ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 59 TO 63 பதிவு 55

 


LS 23

 

|| ஸ்ரீ நகர வர்ணனை || 

 

|| மஹாபத்மாடவீ  - ஸம்ஸ்தா கதம்பவன வாஸிநீ  

ஸுதாஸாகர மத்யஸ்தா காமாக்ஷி  காமதாயினீ || 

யோக சாத்திரத்தின் அடிப்படையிலே பார்த்தால் , ஸ்ரீபுரம் பிரம்மரந்திரத்தில் இருக்கிறது . அதாவது நமது மனோநிலையில் இருப்பது . சிந்தாமணி கிருஹம் என்பது நிஜமான சிந்தாமணிக் கற்களைக் கொண்டு கட்டியது மாத்திரம் அல்ல . சிந்தாமணி கிருஹத்தில் இருக்கிறாள் என்றால் தன்னுடைய குழந்தைகள் எதையெல்லாம் கேட்க்கிறார்களோ , அதையெல்லாம் தருவதற்காக இருப்பவள் என்று பொருள் . இன்னொன்று , இந்த ஜீவன்களின் உடல்களையே தன்னுடைய இருப்பிடமாக்கிக்கொண்டு , சிந்தாமணியின் திருப்தியை அங்கேயே ஏற்படுத்துகிறாள் . ஸ்ரீ என்றால் ஐசுவரியம் . ஸ்ரீ நகரம் என்றால் ஐசுவரியம் செழிந்த நிலை 

59.மஹாபத்மாடவீ  -

மஹா பத்மம் என்றால் பெயரிய தாமரை - ஆயிரம் இதழ்களை உடையது . அந்த மஹா பத்ம அடவியில் இருப்பவள் அம்பாள்

60.கதம்பவன வாஸினீ

அம்பாளுக்கு மிகவும் பிடித்தது கடம்ப வனம் . கடம்பவன சுந்தரியா இருப்பவள் அந்த கடம்ப வனத்தில் இருக்கும் சிந்தாமணி கிருஹத்தில் அம்பாள் வாசம் செய்கிறாள் .அவள் கடம்ப வன வாஸினியாகவும் இருக்கிறாள்ஸுதாஸாகர மத்யஸ்த்தாவாகவும் இருப்பவள் . சுதா சாகரம் என்றால் அமுதக்கடல் . அந்த ஸ்ரீபுரமே சுதா சாகரத்துக்கு நடுவில் இருக்கிறது . 

61.ஸுதாஸாகர மத்யஸ்த்தா.

அம்பாளே  நடுவில் இருப்பதால்  அமுதத்தைப் பொழிகிறாள் 

62.காமாக்ஷி :

அம்பாளின் உருவத்தையும் குணத்தையும் சேர்த்து வர்ணிக்கிற திருநாமம் இது . அவளின் அழகான கண்கள் , விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றன . காமேஸ்வரனை தன்  இரு கண்களாக கொண்டவள் 

63.காமதாயினீ : விரும்பியவற்றை அருள்கிறவள் . 

இது வரை திருநாமங்கள் ( 63வரை ) அம்பாளின் ஸ்வரூப வர்ணனை யாகவும் , அவள் எங்கெல்லாம் வீற்றிருக்கிறாள் என்றும் கூறுவனவாகவும் அமைந்தன . இதற்குப்பிறகு வரக்கூடிய 22 திருநாமங்கள் , அம்பாளுடைய திரு அவதாரத்தைப் பற்றி பேசக்கூடிய திருநாமங்கள் . ( 64 to 84) 


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை