகம் தீரவில்லையே.

திருவள்ளூர் ஜில்லா, பொன்னேரி தாலுக்காவில், தேவதானம் என்று ஒரு அருமையான கிராமம். இது வட ஸ்ரீரங்கம் என பெயர் பெற்றது. அங்கு எங்கும் பச்சை பசேல் என்று வயல்கள் இருந்தது முதலில் நான் சென்றபோது. அடுத்து அடுத்து சென்றபோது வயல்கள் நடுவிலே வீட்டு மனைகள் வியாபாரம் பலகைகள் நின்றபோது வயிற்றில் பகீர் என்றது. ஏனென்றால் இங்கே ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை விட அரை அடி நீளம் அதிகமானவர். ஆகிருதியாக சேஷன் மேல் சுகமாக யார் தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டிருக்கிறாரே. எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்கவைப்பவர்களும் இல்லையே. இயற்கை சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு ஆனந்தமாக சயனித்திருக்கிறார். அருகே அவரை தொடும் தூரத்தில் நின்று மணிக்கணக்காக அவரோடு பேசலாம், பாடலாம், யாரும் தடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் யாருமே இல்லை.

தேவதானம் பெருமாள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலானவர். பெருமாள் மேல் அவர் செய்த சேவைக்கு நன்றியாக தேவர்கள் சேர்ந்து அளித்த தானம் இந்த வயல் சூழ்ந்த இடம். தேவதானம். சிறிய கோவில் என்றாலும் சாளுக்கிய ராஜாவால் கட்டப்பட்ட ஆலயம். ஆலயம் வயல்கள் நடுவே ஒரு மணல் திட்டில் அமைந்திருக்கிறது. வளைந்து வளைந்து வண்டியில் செல்ல பாதை அமைத்திருக்கிறார்கள். யாரும் தன்னை தொந்தரவு செய் யக்கூடாது என்ற நோக்கத்தோடு தானே ரங்கநாதர் இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கோவிலை அடுத்து பெரிய வயதான மரங்கள். நிறைய பக்ஷிகள் அவருக்கு இன்னிசை பாட கொடுத்து வைத்திருக்கின்றன. சிறிய சாதாரண நுழைவாசல், அதை தொடர்ந்து பலி பீடம், கொடிமரம், எதிரே பெருமாளை தொழுதபடி கருடாழ்வார். அப்புறம் நம் கண் முன்னே பிரம்மாண்டமான ரங்கநாதர். ஐந்து தலை ஆதிசேஷன். மூன்று மடிப்புகளாக தனது உடலை படுக்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறார். தலைகள் தான் குடை. கிழக்கு நோக்கிய திருமுகம். யோக சயன ரங்கநாதர். எல்லோருக்கும் நெல் அளந்து கொடுத்து களைத்து அளந்த மரக்கால் படியை தலைக்கு வைத்தவாறு பதினெட்டு அடி நீளத்தில் தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.

தாமரைக்கண்ணன். வலது கையை அழகாக மடித்து தலைக்கு கீழே. இடது காய் நீட்டியபடி.
ஒரு ஆச்சர்யமான விஷயம். இந்த ரங்கநாதர் கல்லால் செதுக்கப்பட்டவர் அல்லர். சுதை. திருமேனி முழுதும் சாளக்ராம கற்களால் வடித்தது. என்ன வசீகரமான புன்னகை பூத்த ;முகம். அப்பப்பா. நாள் முழுதும் ரசிக்க ஒரே இடம். பத்மநாபன் நாபியில் ப்ரம்ம தேவன். தாமரை மலர் கையிலேந்திய ஸ்ரீ லட்சுமி தேவி. அவளை அடுத்து நீலோத்பல மலர் ஏந்திய பூமா தேவி. கையில் தம்புராவோ வீணையோ கையில் கொண்டு போற்றி பாடும் தும்புரு, வணங்கிக்கொண்டே இருக்கும் ஆஞ்சனேயர். சுதை சாளக்ராம விக்ரஹம் என்பதால் அபிஷேகம் இல்லை. தைல காப்பு. மினுமினுக்கிறார். பிரகாரத்தில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சந்நிதி. ஸ்தல விருக்ஷம் பாரிஜாதம் பூத்து குலுங்குகிறது. பறிப்பதற்கு ஆளில்லையா? எங்கும் கம்மென்று பாரிஜாத நறுமணம். பெரிய புற்று ஒன்று. உள்ளூர் பக்தர்கள் அடிக்கடி வந்து பால் ஊற்றுகிறார்கள்.

சென்னையிலிருந்து ரெண்டு மணி நேரத்தில் காரில் சென்று அடையலாம்.

மீஞ்சூர் அல்லது அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய மினி பஸ், ஆட்டோ கிடைக்கிறதால் வயல் வழியே சென்று ரங்கநாதனாரை தரிசிக்க முடியும்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

30.சிராத் திருயா ஹம்ஸை: கதம் அபி ஸதா ஹம்ஸ ஸுலபம்
நிரஸ்யந்தீ ஜாட்யம் நியதஜடமத்யைக சரணம் |
அதோஷ வ்யாஸங்கா ஸததம்
அபி தோஷாப்தி மலினம்
பயோஜம் காமாக்ஷ்யா:
பரிஹஸதி பாதாப்ஜயுகலீ 30

ஹம்ஸர்களால் எப்படியோ வெகுநாட்கள்
தேடிக்காணத்தக்கதும், ஜடத்தன்மையைப் போக்குவதும் தோஷங்களால் தீண்டப்படாததுமான காமாக்ஷியின் திருவடி (இரட்டை) எப்போதும் ஹம்ஸங்களால் எளிதில் அடையத்தக்கது. ஜட (ஜல)த்தின் நடுவே மட்டுமிருப்பதும் எப்போதும் தோஷா (மாலைநேரம்) சேர்வதால் வாடுவதுமான தாமரையை ஏளனம் செய்கிறது.

சிலேடை-ஹம்ஸர் பரமஹம்ஸர்கள், அன்னப்
பறவைகள். ஜாட்யம். அஜ்ஞானம் மந்தமான அறிவு. ஜடம் அறிவிலி, குளிர்ந்த நீர், தோஷம் - குறை, தோஷா - அந்திநேரம். திருவடியை ஹம்ஸர்கள் தேடி அலைகின்றனர். தாமரையை ஹம்ஸங்கள் எளிதில் தேடாமலே அடைகின்றன. திருவடி ஜடமாயிருப்பதையே விரட்டும். தாமரை ஜட (ஜல)த்தின் நடுவே மட்டும் இருக்கும். திருவடி தோஷத்தை நெருங்காது. தாமரை தோஷா (மாலைநேரம்)வை தானே வேறுவழியின்றி நெருங்கி வாடும். தாமரையைத் திருவடி எள்ளி நகைப்பது எளிதல்லவா.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆழ்ந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்,

அவருடைய மனைவி ஒரு ஆலோசகரிடம் சந்திப்பை பதிவு செய்தார்.

மனைவி சொன்னாள்...

"அவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார், தயவு செய்து பாருங்கள்.."

மனைவி வெளியில் அமர்ந்திருந்தபோது ஆலோசகர் சில தனிப்பட்ட விஷயங்களைக் கேட்டு தனது ஆலோசனையைத் தொடங்கினார்.

கணவர் பேசினார்,

"நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

குடும்பப் பிரச்சனைகள்,
வேலை அழுத்தம்,
நண்பர்கள்,
குழந்தைகளின் படிப்பு,
வேலை டென்ஷன்,
அடமானக் கடன்,
கார் கடன் போன்ற கவலைகளால் நான் மூழ்கிவிட்டேன்.

நான் விரும்பும் எல்லாவற்றிலும் நான் ஆர்வத்தை இழந்துவிட்டேன்.

உலகம் என்னை ஒரு பீரங்கியாக நினைக்கிறது,

என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்,

ஆனால்

என்னிடம் கார்ட்ரிட்ஜ் அளவுக்கு கூட பொருட்கள் இல்லை.

நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்.."

அப்போது கற்றறிந்த ஆலோசகர் அவரிடம், "நீங்கள் எந்த மேல்நிலைப் பள்ளியில் படித்தீர்கள்" என்று கேட்டார்.

அவர்பள்ளியின் பெயரைச் சொன்னார்.

அந்த ஆலோசகர்,

நீங்கள் அந்தப் பள்ளிக்குச் செல்லுமாறு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.

நீங்கள் பள்ளிக்குச் சென்றதும்,

உங்கள் 'வகுப்புப் பதிவேடு' இருந்தால், உங்கள் சகாக்களின் பெயர்களைப் பார்த்து, அவர்களின் தற்போதைய நல்வாழ்வைப் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கவும்.

அவர்களைப் பற்றி கிடைக்கும் அனைத்து தகவல்களையும் எழுதி ஒரு மாதம் கழித்து என்னை சந்திக்கவும்.

ஜென்டில்மேன் தனது முன்னாள் பள்ளிக்குச் சென்று, பதிவேட்டைக் கண்டுபிடித்து, அதில் உள்ள ஒவ்வொரு பெயரையும் நகலெடுத்தார்.

மொத்தம் 120 பெயர்கள் இருந்தன.

அவர் ஒரு மாதம் முழுவதும் இரவும் பகலும் முயன்றார்,

ஆனால் அவரது வகுப்பு தோழர்களில் 75-80 பேரின் தகவல்களை சேகரிக்க முடியவில்லை.

ஆச்சரியம்,
இதில் 20 பேர் உயிரிழந்தனர்.

7 பேர் விதவைகள்,

13 பேர் விவாகரத்து பெற்றனர்.

10 பேர் போதைக்கு அடிமையானவர்கள்.

6 பேர் நம்பவே முடியாத அளவுக்கு பணக்காரனாக மாறியிருக்கிறார்கள்.

சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,

சிலர் முடங்கி,

சிலர் நீரிழிவு,

ஆஸ்துமா,

இதய நோய் நோயாளிகள்.

அவர்களில் ஒரு ஜோடி கை/கால் அல்லது முதுகுத் தண்டுவடத்தில் காயங்களுடன் படுக்கையில் இருந்தனர்.

சிலருடைய பிள்ளைகள் பைத்தியம் பிடித்தவர்களாக, அலைக்கழிப்பவர்களாக மாறிவிட்டனர்.

ஒருவர் சிறையில் இருந்தார்.

இரண்டு விவாகரத்துக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது திருமணம் செய்ய முயல்கிறார்கள்.

ஆலோசகர் கேட்டார்:- "இப்போது சொல்லுங்கள் உங்கள் மனச்சோர்வு எப்படி இருக்கிறது?"

அவருக்கு எந்த நோயும் இல்லை,

அவர் பசியால் வாடவில்லை,

அவரது மனம் சரியானது,

அவர் துரதிர்ஷ்டவசமானவர் அல்ல என்பதை அந்த மனிதர் புரிந்து கொண்டார்.

அவருடைய மனைவியும் குழந்தைகளும் மிகவும் நல்லவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவருக்கு அதிர்ஷ்டம்.

அவர் ஆரோக்கியமாகவும் இருந்தார்,

அவரால் தினமும் மூன்று வேளை உணவு வாங்க முடியும்.

அவரது சவால்கள் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.

உலகில் உண்மையில் நிறைய துக்கம் இருக்கிறது என்பதையும், தான் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருந்ததை அந்த மனிதர் உணர்ந்தார்.

மற்றவர்களின் தட்டுகளில் (மக்கள் அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம்) எட்டிப்பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்,

உங்கள் தட்டில் உள்ள உணவை அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் விதியின்படி நகர்கிறார்கள்,

நீங்கள் தாமதமாகவோ அல்லது சீக்கிரமாகவோ இல்லை.

உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் நிராகரிப்பீர்கள்?

நல்லதோ
கெட்டதோ
பெரியதோ
சிறியதோ
எல்லாவற்றிலும் கொடுங்கள்,
நன்றி.

சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள்,

ஒருபோதும் நன்றியில்லாதவர்களாக இருக்காதீர்கள்....

******

ravi said…
🌹🌺 "Let us wake up with a bright face and hope to start a new day with the grace of almighty Shri Krishna...! .. A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- -----
🌺🌹 Disciple Shiva said to his Guru Somu, "Master, I want peace." Guru Somu said to him, "Then sacrifice."*

🌺*"What Guru?" Said Shiva. "Sacrifice thoughts. That is thoughts that create anxiety” said Guru Somu.*

🌹*You are saying immediately, disciple "problems create worries". Guru, "How do you get rid of problems?" He said.*

🌺*. “Reduce your needs. "The problems will be reduced," he said.

🌺 ''If there are no problems, there will be no worries. If there is no worry then what is the relief,” he said.*

🌺Disciple Shiva, wishing to be alone and free from any disturbance and disturbance, went to the forest and built a small hut and was doing penance there.*

🌺 While he was closing his eyes and trying to concentrate his mind, some lizards started running on top of him.

🌺He bought and raised a cat to kill them. Then he bought a cow to feed the cat.

🌺 He appointed a woman to take care of the cow. Within a few days Shiva started a family with the woman and fathered many children.

🌺Now build a big hut,*
He is living in the midst of many problems that he has created. Indeed every child is a problem.*

🌺 If we had not increased our needs, we would not have had such a situation.*

🌺There is no penance greater than patience.There is no greater pleasure than contentment.There is no virtue greater than compassion.There is no more powerful weapon than forgiveness...!*

🌺 Even if failures surround. Dispel the darkness with the light of Sri Krishna Bhakti like a lamp that illuminates the darkness and take a step towards the next step of success.

🌺 Not until it's over, but until each of us reaches our goal.

🌺 May this dawn dawn with good for us and a new dawn in each of our lives...!*
🌺 May Almighty Shri Krishna bless us to wake up with a bright face and hope to start a new day...!

🌹valga Vayakam 🌺 🌹 valga Vayakam🌺 🌹valga Valamudan 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹Sarvam Shri Krishnarpanam🌹🌺🌻
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்

பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள் வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!"-அர்ச்சகர்

(ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய பெரியவாளின் தங்கமான மனது)

ஜூன்24-2017-தினமலர்-பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்-திருப்பூர் கிருஷ்ணன்.
தட்டச்சு-வரகூரான் நாரயணன்.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் சன்னதித் தெருவில் ஜுரஹரேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் உண்டு. யாருக்காவது ஜுரம் வந்தால் இங்குள்ள சிவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு சிவனே என்றிருப்பார்கள். ஜுரம் குணமானதும் சுவாமிக்கு மிளகு சாதம் நிவேதனம் செய்வார்கள்.

ஒரு சிவராத்திரி...எப்போதும் சிவராத்திரியன்று காஞ்சி மகாபெரியவர், நான்கு கால பூஜை செய்வது வழக்கம். அவரைத் தரிசிக்கவும், பூஜையைப் பார்க்கவும் இரவில் கூட்டம் அலை மோதும்.அன்று நள்ளிரவு 11 மணி அளவில், பெரியவர் ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குப் புறப்பட்டார்.

அவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒருவர் தவிப்போடு கூறினார்.

"இன்று முழுவதும் நீங்கள் உபவாசம்.(பட்டினி) இரவெல்லாம் கண்விழித்து பூஜை செய்த களைப்பு வேறு.மடத்திலேயே இத்தனை நேரம் சிவபூஜை தானே செய்தீர்கள். உடல் தளர்ந்திருக்கும் நேரத்தில் நடந்து போய் ஜுரஹரேஸ்வரரைத் தரிசிக்கத்தான் வேண்டுமா? ஓய்வெடுங்களேன்!"

பக்தரைக் கனிவோடு பார்த்த பெரியவர்,பதில் கூறவில்லை. நடந்தே கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதைக்கண்டு அங்கு ஏராளமானோர் குழுவினர்எல்லோருக்கும் ஆசி கூறிய பெரியவர் மடத்திற்கு வந்து சேர்ந்தார்.

'மறுநாள்'.....காலை பிரசாதத்துடன், பெரியவரைப் பார்க்க வந்தார் வறுமையால் மெலிந்த தோற்றமுடைய ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர்.

தன்னைக் கோயிலுக்குச் செல்ல வேண்டாமே என வேண்டிய பக்தர் அருகே இருப்பதைக் கண்ட பெரியவர், அர்ச்சகரிடம், "சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?" என்றார்.

"பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள் வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!"-அர்ச்சகர்.

"இல்லாவிட்டால் சுமாராக எவ்வளவு வரும்?"-பெரியவா

"என்ன, ஒரு இருநூறு ரூபாய் தட்சணை கிடைத்தாலே பெரிது".

அந்த ஏழை அர்ச்சகர் முகத்தில் நல்ல வருமானம் கிடைத்தது பற்றிய மகிழ்ச்சி தென்பட்டது.

உடனே பெரியவர் அந்த பக்தரை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தார்.அந்தப் பார்வை ஆயிரம் விஷயங்களப் பேசிற்று.

ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய பெரியவாளின் தங்கமான மனதை புரிந்து கொண்ட பக்தரின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏🌹🌹🌹
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இன்றைக்கு இதை விஷயமாக எடுத்துக்கொள்ள அரசாங்கத்தாருடைய ஒரு அபிப்ராயம்தான் ‘ப்ராவகேஷ’ னாக (தூண்டுதலாக) இருந்தது. ஸமீபகாலமாக, பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும்போது மாணவர்களுக்கு ‘ப்ரேயர்’ இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதில் இரண்டுவித கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. தலைவர்களில் சில பேர் தெய்வபக்தி உள்ளவர்களாகவும், சில பேர் அப்படியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் அபிப்ராய பேதம். அப்புறம் தெய்வபக்தியில்லாதவர்களும் ‘ஸ்கூல் ஆரம்பத்தில் ‘ப்ரேயர்’ என்பது நீண்டகால வழக்கமாக இருந்து வந்துவிட்டதே;இதை எடுத்துவிட்டால் நான் ரொம்பப் பேரின் அதிருப்திக்குப் பாத்திரமாக வேண்டிவருமே!’ என்பதால், ப்ரேயர் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும், இஷ்டப்பட்ட பசங்கள் பண்ணட்டும், இஷ்டமில்லாதவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் இதோடு பிரச்னை தீர்ந்து விடவில்லை. ‘ப்ரேயர்’ என்றால் எதை வைப்பது?
ravi said…
இதுவோ மதச்சார்பில்லாத ஸெக்யூலர் அரசாங்கம். அநேக மதங்களைச் சேர்ந்த பசங்கள் சேர்ந்து படிக்கும்போது எந்த ஒரு மதத்தின் பிரார்த்தனையை மட்டும் வைத்தாலும் தப்பாகிவிடுமே என்று யோசித்தார்கள். முடிவாக இப்போது பசங்கள் எல்லாரும் பாடங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் இரண்டு நிமிஷமோ மூன்று நிமிஷமோ மௌனமாகப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளட்டும் என்று தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.
ravi said…
சின்னக் குழந்தைகளுக்கே இப்படி மௌனத்தை அவர்கள் சொல்வதால், நாமுந்தான் பெரிய குழந்தைகளுக்கும் மௌனத்தைப் பற்றிச் சொல்லாமே என்று தோன்றிற்று.
அவர்கள் மட்டும்தான் மாணவர்களா என்ன? நீங்கள், நான் எல்லோரும் மாணவர்கள்தான். லோகம் என்கிற இந்த பெரிய ஸ்கூலில் வாழ்நாள் பூராவும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய வித்யார்த்திகளாகத்தான் நாம் எல்லாருமே இருக்கிறோம்.
ravi said…
இன்றைக்கு நீங்கள் கற்றுக்கொண்டது மௌன வித்யை. ‘ மோனம் என்பது ஞான வரம்பு ‘என்று பிரம்ம வித்யையாகவே அதைச் சொல்லியிருக்கிறது. ஜன்மா எடுத்ததற்கு இந்த ஜன்மாவில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒன்றுமே செய்யாமல், பேசாமல், நினைக்காமல் இருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதுமாகும். மனஸ் போகிறபடியெல்லாம் நினைப்பது, வாயில் வந்தபடியெல்லாம் பேசுவது என்றால், பிற்பாடு ஜன்மாவின் பலனையே அடையவில்லை என்று துக்கப்படும்படியாகும். அதனால்தான் மனஸை அடக்கி மௌனமாயிருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதே (அப்படிச் செய்வது அப்புறம் இருக்கட்டும்) உங்களுக்கு ஒரு வித்யா லாபம் என்று நினைத்துச் சொன்னேன். மெட்றாஸுக்கு வந்ததில் நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். மௌனத்தால் கிடைக்கிற சாந்த ஸெளக்யம் சாச்வதமாக நிலைத்து நிற்பது;அதாவது எத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் கஷ்டம் தெரியாமல் ஆனந்தமாக இருக்கும்படிப் பண்ணுவது என்று சொல்கிறார்கள். கஷ்டமே இல்லாமலிருக்க வேண்டுமென்றால் முடியாது. கஷ்டம் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் கர்மா கழியும். ஆனாலும் அது கஷ்டமாகத் தெரியக்கூடாது. ஒரே ஒரு ‘அயிட்டத்’ திலாவது இதை நான் தெரிந்து கொண்டதற்கு மெட்றாஸ் வாஸம் ஸஹாயம் பண்ணியிருக்கிறது. இங்கே பூஜை பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்களெல்லாம் பக்தியோடு கும்பலில் தெரிந்து கஷ்டப்பட்டுக்கொண்டு மணிக் கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். பூஜை பார்க்கிறபோது இத்தனை கஷ்டமும் மறந்து உத்ஸாஹம் உண்டாகி பாராயணம், பஜனை என்று ஆனந்தமாக ஆரம்பித்து விடுகிறீர்கள். மற்றவர்களுக்கும் இது நல்லதுதானே என்ற நல்லெண்ணத்தில்தான் இப்படிச் செய்கிறீர்கள். ஆனால் இதனாலேயே ரொம்பவும் சப்தமும், distraction -ம் (கவனச்சிதறலும்) ஏற்பட்டு விடுகிறது என்று சில பேருக்குத் தோன்றவே, “Silence Please!” என்று அட்டைகள் எழுதி மாட்ட ஆரம்பித்தார்கள். நான் அவற்றைக் கழற்றிவிடச் சொன்னேன் ஏன்?’ இப்போதுதான் நமக்கு ஒரு பாடம் படித்துப் பாஸ் பண்ண ஸந்தர்ப்பம் வந்திருக்கிறது. இதை நழுவவிடக் கூடாது’ என்று நினைத்துத்தான் கழற்றச் சொன்னேன். ஈஸ்வராநுக்ரஹத்தில், இப்போது எத்தனை சப்தமிருந்தாலும் நான் பாட்டுக்குப் பூஜையைப் பண்ணிக் கொண்டிருக்கப் பழகி விட்டேன்.
அதனால் இன்று மௌனத்தைப் பற்றிப் பேசினது எனக்கு ஸெளகர்யமாகப் பூஜையின்போது நீங்கள் பேசாமலிருக்கும்படிப் பண்ண வேண்டும் என்ற உத்தேசத்திலல்ல. உங்களுக்கே அதன் பிரயோஜனம் ஏற்பவேண்டுமென்றுதான் சொன்னேன். இத்தனை நாள் உங்கள் இஷ்டப்படி பாடி, பேசி, பஜனை செய்தாகிவிட்டபடியால், இப்போது உங்களைப் பூஜையின்போது மௌனமாக மானஸிகமாகப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளச் செய்வதில் நியாயமிருக்கிறதென்று தோன்றிற்று. சும்மாயிருக்கும் ஸுகத்தின் லேசமாவது உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என்ற ஆசையில் சொன்னேன்.
ravi said…
*விவிக்தாய நமஹ*🙏
தனி ஒருவனாக விளங்குபவர்
ravi said…
துஷ்டதூரா துராசார-சமனீ *தோஷவர்ஜிதா*🙏

குற்றம் குறைகளை போக்குபவள்
ravi said…
*தவறிழைத்தவரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே...!*

*அதனால் உன் நிம்மதியை*
*தொலைத்துவிடுவாய்....!*

*பொறுமையாக காத்திரு,*
*காலம் தன் கடமையை*
*சிறப்பாக செய்து முடித்து விடும்....!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
அம்மா* ...

உன் கருணைக்கு அளவு என்று உண்டோ ...

பிரவாகம் எடுத்து வரும் கங்கை தனை கரம் கொண்டு தடுக்க முடியுமோ ?

உன் காரூணியம் கண்டதுண்டோ அடைக்கும் கதவுகள்

தாழ் போட்டு மூடி விடமுடியுமோ ?

உன் மந்தஸ்மிதம் அது அஸ்தமனம் காணுமோ எங்கேனும் ?

அள்ளித் தருவதற்கோ ஆயிரம் கரங்கள் கொண்டாய் .. ??

ஆடி பாடி ஆனந்தம் காணவோ ஆயிரம் நாமங்களுக்குள் உள் புகுந்தாய் ?

தேடி ஓடி பார்த்தும் தேவதை உன் போல் அழகு இல்லை

உனை அன்றி காண்பதெல்லாம் வெறும் நிழலே கானல் நீரே 🤝🤝🤝
ravi said…
அமைதி என்ற பொருளால்தான் முழு இயற்கையும் உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதன்தான் அவனது முட்டாள்தனத்தால் அவனைச் சுற்றியும், அவனுக்குள்ளும், எல்லாவற்றையும் குலைத்து வைத்திருக்கிறான்.

அவன் இப்போது அமைதியைத் தேடுகிறான்.

விழிப்புணர்வு தான் உங்களுடைய மெய்யிருப்பு நிலை. அதன் மேல் படியும் தூசு தான் மனம் என்பது.

உங்கள் உள் மையத்தில் இருந்துக் கொண்டு உணர்வின் மூலம் மனதை கவனியுங்கள்.

உங்கள் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு கணத்திலும் விழிப்புணர்வு என்னும் அகல் விளக்கு பிரகாசமாக எரியட்டும்.
- ஓஷோ.

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*💐🌹🌹🌹🙏🏻💐💐💐இன்றைய சிந்தனை.*
……………………………………………........................

*''குழந்தைகளுடன் இருக்க நேரம் ஒதுக்குங்கள்..''*
...............................................................

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன், என்ன வேலை இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுடன் சிறிது நேரமாவது, உரையாட வேண்டும்.

அந்தக் குழந்தைகளிடம், அரவணைப்புடன், "இன்று பள்ளியில் என்ன நடந்துச்சு.? என்று அன்பாக விசாரிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைக்கு, பள்ளியில்,ஏதும் மனரீதியான பாதிப்புகள் இருந்தால், உடனே அதைக் கலைய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இப்படி நீங்கள் அன்பாகப் பேசினாலே போதும். குழந்தைகள், எப்போதும் உங்கள் பக்கம் தான்.

குழந்தைகளுடன் இருக்க அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது, பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதைச் சொன்னால் அம்மா அடிப்பார்கள், என்ற பயம் இல்லாமல், எதைப் பற்றியும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

அப்போது தான் வெளியில் அவர்களுக்கு நடக்கும் கெட்ட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் குழந்தை ஒரு தவறு செய்து விட்டால் உடனே கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்பதில்லை.

அப்படிச் செய்தால், அடுத்த முறை தான் செய்த தவறை உங்களிடமிருந்து மறைக்கப் பார்ப்பார்கள்.

அதற்குப் பதில், அந்தத் தவறைச் செய்வதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்போது தான் அடுத்த முறை அந்தத் தவறை செய்யத் தயங்குவார்கள்.

வீட்டில் பெற்றோர்கள்,  குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.

அன்புமதி ஒரு 10 வயது சிறுவன். அவனது தந்தை தனது மகனுடன் நேரத்தை செலவிட முடியாத மிகவும் ஓய்வு இல்லாத தொழிலதிபர்.

அன்புமதி தனது தந்தையின் அரவணைப்புக்கு ஏங்கினான். அவன் தனது நண்பர்களைப் போலவே வெளியில் சென்று தந்தையுடன் விளையாட விரும்பினான்.

ஒரு நாள், மாலையில் தனது தந்தையை வீட்டில் பார்த்த மகன் ஆச்சரியப்பட்டான். அப்பா, உங்களை வீட்டில் பார்ப்பது ஒரு பெரிய ஆச்சரியம்" என்று கூறினான்.

'ஆமாம் மகனே, என் அலுவலகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே நான் வீட்டிற்கு வந்து விட்டேன்..ஆனால், இரண்டு மணி நேரம் கழித்து நான் விமான நிலையம் செல்ல வேண்டி இருக்கிறது" என்று அவனது தந்தை பதில் அளித்தார்.

அன்பு சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்னர் அவன்,

'அப்பா, நீங்கள் ஒரு நாளில் அல்லது அரை நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

தந்தை குழப்பம் அடைந்து மகனிடம்,

'நீ ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?" என்று கேட்டார்.

ஆனால் விடாப்பிடியாக 'ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் அப்பா என்று மீண்டும்,மீண்டும் கேட்டான்.

ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 ஆயிரம் இருக்கும்" என்று பதிலளித்தார்

அன்பு தனது அறைக்கு ஓடி, தான் இதுநாள் வரை சேமித்து வைத்த  உண்டியலுடன் கீழே வந்தான்.

'அப்பா, எனது உண்டியலில் 20 ஆயிரம் சேர்த்து இருக்கிறேன்.

எனக்காக இரண்டு மணி நேரத்தை ஒதுக்க முடியுமா?நான் கடற்கரைக்குச் சென்று நாளை மாலை உங்களுடன் இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன்.

இதை உங்கள் அட்டவணையில் சேர்க்க முடியுமா?" என்று கேட்டான். தந்தை பேச்சற்று இருந்தார்....! 
குழந்தைகளுடன் நேரம் கிடைக்கும் போது அவர்களுடன் உரையாடுங்கள். அவர்களின் விரும்பு, வெறுப்பு என்ன என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். உறவுகள்,உறவு முறைகளை எடுத்து சொல்லுங்கள்.. குழந்தைகளுடன் சிறிது நேரமாவது விளையாடுங்கள்..

*ஆம்..,நண்பர்களே..*

*நீங்கள், எவ்வளவு செலவு செய்து, குழந்தைக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தாலும், நீங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்கும் நேரம் ஒன்று தான், பணம், பொருள் எல்லாவற்றிலும் உயர்ந்தது"..*

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*


*CHAGRIN*

*(பெரும் ஏமாற்றம்)*

meaning..... a feeling of being frustrated or annoyed because of failure or disappointment....


1.   Much to my *chagrin*, I failed my math test.


2.   To the viewer’s *chagrin,* the final episode of the television series ended with several unanswered questions.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
*❖ 33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி* =

காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள்💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

வைதிகக் குடுக்கைகள், மடிஸஞ்சிகள் என்று மற்றவர்கள் திட்டுகிற மாதிரி சிலர் ஜீவகாருண்யம் இல்லாமல் வெறுமே கர்மா, பக்தி என்று பண்ணிக் கொண்டிருந்தால் அது ஸரியில்லைதான். ஆனாலும்கூட இவர்கள் உணர்ந்தாலும், உணராவிட்டாலும், இந்த யாகயஜ்ஞம், திவஸம், தர்ப்பணம், பூஜை எல்லாமும்கூட, அததன் உள்ளர்த்தத்தைக் கவனித்தால் ஸோஷல் ஸர்வீஸ்தான். லோகத்தின் ஸமஸ்த ஜீவராசிகளுக்கும் க்ஷேமத்தை உண்டாக்கிக் கொடுப்பதுதான் யாக மந்த்ரங்கள், சடங்குகள் ஆகியவற்றின் தாத்பர்யம்.
ravi said…
இந்த லோகத்தில் உள்ள ஜீவராசிகளில் செத்துப்போன நம் பித்ருக்களும் எங்கேயோ பிறந்துதானே இருக்கிறார்கள்?அவர்கள் எந்த இடத்தில் எந்த ரூபத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு க்ஷேமம் உண்டாவதற்குத்தான் பித்ரு தேவதைகளுக்குத் தர்ப்பணாதி, சிராத்தம் முதலானதுகளைச் செய்கிறோம்.

ravi said…
லோக க்ஷேமத்துக்காவேதான் பகவானைப் பூஜை பண்ணுவதும்.”ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய” அதாவது, உலகமெல்லாம் கஷ்டம் தீர்ந்து ஸந்தோஷமாக இருக்க ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவைப் ப்ரார்த்தித்துத்தான் பூஜையை ஆரம்பித்து, முடிக்கிறபோது ”லோகா:ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” அதாவது, வையகமும் துயர் தீர்கவே!’ என்று முடிக்கிறோம்.

ravi said…
யோகம், ஞானம் என்று ஜனங்களையே விட்டுவிட்டு எங்கேயோ குகையில் உட்கார்ந்துகொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறானே அவன் கதை என்ன? ‘இப்படிப்பட்டவனுக்கு பிக்ஷை போடாதே. அவன் ஸோஷல் ஸர்வீஸ் என்ன செய்கிறான்? ஸமூஹத்தைப் பிடுங்கி தின்கிறான் (parasite) என்றெல்லாம்கூட இந்த நாளில் கோஷம் போடுகிறார்கள். ஆண்டி, பண்டாரம், ஸந்நியாஸி என்று கிளம்பியிருப்பவர்களில் வேஷம் போடுபவர்களும் இருப்பார்கள்தான். அது வேறு விஷயம். ஆனால் வாஸ்தவமாகவே ஒருத்தன் ஆத்ம அபிவிருத்தி அடைவதற்காக ஏகாந்தமாக, ஸமூஹத்தை விட்டு, ஒரு தொழிலும் செய்யாமல் இருக்கிறான் என்றால் அவன் ஸமூஹத்துக்குப் பிரயோஜனம் இல்லாதவன்தானா?

ravi said…
இப்படி நினைப்பது முழுப் பிசகு. ஒவ்வொரு ஜீவனும் தன் மனஸை சுத்தப்படுத்திக்கொண்டு, அதை ஈஸ்வரனோடு ஈஸ்வரனாகச் சேர்த்துக் கறைக்கிற அளவுக்கு உயர்வதற்காகப் பாடுபடத்தான் வேண்டும். மற்ற ஜீவராசிகளுக்குச் செய்கிற பரோபகாரங்கூட அவர்களையும் கடைசியில் இப்படி ஆத்மார்த்தமாக உயர்த்தாவிட்டால், அத்தனை உபகாரத்தாலும் ப்ரயோஜனம் ஒன்றுமில்லை. ஆகையினால் நம்மில் ஒருத்தன் அப்படி உயரப் பாடுபடுகிறான் என்றால் அதுவே நமக்கு ஸந்தோஷம் தரத்தான் வேண்டும். நம் மாதிரி ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டு கஷ்டப்படாமல், இதிலிருந்து தப்பிக்கிறதற்கு ஒரு தீரன் முயற்சி பண்ணுகிறான் என்றால் அவனைப் பார்த்து நாம் பெருமைதான் படவேண்டும். அவனுடைய சரீர யாத்திரை நடப்பதற்கு அத்யாவச்யமான ஸஹாயத்தை நாம் செய்து கொடுக்கத்தான் வேண்டும். அப்புறம் அவன் நல்ல பக்குவம் அடைந்து யோக ஸித்தனாக, அல்லது பூர்ண ஞானியாக ஆகிவிட்டான் என்றால், அதன்பின்னும் அவன் கார்யத்தில் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணவே வேண்டாம். தன்னாலேயே அவனிடமிருந்து ஜனங்களின் தாபங்களையெல்லாம் தீர்க்கிற சக்தி வெளிப்படும்; radiate ஆகும். ஜனங்களின் மனஸுக்குத் தாப சாந்தி உண்டாக்குவதை விடப்பெரிய ஸமூஹ ஸேவை எதுவும் இல்லை. ஒரு மஹானின் தர்சனத்தால் கிடைக்கிற இந்த சாந்தி, விச்ராந்தி தாற்காலிகமாக இருந்தால்கூட, அது பெரிய ஸோஷல் ஸர்வீஸ்தான். அப்படிப் பார்த்தால் எந்த ஸோஷல் ஸர்வீஸ்தான் சாச்வதமாயிருக்கிறது? எல்லாமே தாற்காலிகம்தான். தர்ம ஆஸ்பத்திரி வைத்து ஒரு வியாதிக்கு மருந்து கொடுத்து ஸரி பண்ணினாலும் அப்புறம் இன்னொரு வியாதி வரத்தான் வருகிறது. அன்ன சத்திரம் வைத்து ஒருவேளை சாதம் போட்டால், அடுத்தவேளை பசிக்கத்தான் பசிக்கிறது. அதனால் இந்த லோகத்தில் எல்லாமே தாற்காலிகம்தான்.

ஒருத்தன் பூர்ணத்வம் அடைந்துவிட்டால் மற்றவர்களின் மனஸின் கஷ்டத்தைப் போக்குவது, அதை சுத்தப்படுத்துவது தவிர, அவன் அவர்களுடைய லெள‌கிகமான வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றுகிற அநுக்ரஹ சக்தியும் பெற்றுவிடுகிறான்.

எந்த விதி (rule) இருந்தாலும், அதற்கு ஒரு விலக்கு ( exception ) இருக்கத்தான் செய்யும். அம்மாதிரி அத்யாத்ம மார்க்கத்தில் போகிறவர்களை – பக்தி, யோகம், ஆத்ம விசாரம் என்று தீவிரமாக இருக்கிறவர்களை – ஸோஷல் ஸர்வீஸில் இழுக்கக்கூடாது; அவர்களை ‘பாரஸைட்’ என்று திட்டக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.
ravi said…
காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது.

காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் குமரகுருபரர் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார்.

மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார்.

"கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.... எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்." - சொல்லிவிட்டு எழுந்து போனார்.

ravi said…
அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது.

ஞானிகள் என்போர்...
எளிமையானவர்கள் எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள்.

எதிரே இருப்பவன் அரசனோ
ஆண்டியோ இரண்டும் ஒன்றுதான் அவர்களுக்கு .

எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை , ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும் , ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.

ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது .

ravi said…
மறுநாள்... விடிந்தது.

காசி தேசத்துச் சான்றோர்கள், அவையில் கூடினார்கள்.

பாட்டுப் பாடுகிற வித்வான்களும்,
ஆடல் மகளிரும்,
அரபியில் கவிதை சொல்கிறவர்களும்,
அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்று கூடினார்கள்.

எங்கே அந்த மதுரைக் கிழவர்...?"
- நவாப் விசாரித்தார்.

அவர் அரபி படிக்க போயிருக்கிறார்.."
- யாரோ சொல்ல, சபை சிரித்தது.

"அப்படியா... ஆயுசுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்..."
- மறுபடி சபை சிரித்தது.

"
ravi said…
அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்." - யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.

"அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே... வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."

"இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில், நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்.." - ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.

"சில சவுக்கடிகள்..." அவருக்கு உபயம் என உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான்.

மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.

"ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."

"
ravi said…
வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார்.

நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா..."

"ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.

வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.

குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார்.

* அவர் நரைத்த தலைமுடியும்,

* தலைப்பாகையும்,

* வெள்ளை வெளேர் என்று
வயிறு வரை நீண்ட தாடியும்,

* இறையை உணர்ந்த
உறுதியான முகமும்,

* போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும்...

அவரையும் சிங்கம்போல் காட்டின ,

ravi said…
அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன.

நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.

"என்ன இது..." கத்தினான்.

"நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்!!"

"இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."

"இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா...

சிங்கங்கள் சபை முழுவதும் சுற்றித்திரிந்தன .

நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்

சபை வெறிச்சோடிப் போயிற்று.
துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று.

உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.

குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன.

நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.

குமரகுருபரர் அவனையே
பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவர் கண்கள் சிரித்தன ,
முகச் சுருக்கங்கள் சிரித்தன ,
இதழ்க் கடைகள் சிரித்தன ,
காது வளையங்கள் சிரித்தன ,
அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.

நவாப் சலாம் செய்தான்.

''உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம் செய்தான்.

"தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் .

"நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே....

நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..! "

ஆமாம்! பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று , ?

"இறையருள்."

எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."

உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு.

"ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"

ஒரு நொடியில் கொடுத்தான்.

எப்படி ,,, ?

சகலகலாவல்லி மாலை
என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.

மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.

கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..."

நவாப் பணிவாகப் பேசினார்.

கங்கைகரை ரகசியங்கள்,
எழுத்துச்சித்தர் பாலகுமாரன்👌👌
ravi said…
*அகங்காரம் கொண்ட பக்தியை விட, அன்புள்ளம் கொண்ட எளியவர்களின் பக்திக்கே இறைவன், இறங்கி அருள்வான். !*

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், உபன்யாசம் செய்து கொண்டிருந்தார், அக்கோவில் அர்ச்சகர். அதை, ஏராளமானோர் கேட்டபடி இருக்க, சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்த பூந்தானம் என்ற பக்தர், அதைக் கேட்டு, அப்படியே மெய் மறந்து நின்றார். நிகழ்ச்சி முடிந்து வெளி வந்த அர்ச்சகர், பூந்தானத்தை பார்த்து நலம் விசாரித்தார்.
அவருடைய பேச்சில் ஞானம், பக்தியை விட, ஏளனமும், கர்வமும் தலைதூக்கி இருந்தன. அதை புரிந்து கொள்ளாத பூந்தானம், 'உத்தமரே... அவ்வப்போது நானும் கண்ணனை தியானம் செய்கிறேன்; இருப்பினும், கண்ணனின் முழு வடிவத்தை தியானிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். நல்லதொரு வழியை காட்டுங்கள்...' என, பணிவோடு வேண்டினார்.
அவருடைய அப்பாவித்தனம், அர்ச்சகரின் வித்யா கர்வத்தை தூண்ட, 'பூந்தானம்... நீ அந்த பரந்தாமனின் பக்தன் தானே... அவனை எருமை மாடு வடிவத்தில் கூட தியானிக்கலாமே...' என, விளையாட்டாக கூறினார்.
அதை, அப்படியே நம்பி, கண்ணனை எருமை மாடு வடிவத்திலேயே தியானிக்க துவங்கினார், பூந்தானம். அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு, எருமை மாடு வடிவத்திலேயே காட்சி கொடுத்தார், கண்ணன்.
ஒருநாள், குருவாயூர் கோவில் உற்சவத்தின் போது, உற்சவரை வெளியே கொண்டு வர முயன்றனர்; முடியவில்லை. படிக்கட்டில் ஏதோ இடிப்பதை போல இருந்தது. ஆனால், கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.
அப்போது, சற்று தூரத்தில் இருந்த பூந்தானத்தின் கண்களுக்கு, உற்சவ மூர்த்தி, எருமை மாடு வடிவத்தில் காட்சியளித்தார். அம்மகிஷத்தின் கொம்பு இடிப்பதாலேயே உற்சவர் வெளிவர முடியவில்லை என்பது, பூந்தானத்திற்கு புரிந்தது.
அவர் உடனே, 'சற்று வலது கை புறமாக சாய்த்து எடுங்கள்; அங்கு தான் கொம்பு இடிக்கிறது. அதனால் தான், சுவாமியால் வெளி வர முடியவில்லை...' என்றார்.
அவர் சொல்வது புரியாவிட்டாலும், அப்படியே செயல்பட்டனர்; உற்சவர் வெளியே வந்து விட்டார். அதேசமயம், கர்ப்பகிரகத்தில் சுவாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சருக்கு, இறைவன், எருமை மாடு வடிவில் காட்சியளித்து, 'என் பக்தனான பூந்தானம், இவ்வடிவில் தான், என்னை தியானித்து வருகிறான்...' என, விவரித்தார்.
அர்ச்சகருக்கு, கண்ணனின் கருணையும், அக்கருணைக்கு பாத்திரமான பூந்தானத்தின் தூய்மையான பக்தியும் புரிந்தது. வேகமாக வெளியில் வந்து, பூந்தானத்தின் திருவடிகளில் விழுந்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போதுதான், மற்றவர்களுக்கு, பூந்தானம் ஏன் கொம்பு இடிக்கிறது என்று கூறினார் என்பதன் காரணம் புரிந்தது.

தூய்மையான பக்தி, தெய்வத்தையும் அசைக்கும்

ravi said…
_*“ நரசிம்ம விரதம் “*_


நரசிம்மரை தொடர்ந்து
விரதம் இருந்து வணங்கி
வழிபட்டு வந்தால்
8 திசைகளிலும் புகழ்
கிடைக்கும்.

பக்தியுடன் விரதம் இருந்து
வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

நரசிம்மன் என்றால்
‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள்.
மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம
அவதாரம் உக்கிரமானதாக
கருதப்பட்டாலும்,
பக்தர்கள் அவரை விரும்பி
வணங்குகிறார்கள்.

நரசிம்ம பகவானை பக்தியுடன்
மனம் ஒன்றி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும்.

ஶ்ரீ நரசிம்மரை - ‘மருத்யுவேஸ்வாகா’ என்று
கூறி வழிபட்டால் -
மரண பயம் நீங்கும். ‘

‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ,
‘பக்தர்கள் உரிமையோடு
அடித்து கேட்ட மறுவினாடியே
உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

நரசிம்மர் வீற்றிருக்கும்
ஆலயங்களில் ஆஞ்சநேயர்
நிச்சயம் இருப்பார்.
நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார்.

சுவாதி நட்சத்திரத்தன்று அவரை விரதம் இருந்து வழிபடுவது நல்ல பலனை தரும்.

மேலும் விஷ்ணுவை பற்றி அறிய https://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 412* 🙏🙏🙏started on 7th Oct 2021

160
ravi said…
*160 *निश्चिन्ता - நிச்சிந்தா* -

கவலை என்றால் என்ன என்று அறியாதவள்.

நமது வாழ்நாளின் பெரும்பகுதியை ஏதோ ஒரு கவலை, மன வியாகூலத்தில் கழித்து வாடுகிறோமே.

அம்பாளை சரணடைந்தால் இதெல்லாம் கிட்டே வருமா?

அம்பாளுக்கு என்ன கவலை இருக்கிறது.

ஸ்ரீ லலிதாம்பிகைக்கு சகலமும் பொறுப்பேற்ற வாராஹி , சியாமளா இருக்கிறார்களே 🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 8 ...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் 9*💐💐💐
ravi said…
आदृतकाञ्चीनिलयमाद्यामारूढयौवनाटोपाम् ।
आगमवतंसकलिकामानन्दाद्वैतकन्दलीं वन्दे ॥ ९॥

9. Aadrutha Kanchi nilayam aadhyaam aarooda youvana topaam,
Aagama vathamsa kalikam, aananda adwaitha kandhalim vande.

ஆத்றுதகாஞ்சீனிலயமாத்யாமாரூடயௌவனாடோபாம் |

ஆகமவதம்ஸகலிகாமானன்தாத்வைதகன்தலீம் வன்தே ||9||
ravi said…
பெண்கள் சிரத்தில் மலர் மொட்டுகளை அணிவது வழக்கம்.

காஞ்சி வாஸினி அம்பாள் சிரத்தில் எது மொட்டு தெரியுமா?

வேதங்களின் சாரமான உபநிஷத்துக்கள் தான் அவள் சிரத்தில் பூஷணம்.

சிரோபூஷணம். அம்பாள் ப்ரபஞ்சம் தோன்ற ஆதி காரணி.

யௌவனம் மிக்கவள்.

அத்வைதம் தரும் ஆனந்த ஸ்வரூபிணி.🪷🪷🪷🪷🪷
ravi said…
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி,

மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,

அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்,

நின்கண் வேட்கை எழுவிப்பனே.

-திருவிருத்தம்
ravi said…
*கண்ணா*

உன்னை வணங்க கர்மம், ஞானம், பக்தி என்ற யோகங்களை உருவாக்கியவன் நீயே!

பல (வைணவ, சைவ, புத்த, சமண, .. ) மதங்களையும் உருவாக்கி,

உலக மாந்தர் (உன்னையே அந்தராத்மாவாகக் கொண்ட)

பலவகைப்பட்ட தெய்வங்களையும் வழிபடுமாறு செய்வித்தாய்!

நின் புகழானது, வடிவானது, எங்கும் எப்போதும் நிலைத்திரும்படி செய்தாய்!

முழுமுதற்கடவுளான உன்னை தலைவனாகக் கொண்ட யான்,

பிற சமயத்தவர் மீது பிணக்கின்றி, உன் மேலேயே என் பக்தியை பெருக்கிய வண்ணம் இருப்பேன் *கண்ணா*🪷🪷🪷
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி* =

காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள்💐💐💐
ravi said…
அம்மா* ...

உன் கருணைக்கு அளவு என்று உண்டோ ...

பிரவாகம் எடுத்து வரும் கங்கை தனை கரம் கொண்டு தடுக்க முடியுமோ ?

உன் காரூணியம் கண்டதுண்டோ அடைக்கும் கதவுகள்

தாழ் போட்டு மூடி விடமுடியுமோ ?

உன் மந்தஸ்மிதம் அது அஸ்தமனம் காணுமோ எங்கேனும் ?

அள்ளித் தருவதற்கோ ஆயிரம் கரங்கள் கொண்டாய் .. ??

ஆடி பாடி ஆனந்தம் காணவோ ஆயிரம் நாமங்களுக்குள் உள் புகுந்தாய் ?

தேடி ஓடி பார்த்தும் தேவதை உன் போல் அழகு இல்லை

உனை அன்றி காண்பதெல்லாம் வெறும் நிழலே கானல் நீரே 🤝🤝🤝
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
புருஷோத்தமஹ ன்னு வேதத்துலயும், இந்த உலகத்துல பகவான் அவதாரம் பண்ணி ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்த போது உலகமே இவன்தான் புருஷோத்தமன்னு கொண்டாடினா.

அந்த பகவான் மூவுலகத்தையும் ஒரு குடைக்கு கீழ வெச்சு ஆண்டவன். ஆள்பவன்.

நாம வழிபட வேண்டிய ஒரே எஜமானன் அவன் தான்.

அவனை வழிபட்டால், அவனோட காரியத்தைப் பண்ணினா என்ன கொடுப்பான்னா, ‘ *ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி’ –* அவன் தன்னை வழிபடுகிறவர்களுக்கு தன்னுடைய ஸ்தானத்தையே கொடுதுடறான்.

தன்னையே கொடுக்கறான்.

அப்பேற்பட்ட அந்த நாராயணன் நமக்கு எஜமானனாக ஸ்வாமியாக விளங்கும்போது ‘ *யம் கஞ்சித்புருஷாத⁴மம்’* –

இவர் புருஷோத்தமர் பகவான். நாம் ஒரு புருஷர்களுக்குள் அதமனா, கர்வியா, ரொம்ப ராஜஸ தாமஸ குணங்கள் நிறைந்தவனா உள்ள ஒருத்தன் கிட்ட ‘ *கதிபயக்³ராமேசம்’* – ஏதோ ஒரு கிராமத்துக்கு, இரண்டு கிராமத்துக்கு தலைவனா இருப்பான்.

எவ்ளோ பெரியவனா இருந்தா என்ன?

அவனுடைய செல்வமேல்லாம் த்ரிஜகத்துக்கும் தலைவனான, லக்ஷ்மிபதியான பகவானுடைய செல்வத்துக்கு நிகராகுமா? 🙏🙏🤝
Oldest Older 201 – 309 of 309

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை