சிவானந்தலஹரி-15- சிவக்ருபை இருந்தா விதியை வெல்லலாம்!!


ஆச்சார்யாளோட சிவானந்தலஹரியில 14 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். 13வது 14வது ஸ்லோகத்துல, ‘இந்த சாரமில்லாத ஸம்ஸாரத்துல நான் சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு அடைக்கலம் கொடுப்பா? நீ க்ருபை பண்ணு’ ன்னு சொன்னார். 14 வது ஸ்லோகத்துல ‘ஒரு ஏழை பந்து இருந்தான்னா ஒரு ப்ரபு தயவு பண்ண மாட்டானா? அந்த மாதிரி நான் தான் தைன்யர்களுக்குள்ள ரொம்ப முக்யமானவன். ரொம்ப deserving. என்னை கொஞ்சம் கண்ணெடுத்து பாரு’ ன்னு சொல்றார்.
இந்த 15 ஆவது ஸ்லோகத்துல


உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்

து³ராசாபூ⁴யிஷ்டா²ம் விதி⁴லிபிமசக்தோ யதி³ ப⁴வான் ।

சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம் பசுபதே

கத²ம் வா நிர்யத்னம் கரனக²முகே²னைவ லுலிதம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்

ஹே பசுபதே! உனக்கு என் கிட்ட உபேக்ஷை இல்லேன்னு சொல்றே. அதாவது என் மேல வெறுப்பு இல்லை. என்னை உதாசீனம் பண்ணலேன்னு சொல்ற. ஆனா ‘து³ராசாபூ⁴யிஷ்டா²ம்’ – கெட்ட ஆசைகள் நிறைஞ்சதும் ‘ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்’ உன் த்யானம் பண்ணாமல் வேறே ஏதேதோ விஷயங்களில் இழுத்துண்டு போகிற மாதிரி ஒரு தலையெழுத்தை – ‘விதி⁴லிபி’ – என் தலையில பிரம்மா எழுதியிருக்கார். 

இதை ‘கிம் ந ஹரஸி’ – நீ ஏன் போக்கடிக்க மாட்டேங்கறே? உனக்கு தயவு இருக்குன்னு சொல்ற. இதை நீ போக்கிட்டேன்னா, உன்னோட தியானத்தை நான் பண்ணினா, நான் எவ்வளவோ நன்னாயிருப்பேனே. அப்படீன்னு சொல்றார். “நான் எப்படி பிரம்மா எழுதினதை மாத்த முடியும். ‘ப⁴வான்அசக்தோ யதி³’ என்னால முடியாதுன்னு நீங்க சொல்றேளா? ன்னு கேட்டுண்டு, ‘சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம்’ – 

அந்த ப்ரம்மாவோட தலை அப்படி ஒண்ணும் எடுக்க முடியாது. strong ஆ திடமாதான் அமர்ந்து இருந்தது. அதை கிள்ளிவிட முடியாது. ஆனால் அதை ‘வைதா⁴த்ரம் சிர: கத²ம் வா நிர்யத்னம் – அந்த ப்ரம்மாவோட தலையானது ஒரு யத்தனம் இல்லாம ‘கரனக²முகே²னைவ லுலிதம்’ – உன்னால் உன் நக நுனியினாலேயே கிள்ளி எறியப் பட்டதே. “என் தலையில பிரம்மா எழுதினதை அழிக்க முடியாது. அனுபவிச்சு தீர்த்துக்கோன்னு சொல்றே. ஆனா ஒரு க்ஷணத்துல ப்ரம்மாவோட தலையையே கிள்ளி எறிஞ்சேளே, உங்களால முடியாதா!” ன்னு வேடிக்கையா சொல்றார்.

பிரம்மாவும்,விஷ்ணுவும் நான் பெரியவன், நான் பெரியவன்னு வாக்குவாதம் பண்ணின போது அங்கே ஒரு ஜோதி ஸ்வரூபமா பரமேஸ்வரன் காட்சி கொடுக்கறார். இந்த ஜோதியினுடைய பாதத்தை, அடியை நான் பார்த்துண்டு வரேன்னு விஷ்ணு பகவான் வராஹரூபம் எடுத்துண்டு போறார். 

பிரம்மா ஹம்ஸரூபம் எடுத்துண்டு இந்த ஜோதியோட முடியை பார்த்துண்டு வரேன்னு போறார். ஆனா இரண்டு பேராலயும் அடிமுடி காண முடியாத பரமேஸ்வர ஸ்வரூபம். ஆனா விஷ்ணு பகவான் திரும்பி வந்து நான் பார்க்கலை. என்னால பாதத்தை பார்க்க முடியலைன்னு சொல்றார். ஆனா பிரம்மா வந்து நான் பரமேஸ்வரனுடைய சிரஸை பார்த்தேன். அந்த ஸிரஸிலிருந்து இந்த தாழம்பூ கீழ விழுந்துண்டு இருந்துதாம். அந்த தாழம்பூவையே கூட்டிண்டு வந்து பொய்சாக்ஷி சொல்ல சொல்லி, நான் பரமேஸ்வரனுடைய சிரஸைப் பார்த்தேன்னு பிரம்மா சொல்றார். 

அந்த தாழம்பூ ஆமாம்னு சாக்ஷி சொல்றது. உடனே பரமேஸ்வரன் தரிசனம் கொடுத்து கோவிச்சுண்டு ப்ரம்மாவோட 5வது தலையை கிள்ளி போட்டுட்டார்னு கதை. அந்த மாதிரி பிரம்மாவை தண்டிக்கவே உங்களால முடியுமே. என் தலையில அவர் இந்த மாதிரி எழுதின, அதுவும் ஒரு கெட்ட எழுத்தை, கெட்ட எண்ணங்கள், கெட்ட ஆசைகள் இதுலேயே நான் இருந்துண்டு இருக்கேன். அதை நீங்க போக்கக் கூடாதான்னு சொல்றார்.

ஆனா பகவானுடைய அனுக்ரஹம் கிடைச்சுடுத்துன்னா நம்ம தலையில பிரம்மா எழுதினது மாறிடும். தலையெழுத்தை தான் ஜாதகம் ஒரு indicate பண்றது. அந்த ஜாதகத்துல இருக்கிற எல்லாத்தையும் பகவானுடைய அருள் மாத்த முடியும்.

ஒரு மூகபஞ்சஸதி ஸ்லோகம் இருக்கு

विनम्राणां चेतोभवनवलभीसीम्नि चरण-
प्रदीपे प्राकाश्यं दधति तव निर्धूततमसि ।
असीमा कामाक्षि स्वयमलघुदुष्कर्मलहरी
विघूर्णन्ती शान्तिं शलभपरिपाटीव भजते ॥

வினம்ராணாம் சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி சரண-

ப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி தவ நிர்தூ⁴ததமஸி ।

அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ

விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே ॥

வினம்ராணாம் – ரொம்ப வணக்கத்தோட அம்பாளை நமஸ்காரம் பண்றவாளோட சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி – அவாளுடைய மனம், சேதஸ் என்ற வீட்டின் மாடியில் சரணப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி – அவாளுடைய மனசுல அம்பாளோட சரணம் வந்துடும்ங்கிறார்.

அந்த சரண தீபம் அவாளுடைய மனமாகிய வீட்டில் ஏற்றப்பட்டவுடன், தவ நிர்தூ⁴ததமஸி – அது அக்ஞான இருட்டைப் போக்கிக் கொண்டு ஒளியோடு அந்த தீபம் விளங்குகிறது. அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ – எல்லையில்லாததும், ரொம்ப நான் மீள முடியாததுமான து³ஷ்கர்மலஹரீ கெட்ட வினைகளின் கூட்டங்கள் விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே – 

அம்பாளுடைய பஜனம் பண்றவாளோட மனசுல அந்த பாதமாகிய தீபத்தை ஏற்றி வெச்சதுனால கூட்டம் கூட்டமாக தீவினைகள் என்ற சலபபரீபாடினா ஈசல் பூச்சி. அது விளக்குல வந்து விழுந்துடும். அந்த மாதிரி கூட்டம் கூட்டமாக என்னோட தீவினைகள் உன்னோட பாதமாகிய நெருப்புல விழுந்து பொசுங்கி போயிடறதுன்னு சொல்றார். 

அந்த மாதிரி நம்முடைய பூர்வஜன்மாவுல எவ்ளோ தீவினைகள் பண்ணியிருந்தாலும் பகவானுடைய பக்தி இருக்கணும். ரொம்ப வணக்கத்தோட இருக்கணும்.அந்த egoவை விட்டு நான் பண்றேன்னு நினைக்காம பகவான் பண்றார்னு நினைச்சாலே பாதி வினைகளோட பாரம் குறைஞ்சுடும். மேலும் அந்த அருட் பார்வை பட்டுடுத்துன்னா  எல்லா தீவினைகளும் போயிடும். வாழ்க்கையே நிம்மதியா இருக்கும்னு சொல்றார்.

சிவக்ருபை இருந்தா விதியை வெல்லலாம் என்கிறதை வேடிக்கையா இந்த ஸ்லோகத்துல சொல்றார். 

பசுபதியே ! உனக்கு என்னிடத்தே வெறுப்புணர்ச்சி இல்லையானால், பேராசை நிரம்பி, உனது நினைவில் ஈடுபடாத எனது தலை எழுத்தை ஏன் மாற்றவில்லை? அப்படி நீ (பிரம்மா எழுதியதை மாற்றும்) திறமையற்றவனாயின் கை நகத்தைக்கொண்டே சிரமமின்றி பிரும்மாவினுடைய அந்தக் கெட்டியான தலை உன்னால் எங்ஙனம் கிள்ளி அகற்றப்பட்டது? (பிரம்மாவின் ஐந்து முகங்களில் ஒன்றைக் கொய்தவர் பரமேசுவரனே.)



LS : 
பக்த மாநஸ ஹம்ஸிகா ;. 
காமேச்வர ப்ராணநாடீ :  
க்ருதஜ்ஞா ;
ஸ்ரீ கண்டார்த்த சரீரிணீ 

========================================================================

If it not neglect ,, then why do YOU not remove my destiny , which has turned me away from meditation on YOU and filled with futile desires . O Siva ! If you are incapable , then that famous episode of the fifth head of Brahma being cut off by your nail , could not have happened . How could YOU , without any effort clip off Brahma's strong head- the embodiment of destiny -using only the tip of  Your fingernail ?
========================================================================

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை