ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 11. பஞ்சதந்மாத்ரஸாயகா (1) பதிவு17

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

11 பஞ்சதந்மாத்ரஸாயகா(1)

பதிவு 17



இன்று நாம் பார்க்கப் போவது 11வது திருநாமம் 


11.*पञ्चतन्मात्रसायका* - *பஞ்சதந்மாத்ரஸாயகா* -🏵️🏵️🏵️🏵️🏵️

தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? 

ஐம்புலன்களினால் நான்  அனுபவிப்பது.

தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது,  காண்பது. 

இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். 

இவை ஐந்தும் ஐந்து வில்லாக  ஏந்தியவள் . 

அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள் தருகிறது அல்லவா?



பஞ்ச தன்மாத்ர = ஐந்து பூதங்ளான நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ஆகிய வற்றின் நுட்ப பண்புகளான - சுவை, ஊறு, நாற்றம், ஒளி, ஓசை என்பன 

 *சாயக* = அம்பு 

ஐம்பூதங்களின நுட்ப வெளிப்பாடுகளான தன்மாத்திரைகளை தன் அம்புகளாக்கி கொண்டவள் 🙏🙏🙏

பஞ்சதன்மாத்ர ஸாயகா -அவளுடைய கையில் உள்ள சரங்கள் அதாவது அம்புகள் என்னவென்று கேட்டால், அவை வேறு ஏதோ அம்புகள் அல்ல; 

வெறும் மலர் அம்புகளும் அல்ல; மலர் அம்புகள் என்றால் கரும்பு வில் என்று சொன்னது போல 'புஷ்ப பாணம்' என்று சொல்லியிருக்க வேண்டும். 

ஆனால் 'பஞ்சதன்மாத்ர ஸாயகா' என்று சொல்லியிருக்கிறது. அப்படியானால், அவள் கரங்களில் இருப்பது மலர் அம்புகள் அல்ல. 

நம்முடைய தன்மாத்திரைகள்தாம் அங்கே அம்புகளாக இருக்கின்றன! நான்கு திருக்கரங்களைக் கொண்டவளே! பாசத்தை ஒரு கரத்திலும், பாசத்தைக் களையும் அங்குசத்தை ஒரு கரத்திலும், எங்கள் மனமாகிற வில்லை ஒரு கரத்திலும், எங்கள் பஞ்சதன்மாத்திரைகளை ஒரு கரத்திலும் தாங்கிக் கொண்டு இருப்பவளே! 



'பஞ்சதன்மாத்ர ஸாயகா' என்றால் என்ன அர்த்தம்? 

அம்புகளைப் புஷ்ப பாணங்களாகத்தான் சித்திரிக்கப் பார்க்கிறோம். 

அம்பிகைக்கே காமேசுவரி என்று ஒரு திருநாமம் உண்டு. பின்னால் வரும். 

காமேசுவரருடைய திருத்தொடையில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்றும் ஒரு திருநாமம் வரும். 

பரமேசுவரனுக்குக் காமேசுவரன் என்று ஒரு திருநாமம். அம்பிகைக்குக் காமேசுவரி என்று ஒரு திருநாமம்.

காமம் என்றால் ஆசை, அதாவது விருப்பம் என்று அர்த்தம். இந்த உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற விருப்பத்தால், அதற்காக அவதாரம் செய்த அம்பிகைக்குக் காமேசுவரி என்று பெயர். இந்த உலகத்தைப் படைக்க வேண்டும் என்பதற்காக, நிர்குண பிரம்மமாக இருக்கும் பரமாத்மா தன்னையே ஒரு ஸ்வரூபத்துக்குள் கொண்டு வந்ததால், அவருக்குக் காமேசுவரர் என்று பெயர். 



அதுமட்டுமல்ல, நம்முடைய விருப்பங்களை, ஆசைகளை அவள் நிறைவேற்றித் தருபவள் என்பதால் அம்பாளுக்குக் காமேசுவரி என்று பெயர். 

இன்னொரு அர்த்தம் என்னவெனில் அழகாக இருப்பவள். கமனீயமாக உள்ளவள் (கமனீயமாக-அழகாக). இவ்வாறு காமேசுவரி என்ற பெயருக்கு அனேக அர்த்தங்களைச் சொல்லலாம் என்றாலும்கூட 'காமம்' என்ற சொல்லோடு மற்றொருவரையும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். 

காமன் என்றால் மன்மதனைக் குறிக்கும். மன்மதனிடம் இருப்பதும் இதே கரும்புவில்; இதே மலர் அம்புகள்தாம்! இதன் தாத்பர்யம் என்ன?



          👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍







Comments

ravi said…
[12/07, 07:36] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 281* 🙏🙏🙏started on 7th Oct 2021
[12/07, 07:38] Jayaraman Ravilumar: *96. அகுலா* -

குலத்திற்கு அப்பாற்பட்டவள்.

மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்கரம் வரை, சக்தி பாதையானதால், அது குலம்.

இந்தக் குலபதத்தைத் தாண்டி இருப்பது *சஹஸ்ரார கமலம்.*

ஆகவே, ஆயிரம் தளத் தாமரையே அகுலம்.

அகுலத்தில் சிவம், குலத்தில் சக்தி என்று சொன்னாலும், விமர்ஸமாகப் பிரிந்திருக்கும்போதுதான் இரண்டும் தனித்தனி. இல்லையென்றால் இரண்டும் ஒன்றுதானே.

சஹஸ்ராரத்தில் பரம்பொருளாக இருப்பவள் *அகுலா* .

*அகுலா* என்பதற்கு பிறப்பில்லாதவள் என்றும் பொருள் சொல்லலாம்.

எதற்குப் பிறப்பும் தோன்றுமிடமும் உள்ளதோ, அதற்குக் குலம் என்று பெயர்.

அம்பாளுக்குப் பிறப்பிடம் கிடையாது; அவளே ஆதி; ஆகவே *அகுலா* 🪷🪷🪷🪷🪷.
ravi said…
[12/07, 07:33] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 280* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*73 நகில்கள் அல்ல அவை ஞானாமிருத கலசங்கள்*

பால் வளர்ச்சி, ஜீவன் முக்தி

அமூ தே வக்ஷோஜா வம்ருதரஸ மாணிக்ய குதுபௌ

ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:

பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித வதூஸங்க ரஸிகௌ

குமாராவத்யாபி த்விரதவதன க்ரௌஞ்சதலனௌ 73
[12/07, 07:34] Jayaraman Ravilumar: மனிதர்கள் போன்று அன்னை பராசக்தியின் ஸ்தனங்களில் தாய்ப் பால் இருந்திருந்தால்

அதனை உண்ட கணபதி மற்றும் ஸ்கந்தன் மனிதர்கள் போன்று வளர்ந்து யெளவன இச்சைகள் உடையவராக இருந்திருப்பர்.

ஆனால் அவர்கள் சிறு பிள்ளைகளாக, யானை முகமூடி கொண்டும், பர்வதம்/மலையைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால்

அவர்கள் சிறு-குழந்தைகளாகவே தோன்றுகின்றனர்.

இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர்.

அம்ருதம் உண்டவர்களுக்கு வயதால் ஏற்படும் மூப்பு கிடையாது என்று சொல்லப்படும்.
ravi said…
எண்ணி லாத பொருட்குவை தானும்,
ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்
வெம்மை யும்

பெருந் திணமையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள்

இன்றென தன்னை யென்காளி;

மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,

வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,

வானம் மூன்று மழைதரச் செய்வேன்

மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;

மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,

நான்விரும்பின காளி தருவாள்.🙏🙏🙏
ravi said…
ராமரும் வாமதேவரும்* 🙏

*வாமதேவர் சொன்ன கீதை* 🪷

வாமதேவர் (Vamadeva) வேதகால ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள முனிவர்களில் ஒருவர்.

வாமதேவர் சப்தரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ரிக் வேதத்தின் நான்காம் மண்டலம் மற்றும் பிரகதாரண்யக உபநிடதம் மற்றும் ஐதரேய உபநிடதங்களில் வாமதேவ முனிவரின் பெயர் பல இடங்களில் காணப்படுகிறது.

இவரது தந்தையின் பெயர் கௌதம முனிவர்.🙏
ravi said…
ராமா* ...

வசிஸ்ட்டரின் சீடர்களில் நானும் ஒருவன் .

இந்த வரம் ஒன்றே போதும் என்றே நினைத்தேன் ...

பொங்கி வந்த உன் நாமம் அதன் சுகந்தம் தனை என் நாசி சுவாசிக்க கண்டேன் .

ரிக் வேதம் போல் இனிக்க கண்டேன் .

யஜுர் வன வேதம் போல் புஜங்கள் பூரிக்கக் கண்டேன் ..

சாம வேதம் போல் சர்வேஸ்வரன் ரூபம் கண்டேன் .

அதர்வண வேதம் போல் அதர்மம் அழியக்கண்டேன்

நான்கு வேதமும் இரண்டு எழுத்துக்குள் நுழையக்கண்டேன்

எங்கும் காணா *சச்சிதானந்தம்* என் முன்னே நிற்க கண்டேன் ...

எனை ஆள வந்த நாமம் இது ..

ஏழைக்கும் இது பொன் குவிக்கும் மேரு மலை ..

ஏழுமலை நீ இருக்க இந் நாமம் செய்யும் விந்தை கண்டு மலைத்துப்போனேன்

*ராமா* ...

உன் நாமம் ஒன்று போதும் உலகை வெல்ல

ஊழ்வினை மாற்ற

எள்ளளவும் சந்தேகம் இல்லை ..

ஏழைக்கென்றே பிறந்த நாமம் .. பாற்கடலையும் விலை பேசும்

*வாமதேவரே* ...

வேதம் தனில் கரை கண்டவர் நீங்கள்

அதிலே *இறை* தேடினால் என் நாமம் எனும் *இரை* கிடைக்காதோ .. ?

*உறையில்* வைக்கும் நாமம் அல்ல இது ..

*குறை* இல்லா வாழ்வு தரும் நாமம் இது .

*மறை* நாயகன் மறைந்து வாழும் நாமம் இது ..

*வரை* இன்றி அருள் வழங்கும் அமிர்த வர்ஷினி ராகம் இது ...

*தரையில்* வாழ்வோர் தரணி செழிக்க சொல்லும் நாமம் இது ...

*தடைகள்* யாவும் பொடிப்பொடியாய் போகச் செய்யும் நாமம் இது

*ராமா*

ஒன்று சொன்னாய் அதையும் நன்று சொன்னாய் ..

இதுவே உன் வாக்குமூலம் ஆயின்.....

உன் நாமம் ஒன்று போதும் காஞ்சி வாழ் மகானாய்

கவசமாய் காக்கும் தர்மத்தை ...

கலவை கண்ட கார்மேகம் சூல் கொண்டு பொழியும் தன் புன்னகையை என்றும் இப்புவி தனில் 🙏🙏🙏
ravi said…
*பிபரே ராமரஸம் ரஸனே பிபரே ராமரஸம்*

அருந்துவாய் ராமரஸம் -நாவே !

விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்

*தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம்*
*பூரித நானாவித பல வர்க்கம்*

புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.

நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.

அருந்துவாய் ராமரஸம் -நாவே !

விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்

*ஜனனமரணபய சோக விதூரம்*

*சகல சாஸ்த்ர நிகமாகம சாரம்*

பிறவிமரணபயம் மாய்க்கும் மாமந்த்ரம்.

மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.

அருந்துவாய் ராமரஸம் -நாவே !

விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்

*பரிபாலித சரசிஜ* *கர்ப்பாண்டம்*

*பரம பவித்ர க்ருத பாஷாண்டம்*

நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம்.

நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் .

அருந்துவாய் ராமரஸம் -நாவே !

விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்

*சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம்*

*சுக சௌனக கெளசிக முக பீதம்*

யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .

ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் .

அருந்துவாய் ராமரஸம் -நாவே !

*விருந்திது அமுதமயம் !-நாவே!*
*அருந்துவாய் ராமரஸம்*
Ramesh said…
வேதத்தில் இறை..
ராமநாமத்தில் இரை..
அருமை..🙏🙏
Kousalya said…
அருமை அருமை வரை இன்றி அருள் வழங்கும் நாமம் இந்த நாமம்...🙏🙏
Kousalya said…
பிபாரே ராம ரசம் என்று சபரிக்கு நாம பாராயணம் செய்ய சொல்லி கொடுத்த மதங்கருக்கு கோடி கோடி நமஸ்காரம்
ravi said…
[12/07, 08:22] Shivaji L&T C: Arumai.🌹🌹🙏🙏
[12/07, 08:38] Metro Ad Vipul: அருமை
[12/07, 08:55] Metro Kowsalya: 👌👌👏👏👏
Hemalatha said…
இப்படிப்பட்ட அறிய பொக்கிஷ தகவல்களைப் படிக்க வாய்ப்பு அளித்த ஆண்டவனுக்கு நன்றி 🙏
எழுதிய உங்களுக்கு நன்றி 🙏
நான் எழுதும் போது மட்டும் நன்றி,அருமை என்றவார்த்தைகள் மட்டும் தரும் தமிழ் தாய் தங்களுக்கு மட்டும் மடைதிறநத வெள்ளமென வருவதற்கு நன்றி 🙏🙏
ravi said…
[12/07, 16:10] Hema Latha. Thiruvasagam: 4248+1003752=1008000. ஓம்ஸ்ரீ அபிராமி அன்னையேபோற்றி போற்றி
[12/07, 16:12] Hema Latha. Thiruvasagam: அபிராமி அந்தாதி படித்து சமர்ப்பித்து கொண்டு இருக்கிறோம் திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது முதல்🙏🙏
ravi said…
🌹🌺 *பெண்களை அம்மா எனவும்* ..... *தாயே எனவும் அழைக்கும் மிகபெரிய தர்மம் எங்கள் தர்மம்* ....
*என அந்நிய நாட்டில் வீர முழக்கமிட்ட சன்னியாசி* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹"நான் உங்களை நோக்கி சகோதர சகோதரிகளே என சொன்னதும் கைதட்டுகின்றீர்கள்

🌺எங்கம் மதம் எங்களுக்கு இதைத்தான் போதிக்கின்றது, பெற்றோரும். குருவும் மனைவியும் தவிர ஒருவனுக்கு எல்லா உறவும் சகோதர உறவே

🌺அதுவும் இந்து சன்னியாசிக்கு எல்லோரும் சகோதர‌ சகோதரர்களே எனும் சொல்லும் தர்மத்தின் வழியில் இருந்து வந்திருக்கின்றேன்

🌺உங்கள் நாட்டில் பெண்களை அம்மா என அழைத்தேன் என்னை கோபமாக பார்த்தார்கள், எனக்கு வயதாயிற்றா? என சீறினார்கள்.

🌺அம்மா என அழைத்தால் மூதாட்டி என நினைத்தாயோ என திரும்ப கேட்கின்றார்கள்

🌺நான் பொறுமையாக சொன்னேன், உங்கள் நாட்டில் இந்த கிறிஸ்தவ சன்னியாசிகள் உண்டல்லவா? அப்படி இந்து சன்னியாசி நான்

🌺எங்கள் நாட்டில் சன்னியாசிகள் எல்லா பெண்களையும் தாயே என்றுதான் அழைப்போம், அது வயதான பெண் என்றாலும் சரி, சின்னஞ்சிறிய மகவு என்றாலும் சரி
எல்லா பெண்களும் எங்களுக்கு தாயே..

🌺பெண்களை அம்மா எனவும் தாயே எனவும் அழைக்கும் மிகபெரிய தர்மம் எங்கள் தர்மம், அந்த மாபெரும் சிறப்புமிக்க பூமியில் இருந்து வந்திருக்கின்றேன்

🌺துறவு என்பது விஞ்ஞானமல்ல, துறவி என்பவன் அதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் விஞ்ஞானியும் துறவி அல்ல, ஆன்மீகம் என்பது அனுபவித்து உணரவேண்டியது, தெய்வத்தை உணர வைப்பவனே துறவி என சொல்லும் அந்த மதத்தில் இருந்து வந்திருக்கின்றேன்

🌺கண் தெரியாதவனுக்கு உலகை காணமுடியாது, அகங்காரம் கொண்டவனுக்கு ஆண்டவனை காண முடியாது

🌺உங்கள் நாகரீகத்தில் எங்கள் நாட்டு சன்னியாசிகள் அழுக்கானவர்கள் என்பார்கள், கந்தலாடை அணிந்தவர்கள் என்றெல்லாம் சொல்வார்கள், ஆம் அழியபோகும் உடலுக்கு ஏன் அழகு என குறிப்பால் சொல்வது எம் தர்மம்

🌺இந்துக்களின் ஒவ்வொரு அடையாளமும் அசைவும் மானிடத்தின் நாகரீக கண்களுக்கு அற்பமானவை, ஆனால் ஞானத்தின் வெளிச்சமிக்க கண்களுக்கு ஆச்சரியமானவை, இந்துக்களையும் அவர்கள் பெரும் மதத்தையும் ஞானகண்ணால் பார்க்கவேண்டுமே தவிர புறக்கண்ணால் நோக்கி நகைத்தால் அர்த்தமில்லை

🌺எங்கள் தர்மம் உலகில் எந்த மதமும் சொல்லா தியானத்தை போதிக்கின்றது, தன்னை வெல்வதே மாபெரும் வெற்றி என்பதை சொல்கின்றது

🌺உலகுக்கே ஒற்றுமையும் அன்பையும் உண்மையான ஆன்மீக தத்துவங்களையும் மானிடரை மானிடராக வாழவைக்கும் அற்புத ஞான களஞ்சியங்களையும் கொண்டிருக்கும் மகா உயர்ந்த ஹிந்து தர்மத்தின் சாட்சியாக உங்கள் முன் நிற்கின்றேன்

🌺இந்துவாக இருந்த ஒரே காரணத்தால் இந்த வாய்ப்பினை கொடுத்த இந்துமதத்தை மனதார வணங்கி உரையினை தொடங்குகின்றேன்"

🌺1893ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் தேதி சிகாகோ உரையில் சுவாமி விவேகானந்தர்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Calling women as Amma.....Taye is our greatest charity....As a sannyasi who shouted heroism in a foreign country - a simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹 "When I say to you brothers and sisters, you clap your hands


🌺 Our religion teaches us this and so do our parents. Except Guru and wife, all relationships are brotherly


🌺 I have come from the path of dharma which says that all are brothers and sisters to the Hindu Sannyasi.

🌺 In your country I called women mother and they looked at me angrily, Am I old? They screamed.


🌺If you call me mother, they ask you back if you thought I was old lady

🌺 I said patiently, don't you have these Christian sannyasis in your country? I am a Hindu Sannyasi

🌺 In our country, sannyasis call all women mother, be it an old woman or a small child. All women are our mothers..

🌺 Calling women as mother and mother is our greatest dharma, I have come from that great and special earth.

🌺 I come from that religion which says that asceticism is not a science, a monk is a scientist who proves it with proof, and a scientist who proves it with evidence is not a monk, spirituality is something to be experienced and felt, and a monk is one who realizes God.


🌺A blind person cannot see the world, a proud person cannot see God


🌺 In your culture, our country's sannyasis are called dirty, they wear rags, yes, it is our dharma to say why the perishable body is beautiful.


🌺Every sign and movement of the Hindus is trifling to the civilized eyes of man, but amazing to the enlightened eyes of wisdom, Hindus and their great religion must be seen with the eyes of wisdom and not to be laughed at by the eyes of the outsider.


🌺Our dharma teaches meditation like no other religion in the world and says that conquering the self is the greatest victory.


🌺I stand before you as a witness of the supreme Hindu Dharma, which contains unity and love for the world, true spiritual philosophies and wonderful storehouses of wisdom that enable man to live man to man.


🌺I begin my speech by bowing to Hinduism for giving me this opportunity for the sole reason of being a Hindu.


🌺Swami Vivekananda in his Chicago speech on September 12, 1893🌹🌺

-------------------------------------------------- --------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அருணகிரிநாதர் ஸுப்ரம்மண்ய ஸ்வாமியிடமிருந்து தமக்குக் கிடைத்த அத்வைத அநுக்கிரகத்தையே “கந்தர் அநுபூதியில்” விசேஷமாகச் சொல்கிறார்.

அவர் தம்முடைய திருப்புகழ் பாட்டுக்கள் ஒவ்வொன்றையும் ‘பெருமாளே’ என்கிற வார்த்தையுடனேயே முடிக்கிறார்.

பொதுவாக ‘பெருமாள்’ என்றால் மகாவிஷ்ணுதான். ஒரு ஊரில் ‘ஈச்வரன் கோயில்’, ‘பெருமாள் கோயில்’ என்ற போது ‘பெருமாள் கோயில்’ என்றால் விஷ்ணு ஆலயம்தான்.
ravi said…
சிவசக்தியின் பூர்ணதேஜஸாக இருக்கப்பட்ட சுப்ரம்மண்யத்தை இப்படி பெருமாளாகச் சொல்லச் சொல்லி அவர் முடிப்பதும் அழகாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம். ‘மருகன்’ என்றும் முருகனைச் சொல்கிறோமே, இது எதனால்? அவர் அம்பாளுக்கு சகோதரராக இருக்கிற மகாவிஷ்ணுவின் மருமகன் என்பதால்தான். ‘மால் மருகன்’ என்கிறோம்.

மருமகன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். மருமகப்பிள்ளை என்பார்கள். பூர்வத்தில் வள்ளி தேவசேனைகள் மகாவிஷ்ணுவின் புத்திரிகள்தான். அதனால் மாமாவான விஷ்ணு முருகனுக்கு மாமனாராகவும் இருக்கிறார்.
ravi said…
சிவனுக்கு மகன், மகாவிஷ்ணுவுக்கு மருமகன் என்ற பெருமை இவருக்கே இருக்கிறது. ‘மருகோனே’ என்று அருணகிரிநாதரும் சொல்வார். மேகத்தில் நாம் பார்க்கிற மின்னல் ஜோதி வெளி இருட்டை மாத்திரம் வெகு சிறிது காலத்துக்கு நீக்குகிறது. சுப்ரம்மண்யமோ, அருள் ஒளி – அருட்பெரும்ஜோதி. அது வெளியிருட்டு, உள்ளிருட்டு இரண்டையும் சாசுவதமாக நீக்குவது.
ravi said…
மின்சாரம் ஒருத்தரை இழுத்துக்கொண்டால் எவராலும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாது. ‘எலெக்ட்ரோக்யூட்’டானால் மரணம்தான். இந்த அருள் மின்சாரம் இழுத்துக் கொண்டாலும் எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், இது அந்த ஜோதி ரூபமாகவே நம்மையும் ஆக்கி, அமரமாகச் செய்துவிடும்.
ravi said…
அருணகிரிநாதர் “கந்தர் அநுபூதி”யில் இந்தப் பெரிய அநுபவத்தையே சொல்கிறார். ஒன்று இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாய்ச் சேர்ந்தபின், பலவாக நினைக்கிற நம்மையும் இழுத்துக் கடைசியில் அந்த ஒன்றாகவே ஆக்குகிறது.
(இன்று ஆனி மூலம்-அருணகிரிநாதர் ஜெயந்தி)
ravi said…
ராமரும் காஷ்யபரும்👍காஷ்யபர் சொன்ன கீதை🪷
ravi said…
ராமா* ... 💐💐💐

எண்ணற்ற அசுரர்களை பெற்றடுத்தேன் ..

வானவராய் வளர்த்தேன் தானவர்களாய் ஆவார்கள் என்றே நினைக்க வில்லை அன்று ..

கானவர்கள் அவர்கள் அவர்களைக் கண்டவர்கள் கதி கலங்கினரே...

மதி இன்றி பெற்றேன் ..

உன் கதி கிடைக்க பெற்றிலேன் ..

விதி அதுவே என்றால் ஓடும் இந் நதிதனில் உயிர் மாய்க்கிறேன்

சதி செய்த விதி அதிதி அன்றே சொன்னாள் ..

ராம நாமம் ஒன்றே போகும் வழிக்கு நல்ல கதி என்றே

சிரித்தான் ராமன் ...

*குருவே*💐💐💐

இன்று குரு பூர்ணிமா உங்கள் தரிசனம் கோடி புண்ணியம் ..

வாடி வதைந்து போன என் நெஞ்சில் கிடைக்கப் பெற்றேன் குருவின் தரிசனம்

குறை ஒன்றும் இனி இல்லை ...

எல்லாம் நன்மைக்கே என்றே எண்ணுங்கள்

இனிதே செல்லும் வாழ்க்கை பயணம்

*ராமா* !!

ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய் ...

உன் நாமம் உரைத்தே என் பாவம் தொலைக்கின்றேன் ..

காஞ்சி வாழ் ஜகத்குருவின் ஆசி கொண்டு சொல்கிறேன் ..

பகை மனம் விட்டு செல்லும்

மீண்டும் நுழைந்தால் உன் நாமம் தடை செய்யும்

ராமன் பெருமை கொண்டான் ..

தன் நாமம் செய்யும் லீலை கண்டே 👍

🙏🙏🙏
ravi said…
குரு பூர்ணிமா ஸ்பெஷல் !
குரு பாதுகா ஸ்தோத்ரம் !

ஆதி சங்கரர்

👇👇👇

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதார
நௌகாயி தாப்யாம்,
குருபக்தி தாப்யாம்

வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

🌺பொருள்:

எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

கவித்வவாராசி நிசாகராப்யாம்
தௌர்பாக்ய தாவாம் புதமாலிகாப்யாம்
ravi said…
தூரீக்ருதா நம்ர விபத்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம ||

🌺பொருள்:

கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்ற சந்திரனாகவும், துன்பமென்னும் காட்டுத்தீயை அணைக்கும் மேகக்கூட்டமாகவும், தன்னை வணங்கியவர்களின் துன்பங்களை போக்குகின்றதாகவும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

நதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு:
கதாசிதப்யாஷு தரித்ரவர்யா:

மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

🌺பொருள்:

மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப்பொழுதாவது எந்த குருவின் பாதுகைகளை வணங்கிய உடனே செல்வந்தர்களாக ஆகிறார்களோ, எந்த பாதுகைகளை வணங்கிய ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரான சொல்லாற்றல் பெற்றவர்களாய் ஆகிறார்களோ, அவ்விதம் பெருமை வாய்ந்த, நன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
ravi said…
நாலீக நீகாஷ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவாரிகாப்யாம்

நமஜ்ஜனாபீஷ்ட ததிப்ரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

🌺பொருள்:

தாமரைக்கு நிகரானதாயும், பலவித மயக்கங்களை (மோஹங்களை) போக்கக்கூடியதாயும் தன்னை வணங்கியவர்களுக்கு விரும்பியவற்றை தரக்கூடியதாயும் உள்ள, ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

ந்ருபாலி மௌலீ வ்ரஜரத்னகாந்தி
ஸரித்விராஜ ஜஷகன்யகாப்யாம்

ந்ருபத்வ தாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

🌺பொருள்:

அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீசுகின்ற சிறந்த ரத்தினங்களின் ப்ரகாசமாகிய ஆற்றல் (நதியில்) அழகுடன் விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும், தன்னை வணங்குகிறவர்களுக்கு அரசனாயிருக்கும் நன்மையைக் கொடுக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
ravi said…
பாபாந்தகாரார்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்

ஜாட்யாப்தி சம்ஷோஷண
வாடவாப்யாம்

நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம் ||

🌺பொருள்:

பாவமாகிய இருளைப் போக்கும் சூரியன் போன்றதாயும், மூன்றுவித தாபங்களாகிய ஆதிபௌதிக, ஆதிதெய்வீக, ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கின்ற கருடன் போன்றும், அக்ஞானமாகிய (மூடத்தன்மை) சமுத்ரத்தை வற்றச் செய்கின்ற வாடவாக்னியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ குரு பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

🌺குறிப்பு:
ஆதிபுதிகம் : மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷிரிணம், பித்ருரிணம் ஆகிய ரிணத்ரயம்
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணத்ரயம்

மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ சேர்ந்தோ பிறவிக்குக் காரணமாகிறது
ravi said…
சமாதி ஷட்க ப்ரத வைபவாப்யாம்
சமாதிதான வ்ரத தீக்ஷிதாப்யாம்

ரமாதவான்க்ரிஸ் ஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

🌺பொருள்:

ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய ஆறு குணங்களைக் கொடுக்கும் பெருமை வாய்ந்ததாயும், அவ்வாறு குணங்களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தை அருளக்கூடியாதாயும், ஸ்ரீமன் நாராயணனின் சரணாரவிந்தங்களில் நிலையான பக்தியைக் கொடுக்க கூடியதாயுமுள்ள ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

ஸ்வார்சாபராணாம்
அகிலேஷ்டதாப்யாம்

ஸ்வாஹா ஸஹாயாக்ஷ
துரந்தராப்யாம்

ஸ்வான்தாஸ்ச பாவ
ப்ரத பூஜனாப்யாம்

நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
ravi said…
பொருள்:

தனனி (பாதுகைகளை) பூஜிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும் கொடுக்கக் கூடியதாகவும், தேவதைகளின் அனுக்ரகத்தை விரைவில் அளிக்கக்கூடியதாகவும், மனதிற்கு ததூய்மையான எண்ணத்தைத் தரக்கூடியதாயும் பூஜிக்கத் தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

காமாதிஸர்ப்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்

போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

🌺பொருள்:

ஆசை முதலிய தீய குணங்களாகிய
பாம்புகளை அழிக்கும் கருடனாகவும், விவேகம் (நன்மைகளை தீமைகளை அறிதல்) வைராக்யம் (பற்றின்மை), ஆகிய செல்வங்களை கொடுக்கக் கூடியதாயும், ப்ரம்ம ஞானத்தை அளிக்கக்கூடியதாயும், தன்னை (பாதுகைகளை) மனதில் சதா த்யானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் பாதுகைகளுக்கு நமஸ்கரித்து வாழ்வோம்! வாழ்விப்போம்!!

ஸ்ரீ குருப்யோ நமஹ !
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்
ஒவ்வொரு ஸித்தாந்தந்துக்கும் ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று உண்டு என்று சொன்னேன். இப்போது நம் தேசத்திலிருக்கப்பட்ட சங்கரர், ராமாநுஜர், மத்வர், ஸ்ரீகண்டர் (சைவ சம்பிரதாய ஆசாரியர்) முதலியவர்களின் ஸித்தாந்தங்களுக்கெல்லாம் வேதாந்த மதங்கள் என்றே பொதுப்பெயர். இந்த ஆசார்யர்கள் எல்லோருமே உபநிஷத்துக்களில் தங்கள் தங்கள் கொள்கையைத்தான் சொல்லியிருக்கிறது என்று ஆதாரம் காட்டுகிறார்கள். உபநிஷத்துக்களில் பத்தை முக்கியமாக எடுத்து அவற்றுக்குத் தங்கள் ஸித்தாந்தப் பிரகாரம் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்கள் * . அதனால் வேதாந்த மதத்துக்கு ஸூத்ரத்தின் ஸ்தானத்தில் உபநிஷத்துக்களையே சொல்ல வேண்டும். “ஸ்தானத்தில்”தான்; வாஸ்தவமாக உபநிஷத்துக்கள் ஸூத்ர ரூபத்தில் இல்லை.

ஸூத்ரம் என்றால் எப்படியிருக்க வேண்டும்? ரொம்ப ரொம்பச் சுருக்கமாகத் தத்வங்களைச் சொல்லிக் கொண்டே போக வேண்டும். மினிமம் (அதம பக்ஷமான) வார்த்தைகளில் சொல்லிக் கொண்டு போகிறதை (aphorism-என்பதை)த் தான் ஸூத்திரம் என்பது. இந்த definition படி, உபநிஷத்துக்களை நேராக ஸூத்திரம் என்று சொல்லமுடியாது. ஆனாலும் வேதாந்த ஸம்பிரதாயங்கள் எல்லாவற்றுக்கும் ஆதார நூலாக (basic text -ஆக) ஒரு அசல் ஸூத்ர புஸ்தகமும் இருக்கிறது. அதுதான் ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ என்பது.

ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஒவ்வொரு ஸம்பிரதாயத்தை ஒட்டியும் பாஷ்யம் உண்டு. இந்த பிரம்ம ஸூத்ரம் என்பது என்னவென்றால், உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கிற தத்வங்களின் ஸாரத்தை ரத்தினச் சுருக்கமாக ஸூத்ர ரூபத்தில் வியாஸ மஹரிஷி எடுத்துச் சொல்லியிருப்பதுதான்.

பதரி என்னும் இலந்தை மரத்தடியில் இருந்ததால், வியாசருக்கு பாதராயணர் என்றும் ஒரு பேர் உண்டு. அதனால், இதற்கு பாதராயண ஸூத்ரம் என்ற பெயரும் இருக்கிறது.

ஜீவன் யார்? அவன் வாழ்கிற ஜகத் என்பது என்ன? இதற்கெல்லாம் காரணமான ஸத்ய தத்துவம் என்ன?- என்கிற மூன்று விஷயங்களை முக்கியமாக விசாரிக்கும் வேதாந்த ஸம்பிரதாயங்களுக்கெல்லாம் ஆதார நூலாக பிரம்ம ஸூத்ரம் இருக்கிறது.

ஆனால் அதுவும் வியாஸரின் சொந்த அபிப்ராயங்களைச் சொல்வதல்ல. ஏற்கெனவே இருந்த வேதாந்த சாஸ்திரமான உபநிஷத்துக்களின் அர்த்தத்தை விசாரித்து வியாஸர் பண்ணினதுதான் அது. வேதத்தின் பிற்பகுதியில் வரும் உபநிஷத்தை ஆராய்வதால், “உத்தர மீமாம்ஸை” என்று அதற்குப் பேர்.

அதில் ஐந்நூற்றுச் சொச்சம் (555) ஸூத்ரங்கள் இருக்கின்றன. அந்தப் புஸ்தகம் நாலு அத்யாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்யாயமும் நாலு பாகங்களாக இருக்கிறது. மொத்தம் எல்லாவற்றிலும் சேர்ந்து, ‘அதிகரணம்’ என்கிற சுமார் இருநூறு (191) ஸெக்ஷன்கள் இருக்கின்றன.

ஸந்நியாஸ லக்ஷ்யத்தை முடிவாகச் சொல்வதால் “பிக்ஷூ ஸூத்ரம்” என்றும், சரீரத்துக்குள் இருக்கிற ஆத்மாவைப் பற்றி விசாரிப்பதால் “சாரீரகம்” என்றும் பிரம்ம ஸூத்ரத்துக்குப் பெயர்கள் உண்டு.

ஸூத்ரம் என்றால் கயிறு என்று ஒரு அர்த்தம். மங்கள ஸூத்ரம் என்று தாலிக்கயிற்றைச் சொல்கிறோம் அல்லவா? இந்த அர்த்தத்தை வைத்து ஆசார்யாள் தம்முடைய பாஷ்யத்தில் (I.1.2) சிலேடையாகச் சொல்கிறார்:

வேதாந்த வாக்ய குஸும க்ரதனார்த்தத்வாத் ஸூத்ராணாம்

வேதம் என்ற விருக்ஷத்தில் பூத்த உபநிஷத் புஷ்பங்கள் உதிரி உதிரியாக இருந்தால் நாம் எப்படி அதை மாலையாகப் போட்டுக்கொள்ள முடியும்? அதற்காக உபநிஷத் புஷ்பங்களையெல்லாம் ஒன்றாகத் தொடுத்துத் தருகிற கயிறாக இந்த பிரம்ம ஸூத்ரம் இருக்கிறது என்று ஆசார்யாள் சொல்கிறார். இன்றைக்கு ஹிந்து மதம் என்ற பெயரில் உள்ள எல்லா ஸம்பிரதாயங்களுக்கும், ஸித்தாந்தங்களுக்கும், ஆதாரமான ஸூத்ரம் பிரம்ம ஸூத்ரம் என்றால், அந்த பிரம்ம ஸூத்ரத்திற்கு ஆதாரமாக இருப்பது உபநிஷத்துக்கள்தான். இதனால் தான் வைதிக மதங்களை எல்லாமே “ஒளபநிஷத மதங்கள்” என்று சொல்கிற வழக்கமும் இருக்கிறது.

“Vedanta, Vedanta” என்று மேல்நாட்டு அறிவாளிகள் கொண்டாடுவது உபநிஷத்துக்களைத்தான். இஹலோகத்தின் அல்ப விஷயங்களை விட்டுக் கொஞ்சம் வைராக்யமாக, ஞானமாக யாராவது ஏதாவது சொன்னாலும், “என்னடா வேதாந்தம் பேசுகிறாய்?” என்றுதான் பொது வழக்கில் கேட்கிறோம்! அப்படியாக, ஞானத்தைப் பூரணமாக வைத்து இந்த உபநிஷத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வேதத்தின் முடிவு என்கிற மாதிரியே வேதத்தை ஒரு புருஷனாகச் சொன்னால், அந்த வேத புருஷனுக்கு சிரஸாக இருப்பது உபநிஷத்துக்களே என்ற அர்த்தத்தில், அதற்கு ‘ச்ருதி சிரஸ்’ என்றும் பெயர் இருக்கிறது. ‘சு(ரு)தி முடி’ என்றும், ‘மறை முடி’ என்றும் தமிழில் பெயர் இருக்கிறது.
(இன்று வியாசபூஜை)
ravi said…
🌹🌺 'Rama' is the name itself. A simple story to explain that it removes all fears, bestows all wisdom and devotion, and bestows great pleasures.🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹"Kumbakonam Ramaswamy temple shows both Rama and Sita sitting on the same seat as they are married.

🌺 Here, on the left side of Rama, Shatrukanan is seen throwing a sword, on the right side, Bharata is holding an umbrella, and Lakshmana is with a bow.

🌺 As Rama is married, Hanuman is seen here putting aside his warlike nature and retrieving the veena.

🌺This is one of the few temples where the Rama brothers are in one place.

🌺Raman, Sita, Lakshmana and Hanuman are the only ones that can be found in Rama temples.

🌺 It is in Ayodhya that Rama's brothers Lakshmana, Bharatha and Shatrukanan can be seen together.

🌺 Since going to Ayodhya is impossible for everyone, if you come to Kumbakonam, you can visit Rama with Dambiar.

🌺Anjaneya performs with veena and Ramayana recital. Anjaneya with veena can be seen only here.

🌺 Ramayana is the glory of Rama name. For Anjaneya, the name 'Rama' is alive. 'Sri Rama's Name' removes all fears, bestows all wisdom and devotion, and bestows great pleasures.

🌺This temple was built by Raghunatha Nayak who ruled with Tanjore as his capital in 1620.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 ' *ராம* ' *நாமமே* . *எல்லாவித பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது ..என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹"கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமர், சீதை இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே இருக்கையில் அமர்ந்தபடி காட்சி தருகின்றனர்.

🌺 இங்கு, ராமனின் இடது புறம் சத்ருக்கனன் சாமரம் வீசுவது போன்றும், வலது புறம் பரதன் குடை பிடித்த நிலையிலும், லட்சுமணன் வில்லுடனும் இருக்கின்றனர்.

🌺ராமர் திருமணம் செய்த நிலையில் இருப்பதால், அனுமன் இங்கு தனது போர்க்குணத்தை ஒதுக்கி விட்டு, வீணை மீட்டுவது போன்ற நிலையில் காட்சி தருகிறார்.

🌺ராம சகோதரர்கள் ஒரே இடத்தில் இருக்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்று.

🌺ராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோரை மட்டுமே அனேகமாக ராமர் கோயில்களில் காணமுடியும்.

🌺அயோத்தியில்தான் ராமனின் தம்பிகளான லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகிய அனைவரையும் ஒருசேர காணமுடியும்.

🌺அயோத்திக்கு செல்வது அனைவராலும் இயலாத காரியம் என்பதால் கும்பகோணம் வந்தாலே தம்பியருடன் கூடிய ராமனை தரிசித்துவரமுடியும்.

🌺ஆஞ்சநேயர் வீணையுடனும், ராமாயண பாராயணத்துடனும் காட்சி தருகிறார். வீணையுடன் கூடிய ஆஞ்சநேயரை இங்கு மட்டுமே காண இயலும்.

🌺ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது 'ராம' நாமமே. எல்லாவித பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது 'ஸ்ரீராம நாமம்.

🌺1620ம் ஆண்டு தஞ்சையை தலைநகராக கொண்டுஆட்சி நடத்திய ரகுநாத நாயக்கரால் இந்த கோயில் கட்டப்பட்டது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

Hemalatha said…
குருவே சரணம் 🙏🙏
இதை ஒரு முறை அனைவரும் படித்தாலே போதும் குருவிற்கு அவர்கள் வணக்கம் சொன்னதுபோல் ஆகிவிடும்👌👌🙏🙏
ravi said…
ஆசையாய் அப்பாவை அணைத்தது இல்லை ..

அழுகையிலும் அப்பாவை அணைத்ததில்லை

ஆசையாய் அணைத்தால் அழுது விடுவார் ..

அழுகையில் அணைத்தால் நொறுங்கி விடுவார்..

-- *எப்பவோ கிறுக்கிய வார்த்தைகள்*
Hemalatha said…
👌👌👌
ravi said…
■ சரியான திசை ■

இந்தக் கதையில் நீங்கள் தான் முக்கிய கதாப்பாத்திரம்.

ஒரு நாள், ஒரு விமானியுடன், ஒற்றை பயணியாக, விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். திடிரென்று விமானத்தின் இஞ்சின் பழுதடைந்து விடவே, விமானம் ஆகாயத்தில் தடுமாறுகிறது. எந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலைமை வருகிறது. அப்போது விமானி உங்களிடம், பாராஷூட் ஒன்றை கொடுத்து, தப்பி விடுமாறு உதவுகிறார்.

நீங்களும் பாராஷூட்டை எடுத்துக் கொண்டு வானிலிருந்து குதித்து விடுகின்றீர்கள். ஆனால், சோதனையாக அந்த பாராஷூட்டோ உங்களை ஒரு அடர்த்தியான காட்டிற்குள் எடுத்துச் சென்று இறக்கி விடுகிறது. காட்டின் எல்லாப்புறமும் ஒரே மாதிரி இருக்கின்றது. காட்டின் எந்தப்புறம் ஓடினால் தப்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

ravi said…
சில நொடிகள் சுற்றி முற்றி பார்க்கின்றீர்கள். அப்போது ஒரு பலகையில் காட்டின் இரு விதிகள் எழுதப்பட்டிருக்கிறது.

முதல் விதி..., மனிதர்கள் எவரேனும் தவறுதலாக காட்டிற்குள் நுழைந்து விட்டால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டின் மிகக் கொடிய விலங்குகள் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து வந்து சேரும். எனவே ஒரு மணி நேரத்திற்குள் அந்த காட்டை விட்டு நீங்கள் தப்பித்தாக வேண்டும்.

இரண்டாவது...., கிழக்கு பக்கமாக சென்றால் மட்டும் தான் அந்தக் காட்டை விட்டு வெளியே செல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்க்கின்றீர்கள். கிழக்கு திசை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று ஒரு யோசனையும் வரவில்லை. காட்டு விலங்குகளின் பசிக்கு இரையாகி விடுவோமோ என்ற அச்சம் வேறு ஒரு பக்கம். அப்போது அந்த இடத்தில் திடிரென்று ஒரு தேவதை உங்கள் முன் தோன்றுகிறது. உங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, உங்களிடம் இரு பொருள்களை நீட்டுகிறது.

ஒன்று...., மணிப் பார்க்கும் கடிகாரம். அதன் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் தப்பிக்க இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால், அதை வைத்துக் கொண்டு திசையை கண்டுபிடிக்க இயலாது.

மற்றொன்று...., திசைக் காட்டும் கருவி. இந்தக் கருவி மூலம் உங்களுக்குத் தப்பிச் செல்லக் கூடிய திசை தெரியும். ஆனால், நீங்கள் தப்பிக்க எவ்வளவு நேரம் மீதம் உள்ளது என்று தெரியாது.

தேவதை, உங்களிடம் இந்த இரு பொருள்களையும் காண்பித்து, “நான் உனக்கு உதவ முடியும். ஆனால் இந்த இருப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் நீ எடுத்துக் கொள்ள முடியும். உனக்கு எது வேண்டும்?” என்று கேட்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்தப் பொருளை தேர்வு செய்வீர்கள்? எது உங்களுக்கு மிக முக்கியமானதாக தோன்றும்?.

♤திசையா? ♤ நேரமா? ♤ வேகமா? ♤ வழியா?

ஆம், உங்கள் யூகமும், பதிலும் சரிதான். திசைகாட்டும் கருவி தான் உங்களுக்கு அதிக தேவையாக இருக்கும்.

இந்தக் கதைக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும் இதே நிலைதான். பல பிரச்சினைகள் நமக்கு வரும் போதும், சரியான திசையில் செல்லக் கூடிய முடிவே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது.

ஒருவர் எவ்வளவு தான் திறமைகள் கொண்டவராய் இருப்பினும், வேகமாக செயல்படக் கூடியவராய் இருப்பினும், சரியான வழியில் செல்லத் தெரியவில்லை என்றால், அவர் இலக்கை அடைவது இயலாதக் காரியமே.

◇ வெற்றிக்கு வேகமாக ஓடுவதை காட்டிலும், சரியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே, உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றி பெறட்டும்◇

◇ திட்டமிடுங்கள்..
◇ உழையுங்கள்..
◇ வெற்றி பெறுங்கள்..

படித்ததில் மிகவும் பிடித்தது
ravi said…
அமுர் நதி*

உலகின் 10வது பெரிய நதி அமுர் ஆறு, இது 2763 மைல் நீளம் கொண்டது.

அமுர் மேற்கு மஞ்சூரியாவின் மலைகளில் இருந்து தொடங்குகிறது.

அந்த புள்ளியின் உயரம் தரையில் இருந்து 994 அடி.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பாயும் இது சுமார் 250 மைல்களுக்கு ஒரு எல்லையாக செயல்படுகிறது.
ravi said…
*தாயே* ...

கண்ணனை நினைத்தே கண் இமையாமல் ஓடுபவளே ...

வெளி நாட்டில் பிறந்தாலும் உன் வேகம் கண்ணன் அவனை காண்பதே ..

உன் தேகம் எங்கும் அவன் தெளித்த குழல் ஓசை ...

உன் பாகம் தனில் கண்ணன் பாகம் பார்க்கிறேன் ...

பக்திக்கு நாடு தேவை இல்லை

கண்ணனை நாடும் மனம் ஒன்றே வேண்டும் ...

தெரிந்து கொண்டேன் உன்னிடத்தில் கீதை ஒன்றை ...

நாடை நாடாமல் இனி கண்ணனையே நாடுவேன்
நாட்டம் பல கொண்டு ...

ஓட்டம் எடுக்கட்டும் என் ஊழ்வினைகள்

ஆட்டம் முடியட்டும் அகத்தில் உள்ள அகங்காரங்கள் ...

அன்னையே வாழ்த்துவாய் உன் வாய் நிறைய எங்களையே 🙏🙏🪷🪷
ravi said…
ராமரும் துருவாசரும்* (😡)

*துருவாசர் சொன்ன கீதை*
ravi said…
வரவேண்டும் மாமுனியே ...

வனம் நிறைந்த இடம்

இதில் தனம் இன்றி இருக்கும் குடில் இதில்

கனம் இன்றி வாழ்கிறோம் .

தங்கள் வருகை எங்கள் வருவாய் பல மடங்கு ஆக்கியதே ...

*ராமா* ...

சினம் கொண்டவன் நான் .. சீற்றம் என் உடன்பிறப்பு ...

உன் நாமம் சொல்லும் வேளை தனில் சினம் இமயப்பனி ஆனதன் விந்தை என்ன ?

குணம் , குற்றம் குறை பார்ப்பதை மறுக்கும் நலம் என்ன ?

என்ன மந்திரம் இது !!!

இரண்டே எழுத்து என் இதயத்தை உருக்கி ஓடும் கங்கை ஆக்கியதே

கள்ளன் அல்ல நீ இருந்தும் என்ன கள்ளத்தனம் புரிந்தாய் ...?

இரண்டு எழுத்து சொல்ல வைத்தே சொக்க வைக்கின்றாய் ..

சொக்கும் உன் நாமம் நான் வணங்கும் சொக்கன் சொக்கியாய் தெரிகிறதே ...

சிரித்தான் ராமன் ..

விந்தை ஒன்றும் இதில் இல்லை ..

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்

வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்

கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே...

உள்ளமதில் இறை நாமம் உறைந்தால் வெளி தெளிக்கும் வார்த்தைகள் தேன் அன்றோ ...

பலர் உரைப்பதால் என் நாமம் பஞ்சாமிருதம் ஆனதில் வியப்பு இல்லையே குருவே

ராமா உன் பெருமை தனை மறைத்தே பேசுகிறாய் ..

வரம் ஒன்று தருகிறேன் ...

அடியேன் பெரும் பாக்கியம் செய்தேன் .. தாருங்கள் குருவே

*ராமா*

என் சினம் அதை பரிசாய் தருகிறேன் ...

உன்னால் சினம் என்றும் கொள்ள முடியாது ...

பகைக்கும் நலம் செய்யும் குணம் கொண்டவன் .

சரண் அடைந்தோர் அனைவரும் உன் உயிர்பிச்சை..

சினம் தேவை சில இடங்களில் ராமா ...

அதர்மம் தலை எடுத்தால் கருணை கொண்டு கிள்ளி எறிய முடியுமோ?

என் சினம் ஏற்பாய் ...

அதில் என்றும் சிவம் உண்டு ...

தானவர்கள் மாய்ந்த பின் கொண்ட சினம் என்னிடம் திரும்பி வந்து விடும் ...

*இனி நான் ராமன் நீ துருவாசர் ..*

*ஐயனே*

காஞ்சி மகான் தாங்கள் ..

அதனால் கொடுத்த சினம் இனி திரும்பி வாரா ...

என்றும் வாழ்வீர்கள் ராமனாய் காஞ்சி தனில் ....

ராமன் கொண்ட சினம் அதில் லங்கை இன்றும் தீப்பொறி காண்கிறதே ... 🔥🔥
Kousalya said…
ரூபத்தை வர்ணிக்க வார்த்தைகளே குறைந்து போகும்....அற்புதம்...🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 5* 🦚🐓🙏
ravi said…
[14/07, 17:21] Jayaraman Ravilumar: அடல் அருணைத் திருக் கோபுரத்தே

அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்;

வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன்,

சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!🙏
[14/07, 17:23] Jayaraman Ravilumar: சரி....இவிங்கள பார்க்க வரவங்க மட்டும் என்னமோ, தலையில ஒரு தினுசா...வித்தியாசமாக் குட்டிக்கறாங்களே!

புத்தி, கித்தி கெட்டுப் போச்சா இவிங்களுக்கு?

யாராச்சும் தன்னைத் தானே குட்டிப்பாங்களா?:)

வருவார் தலையில், *தட-பட* எனப் படு குட்டுடன்
அருணகிரி கந்தக் கவி மட்டுமா? சந்தக் கவியும் அல்லவா?

அதான் தலையில் குட்டிக் கொள்ளும் சத்தத்தைப் பாட்டிலேயே வச்சிட்டார்!

மக்கள் எப்படிக் குட்டிக்கிறாங்கன்னு நினைக்கறீங்க?

*தடக், படக்* என்று குட்டிக்கறாங்க! சரி, ஏன் குட்டிக்கணும்?

காவிரியின் ஆணவத்தை அடக்குகிறேன் பேர்வழி-ன்னு அகத்தியர் அவளை அடக்கி வைத்து விட்டார்!

ஊருக்குப் பொதுவான காவிரி ஆற்றை ஒருவர் மட்டும் அடக்கி ஆளலாமா?

என்ன தான் காவிரிப் பெண் ஆணவம் பிடித்துப் பேசி இருந்தாலும், ஊர் பாதிக்காதவாறு அல்லவா அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?

ஆனால் அகத்தியர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மட்டுமே பார்த்தாரே அன்றி, ஊருக்கு ஏற்படும் தீங்கைப் பார்க்க மறந்து போனார்!🙏
ravi said…
அடல் அருணைத் திருக் கோபுரத்தே

அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்;

வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன்,

சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!🙏
ravi said…
[14/07, 17:13] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 280*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
[14/07, 17:15] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
[14/07, 17:15] Jayaraman Ravilumar: *ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா’ –* உனக்கு சொல்றதுக்கு என்ன இருக்கு?

அதனால இப்படி ஒருத்தர் எனக்கு கிடைச்சியேன்னு சந்தோஷத்துல இருக்கேன் அப்படீன்னு சொல்றார்.

இந்த அநுபவம் ஒரு நல்ல ஸத்குரு கிடைச்சவாளுக்கு இருக்கும்.

அந்த ஸத்குரு கிட்ட தன்னை ஒப்படைச்சாலே, பாரமெல்லாம் இறங்கி, அவர் அப்படி நம்மளைப் பார்த்துக்கறார்

அப்படீங்கிறது தான் பகவத் அனுக்ரஹத்தோட முதல் ருசி.

பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் நம்மளைப் பார்த்துக்கறார்.

அவர் கிட்ட நம்மளை ஒப்படைச்சா, நம்ப இவ்ளோ பாரம் சுமக்க வேண்டாம்👍
ravi said…
[14/07, 17:07] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 280* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*73. மாதவாய நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
*மாதவோ* மதுஸூதன:||8
[14/07, 17:08] Jayaraman Ravilumar: லோகமாதாவான மகாலட்சுமிக்கு ‘ *மா* ’ என்று திருநாமம். அந்த மகாலட்சுமிக்குக் கேள்வனானபடியால் திருமால் “ *மாதவ* :” என்றழைக்கப்படுகிறார்.

அதனால் தான் கண்ணன், “நான் மாதவன் ஆனபடியால் நான் மட்டுமே அவளை மணக்க முடியும்!” என்று அந்த ஓலையில் எழுதியிருந்தான்.

“மாதவ:” என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 73-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ *மாதவாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்குச் சிறந்த மணவாழ்க்கை அமையும் படி மாதவன் அருள்புரிவான்.
ravi said…
[14/07, 07:19] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 283* 🙏🙏🙏started on 7th Oct 2021
[14/07, 07:21] Jayaraman Ravilumar: *சமயா* = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும்

*அந்த:ஸ்தா* = உள்ளுறைபவள்

*97* *சமயாந்த:ஸ்தா*

=சமயாசாரத்தின் வழிபாட்டு முறைகளுள் உறைபவள்.

(ஸ்ரீவித்யா உபாசனை முறைகளில் சமயாசார முறையும் ஒன்று)👍👍👍
[14/07, 07:23] Jayaraman Ravilumar: அம்பாளுக்கு *ஸமயா* என்று திருநாமம்.

அதாவது பரம்பொருளுக்குச் சமமாக உள்ளவள்.

சிவமும் அம்பாளும் ஸமரஸமாக இருப்பவர்கள்.

முக்கண்கள், சிரஸில் பிறைநிலா,

செம்மெனி போன்ற வடிவ ஒற்றுமையாலும் (ரூப ஸாம்யம்),

பவ, பவா, சிவ, சிவா, பைரவ, பைரவி போன்ற பெயர்களின் ஒற்றுமையாலும் (நாம ஸாம்யம்),

மேரு மலையிலும் ஸ்ரீ புரத்திலும் பக்தர் உள்ளத்திலும் வசித்தல் போன்ற இட ஒற்றுமையாலும்

(அதிஷ்டான ஸாம்யம்),

நிருத்யம் போன்ற சிறப்பு நிலைகளின் ஒற்றுமையாலும்

(அவஸ்தான ஸாம்யம்),

சிருஷ்டி ஸ்திதி போன்ற ஐந்தொழிலின் செயல்பாடுகளின் ஒற்றுமையாலும்

(அனுஷ்டான ஸாம்யம்)

அனைத்து வகைகளிலும் சிவமும் சக்தியும் ஒன்றே!🙏🙏🙏
ravi said…
[14/07, 07:13] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 282* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[14/07, 07:15] Jayaraman Ravilumar: *74 மார்பில் விளங்கும் முத்துமாலை*

*நற்கீர்த்தி*

வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ கும்ப ப்ரக்ருதிபி:

ஸமாரப்தாம் முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம்

குசாபோகோ பிம்பாதர ருசிபி ரந்த: ஶபலிதாம்

ப்ரதாப வ்யாமிஶ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே 74
[14/07, 07:16] Jayaraman Ravilumar: *அம்மா !*

உன்னுடைய நகில்களின் மத்தியப்பிரதேசம் கஜாசுரனுடைய கும்பத்தில் இருந்து உண்டான சிறந்த முத்துக்களால் ஆக்கப்பட்டதும்,

குற்றமற்றதும் கோவைப்பழம்போல் சிவந்த உதட்டின் காந்தியால் உள்புறம் விசித்திரமான வர்ணங்களோடு பிரகாசிப்பதாகவும்,

முப்புரம் அழித்த பரமசிவனுடைய பிரதாபத்தோடு கலந்த கீர்த்தியே மாலையாக வந்ததோ என்று விளங்குவதாகவும் உள்ள கொடிபோன்ற ஹாரத்தை தாங்குகிறது.🙏🙏🙏
ravi said…
விண்டு ரைக்க அறிய அரியதாய்

விவிந்த வான வெளியென நின்றனை;

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;

அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;

மண் டலத்தை அணுவணு வாக்கினால்,

வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,

கோலமே! நினைக் காளியென் றேத்துவேன்.👍
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
குரு' இலக்கணச் செய்யுட்கள்
குரு, ஆசார்யர், தேசிகர், உபாத்யாயர், அத்யட்சகர், புரோஹிதர் என்றிப்படி நமக்கு அறிவைத் தருகிறவருக்குப் பல பேர் சொல்கிறோம். வெறுமே அறிவைத் தராமல் நற்றிவைத் தருகிறவராக அவர் இருக்க வேண்டும் என்பதே ஆதிகாலம் தொட்டு நம் மரபு வலியுறுத்தி வந்திருக்கிற விஷயம். அதாவது அறிவை வளர்த்துக் கொடுக்கும்போதே, கெட்டதற்கு அந்த அறிவு ப்ரயோஜனப்படாமல் தர்ம வழியிலேயே போய் நல்லதைச் செய்யும்படி ரூபம் பண்ணித் தருகிறவரே குரு, இன்னும் ஆசார்யர், அத்யட்சகர், உபாத்யாயர், புரோஹிதர், தேசிகர் எல்லாம். இந்த எல்லாப் பெயர்களையும் நாம் ஒரே அர்த்தத்தில் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் இவற்றில் ஒன்றுக்கொன்று வித்யாஸம் சொல்லிப் பாகுபடுத்தியும் தனித் தனி லட்சணம், 'டெஃபனிஷன்' சொல்லியிருக்கிறது. அடிப்படையில் இந்த எல்லாருடைய கார்யமும் சிஷ்யரை நல்ல வழியில் போகச் செய்வதே என்றாலும் அதைச் செய்வதில் உள்ள வித்யாஸமான முறைகளை வைத்து வெவ்வேறாக டெஃபனிஷன் கொடுத்திருக்கிறது.
இன்னொரு தினுஸாகவும் சொல்லலாம். அதாவது, நல்வழிப்படுத்துகிற அந்த ஒரே பெரியவரின் ஒவ்வொரு விதமான கார்யத்தை - ஒவ்வொரு 'ஆஸ்பெக்'டை - வைத்து ஒவ்வொரு பெயரைக் கொடுத்து அதற்கான டெஃபனிஷன்கள் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
'குரு' என்பதற்கு 'இருட்டைப் போக்கடிக்கிறவர்' என்று அர்த்தம் செய்திருப்பது ஸாதரணமாக ஓரளவு வித்வான்களாக உள்ள எல்லாருக்கும் தெரிந்ததே.
கு- காரஸ் - த்வந்தகார ஸ்யாத் ரு - காரஸ் - தந்நிவர்தக : 1
அந்தகார - நிரோதித்வாத் குருரித்யுச்யதே புதை : 11

என்று ச்லோக ரூபத்தில் டெஃபனிஷன் இருக்கிறது. " 'கு' என்பது அந்தகாரம். 'ரு' என்பது அதை நிவர்த்தி செய்வது. அந்தகாரத்தை நிவர்த்தி செய்வதாலேயே அப்படிச் செய்கிறவர் குரு என்று புத்திமான்களால் சொல்லப்படுகிறார்" என்று அர்த்தம். அந்தகாரம் என்பது அஞ்ஞான இருட்டுத்தான். அந்தகார நிவர்த்தி என்பது ஞான ஜ்யோதிஸ்ஸான ப்ரம்மத்தை அநுபவிப்பதுதான். 'ஹை லெவ'லில் ப்ரஹ்ம வித்யையையே கல்வியாகச் சொன்னால் அந்த அர்த்தம். ஸாதாரணமாக எல்லாரும் பெறுகிற கல்வி என்கிறபோது, அநேக ஸமாசாரங்களில். ஸயன்ஸ், ஆர்ட் என்கிறவற்றில், அறிவின்மை என்ற இருட்டிலுள்ளவருக்கு அந்தத் துறையில் அறிவொளியைத் தருபவர் குரு என்று அர்த்தம்.
இன்னொரு டெஃபனிஷனும் இருக்கிறது - அபூர்வமாகச் சில பேருக்கு மட்டுமே தெரிந்தது.
சுகார:ஸித்தித:ப்ரோக்தோ ரேப:பாபஸ்ய ஹாரக:1
உகாரோ விஷ்ணுரவ்யக்தஸ் - த்ரிதயாத்மா குரு ஸ்ம்ருத:11
'குரு' என்ற வார்த்தையில் முதலில் 'க' காரமும் 'உ'காரமும் சேர்ந்து 'கு' அப்புறம் 'ர'வும் 'உ'வும் சேர்ந்து 'ரு'. இப்படி க, உ, ர, உ என்ற நாலு சப்தங்களாக அந்த வார்த்தையைப் பிரித்து, 'க'வுக்கு இன்ன தாத்பர்யம், 'ர'வுக்கு இன்ன, 'உ'வுக்கு
இன்ன என்று ச்லோகத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது.
க,ர,உ ஆகிய மூன்றுக்கும் என்ன அர்த்தமோ அதுவே ரூபமாக அமைந்தவர்தான் குரு என்று முடித்திருக்கிறது:த்ரிதயாத்மா குரு:ஸ்ம்ருத:'அம் மூன்றும் ஒன்றுபட்டதாக 'குரு' என்ற வார்த்தை நினைக்கப்படுகிறது.'
கௌசல்யா said…
இரண்டெழுத்து மனனம் செய்து சொக்கி போனால் சொக்கனையும் மயக்கி முக்தி காணலாம்....அற்புதம்..ராம் ராம் ராம்.,🙇‍♀️🙇‍♀️🌹🌹
ravi said…
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை

கருத்தினால் இருத்தியே

கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும்

பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்

அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே. 5🙏
ravi said…
நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் *தனஞ்செயன்* எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது.

இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர்.

தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது...

அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது.

உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .

ஆதலால் இதனை நன்குஅறிந்து *வாசியோகம்* எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி

அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி

கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும்

இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள்

கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர்.

அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும்.

இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். .

நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை.
ravi said…
49

மார்கேண மஞ்ஜு கச காந்தி தமோவ்ருதேன
மன்தாயமான கமனா மதனாதுராஸௌ |
காமாக்ஷி த்ருஷ்டிரயதே தவ ஶம்கராய
ஸம்கேத பூமிமசிராதபிஸாரிகேவ ||49||

காமாக்ஷியே! உனது கடாக்ஷமானது ஒளிமறைவாய் ஓரிடத்தில் தன் நாயகனைச் சேரச் செல்லும் காமபீடிகையான ஸ்திரீயைப் போல, (அபிஸாரிகையைப்போல்) அழகிய கருங்கூந்தலாகிய இருட்டால் சூழப்பட்ட வழியாக மெதுவான நடையுடன், பரமசிவனை உத்தேசித்து ஒரு ஸங்கேத ஸ்தலத்திற்கு செல்கிறது.
ravi said…
"பரம ரகசியத்தை பக்தருக்கு உணர்த்திய மகாபெரியவா!"*

மகாபெரியவா மீது பவித்ரமான பக்தி கொண்டிருந்தவர், மயிலம் சிவசுப்ரமணியம். தமிழில் மூழ்கி முத்தெடுத்து, தமிழுக்கு அழகு சேர்த்த மிக அரிய தமிழறிஞர்களில் மூத்த இடத்தில் இருந்த பேராசிரியர் அவர். அவரது தமிழறிவில் மூழ்கித் திளைத்தவர்கள், அவரைத் தமிழ்க்கடல் என்றே போற்றுவார்கள்.
ravi said…
தமிழ் மீது இருந்த ஆர்வத்தைப் போலவே அவருக்கு மகாபெரியவா மீது மாறில்லா பக்தி இருந்தது.

ஒரு முறை மகாபெரியவர், காஞ்சிபுரம் பக்கத்தில் தெள்ளாறு எனும் ஊரின் ஊடாய்ச் செல்லும் பாலாற்றங்கரையில் யாத்திரை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவரைத் தரிசிக்க வந்தார், மயிலம் சிவசுப்ரமணியம். நேராக மகான் முன் சென்று, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். மயிலம் அவர்களை பார்த்த பெரியவா அகமகிழ்ந்து ஒரு புன்னகை பூத்தார்.
ravi said…
அன்றைய தினம் மகான் பூரண மௌன விரதம் மேற்கொண்டிருந்ததால், மௌன மொழியிலேயே தமது அனுகிரஹத்தையும் அன்பையும் அளித்தார். புரிந்து கொண்டு வணங்கிய பக்தரிடம், ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல நினைத்த மகான், அதை சைகை மூலம் உணர்த்தினார்.

ஆனால் என்ன ஆச்சர்யமோ, மாமேதையான மயிலம் அவர்களுக்கு, மகாபெரியவரின் சைகைகள் எதுவும் கொஞ்சமும் புரியவேயில்லை.
ravi said…
அந்த சமயத்தில் எதனாலோ மகானின் அணுக்கத் தொண்டர்களும் சற்றுத் தொலைவில் இருந்ததால், அவர்களாலும் அதை கவனித்துச் சொல்ல முடியவில்லை.
பலமுறை வெவ்வேறு வகைகளில் சைகை காட்டியும் பக்தருக்குப் புரியாததால், மகாபெரியவா, தொலைவில் இருந்த அணுக்கத் தொண்டர் ஒருவரைப் பார்த்து, ஒரு சிலேட்டும் எழுது குச்சியும் வேண்டும் என்பதுபோல், சைகை செய்தார்.
ravi said…
வழக்கமாக மௌன விரதம் இருக்கும் சமயங்களில் பெரியவா சில விஷயங்களை இப்படி எழுதிக் காட்டுவது உண்டு என்பதால், எப்போதும் ஒரு சிலேட்டும், சாக்பீஸும் வைத்திருப்பார்கள் தொண்டர்கள். அதை எடுத்துவந்து கொடுத்தார் அந்தத் தொண்டர். மயிலம் பக்தரிடம் தான் சொல்ல நினைத்த விஷயத்தை அதில் எழுதினர் மகான். அவர் கைப்பட்டதில், அட்சரங்கள் அத்தனையும் சிலிர்த்துக் கொண்டு அழகழகாய்த் தோன்றின. பக்தரிடம் சிலேட்டை நீட்டினார், மகான்.
ravi said…
அதை பெற்றுக் கொண்டு படித்த சிவசுப்ரமணியம் அவர்களுக்கு, தமிழ்க் கடவுளே தமிழைத் தமக்கு உபதேசித்தது போன்ற உணர்வு எழுந்தது. ஒவ்வொரு எழுத்தாக பலமுறை வாசித்து மனதுக்குள் சிலிர்த்தார். பின்னர், அதில் எழுதி இருந்ததை நிச்சயம் நிறைவேற்றுவதாக மகானிடம் உறுதியளித்தார்.
அடுத்துதான் தொடர்ந்தது ஆசார்யாளின் அருள் விளையாட்டு. தான் சிலேட்டில் எழுதிக் காட்டியதை அழித்துவிடுமாறு பக்தருக்கு சைகை காட்டினார், மகான்.
இப்போதும் தமிழ்க் கடலுக்கு ஒன்றும் புரியவில்லை.
ravi said…
அலைகடல் ஆண்டவன் திருவடி பட்டதும் அமைதிக்கடல் ஆவதுபோல், இவரும் தமது ஆற்றலை எல்லாம் ஒடுக்கிக் கொண்டு பவ்யமாக நின்றார். மூன்று நான்கு முறை வெவ்வேறு எளிதான சைகைகள் மூலம் மகான் உணர்த்தியும், அவருக்குச் சற்றும் விளங்கவே இல்லை.
புன்னகைத்தபடியே மயிலத்திடமிருந்து அந்த எழுது பலகையை வாங்கிய மகான், அதை ஒரு முறை உற்றுப் பார்த்தார். பிறகு அதை அப்படியே ஆகாயத்தை நோக்கி உயர்த்திக் காண்பித்தார். பக்தருக்குப் மகாபெரியவா காட்டிய சைகை, இப்போது தன் முன் நீட்டி பெரியவா போடும் கட்டளை என அனைத்தையும் உணர்ந்த இயற்கை தன் பங்கிற்கு மகா பெரியவரின் அவதார ரகசியத்தை வெளிப்படுத்த ஆவல் கொண்டது
ravi said…
அடுத்தகணம், மகானின் கையில் இருந்த அந்தப் பலகையின் சதுரத்திற்கு உள்ளே மட்டும் அளவான மழை பொழிந்தது. சிலேட்டில் அவர் எழுதியவற்றை சில நொடிகளில் அழகாக அழித்துவிட்டு, வந்த சுவடே இன்றி மறைந்தது. உடனிருந்த மயிலம் அப்படியே சிலிர்த்து நின்றார். சற்றே தொலைவில் இருந்த அணுக்கத் தொண்டர்கள், பக்தர்கள், ஊர் மக்கள் என யாவரும் நடந்ததை எல்லாம் பார்த்து ஆச்சரியத்திலும், அதிசயத்திலும் சிலையாகி நின்றார்கள்.
ravi said…
பக்தருக்கும் பெரியவாளுக்கும் இடையே நடந்த விவரங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் காஞ்சி மகான், கரம் நீட்டிய கணத்தில் அந்த இடத்தில் மட்டும் மழை பெய்ததும், சில நிமிடங்களிலேயே அது நின்றதும் மகான் நடத்திய திருவிளையாடலே என்பது புரிந்ததில், கண்டவர்கள் கண்களில் இருந்து இப்போது ஆனந்த மழை பொழிந்து கொண்டிருந்தது.
பரமரகசியமான தன் அவதாரத்தை, பஞ்சபூதங்களுள் ஒன்றினை தன் விருப்பப்படி இயக்கிக் காட்டி, எளியவனான தனக்கு உணர்த்திய மகானின் திருவடிகளை மீண்டும் மீண்டும் பணிந்து ஆசிபெற்றுப் புறப்பட்டார், தமிழ்ப் பேராசிரியர்.
ravi said…
🌹 🌺" *கணவனுக்கும் அவன் முன்னோருக்கும் சொர்க்கலோகம் கிடைக்க செய்பவள் அவன் மனைவியே ஆகும்* .....!!! - *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" பெண்ணின்_மகத்துவம் பற்றி மனுதர்மசாஸ்திரம் கூறுகிறது

🌺வீட்டை விளங்கச் செய்வதும் சந்ததியை உருவாக்குவதும் பெண்களே என்பதால் அவர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் மஹாலட்சுமிகள் இதற்குமேல் அவர்களைப் போற்ற வேறு வார்த்தைகள் ஏது?

🌺பிள்ளை பெறுபவர்களும் பெண் தான் பெற்ற பிள்ளையை பேணி வளர்ப்பவள் பெண் தான் ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்தி செல்பவர்களும் பெண்கள்தான் உலக வாழ்க்கையின் அஸ்திவாரமே பெண்கள்தான்

🌺ஒருவன் சந்ததியை பெற்று இம்மை மறுமை இன்பங்களை அடையச் செய்பவள் மனைவியே.

🌺மந்திரப் பூர்வமான தர்மகாரியங்களுக்கு அவன் மனைவியும் உடன் இருந்தாக வேண்டும் மனைவி இல்லாவிடில் செய்யமுடியாது

🌺அவனுக்கு பணிவிடை புரிபவளும் ஆத்ம சுகம் தருபவளும் மனைவியே பித்ரு காரியங்களுக்கு உடனிருந்து உதவுவதும் அவளே

🌺மொத்தத்தில் கணவனுக்கும் அவன் முன்னோருக்கும் சொர்க்கலோகம் கிடைக்க செய்பவள் அவன் மனைவியே ஆகும்

🌺மனதாலும் வாக்காலும் சரீரத்தாலும் கணவனை அனுசரித்து இருக்கும் மனைவி கணவன் தன் புண்ணிய பலன்களால் எத்தகைய உயர்ந்தலோகத்தை அடைகிறானோ அதே லோகத்தை தானும் அடைகிறாள், 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹 🌺 "A simple story explaining that "The one who makes heaven for the husband and his ancestors is his wife ...!!! - 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹" Manudharmasastra says about the greatness of woman

🌺 Women are the most admired because they are the ones who make the house clear and create offspring. Mahalakshmi in their house What other words to praise them?

🌺 Women are the ones who bear children, women are the ones who take care of the children born, women are the ones who run a family, women are the foundation of life in the world.

🌺 It is the wife who makes one get offspring and attain the pleasures of this world and the next.

🌺 His wife must be with him for magical dharmakaryas, it cannot be done without his wife

🌺She is the wife who takes care of him and gives him peace of mind and helps him in all the affairs of Pitru.

🌺 In general, it is his wife who makes heaven available to the husband and his ancestors

🌺A wife who obeys her husband with mind, speech and body attains the same world as her husband attains through his pious fruits, 🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
https://chat.whatsapp.com/GJwh6EdSqfx0qZpF7rxwmj

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீப ஆராதனை (கிரியை) பற்றிய பதிவுகள் :*

*கற்பூரம் :-*

இறைவனோடு ஜீவன் இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும். ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, சிவத்திலே ஜீவன் கரைந்து இரண்டற்ற தன்மை உண்டாக்குவது ஆகும். அத்தகைய நிலையை நாம் நமக்குள் அகக்கண்ணால் அடைய வேண்டி கற்பூர ஒளியை கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும். நமக்கு அஞ்ஞானத்தை ( அறியாமையை, இருளை) போக்கி மெய்ஞானத்தை ( ஞானஅறிவை, ஒளியை) அருளுவது ஆகும்.

*தேங்காய் :-*

ஆன்மாவின் ( உயிரின் ) மும்மலத்தை ( ஆணவம், கன்மம், மாயை ) நீக்கி பேரின்பம் பெறவேண்டும் என உணர்த்துதல் ஆகும். மேல்மட்டை - மாயா மலம், உரித்தெடுக்கும் நார் - கன்ம மலம், உள்ளே ஓடு - ஆணவ மலம், வெள்ளைப்பருப்பு - பேரின்பம் ( வீடுபேறு, முக்திபேறு ) ஆன்மா நீர் - ஆண்டவன் திருவருள் ஆகும்.

*பழம் :-*

சாதகனின்( அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டு மெய்ஞானத்தை அடைந்தவன்) நல்வினை பலன்களை குறிக்கும்.

*விபூதி ( திருநீறு) :-*

பசு சாணத்தை சாம்பலாக்கி செய்யப்படுவது ஆகும் உடல் சாம்பல் ( அ) மண் ஆகலாம் என்ற தத்துவத்தை குறிப்பது ஆகும். திருநீறு உடலில் உள்ள அசுத்தம் அகற்றி நோய் கிருமிகளை போக்கி பிணி அகற்றும் மருந்து ஆகும். பதி, பசு, பாசம், என்ற மூன்றாக கோடுகளை படித்த வண்ணம் சைவமும், நின்ற வண்ணம் வைணவமும் இடும் உடம்பில் திருநீறு இடும் இடங்கள் 16 ஆகும். திருநீறை பேணி அணிபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் மேலும் எல்லா நலன்களையும் தர வல்லது திருநீறு ஆகும்.

*குங்குமம் :-*

தேவியின் அருளையும், நிறத்தையும் குறிக்கும் நெற்றி புருவத்தின் மத்தியில் வைப்பார்கள் குங்குமம். இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி இரத்தக்கொதிப்பு, இரத்த அழுத்தம் குறைவு, நினைவாற்றல் அதிகரிக்கும், வெப்பத்தைக் குறைக்கும் தன்மை குங்குமத்திற்கு உள்ளது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
யயாதி யின் கதை

ஸ்ரீமத்பாகவத கதைகள்
(31)


யயாதி அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன்.
ravi said…
அசுர மன்னரின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதி-தேவயானி மூலம் யது, துர்வசு என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது. அசுர மன்னன் விருசபர்வன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியும் சர்மிஷ்டையையும் ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான்.
ravi said…
அசுர மன்னன் விருசபர்வன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியும் சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். சர்மிஷ்டைக்கு யயாதி மூலமாக துருயு, அனு மற்றும் புரு எனும் மூன்று குழந்தைகள் பிறக்கின்றனர். இச்செய்தி கேட்ட தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான சுக்கிராச்சாரியிடம் தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரி, தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான்.
ravi said…
கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார். பின்னர் யயாதி தனது முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் ஹஸ்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது நீங்கள் கால்நடை செல்வங்களுக்கே சொந்தகாரர்களாக இருக்க என்று சாபம் இட்டார்
ravi said…
பின்னர் மற்ற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்கு பிறந்த கடைசி மகனான புரு மட்டுமே. யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான்.
ravi said…
ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவியருடன் கானகம் ஏகி நற்தவம் செய்து தேவலோகம் அடைந்தான். தேவயானியின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள். ஸ்ரீகிருஷ்ணர் இந்த யாதவ குலத்திலே கண்ணன் பிறந்தான். சர்மிஷ்டையின் இளைய மகன் புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகும்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
கோ பரம புனிதமானதாக இருப்பதால் அதன் உடம்புக்குள்ளிருந்து எடுக்கிற கோரோசனையும் ஈச்வரார்ப்பணம் ஆவதற்குத் தக்கதாக இருக்கிறது.
நடராஜாவாக ஆடும் ஈச்வர ஸந்நிதியில் நந்திகேச்வரரே ம்ருதங்கம் வாசிப்பது பல பேருக்குத் தெரிந்த விஷயம். அதைவிடவும் விசேஷமாக ஒன்று. ’கோ ச்ருங்கம்’ என்கிற மாட்டுக் கொம்பின் வழியாகப் பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்வதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. ருத்ர-சமகங்கள் ஒரு ஆவ்ருத்தி சொல்கிற காலத்துக்கு கோ ச்ருங்க த்வாரம் வழியாக சிவலிங்கத்துக்கு க்ஷீராபிஷேகம் (பாலபிஷேகம்) செய்வது மஹா புண்யம். காளை மாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பவருக்கு கோச்ருங்கத்தால் பசும்பால் அபிஷேகம் பொருத்தந்தானே?

பெண் பசு பால் என்ற உணவை நேராகத் தருகிறது என்றால் காளை மாடுதான் முக்யமாக உழவில் உழைத்து பயிர் பச்சை மூலம் உணவு தருகிறது. இப்படி மாட்டு ஜாதியே மநுஷ்ய ஜாதியின் வயிற்றுக்குப் போடும் பரமோபகாரத்தைப் பண்ணுவதாக இருக்கிறது. அதனிடம் நாம் அளவில்லாத நன்றியும் பக்தியும் காட்ட வேண்டும். அதற்குச் சின்ன ஹானி செய்தாலும் தெய்வாபராதமாக, தெய்வக் குற்றமாக நினைக்க வேண்டும்.
கொம்பு வழியாக அபிஷேகம் என்பதோடு பஞ்சகவ்ய வஸ்துக்களான ஐந்துமே ஸ்வாமிக்கு அபிஷேகமாகின்றன. முடிவாக ஸகல மக்களும் ஒன்றுகூடி நடத்த வேண்டிய பணி என்னவென்றால் ஒரு பசு கூட வதைக்குப் போகாமல் வயிறு ரொம்பத் தீனி பெறவும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாஸம் பெறவும் செய்வதுதான். இதற்காகக் கறவை நின்றுபோன பசுக்களுக்கென்றே ஆங்காங்கு காப்பு விடுதிகளை மக்கள் அமைத்துச் செவ்வனே பரிபாலிக்க வேண்டும். கறவை நின்ற பசுக்களை வைத்துக் காப்பாற்ற ப்ரியப்படாமல் இறைச்சிக் கூடத்துக்கு விற்கவிருக்கும் எல்லா சொந்தக்காரர்களிடமிருந்தும் அவற்றை வாங்கி இந்த விடுதிகளில் வைத்துக் காப்பாற்ற வேண்டும். போதிய பண்பாடில்லாத சொந்தக்காரர்களாயிருந்தால் அவர்கள் மாம்ஸ விலையையும் தோல் விலையையும் நினைத்து பேரம் பண்ணக்கூடும். அவர்களுக்குப் பொறுமையாகவும் சாந்தமாகவும் இப்பணியிலுள்ள புண்யம், ஜீவகாருண்யம் இரண்டையும் எடுத்துச் சொல்லி நியாய விலைக்கோ, இலவசமாகவோ விற்கச் செய்ய வேண்டும். பல மாட்டுக்காரர்கள் நிஜமாகவே ஏழைகளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடமிருந்து இலவசமாக எதிர் பார்ப்பதற்கில்லைதான். எப்படியானாலும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்ற காரணத்துக்காக ஒரு பசுவைக்கூடக் கொலைக் கூடத்துக்குப் போகும்படிப் பண்ணிவிடக்கூடாது. ‘விலைக்கு மாடு வாங்குவது, விடுதி அமைப்பது, தீனி போடுவது என்றால் நிரம்பப் பணம் பிடிக்குமே! அதோடு, ‘மாடோ பாடோ’ என்று கிழமாடுகளைப் பராமரிப்பதென்றால் சரீர உழைப்பும் நிரம்பத் தேவைப்படுமே!’ என்றால், இந்தப் பணியின் முக்யத்வத்தைப் பார்க்கிறபோது பணமும் உழைப்பும் ஒரு பெரிசில்லை
ravi said…
ராமரும் கார்த்தியாயனரும்*

*கார்த்தியாயனர் சொன்ன கீதை*

கார்த்தியாயனர் ... வசிட்டரின் தலையான சிஷ்யர்
ravi said…
ராமா* ...

உன் கீர்த்தி கண்டு திளைக்கின்றேன் ..

என் மூர்த்தி சிறிது ஆனாலும்

மனதில் பாத்திக்கட்டி உனை நிறுத்தி வைத்தேன் ..

சூரியனுக்கே ஆர்த்தி எடுக்கிறேன் ..

கடலுக்கே நீரை வார்க்கின்றேன் ..

தேவர் கடைந்த அமுதம் தனை நிலவுக்கே ஊட்டுகின்றேன் ...

என் போல் *அறியாமை* கொண்டோர் இவ்வுலகில் நீ கண்டதுண்டோ ராமா ?

சிரித்தான் ராமன் ..

*ஐயனே*

உருவம் கொடுத்து உத்தமனை தொழுவார் *அறியாமை* கொண்டோரே ...

அருந்தும் உணவும் எள்ளுருண்டை என இறைவனுக்குப் படைப்போர் *முயலாமை* கொண்டவரே

கையளவில் கடவுளை அடக்கி அதிலே அண்டம் காண்பவர் *இயலாமை* கொண்டவரே

பல தெய்வங்கள் உண்டு என்றே பல சமயங்கள் தொழும் யாவரும் *கல்லாமை* கற்ற கயவர்களே

இறை தனை *எண்ணாமை* உண்ணும் உணவுகள் எல்லாம் வாசுகி கக்கிய விஷம் கொண்டவையே !!

எல்லாம் நானே என்றே எண்ணி வாழ்வோர் சாதித்தவர் எண்ணிக்கையில் ஒன்றாவர் அன்றோ ??

*ராமா* ஒன்று சொன்னாய் அதையும் நன்று சொன்னாய் .

அறியாமை கொண்டிருந்தேன் . ஹரி எடுத்த ஆமை அவதாரம் என் கண்கள் எனும் தாடகம் தன்னில் நீந்தி வரும் காலை தனில்🐢🐢🐢

என் அறியாமை அனைத்தும் நீங்கப்பெற்றேன் ...

*ராமா* உன் நாமம் சொல்வோர் உயர்ந்தோர் ..

*குருவே* ...

என் நாமம் என்று ஒன்றுமில்லை அனைத்தும் என் நாமங்களே ...

ஊர் அறியேன் உறவறியேன் உற்றார் பெற்றார் அறியேன் ...

பெயர் இல்லை எனக்கு ..

அன்பே சிவம் என்போர் எனை ..

சிவம் நீங்கள் செய்யும் தவம் கொண்டு காஞ்சி தனில் உதிக்கும் நாள் ஒன்று வரும்

அங்கே உருவாய் குருவாய் வருவேன் .. அருவாய் இருக்கும் நான் உருவாய் வந்தே உங்கள் நாமம் ஏற்பேன் ...

புன்னகைத்தான் ராமன் ... பூத்து குலுங்கியது வசந்தம் காஞ்சி தனில்
Ramesh said…
மஹா புண்ணியவான் சார் அவர். நேரே அனுபவித்திருக்கிறார்.இதை படித்து அனுபவிக்க நாமும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். 🙏🙏
Ramesh said…
அறியாமை
முயலாமை
இயலாமை
கல்லாமை
எண்ணாமை
மொத்தத்தில் அஞ்சாமை (அஞ்சு+ஆமை)
அருமை..
ravi said…
சில பொக்கிஷமான நூல்களில் இருந்து.....
இந்த கால கட்டத்தில் யாவரும் சொல்லவேண்டிய மிருத்யுஞ்ஜய மந்திரம் பற்றிய அபூர்வ விளக்கத்தை இன்று பகிர்கிறேன்.....

மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் சிலர் விபத்துகாரணமாகவோ அல்லது நோய் காரணமாகவோ விதி முடிவதற்கு முன்பே மரணம் அடைவதுண்டு. இதை துர் மரணம் என்பர். முக்கண்ணனை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு துர் மரணம் நேராது. சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் மரணம் அண்டாது. மரணப்படுக்கையில் இருப்பவர்களை கூட காக்கும் சக்தி பெற்றது மிருத்யுஞ்ஜய மந்திரம்.

சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் அவனை மரணம் அண்டாது. மரணப்படுக்கையில் இருப்பவர்களை கூட காக்கும் சக்தி பெற்றது மிருத்யுஞ்ஜய மந்திரம் என்று இந்த மந்திரத்தின் பெருமையை மார்க்கண்டேய மஹரிஷி கூறுகிறார்.

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் :
------------------------------------------------------

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

இந்த கால கட்டத்தில் அனைவரும் சிவ பரம்பொருளை நினைத்து இந்த மிருத்யஞ்சய மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள்.... மாபெரும் அபத்துகளில் இருந்து உங்களை காக்கும் மருந்து இது....
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 284* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
[15/07, 07:59] Jayaraman Ravilumar: *97 ஸமயாந்தஸ்த்தா.*
[15/07, 08:03] Jayaraman Ravilumar: பரம் பொருளிடமிருந்து வேறுபட்டு தோற்றம் தந்தாலும், பரம்பொருளோடு ஒன்றுபட்டு இருப்பவளான அம்பாளுக்கு *ஸமயா* என்றே திருநாமம்.

ஸமய வடிவமாக இருப்பவளே *ஸமயாந்தஸ்த்தா* (ஸமய + அந்த + ஸ்தா; 'அந்த' என்றால் வடிவம்).

ஆத்மாவோடு ஒருமுகப்படுத்தி ஆந்தரிகமாக வழிபடுவது ஸமய முறை.

அதற்கான தெய்வமாக இருப்பவள் *ஸமயாந்தஸ்த்தா* .

*ஸமயாசார தத் பரா -*

ஸமயாசார முறையின் உண்மைப் பொருளாக இருப்பவள்.🪷🪷🪷
[15/07, 08:03] Jayaraman Ravilumar: இனி வருகிற திருநாமங்கள், ஆதாரச் சக்கரங்களில் அம்பாள் எவ்வாறெல்லாம் நிலைப்
பட்டிருக்கிறாள் என்று சொல்கிற நாமங்கள்.🙏🙏🙏
ravi said…
[15/07, 07:52] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 283* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[15/07, 07:52] Jayaraman Ravilumar: *74 மார்பில் விளங்கும் முத்துமாலை*

*நற்கீர்த்தி*

வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ கும்ப ப்ரக்ருதிபி:

ஸமாரப்தாம் முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம்

குசாபோகோ பிம்பாதர ருசிபி ரந்த: ஶபலிதாம்

ப்ரதாப வ்யாமிஶ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே 74
[15/07, 07:54] Jayaraman Ravilumar: தாயே!

உன்னுடைய ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசத்தில் கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உண்டான முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஹாரமானது விளங்குகிறது.

அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது.

இந்த ஹாரமானது பரமசிவனுடைய பராக்ரமத்தை/கீர்த்தியை சொல்வதாக இருக்கிறது.🙏🙏🙏
[15/07, 07:55] Jayaraman Ravilumar: நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான்.

ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர்.

இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல

நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.

கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது.

அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.🙏🙏🙏
ravi said…
வாயு வாகி வெளியை அளந்தனை,

வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,

தேயு வாகி ஒளிருள் செய்குவை,

செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;

பாயு மாயிரஞ் சக்தி
களாகியே

பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;

சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,
நிற்பன

தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 6*🦚🦚🦚
ravi said…
வடிவு கண்டுகொண்ட பெண்ணை மற்றொருவர் நத்தினால்

விடுவனோ லவளையின்னம்

வெட்டவேணு மென்பனே

நடுவன் வந்தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்

சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைகொடுப்பரே. 6🙏🙏🙏
ravi said…
அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் . முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். .

அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய்?

மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா?

அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா

ஆகவே அதனை அந்த அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து அவன், அந்த தோட்டி, அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ சொல்லுவார்கள். .

அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையே?

அது ஏன் என்று யோசியுங்கள்

அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். .

அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 6* 🦚🐓🙏

அடல் அருணைத் திருக் கோபுரத்தே

அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்;

வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன்,

சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!🙏
ravi said…
[15/07, 17:42] Jayaraman Ravilumar: அப்போது நாரதர் சொல்லி வந்தார் விநாயகர்!

காவிரியை விரித்து விட்டார்!!
சிறு பிள்ளையாய் அகத்தியர் முன் தோன்றி ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்!

பிள்ளையின் தலையில் நச்-னு ஒரே கொட்டு...
கோபம் மேலும் வீங்க வீங்க,
குறுமுனி கையை ஓங்க ஓங்க...

அச்சோ.....
*ஓங்க ஓங்க நிற்பது ஓங்காரப் பொருள் விநாயகன் அல்லவா!*

அகத்தியர் அஞ்சி நடுங்குகிறார்!

அவனைக் குட்டத் தூக்கிய கையைத், தன் தலையிலேயே வைத்துத் தானே குட்டிக் கொண்டார்!

* அடுத்தவனைக் குட்ட எண்ணும் முன்னர், தன் தவற்றை முதலில் உணர வேண்டும்!

* ஊரைத் திருத்த எண்ணும் முன்னர், தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்!

அதான் தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர்! -

தோன்றியது பிள்ளையார் குட்டு!
[15/07, 17:44] Jayaraman Ravilumar: இனி மேல் பிள்ளையார் முன் குட்டிக் கொள்ளும் போது, இதை நினைவில் வையுங்கள்!

முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)

ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற், பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!

*தட-பட* எனப் படு குட்டுடன், முதலில் நம் தலையில் குட்டிக் கொள்வோம்!

அருணகிரி முருகனுக்கு அரோகரா!!!
ravi said…
[15/07, 17:42] Jayaraman Ravilumar: அப்போது நாரதர் சொல்லி வந்தார் விநாயகர்!

காவிரியை விரித்து விட்டார்!!
சிறு பிள்ளையாய் அகத்தியர் முன் தோன்றி ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்!

பிள்ளையின் தலையில் நச்-னு ஒரே கொட்டு...
கோபம் மேலும் வீங்க வீங்க,
குறுமுனி கையை ஓங்க ஓங்க...

அச்சோ.....
*ஓங்க ஓங்க நிற்பது ஓங்காரப் பொருள் விநாயகன் அல்லவா!*

அகத்தியர் அஞ்சி நடுங்குகிறார்!

அவனைக் குட்டத் தூக்கிய கையைத், தன் தலையிலேயே வைத்துத் தானே குட்டிக் கொண்டார்!

* அடுத்தவனைக் குட்ட எண்ணும் முன்னர், தன் தவற்றை முதலில் உணர வேண்டும்!

* ஊரைத் திருத்த எண்ணும் முன்னர், தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்!

அதான் தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர்! -

தோன்றியது பிள்ளையார் குட்டு!
[15/07, 17:44] Jayaraman Ravilumar: இனி மேல் பிள்ளையார் முன் குட்டிக் கொள்ளும் போது, இதை நினைவில் வையுங்கள்!

முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)

ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற், பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!

*தட-பட* எனப் படு குட்டுடன், முதலில் நம் தலையில் குட்டிக் கொள்வோம்!

அருணகிரி முருகனுக்கு அரோகரா!!!
ravi said…
[15/07, 17:31] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 280* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*74. மதுஸூதன நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ *மதுஸூதன* :||8
[15/07, 17:33] Jayaraman Ravilumar: *74. மதுசூதனாய நமஹ (Madhusoodanaaya namaha)*

திருமால் தனது உந்தித் தாமரையில் பிரம்ம தேவரைப் படைத்து அவரைப் படைப்புக் கடவுளாக நியமித்து வேதங்களையும் உபதேசித்தார்.

வேதம் கற்றதாலும், படைப்புக் கடவுள் என்ற பதவி பெற்றதாலும் பிரம்மாவுக்கு ஆணவம் உண்டானது.

அந்த ஆணவத்தைப் போக்க விழைந்த திருமால் ஒரு லீலை புரிந்தார்.

திருமாலின் காதுக் குரும்பையிலிருந்து (ear wax)
இரண்டு அசுரர்கள் தோன்றினார்கள்.

இருவரும் திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்த பிரம்மாவிடம் வந்தார்கள்.

முதல் அசுரனைத் தொட்டுப் பார்த்த பிரம்மா, அவன் மிருதுவாக இருப்பதைக் கண்டு, ‘ *மது* ’ என்று அவனை அழைத்தார்.

அடுத்த அசுரன் மிகவும் கடினமானவனாகவும், கரடுமுரடாகவும் இருப்பதைக் கண்டு, ‘ *கைடபன்* ’ என்று அவனை அழைத்தார்.
ravi said…
காங்கோ நதி*

காங்கோ நதியின் முன்னாள் பெயர் *ஜைர்* ,

ஆப்பிரிக்காவின் ஆழமான மற்றும் நீளமான நதியாகும். இது 2920 மைல் நீளம் கொண்டது,

இது உலகின் 9 வது பெரிய நதியாகும்.

இதன் வடிகால் படுகை 4014500 சதுர கிலோமீட்டர்கள்.
ravi said…
காங்கோ நதியே காலம் புரண்டாலும் யுகம் மாறினாலும் நீ கன்னியாய் இருப்பதன் அதிசயம் என்ன ? உன் கனவுகள் இன்னும் பிறந்த வண்ணம் இருப்பதன் ஆச்சரியம் என்ன ?

சிரித்தாள் அன்னை ...

பரமன் தன்னை மனதில் காலண்டர் போல் மாட்டிக்கொண்டால் என்றும் இளமை இனிமை ... இதில் ஏது வறுமை ?

உண்மை தாயே ... உள்ளன்புடன் ஒருவர்கேனும் தினம் உதவி செய்தால் உயரலாம் வாழ்வில் ..

சுயநலம் மட்டுமே இருந்தால் மடமை ...

சுற்றி இருப்போர் வாழ வேண்டி தினம் பூஜிப்பதே ஒருவர் கடமை ..

நன்று சொன்னாய் ... பிறர் வாழ பிறவி எடுப்போர் காணார் ஒரு குறையும் வாழ்வு தனில் .

தான் வாழ பிறரை கொல்வோர் தவிப்பர் என்றும் தண்ணீரும் அருந்த முடியாமல் ..

வெண்ணீர் அணிந்தவனும் பன்னீர் அலைகள் தன்னில் அமர்ந்தே பிறர் கண்ணீர் துடைப்பவனும் சொன்ன கீதை இதுவே

காங்கோ சொல்லி அள்ளி சென்றால் என் மனத்தை ...

தொலைத்த இதயம் மலைத்துப்போனது மாதவம் புரிந்த மங்கையிடம் இன்றே
ravi said…
How can I please Lord Shiva?
Please daily recite the below prayers known as Sivastakam (eight verses glorifying Lord Shiva). Please recite this sincerely. By this, you can quickly please Lord Shiva and obtain his special mercy.

namo namas te tri-daśeśvarāya bhūtādi-nāthāya mrḍāya nityam
gaṅgā-taraṅgotthita-bāla-candra cūḍāya gaurī-nayanotsavāya || 1 ||

“I perpetually offer obeisances unto you, the lord of the thirty primal devas, who is the original father of created beings, whose character is gracious, upon whose head, which is crested by the sickle moon, the Gaṅgā springs, and who is a festival for the eyes of Gaurī, the fair goddess.”
ravi said…
su-tapta-cāmīkara-candra-nīla padma-pravālāmbuda-kānti-vastraiḥ
sunṛtya-raṅgeṣṭa-vara-pradāya kaivalya-nāthāya vṛṣa-dhvajāya || 2 ||

“I offer my obeisances to you who resembles a moon of molten gold, who is dressed in garments colored like a group of budding blue lotuses or lustrous rainclouds, who bestows the most desirable boon to your devotees by your delightful dancing, who offers shelter to those who seek to become one with the transcendental effulgence of Godhead, and whose flag bears the image of the bull.”

sudhāṁśu-sūryāgni-vilocanena tamo-bhide te jagataḥ śivāya
sahasra-śubhrāṁśu-sahasra-raśmi sahasra-sañjittvara-tejase ‘stu || 3 ||

“I offer my obeisances to you who dispels darkness with your three eyes—the moon, sun and fire. Thus you cause auspiciousness for all the living entities of the universe, and your potency easily defeats thousands of moons and suns.”

nāgeśa-ratnojjvala-vigrahāya śārddūla-carmāṁśuka-divya-tejase
sahasra-patropari saṁsthitāya varāṅgadāmukta-bhuja-dvayāya || 4 ||

“I offer my obeisances to you, whose form is brilliantly illuminated by the jewels of Ananta-deva, the king of snakes, who possesses divine potencies and is clothed in a tiger skin, who stands in the midst of a thousand petalled lotus, and whose two arms are adorned by lustrous bangles.”
ravi said…
su-nūpurārañjita-pāda-padma kṣarat-sudhā-bhṛtya-sukha-pradāya
vicitra-ratnaugha-vibhūṣitāya premānam evādya harau vidhehi || 5 ||

“I offer my obeisances to you who bestows happiness to your servitors as you pour upon them the liquid nectar flowing from your reddish lotus feet, upon which charming anklebells ring. Obeisances unto you who is adorned by an abundance of gems. Please endow Me today with pure love for Śrī Hari.”

śrī-rāma govinda mukunda śaure śrī-kṛṣṇa nārāyaṇa vāsudeva
ity ādi-nāmāmṛta-pāna-matta bhṛṅgādhipāyākhila-duḥkha-hantre || 6 ||

“O Śrī Rāma! O Govinda! O Mukunda! O Śauri! O Śrī Kṛṣṇa! O Nārāyaṇa! O Vāsudeva!’ I offer my obeisances unto you, Śrī Śiva, who is the monarch ruling over all the bee-like devotees who are mad to drink the nectar of these and other innumerable names of Hari, and who thus destroys all grief.”

śrī-nāradādyaiḥ satataṁ sugopya jijñāsitāyāśu vara-pradāya
tebhyo harer bhakti-sukha-pradāya śivāya sarvva-gurave namaḥ || 7 ||

“I offer my respectful obeisances to you, Śrī Śiva, who is forever inquired of confidentially by Śrī Nārada and other great sages, who very easily bestows boons on them, who bestows the happiness of Hari-bhakti to those who seek boons from you, who thereby creates auspiciousness and is thus the guru of everyone.”
ravi said…
śrī-gaurī-netrotsava-maṅgalāya tat-prāṇa-nāthāya rasa-pradāya
sadā samutkaṇṭha-govinda-līlā
gāna-pravīṇāya namo ‘stu tubhyam || 8 ||

“I offer my obeisances to you who is a festival of auspiciousness for the eyes of Gaurī, who is the lord of her life-energy, who bestows rasa and is expert in forever singing songs with eagerness of the pastimes of Govinda.”

Above eight verses were composed by Chaitanya Mahaprabhu and recorded in Murari Gupta’s Sri Caitanya Carita Mahakavya.
ravi said…
50

வ்ரீடனு வ்ருத்தி ரமணீக்ருத ஸாஹசர்யா
ஶைவாலிதாம் களருசா ஶஶிஶேகரஸ்ய |
காமாக்ஷி காந்திஸரஸீம் த்வதபாங்கலக்ஷ்மீ:
மந்தம் ஸமாஶ்ரயதி மஜ்ஜன கேலனாய ||50||

ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷ லக்ஷ்மியானவள், வெட்கம் என்னும் தோழி கூடியவளாய், ஜலக்கிரீடையை உத்தேசித்து, சந்திர சேகரருடைய கழுத்தின் சோபையால் பாசி படர்ந்தது போலுள்ள காந்தியாகிற குளத்தை மெதுவாக அடைகிறாள்! சிவனின் முக காந்தியாகிற ஸரஸுக்கு கழுத்திலிருக்கும் கருப்பானது பாசி படர்ந்தது போலிருப்பதாகச் சொல்லப்பட்டது.
ravi said…
🌹🌺 'The temple whose owner, seated in Padmasana posture, still looks alive today like Thirumeni in meditation - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 "Ramanujar lived for 120 years and finally his body was 'interred' in Srirangam Ranganatha temple. It is called 'Thanana Thirumeni'.

🌺 Mahan Sri Ramanuja, who lived forever, passed away at the age of 120 in Srirangam. It was 1137 AD. In the year of his birth, in the year of his birth, in the month of Varapirai Dasami, on Saturday noon in the Tiruvadhirai Nakshatra, he ascended at the Jeyar Math.

🌺 When the Lord ascended, the asariri sounded saying, Dharmo Nashta: (Dharma has suffered loss).

🌺 Arangan sent the undressed Peethagawada, the wrapped flowers and the bowl of oil to Jeyar Math through his disciple Uttama Nambi.

🌺 Uttama Nambi consoled the disciples in Jeeyar Math and rubbed the oil given by Namperumal on the Thirumudi of Emperumanar, bathed the Thirumeni and prepared it for Brahmamedha Samskarat.

🌺It is believed that when the final procession started, a bell was sounded from Ranganatha temple. 'Ramanujan is a man' and 'Ramanujan is a treasure', the voice said. Therefore, it was accepted as Perumal's command to enshrine Ramanuja's body in the Arangan temple complex, as per the samskara rules for monks.

🌺Generally, Vaishnava rituals do not involve cremation of departed saints.

🌺 Instead, their bodies will be schooled. That is, the Samadhi is kept in a sitting position and the Samadhi is closed according to the proper procedures. Similarly, Ramanuja's body was enshrined in the Srirangam temple complex, in a place known as Vasantha Mandapam.

🌺There is now a shrine of the owner known as Ramanuja. There, seated in the Padmasana position, it still looks vividly like Thirumeni in meditation.

🌺 Ramanuja's eyes are open and his toes, nails and hands are hairy.

🌺His body is covered with a mixture prepared with green camphor and saffron.

🌺The body of Ramanuja, who passed away in 1137 AD, was preserved in the Srirangam Vasantha Mandapam as a form of sanctification, after being embalmed with various potions and suranas. Almost, for more than 800 years, based on yogic heat, the body remains tight and stable.

🌺It is on that spot that Ramanuja's sanctum, which is now called Emperumanar, is located in Srirangam.

🌺 It is the opinion of many researchers that his mani is still inside as it was placed, and the current form above it is 'Tanaana Mani'. Thirumanjanam i.e. no abhishekam is performed for that Thirumeni.

🌺Only a decoction of green camphor and saffron is extracted twice a year.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 ' *உடையவர், பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தரும் கோயில் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹"ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது.

🌺நிறைவாழ்வு வாழ்ந்த மகான் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் தம் 120 ஆம் வயதில் பரமபதித்தார். அது கிபி., 1137ம் ஆண்டு. தாம் பிறந்த பிங்கள வருடம் மாசி மாத வளர்பிறை தசமியில்,திருவாதிரை நக்ஷத்திரத்தில் சனிக்கிழமை நண்பகல் ஜீயர் மடத்தில் அவர் பரமபதித்தார்.

🌺எம்பெருமானார் பரமபதித்த வேளையில், தர்மோ நஷ்ட: (தர்மத்திற்கு நஷ்டம் வந்தது) என்று அசரீரி ஒலித்ததாம்.

🌺அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடை, சூடிக்களைந்த துழாய் மலர், எண்ணெய்க் கிண்ணம் என சீடராகிய உத்தம நம்பியின் மூலம் ஜீயர் மடத்துக்கு அனுப்பி வைத்தாராம்.

🌺உத்தம நம்பி ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி நம்பெருமாள் அளித்த எண்ணெயை எம்பெருமானாரின் திருமுடியில் தேய்த்து, திருமேனியை நீராட்டி, பிரம்மமேத சம்ஸ்காரத்துக்கு தயார் படுத்தினார்.

🌺இறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக்குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப் படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

🌺பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை.

🌺மாறாக, அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது.

🌺அங்கே தற்போது ராமானுஜர் என்று அழைக்கப்படும் உடையவரின் சன்னிதி உள்ளது. அங்கே, பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தருகிறது.

🌺ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம்.

🌺அவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது.

🌺1137-ம் ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது.

🌺அந்த இடத்தின் மீதுதான் தற்போது எம்பெருமானார் என்று சொல்லப்படும் ராமானுஜரின் சன்னிதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது.

🌺இப்போதும் அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை.

🌺வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப் பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*விவேகசிந்தாமணி*

*பாடலும் பொருளும்*

*11: விலகியே இருத்தல் நலம்*

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை, மீளவே கொடுக்கி னாலே வெய்யுறக் கொட்ட லேபோல், ஏளனம் பேசித் தீங்குற் றிருப்பதை எதிர்கண் டாலும், கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.

*பொருள்*
தேளானது தீயில் விழுந்த போது அதை இறந்து விடக்கூடாது என்று காப்பாற்றி எடுத்தவரை அது கொடுக்கினாலே கொட்டுவது போல, கேலி பேசியும் கலகம் செய்தும் வாழ்கின்ற கோணல் புத்தி உள்ள ஒருவருக்குச் செய்கின்ற நன்மையானது செய்பவருக்கே துன்பமாக ஆகும்.

(ஆகவே துஷ்டனைக் கண்டால் தூர விலகு.)

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்* *16/07/2022*
🌹🌻🙏🏻🌹🌻🙏🏻🌻🌹
ravi said…
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெரும் சங்கே!

எம்பெருமானை எப்பொழுதும் அனுபவிக்கும் பெருஞ்செல்வத்தைப் பெற்றுள்ள ஸ்ரீபாஞ்சஜந்யமே! பதினாறாயிரம் தேவிமார்கள் கண்ணன் எம்பெருமானின் வாகம்ருதத்தைப் பருகலாம் என்று பார்த்திருக்க, எம்பெருமானின் அடியார்கள் எல்லோரும் பகிர்ந்துண்ணவேண்டிய அந்த எம்பெருமானின் வாகம்ருதத்தை, நீ ஒருவனே ஆக்ரமித்துத் தேனை உண்பதுபோல் உண்டால் மற்ற பெண்கள் உன்னுடன் வாதம் செய்ய மாட்டார்களோ?
ravi said…
ராமரும் கவுதமரும்*

*கவுதமர் சொன்ன கீதை* 💐💐💐
ravi said…
ராமா*

கல்லாய் மனதை ஆக்கியே கல்லாய் சமைத்தேன் என் துணையை.

புல்லாய் புழுவாய் பிறக்கினும்

உன் அருள் உண்டு என்றால்

எண்ணற்ற பிறவிகள் என் செய்யும் ராமா ?

உத்தமி
அவள்

உள்ளத்தால் எண்ணத்தால் தன்னைத்தான் இழந்து விட்டாள் ... அமரர்தங்கோன் செய்த சூழ்ச்சியால்

உன்னைத்தான் எண்ணித்தான் கல்லாய் வாழ்ந்தாள்

கனியும் காலமதில் காட்சி தந்தாய் ..

கற்பகமே மன்னித்தருள் 💐

மாதவம் செய்தும் உன் குணம் இன்றி போனேன் ..

மன்னிக்கும் குணம் ஏனோ எனை தவிக்க விட்டு மறைந்து போனதே ...

குருவே சந்தேகம் எனும் பூதம் தலை விரித்து ஆடும் வேலைதனில்
தேகம் அது பந்தாகும்

நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவைக்கும்

தசையினைத் தீச்சுடினும் – உங்கள் துணை தனை இழவேள்

நசையரு மனம் கேளுங்கள் –

நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேளுங்கள்

அசைவறு மதி கேளுங்கள்

இவை அருள்வதில் எனக்கேதும் தடை இல்லை

*ராமா*

உன் நாமம் சொல்லும் அருள் வேண்டும் ...

ஒரு நொடி மறந்தாலும் நானும் இவள் போல் கல்லாக வேண்டும் ..

இந்த வரம் ஒன்றே வேண்டும்

ஒரு வரம் கேட்டே அனைத்தும் அடைந்தீர்கள் ..

காஞ்சியில் முழுமை தனை காண்பீர்கள்

முதுமையிலும் இளமை கொண்டவன்

இளமையிலும் முதுமை கண்டவன்

அவனை நினைத்தோர் சாதித்தோர் என்றுமே

உண்மை *ராமா*

உரைப்பேன் உன் நாமம் *ராமா* என்றே

அதிலே வாழும் சுவாமி நாதன் வாழ்த்தட்டும் மனம் திருந்துவோர் அனைவரையும் ...
ravi said…
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்

என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லரோ

என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே. 7

ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 7*🦚🦚🦚
ravi said…
Today Sankatahara Chaturthi, the day of Maha Ganapathy, remover of all obstacles of his devotees. On this day let me do prarthana at his feet to clear all hurdles in your life path, protect and bless you with a hassle free & peaceful life. May his benevolent grace be ever upon you and your family.
ravi said…
ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹீ
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.
வக்ர துண்ட மஹாகாய
சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா
சர்வ கார்யேஷு சர்வதா.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 285* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*சமயா* = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும்

*ஆசார* = மரபாச்சார பழக்க வழக்கங்கள் தத்பரா = பிடித்தமான

*98 ஸமயாசார தத்பரா* =

சமயாச்சார வழக்க முறைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபாடு உடையவள்

ஸமய வடிவமாக இருப்பவளே *ஸமயாந்தஸ்த்தா*

(ஸமய + அந்த + ஸ்தா; 'அந்த' என்றால் வடிவம்).

ஆத்மாவோடு ஒருமுகப்படுத்தி ஆந்தரிகமாக வழிபடுவது ஸமய முறை.

அதற்கான தெய்வமாக இருப்பவள் ஸமயாந்தஸ்த்தா.

*ஸமயாசார தத் பரா -*

ஸமயாசார முறையின் உண்மைப் பொருளாக இருப்பவள்.👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 284* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*74 மார்பில் விளங்கும் முத்துமாலை*

*நற்கீர்த்தி*

வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ கும்ப ப்ரக்ருதிபி:

ஸமாரப்தாம் முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம்

குசாபோகோ பிம்பாதர ருசிபி ரந்த: ஶபலிதாம்

ப்ரதாப வ்யாமிஶ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே 74
ravi said…
கொற்ற வாரண முகமகன் பொரு
குஞ்சரானன நிருதனார்

இற்ற கோடு உதிர் ஆர மாலிகை
இதழ் மணி ப்ரபை தழையவே

பெற்ற பாக பினாகபாணி ப்ரதாப
மோடு அணை புகழ் எனா

உற்றது ஆயினும் உனது பொற்றனம் (பொன் தனம்)

உரை படா நிறை செல்வியே🙏
ravi said…
சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள்.

அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம்.

இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர்என்று சொல்கிறார் தேதியூரார்.👍👍👍

கொற்ற வாரண முகமகன் பொரு
குஞ்சரானன நிருதனார்

இற்ற கோடு உதிர் ஆர மாலிகை
இதழ் மணி ப்ரபை தழையவே

பெற்ற பாக பினாகபாணி ப்ரதாப
மோடு அணை புகழ் எனா

உற்றது ஆயினும் உனது பொற்றனம் (பொன் தனம்)

உரை படா நிறை செல்வியே🙏
ravi said…
நிலத்தின் கீழ்
பல்லுலோகங்கள் ஆயினை,

நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;

தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;

குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;

புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,

அன்னே!
போற்றி!போற்றி!நினதருள் போற்றியே!
ravi said…
[16/07, 16:51] Jayaraman Ravilumar: *கந்தர் அலங்காரம் 7* 🐓🦚🙏
[16/07, 16:53] Jayaraman Ravilumar: *அலங்காரம்-02:*

சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?
[16/07, 16:54] Jayaraman Ravilumar: பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை,

ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா,

செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,

குமாரன் கிருபாகரனே!🙏
[16/07, 16:57] Jayaraman Ravilumar: அலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க?

உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன்!

அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்? :)

ஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர்,

நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்!

சேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா?

*இது கந்தர் அலங்காரம்!*

கந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்!

என்ன அலங்காரம்? = *பணிவலங்காரம்* !!!
பணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்!

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து - என்கிறார் ஐயன்!

பணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அலங்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே!

*பணிவு அலங்காரம் எப்படி வரும்?*

நாளை பார்ப்போம் 🙏
ravi said…
[16/07, 16:45] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 282*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
[16/07, 16:47] Jayaraman Ravilumar: आदिक्षन्मम गुरुराडादिक्षान्ताक्षरात्मिकां विद्याम् ।
स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् ॥60॥

ஆதி3க்ஷன்மம கு3ருராடா3தி3க்ஷாந்தாக்ஷராத்மிகாம் வித்3யாம் |
ஸ்வாதி3ஷ்ட2சாபத3ண்டாம் நேதி3ஷ்டா2மேவ காமபீட2க3தாம் ||60||

(மூகபஞ்ச சதீ ஆர்யா ஶதகம்)

அப்படீன்னு ‘ஸமீபம்’ங்கிறதோட superlative ‘ *நேதி3ஷ்டம்* ’- ரொம்ப ரொம்ப நெருக்கத்தில் உள்ளுக்குள்ளேயே காமாக்ஷி இருக்கான்னு காமிச்சுக் கொடுப்பார்.
[16/07, 16:48] Jayaraman Ravilumar: नन्दति मम हृदि काचन मन्दिरयन्ती निरन्तरं काञ्चीम् ।
इन्दुरविमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी ॥52॥

நந்த³தி மம ஹ்ருʼதி³ காசன மந்தி³ரயந்தீ நிரந்தரம் காஞ்சீம் । இந்து³ரவிமண்ட³லகுசா பி³ந்து³வியன்னாத³பரிணதா தருணீ ॥ 52 ॥

(மூகபஞ்ச சதீ ஆர்யா ஶதகம்)

‘ *நந்த³தி மம ஹ்ருʼதி³ காசன மந்தி³ரயந்தீ நிரந்தரம் காஞ்சீம்’*

– காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் நிரந்தரமாக காமாக்ஷி நித்யவாசம் பண்றாள்னு புராணங்கள்ல சொல்றது நேரப் பார்க்கறோம்.

ஆனா, மூககவி சொல்றார், ‘ *நந்த³தி மம ஹ்ருʼதி³’* –

என் மனசுல அவ நிரந்தரமா சந்தோஷமா இருக்கா அப்படீங்கறார்.👍👍👍
ravi said…
[16/07, 16:41] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 281* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*74. மதுஸூதன நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ *மதுஸூதன* :||8
[16/07, 16:43] Jayaraman Ravilumar: இருவரோடும் பிரம்மா விளையாடத் தொடங்கினார்.

அப்போது இருவரும் பிரம்மாவிடமிருந்த வேதங்களைத் திருடிச் சென்றார்கள்.

வேதம் பறிபோனதை உணர்ந்த பிரம்மா, அவற்றை மீட்டுத் தரும்படி திருமாலிடம் வேண்டினார்.
“என்னைப் படைத்தவனான நீ இருப்பதை மறந்து விட்டு, நான் வேதங்களைக் கற்றவன், நானே படைப்புக் கடவுள் என்ற
கர்வத்துடன் இருந்து விட்டேன்.

இப்போது இவர்களின் மூலம் நீ எனக்கு நல்ல பாடம் புகட்டி விட்டாய்.

நீ தான் இவர்களிடமிருந்து வேதத்தை மீட்டுத் தந்தருள வேண்டும்!

உன்னைத் தவிர வேறு புகலிடம் ஏதும் அடியேனுக்கு இல்லை!” என்று
பிரார்த்தித்தார் பிரம்மா.🪷🪷🪷
ravi said…
51

காஷாயமம்ஶுகமிவ ப்ரகடம் ததானோ
மாணிக்ய குண்டலருசிம் மமதாவிரோதீ |
ஶ்ருத்யந்த ஸீமனி ரத: ஸுதராம் சகாஸ்தி
காமாக்ஷி தாவக கடாக்ஷ யதீஶ்வரோ‌ऽஸௌ ||51||

ஹே காமாக்ஷி! உன்னுடைய கடாக்ஷமாகிற யதிச்ரேஷ்டரானவர் உனது ரத்ந குண்டலங்களுடைய காந்தியை காவியுடை போல் தரித்துக்கொண்டு , மமதை என்ற எண்ணத்திற்கு எதிரியாக இருந்துகொண்டு சுருதியந்தமென்கிற வேதாந்தத்தின் எல்லையில்( காதுகளின் எல்லையில் ) கருத்தினில் ஈடுபட்டவராக மிகவும் விளங்குகிறார்!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும். ஒருத்தரின் கிட்டேயே கோபம் நெருங்க முடியாது; மஹா கோபிஷ்டர்கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகிவிடுவாரென்றால் அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம் படைத்தவராகத்தானே இருக்க வேண்டும்? இப்படி ஒரு உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது. நம் எல்லோரிடமும், ஈ எறும்பிலிருந்து ஆரம்பித்து அத்தனை ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடிய ஒருவர் யார்? ஸாக்ஷாத் அம்பாள் தான். இத்தனை ஜீவராசிகளுக்கும் தாயாக இருக்கப்பட்ட அகிலாண்ட ஜனனி அவள்தானே? அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேச்வரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) இருக்கப்பட்ட அகிலாண்டேச்வரி கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்ரக் கோலமாக ஆகிவிட்டாள். ஸகல சக்தியும் அவள்தானாகையால் அன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள்.

கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆசார்யாள் அங்கே வந்தார். பரமேச்வராவதாரமானதால் அவரால் உக்ரகோலத்திலிருக்கிற அம்பாளிடமும் போகமுடியும். ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிள்ளையாரின் அன்பு மனப்பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க நினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோவில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை ப்ரதிஷ்டை பண்ணிவிட்டார்!

அவ்வளவுதான்! செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்ரமும் போன இடம் தெரியாமல் போய்விட்டது! அநேக விநாயக மூர்த்தங்களில் ஒன்றுக்கு ‘செல்லப் பிள்ளையார்’ என்றே பெயர்! அப்படிப்பட்ட பிள்ளையின் அன்பு மன விசேஷத்தால் அம்பாளுக்கும் கோபம் போய் வாத்ஸல்யம் பிறந்தது.

அப்போது அம்பாளை விட்டுப் போயிருந்த கோபம் மறுபடியும் ஒருபோதும் அவளிடம் திரும்பிவிடக் கூடாதென்று ஆசார்யாள் நினைத்தார். அதனால் அந்த உக்ர கலைகளை அப்படியே யந்த்ராகாரமான இரண்டு தாடங்கங்களில் ஆகர்ஷித்து சமனம் செய்தார் (அடக்கினார்). அந்தத் தாடங்கங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்தார்.

தாடங்கம் ஸெளமங்கல்யத்துக்கு (ஸுமங்கலித் தன்மைக்கு)ச் சின்னம். அமிருதத்தைச் சாப்பிட்டவர்களாயிருந்தபோதிலும் மற்ற தேவர்களெல்லாம் அழிவடைகிற மஹாப்ரளயத்திலுங்கூட, அவர்கள் அமிருதம் சாப்பிட்ட போது தான் ஒருத்தன் மட்டும் காலகூட விஷத்தைச் சாப்பிட்டானே, அந்தப் பரமேச்வரன் மட்டும் எப்படி அழியாமலிருக்கிறான் என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.* உடனே அதற்கு ரத்னச் சுருக்கமாகப் பதிலும் சொல்லிவிடுகிறார். “தவ ஜநநி தாடங்க மஹிமா: அம்மா! இது உன் தாடங்கத்தின் மகிமைதான்” என்கிறார்.

இப்படி அவளுடைய பாதிவ்ரத்ய (கற்பு நெறி) ப் பெருமைக்குரிய தாடங்கத்தில் உத்ரகலையை ஆகர்ஷித்ததோடு, அதற்கு முந்தியே அவளுடைய வாத்ஸல்யப் பெருமையைக் காட்டுவதாக ப்ரிய வத்ஸனான பிள்ளையாரை அவளுக்கு முன்னால் ப்ரதிஷ்டை பண்ணிவிட்டார்.

ஜம்புகேச்வரம், திரு ஆனைக்கா என்ற இரண்டு பேர்களிலுமே பிள்ளையார் ஸம்பந்தமிருக்கிறது. ஜம்பு என்பது நாவல் மரம். அந்த க்ஷேத்ரத்தில் வெண்ணாவல் மரம்தான் ஸ்தல வ்ருக்ஷம். பிள்ளையாருக்கு ரொம்பப் பிடித்தது நாவல் பழம். ‘கபித்த ஜம்பூபல ஸார பக்ஷிதம்’ என்று ஸ்தோத்ரம் சொல்கிறோம். பிள்ளையாரின் பரம பக்தையான அவ்வையாருக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி போட்ட சுட்ட பழமும் நாவல்தான்.

‘திரு ஆனைக்கா’ என்கிறபோதும் அதிலே ‘ஆனை’ வந்து உட்கார்ந்து கொண்டு கஜானன மூர்த்தியை ஞாபகப்படுத்துகிறது.

ஈச்வரனே ஆசார்ய ரூபத்தில் அவதாரம் செய்தபோது ஈச்வரிக்கு, அகிலாண்ட ஈச்வரிக்கு முன்னால் சிவ-சக்தி தம்பதியரின் ப்ரிய ஸுதனான பிள்ளையாரை ப்ரதிஷ்டை செய்தது விசேஷம்.

கருணாமூர்த்தியாக இருக்கப்பட்ட பராசக்திக்குமே கூடக் கோபம் ஏற்பட்டாலும், அது போய் அவள் குளிர்ந்த மனஸோடு லோகத்துக்கு அநுக்ரஹம் பண்ணும்படியாக மாற்றிவிடும் சக்தி பிள்ளையாருக்கு இருக்கிறது. ‘சக்தி’ என்றால் அவர் ஏதோ பெரிசாக மந்த்ரம் போட்டோ, அல்லது வேறே ஏதாவது பண்ணியோ அந்தப் பராசக்தியை மாற்றவேண்டுமென்றில்லை. இவர் அவள் கண்ணிலே பட்டுவிட்டால் அதுவே போதும். அன்பே வடிவமான விநாயக ரூபத்தைப் பார்த்தமாத்திரத்தில் அம்பாளின் கண் வாத்ஸல்ய வர்ஷம் பொழியத் தொடங்கிவிடும்.

அத்தனை நல்ல மனஸ் அவருக்கு! ஸுமனஸாகிய அவரை வாகீசாதி ஸுமனஸர்கள் நமஸ்கரித்தே ஸகல கார்ய ஸித்தி பெறுகிறார்கள்.
(இன்று சங்கடஹரசதுர்த்தி)
ravi said…
🌹 🌺" *நாம் புடைக்கும் முறமா? அல்லது சலிக்கும் சல்லடையா? .....!!! எப்படி இருக்க வேண்டும் - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கின்றனர்.

🌺ஒரு வகையினர் புடைக்கும் முறத்தையும், மற்றவர் சலிக்கும் சல்லடையையும் போன்றவர்கள் ஆவர்.

🌺முறம் உபயோகமற்ற உம்மியைச் சிதறவிட்டு, உபயோகமுள்ள அரிசியை நிறுத்திக்கொள்ளும்.

🌺அதுபோலவே பெரியோர் கொள்ளத்தகாதவையான பெண், பொன் முதலியவற்றைத் தள்ளி, ஏற்ற ஒரே பொருளான ஸ்ரீமந் நாராயணனைத் தம் மனதில் நிறுத்தித் தியானம் செய்வர்.

🌺ஆனால், சல்லடையோ பயனுள்ள பொருட்களைக் கீழே விட்டு, உபயோகமற்றதை நிறுத்திக் கொள்வது போல், சிறியோர் பொருட்களைக் கீழே விட்டு, ஸ்ரீமந் நாராயணனை மறந்து விட்டு, பொன்னையும் பெண்ணையுமே முக்கியமாகக் கொள்வர் என மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 'The temple whose owner, seated in Padmasana posture, still looks alive today like Thirumeni in meditation - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 "Ramanujar lived for 120 years and finally his body was 'interred' in Srirangam Ranganatha temple. It is called 'Thanana Thirumeni'.

🌺 Mahan Sri Ramanuja, who lived forever, passed away at the age of 120 in Srirangam. It was 1137 AD. In the year of his birth, in the year of his birth, in the month of Varapirai Dasami, on Saturday noon in the Tiruvadhirai Nakshatra, he ascended at the Jeyar Math.

🌺 When the Lord ascended, the asariri sounded saying, Dharmo Nashta: (Dharma has suffered loss).

🌺 Arangan sent the undressed Peethagawada, the wrapped flowers and the bowl of oil to Jeyar Math through his disciple Uttama Nambi.

🌺 Uttama Nambi consoled the disciples in Jeeyar Math and rubbed the oil given by Namperumal on the Thirumudi of Emperumanar, bathed the Thirumeni and prepared it for Brahmamedha Samskarat.

🌺It is believed that when the final procession started, a bell was sounded from Ranganatha temple. 'Ramanujan is a man' and 'Ramanujan is a treasure', the voice said. Therefore, it was accepted as Perumal's command to enshrine Ramanuja's body in the Arangan temple complex, as per the samskara rules for monks.

🌺Generally, Vaishnava rituals do not involve cremation of departed saints.

🌺 Instead, their bodies will be schooled. That is, the Samadhi is kept in a sitting position and the Samadhi is closed according to the proper procedures. Similarly, Ramanuja's body was enshrined in the Srirangam temple complex, in a place known as Vasantha Mandapam.

🌺There is now a shrine of the owner known as Ramanuja. There, seated in the Padmasana position, it still looks vividly like Thirumeni in meditation.

🌺 Ramanuja's eyes are open and his toes, nails and hands are hairy.

🌺His body is covered with a mixture prepared with green camphor and saffron.

🌺The body of Ramanuja, who passed away in 1137 AD, was preserved in the Srirangam Vasantha Mandapam as a form of sanctification, after being embalmed with various potions and suranas. Almost, for more than 800 years, based on yogic heat, the body remains tight and stable.

🌺It is on that spot that Ramanuja's sanctum, which is now called Emperumanar, is located in Srirangam.

🌺 It is the opinion of many researchers that his mani is still inside as it was placed, and the current form above it is 'Tanaana Mani'. Thirumanjanam i.e. no abhishekam is performed for that Thirumeni.

🌺Only a decoction of green camphor and saffron is extracted twice a year.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*விவேகசிந்தாமணி*

*12: ஈவதே உயர்வு*

மடுத்தவர் வாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க் கெல்லாம், கொடுத்தவர் வறுமை யுற்றால் கொடாது வாழ்ந்தவர் யார் பூமேல், எடுத்து நாடுண்ட நீரும் ஈயாத காட் டகத்து நீரும், அடுத்த கோ டையிலே வற்றி அல்லதிற் பெருகுந் தானே.

*பொருள்*

தன்னை அடைந்தவர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஏழைகளுக்கும், வேதம் படித்தவர்களுக்கும், தானம் செய்ததால் வறுமை அடைந்தவர் பூமியில் யார் உள்ளார்? யாருக்கும் எதையும் கொடாது புகழடைந்தவர் யாரும் உலகில் உண்டோ? அனைவருக்கும் பயன்படும் ஊருக்கு நடுவே இருக்கும் நீர் நிலையும், யாருக்கும் பயன்படாமல் கானகத்தே இருக்கும் நீர்நிலையும் கோடையில் வற்றி மீண்டும் அடுத்த மழைக்காலத்தில் நீர் நிரம்பிப் பெருகும் தானே!

(ஆகவே, செல்வம் வருவதும் போவதும் இயல்பு; அதை அனைவருக்கும் பயன்படுமாறு ஈவதே உயர்வு)

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்17/07/2022*

🌹🌹🌻🌹🌻🙏🏻🌻🌹
ravi said…
ஸ்ரீ தோடகாஷ்டகம் பற்றி அறிந்து கொள்வோமா

தோடகாஷ்டகம் !

ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது.

ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.
ravi said…
அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.
ravi said…
ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும்.

விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)
ravi said…
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள்.
என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.
ravi said…
பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!

தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!
ravi said…
பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும்
நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!
ravi said…
ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!

குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!
ravi said…
விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

ஸ்ரீ குருப்யோ நமஹ !
ravi said…
ராமரும் ராம சகோதரியும்*🙏🙏🙏

*ராம சகோதரி சொன்ன கீதை* 🪷🪷🪷
ravi said…
ராமா*💥💥💥

பஞ்சாமிருதம் இனிக்க வில்லை

பால் பழங்கள் சுவைக்க வில்லை ..

கோடி கோடி இனிப்புகள் தேடி தேடி வந்தாலுமே

தேனில் திராட்சை கலந்து அதில் இனிக்கும் பலா சுளைகள் அமர்த்தினாலும்

நா அந்த சுவை நாடுவதில்லையே!!

உன் நாமம் உரைத்தேன் ஒரு கோடி கரும்பை பிசைந்து சாறு எடுத்து

அதிலே கோடி அண்டாக்கள் தேன் கொட்டி

பாதாம் முந்திரி அள்ளி தெளித்து அதற்கு துணையாய் பச்சை கற்பூரமும் ஏலக்காயும் எம்பி குதிக்க செய்து

என்னை உன் நாமம் அதில் மூழ்க வைத்ததே ராமா ..

என் சொல்வேன் .

இது போல் ஒரு இனிப்பு நான் அருந்தியது இல்லை

*அன்பு சகோதரியே*💐

அந்தரியே! சுந்தரியே!

உன் நாமம் தினம் உரைப்பவன் நான் ..

என் நாமம் தேன் என்றால் உன் நாமம் அதை சேர்க்கும் தேனீ அன்றோ ... 🪳

என் நாமம் பால் என்றால் அதை சுரக்கும் பசு நீ அன்றோ ... 🐄

என் நாமம் பழம் என்றால் அது தரும் விக்க்ஷம் நீ அன்றோ🌳

எல்லாம் நீயே ஆகி என் புகழ் சேர்க்கிறாய் .. 👍

என் நாமம் இனிப்பதற்கு என்னில் நீ இருக்க உன்னில் சொக்கன் வாழ

சுவைக்கு குறை உண்டோ சொல் திரிபுரி !!

*சஹஸ்ர நாம தத்துல்யம்*

*ராம நாம வரானனே*

என்றே

கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடன் சொன்னார் ஆடல் அரசர் 🙏

அதுவும் மனோகரமே !!

அருமை தங்கையே!!

இது வரை எடுத்த அவதாரங்கள் எல்லாம் என்னை முதன்மை கொண்டே வந்தவை ..

ராம அவதாரம் ஓன்றே நாமம் எடுத்த அவதாரம் ..

இதில் நாம் மூவரும் வாழ்கிறோம் வணங்குவோரை வாழ்த்துகிறோம் ... 👏

காஞ்சி வாழ் கற்பகமே ...

சங்கரன் கண்ட அற்புதமே ...

அங்கே உன் புகழ் பாடியே சுவாமி நாதனாய் வாழ்ந்திடுவேன்

ராம சகோதரி அகமகிழ்ந்தாள்...

கன்னத்தில் குழி விழ

அதரத்தில் அமுதம் வழிய

கண்களில் காரூண்யம் கார்மேகம் எனப் பொழிய

*ராமா ராமா* என்றே உரைத்தாள்..

எதிரொலி அங்கே *சங்கரா சங்கரா* என்றே ராம நாமத்தில் சங்கமம் ஆனதே👌👌
ravi said…
[17/07, 12:12] Jayaraman Ravilumar: *முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 63*
[17/07, 12:12] Jayaraman Ravilumar: பதினொன்னாவது ஸ்லோகம்.

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।

हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥

கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
[17/07, 12:16] Jayaraman Ravilumar: ஒரு மடு ஜலம் அப்படீன்னா அதுல என்னவெல்லாம் இருக்கும்?.

தாமரை பூக்கள் இருக்கும்.

அலைகள் இருக்கும். மீன்கள் இருக்கும்.

இந்த கிருஷ்ணனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துல ‘ *கர சரண சரோஜே’ –*

பகவானுடைய திருக்கைகள், திருவடிகள் இதெல்லாம் தாமரைப் பூ மாதிரி இருக்கு.

‘ *ஹரிஸரஸி* ’ – ஹரிங்கிற குளத்துல இந்த தாமரைகள் இருக்கு.

‘ *காந்திமந் நேத்ர* *மீனே* ’ ரொம்ப காந்தியோட இருக்கக் கூடிய அவரோட கண்கள் மீன்களைப் போல இருக்கு.

‘ *ஸ்ரமமுஷி புஜவீசி’* –

நம்முடைய ஸ்ரமத்தை போக்குவதான தோள்கள் என்ற அலைகள் இருக்கு. *‘வ்யாகுலேऽகா³த⁴மார்கே’* –

நம்முடைய வ்யாகுலங்களையும், ஸ்ரமங்களையும் போக்கக் கூடிய அந்த தோள்கள்.

அந்த குளம் எப்படி இருக்குன்னா, *“அகாத மார்க்கே”* ஆழமாக இருக்கு.

பகவான் எவ்வளவு ஆழமானவர்!

ஆழமான அந்த ஹரிசரஸி விகாஹ்ய நன்னா முங்கி குளிச்சு, ‘ *ஆபீய தேஜோ ஜலௌகம்* ’ – பொங்கி வரும் தேஜஸ் என்ற அந்த ஜலத்தை, ‘ *ஆபீய* ’ –குடிச்சு, ‘ *பவமரு* *பரிகின்ன* :’ –

இந்த சம்ஸாரம்ங்கிறது ஒரு பாலைவனம் மாதிரி இருக்கு.

இந்த பாலைவனத்துல அலைஞ்சு அலைஞ்சு நான் ரொம்ப தாபத்தோட இருக்கேன்.

அந்த தாபம் tiredness எல்லாத்தையும் “ *கேதமத்ய த்யஜாமி”*

இன்னிக்கு அதெலாம் நான் போக்கிக்கப் போறேன்னு சொல்றார்.🪷🪷🪷
ravi said…
[17/07, 08:04] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 286* 🙏🙏🙏started on 7th Oct 2021
[17/07, 08:07] Jayaraman Ravilumar: 99 to 111

மூலாதாரைக நிலையா;

ப்ரஹ்மக்ரந்தி விபேதினி;

மணிபூரந்தருதிதா;

விஷ்ணுக்ரந்தி விபேதினி;

ஆக்ஞா சக்ராதராலஸ்தா;

ருத்ரக்ரந்தி விபேதினி;
சஹஸ்ராரம்புஜாரூடா

சுதாசாராபி வர்ஷிணி;

தடில்லதா சமருசி: ;

ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா ;

மஹாஷக்தி ; குண்டலினி ;

பிஸதந்து தனீயஸீ;🙏🙏🙏
[17/07, 08:09] Jayaraman Ravilumar: *மூலாதார* = மூலாதார சக்கரம்

*மூலாதாரைக* = மூலாதாரத்தில் நிலயா = இருப்பவள்

*99 மூலாதாரைக நிலயா* = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள்

(மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)👍👍👍
ravi said…
[17/07, 07:58] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 285* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[17/07, 07:59] Jayaraman Ravilumar: *75* *பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்*

கவிபாடும் திறமை
[17/07, 08:00] Jayaraman Ravilumar: தவ ஸ்தன்யம் மன்யே
தரணிதரகன்யே ஹ்ருதயத:

பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ

தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத்

கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீய: கவயிதா: 75
[17/07, 08:01] Jayaraman Ravilumar: மலையரசன் பெண்ணே !

உன்னுடைய முலைப்பால் இருதயத்திலிருந்து உதித்த அமிருதப்பிரவாகம் போலும்,

வாக்தேவதையான ஸரஸ்வதியே அவ்வுருக்கொண்டு வந்தாற்போலும், பெருகிறது என்று கருதுகிறேன்.

ஏனென்றால் கருணை ததும்பும் உன்னால் அளிக்கப்பட்ட உன்னுடைய பாலை அருந்தி திராவிடக்குழந்தை தலைசிறந்த கவிகளுக்குள் மனதைக் கவரும் கவிஞனாக ஆகிவிட்டான் அன்றோ !👍👍👍
ravi said…
சித்த சாகரஞ் செய்தனை

ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை;

தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்

சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும்

சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீக்கடல் போலப் பலவகை

உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை.🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 8*🦚🦚🦚
ravi said…
[17/07, 08:14] Jayaraman Ravilumar: நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை

நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை

அனைத்துமா யகண்டமா யனாதிமுன் னாதியாய்

யெனக்குள்நீ யுனக்குள்நா னிற்குமாற தெங்கனே. 8🙏🙏🙏
[17/07, 08:15] Jayaraman Ravilumar: நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளே,

அது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை.

நான் தியானத்தில் அமர்ந்து நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது

அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை.

நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், நின்ற மனம் ஒரு மாயையோ,

இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே.

எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனே,

உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!🙏
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

“வேதோ (அ) கிலோ தர்ம மூலம்” என்று மநு சொல்கிறபடி வேதந்தான் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்ற நெறிகளுக்கும் காரியங்களுக்கும் மூலமாக, வேராக, ஊற்றாக இருக்கிறது.
ravi said…
ஆத்ம க்ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோக க்ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தருவது வேதம். இந்த இரண்டும் ஏற்பட எது உதவுகிறதோ அதுதான் ‘தர்மம்’ என்பது. அந்த தர்ம மூலமாக வேதம் இருப்பது வாஸ்தவம்தான். வேதோ (அ)கிலோ தர்ம மூலம்.

ஆனால் வேதங்களைப் பார்த்தால் ஒரு கிரமமாக, திட்டவட்டமாக நாம் செய்ய வேண்டியவற்றுக்கு ‘லிஸ்ட்’ இல்லையே! இப்படி இப்படி செய்ய வேண்டுமென்ற விரிவான விளக்கமும் இல்லையே! அனந்தமான வேதத்தில் நமக்குக் கிடைத்திருப்பதே கொஞ்சந்தான். நமக்குக் கிடைத்திருக்கிற வேத வாக்கியங்களைப் பார்த்தாலும் அவற்றில் அநேகத்துக்கு அர்த்தங்கூட முழுக்கத் தெரிய மாட்டேன் என்கிறதே!
ravi said…
இப்படி இருக்கிற வேதங்களிலிருந்துதான் கல்பம் என்கிற ஆறாவது வேதாங்கத்தில் உள்ள தர்ம ஸூத்ரங்களும் க்ருஹ்ய ஸூத்ரங்களும் ச்ரெளத ஸூத்ரங்களும் ஒருத்தன் பண்ண வேண்டிய கர்மாக்களைத் திரட்டி ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கின்றன. ஆனால் இதுவும் சுருக்கமாகத்தான் இருக்கும். எல்லா அம்சங்களையும் ஒரே இடத்தில் சொல்வதாகவும் இராது. இவையும் விரிவான- guide ஆக இல்லை. இவற்றை சந்தேகத்துக்கு இடமில்லாமல் விரித்துச் சொல்கிறவைதான் தர்ம சாஸ்திரங்கள்.
ravi said…
தர்ம ஸூத்ர‌ங்கள் (ஆபஸ்தம்பர், கௌதமர் முதலானவர்கள் செய்தவை) சின்னச் சின்ன வாசகங்களாக ஸூத்ர‌ லக்ஷணப்படி இருக்கும். ஸூத்ர‌ம் என்றால் ரத்னச் சுருக்கமாகத்தான் இருக்க வேண்டும். தர்ம சாஸ்திரங்கள் என்கிற ஸ்மிருதிகள் (மநு, யாக்ஞவல்கியர், பராசரர் முதலானவர்கள் செய்தவை) ச்லோக ரூபத்தில் விரிவாக இருக்கும்.

ஆனால் எல்லாவற்றிற்கும் பொதுவான ஆதாரம் வேதந்தான். நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு வேதத்தின் ஆக்ஞைகளைத்தான் மேற்கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். வேதக் கட்டளைகளை ஓர‌ள‌வுக்கு முறைப்படுத்திச் சொல்கிற கல்பத்தை நன்றாக அலசி விஸ்தாரம் பண்ணுவதே தர்ம சாஸ்திரம். யக்ஞ பூமி நிர்மாணம், க்ருஹ நிர்மாணம் போன்றவற்றையே கல்பம் அதிகம் சொல்கிறதென்றால் மநுஷ்யனுக்கு ஸகல விதத்திலுமான நடத்தைமுறையையும் (code of conduct) விவரமாகச் சொல்வது தர்ம சாஸ்திரம்.
ravi said…
நான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இந்தக் காரியத்தைச் செய்வது சரியா, தப்பா என்று வேதத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே! ‘அநந்தா வை வேதா:’ என்றபடி வேதம் அளவு கடந்ததாக அல்லவா இருக்கிறது? இவற்றில் பெரும்பாலானவை இப்போது மறைந்தே போய் விட்டன. அதனால் எங்கே இந்தக் காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லையே! இவை எல்லாவற்றையும் படித்தவர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லையே? என்ன செய்வது?” என்று கேள்வி.

ஸமுத்திரம் மாதிரி விரிந்து கிடக்கிற வேதங்களிலிருந்து நமக்கு வேண்டிய காரியங்களைப் பொறுக்கி எடுப்பது அஸாத்யம்தான்.
ravi said…
இப்படி செய் என்று வேதத்தில் இதைப்பற்றிச் சொல்லியிருப்பது தெரிந்தால் வேத வாக்கியப்படியே செய்து விடுவேன். அது தெரியாதபோது என்ன செய்வது?”

இதற்கு மநு பதில் சொல்கிறார்: “சரி, அப்படியானால் ஒன்று சொல்கிறேன். அந்த வேதங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்த மஹரிஷிகள் ஸ்ம்ருதிகள் என்று செய்திருக்கிறார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்” என்கிறார். ஸ்ம்ருதி என்பதே தர்ம சாஸ்திரம்.

வேதோகிலோ தர்மமூலம்| தத்விதாம் ச ஸ்ம்ருதிசீலே|
ravi said…
ஸ்ம்ருதி” என்றால் நினைவுக் குறிப்பு; விஸ்ம்ருதி என்றால் பைத்தியம். “வேதத்துக்கு ஸ்ம்ருதி இருக்கிறதே! அதாவது, நினைவுக் குறிப்பு (notes) இருக்கிறதே! வேதங்களையெல்லாம் நன்றாக உணர்ந்த மஹரிஷிகள் அவற்றிலுள்ள தர்மங்களையும், கர்மங்களையும் ஒரே இடத்தில் தொகுத்து முறைப்படுத்திக் குறிப்பாக எழுதி வைத்தவையே இவை. இந்த ஸ்மிருதிகளில் நமக்கு நன்றாக அர்த்தம் புரிகிற பாஷைகளில் எழுதப்பட்டவை. அவற்றைப் பார். நீ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படிச் செய்ய வேண்டும் என்பவையெல்லாம் அவற்றில் ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது” என்கிறார் மநு. “தர்ம சாஸ்திரம்” என்று சொல்வது இந்த ஸ்ம்ருதிகளைத்தான்.
ravi said…
வேதம் சொல்லும் காரியங்களை, அநுஷ்டானங்களை எப்படிப் பண்ண வேண்டும் என்று வேதாங்கங்களில் ஆறாவதாக உள்ள ‘கல்பம்’ சொல்கிறது. கல்பத்தில் அடங்கும் க்ருஹ்ய ஸூத்ர‌ங்களும், ச்ரௌத ஸூத்ர‌ங்களும், தர்ம ஸூத்ர‌ங்களும் வேள்வி முதலானவற்றின் செய்முறையைச் சொல்கின்றன. இதையே ஒரு ஜீவன் கருவாக மாதாவின் கர்ப்பத்தில் உருவாவதிலிருந்து, அது பிறந்து வளர்ந்து, கலியாணம் பண்ணிக்கொண்டு, குடும்பம் நடத்தி, கடைசியில் சிதையில் வைத்து தகனம் செய்யப்படும் வரையில் இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று அடியிலிருந்து நுனி வரையில் நுணுக்கமாகச் சொல்பவையே ஸ்ம்ருதிகள். தினந்தினமும் எழுந்திருந்ததிலிருந்து தூங்குகிற வரையில் ஒருத்தன் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி யெப்படிச் செய்ய வேண்டும் என்று அது routine போட்டுக் கொடுத்து விடுகிறது.
ravi said…
ஸ்மிருதியைப் பார்த்து விட்டால் போதும். நம் மதப்படி நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன என்பது பூர்ணமாகத் தெரிந்துவிடும்.
ravi said…
OB நதி*

உலகின் 7 வது பெரிய நதி ரஷ்யாவின் செர்பியாவில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய நதியாகும்.

இதன் நீளம் 3394 மைல்கள். இது 2990000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட வடிகால் பகுதியை ஒவ்வொரு நொடிக்கும் 12,475 கன மீட்டர் வெளியேற்றும் திறன் கொண்டது.👍👍👍
ravi said…
ஓப் ஆறு* ...

ஓம் எனும் பிரணவம் உணர்த்தியவளே ...

உள்ளமெல்லாம் அன்பு எனும் வெள்ளமாய் ஓடுபவளே ...

ஏழு ஸ்வரங்கள் நீ ஈன்ற அற்புதமோ ...

இசை என்னும் கச்சைக் கட்டி இன்பம் எனும் ஊஞ்சல் தனில் நீ பாடும் பாடல்கள் உன் கச்சபீ மீட்டிய நாதம் அன்றோ ..

நிகர் உண்டோ ஒருவர் உனக்குத் தாயே ...?

தடைகளை தகர்க்கும் தாயன்றோ நீ ...

தலை வணங்குகிறேன் ...

என் சென்னி தனில் உன் பாதம் பதித்திடவே 👌👌👌
ravi said…
*கந்தர் அலங்காரம் 8* 🐓🦚🙏

*அலங்காரம்-02:*

சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?
ravi said…
*பணிவு அலங்காரம் எப்படி வரும்?*

தன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும்!

தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது!

மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது!

இதில் நம்
சொந்த டாம்பீகம் எங்கு வந்தது?

அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி!

அதனால் இன்று பணம்!

அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்!

அதனால் இன்று கண்ணியம்!

இப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல!

நம்மைத் தேடி வந்தது! = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்!

அருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்!

பேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை!

இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா! -

என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்!

பாட்டைப் பார்க்கலாமா?🐓🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 283*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
உள்ளம் பெரும் கோயில். ஊன் உடல் ஆலயம்’ அப்படீன்னு கோயில்ல இருக்கிற ஸ்வாமியை நமக்குள்ளேயே நாம பார்த்துட்டோமானா போரும்.

அந்த காலத்துல வீடுகளே அப்படி தான் கட்டுவா.

ஊருக்கே ஒரு பெரிய கோயில். மஹா க்ஷேத்திரங்களெல்லாம் ஊரே கோயிலா இருக்கும்.

ஒரு மதுரை, ஒரு காஞ்சிபுரம்னா ஊரே கோயிலா இருக்கும். சின்ன ஊர்கள்ல கூட எல்லா வீட்டைக் காட்டிலும் கோயில் ரொம்ப பெருசா இருக்கும். பகவானுக்குத் தான் முக்கியம் நம்ம மதத்துல கொடுத்திருக்கா!👍
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 282* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*74. மதுஸூதன நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ *மதுஸூதன* :||8
ravi said…
பிரம்மாவின் சரணாகதிக்குத் திருவுள்ளம் உகந்த திருமால், குதிரை முகத்துடனும் மனித உடலோடும்
ஹயக்ரீவராக அவதாரம் செய்தார்.🦄🦄🦄

பாதாள லோகத்தில் ஒளிந்திருந்த மது, கைடபரைப் பிடித்து,
அவர்களைத் தன் தொடையில் வைத்து நசுக்கி வதம் செய்து, வேதங்களைப் பிரம்மாவுக்கு மீட்டுக் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி, பிரம்மாவின் பக்திக்கு உகந்து, தான் இதுவரை எடுத்த அவதாரங்களையும்
இனி எடுக்கவுள்ள அவதாரங்களையும் அவருக்குக் காட்டி அருளினார்.🪷🪷🪷
ravi said…
I'm going to a nursing home. I have to. When life gets to where you are no longer able to take care of yourself completely, your children are busy at work and have to take care of their children and have no time to take care of you, this seems to be the only way out.

The nursing home is in good condition, with clean single rooms equipped with simple and practical electrical appliances.

All kinds of entertainment facilities are complete, the food is fairly delicious, and the service is also very good.

The environment is also very beautiful, but the price is not cheap.

My pension is poorly able to support this. But I have my own house.

If I sell it, then money is not a problem. I can spend it on retirement, and the rest will be left as an inheritance for my son.

The son understands very well: "your money and your property should be enjoyed by you, don't worry about us."

Now I have to consider preparing to go to a nursing home.......2
ravi said…
As the saying goes:

Breaking a family is worth tens of thousands, which refers to many things.

Boxes, bags, cabinets, and drawers are filled with all kinds of daily necessities: clothing for all weather and beddings for all seasons.

I like to collect. I have collected a lot of stamps.

I also have hundreds of purple clay tea pots.

There are many small collections, and such small items as pendants of emerald and walnut amber, and two small yellow croakers.

I am especially fond of books.

The bookshelves on the wall are full.

There are also dozens of bottles of good foreign wine.

There are full sets of household appliances; various cooking utensils, pots and pans, rice, oil, salt, noodles, flour, spices, various seasonings, in fact the kitchen is also full.

There are also dozens and dozens of photo albums, looking at the house full of things, I'm worried!....3
ravi said…
The nursing home has only one room with a cabinet, a table, a bed, a sofa, a refrigerator, a washing machine, a TV, an induction cooker and a microwave oven - all the things I will really need.

There is no place to store the wealth that I have accumulated throughout my life.

At this moment, I suddenly feel that my so-called wealth is superfluous, and it doesn't belong to me.

I just take a look at it, play with it, use it. It actually belongs to this world.

The wealth that comes in turns is just passing by.

Whose palace is the Forbidden City?

The Emperor thought it belonged to him, but today it belongs to the people and society.

You look at these, you play with these, you use these but you can't take them with you in death.....4
ravi said…
I really want to donate the things in my house, but I can’t get it done.

To deal with it has now become a problem.

Very few children and grandchildren can appreciate what I have collected.

I can imagine what it will be like when my children and grandchildren face these painstakingly accumulated treasures of mine: all the clothes and bedding will be thrown away; dozens of precious photos will be destroyed; books will be sold as scrap. Collections?

If you are not interested, you will dispose of them.

The mahogany furniture is not practical and will be sold at a low price. Just like the end of the Red Mansion: only a piece of white left, so clean. Facing the mountain of clothes, I only picked a few favourites;

I only kept a set of pots and pans for kitchen supplies, a few books that are worth reading; a handful of teapots for tea.

Bring along my ID card, senior citizen certificate, health insurance card, household register, and of course a bank card.

Enough! It's all my belongings! I'm gone.

I bid farewell to my neighbours, I knelt down at the door and bowed three times and gave this home back to the world....5
ravi said…
Yes! In life, you can only sleep in one bed, live in one room.

Any more of it is merely for watching and playing! Having lived a lifetime, people finally understand: we don’t really need much.

Don’t be shackled by superfluous things to be happy!

It's ridiculous to compete for fame and fortune.

Life is no more than a bed.

Not only people over 60 years old but once you start to understand this fact, shouldn’t one think carefully about how to prepare well ahead of time for the last journey in life?

Let go of fantasies and baggage, and of those things that can't be eaten, worn, or used.

Be healthy and be happy.

Very practical and true yet one is not able to LET GO. So it is an important art to LET GO.

Have a Sunday, musing over Subtle aspects of life!!!!👍👍👍
Chandra said…
Thank you 🙏 (though I m not scholar like you in slogam meanings and writing skills) I love this subject of Athma….
ravi said…
🌹🌺 'அய்யா.... ஸ்ரீ கிருஷ்ண பக்த ரிஷியே "தயை கூர்ந்து எங்களை மன்னித்து விடுங்கள்" என்று மன்றாடிய தேவலோகத்து அப்சரசு(கன்னி)கள் - விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" கோதாவரி நதிக்கரையில் சின்னபாப் என்ற புனித ஸ்தலம் உள்ளது. அங்கு மிக கடினமாக தவம் செய்யும் சஞ்சதப்பா என்ற ரிஷி வாழ்ந்து வந்தார்.

🌺சூரியன் சுட்டெரிக்கும் காலத்தில் நெருப்பின் இடையில் அமர்ந்து தவம் செய்வார்; கடும் குளிரில் ஆற்றில் தவம் செய்வார். ஆகையால் அவர் முழுவதுமாக தூய்மையடைந்திருந்தார்.

🌺தன் புலன்கள் அனைத்தையும் அவரால் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் காரணத்தால் பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களை முழுமையாக சரணடைந்திருந்தார்.

🌺பிரம்மதேவர் தினமும் சஞ்சத்தப்பாவை சந்தித்து, பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்று கேள்விகள் கேட்பார். சஞ்சத்தப்பாவும் விளக்கமளிப்பார்.

🌺இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த இந்திரதேவருக்கு, சஞ்சத்தப்பாவை பார்த்து பொறாமை ஏற்பட்டது. எங்கு சஞ்சதப்பா தன் தவ வலிமையால் இந்திரலோகத்தை கைப்பற்றிவிடுவாரோ என்ற பயம் இந்திரனுக்கு ஏற்பட்டது.

🌺இந்திரன் உடனே தேவலோகத்து அப்சரசு(கன்னி) களாக இருந்த எங்கள் இருவரையும் அழைத்து, சஞ்சத்தப்பாவின் தவத்தை கலைக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.

🌺இந்திரனின் ஆணையை ஏற்று நாங்கள் இருவரும் கோதாவரி நதிக்கரையிலுள்ள சஞ்சத்தப்பாவின் ஆசிரமத்தை வந்தடைந்தோம். சஞ்சத்தப்பாவின் புலன்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் விதத்தில் நாங்கள் இருவரும் பாடிக்கொண்டே அவரை சுற்றி நடனமாடினோம்.

🌺உடனடியாக சஞ்சதப்பா தன் கையில் நீரை எடுத்து, "நீங்கள் இருவரும் கங்கை நதிக்கரையில் வில்வ மரங்களாக மாறுவீர்கள்" என்று சபித்தார். இந்த சாபத்தை சற்றும் எதிர்பாராத நாங்கள் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினோம்.

🌺அய்யா.... ஸ்ரீ கிருஷ்ண பக்த ரிஷியே "தயை கூர்ந்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் இந்திரனின் சேவகர்கள்" என்று மன்றாடினார்கள்.

🌺அவர்களுடைய பணிவை கண்டு மனமுறுகிய ரிஷி, நாங்கள் எங்களுடைய பூர்வ ஜென்மத்தை நினைவு கொள்வோம் என்றும், மஹாராஜா பரதர் எங்களை விடுவிப்பார் என்றும் ஆசி வழங்கினார்.

🌺"பரத மஹாராஜா, தாங்கள் தபோவனத்திற்கு வந்தபொழுது, எங்களின் மரத்தடியிலேயே ஓய்வெடுத்தீர்கள். அப்போது நீங்கள் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்தீர்கள்.

🌺நாங்களும் அதை கேட்டோம். அதன் பலனால் மரத்தின் வடிவிலிருந்து விடுதலை பெற்றோம். அதோடல்லாமல் பௌதிக ஆசைகள் எங்களிலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டது" என்று தங்கள் கதையை கூறி முடித்தார்கள்.

🌺ஸ்ரீ கிருஷ்ண பக்த ரிஷி அவர்களை வாழ்த்திவிட்டு தன் ஆசிரமத்திற்கு திரும்பின்னர். அந்த இரண்டு பெண்களும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து ஸ்ரீ கிருஷ்ணன் பாத கமலங்களின் சேவையை பெற்றனர்".🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹 🌺 "Are we a hummingbird? Or a boring sieve? .....!!! A simple story that explains how to be - 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 "There are two types of people in this world.

🌺 One type is like a bulging face and the other is like a boring sieve.

🌺Muram disperses the useless ummi and stops the useful rice.

🌺Similarly, elders put away unworthy women, gold, etc., and meditate on Sriman Narayana, the only suitable object.

🌺 But just like a sieve leaves the useful things down and stops the useless, the little ones leave the things down, forget Sriman Narayan and prefer gold and women, says Mahan Ramakrishna Paramahamsa 🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🙏🥀🌸🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

2.82 *திருத் தேவூர் * - காந்தாரம்

2356. *பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,*
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் *தேவூர் அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.* 1


2.105 *திருக்கீழ் வேளூர் * - நட்டராகம்

2605. மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும் அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு *கீழ்வேளூர் உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.* 1
*திருச்சிற்றம்பலம்*
🙏🥀🌸🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
மஞ்சள் ஆறு*

ஆசியாவின் மூன்றாவது நீளமான நதி மற்றும் உலகின் முதல் பத்து பெரிய நதிகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

மஞ்சள் ஆறு சீனாவின் ஒன்பது மாகாணங்களில் பாய்கிறது.

இது 3395 மைல் நீளம் கொண்டது. இது மேற்கு சீனாவில் அமைந்துள்ள பயான் ஹர் மலைகளில் இருந்து தொடங்கி. ஷான்டாங் மாகாணத்தின் டோங்கிங் நகருக்கு அருகில் அமைந்துள்ள போஹாய் கடலில் கலக்கிறது.🙏🙏🙏
ravi said…
மஞ்சள் எனும் பேர் கொண்டவளே பாரில் நிகரில்லா புகழ் கொண்டவளே ..

தாழ்ந்தோர் மனமதில் நீ வீழ்ந்தோன் இல்லை என்றே உரைப்பவளே ...

வீழ்ந்தே மீண்டோன் எவரும் மீண்டும் தாழ்ந்தோன் ஆவதில்லை உன் அருள் இருந்தால்

வாழ்ந்தோன் எவரும் உன் நாமம் உரைத்தவரே ...

ஆழ்ந்தோன் உன் சிந்தனை தனில் என்றும் சான்றோன் எனவே பேர் எடுப்பவரே 👍👍👍
ravi said…
ராமனும் ராவணனும்* 👍👍👍

*ராவணன் சொன்ன கீதை* 💐💐💐
ravi said…
ராமா*

தசமுகன் என்றே பேர் கொண்டேன்

ஒருமுகமும் என்னை காக்கவில்லை .

அறுமுகன் தந்தையை நெஞ்சில் வைத்தேன் ..

ஆறுதலை தந்தான் அவன் ...

மாறுதலை வேண்டி நின்றேன் அவனிடம் ..

ஒருதலையாய் நடந்து கொண்டான் .

தருதலையானேன் இன்றே .

இருதலை கொல்லி எரும்பாய் வெந்தேன் உன் கணையில் இன்றே

வேந்தன் என்றால் இவனன்றோ என்றே வாழ்ந்தேன்

வேதங்கள் பாதம் பணிய செய்தேன் ..

தேவேந்திரன் பாத பூஜை செய்யக்கண்டேன்

மதி சூடியவன் ஏன் என் நிம்மதி தனை அழித்தான் ராமா ...

விதி செய்த வேலை என்றே சொல்லாதே ..

விடை ஏறுபவன் என் கேள்விக்கு ஏனோ விடை தர மறுக்கிறான் ..

நதிகள் வரண்டாலும் அவன் கருணை வற்றி போகாதே

ஏன் எனக்கு வஞ்சனை செய்தான் ..

முக்கண் எனக்கிருந்தால் அழிக்கும் அவனை நானே அழித்து விடுவேன் ..

*ராவணா*!!

தவறிழைத்தாய்..

அன்பே சிவம் . அழித்து பார்பவனல்ல அவன் ...

அள்ளி கொடுப்பவன் வரத்தை ...

சொல்லில் வரும் சிவ நாமம் உன் உள்ளம் அதில் இல்லை ..

உதடுகள் செய்த ஹோமம் உன் நெஞ்சில் இல்லை ..

சிவன் என்று சொன்னாய் ..

பெண்ணுக்கு சரி பாதி கொடுத்தவன் ..

அவன் படைத்த பெண்ணை ஏன் வஞ்சித்தாய் .. ?

ஈசன் பாதி நான் பாதி உனை கொன்றோம் ...

நான் பாதி அவள் பாதி என்றே வாழ்கிறோம் ..

இதில் ஒரு பாதி மறைந்தாலும் உயிர் வாழோம் ...

அதர்மத்தில் தர்மம் செய்து என்ன பயன்??

இல்லை தர்மதில் அதர்மம் செய்தும் என்ன பயன் ..??

தர்மத்தில் தர்மம் செய்தால் மட்டுமே ஈசன் அருள் கிடைக்கும் ..

புரிந்து கொண்டேன் *ராமா*

இனி ஒரு பிறவி வந்தால் எல்லா பெண்களும் என் தாய் என்றே வாழ்வேன் ..

உன் பாதி சிவனை மறவேன் அவன் பாதி உனையும் மறவேன் 💐

நன்று ராவணா ஒன்று உரைத்தாய் நன்று உரைத்தாய் ..

உலகம் போற்றும் ஞானி ஒருவன் கலவையில் உதிப்பான் ..

பெண்கள் அவன் தாயென நினைப்பான் ..

உன் ஆத்மா அவனுள்ளே நல் ஆத்மாவாய் பிறக்கட்டும் ..

பத்தானவன் எதிலும் பற்று இல்லாதவன் பன்னிரண்டு கரங்கள் கொண்டவன் பேர் கொண்டவன் ...

பார் புகழ வாழ்வாய் இனி வரும் பிறவி தனில் ..

ராவணன் கீதை சொல்லி சீதை தனை திருப்பி தந்தான் ராமனிடம் தன் தாயாக ...

எரிந்த சிதை தனில் ஓங்கி உரைத்தான் சிவ நாமம் தனை

அங்கே பாலில் கலந்த தேன் போல் இனித்தது ராம நாமம் ... 🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 287* 🙏🙏🙏started on 7th Oct 2021

*மூலாதார* = மூலாதார சக்கரம்

*மூலாதாரைக* = மூலாதாரத்தில் நிலயா = இருப்பவள்

*99 மூலாதாரைக நிலயா* = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள்

(மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)👍👍👍
ravi said…
*99* *மூலாதாரைக நிலயா -*

மூலாதாரத்தில் நிற்பவள்; மூலாதாரத்தைத்தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

மூலாதாரத்தில் நான்கு இதழ்கள் கொண்ட தாமரையொன்று இருப்பதாகக் கணக்கு.

இதன் நடுவில் உள்ள துவாரத்தில் தன்னுடைய தலையைப் புதைத்துக் கொண்டு, குண்டலினி எப்போதும் உறங்குகிறது.

(நம்முடைய ஜீவசக்தியான குண்டலினி உறங்குகிறது.

அதனைச் சரியாக எழுப்பி நெறிப்படுத்துவதே குண்டலினியை எழுப்புவதாகும்.)

உடலின் அடியில் *மூலாதாரம்* ,

சற்று மேலே *ஸ்வாதிஷ்டானம்* ,

நாபிப் பிரதேசத்தில் *மணிபூரகம்* ,

இதய நிலையில் *அனாஹதம்* ,

கழுத்தில் *விசுத்தி* ,

புருவ நடுவில் *ஆக்ஞை* ,

பின்னர் அதற்கும் மேலே *பிரம்மரந்திரம்* .

ஒவ்வொரு சக்கரத்திலும் தாமரை உள்ளது;

ஆனால், ஒவ்வொன்றில் இதழ்களின் எண்ணிக்கையும் வேறுபடும்.

ஆறு சக்கரங்களில், இரண்டிரண்டு சேர்ந்தது ஒரு *கண்டம்* .

மானசிகமாக இவற்றுக்குச் சில உருவங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.

நீளமாக ஒரு பாதை; பாதையில் ஆங்காங்கே சில முடிச்சுகள். இத்தகைய முடிச்சுகளையே சக்கரங்கள் என்கிறோம்.

முடிச்சு என்றால் ஏதோ அவிழ்க்கமுடியாத சிக்கல் என்று பொருளல்ல.

இன்னும் விவரமாக பார்ப்போம் அவள் அருளால் 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 286* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*75* *பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்*

கவிபாடும் திறமை

தவ ஸ்தன்யம் மன்யே
தரணிதரகன்யே ஹ்ருதயத:

பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ

தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத்

கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீய: கவயிதா: 75
ravi said…
*அம்பிகே!,*

உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும்,

ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!.

பால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும்,

மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது.

த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை.

சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர்🙏🙏🙏
ravi said…
எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,

எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,

கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்

காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;

மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?

விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?

வெல்க காளி பதங்களென் பார்க்கே.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 9*🦚🦚🦚
ravi said…
மண்ணும் நீ விண்ணும் நீ
மறுகடல்க ளேழும் நீ

எண்ணும் நீ எழுத்தும் நீ யியைந்த பண்ணெழுத்தும் நீ

கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ

நண்ணுநீர் மைநின்ற பாதம் நண்ணுமா றருளிடாய். 9👍👍👍
ravi said…
பூமியாகவும், ஆகாயமாகவும்,

ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே.

எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும்,

ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே.

கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே.

இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!👍👍👍
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 64*
ravi said…
பதினொன்னாவது ஸ்லோகம்.

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।

हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥

கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
ravi said…
நமக்கு அந்த அர்ச்சாவதாரமான சுவாமி முன்னாடி நிக்கும் போது ஒரு க்ஷணம் அந்த மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் ஏற்படறது.

அதனால தானே திருப்பதியில கோடிக் கணக்கான பேர் வந்து அங்கு எந்த ஸ்ரமத்தையும் பார்க்காம நின்னு பகவானை தரிசனம் பண்றான்னா,

நம்மளை காட்டிலும் அந்த பாமர ஜனகளுக்குதான் ரொம்ப பக்தி.

ஏன்னா, அவா ஒரு வருஷம் முழுக்க கஷ்டப் பட்டு பணத்தை சேர்த்துண்டு, அங்க வந்து ஸ்வாமியை தரிசனம் பண்ணி, உண்டியல்ல முடிஞ்சதை போட்டுட்டு அதுல என்ன திருப்தி அவாளுக்குன்னா, அது அவாளுக்குத் தான் தெரியும்.

அந்த சுவாமிக்கு முன்னாடி கோவிந்தா, கோவிந்தான்னு சொல்லி அவரைப் பார்த்தா அவாளுக்கு சம்ஸார தாபம் எல்லாம் போயிடறது.

அப்படி ஒரு விக்ரஹத்தை பார்க்கும் போதே இவ்வளவு திருப்தி.
Kousalya said…
இதற்கு மிகவும் ரசமான ஒரு விளக்கம் ....அப்படி கஷ்டப்பட்டு தரிசனம் செய்ய போகும்போது ஜருகண்டி ஜருகண்டி என்று தள்ளினாலும் சுவாமி நம்ம எல்லாரையும் கடாக்ஷிக்கரதுநால நமக்கு ரொம்ப நல்ல தர்சனம் கிடைத்த சந்தோஷத்தில் வருகின்றோம் ......நினைத்து பார்த்தால், முழுசா பார்தோமா என்றே சந்தேகம் ...இல்லையா . கோவிந்தா கோவிந்தா 🙏🙏
ravi said…
உண்மை ஆனால் அந்த ஒரு க்ஷண தரிசனம் போதுமே வாழ்வு பூரணத்துவம் அடைய
ravi said…
*Awesome! B_O_M_B_A_Y 🌇 🎖*

Bombay has no bombs 💣 and is a harbour ⛵ not a bay. 🎖 Churchgate has neither a church ⛪ nor a gate. It is a railway station 🚉. 🎖 There is no darkness 🔦💡 in Andheri. 🎖 Lalbaag ♨ is neither red🔴 nor a garden 🌴. 🎖 No 👑👌king 🔱 ever stayed at Kings Circle 🌀. 🎖 Nor did Queen 👸 Victoria 💃stay at Victoria* 🏢Terminus*. 🎖 Nor is there any 👒princess 👸 at Princess Street* . 🎖 Lower Parel is at the same level as Parel. 🎖 There are no marines 🚅 or sailors ⚓at Marine Lines*.🚼 🎖 The Mahalaxmi* 🎫temple* is at Haji Ali 🗼 not at Mahalaxmi. 🎖Teen bati* 🚥 is a junction of 3 roads, not three lamps 🚥. 🎖 Trams 🚄 used to terminate at Kings circle 🌀 not Dadar* TramTerminus.Dadar TT*..). Breach* 🍭*Candy* 🍡is not a sweetmeat 🐮 market, but there is a Hospital 🏥. 🎖 There are no Iron 🔔 smiths at Lohar chawl*. 🎖 There are no 🍯pot 🍵 makers at Kumbhar wada*. 🎖Lokhandwala* complex 🏬 is not an Iron and steel market 🏯. Null bazaar* 🛀 does not sell taps. 🎖 You will not find lady💃 fingers ☝ 🎍in Bhendi Bazar*.
Funny 😇Bombay... 😜😜zara hatke zara bachke ✌
*Yeh hai Mumbai meri Jaan*
Uma kumar said…
Yes today’s post really touched my heart
Uma kumar said…
சிறந்த கலைஞன் ரசிகன் சிவபக்தன் மண்மகள் முகம் கண்டு மதி மயங்கிய சபலம் இட்டுச்சென்றது மாபெறும்வீழ்ச்சியடைந்தான்
Kousalya said…
Too nice verses...அற்புதமாக அமைந்த இந்த வரிகளில் ராம நாமம் தோய் ந்துள்ளதால் மிகவும் இனிக்கிறது.... அருமை அருமை.... ஜய் Shri Ram... ஜய் சங்கரா 🙏🙏🙇‍♀️🙇‍♀️👏👏🍇🍒🌹
ravi said…
https://chat.whatsapp.com/CRtcxp74bB89eDfd3NNqG2

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து, 18 சித்தர்களின் பிறப்பும் மறைவும் :*

18 சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி, யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனித குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். கடவுள் பக்தியுடையவர்களாக சதுரகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

நீண்ட நாட்கள் வாழவைக்கும் இளமை மூலிகைகளை கண்டறிந்து அவற்றை சாப்பிட்டு நீண்ட ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர்.

மறைந்து ஜீவ சமாதிகளில் வீற்றிருந்தாலும் இன்னும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு சூட்சும ரூபமாக உதவி வருகின்றனர், பல சித்தர்கள். ஞானிகள், சித்தர்கள் எண்ணற்றோர் இருந்தாலும் 18 சித்தர்களே குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் பிறந்து எத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை பற்றி பார்ப்போம்.

பதஞ்சலி முனிவர் பிறந்தது பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில். 5 யுகம் 7 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் ராமேஸ்வரம்.

அகத்திய முனிவர் பிறந்தது மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில். 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சமாதியடைந்த இடம் திருவனந்தபுரம்.

போகர் பிறந்தது வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில். 300 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். ஆவினன்குடியில் சமாதியடைந்தார்.

கமலமுனி பிறந்தது வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில். 4000 வருடம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சமாதியடைந்த இடம் திருவாரூர்.

திருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில். 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சிதம்பரத்தில் சமாதியடைந்தார்.

குதம்பை சித்தர் பிறந்தது ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில். 1800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். மாயவரத்தில் சமாதியடைந்தார்.

கோரக்கர் பிறந்தது கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில். 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். பேரூரில் சமாதியடைந்தார்.

தன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில். 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். வைத்தீஸ்வரன்கோவிலில் சமாதியடைந்தார்.

சுந்தரானந்தர் பிறந்தது ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில். 800 வருடம் 28 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். மதுரையில் சமாதியடைந்தார்.

கொங்கணர் பிறந்தது சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில். 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பதியில் சமாதியடைந்தார்.

சட்டமுனி பிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருவரங்கத்தில் சமாதியடைந்தார்.

வான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில். 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். எட்டுக்குடியில் சமாதியடைந்தார்.

ராமதேவர் பிறந்தது மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில். 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அழகர்மலையில் சமாதியடைந்தார்.

நந்தீசுவரர் பிறந்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில். 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். காசியில் சமாதியடைந்தார்.

இடைக்காடர் பிறந்தது புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில். 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.

மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.

கருவூரார் பிறந்தது சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில். 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். கரூரில் சமாதியடைந்தார்.

பாம்பாட்டி சித்தர் பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சங்கரன்கோவிலில் சமாதியடைந்துள்ளார்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
ADVANCE: 13/07/2022, Wednesday 3.00pm Grp.B Bhagavatham 1-7 (35-58) Sloka
Total points
3/5

ravi said…

1.அஸ்வத்தாமன் பிராமண உறவினர் என்று அழைக்கப்படுவதன் பொருள் யாது? Why Ashwathaama is called as a relative of Brahman?
*
1/1
a. தூய பிராமண குலத்தில் பிறந்தவர்/ born in a brahman family
b அனைத்து ஆகமங்களை அறிந்தவர்/who knows all agamas
c. பிராமண குலம் எனினும் பிராமண தகுதி இல்லாதவர்/born in a brahmin family but doesn't possess the capability

d.போர்க்கலை அறிந்தவன். / who Knows battlefield ethics
ravi said…
2.சரணடைந்த ஆத்மாவைக் கொல்லாதவன் யார்? Who doesn't kill surrendered soul?
*
1/1
a.சமயக் கொள்கைகளை அறிந்தவர்/ who knows religious policies

b..தன்னுடைய வீரத்தில் கர்வம் கொண்டவர்/ who feels proud of his bravery
c..பிறரை திருப்தி படுத்த நினைப்பவர்/ who tries to satisfy others
d. இவர்களில் யாருமில்லை/ none of them
ravi said…

3.திரௌபதியின் பேச்சில் வெளிபட்ட குணாதிசயங்கள் எத்தனை? How many qualities were seen in Dhraupathi's conversation?
*
1/1
a. 3
b. 5
c. 6

d. 11
ravi said…

4.யாருடைய திருப்திக்காக அஸ்வத்தாமன் தண்டிக்கப்பட வேண்டும்? / For whose satisfaction, should Ashwathaama be punished?
*
0/1
a.பாண்டவர்கள்/ Pandavas

b.பீமன்,ஸ்ரீ கிருஷ்ணர்/ Bheema , Sri Krishna
c.திரௌபதி/ Dhraupathi
d.நகுலன், சகாதேவன்/ Nakula, Sagadeva
Correct answer
b.பீமன்,ஸ்ரீ கிருஷ்ணர்/ Bheema , Sri Krishna
ravi said…
5. அஸ்வத்தாமனுக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாவை? What were the shameful acts faced by Ashwathaama?
*
0/1
a.கயிற்றினால் கட்டப்பட்டது/ tied with rope
b.விலங்கினைப் போன்று இழுத்துச் சென்றது. / He was pulled similar to an animal
c.முடி மற்றும் மணி இழப்பு/ loss of hair & jewel

d.மேற்கண்ட அனைத்தும்/All of the above
ravi said…
1.அஸ்வத்தாமன் கொல்லப்படக்கூடாது என்பதற்கான திரௌபதியின் வாதங்கள் யாவை? / What were the arguments of Dhraupathi for not killing Ashwathaama?
When Arjuna brought Ashwatthama to the camp and put him before Draupadi.Due to her female nature, and due to her being naturally good and well-behaved, she showed him due respects as a brāhmaṇa.

She could not tolerate Aśvatthāmā’s being bound by ropes, and being a devoted lady, she said: Release him, release him, for he is a brāhmaṇa, our spiritual master.
Gratitude : For Guru as you have learned the military art from him. He is being represented by his son.We cannot kill him.
Do not cause grief to glorious family members who are always respectable and worshipful.
Empathy – She says I do not want Drona’s wife Krpi to cry for the loss of her son Ashwathhama just like I am crying for the loss of my sons.
Duty as Ksatriya to respect the Brahmana order and protect them.
Yudhisthira supports Draupadi. Nakula, Sahadeva, Arjuna and Krsna agreed with King Yudhishthira.
ravi said…
Feedback
1.7.44 :குருவிற்கு செய்யும் கடமை

1.7.45: மகன் தந்தையின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார், கிருபி இன்னும் வாழ்ந்து வருகிறார்.

1.7.46: மரியாதைக்குரிய ஒழுங்கை அவமதித்து வலியை ஏற்படுத்தாதீர்கள்.

1.7.47: அரசே, துரோணரின் மனைவியை என்னைப் போல் அழ வைக்காதீர்கள்.

1.7.48: அரச நிர்வாக ஆணை பிராமண ஆணையைப் புண்படுத்தி அவர்களைக் கோபப்படுத்தினால், அந்த நெருப்பு அரச குடும்பத்தை எரிக்கிறது.

திரௌபதியின் வாதங்கள் தர்மம் (மதக் குறியீடுகள்), நியாயம் (நியாயம்), சகருணர் (கருணை), நிர்வலிகர் (இரட்டை இல்லாமல்), சமத் (சமம்) மற்றும் மஹா (புகழ் வாய்ந்தவை).

44: Obligation to guru. - nydyyam
45: Son is considered a representative of father, Krpi is still living. - sakarunarh
46: Never insult and cause pain to the respectable order. - nirvyalikam
47: My lord, do not make the wife of Dronácárya cry like me. - samath
48: If the kingly administrative order offends the bráhmana order and enrages them, then that fire burns royal family. - mahat
Draupadí's arguments which were dharmyam (religious codes), nyáyyarh (justice), sakarunarh (merciful), nirvyalikarh (without duplicity), samath (equal) and mahat (glorious).
ravi said…
2.பிராமணரின் உறவினருக்கு வழங்கப்படும் தண்டனைகள் யாவை? What punishments are prescribed for Brahmana ?
As a brahma-bandhu, or a worthless son of a brāhmaṇa, Aśvatthāmā was not to be killed, but he was at the same time an aggressor also. And according to the rulings of Manu, an aggressor, even though he be a brāhmaṇa (and what to speak of an unworthy son of a brāhmaṇa), is to be killed

Cutting the hair from his head, depriving him of his wealth and driving him from his residence are the prescribed punishments for the relative of a brāhmaṇa. There is no injunction for killing the body.
ravi said…
Feedback
ஒரு பிராமணரின் உறவினர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனைகள் :

*முடிவெட்டுதல்,

*அவனது செல்வத்தை பறித்து,

*அவனது வசிப்பிடத்தை விட்டு விரட்டியடித்தல்.

Prescribed punishments for relatíve of a Bráhmana never includes killing. It includes

(i) Cutting the hair,
(ii) depriving him of his wealth and
(iii) driving away from his residence
ravi said…
52

பாஷாண ஏவ ஹரி நீலமணிர் தினேஷு
ப்ரம்லனதாம் குவலயம் ப்ரகடீகரோதி |
நைமித்திகோ ஜலத மேசகிமா ததஸ்தே
காமாக்ஷி ஶூன்யமுபமனமபாங்கலக்ஷ்ம்யா: ||52||

ஹே காமாக்ஷீ! இந்திர நீலமணியோ ஒரு கல்லைத்தவிர வேறில்லை. குவலய புஷ்பமோ பகலிலே வாடிவிடுகிறது. மேகத்தின் கருமையோ எப்போதாவது ஒரு மையத்தில் தான் ஏற்படக்கூடியதாய் இருக்கிறது. ஆகையால், உன்னுடைய கடாக்ஷ சோபைக்கு ஈடாக சொல்லக்கூடியது எதுவுமில்லை.
அம்பிகையின் கடாக்ஷத்திற்கு ஸமமாக சொல்லக்கூடிய மூன்று வஸ்துக்களான இந்திர நீலமணி, குவலயம், மேகம் ஆகியவற்றில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டி, அம்பிகையின் கடாக்ஷ லக்ஷ்மியானது நிகரற்றது என்று வர்ணிக்கப்பட்டது.
ravi said…
*கந்தர் அலங்காரம் 9* 🐓🦚🙏

*அலங்காரம்-02:*

சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?
ravi said…
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை,

ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா,

செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,

குமாரன் கிருபாகரனே!👏👏👏
ravi said…
பேறு, தவம் ரெண்டுமே இல்லாத அடியேனை,

வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்ட சேற்றை எல்லாம் கழுவி என்னை மீட்டவா!

சடாமுடியில் கங்கையாறு, நாகம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைச்சந்திரன் என்று ஐந்தும் சூடியுள்ளான் ஐந்தெழுத்தான்!
அந்தச் சிவபெருமானின் குமாரனே,

குமரனே! உன் கிருபையால் தான் அடியேனுக்கு உய்வு!🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 284*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
இவர், “நான் பக்தன்” அப்படீங்கறார்.

‘ *ஸாம்ப* ³’ – “அம்பாளுடன் கூடிய ஹே பரமேஸ்வரா!”.

அம்பாளோட கூடியிருக்கும் போது அநுகிரஹம் அதிகம் பண்ணுவார்.

அந்த பரமேஸ்வரன்கிட்ட சொல்றார். “நான் பக்தன். அதனால இந்த வைதீகாள் வேதமார்க்கமா பண்ற புண்யாஹவாசனத்தை, நான் பக்திமார்கமா பண்றேன்”. அது என்னன்னா?

‘ *ப்ரஸந்நே மந: கும்பே⁴* ‘ – ப்ரஸன்னமான, ரொம்ப தெளிவான, குழப்பங்களே கிடையாது.

நான் தெரிஞ்சுண்டேன். நீ என் மனசுல இருக்க. நீதான் எனக்கு பரமக்ஷேமத்தைப் பண்ணக்கூடிய ‘ *ஸுஹ்ருத்’* ன்னு தெரிஞ்சுண்டேன்.

நீ என் மனசுல இருக்கங்கிறதையும் தெரிஞ்சுண்டேன். அதனால நான் குழம்ப மாட்டேன். ‘ *ப்ரஸந்நே மந: கும்பே⁴* ‘ –

ப்ரஸன்னமான தெளிவடைந்த என்னுடைய மனமாகிய கும்பத்தில்,
1 – 200 of 308 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை