ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 14 குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா - பதிவு 21

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

14   कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता - குருவிந்தமணி  ச்ரேணீகநத் கோடீரமண்டிதா - 

பதிவு 21

இன்று நாம் பார்க்கப் போகும் திருநாமம் 

14 कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता - குருவிந்தமணி  ச்ரேணீகநத் கோடீரமண்டிதா

மிகவும் ரசிக்க வேண்டிய திரு நாமம் இது 🌸🌸🌸🌺🌺🌺


ஆஹா,   வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ  மணி மகுடம் தரித்திருக்கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.  

குருவிந்த மணியைத்தான்  குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக  வைத்து விநாயக சதுர்த்தியில்  களிமண் பிள்ளையார் வாங்குகிறோம். 

சிவப்பில் கருப்பு புள்ளி  அழகோ அழகு.🙏🙏🙏

*குருவிந்தமணி* = மாணிக்க கற்கள் 

*ஸ்ரேணி* = சரம

*கனத்* = பளபளக்கும் 

*கோடீர* = உச்சி / 

*மகுடம் மண்டிதா* = அலங்கரித்திருக்கிறது 

*குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா* = 

மாணிக்க பரல்கள் பளபளக்கும் சரத்தால் மகுடத்தை அலங்கரித்திருப்பவள்🌺🌺🌺🌸🌸🌸👏👏👏

குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா - குருவிந்தமணி என்பது பத்மராகக் கல். சிவப்பான 

இந்தக் கற்கள் அம்பாளின் கிரீடத்தில் வரிசையாக உள்ளன. 

அம்பாளுடைய கிரீடம், கோடீரம் என்ற வகையைச் சேர்ந்தது. 

கிரீடம், மகுடம் ஆகிய வகைகள் ஆண்கள் அணிபவை; கேசத்தை மறைக்கும்படியாக இருக்கும். 

பெண்கள் அணிகிற கோடீரம் என்பது கூந்தலின் சுருள்களையும் கேசபாரத்தின் அழகையும் மறைக்காதபடிக்கு அமைக்கப் பட்டிருக்கும். 

அம்பாளின் கோடீரத்தை தியானித்தால், நல்ல எண்ணங்கள் மிகும்.


எந்த நகை போட்டாலும் அவளுடைய ஒரு புன்னகைக்கு ஈடாகுமா?? .. 

பர்வத ராஜன் தன் மகளை தங்கத்தால் இழைத்தானாம் 

அவள் மேனியில் மின்ன வேண்டிய தங்க் நகைகள் பித்தளை போல் இளித்ததாம் பொலிவு குறைந்து ... 

அவள் கண்களில் இருந்து கொட்டும் காரூண்யம் ஒன்று போதும் அவள் ஜொலிக்க ... 

வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ  மணிகள் என்ன செய்யும் ? 


அன்னையின் மீது தவழ்ந்து இன்னும் அதிக பொலிவைப் பெறுகின்றன ..

எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் உள்ளத்தில் மட்டுமே அவள் குடியிருக்க ஆசைப்படுகிறாள் .. 

பொன்னும் பொருளும் நிறைந்தவர் உள்ளம் பொய்யில் விளையும் காடு அன்றோ 👍👍👍



சௌந்தரிய லஹரி 

பாடல் 42    கிரீட வர்ணனை  ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்

ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்

  கதைர் மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ரகடி

தம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:

ஸ நீடேயச்சாயாச் சுரணசபளம் சந்த்ரசகலம்

தநு: செள்நாஸீரம் கிமிதி ந நிபத்நாதி தஷணாம்

மலையரசன் மகளே!, த்வாதச ஆதித்யர்களே மாணிக்கங்களாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எந்த பக்தனாவது வர்ணிக்கையில், உன் கிரீடத்தில் பதிந்திருக்கும் ரத்னங்களின் காந்தியால், [அந்த கிரீடத்தில் இருக்கும்] சந்திரன் பல நிறமுடையதாக தோன்றுவதைக் காணும் போது சந்த்ரனை இந்திர தனுஸோ என்று சந்தேகித்து அப்படியே வர்ணிக்கக்கூடும்.

ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்கிறாள். ஆக அம்பாளும் சந்த்ரமெளலி தான். அன்னைக்கு "அஷ்டமிச் சந்த்ர விப்ரபா" என்ற நாமம் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறாக அன்னையின் கிரீடத்தில் உள்ள சந்த்ரன் வெண்மையாக இருந்தாலும், அவளது கிரீடத்தில் இழைக்கப்பட்டிருக்கும் மற்ற நவரத்னங்களான பன்னிரு ஆதித்யர்களது ஒளியால் பல வர்ணங்களில் ஜகஜ்வலிக்கும் இந்திர தனுசு போன்று காக்ஷியளிக்கிறதாம். இதுவே "ஐந்த்ரஸ்யேவ சராஸனஸ்ய தததீ மத்யேலலாடம் ப்ரபாம்" என்று லகுஸ்துதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே த்வாதச ஆதித்யர்கள் அம்பாளுக்கு அருகில் இருந்து சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பு.                      

                                                👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌



Comments

ravi said…
அவரது தவத்துக்கும் பிரார்த்தனைக்கும் திருவுள்ளம் உகந்த மகாலட்சுமி, கும்பகோணத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில்
ஒரு தங்கத் தாமரையின் மேல் அவதரித்தாள்.

வடமொழியில் கோமளம் என்றால் தங்கம் என்று பொருள்.

தங்கத் தாமரையில் அவதரித்தபடியால் கோமளவல்லி என்று அவளுக்குப் பெயர் சூட்டினார் ஹேமரிஷி.

மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியைத் திருவரங்கநாதனுக்கே திருக்கல்யாணம் செய்து வைக்க விழைந்த
ஹேமரிஷி திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தார்.

கோமளவல்லியும் இணைந்து தவம் புரிந்தாள்.
Ramya said…
Sir absolutely great as I mentioned earlier u have been a great son for ur parents at their last stage and supported them especially your wife there is no words to express about her as she took care of her inlaws very well at their stage.
Sir I liked the way you explained about yourself and penning art is superb and also the way you related ur life to VS your ideology is different and superb no wonder we all can reach greater heights under a great leadership like you
Surya said…
God had given you strength to overcome all the struggle at a particular period. Well managed by you and your
Wife.
Thank you for the key take away sir.
Sindhu said…
Oh my thank you for adding these stories sir,you are a very good son, and your partners caring is very much appreciable, how patiently she would have taken care of her in laws. Thankyou for you key takeaways sir🙏


And about Peppy he is cute max,like you said we have to learn what unconditional love is from them,they make our lives very happy..Thankyou for penning it down sir🙏🪷
ravi said…
I tried to explain my story line in following manner sindhu

1. *Prayer n pledge* ( my mother's)

2. *Poorvangam* ( schooling , college etc,)

3. *Purvanyasaha* ... (CA 's days )

4. *Dhyanam* ( year 2006)

5. *Main Stotram* ( my career with L&T)

6. *Phalasrutihi* ( laurels earned)

7. Everyone 's *Uvacha* ( for my benefits)

You people made me do allocations 🙏🙏🙏🙂
Sindhu said…
Wow you really made people feel good about themselves sir,even in my case i never felt so worty before joining this Madhava group,particularly after sharing my story the kind of kindness and appreciation is what im longing for in life as a just home maker,you made many women to feel that feeling sir, all gratitude to you only sir
Sindhu said…
You're one such beautiful soul i have met in life sir 🙏
ravi said…
DEVOTEE SHARES MIRACLE என்னுடைய குடும்பத்தினர் அனைவ
ரும் ஓன்று சேர்ந்து எங்களுடைய பூர்
வீக கிராமமான (தஞ்சாவூர் பந்தனை நல்லூர் அருகிலுள்ள) ஸ்ரீரங்கராஜபுரத்தில் மஹாவாமிகளுக்கு ஒரு திருக்கோயி ல் அமைத்து 2021 மார்ச் 10ஆம் தேதியன்று காஞ்சி பால பெரியவா முன்நிலை யில் குருவருளுடன் கும்பாபிஷேகம்
செய்வித்தோம்.

அதன் பிறகு என் தந்தை பெயரில் S.V.
ஒரு டிரஸ்டை தொடங்கி செவ்வனே நிர்வகித்து வருகிறோம்

அடுத்த கட்டமாக தேவையான வசதி
களுடன் மஹாஸ்வாமிகளின் அனுக் கிரஹத்துடன் ஒரு கோசாலை தொட ங்கப் பட்டது. அதன் முதல் கட்டமாக 3 கறவைப் பசுக்களை வாங்கினோம்

இதில் தான் ஒரு அதிசயம் நடந்தேறி
யது.வாங்கிய முதல்பசுவை பரசவித்த 4 வது நாளே கோசாலைக்கு கொ ண்டு வந்தோம். அந்த பசு பரசவித்த
போது நஞ்சு முற்றிலும் வெளியே
றாமல் கொஞ்சம் கர்பப் பையிலேயே
தங்கியுள்ளது. இதை ஒருவரும் அறிந் திருக்க வாய்ப்பில்லை. கோசாலைக் கு வந்த 5 நாளுக்குள் பசுவின் உடல்
நலத்தில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு அன்ன திரேஷம் உண்டாகி
வைக்கோல்,புல், பருத்திக்கொட்டை
புண்ணாக்கு எல்லாவற்றையும் முகர் ந்து பார்க்கக் கூட மறுத்தது. மருத்து வர்களை வரழைத்து வைத்தியம் செ ய்து பார்த் தோம். எவ்வித பயனும் இல்லை.மருத்துவர்களும் பசு உயிர் பிழைப்பது துர்லபம் என்று கூறிவிட் டார்கள்.நாங்களும் டிரஸ்ட் மேனேஜரு ம் செய்வத றியாது திகைத்தோம்.
அப்பொழுது தான் நாங்கள் ஒரு முடி வுக்கு வந்தோம். அந்த கோசாலை
யோ ஸ்ரீ மஹாஸ் வாமிகளுக்காகவே அர்பணிக்கப் பட் டது. இது நம் சக்திக்
கு அப்பாற்பட்டது. நம்மால் செய்யக்
கூடியது ஒன்று தா ன் என்றெண்ணி மஹா ஸ்வாமிகள் மேல் பாரத்தை
இறக்கிவைத்து விட்டு ஸ்வாமிகள் பா
ர்வையில் பசுவை நிறுத்தி வைத்து
கோபூஜை செய்வித்தோம். அபிஷகமு
ம் ,ஆராதனையும் செய் யப்படும் போ து கூட பசுவிடம் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. பூஜை முடிந்து தீபாராதனை காண்பிக் கும் போது தா ன் அந்த மறக்க முடியாத நிகழ்வு நிக
ழ்ந்தது. அந்த தீபத்தின் ஒளி பசுவின் பார்வையில் பட்ட வுடன் பசு உபாதை
கள் நீங்கி தெளிவு பெற் றது. இது மஹாஸ்வாமிகளின் அருட்பார்வை யைத் தவிர வேறொன்றுமில்லை.
எனபது அங்கு வந்த பக்தர்கள் அனை வரும் உணர்ந்த நிதர்சனம்.உடன் பசு
ஆகாரம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. உடன் மருத்துவரை அழைத் தோம்.மருத்துவரோ இந்த Miracle எப்படி நட
ந்தது என்று எங்களிடம் வினவினார் நாங்கள் நடந்ததைக் கூறினோம். இந் த நிக ழ்வை நண்பர்களுடன் பகர்ந் து கொள்ள வேண்டும் என்ற ஆசையி ல் பதிவிட்டுள்ளேன். இந்த நிகழ்விற்
கு பிறகு மஹாஸ்வாமிகள் அவ்விடத்
ல் அமர்ந்து ரக்ஷக்கிறார் என்ற புத்து
ணர்வுடன் எங்கள் கடமையை உத்வே கத்துடன் செய்து கொண்டிருக்கிறோம்.
Sinduja said…
You're such a gem of a person sir,nallathu nenacha ungaluku nallathuthan nadakkum,unga thooimayana kallam kabadam illatha ullamthan sir *KADAVUL* kandippa antha family ungala kadavulatha ninachirupanga, very true neenga sonnathu ivlo nallathu ninaikurathu aduthavangala manamaara paaratrathu ithellam romba nalla gunam our good karama has joined us through VISVAS.
ravi said…
🌹🌺" *தன் அடியார்கள் எந்த பேரால் அழைக்கிறார்களோ அந்த பேரை பரந்தமான் ஏற்றுக்கொள்கிறான் ! ...என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன், ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார்.

🌺அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் அலங்காரம் செய்வது, திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்வது, மலர்களைக்கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார் !

🌺அந்த விக்ரஹத்துக்கு ” சதங்கை அழகர் ” என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம் “, என்றெல்லாம் பக்திமேலிட கூறி மகிழ்வார் மதன் !

🌺ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும்போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது !

🌺அவரை பார்த்து அழகாக சிரிக்கவும் செய்தது. அவர் அந்த குழந்தையை அருகே அழைத்து ” நீ யார் ?” என்று கேட்க, “சதங்கை அழகர்” என்று சொல்லி, சிரித்தபடியே ஓடிவிட்டது !

🌺இந்த அற்புத கனவை அவர் மறுநாள் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் வியப்புடன் நான்கு வீடுகள் தள்ளி இருந்த மதனிடம் சொல்ல, யாவரும் மெய் சிலிர்த்து, அந்த பக்தரிடமே இந்த நிகழ்வை சொன்னார்கள்.

🌺கண்களில் நீர் மல்க ” ஆஹா ! நான் ஏதோ எனக்கு பிடித்த பெயரை சூட்டி பெருமானை தொழுதால், அதை தாம் ஏற்று கொண்டது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் தெரியபடுத்தியுள்ளார் !!

🌺என்ன வாத்சல்யம் என்று உருகினாராம்!!
பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்,
” தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர், மற்று அப்பேர் – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமயாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ! “

🌺என்ற பாசுரத்தில் ” தன் அடியார்கள் எந்த பேரால் அழைக்கிறார்களோ அந்த பேரை பரந்தமான் ஏற்றுக்கொள்கிறான் !

🌺எந்த உருவத்தில் வழிபடுகிறார்களோ அந்த உருவத்தை ஏறிட்டுகொள்கிறான் ! பக்தர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே தோன்றுகிறான் ஆழியானாகிய கண்ணன் !! ” என்று கூறியிருப்பது உண்மைதானே !🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹

ravi said…
🌹🌺 A simple story to explain that "Pharathman accepts the names by which his servants call him! ... 🌹🌺 -------------------------------------------------- -----
🌺🌹Many years ago, there lived a devotee named Madan on Srirangath Chitrai Road.

🌺 He has so much devotion to Krishna! There was a small Krishna Vigraham in his residence. He is very involved in it and enjoys doing daily decorations, abishekam, worshiping with flowers, etc.!

🌺 When talking to friends and relatives after naming that vigraha as "Satangai Alaghar", Madan would say with devotion, "Today we garlanded Satangai Alaghar with jasmine, we garlanded roses, we performed Balabhishekam, we performed honey abhishekam"!

🌺 Once, relatives from the town came to a house four houses away from their house. When one of them was soundly asleep, a beautiful child appeared in his dream, with a divine weed!

🌺 Made him smile beautifully. He called the child near and said, "Who are you?" On hearing that, she said, "Sadangai Alaghar" and ran away laughing!

🌺 The next day he told this wonderful dream to the people in that house, and they were surprised to tell Madan who was four houses away, everyone was thrilled and told this event to the devotee.

🌺 Tears in the eyes "Aha! If I pray to the Lord by naming something that I like, He not only accepts it, but also lets others know about it!!

🌺He was melting with what love!!
Poikayalvar in his first Thiruvanthadi,
” Thamarukandathevvuruva is the same

🌺What is tamarukandhu, and what is tamarukandhu?
What kind of thinking do you think?
That color is doomed! "

🌺 In the psalm "Pharathman accepts the name by which his servants call him!"

🌺 In whatever image is worshiped, he mounts that image! As the devotees think, Kannan appears the same way!! It is true what he said!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
Usha perumal said…
Sir. No words to explore my thoughts now it's completely blocked sir. Again I thank God to give me a good hearted person near me.

Many times I worried about my kids how they survive in this world. I faced many problem coz my attitude sir no one is ready to help without expectations sir.....

But u r really great. Bless me and my family sir. Good night.
Usha perumal said…
God s proven himself by connecting the persons like us. Everyone has good thought and motive. Superb.


Today heavy work sir. Have a deep sleep sir. Jai shree ram.
ravi said…
*50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம் 'உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?' என்று கேட்டேன்.*

அவர் அனுப்பிய பதில் இதோ :

*1) என் பெற்றோரை, என் உடன் பிறந்தவர்களை, என் மனைவியை, என் குழந்தைகளை, என் தோழர்களை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.*

*2) நான் 'உலக வரைபடம்' அல்ல என்று உணர்ந்து கொண்டுள்ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை.*

*3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே.*

*4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம்.*

*5) 'எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க' என்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தமது பழைய நினைவுகளை அசை போடுகிறார்கள்; கடந்த காலத்திலிருந்து விடுபடுகிறார்கள்.*

*6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களைத் திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன்.*
*எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னுடையது அல்ல.* *எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம்.*

*7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது, பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை - ஒருவர் உங்களைப் பாராட்டும்போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்*

*8) என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.*

*9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்.*

*10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மோசமாகச் செயல் பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.*

*11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுசனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்.*

*12) ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ-வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்.*

*13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.*

*14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.*

- *இப்பதிவில் சொன்ன பதில் எல்லா வயதினருக்கும் பொருத்தமானது என்று நினைக்கிறேன், இதைச் செயல்படுத்த 50, 60, 70 வயது வரை காத்திருக்க வேண்டுமா என்ன ? சிந்திப்போம்....வணக்கங்கள்
ravi said…
கண்ணா வெண்ணெய் திருடினாய் பெண்ணைத் திருடினாய் மண்ணை திருடினாய் என் நெஞ்சையும் திருடினாய்

உன்னை திருடி உள் வைத்தேன் சுற்றி எங்கும் பக்தி எனும் மதில் எழுப்பி

சரணாகதி எனும் காவலர் வைத்தேன்

உன் காலில் என் உள்ளம் எனும் சங்கலி கட்டி

உரல் எனும் கோயில் எழுப்பினேன் ..

உண்மை சொல் உன்னால் தப்பிக்க முடியுமோ வேறு இடம் இனியே ?? 💐💐💐
ravi said…
*அழகிய சிங்கரும் அற்புத பக்தனும்*🪷🪷🪷
ravi said…
கண்களில் தீயின் நாட்டியம்

கரங்களில் ஓடும் குருதி

வாயினிலே கோரைப் பற்களின் தாண்டவம்

இரண்ய கசிபின் உடம்பெங்கும் தேடினான் சிங்க ராஜன்

ஓரமாய் இருக்குமோ நாராயணா எனும் நாமம் ...

தேடியும் எங்கும் கிடைக்க வில்லை அரியின் நாமம் ...

கோபம் காட்டு வெள்ள மானதே

அழித்தான் அரக்கன் ...தனை

அடங்கவில்லை கோபம் ...

அன்னையும் அருகில் செல்ல பயந்தாள்

பார்த்ததில்லை இப்படி ஒரு கோலம்

பிரகலாதன் அச்சம் இன்றி அருகே சென்றான் ..

அசிங்கம் மீண்டும் அங்கே சிங்கமானதே
பாய்ந்த சிங்கம் அழகிய சிங்கர் ஆனதே ...

மகனே என்ன வரம் வேண்டும் ...

தாமதாய் வந்தேன் ... தடைகள் பல தந்தேன் ...

தங்கு தடையின்றி கேள்

*ஐயனே*

உனை பார்த்தபின் வேண்டுவதும் ஒன்று உண்டோ ??

சர்க்கரைப் பொங்கல் இருக்க வெறும் சர்க்கரை நாடுவோர் உண்டோ

கரும்பு சாறு இருக்க சக்கை கேட்போர் உண்டோ

எறும்பு ஊரும் மேனி தனில் *நிலை* வேண்டும் என்றே கேட்போர் மூடர் அன்றோ ??

வேண்டேன் ஒன்றும் உன் எழில் கண்டபின்னே !!

இல்லை மகனே கேள் ஏதாவது என்னிடம்

*தந்தையே*

கர்வம் இல்லா வாழ்வு வேண்டும் .

*எல்லாம் உன்னால் எனும் நினைப்பு வேண்டும்*

பொன்னால் மகிழும் வாழ்வு தனை வேண்டேன்

உன் கண்ணால் கடைந்தேறும் வாழ்வு தனை கேட்பேன்

என் தந்தை காண வேண்டும் உன் திருவடியை நித்ய சூரியாய் ..

மாணிக்கமே மன்னிப்பாயோ என் தந்தையை

சிரித்தான் சிங்க ராஜன் ... 🦁

உன் போல் மகன் இருந்தால் பெற்றோர் என்றும் நித்திய சூரிகளே .. 🙏

21 தலைமுறை மன்னிப்பேன் உன் குலம் தனில் தோன்றுவோர்க்கே

ஐயனே கருணா மூர்த்தியே

காஞ்சியில் நான் பிறக்க வேண்டும்

அங்கே உன் காலடி ஓசை கேட்டருக்க வேண்டும்

அருள்வாயோ ஆரமுதே ...

*பிரகலாதா* பிறப்பாய் பெரியவாளாய் ..

உன்னால் பெருகட்டும் உன்னத பக்தி தொண்டு ..

நீ சொல்வதெல்லாம் வேதம்

நீ தொடுவதெல்லாம் துலக்கும் அன்று அலர் அரவிந்தமாய்
👍🪷🪷🪷🪷
ravi said…
71

காலாம்புவாஹ நிவஹை: கலஹாயதே தே
காமாக்ஷி காலிம மதேன ஸதா கடாக்ஷ: |
சித்ரம் ததாபி நிதராமமுமேவ த்ருஷ்ட்வா
ஸோத்கண்ட ஏவ ரமதே கில நீலகண்ட: ||71||

ஹே காமாக்ஷி ! உனது கடாக்ஷமானது கருமையாயிருக்கும் தன்மையினால் காளமேகங்களின் கூட்டங்களோடு எப்போதும் சண்டையிடுகிறது.ஆயினும், கருப்புநிறமுள்ள கண்டத்துடன் நீலகண்டன் மட்டும் இதைக்கண்டு எப்போதும் ரஸிக்கிறான்.
காளமேகங்களைக் கண்டு மயில்கள் நர்த்தனம் செய்வதுபோல் , கறுப்பு நிறத்தில் நீருண்ட மேகங்களையும் தோற்கடிக்கும் அம்பாளின் கடாக்ஷத்தைப் பார்த்து நீலகண்டனான பரமசிவன் சந்தோஷமடைகிறாரே என்று கவி ஆச்சரியம் அடைகிறார்!
ravi said…
*கந்தர் அலங்காரம் 36* 🐓🦚🙏

*அலங்காரம்-11:*
ravi said…
சும்மா வருவதல்ல ஞானம்!

முருகன் இறங்கி வந்து காதில் சொன்னதை அப்படியே போட்டு உடைத்துவிட இவரால் முடியாது!

கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல!

இந்த ஜென்மம் கடைத்தேறினால், மீண்டும் பிறப்பு நிச்சயம்!

ஆனால், இவர் சொல்ல விழைவது ஜென்மமே இல்லாமல் செய்யும் 'ஒன்று'!

இது அவரவர் சாதகம் செய்து மட்டுமே அனுபவித்து உணரக்கூடிய 'ஒன்று'!

அதை 'லொள்ளு'எனச் சொல்லுவது சரியில்லை

இதை அடையத்தான் காலம் காலமாக யோகிகளும் ஞானிகளும் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனைச் சூசகமாகத்தான், இப்படித்தான், சொல்லி ஆசையைத் தூண்டிவிட்டு, சாதகனை உயரச் செல்லவைக்க முடியும்!

இதற்கு மேல் சொல்ல எனக்குத் தெரியவில்லை!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 317*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
ஸத்³கு³ணஸேவித:” – ஸாதுக்கள், அந்த சந்திரனை எப்பவுமே சேவிக்கிறார்கள். மஹாபெரியவா எப்பவுமே சந்திர வெளிச்சத்திலேயே போய் உட்கார்ந்துண்டு லலிதா சஹஸ்ரநாமம் முழுக்க பாராயணம்பண்ணுவா.

“ம்ருʼக³த⁴ர꞉” – சந்திரன்ல ஒரு அடையாளமா ஒன்னு இருக்கும் இல்லையா, அது மான் மாதிரி இருக்கு அப்டிங்கறதால, சந்திரனுக்கு ம்ருʼக³த⁴ர꞉ னு பேரு.

“பூர்ண:” – பதினாறு கலைகளும் நிரம்பியதால பூர்ணமானவர்.

“தமோமோசக꞉” – இருளை போக்குபவர். சந்திரன் வந்தா இருள் போகும்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 314* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
*விக்ரம* க்ரம: |

🪷🪷🪷
ravi said…
இன்றும் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் கோமளவல்லி மணவாளனாகக் கும்பகோணத்தில்
குதிரைகளும் யானைகளும் பூட்டிய தேர் வடிவிலுள்ள கர்ப்பக்கிரகத்திலே எழுந்தருளியுள்ளான்.

சார்ங்கபாணிப் பெருமாள் – கோமளவல்லித் தாயாரின் திருக்கல்யாணத்தைக் கண்டு மன நிறைவடைந்த ஹேமரிஷி,
பத்ரிநாத்தை அடைந்தார்.

அங்கே வியாசரைச் சந்தித்துத் திருமால் தனக்குச் செய்த அனுக்கிரகத்தை விவரித்து மகிழ்ந்தார்.

மேலும், “வேத வியாசரே, எனக்கொரு சந்தேகம்.

அதை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்!” என வேண்டினார்.

“என்ன சந்தேகம்?” என்று கேட்டார் வியாசர்.

“திருமால் திருவரங்கத்திலிருந்து குடந்தைக்கு வருகையில்,
யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் வந்தார்.

அதெப்படி ஒரே தேரில் மெதுவாக நடக்கும் யானையையும்
விரைந்து ஓடும் குதிரையையும் பூட்ட முடியும்?

அவ்வாறு பூட்டினால் தேர் சீராக ஓடுமா?” என்று கேட்டார் பிருகு மகரிஷி👍👍👍
ravi said…
[20/08, 09:31] Moorti Mumbai: அருமையான எளிதான வார்த்தைகள்... 👌👌👏🙏
[20/08, 11:18] Metro Kowsalya: இவ்வளவு அன்பாய் கேட்டால் இந்த சித்த சோரன் என்ன செய்வான்... பாவம்..குட்டு🙏🙏👌👌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 318* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*114 भवारण्यकुठारि*

*பவாரண்ய குடாரிகா --*💐💐💐
ravi said…
ஆரண்யத்தை தனது கோடரியை வைத்துக்கொண்டு வெட்டக்கூடியவள் என்ற பொருள் தருகிறது இந்த திருநாமம்

பவ மாகிய ஆரண்யம்

பவக்கடல் என்று சொல்வதுண்டு நமது பிறவி எனும் பெருங்கடலை குறிக்க

அதுன்னுள்ளே மாட்டிக்கொண்டால் நம்மால் தப்பிக்கவே முடியாது அதுதான் சம்சார சாகரம்

கடலுக்குள் மூழ்கி விட்டோமானால் அவ்வளவு தான் கை கால்களை அசைத்தாலும் தூக்கி விட வருபவர்களும் காப்பாற்ற தயங்குவார்கள் ..

அவர்களையும் பிடித்து இழுத்து உள்ளே தள்ளி விட்டால் என்ன செய்வது ??

அலை மோதும் கை எல்லோரையும் பிடித்து உள்ளே இழுத்து விடும்

அந்த சம்சார சாகரத்தை ஆரண்யமாக புதர்கள் நிறைந்த காடாக இந்த நாமம் வர்ணிக்கிறது

அந்த இருண்ட காட்டில் எது வேண்டும் எது வேண்டாம் என்று பார்க்க முடியாத அளவு அடர்ந்து படர்ந்து உள்ளது

அப்படிப்பட்ட இருண்ட காட்டினிலே பவ ஆரண்யத்தில் வேண்டாதவைகளை அம்பாள் தன் கோடாரியால் வெட்டி சாய்க்கிறாள் ..

எனவே அவள் *பவ ஆரண்ய குடாரிகா*🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 320* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*86 பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி*

*பிசாச பய நிவிருத்தி, சத்ருஜயம்*

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்

லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே

சிராதந்த: ஶல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா

துலாகோடிக்வாணை: கிலிகிலித மீஶான ரிபுணா 86
ravi said…
அம்மா

உன் பிறந்தவீட்டைப்
பற்றிய ஏளனத்தை விளையாட்டுக்காக செய்துவிட்டு

பிறகு உன் ப்ரணயகோபத்தைக்கண்டு இன்னது செய்வதென்று தெரியாமல் வணங்கின பர்த்தாவின் நெற்றியில் உன்னுடைய பாதகமலங்கள் தட்டுப்படும் போது,

நெற்றிக்கண் எரிப்பால் எரிக்கப்பட்டு,

நெடுநாளாக நெஞ்சில் வைத்து உறுத்திக் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை அடியோடு தீர்த்துக் கொள்பவனும் சிவனுடைய பகைவனுமாகிய மன்மதனால்

உன் பாதச் சிலம்புகளின் மூலம் ‘கிலி கிலி’ என்ற ஜயகோஷம் எழுப்பப் படுவதாயிற்று.🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்
கிராமாந்தரங்களில் முன்னிருட்டு நாட்களில் திருட்டு இருக்கும். இதற்காக ஒரு நாலு பேராவது முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொண்டு ரோந்து சுற்றுவார்கள். கொஞ்சத்தில் கொஞ்சம் திருட்டுக் குறையும்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா லோகத்தைவிட்டுப் போனவுடன் லோகம் முழுவதிலும் கலியின் இருட்டு வீரியத்துடன் பரவக்கூடிய நிலைமை ஏற்பட்டது. வரப்போகிற அதர்ம இருட்டில் வேதம் என்கிற தீபம் சில இடங்களிலாவது அணையாமல் இருக்கச் செய்ய வேண்டுமே என்று ஒரு மகா பெரியவர் விசாரப்பட்டு அதற்கான காரியங்களில் இறங்கினார். கலிகால மநுஷ்யர்களுக்கு வேதம் முழுவதையும் அத்யயனம் செய்கிற சக்தி இருக்காது என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் வேத மந்திர சப்தம் லோகத்தில் கொஞ்சமாவது இருந்தால்தான் சமஸ்தப் பிராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகும். கலிகாலத்திலும்கூட தர்ம மார்க்கப்படி இப்படிச் சிறிது க்ஷேமம் எல்லா ஜீவராசிகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் தனது அபார கருணையினால் நினைத்தார். இதற்காகக் கலிகாலத்தில் வரப்போகிற அற்ப சக்தர்களுக்கு ஏற்றபடி, அதுவரை கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்களை நாலாகப் பிரித்தார். தம் சிஷ்யர்களில் பைலர் என்கிறவருக்கு ரிக்வேதத்தையும் வைசம்பாயனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்கு ஸாம வேதத்தையும், ஸுமந்துவுக்கு அதர்வண வேதத்தையும் உபதேசித்தார். “உங்களிடம் இந்த பெரிய சொத்தை ஒப்படைத்தேன். வேதத்தின் இந்த ஒவ்வொரு சாகை (கிளை) யையும் சிஷ்ய பரம்பரை மூலம் ரக்ஷித்து வர ஏற்பாடு பண்ணுங்கள்” என்று அந்த நாலு சிஷ்யர்களை ரோந்து சுற்றுகிற மாதிரி அனுப்பி வைத்தார். அனந்தமாக இருந்த வேதங்கள் இப்படிக் கலிகால அற்ப சக்தர்களும் ஒரு ஆயுளில் கற்று அத்யயனம் செய்கிற அளவுக்கு நாலாக வகுத்துத் தரப்பட்டன.

அந்த நாலு சிஷ்யர்கள், அப்புறம் அவர்களுடைய சிஷ்யர்கள், சிஷ்யர்களின் சிஷ்யர்கள் என்று எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக இந்த நாலு வேதங்களும், காதால் கேட்டுக் கேட்டே – ‘எழுதாக் கிளவி’ என்றே தமிழில் சொல்வார்கள் – நம் காலம்வரை வந்துவிட்டது. அதனால், கலியின் கோலாஹலமும் அடங்கியே இருந்தது. வேத அத்யயனம் குறைந்த இந்த ஒரு நூற்றாண்டில் கலி எப்படி முற்றிவிட்டது என்று நன்றாகப் பார்க்கிறோம்.

கலியுக ஆரம்பத்தில் லோக ரக்ஷணத்துக்காக வேதத்தை இப்படிக் காத்துத் தந்த அந்த மகா பெரியவரைத்தான் ‘வேத வியாஸர்’ என்கிறோம். ‘வியாஸ’ என்றால் ‘பகுத்து வைப்பது’ என்று அர்த்தம். வேதத்தை நாலாகபப் பகுத்தவர் வேத வியாஸர்.

அவருடைய இன்னொரு பெயர் பாதராயணர். தீவில் (த்வீபம்) பிறந்ததால் அவருக்கு ‘த்வைபாயனர்’ என்றும் ஒரு காரணப் பெயர் உண்டு. அவர் சியாமள வர்ணமாதலால் ‘கிருஷ்ணர்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ‘கிருஷ்ணத்வைபாயனர்’ என்று சேர்த்தே சொல்வார்கள் – கிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து வித்தியாசம் தெரிவதற்காக.

வாஸ்தவத்தில் அவரும் கிருஷ்ண பரமாத்மாவும் வேறல்ல. வேத வியாஸர் மகாவிஷ்ணுவின் அம்சாவதாரம்தான். பிற்காலத்தில் நம் ஆதி சங்கர பகவத்பாதாளுடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டாக அவரிடம் கோபித்து அவரோடு விவாதச் சண்டை போடுவதற்காகக் கிழப்பிராமணராக வியாஸர் வந்தார். இருவரும் உக்கிரமாக வாதப் பிரதிவாதம் செய்தபோது, ஆசாரியாளின் சிஷ்யர் பத்மபாதருக்கு இரண்டு பேரும் உண்மையில் யார் என்று ஞானதிருஷ்டியில் தெரிந்து, ‘சங்கர சங்கர ஸாஷாத்; வ்யாஸோ நாராயண ஸ்வயம்’ என்று அவர் சொன்னதாக சுலோகம் இருக்கிறது. ‘ஆசாரியாள் சாக்ஷாத் பரமேசுவரன்; வியாஸர் நாராயணனே’ என்று அர்த்தம், ‘முனிவர்களில் நான் வியாஸர்’ என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லியிருக்கிறார். ‘வ்யாஸாய விஷ்ணு ரூபாய’, ‘வ்யாஸ ரூபாய விஷ்ணுவே’ என்றும் சுலோகம் இருக்கிறது.
Kousalya said…
மிகவும் அருமை அழகிய சிங்கரும் அற்புத பக்தனும்...🙏🙏👍👍🌹🌹
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 42*🦚🦚🦚
ravi said…
ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்

மோதகங்க ளானதெச்சில்

பூதலங்க ளேழுமெச்சில்

மாதிருந்த விந்துவெச்சில்
மதியுமெச்சி
லொலியுமெச்சில்

எதிலெச்சி லிலதில்லை யில்லையில்லை யில்லையே. 42👍👍👏
ravi said…
வாயினால் ஓதுகின்ற வேதம், மந்திரங்களாக உள்ளவை,

உண்ணும் உணவு, ஏழு உலகங்கள், பெண்களிடம் விட்ட விந்து, அறிவு, சப்தங்கள் யாவுமே எச்சில்தான்,

ஆகவே அனைத்திலும் நீராகிய எச்சிலால் ஆனது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நீரில்லாமல் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.🙏🙏🙏
Hemalatha said…
தினமும் எழுந்ததும் முதல்ல பாபாவை பார்ப்பேன்.அடுத்து காளிகாம்பாள்,திருத்தணி முருகனை பார்த்து விட்டு தங்கள் உதவிக்காக மானசீகமாக நன்றி சொல்லிட்டுத்தான் அடுத்த வேலை.இந்த உயிர் இருக்கும் வரை இது தொடரும்.🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 95*
ravi said…
அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
*த்ருஷ்ணா* ’ அப்படீன்னாஉலக விஷயங்களை அனுபவிக்கனும்கிற ஆசை.

த்ருஷ்ணாங்கிற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு *தாகம்னு* அர்த்தம்.

அந்த மாதிரி விஷய சுகங்கள்ல இன்னும் வேணும் வேணும்னு நமக்கு இருக்கக் கூடிய தாகத்துக்கு த்ருஷ்ணா னு பேர்.

இந்த பவக்கடல்ல இந்த விஷயானுபவத்துல இருக்கிற அந்த இச்சை தான் ஜலமாம்.

பிறகு ‘ *மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே’*

நம்முடைய காமம் என்ற காற்றினால் கிளப்பப் பட்ட மோஹ அலைகள் வீசிண்டிருக்கு இந்த பவக்கடல்ல. ‘ *தாரவர்த்தே* ’ – மனைவிங்கிற சுழல் இருக்கு இந்த பவக் கடல்ல.👏👏👏
ravi said…
நாராயண ! நாராயண !

*ஒரு முறை நாரத -மகரிஷி கவலையுடன் காணப்பட்டார்.*

அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள்-.

நாரதர் --தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார் --

மஹாலக்ஷ்மி ---நாரதா அப்படி என்றால் ஒன்று செய் --ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள்--

நாரதரும் ரிஷிகேசம் வந்தார் .

கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் ---என்ன நாரதரே சௌக்கியமா என்றது ---

பேசும் மீனை அதிசியமாக பார்த்துக்கொண்டே நாரதர் ---

ம்ம் எதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார் --

-மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே என்றது ---

நாரதர் --ஏன் மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம் ஏதாவது தேவையா என்று சொல் நான் வரவழைத்து தருகிறேன் என்றார் --

மீன்--நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் ---

நாரதர் ---ஆனால் ---

மீன் ---ஒரே தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் தான் கிடைக்க மாட்டேங்கிறது அதுதான் என் சலிப்புக்கு காரணம் என்றது---மீன் ---

-மீன் கூறியதை கேட்டதும் -- நாரதருக்கு கோபம் வந்தது--என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா ?!!

நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது ?!!

மீன் --சிரித்துக்கொண்டே ---நீர் மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க

நாரதர் வியப்புடன் மீனை பார்க்க --மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து

நாரதா ---என் பெயரை கூறி கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது ---

கலகம் என்பது அவர் --அவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது ---அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன் --யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய் --

உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும் ---

என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார் .

நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித-கங்கையில் நிம்மதியாக --ஆனந்தமாக நீராடினார் ---என் கருத்து ---என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம் --அதுவே நாளும் பேரின்பம் --யாவும் நலமாகவும் முடியும் .

ஓம் நமோ நாராயணா !

இது போன்ற ஆன்மீக தகவல்களை அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தி நமது ஸ்ரீ மகா விஷ்ணுவின் குழுவில் இணையுங்கள்
👇👇 ஏற்கனவே உள்ளவர்கள் இணைய வேண்டாம்
https://chat.whatsapp.com/BlheoP6vNe43aq8sUnwtKh
ravi said…
🌹🌺 ' *ஸ்ரீ ஹரியே* ! *எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்ட யசோதையும், நந்தனும்* .….... - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு நாள் யசோதை குழந்தையான கண்ணனை, மடியில் வைத்திருந்தாள். குழந்தையின் எடை அதிகமாக இருந்ததால், அவளால் அதிக நேரம் மடியில் வைத்திருக்க முடியவில்லை. உடனே கண்ணனைப் படுக்கையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.

🌺அப்போது, கம்ஸனால் அனுப்பப்பட்ட, த்ருணாவர்த்தன் என்ற மற்றொரு அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்தான். குழந்தையையும் எடுத்துச் சென்றான்.

🌺கோகுலம் முழுவதும் புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். அவள் அழுத சத்தம் எங்கும் பரவியது. யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர்.

🌺அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப் பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான்.

🌺அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான்.

🌺ஆனால் கண்ணன் அவனை விடவில்லை. அவனுடைய கழுத்தை இறுகப் பிடித்தான். அசுரன், உயிரிழந்து பூமியில் விழுந்தான். அவனுடைய உடல் ஒரு பாறை மீது விழுந்தது.

🌺அழுதுகொண்டு வந்த அனைவரும், அசுரனுடைய உடல் மேல், சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டனர்.

🌺அசுரன் கல்லின்மீது விழுந்து உயிரிழந்து கிடந்தான். குழந்தையான கண்ணனோ, தன்னுடைய தாமரைக் கைகளினால் அவனை அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இவ்வாறு, சூறாவளிக் காற்றாய் வந்த அசுரனையும் அழித்தான்.

🌺மலைமேல் இருக்கும் ஒரு நீலமணியைப் போல் இருந்த குழந்தையைத் தூக்கி எடுத்து வந்தார்கள்.

🌺நந்தகோபனும், மற்றவர்களும் சந்தோஷமடைந்தனர். அனைவரும் குழந்தையை அணைத்து முத்தமிட்டனர். தன்னைத் தூக்க வேண்டும் என்ற கோபியர்களின் எண்ணத்தை அறிந்து, கண்ணன் தானாகவே தாவிச் சென்று அவர்களுடைய கைகளில் விளையாடினான்.

🌺யசோதையும், நந்தனும், மற்றவர்களும், “ஸ்ரீ ஹரியே! எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்கள்.

🌺மேலும், "நாம் பூர்வ ஜன்மத்தில் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறோம், அதனால்தான் அந்த பகவான் நம் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

🌺குழந்தையை அசுரன் எடுத்துச் சென்றும், எந்த ஆபத்துமில்லாமல் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, குழந்தையை உச்சி மோர்ந்து புளகாங்கிதமடைந்தனர்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 'Sri Hari! Yasoda and Nandan who prayed "save our child".🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹One day Yasoda held the child Kannan in her lap. As the baby was heavy, she could not hold it on her lap for long. She immediately put Kannan to bed and was doing housework.

🌺Then, sent by Kamsa, another monster named Drunavartha came in the form of wind, flying dust and making a great noise. He also took the child.

🌺 The entire gooculum is dark with dust. In the darkness where nothing could be seen, Yasoda lost sight of the child and cried. Her cries echoed everywhere. On hearing Yasoda's cry, the Adyars came to Nandagopan's house. Everyone cried without seeing the child.

🌺 At the same time, Drunavartha flew high in the sky carrying Kannan on his shoulder. Then Kannan increased his weight very much.

🌺 Unable to bear his burden, Drunavartha became slow. Kannan was as heavy as a mountain for him. The dust and noise stopped. Now the monster thought of leaving the child.

🌺 But Kannan did not let him go. He gripped his neck tightly. The monster fell dead and fell to the earth. His body fell on a rock.

🌺 Everyone who came crying saw the child who was laughing and playing on top of the monster's body.

🌺 The monster fell on the stone and died. Kannano, the child, was playing and beating him with his lotus hands. Thus, he destroyed the monster that came in the form of a whirlwind.

🌺They took the child who looked like a blue gem on the mountain.

🌺Nandagopan and others were happy. Everyone hugged and kissed the baby. Sensing the Gopis' intention to lift him, Kannan automatically jumped and played in their arms.

🌺 Yasoda, Nandan and others said, “Sri Hari! Save our child,” they prayed.

🌺Also, they said to themselves, "We have done many merits in our previous birth, that's why the Lord has saved our child from danger."

🌺 After the monster took the child, they thought that they had got it without any danger, and they raised the child and were amazed.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 43*🦚🦚🦚
ravi said…
பிறப்பதற்கு முன்னெலா மிருக்குமாற தெங்ஙனே

பிறந்துமண் ணிறந்துபோ யிருக்குமாற தெங்ஙனே

குறித்துநீர் சொலாவிடிற் குறிப்பிலாத மாந்தரே

அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால். 43🪷🪷🪷
ravi said…
பிறப்பதற்கு முன்பு நாம் எங்கிருந்தோம்,

பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தபின் எங்கே போய் இருப்போம் என்பதை எண்ணிப்பாருங்கள். .

இப்பிறவியின்
மேன்மையை உணராமல்

எந்த இலட்சியமும் இல்லாமல் மறைந்து போகும் மானிடர்களே!

உங்கள் பிறவியை அறுக்கவும், மீண்டும் பிறவாமல் இருக்கவும் *அஞ்செழுத்து* என்றும் பஞ்சாட்சர மந்திரத்தை உங்கள் காதுகளில் ஓதுகின்றேன்.👍👍👍
ravi said…
இனிய காலை வணக்கம்* 🪷🪷🪷

*ஸ்லோகம் 2* 🦚🦚🦚

*வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே:*

*பௌத்ரமகல்மஷம் / பராச’ராத்மஜம் வந்தே*

*சு’கதாதம் தபோநிதி4ம் //*

நான் வியாசரை வணங்குகிறேன்.

அவர் ரிஷி வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்,

ரிஷி சக்தியின் பேரன்,

ரிஷி பராசரரின் மகன்,

சுகமுனியின் தந்தை ,

களங்கமற்ற தபஸ்வி.🙏🙏🙏
ravi said…
கார்மேகம் குடை பிடித்து வந்ததோ 🌦️

அதில் கருநாகம் கால் விரல் சூப்பும் உன்னை கண்டே படம் எடுத்து நின்றதோ 🐍

தன்னில் நடக்கும் உன்னை கண்டே யமுனை தாய்மை உச்சம் தொட்டதோ 👍

வெண்ணெயும் நெய்யும் தயிரும்
*மா தவம்* செய்தே உன் மேனி தனில் உறைந்ததோ 🪷

கல்லும் காடும் நிறைந்த என் நெஞ்சம்

உனை கண்டே திருவண்ணாமலை ஜோதியானதோ ... 🔥🪔

திருடன் எனும் பெயரில் தெய்வீகம் கண்டேன் .. 🙏

பொய்யன் எனும் பேரில் என் மெய்யும் உருக கண்டேன் 🙏

அதர்மம் சென்ற வழியில் தர்மத்தின் சுகந்தம் பெற்றேன் 💐

மூங்கில் செய்த பாக்கியம் உன் அதரத்தில் நான் விரும்பும் மதுரம் கண்டேன் 👍

உனையே நினைக்கின்றேன் ..

ராதாவாய் மீராவாய் பாமாவாய் ருக்மணியாய்

எனை மாற்றும் நாள் எந்நாளோ *கண்ணா* 🦚🦚🦚
கௌசல்யா said…
அதி அற்புதம்.....எப்போது இந்த கண்ணனை பார்த்தாலும், அவனை கேட்க தோன்றும் வினாக்களை வரிகளாய் அமைத்து வர்ணம் கலந்து கொடுத்து இருக்கிறீர்கள்....அருமை.. ஜய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🙏🪔🪔💖💖🌹🌹🍒🍒
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 321* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*86 பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி*

*பிசாச பய நிவிருத்தி, சத்ருஜயம்*

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்

லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே

சிராதந்த: ஶல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா

துலாகோடிக்வாணை: கிலிகிலித மீஶான ரிபுணா 86
ravi said…
அம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார்,

உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார்.

அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத ' *சிலம்புகள் *கிலி-*
*கிலி'* என்று ஒலியெழுப்புகின்றன

உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.👌👌👌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 319* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*பத்ர* = காருண்ய - கனிவான - அருள் நிறைந்த

*ப்ரியா* = பிரியமான - பிடித்தமான

*115 பத்ரப்ரியா* = அனுகூலமான யாவற்றிற்கும் அபிமானவள்👍👍👍
ravi said…
*115 * भद्रप्रिया - பத்ரப்ரியா --*

''பத்திரம் பத்ரம், ஜாக்கிரதை '' என்று சொல்கிறோமே எதற்கு?

எதையோ பாதுகாக்க.

அம்பாள் பக்தர்களை இரவும் பகலும் அனுதினமும் பத்திரமாக பாதுகாக்கிறாள்.

அதில் அவளுக்கு பிரியம் என்கிறது இந்த நாமம்.👍👍👍
ravi said…
பெரியவனாய் ஆன சின்னவனும் சின்னவனாய் வந்த பெரியவரும்* 🪷🪷🪷
ravi said…
குழந்தை ஒன்று வந்ததே

கமண்டலம் குண்டலம் போல் ஆட

நாபி கமலம் பூணுலாய் மின்ன

கண்கள் கொஞ்சம் காரூண்யம் மறைத்திருக்க

அம்மா என்றவுடன் ஓடி வந்துவிடுவளோ எனும் அச்சத்தில்

அங்கவஸ்திரம் கொண்டே நெஞ்சில் நிலைத்திருக்கும் திருவை மூடிக்கொண்டது வரம் தரும் குழந்தை அன்று

எல்லாம் தந்த பாகுபலி மூன்றடி கேட்க வந்தான் மகா பலியிடம் ஒன்றும் இல்லாதவன் போல்

ஆறடி இடம் போதும் என்றே

திருவடி பணியக்கண்டான் மன்னன் தன் சென்னியிலே

காலடி சிரம் பதிய சிவந்த அடிகள் விஸ்வரூபம் எடுத்தனவே ...

யாருக்கும் கிடைக்கா பாக்கியம்

மகாபலியின் வண்மை , குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றா அருள் செய்ததே

காலடி தேரடியாய் மாலடி கண்டு நாலடி காஞ்சியில் பாலடியாய் வந்ததே

ஐந்தடி சுவாமி நாதன் உலகளந்த பெருமானாய் பெரியவா ஆனாளே

பெரியவன் சின்னவனாய் வந்ததும்

சின்னவன் பெரியவாளாய் மாறியதும்

மூன்றடி காலடி கண்ட விந்தையினாலோ 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
Savitha said…
அருமை பாகுபலி மகாபலி🙏🏻
Kousakya said…
ஆஹா...அருமை அருமை.......அடி அடியாய் வரிகள் அமைத்து மூன்றடி வைத்தவன் காலடி கண்ட காருண்ய மூர்த்தியை ஐ ந்தடியாய் அவதரித்வரின் மலரடி பணிந்து உய்வோம்....🙏🙏🙇‍♀️🙇‍♀️👏👏👍👍🌹🌹
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 43*🦚🦚🦚
ravi said…
பிறப்பதற்கு முன்னெலா மிருக்குமாற தெங்ஙனே

பிறந்துமண் ணிறந்துபோ யிருக்குமாற தெங்ஙனே

குறித்துநீர் சொலாவிடிற் குறிப்பிலாத மாந்தரே

அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால். 43🪷🪷🪷
ravi said…
பிறப்பதற்கு முன்பு நாம் எங்கிருந்தோம்,

பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தபின் எங்கே போய் இருப்போம் என்பதை எண்ணிப்பாருங்கள். .

இப்பிறவியின்
மேன்மையை உணராமல்

எந்த இலட்சியமும் இல்லாமல் மறைந்து போகும் மானிடர்களே!

உங்கள் பிறவியை அறுக்கவும், மீண்டும் பிறவாமல் இருக்கவும் *அஞ்செழுத்து* என்றும் பஞ்சாட்சர மந்திரத்தை உங்கள் காதுகளில் ஓதுகின்றேன்.👍👍👍
ravi said…
"மா" புராணம்.......

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்

மா புராணம் என்றால் ஏதோ மாமரத்தைப் பற்றி நான் எழுதப் போகிறேன் என்று எண்ணி விடாதீர்கள். அரிசி மா சத்துமா இவைகளைப் பற்றித்தான் கீழே விவரமாகத் தந்துள்ளேன். பூஜைக்கு உரியவை இந்த அரிசிமாவும் சத்துமாவும்!!

இப்படி ஒரு சிந்தனை ஏன் ஏற்பட்டது? என்றால் நேற்று கோகிலா அஷ்டமி. இன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த இரண்டு நாளிலும் என் மனைவி வீடு முழுக்க அரிசி மாவினால் கிருஷ்ணனின் பாதங்களை வரைந்து இருந்தாள்......

அரிசி மாவை வைத்துக்கொண்டு கோலம் இடுவது நம்முடைய சம்பிரதாயங்களில் ஒன்றாகும்! ஏனென்றால் எறும்பு பூச்சிகள் இந்த மா துகள்களைத் தின்று உயிர் வாழும் என்கின்ற அர்த்தத்தில் தான்!.

மா கோலம் இடுவது கூட ஒரு விதத்தில் மனிதாபிமானத்துடன் சம்பந்தப்பட்டது.

பச்சை அரிசியை நீரில் நனைத்து உலர்த்தி உரலில் இடித்து மாவாக்குவார்கள். இந்த மாவுடன் வெல்லப்பாகைச் சேர்த்து பிசைந்து கூடவே ஏலக்காய் துகள்களையும் சேர்ப்பார்கள். இந்த கூட்டுப் பொருள் மாவிளக்கு மா ஏற்றப் பயன்படுகிறது.

பிசைந்த மாவைக் குவித்து நடுவில் குழியிட்டு அதில் நெய் ஊற்றி ஏற்றுவார்கள். புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்திம் அன்று மா விளக்கு மா ஏற்றுவோர் உண்டு! பெண் தெய்வங்களுக்கும் மா விளக்குமா ஏற்றுவதுண்டு. அதேபோல் பெருமாள் முன்பாகவும் மாவிளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். நினைத்தக் காரியம் நடப்பதற்காக சுப காரியங்கள் கை கூடுவதற்காக மாவிளக்கு ஏற்றுகிறேன் என்று வேண்டிக் கொள்வதும் உண்டு.

அரிசி மாவைப் போல சத்துமாவும் யாக காரியங்களுக்குப் பயன்படக்கூடியதாகும். சில வேள்விகளின் போது சத்து மாவை நிவேதனம் செய்வதுடன் அக்கினியில் இடுவதும் உண்டு. வேத பிராமணர்கள் யாகம் செய்யும் பொழுது சத்து மாவை கஞ்சியாகக் காய்ச்சிக் குடிப்பார்கள். இந்தக் கஞ்சியில் உப்பு சேர்க்கப்படாததால் இது பத்து ஆகாரம் ஆகாது என்ற விதியும் இருக்கிறது. இது ஒரு சூட்சமமான விஷயம்.

மண்டை மா விளக்கு என்கின்ற பிரார்த்தனை தென் மாவட்டங்களிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் செய்யப்படுகிறது. நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நல்ல புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் அரிசி மாவில் முன்னர் சொன்னபடி வெல்லப்பாகு ஏலக்காய் இவைகளைச் சேர்த்து நெய் விளக்கு இடுவார்கள். இது ஒரு பலகையின் மீது வைக்கப்பட்டிருக்கும். பலகையை தூக்கியபடி கோவிலை வலம் வருவார்கள். இந்த மாவிளக்குமா பெரும்பாலும் கோவில்களில் தான் ஏற்றப்படும். தலையில் தூக்கிக் கொண்டு செல்வதால் மண்டை மா விளக்கு என்று இதைச் சொல்கிறார்கள்.

தினைமாவு முருகனுக்கு மிகவும் பிரியமான உணவாகும். காட்டில் வாழும் வேடுவர்கள் தினையை மாவு போன்று செய்து உணவில் பயன்படுத்துவார்கள். எனவே இதுவே வள்ளிக்கு உணவானது. அதனால் முருகனுக்கும் தினை மாவு நிவேத்தியம் செய்யப்படுகிறது. முருக வழிபாட்டின் போது தினை மாவு பிரசாதம் பிரதானமாக இருக்கும். திருச்செந்தூரிலும் கதிர் காமத்திலும் தினை மாவில் மா விளக்கு ஏற்றுவோரும் உண்டு.

தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்து அளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே... என்பது குமரகுருபரின் வாக்காகும்.

கேழ் வரகு மாவும் இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் எல்லா அம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவார்கள். கேழ்வரகு மாவைப் புளிக்க வைத்து அதில் அரிசி நொய் (குருணை என்று தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்) சேர்த்து கூழாக்கி தெய்வங்களுக்குப் படைக்கின்றனர்.

கூழ் ஊத்துவது என்பது சென்னை போன்ற நகரங்களில் பெரிய விழாவாக எடுக்கப்படுகிறது." கஞ்சியோ கூழோ நாம் உழைத்து சாப்பிட்டால்தான் திருப்தி" என்கிற பழமொழியும் உண்டு.

சில குடும்பங்களில் இறப்புக்குப் பின் ........அக்னிக்கு உடம்பைக் கொடுத்த பின் அரிசி மாவில் மனித உருவம் செய்து மந்திரங்களுடன் ப்ரீதி செய்வது உண்டு. மா என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதது.
ravi said…
73

காமாக்ஷி மன்மத ரிபோரவலோகனேஷு
காந்தம் பயோஜமிவ தாவகமக்ஷிபாதம் |
ப்ரேமாகமோ திவஸவத் விகசீகரோதி
லஜ்ஜாபரோ ரஜனிவன் முகுலீகரோதி ||73||

காமாக்ஷீ! மன்மத வைரியான பரமசிவன் உன்னைப் பார்க்கும்போது, உனது ப்ரேமையானது உன் கடாக்ஷத்தை தாமாரைப்பூவைப் பகல்போல் மலரச்செய்கிறது.அதிகமான லஜ்ஜையானது இரவைப் போல் கடாக்ஷத்தை மூடச்செய்கிறது.
ravi said…
ராம நாமத்தின் பெருமை*

*மஹாபெரியவா*

*ரா* *மா* எனும் இரண்டு எழுத்தில் அப்படி என்ன பெருமை இருக்கிறது ?

*தியாக பிரம்மம்*

நிதி சால ஸுக மா ராமுநி ஸந்-
நிதி ஸேவ ஸுக மா நிஜமுக ப ல்கு மநஸா

என்று உருகி பாடுகிறார் ..

*சதாசிவ பிரம்மேந்தராள்*

பிப3ரே ராம-ரஸம் ரஸனே பிப3ரே ராம-ரஸம் என்று பாடுகிறார் ...

மூன்று முறை ராமா என்று சொன்னால் விஷ்ணுவின் 1000 நாமங்களுக்கு ஈடாகும் என்கிறார் *மாதொரு பாகன்* ..

ஏன் எல்லோரும் ஒருமித்த கருத்தாக ராம நாமத்தை வனாளவு புகழ் கின்றனர்

காரணம் இது தான்

ராமா என்பது விஷ்ணுவையும் சிவனையும் சேர்த்து சொல்லும் நாமம் .

இருவருக்குள் எந்த பேதமும் இல்லை என்பதை உணர்த்தும் நாமம் .

*அஷ்டாக்ஷர மந்திரம்*

ஓம் ஓர் எழுத்து பீஜம்

ந மோ
நா ரா ய ணாய ...

இதில் *ரா* வெனும் எழுத்து உயிர்நாடி ..

ரா வை எடுத்து விட்டு சொல்லுங்கள்
.
ஓம் நமோ நா யனாய .. தகுதி இல்லாதவன் என்று பொருள் .. மஹா விஷ்ணு எதற்கும் தகுதி இல்லாதவர் என்றால் அது கொடும் பாவம் அல்லவா ?

அதே மாதிரி நமசிவாய

நாதம்
மனம்
சித்தம்
வாசி
யந்திரம் என்கிற 5 சங்கமம்

இதில் *ம* எனும் எழுத்து உயிர்நாடி ..

*ம* எழுத்தை நீக்கி படியுங்கள்...
ந சிவாய ... சிவம் , மங்களம் அற்றது எனும் பொருள் வரும்

இது அதை விட கொடுமை .

இந்த இரண்டு உயிர் நாடிகளான எழுத்துக்களை கொண்டு தைக்கப்பட்ட நாமம் *ராமா*

இப்பொழுது சொல்லுங்கள் எவ்வளவு உயர்வான நாமம் இது 👍👍👍
ravi said…
[21/08, 19:18] Jayaraman Ravilumar: 2வது கேள்வி .. பீஷ்மர் கடைசியாய் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இருக்கும் நாமம்

*மேதாவீ*
[21/08, 19:20] Jayaraman Ravilumar: தொண்டரடிப்பொடியாழ்வார்,

“ *உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதி”* என்று பாடினார்

அனைவரின் உள்ளங்களில் இருக்கும் அனைத்தையும் அறியவல்லவராக விளங்குவதால்
திருமால் ‘ *மேதாவீ* ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *78* -வது திருநாமமாக அமைந்துள்ளது.
*“மேதாவிநே நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்லறிவைத் திருமால் அருளுவார்
Sindhuja said…
Awesome explanations for both the questions sir,thankyou for letting us all know🙏🙏 i have searched alot but never find these kinda answers, really great🙏🪷👏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

”ந்ருணாம்” என்றால் ”மநுஷ்யனுக்கு”, ”மநுஷ்யனாகப் பிறந்த எல்லாருக்கும்” என்று அர்த்தம். ”ருணம்” என்றால் ‘கடன்’, ”மநுஷ்ய ஜன்மா எடுத்தவனுக்குப் பெரிய தீட்டு கடன் படுவதுதான்” என்று ஆசார்யாள் சொல்கிறார். ஏன் அப்படிச் சொன்னார்?
ravi said…
தீட்டு வந்தால் என்ன பண்ணுகிறோம்? இந்தக் காலத்தில் ஒன்றும் பண்ணுவதில்லை. ”தீட்டாவது, துடக்காவது? எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்று ஆலய ஸந்நிதானம் உள்பட எல்லா இடத்திலும் ஆசௌசங்களைக் கலந்து கொண்டிருக்கிறோம். பலனாகத்தான் துர்பிக்ஷம், நூதன நூதன வியாதிகள், மஹாக்ஷேத்ரங்களிலேயே விபத்துக்கள் என்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகையால் ஐம்பது வருஷத்துக்கு முன்வரை இருந்த நடைமுறையை வைத்தே, ஆசார்யாள் எழுதினதற்கு அர்த்தம் சொல்கிறேன். இரண்டாயிரம் வருஷம் முந்தி அவர் இருந்தபோதும், அவருக்கும் எத்தனையோ ஆயிரம் வருஷம் முந்தியும் இதே ஆசார – ஆசௌசங்கள்தானே அநுஷ்டானத்திலிருந்திருக்கின்றன?
ravi said…
ஒருத்தனுக்குத் தீட்டு ஸம்பவித்துவிட்டால் அந்த நாளில் என்ன பண்ணுவார்கள்? மற்றவர்கள் அவன் கிட்டேயே வரமாட்டார்கள். மேலே பட்டு விடப்போகிறான் என்று தள்ளித் தள்ளியே போவார்கள். கடனாளியாக இருக்கிறவனைக் கண்டும் பயந்து, ”எங்கே நம்மைக் கேட்டுவிடுவானோ?” என்று மற்றவர்கள் ஒதுங்கித்தானே ஓடுகிறார்கள்! இவனும் கடன் கொடுத்தவன் எங்கே எதிர்ப்பட்டு விடுவானோ என்று பயந்துகொண்டு ஜன ஸமூஹத்தின் கண்ணில் படாமல் ஒளிந்துகொண்டுதான் போவான். தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போவது என்பார்கள், அடையாளம் தெரியாமலிருப்பதற்கு தன்னைத்தானே இப்படிப் பெரிய ஆசௌசம் ஏற்பட்டு விட்டதுபோலக் கடனாளி ஸமூஹ ப்ரஷ்டம் செய்து கொண்டுவிடுகிறான்.
ravi said…
ஒருத்தன் கடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதால் அத்தனை பேருக்கும் கஷ்டம். ”கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்” என்று கம்பரே சொன்னபடி, கடன் வாங்கிவிட்டவன் கொடுத்தவனை நினைத்து எப்போதும் பயந்துகொண்டு கஷ்டப்படுகிறான்; தப்பித்துக்கொள்வதற்காகப் பொய் சொல்கிறான்; மிஞ்சினால் கடனை அடைப்பதற்காகத் திருடவும் துணிகிறான். கடன் பட்டாரைப் போல, அல்லது அதை விடவும், ”கடன் கொடுத்தார் நெஞ்சமும்” கலங்கிக் கொண்டுதான் இருக்கம் – பணத்தை அழுதவன் இவன் தானே? அது திரும்பி வருமா வராதா என்று எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பான். கடன் கொடுத்தவனான இவனுக்கு எத்தனை எரிச்சலும் மனக் கொதிப்பும் உண்டாயிருக்கிறது என்பது ”கடன்காரன், கடன்காரி” என்று வசவு ஏற்பட்டிருப்பதிலிருநந்தே தெரிகிறது.
ravi said…
கடன்காரன் என்றால் கடன் கொடுத்தவன், வாங்கினவன் என்று இரண்டு தினுஸாகவும் அர்த்தம் பண்ணிக்கொள்ள இடமிருக்கிறது!வளர்ந்த குழந்தைகள் செத்துப்போனால், ”கடன்காரன் (கடன்காரி) போயிட்டானே (போயிட்டாளே) ”என்று தாயாக இருக்கப்பட்டவள் மனஸ் நொந்து பிரலாபிப்பதுண்டு. இங்கே கடன்காரன் என்றால் பூர்வ ஜன்மத்தில் நமக்குப் பணமாகவோ உழைப்பாகவோ கொடுத்தவன் என்று அர்த்தம். அப்படிக் கொடுத்ததை, கடனைத் திருப்பி வாங்கிக்கொள்கிற மாதிரி வாங்கிக்கொள்ளவே இப்போது பிள்ளையாகப் பிறக்கிறான். பெற்றவர்களுக்குச் செலவு, தேஹ ச்ரமம் எல்லாம் வைக்கிறான். இவற்றில் தான் முன் ஜன்மாவில் கொடுத்த அளவுக்குத் திரும்ப அவர்களிடம் வாங்கிக் கொண்டவுடன் கடன் தீர்ந்தாயிற்று என்று கண்ணை மூடிக்கொண்டு போய்விடுகிறான்.
ravi said…
ஜன்மாந்தர கடன்காரன்” என்று சொல்கிற போதும் பூர்வஜன்மத்தில் நாம் ஒருத்தனால் பெற்றதைத் திரும்ப நம்மிடமிருந்து வாங்கிக்கொள்ள அவன் வந்திருக்கிறான் என்றே அர்த்தம்.
ravi said…
ஒருத்தன் கடன் படுவதனால், கடன் படுகிறவன் மட்டுமில்லாமல் கடன் தருகிறவனும் கஷ்டத்துக்கு ஆளாகிறான் என்று சொல்ல வந்தேன். இப்போது நவீன ‘ஐடியாலஜி’ போய்க்கொண்டிருக்கிற போக்கில் கடன் கொடுத்தவர்தான் அதிகக் கஷ்டத்துக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. ஸர்க்காரே கடன் வாங்கிப் பெரிய பெரிய திட்டம் போடுவதாக இருப்பதால் போலிருக்கிறது, கடன்பட்டவர்களுக்குத்தான் இப்போது ஸர்க்காரில் எல்லா சலுகையும் !வெளி தேசங்களில் உள்ள லக்ஷரிகள்தான் இப்போது நம் ஸர்க்காருக்கு ‘டார்கெட்’ (குறிக்கோள்) ! வாஸ்தவத்தில் தேசத்தில் திருப்தியும் ஆத்யாத்மிகமான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமானால், ஜனங்களுக்கு இடையில் பொறாமையும் போட்டிகளும் போகவேண்டுமானால், ‘வாழ்க்கைத் தரம்’ என்று சொல்வதைக் குறைப்பதற்குத் தான் திட்டம் போடவேண்டும். ஆனால் வாழ்க்கைத் தரத்தை மேல் நாடுகளின் தரத்துக்கு உயர்த்தியே தீரவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு வேண்டாத வஸ்துக்களை அத்யாவசியத் தேவையாக ஆக்குவதற்கே ஸர்க்கார் திட்டம், திட்டம் என்று ஓயாமல் போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக, இந்த தேசத்திலுள்ள எல்லா ஜனங்களின் கடனையும் சேர்த்து வைத்து ஸர்க்காரே ஒன்றுக்கப்புறம் எத்தனையோ ஸைஃபர்கள் போடுகிற தொகை லோகம் பூராவும் கடன்பட்டிருக்கிறது.
ravi said…
வேண்டாத வஸ்துக்களில் ஜனங்களுக்கு அபிருசியை உண்டாக்கி விட்டு, அதனாலேயே அவர்களை சம்பள உயர்வுக்காக எப்போது பார்த்தாலும் சண்டை, ஸ்டிரைக் என்று இறங்குவதற்குத் தூண்டிக்கொண்டிருக்கிறது. ‘திட்டம்’ என்ற பெயரில் திட்டமில்லாமல் செய்கிற காரியத்தால் ஏற்பட்டிருக்கிற inflation -ல் [பணவீக்கத்தில்] என்ன [வருமானம்] வந்தாலும் போதமாட்டேனென்கிறது. ஜனங்கள் கடனாளியாக வேண்டியிருக்கிறது. இதற்கு ஸர்க்காரே ‘இன்ஸென்டிவ்’ தருவதாக இருக்கிறது! ஜனங்களைக் கடன் வாங்குவதற்கு நன்றாகப் பழக்கி வைக்கிற ரீதியில் கிராமத்துக்கு கிராமம் பாங்குகள் திறந்து அநேக ஜனங்களுக்கு ‘லோன்’ கொடுக்கிறது. இதனாலே எத்தனையோ பொய், மோசடி, கரப்ஷன், பாங்கு சொல்கிற இனத்துக்காக் கடன் வாங்குவதாகச் சொல்லிக்கொண்டு அதை வேறு காரியங்களுக்குப் பிரயோஜனப்படுத்துவது, அதற்காக inspection staff -க்கு ‘அழுவது’ முதலில் பல பேர் மனுப்போடும் போட்டியில் ‘லோன்’ வாங்குவதற்கே அதிகாரிகளுக்கு ‘நைவேத்யம் பண்ணுவது’ என்றெல்லாம் ரொம்பக் குழறுபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது.
ravi said…
அப்புறம் கடனைத் திருப்பி வசூலிப்பதும் கஷ்டமாகிறது. கட்டாயப்படுத்தி வாங்கினால் ‘வோட்’ போய்விடப் போகிறதே என்ற பயத்தில் கடனை write off பண்ணி விடுகிறார்கள்! சொந்தப் பணமா என்ன, ஜனங்கள் வரி முதலானவைகளைக் கொடுத்துதானே என்பதால் ஸுலபமாகக் கடனை வஜா செய்துவிட்டு நல்ல பெயரும், வோட்டும் ஸம்பாதிக்கப் பார்க்கிறார்கள். அதோடு போகவில்லை. சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்தவன் அல்லது குத்தகைப் பணம் பெற வேண்டியவன் முதலியவர்களெல்லாருங்கூடத் தங்கள் பணத்தை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதாக அவர்களை வயிறெரிய வைத்து, ‘மொரடோரியம்’ என்று ‘ஆர்டினன்ஸ்’ போட்டு விடுகிறார்கள்.
ravi said…
ஏழைகளுக்கு வாஸ்தவமாக நன்மை பண்ணுவதை யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் பொதுவாக அடக்கப் பண்பும் எளிமையும் உள்ள நம் ஏழை ஜனங்களை வீண் டாம்பீகத்திலும், பலவிதமான பொய் பித்தாலாட்டங்களிலும் தூண்டிவிட்டு, ‘பட்ட கடனைத் தீர்க்கத்தான் வேண்டும் என்ற பெரிய தர்மத்துக்கு விரோதமாக நாம் போனாலும் ஸர்க்கார் நமக்குத்தான் ஆதரவாக இருக்கும்’என்று துணிச்சல் கொள்ள வைப்பது நன்மை இல்லவே இல்லை; தீமைதான். ‘வோட்டுப் பெட்டி பலம் நமக்குத் தானிருக்கிறது’ என்று அவர்களை எண்ண வைத்து, அதற்காக தர்ம பலத்தையும் தெய்வ பலத்தையும் அவர்கள் இழக்கும்படிச் செய்வது அவர்களுக்குச் செய்கிற தீமைதான்.
ravi said…
கடன் கொடுத்தவன் எப்படியெல்லாம் கடின சித்தனாகிக் கொடுமை பண்ணுகிறான் எனபதும் எனக்குத் தெரியாமலில்லை. அநியாய வட்டி வாங்குவது, எத்தனை திருப்பினாலும் அசலில் கழித்துக் கொள்ளாமல் வட்டியிலேயே கழித்துக் கொள்வது என்று அவர்களும் அநேக அக்ரமங்கள் பண்ணத்தான் பண்ணுகிறார்கள்.

கடன் வாங்குவது என்ற தப்பை ஒருவன் பண்ணுவதால்தான் இப்படி இன்னொருத்தன் (கடன் கொடுப்பவன்) பாவம் செய்பவனாக ஆகிறான். கடைசியில் ஸர்க்கார் அவனுக்கு நாமம் போடுகிறபோது அவனும் கஷ்டப்படுகிறான்.

ஆதலால், அடிமுதலில் எவனானாலும் கடன் என்றே போகாமல் தன் வருவாயில்தான் காலம் தள்ளுவது என்று ஆக்கிக்கொள்ள வேண்டும்.
ravi said…
கடன் கஸ்தியால்தான் அநேகர் திருடர்களாவது; போலி ஸந்நியாஸிகளாகி ஊரை ஏமாற்றுவது. மானஸ்தர்களில் பலர் குடும்பத்தோடு பிராணஹானி பண்ணிக் கொள்வதாகவும் அவ்வப்போது பேப்பரில் பார்க்கும்போது மனஸ் வேதனைப்படுகிறது.

முன்னயே சொன்ன மாதிரி கடன் கொடுத்தவன், கடன் பட்டவன் என்ற இரண்டு பேர் மட்டுமில்லாமல் ஊரார் எல்லாருமே ஒருவன் கடனாளி என்றால் ”அவன் எங்கே நம்மை உபத்ரவம் பண்ண வருவானோ?” என்று ஓடும்படியிருக்கிறது.

கடன் பழக்க்த்தினால் இப்படி லோகம் முழுக்க சிரமங்கள் ஏற்படுவதால்தான், இந்த லோகத்திலேயே அதுதான் பெரிய தீட்டு என்று ஆசார்யாள் தீர்ப்புப் பண்ணிவிட்டார்.
ravi said…
பரோபகாரம் என்பதைச் சொல்லும்போது, உபகாரம் பண்ணாவிட்டாலும் பர அபகாரம் எப்படியெப்படிப் பண்ணாமலிருக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டுமல்லவா? Ten Commandments [கிறிஸ்தவர்களின் பத்துக் கட்டளைகள்] கூட எல்லாமே negative -ஆகத்தானே (இன்னின்னவற்றை செய்ய வேண்டும் என்பதற்குப் பதில் கூடாது என்பதாகத்தானே) இருக்கின்றன!

வைதிகமான ஸாமான்ய தர்மங்களிலுள்ள அஸ்தேயம் (திருடாமை) , யோக சாஸ்திரத்திலுள்ள அபரிக்ரஹம் (பொருள் சேர்த்துக்கொள்ளாமை) என்பதாக ‘நெகடிவ்’ஆக உள்ள இரண்டுமே பரோபகாரத்துக்கு அங்கம்தான். இந்த இரண்டையும் பின்பற்றினால் கருமித்தனம், ஊதாரித்தனம், கடன் வாங்குவது எல்லாமே போய்விடும்.
ravi said…
காசி விஸ்வநாதர் கோவிலின் கருவறை முழுவதும் தங்கத்தால் ஆனது, பிரதமர் மோடியின் ரசிகர் ரகசிய நன்கொடை..!*

*ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 30 மணி நேரத்தில் கருவறை உள் சுவர் முழுவதும் தங்கத்தால் மூடப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது... தகவலின்படி, 10 பேர் கொண்ட கைவினைஞர்களைக் கொண்ட குழு சுவர்களை பொன்னிறம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது..*

*வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் வரலாற்றில் மற்றொரு பொன்னான அத்தியாயம் சேர்ந்துள்ளது.. 187 ஆண்டுகளுக்குப் பிறகு, கோயிலின் கருவறையின் உள் சுவர்கள் தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. தங்க அடுக்குகளுக்குப் பிறகு, காசி விஸ்வநாதர் கோயிலின் கருவறைக்குள் மஞ்சள் விளக்கு அனைவரையும் மயக்குகிறது... கோவிலில் கருவறையில் தங்கம் பூசும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது...*

*கருவறைக்குள் 37 கிலோ தங்கம் வைக்கும் பணி நிறைவடைந்துள்ளது... இப்போது மீதமுள்ள பாகங்கள் மற்றும் சட்டகம் போன்றவற்றை மாற்ற 24 கிலோ தங்கத்தை வைக்கும் திட்டம் உள்ளது... மகாசிவராத்திரிக்குப் பிறகு இந்தப் பணி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது...*

*தென்னிந்தியாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர், பெயர் தெரியாத நிலையில், கோவில் நிர்வாகத்துடன் இணைந்து, கருவறையில் தங்க முலாம் பூசியுள்ளார்... இந்த ரகசிய நன்கொடையாளர் பிரதமர் மோடியால் மிகவும் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது... மகாசிவராத்திரியை முன்னிட்டு, விஸ்வநாதர் கோவிலின் கருவறை பொன்னிறமாக மாறியுள்ளது...*

*மூன்று மாதங்களுக்கு முன் தென்னிந்தியாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கோயிலுக்கு வந்து கருவறையில் எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்று விசாரித்தார்.. அப்போது தங்கம் தானம் செய்வது குறித்து பேசியிருந்தார்.. மேலும் அவரது பெயர் ரகசியமாக வைக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.. கோவில் நிர்வாகத்தின் அனுமதிக்கு பின், தங்கம் பூசுவதற்கு அளந்து அச்சுகள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கின.. ஒரு மாத ஆயத்தத்துக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த தங்கம் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது..*

ravi said…
*கந்தர் அலங்காரம் 37* 🐓🦚🙏

*அலங்காரம்-11:*
ravi said…
சும்மா" இரு! அம்-மா பொருள்!
ravi said…
சும்மா" இருக்கறது-ன்னா என்ன?

பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா?

ஹிஹி!
* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!

* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!

"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா?

அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்?
அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை!

ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க!

அப்படியா என்ன? :)
ஹா ஹா ஹா!

இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)👍👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 318*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
*சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேத்³” –*

இப்பேர்ப்பட்ட சந்திரன் காணப்பட்டால்,
“ *ஆனந்த³பாதோ²நிதி⁴꞉ விஜ்ருʼம்ப⁴தே” –*

ஆனந்தம் என்கிற கடல் பொங்கும்.

சந்திரன் வந்தா கடல் பொங்கும்.

ஸாதுக்களுக்கு, இந்த மாதிரி சந்திரனை பார்த்தால் ஆனந்தம்ங்கிற கடல் பொங்கும்.

“ *ஸுமனஸாம்ʼ* *வ்ருʼத்தி: ஜாயதே”* – பூக்கள் எல்லாம் நன்னா..

சந்திரன் வரும்போது பூக்கள், மூலிகைகள் எல்லாம் நன்னா வளரும்.🪷🪷🪷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 315* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
*விக்ரம* க்ரம: |

🪷🪷🪷
ravi said…
அதற்கு வியாசர், “வேதத்தில் சம்ஹிதை, சாகை என இரு பாகங்கள் உண்டு.

சம்ஹிதை பாகத்தை ஓதினால் அது குதிரையின் ஓட்டத்தால் உண்டாகும் ஒலி போலத் தோன்றும்.

சாகை பாகத்தை ஓதினால் அது யானையின் நடையோசையைப் போலத் தோன்றும்.

இந்த ஒலிகளின் வடிவிலுள்ள வேதத்தையே திருமால் தனக்கு வாகனமாகக் கொண்டிருப்பதை உருவகப்படுத்திக் காட்டவே
குதிரை, யானை இரண்டும் பூட்டப்பட்ட தேரோடு குடந்தைக்கு வந்து உமக்கு அருள்புரிந்தார்!” என விளக்கினார்🪷🪷🪷
ravi said…
🌹🌺 ' *சந்திர நாடியில் வெளிப்படும் அமிர்தத்தைப் பருகும் ஸ்ரீகிருஷ்ணர்* .…
- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, '#நான்கொடுக்கிறேன்_மாந்தாதா'' என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார்.

🌺மனித சரீரத்தில் ஒவ்வொரு #அங்கத்திலும் ஒரு #தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி #இந்திரன்_அனுக்கிரஹம்_செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் #பசியின்போது_வாயில்_விரல்_இட்டுக்_கொள்கிறது.

🌺ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது #சரீரம் முழுவதும் #அமிர்த_மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை '#அமிர்த_வபு' என்கிறது.

🌺இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில்போட்டு கொண்டிருக்கிறார்.

🌺இடது கட்டை விரல்தான் அவர்வாயில் போட்டிருப்பது. நடராஜனது தூக்கிய திருவடியும் இடதுதான்! சந்திரன் அமிர்தத்தை பெருக்குகிறவன். யோக சாதனை செய்வதன்மூலம் உடலின் இடது பாகத்தில் உள்ள சந்திரநாடியில் அமிர்தம் பெருகும்.

🌺அந்த சந்திர நாடியில் வெளிப்படும் அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் இடது கால்கட்டை விரலை ருசிக்கிறார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🛕🌹🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏


_*மகா பெரியவா பொன்மொழிகள்*_

மகா பெரியவா பொன்மொழிகள்
தனது பதின்மூன்றாவது வயதில் பெற்றோர்கள் உறவினர்களை பிரிந்து துறவு வாழ்க்கையை ஏற்றுகொண்ட “மகா பெரியவா பொன்மொழிகள்” தொகுப்பை பார்க்கலாம்.

1.பூமியை விட்டுச் செல்லும் முன் ‘என்னிடம் பாவமே இல்லை’ என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

2. வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.

3. நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.

4. பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

5. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

6. தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.

7. உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.

8. எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.

9. நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.

10. சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.

11. புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் ‘நான்’ என்னும் ஆணவம் கூடாது.

12. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.

13. பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

14. எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.

15. ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.

16. வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.

17. பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.

18. வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.

19. அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

20. நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே.

21. கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.

22. தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

23. ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

24. தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.

25. வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது.

பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

26. சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள்.

பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள்.

அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.

ஜெய ஜெய சங்கர.

ஹர ஹர சங்கர.

மஹா பெரியவா சரணம்.

🌷🌷


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🛕🔔🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🛕🔔🙏
ravi said…
அமுதம் கக்கிய விஷம்* 🐍🐍🐍
ravi said…
வாசுகி தவித்தாள் .. 🐍

பெண் என்று ஏன் பிறந்தேன் .. ?

பெருமை அதில் என் கண்டேன் ...?

*ஈசனே*

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய்...

இல்லை என் ஆவி நீங்க கண்டாய் ..

இரண்டில் ஒன்று செய்

மேருவும் புலம்ப வானவரும் தானவரும் ஒருபக்கம் இன்றி இருபக்கம் இழுக்க ...

வாசுகி பிரசவ வலி கண்டாள் ...

சுமந்த வலி பத்து திங்களுக்கும் மேல்

பனிக்குடம் உடைய பரமன் திருவடி நினைத்தாள்...

தாயும் ஆனவனே என்னை தவிக்க விட்டது சரியோ ...

விஷம் தனை பிரசவித்தால் வினை சேரும் என்றே சுமந்து இருந்தேன் வலியுடன் என் நஞ்சை

பனிக்குடம் உடைந்து போனதே பரமனே

பார் அழியும் முன்னே யான் உனை அழைத்தேன் ...

நீ இன்றி காப்போர் யார் ஈசனே ??

சிரித்தான் ஈசன் ...

அமுதம் பிறக்கும் வேளையிலே நஞ்சும் பிரசவித்தாய்...

தர்மம் பிறந்த அன்று தான் அதர்மமும் பிறந்தது ..

நல்லது வேண்டும் என்றால் தீயது நீங்க வேண்டும்

*ஐயனே* ...

விஷம் நான் விரும்பி பிரசவிக்க வில்லை ..

வலியின் கொடுமை

பெண் என்று பிறந்ததே பெரும் பாவம் செய்தேன் ...

இதோ என் நஞ்சு தவழ தொடங்கி விட்டதே ....

*ஈசனே* ...

என் குழந்தை பிறரை தீண்டும் முன் தீர்ப்பாய் அவன் கதையை

*வாசுகி*

தாயன்றோ நீ உன் சிசுவை நீயே கொன்று போட துடிப்பது சரியோ ?

*ஈசனே* ..

அமுதமும் என்னால் பிறந்த சிசுவன்றோ ...

பிறர் வாழ நினைப்போர் வாழ வேண்டும் என்றும் ...

அழிய வேண்டும் என்றே நினைப்போர் எவராயினும் மடிய வேண்டும் நொடி பொழுதில்

அழித்து விடு என் ஓரு சிசுவை ....

ஆலகால விஷம் வாசுகியின் உதிரம் சிதற வெளி வந்ததே ..

எடுத்தான் கையில் பரமன் ...

அணைத்தான் தன் கண்டத்தில் அன்புடனே ...

அங்கே ஊஞ்சல் போட்டு உறங்க வைத்தான் மாதொருபாகன் நீலாம்பரி ராகமதில் பாட்டு ஒன்று பாடியே

இப்படி புண்ணியம் செய்தோர் யாருமில்லை ...

பரமன் பிறந்தான் மீண்டும் பூமியிலே

நஞ்சு உள்ளம் கொண்டோர் நல்லவர் ஆவதற்கே ..

தன் பெயர் மாற்றம் கொண்டான் *பெரியவா* என்றே ஊர் சொல்லிடவே 💐💐💐
Amsaveni said…
Really super sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Jeyalakshmi said…
Swami அருமை..5 முறை படித்தேன்..ஒரு ஒரு முறையும் ஒரு அனுபவம்..
Sethu said…
நல்ல தமிழ் வாழ்க, வளர்க. மெய் சிலிர்த்து போனேன் ஐயா. சொல்ல வார்த்தை இல்லை.
Usha perumal said…
Please text n english. I addict to read ur msgs and learn alot.
ravi said…
[22/08, 09:12] Metro Kowsalya: Adbhut....👌👌👏👏🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹
[22/08, 09:42] Shivaji L&T C: Arumai🌹🌹🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 320* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*115 * भद्रप्रिया - பத்ரப்ரியா --*

'மங்களமானவள் ..
தன்னை வேண்டுவோர்க்கு மங்களத்தை வரை இன்றி தருபவள்

அம்பாளுக்கு பிரியம் அதிகம் அதை எழுத்தில் வடிப்பது இயலாத காரியம் 🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 322* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*86 பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி*

*பிசாச பய நிவிருத்தி, சத்ருஜயம்*

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்

லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே

சிராதந்த: ஶல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா

துலாகோடிக்வாணை: கிலிகிலித மீஶான ரிபுணா 86
ravi said…
அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த வீட்டினை இகழ்ந்த பரமன்,

அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு

அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள் காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார்.

மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார்.

தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில் பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.🙏🙏🙏
ravi said…
கண்ணனோ குமரனோ

கற்பனைக்கும் எட்டாத கார் மேகமோ

கற்சிலையோ கற்பனையோ

கண்கள் காண்பது வெறும் கானல் நீரோ

சொப்பணமோ உன் தரிசனம் ...

ஊதுவது குழலோ இல்லை என் உயிரோ

சொன்னது கீதையோ தேடியது சீதையோ
கொன்றது சூரனோ

இல்லை

என்னுள் வாழ்ந்த தானவனோ

என் மனம் எனும் இரண்ட காடு தனில் நீ வைத்து சென்றது அக்கினிக் குஞ்சோ 🔥

அது பற்றி எரித்தது நான் வளர்த்த அகங்காரமோ ... மமகாரமோ அகந்தையோ

நீ யாரென்று அறியேன் ...

காதல் விதைத்து சென்றாய்

கண் உறங்கி இமை தழுவி யுகம் பல சென்றனவே ..

இனியேனும் பார்ப்பேனோ

கண்ணா! குமரா! ராமா! குகனே! உன் ப்ரசன்ன வதனம் தனை? 💐💐💐
Hemalatha said…
இதென்ன இப்படி ஒரு கதம்ப சாதம். அருமையான வரிகள் 👏👏👏
ravi said…
😄😄 எல்லாம் ஒருவனே என்பதை உணர்த்தும் பதிவு .. பெயர்கள் தான் வேறு வேறு அதுவும் நாம் வைப்பது
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 97*
ravi said…
அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
*ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴’*

சம்ஸாரம் என்றா பெயருடைய இந்த பெரிய கடலில் ‘ *மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்’ –* மூழ்கிண்டு இருக்கக் கூடிய *த்ரிதா⁴மன்* எங்கிற நாமத்தை சொல்றார்.

மூன்று இடங்கள்ல இருப்பவர்னு அர்த்தம்.

திருப்பாற்கடலிலும் ஸ்ரீ வைகுண்டத்திலும் இந்த பூமியில் கோயில்களிலும் இருக்கார்னு *த்ரிதா⁴மன்* என்கிறதுக்கு அர்த்தம் சொல்லுவா.

இங்க அதுக்கு மேல அகார, உகார, மகாரங்கள்ல இருக்கார்.

அதாவது பிரணவ ஸ்வரூபமா இருக்கார்.

அது தவிர விழிப்பு, தூக்கம், நித்திரைங்கிற மூணு ஸ்தானங்கள்ல இருக்கார்.

பூர் புவஸ் ஸ்வாஹங்கிற மூவுலகங்கள்ல இருக்கார் அப்படீன்னு *த்ரிதா⁴மன்* என்கிறதுக்கு பல அர்த்தங்கள் கொடுத்திருக்கார்.

அப்படி மூன்று இருப்பிடங்களைக் கொண்ட நாராயணா!💐💐💐
ravi said…
🌹🌺 'Shrikrishna sipping nectar from the lunar pulse.
- A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Mantada, a king of the Surya dynasty, was crying because there was no mother to give him milk when he was born. Seeing this, Indra was dismayed and took the child's finger and put it in his mouth, saying '#நாநுக்குக்குக்கு_Manthada''.

🌺 An #angel resides in every #part of the human body. Indra is the deva in charge of it. #इद्रान_अनुक्रहाम_जुद्धार to let the amrita he eats go to the child's mouth through the thumb of his hand. That's why many children put their finger in their mouth when #hungry.

🌺But what Srikrishna is putting in his mouth here is not a finger. Big toe! Vishnu Sahasra Naam calls him '#Amirtha_Vabu' because his entire #body is #amrta_maya.

🌺Indradhi is putting her toe in her mouth as if to show that she can do what the gods can do with their hands.

🌺 The left thumb is put in his mouth. Natarajan's raised thiruvadi is also left! Moon is the one who amplifies nectar. Amrita increases in Chandranadi on the left side of the body by practicing yoga.

🌺Shrikrishna tastes the left toe to sip the nectar that emerges from that lunar pulse.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
Oldest Older 201 – 308 of 308

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை