ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 55 TO 58 பதிவு 54


 LS 22 

 

|| ஸ்ரீ நகர வர்ணனை || 

 

|| ஸு மேரு - ம்த்யச் ருங் கஸ்தா ஸ்ரீ மந்நகர -நாயிகா

   சிந்தாமணி க்ருஹாந் தஸ்தா பஞ்ச - ப்ரஹ்மாஸனஸ்த்திதா || 

 

55.ஸு மேரு - ம்த்யச் ருங் கஸ்தா :

மேரு மலையின் உச்சியில் ஸ்ரீ புரம் இருப்பதாகக் கணக்கு . மேருமலைக்கு நான்கு சிகரங்கள் உண்டு . இந்த நான்கு சிகரங்களுள் மூன்று ஒரே உயரமாக இருக்கும் . பிரம்மா , விஷ்ணு , ருத்ரன் ஆகியோரே இந்த மூன்று சிகரங்கள் . மூன்று சிகரங்களுக்கு மேல் நான்காவது சிகரமாக உயரத்தில் (ஸு மேரு - ம்த்யச் ருங் கஸ்தா) ஸ்ரீபுரம் இருக்கிறது  

56.ஸ்ரீ மந்நகரநாயிகா

அந்த ஸ்ரீபுரத்தில் சிந்தாமணி கிருஹத்தில் அம்பாள் வீற்றிருக்கிறாள் 

சிந்தாமணி என்பது என்ன ? : அப்படி ஒரு கல் இருந்ததாகச் சொல்வார்கள் . அதனிடம் ஏதேனும் வேண்டும் என்று கேட்டால் உடனே கொடுத்துவிடும் . சிந்தாமணியின் குணமே அதுதான் 

சின்னஞ்சிறு கல்லாக இருக்கும் சிந்தாமணியே நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கும். அம்பாள் வீற்றிருப்பதோ முழுவதும் சிந்தாமணிக் கற்களாலான கிருஹத்தில் .

 57.சிந்தாமணி க்ருஹ அந்தஸ்த்தா  

அனைத்தையும் நமக்கு தர வல்லவள்

ஸுதா ஸிந்த்தோர் மத்த்யே ஸுரவிடபி வடீ பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவ பாயாங்க நிலயாம்
ஜந்தி த்வாம் ன்யா: கதிசன சிதானந்த லஹரீம்.                               8

அமிர்தக் கடலின் நடுவில் கல்பகவிருக்ஷத் தோப்புகளால் சூழப்பட்ட ரத்னத்தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான வனத்துடன் கூடிய சிந்தாமணிக்கிருஹத்தில் பரம மங்கல வடிவமான சிம்மாஸனத்தில் பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கும் ஞானானந்தக் கடலின் அலைபோன்ற உன்னை புண்ணியவான்களான சிலரே வழிபடுகிறார்கள்.

 58.பஞ்ச - ப்ரஹ்மாஸனஸ்த்திதா

ஒரு சிம்மாஸனத்தில் அம்பிகை அமர்ந்திருக்கிறாள் . அந்த சிம்மாஸனத்தில் ஒரு பீடம் இருக்கும் - பீடத்திற்கு நான்கு கால்கள் - அந்த நான்கு கால்களாக இருப்பவர்கள் - பிரம்மா , விஷ்ணு , ருத்ரன் , மகேஸ்வரன் . அந்த பீடம் சதாசிவம் . சதாசிவ பீடத்திற்கு மேலே , அனுக்ரஹ பீடத்திற்கும் மேலே அமர்ந்திருப்பவள்தான் அம்பிகை . இவ்வாறு ஐந்து பெரும் கால்களாகவும் , தட்டாகவும் இருக்க , அந்தப்பீடத்தில் ஸ்திரமாக அமர்ந்திருப்பவள் என்பதைத்தான் பஞ்ச - ப்ரஹ்மாஸனஸ்த்திதா என்னும் திருநாமம் குறிக்கிறது . அம்பாள் தனது சக்தியைப் பிரயோகிக்கும் போது சிருஷ்ட்டியை ஒட்டிய ஐந்து  காரியங்கள் நடக்கின்றன . அப்போது பஞ்ச பிரம்மாஸனம் என்று பெயர் . அவ்வாறு பிரயோகிக்காமல் இருக்கும்போது பஞ்சப் பிரேதங்கள் ஆகும்.

Comments

ravi said…
*அம்மா*

வானில் சூல் கொண்ட மேகங்கள் பிறந்த வீடு செல்கிறதோ
பிரசவிக்க..... ??

மின்னும் தாரகைகள் தாரகை உன்னிடம் தமிழ் கற்றுகொண்டதோ?

சூரியன் சந்திரன் பகல் இரவு மாறி மாறி உன் கோட்டையில் காவல் காக்கின்றனரோ ?

வரையும் ஓவியங்களில் உன் வண்ண முகம் காண்கிறேன் ...

தேயும் நினைவுகளில் மீதி கொஞ்சம் சேமித்து வைக்கின்றேன் ...

நீதி நழுவா மஹா ராணி நீ ..

பீதி கொள்ளும் பேதைகளையும் மேதையாக்கும் சிம்ஹ வாகினீ நீ !!

வேதம் கற்றதில்லை உபநிஷதங்கள் அறிந்ததில்லை ..

உருப்படியாய் உன் நாமம் ஒரு நாளும் சொன்னதில்லை !!

உன் நீதி மன்றத்தில் எனை நிறுத்தி கீதை என்ன சொல்லப்
போகிறாய்... ?
என்றே நான் நினைக்க ...

பாதை எங்கும் நீ நடந்து என் தேவை எல்லாம் நீ புரிந்து

எனை கோதையாக்கி விட்டாய் ..

கண்ணனான உனக்கு நான் என் தருவேன் ...

நான் சூடிக்கொண்ட மாலை தனை நீ சூட

தாயே!!

அங்கே காற்றில் வரும் கீதமாய் கண்ணன் குழலோசை கேட்கின்றேன் கற்பகமாய் உன் சிரிப்பும் அங்கே சங்கமானதே !!
ravi said…
*அம்மா*

வானில் சூல் கொண்ட மேகங்கள் பிறந்த வீடு செல்கிறதோ
பிரசவிக்க..... ??

மின்னும் தாரகைகள் தாரகை உன்னிடம் தமிழ் கற்றுகொண்டதோ?

சூரியன் சந்திரன் பகல் இரவு மாறி மாறி உன் கோட்டையில் காவல் காக்கின்றனரோ ?

வரையும் ஓவியங்களில் உன் வண்ண முகம் காண்கிறேன் ...

தேயும் நினைவுகளில் மீதி கொஞ்சம் சேமித்து வைக்கின்றேன் ...

நீதி நழுவா மஹா ராணி நீ ..

பீதி கொள்ளும் பேதைகளையும் மேதையாக்கும் சிம்ஹ வாகினீ நீ !!

வேதம் கற்றதில்லை உபநிஷதங்கள் அறிந்ததில்லை ..

உருப்படியாய் உன் நாமம் ஒரு நாளும் சொன்னதில்லை !!

உன் நீதி மன்றத்தில் எனை நிறுத்தி கீதை என்ன சொல்லப்
போகிறாய்... ?

என்றே நான் நினைக்க ...

பாதை எங்கும் நீ நடந்து என் தேவை எல்லாம் நீ புரிந்து

எனை கோதையாக்கி விட்டாய் ..

கண்ணனான உனக்கு நான் என் தருவேன் ...

நான் சூடிக்கொண்ட மாலை தனை நீ சூட

தாயே!!

அங்கே காற்றில் வரும் கீதமாய்

கண்ணன் குழலோசை கேட்கின்றேன்

கற்பகமாய் உன் சிரிப்பும் அங்கே சங்கமம் ஆனதே !!
Oldest Older 201 – 202 of 202

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை