சிவானந்தலஹரி-16 ரொம்ப தைன்யமா இருக்கேன் நான். அதுனால ,உங்களோட கடாக்ஷம் எனக்கு கிடைச்சுது,


 விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது ப⁴வதா தத்பரசிர:

சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான் ।

விசார: கோ வா மாம் விசத³ க்ருʼபயா பாதி சிவ தே

கடாக்ஷவ்யாபார: ஸ்வயமபி ச தீ³னாவனபர: ॥

பிரம்மாவை வந்து நீங்க கோவிச்சுண்டேளே, தலையை கிள்ளி போட்டேள். இப்ப நான் ஒரு appeal விட்டுருக்கேன். அந்த பிரம்மாதான் என்னை ரொம்ப தொல்லை பண்றார். தலையில ஏதோ எழுதிட்டார்னு சொல்றேன். 

உடனே நீங்க கோவிச்சுண்டு அவருடைய இன்னொரு தலையை ஏதாவது கிள்ளிடாதீங்கோ என்கிறார் 

விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது – விரிஞ்சு தீர்க்காயுசா இருக்கட்டும் ப⁴வதா தத்பரசிர: சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் – அவருடைய பாக்கி நான்கு தலைகளும் உம்மால் காப்பாற்றப்படட்டும். 

அதாவது அதை எல்லாம் நீங்க எடுத்துக் கிள்ளிப் போட்டுடாதீங்கோ ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான்  – அவர்தான் என் தலையில எழுதினார். ஆனா தைன்யத்தை எழுதியிருக்கார். அதுல ஒரு லாபம் ஆச்சு. ஏன்னா நீங்க தீ³னாவனபர: – தைன்யமா இருக்கிரவாளை காப்பாத்தணும்னு ஒரு கொள்கை வெச்சிசிண்டிருக்கேள். அதுனால என்ன ஆச்சு? 

சிவ –  மங்கள வடிவமான பரமேஸ்வரா, விஷத – நிர்மல ஸ்வரூபியே! எனக்கு ஒண்ணும் யத்தனம் இல்லாமலேயே உங்களுடைய கடாக்ஷம் கிடைச்சுடுத்து. நீங்க ஐயோ பாவமா இருக்கிறவாளைத்தான் கண்ணெடுத்துப் பார்க்கறேள். அந்த பிரம்மா இந்த மாதிரி ஒரு தலையெழுத்தை எழுதியிருக்கார். 

ரொம்ப தைன்யமா இருக்கேன் நான். அதுனால என்ன ஆச்சுனா,உங்களோட கடாக்ஷம் எனக்கு கிடைச்சுது,அப்படீன்னு சொல்லி சந்தோஷப் படறார். அந்த மாதிரி நாம் பகவானிடத்தில் தன்னோட தைன்யத்தை வெளிப்படுதறதுன்னுஒரு அங்கம் சரணாகதியில. பகவான் தான் ப்ரபு. நாம் அவரோட அடிமைன்னு நினைக்கத் தெரிஞ்சாலே அவாளுக்கு

“அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே”

ன்னு திருநாவுக்கரசர் தேவாரத்துல பாடறார். பகவானுக்கு அடிமை பூண்டா அல்லல் என் செயும்? அருவினை என் செய்யும்? தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்?என்னுடைய பழைய வினைகளெல்லாம் என்ன பண்ணப் போறது? என்னுடைய மூன்று விதமான வினைகளும் (சஞ்சிதம், ஆகாமி பிராரப்தம்) என்னை ஒண்ணுமே பண்ண முடியாது. என்னை எதுவுமே அல்லல் படுத்த முடியாதுன்னு சொல்றார்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

ன்னு பாடினா மாதிரி இங்க ஒரு பாட்டுல சொல்றார். அந்த பகவானிடத்தில் அடிமை பூண்டு இருக்கணும்ங்கிற அந்த புத்தி, அவர் கிட்ட மட்டுமே தைன்யமா இருக்கணும் என்கிற பிரார்த்தனை இந்த ஸ்லோகங்கள்ல வெளிப்படறது. இன்னும் இதே மாதிரி மேலும் ‘நான் உன்னை சரணாகதி பண்ணேன். என்னை காப்பாத்து’ ன்னு வேண்டப் போறார். அதெல்லாம் அடுத்தது பார்ப்போம்.

பிரும்மா நீண்ட ஆயுள் உள்ளவராயிருக்கட்டும்! அவரது மிஞ்சியுள்ள நான்கு தலைகளையும் நீங்கள் ரக்ஷியுங்கள். இப்புவியில் அவரல்லவா இந்த தீனத்தன்மையை என் தலையில் எழுதினார். இதற்காக என்ன கவலை? மாசற்ற மங்களவடிவினனான உனது கடைக்கண் பார்வை இயற்கையான எளியோர்களை காக்க வல்லது. என்னையும் காப்பாற்றுகிறது. (பிரம்மா எனக்கு தீனத்தன்மையை விதித்ததால் தான், உனது தீனரக்ஷக ஆற்றலை அநுபவிக்க முடிகிறது. எனவே, அவரை எஞ்சிய நான்கு தலைகளோடு சிரஞ்ஜீவியாக விடுவாயாக!)

16 May Brahma , the creator have a long life . His four remaining heads must certainly be protected by You as it is . He who has indeed inscribed on this Earth the pitiable condition all beings face. O Bhagavan ! Pure in form , what is there to deliberate further on this matter ? For, your mere slide glances , naturally compassionate,  are ever engaged in protecting the miserable 

LS : 
பவாரண்ய குடாரிகா :
பத்மப்ரியா :
பத்ர மூர்த்தி ,
பக்த  ஸௌபாக்ய தாயினீ  : 






=========================================================================

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை