ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 23. பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: பதிவு 30

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 30

23 पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः - பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ:

இன்று நாம் பார்ப்பது 23வது திருநாமம் .. மிகவும் அருமையான நாமம் 🌸🌸🌸🌸🌸

23 पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः - பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ:


பத்ம ராக கல்லை இழைத்து கண்ணாடியாக்கினால் எப்படி வழவழவென்று ஒளி வீசுமோ 

அது போல் இருக்கும் கன்னங்களை உடையவள் அம்பாள்.👍👍👍👍👍👍👍👍👍👍

பத்மராக = மாணிக்கத்தின் வகை 

ஷிலா = (மாணிக்க) கற்கள் 

தர்ஷ = பார்வைக்க

பரிபாவி = மனத் தோற்றம் 

கபோல = கன்னம்

பத்மராக ரத்தினத்தை போல ஜொலிக்கும் கன்னங்கள் கொண்டவள்

இப்படி ஓவ்வொரு நாமமாக வாக்தேவிகள் அம்பாளை வர்ணிப்பதை முழுசா கேட்க நம் அபிராமி பட்டருக்கு பொறுமை இல்லை .. 

எப்போ நாம் வர்ணித்து முடிப்பது இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்றே நினைத்தாரோ என்னவோ ... ஒரே வரியில் பாடி விட்டார் ரத்ன சுருக்கமாய் 

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகி சிவந்த பதாம் புயத்தாள் 🙏🙏🙏



பத்மராகத்தால் செய்யப்பட்ட கண்ணாடி போன்று பளபளக்கும் கன்னங்களை உடையவள். 

பத்மராகம் என்பது ரத்தினக் கற்களில் ஒன்று. 

சிவப்பு நிறமாகவும் தெளிவாகவும் இருக்கும். அதுபோன்றே அம்பாளின் கன்னங்களும் பளபளக்கின்றன. 

நிர்மலமாக உள்ளன. 


                                                      💐💐💐💐💐💐💐💐💐💐

Comments

ravi said…
🌹🌺" *ஒவ்வொரு க்ஷணமும் என்னை நினைக்க முயற்சி செய் ..! என்ற ஸ்ரீ கிருஷ்ணன்.. விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனிடம் பூலோகத்தில் மக்கள் மோக்ஷம் அடைய கூறும் உபாயம் பற்றி காண்போம்

🌺கிருஷ்ணன் : நீ தியானம் செய்வது, பூஜை செய்வது மந்திரம் ஓதுவது, எனக்காக கோவில் கட்டுவதெல்லாம் ஒரு புறம். அதெல்லாம் உன்னை மேம்படுத்தும். உன்னை என்னை நோக்கி இழுக்கும்.

🌺ஆனால் இந்த கண்ணன் உன்னிடம் ஒன்றை விரும்புகிறான். அது பேராசை என்று நினைத்துக்கொண்டாலும் சரி.

🌺அர்ஜுனன் : அது என்ன கண்ணா?

🌺கிருஷ்ணன் : நீ என்னை நினைத்து எனக்காக விடும் ஒரு சொட்டு கண்ணீர்தான் அது. அந்த நேரத்தில் நான் மூவுலகத்தையும் மறந்து விடுவேன். ஏன் என்னையே மறந்து விடுவேன்.

🌺அர்ஜுனன் : கிருஷ்ணா, அத்தகைய வரம் எனக்கு எப்போது கிடைக்கும்?

🌺கிருஷ்ணன் : ஒரு காதலன் எப்படி காதலியை காதலிக்கிறாளோ அப்படி காதலிக்க வேண்டும். அவளை பார்க்க வேண்டும் என்று எப்போதும் துடிப்பான்.

🌺ஒவ்வொரு க்ஷணமும் நினைப்பான். அவள் இல்லையென்றால் உயிரே இல்லாதது போல் கருதுவான். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகும்.

🌺கோபிகைகள் என்னை அப்படித்தான் காதலித்தனர். நீயும் ஒவ்வொரு க்ஷணமும் என்னை நினைக்க முயற்சி செய். உன் கண்களிலும் கண்ணீர் பெறுக ஆரம்பிக்கும்.

🌺என்னை பார்க்கும்போதும் நினைக்கும் போதும் உன் கண்களில் கண்ணீர் வருமாயின் அந்த க்ஷணமே இந்த பூலோகத்தில் நீ மோக்ஷ நிலையை அடைந்து விட்டாய்.

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺🌻


ravi said…
*வ்ருஷபாய நமஹ*🙏

அடியார்களின் மேல் அருள் மழை பொழிபவர்
ravi said…
துர்லபா *துர்க்கமா* துர்க்கா து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா🙏🙏

சத்தியமான வழியில் எளிதில் அடைய முடிபவள்
ravi said…
🌹🌺 "Try to think of me every moment ..! A simple story explained by Sri Krishna 🌹🌺
-------------------------------------------------- -----
🌺 Let's see about the trick that Sri Krishna tells Arjuna to help people achieve salvation in the world

🌺Krishnan: You are meditating, doing pooja, reciting mantra, building a temple for me is one side. It will improve you. will draw you to me.

🌺 But this Kannan wants something from you. Even if you think it's greed.

🌺Arjuna: What is it dear?

🌺Krishnan: It is a drop of tears you shed for me thinking of me. At that time I will forget the three worlds. Why would I forget myself?

🌺Arjuna: Krishna, when will I get such a boon?

🌺Krishnan: Love as a lover loves his beloved. Always eager to see her.

🌺 He thinks every moment. If not for her, he would consider himself as if he did not exist. Tears well up in the eyes.

🌺 Gopikais loved me like that. You also try to think of me every moment. Tears will begin to form in your eyes.

🌺 If tears come to your eyes whenever you see and think of me, that moment you have reached the state of moksha in this world.

🌹Valga Vayakam 🌺 🌹 Valga Vayakam🌺 🌹Valga Valamudan 🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹Sarvam Shri Krishnarpanam🌹🌺🌻
ravi said…
💐💐💐🙏🏻🌹🌹🌹🌺🌺
*இன்றைய சிந்தனை.*
……………………………………………......................

*'' முயற்சியைக் கை விடாதீர்கள்..''*
......................................................

வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும்....

சிலர் கடுமையாக முயற்சி செய்தும்  வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது இல்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியைப் பிடித்து, ஒரு கண்ணாடிப் பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள்.அந்தக் கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்தப் பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்.மேலே உள்ள கண்ணாடியில் இடித்து,“ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்துப் போகணும் என்று தீர்மானித்துக் கொள்ளும்.

அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக,வெளியே செல்ல முயற்சி செய்யும். அதே அடி.அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.

சரி, இதுதான் நமது வாழ்க்கை. இந்தக் கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.

ஆக, இந்தக் கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும்.

அதோடு கூண்டைத் தாண்டி வெளியே செல்லும் முயற்சியைக் கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கிப் பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.

இந்தத் தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலியும் இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.

அனைத்துப் பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்தத் திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொண்டு அந்தக் கூண்டிலேயே தன் மீதிநாள் வாழ்க்கையை முடித்து விடும்.

இப்படி, அந்தப் பூச்சி, எந்தப் பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதைப் பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.

ஆனால், அந்தப் பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கும்

அந்தப் பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, முயற்சி செய்து இருந்தால் அந்த ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்..

*ஆம்.,அன்பு நண்பர்களே..,*

தொடர்ந்து முயற்சி செய்வதைக் கைவிட்டு விட்டு., நம்மில் பலர், இந்தப் பூச்சியை போன்று தான் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்...

தொடர்சியாக முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவார்.எப்போதும் முயற்சியை மட்டும் விட்டு விடக்கூடாது

காலம் கடந்தாலும் பொறுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

முயற்சி செய்யுங்கள் ''வெற்றி'' கிடைக்கும்.
முயற்சி செய்யுங்கள் ''தோல்வியும்'' கிடைக்கும்.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.,

'தோல்வியும் வெற்றியாக'' மாறும்....!

பகிர்வு - தகவல் உலா

💐💐💐💐💐💐💐


ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

*Good morning friends*


*Today's word ✍🏻*


*INSINUATION*

*(தூண்டுதல்)*

meaning.....  a suggestion or hint that is usually indirect and negative in nature....


1. The innocent suspect was insulted by the officer’s *insinuation* that he had committed the horrible crimes.


2.  Although he never said his brother was a crook, Arjun's *insinuation* put the thought in the minds of others.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
*இன்றைய 10 சொற்கள்!*

*அறிவு பரவல் ✍*


1. Intimidate (இன்டிமிடேட்) - அச்சுறுத்தல்.
காவல்துறையினர் பாதுகாப்பு கட்டணம் செலுத்தமாறு கடை உரிமையாளர்களை அச்சுறுத்தினர்.
The police intimidate the store owners to pay protection fees.

2. Subversion (சப்வெர்சன்) - நாசவேலை.
நாசவேலை வழக்குக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிறுபிக்கப்படவில்லை.
Criminal charges against subversion cases is not proved.

3. Corpses (கார்ப்ஷஸ்) - சடலம்.
கிணற்றில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.
The corpses was recovered from the well.

4. Association (அஸோஸியேஸன்) - சங்கம்.
அமைச்சரவை சங்கம் வரிகள் மீது ஒரு புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.
The cabinet association decided to enact a new law on taxes.

5. Tornadoes (டோர்னடோஸ்) - சுழற்காற்று.
கோடையில் அடிக்கடி சுழற்காற்று வீசும்.
Tornadoes often blows in the summer.

6. Devastation (டிவாஸ்டேஸன்) - பேரழிவு.
ஓகிப் புயல் கன்னியாகுமாரியில் பேரழிவை உண்டாக்கியது.
Ogi storm caused devastation in Kanyakumari.

7. Euthanasia (யுதனேசியா) - கருணை கொலை.
பல நாடுகள் சட்டப்பூர்வமாக கருணை கொலையை நடைமுறையில் அனுமதிக்கிறது.
Many countries are now legally allowing the practice of euthanasia.

8. Macabre (மெகாபிர்) - இரக்கமற்ற.
பிரஞ்சு புரட்சி காலத்தில், இரக்கமற்ற படுகொலைகள் அதிகமாக இருந்தது.
During the French Revolution, macabre slaughter was too much.

9. Touch screen (டச் ஸ்கிரின்) - தொடு திரை.
என்னுடைய கைப்பேசியில் தொடு திரை வேலை செய்யவில்லை.
Touch screen is not working in my mobile phone.

10. Consecrate (கான்சிக்ரேட்) - கும்பாபிஷேகம்.
சிவன் கோவிலில் மறுகட்டுமானம் செய்யப்பட்ட பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Shivan temple was consecrated after reconstruction
ravi said…
பகவான், பாகவதர், மஹான் இவர்களுக்கு அன்னமிட்டால் இடுபவர்களுக்கு மாத்திரம் புண்யம் மேன்மை என்பதில்லை. இடப்பட்ட அன்னத்துக்கும் மேன்மை இது.

அடுத்த பிறவியில் "பவநே ஷ்வஸ்த்வபி கீட ஜன்மமே. மஹான்களில் வீட்டில் புழுவாகப் பிறக்கக் கடவேன்" என்று, ஆளவந்தார் ஸாதித்தபடி உயர்ந்த ஜன்மத்தை அந்த அன்னம் பெறும். இப்படி மேன் மேல் உயர்ந்த பிறவையை அடைந்துவந்தால் மனிதர்களாகவும் தேவர்களாகவும் பிறக்க வாய்ப்பு உண்டாகிறது. இதனால் ஞான ஸம்பத்து உண்டாகும். ஆக, தேஹ ஸம்பத்தின் மூலம் ஞான ஸம்பத்து தேறும். மேல் நற்கதியைப் பெறலாம்.

ஒரு மஹான் வீட்டுக்கு வந்தால், ஸ்தாவரங்கள் ஸந்தோஷப்படுகின்றனவாம். புடலை பாகல் அவரை நினைக்கின்றதாம். அதிதி பூஜையில் இவரது வயிற்றில் போவோம். அதன் மூலம் மேன் மேல் நமக்கு க்ஷேமம் என்று. புஷ்பங்களால் பெருமாளை அர்ச்சித்தவனுக்கு மாத்திரம் க்ஷேமம் என்பதில்லை. அர்ச்சிக்கப்படும் புஷ்பமும் க்ஷேமம் பெறுகிறது. பாதுகா ஸஹஸ்ரத்தில் இதைக் காணலாம். "செங்கழி நீர் வாய் நெகிழந்து ஆம்பல் வாய் கூம்பினகான்" என்ற பாசுரத்தில் இதைத் தெளியலாம். ஸாயம் ஆனதும் ஏன் ஆம்பல் கூம்புகிறது? ஐயோ என்னை கடவுளிடம் அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தவில்லையே என்ற கஷ்டத்தால். தாமரைப்பூ ஏன் மலருகிறது தெரியுமா? "நான் செவ்வையாக இருக்கும்போதே, கடவுளிடம் என்னை ஸமர்ப்பிப்பாய். நல்ல கதியை நீ பெருவாய். நானும் பெருவேன் !" என்று இவைகளிலும் ஜீவன் இருக்கிறபடியால், அதன் மூலம், இருவருக்கும் நற்கதி உண்டாகும்.

எண்ணக்கண்ட விரல்களால் இறைப்பொழுதும் எண்ணுகிலாது போய் உண்ணக்கண்டத்தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே' என்று ஆழ்வார் சொன்னார். மாலாகாரருக்கு, அலங்காரம் செய்ததால் கிடைத்த பலனைப்பார்க்கவும்.

வேத வித்யா வ்ரதே ஸ்நாதே ச்ரோத்ரியே ஸ்வமாகதே
நந்தந்தி ஓளஷதய ஸர்வா: யாஸ்யாம: பரமாம்கதிம்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷுஷா
ஸ்தாவராண்ய பிமுச்யந்தே கிம் புன: பாந்த வாஜனா:

அத்யயனம் முதலிய நற்கார்யங்கள் செய்தவன் வந்ததும் வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகளெல்லாம் ஸந்தோஷமடைகின்றன. இவர் மூலம் நாம் பரம கதியை அடைவோம் என்று. மஹான்கள் கண்ணால் பார்க்கப்பட்டவை தொடப்பட்டவை எல்லாம் பாபங்களிலிருந்து விடுபட்டு வாழ்கின்றன.

அருகம் புல் துளஸி முதலியவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் பட்டால் அவைகள் ஸம்ஸாரமாகிற பாம்பின் விஷத்தையும் போக்கடிக்கும் ஓளஷதியாக மாறுகின்றன என்றார் ஸ்வாமி தேசிகன்.

ஆக, இவ்வாறு பகவான், பாகவதர்களுக்கு உபயோகப்பட்ட பொருள்கள் எல்லாம் அடுத்த பிறவியில் மேன்மையைப் பெற்று க்ரமேண உயர்ந்த கதியை அடைகின்றன

____________________________

ravi said…
🌹🌺 ""Hare...Krishna....Sahadeva questioned whether astrology is false - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 Sahadeva has become a bit arrogant in his arrogance that he knows astrology.

🌺 Duryodhana asks Sahadeva to predict the best day for the war to destroy the Pandavas, Sahadeva also predicts a good day.

🌺 He was so true to his art. It is only when Karna is about to die in battle that the truth that Karna is his sibling is revealed.

🌺 Because of this, he loses faith in astrology because he is not able to know this truth in the art he has learned.

🌺 After the 18-day Kurushetra war ends, Sahadeva looks at Krishna and asks Krishna if astrology is a lie.

🌺Krishna asks if you who know everything about astrology can say this.

🌺 In astrology everyone's birth secret was known by my mathematical skills, but the secret of Karna being my sibling was not found in my mathematics.

🌺 If so Hare...Krishna....Sahadev questioned again that astrology is false. Krishna heard this patiently and said.

🌺 If you know everything in astrology then why me??? On hearing this answer Sahadeva
Thrown away.

🌺 His pride is included. No matter how good an astrologer is, only 99% can pick up their mathematical skills. The remaining 1% is held by Sri Krishnan...

🌺🌹valga vaiyagam 🌹valga vaiyagam 🌹valga Valamudan 🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
பாதாரவிந்த சதகம் !

25.க்ருத ஸ்நானம்
சா'ஸ்த்ராம்ருத ஸரஸி காமாக்ஷி நிதராம்
ததானம் வைச'த்யம் கலிதரஸ
மானந்த ஸுதயா !
அலங்காரம் பூமே: முநி ஜன மனச்' சிந்மய மஹா
பயோதே ரந்தஸ்தம் தவ சரண ரத்னம் ம்ருகயதே

காமாக்ஷி ! சாஸ்திரம் என்ற அமுத ஓடையில் நீராடி, தெளிவுபெற்று, ஆனந்த அமுதத்தைச் சுவைத்துள்ள முனிவர்களின் மனம் பூமிக்கு அணியும், சித் சக்தி எனும் பெருங்கடலினுள் ஆழ்ந்துள்ளதுமான உன் திருவடியாகிற ரத்தினத்தை (முத்தை)த் தேடுகிறது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*❖ 28 மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா =*

தன் புன்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்🙏🙏🙏
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
பெண் நகையே பேடகமே

உன் புன்னைகைக்கு ஒப்பாரும் மிக்காரும் உண்டோ ...

உன் அழகுக்கு ஒவ்வாதவரும் ஒத்தவரும் உண்டோ

பித்தானேன் உன் பால் எத்தாய் நீ என்றே புரிந்தபின் ..

சத்தாய் சாரமாய் என் தவமானவளே ..

தரணி தனில் உன் புகழ் பாட தாராயோ கவித்வம் எனக்கே 🤝🤝🤝
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மாதான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டுகொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அநுபவிக்கிறவன் அவன். வெளிப் பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குத் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாம் ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.

ravi said…
பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாய உலகத்தில் அகப்பட்டுக்கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு பிரார்த்தித்தால் ஈஸ்வரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈசுவரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும் பிரார்த்திக்காவிட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக் கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தைச் செய்கிறார்.

ravi said…
காரியம் இல்லாத பிரம்மம் வேறு. காரியம் செய்கிற ஈசுவரன் வேறு என்பதா? இல்லை. ஞானியின் பிரம்மமே தான் லோக காரியங்களை நிர்வகிக்கிற ஈஸ்வரனாகவும் இருக்கிறது.

சிவனின் தக்ஷிணாமூர்த்திக் கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியமே இல்லை. ஒரே மௌனம் தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களை செய்திருக்கிறார்? சிதம்பரத்தில் ஒரேயடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிக்ஷாடனனாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். தக்ஷயக்ஞத்தில் சூரியனைப் பளீரென்று அடித்துப் பல்லை உதிர்த்திருக்கிறார்.

ravi said…
ஸ்வாமி எப்போதும் உள்ளே அடங்கி பிரம்மமாக இருக்கிறார். வெளியிலே சகல காரியமும் செய்யும் ஈஸ்வரனாக இருக்கிறார்.

சாதாரண ஜனங்கள் ஏரியில், சம்ஸார அலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள் மறுபக்கம் வயலிலே நிற்கிறார்கள். நடுவில் ஏரிக்கரை. அது குறுக்கிடுவதால் ஞானிக்கு ஏரி தெரியாது. ஸ்வாமியோ இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற கரைமேல் இருக்கிறார். ஏரித் தடத்தில் நிற்கிற “தடஸ்தன்” அவர். அவருக்கு லோகமும் தெரியும்; லோக திருஷ்டி நசித்துப்போன ஞானியின் நிலையும் தெரியும். ‘ஏரியில் முழுகுகிறவனைத் தூக்கிப்போடு’ என்று வயலில் இருக்கிறவனைக் கூப்பிட்டு அவர் சொல்ல முடியும்.

ravi said…
எல்லாம் தாமே என்பதை ஸ்வாமி அறிந்திருக்கிறார்; ஆனாலும் அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறுபோலப் பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப் பற்றி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் “சிவலீலார்ணவ”த்தில் ஒர் அழகான சுலோகம் உண்டு. அதன் தாத்பரியத்தைச் சொல்கிறேன்.

ravi said…
பரமேஷ்வரனின் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டிய ராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். உடனே அந்த பிரம்படி பாண்டியன் உள்பட சகல ஜீவராசிகள் மீதும் விழுந்தது. இங்கே தாமே எல்லாமும் என்பதை அவர் காட்டிவிட்டார். இதைப் பார்த்துக் கவி கேட்கிறார்; “அது சரி உண்னைத்தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படி படுவதற்கு மட்டும்தானா? நீ மதுரமான பிட்டை வாங்கி வாங்கித்தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும்போது ஒன்று; ஆனந்தத்தின்போது வேறு வேறா?”

ravi said…
ஸ்வாமி உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈசுவரனாகவும் இருப்பதை இந்த ரஸமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை ஐந்தாகச் சொல்வார்கள். “பஞ்ச கிருத்யம்” என்பார்கள். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற மூன்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்றும் மாயாலோக விஷயம்தான். இப்படி மாயையால் மறைக்கிற காரியம் “திரோதானம்” எனப்படும். இந்த மாயையிலிருந்து விடுவிப்பதே அவன் செய்கிற மகா பெரிய காரியம். ‘அநுக்கிரகம்’ என்று அதற்கே பேர். அத்வைத ஸித்தி நமக்கு ஏற்படவேண்டும் என்றால், அதற்கு இந்த அநுக்கிரகமின்றி வேறு வழியில்லை. இந்த அநுக்கிரத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாஸனைக்கே, நம்மை அநுக்கிரகிக்கக்கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி அவரிடம் நெஞ்சுருகி அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 131*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
காலமே
யெழுந்திருந்து

கண்கண் மூன்றி லொன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே. 131
ravi said…
காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!!

எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா?

அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.
ravi said…
🌹🌺 "“ *ஹரே...கிருஷ்ணா* .... *ஜோதிடம் பொய்தானே என்று கேள்வி எழுப்பிய சகாதேவன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 சகாதேவன், தனக்கு ஜோதிடக்கலை தெரியும் என்ற ஆணவத்தில் சற்று கர்வம் அதிகமாகிவிட்டது.

🌺துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு , போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நல்ல ஒரு நாளைக் குறித்துக்கொடுக்கிறான்.

🌺அந்தளவிற்கு தன் கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை தெரியவருகிறது.

🌺இதனால் தான் கற்ற கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடிய வில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான்.

🌺18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்தபின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான்.

🌺அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா என்று கேட்கிறார்.

🌺ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணித திறமையால் தெரிந்து கொண்டேன், ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் கணிதத்தில் வரவில்லை

🌺அப்படி யென்றால் ஹரே...கிருஷ்ணா....ஜோதிடம் பொய்தானே என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னார்.

🌺அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டால் பிறகு நான் எதற்கு??? இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு
தூக்கிவாறிப்போட்டது.

🌺அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% ஸ்ரீ கிருஷ்ணன் பிடியில்...

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்கவளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
*பெரிய பிராட்டியின் சம்பந்தம்*

http://www.srimahavishnuinfo.blogspot.com

பெரிய பிராட்டி என அழைக்கப்படும் திருமகளே (லட்சுமி) பெருமாளுக்கு அடையாளம்.

கோயில்களில் திருமார்பு நாச்சியார் என பெருமாளின் மார்பில் இவள் இருப்பாள். பக்கத்து நாச்சியாராக அவருக்கு அருகிலும் இருப்பாள். தனிக்கோயில் நாச்சியாராகவும் வீற்றிருப்பாள்.

ravi said…
ஆனால், பெருமாளுக்கு இப்படி தனித்தனி சந்நிதிகள் இருக்காது. பெருமாள் நிஜம் என்றால், அதன் நிழல் தான் தாயார்.

பெருமாள் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் தாயார் நிழல் போல தொடர்கிறாள். முக்தி பெற்ற உயிர்களை வைணவத்தில் "நித்யசூரிகள்' என்று குறிப்பிடுவர். இந்த நித்யசூரிகளுக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் பெரியபிராட்டி தான்.

நிஜம், நிழல் இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம் என்று கேட்டால் எல்லோரும் நிஜத்திற்குத் தான் என்று பதில் சொல்வர்.

ஆனால், மரம் நிஜமாக நம் கண்முன் நிற்கிறது. ஆனால், வெயிலுக்கு ஒதுங்குபவர் மரத்தடிக்குச் சென்று, "அம்மாடி! இப்ப தான் குளிர்ச்சியா இதமா இருக்கு!'' என்று சொல்லுவார்
அல்லவா.

அதுபோல, பெருமாளை நேராக அனுபவிக்க முடியாது. நிழல் போல இருக்கிற பிராட்டியே நமக்கு அருளை வாரிக் கொடுக்கிறாள்.

கட்டித் தங்கத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அந்த தங்கத்தை ஆபரணத்தங்கமாக மாற்றி விட்டால் நாம் வேண்டிய ஆபரணமாக்கி அணிந்து
கொள்கிறோம்.

பெருமாள் கட்டித் தங்கமாக இருக்கிறார். பிராட்டியே ஆபரணத்தங்கம். தாயாருக்குத் தான் பிள்ளைகளின் கஷ்டநஷ்டம் தெரியும்.

நமக்காக பெருமாளிடம் அருள்புரிய வேண்டிக் கொள்கிறாள். தாயாரின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கு ஏற்றம், பெருமை எல்லாமே.

அப்படியானால், பெருமாள் தாயாருக்கு தாழ்ந்தவரா? என்று கேட்டால், அவர் ஸ்வதந்திரர் அதாவது யாருக்கும் அடிமை இல்லாதவர். நவரத்தினங்களின் ஒன்றான மாணிக்கத்திற்கு மதிப்பு அளிப்பது அதன் ஒளி.

அதுபோல, பெருமாளுக்கு ஒளியாக இருந்து தாயாரே அவரை விளங்கச் செய்கிறாள். ஒளி எப்போதும் தனித்திருக்காமல் அதோடு ஒன்றியிருப்பது போல, தாயாரும் பெருமாளை ஒன்றியே இருக்கிறாள்.

சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கட்டம்.

அதாவது, ஒருசமயம் வேதாந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி, யார் பரம்பொருள் (தெய்வம்) என்று விவாதம் செய்தன.

உலகத்திற்கு மூலமுதற்காரணம் யார் என தத்துவஆராய்ச்சியில் இறங்கின.

பிரம்மா, ருத்ரர், இந்திராதி தேவர்கள் என ஒவ்வொருவரின் நெஞ்சத்தை அடைந்த வேதாந்தங்கள், "யார் பிரம்மம்?' என அறிய முற்பட்டன.

திருமாலின் மார்பில், திருமகளின் பாதச்சின்னம் இருப்பதைக் கண்டு ஸ்ரீமந்நாராயணரே மூலமுதற்பொருள் என உணர்ந்தன.

யமுனை ஆற்றங்கரையில் மரத்தின் மீதமர்ந்து கண்ணன், தீர்த்தத்தை (தண்ணீர்) தன் காலால் அடித்தபடி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

அந்த அழகைக் கண்ட திருமகளுக்குத் தானும் அதுபோல ஆனந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது.

திருமகளும், திருமாலின் மார்பில் இருந்தபடி, ஊஞ்சல் போல அசைத்து மகிழ்ந்தாள். அவள் பாதத்தில் கிடக்கும் குங்குமமும், குங்குமப்பூவும் அவளின் திருவடிகள் பட்டு தெறித்தன.

ravi said…
திருமாலின் கருத்த மேனியில் சிவப்பான வட்டமாக கோலமிட்டது போல அது இருந்தது. வேதாந்தங்கள் ஒன்றுகூடி, திருமாலின் நெஞ்சத்தில் இந்த காட்சியைக் கண்டு "இவரே பரம்பொருள்' என்ற முடிவுக்கு வந்தன.

திருமங்கையாழ்வார் திவ்யதேச யாத்திரையாக, தேரெழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலுக்கு வருகிறார். எம்பெருமானின் அழகில் ஈடுபட்டு 40 பாசுரங்கள் பாடினார்.

"திருநெடுந்தாண்டகம்' என்னும் அப்பாசுரத்தில், "திருவுக்கு திருவாகிய செல்வன்' என்று பெருமாளைக் குறிப்பிடுகிறார்.

ravi said…
மரியாதையாக ஒருவரை அழைக்க வேண்டுமானால், ஸ்ரீமான், திருவாளர், "திரு' என்றெல்லாம் அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் திருவுடையாக இருப்பவர் பெருமாள் தான். அவரே " ஸ்ரீதேவி நாச்சியாருக்கே "ஸ்ரீ' யாக இருக்கிறார்.

கங்கை,யமுனை தீர்த்தங்களில் நீராடச் சென்றால் அந்த ஜலபிரவாகத்தில் மீன்கள் துள்ளி விளையாடும். அதை நாம் தொட்டுப் பார்த்தால் "வழவழ' என நீரின் தன்மையைப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

மீன் தண்ணீருக்குள்ளே இருப்பதால் நீரின் தன்மை உண்டாகி விட்டது. அதுபோல, பெருமாளின் நெஞ்சம் மட்டுமில்லாமல், திருவடி முதல் திருமுடி வரை எங்கு தொட்டாலும் திருமகளின் சம்பந்தம் இருக்கும்.

வருணதேவனின் பிள்ளையான பிருகுவுக்கு ஒருசமயம். "பிரம்மம் (தெய்வம்) எது?' என்ற சந்தேகம் எழுந்தது.

தந்தையிடமே கேட்டு விடலாம் என கருதிய பிருகு, தந்தையின் திருவடியை வணங்கி, "பிரம்மம் எது?' என்று கேட்டபோது, வருணனும், ""எதனிடத்தில் உலகம் உருவானதோ, எதை உலகைக் காக்கிறதோ, எதில் உலகம் ஒடுங்குகிறதோ அதுவே பிரம்மம்'' என்று உபதேசித்தார்.

இதே கருத்தை கம்ப நாட்டாழ்வாரும், ""உலகம் யாவையும் தாமுள ஆக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர்'' என்று குறிப்பிடுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் செய்யும் அந்த பரம்பொருள் நாராயணரே.

ஸ்ரீதேவி தாயாரை மார்பிலே கொண்டிருக்கும் பெருமாள், ஏன் இந்த உலகை உற்பத்தி செய்தார் தெரியுமா? உயிர்கள் எல்லாம் மோட்சகதியை அடைய வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், அதற்கு யாராவது முயற்சித்தார்களா?

குருக்ஷேத்திரத்திலே மனம் குழம்பிய அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் நேரில் வந்து 700 ஸ்லோகங்களில் கீதையை உபதேசித்தார்.

ஆனால், "ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே' என்று சொல்லி, அர்ஜூனன் கூட, பெருமாளைச் சரணடைய முன்வரவில்லை.

இந்த பூவுலக வாழ்வை முடித்து விட்டு, பஞ்ச பாண்டவர்கள் எல்லோரும் செய்த தர்மத்தின் பயனால் சொர்க்கத்தையே அடைந்தனர்.

ஆச்சார்ய மார்க்கமாக நல்ல குருவின் உதவியோடு தான் நாம் மோட்ச கதியை அடைய முடியும்.

அதற்கு ஸ்ரீதேவியைத் தன் மார்பிலே தாங்கியிருக்கும் நாராயணரின் திருவடிகளை, இளமைப்பருவத்தில் இருந்தே கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 12 started on 6th nov
ravi said…
*பாடல் 6 ... திணியான மனோ*

(ஆறுமுகன் அடியாரை ஆட்கொள்வான்)

திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?

.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே🪷🪷🪷
ravi said…
*பணி யா என* ... எனக்கு இடும் கட்டளை எவை என வினவி,

*வள்ளி பதம் பணியும் ...* வள்ளி பிராட்டியின் திருவடிகளை
வணங்குகின்ற,

*தணியா* ... குன்றாத,

*அதிமோக ..* . மிகுந்த காதல் கொண்டுள்ள,

*தயாபரனே* ... கருணைக் கடவுளே,

*திணி ஆன மனோ சிலை மீது ..* . மிகவும் கடினமான
மனமாகிய கல்லின் மீது,

*உன தாள்* ... உனது திருவடியான,

*அணியார் அரவிந்தம் அது அரும்புமதோ ...*

அழகு மிகுந்த
தாமரை மலருவது என்ன ஆச்சரியம்?
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 396* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
*93. வ்யாலாய நமஹ (Vyaalaaya namaha)*
ravi said…
*அவனிடம் சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்*

அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.

நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், “பகவானே… நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை…’ என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 15

புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல். . . . .[15]

விளக்கம்:

புல்லை உண்கின்ற குதிரையின்மேல் மணியில்லாமல் ஏறிச் செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம் துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கமடையும்படியான நிலையில் இருத்தல் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 4 ...18th Nov 22*

*ஆர்யா சதகம்*
ravi said…
*ஆர்யா சதகம் - ஸ்லோகம் 1 -5*

ஸ்லோகம் 3
ravi said…
चिन्तितफलपरिपोषणचिन्तामणिरेव काञ्चिनिलया मे ।
चिरतरसुचरितसुलभा चित्तं शिशिरयतु चित्सुखाधारा ॥ ३॥

3. Chinthitha phala pari poshana chinthamani reeya Kanchi nilayaa may,
Chira thara sucharitha sulabhaa, chitham sisirayathu chith sukhaa dharaa.

சிந்திதபலபரிபோஷணசின்தாமணிரேவ காஞ்சினிலயா மே |

சிரதரஸுசரிதஸுலபா சித்தம் ஶிஶிரயது சித்ஸுகாதாரா ||3||
ravi said…
காமாக்ஷி அம்பாள் காஞ்சிபுரநிவாஸினி.

அவளை எத்தனையோ ஜன்ம நற் காரிய பலனாகத் தான் நாம் அடைய முடியும்.

மனதால் நினைத்தாலே போதும். விருப்பங்களை நிறைவேற்றுபவள்.

அவளை சிந்தாமணி என்று அதனால் அழைக்கிறோம்.

சித் ரூபி யான அம்பாள் வாளிப்பான தேகமுடைய சக்தி தேவி.

கருணையை, தயையை, மழையாக பொழிபவள்.

அவளை வணங்கி மனம் குளிரட்டும்.

வணங்குகிறோம் தாயே.🙏🙏🙏🪷🪷🪷
ravi said…
கண்ணா*

உன் பிரிவு என்னை வாட்டுகின்றதே!!

உயிர் உடம்பில் இருந்து பிரிவதை பார்த்ததில்லை

ஆனால் உன் பிரிவோ அதிலும் கொடுமை அன்றோ ?

எனது சருமமானது, காய்ந்த மாவிலை போலாகி உடைந்து உதிரும் நிலைக்கு வந்து விட்டதே கண்ணா !

பசலை நோயில் வாடி என் மேனி மஞ்சள் பூத்து விட்டது.

ஓர் இரவு பல யுகங்கள் போல் என்னை வதைக்கிறதே கண்ணா !

*கண்ணா* இத்தனை வேதனைகளும்

பகைவரைக் கொல்கின்ற சக்கரமேந்திய உன் அழகிய துளசி மாலையின் குளிர்ச்சியில் திளைக்க ஆசைப்பட்டு,

உனை நாடிச்சென்ற என் நல்நெஞ்சம்

எனக்களித்த தனிச்செல்வங்கள் அன்றோ *கண்ணா*??💐💐💐
ravi said…
After Shri Krishna killed Kansa, he went to the jail to release Vasudev and Devki, his mother and father.

Devki mata asked eagerly, "Child, you are God yourself, and you have divine powers; then, why did you wait fourteen years to kill Kansa and release us"?

Shri Krishna replied, ′′ Respected mother, forgive me. But why did you send me to the jungle for fourteen years in my last birth?

Devki was very surprised and said, ′′ Krishna, how is this possible? Why are you saying this?"

Shri Krishna replied, ′′ Mother, you will not remember anything about your previous birth. But you were Kaikayi in your last birth and your husband was Dashrath".

Devki was very surprised and asked curiously, ′′ Then, who is Kausalya now?"

Shri Krishna replied, ′′ Mother Yashoda. The fourteen years of mother's love that she was deprived of in her last life, she got it in this life ′′

Everyone has to bear the fruits of their past sins, even the gods cannot escape from it.

Keep an eye on virtues and sins you want to accumulate.

🙏🍁🌻🙏🍁🙏
ravi said…
*ஸ்ரீராமஜெயம்* 🙏

"' *ராம ராமா* ... *நீ தான் இந்த கொடிய  நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்* ...' *என்ற, பத்மநாபர்.....!! - விளக்கும் எளிய கதை* 🙏🌹

*காசியில் வாழ்ந்து வந்த, பெரும் செல்வந்தரான குமரன் எனும்  வியாபாரி ஒருவர், குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார்*.

*மன வருத்தம் அடைந்த அவர், 'மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன பலன்...' என்று புலம்பினார்*.

*ஒருநாள் மனைவி, மக்கள், சுற்றத்தார் என, அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை*. *என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய், கங்கையில் போட்டு விடுங்கள்...' என்றார் குமரன்* .

*முதலில் மறுத்த உறவினரும்*, *மற்றவர்களும், வேறு வழியின்றி*, *செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர்*.
*செல்வந்தர் குமரனை  துாக்கிப்போய், அவர் தலையிலும், கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர்*.

*அந்த நேரத்தில், கபீர்தாசரின் சீடரான பத்மநாபர், அங்கு வந்து, விபரம் அறிந்தார்*.
*என்ன அக்கிரமம்* *இது. புல்- பூண்டு என, பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மானுடப் பிறவி கிடைக்கிறது.*

*அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை,* *தற்கொலை செய்வதில் ஈடுபடுத்தலாமா*...' *என, அறிவுரை கூறினார்*.
*ஐயா*.. *பரிகாரங்கள்* *பலவும் செய்து* *விட்டேன்*; *பலன் ஏதும் இல்லை. அதனால் தான் இந்த முடிவு...' என்றார், செல்வந்தர் குமரன்* .

*'நடந்ததை விடுங்கள்; இப்போது நீங்கள், 'ராம ராம ராம' என்று, மூன்று முறை சொல்லுங்கள். பகவான் அருளால் உங்கள் நோய் குணமாகும். ஆத்மார்த்தமாக, 'ராம ராமா ... நீ தான் இந்த கொடிய  நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்...' என்றார், பத்மநாபர்*.

*அதன்படியே செல்வந்தரும், சுற்றி இருந்தவர்களும் சொல்ல, அவரின் நோய் நீங்கியது*.
*பத்மநாபரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்*, *செல்வந்தர் குமரன்.*
*அனைத்தும் ஸ்ரீ ராமன்*  *செயல்*...' *என்றபடியே அங்கிருந்து போய் விட்டார், பத்மநாபர்*.

*தகவல் அறிந்து, பத்மநாபரை அழைத்து, 'சீடனே... வியாதி நீங்க, 'ராம' நாமத்தை, ஆத்மார்த்தமாக ஒருமுறை சொன்னாலே போதுமே... நீ, மூன்று முறை ஏன் சொல்லச் சொன்னாய்...' எனக் கேட்டார், கபீர்தாசர்*.

*குருநாதா*
*தங்கள் திருவடிகளைப் பணியாத* *அச்செல்வந்தரின் குறை தீர, ஒருமுறை; அவருடைய நோயும், பிறவியும் தீர*, *ஒருமுறை*; *சுற்றியிருந்த மக்கள் நல்வழியில் நடக்க, ஒருமுறை என்பதற்காகவே*, *மூன்று முறை, 'ராம' நாமா சொல்லச் சொன்னேன்*...' *என்றார், பத்மநாபர்*.
*தம் சீடனை வாழ்த்தினார்* *கபீர்தாசர்*.

*இப்போதுள்ள நிலையில், தெய்வத்தைத் தவிர வேறு துணையே இல்லை. அவரவர் இஷ்ட தெய்வ நாமாவை, ஆத்மார்த்தமாகச் சொல்வோம்; துயர் தீர்க்க வேண்டுவோம். படுத்தும் நோய் பறந்து போய் விடும்*🙏🌹
ravi said…
*இதுவும் கடந்துப்* *போகும்*


*நம்முடைய இதுநாள்* வரை *வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்* .

**எத்தனை வெற்றிகள்* ,
*எத்தனை தோல்விகள்* ,
*எத்தனை மகிழ்ச்சிகள்* ,
*எத்தனை துக்கங்கள்** ...

*எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்துப் போயிருக்கின்றன* .
*வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது* *உறுதியாகிறதல்லவா* ?

*வந்து* *போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா* ?

*எத்தனை **நண்பர்கள்* ,
*எத்தனை பகைவர்கள்* ,
*எத்தனை உறவுகள்* நம் *வாழ்வில் முக்கிய** *அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு* *விட்டுப்* *போயிருக்கிறார்கள்** ?

*வாழ்வில்* *வந்ததெல்லாம்* *நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே **இருக்கின்றன* .
*ஒரு விதத்தில் என்றும்* *நாம்** *தனியர்களே* *அல்லவா** ?

*இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும்* *அமைதி சாதாரணமானது *அல்ல* .
*அந்த அமைதியை** *மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்* .

*வெற்றிகள் கிடைக்கும்* *போது* .,
*"இதுவும் கடந்துப்* *போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. கர்வம் தலை தூக்காது* .
*
*தோல்விகள் தழுவும்* *போது** ..,
" *இதுவும் கடந்துப்* *போகும்" என்பதை* *நினைவில் கொள்ளுங்கள்...சோர்ந்து விட *மாட்டீர்கள்* .

*நல்ல மனிதர்களும்* , *நண்பர்களும் உங்கள்* *வாழ்க்கையில் வரும் போது.,"இதுவும் கடந்துப் போகும்" என்பதை நினைவில்* *கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்* . *அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்** .

*தீய* *மனிதர்களும், *பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது* ..,
" *இதுவும் கடந்துப் போகும்" என்பதை நினைவில்** *கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்* .

*நெற்றி சுருங்கும் *போதெல்லாம்* ..,
*"இதுவும் கடந்துப்* *போகும்" என்பதை** *நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்* .

*வாழ்க்கையின்* *ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்* .,
*அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்* ."

*இந்த நாள்* *இறைவனின் அற்புதமான நாளாக *அமைய வாழ்த்துகள்*
*ப்ரார்த்தைகள்**
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

*Good morning friends*

*Today's word ✍🏻*


*INTERMENT*

*(புதைத்தல்)*

meaning.....  putting a dead body to rest; the act of burying someone....


1. The ceremonies for the *interment* of the dead vary among religions and cultural groups.


2. Because of numerous autopsies, there has been a long delay between the time of the victim’s death and his *interment*.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
பாதாரவிந்த சதகம் !

26.மநோ கேஹே மோஹோத்பபவ திமிர பூர்ணே மம மூஹு:
தரித்ராணீ குர்வந் தினகர ஸஹஸ்ராணி கிரணை: விதத்தாம் காமாக்ஷி! ப்ரஸ்ருமர தமோ வஞ்சந சண: க்ஷணார்த்தம் ஸாந்நித்யம் சரணமணி தீபோ ஜனனிதே

தாயே ! காமாக்ஷி ! தன் கிரண ஒளியால் ஆயிரக்கணக்கான சூரியர்களின் ஒளியைத் தாழச் செய்வதும், பரவிவருகிற அறியாமை எனும் இருளை நீக்குவதில் திறமை பெற்றதுமான உளது திருவடியாகிற மணிவிளக்கு மோகத்தால் உண்டான இருள் நிரம்பிய என்மனமெனும் வீட்டினுள், அடிக்கடி அரைநொடியாவது, அருகாமை தரட்டும். (கூடத்துணையாயிருக்கட்டும்.)

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 397* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
முதலில் இவனையும் இவனுடன் வந்த நால்வரையும் முழுவதுமாகச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஆடைகளுக்குள் ஆயுதங்களை இவர்கள் மறைத்து வைத்திருக்க வாய்ப்புண்டு!” என்றான் மைந்தன்.

தன்னுடைய வரலாற்றையே மறந்த சுக்ரீவன், “உடன் பிறந்த அண்ணனுக்கே துரோகம் இழைத்துவிட்டு வந்தவனை
ஏற்றுக் கொள்ளவே கூடாது!” என்றான்.

இறுதியாக அனுமனின் முகத்தைப் பார்த்தான் ராமன். “நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது ராவணன் என்னைக் கொல்ல நினைத்தான்.
தூதுவனைக் கொல்லக் கூடாது என்று சொல்லி என் உயிரைக் காப்பாற்றியவன் இந்த விபீஷணன்.

இவன் நல்லவன். எனவே இவனை ஏற்றுக் கொள்ளலாம்!” என்றார் அனுமன்.🐒🐒🐒
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 13 started on 6th nov
ravi said…
*பாடல் 6 ... திணியான மனோ*

(ஆறுமுகன் அடியாரை ஆட்கொள்வான்)

திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?

.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே🪷🪷🪷
ravi said…
என்ன சேவை செய்ய வேண்டும்? என வினவி வள்ளி பிராட்டியின்
திருவடிகளை வணங்கும் குன்றாத பெரும் காதலை உடைய
கருணா முர்த்தியே,

வலிய மனப் பாறை மீது உனது திருவடித்
தாமரை முளைக்குமோ?

முளைக்காது என்று பெரும்பான்மையோர்
உரை கூறி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பாடல்களுக்கு
முருகனின் கருணையை வியந்து பாடுவதாக உரை செய்யவேண்டும்.

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னுடைய பாறைபோன்ற
மனத்தில் உன்னுடைய கருணையினால்தான் உனது திருவடித்
தாமரை ஒளி வீசுகிறது.
ravi said…
இப்படி ஒரு பெரிய அதிசயம்
நடந்துவிட்டதே என்று பெரும் உவகையுடனும் பெருமிதத்தினுடனும்
பாடுகிறார் அருணை முனிவர் இந்தப் பாடலை.

- *Kanthar Anubuthi is not a cry of despair*

*But it is a shout of exultation -*👌👌👌
ravi said…
கந்தக் கடவுளின் அநுபூதிபெற்று பாடப்பட்ட பாடல்கள் இவைகள்
ஆகையினால் இங்கு விரக்திக்கே இடமில்லை.

மேலும் 'என்னால்
பிறக்கவும்' - (பாடல் 904) வயலூர் திருப்புகழில் ..

.. கல் நார் உரித்த என் மன்னா ..

.. எனப் பாடும்போதும் இதே பெருள் பொருந்துகிறது.

பக்குவப்பட்ட
ஆன்மாக்களை தானே வலிய வந்து ஆட்கொள்ளுவதே முருகப்
பெருமானின் தனிப் பெரும் கருணை என்பது இறுதி இரு அடிகளில்
சுட்டிக் காட்டப்படுகிறது.
ravi said…
பிரபஞ்ச வாழ்க்கையான தினைப்புனத்தில் பக்திப் பயிரை பாதுகாத்துவந்த
பக்குவப்பட்ட ஆன்மாவின் நிலை அறிந்து (பதம் என்றால் பக்குவம்),
தானே நேரில் வந்து ஜீவாத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டதே
வள்ளி திருமணத்தின் நுண் பொருள்.

இரண்டாவது பொருள், இறைவன் தன்னுடைய பிரதி பிம்பமான
ஜீவத்மாவை ஆட்கொள்ளுவற்கு எந்த இழி தொழிலானாலும்
செய்கிறான்.

கல்லினாலும் வில்லினாலும் அடி படுகிறான்.

பக்தன்
கொடுத்த எச்சில் மாமிசத்தையும் உண்கிறான்.

அப்படி இருக்கையில்
முருகன் வள்ளியின் பாதங்களைப் பணிவதில் ஆச்சரியம் இல்லை.

ஐம்புலன்களையும் தனது ஐந்து சகோதரர்களாகக் கொண்ட வள்ளி
பிராட்டியின் தவத்திற்கு இணங்கிய கந்தக் கடவுள், தகுதியே இல்லாத
என்னையும் ஆட்கொண்டானே.

என்னே அவனின் பெருங்கருணை
எனப் பெருமிதம் அடைகிறார் நமது பரம குருநாதர்.🤝🤝🤝
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 395*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம:
ஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக: |
கடௌ பீதவாஸா கரே சாருசக்தி:
புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ: ||
ravi said…
முருகனை மயிலாக நினைத்து பாடிய பாடல் போல் சங்கரர் ஈசனை இந்த ஸ்லோகத்தில் மயிலாக நினைத்து பாடுகிறார்
ravi said…
ஆகாஶேன ஶிகீ² ஸமஸ்தப²ணினாம்ʼ நேத்ரா கலாபீ நதா-

(அ)னுக்³ராஹிப்ரணவோபதே³ஶனினதை³꞉ கேகீதி யோ கீ³யதே .
ஶ்யாமாம்ʼ

ஶைலஸமுத்³ப⁴வாம்ʼ க⁴னருசிம்ʼ த்³ருʼஷ்ட்வா நடந்தம்ʼ முதா³

வேதா³ந்தோபவனே விஹாரரஸிகம்ʼ தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 53..
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 408* 🙏🙏🙏started on 7th Oct 2021

*158*
ravi said…
*158 * निर्मदा - நிர்மதா -*
எதிலும் நம்பிக்கை தேடுபவள் அல்ல பரமேஸ்வரி.

நம்பிக்கை எதிர்பார்ப்பின் அஸ்திவாரத்தில் உருவாகிறது.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 5 ...18th Nov 22*

*ஆர்யா சதகம்*
ravi said…
*ஆர்யா சதகம் - ஸ்லோகம் 1 -5*

ஸ்லோகம் 4
ravi said…
कुटिलकचं कठिनकुचं कुन्दस्मितकान्ति कुङ्कुमच्छायम् ।
कुरुते विहृतिं काञ्च्यां कुलपर्वतसार्वभौमसर्वस्वम् ॥ ४॥

4. Kutila kacham, katina kucham, kunda smitha kanthi, kunkuma chayam,
Kuruthe vihruthim kanchyaam kula parvatha saarva bhouma sarvaswam.

குடிலகசம் கடினகுசம் குன்தஸ்மிதகான்தி குங்குமச்சாயம் |
குருதே விஹ்றுதிம் காஞ்ச்யாம் குலபர்வதஸார்வபௌமஸர்வஸ்வம் ||4||

पञ्चशरशास्त्रबोधनपरमाचार्येण दृष्टिपातेन ।
काञ्चीसीम्नि कुमारी काचन मोहयति कामजेतारम् ॥ ५॥
ravi said…
அலை அலையாக திரண்ட சுருண்ட கூந்தலை உடையவள் அம்பாள் காமாக்ஷி.

குந்த புஷ்பம் போன்ற மென்மையானவள். அன்னையின் வதனத்தில் எப்போதும் பாசம் நிரம்பிய புன் சிரிப்பு. கடைந்தெடுத்த குங்குமப்பூ நிற தேகம். பர்வதங்களில் 7 சிறந்தவை.

மகேந்திர பர்வதம், ஸஹ்ய பர்வதம், ஹிமாசலம், விந்திய பர்வதம், மலயமாருத பர்வதம், பரியாத்ர பர்வதம், ருக்ஷ பர்வதம். இவற்றில் முதன்மையானது, தலைவன் ஹிமாசல பர்வதம் .

அம்பாள் ஹிமவான் புத்ரி, இம்மகிரி தனயே , சர்வ சௌபாக்கிய மூர்த்தியாக, காஞ்சியில் குடியேறி நம்மை ரக்ஷிக்கிறாள்.
ravi said…
கண்ணா*

நான் நீசன் அயோக்கியன் .

மெய் கொண்டு பொய் பேசுபவன்

முட்டாள் மூடன் நாயேனும் கீழ் சாதி கொண்டவன்

எனக்கு ஏதும் தகுதி உண்டோ கண்ணா உனை அடைய ?

ஆஹா கண்டு கொண்டேன்

ஓர் தகுதி உண்டு ... உனை சரணாகதி அடையும் தகுதி

*கண்ணா* நான் எனை நீசன் என்றேன் அயோக்கியன் என்றேன் ...

நீயும் தான் ...

கம்சனுக்கு நீசன் சகுனிக்கு அயோக்கியன்

நான் மெய் கொண்டு பொய் பேசுபவன் என்றேன் எனை ...

நீயும் தான் ...

நீயே மெய் என்று அறிந்தோர் பொய் பேசக்கண்டோர் பாரத போரில்

முட்டாள் மூடன் நாயேனும் கீழே என்றேன் எனை ...

நீயும் முட்டாளே மூடனே ...

உனை தந்து எனை வாங்கி கொண்டாயே ...

அடியார்க்கும் அடியவன் அன்றோ நீ அதனால் நாயேனுக்கும் கீழே ...

சரணாகதி எனும் தகுதி கொண்டே உனை வென்றேன் நான் இன்றே 🪷🪷🪷
ravi said…
*திருமாலை பாசுரம்-33.*

” மெய் எல்லாம் போகவிட்டு; விரி
குழலாரில் பட்டு,
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட
போட்கனேன் வந்து நின்றேன்:

ஐயனே* அரங்கனே* உன் அருள் என்னும் ஆசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன்

பொய்யனேன் பொய்யனேனே*”
Kousalya said…
அதி அற்புதம்....shankarNarayana
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம் தேசத்தில் இத்தனை ஆயிரம் கோயிலிருந்தும், ஒவ்வொரு கோயிலிலும் ஏகப்பட்ட ஸந்நிதிகள் இருந்தும், அநேக உத்ஸவாதிகள் நடத்தப்பட்டபோதிலும் ப்ரம்மாவுக்கு எதுவுமே காணோம்! அபூர்வமாக எங்கேயாவது புஷ்கர் மாதிரி ஒரு க்ஷேத்திரத்தில்தான் தேடித்தேடி அவருக்குக் கோயில் பார்க்க முடிகிறது. பிரம்மா கோயில் என்றாலே புஷ்கரைத்தான் இன்று நினைக்கிறார்கள்.
ravi said…
நம்முடைய கும்பகோணத்திலேயே ப்ரம்மாவுக்குத் தனிக் கோயில் இருப்பது ரொம்பப் பேருக்கு தெரியவில்லை. காஞ்சீபுரத்திலும் கும்பகோணத்திலும் தடுக்கிவிழுந்த இடமெல்லாம் கோவில்கள் என்பார்கள். காஞ்சீபுரத்தில் நாம் ஜென்மாவில் பண்ணுகிறதற்கெல்லாம் கணக்கு எழுதும் சித்திரகுப்தனுக்கு அபூர்வமாகக்கோயில் இருக்கிறதென்றால், கும்பகோணத்தில் ஜென்மாவைத் தரும் ப்ரம்மாவிற்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறது!
ravi said…
திருக்கண்டியூர் என்று திருவையாற்றுக்குக் கிட்டே இருக்கிறது. அது பரமசிவன் ப்ரஹ்மாவுக்கு ஆதியில் இருந்த ஐந்து தலைகளில் ஒன்றைச் சேதித்த க்ஷேத்ரம். அங்கே சிவனுக்கு பரஹ்மசிரக்கண்டீசர் என்றே பேர். அங்கே ப்ரஹ்மாவுக்கும் ஸந்நிதி இருக்கிறது. கொங்கு நாட்டிலுள்ள த்ரிமூர்த்தி க்ஷேத்ரமான பாண்டிக் கொடுமுடியிலும் இருக்கிறது. திருச்சிராப்பள்ளிக்கு பக்கத்தில் உத்தமர் கோயிலில் த்ரிமூர்த்திகளுக்கும் ஸந்நிதி இருப்பதில் ப்ரம்மாவும் இருக்கிறார். சிதம்பரத்தில் ப்ரஹ்மாவையே சண்டேச்வரர் என்று சொல்லி, (கனக) ஸபையைச் சுற்றி வரும்போது அவருக்கு ஒரு சின்ன கோஷ்டம் காட்டுகிறார்கள். ஆனாலும் இதெல்லாம் ஸமுத்ரத்தில் ஒரு துளி மாதிரிதான். நம் தலையெழுத்தை எழுதுகிறவரின் தலையெழுத்து இப்படி இருக்கிறது! வைஷ்ணவர்களின் கோயில்களை எடுத்துக்கொண்டால் அங்கே நவக்ரஹங்கள் கூடத்தான் கிடையாது. பெருமாள், பெருமாளோடு இணைபிரியாத தாயார், அவருடைய வாஹனம், அவருடைய அவதாரங்கள், அவரையே சேர்ந்த பார்ஷதர்கள், அவருடைய பக்தியிலேயே ஸதாவும் திளைத்துக் கொண்டிருக்கும் ஆழ்வார்கள், வைஷ்ணவ ஸித்தாந்தத்துக்கே ஏற்பட்ட ஆசார்ய புருஷர்கள் – என்பதாக முழுக்க முழுக்க விஷ்ணு ஸம்பந்தமிருப்பவர்களுக்குத்தான் அவருடைய ஆலயங்களில் இடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். நவக்ரஹங்களை இப்படிச் சொல்ல முடியாதல்லவா? வைஷ்ணவர்களைப் பற்றி ‘மறந்தும் புறந்தொழார்’ என்பார்கள். பெருமாள், அப்புறம் பெருமாளே ஸகலமும் என்று அவருக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், ஸேவை செய்கிறவர்கள், வைஷ்ணவ ஸித்தாந்த ப்ரவர்த்தகர்கள் ஆகியவர்கள் தவிர, புறம்பாக உள்ள எவரையும் அவர்கள் தொழ மாட்டார்கள்.
ப்ரஹ்மா விஷ்ணுவின் ஸாக்ஷாத் புத்ரர்தான். தகப்பனாரை மிகவும் மதித்து அவருக்கு அடங்கியே இவர் இருந்ததாகத்தான் புராணங்களிலிருந்து தெரிகிறது. ஆனாலும் அவரிடமே உருகி உருகி பக்தி பண்ணிக்கொண்டு அவர் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ருஷ்டி என்று தனக்கு தனி ஆபீஸ் வைத்துக் கொண்டுதான் நடத்திவருகிறார். அதாவது, வைஷ்ணவர்கள் முழு முதற்கடவுளாகக் கருதும் நாராயணனே த்ரிமூர்த்திகளில் ஒருவரான பாலனகர்த்தாவாக ஒரு வேஷம் போட்டுக் கொள்ளும்போது, அந்த த்ரிமூர்த்திகளில் இன்னொருவராக, அதாவது அவருக்கு ஸம ஸ்தானத்திலிருப்பவர் போல, இவர் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்கிறார். பெருமாளின் அவதாரமாகவேயோ, அல்லது அடியாராகவோ இருப்பவருக்குத்தான் வைஷ்ணவ ஆலயங்கள் இடம் தருமே தவிர, அவருக்கு ஸமதை மாதிரி ஒரு ஸ்தானத்திலுள்ள இன்னொருவருக்குத் தராது. அதனால்தான் விஷ்ணு ஆலயங்களிலும் ப்ரம்மா இல்லை போலிருக்கிறது!
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 29 அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா =* விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்
ravi said…
அம்மா*

ஆடை நூலில் தயித்ததோ உன் தாடை

வாடை காற்றில் நெய்ததோ வஞ்சி உந்தன் மேனி

வேட்டை ஆடும் மான்கள் ஒளிந்து கொள்வதோ உன் பார்வை தனில்

கடலில் சேரும் மீன்கள் பிறக்கும் வீடு உன் கண்கள் எனும் தாடங்கம் தனிலன்றோ 🐡🐡🐡

முத்துக்கள் கொலுவிருக்கும் பற்கள்

அதை மூடும் மதுரம் தோய்ந்த இதழ்கள்

இனிக்கும் புன்னகையில் சேர்ந்தே பொன்னிசை மீட்டியதோ ...

உன் அருள் இருக்கையில் யார் உதவி இனி வேண்டும் தாயே !!!💐💐💐
CYS said…
Arumai 🙏🙏🙏
ravi said…
முகுந்தமாலா 29,30 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அடுத்த முப்பதாவது ஸ்லோகம்….

मज्जन्मनः फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीयमदनुग्रह एष एव ।

त्वद्भृत्यभृत्यपरिचारकभृत्यभृत्यभृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥ ३२ ॥

மஜ்ஜன்மன: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே

மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ ।

த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² ॥
ravi said…
மதுகைடபர்களை வதம் பண்ணின கிருஷ்ணா!
ஜகன்னாதா!

உலகத்தின் தலைவனே, ‘ *மஜ்ஜன்மன: ப²லமித³ம்’* என்னுடைய ஜன்மா எடுத்ததற்கு இந்த ஒண்ணே ஒண்ணுதான் பயன்.

எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் நீ செய்ய வேண்டியது. ‘ *மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ’* நான் பிரார்த்தனை பண்றது இது ஒண்ணுதான்.

எனக்கு நீ பண்ணவேண்டிய அனுக்ரஹமும் இது ஒண்ணுதான். என்ன தெரியுமா?
ravi said…
After Shri Krishna killed Kansa, he went to the jail to release Vasudev and Devki, his mother and father.

Devki mata asked eagerly, "Child, you are God yourself, and you have divine powers; then, why did you wait fourteen years to kill Kansa and release us"?

Shri Krishna replied, ′′ Respected mother, forgive me. But why did you send me to the jungle for fourteen years in my last birth?

Devki was very surprised and said, ′′ Krishna, how is this possible? Why are you saying this?"

Shri Krishna replied, ′′ Mother, you will not remember anything about your previous birth. But you were Kaikayi in your last birth and your husband was Dashrath".

Devki was very surprised and asked curiously, ′′ Then, who is Kausalya now?"

Shri Krishna replied, ′′ Mother Yashoda. The fourteen years of mother's love that she was deprived of in her last life, she got it in this life ′′

Everyone has to bear the fruits of their past sins, even the gods cannot escape from it.

Keep an eye on virtues and sins you want to accumulate.

🙏🍁🌻🙏🍁🙏
ravi said…
*தவறு செய்துவிட்டு பின் கடவுளிடம் மன்னிப்பு கேட்காதே...!*

*தவறை யாருக்கு இழைத்தாயோ அவரிடம் மன்னிப்பு கேள்...!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
என்றும் இறைவனை நினைத்திருந்தால் நீங்கள் எந்த அளவு வலியை அனுபவிக்கிறீர்களோ, அந்த அளவு மிகப்பெரிய வளர்ச்சி அடைவீர்கள்.

இறைவனை நீங்கள் உணராவிட்டாலும்
இறைவன் உங்களுடன் தான் இருக்கிறார் அறிவாய், தெளிவாய்.
ஆகவே பயம் கொள்ளாதீர்கள்.

இறைவனை நம்பியோருக்கு சோதனை உண்டு. ஆனால் தோல்வி இல்லை.

இறைவனிடம் கை ஏந்தியவர் வேறு எவரிடமும் கை ஏந்த அவசியம் இருக்காது.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
🌹🌹🌹🌹🙏🏻🌹🌹🌹🌺

*இன்றைய சிந்தனை.*
..................................................

*'' சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு..''*
.....................................................................

‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம்.

சரி, மரியாதை என்றால் என்ன?

நம்முடைய நற்குணங்கள் நற்செயல்கள் நன்னடத்தை நமக்குச் சமுதாயத்தில் தேடித் தரும் நன்மதிப்பு தான் மரியாதை ஆகும்.

பணம், பதவியினால் வரும் மதிப்பு நிலையானதன்று; பணமும், பதவியும் நம்மை விட்டுச் செல்லும் போது, மதிப்பும், மரியாதையும் நம்மை விட்டுச் சென்று விடும்.

ஒருவர் உடல்நலம் குன்றி ஓய்வு எடுக்கும் போது, நாம் அவரை மரியாதை நிமித்தமாக நலம் விசாரிப்பது மனித நேயம் மிக்க செயல். மனிதப் பண்பாடும் அது தான்.

ஆனால் செல்வமும், செல்வாக்கும் உடையவரை சிலர் அடிக்கடி சந்திப்பதை நாம் பார்க்கிறோம்.

ஒரு சாதாரண மனிதரை அப்படி யாரும் சந்திப்பது இல்லையே ஏன் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பணம் , பதவி படைத்தோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது.

இன்று ஒரு வணக்கம் போட்டு வைத்தால், நாளை ஒன்றுக்குப் பயன்படும் என்னும் நினைப்பில் தன்னலம் இருக்கிறது அல்லவா.?

காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுவதை ஒரு கலையாகக் கற்று ஒரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு ஒரு நண்பர் வந்து விட்டார்.

உனது உயர்நிலையை எண்ணியாவது இனிமேல் காலில் விழுவதைக் கைவிடுக என்று அவருடைய நண்பர் அறிவுரை அவருக்குக் கூறினார்.

நான் இப்படி விழுந்து, விழுந்து தான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதை மட்டும் என்னால் கைவிட முடியாது’ என்று மறுமொழி சொன்னார்.

காலமாறுதலில், எதிர்பாராதவை சில நடக்கக் கூடும். இப்படிக் காலில் விழுந்து கிடப்பவர்களை சிலர் விரும்பி ,வரவேற்று மகிழலாம்.

ஆனால் காலப்போக்கில் காலைத் தொட்டுத் தொழுது கிடப்பவன், காலை வாரி விடவும் தயங்க மாட்டான்.

காலில் விழுந்து கிடப்பவனை அவனது உண்மையான பண்பு அறிந்தவர்கள் ஒதுக்கி விடுவதும் ஒரு கட்டத்தில் நடக்கக் கூடும்.

நடிப்பும் நயவஞ்சகமும் நீண்ட நாள் வெற்றி பெற முடியாது அல்லவா?

சுயமரியாதை இழந்து, குனிந்து கும்பிட்டுக் கிடப்பவர்கள் வாழ்வில் ஒருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும்,

நாம் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து நமது சுயமரியாதையைக் காயப்படுத்தி விடக்கூடாது.

*ஆம்.,நண்பர்களே..,*

நம்முடைய நற்செயல்கள், நன்னடத்தை குறித்து நாம் பெருமையும், பெருமிதமும் கொள்வது நமக்குச் சுயமரியாதை உணர்வை உருவாக்கும்; அடிமை மனத்தை அகற்றும்.

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு,எழிலார்ந்த ஏற்றம் மிகு வாழ்வு,

உயிரனைய உரிமை வாழ்வு என்பதை மனதில் நிறுத்தி மாண்புற வாழ்வோம்.

தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தொண்டறம் செய்து மனிதநேயத்தோடு வாழ்வோம்!

*பகிர்வு - தகவல் உலா*

💐💐💐💐

ravi said…
🌹🌺"Kannan's friend who knew Kuselan's mind and gave him immense wealth.. A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- -----
🌺 Kannan and Kuselan once went to the forest when they were young. Kuselan's mother Gurupathini sent them food.

🌺 They hid in a place when it started raining terribly. There Kuselan was very hungry. Because of that he also ate Kannan's food.

🌺 This is the mistake made by Kuselan. Misappropriation of property of others. For that Kuselan lived in poverty for many years. Not that Kannan immediately punished. He reprimanded.

🌺 A mother never wants to punish her child. She will reprimand. Kannan also did the same.

🌺 After that Kuselan went to see Kannan after many years. Kannan welcomed him warmly. Kannan she ate. At that time the sin of Kuselan was dissolved.

🌺 At the same time, thanks to Krishna's mercy, the blessings multiplied. What we need to know here is that Kuselan did not ask anything from Kannan till the end even when his wife told him.

🌺That's why Kannan also knew the heart of Kuselan and gave him immense wealth.

🌹Long live Vayakam 🌺 🌹 Long live Vayakam🌺 🌹Live prosperously 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹Sarvam Shri Krishnarpanam🌹🌺🌻
ravi said…
🌹🌺" *குசேலனின் மனதை அறிந்து அவனுக்கு அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுத்த நண்பன் கண்ணன் .. விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺கண்ணனும் குசேலனும் சிறு வயதில் ஒருமுறை காட்டிற்கு சென்றனர். குசேலன் அன்னை குருபத்தினி அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.

🌺மழை பயங்கரமாக பெய்ய ஆரம்பிக்க ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டனர். அங்கே குசேலனுக்கு பயங்கர பசி. அதன் காரணமாக கண்ணனின் உணவையும் சேர்த்து சாப்பிட்டான்.

🌺இதுவே குசேலன் செய்த தவறு. மற்றவர்களின் பொருளை அபகரித்தல். அதற்காக குசேலன் ஏழையாக பல ஆண்டுகள் வாழ்ந்தான். உடனே கண்ணன் தண்டித்தான் என்பதல்ல . அவன் கண்டித்தான்.

🌺தாய் ஒருபோதும் பிள்ளையை தண்டிக்க விரும்புவது இல்லை. கண்டிக்கவே செய்வாள். அதையே கண்ணனும் செய்தான்.

🌺அதன் பின் குசேலன் பல வருடங்கள் கழித்து கண்ணனை பார்க்க சென்றான். கண்ணன் அவனை அன்புடன் வரவேற்று உபசரித்தான். கண்ணன் அவல் சாப்பிட்டான். அந்த நேரத்தில் குசேலனின் பாபம் கரைந்தது.

🌺அதே நேரத்தில் கிருஷ்ண கருணையினால் புண்ணியம் பல மடங்காகியது. இங்கே நாம் அறிய வேண்டியது என்னவென்றால் மனைவி கூறி அனுப்பியபோதும் கடைசி வரை குசேலன் கண்ணனிடம் எதுவும் யாசிக்க வில்லை.

🌺அதனாலேயே கண்ணனும் குசேலனின் மனதை அறிந்து அவனுக்கு அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுத்தான்.

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺
ravi said…
நேரமும் வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.

தடைகளையே உற்றுப் பார்க்காதீர்கள்,

அதனால்

உங்களால் எதையும் செய்யமுடியாமல் போகலாம்.

குறிக்கோளை உற்றுப் பாருங்கள்
தடைகள் மறைந்துவிடும் உத்வேகம் தானாக வரும்.

வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது.

விழுந்த போது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை.

எழாத போதுதான் தோல்வி அறிவிக்கப்படுகிறது.

விழுந்தாலும் மீண்டும் எழுங்கள்
வெற்றி நிச்சயம் 👍
ravi said…
*ஹே…. பிரபோ கிருஷ்ணா விட்டலா பாண்டுரங்கா*

உம்மைப் பல பல தடவைகள் துதிக்கிறேன். உமது திருமேனி, ஆகாயத்தைப்போல நீல நிறத்தோடும் மின்னும் மேகத்தைப் போலும் ஜ்வலிக்கிறது.

சிரசிலே மஸ்தக லிங்கதோடு காட்சி தரும் சர்வேச்வரனான விட்டலா
உமது நெற்றியிலே கோபி சந்தனமும்
காதுகளில் மகர குண்டலமும் காட்டுப் புஷ்பங்களை அணிந்துகொண்டு நிற்கும் எழிலும் மயில் இறகுகளைத் தலையில் அணிந்து, கைகளில் சங்கமும் பத்மமும் கொண்டு வரத் ஹஸ்தமும் கொண்டு, இடுப்பில் கைகளை ஊன்றி நின்று கொண்டு, பசுக்களை மேய்க்க கம்பை கால் இடுக்கில் வைத்துக் கொண்டு, பசுக்களை அழைக்கக் கொம்பு வாத்தியத்தையும்
வைத்துக் கொண்டு, ஒரு கோபாலகன் எந்த அடையாளத்துடன் இருப்பானோ, அப்படி உம்மைக் காண்கிறேன். உமது கோமளமான மலர் திருவடிகளைக் காண்கிறேன் அதை பல கோடன கோடி முறை நமஸ்கரிக்றேன்

உமது மகிமைகள் அநந்தம். இந்த, அப்ராக்ருதமான உம்முடைய சரீரம், உமது சங்கல்பத்தால், நீரே படைத்துக் கொண்டது. உமக்கு சமமானவர், மேலானவர் ஒருவருமில்லை. மனத்தால் உம்மைப் பார்ப்பதற்கு, உம்முடைய அநுக்ரஹம் இருந்தால்தான் முடியும். அதுவும், ஆத்ம சுகம் விரும்புகிறவர்கள் , யோக முறையால்தான் பார்க்க முடியும். உமது ஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில் தரித்து, உமது கதா விசேஷங்களைக் கேட்டு, திருநாமங்களைச் சொல்லி, அதையே
வாழ்க்கையாகக் கொண்ட மகான்கள், பாகவத ஸ்ரேஷ்டர்கள் உமக்காகவே வாழ்கிறார்கள்.

உமது ஆத்ம ஸ்வரூபத்தை, உமது திருவருளால்தான் அறிகிறார்கள்.

பக்தி மார்க்கத்தால் உம்மை அறிபவர்கள், ஞான மார்க்கத்தாலோ, நிஷ்டையாலோ எவ்வளவு ஸ்ரமப் பட்டாலும் அந்த பாக்யத்தை அடைவதில்லை. அவர்கள், உமியைக் குத்துபவர்கள்.

பல யோகிகள் , தங்கள் கர்மாவை, உமது பாத சரோஜங்களில் ஸமர்ப்பித்து, அதிலேயே பற்று வைத்து, ஸதா ஸர்வ காலமும் உமது புண்ய சரிதங்களையே கேட்டு,
உமது வாஸமான ஸ்ரீ வைகுண்டத்தை அடைகிறார்கள். உமது குணமஹிமையைச் சொல்லிச் சொல்லி, உமது திவ்ய ஸ்வரூபத்தைத் த்யானித்து, நீர் ,
பல அவதாரம் எடுத்ததை நினைத்து, வாழ்கிற பக்தர்கள், காலக்ரமத்தில் , உமது கிருபையால் உம்மை வந்து அடைகிறார்கள்.
உமது அநந்தமான நாமம் சொல்லும் மகா பாக்கியத்தை அருள வேண்டும் என் விட்டலா

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி

மேலும் இது போல ஆன்மீக தகவல் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
*வ்ருஷ பரவணே நமஹ*🙏
தன்னை அடையக் கூடிய படியாக தர்மங்களையே கொண்டவர்
ravi said…
துர்லபா துர்க்கமா துர்க்கா *து:க்கஹந்த்ரீ* ஸுகப்ரதா🙏🙏

துக்கத்தை அழிப்பதில் முதன்மை யானவள்
ravi said…
நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு மட்டுமே இருக்கும்.

உலகின் மிக மிகச் சிறந்த யோசனைகள்கூட பயனற்றுப்போகும்,
நீங்கள் செயல்படவில்லை என்றால்.

ஒவ்வொரு நாளும் இளமை கலைகிறது, முதுமை படர்கிறது. செய்ய நினைத்ததை இன்றே செய்யுங்கள்.

ஏனெனில் காலம் உங்கள் கையில் இல்லை, காலத்தின் கையில் தான் நீங்கள் உள்ளீர்கள்.

வானுக்கு எல்லை இல்லை, காற்றுக்கு வேலி இல்லை, மண்ணுக்கு அளவு இல்லை, உங்கள் முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
https://chat.whatsapp.com/CVC5I4mUuXn4fCe9btAOMy

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆணவம் அழிக்கும் செவ்வந்தியின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :*

மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும், மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்து செல்லக்கூடியவை.

அதனால் தான் இறைவனை துதிக்கின்ற பூஜைகள், வழிபாடுகளில் மலருக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் எல்லா விதமான மலர்களையும் எல்லா தெய்வத்திற்கும், வழிபாடுகளிலும் பயன்படுத்தலாமா? என்றால் அவ்வாறு செய்ய இயலாது. குறிப்பிட்ட மலர்களை குறிப்பிட்ட கடவுளுக்குத்தான் அர்பணிக்க முடியும்.

உதாரணத்திற்கு துளசியை சிவனுக்கு அர்பணிக்க முடியாது. ஆனால் விஷ்ணுப்பெருமானுக்கு மாலையாக கட்டி வழிபடலாம். ஒரு வில்வ தளமானது லட்சம் பொன் மலர்களுக்கு சமம்.

ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்பட்ட பாவங்களும் விலகும்.

அந்த வகையில், கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது செவ்வந்தி மலர் ஆகும்.

ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பது நம்பிக்கை.

அதை போலவே செவ்வந்தியின் தனித்தன்மை யாதெனில், மற்ற மலர்களை போல் அல்லாமல் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே அதனால் மற்ற மலர்களை மரு உருவாக்கம் செய்ய முடியும். இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது.

http://blog.omnamasivaya.co.in/2022/11/blog-post_48.html

செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற் போல மற்றொரு வடிவை எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

இந்த செவ்வந்தி மலர் அனைத்து விதமான தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும்.

மேலும் இதனுடைய நறுமணமானது அதன் இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது தான் வருந்தினும் பிறருக்கு நன்மையை அளிக்கும் புனித தன்மையுடன் செவ்வந்தி உள்ளது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

*��ஓம் நமசிவாய��*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்த நூற்றாண்டில் பிரத்யக்ஷமாகத் திரும்பத் திரும்பப் பார்த்த விஷயம் சொல்கிறேன். தர்மசாஸ்திர ஆசாரங்கள் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாகப் பிளவுபடாமலே இருந்திருக்கின்றன. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றெல்லாம் தத்வரீதியில் பிரிந்த போதுங்கூட இவர்கள் புதுப்புது தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொண்டு விடவில்லை. பழைய சாஸ்திரங்களின்படியேதான் பெரும்பாலான ஆசாரங்கள் இருந்தன. ஆதியிலிருந்த ஆபஸ்தம்ப, ஆச்வலாயனாதி ஸுத்ரங்களும், மநுதர்ம சாஸ்திரம், நிபந்தன க்ரந்தங்கள் முதலியனவுந்தான் எல்லா ஸித்தாந்திகளுக்கும் பொதுவாகத் தொடர்ந்து இருந்திருக்கின்றன. இவற்றுக்குள்ளேயேதான் சில ஸித்தாந்திகள் சிலதை விட்டும் சிலதைச் சேர்த்தும், சிலதைக் கூட்டியும் சிலதைக் குறைத்தும் பண்ணுகிறார்கள். இப்படி வைதிகாசாரமானது ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஒரே மாதிரியாக இருந்துவந்திருக்க,
ravi said…
ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே அநேகமாக ஹிந்துமதச் சீர்திருத்த இயக்கங்களாகத் தோன்றிய எல்லாவற்றிலும் பிளவுகள் ஏற்பட்டு வெவ்வேறு ”க்ருப்”கள் தோன்றி விட்டன!
மதச் சீர்திருத்த அம்சங்களையே நிறையக் கொண்ட அரசியல் கட்சிகளிலும் இப்படியே ஒவ்வொன்றும் இரண்டாக, மூன்றாக உடைந்து போயிருக்கின்றன. இப்படி இதுகளுக்கு stability (ஸ்திரத்தன்மை) போதாததே இவற்றிலே ஸத்ய பலம் குறைச்சல்,
ravi said…
இவற்றை ஆரம்பித்தவர்களுக்கு (அவர்கள் நல்லவர்களாகவும், நல்ல நோக்கமுள்ளவர்களாகவும் இருந்தாலும்) தபோ பலம் குறைச்சல் என்பதற்கு அழுத்தமான proof -ஆக இருக்கிறது. கொள்கைகளின் ஸத்யமும், அவற்றைச் சொன்ன ரிஷிகளின் தபோ பலமும்தான் வைதிக ஸமயாசாரத்தை யுகயுகாந்தரங்களாகக் காப்பாற்றியிருக்கிறது. இன்றைக்கு இத்தனை சீர்திருத்த மத இயக்கங்கள் ஏற்பட்ட பின்னும் முக்கால்வாசிக்கு மேலான ஜனங்கள் இவற்றில் சேராமல் மூலமான ஹிந்து மதத்தில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வெளியிலே ஆசாரத்துக்கு மாறாகச் சொல்கிறவர்கள் கூட உள்ளூர [அதற்குக்] கொஞ்சம் பயப்படத்தான் செய்கிறார்கள். தங்கள் சொந்த விஷயத்தில் ரஹஸ்யமாக அநேக ‘ஸுபர்ஸ்டிஷன்’களை அநுஸரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்! இப்படி அநேகம் என்னிடம் அற்றுபடியாகிக் கொண்டிருக்கின்றன!
ravi said…
எலெக்ஷனுக்கு டெபாஸிட் கட்டுவதென்றால் எத்தனை ரேஷனலிஸ்டானாலும் நாள், நக்ஷத்ரம் பார்த்துத்தான் செய்கிறார்கள் என்று கேள்வி! பழைய ஆசாரம் வேணுமா, சீர்திருத்தம் வேணுமா என்பதற்கு ஒரு ‘டெஸ்ட்’ போதும். ஒழுங்கீனம், லஞ்சம், திருட்டுப்புரட்டு, மோசடி, கொலை, வியபசாரம் இத்யாதிகள் நாம் ‘ஸுபர்ஸ்டீஷிய’ஸாக இருந்தபோது ஜாஸ்தியிருந்ததா, இப்போது ‘என்லைடன்’ ஆகிவிட்ட பிறகு [‘அறிவுப் பிரகாசம்’ அடைந்த பிறகு] ஜாஸ்தியாகியிருக்கிறதா என்று பார்த்து விட்டால் போதும்!இத்தனை அனர்த்த பரம்பரையோடுதான் நாம் ‘சீர்திருந்தி’யிருக்க முடியுமென்றால், இதைவிட மூட நம்பிக்கைகளைக் கட்டிக்கொண்டு அழுவதேமேல் என்றுதான் தோன்றுகிறது.
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 30 காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபித கந்தரா =*

காமேஷ்வரன் (ஈஸ்வரன்) அணிவித்த மங்கலநாணுடன் சோபிக்கும் கழுத்தை உடையவள்
ravi said…
அம்மா*

மூன்று முடிச்சு போட்டான் சுந்தரன் உன் கழுத்தில் ...

பலனாக அவன் கண்டம் அமுதாக்கினாய் ...

பரமன் அணிவித்த திருமாங்கல்யம் சுந்தரி உனை இன்னும் சொக்க வைத்ததே

சொக்க வைத்தே சுந்தரனை காமேஸ்வரன் ஆக்கினாய் ...

சின்முத்திரைகள் நீங்கி அங்கே சிற்றம்பலம் ஆனதே

🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 128*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
வேதனாலு பூதமாய் விரவுமங்கி நீரதாய்
பாதமேயி

லிங்கமாய்ப் பரிந்துபூசை பண்ணினால்

காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்

ஆதியந்த முங்கடந் தரியவீட டைவரே. 128
ravi said…
நாண்டு வேதங்களில் உள்ள மெய்ப்பொருள் பஞ்சபூதங்களாய் விரிந்து நம் உடம்பில் நீராய் நிற்கின்றது.

அதுவே ஈசன் திருவடியாகவும் இழிந்கமாகவும் இருப்பதை அறிந்து ஆன்மா எனும் பூவை அசையாமல் நிறுத்தி தியானிக்க வேண்டும்.

அப்போது வாசியானது லயமாகி நாத சப்தத்துடன் நம் காதுகளில் கேட்கும்.

அந்நாத ஒலியால் மெய் வாசலைத் திறந்து மனமெனும் பேயை தவத்தால் கட்டறுத்த ஞானிகள் ஆதி அந்தமும் கடந்து அனாதியாய் உள்ள சிவத்தை அடைந்து அரிய வீடு பேறை அடைவார்கள்.
ravi said…
முகுந்தமாலா 30 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அடுத்த முப்பதாவது ஸ்லோகம்….

मज्जन्मनः फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीयमदनुग्रह एष एव ।

त्वद्भृत्यभृत्यपरिचारकभृत्यभृत्यभृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥ ३२ ॥

மஜ்ஜன்மன: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே

மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ ।

த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² ॥
ravi said…
அடுத்த முப்பதாவது ஸ்லோகம்….

मज्जन्मनः फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीयमदनुग्रह एष एव ।

त्वद्भृत्यभृत्यपरिचारकभृत्यभृत्यभृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥ ३२ ॥

மஜ்ஜன்மன: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே

மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ ।

த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² ॥
ravi said…
த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத²

ன்னு உன்னுடைய அடிமைக்கு, அடிமைக்கு, அடிமைக்கு, அடிமைக்கு அடிமைக்கு, அடிமைக்கு, அடிமையாக என்னை வெச்சுக்கோ. எனக்கு அந்த தாஸ்யத்தை கொடு. அந்த அடிமைக்கு அடிமைக்கு அடிமையா இருக்கணும் ன்னு வேண்டிக்கறார். ஒரு செல்வம்னா பரம்பரையா வந்தா அதுக்கு ஒரு பெருமை. புது பணக்காரன்னு கேலி பண்ணுவா இல்லையா? பரம்பரையா வந்த செல்வத்துக்கு ஒரு பெருமை. அந்த மாதிரி இந்த அடிமைச் செல்வதையும் பரம்பரையா வந்தா பெருமை. அருணகிரிநாதர் சீர்பாத வகுப்புல

“முடியவழி வழியடிமை எனுமுரிமை அடிமை முழு

துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி

முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன

முகுளபரிமள நிகில கவிமாலை சூடுவதும்… மணநாறு சீறடியே”

ன்னு சொல்வார்
Kousalya said…
என்ன ஒரு வேண்டுகோள்....அடியேன் அடியாருக்கு அடியாருக்கு அடியாருக்கு அடியாருக்கு அடியாராக இருக்க வேண்டும் என்று....அற்புதம்...🙏🙏🙇‍♀️🙇‍♀️🪔🪔🪷🪷
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 396*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை

ஆகாஶேன ஶிகீ² ஸமஸ்தப²ணினாம்ʼ நேத்ரா கலாபீ நதா-

(அ)னுக்³ராஹிப்ரணவோபதே³ஶனினதை³꞉ கேகீதி யோ கீ³யதே .
ஶ்யாமாம்ʼ

ஶைலஸமுத்³ப⁴வாம்ʼ க⁴னருசிம்ʼ த்³ருʼஷ்ட்வா நடந்தம்ʼ முதா³

வேதா³ந்தோபவனே விஹாரரஸிகம்ʼ தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 53..
ravi said…
சிவபெருமானை அற்புத மயிலாக ஆச்சார்யாள் நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.

எந்த வஸ்துவை பார்த்தாலும் அவருக்கு சிவபெருமானாகத் தான் காட்சியளிக்கிறது.

இப்படி ரசித்து ரசித்து ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.

போன ஸ்லோகத்தில் சிவபெருமானை மேகமாக சிலேடை செய்தார்.

இந்த ஸ்லோகத்தில் அம்பாளையே கருமேகமாகவும் அதனைப் பார்த்து நடமாடும் மயிலாக சிவபெருமானை ஸ்தோத்திரிக்கிறார். 🙏🌸

பொதுவாக முருகனைத்தான் மயிலோடு ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம்.

முருகப்பெருமான் ஸ்வாமிநாதனாக சிவபெருமானுக்கு பிரணவோபதேசம் செய்திருக்கிறார்.

அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று திருப்புகழில் பாடுகிறார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 398* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
என் உள்ளத்தில் உள்ளதை உங்களில் ஒருவர் கூட உணரவில்லையே!” என வருந்தினான் ராமன்.

“அனுமனே! நீ அவன் நல்லவன் என்பதால் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாய்.

வானரர்களே! அவன் தீயவன் என்பதால் ஏற்கலாகாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆனால் என் கருத்து யாதெனில் வந்திருப்பவன் நல்லவனாக இருந்தாலும் சரி, தீயவனாக இருந்தாலும் சரி,
என்னைத் தேடி வந்தவனை ரட்சித்தே தீருவேன்!” என்று தன்னுடைய திருவுள்ளத்தை வெளியிட்டான் ராமன்🙏🙏🙏🙏🙏
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 14 started on 6th nov
ravi said…
*பாடல் 7 ... கெடுவாய் மனனே*

(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய்,

வடிவேல் இறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
ravi said…
*மனனே* ... ஏ மனமே,

*கெடுவாய்* ... நீ கெட்டு வீணே ஒழிகின்றாய்,

*கதி கேள்* ... நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக,

*கரவாது இடுவாய்* ... இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம்
செய்வாயாக,

*வடிவேல் இறை தாள் நினைவாய் ...*

வேலாயுதக்கடவுளின்
திருவடிகளைத் தியானிப்பாயாக,

*நெடு வேதனை ...* நீண்ட பிறவித் துன்பத்தை,

*தூள் படவே சுடுவாய் ...*

பொடியாக்கி ஞானாக்கினியால்
சுட்டு எரிப்பாயாக

*வினையாவையும் விடுவாய் விடுவாய்* ...

வினைகள் யாவையும்
விட்டு விடுவாய்
ravi said…
பாதாரவிந்த சதகம் !

27.கவீநாம் சேதோவன் நகரருசி ஸம்பர்க்கி விபுத
ஸ்ரவந்தீ ஸ்ரோதோவத் படுமுகரிதம் ஹம்ஸகரவை: தினாரம்ப ஸ்ரீவத் நியதம் அருணச்சாய ஸுபகம்
மதந்த: காமாக்ஷ்யா: ஸ்புரது பதபங்கேருஹ யுகம் |

கவிகளின் மனம்போல், நகர (கரடுமுரடல்லாத நகத்தின்) ருசியுடன் (ஒளியுடன், சுவையுடன்) கூடியதும் கங்கையின்
பிரவாகம்போல்
ஹம்ஸகங்களின் (பாதசரங்களின்,
அன்னப்பட்சிகளின்) இனிய ஒலிகளால் இனிது பேசுவதும், உதயகாலத்து அழகுபோல் அருண (செம்மையுள்ள அருணனுடைய)ச் சாயையால் அழகியதுமான காமாக்ஷியின் இரு திருவடித் தாமரைகள் எப்போதும் என் உள்ளத்தில் விளங்கட்டும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
Hariharan Krishnamurthy:
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி

“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ .....வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ... இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி .... வந்திருக்கேன்” -பெரியவா

(“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மி யம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!)

கட்டுரை ஆசிரியர்-ரா.கணபதி
கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.

நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதி ராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.

ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாகநிறுத்தி வைக்கப் பட்டிருந்தது..க்யூவிலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்

“ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா! “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள்.

வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க் கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். முக்யமான ஆலோசனையிலிருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார்.

அவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலாக!

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” --- நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி! இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர்.

“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!

முகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே! என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள்.

அது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலெ கூரை அமைக்கப் பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்!

“ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி?” என்றார்.

“நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது!” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக் கொண்டாள்.

பெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார்.

என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப் பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள்.

ஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி! நான் போகலாமா?” என்றார்.

“பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ!” என வேண்டினாள் அந்த பரம பக்தை.

“ பாட்டீ! அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இருந்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே! நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர்.

தமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும்,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது

ravi said…
சங்கராம்ருதம் - 340

அவ்யாஜ கருணையும், அளவிலா அன்பும் ஒரு கலவையாகி, கலவையில் பீடாதிபத்யம் ஏற்றதும், அப்போது ஸ்ரீமடத்தின் ராஜதானியாக இருந்த கும்பகோணத்தில், ஸம்ப்ரதாய ராஜரீகத்துடன் விமர்ஸையாக பட்டாபிஷேகம் ஏற்றுக்கொள்ள முதல் யாத்ரையாக கிளம்பினார் நம்முடைய பெரியவா.போகும் வழியில் திண்டிவனத்தை தாண்டித்தான் போகவேண்டும் என்பதால், அத்தனை நாள், குட்டி ஸ்வாமிநாதனாக ஆடி, ஓடி, கூத்தடித்த திண்டிவனத்துக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதியாக, முதன்முதலாக தன் திருவடிகளைப் பதித்தார்.தங்கள் வீட்டுச் செல்லக்குழந்தை, உலகத்தை உத்தாரணம் பண்ணப் பொறுப்பேற்றதைக் கண்டு திண்டிவனவாஸிகள், ஸ்வாமிநாதனுடன் படித்த ஸக மாணவர்கள், ஸ்கூல் ஹெட்மாஸ்டர், டீச்சர்கள், பாவா மரைக்காயர் குடும்பத்தார், தெருக்காரர்கள் என்று அத்தனை பேரும், பெரியவாளின் வருகையை ஒரு மஹத்தான விழாவாகவே கொண்டாடினார்கள்.வீட்டுக்குவீடு மாவிலைத் தோரணம், வாழைப்பந்தல், பெரிய பெரிய மாக்கோலங்கள், ஸந்தோஷமான முகங்கள், ஜாதி, மத பேதமில்லாமல் ஒவ்வொரு வீட்டு வாஸலிலும் பூர்ணகும்பங்கள், சுடர் விட்டெறியும் தீபங்கள், பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளில் கூட, ஶாஸ்திரிகளை வைத்து பூர்ணகும்பம் குடுக்க ஏற்பாடு…… என்று வனவாஸம் முடித்து வந்த ஸ்ரீராமனை வரவேற்ற அயோத்தி போல் கல்யாணக்கோலமாக ஸந்தோஷம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது.இத்தனை வைபவத்திலும், ஒரே ஒரு ஜீவன் மட்டும் மிகுந்த வெட்கமும், வேதனையும் சூழ, மனஸில் போராடிக் கொண்டிருந்தது.
ravi said…
அது யார்?ஒரு சின்ன flash back-ல் மறுபடியும் குட்டி கிணியை இதே திண்டிவனத்தில் ஸந்திப்போம்….நம்முடைய செல்லக்கிணி திண்டிவனத்தில் இருந்தபோது, அங்கு ஒரு ப்ராஹ்மண விதவைப் பாட்டி, முறுக்கு சீடை வ்யாபாரம் பண்ணி வந்தாள்.அவளுடைய Premium Customer, வேறு யாருமில்லை, நம்முடைய ஸ்வாமிநாதன்தான்!ஸ்வாமிநாதனுக்கு அந்தப் பாட்டியின் கையால் செய்யும் முறுக்கும், தட்டையும், சீடையும் ரொம்பப் பிடிக்கும். அம்மாவிடமிருந்து காஸு வாங்கிக் கொண்டு வந்து, பாட்டியிடம் வாங்கி ஸாப்பிடுவான்.ப்ருந்தாவனத்தில் கோபகுமாரனாக, கோபர்களோடு வனபோஜனம் பண்ணுவதில் மிகுந்த ப்ரீதி உடையவன் என்பதால், தான் மட்டும் தனியாக என்றுமே ஸாப்பிடும் பழக்கம் இல்லையே! படை-பட்டாளத்தோடுதான் வருவான். அந்தப் பசங்களும் நிறைய வாங்கி ஸாப்பிடுவார்கள்.மொத்தத்தில்,
ravi said…
பாட்டிக்கு இவனால் நல்ல போணி ஆகும்! வ்யாபாரம் சூடு பறக்கும்!பாட்டியிடம் வாங்கிய முறுக்கை ‘கறுக்-முறுக்’கென்று உள்ளே தள்ளிக் கொண்டே, business deal-லாக அவளுக்கும், தனக்குமான ஞாயமான பேரம் பேசினான்…..“பாட்டி! ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சுக் குடுத்திருக்கேனோல்லியோ? அதுனால, எனக்கு மட்டும்.. வெலைய கொஞ்சம் கொறைச்சு குடேன்…”Commission-ம், discount-ம், எந்த தர்மமான வ்யாபாரத்திலும் உண்டுதானே?‘என்னுடையது அத்தனையையும், உனதே…யடா !‘ என்று ஆத்மஸமர்ப்பணம் பண்ண வேண்டிய குழந்தையிடம், பாட்டி கொஞ்சங்கூட அசைந்து கொடுக்கவில்லை!நூறு வயஸிலும், இத்தனை அளவிலா அற்புதங்களை ஸாதித்தும், தன்னை பலபேருக்குக் காட்டிக் கொள்ளாமலே இருக்கும் ஸ்வாமிகள், அன்று குழந்தையாக எத்தனை ஜாலங்கள் பண்ணி, எத்தனை பேருடைய கண்களை கட்டியிருப்பார்!“என்ன பாட்டி? யோஜிச்சு சொல்லு…”“அதெல்லாம் கெடையாது.! ஒனக்கு வேணுங்கறதை வாங்கி ஸாப்டு…! வெலையெல்லாம் கொறைக்க முடியாது”பாட்டி கறாராக பேசினாள். ஸ்வாமிநாதனுக்கு கோபம் வந்தது…..“போ! பாட்டி! இனிமே ஒங்கிட்ட நா… வாங்கப் போறதே இல்ல..!”“வாங்காட்டா போயேன்! ஏதோ நீ வாங்காட்டா… எனக்கு பொழப்பே இல்லாமப் போயி, ஒன்னைப் பூர்ணகும்பம் வெச்சு கூப்டுவேன்-னு நெனச்சுண்டியோ?…”பாட்டி அதை விடக் கோபமாக கத்தினாள்.“கூப்ட்டுத்தான் பாரேன்…..!”ஸ்வாமிநாதன் ஓடிவிட்டான் அங்கிருந்து! அதற்குப்பின், அந்தக் குழந்தை, பாட்டியின் வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.அன்று குழந்தை ஸ்வாமிநாதனுக்கு “முறுக்கு வெலையை கொறச்சுத் தரமுடியாது!’என்று ஒரே முறுக்காக முறுக்கிக்கொண்ட அதே ப்ராஹ்மண விதவைப்பாட்டிதான், இன்று குட்டி ஸ்வாமிகளை, காஞ்சி காமகோடி பீடாதிபதியை வரவேற்க வாஸலில் கோலம் போட்டு, பூர்ணகும்பத்தை ஸித்தம் செய்தாள்.அவளுடைய மனஸுக்குள்தான்…. ஏகப்பட்ட உணர்ச்சிப் போராட்டம்!“ஒனக்கு பூர்ணகும்பம் வெச்சுக் கூப்டுவேனாக்கும்?…” ன்னு அந்தக் கொழந்தையை, என் சமத்து சக்கரைக்கட்டியை வெரெட்டினேனே! மஹாபாவீ! பாவம், அதுவும்…. அதுக்கப்றம் இந்தப் பக்கம் தலையே காட்டல!…. இன்னிக்கி அதுதான்….. தண்டபாணியாட்டம் வரப்போறது”வெட்கம், பஶ்சாதாபம், வருத்தம் எல்லாம் கலந்த நிலையில், தன்னைத்தானே அபராதி என்று நொந்து கொண்டிருந்தாள் முறுக்குப்பாட்டி!“இன்னிக்கி என்னோட பூர்ணகும்பத்தை, அது…. ஏத்துக்குமா?...”
ravi said…
கண்ணெட்டும் தூரத்தில், வேதகோஷம் விண்ணைப் பிளக்க, திண்டிவனமே ஒட்டு மொத்தமாக உடன் ஓடிவர, இதோ….. பால ஸ்வாமிகள் ஒவ்வொரு வீட்டின் வாஸலிலும் நின்று, அழகாக பூர்ணகும்பத்தை தொட்டு ஆஶீர்வதிக்கிறார்.ஆஹா! முறுக்குப்பாட்டி வீட்டுக்கு முந்தின வீட்டுக்கும் வந்தாகிவிட்டது!பாட்டி, ஸ்வாமிகளை உற்றுப் பார்க்கிறாள்.ஆஹா! எப்பேர்ப்பட்ட உருமாற்றம்! ஏற்கனவே சுட்டி, சமத்து! இப்போது அந்த முண்டனம் செய்த முகத்தில் பளீரென ஒளிரும் தெய்வீகம், தேஜஸ்…. அதோடு கலந்த ஒரு தாய்மையின் குழைவு! சில மாஸங்களிலேயே இத்தனை தேஜஸ்ஸா!இதோ! பாட்டியின் வீட்டு வாஸலுக்கு வந்து நிற்கிறார் பால ஸ்வாமிகள் !ஆவலும், ஆசையும் பாட்டியின் கால்களை முன்னே தள்ள, குற்ற உணர்ச்சியும், பயமும் பின்னிழுக்க, அதற்குள் ஶாஸ்த்ரிகள் ஒருவர், அவளுடைய ஸார்பாக பூர்ணகும்பத்தை குழந்தை ஸ்வாமிகள் முன் நீட்டினார்.ஜகத்குருவின் பரிவான நயனங்கள் பாட்டி மேல் பதிகிறது. அபராதக்ஷமாபனங்கள் பாட்டியின் மனஸில் ஓலமிட்டுக் கொண்டிருந்தது, அவதார ரத்னத்துக்கு தெரியாதா என்ன?அழகாக புன்னகைத்துக் கொண்டே, பூர்ணகும்பத்தில் தன் திருக்கரத்தை வைத்தார்.“குடுப்பேனா-ன்னு நீயும் குடுத்துட்டே! வாங்கிப்பேனா-ன்னு நானும் வாங்கிண்டுட்டேன்!…”தேனாகக் கூறிவிட்டு, பாட்டி நமஸ்காரம் பண்ணியதும், “நாராயண! நாராயண!” என்று ஆஶீர்வதித்தார்.இரண்டு பேரும் பண்ணிய ப்ரதிக்ஞையில், இப்போது இரண்டு பேருமே தோற்றுப் போனதில், இருவருக்குமே ஏகக் களிப்பு!போகும்போக்கில், பாட்டியின் உள்ளத்தையும், அதில் பிராண்டிக் கொண்டிருந்த குற்றமனப்பான்மையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்.லோகத்தில் உள்ள அத்தனை ஜீவராஸிகளையும், அவற்றின் குற்றம்-குறையோடு அப்படியே எடுத்துக் கொண்டு, அவற்றை அறவே நீக்கி ஶுத்தம் செய்து தன்னிடமே கலந்து கொள்ளும் ப்ரேமாக்னி இல்லையா?



ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ravi said…
🌹🌺 ""Dear...Ask for whatever you want...Money? Fame? Power? - A Simple Story Explained by Sri Caitanya Mahaprabhu 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 We are people who live as examples for others, the greatest need of today's society

🌺 Sri Krishna devotee Kolavechha Sridhar was happy even when he lived in extreme poverty. He did not ask anything else for himself from Bhagavan.

🌺Sri Chaitanya Mahaprabhu said to him, "I am giving you a boon. Dear...Ask for whatever you want... Wealth? Fame? Power? Ask for whatever you want."

🌺Kolavecha Śrīdhar nevertheless became happy within himself as he tasted the nectar of the love of Śrī Kṛṣṇa bhakti. This is real wealth.

🌺Therefore, it is very important to evaluate what is sacred in our lives.

🌺What is most important? To accumulate more fame, prestige, money? Greater enjoyment of sense pleasure? Or living with character?

🌺Do we benefit the world by living by example? The greatest need of this human society is people who lead by example.

🌺 Yat Yat Asarathi Shreshtas
Dut Dut Evetaro Jana: 🌹

As the Bhagavad Gita says

🌺 That the common people follow what the leaders do.

🌺 All of you who are here in this Sri Krishna group, your children will be the leaders of the society in one way or another in the future.

🌺If you live up to your high standard of action, your children and others around you will follow suit.

🌹So, living authentically? Or living in illusion? Please evaluate what is most valuable in your life and correct/change the mistakes today.

🌹🌺Those who corrected themselves (Anjaneyar, Valmiki, Vallalar, Ramana, Pattinathar) we still remember the history of

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "“ *அன்பரே* ... *என்ன வேண்டுமோ கேளுங்கள்* ... *செல்வமா* ? *புகழா* ? *அதிகாரமா* ? *என்ற ஸ்ரீ சைதன்ய மகாபிரபு* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 நாம் பிறருக்கு முன்னுதாரணமாக வாழும் மக்களே இன்றைய சமுதாயத்திற்கு மிகப் பெரிய தேவை

🌺ஸ்ரீ கிருஷ்ண பக்தர் கொலவேச்ச ஸ்ரீதர் என்பவர் மிகக்கொடிய வறுமையில் வாழ்ந்தபோதும் மகிழ்ச்சியாக இருந்தார். பகவானிடம் தனக்காக வேறெதுவும் வேண்டவில்லை.

🌺ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவரிடம், "நான் உனக்கு வரம் அருள்கிறேன். அன்பரே...என்ன வேண்டுமோ கேளுங்கள்... செல்வமா? புகழா? அதிகாரமா? எது வேண்டும் கேள்" என்றார்.

🌺இருப்பினும் கொலவேச்ச ஸ்ரீதர் ஸ்ரீ கிருஷ்ண பக்தியின் அன்பின் அமிர்தத்தை ருசிப்பதால் தனக்குள்ளேயே மகிழ்ச்சி அடைந்தார். இதுதான் உண்மையான செல்வம்.

🌺ஆகவே, நமது வாழ்க்கையில் புனிதமானது எது என்பதை மதிப்பீடு செய்வது மிக மிக அவசியம்.

🌺மிக முக்கியமானது என்ன? மேன்மேலும் புகழ், கௌரவம், பணத்தை குவிப்பதா? புலன் இன்பத்தை மேன்மேலும் அனுபவிப்பதா? அல்லது பண்புடன் வாழ்வதா?

🌺முன்மாதிரியாக வாழ்வதன் மூலம் உலகிற்கு நாம் நன்மை புரிவதா? சிறந்த முன்மாதிரியாக வாழும் மனிதர்கள்தான் இந்த மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய தேவை.

🌺 *யத் யத் ஆசரதி* *ஸ்ரேஷ்டஸ்*
*தத் தத் ஏவதரோ ஜன* : 🌹

என பகவத் கீதை கூறுகிறது

🌺தலைவர்கள் எத்தகைய செயல் செய்கிறார்களோ அதனையே சாதாரண மக்களும் பின்பற்றுகிறார்கள் என்று.

🌺இங்கே இந்த ஸ்ரீ கிருஷ்ண குழுவில் குழுமி இருக்கும் நீங்கள் அனைவரும், உங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தின் தலைவர்களாக வருங்காலத்தில் இருப்பீர்கள்.

🌺நீங்கள் உங்கள் உயர்ந்த செயலால் முன் மாதிரியாக வாழ்ந்தால், உங்கள் குழந்தைகள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களும் உங்களை பின்பற்றி வாழ்வார்கள்.

🌹எனவே, உண்மையாக வாழ்வதா? அல்லது மாயையாக வாழ்வதா? எது உங்கள் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை தயவுசெய்து மதிப்பீடு செய்து இன்றே தவறுகளை திருத்தி/மாற்றிக் கொள்ளுங்கள்.

🌹🌺தன்னை தானே திருத்தியவர்களே(ஆஞ்சநேயர், வால்மீகி, வள்ளலார், ரமணர், பட்டினத்தார் என பற்பலோர் சரித்திரம் இன்றும் நாம் நினைவில் கொண்டுள்ளோம்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
Hariharan Krishnamurthy:
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி

“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ .....வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ... இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி .... வந்திருக்கேன்” -பெரியவா

(“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மி யம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!)

கட்டுரை ஆசிரியர்-ரா.கணபதி
கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.

நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதி ராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.

ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாகநிறுத்தி வைக்கப் பட்டிருந்தது..க்யூவிலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்

“ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா! “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள்.

வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க் கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். முக்யமான ஆலோசனையிலிருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார்.

அவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலாக!

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” --- நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி! இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர்.

“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!

முகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே! என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள்.

அது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலெ கூரை அமைக்கப் பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்!

“ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி?” என்றார்.

“நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது!” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக் கொண்டாள்.

பெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார்.

என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப் பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள்.

ஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி! நான் போகலாமா?” என்றார்.

“பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ!” என வேண்டினாள் அந்த பரம பக்தை.

“ பாட்டீ! அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இருந்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே! நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர்.

தமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும்,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது

ravi said…
ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக்கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக்கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன.
குப்பைத் தொட்டியான #மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே #த்யானம் செய்ய முடிகிறது.
கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த #நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது.
குயுக்தி எல்லாம் பண்ணும் #மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்வ ஆராய்ச்சி பண்ண முடிகிறது.
இப்படியே, இந்த சரீரத்தால் – கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா? அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சரீரப் பிரயாஸையாலேயே பண்ணிக்கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக்கார்யங்களான பூர்த்த தர்மங்கள்-ஸோஷல் ஸர்வீஸ்-அத்தனையும், சரீரப் பிரயாஸையாலேயே இது சித்த சுத்தியையும் தரக்கூடியது.
ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் கார்யங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான்.

#தயை என்பது ஒவ்வொருவர் மனஸிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம்.
அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும்......

#தெய்வத்தின்_குரல்...
#மஹாபெரியவா_சரணம்...
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 17

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல். . . . .[17]

விளக்கம்:

கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*வ்ருஷோதராய நமஹ*🙏

பக்தர்க‌ள் சமர்பிப்பதை ஏற்று மகிழ்பவன்
ravi said…
துர்லபா துர்க்கமா துர்க்கா து:க்கஹந்த்ரீ *ஸுகப்ரதா*🙏🙏

தீங்கு இல்லாத நன்மையை அளிப்பவள்
ravi said…
➰➰➰➰➰➰➰➰➰➰➰

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

நாளைய
வாழ்க்கையை
சிறப்பாக மாற்றுவது
இன்றைய
எண்ணங்களும்,
செயல்களும் தான்!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

உடல் வலியால் அல்லல்படுபவர்கள் விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்யை சம அளவு எடுத்து அதில் அன்னாசி பூ சேர்த்து காய்ச்சி, தடவி வந்தால் வலி விரைவில் மறையும்.

📰 *நாளும் ஒரு செய்தி*

வெள்ளைச் சர்க்கரையில் உள்ள ரசாயனங்கள் நமது உடலிலுள்ள *இன்சுலின்* சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடும்.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

வெங்காயத்தை வெட்டும் முன் வெந்நீரில் நனைத்த பின் வெட்டினால் கண்கள் எரியாது.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

பேச்சை அடக்குவது மிகக் கடினம். அது மிகச் சுருக்கமாகவும், பொருட் செறிவுடன் இருப்பது அவசியம்.
*-விதுரர்*

📆. *இன்று நவம்பர் 24-*

▪️ *1859-இல் சார்லஸ் டார்வின் "உயிரினங்களின் தோற்றம்" என்ற நூலை வெளியிட்டார்.*

🌸 *பிறந்த நாள்* 🌸

⭕1961- *அருந்ததி ராய்* (இந்திய எழுத்தாளர்)

💐 *நினைவு நாள்* 💐

⭕1675- *குருதேக் பகதூர்* (இந்திய ஆன்மீகத் துறவி)

➰➰➰➰➰➰➰➰➰➰➰
( *பகிர்வு - தகவல் உலா)*

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/I8tPBT0gyRA55eGhB3WmiN
ravi said…
வீட்டுடன் ஒப்பிடும்போது கதவு மிகவும் சிறியது, கதவுடன் ஒப்பிடும்போது ஒரு பூட்டு மிகவும் சிறியது. இவ்விரண்டையும் விட ஒரு சாவி எல்லாவற்றிலும் சிறியது,

ஆனால் ஒரு சாவியால் முழு வீட்டையும் திறக்க முடியும். அதுபோல ஒரு சிறிய, நற்சிந்தனையால் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும்.

வார்த்தைகளும் சாவியை போன்றவை. சரியாக பயன்படுத்தினால் எந்த இதயத்தையும் திறக்கலாம். எந்த வாயையும் மூடலாம்.

மற்றவர்களிடம் பேசும்பொழுது உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். ஏனென்றால் அதில் தான் உங்கள் தாயின் வளர்ப்பும், தந்தையின்
ஒழுக்கமான வழிகாட்டுதலும் கணிக்கப்படுகிறது.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
➰➰➰➰➰➰➰➰➰➰➰

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

நாளைய
வாழ்க்கையை
சிறப்பாக மாற்றுவது
இன்றைய
எண்ணங்களும்,
செயல்களும் தான்!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

உடல் வலியால் அல்லல்படுபவர்கள் விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்யை சம அளவு எடுத்து அதில் அன்னாசி பூ சேர்த்து காய்ச்சி, தடவி வந்தால் வலி விரைவில் மறையும்.

📰 *நாளும் ஒரு செய்தி*

வெள்ளைச் சர்க்கரையில் உள்ள ரசாயனங்கள் நமது உடலிலுள்ள *இன்சுலின்* சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடும்.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

வெங்காயத்தை வெட்டும் முன் வெந்நீரில் நனைத்த பின் வெட்டினால் கண்கள் எரியாது.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

பேச்சை அடக்குவது மிகக் கடினம். அது மிகச் சுருக்கமாகவும், பொருட் செறிவுடன் இருப்பது அவசியம்.
*-விதுரர்*

📆. *இன்று நவம்பர் 24-*

▪️ *1859-இல் சார்லஸ் டார்வின் "உயிரினங்களின் தோற்றம்" என்ற நூலை வெளியிட்டார்.*

🌸 *பிறந்த நாள்* 🌸

⭕1961- *அருந்ததி ராய்* (இந்திய எழுத்தாளர்)

💐 *நினைவு நாள்* 💐

⭕1675- *குருதேக் பகதூர்* (இந்திய ஆன்மீகத் துறவி)

➰➰➰➰➰➰➰➰➰➰➰
( *பகிர்வு - தகவல் உலா)*

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/I8tPBT0gyRA55eGhB3WmiN
ravi said…
*இன்றைய 10 சொற்கள்!*

*அறிவு பரவல் ✍*


1. Sprout (ஸ்ப்ரவுட்) - துளிர் விடுதல்.
விதைகள் விதைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு துளிர் விடும்.
The seeds will sprout in 3 days after they are sown.

2. Throttle (த்ரோட்டில்) - குரல்வளையை அழுத்துதல்.
தாக்குதல்காரன் கயிரால் அவளது குரல்வளையை அழுத்த முயன்றான்.
The attacker tried to throttle her with wire.

3. Insolent (இன்சொலென்ட்) - ஆணவம் பிடித்த.
இந்த ஆணவம் பிடித்த வார்த்தைகளால், அவளுடைய கோபம் அதிகரித்தது.
Due to this insolent words, her anger rose.

4. Grandeur (கிரான்டியர்) - மேன்மையான தோற்றம்.
அவர் தனது மேன்மையான தோற்றத்திற்கு முற்றிலும் அக்கறை காட்டுகிறார்.
He is wholly concerned with his own grandeur.

5. Fable (ஃபேபல்) - கட்டுக்கதை.
இந்த பழைய கட்டுக்கதை நூற்றாண்டுகளாக தொடர்ந்து எதிரொலிக்கிறது.
This old fable continues to echo down the centuries.

6. Bogus (போகஸ்) - பொய்யான.
விசாரணையின்போது, அவரது கூற்று பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
On investigation, his claim was found to be bogus.

7. Audition (ஆடிஷன்) - ஒத்திகை.
தயாரிப்பாளர் நாளை காலை ஒத்திகைக்கு திட்டமிட்டுள்ளார்.
The producer plans to audition tomorrow morning.

8. Plucky (ப்லக்கி) - துணிவுடைய.
துணிவுமிக்க சகோதரர் தனது இளைய சகோதரியின் உயிரை காப்பாற்றினார்.
Plucky brother saved her younger sister′s life.

9. Deface (டிஃபேஸ்) - உருக்கெடு.
தேசியக் கொடியை உருக்கெடுக்க முயன்றதற்காக ரவி கைது செய்யப்பட்டார்.
Ravi was arrested for attempting to deface the national flag.

10. Exacerbate (எக்‌ஷாசர்பேட்) - இன்னும் மோசமடைதல்.
இப்போது குறுக்கிடுவதால் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும்.
Interfering now would only exacerbate the situation
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*

*PANEGYRIC*

*( ஒருவரைப் பற்றி, புகழ்ந்து பேசுதல் (அ) எழுதுதல்)*


meaning........    a speech or written composition used to pay tribute to a person, place, or thing.....


1.  Everyone cried when Jim’s best friend delivered a moving *panegyric* at his funeral.


2.  Before the poet died of cancer, he penned a beautiful *panegyric* for his devoted wife.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
ஒரு நாட்டிலே ஒரு துறவி ஒருவர் இருந்தார். அந்த நாட்டு அரசன் அவரிடம் அடிக்கடி சென்று அவரை சந்தித்து சில ஆலோசனைகளை பெறுவான். அப்படி இருக்கையில் ஒரு நாள் " சுவாமி நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைத்துப்போக வந்திருக்கிறேன்" எனக் கூறினான்.

துறவி வரமாட்டார் நான் எளிமையானவன் எனக்கு அரண்மனை வாசம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று நினைத்து அவன் அவ்வாறு அவரை அழைத்தான். ஆனால் அவரும் சரி போகலாம் போய் ரதத்தை கொண்டு வா! அரண்மனைக்குச் செல்வதற்கு எனக்கு ஆடம்பரமான ஆடைகளை கொண்டு வா என கேட்டார். மன்னனுக்கு தூக்கி வாரிப்போட்டது உண்மையிலேயே இவர் துறவிதானா? என்ற சந்தேகம் ஏற்பட்டது ரதத்தைக் கொண்டுவந்தான். துறவி ஏறி உட்கார்ந்தார். அருகிலே அரசன். துறவி மிகவும் உற்சாகமாக இருந்தார். இவனோ சோர்ந்து போயிருந்தான்.

துறவி மரத்தடியிலே வாழ்ந்து பழக்கப்பட்டவர் எளிமையாக அரண்மனையில் ஓரிடத்திலேயே உட்கார்ந்து கொள்வார் என்று நினைத்தான் .ஆனால் அப்படி இல்லை அரண்மனைக்கு வந்த உடனே துறவி அதைக் கொண்டு இதைக் கொண்டு வா என்ற அரசனுக்கு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இரவில் சுகமாக உறங்கினார். பகலில் அரண்மனைத் தோட்டத்தில் உலாவினார். நீச்சல் குளத்தில் நீராடினார் இப்படியே பொழுதைப் போக்கினார். ஆனால் அரசனால் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அவனுக்கு அரசாங்க கவலைகள் ஏராளம்.

துறவி இப்படி இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஒருநாள் அவரிடம் போய் நான் உங்களிடம் சிறிது பேச வேண்டும் என்றான். துறவியோ மரத்தடியில் இருக்கும் போது அடிக்கடி என்னை வந்து சந்தித்து ஏதாவது விளக்கம் கேட்பாய் ஆனால் இங்கே வந்த பிறகு என்னை சந்திப்பது கூட அபூர்வம் என்ன கேட்க வேண்டும் கேள் என்று சொன்னார். வேறு ஒன்றுமில்லை சுவாமி உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? இரண்டு பேரும் அரண்மனையில் தான் இருக்கிறோம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இவ்வளவுக்கும் நீங்கள் முதல் இருந்தது போல் இப்போது இல்லை. தினமும் தங்கத்தேர் , தரமான ஆடைகளை அணிகிறார்கள் சுவையான சாப்பாடு இப்படி இருக்கையில் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? என்று மன்னன் கேட்டான்.

இதற்கு பதில் சொல்கிறேன் என்கூட புறப்பட்டு வா என்று நகரத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டு போனார அங்கே போய் நான் திரும்பி வரப்போவதில்லை நீ என்னோடு வருகிறாயா? திரும்பி போகிறாயா? என்று கேட்டார். அதற்கு மன்னன் அதெப்படி உங்களுடன் வர முடியும். என்னுடைய நாட்டினுடைய சொத்துக்கள் மனைவி மக்கள் எல்லாத்தையும் விட்டுவிட்டு என்னால் வர முடியாது என்று சொன்னான். இப்போது வித்தியாசத்தை தெரிந்து கொண்டாயா?

நான் அரண்மனையிலிருந்து எல்லாவித பொருள்களும் உடையவனாக இருந்தேன். ஆனால் ஒன்றையும் சொந்தம் கொண்டாடுகிறவனாக இருக்கவில்லை. நீ எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடுகிறாய். இதுதான் நமக்குள் உள்ள வித்தியாசம் அ என்று கூறிவிட்டு அரண்மனை ஆடைகளை களைந்து உன்னுடைய ஆடைகளை நீயே வைத்துக்கொள் என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அரசனுக்கு அப்போதுதான் அவனுடைய அறியாமை புரிந்தது.

இந்த உலகத்தில் எத்தனையோ பொருள்கள் இருக்கின்றன அதை எல்லாம் முறையாக பயன்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதை விட்டுவிட்டு அதை நாம் சொந்தம் கொண்டாட எப்போது ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் கவலைகள் நம்மை சுற்றி வளைத்து கொள்கின்றன.


ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 31 கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா* =

தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள்🤝🤝🤝
ravi said…
பொன்னோ மணியோ மாணிக்கமோ மரகதமோ ...

பெண்ணோ பெருமாட்டியோ கன்னியோ என் கண்ணோ

தாயோ தமிழோ தங்க சிலையோ தேனோ தினை மாவோ

கருணையோ கார்மேகமோ கார் குழலோ கற்பகமோ

துணையோ எதிரி தனை அழிக்கும் கணையோ துஷ்ட்டங்களை தூர விலக்கும் தும்பை மலரோ

எல்லாம் நீயே எனில் உனை எண்ணில் என்னில் வாழ மறுப்பாயோ ? 👌👌👌
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 129*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே

துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்

கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்

திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே. 129
ravi said…
நைந்துபோன பருத்தி நூலினால் நெய்த ஆடைகளை உடுத்தி பஞ்சப்பாட்டு பாடி வாழும் மனிதர்களே! உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை வாசியோகத்தால் துருத்திக் கொண்டு ஊதுவதுபோல ஊத்தி விழிப்புறச் செய்து மேலேற்றினால் துன்பங்கள் யாவும் தானே நீங்கும்.

இந்த யோகத்தால் தியானிப்பவர் சிந்தையில் கருத்துள்ள நல்ல நூல்களும் உதிக்கும். பல கலை ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.

காலன் எனும் எமன் அணுகான்.

வாழ்நாள் காலங்கள் திருத்தி ஆயுள் அமையும்.

கவலைகள் யாவும் அற்றுப் போகும். ஆகவே ‘சிவயநம’ என அஞ்செழுத்தை ஓதி தியானம் செய்யுங்கள்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 409* 🙏🙏🙏started on 7th Oct 2021

*159*
ravi said…
*159 मदनाशिनी - மதநாசிநீ -*

வீண் டம்பம், கர்வம் தலைகனம் , அகம்பாவம், தற்பெருமை எல்லாவற்றையும் பக்தர்களிடமிருந்து அழிப்பவள்.

இதெல்லாம் இருந்தால் எந்த ஜென்மத்தில் ஞானம், பெறுவது, எப்போது மோக்ஷ மடைவது?
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 7 ...18th Nov 22*

*ஆர்யா சதகம்*
ravi said…
*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*

ஸ்லோகம் 6
ravi said…
6. Paraya, Kanchi paraya parvatha paryaya peena kucha bharaya,
Para thanthra vayamanaya pankaja sa Brahmachari lochanayaa.

பரயா காஞ்சீபுரயா பர்வதபர்யாயபீனகுசபரயா |

பரதன்த்ரா வயமனயா பங்கஜஸப்ரஹ்மசாரிலோசனயா ||6|
ravi said…
காமாக்ஷி திடகாத்திர சரீரம் கொண்ட ஸ்த்ரீ ரூபிணி.

காஞ்சியில் குடிகொண்ட ஹிமாசல பர்வதம் என்பதால் பார்வதி என்ற பெயர் கொண்டவள்.

தாமரை போன்ற கண்ணுடையாள் .

இப்படிப்பட்ட திவ்ய ஸ்வரூபிணியை தரிசித்து பரவசமடையாதவர்கள் உண்டா?
ravi said…
முகுந்தமாலா 30 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அடுத்த முப்பதாவது ஸ்லோகம்….

मज्जन्मनः फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीयमदनुग्रह एष एव ।

त्वद्भृत्यभृत्यपरिचारकभृत्यभृत्यभृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥ ३२ ॥

மஜ்ஜன்மன: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே

மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ ।

த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² ॥
ravi said…
அந்த மாதிரி முடிய வழி வழி அடிமை எனுமுரிமைஅடிமை, அப்படி வழிவழியா அடிமை.

அப்பாவும் உனக்கு அடிமை.

தாத்தாவும் உனக்கு அடிமை.

நானும் அடிமைன்னா பகவானால நம்மை புறக்கணிக்க முடியாது.
ஏத்துண்டுதான் ஆகணும்.

அப்படி அந்த ஒரு பாக்யத்தை கொடுன்னு இந்த ஸ்லோகத்துல வேண்டிக்கறார்
ravi said…
*மூன்றாம் பத்து முதலாம் திருமொழி பாசுரம்-9*

தாய்மார் மோர் விற்கப் போவர்

தகப்பன்மார் கற்றாநிறைப்பின்பு போவர்

நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை நேர்படவே கொண்டுபோதி

காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத்திரியும் ஆயா!

உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.🙏🙏🙏
ravi said…
கண்ணா .... யசோதை மோர் விற்க சென்று விட்டாள் .. நந்தகோபனோ மாடு மேய்க்க சென்று விட்டான் .

கன்னியர் கண்ணிப்போயினர் உன் கண் சுகம் கண்டே

சுண்ட வைத்தே சொர்க்கம் காட்டுகிறாய் ...

என்ன மாயமோ கண்ணா

மயங்குவது நாங்கள் மட்டுமா

இல்லை இல்லை

மண் செடி கொடியும் தானே ..

உன் கமலக் கண்களில் கருணை எனும் கட்டிலில் உறங்கும் தேனீக்கள் நாங்கள் அன்றோ மன்னா 👌👌👌
ravi said…
_*சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?*_


*சிவபுராணத்தின் பெருமைகள் :*

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
ஓம் நமச்சிவாய..🙏🏼

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்...!



🌷🌷
ஹேமலதா said…
ஆரம்பமே ஆவலை தூண்டும் பதிவாக உள்ளது.👌👌👏👏கேட்க கேட்க இனிக்கும் கண்ணன் பதிவுகள் 🙏🙏
ravi said…
*கடவுள் என்பவர் யார்?*
*என்பதை உணர்த்திய ஆன்மிக கதை*

ஆன்மிக கதை
எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர்.

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார்.

அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது.

சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டான்.

துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது.

சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?' என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.

கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே! என்றார். இளைஞனுக்கு கோபம்.

வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே! துறவி பொய் சொல்லலாமா? என்று சற்று கோபமாகவே கேட்டான்.

மகனே! மவுனமே எனது பதில்
என்றார் துறவி.

இளைஞனோ, இப்படி புதிர் போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்,'என்றான்.

ஆன்மிகத்தின் ஒட்டுமொத்த பிழிவே மவுனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும், என்ற துறவி மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தார்.

ravi said…
கூரத்தாழ்வானின் கடைசி நிமிடங்கள்...

குருவியானது, தான் கூடுகட்டிய மரம் வெட்டப்படும் போது, கூட்டின் மீது பற்று நீங்கி பறந்து போகும்...

..அதுபோல் பக்தனும் இந்த உடலை விட்டு உயிர் நீங்கும் போது,
உடல் மீதுள்ள பற்று நீங்கி, உயிரைத் துறக்க வேண்டும்...

ஸ்ரீரங்கத்தில் தன்னுடைய சிஷ்யகோடிகளுடன் உடையவர் வாழ்ந்தருளுகின்ற சமயம் அது...

..உடையவருக்கு அப்போது ஏறத்தாழ 116 வயது..

அவ்வமயம், அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வான் நம்பெருமாளிடத்து ஒருநாள் ஸ்தோத்திரம் செய்து, தயங்கியவாறு அவன் திருமுன்னே நிற்கிறார்...

உடன், அரங்கன்,

"..உமக்கு வேண்டினதெல்லாம் தருகிறோம்.. வேண்டிக்கொள்ளும்..."
என்று திருவாய் மலர்ந்தருளுகிறான்..

ஆனால், ஆழ்வானுக்கோ இப்போதும் ஏதும் வேண்டிப் பெறத் தெரியவில்லை!.

"நாயன்தே!
அடியேனுக்குப் பண்டே எல்லாந் தந்தருளிற்றே!’ (நீதான் எனக்கு வேண்டியவற்றையெல்லாம் ஏற்கனவே அருளிச் செய்தாயிற்றே!”) என்கிறார்...

(..வாஸ்தவத்தில், கூரத்தாழ்வானுக்குத்தான் எவ்வளவு கொடுமைகள் அரங்கேறின!...
எவ்வளவு துன்பத்திற்கு அவர் ஆளானார்!...

...ஆயினும் இவற்றால் எந்த விதமான பாதிப்புமின்றி, எவ்வளவு பரிவாக, நிறைவாகப் பேசுகின்றார் என்பதை நாமெல்லோரும் இங்கே உணர வேண்டும்!..)

ஆனால், அரங்கன் விடவில்லை!.

"..அப்படியன்று!
இப்போதும் வேண்டிக்கொள்ளும்!
நம் பெண்டுகளாணை!
நம் இராமனுசன் மீது ஆணை! தருகிறோம்!..”

("அரங்கனே ஆணையிட்டு அருளியது இவர் ஒருவருக்குதான்!.." என்பர் பெரியோர்..)

அப்போது, கூரத்தாழ்வாருக்கு உடையவர் நன்றாகயிருக்கும் போதே,
தாம் தமது இப்பூதவுடலை நீக்கிப் பரமபதம் செல்லச் சித்தம் உண்டாயிற்று..

"த்வதநுபவ விரோதியான இந்த சரீரத்தை விடுவித்து, த்வதநுபவத்தை தந்தருள வேணும்.." என்று அரங்கனிடம் ப்ரார்த்தனை செய்தார் ஆழ்வான்..
(அதாவது, "அரங்கன்" அனுபவத்தினை பூரணமாகப் பெறவிடாமல் செய்கின்ற இச்சரீரம் மறைந்து, பரமபதத்தைத் தந்தருள வேண்டும் என்று ப்ரார்த்திக்கின்றார் ஆழ்வான்.. )

அதற்கு அரங்கன்,

"அத்தையொழியச் சொல்லும்.."
(இதைத்தவிர வேறு ஏதேனும் கேளேன்!” ) என்கிறார்..

...இப்போது கூரத்தாழ்வான் விடவில்லை..

"அடியேன் அபேக்ஷித்ததையே ப்ரஸாதிக்க வேணும்” என்கிறார்.
(நான் கேட்டதையே தாரும் என்கிறார்..)

அரங்கன்,

"ஆகில், உமக்கும் உம்முடைய
ஸம்பந்தமுடையோர்க்கும் பரமபதந் தந்தோம்..” என்றருளிக்
கடைசியாகத் திருப்பரிவட்டம், தீர்த்தம், பிரஸாதமும், பூந்தண்மாலையும், திருத்துழாயும் கொடுத்து சிறப்பித்து விடைக் கொடுக்கின்றார்...

நடந்ததையறிந்த உடையவர், ஆழ்வான் திருமாளிகை விரைகின்றார்..

”ஆழ்வான்! நீர் இப்படிச் செய்தருளலாமோ!’ என்கிறார் சோகமாக!.

"நீர் பரமபதம் ஏகும்போது, உம்மையங்கு எதிர் கொள்ளவே இங்ஙனம் ஆயிற்று!..’ என்று பதில் சொல்கிறார் ஆழ்வான்!.

உடையவரோ வருந்துகின்றார்!.

"ஆழ்வான்! என்னுயிர் இணையான உம்மை இழந்து எங்ஙனே தரிப்பேன்..?

என்னையும் உடன் கொண்டுபோகத் திருவுள்ளம் பெற்றிலீர்!
...நம்மை விட்டுப்போக உமக்கு ருசிப்பதேன்?

பரமபதநாதனும் அங்குள்ள நித்யசூரிகளும்,
...என்ன பாக்யம் பண்ணினார்களோ உம்மை அங்கு அடைய!..

...இங்கு உறங்கும் பெரியபெருமாளும், நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ?.." என்றெல்லாம் அரற்றுகின்றார்...

ஆழ்வானின் திருமுதுகினைப் பரிவாகத் தடவி,
த்வய மந்திரத்தை அநுஸந்திக்காது போனால், நா வறண்டு போகும் கூரத்தாழ்வானுக்கு மீண்டும் த்வயத்தினை அருளிச்செய்கிறார் உடையவர்...

பிறகு, அஞ்சலித்து விடை கொடுக்கின்றார்...

அக்கணமே, ஆழ்வான் தம் ஆச்சார்யனான உடையவரின் திருப்பாதங்களில் வேரறுந்த மரம் போன்று விழுகின்றார்!..

உடையவர் அவரை அப்படியே வாரி எடுக்கின்றார்!..

கண்ணீர் கொப்புளிக்க,
தாமும் அவரோடு சேர்ந்து பரமபதம் செல்லமாட்டோமா? என்கிற தாபத்தோடு அவரை இறுக்கி அணைக்கிறார் உடையவர்!..

...இப்படி அனந்தாழ்வானும் திருவேங்கடத்தானும் போல்,

இலக்ஷ்மணனும் ஸ்ரீராமசந்திரனும் போல்,

...இப்புவியில் கூரேசரும் உடையவரும் இருந்தனர்...

...இறுதியில் தனது ஆச்சார்யனின் திருவடிகளிலேயே, தனது இன்னுயிரையும் த்யாகம் செய்து, பரமபதம் ஏகினார் ஆழ்வான்..
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 18

உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர் தொடர்பு. . . . .[18]

விளக்கம்:

நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம். வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல் (வீரம் பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும். மன வறுமையுடையாரது சேர்க்கை துன்பமாகும்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*வர்தனாய நமஹ*🙏

ஊட்டச்சத்து கொடுத்து நம்மை வளர்ப்பவர்
ravi said…
*துஷ்டதூரா* துராசார-சமனீ தோஷவர்ஜிதா

கெடுதல்களை விலக்கி வைப்பவள்
ravi said…
🌹🌺" A simple story explaining the new type of devotion like sravanam, kirtana..smarana, foot service 🌹🌺
-------------------------------------------------- -----
🌺🌹 1. By guarding the glories of God
Incessant listening is “Sravanam”;
Parikshithu, the cursed king
After listening to Bhagavata, he got rid of his sins!

🌺 2. Praise the Lord with your mouth
“Kirtanam” is sung incessantly;
Sung by Sadagokar
Everyone who heard was happy and brought Vishnu first

🌺 3. The name of the Lord aloud with the tongue
Meditation is called “smarana”;
No matter how many sufferings and dangers come
Bhakta Prahlada did not forget Hari.

🌺 4. To the divine feet with undiminished devotion
A lot of service is “foot service”;
A great one who serves the feet
Blessed is Goddess Lakshmi.

🌺 5. Bringing flowers with an immaculate mind
"Archana" is to worship Eason;
Pridu Maharaja was among those who ordained
Famous and blessed.

🌺 6. So that the eight limbs fall well on the ground
Worshiping Num Gunathana is “Vandanam”;
Honored by worshiping Kannan
Bhakta Agrur is the recipient of the eyeball.

🌺 7. Dasanu considers himself as Dasan,
Charity is understood as “tasyam”;
In "My debt is to work".
Who can beat the guesswork?

🌺 8. Considering God as a friend
Befriending God is “right”;
Arjuna used to eat, sleep and talk
Devotion to Kannan is right.

🌺 9. All his body, material and spirit
Devotion without hesitation is “Self Enlightenment”;
Immortal fame for giving everything
For the sacrifice of the soul by the king!🌺

🌹Vazhga Vayakam 🌺 🌹 Vazhga Vayakam🌺 🌹Live prosperously 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 *Sarvam Sri Krishnarpanam* 🌹🌺🌻
ravi said…
🌹🌺" *சிரவணம்* , *கீர்த்தனம்* .. *ஸ்மரணம்* , *பாத சேவை* *என நவவித பக்தியினை விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹1.இறைவனின் பெருமைகளைக் காதால்
இடை விடாமல் கேட்பது “சிரவணம்”;
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து
தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

🌺2.இறைவனின் பெருமைகளை வாயால்
இடை விடாமல் பாடுவது “கீர்த்தனம்”;
சடகோகர் பாடிய பாடலால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் விஷ்ணு முதல் கொண்டு

🌺3.நாவால் சப்தமாக இறை நாமத்தை
மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்;
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும்
பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

🌺4.குறையாத பக்தியுடன் இறை பாதங்களுக்கு
நிறைய சேவை செய்வதே “பாத சேவை”;
பாத சேவை செய்யும் மகத்தானதொரு
பாக்கியம் பெற்றவள் லக்ஷ்மி தேவியே.

🌺5.மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு
ஈசனுக்கு பூஜை செய்வதே “அர்ச்சனை”;
பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில்
பிரசித்தி வாய்ந்து, இறை அருள் பெற்றவர்.

🌺6.எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி
எண் குணத்தானை வணங்குவது “வந்தனம்”;
கண்ணனை வணங்கித் தனிப் பெருமையை
கண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.

🌺7.தாசானு தாசனாகத் தன்னையே எண்ணி,
நேசத்துடன் தொண்டுகள் புரிவது “தாஸ்யம்”;
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதில்
அனுமனை யாரால் மிஞ்சிவிட முடியும்?

🌺8.பகவானை நண்பணாக எண்ணிக்கொண்டு
இறைவனிடம் நட்புக் கொள்ளுவது “சக்யம்”;
உண்டு , உறங்கி, பேசிப் பழகிய அர்ஜுனன்
கண்ணனிடம் கொண்ட பக்தியே சக்யம்.

🌺9.தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும்
தயங்காமல் அர்ப்பணிப்பது “ஆத்மநிவேதனம்”;
அனைத்தையும் அளித்ததால் அழியாப் புகழ்
அரசன் மகாபலி செய்த ஆத்ம நிவேதனத்துக்கு!🌺

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺🌻
ravi said…
*அடுத்தவர்களை பற்றி அதிகம் தெரிஞ்சிக்கவும் வேண்டாம்......!*

*உங்களை பற்றியும் அதிகம் யாரிடமும் சொல்லவும் வேண்டாம்....!*

*இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
*ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு.*

நானும், ஆஞ்சநேயரும் பக்கபலமாக உன்னிடம் இருக்கும்போதே, முப்பது கல் தொலைவில் விழுந்த நீ பலவானா! யாருடைய துணையுமின்றி தனித்து முப்பத்தைந்து கல் தொலைவில் விழுந்த கர்ணன் பலவானா…யோசி,'' என்றார்.
அர்ஜுனன் அடுத்த கணம் கண்ணனின் காலடியில் கிடந்தான்...

குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.
பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.
தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.
சுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை.
""கண்ணா! பார்த்தாயா! என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது. அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா! என் பராக்கிரமத்தை!'' என்று மார்தட்டிய போது தான், கண்ணன், ""அப்படியா!'' என்றானாம்.
சொன்னதோடு நின்றானா!
""அர்ஜுனா! எனக்கு கொஞ்சம் கீழே வேலையிருக்கிறது. சற்றுநேரம், நீ கர்ணனைத் தனித்து சமாளி! இதோ! உன் கொடியில் பறக்கிறானே, ஆஞ்சநேயன்! அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை. இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,'' என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, ""மாருதி! வா போகலாம்,'' என்றான்.
ஆஞ்சநேயரும் கொடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இருவருமாய் மறைந்து விட்டார்கள். அப்போது, கர்ணன் ஒரு அம்பு விட்டான். அர்ஜுனனின் தேர் 150 கல் தொலைவில் போய் விழுந்தது. அதை நிமிர்த்தி, சிதறிக்கிடந்த கிரீடம், இதர பொருட்களை அள்ளி வருவதற்குள் அர்ஜுனனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
அவன் சுதாரித்து எழுந்தபிறகு, கண்ணனும், ஆஞ்சநேயரும் வந்துவிட்டார்கள். ஆஞ்சநேயர் கொடியில் தங்கி விட்டார். கண்ணன் தேரில் ஏறினான்.
""என்னப்பா இது! இவ்வளவு தூரம் தள்ளிக்கிடக்கிறாய். ஓ! கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா!'' என்றதும், அர்ஜுனன் தலை குனிந்தான்.......

ravi said…
💐💐💐💐🙏🏻🌹🌹🌹
*இன்றைய சிந்தனை.*
...............................................................

*‘’ போராட்டமே இல்லாத வாழ்க்கை..’’*
…………………………….............................

போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது

பிறந்தக் குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை.

பூந்தோட்டத்தில் தினம் தினம் புதுப்புது மலர்கள் பூப்பது உண்டு. ஆனால் அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை.

அது போலத்தான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும்,  போவதும். எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஓரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல் தான் வாழ்க்கையும் இன்பமும், துன்பமும் கலந்தது.

சரியான நேர்மையான வாழ்க்கைப் பயணப் பாதை முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதை தான்.

இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப்பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும் தான் நிறைந்து இருக்கும்.. வாழ்க்கையில்
போராட்டங்கள் இடைவிடாது தொடரும் போது மனம் தளர்வது இயல்பானது தான். வாழ்க்கையே வெறுத்து விடும். உறவுகள் கூடக் கசக்கும்.

எதற்காக இவ்வளவு துன்பங்களுடன் வாழ வேண்டும் என்று கூட மனம் கேள்வி எழுப்பும். எல்லோரும் நம்மைக் கை விட்டது போல் தோன்றும்.

இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத் தான் விரும்புகின்றான்.

வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக் கொள்ள ஓவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது.

போராட்டமே இல்லாத வாழ்க்கை இவ்வுலகில் இல்லை என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும் போது அவற்றை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும்  மனத்தெளிவு உதவும். துன்பங்கள் வாழ்க்கையில் வரலாம்; ஆனால் துன்பமே வாழ்க்கை என்றால் ?

துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு அவர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விடுகிறது.

இந்த மாதிரியான கடினமான சமயங்களில், நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மனதை சோர்ந்துப் போக விடக்கூடாது.

எது நடந்தாலும் பரவாயில்லை என்ற மன உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.. நமக்கு இருக்கிற பிரச்சினை என்னவென்றால்
மற்றவர்கள் முன் நம் கவுரவம் குறைந்து விடுமோ என்ற பயம், அவமானம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம்.. இவற்றை விட்டு ஒழியுங்கள்.வாழ்க்கை எளிதாகி விடும்.

*ஆம்.,நண்பர்களே..,*

உங்கள் வாழ்க்கைப் பாதையை நல்ல சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள்.

வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும்.

கப்பல் வடிவு அமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல!

வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல!கடலில் புயலும் வீசும். தென்றலும் அடிக்கும். இரண்டையும் கடந்து வாழ்க்கைப் பாதையில் வாழ வாருங்கள்..! வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம்..!!

ravi said…
*இன்றைய 10 சொற்கள்!*

*அறிவு பரவல் ✍*


1. Ethereal (எதிரல்) - மிகத் தூய்மையான (நுட்பமான).
இது நகரத்தில் உள்ள மிகத் தூய்மையான கோபுரத்தில் ஒன்றாகும்.
This is one of the ethereal tower in the city.

2. Impalpable (இம்பல்பபல்) - தொட்டு உணர முடியாத.
நான் ஒரு உடலற்ற தொட்டு உணர முடியாத அவதாரம்.
I am an immaterial impalpable incarnation.

3. Discarnate (டிஸ்கார்னேட்) - உடல் சார்பற்ற.
இது ஒரு உடல் சார்பற்ற நோய்.
It is a discarnate disease.

4. Bench (பெஞ்ச்) - நீண்ட இருக்கை.
மரத்தின் கீழ் ஒரு நீண்ட இருக்கை உள்ளது.
There is a bench under the tree.

5. Tavern (டவெர்ன்) - சத்திரம்.
தெருவின் முனையில் ஒரு சத்திரம் உள்ளது.
There is a tavern at the corner of the street.

6. Bellicose (பெல்லிகோஸ்) - சண்டையிடும் குணமுள்ள.
அவரது சண்டையிடும் குணம் அவரது நண்பரை அந்நியப்படுத்தியது.
His bellicos disposition alienated his friend.

7. Truculent (ட்ருகுலென்ட்) - பயங்கரமான.
அவர் பயங்கரமானவராகவும், எளிதில் கோபம் அடைகிறவராகவும் கருதப்படுகிறார்.
He is considered as truculent, temperamental person.

8. Hone (ஹோன்) - சாணைக்கல்.
கத்தியை சாணைக்கல் கூர்மைப்படுத்துகின்றது.
The knife is sharpened by hone.

9. Trample (ட்ரம்பில்) - நசுக்கு.
பூக்களை நசுக்காதே!
Don′t trample the flowers!

10. Spate (ஸ்பேட்) - ஆற்று வெள்ளம்.
கடும் மழைக்குப் பிறகு, கிராமம் முழுவதும் ஆற்று வெள்ளக்காடாக காட்சியளித்தது.
After heavy rain, the village was full of spate.
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

*Good morning friends*


*Today's word ✍🏻*


*TEMPESTUOUS*

*(கொந்தளிப்பான)*

meaning.....  identified by stormy or explosive conditions....


1. Although Sara and Clara were once friends, they now have a *tempestuous* relationship and rarely speak to each other.


2. My father’s *tempestuous* mood often leaves my mother in tears.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
*🙇🏻‍♀️ _TODAY'S G.K._ 🙇🏻‍♂️*


*🤔 Do you know?*

1. A leech can take up to 200 days to digest a meal.

2. Roundabouts reduces 72% accidents.

3. Tom and jerry were originally called Jasper & jinx.

4. I am is the shortest complete sentence in the english language.

5. Swims will be swims even when turned upside down.

6. The lifespan of a squirrel is about nine years.

7. Diamonds donot show up in X-Ray.

8. People with blue eyes are better able to see in the dark.

9. Starfish can regenerate the arm when they lose it.

10. Broccoli is not only vegetable but also a flower.

*🤔உங்களுக்குத் தெரியுமா?*

1. உணவை ஜீரணிக்க அட்டை, 200 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

2. ரவுண்டானாவின் மூலம் 72 சதவிகிதம் விபத்துக்கள் குறைகிறது.

3. டாம் மற்றும் ஜெர்ரி முதலில் ஜஸ்பர் மற்றும் ஜின்க்ஸ் என்று அழைக்கப்பட்டனர்.

4. ஐ அம் என்பது ஆங்கில மொழியில் குறுகிய முழுமையான வாக்கியமாகும்.

5. ஸ்விம்ஸ் தலைகீழாக மாறினாலும் கூட ஸ்விம்ஸ் என்று வரும்.

6. ஒரு அணிலின் ஆயுட்காலம் சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆகும்.

7. வைரங்கள் எக்ஸ்-ரேவில் தெரியாது.

8. நீல நிற கண்கள் கொண்டவர்களால் இருளில் நன்றாக பார்க்க முடிகிறது.

9. நட்சத்திர மீன்கள் அதன் மேற்கையை இழக்கும்போது, அது மறுவளர்ச்சி அடையும்.

10. ப்ரோகோலி காய்கறி மட்டும் இல்லை, அது மலர் வகையையும் சார்ந்தது.

பகிர்வு - தகவல் உலா

🌷🌷

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/I8tPBT0gyRA55eGhB3WmiN
ravi said…
கிருஷ்ணரின் அண்ணன் பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.

பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.

பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார்.

அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான்.

பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார்.

அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான்.

ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான்.

சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.

“அண்ணா, இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார்.

கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை. இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப் பார்த்து புன்னகை பூத்தார்.

அரக்கனின் உருவம் சாதாரண மனித வடிவை அடைந்தது.

“வா என் தோழனே” என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார்.

அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது.

அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன், அவனை அரவணைத்து தட்டிக்கொடுத்தார்.

இன்னும் சிறியவனாகிவிட்டான் அரக்கன். இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம்.

“தம்பி, எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்?” என்று கேட்டார்.

“இந்த அரக்கனின் பெயர் குரோதம்.

நீ கோபமாகும் போது, அவனுக்கு அது உணவாகும்.

மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன் இவன்.

நீ உன்னுடைய கோபத்தைத் துறந்துவிட்டு அன்பை அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி விடுவான்.”

புத்தரின் பிரதானமான அறிவுரையும் இதுதான்.

வெறுப்பால் வெறுப்பை நீங்கள் சமாதானப்படுத்தவே இயலாது.

நேசத்தின் மூலமாக அன்பின் மூலமாக எல்லாரையும் எல்லாவற்றையும் வெல்லமுடியும்.

ஹரே ௧ி௫ஷ்ணா🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/CFfAaTmnOZR4tEOD6SVK1x

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கார்த்திகை தீபம் பற்றிய பதிவுகள் :*

இந்த ஆண்டு உலகம் முழுவதும் டிசம்பர் 6 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஓணம், தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று அனைத்து மக்களும் கொண்டாடும் திருநாள் தான் தீபத்திருநாள்.

இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி ஜோதி ரூபமாக சிவனை வழிபடுவது வழக்கம்.

இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதுதான் திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்படும்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இந்த தீபம் ஏற்றப்படும். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது. இந்த திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

மாலை மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 7 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும். தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.

மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் துன்பங்கள் அண்டும்.

ஒரு முகம் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், இரு முகம் ஏற்றினால் குடும்பங்களில் நன்மை உண்டாகும், 3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும், 4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், 5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

http://blog.omnamasivaya.co.in/2022/11/6.html

குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த 27 எண், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது.

27 வைக்கமுடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.

நன்றி K அனுபிரியம்

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய வாழ்க
6-12-2022
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

கொப்பரை :

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகாதீப கொப்பரை கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகாதீப கொப்பரை மலைக்கு எடுத்து செல்லப்படும்.

பரணி தீபம் :

கார்த்திகை தீபத்திருவிழா நாளின் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல்விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ஐந்து பெரிய அகல்விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணி தீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகாதீபம் :

மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருவது வழக்கம்.

சிவாய நம திருச்சிற்றம்பலம்
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 16 started on 6th nov
ravi said…
*பாடல் 7 ... கெடுவாய் மனனே*

(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய்,

வடிவேல் இறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
ravi said…
வல் வினைப் பட்டு ... வினை யாவையுமே

ஆழாமல் காப்பான் ... வடிவேல் இறை

சொல்கின்றேன் ... கதி கேள்

இந்த திருவாசகத்தில் பாசம் அகலுவதற்கு ஒரு உபாயம் கூறுகிறார்.

அது இறைவனை ஏத்துவதே.

கீதையிலும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
சரம சுலோகம் கூறியிருக்கிறார்.

... சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம்

வ்ரஜ அகம் த்வாம் மோட்சயின் மாசுச ...

இங்கு இரண்டு உபாயங்கள் கூறப்படுகின்றன.

*சர்வ தர்மான் வ்ரஜ ..* என்பது விடுவாய் வினையாவையுமே என்றும்,

*மா மேகம் சரணம் வ்ரஜ* .. என்பது அநுபூதியில் வடிவேல்
இறைதாள் நினைவாய் என்றும் வருகிறது.🤝🤝🤝
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 400* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
சில காலம் கழித்து, லக்ஷ்மணனும் விபீஷணனும் பேசிக் கொண்டிருந்த போது,
லக்ஷ்மணன், “விபீஷணா! ராமன் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் திரும்ப இலங்கைக்கே அனுப்பி இருந்தால்
என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டான்.

“ராமன் என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என நான் நம்பினேன்!” என்றான் விபீஷணன்.
“எதை வைத்து அப்படி நம்பினாய்?” என்று கேட்டான் லக்ஷ்மணன்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 398*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை

ஆகாஶேன ஶிகீ² ஸமஸ்தப²ணினாம்ʼ நேத்ரா கலாபீ நதா-

(அ)னுக்³ராஹிப்ரணவோபதே³ஶனினதை³꞉ கேகீதி யோ கீ³யதே .
ஶ்யாமாம்ʼ

ஶைலஸமுத்³ப⁴வாம்ʼ க⁴னருசிம்ʼ த்³ருʼஷ்ட்வா நடந்தம்ʼ முதா³

வேதா³ந்தோபவனே விஹாரரஸிகம்ʼ தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 53..
ravi said…
இன்று மயிலுடன் எப்படி ஈசனை ஒப்பிடுகிறார் என்று பார்ப்போம் 🦚

ஏதோடும் ஒப்பிட முடியாதவன் பரமேஸ்வரன்

இருந்தாலும் அவனை ஒப்பிட்டு பக்தி செய்தாலும் மனம் உருகி வருபவன்

*மயில்*🦚

மிகவும் அழகான பறவை ..

அதன் கழுத்து அதி நீலமாக மிகவும் அழகாக இருக்கும் .

நீல கண்ட மயூரமே என்று பாடுகிறார் அருணகிரி 🦚

*பரமேஸ்வரன்* 🪷🪷🪷🪷🪷

ஈசனும் தன் ஸ்படிக மேனியில் கண்டத்தில் விஷம் தங்கி

நீலகண்டனாக இருக்கிறான் ... ..

அவனுடைய சிவந்த பொன் மேனியில் நீல கண்டம் இன்னும் அழகை சேர்க்கிறது

*மயில்*🦚

மயிலின் கொண்டை மிகவும் அற்புதமான ஒன்று...

மயில் கொண்டை கொண்ட புடவைகள் காஞ்சிபுரத்தில் பேர் போனவை

*பரமேஸ்வரன்*🪷🌧️

பரந்து வளர்ந்துள்ள வானமே அவன் கொண்டை ...

கேதார்நாத் அமர்நாத் போன்ற இடங்களில் மேகங்கள் அவன் முடியை தொட்டு செல்வதை இன்றும் பார்க்கலாம் ☁️☁️☁️

*மயில்* 🦚

அதன் தோகையில் 1000 கண்கள் இருக்கும் ..

பார்க்க இன்னும் அழகாக இருக்கும்

*பரமேஸ்வரன்*
🦚🐍

ஆதிசேஷன் தன் ஆயிரம் முகங்களில் 2000 கண்கள் கொண்டு ஈசனுக்கு குடை☂️☔ பிடிக்கிறான் ...

அவன் கண்களின் வெளிச்சம் மயிலின் தோகையில் இருக்கும் கண்கள் போல் ஒளி விடுகின்றன 🐍

*மயில்* 🦚

கார் மேகம் தனை கண்ட ஆனந்தத்தில் நடனமாடும் ..

தோகை விரிக்கும் ..

குக்குக் என்று சப்தம் எழுப்பும்

*பரமேஸ்வரன்*🪷💫

அவனை சுற்றியுள்ள ஓம் என்னும் பிரணவம் ஓம் ஓம் என்று மயில் போல் சப்தம் எழுப்புகிறது .

அம்பாளின் கடாக்ஷம் எனும் திரு முகத்தை கார் மேகம் போல் கருணை பொழியும் மரகத முகத்தை பார்த்து ஆனந்தப்பட்டு

தில்லை நாயகன் ஆனந்த தாண்டவம் புரிகிறான் ...

ஆடும் போது அவன் சடை தோகை போல் விரிந்து பரந்து இருக்கின்றன ..

*மயில்*🦚

வனத்தில் வசிக்கும் பறவை ...

காட்டுக்குள்ளே சென்றால் தான் பார்க்க முடியும்

*பரமேஸ்வரன்*

உப நிஷதங்கள் வேதம் எனும் திவ்ய காட்டுக்குள் அவன் மறைந்திருக்கிறான் .. அவனை அதற்குள் சென்று தேட வேண்டும் ... உள்ளம் எனும் நம் காட்டிலும் அவன் இருக்கிறான் .. அவனை உள்ளே தேடினால் மயில் போல் நம்மை பார்க்க பறந்து வருவான் 🦚
ravi said…
*நாமத்தால் வந்த மதிப்பு*

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார்.

மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.

விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர்.

வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது.

பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர்.

நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.

யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள்.

அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால் கெட்டுவிடும் என்று நினைக்கும் சமூகக் கட்டமைப்பு.

அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள்.

பொழுது போகவில்லை.

தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌பிடித்து விட்டது.

வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள்.

சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்துக் கொண்டது.

பொழுது போகாத
போதெல்லாம் நாமம் சொல்லிக்
கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.

ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள்.

இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.

இப்படியே அவளுக்கும் வயதாகியது.

அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின.

அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.

ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது.

ஏம்மா அழற?

அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.
வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம்.

அம்மா அழுதுண்டே இருக்காங்க..

சரி, அழாத.. இங்க வா..

ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல.

உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு.

சரியாப் போயிடும்
என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.

சரி பாட்டி
என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன் திரும்பி வந்தது.

அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.

நீங்க நாமா கொடுத்தேள் னு குழந்தை சொன்னதும்

மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார்.

வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு.

இனி வ்யாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார்.

என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.

விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.

யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி.

கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.

யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ,
அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.

துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம்,

அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.

அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவைரும் வரவேற்கும்படி செய்தது எது?

அவளைப் பிடித்துக்கொண்ட ராமநாமமன்றோ?

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 410* 🙏🙏🙏started on 7th Oct 2021

*159*
ravi said…
*159 मदनाशिनी - மதநாசிநீ -*
ravi said…
மதம் எனும் அகங்காரம் ஏற்படும் போது அதை அழிப்பவள் அவளே

பல நேர்மரை நாமங்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ... உதாரணம் நித்திய த்ருப்தா , அநித்ய த்ருப்தா, சிம்ச வாஹிணி அஹிம்ச வாஹிணி .. இப்படி பல நாமங்கள் . இவை எல்லாமே உணர்த்துவது ஒன்றே ஒன்றைத்தான் . அவள் சர்வ வ்யாபிணி ... இருட்டும் அவளே வெளிச்சமும் அவளே குளிரும் அவளே நெருப்பும் அவளே பூமியும் அவளே வானமும் அவளே ... எது வேண்டுமோ அதை குறைவின்றி தருபவள் 👏👏👏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 8 ...18th Nov 22*

*ஆர்யா சதகம்*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*

ஸ்லோகம் 7
ravi said…
ऐश्वर्यमिन्दुमौलेरैकात्म्यप्रकृति काञ्चिमध्यगतम् ।
ऐन्दवकिशोरशेखरमैदम्पर्यं चकास्ति निगमानाम् ॥ ७॥

7. Aiswarayamindu moule aikathmya prakruthi Kanchi madhya gatham,
Aindhava kisora shekharam aidamparya chakrasthi nigamaanam.

ஐஶ்வர்யமின்துமௌலேரைகத்ம்யப்ரக்றுதி காஞ்சிமத்யகதம் |

ஐன்தவகிஶோரஶேகரமைதம்பர்யம் சகாஸ்தி னிகமானாம் ||7||
ravi said…
பிரபஞ்சத்தில் சகலமும் உற்பத்தியாக காரண வஸ்து தான் ப்ரக்ருதி.

அம்பாள் தான் அந்த மூல ப்ரக்ருதி.

புருஷன் எனப்படும் பரமேஸ்வரனுடன் அபேதமாக இருப்பவள்.

சேர்ந்து இணை பிரியாதவள். அர்த்தநாரி.

இது தான் சக்தி சிவ ஐக்கியம்.

பரமேஸ்வரனைப் போலவே அம்பாளுக்கும் சிரசில் பால சந்திரன், பிறைச்சந்திரன் தான் அணிகலன். ஆபரணம்.

அம்பிகையால் தான் சிவனுக்கு சகல ஐஸ்வர்யமும். சக்தியில்லையேல் சிவனில்லை.🤝🤝🤝
ravi said…
கண்ணா*

வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்டவனே

குறும்புகள் பல செய்த, கோள்கள் பல சொன்ன, பொல்லாதவனே!

அமுதத்துக்கு ஒப்பான வான் அரசனே!

என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னைச் சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும்,

அரக்கர்களை அழிக்கவும்

உனை வேண்டினேன்.

உன்னைப் பற்றிய என்னை நீயும் அழுத்தமாகப் பற்றிக் கொள்வாயா *கண்ணா* ?
ravi said…
வைகுந்தா மணிவண்ணனே

என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,

வைகும் வைகல்தோறும் அமுதாய வானேறே,

செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து

அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா

உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.👏👏👏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அநேக சிவஸ்தலங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளுக்குக் ‘காமகோட்டம்’ என்ற பெயர் இருப்பதாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. சோழர் காலத்திலிருந்து பல அரசர்கள் இந்த சந்நிதிகளுக்குத் திருப்பணி செய்ததை சிலர் சாஸனமாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவிநாசி, விஜயமங்கலம், திருவொற்றியூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருப்பழனம், கோயிலாடி மாதிரி பல க்ஷேத்திரங்களில் உள்ள அம்பாள் சந்நிதிக் கல்வெட்டுகளில், அந்தந்த அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, “திருக்காமக் கொட்டத்து நாச்சியார்”, “திருக்காமக் கொட்டமுடைய அழகமர் மங்கையார்”, “திருக்காமக் கொட்டமுடைய அகிலநாயகியார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது.
ravi said…
அந்தக் காலத்தில் குறிலைக் குறிக்கும் ஒற்றைக் கொம்பு, நெடிலைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு என்ற வித்தியாசமே கிடையாது. இதனால்தான் ‘காம கோட்டம்’ ‘காம கொட்டம்’ என்று இருக்கிறது. சிதம்பரத்திலும் இப்படி ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. அதோடு ஸம்ஸ்கிருதத்திலும், “காமகோஷ்ட ஸ்திதாயா;” என்று அங்குள்ள சிவ காமேசுவரியைச் சொல்லும் சாஸனம் இருக்கிறது.
ravi said…
எல்லா சக்தி கோட்டங்களிலும் இருந்த ஜீவகளை காஞ்சிபுரத்திற்கு இழுக்கப்பட்டு மறுபடியும் அங்கிருந்து அந்தந்த க்ஷேத்திரத்திற்கு அனுப்பப்பட்டதாகப் புராணம் சொல்லுகிறதல்லவா? அதாவது இப்போது நாம் எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அநுபவிக்கிற சாந்நித்தியமானது ஒரு காலத்தில் காஞ்சி காமாக்ஷியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும். இப்படிக் காமக்கோட்டத்திலிருந்தே எல்லா ஸ்தலங்களுக்கும் ஜீவகளை வந்ததால்தான், இதர ஸ்தலங்களிலுள்ள அம்பாள் சந்நிதிகளையும் “காமகோட்டம்” என்றே குறிப்பிடுகிற வழக்கம் வந்திருக்க வேண்டும்.
இன்று ஆலங்குடி என்கிற, பழங்காலத் திருஇரும்பூளையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரத்தில், “கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி” என்கிறார். முன்பே சொன்னதுபோல் குறில் – நெடில் கொம்பு வித்தியாசத்தை நினைத்தால், இங்கே காமகோடி என்பது ‘காமக்கோடி’ அல்லது ‘காமகோடி’ என்றேயிருக்கலாம். ஆலங்குடி அம்பாளை ‘காமகோடி’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, அது ஏதோ அந்த க்ஷேத்திரத்துக்கே சுபாவமாக ஏற்பட்ட பேர் அல்ல என்று தெளிவு படுத்துகிற மாதிரி, ‘கச்சிப்பொதி’ என்று காஞ்சீபுரத்தைப் பிரஸ்தாபிக்கிறார் ஞானசம்பந்தர். அப்பர் ஸ்வாமிகள் திருவதிகைத் திருத்தாண்டகத்தில் “கொழும் பவளச்செங்கனி வாய்க்காமக் கோட்டி” என்கிறார். இதிலிருந்தும், மற்ற க்ஷேத்திரங்களிலும் கூட காமாக்ஷியின் சக்தியே அருள்பாலித்தது என்று ஆகிறது. காம கொட்ட வாஸினி என்பதால் அப்பர், காமக்கோட்டி என்றார் போலிருக்கிறது.
‘காமகோடி’ வேறு. ‘காமக்கோட்டி’ வேறு.
ravi said…
காமாக்ஷியின் இருப்பிடமான கோட்டம் காமகோட்டம். கர்மங்கள் எல்லாம் முடிந்து போகிற கோடியாக, அதாவது ஞான ஸ்வரூபமாக இருப்பது காமகோடி. காமாக்ஷியேதான் காமகோடி. மூர்த்தியாகச் சொல்லுகிறபோது காமாக்ஷி. பீடமாகச் சொல்லும்போது காமகோடி. காமாக்ஷி சந்நிதியில் காமகோடி பீடம் இருக்கிறது. பாகவதத்தில் பரசுராமனின் தீர்த்த யாத்தரையின்போது, அவர் காஞ்சிபுரத்திற்கு வந்ததைக் கூறுகையில், ‘காமகோடி புரியான காஞ்சிக்கு’ என்றே சொல்லியிருக்கிறது. (காமகோடி புரீம் காஞ்சீம்) காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்தாலும், அம்பாளின் காமகோடி புரியாகவே அது ஆதி காலத்திலிருந்து விசேஷிக்கப்பட்டிருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.
ravi said…
இதர க்ஷேத்திரங்களில் அம்பாள் சாந்நித்தியத்தை மறுபடியும் ஏற்படுத்திய காமாக்ஷி மன்மதன் வெற்றிக்குக் காஞ்சியில் மட்டும் சாசுவதமான அடையாளம் இருக்க வேண்டும் என்று கருணை கொண்டாள். அதனால் காஞ்சீபுரத்தில் மட்டும் எந்தச் சிவாலயத்திலும் அம்பாள் சந்நிதி இருக்கலாகாது என்றும், மன்மதன் சிவனை ஜயித்ததற்கு அடையாளமாகக் காஞ்சிக்கு ‘சிவஜித்’ க்ஷேத்திரம் என்று பெயர் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டாள். இப்படிச் செய்தால், ஏன் இந்தக் காஞ்சி மண்டலத்தில் ஒரு சிவன் கோவிலில்கூட அம்பாள் சந்நிதி இல்லை? இதற்கு ஏன் சிவஜித் க்ஷேத்திரம் என்று பெயர் இருக்கிறது? என்று எல்லோரும் யோசிப்பார்கள் அல்லவா? அப்போது புராணத்தை, அல்லது புராணம் பார்த்தவர்களைக் கேட்பார்கள்.
ravi said…
உடனே இது மன்மதனுக்கு அம்பாள் தந்த வரப்பிரசாதம் என்று பதில் தெரியும். அதாவது மன்மதன் பிரார்த்தித்தப்படி அவனுடைய வெற்றி என்றென்றும் லோகத்தில் விளங்கும். இப்படித் தீர்மானம் பண்ணி, அபச்சாரம் பண்ணின மன்மதனுக்கும் அநுக்கிரஹம் செய்தாள் அம்பாள். இன்றைக்குக்கூட காஞ்சியில் எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும், காமாக்ஷீ கோவிலைத் தவிர வேறு அம்பாள் சந்நிதியே கிடையாது.
ravi said…
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் பாடும்போது
வாரிருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள்,
மதுவிம்மு கொன்றைத்
தாரிரும் தடமார்பு நீங்காக் தையலாள்,
உலகுய்யவைத்த
காரிரும்பொழில் கச்சிமூதூர்க் காமகோட்டம்
உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே,
ஓணகாந்தன் தளியுளீரே.
என்கிறார். இந்தத் ‘தளி’ அல்லது கோயிலுக்குத் தனியாக அம்பாள் இல்லாததால்தான், ‘உலகுக்கெல்லாம் சோறு போடுகிற காம கோட்டத்துக் காமாக்ஷி இருக்க, நீ ஏன் பிக்ஷாடனனாகக் கப்பரையோடு திரிகிறாய்?’ என்று பரமேசுவரனைக் கேட்கிறார். காமாக்ஷி ஞானப் பிரதமான தெய்வம் மட்டுமில்லை. ஞானப்பால் தருவதோடு அன்ன பூர்ணேசுவரியாக உலகுக்கெல்லாம் சோறும் போடுகிறாள். இரு நாழி நெல்லைக் கொண்டு அவள் முப்பத்திரெண்டு அறங்களையும் ஆற்றினாள் என்று தமிழ் நூல்கள் சொல்லும். அவள் நமக்குச் சோறு போடுவாள். நம் காமனைகளை எல்லாம் கடாக்ஷத்தால் நிறைவேற்றித் தருவாள். “காமாக்ஷி” என்றாலே நம் ஆசைகளைத் தன் கடாக்ஷத்தால் நிறைவேற்றுபவள் என்றும் ஓர் அர்த்தமாகும்.
காமனுக்கு அநுக்கிரஹம் செய்து, பரமேசுவரனைக் காமேசுவரனாக்கிய அந்த சிவகாம சுந்தரியைத் தியானித்தால், நம்முடைய ஆசைகள், காமங்கள் எல்லாமே கடைசியில் அழிந்து போகும். அவளுடைய கடாக்ஷம் கிடைத்துவிட்டால் அதன்பின் எவ்வளவு ஆசையை உண்டு பண்ணக்கூடிய வஸ்துவும், நமக்கு ஆசை உண்டாக்காது. காமம், குரோதம், லோபம் (பணத்தாசை), மோகம், மதம், மாத்சரியம் (பொறாமை) ஆகிய துர்குணங்களில் ஒன்றும் இல்லாமல் நம் சித்தம் பரிசுத்தம் ஆவதற்கு அவளையே பிரார்த்திக்க வேண்டும்.
ravi said…
❖ *32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா =*

முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள்.
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
அம்மா*

மாணிக்கம்
முத்து
நீலம்
கோமேதகம் , புஷ்பராகம் ,
வயிரம் ,
வைடூரியம்
பவளம் ,
மரகதம்

உன் மேனி எனும் கொல்லர் பட்டறையில் பருவம் எய்தியதோ

குண்டு மல்லி
செம்பருத்தி
ரோஜா
பவழமல்லி
கதம்பம்
தாமரை
பாரிஜாதம்
தும்பை
சண்பகம்

பூக்கள் எல்லாம் உன் மேனி எனும் பூம் தோட்டத்தில் இளமை கண்டதோ

கருணை
காரூண்யம்
கார்மேகம்
கடாக்ஷம்
விழிகள் எனும் மீன்கள்
மிரட்சி புரியும் மான்கள்
கர்ஜிக்கும் சிம்மம்
கார்தோகை விரிக்கும் மயில்கள்

உன் எழில் கண்டு பூமிக்கு இறங்கி வந்ததோ

பூத்தவளே காத்தவளே மறைப்பவளே மாண்பு தருபவளே மண்ணிலும் இணையாய் மற்றோரு தெய்வம் உண்டோ உனக்கே 💐💐💐👌👌👌
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 130*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்

தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்

மூவராலு மறியொணாத முக்கணன்முதற் கொழுந்து

காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே. 130
ravi said…
ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!!

வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ?

எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!!

இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன்.

அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் பிள்ளையான கணேசன் உனக்குக் காவலாக உனக்குள்ளேயே பிண்டக்கல்லாக கலந்திருப்பதை கண்டு தியானம் செய்யுங்கள்.
ravi said…
முகுந்தமாலா 31 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இணையற்ற நாராயண நாமத்‌தின் மகத்துவத்தை எடுத்துச் சொன்னோம்

என் நண்பர் ஒருவர் வாழ்நாளில் நடந்த ஒரு அற்புதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆவல்.

தஞ்சாவூருக்குப் பக்கம் வாளமர்கோட்டை என்று ஒரு கிராமம்.

நெடுநாள் மழையின்றி மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தக்கிராமத்தில் பெரிய சிவாலயத்தைத் திருப்பணி செய்துகொண்டு தவத்திரு காத்தையா சுவாமிகள் என்று ஒரு மகான் இருந்தார்

.(சிவன்சார் ஏணிப்படிகளில் மாந்தர்கள் சாஸ்த்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் மகான் நிலை.காஞ்சி மஹாசுவாமிகளால் ஒருமுறை சுவாமி என்று அழைக்கப்பட்டதிலிருந்து தவத்திரு காத்தையா சுவாமிகள் என்ற திருநாமத்தால் மக்கள் போற்றிக் கொண்டனர்.)

மக்கள் அவரிடம் முறையிட்டுக்
கொண்டவண்ணம் இருந்தனர்.
ஹேமலதா said…
சார்‌ உங்களுக்கு நன்றிகள் பல கோடி 🙏🙏
என் மகளின் திருமணம் செய்ய பணம் தந்து உதவி செய்தீர்கள்.
தினமும் தங்கள் பதிவுகள் எங்களை நல்வழியில் அழைத்து செல்கிறது.
Hemalatha said…
உங்கள் உதவியை பற்றியே சிந்தனை.இப்படியும் ஒரு மனிதநேயம் கொண்ட மனிதர்🙏
Kousalya said…
அற்புதமான ஒரு வார்த்தைகள்...அருமை...👍👍🙏🙏
ravi said…

A sculptor, when asked on how he converts mere stones to beautiful statues, his response was, "Statues are already hidden in these stones; I only remove the unwanted part". As humans, one take-away is that the more we remove 'Unwanted parts (worries, anxieties) from our lives', we will keep experiencing enhanced happiness.
1 – 200 of 309 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை