ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 44 நக தீதிதி& 45 பதத்வய பதிவு 50

 ❖ 44 : நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா

நகங்களின் காந்தியாலேயே மண்டியிருக்கும் இருளென்ற அஞ்ஞானத்தை போக்க வல்லவள்  

(பக்தர்களின் புத்தியை மூடி,  நரகத்தில் மூழ்கச் செய்யும் அஞ்ஞானம்) 

நக = நகங்கள் 

தீதிதி = மினுமினுப்பு 

ஸஞ்சன்ன = மறைந்திருக்கும் 

ந = அல்லாத 

மஜ்ஜன = மூழ்குதல் - நரகத்தில் மூழ்குதல் 

தமோ = இருள் / அஞ்ஞானம் 

குணா = குணம்


The rays of Her nails remove the ignorance of those who bow before Her.  When Deva-s and asura-s (demons) pay their reverence to Her by bowing, the rays of the gems emanating from their crowns are in no comparison to the rays emanating from the nails of Her feet.  

The rays that come out of Her nails destroy the tamo guṇa (inertia) and ignorance of those who worship Her.

It is also said that She does not bless with Her hands, but with Her feet.  She does not have abhaya and varada hands.  

Normally one can notice that most of the Gods have four hands, out of which one is meant for blessings and another for giving boons.  Lalitai does not have these two hands as She has four powerful goddesses (nāma-s 8, 9, 10 and 11) in Her four hands.  The two acts of blessings and granting boons are done by Her lotus feet


❖ 45 பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா;

தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளிர்மை பொருந்திய பாதங்கள் கொண்டவள் 

பத = பாதம் 

த்வய = இரு - இரண்டு 

ப்ரபா = பளபளப்பு 

ஜால = பிணைப்பு - வலை 

பராக்ருத = எள்ளி நகையாடுதல், ஒதுக்குதல் 

சரோருஹ் = தாமரை ❖ 45 பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா; = தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளிர்மை பொருந்திய பாதங்கள் கொண்டவள்



The beauty of Her feet is much more than a lotus.  Generally lotus flower is compared to the eyes and feet of gods and goddesses.  In Saundarya Laharī (verse 2) says “Gathering tiniest speck of dust from your lotus feet, Brahma creates the worlds, Viṣṇu sustains them and Śiva pulverising them into ashes besmears His body with them.”  

There are opinions that She has four feet.  They are known as śukla, rakta, miśra and nirvāna. The first two rest in ājña cakra, the third on the heart cakra and the fourth on the sahasrāra.  

Each of these feet is ruled by BrahmaViṣṇu, Rudra and Sadāśiva.  They stand for creation, sustenance, dissolution and the last one for liberation (or recreation).

In Hindu mythology, every act of Nature is represented by a god or goddess.  For example, water is represented by lord Varuṇa, fire is represented by Agni, wealth by Kubera, death by Yama etc.  It is nothing but worshiping the Nature and the cosmos.  Since there are so many forces and energies in the universe, each of them is represented by a god. 

Saundarya Laharī (verse 3) says, “The particles of dust at your feet serve to remove the inner darkness of the ignorant.”    


        

                ===💐💐💐💐💐



Comments

ravi said…
ராமனிடம் விடைபெற்றுக்
கொண்டு ஜாம்பவான் ஆஞ்சநேயரிடம் சென்றார் "

சங்கர சுவனா , நாட்கள் ஓடிவிட்டன - சுக்ரீவன் சீதையை தேட எந்த திட்டமும் போடுவதாகத் தெரியவில்லையே -

சூரிய ஒளி பொங்கும் அந்த ராகவனனின் முகத்தைப்பார் , நாம் அந்த வெப்பத்தில் வெந்து விடக்கூடாது என்று எண்ணி தன் முகத்தில் நிலவை குடி வைத்து இருக்கிறார் -

அந்த நிலவை அவர் அகற்றி விட ஒரு வினாடி கூட ஆகாது

--- சுக்ரீவன் தன்னை மறந்திருக்கிறான் , தன் நிலைமையை மறந்திருக்கிறான் ,

அவ்வளவு ஏன் அந்த ராகவனையே யார் என்று கேட்க்கும் நிலைமையில் இருக்கிறான் --

மதுவும் , மாதுவும் ராமனை அவனிடம் இருந்து மறைத்து வைத்துள்ளன --

நாமும் இந்த உண்மையை மறைத்து வைத்தால் கங்கையே நம்மை மன்னிக்காது --

வா நாம் இருவரும் சுக்ரீவனிடம் செல்வோம் -

நம்மையாவது யார் என்று தெரிந்து
கொள்கின்றானா என்று பார்ப்போம் --- 🌸
ravi said…
ராமன் தன் தம்பியுடன் பேசிக்கொண்டிருந்தான் --

"தம்பி சுக்ரீவனின் அரண்மனைக்கு சென்று அவன் நன்றாக இருக்கிறானா -

ஏதாவது சௌகரியங்கள் குறைவாக இருக்கிறதா -

தன் மன்னியை, மன்னியாக பாவிக்கிறானா?

என் உதவி இன்னும் தேவையா என்று கேட்டு விட்டு வருகிறாயா?"

லட்சுமணனுக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது "

அண்ணா உன் கருணைக்கு அளவே இல்லையா?

6 மாதங்கள் ஓடி விட்டன ---- சுக்ரீவன் தன் படைகளை இன்னும் சேர்க்கவில்லை,

என்ன திட்டம் என்று யாருக்குமே தெரியவில்லை -

மதுவும் மாதுவுமாக இருப்பதாக கேள்வி --

அவனை ஒரு தட்டு தட்டினால் தான் வழிக்கு வருவான் - அனுமதியுங்கள்,

அவனை இங்கே உருட்டிக்கொண்டு வருகிறேன் ----"🌸
ravi said…
தந்த்ர = யுக்தி - நுணுக்கம் – போதனை (வழிபாட்டு முறைகளின் நுணுக்கங்கள்)

*❖ 206 சர்வ-தந்த்ர-ரூபா =* அனைத்து தந்திரமுறைகளின் சாரமாக விளங்குபவள்
ravi said…
கண்மணி உமையே
கண்ணெதிர் வருக

கவின்மிகு சிவையே
கருத்தினில் ஒளிர்க

ஒரு முறை பார்க்க
ஒரு வரம் கேட்க

சிறு இதழ் நெளிவினில்
குறு நகை கோக்க

இவள் என் மகளென/ மகனென
அன்புடன் நோக்க

இனி நான் துணையென
இன்பத்தை வார்க்க

பழ வினை நீக்க
வரு வினை போக்க
கலி பயம் தீர்க்க
களி நகை பூக்க

இவள் என் மகளென/ மகனென
அன்புடன் நோக்க

இனி நான் துணையென
இன்பத்தை வார்க்க

கண்மணி உமையே
கண்ணெதிர் வருக🙏🙏🙏🌸🌸🌸
ravi said…
*எங்கும் நீ! எதிலும் நீ!*

எங்கும் உன்றன் எழில் கண்டேன்

எதிலும் உன்மதி முகம் கண்டேன்

பண்ணில், பரதத்தில், பற்பல கலைகளில்

உன் கைவண்ணம் தான் கண்டேன்

மண்ணில் பூத்த மலர்களின் அழகில்

உன்றன் மஞ்சள் முகம் கண்டேன்

விண்ணில் ஒளிரும் கதிரவன் ஒளியில்

உன்றன் விழியின் ஒளி கண்டேன்

மேகம் மாற்றும் உடை கண்டேன், அதிலே

உன்றன் நிறம் கண்டேன்

தாகம் தீர்க்கும் மழை கண்டேன், அதிலே

உன்றன் அருள் கண்டேன்

இயற்கை யெல்லாம் உன் வடிவே

இயங்குவ தெல்லாம் உன் செயலே

மருளும் மயக்கமும் உன் வயமே

தெளிந்தால் அனைத்தும் சின் மயமே!👍👍👍
ravi said…

பழனிக் கடவுள் துணை - 20.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-54

பிறப்பின் அவலம் கூறல்!!

மூலம்:

பொன்னவிர் கோவிற் பொலிவார் பழனிப் பொருப்பில் நின்று
பன்னகந் துய்க்கும் மயிலேறி ஆடல் பலபயில்வாய்!
உன்னரு ளேவலி தென்றுணர்ந் தேனுக்குக் கொருபிறப்பீண்(டு)
இன்னம் அளிப்பினும் அந்தோநின் சீர்த்தி இழிவெய்துமே (54).

பதப்பிரிவு:

பொன் அவிர் கோவில் பொலிவார் பழனிப் பொருப்பில் நின்று
பன்னகம் துய்க்கும் மயிலேறி ஆடல் பல பயில்வாய்!
உன்னருளே வலிது என்று உணர்ந்தேனுக்கு ஒரு பிறப்பு ஈண்டு
இன்னம் அளிப்பினும் அந்தோ! நின் சீர்த்தி இழிவு எய்துமே!! (54).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பன்னகம்-பாம்பு; இதை மயில் உணவாய்க் கொள்ளும்;

இந்த மானிடப் பிறப்பின் அவலத்தைப் பற்றியும் பிறவாப் பெற்றியையும் சுவாமிகள் பேசும் பாடல் தான் இந்த 54வது அலங்காரம். தனக்கு மீண்டும் பிறப்பு நேர்ந்தால் அது எம் பெருமான், உனக்கு, உன் பெரும் புகழுக்கு நேரும் இழுக்கு அன்றோ என்று சுவாமிகள் மிக உரிமையுடன் வாதாடுகிறார் இப்பாடலில்.

பொன் ஒளிவீசிப் பிரகாசித்து, பொலிவு செறிந்து விளங்கும் உன் பழனிமலைக் கோவிலில் நின்று,
பாம்பை உணவாய்க் கொள்ளும் உன் நீலச் சிகண்டியில் ஏறி, சொல்லவொண்ணாத பல திருவிளையாடல்கள் பயில்வோனே! பழனிக்கு அதிபனே! இவ்வுலகில், மதிப்பிடவே முடியாத உன் தண்ணருளே மிக மிக வலிமையானது, நிகரற்றது என்று முற்றிலுமாய் உணர்ந்தோன் ஆன எனக்கு மீண்டும் ஒரு பிறப்பு, எல்லாம் உணர்ந்த என் தெய்வம், நீ அளித்தாயானால், அந்தோ! ஐயகோ! உன் பெரும் புகழுக்கு இழிவு எய்துமே ஐயா!! பழனிக் குமர! உன் அடிமை நான் வாடினால், உனக்கல்லவோ இழுக்கு? பிறவாப் பெற்றி அளிப்பாய், பிறப்பிறப்பிலா என் பெருமானே!

தன் தண்ணருள் தழைய, *தமிசிரமிலாது, தத்தியமாய், தன்னிட்டம்போல், தன்னடியாரைத் ததைவில்வைத்துத் தடுத்தாட்கொள்ளும் தண்டபாணிப்பெருமாளே! தராதலமெங்கும் தராதரங்காணாது தன்னருளே தந்தாட்கொள்ளுமுன்போல் தெய்வமுண்டோ? தண்டாயுதமுடைத் தனபதியே!

*தமிசிரம்- குறைவு; தத்தியம்- மெய்; ததைவு- நெருக்கம்; தராதலம்- உலகம்;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺 “A simple story that explains how special it is to visit and pray to Lord Vishnu's Tiruppad, so is worshiping Chakrathalwar - 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺Sudarshan means gloomy, gloomy.

🌺 'Chakra' means always active. There is no sudarsana chakra like other weapons. Stronger than all weapons. And it can always rotate.

🌺 Normally, Sudarsana Chakra is the Lord Vishnu found on the little finger of Lord Sri Krishna, his
He is holding it on his index finger.

🌺Krishna, when someone launches, launches only from the index finger. After destroying the enemies, the Asurakuta, the Sudarshana Chakra returns to its place again.

🌺 That is, after the Sudarsana Chakra is launched, it obeys the command of the God who sent it and comes to his Thirukaran.

🌺Vishnu Purana says that by walking on the zero path without any pressure, the Sudarsana Chakra can go to any place within the blink of an eye.


🌺Also, when the Sudarsana Chakra came out from Lord Vishnu's hands, he did not know when he destroyed his enemies, and when he came back to his hands and sat on his fingers, he did not know. Everything happens in a moment.

🌺Perhaps, if the opponent is very strong, if there is an obstacle in the speed of the Sudarsana Chakra.. then the speed of the chakra will increase to an unprecedented speed! This is called 'Ransagati'.

🌺The Sudarsana Chakra does not make any sounds when it rotates.The shape of the Sudarsana Chakra can fit into a small tulsi base, a handful of tulsi. However, this universe is vast and expansive.

🌺Sudarsana Chakra is Chakrathalvar. As special as it is to visit and pray to Lord Vishnu's Tirupadam, worshiping Chakrathalwar is also special. Acharyas say that He who destroys our opposition and enemies and destroys all obstacles for us.

🌺 On days including Ekadasi, Wednesday, Thiruvonam and Saturday, if we pray Tulsi Sarthi to Chakrathalwar, all our troubles will fly away.....

🌺🌹 Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺“ *மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது - என்பதை பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.

🌺‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.

🌺சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும் மகாவிஷ்ணுவோ, தன்
ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

🌺யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.

🌺அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.

🌺எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப் பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.


🌺மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.

🌺ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்.. அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ *ரன்ஸகதி* ’ என்பர்.

🌺சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை.சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

🌺சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளை யெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

🌺ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும்.....

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

ஆபாடலாம்சுகதராம்
ஆதிரஸோன்மேஷவாஸித கடாக்ஷாம் | ஆம்நாயஸாரகுளிகாம்
ஆத்யாம் ஸங்கீதமாத்ருகாம் வந்தே !!

வெண்சிவப்பு நிற ஆடை உடுத்தியவள்.
சிருங்காரரஸத்தின் எழுச்சி மணக்கின்ற கடைக்கண் பார்வையுள்ளவள். வேதத்தின் ஸாரமான உபநிஷத்தின்
குளிகையானவள். எல்லாவற்றிற்கும் முதன்மையாக உள்ளவள். ஸங்கீதத்தின் தாயான அந்த ஸங்கீத மாத்ருகா என்ற மந்திரிணியை வணங்குகிறேன். (35)
ravi said…
[20/05, 11:23] Metro Ad Vipul: Affection oru example
Somehow though a small role
Andha character manasil padindhu vittadhu
[20/05, 11:24] Metro Ad Vipul: I heared abt sambadhu through jrk a sundara kandam narration only
[20/05, 11:25] Metro Ad Vipul: Jrk has made sambadhi character so nice
It attracted me
Migavum rasithen andha padhivugal
ravi said…
[20/05, 12:21] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 161*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

*ஸ்லோகம் 23*

ययोः सान्ध्यं रोचिः सततमरुणिम्ने स्पृहयते
ययोश्चान्द्री कान्तिः परिपतति दृष्ट्वा नखरुचिम् ।
ययोः पाकोद्रेकं पिपठिषति भक्त्या किसलयं
म्रदिम्नः कामाक्ष्या मनसि चरणौ तौ तनुमहे ॥


யயோ: ஸான்த்⁴யம் ரோசி: ஸததமருணிம்னே ஸ்ப்ருஹயதே
யயோஶ்சான்த்³ரீ கான்தி: பரிபததி த்³ருஷ்ட்வா நக²ருசிம் ।
யயோ: பாகோத்³ரேகம் பிபடி²ஷதி ப⁴க்த்யா கிஸலயம்
ம்ரதி³ம்ன:

காமாக்ஷ்யா மனஸி சரணௌ தௌ தனுமஹே ॥23॥
[20/05, 12:48] Jayaraman Ravikumar: Subject

1. அம்பாளின் பாதங்கள் செக்க செவேல் என்று இருக்கிறது

2. நக காந்தி நிலவைக்காட்டிலும் ஒளி மிகுந்த படி உள்ளது

3. பாத கமலம் மிகுவும் தளிர் , நாணலை விட மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கிறது

நீலகண்ட தீக்ஷிதர் தனது ஆனந்த சாகர-ஸ்தவம் எனும் ஸ்லோகங்களில் அம்பாளின் பாதங்களை மிகவும் நகைச்சுவையுடன் விவரித்து உள்ளார்

முதல் 45 ஸ்லோகங்களில் அவர் என்ன சொல்கிறார் என்றால் அம்மா எனக்கு கர்ம யோகம் பக்தி யோகம் ஞான யோகம் இவை எல்லாம் என்னவென்று தெரியாது எனக்குத் தெரிந்ததெல்லாம் உன் மலர் பாதங்களை காற்று கொஞ்சம் கூட நுழைய முடியாமல் இறுக்க கட்டிக்கொள்வது மட்டுமே !!👣

*தத் த்வாமனந்ய சரண: சரணம் ப்ரபத்யே*
*மீனாக்ஷி விச்வ ஜநநீம் ஜநநீம்*
*மமைவ*

அம்மா எனக்கு என் நன்மை எதுவென்று தெரியாது

அதற்கு உபாயமும் தெரியாது

மிகவும் எளியவன்

வேறு கதி இல்லை

இந்த நிலமையில் உன் பாதரவிந்தங்கள் மட்டுமே எனக்கு தெரிகின்றது அவைகளில் சரணடைகிறேன் 💐💐💐👣👣👣👣👣
ravi said…
[20/05, 12:18] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 565* 🙏🙏🙏started on 7th Oct 2021

*270 வது திருநாமம்*
[20/05, 12:20] Jayaraman Ravikumar: *270 तिरोधानकरी - திரோதான கரீ -*

அம்பாள் தன்னை நம்மிடமிருந்து மறைத்துக் கொள்கிறாள்.

''திரையின் பின் இருப்பவள் '' என்று வைத்துக் கொள்வோம்.

மறைப்பது என்று சொல்லும்போது மறைவது பொருத்தமாகிறது.

சகல உயிர்களும் மறைய காரணமானவள் அம்பாள்.

படைத்தல் காத்தல் அழித்தல் அடுத்தது மறைதல் எனும் திரோதானம்,

இதையே மஹா ப்ரளயம் என்கிறோம். பழையன கழிந்தால் தானே புதியன புகும். இந்த ''கழிதலை '' புரிபவள் அம்பாள் ஸ்ரீ லலிதை என புரிய வைக்கிறது இந்த நாமம்.

ஒரு ஜீவனுக்கு மூன்று வழிகள். ஒன்று பரமாத்மாவோடு, ப்ரம்மத்தோடு இணைத்தல்,

இறந்து மீண்டும் பிறத்தல்,

மஹாப்ரளயத்தில் மறைதல்.🌸🌸🌸
ravi said…
🙏🏾🙏🏾🙏🏾பூரி ஜகனாதர் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படும் "நாராயண் ஷீலா " என்பது இது தான். இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பெட்டகத்தில் இருந்து வெளிகொணர்ந்து
பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். இவ்வருடம் அவ்வாறு எடுத்து வைத்து பூஜிக்கப்படும் போது கிடைத்த படம் ஆகும். இதை கண்ணார தரிசிப்பவர்கள் அதி பாக்கியசாலிகள். இது சிலருக்கு மட்டுமே வாழ்வில் தரிசிக்க கிடைக்கப்பெறும். அவ்வகையில் நாம் அனைவரும் புண்ணியவான்களே.

பூரி கோவிலுக்கு சொந்தமான இந்த சாலிகிராம் கடைசியாக 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலின் போது தொற்றுநோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க எடுக்கப்பட்டது. COVID இன் பார்வையில் இது இப்போது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

*பூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் 8 அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.*🚩

*1. கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.*

*2. கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.*

*3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.*

*4. இக்கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.*

*5. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.*

*6. இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை. மீந்து போய் வீணானதும் இல்லை.*

*7. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது.*

*8. சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.*

*ஆனால் … அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.*
ravi said…
[19/05, 16:27] Jayaraman Ravikumar: *115. ருத்ராய நமஹ (Rudraaya namaha)*
[19/05, 16:28] Jayaraman Ravikumar: நூறு கங்காளம் பொங்கலும்,

நூறு கங்காளம் புளியோதரையும்

பெருமாளின் முன்னே இருந்தன.

திருக்கச்சி நம்பிகளைக் கண்டதும் வரதராஜப் பெருமாள்,
“இவர் மட்டும் என்னுடன் இங்கே இருப்பார். மற்ற அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள்! நாங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளப் போகிறோம்!” என்றார்.

அனைவரும் விலகிச் சென்றார்கள்.

கதவு தாளிட்டுக்கொண்டது.
ravi said…
[19/05, 16:29] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 82*💐💐💐💐🙏🙏🙏

பா3ணத்வம் வ்ருஷப4த்வ-மர்த4வபுஷா பா4ர்யாத்வ-மார்யாபதே

       கோ4ணித்வம் ஸகி2தா ம்ருத3ங்க3 வஹதா சேத்யாதி3ரூபம்-த3தௌ4 |

த்வத்பாதே3 நயனார்ப்பணஞ்ச க்ருதவான் த்வத்3 தே3ஹ-பா4கோ3 ஹரி:

       பூஜ்யாத் பூஜ்யதரஸ்ஸ ஏவ ஹி ந சேத் கோ வா தத3ன்யோ-(அ)தி4க: || 82
[19/05, 16:30] Jayaraman Ravikumar: ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்த்தபின் பெரியவா சிவ விஷ்ணு அபேதம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
ravi said…
🌸 விஷ்ணுவின் பெருமையை விவரிக்கும் ஸ்லோகம் சிவானந்த லஹரியில் !!!

💐 எல்லோருக்கும் மேலான கடவுள் விஷ்ணு

எல்லோராலும் போற்றப்படக்கூடிய கடவுள் விஷ்ணு ...

இது எப்படி சாத்தியம் என்றால் அவர் ஒரு சிறந்த எல்லோருக்கும் மேலான சிவபக்தராய் இருப்பதால் தான் ...

எங்கே சிவ சிந்தனை அதிகம் இருக்கோ அங்கே பெருமை புகழ் பாராட்டுக்கள் எல்லாம் இருக்கும் 👍

🫀 அவர் மோகினி அவதாரத்தில் சிவனுக்கு சிறந்த தோழியாய் வந்தவர்

🐄 நந்தி கேஸ்வரராய் இருப்பது ஸ்ரீ மஹா விஷ்ணுவே

💃 பரமேஸ்வரன் ஆனந்த நடனம் புரியும் போது அதை மிகவும் ரசித்து தாளம் மேளம் வாசிப்பதும் மஹா விஷ்ணுவே .

திருவாரூர் தனில் மஹா விஷ்ணு விடும் மூச்சுக் காற்றில் நடம் செய்வது
தியாகராஜர் ... தனது மார்பில் வைத்து போற்றிய மரகத லிங்கமே அங்கு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது

🦚 ஈசனின் வாம பாகத்தை சக்தி ரூபத்தில் வவ்விக்கொண்டவர் ஸ்ரீ மஹா விஷ்ணு ( அம்பாளும் மஹா விஷ்ணுவும் ஒருவரே )

இன்னும் பார்ப்போம்
ravi said…
[19/05, 16:47] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 159 started on 6th nov

*பாடல் 45 ... கரவாகிய கல்வி*

(மெய் பொருளே, உன் நிலையை உணர்த்து)

கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?

குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே!!💐💐💐
[19/05, 16:48] Jayaraman Ravikumar: யானையும் மயிலும் பிரணவ சொரூபம். மயில் மீது வருவதற்கும்
பிணிமுகத்தின் மீது வருவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில்,
தோகை விரித்த மயில் மீது முருகன் வீற்றிருப்பது பிரணவத்தின்
உட்பொருளாக முருகன் உள்ளான் என்பதையும், பிணிமுகத்தில்
அமரும்போது பிரணவத்தை இயக்குபவனாக இருந்து முருகன்
அதனைச் செலுத்துகிறான் எனப் பொருள்படும்.

சிவயோகத்தை அளிக்கும் கருணாமூர்த்தி, தன் அடியார்களுக்கு
அந்த சிவயோக அனுபவத்தை அருளுகிறான்.

'ஐந்து பூதமும்' எனத் தொடங்கும் விராலிமலைத் திருப்புகழில்,
(பாடல் 575), 'சிவயோகம்' என்றால் உலகில் காணப்படும் எல்லாப்
பொருள்களிலும் தானே இருப்பதாக கூறுகிறார்.

இந்த மேலான
அனுபவம் முருகனின் அருளால் கிடைக்கும்.
ravi said…
*அகால மரணம் ஏற்படக்கூடாது*
*என்று ஆசையா*?
*பெருமாள் கோவிலில் தீர்த்தம்* *கொடுப்பதன் நோக்கம் என்ன*?..

"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.

'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.

சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.

ravi said…
உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்' என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது

வட இந்தியாவில், வெளி
நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.

'யாருமே அகால மரணம்
அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.

ravi said…
கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.

ravi said…
இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!

'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.

'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.

கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.

அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.

.நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.
தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.

ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.

கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.

ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.

வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.

அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.

ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.

அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்

என்கிறது வேத வாக்கு.

விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
என்று வேதமே சொல்கிறது.

மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!! என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது,
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.

நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.

அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன்,
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.

"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.

'நோய்' வருவதற்கு காரணம் -
நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் -
நாம் செய்த 'பாபங்களே'.

'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு,
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும்
என்று வேதமே சொல்கிறது.

கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால், பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?

பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.

அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.

எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது

*அகால ம்ருத்யு ஹரணம்*
*சர்வ வியாதி நிவாரணம்*,
*சமஸ்த பாபக்ஷய ஹரம்*
*விஷ்ணு பாதோதகம் சுபம்*

என்ற ஸ்லோகத்தை மனதிற்குள.் சொல்லியபடி தீர்த்தத்தை சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து
அருந்த வேண்டும்
ravi said…
"மாதர் மே" எனும் ஸ்ரீ சண்டிகாபரமேச்வரீயின் த்யான ஸ்லோகத்தை சார்ந்த தமிழில் இயற்றப்பட்ட பாடல்

மாதா என்றே உன்னை அழைத்திட்டேன் மகிழ்வுடனே வந்திடுவாய்

மதுகைடபர் தனை வதைத்த மங்கள நாயகியே

மகிடனின் கர்வ மழித்த மாமேரூவளர் மங்கயளே

தூம்ர லோசனை யழித்திட்ட துர்கயளே வந்திடம்மா

சண்ட முண்டர்களை ஒழித்த சங்கரியே அம்மே கேள்

ரக்தபீஜனை காய்ந்திட்ட காலராத்ரீ மாமாயே

நித்ய கன்னியளே நிசும்பனை வதைத்தவளே

சும்பனை மாய்த்த அதிரூப சுந்தரியே

சரணம் சரணமென்று உனையே சரணடைந்தேன்

எந்தன் துயர் தீர்க்க துர்கை நீ துரிதமாய் வந்திடம்மா!!

- மனோஜ் மஹாதேவ்
ravi said…
Shriram

20th May

*Maintain Remembrance of Rama in Worldly Life*



The root cause of all sorrow lies in forgetting God, forsaking Him. Life is sorrow incarnate, unless enlightened by remembrance of Rama. Coal will certainly blacken the hand, for that is its very nature; we feel sorry for the blackening because we lose sight of the nature of coal. Life, likewise, is bound to be sorrowful and futile if we keep God out of it. Worldly prosperity and public esteem fail to yield contentment if our concept of life is devoid of the divine. Forgetting the Lord is the seed from which spring anxiety, egoism, fear, longing. How can we expect sweet fruit if we plant a seed of a bitter fruit? Anxiety and fear spring from forgetting God. Worldly gain and loss both keep God away. Worldly wisdom, charitable disposition, spotless moral behaviour, public esteem, worldly splendour – all these come to nought in the absence of devotion to Rama. One who conducts himself cautiously in the world without forgetting Rama will alone be happy.

Surrender yourself unreservedly to Rama, and entirely forget ‘me’ and ‘mine’: this is all one needs to do. One who acts without a sense of doership will not be affected by Kali. Do not be a prey to Kali, avoid being a victim of pride. Where Kali enters, Rama will forsake that place. All that the householder needs to do by way of sadhana is to follow his business or profession carefully in the remembrance of Rama. He should attend to his duty in the conviction that Rama, not he, is the doer. He heads for ruin who considers that his welfare lies elsewhere than in the hands of Rama. He cannot apply his mind to Rama so long as he considers himself to be the doer. He who gives up ‘I-ness’ and pride, rest assured that happiness will come in search of him. ‘I-ness’ will cease to exist for him who dedicates everything to Rama. There is nothing that will tend more to one’s welfare than service to Rama. Therefore go in utter surrender to Rama, for there is no better way to get over sorrow and misery. It is only he who dedicates himself completely to Rama, makes his life really meaningful.

Think what you ought to do, rather than what others are doing. When you attend to Rama, understand that you are on the way to spiritual knowledge.

* * * * *
ravi said…
விரும்புவது பெற ஓத வேண்டிய ஸௌந்தர்யலஹரி பாடல் எண்

ஆதிசங்கரரால் அம்பாளைக் குறித்து பாடப்பட்ட துதி இது. நூறு ஸ்லோகங்களைக் கொண்டது. தேவி உபாசனையின் ரகசியம், தத்துவங்கள், யந்திரம், வழிபடு முறை, பலன்கள் ஆகியவை கூறப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் கைலாயத்திற்குச் சென்ற போது பாடிய நாற்பத்தியோரு ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும், மீதியுள்ள ஸ்லோகங்கள், அம்பிகையின் பேரழகைப் போற்றி அவர் பாடியதால், ஸௌந்தர்ய லஹரி என்றும் அழைக்கப்பட்டது. இதை முறைப்படி பாராயணம் செய்தால் சகலவிதமான சித்திகளும், சகல செல்வங்களும் கிட்டும்.

ravi said…
அம்மை நோய் நீங்க: பாடல் எண்: – 50
அஷ்ட சித்தி பெற: பாடல் எண்: – 30
ஆத்ம ஞானம் உண்டாக: பாடல் எண்: – 27
ஆரோக்யமும், சகல சுகமும் பெற: பாடல் எண்: – 99
இதயநோய் நீங்க: பாடல் எண்: – 35
இறை அருள் பெற: பாடல் எண்: – 47
இஹலோக ஸுகம் பெற: பாடல் எண்: – 22
உயர் பதவி கிடைக்க: பாடல் எண்: – 25
உயர்ந்த பதவி, அதிகாரம் பெற: பாடல் எண்: – 63
உயர்ந்த பதவிகள் பெற: பாடல் எண்: – 92
எடுத்த காரியம் நன்கு நிறைவேற: பாடல் எண்: – 70
எடுத்த காரியம் நிறைவேற: பாடல் எண்: – 69
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற: பாடல் எண்: – 93
எதிரிகளின் பயம் நீங்க: பாடல் எண்: – 55
ravi said…
எதிரிகளை வெற்றி கொள்ள: பாடல் எண்: – 7
எல்லா நன்மைகளும் பெற: பாடல் எண்: – 1
கணவன் மனைவி பிரச்சனை தீர: பாடல் எண்: – 6
கண் நோய், காது நோய் நீங்க: பாடல் எண்: – 52
கர்ப்பம் நிலைத்து குழந்தை செல்வம் பெற: பாடல் எண்: – 98
கல்வி அறிவு பெற: பாடல் எண்: – 60
கல்வி அறிவு பெற: பாடல் எண்: – 61
கல்வி, ஞானம் பெற: பாடல் எண்: – 16
கவிதா சக்தி உண்டாக: பாடல் எண்: – 75
கவிதை உண்டாக: பாடல் எண்: – 12
ravi said…
கவிதைகள் சொந்தமாக இயற்ற: பாடல் எண்: – 15
குழந்தைகள் நோய் நீங்க: பாடல் எண்: – 38
கூடுவிட்டு கூடுபாயும் சக்திபெற: பாடல் எண்: – 84
கெட்ட கனவுகள் வராமல் இருக்க: பாடல் எண்: – 39
சகல காரிய சித்தி பெற: பாடல் எண்: – 100
சகல காரியங்களும் வெற்றி பெற: பாடல் எண்: – 53
சகல தோஷங்களும் விலக: பாடல் எண்: – 48
சகல நோய்களும் நீங்க: பாடல் எண்: – 36
சகலத்திலும் வெற்றி பெற: பாடல் எண்: – 65
சந்தான(குழந்தை) பாக்கியம் பெற: பாடல் எண்: – 11
சந்தேகம் நீங்க: பாடல் எண்: – 34
சர்வ ரோக நிவாரணம்: பாடல் எண்: – 66
சர்வ வல்லமை பெற: பாடல் எண்: – 76
சுகமான தூக்கம் பெற: பாடல் எண்: – 62
சுபிட்சம் ஏற்பட: பாடல் எண்: – 57
சுவர்ணாபரணங்கள் பெற: பாடல் எண்: – 32
செல்வம் செழிக்க: பாடல் எண்: – 33
சேனையை அசையாமல் நிறுத்த: பாடல் எண்: – 83
தனலாபம், பூமிலாபம் பெற: பாடல் எண்: – 91
தியானம் வெற்றி பெற: பாடல் எண்: – 10
தீராத ரணங்கள், புண்கள் ஆற: பாடல் எண்: – 95
தீராத வியாதிகள் நீங்க: பாடல் எண்: – 89
துஷ்ட ரோகங்கள் நீங்க: பாடல் எண்: – 54
தேவதைகள் வசியமாக: பாடல் எண்: – 71
தேவியின் உபாசனை பெற: பாடல் எண்: – 31
நல்ல அறிவு பெற: பாடல் எண்: – 96
நல்ல நண்பர்கள் கிடைக்க: பாடல் எண்: – 56
நல்ல மனைவி அமைய: பாடல் எண்: – 13
நெருப்பு சுடாமலிருக்கும் சக்தி: பாடல் எண்: – 81
பகை நீங்கி நட்பு வளர: பாடல் எண்: – 5
பகைமை நீங்க: பாடல் எண்: – 26
பகைமை நீங்கி வெற்றி உண்டாக: பாடல் எண்: – 21
பதவி உயர: பாடல் எண்: – 67
பாம்பு பயம் நீங்க: பாடல் எண்: – 87
பால் பெருக: பாடல் எண்: – 73
பிசாசு பீடை நீங்க: பாடல் எண்: – 37
பிசாசுகளை ஓட்ட: பாடல் எண்: – 86
பில்லி, சூனியம் விலக: பாடல் எண்: – 14
பில்லி, சூன்யம், ஏவல் நீங்க: பாடல் எண்: – 90
பிறரால் போற்றப்பட: பாடல் எண்: – 94
புகழ் உண்டாக: பாடல் எண்: – 74
புகழ் பெற: பாடல் எண்: – 51
புகழ் பெறவும், நோய் நீங்கவும்: பாடல் எண்: – 58
புத்ர பாக்கியம் பெற: பாடல் எண்: – 46
பூத, ப்ரேத, பிசாசங்களை அகற்ற: பாடல் எண்: – 85
பேய், பூதம் முதலியவை நீங்க: பாடல் எண்: – 24
மந்திரங்கள் சித்தி பெற: பாடல் எண்: – 79
மரண பயம் நீங்க: பாடல் எண்: – 28
மனைவியின் அன்பைப் பெற: பாடல் எண்: – 59
மிருகங்களை ஆகர்ஷிக்க: பாடல் எண்: – 88
முக்காலத்தையும் உணர: பாடல் எண்: – 45
முரட்டுத்தனம் நீங்க: பாடல் எண்: – 29
மூவுலகையும் வெல்லும் ஆற்றல்: பாடல் எண்: – 19
யாத்திரையில் பயம் நீங்க: பாடல் எண்: – 72
ராஜபதவிகள் கிடைக்க: பாடல் எண்: – 68
ராஜாங்க பதவியில் ஜயம் உண்டாக: பாடல் எண்: – 78
வயிற்றில் ஏற்படும் நோய்கள் நீங்க: பாடல் எண்: – 42
வயிற்று வலி நீங்க: பாடல் எண்: – 41
வருங்காலம் உணர: பாடல் எண்: – 40
வாக்கு சித்தி, உடல் நலம் பெற: பாடல் எண்: – 97
வியாதி, கடன் தொல்லை நீங்க (ருண, ரோகம் நீங்க): பாடல் எண்: – 23
வியாதிகள் நீங்க: பாடல் எண்: – 4
வியாதிகள் நீங்கி உடல்நலம் பெற: பாடல் எண்: – 9
வியாபாரம் விருத்தியாக: பாடல் எண்: – 49
விஷ பயம் நீங்க: பாடல் எண்: – 20
வெற்றி பெற: பாடல் எண்: – 77
வேதப் பொருள் நீங்க: பாடல் எண்: – 3
ஜடப்பொருள்களால் தடை நீங்க: பாடல் எண்: – 2
ஜயம், புகழ் பெறவும், வியாதி நீங்கவும்: பாடல் எண்: – 43
ஜலத்தில் நடக்கும் சக்தி பெற: பாடல் எண்: – 82
ஜனங்களின் மனதைக் கவர: பாடல் எண்: – 44
ஜால வித்தையில் வல்லமை பெற: பாடல் எண்: – 80
ஸகல கலைகளிலும் வல்லமையுண்டாக: பாடல் எண்: – 17
ஸம்ஸார பந்தம் நீங்க: பாடல் எண்: – 8
ஸ்த்ரீ வசியம்: பாடல் எண்: – 18
ஸ்த்ரீகளின் வியாதி நீங்க: பாடல் எண்: – 64
ravi said…
அம்பிகைக்கு உரிய இந்த
ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா

படித்ததில் பிடித்தது, பகிர்ந்தேன்

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பராக் (பெருமைகள் ) சொல்லும் சுலோகம்: பொதுவாக அந்த காலத்து திரைப்படங்களில் பார்த்து இருப்போம் ஒரு ராஜா அரியணைக்கு வரும் போது முன் அறிவிப்பாக அந்த குலத்தின் பெருமைகளை சொல்லும் வழக்கம் இருந்தது. ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குல திலக. என ஆரம்பிக்கும் என்பது நாம் திரைப்படங்களில் பார்த்தது தான்.. சாதாரண ஒரு தேசத்தை சில காலங்கள் ஆளும் மன்னருக்கே பராக்கு சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது என்றால்.. சகலத்தையும் படைத்தது காத்து ரட்சிக்கும் பரதேவதையாம், மகா ராணியாம் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரியாம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு பராக்கு இருக்காதா என்ன.. ஆம் இதோ அந்த பராக்.. ஆனால் இது ராஜாக்களுக்கு சொல்வது போல எல்லா நேரங்களிலும் சொல்லப்படுவது இல்லை..

Advertisements

REPORT THIS AD

பிரம்மோற்சவம் நிறைவடைந்து தினசரி விடையாற்றி உற்சவத்திற்கு அம்பாள் எழுந்தருளி ஊஞ்சல் கண்டு தனது ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும் போதும், பிரம்மோற்சவத்தின் 6 ஆம் திருநாள் அன்று காலை நடைபெறும் கந்தப்பொடி இடிக்கும் நிகழ்விலும் மட்டுமே சொல்ல படுகிறது.. இதோ அந்த சுலோகம் ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா

ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காமகிரீந்திர நிலயே!
ஜய ஜய ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே!
ஜய ஜய ஸ்ரீ த்ரிஸத் வாரிம் சத்கோண ஸ்ரீ சக்ராந்தரால பிந்து பீடோ பாரிலஸத் பஞ்ச ப்ரஹ்மமய மஞ்சமத்யஸ்த ஸ்ரீ சிவகாமேச வாமாங்க நிலயே!
ஜய ஜய ஸ்ரீ விதி ஹரிஹர ஸுரகண வந்தித சரணார விந்தயுக லே!
ஜய ஜய ஸ்ரீமத் ரமாவாணிந்த்ராணி ப்ரமுக ரமணீ கரகமல ஸமர்பித சரண கமலே!
ஜய ஜய ஸ்ரீ நிகில நிகமாகம ஸகல சம்வேத்யமான விவித வஸ்திராலங்கிருத ஹேம நிர்மித அனர்கபூஷண பூஷித திவ்ய மூர்த்தே!
ஜய ஜய ஸ்ரீ அனவ்ரதாபிஷேக தூபதீப நைவேத்யாதி நானாவிதோபாசாரை: பரிஷோபிதே!
ஜய ஜய ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி நகர் யாம் தவாத்ரிம்சத் தர்மப்ரதிபாதனார்தம் ஸ்தாபித ஹேமத்வஜாலங்கருதே!
9.ஜய ஜய ஸ்ரீ ஸகல மந்த்ர தந்த்ர யந்த்ரமய பராபிலாகாச ஸ்வரூபே!
ஜய ஜய ஸ்ரீ காஞ்சி நகர் யாம் காமாக்ஷி இதி ப்ரக்யாத நாமாங்கிதே !
ஜய ஜய ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரீ பஹு பராக்!
சுபம் !
அம்பிகைக்கு உரிய இந்த ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகாவை நாமும் அவ்வப்போது வாசித்து அவள் பெருமைகளை மனதார சொல்லி வாயார வாழ்த்தி நலம் பெறுவோம்.. ஜய ஜய காமாக்ஷி
ravi said…
[20/05, 16:52] Jayaraman Ravikumar: *115. ருத்ராய நமஹ (Rudraaya namaha)*
[20/05, 16:54] Jayaraman Ravikumar: சிறிது நேரம் கழித்து, “இப்போது உள்ளே வாருங்கள்!” என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது.

கதவைத் திறந்துகொண்டு
பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்றார்கள்.

பார்த்தால் இருநூறு கங்காளங்களிலிருந்த பிரசாதமும் காணாமல் போயிருந்தது.

அனைத்தையும் உண்ட களைப்பில் வியர்த்துப் போயிருந்த வரதனுக்குத் திருக்கச்சி நம்பிகள் சாமரம் வீசிக்
கொண்டிருந்தார்.

“இருநூறு கங்காளங்களில் உள்ள உணவை ஒரு மனிதனால் இவ்வளவு சீக்கிரமாகச் சாப்பிட முடியுமா? உண்டவன் நான் தான்!” என்றார் வரதராஜன்.🙏🙏🙏
ravi said…
[20/05, 16:47] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 82*💐💐💐💐🙏🙏🙏

பா3ணத்வம் வ்ருஷப4த்வ-மர்த4வபுஷா பா4ர்யாத்வ-மார்யாபதே

       கோ4ணித்வம் ஸகி2தா ம்ருத3ங்க3 வஹதா சேத்யாதி3ரூபம்-த3தௌ4 |

த்வத்பாதே3 நயனார்ப்பணஞ்ச க்ருதவான் த்வத்3 தே3ஹ-பா4கோ3 ஹரி:

       பூஜ்யாத் பூஜ்யதரஸ்ஸ ஏவ ஹி ந சேத் கோ வா தத3ன்யோ-(அ)தி4க: || 82
[20/05, 16:49] Jayaraman Ravikumar: இன்னிக்கு காஞ்சி பெரியவா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ... காமாக்ஷியே சொன்னது போல் அல்லவா ....
ravi said…
[20/05, 16:50] Jayaraman Ravikumar: *சிவ, விஷ்ணு அபேதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)*
[20/05, 16:51] Jayaraman Ravikumar: குணங்கள் மூன்று விதம்.

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன அவை.

ஸத்வம் என்பது ஸமநிலை, சாந்தம், அன்பு. அதன் நிறம் வெண்மை. வெள்ளை வெளேரென்று வஸ்துவைப் பார்த்தாலே மனஸில் ஏற்படுகிற பரிசுத்த மலர்ச்சிதான் ஸத்வம்.

ரஜஸ் என்பது வேகம். இதில் நல்லது கெட்டது என்ற இரண்டும் கலந்து இருக்கும்.

இதன் நிறம் சிகப்பு அல்லது செம்மஞ்சள். செக்கச் செவேல் என்று இருப்பதில் அழகும் உண்டு. கண்ணைக் குத்துகிற மாதிரி பயப்படுகிற தினுசும் உண்டு.

உதய சூரியனையும் செம்பருத்தியையும் பார்த்தால் சிவப்பே அழகாயிருக்கிறது.

ரத்தத்தைப் பார்த்தால் பயமாயிருக்கிறது.

தமஸ் என்பது முழுக்கவும் கெட்ட குணம். சோம்பல், தூக்கம் எல்லாம் இதைச் சேர்ந்தவை.

இதன் நிறம் கறுப்பு. அதாவது அஞ்ஞான இருள் மயமானது.🙏
ravi said…
[21/05, 07:27] +91 96209 96097: *மத்⁴யமா* வைக²ரீரூபா ப⁴க்தமானஸஹம்ஸிகா🙏🙏
இரண்டு உறுப்புகளின் மத்யமாக அமைந்து பேச்சு ஆற்றலை வளர்ப்பவள்
[21/05, 07:27] +91 96209 96097: *தரமயூபாய நமஹ*🙏🙏
தர்மத்தோடு குடியிருப்பவர்
ravi said…
இன்றைய சிந்தனை

(21.05.2023)
…………………………………………

*“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...!"*
…………………………………………

https://srimahavishnuinfo.org

நம் காலத்தில் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வசதிகளை,நம் அடுத்தத் தலைமுறைக்கும் பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்...

எந்த வசதியும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்ல எண்ணம் இருப்பதில்லை...

நம் வேலையானால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற குறிக்கோளற்றப் பாங்கு தான் பலரிடமும் மேலோங்கி உள்ளது...

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் வரும் உலகம் இன்பமயமாகி விடும்...

ஒருவர் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது, பருகுவதற்குத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தார்...

தாகத்தால் உயிர் இழந்து விடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது...

அந்த இடத்திற்கு அவர் சென்றார். அங்கு ஒரு கையால் அடித்து இயக்கும் விசையால் இயங்கும் நீரெடுப்பான் (water pump) மற்றும் அதன் அருகில் ஒரு குவளையில் குடிநீரும் இருந்தன

ஒரு அட்டையில் எவரோ ஒருவர் எழுதி வைத்து இருந்தார்கள்...

அதில்!, "குவளையில் இருக்கும் தண்ணீரை அந்த நீரெடுப்பானில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டுப் பின்னர் மறுபடியும் அந்தக் குவளையில் தண்ணீரை நிரப்பி விட்டுப் போகவும்" என்று இருந்தது...

அந்த நீரெடுப்பான் மிக மிகப் பழையதாக இருந்தது. அது வேலை செய்யுமா?, தண்ணீர் வருமா? என்பது அய்யப்பாடாக இருந்தது. அது வேலை செய்யா விட்டால் அந்தக் குடிதண்ணீர் வீணாகி விடும்...

அதற்குப் பதில் அந்தக் குடிதண்ணீரைக் குடித்து விட்டால் தாகம் தணியும் மேலும் உயிர் பிழைப்பதற்கு உறுதியும் இருக்கும். அவர் ஆலோசித்தார்...

குடிதண்ணீரைக் குடித்து விடுவதே அறிவான செயல் என்று அறிவு கூறியது...

ஒரு வேளை அதில் எழுதி வைத்து இருப்பது போல் அந்தப் நீரெடுப்பான் இயங்குவதாக இருந்து, அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக நேருமே, அதற்கு நாமே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது...

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.

தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்தக் குவளையில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவரது மனம் நிறைந்திருந்தது...

ஆம்.,நண்பர்களே...!

🔹அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அதுதான் மிகப் பெரிய பரிசு; விருது...!

🟡 நல்லது அல்லாததை செய்ய வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் மன நிறைவை விட பெரிய வாழ்த்து, பாராட்டு, விருது ஏதாவது இருக்கிறதா...?

🔴 இப்படி மனநிறைவைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்...!!

⚫ வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது நியதி. எனவே!, எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ!, அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள்...!!

🔘 செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவருக்குக் கொடுங்கள். உறுதியாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரும். கொடுத்து மகிழ்வோம்...!!!

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 28*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 5

ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ் ஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம்

சங்கும் சக்கரமும் தாங்கியவராய், முடியும் குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக் கண்ணராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்.

ஓம் நமோ நாராயணா !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
Periyava Charanam 🙏

Ravi has taken efforts to compile the slokas that are covered till now in both Sanskrit and Tamil with the pronounciation connotation!!!!

This would help everyone to pronounce the slokas...

Thanks a ton sir for the volunteer effort towards chanting 🙏🙏🙏

Ravi sir would update the slokas as and when it is covered...

Periyava Charanam 🙏
ravi said…
Thank you for your efforts and compilation. I am sure it will help all. 🙏🙏Thank you Akshaya 🙏🙏
ravi said…
All the credit goes only to Ravi .. I have just forwarded the same 🙏🙏👍
ravi said…
Good morning. Great job. It will be very much helpful for the practice. 🙏🙏🙏
ravi said…
Shriram

21st May

*Exert Yourself to Remember Nama*


There is no sadhana so subtle and yet so gross as Nama. One who wants to say anything most earnestly, says, “I tell you this from the bottom of my heart (or, literally ‘the navel’.)”. So Nama, too, should be taken from the bottom of the heart, or the navel, because all desires spring from there. When it is made the seat of Nama, it will gradually dislodge desire and totally extinguish it in the end. Nama should be practiced not superficially, casually, but sincerely and insistently. Let us not worry as to how we shall respond to sensuous pleasures when all desire becomes extinct.

It is easy to realize God when we realize His omnipotence. He is a saint who has realized God. When we go to a town, we inquire about the local gentry and the Mayor. We can meet them because the residents can point them out. The Supreme Being, however, is without form, without attributes; how can we reach Him, meet Him? But then do we always take things which are not perceptible to be unreal? Our yearning for God is a yearning for the perfection that is God. This yearning can be quelled only by attaining Him. Every being has this fundamental yearning; only, it is misdirected. Because it is directed to the satisfaction of sensuous pleasures which are only evanescent, it never really comes to fruition. Because birth itself is a result of desire, it is desire that we yearn to satisfy. To withdraw our yearning from there and direct it to God – it is in this that man’s peculiar competence lies. ‘What can I do to attain to God?’, this is the yearning that every human should entertain, else he has failed in his special mission and opportunity. All sadhanas aim at creating this longing; and where genuine longing is found, God extends His helping hand.

There is no sorrow, no pain in the world that can ever overshadow the bliss that is God. Everybody hankers after bliss, because it is His nature, His very essence. We should try to inculcate its sweetness in ourselves by study and practice. It may be asked, 'If I spring from God, what is the need for such study?’ The need arises because we have forgotten our noble origin. Because God is all love, let us strive to fill our heart with love.

* * * * *
ravi said…
[21/05, 11:50] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 162*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* ������������

������

*ஸ்லோகம் 24*
[21/05, 12:00] Jayaraman Ravikumar: ஜக³ன்னேத³ம் நேத³ம் பரமிதி பரித்யஜ்ய யதிபி⁴:
குஶாக்³ரீயஸ்வான்தை: குஶலதி⁴ஷணை: ஶாஸ்த்ரஸரணௌ ।

க³வேஷ்யம் காமாக்ஷி த்⁴ருவமக்ருதகானாம்

கி³ரிஸுதே
கி³ராமைத³ம்பர்யம் தவ சரணபத்³மம் விஜயதே ॥24॥
[21/05, 12:06] Jayaraman Ravikumar: அகம்பாவம், அசூய் இவைகளால் மனம் சூழப்பட்டிருக்கிறது.

உடல்
வியாதியால் பாதிக்கப்
பட்டிருக்கிறது.

சொந்தம் பந்தம் இவைகளால் என் வீடு ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது

அம்மா உன் திருவடிகளை அடையும் மார்க்கம் கொள்வாயோ .

குழம்பியுள்ள மனம் சரியாக ஓர் வழி சொல்வாயோ அம்மா ������
ravi said…
[21/05, 10:50] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 566* 🙏🙏🙏started on 7th Oct 2021

*271 வது திருநாமம்*
[21/05, 10:50] Jayaraman Ravikumar: *271 * ईश्वरी - ஈஸ்வரி* --
36 தத்துவங்களில் ஈஸ்வர தத்துவம் 26வது.

ஞான சக்தியை கூறுவது.

எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஈஸ்வரனாகிய ஈஸ்வரியே.

சர்வ ஈஸ்வரி சர்வேஸ்வரி.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அப்படியானால், தேவாஸுர யுத்தமில்லாமல், மனஸ் இல்லாமல், அதிலிருந்து முளைக்கும் ஆசை இல்லாமல் நாம் சாந்தமாக இருக்க வழி தூங்கிக் கொண்டேயிருப்பதுதானா? நிறையத் தூக்க மாத்திரை வாங்கி வைத்துக்கொண்டு, முழித்துக்கொள்ளும் போதல்லாம் போட்டுக்கொண்டு மறுபடி தூங்கிவிடலாமா?

அது ஸரியில்லை.

ravi said…
நல்ல தூக்கத்திலே மனஸின் க்ருத்ரிமம் இல்லை, ஆத்மா மட்டும் இருக்கிறது என்றாலும், ‘ஆத்மாநுபவம்’ என்கிற ஆனந்தமான சாந்தமான நிலையாக நாம் அதைத் தெரிந்து கொண்டு தூக்கத்தின் போது அநுபவிக்கிறோமா என்ன? இல்லை. முழித்துக்கொண்ட பிற்பாடு “ஸுகமாகத் தூங்கினேன்; நிம்மதியாயிருந்தது” என்று சொல்லத் தெரிகிறதே ஒழிய, தூங்கும்போது அந்த ஸுகமோ, நிம்மதியோ நமக்குத் தெரியவில்லை. ஏதோ மரக்கட்டை மாதிரி கிடக்கிறோம். இப்படி வெறும் ஜட நிலைக்கு நம்மைத் தாழ்த்திக் கொள்வது நம்மையே நாம் அவமரியாதை பண்ணிக்கொள்வதுதான். வேறு யாராவது நம்மை “ஜடமே” என்று கூப்பிட்டால் அவமானம், கோபம் படுகிறோமே, நம்மை நாமே அப்படி பண்ணிக்கொள்ளலாமா? ஸ்ருஷ்டி என்ற பெரிய விஷயத்தையே ஏளனப்படுத்துவதாக ஒரு மநுஷ்யன் தன்னை எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் ஜட ஸ்திதிக்குத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

ஜட நிலைமைக்கு அப்புறம் ஓரறிவிலிருந்து ஆறறிவு என்று ஸ்ருஷ்டி க்ரமம் உயர்ந்துகொண்டே போவதில் மநுஷ்யன் உச்சாணியல் இருக்கிறான். இந்த ஆறறிவால் இவனுக்கு ஏகப்பட்ட உபத்ரவங்கள், ஹிம்ஸைகள் ஏற்படுவது வாஸ்தவந்தான். ஆனால், அதற்காகப் பேடி மாதிரி, ஒருவன் தன்னை நபும்ஸகனாக்கிக் கொள்கிற மாதிரி, இதுகள் எல்லாவற்றையும் சக்தியிழக்கப் பண்ணி ஜடமாக்குவது கொஞ்சங்கூட அழகில்லை. ஆறறிவுகளால் ஹிம்ஸை, உபத்ரவம் வந்தாலும் எத்தனையோ நல்லதும் பண்ண முடிகிறதோ இல்லையோ? உசந்த தத்வ விசாரணை, ஸங்கீதம், சில்பம், பொது ஜன ஸேவை, அன்பு, த்யாகம், இப்படி எத்தனையோ நல்லவற்றிலும் கர்மேந்த்ரிய ஞானேந்த்ரியங்களையும் மனஸையும் செலுத்த முடிகிறதோல்லியோ? இப்படிச் செய்ய முயலவேண்டும். அப்புறம், ஆறறிவுக்கு மேலே ஒரே அறிவாக ஆக, ஞான விசாரம் செய்யவேண்டும்; ஆறறிவுக்குக் கீழே ஜடநிலைக்குப் போகப்படாது.
ravi said…
*ராமரும் அங்கதனும்*

*ராமா* ...

தந்தை இழந்தேன் ...

தாய் எனும் தனிமரத்தில் ஓர் விழுதானேன் ...

பார்ப்போர் போவோர் வருவோர் அனைவரும்

பிறர் மனை திருடிய திருடன் மகன் என்றே கேலி செய்கின்றனர் ...

தந்தை தவறு செய்தால் மகன் பொறுப்பாவனோ *ராமா* ?

அங்கதனே

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானப்பா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்

வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்

இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்

பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்

குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்

குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் ...

கவலை விடு ...

எல்லோரையும் த்ருப்தி செய்வது என்னாலும் எந்நாளும் இயலாத ஒன்று

உன் சேவை வேண்டும் ...

தூதுவனாய் போரை நிறுத்த வேண்டும் செய்வாயோ ?

*ராமா* .. ராவணன் என் தந்தையிலும் தாழ்ந்தவன் ...

போர் ஏன் நிற்க வேண்டும் ...

எதையும் புரிந்தோன் இன்று தாழ்ந்து நின்றான் ...

எதிலும் சிறந்தவன் நீயோ ஏங்கி நின்றாய்

அங்கதா ... போர் என வந்தால் புலியும் அஞ்சும் என் அம்பிடம்...

தவறு செய்தவன் ஏகன் . அநேகம் கொல்ல வேண்டுமோ

*ராமா*

உனை போல் எண்ணுவோர் ஒருவர் இனி வரினும் உலகம் உய்யும் ஓர் கோடி ஆண்டுகள் ...

தூது செல்கிறேன் உன் நாமம் துணை கொண்டு ...

ஏதும் ராவணன் எதிர்மறை பேசினால் என் கரங்களுக்கு வேலை தந்தே உன் அம்புக்கு ஓய்வு தருவேன் *ராமா*

சிரித்தான் ராமன் இள ரத்தம் என்றே 🙂🙂🙂🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
சகல கலை அரசி, சரஸ்வதி

சகல உலகும் போற்றும், சரஸ்வதி

வேத நாயகி நாத ரூபிணி

நான்முகன் நாவினில் குடி கொண்ட தேவி நீ

வெண்மலரில் இருப்பாள்; வீணை ஒலித்திருப்பாள்

கண்மலராம் கல்வியும், ஞானம் அளித்திடுவாள்

பண்ணும், பரதமும், நற்கவியும் தருவாள்

எண்ணருங் கலைமகள் இசைத்தமிழில் ஒளிர்வாள்

வாணியும் நீயே வேணியும் நீயே வேதங்கள் போற்றும் பொருள் நீயே

கானமும் நீயே மோனமும் நீயே ஞானம் நல்குகின்ற அருள் நீயே

வானகம் நீயே வையகம் நீயே ஈரேழுலகும் உனதருளே

சூடணும் உன் பதம், பாடணும் உனை நிதம், கவியினில் நிலைத்திடு கருப்பொருளே

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ravi said…
தந்த்ர = யுக்தி - நுணுக்கம் – போதனை (வழிபாட்டு முறைகளின் நுணுக்கங்கள்)

*❖ 206 சர்வ-தந்த்ர-ரூபா =* அனைத்து தந்திரமுறைகளின் சாரமாக விளங்குபவள்
ravi said…
நாரதமுனி , அந்தணர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளி

��������������������

ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு பகவான் நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதரை வணங்கிய அந்தணர், “தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

அதற்க்கு, “நிச்சயமாக, நான் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!” என பதிலுரைத்தார்.

“அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?”

“தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!”

“தாங்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?”

“நிச்சயமாக” என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார். சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார். நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்தித்து அங்கிருந்து வைகுந்தம் செல்கிறார்.

வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடுபேறு அடைவார்கள் என வினவினார்.

சற்றும் யோசகாமல் பகவான், “அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி இப்பிறவி முடிந்ததும் பிறவிக் கடலை நீந்தியவராவர், அந்த அந்தணர் இப்போதைக்கு வீடு பேரு பெரும் சாத்தியம் இல்லை, இன்னும் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்” என்று இயம்பினார்.

இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு!! பகவானை நோக்கி, " ஓ பிரபு, வேதங்களை நன்கு கற்றறிந்த பண்டிதன், ஆச்சாரமாக வாழும் ஒருவனை விட ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக பிறவிக்கடல் தாண்டி வீடு பேரு அடைவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை, சற்றே என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?” என வினவினார்.

அதைக் கேட்டு புன்னகைத்த பகவான், ஒரு ஊசியை நாரதரிடம் கொடுத்து, “நீ நேராக சென்று அவர்களை சந்திப்பாயாக, அவர்கள் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் எனக் கேட்டால், இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தேன் என்று சொல், அதற்க்கு அவர்கள் எந்த மாதிரி பதில் தருகிறார்கள் என்று பார், உன் சந்தேகம் தீரும்” என அனுப்பி வைத்தார்.

நாரதரும் அவ்வாறே திரும்ப வந்து, வழியில் சந்தித்த அந்தணரை மீண்டும் கண்டார். அவரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், “நாராயணரைச், சந்தித்தீர்களா? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என வினவினார்.

நாரதர் பகவான் சொன்னபடி, ” ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தார்” என்றார்.

அதற்க்கு அந்தணர், ” மாமுனிவரே தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை, ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்? ” என்றார். புன்னகைத்த நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.

அதைக் கேட்டதும், “ஆஹா, என் இறைவன் எல்லாம் செய்ய வல்லவன், அவனால் இது நிச்சயம் முடியும்” என்று துள்ளிக் குதித்தார்.

இதைப் பார்த்த நாரதருக்கோ பெருத்த ஆச்சரியம். “ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா? எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்று வினவினார்.

அதைக் கேட்ட அந்த தொழிலாளி, “ஐயா யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை விட சிறிய துளையிலும் என் இறைவனால் நுழைக்க முடியும்” என்றார்.

மேலும் வியந்துபோன நாரதர் “எப்படி?” என வினவினார்.

கீழே குனிந்து அங்கே கொட்டிக் கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின் பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்த அந்த தொழிலாளி “இதோ நான் தினமும் வந்து உட்காரும் இந்த இடத்திலுள்ள ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பதென்ன பெரிய விஷயமா?” என்று கேட்டார்.

இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் தற்போது முற்றிலும் தீர்ந்தது!!

ஆம் நம்பிக்கையற்றவன் வைகுணடத்தில் ஶ்ரீமன் நாராயணனின் பக்தித் தொண்டினை அடைய முடியாது

ஶ்ரீமத் பகவத் கீதை 9.3 .

அஷ்ரத்ததானா: புருஷா
தர்மஸ்யாஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்தந்தே
ம்ருத்யு-ஸம்ஸார-வர்த்மனி

எதிரிகளை வெல்வோனே, இந்த பக்தித் தொண்டில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடைய முடியாது. எனவே, அவர்கள் இந்த பௌதிக உலகின் பிறப்பு இறப்பு பாதைக்கே திரும்பி வருகின்றனர்.

ஹரே கிருஷ்ணா !����
ravi said…

பழனிக் கடவுள் துணை - 21.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-55

காமத்திழிவு கழறல்!!

மூலம்:

தாமக் குவளையும் செச்சையும் நீபமும் தண் குரவும்
ஏமப் பணியும் புனைவாய்! பழனிக் கிறையவனே!
ஈமக் கனலினும், எவ்வித நோயினும், என்னளவும்
காமக் கடற்சுழி யேகொடிதாகும் கருதிடினே (55).

பதப்பிரிவு:

தாமக் குவளையும் செச்சையும் நீபமும் தண் குரவும்
ஏமப் பணியும் புனைவாய்! பழனிக்கு இறையவனே!
ஈமக் கனலினும், எவ்வித நோயினும், என் அளவும்
காமக் கடல் சுழியே கொடிதாகும் கருதிடினே!! (55).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தாமக் குவளை- மாலையாயுள்ள குவளை- அதாவது நீலோற்பலம்; செச்சை- வெட்சிப்பூ; நீபம்- கடப்ப மலர்;
குரவு- குரா மலர்; ஏமப் பணி- பொன்னாபரணம்; ஈமக் கனல்- மயான நெருப்பு;

எந்த நோயினும், காம நோயே மிக மிக இழிந்ததென்றும், அந்நோய் தன்னைச் சேர விடாது காத்து அருள, எம் பெருமான் பழநியாண்டவனைத் துதித்தேத்தும் பாடலே இந்த 55 வது அலங்காரம். மிக அற்புதமான சொல்லாடல்கள் கையாளப்பட்டுள்ள ஓர் அற்புதமான அலங்காரம்.

எம் பெருமான் அணிந்துள்ள மலர் மாலைகளின் பட்டியலை இந்தப் பாடலில் இடுகிறார் நம் சுவாமிகள். இந்த மாலைகளின் அணிவகுப்பு, "கார் கொள் முகத்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண் நறும் கானத்து இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து உருள்பூத் தண் தார் புரளும் மார்பினன்" என்ற நக்கீரரின் திருமுருகாற்றுப்படை அடிகளை நினைவில் கொண்டு வருகின்றது.

மாலையாயுள்ள குவளை, அதாவது நீலோற்பலம், வெட்சிப்பூ, கடப்ப மலர், குளிர்ந்த குரா மலர் போன்ற அழகிய மலர்களோடு பொன்னாபரணங்களையும் புனையும், "ஆயிரம் கோடி காமர் அழகு எலாம் திரண்டு ஒன்று ஆகி மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில் தூய நல் எழிலுக்கு ஆற்றாது என்றிடின் இனைய தொல்லோன் மாயிரு வடிவிற்கு எல்லாம் உவமை யார் வகுக்க வல்லார்?" என்ற கச்சியப்ப சிவாச்சாரியாரின் அடிகளுக்கு ஏற்ப, உவமையே சொல்ல ஒண்ணாதபடி, அழகின் மொத்த உருவாயுள்ள எம் பழனிமன்னனே! பழனாபுரியின் இறையே! உன் அடிமை நான் கருதிடின், என்னளவும், மயானக் கனலினும், எவ்வித நோயினும், சிக்கினால் வெளிய வரமுடியாத பெரும் சுழலான காமக் கடல் சுழியே மிக மிகக் கொடிதாகும் எம் பெருமாளே!!! நீ அறியாததா? எனவே, அக்கொடிய நோய் என்னைத் தாக்காதவாறு காத்து இரட்சிப்பாய் எம் பழனாபுரி குகேசப் பெருமாளே!

காமனைக் கனலில் கருக்கிய கங்கைதங்குசடையனின் கண்ணீன்றக் காங்கேயனே! காமநோயணுகாது கமலமேவுமுனது கழலேயெமக்குக் கனிவுடனருள்! காமப்பித்தம் கொள்ளாது வாழ, அருள்வாய் நித்தம் நின் சித்தம்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺""Achaleeswara! You have made me a liar before! A simple story explaining about the devotee who cursed to let thunder fall on your head... 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 A poor woman Shanti.... used to sell flowers. Grind sandalwood to the temple on non-flowering days and make the temple more beautiful. She used to do work like watering Nandavan.

🌺The girl befriended Nalini, a rich woman who came to the temple every day. It grew to the point of asking for money to be bartered. Once she bought some big amount from that rich sister.

Selvavati Nalini asked for the money back after a month. The poor girl Shanti used to make excuses. Nalini, who gave the loan, I gave this money by pawning the jewel without the knowledge of my family.

My brother-in-law is getting married next month. My husband will scold me if I don't pay it back by then. Poor girl Shanti was disturbed.

🌺After everyone left, in the shrine of Achaliswarar, Ishwara! I keep the money but don't give it! She prayed that I am going to lie by trusting you, don't take revenge on me as punishment.

🌺The next day when rich Nalini asked for a loan, she went home and looked at the bank note. Poor thing, she said that I have already paid your debt. Dhanavanti was speechless.

🌺After coping
Innocent! Lie like this! I am gathering the important people of the village. She said that she should take an oath in the shrine of Achaleeswarar. The town gathered. The poor woman crawled into the temple and said, Achaliswara! I gave the loan. She hit camphor saying this is true.

🌺Many looked down on rich Nalini. Selvavati with passion, Achaliswara! People have made me a liar before! She cursed that thunder would fall on your head, who had accepted the falsehood and remained silent.

🌺 Then the car clouds gathered. Rain, thunder and lightning flashed. A thunderbolt fell on the Swami Sannidhi Vimana. There was a split in Lingat Thirumeni. The villagers were amazed that the Lord had proved the truth.

🌺Urar collected funds and gave it to the rich devotee Nalini, her family gave it to the temple. The split lingam was placed in a nearby lake. They installed a new lingam in the sanctum sanctorum.

🌺The next day when the sanctum was opened, there was a split Linga. Devotees pray daily to close the gap so that it is convenient for abhishekam and the gap has narrowed little by little and now only the scar is visible. The newly made lingam is still in Pushkarani.

🌺(The name of this temple is Achaleeswarar Temple, Nathane Pon Manai Mahadeva Temple between Nandeeswaram Temple, Kanyakumari District.)🌹

🌺🌹Vayakam valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺“" *அச்சாளீஸ்வரா* ! *ஊரார் முன்பு என்னைப் பொய்யானவளாக்கி விட்டாயே!* *உன் தலையில் இடி விழட்டும் என சபித்த பக்தை பற்றி* ... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺ஒரு ஏழைப்பெண் சாந்தி.... பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள்.

🌺அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் நளினியுடன் தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள்.

🌺ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி நளினி . இதோ அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண் சாந்தி. கடன் கொடுத்த நளினியோ , என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன்.

🌺அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார் கடன் வாங்கும்போதே நம்மால் திரும்பக் கொடுக்க முடியுமா என்று யோசிக்க மாட்டாயா என்று ஏசினாள். ஏழைப் பெண் சாந்தி கலங்கினாள்.

🌺எல்லோரும் போனபிறகு அச்சாளீஸ்வரர் சன்னிதியில், ஈஸ்வரா! பணம் வைத்துக் கொண்டா கொடுக்காமல் இருக்கிறேன்! உன்னை நம்பித்தான் பொய் சொல்லப்போகிறேன், தண்டனையாக என்னைப் பழி வாங்கி விடாதே என்று பிரார்த்தித்தாள்.

🌺அடுத்த நாள் பணக்காரி நளினி கடனைக் கேட்டபோது, வீட்டுக்குப் போய் கணக்கு நோட்டைப் பார். உன் கடனை எப்பவோ கொடுத்து விட்டேன் என்று ஒரே போடாகப் போட்டாள் ஏழை. தனவந்தி வாயடைத்துப் போனாள்.

🌺பிறகு சமாளித்துக்கொண்டு
அடிப்பாவி! இப்படியா பொய் சொல்லுவே! ஊர் முக்கியஸ்தர்களைக் கூட்டி வருகிறேன். அச்சாளீஸ்வரர் சன்னிதியில் சத்தியம் செய்ய வேண்டும் என்றாள். ஊர் கூடியது. ஏழைப் பெண் கோயிலை வலம் வந்து, அச்சாளீஸ்வரா! கடனைத் தந்து விட்டேன். இது சத்தியம் என்று கற்பூரத்தை அடித்தாள்.

🌺பலரும் பணக்காரி நளினியை இகழ்வாகப் பார்த்தனர். செல்வவதி ஆவேசத்தோடு, அச்சாளீஸ்வரா! ஊரார் முன்பு என்னைப் பொய்யானவளாக்கி விட்டாயே! அசத்தியத்தை ஏற்று மௌனமாயிருக்கும் உன் தலையில் இடி விழட்டும் என சபித்தாள்.

🌺அப்போது கார் மேகங்கள் கூடின. மழையும், இடியும், மின்னலுமாய் வெளுத்து வாங்கியது. அதில் ஒரு இடி ஸ்வாமி சன்னிதி விமானத்தில் விழுந்தது. லிங்கத் திருமேனியில் பிளவு ஏற்பட்டது. உண்மையை இறைவன் நிரூபித்தான் என்று ஊரார் அதிசயித்தனர்.

🌺ஊரார் நிதி திரட்டி பணக்கார பக்தை நளினியிடம் கொடுக்க, அவள் வீட்டார் அதைக் கோயில் திருப்பணிக்கே தந்து விட்டனர். பிளவு பட்ட லிங்கம் அருகிலுள்ள தடாகத்தில் வைக்கப்பட்டது. கருவறையில் புதிய லிங்கம் ஸ்தாபித்தனர்.

🌺மறுநாள் கருவறையை திறந்தபோது, அங்கே பிளவுபட்ட லிங்கமே இருந்தது. அபிஷேகம் செய்ய வசதியாக பிளவை மூடிக் கொள் என்று பக்தர்கள் தினமும் பிரார்த்திக்க பிளவு சிறிது சிறிதாகக் குறுகி, தற்போது வடு மட்டுமே தெரிகிறது. புதிதாகச் செய்த லிங்கம் புஷ்கரணியில் இன்றும் உள்ளது.

🌺(இக்கோவிலின் பெயர் அச்சாளீஸ்வரர் கோவில், நாதனே பொன் மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.)🌹

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
Thank you mama. This forum deserve someone who drives things periodically so we don't lose the sath or knowledge gained because of busy life. God knows who can help in every situation and you are here 🙏🙏
ravi said…
[21/05, 17:58] Jayaraman Ravikumar: *பாடல் 46 ... எம் தாயும்*

(மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்)

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா,

கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே🌸🌸🌸
[21/05, 17:59] Jayaraman Ravikumar: கந்த சுவாமியே, ஞான ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே,

பார்வதியின் பாலகனே, குமரனே, வேத நாயகனே,

நீ எனக்கு தாயும்
கிருபை பாலிக்கும் ஞானத் தந்தையும் ஆவாய்.

ஆகையால் என்
மனத்துயரை எல்லாம் நீக்கி என்னை ஆட்கொள்வாயாக
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 161 started on 6th nov
ravi said…
[21/05, 17:54] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 82*💐💐💐💐🙏🙏🙏

பா3ணத்வம் வ்ருஷப4த்வ-மர்த4வபுஷா பா4ர்யாத்வ-மார்யாபதே

       கோ4ணித்வம் ஸகி2தா ம்ருத3ங்க3 வஹதா சேத்யாதி3ரூபம்-த3தௌ4 |

த்வத்பாதே3 நயனார்ப்பணஞ்ச க்ருதவான் த்வத்3 தே3ஹ-பா4கோ3 ஹரி:

       பூஜ்யாத் பூஜ்யதரஸ்ஸ ஏவ ஹி ந சேத் கோ வா தத3ன்யோ-(அ)தி4க: || 82
[21/05, 17:54] Jayaraman Ravikumar: *சிவ, விஷ்ணு அபேதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)*
[21/05, 17:55] Jayaraman Ravikumar: ஸத்வ – ரஜோ – தமோ குணங்களில்தான் எல்லா மனிதர்களும் கட்டுண்டு கிடக்கிறோம்.

எல்லாம் ஒரே பரமாத்மாவிடமிருந்து வந்ததால், ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றுக்கும் ரூபகமாக பரமாத்மாவின் மூன்று மூர்த்தி பேதங்களைச் சொல்கிறார்கள்.

ஜனனம் என்பதில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கிறது.

காம வேகத்தினால்தான் பிறப்பு உண்டாகிறது.

எனவே, சிருஷ்டிக்கெல்லாம் காரணமாயிருக்கிற பிரம்மாவை பரமாத்மாவின் *ரஜோ குணமூர்த்தி* என்று வைத்தார்கள்.

அதில் யாருக்கும் பேதமில்லை.

பிரம்மா மஞ்சள் சிவப்பாக இருக்கிறவர்.🌸🌸🌸
ravi said…
[21/05, 17:51] Jayaraman Ravikumar: *115. ருத்ராய நமஹ (Rudraaya namaha)*
[21/05, 17:53] Jayaraman Ravikumar: திருக்கச்சி நம்பிகள் குற்றமற்றவர் என்பதைக் கோயில் அதிகாரிகளும் பொதுமக்களும் உணர்ந்தார்கள்.

“திருக்கச்சி நம்பிகள் எப்போதும் போல் எனக்குச் சாமரம் வீசும் கைங்கரியத்தைத் தொடர்ந்து செய்வார்!” என்று
பெருமாள் திருவாய் மலர்ந்தருளினார்👍👍👍
ravi said…
*முத்து*

முத்து உதிர்ந்திடுமோ, என்றன்

மோகம் விரட்டிடுமோ

பற்று விலகிடுமோ, உன்மேல்

பாசம் பெருகிடுமோ

வந்து பிறந்து விட்டேன், உலகில்

வாசனை தீரவில்லை

நொந்து மயங்கி விட்டேன், விதியின்

ஆட்டமும் தீரவில்லை

அன்னை எனக் கொண்டேன், என்னை

உன்றன் பிள்ளை எனக் கொண்டேன்

அன்னையென நீயே, இருந்தும்

என்ன பயனைக் கண்டேன்

அலைகள் ஓய்ந்திடுமோ, இதயம்

ஆறுதலைப் பெறுமோ

பிறவிக் கடல்தனை, நானும்

கடக்கும் நாள் வருமோ🌸🌸🌸
ravi said…
ரொம்ப கரெக்டா சொன்னீர்கள்....உன்னை அம்மா என்று சொல்லி என்ன...ஒரு மாறுதலும் இல்லை...நாட்கள் வெறுமனே போகின்றது....நான் என்ன செய்ய...எதற்கு இருக்கின்றேன் என்று தெரியாமல்....நொந்து நிற்கின்றேன் தாயே...ஒருமுறை உன் கடைக்கண் பார்வை அருள வேண்டும்....தாயே..🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
ரொம்ப கரெக்டா சொன்னீர்கள்....உன்னை அம்மா என்று சொல்லி என்ன...ஒரு மாறுதலும் இல்லை...நாட்கள் வெறுமனே போகின்றது....நான் என்ன செய்ய...எதற்கு இருக்கின்றேன் என்று தெரியாமல்....நொந்து நிற்கின்றேன் தாயே...ஒருமுறை உன் கடைக்கண் பார்வை அருள வேண்டும்....தாயே..🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
*ராமனும் கும்பகர்ணனும்*

*பாதி பாதி* 🌸🌸🌸

*ராமா* மனிதன் பாதி மிருகம் பாதி சேர்ந்த கலவை நான்

தூக்கம் பாதி ஏக்கம் பாதி சென்ற நாட்கள் காண்

வேகம் பாதி விவேகம் பாதி கொண்டிருந்தும்

தாகம் பாதி காமம் பாதி கொண்டவன் திருந்தவில்லை

சோறு பாதி அதில் உப்பு பாதி உண்டவன் நான்

ஏக்கம் பாதி ஏமாற்றம் மீதி என்றே வாழ்வை முடிக்க வந்தேன்

உன் கரங்கள் பாதி உன் நாமம் மீதி என்னை மன்னிக்கட்டும்

செஞ்சோற்று கடன் பாதி உன் வரவு மீதி இன்றே எனை தீர்க்கட்டும்
என் விதி பாதி மதி பாதி தனை *ராமா*

*ராமன்* சிரித்தான் ..

சிம்மம் பாதி நரன் பாதி அவதாரம் எடுத்தவன் நான்

சிவம் பாதி மால் பாதி என்றே வந்தவன் நான்

நல்லது பாதி சொன்னாய் ராவணனுக்கே
கெடுத்தது பாதி அவன் விதி அன்றோ

புகழ் பாதி கீர்த்தி மீதி என்றே என்றும் வாழ்வாய் ...

கண்ணனாய் நான் வரும் போது

பாதி தானம் பாதி வீரம் கொண்டே கர்ணனாய் பிறப்பாய்

உள்ளம் உனது நல்லதே ஆனதால் அது உறங்காது என்றும் கர்ணா

பாதி உறக்கம் கண்ட கும்ப கர்ணன் கண்டான் நிரந்தர நித்திரை அன்று ...

திரையின் பின்னே சிரித்து நின்றான் *சீதா ராமன்* எல்லாம் அறிந்தவன் ஏதும் தெரியாமலே 🙂🙂🙂
ravi said…
ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்,* 🪷🪷🪷

அயோத்⁴யாபுரனேதாரம் மிதி²லாபுரனாயிகாம் ।
ராக⁴வாணாமலங்காரம் வைதே³ஹானாமலங்க்ரியாம் ॥ 1 ॥

ரகூ⁴ணாம் குலதீ³பம் ச நிமீனாம் குலதீ³பிகாம் ।

ஸூர்யவம்ஶஸமுத்³பூ⁴தம் ஸோமவம்ஶஸமுத்³ப⁴வாம் ॥ 2 ॥


🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 54🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
நான் அமைதியாக பொறுமையுடன் இருப்பது எனது பலவீனத்தை காட்டுவதாகாது -

பாய்ந்து வரும் புலியையும் பரிவோடு பார்க்க கற்றுக்கொண்டவன் -

ஒருவனை கொல்வது மிகவும் எளிது, பகைவனாக்குவதும் மிக எளிது --

அவனை நண்பனாக்கி பார் - வாழ்க்கை என்றுமே இனிதாக இருக்கும்..

மன்னிக்க தெரிந்துகொண்டால் நீ சொன்ன அதே எறும்பு ஒரு நாட்டுக்கு மன்னனாக கூட மாறலாம் ......

நீ ஒன்றை மறந்துவிட்டாய் --- என்னிடம் வாலியை கொன்ற அம்பு இன்னும் பசியோடுதான் இருக்கிறது -

இதையும் சுக்ரீவனிடம் அன்புடன் சொல்லி விட்டு வா ---

ஜாம்பவானுக்கு லட்சுமணன் சுக்ரீவனைப்பார்க்க செல்கிறான் என்ற செய்தி கிடைத்து விட்டது --

துடித்தார் -- எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடக்கும் போல் இருக்கிறதே ---

லட்சுமணன் அம்பினால் மட்டும் தானே பிறருடன் பேசுவான் -----

மாருதி -- வா அவன் போய் சேரும் முன் சுக்ரீவனுக்கு நல்ல புத்தி சொல்வோம் - கிளம்பு -

ராமநாமத்தை ஒரு இடத்தில் உட்காந்துக்கொண்டுதான் சொல்லவேண்டும் என்றில்லை -- என்னுடன் நடந்துகொண்டே கூட சொல்லிக்கொண்டு வரலாம் - புறப்படு வாதஜாதனே !!!

சிங்கமாக சென்று கொண்டிருந்தான் லட்சுமணன் --

புலியாக ஜாம்பவானும், அனுமாரும் விரைந்தனர் -

அங்கே ஒரு வானரமாக இன்னும் பல பெண்களின் மடிகளில் உறங்கிக்
கொண்டிருந்தான் சுக்ரீவன் --------🐒🐒🐒
ravi said…
திருமகளே வருக, உன்றன்

திருவருளைத் தருக

அலைகடலில் உதித்த அழகிய தேவி

அறிதுயில் பயிலும் மாலவன் ராணி

வதனம் தாமரை, விழிகள் தாமரை

ஆசனமும் செந் தாமரையே

பதங்கள் தாமரை கரங்களில் தாமரை

நீயே ஒரு பெண் தாமரையே

ஏழை மாந்தருக் கருளிடவே

எட்டு விதமாக வடிவம் கொண்டாய்

அஷ்ட ஐஸ்வர்யம் அள்ளித்தரும்

அதிபதியே எழில் அருள் நிதியே🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
[21/05, 18:43] Jayaraman Ravikumar: # *முதிர்ச்சி* :

தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும்.

வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.

ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார்.

என்னதான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை.

ஸ்கூட்டர்,அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி சென்றார்.

இது நேற்று நடந்தது.

இன்று அதே நேரத்தில், அங்கு எனக்கு இருக்க வேண்டிய சூழ்நிலை. அவரிடம் பலாச்சுளைகளை வாங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு சுளைகளை கவரில் வைத்து கொடுக்கும் போது கூட, தெருவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார், யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு.

அதே பெண் தூரத்தில் ஸ்கூட்டரில் வருவதை பார்த்ததும், ஒரு நிமிஷம் சார், என்று என்னிடம் கூறிவிட்டு வந்து கொண்டிருந்த பெண்ணை நிறுத்தச் சொல்லி கையசைத்தார்.

அந்த இளம் பெண்ணும் முகத்தில் சற்று கலவரத்தோடு, நேற்று திட்டியதற்கு சண்டை போடப் போகிறாரே? என்று வண்டியை நிறுத்திவிட்டு, என்ன? என்று கோபமாக கேட்டாள்.

நான் கூட நேற்று நடந்ததற்கு ஒரு சத்தம் போடப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் நடந்தது மனதை நெகிழ வைத்தது.

தாயி, நேற்று போன அவசரத்தில் இதை தவற விட்டு விட்டு போய் விட்டாய்" என்று விலையுயர்ந்த செல்போனை தன் மடியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

அந்த இளம்பெண்ணுக்கு பேச்சே வரவில்லை.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, ஐயா இந்த போனை தொலைத்தில் இருந்து நிம்மதியே இல்லை. நான் பேங்கில் பணிபுரிபவள். முக்கியமான நம்பர் எல்லாம் இதில்தான் இருக்கிறது. மிக்க நன்றி என்று கூறிவிட்டு கண் கலங்கினார்.

நேற்று அவ்வளவு அவமரியாதையாக பேசி இருக்க கூடாது. கொஞ்சம் டெனசன், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விட்டேன்" என்று கைகூப்பினாள்.

அட விடு தாயி. எல்லாருக்கும் கோபம் வர்றதுதான். இதை போய் பெரிசு படுத்திக்கிட்டு, ஜாக்கிரதையாக போ தாயி என்று அன்போடு அனுப்பி வைத்தார்.

நேற்று அப்படி திட்டிய பெண்ணை, நாலு வார்த்தை கேட்டிருக்கலாமே என்றேன்.

சின்ன பொண்ணு சார்.இன்னும் கல்யாணம், காட்சி, குழந்தைன்னு ஆல விருட்சமா வாழ வேண்டிய பொண்ணு சார். வயசாயி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். எனக்கு பேத்தி வயசு. என் பேத்தியா இருந்தா சண்டை போடுவேனா? நல்லா இருக்கட்டும் சார். நம்மை சுத்தி எல்லோரும் மனுஷங்கதான் சார். இருக்கிற வரைக்கும் அன்பா பாசமா இருந்துட்டு போவேமே என்றார்.

என்னால் பேசவே முடியவில்லை.
அசந்து விட்டேன்.

நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்.

*படித்ததில் பிடித்தது.*
[21/05, 19:29] Jayaraman Ravikumar: வாழும் வரை நலமாக அனைவருக்கும் துணையாக வாழ்விக்க வேண்டும் நீயே.

வந்தாலும் போனாலும் வாடாமல் உள்ளத்தை வளமாக்க வேண்டும் தாயே.

௭மன் நெருங்காமல் ௭ங்கள் வாழ்வு காக்கின்ற ஏகாம்பரன் தேவியே,

௭ழில் பொழியும் காஞ்சிநகர்
அரசபுர ராணியே,

௭ங்கள் காமாட்சி உமையே,உம்மையே சரண்புகுந்தோம்
காத்தருளும் காமகோடி பீடமே....

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!🪷🪷🪷
ravi said…
வாழும் வரை நலமாக அனைவருக்கும் துணையாக வாழ்விக்க வேண்டும் நீயே.

வந்தாலும் போனாலும் வாடாமல் உள்ளத்தை வளமாக்க வேண்டும் தாயே.

௭மன் நெருங்காமல் ௭ங்கள் வாழ்வு காக்கின்ற ஏகாம்பரன் தேவியே,

௭ழில் பொழியும் காஞ்சிநகர்
அரசபுர ராணியே,

௭ங்கள் காமாட்சி உமையே,உம்மையே சரண்புகுந்தோம்
காத்தருளும் காமகோடி பீடமே....

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!🪷🪷🪷
ravi said…
*208 மாஹேஷ்வரீ =* ஈஸ்வரனான மஹேஸ்வரனின் சகதர்மிணி🌸🌸🌸
ravi said…
மண்ணுலகும் பொன்னுலகே

மாதரசி துணையிருந்தால்

மண்பிறப்பும் நற்பிறப்பே

மங்கை யுன்னை நினைத்திருந்தால்

உன்னை என்றன் நெஞ்சில் வைத்து

உன்றன் பாதம் பூஜித்து

உன்றன் நாமம் ஜெபித்து

உன்னைப் பாடித் துதித்து வந்தால்

ஊரும் உண்டு பேரும் உண்டு

உற்றார் பெற்றரும் உண்டு

உன்னை என்றன் அன்னை என்று

சொந்தம் கொண்டு வந்தேன் இன்று

கோடி ஜென்மம் கொண்ட போதும்

அன்னை மட்டும் நீயேயன்றோ

ஓடி வந்தேன் உன்னை நாடி

பாடி வந்தேன் உன்னைத் தேடி🪷🪷🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தர்ம ரக்ஷைக்காகவே இப்படிப் பல தினுஸில் சரீரத்தைக் கொண்டும், ஆயுதத்தைக் கொண்டும் தன்னுடைய சரீரத்தையும், தன் நாட்டு மக்களின் சரீரத்தையும் ரக்ஷித்துக் கொள்வதற்கு தநுர்வேதம் வழி சொல்லிக் கொடுக்கிறது.

ravi said…
எந்தப் போர் முறையானாலும் இன்னின்ன ஒழுங்கு முறைகளின்படிச் செய்ய வேண்டும் என்று அதற்கு வ்யவஸ்தை பண்ணி ‘தர்ம யுத்தம்’ என்று வைத்திருக்கிறது. இதிலே பெரிய தர்மம், ‘ஸேனைக்கும் ஸேனைக்கும்தான் சண்டை, யுத்த பூமியிலேதான் அந்த சண்டை நடக்க வேண்டும், மற்றப் பொது ஜனங்கள் எவரையும் தாக்கப்படாது, நாடு நகரங்களை பாதிக்கப்படாது’ என்று வைத்ததுதான். தற்காலத்திலோ ஸிவிலியன் பாபுலேஷன், குழந்தைகள், ஸ்திரீகள் எவரானாலும் க்ரூரமாகக் கொன்று குவிக்கிற விமானப் படையெடுப்பும், குண்டு போடுவதுந்தான் போர்முறை என்றாயிருக்கிறது.

ravi said…
அத்து மீறிப் பண்ணினவர்கள்தான் முற்காலங்களில் நாடு நகரத்தில் புகுந்து நாசம் பண்ணியும், தீ வைத்தும், ஜலாசயங்களில் (நீர் நிலைகளில்) விஷம் கலந்தும், ஸ்திரீகளை மானபங்கம் செய்தும் யுத்தம் செய்தது. இவர்கள் ரொம்பவும் குறைச்சலே. துருக்கர்கள், முதலான அந்நிய தேசத்தவர்கள் இந்த மாதிரி முறைகெட்ட கார்யங்களைச் செய்ய ஆரம்பித்த பின்தான் இங்கே இவை சற்றுப் பரவின. அவர்கள் இப்படி அக்ரமம் பண்ணின போதுகூட சிவாஜி முதலான ஹிந்து ராஜாக்கள் சத்ருக்களைச் சேர்ந்த ஸ்திரீகளுக்குக் கெடுதல் பண்ணாமல், காப்பாகப் பல்லக்கிலே ஏற்றிப் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்துருக்கிறார்கள்.

ravi said…
பாபங்களிலும் பிராயச்சித்தமேயில்லாத சில மஹா பாபங்களுண்டு. இவற்றைப் பண்ணினவர்களுக்கு ‘ஆததாயி’ என்றுபேர். தர்ம யுத்தமாக சரீர-ஆயுத பலங்களை மட்டும் காட்டி ஜயிக்காமல் நெருப்பு வைக்கிறவன், விஷம் வைக்கிறவன், நிராயுதபாணியாக இருப்பவனை ஆயுதத்தால் கொல்பவன், கொள்ளையடிக்கிறவன், நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறவன், பரஸ்திரீயை அபஹரிக்கிறவன் ஆகியவர்களை ஆததாயிக்களின் லிஸ்டிலேயே சேர்த்திருக்கிறது. இதிலிருந்தே தர்ம வியவஸ்தை நம் யுத்த முறையை எப்படிக் கட்டுப்படுத்தியிருக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம்.

ravi said…
முன்னேயே இன்னார்தான் இன்னாருடன் யுத்தம் செய்யலாம் என்ற கட்டுப்பாட்டைச் சொன்னேன். ஸம பலமுள்ளவர்களே யுத்தம் செய்துகொள்ள வேண்டும். சரணாகதி பண்ணுகிறவனை அடிக்கக் கூடாது. பயங்காளியை விட்டுவிடணும். ஒரு font-ல் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தேவையின்போது சேர்ந்து கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறவன் (stand-by) திடீரென்று புகுந்து ஒருத்தனை தாக்கக்கூடாது. ரொம்ப முடியாமல் சத்ரு கொஞ்சம் ச்ரம பரிஹாரம் செய்து கொள்கிறேனென்றால் அவனுக்கு அநுமதி தரவேண்டும். ‘தீர்த்தம் குடிக்கிறேன்; கவசத்தை ஸரி செய்து கொள்கிறேன்;குதிரையை மாற்றிக் கொள்கிறேன்; புதுசாக ஆயுதம் கொண்டுவரச் செய்கிறேன்’ என்றெல்லாம் சத்ரு சொல்லும்போது, அவன் அப்படிச் செய்கிறவரையில் தாக்கக் கூடாது. ஆயுதம் இழந்தவன், கவசம் உடைந்தவன் கவனக் குறைவாய் இருப்பவன், புறமுதுகு காட்டி ஓடுகிறவன் முதலியவர்களை ஒருபோதும் அடிக்கக் கூடாது. சாரணர்கள் என்று ஒற்றர்கள், வேவுகாரர்கள் இருப்பார்கள்; ஸமாசாரம் கொண்டு வரும் தூதர்கள் இருப்பார்கள்; ஆயுதங்களைக் கொண்டுவந்து தருவதற்காகச் சிலபேர் இருப்பார்கள் உத்ஸாஹமூட்டுவதற்காக சங்கம், பேரி முதலான வாத்யங்களை வாசிப்பவர்கள் இருப்பார்கள். இவர்களையெல்லாம் தப்பித் தவறியும் தாக்கிவிடக் கூடாது. ராவணனுடைய சாரணர்கள், தூதர்கள் ஆகியவர்களை வானரங்கள் ஹிம்ஸிக்காதபடி ராமர் யுத்த தர்மத்தை அவர்களுக்குச் சொன்னதாக ராமாயணத்தில் இருக்கிறது.

ravi said…
யுத்த பூமியில்தான் சண்டையே தவிர, யுத்தம் முடிந்து திரும்பிப் பாசறைக்கும் போகிறபோது இரண்டு தரப்புக்காரர்களும் அன்போடுதான் பழக வேண்டுமென்று கூடச் சொல்வார்கள்.

இப்போது ஒரே அதர்ம யுத்தந்தான் Chemical Warfare என்று ஜலத்திலும் அட்மாஸ்ஃபியரிலும் விஷத்தைச் சேர்ப்பது, scorch-earth என்று நிலத்தை சாகுபடிக்குப் பிரயோஜனமில்லாமல் எரித்துவிடுவது எல்லாமே ஸஹஜமாகச் செய்யப்படுகின்றன.

ravi said…
நமக்கு அர்த்தம், காமம் எல்லாமே அநுமதிக்கப்பட்டிருந்தாலும் தர்மம், மோக்ஷம் என்ற இரண்டாலும் இவற்றுக்கு இரண்டு பக்கமும் வரம்பு கட்டி தர்ம-அதர்ம-காம-மோக்ஷம் என்று வைத்துவிட்டதால் யுத்தம் உள்பட எல்லாமே அததுவும் லக்ஷ்யமாய் விடாமல், தர்ம வாழ்க்கை, வீட்டுப் பேறு என்ற லக்ஷ்யங்களுக்கு அநுகூலம் செய்யும் ஸாதனங்களாகவே ஒழுங்கு செய்யப்பட்டன. இப்படி தர்மத்தோடு இசைந்து செய்யும்படியாகவே ரிஷிகள் அமைத்துத் தந்த போர்க் கலைதான் தநுர்வேதம். பாரத யுத்தத்தின்போது, ஸந்த்யா வந்தனத்தில் அர்க்யம் தருகிற வேளை தப்பிப் போகிறதேயென்று ஸேநா வீரர்கள், ஜலத்தைத் தேடிக்கொண்டு போக அவகாசமில்லாததால் புழுதியையே எடுத்து அர்க்யம் தந்தார்கள் என்று வியாஸர் சொல்வதிலிருந்தே யுத்தம் எப்படி தர்மாசாரங்களோடு சேர்ந்திருந்தது என்று தெரிகிறது.

தமிழிலே அர்த்த புஷ்டியுடன் ‘மறக் கருணை’ என்று சொல்வார்கள். லோகத்தில் தர்மம் தழைக்க வேண்டும் என்ற உசந்த லக்ஷ்யத்துக்காவே கடுமையாக நடந்து கொள்வதுதான் மறக் கருணை. இந்த அடிப்படையில் அநுஷ்டிக்க வேண்டியதே தநுர்வேதம்.
ravi said…
🌹🌺 “Brahma Deva.... A simple story explaining about the beauty deva who wants the boon of always serving Sriman Narayan 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 Mahishmati, a girl belonging to the Asura clan, had received a boon from Lord Brahma that no one should let her two sons down.

These two Asuras were harassing all the Gods because of the boon they had received. As their misdeeds increased day by day, Lord Brahma called the beautiful goddess Dilothama and asked them to dance before the two Asuras.

🌺 Tilothama also danced before the two Asuras. Then the two asuras fought to attain the beauty goddess Tilothama alone.

🌺Through the subtle knowledge of Tilothama, both of them attacked each other violently and died. Delighted by this, Lord Brahma assured Tilothama to grant her the boon she wanted.

🌺Beautiful goddess Dilothamai, Brahma Deva.... She said that she always wants the boon of serving Sriman Narayan. Brahmadeva also said that even if he gave a boon, her mind would be satisfied if she did penance regarding Tirumala.

🌺Accordingly, Tilothama took Urvasi and went to Tirumala for penance. Narayanan blessed both of them to continue their penance, and accordingly, both of them are still doing the work of throwing vensamaram at Tirumal.

🌺Thus one can visit Perumal throughout the year at this Nanguneri Vanamamalai Perumal Temple in the eight thalams where Perumal is Swayambumurti. Divya Desam is the 90th of the 108 Divya Desams.
108 Vaishnava Divya Desa Ula - 90. Nanguneri Vanamamalai Perumal Temple*

🌺 Thirumal is the 90th Divya Desam among 108 Divya Desams to have Mangalasasana. Nammalwar has made this place Mangalasasana.


🌺🌹 Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 Valamudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺“ *பிரம்ம தேவா* .... *தனக்கு எப்போதும் ஸ்ரீமந் நாராயணனுக்கு சேவை செய்யும் வரம் வேண்டும் என்ற அழகு தேவதை* - *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺அசுர குலத்தைச் சேர்ந்த பெண் மகிஷ்மதி, தன் இரண்டு மகன்களை யாரும் வீழ்த்தி விடக் கூடாது என்று பிரம்மதேவனிடம் இருந்து வரம் பெற்றிருந்தாள்.

🌺பெற்ற வரம் காரணமாக அனைத்து தேவர்களையும் இந்த இரு அசுரர்களும் துன்புறுத்தி வந்தனர். நாளுக்கு நாள் அவர்களது அக்கிரமங்கள் அதிகரிக்க, பிரம்மதேவன் அழகு தேவதை திலோத்தமையை அழைத்து, இரு அசுரர்கள் முன்னர் நடனமாடும்படி கூறினார்.

🌺திலோத்தமையும் அவ்வண்ணம் இரு அசுரர்கள் முன்னர் நடனமாடினாள். அப்போது இரு அசுரர்களும், அழகு தேவதை திலோத்தமையை, தானே அடைய வேண்டும் என்று சண்டையிட்டுக் கொண்டனர்.

🌺திலோத்தமையின் நுண்ணிய அறிவினால், இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டு மாண்டனர். இதனால் மகிழ்ந்த பிரம்மதேவன், அவள் வேண்டும் வரம் அளிக்க திலோத்தமைக்கு உறுதி அளித்தார்.

🌺அழகு தேவதை திலோத்தமை, பிரம்ம தேவா.... தனக்கு எப்போதும் ஸ்ரீமந் நாராயணனுக்கு சேவை செய்யும் வரம் வேண்டும் என்றாள். பிரம்மதேவனும், தான் வரமளித்தாலும், திருமாலைக் குறித்து தவம் இருந்தால் அவள் எண்ணம் ஈடேறும் என்றார்.

🌺அதன்படி திலோத்தமை, ஊர்வசியை அழைத்துக் கொண்டு திருமாலை நோக்கி தவம் இருந்தாள். இருவரின் தவத்தை மெச்சி அப்படியே ஆகட்டும் என்று நாராயணன் அருள்பாலித்தார், அதன்படியே இருவரும் திருமாலுக்கு வெண்சாமரம் வீசும் பணியை இன்றும் செய்து வருகின்றனர்.

🌺இவ்வாறு பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் இந்த நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். 108 திவ்ய தேசங்களில் 90-வது திவ்ய தேசம் ஆகும்.

🌺திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 90-வது திவ்ய தேசம் ஆகும்.இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

🌺ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை

🌺வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே....தேன மாம்பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே🌹

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…

பழனிக் கடவுள் துணை - 22.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-56

அருட்பேறு வேண்டல்!!

மூலம்:

அறுமா முகத்தமு தே! பழனாபுரி ஐய! நின் பால்
பெறுமாண்பனேகம் இருந்தாலும், நாற்றப் பிசிதம் உண்பான்
குறுமா முயல் உடும்(பு) ஆடு ஏனம் ஆதிய கொல்லும் பொல்லார்
இறுமாப் பழிக்கும் வரமெனக் கீந்தருள் இக்கணமே (56).

பதப்பிரிவு:

அறு மாமுகத்து அமுதே! பழனாபுரி ஐய! நின் பால்
பெறும் மாண்பு அனேகம் இருந்தாலும், நாற்றப் பிசிதம் உண்பான்
குறுமா முயல் உடும்பு ஆடு ஏனம் ஆதிய கொல்லும் பொல்லார்
இறுமாப்பு அழிக்கும் வரம் எனக்கு ஈந்து அருள் இக்கணமே!! (56).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழனாபுரியாண்டவனிடம் அருட்பேறு வேண்டும் முகத்தான் இரு அலங்காரங்கள் சுவாமிகள் புனைந்துள்ளார். அந்த வரிசையில் முதல் அலங்காரமே இந்த 56வது பாடல். ஜீவகாருண்யத்தைத் தொடர்ந்து சுவாமிகள் வலியுறுத்துவதை நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். இப்பாடலும் அவ்வரிசையில் ஒன்று. இப்பாடலின் சொல்லாடல்களும் கவனிக்கற்பாலன. அறு மாமுகத்து அமுதே, குறுமா (சிறு விலங்கு), பிசிதம் (புலால்) போன்ற அற்புதமான சொற்கள் உன்னி நோக்கத் தக்கன. மேலும் இப்பாடலில், சுவாமிகளின் கூற்றான- பழநியாண்டவ! நின்னிடம் நான் பெறும் வரங்கள் அநேகம் உண்டு என்கிறார், இது எம் பெருமானின் கருணைக்கொடையைப் பிரதிபலிக்கிறது.

உன் அன்பர்க்கு ஆறுதல் அளிக்கும் முகத்தான், ஆறு மா முகங்ளுடை, காணக் காணத் தெவிட்டா இன்னமுதே! பழனாபுரியை ஆளும் என் ஐயனே! பழனிப் பெருமாளே! கருணை கொண்டலான நின் பால் உன் அடியேன் நான் பெறும் நன்மையான வரங்கள் அனேகம் இருந்தாலும், புலால் உண்போர், அதை உண்ணும் பொருட்டு சிறு விலங்குகள் ஆன முயல், உடும்பு, ஆடு, பன்றி போன்றவற்றைக் கொல்லும் பொல்லாதவர்களின் செருக்கை நான் அழிக்கும் வரத்தை, எனக்கு, இக்கணமே கொடுத்து அருள்வாய் என் ஐயனே!! ஜீவகாருண்யத்தை நிலைநாட்டும் வரமே எனக்கு அளித்து என்னைப் புரக்கத் திருவுள்ளம் கொள் என் பழநியாண்டவனே!

குறமாதணைக் குரவ! குறுமுனி பணி குரு! என் குறை குரை பழனி இறைவ! இரை உண்போரின் மறுவழித்து, அவர்தம் பிழை மருப்பாய்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

அநயோரந்தர வஸுதா: ப்ரணும: ப்ரத்யக்ரபுஷ்பராகமயீ:
ஸிம்ஹாஸநேச்வரீ மனு
சிந்தன நிஸ்தந்த்ரஸித்த நீரந்த்ரா: II

இந்த தங்க -புஷ்பராகக் கோட்டைகளுக்கிடையே,
ஸிம்ஹாஸனேச்வரியான தேவியின் மந்திரத்தைத்
தொடர்ந்து மனனம் செய்வதில் சோம்பலற்ற சித்தர்களால்
இடைவெளியின்றி நிறைந்துள்ள புஷ்பராகத்தாலான
பூமியை (தரையை) வணங்குகிறேன்.(37)
ravi said…
21.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 60)

Sanskrit Version:

यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्िचतः।
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः।।2.60।।


English Version:


yatato hyapi kaunteyah:
purushasya vipaschitah: |
indriyaaNi pramaaDhIni
haranti prasaBham manah: ||

Shloka Meaning

O Arjuna ! The turbulent senses carray away the mind even of the learned man though he is striving to control them.

The senses are very powerful. But the divinity within is far more powerful if it is realized.

The man is placed between the sense world on the one side and the divine world on the other side.
By continuous practice, the seeker attains the necessary power and ultimately , he
wins the battle over the senses.

Mere book learning is insufficient. Spiritual experience is very essential.

Perhaps, so far, people have under estimated the strength of the enemy, and consequently their
effort is not as intense as it should be.

But now, Shri Krishna has sketched out the strength of the hostile forces which one has to conquer.
In war, assessment of the strength of the enemy is crucial to winnability.

Jai Shri Krishna 🌺
ravi said…
Shriram

22nd May

*Keep Implicit Faith in the Guru*


Exercise builds up physical strength; solving difficult examples develops intellectual capacity; similarly, spiritual strength is enhanced by facing difficult situations boldly, coolly. Spiritual strength is gauged by the degree of diminution of body-consciousness. It is for this that God sends calamities. It is wrong, therefore, to be scared by them. God knows well wherein your welfare lies, and it is not in your interest to request Him to withdraw calamities. It is valorous to endure coolly whatever situations arise. Do take medicine if you are ill. But is it not God who endows the drug with its curing property? And, after all, it cures one patient, fails with another. So remember that whatever God brings about is best for the particular person. Therefore, approach God in genuine submission, and pray for strength to bear the situation with courage, pray to Him to bless you with contentment, and live in His remembrance. If illness comes, bear it cheerfully, for to that extent you are redeeming yourself from what you owe to prarabdha. Do not give much thought to it, then it will affect you less.

You feel indisputably sure of your existence as so-and-so; you should feel equally sure that God exists. When you have the conviction that your guru is the same as God Almighty, then alone you can be said to have true regard for him.

When you think you are serving me, it is only with your body-consciousness; for, you do only what you yourself like to do. To do what I like, to obey me passively, to be in nama-smarana, not to hurt anybody physically or emotionally because God dwells in every being, and to believe that it is He who does everything – this would be true service to me.

My preaching may be ineffective for one of two reasons: one, that I lack the power to bring about the mutation of your mind; and the other, that you do not practice what I tell you. But, after all, a sudden spiritual metamorphosis is not desirable; for instance, if fever suddenly drops from 40°C to 35°C, it may indicate a collapse. So, too, if one who is prone to fits of anger becomes very docile in a day, it is not desirable. The change should be gradual, and be brought about by deliberation.

* * * * *
ravi said…
[22/05, 12:35] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 163*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஜக³ன்னேத³ம் நேத³ம் பரமிதி பரித்யஜ்ய யதிபி⁴:
குஶாக்³ரீயஸ்வான்தை: குஶலதி⁴ஷணை: ஶாஸ்த்ரஸரணௌ ।

க³வேஷ்யம் காமாக்ஷி த்⁴ருவமக்ருதகானாம்

கி³ரிஸுதே
கி³ராமைத³ம்பர்யம் தவ சரணபத்³மம் விஜயதே ॥24॥

*ஸ்லோகம் 24*
[22/05, 12:38] Jayaraman Ravikumar: பரமஹம்ஸர்களால் அரிதாகக் காணப்படுவதும்,

அஞ்ஞானத்தைப் போக்குவதும் ,

தோஷமே தீண்டாததுமான காமாக்ஷியின் திருவடித் தாமரைகள் இருக்க குளத்துத் தாமரை எதற்கு?’

என்று சிலேடையாக கேட்கிறார் மூககவி.

ஆச்சார்யாளும் ‘நித்யானந்தரஸாலயம்’ என்கிற சிவானந்தலஹரி ஸ்தோத்திரத்தில்,

“ஏ மனமே! பாபம் என்ற மாசை அகற்றி, புண்ணியம் என்னும் நறுமணத்தை தரும் சம்புத் த்யானம் என்கிற நித்யானந்த ஆலயம் இருக்கும் போது ‘

நீ ஏன் அற்பர்களுக்கு சேவை செய்கிற காரியம் என்கிற குட்டையில் ஏன் ச்ரமப்பட்டு உழலுகிறாய்?’” என்று கேட்கிறார்.🌸🪷🪷🪷
ravi said…
[22/05, 12:32] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 567* 🙏🙏🙏started on 7th Oct 2021

*272 வது திருநாமம்*
[22/05, 12:33] Jayaraman Ravikumar: *272 सदाशिवा - ஸதாசிவா --*

மிகவும் அற்புதமான நாமம் இது.

சதா : எப்போதும், சிவம்: மங்களம். நன்மை புரிவது.

ப்ரம்மத்திற்கு ஐந்து காரியங்கள் நான்கை மேலே சொன்ன நாமங்கள் மூலம் அறிந்தோம்.

சிருஷ்டி, ஸ்திதி, லய, திரோதானம், அடுத்த ஐந்தாவது அனுக்ரஹம்.

புணருத்தாரணமான ஜீவன்களை வாழ்த்தி அருளுதல்👍👍👍
ravi said…
*இன்றைய சிந்தனை* ❤️

(22.05.2023)

https://srimahavishnuinfo.org
....................................................

*‘’திறமையும்...! வெற்றியும்,..!!"*
...................................................

ஒரு மனிதனின் வெற்றி. அவர் படித்தப் படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்...

கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமை தான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது...

பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது...

பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்...

நம் ஊர்களில் குப்பைப் பொருள்களைத் திறமையாகப் பேசி, நம்மிடம் புகுத்தும் விற்பனை அலுவலர்களை நாம் அறிவோம்...

நம்மைப் பற்றி நம் பெற்றோர்கள் வருந்தும் போது கூறக்கூடிய வார்த்தை 'கொஞ்சம் கூடத் திறமை (சாமர்த்தியம்) போதாது இவனுக்கு" என்பது தான்...

இப்போது ஒரு சிறுகதை...

ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்குப் பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி...

'பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்து விட்டால் "எப்படி வெளியே வருவீர்கள்...?' என்பது தான்...

ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முயற்சித்து ஏறி விடுவேன் என்றார் மற்றொருவர். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை...

கடைசியில் ஒருவர் கேட்டார்..,

'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா...?'
'இல்லை' என்றனர் தேர்வுக் குழுவினர்...

'நான் விழுந்தது பகலிலா...? அல்லது இரவிலா...?'
'எதற்குக் கேட்கிறாய்...?'- என்றனர் தேர்வுக் குழுவினர்...

இவர் கூறியதாவது...

''பகலில் குழியில் விழ நானொன்றும் கண் பார்வையற்றவர் இல்லை. கவனக் குறைவானவரும் அல்ல...

அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் அல்ல...

அதனால்!, கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை என்றான்...

அவர் பதில் மனநிறைவு ஏற்படுத்தியது தேர்வுக் குழுவினர்க்கு. அவரது வாக்குத்திறமை அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது...

ஆம் நண்பர்களே...!

🟡 ஆளுமை என்பது ஒரு திறமை, அதுவே மிகை ஆற்றலாகும். திறமை என்பது மற்றவரை ஏமாற்றுவதோ, தன் செயலை சாதித்துக் கொள்வதோ இல்லை...!

🔴 திறமை என்பது பேச்சுத் திறமை, அறிவுக் கூர்மை, தெளிந்த சிந்தனை, நம்பிக்கை, சரியாக முடிவெடுக்கும் திறமை, முடிவெடுக்கும் திறன். எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்து விடுவதில்லை...!!

⚫ உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை.  தொடர்முயற்சி, கடினஉழைப்பு, புத்திக் கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் திறமை, இவையெல்லாம் தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும்...!!!

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 29*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 6

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோ பரி
ஆஸீந மம்புதஸ் யாமம், ஆயதாக்ஷ மலங்க்ருதம்

பாரிஜாத மரத்தின் நிழலில் தங்கச் சிம்மாசனத்தில் அமர்ந்தவரும், மேக வண்ணரும், நீண்டு அகன்ற கண்களை உடையவரும், அலங்கரிக்கப்பெற்றவரும்.

ஓம் நமோ நாராயணா !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
23.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 61)

Sanskrit Version:

तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता।।2.61।।


English Version:

taani sarvaaNi samyamya
yukta aaseeta matparah: |
vashe he yasyendriyaaNi
tasya prajnaa pratishtitaa ||


Shloka Meaning

Having restrained all the senses, the harmonised should intent on Me.
His wisdomw is steady whose senses are under control.

All the senses should be controlled not merely one or two. A pot with a
small hole cannot retain its water.

Sensual pleasures of any kind will lead to a downright fall from the spiritual aim. Bhagvan Krishna emphasizes this point again and again by the usage of the term sarvaaNi (meaning all or everything).

In this verse, two practises are mentioned.

i). Control of the senses from running out and attaching themselves to sense objects.
ii). Directing the mind inwards towards the Supreme Lord (Atma)

It means the rejection of the objective world (Drishya) and identification with
the subject (Drik). Both practices are necessary.

Jai Shri Krishna 🌺
ravi said…
21.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 60)

Sanskrit Version:

यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्िचतः।
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः।।2.60।।


English Version:


yatato hyapi kaunteyah:
purushasya vipaschitah: |
indriyaaNi pramaaDhIni
haranti prasaBham manah: ||

Shloka Meaning

O Arjuna ! The turbulent senses carray away the mind even of the learned man though he is striving to control them.

The senses are very powerful. But the divinity within is far more powerful if it is realized.

The man is placed between the sense world on the one side and the divine world on the other side.
By continuous practice, the seeker attains the necessary power and ultimately , he
wins the battle over the senses.

Mere book learning is insufficient. Spiritual experience is very essential.

Perhaps, so far, people have under estimated the strength of the enemy, and consequently their
effort is not as intense as it should be.

But now, Shri Krishna has sketched out the strength of the hostile forces which one has to conquer.
In war, assessment of the strength of the enemy is crucial to winnability.

Jai Shri Krishna 🌺
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 23, Tuesday, May, 2023_*

*❁ ════ ❃• ✍️ •❃ ════ ❁*

*🧿'' வாசிப்பை நேசிப்போம்.''*

https://srimahavishnuinfo.org

*♻️வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது”.*
*நம்மை ஏமாற்றாத, சிறந்த நண்பன் புத்தகம் தான்.*

*♻️நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்;*

*♻️நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; துணிவான முடிவுகள் எடுக்க புத்தகம் துணை புரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி காணும்..!*

*♻️புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடி உள்ளர்கள்; வரலாற்றை மாற்றி எழுதி உள்ளார்கள்!*

*♻️புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்ப்படுகிற சிக்கல்களை தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும்.மனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும் போது நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும்.*

*♻️நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம்.*

*♻️அதைப் போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.*

*♻️புத்தகங்கள் வாங்கத் தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனம் ஆகும்! அது, வட்டியை ஈட்டித் தருவதைப் போல அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்!*

*♻️புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும்பான்மையோர் கூறுகிறார்கள்.*

*♻️விமானம்,பேருந்து தொடர்வண்டி பயணத்தின் போது மருத்துவரை,உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்கக் காத்து இருக்கும் போதும், புத்தகங்கள் படிக்கலாம்.*

*♻️நேரம் வீணாய்க் கழியாமல், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் நேரத்தை ஒதுக்கலாம்.*

*♻️நாம் நமது நண்பர்களுடன் கேளிக்கைகளிலும், வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும் பொன்னான நேரத்தை வீண் அடிக்கிறோம்.*

*♻️ஆனால், நம்மை உயர்த்திக் கொள்ளப் புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்பித் தள்ளுகின்றோம். இது வேடிக்கையாக இல்லை.?!*

*♻️எனவே, நமக்குக் கிடைக்கும் நேரத்தை வீண் அடிக்காமல் புத்தகங்களைப் படிப்போம்.*

*♻️நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.*

*♻️குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்டுவோம்.*

*♻️ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படும்.*

*♻️புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும்,நேர்மை,, நாணயம் உடையவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.*

*♻️நல்ல புத்தகங்களைப் படித்து, கெட்டுப் போனவர்கள் யாரும் உலகில் இல்லை. புத்தகங்கள் படிப்பதைக் கடமை ஆக கொண்டவர்கள் வாசிப்பதை உயிர் என்று மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார்கள்.*

*♻️புத்தகங்கள் பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சி அளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்!*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தங்களை நாளும் படிப்போம். வாசிப்பை நேசிப்போம்!*

*⚽வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம்!புத்தகங்களை,* *காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும்,கலங்கரை தீபங்கள் என்போம்*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 30*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 7

சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

சந்திரன் போன்ற முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைகிறேன்.
த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றன!!

ஓம் நமோ நாராயணா

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
நதியோடு ஜதி போட்டு

நாட்டியத்தில் நடை போட்டு

கொடியிடையாள் உன்னை நானும்

கொஞ்சிப் பாட வந்தேனம்மா

குக்குக்கூ குயிலொன்று

கூவி ராகம் சொல்லித் தர

மீனாள் கைப் பைங்கிளி வந்து

பைந்தமிழில் பாடித் தர

நந்தி தேவன் மத்தளம் கொட்ட

கலைவாணி வீணை மீட்ட

கோபாலன் குழலின் ஓசை

காற்றினிலே மிதந்து வர

முனிவரெல்லாம் மறைகள் ஓத

கணங்களெல்லாம் நடனம் ஆட

தேவரெல்லாம் பணியும் உன்றன்

தங்கப் பாதம் தஞ்சம் அடைந்தேன்👍👍👍
ravi said…
ராமரும் காட்டு பவழ மல்லியும்*

*ராமா*

எல்லா மலர்கள் பிறந்தே உன் திருவடி பட்டு முக்தி பெரும் போது

நான் மட்டும் நிலத்தில் விழுந்து நீரில் கரைவது முறையோ *ராமா* ...

கீழே விழுந்தே கீழ் இனம் கொண்டேன் ...

பறிக்கும் மலர்கள் பரிகாசம் செய்ய நிலத்தில் நீந்தினேன் ..

கால் பட்டு சென்றோர் கணக்கிலோர் ..

எச்சில் பட்டு ஏளனம் செய்தோர் எண்ணிக்கையில் அடங்கார் ...

புண் பட்டு போனேன் *ராமா* ..

கல் பட்டு பெண் ஒருத்தி வந்தாள் ...

உன் சொல் பட்டு வில் பட்டு வீரம் ஒங்கி நின்றது ..

மண் பட்டு போனேன் *ராமா*

உன் மலரடி பட கண் கெட்டு போனதோ ..

விண் தொட்டு பண் பாடி சென்றது உன் பாணம் ...

நான் மட்டும் நல்லவன் அன்றோ

*ராமா* தரைக்கு தானம் ஏன் ஆனேன் *ராமா*

*ராமன்* சிரித்தான் ...

பவழ மல்லி உன் போல் மணம் கொண்டோர் இங்கு எவருண்டு ..

வில்வம் போல் உனக்கு பேருண்டு ...

நீ வீழ்ந்தவன் அல்ல கெட்டோரை வீழச் செய்பவன் ...

கீழே கிடந்தாலும் என் மேலே சாய்வாய் ...

பொறுக்கி எடுத்தே என் பொன் முடிதனில் வைப்பார் உனை ...

என் பாதங்களில் உன் வாசம் என்றும் வாசம் தரும் ...

பாசம் கொண்ட உன் விழிகள் என்றும் என் தாசனாய் வாழும்

*ராமா* எனக்கும் வாழ்வு தந்தாய் ..

கீழே விழ்ந்தவனை மேலே தூக்கி வைத்தாய் ..

உன் போல் எவருண்டு ...

தாயின் உள்ளம் என்றும் காணுமோ கள்ளம் ...

கீழே சிந்திய பவழ மல்லிகள் நேர் கோட்டில் அணி வகுத்து

மூன்றடி மண் கேட்டவன் மேனி தனில் மீண்டும் மலர்ந்தன 🌸🌸🌸
ravi said…
படித்ததில் வியந்தது 😳❤️

முன்பெல்லாம் வேளச்சேரி சங்கீதா ஓட்டலுக்கு எப்போதேனும் குடும்பத்துடன் சாப்பிடச் செல்வதுண்டு. நாங்கள் அமர்ந்து சாப்பிடும் டேபிள் சொல்லி வைத்தாற்போல் காலியாகவே இருக்கும். அதே இடத்தில்தான் அமர்வோம். அந்த டேபிளுக்கு 50+ வயதிருக்கும் ஒரு மேனேஜர் வருவார். சுத்தமாக உடை அணிந்து மென்மையான சிரிப்புடன் பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பார். அவரது கண்ணியமான பேச்சும், மரியாதை கொடுத்துப் பழகும் விதமும் அவரது கம்பீரத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

ravi said…
நாங்கள் சென்றதும் வணக்கம் சொல்லி வரவேற்பார். சாப்பிடும்போது காய்கறிகள் ஏதேனும் தேவையா என கேட்டு கேட்டு கொண்டு வைப்பார். சாதம் வேண்டுமானாலும் கேளுங்கள், கொடுக்கிறோம் என அன்புடன் உபசரிப்பார்.

இத்தனைக்கும் நாங்கள் மாதம் ஒருமுறையோ இருமாதங்களுக்கு ஒருமுறையோதான் ஓட்டலுக்குச் செல்வோம். தினமும் சென்றுகொண்டிருந்தால் பழக்கதோஷத்தில் இப்படி நட்புடன் பழகுகிறார் என வைத்துக்கொள்ளலாம். ஆனால் எப்போதேனும் செல்லும் எங்களிடம் இப்படி மரியாதையுடன் பழகுகிறார் என்றால் அது அவரது பிறவி குணமாகத்தான் இருக்க வேண்டும்.

அவருக்கு டிப்ஸ் கொடுத்தால் அதை மறுத்து ‘எனக்கு நிர்வாகம் நிறைவாக சம்பளம் கொடுக்கிறது. எங்கள் முதலாளி எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை’ என்று கூறி அந்த பணத்தை டேபிள் சுத்தம் செய்யும் பணியாளரை அழைத்து எடுத்துக்கொள்ளச் சொல்வார்.

சென்னையைத் தாண்டி திருச்சி செல்லும் வழியில் ஓர் இயற்கை உணவகம் உள்ளது. அந்த வழியாக பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் அந்த ஓட்டலில் சாப்பிடுவதுண்டு. அங்கு பணிபுரியும் அனைவருமே புன்சிரிப்புடன் மனநிறைவாக பணியாற்றுவதை கவனித்திருக்கிறேன். ஒருமுறை இரவு 9 மணிக்கு சென்னை திரும்பி வரும்போது அங்கு சாப்பிடச் சென்றோம். அந்த ஓட்டலின் பாத்ரூம்களை சுத்தம் செய்யும் அனைவருமே பெண்கள். என்னிடம் சிரித்துக்கொண்டே ‘மேடம், நாங்க பாத்ரூமை நன்றாக சுத்தபத்தமா வச்சிருக்கோமா?’ என கேட்டார் ஒரு பணிப்பெண். இரவு 9 மணிக்கு மேலும் இத்தனை உற்சாகமாக சிரித்த முகத்துடன் பணியாற்ற முடியுமா என அசந்துபோனேன்.

அவருக்கு டிப்ஸ் கொடுக்க முற்பட்டபோது ‘வேணாம்மா, எங்கள் சார் எந்த குறையும் வைக்கிறதில்லை…’ என்று சொன்னபோது இன்னும் வியந்தேன்.

எங்கள் தெருவில் குப்பை அள்ளும் தூய்மைப் பணியாளருக்கு 55+ வயதிருக்கும். புடவைக்கு மேல் சீருடை அணிந்து குப்பையை கைகளால் பிரித்துக் கொண்டிருப்பார். நான் எப்போதேனும் குப்பை போடச் செல்லும்போது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். ஒரு முறை அமெரிக்காவில் பணிபுரியும் என் சகோதரிக்கு அம்மை போட்டிருந்தது. வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கை, தேவையான இயற்கை மருத்துவம் இவற்றுடன் இறைவழிபாட்டையும் விடவில்லை. கூடுதலாக அந்த தூய்மைப் பணியாளருக்கு ஒரு புது புடவையும், ஒரு நாள் மூன்று வேளை சாப்பாட்டுக்கு பணமும் வெற்றிலை பாக்குடன் வைத்துக்கொடுத்தோம். முதலில் வாங்கவே இல்லை. ஆனால் காரணம் சொன்னவுடன் அவருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

‘உங்க தங்கச்சிய நான் பார்க்க முடியுமா’ என வெள்ளந்தியாகக் கேட்டார். போனில் புகைப்படம் காண்பித்தேன். ‘அவங்களுக்கு சரியான பிறகு சொல்லுங்கள்’ என கேட்டுக்கொண்டார்.

என் சகோதரிக்கு பூரண குணம் ஆன பிறகு அவரிடம் மறக்காமல் தகவல் சொன்னேன்.

‘சரிம்மா, நல்லது அந்த மாரியாத்தா நல்லதுதான் செய்வா’ என சொல்லிவிட்டு கருமமே கண்ணாயினரானார்.

இரண்டு நாட்கள் கழித்து பைக்கில் அந்த வழியாகச் செல்லும்போது அவரை கவனித்தேன். சட்டென அடையாளம் தெரியவில்லை. தலைக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தார்.

நான் பைக்கை நிறுத்தி ‘என்ன வெயிலுக்காகவா’ என விசாரித்தேன்.

‘இல்லம்மா, உங்க தங்கச்சிக்காகத்தான். மாரியம்மனுக்கு வேண்டிக்கிட்டேன்’ என சொன்னபோது எனக்குள் சர்வமும் ஒடுங்கியது.

நாம்தான் கருணையோடு இருக்கிறோம் என நினைத்து சின்ன பெருமிதத்துடன் நடந்துகொள்ளும்போது ‘நான் அதைவிட கருணையுடன் இருப்பேன்’ என மிகவும் இயல்பாக நம்மைக் கடந்து செல்லும் அன்புள்ளங்கள் இருப்பதால்தான் இன்னும் இந்த பூமி இயங்கிக்கொண்டிருக்கிறது.

நாம் ஒரு துளி கருணையைக் காண்பித்தால்போதும், இந்த பிரபஞ்சம் கடலளவு கருணையை நமக்காகக் கொட்டிக் கொடுக்க காத்திருக்கும்.

- படித்ததில் பிடித்தது
ravi said…
[23/05, 16:48] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 163 started on 6th nov

*பாடல் 46 ... எம் தாயும்*

(மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்)

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா,

கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே🌸🌸🌸
[23/05, 16:49] Jayaraman Ravikumar: தாய் அன்பு என்பது எந்த விதமான பிரதிபலனையும் கருதாமல் ஒரு
அன்னையால் தன் குழந்தைகள்பால் செலுத்தப்படும் பெருங்
கருணையே.

பிள்ளை நன்றி கெட்டவனாக இருந்தாலும் தாய் அன்பு
காட்டுவதில் தயங்க மாட்டாள். '

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம்
கல்லு' எனும் உலக வழக்கிலும் இதைக் காணலாம்.

சித்தாந்திகளின் கருத்துப்படி தாயாகிய அம்பிகை, ஜீவாத்மாவாகிய
தன் குழந்தைகளை, கையை பிடித்துக் கூட்டிக்கொண்டு போய்,
அதாவது உபாசனா மார்க்கங்களில் அந்த ஜீவனை செலுத்தி அதனை
பக்குவப்படுத்தி முடிவில் தன் தகப்பனாகிய ஈசனிடம் சேர்த்து
வைப்பாள்.

இதுவே சத்தி நிபாதம். ஆதலால் முருகா, நீ எனக்கு
தாயும் தந்தையுமாக இருக்கிறாய்.

அதனால் என்னைக் கைவிட
மாட்டாய்.

அன்பும் அருளும் தர நீ கடமைப்பட்டவன்.🦚🦚🦚
ravi said…
[23/05, 16:46] Jayaraman Ravikumar: *116. பஹுசிரஸே நமஹ.(Bahushirasey namaha)*
[23/05, 16:47] Jayaraman Ravikumar: கர்நாடகத்துக்கு ராமாநுஜர் எழுந்தருளிய காலத்தில் அங்கே வாழ்ந்த அருகதராஜன் என்ற வித்வான்
ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டார்.

எளிய மக்களுக்கும் வேதத்தின் கருத்துக்களைச் சரியான
முறையில் கொண்டு சேர்த்து அனைவரின் ஆதரவும் பெற்று ராமாநுஜர் விளங்குவதைக் கண்டு அருகதராஜன் பொறாமை கொண்டார்
ravi said…
[23/05, 16:38] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 82*💐💐💐💐🙏🙏🙏

பா3ணத்வம் வ்ருஷப4த்வ-மர்த4வபுஷா பா4ர்யாத்வ-மார்யாபதே

       கோ4ணித்வம் ஸகி2தா ம்ருத3ங்க3 வஹதா சேத்யாதி3ரூபம்-த3தௌ4 |

த்வத்பாதே3 நயனார்ப்பணஞ்ச க்ருதவான் த்வத்3 தே3ஹ-பா4கோ3 ஹரி:

       பூஜ்யாத் பூஜ்யதரஸ்ஸ ஏவ ஹி ந சேத் கோ வா தத3ன்யோ-(அ)தி4க: || 82
[23/05, 16:40] Jayaraman Ravikumar: *சிவ, விஷ்ணு அபேதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)*
[23/05, 16:44] Jayaraman Ravikumar: .
இதிலிருந்துதான் சைவ – வைஷ்ணவப் பிணக்குயாவும் வந்தது போலிருக்கிறது.

மஹாவிஷ்ணுவின் பரிபாலனத்தை ஸத்வம் என்று சைவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ‘

இந்த நிலையற்ற இகலோக வாழ்க்கையைப் பரிபாலிப்பது என்பது மனிதனை மேலும் மேலும் அஞ்ஞானத்தில் தள்ளுகிற காரியம்தான்.

இதில் ஸத்வம் இல்லை.

சிவன்தான் அஞ்ஞானம் நீங்க ஞானோபதேசம் செய்கிறவர்.

இந்த ஞானபதேசத்துக்குப் பக்குவமாக இல்லாதவர்களைக்கூட, அவர் பரமக்கிருபையோடு அவ்வப்போது கர்மக் கட்டிலிருந்து விடுவித்து, ஓய்வு தருவதற்கே சம்ஹாரம் செய்கிறார்.

பிறவிகளுக்கு நடுவே சம்ஹாரத்தின் மூலம் விச்ராந்தி தருகிற கருணாமூர்த்தியே சிவபெருமான்.

இத்தொழில் தமஸ் அல்ல.

ஸத்வமே. ‘பரதெய்வமான பரமேசுவரன் ஆக்ஞைப்படிதான் விஷ்ணு பரிபாலனம் செய்கிறார்’ என்று சிவ பக்தர்கள் சொல்கிறார்கள்.

வைஷ்ணவர்களோ, ‘மஹா விஷ்ணு இவ்வுலகத்தைப் பரிபாலனம் பண்ணுவார். ஆனால் அது மட்டுமில்லை. அவரே பரமபதமான மோக்ஷமும் தருவார்; அவரே முழுமுதற் கடவுள்;

பரமசிவன் அவருக்குக் கீழ்ப்பட்டுத்தான் சம்ஹாரம் செய்கிறார் என்கிறார்கள்.
ravi said…
- *ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்,*

புத்ரம் த³ஶரத²ஸ்யாத்³யம் புத்ரீம் ஜனகபூ⁴பதே: ।

வஶிஷ்டா²னுமதாசாரம் ஶதானந்த³மதானுகா³ம் ॥ 3 ॥

கௌஸல்யாக³ர்ப⁴ஸம்பூ⁴தம் வேதி³க³ர்போ⁴தி³தாம் ஸ்வயம் ।

புண்ட³ரீகவிஶாலாக்ஷம் ஸ்பு²ரதி³ன்தீ³வரேக்ஷணாம் ॥ 4 ॥ 🪷🪷🪷
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 55🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
சிங்கமும், புலியுமாக ஒரு வானரத்தை திருத்தச் செல்ல,

தனியாக ஓர் இடத்தில் ஒரு ஆண் மான் அழுது
கொண்டிருந்தது --

ஆமாம் ராமர் தான் - இந்த தடவை கவனம் சீதையைப்பற்றி அல்ல, தன்னை பெற்ற தாய் கௌசல்யாவை பற்றி

--- எப்படியோ அவர் மனம் யூகித்து விட்டது , தாயின் உடல் நலம் குன்றி விட்டது என்று ...

ராமர் "தாயே என்னை பெற்றதை தவிர வேறு எந்த சுகமும் நீங்கள் கண்டதில்லை.

மகனாக உங்களுக்கு நான் எந்த சேவையையும் செய்ததில்லை ...

உங்கள் மடியில் உறங்கிய சுகத்தை இன்னும் மறக்கவில்லை....

தாயையும் தாய்நாட்டையும் அன்புடன் பேணிக்க வேண்டும் என்று சொல்வீர்கள்.

தாயையும் காப்பற்ற தவறினேன். தாய்நாட்டையும் இழந்து திக்குத் தெரியாத காட்டில் திரிந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி ஒரு பிள்ளையை என்னம்மா தவம் செய்து பெற்று எடுத்தீர்கள்??" 🌸🌸🌸
ravi said…
அங்கே ஆஞ்சநேயருக்கு மனதை என்னவோ செய்தது -

ஜாம்பவானிடம் சொன்னார் " சுவாமி என் மனம் சரியில்லை -

ராமனின் புலம்பல் என் காதுகளில் விழுகின்றது -

நான் இப்பொழுதே என் பிரபுவை பார்க்கவேண்டும் ...

நீங்கள் சென்று சுக்ரீவனுக்கு நல்ல புத்திமதிகள் சொல்லுங்கள் -

சீக்கிரம் திரும்பி வந்து விடுகிறேன் ---

ஆஞ்சநேயர் ஜாம்பவானின் அனுமதியை கேட்டுத்தான் எதுவும் செய்வார், சொல்வார்,

ஆனால் இந்த சமயம் ஜாம்பவானின் அனுமதி முன்னமே அங்கிருந்து பறந்துவிட்டார் ----- 🦅🐒
Oldest Older 601 – 701 of 701

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை