ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 31

 

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 38

31 कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता - கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா -

🙏🙏🙏

அம்பாள் அணிந்துள்ள கேயூரம் எனும் தோள் வளை எப்படி கண்ணைப் பறிக்கிறது பார்த்தீர்களா? 

இப்போது இம்மாதிரியான  ஆபரணங்கள் வழக்கத்தில் இல்லாத ஒரு நாகரீகம் நம்மை ஆக்ரமித்துவிட்டது.

கனகாங்கத= தங்க வளையல் - 

 கனக என்றால் தங்கம் 

கேயூர = வங்கி (புஜங்களில் அணியும் அணிகலன்)

 கமனீய = ரம்யமான புஜ = கைகள் 

 அன்விதா= அதனுடன் - கூடிய 

31 கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா = 

தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள் 🇨🇮🇨🇮🇨🇮




கைகளில் மலர் ஏந்தி காளி வந்தாள் 

கங்கை கரையோரம் நீலி வந்தாள் 

மை நிறத்து பேரழகி நேரில் வந்தாள் 

மலரடிகள் நோகும் படி அருள வந்தாள் 

ஓடமெல்லாம் ஓயிந்திருந்த நதியோரம் 

வேத மொழி முழங்குகின்ற கரையோரம் 

தேகம் தனை இழந்த மகள் செல்லும் நேரம் 

தேவ தேவி அருகில் இருந்தாள் வெகு நேரம் 

மங்கை இவள் வாழ்ந்திருந்த விதம் பார்த்து 

கங்கையிலே அவள் கரையும் தினம் பார்த்து 

எங்கள் அன்னை நேரில் வந்தாள் இடம் பார்த்து 

எங்கும் அவள் ஆகி இருந்தாள் ஒளி பூத்து 🌷🌷🌷



தோள் வளை

இதைப்பற்றி நாம் நிறைய  தெரிந்து கொள்ள வேண்டும் .

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். 

எல்லா பெண்களும் அம்மனின் அம்சம்

எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது. 

1. தாலி- தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

 4. வளையல்- கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

 5.ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!

6. மோதிரம்

எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க. 

இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, 

அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. 

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. 
இவ்வாறு அணிவதன் சிறப்பு..🙏

கொலுசு : பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். 

இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. 

அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். 

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. 

மெட்டி : மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.

👍👍👍
வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. 

மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். 




மோதிரம் : விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. 

அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. 

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. 

சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது. 

மூக்குத்தி : மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் 

இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. 

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. 

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். 

காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். 

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது 

மூக்குத்தி . சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். 

இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது. 

காதணி : தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். 

காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. 

காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.🙏🙏🙏




தோள் வளை

மூகர் அம்பாளை இப்படி வர்ணிக்கிறார் 

அம்மா ... உன் பதியோ பொன்னார் மேனியன் .. நீயோ *கருப்பாயி* ... 

ஆனால் அவன் உனக்கு தன்னில் ஒரு பாதி தந்து விட்டான் .. 

உன் ஒரு பாதி அவன் நிறத்தை அடைந்து விட்டது 

ஆனால் உன் இன்னொரு பாதி ... 🤔🤔

உன் வருத்தத்தை எப்படியோ கண்டு கொண்ட ஈசன் உன் அழகிய தோள்களில் தன்னையே சாய்த்து கொள்கிறான் .. 

இல்லை சார்ந்து கொள்கிறான் .. 

இங்கே சேர்ந்து கொள்வது வேறு சார்ந்து கொள்வது வேறு ... 

சேர்ந்து கொள்வது என்றால் ஒரு கட்சியில் நம்மை இணைத்துக்கொள்வது ... சமமான பலம் இருந்தால் சேர்ந்து  கொள்ளலாம் .. 

ஆனால் சார்ந்து கொள்வது என்பது தன்னையே ஒருவரிடம்  சரணடைய வைப்பது .. அவரையே நம்பி வாழ்வது !!!

அவர் இல்லாமல் தனித்து வாழ முடியாத நிலை ... 

ஈசன் இங்கே அம்பாளிடம்  தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை சார்ந்து கொள்கிறான் ... 

அவள் இல்லாமல் அவன் இல்லை ... 

அவன் தோளில் தன் இன்னொரு பாதியை அம்பாள்  சாய்த்துக் கொள்கிறாள் .. 





அதுவே நாளடைவில் தோள் வளை யாகி விட்டதாம் 

அந்த இன்னொரு பாதியும் பொன் போல் ஜொலிக்க ஆரம்பித்து விட்டதாம் ... ☀️🌤️💫

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌


Comments

ravi said…
நாந்தீ ஸ்ராத்தம்:--

வாழ்ந்து மறைந்த மூன்று தலை முறையை சேர்ந்த தகப்பனார், தாத்தா,தகப்னாரின் தாத்தா, இவர்களின் மனைவிகள், தாயின் தந்தை, தாயின் தாத்தா, தாயின் தகப்பனாரின் தந்தை., .முதலிய முன்னோகளுக்கு , நாந்தி சோபன பித்ருக்கள்==மங்களமான பித்ருக்கள் எனப்பெயர்.

இவர்கள் நமது வீட்டில் மங்களமான நிகழ்ச்சிகள் நடக்க இருக்கும் போது
ஒரு சில நாட்கள் முன்னதாகவே நம்முடைய இருப்பிடத்திற்கு , ஸந்தோஷத்துடன் ஆசி கூற அவர்களாகவே வருகிறார்கள்..

ravi said…
அவ்வாறு வரும் அவர்களுக்கு சாப்பாடு போட்டு நல்ல வஸ்த்ரம் கொடுத்து
அவர்களை ஸந்தோஷபடுத்தி அவர்களின் ஆசியை பெறும் செயல் தான் நாந்தி.முன்னோர்களின் அநுக்கிரஹம் கிட்டும்… ச்ராத்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என அர்த்தம்.. ஈடுபாட்டுடன் செய்வது என்று அர்த்தம்..

இதில் அமங்களம் எதுமில்லை.. இதுவும் மங்களமானதுதான். உபநயனம், விவாஹத்திற்கு முன் அவச்யம் செய்ய வேண்டும். நாநிஷ்ட்வா து பித்ரூன்
ச்ராத்தே, வைதிகம் கர்ம ஸமாசரேத், என்பதாக ஆபஸ்தம்பர், முதலிய அனைத்து மஹரிஷிகளும் வலியுருத்தி கூறுகிறார்கள். நாந்தி பித்ருக்களை பூஜிக்காமல் வேதத்தில் கூறப்பட்ட எந்த கர்மாவும் செய்யக்கூடாது. .

ravi said…
செய்யாமல் விட்டால் பித்ருக்களின் தோஷம் ஏற்படும். ஆதலால் மங்கள நிகழ்ச்சிகளுக்கு முன்னால் நாந்தியை கட்டாயம் செய்ய வேன்டும்.

“”ஸீமந்த, வ்ருத, செளள நாமகரண, அன்னப்ராசனோபாயன , ஸ்நான, ஆதான, விவாஹ, யஞ்ய, தநயோத்பத்தி, ப்ரதிஷ்டாஸூ ச பும்ஸுஹ்யாவஸத ப்ரவேசன, ஸூதாத் யாஸ்யாவலோக ,ஆச்ரம, ஸ்வீகார,

க்ஷிதிபாபிஷேக தயிதாத் யர்தெள ச நாந்தி முகம். என்பதாக ஸீமந்தம், கல்யானத்திற்கு முன் செய்யும் நான்கு வேத வ்ரதங்கள், , குடுமி வைத்தல்,பெயர் சூட்டுதல், சோறூட்டுதல், பூணல் போடுதல்; ,

ஸமாவர்த்தனம், அக்னி ஆதானம், திருமணம், யாகம், குழந்தை பிறத்தல், கும்பாபிஷேகம், பும்ஸுவனம், புது வீட்டில் குடி புகுதல். ஸன்யாச ஆச்ரமம் ஸ்வீகாரம், , ராஜ பட்டாபிஷேகம், ப்ரதமார்தவ சாந்தி முதலிய மங்கள

கார்யங்களில் கட்டயம் நாந்தி செய்ய வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்ப மஹரிஷி.

ravi said…
விவாஹம், உபநயனம் போன்ற மங்களமான நிகழ்ச்சிகளுக்கு சில தினங்கள் முன்னதாகவே , நாந்தி சிராத்தத்தை, எட்டு அல்லது பத்து ப்ராஹ்மணர்களை வரித்து , சாப்பாடு போட்டு, பித்ரு வர்க்கம்,

மாதாமஹ வர்கம், ஆகிய இரண்டு வர்கத்திற்கும் ஹோமம் செய்து மற்ற சிராத்தங்கள் போல் அன்னரூபமாக செய்ய வேண்டும். இதில் கருப்பு எள்ளு, ஸ்வதா என்ற சொல் உபயோகிக்க கூடாது.

அல்லது ஹோமம் இல்லாமல் சங்கல்பமாக செய்யலாம். . அரிசி, வாழைக்காய் முதலியன கொடுத்து ஹிரண்ய சிராத்தமாக வாவது கட்டாயம் செய்ய வேன்டும்.

⚜️
ravi said…
தந்தை உள்ளவர் ஒரு சில காலங்களில் நாந்தி தானே செய்யலாம். உத்வாஹே புத்ர ஜந்நே பித்ரேஷ்ட்யாம், ஸெளமிகே மகே தீர்தே ப்ராஹ்மண ஆயாதே ஷடே தே ஜீவத: பிது: என்கிறது தர்ம சாஸ்த்ரம்.

பிறந்த குழந்தைக்கு செய்யபடும் ஜாத கர்மாவிலும். சாதுர்மாஸ்ய, யாக, ஸாகமேத, பர்வா பித்ர்யேஷ்டியிலும், , ஸோம யாகத்திலும், காசி முதலிய

புண்ய க்ஷேத்ரங்களிலும் உத்தமரான ப்ராஹ்மணர் வருகை தரும் போதும் தந்தை இருப்பவரும் நாந்தி சிராத்தம் தானே செய்யலாம்.. ஒரு சில வற்றில் நாந்தியை தந்தை தான் செய்ய வேண்டும்.

ravi said…
குழந்தையின் ஜாத கர்மா, நாமகரணம், அன்ன ப்ராசனம், செளளம், உபநயனம், மற்றும் விவாஹம் வரை உள்ள நாந்தியை குழந்தயின் தந்தை தான் செய்ய வேன்டும். விவாஹத்திற்கு பிறகு செய்யும் நாந்தியை தானே செய்ய வேன்டும். விவாஹ நாந்தியை தந்தை தான் செய்ய வேண்டும்.

தந்தை அல்லாத பெண்//பிள்ளைகளுக்கு அண்ணா, சித்தப்பா, பெரியப்பா முதலியவர்கள் ஜாத கர்மா, உபநயனம், விவாஹம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்து வைக்கும் போது “”அஸ கோத்ரஹ ஸகோத்ரோ வா ய ஆசார்ய உபாயனே ததோ பனேய பித்ராதீன் உத்திச்ய அப்யுதயம் சரேத்.

என்னும் வசனப்படி , உபநயனத்தில் மட்டும் , பூணல் போட்டு வைக்கும் ஆசார்யன் , பூணல் போட்டு வைக்கபடும் பையனின் கோத்ரத்தை சேர்ந்தவனாயினும், வேறு கோத்ரமாக இருப்பினும் உபநயனம் செய்து வைக்கப்படும் பையனின் பித்ருக்களை குறித்து தான் நாந்தி சிராத்தம் செய்யபட வேன்டும். உறவினர்களின் முதன் முதலில் உபசரிக்க வேண்டியவர்களில் பித்ருக்களே முதன்மையானவர்கள். . .
முறைப்படி இரண்டு வர்கங்களுக்கும் , ஹோமம் செய்து சாப்பாடும் போட்டு பார்வண விதியாக செய்யும் நாந்தியை ஸோம யாகம் போன்ற யாகங்களில் 21 நாட்கள் முன்னதாக வும், செளளத்தில் மூண்று நாட்கள் முன்னதாகவும், உபநயனத்தில் ஆறு நாட்கள் முன்னதாகவும் நாந்தி செய்யலாம்.

நாந்தி ஆம ரூபமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ செய்வதாயின் இந்த விதி பொருந்தாது.

ஸகல தேவதைகளையும் ஸந்தோஷப் படுத்திய பின்பே விவாஹம் முதலிய சுப கார்யங்கள் செய்ய வேண்டும். குல தேவதை பூஜை, ஸமாராதனை, சுமங்கலி ப்ரார்தனை செய்கிறோம்.. அதை அநுசரித்து , ஸூத்ரகாரர்கள் சில
கர்மா ஆரம்பத்திலும், சில கர்மா முடிவிலும் நாந்தி ஸ்ராத்தம் செய்யும் படி விதிக்கிறார்கள். இதை ப்ராமணன் போஜயித்வா என்றும் அசிஷோ

வாசயித்வா என க்கூறுகிறார்கள். இதற்கு நாந்தி சிராத்தம் செய் என அர்த்தம். பித்ருக்களில் பல வகை உண்டு,.. அதில் நாந்தி முக என்பவர் சுப காலத்தில் ஆராதிக்க தக்கவர். இதையும் சுப கார்யங்களுக்கு முன்னால் செய்ய வேண்டும்.

அப்ப்யுதயம்=இந்த சொல் தர்மம், அர்த்தம்,காமம், ஆகியவற்றின் வளர்ச்சியை குறிக்கும். அவை வளர்வதற்காக பித்ரு தேவதைகளுக்கு செய்யும் ஆராதனைக்கு அப்யுதய சிராத்தம் என்று பெயர். தேவதையின் ஆசியை கோறுதல்= நாந்தி என்ற சொல்லால் குறிக்கபடுவதால் அப்யுதய சிராத்தத்தை நாந்தி என்றும் சொல்வது வழக்கம்.
முடிவில் செய்யும் ப்ரார்தனை. :- இனிமையானதே நான் மனதால் எண்ண வேண்டும். இனிமையானதே செய்ய வேண்டும் .இனிமையானதே பேச வேன்டும்
.இனியதையே தேவர்களிடத்தும் மனிதர்களிடத்தும் செய்யும் படியும் தேவர்கள் அருளட்டும் . பித்ருக்கள் ஆமோதிக்கட்டும். என்பதே.

ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 37

நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். . . . .[37]

விளக்கம்:

வாசனை இல்லாத நல்ல மலர் துன்பமாகும். கரையைத் தெரியாதவன் நீரில் இறங்கிச் செல்லுதல் துன்பமாம். அறியாதவன் கற்றவர்களால் வினாப்படுதல் துன்பமாம். அவ்வாறே சிறியவர்கள் மீது கோபம் கொள்ளுதல் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

நாம் முதலில் செய்யவேண்டியது கர்ம வ்யாதியைப் போக்கிக் கொள்வது. வ்யாதி எப்படிப் போகும்? வைத்யரிடம் போய், மருந்து வாங்கிச் சாப்பிட்டால் போகும். ஏற்கெனவே வந்துவிட்ட கர்ம வ்யாதி தீரவும், மறுபடி அது வராமலிருக்கவும் மருந்து சொல்லும் வைத்யர் யார்? மநுதான் அந்த வைத்யர். மநு என்றால் மநு முதான யார் யார் தர்ம சாஸ்த்ரங்களைக் கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும்*. இதிலிருந்தே அவர்கள் கொடுக்கிற மருந்து என்ன என்று ஊகித்துவிடலாம். நம்முடைய கர்மாக்களை நிர்ணயம் செய்து கொடுக்கும் தர்ம சாஸ்த்ரங்களே தான் மருந்து. இது நான் ஏதோ அழகாக உபமானம் கட்டிச் சொல்வதில்லை. வேதத்திலேயே, ‘மநு என்ன சொன்னாரோ அதுதான் பேஷஜம்’. என்று ‘தைத்திரீய ஸம்ஹிதை’யில் சொல்லியிருக்கிறது, ‘பேஷஜம்’ என்றால் ‘மருந்து’, (‘ஸ்ரீருத்ரம்’, ‘விஷ்ணு ஸஹஸ்ரநாமம்’ தெரிநத்வர்களானால், அர்த்தம் தெரியாவிட்டாலும் ‘பேஷஜம்’ என்ற வார்த்தையாவது தெரிந்திருக்கும்.)

ravi said…
மருந்து கொடுத்தால் பத்யமும் வைப்பார்கள். இதிதைச் சாப்பிடப் படாது, சாப்பிட்டாலும் இவ்வளவுதான் சாப்பிடலாம் என்று கட்டுப்பாடு செய்வார்கள். அதே போல தர்ம சாஸ்த்ரங்களில் இன்னின்ன பண்ணக்கூடாது, இன்னின்ன அநுபோகங்கள் இவ்வளவுதான் வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் விதிகள், நிஷேதங்கள் இருக்கின்றன.

ravi said…
எப்படியும் என்றைக்கோ ஒரு நாள் அழிந்தபோகப் போகிற சரீர அபிவ்ருத்தியை முன்னிட்டே வைத்யர் தரும் கசப்பு மருந்து, உறைப்புக் கஷாயம் எல்லாம் சாப்பிட்டு, அவர் சொல்கிற பத்யங்களை ஏற்று நடத்தும் நாம் ஆத்மாபிவ்ருத்திக்காக மருந்து சொல்லும் மஹா பெரியவர்களான தர்ம சாஸ்த்ரகாரர்களின் மருந்து, பத்யங்களை அதைவிட நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

முன்னேயே சொன்னேன்: போகப் போக தர்ம கர்மாநுஷ்டானமென்பதே மனஸுக்குப் பிடித்த கூஷ்மாண்ட லேஹ்யம் மாதிரி, யுனானி மருந்து மாதிரித் தித்திக்க ஆரம்பித்துவிடுமென்று.
ravi said…
*கேரள கோவில்களில் உள்ள சிறப்பு !*

அங்கே சிவா, விஷ்ணு பேதங்கள் இல்லை

சைவம், வைணவம்… அதிலும் வடகலை, தென்கலை இல்லை..

ஏன் திருநீறே இல்லை …மஹா தேவர் என்றழைக்கப்படும் சிவ சன்னிதானங்களில்கூட !!

சந்தனம் மட்டுமே பிரசாதம்..

ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி, சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்..( பழைமையான கோவில்களிலேயே..!)

கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை…

எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம், “ இலவச” தரிசனம் போர்டுகள், வழிகள் கிடையாது…!

தந்திரிகள் , கருவறை பூஜையில் உள்ளோர், இயற்கை உபாதையை கழிக்கவேண்டியிருந்தால்.. மீண்டும் மீண்டும் குளித்தபின்பே கருவறைக்குள் செல்கிறார்கள்( குருவாயூரில் கண்டது )…

புஷ்பாஞ்சலி( ்அர்ச்சணை) அவ்வப்போது பெயர், நட்சத்திரம் சொல்லி “ சக குடும்பானாம்..” என்று சப்தமாக சொல்லி , நிமிடத்திற்கு ஒரு ஆரத்தி காண்பித்து தட்டுக்காசு வாங்குவதில்லை…
மந்திரங்களை மனதுக்குள் உச்சரித்து, முத்திரைகளுடன் புஷ்பாஞ்சலி மொத்தமாக நடக்கும்…

கோவில் பிரசாதம் என்று மெதுவடை, புளியோதரை, அதிரசம் என்று கோவிலுக்குள் மினி ஹோட்டல் கிடையாது

கோவில் பிரகாரத்திற்குள், ஏன் வளாகத்திற்குள்ளேயே யாரும் உணவருந்துவதில்லை ..

கோவில் வளாகத்திற்குள் அன்னதானக்கூடங்கள் இல்லை…

நரேந்திர மோதி வந்தாலும் வேட்டி, மேல் வஸ்திரத்துடன் மட்டுமே அனுமதி…( பத்மநாபசுவாமி ஆலயம்)
இந்திரா காந்தியே வந்தாலும் இந்து அல்லாதவர்க்கு அனுமதி இல்லை ( குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணன் கோவில்)

கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும், கிருஸ்துவர்கள் அதிகம் இருக்கும் மாநிலமான கேரளத்தில் தெய்வ பக்தி அதிகமாகவே உள்ளது..

அங்கே கோவிலை இடிப்பவர்கள் இல்லை.. கடவுளை இல்லை என்று சொல்பவர்களும் இல்லை!!

கோவிலின் பாரம்பரியத்தை கெடுக்கவும் இல்லை!! கோவில் உள்ளே செல்வதற்கு முன் ஆண்கள் சட்டையை கழட்டிவிட்டுதான் செல்ல வேண்டும்!!

இதற்கு அங்கு உள்ள எந்த அரசியல்வாதியும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை!!

பெண்கள் சில கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற கட்டுபாட்டை பெண்களே மதிக்கிறார்கள்..

எவ்வளவு பெரிய பணக்காரணாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும்.. வரிசையில்தான் வரவேண்டும்..!! சிறப்பு தரிஸணம் கட்டணம் ஏதும் கிடையாது.. ஏன்?பொதுவாகவே கட்டணமே கிடையாது!!

அர்ச்சகர்களை தொட்டு பேசமுடியாது!!
அவர்கள் இரண்டு வேளையும் குளித்துவிட்டுதான் கருவறைக்குள் செல்வார்கள்..

பூஜை முடியும் வரை யாருக்காகவும், எதுக்காகவும் பூஜையை பாதியில் நிறுத்துவதில்லை!!

அரைத்த சந்தனம்தான் சாற்றுவார்கள்..


பக்தர்கள் யாரும் அவர்கள் இஷ்டத்திற்கு கோவிலை சுற்றி எங்குமே விளக்கு ஏற்ற முடியாது.. கோவிலில் எரியும் பொதுவான விளக்கிலேயே கொண்டுவந்த எண்ணையை விட்டுவிடவேண்டும்..

அதிகாலை நிர்மால்ய தரிஸணம் உண்டு!! பூஜைநேரத்திற்கு பூஜை செய்துவிடுவார்கள்.. யாருக்காகவும் பூஜை நிற்காது..

பூஜைக்கு கட்டணம் செலுத்தியவர்கள் கோவில் நிர்வாகம் சொல்லும் நேரத்திற்கு வந்துவிட வேண்டும்.. இல்லையேல் அவர்களுக்கக காத்திருந்து பூஜை செய்ய மாட்டார்கள்!!

கோவில் பிரஸாதத்தை விற்பது இல்லை!! கோவிலின் பிரதான கோபுரத்துக்கு வெளியேதான் கடைகளுக்கு அனுமதி!!

வெளியிலிருந்து கொண்டுவரும் பூக்களையோ,மாலைகளைகளையோ, பிரஸாதங்களையோ, கருவறைக்குள் அனுமதிப்பல்லை!!

அர்ச்சர்கள் கோவிலை விட்டு வேறு எங்கும், யார் வீட்டுக்கும் பூஜைக்கு கோவில் நேரத்தில் செல்வதில்லை!!

கோவில் சாற்றும்வரை சன்னதியிலேயே அர்ச்சர்கள் இருப்பார்கள்!!

கோவிலை சுற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள்!!..

மொத்தத்தில் கோவில் பணத்திற்காக அல்ல. கேரளத்து பாரம்பர்யத்திற்காக!

*படித்ததில் பிடித்தது !*
ravi said…
*Sum and Substances*

*To recite VS*

1. For normal delivery

2. Urinary Infection or any renal problems

3. For high fever ( living example Periyava 's 104 degree fever became normal on reciting VS once )

4. Respiratory problems

5. Graha peedas ... Navagraha dhosams

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
🌹🌺" *மூன்று லோகங்களையும் தாங்குகின்ற சர்வேஸ்வரனையே நான் தாங்குகிறேனே...ஆகா! என்னே என் திறமை?என்ற நந்தி -----விளக்கும் எளிய கதை* 🌹🌺

--------------------------------------------------------
🌹🌺கயிலாயத்தில் ஒரு நாள் நந்தி பகவானுக்கு தன் மீதும், தன் சிவ பக்தியின் மீதும் அதிக கர்வம் ஏற்பட்டது. உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானுக்கு இது தெரியாதா என்ன?

🌺நந்தியின் கர்வத்தை அடக்கநினைத்த ஈசனும், நந்தியின் மேல் அமர்ந்தபடி ஒரு முறை பூமியை வலம் வந்தார்.

🌺அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற சர்வேஸ்வரனையே நான் தாங்குகிறேன்.
ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார்.

🌺இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🌺நந்தியின் கர்வத்தை அடக்கும் நேரமும் வந்தது. இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.

🌺அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை.

🌺ஏனென்றால் இறைவன் அப்போது நந்தியுடன் இருந்தார். ஆனால் ஆணவம் உண்டாகி, இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியின் பாரம் கூட தாங்க முடியவில்லை.

🌺தனது வல்லமையின் மீது கர்வம் கொண்டிருந்த நந்தீஸ்வரரும் தனது தவறை உணர்ந்து கர்வம் நீங்கினார். அவனன்றி இவ்வுலகில் எது அசையும்!
🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பூஜை செய்வதற்கான சில குறிப்புகள் :*

பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூப தீபம் முடியும் போதும், பலி போடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சத்தத்தோடு செய்யப்படும் பூஜை நல்ல பலன் தரும்.

கோவில்களில் அர்ச்சகரிடமிருந்து தான் பிரசாதங்களை பெற வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதுபோன்று வாங்கிய பிரசாதத்தை மூர்த்தியின் முன் நின்றோ அல்லது மூர்த்தியை பார்த்தவாறோ நின்று அணியக்கூடாது.

பெருவிரலும், மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களை சேர்க்க கூடாது.

பூஜைக்குரிய பழங்கள், நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், வாழை, கொய்யா, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம் ஆகியவை.

செண்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

மலர்களை கிள்ளி பூஜிக்க கூடாது. வில்வம், துளசியை மாலையாகவே பூஜிக்க வேண்டும்.

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும் இவை சிவ பூஜைக்கு ஏற்றவை.

துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழு நீர், மரிக்கொழுந்து, மருதாணி, தாபம், அருகு, நாயுருவி, விஷ்ணு க்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

குடுமியுள்ள தேங்காயை சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

மலர்களில் வாசனை இல்லாதது, முடி புழுவோடு சேர்ந்தது, வாடிய மலர்கள், தகாதவர்களால் தொடப்பட்டவை, நுகரப்பட்ட மலர்கள், தரையில் விழுந்த மலர்கள் இவற்றை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.

http://blog.omnamasivaya.co.in/2022/12/blog-post_51.html

தாமரை, நீலோத்பலம் போன்ற மலர்களை பறித்த அன்றே பூஜை செய்தல் வேண்டிய விதி இல்லை.

ஒருமுறை இறைவன் திருவடியில் சமர்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் எடுத்து பூஜிக்கலாகாது.

பறித்த மலர்களை முழுவதுமாக பூஜிக்க வேண்டும்.

துலுக்க சாமந்தி பூவை பூஜைக்கு பயன்படுத்த கூடாது.

ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்திற்கு மாதீபம் அல்லது மா நீராஜனம் என்று பெயர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ஓம் நமசிவாய
ravi said…
🌹🌺 "If we understand the subtlety of Lord Sri Krishna's words, we can think better every moment----" A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹There are lords who wield (the country) with the sharpest weapon of words, and there are lords (Kauravars).

🌺 Their words are the reason why Kampan and Kaviarasar will never be forgotten. ​

🌺Shakuni's cunning words - no one can hide what led to the war.

🌺 No one can deny that Arichandra's words, who had the principle of speaking only the truth no matter what the trouble, earned him a great honor.

🌺 The words spoken by Swami Vivekananda "My Dear Brothers & Sisters" are the specialty of those words that every Indian should have towards himself, towards his motherland and towards his fellow citizens.

🌺 As Kavyarasar said, words help to "praise and praise and slander with dust". ​

🌺The heart rejoices when one congratulates - and the heart grieves when rebuked.

🌺 Words have a lot of power.
A word wins.
A word kills.

🌺Whether the world sees you as a clown or as an intellectual depends 100% on the words you utter. ​
🌺Life is not an adventure surrounded by terror - there is no void of nothingness! If we understand the subtlety of Lord Sri Krishna's words in the Gita, we can think better of every moment. Can be planned. can act. Can handle and can achieve.

🌺 May we get the grace of Shri Krishna forever for that amazing life 🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய வார்த்தைகளின் சூட்சுமத்தை நாம் புரிந்து கொண்டால், நம்மால் ஒவ்வொரு நொடியும் சிறப்பாக சிந்திக்க முடியும்----- என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹வார்த்தைகள் எனும் கூரிய ஆயுதத்தை வைத்து (நாட்டை) ஆண்டவர்களும் உண்டு, மாண்டவர்களும் உண்டு (கவுரவர்கள்).

🌺காலம் உள்ள வரை கம்பனும், கவியரசரும் மறக்கவே முடியாத ஜீவன்களாக இருப்பதற்கு அவர்களின் வார்த்தைகள் தான் காரணம். ​

🌺சகுனியின் தந்திரமான வார்த்தைகள் - போர் முனை வரை போக வைத்ததை யாரும் மறைப்பதற்கில்லை.

🌺என்ன துன்பம் வந்தாலும் உண்மையை மட்டுமே பேசுவேன் என்ற கொள்கையோடு இருந்த அரிச்சந்திரனின் வார்த்தைகள் - மிகப் பெரிய ஒரு மரியாதையை அவருக்கு பெற்றுத் தந்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

🌺சுவாமி விவேகானந்தர் உச்சரித்த வார்த்தைகள் “My Dear Brothers & Sisters” இன்றளவும் ஒவ்வொரு இந்தியனும் தன் மீதும், தன் தாய் நாட்டின் மீதும், தன் சக பிரஜையோடும் கொள்ள வேண்டிய பற்றை பறை சாற்றுவதே அந்த வார்த்தைகளின் சிறப்பு.

🌺கவியரசர் சொன்னது போல் “போற்றுவார் போற்றுதற்கும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றுதற்கும்” உதவுவது வார்த்தைகள். ​

🌺ஒருவர் வாழ்த்தும் போது மனம் மகிழ்கிறது - அதே போல் கடிந்து கொள்ளும் போது மனம் வருந்துகிறது.

🌺வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.
ஒரு வார்த்தை வெல்லும்.
ஒரு வார்த்தை கொல்லும்.

🌺உங்களை இந்த உலகம் கோமாளியாக பார்க்கிறதா அல்லது அறிவாளியாக பார்க்கிறதா என்பது நூற்றுக்கு நூறு நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளில் தான் உள்ளது. ​
🌺வாழ்க்கை பயங்கரம் சூழ்ந்த சாகசமும் இல்லை - எதுவுமே இல்லாத வெற்றிடமும் இல்லை !கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய வார்த்தைகளின் சூட்சுமத்தை நாம் புரிந்து கொண்டால், நம்மால் ஒவ்வொரு நொடியும் சிறப்பாக சிந்திக்க முடியும். திட்டமிட முடியும். செயல்பட முடியும். கையாள முடியும் சாதிக்கவும் முடியும்.

🌺அந்த சாதனையான வாழ்க்கை நமக்கு அமைய ஸ்ரீ கிருஷ்ணன் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…

பழனிக் கடவுள் துணை -15.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

முதலாவது- வெண்பா மாலை-98

மூலம்:

பொன்னைப் பொருளாய்ப் புகழ்வார் புறங்கடைக்கும்
என்னைச் செலவிட் டிடல் வேண்டாம் – மின்னைநிகர்
சிற்றிடையார் சிந்தையையும், தென்பழனி யிற்கவரும்
வெற்றிவடி வேற்படைத்தே வே (98).

பதப்பிரிவு:

பொன்னைப் பொருளாய்ப் புகழ்வார் புறம் கடைக்கும்
என்னைச் செல விட்டிடல் வேண்டாம்! – மின்னை நிகர்
சிற்றிடையார் சிந்தையையும், தென்பழனியில் கவரும்
வெற்றி வடிவேல் படைத் தேவே (98).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

புறம் கடை- வீட்டு வாயில்;

மின்னை நிகர் சிற்றிடையார் சிந்தையையும் என்றதால், பேரன்பர் சிந்தயையும் கவர்கின்றான் பழநியாண்டவன் என்று உணர வேண்டும். அதாவது, பழநியாண்டவன் யாரையும் கவரும் தெய்வம்- வயது, வரம்பு என்ற எந்தப் பாரபட்சமும் இல்லை. சிறுவர், சிறுமியர், குமரியர் முதல் வயது வந்தோர் என எல்லோரையும் ஈர்க்கும் பேராற்றல் படைத்தவன்.

மின்னை நிகர் சிற்றிடையார் முதல் அத்துணை பேரன்பர்களின் சிந்தையையும், தென்பழனியில் நின்று ஆண்டு கொண்டு, கவர்ந்து இழுக்கும் வெற்றி வடிவேலை உடைய எங்கள் தேவ, தேவ, தேவாதி, தேவப் பெருமானே! உன்னை நாடி, தேடித் தொழும் அத்துணை அன்பர்களையும் உன் அன்பில் கட்டிப்போட்டு விடும் பேரன்பின் அடையாளமே! பொன்னைப் பொருளாய்ப் புகழ்வார் வீட்டு வாயிலில் என்னைச் செல்ல விட்டிடல் வேண்டாம்! அந்த நிலை எனக்கு வராது, உன் பேரருள் கூர்ந்து என்னைக் காக்க வேண்டும் பழனிக் கோவே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[15/12, 07:22] +91 96209 96097: *சந்திராம்ஷவே நமஹ*🙏
சந்திர கிரணங்களை போல குளிர் விப்பவர்
[15/12, 07:22] +91 96209 96097: மஹாரூபா *மஹாபூஜ்யா* மஹாபாதக-நாசினீ🙏

மிகப் பெரிய மனப் பூஜையையு‌ம் யேற்பவள்
ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 38

பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. . . . .[38)

விளக்கம்:

பிறன் மனைவியை விரும்பித் தொடர்வது துன்பமாம். வீரமில்லாதவன் போர்க்களத்தில் செல்லுதல் துன்பமாம். விரைந்து செல்லும் கடிவாளம் இல்லாத குதிரையின் முதுகில் ஏறுதல் துன்பமாம். செய்யத் தெரியாதவன் செய்யும் காரியம் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
தகவல் உலா



*ஒரு ரூபாய்க்கு இறைவன்.*



எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான் அதற்கு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார் அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான் சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான் தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர் அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான் அதற்கு அந்த கடைக்காரர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும் நான் தருகிறேன் என்று கூறி அவனை உள்ளே அழைத்து அவனிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொடுத்தார் இதைக் கொண்டு போய் உன் தாயிடம் குடிப்பதற்கு கொடு உன் தாய் குணமாவார் என்று கூறி அனுப்பி வைத்தார் மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை சிறப்பு மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்தனர் சிறுவனின் தாய்க்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது தாயும் உயிர் பிழைத்தார் அவரிடம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காகன பில் காட்டினார்கள் தனக்கு சிகிச்சை செய்த செலவுத் தொகையை கண்ட அந்த ஏழைத்தாய் அதிர்ந்து போனார் ஆனால் மருத்துவர்கள் அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள் உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் ஒருவர் மருத்துவமனையில் செலுத்தி விட்டார் அவரே உங்களிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார் என்று கூறி அந்த கடிதத்தை தாயிடம் கொடுத்தனர் அதை வாங்கி படித்தார் தாய் அதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல நான் ஒரு நிமித்தம் (கருவி) மட்டுமே

ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கடை வீதியில் நம்பிக்கையோடு அலைந்த உங்கள் அப்பாவி மகனுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...

ravi said…
🌺🌺🌺🙏🏻🌹🌹🌹🌹🌹🌹

*இன்றைய சிந்தனை*
.......................................................

*''திறனாய்வுகளை எதிர்கொள்ளுங்கள்"*
..........................................

எவராவது நம்மை ஏளனம் செய்து விட்டால், `நான் யாரென்று தெரியுமா...?’ என்று வெஞ்சினம் கொள்கிறீர்களா...?, அல்லது, “நம்மை இப்படி இழிவுபடுத்தி விட்டார்களே என்று முடங்கி விடுகிறீர்களா...?” இரண்டுமே திறனாய்வுகளை எதிர்கொள்ளும் சரியான அணுகுமுறையல்ல...
                                                                                                                                                      ஆயினும், எதிர்மறையான ஏளனங்களும், நிந்தனைகளும், மனதைக் காயப்படுத்தும் செயல்கள் கூட வாழ்க்கை முழுவதும் மனதில் வடுவாக சிலருக்குப் பதிந்து விடும்.

தாழ்வான திறனாய்வுகள் பலரை வாழ்வில் செயல்பட விடாமலேயே தடுத்திருக்கிறது, அவர்களின் திறனாய்வுகளில், கருத்துகளில் பொருள் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் தவறுகளைத் திருத்தி முன்னேற்றம் காணுங்கள்...

பொருளற்ற விமர்சனங்களால், ஏளனம் மற்றும் நிந்தனைகளால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி நிலையற்றது, அது உங்களின் முன்னேற்றத்தால், நீங்கள் பெற்ற சிறப்பால் அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்...

அது போன்றவர்களின் ஏளனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். அவர்களுக்கு பதில்களால் பதிலடி கொடுக்காமல், முன்னேற்றத்தால் அவர்களிடம் மனம் மாற்றம் ஏற்படச் செய்யுங்கள்...

உடல் அமைப்பு, ஆடைத் தோற்றம், பெற்றோரின் நிலை போன்ற பல காரணங்களுக்காக சிலரைப் புனைப்பெயர் சூட்டி அழைப்பது சிலருக்கு வேடிக்கையாகத் தோன்றலாம், அதற்காக கலங்க வேண்டியதில்லை. அவர்களே இன்னும் பண்பட வேண்டியவர்களாவார்கள்...

அப்படிப் பேசுபவர்களிடம் எதிர்த்து விவாதிக்க வேண்டாம்.
சிறு புன்னகையுடன் கண்டு கொள்ளாது கடந்து சென்றாலே அவர்கள் சோர்வடைவார்கள்...

வாழ்க்கை முழுவதுமே இதுபோன்ற திறனாய்வுகள் மற்றும் எதிர்கருத்துகளை எதிர்கொள்ளப் பழக வேண்டும், பொருளார்ந்த சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர்கருத்துகள் தான்...

சரியோ தவறோ, எதுவாக இருந்தாலும் ஒன்றைப் பற்றிய பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய திறனாய்வுகள் தான் உங்கள் செயல்களின் அறுவடை...

வெறும் பாராட்டுகளால் மட்டும் மனநிறைவு அடைபவர்களை விட, திறனாய்வை சரியாக எதிர்கொண்டவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டவர்கள் என்றும் வெற்றியாளர்களாக நிலைப்பார்கள்...

எனவே!, புகழ்ச்சிகளில் மயங்க வேண்டாம், திறனாய்வுகளால் முடங்க வேண்டாம்...!

நம்மை எவராவது விமர்சனம் செய்யும் பொழுது அதன் உண்மைத் தன்மையை ஆய்ந்தறிய வேண்டும்...

உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தால் அதைக் களைய முன் வர வேண்டும்...

இது இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே செல்தற்கான வழி...

*ஆம் நண்பர்களே...!*

போட்டியாளர்களும், எதிராளிகளும் தீய எண்ணங்களுடன் உங்களைத் திறனாய்வு செய்து தீண்டி உணர்த்துபவர்களாக இருப்பார்கள்...(தீண்டி உணர்த்துதல்- சீண்டுதல்)

அவர்கள், உங்கள் வளர்ச்சியினால் கோட்பாடற்றுப் போவார்கள்...!

ஆனால்!, அதற்கு அவர்களின் வார்த்தைப் பொறியில் சிக்கி, நீங்கள் வாடி, முடங்கி விடாமல் திறனாய்வுகளை எதிர்கொள்ள வேண்டும்,  அதுதான் வெற்றியின் மறைபொருள்...! (மறைபொருள்- இரகசியம்)

*பகிர்வு - தகவல் உலா *

🌺🌺🌺🙏🏻🌹🌹🌹🌹🌹🌹


ravi said…
🌹🌺" *நம் மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட ஸ்ரீமந் நாராயணன் நிச்சயம் கிடைப்பார்...விளக்கும் எளிய கதை* 🌹🌺

--------------------------------------------------------
🌹🌺எட்டு வயது சிறுவன் சண்முகம் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான்

🌺சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான்

🌺பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் சண்முகம் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான்

🌺அதற்கு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார்

🌺அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான் சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான் தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

🌺மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர் அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான்

🌺அதற்கு அந்த கடைக்காரர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவன் தானே வேண்டும் நான் தருகிறேன் என்று கூறி அவனை உள்ளே அழைத்து ஓம் நமோ நாராயணா... என சொல்லிக் கொண்டே அவனிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொடுத்தார்

🌺இதைக் கொண்டு போய் உன் தாயிடம் குடிப்பதற்கு கொடு, ஸ்ரீமந் நாராயணன் அருளால் உன் தாய் சீக்கிரம் குணமாவார் என்று கூறி அனுப்பி வைத்தார்

🌺மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை சிறப்பு மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்தனர். சிறுவனின் தாய்க்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது

🌺தாயும் உயிர் பிழைத்தார், அவரிடம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காகன பில் காட்டினார்கள் தனக்கு சிகிச்சை செய்த செலவுத் தொகையை கண்ட அந்த ஏழைத்தாய் அதிர்ந்து போனார்

🌺ஆனால் மருத்துவர்கள் அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள் உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் ஒருவர் மருத்துவமனையில் செலுத்தி விட்டார்

🌺அவரே உங்களிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார் என்று கூறி அந்த கடிதத்தை தாயிடம் கொடுத்தனர்

🌺அதை வாங்கி படித்தார் தாய் அதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல நான் ஒரு நிமித்தம் (கருவி) மட்டுமே

🌺ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கடை வீதியில் நம்பிக்கையோடு அலைந்த உங்கள் அப்பாவி மகன் சண்முகத்திற்க்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.

🌺நம் மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட ஸ்ரீமந் நாராயணன் நிச்சயம் கிடைப்பார்...🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "If we have faith in our heart we will surely get Sriman Narayan even for one rupee... A simple story that explains 🌹🌺

-------------------------------------------------- ------
🌹🌺An eight-year-old boy, Shanmugam, showed a one-rupee coin to a shopkeeper on the street and asked if there was a Lord in your shop, would you buy it for one rupee?

🌺 The shopkeeper knocked the coin from the boy's hand and chased the boy away from there. The boy took the coin and went to every shop and asked God for one rupee.

Even though many shopkeepers chased him away, the boy Shanmugam went to a big shop and asked the shop owner if he wanted a god in your shop for one rupee.

🌺 To that the shopkeeper bought the God for one rupee and asked what are you going to do with that God

🌺Besides, my mother does everything for me, from feeding me to lullabying me to sleep.

🌺 Doctors have said that only God will save your mother, that's why I am searching if God will be available for one rupee that I have.

🌺The shopkeeper said I will give you the Lord himself for one rupee and called him inside saying Om Namo Narayana... and gave him a small bowl of clean water.

🌺 Take this and give it to your mother to drink, Sriman Narayanan said that your mother will get well soon.

🌺 The next day, special doctors came and operated on the mother who was being treated at the hospital. The boy's mother was given high-quality treatments

🌺The mother also survived, the doctors who treated her showed the bill for the treatment and the poor man was shocked to see the amount of the treatment.

🌺 But doctors, don't worry about that poor mother, someone has paid all the money for your treatment in the hospital

🌺They gave the letter to the mother saying that he has also given you a letter asking him to give it to you

🌺Mother bought it and read it You have to thank me not me I am only a nimitham (instrument).

🌺 But he had said that he should thank your innocent son Shanmukha who wandered with faith in the shop street asking God for a rupee.

🌺 If we have faith in our heart, we will surely get Sriman Narayan even for one rupee...🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
இல்லாத சில விஷயங்களை நினைத்துக் கொண்டே இருப்பதால்
இருக்கின்ற பல விஷயங்களை இழந்து விடுகிறோம்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.

கடைசிக்கு இதாவது கிடைத்ததே என்ற பக்குவம் நிறைந்த மனதோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

கவலையும் கண்ணீரும் உங்களை ஒருபோதும் வாழ வைக்காது. தைரியமும் நம்பிக்கையுமே வாழ வைக்கும்.
- (ப/பி)

���� *இனிய காலை வணக்கம்* ����
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
சிஷ்ய' விளக்கம்

சிஷ்யனுக்கு ப்ரதம லக்ஷணம் விநயம் என்றால் அவனுடைய மற்ற லக்ஷணங்கள் என்ன? 'குரு', 'ஆசார்யன்' முதலான வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்த்தாற்போல் 'சிஷ்யன்' என்பதற்கு அர்த்தம் என்ன? - என்று பார்த்தால் பெரியவர்கள் மூன்று விதமாக டிஃபைன் பண்ணியிருக்கிறார்கள். 'சி¬க்ஷ' என்றால் 'கற்றுக்கொடுப்பது' என்பது தெரிந்ததுதானே? (சிரித்து) இந்த நாளில் தெரியாமலுமிருக்கலாம்!சி¬க்ஷ என்றால் 'ட்யூஷன்'. எவன் 'சி¬க்ஷ' பெறுகிறானோ அவன் 'சிஷ்யன்'. 'சிக்ஷ்யன்' என்பதே சிஷ்யன் என்றாயிருக்கிறது. 'சிக்ஷ்'தான் வேர்ச்சொல். அதற்குப் படிப்பது, அறிவு ஸம்பாதித்துக்கொள்வது என்று அர்த்தம். அப்படிப் பண்ணுபவன் சிஷ்யன். இது ஒரு அர்த்தம்.

இன்னொன்று - 'சே’என்ற வேர்ச் சொல்லின் அடியாக 'சேஷம்' என்று வார்த்தை இருக்கிறது. மீந்துபோனதை 'சேஷம்' என்கிறோம். 'மிகுந்து' என்பதுதான் 'மீந்து' என்று ஆனது. தமிழில் 'மிக்கார்', 'மிக்கார்' என்று புலவர்கள் சொல்வது எவர்களை? ஸாதரணமான லோக ஜனங்களின் லெவலில் இல்லாமல் அதிலிருந்து 'மிகுந்து', 'மீந்து', 'சேஷ'மாகி உயர்ந்த லெவலில் இருக்கிறவர்கள்தானே? 'சேஷர்' என்று அவர்களைச் சொல்லலாம். 'சிஷ்டர்' என்று சொல்கிறோமே, அது இதே வேர்ச்சொல்லை வைத்துத்தான். 'சேஷம்', 'மீந்துபோனது' என்னும்போது ஒரு வஸ்துவுக்கு உயர்வு தெரியாவிட்டாலும், அதற்கு முன்னே 'M' சேர்த்து 'விசேஷம்' என்றால் ரொம்ப உயர்வு, ரொம்பச் சிறப்பு என்றுதானே எடுத்துக்கொள்கிறோம்?

'M' என்ற முன்னடைக்கு எதிரர்த்தம் தருவது, இருக்கிற அர்த்தத்திற்கு ஏற்றம் கொடுப்பது என்று இரண்டு குணமுண்டு. இங்கே 'சேஷ'த்திற்கு ஏற்றம் கொடுத்தே 'விசேஷம்'.

இப்படி, சிறப்பு இல்லாமல் ஸாதாரணப் பேர்வழியாயிருந்த ஒருவன் குருவின் சி¬க்ஷயால் 'சேஷ'னாக சிஷ்டனாக உருவெடுக்கும்போதே 'சிஷ்யன்' என்று சொல்லப்படுகிறான் - இது இரண்டாவது அர்த்தம்.

'சி¬க்ஷ' என்று தண்டிப்பதையும் சொல்வது. 'ராஜ தண்டனை' என்பதை 'ராஜ சி¬க்ஷ' என்பார்கள். ராஜா ர¬க்ஷ, சி¬க்ஷ இரண்டும் தரவேண்டும் என்று சாஸ்திரம். அந்த மாதிரி தன்னுடைய இந்த்ரியங்கள் கண்டபடி போகாமல் சிக்ஷித்துக் கொள்கிறவனே 'சிஷ்யன்' என்று மூன்றாவது அர்த்தம்.

இந்த்ரியத்தை அடக்குவது ஒரு (சிஷ்ய) லக்ஷணமென்றால் 'அடக்கமாயிருக்கான்' என்கிறோமே, அப்படி humble -ஆக, 'விநய'மாக இருக்க வேண்டியது அவனுடைய இன்னொரு லக்ஷணம். அதனால்தான் சிஷ்யனுக்கு 'விநீதன்' என்றே இன்னொரு பெயர்.

குருவோடு கூடவே வஸிப்பவன் என்பதால் 'அந்தேவாஸி' என்றும் அவனுக்கு இன்னொரு பெயர். அப்பா, அம்மாவோடு வீட்டிலில்லாமல் குருகுல வாஸத்தில்தானே
ravi said…
முற்கால சிஷ்யர்கள் படித்தது? அதனால் அதற்கு முக்யத்வம் தந்து இந்த 'அந்தேவாஸி' என்ற பேர் ஏற்பட்டிருக்கிறது. எனக்குத் தோன்றவதுண்டு - 'அந்தே' என்பதற்குக் 'கூட', 'உடன்' என்று அர்த்தம் பண்ணுவதை விட 'உள்ளே' என்றே அர்த்தம் பண்ணலாமென்று குருவின் கூட

இவன் வஸிப்பது மட்டுமில்லை, அவருக்கு உள்ளேயே, அவருடைய ஹ்ருதயத்திலேயே இடம் பிடித்து வஸிக்க வேண்டியவன். அதுதான் ஸரியான அந்தேவாஸி.

ravi said…
சிஷ்யனின் ப்ரதம லக்ஷணம் விநயம். அவனுக்கு மட்டுமில்லாமல், அவன் யாரிடம் அதி விநயமாயிருக்கிறானோ அந்த ஆசார்யனுக்குமே விநய ஸம்பத் அவச்யம் என்று நம் பூர்வ சாஸ்த்ரங்கள் காட்டுகின்றன.
ravi said…
இன்று மார்கழி முதல் நாள். திருப்பாவை என்னும் அற்புதமான பாசுரங்களின் தொகுப்பை, புதுக்கவிதை நடையில் தினமும் விளக்க முற்படுகிறேன்.

*1. மார்கழித் திங்களில் மங்கையின் வேண்டல்*

*(திருப்பாவை- முதலாம் பாசுரம்:)*

வளங்கள் மென்மேலும் பெற்று-
நலங்கள் நாள்தோறும் உற்று-
அவங்கள் அறவே அற்று-
தவங்கள் முழுதாய்க் கற்று-

பொலிவுகள் மலிந்து- யாண்டும்
நலிவுகள் நலிந்து-

புகழின் உச்சியில் இருக்கும்-
புண்ணியங்களை நாளும் பெருக்கும்-

ஆயர்பாடிக் குலத்தின்
அணிவிளக்கான கன்னியரே!
அனைவரும் நம் இனமே;
ஆருமில்லை இங்கு அன்னியரே!

மார்கழி மாதம் இது;
முன்பனிக்காலம் என-
முன்னோர்களால் சுட்டப்பெறும்
ஏமந்த ருது;

இருள் படுதாவை நீக்கி-
இந்து தன் முகத்தை
இம்மியும் ஒளித்திடாமல்
வெளிக்காட்டும் நாள் இன்று;
புராணங்கள் இயம்பும் இதை-
புண்ணிய நாள் என்று!

பொழுது புலரப் போகிறது;
தாமரை மலரப் போகிறது!

வாருங்கள் கன்னியரே நீராட;
நீருக்குள் இறங்கி நீருடன் நாம் சீராட!

சீரான மாந்தன்; ஆயினும்
கூரான வேலால்- எதிரியை
கூறாக்கும் குணமுடைய-
இடையர்குல வேந்தன்;

நந்தகோபன் எனும்
நாமம் தாங்கியவன்;
ஆயர்குலம் காத்திடவே-
அசுரர்கள் உயிரை வாங்கியவன்!

அந்தமிகு கண்ணை உடையவள்;
நந்தகோபனின்- மானங்காக்கும் உடை அவள்!

அசோதை அவள் பெயர்;
அவள் நாமம்தான் அவன் உயிர்!

நானிலமே போற்றிடும்
நந்தகோபன்-அசோதை
தம்பதியின் கன்று;
நாளை நிற்கப்போகிறது-
நீசர்களின் படையை வென்று!

கண்ணன் என்பது- அந்த
கன்றின் நாமம்;
அதனை நவின்றால்
அடையலாம் அனேக சேமம்;

அந்த நாயகனுக்கு-
அந்தகார நிறத்து மேனி;
ஆயினும்- அந்த மேனி
பிளிற்றும் வெளிச்சத்தின் முன்
பரிதியும் நிற்கும் கூனி!

அவனுக்குச் செக்கர் நிறக்கண்!
ஆயினும்- அது அறக்கண்;
அது துப்பிடும் அழலில்
மாண்டதுண்டு பல மறக்கண்!

அவன் முகமோ-
சுட்டெரிக்கும் ஞாயிறும்
சுகம்தரும் திங்களும்
ஒன்றாய்க் கலந்தமுகம்;
ஒருபூவைப் போல மலர்ந்தமுகம்!

அவன் புகழ்பாடினால்-
அவாவியதைத் தருவான்;
அவன்தானே-
அகிலமே விரும்பிடும்
அம்மழையைத் தரும்வான்!

ஆகையால்-
அவன்சீர் போற்றி
ஆரம்பிப்போம் நோன்பை;
ஆயர்குலப் பெண்களே!
ஆயிரம் இடர் வந்தாலும்-
ஆரும் தொடரவேண்டும் இந்த மாண்பை!

- S.நடராஜன், சென்னை
ravi said…
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

#கேரள_மாநிலம்_குருவாயூரிலுள்ள
#ஸ்ரீகுருவாயூரப்பன்_ஆலயத்தில்_காலை3_00_மணிக்கு_நிர்மால்ய_தரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள்.
ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "#அம்மே_நாராயணா_கிருஷ்ணா!#குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள்.

🍒 அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.
ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக #தைலாபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேகம் செய்தவுடன்
#வாகை_மரத்தின்_பட்டையை_இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான்
#வாகை_சார்த்து என்கிறார்கள்.
அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர்.
அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது.

🍒 திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம் (கௌபீனம்) தரித்து, புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான்.
இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த வாகை சார்த்து வழிபாடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம்.
பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான்.
அப்போது #நாரத_முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த #அட்சய_பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.
அவனும் அதிலிருந்து தேவையானபோதெல்லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான்.
அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.
பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.
அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.
சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த #காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான்.
திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ""#கலியுகத்தில்_நீ_ஒரு_வாகைமரமாகப் #பிறப்பாய்_அப்போது_நான்குருவாயூர் #கோவிலில்_குருவாயூரப்பனாகக்காட்சி தருவேன்.
ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள்.
அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய்.
இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் #தோல்_நோய்களும்_தீரும்'' என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் #குருவாயூரப்பனுக்கு "#வாகை_சார்த்து_வழக்கம்_ஏற்பட்டதாம்!!

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 418* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*அஜஸ்* : ஸர்வேச்’வரஸ்: ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
ஆனால் அவ்வூர்ப் பெரியோர்களுக்கு மார்கழி மாதக் குளிர் என்றாலே பயம். எனவே ஆண் துணையாக யார் செல்வது என
யோசித்துக் கொண்டிருக்கையில்

ஒருவர், “இந்தக் கண்ணன் எப்போதும் விஷமங்கள் செய்து கொண்டே இருக்கிறானே.
அவனை இவர்களுக்கு மெய்க்காப்பாளனாகப் போட்டுத் துணைக்குப் போகச் சொல்வோம்.

அவன் செய்யும் விஷமங்களுக்கு
இதுவே சரியான தண்டனை!” என்றார். அதைப் பலரும்

ஆமோதிக்கவே கண்ணனை நோன்பு நோற்கச் செல்லும் பெண்களுக்கு
மெய்க் காப்பாளனாக நியமித்தார்கள்.

இது கோபிகைகளுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுவது போல இருந்தது.
ravi said…
*பாடல் 13..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 36 started on 6th nov
ravi said…
நெஞ்சே, கையில் விளங்கும் ஞானச் சுடர் வீசுகின்ற ஐவேலை உடைய
முருகப் பெருமானின் திருவடிகளை புகலிடமாகப் பெற்று ஈடேறக்
கடவாய்.

ஐம்புலங்களின் வழியே செல்லும் ஆசையை தள்ளுவாயாக🪷🪷🪷
ravi said…
நாம் என்ன செயல் செய்தாலும் மனதால் எண்ணிய பிறகே
செயல்படுகிறோம்.

நமது மனதை நற்சிந்தனைகளை நினைக்கப்
பழகிக்கொள்ளவேண்டும்.

ஆனால் மனமோ ஐந்து இந்திரியங்களின்
செயலால் உண்டாகும் இன்பத்தை ஏற்கனவே அறிந்திருக்கிறது.

மேன்மேலும் அத்தகைய இன்பங்களை அடையவேண்டும் என்கிற
எண்ணமே சதா நமது மனதில் குடிகொண்டுள்ளது.

ஆகையால் நம்
வாழ்நாளில் இந்த ஐம்பொறிகளுக்கு உணவு போடுவதே பெரிய
வேலையாகி விட்டது.

.. அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை பற்றித்
தவியாத பற்றைப் பெறுவேனோ ..

... என்கிற அடிகளைச் சிந்திக்கவும்.

('அற்றைக் கிரைதேடி' - காஞ்சீபுரம்
திருப்புகழ் - பாடல் 329).

ஆனால் எரிகின்ற நெருப்பில் மேன்மேலும்
விறகையோ அல்லது நெய்யையோ இட்டால் தீ அதிகமாகவே எரியுமே
தவிர அணையாது. ஆதலால்

.. ஏ மனமே, ஐம்பொறிகளாகிய ஐந்து வாயில்களின்
வழியே சென்று அவாவுவதை ஒழித்து விடு ..

... என்கிறார் அருணகிரியார்.

ஆசை இல்லை என்றால் முயற்சியும் அனுபவமும் இல்லை.

அவாவை
ஒழிப்பதற்கு மனதிற்கு வேறு ஒரு வழியைக் காண்பிக்கவேண்டும்.

முருகப் பெருமானின் கழல்களை சதா தியானித்துக் கொண்டே இரு.

ஆசைகள் அடங்கி விடும்.

பிறகு அவாவுதல் கிடையாது. வினைகளும்
நம்மை பிறப்பில் கட்டுப்படுத்தாது. மனம் உருவத்தையே பற்ற பழக்கம்
கொண்டிருப்பதால் ஜோதி வீசுகின்ற ஐவேலை முதலில் தியானிக்க
வேண்டும்.

பிறகு முருகனுடைய திருக்கை.

பின் கொஞ்சம் கொஞ்சமாக
முருகனுடைய உருவம் முழுவதும் அகக் கண்ணில் வந்தபின்
அவனுடைய திருவடியை உறுதியாக துணையாக பிடித்துக்கொண்டு
கடைத்தேறுவாய் என்பதே அருணகிரியாரின் அருமை உபதேசம்.🙌🙌🙌

ஆக அவா என்பது பிறப்பு ஈனும் வித்து என்ற திருக்குறளின்படி,
பிறப்பை அறுக்க முதலில் ஆசையை ஒழிக்க வேண்டும். ஆசையை
அடக்க ஐந்து குதிரைகளான ஐம்புலங்கள் ஒடுக்கப்படவேண்டும்.
புலன்கள் அடங்க, ஐந்து குதிரைகளை ஓட்டும் சாரதியாகிய மனம்
அடங்கவேண்டும். மனத்தை அடக்க அதை முருகனின் திருவடிகளில்
அன்பு என்னும் கயிற்றால் கட்டி விட வேண்டும்.

இவ்வாறு குகன் சரணத்தில்,

... ஓடும் மனதை இருத்த வல்லவர்களே காலத்தை வென்றிருப்பார்.
வெறும் தீய வழிகளில் சென்று உழல்பவர்கள் மீண்டும் மீண்டும்
மரித்துப் பிறப்பார்கள்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 416*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 56வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
நித்யாய தரிகு3ணாத்மனே புரஜிதே காத்யாயனீச்ரேயஸே
ஸத்யாயாதி3-குடும்பி3னே முனிமன: - ப்ரத்யக்ஷ-சின்மூர்த்தயே |

மாயாஸ்ருஷ்ட–ஜக3த்-த்ரயாய ஸகலாம்-னாயாந்த-ஸஞ்சாரிணே

ஸாயம் தாண்ட2வஸம்ப்4ரமாய ஜடினே ஸேயம் நதி: சம்பவே || 56
ravi said…
போன ஸ்லோகத்தில், ‘நன்றாக தாண்டவம் ஆடுவதில் விருப்பமுள்ளவனும், ஜடைகளை தரித்தவனும், மங்களத்தை அளிக்கும் சம்புவுக்கு இந்த நமஸ்காரம்’ என்று முடித்திருந்தார்.

இந்த ஸ்லோகத்திலும் அந்த தாண்டவத்தின் அழகில் லயித்து, ‘சாயங்கால தாண்டவமாக’ அதே வார்த்தைகளோடு வர்ணிக்கிறார் ஆசார்யாள். 🙏🌸

மிக அருமையான விளக்கம்.

பார்வதியின் தவத்தின் பலனாக பரமேஸ்வரனை வர்ணிக்கிறார் ஆசார்யாள்.

இதற்கு இணையாக மூகர் ‘பரமேஸ்வரனின் தவப்பயன் காமாக்ஷி’ என்ற மூகபஞ்சசதி மேற்கோள் அருமை.

மஹா பெரியவாளின் சங்கர சரித்திரத்திலிருந்து ‘காரியமின்மையைச் சொல்லவே ஓயாக்காரிய அவதாரம்’ மற்றும் ‘தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் பராசக்தி அவருக்குள்ளேயே ஸூக்ஷ்மமாக அடங்கியிருக்கிறாள்’ என்பதையும் மேற்கோள் காட்டியது மிக அருமை 👌🙏🌸
ravi said…
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்🙏🙏🙏
ravi said…
*கண்ணா*

மார்கழி மாதம் ...

மஞ்சம் வந்து கொஞ்சும் பனித்துளிகள்

நெஞ்சம் எங்கும் கண்ணன் நினைவலைகள்

யமுனை என ஓடும் உன் அருள் வெள்ளம்

அதில் அதில் கண்டோம் கதிர்மதியம் போல் உன் திருமுகம்

பறை தர வாராயோ *கண்ணா*

மறை போற்றும் மாதவா

மார்கழி மாதம் மாதவம் செய்தோம்

உனை அன்றி வேறு எண்ணம் ஏழாவண்ணம்

குழல் கொண்டு தடுப்பாய் *கண்ணா*🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 25.18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
तुङ्गाभिरामकुचभरश‍ृङ्गारितमाश्रयामि काञ्चिगतम् ।
गङ्गाधरपरतन्त्रं श‍ृङ्गाराद्वैततन्त्रसिद्धान्तम् ॥ १०॥

10. Thungabhirama kucha bhara srungareetham aasrayami Kanchi gatham,
Ganga dhara para thanthram srungara advaitha thanthra sidhantham.

துங்காபிராமகுசபரஶ்றுங்காரிதமாஶ்ரயாமி காஞ்சிகதம் |

கங்காதரபரதன்த்ரம் ஶ்றுங்காராத்வைததன்த்ரஸித்தான்தம் ||10||������
ravi said…
பர தந்த்ரம் என்றால் பிறருக்கு வசப்பட்டிருப்பது.

புருஷன் காமேஸ்வரனுக்கு வசப்பட்டவள் காமேஸ்வரியான காமாக்ஷி. பதிவ்ரதை.

ஸ்ருங்கார சாஸ்திரத்தின் சித்தாந்தம் காமாக்ஷி.

சத்வ குணத்திலிருந்து ஏற்படும் பிரம்மானந்தம். ஸ்வயம்பிரகாசமாக ஒளிவிடும் ஆனந்த ரூபிணி.

குண்டலியை மூலாதாரத்திலிருந்து ஸஹஸ்ராரம் வரை கொண்டு சென்று, அம்ருதப்ரவாஹமாக தேஹமுழுதும் வர்ஷிப்பவள்.

நித்ய சரீரி. பக்தியோடு அவளை வணங்கி சகல சௌபாக்கியமும் பெறுவோம்.🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 429* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*171 லோபநாசிநீ -*

அம்பாள் மனதில் எள்ளளவும் கருமித்தனம் இல்லாமல் நீக்குபவள் .

தருமசிந்தனை வளரவிடாமல், குறுகிய மனத்தை வளர்ப்பது பேராசையும் கஞ்சத்தனமும்.

ஆகவே தான் அம்பாள் தாராள, பரந்த மனதை, விரிந்த எண்ணத்தை அருளுபவள்.🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 417*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 56வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
நித்யாய தரிகு3ணாத்மனே புரஜிதே காத்யாயனீச்ரேயஸே
ஸத்யாயாதி3-குடும்பி3னே முனிமன: - ப்ரத்யக்ஷ-சின்மூர்த்தயே |

மாயாஸ்ருஷ்ட–ஜக3த்-த்ரயாய ஸகலாம்-னாயாந்த-ஸஞ்சாரிணே

ஸாயம் தாண்ட2வஸம்ப்4ரமாய ஜடினே ஸேயம் நதி: சம்பவே || 56
ravi said…
எப்படி சிவனையும் சக்தியையும் பிரிக்க முடியாதோ,

அதேபோல் திவ்ய தம்பதியரை பிரிக்க நினைத்தால் அவர்களுடைய கதி என்னவாகும் என்பதை ராமாயணத்தில் காண்கிறோம்.

ராமனை மட்டும் அடைய நினைத்த சூர்பனகைக்கும், சீதையை மட்டும் அடைய நினைத்த ராவணனுக்கும் என்ன நேர்ந்தது என்பதிலிருந்து தெரிகிறது.

‘மாயையால் மூன்று உலகங்களையும் ஸ்ருஷ்டிக்கிறார்’ என்கிறார் ஆசார்யாள்.

மகா பெரியவாளும் “ஒரே ஸமயத்தில் மாயையோடேயும் சேர்ந்திருப்பார். தனித்து ஆத்மாவாகவும் இருப்பார்.

அவருடைய ஆதிக்கத்திலுள்ள மாயை நமக்குத்தான் நம்முடைய ஆத்மா தெரியாத விதத்தில் மனஸ் என்ற தடுப்பைப் போட முடியுமேயொழிய அவருக்கே போட முடியாது.

அதனால் அவர் எவ்வளவு மாயக்கூத்து அடித்துக்கொண்டு ஈச்வரனாக, அவருடைய நிஜ – நிலையில்லாத மாதிரி இருந்தாலும் அப்போதும் பூரண ஞானத்துடன் தான் ப்ரஹ்மமே என்ற அநுபவத்திலேயே உள்ளூற இருந்து கொண்டுதானிருப்பார்.

மாயைக்கு காரணமான ஈச்வரன் — தக்ஷிணாமூர்த்தியாக இருக்கப்பட்டவன் —

லோக லீலை செய்வதை ஆசார்யாளே தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் சொல்லியிருக்கிறார்:

🙏🙏🙏
ravi said…
*பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் ப்ராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேசகாலகலனா வைசித்ரய சித்ரீக்ருதம் |

மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

||” என்கிறார். 🙏🌸
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 37 started on 6th nov
ravi said…
*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
*பொரு புங்கவரும்* ...

போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும்,

*புவியும் பரவும் ...* பூவுலகத்தவரும் புகழ்ந்து துதிக்கின்ற,

*குரு புங்கவ* ... குரு சிரேஷ்டனே,

*எண் குண பஞ்சரனே* ...

அருங் குணங்கள் எட்டிற்கும்
உறைவிடமானவனே,

*முருகன், குமரன், குகன் என மொழிந்து ...*

முருகன், குமரன்,
குகன் என உனது திரு நாமங்களை மெய்யன்புடன் புகழ்ந்து கூறி,

*உருகும் செயல் தந்து ..* . உள்ளம் கசிந்து உருகும் தன்மையைத் தந்து,

*உணர்வு என்று அருள்வாய் ...*

மெய்யுணர்வை எப்போது
அடியேனுக்கு தந்து அருள் புரிவாய்.

......... ..

சண்டையில் ஈடுபடும் வானோரும் மண் உலகத்தவரும் வணங்கித்
துதிக்கின்ற ஆச்சார்ய சிரேஷ்டனே,

எட்டு குணங்களையே தனது
திரு உருவமாகக் கொண்டவனே,

முருகன், குமரன், குகன் என்று
நெஞ்சு கசிந்து மொழிந்து உருகி உணரும் அறிவை

எப்போது
கொடுத்தருளப்போகிறாய்?🙌🙌🙌
Savitha said…
அற்புதமான தமிழ்
முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 419* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*அஜஸ்* : ஸர்வேச்’வரஸ்: ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
கண்ணனைப் பார்க்கக் கூடாது, அவனுடன் பேசிப் பழகக் கூடாது என்று தடைபோட்ட பெரியோர்களே இப்போது
அவனைப் பார்த்துப் பேசிப் பழக வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துவிட்டார்களே!

ஆஹா! கண்ணன் எப்பேர்ப்பட்ட லீலையைச் செய்துள்ளான்!”

என்று
எண்ணி மனம் மகிழ்ந்தார்கள். மார்கழி மாதம் முழுவதும் நோன்பு என்ற சாக்கில் கண்ணனோடு ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள்.

அதை அப்படியே பின்பற்றிய ஆண்டாள்,

தன்னை ஒரு கோபிகையாகவும், ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆய்ப்பாடியாகவும்,
வடபத்ரசாயீயைக் கண்ணனாகவும், அவன் கோயிலை நந்தகோபன் திருமாளிகையாகவும், தன் தோழிகளை இடைச்சிகளாகவும்

பாவித்து
மார்கழி நோன்பு திருப்பாவை பாடினாள் என்பது நாம் அறிந்ததே
ravi said…
*52 ஶிவ காமேஷ்வராங்கஸ்தா* ; =

சிவனின் அர்த்தாங்கினியானவள் -

அவனின் பாதியை கொண்டவள்.🙌
ravi said…
*அம்மா*

ஈசன் பிரம்மம் என்றால் அதை அசைக்கும் எண்ணம் உந்தன் வண்ணம்

ஈசன் தியானம் என்றால் அதில் தெளிர்ந்து ஓடும் ஓடை உன் மேடை

ஈசன் கோபம் என்றால் அதில் கொட்டும் அமிர்த வர்ஷினி நீ

ஈசன் சாந்தம் என்றால் அதில் சந்தனம் கலக்கும் கலவை நீ

ஈசன் ஒருவன் என்றால் இரு இதயங்கள் ஒன்றாய் இயங்க வைத்தவளும் நீ

ஒரு கை தட்டினால் ஓசை வருமோ *அம்மா*

இரு கை தட்டினால் இருப்பதெல்லாம் இனிப்பாய் ஆகாதோ *அம்மா*
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (41-54)*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

11 –
ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாசலா ! (அ)🙏🙏🙏🙏🙏
ravi said…
*அருணாசலா*

வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழி அவள்

முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் உன்னை குறித்து நாங்கள் பாடுவது அவள் காதில் விழவில்லையே 😰

செவிடாகி விட்டாளே 😰

உன் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடுவதை கேட்டு,

வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள்.

பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள்.

ஆனால், என் தோழியோ இன்னும் உறங்குகிறாள் 😰

தூங்கும் இந்த உள்ளங்களில் நீ இருப்பது இல்லையோ அருணாசலா ...?

ஐம்புலக்கள்வர் உள்ளே புகுந்து என் தோழியின் உள்ளதை சூறை ஆடுகிறார்களே ..

அவளை எழுப்பி அந்த கள்வர்களை அழிப்பாயோ *அருணாசலா* .. ?

என் தோழி மிகவும் நல்லவள் ..

இன்று என்ன ஆயிற்று என்று புரியவில்லை ..

அவள் இப்படி தூங்குபவள் அல்ல ..

என் மனதில் நீ குடி புகுந்து என்னை சிக்கென பிடித்துக்கொண்டதை போல் அவளையும் காப்பாற்று *அருணாசலா*😊😊😊
Shivaji said…
Arumai.... Wonderful description, specially linking with start of Maarghazzhi🌹🌹
ravi said…
Yes ..ரமணர் அஷ்ரமாலையில் திருவெம்பாவையை கலந்து ஒரு கலவை .. 2 in 1. படிப்பதற்கு மிக்க நன்றி
Kousalya said…
சூப்பர்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தநுர்மாஸம் என்றும், மார்கழி என்று தமிழில் திரிந்து வந்திருக்கிற மார்க்கசீர்ஷம் என்றும் இரண்டு பெயர் ஏன் என்றால், வருஷத்தைக் கணக்குப் பண்ணுவதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘ஸௌரமானம்’ என்பது ஸுர்யனை வைத்துப் பண்ணினது. பன்னிரண்டு ராசிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாஸமாக ஸுர்யன் தாண்டிக்கொண்டே போய் ஒரு வருஷம் பூர்த்தியானவுடன் மறுபடி ஆரம்பித்த ராசிக்கே வருகிற மாதிரி பூமி அதைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போகும் போது தோன்றும். வாஸ்தவத்தில் ஸுர்யன் இருந்தபடிதான் மத்தியில் இருப்பது. பூமிதான் அதைச் சுற்றிக் கொண்டே போய் .
ravi said…
ஒரு வருஷம் ஆனதும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது. ஆனால் பார்வைக்கு மாறுதலாகத் தெரியும். பூமியின் அந்த ஒரு ஸுர்ய ப்ரதக்ஷிணம் மாஸத்திற்கு ஒரு ராசி வீதம் நடந்து 365 நாளில், அதாவது ஒரு வருஷத்தில் பன்னிரண்டு ராசியையும் ‘கவர்’ பண்ணிவிடுகிறது. இவ்வாறு உள்ளபடியே வைத்துக் கொண்டாலும் ஒரு ராசிக்கு வருஷத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான காலம் பிடிக்கிறது என்ற fact நிற்கிறது. ஒவ்வொன்றின் பெயரிலுமாக, முதல் மாஸத்தை ‘மேஷம்’ என்கிற ராசியில் ஆரம்பித்து, அதற்கு மேஷ மாஸம் என்று பெயர் கொடுத்து, அப்படியே வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகிற போது ஒன்பதாவது மாஸம் தநுர் ராசியாக அமைவதால் அதற்கு தநுர்மாஸம் என்று பெயர்.
இன்னொரு விதக் கணக்குக்குச் சாந்த்ரமானம் என்று பெயர். சந்த்ரனை வைத்து கணக்குப் பண்ணுவதால் அப்படிப் பெயர். அதன்படி ஒரு க்ருஷ்ண பக்ஷம் ‘ப்ளஸ்’ ஒரு சுக்ல பக்ஷத்திற்கு எத்தனை நாள் பிடிக்கிறதோ அது ஒரு மாஸம். பெரும்பாலும் ஒரு க்ருஷ்ண பக்ஷ ப்ரதமையிலிருந்து அடுத்த க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை என்றே சாந்த்ரமானக்காரர்கள் அநுஸரிக்கிறார்கள். வடக்கே ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாஸம் என்று வைத்துக் கொள்வதும் இருக்கிறது.
தமிழ் தேசத்தில் இந்தச் சாந்த்ரமான வழக்கே ரொம்ப காலத்துக்கு முன்னால் இருந்ததால்தான் மாஸத்திற்கே ‘திங்கள்’ என்று சந்த்ரனின் பெயரைக் கொடுத்திருக்கிறது.
இதில் எந்த நக்ஷத்திரம் ஒரு பௌர்ணமியன்று சந்திரனுக்குக் கிட்டேயிருக்கிறதோ அதன் பெயரையே அந்த மாஸத்திற்குப் பெயராக வைத்திருக்கிறது. சித்ரா நக்ஷத்திரம் பூர்ணிமை சந்திரனுக்குக் கிட்டேயுள்ள மாஸம்தான் சித்திரை, வைகாசம் அப்படி இருப்பது வைகாசி, தமிழில் அந்த நக்ஷத்ரப் பெயர்கள் ரொம்பவும் ரூப பேதம் (உருமாற்றம்) அடைந்து ‘ப்ரோஷ்டபதி’ என்ற நக்ஷத்ரப் பெயரிலான மாஸம் ‘புரட்டாசி’, ச்ராவண நக்ஷத்ர மாஸம் ‘ஆவணி’, ‘தைஷ்யம்’ என்பது ‘தை’ என்று இப்படியெல்லாம் ஆகியிருப்பதில்தான் ‘மார்க்கசீர்ஷம்’ என்பது ‘மார்கழி’ என்றாகியிருக்கிறது.
தாரா (தாரகை) மண்டலத்தில் ‘நக்ஷத்ரங்கள்’ என்று பிரதானமாக இருக்கிற இருபத்தேழும் ராசிக்கு இரண்டே கால் நக்ஷத்ரம் வீதம் பன்னிரண்டு ராசிகளில் கவர் ஆகி விடுகின்றன. ஒரு பூர்ணிமை நக்ஷத்திரத்திற்கு அடுத்த பூர்ணிமை நக்ஷத்ரம் இரண்டே கால் நக்ஷத்ரம் தள்ளி அடுத்த ராசியைச் சேர்ந்ததாக இருக்கும். இப்படி இருப்பதால் இங்கேயும் பன்னிரண்டு பூர்ணிமைகளில் – அதாவது பன்னிரண்டு மாஸத்தில் ஒரு வருஷ காலம் பூர்த்தியாகிவிடுகிறது…. மலமாஸம், அதிக மாஸம் என்று ரொம்ப detail-ல் போகாமல் சொல்லிக் கொண்டு போகிறேன்….
ஸௌரமானப்படி மேஷ மாஸம் என்பது இங்கே சித்திரை மாஸம். ரிஷப மாஸம் என்பது வைகாசி மாஸம். இப்படியே ஸௌரமான தநுர் மாஸம்தான் சாந்த்ரமான மார்க்கசீர்ஷமாகிற மார்கழி.
சிவ-விஷ்ணு அபேதம் போல் சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுவதாக ஈச்வரனுக்கு முக்யமான திருவாதிரை, பெருமாளுக்கு முக்யமான வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு உத்ஸவங்களும் இந்த மாஸத்திலேயே வருவதால்தான் பகவத் கீதை விபூதி யோகத்தில், தாம் மாஸங்களில் மார்கழி என்று பகவான் சொல்கிறார் என்று தோன்றியதைச் சொன்னேன்
ravi said…
முகுந்தமாலா 35 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
கிருஷ்ணனோட குணங்களைச் சொல்றார். எட்டு விபக்திகள்ல சொல்றார்

कृष्णो रक्षतु नो जगत्त्रयगुरुः कृष्णं नमस्याम्यहं

कृष्णेनामरशत्रवो विनिहताः कृष्णाय तस्मै नमः ।

कृष्णादेव समुत्थितं जगदिदं कृष्णस्य दासोऽस्म्यहं

कृष्णे तिष्ठति सर्वमेतदखिलं हे! कृष्ण संरक्ष माम् ॥ ३६ ॥

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்

க்ருʼஷ்ணேனாமரசத்ரவோ வினிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।

க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்

க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம் ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
சுந்தராச்சாரியார் இந்த புஸ்தகத்துல எழுதியிருக்கார். இந்த ஸ்லோகத்தோட அமைப்பை பார்க்கும் போது இந்த கவிக்கு கிருஷ்ண பைத்தியம் பிடிச்சிருக்கு போல இருக்கு.

அதனால கிருஷ்ணனை எப்படி எப்படியெல்லாமோ சொல்லி சந்தோஷப் படறார்.

எல்லா விபக்திகளையும் அவரையே வெச்சுப் பாடறார்.

சிலது எல்லாம் சொன்ன கருத்தையே திருப்பி சொல்றார்.

அதெல்லாம் அவரோட பக்தியினால, குணமே தவிர தோஷம் கிடையாதுங்கிறார்.

அவர் கிருஷ்ண பக்தியில பண்றார்ன்னு குறிப்பு கொடுங்கிறார்.
ravi said…
ஒற்றை சிறகோடு என்றைக்கும் வானில் பறக்க முடியாது. ஒத்துவராதவர்களோடு எப்போதும் நிம்மதியாக பயணிக்க முடியாது.

உடல் காயத்திற்கு மருந்திடுவதைப் போல், உங்கள் மனக்காயத்தற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்.

நிம்மதி இல்லை என்று வருத்தப்படாதீர்கள். நல்லவங்களுக்கு என்றுமே அது எளிதில் கிடைப்பதில்லை.

மற்றவர்களின் செயல்களை மாற்ற முயற்சித்து மனவேதனை அடைவதை விட, உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழப் பழகுங்கள் அதுவே நிம்மதிக்கு வழிவகுக்கும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
https://chat.whatsapp.com/HjRTSDmw4CY1ThPJ6MYHck

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தனுர் மாதப்பிறப்பு பற்றிய பதிவுகள் :*

குலதெய்வம், பூர்வீகம், போன்ற நமக்குக் கிடைக்க வேண்டிய பாக்கிய விஷயங்களை குறிப்பது 9-ஆம் இடம். இதனை மூன்றாவது திரிகோண ஸ்தானம் (பாக்கிய ஸ்தானம்) என்பார்கள்.

தமிழ் மாதங்களில் இது ஒன்பதாவது இடம், தனுர் மாதத்தை குறிப்பது. தனுர் என்பது வில்லை குறிக்கும். மார்கழி குளிரில் உடல் வில் போல் வளையும் என்பதால், சீதோஷ்ணநிலையை அனுசரித்து தனுர் மாதம் என்றார்கள்.

தனுர் ராசியான குரு பகவானின் வீட்டில், சூரியபகவான் பிரவேசிக்கும் மாதம். மார்கழி மாதத்தை குறித்து, பகவான் கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார். 12 மாதங்களில் தனக்குப் பிடித்த மாதமாக இந்த மார்கழியைக் குறிப்பிடுகிறார்.

தேவர்களுக்கு இது காலை சந்தி நேரம் என்பதால், வழிபாட்டுக்குரிய நேரம். காலையில் எழுந்து கடும்பனியைக் குறித்துக் கவலையின்றி, நீராடி, நெற்றியில் திலகம் அணிந்து, வாழ்வாங்கு வாழும் வரம் வேண்டி, தெய்வத்தின் சந்நதியை நாள்தோறும் நாடிச் சென்று, பின் மற்ற வேலையைத் தொடங்கும் மாதம் இந்த தனுர் மாதம்.

இதனை அசுப மாதம் என்று சிலர் தவறாகக் கருதுவார்கள். இது இறை வழிபாட்டுக்கு என்றே ஒதுக்கப் பட்ட ஒரு மாதம்.

தெய்வத்தை நினைக்கும் வேளையில் சாதாரண உலகியல் விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாதத்தில் திருமண முகூர்த்தங்களை வைத்துக் கொள்வதில்லை.

http://blog.omnamasivaya.co.in/2022/12/blog-post_16.html

தமிழகத்தின் தொல் சமயங்களான சைவம், வைணவம் இரண்டுக்குமே உரிய மாதம் இந்த தனுர் மாதம் என்பதால் சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் விடிகாலை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.

மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சியும், ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சியும் தினசரி வழிபாட்டில் இடம்பெறும்.

ஒருவகையில் முழுக்கமுழுக்க தமிழ் வழிபாட்டை முன்னிறுத்திய உயர் மாதம் என்று இந்த மார்கழி மாதத்தைச் சொல்லலாம். அந்த மாதத்தின் துவக்க நாள் இன்று.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
[17/12, 07:22] +91 96209 96097: *அம்ருதாஷூத்பவாய நமஹ*🙏
அமுதை பொழியும் நிலவை படைத்தவர
[17/12, 07:22] +91 96209 96097: *மஹாமாயா* மஹாஸத்வா மஹாசக்திர்-மஹாரதி🙏

ஆன்ம உணர்வைத் தூண்டி சிவ ஞானத்தை அளிப்பவள்
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"காலையில் பேசிக் கொள்ளலாம்"- பெரியவா

இதற்காகத்தான் அந்த கருணாமூர்த்தி சொன்னாரோ?

முக்காலும் உணர்ந்த அந்தக் கருணை மேன்மையை,எண்ணி உருகி நின்ற பாபு தீட்சிதர்

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

1983 ம் வருடம்.குல்பர்கா நகரின் அருகில் இருந்த மகாகாவ் என்னும் இடத்தில் மகான் முகாமிட்டு இருந்தார்.பாபு தீட்சிதர் அவரைத் தரிசிக்க வந்திருந்தார். மகானுக்கு அன்று மௌனவிரதம். திருவீழிமிழலை என்னும் திவ்ய க்ஷேத்திர மகாத்மியம் பற்றிய புத்தகம் ஒன்றை பாபு தீட்சிதர் சொல்ல, அதை வாசிக்கும்படி ஜாடை காட்டினார் மகான்.

ஜன்னலுக்கு உள்ளே மகான், வெளியே பாபு தீட்சிதர், இரவு 7-30 மணி முதல் 11-00 வரை வாசிப்பு தொடர, அதைக் கேட்டுக் கொண்டு இருந்தார் மகான்.இப்படி பல நேரங்களில் பலரை வாசிக்கச் சொல்லி மகான் அமைதியாக செவிமடுப்பதும் உண்டு.பாபு தீட்சிதர் வாசித்துக் கொண்டு இருக்கும்போதே,மகா பெரியவா தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். வரலாறு நன்றாக இருப்பதாகவும்,எல்லோருக்கும் புரியும்படி இருப்பதாகவும் பாராட்டினார்.

"க்ஷேமத்துடன் இருப்பாய்" என்று தீட்சிதருக்கு ஆசி வழங்கினார்.தான் வந்த விஷயத்தைப் பற்றி பேசவே இல்லையே என்று நினைத்த தீட்சிதர்,தன் மகளுக்கு விவாகம் நிச்சயமாக வேண்டும் என்று மகானிடம் வேண்டினார்.

"காலையில் பார்ப்போம்" என்று கூறிவிட்டார் மகான்.

ஏன் மகான் இப்படிச் சொன்னார் என்றெல்லாம் தீட்சிதர் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கவில்லை.எப்படியும் அவரது அருளாசி தன் மகளுக்குக் கிடைக்கும் என்று நம்பினார்.

மறுநாள் காலை எட்டுமணி.

பெரியவா அழைப்பதாகச் சொல்ல, தீட்சிதர் மகான் இருக்குமிடம் விரைந்தார்.

"நீ கவலைப்பட வேண்டாம். உன் பெண்ணுக்கு கல்யாணம் நடந்து சௌகர்யமாக இருப்பாள்" என்று ஆசீர்வாதம் செய்தார்."சாட்சாத் பகவானே ஆசி வழங்கியது போலிருந்தது" என்றார் தீட்சிதர்.

மகான் இன்னொரு காரியத்தையும் செய்தார்.....

"இவன் வெளியில் சாப்பிட மாட்டான்...ரொம்பவும் ஆசாரம் உள்ளவன்."பொரியில் தயிரைக் கலந்து கொடு" என்று உத்தரவிட்டார்.

எப்படியெல்லாம் பக்தர்களின் சேவையைக் கவனிக்கிறார் மகான்?

தீட்சிதர் ஊருக்கு வந்ததும்,அவர் காதில் விழுந்த முதல் செய்தி பயங்கரமானதாக இருந்தது. எந்த இரவு, தன் மகளின் திருமணத்தைப் பற்றிப் பேசினாரோ, அன்று அவரது மகளுக்கு பிராண அவஸ்தை ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்திருக்கிறார்.சரியாக காலை எட்டு மணிக்கு பெரியவா அவரை அழைத்த நேரத்தில் இங்கே மகள் பூரண குணமடைந்திருக்கிறாள்.

"காலையில் பேசிக் கொள்ளலாம்" என்று அந்த கருணாமூர்த்தி இதற்காகத்தான் சொன்னாரோ? முக்காலும் உணர்ந்த அந்த கருணை மேன்மையை எண்ணி உருகி நின்றார் பாபு தீட்சிதர்

ravi said…
🌹🌺 "A simple story to explain that if you chant the names of Lord Shrikrishna and worship him wholeheartedly, you can live a fulfilled life 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹 'Wherever there is truth there is also Srikannan. Because that oath is Satshad himself!' Vaishnava nobles praise that.

🌺 Where God is, there is truth. It was the truth and dharma of the Pancha Pandavas that protected them. That is, they won because the Lord was with the Pandavas.

🌺''He can destroy all the Pandava dynasty with a single pot. But they have Srikrishna Paramatma as their savior... If not for Him, they can be destroyed in the snap of a finger'' said Bhishma and Drona.

🌺Leave what the Acharyas said...Sriparameswaran himself says...''No one can do anything to the Pandavas as long as Kannabran is with them''!

🌺Don't forget that if you chant the names of Lord Sri Krishna and worship him wholeheartedly, you can live a full life with truth and dharma.

🌺 The Olashada Shastra of 'Charaka Samhita' describes this wonderfully. They will prepare the medicine by chanting the mantra, 'How Vasudevan does not get failure, how this ocean is never dry, how I did not get to see my mother's marriage... As if all these words are true, this medicine will also work and heal'.

🌺Shrikrishna Paramatma is the one who has all these glories. This is why he got the nickname Aparajithan. Aparajithan means one who never fails!🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், நிறைவாக வாழலாம் என்பதை----- என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹'சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.

🌺பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.

🌺''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.

🌺ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!

🌺பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

🌺'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

🌺இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
. உ

*திருப்பாவை*
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையிற் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய் (2)


*திருஎம்பாவை*

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல் நாம்
பேசும்போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!' `நேரிழையீர்!
சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? *விண்ணோர்கள்*
*ஏத்துதற்குக்*
*கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்*
*தேசன், சிவலோகன்,* *தில்லைச்சிற்றம்பலத்துள் ஈசனார்* க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?' ஏல் ஓர் எம்பாவாய்! 2
*திருச்சிற்றம்பலம்*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே
வழக்கமாகி விடும்.்

பெரியவாள் கலவையில் முகாம்.

காலை வேளை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த
வழக்கறிஞர் தரிசனத்துக்கு வந்தார் காரில்.ஏக தடபுடல்,
மனைவி-மடிசார். பையன்கள்,வேட்டி-துண்டு.இவர பஞ்சகச்சம்-அங்க வஸ்திரம்,நவரத்தினமாலை இத்யாதி.

பெரியதட்டில்பழங்கள்,புஷ்பம்,கல்கண்டு,திராட்சை, முந்திரிப் பருப்பு,தேன் பாட்டில் அத்துடன் ஒரு காகித
உறையில் ரூபாய் நோட்டுகள்.

பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பணம் செய்து,
வந்தனம் செய்து கொண்டார்கள்.

பெரியவா அந்தத் தட்டை மெதுவாகக் கண்களால்
துழாவினார்கள். "அது என்ன, கவர்?"

"ஏதோ.....கொஞ்சம் பணம்..."

"கொஞ்சம்னா?...பத்து ரூபாயா, பதினோரு ரூபாயா?"

வழக்கறிஞர் நெஞ்சில் ஒரு கர்வம் தோன்றியிருக்கவேண்டும்.
தன்னைப் பற்றி, மாவட்டத்திலேயே பிரபலமான கிரிமினல்
லாயரைப் பற்றி, இவ்வளவு தாழ்வாக எடை
போட்டிருக்கிறார்களே பெரியவா? நான் எவ்வளவு பெரிய
அட்வகேட் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா?..

பொய்யான பவ்யத்துடன், "பதினைந்தாயிரம் ரூபாய்," என்றார்.

பெரியவா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக்
கேட்டார்கள்; " நீ எதில் வந்திருக்கே?"

"காரில் வந்திருக்கோம்..."

"அந்தக் கவரை எடுத்துக்கொண்டு போய் காரில் பத்திரமாக
வைத்துவிட்டு வா. பழம்,புஷ்பம் போதும்..."

அட்வகேட் வெலவெலத்துப் போய் விட்டார்.
பெரியவா சொன்னபடியே செய்தார்.
அவரிடம் வெகு சாந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து
விட்டு, பிரசாதம் கொடுத்து அனுப்பினார்கள்.

கார் புறப்பட்டுச் சென்ற சத்தம் கேட்டது.

"பதினையாயிரம் ரூபாயை ஏற்றுக்கொள்ள மறுத்து
விட்டார்களே?" என்ற பொருமல் சிஷ்யர்களுக்கு
இருக்கும் என்பது பெரியவாளுக்குத் தெரியாதா என்ன?

"ஒரு பொய் வழக்கில் வாதாடி இவர் ஜெயித்தார்.கிடைத்த பீஸில்,ஒரு பங்குதான் இந்தப்பதினைந்தாயிரம்.
பாப சம்பாத்யம். அதனால் தான் வேண்டாம் என்றேன்..."

தொண்டர்களுக்குத் தெளிவு உண்டாயிற்று.

ஸ்ரீ மடத்துக்கு, அந்த நாட்களில் அடிக்கடி பொருள்தட்டுப்பாடு வருவதுண்டு. மானேஜர் கவலைப்படுவார்,
அப்போது கூட, "எப்படியாவது பணம் கிடைத்தால் சரி"
என்று எல்லோருடைய பணத்தையும் பெரியவாள் ஏற்றுக் கொண்டதில்லை.

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக் கல் போதும். ஒருவருக் காக தர்மத்தைத் தளர்த்தி னால் அதுவே வழக்க மாகி விடும்.".....
ravi said…
*Kanchi Paramacharya Views On Shradham Performed Overseas*

Few people were waiting for the darshan of Paramacharya Swamy in Kanchi Matham.

One of them, a rich man, came to visit Swami along with his family. Everyone was wearing expensive clothes and jewelry.

Mahaswamy was sitting on the floor and watching over his devotees.

The man started speaking in Tamil, mixed with Malayalam. "I have been living in America for the past 25 years. I came here to get married because I wanted an Indian wife. This is my wife and these are my sons and daughters. When we are abroad, we follow Sanatana Brahmin practices and traditions. I never miss the annual shradham of my parents. Periyava, I will not back down at any cost to get my late parents to Heaven. Tomorrow my son will do this for me. Ain't it the truth?"

ravi said…
Everyone, including the matham employees who were nearby, were looking at him angrily for his words and his arrogance.

Mahaswamy's head was down all the time. Then he raised his head and started asking the man questions, "How much does it cost to get the things needed to perform Shradham in America?"

The man suggested that's it very small amount in dollars, even more insignificant in rupee terms.

That's why Mahaswamy said, "Oh! That's not expensive."

"It's not a big deal, perivava! Now we have advanced a lot. There is a device called cassette tape recorder. I have got recorded all those chants from my house priests. I play it during cremations. Where there is a will there is a way, right Periyava? What do you say?

"
ravi said…
Oh Shradham can be done like this also!" Periyava responded.

"How much will it cost you to come to India and go back to America?" Perivaa asked.

The man went at length with their itinerary details, its costs, and various flight charges. Then he bragged, "but I always travel executive class. Because the lower class is a big headache for us."

"Do you come here every year," asked the Swami.

ravi said…
Every year I come at least once during December holidays and once during Navaratri with the whole family. There are two reasons to be here for Navratri. First of all, tell me how would this world be without Ambika and Lokamata? The second is to make our children aware of these traditions and festivals. Money is not the only meaning in life, right? Our traditions should be taught to our children."

ravi said…
Mahaswamy said "That means you are earning well there and spending a lot to make your children and your ancestors happy. From what you said, you're meeting the right relatives here, because you don't like being downgraded by little ones."

Now the faces of others out there are lit up with joy. On the other hand, that family felt like something hit them. Not able to see into the faces of others, the gentleman who spoke for so long was only looking at Swamy.

ravi said…
Who told you to do shradha karma overseas? How will your ancestors here take the food you offered in that foreign country? *The right to take Amavasya Tarpanas, Mahalaya Tarpanas, Shradha karma pindas is only in this holy land India. For this reason our science has told us Brahmins not to leave this holy land of India and cross the ocean. There is no God greater than the father. Every time you train your attention there, they all come eagerly and hungrily for the food and bless you".

"But, they couldn't partake the food you served overseas and they went hungry and cursed you all these years. You better plan ahead to visit the Goddess. Your ancestors are eagerly waiting for water and food from you. Immediately tell your house priest to prepare for these 25 years of rituals. Go and do it while you can. Your ancestors will be glad and bless you."

ravi said…
That rich man's ego was gone. With tears in his eyes, he fell at the feet of Paramacharya Swamy and begged for forgiveness. "My eyes have opened. I made a big mistake. I have committed a grave sin. As per your order, I will go now and perform shraddha karma for all the years. I am begging you Swami to have mercy on us and give us prasadam. I have nothing more to say."

Paramacharya Swamy gave Kalakanda, kumkuma, flowers to his wife and gave a Ravikaabatta and said "You all have lunch in the mattam and go to Kamakshi Ammavaru Temple and have darshan of Bhagavati. Come here when you finish your paternal duties and then go to America."
ravi said…
இன்று மார்கழி முதல் நாள். திருப்பாவை என்னும் அற்புதமான பாசுரங்களின் தொகுப்பை, புதுக்கவிதை நடையில் தினமும் விளக்க முற்படுகிறேன்.

*1. மார்கழித் திங்களில் மங்கையின் வேண்டல்*

*(திருப்பாவை- முதலாம் பாசுரம்:)*

வளங்கள் மென்மேலும் பெற்று-
நலங்கள் நாள்தோறும் உற்று-
அவங்கள் அறவே அற்று-
தவங்கள் முழுதாய்க் கற்று-

பொலிவுகள் மலிந்து- யாண்டும்
நலிவுகள் நலிந்து-

புகழின் உச்சியில் இருக்கும்-
புண்ணியங்களை நாளும் பெருக்கும்-

ஆயர்பாடிக் குலத்தின்
அணிவிளக்கான கன்னியரே!
அனைவரும் நம் இனமே;
ஆருமில்லை இங்கு அன்னியரே!

மார்கழி மாதம் இது;
முன்பனிக்காலம் என-
முன்னோர்களால் சுட்டப்பெறும்
ஏமந்த ருது;

இருள் படுதாவை நீக்கி-
இந்து தன் முகத்தை
இம்மியும் ஒளித்திடாமல்
வெளிக்காட்டும் நாள் இன்று;
புராணங்கள் இயம்பும் இதை-
புண்ணிய நாள் என்று!

பொழுது புலரப் போகிறது;
தாமரை மலரப் போகிறது!

வாருங்கள் கன்னியரே நீராட;
நீருக்குள் இறங்கி நீருடன் நாம் சீராட!

சீரான மாந்தன்; ஆயினும்
கூரான வேலால்- எதிரியை
கூறாக்கும் குணமுடைய-
இடையர்குல வேந்தன்;

நந்தகோபன் எனும்
நாமம் தாங்கியவன்;
ஆயர்குலம் காத்திடவே-
அசுரர்கள் உயிரை வாங்கியவன்!

அந்தமிகு கண்ணை உடையவள்;
நந்தகோபனின்- மானங்காக்கும் உடை அவள்!

அசோதை அவள் பெயர்;
அவள் நாமம்தான் அவன் உயிர்!

நானிலமே போற்றிடும்
நந்தகோபன்-அசோதை
தம்பதியின் கன்று;
நாளை நிற்கப்போகிறது-
நீசர்களின் படையை வென்று!

கண்ணன் என்பது- அந்த
கன்றின் நாமம்;
அதனை நவின்றால்
அடையலாம் அனேக சேமம்;

அந்த நாயகனுக்கு-
அந்தகார நிறத்து மேனி;
ஆயினும்- அந்த மேனி
பிளிற்றும் வெளிச்சத்தின் முன்
பரிதியும் நிற்கும் கூனி!

அவனுக்குச் செக்கர் நிறக்கண்!
ஆயினும்- அது அறக்கண்;
அது துப்பிடும் அழலில்
மாண்டதுண்டு பல மறக்கண்!

அவன் முகமோ-
சுட்டெரிக்கும் ஞாயிறும்
சுகம்தரும் திங்களும்
ஒன்றாய்க் கலந்தமுகம்;
ஒருபூவைப் போல மலர்ந்தமுகம்!

அவன் புகழ்பாடினால்-
அவாவியதைத் தருவான்;
அவன்தானே-
அகிலமே விரும்பிடும்
அம்மழையைத் தரும்வான்!

ஆகையால்-
அவன்சீர் போற்றி
ஆரம்பிப்போம் நோன்பை;
ஆயர்குலப் பெண்களே!
ஆயிரம் இடர் வந்தாலும்-
ஆரும் தொடரவேண்டும் இந்த மாண்பை!

- S.நடராஜன், சென்னை
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

12 –
ஒருவனாம் உன்னை ஒளித்து

எவர் வருவார்


உன் சூதேயிது அருணசலா ! (அ)
ravi said…
*அருணாசலா*

அழகிய அணிகலன்களை அணிந்த என் தோழி

இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசுவாள்

"ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசிவாள்.

ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாள்

கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட உனை தினம்

வழிபட அயன் திருமால் இன்னும் முப்பது முக்கோடி தேவர்கள் முயன்றும் முடியவில்லை

நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறாய்.

நீ சிவலோகத்தில் வாழ்பவன்,

திருச்
சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன்.

எங்களைத் தேடி வருபவன்

உன் மீது கடல் ஆழம் வானம் பரப்பு அன்றோ பாசம் வைக்க வேண்டும் !!

உன்னை கரம் கொண்டு மறைக்க முடியுமோ அருணாசலா?

இல்லை துணி கொண்டு மூட முடியுமோ ?

இல்லை சிறையில் அடைக்க முடியுமோ அருணாசலா ...?

எல்லாம் நீ ஒருவன் அன்றோ ...

உனை மறைக்க மறையும் நாணுமே அருணாசலா ...

உன் சூது அன்றோ உனை புரியாமல் நாங்கள் வாழ்வது அருணாசலா ??💐💐💐
ravi said…
*அருணாசலா*

அழகிய அணிகலன்களை அணிந்த என் தோழி

இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசுவாள்

"ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசிவாள்.

ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாள்

கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட உனை தினம்

வழிபட அயன் திருமால் இன்னும் முப்பது முக்கோடி தேவர்கள் முயன்றும் முடியவில்லை

நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறாய்.

நீ சிவலோகத்தில் வாழ்பவன்,

திருச்
சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன்.

எங்களைத் தேடி வருபவன்

உன் மீது கடல் ஆழம் வானம் பரப்பு அன்றோ பாசம் வைக்க வேண்டும் !!

உன்னை கரம் கொண்டு மறைக்க முடியுமோ அருணாசலா?

இல்லை துணி கொண்டு மூட முடியுமோ ?

இல்லை சிறையில் அடைக்க முடியுமோ அருணாசலா ...?

எல்லாம் நீ ஒருவன் அன்றோ ...

உனை மறைக்க மறையும் நாணுமே அருணாசலா ...

உன் சூது அன்றோ உனை புரியாமல் நாங்கள் வாழ்வது அருணாசலா ??💐💐💐
ravi said…
*கண்ணா* ...

உனை அடைய என் மனம் துடிக்க

ஏனோ அது நெய்யையும் பாலையும் வெறுப்பதில்லை ...

கண்கள் ஏனோ மெய் மறந்து மை தேடுகிறதே ...

கூந்தல் உன் வாசம் மறந்து கேசமதில் மலர் சொரிய கெஞ்சுகின்றதே

கட்டுக்குள் அடங்காத காளையாய்

காலை வேளை தனில் உன் கலை மறந்து போகிறதே *கண்ணா*

என் வேளை வரும் நேரமதில் காலன் கயிறு வீசும் முன்

என் முன்னே வாராயோ ...

அவன் வழி தடுத்து நற்கதி எனக்கு தாராயோ ..

செய்யாதனவற்றை செய்யோம் என்றே வாக்களித்தோம் ..

தீய சொற்கள் பேசமாட்டோம்

ஆனால் அதில் ஏனோ உனை தீண்டும் இன்பம் வருகிறதே *கண்ணா*

நீயோ செய்வனவற்றை செய்யாமல் இருக்கின்றாயே !!

இது உனக்கு அழகா

*கண்ணா* 🦚
ravi said…
43.ஜகத் ரக்ஷா தக்ஷா ஜல ஜருசிய சிக்ஷாபடுதரா
ஸுரைர் நம்யா ரம்யா ஸததம் அபிகம்யா புதஜனை:
த்வயீ லீலா லோலா ஸ்ருதிஷு ஸுரபாலாதிமுகுடீ-
தடீஸீமா தாமா தவ ஜயதி காமாக்ஷி பதயோ: ||

(தாயே) ! காமாக்ஷி ! உன் திருவடிகளின் இரட்டை, உலகைக் காப்பதில் ஆற்றல் மிக்கது. தாமரைக்கு ஒளிபெறும் முறையைக் கற்பிப்பதில் மிகவும் தேர்ந்தது. தேவர்களால் (எல்லோராலும்) வணங்கத்தக்கது. அழகியது. அறிவாளிகளால் எப்போதும் வரவேற்கத் தக்கது, வேதங்களில் லீலையாக உலாவுவது, இந்திரன் முதலானோருடைய கிரீட விளிம்பில் விளங்குகிறது.
ravi said…
*2. விலக்கத்தின் விளக்கம்*

*திருப்பாவை- இரண்டாம் பாசுரம்*

_வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்._


பால் பரவையில்
படுத்துறங்கும்
பரமனைப் போற்றி-
அரவணை மேல்
அறிதுயில் கொள்ளும்
அவன் சீர் சாற்றி-

பாவையர் நோற்கும்
பாவை நோன்பின்
பாங்கினைக் கேளீர்!

நோன்பினை நாங்கள்
நோற்கும் காலத்தில்-

விடிகாலையில் விழிப்போம்!
வெகுவிரைவில் குளிப்போம்!

அஞ்சனம் தவிர்ப்போம்!
அழகு மலர் தவிர்ப்போம்!

நெய்யினைத் தவிர்ப்போம்!
பொய்யினைத் தவிர்ப்போம்!

பாலும் தவிர்ப்போம்! பாவமும் தவிர்ப்போம்!

புறம் கூறாதிருப்போம்!
அறம் மாறாதிருப்போம்!

இரப்போர்க்கும் துறவோர்க்கும்
இல்லையென இயம்பாமல்
இயன்றவரை ஈவோம்!
இனியவராய் ஆவோம்!

- S.நடராஜன், சென்னை
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 38 started on 6th nov
ravi said…
*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
இப்பாட்டில் ஒவ்வொரு சொல்லிற்கும் சில விஷேசப் பொருள் உண்டு.
அவற்றைப் பார்ப்போம்.

*பொருபுங்கவரும் பரவும் ...*

தேவர்களுக்கு பகைவர்களால் ஆபத்து வந்து துன்பப்படும் போதெல்லாம்,
முருகனையே துதித்து துணையாகக் கூப்பிடுவார்கள்.

சூரபத்மனால்
தேவலோகம் ஆக்கிரமிக்கப்பட்டு, தேவர்கள் எல்லோரும் சூரனுக்கு
அடிமைகளாகி, அவன் கொடுத்த பல இழிவான தொழில்களை
செய்துக்கொண்டிருந்தபொழுது,

ஆறுமுகப் பெருமான் உதித்து,
சூரபத்மாக்களை வதைத்து, தேவர்களின் சிறையை மீட்டு அண்டர்
பதியில் குடியேறச் செய்தார்.

அதனால் அவன் தேவசேனாதிபதி.
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணனும்,

.. *சேனானீம் அஹம் ஸ்கந்தக ..*

... என கூறப்படும் ஒப்பற்ற மஹா வீரன் முருகப் பெருமான்.

*புவியும் பரவும் ...*

விண்ணவர்கள் யுத்தம் வந்தால்தான் முருகனை அழைப்பார்கள்.

ஆனால் மண்ணவர்களோ எப்பொழுதும் முருகனை துதிப்பவர்கள்
என்று கூறி, மண்ணவர்களுக்கு ஒரு ஏற்றம் தருகிறார் அருணை
முனிவர்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 420* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*அஜஸ்* : ஸர்வேச்’வரஸ்: ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
கோபிகைகள் கண்ணனை அநுபவிக்க முடியாமல் தடுத்த தடைகளைப் போக்க எண்ணிய கண்ணன்,

ஆயர்பாடியில் பஞ்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை உண்டாக்கி,

அதற்குப் பரிகாரமாகப் பெண்கள் நோன்பு நோற்க வேண்டும்
என்று கர்கரைச் சொல்ல வைத்து,

அவர்களுக்குப் பாதுகாவலனாகக் கண்ணனையே ஊரார்கள் நியமிக்கும்படி லீலைகள் செய்து,
கோபிகைகளுக்குத் தன் அநுபவத்தையும் தந்தான்.

இவ்வாறு தன்னை வழிபடுவதற்கு இடையூறாக வரும் தடைகளைத் தவிடு பொடியாக்கித்
தன் அடியார்கள் தடையின்றி வழிபாடு செய்ய வகைசெய்து தருவதால்
‘ *அஜ* :’ என்று திருமால் போற்றப் படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 96-வது திருநாமம்.
“ *அஜாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் வரும் தடைக்கற்கள் யாவும் படிக்கற்களாக மாறும்.🙌🙌🙌
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 417*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 57வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
நித்யம் ஸ்வோதா3- போஷணாய ஸகலானுத்3தி3ச்ய வித்தாசயா

வ்யர்த்த2ம் பர்யடனம் கரோமி ப4வத: ஸேவாம் ந ஜானே விபோ4 |

மஜ்ஜன்மாந்தர-புண்யபாக-ப3லதஸ்-த்வம் சர்வ ஸர்வாந்தரஸ் –

திஷ்ட2ஸ்யேவ ஹி தேன வா பசுபதே தே ரக்ஷணீயோஸ்-ம்யஹம் || 57
ravi said…
அடியார்களது பாவத்தைப்போக்குவதால் "சர்வர்'” எனப்படுபவரே!

எங்கும் நிறைந்த விபுவே!

எனது வயிற்றை வளர்க்கவே செல்வத்திலாசை கொண்டு பலரையும் நாடி வீணாக அலைகின்றேன்,

(இதுவரை) உன் சேவையை அறிந்தேனில்லை.

(இப்பொழுதுதான்) எனது முற்பிறவிகளில் செய்த புண்ணியம் பழுத்துப் பலன் தந்த அனைத்துள்ளும் உறைபவராக உம்மையறிந்தேன்.

ஆகவே உம்மால் காப்பாற்றப்பட வேண்டியவனாகிறேன்🙌🙌🙌
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஒன்று தூக்கக்காரன் விரதம், மற்றது ஆட்டக்காரன் பண்டிகை. ஆனால் இரண்டு பேரும் ஒரே மாதிரி ராஜாக்கள்-ரங்கராஜா, நடராஜா.
ராஜா என்றால் ராஜஸபை, ராஜஸதஸ் என்று தர்பார் இருக்கணுமோல்லியோ? அப்படித்தான் அந்த இரண்டு பேருக்கும் அந்த அம்சமும் ஒற்றுமையாக இருக்கிறது. ரங்கம் என்றால் ஸபைதான். சிதம்பரத்திலோ ஸபை, ஸபை என்றே ஸந்நிதியைச் சொல்கிறது – சித்ஸபை, கனகஸபை என்று. விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆட்டக்காரன் ஸாக்ஷாத்தாக ஆடுகிற அந்த இடம் மட்டுமே சித்ஸபை என்றும், அந்த வாசல்படிக்கு அடுத்தாற்போல பக்தர்கள் நிற்கிற இடமே கனக ஸபை என்றும் சொல்வார்கள். எப்படியானாலும் ஸபைதான். இந்த இரண்டு ஸபைகளிலும் இருக்கிற இரண்டு ராஜாக்களும் ஒரே மாதிரி தெற்குப் பார்த்தே இருப்பதிலும் ஒற்றுமை!
ravi said…
இன்னொரு ஒற்றுமை, இந்த இரண்டு ராஜாக்களுமே தங்கள் ராஜ்யப் பிரஜைகளுக்குத் தண்டனை கொடுக்கிறதற்கோ, மற்ற ராஜ்யங்களோடு சண்டை போடுவதற்கோ ஸபை கூட்டி தர்பார் நடத்துகிறவர்களில்லை! இது ‘பொலிடிகல்’ – ராஜாங்க – அரசாங்க ஸபையே இல்லை! ‘ராஜ அங்கமான ஸபையேயில்லாத ராஜாக்களா? வேடிக்கையாயிருக்கே?” என்றால் வேடிக்கையேதான்!
ravi said…
ப்ரபஞ்சம் பூராவையும், ப்ரபஞ்ச வாழ்விலே நடக்கிற எல்லாவற்றையும் – அதிலிருந்து தப்பித்துக் கொண்டு மோக்ஷத்திற்குப் போய்ச் சேர்வது பர்யந்தம் ஸகலத்தையும் – வேடிக்கையாகவே நடத்தி வைக்கிற ஸர்வலோக ராஜா தான் இப்படி இரண்டு வேஷம் போட்டுக் கொண்டிருப்பது! ஒருத்தன் வேடிக்கை ஆட்டமாகவே ஆடி அதை நடத்தி விடுகிறான் – நாளன்றைக்குக் களி தின்ன வைத்துப் பண்டிகை கொண்டாட வைக்கப் போகிறானே, அவன்! ஆமாம், அவனுடையது தண்டனை தரும் ஸபையில்லை, நடன ஸபை! ம்யூஸிக் ஸபா, டான்ஸ் ஸபா என்றே சொல்கிறோமே, அந்த மாதிரி ஸபை! முந்தா நாள் பட்டினி போட வைத்தவனுடைய ஸபை? அது நான் சொன்ன வேடிக்கையிலேயும் இன்னும் வேடிக்கை! சயனக்ருஹம் – bedroom –தான் இங்கே ஸபை! அங்கே ஒரே ஆட்டமான ஆட்டமென்றால், இங்கே ஸரியான தூக்கம்! ஆட்டமாக ஆடினால், களி, கிளி சாப்பிட்டால்தானே முடியும்? அப்படி அங்கே! தூக்கத்துக்கு ஏர்வையாக (ஏற்றதாக) இங்கே பட்டினி! காற்று ஆட்டமாக ஆடுகிற புயலுக்கும் ஆதாரமாக ஒரு சாந்த கர்ப்பம், still centre உண்டு. அணுவுக்குள்ளும் ஒரு still centre-ஐச் சுற்றியே மஹா வேக ஆட்டம் நடப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியே, தனக்கு உள்ளே இருக்கிற ஆடாத அசையாத ஸத்ய ஸ்திதியையே அந்த ஆட்டக்காரன் வெளியிலே ஞானாகாசமாகவும், தூக்கக்காரன் தன்னுடைய மௌன நித்திரையாகவும் தெரிவிக்கிறார்கள்.
‘கோயில்’ என்றே சைவர்கள் சொல்வது ஆட்டக்காரனின் சிதம்பரத்தைத்தான். வைஷ்ணவர்கள் ‘கோயில்’ என்று மட்டும் சொன்னால் அது தூக்கக்காரனின் ஸ்ரீரங்கம்தான்.
இரண்டு இடத்திலும் ‘டான்ஸ் தியேட்டர்’ என்கிற அர்த்தம் கொடுக்கும் ‘ஸபை’ என்றும் ‘ரங்கம்’ என்றும் தான் அவர்களுடைய ஸந்நிதிகளுக்குத் தனிப்பெயரும் கொடுத்திருக்கிறார்கள்.
நம்முடைய பூர்விகர்கள் அந்த இரண்டு பேரும் ஒருத்தனேதான் என்று நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.
அந்த இரண்டு பேருக்கும் விசேஷமான திருநாள்கள் இந்த தநுர் மாஸத்திலேயேதான் வருகிறது.
இரண்டு பேருக்குமான திருப்பாவை – திருவெம்பாவைப் பாராயணமும் இந்த மாஸத்துக்கென்றே ஏற்பட்டிருக்கிறது.
சிவ-விஷ்ணு அபேதத்தைப் போக்கி ஐக்கியத்தை இப்படிக் காட்டும் பெரிய சிறப்பால்தான் தநுர்மாஸத்திற்கு இத்தனை விசேஷம், ‘மாஸானாம் மார்க்கசீர்ஷோ (அ)ஹம்’ – ’மாஸங்களுக்குள்ளே நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கூறும்படியான தனிச் சிறப்பு* ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
*கீதை – 10.35
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (41-54)*
ravi said…
*❖ 53 ஷிவா =* சிவனுமானவள் – சிவத்துடன் ஐக்கியமானவள், அதனின்று வேறுபாடற்றவள்
ravi said…
*அம்மா*

இரண்டில் ஒன்றானவளே ஒன்றில் உயிரானவளே

உயிரில் உன் எழில் பதிப்பவளே எழிலில் இணை இல்லாதவளே

இல்லாதவளே ... கோபம் கர்வம் மமதை ஏதும் இல்லாதவளே

இருப்பவளே என்றும் இளமை கொண்டவளே

இளமை தனில் இன்னிசை எழுப்பவளே

எழும் பிறவியில் விழித் துணையாய் வருபவளே 👏👏👏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 26.18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
காஂசீரத்நவிபூ4ஷாம் காமபி கந்த3ர்பஸூதிகாபாங்கீ3ம் |
பரமாம் கலாமுபாஸே பரஶிவவாமாஂகபீடி2காஸீநாம் ‖11‖
ravi said…
काञ्चीरवनशिभूषाां, कामशप कन्दपविूशतकापाङ्गीम्।
परमाांकलामुपािे, परशशििामाङ्क-पीशठकािीनाम्॥
11
ravi said…
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தமது சிறுவயதில் பஞ்சதஸி மற்றும் மூக பஞ்ச சதியையும் பாராயணம் செய்துகொண்டே காஞ்சி காமாட்சி அம்மனின் ஆலயப் பிரகாரம் வருவாராம்.

மேலும் ஸ்ரீ மஹா பெரியவரும் இம்மூகப் பஞ்சசதீ பற்றி மிகவும் சிலாகித்து கூறுவர்களாம்.

அவற்றில் நமது பாவங்களை எரித்து பொசுக்கும் அக்னியின் ஆற்றலைப் போன்ற ஸ்லோகம் ஒன்று ...................

தினசரி 21 முறை காமாக்ஷியை நினைவிற்கொண்டு சொல்ல நெருப்பிலிட்ட பஞ்சுபொதியாய் நமது பாபங்கள் எரிந்து சாம்பலாகும்.
ravi said…
ஸ்ரியம் வித்யாம் தத்யாத் ஜனனி நமதாம்
கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி !
கருணா !
த்ரிலோக்யா மாதிக்ஞம் திரிபுர பரிபந்தி ப்ரணயினி !

ப்ரணாமஸ் த்வத்பாதே ஸமித துரிதே கிம் ந குருதே !!
ravi said…
ஹே காமாக்ஷி ! வணங்குகின்றவர்களுக்கு உனது கருணையானது தனம் ( செல்வம் ), வித்யை , அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள் , மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை, இவைகளை விரைந்து கொடுக்கிறது.

திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் பிரிய பத்தினியே !

பக்தர்களின் பாபங்களைப் போக்குகின்ற தங்கள் பாதங்களில் செய்த நமஸ்காரமானது எதைத்தான் தராது!
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 430* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*171 லோபநாசிநீ -*

மிகவும் அருமையான நாமம் ... வாரி வாரி வழங்குவதால் தான் அவள் என்றும் வற்றாமல் இருக்கிறாள் ...

அவளிடம் ஞானம் கொட்டிக் கிடக்கின்றது .

தனம் கொட்டிக் கிடக்கின்றது ...

நாம் வேண்டுவது லௌகீக விஷயங்கள் மட்டுமே ..

ஞானம் நாம் கேட்பதில்லை ...

வைராக்கியம் தா என்று சொல்வதில்லை ...

யாரோ எங்கோ ஒருவர் காளமேகம் ஆகிறார்

ஒரு அடி முட்டாள் சியாமளா தண்டகம் பாடுகிறார் ..

ஒரு ஊமை 500 பாடல்கள் பொழிகிறான் ..

இவர்கள் அன்னையிடம் கேட்டது பொன்னும் பொருளும் அல்ல வற்றாத ஞானம் ... 🙌🙌🙌
ravi said…
எவ்வளவோ புண்ணியம் செய்து இந்த மனித பிறவி பெற்றுள்ளோம் ..

இதன் அருமை நமக்கு இன்னும் சரிவர தெரியவில்லை ...

இறைவன் நாமங்களை சொல்லும் அரிய வாய்ப்பு மனித பிறவியில் மட்டுமே கிடைக்கும் ...

எவ்வளவோ மகான்கள் எழுதி வைத்த ஸ்லோகங்கள் இன்றும் நல்ல பலனை தந்த வண்ணம் உள்ளன ...

அற்புதமான ஸ்லோகங்கள் வரிசையில்

சிவ சஹஸ்ரநாமம் , ஸ்ரீ ருத்ரம் , கனகதாரா ஸ்லோகம் , விஷ்ணு சஹஸ்ரநாமம் , ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , அபிராமி அந்தாதி , சிவானந்த லஹரி , சௌந்தர்ய லஹரி இன்னும் பலப் பல

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில்
கீழ் கண்ட ஸ்லோகங்களின் பலஸ்ருதி (Phalashruti)யை தொகுத்துள்ளேன் ..

வேண்டத்தக்கது அறிவோன் அவன் வேண்டுவது தருவோன் அவன்

இருப்பினும் பலன்களை தெரிந்து கொண்டு ஸ்லோகங்களை சொல்வதால் இன்னும் நமக்கு அதிக ஈடுபாடு வருமே

1. அபிராமி அந்தாதி

2. விஷ்ணு சஹஸ்ரநாமம்

3. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

4. சௌந்தர்ய லஹரி

5. மூக பஞ்சசதீ

இந்த தொகுப்பை ஒரு பொக்கிஷமாக பாவித்து பார்க்கவும் .. ஒரே இடத்தில் எல்லாம் கிடைப்பது அரிது ..

அவன் அருள் இருந்தால் மட்டுமே நமக்கு இந்த தொகுப்பை பெறவோ பார்க்கவோ முடியும் ...

அன்புடன்
அடியேன்
ravi said…
The Veblen effect is all about shifting the context to shift mind and thereby shift reality. Interesting and yes a great psychological game being played over thousands of years and generations. The best part is despite so much of Knowledge available and technology advancement and information availability, Veblen Effect refuses to let go.


At 23, Julius Caesar was a junior politician on the way up. But he had an advantage: confidence and brains. Sailing across the Aegean Sea, he was captured by Sicilian pirates. They demanded a ransom: 20 talents of silver. (That’s about 620kg, worth about $600,000.) Caesar told them they were being ridiculous. He couldn’t possibly allow himself to be ransomed so cheaply. The pirates hesitated, they were confused. Caesar insisted the ransom must be raised to 50 talents of silver. (Around 1,550kg, worth about $1.5 million.) Now the pirates didn’t know what to make of this. Normally, their captives tried to escape as cheaply as possible. They didn’t understand what was going on. But if he said he would double the ransom, why argue? They let Caesar’s men go back to Rome to raise the money. And in Rome, in his absence, Caesar suddenly became very famous and well known. No-one had ever been ransomed for such an enormous sum ever before. He must be very special, he must be incredibly important.
ravi said…
He had just invented the Veblen Effect. Although Thorstein Veblen wouldn’t give it that name for another 2,000 years. The Veblen Effect is when consumers perceive higher-priced goods to be worth much more, simply because they cost more. On Sunset Boulevard, a "Sale" implies an increase in prices to push up the perception of value. A typical example of the Veblen Effect in the retail space! None of them are actually any better than the cheaper alternatives, but the price alone makes them seem more price and desirable. Caesar had effectively made himself a Veblen brand. He’d placed a much higher value on himself greater than anyone in Rome. But, as far as anyone in Rome knew, it wasn’t him who had done it. It was an independent valuation. So it must be true. And because Caesar was now so highly valued, his men had little trouble raising the ransom money. They returned to the island and freed him. But Caesar wasn’t going to allow the pirates to keep that sort of money at all. As a now as an important and famous man, it was easy to raise a huge force. He hunted down the pirates and took back all the money, plus everything else they had pillaged, t
ravi said…
So Caesar was now both very rich and very famous. And in time, with that same combination of confidence and brains, he became ruler of all Rome. And he presided over the golden age of the Roman Empire. Expanding it from Spain to Germany, from Britain to the Middle East. Because Caesar knew that reality begins in the mind. So the most important piece of real estate in which to stake a claim is the human mind. How you stake a claim in the mind is by creating a perception. And how you create that perception is by controlling the context. Control the context and you control the mind. Control the mind and you control reality.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 431* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*172 நிஸ்ஸம்சயா -*

துளியும் சந்தேக என்பதே இல்லாத மனம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை.

முழுமை, முதிர்ச்சி பெறாத மனம் தான் சந்தேகப்படும்.

ஞானம் நிறைந்த ப்ரம்மத்திற்கு எது சந்தேகம்?

எதில் சந்தேகம்?
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 27.18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐 கர்சீரத்நவிபூ4ஷாம் காமபி கந்த3ர்பஸூதிகாபாங்கீ3ம் |

பரமாம் கலாமுபாஸே பரஶிவவாமாஂகபீடி2காஸீநாம் ‖11‖

काञ्चीरवनशिभूषाां, कामशप कन्दपविूशतकापाङ्गीम्।
परमाांकलामुपािे, परशशििामाङ्क-पीशठकािीनाम्॥
11
ravi said…
காஞ்சியாகிற ரத்தனத்தை அணிந்தவளும்

மன்மதனுக்கு மறு வாழ்வு கொடுத்தவளும்

பரமேஸ்வரனின் இடப்பாகம் கொண்டவளும் ஒன்றாய் இருக்கும் பிரம்மமும் ஆகிய என் காமாக்ஷியை நான் உபாசிக்கிறேன் 🙌🙌🙌
ravi said…
*கண்ணா*

உனை நினைத்தால் உனை தொழுதால் உனை எண்ணி விரதம் பூண்டால்

கிடைக்காத செல்வம் உண்டோ *கண்ணா* ?

மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்காதோ ?

வயல்களில் பசுமை பாய் விரித்தே ஆடாதோ ?

பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா

பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் கொண்டே நில்லாதோ

அறுவடைக் காலம் அவள் தன் திருமண நாளன்றோ ..

கண்ணனை மணக்கும் பொன்னாள் அது வன்றோ?

*கண்ணா*

நீ தின்ற மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு

கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு

நெஞ்சிலே ஈரம் உண்டு உன் மேல் பாசம் உண்டு
பசுமை உண்டு

பஞ்சமும் நோயும் இன்றி உன் அருள் கொண்டே பாராளும் வலிமை உண்டு

சேராத செல்வம் இன்று சேராதோ?

தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ *கண்ணா* ?

மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழாதோ ?

குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்காதோ *கண்ணா*

வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தாராதோ ?

என்றும் வற்றாத செல்வத்தை எங்கள் விரதம் தரும் அன்றோ *கண்ணா* ?

கைகட்டிச் சேவை செய்து

கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு

பொய் சொல்லிப் பிச்சை பெற்றால்

அன்னை பூமி கேலி செய்வாள் அன்றோ *கண்ணா* ?

மெய் கட்டி கண்களில் உனை நிரப்பி

உள்ளம் தொட்டு
மெய் சொல்லி

உனைத் தொழுதால் அன்னை பூமி வாரி அணைக்க மாட்டாளோ *கண்ணா* ?

ஓங்கி உலகளந்த உத்தமன் அன்றோ நீ *கண்ணா* ... ?

ஏங்கி உலகில் சுழன்று பிறவி பல எடுக்கும் எத்தர்கள் அன்றோ நாங்கள் ...

எனை அளந்தே உயர வைப்பாயோ *கண்ணா*💐💐💐
ravi said…
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்

நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே

புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்

பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.3 🙌🙌🙌
ravi said…
வேதத்தின் சாரமே எதையும் சாராதவளே

உபநிஷத்தின் ஆணி வேரே... எங்களை தாங்கும் ஆல விழுதே

முப்பது முக்கோடி உணரா உன்னதமே

என் அறிவுக்கும் அளவாய் வந்தது அதிசயமே ...

பாதம் தேடுவோர் கோடி ..கோடியில் நின்ற என்னை நீ வலிய வந்து பாதம் என் சென்னியில் பொறுத்தினாயே உன் போல் தெய்வம் வேறு உளரோ இலரோ ...

உன் சேவை செய்ய ஒரு கோடி முறை பிறப்பினும் அஞ்சேன்

உறவு என்றே சொல்ல நீ ஒருத்தி கிடைத்தாய் அது போதும் எனக்கே 🥇🥇🙌
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (41-54)*
ravi said…
*❖ 54 ஸ்வாதீனவல்லபா; =* தனித்தன்மையுடன் விளங்குபவள் -

எதனையும் அல்லது எவரையும் சாராது தனித்து இயங்குபவள்
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

13 –
ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்

உனை யார் அறிவார் அருணாசலா (அ)🙌
ravi said…
*அருணாசலா*

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாள் என் தோழி

வந்துன் ஆலயம் பார்ப்பாள் இல்லை

எழுப்பினால் இன்னும் விடியல் இல்லை என்கிறாள்

நாங்கள் பழம் பெரும் அடியவராம் அவளோ புதியவளாம்...

உனை தொழ இன்னும் முறைகள் தெரியவில்லையாம்

*அருணாசலா* .. அவள் மெய் சொன்னாள்

உன்னை அறிந்தோர் எவருண்டு *அருணாசலா* ..?

ஓம் கார ரூபத்தில் உயிர் மூச்சே நீ தானே

நாங்கள் பக்தியில் அனைவரும் புதியவரே ...

பழமைக்கு பழமை நீ புதுமைக்கு புதுமை நீ ..

போற்றாதோர் மனதிற்கு மதி இல்லா கார்மேகம் நீ *அருணாசலா*💐💐💐
ravi said…
முகுந்தமாலா 35 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
கிருஷ்ணனோட குணங்களைச் சொல்றார். எட்டு விபக்திகள்ல சொல்றார்

कृष्णो रक्षतु नो जगत्त्रयगुरुः कृष्णं नमस्याम्यहं

कृष्णेनामरशत्रवो विनिहताः कृष्णाय तस्मै नमः ।

कृष्णादेव समुत्थितं जगदिदं कृष्णस्य दासोऽस्म्यहं

कृष्णे तिष्ठति सर्वमेतदखिलं हे! कृष्ण संरक्ष माम् ॥ ३६ ॥

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்

க்ருʼஷ்ணேனாமரசத்ரவோ வினிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।

க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்

க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம் ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
தெய்வபாசம் பேசினோமே, அந்த பாசம் அவருக்கு வந்துடுத்துன்னு

இந்த கவிதையில அது தெரியறது

‘க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம்’

கிருஷ்ணனால் தான் இந்த உலகமே உண்டாயிற்று

‘க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்’

நான் கிருஷ்ணனோட தாசன் ‘க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம்’ கிருஷ்ணன கிட்ட இருந்து உண்டான உலகம் கிருஷ்ணன் கிட்ட நிலைபெற்று இருக்கு

‘ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம்’

கிருஷ்ணா என்னைக் காப்பாத்துன்னு ஒரு ஸ்லோகம்.

நமக்கும் இந்த கிருஷ்ண பைத்தியம் பிடிக்கணும்னு வேண்டிப்போம்

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்

க்ருʼஷ்ணேனாமரசத்ரவோ வினிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।

க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்

க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம் ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥
ravi said…
DEDICATION to the Memory of one of the founders of LARSEN & TOUBRO



Quite often when one comes across a challenge which appears to be steep, the 'Fight or flight' debates get generated within the head. I am sharing my experience of the same...



ravi said…
It was in 2004 that the Powai (suburb of Mumbai, India) campus team of L&T [L&T =Larsen & Toubro, an Indian multinational conglomerate, founded in 1938, of which Mr Henning Holck-Larsen - HHL - was one of the founders] organised a Larsen Memorial run; the route selected - after obtaining clearances was near the Powai area, and the distance was about 7 km. Having had the privilege of being one of those who got to carry the bier of HHL (as he was known) in his last journey to the crematorium, I decided to exorcise my fear of running (even 7 km for me was insurmountable, those days). What started off as a DEDICATION, and just for fun, made an impactful difference to me. And the encouragement, support I got from my wife, made me think of participating in at least one half marathon (~21 km) in Mumbai.



ravi said…
While going for a walk often was plausible for me, preparations for the half-marathon necessitated a different level of preparation, and not just the physical one. I must, at this point, thank those well-wishers, who encouraged me with all their sincerity, and gave ideas on 'Dos and Don'ts'. While hearing, listening, and understanding are the easy parts, the practice itself was in another league. Since that maiden attempt of Larsen Memorial Run in 2004, it is wonderful to share that I have completed over 25 half marathons, and except for four of those I completed, my life-partner, Aruna, has been with me every time, encouraging.



ravi said…
Fast forward to today, the Chennai [known as Madras earlier] unit of L&T announced yet another edition of the Larsen Memorial Run (LMR2022) today. While the live event was in Chennai, thanks to the events held during the pandemic restrictions (of2020, 2021), participants could compete in 'Remote or Virtual' mode, from their city itself. And the memory of the 2004 maiden run propelled me today, as I completed the 10 km run in 82 minutes, amongst one of my best. Aruna too competed, and completed in 78 minutes. And the reason for sharing this personal experience is just to bring out that even a 'Lazy-bones' person like me could, when triggered with encouragement and support, exorcise the fear of the unknown / un-achievable.



I am ending with a quote by Mr Holck-Larsen: Machinery may be there, Buildings may be there, but without people it’s all nothing.



Thank you for the patient reading of this self-experience.



Have a Sunday filled with recall of Satisfying moments.
ravi said…
🌹🌺" *நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது...என கூறும் கோதை ...விளக்கும் எளிய கதை* 🌹🌺

--------------------------------------------------------
🌹🌺ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும்
அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ணன் கண்ணுக்குத்தெரிவான்.

🌺அதனால் தான் பாவை
நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள்,
தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.

🌺எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டிருப்பதால்
வையம் என்ற சொல்பூமியைக் குறிக்கிறது. எனினும் பூமியின் ஒரு பகுதியில் உள்ள திருஆய்ப்பாடியையே உணர்த்துகின்றது.

🌺கண்ணன் பிறந்த திருவாய்ப்பாடியில் வாழும் காலத்தில் அவ்விடத்தில் அவனோடு சேர்ந்து வாழும் பெரும்பேறு பெற்றவர்களே! மழைக்காக நாம் செய்யும் நோன்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறேன்
கவனத்துடன் கேளுங்கள்.

🌺அடியார்களுக்கு அருள்வதற்காகவே நாராயணன் பாற்கடலில் அரவணைமேல் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்கின்றான்.

🌺அப்படிப்பட்ட பரமனைப்
பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.
விடியற்காலையில் நீராட வேண்டும். திருஆய்ப்பாடியில்

🌺நெய்யும் பாலும் நிறைந்திருந்தாலும்
நாம் உண்ணக்கூடாது.
மை என்பது மங்களகரமான
பொருளாக இருந்தாலும்
அதைக் கண்களில் இட்டு அலங்காரம்
செய்துகொள்வதையும், தலையில்
மலர்களை வைத்துக்கொள்வதையும் விரதகாலம் முடியும்வரை
தவிர்க்க வேண்டும்.

🌺பெரியோர்கள் இப்படிப்பட்ட
காலங்களில் எந்தெந்தச்
செயல்களைச் செய்யாமல்
விட்டார்களோ, அந்தச்
செயல்களை நாமும்
செய்யாதிருக்க வேண்டும்.

🌺ஒருவர்மேல் ஒருவர் கோள் சொல்வது தீமை பயக்குமாததால், அத்தகைய தீக்குறளைச் சொல்லக்கூடாது. யாசகர்களுக்கு "இல்லை' என்று சொல்லாமல் உணவு இடவேண்டும்;

🌺பிச்சை இட வேண்டும்; அவ்வாறு கொடுக்கும்
இடத்தையும் காட்ட வேண்டும். இவை எல்லாம்
நீங்கள் நன்மைபெறும் வழிகள். இவற்றைச் செய்யும்போது மனமுவந்து செய்ய வேண்டும்

🌺நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது என்கிறாள் கோதை ஆண்டாள்.

🌺ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே சரணம் 🙏🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 10

https://chat.whatsapp.com/LcR1b82EBK7JGof6Td56Qb

*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (20.12.22) storylines of Sri Krishna - "🌺 In Every home Thiruvembavai has to read & followed by every matha ji.. to get Shri Krishna's grace 🌺.....that can be seen 👇👇 in Four Languages - தமிழ், Hindi, Kannda & English* 🌹🌺🌹🌺

*1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ்* -

🌺 https://youtu.be/J0mq4ExCutE

🌹 https://youtu.be/o8yThSelWWQ

**2. Sri Krishna Stories - English -*

🌺 https://youtu.be/Bt3q-4CirWg

*3. सर्वम श्री कृष्णर्पनम - Hindi -*
🌺 https://youtu.be/mquBm-HZMZk

*4.ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಕಥೆಗಳು - Kannada** -

🌺 https://youtu.be/kW0GLxkR5j0

🙏🌹🌺 **Jai Sri Andal Krishnaki Jai* 🌹🌺🙏🏼🌹
ravi said…
🌹🌺" *நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது...என கூறும் கோதை ...விளக்கும் எளிய கதை* 🌹🌺

--------------------------------------------------------
🌹🌺ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும்
அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ணன் கண்ணுக்குத்தெரிவான்.

🌺அதனால் தான் பாவை
நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள்,
தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.

🌺எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டிருப்பதால்
வையம் என்ற சொல்பூமியைக் குறிக்கிறது. எனினும் பூமியின் ஒரு பகுதியில் உள்ள திருஆய்ப்பாடியையே உணர்த்துகின்றது.

🌺கண்ணன் பிறந்த திருவாய்ப்பாடியில் வாழும் காலத்தில் அவ்விடத்தில் அவனோடு சேர்ந்து வாழும் பெரும்பேறு பெற்றவர்களே! மழைக்காக நாம் செய்யும் நோன்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறேன்
கவனத்துடன் கேளுங்கள்.

🌺அடியார்களுக்கு அருள்வதற்காகவே நாராயணன் பாற்கடலில் அரவணைமேல் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்கின்றான்.

🌺அப்படிப்பட்ட பரமனைப்
பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.
விடியற்காலையில் நீராட வேண்டும். திருஆய்ப்பாடியில்

🌺நெய்யும் பாலும் நிறைந்திருந்தாலும்
நாம் உண்ணக்கூடாது.
மை என்பது மங்களகரமான
பொருளாக இருந்தாலும்
அதைக் கண்களில் இட்டு அலங்காரம்
செய்துகொள்வதையும், தலையில்
மலர்களை வைத்துக்கொள்வதையும் விரதகாலம் முடியும்வரை
தவிர்க்க வேண்டும்.

🌺பெரியோர்கள் இப்படிப்பட்ட
காலங்களில் எந்தெந்தச்
செயல்களைச் செய்யாமல்
விட்டார்களோ, அந்தச்
செயல்களை நாமும்
செய்யாதிருக்க வேண்டும்.

🌺ஒருவர்மேல் ஒருவர் கோள் சொல்வது தீமை பயக்குமாததால், அத்தகைய தீக்குறளைச் சொல்லக்கூடாது. யாசகர்களுக்கு "இல்லை' என்று சொல்லாமல் உணவு இடவேண்டும்;

🌺பிச்சை இட வேண்டும்; அவ்வாறு கொடுக்கும்
இடத்தையும் காட்ட வேண்டும். இவை எல்லாம்
நீங்கள் நன்மைபெறும் வழிகள். இவற்றைச் செய்யும்போது மனமுவந்து செய்ய வேண்டும்

🌺நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது என்கிறாள் கோதை ஆண்டாள்.

🌺ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே சரணம் 🙏🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
[20/12, 07:25] +91 96209 96097: *சுரேஷ்வராய நமஹ*🙏

அறநெறியில் நடப்போருக்கு தலைவராக இருந்து காப்பவர்
[20/12, 07:25] +91 96209 96097: மஹாமாயா மஹாஸத்வா மஹாசக்திர் *மஹாரதி*🙏

பயிர் செழிக்கவும், குடும்ப ஒற்றுமையையு‌ம் வளர்ப்பவள்
ravi said…
*கண்ணா*

*நீ*

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும்,

பகவானும்,

மதுராபுரியில் அவதரித்தவனும்,

பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும்,

ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும்,

தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும்,

*நீ அன்றோ கண்ணா*

உன் சேஷ்டை பொறுக்காத உன் யசோதா

இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பு

என்ன பாக்கியம் செய்ததோ *கண்ணா*

உன் சிற்றிடையில் வீற்றிருக்க

நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் உனை காண புறப்படுவோம்.

உனை மனதில் இருத்தி

உன் புகழ் பாடினாலே போதும்!

செய்த பாவ பலன்களும்,

செய்கின்ற பாவ பலன்களும்

தீயினில் புகுந்த தூசு போல

காணாமல் போய்விடுமே *கண்ணா*
ravi said…
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான்

நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்🙏🙏🙏
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 40 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
*குணம்* ...

குணி என்ற முறை இங்கு கிடையாது.

இறைவன் இந்த எட்டு
குணங்களுக்கும் இருப்பிடமானவன்.

கந்தர் அநுபூதியின் பயன் 'நெஞ்சக் கன கல்லையும் உருக்குதல்'
என காப்புச் செய்யுளில் கூறினார்.

இப்போது நெஞ்சை உருக்குவதற்கு
ஒரு வழி சொல்லித் தருகிறார்.

முருகனுடைய திரு நாமாக்களை சொல்லிச் சொல்லி உருகவேண்டும்
என்கிறார்.

உள்ளத்தில் முருகனுடைய திரு நாம உட்பொருளை உன்னி
உன்னி, அந்த நாமாக்களை வாயால் கூறும்போது, நம் உள்ளம் உருகும்.
*முருகன், குமரன், குகன்'* என்ற மூன்று நாமங்களின் தத்துவத்தை
அறியவேண்டும்.

அநேக நாமாக்கள் இருக்க இந்த மூன்று நாமாக்களை
மட்டும் கூறுவதற்கு என்ன காரணம்?
ravi said…
அஜஸ்: *ஸர்வேச்’வரஸ்* : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
பாதாரவிந்த சதகம் !

47.கிரஞ் ஜ்யோத்ஸ்னா ரீதிம் நகமுகருசா ஹம்ஸ மனஸாம் விதன்வான: ப்ரீதிம் விகச தருணாம் போருஹருசி: ப்ரகாச:ஸ்ரீ பாதஸ்தவ ஜனநி காமாக்ஷி தனுதே
சரத்கால ப்ரௌடிம் சசிசகலசூட ப்ரியதமே

பிறைசூடியின் இனியாளே / காமாக்ஷி / நகமாகிற ரத்தினத்தின் ஒளியால், நிலவாகப் பரவுவதும், ஹம்ஸர்களின் மனத்தில் மகிழ்ச்சியைப் பெருக்குவதும், மலர்ந்து சிவந்த (இளமைமிக்க) தாமரைப்பூவின் அழகுள்ளதும், பேரொளியுமான உன் திருவடி, சரத்காலத்தின் தெளிவான வானிலை அழகை வெளிப்படுத்துகிறது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*5. நாராயணனின் நாமம் சொல்க!*

*திருப்பாவை- ஐந்தாம் பாசுரம்:*

_மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்_
_தூய பெருநீர் யமுனைத் துறைவனை_
_ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்_
_தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை_
_தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது_
_வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க_
_போய பிழையும் புகுதருவான் நின்றனவும்_
_தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்._


அவன்-
ஆயன்;
மாயன்;
நேயன்;
தூயன்!

அவன்-
வடமதுரை நகரினிலே
வந்துதித்த பிள்ளை;
வள யமுனைக் கரையினிலே
வாழுகின்ற கிள்ளை!

தரையிறங்கிய அவனால்-
தாய்க்குத் தனிப்பெருமை!
அவனிக்கு வந்த அவனால்-
ஆயர்க்கும் மிகப் பெருமை!

அவன்-
மதுரைக்குக் கிடைத்த
மணி விளக்கு!
ஆயர்க்குக் கிடைத்த
அணி விளக்கு!
கோகுலம் கண்ட
குல விளக்கு!
உலகுக்கு அவன்தான்
ஒளி விளக்கு!

அதிகாலையில் நீராடி-
அழகோடு அவன் சீர்பாடி-

அவன் தாளுக்கு
மலர் தூவி-
அவனையெண்ணி
அவன்பெயர் கூவி-

பக்தி செலுத்தும் எவர்க்கும்-
பாவங்கள் கலையும்!
நெருப்பிலிட்ட பஞ்செனவே- அவர்
பாவங்கள் குலையும்!

ஆகவே-
விளம்புக அவனின் நாமம்!
விளம்புவோர்க்கு அவன் ஏமம்!
விளைந்திடும் அவனால் சேமம்!
விலகிடும் புன்மை;ஈமம்!

- S.நடராஜன், சென்னை
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 419*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.

அந்தக் கயிறுதான் ‘ *பாசம்* ’.

இவனுடைய ஆசை என்பதேதான் அப்படிப் பாசமாகி இவனை ஸம்ஸார சக்ரத்திலேயே சுற்றிச் சுற்றி வரும்படிப் பண்ணுகிறது.

இந்த ஆசை கட்டுப் போக வேண்டுமானால் நாமே தர்ம காரியங்கள் என்கிற சாஸ்திர கட்டை போட்டாக வேண்டும்.

தார்மிகமாக மநுஷ்ய காரியம், தேவகாரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும்.

ஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும்.

ஞானம் என்கிற கத்தி அந்தக் கயிற்றைத்தான் துண்டித்து ஜீவாத்மப் பசுவை ஜன்மச் சுழலிலிருந்து விடுவித்து மோக்ஷம் அருளுவது.

அப்போது அவன் பசுவேயில்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.” என்கிறார்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 423* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
ஆனால் அடுத்த நாள் காலை ச்ருத தேவருக்குக் கடும் காய்ச்சல்.

படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை.

“கண்ணா! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?” என்று புலம்பினார்.

அவரது மகன் ஒரு வைத்தியரை அழைத்து வந்தான்.
வைத்தியரிடம் நோயைப் பற்றிக் கூட ஒன்றும் பேசாத ச்ருத தேவர், “கண்ணன் மிதிலைக்கு வந்துவிட்டானா?
மன்னர் அவனை வரவேற்கப் பரிவாரங்களுடன் தெற்கு வாசலை அடைந்துவிட்டாரா?” என்றெல்லாம் வினவினார்.

“சற்றுப் பொறுங்கள்!” என்று சொல்லிக் கொண்டே அந்த வைத்தியர் ச்ருத தேவரின் கையைப் பிடித்தார்.

உடனே அவருக்கு வியர்வை பெருகியது.

காய்ச்சல் குணமாகி விட்டது. “கண்ணன் தெற்கு வாசல் வழியாக வரவில்லை என்ற அறிவிப்பு வந்தது.
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 41 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
. *முருகன்* ..

முருகு என்றால் அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்கிற நான்கு
பொருட்கள் உண்டு.

இத்தன்மைகளை உடையவன் முருகன். குன்றாத
அழகு, என்றும் மாறாத இளமை, வாடாத மணம், இவற்றோடு தெய்வீகத்
தன்மையை உடையவன் முருகன்.

மற்ற மதத்தினர் தத்தம் கடவுளுக்கு
கூறும் இயல்புகள் அனைத்தையும் முருகன் என்கிற ஒரே சொல்லில்
அடக்கிய பெருமை தமிழ் மொழிக்கே உண்டு.

இத்தனித் தமிழ்ச் சொல்லை நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில்,

.. பண்டைத் தண்மணம் கமழ தெய்வத்து
இள நலம் காட்டி ..

... என்பதில் முருகு என்கிற சொல்லின் நால்வகைப் பொருளையும் அடக்கி
கூறியிருப்பது ஆச்சரியமானது.

அவர் இக்கோலத்தை முருகனுடைய
பழைய கோலம் என்கிறார்.

பஞ்சாட்சரம், ஷடாட்சரம்போல முருகா என்கிற
சொல் ஒரு மந்தராட்சரமாக கருதப்படுகிறது.

முருகன் என்கிற சொல்லில்
பிரணவத்தில் அடங்கிய 'அ, உ, ம' என்கிற மூன்று அட்சரங்கள் உள்ளதை
உணரலாம்.

மேலும் தமிழ் மொழியில் உள்ள மெல்லினம், இடையினம்,
வல்லினம் உள்ள எழுத்துக்களே ' *முருகு* ' ஆகிறது.

மெல்லினம் முதலிலிலும்
வல்லினம் கடைசியில் வருவதும் ஆச்சரியமே.

கந்தர் அலங்காரத்தில்,

.. மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் ..

... என்கிறார் அருணகிரியார்.

முருகா எனும் நாமத்தை பன்மையில் கூறி
இருப்பதை உணர வேண்டும்.

.. *அ* .. கார ரூபனான இறைவனும்
.. *உ* .. கார ரூபியான இறைவியும்
.. *ம* .. கார ரூபமாக குறிக்கப்படும் ஆன்மாவும்

*முருகன்* ' என்கிற நாமாவில் அடங்கியுள்ளதால்தான் நாமாக்கள் என
பன்மையில் கூறி இருப்பதை உணரலாம்.
Oldest Older 201 – 353 of 353

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை