ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 11. பஞ்சதந்மாத்ரஸாயகா (1) பதிவு17

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

11 பஞ்சதந்மாத்ரஸாயகா(1)

பதிவு 17



இன்று நாம் பார்க்கப் போவது 11வது திருநாமம் 


11.*पञ्चतन्मात्रसायका* - *பஞ்சதந்மாத்ரஸாயகா* -🏵️🏵️🏵️🏵️🏵️

தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? 

ஐம்புலன்களினால் நான்  அனுபவிப்பது.

தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது,  காண்பது. 

இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். 

இவை ஐந்தும் ஐந்து வில்லாக  ஏந்தியவள் . 

அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள் தருகிறது அல்லவா?



பஞ்ச தன்மாத்ர = ஐந்து பூதங்ளான நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ஆகிய வற்றின் நுட்ப பண்புகளான - சுவை, ஊறு, நாற்றம், ஒளி, ஓசை என்பன 

 *சாயக* = அம்பு 

ஐம்பூதங்களின நுட்ப வெளிப்பாடுகளான தன்மாத்திரைகளை தன் அம்புகளாக்கி கொண்டவள் 🙏🙏🙏

பஞ்சதன்மாத்ர ஸாயகா -அவளுடைய கையில் உள்ள சரங்கள் அதாவது அம்புகள் என்னவென்று கேட்டால், அவை வேறு ஏதோ அம்புகள் அல்ல; 

வெறும் மலர் அம்புகளும் அல்ல; மலர் அம்புகள் என்றால் கரும்பு வில் என்று சொன்னது போல 'புஷ்ப பாணம்' என்று சொல்லியிருக்க வேண்டும். 

ஆனால் 'பஞ்சதன்மாத்ர ஸாயகா' என்று சொல்லியிருக்கிறது. அப்படியானால், அவள் கரங்களில் இருப்பது மலர் அம்புகள் அல்ல. 

நம்முடைய தன்மாத்திரைகள்தாம் அங்கே அம்புகளாக இருக்கின்றன! நான்கு திருக்கரங்களைக் கொண்டவளே! பாசத்தை ஒரு கரத்திலும், பாசத்தைக் களையும் அங்குசத்தை ஒரு கரத்திலும், எங்கள் மனமாகிற வில்லை ஒரு கரத்திலும், எங்கள் பஞ்சதன்மாத்திரைகளை ஒரு கரத்திலும் தாங்கிக் கொண்டு இருப்பவளே! 



'பஞ்சதன்மாத்ர ஸாயகா' என்றால் என்ன அர்த்தம்? 

அம்புகளைப் புஷ்ப பாணங்களாகத்தான் சித்திரிக்கப் பார்க்கிறோம். 

அம்பிகைக்கே காமேசுவரி என்று ஒரு திருநாமம் உண்டு. பின்னால் வரும். 

காமேசுவரருடைய திருத்தொடையில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்றும் ஒரு திருநாமம் வரும். 

பரமேசுவரனுக்குக் காமேசுவரன் என்று ஒரு திருநாமம். அம்பிகைக்குக் காமேசுவரி என்று ஒரு திருநாமம்.

காமம் என்றால் ஆசை, அதாவது விருப்பம் என்று அர்த்தம். இந்த உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற விருப்பத்தால், அதற்காக அவதாரம் செய்த அம்பிகைக்குக் காமேசுவரி என்று பெயர். இந்த உலகத்தைப் படைக்க வேண்டும் என்பதற்காக, நிர்குண பிரம்மமாக இருக்கும் பரமாத்மா தன்னையே ஒரு ஸ்வரூபத்துக்குள் கொண்டு வந்ததால், அவருக்குக் காமேசுவரர் என்று பெயர். 



அதுமட்டுமல்ல, நம்முடைய விருப்பங்களை, ஆசைகளை அவள் நிறைவேற்றித் தருபவள் என்பதால் அம்பாளுக்குக் காமேசுவரி என்று பெயர். 

இன்னொரு அர்த்தம் என்னவெனில் அழகாக இருப்பவள். கமனீயமாக உள்ளவள் (கமனீயமாக-அழகாக). இவ்வாறு காமேசுவரி என்ற பெயருக்கு அனேக அர்த்தங்களைச் சொல்லலாம் என்றாலும்கூட 'காமம்' என்ற சொல்லோடு மற்றொருவரையும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். 

காமன் என்றால் மன்மதனைக் குறிக்கும். மன்மதனிடம் இருப்பதும் இதே கரும்புவில்; இதே மலர் அம்புகள்தாம்! இதன் தாத்பர்யம் என்ன?



          👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍







Comments

ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 283* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*74. மதுஸூதன நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ *மதுஸூதன* :||8
ravi said…
வேதங்கள் பிரம்மாவின் நினைவில் அல்லவோ இருந்தன! ஓலைச் சுவடியின் வடிவில் இல்லையே.
அப்படியிருக்க, வேதங்களை மது-கைடபர் பிரம்மாவிடமிருந்து எப்படித் சென்றிருக்க முடியும்?

மிருதுவாக இருந்ததால் மதுவைப் பிரம்மா தொட்டவுடன், அவருடைய புலன்கள் யாவும் அவன்பால் ஈர்க்கப்பட்டு விட்டன.

பிரம்மாவின் சிந்தை முழுமையாக மதுவிடம் சென்றமையால், அவரது சிந்தையிலிருந்த வேதம் பறிபோனது.

திருமால், மதுவை வதம் செய்து பிரம்மாவின் சிந்தையில் மீண்டும் வேத ஞானம் உதிக்கும்படி அருள் புரிந்தார்🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்🌹🌺🪷🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔


*மெய் சிலிர்க்க வைத்த பதிவு...* மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்.

1976, பாளையங்கோட்டை யில், நாங்கள் தங்கியிரு ந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து, தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன்.

ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான், உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை... எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப் போய், அது ஹாலுக்குள் வந்துவிட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.

அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மகாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும். இதற்குள், பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய் விடுமோ என்று பயந்திருந்த வேளையில், சுவாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மகாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறி விட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்கு பயணமா னேன்.மகாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவர், அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்தி விட்டது.
"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ!''

நான் பெரியவர் காலில் தடாலென விழுந்து விட்டேன். "ஆஹா... வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்கு தெரிந்தது! என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ!

இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறேன். ஒரு சமயம். கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந் தார். நாங்கள் குடும்பத்து டன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்கு கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவர் முன் நின்ற போது,"உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே!'' என்றார்.

"எனக்கு தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!'' என அவரிடம் சொன்னேன். பெரியவர் என்னிடம், "நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்கு தகவல் கொடு,'' எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.

"ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்'' என்ற தகவல் தான் அது.

பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

💐🙏💐


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪷🙏

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம், அதாவது மனஸின் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும், அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசியில் தேகவியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.
ravi said…
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.

மனசு அதற்கப்புறம் ஓடவே முடியக் கூடாது. அப்படி ஓடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போதும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்ந்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.
ravi said…
நதி இருக்கிறது. அதன் மூலம்—உண்டான இடம்—என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாகப் போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அநுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும், இது அடைய வேண்டும் என்கிற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவன் யோகி இல்லை, அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.
ravi said…
யோகியின் அடையாளத்தை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆடக் கூடாது, அசையக் கூடாது, அழக்கூடாது. இப்படியில்லாமல், சித்தம் துளித்துளி சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.

யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.
ravi said…
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியும் ஹிம்ஸை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதிலெல்லாம் அவனுக்குத் ‘தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மஹா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு ஜீவனும்—எத்தனை பாப ஜீவனாக இருந்தாலும்—சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப் பழக்கினால்தான், கோடாநு கோடி ஜனங்களை இந்தமாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மநுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.
ravi said…
🌹🌺" *ஸ்ரீகண்ணபிரானின்*
*கரிய நிறத்தையே உள்வாங்கிக் கொண்டு தானும் கறுப்பாகக் காட்சி தருகிறதாம் யமுனை நதி! என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" நம் பரத கண்டத்தில் பாய்ந்தோடுகிற நதிகள் எல்லாமே புனித நதிகள்தான்; புண்ணிய நதிகள்தான்! ஆனால், எந்த நதிக்கும் இல்லாததொரு பெருமை, யமுனை நதிக்கு உண்டு.

🌺பாய்ந்தோடுகிற கங்கையையும், துங்கபத்ராவையும் பார்த்திருக்கிறீர்களா?

🌺அவை வெள்ளை வெளேரென்று, பளீரென ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், யமுனை நதி கன்னங்கரேலென்று, கறுப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருக்குமாம்!

🌺ஏன் இப்படி?
இந்த நதியிலும் கரையிலும் இருந்தபடிதானே, அத்தனை லீலைகளையும் செய்து, அனைவரையும் குதூகலப்படுத்தினான் ஸ்ரீகண்ணபிரான்!

🌺அவனையே சதாசர்வகாலமும் பார்த்துப் பார்த்து, ஸ்ரீகண்ணபிரானின்
கரிய நிறத்தையே உள்வாங்கிக் கொண்டு தானும் கறுப்பாகக் காட்சி தருகிறதாம் யமுனை நதி! ஸ்ரீகிருஷ்ண பகவானின் நிறத்தைக் கொண்டிருக்கிற நதி என்பதால், யமுனைக்குத் தனிச் சிறப்பு உண்டு.

🌺அதுமட்டுமா? ஸ்ரீகண்ணன், இந்த யமுனை நதி நீரைக் கைகளால் அள்ளி அள்ளிப் பருகியிருக்கிறான். ஆனந்தமாகக் கைகளில் ஏந்தி, கோபியர் முகத்தில் தெளித்து விளையாடியிருக்கிறான்.

🌺முக்கியமாக, வாய் கொப்பளித்திருக்கிறான். வேறு எந்த நதிக்கும் இல்லாத பெருமை இது என்று போற்றுகின்றனர், வைணவப் பெரியோர்!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺" The Yamuna river absorbs the black color of Srikannapiran and looks black! A simple story to explain that 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹" All the rivers that flow in our Bharata continent are holy rivers; holy rivers! But Yamuna river has a pride that no other river has.

🌺Have you seen the flowing Ganga and Tungabhadra?

🌺They are white and shiny. But the river Yamuna would be flowing black as Kannangare!

🌺Why like this?
As he was in this river and on the bank, he performed all the leelas and made everyone happy!

🌺Srikannapiranin, looking at him forever
The Yamuna river absorbs the black color and looks black! Yamuna has a special character as it is a river that has the color of Lord Sri Krishna.

🌺Is that all? Srikannan has been drinking this Yamuna river water with his hands. Happily carrying it in his hands, he is playing with Gopiar splashing it on his face.

🌺 Mainly, he is full of mouth. Vaishnav elders praise this as the pride of no other river!🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
TV Ganesh said…
உடல்பாதி தந்த பெண்மையின் உயர்வை கூட்டினான் உமாபதி

உள்ளம் முழுதும் தந்த
பெருமை நாட்டினான் உலகளந்த பெருமாள்

சக்தி இல்லையேல் சிவம் இல்லை

இலஷ்மி இல்லையேல் இட்ஷனம் இல்லை

எந்த ஜீவனாலும்
உலகில்
ஜனிக்கத் தேவை ஜனனி

பெண்ணின் பெருமை போற்றதவன் பொருளற்றவனே

தாய்மையின் தரம் தெரியாதவன்
ஆயிரம் தானம் செய்தும் அஃறினையே

ஓறிவோ ஆறிவோ தாய்மையின் தராதரம் மாறுமோ

பெரியவா எனும் பெருந்தகையை பெற்றெடுத்த பெருமை தாயையே சேரும்

ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் பெண்மை உண்டு

ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் ஆண்மை உண்டு

தாய்க்கு
சேயானோம் இளமையில்

தாய்க்கு
தாயாவோம்
முதுமையில்
ravi said…
*கவலை*

பேசிப்பேசி
உரசிய நாக்குகளில்
தீப்பொறிகளின்
தாக்கம்...

உன்முறை
என்முறையென
முறைத்துத் தீ
இறைத்தது
வன்முறை...

கற்கச் சொன்ன
பள்ளியை நோக்கி வீசிய
கற்களின் சில்லுகள்...

பள்ளிச்சுவற்றின்
வெளிவிளிம்பில்
எட்டிப்பார்த்த
சிறுமி கேட்டாள்,

''எரியாமல்
இருக்குமோ என்
மூணாவகுப்பு
நோட்டுக்குள்
குட்டிபோட்ட
மயிலிறகு...!?''🦚
ravi said…
ராமனும் மண்டோதரியும்*

*மண்டோதரி சொன்ன கீதை* 💐💐💐
ravi said…
ராமா* ...

இழந்தேன் ஈடில்லா இணைப்பொருளை ...

மடிந்தான் மாயை தனை மாண்பாய் கொண்டவன்

பத்துதலை கொண்டான் ..

உன் மீது ஏனோ பற்றுதலை கண்டான் இல்லை ..

தலை கனம், அவன் மலை கனம் கொண்ட உடம்பை மண்ணில் சாய்த்ததே ...

உங்கனம் ஒன்று கேட்பேன் ராமா எங்கனம் எடுத்து சொல்வேன் அதையே ?

*தாயே* ...

தங்கள் போல் உத்தமி கண்டிலேன் ...

அழியும் உடம்பிதில் அழகு நிற்பதில்லை வெகு நாள் ...

காணும் வெளி அழகு வெறும் கானல் நீரே ...

மனதில் அழகு இருந்தால் அதுவே நிஜமாகும்

நிழல் தன்னை தனதாக்கும்

*ராமா*

மனம் அழகாவது எங்கனம் உரைப்பாயோ இந்த பேதைக்கு கொஞ்சம் ??

சொல்வேன் *தாயே* ...

கேளுங்கள் இதையே

பொன் கண்டோர் மனமெல்லாம் புண் நிறைந்தே போகும் ...

பண் கொண்டு பரமனை பாடும் மனமெல்லாம் பாற்கடலாகும் ..

விண் கண்ட தேவர்கள் தேன் கொண்டு பொழிவர் பூஷ்பங்களை ...

பிறர் வாழ எண்ணுங்கள்

பிறர் உடமை போற்றுங்கள் ...

அதை பெற வேண்டும் என்றே வரும் நினைவை வேல் கொண்டு கொல்லுங்கள் ...

ஆண்டவன் அடி பனிவான் இக்குணம் கொண்டவர்க்கே ...

காஞ்சி வாழ் கார்மேகம் தெய்வத்தின் குரலாய் இதையே சொல்வார் கலியுகம் தனில் ...

நான் இன்றே சொன்னேன் ...

*உண்மை ராமா* உணர்ந்தேன் ...

எல்லாம் இருந்தும் மாற்றான் தோட்டத்தின் மல்லிகை தனை மணம் நுகர்வோர்
மாண்டு போவார் ஒரு நாதி இன்றியே ...

உன் நாமம் உரைப்போர் வெல்வர் காலன் அவன் கைப்பொருளை 🙏🙏🙏
ravi said…
யெனீசி நதி*

ஆர்க்டிக் பெருங்கடலில் பாயும் மூன்று ஆறுகளில், யெனீசியே மிகப்பெரியது,

இது தோராயமாக 3445 மைல்கள் நீளம் கொண்டது.

உலகின் முதல் பத்து பெரிய ஆறுகளின் பட்டியலில் யெனீசி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இது மங்கோலியாவில் இருந்து உருவாகி சைபீரியா வழியாக பாய்கிறது.🙏
ravi said…
அம்மா ... ஆயகியாதி நாமங்கள் உடையாய் சரணம் அரண் நமக்கே ...

அம்மா ... அழைக்கும் குரலுக்கு அமுது ஊட்டுபவளே ...

அமுதும் அமிர்தம் ஆகாதோ உன் திருக்கை பட்டால்

விஷம் கொண்ட மனமிது ஓரிடத்தில் நில்லாது உனை போல் ஒடிக்கொண்டே இருக்கும் ...

நில் என்று சொன்னால் நில்லாது ...

சொல் உன் நாமம் என்றால் சொல்லாது ..

கல் அதை விரும்பும் ..

கணியும் உன் நாமம் ஏனோ சொல்வதில்லை ...

சொல்ல வைப்பாயோ உன் நாமம்

உயர வைப்பாயோ என் புகழை இன்னும் மேலே ....🙏

உன் நாமம் இனியும் நா உரைக்க வில்லை என்றால் உன்னில் என் மேனி மிதக்கட்டும் ...
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 64*
ravi said…
பதினொன்னாவது ஸ்லோகம்.

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।

हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥

கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
ravi said…
கீதையில கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு சொல்றார்.

இங்க திருவல்லிகேணியில தான் பார்த்தசாரதி இருக்கார்.

அவர் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் தரிசனம் கொடுக்கறார்.

கொடுத்த உடனே அவன்

“ *ஸ்தானே ஹ்ருஷீகேச தவப்ரகீர்த்யா, ஜகத் ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்ய தே ச |*

*ரிக்ஷாம்ஸி பீதானி திஷோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்திச ஸித்த ஸங்கா ||*

ன்னு ஸ்லோகங்கள் சொல்லி நமஸ்காரம் பண்றான்🙏
ravi said…
भक्त्या तु अनन्यया शक्यः अहम् एवंविधोर्जुन ।

ज्ञातुम् द्रष्टुम् च तत्त्वेन् प्रवेष्टुम् च परन्तप ।।

*பக்த்யா த்வ் அனன்யயா ஷக்ய: அஹம் ஏவம்-விதோ (அ)ர்ஜுன |*

*க்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப ||*

இப்படி என்னை அறிந்து, தரிசித்து, எனக்குள் புகுவதற்கு பக்தி ஒன்றால் தான் முடியும்,

அப்படீன்னு கீதா வாக்யம்.

அப்படி அந்த ப்ரம்மம் ஸமுத்ரம் போல இருக்கு.

அந்த பிரம்மத்தை ஒரு கிருஷ்ண ஸ்வரூபத்துல ஒரு மடு போல ஸரஸ் போல தியானம் பண்ணி அதுல ஆனந்தமா ஸ்நானம் பண்ணி அந்த தேஜஸை தீர்த்தம் போல குடிச்சு அவா சம்ஸார தாபத்தை போக்கிக்கறா🙏🙏🪷🪷
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்🌹🌺🪷🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔


*மெய் சிலிர்க்க வைத்த பதிவு...* மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்.
ravi said…
1976, பாளையங்கோட்டை யில், நாங்கள் தங்கியிரு ந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து, தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன்.

ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான், உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை... எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப் போய், அது ஹாலுக்குள் வந்துவிட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.
ravi said…
அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மகாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும். இதற்குள், பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய் விடுமோ என்று பயந்திருந்த வேளையில், சுவாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மகாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறி விட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்கு பயணமா னேன்.மகாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவர், அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்தி விட்டது.
"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ!''
ravi said…
எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்கு பயணமா னேன்.மகாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவர், அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்தி விட்டது.
"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ!''

நான் பெரியவர் காலில் தடாலென விழுந்து விட்டேன். "ஆஹா... வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்கு தெரிந்தது! என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ!

இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறேன். ஒரு சமயம். கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந் தார். நாங்கள் குடும்பத்து டன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்கு கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவர் முன் நின்ற போது,"உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே!'' என்றார்.
ravi said…
எனக்கு தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!'' என அவரிடம் சொன்னேன். பெரியவர் என்னிடம், "நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்கு தகவல் கொடு,'' எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.

"ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்'' என்ற தகவல் தான் அது.

பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

💐🙏💐
ravi said…
சில விஷயங்கள் பாரதத்தில் தேடும்போது கிடைக்காது. பாகவதத்தில் கண்ணில் படும்.

ராமனை ஊரே, உலகமே அறியும் எனும்படி அவன் மஹிமை, பெருமை எங்கும் பரவி இருந்தது.
ராமன் காட்டிற்கு போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை.

'உள்ளங்கையில் முதலில் வைத்து விட்டு இறங்கவேண்டும் சொல்கிறான். இவ்வாறு ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் பெறுகிறான் கேவத். .

கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத்.
சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தருகிறாள் ''இதை அவருக்கு பரிசாக கொடுங்கள் '' என்கிறார்.

''அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் '' என பரிசை ஏற்க மறுக்கிறான்.

''ஓ அப்படியா, கேவத், நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம் எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள் '' என சிரித்துக் கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீ ராமன்.

''ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா ''

''என்னப்பா கேவத் நீ பேசுவதோ விநோதமாகவே இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்கமாட்டாய்?''- ராமர்
''எதற்கு ?''
''தொழில் விசுவாசம் ஐயா''
''அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படியாக சொல்லேன்''
''ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்கமாட்டான். துணி வெளுப்பவன் அப்படித்தான்.
''புரியவில்லை. விளக்கமாக சொல். நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ எனக்கு அவ்வாறு சேவை செய்யவில்லையே. நீ படகோட்டிதானே'' என்கிறார் ராமர்.

''உங்களுக்கா புரியாது.. என்னை சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் ஓடக்காரன். நீங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்து இந்த ஸம்ஸார கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமன். நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. தொழில் ஒன்றுதானே பகவானே. என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்து உங்கள் கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்'' என்று ராமர் காலில் விழுந்து வணங்குகிறான் கேவத்.

ராமர் கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. ஆனந்த பாஷ்பம். என்ன ஒரு அருமையான பக்தன் இவன். பாவத்தோடு (BHAVAM ) நம் பாவம் தீர ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் ஸ்லோகம் பாடுகிறார் காதில் விழுகிறதா?

ravi said…
என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?'' என பக்தியோடு கேட்கிறான்.
''கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.''
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன் படகை இங்கே கொண்டுவா '' என படகு நெருங்கி வருகிறது.
''கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன்.இவர்களை அக்கரை கொண்டு சேர்''

கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவில் பாட்டுக்கு முன்பும் ராம நாமம் சொல்பவன்.

'' ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே . தூசு தும்பு இருக்கக்கூடாது ''
ravi said…
மஹாராஜா, நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு கிடையாது,இன்னொன்று வாங்க வசதியும் இல்லை ''

''எதற்கு இப்படி பேசுகிறாயப்பா '' - ராமர்.
''எனக்கு உங்களை பற்றி தெரியுமய்யா. உங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும் கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி பட்டு என் படகும் ஒரு பெண்ணானால் நான் அவளை எப்படி காப்பாற்றுவேன், என் படகு காணாமல் போய்விடுமே!'' அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் என் படகில் கால் வைக்கும் முன்பே, உங்கள் கால்களை தூசி, இல்லாமல் முதலில் கழுவ ஆசைப்பட்டேன். கேட்டுக்கொண்டேன். என்னையும் என் படகையும் நீங்கள் தான் ரக்ஷிக்க வேண்டும் ''

ராமர், சீதை லக்ஷ்மணன் குகன் அனைவரும் கேவத்தின் எளிமை,பக்தி சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மனமார மகிழ்கிறார்கள்.

கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை ஜலத்தால் ஸ்ரீ ராமரின் பாதங்களை கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்கிறார்கள். கேவத் தனது வஸ்த்ரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசி இல்லாமல் துடைக்கிறான். அவர்களை கங்கை நதியின் மறுகரையில் கொண்டு சேர்க்கிறான்.

அவர்கள் மறுகரை சேர்ந்ததும், ராமர் பாதங்களை தனது உள்ளங்கையில் முதலில் வைத்து விட்டு இறங்கவேண்டும் சொல்கிறான். இவ்வாறு ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் பெறுகிறான் கேவத். .

கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத்.
சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தருகிறாள் ''இதை அவருக்கு பரிசாக கொடுங்கள் '' என்கிறார்.

''அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் '' என பரிசை ஏற்க மறுக்கிறான்.

''ஓ அப்படியா, கேவத், நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம் எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள் '' என சிரித்துக் கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீ ராமன்.

''ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா ''
ravi said…
கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத்.
சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தருகிறாள் ''இதை அவருக்கு பரிசாக கொடுங்கள் '' என்கிறார்.

''அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் '' என பரிசை ஏற்க மறுக்கிறான்.

''ஓ அப்படியா, கேவத், நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம் எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள் '' என சிரித்துக் கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீ ராமன்.

''ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா ''

''என்னப்பா கேவத் நீ பேசுவதோ விநோதமாகவே இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்கமாட்டாய்?''- ராமர்
''எதற்கு ?''
''தொழில் விசுவாசம் ஐயா''
''அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படியாக சொல்லேன்''
''ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்கமாட்டான். துணி வெளுப்பவன் அப்படித்தான்.
''புரியவில்லை. விளக்கமாக சொல். நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ எனக்கு அவ்வாறு சேவை செய்யவில்லையே. நீ படகோட்டிதானே'' என்கிறார் ராமர்.

''உங்களுக்கா புரியாது.. என்னை சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் ஓடக்காரன். நீங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்து இந்த ஸம்ஸார கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமன். நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. தொழில் ஒன்றுதானே பகவானே. என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்து உங்கள் கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்'' என்று ராமர் காலில் விழுந்து வணங்குகிறான் கேவத்.

ராமர் கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. ஆனந்த பாஷ்பம். என்ன ஒரு அருமையான பக்தன் இவன். பாவத்தோடு (BHAVAM ) நம் பாவம் தீர ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் ஸ்லோகம் பாடுகிறார் காதில் விழுகிறதா?

புனரபி ஜனனம் புனரபி மரணம்.
புனரபி ஜனனி ஜடரே சயனம்.
இஹ சம்சாரி, பஹு துஸ்தாரே ,
க்ரிப்பாயா பாரே பாஹி முராரே.......
ravi said…
நண்பர்களே

, பகவானிடம் எனக்கு சொத்து கொடு, சுகம் கொடு, வீடு,கார் கொடு, பங்களா கொடு என்று கேட்காதீர்கள். மஹா பெரிய தனவந்தனிடம், வள்ளலிடம் ஒரு ரூபாய் காசா எதிர்பார்ப்பது?

நமது துன்பங்களை போக்கி மாய உலகத்தை நீங்கி அவன் திருவடி தர காத்திருக்கிறான்.

கேவத் சொல்லிக் கொடுக்கிறான்

ஒரு படிக்காத ஓடக்காரனிடம் பாடம் படிப்போம்.
ravi said…
[19/07, 20:45] Jayaraman Ravilumar: *கந்தர் அலங்காரம் 10* 🐓🦚🙏

*அலங்காரம்-02:*

சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?
[19/07, 20:45] Jayaraman Ravilumar: பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை,

ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா,

செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,

குமாரன் கிருபாகரனே!🙏
[19/07, 20:49] Jayaraman Ravilumar: *செஞ் சடா அடவி மேல்* = என்ன ஒரு உருவகம் பாருங்கள்!

சிவபெருமானின் ஜடாமுடி அடவியாம்!

அடவி* =காடு!

அவர் ஜடா முடி, காடு போல் அடர்ந்து இருக்கு!

மறைக்காடு ஈசனுக்கு மயிர்க் காடு!

அந்தக் காட்டில் என்னென்ன எல்லாம் இருக்கு?

ஓடும் காட்டாறு இருக்கு!

அதில் இளைய நிலா பொழிகிறது!

கொன்றை/தும்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன!

ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன!

எப்படி இருக்கு கானகக் காட்சி?

1. *ஆற்றை* = கங்கையை
2. *பணியை* = பாம்பை
3. *இதழியை* = கொன்றைப் பூவை
4. *தும்பையை* = தும்பைப் பூவை
5. *அம்புலியின் கீற்றை* = சந்திரனின் பிறையை
*புனைந்த பெருமான்* = அணிந்த சிவ பெருமான்

சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா?

அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்!

கொன்றைப் பூ = மஞ்சள் நிறம்!

கொத்து கொத்தாப் பூக்கும்!

தொலைவில் இருந்து பார்க்க ஏதோ நெருப்புக் கொத்து போலத் தென்படும்!
ravi said…
[19/07, 20:40] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 285*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
[19/07, 20:42] Jayaraman Ravilumar: नन्दति मम हृदि काचन मन्दिरयन्ती निरन्तरं काञ्चीम् ।
इन्दुरविमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी ॥52॥

நந்த³தி மம ஹ்ருʼதி³ காசன மந்தி³ரயந்தீ நிரந்தரம் காஞ்சீம் । இந்து³ரவிமண்ட³லகுசா பி³ந்து³வியன்னாத³பரிணதா தருணீ ॥ 52 ॥

(மூகபஞ்ச சதீ ஆர்யா ஶதகம்)

‘நந்த³தி மம ஹ்ருʼதி³ காசன மந்தி³ரயந்தீ நிரந்தரம் காஞ்சீம்’ – காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் நிரந்தரமாக காமாக்ஷி நித்யவாசம் பண்றாள்னு புராணங்கள்ல சொல்றது நேரப் பார்க்கறோம். ஆனா, மூககவி சொல்றார், ‘நந்த³தி மம ஹ்ருʼதி³’ – என் மனசுல அவ நிரந்தரமா சந்தோஷமா இருக்கா அப்படீங்கறார்.
ravi said…
[19/07, 20:36] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 284* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*74. மதுஸூதன நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ *மதுஸூதன* :||8
[19/07, 20:38] Jayaraman Ravilumar: பிரம்மாவின் சிந்தை மதுவை நோக்கிச் சென்றதால் வேத ஞானத்தை மறந்ததைப் போல
நம்முடைய புலன்களும் சிந்தையும் உலக விஷயங்களில் ஈடுபட்டு, அதன் விளைவாக இறைவனை மறந்து விடுகின்றன.

இறைவனே வந்து மது, கைடபரை வதம் செய்ததுபோல,

அவனே நம் புலன்களையும் அடக்கி தன் பால் அவை செல்லும்படி அருள்புரிகிறான்.

புலன்களுக்கு மது என்று பெயர்.

அடியார்களின் புலன்களான மதுவை மற்ற விஷயங்களில் ஈடுபடவிடாது,
தன்பால் ஈர்த்துக் கொள்வதால், திருமால் “ *_மதுஸூதன_* :” என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 74-வது திருநாமம்.
“ *மதுஸூதநாய* *நமஹ* ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் புலன்களைத் திருமால்
தன் பால் ஈர்த்துக்கொண்டு, அவர்களுக்கு நிம்மதியை அருள்வார்👍👍👍
ravi said…
53

ஶ்ருங்கார விப்ரமவதீ ஸுதராம் ஸலஜ்ஜா
நாஸாக்ர மௌக்திகருசா க்ருத மந்தஹாஸா |
ஶ்யாமா கடாக்ஷ ஸுஷமா தவ யுக்தமேதத்
காமாக்ஷி சும்பதி திகம்பர வக்த்ர பிம்பம் ||53|

ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷத்தின் ஸெளந்தர்யமாகிற கருமையான நிறத்தையுடைய ஸ்த்ரீயானவள் சிருங்கார விலாஸத்தோடும், நாணத்தோடும் கூடியவளாய் மூக்கின் நுனியிருக்கிற மூக்கூத்தி முத்தின் காந்தியால் மந்தஹாஸம் செய்பவள் போலிருந்துகொண்டு, திக்குகளையே ஆடையாக அணிந்த பரமசிவனுடைய முகபிம்பத்தை முத்தமிடுகிறாள் என்பது பொருத்தமே!
ravi said…
*விவேக சிந்தாமணி*

*16. பணமில்லாதவன் பிணமே*

பொருளிலார்க் கின்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும், மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை, கருதிய தரும மில்லை கதிபெற வழியுமில்லை, பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.

*பொருள்*

கையில் பணம் இல்லாத ஏழைக்கு இவ்வுலகில் மகிழ்ச்சியானது இல்லை, நற்செயல்களை செய்ய முடியாததால் புண்ணியமில்லை, புகழ் இல்லை, அவரது புதல்வர்களுக்கும் பெருமை ( ஸமூக அந்தஸ்து) இல்லை. தான தர்மங்களைச் செய்ய முடியாததால் மறுபிறவிக்கும் நன்மை இல்லை. இந்த பெரும் பூமியில் அவர்கள் நடைப்பிணங்களைப் போல திரிவார்கள்.
(ஆகவே செய்க பொருளை.).

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்.20/07/2022*

🌹🌻🌹🌻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
🌹🌺 "Our women of India have been those who know Samayosita Buddhi and domestic dharma! They are..... - A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Once Vasishtar invited Vishwamitra to come and eat at his hut for his ancestral sraddha [divasam].

🌺 Why is it gone? But we have to prepare 1008 types of vegetables." He said. Are there 1008 types of vegetables in the world? Can anyone prepare food by cooking so many curries? Even if they are cooked as they are, who can eat them?

🌺Doesn't Vasishta know that Vishwamitra is doing this on purpose to get himself into trouble or to humiliate him?. Still not giving up, he said, "Aha! Do you want 1008 types of curry? I will tell Arundhati about that."*

🌺 Arundhati, the wife of Vasishta, is a symbol of chastity. Every Hindu should see Arundhati Nakshatra on the first night of marriage. The priests wish you both to live in harmony, just as Vasishta and Arundhati did not.*

🌺She is blessed in five or six places in the Sangathamil texts. Tamil people have been singing her praises for thousands of years.*

🌺 The day of Sraddhachapapad has come. Vishwamitra sat on a leaf. Along with cantaloupe, jackfruit and brandy, there were only as many vegetables as a banana leaf could produce. There were no 1008 vegetables.*

🌺Vishvamitra angrily asked "What is this? Where are the 1008 types of nuts?" asked Vasishta. He said, "I have told Arundhati! Ask her."*

🌺 The world-class Uttami Arundhati, who was listening to them, came forward and recited a sloka and said, "This is the fate of Sraddhaka, you know!" she said.*

🌺* Vishwamitra was speechless. After eating without speaking, he left. What was that sloka by Arundhati?*

🌺Karavalli Satam Saiva Vajravalli Sattrayam*
*Banasam Shat Satamsaiva* *Srarthakale Vidiyathe*🌹

🌺*Karavalli Shant Chaiva Vajra Valli शतत्रयं*
*पनसम शट शतन्चाइव श्रार्धकाले विधियते*🌹

🌺 "In a dish cooked on a Sraddhathithi, the song says that 100 pieces of betel nut curry, 300 pieces of brandy and 600 pieces of jackfruit are used.*

🌺Have you got a thousand pods? Count on the rest of the leaves, I have eight curry leaves. So a total of 1008! " She said. Arundhati's answer, who gave the explanation according to the scriptures, is wisdom?

🌺 Women of those days in our Bharat who knew Samayosita Buddhi and domestic dharma!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *சமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரத பெண்கள் இருந்திருக்கிறார்கள்! இருக்கிறார்கள்.....*
- *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு [திவஸம்] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.

🌺அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்" என்றார். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்?

🌺விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத்தெரியாதா என்ன ?. இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், "ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார்.*

🌺வஸிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தை பார்க்கவேண்டும். வஸிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.*

🌺சங்கத்தமிழ் நூல்களில் ஐந்தாறு இடங்களில் அவள் வாழ்த்தப்படுகிறாள். தமிழ்ப்புலவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாக அவள் புகழ் பாடுகின்றனர்.*

🌺ஸ்ராத்தச்சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.*

🌺விஸ்வாமித்திரர் கோபத்துடன் "என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?" என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.*

🌺இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, "இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!" என்றாள்.*

🌺*விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன?*

🌺காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்*
*பனஸம் ஷட் ஸதம்சைவ* *ஸ்ரார்த்தகாலே விதீயதே*🌹

🌺*कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं*
*पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते*🌹

🌺"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.*

🌺ஆயிரம் காய்கள் ஆயிற்றா? மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! " என்றாள். சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே?

🌺சமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்!* ஏன் இருக்கிறார்கள்... இன்றைய ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை எத்தனையோ மகா லட்சுமிகளாக 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
ராமா* ...

பார்ப்பவர் பயப்படும்படியான பருத்த உடல், மார்பு, இடுப்பு என்றெல்லாம் என் உடலில் பாகப் பிரிவினை இல்லையே *ராமா*

மலை ஒன்று நடந்து வருவதுபோல் அன்றோ இருக்கும், நான் நடந்து வரும் தோற்றம்!

அதனால் யாரும் பெறா பேர் பெற்றேன் *அதிகாயன்* என்றே

சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு வித உபாயங்களையும் கற்றேன்

அயன் திவ்ய கவசம் ஒன்றையும் தங்கத்தால் செய்யப்பட்ட ரதம் ஒன்றையும் பரிசாக தந்தான் எனக்கே

அதன் பலத்தைக் கொண்டு இந்திரனையும் வருணனையும் என் வீரப் பராக்கிரமத்தால் கலங்கச் செய்தேன் *ராமா*

இன்று எதுவும் இல்லா ஏழை ஆனேன் உன் எழில் கண்டு ...

என் தவம் செய்தேன் *ராமா* உன் கரம் கொண்டு வீழ்ந்தேன் தரையில் ..

வீழ்ந்தது என் உடல் மட்டும் அன்று *ராமா* ..

என் கர்வம் , வீரம் , தற்பெருமை அனைத்துமே ...

எல்லாம் அடங்கும் நேரமதில் வரம் ஒன்று கேட்க்கிறேன் உன்னிடத்தில்

என் உயிர் வாழ அல்ல *ராமா* உலகம் உய்ய கேட்கிறேன் ..

*அதிகாயனே* ...

அதி வரம் தருவேன் நானே

ஆதி அந்தம் ஆவேன் ..

புரிந்து கொண்டாய் இதையே

கேள் வரம் தனை

*ராமா* ...

தந்தை தவறு இழைத்தால் வேலியே பயிர் மேய்வது போல் அன்றோ ...

பரம் என்று உனை அடைந்தேன்

தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது

தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில்

அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவன் நீயன்றோ *ராமா* ...

உனக்கும் ஈசனுக்கும் பேதம் ஏது *ராமா ?*

மன்னித்து விடு என் தந்தையை ...

முக்தி கிடைக்கட்டும் அவனுக்கே ...

இனி பெண்களை சக்தி என்றே போற்றுவான்

நான் அதற்கு சாட்சி *ராமா*

ஒன்று கேட்டாய் நன்று கேட்டாய் உயிர் பிரியும் நேரமதில் ..

உனக்காக இல்லை உன் தந்தைக்காக ... உயர் பதவி உனக்கும் தருவேன் ...

உத்தமனாய் பிறப்பாய் காஞ்சி தனில் ..

பார்க்கும் பெண்கள் அனைவரும் அங்கே உனக்கு என் தங்கை காமாக்ஷியாய் தெரிவர் ...

உயர்ந்து விட்டாய் நீ என் மனமதில் ...

உன்னைப்போல் பிள்ளை எல்லோருக்கும் அமையவேண்டும்
உன் தந்தை போல் பேராசை இன்றியே

நன்றி *ராமா* ...

உன் பாதங்கள் தனில் நிற்கட்டும் என் *சுவாசம்* இனி நான் *வாசம்* செய்வது *பாசம்* கொண்ட உன் பாதங்களில் 👍🙏🙏
ravi said…
அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்

சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ் செபங்களும்

சிந்தைமேவு ஞானமுந்

தினஞ்செபிக்கு மந்திரம்

சிந்தை ராம ராமராம ராமவெனும் நாமமே. 11
ravi said…
அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும்,

பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும்,

இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும்

எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும்.

ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள்.🙏🙏🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 289* 🙏🙏🙏started on 7th Oct 2021

*மூலாதார* = மூலாதார சக்கரம்

*மூலாதாரைக* = மூலாதாரத்தில் நிலயா = இருப்பவள்

*99 மூலாதாரைக நிலயா* = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள்

(மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)👍👍👍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 289* 🙏🙏🙏started on 7th Oct 2021

*மூலாதார* = மூலாதார சக்கரம்

*மூலாதாரைக* = மூலாதாரத்தில் நிலயா = இருப்பவள்

*99 மூலாதாரைக நிலயா* = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள்

(மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)👍👍👍
ravi said…
இரண்டிரண்டு சக்கரங்கள் ஒரு கண்டம்.

மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் *அக்னி கண்டம்.*

அதாவது பிரம்ம ஸ்தானம் அல்லது சிருஷ்டி ஸ்தானம். மணிபூரகமும் அனாஹதமும் *சூரிய கண்டம்.*

அதாவது ஸ்திதி ஸ்தானம் அல்லது விஷ்ணு ஸ்தானம். கடைசியான விசுத்தியும் ஆக்ஞையும் *சோம கண்டம்.*

அதாவது சிவ ஸ்தானம் அல்லது ஒடுக்க ஸ்தானம்.

ஒரு கண்டத்திற்கும் அடுத்ததற்கும் இடையில் பாதையானது குறுகி, சின்னஞ்சிறு துவாரமே உள்ளது.

அதற்குக் *கிரந்தி* என்றே பெயர் (கிரந்த என்றால் குறுக்குதல்).

அக்னி கண்டத்துக்கும் சூரிய கண்டத்துக்கும் இடையில் *பிரம்ம கிரந்தி* ;

சூரிய கண்டத்துக்கும் சந்திர கண்டத்துக்கு இடையில் *விஷ்ணு கிரந்தி;*

சந்திர கண்டத்துக்கும் பிரம்மரந்திர ஆயிரம் தளத் தாமரைக்கும் இடையில் *ருத்ர கிரந்தி* .

பாதை வழியாகப் பயணப்படுகிற நீர் அல்லது காற்று, தக்க வேகமும் காத்திரமும் பெறுவதற்கு முன்பாகவே மேலே மேலே ஓடிவிடாமல் இருக்க, இவ்வாறு சிற்சில குறுகல்கள்;

நவீன முறையில், வால்வுகள் (valves) என்று வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட வேகமும் காத்திரமும் பெற்றால் மட்டும்தான், கிரந்தியைத் தாண்டி அடுத்த நிலைக்குப் போகமுடியும்.

👍👍👍
ravi said…
மூலாதாரத்திலிருந்து புறப்படுகிற குண்டலினி சக்தி, அக்னி கண்டத்தின் சக்கரங்களைக் கடந்து, பிரம்ம கிரந்தியைத் துளைத்துக் கொண்டு மேலே செல்கிறது.

அதைச் செய்கிற அம்பாள், *ப்ரஹ்மக்ரந்தி விபேதினீ* ஆகிறாள்.🙏🙏🙏
ravi said…
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன்-நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும்-சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்;-இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
ravi said…
[20/07, 07:33] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 288* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[20/07, 07:34] Jayaraman Ravilumar: *76 மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு*

பரம வைராக்கியம், காமஜயம்

ஹரக்ரோத ஜ்வாலாவலீபி ரவலீடேன வபுஷா

கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:

ஸமுத்தஸ்த்தௌதஸ்மா தசல தனயே தூமலதிகா

ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி 76
ravi said…
மலையரசன் பெண்ணே !

மன்மதன் பரமசிவனுடைய கோபத்தினின்று தோன்றிய அக்கினி ஜ்வாலைகளால் சூழப்பெற்ற சரீரம் உடையவனாய் உன்னுடைய ஆழமான நாபி என்னும் மடுவில் நாட்டம் உடையவன் ஆனான்,
அதில் மூழ்கினான், அதிலிருந்து கொடிபோன்ற புகை கிளம்பிற்று.

அதை ஜனங்கள் உன்னுடைய நாபியிலிருந்து மெல்லிதாய் மேலே படரும் ரோமவரிசை என்றே கருதுகிறார்கள்.👍👍👍
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 65*
ravi said…
பதினொன்னாவது ஸ்லோகம்.

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।

हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥

கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
ravi said…
மூக கவி இதே மாதிரி ஒரு ஸ்லோகம் சொல்றார்.

दुष्कर्मार्कनिसर्गकर्कशमहस्सम्पर्कतपतं मिलत्

पङ्कं शङ्करवल्लभे मम मनः काञ्चीपुरालङ्क्रिये ।

अम्ब त्वन्मृदुलस्मितामृतरसे मङ्क्त्वा विधूय व्यथां

आनन्दोदयसौधशृङ्गपदवीमारोढुमाकाङ्क्षति ॥

து³ஷ்கர்மார்கனிஸர்க³கர்கஶமஹஸ்ஸம்பர்கதபதம் மிலத்

பங்கம் ஶங்கரவல்லபே⁴ மம மன: காஞ்சீபுராலங்க்ரியே ।

அம்ப³ த்வன்ம்ருʼது³லஸ்மிதாம்ருʼதரஸே மங்க்த்வா விதூ⁴ய வ்யதா²ம்

ஆனந்தோ³த³யஸௌத⁴ஶ்ருʼங்க³பத³வீமாரோடு⁴மாகாங்க்ஷதி ॥

ன்னு சொல்றார்.
Kousalya said…
இதுவரை அறிந்ததில்லை அதிகாயன் பற்றி.....ஆனால் அருமையான வரம் கேட்டு நம்மையும் உய்ய வைத்தான்...ராம ராம ராம.💐💐🙇‍♀️
ravi said…

1. நிலையான மனதைக் கொண்ட முனிவர் ஏன் மூவகைத் துன்பங்களின் தாக்குதலால் சிறிதும் கலங்குவதில்லை? / Why a sage of steady mind is not at all disturbed by the onslaughts of the threefold miseries?
*
1/1
a. ஏனெனில் அவர் தனது மனதை பல்வேறு வழிகளில் கிளர்ச்சி செய்ய முடியும். /Because he can agitate his mind in various ways
b. ஏனெனில் அவர் அனைத்து துன்பங்களையும் இறைவனின் கருணையாக ஏற்றுக்கொள்கிறார். /Because he accepts all miseries as the mercy of the Lord.

c. ஏனெனில் அவர் பற்றற்றவர். /Because he is detached
d. இவை எதுவும் இல்லை. / None of these.
ravi said…
Feedback
பகீ 2.56 - மூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம்,கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன், "நிலைத்த மனம் உடைய முனிவன்" என்று அழைக்கப்படுகிறான்.

BG 2.56 - One who is not disturbed in mind even amidst the threefold miseries or elated when there is happiness, and who is free from attachment, fear and anger, is called a sage of steady mind.
ravi said…
2. மிகுந்த செல்வந்தர்கள் ஏன் சந்தோசமாக இருப்பதில்லை ? Why are extremely rich people not happy as well?
*
0/1
a. ஆசைகள் பூர்த்தி அடையாததால் / Due to unfulfilled desires
b.உண்மையான ஆனந்தம் மற்றும் தெளிவான புத்தி பற்றிய அறிவில்லாததால் / Lack of knowledge of true happiness and steady mind

c. இரண்டும் a மற்றும் b / Both a and b
d. மேலே உள்ள எதுவுமில்லை / None of the above
Correct answer
c. இரண்டும் a மற்றும் b / Both a and b
ravi said…
Feedback
பகீ 2.66 - பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?

BG 2.66- One who is not connected with the Supreme [in Kṛṣṇa consciousness] can have neither transcendental intelligence nor a steady mind, without which there is no possibility of peace. And how can there be any happiness without peace?
ravi said…
3. பல கற்றறிந்த முனிவர்கள் (எ.கா- விஸ்வாமித்ரா) பௌதீக புலன் இன்பத்திற்கு பலியாவதற்கு என்ன காரணம்? What caused many learned sages (Eg- Vishwamitra) fall victim to materialistic desire enjoyment.?
*
1/1
a) உணர்வு / Consciousness
b) பசி / Hunger
c) நிலையற்ற மனம் / Unstable mind

d) பாகுபாடு / Discrimination
ravi said…
Feedback
பகீ 2.61 - புலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறாரன்.

BG 2.61- One who restrains his senses, keeping them under full control, and fixes his consciousness upon Me.
ravi said…
4. இறைவனின் கருணையை அடைவதன் விளைவு என்ன? What is the result of achieving the Lord’s mercy ?
*
1/1
a. புலன்கள் மற்றும் உணர்வுகளின் முழுமையான திருப்தி. / Complete satisfaction of senses and consciousness
b. மூவகைத் துன்பங்கள் இல்லை. / Threefold miseries do not exist.
c. அறிவுத்திறம் நிறுவப்படும். / Intelligence will be established.
d. மேலே உள்ள அனைத்தும். / All of the above.
ravi said…
Feedback
பகீ 2.65 - இவ்வாறு (கிருஷ்ண உணர்வில்) திருப்தியுற்றவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இத்தகைய திருப்தியுற்ற உணர்வில் அவனது புத்தி வெகு விரைவில் நிலைபெறுகின்றது.

BG 2.65 - For one thus satisfied in Kṛṣṇa consciousness, the threefold miseries of material existence exist no longer; in such satisfied consciousness, one’s intelligence is soon well established.
ravi said…

5. பின்வருவனவற்றில் எது ஒருவரின் ஆன்மீக உணர்வை அடைவதற்கு தடையாக இருக்கிறது? Which one of the following prevents one to achieve spiritual consciousness?
*
0/1
a. உண்மையான மகிழ்ச்சியானது பொருள் உடைமையால் அல்ல, ஆனால் கிருஷ்ணரின் ஆன்மீக பக்தியின் மூலம் வருகிறது என்பதைக் கண்டறிதல். / Discovering that real happiness comes not by material possession but by spiritual devotion for Krishna

b. அனைத்து உயிர்களையும் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களாக கிருஷ்ணரின் குடும்பத்தில் பார்ப்பது. / Seeing all living beings as our family members in Krishna’s family
c) பௌதீக இன்பத்தில் ஈடுபடுதலால் / Engaging in materialistic pleasure
d. மேலே உள்ள அனைத்தும். / All of the above
Correct answer
c) பௌதீக இன்பத்தில் ஈடுபடுதலால் / Engaging in materialistic pleasure
ravi said…
Feedback
பகீ 2.71 - புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அகங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.

BG 2.71- “A person who has given up all desires for sense gratification, who lives free from desires, who has given up all sense of proprietorship and is devoid of false ego—he alone can attain real peace.”
ravi said…
1- ஆன்மீக உணர்வில் உள்ள ஒருவரின் அறிகுறிகள் மற்றும் நடத்தையை ஒருவர் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? Why should one know the symptoms and behaviour of a person in spiritual consciousness?
Person in spiritual consciousness will reach a sage of steady wisdom and he will not allow the mind to hanker for pleasure or lament for miseries.

Further, such a sage does not permit the mind to succumb to the urges of fear and anger. In this way, the mind becomes situated on the transcendental level.
ravi said…
Feedback
*இறைவனின் கருணையைப் பெறுதல் மற்றும் கிருஷ்ணருடன் அன்பான உறவைப் பெறுதல் (2.65) ஆகியவற்றை இறுதி இலக்காகப் புரிந்துகொண்டு செயல்படுதல்.

* அமைதி மற்றும் உண்மையான ஆசையின்மையை அடைய (2.66, 2.71)

*To understand and work towards our ultimate goal of attaining Lords mercy and having a loving relationship with Krsna (2.65)

*To attain peace and real desirelessness (2.66, 2.71)
ravi said…
2. 2.56 இன் படி, கிருஷ்ணர் அதன் வெற்றியோ தோல்வியோ சமமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், நாம் பாறையைப் போல உணர்ச்சியற்றவர்களாக மாற அவர் விரும்புகிறாரா? / As per 2.56, Krsna says to stay equipoised whether its success or failure, does he want us to become unemotional like a rock?
No பகவான் அப்படி நாம் மாற விரும்பவில்லை .. பலன்களில் பற்று இல்லாமல் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் இருந்தால் இந்திரியங்களை கட்டுப்படுத்தும் நிலையை அடைய முடியும் .. இந்திரியங்களை அடக்கி விட்டால் மனதை கட்டுப்படுத்த முடியும் . மனதை கட்டுப்படுத்தி விட்டால் இறைவன் சிந்தனை மட்டுமே நம்மை ஆட்க்கொள்ளும் ..இந்த வாழ்க்கையே ஒரு கானல் நீர் என்று புலப்படும்
ravi said…
Feedback
இல்லை, ஜடவுலகில் உள்ள வெற்றி மற்றும் இழப்புகளை விட மேலானவற்றில் நம் உணர்ச்சிகளை முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நமது உணர்ச்சிகள் பரமாத்மாவான கிருஷ்ணரை நோக்கி செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் பொருள் அனைத்தும் தற்காலிகமானது. நாம் இந்த மகிழ்ச்சி/துக்கம், வெற்றி/தோல்வி (பொருள் தளம்) ஆகியவற்றைக் கடந்து, இறுதியான ஆன்மீக மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (2.56)

No, he wants us to invest our emotions in something greater than wins and losses in the material world. Our emotions have to be directed towards the Supreme Lord Krishna. Because everything material is temporary. He wants us to overcome this happiness/sadness, win/loss (material platform) and attain the ultimate spiritual happiness (2.56)
ravi said…
ADVANCE: 20/07/2022 Wednesday 3.00pm- Grp B BG Chap-2 (54 -72) Sloka
Total points
3/5
ravi said…
சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கதும், தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக திகழ்கிறது சமயபுரம் என்கிற கண்ணபுரம்.

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத்துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.
ravi said…
பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.

உரிய காலத்தில் தேவையான, கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்பது இந்த அம்மனது அடைமொழி.

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.
ravi said…
அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் (தாய் வீடு) எனப்படுகிறது!).
அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட்டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தற்போதைய ஆலயம் கி.பி. 1804 ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.
ravi said…
சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.

இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.

மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984-ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.
ravi said…
பக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு, மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு,வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.
ravi said…
இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் (தற்போது மாற்றபட்டுள்ளது) வலப்புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970-ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு
ravi said…
சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ ,127 கிராம். இத்துடன் 3 கிலோ288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

முலஸ்தானத்தில் அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் கண்ணபுரத்தாள்.

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.
ravi said…
சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

வசுதேவர்,தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன், யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்
ravi said…
இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

காலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.
ravi said…
உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால்
விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2ஆம் திருநாளிலிருந்து 8ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9ஆம் நாள் தெப்பத் திருவிழா.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தநுர்வேதத்தில் அஸ்திரம், சஸ்திரம் என்று இரண்டு வகை ஆயுதங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. சஸ்திரம் என்பதுதான் கம்பு, அம்பு, ஈட்டி, கதை முதலான அசல் ஆயுதங்கள். அஸ்திரம் என்பது இப்படி அசல் ஆயுதமாக இல்லாமல் எந்த ஒரு வஸ்துவையும் மந்திர சக்தியால் ஆயுதமாக ஆக்கி எய்வது. மந்திரத்தைச் சொல்லி ஒரு தர்ப்பையையோ, புல்லையோ ஏவி விட்டால் கூட அது ஆயுதமாகிவிடும். சஸ்திரங்களையும் இப்படி மந்திர பூர்வமாகப் பிரயோகிப்பதுண்டு. மந்திரபூர்வமாக ஒரு பதார்த்தத்தை அஸ்திரமாக்கி ஏவி விட்டால், எதன்மேல் விடுகிறோமோ அது நாசமடையும்.
ravi said…
இரு பிறப்பாளர் என்னும் பிரம்ம-க்ஷத்ரிய- வைசியர்கள் பிரதிதினமும் மூன்று வேளையும் பண்ண வேண்டிய அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை, அதாவது லோகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை, நாசம் பண்ணுவதற்காக இந்த அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை, அதாவது லோகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை, நாசம் பண்ணுவதற்காக இந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். அஸ்திரம் என்றால் ஒன்றை மந்திர பூர்வமாக விட்டு எறிகிறதல்லவா? அந்த அஸ்திரம் எது? எதை விட்டெறிகிறது? ஜனங்களுடைய புத்தியை ஆசிரயித்திருக்கிற அஸுரர்கள் தொலைய வேண்டுமென்று ஜலத்தை விட்டு எறிகிறதுதான் அஸ்திரமாகிறது. இதுதான் ஸந்தியா வந்தன அர்க்யம். ‘பாபம், பொய் முதலியவை தொலைய வேண்டும். ஞான ஸூரியன் பிரகாசிக்க வேண்டும். அது பிரகாசிக்காமல் பண்ணிக் கொண்டு உள்ளே இருக்கிற பிரதிபந்தகங்கள் [இடையூறுகள்] நிவர்த்தியாக வேண்டும்’ என்று அந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பண்ண வேண்டும். எந்தக் காரியம் பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இதைப் பண்ண வேண்டும்.
ravi said…
ஒரு காரியத்தை சிரத்தையாக ஒருவன் பண்ணினால் ‘மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ணுகிறான்’ என்று சொல்லுகிறோம். வாஸ்தவத்தில் இந்த அர்க்ய காரியத்தையே மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ண வேண்டும்! தினந்தோறும் இதைப்பண்ணி வந்தால் அந்த சத்ருக்கள் நாசமாய்ப் போய் விடுவார்கள். இது பண்ணுவதற்கு முதலில் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது ச்வாஸத்தை அடக்க வேண்டும். இப்பொழுது நாம் மூக்கை மட்டும் தான் பிடிக்கிறோம். சாஸ்திரம் ‘நாஸிகாம் (மூக்கை) ஆயம்ய’ என்று சொல்லவில்லை. ‘ப்ராணான் (மூச்சை) ஆயம்ய’ என்றுதான் சொல்லியிருக்கிறது. அதாவது வெறுமே மூக்கைப் பிடிக்காமல் பிராணனையே கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். ‘ப்ராணாயாமம்’ என்பது ‘ப்ராண ஆயாமம்’, அதாவது ‘ச்வாஸக் கட்டுப்பாடு’, ‘ஆயம்ய’ என்றால் ‘கட்டுப்படுத்தி’.
ravi said…
எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருமைப்பட வேண்டும். ஜலத்தைக் கொண்டு அஸ்திரப் பிரயோகம் செய்வதற்கும் மனது ஒருமைப்பட வேண்டும். அதற்காகத் தான் மூச்சைப் பிடிக்க வேண்டும். ‘மூச்சைப் பிடித்தால் மனது எப்படி நிற்கும்?’ என்று கேட்கலாம். மனது நிற்கிற பொழுது மூச்சு நிற்பதைப் பார்க்கிறோமே! பெரிய ஆச்சரியம் உண்டாகிறது, பெரிய துன்பம் வருகிறது, பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மனசுலயித்துப் போய் ஏகாந்தமாக நிற்கிறது; ‘ஹா!’ என்று கொஞ்ச நேரம் மூச்சும் நின்றுபோய் விடுகிறது. அப்புறம் வேகமாக ஓடுகிறது. நாமாக அதை நிறுத்தவில்லை; தானாக நிற்கிறது. மனசு ஒன்றிலே நன்றாக ஈடுபட்டவுடன் மூச்சு நின்றுவிடுகிறது. பின்பு பெருமூச்சு விடுகிறோம். எதற்காக? முன்பு விடாத மூச்சையும் சேர்த்து விடுகிறோம். இப்படி மனது ஒருமைப்படுகிற போது மூச்சு நிற்கிறதென்றால் மூச்சை நாமாக நிறுத்தினாலும் மனது ஒருமைப்படும் என்று ஆகிறதல்லவா? இதற்காகத்தான் பிராணாயாமத்தால் மூச்சை இறுக்கி, அப்புறம் அர்க்யம் தருவது.
ravi said…
நாம் அர்க்கியம் விடும்போது சித்த ஐகாக்ரியத்தோடு [மன ஒருமைப்பாட்டோடு] விடவேண்டும். பிராணாயாமம் பண்ணினால் சித்தைக்காக்கிரியம் உண்டாகும். அதை நிறையப்பண்ணுவது யோகத்திற்கு அவசியம். அப்படி நிறையப் பண்ணுவது கஷ்டமானது; உபதேசத்தின்படி செய்ய வேண்டியது. நாம் ஸந்தியாவந்தனத்தில் அதிக பட்சமாக ஒரு இடத்தில் பத்துத் தடவை பண்ணுகிறோம். மூன்று பண்ணு என்றும் சில இடத்தில் இருக்கிறது. சிறு வயதில் உபநயனமான காலம் முதற்கொண்டு கிரமமாக நாம் வேளைக்குப் பத்துப் பிராணாயாமம் பண்ணிக்கொண்டு வந்திருந்தாலே, இத்தனை நாளில் யோகீச்வரராக ஆகியிருப்போம். பண்ணுகிறதைச் சரியாகப் பண்ண வேண்டுமல்லவா? அரை நிமிஷம் ச்வாஸத்தை நிற்கப் பண்ண வேண்டும். அதிகமாக வேண்டாம். பிராணன் நின்றால் மனது நிற்கும். அந்த நிலையில் அர்க்யம் கொடுத்தால் வாஸ்தவமாகக் கெட்ட அஸுர சக்திகள் ஓடிப்போகும். மனஸ் நின்றால் நாம் விடுகிற ஜலம் அஸ்திரமாகும்.
ravi said…
அர்க்கியமாகிய அஸ்திரப் பிரயோகத்தைப் பண்ண வேண்டும். பின்பு காயத்ரீ பண்ணவேண்டும். பிராணாயாமத்தைக் கூடிய வரையில் பண்ணவேண்டும். மூச்சைக் கொஞ்சம் நிறுத்துகிறது, பின்பு விடுகிறது என்ற அளவில் இருந்தாலே போதும். அதிகம் அடக்கவேண்டாம். ஸங்கல்பம், மார்ஜனம், பிராசனம், அர்க்யப்ரதானம், ஜபம், ஸ்தோத்திரம், அபிவாதனம் இவ்வளவும் பரமேச்வரனுடைய அநுக்கிரஹம் பெறுவதற்காகப் பண்ணகிறேனென்று நினைத்துச் செய்யவேண்டும். முதலில் பண்ணும் ஸங்கல்பம் என்பது அதுதான். ஆரம்ப முதல் கடைசி வரையில் பரமேச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இவ்வளவுக்கும் பிராணாயாமம் முக்கிய அங்கம். திரிகாலங்களிலும் இதை ஸ்வல்பமாவது பண்ணவேண்டும்.

தினந்தோறும் மூன்று வேளையும் ரோகிஷ்டன் [நோயாளி] கூடப் பிராணாயாமம் பண்ணவேண்டும் என்று சாஸ்திரத்தில் இருப்பதால் உபத்திரவம் கொடுக்கிற அளவுக்கு இதில் ச்வாஸக் கட்டுப்பாடு இல்லை என்று புரியும். இப்படிப் பண்ணினாலே ரோகமும் போய் தீர்க்காயுஸ் உண்டாகும்.

ரிஷயோ தீர்க்க ஸந்த்யத்வாத் தீர்க்கமாயுரவாப்நுயு:|

ப்ரஜ்ஞாம் யசச்ச கீர்த்திம் ச ப்ரஹ்ம வர்சஸமேவ ச||

(மநுஸ்மிருதி, 4-94)
ravi said…
அபிவாதனத்தில் எந்த மஹரிஷியினுடைய ஸந்ததியில் பிறந்திருக்கிறோம் என்று சொல்கிறோமோ அந்த மஹரிஷி முதல் காயத்ரீ ஜபிக்கப்பட்டு வருகிறது. அந்த கோத்திரத்தில் பிறந்ததற்காவது கர்மாநுஷ்டானங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை. அந்த முதல் ரிஷிக்கு அப்புறம் எவ்வளவோ பேர் ரிஷிகளாக இருந்திருக்கிறார்கள். த்ரயார்ஷேயம், பஞ்சார்ஷேயம், ஏகார்ஷேயம் என்று சொல்கிறோம். அதாவது அந்த அந்த கோத்திரத்தில் ரிஷிகளோ, ஐந்து ரிஷிகளோ, ஒரு ரிஷியோ இருந்திருக்கிறார்கள் என்று இதனால் தெரியவருகிறது. அவர்கள் அப்படி தீர்க்காயுஸ், ஞானம், புகழ், பிரம்மதேஜஸ் முதலியவையுள்ள ரிஷிகளாக ஆனதற்குக் காரணம் அவர்கள் செய்த ஸந்தியாவந்தனம்தான் என்பது நான் சொன்ன [மநு ஸ்மிருதி] ச்லோகத்தின் அர்த்தம்.

தொடர்ச்சியாக வந்த இந்த தாரையை நாம் அறுத்து விடக்கூடாது. பிராணயாமத்தோடு சித்தைக்காக்கிரியத்தோடு மந்திர லோபமில்லாமல் பரமேச்வரார்ப்பணமாக ஸந்தியாவந்தனத்தை நிறுத்தி நிதானமாகப் பண்ணவேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு பண்ணவேண்டும்.
ravi said…
மனோ-வாக்-காயங்களால் பாபம் பண்ணியிருக்கிறோம். அந்த மூன்றாலும் செய்யும் கர்மாக்களால் அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ளவேண்டுமென்று முன்பு சொல்லியிருக்கிறேன். ஸந்தியாவந்தனத்தில், வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம்; காயத்ரீ ஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம்; மார்ஜனம் (புரோக்ஷித்துக் கொள்வது) முதலியவைகளால் காயசுத்தி உண்டாகிறது.

அது மட்டுமில்லாமல் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் மூன்றும் சேர்ந்ததாகவும் ஸந்தியாவந்தனம் இருக்கிறது.

ஸந்தியாவந்தனம் பண்ண அவரவர்கள் தங்கள் தங்களுக்கென்று பாத்திரம் வைத்துக்கொள்ளவேண்டும். ஸந்தியா வந்தனத்தை அவஸரமாகப் பண்ணக்கூடாது என்பது முக்கியம்.
ravi said…
*கந்தர் அலங்காரம் 11* 🐓🦚🙏

*அலங்காரம்-02:*

சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை,

ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா,

செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,

குமாரன் கிருபாகரனே!🙏
ravi said…
*தும்பைப் பூ* = வெள்ளை நிறம்!

பார்க்க சங்கு போல இருக்கும்!

பரிசுத்தமான வெள்ளை!

மென்மையானதும் கூட!

வீட்டில் சுடும் இட்லி தும்பைப்பூ போல இருக்குன்னு சொல்வாங்க தானே?

இப்படி எல்லாமே வெண்மை/குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் தான் சிவபெருமானுக்கு!

ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்!

பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!

இப்படி தலையில் இருந்து பாதம் வரை, வெள்ளலங்காரம் செய்து கொண்டுள்ள ஈசன்...

*குமரன் கிருபாகரனே* = அந்த ஈசனின் குமரன், மிகவும் கிருபை உள்ளவன்!

*கிருபா-ஆனந்த*-
*வாரி* = கருணை ஆனந்தக் கடல்!

எப்படி என்ன பெருசா கருணை காட்டிட்டான்பா ஈசனின் குமரன்?

பார்க்கலாம் நாளை 🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
[20/07, 17:09] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 286*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
[20/07, 17:10] Jayaraman Ravilumar: இந்து³ரவிமண்ட³லகுசா பி³ந்து³வியன்னாத³பரிணதா தருணீ’ – நாத பிந்து தத்துவமானவள். சூரியனையும் சந்திரனையும் ஸ்தனங்களா கொண்டவள் அப்படீன்னு அவ்ளோ பெருமை மிக்க அந்த தாயார் எனக்கு ரொம்ப பரம அந்தரங்கமா இருக்கான்னு சொல்றார்.

அப்படி அந்த குருங்கிறவர் காமிச்சசுக் கொடுக்கறார். ‘உள்ளம் பெரும் கோயில். ஊன் உடல் ஆலயம்’ அப்படீன்னு அந்த கோயில்ல இருக்கிற ஸ்வாமியை நமக்குள்ளேயே நாம பார்த்துட்டோமானா போரும்.

அந்த காலத்துல வீடுகளே அப்படி தான் கட்டுவா.

ஊருக்கே ஒரு பெரிய கோயில். மஹா க்ஷேத்திரங்களெல்லாம் ஊரே கோயிலா இருக்கும்.

ஒரு மதுரை, ஒரு காஞ்சிபுரம்னா ஊரே கோயிலா இருக்கும். சின்ன ஊர்கள்ல கூட எல்லா வீட்டைக் காட்டிலும் கோயில் ரொம்ப பெருசா இருக்கும்.

பகவானுக்குத் தான் முக்கியம் நம்ம மதத்துல கொடுத்திருக்கா!
ravi said…
[20/07, 17:04] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 285* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*ஈச்’வரோ* விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9

🏵️🏵️🏵️🏵️
[20/07, 17:06] Jayaraman Ravilumar: *75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)*
[20/07, 17:07] Jayaraman Ravilumar: கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி ஸ்வாமி கோவிலுக்கு நாதமுனிகள் எழுந்தருளினார்.

அப்போது பெருமாள் சந்நதியில் ஒரு பக்தர்,

ஆராவமுதே என்று தொடங்கித் தேனினும் இனிய பத்து பாடல்களைப் பாடுவதைக் கேட்டுப்
பரவசம் அடைந்தார் நாதமுனிகள்.

அதில் இறுதியான பாடல்,

“உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்

கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்

மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே”

– என்று அமைந்திருந்தது.

அவர் அருகில் சென்ற நாதமுனிகள், “ஆயிரம் பாடல்களுள் இவை பத்து என்று பாடினீர்களே.
மீதமுள்ள 990 பாசுரங்களையும் நீங்கள் ஓத முடியுமா? அவற்றைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்!” என்றார்.🙏
ravi said…
54

நீலோத்பலேன மதுபேன ச த்ருஷ்டிபாத:
காமாக்ஷி துல்ய இதி தே கதமாமனந்தி |
ஶைத்யேன நிந்தயதி யதன்வஹமின்து பாதான்
பாதோருஹேண யதஸௌ கலஹாயதே ச ||54|

ஹே காமாக்ஷி ! உனது கடாக்ஷமானது கருநெய்தல் மலருக்கும், வண்டுக்கும் ஒப்பென்றுஎப்படி கூறுகிறார்களோ?குளிர்ச்சியில், கரு நெய்தலுக்கு நண்பனான சந்திர கிரணங்களையும் இகழ்கிறது! வண்டுகளுக்கு நண்பனான தாமரை மலரைவிடவும் அழகுகொண்டு, அதோடும் சண்டையிடுகிறதே தினமும்!
அம்பிகையின் கடாக்ஷத்திற்கு உபமானமாக நீலோத்பலத்தையும்,வண்டையும் உலகில் கூறுகிறார்களே, அப்படியிருக்கையில், நீலோத்பலத்தை மலரச் செய்வதினால் நண்பனான சந்த்ர கிரணங்களோடும், வண்டுகளுக்கு நண்பனான தாமரை புஷ்பங்களோடு விரோதியாக இருந்து வருவதைக் கண்டு கவி ஆச்சர்யப்படுகிறார்
ravi said…
⚽🎼ஒருமுறை கால் பந்தும் புல்லாங்குழலும் பேசிக்கொண்டதாம்

*கால் பந்து* :

அண்ணே !! உங்களுக்கும் எனக்கும் காற்று ஒன்றே உயிர் நாடி ..

ஆனால் நானோ மிதி படுகிறேன்

நீங்கள் ஊதுவோர் அதரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறீர்கள்

இது என்ன தர்மம் .. ?

*புல்லாங்குழல்* ...

தம்பி ... எனக்குள் இருக்கும் காற்றை நான் என் உரிமை என்று பூட்டி வைத்துக்
கொள்வதில்லை ..

அதை இசையாய் மாற்றி வெளியே அனுப்புகிறேன் பிறர் சுகம் காண ...

ஆனால் நீயோ உன் வாழ்வு நிரந்தரம் என்று நினைத்து உனக்குள் காற்றை பூட்டிக்கொண்டு திரிகிறாய் ...

அதனால் உன் வாழ்வு பிறர் மிதிக்க, தூக்கி எறிய ஏதுவாய் இருக்கிறது ...

*கால் பந்து* ... உண்மை அண்ணே ... என் சுயநலமே என் வாழ்வின் சத்ரு ... 👌👌👌
ravi said…
*விவேகசிந்தாமணி*


*17.ஒழுக்கம் உயர்வு தரும்*

ஆசாரம் செய்வா ராகில் அறிவொடு புகழும் உண்டாம், ஆசாரம் நன்மை யானால் அவனியில் தேவர் ஆவார், ஆசாரம் செய்யா ராகில் அறிவொடு புகழும் அற்றுப், பேசார்போல் பேச்சும் ஆகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.

*பொருள்*

நல்லொழுக்கத்தோடு வாழ்பவருக்கு நல்ல அறிவொடு புகழும் உண்டாகும். அவரது (ஈகை முதலான) நற்குணங்களால் பலருக்கு நன்மையும் ஏற்படுமாயின் இவ்வுலகில் அவர் தெய்வமாக மதிக்கப்படுவார். ஒருவர் ஒழுக்கம் தவறினால் அறிவொடு புகழும் இழந்து அவச்சொல்லுக்கு ஆளாகி நோயோடு கொடிய நரகத்தில் வீழ்வார்.

(ஆகவே, ஒழுக்கம் பிழையாதே.)

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்.21/07/2022*

🌻🌹🌻🌹🙏🏻🌹🌻🌹🌻
ravi said…
🌹 🌺 "Rukmani....a simple story explaining that Srikrishna that joking and talking to one's beloved brings the highest bliss between couples 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹 "One day Lord Sri Krishna was resting in the bedroom of Goddess Rukmini Devi. Then Rukmini and her maids were doing various tasks for Lord ..

🌺Shri Krishna looked at Rukmani and started teasing.

🌺Previously many noble kings wanted to marry you because of your appearance and character..In fact your father and brother wanted to give you to Sisupala..

🌺 Be like that. Why did you accept an unworthy husband like me, who once gave up my kingdom and ran away to the sea due to the fear of Jaraschandan? And I violate worldly justices.

🌺I don't own anything. I am dear to the poor and the rich. Surely they will not worship someone like me.... Krishna said mockingly

🌺 Srikrishna stopped talking after dispelling the thought of Rukmini's goddess that she was very dear to her husband..

🌺Rukmani started crying on hearing this.. Immediately she was gripped by great fear, pain and anxiety and fell down unconscious.

🌺 Lord Shri Krishna saw that she misunderstood his joke.. He took pity on her .. Bhagavan picked her up from the ground. After talking to her. He chose her as follows.

🌺I know that you are completely attached to me.I spoke like this because I wanted to see you wince at my teasing and so your lotus face gets decorated..

🌺Rukmini....Srikrishna smiled and reassured Rukmini that joking and talking to her beloved would bring the highest happiness between couples...🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹 🌺" *ருக்மணி* .... *தமது அன்புக்குரியவரிடம் கேலி செய்வது, பேசுவது தம்பதிகளுக்கிடையே மிக உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் என்ற ஸ்ரீகிருஷ்ணர்* - *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மணி தேவியின் படுக்கையறையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அப்பொழுது ருக்மணியும் அவளது பணிப்பெண்களும் பகவானுக்கு பலவிதமான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தனர் ..

🌺ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மணியை பார்த்து பரிகசிக்க (கிண்டல்) துவங்கினார்.

🌺முன்பு தோற்றத்திலும் குணத்திலும் உனக்குத் தகுதி உள்ள சீரும் சிறப்புமிக்க பல அரசர்கள் உன்னை மணக்க விரும்பினர் ..உண்மையில் உன் தந்தையும் சகோதரனும் உன்னை சிசுபாலனுக்கு கொடுக்க எண்ணி இருந்தனர்..

🌺அப்படி இருக்க. ஒரு முறை ஜராசந்தனிடம் இருந்த பயத்தால் என் ராஜியத்தை துறந்து கடலுக்கு ஓடிய என்னைப்போன்ற தகுதியற்ற ..ஒரு கணவனை நீ ஏன் ஏற்றுக்கொண்டாய்? மேலும் உலக நீதிகளையும் நான் மீறுகிறேன்.

🌺எனக்குச் சொந்தமானது எதுவும் இல்லை. நான் பரம ஏழைகளுக்கு பிரியமானவனாகவும் செல்வ சிறப்புடன் உள்ளவர்கள். நிச்சயமாக என்னை போன்ற ஒருவனை பூஜிக்க மாட்டார்கள்.... என்று கேலி பேசிய கிருஷ்ணர்

🌺தன் கணவருக்கு மிகப் பிரியமானவள் என்ற ருக்மணியின் தேவியின் எண்ணத்தை சிதறடித்த பின் ஸ்ரீகிருஷ்ணர் பேசுவதை நிறுத்திக் கொண்டார்..

🌺இதைக் கேட்ட அழத் தொடங்கிய ருக்மணி.. உடனே பெரும் பயம் வேதனை மற்றும் கவலை ஆகியவற்றால் பிடிக்கப்பட்டு உணர்விழந்து கீழே விழுந்து சரிந்தாள் .

🌺தமது கேலிப்பேச்சு அவள் தவறாக புரிந்து கொண்டதைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.. அவளிடம் இரக்கம் கொண்டார் ..அவளை தரையில் இருந்து​தூக்கி எடுத்த பகவான் .அவரிடம் கொஞ்சிப் பேசி பின். பின்வருமாறு அவளைத் தேற்றினார்.

🌺நீ என்னிடம் முழுமையாக பற்றுக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன் .என் கேலி பேச்சினால் நீ முகத்தை சுளித்து அதனால் உன் தாமரை முகம் அலங்கரிக்கப்படுவதை நான் காண வேண்டும் என்ற ஆசையினால் தான் இப்படி பேசினேன் ..

🌺ருக்மணி....தமது அன்புக்குரியவரிடம் கேலி செய்வது, பேசுவது தம்பதிகளுக்கிடையே மிக உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் என்று ஸ்ரீகிருஷ்ணர் ருக்மணியிடம் சிரித்து சமாதானம் செய்தார்...🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


*
Lakshmi balaraman said…
தும்பைப் பூ போன்ற
வெள்ளை நிறம். கொண்ட மனம்
எங்கள் ரவிகுமாருக்கு.
வாழ்க வளமுடன்.🙏
Moorthi said…
மறுக்க முடியாத உண்மை.. 👌
Lakshmi balaraman said…
காற்றினிலே வரும் கவிதை. அருமை .👌
Bhuvana kumar VS said…
Sir
I'm impressed by your recital..very calm and composed. Mahapranas excellent improvement sir. We should keep on practising🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 290* 🙏🙏🙏started on 7th Oct 2021

*மூலாதார* = மூலாதார சக்கரம்

*மூலாதாரைக* = மூலாதாரத்தில் நிலயா = இருப்பவள்

*99 மூலாதாரைக நிலயா* = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள்

(மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)👍👍👍
ravi said…
இந்த நாமம் தொண்டு தொட்டு புழக்கத்தில் இருக்கும் பழ மொழியை தவிடு பொடியாக்குகின்றது

ஆமாம் *மூலம் நீர்மூலமாக்கும்*

மூல நட்சத்திரத்தில் பிறந்த பல பெண்களுக்கு திருமண தடை வருகிறது ...

இந்த நாமத்தை அம்பாள் தனதாக்கி கொண்டுள்ளாள் ..

இதைவிட வேறு என்ன உயர்வு வேண்டும் ...?

மூலாதாரத்தில் உறைகின்றாள் ...

அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருட்டு என்று குண்டலினி மேலே எழுவது போல் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் ...

ஆண்டாள் புகழ் இன்றும் பேசப்படுகிறது

அவள் பிறந்தது மூல நட்சத்திரத்தில் ...

பக்தியை உயர்த்தி அஞ்ஞானத்தை நிர்மூலமாக்கினாள் ..

பெண் தான் எதற்கும் மூலமாய் இருப்பவள் ..

ஒரு மூலையில் உட்காருபவள் அல்ல ..

பெண் வர்க்கம் இல்லை என்றால் எல்லாமே நிர்மூலமாகும்...

இனியாவது இப்படிப்பட்ட பைத்தியகாரமான திரிக்கப்பட்ட பழமொழிகளை அவள் அருள் கொண்டு நிர்மூலமாக்குவோம் 🙏🙏🙏
ravi said…
[21/07, 07:21] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 289* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[21/07, 07:22] Jayaraman Ravilumar: *76 மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு*

பரம வைராக்கியம், காமஜயம்

ஹரக்ரோத ஜ்வாலாவலீபி ரவலீடேன வபுஷா

கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:

ஸமுத்தஸ்த்தௌதஸ்மா தசல தனயே தூமலதிகா

ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி 76
[21/07, 07:24] Jayaraman Ravilumar: அம்மா !! பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன்,

அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது,

அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர்.

உடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம்.

ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில் நீரை தெளிக்கையில் புகை கிளம்பும்.

அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார்.👌👌👌
ravi said…
காணி நிலம் வேண்டும்*

காணி நிலம் வேண்டும்-
பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-

அங்கு,
தூணில் அழகியதாய்-
நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-

அந்தக்
காணி நிலத்திடையே-

ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-

அங்கு,
கேணி யருகினிலே-
தென்னைமரம்
கீற்று மிளநீரும்.....
ravi said…
சாதித்தோர் எண்ணிலர் .. உன் சாதனை கண்டோர் எவர் இலர் ...

வேதனையாகட்டும் போதனை ஆகட்டும்

உன் சாதனை கண்டே ஓடுவர் காதனை தூரம் எவரும் ...

நாதனை நம்பும் நாயகன்

நாவுக்கு அரசன் .. கட்டி வைப்போர் மனமதில் பொம்மன் என வாழ்கின்றாய்

பொங்கி வரும் பொன்னியின் செல்வன் ..

பூனாகம் நுழைந்த நடிப்பு

பூபாளம் பாடும் துடிப்பு ..

நின்றதோ நடிப்பு இன்று

நிறை கொள்ளுமோ வையம் அதைக்கண்டு ...

வாடிப்போனதே ஐயம் கொண்டு

வறண்டு போனதே வார்த்தை இன்றி ...

மீண்டும் வாராயோ ... தீண்டும் சுகம் தாராயோ ..

மடிந்தவர் மீளட்டும் உன் நடிப்பில்

மீண்டும் இங்கு ... நடிப்பவர் எவரும் இன்றோ அரசியலில் ...

அரசியல் காண்போர் ஆழ்கடல் எம்மை தள்ளும் போது

திரையில் நடித்து ஓடமாய் உருவெடுத்தாய் ...

அமைதியான நதி தனில் ஓடும் ஓடமென உன்னைக்கண்டே

உன்னில் எங்களை பொறுத்திக்கொண்டோம்

இரு கண் விழிகளில் உன் பேர் எழுதியே 😰



இன்று நடிப்பு தன்னை நிறுத்திக்கொண்ட நாள்
ravi said…
ராமரும் தான்யமாலினியும் -*👍👍👍

(ராவணனின் இளைய மனைவி)

*தான்யமாலினி சொன்ன கீதை* 🪷🪷🪷
ravi said…
ராமா*🪷🪷🪷

தசரதன் போல் நானும் நான்கு பிள்ளைகள் பெற்றேன் ...

(1.Atikaya, 2.Narantaka, 3.Devantaka, 4.Trishira)

தந்தை சொல் நீ கேட்டாய் ...

தசமுகன் சொல் என் பிள்ளைகள் கேட்டனர் ...

கேட்டவர் பிழையோ ராமா இல்லை சொன்னவர் பிழையோ ...

கேட்டவர் எல்லாம் கெட்டவர் ஆனாரே ..

நான்கு திங்கள் நால்வரை சுமந்தேன் ...

என் சுமை பெரிதல்ல *ராமா* ..

திங்களை உன் நாமம் அதில் தினம் தினம் சுமக்கிறாய்...

பிறை சூடும் பெருமாள் போல்...

குறை கொண்ட திங்கள் உன் நாமம் அதில் தங்கி நிறை கண்டதே ராமா ...

என் வரை அது ஏன் சதி செய்தது *ராமா* ??

ஏழ் கடல் வற்றினாலும் வற்றாத ஜீவ நதி அன்றோ உன் நாமம் ..

பசி கொல்லும் நாமம் அதை புசிக்காமல் கசிந்து போனார்களே பெற்ற பிள்ளைகள் ...

*தாயே* ...

உறவுகள் நீடிப்பதில்லை

ஒருநாள் ஓய்ந்து போகும் ..

உள்ளவரை எல்லாம் உள்ளவரை வேண்டி நின்றால் ஏழ் பிறப்புக்கும் இழிவு இல்லை ...

உரைக்கும் நாமம் எதுவானால் உள்ளம் சொல்ல வேண்டும் வெறும் உதடுகள் அல்ல ..

உத்தமர்கள் உன் பிள்ளைகள் ..

நால்வரை கொன்றாலும் நான்மறையாய் வாழ்ந்திடுவர் நற்கதி கொண்டே ...

ஆத்மாவுக்கு அழிவு உண்டோ ...

உடல் காக்கைகள் கொத்தும் யாக்கை அன்றோ ...

காஞ்சி வாழ் கருணையும் மண்ணில் செல்லும் என்னில் சேரும் .. எண்ணில் உயரும் .. விண்ணில் மிளிரும் கண்ணில் நிலைக்கும் ...

உன் பிள்ளைகள் இனி என் வசம் ...

*உத்தமியே*

உள்ளம் நிறை கொண்டு செல்வாய்

*ராமா* ..

உன் கருணைக்கு அணை உண்டோ ...

உன் கணைக்கு நிகர் உண்டோ ...

உன் சொல்லிற்கு மேல் வேதம் உண்டோ ..

உன் வில்லுக்கு முன் வினை உண்டோ ...?

தானவர்களை வானவர்கள் ஆக்கினாய் ...

வானவர்களை வானரம் ஆக்கினாய் ..

வானரம் கொண்டே திருவை மீட்டினாய் ..

திருவை கொண்டே உன் திருமுகம் காட்டினாய் ..

திருமுகம் கண்டேன் தசமுகம் கொண்டவனும் மறைந்தான்

ஆசை முகம் மறந்து போவேன் ராமா

உன் அருள் முகம் என்றும் மறவேன்

வாழ்க நீ எம்மான் இவ்வயம் கடந்தும் ..

பொங்கும் கண்ணீர் பாற்கடலில் தெரிந்து சங்கமம் ஆனதே 👍👍👍
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🌺🪷🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔

“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு.

கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “

(ஆஞ்சநேய பக்தருக்கு அருள் புரிந்த நிகழ்ச்சி)

வட இந்தியாவில் வேலை பார்க்கும் நம் ஊர்காரர் ஒருவர், மஹாபெரியவா தரிசனத்துக்கு வந்தார்.

அவருக்கு ஒரு பிரச்சினை. செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது ! அந்தப் பேச்சு, ஆஞ்சநேயருடைய குரல் என்ற எண்ணம் எப்படியோ வந்துவிட்டது அவருக்கு.

இந்தத் தெய்வீக சக்தியை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா ? நண்பர்கள் தான் சும்மா இருக்க விடுவார்களா ?

குறி சொல்வதற்கு என்று ஒரு நாளை ஒதுக்கினார்.

யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை ? எனவே கூட்டமான கூட்டம். அதிலும் கட்டணம் ஏதுமில்லை என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா ?

ஆனால் குறி சொல்கிற அன்பருக்குத்தான் மன நிம்மதி இல்லை.

பெரியவாளிடம் வேண்டிக்கொண்டார் :

“வடக்கே இருப்பதற்கு எனக்குப் பிடிக்கவில் லை. பெரியவா அனுக்ரஹத்தாலே, மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும் ….”

“எங்கிட்ட ஏன் சொல்றே ? உனக்குத்தான் ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமா இருக்கே ஹனுமானிடமே பிராத்தனை பண்ணிக்கோயேன் ….”

அன்பர், அப்படியே கூசிக்குறுகிப் போய்விட்டார்.

” ஆஞ்சநேயர் பேசுகிறார் என்பது நானாகச் சொன்னதுதான். என்ன துர்தேவதையோ தெரியவில்லை. என்னைத் தூங்கவிடமாட்டேன் என்கிறது . . அது சொல்கிற பதில் சில பேர்களுக்குப் பலித்து விடுவதால் எல்லோரும் நம்புகிறார்கள். எனக்குத்தான் நம்பிக்கையில்லை. பெரியவா என் கஷ்டத்தைப் போக்கணும் …”

பெரியவாள் சொன்னார்கள் :

“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு.

கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “

பத்து நாள்கள் கழித்து மகிழ்ச்சியோடு வந்து பெரியவாவை தரிஸனம் செய்தார் அன்பர்.

“என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?” என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக. !!!!!

ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆக்ஞைப்படி ( புரட்டாசி பௌர்ணமி திதியில் ) ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் படுகிறது


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪷🙏

ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 66*
ravi said…
பதினொன்னாவது ஸ்லோகம்.

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।

हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥

கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
ravi said…
இந்த சம்ஸார தாபத்துல ‘ *த்வன்ம்ருʼது³லஸ்மிதாம்ருʼதரஸே*

‘உன்னுடைய புன்னகை *ம்ருதுலஸ்மித அமிர்தரஸே* –

அமிர்தமா இருக்கற மந்தஸ்மிதம் என்ற மடுவில் நான் மூழ்கி ‘ *மந்க்த்வா* ’ நன்னா முங்கி குளிச்சு ‘ *விதூ⁴ய வ்யதா²ம்’ –* என்னுடைய இந்த தாபத்தை எல்லாம் போக்கிண்டு *ஆனந்தோ³த³யஸௌத⁴ச்ருʼங்க³பத³வீம்*

ஆனந்தம் என்கிற மலையின் உச்சியில் மாரோடு⁴ *மாகாங்க்ஷதி* – ஏறுவதற்கு ஆசை படுகிறது.

என்னுடைய மனம் விரும்புகிறது, அப்படீன்னு சொல்றார்.
Oldest Older 201 – 308 of 308

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை